Powered By Blogger

Monday, April 01, 2024

The M.M.S !!

 நண்பர்களே,

வணக்கம். பெயரிடும் படலத்தின் முதல் பகுதி நிறைவு பெற்றுவிட்டது - நம்ம STV நேற்றிரவே தனது டாப் 2 தேர்வுகளைக் குறிப்பிட்டு அனுப்பிய நொடியில் ! அந்த இரண்டில் ஒன்றினை கொஞ்ச நேரம் அசை போட்டான பின்னே - The MAGIC MOMENT Special என்ற பெயரினில் இருவருமே freeze ஆனோம் ! ஆகையால் அடியேனின் பொறுப்பிலான ஆயிரமாவது இதழினை கொண்டாடும் ஸ்பெஷலாக வாகானதொரு தருணத்தில் "MMS" வந்திடும் ! இதன் பெயர் உபயம் - JSVP @ Tex Tiger என்ற பெயரில் பின்னூட்டமிட்டு வரும் நண்பர் ! தன்னை அறிமுகம் செய்து கொள்ள அவர் மெனெக்கட்டாரெனில், இதழ் வெளிவரும் சமயம் அதற்கான credit தந்திடலாம் ! So மேடைக்கு வந்திடுங்களேன் நண்பரே ?

காத்திருக்கும் வலைப்பதிவின் 1000-வது பதிவினை celebrate செய்திட வேண்டிய ஸ்பெஷலுக்கான பெயர் தேர்வினை இன்னமும் பூர்த்தி செய்திட இயலவில்லை ; in any case - அதற்கு இன்னமும் சில மாதங்கள் அவகாசம் இருப்பதால் - we'll take it as it comes !

And ஏற்கனவே ப்ராமிஸ் செய்தது போலவே, இன்று காலை ஏப்ரல் இதழ்களின் சகலமும் கூரியர்களில் கிளம்பி விட்டன ! இம்முறை hardcover இதழ்களே இரண்டெனும் போது டப்பிக்கள் நல்ல பருமனில் பயணிக்கின்றன ! அது மட்டுமன்றி, போன 2 மாதங்கள் முழுக்க முழுக்க black & white மாதங்களாய் காட்சி தந்திருக்க, இம்முறை அந்தக் கலர் வறட்சி நஹி !! பவுன்சரிலும், வேதாளரிலும் வர்ண தாண்டவங்கள் நிறைந்திருக்கும் ! அப்புறம் SUPREME '60s தனித்தடம் இம்மாதத்து காரிகன் ஸ்பெஷல் -2 சகிதம் நிறைவுறுகிறது ! இதன் பின்பான க்ளாஸிக் நாயக பவனி பற்றி ஜூன் மாதம் அறிவிப்போம் ! 

And புக்ஸ் அனுப்பிய கையோடு ஆன்லைன் லிஸ்டிங்கும் போட்டாச்சு guys ; so அவ்வப்போது வாங்கிடும் நண்பர்கள் ஆர்டர்களை போட்டுத் தாக்கிடலாம் ! எப்போதும் போலவே - happy shopping & happy reading folks ! See you around ! 

இதோ லிஸ்டிங்கின் லிங்க் : https://lion-muthucomics.com/latest-releases/1188-2024-april-pack.html  

212 comments:

  1. Replies
    1. வாழ்த்துக்கள் நண்பரே

      Delete
  2. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  3. டிஸ்கவரி புக் பேலஸ் ல ரேகுலரா கிடைச்சா நல்லா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. போகும் போது அவர்களிடம் நமது இதழ்கள் குறித்துக் கேளுங்கள் சார் ! Maybe தொடர்ச்சியாய் வாங்கிட உந்துகோலாய் இருக்கக்கூடும் !

      Delete
    2. வாரம் ஒரு முறை செல்கிறேன். வந்து விட்டதா என்று ஒவ்வொரு முறையும் கேட்கிறேன் சார்

      Delete
    3. என்ன சொல்கிறார்கள் சார் ?

      Delete
    4. இந்த மாதம் order போட்டடுறேன். அடுத்த மாதம் முதல் அங்கு கிடைத்தால் நலம்.

      Delete
    5. இன்னும் இந்த மாதம் வரவில்லை என்று தான் பதில் வருகிறது

      Delete
    6. பொதுவெளியில் இது குறித்து மேற்கொண்டு பேசுவது சுகப்படாது சார் ; but இந்த விஷயத்தில் நாங்கள் செய்யக்கூடியது எதுவுமில்லை என்பது தான் நிலவரம் !

      Delete
    7. புரிகிறது சார்

      Delete
    8. Hard Fact Edi.. வாசகர்களை தேவையில்லாமல் அலைகழிக்கும் வேலையை தவிர வேறு ஒன்றும் அவர்கள் செய்வதில்லை..... Sad Reality 😒

      Delete
  4. @Edi Sir..😍😘

    Me in 😍😃

    Happy April Cool Day wishes Sir..🎍🌴🍃🍀

    ReplyDelete
    Replies
    1. சார்...ஸ்பெல்லிங் மிஸ்டேக் !

      Delete
  5. அனைவருக்கும் வணக்கம்....

    ReplyDelete
  6. அருமையான பெயர் தேர்வு வாழ்த்துக்கள் நண்பருக்கு

    ReplyDelete
  7. கேப்டன் டைகர் வர வேண்டும்

    ReplyDelete
  8. MMS Lucky title - Minnum Maranam Special

    ReplyDelete
  9. ""க்ளாஸிக் நாயக பவனி பற்றி ஜூன் மாதம் அறிவிப்போம் !"---மரண வெயிட்டிங் சார்...

    ReplyDelete
    Replies
    1. ஜூன் மாதம். அப்போ ஆன்லைன் புத்தக விழா முடிந்த பிறகு. வாரே வா

      Delete
  10. வந்துட்டேன். பவுன்சருக்காக வெறியோடு வெயிட்டிங். This month looks very promising like January.

    ReplyDelete
    Replies
    1. இது பதிவு எண் 987. இன்னும் 13 பதிவுகள் மட்டுமே.

      Delete
    2. மீ டூ பெளன்சருக்கு வெயிட்டிங்...


      பெளன்சர்,
      தல,
      வேதாளர் னு 3பெரிய ஸ்டார் மாதம்

      Delete
  11. வாழ்த்துக்கள் நண்பரே JSVP . நீங்கள் தான் பெயர் வைக்கலாம் என்று ஆரம்பித்தது. உங்களுக்கே பரிசு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  12. கடந்த இரு பதிவுகளாக comment subscription வேலை செய்ய மாட்டேன் என்கிறது, கவனித்தீர்களா?!

    ReplyDelete
    Replies
    1. ஆம்.....பல தடவை க்ளிக்கியும் வேலை செய்ய மாட்டேன்து.

      Delete
    2. அப்பாடா!!!! நான் கூட எனக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சினையோன்னு நினைச்சேன்!! :)

      Delete
    3. அப்படியா.. எனக்கு இன்று வேலை செய்கிறதே....

      Delete
  13. """The MAGIC MOMENT Special"""

    ஆசிரியர் தயாரிப்பில் ஆயிரம்...ஸ்பெசல் வெளியீடுக்கு பெயர் சூட்டிய நண்பர் JSVP @ Tex Tiger க்கு வாழ்த்துகள்💐💐💐💐💐

    நண்பர்கள் சூட்டிய பெயர்களில் இருந்து வெற்றி பெற்று தலைப்பாகும் பெயரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கிய ஆசிரியர் சாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.....🙏

    ReplyDelete
    Replies
    1. தலைப்புக்கு ஏற்றவாறே, ஆயிரம் இதழ் என்பது ஆசிரியர் சார் & அவரோட இணைந்த நம்முடைய காமிக்ஸ் பயணத்தில் மேஜிக் மெமொன்ட் தான்..🎉🎉🎉🎉

      Delete
    2. Thank u ver much STV சார்...
      தலைப்பு சொன்ன போதே பாராட்டிய உங்க மனதுக்கு நன்றிகள்🥰🙏

      நிச்சயமாக எடிட்டர் சாரின் இந்த பயணம் ஒரு Miraculous Magic தான்...🥳🤩
      உங்கள் புள்ளி விவரங்களும், ஞாபக சக்தியும் தனி மேஜிக் 👌👌👌

      Delete
  14. ஏப்ரல் இதழ்கள் சூப்பர். வேதாளர் book பல பழைய இனிமையான நினைவுகளை திரும்ப நியாபக படுத்தி கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க போகிறது.. 🥰😍

    ReplyDelete
  15. சூப்பர் சார்....மேஜிக் மொமண்ட் செமயாருக்கு...வாழ்த்துக்களுடன் நன்றிகள் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. Thank u Very Much Steel சார்🤝🤝🤝❤️

      Delete
  16. அருமையான பெயர் தேர்வு.

    வாழ்த்துக்கள் பெயரை தெரிவு செய்த நண்பருக்கு.

    ReplyDelete
  17. "The Magic Moment Special"

    தலைப்பை தேர்ந்து எடுத்த எடிட்டர் சார் அவர்களுக்கும், STV சார் அவர்களுக்கும் மிக்க மிக்க நன்றி🙏🙏🙏❤️❤️❤️

    மிகப் பெருமையாகவும், சற்று கூச்சமாகவும் உள்ளது சார்😀😊

    என் முழுப் பெயர் ஜான் ஶ்ரீதர் விக்ரந்த் பிரதீஷ் (JSVP), but சுருக்க & attendance பெயர் விக்ரம். வயது 38. ஊர் திருச்சி அருகே பெரம்பலூர்... வரலாறு ஆசிரியராக பணி புரிகிறேன் நண்பர்களே...

