நண்பர்களே,
வணக்கம். வழக்கமாய் புது புக்ஸ் ஆபீசுக்கு வந்து இறங்கும் போதெல்லாம் பிரெஷான அந்த பிரின்டிங் இங்கின் மணம் நாசியைத் துளைக்கும் ! So டெஸ்பாட்ச் தினத்தை ஆந்தை விழிகள் ஊர்ஜிதம் செய்யும் முன்பாகவே மிஸ்டர் மூக்கார் இனம்கண்டு சொல்லி விடுவது வழக்கம். ஆனால் இன்றைக்கோ ஆபீஸ் வாசலிலேயே ஒரு 'ஜம்'ம்மென்ற மணம் நாசியை வருட, 'அடடே இன்னா மேட்டரு ?' என்றபடிக்கே உள்ளே நுழைந்தால், திக்கெட்டும் ரவுண்டு பன் பாக்கெட்கள் !! அடடா, ரக ரகமாய், சைஸ் சைஸாய், நமது ஆன்லைன் மேளா புக்ஸ் குவிந்து கிடக்க, நடுநாயகமாய் ஒரு பன் மலை ! நூறு தபா கடையில் பார்த்த சமாச்சாரம் தான் ; ஆனால் இப்படி மொத்தமாய்ப் பார்க்கையில், "ஆகா....ஆகாகா..." என்றபடிக்கே பாய்ந்து ஒரு பாக்கெட்டைப் பிரித்து மொசுக்கும் ஆசையை அவசரம் அவசரமாய் விழுங்கி வைப்பது அத்தனை சுலபமாகவெல்லாம் இருக்கவில்லை ! 'ச்சே..ச்சே..நாம சட்டைய இன்லாம் பண்ணிட்டு, கெத்தா வந்திருக்கோம் ; ஒரு வட்டமான வஸ்துவுக்கோசரம் புள்ளீங்க முன்னாடி அதை விட்டுக்கொடுக்கப்படாது' என்றபடிக்கே நடையைக் கட்டினேன் ! "ஆங்...அல்லா டப்பிகளிலேயும் ஒண்ணை மறக்காம வைச்சு விட்டுருங்க !!" என்று கடமைக்குச் சொல்லிவிட்டு ரூமுக்குள் போனாலும், கடைவாயில் கர்சீப்பை ஒற்றியெடுக்கத் தேவை இருந்தது ! பேக்கரியே இங்கு குடி மாறியிருந்தது போலான பீலிங்கை தவிர்க்க இயலவில்லை ! "மைதீன்...இரத்தப் படலம் எவ்ளோ பக்கம் முடிஞ்சிருக்குப்பா ?" என்று வினவும் போதும் பார்வை CC டி.வியில் லயிக்கிறது - பரபரவென்று உசரம் குறைந்து வரும் பன் மலையைப் பார்த்தபடிக்கே ! "அப்புறம்...அந்த ஆண்டுமலர் ராப்பர் டிசைன் கோகிலா கிட்டேர்ந்து வந்திருச்சா மைதீன் ?" என்று விசாரிக்கும் போதும் முட்டைக்கண்கள் அக்கடயே !! "வாங்கியிருக்க பன்னு எண்ணிக்கைலாம் செரியா போயிடுமில்லையா ? எதும் பற்றாம கிற்றாம போயிடாதுலே ?" என்று அக்கறையாய்க் கேட்கும் தோரணையில் வெளியே வந்து நின்ற போது டப்பிகளுக்குள் வேக வேகமாய் அடைக்கலமாகிக் கொண்டிருந்த வட்ட வடிவங்கள் என்னைப் பார்த்து வசீகரப் புன்னகையினை உதிர்ப்பது போலவே இருந்தது !! "இன்னிக்கி சட்டைய இன் பண்ணாமலே வந்திருக்கணுமோ ?" என்ற எண்ணம் மண்டைக்குள் ஓடியதும், "பன்னு ஜாஸ்தி தான் இருக்கு சார் ; பாக்கெட்லாம் போட்ட பிறகும் பத்து-பதினைஞ்சு மிச்சம் கிடக்கும் !" என்று நம்மாட்கள் தகவல் சொன்னதும், ஒரே நொடியின் நிகழ்வுகளாகிட, பச்சக்கென்று குனிந்து ஒரு பாக்கெட்டை கையில் எடுத்துக் கொண்டு ரூமுக்குள் போய் ஐக்கியமானேன் !! "மாடு..மாடு...எடுத்தது தான் எடுத்தே - ரெண்டா எடுத்திருக்கலாமில்லே ?" என்ற குரல் உள்ளுக்குள் ஒலித்த போது, எனக்கே லஜ்ஜை பிடுங்கித் தின்ன, பன்னில் ஒரு வாயைப் பிய்த்துப் போட்டு, அதை சமன் செய்ய முயன்றேன் !! So ஒரு கத்தை இதழ்களோடு இன்றைய டெஸ்பாட்ச் இனிதே நடந்தேறியதென்ற தகவலை, பண்பட்ட மனங்களுக்கு, பன் போட்ட வாயால் சொல்வதே இந்தப் பதிவின் பிரதான நோக்கம் ! நாளை காலை கூரியர்கள் பட்டுவாடாக்களைச் செய்து என்னையும், பன்னையும் காப்பாற்றிட, புனித தேவன் அருள்புரிவாராக !! Phew !!
பொதுவாய் ஒவ்வொரு மாதமும், புக்ஸை தயாரிக்கும் பணிகளினிடையே இருக்கும் போது - ஏதோவொரு காரணத்தின் பொருட்டு, "ஆஹா..புக்ஸ் இப்போவே நண்பர்களைப் போய்ச் சேர்ந்தால் சூப்பரா கீதுமே ?" என்ற எண்ணம் மேலோங்கும் ! ஒரு சூப்பரான கதை அதற்கொரு காரணமாயிருக்கலாம் ; அல்லது நெடுநாள் காணாது போயிருந்ததொரு க்ளாஸிக் நாயகரின் மறுவருகை ஆல்பமாக அது இருந்து வைப்பது காரணமாக இருக்கலாம் ; இல்லாங்காட்டி, உங்களின் கைதட்டல்களை ஈட்டவல்ல ஏதேனும் ஒரு மொழிபெயர்ப்புப் பகுதி மீதான நம்பிக்கை காரணமாக இருக்கலாம் ! And இதோ, இந்த நொடியில் அந்த ஆர்வம் ஊற்றெடுக்கிறது உள்ளுக்குள் - இந்த ஸ்பெஷல் புக்ஸ் மத்தியில் உள்ளதொரு ஒற்றை ஆல்பம் மட்டுமாவது, அம்புட்டுப் பேரது பார்வைகளிலும் இப்போதே விழுந்து விடாதா ? என்று !! அந்த ஆல்பமானது - இம்முறையின் கமர்ஷியல் கி.நா.வே தான் !!
