Saturday, October 24, 2020

பணியும்..பனியும்..!

நண்பர்களே,

வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது ! அதற்குக் காரணங்கள் இரண்டு ! இல்லே..இல்லே..மூணு !

பிரதானமானது – காத்திருக்கும் நவம்பரின் பணிகள் டாப் ஸ்பீடில் இக்கட ஓடிக் கொண்டிருப்பதே ! ஒவ்வொரு சமீப ஆண்டுமலரையும் நமது ஒல்லிப் பிச்சான் மஞ்சள்சட்டையோடும், ஒவ்வொரு தீபாவளியையும் திடகாத்திர மஞ்சள்சட்டையோடும் கொண்டாடி வருவது தெரிந்த சமாச்சாரமே ! And true to form – இம்முறையுமே தீபாவளி with டெக்ஸ். அட்டவணையினில் ஒரு முன்னணியான ஸ்தானத்தைப் பெற்றுள்ளது  ! திட்டமிடும் போது பந்தாவாய் 500 பக்கம் / 600 பக்கம் என்றெல்லாம் போட்டு விடுவது செம ஜாலியாகத் தானுள்ளது ! ஆனால் 'அள்ளி விடும் அழகப்பனின்' பாணி சுலபம் ; புஜம் கதற செயலில் இறங்க வேண்டிய செங்கோடனின்  பணி சுலபமேயல்ல என்பதை 101-வது முறையுமே கண்டுபிடித்து வருகிறேன் ! டெக்ஸ் தான்... நம்ம கார்சன்  தான்... நேர்கோட்டுக் கதைகள் தான்... black & white தான்... So பெருசாய் சிக்கல்கள் இருந்திடக் கூடாது தான் ! அதாவது – ஒரு உத்தம உலகினில் சிக்கல்கள் இருந்திடக்கூடாது தான் ! ஆனால் நாம் வசிப்பதோ உத்தமங்கள் வீசம்படி எவ்வளவென்று கேட்கும் உலகில் தானே ? So எந்தத் திட்டங்கள் தான் drawing board-ல் உள்ள அதே எளிமையோடு நடைமுறை கண்டிட முடியும் ?

2 MAXI நீளங்களிலான டெக்ஸ் சாகஸங்கள் இம்முறை ! (அண்ணோவ்ஸ் : கவனிக்க - MAXI நீளங்கள் மட்டுமே   !!) முதலாவது “யுத்த பூமியில் டெக்ஸ்”! பெயரே கதையின் பாதியைச் சொல்லி விடுவதால் – இது நமது ‘தல‘ ப்ளாஷ்பேக் என்பதை உங்களில் நிறையப் பேர் யூகித்திருக்கலாம் ! And yes – அமெரிக்க வரலாற்றினில் ஒரு நீங்காக் கறுப்புப் புள்ளியாகவும், பின்நாட்களில் வன்மேற்கு சார்ந்த நாவல்கள், காமிக்ஸ் போன்ற படைப்புகளின் ஆசிரியர்கள் விடாப்பிடியாய்ப் பிடித்துத் தொங்கிக் கொள்ளவொரு கிளையாகவும் அமைந்து போன வடக்கு Vs தெற்கு (Union vs Confederates) என்ற உள்நாட்டுப் போரே இங்கே பின்புலம் ! பெரியவர் போனெலியின் கைவண்ணத்தில் உருவான இந்த ஆல்பமானது டெக்ஸின் ரசிகர்கள் அத்தனை பேருக்கும் ஒரு “இன்றியமையா இதழ்” என்ற பாணியில் நிறையவே இன்டர்நெட் குறிப்புகளைப் பார்த்திட முடிந்தது ! So எனது கதைத் தேர்வு அமைந்தது அந்தப் பின்னணியிலேயே & பணிகளுக்குள் புகுந்த போது தான் அதன் காரணமும் புரிந்தது ! நம்மவருக்கு இந்த யுத்தத்தில் இருந்த நேரடிப் பங்கு பற்றி பிசிறின்றி கதை நகற்றிச் சென்றுள்ளனர் ! அதே சமயம், இது இரவுக் கழுகாரின் “ரேஞ்சர் நாட்களுக்கு” முந்தைய காலகட்டம் என்பதால் நெஞ்சில் பாட்ஜோடு எதிரிகளை துவைத்துக் காயப் போடுவது இங்கு நிகழ்வதில்லை ! மாறாக யுத்தமண்ணிலும் வீரத்தை, விவேகத்தைக் காட்டி டெக்ஸ் களமாடுவதே இந்த 300+ பக்க சாகஸம் ! ஒரு பக்கம் யுத்த பூமி.. யுத்த மாந்தர்கள்... யுத்த யுக்திகள் என சகலமும் வரலாற்று வரிசைப்படிக் கச்சிதமாய் இருந்திட, அதனூடே நம்மவரை நுணுக்கமாய் நுழைத்திட பெரியவர் போனெலி அழகாய்த்  திட்டமிட்டுள்ளார் ! And சமீப மாதங்களின் நடைமுறை இப்போதுமே அமலில் – இன்டர்நெட்டில் தகவல்கள் தேடும் பொறுப்புகள் சொல்லோ ! அக்டோபர் இதழ்களின் பொருட்டு அமெரிக்க அரசியல் பற்றிப் படிக்க நேர்ந்ததெனில் – தற்சமயம் அமெரிக்க வரலாற்றுக்குள் எட்டிப் பார்க்க அவசியப்பட்டது ! போகிற போக்கில், இப்டியே தொடர்ந்தாக்கா – நெக்ஸ்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அண்ணாத்தே கூட நிற்கலாம் போலிருக்குது ! 2024 !! போடுங்கய்யா வோட்டு – ஆந்தை சின்னத்தைப் பார்த்து !

ஆல்பத்தின் கதை # 2 – மௌரோ போசெல்லியின் ரொம்பவே வித்தியாசமான கைவண்ணம் - பனிவனப் படலம்  ! இங்குமே கதையின் தலைப்பு ஒரு giveaway எனும் போது – மாமூலான மொட்டைப் பாலைவனங்களில் நம்மவர்கள் சுற்றித் திரியப் போவதில்லை என்பது புரிந்திருக்கும் ! And கதை சுற்றிச் சுழல்வது கனடாவின் பிரம்மாண்ட பனி பூமியினில் என்பதையுமே யூகித்திருக்கலாம் ! இந்த ஆல்பத்தின் உரிமைகளை நாம் வாங்கியது 3 ஆண்டுகளுக்கு முன்னமே ! And இதன் மொழிபெயர்ப்பை கருணையானந்தம் அங்கிளிடம் ஒப்படைத்ததும் 36 மாதங்களுக்கு முன்பாகவே ! ஆனால் தொடர்ந்த ஆண்டுகளில் இத்தனை பக்க நீளத்திலானதொரு மெகா சாகஸத்தை நுழைக்கும் சந்தர்ப்பங்கள் சரிவர அமையாது போனதால், இது வெயிட்டிங்கிலேயே இருக்க நேரிட்டது ! 2020 -ன் அட்டவணையினுள் இதனை நுழைத்தே தீருவது என்ற தீர்மானத்தின் பலனே இந்த "தீபாவளி with TEX ! ஒரு மாதிரியாய் இதன் டைப்செட்டிங் பணிகள் சில நாட்களுக்கு முன்பாய்த் துவங்கியிருக்க – முதலிரண்டு பாகங்கள் நிறைவுற்று என் மேஜையில் காத்துள்ளன எடிட்டிங்கோசரம் ! சுமார் 30 பக்கங்கள் வரையிலேயே தான் நானும் வாசித்திருக்கிறேன் – ஆனால் மெய்யாலுமே இதுவரையிலும் இக்கதையின் plot பற்றித் துளியும் யூகிக்க முடியவில்லை ! கதை துவங்குவதே பனிபடர்ந்த ஆற்றில் ஒற்றைப்படகில் மிதந்து வரும் சடலத்தோடு எனும் போது துவக்கமே மர்ம கியர் எகிறுகிறது ! ஆர்வம் தாளாமல் பின்பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் ஏகப்பட்ட ஆக்ஷன் தெறிக்கிறது & அத்தனையும் நடுங்கச் செய்யும் கனேடிய பனிவனங்களில் எனும் போது டெக்ஸ் & தாத்தா சார் செம கம்பீரமாய் பனி அங்கிகளை அணிந்து கொண்டு கதை நெடுக வலம் வருவது தெரகிறது ! வெள்ளியிரவினில் தான் “யுத்த பூமியில் டெக்ஸ்” முப்பாகத்தினில் எனது பணிகள் முடித்து DTP-க்கு ஒப்படைத்திருக்க, அதனில் திருத்தங்களை இப்போது போட்டு வருகிறார்கள் !  So அவர்களை யுத்த பூமி பிசியாக வைத்திருக்க, என்னையோ பனி பூமி அழைக்கிறது ! இன்றோ - நாளையோ அதனிலும் எனது வேலைகளை முடித்துக் கொடுத்து விட்டால், விடுமுறைகள் முடிந்த நாட்களில் அச்சுக்குப் புறப்பட்டுவிடுவோம் ஜல்தியாய் !  In the meantime yet another பனிவனம் அழைத்து நிற்கிறது – இம்முறையுமே நம் இரவுக்கழுகாரின் உபயத்தில் ! அது வேறெதுவுமில்லை; தீபாவளி மலரோடு வண்ண இணைப்பாக வந்திடவுள்ள 32 பக்கச் சிறுகதை ! And தமிழ் சினிமாக்களுக்கு இத்தாலியிலும் ஒரு audience உண்டென்பதை என்னளவுக்கு நம்பச் செய்யும் சிறுகதை இது ! Simply awesome !! அதற்குப் பேனா பிடிக்கும் பணியையும் நிறைவு செய்திட்டால், நவம்பர் இதழ்களின் செம tough பணிகளுக்கு சுபம் போட்ட திருப்தி கிட்டிடும் ! 650+ பக்கங்கள் எனும் போது, ராவுக்குக் கட்டையைக் கிடத்தினாலுமே உறக்கம் பிடிக்க மறுக்கிறது ! பண்டிகை நாள் November 14-ம் தேதி தான் என்றாலும், இம்முறை நவம்பர் 9-ம் தேதியே டெஸ்பாட்ச் செய்தாக வேண்டும் என்பதில் முனைப்பாகவுள்ளோம் ! And இந்த அறுநூற்றுச் சொச்சப் பக்க புக்கானது hardcover எனும் போது, பைண்டிங்கிற்கு போதிய அவகாசம் தந்திட வேண்டியுள்ளது ! So பத்தி பத்தியாய் பதிவுச் சாயாவை ஆத்திடாது, இம்முறை பணி சார்ந்த சாயாவை ஆத்துவதே சாலச் சிறந்ததென்று பட்டது ! (இப்படிச் சொல்லியே 3 மாடியைக் கட்டிப்புட்டியே மன்னாரு?! - காமிக்லவர் மைண்ட்வாய்ஸ் )

And இதோ – நமது அமெரிக்க ஓவியை + நமது டிசைனர் பொன்னனின் கூட்டணியிலான இந்த மெகா இதழுக்கான அட்டைப்பட முதற்பார்வை ! 

