Powered By Blogger

Saturday, March 30, 2024

கண்ணாலமாம்..கண்ணாலம்..கலரிலே கண்ணாலம் !

 நண்பர்களே,

வணக்கம். ஏப்ரலின் புக்ஸ் பைண்டிங்கில் ரெடி ; ஆனால் அந்த பெளன்சர் hardcover இதழுக்கு காய்ந்திட கொஞ்சம் அவகாசம் தந்தால் நல்லதென்றுபட்டது ! அட்டைப்படம் பிரமாதமாய் வந்திருக்க, உட்பக்கங்களும் ரகளையாய் அச்சாகியிருக்க, பைண்டிங்கில் மட்டும் கொஞ்சமே கொஞ்சமாய் கூடுதல் டைம் தந்தால் - கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகை நீங்கள் ஏந்திடல் சாத்தியமாகிடும் ! So திங்களன்று despatch இருந்திடும் guys ! அப்புறம் கடைசி நிமிட குட்டிக்கரணமும் உண்டு இந்த மாதத்தில் - but ஜூனியர் பொறுப்பிலான நம்ம V காமிக்சில் !

ஏஜெண்ட் ராபினின் "ஆரூடத்தின் நிழலில்" தான் ஏப்ரலுக்கான V காமிக்ஸ் ! And தமிழாக்கத்தை அடியேன் செய்து தருவது என்பதே திட்டமிடல். எப்போதுமே எழுதப் போகும் கதையை முழுசாய்ப் படிப்பதில்லை நான் ; படித்துக் கொண்டே, எழுதிக் கொண்டே போவதே வாடிக்கை ! நான்கு நாட்களுக்கு முன்னே பணியைத் துவக்கியிருந்தேன்  & இம்முறையும் அதே போலவே வண்டி ஓடியது !  And வழக்கம் போல flashback படலத்தில் கதை நகர்ந்து சென்றது !  கிட்டத்தட்ட கதையின் 90% ஓடியிருந்த நிலையில் - கதையின் ஒருசில விளிம்பு நிலை மனிதர்களுக்கு ஏதோவொரு flashback இருப்பது தெரிய ஆரம்பித்தது ! 'ஆஹா...இது எப்போ ?' என்றபடிக்கே தொடருக்குள் தேட ஆரம்பித்தால், இடைப்பட்டதொரு ஆல்பத்தில் அவர்களுக்கு ஒரு சின்ன  intro இருப்பதைப் பார்க்க முடிந்தது ! So அந்த ஆல்பத்தை  வரவழைத்து உட்புகுத்திய பிற்பாடே, "ஆரூடத்தின் நிழலில்" சரிப்படும் என்றுபட்டது ! கொஞ்ச நேரத்துக்கு ஜூனியர் பேந்தப் பேந்தவும் ; me மாமூலாயும்  முழித்துக் கொண்டிருந்தோம் ! இந்தக் கூத்து அரங்கேறியதோ வியாழன் மதியம் !! கையைப் பிசைந்து கொண்டிருந்த அந்த நொடியினில் தான் கலரில் காத்திருக்கும் "வேதாளருக்குத் திருமணம்" ஜூனியருக்கு நினைவுக்கு வந்தது ! "க்ளாஸிக் இதழ் ; செம cute கலரிங்கில் உள்ளது & ராப்பருமே ரெடி ; இதை fast forward பண்ணிப்புடலாம் !" என்று சொல்ல -  'ஆட்றா ராமா....தாண்ட்றா ராமா !' என வியாழன் மாலையே ஆபீஸ் பல்டியடிக்க ஆரம்பித்தது ! வியாழன் இரவோடு இரவாய் பிராசசிங் பணிகளைத் துவக்கி, வெள்ளி மதியம் அச்சும் முடித்து, இதோ - இன்றைக்கு பைண்டிங்குக்கு அனுப்பியுள்ளோம்  ! And நாளையோ, திங்கள்  காலைக்குள்ளோ, புக்ஸ் ரெடியாகிடும் - டப்பிகளுக்குள் அடைத்திட ஏதுவாக ! இதோ - மின்னல் முரளியாய் ரெடியாகியுள்ள வேதாளரின் அட்டைப்பட preview ! இது வேதாளர் தொடரின் ஒரு iconic தருணம் சார்ந்த கதை என்பதால், நடமாடும் மாயாத்மாவை உலக மொழிகளில் வெளியிட்டு வரும் அனைத்துப் பதிப்பகங்களுமே வெளியிட்டிருப்பர் ! And அவர்களின் பெரும்பான்மை பயன்படுத்திய அதே அட்டைப்பட டிசைனை நமது புது டிஜிட்டல் ஓவியை நமக்குப் போட்டுத் தந்திருக்கிறார் !  இதோ - ஒரு கும்பலே மாயாத்மாவை வாழ்த்தும் அந்தக் காட்சி : 

And உட்பக்கங்களின் வண்ண preview இதோ : 


முத்து காமிக்சின் செம க்ளாஸிக் இதழான "பூவிலங்கு" தான் பெயர் மாற்றத்துடனும், வர்ணச் சேர்க்கையுடனும் வந்திடுகிறது என்பதை 70's & 80's kids அறிவர் ! அதற்குப் பின்பான யூத்மார்களுக்கு இதுவொரு புது ஆல்பமாகவே தோன்றிடலாம் ! Anyways - அட்சர சுத்தமாய் அந்நாட்களது சைஸ் ; பக்க அமைப்பு ; மொழிபெயர்ப்பு என சகலத்தையும் adopt செய்திருக்கிறோம் ! And yes -   

And இம்மாத இளம் டெக்ஸ் - இங்கு அடிக்கும் அனலுக்கு ஈடாய் சுட்டெரிக்கும் மெக்சிகோவில் அரங்கேறிடுகிறது ! And 'தேடப்படும் குற்றவாளியாய்' சின்னத் 'தல' ஓட்டமெடுக்கும் கதைச்சுற்றின் இன்னொரு சங்கிலியே இது ! இந்த ஆல்பத்தில் 2 ஸ்பெஷல் சமாச்சாரங்களுண்டு !! ஏற்கனவே ரேஞ்சராய் இருக்கும் கார்சன் சும்மா கரு கரு மீசையோடு ஆஜராகிறார் & 'கண்டவுடன் காதல்' கொள்ளும் மெக்சிகோ மங்கையொருத்தி இளம் டெக்ஸை கட்டினாலே ஆச்சு என்று தவம் நிற்கிறாள் ! 128 பக்கங்கள் ; 2 அத்தியாயங்கள் ; சின்ன அதிகாரியின் தொடர் ஓட்டம் - இதுவே காத்திருக்கும் "பகைவருக்குப் பஞ்சமேது ?" 



