நண்பர்களே,
வணக்கம். சில IPL மேட்ச்களில் ஆறு ஓவர்கள் வீசி பவர் பிளே முடிக்கும் போதே தெரிந்திருக்கும் - இன்னிக்கி பிரியாணியாகப் போவது யாரென்று ! Of course - "சுபம் போடும் வரைக்கும் எதுவும் உறுதி கிடையாது ; கடைசி நிமிஷத்தில் கூட ஏதாச்சும் அதிரடியா மாறலாம் !" என்று வாங்கும் சம்பளத்துக்கோசரம் கமெண்டேட்டர்ஸ் தேய்ந்த ரெக்கார்டுகளாய் ஒலிப்பதுண்டு தான் ! நமக்கோ, கடைசியில் வெற்றியின் margin என்னவாக இருக்கும் என்பதில் மாத்திரமே சுவாரஸ்யமிருக்கும் ! இதோ - நடந்து முடியப் போகும் நம்ம காமிக்ஸ் தேர்தலிலும் அதே கதை தான் !! வோட்டிங் துவங்கிய அரை நாளிலேயே தெரிந்து போச்சு - போட்டி வெள்ளிக் கோப்பைக்கு மாத்திரமே ; தங்கக் கோப்பையில் பெயரெல்லாம் பொறித்து, போட்டோவுக்கு அந்த வின்னர் போஸ் கொடுக்கவும் செய்தாயிற்று என்று !!
டெக்ஸ் வில்லர் !!!
சிவாஜி பட பன்ச் டயலாக் யாருக்குப் பொருந்துதோ, இல்லியோ - நம்ம இரவுக் கழுகாருக்கு சாலப் பொருந்தும் !! பெயரைக் கேட்டாலே சும்மா அதிருது தான் !! நிஜத்தைச் சொல்வதானால், இந்தத் தேர்தல் மெய்யாலுமே செம tough ஆக இருந்திடும் என்றே நான் எண்ணியிருந்தேன் ! 'தல' clear favorite என்று எனக்குப் பட்டாலும், எதிர்த்து நிற்கும் 6 நாயகர்களுமே செம ஜாம்பவான்ஸ் - in their own rights !! So - "வந்தார்...கண்டார்...வென்றார்...சென்றார்...!" என்பதெல்லாம் இந்தக் களத்தில் டெக்ஸுக்கு சாத்தியமாகாது என்றே மனசுக்குப்பட்டது ! ஆனால்....ஆனால்...தேர்தலும் வந்தது ; அத்தினி பெரும் பிரச்சாரங்களும் செய்தனர் ; ஆனால் வாக்கெடுப்பினில் அம்புட்டு பேரையும் வாரிச் சுருட்டி கம்மங்கூட்டுக்குள் செருகிக் கொண்டே "நான் ரொம்ப பிசி !!!" என்றபடிக்கே கிளம்பியிருப்பது யாரென்று பார்த்தால் - அது TEX தான் !!
342 பேர் வோட்டுப் போட்டுள்ளனர் and அது மெய்யாலுமே நல்லதொரு எண்ணிக்கை தான் ! அதில் 143 வாக்குக்களைப் பெற்று 'ஜிலோ'வென்று வாகை சூடியுள்ளார் 'தல' !! இம்முறை யார்-யார், யாருக்கு வோட்டளித்துள்ளனர் ? ; எந்த நாட்டிலிருந்து வாக்குகள் பதிவாகியுள்ளன ? என்பதையும் பார்த்திட முடிந்துள்ளது !! And இந்தப் பதிவை நான் எழுதும் ஏப்ரல் 30 இரவின் நிலவரப்படி - உள்நாடு மாத்திரமன்றி, வெளிநாட்டிலிருந்தும் 'தல' அலை தொடர்ந்துள்ளது ! TEX பெற்றுள்ளது 41.81% வாக்குகளை !! சிலாகிப்புகளைத் தொடரும் முன்பாக, அடுத்தடுத்த இடங்களில் உள்ளோர் யாரென்பதையும் சொல்லிப்புடுகிறேனே !!
RUNNER UP : கேப்டன் டைகர் !! கிட்டத்தட்ட டீம் டெக்சின் வாக்கினில் பாதி பெற்று இரண்டாமிடத்தில் குந்திக்கிறார் நமது ட்ஸி-நா-பா ! 'சிரிகாகுவா சில்க்கை உதவி ஜனாதிபதியாக்குவேன்' என்ற வாக்குறுதி கூட மனுஷனுக்கு 77 வாக்குகளுக்கு மேல் ஈட்டித் தந்திருக்கவில்லை எனும் போது - முதலிடம் பெற்றுள்ள டெக்சின் கோட்டை L&T சிமெண்டை விடவும் உறுதியான கலவையில் கட்டப்பட்டிருப்பது புரிகிறது !! டைகரின் வாக்கு சதவிகிதம் : 22.58%
வேங்கை வாங்கியுள்ள வாக்குகளில் சரி பாதியை வாங்கி, மூன்றாமிடத்தில் வீற்றிருக்கிறார் நமது evergreen இரும்புக்கை மாயாவியார் - 38 வாக்குகளுடன் ! Oh yes - அந்த க்ளாஸிக் யுக காதலர்களின் பெரும்பான்மை, நமது வாசிப்பு வட்டத்தினில் இன்றைக்கு இருக்க வாய்ப்புகள் குறைவென்பதை ஏற்றுக்கொண்டே தீர வேண்டும் ! அவ்விதம் இருக்கக்கூடியோரிலுமே பெரும் பகுதியினர் இந்த blog ; சமூக ஊடகங்கள் இத்யாதி...இத்யாதிகளில் கலந்து கொள்ளாதிருக்கலாம் தான் ! So எஞ்சியுள்ளோரின் வாக்குகளோடு மூன்றாமிடத்தைப் பிடித்திருப்பதே பெரிய சமாச்சாரம் தான் ! 11.14% - மாயாவியாரின் vote share !!
4th PLACE - நம்ம ஒல்லியார் லக்கி லூக்குக்கு !! வெறும் 28 ஓட்டுக்கள் பெற்று, 8.2% மக்களின் ஆதரவை மட்டுமே ஈட்டியுள்ளார் - இந்த கார்ட்டூன் தலைமகன் ! In many ways - நம் வட்டத்தில் கார்ட்டூன்கள் பெருசாய் எடுபடாது போகும் நெருடலை இந்தப் புள்ளிவிபரம் நெற்றியடியாய் சொல்கிறது ! நம்மிடையே 39 ஆண்டுகளாய் கோலோச்சும் ஒரு ஜாம்பவானே, கார்ட்டூன் ஜானரின் கொடியைப் பிடித்தால் கூட, சுயேச்சை வேட்பாளருக்குக் கூடும் கூட்டம் கூடத் தேறாது என்பது அப்பட்டமாகிறது !! Phew !!!!
PLACE 5 - நம்ம சிரசாசன SMS புகழ் ஸ்பைடர் !!! 26 ஓட்டுக்கள் வாங்கி, 7.62% வாக்குவிகிதத்துடன் மலைக்கவே வைக்கிறார், becos இவர் பின்னுக்குத் தள்ளியிருப்பதோ - 2 சமகால ஜாம்பவான்களை !! So இவரது வாக்கு எண்ணிக்கையை விட, வாங்கியுள்ள இடம் வீரியமானதென்பேன் !
PLACE 6 - லார்கோ வின்ச் with 18 votes & 5.28% vote share !!