எப்போதையும் விட இம்முறை நகாசு வேலைகளையும் அடித்துத் தாக்கியுள்ளோம் என்பதால், ஆல்பம் உங்கள் கைகளை எட்டும் போது, தடவிப் பார்த்து ரசிக்கவே நிறைய நேரத்தையும் கைவசம் வைத்துக் கொள்ளல் தேவலாம் என்பேன் ! இதோ – இரு ஆல்பங்களிலிருந்தும், சில உட்பக்க previews :


சாயா ஆத்தும் கடமையை நிங்கள் கைகளில், இம்முறை நான் ஒப்படைக்க நினைக்கும் காரணம் # 2 பற்றி இனி...! 

ஒற்றை வாரமே காத்துள்ளது – நமது 2021-ன் அட்டவணை ரிலீஸுக்கு! ஒன்பது மாதங்களுக்கு மட்டுமே திட்டமிடல் என்பதால் absolutely essential என்ற நாயக / நாயகியரைத் தவிர்த்து பாக்கிப் பேருக்கெல்லாம் இதயத்தில் மட்டுமே இடம் என்பதில் no secrets ! ஆகையால் இம்முறை அட்டவணையை யூகிப்பதில் உங்களுக்கு பெரிதாய்ச் சிரமங்கள் இராதென்றே படுகிறது எனக்கு ! So இந்த வாரம் ஆளுக்கொரு எடிட்டர் குல்லாவை மாட்டிக் கொண்டு, ஆளுக்கொரு அட்டவணை தயார் செய்ய முற்பட்டாலென்ன guys ? Of course – நான் புதுசாய் நுழைக்கக் கூடிய நாயக / நாயகியரை யூகிக்க வழிகள் இராது தான் ; ஆனால் அவை தவிர்த்து பொதுவானதொரு அட்டவணை மாதிரியைத் தயாரிக்க முயற்சிகள் ப்ளீஸ் folks ?

Maybe உங்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புகள் நான் முக்கியத்துவம் தந்திரா ஏதேனுமொரு ஆசாமன் or ஆசாமி மீது லயித்திருக்கும் பட்சத்தில், ஜல்தியாய் எனது அட்டவணையினில் திருத்தங்களைப் போட்டுக் கொள்ள வசதியாக இருக்குமல்லவா ? So இந்த ஒற்றை வாரம் கொஞ்சமாய் நீங்கள் மெனக்கெட்டால், அதன் பலன் அடுத்தாண்டின் திட்டமிடலில் பிரதிபலிக்க வாய்ப்புகள் உண்டு ! “என்னெத்தக் கதை தேர்வு பண்றான் மாக்கானாட்டம் ? நான்லாம் இதே வேலையைச் செஞ்சாக்கா  வூடு கட்டி அடிச்சிருப்பேனாக்கும் !” என்று அப்புறமாய் சாவகாசமாய் FB-யிலோ; வாட்சப் குரூப்களிலோ தொடை தட்டுவதைத் தவிர்க்க நினைத்திட்டால் – this is the time for it ! And எனது இறுதித் திட்டமிடலுக்கு நெருங்கிய செலக்ஷன்களை செய்திடும் Top 3 தேர்வாளர்களுக்கு a சந்தாப் பிரிவு  of their choice -  நம் அன்புடன் ! ”So சும்மானாச்சும் பிலிம் காட்டறான்டா டோய்” என்ற பகடிகள் would be out of place !

And நான் டெக்ஸுடன் பனிக்காட்டுக்குள் புகுந்திட தயாராகும் முன்பாக ஒரு அதிரடி நியூஸ் ! பணிகள் சகலமும் முடிந்தது ; அட்டவணையை அச்சுக்கு எடுத்துப் போகலாமென்ற தீர்மானத்திற்கு நான் வந்திருந்த வெகு சமீபத்தைய நாளில் ஒரு மின்னஞ்சல் ! தொடர்ந்தது எ-ன்-ன ? என்பதை அறிந்து கொள்ள நீங்கள் இன்னொரு வாரம் காத்திருக்க வேண்டி வரலாம் ! ஏனெனில் மின்னஞ்சலின் சாராம்சத்தை மண்டைக்குள் அசைபோட்டு வருகிறேன் - அதனில் உள்ள சமாச்சாரத்தை  நடைமுறைக்கு கொணர சாத்தியங்கள் உள்ளனவா என்ற மஹாசிந்தனைகளோடு ! If it does work out - தொடரவுள்ள 2021-ன் சந்தா அணியினில் ஐக்கியமாகிட கூடுதலாகவொரு சூப்பர் காரணமும் இருந்திடக்கூடும்...! இப்போதைக்கு அந்தத் தகவலோடு கிளம்புகிறேன் - பனிக்காட்டுக்குள் திரிய !  

And I need a piece of assistance too folks : காத்திருக்கும் "சர்ப்பத்தின் சவால்" இதழின் முதற்பக்கத்தில் இடம்பிடித்திட நண்பர் JSK சார்ந்த குறிப்புகள் ; அவரது எழுத்துக்களின் சிறு மாதிரிகள் ; அவரது போட்டோ என்ற contents சகிதம் ஒற்றைப்பக்கத்தை யாரேனும் தயார் செய்து அனுப்பிட நேரம் எடுத்துக் கொண்டால், ரொம்பவே உபகாரமாக இருந்திடும் ! Of course - நண்பரைப் பற்றி நான் எழுந்திடும் வரிகளை வாகான இடத்தினில் இணைத்துக் கொள்வேன் ! And taking it further, நண்பரை நேரடியாகவோ, FB அல்லது வாட்சப் மூலமாகவோ நன்கு அறிந்து வைத்திருந்த நண்பர்களும் அவர் சார்ந்த நினைவுகளை பகிர்ந்திடலாமே - maybe like a tribute of sorts ? மின்னஞ்சலில் அனுப்பிடலாம் ; இங்கேயும் பகிர்ந்திடலாம் !பக்கங்கள் கூடுதலாகினால் இப்போதே திட்டமிட்டுக் கொள்வேன் - அவற்றையும் இணைத்துக் கொள்ளும் விதமாய் ! ஒரு mad rush-ல் பணிகள் சூழ்ந்து கிடக்கும் சூழலில், உங்களின் மெனெக்கெடல்ஸ் ரொம்பவே உதவிடும் எனக்கு ! Please guys ? கடமை # 3 !!

மீண்டும் சந்திப்போம் ! Bye for now !! அனைவருக்கும் பண்டிகை வாழ்த்துக்கள் !! Enjoy the weekend & more !! 

541 comments:

 1. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 2. சூப்பரா இருக்கு அட்டைப்படம்

  ReplyDelete
 3. ///சூப்பர் காரணமும்///

  🤔🤔🤔
  🤷

  ReplyDelete
 4. அற்புதமான கலரிங்கண்ணைப்பறிக்கிறது. இது வரை வந்த டெக்ஸின் அனைத்து அட்டைப்படங்களையும் மிஞ்சும்வகையில்அமைந்துள்ளதால் இந்ததீபாவளி தல தீபாவளி என்பதில் மிக்க மகிழ்ச்சி. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 5. 2021 ல் மறுபதிப்பாகவேனும் ஒரு மாடஸ்டி ப்ளீஸ்.சார் சென்சார்அனுமதிக்கப்படுகிறது. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. புதிய மாடஸ்தியே உள்ளார் நண்பரே பிறகு ஏன் மறுபதிப்பு...:-)

   Delete
 6. // ஆல்பம் உங்கள் கைகளை எட்டும் போது, தடவிப் பார்த்து ரசிக்கவே நிறைய நேரத்தையும் கைவசம் வைத்துக் கொள்ளல் தேவலாம் என்பேன் ! //
  டெக்ஸ் அட்டைப்படம் செம கலக்கல்,தல செம கெத்து நிற்கிறார்...

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. // ஆனால் அவை தவிர்த்து பொதுவானதொரு அட்டவணை மாதிரியைத் தயாரிக்க முயற்சிகள் ப்ளீஸ் folks ? //
  தங்களைப் போல் யூகிக்க முடியாது என்பதை மட்டும் யூகிக்க முடிகிறது...

  ReplyDelete
 9. டெக்ஸ் அட்டைப்படம் செம செம! அட்டைப்படம் வேற லெவல் சார் இது! எப்படி பாராட்டுவது என தெரியவில்லை! simply சூப்பர்!!

  ReplyDelete
 10. எடிட்டர் சார்..

  தீபாவளி வித் டெக்ஸ் - அட்டைப்படம் பிரம்மிக்க வைக்கிறது! (அதாவது 'இதுவர வந்ததிலயே இதா பெஸ்ட்'!) அமெரிக்க - இந்திய கொலாப்பரேஷனில் அசத்தலாக வந்திருக்கிறது! இன்னும் நகாசு வேலைகளும் சேர்ந்து கொண்டால் ச்சும்மா தகதகன்னு எம்ஜியார் மாதிரி மின்னப் போவது உறுதி! 2 மெகா கதைகள் சகிதம் அதிகாரி அட்டகாசப்படுத்தவிருக்கும் செம குண்டு புக்கை கையிலேந்தப் போகும் நாளை நினைத்தாலே ச்சும்மா ஜிவ்வுனு இருக்கு மனசுக்குள்ளே! கூடவே ஒரு கலர் டெக்ஸும் இலவசமாக எனும்போது 'அட்ராசக்கை அட்ராசக்கை' என்று ஒரு ஆட்டம் போடத் தோன்றுகிறது!

  அந்த ஈமெயிலில் அப்படி என்ன இருந்தது.. அடுத்த வருடம் எங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது.. என்ற தணியாத ஆவலில்!!

  ReplyDelete
  Replies
  1. அப்படியே வழிமொழிகிறேன்..

   Delete
 11. பனிவனப் படலம் ஓவியங்கள் அசத்தும் போல,இந்த நேரத்தில் டெக்ஸ் 250 யில் வெளிவந்த பிரம்மன் மறந்த பிரதேசம் இதழ் நினைவுக்கு வருகிறது,அந்த சாகஸம் கனடாவில் நடப்பதாக நினைவு,அக்களம் வண்ணத்தில் அசத்தலாக அமைந்திருக்கும்...