Moving on, அடுத்தடுத்த மாதங்களில் சிலபஸில் அல்லாத இதழ்களாய் கணிசமானவற்றைப் போட்டுத் தாக்க வேண்டிய தருணத்தினை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் ! அவற்றைப் பற்றியான உங்களின் உற்சாக எதிர்பார்ப்புகள் ; பரிந்துரைகள், சிந்திக்க நிறையவே தீனி தந்துள்ளன ! ஒருக்கா நானே உரக்க பேசிக்கொள்கிறேனே - எனது ஞாபகத்துக்கு :

1. Make My Own Mini Santha - MYOMS - 4 இதழ்களோடு - பிரத்தியேக முன்பதிவுகளுக்கு !! இதோ - அது சார்ந்த அறிவிப்பு guys ! 400 முன்பதிவுகள் ; அல்லது 90 நாட்கள் - இவற்றுள் எது முந்திக் கொள்கிறதோ ; அதற்கேற்பவே MYOMS-ன் வெளியீட்டுத் தேதி(கள்) நிர்ணயம் கண்டிடும் ! Maybe ....just maybe ....மூன்று மாத அவகாசத்திற்குள்ளும் முன்பதிவு எண்ணிக்கையினை தொட்டிட இயலாது போயின் - தொகைகள் refund செய்யப்படும் ! அதற்கெல்லாம் அவசியமிராதென்று Fingers crossed !!

2.அடுத்த இரு பெசல் ஐட்டங்களுமே ஆயிரம்வாலாக்கள் !! 

முதலாவது : "ஆயிரம்" என்ற வெளியீட்டு நம்பரை, இந்த ஆந்தைவிழியன் பொறுப்பேற்ற பிற்பாடு நமது குழுமம் தாண்டியுள்ளதைக் கொண்டாடிட !!  போன ஆண்டின் ஏதோவொரு தருணத்தில் இந்த நம்பரைத் தாண்டிப்புட்டு, தற்சமயாய் 1025+ போலானதொரு இலக்கில் பயணித்து வருவதாய் எனக்கு ஞாபகம் ! Anyways - அந்த ஆயிரத்தை தாண்டிய நொடிக்கான ஸ்பெஷலுக்கு - Jus' Like That ஸ்பெஷல் எனப் பெயரிடலாமென்று இந்த topic துவங்கிய 2018-ல் சொல்லியிருந்தேன் ! But அதற்கு நல்லதாய் வேறேதேனும் பெயரிடலாம் என்று தோணும் பட்சத்தில் - போட்டுத் தாக்கிடலாமே guys ? 'எடிட்டர் ஸ்பெஷல்' ; 'ஏட்டய்யா ஸ்பெஷல்' என்ற ரேஞ்சிலான பெயர்களை மட்டும் தவிர்த்து விட்டு - பொருத்தமான பெயர்களை நண்பர்கள் முன்மொழியலாம் ! And அவற்றுள் சிறந்ததை இந்த டாபிக்கை open பண்ணிய நம்ம டெக்ஸ் விஜயராகவனே தேர்வு செய்திடுவார் ! And ஞாயிறு மாலை - அதாவது நாளை மாலைக்குள்ளான பதிவுகள் மட்டுமே consider செய்து, ஒரு பெயரை செலெக்ட் செய்து விடலாம் ! ஓ.கே.வா all ?  

3.Next in line - நமது இந்தப் பதிவுப் பக்கம், தனது ஆயிரமாவது பதிவினை அடுத்த ஓரிரு மாதங்களில் தொட்டிடக் காத்துள்ளதன் நீட்சி ! So அந்த மைல்கல் தருணத்தினைக் கொண்டாடிடவும் ஏதேனுமொரு ஸ்பெஷல் வெளியீட்டினை பிராமிஸ் செய்திருந்தேன் ! So அதற்குமொரு பெயர் பரிந்துரை ப்ளீஸ் ? இந்த முறையோ - பொருத்தமான பெயரை தேர்வு செய்திடப் போவது, இந்தப் பதிவின் கோவைத் தூணான நம்ம கவிஞரும், நானும் தான் ! கோவை இரும்பார் 3 பெயர்களை shortlist செய்து எனக்குத் தந்திட வேணும் & அவற்றுள் ஒன்றினை நான் செலக்ட் செஞ்சூ ! Again ஓ.கே.வா all ? இக்கட முக்கிய கண்டிஷன் - நடுவர்(கள்) போட்டியில் கலந்துக்குப்படாது என்பதே !! ஓ.கே.வா ஸ்டீல் ?

"ரைட்டு....பேர்லாம் வைச்சுப்புடலாம் ; ஆனால் இந்த 2 ஸ்லாட்களுக்கும் எதை  வெளியிடப் போறே அம்பி ?" என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ் கேட்காதில்லை ! கொஞ்சமே கொஞ்சமாய் அரைத்த மாவுகளிலிருந்து மாறுபடும் சில கதைகளுக்கு ; தொடர்களுக்கு சமீபமாய் முயற்சித்து வருகிறோம் ! அவற்றின் பலன்கள் இரண்டல்லது - மூன்று வாரங்களில் தெரிய வரும் ! தற்போது ஐரோப்பிய புத்தக விழாக்களின் circuit முழுமூச்சில் ஓடிக் கொண்டிருப்பதால், உரிமைகளுக்கான இலாக்காக்களைப் பார்த்து வரும் அனைவருமே அங்கே செம பிசி ! மாமூலான வினவல்களுக்குப் பதில் சொல்லவே நேரமின்றித் திணறி வருகின்றனர் ; so கொஞ்சமாய் பொறுமை காத்தோமெனில் அதற்கான பலனிருக்கக்கூடும் ! Let's wait a bit guys !

