Powered By Blogger

Wednesday, October 14, 2020

வரம் தருவாரா பூசாரி ?

  நண்பர்களே,

வணக்கம். சாமி வரம் கொடுத்தாச்சு நேத்திக்கு மதியமே ; பூசாரியின் வர  நிலவரமோ 50 -50 - நேத்திக்கு முன்னிரவினில் ! என்ன பேத்துறேள் ? என்ற கேள்வியா ? அச்சு + பைண்டிங் + பேக்கிங் என சகலமும் ஒருநாள் முன்பாகவே நிறைவுற்றிருக்க, நேற்றைய மதியமே சந்தா புக்ஸ் சகலத்தையும் கூரியருக்கு அனுப்பி விட்டோம் ! DTDC பார்சல்கள் எல்லாமே இங்கிருந்து புறப்படவும் செய்து விட்டன ! ஆனால் ST கூரியரில் ஆள்பற்றாக்குறை என்பதால் 175 டப்பிகளை மட்டுமே நேற்றைக்கு புக் செய்துள்ளனர் ! மீதம் இன்றைக்கே இங்கிருந்து கிளம்புகின்றன ! So ஸ்ட்ராங்கான குலவைகளைப் போட்டு வைத்தால் maybe இங்கிருந்து கிளம்பிவிட்டுள்ள பார்சல்களுள் உங்களதும் இருந்திடக்கூடும் !!

And finally - "மா துஜே ஸலாம்" இதழின் அட்டைப்படம் உங்கள் பார்வைக்கு ! ப்ளஸ் அதன் படைப்பாளிகளின் போட்டோக்களுமே !


கதாசிரியர் 

ஓவியர் 

Online லிஸ்டிங்களுமே  ரெடி : 

https://lioncomics.in/product/october-pack-2020/ 

https://lion-muthucomics.com/latest-releases/622-october-pack-2020.html

பார்சலை முதலில் கைப்பற்றி, "மா துஜே ஸலாம்" கதையின் இரண்டாம் பாகத்தின் பெயரை இங்கே பதிவிடும் மின்னலுக்கு நமது உயரிய சன்மானமான ரவுண்டு பன் அடுத்த மாத கூரியர் டப்பியில் இணைத்திடப்படும் ! 

 

P.S : ரைட்டு...பன்னுக்கு ரேஸ் முடிந்சூ !

இனி ஒவ்வொரு புக்கையும் படித்த கையோடு இங்கே பதிவிடும் மின்னல்களுக்கு தலா ஒரு ஸ்பாஞ் கேக் or ப்ளம் கேக் !!

ப-டி-த்-த கையோடு என்பதை அடிக்கோடிடுகிறேன் மக்களே !

Happy Reading folks ! 

263 comments:

  1. வழக்கமான பரிசு! ஆனா வித்தியாசமான போட்டி!! :-)

    ReplyDelete
  2. Replies
    1. கேள்வியைச் சரியாய்ப் படிக்கவில்லையே டாக்டர் சார் ? நான் கேட்டது கூரியர் டப்பிக்குள் உள்ள நமது தமிழ் ஆல்பத்தினில் உள்ள இரண்டாம் அத்தியாயப் பெயர் !

      Delete
    2. சாரி தாமதமாகத்தான் புரிந்தது சார்... பன் போச்சே...

      Delete
    3. ஆனாலும் உங்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாய் கம்பெனியின் லேட்டஸ்ட் கொள்முதலான 'மினி பன்' ஒரு பாக்கெட் அனுப்பிடப்படும் சார் !

      Delete
    4. அதுவுமே ஒரு வாரம் கழித்துத் தான் கிடைக்குமெனில்......ஹ்ம்ம்ம் ?

      Delete
    5. மினி பன் வென்ற நண்பர் AKKக்கு என் வாழ்த்துகள்!! (லைட்ட்ட்டான வயித்தெரிச்சலுடன்)

      எடிட்டர் சார்.. ஒரு மைக்ரோ பன்னாவது..?!!

      Delete
    6. மைக்ரோ பன் அலைவரிசை 848 ல் தொடர்பு கொள்ளுங்கள்...:-)

      Delete
  3. இரண்டாம் பாகத்தின் பெயர் Doves Of Grozny

    ReplyDelete
  4. Ducoudray, Anlor இணையின் BITTER RUSSIA -02- Doves of Grozny...

    ReplyDelete
  5. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  6. இல்லை நீங்கள் வைக்கப் போகும் தமிழ் பெயரைக் கேட்டீர்களோ...!?

    Any ways DTDC courierக்கும் என் இடத்திற்கும் ஏழாம் பொருத்தம்.. எனக்கு ஒரு வாரம் கழித்துதான் தருகிறார்கள்... அதனால் ரவுண்ட் பன் எனக்கில்லை... ஆவ்வ்வ்வ்வ....

    ReplyDelete
  7. கொரியர் மெஸேஜ் கிட்டியூ சாரே!..

    ReplyDelete
  8. புக்கு நாளைக்கு தான் கிடைக்கும் சார்....போட்டி முடிவும் நாளை வரை தள்ளி வைக்க முடியுமா...:-)

    ReplyDelete
  9. பார்சலை கைப்பற்றாமலே நான் பதில் சொல்கிறேன் சார்...


    மா துஜே சலாம் பார்ட் 2...

    பரிசு

    மின் மினி பன்னா இருந்தாலும் ஓகே தான் சார்...

    ReplyDelete
    Replies
    1. கடலைமிட்டாய் கூடத் தேறாது தலீவரே !

      Delete
  10. மா துஜே சலாம் அட்டைப்படமே ஒரு கதை சொல்கிறது அருமை...


    ஜானியின் அட்டைப்பட கோமாளியும் கலக்கல் சார்...

    ReplyDelete
  11. குரோஸ்னி படலம் ..

    ReplyDelete
    Replies
    1. ரவுண்டு பன் பார்சல்லல்லல் !

      Delete
    2. வாழ்த்துகள் @ MKS.RAMM

      Delete
    3. வாழ்த்துக்கள் நண்பரே..:-)


      எனக்கு தான் வட போச்..:-(

      Delete
    4. வாழ்த்துக்கள் தம்பி:)

      Delete
    5. சார் .. ஈ.வி.ஜிகே முழு ரவுண்டு பன் கொடுத்து விடுங்கள் .. நமக்கு அந்த ப்ளம் அல்லது ஸ்பாஞ்ச் கேக் அனுப்பி விடுங்கள் சார் .. நான் எழுதும் விமர்சனதுக்கெல்லாம் கேக் வராது .. பன்னுக்கு exchange பண்ணிக்கறேன்

      Delete
  12. புக்கு வந்திடுச்சேய்!!!!

    'குரோஸ்னி படலம்' ( சார் ஆறுதல் பன்னு ஏதாவது?!!)

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ராம் காக்காய் கடி கொடுக்கிறாரான்னு கேட்டுப் பாருங்கோ !

      Delete
    2. செயலரே...திரும்ப ஈரோட்டுக்கு "பன்னு பொட்டி " வந்து தான் ஆகனும்...ஆறுதல் பன்னு என்ன அறுபதும் பன்னும் சங்கத்துக்கு தான்..:-)

      Delete
    3. ஆறு நிமிடத்தில் பன் தவறிவிட்டது. Awwwwwwwwwww

      Delete
  13. இன்னிக்கு பார்சல் தகவல ஏதும் வரலையே...நாளைக்கு வந்தா ஓகே தான்...:-)

    மனசு வையு ஆத்தா...நாளைக்கு வீட்ல தான் இருப்பேன்...!

    ReplyDelete
  14. புக்கு இன்னும் வரவில்லை!!!!

    'குரோஸ்னி படலம்' ( சார் ஆறுதல் II - பன்னு ஏதாவது?!!)

    ReplyDelete
  15. இன்னும் புக்கு பொட்டி வரலை..
    இரண்டாம் பாகம் தமிழ் தலைப்பு
    தாய் மண்ணே வணக்கம்... வந்த்த்த்தே மாதரம்... :-)

    ReplyDelete
  16. சிவகாசியில் பேக்கரி சூறையாடல்!! பன்னு கிடைக்காத ஆத்திரத்தில் ஈரோட்டு வாலிபர் வெறிச்செயல்!

    நாளைய தினத்தந்தியில்!

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு Ok!
      But
      வாலிபர்....?!?!?!?!

      Delete
    2. சிவகாசி பேக்கரியில் துணிகர கொள்ளை முயற்சி ; அரைக்கிலோ தொடைக்கறியைக் கவ்விய அல்சேஷனுக்கு பாராட்டுக்கள் குவிகிறது !

      -நாளைய "புரட்சித் தீ" நாளேட்டில் !

      Delete
    3. சம்மந்தப்பட்ட வாலிபர் எத்தனை வருடங்களாக வாலிபர்??? We want age proof. இவர் உண்மையில் யூத்தா அல்லது பழைய டெலிபோன் பூத்தா??? The nation wants to know.