துணைக்கு வந்த ஆவி !!! ஏற்கனவே இது பற்றிய பில்டப்பெல்லாம் 2 பதிவுகளுக்கு முன்னமே தந்து விட்டிருந்தேன் தான் ; yet அதை மறுக்கா மெய்சிலிர்த்து சிலாகிக்க காரணமுள்ளது ! பொதுவாகவே காக்கைகளுக்கு கூட்டில் இருப்பவையெல்லாமே பொன்னிறமாகத் தென்படக் கூடும் தான் !! அட்டுப் படம் எடுப்போருக்குக் கூட, "வாங்கப் போகும் ஆஸ்கார் விருதை எந்த ஷெல்பிலே வைப்பது ?" என்ற கேள்வி எழுந்திடும் ! டப்ஸா புக்கைத் தயாரிக்கிறோம் என்று ஆழ்மனசுக்குத் தெரிந்தாலும், "உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக" என்று கூவவே ஒரு பப்லிஷருக்குத் தோன்றும் ! அடியேனும் அதற்கு விதிவிலக்கல்ல எனும் போது - "துணைக்கு வந்த ஆவி" மீதான அதீத வாஞ்சையினை கொட்டாவியோடு நீங்கள் எதிர்கொண்டீர்களேயானால் தவறு உங்களிடம் இராது ! Yet, trust me guys , இது மாமூலான பில்டப் படலமே அல்ல !
இந்த ஆல்பத்தினை நான் முதன்முதலாய்க் கண்ணில் கண்டது, லாக்டௌன் நாட்களின் ஏதோவொரு வேளையில் தான் ! வழக்கமான கௌபாய் கதை போலத் தென்பட்டாலும், கச்சா-முச்சா என்ற அந்த ஓவிய பாணி பெருசாய் எனது ஆர்வத்தைக் கிளறியிருக்கவில்லை ! நாட்கள் ஓடின & மறுக்கா அந்த ஆல்பம் பற்றிய தகவல்கள் அகஸ்மாத்தாய்க் கண்ணில்பட்டன - செம சிலாகிப்புகளாய் ! Black & White டீலக்ஸ் பதிப்பாகவும், கலர் பதிப்பாகவும் இது சக்கை போடு போட்டு வருவதாய் வாசிக்க முடிந்தது ! இன்னொருவாட்டி பக்கங்களை புரட்டிய போது, முதல்வாட்டி கேப்டன் பிரின்ஸ் கதைகளுக்கு ஓவியர் ஹெர்மன் தீட்டியிருந்த சித்திரங்களைப் பார்த்தது தான் நினைவுக்கு வந்தது ! சரி, இதை ஓரம்கட்டுவதானால், அதற்கு சித்திர பாணி ஒரு காரணமாக இருக்க வேண்டாமே ? என்ற எண்ணத்துடன் நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரிடம் அனுப்பி வைத்தேன் ! 2 வாரங்களுக்குப் பின்னே அவருக்கு போன் செய்து, "அந்தக் கதை எப்புடி கீது மேடம் ? ஏதாச்சும் தேறுமா ?" என்று விசாரித்தேன் ! பொதுவாய், சிக் பில் தவிர்த்த மீத பிரெஞ்சு ஆல்பங்களையெல்லாமே - "ஓ.கே.வா இருக்கு மிஸ்டர் விஜயன் ; எதுக்கும் நீங்க ஒருவாட்டி செக் பண்ணிக்கோங்க !" என்று சொல்லி ஒதுங்கி கொள்ளுவார் ! ஆனால் இம்முறையோ, "வித்தியாசமா இருக்கு ! நம்ம ரீடர்ஸுக்குப் புடிக்கும்னு தான் நினைக்கிறேன் !" என்றார். நமக்கெல்லாம் கதை வாங்குவதென்பது, B.G.நாயுடு ஸ்வீட் ஸ்டாலில் நிற்கும் பச்சைப் புள்ளைக்கு சகல துவாரங்களிலிருந்தும் ஜொள் பிரவாகமெடுப்பதற்கு ஈடானதொரு செயல் ! நம்ம மொழிபெயர்ப்பாளரே க்ரீன் சிக்னல் தந்த பின்னே கேட்கவும் வேணுமா - கபாலென்று வாங்கிப்புட்டேன் ! தொடர்ந்தது தான் ஸ்டெர்ன் வேணுமா ? அல்லது இந்த நவீன கிராபிக் நாவல் வேணுமா ? என்ற ஓட்டெடுப்பு இத்யாதி...இத்யாதி !
