Powered By Blogger

Saturday, April 27, 2024

உள்ளேன் ஐயா !

 நண்பர்களே,

 

வணக்கம். ஒற்றை ஞாயிறுக்கு லீவு போட்டான பின்னே இதோ மறுக்கா “உள்ளேன் ஐயா!” என்றபடிக்கே ஆஜராகியுள்ளேன்! நிஜத்தைச் சொல்வதானால் சமீப வாரங்களில் பதிவுப் பக்கத்தில் பெருசாய் ஒரு சுறுசுறுப்பு தென்படாத காரணத்தினால் போன வியாழனிரவு அந்த ”எலக்ஷன் செலக்ஷன்” பதிவைப் போட்டு விட்டு, அதையே அந்த வாரயிறுதிக்கான பதிவாகவும் ஒப்பேற்றிட எண்ணியிருந்தேன்! ஆனால் ஞாயிறுக்கும் பதிவு வரக்காணோம் என்ற பிற்பாடு, ஏகப்பட்ட கவலை தோய்ந்த குரல்கள் எனது வாட்சப்பில் மாத்திரமன்றி, நமது ஆபீஸ் வாட்சப் நம்பரிலும் பதிவாகியிருந்ததைப் பார்த்த போது “ஜெர்க்” அடித்தது! உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், கோபால் பல்பொடி ரேஞ்சுக்கு  அசல்நாடுகளிலிருந்தும் “எல்லாம் ஓ.கே. தானுங்களா?” என்ற வினவல்கள் வரப்பெற, ரொம்பவே பப்பி ஷேமாகிப் போச்சு – லீவு லெட்டர் கூட ஒப்படைக்காது காணாது போனது குறித்து!

 

Truth to tell – மாதாமாதம் மேஜையில் வந்து குவியும் கதைகளுக்குள் புகுந்து பட்டி-டிங்கரிங் பார்க்கும் பணிகளிலேயே கணிசமான “தம்” காலாவதியாகிப் போவதால், இன்ன பிற பணிகளுக்குள் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்க ஜீவன் இருக்க மாட்டேன்கிறது! And no different this month too – ரெகுலர் தடம் + ஆன்லைன் மேளாவுக்கான இதழ்கள் என்ற பட்டியலுடன் ! ரெகுலர் தடத்து மெயின் இதழான டேங்கோவுக்குப் பேனா பிடித்தது நானே என்பதால் அங்கே எடிட்டிங்கில் பெருசாய் நோகவில்லை தான்! ஆனால் கதைக்குள் பயணிக்கும் போது கதாசிரியர் Matz-ன் கதை நகற்றும் பாணிகளுக்கு அட்ஜஸ்ட் ஆகிக் கொள்ள கொஞ்சம் நேரம் பிடித்ததென்னவோ நிஜம் தான்! கதை மாந்தர்கள் உரையாடிக் கொள்வது பாதி என்றால் பின்னணியில் இருந்தபடிக்கே கதாசிரியர் monologue-ல் சொல்வது மீதி! அந்தக் குரலில் லைட்டான நையாண்டி; கொஞ்சம் தத்துவார்த்தம்; மேலோட்டமாய் வரலாறு என்றெல்லாம் இழையோட வேண்டியிருப்பதால், அதற்கேற்ற கரணங்களை கூகுள் துணையோடு அடிக்க வேண்டியிருந்தது! இம்முறை டேங்கோ & மரியோ சாலடிப்பதோ ஈக்வெடோ தேசத்தில்! And வழக்கம் போலவே கும்பல் கும்பலாய் தறுதலைகள் நம்ம லோன்ஸ்டாரை வேட்டையாடப் பின்னணியில் துரத்தி வருகின்றனர். மிரட்டலான லாங்-ஷாட் ஓவியங்கள்; இயற்கை காட்சிகள் என்று ஓவியர் தாறுமாறு - தக்காளிச் சோறு கிண்டுகிறாரெனில், கலரிங் ஆர்டிஸ்டும் தனது பங்குக்கு வூடு கட்டி அடித்துள்ளார்! And லேட்டஸ்ட் டிஜிட்டல் கலரிங் பாணி என்பதால் அச்சிலும் பட்டையைக் கிளப்பியுள்ளது! So இம்மாதத்து ”தவணையில் துரோகம்வாசிப்பில் தவணை முறையினைக் கோரிடாது! கதைக்குள் புகுந்தால் நிச்சயமாய் 30 நிமிடங்களுக்காவது வேறெந்த வேலைக்குள்ளேயும் ஈடுபட மனசு வராது என்பேன்! செம ஸ்பீடான த்ரில்லர் இது! ஒரே ஒரு வேண்டுகோள் though! இதற்கு முன்பான 3 டேங்கோ சாகஸங்களையும் மேலோட்டமாய், லைட்டாய் ஒரு புரட்டு புரட்டிக் கொண்டீர்களேயானால் – ”இந்த அத்தாச்சி எதுக்கு டுப்பாக்கியைத் தூக்கிட்டு சொர்ணாக்காவா பாயுது?”; ”அந்த மொட்டை பாஸ் எதுக்கு கோட்டும் சூட்டும் போட்டுகினு மிக்சர் சாப்பிட்டுத் திரியறான்?”. நம்ம நாயகர்களுக்கு ஈக்வெடோவில் என்ன ஜோலி? என்பனவெல்லாம் சுலபமாகி விடும்! Of course – என்னைப் போலான வெண்டைக்காய் பார்ட்டியாக நீங்கள் இல்லாது முன் கதைகள் ஸ்பஷ்டமாய் நினைவிருக்கும் பட்சத்தில், no worries – dive right in! இதோ – ஒரிஜினல் அட்டைப்படம், லேசான கலர் மாற்றங்களோடு and உட்பக்கப் பிரிவியூக்களுமே!




போன வாரத்தில் என்னை பிஸியாக்கிய அடுத்த கோஷ்டி – நம்ம உட்சிட்டியின் அட்ராசிட்டி போல்ஸ்கார்ஸ் தான்! இப்போதெல்லாம் ஆண்டுக்கு ஒருவாட்டி டாக்புல் & ஆர்டின் தலை காட்டினாலே பெரிய சமாச்சாரம் என்றான பிற்பாடு, அந்த ஒற்றை ஆல்பமும் இயன்றமட்டுக்கு சிரிப்புகளுக்கு பஞ்சம் வைக்கப்படாது என்ற ஆதங்கம் எனக்கு! So ”கடமையைக் கைவிடேல்” பணிகளுக்குள் கடமை கந்சாமியாய் புகுந்த போது நிறையவே மாற்றி எழுதினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது! அப்புறமென்ன, உட்சிட்டியிலேயே சில தினங்களுக்கு டேரா! And சமீப இதழ்களைப் போலவே இதனிலும் ஆர்டினுக்குத் தான் ஒளிவட்டத்தின் பெரும்பங்கு! So ப்ரான்கோ-பெல்ஜிய கவுண்டமணி, செந்தில் ஜோடிக்கு இயன்றமட்டும் நியாயம் செய்வதில் மெனக்கெட்டால் தப்பில்லை என்று பட்டதால் இதனுள் கணிசமாகவே நேரத்தை செலவிட்டேன் - செம ஜாலியாய்! இதோ – நம்ம சிரிப்பு போலீஸாரின் அட்டைப்பட முதல் பார்வை !! பொதுவாய் ”கார்டூன்களாாாா??” என்று ஜெர்க் அடிப்போராக நீங்கள் இருந்தாலுமே இந்த ஒற்றை இதழுக்கு உங்களது கொள்கைகளை தளர்த்திக் கொண்டால் தப்பிராது என்பேன் – becos இது யாருக்கும் பிடிக்காது போக வாய்ப்புகள் ரொம்ப கம்மி! An absolute laugh riot folks!