    சிறு வயதில் இருந்தே நானும், என் 2 அண்ணன்களும் தீவிர comics ரசிகர்கள்... எனக்கு Tiger, அண்ணனுக்கு tex most favourite, அதான் Tex & Tiger...(tiger kku அடுத்து டெக்ஸ், xiii, thorgal all are favorites)

    பல அருமையான தலைப்புகளிடையே எனது தலைப்பு செலக்ட் செய்யப் பட்டது எனது வாழ்நாள் மகிழ்ச்சிகளில் ஒன்று...

    அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏😘🥰 (தலைப்பு சொன்ன போதே பாராட்டிய சேலம் குமார் சார், ஸ்டீல் சார், திருச்சி செந்தில் சார் ஆகியோருக்கு ஸ்பெஷல் நன்றிகள்🙏🎉 )

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல பரணி சார்🤝🙏🙏🙏

      Delete
    2. welcome விக்ரம்...🌹

      சிறப்பான அறிமுகம்....

      டெக்ஸ் ரசிகரான உங்க அண்ணனை கேட்டதாக சொல்லுங்க...

      Delete
    3. நன்றிகள் நண்பரே. உங்கள் சுய அறிமுகம் அருமை. Welcome to the club.

      Delete
    4. STV சார், கண்டிப்பா அண்ணங்கிட்ட சொல்றேன்.., எனக்கும் டெக்ஸ் ரொம்ப பிடிக்கும், அதையும் மறந்துடாதீங்க🤗

      குமார் சார், sure sir.... It's our Great comics club🔥🔥🔥

      Steel சார், இது வேறு பள்ளி ஆச்சே...இங்கு நம் அனைவருக்கும் ஒரே ஆசிரியர் தானே😉

      Delete
    5. Varuga thala thalapathi (tex-tiger)

      Delete
    6. Magic Moment Special நல்லதொரு பெயர் தேர்வு... வாழ்த்துகள் தோழர்.

      Delete
    7. Doctor hariharan sir, Thank u so much🙏🙏🙏🙏🙏

      Delete
    8. தோழர் Rafiq Raja அவர்களே, மிக்க நன்றி🙏🙏🙏😊

      Delete
    9. @JSVP
      நண்பரே என் அக்காவும் பெரம்பலூரில் தான் இருக்கிறார்கள். என் மச்சான் ஆட்டோ பைனான்ஸ் மற்றும் எம்பிராய்டிங் வொர்க் செய்யும் மிஷின் போட்டு இருக்கிறார். என் அக்கா வீடு மற்றும் கடை பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ளது. பெரம்பலூர் வரும்போது உங்களை நிச்சயம் சந்திக்க விரும்புகிறேன்.

      Delete
  18. Thank u Kumar சார், எல்லாம் உங்க புண்ணியம் தான் 😉🤝

    ReplyDelete
  19. The magic moment special - சூப்பர் தலைப்பு! சொல்லும்போதே மனசுக்குள் ஃப்ளாஷ் அடிக்கிறது!

    பெயர் சூட்டிய நண்பர் விக்ரமிற்கும், தேர்வு செய்த STVRக்கும் வாழ்த்துகள்!!

    நண்பர் விக்ரமின் சுயஅறிமுகம் சூப்பர்!
    வாங்க பாஸ்.. வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க!

    ReplyDelete
    Replies
    1. The magic moment special - சூப்பர் தலைப்பு! சொல்லும்போதே மனசுக்குள் ஃப்ளாஷ் அடிக்கிறது!

      பெயர் சூட்டிய நண்பர் விக்ரமிற்கும், தேர்வு செய்த STVRக்கும் வாழ்த்துகள்!!

      Thanks Vijay

      Delete
    2. கண்டிப்பா விஜய் சார், already ஐக்கியம் ஆகி விட்டேன்...

      Thanks a lot for all your love & kindness❤️🤝

      Delete
  20. Congrats JSVP sir.
    தளத்திற்கு இன்னொரு ஆசிரியர் கிடைத்திருக்கிறார்.
    மிக்க மகிழ்ச்சி சார்.
    பெயர் சூட்டு விழா மொமண்ட்ல , கலந்து கொண்ட மொமண்ட்ல ,
    பரிசுகிடைத்த மொமண்ட்ல
    உங்க ஃபீலிங் மொமண்ட் எப்படி இருந்தது ?

    ReplyDelete
    Replies
    1. நான் லாம் சின்ன ஆசிரியர் தான் சார்...
      H.M என்னைக்கும் நம் எடிட்டர் சார் தான்😊

      போட்டியில் ரொம்ப ஆர்வமா தான் கலந்துகிட்டேன் சார்...

      உண்மைய சொல்லணும்னா
      Sunday kku அப்புறம் அடிக்கடி blog check பண்ணேன்....
      Result எப்படி வருமோ nu....

      ஆனா காலையிலே தலைப்பை பார்த்த உடனே, really I am on cloud nine சார்...
      மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை... கூடவே ஒரு நிம்மதியும் சார்,🎉🎉🎉

      Delete
    2. நான் சொல்ல மறந்தது,பள்ளி ஆசிரியர் என்பதை,

      Delete
  21. புத்தகம் வந்தாச்சுதுங் சார்....

    பெளன்சர் ஆஆஆத்தீஈஈஈஈஈஈ யாக இருக்கு......

    ஹார்டு பைண்டிங்லயே இது வித்தியாசமான பீலிங் தருகிறது...

    அருமையாக வேலை பார்த்து உள்ளது லயன் அணி..

    அட்டையில் அந்த டாட்டூக்கள் கையில் வருடுது...

    இம்மாதம் முதல் ரீடிங் பெளன்சர் தான்...

    மிக நீஈஈஈஈண்டநாள், காத்திருப்பு முடிவுக்கு வருகிறது...

    கடைசியாக வந்த பெளன்சர் 2015ல வெளியானது.. தற்போது 9ஆண்டு கழித்து அடுத்து இதழ் வெளியாகியுள்ளது....

    லயன் வரலாற்றில் முந்தைய இதழுக்கும் இந்த இதழுக்கும் இடையே இத்தனை பெரிய இடைவெளி இப்போது தானா?? வேறு யாரும் இப்படி இத்தனை பெரிய இடைவெளியில் வெளியாகியுள்ளார்களாங் சார்??
    ஏதேனும் நினைவு உள்ளதா?

    பழைய நண்பர்கள் யாருக்கும் நினைவு இருந்தாலும் சொல்லுங்கள் நண்பர்களே..

    ReplyDelete
    Replies
    1. Comics Pediaவே நீங்கதான். நீங்களே கேள்வி கேட்டால் எப்படி ஜி?

      Delete
    2. ஸ்பைடர் ; ஆர்ச்சி சார் ! இதைவிடவும் நீண்ட இடைவெளிக்குப் பின்பாய் வந்துள்ளனர் என்ற ஞாபகம் !

      Delete
    3. ///நீங்களே கேள்வி கேட்டால் எப்படி ஜி?///--

      பத்து சார்@ சீனியர் நண்பர்கள் மத்தியில சின்ன பையன்னு காட்டிக்க அந்த கேள்வி! ஹி..ஹி!!!

      Delete
    4. ஸ்பைடர், ஆர்ச்சி ன்னு ரெண்டு பேரு பல மாமாமங்கள் கழிச்சு தலை காட்டுனதெல்லாம் எப்படி மறந்திட்டீங்க ராகவன்... So Bad 😁🙌😍

      Delete
  22. JSVP சார்,
    தங்களுக்கு எனது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்... இத்தருணம் தங்களுக்கு மகிழ்ச்சியான தருணம்.
    பின்னாட்களில் மனம் குதூகலம் அடைய, பசுமையாக நிலைத்திருக்கும். வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. Real words from you ரகு சார்...
      வாழ்வில் இதை எப்பொழுதும் மறக்க முடியாது...
      என்றும் பெருமையாக நினைத்து இருப்பேன்👍🤝

      Delete
  23. அடுத்து வேதாளர் ஆஹா... அருமையான கண்ணுக்கு உறுத்தாத இளமையான கலரிங்...

    ஒரு பக்கத்துக்கு ரெண்டே ரெண்டு பெரிய பேனல்கள்....ஓவியங்கள் ரசிக்க அருமையான செட் அப்.. என்னை போன்ற டொக்கு கண்ணுக்கும் வாசிக்க இயலும் எழுத்துருக்கள்...

    இன்றைய மித வாசிப்புக்கு ஏற்ற இலகுவான புக்...
    ஐ லைக் திஸ் வேதாளர் சோ மச்..😍😍😍😍

    இதே போன்ற செட் அப்புல வந்தா க்ளாசிக் நாயகர்களுக்கும் கூட நான் ரசிகனாகிடுவேனோ...!!!!!

    ReplyDelete
  24. இளந்தலை தன் ஓட்டத்தை தொடர்கிறார்....
    மஞ்சள் என்பது சட்டையில மட்டுமல்ல அட்டையிலும் கூட அசத்தலாகத்தான் உள்ளது....

    பர்ஸ்ட் லுக்குல தல 3வது இடத்தை பெறுகிறார்...பார்ப்போம் இது ஆரம்பம் தான்...

    சகல சென்டர்களுக்கும் புக்ஸ் போகும்போதுதான் தலையின் நிஜமான வலிமை புலனாகும்....

    பெளன்சரோடு தங்கத்தை தேட போகிறேன்....

    ReplyDelete
  25. @ALL : இம்மாதத்து புக்ஸ் கிடைக்கப் பெற்ற நண்பர்கள் - போன மாதத்தைப் போலவே முதற்பார்வை ரேங்க் போடலாமே - ப்ளீஸ் ?

    ReplyDelete
    Replies
    1. சாயங்காலம் வீட்டுக்கு சென்ற உடன் சார். முதல் இடம் பவுன்சர் தான்.