அங்கே ஸ்டெர்ன் கெலித்திருந்தாலும், இந்த கமர்ஷியல் கி.நா.வை வாகானதொரு வேளையில் உங்களிடம் காட்டியே தீரணுமே - என்ற குடைச்சல் தலைக்குள் இருந்து வந்தது ! ஆன்லைன் மேளா அதற்கான களமாகிட, ஒரு வழியாய் மொழிபெயர்ப்புக்கென இந்த ஆல்பம் கைக்கு வந்து சேர்ந்தது ! 78 பக்கங்கள் ; கிட்டத்தட்ட நமது ரெகுலர் இதழ்களின் ஒண்ணேமுக்கால் பங்கு நீளம் கொண்டது ! And ஜாலியாய் 2 பெருசுகளோடு வன்மேற்கில் கதை துவங்க, 'அட்றா சக்கை' என்றபடிக்கே வேகமெடுத்தேன் ! 'இப்போதெல்லாம் கிழடுகள் கதைமாந்தர்களானால் நம்மையும் அறியாது குஷி கிளம்பிடுதே - ஒருக்கால் நாமளுமே கிழடாகி வர்றோமோ ?' என்று உள்ளுக்குள் எழுந்த கேள்வியை மண்டையோடு தட்டி அமுக்கி விட்டு வேலையைத் தொடர்ந்தேன் ! டெட்வுட் டிக் அளவுக்கெல்லாம் இல்லாங்காட்டியும், இங்கே நாகரீகமே எட்டிப் பார்த்திரா raw ஆன மனிதர்களே உலா வருகிறார்கள் என்பதும், செம லோக்கலான பேச்சு நடையுமே புழக்கத்தில் இருக்க வேண்டியதன் அவசியம் புரிந்தது ! And ரொம்பச் சீக்கிரமே புரிந்தது, இதுவொரு கதை என்பதைக் காட்டிலும் "ஒரு பயணம்" என்பதே மெய்யாகிடும் என்பது ! நம்ம Texkit போடும் பின்னூட்டங்களுக்குச் சவால் விடும் சுருக்கத்தில் இந்தக் கதையினைச் சொல்லி விடலாம் ! ஆனால் அதனைச் சொல்லியுள்ள பாணியும் சரி, செம சுவாரஸ்யமாய் இணைத்துள்ளதொரு இணைகோட்டுப் பயணியும் சரி, இந்த ஆல்பத்தை ரொம்பவே ரசிக்கும் விதமானதாக்கி இருந்தது ! நிறைய பக்கங்களில் வசனங்களே இல்லாமல் ஓவியர் நம்மோடு பேசியிருப்பதையும் பார்த்த போது - "ஹை...இந்தப் பக்கங்களுக்குலாம் பேனா புடிக்க தேவையே இல்லியே !!" என்று உள்ளுக்குள் குஷியானது ! ஆனால், நிறையவே அழுத்தமான இடங்கள் இருக்க, நிறையவே வேலை வாங்கிடவும் செய்தது ! எல்லாம் முடிந்து, அச்சுக்குச் சென்று, மாதிரிகள் வந்த போது தான் உள்ளுக்குள் 'ஜிவ்வென்று' பரபரக்கத் தோன்றியது !! வேறொன்றுமில்லை - நான் எழுதுவதோ black & white பிரிண்ட்களிலிருந்து ; so டின்டின், லக்கி லூக் போல நான் ஏற்கனவே பார்த்திருக்கும் இதழ்களாய் இருந்தால் தவிர, புக் அச்சாகும் வரைக்கும் கலரில் அதன் பரிமாணங்களை நான் பெரிதாய்ப் பார்த்திருக்க மாட்டேன் ! நான் வேக வேகமாய்த் தாண்டிச் சென்றிருந்த வசனங்களில்லா முழுப்பக்க சித்திரங்களெல்லாம் கலரில் சும்மா தெறிக்க விட்டுக் கொண்டிருந்தன !! Phewwwwww !!! இங்கே கதையே தேவை லேது ; இந்தச் சித்திரங்களை ரசித்தாலே வயிறு நிரம்பி விடும் போல் தோன்றியது ! அந்த நொடியில் எழுந்தது தான், 'இப்போவே இந்த புக் நண்பர்கள் கைக்குச் போய்ச் சேர்ந்திடாதா ?" என்ற பேரவா !! So இந்த ஆல்பத்துக்கும், பணியாற்றிய எங்களுக்கும் நீங்கள் எத்தினி மார்க் போட்டாலும் சரி, போடாமல் மூ.ச.பக்கமா பழகிப் பார்க்க இட்டுப் போனாலும் சரி, நிச்சயமாய் 'ஈஈஈஈ' என்ற இளிப்பு மட்டும் முகத்திலிருந்து அகன்றிடாது - becos இவை போலான சித்திர விருந்துகள் தினமும் வாய்ப்பதே இல்லை ! And அவற்றை இது போன்ற தருணங்களில் களமிறக்கிடும் 'த்ரில்' அறிவார்ந்த சில ஆர்வலர்கள் காதில் புகை விட்டு கழுவி ஊற்றினாலும் கூட மட்டுப்படவே செய்யாது ! இதோ பாருங்களேன் folks :
அந்த முதல் சித்திரத்தைத் தான் பாருங்களேன் !! கண்ணில் பார்க்கவே செய்திரா ஒரு காலகட்டத்தினை இத்தனை உயிர்ப்போடு வரைவதென்பது இந்த AI காலத்திலுமே பிரமிக்கச் செய்கிறது ! And அந்தக் கலரிங் ஆர்ட்டிஸ்ட் நெடுக கதையின் மூடுக்கேற்ப அடர் வர்ணங்களைக் கொண்டு விளையாடியுள்ளார் ! நாளையே உங்களின் பார்சல்கள் கைக்கு கிட்டிடும் பட்சத்தில் - பன்னுக்குத் தரும் கவனிப்பினை "து.வ.ஆ."க்குமே தந்திட்டால் you won't be disappointed guys !!
அப்புறம் க்ளாஸிக் சூப்பர்ஸ்டார்ஸ் ஸ்பெஷலில் ஒரு சின்ன மாற்றம் கீது folks ; அதுக்கோசரம் முன்கூட்டிய sorry ! நம்ம ஸ்பைடர் சாரும், ஆர்ச்சீ சாரும் மோதும் சாகசத்தைக் கண்டு பரவசமாகி, கதையினை ரெடியும் செய்து விட்டோம் ! ஆனால் எடிட்டிங் செய்திடும் போது தான் புரிந்தது - இந்த சாகசம் தொடரின் அத்தியாயம் # 2 என்பது ! So வேக வேகமாய் முதல் பாகத்தையும் வரவழைத்து, ராத்திரியோடு, ராத்திரியாய் மொழிபெயர்ப்பினையும் செய்து முடித்து, பிரிண்டும் செய்தாச்சு ! Surprise ...surprise ....இங்கே நம்ம ஸ்பைடரோடு சலம்புவது சாட்சாத் இரும்புக்கை மாயாவி தான் !! And கூர்மண்டையர் நயமாய் அல்வா தந்திடுகிறார் - மிஸ்டர் கிராண்டேலுக்கு !!
And இன்னொரு இறுதி நிமிட சமாச்சாரமுமே - இம்முறை தவிர்க்க இயலா விஷயமாய் ! பைண்டிங்கில் இறுதி நிமிடத்தில் இயந்திரப் பழுது நேர்ந்திட்டத்தைத் தொடர்ந்து "தண்டர் in ஆப்ரிக்கா" இதழ் சுணங்கி விட்டது ! பழுது நீக்கி, அதையும் முடித்து வாங்கிடுவதானால் இன்னும் 2 அல்லது 3 நாட்களாகிடக்கூடும் என்றொரு சூழ்நிலை ! இவை லேட்டாகிக் கொண்டே போனால் அப்புறம் ஜூன் மாதத்து ரெகுலர் இதழ்களும் சுணங்கிடக்கூடும் என்பதால் இன்றைக்கு 7 புக்ஸ் மட்டுமே அனுப்பியுள்ளோம் ! விடுபட்டுள்ள அந்த ஒற்றை இதழானது ஜூன் சந்தா டப்பிகளோடு பயணமாகும் & சந்தாவில் அல்லாதோருக்கு, தனியாக அனுப்பிடுவோம் ! Very Sorry guys ; தவிர்க்க இயலா இடர் !!