“ரைட்டு மாதத்தின் இரண்டு கலர் இதழ்களையும் சமாளிச்சாச்சு.. நம்ம V காமிக்ஸின் ”தலைவனுக்கொரு தாலாட்டு” ரெடியாகி இருந்தால் மேலோட்டமாய் ஒரு பார்வை பார்த்துப்புட்டு அச்சுக்கு அனுப்பிடலாம்!” என்று சாவகாசமாக இருந்தேன்! ஆனால் V காமிக்ஸின் எடிட்டர் எனக்குப் போட்டியாக ‘திருதிரு‘வென முழித்தபோதே புரிந்தது – மைசூர்பாகில் பதம் சொதப்பி இருக்கும் போலும் என்பது! என்ன பிரச்சனை? என்றபடிக்கே கதையை வாங்கிப் பார்த்த போது தான் புரிந்தது – இதனில் பணி செய்திருந்த சகோதரி கேப் வி்ட்டு, கேப் விட்டு எழுதியிருக்கிறார் என்பது! அனுபவம் வாய்க்கும் வரையிலுமாவது கதைகளின் பணிகளில் பெரியதொரு இடைவெளி விடுவது அத்தனை சுகப்படாது என்பதை நான் நிரம்பவே பார்த்திருக்கிறேன்! ஒரு கதைக்குள் மாத ஆரம்பத்தில் சீட்டியடித்தபடிக்கே ஜாலியாகப் புகுந்திடும் போது வரும் வரிகளுக்கும், மாதக் கடைசியில் E.B. பில்லைப் பார்த்த வவுத்தெரிச்சலோடு தயாரி்த்திடும் வரிகளுக்கும்  மத்தியில் கணிசமாகவே வேற்றுமைகள் இருப்பதுண்டு! And இங்கே ஆகச் சரியாய் அதுவே நிகழ்ந்திருக்கிறது! V எடிட்டர் அதனைச் செப்பனிட முயன்றிருந்தும் கதையின் பின்பகுதி முழுசுமாய் மாற்றி எழுதிடாது தேறாது என்பது புரிந்தது! பெருமூச்சு, சிறுமூச்சு என்ற சிக்கின மூச்சிகளையெல்லாம் விட்டபடிக்கே அதனுள்ளும் புகுந்திருக்கிறேன்! இதோ, இந்தப் பதிவை எழுதி முடித்த கையோடு கடைசி 30 பக்கங்களை புதுசாய் எழுத  ஓடிட வேண்டும்! இது மாதிரியான நிகழ்வுகள் தொடர்கதைகளாகிக் கொண்டே போகும் போது தான் – மறுபதிப்புகளும் நமது கருணையானந்தம் அங்கிள் எழுதித் தரும் க்ளாஸிக் கதைகளும், ராஷிகண்ணா + தமன்னாவின் டபுள் டமாக்கா டான்ஸாட்டம்  என்னை வசியம் செய்கின்றன!



மறுபதிப்பா? ரைட்டு!! ‘க்‘...‘ப்‘....‘ச்‘... ஒற்றுப் பிழைகளைப் பார்த்துப்புட்டு அப்படியே வண்டியை அச்சாபீஸ் திசையில் சுளுவாய் திருப்பிவிட்டுப்புடலாம்!

 

க்ளாஸிக் கதைகளா? அந்தக் கதை பாணிகளுக்குக் காலமாய் ‘செட்‘ ஆகிப் போயுள்ள எழுத்து நடையே தாராளம் என்பதால் அங்கேயும் எனக்கு பிழைதிருத்தங்களைத் தாண்டிய நோவுகள் லேது! Of course – ஏக் தம்மில் எட்டோ – ஒன்பதோ, பத்துக் கதைகளைச் சமாளிப்பது என்பது வேறு விதத்தில் நாக்குத்தள்ளச் செய்யும்தான்; But at least நான் மண்வெட்டி கடப்பாரை சகிதம் ஸ்கிரிப்டுகளுக்குள் புகுந்திட அவசியம் இராதே! So ”கண்ணா... ரெண்டு லட்டு தின்ன ஆசையா?” என்ற சபலம் எனக்கு அவ்வப்போது எழுவது இவ்விதம் தான்! 


இதோ – நம்ம V காமிக்ஸின் previews படலம்!




 

பதிவு வண்டி ஸ்டார்ட்டிங் ட்ரபிள் கொள்வதற்கு இன்னொரு காரணம் – டி.ராஜேந்தர் அவர்கள் பாணியில் நானே கதை எழுதி; மீசிக்கும் போட்டு, நடிக்கவும் முனைவதால் தான்! முன்பெல்லாம் பதிவுகளை பேப்பரில் எழுதிக் கொடுத்து விடுவேன் & சனி மாலைக்குள் டைப்படித்து வந்து சேர்ந்து விடும்! ஆனால் நாளாசரியாய் டைப்பாகி வரும் ஸ்க்ரிப்டில் தாமதமாகிக் கொண்டே போக, நானே மண்டைக்குள் வரிகளை வடிவமைத்துக் கொண்டே, நானே டைப்பும் அடித்து விடுவதென்று தீர்மானித்தேன்! முறையான டைப்பிங் பயிற்சியில்லாத நமக்கு கீபோர்டில் ஒருவிரல் கிருஷ்ணாராவ் ரேஞ்க்குத் தான் லொட்டு – லொட்டென்று தட்ட முடியுமென்பதால் ஒரு decent நீளத்திலான பதிவை பூர்த்தி செய்ய குறைந்தது 4 மணி நேரங்களாவது ஆகிப் போகிறது! ஏற்கனவே ஒரு கத்தைப் பணிகளை முடித்து வந்த கையோடு பதிவில் 4 மணி நேரங்களைச் செலவிட்டு விட்டு மறுக்கா இன்னொரு லோடு பணிகள் காத்திருப்பதை நினைக்கும் போதே கண்ணை இருட்டிக் கொண்டு வருவதுண்டு ! So மரியாதையாய், பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு பதிவை எழுத மட்டும் செய்வது தான் இனி சுகப்படும் என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டேன்! இதோ – இன்றைய இந்தப் பதிவு விறுவிறுவென்று எழுதும் போது ஒன்றரை மணி நேரத்திற்குள் பூர்த்தியாகி விட்டது! இனி எல்லாம் பேப்பரே!

 

இவையெல்லாம் குட்டியும், குருமானுமான காரணங்களெனில், மெயினான காரணமோ – பொதுவான சோம்பல் / அயர்ச்சி என்பேன்! பொதுவாக எல்லாப் பொதுவெளி முயற்சிகளுக்குமே ராக்கெட் எரிபொருளாக அமைவது மறுபக்கத்தில் உள்ள நண்பர்களின் interactions தான்! ”பாருங்கோ ஷார்ர்ர்... கம்பி மேலே நடக்குது! அல்லாரும் ஜோரா ஒரு தபா கைதட்டுங்க!” என்று சாலைகளில் வித்தை காட்டுவோரிடம் இருந்து நாமும் பெரிதாய் இந்த விஷயத்தில் மாறுபட்டிருப்பதில்லை! கைதட்டல்களோ, கழுவி ஊற்றலோ – இரண்டில் எது கிட்டினாலுமே உங்களிடமிருந்தான interactions என்ற திருப்தியில் வண்டி ஓட்டமெடுக்கும்! மாறாக – ‘ஆங்... சரி... ரைட்டு... அம்புட்டு தானே! சரி... படிச்சாச்சி! நான் கிளம்பறேன்!‘ என்றபடிக்கு நண்பர்களில் பலர் மௌனம் காக்கும் போது, புதுப்பேட்டை படத்தில் தனுஷ் ”யாராச்சும் இருக்கீங்களா? ரொம்ப பயம்மாாாா கீது!” என்ற கூவும் sequence தான் மனதில் ஓடும்! Of course தளத்தில் கிட்டிடும் page views இன்னமும் சீராய்த் தொடர்ந்திடுகிறது! So நீங்களிங்கு ஆஜராவதும், வாசிப்பதும் ஐயமின்றிப் புரிகிறது! But ‘எங்க ஊரிலே மாடு செவல கலரிலே கன்று போட்டுருக்கு – தெரியுமோ?‘ என்ற ரேஞ்சுக்கேனும் எதையேனும் பின்னூட்டமிட்டால், சக்கரங்கள் கீறிச்சிடாமல் சுழலக்கூடுமல்லவா guys? And yes – ஏதாச்சும் ஸ்பெஷல் அறிவிப்புகள்; flashbacks; க்ளாசிக் பார்ட்டிகளின் மறுவருகை - என்ற ரீதியில் பதிவுகள் அமையும் போது ‘கில்லி‘ படத்து ரீ-ரிலீசுக்கான கூட்டத்தைப் போல இங்கு அதகளங்களை அரங்கேற்ற நீங்கள் தவறுவதில்லை தான்! So உங்களைக் குறை சொல்வது நிச்சயமாய் பொருத்தமாகிடாது! இதை போல அந்நாட்களில் பேஸ்தடித்த ஒரு மதியம், சூட்டைக் கிளப்பிடுவதற்காகவே அறிவித்தது தான் MEGA DREAM ஸ்பெஷல்! அது நமது லிஸ்டில் ஒரு மெகா ஹிட்டாகியதை நாமறிவோம்! ஆனால் இன்றைக்கோ சும்மானாச்சும் ஸ்பெஷல் இதழ்களை அறிவிப்பது நடைமுறையில் சாத்தியக்குறைவாகவே உள்ளதெனும் போது  அடக்கி வாசிக்க வேண்டியுள்ளது!