      Delete
    2. கூரியரில் இருந்து முற்பகலில் அழைப்பு,வீட்டிற்கு வந்து விட்டதாக தகவல்,போய்தான் பார்க்கனும்...

      Delete
    3. 1.பெளன்சர்
      2.வேதாளர்
      3.டெக்ஸ் வில்லர்

      Delete
    4. முதல் பார்வையில்
      1. பவுன்சர்
      2. காரிகன்
      3. வேதாளர்
      4. டெக்ஸ்

      Delete
    5. முதல் பார்வையில்
      1. பவன்சர்
      2. டெக்ஸ்
      3. வேதாளர்

      Delete
  26. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  27. MAGIC MOMENT Special நல்ல தலைப்பு...

    ReplyDelete
  28. மே மாதம் டெக்ஸ் வில்லர் இல்லையா........😭😭😭😭

    ReplyDelete
    Replies
    1. Wait we may get some surprises from our editor in May 2024

      Delete
    2. அதானே அடுத்த வெளியீடுகள் அறிவிப்பில் டெக்ஸ் இல்லை...
      இன்னாபா இது தலைக்கு வந்த சோதனை...
      வெயில் தாங்கலைன்னு ரெஸ்ட் எடுக்கப் போயிட்டாரோ...

      Delete
  29. பௌசன்சர் முதல் பார்வையிலேயே முதல் இடத்தைப் பிடிக்கின்றார். அழகான உருவாக்கம். நேர்த்தியான அச்சு. மயக்கும் வண்ணக் கலவை. அசத்தலான அட்டைப்படம். வாழ்த்துகள் விஜயன் சார். உங்கள் குழுவிற்கும் என் வாழ்த்துகள் & நன்றிகள்.

    ReplyDelete
  30. 1.பௌன்சர்.
    2.வேதாளர்.
    3.காரிகன்.
    4.டெக்ஸ்வில்லர்.

    ReplyDelete
  31. முதல் புரட்டலில் பெளன்சர் கெட்டி அட்டையில் வளப்பமான கெட்டி அட்டையில் மிரட்டலா இருக்கு,அட்டகாசமான மேக்கிங் சார்,
    அடுத்து வேதாளர் கலரில் தகதகக்கிறார்,கதையில் என்ன பண்றாருன்னு பார்க்கனும்...
    தொடர்ச்சியா இளம் டெக்ஸ்,அட்டைப்படமே ஒரு கலக்கலான என்ட்ரியில் அமைக்கப்பட்டிருப்பது எதிர்பார்ப்பு மீட்டரில் சூடு வெச்சாற்போல இருக்கு...
    கடைசியா நானும் இருக்கேன்பான்னு துப்பாக்கியும்,அழகியுமாக போஸ் கொடுக்கிறார் காரிகன்,அப்பாலிக்கா வெயிட் பண்ணுபா,கடைசியா பார்ப்போம்னு சொல்லியாச்சி...

    குறைஞ்ச நேரத்தில் உடனே படிக்க முடியும் என்பதால் முதல் வாசிப்பா இளம் டெக்ஸ்,அடுத்து வேதாளர்...
    பின்னர் கிடைக்கும் நேரத்தில் மற்றவை...

    ReplyDelete
  32. அடுத்த வெளியீட்டில் லோன் ஸ்டார் டேங்கோ எதிர்பார்க்க வைக்கிறார்...

    ReplyDelete
  33. ஏப்ரல் 2024 மாத வெளியீடுகள்... முதல் பார்வை ரேங்க்...
    1) காரிகன் - ஸ்பெஷல்- 2
    2) வேதாளர்
    3) பௌன்சர்
    4) இளம் டெக்ஸ்

    ReplyDelete
  34. The MAGIC MOMENT Special நன்றாக உள்ளது. பெயரை தெரிவு செய்த நண்பரை வாழ்த்துகிறேன். இம்மாத வெளியீடுகள் வந்து விட்டன.. ஒவ்வொன்றும் தரமான சம்பவங்கள்..

    ReplyDelete
  35. "வேதாளருக்கு திருமணம்."அருமையான இனிமையான வாசிப்பு அனுபவம். கலரிங் கலரிங் என்று அடிக்கடி சொல்வோமே.அது இந்த கதையில் மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது.வெறும் திருமண வைபவம் மட்டுமில்லாமல் ஒரு ஆக்சன் சீக்வன்சும் கதையுடன் இணைந்து வந்துள்ளதால் எல்லாப் பக்கத்திலும் சிக்சர் அடித்துள்ளார் வேதாளர்.எனது மதிப்பெண் 10/10.கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. As a வேதாளர் fan, I am very happy by your review 🤩🎉

      Delete
  36. சிறப்பு இதழின் தலைப்பு அருமை சார்...அதனை எழுதிய நண்பர் டெக்ஸ் டைகர் அவர்களுக்கும்..தேர்ந்தெடுத்த டெக்ஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்களும் ,பாராட்டுகளும்...

    தலைவர் பரணிதரன்!

    ReplyDelete
  37. சாபம் சுமந்த தங்கம்....

    இரண்டு மணி நேரம் நானும் அந்த வன்மேற்கு உலகில் மலைகளில் ,பள்ளத்தாக்குகளில்,பாலைவனத்தில். என சுற்றி திரிந்த அனுபவம்...அடேங்கப்பா மீண்டும் பெளன்ஸர் அசத்தி விட்டார் என சொல்லவும் வேண்டுமா...?!கதையில் வரும் அத்தனை மாந்தர்களும் வில்லன்கள் உட்பட கவனிக்க வைக்கிறார்கள் எனில் அனைத்து கதாபாத்திரங்களின் வசனங்களும் நம்மை அவர்களின் உலகில் இன்னமும் நெருக்கத்தில் போய் உலவ வைக்கிறது...இதற்கு முன் வந்த பெளன்ஸர் சாகஸங்களில் எதிர்பாரா ,அதிர்ச்சி அடைய வைக்கும் வன்முறைகளை எல்லாம் கணக்கில் கொண்டால் இதில் வன்முறைகள் குறைவே என தோன்றுகிறது...ஒரு வேளை இப்பொழுது வரும் திரைப்படங்களில்...வெப் சீரியஸ்களில் எல்லாம் இந்த வன்முறைகளை கண்டு கண்டு இது சாதாரணமாகி விட்டதா எனவும் தெரியவில்லை...ஆனால் சாபம் சுமந்த தங்கம் முதல் பக்கத்தை புரட்டி விட்டால் இறுதி பக்கத்தை அடையும் வரை வாசிப்பதை நிறுத்த முடியாது என்பது உண்மை... பெரும்பாலான தங்க புதையல் தேடும் சாகஸங்களில் தங்கத்தின. முடிவுரை மட்டும் சாபமாக அமையும் ..ஆனால் இந்த சாபம் சுமந்த தங்கமோ இறுதியில் சுபமாக அமைந்து போனது இன்னமும் மகிழ்வு .. இறுதியில் மகிழ்வான முடிவுரையும்...பெளன்ஸருக்கு அட்டகாசமான கரங்களும் கிடைத்ததும் ஒரு மகிழ்வான நிறைவை தந்தது மட்டுமல்லாமல் அடுத்த பெளன்ஸர் சாகஸம் எப்பொழுது சார் என மீண்டும் கேட்க வைக்கிறது இந்த தங்கம் ....ஆம் சார் அடுத்த பெளன்ஸர் எப்பொழுது...?!


    கதையின் ஆக்கமும் ,மொழிஆக்கமும் ,விறுவிறுப்பும் எவ்வளவு அருமையோ அது போலவே இதழின் தயாரிப்பு தரமும்...அட்டகாசமான சித்திரங்களும்...அச்சுதரமும் செம சார்...

    மொத்தத்தில் இந்த கோடை மலர் கோடை வெப்பத்தையே மறக்க வைத்த தங்க மலர்..

    (ஆசிரியர் சார்@ தலீவரின் அலைபேசியில் இருந்து பதிய இயலவில்லை போல.. , தலைவரின் பதிவு)

    ReplyDelete
  38. சார் வீட்டுக்கு வந்ததும் கட்டிலில் கிடந்த பெரிய பார்சல் ஒட்டுபோட்ட கருப்பு டேப்புகளுடன் வரவேற்க ஆஹா பெரிய பார்சல்...பயலுக புரட்டி பார்த்தது அப்பட்டமாய் தெரிய....அரக்க பறக்க டேப்பை கிழித்து பார்சல் குடல் உருவ...பயல்களின் கைபட்டதால் கசக்கப் பட்ட நச்சுக்கொடியாய் மாற்றாய் வேதாளம் எனும் தாள் தளம் பக்கம் வராதோரை துள்ள வைத்திருக்கும்...

    பௌன்சர் அட்டைப்படம் அட்டகாசமாய் அதன் லெவலுக்கு அமர..அதற்கு போட்டியாய் இளம் டெக்ஸ் முன்னட்டை ஈர்க்கு மட்டும் தெரியும் குடிசை தடங்கள்...சிதிலமடை வீடு...சோம்பலாக கிரிங்கோ சகிதம் தகிக்க வைக்க....மனதை துயரபடுத்த...பின்னட்டை வண்ணங்களால் வேதாளருக்கு திருமண கொண்டாட்டத்தில் கலந்து தோரணம் கட்டி போட்டி போட....வேதாளர் தான் டாப்புன்னு அள்ளிய ஆட்டம் தள்ளி வைக்குது கண்கள் பெரிய நயினார் பிரசவிக்க காத்திருக்கும் காரிகன கண்டு...செம சார்...அந்த சில்வர் எழுத்தும் வண்ணமும் பாப்பாக்களும் சூப்பர்..இந்த இரண்டில் எது டாப்புன்னு நானறியேன் பராபரமே

    ReplyDelete
  39. முதல் பார்வை ranking

    1. TeX
    2. Bouncer
    3. Corrigan
    4. வேதாளர்

    ReplyDelete
  40. Sir ,

    Young TEX - mudeela sir ! Same story different names chasing TEX - year on year on year !! Sabbaa !! Lost my wind for Young TEX half way through this album !

