நண்பர்களே,
வணக்கம். ஏப்ரலின் புக்ஸ் பைண்டிங்கில் ரெடி ; ஆனால் அந்த பெளன்சர் hardcover இதழுக்கு காய்ந்திட கொஞ்சம் அவகாசம் தந்தால் நல்லதென்றுபட்டது ! அட்டைப்படம் பிரமாதமாய் வந்திருக்க, உட்பக்கங்களும் ரகளையாய் அச்சாகியிருக்க, பைண்டிங்கில் மட்டும் கொஞ்சமே கொஞ்சமாய் கூடுதல் டைம் தந்தால் - கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகை நீங்கள் ஏந்திடல் சாத்தியமாகிடும் ! So திங்களன்று despatch இருந்திடும் guys ! அப்புறம் கடைசி நிமிட குட்டிக்கரணமும் உண்டு இந்த மாதத்தில் - but ஜூனியர் பொறுப்பிலான நம்ம V காமிக்சில் !
ஏஜெண்ட் ராபினின் "ஆரூடத்தின் நிழலில்" தான் ஏப்ரலுக்கான V காமிக்ஸ் ! And தமிழாக்கத்தை அடியேன் செய்து தருவது என்பதே திட்டமிடல். எப்போதுமே எழுதப் போகும் கதையை முழுசாய்ப் படிப்பதில்லை நான் ; படித்துக் கொண்டே, எழுதிக் கொண்டே போவதே வாடிக்கை ! நான்கு நாட்களுக்கு முன்னே பணியைத் துவக்கியிருந்தேன் & இம்முறையும் அதே போலவே வண்டி ஓடியது ! And வழக்கம் போல flashback படலத்தில் கதை நகர்ந்து சென்றது ! கிட்டத்தட்ட கதையின் 90% ஓடியிருந்த நிலையில் - கதையின் ஒருசில விளிம்பு நிலை மனிதர்களுக்கு ஏதோவொரு flashback இருப்பது தெரிய ஆரம்பித்தது ! 'ஆஹா...இது எப்போ ?' என்றபடிக்கே தொடருக்குள் தேட ஆரம்பித்தால், இடைப்பட்டதொரு ஆல்பத்தில் அவர்களுக்கு ஒரு சின்ன intro இருப்பதைப் பார்க்க முடிந்தது ! So அந்த ஆல்பத்தை வரவழைத்து உட்புகுத்திய பிற்பாடே, "ஆரூடத்தின் நிழலில்" சரிப்படும் என்றுபட்டது ! கொஞ்ச நேரத்துக்கு ஜூனியர் பேந்தப் பேந்தவும் ; me மாமூலாயும் முழித்துக் கொண்டிருந்தோம் ! இந்தக் கூத்து அரங்கேறியதோ வியாழன் மதியம் !! கையைப் பிசைந்து கொண்டிருந்த அந்த நொடியினில் தான் கலரில் காத்திருக்கும் "வேதாளருக்குத் திருமணம்" ஜூனியருக்கு நினைவுக்கு வந்தது ! "க்ளாஸிக் இதழ் ; செம cute கலரிங்கில் உள்ளது & ராப்பருமே ரெடி ; இதை fast forward பண்ணிப்புடலாம் !" என்று சொல்ல - 'ஆட்றா ராமா....தாண்ட்றா ராமா !' என வியாழன் மாலையே ஆபீஸ் பல்டியடிக்க ஆரம்பித்தது ! வியாழன் இரவோடு இரவாய் பிராசசிங் பணிகளைத் துவக்கி, வெள்ளி மதியம் அச்சும் முடித்து, இதோ - இன்றைக்கு பைண்டிங்குக்கு அனுப்பியுள்ளோம் ! And நாளையோ, திங்கள் காலைக்குள்ளோ, புக்ஸ் ரெடியாகிடும் - டப்பிகளுக்குள் அடைத்திட ஏதுவாக ! இதோ - மின்னல் முரளியாய் ரெடியாகியுள்ள வேதாளரின் அட்டைப்பட preview ! இது வேதாளர் தொடரின் ஒரு