      Delete
    4. **** பிறாண்டல் லிஸ்ட் ****

      1. பிளைசி பாபு
      2. விஜயன்
      3. ஜெகன் ஜி
      4. அனு

      வெயிட்டிங் லிஸ்ட்:
      1. MKS.RAMM (மேக்ஸி பன் வெற்றியாளர்)
      2. AKK (மினி பன் வெற்றியாளர்)

      பி.கு : 'பெண்களை பிறாண்டுவதில்லை' என்ற என் கொள்கை இன்றுமுதல் தளர்த்தப்படுகிறது!

      Delete
    5. பிறாண்டுவது ஒரு வாழ்கலை. எல்லாருக்கும் அதன் முக்கியத்துவம் புரியாது. உதாரணமாக நேற்று இரவு புதிய ஐபோன் நிகழ்ச்சி முதல் என் ஆத்துகாரர்க்கு காது கேட்கவில்லை. பிறாண்டலை மெதுவாக நகர்ந்தி கொண்டு இருக்கிறேன்.

      Delete
  17. இம்மாத இதழ்களுடன் டெக்ஸ் மற்றும் ரோஜரையும் ஆர்டர் செய்தாயிற்று. நம் ஆப்பில் எல்லா இதழ்களுக்கும், அது ஒற்றை இதழே ஆனாலும், 200 ரூபா கூரியர் தொகையே விதிக்கப்படுகிறது. இது ஏதாவது புதிய நடைமுறையா எடிட்டர் சார்?

    ReplyDelete
    Replies
    1. ஐயையோ...அப்படியெல்லாம் இல்லையே ...? சரி பார்க்கச் சொல்கிறேன் & உங்களின் கூடுதல் தொகையை அடுத்த ஆர்டரில் கழித்துக் கொள்ளச் செய்கிறேன் !

      Delete
    2. தாங்க்ஸ் எடி சார். இந்த பன் தவிர வேறு அயிட்டம் ஏதாவது உண்டா?

      Delete
    3. नीचे देखिये !

      Delete
    4. தேக்கிட்டேன். 3 லேந்து 5ஆம் வகுப்பு வரை கற்ற மொத்த வித்தையும் வெச்சு கூட்டி படிச்சுட்டேன். பிளம் கேக் மேரி பேவரைட்!

      Delete
  18. எனக்கு ரவுண்டு பண்ணே பிடிக்காது....

    மில்கா ஒண்டர் கேக் ஒண்ணு அனுப்புங்கோ

    ReplyDelete
  19. புக்கை கைப்பற்றியதும் மா துஜே சலாமா? ஜானியா? சதியின் மதியா எதை முதலில் வாசிப்பதென்றே குழப்பமே எழும் போல மூன்றுமே தெறிக்க விடும் போல

    ReplyDelete
  20. DT supp...குய்...ங்ஙுய்..குய்..ங்ஙுய்...
    என்னடா கொரியர் சப்ளயர் அழைக்கிறாரே...நாளை தான வரும்....ஒரு வேள வந்ருச்சோ என உற்ச்சாக கூக்குரலிட்ட் உள்ளத்த அடக்கிய வாறே....சொல்லுங்க....என்க...அண்ணா அம்மாட்ட பார்சல குடுத்துட்டேன் என்க...இன்னைக்கே வந்தாச்சா....நன்றி நன்றி வீட்ல தா இருக்கேன் என ஓட ....பார்சல் கட்டில் மேல் கிடக்குது தவழாக் குழந்தையாய்....
    நன்றிகள் பல ஆசிரியரே...

    ReplyDelete
  21. இது வர வந்த இனி வர உள்ள அனைத்து அட்டைகளையும் தூக்கிக் கபளீகரம் சேய்ய அள்ளிக் கொண்டு பின்னட்டையில் செல்கிறார் தாய்...இது வர வந்த அட்டைகளிலே பெஸ்ட் என பார்த்த பின் கூவுங்க நண்பர்வளே

    ReplyDelete
  22. அட்டகாசமான அசரவைக்கும் அற்புதமான செய்தி.

    ReplyDelete
  23. எனக்கெல்லாம் இந்த மாசம் அஞ்சு புக்கு....:-)

    ReplyDelete
  24. சார்!கொரியர் வந்திடுச்சு,நன்றிகள்!அடுத்த மாதம் Axa வருவது சர்ப்ரைஸ், ஒரு suggestion...ஆக்ஸா (Axa)-க்கு தமிழில் அமாயா(Amaya) என்ற பெயரை விட அலெக்ஸா(Alexa) என்று கூட வைக்கலாம் அல்லது நம் வாசக நண்பர்களிடம் கேட்டு நல்லதொரு பெயரை நீங்கள் தேர்வு செய்யலாமே?

    ReplyDelete
    Replies
    1. புக்கே பிரிண்ட் ஆகியாச்சு நண்பரே !

      Delete
    2. ஓகே சார்!அமாயாவை வரவேற்கிறேன்!

      Delete
  25. @ ALL : ரைட்டு...பன்னுக்கு ரேஸ் முடிந்சூ !

    இனி ஒவ்வொரு புக்கையும் படித்த கையோடு இங்கே பதிவிடும் மின்னல்களுக்கு தலா ஒரு ஸ்பாஞ் கேக் or ப்ளம் கேக் !!

    ப-டி-த்-த கையோடு என்பதை அடிக்கோடிடுகிறேன் மக்களே !

    ReplyDelete
    Replies
    1. ஆண்டவா! ஆபீசுல லீவு தரமாட்டேன்றாங்களே!!!

      Delete
  26. என்னது ரேஸ் முடிஞ்சிருச்சா. வாழ்த்துக்கள் ராம் சார். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  27. மணி 3. 30 ஆகுது இன்னுமெ முதல் விமர்சனம் வரலையே ஆர்வத்துடன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  28. சார்.. AXAவுக்கு நீங்கள் வைத்துள்ள 'அமாயா' பெயர் 'அம்மா + ஆயா'வை சேர்த்துச் சொல்லுவது போல் இருக்கிறதே?!!

    பிரின்டிங் மிஸ்டேக் ஏதாவது ஏற்பட்டால் 'ஆமாய்யா' என்று அச்சாகிவிடவும் வாய்ப்பிருக்கிறது!

    நண்பர் பூபதி முன்மொழிந்த 'அலெக்ஸா' கூட நன்றாகத்தான் இருக்கிறது!!

    ஆனால் புக்கே பிரின்ட் ஆகியாச்சு என்ற நிலையில் நாங்களெல்லாம் அமாயா'வோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்றாகிறது!

    அமாயாவுக்கு தீபாவளி ட்ரெஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்துடாதீங்க!

    ReplyDelete
    Replies
    1. #அமாயாவுக்கு தீபாவளி ட்ரெஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்துடாதீங்க!#
      ஆசிரியர் ரொம்ப ஸ்ட்ரிட்டாக்கும் ஈ.வி!அதெல்லாம் டையலாக் பலூன் வெச்சு மறைச்சிருப்பார்.

      Delete
    2. // அமாயாவுக்கு தீபாவளி ட்ரெஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்துடாதீங்க! //

      :-)

      Delete
  29. புத்தகங்கள் வந்துவிட்டன. என் பெயரிலேயே பன் இணைந்திருப்பதால் சுட்ட பன், சுடாத பன்னுக்கெல்லாம் ஆசைப்படப்போவதில்லை. ( அதான் கண்டிப்பா கிடைக்காதுங்கறது கன்பார்ம் ஆகிட்டதே )

    ஈவி.. பிறாண்டல் லிஸ்ட்ல என்னையும் சேர்த்துக்கோங்க
    .
    யூத்துன்னு பத்து நாளா சொல்லிக்கிட்டிருந்தா..வாலிபன்.
    பத்து வருஷமா சொல்லிக்கிட்டிருந்தா..வாலிபர்ர்..

    ReplyDelete
  30. அமாலியா காரிங்டனோட, தாத்தாவுக்கு சித்தப்பாவோட தங்கச்சியோட பேத்தியாம் இந்த அமாயா. (ஆமாய்யான்னு யாரோ அங்க சொல்றாங்க). இரண்டாம் உலகப்போர் முடிஞ்சப்புறம் அமெரிக்காவுல ஒரு மிகப் பெரிய்ய்ய துணிப் பஞ்சம் வந்துதாம். அப்பத்தான் இந்தப் பொண்ணு பொறந்துச்சாம். விக்கிபீடியாவுல போட்டிருக்கு.(நம்ம எடிட்டர் ஜமுக்காளமே போர்த்திடுவாரு)

    ReplyDelete
  31. இதழ்களை கைப்பற்றியாச்சு,முதல் புரட்டலில் மூன்று இதழ்களும் முத்துக்களாய் ஜொலிக்கின்றன...
    முதலில் ஜானியுடன் துப்பறியச் செல்ல மனம் பரபரத்தாலும்,மா துஜேவுக்கு சலாம் வெச்சிட்டு தான் அடுத்த வேலையைப் பார்க்கனும்...