    ReplyDelete
  41. எல்லா நிறமும் கலந்து கட்டி அடித்த வேதாளம் திருமணம் அட்டை பூந்தளிராய் தூள் கிளப்ப....

    காரிகள் கார்...விமானம்...மனதை மயக்கும் நிறங்களால் சுண்டியிழுக்க....


    மே மாத ஆன் லைன் மேளா கண்ணா இன்னும் பல லட்டு திங்க ஆசையான்னு ஊட்டி விடத் தயாராக

    என் பெயர் அந்நியன் விளம்பரம் அன்று போலவே என்றும் பரபரப்பை பத்து வைக்க...வேதாளம் வண்ண இரு பேனல்களால் கலக்கியது போதாதென தெளிய வைக்காமலே பறக்கவைக்குது அடுத்த வண்ண வேதாளர் அறிவிப்பு...

    காரிகன் வெளிய இருந்த பளபளப்பு உள்ள இல்ல...ஆனாலும் கதை அதை ஈடு செய்யும்னு நினைக்கிறேன்...பார்ப்போம்...


    பௌன்சர் உள்பக்கம் மிரட்டுவது தங்கக் கல்லறை வண்ணத்தை நினைவுறுத்தும் விதமாக...

    டெக்சின் பக்கங்கள் புரட்ட கார்சன் ..அதும் பக்கங்கள் புரள்வதை தடுக்காமல் போக கட்டுப்படுத்தி கலைகிறேன் நாளை படிப்போமென...

    பௌன்சரா...டெக்சா..காரிகனான்னு போட்டி போட வேதாளர் சத்தமில்லாம முதலிடம் பெறுகிறார் படிக்க வைப்பதில்

    ReplyDelete
    Replies
    1. நெசமாவே மிரள வைக்குது உங்களுக்கு காத்திருக்கும் மூன்று அதிரடிகள்...அதனால் எங்களுக்கு கிடைக்கும் சரவெடிகள்...வலுவை மொத்தமாய் உங்களுக்கு அருள செந்தூரானை வேண்டுகிறேன்...எழுத வேலிருக்க ...அதில் வண்ணமாய் மயிலிருக்க

      Delete
  42. Replies
    1. பௌன்சர்ல இடமில்லயா...காரிகன் பின்னட்டை முழுக்க சும்மா இருக்கு...வேதாளர் உம்மா டிஸ்டர்ப் பன்ன வேண்டாம்...

      Delete
  43. வாசகர்களை ஈர்க்கும் கதைகள் கேள்விகளை எழுப்பிக் கொண்டே செல்லும். அதிலும் டெக்ஸ் கதைகளில் டெக்ஸ் வென்று விடுவார் என்று தெரிந்தாலும், பிரதான கதையில் உள்ள கிளைக் கதைகளில் எழும் கேள்விகளுக்கு விடை தேடி செல்வதே டெக்ஸ் கதைகள் வெற்றி பெரும் இடம் என்பேன். அதிலும் வாசகனை ஏமாற்றாமல், கதையை நகர்த்தி செல்வது சிறப்பு என்று சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி எனும் புத்தகத்தில் படித்திருக்கிறேன். 

    *பகைவருக்குப் பஞ்சமேது?*

    கேள்வியே தலைப்பாய் அமைந்த கதைக்குள் நுழைந்தவுடன், அற்புதமான வரிகளுடன் கதை துவங்க வழக்கமான டெக்ஸ் கதை அல்ல என்று நிமிர்ந்து உட்கார்ந்தேன். ஏற்கனவே கார்சனின் அறிமுகம் உள்ளது என்று வலைப்பூவில் படித்த பிறகு கார்சனின் அறிமுகம் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை மாறாக கார்சன் டெக்ஸை எப்பொழுது சந்திப்பார் என்ற முதல் கேள்வி எழுந்தது.

    ரேஞ்சர்கள் டெக்ஸ் பக்கம் நிற்க நடக்கும் விவாதத்தில் அனல் பறந்தாலும் முடிவில் அனைவரும் டெக்ஸுக்கு உதவுவது என்று முடிவு எடுத்த உடன்  டெக்ஸ் எப்பொழுது ரேஞ்சராக மாறுவார்? என்ற இரண்டாவது கேள்வியுடன் பயணத்தை தொடர்ந்தேன்.

    திருமணம் எனும் பந்தத்தில் டெக்ஸுக்கு இருக்கும் தயக்கம் கதை ஓட்டத்தில் காணப்பட்டாலும், பூர்வ குடி பெண்களை மணக்க எந்த வித ஆட்செபனையும் டெக்ஸுக்கு இல்லை என்பதை இந்த கதை நிறுவுகிறது. அதுவே லிலித் திருமணத்திலும் நிகழ்ந்திருக்கிறது என்று ஒரு கேள்விக்கு விடை தந்து செல்கிறது. 

    டெக்ஸுடன் கார்சன் இல்லாத குறையை ஜிம்மி ஜோன்ஸ் தீர்த்து வைத்தாலும் ஜிம்மி ஜோன்ஸுடன் கடைசி வரை பயணிக்க முடியாது என்று டெக்ஸ் எடுத்த முடிவு வருத்தத்தை கொடுத்தாலும் கதை நெடுக ஜிம்மி கலக்க, ஜிம்மி எப்பொழுது பிரிவார் என்ற கேள்வி பதில் கிடைக்காமலேயே சமாதானமடைந்து விடுகிறது. நகைச்சுவையாக கதையை நகர்த்திக் கொண்டு சென்ற வசனங்கள் நச் ரகம்.


    சோலிடட் டெக்ஸ் மீது கொள்ளும் காதல் எப்படி முடிவுக்கு வரும் என்ற நான்காவது கேள்வி இந்த கதையை ரொமான்ஸ் பக்கமும் கொண்டு செல்கிறது. 

    வழக்கம் போலவே அதிகாரிகள் திருடர்களின் கள்ளக் கூட்டணி இந்த டெக்ஸ் கதையிலும், இப்படி ஒரு கட்டத்தில் முதல் அத்தியாயம் முடிய இரண்டாவது அத்தியாயத்திலாவது விட கிடைக்குமா என்று நான் தொடர,


    தான் நிரபராதி என்று நிரூபிக்க டெக்ஸ் காபினை தேட காபின் டெக்ஸ் கையில் எப்பொழுது கிடைப்பான் என்று ஐந்தாவது கேள்வி இணைந்துக் கொள்ள, 

    இளம் டெக்ஸ் எப்படி முதிர்ந்தார் என்பதற்கு சாடசியாக ராணுவ அதிகாரிகளின் துரோக செயல் அம்பலமாக ஆஹா கதை சூடு பிடித்து விட்டது என்று நான் துள்ளி குதித்து பக்கங்களை புரட்ட சோலிடட்டின் அம்மா மொராலெஸ் தன் வீரத்தை காட்ட, ஜிம்மி சில பல தகிடு தத்தங்கள் செய்து பரபரப்பை கூட்ட, காஃபின் குறித்து லாரியிடம் டெக்ஸ் விசாரணை தொடங்க, ஆயுத கடத்தல் குறித்து ஆய்வு செய்ய ரேஞ்சர்கள் நுழைய, அந்த ஆயுத கடத்தலின் பழி டெக்ஸ் மீது விழுந்து அவரை தேடி ஒரு ஷெரிப் கூட்டம் தேடுதலை தொடங்க...

    வேட்டையும் ஓட்டமும் தொடர்கிறது என்று கதையை நிறுத்தி விட்டு அடுத்த மாத கோட்டாவில் டெக்ஸ் இல்லையே என்று பாயை பிராண்டிக் கொண்டிருக்கிறேன். 

    எடிட்டர் சார் இந்த பாகுபலியிலாவது கட்டப்பா ஏன் கொன்னான்னு ஒரே கேள்வியோடு விட்டாங்க, இங்க இத்தனை கேள்விகளை அனாதையாக விட்டு வைத்தால் பௌன்சர் புக்கை படிக்க மனசே வரலே சார்.

    கதை 9.5/10

    ஓவியம் 10/10

    மேக்கிங் 8/10 (ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்ணில் பட்டது.)

    ReplyDelete
    Replies
    1. அருமையான விமர்சனம்👌👌👌(ஒரு spelling mistake கு 2 mark குறைச்சிடீங்களே😀)

      Delete
  44. Read bouncer first. As usual remarkable story
    U are correct sir. Some dignity and decency came to bouncer due to new writer. Sandstorm is superb. Story is very close to reality.

    Phantom- Jolly read in 10 minutes. Remined many old phantom stories like thanga manal too. Breezy read.

    Yet to read tex. Haaaavvvv...

