Powered By Blogger

Saturday, October 31, 2020

தேர் இழுக்கும் திருவிழா - 2021 !!

 நண்பர்களே,

வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்திலை மறந்திருக்காது தானே ? (நாங்க மறந்திருந்தாலும் நாலு பதிவுக்கு ஒருவாட்டியாச்சும் நீ அதை ஞாபகப்படுத்தும் போது  மறக்க வாய்ப்பில்லையே ராஜா - என்கிறீர்களா ?!) 2012 முதலான கடந்த 8 வருஷங்களாய், ஜுன், ஜுலை முதலாகவே அந்த "சிந்தனை செந்தில்" கூத்தைத் தான் நானும் அடித்திடுவேன் ! (இதுவுமே தெரிஞ்சது தானே ராஜா என்கிறீர்களா ? 😎😎) புது அட்டவணைக்கான  combinations-களை நிர்ணயம் செய்கிறேன் பேர்வழி என்று குயர் குயராகப் பேப்பரைக் கபளீகரம் செய்து வருவது ரெகுலரான நிகழ்வு ! ஆனால் முதன் முறையாக – ஒற்றைப் பேப்பரில் ; ஒரே சிட்டிங்கில் அட்டவணையின் முக்கால்வாசி உருவான மாயம் இந்த ஆகஸ்டில் அரங்கேறியது ! “கால்களை அகலமாய் விரித்துக் கொண்டே போகாதேப்பா” என்ற சேதி,  ஒரு நுண்வைரஸின் உபயத்தில் கிட்டிட – “இந்த ரோட்டை வாங்கிப் போடவா? அந்தத் தெருவை வாங்கிப் போடவா? என்று அலைமோதும் கவுண்டர் சாரின் ஆர்வக் கோளாறுகள் இம்முறை என்னைப் பீடிக்காது பார்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டிப் போனது ! அலிபாபா குகையினுள் குவிந்து கிடக்கும் பொக்கிஷங்களைப் போல கதைகளின் குவியல்களைப் பார்த்திடும் போது - சங்கிலி போட்டுக் கட்டி வைத்தாலும் திமிறத்தான் தோன்றுகிறதென்பது தனிக்கதை !   அதே சமயம் சிக்கனத்திலும் (!!!) சாகஸம் செய்து பார்ப்பது ஒரு செம சுவாரஸ்ய அனுபவமாய் அமைந்து போயிட இதோ – ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் 2021-க்கான ஒன்பது மாதச் சந்தா அட்டவணை !

என் முன்னிருந்த முதலும், பிரதானமுமான கேள்வி இதுவே : 

What would be a good number for the 9 months ? 

இந்தச் சுருக்கமான சந்தாவுக்கு 30 புக்ஸ் ; 24 புக்ஸ் ; 32  புக்ஸ் என்று ஏதேதோ கணக்குகளைப் போட்டுப் பார்த்தேன் ; பட்ஜெட் உதைத்தது / அல்லது ரொம்பவே குறைச்சலாய்த் தோன்றியது ! இறுதியாய் மாதம்தோறும் 3 - ஆக மொத்தம் 27 புக்ஸ் (ஜம்போ சேர்க்காது) என்று தீர்மானித்தேன் ! 

அடுத்து எழுந்த கேள்வி - 27 புக்ஸ் என்ற அப்பத்தை ஆக்ஷன் ; போனெல்லி ; கார்ட்டூன் ; கி.நா. என்ற புள்ளீங்க மத்தியினில் எவ்விதம் பிரித்துத் தருவதென்பதே ! இக்கட கூட்டிப்புட்டா - அக்கட குறையும் & vice versa ! ரைட்டு - ஒவ்வொரு ஜானரிலும் இன்றியமையா mass நாயகர்களைப் பட்டியலிட்ட பின்னே தொகுதி உடன்பாட்டைச் செய்து கொள்ளலாமென்று தீர்மானித்தேன் ! 

சந்தா A :

As always – ஆட்டம் துவங்குவது சந்தா A-விலிருந்தே ! ‘’ACTION APLENTY’’ என்று பறைசாற்றும் இந்தச் சந்தாப் பிரிவினில் ஆதி முதலே நமக்கெல்லாம் ஆதர்ஷங்களாகிப் போயிருக்கும் detective / அதிரடிக் கதைகள் இடம் பிடிக்கின்றன! மட மடவென பெயர்களை எழுதி விட்டு நிமிர்ந்தால் 8 பெயர்கள் காகிதத்தில் இருந்தன ! அவர்களை லைனாய் அணிவகுக்க வைத்து - ஒவ்வொருவரின் குறை + நிறை என்று மனசுக்குள் ஓடச் செய்ய முற்பட்டேன், நடப்பாண்டின் அனுபவங்களைக் கணக்கில் கொண்டபடிக்கே ! கிட்டத்தட்ட அத்தனை பேருமே - 'எங்களைத் தேர்வு பண்ணாட்டி நஷ்டம் உனக்குதான்ப்பா !' என்பது போல் முறைப்பதாய்த் தோன்றிட, வேகமாய் டிக் அடிக்கும் படலத்தினுள் புகுந்தேன் ! 

So நமது புது கேட்லாக்கின் முதற்பக்கம் துவங்குவதே மௌனப்புயல் ட்யுராங்கோவுடன் ! 5 ஆண்டுகளுக்கு முன்பாய் நம்மிடையே சத்தமின்றி யுத்தம் செய்யக் களம் கண்ட இந்த வன்மேற்கின் அதிரடிக்காரர் வருஷத்துக்கொரு 3 பாக ஹார்ட்கவர் தொகுப்போடு அதகளம் செய்து வந்துள்ளார் ! சாகசங்களில் மாத்திரமன்றி, விற்பனைகளிலுமே ஓசையின்றி காரியம் சாதிக்கும் இவரது பாணி புலனானது - கிட்டங்கியின் கையிருப்பைச் சரி பார்த்த கணத்தினில் !! நடப்பாண்டு + 2019-ல் வெளியான 2 ஆல்பங்கள் நீங்கலாய் பாக்கி எல்லாமே sold out என்று நம்மவர்கள் சொன்ன போது "தெய்வமே !!" என்றபடிக்கு இவருக்கு ஒரு பெரிய thumbs up தந்ததோடு - முத்து காமிக்சின் ஒரு மைல்கல்லைக் குறிக்கும் வாய்ப்பினையுமே சேர்த்து வழங்கினேன் ! So 2021-ல் காத்திருக்கும் “முத்து காமிக்ஸ் இதழ் # 450” என்ற மைல்கல்லுக்கு உரமேற்றவிருப்பது ட்யுராங்கோவின் “ரௌத்திரம் கைவிடேல்”! ஏற்கனவே அறிவித்திருந்தது போல ட்யுராங்கோ தொடருக்கு விடைதரும் வேளையும் இதுவே ! இதற்குப் பின்பாய் ஒரேயொரு சிங்கிள் ஆல்பம், முற்றிலும் புது ஓவிய பாணியில் உள்ளது தான் ! ஆனால் அதன் தொடர்ச்சியை உருவாக்காதே தொடரினை மங்களம் பாடி விட்டுள்ளனர் - படைப்பாளிகள்  ! So கெத்தான ஒரு நாயகருக்கு முத்தான ஒரு வாய்ப்புத் தந்து thank you & goodbye சொல்லவிருக்கிறோம்! வழக்கம் போலவே ஹார்ட்கவர் & முழுவண்ணம் & கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பு !

ஆக்ஷன் சந்தாவில் ‘டக்‘கென்று ‘டிக்‘ வாங்கிய அடுத்த நாயகர் – லிப்ட்டில் உடைமாற்றும் ஒரு NYPD டிடெக்டிவ் ! அம்மாவுக்கு அடங்கிப் போகும் ஒழுக்கமான பாஸ்டராக வீட்டிலும் ; ரகளையின்றி ரணகளங்களைச் சமாளிக்கும் போலீஸ்காரராய் நியூயார்க்கின் வீதிகளிலும், உலா வரும் SODA – நடப்பாண்டினில் அறிமுகமாகி, ஓவர்ரைட்டில் நம் பட்டியலில் ஒரு நிரந்தரராகி விட்டுள்ளதில் no secrets ! வித்தியாசமான கதை பாணி ; கார்ட்டூன் ஸ்டைல் சித்திரங்களிலும் ஈர்ப்பு & இதுவரையிலும் நாம் பார்த்தேயிராத கதாநாயக template இங்கே கோலோச்சுவதால் இவரது கதைக்குத் துண்டு விரிப்பதில் எனக்குத் துளி கூடத் தயக்கம் தோன்றிடவில்லை ! And இதுவொரு கொட்டாவி விடும் நீளத்துக்கான தொடரும் அல்ல எனும் போது டிரெண்ட் பாணியினில் ஆண்டுக்கு, ஒன்றோ-இரண்டோ போட்டுத் தாக்குவது சுலபம் என்பது புரிந்தது ! More than anything else - இதுமாதிரியான சற்றே மாறுபட்ட கதைப்பாணிகளே இப்போதெல்லாம் பணியாற்றும் போது எனக்கொரு பூஸ்ட்டை தருவதை உணர முடிகிறது ! மாமூலாய் மரத்தைச் சுற்றி டூயட் பாடும் மகானுபாவர்களை காணும் நொடியில் பேனா பேந்தப் பேந்த முழிப்பதே நிகழ்கிறது ! So ’’நித்தமும் உந்தன் நிழலில்” with SODA !

தயக்கமின்றித் தானே தேர்வாகிக் கொண்ட அடுத்த நபர் நமது சிகப்புச் சட்டைக்கார ட்ரெண்ட் ! அதிர்ந்து பேசா ; ஆக்ஷனைப் பெரிதாய் நம்பியிரா இந்த அழுத்தமான ஹீரோ சமீப ஆண்டுகளில் ஒவ்வொரு முறையுமே, கிடைக்கும் வாய்ப்புகளைக் கச்சிதமாய்ப் பயன்படுத்தி வருகிறார் ! தவிர, மொத்தமே 8 ஆல்பங்கள் தான் இவரது தொடரினில் எனும் போது, ஒரிஜினலின் வரிசைக்கிரமத்தில் போட்டுத் தாக்குவது சுலப வேலையாகி விடுகிறது ! ரம்யமான சித்திரங்கள் இதமான வர்ணங்கள், நேர்கோட்டுப் பயணம் ; நமக்குத் பிரியமான கௌபாய் பாணி ; yet மாறுபட்ட கனேடிய பின்புலம் - என்ற அந்த ரெகுலர் பாணியில் ட்ரெண்ட் தொடரின் ஆல்பம் # 6 – “பகலறியா பூமி !’’.

தேர்வு பண்றியா? இல்லாங்காட்டி கமிஷனர் போர்டன் கிட்டே போட்டுக் கொடுக்கவா ?' என்றபடிக்கு மிரட்டும் கேரட் மண்டை ரிப்போர்ட்டரே next in line ! மினிமம் கியாரண்டிக்கு என்றைக்குமே மோசமில்லை என்று தெம்பாய் வலம் வரும் ரிப்போர்ட்டர் ஜானி – நடப்பு மாதத்தின் டபுள் ஆல்பப் புரமோஷனுமே கண்டவர் எனும் போது, இவருக்கான ஸ்லாட்டைத் தட்டிப் பறிக்க யாருமிலர் ! இங்கே எனக்கிருந்த ஒரே கேள்வி - பழைய கேரட்காரரா - அல்லது புதியவரா ? என்பதே ! And இம்மாதத்து உங்களின் அலசல்கள் தெள்ளத்தெளிவாக விடை சொல்லி விட்டதால், என் பணி சுலபமாகிவிட்டது ! So க்ளாஸிக் ஜானியின் “காற்றில் கரைந்த கலைஞன்” 2021-ல்  ஆஜராக உள்ளார் ! பெர்சனலாய் எனக்கு ஜானி 2 .0 தேர்வாகிடாதா ? என்ற ஆதங்கமே மேலோங்கியிருந்தது ! ஆனால் 'பழசுக்கு ஜே' போடும் நமது பாணிகளில் no மாற்றம்ஸ் எனும் போது - "மை பெஸ்ட் கஸ்டமர்   ..but நோ  பீஸ் !" என்று புலம்பும் வடிவேலு பாணியில் நடையைக் கட்ட வேண்டியானது !! 

மோனப் பார்வையிலேயே கேள்வி கேட்கும் மறதிக்கார மன்னாரு அடுத்த automatic choice ஆகிட்டார் ! நடப்பு ஆண்டினில் 2132 மீட்டர் ஒரு அனல்பறக்கும் அத்தியாயமாய் அமைந்தது மட்டுமல்லாது, ஒரு செம த்ரில்லான தருணத்தில் “தொடரும்” என்ற போர்டை மாட்டிக் கொண்டதால் அதன் conclusion-ஐ ரசிக்கும் ஆவல் கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே இருப்பது உறுதி ! 2020-ன் நவம்பரில் இரத்தப் படலத்தின் 27-ம் பாகம் பிரெஞ்சில் ரிலீஸாவதால் – சூட்டோடு சூடாய் 2021-ல் அதனை வெளியிடவுள்ளோம் – “நினைவோ ஒரு பறவை” வாயிலாக ! And தகவல் ரைட்டா – தப்பா ? என்று தெரியலை ; ஆனால் இரண்டாம் சுற்று இந்தப் புது ஆல்பத்தோடு நிறைவுறுவதாய்க் கேள்வி ! நிஜம் தானா என்றறியக் கேட்டுள்ளேன் - அடுத்த வாரத்தில் files வரும் போது விடையும் வந்திருக்கும் !

Who next ? என்று பார்த்த போது, முன்நெற்றியில் கேசம் சுருண்டு விழுந்திருக்கும் ஒரு ஸ்டைலானவர் கருப்பு கோட்டணிந்தபடிக்கே கரம் நீட்டி நிற்பது தெரிந்தது ! சில icon கள் யுகங்கள் எத்தனை ஆனாலும் நம் மனங்களிலிருந்து அதிக தொலைவு பயணிப்பதில்லை என்பதை க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் 007 உணர்த்துவது புரிந்தது ! Yes indeed - ராணி காமிக்சில் வெளியான சாகசங்களே இவை ; கதைகளுள் அந்நாட்களது நெடி சற்றே தலைதூக்குவது வாஸ்தவமே - ஆனால் கறுப்பு வெள்ளையில் - அந்த பர பர ஆக்ஷன் கதைகள் என்றைக்குமே அளிப்பதில்லை என்று நினைத்தேன் ! நடப்பாண்டில் அட்டவணையில் போல நிறைய ஸ்லாட்ஸ் என்றெல்லாம் இல்லாது - இம்முறை ஒன்றே ஒன்று ; கண்ணே கண்ணு பாண்டுக்கு எனது தீர்மானித்தேன் ! அப்போது தான்  சிலபல டாக்டர்களின் மனங்களையும், தொழிலதிபர்களின் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் ஒரு ஜாலப் பெண்மணி அருகாமையில் நிற்பது தெரிந்தது ! அவரோ கையிலொரு   காங்கோவைச்  சுழற்றிக் கொண்டிருக்க, அவருக்கு ஒரு எட்டு பின்னே நிற்கும் செம்பட்டைமண்டைக்காரரோ கத்தியும் கையுமாய்க் காட்சி தர, லைட்டாய்க் காப்ரா ஆகிப்போனது எனக்கு ! இவர்களுக்கு இடம் உள்ளத்தினில் தானென்றால் இங்கு சிலபல உள்ளங்கள் சித்தரிடுமென்பதும் புரிந்தது ; அதே சமயம் இடப்பற்றாக்குறையுமே மிரட்டியது ! அப்போது எழுந்த மஹாசிந்தனை தான் - The B & B Special !! முதல் தபாவாக நமது க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்டும், இளவரசி மாடஸ்டியும் "Bond & Blaise ஸ்பெஷல்” என்றதொரு black & white சாகஸத்தில் மிரட்டவுள்ளனர் ! இருவருமே ஒரே குழுமத்து பிரிட்டிஷ் தயாரிப்புகள் என்பதால் இந்தக் கூட்டணி நிச்சயமாய் க்ளாஸிக் கதை ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருந்திடுமென்று சொல்வேன் ! அதிலும் இம்முறை தேர்வாகியுள்ள 2 கதைகளும் சரி ; அவற்றிற்கென நமது அமெரிக்க ஓவியை தயார் செய்திருக்கும் அட்டைப்படங்களும் சரி - பொறி பறக்கச் செய்யும் ரகம் !