அப்புறம் புறப்படும் முன்பாக ஒரு குட்டியான ஜாலி சேதி !! பிரமிக்கச் செய்யும் 2 ஒன்-ஷாட் ஆல்பங்களுக்கான உரிமைகள் அடுத்த வாரத்தில் நம்மதாகிடும் என்று எதிர்பார்க்கிறேன் ! தெய்வமே.....அவற்றை உள்ளே நுழைக்க கூடுதல் ஸ்லாட்ஸ் தேவை ; அதற்கென வருஷத்தில் ஒரு ரெண்டோ-மூணோ மாசங்களைக் கூட்டிட மட்டும் முடிந்தால் சும்மா 'ஜிலோ'வென்று இருக்குமே !! புனித மனிடோ !
ரைட்டு..நான் நடையைக் கட்டுகிறேன் guys - க்யூபாவில் நம்ம XIII கூட ரகளை செய்திட !! And ஆத்தீ.....நம்மவருக்கென படைப்பாளிகள் திட்டமிட்டிருக்கும் க்ளைமாக்ஸ் மட்டும் எனது யூகத்தின்படி இருக்குமேயானால், பிதாமகர் ஷான் வான் ஹாம் கூட மெய்சிலிர்த்துப் போய்விடுவார் ! அடுத்த ஆல்பத்தோடு முடிவுக்கு வருகிறதாம் இந்த இரண்டாம் சுற்று - பார்க்கணும் இந்த நவம்பரில் அந்த க்ளைமாக்ஸ் இதழை !!
Bye guys....see you around !! அப்புறம் இதையே இந்த வாரயிறுதிக்கான பதிவாய்ப் பாவித்திடக் கோருகிறேன் ! ஆயிரமாவது பதிவின் வருகையை இன்னும் 2 வரங்களுக்காச்சும் நீட்டிக்கணும் ஷாமியோவ் !! Have a beautiful weekend !!
OMG!! I can't believe that I'm the first here for first time in my life!!!
ReplyDelete😨
DeleteIt's an Unbelievable achievement E.V sir😱
DeleteMany many congrats to you😅
டேங்க் யூ JSVP ji!! வாழ்க்கையில் முதன் முறையாக உங்களிடமிருந்து வாழ்த்துப் பெறுவதும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!
Deleteமேலே நண்பர் kumar salem ஏன் அப்படி அதிர்ச்சியாகப் பார்க்கிறார் என்பதுதான் புரியவில்லை!!
மாநாடு படம் மாதிரி Time loop ஆகிகிட்டு இருக்கோனு அதிர்ச்சியாக இருக்கலாம் சார்🕛🕛🕛
Delete///வாழ்க்கையில் முதன் முறையாக உங்களிடமிருந்து வாழ்த்துப் பெறுவதும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!///
Delete😂😂😂😂😂
EV, I also cannot believe how many times you will come for the first time first in your life :-)
DeleteROFL 😃😃😃😃
DeleteIvare first comment posuvaram appuram a ivare post um posuvaram..enna post pottu vera yaarum vanthuda koodathunnu....
Deleteவாழ்த்துகளோ வாழ்த்துகள் நண்பரே.
Deleteமுதல் "பன்"பான கமெண்டை பதிவிட்ட ஈரோடு பன் இளவரசருக்கு வாழ்த்துகள்
Deleteவிஜய் அண்ணா , நேற்றைய நாள் வரை அனைத்தையும் மறந்து விட்டு, அன்றைய நாளில் புதிதாக தொடங்கும் வல்லமை வாய்ந்த அதிசய மனிதர். இது எல்லோருக்கும் கிடைத்து விடாது... சரியா சார்
Delete@ Tex kit, ஜம்பிங் தலீவர், சரவணன், ஜட்ஜம்மா (அம்மம்மா!!), ரகுராமன், ராக் ஜி, JSVP, KS and EV (என்னையும் சேர்த்துக்கிட்டேன்.. ஒரு மாஸ் காட்டணும்ல?)
Deleteநன்றி நண்பர்களே! உங்கள் வாழ்த்து மழையால் உள்ளம் குளிர்ந்தேன். இதுபோன்ற வாழ்த்துகளைப் பெற ஒவ்வொரு முறையும் முயற்சிப்பேன்! :)
தனி சிறப்பு வாய்ந்த... 1000 ஆம் பதிவில் 1 வது மற்றும் 1 முதல் 10 இடம் பிடிக்க நண்பர்கள் என்னென்ன திட்டம் வைத்துள்ளார்களோ ... !!!? வாழ்த்துக்கள்...
Delete///விஜய் அண்ணா , நேற்றைய நாள் வரை அனைத்தையும் மறந்து விட்டு, அன்றைய நாளில் புதிதாக தொடங்கும் வல்லமை வாய்ந்த அதிசய மனிதர். ///
Deleteஒரு வேளை கஜினி சூர்யா மாதிரியோ🤔😅
///இதுபோன்ற வாழ்த்துகளைப் பெற ஒவ்வொரு முறையும் முயற்சிப்பேன்! :)///
Deleteஒவ்வொரு முறையும் முதல் முறை தானே ஸார்?🤭
///ஒரு வேளை கஜினி சூர்யா மாதிரியோ🤔😅///
Deleteசார், ஜஸ்ட் for fun... Don't mistake pls...
///சார், ஜஸ்ட் for fun... Don't mistake pls.///
Deleteநான் ஏன் நண்பரே தப்பா எடுத்துக்கப் போறேன்? கஜினி சூர்யா'ன்னா ஒரு அசின் வந்தாகணுமில்ல? சந்தோசமான சமாச்சாரமாச்சே?!! ;)
😂👌
Deleteஅசின் மட்டுமில்ல நயன்தாராவும் உண்டு சார்🤩
2வது..
ReplyDeleteAgain and again 😅
DeleteCongrats STV sir 💐
தேங்ஸ் JS..🤣 ரன்னர் அப் தான் சாஸ்வதம் போலயே....
DeleteNo sir...
Deleteவெற்றி என்பது அருகில் இல்லை...
நீங்கள் அதை விடுவதாகவும் இல்லை...
Soon U will be the WINNER sir🤝🥰
பொருளாலரும்,செயலாளரும் மாத்தி மாத்தி வருவார்களாம்...மத்தவங்களுக்கு ஒண்ணும் கிடையாதாம்
Deleteசெம்ம சகோ😊😁
DeleteTex kit நீங்க வழக்கமா '157th', '234th' - இப்படித்தானே பதிவிடுவீங்க. இப்ப மட்டும் என்னவாம்? :)
Deleteவந்துட்டேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸார் 💐
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஇது பதிவு எண் 998. வந்துட்டோம் ரொம்ப கிட்ட வந்துட்டோம்.
