Saturday, October 31, 2020

தேர் இழுக்கும் திருவிழா - 2021 !!

 நண்பர்களே,

வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்திலை மறந்திருக்காது தானே ? (நாங்க மறந்திருந்தாலும் நாலு பதிவுக்கு ஒருவாட்டியாச்சும் நீ அதை ஞாபகப்படுத்தும் போது  மறக்க வாய்ப்பில்லையே ராஜா - என்கிறீர்களா ?!) 2012 முதலான கடந்த 8 வருஷங்களாய், ஜுன், ஜுலை முதலாகவே அந்த "சிந்தனை செந்தில்" கூத்தைத் தான் நானும் அடித்திடுவேன் ! (இதுவுமே தெரிஞ்சது தானே ராஜா என்கிறீர்களா ? 😎😎) புது அட்டவணைக்கான  combinations-களை நிர்ணயம் செய்கிறேன் பேர்வழி என்று குயர் குயராகப் பேப்பரைக் கபளீகரம் செய்து வருவது ரெகுலரான நிகழ்வு ! ஆனால் முதன் முறையாக – ஒற்றைப் பேப்பரில் ; ஒரே சிட்டிங்கில் அட்டவணையின் முக்கால்வாசி உருவான மாயம் இந்த ஆகஸ்டில் அரங்கேறியது ! “கால்களை அகலமாய் விரித்துக் கொண்டே போகாதேப்பா” என்ற சேதி,  ஒரு நுண்வைரஸின் உபயத்தில் கிட்டிட – “இந்த ரோட்டை வாங்கிப் போடவா? அந்தத் தெருவை வாங்கிப் போடவா? என்று அலைமோதும் கவுண்டர் சாரின் ஆர்வக் கோளாறுகள் இம்முறை என்னைப் பீடிக்காது பார்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டிப் போனது ! அலிபாபா குகையினுள் குவிந்து கிடக்கும் பொக்கிஷங்களைப் போல கதைகளின் குவியல்களைப் பார்த்திடும் போது - சங்கிலி போட்டுக் கட்டி வைத்தாலும் திமிறத்தான் தோன்றுகிறதென்பது தனிக்கதை !   அதே சமயம் சிக்கனத்திலும் (!!!) சாகஸம் செய்து பார்ப்பது ஒரு செம சுவாரஸ்ய அனுபவமாய் அமைந்து போயிட இதோ – ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் 2021-க்கான ஒன்பது மாதச் சந்தா அட்டவணை !

என் முன்னிருந்த முதலும், பிரதானமுமான கேள்வி இதுவே : 

What would be a good number for the 9 months ? 

இந்தச் சுருக்கமான சந்தாவுக்கு 30 புக்ஸ் ; 24 புக்ஸ் ; 32  புக்ஸ் என்று ஏதேதோ கணக்குகளைப் போட்டுப் பார்த்தேன் ; பட்ஜெட் உதைத்தது / அல்லது ரொம்பவே குறைச்சலாய்த் தோன்றியது ! இறுதியாய் மாதம்தோறும் 3 - ஆக மொத்தம் 27 புக்ஸ் (ஜம்போ சேர்க்காது) என்று தீர்மானித்தேன் ! 

அடுத்து எழுந்த கேள்வி - 27 புக்ஸ் என்ற அப்பத்தை ஆக்ஷன் ; போனெல்லி ; கார்ட்டூன் ; கி.நா. என்ற புள்ளீங்க மத்தியினில் எவ்விதம் பிரித்துத் தருவதென்பதே ! இக்கட கூட்டிப்புட்டா - அக்கட குறையும் & vice versa ! ரைட்டு - ஒவ்வொரு ஜானரிலும் இன்றியமையா mass நாயகர்களைப் பட்டியலிட்ட பின்னே தொகுதி உடன்பாட்டைச் செய்து கொள்ளலாமென்று தீர்மானித்தேன் ! 

சந்தா A :

As always – ஆட்டம் துவங்குவது சந்தா A-விலிருந்தே ! ‘’ACTION APLENTY’’ என்று பறைசாற்றும் இந்தச் சந்தாப் பிரிவினில் ஆதி முதலே நமக்கெல்லாம் ஆதர்ஷங்களாகிப் போயிருக்கும் detective / அதிரடிக் கதைகள் இடம் பிடிக்கின்றன! மட மடவென பெயர்களை எழுதி விட்டு நிமிர்ந்தால் 8 பெயர்கள் காகிதத்தில் இருந்தன ! அவர்களை லைனாய் அணிவகுக்க வைத்து - ஒவ்வொருவரின் குறை + நிறை என்று மனசுக்குள் ஓடச் செய்ய முற்பட்டேன், நடப்பாண்டின் அனுபவங்களைக் கணக்கில் கொண்டபடிக்கே ! கிட்டத்தட்ட அத்தனை பேருமே - 'எங்களைத் தேர்வு பண்ணாட்டி நஷ்டம் உனக்குதான்ப்பா !' என்பது போல் முறைப்பதாய்த் தோன்றிட, வேகமாய் டிக் அடிக்கும் படலத்தினுள் புகுந்தேன் ! 

So நமது புது கேட்லாக்கின் முதற்பக்கம் துவங்குவதே மௌனப்புயல் ட்யுராங்கோவுடன் ! 5 ஆண்டுகளுக்கு முன்பாய் நம்மிடையே சத்தமின்றி யுத்தம் செய்யக் களம் கண்ட இந்த வன்மேற்கின் அதிரடிக்காரர் வருஷத்துக்கொரு 3 பாக ஹார்ட்கவர் தொகுப்போடு அதகளம் செய்து வந்துள்ளார் ! சாகசங்களில் மாத்திரமன்றி, விற்பனைகளிலுமே ஓசையின்றி காரியம் சாதிக்கும் இவரது பாணி புலனானது - கிட்டங்கியின் கையிருப்பைச் சரி பார்த்த கணத்தினில் !! நடப்பாண்டு + 2019-ல் வெளியான 2 ஆல்பங்கள் நீங்கலாய் பாக்கி எல்லாமே sold out என்று நம்மவர்கள் சொன்ன போது "தெய்வமே !!" என்றபடிக்கு இவருக்கு ஒரு பெரிய thumbs up தந்ததோடு - முத்து காமிக்சின் ஒரு மைல்கல்லைக் குறிக்கும் வாய்ப்பினையுமே சேர்த்து வழங்கினேன் ! So 2021-ல் காத்திருக்கும் “முத்து காமிக்ஸ் இதழ் # 450” என்ற மைல்கல்லுக்கு உரமேற்றவிருப்பது ட்யுராங்கோவின் “ரௌத்திரம் கைவிடேல்”! ஏற்கனவே அறிவித்திருந்தது போல ட்யுராங்கோ தொடருக்கு விடைதரும் வேளையும் இதுவே ! இதற்குப் பின்பாய் ஒரேயொரு சிங்கிள் ஆல்பம், முற்றிலும் புது ஓவிய பாணியில் உள்ளது தான் ! ஆனால் அதன் தொடர்ச்சியை உருவாக்காதே தொடரினை மங்களம் பாடி விட்டுள்ளனர் - படைப்பாளிகள்  ! So கெத்தான ஒரு நாயகருக்கு முத்தான ஒரு வாய்ப்புத் தந்து thank you & goodbye சொல்லவிருக்கிறோம்! வழக்கம் போலவே ஹார்ட்கவர் & முழுவண்ணம் & கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பு !

ஆக்ஷன் சந்தாவில் ‘டக்‘கென்று ‘டிக்‘ வாங்கிய அடுத்த நாயகர் – லிப்ட்டில் உடைமாற்றும் ஒரு NYPD டிடெக்டிவ் ! அம்மாவுக்கு அடங்கிப் போகும் ஒழுக்கமான பாஸ்டராக வீட்டிலும் ; ரகளையின்றி ரணகளங்களைச் சமாளிக்கும் போலீஸ்காரராய் நியூயார்க்கின் வீதிகளிலும், உலா வரும் SODA – நடப்பாண்டினில் அறிமுகமாகி, ஓவர்ரைட்டில் நம் பட்டியலில் ஒரு நிரந்தரராகி விட்டுள்ளதில் no secrets ! வித்தியாசமான கதை பாணி ; கார்ட்டூன் ஸ்டைல் சித்திரங்களிலும் ஈர்ப்பு & இதுவரையிலும் நாம் பார்த்தேயிராத கதாநாயக template இங்கே கோலோச்சுவதால் இவரது கதைக்குத் துண்டு விரிப்பதில் எனக்குத் துளி கூடத் தயக்கம் தோன்றிடவில்லை ! And இதுவொரு கொட்டாவி விடும் நீளத்துக்கான தொடரும் அல்ல எனும் போது டிரெண்ட் பாணியினில் ஆண்டுக்கு, ஒன்றோ-இரண்டோ போட்டுத் தாக்குவது சுலபம் என்பது புரிந்தது ! More than anything else - இதுமாதிரியான சற்றே மாறுபட்ட கதைப்பாணிகளே இப்போதெல்லாம் பணியாற்றும் போது எனக்கொரு பூஸ்ட்டை தருவதை உணர முடிகிறது ! மாமூலாய் மரத்தைச் சுற்றி டூயட் பாடும் மகானுபாவர்களை காணும் நொடியில் பேனா பேந்தப் பேந்த முழிப்பதே நிகழ்கிறது ! So ’’நித்தமும் உந்தன் நிழலில்” with SODA !

தயக்கமின்றித் தானே தேர்வாகிக் கொண்ட அடுத்த நபர் நமது சிகப்புச் சட்டைக்கார ட்ரெண்ட் ! அதிர்ந்து பேசா ; ஆக்ஷனைப் பெரிதாய் நம்பியிரா இந்த அழுத்தமான ஹீரோ சமீப ஆண்டுகளில் ஒவ்வொரு முறையுமே, கிடைக்கும் வாய்ப்புகளைக் கச்சிதமாய்ப் பயன்படுத்தி வருகிறார் ! தவிர, மொத்தமே 8 ஆல்பங்கள் தான் இவரது தொடரினில் எனும் போது, ஒரிஜினலின் வரிசைக்கிரமத்தில் போட்டுத் தாக்குவது சுலப வேலையாகி விடுகிறது ! ரம்யமான சித்திரங்கள் இதமான வர்ணங்கள், நேர்கோட்டுப் பயணம் ; நமக்குத் பிரியமான கௌபாய் பாணி ; yet மாறுபட்ட கனேடிய பின்புலம் - என்ற அந்த ரெகுலர் பாணியில் ட்ரெண்ட் தொடரின் ஆல்பம் # 6 – “பகலறியா பூமி !’’.

தேர்வு பண்றியா? இல்லாங்காட்டி கமிஷனர் போர்டன் கிட்டே போட்டுக் கொடுக்கவா ?' என்றபடிக்கு மிரட்டும் கேரட் மண்டை ரிப்போர்ட்டரே next in line ! மினிமம் கியாரண்டிக்கு என்றைக்குமே மோசமில்லை என்று தெம்பாய் வலம் வரும் ரிப்போர்ட்டர் ஜானி – நடப்பு மாதத்தின் டபுள் ஆல்பப் புரமோஷனுமே கண்டவர் எனும் போது, இவருக்கான ஸ்லாட்டைத் தட்டிப் பறிக்க யாருமிலர் ! இங்கே எனக்கிருந்த ஒரே கேள்வி - பழைய கேரட்காரரா - அல்லது புதியவரா ? என்பதே ! And இம்மாதத்து உங்களின் அலசல்கள் தெள்ளத்தெளிவாக விடை சொல்லி விட்டதால், என் பணி சுலபமாகிவிட்டது ! So க்ளாஸிக் ஜானியின் “காற்றில் கரைந்த கலைஞன்” 2021-ல்  ஆஜராக உள்ளார் ! பெர்சனலாய் எனக்கு ஜானி 2 .0 தேர்வாகிடாதா ? என்ற ஆதங்கமே மேலோங்கியிருந்தது ! ஆனால் 'பழசுக்கு ஜே' போடும் நமது பாணிகளில் no மாற்றம்ஸ் எனும் போது - "மை பெஸ்ட் கஸ்டமர்   ..but நோ  பீஸ் !" என்று புலம்பும் வடிவேலு பாணியில் நடையைக் கட்ட வேண்டியானது !! 

மோனப் பார்வையிலேயே கேள்வி கேட்கும் மறதிக்கார மன்னாரு அடுத்த automatic choice ஆகிட்டார் ! நடப்பு ஆண்டினில் 2132 மீட்டர் ஒரு அனல்பறக்கும் அத்தியாயமாய் அமைந்தது மட்டுமல்லாது, ஒரு செம த்ரில்லான தருணத்தில் “தொடரும்” என்ற போர்டை மாட்டிக் கொண்டதால் அதன் conclusion-ஐ ரசிக்கும் ஆவல் கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே இருப்பது உறுதி ! 2020-ன் நவம்பரில் இரத்தப் படலத்தின் 27-ம் பாகம் பிரெஞ்சில் ரிலீஸாவதால் – சூட்டோடு சூடாய் 2021-ல் அதனை வெளியிடவுள்ளோம் – “நினைவோ ஒரு பறவை” வாயிலாக ! And தகவல் ரைட்டா – தப்பா ? என்று தெரியலை ; ஆனால் இரண்டாம் சுற்று இந்தப் புது ஆல்பத்தோடு நிறைவுறுவதாய்க் கேள்வி ! நிஜம் தானா என்றறியக் கேட்டுள்ளேன் - அடுத்த வாரத்தில் files வரும் போது விடையும் வந்திருக்கும் !

Who next ? என்று பார்த்த போது, முன்நெற்றியில் கேசம் சுருண்டு விழுந்திருக்கும் ஒரு ஸ்டைலானவர் கருப்பு கோட்டணிந்தபடிக்கே கரம் நீட்டி நிற்பது தெரிந்தது ! சில icon கள் யுகங்கள் எத்தனை ஆனாலும் நம் மனங்களிலிருந்து அதிக தொலைவு பயணிப்பதில்லை என்பதை க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் 007 உணர்த்துவது புரிந்தது ! Yes indeed - ராணி காமிக்சில் வெளியான சாகசங்களே இவை ; கதைகளுள் அந்நாட்களது நெடி சற்றே தலைதூக்குவது வாஸ்தவமே - ஆனால் கறுப்பு வெள்ளையில் - அந்த பர பர ஆக்ஷன் கதைகள் என்றைக்குமே அளிப்பதில்லை என்று நினைத்தேன் ! நடப்பாண்டில் அட்டவணையில் போல நிறைய ஸ்லாட்ஸ் என்றெல்லாம் இல்லாது - இம்முறை ஒன்றே ஒன்று ; கண்ணே கண்ணு பாண்டுக்கு எனது தீர்மானித்தேன் ! அப்போது தான்  சிலபல டாக்டர்களின் மனங்களையும், தொழிலதிபர்களின் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் ஒரு ஜாலப் பெண்மணி அருகாமையில் நிற்பது தெரிந்தது ! அவரோ கையிலொரு   காங்கோவைச்  சுழற்றிக் கொண்டிருக்க, அவருக்கு ஒரு எட்டு பின்னே நிற்கும் செம்பட்டைமண்டைக்காரரோ கத்தியும் கையுமாய்க் காட்சி தர, லைட்டாய்க் காப்ரா ஆகிப்போனது எனக்கு ! இவர்களுக்கு இடம் உள்ளத்தினில் தானென்றால் இங்கு சிலபல உள்ளங்கள் சித்தரிடுமென்பதும் புரிந்தது ; அதே சமயம் இடப்பற்றாக்குறையுமே மிரட்டியது ! அப்போது எழுந்த மஹாசிந்தனை தான் - The B & B Special !! முதல் தபாவாக நமது க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்டும், இளவரசி மாடஸ்டியும் "Bond & Blaise ஸ்பெஷல்” என்றதொரு black & white சாகஸத்தில் மிரட்டவுள்ளனர் ! இருவருமே ஒரே குழுமத்து பிரிட்டிஷ் தயாரிப்புகள் என்பதால் இந்தக் கூட்டணி நிச்சயமாய் க்ளாஸிக் கதை ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருந்திடுமென்று சொல்வேன் ! அதிலும் இம்முறை தேர்வாகியுள்ள 2 கதைகளும் சரி ; அவற்றிற்கென நமது அமெரிக்க ஓவியை தயார் செய்திருக்கும் அட்டைப்படங்களும் சரி - பொறி பறக்கச் செய்யும் ரகம் !

அடுத்த automatic choice - நமது fantasy நாயகர் தோர்கல் ! துவக்கம் தடுமாற்றமாய் இருப்பினும், பின்னாட்களில் வேறொரு லெவல் என்று வீரியம் கூட்டிக்கொண்டுள்ள ஹீரோ இவர் ! And காத்திருக்கும் ஜனவரியில் இவரது 5 பாக ஆல்பமொன்று தெறிக்க விடவுள்ளதெனும் போது - தோர்களின் graph உசக்கே மட்டுமே பயணிக்க முடியும் ! ஆனால் இம்முறை எனக்கிருந்த சிக்கல் பட்ஜெட் சார்ந்தது என்பதால், ஆரிசியாவின் ஆம்படையானுக்கு ஒற்றை சிங்கிள் ஆல்பமே possible ! தவிர ஜனவரியில்  5 பாகத் தொகுப்பு + தொடரக்கூடியோ ஏப்ரலிலோ, மே மாதத்திலோ இன்னொரு மெகா தொகுப்பு எனில் overkill ஆகிடுமோ என்ற தயக்கமும் எழுந்தது ! இதுவரையிலும் நாம் தொட்டிருப்பது ஆல்பம் 16 - ஒரிஜினல் வரிசையினில் ! ஜனவரியில் காத்துள்ளதோ - numbers 17 to 21 ! So அடுத்த அட்டவணையினில் இடம்பிடித்திடுவது சிங்கிள் ஆல்பமான # 22 ! எல்லாம் நார்மலாகியிருக்கும் போது - மறுக்கா அந்த தொகுப்பு mode-க்கு தோர்கல் குதித்திடுவார் ! But  இன்னொரு டிடெக்டிவ் நாயகருக்கு தூண்டில் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவர் கிட்டி விட்டால் - இந்த தோர்கல் சிங்கிள் ஆல்பம் நிச்சயமாய்த் தள்ளிப் போகும் !