iconic தருணம் சார்ந்த கதை என்பதால், நடமாடும் மாயாத்மாவை உலக மொழிகளில் வெளியிட்டு வரும் அனைத்துப் பதிப்பகங்களுமே வெளியிட்டிருப்பர் ! And அவர்களின் பெரும்பான்மை பயன்படுத்திய அதே அட்டைப்பட டிசைனை நமது புது டிஜிட்டல் ஓவியை நமக்குப் போட்டுத் தந்திருக்கிறார் ! இதோ - ஒரு கும்பலே மாயாத்மாவை வாழ்த்தும் அந்தக் காட்சி :
And உட்பக்கங்களின் வண்ண preview இதோ :
முத்து காமிக்சின் செம க்ளாஸிக் இதழான "பூவிலங்கு" தான் பெயர் மாற்றத்துடனும், வர்ணச் சேர்க்கையுடனும் வந்திடுகிறது என்பதை 70's & 80's kids அறிவர் ! அதற்குப் பின்பான யூத்மார்களுக்கு இதுவொரு புது ஆல்பமாகவே தோன்றிடலாம் ! Anyways - அட்சர சுத்தமாய் அந்நாட்களது சைஸ் ; பக்க அமைப்பு ; மொழிபெயர்ப்பு என சகலத்தையும் adopt செய்திருக்கிறோம் ! And yes -
And இம்மாத இளம் டெக்ஸ் - இங்கு அடிக்கும் அனலுக்கு ஈடாய் சுட்டெரிக்கும் மெக்சிகோவில் அரங்கேறிடுகிறது ! And 'தேடப்படும் குற்றவாளியாய்' சின்னத் 'தல' ஓட்டமெடுக்கும் கதைச்சுற்றின் இன்னொரு சங்கிலியே இது ! இந்த ஆல்பத்தில் 2 ஸ்பெஷல் சமாச்சாரங்களுண்டு !! ஏற்கனவே ரேஞ்சராய் இருக்கும் கார்சன் சும்மா கரு கரு மீசையோடு ஆஜராகிறார் & 'கண்டவுடன் காதல்' கொள்ளும் மெக்சிகோ மங்கையொருத்தி இளம் டெக்ஸை கட்டினாலே ஆச்சு என்று தவம் நிற்கிறாள் ! 128 பக்கங்கள் ; 2 அத்தியாயங்கள் ; சின்ன அதிகாரியின் தொடர் ஓட்டம் - இதுவே காத்திருக்கும் "பகைவருக்குப் பஞ்சமேது ?"
Moving on, அடுத்தடுத்த மாதங்களில் சிலபஸில் அல்லாத இதழ்களாய் கணிசமானவற்றைப் போட்டுத் தாக்க வேண்டிய தருணத்தினை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் ! அவற்றைப் பற்றியான உங்களின் உற்சாக எதிர்பார்ப்புகள் ; பரிந்துரைகள், சிந்திக்க நிறையவே தீனி தந்துள்ளன ! ஒருக்கா நானே உரக்க பேசிக்கொள்கிறேனே - எனது ஞாபகத்துக்கு :
1. Make My Own Mini Santha - MYOMS - 4 இதழ்களோடு - பிரத்தியேக முன்பதிவுகளுக்கு !! இதோ - அது சார்ந்த அறிவிப்பு guys ! 400 முன்பதிவுகள் ; அல்லது 90 நாட்கள் - இவற்றுள் எது முந்திக் கொள்கிறதோ ; அதற்கேற்பவே MYOMS-ன் வெளியீட்டுத் தேதி(கள்) நிர்ணயம் கண்டிடும் ! Maybe ....just maybe ....மூன்று மாத அவகாசத்திற்குள்ளும் முன்பதிவு எண்ணிக்கையினை தொட்டிட இயலாது போயின் - தொகைகள் refund செய்யப்படும் ! அதற்கெல்லாம் அவசியமிராதென்று Fingers crossed !!
2.அடுத்த இரு பெசல் ஐட்டங்களுமே ஆயிரம்வாலாக்கள் !!