 

ஆனால் இதோ – வாகாக ஒரு வாய்ப்பு இந்த மே மாதத்தில் ”ஆன்லைன் மேளா”வின் புண்ணியத்தில் வாய்த்துள்ளதால் உள்ளாற பட்டாப்பெட்டி இருக்கிற தைரியத்தில் வேஷ்டியை ஏற்றிக் கட்டிக்கினு களமிறங்கத் தயாராகி வருகிறோம்! மே மாதத்தின் முதல் வார இறுதியையே நடப்பாண்டின் ஆன்லைன் மேளாவுக்கென ஒதுக்கிடலாமா guys? ‘ஓ.கே.‘ என்றீர்களானால் ஏற்பாடுகளைச் செய்திட வேண்டியது தான்! What say all?

 

ரைட்டு... மே மாதத்தின் ரெகுலர் இதழ்களில் டேங்கோ & சிக் பில் பிரிண்ட் ஆகியாச்சு! இன்றும், நாளையுமாய் ஏஜெண்ட் ராபினையும் நிறைவு செய்திட்டால் – திங்களன்று அவரும் அச்சுக்கு சென்றிடுவார்! பைண்டிங்கிலிருந்து புக்ஸ் கிடைக்கப்பெறுவதற்கு ஏற்ப புதனன்றோ, வியாழன்றோ டெஸ்பாட்ச் இருந்திடும்! So ‘தலைவனுக்குக்கொரு தாலாட்டு‘ பாட நான் புறப்படுகிறேன்! Have a Sunny weekend all! See you around!!

268 comments:

  1. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  2. வந்தமைக்கு மிக்க நன்றி ஆசிரியரே 🙏🙏🙏

    ReplyDelete
  3. வாங்கய்யா வாங்க..😍😘😘😘😘😘😘😘

    ReplyDelete
  4. இப்போது தான் பிளாக்கில் வெளிச்சம் தெரிகிறது ஆசிரியரே! மிக்க நன்றி 🙏🙏

    ReplyDelete
  5. May 1st week is good timing sir for Online Mela ! I am game !!

    ReplyDelete
  6. அப்பாடி ஒரு வழியாக பதிவு வந்துவிட்டது

    ReplyDelete
  7. //உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், கோபால் பல்பொடி ரேஞ்சுக்கு அசல்நாடுகளிலிருந்தும் “எல்லாம் ஓ.கே. தானுங்களா?” என்ற வினவல்கள் வரப்பெற ரொம்பவே பப்பி ஷேமாகிப் போச்சு – லீவு லெட்டர் கூட ஒப்படைக்காது காணாது போனது குறித்து//

    ஆமாங்க ஆசிரியரே
    ரொம்ப கவலையாகிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க எடி சார்..😍😘

      ச்சும்மானாச்சுக்கும் வந்து
      'மாசாமாசம் வர்ற புக்க படிச்சு ஒரு feedback ம் யாரும் போட மாட்டேங்கறீங்க'..😃

      அதனால "உங்கப்பேச்சு கா" ன்னாவது சொல்லிட்டு போயிருக்கலாம்..😔

      மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சுங்க சார்..😶

      Delete
  8. ஆன்லைன் புத்தக திருவிழா பற்றி ஒரு வரி கூட சொல்லவில்லையே தலைவரே

    ReplyDelete
    Replies
    1. //ஆனால் இதோ – வாகாக ஒரு வாய்ப்பு இந்த மே மாதத்தில் ”ஆன்லைன் மேளா”வின் புண்ணியத்தில் வாய்த்துள்ளதால் உள்ளாற பட்டாப்பெட்டி இருக்கிற தைரியத்தில் வேஷ்டியை ஏற்றிக் கட்டிகினு களமிறங்கத் தயாராகி வருகிறோம்! மே மாதத்தின் முதல் வார இறுதியையே நடப்பாண்டின் ஆன்லைன் மேளாவுக்கென ஒதுக்கிடலாமா guys? ‘ஓ.கே.‘ என்றீர்களானால் ஏற்பாடுகளைச் செய்திட வேண்டியது தான்! What say all?//

      Delete
  9. மே முதல் வாரம் ஆபுவி கொண்டாட நாங்க ரெடி!!!

    ReplyDelete
  10. ஆசிரியர் சாருக்கும்அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் .ராஜசேகரன்

    ReplyDelete
  11. @ALL : ஞான் ரயிலில் ஊருக்குத் திரும்பிக் கொண்டேயிருக்க, ஆபிசிலிருந்து டைப் செய்து வந்ததை அப்டியே போட்டிருக்கின்றேன் - proofread செய்யாமலே ! So கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ் !

    ReplyDelete
    Replies
    1. No problem Sir. பதிவு வந்தா மட்டும்போதும்

      Delete
    2. எங்களுக்கு உங்கள் பதிவு தான் முக்கியம் சார்.

      Delete
    3. Proof Reading வேலை நாங்க பண்ணிடுறோம், ஆசிரியரே 😊😁

      Delete
    4. // So கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ் ! //
      நீங்க வந்தா மட்டும் போதுங்கோ...

      Delete
  12. டியர் விஜயன் சார், 
    இவ்வளவு நீளமான பதிவுகளை, நீங்கள் இன்னமும் கைப்பட எழுதிக் கொண்டிருப்பது வியப்பான விஷயம் தான் சார், அதைக் கைவிடாதீர்கள்! நானெல்லாம், கையெழுத்து போடவும், காது குடையவும் தான் பேனாவை வெளியேவே எடுக்கிறேன்! ரொம்ப நாளைக்குப் பிறகு வரிசையாக சில பதிவுகளை போடுவதற்குள்ளாகவே எனக்கு நாக்கு தள்ளி விட்டது! நீங்கள் வாரா வாரம் இவ்வளவு பெரிய பதிவுகளை, அதுவும் ஆண்டுக்கணக்காக தவறாமல் எழுதி வருவது குறைந்தபட்சம் ஒரு லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்-இல் இடம்பெறத்தக்க வேண்டிய சாதனை!

    அந்த "ஜோரா கைதட்டுங்கோ" மேட்டரை புரிந்து கொள்ள முடிகிறது சார், இல்லை என்றால் யாருக்காக மெனக்கெட்டு எழுதிக் கொண்டிருக்கிறோம் என்ற ஒரு அலுப்பு வந்துவிடும் தான்! இங்கே கமெண்டு போடக் கூடாது என்று வேண்டுதல் எல்லாம் ஒன்றுமில்லை, ஒற்றை புக்கைக் கூட படிக்காமல் சும்மா சும்மா எதையாவது குறை சொல்ல மட்டுமே இங்கே வருகிறோமோ என்ற ஒரு எண்ணம் தான்!

    ReplyDelete
    Replies
    1. பதிவு மட்டும் தான் என்றில்லை கார்த்திக் ; மொழிபெயர்ப்பின் முழுமையுமே நான் கையால் எழுதுவது தான் ! முடிந்த பணிகளுக்கான ஸ்கிரிப்ட் கத்தைகளை ஆபிசில் அடுக்கி வைத்திருப்பது அவ்வப்போது கண்ணில் படும் சமயங்களில் "ஆத்தீ" என்ற மலைப்பு ஒரு நொடிக்கு அலையடிக்கத் தான் செய்யும் !

      அநேகமாக writing pads & பால்பாய்ண்ட் பேனாக்களை அதிகமாய் பயன்படுத்தியிருப்பது தலீவருக்கு அடுத்தபடியாக நானாகத் தானிருப்பேன் !

      Old school !!

      Delete
    2. நான் பேப்பர் ல் எழுதிப்
      பார்த்தே f b... ல் பதிவிடுவேன் சார்... ❤️👍

      Delete
  13. சார் .இந்தமாதிரி போனவாரம்இடையில் ஒரு ஹாய் சொல்லி இருந்திருக்கலாங்க சார்

    ReplyDelete
  14. உங்கள் ரசனையுள்ள எழுத்து நடையை தனி ஆனந்தம் தான் ஆசிரியரே. இதற்காக தான் இத்தனை நாட்கள் நாங்கள் காத்திருந்தோம் ☺️☺️🥰

    ReplyDelete
  15. ஆன்லைன் மேளா மே பர்ஸ்ட் வீக்னா..
    மே 3&4 ங்களா சார்..😍

    Ok தான்..But special books எல்லாம் அதுக்குள்ள ரெடி பண்ண முடியுங்களா..😟

    மே 2nd week.. மே 10&11 -ன்னா double Ok சார்..😍😘😃😀

    ReplyDelete
  16. என்னங்க ஆசிரியரே
    ஒரு வாரம் கழித்து பதிவு வந்திள்ளது
    மே மாத ஆன்லைன் புத்தக விழா இன்னும் கொஞ்சம் சொல்லுவீங்க எதிர்பார்ப்புடன் இங்கே பாய் விரித்து உட்கார்ந்து உள்ளோம்

    ReplyDelete
    Replies
    1. ஒரு ஏர்-பில்லோ அனுப்புறேன் ரம்யா.....அப்டிக்கா புதன் வரைக்கும் லைட்டா ஒரு தூக்கத்தை போடுங்க பாயிலே !