ReplyDeleteYes Sir 😍
Deleteஎச்சூஸ்மீ. மே ஐ கம் இன்?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWelcome 🙏
ReplyDelete///பிரமிக்கச் செய்யும் 2 ஒன்-ஷாட் ஆல்பங்களுக்கான உரிமைகள் அடுத்த வாரத்தில் நம்மதாகிடும் என்று எதிர்பார்க்கிறேன் ! தெய்வமே.....அவற்றை உள்ளே நுழைக்க கூடுதல் ஸ்லாட்ஸ் தேவை ; ///
ReplyDeleteமுந்தாநேத்து கடந்து போன நம்ம தலீவரோட பிறந்தநாள் ஸ்பெஷல்னு சொல்லி அடுத்த மாசம் வெளியிட்ரலலாம் சார்.!!
🥰🥰🥰
தலீவருக்கு அருமையான பிறந்தநாள் பரிசு
Delete1000 இந்த மாதத்திலேயே முடிக்கிறோம்.. அடுத்த மாதத்தில் ஸ்பெஷல் போடுறோம்... 🔥🔥🔥🔥
ReplyDeleteஆமா ஆமாமா
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDelete// அப்புறம் இதையே இந்த வாரயிறுதிக்கான பதிவாய்ப் பாவித்திடக் கோருகிறேன் // ஓகே சார்.
ReplyDeleteஸ்டெர்ன் கண்டிப்பாக வேண்டும்... ஜெரேமேயா வும் வேண்டும் எடிட்டர் சாரே
ReplyDelete///ஜெரேமேயா வும் வேண்டும் ///
Deleteம்..ம்... வரட்டும் வரட்டும்...😇
💥😂
Delete//ம்..ம்... வரட்டும் வரட்டும்...😇//
Deleteவந்துடுவார் 😁😁😁
Hi Editor sir , துணைக்கு வந்த ஆவி -> pictures looks amazing!!
ReplyDeleteYes each frame tells a story'. Simply superb
Deleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteமனமெல்லாம் மகிழ்ச்சி for ரவுண்டு பன் பிளஸ் books காக. ஆவலுடன் காத்திருக்கிறேன் பொட்டிக்காக. 😍🥰💐
ReplyDeleteதுணைக்கு வந்த மாயாவி..
ReplyDeleteமுதல் இரண்டு படங்களும் ஸ்டன்னிங்.......😮😮😮😮
அப்போ நாளை புத்தகம் வந்ததும் முதலில் துணைக்கு வந்த மாயாவி தான். செம்ம preview சார்.
ReplyDeleteசித்திரங்கள் அமர்க்களம்... அதகளம்... வாவ்..
ReplyDeleteசார்.. நீங்க ஆயிரம் பதிவுகள் போட்டிருந்தாலும் என்னைப் பொறுத்தவரையில் இதான் சார் பெஸ்ட்!! அதுவும் பதிவின் முதல் பாதி - வேற லெவல்!! நீங்க இவ்வளவு ரசிச்சு இதுவரை பார்த்ததில்லீங்க சார்!! நீங்க ஒரு பன்பாளர்ன்றதை நீரூபிச்சுட்டீங்க!
ReplyDeleteஅந்த தூரிகை ஜாலங்கள் எல்லாம் அபாரம்!! ஒவ்வொன்றாக ஜூம் செய்து பார்த்து ரசிகணும்!
பதிவின் கடைசி வரிகள் ரொம்பவே மோசம்!!
உங்களுக்கும் ஒரு பன் வருதாம், வெடிக்காம பார்த்துகோங்க சகோ
Deleteஇது வரை பார்த்ததிலயே நேர்த்தியான, பிரமிப்பூட்டும் சித்திரங்கள் இதுவாக இருக்கும் என்று தோன்றுகிறது சார்😱😳
ReplyDeleteReally Wonderful & Amazing 🤩🔥🎊
கரும்பு தின்ன கூலியா என்பது போல்,
ReplyDeleteதானை தலைவரோடு இரும்புக் கையாரும் சேர்ந்தால் சந்தோஷத்திற்கு கேட்கவும் வேண்டுமா 🤩
Pleasant Surprise 😍👌🔥
நா இப்பவே ஆயிரத்த தட்டி இரண்டு பதிவ வாங்கிடனும்னு இருக்கேன்...ஆர்வமான இரண்டு ஒன் ஷாட் கதைகள் வேறு
ReplyDeleteGood evening friends!
ReplyDeleteஸ்பைடர் இல்லயோன்னு. பயந்தா ஆப்பிரிக்க பயணம் மிஸ்ஸிங்கோ...இந்த கோடை கொடையும் எல்லா இதழுமே ஏக எதிர்பார்ப்பாச்சே
ReplyDeleteதலைவர் ஞாபக மறதியாரை (XII)
ReplyDeleteபற்றி நீங்கள் கூறிய விஷயம் hype ஐ செமயா ஏற்றுகிறது...💪
வெயிட்டிங் ஸார் 😍
முதல்ல படிக்கப் போறதே மாயாவி தான் சார்
ReplyDeleteஆச்சரியமான விசயம் துணைக்கு வந்த மாயாவி தலைப்புடன் ஒரு புக்குன்னா....ஸ்பைடருக்கும் துணைக்கு வருகிறாரே மாயாவி தலைப்பிலில்லாம கதைல...என்னா ஒத்துமை
Deleteநாளைக்கு கொரியர
ReplyDeleteபதிமூன்று சும்மா கலக்க...தாத்தா படபடக்க...மிஸ்டர் நோ..என
ReplyDelete// "ஆகா....ஆகாகா..." என்றபடிக்கே பாய்ந்து ஒரு பாக்கெட்டைப் பிரித்து மொசுக்கும் ஆசையை அவசரம் அவசரமாய் விழுங்கி வைப்பது அத்தனை சுலபமாகவெல்லாம் இருக்கவில்லை ! 'ச்சே..ச்சே..நாம சட்டைய இன்லாம் பண்ணிட்டு, கெத்தா வந்திருக்கோம் ; ஒரு வட்டமான வஸ்துவுக்கோசரம் புள்ளீங்க முன்னாடி அதை விட்டுக்கொடுக்கப்படாது' என்றபடிக்கே நடையைக் கட்டினேன் //
ReplyDeleteROFL :-)
Ayyo pavam sir neengal.