LAST PLACE - XIII - தனது பெயரிலுள்ள நம்பரைக் கூட தொட்டிடாது, 12 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் !! என்னைப் பொறுத்தவரையிலும் இந்தத் தேர்தலின் biggest shock இதுவே !! விற்பனையில் வேறு யாருமே கண்டிரா உச்சங்களை ஈட்டியுள்ளதொரு நாயகர் குச்சி ஐஸ் சாப்பிடும் நிலையினை எவ்விதம் அர்த்தமாக்கிக் கொள்வதோ - புரியலை !!
Here are the results ! அங்கே வோட்டிங் தளத்திலுமே, இதனை நீங்கள் பார்த்திட இயலும் !!
டெக்ஸ் வில்லர்
41.81% (143 votes)
கேப்டன் டைகர்
22.51% (77 votes)
இரும்புக்கை மாயாவி
11.11% (38 votes)
லக்கி லூக்
8.19% (28 votes)
லார்கோ வின்ச்
5.26% (18 votes)
Total votes: 342
அப்புறம் எந்த தேசத்திலிருந்து யாருக்கு - எவ்வளவு ஓட்டுகள் என்ற புள்ளி விபரமும் இதோ ! அது ஆரானோ - இஸ்ரேலில் நம்ம வாசகர் ? கொஞ்சம் அறிமுகம் செய்து கொள்ளலாமேஜி ? அல்லது அது ஏதேனும் உல்டா லொகேஷன் ஷேரிங்கா ? And அமெரிக்காவில் உள்ள 'தல' ஸ்லீப்பர் செல் கச்சிதமாய் பணியாற்றியிருப்பதும் அப்பட்டம் !! 😁😁
Anyways, கிஞ்சித்தும் குழப்படியின்றி தேர்தலின் முடிவுகள் ஸ்பஷ்டமாகப் பதிவாகி இருப்பதால், தல - 'தல' தான் - என்பதை புரிந்து கொள்ள முடிகிறது ! 1985 முதலாய் நம்மோடு உலவி வரும் இந்த அசாத்தியர், படையப்பாவில் நீலாம்பரியின் வரிகளையே நினைவூட்டுகிறார் : வயசானாலும், அந்த அழகும், ஸ்டைலும் இம்மி கூடக் குறையவில்லை ! Maybe இன்னுமொரு பத்தாண்டுகள் கழித்து, இதே தேர்தலை டின்டின் ; இன்ன பிற புது நாயக / நாயகியரோடும் நடத்தும் போதாவது 'தல'யின் கிரீடத்துக்கு ஏதேனும் ஜெர்க் இருக்குமா ? என்று சொல்லத் தெரியலை !! இந்த நொடிக்கு - இவரொரு காமிக்ஸ் பாகுபலி !! Hail The King !!
Bye guys....ஆன்லைன் ஸ்பெஷலின் ஒரு இதழுக்கு அவசரமாய் பேனா பிடிக்கக் கிளம்புகிறேன் ! வெள்ளி மாலை புதிய பதிவோடு ஆஜராவேன் ! And புது புக்ஸ் நாளை டெஸ்பாட்ச் ஆகிடும் !! See you around ; have a cool day !! மே தின நல்வாழ்த்துக்கள் !!
P.S : பன் போட்டி காலையில் !!
COUNTRY | VOTERS | VOTES PER OPTION |
---|
India | 310 (90.64%) | டெக்ஸ் வில்லர் : 129 (41.61%) கேப்டன் டைகர் : 71 (22.90%) இரும்புக்கை மாயாவி : 34 (10.97%) ஸ்பைடர் : 25 (8.06%) லக்கி லூக் : 24 (7.74%) XIII : 10 (3.23%) லார்கோ வின்ச் : 17 (5.48%)
| Sri Lanka | 7 (2.05%) | டெக்ஸ் வில்லர் : 3 (42.86%) கேப்டன் டைகர் : 2 (28.57%) இரும்புக்கை மாயாவி : 0 (0.00%) ஸ்பைடர் : 0 (0.00%) லக்கி லூக் : 0 (0.00%) XIII : 1 (14.29%) லார்கோ வின்ச் : 1 (14.29%)
| United States of America | 6 (1.75%) | டெக்ஸ் வில்லர் : 4 (66.67%) கேப்டன் டைகர் : 0 (0.00%) இரும்புக்கை மாயாவி : 1 (16.67%) ஸ்பைடர் : 0 (0.00%) லக்கி லூக் : 1 (16.67%) XIII : 0 (0.00%) லார்கோ வின்ச் : 0 (0.00%)
| France | 4 (1.17%) | டெக்ஸ் வில்லர் : 3 (75.00%) கேப்டன் டைகர் : 0 (0.00%) இரும்புக்கை மாயாவி : 0 (0.00%) ஸ்பைடர் : 0 (0.00%) லக்கி லூக் : 1 (25.00%) XIII : 0 (0.00%) லார்கோ வின்ச் : 0 (0.00%)
| Germany | 3 (0.88%) | டெக்ஸ் வில்லர் : 0 (0.00%) கேப்டன் டைகர் : 2 (66.67%) இரும்புக்கை மாயாவி : 1 (33.33%) ஸ்பைடர் : 0 (0.00%) லக்கி லூக் : 0 (0.00%) XIII : 0 (0.00%) லார்கோ வின்ச் : 0 (0.00%)
| United Arab Emirates | 3 (0.88%) | டெக்ஸ் வில்லர் : 1 (33.33%) கேப்டன் டைகர் : 1 (33.33%) இரும்புக்கை மாயாவி : 0 (0.00%) ஸ்பைடர் : 0 (0.00%) லக்கி லூக் : 0 (0.00%) XIII : 1 (33.33%) லார்கோ வின்ச் : 0 (0.00%)
| Kuweit | 2 (0.58%) | டெக்ஸ் வில்லர் : 0 (0.00%) கேப்டன் டைகர் : 0 (0.00%) இரும்புக்கை மாயாவி : 1 (50.00%) ஸ்பைடர் : 1 (50.00%) லக்கி லூக் : 0 (0.00%) XIII : 0 (0.00%) லார்கோ வின்ச் : 0 (0.00%)
| United Kingdom | 2 (0.58%) | டெக்ஸ் வில்லர் : 0 (0.00%) கேப்டன் டைகர் : 0 (0.00%) இரும்புக்கை மாயாவி : 0 (0.00%) ஸ்பைடர் : 0 (0.00%) லக்கி லூக் : 2 (100.00%) XIII : 0 (0.00%) லார்கோ வின்ச் : 0 (0.00%)
| Singapore | 2 (0.58%) | டெக்ஸ் வில்லர் : 1 (50.00%) கேப்டன் டைகர் : 0 (0.00%) இரும்புக்கை மாயாவி : 1 (50.00%) ஸ்பைடர் : 0 (0.00%) லக்கி லூக் : 0 (0.00%) XIII : 0 (0.00%) லார்கோ வின்ச் : 0 (0.00%)
| Oman | 1 (0.29%) | டெக்ஸ் வில்லர் : 1 (100.00%) கேப்டன் டைகர் : 0 (0.00%) இரும்புக்கை மாயாவி : 0 (0.00%) ஸ்பைடர் : 0 (0.00%) லக்கி லூக் : 0 (0.00%) XIII : 0 (0.00%) லார்கோ வின்ச் : 0 (0.00%)
| Israel | 1 (0.29%) | டெக்ஸ் வில்லர் : 1 (100.00%) கேப்டன் டைகர் : 0 (0.00%) இரும்புக்கை மாயாவி : 0 (0.00%) ஸ்பைடர் : 0 (0.00%) லக்கி லூக் : 0 (0.00%) XIII : 0 (0.00%) லார்கோ வின்ச் : 0 (0.00%)
| Malaysia | 1 (0.29%) | டெக்ஸ் வில்லர் : 0 (0.00%) கேப்டன் டைகர் : 1 (100.00%) இரும்புக்கை மாயாவி : 0 (0.00%) ஸ்பைடர் : 0 (0.00%) லக்கி லூக் : 0 (0.00%) XIII : 0 (0.00%) லார்கோ வின்ச் : 0 (0.00%)
|
| |
|
---|
தோனி ஆராமாய் இருக்க, ருதுராஜ் கிட்டே தலைவர் பொறுப்பை CSK குடுத்தா மாதிரி நம்ம டெக்ஸ் ஜாலியாய் ஓய்வெடுத்துக் கொண்டு, தனது இடத்தில் லக்கி லூக்கை நுழைக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்களேன் - அந்த டீம் என்ன செப்பும் ? மனசுக்குள் & வெளியே ?