      Delete
    2. 😊😊😊😁😁

      புதன் அன்று முதல் கமெண்ட் போட ரெடிங்க, ஆசிரியரே

      Delete
  17. அட்டைப் படங்கள் அருமை - எடிட்டர் சார்!
    நீண்ட நாட்களுக்குப் பிறகு வுட்சிடி ஆசாமிகளின் காமெடி ரகளையைப் படித்திடப்போவதால் - மனசுக்குள் மத்தாப்பு!!

    டிடெக்டிவ் ராபின் கதையை படிக்கப் போவதும் - மனசுக்குள் சரவெடி!

    ReplyDelete
    Replies
    1. சரவெடி ரைட்டு...but எப்போ போடுவீங்களாம் ?

      Delete
  18. கமெண்ட் சப்ஸ்கிரிப்ஷன் பல வாரங்களாக வேலை செய்யவில்லை! ஜுனியரிடம் கொஞ்சம் என்னவென்று பார்க்கச் சொல்லுங்கள் சார்! லயன்முத்து குழுமத்தில் இருந்து ஃப்ரீயாக கிடைக்கும் ஒரே சப்ஸ்கிரிப்ஷன் அது மட்டும்தான்! :-D 

    ReplyDelete
    Replies
    1. காசு குடுத்து வாங்குற சப்ஸ்க்ரிப்ஷனையே வாசிக்கப் போறதில்லே ; இதிலே விலையில்லா சப்ஸ்கிரிப்ஷனை எங்கே வாசிக்கப் போறீங்கன்னு blogger.com நினைச்சிருக்கும் போல கார்த்திக் !!

      Delete
  19. Appada Saturday ippo than vantha mathiri irukku

    ReplyDelete
  20. அப்பறம் லீவு போட்டாக்கூட ஓகே. ஆனா லீவுன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போட்டுட்டீங்கன்னா நிம்மதியா இருக்கும்.

    லீவு லெட்டர் தராம லீவு போட்டதுக்கு அபராதமா ஒரு நல்ல குண்டு புக்கா அபராத ஸ்பெசல்னு ஒண்ணை மறக்காம ரிலீஸ் பண்ணிடுங்கோ.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் தான். அபராத ஸ்பெஷல் +1

      Delete
    2. வரவேற்கிறேன். ஆமோதிக்கின்றேன்.
      எப்படியாவது ஒரு குண்டு புக் வாங்கித் தாருங்கள் அமெரிக்கா சார்.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. வேண்டும்.. வேண்டும்..

      இளவரசியின் குண்டு புக் வேண்டும்..

      #இளவரசியின் அமெரிக்க கள்ள காதலர்..

      Delete
  21. நிறைய பேருக்கு Blog blocked by court order னு error காமிச்சு அப்பறம் அதுவா சரியாகி இருக்கு போல.

    ReplyDelete
  22. சில பேருக்கு Login வேலை செய்யாம இருத்துச்சுங்க, ஆசிரியரே
    ஆனால் இன்னைக்கு பார்த்து நல்லாவே வேலை செஞ்சுருக்கு

    ReplyDelete
  23. @Edi Sir..😍😘

    மே 2nd வீக்னா..
    சிலபல புக்ஸ் கூடுதலா கிடைக்க வாய்ப்பிருக்கே..😃😍😘😀

    அதனால மே 2nd வீக் தான் சரியா இருக்கும்..

    மேலும்.. நண்பர்கள் கையில் முன்னே பின்னே பணப்புழக்கம்
    இருக்கும்..
    அதனால..மே 2nd week "ஆன்லைன் மேளா" ஏற்பாடு பண்ணுங்க சார்..🙏👍

    ReplyDelete
    Replies
    1. மே ரெண்டாவது வாரம் எங்களுக்கு இங்கே சிவகாசியில் விடுமுறையாக இருக்கும் சார் ; இரண்டாவது கோவில் திருவிழாவினை முன்னிட்டு ! அதனால் தான் மொத வாரம்னா தேவலாம் என்று நினைத்தேன் !

      இல்லாங்காட்டி மூன்றாம் வாரம் தான் !

      Delete
    2. முதல் வாரமே வைத்து விடலாம் ஆசிரியரே
      மூன்றாவது வாரம் வரை தாங்காது

      Delete
  24. At last the waiting is over.... And as usual there is a lot to know from you sir. EXPECT THE UNEXPECTED from our Editor. 🥰💓

    ReplyDelete
  25. சின்ன பதிவா போச்சே....என்ன சின்னத்துக்கு வாக்களிச்சாரோ....



    சார் நம்ம சின்னம் காமிக்comic சின்னந்தான



    அட்டைப்படம் ரெண்டுமே செம....டேங்கோ சுரண்டலாளர்களால் மங்கலான மரங்களுக்கு மத்தில் பளிச் சிவப்பில் தகிப்பத நேரில் பாக்க தவிக்கிறேன்.பின்னட்டை வித்தியாசமாருக்குமோ....


    நீலவான நிலவின் பிடில நம்ம வுட்சிடி போலீஸ் அட்டை அருமா....கிரிமுறி இதுலயும் வரும் போலவே

    ReplyDelete
    Replies
    1. நானும் மறந்ததால் பழய கதைகள் எடுக்கனும்னு நெனச்சா நீங்களும் சொல்றீய..

      Delete
    2. இன்னைக்கே சொல்ல முடியாதா சர்ப்ரைஸ்....அப்புறம் நா சொல்லிடுவேன் ....சஸ்பென்ஸ் உடையகூடாதுன்னா

      Delete
  26. ஆன்லைன் மேளா 2வது வாரம் வந்தால் நன்றாக இருக்கும்...மேலும் அது பற்றிய அப்டேட்ஸ் க்கு வெயிட்டிங் 🙃...இளம் டெக்ஸ் துண்டு துண்டாக போடாமல் "எதிரிகள் ஓராயிரம்" போன்ற பார்மட்டில் வந்தால் படித்த முழு திருப்தி கிடைக்கும்...என் போன்ற இளசுகளை கவர மாங்கா காமிக்ஸ் எப்போது இறக்குவீர் எடி sirrrrrrr (பி.கு- இது எனது முதல் வலைப்பதிவு😅)

    ReplyDelete
    Replies
    1. வாங்க கார்த்திக் வெல்கம்

      Delete
    2. .////என் போன்ற இளசுகளை கவர ////

      ப்ளாக்குல பொய் சொன்னா மாட்டிக்குவிங்க கார்த்திக்...

      பொய் சொன்னா பெல்லடிக்கிற மிசினு வெச்சிருக்கோம்.!

      Delete
    3. ஆதார் கார்டு காட்டுனா தான் நம்புவிங்க போலயே😅

      Delete
    4. Kumar Salem \\ நன்றி சகோ❤️

      Delete
    5. வருக வருக வருக வருக இளஞ்சிங்கமே.

      அன்புடன் சின்னமனூர் சரவணன்.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. அதிலும் பிறந்த தேதி அப்டேட் பண்ணி இருக்கணும். அப்பதான் நம்புவோம்.
      Warm welcome our comics ground

      Delete
    8. மாங்கா வேணா சாப்பிடலாம், கொஞ்சமா மசால் தொட்டு - என்கிறார்கள் நம்ம "யூத்" அணியினர் !! அதும் கல்லாமை ; இல்லாங்காட்டி பஞ்சவர்ணம்னா தேவலாம் என்று தகவல் !!

      Delete
  27. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  28. ## அநேகமாக writing pads & பால்பாய்ண்ட் பேனாக்களை அதிகமாய் பயன்படுத்தியிருப்பது தலீவருக்கு அடுத்தபடியாக நானாகத் தானிருப்பேன் !

    Old school !! ##

    @Edi Sir..😍😘

    இப்பதான் நாம பேசுறதை அப்படியே
    டைப் ல காமிக்கிறமாதிரி software எல்லாம்
    வந்துடுச்சே..😘
    அதை யூஸ் பண்ணிபாருங்க..👍👌

    New School..!!!😃

    ReplyDelete
    Replies
    1. அதுவும் நம்மள மாதிரிதான் போல. ஏகப்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும். ப்ரூஃப் திருத்தித்தான் post போடணும்.

      Delete
    2. Yes !! அதுவும் பிழைகள் குண்டக்க-மண்டக்க வந்து சேருகின்றன !

      Delete
  29. ஆன்லைன் பு. வி உங்களுக்கு வசதியான வகையில் எப்போது வேண்டுமானாலும் வையுங்கள் ஐயா...

    அட்டெண்டன்ஸ் போட நாங்க ரெடி!