அடுத்த automatic choice - நமது fantasy நாயகர் தோர்கல் ! துவக்கம் தடுமாற்றமாய் இருப்பினும், பின்னாட்களில் வேறொரு லெவல் என்று வீரியம் கூட்டிக்கொண்டுள்ள ஹீரோ இவர் ! And காத்திருக்கும் ஜனவரியில் இவரது 5 பாக ஆல்பமொன்று தெறிக்க விடவுள்ளதெனும் போது - தோர்களின் graph உசக்கே மட்டுமே பயணிக்க முடியும் ! ஆனால் இம்முறை எனக்கிருந்த சிக்கல் பட்ஜெட் சார்ந்தது என்பதால், ஆரிசியாவின் ஆம்படையானுக்கு ஒற்றை சிங்கிள் ஆல்பமே possible ! தவிர ஜனவரியில்  5 பாகத் தொகுப்பு + தொடரக்கூடியோ ஏப்ரலிலோ, மே மாதத்திலோ இன்னொரு மெகா தொகுப்பு எனில் overkill ஆகிடுமோ என்ற தயக்கமும் எழுந்தது ! இதுவரையிலும் நாம் தொட்டிருப்பது ஆல்பம் 16 - ஒரிஜினல் வரிசையினில் ! ஜனவரியில் காத்துள்ளதோ - numbers 17 to 21 ! So அடுத்த அட்டவணையினில் இடம்பிடித்திடுவது சிங்கிள் ஆல்பமான # 22 ! எல்லாம் நார்மலாகியிருக்கும் போது - மறுக்கா அந்த தொகுப்பு mode-க்கு தோர்கல் குதித்திடுவார் ! But  இன்னொரு டிடெக்டிவ் நாயகருக்கு தூண்டில் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவர் கிட்டி விட்டால் - இந்த தோர்கல் சிங்கிள் ஆல்பம் நிச்சயமாய்த் தள்ளிப் போகும் !

இதுவரையிலான பட்டியலில் 7 பேர் இடம்பிடித்திருக்க - who next ? என்றபடிக்கே நிமிர்ந்தேன் ! செலக்ஷன் பட்டியல்களை டார் டாராய்க் கிழித்த கையோடு – “எனக்கெல்லாம் ஒரு செலக்ஷன் கமிட்டி வைக்கும் அளவுக்குத் துளிர்த்துப் போச்சா ? எனக்கு இடம் இல்லாட்டிப் “பிச்சி…பிச்சி !“ என்று மிரட்டி நிற்கிறார் ட்சி-நா-பா எனும் தட்டைமூக்கார் எனும் கேப்டன் டைகர் ! டைகர் ஆக்டிவாக இருந்த நாட்களில், இம்மி கேள்வி கூட இல்லாது டீம் செலக்ஷனில், விராட் கோஹ்லியின் பெயரைப் போல முதல் பெயராய் இவர் ‘டிக்‘ ஆகியதே நடைமுறை ! ஆனால் இளம் டைகரின் பிற்பாதி மாத்திரமே இனி எஞ்சியிருக்க, தொடரின் ஹிட் கதைகள் சகலத்தையும் வெளியிட்டு முடித்த நிலையில் – உடைந்த மூக்கார் நமது ரேடாரிலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தார் ! பற்றாக்குறைக்கு "இளம் டைகர் ஸ்பெஷல்" அறிவித்த சற்றைக்கெல்லாமே இங்கே கொரோனா புண்ணியத்தில் சகலமும் உல்டாவாகிப் போக, அந்தத்திட்டமிடலைக் கைவிட வேண்டிய கட்டாயமும் எழுந்தது !  நிலவரம் இவ்விதமிருக்க, சென்றாண்டினில் கேப்டன் டைகரை முற்றிலும் புதுக் கதாசிரியர் – ஓவியர் டீமின் பராமரிப்பில் விட்டு – புதியதொரு 2 பாக சாகஸத்தை உருவாக்கியுள்ளனர் என்பது பற்றிப் பகிர்ந்திருந்தேன் ! And அதன் முதற்பாகம் 2019-ன் பிற்பகுதியில் வெளிவந்து விட்டுள்ளதை நாம் அறிவோம் ! க்ளைமேக்ஸ் பாகமானது 2021-ன் ஜுன் இறுதிக்குள் வெளிவந்திடுமென நமது படைப்பாளிகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர் ! So ஒரு ரிஸ்க் எடுத்து, ரெடியாகி வரும் அந்த  இரண்டாம் பாகத்தையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டு 2021-ன் தீபாவளியை – தளபதி தீபாவளியாக்கினால் என்னவென்ற மகாசிந்தனை திடுமென தோன்றியது ! So படைப்பாளிகளின் தரப்பில் மட்டும் தாமதம் நிகழாது போயின் – 2021-ன் தீபாவளி “வேங்கைகள் வீழ்வதில்லை”யுடன் !! முதல் பாகத்தை ஏற்கனவே மொழிபெயர்ப்புக்கென நமது பிரெஞ்சு எழுத்தாளருக்கு அனுப்பியிருக்க – அதைப் படித்த கையோடு, “இது ரொம்பவே சுவாரஸ்யமாத் தெரியுது!” என்று அவரும் கமென்ட் செய்திருந்தார் ! சித்திர பாணி மட்டும் டைகர் ரசிகர்களுக்கு லைட்டாக வயிற்றைக் கலக்கிடக் கூடும் தான் ; ஆனால் கதை அதனை ஈடு செய்கிறது ! So ஒரு வேங்கைத் தீபாவளி புலருமா ? என்ற எதிர்பார்ப்போடு அடுத்த நாயகரிடம் தாவுகிறேன் ! "இப்போ கொள்ளை போகுதா - என்ன ? புக் அக்கட ரிலீஸ் ஆகும் முன்னமே திட்டமிடல் ஏனோ ?" என்ற கேள்விகளும் இதன் தொடர்ச்சியாய் எழுமென்பது புரிகிறது தான் ! ஆனால் 2021 நவம்பருக்குள் அங்கிருந்து பாகம் # 2 கிளம்பியிருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாலேயே அட்டவணைக்குள் நுழைகிறார் தட்டைமூக்கார் ! நாலைஞ்சு வருஷமா TEX தீபாவளி கொண்டாடி வர்றோமே ; அதுக்கு கல்தாவா ? " என்ற வினவலுமே தொடரக்கூடும் அல்லவா ? So அதற்குமே பதில் சொல்லிப்புட்டால் உங்களில் பலருக்கும் டைப்படிக்கும் நோவு மிச்சமாகுமல்லவா ? "தளபதி தீபாவளி" உண்டென்பதற்காக - "தல தீபாவளி" இல்லையென்று போகணுமா - என்ன ? So மஞ்சள் ஒளிவெள்ளங்கள் ஒவ்வொரு தீபத் திருநாளுக்கும்  நிச்சயமிருக்கும் என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன் ! Read on folks...!

To complete the ஆக்ஷன் சந்தா – யாரைப் பட்டியலிடுவது ? அல்லது "8" என்ற நம்பரோடு முற்றுப்புள்ளி வைப்பதா ? என்று யோசிக்கத் துவங்கிய சமயத்தினில், "அடடே..இந்த அட்டவணைக்குள் இன்னமும் புதுசாய் யாரையும் இதுவரையிலும் அறிமுகம் செய்யவில்லையே !" என்ற நெருடல் லேசாய் ஓடிக் கொண்டிருந்தது ! என்ன தான் வீரதீரர்களும், பயில்வான்களும் நம் அட்டவணைகளில் இடம் பிடித்திருந்தாலும் – புதியவர்களை வரவேற்கும் உற்சாகமே தனி தானே ? பின்நாட்களில் அவர்கள் உப்மா கிண்டவோ ; ஹக்கா நூடுல்ஸ் போடவோ தயாராகிடும் ஜெரெமியாக்களாகவோ ; லேடி S-களாகவோ; கமான்சேக்களாகவோ ; ஜடாமுடித் தாத்தா சார்களாகவோ உருமாறிடும் வாய்ப்புகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை ; ஆனால் புதியவர்கள் கொணரும் ஒரு தேஜஸ் எப்போதுமே ஜாலி ரகம் அல்லவா ? அப்போது தான் நமது பெல்ஜியம் காமிக்ஸின் ஆலோசகரும் சரி, 2016 பிராங்க்பர்ட் புத்தகவிழாவின் போது படைப்பாளிகளின் பிரதிநிதிகளும் சரி – பரிந்துரைத்ததொரு மினி தொடரின் நாயகி நினைவுக்கு வந்தார் ! அம்மணியின் பெயர் டாப் ராமெனோ ; மேகியோ என்று லேசாய் ஞாபகத்திலிருக்க, எனது டயரியை உருட்டினேன் ! அப்போது கைதூக்கி நின்றவர் தான் மேகி கேரிஸன் ! அம்மணி ஒரு டிடெக்டிவ்… அதாவது டிடெக்டிவாக முயற்சிக்கும் லேடி ! மயக்கும் சொப்பன சுந்தரியெல்லாம் கிடையாது ! சொல்லப் போனால் XIII தொடரில் வரும் மார்த்தாவைப் போலயிருப்பார் ஒரு சாயலில் ! So லேடி S போல அண்ட்ராயரோடு கிழக்கு ஐரோப்பியக் கூரைகளில் நடுச்சாமத்தில் ஓட்டமெல்லாம் இவர் எடுத்திட மாட்டார் ! மாறாக, லண்டனின் வீதிகளில் ஜாலியாய்ச் சுற்றியபடிக்கே தனது புலனாய்வுகளைச் செய்திடுவார் ! மொத்தம் மூன்றே ஆல்பங்கள் கொண்ட இந்த மினித்தொடருக்கு ஏகப்பட்ட சிலாகிப்புகள் நெட்டில் தென்பட்டது & கணிசமான விருதுகளும் ஈட்டியுள்ளது ! So டிசம்பர் 2021-ல் முதல் ஆல்பம் ; அதன் மறு வருஷத்துத் துவக்க மாதங்களில் மற்ற 2 ஆல்பங்களும் என அடுத்தடுத்து வெளியிட உத்தேசம் (ஜேஸன் ப்ரைஸ் பாணியில்). So – ‘செய்வன தில்லாய்ச் செய்‘ என்று கெத்தாகக் களமிறங்குகிறார் புதியவர் !

ஆக 9 ஆக்ஷன் இதழ்கள் கொண்ட சந்தா A -வின் அங்கத்தினர் மேற்படி நபர்களே ! Of course – இந்த நொடியில் உங்களுக்குள் ஓடக் கூடிய கேள்வி என்னவாகயிருக்குமென்று யூகிப்பதில் சிரமமில்லை ! "இருக்கு சரி ; இல்லாதது எங்கே ?" என்று யோசித்தபடிக்கே - "ரோஜர் கிடையாதா ? ப்ருனோ பிரேசில் கிடையாதா ? லார்கோ கிடையாதா ?" என்ற கேள்விகள் தடதடக்கக்கூடும் தான் ! லார்கோ தொடரினில் வெளியாகியுள்ள 2  பாக புது ஆல்பத்தினில் கதாசிரியர் வான் ஹாமின் absence ரொம்பவே உறுத்தும் விதமாய் அமைந்திருப்பதாய் எனக்குத் தோன்றியது ! புதுக் கதாசிரியர் முன்வைத்திருக்கும் செம complicated கதைக்கு மொழியாக்கம் செய்திட ஒரு பிசினஸ் டிக்ரீ  தேவைப்படுமென்பது எனது எண்ணம் ! அதனைக் கொண்டவரைத் தேடிப் பிடித்தே விட்டாலுமே - வாசிக்கக்கூடிய நமக்கெல்லாம் ஒரு மினி டிக்ரீயாச்சும் தேவைப்படலாம் ! So அடுத்த லார்கோ ஆல்பம் வரட்டும் என்று நினைத்தேன் ! ரோஜர் & ப்ரூனோ பற்றி நிறையவே பேசி விட்டோம் என்பதால்  ஜாலியாய் சந்தா B பக்கமாய் நடையைக் கட்டலாமா ? 






 சந்தா B :

As always – சந்தா B – போனெலியின் ஆடுகளமே ! And இங்குமே 9 இதழ்களே என்று தீர்மானித்தேன் - விற்பனையில் நமக்குத் பிராண வாயுவினை வழங்கிடும் டெக்ஸ் & டீமுக்கு போதிய இடமளிக்கும் விதமாய் ! And வழக்கம் போல ‘தல‘ முக்கால்வாசி இருக்கைகளைத் தனதாக்கிக் கொள்ள, பாக்கி இடங்களில் முண்டியடித்து இடம்பிடிக்கின்றனர் C.I.D ராபின் ; மர்ம மனிதன் மார்டின் & டைலன் டாக் !  “தெரிந்த சமாச்சாரம் தானே…? மஞ்சள் சட்டைக்காரர் தானே சதா நேரமும் limelight- ன் சொந்தக்காரர் ? என்று விசனம் கொள்ளும் ஒரு சிறு அணிக்குக் கூட .இந்த முறை சுவாரஸ்யமூட்ட 2 சமாச்சாரங்கள் கைவசமுள்ளன! 

சமாச்சாரம்  # 1 : ஒரு அதிரிபுதிரிக் கூட்டணி ! இத்தனை காலமாய் ஒரே புக்கில் நாலைந்து நாயகர்களின் சாகஸக் கூட்டணிகள் அமைந்திருப்பதைப் பார்த்திருப்போம் தான் ! அட… ஒரு டஜன் நாயக / நாயகியரும் ஒற்றை இதழில் இடம் பிடித்திருப்பதைக் கூடப் பார்த்திருப்போம் ! ஆனால் முதல் தபாவாக, ஒரே சாகஸத்தில் இருவர் இணைவதை 2021-ல் பார்த்திடவுள்ளீர்கள் ! மர்மங்களின் துப்பறிவாளர் அண்ணன் மார்ட்டினும், அமானுஷயங்களின் துப்பறிவாளர் டைலன் டாக்கும் ஒரே கரம் கோர்க்கவுள்ளனர் “உலகத்தின் கடைசி நாள்” சாகஸத்தின் உபயத்தில்! நல்ல நாளைக்கே இரு நாயகர்களும் சிண்டைப் பிய்த்துக் கொள்ளச் செய்வதில் நிபுணர்கள் ! இந்த அழகில் இவர்கள் இருவரும் "அண்ணா..தம்பி" என்று ஜோடி போட்டால் பூமி தாங்குமா ?" என்ற கேள்வி எழக்கூடும் என்பதாலோ, என்னவோ - தலைப்பு அவ்விதமாய் வைத்துள்ளேன் ! நமக்கு ரொம்பவே பரிச்சயமான இருவர் இப்படியொரு  ”வாசக நலக்கூட்டணி” அமைத்துள்ளார்களெனும் போது, அதனை ரசிக்கும் ஆர்வத்தை என்னால் அடக்கிட முடியவில்லை ! பிய்க்கவுள்ள சிண்டை ஒரேவாட்டி ; ஒரே இதழில் பிய்த்து விட்டால் வேலை சுலபமல்லவா ? And இதன் சித்திரத் தரமும் அசாத்தியம் என்ற போது மறுபேச்சின்றி ‘டிக்‘ அடித்தேன்! 