A - டைகர் ஜாக் & B - லக்கி : மனசுக்குள் !!
C - கிட் & D - கார்சன் : உரக்க !!
இந்தப் படத்துக்கேற்ப ஜாலியான கேப்ஷன் எழுதி வென்றிடும் நண்பருக்கு நமது ஆன்லைன் மேளா ஸ்பெஷல் புக்ஸ் செட் நமது அன்புடன் !! ப்ளஸ் அரை டஜன் ரவுண்டு பன்களுமே !! Best caption எதுவென்று தேர்வு செய்திட நம்ம பேரவையின் மகளிர் அணித் தலைவி கடல்யாழ் ரம்யாவை நியமிக்கிறேன் !
போட்டுத் தாக்குங்கோ !!
நன்று சார் 🤗
ReplyDeleteஅட டே சைலன்ட்டா தட்டி தூக்கிட்டீங்க வாழ்த்துகள் சார்..💐
DeleteAda online bookfair write-up varumnu paarthaa ... :-)
ReplyDelete3rd
ReplyDeleteசார்
ReplyDeleteஇளவரசிய பத்தியும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்தான்.
ஈரோடு புத்தகத் திரு விழா இன்னும் நூறு நாட்களே .அப்படியே இந்த வருடம் சேலத்தில் புத்தக திருவிழாவின்போது ஒரு வாசகர் சந்திப்பு இருக்குமாறு உங்கள் செட்யூல திட்டமிட முடியுமா என்று முயற்சித்து பாருங்கள் சார் .இது எனது தாழ்மையான வேண்டுகோள்.
ReplyDeleteஅடடே சூப்பர் சார். ஈரோட்டுக்கு வெயிட்டிங். சேலம் புத்தக விழாவின் போது வாசக சந்திப்புக்கும் வெயிட்டிங்.
Deleteஇதை நான் வழிமொழிகிறேன்!
DeleteMee,.. too🤣
DeleteGood morning to all
ReplyDeleteசிங்கம் சிங்கம்தான்
ReplyDeleteகாலை வணக்கம் ஆசிரியரே
ReplyDeletePresent Sir
ReplyDeleteஜெய் பாகுபலி !!
ReplyDeleteஅதி காலை வணக்கம் நண்பர்களே
ReplyDeleteஇளவரசி இந்த சித்திரக்கதை தேர்தலில் பங்கெடுத்திருந்தால் டெக்ஸ் டெப்பாஸிட் இழந்திருப்பார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி...
ReplyDelete🤨😎
ஆஹான்
Deleteகனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்…துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
Deleteஹிஹிஹி!! :))))
Deleteஇளவரசிக்கும், டாக்டர்களுக்கும், படகுக்கும் பாட்டுல கூட கனெக்டிவிட்டி workout ஆகுது போல
DeleteYou are correct sir. Athanala than ilavarasiya aatathula sethukala pola....
Deleteசார்.. எல்லோரும் தேர்தலை சரியா புரிஞ்சு ஓட்டு போடல..
Delete- ஜனாதிபதியா - டெக்ஸ் வில்லர- ஒரு இடத்தில் உட்காரத்தான் வைக்க முடியுமா?.
மாடஸ்டி - தான் சூப்பர் சாய்ஸ்...
ஜஸ்ட் ... மிஸ்...
வந்துட்டேன்.
ReplyDeleteHi @Editor sir! Vanakam!! Great to see Thala winning the election! I also did my duty on this election from USA only for Thala. One request from my sid.
ReplyDeleteWhen you get time , please do some post in facebook or youtube sir. It make us happy when you do some post there.
+1
Deleteஇனிய காலை வணக்கங்கள்
ReplyDeleteஅடடா ஆன்லைன் ஸ்பெஷல் விபரங்களுக்கு வெள்ளி மாலை வரை காத்து இருக்க வேண்டுமா?
ReplyDeleteஇன்னும் இரு நாட்கள் தானே வெயிட் பண்ணுவோம்.
உள்ளேன் ஐயா
ReplyDeleteநாளை புத்தகங்கள் கிளம்பும். சூப்பர் சூப்பர், டேங்கோவுக்கு ஆவலுடன் வெயிட்டிங்.
ReplyDeleteஉள்ளேன் ஐயா...!!
DeleteThis comment has been removed by the author.
DeleteHi..
ReplyDeleteஅப்ப வெள்ளிக்கிழமை தன் ஆன்லைன் புத்தக லிஸ்ட் பத்தி தெரிந்து கொள்ள முடியும் போல
ReplyDeleteஜனநாயகத்தில் ஒரு கருப்பு நாள்..
ReplyDelete😥😣😫
Deleteவிடுங்க ரம்மி... எவ்வளவோ அடக்குமுறைய பார்த்துட்டோம்... இது நமக்கு புதுசா... கடந்து போவோம்... நம் காலம் விரைவில் வரும்...
Deleteஹிஹிஹி!! அவலக் குரல்!!
Deleteஆமாங்க சகோ, உங்களை போன்று பாட்டு பாடும் குரல் இல்லைங்க 😔
Delete😀😀😀😀😀( ஒரு வேளை வெளிநாட்டு சதியா இருக்குமோ)🤗
DeleteBut As a Tiger fan, தளபதி இரண்டாம் இடம் பிடித்தது கொஞ்சம் ஆறுதலாக உள்ளது ஸார் 🙂😌
Delete🤣😄😂
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAkk சார் என் மனதில் உள்ளதை அப்படியோ சொல்லி விட்டீர்கள்
ReplyDelete'தல' தான் ஜெயிப்பார்ன்றதெல்லாம் எங்களுக்குப் பல வருசங்களுக்கு முன்னாடியே தெரியும் சார்!
ReplyDeleteசிங்கத்துக்குப் போட்டியாக சிறு நரிகளைக் களமிறக்கலாமோ?!!
தல'யின் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நம்ம இரும்புப் புலவரை ஒரு பாடல் இயற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்!
வேண்டாம் ஜி இந்த விசப்பரிட்சை.
Deleteபல வருசங்களா இந்த விஷத்தை சாப்பிட்டுத்தானே உடம்பை உரமேற்றி வைத்திருக்கிறோம், Sridharan ji?!! ;)
Deleteஏற்கனவே வெப்ப அலை வறுத்தெடுக்குது ஈ.வி.