    ReplyDelete
  32. மா துஜே சலாம். ரீடிங் போயிங். வித்தியாசமான கதை. வித்தியாசமான படங்கள். ராணுவ வீரனான மகனைத் தேடும் பாசக்காரத்தாயின் கதை என்றவுடன், முதலில் சிப்பாயின் சுவடுகளில் கதை தான் நினைவுக்கு வந்தது. ஆனால் முதல் நான்கு பக்கங்களிலேயே என் நினைப்பு மண்ணைக் கவ்விவிட்டது. முதல் பாகம் முடிந்து இரண்டாம் பாகம் குரோஸ்னி படலம் போய்க்கொண்டு இருக்கிறது. மனதை பிழியக்கும் அழுகாச்சி எல்லாம் இதுவரை சத்தியமாக இல்லை. ஆனால் ஏதோ வித்தியாசமான ஒன்று ஆரம்ப முதல் நம்மைக் கட்டிப் போடுகிறது.
    இரண்டாம் பாகத்தில் தற்போது நான் ரசித்த டயலாக்.
    " முன்பெல்லாம் குண்டும், குழியுமான சாலைகளில் கவனமாக போக வேண்டி இருக்கும். இப்போது குண்டு விழுந்து குழியான சாலைகளில் போயாக வேண்டும். வித்தியாசம் அவ்வளவே"
    மீதி அப்புறம்.

    ReplyDelete
    Replies
    1. செல்லாது... செல்லாது.. பாதி தான் படிச்சிருக்கீங்க ! கேக்கை பாதியா தான் பிய்க்கோணும் !

      Delete
  33. ஜானியின் இரு கதைகளும் அட்டகாசம்... 2.0 அசத்தினாலும்.. வழக்கமான பாணியிலான க்ளாசிக் ஜானி முதலிடம்... வண்ணச்சேர்க்கைகள் கண்களுக்கு விருந்து..

    ReplyDelete
    Replies
    1. கலரிங்கில் க்ளாசிக் ஜானியின் பாணிக்குக் கிட்டே கூட நெருங்க முடியாது யாரும் !

      Delete
  34. முடித்து விட்டேன். சலாம் விஜயன் சார். அருமையான கதை. அதிரடி ஆக்ஷன்களோ, திகிலூட்டும் ஹாரர்களோ, கிச்சுகிச்சு மூட்டும் காமெடியன்களோ என யாரும் இல்லை.
    பின்னே யார்?.. இல்லை இல்லை எது ஹீரோ?
    Yes..truely Says. only the Story.
    கதைக்களமும் அசாத்தியமான கதைக்களமோ யாரும் தொடத் தயங்கும் ஜானரோ இல்லை.
    ரஷ்ய-செசன்ய யுத்தப் பின்னணியில் சாதாரண கதை மாந்தரை வைத்து பின்னப்பட்ட இயல்பான கதை. மகனைத் தேடி செல்லும் தாய் வழி நெடுகிலும் காணும் யுத்த அவலங்கள், அதனால் எளிய மக்கள் படும் துன்பங்கள், குண்டு வெடிப்புகள், அவதிகள் என சகலமும், செல்லும் வழியில் காணும், தானும் அனுபவிக்கும், அந்தத் தாயுடன் கடைசிவரை நாமும் பயணிக்கிறோம்.
    கடைசியில் மகனை ஒரு சார்ஜண்ட் ஆக உயிருடன் காணும் தாய். இறுதியில் சொல்லும் வார்த்தைகள். "இரண்டல்ல. ஏராளமான பிள்ளைகள்". Super.
    ஆரம்பம் முதல் தாயுடன் உடன் வரும் அந்த நாய் 'மில்யீ' இறுதியில் குட்டிகளை ஈன்றுவிட்டு மரணிக்கும் கட்டம் நம்மை ஏதோ செய்கிறது.
    இரண்டு நாடுகள் இடையே நடக்கும் போர்களினால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களின் அவல வாழ்க்கை நிலை இந்த கதையின் மூலம் நம்மால் உணர முடிகிறது.
    என்னை வசிகரித்த சில வசனங்கள்.
    " இங்கு நார்மல் என்பது, மரணத்தில் வாயிலில் குடியிருப்பது"
    "சுற்றிலும் நிகழும் கொடூரங்களை பார்க்கும் போது
    பார்வையை தொலைத்திருந்தால் தேவலாம் போலிருக்கிறது."
    வசனங்கள் பல இடங்களில் படு யதார்த்தம்.
    இதற்கு மேல் எனக்கு சொல்லத் தெரியவில்லை.
    பாராட்டுக்கள் விஜயன் சார்.
    மா துஜே சலாம் கண்டிப்பாக முதலிடமே. சந்தேகமில்லை.
    சித்திரங்களை சொல்வதானால், பிஸ்டலுக்குப் பிரியாவிடை, சோடா, இந்தக் கதை மூன்றும் ஒரே மாதிரி சித்திரப் பாணிகள். I like it,

    இறுதியாக.. ஏனோ முல்லை வாய்க்கால் ஞாபகம் வருவதை தவிர்க்க இயலவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அனுபவிச்சுப் படிச்சதனால அனுபவிச்சு எழுதியிருக்கீங்க பத்து சார்!! அரும & செம்ம!!!

      ஒரு சிறு வேண்டுகோள்! கதையின் சில முக்கியத் திருப்பங்கள்/முடிவுகள் பற்றி இத்தனை சீக்கிரத்தில் எழுதாமலிருப்பது நல்லது!

      Delete
    2. நன்றி ஈ.வி.கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொள்கிறேன்.

      Delete
  35. அப்புறம்...

    நான் இவ்வளவு நீளமாக சொன்னதை எடிட்டர் பின் அட்டையில் எளிமையாக அழகாக சொல்லிவிட்டார்.

    " பனி படர்ந்த போர் பூமி...
    பாசப் போராட்டத்தில் ஒரு தாய்"

    அழகானதொரு கிராபிக் நாவல்.

    இதை விட வேறு என்ன சொல்ல?..

    ReplyDelete
    Replies
    1. //இதை விட வேறு என்ன சொல்ல?..//

      ஸ்பான்ஜ் வேணுமா ? ப்ளம் வேணுமா ? என்று சொல்லுங்கள் சார் !

      Delete
    2. ஹி.ஹி..உங்களுக்கு ஆட்சேபணை இல்லியானா ரெண்டுமே..
      கண்ணா..லட்டு திங்க ஆசையா?..

      Delete
  36. சிங்கத்தின் சிறுவயதில் போனவாரம் தான் படித்தேன். ஃப்ளாஷ்பேக் வரை மிகச்சிறப்பாக இருந்தது.மகிழ்ச்சி.

    ReplyDelete
  37. நம்பள்து ST courier.

    அந்த 175 ல் நம்பிள் வர்ல...

    பூசாரி வரம் தர்ல...

    "பன்"னும் போச்& "கேக்"கும் போச்!

    ReplyDelete
  38. /// ஏனோ முல்லை வாய்க்கால் ஞாபகம் வருவதை தவிர்க்க இயலவில்லை.///

    மன்னிக்கவும்..முள்ளிவாய்க்கால் என்பதை, முல்லை வாய்க்கால் என தவறாக எழுதிவிட்டேன்.

    ReplyDelete
  39. ஒரு நாள் முன்பே இம்மாத புத்தகங்கள் வேலை முடிந்து அனுப்பியதற்கு நன்றிகள் எடிட்டர் சார்.

    தீயாய் வேலைபார்த்த எடிட்டர் சார் & டீமுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  40. அடுத்த மாதம் 🎆🎆🎆🎆தீபாவளி🎇🎆🎇🎆 மலர் மாதம் போல நினைத்தாலே இனிக்குது...😍😍😍😍

    ReplyDelete
  41. எடிட்டர் சார்.. சதியின் மதி உள் அட்டையில் ' கால்வின் வாக்ஸ்' என்றும், பின் அட்டையில் ' கால்வின் வேக்ஸ்' என்று தவறாகவும் பிரிண்ட் ஆகி இருப்பதை கவனித்தீர்களோ?

    ReplyDelete
    Replies
    1. அட்டை பிரிண்ட் ஆனது பிப்ரவரியில் சார் ! இத்தனை நெடும் இடைவெளி நேர்ந்து விட்டதில் மறந்து விட்டேன் அட்டைப்படத்தில் எவ்விதம் spell பண்ணியுள்ளோம் என்பதை ! தவறு தான் !

      Delete
    2. ரெண்டுமே சரிதான்-அப்டின்னு தோணுது


      உள் அட்டை வாக்ஸ்- pronunciation academy படி சரி

      பின் அட்டை வேக்ஸ்..பிரிட்டிஷ் இங்கிலீஸ் படி சரி..

      Viser- wiser

      Viper - wiper

      Vest - west

      Grew- groove

      Veil- whale

      குறிப்பா வா ,வே கொஞ்சம் கஷ்டப்படுத்தி புடும்!

      Delete
    3. Yes selvam sir, specifically Cornish/Scottish British accents are too bad. They mashup all words and speak like "Well, 'e 'ad these 'ead pains and 'e was def'nitley nervous." for "Well, he had these head pains and he was definitely nervous."
      This is how a character called Janice speaks in the latest JK Rowling novel Troubled Blood. நாம தான் தேவையில்லாமல் posh accents போட்டு பேசறதை ஒரு பெருமையா நினைத்து கொண்டிருக்கிறோம்.

      Delete
  42. சதியின் மதி.