‘டிக்‘ என்றவுடன் தான் இன்னொரு ‘டிக்‘கும் நினைவுக்கு வருகிறார் ! நான் குறிப்பிட்ட முதல் டிக் – tick என்றால் ; இரண்டாவது டிக்கோ – Dick ! இது என்ன புதுக் கதை ? என்கிறீர்களா ? போனெலி 2018-ல் ஒரு புத்தம்புதுக் கதைவரிசையினை ; புத்தம்புதுத் தடத்தில் களமிறக்கினர் ! அப்போது உருவான ”Deadwood Dick“ எனும் புத்தம் புதிய வன்மேற்கு நாயகர் 2021-ல் தமிழ் பேசிடக் காத்திருக்கிறார் ! இவருமொரு வன்மேற்கு நாயகரே – ஆனால் with a difference ! அட… ஒவ்வொரு ஹீரோவுக்கும் தரும் பில்டப் தானே இது – என்ன புடலங்காய் difference ? என்று கேட்க நினைப்போர் நிச்சயம் இருப்பர் நம் மத்தியில் ! For starters – இவரொரு கறுப்பின இராணுவ வீரர் ! மாமூலாய் கௌபாய் கதைகளில் பட்லர் வேஷங்களையோ; ஆஜானுபாகுவான அடிமை வேஷங்களையோ போட்டுக் கொண்டு, பாவமாய்ச் சுற்றி வரும் தலைவிதி கறுப்பின நாயகருக்கு, இந்தத் தொடரினில் இராது ! தனிப்பட்ட சில சிக்கல்களிலிருந்து தப்பித்திடும் பொருட்டு இராணுவத்தில் சேரும் மனுஷன் அங்கே சந்தித்திடும் சவால்கள் ; யுத்தங்கள் ; வன்மேற்கின் அதகளங்களே “நரகத்திற்கு நடுவழியில்…" எனும் 4 பாக 200 பக்கத் தொகுப்பு ! இதன் செம highlight என்னவென்றால் மெய்யாலுமே அந்நாட்களில் “டெட்வுட் டிக்” வாழ்ந்திருக்கிறார் ! Nat Love என்ற ஒரிஜினல் பெயருடன் இருந்த கறுப்பினர், பின்நாட்களில் இராணுவத்தில் சேர்ந்து செம அதிரடிகளைச் செய்து “டெட்வுட் டிக்‘ என்ற பட்டப்பெயரை ஈட்டியிருக்கிறார் ! அவரது நிஜ வாழ்க்கையை பல நாவல்களில் சிலாகித்துள்ளனர் ! And நமது டெக்ஸ் எடிட்டரான மௌரோ போசெலியிடம் அது சிக்கிட, மொத்தம் 7 பாகங்கள் கொண்டதொரு மினி தொடரை உருவாக்கியுள்ளார் ! துவக்கத்து 4 பாகங்கள் ஒரு சுற்றாகவும்; பிந்தைய 3 இரண்டாம் சுற்றாகவும் அமைந்திட – 2021-ல் நாம் முதல் நான்கை ரசித்திடவுள்ளோம் ! So நான் குறிப்பிட்ட item # 2 இதுவே !

As always – போனெலி சந்தாவில் அதகளம் செய்திடவுள்ள நமது ‘தல‘ பற்றி இனி...!

- நேர்கோட்டுக் கதைகள் தான்…

- அடிக்கடி ஒரே பாணியிலான templates தான்…

- நிறையப் பில்டப்… நிறைய பன்ச் டயலாக்குள் உண்டு தான் !

- ஓங்கியடிச்சா ஒண்ணரை டன்னே தான் !

ஆனால்…ஆனால்…ஆண்களை மாத்திரமன்றி பெண்களையும் ; பெரியவர்களை மாத்திரமன்றி சிறியவர்களையும் மெய்மறக்கச் செய்யும் ஏதோவொரு மாயம் இந்த மனுஷனிடம் குடியிருப்பதை ஒவ்வொரு முறையும் பார்க்கத் தானே செய்கிறோம் ! ஞானப்பழத்தை வெற்றி கொள்ள லோகமெல்லாம் மயிலேறிப் பயணித்த ஆறுமுகத்தானைப் போல நமது இதர காமிக்ஸ் ஜானர்கள் குட்டிக்கரணம் ஒன்றைப் பாக்கி வைக்காது அடித்து விட்டு நிற்க, அம்மையப்பரை சிம்பிளாய் வலம் வந்து பழத்தைப் பெற்ற விநாயகரின் பாணியில் டெக்சோ நேர்கோட்டில் பயணித்து ஹிட்டடிக்கிறார் ! 2012-ல் நமது மறுவருகைக்குப் பின்பாய் ஏதேதோ சைஸ்களில் ; பக்க நீளங்களில்; விலைகளில் இதுவரையிலும் மொத்தம் 53 கதைகள் வெளிவந்துள்ளன டெக்ஸ் தொடரிலிருந்து ! And இன்று நம்மிடம் ஸ்டாக்கில் உள்ளதோ சுமார் 25 இதழ்கள் மட்டுமே ! ஒவ்வொரு புத்தக விழாவிலும் ஸ்கோர் செய்வதும் இவரே ; ஒவ்வொரு முகவரின் செல்லப் பிள்ளையும் இவரே எனும் போது - நாம் வாஞ்சையோடு இவரை இம்முறையும் அட்டவணையினுள் புகுத்திடுவதில் வியப்பு தான் ஏது ? வழக்கமான டபுள் ஆல்பங்களாய் கீழ்க்கண்ட 3 வரவுள்ளன :

- நெஞ்சே எழு…!

- கண்ணே கொலைமானே…!

- ஒரு பிரளயப் பயணம் !

And –‘தல‘ தனது இளம் பிராயத்தில் செய்த அதிரடிகள் 2021-ல் தொடர்கின்றன – 5 பாகங்களை ஒருங்கிணைத்து “திக்கெட்டும் பகைவர்கள்” வாயிலாக !  இளம் டெக்ஸின் தனித்தடம் இத்தாலியில் ரகளை செய்து வர, நாமும் அந்த ரயில்வண்டியில் ஒரு ஓரத்தில் தொற்றிக் கொள்ள முனைகிறோம் ! நடப்பாண்டினில் one of the most well received டெக்ஸ் கதையாய் "எதிரிகள் ஓராயிரம்" அமைந்திருப்பதால், இளையவரை நம் அட்டவணைகளில் இனி ரெகுலராக்கிடுவது காலத்தின் கட்டாயம் என்பேன் ! Young Tex - "எ.ஓ" ஆல்பம் வாயிலாக நாம் கவர் செய்தது சிங்கிள் ஆல்பம்ஸ் 1 to 4 . And இப்போதோ ஆல்பம்ஸ் 5 -9 என்ற அடுத்த ஐந்து ! இதன் ஆல்பம் # 10 மெபிஸ்டோவின் கதையோடு என்பதால் மாவீரரும், யுவாவும் 2022 வரைக் காத்திருக்க வேண்டிவரும் ! Sorry நண்பர்களே & better luck for sure next time ! 

அப்புறம் கறுப்பு-வெள்ளையிலேயே கலக்குபவருக்கு கலரைத் துணையாக்கினால், சும்மா எம்.ஜி.ஆர்.போல தகதகக்க மாட்டாரா - என்ன ? So தொடர்வது முழுவண்ணத்தில் The T & T ஸ்பெஷல் !! கலக்கலான டெக்ஸும் ; உடன்பிறவா டேஷாவும் - ஓவியர் சிவிடெல்லியின் கைவண்ணத்தில் பொக்கிஷம் தேடியொரு பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர் ! ரெகுலர் டெக்ஸ் சைஸிலேயே இந்த இதழ் கலரில் வெளிவருமென்பதால் கொத்துக்கறிலாம் வாங்க ஆள் அனுப்ப அவசியமிராதுங்கோ ! So இன்னொருக்கா அது குறித்து "Be careful"-ன்னு நேக்கு வார்ன் பண்ணிட டைப்படிக்கும் வேலை மிச்சமுங்ண்ணா உங்களுக்கு ! And வண்ணத்தில் ஜொலிக்கவுள்ள இந்த இதழும் 2021 தீபாவளிக்கு என்பதால், தல + தளபதி தீபாவளிக்கு வாய்ப்புகள் பிரகாசமோ-பிரகாசம் என்பேன் !!

‘தல‘ புராணம் இன்னமும் முடிந்தபாடில்லை – simply becos க்ளைமேக்ஸே இனித்தான் காத்துள்ளது ! God Willing, காத்திருக்கும் 2021 நமது முத்து காமிக்ஸிற்கும் சரி, லயனுக்கும் சரி, இரு massive மைல்கற்களைச் சுமந்து காத்துள்ளதொரு ஆண்டு  ! முத்துவின் # 450 மற்றும் லயனின் # 400 என்ற இந்த டவுள் தமாக்காவை ஒரிஜினலாய் ஜனவரி 2021-ன் சென்னைப் புத்தகவிழாவின் போது வூடு கட்டி அடிக்கத் திட்டமிட்டிருந்தோம் ! ஆனால் கொரோனா தாண்டவத்தின் உபயத்தால் சகலமும் went for a toss ! தாமதமானாலும் மைல்கல்லைத் தொட்டுப் பிடிக்காது போக மாட்டோம் எனும் போது – அவற்றிற்கென ஸ்பெஷல் இதழ்களைத் திட்டமிட வேண்டுமல்லவா ? நமது காமிக்ஸ் உலக க்ளிண்ட் ஈஸ்ட்வுட் முத்துவின் இதழ் # 450-ஐ அலங்கரிக்க உள்ளார் எனில், ‘தல‘ டெக்ஸ் & முழு டீமும் லயனின் இதழ் # 400-ஐ கலக்கவுள்ளனர் – “புத்தம் புது பூமி வேண்டும் !” எனும் 384 பக்க முழுநீள – முழுவண்ண மெகா த்ரில்லர் வழியே ! And ஆகஸ்ட் 2021-ல் இந்த இதழ் வந்திட வேண்டும் – ஆண்டவன் மாற்றியமைக்கத் தீர்மானிக்காத பட்சத்தில் ! And maybe அதற்குள் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு இந்த நுண்கிருமியை மனிதன் வென்றிடும் பட்சத்தில் – வாழ்க்கைகள் பழைய சகஜங்களுக்குத் திரும்பிடும் பட்சங்களில், ஈரோட்டின் V.O.C பார்க் சாலையை நாம் மறுக்கா தேய்த்தெடுத்து விடலாமோ ? Fingers massively crossed !

இதழ் # 9 ஆக அமைந்து இந்த சந்தா B-க்கு சுபம் போடக்காத்துள்ளவர் நமது CID ராபின் ! நம்மிடமுள்ள ஒரே அக்மார்க் டிடெக்டிவ்வை ஆண்டுக்கொருவாட்டி சந்திக்க இம்முறையும் வாய்ப்பு வழங்கிட எண்ணினேன் ! இங்கே போட்டியாய் நின்றோர் அக்கா ஜூலியா & அண்ணாத்தே டயபாலிக் தான் ! எனது பெர்சனல் சாய்ஸ் அக்கா தான் என்றாலும், கல்லாவுக்கும், அக்காக்கும் ஏழாம் பொருத்தமாய் இருப்பது தான் உறுத்தியது ! So ராபினோடு நிறைவுறுகிறது சந்தா B !! 

வழமை போல் - "இத்தினி மஞ்சசட்டைக்கார தாண்டவமா ?" என்ற வினவல்கள் இல்லாது போகாதென்பது புரிகிறது ! ஆனால் இன்றைய நிலவரத்தில் அவரது இடத்தினை ஆக்கிரமிக்க இன்னொரு தெறிக்கும் மாஸ் நாயகரைக் கண்ணில் கண்டாலொழிய விசில் போடுவது சந்தோஷமான காலத்தின் கட்டளை ! On an aside - அடுத்த பதிவினில் காத்துள்ள TEX தீபாவளி மலர் 2020 பற்றி எழுதிடவுள்ளேன் ! கடந்த 15 நாட்களை போனெல்லியின் ஆதர்ஷப் புத்திரனோடே செலவிட்டவன் என்ற வகையில் சொல்கிறேன் - இந்த மனுஷன் அத்தனை சீக்கிரத்தில் தனது சூப்பர் ஸ்டார் மகுடத்தைத் துறக்கப் போவதில்லை ! நீங்க பாயசம் கிண்டுங்கோ ; அல்வா கிண்டுங்கோ - ஆனால் அவற்றை உங்களுக்கே புகட்டிய கையோடு உங்களையுமே புன்னகைக்கச் செய்திடுவார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக்களே லேது ! 'தல' - நேற்றும், இன்றும், நாளையும் உனதே !







 சந்தா C :

Moving ahead - எப்போதும் போலவே சந்தா C - கார்ட்டூன்களுக்கோசரம் ! And இரண்டு நிமிடங்களுக்கு மேல் எனக்கு எடுக்கவில்லை - அதன் அங்கத்தினரை லிஸ்ட் செய்திட ! லக்கியான லக்கி லூக் முதல்பெயராகிட, அடுத்து உட்ஸிட்டி  கோஷ்டி இடம் பிடித்திட, ப்ளூ கோட் பட்டாளம் ஸ்லாட் # 3 ஐ தங்களதாக்கிக் கொண்டனர் ! மேக் & ஜாக் பர பரவென ஸ்லாட் 4 -ல் குந்திக்க,  மீசைக்காரர் க்ளிப்டன் ஐந்தாவதாய்த் தேர்வாகிக் கொண்டார் ! மாறுவேஷ மன்னன் ஹெர்லக் ஷோம்ஸ் & டாக்டர் வேஷ்டிசன் (!!) இறுதி இடத்தை எடுத்துக் கொள்ள - "வேலை முடிஞ்சது...வாங்கப்பா..பொர்ட்டா சாப்பிடலாம் !" என்றபடிக்கே நடையைக் கட்டத்தான் தோன்றியது ! லக்கிக்கு இம்முறையும் ஆண்டுமலர்ப் பொறுப்புகள் என்பதைத் தீர்மானித்திருக்க - இயன்ற சிறு வித்தியாசத்தைக் கொணர முயன்றேன், லக்கியோடு  ரின் டின் கேன் ஞானசூன்யமும் இடம் பிடித்திடும் ஒரு சாகசத்தின் புண்ணியத்தில் ! (தேங்க்ஸ் அனு !!) ஜெயிலில் கிடைக்குமொரு கோடீஸ்வரன் மண்டையைப் போடும்முன் தனது சொத்து பத்துக்களையெல்லாம் நம்ம ரின் டின்னுக்கு எழுதி வைத்து விட, ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிப் போகிறது ரின்னி ! அன்னாருக்கு டால்டன்கள் வலை வீச, நமது ஒல்லியார் பாதுகாவலுக்குப் போக - இது போதாதா படைப்பாளிகள் ரவுண்டு கட்டியடித்திட ? லயன் ஜாலி ஆண்டு மலரில் ரின் டின் தான் ஹைலைட். (PFB சார் !! பசங்ககிட்டே இப்போவே சொல்லி வச்சிடுங்க !!) 

அப்புறம் சிக்  பில் & கோ.வின் சாகஸமானது இம்முறை 20 பக்கங்கள் கூடுதலானது ! So அவர்களுடன் ஒரு நெடும் பயணம் வெயிட்டிங் ! 

ப்ளூகோட்ஸ் & மேக் & ஜாக் தாமுண்டு, தம் வேலைகளுண்டு என்று கிட்டும் எல்லா வாய்ப்புகளிலும் பவுண்டரிகளைச் சாத்திடும் ஆட்டக்காரர்கள் என்பதால் எனக்கங்கு கதைத் தேர்வு +  தலைப்பிடல் மட்டுமே வேலையானது ! 