இதுவரையிலான பட்டியலில் 7 பேர் இடம்பிடித்திருக்க - who next ? என்றபடிக்கே நிமிர்ந்தேன் ! செலக்ஷன் பட்டியல்களை டார் டாராய்க் கிழித்த கையோடு – “எனக்கெல்லாம் ஒரு செலக்ஷன் கமிட்டி வைக்கும் அளவுக்குத் துளிர்த்துப் போச்சா ? எனக்கு இடம் இல்லாட்டிப் “பிச்சி…பிச்சி !“ என்று மிரட்டி நிற்கிறார் ட்சி-நா-பா எனும் தட்டைமூக்கார் எனும் கேப்டன் டைகர் ! டைகர் ஆக்டிவாக இருந்த நாட்களில், இம்மி கேள்வி கூட இல்லாது டீம் செலக்ஷனில், விராட் கோஹ்லியின் பெயரைப் போல முதல் பெயராய் இவர் ‘டிக்‘ ஆகியதே நடைமுறை ! ஆனால் இளம் டைகரின் பிற்பாதி மாத்திரமே இனி எஞ்சியிருக்க, தொடரின் ஹிட் கதைகள் சகலத்தையும் வெளியிட்டு முடித்த நிலையில் – உடைந்த மூக்கார் நமது ரேடாரிலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தார் ! பற்றாக்குறைக்கு "இளம் டைகர் ஸ்பெஷல்" அறிவித்த சற்றைக்கெல்லாமே இங்கே கொரோனா புண்ணியத்தில் சகலமும் உல்டாவாகிப் போக, அந்தத்திட்டமிடலைக் கைவிட வேண்டிய கட்டாயமும் எழுந்தது !  நிலவரம் இவ்விதமிருக்க, சென்றாண்டினில் கேப்டன் டைகரை முற்றிலும் புதுக் கதாசிரியர் – ஓவியர் டீமின் பராமரிப்பில் விட்டு – புதியதொரு 2 பாக சாகஸத்தை உருவாக்கியுள்ளனர் என்பது பற்றிப் பகிர்ந்திருந்தேன் ! And அதன் முதற்பாகம் 2019-ன் பிற்பகுதியில் வெளிவந்து விட்டுள்ளதை நாம் அறிவோம் ! க்ளைமேக்ஸ் பாகமானது 2021-ன் ஜுன் இறுதிக்குள் வெளிவந்திடுமென நமது படைப்பாளிகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர் ! So ஒரு ரிஸ்க் எடுத்து, ரெடியாகி வரும் அந்த  இரண்டாம் பாகத்தையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டு 2021-ன் தீபாவளியை – தளபதி தீபாவளியாக்கினால் என்னவென்ற மகாசிந்தனை திடுமென தோன்றியது ! So படைப்பாளிகளின் தரப்பில் மட்டும் தாமதம் நிகழாது போயின் – 2021-ன் தீபாவளி “வேங்கைகள் வீழ்வதில்லை”யுடன் !! முதல் பாகத்தை ஏற்கனவே மொழிபெயர்ப்புக்கென நமது பிரெஞ்சு எழுத்தாளருக்கு அனுப்பியிருக்க – அதைப் படித்த கையோடு, “இது ரொம்பவே சுவாரஸ்யமாத் தெரியுது!” என்று அவரும் கமென்ட் செய்திருந்தார் ! சித்திர பாணி மட்டும் டைகர் ரசிகர்களுக்கு லைட்டாக வயிற்றைக் கலக்கிடக் கூடும் தான் ; ஆனால் கதை அதனை ஈடு செய்கிறது ! So ஒரு வேங்கைத் தீபாவளி புலருமா ? என்ற எதிர்பார்ப்போடு அடுத்த நாயகரிடம் தாவுகிறேன் ! "இப்போ கொள்ளை போகுதா - என்ன ? புக் அக்கட ரிலீஸ் ஆகும் முன்னமே திட்டமிடல் ஏனோ ?" என்ற கேள்விகளும் இதன் தொடர்ச்சியாய் எழுமென்பது புரிகிறது தான் ! ஆனால் 2021 நவம்பருக்குள் அங்கிருந்து பாகம் # 2 கிளம்பியிருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாலேயே அட்டவணைக்குள் நுழைகிறார் தட்டைமூக்கார் ! நாலைஞ்சு வருஷமா TEX தீபாவளி கொண்டாடி வர்றோமே ; அதுக்கு கல்தாவா ? " என்ற வினவலுமே தொடரக்கூடும் அல்லவா ? So அதற்குமே பதில் சொல்லிப்புட்டால் உங்களில் பலருக்கும் டைப்படிக்கும் நோவு மிச்சமாகுமல்லவா ? "தளபதி தீபாவளி" உண்டென்பதற்காக - "தல தீபாவளி" இல்லையென்று போகணுமா - என்ன ? So மஞ்சள் ஒளிவெள்ளங்கள் ஒவ்வொரு தீபத் திருநாளுக்கும்  நிச்சயமிருக்கும் என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன் ! Read on folks...!

To complete the ஆக்ஷன் சந்தா – யாரைப் பட்டியலிடுவது ? அல்லது "8" என்ற நம்பரோடு முற்றுப்புள்ளி வைப்பதா ? என்று யோசிக்கத் துவங்கிய சமயத்தினில், "அடடே..இந்த அட்டவணைக்குள் இன்னமும் புதுசாய் யாரையும் இதுவரையிலும் அறிமுகம் செய்யவில்லையே !" என்ற நெருடல் லேசாய் ஓடிக் கொண்டிருந்தது ! என்ன தான் வீரதீரர்களும், பயில்வான்களும் நம் அட்டவணைகளில் இடம் பிடித்திருந்தாலும் – புதியவர்களை வரவேற்கும் உற்சாகமே தனி தானே ? பின்நாட்களில் அவர்கள் உப்மா கிண்டவோ ; ஹக்கா நூடுல்ஸ் போடவோ தயாராகிடும் ஜெரெமியாக்களாகவோ ; லேடி S-களாகவோ; கமான்சேக்களாகவோ ; ஜடாமுடித் தாத்தா சார்களாகவோ உருமாறிடும் வாய்ப்புகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை ; ஆனால் புதியவர்கள் கொணரும் ஒரு தேஜஸ் எப்போதுமே ஜாலி ரகம் அல்லவா ? அப்போது தான் நமது பெல்ஜியம் காமிக்ஸின் ஆலோசகரும் சரி, 2016 பிராங்க்பர்ட் புத்தகவிழாவின் போது படைப்பாளிகளின் பிரதிநிதிகளும் சரி – பரிந்துரைத்ததொரு மினி தொடரின் நாயகி நினைவுக்கு வந்தார் ! அம்மணியின் பெயர் டாப் ராமெனோ ; மேகியோ என்று லேசாய் ஞாபகத்திலிருக்க, எனது டயரியை உருட்டினேன் ! அப்போது கைதூக்கி நின்றவர் தான் மேகி கேரிஸன் ! அம்மணி ஒரு டிடெக்டிவ்… அதாவது டிடெக்டிவாக முயற்சிக்கும் லேடி ! மயக்கும் சொப்பன சுந்தரியெல்லாம் கிடையாது ! சொல்லப் போனால் XIII தொடரில் வரும் மார்த்தாவைப் போலயிருப்பார் ஒரு சாயலில் ! So லேடி S போல அண்ட்ராயரோடு கிழக்கு ஐரோப்பியக் கூரைகளில் நடுச்சாமத்தில் ஓட்டமெல்லாம் இவர் எடுத்திட மாட்டார் ! மாறாக, லண்டனின் வீதிகளில் ஜாலியாய்ச் சுற்றியபடிக்கே தனது புலனாய்வுகளைச் செய்திடுவார் ! மொத்தம் மூன்றே ஆல்பங்கள் கொண்ட இந்த மினித்தொடருக்கு ஏகப்பட்ட சிலாகிப்புகள் நெட்டில் தென்பட்டது & கணிசமான விருதுகளும் ஈட்டியுள்ளது ! So டிசம்பர் 2021-ல் முதல் ஆல்பம் ; அதன் மறு வருஷத்துத் துவக்க மாதங்களில் மற்ற 2 ஆல்பங்களும் என அடுத்தடுத்து வெளியிட உத்தேசம் (ஜேஸன் ப்ரைஸ் பாணியில்). So – ‘செய்வன தில்லாய்ச் செய்‘ என்று கெத்தாகக் களமிறங்குகிறார் புதியவர் !

ஆக 9 ஆக்ஷன் இதழ்கள் கொண்ட சந்தா A -வின் அங்கத்தினர் மேற்படி நபர்களே ! Of course – இந்த நொடியில் உங்களுக்குள் ஓடக் கூடிய கேள்வி என்னவாகயிருக்குமென்று யூகிப்பதில் சிரமமில்லை ! "இருக்கு சரி ; இல்லாதது எங்கே ?" என்று யோசித்தபடிக்கே - "ரோஜர் கிடையாதா ? ப்ருனோ பிரேசில் கிடையாதா ? லார்கோ கிடையாதா ?" என்ற கேள்விகள் தடதடக்கக்கூடும் தான் ! லார்கோ தொடரினில் வெளியாகியுள்ள 2  பாக புது ஆல்பத்தினில் கதாசிரியர் வான் ஹாமின் absence ரொம்பவே உறுத்தும் விதமாய் அமைந்திருப்பதாய் எனக்குத் தோன்றியது ! புதுக் கதாசிரியர் முன்வைத்திருக்கும் செம complicated கதைக்கு மொழியாக்கம் செய்திட ஒரு பிசினஸ் டிக்ரீ  தேவைப்படுமென்பது எனது எண்ணம் ! அதனைக் கொண்டவரைத் தேடிப் பிடித்தே விட்டாலுமே - வாசிக்கக்கூடிய நமக்கெல்லாம் ஒரு மினி டிக்ரீயாச்சும் தேவைப்படலாம் ! So அடுத்த லார்கோ ஆல்பம் வரட்டும் என்று நினைத்தேன் ! ரோஜர் & ப்ரூனோ பற்றி நிறையவே பேசி விட்டோம் என்பதால்  ஜாலியாய் சந்தா B பக்கமாய் நடையைக் கட்டலாமா ? 


 சந்தா B :

As always – சந்தா B – போனெலியின் ஆடுகளமே ! And இங்குமே 9 இதழ்களே என்று தீர்மானித்தேன் - விற்பனையில் நமக்குத் பிராண வாயுவினை வழங்கிடும் டெக்ஸ் & டீமுக்கு போதிய இடமளிக்கும் விதமாய் ! And வழக்கம் போல ‘தல‘ முக்கால்வாசி இருக்கைகளைத் தனதாக்கிக் கொள்ள, பாக்கி இடங்களில் முண்டியடித்து இடம்பிடிக்கின்றனர் C.I.D ராபின் ; மர்ம மனிதன் மார்டின் & டைலன் டாக் !  “தெரிந்த சமாச்சாரம் தானே…? மஞ்சள் சட்டைக்காரர் தானே சதா நேரமும் limelight- ன் சொந்தக்காரர் ? என்று விசனம் கொள்ளும் ஒரு சிறு அணிக்குக் கூட .இந்த முறை சுவாரஸ்யமூட்ட 2 சமாச்சாரங்கள் கைவசமுள்ளன! 

சமாச்சாரம்  # 1 : ஒரு அதிரிபுதிரிக் கூட்டணி ! இத்தனை காலமாய் ஒரே புக்கில் நாலைந்து நாயகர்களின் சாகஸக் கூட்டணிகள் அமைந்திருப்பதைப் பார்த்திருப்போம் தான் ! அட… ஒரு டஜன் நாயக / நாயகியரும் ஒற்றை இதழில் இடம் பிடித்திருப்பதைக் கூடப் பார்த்திருப்போம் ! ஆனால் முதல் தபாவாக, ஒரே சாகஸத்தில் இருவர் இணைவதை 2021-ல் பார்த்திடவுள்ளீர்கள் ! மர்மங்களின் துப்பறிவாளர் அண்ணன் மார்ட்டினும், அமானுஷயங்களின் துப்பறிவாளர் டைலன் டாக்கும் ஒரே கரம் கோர்க்கவுள்ளனர் “உலகத்தின் கடைசி நாள்” சாகஸத்தின் உபயத்தில்! நல்ல நாளைக்கே இரு நாயகர்களும் சிண்டைப் பிய்த்துக் கொள்ளச் செய்வதில் நிபுணர்கள் ! இந்த அழகில் இவர்கள் இருவரும் "அண்ணா..தம்பி" என்று ஜோடி போட்டால் பூமி தாங்குமா ?" என்ற கேள்வி எழக்கூடும் என்பதாலோ, என்னவோ - தலைப்பு அவ்விதமாய் வைத்துள்ளேன் ! நமக்கு ரொம்பவே பரிச்சயமான இருவர் இப்படியொரு  ”வாசக நலக்கூட்டணி” அமைத்துள்ளார்களெனும் போது, அதனை ரசிக்கும் ஆர்வத்தை என்னால் அடக்கிட முடியவில்லை ! பிய்க்கவுள்ள சிண்டை ஒரேவாட்டி ; ஒரே இதழில் பிய்த்து விட்டால் வேலை சுலபமல்லவா ? And இதன் சித்திரத் தரமும் அசாத்தியம் என்ற போது மறுபேச்சின்றி ‘டிக்‘ அடித்தேன்! 

‘டிக்‘ என்றவுடன் தான் இன்னொரு ‘டிக்‘கும் நினைவுக்கு வருகிறார் ! நான் குறிப்பிட்ட முதல் டிக் – tick என்றால் ; இரண்டாவது டிக்கோ – Dick ! இது என்ன புதுக் கதை ? என்கிறீர்களா ? போனெலி 2018-ல் ஒரு புத்தம்புதுக் கதைவரிசையினை ; புத்தம்புதுத் தடத்தில் களமிறக்கினர் ! அப்போது உருவான ”Deadwood Dick“ எனும் புத்தம் புதிய வன்மேற்கு நாயகர் 2021-ல் தமிழ் பேசிடக் காத்திருக்கிறார் ! இவருமொரு வன்மேற்கு நாயகரே – ஆனால் with a difference ! அட… ஒவ்வொரு ஹீரோவுக்கும் தரும் பில்டப் தானே இது – என்ன புடலங்காய் difference ? என்று கேட்க நினைப்போர் நிச்சயம் இருப்பர் நம் மத்தியில் ! For starters – இவரொரு கறுப்பின இராணுவ வீரர் ! மாமூலாய் கௌபாய் கதைகளில் பட்லர் வேஷங்களையோ; ஆஜானுபாகுவான அடிமை வேஷங்களையோ போட்டுக் கொண்டு, பாவமாய்ச் சுற்றி வரும் தலைவிதி கறுப்பின நாயகருக்கு, இந்தத் தொடரினில் இராது ! தனிப்பட்ட சில சிக்கல்களிலிருந்து தப்பித்திடும் பொருட்டு இராணுவத்தில் சேரும் மனுஷன் அங்கே சந்தித்திடும் சவால்கள் ; யுத்தங்கள் ; வன்மேற்கின் அதகளங்களே “நரகத்திற்கு நடுவழியில்…" எனும் 4 பாக 200 பக்கத் தொகுப்பு ! இதன் செம highlight என்னவென்றால் மெய்யாலுமே அந்நாட்களில் “டெட்வுட் டிக்” வாழ்ந்திருக்கிறார் ! Nat Love என்ற ஒரிஜினல் பெயருடன் இருந்த கறுப்பினர், பின்நாட்களில் இராணுவத்தில் சேர்ந்து செம அதிரடிகளைச் செய்து “டெட்வுட் டிக்‘ என்ற பட்டப்பெயரை ஈட்டியிருக்கிறார் ! அவரது நிஜ வாழ்க்கையை பல நாவல்களில் சிலாகித்துள்ளனர் ! And நமது டெக்ஸ் எடிட்டரான மௌரோ போசெலியிடம் அது சிக்கிட, மொத்தம் 7 பாகங்கள் கொண்டதொரு மினி தொடரை உருவாக்கியுள்ளார் ! துவக்கத்து 4 பாகங்கள் ஒரு சுற்றாகவும்; பிந்தைய 3 இரண்டாம் சுற்றாகவும் அமைந்திட – 2021-ல் நாம் முதல் நான்கை ரசித்திடவுள்ளோம் ! So நான் குறிப்பிட்ட item # 2 இதுவே !

As always – போனெலி சந்தாவில் அதகளம் செய்திடவுள்ள நமது ‘தல‘ பற்றி இனி...!

- நேர்கோட்டுக் கதைகள் தான்…

- அடிக்கடி ஒரே பாணியிலான templates தான்…

- நிறையப் பில்டப்… நிறைய பன்ச் டயலாக்குள் உண்டு தான் !

- ஓங்கியடிச்சா ஒண்ணரை டன்னே தான் !