And before I sign out - இதோ ஜாலியானதொரு சமாச்சாரம் ! நேற்றைக்கு விளையாட்டாய் FB-ல் நமது நாயகர்கள் சார்ந்ததொரு கேள்வியைக் கேட்டு வைக்க, செம உற்சாக ரெஸ்பான்ஸ் அங்கே ! இதோ அது : Care to give it an answer folks ?


Bye all....மீண்டும் சந்திப்போம் ; அடுத்த டின்டின் டபுள் ஆல்பத்தின் க்ளைமாக்ஸ் பகுதி வெயிட்டிங் என்பதால் அவர்களோடு இன்கா பூமிக்கு விரைந்திடவுள்ளேன் ! ! Have an awesome week-end all ! 

191 comments:

  1. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  2. 1000 th issue may be named "One and Only Special "

    ReplyDelete
  3. வருங்கால அமெரிக்கா ஜனாதிபதியா? Sitting ஜனாதிபதி கடத்தப்பட்டா பதறலாம். வருங்கால ஜனாதிபதின்னா புரியலையே சார்

    இருந்தாலும் லக்கி லூக்கை தனியாக அனுப்பாமல் ஜாலி ஜம்பருடன் rintin can உடனும. சேர்த்து அனுப்புங்கள். செம ரகளையா இருக்கும்.

    அப்புறம் மற்றுமொரு சந்தேகம் சார்

    கடத்தியது டால்டன் பிரதர்ஸ் தானே

    ReplyDelete
  4. // இக்கட முக்கிய கண்டிஷன் - நடுவர்(கள்) போட்டியில் கலந்துக்குப்படாது என்பதே !! ஓ.கே.வா ஸ்டீல் ?
    //

    எங்க ஆள கட்டி போட என்ன ஒரு ஐடியா 😀😀😀😀👌

    ReplyDelete
  5. 1000 இதழ் special க்கு

    The milestone special

    ReplyDelete
  6. 1000 blog special க்கு

    Ton blog special

    ReplyDelete
    Replies
    1. Lion roar special

      Super blog special

      Musings of lion special

      Thousand streak special

      Delete
    2. The battalion special (battalion consists of upto about 1000 soldiers)

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  9. பங்குனி மாசம் கல்யாணம்
    டெங்காலியிலே ஊர்கோலம்.....
    🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
    🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁
    💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

    ReplyDelete
  10. 🌹வேதாளர் அட்டைப்படம் கலரே கண்ணைப் பறிக்கிறது என்றால்,
    டெக்ஸ்ன் அட்டைப்பட பின்னணியோ அனல் தெறிக்க வைக்கிறது.
    வெய்யிலுக்கு ஏற்ற படம்தான்.

    🌹பெளன்சர் ஹார்ட் பைன்ட் என்பதால் மெதுவாகவே வரட்டும் சார்.

    🌹1)The Thousand Special.
    Super Thousand Special.
    Thousand walaa Special.


    🌹 2) Lion Blog special.
    The 1000 Blog Special
    .
    🌹 மறுபடியும் டின்டின்னோடு பயணமா?🔥.
    👏👏👏👏👏.

    ReplyDelete
  11. ///'எடிட்டர் ஸ்பெஷல்' ; 'ஏட்டய்யா ஸ்பெஷல்' என்ற ரேஞ்சிலான பெயர்களை மட்டும் தவிர்த்து விட்டு - பொருத்தமான பெயர்களை நண்பர்கள் முன்மொழியலாம் ! ///

    தி ஓட்டைவாய் உலகநாதர் ஷ்பெசல்
    தி ஃபெவிகால் பெரியசாமி ஷ்பெசல்

    ("தி" கரெக்ட் டா போட்டுட்டேன் குருநாயரே..@Erode Vijay)

    ReplyDelete
    Replies
    1. @கிட்
      ஹிஹி க.க.க.போங்க!

      Delete
    2. KOKன் பதில் : அதெல்லாம் விடிஞ்சு எழுந்ததுமே போய்ட்டேன் குருநாயரே!

      Delete
    3. பெவிக்கnல் பெரியசாமி ஸ்பெஷல் ".... கடவுளே... 😄😄😄😄😄😄😄😄😄😄சிரிப்பு தாங்கல பா.. 😄😄

      Delete
  12. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  13. All1000 spesiol .அடுத்து லயன் 1000.முத்து1000வரவிருப்பதால் all1000இல்லனா l.m.1000. Lion _muthu1000

    ReplyDelete
  14. ஆயிரம் கதை சொல்லிய அபூர்வ சிந்தாமணி...

    ReplyDelete
  15. // So திங்களன்று despatch இருந்திடும் guys ! //
    ஏப்ரலில் ஏப்ரல் மகிழ்ச்சி...

    ReplyDelete
  16. MYMOS க்கு நான் செலுத்த வேண்டிய தொகை 930ஆ, அல்லது 1060ஆ ?

    ReplyDelete
    Replies
    1. சந்தாதாரர் எனில் 930/- தான் பத்து சார்...

      Delete
  17. Everytime when a new ad is given, pls post gpay number also. I can't find in gpay

    ReplyDelete
  18. MYOMS ஸ்பெஷல் இதழ்களுக்கு சந்தாதாரகளுக்கு கூரியர் இலவசம் எனும் அறிவிப்பு நல்ல சலுகை சார்...