    கிறுகிறுக்க வைக்கும் biography of கால்வின் வாக்ஸ்.

    முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை செம விறுவிறுப்பு. முடிக்காமல் வைக்க விடவில்லை.

    அரசியல் சூதாட்டக்களங்கள் அமெரிக்கா மட்டுமல்ல, உலகம் எங்கும் ஒரேவகை தான். சூழ்ச்சிகள், மேலும் சூழ்ச்சிகள், அதன் களப்பலிகள் என அரசியல் ஆடுகளம் எங்கும் பரபரப்பானதே.
    இதுவரை வந்த ஸ்பின் ஆஃப் கதைகளில் இதுவே முதல் இடத்திற்கு தகுதியானது.

    "ஒரு அரசியல்வாதியின் உள்வட்டத்தில், சரியான ஆலோசனைகளை சொல்லிட திறமையான நபர்கள் இருப்பது எத்தனை அவசியமோ, அத்தனை அவசியமே தன் சித்தாந்தங்களுக்கு நேர்மாறான எண்ணங்கள் கொண்ட நபர் இருப்பதும்."
    இது போல கூர்மையான வசனங்கள், பல இடங்களில்.
    நன்றிகள் எடிட்டர் சார்.

    ReplyDelete
    Replies
    1. 👍வடை போச்சே😭

      Delete
    2. ///Plum + Sponge 🍰🍰👍///

      'ஆற்றாமையை அடக்கிக் கொள்ள ஐம்பத்தெட்டு வழிமுறைகள்'

      மொன..மொன..மொன..

      Delete
    3. வசனங்களுக்கு இம்மாதிரியான ஆழமான களங்களில் எத்தனை முக்கியத்துவம் உண்டென்பது புரிந்தது சார் ! அதனால் தான் இந்த ஸ்பின் ஆப்புக்கு எக்கச்சக்க மெனெக்கெடலை காட்ட வேண்டிப் போனது ! ஒரிஜினல் கதாசிரியரின் கூர்மையை நாம் மழுங்கச் செய்தது போலாகினால் ஊரிலிருக்கும் ஒட்டு மொத்த சர்ப் எக்ஸைலையும் போட்டு துவைத்திடுவார்களல்லவா ?

      Delete
  43. சதியின் மதி- XIII
    நமக்குத் தெரிந்த நம்பர் II இடத்தில் இருக்கும் கால்வின் வாக்ஸ் உண்மையான ஒரு அரசியல் சாணக்கியன்.
    இவருடைய கதாபாத்திர வார்ப்பு இல்லாமல் போயிருந்தால் ரத்தப் படலம் இருந்திருக்காது.
    முன்னாள் இருக்கவேண்டும் என்று எண்ணுவதை விட இவர்களுக்குப் பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் சிறந்த ஒரு சூத்திரதாரி என தன்னை உருவாக்கிக் கொண்டுள்ள ஒரு கதாபாத்திரம்.
    "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்னும் வரிகளுக்கு வலுவான அர்த்தம் தரும் ஒரு கதையோட்டம்
    சித்திரங்கள் எங்கும் கத்தரி போடாத ஆசிரியருக்கு ஒரு நன்றி.
    அவை இந்த கதையோடு ஒன்றி பயணிப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தது.
    ரத்தப் படலம் ஸ்பின் ஆஃப் பதிப்புகளில் ஆகச் சிறந்தது சதியின் மதி, நம் நாட்டு சாணக்கியர் மக்களுக்காக ஆட்சி செய்யும் ஒரு மன்னனை உருவாக்கினார் ஆனால் இந்த சாணக்கியன் ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கும் காரியத்தை செவ்வனே செய்து முடிக்கும் சிறந்த மூளை...
    தவறான மனிதனின் சரியான கதை

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆல்பத்திற்குப் பின்பாய் ஷெரிடன் சற்றே அடங்கியும் ; கால்வின் வேக்ஸ் விஸ்வரூபம் எடுத்தும் தென்படுவது எனக்கு மட்டும் தானா ? என்ற கேள்விக்கு வரும் நாட்களில் உங்களின் அலசல்களில் பதில் தேடுவேன் !

      Delete
    2. வாவ்! செம விமர்சனம்!!

      Delete
    3. நீங்கள் பின்னூட்டம் இட்டபடி, கதையின் போக்கையோ, முக்கிய திருப்பங்களையோ,விமர்சனத்தில் வராது விமர்சிக்க ஏகமாய் மெனக்கெடல் அவசியம் பூனையாரே!கெட்டுவிட்டேன் 😄

      Delete
    4. கடவுளே.. என் பேச்சுக்கும் இத்தனை மதிப்பா?!! நன்றி நண்பரே!! _/\_

      Delete
    5. @parani- என் போக்கிற்கு வராது,
      பன், கேக்கிற்கு வந்தேன்...
      வயிற்றுக்கு ஈயலாம் என்று ஓடி வந்தேன்,
      கண்ணிற்க்கு விருந்து படைத்த கால்வின் வாக்ஸ்ஸால்,ஈ என இளித்திருந்த நேரத்தில்,
      பண்பாளர் பத்மனாபர் பன் ஆளர் ஆகிவிட...
      என் சுய மதியின் சதியால் தாமரைஉந்தியர் முந்தி செல்ல...
      புது வெண்ணெயன் பிந்தி விட்டேன்

      Delete
    6. Navaneethan @ :-)

      When you find time please do visit and drop message here!

      Delete
  44. ***** மா.. துஜே... சலாம்! *****

    செச்சன்ய படையினரிடம் கைதியாய் மாட்டிக்கொண்ட ரஷ்ய ராணுவ வீரனான தன் மகனை விடுவித்து அழைத்துவர ஒரு ஏழைத் தாய் தன் செல்ல நாயுடன் நிகழ்த்திடும் ஒரு எல்லை தாண்டிய பயணமே கதையின் கரு!

    ஒரு போர்க்களத்தில் சாதாரண குடிமக்கள் படும் இன்னல்களையும், வாழ்க்கைப் போராட்டங்களையும், அவர்களது மனநிலைகளையுமே கூட மிக அழகாய் சித்தரித்து - இயல்பாய் நகர்த்திச் செல்கிறது கதை! நமக்கெல்லாம் ரொம்பவே பரிச்சயமான 1990களில் நடந்த நிஜ சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்ட ஒரு யாதார்த்த படைப்பு இதுவென்பது சற்றே ஆச்சரியமான உண்மை!!

    நிறைகள் :
    * முழுக்கதையின் ஒட்டுமொத்தத் தொகுப்பாய் அமைந்துபோன அபாரமான அட்டைப்படம்! இந்தக் கதைக்கு இதைவிடப் பொருத்தமான, நேர்த்தியான அட்டைப்படம் அமைத்துவிடமுடியாது!!

    * சித்திரங்கள் : செமி-கார்ட்டூன் பாணியிலும், பிரம்மிக்க வைத்திடும் வர்ணச் சேர்க்கையிலும் நம்மை ரஷ்ய-செச்சன்ய பிரதேசங்களுக்கே அழைத்துச் செல்லும் அபாரமான உழைப்பு!! ஓவியை Anlor தான் இந்தப் படைப்பின் பிரதான நாயகி என்றால் அது சத்தியமாய் மிகையில்லை! வாசிப்பின்போது அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு தொய்வுகளையும் பூசிமொழுகி நம்மை விடாமல் நகர்த்திச் செல்வது இவர் செய்திருக்கும் சித்திர ஜாலங்களே!! பெரும்பாலான பின்னணிக் காட்சிகளில் gradient வகை வண்ணச்சேர்க்கையை மிக அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார்! பயன்படுத்தியிருக்கும் வண்ணங்களிலுமே கூட ஒரு uniqueness இழையோடுவதை கதை நெடுக ரசித்திட முடிகிறது!

    * பாத்திரப் படைப்புகள் : மகனைத் தேடும் தாய், அவளது ஜாலகார நாய் 'மில்யி', சிறுவன் வொலோடியா, பெண் ஸ்நைப்பராக வரும் 'ஏசியா', கதையில் மகனாக நடிக்கும் ரஷ்ய வீரன், தலையில் குண்டு விழாதிருக்க தன் தலையில் எப்போதுமே ஒரு நாற்காலியைச் சுமந்து திரியும் மனநிலை பாதிக்கப்பட்ட ஆசாமி என்று மனதில் நிற்கும் கேரக்டர்கள் நிறையவே!

    * க்ளைமாக்ஸ்!

    குறைகள் :
    * சற்றே மெதுவாக நகரும் கதையமைப்பு!

    வித்தியாசத்தை விரும்புபவர்கள் - எந்தவித எதிர்பார்ப்புமின்றிப் படித்து - ஏதோவொரு வித்தியாச படிப்பனுபவத்தை நிச்சயமாக உணரலாம்! 'ணங், கும், சத்' சமாச்சாரங்களை மட்டுமே விரும்பும் மசாலாப் பிரியர்களுக்கு இது சற்றே அஜீரணத்தை ஏற்படுத்தக்கூடும்!

    எடிட்டரின் தணியாத தேடலின் பலனாய் நமக்குக் கிடைத்த இன்னுமொரு அழகிய படைப்பு!