ஆனால்…ஆனால்…ஆண்களை மாத்திரமன்றி பெண்களையும் ; பெரியவர்களை மாத்திரமன்றி சிறியவர்களையும் மெய்மறக்கச் செய்யும் ஏதோவொரு மாயம் இந்த மனுஷனிடம் குடியிருப்பதை ஒவ்வொரு முறையும் பார்க்கத் தானே செய்கிறோம் ! ஞானப்பழத்தை வெற்றி கொள்ள லோகமெல்லாம் மயிலேறிப் பயணித்த ஆறுமுகத்தானைப் போல நமது இதர காமிக்ஸ் ஜானர்கள் குட்டிக்கரணம் ஒன்றைப் பாக்கி வைக்காது அடித்து விட்டு நிற்க, அம்மையப்பரை சிம்பிளாய் வலம் வந்து பழத்தைப் பெற்ற விநாயகரின் பாணியில் டெக்சோ நேர்கோட்டில் பயணித்து ஹிட்டடிக்கிறார் ! 2012-ல் நமது மறுவருகைக்குப் பின்பாய் ஏதேதோ சைஸ்களில் ; பக்க நீளங்களில்; விலைகளில் இதுவரையிலும் மொத்தம் 53 கதைகள் வெளிவந்துள்ளன டெக்ஸ் தொடரிலிருந்து ! And இன்று நம்மிடம் ஸ்டாக்கில் உள்ளதோ சுமார் 25 இதழ்கள் மட்டுமே ! ஒவ்வொரு புத்தக விழாவிலும் ஸ்கோர் செய்வதும் இவரே ; ஒவ்வொரு முகவரின் செல்லப் பிள்ளையும் இவரே எனும் போது - நாம் வாஞ்சையோடு இவரை இம்முறையும் அட்டவணையினுள் புகுத்திடுவதில் வியப்பு தான் ஏது ? வழக்கமான டபுள் ஆல்பங்களாய் கீழ்க்கண்ட 3 வரவுள்ளன :

- நெஞ்சே எழு…!

- கண்ணே கொலைமானே…!

- ஒரு பிரளயப் பயணம் !

And –‘தல‘ தனது இளம் பிராயத்தில் செய்த அதிரடிகள் 2021-ல் தொடர்கின்றன – 5 பாகங்களை ஒருங்கிணைத்து “திக்கெட்டும் பகைவர்கள்” வாயிலாக !  இளம் டெக்ஸின் தனித்தடம் இத்தாலியில் ரகளை செய்து வர, நாமும் அந்த ரயில்வண்டியில் ஒரு ஓரத்தில் தொற்றிக் கொள்ள முனைகிறோம் ! நடப்பாண்டினில் one of the most well received டெக்ஸ் கதையாய் "எதிரிகள் ஓராயிரம்" அமைந்திருப்பதால், இளையவரை நம் அட்டவணைகளில் இனி ரெகுலராக்கிடுவது காலத்தின் கட்டாயம் என்பேன் ! Young Tex - "எ.ஓ" ஆல்பம் வாயிலாக நாம் கவர் செய்தது சிங்கிள் ஆல்பம்ஸ் 1 to 4 . And இப்போதோ ஆல்பம்ஸ் 5 -9 என்ற அடுத்த ஐந்து ! இதன் ஆல்பம் # 10 மெபிஸ்டோவின் கதையோடு என்பதால் மாவீரரும், யுவாவும் 2022 வரைக் காத்திருக்க வேண்டிவரும் ! Sorry நண்பர்களே & better luck for sure next time ! 

அப்புறம் கறுப்பு-வெள்ளையிலேயே கலக்குபவருக்கு கலரைத் துணையாக்கினால், சும்மா எம்.ஜி.ஆர்.போல தகதகக்க மாட்டாரா - என்ன ? So தொடர்வது முழுவண்ணத்தில் The T & T ஸ்பெஷல் !! கலக்கலான டெக்ஸும் ; உடன்பிறவா டேஷாவும் - ஓவியர் சிவிடெல்லியின் கைவண்ணத்தில் பொக்கிஷம் தேடியொரு பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர் ! ரெகுலர் டெக்ஸ் சைஸிலேயே இந்த இதழ் கலரில் வெளிவருமென்பதால் கொத்துக்கறிலாம் வாங்க ஆள் அனுப்ப அவசியமிராதுங்கோ ! So இன்னொருக்கா அது குறித்து "Be careful"-ன்னு நேக்கு வார்ன் பண்ணிட டைப்படிக்கும் வேலை மிச்சமுங்ண்ணா உங்களுக்கு ! And வண்ணத்தில் ஜொலிக்கவுள்ள இந்த இதழும் 2021 தீபாவளிக்கு என்பதால், தல + தளபதி தீபாவளிக்கு வாய்ப்புகள் பிரகாசமோ-பிரகாசம் என்பேன் !!

‘தல‘ புராணம் இன்னமும் முடிந்தபாடில்லை – simply becos க்ளைமேக்ஸே இனித்தான் காத்துள்ளது ! God Willing, காத்திருக்கும் 2021 நமது முத்து காமிக்ஸிற்கும் சரி, லயனுக்கும் சரி, இரு massive மைல்கற்களைச் சுமந்து காத்துள்ளதொரு ஆண்டு  ! முத்துவின் # 450 மற்றும் லயனின் # 400 என்ற இந்த டவுள் தமாக்காவை ஒரிஜினலாய் ஜனவரி 2021-ன் சென்னைப் புத்தகவிழாவின் போது வூடு கட்டி அடிக்கத் திட்டமிட்டிருந்தோம் ! ஆனால் கொரோனா தாண்டவத்தின் உபயத்தால் சகலமும் went for a toss ! தாமதமானாலும் மைல்கல்லைத் தொட்டுப் பிடிக்காது போக மாட்டோம் எனும் போது – அவற்றிற்கென ஸ்பெஷல் இதழ்களைத் திட்டமிட வேண்டுமல்லவா ? நமது காமிக்ஸ் உலக க்ளிண்ட் ஈஸ்ட்வுட் முத்துவின் இதழ் # 450-ஐ அலங்கரிக்க உள்ளார் எனில், ‘தல‘ டெக்ஸ் & முழு டீமும் லயனின் இதழ் # 400-ஐ கலக்கவுள்ளனர் – “புத்தம் புது பூமி வேண்டும் !” எனும் 384 பக்க முழுநீள – முழுவண்ண மெகா த்ரில்லர் வழியே ! And ஆகஸ்ட் 2021-ல் இந்த இதழ் வந்திட வேண்டும் – ஆண்டவன் மாற்றியமைக்கத் தீர்மானிக்காத பட்சத்தில் ! And maybe அதற்குள் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு இந்த நுண்கிருமியை மனிதன் வென்றிடும் பட்சத்தில் – வாழ்க்கைகள் பழைய சகஜங்களுக்குத் திரும்பிடும் பட்சங்களில், ஈரோட்டின் V.O.C பார்க் சாலையை நாம் மறுக்கா தேய்த்தெடுத்து விடலாமோ ? Fingers massively crossed !

இதழ் # 9 ஆக அமைந்து இந்த சந்தா B-க்கு சுபம் போடக்காத்துள்ளவர் நமது CID ராபின் ! நம்மிடமுள்ள ஒரே அக்மார்க் டிடெக்டிவ்வை ஆண்டுக்கொருவாட்டி சந்திக்க இம்முறையும் வாய்ப்பு வழங்கிட எண்ணினேன் ! இங்கே போட்டியாய் நின்றோர் அக்கா ஜூலியா & அண்ணாத்தே டயபாலிக் தான் ! எனது பெர்சனல் சாய்ஸ் அக்கா தான் என்றாலும், கல்லாவுக்கும், அக்காக்கும் ஏழாம் பொருத்தமாய் இருப்பது தான் உறுத்தியது ! So ராபினோடு நிறைவுறுகிறது சந்தா B !! 

வழமை போல் - "இத்தினி மஞ்சசட்டைக்கார தாண்டவமா ?" என்ற வினவல்கள் இல்லாது போகாதென்பது புரிகிறது ! ஆனால் இன்றைய நிலவரத்தில் அவரது இடத்தினை ஆக்கிரமிக்க இன்னொரு தெறிக்கும் மாஸ் நாயகரைக் கண்ணில் கண்டாலொழிய விசில் போடுவது சந்தோஷமான காலத்தின் கட்டளை ! On an aside - அடுத்த பதிவினில் காத்துள்ள TEX தீபாவளி மலர் 2020 பற்றி எழுதிடவுள்ளேன் ! கடந்த 15 நாட்களை போனெல்லியின் ஆதர்ஷப் புத்திரனோடே செலவிட்டவன் என்ற வகையில் சொல்கிறேன் - இந்த மனுஷன் அத்தனை சீக்கிரத்தில் தனது சூப்பர் ஸ்டார் மகுடத்தைத் துறக்கப் போவதில்லை ! நீங்க பாயசம் கிண்டுங்கோ ; அல்வா கிண்டுங்கோ - ஆனால் அவற்றை உங்களுக்கே புகட்டிய கையோடு உங்களையுமே புன்னகைக்கச் செய்திடுவார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக்களே லேது ! 'தல' - நேற்றும், இன்றும், நாளையும் உனதே ! சந்தா C :

Moving ahead - எப்போதும் போலவே சந்தா C - கார்ட்டூன்களுக்கோசரம் ! And இரண்டு நிமிடங்களுக்கு மேல் எனக்கு எடுக்கவில்லை - அதன் அங்கத்தினரை லிஸ்ட் செய்திட ! லக்கியான லக்கி லூக் முதல்பெயராகிட, அடுத்து உட்ஸிட்டி  கோஷ்டி இடம் பிடித்திட, ப்ளூ கோட் பட்டாளம் ஸ்லாட் # 3 ஐ தங்களதாக்கிக் கொண்டனர் ! மேக் & ஜாக் பர பரவென ஸ்லாட் 4 -ல் குந்திக்க,  மீசைக்காரர் க்ளிப்டன் ஐந்தாவதாய்த் தேர்வாகிக் கொண்டார் ! மாறுவேஷ மன்னன் ஹெர்லக் ஷோம்ஸ் & டாக்டர் வேஷ்டிசன் (!!) இறுதி இடத்தை எடுத்துக் கொள்ள - "வேலை முடிஞ்சது...வாங்கப்பா..பொர்ட்டா சாப்பிடலாம் !" என்றபடிக்கே நடையைக் கட்டத்தான் தோன்றியது ! லக்கிக்கு இம்முறையும் ஆண்டுமலர்ப் பொறுப்புகள் என்பதைத் தீர்மானித்திருக்க - இயன்ற சிறு வித்தியாசத்தைக் கொணர முயன்றேன், லக்கியோடு  ரின் டின் கேன் ஞானசூன்யமும் இடம் பிடித்திடும் ஒரு சாகசத்தின் புண்ணியத்தில் ! (தேங்க்ஸ் அனு !!) ஜெயிலில் கிடைக்குமொரு கோடீஸ்வரன் மண்டையைப் போடும்முன் தனது சொத்து பத்துக்களையெல்லாம் நம்ம ரின் டின்னுக்கு எழுதி வைத்து விட, ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிப் போகிறது ரின்னி ! அன்னாருக்கு டால்டன்கள் வலை வீச, நமது ஒல்லியார் பாதுகாவலுக்குப் போக - இது போதாதா படைப்பாளிகள் ரவுண்டு கட்டியடித்திட ? லயன் ஜாலி ஆண்டு மலரில் ரின் டின் தான் ஹைலைட். (PFB சார் !! பசங்ககிட்டே இப்போவே சொல்லி வச்சிடுங்க !!) 

அப்புறம் சிக்  பில் & கோ.வின் சாகஸமானது இம்முறை 20 பக்கங்கள் கூடுதலானது ! So அவர்களுடன் ஒரு நெடும் பயணம் வெயிட்டிங் ! 

ப்ளூகோட்ஸ் & மேக் & ஜாக் தாமுண்டு, தம் வேலைகளுண்டு என்று கிட்டும் எல்லா வாய்ப்புகளிலும் பவுண்டரிகளைச் சாத்திடும் ஆட்டக்காரர்கள் என்பதால் எனக்கங்கு கதைத் தேர்வு +  தலைப்பிடல் மட்டுமே வேலையானது ! 

கேரட் மீசைக்கார Clifton நிலவரத்தில் அத்தனை சுளுவல்ல எனது பணி ! தொடரின் பிற்பகுதிக் கதைகள் ரொம்பவே மொக்கை என நமது பெல்ஜிய  அட்வைசர் சொல்லியுள்ளதால் - ஆரம்பத்துக் கதைகளுக்குள்ளேயே உருட்ட வேண்டிப்போகிறது !  நகைச்சுவை சற்றே தலைகாட்டும் ஆல்பங்கள் அங்கும் கொஞ்சமே எஞ்சியிருப்பதால் - தொடரும் ஆண்டுகளில் இந்த தாத்தாவை பார்க்கும் வாய்ப்புகள் அத்தனை பிரகாசமில்லை என்பேன் ! 

Ditto for ஹெர்லக் ஷோம்ஸ் ! ஒரேயொரு கதையோ என்னவோ மட்டுமே, இத்தொடரில் இன்னும் எஞ்சியிருப்பதால் - this  could very well be goodbye time !

So நடப்பாண்டைப் போலவே 6 கார்ட்டூன் இதழ்களோடு கடை சாத்தும் நிலவரம் தொடர்கிறது ! கார்ட்டூன் பிரியர்களுக்கு இது தொடர் ஏமாற்றமாய் இருந்திடுமென்பது புரிகிறது - moreso இம்முறை MAXI லயனில் லுக்கி லூக் மறுபதிப்புகள் வெளிவரும் வாய்ப்புகளும் பட்ஜெட்டின் காரணமாய்த் தள்ளிப் போவதால் ! ஆனால் ஆக்ஷனே சகலமும் எனக்கருதிடும் பெரும்பான்மைக்கு மத்தியில் நாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் கொஞ்சம் சவுண்டு மட்டுமே விட்டுக் கொள்ளலாம் எனும் போது - நீலப் பொடியர்கள் ; பென்னி ; மதியில்லா மந்திரி ; லியனார்டோ ; ரின்டின் கேன் போன்றோரெல்லாம்  வெளியில் நின்றபடிக்கே கையை ஆட்ட மட்டுமே செய்திடுவர் ! 2022-ல் நிலவரம் இன்னமும் கலவரமாகிடக்கூடும் என்பதே எனது தற்போதையக் கவலை ! உருப்படியாய் க்ளிப்டன் இருக்க மாட்டார் ; ஹெர்லக் ஷோம்ஸ் காலியாகியிருப்பார் எனும் போது - நான்கே சிரிப்புப் பார்ட்டிகளோடு குடித்தனம் செய்யும் நிலைமை  எழுந்து நிற்கும் ! Of course - 'புதுசாய் தேடுடா அம்பி !' என்று பரிந்துரைக்கலாம் தான் ; ஆனால் நிஜத்தைச் சொல்வதாயின்- கார்ட்டூன்களின்  இந்தத் தோற்கும் யுத்தத்தில் விடாப்பிடியாய்த் தலையை விட்டு, பின்னே விடாப்பிடியாய்ச் சாத்து வாங்குவது அலுத்து விட்டது ! So நாலே நாயகர்கள் எஞ்சியிருப்பினும் அவர்களோடு நிம்மதியாய் வண்டியை ஓட்டிடுவதே சாலச் சிறந்தது என்று படுகிறது ! புண்ணியத்துக்கு அந்த நால்வரின் தொடர்களிலும் கதைகளுக்குப் பஞ்சமே லேது ! So இந்த ஹ்யூமர் வறட்சி சார்ந்ததொரு   நெருடல் இம்முறையும் நெஞ்சில் நெருடிக் கொண்டிருக்க - வேறு வழியின்றி அடுத்த பிரிவிற்கு நகர்கிறேன் ! "பலத்த ஏமாற்றம் ; இதை நாங்க எதிர்பார்க்கலை !" என்ற ரீதியிலான சாத்துக்களை டைப்பிடிக்க விரல்கள் நமநமப்பின் - put them on hold too folks ! இந்த விஷயத்தில் நொந்தே போயிருக்கும் முதல் ஆசாமி  நான் தான்  !   
சந்தா E :

C முடிந்து நேராய் E பக்கமாய் குதிக்கிறேன் folks - நடப்பாண்டின் இந்த (வெகுஜன) சந்தா D தொடர்ந்திடாது - என்ற அறிவிப்போடு ! நம் நேரமோ, என்னவோ ஆண்டின் மூன்றாவது நாற்பது ரூபாய் இதழோடு கடைகளுக்குச் சென்ற சற்றைக்கெல்லாம் கொரோனாவின் பெயரைச் சொல்லி, லாக்டௌன்; சேல்ஸ்டௌன் ; வசூல்டௌன் என்று ஏதேதோ நிகழ்ந்து போயின ! தவிர இளம் டெக்ஸ் கதைகளை சந்தா D-யில்   வெளியிட வகையின்றிப் போக, அதனிடத்தினில் எட்டிப் பார்த்த golden oldies நிறைய பேரைப் பேஸ்தடிக்கச் செய்ததே மிச்சம் ! இன்னமும் ஜனவரியில் போட்ட இந்த சந்தா D புக்ஸுக்கு வசூல் தொக்கி நிற்கும் சூழலில், காத்திருக்கும் 2021-ல் இந்தப் பரீட்சார்த்தம் தொடர்ந்திடாது ! ஒரு தூரத்துப் பொழுதில், சகலமும் நலமான பின்னே, இன்னும் வீரியமான கதைகளைத் தேடிப்பிடித்த கையோடு இது குறித்து திரும்பவும் யோசிப்போம் ! So இப்போதைக்கு ஒரு எழுத்தை விழுங்கிவிட்டு நகர்வோம் ஒரு (brief ) சந்தா E திக்கினில் ! 