  ReplyDelete
 12. //சுமார் 30 பக்கங்கள் வரையிலேயே தான் நானும் வாசித்திருக்கிறேன் – ஆனால் மெய்யாலுமே இதுவரையிலும் இக்கதையின் plot பற்றித் துளியும் யூகிக்க முடியவில்லை ! //
  அடடே,வாசிக்க மிக்க ஆவலுடன்......

  ReplyDelete
 13. ப்பா டெக்ஸ் அட்டைப்படம் செம்ம சூப்பர் ஆசிரியரே

  ReplyDelete
 14. முன் அட்டையும் பின் அட்டையும் போட்டி போடுகின்றன

  ReplyDelete
 15. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 16. தீபாவளி... தீபாவளி.. தீபாவளி...

  🎆🎇🎆🎆🎇🎇🎆🎆🎇🎇🎆🎇🎆🎆🎇🎇🎆

  ReplyDelete
  Replies
  1. தீபாவளி பரபரப்பு ஆரம்பிச்சிருச்சா என்று தெரிந்து கொள்ள ஒரு curiosity ! பட்டாசுக் கடைகள் களை கட்டுகின்றனவா folks?

   Delete
  2. இன்னும் ஆரம்பிக்கவில்லை சார்...

   இம்முறை பட்டாசு விற்பனை 10ம் தேதிக்கு மேல தான் வேகம் எடுக்க கூடும்...

   நார்மலாகவே ஒரு வாரம் இருக்கும் போது தான் இங்கெலாம் பட்டாசுகடைகள் திறப்பாங்க... இந்தாண்டு இந்த அப்நார்மல் சூழலில் கடேசி ஓருசில நாட்கள் தான் பரபரப்பாக இருக்கும் போல...

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. இங்கு பொரி கடையில் தான் சார் கூட்டம்...

   Delete
  5. சென்னையில் ஜவுளி கடை தான் எப்பவும் போல கூட்டம் அலை மோதுகிறது. பட்டாசு இன்னும் கண்ணில் படவில்லை.

   Delete
  6. இம்முறை என்ன எதிர்பார்ப்பதென்றே தெரியலை ! ஒருபக்கம் சிரமங்கள் ; இன்னொரு பக்கம் 4 சக்கர வாகன விற்பனை கூடியுள்ளது ; நிமிடம் ஒன்றுக்கு 9000 ஆர்டர்கள் myntra sale-ல் என்ற ரீதியிலான செய்திகள் ! 😶😶

   Delete
 17. தீபாவளிக்கு 3 புத்தகங்களா நண்பர்களே

  ReplyDelete
 18. டியர் எடி,

  வேளைபளூவுனூடே 50+ பக்கங்கள் கொண்ட காமிக்ஸ் இதழ்களையே, 2-3 நாட்கள் விட்டு விட்டு படிக்க முடிகிறது... 500+ பக்கங்களுக்கு ஏக் தம்மில், மொழிபெயர்ப்பில் உட்காரும் உங்கள் ஆர்வம் வியக்கதக்க வைக்கிறது.

  டெக்ஸ் கிளாசிக், மற்றும் மாடர்ன் என்று இரு கதைகள், நல்ல combo. டெக்ஸுடன் அட்டையில் இடம்பிடித்த அந்த கனடிய மவுண்டனர், ஆர்வத்தை அதிகரிக்கிறார்.

  அடுத்த வருட அட்டவணை உங்கள் தேர்விலேயே பிரதிபலிக்கட்டும். சமீப வருடங்களாக நமது காமிக்ஸ்களை தாண்டி புதிய காமிக்ஸ் அனுபவம் எதற்கும் நேரம் ஒதுக்குவதில்லை என்பதால், உங்கள் வாசிப்பு களங்களின் புதிய தேர்வுகளை ஆவலுடன் எதிர்நோக்குவேன்.

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் அட்டை ஏ1 தரம்.

   வர்ணங்கள், ஓவியம் இரண்டும் கண்ணை கவர்கின்றன. அமெரிக்க ஓவியை, அட்டகாசம் செய்திருக்கிறார்.

   டெக்ஸ் ரசிகர்களுக்கு இந்த வருட தீபாவளி மலர், கொண்டாட்டம் தான்.

   Delete
  2. ///டெக்ஸ் ரசிகர்களுக்கு இந்த வருட தீபாவளி மலர், கொண்டாட்டம் தான்///--- எல்லா ரசிகர்களுக்கும்தான் ரஃபீக் ஜி!

   டெக்ஸ் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு மிடறு கூடுதலாக...!!

   ஆமா, அட்டைபடம் வேறு லெவல் தான்.

   Delete
  3. நன்றிகள் சார் ! டெக்ஸ் அருகே நிற்கும் அந்த நபர் ஜிம் பிராண்டன் ; நமக்கு ஏற்கனவே பரிச்சயமானவரே !

   Delete
  4. //வேளைபளூவுனூடே 50+ பக்கங்கள் கொண்ட காமிக்ஸ் இதழ்களையே, 2-3 நாட்கள் விட்டு விட்டு படிக்க முடிகிறது//

   இன்றைய சூழலில் நேரம் at a premium தானே சார் ; எல்லோருமே ஒரு நில்லா ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதென்று ஆகிப் போச்சு ! எனக்கோ இது தான் வேலை என்பது தான் ப்ளஸ் பாய்ண்ட் !

   Delete
 19. ////! போகிற போக்கில், இப்டியே தொடர்ந்தாக்கா – நெக்ஸ்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அண்ணாத்தே கூட நிற்கலாம் போலிருக்குது ! 2024 !! போடுங்கய்யா வோட்டு – ஆந்தை சின்னத்தைப் பார்த்து !///

  ---- நோ சான்ஸ் எடிட்டர் சார்.

  அமெரிக்கன் பார்ன் சிட்டிசன்ஸ்தான் பிரசிடெண்ட் தேர்தல்களில் போட்டி இட இயலும்...

  கவர்னர் ஆக நிற்கலாம்மாம்...

  அரிசோனாவில் நின்னாக்கா செயம் நமக்குத்தேன்...!!!!

  ReplyDelete
  Replies
  1. அண்ணா எடி சார் சொன்னது நம்ம பதிமூன்றாம் பாபுகாரு ஜெஸன் தம்முடுவை என்று நினைக்கிறேன். அவசரப்பட்டு எந்த அரிசோனா பெண்ணிற்கும் ஃபிரண்ட் request அனுப்பிடாதீங்க😜🤣

   Delete
  2. அட..ஒரு பேச்சுக்காவது கூவுவீங்கன்னு பாத்தாக்கா பியூஸ் பிடுங்கி விட்டுப்ப்புட்டீங்களே ? சரி ரஷ்யா பக்கமா ஒதுங்கிப் பாக்கலாம்னா ஜூடோ கருப்பு பெல்ட்டோடு மிரட்டுறார் !

   Delete
  3. அய்யய்யோ அப்படி எல்லாம் இல்லை சார்....!!!

   ஆஸ்திரியாவுல பிறந்த அர்னால்ட் ஸ்வார்ஸிநேகர், பாடி பில்டிங்ல ஆறு முறை மிஸ்டர் ஒலிம்பியாவா வந்து ஆலிவுட்டில் கோலோச்சி, இருமுறை கலிஃபோர்னியா கவர்னராக வெற்றி பெற்று பணியாற்றியுள்ளார்.

   இந்திய ஜப்பானில் பிறந்து எழுத்துக்கு முக்காலே மூன்றுவீசம் அரிசோனா மண்ணில் நடக்கும் கதைகளாகவே எழுதி வரும் தாங்கள் தாராளமாக அரிசோனா வில் ஹிட் அடிக்கலாம் சார்.

   அரிசோனா வாழ் மக்களைவிட நமக்கு அங்கே பரிச்சயம் அதிகம் அல்லவா...!!!!

   செட்டாக 2024ல் ஷெரீப் வூட்டுல பட்டறைய போடுறோம். எலக்சன்ல தங்களை செயிக்க வைக்கிறோம்.

   Delete
  4. ஆமா.. நல்ல ஓட்டா போட்டு ஜெயிக்கிறோம்... 💪🏼💪🏼💪🏼

   Delete
  5. டெக்ஸாஸ் கவர்னரா நின்னா எங்க வீட்ல ரெண்டு ஓட்டு விழுகும். அரிசோனால நின்னா வீட்லருந்து பிரியாணி வேணா கிடைக்கும். கூடவே கட்டாவும் அரிசோனா வெயிலுக்கு நல்ல மோரும் போட்டுத்தரோம்.

   Delete
  6. வருங்கால அமெரிக்க ஜனாதிபதி விஜயன் வாழ்க வாழ்க ........

   Delete
 20. என் அட்டவணை;
  சுலபக் களங்கள் 75 %.
  கார்ட்டூன்கள் 15 %.
  கிராபிக் நாவல்கள் 10%.
  9 மாதங்கள்.32 புத்தகங்கள்.
  டெக்ஸ் வில்லர் -10.
  லக்கி லூக் -2.
  டாக் புல் -ஆர்டின் -1.
  ரிப்போர்ட்டர் ஜானி-1.
  மாடஸ்டி-1.
  தோர்கல் 1.
  டியூராங்கோ 1.
  XIII-1.
  கிராபிக் நாவல்கள் 4.
  ட்ரென்ட் 1.
  சோடா 1.
  மார்ட்டின் 1.
  C.I.D.ராபின் 1.
  ப்ளுகோட் பட்டாளம் 1.
  டயபாலிக் 1.
  கர்னல் கிளிப்டன் அல்லது ஹெர்லக் ஷோம்ஸ் 1.
  டைலன் டாக் அல்லது ஜூலியா 1.
  புதிய அறிமுகங்கள் 2.
  மொத்தம் 32 புத்தகங்கள் வருகின்றன.இது என் கணிப்பு.தப்பிதமாகத் தான் இருக்கும் என்பது தெரிந்ததே.ஆசிரியர் மூளையைக் கசக்கிப் போட்ட அட்டவணை தான் ஜொலிக்கும் என்பது நண்பர்கள் அனைவரும் அறிந்ததே.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இந்தவாட்டி கசக்க ஜாஸ்தி வாய்ப்புகள் இல்லை சார் !