    ReplyDelete
  30. காரிகன் ஸ்பெஷல் கதை ஒன்னு கதை 1: _காதலுக்கு கண்ணில்லை

    காதலில் விழுந்தேன் என்பதுதான் கதையின் ஒன்லைன்...

    அமெரிக்காவில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் தப்பிச்சென்று மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஒரு அமைப்பிடம் புகலிடம் தேடிக் கொள்கிறார்கள். அப்படி தப்பிச்செல்ல திட்டமிட்டு இருக்கும் வொர்க் என்ற குற்றவாளியை காரிகன் மடக்கி பிடிக்க, அவனுடைய எதிர்கால திட்டம் பற்றி அறிந்து கொள்ள ஆள் மாறாட்டம் செய்து FBI காரிகனை அனுப்புகிறது.

    அந்த தீவுக்கு வந்திருக்கும் காரிகனை வேவு பார்த்து அழைத்துச் செல்கிறார் உள்ளூர் போலீஸ் அதிகாரி.

    அந்த போலீஸ் அதிகாரிக்கும், புகலிடம் தரும் அமைப்பின் தலைவிக்கும் பார்ட்னர்ஷிப்.

    தலைவியின் மேல், போலீஸுக்கு ஒருதலை காதல். பிறகென்ன, முக்கோண காதலில் வெல்பவர் யாரென போட்டி தொடங்குகிறது (இதுவும் ஒருதலையாக)...

    * காரிகன் மீண்டு வந்தாரா?
    * ஏற்கனவே தப்பி வந்த கைதிகளுக்கு காத்திருந்தது என்ன?
    * FBI யின் பிடியில் சிக்கினார்களா?
    என்பதை கதையில் ஆக்சன் கலந்து சொல்லி இருக்கிறார்கள்...

    ReplyDelete
  31. Super....the new arrivals. Vera level. 💓

    ReplyDelete
  32. காரிகன் ஸ்பெஷல் கதை 2: சாவியைத் தேடி

    சிண்டிகேட்டின் உறுப்பினராக இருக்கும் ஜோ பால்கன் அதிலிருந்து விலகி வாழ்கிறார்.

    சமூக விரோத செயல்களை செய்து வரும் சிண்டிகேட்டின் ரகசியங்களை அறிந்துள்ள ஜோ பால்கன், அந்த நடவடிக்கைகளில் இருந்து தனது செல்ல மகளை விலக்கிய வைத்திருக்கிறார்.

    தனக்குப் பிறகு தனது மகளுக்கு பாதுகாப்பாக FBI இருக்கும் என்ற நோக்கில், சிண்டிகேட் தொடர்பான ரகசிய ஆவணங்களை FBI இடம் கொடுக்க விரும்புகிறார் அவர்.

    அதை மோப்பம் பிடித்த சிண்டிகேட் அந்த ஆவணங்களை, கைப்பற்றும் நோக்கில் ஜானி ஏஸ் மற்றும் ஸவுத்ஸைடு இருவரையும் அனுப்புகிறது...

    அமெரிக்காவில் இருந்து, ஐரோப்பாவில் உள்ள சிறு நாட்டிற்கு நகர்ந்து செல்லும் இந்த கதை, அங்கிருந்து ஸ்விட்சர்லாந்துக்கு செல்கிறது.

    கதை முழுவதும் துரத்தல்கள், வேகம் தான்...

    இந்த கதையில் காரிகன் ரயிலில் இருந்து தப்பிச் செல்வதும், இறுதி எதிரியான ஜானி ஏசை வீழ்த்துவதும் ஆக்சன் அதகளம்...

    ReplyDelete
    Replies
    1. நன்று, உடனே படித்து விடலாம்.

      Delete
    2. காரிகன் ஸ்பெஷல் எல்லாமே அற்புதமான கதைகள். படிக்க தவறவிடாதீர்கள்.

      Delete
  33. ஒருவாரம் பதிவு இல்லாம போனதுக்காக...

    தி நஷ்டஈடு ஷ்பெசல் னு ஒண்ணு போட்டு.. அந்த ஷ்பெசல் இதழுல ராமையாவையும் அமாயாவையும் ஜோடியா போட்டு ஒரு கதை வெளியிடணும்னு கேட்டுக்கிறோமுங்க...!

    ReplyDelete
    Replies
    1. ராமையாவும் அமையாவும் கதை நீங்க எழுதப் போகிறீர்களா ரவி ப்ரோ?

      Delete
    2. கதையா முக்கியம் ப்ரோ...

      Delete
    3. எப்படியாவது வாங்கி தாங்களேன். ❤️

      Delete
    4. தி நஷ்ட ஈடு ஸ்பெஷல் -super idea sir🙏🙏🙏👏👏👏

      Delete
    5. // இளவரசியின் அமெரிக்க கள்ள காதலர் //

      ROFl

      Delete
    6. அமாயா அம்மாயி ரெடியா கீது ! ஆருக்கேனும் அமாயா நற்பணி மன்றம் அமைக்க ஆசை இருக்குதா ?

      Delete
  34. மன்னிக்கணும் ஆசிரியர் சார். கடந்த ஒரு வார காலமாக உங்கள் பதிவு இல்லாமல் என்னமோ ஏதோ என்று பதறிப் போய் விட்டேன். இருந்தாலும் மனதில் நம்பிக்கை இருந்தது. காரணம் பெரிதாக இருக்காது என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. நீங்க திரும்ப வந்தது மிகவும் சந்தோஷம். தவறு எங்கள் மீது என்று புரிந்து விட்டது. இனி தளத்தை கலகலப்பாக இருக்க முயற்சி செய்வோம். நன்றி ஆசிரியர் சார்.

    ReplyDelete
    Replies
    1. வயசு ஏறிப் போகப் போக, நார்மலாய் செய்து வந்த பணிகளும் கூட ஒரு மிடறு சிரமமாய்த் தென்படுவதே நிஜம் சார் !

      Delete
  35. //இனி எல்லாம் பேப்பரே!//
    ஆல் is well.
    உண்மையில் உங்கள் டைப்பிங் கண்டு பிரமித்துள்ளேன் தான், எனினும் ஆஃப் லைனில் எழுதி வைத்து கொள்வது சாலச் சிறநதது என் நானும் கூட சொல்கிறேன்.
    டைப் அடித்த பின்னே அதனை நாம் டைப்பில் சிறப்பாக எடிட் செய்ய இயலும்.

    விச்சு கிச்சு ஸ்பெசல் போடும் யோசனை உண்டா சார்?

    ReplyDelete
    Replies
    1. விச்சு கிச்சு ஸ்பெசல் போடும் யோசனை உண்டா சார்?..........


      லாங் லாங் எதோ...நோ படி நோஸ். ஹவ் லாங் எகோ.....

      எப்பவோ சொன்னது ...கோடை மலராய்

      Delete
    2. விச்சு கிச்சு ஸ்பெஷல் வந்தா happy 😁

      Delete
    3. பார்ப்போமே guys ! அந்தக் கதைகளையெல்லாம் துவை துவையென்று மறுபதிப்புகளோடு துவைத்தாச்சே என்பது தான் நெருடல் ! But நாம போடாட்டி அடுத்த முயற்சியாய் ஆர்வல பார்ட்டீஸ் இதில் கல்லா கட்ட கிளம்பிடுவாங்க தான் !

      Delete
  36. இந்த மாதம் வெளிவந்த அனைத்து காமிக்ஸ் புத்தகங்களும் மிக மிக அருமை. காரிகன் தொகுப்பு வேறு ஒரு கதம்ப உணர்வைத் தந்தது. பவுன்சர் பார்க்க படிக்க ரசிக்க அருமையான புத்தகம். வேதாளர் திருமணம் பழங்கால நினைவுகளை மீட்டியது. டெக்ஸ் வில்லர் கதை தொடர்வது சற்றே வருத்தம். இந்தக் கதையில் டெக்ஸ் எப்படி ரேஞ்சராக ரேஞ்சராக உருவானார் என்பதை அறியும் ஆரம்ப புள்ளி இது.

    ReplyDelete
    Replies
    1. /// வேதாளர்திருமணம் பழங்கால நினைவுகளை மீட்டியது. ///
      உங்க கல்யாண நாள் ஞாபகம் வந்ததுங்களா சார்.?

      Delete
    2. பத்து சார் ஹிஹிஹி

      Delete
  37. சார் அப்படியே அந்த எலெக்ஷன் ரிசல்ட் சொன்ன கொஞ்சம் நல்லா இருக்கும்

    இரும்புக்கையா vs கும்மாங்குத்தா

    ReplyDelete
  38. எனக்கும் ஓரிரண்டு முறை Blog blocked by court order என்று error காண்பித்து அப்பறம் அதுவாக சரியாகி விட்டது sir. Long awaited post has come after a week's delay sir. Happy to be here.