Truth to tell - இங்கேயும் 6 இதழ்களையே நான் திட்டமிட்டிருந்தேன் & கதைகளையும் shortlist செய்திருந்தேன் ! ஆனால் பட்ஜெட் ஏறிக் கொண்டே செல்வது நெருடியது ! தவிர, இம்முறை மட்டுமேயாவது இருண்ட களங்கள் வேண்டாமே ; இயன்றமட்டிற்கு சற்றே நார்மலான வாசிப்புகளுக்கு முன்னுரிமை தருவோமே என்று பட்டது ! So நான் தேர்வு செய்திருந்த 3 கலர் ஆல்பங்கள் + 3 black & white ஆல்பங்களில் வண்ணங்களை மட்டுமே முன்னுரிமை தந்து பாக்கியினை வேறொரு வேளைக்கெனப் பின்தள்ளிடத் தீர்மானித்தேன் ! So இம்முறை கி.நா.சந்தா நம்ம தலீவரின் புஷ்டியோடு மட்டுமே இருந்திடும் ! 

துவக்கம் தரவிருப்பது கூட தலீவரின் ஒடிசலும், எனது முன்மண்டையும் கலந்த ஜாடையில் இருக்குமொரு புதுவரவே ! And இவரும் ஒரு வெட்டியான் தான் ! ஏற்கனவே நமக்குத் பரிச்சயமான UNDERTAKER தாட்டியமான சீரியஸ் நாயகரெனில், இப்போது நாம் சந்திக்கவுள்ள STERN ஒரு studious டைப் ! செய்வது வெட்டியான் வேலையெனினும், மனுஷனுக்கு புத்தக வாசிப்பு மீது ஆர்வம் ஜாஸ்தி ; உலக ஞானம் உண்டு ; துப்பறிதலில் ஈர்ப்பு உண்டு ! And கதை நிகழ்வதும், நமக்கு உசிலம்பட்டி-வாடிப்பட்டி ரேஞ்சுக்குப் பரிச்சயமாகி நிற்கும் வன்மேற்கில் எனும்போது இந்தப் புது நாயகரை நம் அணிவகுப்பினுள் புகுத்துவதில் எனக்குத் தயக்கங்கள் இருக்கவில்லை ! இன்னும் சொல்லப்போனால் 2020-ன் அட்டவணையிலேயே இடம்பிடித்திருக்க வேண்டியவர் இவர் ; கடைசி நேரத்தில் ஏதோவொரு காரணத்தின் பொருட்டு வெயிட்டிங் லிஸ்டுக்கு நகர்த்தியிருந்தேன் ! இந்தத் தொடரில் இதுவரைக்கும் நான்கே ஆல்பங்கள் தான் உள்ளன என்றாலும், தொடர் பெற்றிருக்கும் அழகான வரவேற்பில் காரணமாய் இது நீந்திடும் என்றே தோன்றுகிறது ! எனக்கோ இந்தக் கதையின் template மட்டுமன்றி, இதன் செம breezy சித்திர பாணியும் ரொம்பவே பிடித்திருந்தது ! So let's say hello to :  "வழியனுப்ப வந்தவன்" - ஒரு  டிடெக்டிவ் வெட்டியான் / வெட்டியான் டிடெக்டிவ் ! முழுவண்ணத்தில் !

 கி.நா.# 2 ரொம்பவே வித்தியாசமான ஆக்கம் ! இதைப் பற்றி ரொம்பவே பில்டப் தரப்போவதில்லை நான் - simply becos "இதுவா இருக்குமோ ? அதுவா இருக்குமோ ? இப்டி இருக்குமோ ?" என்ற உங்கள் அலசல்களுக்கும் கொஞ்சம் space தேவைப்படலாமில்லையா ? "நிலவொளியில் நரபலி" வந்த அதே compact சைசில், முழுவண்ணத்தில், செம வித்தியாசமான கதையோட்டத்தோடும், சித்திர பாணியோடும் வெளிவரவுள்ள இந்த ஆல்பம் நிச்சயமாய் ரொம்ப different கி.நா. என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன் ! 

And # 3 தான் புது அட்டவணையிலேயே நான் அதிகம் எதிர்பார்த்திருக்கும் ஆல்பம் ! இதுவரைக்கும் நாம் ஏகப்பட்ட ஹீரோக்களை சந்தித்திருப்போம் ! மிடுக்கான ஜேம்ஸ் பாண்ட் ; ஆணழகன் லார்கோ ; மீசைக்கார ஷெல்டன் ; கம்பீரமான டெக்ஸ் ; ஸ்டைலான ரிப்போர்ட்டர் ஜானி ; rugged கேப்டன் டைகர் ; mysterious XIII என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் தானே ? ஆனால் இதுவரையிலும் இப்படியொரு ஹீரோ கூட்டணியை நாம் கற்பனையிலும் உருவகப்படுத்தியிருக்க மாட்டோம் என்பேன் ! Because "பெருசுகள் பட்டாளம்" என்ற அடையாளத்தோடு கைத்தாங்கலாய்க் களமிறங்கும் இந்த மூவரணி - 'இன்னிக்கு செத்தால் இப்போவே பால்' என்ற அகவைகளில் உள்ளோர் ! வாழ்க்கையின் அந்திப் பொழுதைத் தொட்டு நிற்கும் இந்த தாத்தாஸ் அத்தினி பேருக்கும் பல் போயிருந்தாலும், குசும்போ ; லந்தோ ; லூட்டிகளோ விடைதந்திருக்கவில்லை ! இவர்கள் தாத்தாஸ் அல்ல ; ஜாலிலோ ஜிம்கானா தாதாஸ் ! இவர்களை பற்றிப் போனவருஷத்தின் ஏதோவொரு தருணத்தில் இங்கே எழுதியிருந்தேன் என்பது லேசாக நினைவுள்ளது ! இம்முறை அவர்களைக் கண்ணில் காட்டியே தீர வேணுமென்றே முனைப்பில் "அந்தியும் அழகே" ஆல்பத்தினைத் திட்டமிட்டுள்ளேன் - முழு வண்ணத்தில் ! இவர்களது தொடரினில் ஓரளவுக்கு கதைகள் உள்ளன என்பதால் தாதாக்களை நீங்கள் வாஞ்சையோடு ஏற்றுக்கொள்ளும் பட்சங்களில் - லூட்டிகள் தொடர்கதையாகிடும் ! So ஏதோ பாத்துப் பண்ணுங்க யூத்ஸ் ! 

Thus ends the brief சந்தா E & effectively our regular சந்தா பிரிவுகள் !


 AND THEN - JUMBO>>>>

ஜம்போவின் அடுத்த சீசனைப் பற்றி இப்போவே விளம்பரம் செய்வதா ? அல்லது பிப்ரவரி / மார்ச்சில் பார்த்துக் கொள்வதா ? என்ற கேள்வியோடு நிறையவே மல்லுக்கட்டினேன் ! விளம்பரத்தை மட்டும் இப்போதே செய்திடலாம் - உங்கள் தொகைகளை இப்போதோ ; அப்போதோ அனுப்பிக்கொள்ளும் வசதிகளோடு - என்று இறுதியில் தீர்மானித்தேன் - for 3 reasons : 

Reason # 1 : நம்மில் இன்னமும் பாதிக்கு மேலான நண்பர்கள் இந்த வலைப்பக்கங்களை எல்லாம் கண்டுக்குவதில்லை என்பதே யதார்த்தம் ! வந்துச்சா புக்கு ? - படிச்சோமா ? - போய்க்கிட்டே இருந்தோமா ? என்றிருக்கும் அந்த அணியினரின் பார்வைகளில் நாம் நடுவாக்கில் செய்திடும் திட்டமிடல்கள் ; அறிவிக்கும் இதழ்களெல்லாம் போய்ச் சேர்வதில்லை ! 'நான் தான் எல்லாச் சந்தாக்களையும் கட்டிப்புட்டேன்லே ; எனக்கு "பிரிவோம்-சந்திப்போம்' ஏன் வரலை ? Zaroff ஏன் வரலை ? என்று கண்சிவப்போர் ஏராளம் ! அவர்களிடம் "இது ஜம்போ புக்ஸ் சீசன் 2 ..3 ..இதுக்கு நீங்க இன்னமும் சந்தா கட்டலீங்கோ !" என்பதை புரிய வைப்பதற்குள் நம்மவர்கள் வாங்கிடும் ஏய்ச்சுக்கள் ஒருவண்டி ! So அட்டவணையிலேயே ஜம்போவையும் highlight செய்துவிட்டால் எங்கள் மட்டிற்கு நோவுகள் கொஞ்சம் குறைச்சல் என்று நினைத்தேன் ! 

Reason # 2 : நடப்பாண்டினில் ஒரு ஓசையில்லா அதிசயம் நிகழ்ந்துள்ளது - ரெகுலர் சந்தாக்களை ஜம்போ ஓவர்டேக் செய்திடும் பாணிகளில் ! நவம்பரில் ஜம்போ சீசன் # 3 -ன் ஐந்தாவது இதழ் வெளிவரவுள்ளது & இதழ் # 6 ஆன Lone ரேஞ்சர் டிசம்பரில் களம் காண்கிறார் ! So ஜம்போவின் சீசன் 3 இம்முறை சர சரவென பூர்த்தி கண்டிடவுள்ளதால் - அடுத்த சீஸனின் அறிவிப்பினில் எனக்கு நெருடவில்லை ! 

Reason # 3 : இது எடிட்டர் குல்லாயோடு இல்லாது, ஒரு வாசகத் தலைப்பாகையோடு எடுக்கப்பட்ட தீர்மானம் ! என்ன தான் இது 9 மாதத்துக்கான அட்டவணையே என்பது தெரிந்தாலும் ; என்ன தான் கொரோனாவின் காரணமாய் ஓவர் அலம்பல் சாத்தியமல்ல என்று தெரிந்தாலுமே - மொத்தம் 27 புக்ஸ் மாத்திரமே கொண்ட அட்டவணை சற்றே 'பொசுக்' பீலிங்கை தரக்கூடும் என்று தோன்றியது ! ஒரு அட்டவணை தான் காத்திருக்கும் புதுப் பொழுதுகளின் நுழைவாயில் எனும் போது இங்கே உங்களுக்குக் கிட்டிட வேண்டிய மனநிறைவு ஏதேனுமொரு காரணத்தினால் குன்றிடும் பட்சத்தில் - அது நெருடிடக்கூடும் என்பது எனது எண்ணம். So மூன்று மாதங்களுக்கு அப்பாலிக்கா செய்திட வேண்டிய அறிவிப்புகளையும் இப்போதே இணைத்திடும் பட்சத்தினில் - செயலரின் புஷ்டி இக்கட சாத்தியமாகிடுமென்று பட்டது ! 

And before we get into the books - let me make it very clear folks : 

ஜம்போ சீசன் 4-ன் சந்தாத் தொகைகளை நீங்கள் பிப்ரவரி / மார்ச்சில் கூட அனுப்பிடலாம். அதனையும் இந்த நொடியே உங்களிடம் வசூலிக்கும் முனைப்பு சத்தியமாய் கிடையாது எங்களுக்கு ! இந்த விளம்பரங்கள் அடுத்த சீசனைப் பற்றியதொரு தகவல் பலகையைப் போன்றதே ! So "லோன் போட Lone  ரேஞ்சர் கிட்டே கேட்கலாமா ? இல்லாங்காட்டி சொத்தை அடமானம் வைக்கலாமா பங்காளி ?" என்ற ஆழ்சிந்தனைப் பரிமாற்றங்கள் ஆங்காங்கே அவசியமாகிடாது ! 

ஜம்போவில் வழக்கம் போலவே 6 இதழ்கள் தான் ! And வழக்கம் போலவே அவற்றுள் 4 இதழ்களின் அறிவிப்பு இப்போதே இருந்திடும் & பாக்கி 2 உரிய வேளையினில் ! கொஞ்சமாய் அந்த வெற்றிடம் இருக்கும் பட்சத்தில் - எனக்குக் கடைசி நிமிடச் சேர்த்தல்கள் / கல்தாக்கள் சாத்தியப்படும் என்பதால் அந்த பாணியைத் தொடர்ந்திடவுள்ளேன் !  

We start with : "ஒரு தலைவனின் கதை !

ஆல்பம் #  1 : வன்மேற்கினில் குடியிருக்காத குறையாக மாதா மாதம் யாரேனும் ஒரு நாயகரோடு அந்தப் பக்கமாய் உலாற்றித் திரியும் நமக்கு - எப்போதேனும் ஒருவாட்டி - அதே வன்மேற்கின் சாயம்பூசப்படா நிஜங்களின் அறிமுகம் இருத்தல் நலமென்று தோன்றியது ! ஜெரோனிமோ என்ற செவ்விந்தியப் பெருந்தலை சார்ந்ததொரு படைப்பு (நமக்குப்) புதியதொரு பிரெஞ்சுப் பதிப்பகம் வெளியிட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது ! 2016-ல் பிராங்கபர்ட் புத்தக விழாவினில் அவர்களை சந்தித்திருக்க, அப்போது வாங்கிய பல்பை தூர வீசி விட்டு, மறுக்கா முயற்சித்தோம் ! அவர்களுமே நமது ஆர்வங்களுக்கு இம்முறை அன்புடன் செவி சாய்த்திட -  தமிழ் பேச வருகிறார் ஜெரோனிமோ ! மூச்சிரைக்கச் செய்யும் சித்திரங்களும் வண்ணச்சேர்க்கையும் இந்த ஆல்பத்தை கண்களுக்கொரு விருந்தாக்கிடவுள்ளது highlight என்பேன் ! IMAGES ARE IN THE BOTTOM OF THE POST  !!

ஆல்பம் # 2 நமக்கு ஏற்கனவே பழக்கமான திடகாத்திர தாடிவாலாவே ! And ஒரிஜினல் வெட்டியானும் இவரே ! Yes - அண்டர்டேக்கரின் புது ஆல்பங்கள் 5 +6 கொண்ட தொகுப்பானது ஜம்போவினில் வரவுள்ளன ! சொல்லப்போனால்  ஆல்பம் # 6 தற்சமயம் பிரெஞ்சினில் இன்னும் வெளியாகவில்லை தான் ! ஆனால் காத்திருக்கும் நவம்பர் 27 -ல் பாகம் 6 உறுதியாய் வெளியாகிடவுள்ளதால் நமக்கு இதன் பொருட்டு no problems ! இம்முறையும் அண்டர்டேக்கர் மிரட்டோ மிரட்டென்று மிரட்டுவதால் "ஒரு வெள்ளைச் செவ்விந்தியன்" ஜம்போவின் ஹிட்லிஸ்டுக்கு உரம் சேர்க்குமென்று நம்பிடலாம் ! Fingers crossed !  

ஆல்பம் #3 - வழக்கம் போலவே ஒரு மாறுபட்ட one-shot ! இம்முறையோ அதுவொரு க்ரைம் த்ரில்லர் & yet another album  from French ! இப்போதைக்கு இந்த அறிமுகமே போதுமென்பதால் - "சித்திரமும் கொலைப்பழக்கம்" வெளிவந்திடும் நேரத்தினில் மீதத்தைத் தெரிந்து கொள்ளலாம் ! IMAGES ARE IN THE BOTTOM OF THE POST  !!

ஆல்பம் # 4 : மீண்டுமொரு க்ரைம் த்ரில்லர் & மீண்டுமொரு one -shot & மீண்டுமொரு பிரெஞ்சு ஆக்கம் ! ஆனால் இம்முறை அது black & white + grey shades -ல் உருவாக்கப்பட்டதொரு படைப்பு என்பதால் பக்கத்துக்குப் பக்கம் ஓவியரின் ஜாலங்கள் கண்ணைக் கட்டுகிறது ! கதையோ மிரட்டலானதொரு கொலையாளியைத் தேடிடும் whodunit ! "வைகறைக் கொலைகள்" எதுமாதிரியும் இருக்காப் புது மாதிரி ! IMAGES ARE IN THE BOTTOM OF THE POST !!

ஆல்பம் # 5 & 6 : என்னளவிற்கு தேர்வுகள் நிறைவுற்று, கதைகளும் ரெடியே ! ஆனால் திடுதிடுப்பென ஏதாச்சும் புதுசாய்க் கண்ணில்படும் பட்சத்தில் அதனை உட்புகுத்த இந்த அறிவித்திடா slots உதவிடும் என்பதால் இப்போதைக்கு 5 & 6 will stay under wraps !!ஆக ஆண்டவன் அருளோடு காத்திருக்கும் 2021-ல்  நாம் குப்பை கொட்டவுள்ளது இந்த 27 + 6 இதழ்களோடு தான் ! நிச்சயமாய் இவற்றின் தேர்வுகளில் இம்முறை பெரிதாய் சர்ச்சைகள் இராதென்பதே எனது நம்பிக்கை - becos இருக்கும் முக்கிய நாயக / நாயகியர் சகலரையும் ஏதோ ஒரு இண்டிலோ, இடுக்கிலோ இணைக்க முற்பட்டுள்ளேன் ! அதே போல அரைத்த மாவை, அரைத்த அதே ஆசாமிகளோடு அரைத்திடாது, கொஞ்சமே கொஞ்சமாய்ப் புது வரவுகளை கண்ணில்க்காட்டவுமே முயற்சித்துள்ளேன் ! So இருக்கும் நமது வரையறைகளுக்குள் இயன்றதை, எனக்குத் தெரிந்த மட்டிற்கு நிறைவேற்றிடச் செய்திருக்கும் honest முயற்சி இது ! இனி இவற்றை அலசுவதும், ஆராய்வதும், சிலாகிப்பதும், சாத்துவதும் உங்களின் பொறுப்புங்க மக்களே ! 