   Delete
  2. அருமையான முயற்சி சரவணன் சார்

   Delete
 21. இரவு வணக்கம் அனைவருக்கும். டெக்ஸ் அட்டைப்படம் செம்ம கலரிங். கண்டிப்பாக ஹார்ட் பவுண்டில் இன்னும் கலக்கலாக இருக்கும். Super சார்.
  நானெல்லாம் 3ம் பக்கம் படிக்கறதுக்குள்ள கடைசி பக்கத்தை புரட்டி முடிவு என்னன்னு பாக்கற ஆளு. இந்த gussing ஆட்டத்துக்கு நான் சரிப்படமாட்டேன். ஐயா ஜூட். இன்னும் ஒரு வாரம்தானே, அட்டவணைக்கு. காத்திருக்கிறேன். வெற்றியாளருக்கு எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஒன்றுக்கு இரண்டாய் பரிசுகளை ஏற்கனவே தட்டிவிட்டவராச்சே சார் - நீங்கள் !

   Delete
 22. தீபாவளி WITH டெக்ஸ் அட்டைப் படம் நன்றாக ஜொலிக்கிறது.இரண்டு அட்டைகளின் வர்ணச் சேர்க்கையும் சும்மா தகதகனு ஜொலிக்குதுங்கோ.எப்போது தீபாவளி இதழ்களைக் கையில் ஏந்துவோம் என்ற பரபரப்பு இப்போதே தொற்றிக் கொண்டுவிட்டது.

  ReplyDelete
 23. Looking forward to Diwali with Tex. என் மாமனார் ஒரு மாதம் முன்பு இறந்து விட்டதால் இந்த வருடம் தீபாவளி பண்டிகை இல்லை. டெக்ஸ் தயவில் நான் மட்டும் கொண்டாடிவிடுவேன். அமெரிக்க உள்நாட்டுப் போர் ஒரு சூப்பர் கதைகளம். சிவில் வார் மை பேவரைட். ஜான் ஜேக்ஸின் நார்த் அண்ட் சவுத் தொடரை முழுவதும் பார்த்திருக்கிறேன். Expectations are very high. அந்த மெயில் விஷயம் என்ன??? What's the matter. யாராச்சும் ஒரு கொடு காட்டுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. சகோ@ நிறைய நாள் இழுபறியாக இருந்த ஏதாவது ஒரு டாப் ஹீரோவின் தமிழ் உரிமைகள் ஒப்புதல் வழங்கி வந்த மின்னஞ்சலாக இருக்க கூடும்.

   அல்லது ஏதாவது ஒரு அதிரி புதிர தொடர் ஓகே ஆகி இருக்கலாம்.

   எதுவாயினும் அடுத்த சந்தாவில் இணைக்கும் செய்தி செமயாக இருக்கும்...!!!

   Delete
  2. நானே கோடு போடத் தெரியாது முழிச்சிங்ஸ் சிஸ் ! தொடரும் நாட்களில் இந்தப் பணிச்சுமைக்கொரு தீர்வைக் கண்டான பின்னே யோசனைக் குல்லாவைத் தேடியாகணும் !

   Delete
  3. ஓகே, பொறுமை காக்க போராடுவோம். ஒரு வேளை valerian ஆக இருக்குமோ 🤔

   Delete
 24. This comment has been removed by the author.

  ReplyDelete
 25. தீபாவலி..தீபாவலி.. தீபாவலி..

  ReplyDelete
 26. நானும் வந்துட்டேன்.

  ReplyDelete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
 30. This comment has been removed by the author.

  ReplyDelete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
 32. புத்தாண்டின் பரபர பக்கங்களுக்கான நாயகர்களைத் தேர்ந்தெடுப்பதில் என் சாய்ஸ்...


  1.மார்ட்டின் மிஸ்ட்ரி
  2.டிடெக்டிவ் ராபின்
  3.டைகர்
  4.டெக்ஸ்
  5.Xiii வரிசையின் புதியவை எதுவாயினும்..
  6.கேப்டன் ப்ரின்ஸ்..
  7.ட்யூராங்கோ-பவுன்சர் புதிது வந்தால்..
  8.சிக்பில் குழு..
  9.யுத்தகதைகள் ப்ளாக் அண்ட் வொயிட்டில்..அதிரடிப்படை போன்று..
  10.ஜேம்ஸ் நியூ..
  11.அட்டகாசமான கிராபிக் நாவல்கள்..தோர்கல் போன்றவை..

  12.எதிர்கால கதைகள்.. வலேரியன் கிடைச்சாக்கா செம்மயா இருக்கும் சார்.. எந்த தேர்தலில் நின்னாலும் ஓட்டைக் குத்துறேன்.. சாமி சத்தியமுங்..
  13.உங்கள் முத்தான நாயகநாயகி தேர்வுகள் எதுவாயினும்...
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வலேரியன் கிடைப்பதில் பிரச்னை கிடையாது ; அதனை பொது ரசனைக்கு உட்படச் செய்வதில் தானே சார் பிரச்சனையே ?

   Delete
 33. வரேன் வரேன் நானும் எனது அட்டவணை உடன் வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சீறும் சிங்கமே வாரீர்

   Delete
 34. அக்டோபர் 20 (2019)
  JSK- வின் நம்பிக்கையான பதிவு.

  நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.நேற்று மூன்றாவது செக் அப்பிற்காக ஈரோடு மருத்துவமனை சென்று வந்தேன்.உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக டாக்டர் கூறினார்.என்னாலும் அதை உணர முடிகிறது.இன்னும் இரண்டொரு மாதங்களில் பழையபடி நார்மலாகிவிடுவேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.எனக்காக பிராத்தனைமற்றும் உதவிகள் செய்த அன்பு உங்ளங்களுக்கு என் மனமார்ந்ந நனறியினை தெரிவித்துக்கொள்கிறேன்...🙏🙏🙏

  ReplyDelete
 35. ஜேடர்பாளையத்தாருடனான தருணங்கள். இனிப்பானவை.. நெருங்கிப் பழகிய நண்பர் சகோதரர் குணாவையே அவரை பற்றி எழுத அன்புடன் அழைக்கிறேன்..

  ReplyDelete
 36. யுத்த பூமியில் டெக்ஸ்

  இந்த கதையைத்தான் சார் நான் உங்களிடம் வெகு காலமாய் கேட்டுக்கொண்டிருந்தேன் ...

  எனக்கு இந்த கதையை இத்தாலி மொழியில் வாங்கிய புக்கை தமிழில் ட்ரான்ஸ்லேட் செய்து படித்த போதே இது ஒரு அருமையான கதைகளம் என்று தெ/புரிந்து போயிற்று .. இக்கதை தீபாவளி க்கு வெளிவருவது மட்டற்ற மகிழ்ச்சிங்க விஜயன் சார் ...


  அப்புறமாய்
  ஒரு சிறு வேண்டுகோள் : முன் பக்க அட்டை சித்திரங்கள் எழுத்துக்கள் அருமையான கலர்களில் டாலடிக்கின்றது .. (இது வரை வந்த டெக்ஸ் அட்டைப்படங்களில் இதுதான் டாப் ஆக இருக்கிறது) முன் பக்க அட்டையில்

  டெக்ஸை மட்டும்

  போடுங்க சார் .. அட்டகாசமாய் இருக்கும் என எனக்கு தோண்றியது ... மாற்ற இயலுமாங்க டியர் எடி ..?

  ReplyDelete
  Replies
  1. இயலாது என்பது ஒருபக்கமிருக்க அடுத்த வாசகர் " கார்சனை அட்டையிலே கொண்டு வாங்கன்னு "சொன்னா அவருக்கு என்ன சொல்லுவேன் சம்பத் ?

   Delete
  2. 😃😃😃... சரிதானுங்க சார் .. அந்த மாதிரி நான் யோசிக்கவேயில்லை ..

   Delete
  3. நானும் அது கார்ஸன் தான் - இப்படி (ஆட்டுத் ) தாடி இல்லாமல் வரைந்து இருக்கிறார்களே என்று நினைத்து சரி செய்ய சொல்ல நினைத்தேன். அப்றம் சுதாரித்து தொப்பிக்கு வெளியே தெரியும் முடி கருப்பாக இருப்பதைப் பார்த்து வேறு ஒருவர் என்று சுதாரித்துக் கொண்டேன்.

   Delete
  4. நீங்களாவது அப்படி நினைத்தீர்கள்.நான் கார்ஸன் தாடிக்கு மாறுவதற்கு முன்பான கதை என நினைத்தேன்.

   Delete
 37. This comment has been removed by the author.

  ReplyDelete
 38. This comment has been removed by the author.

  ReplyDelete
 39. சார் அட்டைப்படம் முன்னும் பின்னும் தூள்.....நம்ம ஸ்பைடர் அதகளப்படுத்தப் போறார் நண்பரால்....எனது குல்லா வில் உள்ள மூளைக்குள்
  என்பதுகளின் நாயகர்கள் சந்தாவில்...
  1.XIII
  2.ஸ்பைடர்
  3.ஆர்ச்சி
  4.பாண்ட்
  5.புதிய இரும்புக்கை மாயாவி
  6.ரோஜர்
  7.வேதாளன்
  8.லாரன்ஸ்டேவிட்
  9.அழகி ஆக்சா அல்லது டயபாலிக்
  அசத்தும் வண்ணத்ல மேக்சிஸ் அனைத்தும்

  டெக்ஸ்
  9கதைகள்...அந்த 500பக்கமெபிஸ்டோவோட

  கார்ட்டூன்
  1.லக்கி
  2.கிட்
  3.சுஸ்கி
  4.கொரில்லாக்கள், மேக்,ஜாக்
  5.நீலப்பொடியர்கள்
  6.சோடா
  7.ஆஸ்ட்ரிக்ஸ்
  8.லக்கி
  9.ஊதாப்பொடியர்கள்

  அதிரடிகள்
  1.ட்யூராங்கோ
  2.தோர்கள்
  3.கென்யா
  4.ட்யூராங்கோ கதாசிரியர் கதை
  5.வான்சின் கடற்கொள்ளையர்
  6.ஹாம்மேவின் அந்தக் கிபா
  7.நீங்க சொன்ன இன்னோர் கடல் கதை
  8.ஒற்றை நொடி
  9.விண்வெளிக்கதை நண்பர்கள் கேட்டார்களே அது

  ReplyDelete
  Replies
  1. ஆக மொத்தம் 36 எல்லா ஸ்பெஷல் எடிஷன் எல்லாம் சந்தா விலேயே அடடா எவ்வளவு நல்ல மனசு.சந்தா தொகை குறைந்தது ஒரு 6000 வரும்.

   Delete
  2. நான் கிட்டக்க ஏதாச்சும் சோடா பாக்டரி இருக்கான்னு ஒரு நடை பாத்துட்டு வாரேன் ஸ்டீல் ; உங்க லிஸ்டுக்கு கோலி சோடாலாம் குடிச்சு கிறுகிறுப்பு தீராது ! கடையே சித்தே பாத்துக்கோங்க !