    ReplyDelete
    Replies
    1. அப்போ இந்த வாரம் ரெண்டு பதிவு வந்தா தான் tally ஆகும் சார்😀

      Delete
    2. இதைத்தான நான் முன்பே பதிவிட்டிருந்தேன். இந்த பதிவு late fee. நாளைய பதிவு இந்த வாரத்துக்கானது.

      Delete
    3. சார்....ஏதாச்சும் வைரஸாக இருந்திருக்கலாம் ; நாமெல்லாம் அந்த அளவுக்கு ஒர்த் கிடையாது !

      Delete
  39. சோம்பலுக்கு அதீத வெயிலும் ஒரு காரணம் என கருதுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. சரிதான் சார்,வெயில் பாடாய்படுத்துகிறது...வேலையின் தன்மையும் முன்பு போல் இல்லாமல் ஒருவிதமான அயற்சி படுத்துகிறது...
      அடுத்து இன்னும் அக்னி நட்சத்திரம் வேறு அக்னி கோலுடன் வெயிட்டிங்...

      Delete
    2. எல்லாவற்றிற்கும் மேலாய் வயசும் ஏறிக்கொண்டே போகிறதே !

      Delete
  40. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  41. எடிட்டர் சார் போன‌ வாரம் பதிவு வராததால எல்லாருக்கும் ஒரு குழப்பம் & கவலை.

    இனி இப்படி நடக்காமல் இருக்க முயற்சியுங்கள்.

    ஒரு 100 தடவையாவது தளத்தை எட்டிப் பார்த்து ஏதாவது அப்டேட் இருக்கான்னு தேடிப் பார்த்தோம் கமெண்ட்ல.

    இப்போது தான் ரிலாக்ஸாக இருக்க முடியுது

    ReplyDelete
    Replies
    1. //ஒரு 100 தடவையாவது தளத்தை எட்டிப் பார்த்து ஏதாவது அப்டேட் இருக்கான்னு தேடிப் பார்த்தோம் கமெண்ட்ல.//

      ஆமாங்க சகோ🥺🥺🥺

      Delete
    2. ரெம்போ சாரி guys !! இனி இது போல் நடவாது பார்த்துக் கொள்கிறேன் !

      Delete
    3. வேணும்னா இப்டி செய்வோமா - நான் ஏதேனும் காரணமாய் ஆஜராக முடியாது போகும் பட்சத்தில், கோவையின் கானக்குயிலார் கவிஞர் பொன்ராஜிடம் உங்களை மகிழ்விக்கும் பொறுப்பை ஒப்படைச்சிடலாமா ?

      Delete
    4. கைப்புள்ள அருவாளோடு கெளம்பியாச்சு. எத்தன தல உருளப் போவுதோ?

      Delete
    5. ஆசிரியரே, சும்மாவே தாங்கள் சாய்ஸ் கேட்டால், பத்து சொல்லுவார் நம்ம கவிஞர் சகோ
      இதுல ஒப்படைச்சுடீங்கனா, எல்லா கதாநாயகர்களையும் களத்தில இறக்கி விட்றுவாருங்க

      Delete
  42. //கைதட்டல்களோ, கழுவி ஊற்றலோ – இரண்டில் எது கிட்டினாலுமே உங்களிடமிருந்தான interactions என்ற திருப்தியில் வண்டி ஓட்டமெடுக்கும்! மாறாக – ‘ஆங்... சரி... ரைட்டு... அம்புட்டு தானே! சரி... படிச்சாச்சி! நான் கிளம்பறேன்!‘ என்றபடிக்கு நண்பர்களில் பலர் மௌனம் காக்கும் போது, புதுப்பேட்டை படத்தில் தனுஷ் ”யாராச்சும் இருக்கீங்களா? ரொம்ப பயம்மாாாா கீது!” என்ற கூவும் sequence தான் மனதில் ஓடும்!///

    என்னங்க சார் இதெல்லாம் ஒரு காரணமா?.
    ஒரு பதிவுல....
    கமெண்ட், படிச்சவிமர்சனம், வேண்டுகோள்,நிறை குறை போடுவதை தவிர வேறு என்ன எழுத இங்கே?,
    இதுக்கே நம்மாளுங்க அலர்றாங்க,
    300 பேர் உள்ள குரூப்ல பேசறதே 25 பேர்தான்,
    ஏன் போலிங் போட்டா கூட
    ஓட்டு போடறதே 50 பேர் கூட தேறாது,
    10000 பேர் உள்ள முகநூல் தளத்தில் ஒரு போஸ்ட் போட்டா,லைக் வர்றதே 30 கூட தாண்ட மாட்டேங்குது?, அதிலும்
    ப்ரெண்ட் வட்டத்தில் உள்ளவர்களில் பல பேர் திரும்பி கூட பாக்கறதில்லை,
    அவங்க பாக்கறாங்க பாக்கலை அது பற்றி எந்த கவலையும் இல்லை,
    நாம போடற போஸ்ட் பாத்து 2 பேர், "அந்த புக் எங்க கிடைக்கும்னு கேட்டு வாங்கினா" அதுவே திருப்திதான்.
    இதுல எங்க சார் தளத்துல வந்து எல்லாரும் கமெண்ட் போடப்போறாங்க?. சான்ஸே இல்லைங்க.

    *லயன் தளம்*
    அது எங்களுக்கு முக்கியம்,
    வாரவாரம் என்ன வரும்றது ரெம்ப முக்கியம்,
    ஆசிரியர் இந்த வாரம் என்ன எழுதப்போறார்ன்றது முக்கியம்,
    இதை பலர் ரெம்ப எதிர்பாக்கறாங்க,
    ஒரு வாரம் வர்லைனாலும்,
    "சரி ஏதோ வேலையா இருப்பார்" என சட்டுனு ஒதுங்கி போக முடியவில்லை, அதையும் தாண்டி,"என்னாச்சு, பதிவு வர காணமே?, லேட்டானா சொல்லுவாரே?" என்ற கேள்வியே முன் நிக்குது.
    ஆகவே, யாரோ கமெண்ட் போடறாங்க, போடலை,
    என்னமோ பண்றாங்க அது எங்களுக்கு முக்கியமே இல்லைங்க சார்.
    வாரா வாரம் உங்க பதிவு எங்களுக்கு வேண்டும்.
    இதுக்காகவாவது வாரப்பதிவு வரவேண்டும்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உள்ளேன் ஐயான்னு ஒரு சின்ன ஸ்மைலியாவது போட்டுடுங்க சார்.

      Delete
    2. ஆசிரியர் நிறைய வேலை இருந்தாலும் நமக்காக வாரம் தவறாமல் பதிவு போடுவது போல் நாமும் என்ன வேலை இருந்தாலும் பதிவைப் படித்த உடன் இரண்டு வரிகள் எழுதலாமே நண்பர்களே 🙂🙂🙂🙂🙂

      Delete
    3. மௌனப் பார்வையாளர்கள் ஒரு சின்ன ஸ்மைலியாவது போடலாமே ☺️ பத்மநாபன் சார் சொல்வது போல் 😊

      Delete
    4. எனது லேப்டாப்பும் எனது மந்தத்துக்கொரு காரணம் பத்து சார் !

      ஆன் பண்ணினால் பூட் ஆவதற்குள் ஒரு செட் பூரி, வடையை அமுக்கி விட்டு வந்து விடலாம் ! அப்புறம் க்ரோமை ஆன் பண்ணினால் பக்கம் ஆஜராவதற்குள் நாலு நொங்கு + மூணு வெள்ளரிப்பிஞ்சுகளை கபளீகரம் பண்ணி விடலாம் ! இதற்குப் பயந்தே வார நாட்களின் பணிகளுக்கு மத்தியில் லேப்டாப்பை ஆன் பண்ணவே தோணுவதில்லை !

      'அட...மாற்றி விடலாமே' என்று நினைத்தால், கொஞ்சம் சென்டிமென்ட்ஸ் இந்த லேப்டாப்போடு கட்டிப்போட்டு விடுகின்றன !! Phew !!

      Delete
    5. @ ஸ்ரீ : நிஜம் தான் சார் ; ஆனால் நிறைய நண்பர்கள் என்னைப் போல டைப்பிங்கில் மிதமாக இருக்கக்கூடும் ! சிலருக்கோ ப்ளாகரில் அல்லது கூகுளில் அக்கவுண்ட் வைத்துக் கொள்ள தெரியாதும் இருக்கலாம் ! 'அட, இதுக்குள் நுழைவானேன் - எட்ட இருந்தே படிச்சிட்டுப் புறப்படுறது சாலச் சிறந்தது !' - என்றும் எண்ணிடக்கூடும் ! So அவர்களை பிழை சொல்ல மாட்டேன் சார் !