கிளம்பும் முன்பாய் கொஞ்சமே கொஞ்சமாய் கேள்வி-பதில்களையும் சம்பிரதாயப்படியே செய்து முடித்துவிட்டால் ஆங்காங்கே கீ-பேட்கள் நசுங்கிடும் அவசியங்கள் இராதல்லவா ? So here goes :

 1. "சிக்கனம்...சுக்கா ரொட்டி " என்ற கோஷங்கள் காதிலே விழுந்துச்சே ; அப்பாலிக்காவும் மூவாயிரத்து எண்ணூருக்குச் சந்தாவாப்பா தம்பி ?

  Much as I wanted to keep the final number low - லயனின் இதழ் # 400 & முத்துவின் இதழ் # 450 எனும் மைல்கற்களை ஏனோ-தானோவெனத் தாண்டிச் செல்ல எனக்கு மனதில்லை ! So இந்த 2 இதழ்களுக்குமெனத் திட்டமிட்டிருக்கும் இதழ்கள் மட்டுமே பட்ஜெட்டில் ரூ.800-ஐ கோரிவிட்டுள்ளன ! இவற்றின் இடங்களில் ரெகுலர் இதழ்களே இடம் பிடித்திருப்பின் - நிச்சயமாய் மொத்தத் தொகை மூவாயிரத்தின் அருகிலேயே தான் இருந்திருக்கும் ! Again - விற்பனைகளின் கோணத்திலிருந்து பார்ப்பதாயின் - நமது ட்யுராங்கோ கையிருப்பு வெறும் இரண்டு இதழ்களே & டெக்சின் வண்ண இதழ் கையிருப்புமே இரண்டே தான் ! So கெலிக்கும் குதிரைகளை லாயத்திலேயே அடைத்து வைக்க வேண்டாமே என்ற அவாவில் எனது சந்தா வரையறையை அதிகமாக்கிட வேண்டிப் போய் விட்டது ! டெக்சின் ஐநூறு ரூபாய் இதழினை "முன்பதிவுகளுக்கு மட்டும்" என்று திட்டமிடும் எண்ணமும் லேசாய்த் தலைதூக்கியது தான் - ஆனால் ஒரு மாஸ் நாயகருடனான மைல்கல் இதழினை எல்லோருக்கும் சென்றடையும் விதமாய்த் திட்டமிடுவதே உத்தமம் என்று நினைத்தேன் ! 
 2. இரண்டே சந்தாப் பிரிவுகள் என்று சொன்னியே ; இப்போ 4 இருக்கே ?

  இங்கேயும் எனது வைராக்கியம், பிரசவகாலத்து வைராக்கியம் போலவே அமைந்துவிட்டது ! 'என்ன குட்டிக்கரணம் போட்டாலும் கார்ட்டூன்ஸ் ருசிக்காது / ரசிக்காது' என்போரும், 'என்ன ஜாலங்கள் செய்தாலும் கி.நா.க்கள் அறவே ஆகாது' என்போரும் நம்மிடையே இருக்கையில் நான் இரண்டே சந்தாக்களை மட்டுமே அறிவிப்பதாயின் - நாமே அவர்களை சந்தாவினில் தொடர்வதைச் சிக்கலாக்கியது போலிருக்கும் என்றுபட்டது ! So இம்முறை மூன்றே சந்தா ரகங்கள் இருக்கும் :

  சந்தா Falooda - A + B + C + E என நாலு பிரிவுகளும் !!
  சந்தா Vanila - கி.நா.க்கள் இல்லாத சந்தாக்கள் - A + B + C
  சந்தா Chocolate - கார்ட்டூன்ஸ் இல்லாத சந்தாக்கள் - A + B + E


  மேற்படி மூன்றுக்குமான அந்த லோகோக்களின் டிசைன் ஜூனியர் எடிட்டரின் உபயம் !! பார்த்தாலே நாவிலே ஜலம் ஊரும்  ஏதேனுமொன்றைத் தேர்வு செய்திடும் பொறுப்பு உங்களிடம் folks !! இந்த ஐஸ் க்ரீம்களில் எதுவுமே ஜல்ப்புப் பிடிக்கச் செய்திடாது என்பதால் தகிரியமாய் போட்டுத் தாக்கலாம் ! 3. இரத்தப் படலம் மறுக்கா மறுக்கா மறுக்கா பதிப்பு பற்றி ?

  முன்பதிவுகளின் எண்ணிக்கை இந்தப் பதிவினை நான் டைப் செய்திடும் வெள்ளி மாலை வரையிலும் 141-ல் நின்றது ! இன்றைக்கு மதியத்துக்குள்ளோ அவசரம் அவசரமாய் இன்னொரு 9 முன்பதிவுகள் - so தற்போதைய டோட்டல் 150-ல் கச்சிதமாய் நிற்கிறது ! நாம் அறிவித்திருந்த அக்டோபர் 31 காலக்கெடு இன்றோடு நிறைவுறுவதால் கிட்டத்தட்ட நாலரை மாதங்களின் அவகாசத்தினில் சாத்தியமாகியுள்ள நம்பர் இதுவே என்றாகிறது ! இன்னமும் இதே அளவுத் தொலைவினை மேற்கொண்டும் கடந்தாலொழிய இந்த project கரைசேர்வது துர்லபம் ! துவக்கத்தில் சஞ்சு சேம்சனின் வேகம் பிடித்து ; அப்புறமாய் கேதார்  ஜாதவின் மந்தம் கண்ட இந்த முன்பதிவுகள், கடைசி நாள் நெருங்க நெருங்க, மறுக்கா ஜோஸ் பட்லரின் ஆட்ட பாணிக்கு மாறியுள்ளது நிஜம் தான் ! So இன்று புதுச் சந்தா சார்ந்த அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நமது முழு focus இதன் மீதே இருந்திடும் / இருந்திட வேண்டும் ! So முதற்காரியமாய் இரத்தப் படலம் ஆன்லைன் லிஸ்டிங்கள் அனைத்தையும் (தாற்காலிகமாகவாவது) தூக்கிடச் சொல்லியுள்ளேன் ! ஏப்ரல் 2021-ல் நமது ரெகுலர் சந்தாக்களின் இன்னிங்ஸ் துவக்கம் கண்டான பின்பாய் சரியாக 60 நாட்கள் அவகாசம் மாத்திரமே தந்து மே 31 வரையிலும் மேற்கொண்டு முன்பதிவுகளுக்கு அவகாசம் தந்திடவுள்ளோம் - as promised already ! And முன்பதிவு நம்பர் 250-ஐத் தொடும் கணமே நாங்கள் அச்சுப் பணிகளைத் துவங்கிடுவோம் ! So 'இது ஹேஷ்யமான project அல்ல ; மெய்யாலுமே வெளிவந்திடும்' என்ற ஊர்ஜிதம் கிட்டிடும் சமயத்தில், விளிம்பில் நின்று சிந்திக்கும் நண்பர்கள் ஆர்வம் காட்டுவார்களென்ற நம்பிக்கையுள்ளது !   Maybe 250 பக்கமாய் முன்பதிவுகள் பயணிக்கவேயில்லை  ; இலக்கு எட்டாக்கனியாகவே தொடர்கிறதெனில், மொத்தத் திட்டமிடலுக்குமே டாட்டா காட்டுவதே நமக்கிருக்கும் வழியாகிடும் !

  In the meantime - இதுவரையிலும் முன்பதிவு செய்துள்ளோரில் யாருக்கேனும் வாபஸ் வாங்கி கொள்ளும் ஆர்வமிருப்பின், ஒரேயொரு மின்னஞ்சலைத் தட்டி விட்டால் போதும் - உங்களின் முன்பதிவுத் தொகைகள் உங்களிடம் மறு நாளே இருந்திடும் ! தம்படிக் காசைக் கூட அதனிலிருந்து செலவிடவில்லை என்பதால் refunds are possible now ! (ப்ராஜெக்ட் துவக்கம் கண்டான பின்னே refund கோரினீர்களெனில்  , அதற்கு வாய்ப்பிராதுங்கோ !)

  லாக்டௌனின் உச்சத்தினில், பதட்டத்தில், நானாய் வலியப் போய் தேடி அமர்ந்து கொண்ட இந்த ஆப்பிலிருந்து வெளியேற எனக்கு வேறு வழிகள் தெரியில்லா ! Maybe if someone has a better option - கேட்டுக்கொள்ளத் தயாராகயிருப்பேன் !  But இப்போது நான் அறிவித்துள்ளதே இந்த நொடியின் எனது நிலைப்பாடு !
 4. இந்தாப்பா - இரத்தப் படல spin-off கிடையாதுன்னா பூமி குப்பறடிக்கா சுழலுமே - பரால்லியா ?

  Spin-off இல்லாத spinning world-ல் எதையாச்சும் பிடிச்சுக், கிடிச்சு சமாளிச்சுப்பேன் ! இத்தொடரினில் - ஆங்கிலத்தில் நானே படித்துப் புரிந்துகொள்ளும்படியாய் தெளிவான ஆல்பங்கள் என்றைக்கு வெளியாகின்றனவோ அன்றைக்கே நான் படித்து, ஒரு தீர்மானத்துக்கு வந்த பிற்பாடு மேற்கொண்டு யோசிக்கலாம் என்று உத்தேசித்துள்ளேன் ! So அதுவரையிலும் offspin ; legspin என்பதோடு வண்டியை ஒட்டிட நினைக்கிறேன் ! 
 5. MAXI லயன் ; வாண்டு ஸ்பெஷல் ??

  ஏற்கனவே இவை குறித்துப் பேசி விட்டோம் என்பதால் no more reruns ! கொரோனா இல்லா உலகம் சாத்தியமாகி, நார்மலான நாட்கள் புலர்ந்திடின், நமது ஆன்லைன் புத்தக விழாக்களோ ; வழக்கமான புத்தக விழாக்களோ மறுதுவக்கம் கண்டிட்டால் - MAXI ஆஜராகிடும் !
 6. ஈரோட்டுக்கு ????

  மறப்போமா ? பதிலுக்குப் பத்தி பத்தியாய் டைப்படிப்பதற்குப் பதிலாய் - இதோ பதில் !! 

 7. விலைலாம் கூடியிருக்கே..இன்னா மேட்டரு ?

  நிலவரம் என்னவென்பதும், விற்பனைகளின் சுணக்கங்களின் பரிமாணம் என்னவென்பதும் ஊருக்கே தெரியும் எனும் போது, இதுவொரு தவிர்க்க இயலாத தீர்மானமாகிறது ! மொத்தச் சந்தாவினில் நாம் செய்திருக்கும் விலையேற்றம் பிரதிபலிப்பது ரூ.160 என்ற மட்டிற்கே ! So இதை நியாயப்படுத்துகிறேன் பேர்வழி என நான் ஒரு பாட்டம் பாட்டுப் படிப்பதும், அதனையும் பொதுவெளியில் போட்டு துவைத்துத் தொங்கப்போடுவதும்,  நிச்சயமாய் யாருக்கும் பயன் தரப் போவதில்லை ! வியாபாரம் சார்ந்த முடிவுகள் இனி என்னோடே துவங்கி, என்னோடே முடிந்தும் விடும் சமாச்சாரங்களாகவே இருந்துவிட்டுப் போக அனுமதி கோருகிறேன் guys ! 
  ##############################################################################
  Phew !!!!! நிறைவாகவோ, சுமாராகவோ - ஆண்டின் எனது பிரதானப் பணிகளுள் ஒன்றை நிறைவு செய்திட்ட திருப்தியுடன் கிளம்பிட முனைகிறேன் guys ! இது தான் தற்போதைய best என்றெல்லாம் மார்தட்டிக் கொள்ள மாட்டேன் - simply becos ரசனைகளெனும் வானவில்லனில் யார் - எங்கே நிலைகொண்டுள்ளனர் என்பதைப் பொறுத்தே இது ரசிக்கவோ - கடிக்கவோ செய்திடும் என்பதில் ஏது ரகசியங்கள் ? So எனக்குச் சாத்தியப்பட்ட பெஸ்ட்டை ; உங்களின் அண்மைகளோடு களமிறக்கிட ஆண்டவன் yet another வாய்ப்பினை நல்கிடுவார் என்ற நம்பிக்கையோடு உங்களிடமிருந்து இப்போதைக்கு விடைபெற்றிடுகிறேன் !

  Uh oh....இன்னொரு விஷயம் ; ரெம்போ முக்கிய விஷயம் பாக்கியுள்ளதே !! அதனைச் சொல்லிடாது எங்கே நான் கிளம்புவது ?

  நமது சிறுவட்டத்தினுள் பெரும்சிந்தனை கொண்டோருக்குப் பஞ்சமே கிடையாதென்பது நமக்குத் தெரிந்ததே  ! நட்புக்களுக்குக் கரம்நீட்டுவது ; அவசியங்களுக்கு உதவிடுவது ; நமது இக்கட்டுகளில் தோள் கொடுக்க முனைவது ; சந்தா செலுத்தச் சிரமம் காணும் நண்பர்களுக்கு இயன்றமட்டிலும் ஒத்தாசை செய்வதென அந்தப் பரோபகாரப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது ! அதன் yet another அத்தியாயம் போன வாரம் நான் குறிப்பிட்டதொரு மின்னஞ்சல் மார்க்கமாய் :

  "நமது சிறுவட்டத்திலுள்ள நண்பர்களை இந்த இடர்மிகு காலத்திலும் சந்தாக்களில் தொடர்ந்திட ஊக்குவிக்கும் விதமாய் ஏதேனும் செய்யணுமே சார் ; அதற்கு எனது பங்களிப்பாய் ரூபாய் ஒரு லட்சம்  அனுப்பிட விழைகிறேன் !  அதனை சந்தாவினில்  ஒரு discount ஆகப் பிரித்து சந்தா நண்பர்களுக்கு வழங்கினாலும் சரி ; ஏதேனும் பிரத்யேக gift போல சந்தாதாரகளுக்குத் தந்திட்டாலும் சரி - தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் !"

  மேற்படியே அந்த மின்னஞ்சலின் சாராம்சம் !

  குத்துமதிப்பாய் சுமார் 500 சந்தா நண்பர்கள் 2021-க்குக் கிட்டிடும் பட்சத்தில், அவர்கட்கு தலா ரூ.200 discount எடுத்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கும் ! அல்லது ரூ.200 பெறுமானமுள்ள ஏதேனும் அழகான புக்கை நண்பரின் அன்புடன் நாம் தயாரித்து வழங்கிடும் வாய்ப்புமிருக்கும் ! Honestly ஸ்தம்பிக்கச் செய்துள்ளது நண்பரின் இந்த மின்னஞ்சல் & கடந்த ஒரு வாரத்தில் தீபாவளி மலர் சார்ந்த பணிகள் கழற்றிய பெண்டின் மத்தியினில் இது குறித்து சிந்திக்க நிறைய அவகாசம் எடுத்துக் கொள்ள இயலவில்லை ! But வெள்ளியிரவு இது பற்றி யோசிக்க முயற்சித்த போது - இரண்டு option களையுமே நடைமுறைப்படுத்தினால் தப்பில்லை என்றே பட்டது !

  So சந்தா Falooda-வுக்கு 'ஜே' போடும் நண்பர்களுக்கு ரூ.200 திருப்பி வாங்கிக்கொள்ளும் வாய்ப்பு இருந்திடும். You'll have to send us the full amounts & we will send Rs.200 back to you - once enrolment is completed & we are sure of the actual numbers ! (அவ்விதம் செய்யாவிடின் சந்தா ஆன்லைன் லிஸ்டிங்கில் ஒரு நூறு குழப்பங்கள் நேர்ந்து விடும் !! )

  Discount வேண்டாமென எண்ணிடும் சந்தா நண்பர்கள் , கீழ்க்கண்டஇதழினை  விலையின்றி April 2021-ல் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் இருந்திடும் ! Again just for Falooda சந்தா  !!

  TEX - கழுகு வேட்டை  - முழு வண்ணத்தில் - ரெகுலர் சைசில் -  ஹார்ட்கவர் !!
 8. And சந்தாவில் இல்லாத நண்பர்கள் இந்த கிளாசிக் மறுபதிப்பினை , அதன் அசல் cover price ரூ.250-க்கு 2021-ன் முதல் புத்தக விழாவின் வேளையில் (கோவை ? ஈரோடு ? மதுரை ?) வாங்கிடும் வாய்ப்பிருக்கும் !

  So சந்தா எக்ஸ்பிரஸின் கோச் விபரங்களும் உங்கள் முன்னே ; டிக்கெட் கட்டணங்களையும் அறிவித்தாச்சு &  இதோ வழியில் கொறிக்க பரோபகார நண்பரின் snacks கூட ரெடி ! பயண முஸ்தீபுகளில் நாங்கள் வருஷம் முழுக்க கச்சை கட்டிக்கொண்டே தயாராய் இருப்பதால் - நீங்கள் கரம் கோர்க்க வேண்டியது மட்டுமே பாக்கி folks ! As always இந்தப் பயணம் உங்கள் அனைவரின் துணையின்றி முழுமையடையாது என்பதால் - ஆர்வமாய்க் காத்திருப்போம் ! ஆண்டவன் அருளோடு ஒரு சந்தோஷப்பயணம் வாய்த்திட வேண்டியபடிக்கே இப்போதே நடையைக் கட்டுகிறேன் !

  Thank you for reading this & thank you for being the wonderful people you are !! Bye for now ! மீண்டும் சந்திப்போம் !