    ReplyDelete
  19. வண்ண பூவிலங்கு, காரிகன் கிளாசிக்ஸ் மறுப் பதிப்பு awesome... நன்றி.... இது மாதாமாதம் கிளாசிக் போடுங்க ன்னு சொல்றேன் சார்...

    ReplyDelete
  20. ஆயிரம் இதழ் ஸ்பெஷல்,ஆயிரம் பதிவுகள் ஸ்பெஷல்...
    சிறப்பான அறிவிப்புகள்,கலக்குங்க சார்...

    ReplyDelete
  21. கருப்புக்கிழவி பழையதும், புதியதுமாய் வண்ணத்தில் ஒரு ஸ்பெசல் பிளீஸ்...
    கழுகு மலை கோட்டை போன்று பாக்கெட் சைசில் அரை டசன் கதை குண்டு போடலாமே ஸார்...

    கிங் ஆப் crooks தலைவன் குற்ற சாகசம் அரை டஜன் கதை ஸ்பெசல் போடலாமே சார்..

    ReplyDelete
  22. 1000+ and More Special
    From 1000 to Infinity
    Beyond 1000: Into the Future Special
    1000+ and Exceeding Expectations Special
    1000+ Endless Special
    Exceeding 1000 and Embracing Growth Special

    ReplyDelete
  23. Fabulous Forty Fest என் டை சார்

    ReplyDelete
    Replies
    1. எனது டைடில் ஆப்ஷன்

      Delete
  24. 1000 ஆவது இதழ் titles:

    1) Magic Moment Special (MMS)

    2) Thunderous Thousand Special (TTS)

    3) Mega Momento Special (MMS)

    ReplyDelete
  25. 1000 ஆவது blog titles:

    BBS

    1) Blockbuster Blog Special

    2) Blissful Blog Special

    3) Blazing Blog Special

    4) Blasting Blog Special

    5) Banger Blogger Special

    ReplyDelete
    Replies
    1. The BOSS special
      (The Blog-Of-Sivakasi-Service Special)

      Delete
    2. The Blog-Buster Special (TBBS)
      Mega Blog-Buster Special (MBBS)

      Delete
    3. The Blog-Thunder Special (BTS)
      (கோடைக்கு இதமாக)
      The Ultimate Blog Special (UBS)

      Delete
  26. MYMOS க்கு பணம் கட்டியாச்சு. ஆபீசுக்கு வாட்ஸப்ல மெஸேஜும் அனுப்பியாச்சு.

    ReplyDelete
  27. 1000 வாலா ஸ்பெஷல்,
    அதிரடி 1000 ஸ்பெஷல்.
    டைனமைட் ஸ்பெஷல்

    ReplyDelete
  28. தோர்கல் போட்டிகள் சீசன்4ன் finals தற்போது நிறைவு பெற்றது... 11பைனலிஸ்ட்களில் நானும் ஒருவன்..
    இனி பதிவை நிதானமாக வாசித்து விட்டு வருகிறேன் சார்.

    ReplyDelete
  29. லயன் - முத்து
    1000 ஸ்பெஷல்

    ReplyDelete
  30. /// ஏப்ரலின் புக்ஸ் பைண்டிங்கில் ரெடி ; ஆனால் அந்த பெளன்சர் hardcover இதழுக்கு காய்ந்திட கொஞ்சம் அவகாசம் தந்தால் நல்லதென்றுபட்டது ! அட்டைப்படம் பிரமாதமாய் வந்திருக்க, உட்பக்கங்களும் ரகளையாய் அச்சாகியிருக்க, பைண்டிங்கில் மட்டும் கொஞ்சமே கொஞ்சமாய் கூடுதல் டைம் தந்தால் - கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகை நீங்கள் ஏந்திடல் சாத்தியமாகிடும் ! So திங்களன்று despatch இருந்திடும் guys !////

    வாவ ... அருமையான நியூஸ் சார்...

    பெளன்சர்தான் இம்மாத முதல் ரீடிங்.

    நாளை முதல் 3புத்தகங்களை ஒரு பாஸ்ட் ரீடிங் பண்ணிவிடுகிறேன்

    ReplyDelete
  31. /இளம் டெக்ஸ் - இங்கு அடிக்கும் அனலுக்கு ஈடாய் சுட்டெரிக்கும் மெக்சிகோவில் அரங்கேறிடுகிறது ! And 'தேடப்படும் குற்றவாளியாய்' சின்னத் 'தல' ஓட்டமெடுக்கும் கதைச்சுற்றின் இன்னொரு சங்கிலியே இது ! இந்த ஆல்பத்தில் 2 ஸ்பெஷல் சமாச்சாரங்களுண்டு !! ஏற்கனவே ரேஞ்சராய் இருக்கும் கார்சன் சும்மா கரு கரு மீசையோடு ஆஜராகிறார் ////

    சகோதரன் சாமை கொன்றவர்களை போட்டு தள்ளிட்டு ஓடும் சின்ன தலயின் அடுத்த அத்தியாயங்கள் உடனடியாக கிடைப்பது மகிழ்ச்சி சார்.

    கார்சனும் அறிமுகம் ஆகுறார் எனும் போது கூடுதல் ஆரவத்தை கிளப்புது..


    பெளன்சரா இளந்தலயானு போட்டி வந்திடும் போலயே..!!

    ReplyDelete
  32. ////And அவற்றுள் சிறந்ததை இந்த டாபிக்கை open பண்ணிய நம்ம டெக்ஸ் விஜயராகவனே தேர்வு செய்திடுவார் ! And ஞாயிறு மாலை - அதாவது நாளை மாலைக்குள்ளான பதிவுகள் மட்டுமே consider செய்து, ஒரு பெயரை செலெக்ட் செய்து விடலாம் ! ஓ.கே.வா all ? ///

    ஆஹா...ஆயிரமாவது இதழுக்கான செலிபரேசன் ஸ்பெசல் திட்டம் களம் காண்பது ரொம்ப மகிழ்ச்சியான செய்திங் சார். கண்ணா லட்டு திங்க ஆசையா!!!