    என்னுடைய ரேட்டிங் : 9.5/10

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்குமே இயன்றமட்டுக்கு layers தந்துள்ளார் கதாசிரியர் ! பாம்பேர்மேன் ஆடும் சிறுவன் ; மொட்டை மாடியில் புறாக்களைத் தேடும் சிறுமி ; காசுக்கு அலைபாயும் வார்க்கான் என்று சொல்லிக் கொண்டே போகலாம் !

      Delete
    2. பஸ்ஸில் போகும் போது பனி படர்ந்த ஜன்னல் கண்ணாடியினில் மம்மியின் முகம் பிரதிபலிப்பதை ஓவியை வரைந்து , வர்ணமூட்டிய நேர்த்திக்கு special mention !

      Delete
    3. ///ஜன்னல் கண்ணாடியினில் மம்மியின் முகம் பிரதிபலிப்பதை ஓவியை வரைந்து///

      இப்பத்தான் கவனிச்சேன் - 25ம் பக்கத்தில்! செமயா ரசிச்சுருக்கீங்க எடிட்டர் சார்!!

      ஓவியையின் கலரிங் பாணி அபாரம்!!!

      Delete
  45. ஒரு ஓவியம் வரைந்த ஓவியங்களைக்காண
    WAITING .......

    ReplyDelete
  46. **** மா..துஜே.. சலாம்!*** அட்டைப்பட விமர்சனம் ****

    * குருதிப்புனலைப் பிரதிபலித்திடும் போர் மேகங்களை உணர்த்த செந்நிற வானம்!

    * குண்டு வீச்சில் பலத்த சேதமடைந்து எலும்புக்கூடாய் நிற்கும் குடியிருப்புகள்!

    * நடுதெருவில் குத்திட்டு நிற்கும் வெடிக்காத ஏவுகணை! (கதையின் இறுதியில் இது வெடிக்கவைக்கப்படும் விதம் ஒரு சிலிர்ப்பான காட்சி!)

    * மகனைக் காணாத ஏக்கத்தோடு வானத்தை வெறித்திடும் இக்கதையின் பிரதான கேரக்டர்!

    * கண்களை இழந்த ராணுவ வீரன் குற்ற உணர்வில் குறுகி நிற்கிறான் ( குற்ற உணர்வுக்கான காரணம் - கதையில்)

    * நிஜ குண்டுகளைப் பற்றிய கவலையின்றி சதாகாலமும் 'பாம்பர் மேன்' வீடியோ கேமில் மூழ்கிக்கிடக்கும் சிறுவன்!

    * காகிதத்தில் செய்த வெள்ளைப்புறாக்கள் வட்டமடிப்பதை உற்சாகத்தோடு கொண்டாடும் சிறுமி! வெள்ளைப் புறாக்கள் சமாதானத்தைக் குறித்திட, அவை வெறும் காகித வடிவில் மட்டுமே இருப்பதை உணர்த்திடும் பூடகமான காட்சியமைப்பு!

    * வெள்ளை (காகிதப்) புறாக்கள் - ரஷ்யப் படையின் நாடகம் என்பதை உணர்ந்து தன் எதிர்ப்பைக் காட்டும் புத்திச்சாலி நாய் - மில்யி!

    இத்தனையையும் ஒரே காட்சியில் வடித்த ஓவியையே - துஜே சலாம்!!

    ReplyDelete
    Replies
    1. அட்டையில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் செமயாக ரசித்து அதனை பற்றி அட்டகாசமாக எழுதி உள்ளீர்கள் விஜய்.

      Delete
  47. மா.து.சா!

    "வீடியோ கேம் ஆடிக்கொண்டிருக்கும் அந்தப் பையனிடம் இந்த ஆட்டத்தை முடிக்கவே முடியாது என்பதை நான் சொல்லியிருக்க வேண்டும்...
    முற்றுப் புள்ளி என்பதே இங்கு கிடையாது!
    ஒரு லெவல் முடிக்கும் நேரத்திற்குள் புதுசாய் இன்னொரு லெவலை அறிமுகம் செய்திருப்பார்கள்!
    ஜாலியாய் நீ காலம் முழுக்க குண்டு வீசிக்கொண்டே பொழுதுகளை ஓட்டவேண்டியதுதான் தம்பி!

    அதாவது, உன் தலையில் யாரேனும் ஒரு குண்டை வீசும் வரைக்கும்!"


    ப்பா!! வீடியோ கேமையும், நிஜப்போரையும் எத்தனை சாதுர்யமாக ஒருங்கிணைத்துச் சொல்லப்பட்ட வரிகள்!!

    எழுதிய கைகளுக்கும் ஒரு சலாம்!!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர். சும்மா பின்னுறீங்க.

      Delete
    2. பன் எனில் பின்னி விடுவார்

      Delete
    3. ஹிஹி! 'பன்பட்ட மனிதர்' என்று பெயரெடுப்பதே என் ஆசை!

      Delete
    4. // பன் எனில் பின்னி விடுவார் //

      :-)

      // 'பன்பட்ட மனிதர்' // Valka

      Delete
    5. ஈரோடு அண்ணனுக்கு ஒரு ஜாம் பன் பார்சல்

      Delete
  48. வெற்றியாளர்களுக்கு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  49. புதிய இதழ்களைக் காண ஆவலோடு காத்திருக்கின்றேன்.

    ReplyDelete
  50. இன்னும்
    பதினைந்து நாட்களே
    அட்டவணைக்கு ..
    ஆவல் இங்கு ஆறாய் ஓடிக் கொண்டுள்ளது.

    ReplyDelete
  51. தலைப்பு போட்டில நமக்கு வடை தான்...

    அட விமர்சன போட்டியிலும் வடை தான் தெரிஞ்சு போச்...



    இப்ப தான் தகவல் கிடைக்க படாரென சென்று படக்கென்று பார்சலை கைப்பற்றி எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீட்டிற்கு வந்து பார்சலை கூட பிரிக்கமால் பார்சல் வந்து விட்டது என தெரிவிக்க ஓடோடி வந்த எமக்கு ஏதாவது கேக்கு உண்டா சார்....? :-)

    ReplyDelete
    Replies
    1. நம்ம மாதிரி ரப்தி சாஹர் எக்ஸ்பிரஸ்க்கு எல்லாம் அனு அக்காவின் ஸ்பெஷல் 'ஹக்கா' உப்மா தான் தருவாங்க...

      Delete
  52. இதழ்களை பிரித்து ரசித்து படித்த பின்னரே நண்பர்களின் விமர்சனங்களை படிக்க வேண்டும் திருப்பங்களை அறியாமல் இருக்க என்பதால் விமர்சன நண்பர்கள் மன்னிக்க...:-)

    ReplyDelete
  53. விதியின் சதி. கூரியர் ஆசாமிக்கு வாகன விபத்தில் அடிபட்டதால், நாளைக்கு தான் இதழ்கள் வரும். முகாரியை பாட விடுங்கப்பா.

    ReplyDelete
  54. Replies
    1. இல்லை நண்பரே courrier என்பதே ஒரிஜினல் பிரெஞ்சு வார்த்தை. அத‌ன் நிகர் வார்த்தை கூரியர் தான்.

      Delete
  55. பன் மற்றும் கேக் வென்ற வெற்றியாளர்களை வாழ்த்தி மகிழ்கின்றேன்.

    ReplyDelete
  56. மா...துஜே...சலாம் இதழைக் கைப்பற்றிவிட்டேன்.சித்திரங்களும் வர்ணச் சேர்க்கையும் மனதை அள்ளுகின்றன.கதையை விரைவாகப் படித்து விமர்சனம் எழுதலாம் என்றால் வேலைக்குக் கிளம்ப வேண்டிய வேளை வந்துவிட்டது.

    ReplyDelete
  57. பார்சல் வந்து விட்டது.


    ஆனால் மா..து..ஜே மட்டும் கூரியரில் இல்லை.. வைக்க மறந்து வீட்டார்கள்.

    இரண்டு ஜனி இதழ்களும் அருமை. எனக்கு புதிய ஜானி ரொம்ப பிடித்து இருக்கிறது. இந்த காமிக்ஸ் ஸில் ஜானி 2.0 க்ளைமாக்ஸ் சூப்பர். யாரும் யூகிக்க முடியாது.

    கல்வின் வாகஸ். கலக்கலாக உள்ளது.

    ReplyDelete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. பார்வைகள் பலவிதம் !

      உங்கள் தமிழ்ப்பற்றைப் பறைசாற்ற நீங்கள் தேர்வு செய்திருப்பது ஆங்கிலத்தை நண்பரே !

      Delete
    2. Respected editor sir!

      You have been forewarned...




      Delete
    3. பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு ; ஏப்ரலில் துவக்கம் கண்டு , ஜுனில் ராப்பர் அச்சாகி ; இப்போது வெளிவந்திருக்கும் இதழுக்கான forewarning நான்கு தினங்களுக்கு முன்னே தானெனும் போது நான் செய்திருக்கக்கூடியது என்னவோ சார் ?