      எனது சோம்பலை மூட்டை கட்ட வேணும் - அவ்வளவே !!

      Delete
    6. ஆசிரியர் சார், உங்கள் மதிப்புமிக்க பதிவுக்காக காத்திருப்போர் இங்கு ஏராளம் சார். மாத மாதம் உங்களை ஹாட்லைனில் சந்திப்பதை விட,வார வாரம் இங்கு சந்திப்பது மகிழ்ச்சியான அனுபவம் சார், அதை தவிர்க்க வேண்டாம் என்ற ஆதங்கம் 🙏❤️

      Delete
    7. //
      எனது சோம்பலை மூட்டை கட்ட வேணும் //

      நானும் சார் 😊

      Delete
  43. பள்ளிக்கு லீவு விட்டாச்சு.... ஜாலி.. ஜாலி..
    உனக்கு என்ன ஸ்கூல் போற வயசான்னு கேட்காதீங்க, school க்கு போறதை வீட கிளப்பி விட கூடுதல் நேரம், கூடுதல் எனர்ஜி & கூடுதல் டென்ஷன். அச்சச்சோ லேட் ஆச்சு எந்திரிடா கைப்புள்ள ன்னு இல்லாம நிதானமா விட்டத்தை பார்த்து சில நிமிடங்கள் extraவா படுக்கலாம்
    Pending இருக்கும் புக்ஸை இந்ந லீவுக்கு முடுச்சுடுவேன். சின்ன மேடத்தோடு சேர்த்து சில புக்ஸ் படிக்க முடிவு, எப்படி போகுது ன்னு பாக்கனும்.
    மே புக் ஃபேர் promo எப்ப வரும்?

    ReplyDelete
    Replies
    1. //மே புக் ஃபேர் promo எப்ப வரும்//

      மே முதல் தேதிக்குப் பாதி & அடுத்த சனிக்கு மீதி சார் !

      Delete
    2. அப்படியே என்றால் இந்த வாரம் இரண்டு பதிவு 😀

      Delete
  44. பௌனசர comeback மரண மாஸ்

    ReplyDelete
  45. லார்கோ comeback கொல மாஸ் என்றால் பௌனசர comeback மரண மாஸ்.

    ReplyDelete
  46. பௌனசர கதாசிரியர் மற்றும் ஓவியர் செதுக்கி உள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. அந்த இனப்பெருக்கம் செய்ய ஆண்களை உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எறியும் அந்த பெண்கள் பாத்திர படைப்பு வித்தியாசம்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. இநத கதையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிக்கும்படி உள்ளது; நவீன வெட்டியான் கதையின் இரண்டாம் பாகம் இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்கள் நிறைய உண்டு.

      Delete
    4. பெளன்சர் தொடரில் நார்மலான மனுஷாலே குறைவு சார் !

      Delete
  47. கடமையைக் கைவிடேல் - warm welcome back to நமது கவுண்ட்டமணி செந்தில்🤩

    ReplyDelete
  48. // And லேட்டஸ்ட் டிஜிட்டல் கலரிங் பாணி என்பதால் அச்சிலும் பட்டையைக் கிளப்பியுள்ளது! So இம்மாதத்து ”தவணையில் துரோகம்”. //
    சிறப்பு,சிறப்பு...

    ReplyDelete
  49. // இம்முறை டேங்கோ & மரியோ சாலடிப்பதோ ஈக்வெடோ தேசத்தில்! //
    தவணையில் துரோகத்தில் முன்னும்,பின்னுமாய் டேங்கோ ஸ்டைலீஷா கலக்குகிறார் சார்...
    டேங்கோவுக்கு ஸ்டைலீஷ் ஸ்டார்னு ஒரு பட்டத்தை வழங்கலாம் போல...

    ReplyDelete
    Replies
    1. ஆஹான் ? அவர் ஏற்கனவே "லோன்ஸ்டார் " என்று உலவி வருகிறார் ; இனிமேல் "ஸ்டைலிஷ் லோன்ஸ்டார்" என்று மாத்திப்புடலாமோ ?

      Delete
    2. அது நீங்க அப்ளை பண்ற டாகுமெண்ட்டோட வேல்யூவை
      பொறுத்தது ஸ்டீல்.

      Delete
  50. // மே மாதத்தின் முதல் வார இறுதியையே நடப்பாண்டின் ஆன்லைன் மேளாவுக்கென ஒதுக்கிடலாமா guys? ‘ஓ.கே.‘ என்றீர்களானால் ஏற்பாடுகளைச் செய்திட வேண்டியது தான்! What say all? //
    தாராளமாக சார்...

    ReplyDelete
  51. //பைண்டிங்கிலிருந்து புக்ஸ் கிடைக்கப்பெறுவதற்கு ஏற்ப புதனன்றோ, வியாழன்றோ டெஸ்பாட்ச் இருந்திடும்! //
    புதன் மே 1 ஆயிற்றே சார்,கூரியர் அலுவலகம் இருக்குமா ?! வியாழன் பெட்டி கிளம்பினா கூட மகிழ்ச்சி தான்...
    கொஞ்சம் வேலை காரணமா ஏப்ரல் புக்ஸ் இன்னும் வாசிக்கலை,மே மாதம் முதல் வாரத்தில் ஏப்ரல்,மே புக்ஸை கண்டிப்பா வாசிக்கனும்...

    ReplyDelete
    Replies
    1. பெளன்சரோடு ஆரம்பிங்க சார் - தெறிக்கும் !

      Delete
  52. Dear Editor,

    என்னைப் போன்ற கார்ட்டூன் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சுஸ்கி விஸ்கி, மறுபதிப்பு வராத சிக்பில் கதைகள், டின்டின் போன்ற அறிவிப்புகளை வெளியிடவும், ( ஸ்மர்ப் மீண்டும் வர வய்ப்புள்ளதா Sir)

    ReplyDelete
    Replies
    1. சுஸ்கி-விஸ்கி நோஸ்டால்ஜியா மோகத்தைத் தாண்டி சோபிக்கலை சார் ! அந்த இரண்டாவது தொகுப்பு கேட்பாரின்றிக் கிடக்கிறது கிட்டங்கியில் !

      அப்புறம் SMURFS ஸ்டாக்கை தீர்க்க கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் பிடித்துள்ளது எனும் போது மறுக்கா அந்த நீல பூமிக்குள் கால்பதிக்க 'தம்' இல்லையே சார் !

      Delete
  53. ஆன்லைன் மேளா சென்ற வருடமே நிறைய நண்பர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போனது சார், ஆகவே இந்த முறை வாரத்தில் 3 நாட்கள் என,ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் என
    2 வாரங்கள் வைக்கலாம் என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. இல்லை சார் ; விருந்து வாரா வாரமெல்லாம் சோபிக்காது ! And ரெகுலர் பணிகளும் சுணங்கிப் போய்விடும் !

      ரெண்டு வருஷம் கூவிக் கூவி விற்ற இரத்தப் படலம் தொகுப்பின் தருணத்தில் கூட - "இது வந்ததே தெரியாதே !!" என்று விசனப்பட்டோரும் உண்டு சார் !

      Delete
  54. சார் தளத்தை சுறுசுறுப்பாக்க ஒரு சின்ன ஐடியா. மாடஸ்டிதான் பெஸ்ட். மற்றஹீரோக்கள்ளாம் வேஸ்ட் .அப்படின்னு ஒரு சின்ன பதிவு போடுங்க

    ReplyDelete
  55. தல ஜெயிச்சிட்டாருங்கறது தெரிஞ்ச விசயந்தான் .இருந்தாலும் மொத்த ஓட்டுகள்.யார்யாருக்கு எத்தனை ஓட்டு ?.எலக்சன்ல நிக்காமயயே ஓட்டு வாங்கிய இளவரசிக்கு எத்தனை ஓட்டு.? தல லீடிங் எவ்வளவு?. போன்ற விபரங்கள் update please sir

    ReplyDelete
    Replies
    1. புதனன்று நிறைவு பெறுகிறது சார் வோட்டிங் !! இது வரைக்கும் 334 பேர் தங்கள் காமிக்ஸ் கடமையை ஆற்றியுள்ளனர் ! பார்க்கலாமே - புதனன்று நிலவரம் என்னவென்று !

      Delete
  56. சார் வணக்கம்,
    போன வாரம் முழுதும் உங்க எழுத்துக்களை ரொம்ப miss பண்ணோம்...🙃

    Comics Election post போன வாரத்துக்கு போதும் என நீங்கள் நினைத்து விட்டீர்கள் என நினைத்து கொண்டேன்...Atleast அந்த பதிவு வந்ததை எண்ணி ஆறுதல் பட்டுக் கொண்டேன்🤗

    But, நம் நண்பர்கள் சொன்னது போல் தினமும் பல தடவை தளத்துக்கு வந்து check பண்ணேன்...