    அதற்கு பெயரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு எனக்கா...ஆஹா.. ஐசிங் ஆன் த கேக் சார்.. தன்யனானேன்....🙏

    நண்பர்கள் தெறிக்க விடுவாங்களே...

    ரெண்டு நாளாக இதே கூத்து கனவுலகம் குழுவிலும்...அடுத்து இங்கும்...!!!

    ReplyDelete
  33. //// செலக்ட் செஞ்சூ ! Again ஓ.கே.வா all ? இக்கட முக்கிய கண்டிஷன் - நடுவர்(கள்) போட்டியில் கலந்துக்குப்படாது என்பதே !! ஓ.கே.வா ஸ்டீல் ?///

    என்னஅஅஅஅஅஅ.....!!!!

    எரிமலை எப்படி பொறுக்கும்....🤣🤣🤣


    ReplyDelete
  34. Replies
    1. நம்ம 13அ அனுப்பி வைப்பேன்...ஏன்னா அவருதான் அந்த இடத்ல போட்டி போடப் போறாரு....மேலும் இன்னோர் கதை கிடைக்குமே...நிச்சயமா வான்ஹாம்மே வழித்தடத்தில்தான்

      Delete
    2. சூப்பர் சார்....

      கண்ணாலம் கண்ணாலம்னதும் சந்தோசமாய் கீழ வர....ராபினின் விளிம்பு நிலை மனிதர்கள் எனும் வரிகள் ஏகமாய் ஈர்க்க...இல்லையான்னு படியே கீழ பாஞ்சா ராக்கெட் வேகத்ல மேல மேல பறக்கிறேன்....வேதாளருக்குக் கல்யாணம் அட்டைப் படமும் உள்பக்கமும் அடடா செம சார்....அதேதான் இதுவரை வந்ததில்லை இதான் டாப்புன்ன மனதை எரிக்குது...வெயில் சுட்டெரிக்கும் முன்னட்டை இளம் டெக்சின் பின்னட்டையோடு....செம சார் முன்னட்டை வண்ணத்த விருந்தளித்தா பின்னட்டை உங்க ஊர்லல்லா என்ன ப்ரம்மாதம் இங்குப் பாருன்னு வேதாளர் அட்டை டாப்ன்ன எண்ணத்த ஆவியாக்க....அந்த முத்தத்தால் மனமும் குளிர....எதான் டாப்புன்னு நான் திணற.....

      கீழ வந்தா ஆயிரம் வாலாக்கள் நானெப்படி நடுவராக முடியும்னு அட்டைகள் வந்து பாடாய் படுத்த....ஆயிரம் வாலாக்களுக்கு நன்றிகள் கலந்த வாழ்த்துக்கள் சார்னு ....சர்ருன்னு பாயுது மனது நிச்சய வெற்றி வேட்பாளர்களாய் அறிவிக்கப் பட்ட மியாம்ஸ் மேல் நம்பிக்கையோடு..

      Delete
  35. லிமிடெட் *எடி* *சன்* ஸ்பெஷல் &
    லிமிடெட் எடிசன் 1000 ஸ்பெஷல்

    ReplyDelete
  36. ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள் அனைத்து நண்பர்களுக்கும்....

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சார்,
      உங்களுக்கு ஈஸ்டர் திருநாள் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

      Delete
    2. எடிட்டருக்கு Happy Easter சொல்ல நேரம் இல்லை.
      இதுவே தீபாவளி யா இருந்தா
      தனி பதிவே போட்டிருப்பாரு.
      அய்யோ பாவம் இந்த ஈஸ்டர்.
      ஸ்டெல்லா மேடத்துக்காவது,
      வாழ்த்துக்கள் சொல்லி இருப்பாரா.
      நம்ம காமிக்ஸ் அன்பர்கள் அனைவரும் ரொம்ப பிஸியாக இருக்கும் காரணத்தால்,
      நான் ஒருவனாவது
      அவருக்கு
      வாழ்த்து
      சொல்றேன்.
      Happy Easter Stella மேடம்.

      Delete

  37. 1000வது இதழ்:

    1. 1000 கனவுகள் ஸ்பெஷல்
    2. 1000 உணர்வுகள் ஸ்பெஷல்
    3. நினைத்தாலே இனிக்கும்...!
    4. தோரணம் 1000!
    5. அதிரடி 1000வாலா ஸ்பெஷல்!

    1000வது பதிவு:

    1. சித்திர லோகத்தில் 1000 இரவுகள் ஸ்பெஷல்!
    2. 1/1000 ஸ்பெஷல்!
    3. தோரணம் 1000!

    ReplyDelete
  38. வாரணம் ஆயிரம் Spl.

    ReplyDelete
    Replies
    1. வானரம் ஆயிரம்னு படிச்சிருவாங்களே..

      Delete
  39. எடிட்டராக 1000+ இதழ்கள் - சிறப்பிதழுக்கான தலைப்பு:
    - Epic 1000
    - காவியம் ஆயிரம்
    - The Editor's 1000

    1000+ பதிவுகள் - சிறப்பிதழுக்கான தலைப்பு:
    - The 1000 Chats
    - அரட்டைகள் ஆயிரம்

    ஆங், அப்படியே பின்னாடி Special/சிறப்பிதழ் சேர்த்துக்கோங்க... அபிராமி அபிராமி...!

    ReplyDelete
    Replies
    1. @ காசோ : :-)))

      ஆனாக்க தேர்தல் நேரத்துல இப்படி ஆயிரம், ஆயிரம்னு போட்டுக்கிட்டிருந்தா பறக்கும் படை ,தேர்தல் விஜிலன்ஸ் குழுக்கிட்ட மாட்டிக்கிட போறீங்க. பாத்து. கபர்தார்..:-)

      Delete
    2. @செல்வம் அபிராமி:
      என்ன, மிஞ்சிப் போனா ஒரு 1000 ரூபா ஃபைன் போடுவாங்களா? :-D 

      Delete
  40. Replies
    1. Tickling Thousands Special for Blog Post Special as the blog posts always bring us a smile or a laugh.