Deleteதல எல்லார் டெபாசிட்டையும் காலி பண்ணி தனி பெரும்பான்மை பெற்று ஜெயிச்சதற்கு தனி மெஜாரிட்டி ஸ்பெசல் னு ஒரு டெக்ஸ் குண்டு புக் போடலாமே?
ReplyDelete+1000
Deleteடெபனட்லி டெபனட்லி!!
Delete+9
Delete👌👌👌 அப்படியே தளபதி இரண்டாம் இடம் பிடிச்சதை பாராட்டும் வகையில்,
Delete"The ரணகள ரன்னர் அப்" special போட்டாலும் நன்றாக தான் இருக்கும்🔥
(but போடுவதற்கு book எதாவது மிச்சம் இருக்காங்கிறது தான் doubt😉😔)
ஆகஸ்ட் அரங்கேற்றமா செயலரே!
Delete👌அதே!அதே!!
Deleteபன் போட்டிக்கு வெயிடிங், ஆசிரியரே
ReplyDeleteமெதுவாகவே வாங்க
//மெதுவாகவே வாங்க//
Delete'மிருதுவா வாங்க'ன்னு சொன்னா பொருத்தமா இருக்கும் சகோ! :)
ஆமால்ல 🤔
Deleteநடுவுல 'வாங்கிட்டு' சேர்த்துக்கோங்க ஈ.வி
DeleteSoft ஆ சாப்பிடற மாதிரி வாங்கிட்டு வாங்க..😃😃
Deleteதல போல வருமா?
ReplyDeleteதல மற்றும் இளம் தல தலா ஒரு குண்டு ஸ்பெசல் பிளீஸ் சார்.
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDeleteMe in..😍😘
எடிட்டர் சார்.. நீங்க ஏன் ஒரு 'பன் சாப்பிடும் போட்டி' நடத்தக் கூடாது?!!
ReplyDeleteபோட்டியில் அதிக பன் சாப்பிட்டு வெற்றிபெற்றவரை பன்னர்'னு அறிவிச்சு அவருக்கு ஒரு பெட்டி நிறைய பன்னுகளைப் பரிசாக் கொடுத்துக் கெளரவிக்கலாமே?!!
அந்த பெட்டி மேல, பெட்டி பார்னோவ்ஸ்கின்னு ஸ்டிக்கர் ஒட்ட மறந்துடாதீங்க.
Deleteபெட்டி "பன்"னோவ்ஸ்கி 😃😃
DeleteAs expected
ReplyDeleteBut entertaining in watching the election campaign.
வணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteபன்னர் யாருங்க றது சேலத்துலருந்து ஈரோடு வரைக்கும் எல்லாருக்கும் தெரியும்.பன்னர் அப் யாருங்க றதுதான் போட்டியே.
ReplyDeleteஹிஹி! :)
Deleteபன்னர் up.. சரி..
Deleteதின்னர் அப் ..
யாருங்க..😃😃
தின்னர் அப் னு ஈவியை வெச்சிகிட்டே கேட்டா, அவரே மாறுவேடத்தில் வந்து தின்னர் அப், வெங்கலத்தார்னு க்ளீன் ஸ்வீப் பண்ணிடுவாரு🤣
Delete50 வருஷம் கழித்து 3 ம் இடம்...
ReplyDeleteபெரியண்ணன் " இரும்புக்கை
மாயாவி "... ஆத்தி.. நம்பவே முடியலைங்க... Amezing... 🤭.. ❤️
வாழ்த்துக்கள் அவருக்கு.. ❤️👍..
ஆத்தாவ சேத்திக்காம விட்டது
"திட்டமிட்ட சதி"....😄😄😄...
Aamaam
DeleteThis comment has been removed by the author.
Delete33% இடஒதுக்கீடு கூட இல்ல.
Deleteசேத்தியிருந்தா அப்படியே 300க்கு 300வாங்கியிருப்பா...😜🤭🤭🤭🤭
Deleteஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே...
ReplyDeleteடச் விட்டு, கடைசி நொடி வரை ஓட்டுப்போட நண்பர் சக்தி வழிகாட்டலில் முயற்சித்து செல்லாத
ReplyDeleteஓட்டாய் போன சோகம் 😢 ஈ.மெயிலில் சைன் பன்னவேண்டும் என புரியாததால்😌
எப்படி யோ! நம்ம தல கெலித்தது
ஸ்பைடரை ஏய்த்து லவட்டிகொண்ட
ராய் ஆன்ட்டனியின் & பெயர் தெரிந்த XIII ன்,ஏய்க்காத சில்க் கை மணமுடித்த உடைந்த மூக்கால்,மொபைல் டிரான்ஸ்பார்மர்
நிழல் உறுப்பினர் நக்கலடிக்காத நம்பரை பெற்ற பெப்சி🤣 மாடல் போல,.. மகிழ்ந்தேன்.
எடிட்டருக்கு ஒரு வேண்டுகோள்
வரும் இளம் டெக்ஸ் பாகம் -2
கார்சன் டெக்ஸ் & ஆஸ்டின் டெக்ஸ் சந்திப்பு துவங்கி இரண்டு மூன்று முதல் கள் அரங்கேறியுள்ளன சிறப்பாக செய்ங்க சார்..
தொடர்ந்து எழுதி வாங்க டாக்டர்...
Deleteநாலு வரியில் நச்சுனு தல விமர்சனத்தை போடுங்க
சீனியர் இருக்க🤣
DeleteReaders' taste will update and in future a new comics character will decorate the THRONE OF NUMBER ONE and at that time every one will accept the fact.... Change is the only factor which will never change./G. SURESH KUMAR, CHIDHAMBARAM. ♥️🥰.
ReplyDeletePoint....
Deleteஆசிரியர் சாரே ஆல்ரெடி டெக்ஸ்க்கு முன் கோலோச்சிய 3தலைகள குறிப்பிட்டுள்ளார்..
இரும்புக்கையார்
டைகர்
ஸ்பைடர்
இப்ப தல காலம்.... ரொம்ப காலம் இது நீடிக்கும்...
ஆனா இளவரசி ரசிகராக இதை உங்களால ஏற்க இயலாது தான்...ஏன்னா உங்க டிசைன் அப்படி.. வருடம் ஒரு ஸ்லாட் மட்டுமே வரும் ஒரு நாயகரை கொண்டு , வேர்விட்டு மரமாக நின்று மாதம் ஒரு புக் வரும் நாயகரை எப்படி வெல்ல இயலும் னு நம்புறீங்களோ!!!
அது
Deleteஇரும்புக்கையார்
ஸ்பைடர்
ஆர்ச்சி Bro
இந்தமாதம் டெக்ஸ் வில்லர் இல்லா மாதம்! அதை மூடி மறைத்து மழுப்பவே எடிட்டர் சமூகம் இந்த எலெக்சனை நடத்தியிருப்பதாக சந்தேகிக்கப் படுகிறது!
ReplyDeleteஆன்லைன் புத்தக விழால மறுபதிப்பு வருதுங்க செயலரே
Deleteநமக்கு என்ன செயலரே! தல+டைனமைட்னு பேர்ல் ஒரு குதிரை அருகில் வெள்ளி முடியால்,..மறு பாதிப்போ மறுபடியும் பாதிப்போ படிச்சு வைப்போம்.
Deleteடெக்ஸ் இல்லா மாதத்தை இனி கனவிலும் எடிட்டர் நினைக்க மாட்டார்.
எலெக்ஸன் ரிசல்ட் அப்படி🤣
🙄🙄🙄🤪🤪
Deleteஇதைக் கேட்டதுக்கப்புறம் தான் என்னோட ரெளத்திரம் கொஞ்சம் அடங்கியிருக்குங்க ஷெரீப்! :)
Deleteசெமயாச் சொன்னீங்க சாமிநாதன் சார்!!