   Delete
  3. 5.நீலப்பொடியர்கள்
   9.ஊதாப்பொடியர்கள்

   ஏலே மக்கா என்ன இது :-)

   Delete
 40. This comment has been removed by the author.

  ReplyDelete
 41. This comment has been removed by the author.

  ReplyDelete
 42. This comment has been removed by the author.

  ReplyDelete
 43. 70 வது பிறந்தநாளைத் தாண்டியதன் காரணமாக, டெக்ஸ் முகத்திலுள்ள சுருக்கங்களை எல்லாம் பாலீஷ் போட்டு வெகு ஜாக்ரதையாக நீக்கி, வெகுஜனம் போல் இளமையாக ஜொலிக்க வைத்த வகையில் அமெரிக்க ஓவியை மற்றும் பொன்னன் அண்ணார்க்கு வாழ்த்துகள்.

  வழக்கமமாக கார்சன் இடம்பிடிக்கும் அட்டையில் இம்முறை ஜிம் ப்ராண்டன்.காரணமின்றி ஓரணுவும் அசையாது எனும் போது, ஜிம் உடனான மாற்றம் பனிவனப் படலத்தில் கொஞ்சம் குளிரைக் கூட்டுகிறது.

  பின்னட்டையும் நேர்த்தியாகவே உள்ளது.

  மொத்தத்தில் குண்டு புக் என்ற எண்ணமே தித்திப்பை சுவை குறையாமல் பார்த்துக் கொள்கிறது.

  ReplyDelete
  Replies
  1. இந்த மஞ்ச சட்டையை லைட்டா மறைச்சி வைச்சதுக்கு எதாவது காரணம் இருக்குமோ.?:-)

   Delete
  2. மைனஸ் முப்பதைத் தொடும் குளிருங்கோ ; ஸ்டீல்பாடி ஷெர்லக் வந்தாலும் பனியங்கி இல்லாது பருப்பு வேகாது !

   Delete
  3. ஆ... !மைனஸ் முப்பது டிகிரியா?

   டக...டக...டக...டக...
   (பற்கள் நடுங்கும் ஓசை)

   Delete
 44. This comment has been removed by the author.

  ReplyDelete
 45. This comment has been removed by the author.

  ReplyDelete
 46. This comment has been removed by the author.

  ReplyDelete
 47. சார் எனக்கு ஒரு டவுட். ஹீரோ பெயர் எத்தனை கதை என்று சொன்னால் போதுமா??

  ReplyDelete
  Replies
  1. போதும் தான் சார் ; யூகத்தில் வேறென்ன சாத்தியப்படக்கூடும் ?

   Delete
  2. ////சார் எனக்கு ஒரு டவுட். ஹீரோ பெயர் எத்தனை கதை என்று சொன்னால் போதுமா??///

   போதாது! முழுக்கதையையும் சொன்னால் மட்டுமே பரிசு! அத்தோடு, கதையின் நடுவே திடீர் திடீரென வந்து நம்மைத் திகைப்பில் ஆழ்த்தும் கவிதை வரிகளையும் கட்டாயம் இங்கே சொல்லவேண்டும்! ;)

   Delete
  3. /// திடீர் திடீரென வந்து நம்மைத் திகைப்பில் ஆழ்த்தும் கவிதை வரிகளையும் கட்டாயம் இங்கே சொல்லவேண்டும்!///

   கமண்ட்டு ஃபார்வர்டு டு ஸ்டீல் ஐயா அவர்களுக்கு.

   Delete
 48. This comment has been removed by the author.

  ReplyDelete
 49. This comment has been removed by the author.

  ReplyDelete
 50. This comment has been removed by the author.

  ReplyDelete
 51. Deepavali malar! Black & White, gundu book ....Wow wow wow

  ReplyDelete
 52. This comment has been removed by the author.

  ReplyDelete
 53. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. சார்... சார் ..எனது வேண்டுகோளை இன்னொருவாட்டி படித்துப் பாருங்களேன் ?!

   Delete
 54. JSK

  தானைத்தலைவர் ஸ்பைடர் கதைகளின்வரிசைப்படடியல்..:-

  லயன் காமிகஸ்:-

  1.எத்தனுக்கு எத்தன்
  2.டாக்டர் டக்கர்
  3.பாதாளப்போராட்டம்
  4.கொலைப்படை
  5.கடத்தல் குமிழிகள்
  6.பழி வாங்கும் பொம்மை
  7.சைத்தான் விஞ்ஞானி
  8.யார் அந்த மினி ஸ்பைடர் ?
  9.சதுரங்க வெறியன்
  10,குற்றத்தொழற்சாலை
  11.நீதிக்காவலன் ஸ்பைடர்
  12.தவளை எதிரி
  13.மரண மாஸ்டர்
  14.சிவப்பு தளபதி
  15.கல் நெஞ்சன்
  16.விசித்திர சவால்
  19.இராட்சஸ குள்ளன்
  20.சூப்பர் ஸ்டார் ஸ்பைடர்
  21.வீனஸ் கல் மர்மம்
  22.சிறுபிள்ளை விளையாட்டு
  23.மிஸ்டர் மர்மம்
  24.மரண ராகம்
  25.மீண்டு்ம் ஸ்பைடர்
  26.பாட்டில் பூதம்
  27.ஸ்பைடர் V/S பனிப்பிரபு
  28.அரக்கன் ஆர்டினி.

  மினி லயன்:-

  1.ஸ்பைடர் படை
  2.கோப்ரா தீவில் ஸ்பைடர்

  திகில் காமிக்ஸ்:-

  1.விண்வெளி பிசாசு.

  ReplyDelete
 55. This comment has been removed by the author.

  ReplyDelete
 56. JSK

  மலரும் நினைவுகள் 03

  குற்றச்சக்ரவர்த்தி ஸ்பைடர்

  உனக்கு பிடித்த காமிக்ஸ் கதாபாத்திரம் யார் என்று கேட்டால் ....கொஞ்சமும் யோசிக்காமல் பளிச்சென்று பதில் சொல்வேன் ஸ்பைடர் என்று...!

  அந்தளவுக்கு சிறுவயதில் ஸ்பைடர் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அசாதாரணமானது...!

  ஸ்பைடரின் கதைகள் என்னுள் விரித்த கனவுலகம் எல்லையில்லாதது.

  ஸ்பைடர் மற்ற காமிக்ஸ் ஹீரோக்களிலிருந்து மாறுபட்டவன்.ரொம்பவே மாறுபட்டவன். உடலோடு ஒட்டிய கரிய கவச உடுப்பு.., சதா சர்வகாலமும் முதுகில் சுமந்து திரியும் ஜெட் பேக்...., கூர் மண்டையன்., ஊசிக்காது கோமாளி, குரங்கு மூஞ்சிக்காரன், சிலந்திப்பயல் என்று ஏகப்பட்ட அடைமொழிகள்....!
  அந்தளவுக்கு சர்வ லட்சணமும் (???!!) பொருந்தியவன் ஸ்பைடர்...!
  குண நலன்களைப்பற்றி கேட்கவே வேண்டாம்..! ஆணவத்தின் மொத்த உருவம்.தலைக்கனம் ஜாஸ்தியோ ஜாஸ்தி...! தனக்கு நிகர் யாருமில்லை
  யென்ற இறுமாப்பு கொண்டவன்.சரியான தற்பெருமை பார்ட்டி. ஸ்பைடரைப்போல தற்பெருமை பேசித்திரிபவரை வேறெங்கும் காண முடியாது. மகாக்கோபக்காரன்.அவனுக்கு கோபம் வந்துவிட்டால் ராய் ஆர்டினியின் பாடு படு திண்டாட்டமாகிப்போகும்.
  குற்ற சாம்ராஜ்யத்தின் ஏகபோக சக்ரவர்த்தி...! அந்த இடத்துக்கு வேறு யாராவது போட்டியாக முளைத்தால் பொங்கி விடுவான்.

  ஸ்பைடர் தன் சகாக்களை திட்டும் வசவுச்சொற்கள் எங்கள் நண்பர்கள் மத்தியில் ரொம்பப்பிரபலம்.விளையாட்டின் போது ஏதாவது தகராறு வந்துவிட்டால்...., அற்பப்பதரே...சாக்கடைப்புழுவே என்றுதான் திட்டிக்கொள்வோம்.அதுபோல விளையாடி முடித்து வீடு திரும்பும் போது...குட் பை அற்ப மானிடர்களே...! மீண்டும் சந்திப்போம்...! என்று சொல் லித்தான் கிளம்புவோம்.

  போலீஸாரோடு மோதி அவர்களை மண்ணை கவ்வ வைப்பது ஸ்பைடருக்கு இஷ்டமானதொரு பொழுது போக்கு.

  ஸ்பைடர் கதைகளில் வரும் நூதனமான விஞ்ஞானக்கருவிகள் எங்களை பலமுறை வியப்பிலாழ்த்தியிருக்கின்றன.
  குறிப்பாக நீதிக்காவலன் ஸ்பைடரில் வரும் ஜிஸ்மோ கருவி. உள்ளங்கையில் மறைக்கும் அளவேயான அந்த சிறிய கருவியால் வில்லனை நொடியில் கிழவனாக்கி விடுவான்.
  ஸ்பைடர் கதைகளில் வரும் வில்லன்களும் லேசுப்பட்டவர்களல்ல....!
  மிஸ்டர் மினி
  மிஸ்டர் மாஸ்
  டாக்டர் நட்
  டாக்டர டக்கர்
  டாக்டர் ஆக்ரோ
  மிஸ்டர் ஸ்டோன்
  மிஸ்டர் மர்மம்
  பொம்மை மனிதன்
  சதுரங்க வெறியன்
  இயந்திர பொம்மைகளின் பேரரசன்
  பான்த்தர்
  கோப்ரா
  லிட்டில் ஜார்ஜ்
  நாசகாரன்
  விண்வெளி பிசாசு
  என்று அந்தப்பட்டியல் வெகு நீளம்.
  அத்தனை பேருமே மேதைகள்...அறிவுஜீவிகள்...ஜித்தர்கள்...!