      Delete
  41. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  42. வேதாளரின் கல்யாண ஆல்பத்தைப் பார்க்க ஒரு கிளுகிளுப்பான ஆர்வத்தில் இருக்கிறேன் சார்!
    இந்தக் கதையை இதற்கு முன்பு நான் படித்தில்லை.. காட்டுக்குள்ளே கல்யாணம்.. அடர்ந்த காட்டுக்குள்ளே ஹனிமூன்'னு எல்லாமே ஆல்பத்துல இருக்கும்னு நம்பறேன்!
    கல்யாணத்தன்னிக்காவது நம்ம வேதாளர் அந்த ரப்பர் உடை யூனிஃபார்ம், முக்கோணக் கண்ணாடியை எல்லாம் கழட்டிட்டு கோட்-சூட்ல ஜம்முனு இருந்திருக்கலாம்!

    பின்அட்டையில் வேதாளரின் சாகஸம் - அமர்க்களம்!

    ReplyDelete
  43. MYOMS அறிவிப்பு அமர்க்களம்! இன்றோ நாளையோ பணம் அனுப்பிவிடுகிறேன்!

    ReplyDelete
  44. Replies
    1. உங்க ஒருத்தருக்கு மட்டும் தான்,
      " ஈஸ்டர் " னா என்னன்னு தெரிஞ்சிருக்கு.
      கடவுளுக்கு நன்றி.
      அப்புறம்
      தலைவர், செயளாலர் அவங்க பதவியை ராஜினாமா செஞ்சிரலாம்.
      பொன்ராஜ் கவிஞரை
      தலைவராக நியமிக்கிறேன்.
      கடல்வாழ் அவர்களைப்
      செயளாலர் என நியமிக்கிறேன்
      யாராவது இதை வழி பொழிந்தால் போதும்.
      நடைமுறையில் வந்து விடும்.

      Delete
    2. நண்பரே இன்னமும் தெரிஞ்சிக்க எனது ஃபேஸ்புக் பதிவையும் கவனிக்க

      Delete
  45. Replies
    1. ///The Blog Buster Special///

      சூப்பர்!!

      Delete
    2. // இந்தப் பதிவுப் பக்கம், தனது ஆயிரமாவது பதிவினை அடுத்த ஓரிரு மாதங்களில் தொட்டிடக் காத்துள்ளதன் நீட்சி ! So அந்த மைல்கல் தருணத்தினைக் கொண்டாடிடவும் ஏதேனுமொரு ஸ்பெஷல் வெளியீட்டினை பிராமிஸ் செய்திருந்தேன் ! So அதற்குமொரு பெயர் பரிந்துரை ப்ளீஸ் ? //

      Delete
    3. //The Blog Buster Special//

      சால பாகுந்தி...

      Delete
  46. The ஆயிரம் அந்தர்பல்டிகள் ஸ்பெஷல்!

    ReplyDelete
    Replies
    1. ஆங் ...இது பேரு ; ! இலக்கண சுத்தமா 'தி' போட்டும் இருக்கு !

      Delete
    2. 😄😄😄😄... ஆமாம் சார்.. 😄😄😄

      Delete
  47. Blog Buster 1000 - BB1000
    காமிக்ஸ் கச்சேரி 1000 - கா.க.1000
    Lovely Lion Post 1000 - LLP1000
    Lion Muthu Lovely Blog 1000 - LMLB1000

    ReplyDelete
  48. Rescueing U.S president --------------------XIII

    ReplyDelete
  49. @Edi Sir..😍😃

    காமிக்ஸ் ரசிகர்கள் இல்லை என்றால் எதுவுமே சாத்தியமில்லை..👍

    எனவே..

    காமிக்ஸ் ரசிகர் ஸ்பெஷல்..
    (CRS)😍

    Thanks to Rasikaas Special🙏
    (TRS)😘

    ReplyDelete
  50. Sir - simply Kodai 1000 Special 1 - May and Kodai 1000 Special 2 - June !!

    ReplyDelete
    Replies
    1. மே மாதத்துக்கெல்லாம் சான்சே கிடையாது சார் !

      Delete
  51. The Editor's Special..
    (TES)

    முத்தான மூன்று தலைமுறை ஸ்பெஷல்..
    (MMT ஸ்பெஷல்)

    ReplyDelete
  52. The Blog and Bloggers Special
    The Blog and Bloggers Milestone Special

    ReplyDelete
  53. Salem Tex Vijayaraghvan ஸ்பெஷல்..
    (STV ஸ்பெஷல்)😍😃

    Covai Stealclaw ஸ்பெஷல்..
    (CSC ஸ்பெஷல்)😍😘



    ReplyDelete
  54. மேச்சேரி KoK ஸ்பெஷல்.. (MKS)😍😃

    அமெரிக்க மாப்ள மஹி ஸ்பெஷல்.. (AMM ஸ்பெஷல்)😍😃

    Maharashtra Boobathi ஸ்பெஷல்..(MBS)

    ReplyDelete
  55. வருங்கால ஜனாதிபதி கடத்தல்!

    1. ஜோ பைடன் மறுக்கா வந்து கடத்தப்பட்டா .. இவ்ளோ வயசானவரை , மெதுவா பேசி மெதுவா நடக்கறவரை கடத்தினவங்களே ரொம்ப கஷ்டப்பட்டுருப்பாங்க . இவரை மீடகப் போனா எந்த வண்டியில ஏத்துறதா இருந்தாலும் விடிஞ்சுடும் .இவருக்கு ஸ்பைடர்தான் சரி. கடத்தி வச்சுருக்கற இடத்தையே வாஷிங்டனுக்கு கொண்டு வந்து சேக்கனும்னா ஏற்கனவே இந்த விஷயங்களில் அனுபவம் உள்ள ஸ்பைடர் நல்ல சாய்ஸ்


    2. ட்ரம்ப் தப்பித் தவறி இரண்டாவது தடவை ஜனாதிபதி ஆகி கடத்தப்பட்டா

    இவரைக் கடத்துனவங்க உலக விஷயங்களில் இவரது கருத்துகளைக் கேட்டு இவரது உளரல்களைக் காது குளிர கேட்டுதனிப்பட்ட முறையில் சிரித்து மகிழ்வதற்காக இருக்க வேண்டும். இவரை மீட்க டாக்புல் & ஆர்டின் ஜோடி போதும். டாக்புல் & ஆர்டினை வைத்துக் கொண்டு ட்ரம்பை அவர்களாகவே துரத்தி விட வாய்ப்புகள் உண்டு.