கேரட் மீசைக்கார Clifton நிலவரத்தில் அத்தனை சுளுவல்ல எனது பணி ! தொடரின் பிற்பகுதிக் கதைகள் ரொம்பவே மொக்கை என நமது பெல்ஜிய  அட்வைசர் சொல்லியுள்ளதால் - ஆரம்பத்துக் கதைகளுக்குள்ளேயே உருட்ட வேண்டிப்போகிறது !  நகைச்சுவை சற்றே தலைகாட்டும் ஆல்பங்கள் அங்கும் கொஞ்சமே எஞ்சியிருப்பதால் - தொடரும் ஆண்டுகளில் இந்த தாத்தாவை பார்க்கும் வாய்ப்புகள் அத்தனை பிரகாசமில்லை என்பேன் ! 

Ditto for ஹெர்லக் ஷோம்ஸ் ! ஒரேயொரு கதையோ என்னவோ மட்டுமே, இத்தொடரில் இன்னும் எஞ்சியிருப்பதால் - this  could very well be goodbye time !

So நடப்பாண்டைப் போலவே 6 கார்ட்டூன் இதழ்களோடு கடை சாத்தும் நிலவரம் தொடர்கிறது ! கார்ட்டூன் பிரியர்களுக்கு இது தொடர் ஏமாற்றமாய் இருந்திடுமென்பது புரிகிறது - moreso இம்முறை MAXI லயனில் லுக்கி லூக் மறுபதிப்புகள் வெளிவரும் வாய்ப்புகளும் பட்ஜெட்டின் காரணமாய்த் தள்ளிப் போவதால் ! ஆனால் ஆக்ஷனே சகலமும் எனக்கருதிடும் பெரும்பான்மைக்கு மத்தியில் நாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் கொஞ்சம் சவுண்டு மட்டுமே விட்டுக் கொள்ளலாம் எனும் போது - நீலப் பொடியர்கள் ; பென்னி ; மதியில்லா மந்திரி ; லியனார்டோ ; ரின்டின் கேன் போன்றோரெல்லாம்  வெளியில் நின்றபடிக்கே கையை ஆட்ட மட்டுமே செய்திடுவர் ! 2022-ல் நிலவரம் இன்னமும் கலவரமாகிடக்கூடும் என்பதே எனது தற்போதையக் கவலை ! உருப்படியாய் க்ளிப்டன் இருக்க மாட்டார் ; ஹெர்லக் ஷோம்ஸ் காலியாகியிருப்பார் எனும் போது - நான்கே சிரிப்புப் பார்ட்டிகளோடு குடித்தனம் செய்யும் நிலைமை  எழுந்து நிற்கும் ! Of course - 'புதுசாய் தேடுடா அம்பி !' என்று பரிந்துரைக்கலாம் தான் ; ஆனால் நிஜத்தைச் சொல்வதாயின்- கார்ட்டூன்களின்  இந்தத் தோற்கும் யுத்தத்தில் விடாப்பிடியாய்த் தலையை விட்டு, பின்னே விடாப்பிடியாய்ச் சாத்து வாங்குவது அலுத்து விட்டது ! So நாலே நாயகர்கள் எஞ்சியிருப்பினும் அவர்களோடு நிம்மதியாய் வண்டியை ஓட்டிடுவதே சாலச் சிறந்தது என்று படுகிறது ! புண்ணியத்துக்கு அந்த நால்வரின் தொடர்களிலும் கதைகளுக்குப் பஞ்சமே லேது ! So இந்த ஹ்யூமர் வறட்சி சார்ந்ததொரு   நெருடல் இம்முறையும் நெஞ்சில் நெருடிக் கொண்டிருக்க - வேறு வழியின்றி அடுத்த பிரிவிற்கு நகர்கிறேன் ! "பலத்த ஏமாற்றம் ; இதை நாங்க எதிர்பார்க்கலை !" என்ற ரீதியிலான சாத்துக்களை டைப்பிடிக்க விரல்கள் நமநமப்பின் - put them on hold too folks ! இந்த விஷயத்தில் நொந்தே போயிருக்கும் முதல் ஆசாமி  நான் தான்  ! 



  
சந்தா E :

C முடிந்து நேராய் E பக்கமாய் குதிக்கிறேன் folks - நடப்பாண்டின் இந்த (வெகுஜன) சந்தா D தொடர்ந்திடாது - என்ற அறிவிப்போடு ! நம் நேரமோ, என்னவோ ஆண்டின் மூன்றாவது நாற்பது ரூபாய் இதழோடு கடைகளுக்குச் சென்ற சற்றைக்கெல்லாம் கொரோனாவின் பெயரைச் சொல்லி, லாக்டௌன்; சேல்ஸ்டௌன் ; வசூல்டௌன் என்று ஏதேதோ நிகழ்ந்து போயின ! தவிர இளம் டெக்ஸ் கதைகளை சந்தா D-யில்   வெளியிட வகையின்றிப் போக, அதனிடத்தினில் எட்டிப் பார்த்த golden oldies நிறைய பேரைப் பேஸ்தடிக்கச் செய்ததே மிச்சம் ! இன்னமும் ஜனவரியில் போட்ட இந்த சந்தா D புக்ஸுக்கு வசூல் தொக்கி நிற்கும் சூழலில், காத்திருக்கும் 2021-ல் இந்தப் பரீட்சார்த்தம் தொடர்ந்திடாது ! ஒரு தூரத்துப் பொழுதில், சகலமும் நலமான பின்னே, இன்னும் வீரியமான கதைகளைத் தேடிப்பிடித்த கையோடு இது குறித்து திரும்பவும் யோசிப்போம் ! So இப்போதைக்கு ஒரு எழுத்தை விழுங்கிவிட்டு நகர்வோம் ஒரு (brief ) சந்தா E திக்கினில் ! 

Truth to tell - இங்கேயும் 6 இதழ்களையே நான் திட்டமிட்டிருந்தேன் & கதைகளையும் shortlist செய்திருந்தேன் ! ஆனால் பட்ஜெட் ஏறிக் கொண்டே செல்வது நெருடியது ! தவிர, இம்முறை மட்டுமேயாவது இருண்ட களங்கள் வேண்டாமே ; இயன்றமட்டிற்கு சற்றே நார்மலான வாசிப்புகளுக்கு முன்னுரிமை தருவோமே என்று பட்டது ! So நான் தேர்வு செய்திருந்த 3 கலர் ஆல்பங்கள் + 3 black & white ஆல்பங்களில் வண்ணங்களை மட்டுமே முன்னுரிமை தந்து பாக்கியினை வேறொரு வேளைக்கெனப் பின்தள்ளிடத் தீர்மானித்தேன் ! So இம்முறை கி.நா.சந்தா நம்ம தலீவரின் புஷ்டியோடு மட்டுமே இருந்திடும் ! 

துவக்கம் தரவிருப்பது கூட தலீவரின் ஒடிசலும், எனது முன்மண்டையும் கலந்த ஜாடையில் இருக்குமொரு புதுவரவே ! And இவரும் ஒரு வெட்டியான் தான் ! ஏற்கனவே நமக்குத் பரிச்சயமான UNDERTAKER தாட்டியமான சீரியஸ் நாயகரெனில், இப்போது நாம் சந்திக்கவுள்ள STERN ஒரு studious டைப் ! செய்வது வெட்டியான் வேலையெனினும், மனுஷனுக்கு புத்தக வாசிப்பு மீது ஆர்வம் ஜாஸ்தி ; உலக ஞானம் உண்டு ; துப்பறிதலில் ஈர்ப்பு உண்டு ! And கதை நிகழ்வதும், நமக்கு உசிலம்பட்டி-வாடிப்பட்டி ரேஞ்சுக்குப் பரிச்சயமாகி நிற்கும் வன்மேற்கில் எனும்போது இந்தப் புது நாயகரை நம் அணிவகுப்பினுள் புகுத்துவதில் எனக்குத் தயக்கங்கள் இருக்கவில்லை ! இன்னும் சொல்லப்போனால் 2020-ன் அட்டவணையிலேயே இடம்பிடித்திருக்க வேண்டியவர் இவர் ; கடைசி நேரத்தில் ஏதோவொரு காரணத்தின் பொருட்டு வெயிட்டிங் லிஸ்டுக்கு நகர்த்தியிருந்தேன் ! இந்தத் தொடரில் இதுவரைக்கும் நான்கே ஆல்பங்கள் தான் உள்ளன என்றாலும், தொடர் பெற்றிருக்கும் அழகான வரவேற்பில் காரணமாய் இது நீந்திடும் என்றே தோன்றுகிறது ! எனக்கோ இந்தக் கதையின் template மட்டுமன்றி, இதன் செம breezy சித்திர பாணியும் ரொம்பவே பிடித்திருந்தது ! So let's say hello to :  "வழியனுப்ப வந்தவன்" - ஒரு  டிடெக்டிவ் வெட்டியான் / வெட்டியான் டிடெக்டிவ் ! முழுவண்ணத்தில் !

 கி.நா.# 2 ரொம்பவே வித்தியாசமான ஆக்கம் ! இதைப் பற்றி ரொம்பவே பில்டப் தரப்போவதில்லை நான் - simply becos "இதுவா இருக்குமோ ? அதுவா இருக்குமோ ? இப்டி இருக்குமோ ?" என்ற உங்கள் அலசல்களுக்கும் கொஞ்சம் space தேவைப்படலாமில்லையா ? "நிலவொளியில் நரபலி" வந்த அதே compact சைசில், முழுவண்ணத்தில், செம வித்தியாசமான கதையோட்டத்தோடும், சித்திர பாணியோடும் வெளிவரவுள்ள இந்த ஆல்பம் நிச்சயமாய் ரொம்ப different கி.நா. என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன் ! 

And # 3 தான் புது அட்டவணையிலேயே நான் அதிகம் எதிர்பார்த்திருக்கும் ஆல்பம் ! இதுவரைக்கும் நாம் ஏகப்பட்ட ஹீரோக்களை சந்தித்திருப்போம் ! மிடுக்கான ஜேம்ஸ் பாண்ட் ; ஆணழகன் லார்கோ ; மீசைக்கார ஷெல்டன் ; கம்பீரமான டெக்ஸ் ; ஸ்டைலான ரிப்போர்ட்டர் ஜானி ; rugged கேப்டன் டைகர் ; mysterious XIII என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் தானே ? ஆனால் இதுவரையிலும் இப்படியொரு ஹீரோ கூட்டணியை நாம் கற்பனையிலும் உருவகப்படுத்தியிருக்க மாட்டோம் என்பேன் ! Because "பெருசுகள் பட்டாளம்" என்ற அடையாளத்தோடு கைத்தாங்கலாய்க் களமிறங்கும் இந்த மூவரணி - 'இன்னிக்கு செத்தால் இப்போவே பால்' என்ற அகவைகளில் உள்ளோர் ! வாழ்க்கையின் அந்திப் பொழுதைத் தொட்டு நிற்கும் இந்த தாத்தாஸ் அத்தினி பேருக்கும் பல் போயிருந்தாலும், குசும்போ ; லந்தோ ; லூட்டிகளோ விடைதந்திருக்கவில்லை ! இவர்கள் தாத்தாஸ் அல்ல ; ஜாலிலோ ஜிம்கானா தாதாஸ் ! இவர்களை பற்றிப் போனவருஷத்தின் ஏதோவொரு தருணத்தில் இங்கே எழுதியிருந்தேன் என்பது லேசாக நினைவுள்ளது ! இம்முறை அவர்களைக் கண்ணில் காட்டியே தீர வேணுமென்றே முனைப்பில் "அந்தியும் அழகே" ஆல்பத்தினைத் திட்டமிட்டுள்ளேன் - முழு வண்ணத்தில் ! இவர்களது தொடரினில் ஓரளவுக்கு கதைகள் உள்ளன என்பதால் தாதாக்களை நீங்கள் வாஞ்சையோடு ஏற்றுக்கொள்ளும் பட்சங்களில் - லூட்டிகள் தொடர்கதையாகிடும் ! So ஏதோ பாத்துப் பண்ணுங்க யூத்ஸ் ! 

Thus ends the brief சந்தா E & effectively our regular சந்தா பிரிவுகள் !


 AND THEN - JUMBO>>>>

ஜம்போவின் அடுத்த சீசனைப் பற்றி இப்போவே விளம்பரம் செய்வதா ? அல்லது பிப்ரவரி / மார்ச்சில் பார்த்துக் கொள்வதா ? என்ற கேள்வியோடு நிறையவே மல்லுக்கட்டினேன் ! விளம்பரத்தை மட்டும் இப்போதே செய்திடலாம் - உங்கள் தொகைகளை இப்போதோ ; அப்போதோ அனுப்பிக்கொள்ளும் வசதிகளோடு - என்று இறுதியில் தீர்மானித்தேன் - for 3 reasons : 

Reason # 1 : நம்மில் இன்னமும் பாதிக்கு மேலான நண்பர்கள் இந்த வலைப்பக்கங்களை எல்லாம் கண்டுக்குவதில்லை என்பதே யதார்த்தம் ! வந்துச்சா புக்கு ? - படிச்சோமா ? - போய்க்கிட்டே இருந்தோமா ? என்றிருக்கும் அந்த அணியினரின் பார்வைகளில் நாம் நடுவாக்கில் செய்திடும் திட்டமிடல்கள் ; அறிவிக்கும் இதழ்களெல்லாம் போய்ச் சேர்வதில்லை ! 'நான் தான் எல்லாச் சந்தாக்களையும் கட்டிப்புட்டேன்லே ; எனக்கு "பிரிவோம்-சந்திப்போம்' ஏன் வரலை ? Zaroff ஏன் வரலை ? என்று கண்சிவப்போர் ஏராளம் ! அவர்களிடம் "இது ஜம்போ புக்ஸ் சீசன் 2 ..3 ..இதுக்கு நீங்க இன்னமும் சந்தா கட்டலீங்கோ !" என்பதை புரிய வைப்பதற்குள் நம்மவர்கள் வாங்கிடும் ஏய்ச்சுக்கள் ஒருவண்டி ! So அட்டவணையிலேயே ஜம்போவையும் highlight செய்துவிட்டால் எங்கள் மட்டிற்கு நோவுகள் கொஞ்சம் குறைச்சல் என்று நினைத்தேன் ! 

Reason # 2 : நடப்பாண்டினில் ஒரு ஓசையில்லா அதிசயம் நிகழ்ந்துள்ளது - ரெகுலர் சந்தாக்களை ஜம்போ ஓவர்டேக் செய்திடும் பாணிகளில் ! நவம்பரில் ஜம்போ சீசன் # 3 -ன் ஐந்தாவது இதழ் வெளிவரவுள்ளது & இதழ் # 6 ஆன Lone ரேஞ்சர் டிசம்பரில் களம் காண்கிறார் ! So ஜம்போவின் சீசன் 3 இம்முறை சர சரவென பூர்த்தி கண்டிடவுள்ளதால் - அடுத்த சீஸனின் அறிவிப்பினில் எனக்கு நெருடவில்லை ! 

Reason # 3 : இது எடிட்டர் குல்லாயோடு இல்லாது, ஒரு வாசகத் தலைப்பாகையோடு எடுக்கப்பட்ட தீர்மானம் ! என்ன தான் இது 9 மாதத்துக்கான அட்டவணையே என்பது தெரிந்தாலும் ; என்ன தான் கொரோனாவின் காரணமாய் ஓவர் அலம்பல் சாத்தியமல்ல என்று தெரிந்தாலுமே - மொத்தம் 27 புக்ஸ் மாத்திரமே கொண்ட அட்டவணை சற்றே 'பொசுக்' பீலிங்கை தரக்கூடும் என்று தோன்றியது ! ஒரு அட்டவணை தான் காத்திருக்கும் புதுப் பொழுதுகளின் நுழைவாயில் எனும் போது இங்கே உங்களுக்குக் கிட்டிட வேண்டிய மனநிறைவு ஏதேனுமொரு காரணத்தினால் குன்றிடும் பட்சத்தில் - அது நெருடிடக்கூடும் என்பது எனது எண்ணம். So மூன்று மாதங்களுக்கு அப்பாலிக்கா செய்திட வேண்டிய அறிவிப்புகளையும் இப்போதே இணைத்திடும் பட்சத்தினில் - செயலரின் புஷ்டி இக்கட சாத்தியமாகிடுமென்று பட்டது ! 