  தங்கள் திறமைகளை தீயகாரியங்களுக்கே உபயோகிப்பவர்கள்.இவர்களோடு ஸ்பைடர் நடத்தும் ஒவ்வொரு ஜீவ மரணப்போராட்டமும் ரொம்பவும் சுவாரஸ்யமானவை.
  கடையில் புது ஸ்பைடர் புக் வந்துவிட்டது என்ற செய்தி கிடைத்ததுமே...உடம்பில் ஒரு பரவசமும், நடுக்கமும் உண்டாகும் பாருங்கள்...அதை வார்த்தைகளாள் விவரிக்க இயலாது...!
  நானும் குணாவும் புயலாய் கடைக்கு ஓடுவோம்.எங்கள் நண்பர்களை முந்திக்கொண்டு நாங்கள் முதலில் வாங்கிவிடவேண்டுமென்ற வெறி. மேலும் அன்றைய காலகட்டத்தில் ஸ்பைடரின் புத்தகங்கள் விற்பனையில் சக்கை போடு போட்டன.வந்த ஒரே நாளில் விற்றுத்தீர்ந்துவிடும்.அதனால் வந்தவுடனேயே புத்தகத்தை கைப்பற்றிவிடுவோம்.அப்போதெல்லாம் புத்தகத்தை பிரிக்க முடியாதபடி சைடில் பின் அடித்திருப்பார்கள்.புத்தகத்திற்கு சேதம்ஏற்படாமல் அதை கழட்டி எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.ஒரு வழியாக புக்கை பிரித்து உள்பக்க சித்திரங்களை தரிசித்தால்தான் அந்த படபடப்பும் நடுக்கமும ஓரவிற்கு மட்டுப்படும்.

  லயனின் முதல் ஆண்டு மலரான சைத்தான் விஞ்ஞானி ,. இரு வண்ணத்தில் பெரிய சைஸில் வந்த கொலைப்படை , யார் அந்த மினி ஸ்பைடர். நீதிக்காவலன் ஸ்பைடர் போன்ற கதைகளெல்லாம் லயன்காமிக ஸின் லேண்ட் மார்க் இதழ்க
  ள்.
  காலங்கள் மாறிவிட்டன....காமிக்ஸ் படிப்பவர்களின் ரசனையும் கௌ பாய் கதைகள் கிராபிக் நாவல்கள் என வேறு திசையில் பயணமாகிக்கொண்டிருக்கின்றன.
  இந்த மாதிரயான சூழலில் ஸ்பைடரின் மறுபதிப்பு புத்தகங்கள் " காதுல புய்ப்பம் " என கேலி பேசப்படுகின்றன.

  எது எப்படி இருந்தாலும் எம்மைப்போன்ற தீவிர ஸ்பைடரின் அபிமானிகள் இருக்கும் வரை ...தமிழ் காமிக்ஸ் உலகில் ஸ்பைடரின் செல்வாக்கும். புகழும் என்றென்றும் குறையாது.

  ஸ்பைடரா கொக்கான்னானாம்.....!

  ReplyDelete
  Replies
  1. Yes Guna sir, JSK's this comment is suitable for The Spider book. No one can glorify The Spider like JSK.

   Delete
  2. அட்டகாசம் JSK வின் பார்வையில். ஸ்பைடர் படித்து காமிக்ஸ் படிக்க துவங்கிய நம் ஒவ்வொரு வரின் பார்வை.

   Delete
 57. அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தை மைமையமாகக் கொண்டவகையில் யுத்த பூமியில் டெக்ஸ் அதுவும் டெக்ஸ் பிதாமகர் கைவண்ணத்தில் எனும்போது ஆர்வம் பீறிடுகிறது.

  தனித்துவமாக கதை சொல்லும் பாணியில் கைதேர்ந்த போசெல்லியின் ஆக்கமே இரண்டாவது கதை எனும் போது சுதி ஏறிடுது.

  ரெண்டுமே ஒன்றையொன்று விஞ்சப் போகிறதென்றே நினைக்கிறேன்.

  ReplyDelete
 58. JSK

  ஸ்பைடரின் குற்றத்தொழிற்சாலை....!

  கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்..பள்ளிப்பிராயத்தில்....1986 லயன் கோடைமலரில் முதன்முதலாக இந்தக்கதையை படித்து..."ஆ"வென வாய்பிளந்து...ஸ்பைடரின் சாகஸங்களைக்கண்டு பிரம்மித்து நின்றிருந்தேன்.
  ஆனால் இப்போது படிக்கும்போது 'சிப்பு சிப்பா' வருது.

  லாஜிக்கையெல்லாம் தூக்கி ஓரம்கட்டிவிட்டுப்பார்த்தால் நல்ல சுவாரஸ்யமான விறுவிறுப்பான கதைதான்.

  ஸ்பைடரா கொக்கான்னானாம்.....!

  ReplyDelete
 59. This comment has been removed by the author.

  ReplyDelete
 60. This comment has been removed by the author.

  ReplyDelete
 61. This comment has been removed by the author.

  ReplyDelete
 62. This comment has been removed by the author.

  ReplyDelete
 63. இப்போ என்னுடைய கணிப்புகள்.
  1. இரண்டே சந்தா பிரிவுகள் தான் என்று ஏற்கனவே எடிட்டர் சொல்லி விட்டார் எனவே ஒரு சந்தா பிரிவிற்கு 15 புத்தகங்கள் என்று வைத்து கொள்வோம் மொத்தம் 30 புத்தகங்கள் 9 மாதத்திற்கு.
  2. எனவே 6 மாதங்களுக்கு 3 புத்தகங்கள், மீதம் உள்ள 3 மாதங்களுக்கு 4 புத்தகங்கள் இந்த 4 புத்தகங்கள் வரும் மாதங்களில் லைட் ரீடிங் (நமது இப்போதைய சந்தா D போல) .
  3. எனவே 3 புத்தகங்கள் கருப்பு வெள்ளையில் 50,60 விலையில். Diabolik-1, கிளாசிக் 007 -2
  4. அடுத்து எனக்கு பிடித்த கார்ட்டூன்
  லக்கி -3(ஒரு double ஆல்பம் ஆண்டு மலர், ஒரு சிங்கிள் ஆல்பம்) வாண்டு ஸ்பெஷல் -2, மாக் அண்ட் ஜாக் -1, மற்றும் ப்ளூ கோட்ஸ் -1
  மொத்தம் -7
  5. எனக்கு பிடித்த மற்றும் ஒரு பிரிவு கிராஃபிக் நாவல். குறைந்தது மூன்று புத்தகங்கள். 2 கருப்பு வெள்ளை, 1 கலர் மொத்தம் -3.
  6. அடுத்து டெக்ஸ் மொத்தம் 8, மார்ட்டின் 1 மொத்தம் -9
  7. ஜானி, Thorgal, சோடா, XIII, Durango, டிரெண்ட் தலா ஒரு இடம். மொத்தம் -6
  8. மீதம் உள்ளது 2 இடம் ஒன் ஷாட் இப்போது நம் ஜம்போ வில் அசத்துவது போல. அல்லது 2 புது நாயகர்கள்.

  மொத்தம் -30 இது போன பதிவிலேயே நான் பதிவிட்டது. இப்போது இன்னும் சில மாற்றங்களுடன். Updated version.

  ReplyDelete
  Replies
  1. நல்லாவே கணிச்சிருக்கீங்க.!

   Delete
  2. நன்றி GP, நன்றி பரணி.

   Delete
  3. ஆசிரியரின் அட்டவணை போட்ட உணர்வு தந்தது உங்கள் அட்டவணை.நன்றி குமார் சார்.

   Delete
  4. //கிளாசிக் 007 -2 //
   Classic 007 ரீபிரிண்ட் என்பதால் வருவதற்கான வாய்ப்புகள் குறைச்சலே ...?

   Delete
  5. மொய்தீன் சார் நமது லயன் காமிக்ஸ் இல் இது reprint இல்லையே.

   Delete
 64. Replies
  1. இந்த முறை சந்தா பிரிவு 4 ஆக இருக்கலாம் என நினைக்கிறன், அவை டெக்ஸ், கார்ட்டூன், கிராபிக், ரெகுலர்

   1. டெக்ஸ் சந்தா:
   டெக்ஸ் 8

   2. ரெகுலர் சந்தா
   தோர்கல் 1
   டியூராங்கோ 1
   ட்ரென்ட் 1
   சோடா 1
   மார்ட்டின் 1
   ரிப்போர்ட்டர் ஜானி 1
   XIII 1
   ஜேம்ஸ் பாண்ட் 2.0 1
   ஜேம்ஸ் பாண்ட் கிளாசிக் 2
   டயபாலிக் 1 (அல்லது) AXA 1
   புதிய நாயகர்கள் 2

   3. கார்ட்டூன் சந்தா:
   லக்கி லூக் 2
   ப்ளுகோட் பட்டாளம் 1
   சிக் பில் 1 (அல்லது) ஹெர்லக் ஷோம்ஸ் 1
   மேக் & ஜாக் 1 (அல்லது) கர்னல் கிளிப்டன் 1

   4. கிராபிக் சந்தா
   கிராபிக் நாவல்கள் 4 (OR) 6

   Delete
  2. ரெண்டு சந்தா பிரிவுதான்னு ஆசிரியர் சொல்லியிருக்காரே சார்

   Delete
  3. சரியாக கவனிக்கவில்லை கோவிந்த் ராஜ், இதோ மாற்றி விட்டேன்!

   சந்தா type 1
   டெக்ஸ் 8
   டியூராங்கோ 1
   தோர்கல் 1
   மார்ட்டின் 1
   ரிப்போர்ட்டர் ஜானி 1
   ஜேம்ஸ் பாண்ட் கிளாசிக் 2
   டயபாலிக் 1 (அல்லது) AXA 1
   லக்கி லூக் 2
   ப்ளுகோட் பட்டாளம் 1
   சிக் பில் 1 (அல்லது) ஹெர்லக் ஷோம்ஸ் 1
   மேக் & ஜாக் 1 (அல்லது) கர்னல் கிளிப்டன் 1

   சந்தா type - 2
   XIII 1
   ஜேம்ஸ் பாண்ட் 2.0 1
   புதிய நாயகர்கள் 2
   கிராபிக் நாவல்கள் 6 (அல்லது) 4
   ட்ரென்ட் 1
   சோடா 1

   Delete
  4. அட்டவணையினை upload செய்திடும் நொடி வரையிலும் நான் உச்சரிக்கும் சகலங்களும் உரத்த சிந்தனைகள் மாத்திரமே சார் !

   Delete
  5. :-) உங்களின் நீங்கள் விஞ்ஞான முறை தேர்வுகள் உலகறிந்த ரகசியம் சார். :-)

   Delete
  6. பரணி சார் சும்மா நச்சுன்னு ஒரு அட்டவணையைப் போட்டுவிட்டீர்கள்.பாராட்டுக்கள்.

   Delete
  7. சோடா டபுள்ஸ் ஆல்பமாக இருக்கும் என நம்புகிறேன்.