    And Corrigan 😴😴😴

    ReplyDelete
  45. Bouncer அட்டகாசம் அருமை. சும்மா தெறிக்கும் ஆக்சன். ஒவ்வொரு கேரக்டரும் அருமை. வண்ணம், ஓவியங்கள் அந்த பாலைவனம், எல்லாம் செம்ம செம்ம

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. ஏப்ரல் மாத புத்தகங்கள் வந்துவிட்டன.
    முதலிடம் , பெளன்சருக்கு,
    வண்ணத்தில், ஹார்டு பவுண்டில் அமர்க்களமாக உள்ளது
    இரண்டாவது இடம் , வேதாளருக்கு.
    கலரில் அசத்துகிறார்.
    மூன்றாவது இடத்தில் காரிகன் ஸ்பெஷல்.
    அருமையான மேக்கிங்.
    ஹார்டு பவுண்டில் கலக்கலாக உள்ளது.
    நான்காவது இடம் இளம்டெக்ஸ்க்கு .
    வாசிப்பும் இதே வரிசையில் தான் இருக்கும்.
    மொத்தத்தில் பரபர விறுவிறு வாசிப்புக்கான மாதமாக இருக்கப் போகின்றது ,இந்த மாதம்

    ReplyDelete
  49. .💞💞💞💞💞💞💓💕💞💓💞💕💓💞💞💓

    *///"""வசந்த காலம் முடிந்து, நடப்பாண்டின் கோடையும் துவங்கியாச்சு! And கிட்டதட்ட 40ஆண்டுகளுக்கு முன்பான அந்த காமிக்ஸ் வாடிக்கையுமே, இதோ-உங்கள் கைகளிலுள்ள "கோடைமலர்"- வாயிலாக மீண்டும் வந்தாச்சு"""////*

    -----ஆசிரியர் விஜயன் சாரின் இம்மாத ஹாட் லைன் வாசிக்கையில் தான் அட "பெளன்சரின் சாபம் சுமந்த தங்கம்"- 2024ன் கோடைமலருந்தானே என உறைத்தது...!!!

    சமீபத்திய தோர்கல் போட்டி, இயர் என்ட் கணக்கு வழக்குகள் எல்லாம் சேர்ந்து இதை மறக்கச் செய்திட்டன....

    கோடைமலருக்காக காத்திருந்த காலங்கள் தான் எத்தனை உற்சாகமானவை..💞💞💓💕💞💕

    கோடைமலர் என்றாலே கொண்டாட்டம்
    ஏன்???

    #லயன்காமிக்ஸ் கோடைமலர்கள்,

    #முத்துவில் சம்மர் ஸ்பெசல்கள்,

    #திகிலில் கோடை மலர்கள்,

    #மினிலயன் சம்மர் ஸ்பெசல்கள்

    ----இப்படி நான்கு வகையான கோடைமலர்கள் வந்திருந்தாலும் லயன் கோடைமலர்கள் பட்டையை கிளப்பின. ஏன்??? ஏன்???ஏன்???

    *கோடைமலர்கள் என்றாலே கொண்டாட்டம் எனும்போது, அதை அதிகப்படுத்துவது லயன் கோடைமலர்கள் தானே...!!!*

    """யோவ்,அதான் எங்களுக்கே தெரியுமே நீ என்னய்யா சொல்ற???""-னு நீங்கள் கேட்பது தெரிகிறது நண்பர்களே!!!

    #முத்து, திகில், மினிலயன்- கோடைமலர்கள் எல்லாமே அவ்வப்போது வரும் ஞாயிறு & இரண்டு நாள்-மூன்று நாள் வரும் பண்டிகை விடுமுறைகள் போன்றது. ஆனா,

    """"லயன் கோடைமலர்கள் என்பவை ஏப்ரல்-மே மாதம் வரும் கோடை விடுமுறைகள் போன்றது; கோடைவிடுமுறை என்றாலே கிடைக்கும் குதூகலத்தை நினைத்து பாருங்கள் நட்பூஸ்...இரு மாதங்கள் விடுமுறை; அவருவர்க்கு பிடித்த தாத்தா,பாட்டி, மாமா வீடுகள், பொழுதுக்கும் பேட்டும் கையுமாக, ஊர் சுற்றல்கள், பல்வேறு சுற்றிலாக்கள் என ஆடித்தள்ளுனோமே.... அதே கொண்டாட்டம் தான் லயன் கோடை மலரை கையில் ஏந்தும் போதும்....."""

    *லயன் கோடைமலர்களும் பல்வேறு பெயர்களில் ஒவ்வொரு கோடையிலும் அசத்தின. கோடைமலர், சம்மர் ஸ்பெசல், ஹாலிடே ஸ்பெஷல், சென்சுவரி ஸ்பெசல், Top10 ஸ்பெசல், ட்ரீம் ஸ்பெசல், ஜாலி ஸ்பெஷல், கெளபாய் ஸ்பெசல் என்பன அவ்வப்போது காலத்திற்கும், சாதனை மைல்களின் போதும் சூட்டி, நம்மை மகிழ்வித்து- எடிட்டர் Vijayan S விஜயன் சாரும் மகிழ்ந்தவை

    *சதி வலை-1985
    *கோடைமலர்-1986
    *கோடைமலர்-1987
    *ட்ராகன் நகரம்-1988
    *வைக்கிங் தீவு மர்மம்-1989
    *திக்குத் தெரியாத தீவில்-1990
    *லயன் ஹாலிடே ஸ்பெஷல்-1992
    *இரத்த வெறியர்கள்-1993
    *லயன் சென்சுவரி ஸ்பெசல்-1994
    *லயன் Top10 ஸ்பெசல்-1995
    *மரணமுள்-1996
    *கார்சனின் கடந்த காலம்1&2-1997
    *மந்திர மண்டலம்-1999
    *இருளின் மைந்தர்கள்-2003
    *மெகா ட்ரீம் ஸ்பெசல்-2004
    *லயன் ஜாலி ஸ்பெஷல்-2005
    *லயன் கெளபாய் ஸ்பெசல்-2006

    ---இவைகள் 2012 கம்பேக்கிற்கு முன்பான கோடைமலர்கள்..

    லயன்-முத்து இணைந்த கம்பேக்கிற்கு பிறகு ஏப்ரல்-மாதங்களில் தடிதடியான குண்டுபுக்குள் வெளியானாலும் கோடைமலர் என்ற பெயரில் வெளியாகாமல் இருந்தன.... அந்த குறையை எல்லாம்,

    ----லயன்-முத்து கோடைமலர்-2018,

    """"டியூராங்கோவின்---"மொளனமாயொரு இடிமுழக்கம்"""
    ---போக்கியது....

    தொடர்ந்த கோடைமலர்கள்,

    கோடைமலர்-2019-வதம் செய்ய விரும்பு...

    கோடைமலர்-2021-ரெளத்திரம் கைவிடேல்...

    முத்து கோடை மலர்-2022

    முத்து சம்மர் ஸ்பெசல்-2023

    இந்தாண்டு மீண்டும் லயன் கோடைமலராக மலர்ந்துள்ள பெளன்சரின் "சாபம் சுமந்த தங்கம்"- நம்ம அரை நிஜார் காலத்துக்கே கூட்டி போயிட்டது.....!!!
    💞💓💕💞💓💞💕💓💕💞💞💓💕💞💕💓💞💓💕💞


    ReplyDelete
    Replies
    1. சூப்பர் நண்பரே என்னையும் கடந்த காலத்துக்குள்ள தள்ளிட்டீங்க...

      சதிவலை முதன் முறையாக எங்கம்மா இல்லாமல் தனியாக நீண்ட நாட்கள் ஊரிலிருக்க...எனது பெரியம்மா மகனுடன் பகலில் முதன்முறையாக கோவை திரும்பும் போது மதுரை பஸ் ஸ்டாண்டிலும்...

      86கோடை மலர கோவையில் வாங்கி நுகர்ந்ததும் அன்று இரவு ஊருக்கு செல்ல தயாராக சந்தோசமும் அடடா

      87 கோடை மலர கோவையில் வாங்க எனது தூரத்து மாமா ஒருவர் பத்திரிக்கை தர வரும்போது ..இது படிக்கிறியா என வியந்து போது நான் சிலுப்பித் திரிந்ததும்...

      இதற்கு பின் வந்த கோடைமலர்கள் சந்தோசத்த தந்தாலும் சாதாரணமாகிடுச்சு...அந்த குண்டு பாக்கட் மலர் நினைச்சு ஏங்கிய ஏக்கங்கள்...

      அந்த வழவழப்பான கண்ணாடி அட்டை...பலகதை விளம்பரங்கள் ஆர்ச்சி ஸ்பைடர் இரண்டு தாள்கள் குறையாமல் அடேயப்பா ...

      Delete
    2. 87வரை அந்த ஐந்தாம் வகுப்பு வரை படித்த வயதுமோர் காரணமோ...ஆனா லயன் ...அதுல ஆர்ச்சி...ஸ்பைடர்...ஜான் ரேம்போ..ஈகிள் மேன்...பேட் மேன் அடைப்பான்...அதே ஒரிஜினல்ல அந்த கதைகள் அப்டியோ வந்தா இனிக்குமா

      Delete
    3. அருமை STV சார், as usual rocking with a lot of data's & details👌👌👌

      Delete
    4. சூப்பர் சகோதரரே

      Delete
  50. The MAGIC MOMENT Special மிகவும் பொருத்தமான பெயர்.