முதலாவது : "ஆயிரம்" என்ற வெளியீட்டு நம்பரை, இந்த ஆந்தைவிழியன் பொறுப்பேற்ற பிற்பாடு நமது குழுமம் தாண்டியுள்ளதைக் கொண்டாடிட !! போன ஆண்டின் ஏதோவொரு தருணத்தில் இந்த நம்பரைத் தாண்டிப்புட்டு, தற்சமயாய் 1025+ போலானதொரு இலக்கில் பயணித்து வருவதாய் எனக்கு ஞாபகம் ! Anyways - அந்த ஆயிரத்தை தாண்டிய நொடிக்கான ஸ்பெஷலுக்கு - Jus' Like That ஸ்பெஷல் எனப் பெயரிடலாமென்று இந்த topic துவங்கிய 2018-ல் சொல்லியிருந்தேன் ! But அதற்கு நல்லதாய் வேறேதேனும் பெயரிடலாம் என்று தோணும் பட்சத்தில் - போட்டுத் தாக்கிடலாமே guys ? 'எடிட்டர் ஸ்பெஷல்' ; 'ஏட்டய்யா ஸ்பெஷல்' என்ற ரேஞ்சிலான பெயர்களை மட்டும் தவிர்த்து விட்டு - பொருத்தமான பெயர்களை நண்பர்கள் முன்மொழியலாம் ! And அவற்றுள் சிறந்ததை இந்த டாபிக்கை open பண்ணிய நம்ம டெக்ஸ் விஜயராகவனே தேர்வு செய்திடுவார் ! And ஞாயிறு மாலை - அதாவது நாளை மாலைக்குள்ளான பதிவுகள் மட்டுமே consider செய்து, ஒரு பெயரை செலெக்ட் செய்து விடலாம் ! ஓ.கே.வா all ?
3.Next in line - நமது இந்தப் பதிவுப் பக்கம், தனது ஆயிரமாவது பதிவினை அடுத்த ஓரிரு மாதங்களில் தொட்டிடக் காத்துள்ளதன் நீட்சி ! So அந்த மைல்கல் தருணத்தினைக் கொண்டாடிடவும் ஏதேனுமொரு ஸ்பெஷல் வெளியீட்டினை பிராமிஸ் செய்திருந்தேன் ! So அதற்குமொரு பெயர் பரிந்துரை ப்ளீஸ் ? இந்த முறையோ - பொருத்தமான பெயரை தேர்வு செய்திடப் போவது, இந்தப் பதிவின் கோவைத் தூணான நம்ம கவிஞரும், நானும் தான் ! கோவை இரும்பார் 3 பெயர்களை shortlist செய்து எனக்குத் தந்திட வேணும் & அவற்றுள் ஒன்றினை நான் செலக்ட் செஞ்சூ ! Again ஓ.கே.வா all ? இக்கட முக்கிய கண்டிஷன் - நடுவர்(கள்) போட்டியில் கலந்துக்குப்படாது என்பதே !! ஓ.கே.வா ஸ்டீல் ?
"ரைட்டு....பேர்லாம் வைச்சுப்புடலாம் ; ஆனால் இந்த 2 ஸ்லாட்களுக்கும் எதை வெளியிடப் போறே அம்பி ?" என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ் கேட்காதில்லை ! கொஞ்சமே கொஞ்சமாய் அரைத்த மாவுகளிலிருந்து மாறுபடும் சில கதைகளுக்கு ; தொடர்களுக்கு சமீபமாய் முயற்சித்து வருகிறோம் ! அவற்றின் பலன்கள் இரண்டல்லது - மூன்று வாரங்களில் தெரிய வரும் ! தற்போது ஐரோப்பிய புத்தக விழாக்களின் circuit முழுமூச்சில் ஓடிக் கொண்டிருப்பதால், உரிமைகளுக்கான இலாக்காக்களைப் பார்த்து வரும் அனைவருமே அங்கே செம பிசி ! மாமூலான வினவல்களுக்குப் பதில் சொல்லவே நேரமின்றித் திணறி வருகின்றனர் ; so கொஞ்சமாய் பொறுமை காத்தோமெனில் அதற்கான பலனிருக்கக்கூடும் ! Let's wait a bit guys !
And before I sign out - இதோ ஜாலியானதொரு சமாச்சாரம் ! நேற்றைக்கு விளையாட்டாய் FB-ல் நமது நாயகர்கள் சார்ந்ததொரு கேள்வியைக் கேட்டு வைக்க, செம உற்சாக ரெஸ்பான்ஸ் அங்கே ! இதோ அது : Care to give it an answer folks ?
Bye all....மீண்டும் சந்திப்போம் ; அடுத்த டின்டின் டபுள் ஆல்பத்தின் க்ளைமாக்ஸ் பகுதி வெயிட்டிங் என்பதால் அவர்களோடு இன்கா பூமிக்கு விரைந்திடவுள்ளேன் ! ! Have an awesome week-end all !