      Delete
    4. விளம்பரத்தைப் பார்த்த வேளையினிலேயே யாரேனும் ஆட்சேபணை தெரிவித்திருப்பின் அப்போதே இதற்கு வேறொரு தலைப்பைத் தந்திருக்கலாமே ? 180 ரூபாய் விலையிலான இதழ் உருவாகிய பின்பாய் சுட்டிக்காட்டப் படும் போது எனக்கிருக்கக்கூடிய மார்க்கம் என்னவாக இருந்திடும் சார் ?

      Delete
    5. I did put a similar comment but more of the lighter vein. If I may Mr. Rajasimhan, your ideals and frustrations are based in fact on the baseless brainwashing and a ridiculous formula movie that doesn't in fact do anything or add any logic to our lives. Which tamilian activist supports our editor and his comics, which so called politician no doubt,immensely hurt and crying from the so called Hindi imposition has urged tamilians and their children to study exclusively in tamil medium schools? Which big name runs lion comics. We don't need a brand, we have a name for ourselves. I hope editor sir forgives me for this. Take your ill founded, money making hare brained schemes and political agendas elsewhere. This is a platform for true tamilian comic lovers. It will not cater to someone who will not buy a ticket but will say that a Hindi speaking ttr cannot demand for a ticket from thanga thamizan.

      Delete
    6. சார் உங்களது நிலமை தர்ம சங்கடம் தான். உங்களது விளக்கமும் நேர்மையான ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றே. இனி இது போல தலைப்பில் ஏதேனும் வருத்தம் இருந்தால் அதை அறிவிக்கும் போதே தெரிவிக்க முயற்சிக்கிறேன்.

      Delete
    7. //பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு ; ஏப்ரலில் துவக்கம் கண்டு , ஜுனில் ராப்பர் அச்சாகி ; இப்போது வெளிவந்திருக்கும் இதழுக்கான forewarning நான்கு தினங்களுக்கு முன்னே தானெனும் போது நான் செய்திருக்கக்கூடியது என்னவோ சார் ?//

      சமுதாய சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றமே காரணம் சார்!

      வார்னிங் இப்படி ஒரு கேள்வி எழுமாயின் அக்கேள்வியை அணுகும் முறை குறித்தே.

      ஏற்கனவே ஒரு முடிவெடுத்து அதை செயல்படுத்தியதில் இங்கு யாருக்கும் வருத்தம் ஏற்படப்போவதில்லை..

      வெளியீடு தருணத்தில் சமுதாய எண்ணங்கள் மாற்றம் கண்டிருப்பதில் உங்கள் தவறு ஏதுமில்லை..

      ராஜசிம்மன் அவர்கள் தனது கருத்தை வெளிப்படுத்தியவிதம் சரியானதல்ல..

      பதிவின் உட்கருத்தில் - பல நண்பர்களுக்கும் உங்கள் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கும் நண்பர்களுக்கும் ஏற்புடமை உண்டு..

      நண்பர் ராஜசிம்மன் வேண்டுகோள் வைத்ததாக எண்ணி கொள்வோம்..

      இனி தமிழிலே அல்லது ஆங்கிலம் கலந்த தமிழிலே தலைப்பு வைப்பதாக முடிவெடுப்பதில் இழப்பு ஏதுமில்லை சார்!

      தற்போதைய சூழலில் வருங்காலத்துக்கும் சேர்த்து இம்முடிவு நற்பயனையே அளிக்கும்..

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அரசியல்களுக்கு இங்கு அவசியங்களுமில்லை ; அவகாசங்களுமில்லை ! இந்த இதழ் விளம்பரப்படுத்தப்பட்டது ஜம்போ சீசன் 3 அறிவிக்கப்பட்ட தருணத்திலேயே ! இன்றைய குமுறலை அன்றைக்கு இறக்கி வைத்திருப்பின் அதன் லாஜிக் புரிந்திருக்கும் ! அன்று அமைதி காத்துவிட்டு இன்றைக்கு ultimatums வழங்குவதனை புரிந்திட தெரியவில்லை எனக்கு !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. நண்பரே, உங்கள் மொழிப்பற்றை பாராட்டுகிறேன்! ஆனால் இது போன்ற பொழுதுபோக்கு விஷயங்களில்
      உங்கள் மொழிப்பற்றை கொஞ்சம் தள்ளிவையுங்கள் என வேண்டுகிறேன்!! நீங்கள் இந்த கதையில் பலவிஷயங்களில் பாராட்ட உள்ளன நண்பரே! சிறு வயதில் இருந்து நமது காமிக்ஸ் படித்த உங்களால் எப்படி நமது காமிக்ஸ் உலகத்தை புரிந்து கொள்ள முடியாமல் போனது எனது ஆச்சரியம் நண்பரே!

      Delete
    5. புத்தக திருவிழாவில் சந்தித்த சில பிற மொழி நண்பர்கள் தங்களை தமிழ் படிக்க தூண்டியதே நமது காமிக்ஸ் தான் என பெருமையுடன் சொல்லிவுள்ளார்கள்! எனவே நமது காமிக்ஸ்ஸை இந்த மொழி வலைக்குள் நீங்கள் கொண்டு வரவேண்டாமே நண்பரே!

      Delete
  60. ஆன்லைன் ஸ்பெஷல் இதழ்களுடன் மொத்தமாக ஐந்து இதழ்களாக பெரிய்ய பார்சலாக இன்று கைக்கு கிடைத்த இந்த நாளில் இன்றைய சந்தோசம் மிக அதிகமே..

    இதழ்களை பிரித்து ரசித்து முடித்து பின் முதல் இதழாக மஞ்சள் நிற பிண்ணனியில் ரோஜர் கம்பீரமாக நிற்கும் இதழை அதுவும் அட்டகாச சித்திரங்களை படைத்து மெய்மறக்க ரசிக்கும் இந்த இதழை படிக்கலாமா...அல்லது எனது பேவரைட் புன்னைகை மன்னர் ஜானி அதுவும் ஓல்ட் அன்ட் நியூ பாணியில் ஒரே இதழில் இரு வித இரு சாகஸங்களில் தூள் பறத்தும் இந்த இதழை முதலில் படிக்கலாமா ..அல்லது ஏற்கனவே படித்த கதையாகவே இருப்பினும் மேக்ஸி சைசில் நம்ம தல வண்ணத்தில் பட்டையை கிளப்பி கொண்டு இருங்கும் தலைவாங்கி குரங்கை முதலில் படிப்பதா ...அல்லது பின்னோக்கி சென்ற ஸ்பின் ஆப் இந்த முறை ஜெட் வேகத்தில் முன்னே போவதாக வாசிப்பவர்கள் சொல்ல அதகள சித்திரங்களுடன் மிரட்டும் பதிமூன்றை முதலில் புரட்டி கால்வின் வாக்ஸின் சரித்திரத்தை முதலில் கண்டறிவதா என பார்சலை பிரித்தவுடன் பெரும் குழப்பம் ஏற்பட்டாலும் ஆசிரியர் முதலில் மா துஜே சலாம் இதழுக்கு முதல் சலாம் போட முயலாமே என்று வேண்டுகோள் விடுத்தபடியால் சலாமுக்கே முதல் சலாம் இட்டேன்...


    மா துஜே சலாம்....💂🏻‍♂️💂🏻‍♂️💂🏻‍♂️


    ஆஹா அட்டையிலியே போர் பூமியாக ஆசிரியர் பிரகனபடுத்தியை அறிந்து ஆஹா போர் என்றாலே நமக்கு ஸாரி எனக்கு Bore ஆக தோன்றுமே என நினைத்தால் ம்ஹீம்..

    பாச போராட்டத்தில் தாய் என்றவுடன் ஆஹா உணர்ச்சி பெருக்கில் வழிந்தோடும் ஓர் அழுகாச்சி காவியமோ என நினைத்தால் ம்ஹீம்...

    கார்ட்டூன் பாணி சித்திரங்கள் போல் தோன்றுகிறதே நம்மை கதை ஓட்டத்தில் ஒன்ற செய்யுமா என சந்தேகம் வந்தாலும் ம்ஹீம்...

    போர் நடக்கும் சூழலில் கைதியாக சிறையில் வாடுவதாக நினைக்கும் மகனை மீட்க ஒரு நாய்க்குட்டியின் துணையுடன் மட்டும் எதிர் நாடாக கருதப்படும் இடத்திற்கு சென்று மகனை மீட்டு வர செல்லும் தாயின் கதையே மா துஜே சலாம்...இந்த ஒரு வரி கதையை அறிந்தவுடன் நமக்கு ஏதோ அழுகாச்சி காவியமாக தான் செல்லும் என நினைக்க தோன்றும்...ஆனால் நிகழ்வோ வேறு...இன்னல்களுக்கிடையே கதை நிகழ்ந்தாலும் அதிலும் புன்வறுவல் பூக்க வைக்கும் இடங்களும் நிறையவே...அவ்வளவு பெரிய இடர்பாடான அசாதாரணமான வாழ்க்கை சூழல்களிலும் அவரவர்களின் வாழ்க்கை பயணம் சாதாரணமாக பயணிப்பது டாக்ஸி டிரைவர் சொல்வது போல முதலில் குண்டும் குழியுமான சாலைகளில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருந்தேன் இப்பொழுது குண்டு போட்டு குழியான சாலைகளில் ஓட்டிக்கொண்டிருக்கிறேன் பழகி போய்விட்டது என்பது போல இந்த போர் மேக சூழல்களும் அவர்களுக்கு பழகி போய் விட்டது போல..இறுதியில் எதிர்பாரா திருப்பங்களுடன் மகிழ்வான முடிவுரையாக இதழ் அமைந்ததில் இன்னும் மகிழ்ச்சி..