And before we get into the books - let me make it very clear folks : 

ஜம்போ சீசன் 4-ன் சந்தாத் தொகைகளை நீங்கள் பிப்ரவரி / மார்ச்சில் கூட அனுப்பிடலாம். அதனையும் இந்த நொடியே உங்களிடம் வசூலிக்கும் முனைப்பு சத்தியமாய் கிடையாது எங்களுக்கு ! இந்த விளம்பரங்கள் அடுத்த சீசனைப் பற்றியதொரு தகவல் பலகையைப் போன்றதே ! So "லோன் போட Lone  ரேஞ்சர் கிட்டே கேட்கலாமா ? இல்லாங்காட்டி சொத்தை அடமானம் வைக்கலாமா பங்காளி ?" என்ற ஆழ்சிந்தனைப் பரிமாற்றங்கள் ஆங்காங்கே அவசியமாகிடாது ! 

ஜம்போவில் வழக்கம் போலவே 6 இதழ்கள் தான் ! And வழக்கம் போலவே அவற்றுள் 4 இதழ்களின் அறிவிப்பு இப்போதே இருந்திடும் & பாக்கி 2 உரிய வேளையினில் ! கொஞ்சமாய் அந்த வெற்றிடம் இருக்கும் பட்சத்தில் - எனக்குக் கடைசி நிமிடச் சேர்த்தல்கள் / கல்தாக்கள் சாத்தியப்படும் என்பதால் அந்த பாணியைத் தொடர்ந்திடவுள்ளேன் !  

We start with : "ஒரு தலைவனின் கதை !

ஆல்பம் #  1 : வன்மேற்கினில் குடியிருக்காத குறையாக மாதா மாதம் யாரேனும் ஒரு நாயகரோடு அந்தப் பக்கமாய் உலாற்றித் திரியும் நமக்கு - எப்போதேனும் ஒருவாட்டி - அதே வன்மேற்கின் சாயம்பூசப்படா நிஜங்களின் அறிமுகம் இருத்தல் நலமென்று தோன்றியது ! ஜெரோனிமோ என்ற செவ்விந்தியப் பெருந்தலை சார்ந்ததொரு படைப்பு (நமக்குப்) புதியதொரு பிரெஞ்சுப் பதிப்பகம் வெளியிட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது ! 2016-ல் பிராங்கபர்ட் புத்தக விழாவினில் அவர்களை சந்தித்திருக்க, அப்போது வாங்கிய பல்பை தூர வீசி விட்டு, மறுக்கா முயற்சித்தோம் ! அவர்களுமே நமது ஆர்வங்களுக்கு இம்முறை அன்புடன் செவி சாய்த்திட -  தமிழ் பேச வருகிறார் ஜெரோனிமோ ! மூச்சிரைக்கச் செய்யும் சித்திரங்களும் வண்ணச்சேர்க்கையும் இந்த ஆல்பத்தை கண்களுக்கொரு விருந்தாக்கிடவுள்ளது highlight என்பேன் ! IMAGES ARE IN THE BOTTOM OF THE POST  !!

ஆல்பம் # 2 நமக்கு ஏற்கனவே பழக்கமான திடகாத்திர தாடிவாலாவே ! And ஒரிஜினல் வெட்டியானும் இவரே ! Yes - அண்டர்டேக்கரின் புது ஆல்பங்கள் 5 +6 கொண்ட தொகுப்பானது ஜம்போவினில் வரவுள்ளன ! சொல்லப்போனால்  ஆல்பம் # 6 தற்சமயம் பிரெஞ்சினில் இன்னும் வெளியாகவில்லை தான் ! ஆனால் காத்திருக்கும் நவம்பர் 27 -ல் பாகம் 6 உறுதியாய் வெளியாகிடவுள்ளதால் நமக்கு இதன் பொருட்டு no problems ! இம்முறையும் அண்டர்டேக்கர் மிரட்டோ மிரட்டென்று மிரட்டுவதால் "ஒரு வெள்ளைச் செவ்விந்தியன்" ஜம்போவின் ஹிட்லிஸ்டுக்கு உரம் சேர்க்குமென்று நம்பிடலாம் ! Fingers crossed !  

ஆல்பம் #3 - வழக்கம் போலவே ஒரு மாறுபட்ட one-shot ! இம்முறையோ அதுவொரு க்ரைம் த்ரில்லர் & yet another album  from French ! இப்போதைக்கு இந்த அறிமுகமே போதுமென்பதால் - "சித்திரமும் கொலைப்பழக்கம்" வெளிவந்திடும் நேரத்தினில் மீதத்தைத் தெரிந்து கொள்ளலாம் ! IMAGES ARE IN THE BOTTOM OF THE POST  !!

ஆல்பம் # 4 : மீண்டுமொரு க்ரைம் த்ரில்லர் & மீண்டுமொரு one -shot & மீண்டுமொரு பிரெஞ்சு ஆக்கம் ! ஆனால் இம்முறை அது black & white + grey shades -ல் உருவாக்கப்பட்டதொரு படைப்பு என்பதால் பக்கத்துக்குப் பக்கம் ஓவியரின் ஜாலங்கள் கண்ணைக் கட்டுகிறது ! கதையோ மிரட்டலானதொரு கொலையாளியைத் தேடிடும் whodunit ! "வைகறைக் கொலைகள்" எதுமாதிரியும் இருக்காப் புது மாதிரி ! IMAGES ARE IN THE BOTTOM OF THE POST !!

ஆல்பம் # 5 & 6 : என்னளவிற்கு தேர்வுகள் நிறைவுற்று, கதைகளும் ரெடியே ! ஆனால் திடுதிடுப்பென ஏதாச்சும் புதுசாய்க் கண்ணில்படும் பட்சத்தில் அதனை உட்புகுத்த இந்த அறிவித்திடா slots உதவிடும் என்பதால் இப்போதைக்கு 5 & 6 will stay under wraps !!



ஆக ஆண்டவன் அருளோடு காத்திருக்கும் 2021-ல்  நாம் குப்பை கொட்டவுள்ளது இந்த 27 + 6 இதழ்களோடு தான் ! நிச்சயமாய் இவற்றின் தேர்வுகளில் இம்முறை பெரிதாய் சர்ச்சைகள் இராதென்பதே எனது நம்பிக்கை - becos இருக்கும் முக்கிய நாயக / நாயகியர் சகலரையும் ஏதோ ஒரு இண்டிலோ, இடுக்கிலோ இணைக்க முற்பட்டுள்ளேன் ! அதே போல அரைத்த மாவை, அரைத்த அதே ஆசாமிகளோடு அரைத்திடாது, கொஞ்சமே கொஞ்சமாய்ப் புது வரவுகளை கண்ணில்க்காட்டவுமே முயற்சித்துள்ளேன் ! So இருக்கும் நமது வரையறைகளுக்குள் இயன்றதை, எனக்குத் தெரிந்த மட்டிற்கு நிறைவேற்றிடச் செய்திருக்கும் honest முயற்சி இது ! இனி இவற்றை அலசுவதும், ஆராய்வதும், சிலாகிப்பதும், சாத்துவதும் உங்களின் பொறுப்புங்க மக்களே ! 

கிளம்பும் முன்பாய் கொஞ்சமே கொஞ்சமாய் கேள்வி-பதில்களையும் சம்பிரதாயப்படியே செய்து முடித்துவிட்டால் ஆங்காங்கே கீ-பேட்கள் நசுங்கிடும் அவசியங்கள் இராதல்லவா ? So here goes :

  1. "சிக்கனம்...சுக்கா ரொட்டி " என்ற கோஷங்கள் காதிலே விழுந்துச்சே ; அப்பாலிக்காவும் மூவாயிரத்து எண்ணூருக்குச் சந்தாவாப்பா தம்பி ?

    Much as I wanted to keep the final number low - லயனின் இதழ் # 400 & முத்துவின் இதழ் # 450 எனும் மைல்கற்களை ஏனோ-தானோவெனத் தாண்டிச் செல்ல எனக்கு மனதில்லை ! So இந்த 2 இதழ்களுக்குமெனத் திட்டமிட்டிருக்கும் இதழ்கள் மட்டுமே பட்ஜெட்டில் ரூ.800-ஐ கோரிவிட்டுள்ளன ! இவற்றின் இடங்களில் ரெகுலர் இதழ்களே இடம் பிடித்திருப்பின் - நிச்சயமாய் மொத்தத் தொகை மூவாயிரத்தின் அருகிலேயே தான் இருந்திருக்கும் ! Again - விற்பனைகளின் கோணத்திலிருந்து பார்ப்பதாயின் - நமது ட்யுராங்கோ கையிருப்பு வெறும் இரண்டு இதழ்களே & டெக்சின் வண்ண இதழ் கையிருப்புமே இரண்டே தான் ! So கெலிக்கும் குதிரைகளை லாயத்திலேயே அடைத்து வைக்க வேண்டாமே என்ற அவாவில் எனது சந்தா வரையறையை அதிகமாக்கிட வேண்டிப் போய் விட்டது ! டெக்சின் ஐநூறு ரூபாய் இதழினை "முன்பதிவுகளுக்கு மட்டும்" என்று திட்டமிடும் எண்ணமும் லேசாய்த் தலைதூக்கியது தான் - ஆனால் ஒரு மாஸ் நாயகருடனான மைல்கல் இதழினை எல்லோருக்கும் சென்றடையும் விதமாய்த் திட்டமிடுவதே உத்தமம் என்று நினைத்தேன் ! 
  2. இரண்டே சந்தாப் பிரிவுகள் என்று சொன்னியே ; இப்போ 4 இருக்கே ?

    இங்கேயும் எனது வைராக்கியம், பிரசவகாலத்து வைராக்கியம் போலவே அமைந்துவிட்டது ! 'என்ன குட்டிக்கரணம் போட்டாலும் கார்ட்டூன்ஸ் ருசிக்காது / ரசிக்காது' என்போரும், 'என்ன ஜாலங்கள் செய்தாலும் கி.நா.க்கள் அறவே ஆகாது' என்போரும் நம்மிடையே இருக்கையில் நான் இரண்டே சந்தாக்களை மட்டுமே அறிவிப்பதாயின் - நாமே அவர்களை சந்தாவினில் தொடர்வதைச் சிக்கலாக்கியது போலிருக்கும் என்றுபட்டது ! So இம்முறை மூன்றே சந்தா ரகங்கள் இருக்கும் :

    சந்தா Falooda - A + B + C + E என நாலு பிரிவுகளும் !!
    சந்தா Vanila - கி.நா.க்கள் இல்லாத சந்தாக்கள் - A + B + C
    சந்தா Chocolate - கார்ட்டூன்ஸ் இல்லாத சந்தாக்கள் - A + B + E


    மேற்படி மூன்றுக்குமான அந்த லோகோக்களின் டிசைன் ஜூனியர் எடிட்டரின் உபயம் !! பார்த்தாலே நாவிலே ஜலம் ஊரும்  ஏதேனுமொன்றைத் தேர்வு செய்திடும் பொறுப்பு உங்களிடம் folks !! இந்த ஐஸ் க்ரீம்களில் எதுவுமே ஜல்ப்புப் பிடிக்கச் செய்திடாது என்பதால் தகிரியமாய் போட்டுத் தாக்கலாம் !



  3. இரத்தப் படலம் மறுக்கா மறுக்கா மறுக்கா பதிப்பு பற்றி ?

    முன்பதிவுகளின் எண்ணிக்கை இந்தப் பதிவினை நான் டைப் செய்திடும் வெள்ளி மாலை வரையிலும் 141-ல் நின்றது ! இன்றைக்கு மதியத்துக்குள்ளோ அவசரம் அவசரமாய் இன்னொரு 9 முன்பதிவுகள் - so தற்போதைய டோட்டல் 150-ல் கச்சிதமாய் நிற்கிறது ! நாம் அறிவித்திருந்த அக்டோபர் 31 காலக்கெடு இன்றோடு நிறைவுறுவதால் கிட்டத்தட்ட நாலரை மாதங்களின் அவகாசத்தினில் சாத்தியமாகியுள்ள நம்பர் இதுவே என்றாகிறது ! இன்னமும் இதே அளவுத் தொலைவினை மேற்கொண்டும் கடந்தாலொழிய இந்த project கரைசேர்வது துர்லபம் ! துவக்கத்தில் சஞ்சு சேம்சனின் வேகம் பிடித்து ; அப்புறமாய் கேதார்  ஜாதவின் மந்தம் கண்ட இந்த முன்பதிவுகள், கடைசி நாள் நெருங்க நெருங்க, மறுக்கா ஜோஸ் பட்லரின் ஆட்ட பாணிக்கு மாறியுள்ளது நிஜம் தான் ! So இன்று புதுச் சந்தா சார்ந்த அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நமது முழு focus இதன் மீதே இருந்திடும் / இருந்திட வேண்டும் ! So முதற்காரியமாய் இரத்தப் படலம் ஆன்லைன் லிஸ்டிங்கள் அனைத்தையும் (தாற்காலிகமாகவாவது) தூக்கிடச் சொல்லியுள்ளேன் ! ஏப்ரல் 2021-ல் நமது ரெகுலர் சந்தாக்களின் இன்னிங்ஸ் துவக்கம் கண்டான பின்பாய் சரியாக 60 நாட்கள் அவகாசம் மாத்திரமே தந்து மே 31 வரையிலும் மேற்கொண்டு முன்பதிவுகளுக்கு அவகாசம் தந்திடவுள்ளோம் - as promised already ! And முன்பதிவு நம்பர் 250-ஐத் தொடும் கணமே நாங்கள் அச்சுப் பணிகளைத் துவங்கிடுவோம் ! So 'இது ஹேஷ்யமான project அல்ல ; மெய்யாலுமே வெளிவந்திடும்' என்ற ஊர்ஜிதம் கிட்டிடும் சமயத்தில், விளிம்பில் நின்று சிந்திக்கும் நண்பர்கள் ஆர்வம் காட்டுவார்களென்ற நம்பிக்கையுள்ளது !   Maybe 250 பக்கமாய் முன்பதிவுகள் பயணிக்கவேயில்லை  ; இலக்கு எட்டாக்கனியாகவே தொடர்கிறதெனில், மொத்தத் திட்டமிடலுக்குமே டாட்டா காட்டுவதே நமக்கிருக்கும் வழியாகிடும் !

    In the meantime - இதுவரையிலும் முன்பதிவு செய்துள்ளோரில் யாருக்கேனும் வாபஸ் வாங்கி கொள்ளும் ஆர்வமிருப்பின், ஒரேயொரு மின்னஞ்சலைத் தட்டி விட்டால் போதும் - உங்களின் முன்பதிவுத் தொகைகள் உங்களிடம் மறு நாளே இருந்திடும் ! தம்படிக் காசைக் கூட அதனிலிருந்து செலவிடவில்லை என்பதால் refunds are possible now ! (ப்ராஜெக்ட் துவக்கம் கண்டான பின்னே refund கோரினீர்களெனில்  , அதற்கு வாய்ப்பிராதுங்கோ !)

    லாக்டௌனின் உச்சத்தினில், பதட்டத்தில், நானாய் வலியப் போய் தேடி அமர்ந்து கொண்ட இந்த ஆப்பிலிருந்து வெளியேற எனக்கு வேறு வழிகள் தெரியில்லா ! Maybe if someone has a better option - கேட்டுக்கொள்ளத் தயாராகயிருப்பேன் !  But இப்போது நான் அறிவித்துள்ளதே இந்த நொடியின் எனது நிலைப்பாடு !
  4. இந்தாப்பா - இரத்தப் படல spin-off கிடையாதுன்னா பூமி குப்பறடிக்கா சுழலுமே - பரால்லியா ?