Deleteநியாயம் நம்ம பக்கம் செயலரே!😂
Deleteயாரு ஜெயிச்சா நமக்கு என்ன?..
ReplyDeleteஜனநாயக கடமைய ஆத்துனமா?..
வர்ற புக்கை படிச்சாமான்னு கம்னு இருந்துக்கணும்....😃
அதான் நமக்கு நல்லது..
போட்ரா..கைப்புள்ள ஒரு உறக்கத்தை..😍😘
ஆபீஸ் டைமுக்கு டாண்னு தூக்கம் வந்துடும் போலயே!! ;)
Delete😂😂😂
Deleteஆன் டியூட்டி
Deleteஸோகார் ஆட்டத்தில் இருந்திருந்தா நாமக்கல்லுக்கும் சிவகாசிக்கும் மாறி மாறி தாவியிருப்பீங்க....🤣
Delete@EV ji..😍😃
Deleteஇன்னைக்கு மே 1 லீவுங்கோ..
வெயிலுங்கோ..
வெளியிலேயே தல காட்ட முடியலிங்கோ..
அதனால..AC ய போட்டுட்டு
உறக்கங்கோ..
கிடைக்கிற gap ல பெண்டிங் புக்ஸ் எல்லாம் படிச்சு தீக்கறதுங்கோ..😃😃😃
@STV ji..😃😍
Deleteவேதாளர் கல்யாணத்துக்கு காட்டுக்கு போன நம்ப ஸாகோர் திரும்ப வர மனசு இல்லாமா பெங்காலி காட்லேயே காட்லேயே தங்கிட்டாராம்..😃😃😃
வந்தாச்சா பதிவு....ஆஹா!
ReplyDeleteஇது போங்கு ஆட்டம்
ReplyDeleteசென்னையில் ஓட்டு வைத்தால் CSK தான் கெலிக்கும்!!!
This comment has been removed by the author.
Deleteலோக்சபா எலக்ஷன்ல்லயே சென்னைல 55% தான் போலிங்.
Deleteதமிழ் காமிக்ஸ் தேர்தலை பிரெஞ்சு ரசிகர்கள் குழுவிலா வைப்பாங்க....😜
Deleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDelete//இந்தமாதம் டெக்ஸ் இல்லாத மாதம் .அதை மூடி மறைக்கவே எடிட்டர் சமூகம் இந்த எலக்சனை நடத்தியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.//இதுபோன்ற ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடிக்கடி எழுதுங்கள் இளவரசே.
ReplyDeleteஹிஹி! ஆராய்ச்சிக் கவிதையோட ஒருத்தர் வருவார் பாருங்க.. ;)
Deleteஎங்க இன்னும் ஸ்டீல் சகோவை காணோம்
ReplyDeleteஅதே சமயம், வாங்கி அடுக்குவோர் தலைமையகத்தில் ஒரு மர்ம உருவம் தனது மடிக்கணினியை மும்முரமாக இயக்கியது:
ReplyDelete-> Open Post
-> Scroll to the bottom
-> Notify Me
-> Close Browser
Notification received
Delete:-D
Delete😊😁😁😁
Delete77th
ReplyDelete//ஆராய்ச்சிக் கவிதை // தலைப்பு வேற எடுத்துகுடுத்திட்டிங்களா. //எங்க இன்னும் ஸ்டீல் சகோவ காணலாம்.// சீக்கிரம் வாங்க கவிஞரே.
ReplyDeleteடெக்ஸ் இல்லாத மாதத்தை இனி கனவிலும் எடிட்டர் நினைக்க மாட்டார்.எலக்சன் ரிசல்ட் அப்படி.+111111111111111111111111111😭. 🙏
ReplyDeleteகண்டிப்பாக.... 🌹🌹
Deleteயெஸ்ஷூஊஊஊஊஊஊ
Deleteபன் பட்டர் ஜாம்
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteதல என்னைக்குமே தல தான்.... சினிமா விளையாட்டு மட்டுமல்ல காமிக்ஸ் சிலும் அதுதான் என்பதை அப்பட்டமாக உரைத்த தேர்தல்...
ReplyDeleteநரை கூடி பருவம் எய்த போதிலும் தலையின் கிரீடம் ஜெர்க் அடிக்க வாய்ப்பு இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. இன்னும் எத்தனை புதிய ஹீரோக்களை அறிமுகப்படுத்தினாலும் தல தான் என்றும் நம்பர் ஒன் நம்ம காமிக்ஸில்...
வரிக்கு வரி +1000
Deleteதற்போதைக்கு தலைக்கு சவால் விடும் ஆள் கண்ணுக்கெட்டிய தூரம் காணல...😍
மே ஆன்லைன் மேளாவில் வெற்றி பெற்ற நம்ம பி எம் வேட்பாளருக்கு, (தல) வெயிட்டான ஒரு புக்கு களம் காண இருப்பதாக பட்சிசொல்கிறது . 🌹🌹🌹🌹🌹
ReplyDeleteயெஸ்.... இப்ப சனிக்கிழமை ஒரு கனமான புக் உண்டு💓
Delete
ReplyDelete🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"""கிரிக்கெட்னா அங்க தல தோனி
காமிக்ஸ்னா இங்க தல டெக்ஸ்"""""
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
TeX is Comics Comics is Tex....
ReplyDeleteஇந்த வெற்றி 2015 ல வில்லர் விஸ்வரூபம் எடுத்த நாளிலே பெற்ற வெற்றி...
இந்த வெற்றி 2016 ல மாதம் ஒரு டெக்ஸ் வந்தபோதே பெற்ற வெற்றி...
இந்த வெற்றி லயன் காமிக்ஸில் முதல் சதத்தை டெக்ஸ் போட்ட நாளில் கிடைத்த வெற்றி...
இந்த வெற்றி "கம்பேக் 500 ஸ்பெசல்"- ஆக டெக்ஸ் புக் வந்த நாளில் பெற்ற வெற்றி...
இந்த வெற்றி கார்சனின் கடந்த காலம் அகன்ற வெள்ளி திரையில் வெளியான நாளில் பெற்ற வெற்றி...
இந்த வெற்றி ஒவ்வொரு விழாவிலும் டாப் செல்லரில் டெக்ஸ் வந்தபோதே கிடைத்த வெற்றி...
இந்த வெற்றி மீண்டும் மீண்டும் காமிக்ஸ் தலைமகன் டெக்ஸ் என்று பெருந்தேவன் மனிடோ அருளிய நாளில் கிடைத்த வெற்றி...
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
வாக்களித்து டெக்ஸை வெற்றி பெறச்செய்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்....🙏🙏🙏🙏🙏---அகில உலக தமிழ் டெக்ஸ் ரசிகர் மன்றம் சார்பில்...💕💕💕💕💕💕💕
இந்த தேர்தலில் டெக்ஸ்க்கு தளபதியாக 2ம் இடத்தில் தேர்வாகி டெபாசிட் தக்க வைத்த ஒரே வேட்பாளர் டைகருக்கும் அவர் ரசிகர்களுக்கும் வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐
Delete(மொத்த வாக்கில் 6ல் ஒரு பங்கு பெற்றால் மட்டுமே டெபாசிட் தக்க வைக்க இயலும்)
டெபாசிட் இழந்த மற்றவர்களுக்கு ஆறதல்கள்...