    இந்த இதழுக்கு நான் என்ன விமர்சனம் எழுதுவது...அது தான் ஆசரியரே ஒரே வரியில் விமர்சனத்தை அட்டையில் போட்டு விட்டாரே...

    "அழகானதொரு கிராபிக் நாவல் " என்று ..


    அதையே நானும் காப்பி பேஸ்ட் செய்து கொள்கிறேன் சார்...


    மா துஜே சலாம் ...

    அழகானதொரு கிராபிக் நாவல் ...

    வாங்க தவறாதீர்கள் படிக்கவும் தவறாதீர்கள்.நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தலீவரே நீங்க எங்கயோ போய்ட்டீங்க!

      Delete
    2. தலீவரே நீங்க எங்கயோ போய்ட்டீங்க!

      Delete
    3. இல்லப்பா இன்னும் தாரமங்கலத்துல தான் இருக்கேன்...:-)

      Delete
    4. Super பரணி. பாராட்டுக்கள்.

      Delete
  61. மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு இன்று காலை வீட்டிற்க்கு வந்து புத்தகங்களை கைப்பற்றி முதலில் மா thuje சலாம் படித்து முடித்து விட்டேன். அற்புதம் எவ்வளவு சீரியஸ் ஆன கதையை அந்த ஓவியங்கள் மூலம் அழகாக காட்சி படுத்தி இருக்கிறார்கள். வரும் ஒவ்வொரு சிறிய கதாபாத்திரமும் முக்கியமானது. கடைசியில் எதிர்பாராத திருப்பம் உண்மையாகவே கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்து விட்டது. அந்த நாய், இரண்டு சிறுவர்கள் குட்டி சிறுமி கண் தெரியாத அந்த கூட்டம், புரட்சி குழு தலைவர், பெண் Sniper இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

    முழு நிறைவான கதை சார் பிடியுங்கள் 10/10.

    உங்கள் வசனம் நிறைய இடத்தில் மனதை தொட்டது இந்த மாதிரி போர் பற்றிய கதைகள் எழுதுவது உங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. இந்த மாதம் மற்றும் ஒரு பம்பர் ஹிட் மாதம்.

    ReplyDelete
    Replies
    1. மனதின் ஆழத்திலிருந்து எழுதியிருக்கீங்க KS!

      Delete
  62. ” மா துஜே சலாம் “

    पहुत अच्छा टाइटल है !

    நான் ஹிந்தி படித்த தமிழன் சார் !

    ReplyDelete
  63. நண்பர்களே,

    நமது அலசல்களைக் கதைகளின் நிறை குறைகளோடு வரையறுத்துக் கொள்வோமே - ப்ளீஸ் ? ஒரு அழகான படைப்பின் மீதில்லாது வேறெங்கேனும் அலைபாய்ந்திடும் கருத்துக்கள் தேவையற்ற சர்ச்சைகளுக்கு வழிவகுக்கக் கூடுமன்றோ ?

    ReplyDelete
    Replies
    1. கணநேரத்தில் என் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டீர்கள் சார்!

      Delete
    2. நிச்சயமாக ஏடி சார். ஆனால் தேவையில்லாமல் சர்ச்சை கிளப்புவது நம் வாடிக்கையில்லை. ஆனால் ஒன்று, Kindly feel free to name whatever titles you want. Let this not be a disturbing factor. You always have our support.

      Delete
    3. Agreed சார். மா துஜே சலாம் அருமை. இந்த வருடம் ஜம்போ சீசன் 3 இல் இது வரை வந்த 4 கதைகளுமே டாப் கிளாஸ். பிரிவோம் சந்திப்போம், நில் கவனி கொல், தனித்திரு தணிந்திரு இப்போ இந்த மாதம் மா துஜே சலாம் எல்லாமே நண்பர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் வேற லெவல் சார்.

      அப்படியே அந்த 6 வது ஜம்போ என்னவென்று எப்போ சார் சொல்வீர்கள்?????

      Delete
    4. // Kindly feel free to name whatever titles you want. Let this not be a disturbing factor. You always have our support. //

      +!

      Delete
    5. அப்பிடி சொல்லுங்க குமார் அண்ணே 🤣 விட்டா ஜம்போ கூட பெயர் மாற்ற சொல்லுவாங்க.

      Delete
    6. ஜ என்பது வடமொழி என்பதனால் சம்போ என்று நான் பரிந்துரைக்கிறேன்.

      Delete
    7. அரே ஓ சம்போ ஒகே வா பத்து சார்?

      Delete
    8. ///அரே ஓ சம்போ ஒகே வா பத்து சார்?///

      அனு சகோ..🤣🤣🤣🤣🤣

      Delete
  64. தலைப்பில் என்னங்க தவறிருக்கிறது கதைக்களம் தவறாமலிருந்தால் போதும்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சத்யா. நூற்றில் ஒரு வார்த்தை

      Delete
  65. /// பார்வைகள் பலவிதம் !
    உங்கள் தமிழ்ப்பற்றைப் பறைசாற்ற நீங்கள் தேர்வு செய்திருப்பது ஆங்கிலத்தை நண்பரே///

    ரசனைக்குரியவைகளுக்கு மொழி ஒரு தடையில்லை. மேலும் அது படைப்பாளியின் முழு சுதந்திரத்திற்கு உட்பட்டது.
    படகு எந்த திசையில், எந்தவிதத்தில் செலுத்தப்பட வேண்டும் என்பதை படகோட்டுபவரே தீர்மானிக்க முடியும்.
    ஏக் துஜே கே லியே, யாதோன் கி பாராத், மைனே ப்யார் கியா தலைப்பிற்காக ரசிக்கப்படவில்லை.
    மா துஜே சலாம் என்று ஹிந்தியில் அச்சிடப்படவில்லையே. தமிழில் தானே. மேலும்
    தாய் மண்ணே வணக்கம். என்று தலைப்பு வைத்திருந்தால் மட்டும் அதனை எத்தனை பேர் ரசித்திருப்போம். அப்போதும் மாற்றுக் குரல் ஒலித்திருக்கும்.
    எடிட்டரை எடிட்டராக செயல்படவும், சிந்திக்கவும் விடுவோம். சிறந்த கதைகள் வர விடுவோம்.
    ஏற்கெனவே வேறு ஒரு பதிவில் வந்த பின்னூட்டம். 'மரத்தை கேட்டுக் கொண்டு படகு செய்ய முடியாது.'
    என் கருத்தினில் தவறிருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. அருமையான மணி மணியான கருத்துக்கள்.அத்தனையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே.நன்றிகள் பத்து சார்.

      Delete
  66. பலாப்பழத்தின் மேல்தோல் முள்ளாக இருக்கிறதே என்று யாரும் வெறுப்பது இல்லை. மாறாக பழத்தின் சுவையை ருசிக்கிறோம்.
    எனவே...
    கதையின் விமர்சனங்களை தொடர்வோம்.

    ReplyDelete
  67. நேற்றே கொரியரில் கூப்பிட்டு விட்டார்கள். புத்தகத்தை இன்று கைப்பற்றிய ஆச்சு. ஆனால் பார்சலை பிரிக்க முடியவில்லை. வீடு பிரித்து வேலை செய்வதால் வேலைப்பளு அதிகமாக உள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் தான் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  68. ரவுண்ட் பன் போச்சே

    ReplyDelete
  69. My dear friends, let us not alienated any Indian language, Hindi/Bengali/Assamese/Tamil/Odiya whatever the language be, it is Indian language. My humble thought is let us not get divided amongst ourselves based on language. We are United under comics, we are embracing French, Belgian, Italian, Dutch, English comics into Tamil. Hindi is comparatively closer 🙂. We are not against Hindi, nor Hindi speaking people. We love our language, our Tamil...

    மெல்லத் தமிழ்இனிச் சாகும் - அந்த
    மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

    என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
    இந்த வசையெனக் கெய்திட லாமோ
    சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்
    செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

    தந்தை அருள் வலியாலும் - இன்று
    சார்ந்த புலவர் தவ வலியாலும்
    இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
    ஏறிப் புவிமிசை யென்றும் இருப்பேன்.

    மகாகவி பாரதி பாடிவிட்டதை, விட்டுவிடாது தொடர்ந்து வரும் நம் ஆசிரியர் நமக்கு கிடைத்த வரம்.

    We are not against them friends, we are against forced acculturation, again to quote Bharathi...

    நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

    நமக்கு பிடித்து சாப்பிட்டால் அது வேறு, நாமெல்லாம் புல் மீல்ஸ் 'தமிழ்' சாபிட்றவங்க. என்னைக்கோ ஒரு நாள் பீடா மாதிரி 'ஹிந்தி' இருக்கட்டுமே....