    Spin-off இல்லாத spinning world-ல் எதையாச்சும் பிடிச்சுக், கிடிச்சு சமாளிச்சுப்பேன் ! இத்தொடரினில் - ஆங்கிலத்தில் நானே படித்துப் புரிந்துகொள்ளும்படியாய் தெளிவான ஆல்பங்கள் என்றைக்கு வெளியாகின்றனவோ அன்றைக்கே நான் படித்து, ஒரு தீர்மானத்துக்கு வந்த பிற்பாடு மேற்கொண்டு யோசிக்கலாம் என்று உத்தேசித்துள்ளேன் ! So அதுவரையிலும் offspin ; legspin என்பதோடு வண்டியை ஒட்டிட நினைக்கிறேன் ! 
  5. MAXI லயன் ; வாண்டு ஸ்பெஷல் ??

    ஏற்கனவே இவை குறித்துப் பேசி விட்டோம் என்பதால் no more reruns ! கொரோனா இல்லா உலகம் சாத்தியமாகி, நார்மலான நாட்கள் புலர்ந்திடின், நமது ஆன்லைன் புத்தக விழாக்களோ ; வழக்கமான புத்தக விழாக்களோ மறுதுவக்கம் கண்டிட்டால் - MAXI ஆஜராகிடும் !
  6. ஈரோட்டுக்கு ????

    மறப்போமா ? பதிலுக்குப் பத்தி பத்தியாய் டைப்படிப்பதற்குப் பதிலாய் - இதோ பதில் !! 

  7. விலைலாம் கூடியிருக்கே..இன்னா மேட்டரு ?

    நிலவரம் என்னவென்பதும், விற்பனைகளின் சுணக்கங்களின் பரிமாணம் என்னவென்பதும் ஊருக்கே தெரியும் எனும் போது, இதுவொரு தவிர்க்க இயலாத தீர்மானமாகிறது ! மொத்தச் சந்தாவினில் நாம் செய்திருக்கும் விலையேற்றம் பிரதிபலிப்பது ரூ.160 என்ற மட்டிற்கே ! So இதை நியாயப்படுத்துகிறேன் பேர்வழி என நான் ஒரு பாட்டம் பாட்டுப் படிப்பதும், அதனையும் பொதுவெளியில் போட்டு துவைத்துத் தொங்கப்போடுவதும்,  நிச்சயமாய் யாருக்கும் பயன் தரப் போவதில்லை ! வியாபாரம் சார்ந்த முடிவுகள் இனி என்னோடே துவங்கி, என்னோடே முடிந்தும் விடும் சமாச்சாரங்களாகவே இருந்துவிட்டுப் போக அனுமதி கோருகிறேன் guys ! 
    ##############################################################################
    Phew !!!!! நிறைவாகவோ, சுமாராகவோ - ஆண்டின் எனது பிரதானப் பணிகளுள் ஒன்றை நிறைவு செய்திட்ட திருப்தியுடன் கிளம்பிட முனைகிறேன் guys ! இது தான் தற்போதைய best என்றெல்லாம் மார்தட்டிக் கொள்ள மாட்டேன் - simply becos ரசனைகளெனும் வானவில்லனில் யார் - எங்கே நிலைகொண்டுள்ளனர் என்பதைப் பொறுத்தே இது ரசிக்கவோ - கடிக்கவோ செய்திடும் என்பதில் ஏது ரகசியங்கள் ? So எனக்குச் சாத்தியப்பட்ட பெஸ்ட்டை ; உங்களின் அண்மைகளோடு களமிறக்கிட ஆண்டவன் yet another வாய்ப்பினை நல்கிடுவார் என்ற நம்பிக்கையோடு உங்களிடமிருந்து இப்போதைக்கு விடைபெற்றிடுகிறேன் !

    Uh oh....இன்னொரு விஷயம் ; ரெம்போ முக்கிய விஷயம் பாக்கியுள்ளதே !! அதனைச் சொல்லிடாது எங்கே நான் கிளம்புவது ?

    நமது சிறுவட்டத்தினுள் பெரும்சிந்தனை கொண்டோருக்குப் பஞ்சமே கிடையாதென்பது நமக்குத் தெரிந்ததே  ! நட்புக்களுக்குக் கரம்நீட்டுவது ; அவசியங்களுக்கு உதவிடுவது ; நமது இக்கட்டுகளில் தோள் கொடுக்க முனைவது ; சந்தா செலுத்தச் சிரமம் காணும் நண்பர்களுக்கு இயன்றமட்டிலும் ஒத்தாசை செய்வதென அந்தப் பரோபகாரப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது ! அதன் yet another அத்தியாயம் போன வாரம் நான் குறிப்பிட்டதொரு மின்னஞ்சல் மார்க்கமாய் :

    "நமது சிறுவட்டத்திலுள்ள நண்பர்களை இந்த இடர்மிகு காலத்திலும் சந்தாக்களில் தொடர்ந்திட ஊக்குவிக்கும் விதமாய் ஏதேனும் செய்யணுமே சார் ; அதற்கு எனது பங்களிப்பாய் ரூபாய் ஒரு லட்சம்  அனுப்பிட விழைகிறேன் !  அதனை சந்தாவினில்  ஒரு discount ஆகப் பிரித்து சந்தா நண்பர்களுக்கு வழங்கினாலும் சரி ; ஏதேனும் பிரத்யேக gift போல சந்தாதாரகளுக்குத் தந்திட்டாலும் சரி - தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் !"

    மேற்படியே அந்த மின்னஞ்சலின் சாராம்சம் !

    குத்துமதிப்பாய் சுமார் 500 சந்தா நண்பர்கள் 2021-க்குக் கிட்டிடும் பட்சத்தில், அவர்கட்கு தலா ரூ.200 discount எடுத்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கும் ! அல்லது ரூ.200 பெறுமானமுள்ள ஏதேனும் அழகான புக்கை நண்பரின் அன்புடன் நாம் தயாரித்து வழங்கிடும் வாய்ப்புமிருக்கும் ! Honestly ஸ்தம்பிக்கச் செய்துள்ளது நண்பரின் இந்த மின்னஞ்சல் & கடந்த ஒரு வாரத்தில் தீபாவளி மலர் சார்ந்த பணிகள் கழற்றிய பெண்டின் மத்தியினில் இது குறித்து சிந்திக்க நிறைய அவகாசம் எடுத்துக் கொள்ள இயலவில்லை ! But வெள்ளியிரவு இது பற்றி யோசிக்க முயற்சித்த போது - இரண்டு option களையுமே நடைமுறைப்படுத்தினால் தப்பில்லை என்றே பட்டது !

    So சந்தா Falooda-வுக்கு 'ஜே' போடும் நண்பர்களுக்கு ரூ.200 திருப்பி வாங்கிக்கொள்ளும் வாய்ப்பு இருந்திடும். You'll have to send us the full amounts & we will send Rs.200 back to you - once enrolment is completed & we are sure of the actual numbers ! (அவ்விதம் செய்யாவிடின் சந்தா ஆன்லைன் லிஸ்டிங்கில் ஒரு நூறு குழப்பங்கள் நேர்ந்து விடும் !! )

    Discount வேண்டாமென எண்ணிடும் சந்தா நண்பர்கள் , கீழ்க்கண்டஇதழினை  விலையின்றி April 2021-ல் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் இருந்திடும் ! Again just for Falooda சந்தா  !!

    TEX - கழுகு வேட்டை  - முழு வண்ணத்தில் - ரெகுலர் சைசில் -  ஹார்ட்கவர் !!
  8. And சந்தாவில் இல்லாத நண்பர்கள் இந்த கிளாசிக் மறுபதிப்பினை , அதன் அசல் cover price ரூ.250-க்கு 2021-ன் முதல் புத்தக விழாவின் வேளையில் (கோவை ? ஈரோடு ? மதுரை ?) வாங்கிடும் வாய்ப்பிருக்கும் !

    So சந்தா எக்ஸ்பிரஸின் கோச் விபரங்களும் உங்கள் முன்னே ; டிக்கெட் கட்டணங்களையும் அறிவித்தாச்சு &  இதோ வழியில் கொறிக்க பரோபகார நண்பரின் snacks கூட ரெடி ! பயண முஸ்தீபுகளில் நாங்கள் வருஷம் முழுக்க கச்சை கட்டிக்கொண்டே தயாராய் இருப்பதால் - நீங்கள் கரம் கோர்க்க வேண்டியது மட்டுமே பாக்கி folks ! As always இந்தப் பயணம் உங்கள் அனைவரின் துணையின்றி முழுமையடையாது என்பதால் - ஆர்வமாய்க் காத்திருப்போம் ! ஆண்டவன் அருளோடு ஒரு சந்தோஷப்பயணம் வாய்த்திட வேண்டியபடிக்கே இப்போதே நடையைக் கட்டுகிறேன் !

    Thank you for reading this & thank you for being the wonderful people you are !! Bye for now ! மீண்டும் சந்திப்போம் !

    And  ஆன்லைன் listings தயார் : https://lioncomics.in/product/falooda-subscription-2021-april-to-december-abce-other-state/




Saturday, October 24, 2020

பணியும்..பனியும்..!

நண்பர்களே,

வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது ! அதற்குக் காரணங்கள் இரண்டு ! இல்லே..இல்லே..மூணு !

பிரதானமானது – காத்திருக்கும் நவம்பரின் பணிகள் டாப் ஸ்பீடில் இக்கட ஓடிக் கொண்டிருப்பதே ! ஒவ்வொரு சமீப ஆண்டுமலரையும் நமது ஒல்லிப் பிச்சான் மஞ்சள்சட்டையோடும், ஒவ்வொரு தீபாவளியையும் திடகாத்திர மஞ்சள்சட்டையோடும் கொண்டாடி வருவது தெரிந்த சமாச்சாரமே ! And true to form – இம்முறையுமே தீபாவளி with டெக்ஸ். அட்டவணையினில் ஒரு முன்னணியான ஸ்தானத்தைப் பெற்றுள்ளது  ! திட்டமிடும் போது பந்தாவாய் 500 பக்கம் / 600 பக்கம் என்றெல்லாம் போட்டு விடுவது செம ஜாலியாகத் தானுள்ளது ! ஆனால் 'அள்ளி விடும் அழகப்பனின்' பாணி சுலபம் ; புஜம் கதற செயலில் இறங்க வேண்டிய செங்கோடனின்  பணி சுலபமேயல்ல என்பதை 101-வது முறையுமே கண்டுபிடித்து வருகிறேன் ! டெக்ஸ் தான்... நம்ம கார்சன்  தான்... நேர்கோட்டுக் கதைகள் தான்... black & white தான்... So பெருசாய் சிக்கல்கள் இருந்திடக் கூடாது தான் ! அதாவது – ஒரு உத்தம உலகினில் சிக்கல்கள் இருந்திடக்கூடாது தான் ! ஆனால் நாம் வசிப்பதோ உத்தமங்கள் வீசம்படி எவ்வளவென்று கேட்கும் உலகில் தானே ? So எந்தத் திட்டங்கள் தான் drawing board-ல் உள்ள அதே எளிமையோடு நடைமுறை கண்டிட முடியும் ?

2 MAXI நீளங்களிலான டெக்ஸ் சாகஸங்கள் இம்முறை ! (அண்ணோவ்ஸ் : கவனிக்க - MAXI நீளங்கள் மட்டுமே   !!) முதலாவது “யுத்த பூமியில் டெக்ஸ்”! பெயரே கதையின் பாதியைச் சொல்லி விடுவதால் – இது நமது ‘தல‘ ப்ளாஷ்பேக் என்பதை உங்களில் நிறையப் பேர் யூகித்திருக்கலாம் ! And yes – அமெரிக்க வரலாற்றினில் ஒரு நீங்காக் கறுப்புப் புள்ளியாகவும், பின்நாட்களில் வன்மேற்கு சார்ந்த நாவல்கள், காமிக்ஸ் போன்ற படைப்புகளின் ஆசிரியர்கள் விடாப்பிடியாய்ப் பிடித்துத் தொங்கிக் கொள்ளவொரு கிளையாகவும் அமைந்து போன வடக்கு Vs தெற்கு (Union vs Confederates) என்ற உள்நாட்டுப் போரே இங்கே பின்புலம் ! பெரியவர் போனெலியின் கைவண்ணத்தில் உருவான இந்த ஆல்பமானது டெக்ஸின் ரசிகர்கள் அத்தனை பேருக்கும் ஒரு “இன்றியமையா இதழ்” என்ற பாணியில் நிறையவே இன்டர்நெட் குறிப்புகளைப் பார்த்திட முடிந்தது ! So எனது கதைத் தேர்வு அமைந்தது அந்தப் பின்னணியிலேயே & பணிகளுக்குள் புகுந்த போது தான் அதன் காரணமும் புரிந்தது ! நம்மவருக்கு இந்த யுத்தத்தில் இருந்த நேரடிப் பங்கு பற்றி பிசிறின்றி கதை நகற்றிச் சென்றுள்ளனர் ! அதே சமயம், இது இரவுக் கழுகாரின் “ரேஞ்சர் நாட்களுக்கு” முந்தைய காலகட்டம் என்பதால் நெஞ்சில் பாட்ஜோடு எதிரிகளை துவைத்துக் காயப் போடுவது இங்கு நிகழ்வதில்லை ! மாறாக யுத்தமண்ணிலும் வீரத்தை, விவேகத்தைக் காட்டி டெக்ஸ் களமாடுவதே இந்த 300+ பக்க சாகஸம் ! ஒரு பக்கம் யுத்த பூமி.. யுத்த மாந்தர்கள்... யுத்த யுக்திகள் என சகலமும் வரலாற்று வரிசைப்படிக் கச்சிதமாய் இருந்திட, அதனூடே நம்மவரை நுணுக்கமாய் நுழைத்திட பெரியவர் போனெலி அழகாய்த்  திட்டமிட்டுள்ளார் ! And சமீப மாதங்களின் நடைமுறை இப்போதுமே அமலில் – இன்டர்நெட்டில் தகவல்கள் தேடும் பொறுப்புகள் சொல்லோ ! அக்டோபர் இதழ்களின் பொருட்டு அமெரிக்க அரசியல் பற்றிப் படிக்க நேர்ந்ததெனில் – தற்சமயம் அமெரிக்க வரலாற்றுக்குள் எட்டிப் பார்க்க அவசியப்பட்டது ! போகிற போக்கில், இப்டியே தொடர்ந்தாக்கா – நெக்ஸ்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அண்ணாத்தே கூட நிற்கலாம் போலிருக்குது ! 2024 !! போடுங்கய்யா வோட்டு – ஆந்தை சின்னத்தைப் பார்த்து !