   Delete
 65. .டெக்ஸ்
  தோர்கல்
  டியூராங்கோ
  சோடா
  மார்டின்
  ஜேம்ஸ்பாண்ட் (பழசும் புதுசும்)
  ஜானி
  மாடஸ்டி
  லக்கி லூக்
  ப்ளுகோட்ஸ்
  மேக் ஜாக்
  ஒன்றிரண்டு புது கதைகள்
  ஒன்றிரண்டு கி.நா. க்கள்.


  ReplyDelete
  Replies
  1. ஜேம்ஸ் பாண்ட் 2.0 ஜம்போவில் வரவே வாய்ப்புகள் அதிகம் ஜி.

   Delete
  2. 2021இல் ஜம்போ வர வாய்ப்பு குறைவு சரவணன் சார்.

   Delete
 66. TEX அட்டைப்படம் அபாரம்.!!
  ஜொலிக்கிறது..!!!

  ReplyDelete
 67. விஜயன் சார்,
  டெக்ஸ் முன் பக்க அட்டைபடத்தில் டெக்ஸ் உடன் உள்ள அந்த கனடியன் ஆசாமி யாரு? புதிதாக உள்ளார்.

  ReplyDelete
  Replies
  1. ஜிம் ப்ராண்டன் என்று நினைக்கின்றேன் பரணி சார்.

   Delete
  2. Editor confirmed:

   // டெக்ஸ் அருகே நிற்கும் அந்த நபர் ஜிம் பிராண்டன் ; நமக்கு ஏற்கனவே பரிச்சயமானவரே ! //

   Delete
 68. தீபாவளி வித் ரெக்ஸ் அட்டைப்படம் அருமை. தீபாவளிக்கு டபுள் டமாக்கா. அதுவும் ஜிகினா வேலைகளுடன் ஹார்கோர் என்றால் சொல்லவும் வேண்டுமா? கைகளில் ஏந்த பரபரக்கின்றது.

  ReplyDelete
 69. டெக்ஸின் அட்டைப்படம் அட்டகாசம். அந்த ஓவியை சும்மா பின்னி பெடலெடுக்கிறார்...!

  சரி, நம்ம அட்டவணையை கீழே ஒட்டிப்புடலாம்.

  ட்ரெண்ட் - 1
  சோடா - 1
  XIII-1
  ஜானி - 1
  தோர்கல் - 3 ஆல்பங்கள்
  ட்யுராங்கோ - 3 ஆல்பங்கள்(Muthu issue:450)
  புது ஹீரோ - 2 ஆல்பங்கள்
  (80*4 + 300*2 + 200*1= ₹ 1100)

  டெக்ஸ் B / W - One Shot - 3
  டெக்ஸ் Doubles - 2
  டெகஸ் Color Double Album-1 (Lion issue:400)
  தீபாவளி Spl. (டெக்ஸ் B/w Double Album, மார்ட்டின், CID ராபின், டைலன்)
  (70*3 + 150*2 + 500*1 + 450*1= ₹ 1460)

  லக்கி லூக் Double Album - (ஆண்டு மலர்)
  லக்கி லூக் one shot
  ஜேக் மேக் - 1
  ப்ளூ கோட் - 1
  க்ளிப்டன் - 1
  (200*1 + 80*4 = ₹ 520)

  ஜம்போ : Color -one shot - 3
  Double Album - 1
  (100*3 + 200*1 = ₹ 500)

  Graphic Novel: B/W one shot - 5
  Color one shot - 1
  (80*5 + 100*1 = ₹ 500)

  So total budget ₹ 4080/-

  ReplyDelete
  Replies
  1. Nice! I guess this year budget will be between Rs.3000-3500 for 9 months.

   Delete
  2. ரொம்ப சந்தோசம் சார் ii
   சந்தா எப்ப கட்டணும் சார் iii. (இது ஆசிரியரோட பதிவுதானே ii)

   Delete
 70. தீபாவளி டெக்ஸ் இதழ்கள் ஆர்வத்தைக் கிளப்புகின்றன. நீங்கெல்லாம் தீபாவளியை டெக்ஸோட கொண்டாடுங்க. நான் டெக்ஸை தேங்ஸ்கிவிங்கில் கொண்டாடிக்கறேன்.

  ReplyDelete
 71. அடுத்த மாதம் டெக்ஸ் தவிர வேற என்ன இதழ்கள் வருகின்றன.

  ReplyDelete
  Replies
  1. வானமும் வசப்படும் - அமாயா (AXA)
   கானகமே காலடியில் - ஷெர்லக்
   மினி டெக்ஸ்
   +
   2021 அட்டவணை

   Delete
 72. என்னப்பா விடிகாலைல மொத ஆளா பதிவு படிக்க வந்தா அதுக்குள்ள 150 கமெண்ட்டா ..


  எனக்கே இந்த கதியா ...முதல்ல படிச்சுட்டு வரேன் ஹீம்...

  ReplyDelete
 73. வாவ் டெக்ஸ் அட்டைப்படம் அசத்தல் சார் இதுவரை வந்த டெக்ஸ் அட்டைப்படங்களிலேயே இதுதான் பெஸ்ட்டாக இருக்கும் போல வந்ததும் தலைக்கு கண் திருஷ்டி சுற்றிப் போடணும் போல 😊

  ReplyDelete
 74. Replies
  1. வருக வருக நல்வரவாகுக :-)

   Delete
 75. ###“என்னெத்தக் கதை தேர்வு பண்றான் மாக்கானாட்டம் ? நான்லாம் இதே வேலையைச் செஞ்சாக்கா வூடு கட்டி அடிச்சிருப்பேனாக்கும் !” என்று அப்புறமாய் சாவகாசமாய் FB-யிலோ; வாட்சப் குரூப்களிலோ தொடை தட்டுவதைத் தவிர்க்க நினைத்திட்டால்####

  எல்லா பக்கமும் கேட் போட்டா மத்தவங்க எல்லாம் எப்படி பர்பாமென்ஸ் பண்றது ஜாரே 😜😜..

  ReplyDelete
 76. ####2 MAXI நீளங்களிலான டெக்ஸ் சாகஸங்கள் இம்முறை ! (அண்ணோவ்ஸ் : கவனிக்க - MAXI நீளங்கள் மட்டுமே !!) ####


  ஹே ஜாலி...
  இந்த தீபாவளி,
  செமயா இருக்க போகுது..

  தேங்க்யூ ஆசானே...❤️🙏

  ReplyDelete
 77. அதே சமயம், இது இரவுக் கழுகாரின் “ரேஞ்சர் நாட்களுக்கு” முந்தைய காலகட்டம் என்பதால் நெஞ்சில் பாட்ஜோடு எதிரிகளை துவைத்துக் காயப் போடுவது இங்கு நிகழ்வதில்லை ! மாறாக யுத்தமண்ணிலும் வீரத்தை, விவேகத்தைக் காட்டி டெக்ஸ் களமாடுவதே இந்த 300+ பக்க சாகஸம்


  ######


  வாவ்....அட்டகாசம் ஆரம்பம் டெக்ஸ்ன் எதிரிகளுக்கு..

  ReplyDelete
 78. ஒரு உத்தம உலகினில் சிக்கல்கள் இருந்திடக்கூடாது தான் ! ஆனால் நாம் வசிப்பதோ உத்தமங்கள் வீசம்படி எவ்வளவென்று கேட்கும் உலகில் தானே ?


  %%%%%%%


  அது வேணா உண்ம தான் சார்...:-(

  ReplyDelete
 79. தீபாவளி வித் டெக்ஸ் அட்டைப்படம்...

  வேற லெவல்...இங்கே பார்க்கும் பொழுதே பட்டையை கிளப்புகிறது..இன்னும் நகாசு வேலை எல்லாம் உள்ளது என்கிறீர்கள் எனில் நேரில் பட்டாசு தான் போல...:-)

  ReplyDelete
 80. / ஆல்பம் உங்கள் கைகளை எட்டும் போது, தடவிப் பார்த்து ரசிக்கவே நிறைய நேரத்தையும் கைவசம் வைத்துக் கொள்ளல் தேவலாம் என்பேன் ! //


  வழக்கமாகவே வெகு நேரம் பிடிக்கும் நீங்களே சொல்லிய பிறகு கண்டிப்பாக ஒரு நாள் ஆகி விடும் என நினைக்கிறேன் சார்...:-)

  ReplyDelete
 81. அட்வணை 1.
  ஆக்ஷன்,கார்டூன்,கி.நா.என நவரசங்களிலும் சுமார் 18.
  ௮ட்டவணை 2. one and only Tex -12

  ReplyDelete
  Replies
  1. Tex - 12 i?- ரொம்பத்தான் ஆசை.
   ஒரு வேளை சிங்கிள் - 3, L புள்-2,
   மேக்ஸி - 1 - என்று இருக்கலாம்.

   Delete
  2. சரி விடுங்க டெக்ஸ் − 9

   Delete
 82. தள சிகப்ப தததகனு மின்றரர்

  ReplyDelete
 83. இனிய ஆயுதபூஜை நல்வாழ்த்துகள் சார் & நண்பர்களே 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
  .

  ReplyDelete
  Replies
  1. இனிய ஆயுதபூஜை நல்வாழ்த்துகள் சார் & நண்பர்களே 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
   .

   Delete
  2. நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

   நண்பர்கள் அனைவருக்கும் இனிய காமிக்ஸ் பூசை வாழ்த்துகள்...💐💐💐💐💐

   Delete
 84. ஏன் சார்? ஏன்? கலர் ஃபுல் ரோஜர் சாகசத்தை ரொம்பவே மிஸ் பண்றேன்.. கலர்லயே வெளியிட்டு இருக்கலாமே?

  ReplyDelete
 85. தீபாவளி டெக்ஸ் அட்டைப்படம், வண்ணச் சேர்க்கை சூப்பர்

  ReplyDelete
 86. 2021 மாதிரி அட்டவணை...

  9 மாதங்கள்.....

  குறைந்த சந்தா தொகை....

  லைட் ரீடிங்....

  மறுபதிப்புகள் கிடையாது....

  9மாதங்கள்x3புக்ஸ்=27 இதழ்கள் இருக்கும்...

  மூன்று வகையான சந்தா பிரிவுகள் இருக்கலாம்....

  சந்தா1:-9புக்ஸ்...

  தோர்கல்-1,(ஏற்கெனவே 16பாகங்கள் வந்துட்டது, இந்தாண்டு ஒரே இதழில் பாகங்கள் 19டூ23-5 தனத்தனி இதழ்களாக ப்ளானிங்ல உள்ளது)-எனவே விட்டுபோகும் பாகங்கள் 17&18இணைந்து ஒரு டபுள் இதழாக வரலாம்)

  டியூராங்கோ-1,(3பாகங்கள் ஒரே இதழில்)

  சோடா-1,

  XIII-1,(2132மீட்டரின் தொடர்ச்சி....)