    Last but not least, நேற்று உங்கள் பதிவு வந்ததும் தான், எல்லாம் மீண்டும் சகஜ நிலைக்கு வந்தது போல் ஒரு ஃபீலிங்...

    Thanks a lot sir🙏🙏🙏

    டேங்கோ வருவது சந்தோசம் தான், but அதை விட ஆனந்தம் சிக் பில் returns தான்...
    ஆவலுடன் waiting🥰🥰🥰

    Online Book fair மே first week double ok ஸார் 🔥☘️😎

    ReplyDelete
  57. Checked the blog atleast thrice a day for ur post. Welcome back.
    Never participated in online mela before. Couldn't understand what it was and how to do. And I felt hesitated last time that it takes lot of man power to serve one customer. Intha fair try panni pappom.

    ReplyDelete
  58. //புதனன்று ஓட்டிங் நிறைவு பெறுகிறது .//நன்றிங்க சார்.அப்ப மே1 பதிவு ,அதாவது ஆன்லைன் திருவிழா விபரங்கள் நிச்சயம் உண்டு மே1 க்கு வெய்ட்டிங்சார்

    ReplyDelete
    Replies
    1. இன்றைய பலா காயையும் (பதிவையும்) ரசிப்போம்மே ராஜசேகர் சார். ☺️

      Delete
  59. MYOMS சந்தாவில் ஆல்பா, சிஸ்கோ இவை எல்லாம் சிங்கிள் ஆல்பங்களா, இல்லை டபுளா? யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்....

    ReplyDelete
  60. எடிட்டரின் பதிவை படிப்பதே ஒரு சுகானுபவம் தான்... ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு காமிக்ஸ் ஆல்பத்துக்கு சமம்... ஜிலோவா இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. அதான் இப்போல்லாம் நம்ம மக்களில் ஒரு அணியினர் பொஸ்தவங்களை படிக்காமலே விட்டுப்புடுறாங்களோ ?

      Delete
  61. எடிட்டர் சார், மறு பதிப்புங்கிற வார்த்தையை உங்க மனசுல இருந்து அழிக்கிறதுக்கு ஏதாவது ரப்பர் ஏழு கடல் ஏழு மலை தாண்டி இருக்குன்னு சொன்னா கூட போய் எடுத்துட்டு வர்றதுக்கு ரெடியா இருக்கோம்😊

    ReplyDelete
    Replies
    1. இங்கே ஹா..ஹா..ஹா..ங்கிற பார்ட்டி - மேலே சேர்த்திருக்கிற ஒரு படத்தைப் பார்த்துப்புட்டு தன்னோட பின்னூட்டத்தை அழிக்க ரப்பர் தேடப் போறாரு பாருங்களேன் !

      Delete
  62. இந்த நாஸ்டால்ஜியாவ நினைச்சா நாஷ்டா கூட தின்ன முடியல..

    ReplyDelete
    Replies
    1. மேலே பதிவிலே ஒரு படம் சேர்த்திருக்கேன் சார் ; அதை லைட்டா பாத்த பின்னரும் உங்க அபிப்பிராயம் மாறுதான்னு தெரிஞ்சுக்க ஆவல் !

      Delete
  63. ஆன்லைன் மேளாவுக்கு எட்டோ ஒன்பதோ அறிவிச்சீங்க... பணம் rough ஆ எவ்வளவுன்னு சொல்லிட்டா முன்னாலேயே ப்ரிப்பேர் ஆகுறதுக்கு எல்லாருக்கும் வசதியாக இருக்குமே சார்..

    ReplyDelete
    Replies
    1. மூன்றிலக்கங்களுக்குள் தான் சார் !

      Delete
  64. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  65. பவுன்சரின் இந்த ஆல்பம் மாஸ் என்றால் அவரது பழைய ஆல்பங்கள் பக்கா மாஸ்!!

    ReplyDelete
  66. காரிகன் ஸ்பெஷல் கதை எண் 3: கருத்தரங்கில் களேபாரம்

    அமெரிக்காவில் ஏவுகணை தடுப்பு திட்டத்திற்கான கருத்தரங்கு ஒன்று நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டினை ஒருங்கிணைத்து நடத்துபவள் சூசன் பாஸ்டர். அவளுடைய கணவன் பாஸ்டரை கடத்தி வைத்துக்கொண்டு மாநாட்டில் பேசவும் ரகசியங்களை ஒலிப்பதிவு கருவியில் பதிவு செய்து தர வேண்டும் என நிர்பந்தம் செய்கிறது சாங் தலைமையிலான சீன உளவுக் குழு!

    சூசன் பாஸ்டருக்கு உதவியாக எப்.பி.ஐ ஏஜென்ட் பிலிப் காரிகன் வருகிறார். இதற்கு முந்தைய வருடத்திற்கான கருத்தரங்கிலும் சூசனுடன் ஒன்றாக பணிபுரிந்த அனுபவம் பெற்றவர் காரிகன்.

    முதல் நாள் சந்திக்கும் சூசனுக்கும், மறுநாள் சந்திக்கும் உள்ள நடவடிக்கை மற்றும் பேச்சு மாற்றங்களை கைதேர்ந்த உளவாளியான காரிகன் வெகு சீக்கிரமே கிரகித்து விடுகிறார்.

    நடந்த விஷயங்களை சூசனிடம் கேட்டறிந்த காரிகன் தன்னுடைய பாணியில் துப்பறியும் பணியை தொடங்குகிறார். கான்பரன்ஸ் முடிந்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட கருவியை, ஒப்படைக்கும் வரையிலும் முட்டு சந்தில் நிற்கும் தேடுதல் வேட்டை இறுதி கட்டத்தில் சூடு இருக்கிறது.

    டேப்பில் பதிவாகி இருக்கும் தகவல்களை சூசனின் முன்னிலையில் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளும் எண்ணத்துடன் சூசனையும் தன்னுடன் அழைத்து வருகிறான் சாங்.

    அதே நேரத்தில், பாஸ்டர் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை கண்டறிந்த காரிகன், சூசனும் அங்கே அழைத்து வரப்படுவதை காண்கிறார். காரிகன் செய்யும் ஒற்று வேலையை அங்கே காவலிருக்கும் நபர் பார்த்து விட, நேரடி மோதல் தொடங்குகிறது.

    _இந்த கதையை ஏற்கனவே மேகலா காமிக்ஸில் படித்த நினைவுள்ளது. இறுதி பக்கத்தில் தண்ணீருக்குள் இருக்கும் சாங்கைப் பார்த்து காரிகன், வாழும் மனிதருக்கு வாழச் சந்தர்ப்பம் கொடு என சொல்வதாக இருக்கும்..._

    ReplyDelete
    Replies
    1. நான் கூட காரிகனை இம்புட்டு ரசிச்சிருக்க மாட்டேன் சார் !!

      Delete
  67. சார் உங்கள் பதிவை தேடி எப்பொழுதும் காத்து கொண்டுதான் இருக்கிற்றோம்...ஆனால் பல சமயம் இப்பொழுது இந்த தளத்தில் கமெண்ட் செக்‌ஷன் திடீர்திடீரென வேலை செய்வதில்லை..சில சமயம் பப்ளிஷ் என்கிறது ஆனால் இங்கே வந்து பார்த்தால் அந்த பதிவு இல்லாமல் போய்விடுகிறது..இதழ்களின் விமர்சனத்தையும் நீண்டு ரசித்து இங்கே பதிவிடும் பொழுது அது பிரசரமே ஆகாமல் போகும் பொழுது கடுப்பாகி வேறு போகிறது.

    மற்றபடி உங்கள் பதிவுக்கும் பதிலுக்கும் நாங்கள் எப்பொழெதமே ஆவலுடன் தான்..


    ( இது பிரசுரம் ஆக வேண்டும் என்ற வேண்டுதலுடன்...)

    ReplyDelete
    Replies
    1. தலீவரே...ஏதாச்சும் அயல்நாட்டு சதியாக இருக்குமோ ?

      Delete
  68. வரும் புதன் அன்று முதல் தீபாவளி! நன்றிகள் பல சார்"""" நல்ல கதைகளாக போடுங்கள் சார் 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. முயற்சிப்போம் சார் ! எண்ட குருவாயூரப்பா !!

      Delete
  69. மூன்று அட்டைகளும் கலக்கல் ரகம்.

    ஆன்லைன் மேளா என்பதில் புதிய The MMS ஸ்பெஷல் பற்றியா குறிப்பிடுகிறீர்கள் சார்?

    அப்புறம் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் வெயிட்டிங். சீக்கிரம் வெளியிடுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. இல்லை நண்பரே...அதற்கான திட்டமிடல்கள் இன்னும் நிறைவடையவில்லை !

      Delete