இளவரசி இருந்திருந்தா அவுங்களும் ஒரு 25வாக்குகளுக்கு குறையாம பெற்றிருக்க கடும்...
ஆனால் வெற்றி எங்கள் தலைக்கு மட்டுமே சொந்தம் என்பதை எந்த சக்தியாலும் தடுக்க இயலாது என்பதே தற்போதைய நிலவரம்..😍😍😍😍😍😍
//இந்த தேர்தலில் டெக்ஸ்க்கு தளபதியாக 2ம் இடத்தில் தேர்வாகி டெபாசிட் தக்க வைத்த ஒரே வேட்பாளர் டைகருக்கும் அவர் ரசிகர்களுக்கும் வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐//
DeleteThank u சார்🥰🥰🥰
லார்கோ கோடீஸ்வரர் ; டெபாசிட் அவருக்கு பொரிகடலை மாதிரி !
DeleteXIII பெத்த காசு பார்த்தவர் ; அவருக்கும் சிக்கல் லேது !
ஸ்பைடர் டப்பு வேணும்னா எங்கயாச்சும் ஒரு பேங்கில் சோமாறிடுவார் - so அவருக்கும் டெபாசிட் இழப்பு சிக்கலாகாது !
பாவம், மாதச் சம்பளக்காரர் மாயாவிக்கும், ஒண்டியாய் சுற்றும் லக்கி லூக்குக்கும் தான் கையைக் கடிக்கும் !!
ஆமா சார்..😃😃😃
DeleteInnoru voting vainga. Naan nooru perai pudichu tigerai jeyikka vaikkuren
ReplyDeleteபுத்தகங்கள் வெளிவராத நிலையிலும் 2ம் இடம் கிடைத்தது மாபெரும் வெற்றி.. அதை செலிபரேட் பண்ணுங்க டாக்டர்.. Silver medal also worthy and hard to earn...
DeleteXIII கோட்டைலாம் சரிந்து தவிடு பொடியானபோதும், இரத்தகோட்டை வலிமையாக நிற்குதே..
❤️
Deleteயார்-யார் - எந்த ஈரோவுக்கு ஒட்டு போட்டாங்கன்னு லிஸ்ட் இருக்கு சார் ! அதையும் பிரசுரம் பண்ணி இருந்தா செம ஜாலியா இருந்திருக்கும் !
Deleteடைகர் இரண்டாவது இடத்தை பிடித்ததே உற்சாகமான சேதிதான்.
ReplyDelete👏👏👏👌
Deleteபன் போட்டி காலையிலே என்று சொன்னீர்கள், ஆசிரியரே
ReplyDeleteமதியம் ஒன்று ஆகி விட்டது
இன்னிக்கி வீட்டிலே மோர் குழம்போ ரம்யா ?
Delete😁😁😁😁😁
Deleteமொச்சை பருப்பு + கத்திரிக்காய் போட்டு கார குழம்பு வைத்து விட்டார்கள், ஆசிரியரே
அதான் ஸ்வீட்டான பன்னுக்கு காரமாக ஊற்றி சாப்பிடலாம் என்று....
பன்னு..ஈவினிங் ஸ்னாக்ஸ் க்குதான்..😃😃😃
ReplyDeleteஎந்த வேளைக்கும் உண்ணக்கூடிய ஒரே உணவுன்னு ரவுண்டு பன்னை அடையாளம் காட்டியிருக்காங்களாம் FDA!
Deleteநீங்க நம்மாளு ஜம்பிங் தலைவரே !
Delete😍😘😃😀👍👌🙏🙏
Deleteஒற்றை வோட்டுக் கூடப் பெறாமல் தன் சொந்த ஊரான அமெரிக்க மண்ணிலேயே டைகர் மண்ணைக் கவ்வியிருப்பது - வேதனைக்குரியது!
ReplyDelete6 அமெரிக்க வோட்டுகளில் 4 தல'க்கும், ஒன்று இரும்புக் கைக்கும், மற்றொன்று லக்கிலூக்கிற்கும் பதிவாகியிருக்கிறது! டைகருக்கு ஜீரோ!!
ஒற்றை இரவுக்கு மொத்தப் புதையலையும் அள்ளிக் கொடுத்த அந்த நல்லவருக்கா இந்தக் கதி?!! மனசு ரணமாக் கெடக்குது போங்க! :(
ஜெயிச்சா சூப்பர் ஜெயிட்டோம்னு இருக்கனும்
Deleteஅதை விட்டுட்டு, இப்ப டைகர் தோத்தது பத்தி ஆராய்ச்சி கட்டுரை எதுக்குங்க
சாப்பிட்டாச்சுகளா, சகோ
பன் போட்டியில ஜெயிக்க வாழ்த்துகள்
// ரணமாக் கெடக்குது போங்க//
Deleteகரூர்ல டைகர் ரசிகர் டாக்டர் இருக்காருங்க, போய் பார்த்தீங்கனா மருந்து தரவாருப்பல, சகோ
@கடல் சகோ
Deleteஹிஹி! டேங்க் யூ!!
அதுவும் அரசாங்கத்துக்கு சொந்தமான புதையலை . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteமாடஸ்டி ரசிகர் சகோ, அவிங்க நம்ம இளவரசியை கலாட்டா செய்பவர்கள், அங்கனு சப்போர்ட் பண்ணாதீங்க, சகோ
Deleteசக்தி ஜி @ அரசாங்கத்துக்கு சொந்தமான புதையலை ஏற்கனவே மெக்சிகோ செலவு பண்ணிடுறாங்க..... அந்த ரகசியம் தெரிய கூடாதுனு தானே அந்த சவப்பெட்டி அமெரிக்கா போறதை எப்பாடு பட்டேனும் தடுக்க பார்க்கிறாங்க...
Deleteடைகருக்கு கிடைப்பது விகோ சேர்த்து வைத்த தங்கம்..அதைதான் ஒரு ராவுக்காக சிலுக்குகிட்ட தாரைவார்த்துடறாரு....🤭🤭🤭
ஹிஹிஹி!! ஷேம் ஷேம்!!
Delete😶😶😶😶😶😑😑😑😑
Delete/கரூர்ல டைகர் ரசிகர் டாக்டர் இருக்காருங்க//டாக்டர்.akk சாருங்களா ?சகோ. அவர் இளவரசி ரசிகர் சகோ .நம்ம இளவரசி ரசிகர்கள்ள பேர் சொன்னா தெரியர மாதிரி .akk சார் மாதிரி ஒரு 10பேருதான் இருக்காங்க .அவங்களையும் ஏன் சகோ டைகருக்கு தாரை வார்த்து கொடுக்கறிங்க.கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteபின்றீங்க ராஜசேகர் ஜி! :)))
Deleteஅதில பாருங்க ஈவி....
Deleteஇவுங்க இளவரசி ரசிகர்கள் னு சொல்லிக்குவாங்களாம்...அந்த 10பேரும் டைகருக்கும் ஓட்டு போட்டு புடுவாங்களாம்..
ஆனா இளவரசி பேரு லிஸ்ட்ல இருந்திருந்தா இளவரசி செயிச்சிருமாம்..🤭🤭🤭
நம்ம துரைக்கண்ணு வாத்தியார் சொல்ற மாதிரி அவுங்கள்ட்ட நாமும்..
""என்னா ஜோக் காட்டுறீங்களா????""