  And  ஆன்லைன் listings தயார் : https://lioncomics.in/product/falooda-subscription-2021-april-to-december-abce-other-state/
416 comments:

 1. மீ த ஃபர்ஸ் ஃபார் த ஃபர்ஸ்ட் டைம் இன் மை லைஃப்! (ப்பா.. எத்தனை ஃ!!!)

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகள் ஈ.வி.

   Delete
  2. வாழ்த்துக்கள் EV

   Delete
  3. பதிவை போட்ட கையுடன் கமெண்ட் போட வேண்டுமா ஈனா வினா :)

   Delete
  4. "Football is a simple game; 22 men chase a ball for 90 minutes and at the end, the Germans win." - Gary Lineker-england striker (1986 world cup's Golden Boot winner)

   "மீ த பர்ஸ்ட் "--- கான்டஸ்ட் (???) வின்னர் ஈவிக்கு வாழ்த்துகள்🌹🌹🌹🌹🌹

   Delete
  5. வாவ்வ்வ்...உம்ம்ம்மா.. வாழ்த்துக்கள்... கலக்குறோம்..

   Delete
  6. // பதிவை போட்ட கையுடன் கமெண்ட் போட வேண்டுமா ஈனா வினா :) //

   அதே அதே :-)

   Delete
 2. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 3. நான் தான் முதலில்

  ReplyDelete
 4. Replies
  1. எப்படியோ அடிச்சி புடிச்சி வந்திட்டேன்.

   Delete
  2. பத்துக்குள்ளே வந்திட்டேன்.மொத ரெண்டு பரிசு வாங்கினவங்க பத்து பங்கா பிரிக்கணும்னு சொல்லிக்கிட்டு......


   பதிவை படிக்கப் போறேன்.

   Delete
 5. // "நமது சிறுவட்டத்திலுள்ள நண்பர்களை இந்த இடர்மிகு காலத்திலும் சந்தாக்களில் தொடர்ந்திட ஊக்குவிக்கும் விதமாய் ஏதேனும் செய்யணுமே சார் ; அதற்கு எனது பங்களிப்பாய் ரூபாய் ஒரு லட்சம் அனுப்பிட விழைகிறேன் ! அதனை சந்தாவினில் ஒரு discount ஆகப் பிரித்து சந்தா நண்பர்களுக்கு வழங்கினாலும் சரி ; ஏதேனும் பிரத்யேக gift போல சந்தாதாரகளுக்குத் தந்திட்டாலும் சரி - தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் !" //

  அந்த நல்ல மனம் வாழ்க. மிகவும் பெரிய மனது.

  ReplyDelete
 6. வந்துட்டோம்ல ...

  என்ன படிச்சுட்டு திரும்ப வரத்தான் ஒருமணி நேரம் ஆயிரும் போல..:-)

  ReplyDelete
 7. Falooda சந்தா எனக்கு. அந்த பெரிய மனது நண்பரின் டிஸ்கவுட் வேறு யாராவது தேவைப்படும் நண்பர்களுக்கு கொடுத்து விடுங்கள் சார்.

  ReplyDelete
 8. விஜயன் சார், 2021 காமிக்ஸ் அட்டவணை கலக்கல் சார். முழுவதும் படித்து விட்டு பிறகு வருகிறேன். நன்றி சார்.

  ReplyDelete
 9. Falooda சந்தா :+ நேற்று ₹4000 அனுப்பி இருந்தேன். மீதியை ₹200 இப்போது அனுப்பி விடுகிறேன். நன்றி.

  ReplyDelete
 10. அதுக்குள்ளயே பதிவு வந்தாச்சா

  ReplyDelete
 11. எங்க நண்பருக்கு இடம் மகிழ்ச்சி.. தல தளபதி தீபாவளி அருமை....முழுசா மறுபடியும் படிச்சுட்டு வாரேன்...

  ReplyDelete
 12. // "நமது சிறுவட்டத்திலுள்ள நண்பர்களை இந்த இடர்மிகு காலத்திலும் சந்தாக்களில் தொடர்ந்திட ஊக்குவிக்கும் விதமாய் ஏதேனும் செய்யணுமே சார் ; அதற்கு எனது பங்களிப்பாய் ரூபாய் ஒரு லட்சம் அனுப்பிட விழைகிறேன் ! அதனை சந்தாவினில் ஒரு discount ஆகப் பிரித்து சந்தா நண்பர்களுக்கு வழங்கினாலும் சரி ; ஏதேனும் பிரத்யேக gift போல சந்தாதாரகளுக்குத் தந்திட்டாலும் சரி - தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் !" //

  அருமை நண்பரே... _/\_

  ReplyDelete
 13. //

  நமது லயன் & முத்து ரெகுலர் சந்தாக்களில் உள்ளார்
  ஜம்போவுக்கு சந்தா செலுத்தும் பட்சத்தில் ரூ. 899 /-
  கூரியர் கட்டணம் ∴பிரீ!

  //

  முதலில் படிக்கும்பொழுது கூரியர் கட்டணத்தில் ரூபாய் 899 தள்ளுபடி என்பது போல உள்ளது சார்...

  நமது லயன் & முத்து ரெகுலர் சந்தாக்களில் உள்ளார்
  ஜம்போவுக்கு சந்தா செலுத்தும் பட்சத்தில் சந்தா தொகை ரூ. 899 /-
  (கூரியர் கட்டணம் ∴பிரீ!)

  என்று இருந்தால் குழப்பம் வராது என்று நினைக்கிறேன்....
  ReplyDelete
 14. மீதி பணத்தையும் அனுப்பி விட்டேன். அருமை அருமை

  ReplyDelete
 15. இரத்தப்படலம் வண்ண மறுபதிப்புக்கு (தற்போது 150 முன்பதிவுகள் வந்துள்ளதால்) அடுத்த ஆண்டு கிடைக்கும் 60 நாட்கள் அவகாசத்தில் குறைந்தபட்சம் 100+ முன்பதிவுகள் கிடைத்தால் அச்சுப்பணி ஆரம்பித்துவிடுவீர்கள் என்பது எனது புரிதல். சரிதானே Sir?

  ReplyDelete
 16. அட்டகாசமான அட்டவணை சார். நான் எதிர்பார்த்ததை விட அருமையான அட்டவணை. ஐசிங் on the cake jumbo தான்

  ReplyDelete
 17. ஆக்சுவல இந்த வருட சந்தாவும்நல்லா வெரைட்டியாவே வந்திருக்கு. அட்டகாசம். I am happy. இந்த வருடத்தை தாண்டிட்டம்னா பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை உண்டு.

  வழக்கம் போல எனது சந்தாவை நண்பர்களோடு சேர்த்து கட்டிவிடுகிறேன்.

  மறுக்கா பதிவை படிச்சிட்டு வரேன்.

  ReplyDelete
 18. hi sir
  very passionate selections!
  kudos!
  All the best!
  How much is jumbo?
  What happened to Kenya and oru nodi onbuthu thotta?
  Regards
  Thanks and grateful to have u as oureditor!
  By the way one jumbo falooda for me!😀
  Regards
  Arvind

  ReplyDelete
 19. Also if possible let md know payment for
  erode special too.
  Regards
  Arvind

  ReplyDelete
 20. டியர் விஜயன் சார்,

  அருமையான அட்டவணை மற்றும் சரியான இட ஒதுக்கீடுகள்.

  1) டைகர் - தீபாவளி மலர் என்பது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. டெக்ஸ் மற்றும் டைகர் சேர்ந்து பட்டாசை கிளப்ப போகும் 2021 தீபாவளி.

  2) இறை அருளால் எல்லாம் சரியாகி, 2021 ஈரோடு புத்தக விழா நிச்சயம் நடைபெறும். தெறிக்க விடலாம்...

  3) டைலன் + மார்ட்டின் கூட்டணியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  4) நண்பர்களுக்காக இவ்வளவு பெரிய தொகையை கொடுத்த அந்த முகமறியாத நண்பருக்கு நன்றிகளை சொல்ல வார்த்தைகள் இல்லை

  5) லயன் #400 மற்றும் முத்து #450 - அடுத்த வருடத்தின் எதிர்பார்ப்பு லிஸ்டில் (டாப்பில்)

  6) தோர்கல் - ஒரே ஆல்பம் அதுவும் மதில் மேல் பூனையாக என்பது வருத்தமான விஷயம்

  7) ஜெரோனிமோ - எதிர்பார்ப்பை இப்பொழுதே விதைத்து விட்டது


  மொத்தத்தில் அருமை .. அட்டகாசம் ... திருப்தி....

  திருப்பூர் பளுபெர்ரி (எ) நாகராஜன்

  ReplyDelete
 21. சந்தா பலூடா மற்றும் சந்தா ஜம்போ பணம் அனுப்பியாயிற்று இப்போ பதிவை படித்துவிட்டு வருகிறேன்

  ReplyDelete
  Replies
  1. சார் எனக்கு பணத்திற்கு பதில் கழுகு வேட்டை வேண்டும் என்பதை எங்கு பதிவு செய்யவேண்டும் என்று கூறுங்கள்.

   சந்தா தேர்வுகள் அனைத்தும் அருமை.
   கிராபிக் நாவல்கள் குறைவது வருத்தம்தான். இருந்தும் சந்தர்ப்பம் அப்படி மீண்டு வருவோம்.

   Delete
  2. // சந்தா பலூடா மற்றும் சந்தா ஜம்போ பணம் அனுப்பியாயிற்று //

   சூப்பர் ஜி. வாழ்த்துக்கள்.

   Delete
 22. விஜயன் சார், சில மாதங்களுக்கு முன்பு நான் சொன்னது போல் சின்னமனூர் சரவணன் மற்றும் பிளைஸி பாபு இருவருக்கும் சந்தா பலூடாவிற்கு பணம் அனுப்பி விடுகிறேன். இவர்களுக்கான பணத்தை ஜனவரி இறுதிக்குள் அனுப்பி வைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அருமை பரணி. உங்கள் நல்ல மனம் வாழ்க....

   Delete
  2. PFB sir, பிறரை மகிழ்வித்து மகிழும் உங்கள் மனதிற்கு ஒரு பூங்கொத்து சார்.

   Delete
  3. அற்புதம் பரணி👌👌👌👌

   காமிக்ஸ் வானில் தொடர்ந்து மழை பொழிவது உங்களை போன்ற நல்மனம் கொண்ட நண்பர்களாலே!!!💐💐💐💐💐

   வாழ்த்துகள் பாபு&சின்னமனூரார்.🌹🌹🌹🌹🌹

   Delete
  4. அருமை நண்பரே...

   தங்கள் நல்ல மனம் வாழ்க..

   சந்தா பரிசு பெற்ற நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

   Delete
  5. வாழ்த்துக்கள் சகோதரர் பரணி அவர்களே

   Delete
 23. பதிவில் முதல் சந்தா பிரிவை மட்டும் படித்து உள்ளேன்.

  மற்றவை வீட்டு மற்றும் ஆபீஸ் வேலைகளுக்கு நடுவில் படிக்க வேண்டும்.

  இதுவரை அருமையான தேர்வு.

  ReplyDelete
 24. அருமையான திட்டமிடல்...

  எல்லாம் வேணும் ஆனா விலை கம்மியா இருக்கனும்னு டீவி விளம்பரத்திலதான் பாத்திருக்கேன்..

  தமிழ் காமிக்ஸ் குடும்ப தலைவராக நீங்கள் இவ்வளவு திட்டமிட்டு உறுப்பினர் களுக்கு சிறந்த காமிக்ஸ்களை வழங்கிவருவது மிகவும் போற்றுதலுக்குறியது.

  இந்த திட்டமிடல் இந்தவேளையில் இந்த விலையில் வாசகர்களின் எதிர்பார்ப்பினை என்றென்றும் பூர்த்தி செய்யும் எடிட்டரால் மட்டுமே சாத்தியம்..

  இந்த பாதை சிறந்தது. நுண்ணுயிர் நீங்கி மேலும் சிலபல சாகசங்களும் வரட்டும்..

  2021 ல் வரவிருக்கும் அனைத்து இதழ்களும் மாபெரும் வெற்றி பெறவேண்டும் அதே ஆண்டு அனைத்து இதழ்களும் Sold out ஆகவேண்டும் என வேண்டுகிறேன்.

  நன்றி.

  ReplyDelete
 25. Thanks for Gpay. process became so simple

  ReplyDelete
 26. எடிட்டர் சார் நானும் என்னுடன் சேர்ந்து 4 பேர்க்கு சந்தா செலுத்தி விட்டேன்.
  1. நமது மூத்த வாசகர் ATR
  2. எனது அருமை நண்பர் R. கிரி நாராயணன்
  3. உடன் பிறவா சகோதரர் செந்தில் சத்யா
  4. குமார் சேலம்

  ReplyDelete
  Replies
  1. சூப்பர். நல்ல மனம் வாழ்க குமார்.

   Delete
  2. 4வதா இருக்கிறது யாரு?😊😊😊

   Delete
  3. எங்க பக்கத்து தெரு நண்பர் KSனு சொல்லிக் கொள்வதில் கர்வம் கொள்கிறேன்... செம KS...

   Atr, சத்யா, கிரி@ வாழ்த்துகள் ஃப்ரெண்ட்ஸ்💐💐💐💐💐💐

   Delete
  4. அருமை நண்பரே! பெரிய மனம் உங்களுடையது. நன்றிகள் பல.

   Delete
  5. ஆஹா அருமை நண்பரே...தங்களின் நல்ல மனம் வாழ்க...

   Delete
  6. குமார் சார்...தங்களின் நல்ல மனம் வாழ்க...

   சந்தா பரிசு பெற்ற நண்பர்களுக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

   Delete
  7. வாத்தியாரே .. பின்றீங்க .. Super ..

   Delete
  8. மிக்க நன்றிகள் நண்பர் குமார் அவர்களே

   Delete
  9. எங்கள் அண்ணா, ஒரு பொன் மனச் செம்மல்

   Delete
  10. வாழ்த்துகளுக்கு நன்றி டெக்ஸ் விஜயராகவனாரே நண்பர்களுக்கு தெரியாத இன்னொரு ரகசியம் எனக்கு போன வருடம் சந்தா கட்டியதும் நண்பர் சேலம் குமாரே

   Delete
  11. சந்தா பரிசு பெற்ற நண்பர்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்!!

   Delete
  12. நன்றி நண்பர்களே. ஏதோ என்னால் முடிந்த சிறிய உதவி.

   Delete
 27. அருமை. முழுமையாக படித்து விட்டு
  வருகிறேன்.

  ReplyDelete
 28. சந்தா ஃபலூடா மற்றும் ஜம்போ சீஸன் 4, இரண்டிற்கும் சேர்த்து பணம் கட்டிவிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. அப்படி போடுங்க. சூப்பர்.

   Delete
 29. அறிமுகங்களும் பிரமாதம்!

  ReplyDelete
 30. 3 - ஆக மொத்தம் 27 புக்ஸ்... காலம் அறிந்த திட்டமிடல்.... அறிவிப்புகள் அனைவருக்கும் திருப்தியான கதைகளங்களாக இருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த மாதம் என் தரப்பில் இருந்து சந்தா சேர்க்கபடும்.

  ReplyDelete
 31. ஒரே புக்கில் ஜேம்ஸ் பாண்டும், மாடஸ்டியும்.

  ஒரே தீபாவளியில் டெக்ஸும், டைகரும்

  ஒரே கதையில் மார்டினும், டைலன் டாக்கும்.

  செம்மை.!

  ReplyDelete
  Replies
  1. உண்மையாளுமே இது செம கலவை நண்பரே.. அனைத்து தரப்பும் ஹேப்பி அண்ணாச்சி....

   Delete
 32. மொத தடவை...

  2வது தடவை...

  3வது தடவை னு

  படித்து முடித்தாலும் மறுபடியும் மொதல்ல இருந்தே தான் படிக்குது கண்ணு;

  மனசு நாடுது மீண்டும்... மீண்டும்...

  என்ன சிண்ட்ரோம் னு தெரியல...

  இப்ப 4வது தடவையாக....ரீடிங்...!!!


  தலைக்குள் ஒவ்வொரு விசயமாக சிங் ஆகிட்டே இருக்கு....!!!


  நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு...

  இன்னும் ஆசுவாசம் ஆனபிறகு அலசுவோம்...

  ReplyDelete
 33. //நமது சிறுவட்டத்திலுள்ள நண்பர்களை இந்த இடர்மிகு காலத்திலும் சந்தாக்களில் தொடர்ந்திட ஊக்குவிக்கும் விதமாய் ஏதேனும் செய்யணுமே சார் ; அதற்கு எனது பங்களிப்பாய் ரூபாய் ஒரு லட்சம் அனுப்பிட விழைகிறேன் ! அதனை சந்தாவினில் ஒரு discount ஆகப் பிரித்து சந்தா நண்பர்களுக்கு வழங்கினாலும் சரி ; ஏதேனும் பிரத்யேக gift போல சந்தாதாரகளுக்குத் தந்திட்டாலும் சரி - தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன்//

  Hats off நண்பரே! காமிக்ஸ் புத்தகங்கள் மட்டுமல்லாமல் அதை வாசிக்கும் நண்பர்களிடமும் நீங்கள் கொண்டுள்ள வாஞ்சையும் அன்பும் நெகிழ்ச்சி அளிக்கிறது. நன்றிகள் அனைவரின் சார்பாகவும்.

  ReplyDelete
 34. பேரிடர்க் காலத்திலும் சோர்வுறாமல் காமிக்ஸ் வெளியிட்டு, அரிதிலும் அரிதான ஒரு சிறுபான்மைக் குழுவினரை குதூகலமாய் வைத்திருக்கும் உங்களுக்கு முதலில் ஒரு பூங்கொத்து!