    ReplyDelete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. சாபம் சுமந்த தங்கம்..
    துவக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாத அட்டகாசமான கதை.
    கோடை மலரை சிறப்புறச் செய்துவிட்டது.
    மாக்ஸிமில்லியன் தங்கத்தை தேடுவதாக வந்த கதைகளில்,
    4வது கதை இது என்று நினைக்கிறேன்.
    டெக்ஸ் - வல்லவர்கள் வீழ்வதில்லை.
    டைகர் - மின்னும் மரணம்.
    XIII - இரத்தப்படலம்.
    பௌன்சர் - சாபம் சுமந்த தங்கம்.
    இதில் மட்டும் தான் மேக்ஸ் மில்லியன் தங்கம் முழுசாக,
    தேடுபவர் (தேடாதவர்) கைக்கு கிடைக்கிறது.
    மாக்ஸிமில்லியனின் தங்கம் இருக்குமிடத்தை தேடி அலையும்
    எல் குச்சிலோ தலைமையிலான திருட்டு கும்பல்.
    தங்கத்தை அவனிடமிருந்து
    மீட்க அவனைத் தேடி அலையும் மாக்ஸமில்லியனின் ராணுவத்தின் கேப்டன் லெட்ரிலாண்ட்.
    தங்கம் இருக்கும் இடம் பற்றிய வரைபடம் தலையில் டாட்டூவாக குத்தப்பட்ட, எல் குச்சிலோவால் கடத்தப்படும் சிறுமி பான்சிடா .
    அவனிடமிருந்து பான்சிடாவை மீட்க, அவனைத் தேடி அலையும் பௌன்சர்.
    துணைக்கு வரும் பௌன்சரின் தோழன் ஜாப்.
    இவர்களை எல்லாம் ஒன்று சேர வைக்கும் தங்கம் புதையுண்டு இருக்கும் டிராகன் குகை. அந்த இடத்தை சுற்றி இருக்கும் காட்டு மிராண்டி பெண்கள்.
    அவர்களிடம் சிக்கும் இவர்களில் பெளன்சர், பான்சிடா, ஜாப் மூவரைத்தவிர மற்றவர்கள் காட்டுமிராண்டு பெண்களால் கொல்லப்பட, அவர்களிடம் இருந்து உயிர்தப்பி, தங்கத்துடன் பௌன்சர் குழு ஊர்திரும்புகிறது.
    கடைசியில் தங்கத்தை தேடி அலைந்த யாருக்கும் அது கிடைக்காமல்,
    அதன் மீது ஆசை வைக்காத பெளன்சரிடம் அந்த' சாபம் சுமந்த தங்கம்' வந்து சேர்கிறது.
    அற்புதமான சித்திரங்கள்,
    அளவான வசனங்கள், அமர்க்களமான கதை.
    நேரம் போனதே தெரியவில்லை.
    கடைசி வரை விறுவிறுப்பு குறையாத கதை .
    பாராட்டுக்கள் சார்

    ReplyDelete
  53. வேதாளருக்கு திருமணம் செம்ம செம்ம. ரொம்பவே ஜாலியான ஒரு கதை. அப்படியே நானும் ஜாலியாக படித்து விட்டேன். டயானா வுக்கு நீங்கள் போட்ட கருப்பு உடை தான் கண்ணை உறுத்தியது. மற்றபடி ஓகே தான். போன வேதாளரை விட இது பரவாயில்லை.

    ReplyDelete
  54. சொல்ல மறந்த ஒன்று..
    பௌன்சருக்கு செயற்கைக்கரம் பொருத்தப்படும் இடம் அருமை. அதுவும் அந்தக் கை துப்பாக்கியுடன் வடிவமைக்கப்பட்ட விதம், இரும்புக்கை மாயாவியை நினைவூட்டுகிறது.

    ReplyDelete
  55. பகைவருக்கு பஞ்சமேது... அக்மார்க் டெக்ஸ் கதை ஆனால் பாதியில் தொடரும் போட்டது தான் பிடிக்கவில்லை. நல்ல கதை, வசனங்கள் பெரிய பிளஸ். ஆனால் இந்த மாதம் இரண்டாவது இடம் தான் டெக்ஸ்க்கு. முதல் இடம் பவுன்சர் தான்.

    ReplyDelete
    Replies
    1. // இந்த மாதம் இரண்டாவது இடம் தான் டெக்ஸ்க்கு. முதல் இடம் பவுன்சர் தான்.//

      காரிகன் - ஸ்பெஷல் 2 முடித்துவிட்டு முதலிடம் சொல்லுங்கள் சார்

      Delete
  56. இன்னும் காரிகன் மட்டுமே பாக்கி. ஆனால் நாளுக்கு ஒரு கதை மட்டுமே படிக்கலாம் என்று இருக்கிறேன். எனவே ஒரு வாரம் ஆகும். இதை படித்து முடிக்க.

    மொத்தத்தில் ஜனவரிக்குப் பிறகு ஏப்ரல் மாதம் நிரம்பவே சந்தோசமான ஒன்றாக அமைந்தது நன்றிகள் சார் தங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. நானும் அதே முடிவு தான் சார்

      Delete
    2. இரண்டு பேரும் 🏎🏎🏎🏎🏎

      Delete
  57. டியர் எடி, நல்ல வேளை ஏப்ரல் ஃபூல் பதிவ இருக்கும்னு நினச்சிட்டு உங்களோட இந்த ஏப்ரல் 1 பதிவ ரெண்டு நாளா திறந்தே பார்க்கல... 😁

    இன்னிக்கு தான் ஏப்ரல் மாச பார்சல் வந்து சேர்ந்தவுடன் தைரியமாக இந்த பதிவுக்கு வர்றேன்...😍

    இந்த வாரம் முடியறதுக்குள்ள எப்படியாவது Unboxing Video தொடர மீண்டும் தொடரது மட்டுமில்லாம, 2 புக்கையாவது ஏப்ரல் செட்டில் படிச்சிடனும்னு கங்க்னாம் ஸ்டைல் கங்கணம் கட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கேன்...

    இனி வேலையாண்டான் விட்ட விதபடி நடக்கட்டும்... 🙌 #RaRcomics #TamilComics

    ReplyDelete
  58. Corrigon special 2,My favourite stylish action hero, உங்களுக்கு ஆயிரம் நன்றிகள் சொல்ல வேண்டும். 450/- விலையில் பத்து கதைகள்,ஒரே புத்தகத்தில் நான்கு superhit மறு பதிப்பு கதைகள். இந்த நான்கில் ஒன்றை வாங்க வேண்டும் என்றால் கூட இந்த புத்தகத்தை போல் பல மடங்கு மேல் விலை தர வேண்டியது இருக்கும்.
    Corrigan ஸ்பெஷல் ஒன்றுகூட இதுபோல சில மறுபதிப்பு கதைகளை சேர்ந்தால் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.
    அடுத்து வரவிருக்கும் corrigon ஸ்பெஷல் மூன்றாம் பாகத்தில் மேலும் சில சூப்பர் ஹிட் கதைகளை சேர்த்து விடுங்கள்.
    முக்கியமான ஒரு பனிமலை பயங்கரம்
    பில்லி சூனியம்மா பித்தலாட்டமா. சிலந்தி வலையில் காரிகன், மேலும் ஆரம்பத்தில் வந்த சில சூப்பர் ஹிட் கதைகள்.

    ReplyDelete
    Replies
    1. நூற்றுக்கு நூறு உண்மை நண்பரே.

      Delete
  59. தற்போது 3 எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறேன், ஒன்று ஆன்லைன் புத்தகத் திருவிழா புத்தகங்கள் என்னென்ன என்று. இரண்டாவது 60s and 70s என்ன மாதிரி மாற்றங்களுடன் வரப்போகிறது என்ற அறிவிப்பு. மூன்றாவது மேஜிக் MOMENT ஸ்பெஷல் எதிர்பார்ப்பு.

    ReplyDelete
  60. This comment has been removed by the author.

    ReplyDelete
  61. 1.காரிகன்
    2. பவுன்சர்
    3.யங் டெக்ஸ் & வேதாளர்

    ( காரிகன் அட்டைப் படத்தில் ஆரஞ்ச் வண்ணமும், Castle பின்னணியும், Name font um Awesome 🔥)

    ReplyDelete
  62. வாழ்த்துகள் சகோ💐💐💐💐💐🤝🤝🤝🤝🤝🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

    JSVP @Tex Tiger

    ReplyDelete
  63. பௌன்சர் புத்தகம் மேக்கிங் செம்ம ஆசிரியரே
    அட்டகாசம், சூப்பர், பட்டாசு🥳🥳🥳🥳🥳🥳❤❤❤❤❤❤❤❤❤❤❤💥💥💥💥💥💥💥💥💥💥💥

    வேதாளர் கலரிங் அருமையாக வந்துள்ளது💐💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  64. மிக்க நன்றி சகோதரி😊😊😊🙏🙏🙏

    ReplyDelete
  65. (Fbயில் இட்ட பதிவு இங்கும்.)
    சாபம் சுமந்த தங்கம்! லயன் காமிக்ஸ் #446
    பௌன்சர், Bouncer

    நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் வந்துள்ள ஒற்றைக்கை நாயகர் பௌன்சர் மீண்டும் அதகளம் செய்துள்ளார். இவ்வருடத்தின் ப்ளாக் பஸ்டர் கதையாகவும் பௌன்சரின் சாபம் சுமந்த தங்கம் அமைந்துள்ளது.

    பௌன்சரின் வளர்ப்பு மகளான பான்சிடா என்ற சிறுமியை ஒரு கொலைகார கும்பல் ஒன்று கடத்தி விடுகிறது. பான்சிடாவின் முகம் மற்றும் தலையில் ஒரு தங்கப் புதையளுக்கான மேப் உள்ளதால் தான் அவள் கடத்தப் படுகிறாள். சிறுமியை மீட்டுவர பௌன்சரும் அவரது நண்பர் ஜாப்’பும் கிளம்புகின்றனர். படுகொலைகளை நிகழ்த்திவிட்டு சிறுமியை கடத்திச்சென்ற கொலைகார கும்பலை பௌன்சர் பிடித்தாரா? அவர்களிடமிருந்து பான்சிடாவை உயிருடன் மீட்டரா? அந்த மேப்பில் உள்ள தங்கப் புதையலை மீட்டனரா? என்பதுதான் இந்தக் கதையின் ஒன்லைன் எனலாம்.
    சற்று விரிவாக பார்ப்போம்.