// 10பேரும் டைகருக்கும் ஓட்டு போட்டு புடுவாங்களாம்..//
Deleteஏங்க சகோ
நிறையா மாடஸ்டி ரசிகர்கள் டெக்ஸ்க்கு ஓட்டு போட்டு இருக்காங்க, அங்கனுயும் ஓட்டு கம்மியாகும்
@கரூர் ராஜசேகரன் சகோ
தாங்களும் மாடஸ்டி ரசிகர், டெக்ஸ்க்கு ஓட்டு போட்டுடீங்க, நாங்க டைகருக்கு போட்டு இருக்கோம்,
@STVR
Deleteஹிஹி! பரிதாபப் பத்து!! ;)
//நிறையா மாடஸ்டி ரசிகர்கள் டெக்ஸ்க்கு ஓட்டு போட்டு இருக்காங்க, அங்கனுயும் ஓட்டு கம்மியாகும்////
Deleteநிறையலாம் கம்மியாகியிறாது....ஓரிரு வாக்குகள் குறைந்திருக்கலாம்...!!
இளவரசி அறிவிக்கப்பட்டு இருந்திருந்தால் உங்க டைகர்-இளவரசி கூட்டணிக்குள்ளயே விரிசல் கண்டுருக்கும்...
வணக்கம் டெக்ஸ் ஜி. இளவரசி இல்லைங்கும்போது டைகருக்கு ஓட்டு போட்டிருக்காங்க.நான் டெக்ஸ் வில்லருக்கு ஓட்டுபோட்டிருக்கேன்.மொத்தத்தில் நம்ம ஹீரோக்களுக்கு தான் ஓட்டு போட்டிருக்கோம்.நான் 10பேருன்னு சொன்னது பகிரங்கமாக இன்று இளவரசிக்காக வெளியில் வந்து வாதாடிக் கொண்டிருப்பவர்களை. மொத்தமே 10பேர்தான்னு நெனச்சிராதிங்க.டெக்ஸ் டைகர் இரும்புக்கை யார் ஸ்பைடர் இவர்களுக்கு சமமாக ஒரு பெண் களத்தில் நிற்பதே பெருமைப்பட கூடிய விசயமல்லவா . கரூர் ராஜ சேகரன்
ReplyDelete8வதாக அறிவிச்சிருக்கணும் அப்ப தெரிஞ்சிருக்கும்....ஏதோ தன்னோட மொத நாயகினு இரக்கப்பட்டு காப்பாத்திவிட்டுட்டாரு சாரு..!!!
Deleteஒரு சின்ன வருத்தம் டெக்ஸ் வில்ல'ர் 'என்று டைப்பும் போதுடெக்ஸ்வில்லன் என்றே பதிவாகிறது.இதை எதாவது செய்து மாற்ற முடியுமா?
ReplyDeleteஇந்த விசயம் நம்ம ரம்மிக்கு தெரிஞ்சா 'கூகுளாவது உண்மையச் சொல்லுதே!'ம்பாரு!! :)
Delete😂😂😂😂😂
DeleteVijay @ ROFL
Deleteஇருக்கிற ஏழு பேரில் ஒருத்தருக்கு ஓட்டு போட்டிருக்கோம் கடல் சகோ. அதில் பாருங்க டெக்ஸ்விஜயராகவன் சார்.இளவரசி எலக்சன்ல நிற்காமலே ஓட்டு விழுந்தகிட்டிருக்கு கவனிச்சிங்களா
ReplyDelete🙄🙄🙄😑😑
Deleteவேட்புமனுவுக்கே எலிஜபிள் இல்லைனு ஆசிரியர் சாரே ரிஜக்ட் பண்ணின கேன்டிடேட் இளவரசி....!!!
Deleteஆசிரியர் சாருக்கு நன்றி சொல்லுங்க....இல்லைனா டெபாசிட் போன லைன்ல நின்றிருக்கணும்...
ராஜசேகரன் சார் ! இது பாராளுமன்றத்துக்கான தேர்தல் ! அம்புட்டு தொலவுக்கு பொம்பள பிள்ளையை தனியா அனுப்ப வாணாமேன்னு பாத்தேன் ! சட்டமன்றத்துக்கோ ; நகர்மன்றத்துக்கோ தேர்தல் வரட்டும் சார் - நாம யாருன்னு ஊருக்கே காட்டுவோம் !
Deleteஆமா..காட்டுவோம்..✊✊✊
Deleteசாயந்திரம் டீ வேளை வரப்போகுது
ReplyDeleteபன் இன்னும் வரலைங்க😌😌😌
சகோ..
Deleteபன்னுகளும் பட்டாம்பூச்சி மாதிரிதான்! நாம் அதை விரட்டிச்சென்றால் அது நம்மைவிட்டு விலகியோடும்! எதிர்ப்புறம் திரும்பி அமைதியாக உட்கார்ந்திருந்தால் அதுவே நம் வாய்க்குள் நுழைந்து படுத்துக்கொள்ளும்!
பேசாம ஒரு கவிதைப் போட்டி வைக்கலாம் போலயே!!
Deleteதோனி ஆராமாய் இருக்க, ருதுராஜ் கிட்டே தலைவர் பொறுப்பை CSK குடுத்தா மாதிரி நம்ம டெக்ஸ் ஜாலியாய் ஓய்வெடுத்துக் கொண்டு, தனது இடத்தில் லக்கி லூக்கை நுழைக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்களேன் - அந்த டீம் என்ன செப்பும் ? மனசுக்குள் & வெளியே ?
Deleteபண்பட்ட மனிதர்களுக்கு பன் ஊட்டும் போட்டி மேலேயுள்ளது folks !!
பதிவின் வால்பகுதியில் பாருங்களேன் !
Please check the end of the post. Editor sir updated with competition information.
Deleteசூப்பர் சார். ரொம்ப நாள் ஆச்சு இது மாதிரி போட்டி வந்து
Delete//பன்னுகளும் பட்டாம்பூச்சி மாதிரிதான்! நாம் அதை விரட்டிச்சென்றால் அது நம்மைவிட்டு விலகியோடும்! எதிர்ப்புறம் திரும்பி அமைதியாக உட்கார்ந்திருந்தால் அதுவே நம் வாய்க்குள் நுழைந்து படுத்துக்கொள்ளும்!//
Deleteநன்றி சகோ
பட்டாம்பூச்சி கிடைத்துவிட்டது
சிங்கம் சார் அட்டகாசமான போட்டி ஐடியா 😊
Delete///Best caption எதுவென்று தேர்வு செய்திட நம்ம பேரவையின் மகளிர் அணித் தலைவி கடல்யாழ் ரம்யாவை நியமிக்கிறேன் ! ///
ReplyDeleteஅட டே வாழ்த்துகள் கடல்💐💐💐💐💐
நன்றிங்க சகோ 😊😍
Deleteநன்றிகள் ஆசிரியரே 🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤❤
ReplyDeleteசிறப்பாக தேர்ந்திடலாங்க
சகோதரர்களே
ReplyDeleteபோட்டி அறிவிக்கபட்டுவிட்டது
களம் இறங்குகள்
கலந்து கொள்ள போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்
பன்னு போட்டியில பட்டைய கிளப்புறோம் 🥳
ReplyDeleteகிட் : ஹைய்யா...டாடிகிட்டேர்ந்து விடுதலை கிடைச்சிடுச்சி.இந்த சந்தோசத்தைக் கொண்டாட..ஊட்டி கொடைக்கானல்னு டூர் போலாம் அங்கிள்.
ReplyDeleteகார்சன் :மகனே..அங்கெல்லாம் அரிசோனைவிட வெயில் ஜாஸ்தினு ..ஈரோட்லேர்ந்து புகை சமிக்ஞை வந்திருக்குபா.