  //நடுவாக்கில் செய்திடும் திட்டமிடல்கள் ; அறிவிக்கும் இதழ்களெல்லாம் போய்ச் சேர்வதில்லை//
  எனக்குமே இது பிடிக்காத ஒன்று தான் சார்! பதிவின் ஏதோ ஒரு பகுதியில், எதையோ ஒன்றை அறிவித்து விட்டுப் போய் விடுவீர்கள், அது அனைவரின் கண்களிலும் படுமா என்று கேட்டால் "துர்லபம்" தான் (அரிது என்று கூகிள் புண்ணியத்தில் அறிந்து கொண்டேன்)! எடுத்துக்காட்டாக, ஜம்போவிற்கு பணம் கட்டலாம் என்று சொல்லி இருக்கிறீர்கள், அதற்கான தொகை என்ன என்பதை இந்தச் முழுநீளப் பதிவில் குத்துமதிப்பாக இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன் (செங்கல்லை அல்ல)...! :)

  ReplyDelete
  Replies
  1. ஜம்போ விளம்பர போட்டோவைப் பாருங்க. லயன
   முத்து சந்தால இருக்கறவங்களுக்கு ரூ899/

   Delete
  2. மிக்க நன்றி! ஆசிரியர் அந்த விவரத்தை சந்தா பகுதியிலே நுழைத்து விட்டால், என்னைப் போன்ற பொறுமையற்ற பேர்வழிகளின் கண்களில் படுவதற்கு உதவியாக இருக்கும்! :)

   Delete
 35. மாடஸ்டி!!!! இன்ப அதிர்ச்சி!!! ஹா..ஹா.ஹா...ஸ்லாட் ஒதுக்கவே முடியாது என நினைத்திருந்தேன்..

  ReplyDelete
  Replies
  1. வயதான தொழிலதிபர்களின் மாடஸ்டி காதல் உங்களுக்கும் தெரிந்தது தானே செனா?

   Delete
  2. துளசி வாசம் மாறினாலும் மாறும்.ஆனா மாடஸ்டி நேசம் என்னிக்கும் மாறாது..!😊😊😊

   Delete
  3. மாடஸ்டி இல்லையெனில் தான் ஆச்சரியம். முதல் இதழின் நாயகி என்பதால் தனி கெளரவம்...?

   Delete
  4. மாடஸ்டி!!!! இன்ப அதிர்ச்சி!!! ஹா..ஹா.ஹா...ஸ்லாட் ஒதுக்கவே முடியாது என நினைத்திருந்தேன்

   ####

   ஹாஹா...இளவரசியா கொக்கா...:-)


   *******

   வயதான தொழிலதிபர்களின் மாடஸ்டி காதல் உங்களுக்கும் தெரிந்தது தானே செனா?

   ********


   ஓஹோ...:-)

   Delete
 36. //நமது சிறுவட்டத்திலுள்ள நண்பர்களை இந்த இடர்மிகு காலத்திலும் சந்தாக்களில் தொடர்ந்திட ஊக்குவிக்கும் விதமாய் ஏதேனும் செய்யணுமே சார் ; அதற்கு எனது பங்களிப்பாய் ரூபாய் ஒரு லட்சம் அனுப்பிட விழைகிறேன் ! அதனை சந்தாவினில் ஒரு discount ஆகப் பிரித்து சந்தா நண்பர்களுக்கு வழங்கினாலும் சரி ; ஏதேனும் பிரத்யேக gift போல சந்தாதாரகளுக்குத் தந்திட்டாலும் சரி - தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன்//

  இவரைப் பாருங்களேன்!! என்னா மாதிரி மனுஷர்..

  PFB, குமார் சேலம் இவங்களையும் பாருங்களேன்..

  என்னா மாதிரி மனுஷங்க!!!!

  இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம்..

  வாழ்த்த வார்த்தையெல்லாம் தேடறது கஷ்டம்..

  இருக்கப்பட்டாலும் கொடுக்க விரும்புற மனசு இருக்கே அதுக்கு இணையா எதுவுமில்லே..

  நல்லா இருங்க மக்களே!!!!

  சந்தா வகையில பரிசளிச்சா இரட்டை உதவி என்பதால் அது எப்பவுமே உசந்ததுதான்!!!

  ReplyDelete
  Replies
  1. உண்மை உண்மை உண்மை...


   இது போன்ற நண்பர்களுடன் இங்கு இணைந்து பயணிப்பதே என்னை போன்றோருக்கு பெரும் பேறு என்பதும் மறுக்க முடியாத உண்மை..

   Delete
  2. தங்களது பாராட்டுக்கு எனது நன்றிகள் சார்.

   Delete
  3. "நல்ல நட்பு தங்கத்தை விடப் பெரிது"

   Delete
 37. ஒருவழியாக ஒற்றை நொடி ஒன்பது தோட்டா முழுவதுமாக அருமை சார்...

  ReplyDelete
 38. பல குட்டிக்கரணங்கள் அடித்து தயாரித்த நல்லதொரு அட்டவணை சார்....
  பெரும்பாலான வாசகர்களை கவர்ந்துள்ள விதத்திலேயே அமைந்துள்ளது, இமாலயப் பதிவை எப்படித்தான் தயார் செய்தீர்களோ தெரியவில்லை......
  சூழலை அடிப்படையாக பார்க்கும்போது இதழ்களை குறைப்பதை தவிர வேறு வழியில்லைதான்,இருந்தாலும் "பொசுக்" பீலிங்கை தவிர்க்க இயலவில்லை...

  ReplyDelete
 39. இருந்தாலும் தல மாசத்துக்கு ஒரு சாகஸமாவது வந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்...
  அதேபோல் மார்ட்டின் & டைலன் டாக் கூட்டணி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது...

  ReplyDelete
 40. இளம் டெக்ஸ் அறிவிப்பு மிக்க சிறப்பு....
  அண்டர்டேக்கர் ஜம்போவில் வருவதும் மகிழ்ச்சி...

  ReplyDelete
 41. 9 மாத சந்தாவிற்கு இது ஒரு மாஸ் ஆனா தேர்வுகள் சார் ..

  நிறைகள்:
  நிறைய Tex, ONCE AGAIN Tiger (தல தளபதி தீபாவளி ) .. பாண்ட் modesty ஒரே இதழில் .. மார்ட்டின்-டயலன் ஒரே கதையில் ..

  எதிர்பார்ப்புகள் :
  எங் tex , கி.நா , ஜம்போ 4, MUTHU 450 AND LION 400 ..

  குறைகள் என்றால் diabolik இல்லை .. மெபிஸ்டோ இன்னும் இல்லை ..

  ஒரே ஒரு கேள்வி .. பாண்ட் 2.௦ இல்லையா SIR இந்த வாட்டி..

  ReplyDelete
  Replies
  1. ஜம்போ காலியாயுள்ள சிலாட் களில் இடம் பிடிப்பார் என நினைக்கிறேன்.

   Delete
  2. எனது ஃபேவரைட் தனி ஒருவன்????

   Delete
 42. Full Meals சாப்பிட்ட போல இருக்கு.. எல்லாருக்கும் தேவையானது கிடைச்சிட்டுன்னு நினைக்கிறேன். and i am eagerly waiting for Martin Dylan combo.. 💜💜💜

  ReplyDelete
 43. எது மாதிரியும் இல்லாத புது மாதிரி அட்டவணை ஆசிரியரே... உங்கள் மனதின் எண்ணவோட்டத்தை பிரதிபலிப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதை உணர்த்துகிறது.

  டைகர்! அதுவும் தீபாவளி மலராக... Pleasant surprice.

  குறைந்த இதழ்களிலும் நிறைவினை அளித்துள்ளீர்கள். எல்லோருக்கும் திருப்தியளிக்கும் என நம்புகிறேன்.

  இரண்டு மைல்கல் இதழ்களுக்கும் பொருத்தமான திட்டமிடல்.

  தோர்கலை ஒற்றை இதழாக படித்து வெகு நாட்களாயிற்று. அது மட்டுமே கொஞ்சம் வருத்தம். இருந்தாலும் இந்த ஆண்டின் 5 இதழ்கள் நிச்சயம் ஈடுகட்டி விடும்.

  பாண்ட் & மாடஸ்தி என்னவொரு காம்பினேசன்!

  கிராபிக் நாவல் வரிசை... வேறுபட்ட களங்கள்... கதைகள்!

  அண்டர்டேக்கர் வந்தாலும் ஒற்றை பாகம்தான் வரும் என எண்ணியிருந்த எனக்கு இரு பாகங்களும் வருவது மிகவும் மகிழ்ச்சி.

  அடுத்ததாக ஜெரோனிமோ அட்டகாசமான தேர்வு. ஜம்போ இதழ்கள் அனைத்தும் ஆர்வமூட்டுபவையாகவே உள்ளன.

  அட்டவணை அற்புதம்!!!

  ReplyDelete
  Replies
  1. //உங்கள் மனதின் எண்ணவோட்டத்தை பிரதிபலிப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதை உணர்த்துகிறது.//

   எனக்கே என்னை யூகிக்க முடியாதே சார் ! இன்றைக்கு ஒரு கிளை ; நாளைக்கொன்று எனத் தாவும் மந்தியாச்சே !

   Delete
 44. கார்ட்டூனை பொருத்தவரை 6 இதழ்கள் என்பதே சந்தோஷமான விஷயம், எங்கே இந்த இடர்பாடான சூழல் கார்ட்டூன்களை காவுகொண்டுவிடுமோ என்று பயந்து கொண்டிருந்த எனக்கு இது அப்பாடா... என்றிருக்கிறது.

  சூழல் சுமூகமடைந்து புத்தகத் திருவிழாக்களில் மேக்சி லக்கி லூக் கை எதிர்பார்த்திருப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. கார்ட்டூன்கள் இல்லாத சந்தா ஒருபோதும் இராது சார் !

   Delete
 45. அருமையான அட்டகாசமாக தேர்வுகள் சார்! தாங்கள் நிறைய மெனக்கிட்டிருப்பது நல்லாவே தெரிகிறது! டைகர் மீண்டும் 2.0 வருவதில் மட்டட்டற்ற மகிழ்ச்சி சார்! இதில் இரண்டாம் சுற்றில் கலக்குவார் என்றே எண்ணுகிறேன்! இதில் ஒரே ஒரு சிறுகுறை மட்டுமே! தோர்கல் ஒரு கதையாக வெளியிடாமல் நாலைந்து கதையாகவே வெளியிடலாம் என்பது எனது அபிப்ராயம்! ஏற்கனவே கமான்சே சிங்கிள் சிங்களாக போட்டதின் விளைவே அது தள்ளாட ஆரம்பித்தது! அது போலவே இதுவும் ஆகிடக் கூடாது என்பதற்காக சொல்கிறேன்! மற்றபடி அனைத்து தேர்வுகளும் சிறப்பூ 😍

  ReplyDelete
  Replies
  1. தோர்கல் ஒற்றை ஆல்பம் 99 % வெளிவராது சார் ; அதனிடத்துக்கு வேறொரு நாயகர் ரெடியாகி வருகிறார் !

   Delete
 46. நம்முடைய மிக சிறிய வட்டத்திற்கு வேண்டி ஆசிரியர் எடுக்கும் இத்தகைய பெரும் முயற்சியை ஆதரித்து, அவருடைய comics passion கொண்டாடும் விதமாக நான் ஜம்போ பலுடா சாப்பிட்டுவிட்டேன். மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் சரியாகி, அடுத்தவாட்டி ஈரோட்டிலோ, சென்னையிலோ சந்திக்கும் போது நிஜமான falooda வழங்கித் தாக்கிப்புடுவோம் !

   Delete
 47. // மேகி கேரிஸன் ! அம்மணி ஒரு டிடெக்டிவ்… அதாவது டிடெக்டிவாக முயற்சிக்கும் லேடி ! மயக்கும் சொப்பன சுந்தரியெல்லாம் கிடையாது ! சொல்லப் போனால் XIII தொடரில் வரும் மார்த்தாவைப் போலயிருப்பார் ஒரு சாயலில் ! So லேடி S போல அண்ட்ராயரோடு கிழக்கு ஐரோப்பியக் கூரைகளில் நடுச்சாமத்தில் ஓட்டமெல்லாம் இவர் எடுத்திட மாட்டார் //


  இது போதுமே. வரவேற்கிறேன்.

  ReplyDelete
 48. வணக்கம் எடி.சார்..
  வணக்கம் அன்பு நண்பர்களே...

  ReplyDelete
 49. தல,தளபதி தீபாவளி..

  செம..

  ReplyDelete
 50. //நமது சிறுவட்டத்திலுள்ள நண்பர்களை இந்த இடர்மிகு காலத்திலும் சந்தாக்களில் தொடர்ந்திட ஊக்குவிக்கும் விதமாய் ஏதேனும் செய்யணுமே சார் ; அதற்கு எனது பங்களிப்பாய் ரூபாய் ஒரு லட்சம் அனுப்பிட விழைகிறேன் ! அதனை சந்தாவினில் ஒரு discount ஆகப் பிரித்து சந்தா நண்பர்களுக்கு வழங்கினாலும் சரி ; ஏதேனும் பிரத்யேக gift போல சந்தாதாரகளுக்குத் தந்திட்டாலும் சரி - தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன்//

  நல்ல மனம், வாழ்க.

  ReplyDelete
 51. டியர் சார் 2.0 ஜேம்ஸ் பாண்ட் இந்த வருடம் இல்லையா.

  ReplyDelete
 52. பல அருமையான கதைகள் இருக்கின்றன. இரத்தப்படலம் & கென்யா வெளிவந்தால் மிகவும் மகிழ்ச்சி.

  முத்துவின் # 450 மற்றும் லயனின் # 400 // வாவ், இந்த மைல் கல்களை எல்லாரையும் கஷ்டப்படுத்தும் பேரிடர் நீங்கிய ஒரு புது உலகினில் பார்த்திட முடியும் என்று நம்புகின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. இரத்தப் படலம் தான் அட்டவணையில் உள்ளதே நண்பரே !

   Delete
 53. டிடெக்டிவ் ராபின், புதிய வெட்டியான், மேகி கேரிஸன், johnny - 2021 டிடெக்டிவ் கதைகளுக்கு பஞ்சமில்லை - சத்யா ஹேப்பி

  ReplyDelete
 54. "நமது சிறுவட்டத்திலுள்ள நண்பர்களை இந்த இடர்மிகு காலத்திலும் சந்தாக்களில் தொடர்ந்திட ஊக்குவிக்கும் விதமாய் ஏதேனும் செய்யணுமே சார் ; அதற்கு எனது பங்களிப்பாய் ரூபாய் ஒரு லட்சம் அனுப்பிட விழைகிறேன் ! அதனை சந்தாவினில் ஒரு discount ஆகப் பிரித்து சந்தா நண்பர்களுக்கு வழங்கினாலும் சரி ; ஏதேனும் பிரத்யேக gift போல சந்தாதாரகளுக்குத் தந்திட்டாலும் சரி - தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் !" //  இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை நண்பர்களாக பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் சார்..

  நண்பர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்..

  ReplyDelete
 55. தங்களின் தேர்வுகளை படித்தவுடன் எனக்கு தோன்றிய வரிகள் ஒன்றே...


  "குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா "

  என்பதே அது சார்...

  அழகான ,சரியான தேர்வுகள் ..

  என்ன இதழ்கள் குறைந்து விட்டதே என்ற வருத்தம் மட்டும் கொஞ்சம் எட்டி பார்க்கிறது..

  ReplyDelete
 56. முத்து 450 லயன் 400 நான் நல்ல குண்டு கதம்ப இதழ்கள் வித் கிளாசிக் ஹீரோஸ் எதிர்பார்த்தேன் கொஞ்சம் ஏமாற்றம்..
  மல்டிபிள் ஹீரோஸ் காபிரைட் பிரச்சனை என்பதால் இட்டாலி குழுமத்தின் குண்டு புக் எதிர்பார்த்தேன்..

  மொத்த லிஸ்டில் இந்த இரண்டு புக் மட்டும் திருப்தி ஆகவில்லை மற்றவை எல்லாம் தம்ஸ் அப்..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் எதிர்பார்ப்புப்படியே போனெல்லியின் குண்டு புக்கை லயன் 400-க்குப் போட்டிருப்பினும், முத்து 450-க்கு எதைத் தேர்விடச் சொல்வீர்கள் சார் ? And க்ளாஸிக் ஹீரோக்கள் என நீங்கள் குறிப்பிடுவது யாரையோ ? மாயாவி ; ஸ்பைடர் ; ஆர்ச்சியையா ?

   Delete
 57. ஒரே வரியில் சொல்வதானால்...

  இதழ் தேர்வுகள் அனைத்தும் Sure shot 1000 வாலா பட்டாஸ்... 💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥

  Welcome 2021 💥💥💥

  ReplyDelete
 58. Replies
  1. புரியலையே சார் - என்ன சொல்ல வர்றீங்கன்னு ?!

   Delete
 59. டைலன் டாக்
  மார்ட்டின்..
  ஒரே கதையில்..
  வாவ்..
  கதையை முடிப்பதற்குள் தலை முடியை பிய்த்து பிய்த்து வேறொரு வடித்திற்கு கொண்டு வந்து விடலாம்!
  ஹி..ஹி..

  ReplyDelete
  Replies
  1. என்னென்னமோ பாத்துப்புட்டோம் ; இதையும் தான் பார்ப்போமே சார் !

   Delete
 60. 10 குள்ள வரலாம்னு பார்த்தா 110 குள்ள கூட வர முடியல...