    வாழ்க பாரதம்- ஜெய் ஹிந்த்

    ReplyDelete
    Replies
    1. +007.
      ❤❤❤💐💐💐🙏👍👏🤝👋👋👋👏👏

      Delete
    2. அருமை நண்பரே... அருமை வாழ்க பாரதம்.

      Delete
  70. இப்போத்தான் எடிட்டர் மேல எனக்கு ஒரு டவுட்டு வருது. ஏனுங்க சாரே. வேறு ஒரு மொழியில காமிக்ஸ் வெளியிட திட்டமிட்டு இருந்தோம். அதை உங்களால் கண்டிப்பாக யூகிக்க முடியாதுன்னீங்களே?
    ஒரு வேளை அது ஹிந்தி எடிஷனோ? முதல் வெளியீடாக, மா துஜே சலாம் புக்கை வெளியிட்டுட்டீங்களோ , அதுதான் இங்கே பொங்கலா பொங்கிட்டுதோ?

    ReplyDelete
  71. இரண்டாவதாக படித்தது ஜானி

    முத்தான 2 கதைகள்.

    எனக்கு பிடித்தது 2.0 தான். என்னா டுவிஸ்ட் இறுதியில் இன்னும் ஒரு கதை ஞாபகம் வந்தது ஆனால் இப்போது அதை சொல்ல முடியாதே. எனது மதிப்பெண் 10/10

    கிளாசிக் ஜானி எப்போதும் போல இந்த முறையும் distinction இடியாப்ப சிக்கலை கடைசி பக்கம் தீர்ப்பது அருமைதான்

    எனது மதிப்பெண் 9/10

    இன்னும் சதியின் மதி மட்டுமே பாக்கி.

    இந்த மாதம் புத்தகங்கள் எல்லாம் சற்று பெரியவை தான். எனவே I'm very happy. All color books.

    ReplyDelete
  72. வழக்கில் இல்லாத (குறிப்பாக வடமொழிச்) சொற்கள் நமது இதழ்களில் வேண்டாமே என முன்னொரு காலத்தில் முரண்டு பிடித்ததுண்டு! நிஷ்டூரம், சாஸ்வதம், ஜீவிதம் போன்ற சொல்லாடல்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய காலங்கள் அவை! "சாஸ்வதத்தின் சாவி" என்ற தலைப்பு "சாகாவரத்தின் சாவி" ஆக மாறிய தருணமும் உண்டு! சமூக வலைத்தளங்களில் (தமிழ்) மொழிப்போர் புரிவது, தர்மசங்கடங்கமான கேள்விகளையும் (நீ ஆங்கிலம் பேசுவதில்லையா, உன் பையன் இந்தி படிப்பதில்லையா, நீ சுத்தத் தமிழ் தான் பேசுகிறாயா, சுத்தம் என்பதே வடமொழிச் சொல்தானே, நீ முதலில் தமிழனே இல்லியேப்பா வகையறா), மனசாட்சிக் குத்தல்களையும் (முதலில் உன் பையனை முழுதாக ஒரு தமிழ் காமிக்ஸாவது படிக்க வை, அடுத்தவர் மேல் அப்புறம் பாயலாம் வகையறா) கொண்டு வருவதால், "ஆளை வுடுங்கப்பா சாமி" என்று, அவ்வப்போது பொங்கிப் பெருகும் தமிழுணர்வினை பெரும்பாலும் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து, எடுத்த எடுப்பில் இந்தி பேசித் தொலைக்கும் தொலை தொடர்பாளர்களின் மேல் மட்டும் இறக்கி வைப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளேன். ஏனோ இந்தப் பதிவையும், பின்னூட்டங்களையும் படித்ததில் பழைய எண்ணங்கள் ஊற்றெடுக்க, பின்னூட்டங்களில் நிஷ்டூரத்தை தேடியதில் கீழ்ப்படிப் பதிவு சிக்கியது, பொற்காலங்கள் அவை!

    பி.கு: porkaalangal அவை என நான் கூகிள் ட்ரான்ஸ்லிடரேட்டரில் தட்டினால், பொற்காலங்கள் வராமல் முதலில் போர்க்களங்கள் என வருகிறது - அதுவும் சரிதான்!!! :) அப்புறம், போர்க்கொடி என்ற சொல் மீது மௌஸை நிறுத்தினால், word suggestion-ல் பக்கோடா என்று வருகிறது... ம்ம்ம்!

    http://lion-muthucomics.blogspot.com/2015/08/blog-post_22.html

    Load More -  செய்த மேற்படிப் பதிவில் இருந்து ஒரு பின்னூட்டத் துளி:
    ஆதார ஓவியங்களில் நிஷ்டூர வ்யதிரேகங்கள் ஏதும் செய்திடாமல், மூலத்திற்கு மஹாத்ம்யம் சேர்க்கும் வகையில் சிற்சில ஸௌந்தர்ய அபிவிருத்திகளை மட்டும் செய்து, அவற்றை நமது சித்ரா பத்திரிக்கையில் பிரதான அட்டைகளாக உபயோகப் படுத்தி இருப்பது, எமது ஹ்ருதயத்திற்கு ஸ்ம்ருத்தி அளித்து, ஆனந்த பரவசத்தில் ஆழ்த்துகிறது! இனி, இப்பாணியையே ஆசிரியர் தொடர வேண்டும் என்பதே அனேக வாசக கோடிகளின் அபேக்ஷையாக உள்ளது என்ற எனது தாத்பர்யத்தை, ஸுஸ்பஷ்டமாகவும், லஜ்ஜாபயங்கள் இன்றியும் இந்த வலைப்புஷ்ப மஹா சபாவில் பிரகடனம் செய்கிறேன்! :P

    அது சரி, "மா துஜே ஸலாம்" தலைப்பு பற்றிய என் கருத்து? துபாய் எங்கயோ, ஈரோடு பக்கமோ... தூத்துக்குடி பக்கமோ இருக்கு கதைதான்!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப திவ்வியமா இருக்கு. அபேக்ஷையாக அல்லது அபிலாஷையாக???

      Delete
    2. @ கா.சோ ! அப்பவும் இத படிச்சப்ப சிரிப்பு பொங்கி வந்துச்சு...இப்பவும் வருது..

      எப்ப படிச்சாலும் வரும்!!

      சீரயஸான விஷயங்களையும் ஹாஸ்ய உணர்வோட -சரி வேணாம்- நகைச்சுவை உணர்வோட எழுதறவங்கள்ள எப்பவும் நீங்க டாப்தான்!

      தளம் நிறைய மிஸ் பண்ணுது!!!

      Delete
  73. கார்த்திக் ROFL செம்ம செம்ம... ரொம்ப சீரியஸான பதிவு கடைசியில் இப்படி முடியும் என்று சத்தியமாக நினைக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு ROFL-ன் பின்னேயும், ஒரு இயலாமை இருக்கத்தானே செய்கிறது நண்பரே!

      Delete
  74. ரஜினி பன்ச் உங்களுக்கு பொருத்தம் ஜி. நான் எப்போ வருவேன். எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன். பின்னூட்டம் இடுவேன். சரிதானே ஜி.

    ReplyDelete
    Replies
    1. அட நீங்க வேற ஜி, பன்ச் அடிச்ச ஜி-யே பஞ்சராகிப் போன காலமிது ஜி! வார்த்தைக்கு வார்த்தை, இப்படி ஜி போட்டு பேச வேணாமேஜி என்று கூட முன்னொரு காலத்தில் பக்கோடா (விளக்கம் மேற்படி பதிவில்) தூக்கிய தருணமுண்டு ஜி! சாரி ஜி, பழகிடுச்சு ஜி-ன்னு பதில் வந்துச்ஜி! :)

      Delete
    2. நல்லவேளை “ஜி” யை தமிழ்படுத்தறேன்னு “ச்சீ” ஆக்காம விட்டீங்க ரெண்டு பேரும்.

      உலகம் முழுக்க கலாச்சாரப் போரா இருக்கு. முடியலடா சாமி.

      Delete
  75. ஒரு ரவுண்டு பன்னில் ஊற்றெடுத்து ; ஸ்பாஞ் கேக், ப்ளம் கேக் என்று கிளை பிரிந்து ; மொழியுணர்வென்று சீறிப் பாய்ந்து ; இப்போது இலக்கியத் தமிழில் கரை புரண்டோடிடும் இந்தப் பதிவில் இன்னும் சில பல குற்றால நீர்வீழ்ச்சிகளைக் காணவுள்ளோமென்று பட்சி சொல்கிறது ! பார்ப்போமே !

    ReplyDelete
    Replies
    1. டியர் எடி,

      நடக்கிற அதிர்வேட்டில், அந்த பட்சி பச்சடியாகாமல் தப்பியதுதான் அதிசயம் :) குற்றால நீர்வீழ்ச்சிகளாக புதிய புத்தகங்களின் மீதான விமர்சன பார்வை மட்டும் தொடர்ந்தாலே ஏகாந்தம் தான்.

      சலாம், நான் போறேன் 'மா' படிக்க.

      Delete