///தெய்வமே.....அவற்றை உள்ளே நுழைக்க கூடுதல் ஸ்லாட்ஸ் தேவை ; அதற்கென வருஷத்தில் ஒரு ரெண்டோ-மூணோ மாசங்களைக் கூட்டிட மட்டும் முடிந்தால் சும்மா 'ஜிலோ'வென்று இருக்குமே !! புனித மனிடோ ! ///
ReplyDeleteஒரு Offline மேளா போட்டு விட்டால் போச்சு சார்😉
சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தா பொறுமையாக சரி செய்துவிட்டு, மேலும் 2 நாள் தள்ளி கூட அனுப்பலாமே சார், நண்பர்கள் பொறுமையாக இருப்பார்களே, உங்களுக்கும் ஒரு வேலை மிச்சம்.
ReplyDeleteஉண்மையில் அந்த படங்கள் ஆச்சரியாமாகத்தான் உள்ளது.
புத்தகத்தில் பார்க்க இன்னும் நல்லாருக்கும்.
நீங்க வார நாட்களின் இடையில எத்தனை பதிவு வேணா போடுங்க சார்,ஆனா வார ஞாயிறில் காலை காஃபி குடிச்சுட்டே படிக்க சுட சுட பதிவு ஒண்ணு போட்ருங்க, இல்லனா என்னமோ மாதிரி இருக்கும்.
அப்றம் அந்த ஜெரெமயா பத்தி எதும் சொல்லைங்களே?....
// கடைவாயில் கர்சீப்பை ஒற்றியெடுக்கத் தேவை இருந்தது ! பேக்கரியே இங்கு குடி மாறியிருந்தது போலான பீலிங்கை தவிர்க்க இயலவில்லை ! "மைதீன்...இரத்தப் படலம் எவ்ளோ பக்கம் முடிஞ்சிருக்குப்பா ?" என்று வினவும் போதும் பார்வை CC டி.வியில் லயிக்கிறது - பரபரவென்று உசரம் குறைந்து வரும் பன் மலையைப் பார்த்தபடிக்கே ! "அப்புறம்...அந்த ஆண்டுமலர் ராப்பர் டிசைன் கோகிலா கிட்டேர்ந்து வந்திருச்சா மைதீன் ?" என்று விசாரிக்கும் போதும் முட்டைக்கண்கள் அக்கடயே !! "வாங்கியிருக்க பன்னு எண்ணிக்கைலாம் செரியா போயிடுமில்லையா ? எதும் பற்றாம கிற்றாம போயிடாதுலே ?" //
ReplyDeleteennna samalippu sir ;-)
// !! "இன்னிக்கி சட்டைய இன் பண்ணாமலே வந்திருக்கணுமோ ?" என்ற எண்ணம் மண்டைக்குள் ஓடியதும், "பன்னு ஜாஸ்தி தான் இருக்கு சார் ; பாக்கெட்லாம் போட்ட பிறகும் பத்து-பதினைஞ்சு மிச்சம் கிடக்கும் !" என்று நம்மாட்கள் தகவல் சொன்னதும், ஒரே நொடியின் நிகழ்வுகளாகிட, பச்சக்கென்று குனிந்து ஒரு பாக்கெட்டை கையில் எடுத்துக் கொண்டு ரூமுக்குள் போய் ஐக்கியமானேன் !! "மாடு..மாடு...எடுத்தது தான் எடுத்தே - ரெண்டா எடுத்திருக்கலாமில்லே ?" //
ReplyDeleteஒரு பன் படுத்தும் படலம் என இந்த பதிவுக்கு பெயர் வைக்கலாம் :-)
// "மாடு..மாடு...எடுத்தது தான் எடுத்தே - ரெண்டா எடுத்திருக்கலாமில்லே ? //
ReplyDelete:-) :-)
க்யூபான்னாலே போராளி தேசம்...கனவு உலகம்...போராளி நாயகர்கள் இருவர தந்த தேசம்...அங்க பயிற்ச்சி பெறுவது பாக்க அந்த வயதில் சேகுவேரா மேலிருந்த மயக்கத்தில் ...க்யூபாவ காட்டுவாங்களான்னு ஏங்கித் தவித்த எனக்கு...இந்தச்சுற்று...வான்ஹாம்மேவ விஞ்ச...ஆஹாஹா
ReplyDeleteசாமீ.. கடவுளே.. நாளைக்கு வரப்போற கொரியர் டப்பி நாளைக்கே கைக்கு கிடைக்கணும்..🙏
ReplyDeleteமேலும் கடவுளே.. டப்பிக்குள்ளே பன்னு வைக்க லயன் ஆபீஸுல யாரும் மறந்திருக்காம இருக்கணும்..🙏
அப்புறம் கடவுளே.. டப்பிக்குள்ளிருக்கும் பன்னை ஈ-எறும்பு அண்டாம இருக்கணும்..🙏
எல்லாத்தையும் விட கடவுளே.. பன்னை சாப்பிட ஆரம்பிக்கும் போது யாரும் காக்கா கடி கேட்காம இருக்கணும்..🙏
🙏🙏
@JS look at this....பன் னோட ருசி அப்படி....
Deleteவாய்ப்பில்லை விஜய் :-)
Deleteஎனக்கு வெள்ளிக்கிழமை அனுப்பும் புத்தகங்கள் இதுவரை மறுநாள் வந்ததாக சரித்திரம் இல்லை :-)
DeleteOk STV sir😂😂😂
Delete///மேலும் கடவுளே.. டப்பிக்குள்ளே பன்னு வைக்க லயன் ஆபீஸுல யாரும் மறந்திருக்காம இருக்கணும்..🙏
Deleteஅப்புறம் கடவுளே.. டப்பிக்குள்ளிருக்கும் பன்னை ஈ-எறும்பு அண்டாம இருக்கணும்..🙏
எல்லாத்தையும் விட கடவுளே.. பன்னை சாப்பிட ஆரம்பிக்கும் போது யாரும் காக்கா கடி கேட்காம இருக்கணும்..🙏///
3 dialogues உம் செம சிரிப்பு சார்... ROFL...🤣
உண்மையான 'பன்'பாளர் நீங்க தான் E.V சார்🤝
ReplyDelete:-)
Delete
Deleteஅவர் பன்னை யாராவது கேட்டால் அவர் "பன்"பளார் ஆகிவிடுவார் ;)
///அவர் பன்னை யாராவது கேட்டால் அவர் "பன்"பளார் ஆகிவிடுவார் ;///
Delete😂😂😂👌👌செம்ம பரணி சார்...சூப்பர் வார்த்தை விளையாட்டு💐
Another two posts to reach 1000 post sir :-) CC: Kumar Salem :-)
ReplyDelete🙏
Delete"துணைக்கு வந்த ஆவி" யா "துணைக்கு வந்த மாயவியா" சார் ?