    பான்சிடா
    இந்த சிறுமிதான் இந்தக் கதையின் மையம். இவள் எப்படி பௌன்சரை வந்தடைகிறாள் என்பது பௌன்சர் கதை வரிசை பாகம் 8 மற்றும் 9 ல் உள்ளது. ஏனோ அந்த இரண்டு பாகங்களையும் எடிட்டர் விஜயன் தமிழில் ஸ்கிப் செய்து விட்டார். எல் லோபோ எனும் கொள்ளைக்காரனின் மகள்தான் இந்த பான்சிடா. இந்த எல் லோபோ தான் பாகம் 8 டீப் எண்ட் எனப்படும் நரகத்தையொத்த சிறையில் மாட்டிக் கொள்கிறான். அங்கு ஒரு கைதியை தேடி வந்து அந்த சிறையில் பௌன்சரும் மாட்டிக் கொள்கிறார். அப்போது எல் லோபோவும் பௌன்சரும் நண்பர்கள் ஆகின்றனர். எல் லோபோ இறக்கும் தருவாயில் தன் மகளை பொறுப்பேற்கும் படி பௌன்சரிடம் வாக்குறுதி பெறுகிறான். அதன்படி பான்சிடா பௌன்சரின் பாதுகாப்பில் இருக்கிறாள். இதெல்லாம் பாகம் 8 மற்றும் 9ல் வரும்.

    எல் குச்சீல்லோ
    இவன் எல் லோபோவின் கூட்டாளி. சாபம் சுமந்த தங்கம் கதையின் மெயின் வில்லனே இவன்தான். படு பயங்கர பாதகன். எப்படியெனில் அவனைப் பெற்றத் தாயே “அவனது தலையை துண்டித்து விடுங்கள்” எனுமளவுக்கு. இவன்தான் பான்சிடாவை கடத்தி சென்று அவளிடம் உள்ள மேப்பின் படி புதையைலை தேடுபவன்.

    மேக்ஸி மில்லியன் தங்கம்
    ஆமாம், நமது தங்கத் தலைவர் கேப்டன் டைகரின் மின்னும் மரணத்தில் வருமே அதே கோல்டுதான். மன்னர் மேக்ஸி மில்லியன் தனது நம்பகமான ராணுவ அதிகாரிகளிடமும் பிரஷ்ய நாட்டு அரசக் குடும்பத்து சீமாட்டி எஸ்பெரன்ஸா பொறுப்பில் பாதுக்காக்குமாறு கொடுத்து விடுகிறார். அந்த சீமட்டியின் கூட்டாளிகள்தான் எல் லோபோவும், எல் குச்சீல்லோவும். இந்த திருட்டுக் கும்பல் உடன் வரும் ராணுவ வீரர்களுக்கு டேக்கா கொடுத்து விட்டு முழு தங்கத்தையும் அபேஸ் செய்கின்றனர். இதில் எல் குச்சீல்லோவுக்கு சீமாட்டியின் மீது மையல் வேறு. இந்த சமயத்தில்தான் உடனிருக்கும் எல் லோபோ இவர்களை ஏமாற்றி விட்டு முழுப் புதையைலையும் எடுத்துக்கொண்டு காணமல் போய் விடுகிறான். புதையலை ஒரு மலைபரப்பில் பத்திரப்படுத்தி விட்டு தான் டீப் எண்ட் சிறையில் மாட்டிக் கொண்டு செத்துப் போகிறான். தனது மகளின் தலையில் புதையலுக்கான மேப்பை பச்சை குத்திவிட்டு பௌன்சரிடம் மகளையும் ஒப்படைத்து விடுகிறான்.

    பௌன்சர், ஜாப், யின்-லீ,கேப்டன் லெட்ரிலண்ட்

    பான்சிடாவை கடத்திச் சென்ற மேற்படி கும்பலைத் தேடி புறப்படும் நல்லோர் அணி. குறிப்பாக பௌன்சர், ஜாப், கேப்டன் லெட்ரிலண்ட் ஆகிய கூட்டணிதான் கதை நெடுகிலும் வருகிறவர்கள். பௌன்சர் மற்றும் ஜாப்’பின் நோக்கம் பான்சிடாவை மீட்டு வருவது. கேப்டன் லெட்ரிலண்ட்டின் நோக்கம் தங்களை ஏமாற்றிய சீமாட்டி கும்பலிடமிருந்து தங்கத்தை மீட்பது. இறுதியில் மலைப்பகுதியில் வசிக்கும் ஆண்களை கண்டாலே கொன்று விடும் படுபயங்கர காட்டுவாசிக் கும்பலிடம் மாட்டிக் கொண்டு தப்பி வருகின்றனர். மொத்த தங்கத்தையும் மீட்டுக்கொண்டும் வந்து விடுவதோடு கதை முடிகிறது.

    பதிவின் தொடர்ச்சி கீழே...

    ReplyDelete
    Replies
    1. கதை, சித்திரம் Boucq

      சாபம் சுமந்த தங்கம் முறையே பௌன்சரின் கதை வரிசையில் 10 மற்றும்11. முதல் ஒன்பது பாகங்களுக்கு கதை எழுதியவர் Alejandro jodorowski. இந்த 10 , 11 பாகங்களுக்கு கதையை ஓவியர் Boucqஅவர்களே எழுதி அமர்களம் செய்துள்ளார். கதை துவக்கம் முதல் இறுதி பக்கம் வரை அடுத்தடுத்து என்ன ஆகும் என்று வாசகர் யூகிக்க இயலாத வண்ணம் வெகு சுவாரஸ்யமாக கதை சொல்லியுள்ளார். போதாதற்கு மெய்மறக்கச் செய்யும் அளவிற்கு தனது ஆற்றல் மிகு சித்திரங்களால் நம்மை ஈர்த்து விடுகிறார். அவ்வளவு ஏன்? என்னையே வேலைக்கு ஹாப் டே லீவு போட வைத்துவிட்டார் Boucq அவர்கள்.
      புத்தகம் எனக்கு செவ்வாய் அன்று வந்திருந்தது. மகளுக்கு எக்ஸாம் டைம் என்பதால் இரவு மிகவும் தாமதமாகத்தான் தூங்க செல்வோம். மகள் ஒரு பக்கம் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்க.. சரி இன்று வந்த புத்தகங்களை அப்படியே புரட்டுவோமே என்று ஆரம்பித்து.. பௌன்சர் கதையில் நுழைந்தவன் முழுக் கதையையும் வாசித்து விட்டுதான் வைத்தேன். மிகவும் தாமதமாக தூங்கி காலையில் எழுந்திருக்க முடியாமல் எழுந்து அரை நாள் வேலைக்கு லீவு போட வைத்து விட்டார். துளி கூட தொய்வில்லாமல் சித்திரங்களின் வழியாக அருமையாக கதை சொன்ன Boucq அவர்களுக்கு ஹேட்ஸ் ஆஃப் டூ sir. 2024 ஆண்டின் லயன் முத்து குழுமத்தின் டாப் கதைகளுள் முதலிடத்தை பிடிக்கப் போவதும் இந்த பௌன்சர் கதைதான்.

      S.விஜயன் மற்றும் Ms.சுகன்யா

      தமிழ் மொழிபெயர்ப்பு வெகு பிரமாதமாக வந்துள்ளது. ஓவியர் Boucq அவர்களின் கதையும், சித்திரமும் எந்தளவுக்கு பிரமாதமோ அதே அளவிற்கு ஈடு கொடுத்து தமிழ் மொழிப்பெயர்ப்பு நகர்கிறது. பல இடங்களில் மிகவும் ரசித்து வாசித்தேன். குறிப்பாக ஓரிடத்தில் ஞாயிறு இன்றி திங்கள் ஒளிர்வதெங்கே? எல்லாம் சிறப்பு. பக்கம் 90ல் தனது நண்பனை தனி சிறையில் போட சொல்வார் பௌன்சர். அதற்கு அந்த மெக்சிகன் “ஆளாளுக்குத் தனி அறை கொடுக்க இது என்ன சொகுசு ஹோட்டலா?” என்று சொல்வான். இதெல்லாம் கதையோடு மெல்ல இழையோடும் நகைச்சுவை. இப்படி ரசித்து வசிக்க வைத்துள்ளனர் நமது எடிட்டர் Vijayan S ஸாரும் Ms.சுகன்யா மேடமும். பாராட்டுக்கள்.
      மற்றும் விஜயன் ஸாரிடம் ஒரு வேண்டுகோளும் கூட.. பௌன்சர் கதை வரிசையில் ஸ்கிப் செய்யப்பட்ட பாகம் 8 மற்றும் 9தை வெளியிட பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
      பௌன்சரின் அடுத்த பாகம் 12க்காக இப்போதே ஆவலுடன்.

      பதிவை முழுதும் வாசித்த நண்பர்களிடம் ஒரு கேள்வி. மேக்ஸி மில்லியன் கோல்டை தேடிச்சென்ற பிரெஞ்ச் கதைகளில் இரண்டை மேற்படி பதிவில் குறிப்பிட்டுள்ளேன், இன்னும் ஒரு கதையிலும் இதே தங்கம் வரும். எங்கே உங்களுக்கு நினைவிருப்பின் அந்த மூன்றாவது கதையை சொல்லுங்கள் பார்ப்போம்.

      Delete
    2. /// பதிவை முழுதும் வாசித்த நண்பர்களிடம் ஒரு கேள்வி. மேக்ஸி மில்லியன் கோல்டை தேடிச்சென்ற பிரெஞ்ச் கதைகளில் இரண்டை மேற்படி பதிவில் குறிப்பிட்டுள்ளேன், இன்னும் ஒரு கதையிலும் இதே தங்கம் வரும். எங்கே உங்களுக்கு நினைவிருப்பின் அந்த மூன்றாவது கதையை சொல்லுங்கள் பார்ப்போம்.///
      மேலே எனது பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

      Delete
  66. *சாபம் சுமந்த தங்கம்*

    பவுன்சர் கதைகளில் ஒரு மென்சோகம் இழையோடிக் கொண்டே செல்லும். பவுன்சர் மீது ஒரு பச்சாதாபம் வாசகரிடையே சுரந்துக் கொண்டே இருக்கும். அது இந்தக் கதையில் முதல் மூன்று பக்கங்களில் முடிந்து விடுகிறது. கதை 13 ஆம் பக்கத்தில் தொடங்க, என்ன ஆச்சு என்று என் மூளை சுறுசுறுப்பாக, பவுன்சர் அதிரடியாக முடிவுகளை எடுக்க, இது வரை பல்வேறு வகையில் அடித்து துவைத்து காயவைத்த ஒரு புதையல் வேட்டை கதையை வேறு ஒரு கோணத்தில் வித்தியாசமான களத்தில் கண்டு வாசிக்க அற்புதமான ஒரு புத்தகமாக அமைந்தது.