    3. வருங்கால ஜனாதிபதி ஒரு இளமையான பெண் என்றால் டைகரை அனுப்பலாம். The rescue operation would be as smooth as ' silk'.
    மீட்டுக் கொண்டு வந்தபிறகு டைகரின் காதல் மாய வலையிலிருந்து ஜனாதிபதியை மீட்பது குறித்து தனிக் குழு அமைப்பது பற்றி யோசித்துக் கொள்ளவும்.

    4. வ. ஜனாதிபதி ஒரு முன்னாள் தொழிலதிபராகவோ , மருத்துவராகவோ இருப்பின் மாடஸ்டி ஒரு நல்ல தேர்வாக இருக்கும். கடத்ப்பட்ட ஜனாதிபதி கிளிண்டன் போன்ற தோற்றமுடையவராய் இருப்பின் ஜனாதிபதியின் மனைவி தனது கணவர் கடத்தப்பட்டவராகவே இருந்து தொலையட்டும் ; மாடஸ்டியை அனுப்ப வேண்டாம் எனச் சொல்ல வாய்ப்புகள் அதிகம்.

    5. வ. ஜனாதிபதி மிகவும் நேர்மையானவராக உத்தமராக இருந்தால் ( அப்படி அரசியல்வாதி யாரும் இருக்காங்களா என்ன?) அவரைக் காப்பாற்ற டெக்ஸை அனுப்பலாம். நேர்மையானவராய் இல்லாமலிருந்தால் டெக்‌ஸ் கையால் மடியும் அபாயம் உண்டு.
    இவரது தேடல் ஆனால் ,ஒரு பார் , பாரில் உள்ளவர்கள் சில பேரின் தாடைகளை உடைப்பதில்தான் துவங்கும் .

    6. வ. ஜனாதிபதி கடத்தப்பட்டு காட்டிலோ ,மிருகக் காட்சி சாலையிலோ வைக்கப்பட்டிருந்தால் வேதாளரை அனுப்பலாம். வேதாளர் ஆண்களுக்கான உள்ளாடைகளின் அம்பாஸடர் என கடத்தல் காரர்கள் நம்பி ஏமாற வாய்ப்புகள் உண்டு.

    7. வ. ஜனாதிபதி கடத்தப்பட்டு அணில்கள் அதிகம் நடமாடும் இடங்களிலோ, டொமஸ்டிக் கரண்டை விட குறைந்த மின்னழுத்தம் கொண்ட இன்டஸ்ரியல் கரண்ட் வரும் பகுதிகளிலோ( ? திருப்பூர் போல) வைக்கப்பட்டிருந்தால் மாயாவியை அனுப்புவது கஷ்டம். தேர்தல் நேரத்தில் மங்கலான தோற்றத்தில்
    தங்கள் தொகுதியின்இன்னாள் சிட்டிங் பிரதிநிதி -இன்னாள் அபேட்சகர் இப்படி வருவதாக மக்களிடம் மாட்டி அவதியுற நேரிடலாம்.


    8. மீட்கப் பட வேண்டிய ஜனாதிபதி ஒரு பத்து பதினைஞ்சு வருஷம் கழிச்சாவது மீட்டுக்கலாம்னா xiii -ஐ அனுப்பலாம்.தன்னையும் தேடிக் கொண்டு ஊடாலே பல பெண்களையும் அரவணைச்சு கடத்தப்பட்ட ஜனாதிபதியை மீட்க ஒரு மாமாங்கம் ஆகும். இந்த மீட்பு படலத்தை காமிக்ஸ் ஆக மாற்றினால் மெயின் கதை முடிஞ்சு பதினைஞ்சாவது ஸ்பின் ஆஃப்லதான் ஜனாதிபதி மீட்கப் படுவார்.

    9. எந்த ஜனாதிபதியா இருந்தாலும் அவரை சுவாரஸ்யமான முறையில் மீட்க சரியான ஆள் லக்கி லூக்தான்

    Because he is funny and COOL.

    ReplyDelete
    Replies
    1. அ அந்த இளவரசி சார் ?

      Delete
    2. ஹா ஹா ஹா.. சூப்பருங்க செனா அனா! என்னா ஒரு இமேஜினேஷன்! .😃😃😃😃😃😃

      Delete
    3. என்னோட தேர்வு இளவரசியா தான் இருக்கும் ! முதுகிலே உப்புமூட்டை சுமந்தாச்சும் பைடெனை மீட்டிடுவார் ! ட்ரம்புனா தான் சிக்கல் ; கீழே வந்த பிற்பாடு இளவரசியின் குறுக்கிலே டாக்டர்கள் கை வைக்க வேண்டிப் போகும்

      Delete
    4. Vijayan sir @ உங்களை காப்பாற்ற நாங்கள் கண்டிப்பாக இளவரசியை தான் அனுப்புவோம் 😊

      Delete
    5. ஆஹா... அட்டாஹாசம் சார்... மிக்க நன்றி... வாழ்த்துக்கள் சார்.. என் கருத்தும் அதே.. ❤️👍🙏

      Delete
  56. Just Like That special suggestions - The Thunder Thousand special

    ReplyDelete
  57. அதகளம் ஆயிரம்!!!