ReplyDelete// பிரமிக்கச் செய்யும் 2 ஒன்-ஷாட் ஆல்பங்களுக்கான உரிமைகள் அடுத்த வாரத்தில் நம்மதாகிடும் என்று எதிர்பார்க்கிறேன் ! தெய்வமே.....அவற்றை உள்ளே நுழைக்க கூடுதல் ஸ்லாட்ஸ் தேவை ; //
ReplyDeleteகார்த்திக் நோட் திஸ் பாயிண்ட் :-)
அனைவருக்கும் வணக்கம்....
ReplyDeleteஓவியங்கள் . . .திகைத்துப்
ReplyDeleteபிரமித்தேன் Sir . . .ஆத்தி . . .
// ஒரு ரவுண்ட் பன் ரவுண்டப் //
ReplyDeleteசூப்பர் தலைப்பு சார்! பதிவுக்கும் மிக சரியான தலைப்பை வைக்கிறீர்கள் சார்!
@Edi Sir..😍😘
ReplyDeleteMe in..😍😘
73rd
ReplyDeleteகாமடி சார். மிக சுவாரஸ்யமான விவரிப்பு நடை.
ReplyDeleteஇதுக்குதான் சிங்கத்தின் சிறுவயதில் தொடரை தனி புத்தகமாக வேண்டும்னு கேட்பது
+99999999999
Deleteநன்றாக சொன்னீர்கள் சகோ
Deleteஎஃக்கோவா ரம்யா 😂
Deleteபன் பற்றிய எழுத்து நடை தெறி காமடி சார். மிக சுவாரஸ்யமான விவரிப்பு.
Delete(முதல் வரி எப்படி முன்பு மறைந்ததோ )
இதுக்குதான் சிங்கத்தின் சிறுவயதில் தொடரை தனி புத்தகமாக வேண்டும்னு கேட்பது
ReplyDeleteநாய்க்கு வேலையில்லை; நிக்க நேரமில்லை கதையாப் போச்சு எனக்கு.ஏதோதோ வேலைகள்.
எடிட்டர் சார் கேள்வியின் நாயகனாய் அவதார் எடுக்கையில் கூடுமானவரை பதிலளிக்க முயல்வது வழக்கம். அந்த ரீதியில்.....
மாடஸ்டி வெள்ளித் திரையில் நாயகி ...
மியா கலீஃபா..
Like Modesty She rose from the ashes and has a dark past.Now mia is a social media influencer with positive vibes.And she is just 30 years old and like Modesty she has sex appeal.
இல்லை பெட்ரோமேக்ஸ் லைட்டுதான் வேணும்னா
கிரித்திகா ஷெட்டி அல்லது தன்யா ரவிச்சந்திரன்
கார்வினுக்கு- நரேன் ( சித்திரம் பேசுதடி)
மாடஸ்டி ரோலுக்கு கொ. கருப்பாயியை முன் மொழிந்த சில அமெரிக்க ஷெரீஃப்களின் காதுகளுக்கு: தொடர்ந்து மடஸ்டி , மொடஸ்டி என எழுதினால் அவர்கள் இந்தியா வரும்போது ஏவிவிடப்படும் squatters படை அமெரிக்க வீட்டில் வந்து உட்கார்ந்து கொள்ளும். கபர்தார்:D
// அமெரிக்க ஷெரீஃப்களின் காதுகளுக்கு: தொடர்ந்து மடஸ்டி , மொடஸ்டி என எழுதினால் அவர்கள் இந்தியா வரும்போது ஏவிவிடப்படும் squatters படை அமெரிக்க வீட்டில் வந்து உட்கார்ந்து கொள்ளும். கபர்தார்:D //
Delete😂😆
ReplyDeleteQUESTIONS AT A GLANCE :
1.ஒரு பொழுது போகாத நாளில் சும்மானாச்சும் ஒரு தபா, நம்ம வாராந்திரப் பதிவை என் மொக்கை பாணியில் ஆளாளுக்கு எழுதினால் எப்புடி இருக்குமென்று பார்ப்போமா ?
நீங்க பர்மிஷன் கொடுக்காமலே உங்க புக்ஸை எங்களில் சில பேர் பிரிண்ட் போட்டு விக்கறோம்.பேய் சும்மாவே ஆடும். நீங்க கொலுசும் போடுறேங்கிறீங்க.:-) ஜமாய்க்கலாம். ஆனா உங்களை மாதிரி பதிவு எழுதி ஈபுவிழாக்கு இரண்டு ஆயிரம் பக்க ஸ்பெஷல் வரும்னு அதில் இருந்தா அதை நிறைவேத்த வேண்டியிருக்கும்.
:-) Still Imitation is the best form of flattery.
2.வாய்ப்பு அமையும் வேளையில் - "இதே நாள் - இதே மாசம் - பத்தாண்டுகளுக்கு முன்னே" என்று திட்டமிட்டு, அந்தத் தருணத்தின் பதிவினை மறுக்கா இங்கே publish பண்ணி, அதனோடு இப்போது ஒருமுறை fresh-ஆகக் கும்மியடித்துப் பார்க்கலாமா ?
கொண்டாடி மகிழ்ந்த பல தருணங்கள் உண்டுதான். ஆனால் வடிவேலு பாணியில் " பத்து பேரு பரங்கிமலை பக்கமா அடிச்சீங்களே அந்த கும்பலா ?
மீன்பாடி வண்டியிலே கூட்டிட்டுப் போயி இருபது பேர் அடிச்சீங்களே அந்த கும்பலா ? என்பது போன்ற தருணங்களும் உண்டென்பதால் இந்த எண்ணத்தை விட்டுவிடலாம்.தவிர புக்ஸோ, பதிவோ புதுசுதான் வேண்டும்.
.3.விண்வெளிப் பிசாசை ரசிச்சுக்கிட்ட பிற்பாடு, இந்த ஸ்பைடர் டைஜெஸ்ட்டை, டைஜஸ்ட் செய்வது பற்றியொரு தீர்மானம் பண்ணுவோமா ?
ஸ்பைடர், பூரான்,நண்டுவாக்களி இதர கணுக்காலிகள், பல்லி போன்ற மெல்லுடலிகளையும் zoologists ஆராய்ச்சி பண்ண விட்டுவிடுவது உத்தம செயல்.அதற்கு புதிய ஜெரமையா வரலாம். கொள்ளிவாய் பிசாசுக்கு குறளிப் பேய் மேல்.