    பல்வேறு இடங்களில் வசனங்கள் தெறி ரகம். ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்தபடி கதையை நகர்த்தி இருக்கிறார்கள். தங்கம் புதைத்து வைத்துள்ள இடத்தை கண்டுபிடிக்க இருக்கும் குறியீடு சமீபகாலத்தில் நான் படித்த/பார்த்த கதைகளில் மூன்றாவது கதையாகும்.

    பிரான்தன் கணவாயை கடக்கும் பொழுது அங்குள்ள மனிதர்கள் அடையும் சொல்லொண்ணா துயரத்தை வாசிக்கும் என்னுள்ளும் கடத்தும் ஓவியம் வேறு ரகம்

    டிராகன் குகை ஒரு சாந்தமான டிராகன் உறங்குவது போல் வடிவமைக்கப் பட்டிருக்க, இங்கே எந்த அசம்பாவிதமும் நடக்க வாய்ப்பு இல்லை என்று நினைத்துக் கொண்டே இருக்கும் சமயத்தில் இயற்கை சீற்றங்களில் மிகவும் கொடூரமான மணல் புயல் கிளம்பி ருத்ரதாண்டவம் ஆடுகிறது. தப்பித்தவர்களோ மிகவும் மோசமான இடத்தில் சிறைப்பட, ரத்த ஆறு பொங்கி ஓடுகிறது. உயிர் பிழைக்க நாமும் ஓட பக்கங்களை வேகமாக புரட்டி செல்ல வேண்டியதாகி விடுகிறது.

    அதன் பின் புதையல் என்ன ஆனது என்பதை சுவாரசியமாக சொல்லி, யூகிக்க முடியாத கிளைமாக்ஸுடன் முடித்துள்ளார்கள். மென்சோகத்துடன் தொடங்கும் கதை ரௌத்திரத்துடன் பயணித்து மகிழ்ச்சியுடன் முடிய. வேறு என்ன கொண்டாட்டம் தான்.

    கதை 10/10

    ஓவியம் 10/10

    மேக்கிங் 10/10

    ReplyDelete
  67. இன்னுமொரு அட்டகாசமான காரிகன் கலெக்ஷனுக்கு நன்றி சார்! அப்புறம்

    வைரஸ் X , மடாலய மர்மம் அச்சுத்தரம் , தாளின் தரம், தெளிவு அருமை.....பழைய பதிப்பில்!

    புதுசு? நீங்களே பாத்துக்கோங்கோ !
    இனி எந்த விலையில் வந்தாலும் ஒரு பக்கத்தில் இரு பிரேமில் (அந்த காலத்து ஒரு ரூபாய் விலையில்) கிடைத்த தரம் ...தெளிவான அச்சு..வாய்ப்பில்லை.

    +

    ReplyDelete
  68. நேற்று மதியமே புத்தகப் பார்சலை கைப்பற்றி விட்டேன். இன்று வேதாளரின் திருமணத்திற்கு சென்று வந்தேன். நாளை இளம் டெக்ஸ் உடன் பயணம்.

    ReplyDelete
    Replies
    1. கல்யாணம் எப்படி இருந்தது? சாப்பாடு எப்படி இருந்தது?

      Delete
    2. @Parani from Bangalore

      குசும்பு 😋😋😋

      Delete
  69. Ji, classic இரும்பு கை மாயாவி, லாரன்ஸ் டேவிட், ஜானி, ஸ்பைடர், ரிப் கர்பி, ஜார்ஜ், mandrake மற்றும் phantom இவர்கள் கதையில் இருக்கும் ஓவிய கிளாரிட்டி ஏன் காரின் கதைகளில் இருப்பதில்லை.

    ReplyDelete
  70. Corrigon கதைகளில் ஓவிய கிளாரிட்டி இருப்பதில்லை

    ReplyDelete
    Replies
    1. பழைய பதிப்பில் உண்டு. பயங்கரவாதி டாக்டர் செவன் போன்ற ஒன்றிரண்டைத் தவிர.

      Delete
    2. அதிலும்கூட சில பக்கங்களில் அச்சு லேசாக, கருமை குறைவாக இருக்கிறதே தவிர இப்போது போல் பிசிறு தட்டவில்லை

      Delete
  71. கிளாரிட்டி -ன்னு நீங்க எதிர்பார்ப்பது - சில கதைகளை பழைய பதிப்பில் இரு வண்ணத்தில் படித்து ரசித்திருப்பீர்கள்..
    நானும், இதழை கையில் ஏந்தி - (என்னிடம் இல்லாத கதைகளாக இருப்பதால்) பரவசத்துடன் ரசித்துக் கொண்டிருக்கும் போது F-B - நண்பர் ஒருவர் - கடலில் தூங்கிய பூதத் - தின் ஆங்கில பதிப்பின் முழு வண்ணத்தில் இருக்கும் முதல் பக்க சித்திரங்களை பதிவிட்டிருந்தார்..
    ப்பா என்ன அழகு.. மேலும் - அந்த குற்றம் நடக்கப் போகும் ஆரம்ப கட்ட திகிலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது..

    எனவே - இத்துடன் - இந்த ஸ்டைலில் வெளிவரும் இதழ்கள் நிறைவடைவதால்..
    அடுத்த திட்டமிடலில் - எனது கோரிக்கை ..
    ஒவ்வொரு - ஹூரோவுக்கும் இரண்டு - அல்லது மூன்று கதைகள் மட்டும் போதும்.
    இந்த பேப்பர் தரத்தில் - இருவண்ணத்தில் வெளியிட வேண்டுகிறேன்.
    ஆர்ட் பேப்பரோ - முழு வண்ணமோ - தேவையில்லை..
    வேதாளரையும் இப்படி வெளியிடலாம்.
    V - காமிக்ஸுக்கு வேதாளர் - கொஞ்சம் சப் - பென்று இருப்பது போல் படுகிறது. (ஸா கோர் - போல்)
    பார்க்கலாம். - ஆசிரியர் என்ன மாதிரி அடுத்த திட்டமிடலை வைத்திருக்கிறார் என்று.. ii

    ReplyDelete
  72. வழக்கம் போல் IPL Match பார்த்துட்டு சனிக்கிழமை(பதிவுக்கிழமை) என்று சொல்ல சகோதரர்கள் மறந்து விட்டார்கள்🙄🥺

    அதனாலே நானே சொல்லிடுறேன்

    ஆசிரியரே, இன்று பதிவுக்கிழமை எனும் சனிக்கிழமை 😁😁😁😎😎

    ReplyDelete
    Replies
    1. நான் IPL பார்ப்பது இல்லை கடல்.

      Delete
  73. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
    Replies
    1. @ஸ்டீல் சகோ
      பாட்டு ஒண்ணு பதிவு பண்ணுங்க

      Delete
    2. ஏலே இந்த மாத புத்தகங்களை படித்து முதலில் விமர்சனம் போடுல ;-)

      Delete
    3. எல் தம்பி படிக்க ஆரம்பிச்சா பத்தாதுல....சேத்து வச்சி ஒரு வாரம் முழுக்க படிப்பம்ல

      Delete
  74. முன்னாடி ஒரு காலத்தில்,
    என்னோட ஃபேவரைட் பிராண்ட்
    "‌ மேஜிக் மூமெண்ட் " தான்.

    இப்பவெல்லாம்
    8 PM , Green Label தான்.

    பழைய நாட்களை ஞாபகப்படுத்திய நண்பருக்கு நன்றி.

    எப்படியோ
    " Magic Moment " கிட் ஆனா சரிதான்...

    ReplyDelete
  75. This comment has been removed by the author.

    ReplyDelete
  76. ..காரிகன் ஸ்பெஷல் 2....
    முழுவதுமாக படித்தாயிற்று.
    முத்தான பத்து கதைகள். அத்தனையும் அருமை.
    இதில் மடலாய மர்மம் மட்டுமே
    என் நினைவில் உள்ளது. மற்றவற்றை இப்போதுதான் வாசிப்பதாக ஞாபகம்.
    வைரஸ் எக்ஸ்,
    பழிவாங்கும் பாவை,
    கடலில் தூங்கிய பூதம் என
    எல்லாமே அருமையான கதைகள்.
    மரணம் அறியா மனசு.
    தன் உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு மனதை மாற்றி வைக்கும் ஆபரேஷன் முயற்சியில், ஒரு டாக்டருடன் ஈடுபடும் ஒரு பணக்காரனின் கதை
    நம்ப முடியாத கதையாக இருந்தாலும் படிக்க படு சுவாரசியமாக உள்ளது.
    சவப்பெட்டியின் பாதையில்,
    கருத்தரங்கில் களேபரம்,
    சவப்பெட்டியை தேடி,
    மதி மறந்த வஞ்சம்,
    காதலுக்கு கண்ணில்லை
    என அனைத்து கதைகளும் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாதவை.
    எல்லாமே ரசிக்கும்படியாகவே இருந்தது.
    சிறந்த கதைகளை தேர்வு செய்து கலெக்டர்ஸ் ஸ்பெஷல் வடிவில் கொடுத்த ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும்

    ReplyDelete
  77. First 10. Kulla varalam nu partha
    Thoongidivom poleye

    ReplyDelete