    ReplyDelete
  58. வேதாளரின் அட்டைப்படம் கலக்கல் எனில் டெக்ஸ் அட்டைப்படம் இன்னும் கலக்கல் சார் ...அருமை

    ReplyDelete
  59. தங்களின் 1000 தாண்டிய இதழுக்கும்....,ஆயிரம் பதிவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்...

    அதற்கான இதழ்கள் பட்டாஸாய் ஆயிரம் வாலா பட்டாஸ் போல வெடிக்க காத்திருக்கிறேன்

    ReplyDelete
  60. வேதாளர் வண்ணத்தில் ஜொலிக்கிறார்.அருமையான கலரிங்.

    ReplyDelete
  61. Just like that special - இதழின் சிறப்பு பெயருக்கான எனது பதிவு

    " Thousand Thunder Special "

    ReplyDelete
  62. 1000 வது Lion blog - பதிவு சிறப்பிதழுக்கான எனது பதிவு

    " ஆயிரத்தில் ஒருவன் ஸ்பெஷல் "

    ReplyDelete
  63. Just like that special - இதழின் சிறப்பு பெயருக்கான எனது பதிவு

    " Millipede Special "

    ReplyDelete
  64. M1000
    Muthu 1K
    M1K
    Muthu Mega Thousand
    MC@1K
    Muthu Comics 1000

    ReplyDelete
  65. ஆயிரமாவது இதழுக்கும், 1000 ஆவது பதிவுக்கும் என்னுடைய
    Title ஒன்றே.... அது....
    "Take it easy special".... விஜயன் சார் எத்தனை இக்கட்டுகளையும்,
    சிரமங்களையும் தாண்டி இந்த 5g உலகிலும் தொடர்ந்து தனது "ரோல்ஸ்ராய்ஸ் வண்டியை "
    Top கியர் ல்... NH 47.. ல் அட்டாகாசமாய் ஓட்டுவது எனக்கு பெரும் வியப்பே... ஆகவே இது என் மனதில் தோன்றியது...
    வாழ்த்துக்கள் சார்.. ❤️👍🙏

    ReplyDelete
  66. முருகப்பெருமான் மயிலேறி உலகமெல்லாம் சுற்றிவந்திருந்தாலும்... அம்மையப்பனை சுற்றி வந்து மாம்பழத்தை ஜெயித்த விநாயகப்பெருமான் போல... (நீயும் பாக்க புள்ளையார் மாதிரிதான் இருக்கேன்னு சொல்றவங்க கண்ணையெல்லாம் உம்மாச்சி குத்தும்)... எளிதான ஒரு டைட்டில்....


    *..The 1000 special..*

    ReplyDelete
  67. லயன் 1000 ஸ்பெஷல்
    லயன் தவுசண்ட்வாலா ஸ்பெஷல்
    சிங்கத்தின் பாய்ச்சலில் 1000 ஸ்பெஷல்
    சீறிவரும் ஆயிரம் ஸ்பெஷல்

    ReplyDelete
  68. அருமை சார், வேதாளரை நல்ல தமிழ் & வண்ணத்தில் காண வேண்டும் என்பது எனக்கும் சுமார் முப்பதாண்டு கால ஆசை. சென்றமுறை கலரிங் பலரை திருப்திப்படுத்தவில்லை என்று கவனித்திருந்தேன். தயவு செய்து இம்முறை கலரிங்கில் கூடுதல் கவனம் செலுத்தவும் சார்.ப்ளீஸ் 🙏🙏🙏 காரணம் வேதாளர் என்பவர் வேறு மொழிகள் மூலமாகவும் பல்வேறு பதிப்பகங்கள் மூலம் வண்ணத்திலும் பரிச்சயமானவர்.எமது வேதாளர் கதைகளும் அவற்றுக்கு சவால் விடுபவையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை தானே?

    இதை சுட்டிக் காட்டுவதற்கு என்னை மன்னிக்கவும். கலரிங் பண்ணியவர் முதல் சாம்பிள் பக்கத்திலேயே வேதாளர் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான ரெக்ஸின் தலைமயிர் நிறத்தையே தவறாக பிரவுன் கலராக வரைந்துள்ளார்.😥 அதே போல் டயானாவின் தாயார் முடி வெள்ளை நிற நரை முடி. மற்றும் மணப்பெண் ஆடைகள் வெள்ளை நிறத்தில் தானே இருக்கும். (குறித்த ஓவியர் இந்திரஜால், டயமண்ட் காமிக்ஸ்களை வண்ண உதவிக்கு கவனிக்கலாமே).

    ReplyDelete
  69. 1) லயன்-முத்து 1000 ஸ்பெஷல்
    2) ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ ஸ்பெஷல்
    3) வலைத்தள மைல்கல் ஸ்பெஷல்
    4) வலைத்தள 1000 மைல்கல் ஸ்பெஷல்

    ReplyDelete
  70. 1000 Not out special
    The Grand special
    1000 and many more special
    Just 1000 special
    The library special
    The librarian special
    ஆயிரத்திலடங்கா சிறப்பிதழ்

    ReplyDelete
  71. The achievement special
    The celebration special

    ReplyDelete
  72. பெரும் தேவன் மனிடோ ஸ்பெஷல்

    புனித தேவன் மனிடோ ஸ்பெஷல்

    ReplyDelete
  73. அரிமா ஆயிரம் ஸ்பெஷல்
    அசத்தல் ஆயிரம் ஸ்பெஷல்
    Triumphant Thousands Special

    ReplyDelete
  74. LM 1000 - THE MILLENARY MILESTONE SPECIAL ..
    LM 1000 - THE INIMITABLE MILESTONE SPECIAL
    LM 1000 - UNIQUE AND UNPARALLED SPECIAL ..
    LM 1000 - EXCEPTIONAL AND EXCLUSIVE SPECIAL
    LM 1000 - EXQUISITE AND EXCLUSIVE SPECIAL

    ReplyDelete
  75. This comment has been removed by the author.

    ReplyDelete