ஆல்பத்தின் கதை # 2 – மௌரோ போசெல்லியின் ரொம்பவே வித்தியாசமான கைவண்ணம் - பனிவனப் படலம்  ! இங்குமே கதையின் தலைப்பு ஒரு giveaway எனும் போது – மாமூலான மொட்டைப் பாலைவனங்களில் நம்மவர்கள் சுற்றித் திரியப் போவதில்லை என்பது புரிந்திருக்கும் ! And கதை சுற்றிச் சுழல்வது கனடாவின் பிரம்மாண்ட பனி பூமியினில் என்பதையுமே யூகித்திருக்கலாம் ! இந்த ஆல்பத்தின் உரிமைகளை நாம் வாங்கியது 3 ஆண்டுகளுக்கு முன்னமே ! And இதன் மொழிபெயர்ப்பை கருணையானந்தம் அங்கிளிடம் ஒப்படைத்ததும் 36 மாதங்களுக்கு முன்பாகவே ! ஆனால் தொடர்ந்த ஆண்டுகளில் இத்தனை பக்க நீளத்திலானதொரு மெகா சாகஸத்தை நுழைக்கும் சந்தர்ப்பங்கள் சரிவர அமையாது போனதால், இது வெயிட்டிங்கிலேயே இருக்க நேரிட்டது ! 2020 -ன் அட்டவணையினுள் இதனை நுழைத்தே தீருவது என்ற தீர்மானத்தின் பலனே இந்த "தீபாவளி with TEX ! ஒரு மாதிரியாய் இதன் டைப்செட்டிங் பணிகள் சில நாட்களுக்கு முன்பாய்த் துவங்கியிருக்க – முதலிரண்டு பாகங்கள் நிறைவுற்று என் மேஜையில் காத்துள்ளன எடிட்டிங்கோசரம் ! சுமார் 30 பக்கங்கள் வரையிலேயே தான் நானும் வாசித்திருக்கிறேன் – ஆனால் மெய்யாலுமே இதுவரையிலும் இக்கதையின் plot பற்றித் துளியும் யூகிக்க முடியவில்லை ! கதை துவங்குவதே பனிபடர்ந்த ஆற்றில் ஒற்றைப்படகில் மிதந்து வரும் சடலத்தோடு எனும் போது துவக்கமே மர்ம கியர் எகிறுகிறது ! ஆர்வம் தாளாமல் பின்பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் ஏகப்பட்ட ஆக்ஷன் தெறிக்கிறது & அத்தனையும் நடுங்கச் செய்யும் கனேடிய பனிவனங்களில் எனும் போது டெக்ஸ் & தாத்தா சார் செம கம்பீரமாய் பனி அங்கிகளை அணிந்து கொண்டு கதை நெடுக வலம் வருவது தெரகிறது ! வெள்ளியிரவினில் தான் “யுத்த பூமியில் டெக்ஸ்” முப்பாகத்தினில் எனது பணிகள் முடித்து DTP-க்கு ஒப்படைத்திருக்க, அதனில் திருத்தங்களை இப்போது போட்டு வருகிறார்கள் !  So அவர்களை யுத்த பூமி பிசியாக வைத்திருக்க, என்னையோ பனி பூமி அழைக்கிறது ! இன்றோ - நாளையோ அதனிலும் எனது வேலைகளை முடித்துக் கொடுத்து விட்டால், விடுமுறைகள் முடிந்த நாட்களில் அச்சுக்குப் புறப்பட்டுவிடுவோம் ஜல்தியாய் !  In the meantime yet another பனிவனம் அழைத்து நிற்கிறது – இம்முறையுமே நம் இரவுக்கழுகாரின் உபயத்தில் ! அது வேறெதுவுமில்லை; தீபாவளி மலரோடு வண்ண இணைப்பாக வந்திடவுள்ள 32 பக்கச் சிறுகதை ! And தமிழ் சினிமாக்களுக்கு இத்தாலியிலும் ஒரு audience உண்டென்பதை என்னளவுக்கு நம்பச் செய்யும் சிறுகதை இது ! Simply awesome !! அதற்குப் பேனா பிடிக்கும் பணியையும் நிறைவு செய்திட்டால், நவம்பர் இதழ்களின் செம tough பணிகளுக்கு சுபம் போட்ட திருப்தி கிட்டிடும் ! 650+ பக்கங்கள் எனும் போது, ராவுக்குக் கட்டையைக் கிடத்தினாலுமே உறக்கம் பிடிக்க மறுக்கிறது ! பண்டிகை நாள் November 14-ம் தேதி தான் என்றாலும், இம்முறை நவம்பர் 9-ம் தேதியே டெஸ்பாட்ச் செய்தாக வேண்டும் என்பதில் முனைப்பாகவுள்ளோம் ! And இந்த அறுநூற்றுச் சொச்சப் பக்க புக்கானது hardcover எனும் போது, பைண்டிங்கிற்கு போதிய அவகாசம் தந்திட வேண்டியுள்ளது ! So பத்தி பத்தியாய் பதிவுச் சாயாவை ஆத்திடாது, இம்முறை பணி சார்ந்த சாயாவை ஆத்துவதே சாலச் சிறந்ததென்று பட்டது ! (இப்படிச் சொல்லியே 3 மாடியைக் கட்டிப்புட்டியே மன்னாரு?! - காமிக்லவர் மைண்ட்வாய்ஸ் )

And இதோ – நமது அமெரிக்க ஓவியை + நமது டிசைனர் பொன்னனின் கூட்டணியிலான இந்த மெகா இதழுக்கான அட்டைப்பட முதற்பார்வை ! 

எப்போதையும் விட இம்முறை நகாசு வேலைகளையும் அடித்துத் தாக்கியுள்ளோம் என்பதால், ஆல்பம் உங்கள் கைகளை எட்டும் போது, தடவிப் பார்த்து ரசிக்கவே நிறைய நேரத்தையும் கைவசம் வைத்துக் கொள்ளல் தேவலாம் என்பேன் ! இதோ – இரு ஆல்பங்களிலிருந்தும், சில உட்பக்க previews :


சாயா ஆத்தும் கடமையை நிங்கள் கைகளில், இம்முறை நான் ஒப்படைக்க நினைக்கும் காரணம் # 2 பற்றி இனி...! 

ஒற்றை வாரமே காத்துள்ளது – நமது 2021-ன் அட்டவணை ரிலீஸுக்கு! ஒன்பது மாதங்களுக்கு மட்டுமே திட்டமிடல் என்பதால் absolutely essential என்ற நாயக / நாயகியரைத் தவிர்த்து பாக்கிப் பேருக்கெல்லாம் இதயத்தில் மட்டுமே இடம் என்பதில் no secrets ! ஆகையால் இம்முறை அட்டவணையை யூகிப்பதில் உங்களுக்கு பெரிதாய்ச் சிரமங்கள் இராதென்றே படுகிறது எனக்கு ! So இந்த வாரம் ஆளுக்கொரு எடிட்டர் குல்லாவை மாட்டிக் கொண்டு, ஆளுக்கொரு அட்டவணை தயார் செய்ய முற்பட்டாலென்ன guys ? Of course – நான் புதுசாய் நுழைக்கக் கூடிய நாயக / நாயகியரை யூகிக்க வழிகள் இராது தான் ; ஆனால் அவை தவிர்த்து பொதுவானதொரு அட்டவணை மாதிரியைத் தயாரிக்க முயற்சிகள் ப்ளீஸ் folks ?

Maybe உங்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புகள் நான் முக்கியத்துவம் தந்திரா ஏதேனுமொரு ஆசாமன் or ஆசாமி மீது லயித்திருக்கும் பட்சத்தில், ஜல்தியாய் எனது அட்டவணையினில் திருத்தங்களைப் போட்டுக் கொள்ள வசதியாக இருக்குமல்லவா ? So இந்த ஒற்றை வாரம் கொஞ்சமாய் நீங்கள் மெனக்கெட்டால், அதன் பலன் அடுத்தாண்டின் திட்டமிடலில் பிரதிபலிக்க வாய்ப்புகள் உண்டு ! “என்னெத்தக் கதை தேர்வு பண்றான் மாக்கானாட்டம் ? நான்லாம் இதே வேலையைச் செஞ்சாக்கா  வூடு கட்டி அடிச்சிருப்பேனாக்கும் !” என்று அப்புறமாய் சாவகாசமாய் FB-யிலோ; வாட்சப் குரூப்களிலோ தொடை தட்டுவதைத் தவிர்க்க நினைத்திட்டால் – this is the time for it ! And எனது இறுதித் திட்டமிடலுக்கு நெருங்கிய செலக்ஷன்களை செய்திடும் Top 3 தேர்வாளர்களுக்கு a சந்தாப் பிரிவு  of their choice -  நம் அன்புடன் ! ”So சும்மானாச்சும் பிலிம் காட்டறான்டா டோய்” என்ற பகடிகள் would be out of place !

And நான் டெக்ஸுடன் பனிக்காட்டுக்குள் புகுந்திட தயாராகும் முன்பாக ஒரு அதிரடி நியூஸ் ! பணிகள் சகலமும் முடிந்தது ; அட்டவணையை அச்சுக்கு எடுத்துப் போகலாமென்ற தீர்மானத்திற்கு நான் வந்திருந்த வெகு சமீபத்தைய நாளில் ஒரு மின்னஞ்சல் ! தொடர்ந்தது எ-ன்-ன ? என்பதை அறிந்து கொள்ள நீங்கள் இன்னொரு வாரம் காத்திருக்க வேண்டி வரலாம் ! ஏனெனில் மின்னஞ்சலின் சாராம்சத்தை மண்டைக்குள் அசைபோட்டு வருகிறேன் - அதனில் உள்ள சமாச்சாரத்தை  நடைமுறைக்கு கொணர சாத்தியங்கள் உள்ளனவா என்ற மஹாசிந்தனைகளோடு ! If it does work out - தொடரவுள்ள 2021-ன் சந்தா அணியினில் ஐக்கியமாகிட கூடுதலாகவொரு சூப்பர் காரணமும் இருந்திடக்கூடும்...! இப்போதைக்கு அந்தத் தகவலோடு கிளம்புகிறேன் - பனிக்காட்டுக்குள் திரிய !  

And I need a piece of assistance too folks : காத்திருக்கும் "சர்ப்பத்தின் சவால்" இதழின் முதற்பக்கத்தில் இடம்பிடித்திட நண்பர் JSK சார்ந்த குறிப்புகள் ; அவரது எழுத்துக்களின் சிறு மாதிரிகள் ; அவரது போட்டோ என்ற contents சகிதம் ஒற்றைப்பக்கத்தை யாரேனும் தயார் செய்து அனுப்பிட நேரம் எடுத்துக் கொண்டால், ரொம்பவே உபகாரமாக இருந்திடும் ! Of course - நண்பரைப் பற்றி நான் எழுந்திடும் வரிகளை வாகான இடத்தினில் இணைத்துக் கொள்வேன் ! And taking it further, நண்பரை நேரடியாகவோ, FB அல்லது வாட்சப் மூலமாகவோ நன்கு அறிந்து வைத்திருந்த நண்பர்களும் அவர் சார்ந்த நினைவுகளை பகிர்ந்திடலாமே - maybe like a tribute of sorts ? மின்னஞ்சலில் அனுப்பிடலாம் ; இங்கேயும் பகிர்ந்திடலாம் !பக்கங்கள் கூடுதலாகினால் இப்போதே திட்டமிட்டுக் கொள்வேன் - அவற்றையும் இணைத்துக் கொள்ளும் விதமாய் ! ஒரு mad rush-ல் பணிகள் சூழ்ந்து கிடக்கும் சூழலில், உங்களின் மெனெக்கெடல்ஸ் ரொம்பவே உதவிடும் எனக்கு ! Please guys ? கடமை # 3 !!

மீண்டும் சந்திப்போம் ! Bye for now !! அனைவருக்கும் பண்டிகை வாழ்த்துக்கள் !! Enjoy the weekend & more !! 

Sunday, October 18, 2020

கற்றது கைமண்ணே !

 நண்பர்களே,


வணக்கம். ஒரு புளியைக் கரைத்துக் கொண்டிருந்த மாதத்தை வெற்றிகரமாய்த் தாண்டி விட்டுள்ள திருப்தியோடு இந்தப் பதிவினில் புகுந்திடுகிறேன் ! வெளியே தெரிவது வேறு மாதிரி இருப்பினும், நிஜத்தில் ஆந்தை விழியன் ஒரு சோம்பேறி மாடன் என்பதே நிஜம் ! நமது இத்தாலிய மொழிபெயர்ப்பாளரின் டிசிப்ளினோ ; பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரின் வேகமோ ; கருணையானந்தம் அவர்களின் ஈடுபாடோ நிச்சயமாய் எனக்கு  தொலைதூரக் கனவுகளே ! கடைசி நேரம் வரை ஜவ்வு இழுத்து விட்டு, அச்சுக்கான deadlines கண்ணில் தென்படத் துவங்கிய பிற்பாடே இங்கே எஞ்சின் சூடேறும். So டெக்ஸ் வில்லர் போன்ற ஜாலியான களங்களன்றி,  நான் பேனா பிடிக்க அவசியப்படும் இதர ஆல்பங்களை ஒன்றுக்கொன்று இடைவெளிகளோடு அமைந்திடச் செய்யவே அட்டவணையினில் திட்டமிட முனைந்திடுவேன் ! ஆனால் இந்த அக்டொபரிலோ ஏதேதோ காரணங்களின் பொருட்டு அது இயலாக்காரியமாகிப் போக, கிட்டத்தட்ட மூன்று ஆல்பங்களின் 75 % மொழிபெயர்ப்புப் பொறுப்புகள் வழுக்கைத் தலையின் மீது விழுந்து வைத்திட - ரொம்பவே பாம்பு டான்ஸ் ஆட வேண்டிப் போனது ! இளமை இக்கட துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கவில்லை என்பதை ஒவ்வொரு தினமும் ஏதோவொரு விதத்தில் சுட்டிக் காட்டி வரும் நிலையில் -பேனாவைத் தூக்கிக் கொண்டு குந்தியை வேலைகளிலெல்லாம், "இது உனக்குத் தேவையா ? தேவையா ?" என்ற கேள்வி தான் எழுந்தது ! ஆனால் சோம்பேறி சுப்பண்ணாவை எப்படியோ தாஜா செய்து பின்னுக்குப் போகச் செய்ததில் இம்மாதத்துக் கதைகள் ஒவ்வொன்றின் சுவாரஸ்ய quotient க்குப் பெரும் பங்குண்டு என்பேன் ! ஒவ்வொரு பணியின் மத்தியிலும் ஏதேதோ காரணங்களுக்காக நிறையவே இன்டர்நெட் தேடல்களும் அவசியமாகிப் போக, ஒவ்வொரு தேடலின் பலனிலும் நான் கற்றுக்கொண்டது நிறைய !  இம்மாத ஆல்பங்கள் பெயரளவிற்கு மூன்றே என்றாலும் - in effect 5 சிங்கிள் ஆல்பங்களின் கூட்டணியே  (2 ஜானி + 1 XIII spin off + 2 பாக "மா துஜே சலாம்") ! ஜானியின் combo ஆல்பத்தில் க்ளாஸிக் ஜானி மாமூலான template என்பதாலும், அங்கே கருணையானந்தம் அவர்கள் பேனா பிடித்துவிட்டதாலும் பெருசாய்த் தேடல்களுக்கு முகாந்திரங்கள் இருக்கவில்லை ! ஜானி 2 .0 தான் பாடங்கள் பல நடத்திய புண்ணியவான் ! For starters - உளறிக் கொட்டும் அந்தப் புத்தக விநியோகம் செய்யும் போக்கிரிப் பயல் வெப்ஸ்டர் ! "மட்டசீறல் ; துப்பறிவாளர் பானி ; பருப்பு ' என்று பெனாத்தித் திரிபவனுக்கு Dyslexia என்றொரு குறைபாடு இருப்பதாய் கதையோட்டத்தில் சொல்லப்பட, அதனைப் பற்றி மேற்கொண்டு கொஞ்சம் ஆராய்ந்திட முனைந்தேன் ! Yes of course , டிஸ்லெக்ஷியா பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன் தான் ; ஆனால் அதன் பின்னணி பற்றி நெட்டில் வாசித்த போது தான் இது எத்தனை ஆழமானதொரு சமாச்சாரம் என்பது புரிந்தது ! இங்கு கதாசிரியரின் குசும்புமே அழகாய் வெளிப்பட்டதை உங்களில் எத்தனை பேர் கவனித்தீர்களா - தெரியாது : வார்த்தைகளை ; உச்சரிப்புகளை சரியாய்க் கையாள தடுமாறும் அந்தப் போக்கிரிக்குத் தரப்பட்டிருக்கும் பெயரான "வெப்ஸ்டர்" - ஆங்கிலத்தினில் பிரபல டிக்ஷ்னரி வெளியிடும் கம்பெனியின் நிறுவுனரான நோவா வெப்ஸ்டரின் பெயரே ! (https://en.wikipedia.org/wiki/Noah_Webster

அடுத்த பாடம் படிக்கும் படலம் அரங்கேறியது சிலபல பிரெஞ்சுப் பெயர்களின் உச்சரிப்பு சார்ந்திருந்தது !