  ஜானி-1,

  புதிய ஹீரோ1,

  ஒன் ஷாட்கள்..x3

  சந்தா2:- 9புக்ஸ்...

  4xடெக்ஸ் டபுள் ஆல்பங்கள்,

  3xடெக்ஸ் சிங்கிள் ஆல்பங்கள்,

  1xஒரு மேக்ஸி ஆல்பம் தீபாவளிமலர்

  1xகழுகு வேட்டை

  சந்தா3:-9இதழ்கள்...

  1xலக்கி-ஆண்டுமலர்-டபுள் ஆல்பம்,

  2xலக்கி சிங்கிள் ஆல்பங்கள்,

  1xமேக் & ஜாக்,

  1xசிக் பில்,

  1xகர்னல் க்ளிப்டன்,

  1xப்ளூகோட் பட்டாளம்,

  1xஹெர்லக் ஷோம்ஸ்...

  1xபுதிய கார்டூன் ஹீரோ.

  (கார்டூன்கள் 6போதும் என விற்பனை காரணிகள் முடிவு செய்தால் மீதமுள்ள 3இதழ்களில் லைட்டான களம் கொண்ட ஒன் ஷாட்கள் கி.நா.கள் வரலாம்)

  ReplyDelete
  Replies
  1. கழுகு வேட்டை ஜனவரி ஆன்லைன் புத்தக திருவிழாவில் வெளிவரலாம்....

   Delete
  2. அப்படி போடுங்க ரொம்ப நாளா கலரில் படிக்க காத்துள்ள இதழ்இது...😍😍😍😍

   Delete
 87. 2020 தீபாவளி வித் டெக்ஸ் அட்டைபட விமர்சனம்:-

  2013 டெக்ஸ் தீபாவளிமலர்,

  2015 டெக்ஸ் தீபாவளி வித் டெக்ஸ்,

  2016 டெக்ஸ் சர்வமும் நானே,

  2017 ஒரு தலைவன் ஒரு சகாப்தம்,

  2018 காதலும் கடந்து போகும்,

  2019 சர்க்கஸ் சாகசம்-தீபாவளிமலர்

  ----என சமீபத்திய தீபாவளிமலர்களின் அட்டைகளோடு ஒப்பு நோக்குகையில் இவை எல்லாவற்றையும் அசால்டாக தூக்கி சாப்பிடுவது போல அதகளப்படுத்துகிறது இந்த அட்டைபடம்.

  இந்த டெகேட்டின் மிகச்சிறந்த டெக்ஸ் அட்டைப்படமாக செலக்ட் ஆகப்போவது திண்ணம்.

  கதை1:- யுத்த பூமியில் டெக்ஸ்- தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை எனும் பொருள்படும்; அந்த மங்கலமான மஞ்சள் நிற பின்னணியில் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் இரு அணிகளான ஃபெடரலிஸ்ட்கள்& கான்ஃபெடரேட்களது இரு கொடிகளையும் இருபக்கமும் தாங்கி நிற்கும் இளம் டெக்ஸின் வதனம் பளீடுகிறது.

  வீரர்கள் சிந்திய குருதியால் சிவந்த மண்ணின் நிறத்திலேயே டெக்ஸ் அணிந்துள்ள சிவப்பு நிற ஜாக்கெட் போரின் அவலங்களை காட்டும் குறியீடு!

  கதை2- பனிவணப்படலத்தை குறிக்கும் முகப்பு அட்டை மற்றொரு வர்ண ஜாலம்.

  பனியின் வெண்மை; அங்கே அதிக நேரம் நிலவும் காரிருளை குறிக்கும் கருமை; நீதியை நிலைநாட்ட கிளம்பும் சீரிய டெக்ஸ் என அசாத்திய உணர்வுகளை சித்திரிக்கிறது.

  அட்டை படத்தை உருவாக்கிய அணிக்கும், அங்கீகரித்த எடிட்டர் சாருக்கும் வாழ்த்துகள் & பாராட்டுகள்!

  ஏற்கெனவே விற்பனையில் பட்டையை கிளப்பும் குண்டு புக்குகள்; இப்போது இத்தகைய அட்டைபடமும் இணைந்து கொண்டால் சொல்லவா வேணும்...!!

  சந்தாவில் இல்லாத நண்பர்கள் தவற விட்டு விடாதீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. // ஏற்கெனவே விற்பனையில் பட்டையை கிளப்பும் குண்டு புக்குகள்; இப்போது இத்தகைய அட்டைபடமும் இணைந்து கொண்டால் சொல்லவா வேணும்...!! //
   அதெல்லாம் ஜிலோன்னு ஒரு வருஷத்தில் விற்றுத் தீர்ந்து போயிடும்....
   அடுத்த தீபாவளிக்குள் எல்லாம் புக்கும் காலி...

   Delete
 88. தோர்கல் டபுள் ஆல்பம்-1,
  ட்யூராங்கோ ட்ரிபிள் ஆல்பம்-1 (ஹார்ட் பைண்டிங்),
  ஜானி டபுள் ஆல்பம் 1+1-1,
  XIII-1,
  ட்ரெண்ட் சிங்கிள் ஆல்பம்-1,
  சிக்பில் சிங்கிள் ஆல்பம்-1,
  மேக் & ஜாக் சிங்கிள் ஆல்பம்-1,
  ப்ளூகோட் சிங்கிள் ஆல்பம்-1,
  ஷெர்லாக் ஹோம்ஸ் சிங்கிள் ஆல்பம்-1,
  சோடா சிங்கிள் ஆல்பம்-1,
  மார்ட்டின் சிங்கிள் ஆல்பம்-1,
  சி.ஐ.டி இராபின் சிங்கிள் ஆல்பம்-1,
  007 பழசு 2,
  007 புதுசு டபுள் ஆல்பம்-1,
  புதிய ஆக்‌ஷன் ஹீரோ சிங்கிள் ஆல்பம்-1,
  புதிய கார்ட்டூன் சிங்கிள் ஆல்பம்-1,
  லக்கி ஆண்டு மலர் டபுள் ஆல்பம்-1 (ஹார்ட் பைண்டிங்),
  லக்கி சிங்கிள் ஆல்பம்-2,(ஹார்ட் பைண்டிங்)
  டெக்ஸ் வில்லர் சிங்கிள் ஆல்பம்-4,
  டெக்ஸ் வில்லர் டபுள் ஆல்பம்-4,
  டெக்ஸ் வில்லர் தீபாவளி மலர்-1, (ஹார்ட் பைண்டிங்)
  இளம் டெக்ஸ் 4 சாகஸங்கள் கொண்ட ஆல்பம்-1.
  -2021 அட்டவணை ஒருவேளை இப்படி இருக்குமோ ???!!!

  ReplyDelete
  Replies
  1. 2021 யானை பசிக்கு சோளப்பொரியா இருக்கும் போல......

   Delete
  2. யானைப் பொறிக்கு சோளப் பசி..

   Delete
  3. அருமை அண்ணா அட்டகாசமான அட்டவணை. ஆனால் நீங்கள் சொல்வது போல யானை பசிக்கு சோள பொரி தான்.

   Delete
  4. ஆமா குமார்,உங்கள் அட்டவணை கூட நல்ல கணிப்புதான்...
   பார்ப்போம் என்ன நடக்குதுன்னு...

   Delete
 89. சார்,

  எனது guess for அட்டவணை 2021,

  மொத்தம் 40 புக்ஸ் (ஜம்போ சேர்த்து)

  ரெகுலர் black & white டெக்ஸ் - 8
  வண்ண டெக்ஸ் - 1
  மார்டின் - 1
  தோர்கல் - 1
  ட்ரெண்ட் - 1
  சோடா - 1
  டியுராங்கோ - 1
  ஜானி - 1
  XIII - 1
  லக்கிலூக் - 2
  மேக் & ஜாக் - 1
  சிக்பில் - 1
  ப்ளூகோட்ஸ் - 1
  ஹெர்லக் or க்ளிப்டன் - 1
  Old ஜேம்ஸ் - 2
  டயபாலிக் - 1
  புதுமுகம் - 2
  கிராபிக் நாவல் - 6
  ஜம்போ - 6
  மாடஸ்டி or லார்கோ new collection - 1

  இது தவிர special இதழ்கள்:

  ஒற்றை நொடி ஒன்பது தோட்டா,
  கென்யா,
  டைகர் new episodes முழுதொகுப்பு.

  இவை ஈரோடு புத்தக விழா அல்லது ஏதேனும் தருணங்களில் வெளிவரலாம்.


  Light reading எனும் போது, மாதம் ஒரு டெக்ஸ் அவசியம், ஆக டெக்ஸ் - 9.

  ஜூலியா, டைலன், ராபின் இவர்கள் தனியாக சான்ஸ் கிடைக்காது. டெக்ஸ் அல்லது மார்டினோடு சேர்ந்து வரலாம்.

  டியுராங்கோ, தோர்கல், டெக்ஸ், லக்கி மற்றும் ஏதேனும் புது முகக் கதைகள் ஆண்டின் முக்கிய தருணங்களை, வெளியீடுகளை பகிர்ந்து கொள்ளும்.

  மேக்ஸி சைஸ் கதைகள் நல்ல விற்பனை கண்டு வருவதால், நான் மேற்கூரிய கதைகளில் ஏதாவது இரண்டு, மூன்று அந்த சைஸில் வரலாம்.

  ஜம்போ சீசன் சற்று தாமதமாக தொடங்கலாம். 2021ல் ஜம்போ இல்லையென்றால், புதிய் ஜேம்ஸ் பாண்ட்
  மாடஸ்டிக்கு மாற்றாக இருக்கும்.

  சந்தா D (Delightful reading) pattern ல்
  பழைய ஜேம்பாண்ட், டயபாலிக், மாடஸ்டி அகியோர் தொடரலாம்.

  கிராபிக் நாவல்கள் சமீப காலமாக விற்பனையிலும், விமர்சனத்திலும் நல்ல வரவேற்பு கண்டு வருவதால் 6 slot.

  இந்த கணிப்பு எவ்வளவு தூரம் ஒத்துப்போகும் என்பதை அட்டவணையில் காண ஆசை. நன்றி.


  ReplyDelete
 90. இவையோடு சேர்த்து வண்ண மினி டெக்ஸ் வழக்கம் போல் இலவசமாக வரலாம்.

  ReplyDelete
  Replies
  1. 40 புக்காஆஆஆஆஆ.....
   அப்படிப் பார்த்தா பட்ஜெட் எங்கேயோ போயிடுமே ஜி...

   Delete