  ReplyDelete
 61. // “நரகத்திற்கு நடுவழியில்…" எனும் 4 பாக 200 பக்கத் தொகுப்பு ! இதன் செம highlight என்னவென்றால் மெய்யாலுமே அந்நாட்களில் “டெட்வுட் டிக்” வாழ்ந்திருக்கிறார் //

  Warm Welcome “டெட்வுட் டிக்”

  ReplyDelete
 62. தீபாவளி தல தளபதி தீபாவளி...


  என்னது 007 மற்றும் மாடஸ்தி ஒரே் இதழில் இணைந்தா...


  என்ன ஒரே கதையில் இரு நாயகர்கள் இணைந்தா...


  400 ,450 சிறப்பு குண்டு புத்தகங்களா...


  என்னது பெரிய்ய்ய்ய சிக்பில் கதையா...


  இப்படி என்ன என்ன என எண்ண வைக்கும் அட்டகாசமான அட்டவனை...

  வாழ்த்துக்கள் சார்....

  ReplyDelete
 63. அட்டவணை அருமை சார்,

  எதிர்பாராத வெடிகள்
  மார்டின் + டைலன்
  லக்கி + ரின்டின்
  பாண்ட் + மாடஸ்டி
  Surprise தளபதி தீபாவளி
  சந்தா A,B,E & ஜம்போவில் அறிவித்த நான்கைந்து புதுமுகங்கள்.

  எதிர்பார்த்த வெடிகள்
  டியுராங்கோ triple album
  தல தீபாவளி

  ஏமாற்றம்
  புதிய ஜேம்ஸ் பாண்ட்
  One shot black & white இத்தாலிய கிராபிக் நாவல்கள்

  சிறு நெருடல்
  லயன் 400 டெக்ஸ் புத்தகத்தின் விலை, சற்று கூடுதலாக இருப்பது. விலைக்கேற்ற பக்கங்கள் இல்லை என்பது எண்ணம். தவறிருந்தால் மன்னிக்கவும்.

  ஆக 2021 அட்டவணை - திருப்தி

  ReplyDelete
  Replies
  1. கிராபிக் நாவல்களுள் இருண்ட களங்கள் இம்முறை வேண்டாம் - என்பது ஒரு conscious decision சார் ! அவற்றை ரசிக்கும் ஒரு சகஜ சூழல் திரும்பும் போது அவற்றைக் கொணர்ந்து கொள்ளலாம் ! நம்மிடம் கைவசம் 5 கி.நா.க்கள் உள்ளன ; பரவாயில்லை - 2022 -ல் பார்த்துக் கொள்வோமென்று கதைகளையும், அதனுள் உள்ள முதலீட்டையும் ஓய்வெடுக்கச் செய்துள்ளோம் ! அசாதாரண சூழல்களின் அத்தியாவசியங்கள் !

   Delete
 64. Muthu Comics # 400 vs Lion Comics # 400. Phew! We are just play toys in the hands of time!

  ReplyDelete
  Replies
  1. நிஜம் தான் சார் ! இது போன்ற மைல்கற்கள் வேறெதற்கு பயன்படுகின்றனவோ - இல்லையோ ; நாட்களின் நில்லா ஓட்டத்தைச் சுட்டிக்காட்டவாவது அத்தியாவசியம் என்பேன் !

   Delete
 65. // லக்கியோடு ரின் டின் கேன் ஞானசூன்யமும் இடம் பிடித்திடும் ஒரு சாகசத்தின் புண்ணியத்தில் ! //

  // (PFB சார் !! பசங்ககிட்டே இப்போவே சொல்லி வச்சிடுங்க !!) //

  Super super!!! Thank you so much!! we are happy :-)

  ReplyDelete
 66. மீ 120.... சந்தா ஃபாலுடா எனக்கு ஒகே. ஜம்போ எவ்வளவு? அது தவிர ஏதாவது சந்தா இருக்கா?

  ReplyDelete
  Replies
  1. சந்தா ஃபாலுடா என்றால் உங்களின் ஜம்போ சந்தா ரூபாய் 899/= என நினைக்கிறேன் (கூரியர் செலவு கிடையாது)

   so Rs.3850 + 899

   Delete
  2. நீங்கள் ஃபுல் சந்தா மற்றும் ஜம்போ 4 கட்ட வேண்டும் என்றால் 3850+899=4749 கட்ட வேண்டும். இதை தவிர புத்தக விழா ஸ்பெஷல் வெளியீடு ஆகஸ்ட் மாதம் இருந்தால் அதற்கு தனியாக பணம் அனுப்ப வேண்டும். தனி அறிவிப்பு வரும்.

   Delete
  3. நன்றி PFB அண்ட் குமார். லயன் தளத்தில் ஸ்பெஷல் மஞ்சள் சந்தா ஒன்றும் உள்ளதே. என்ன வித்தியாசம்?

   Delete
  4. அந்த மஞ்சள் சந்தா நடப்பாண்டின் சந்தா ! இன்னமும் கூட இந்த 2020 சந்தா செலுத்துவோர் உள்ளனர் என்பதால் , அவர்களின் வசதிக்காக அந்த ஒற்றை பிரிவை மட்டும் தூக்காது விட்டு வைத்துள்ளோம் !

   Delete
 67. எடிட்டர் சார்
  நமது lioncomics.in வெப்சைட்டில் Falooda சந்தாவோடு ஜம்போ சந்தாவுக்கும் தற்போதே பணம் செலுத்தும் வசதி செய்து கொடுங்கள்...
  3850+899=4749

  ReplyDelete
  Replies
  1. திங்கட்கிழமைக் காலையில் செய்து விடுவோம் சார் !

   Delete
 68. // "வழியனுப்ப வந்தவன்" - ஒரு டிடெக்டிவ் வெட்டியான் / வெட்டியான் டிடெக்டிவ் ! //

  Welcome! Welcome "டிடெக்டிவ் வெட்டியான்"

  ReplyDelete
 69. Kudos to all நண்பர்கள் gifting other நண்பர்கள் சந்தா ..very happy to c it .. Special one to that அனாமதேய அன்பர் .. ஒரு லட்சம் என்பது சாதாரண தொகை அல்ல ..

  ReplyDelete
  Replies
  1. ஒரு லட்சம் என்பது சாதாரண தொகை அல்ல .. எப்போதுமே ஒரு லட்சம் சாதாரண தொகை அல்ல. அந்த நண்பரும் அவர் குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும்.

   Delete
  2. // ஒரு லட்சம் என்பது சாதாரண தொகை அல்ல .. எப்போதுமே ஒரு லட்சம் சாதாரண தொகை அல்ல. அந்த நண்பரும் அவர் குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும். //

   Very true!!

   +1

   Delete
  3. And சற்று நேரத்துக்கு முன்பாய் இந்த 1 லட்சம் பணத்தை எங்கள் கணக்குக்கு அனுப்பியும் விட்டார் நண்பர் ! மெய்யாலுமே திணறுகிறது எனக்கு - இது போன்ற அன்புகளுக்கு நியாயம் செய்திட நான் என்ன செய்வதென்ற தடுமாற்றத்தில் ! புக் வெளிவரும் போது இந்த நண்பர் யாரென்ற அறிமுகம் செய்திடுகிறேன் சார் !

   Delete
  4. சூப்பர். அவரின் காமிக்ஸ் காதலுக்கு தலை வணங்குகிறேன்.

   Delete
 70. // "பெருசுகள் பட்டாளம்" என்ற அடையாளத்தோடு கைத்தாங்கலாய்க் களமிறங்கும் இந்த மூவரணி - 'இன்னிக்கு செத்தால் இப்போவே பால்' என்ற அகவைகளில் உள்ளோர் ! வாழ்க்கையின் அந்திப் பொழுதைத் தொட்டு நிற்கும் இந்த தாத்தாஸ் அத்தினி பேருக்கும் பல் போயிருந்தாலும், குசும்போ ; லந்தோ ; லூட்டிகளோ விடைதந்திருக்கவில்லை ! இவர்கள் தாத்தாஸ் அல்ல ; ஜாலிலோ ஜிம்கானா தாதாஸ் ! //


  நன்று! வரட்டும்! வரட்டும்!! ஆர்வத்தை கிளப்புகிறது!

  ReplyDelete
 71. // வியாபாரம் சார்ந்த முடிவுகள் இனி என்னோடே துவங்கி, என்னோடே முடிந்தும் விடும் சமாச்சாரங்களாகவே இருந்துவிட்டுப் போக அனுமதி கோருகிறேன் guys ! //

  Well Said!!!
  +1

  ReplyDelete
 72. விஜயன் சார், அட்டவணை அனைவரையும் கவரும் வகையில் முக்கியமாக திருப்திகரமாக உள்ளது! கதை தேர்வு, புதிய அறிமுகங்கள் மற்றும் கார்ட்டூன் என சரியான கலவையில் உள்ளது! பாராட்டுக்கள்!!
  2021ம் காமிக்ஸ் ஆண்டு 2020ஐ விட இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதை அட்டவணை சொல்லுகிறது!

  9 மாதங்கள் என்றாலும் வழக்கம் போல் மாதம் 3-4 புத்தகங்கள் எங்களுக்கு கிடைக்கும் போல் அமைத்தது சிறப்பு! நன்றி!!!

  பிடியுங்கள் அனைத்து பூக்களும் கலந்த ஒரு பூங்கோத்தை!!

  ReplyDelete
  Replies
  1. //9 மாதங்கள் என்றாலும் வழக்கம் போல் மாதம் 3-4 புத்தகங்கள் எங்களுக்கு கிடைக்கும் போல் அமைத்தது சிறப்பு//

   பழகிப் போய் விட்ட routine அல்லவா சார் ?

   Delete
 73. விஜயன் சார், 2021 சந்தாவில் மினி டெக்ஸ் கதைகள் உண்டா, கடந்த இரண்டு வருடம் வந்தது போல்?

  அதே போல் லாயல்டி பாயிண்ட் பற்றி இந்த முறை தகவல்கள் எதுவும் இல்லை.

  இவைகளுக்கு இந்தமுறை வேறு ஏதாவது திட்டமிடல் உள்ளதா?

  ReplyDelete
  Replies
  1. மினி டெக்ஸ் கிடையாது சார் ! இந்த விலையில்லா இதழ்களை கூடுதல் விலைக்கு சில நண்பர்கள் சந்தைப்படுத்துகிறார்கள் என்று நிறையவே புகார்கள் ! ஒரு சிலரோ, இவற்றை இத்தாலிக்கே தாறுமாறான விலைகளுக்கு விற்றுள்ளனர் ! So இந்த நடைமுறை இனி தொடராது !

   Loyalty points பற்றி அறிவிப்பெல்லாம் இராது சார் ; சூழலுக்கேற்ப ஓசையின்றி இயன்றதைச் செய்திடுவோம் ! போன மாசம் ஒரு வாசகர் "நான் டீ-ஷர்ட் தானே கேட்டேன் ? எனக்கு நீங்க என்னமா ஆர்ச்சி புக் அனுப்பப் போச்சு ?" என்று நமது முன்னலுவலகப் பெண்களிடம் கூப்பாடு போட்டுத் தள்ளி விட்டார் ! அவர்கள் படும் பாடைப் பார்க்கப் பரிதாபமாய் உள்ளது ! So வாயை நான் விட்டு, வாங்கிக் கட்டும் படலத்தை அவர்களிடம் திணிப்பானேன் என்று தோன்றியது !

   Delete
  2. // போன மாசம் ஒரு வாசகர் "நான் டீ-ஷர்ட் தானே கேட்டேன் ? எனக்கு நீங்க என்னமா ஆர்ச்சி புக் அனுப்பப் போச்சு ?" என்று நமது முன்னலுவலகப் பெண்களிடம் கூப்பாடு போட்டுத் தள்ளி விட்டார் //

   வருத்தமாக உள்ளது.

   இப்படியும் மனிதர்களாவென்று.

   // விலையில்லா இதழ்களை கூடுதல் விலைக்கு சில நண்பர்கள் சந்தைப்படுத்துகிறார்கள் என்று நிறையவே புகார்கள் ! ஒரு சிலரோ, இவற்றை இத்தாலிக்கே தாறுமாறான விலைகளுக்கு விற்றுள்ளனர் ! //

   அட என்ன கொடுமை இது.

   இவர்கள் செய்வதை பார்த்தால் கோபமாகவும் வருத்தமாகவும் உள்ளது. இன்னும் திருந்தாத மக்கள். :-(

   இது சம்பந்தமான உங்கள் முடிவை வரவேற்கிறேன்.

   Delete
 74. Youg Tex announcement very super.thankyou sir.
  Totally subscription B supro super.

  ReplyDelete
 75. Erode புத்தக விழா தொடர்பாக ஒரு தகவல் .voc park தற்சமயம் காய்கனி மார்க்கெட் இயஙகிவருகிறது. பழைய மார்க்கெட் இடிக்கப்பட்டு புது மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது.இது நிறைவு பெற 18 மாதங்கள் ஆகும்.அதுவரையில் voc park மார்கெட் ஆகவே செயல்படும். மக்கள் சிந்தனை பேரவையினர் புத்தக விழா நடத்த வேறு வளாகம் தேட வேண்டிய நிலையில் உள்ளனர்

  ReplyDelete
 76. அட்டவணை தேர்வு பிரமாதம்!

  ReplyDelete
 77. விஜயன் சார், சந்தா பிரிவு மற்றும் விலை குறிப்பிட்ட படங்கள் பதிவில் இரண்டு முறை உள்ளது!

  ReplyDelete
  Replies
  1. தெரியும் சார் ; பதிவை மேலோட்டமாய்ப் பார்ப்போர் / படிப்போருக்கு வால்பகுதியில் உள்ளது ! நிதானமாய், முழுசாய்ப் படிப்போர்க்கு உட்பகுதியில் உள்ளது ! தெரிந்தே தான் 2 முறை இருக்கச் செய்துள்ளேன் !

   Delete
 78. Deadwood dick!!

  எப்படி எழுதறதுன்னு தெரியல!!

  எல்லா டிக்‌ஷனரியிலும் DICK அப்டிங்கறதுக்கு

  முதல் இரண்டு அர்த்தங்கள் offensive ஆகத்தான் இருக்கு..

  முதல் அர்த்தம் வாசகர்களே பாத்துக்கலாம்

  ரெண்டாவது அர்த்தம் ஸ்டுப்பிட் don't be such a dick..

  அப்புறம் anything at all...you don't know a dick about it..

  டிடக்டிவ் அப்டின்னு அர்த்தம்..a private dick


  முதல் அர்த்தம்தான் லேசா உறுத்துது..

  முடிஞ்சா மாத்துங்க எடிட்டர் சார்!!!

  ReplyDelete
  Replies
  1. சரிதான் சார் நீங்கள் சொல்வது... முன்கூட்டியே ஆலோசனை...

   Delete
  2. Out of question sir...இவரொரு வரலாற்று மனிதர் & இந்தக் காமிக்ஸ் கதைகள் எல்லாமே அந்நாட்களின் பிரபல நாவல்களின் தழுவல்களே ! தவிர, போனெல்லி இந்தக் கதைவரிசையினை Audace என்றதொரு தனித்தடத்தில் வெளியிட்டுள்ளனர் - உயர் தரத்தில், உயர் ரசனைகள் கொண்டோர்க்கென ! நிச்சயமாய்ப் பெயர் மாற்றத்துக்குச் சம்மதிக்க மாட்டார்கள் ! ஆங்கிலப் பெயர்களைத் தமிழுக்குக் கொணர்வதிலான இடர்களில் இது இன்னொரு அத்தியாயம் - அவ்வளவே !

   கவலைப்படாதீர்கள்...மொழியாக்கத்தில் இதனை நெருடாது கையாண்டு விடுவேன் சார் ! ஏற்கனவே அதற்கென திட்டமிடல் in place !

   Delete
 79. ஈரோடு ஸ்பெஷல் 2021: ஒற்றை நொடி.... ஒன்பது தோட்டா.... தானே?

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக ஈரோட்டில் களமிறங்குவோம் சார்.

   Delete
 80. Overall good selections - satisfying most of the readers !

  I will sponsor one subscription for a desiring person but personally I will buy the books in bulk - what and when I want !

  All the best for 2021 - hope there is some effective vaccine found !

  ReplyDelete
  Replies
  1. All the best for 2021 - hope there is some effective vaccine found !

   //Fingers crossed !!//

   Delete
  2. // I will sponsor one subscription for a desiring person //

   Super. நல்ல விஷயம். பாராட்டுக்கள்.

   Delete
 81. அட்டவணைப் பதிவினை Featured post ஆக்கி விடலாமே சார்? பழைய அட்டவணையே அங்குள்ளது.

  ReplyDelete
 82. தங்க தலைவன் ஓகே... தப்பிச்சிட்டீங்க...

  ஆனா தானை தலைவர் எங்கே??

  ReplyDelete
  Replies
  1. பிக் பாஸ் பஞ்சாயத்துக்கு எங்கனாச்சும் போயிருப்பாரோ - என்னவோ !

   Delete
  2. // ஆனா தானை தலைவர் எங்கே?? //

   யாரு அது :-)

   Delete
 83. ஆஹா...அட்டவணை.
  இப்போது தான் வேலை முடிந்து வருகின்றேன்.வந்தவுடன் ஆஜர் இங்கே.
  அட்டவணையை தரிசித்துவிட்டு வருகின்றேன் நண்பர்களே.

  ReplyDelete
 84. அருமையான பதிவு ஒரு டெக்ஸ் வில்லர் கதையை முழுமையாக படித்தது போல இருந்தது அடுத்தது எந்த புத்தகம் என்ற ஆவலுடன். நன்றி விஜயன் சார்க்கு.

  ReplyDelete
 85. Subscription falooda முதல் தவணை செலுத்திவிட்டேன்.

  ReplyDelete