MARABOUT Publishing 

Bobigny 

Porsche 

Pierre Cardin 

Verviers 

மேற்படி வார்த்தைகளை ஆங்கில உச்சரிப்பின்படி தமிழாக்கம் செய்தால் என்ன கிட்டும் என்பதை நாமறிவோம் ! ஆனால் அவையே பிரெஞ்சுப் பெயர்களாகவோ ; பெல்ஜியத்து flemish பெயர்களாகவோ இருக்கும் பட்சங்களில் கிட்டிடும் உச்சரிப்புகளை நெட்டில் தேடிப்பிடித்துப் படித்த போது - 'அடங்கப்பா !!' என்று பெருமூச்சிட மட்டுமே முடிந்தது ! முதல் வார்த்தை "மேரபு" என்றும் ; பாரிஸின் suburb ஆன அடுத்த பெயரை  "பொபின்யீ  " என்றும் ; வார்த்தை # 3 குறிப்பிடும் பிரபல கார் வகையினை "போர்ஷா" என்றும் ; வார்த்தை # 4 சுட்டிக்காட்டும் உயர்தர fashion brand க்கு "பியர் கர்டோன்" என்றும் ; வார்த்தை # 5 அடையாளம் காட்டும் அந்த பெல்ஜிய சிறுநகருக்கு "வெர்வியே "  என்றும் உச்சரிப்பு என்பதை நாமாய் அறிந்திருக்க வாய்ப்பு தான் ஏது ? Of course - இவற்றைச் சரியாகவோ ; பிழையாகவோ உச்சரிப்பதால் கதையோட்டத்துக்கு எவ்வித பாதகமும் நேரப் போவதில்லை தான் & கிரீடங்கள் வழங்கப்படவோ ; பறிக்கப்படவோ வாய்ப்புகள் நஹி தான் ! ஆனால் நாம் கையாள்வது ஒரு பிரெஞ்சுக் கதை என்பதாலும், நம் மத்தியினில் பிரெஞ்சைப் பேசிடும் வாசகர்களும் உள்ளார்கள் எனும் போது - இது போன்ற சின்னஞ்சிறு பிழைகளும் தவிர்க்கப்பட வேண்டியவை என்றே பட்டது ! நம்மூர் 'பன்ருட்டி'யை அசலூரார் 'பன்ரொட்டி' என உச்சரித்தாலோ ; எழுதினாலோ நமக்கு சிரிப்பும், கடுப்பும் எழக்கூடும் தானே ? இதுவுமே அவ்வித சமாச்சாரமாகவே நான் பார்த்தேன் ! And yes - இன்னமுமே எனக்குத்  தெரியாது - if I got the pronounciations right ; ஆனால் இயன்றதை முயற்சித்துள்ளேன் என்பது மட்டும் தெரியும் ! 

பாடம் # 3 - கதை சார்ந்தது !  ஜானியின் கதைக்குள் சாகச வீரர் ரோஜர் இடம்பிடிப்பதை கதை படித்துவிட்டோர் அறிந்திருப்பர் ! ஆனால் அறிந்திருக்கக் கஷ்டமான சேதி - இந்தக் கதையினில் பயன்படுத்தப்பட்டுள்ள "மேரபு பதிப்பகம்" என்பது 1949 முதலாய் இயங்கிவரும் ஒரு நிஜ  பிரெஞ்சுக் கம்பெனி என்பதும் ; அதன் நிறுவனரின் நிஜப் பெயரும் ஜெரார்டு தான் என்பதும் ; அவர்களின் தலைமையகம் இருப்பதுமே வெர்வியே நகரில் தான் என்பதும்  ; பிளாஷ் புக்ஸ் என்ற பெயரில் அவர்கள் வெளியிட்டு வந்ததும் ; அந்நாட்களில் சாகச வீரர் ரோஜர் கதைகளை இந்நிறுவனம் வெளியிட்டதுமே !  கதையினில் தலைகாட்டும் (ரோஜரின்) கதாசிரியர் ஹென்றி வெர்ன்ஸ் கூட நிஜத்தின் பிரதிபலிப்பே என்பதை உணர்ந்த போது - மொத்த ஆல்பமுமே  எத்தனை தூரத்துக்கு யதார்த்ததோடு பின்னியுள்ளது என்பது புரிந்தது ! ஒன்றரையணா பிரயோஜனமற்ற தகவல்களாக இவையெல்லாமே தென்படக்கூடும் தான் ; ஆனால் எழுதும் போதே நடத்தும் இன்டர்நெட் தேடல்களில் கிட்டிய இந்தத் தகவல்கள் எல்லாமே எனக்கு striking ஆக தோன்றின ! Hence இந்தப் பகிர்ந்திடும் படலம் ! 

நிஜத்தோடு பிணைந்ததென்றில்லாது - கிட்டத்தட்ட நிஜத்தின் நகலாய்ப் பயணிக்கும் XIII - spin off பற்றி அடுத்து !  'ஓங்கி அடிச்சா 13 டன் வெயிட்டாக்கும் ; "இரத்தப் படலம் " போ-ட்ட-டே- தீரணும் ; உடல் மண்ணுக்கு ; அண்டராயர் அண்ணன் ஜேசனுக்கு   " என்றெல்லாம் தெறிக்க விடும் நண்பர்கள் அணி கூட இது சார்ந்த பின்னூட்டங்களை இடக்காணோம் எனும் போது - உங்களில் இன்னமுமே பலர் இதனை வாசித்திருக்கவில்லை  - என்பதே என்மட்டிலான புரிதல் ! So ரொம்பவே போட்டு உடைக்காது மேலோட்டமாகவே பயணித்தல் நலமென்று படுகிறது ! இந்த ஆல்பத்தோடு பயணிக்கும் போது எனக்கு ஒருவித deja vu உணர்வு தான் ! அமெரிக்க அதிபர் ஜான் கென்னெடி படுகொலை பற்றி முன்னெப்போதோ நிறையவே வாசித்திருந்தது அத்தனையும் மனதுக்குள் மறுக்கா ஓட்டமுடுப்பதாகவே தோன்றியது ! 

ஷெரிடன் சகோதரர்கள் - கென்னெடி சகோதரர்கள் ; வில்லியமின் பெண்மோகம் - அதிபரின் பேசப்பட்ட சிலபல கிச்சா-முச்சா உறவுகள் ; கதையினில் வரும் ஜூலியா ப்ரூக்ஸ் - நிஜத்தின் மார்லின் மன்றோ ; ஜூலியாவின் கொலை-நிஜத்தினில் மர்லினின் "தற்கொலை" ; வில்லியமின் மனைவி கார்டெலியா - நிஜத்தினில் Jacqueline Onassis என்று ஏகப்பட்ட இணைகோடுகள் சிந்தனைகளில் நிழலாடின ! 

And இடையிடையே டெமோகிராட் கட்சியின் கோட்பாடுகள் ; தென்மாகாணங்களில் அவர்களுக்கிருந்த உறவுகள் , கு க்ளக்ஸ்  க்ளான்  என்று ஏதேதோ தேடல்களில் ஆழ்ந்திட்ட போது - மொத்த XIII தொடரின் முதுகெலும்புமே 1963-ல் நிகழ்ந்த அந்த டால்லஸ் படுகொலையினில் வேர்கொண்டிருப்பதை முழுமையாய்ப் புரிந்து கொள்ள இயன்றது ! நிஜத்தை காமிக்ஸ் பக்கங்களில் பிரதிபலிக்கச் செய்த சமாச்சாரத்தை ஒரிஜினல் கதாசிரியர் வான் ஹாம் இந்த அளவிற்குப் போட்டு உடைத்ததாய் எனக்குத் தெரியவில்லை ; ஆனால் இந்த spin-off ஆசிரியர் அதைக் கச்சிதமாய்ச் செய்துள்ளார் ! ஒட்டுமொத்த ஆல்பமுமே எனக்கு அமெரிக்க அரசியல் ; அடிவேரில் அங்கே குடியிருக்கும் நிறவெறி ; இனவாதம் பற்றியதொரு டியூஷனை எடுத்து என்றால் மிகையில்லை ! மொத்த XIII சதியுமே திட்டமிடப்படுவது - "அமெரிக்கா - வெள்ளை அமெரிக்கர்களுக்கே" என்ற ஒற்றைக் கோட்பாட்டின் பொருட்டுத் தானே ?  பணத்தாசை ; பதவியாசை ; மத ஈடுபாடுகள் என்ற சமாச்சாரங்கள் சகலமும் அப்பாலிக்கா தொற்றிக்கொண்ட புட்போர்ட் பயணிகள் தானே ? 

"அன்னையே உன்னை வணங்குகிறேன் !" 

இதுவோ - ஒரு உலக அரசியல் அரங்கின் ட்யூஷன் !! ரஷ்ய இரும்புத்திரைக்குப் பின்னுள்ள அரசியல் ; மத்திய ஆசியா வரை அவர்களது பெரும் தேசம் நீண்டிடுவதால், இஸ்லாமிய வேர்களோடு உரசிடுவது ; செச்சென்யா எரிச்சல்கள் ; அங்கே அரங்கேறிய இரத்தக் களரிகள் ; 1999-ல் துவங்கிய இரண்டாவது ரஷ்ய-செச்சென் யுத்தம் பற்றி ; இன்றைய செசென்யா  சூழல்கள் என்று அத்தனைக்குள்ளும் இன்டர்நெட் சவாரிக்கு நடத்திட சந்தர்ப்பங்கள் கிட்டின during the course of this work ! உதாரணத்துக்கு - பக்கம் 46 -ஐச் சொல்வேன் ! பஸாயேவ் பேசும் போது - "1944-ல் எங்களைக் கழுத்தறுத்தீர்களே ; அதை போலவா ?" என்றொரு கேள்வி கேட்பதற்கு வசனம் இருந்தது ! மேலோட்டமாய் நானும் பூசி மெழுகி விட்டுத் தாண்டியிருக்கலாம் தான் ; ஆனால் மனசு கேட்கவில்லை ! நெட்டில் உருட்டிய போது தான் - அரைமில்லியன் மக்களை இடம்பெயரச் செய்ய ரஷ்யத் தலைமை தீர்மானித்ததும், அதனில் நிகழ்ந்த உயிர் பலிகளும் பற்றிய தரவுகள் கண்ணில் பட்டன ! அதனுள் புகுந்தால் கண்கள் ஈரமாவதைத் தவிர்க்க இயலாது ! அதே போல செசென்யா யுத்தத்தினில் தலைநகர் குரொஸ்னிக்கு நேர்ந்த அடிகளைப் பற்றிய தேடல்கள் கொண்டு வந்த வயிற்றைப் பிசையும் நிஜங்கள் ஏராளம் ! அந்த யுத்தத்தினில் மெய்யாகவே பெண் வீராங்கனைகள் (அமேஸான்ஸ்) பயன்படுத்தப்பட்டது ; வெள்ளைப் பாஸ்பரஸ் குண்டு வீச்சு நிகழ்ந்தது ; ஐ.நா.அனுப்பிடும் ரேஷன் பொருட்கள் சூறையாடப்பட்டது - என எக்கச்சக்க நிகழ்வுகளை வாசிக்க முடிந்தது ! எங்கோ ஒரு முடுக்கில் கிடக்கும் இந்தக் குட்டி தேசம் இன்றைக்கு மீண்டும் ரஷ்யக் கட்டுப்பாட்டிலேயே ஒரு பொம்மை அதிபரோடு உள்ளது என்பதையும் வாசித்த போது அந்த மண்ணில் நிகழ்ந்துள்ள மரண தாண்டவத்தை வீரியம் புரிந்தது ! நம் அண்டை மண்ணிலும் நிகழ்ந்த இத்தகைய நெஞ்சை உலுக்கும் போர் பற்றியதொரு ஆல்பத்தை ஒரு பெல்ஜியக்  கதாசிரியர் கையில் எடுத்திருப்பதாய்க் கேள்விப்பட்டேன் ! நிஜத்தை சித்தரிக்கும் முயற்சியாய் அது அமையின் - நம் சொந்தங்கள் அனுபவித்த ரணங்களை  பிடரியில் அறையும் விதத்தில் பார்த்திட இயலக்கூடும் ! தெரியவில்லை - அது எத்தனை காலமெடுக்கும், பூர்த்தி காணவென்று ! ஏது, எப்படியோ - யுத்தமெனும் அரக்கனின் கோர முகத்தை சற்றே நெருடா பாணியில் சொன்ன "மா துஜே சலாம்" எனக்கொரு eye opener !! 

ரைட்டு - இனி உங்களின் அலசல்கள் தொடர்ந்திட வழி வீட்டுக் கிளம்புகிறேன் ! புறப்படும் முன்பாய் ஒரு கேள்வி இங்கு & 1 கேள்வி நமது ஓசியில் ஒட்டுப் போடும் தளத்தினுள் :

அடுத்த அட்டவணையில் ஜானிக்கு 1 ஸ்லாட் & 1 சிங்கிள் ஆல்பமே ! So அதனை இட்டு நிரப்பிட க்ளாஸிக் ஜானி வேணுமா ? 2.0 ஜானி வேணுமா ? சொல்லுங்களேன் பிளீஸ் ! 

And இதோ - அந்த ஆன்லைன் வோட்டிங்குக்கான லிங்க் :

https://strawpoll.com/dkd2pfaob

Bye all...see you around !! Have a cool Sunday !



Wednesday, October 14, 2020

வரம் தருவாரா பூசாரி ?

  நண்பர்களே,

வணக்கம். சாமி வரம் கொடுத்தாச்சு நேத்திக்கு மதியமே ; பூசாரியின் வர  நிலவரமோ 50 -50 - நேத்திக்கு முன்னிரவினில் ! என்ன பேத்துறேள் ? என்ற கேள்வியா ? அச்சு + பைண்டிங் + பேக்கிங் என சகலமும் ஒருநாள் முன்பாகவே நிறைவுற்றிருக்க, நேற்றைய மதியமே சந்தா புக்ஸ் சகலத்தையும் கூரியருக்கு அனுப்பி விட்டோம் ! DTDC பார்சல்கள் எல்லாமே இங்கிருந்து புறப்படவும் செய்து விட்டன ! ஆனால் ST கூரியரில் ஆள்பற்றாக்குறை என்பதால் 175 டப்பிகளை மட்டுமே நேற்றைக்கு புக் செய்துள்ளனர் ! மீதம் இன்றைக்கே இங்கிருந்து கிளம்புகின்றன ! So ஸ்ட்ராங்கான குலவைகளைப் போட்டு வைத்தால் maybe இங்கிருந்து கிளம்பிவிட்டுள்ள பார்சல்களுள் உங்களதும் இருந்திடக்கூடும் !!

And finally - "மா துஜே ஸலாம்" இதழின் அட்டைப்படம் உங்கள் பார்வைக்கு ! ப்ளஸ் அதன் படைப்பாளிகளின் போட்டோக்களுமே !


கதாசிரியர் 

ஓவியர் 

Online லிஸ்டிங்களுமே  ரெடி : 

https://lioncomics.in/product/october-pack-2020/ 

https://lion-muthucomics.com/latest-releases/622-october-pack-2020.html

பார்சலை முதலில் கைப்பற்றி, "மா துஜே ஸலாம்" கதையின் இரண்டாம் பாகத்தின் பெயரை இங்கே பதிவிடும் மின்னலுக்கு நமது உயரிய சன்மானமான ரவுண்டு பன் அடுத்த மாத கூரியர் டப்பியில் இணைத்திடப்படும் ! 

 

P.S : ரைட்டு...பன்னுக்கு ரேஸ் முடிந்சூ !

இனி ஒவ்வொரு புக்கையும் படித்த கையோடு இங்கே பதிவிடும் மின்னல்களுக்கு தலா ஒரு ஸ்பாஞ் கேக் or ப்ளம் கேக் !!

ப-டி-த்-த கையோடு என்பதை அடிக்கோடிடுகிறேன் மக்களே !

Happy Reading folks !