லக்கி :நான் பாட்டுக்கு..எனக்கு ஓட்டு போட்ட 28 பேருக்கு நன்றிசொல்லிட்டு ஆண்டு மலர்க்கு முன்னாடி வந்திடலாம்னு கிளம்பியவனை பாதியில தடுத்து...என்னய்யா பண்றீங்க.?
டைகர் ஜாக்..: நமக்குதான் கதையில டயலாக்கே தரமாட்டாங்க.சம்திங் ராங்.நாம அப்படியே மொறைச்ச மாதிரியே இரூப்போம்.
முதல் எண்ட்ரி
Deleteசெம சகோ
😀😃
Deleteரொம்பவும் லேட்டாக வருகிறேன்
ReplyDeleteபதிவை பற்றி தகவல் தந்த
சக்தி வேல் ஜி & கடல் யாழ் ரம்யா இருவருக்கும் நன்றிகள்
😊😊😊💐💐
Deleteபன் போட்டி என்றால் ஈரோடு விஜய்க்கு தான். 🤩
ReplyDeleteதங்க தலைவி ரம்யாவுக்கு வாழ்த்துக்கள்☺️
ReplyDeleteநன்றிகள் சகோ 😁😁😁
Deleteநாடாளுமன்ற தேர்தலில் கூட கஷ்டமில்லாமல் ஈசியாக ஓட்டு போட்டேன் ஆனால் நம்ம காமிக்ஸ் நாயகர்களின் தேர்தலில் ஓட்டு போடுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன் அதிரடி அஞ்சா நெஞ்சம் டெக்சுக்கா வலை போட்டு என் இதயத்தை கவர்ந்த ஸ்பைடருக்கா தனக்கு மறதி இருந்தாலும் தனது ரசிகர்களை குஷிப்படுத்த மறக்காத 13 க்கா என மிகவும் குழம்பி மன்டையை உடைத்து கொண்டு கடைசியாக இதயத்தை கல்லாக்கி கொண்டு ஒரு வழியாக ஓட்டு போட்டு விட்டேன்
ReplyDeleteநடுவர் ரம்யாவுக்கு வாழ்த்துக்கள் 💐
ReplyDeleteநன்றிகள் தோழரே 😊😊😊😁😁💐💐💐💐💐
Deleteஒவ்வொரு மாசமும் புக்கு
ReplyDeleteமறு பதிப்புக்கள்
புக் பேர் ஸ்பெஷல் வேற......
இவ்வளவு இருந்தும் டெக்ஸ் வாங்கியது 143 வாக்குகள்.
நிறைய நாளுக்கப்புறம் டைகர் போன வருசம் தான் வந்தாரு
77 வாக்குகள்.
தலைவன்எப்பவும் கெத்து தான் ❤
A:டைகர் ஜாக் ( mind voice)
ReplyDelete"இந்த ஆளு எப்ப பார்த்தாலும் வாயில புகை சமிக்ஞையை என்னோட முக்கு குள்ள விட்டு கடுப்பேத்றார் புனித மானிடோ "
லக்கி (Mind voice)
B:"தனிமையே என் துனைவன்னு ஜாலியாக ஜாலியோடு சுத்திக்கிட்டு இருந்த என்னை இப்படி 3 தடிபசங்க கிட்ட கோத்து விட்டுடாரே அந்த முழியாங்கண்ணன், என்ன இங்க போட்ட மாதிரி அந்த ஆட்டு தாடி கிழத்துக்கு பதில் இளவரசியவாது சேத்திருக்களாம் !!!"
C:கிட் வில்லர்:
என்ன அங்கிள் ஒரு குஷியா இருக்கீங்க, தோல்லை விட்டுச்சு இனிமேலாச்சும் லவ்ஸு, ஒரு மரேஜ் , ஒரு வைஃபு, ஒரு லைஃபு கிடைக்கும்ன்னு தானே??
D:கார்சன்:
அட அத விடப்பா, நைட்டு டின்னருக்கு இந்த ஒல்லி பிச்சான் சாப்பிட்டது போக முக்கால் ப்ளேட் வறுத்த கறிய நினச்சா இப்பவே செம்ம குஜாலா இருக்குப்பா...
😂😂😂👌👌
Delete"முக்கால் ப்ளேட் extra வறுத்த கறி" அந்த extra வ மிஸ் பண்ணிட்டேன்
Deleteடெக்ஸ் வில்லர் அப்பவும் இப்பவும் எப்பவும் சூப்பர் ஸ்டார்
ReplyDeleteநான் மாயாவிதான் ஜெயிப்பார் என்று எதிர்பார்த்தேன் .. "தல" வெற்றின்னாலே அது நானேதான் என நிருபித்திருக்கிறார். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹை.. என் கமெண்ட் பதிவாயிருச்சு..!
ReplyDeleteசூப்பர் சகோ
DeleteA)டைகர் ஜாக்..(மன வாய்ஸ்)
ReplyDeleteநமக்கு பேரு மட்டும்தான் டைகரு..
உரும கூட உட மாட்டேய்ங்கறாங்க..
நம்ம காலம் இப்படியே போய்டும் போல இருக்கே..
B)லக்கி லூக்..(மன வாய்ஸ்)
நான் பாட்டுக்கு சிவனேன்னு "தனியே தன்னந்தனியே" ன்னு பாடிட்டு ஓரமா போய்ட்டுதானே இருந்தேன்..
என்னை கூப்பிட்டு இந்த பய புள்ளைகளோட கோத்து வுட்டுட்டாய்ங்களே..
ஒரு பயபுள்ள எனக்கு கண்ணாலம்...
கண்ணாலம்... னு கதறிகிட்டே கிடக்கறான்..
இந்த தாடி வாலா.. பொழுதன்னிக்கும் சுக்கா..மக்கா ன்னு ஜொல்லு ஊத்திகிட்டே தாடிய நனைச்சிகிட்டே இருக்கு..
இந்தா..இந்த டைகரு பொழுதா பொழுதன்னிக்கும் வெறப்பாவே என்னவோ Z plus security officer மாதிரியே டுபாக்கிய வெறப்பா தூக்கி புடிச்சுகிட்டே அலையுறான்.. மண்ட சூடாயி எங்க நம்பள சுட்டுறுவானோன்னு பயந்து பயந்து வருது..
C)கிட் வில்லர்..
யப்பா..சித்தப்பு!.. நீயாவது எனக்கு கல்யாணம் பண்ணி வப்பியா.. இல்ல எங்க அப்ஸ் மாதிரியே அல்வா குடுத்துகிட்டே அலைவியா..
நம்பள இப்படி புலம்ப வுடுறாங்களே.. கடைசிவரைக்கும் இப்படியே மொட்டப்பையனாவே அலைஞ்சே ஆவணுமா..
என்னமோ போடா மாதவா..
D)கார்சான்..
யப்பா..லக்கி.. இந்த பக்கிக்கு பசிச்சுகிட்டே இருக்குதுப்பா.. லோ..லோ..ன்னு அலையறத நிறுத்திட்டு நெக்ஸ்ட் எங்கேயாவது தள்ளுவண்டி கடையிலேயாவது முக்கா ரொட்டியும், சுக்கா கறியும் வாங்கி கொடுய்யா.. புண்ணியமா போகும்..
சுகர் வேற லோ ஆயிடுச்சுப்பா..
ஜம்பிங் தலைவர் களத்துக்கு வந்துட்டாருங்க
Delete