பழையவற்றினை ஆராதிப்பது தொடருமெனில் பொருணாற்றுப்படை, தொல்காப்பியம், சீவக சிந்தாமணி, நள வெண்பா போன்றவற்றையும் சித்திரக் கதை வடிவில் கொண்டு வரவும். :-)
// நீங்க பர்மிஷன் கொடுக்காமலே உங்க புக்ஸை எங்களில் சில பேர் பிரிண்ட் போட்டு விக்கறோம்.பேய் சும்மாவே ஆடும். நீங்க கொலுசும் போடுறேங்கிறீங்க.:-) //
Deleteசெம செம 🤣
// ஜமாய்க்கலாம். ஆனா உங்களை மாதிரி பதிவு எழுதி ஈபுவிழாக்கு இரண்டு ஆயிரம் பக்க ஸ்பெஷல் வரும்னு அதில் இருந்தா அதை நிறைவேத்த வேண்டியிருக்கும். //
குட் பாயிண்ட். இத ஏன் சார் இப்ப சொன்னீர்கள் 😊 அட 2000 பக்க வட போச்சே 🤣
///பழையவற்றினை ஆராதிப்பது தொடருமெனில் பொருணாற்றுப்படை, தொல்காப்பியம், சீவக சிந்தாமணி, நள வெண்பா போன்றவற்றையும் சித்திரக் கதை வடிவில் கொண்டு வரவும். :-)///
Delete😂😂😂😂😂
///ஸ்பைடர், பூரான்,நண்டுவாக்களி இதர கணுக்காலிகள், பல்லி போன்ற மெல்லுடலிகளையும்///
Delete🤣🤣🤣👌👌👌
ReplyDelete4.முத்து காமிக்சின் இதழ் நம்பர் 500-க்கு உங்கள் பரிந்துரை என்னவாக இருக்குமோ ?
செல்லமுத்து, காடமுத்து , சோணமுத்து காத்தமுத்து போன்ற பழைய முத்தில்லாது புதிய சிப்பிகளை திறந்தெடுத்த புத்தம்புது நன்முத்து எதுவாயினும்.
5.நடப்பாண்டின் crisp reading பாணி உங்களுக்கு எப்படிப்படுகிறது ? ஓ.கே.வா ? Not ஓ.கே.வா ?
ஆரம்பத்தில் ஓகேதான். இப்ப அப்படி இல்ல. இம்மாத இதழ்கள் ஒரே நாளில் படித்து முடிக்கப்பட்டன. பர்கர் சாப்பிட்ட வாய் பட்டாணி சாப்பிட்ட மாதிரி வேறு வழியில்லாம காரிகன்ல இரண்டு கதை படிக்க வேண்டியதாப் போச்சு. ஆன்லைன் ஸ்பெஷல் வர்றதால சமாளிக்கலாம்.ஊடுபயிர் மாதிரி. இப்படி நடுவால புக்ஸ் வந்துகிட்டே இருந்தா ஓகேதான்.
6.நடப்பாண்டினில் இது வரை வெளியாகியிருக்கும் இதழ்களுள் நீங்கள் வாசித்தது எத்தனையோ ?
அத்தனையும் . காரிகனில் மீதம் உள்ள கதைகள் தவிர. Surgical Castro enterologist - இடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வைத்திருக்கிறேன். வி.பிசாசு மற்றும் காரிகனின் மீதிக் கதைகள் படிக்கும்போது குடலைப் பராமரிக்க:-)
// Surgical Castro enterologist - இடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வைத்திருக்கிறேன். வி.பிசாசு மற்றும் காரிகனின் மீதிக் கதைகள் படிக்கும்போது குடலைப் பராமரிக்க:-)
Delete//
ROFL
ReplyDelete/லார்கோ ; டின்டின் ; பெளன்சர் ; டேங்கோ ; ராபின் ; டெட்வுட் டிக் - என crisp reading களங்களிலும் ஸ்கோர் செய்துள்ள புக்ஸ் இம்முறை இருந்துள்ளன என்ற எனது அனுமானம் சரிதானுங்களா ?/
மெத்த சரி! இவர்கள் தானாகவே சுடர்விடும் நட்சத்திரங்கள். ஒளியை வாங்கி பிரதிபலிக்கும் நிலா போன்ற துணைக்கோள்கள் அல்ல.
பக்கங்களின் எண்ணிக்கை அல்ல இவர்களை முன்னிறுத்துவது; உள்ளடக்கமும் கதை சொல்லப்படும் யுக்தியுமே. நல்ல மாங்கனிகள் தனி மரத்திலோ , தோப்பிலோ கிடைப்பது போன்றது.
Deleteஒருவேளை யாரேனும் பதிவைப் படித்தால் அவர்கள் கவனத்திற்கு
பொருணாற்றுப்படை- தவறு
பொருநராற்றுப்படை- சரி
Surgical Castro enterologist- தவறு
Surgical gastro enterologist- சரி
( prompter error)
பழைய பன்னீர்செல்வம் திரும்பி வந்து விட்டார் :-) எல்லா பின்னூட்டங்களும் சிரிப்பு & சிந்தனை.
Delete
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துகள் சொன்ன நண்பர்களுக்கு நன்றி.ஆனால் அது என் பிறந்தநாள் அல்ல. இவ்விடத்தில் ஒரு வேண்டுகோளும் . சில மாதங்களுக்கு முன் நடந்த cyberfraud காரணமாக சில சங்கடங்கள் ஏற்பட்டன. அதனால் எனது வங்கிக் கணக்குகள் பலவற்றை மூடிவிட்டேன். சைபர் கிரைமில் கொடுத்த புகார் காரணமாக இரண்டு வங்கிக் கணக்குகள் CCP மூலம் Hold- ல் வைக்கப்பட்டுள்ளன.நான் எந்த சமூக வலைத் தளங்களிலும் செயல்பாட்டில் இல்லை. எனது primary email உட்பட இரண்டு ஈமெயில் முகவரிகள் ஹைஜாக் செய்யப்பட்டுள்ளன. குற்றவாளியை சைபர்க்ரைம் நெருங்கிவிட்டது.பிரச்சினை எனது அதி முக்கிய டேட்டாக்களை darkweb -ல் விற்று விட்டதுதான்.தற்போது எழுதிக் கொண்டிருப்பது எனது ஸ்டாஃபின் எண் மூலம் பெறப்பட்ட ஈமெயில் முகவரி.
எனது வேண்டுகோள் : யாரேனும் எனது ஈமெயில் முகவரி( சோஷியல் மீடியாவில், வாட்ஸ் அப்பில்) பயன்படுத்தி பணம் கேட்டால் மறுக்கவும்.கடவுள் புண்ணியத்தில் பொருளாதார ரீதியாக நிறைவாக இருக்கிறேன். இதைப் பதிவிடக் காரணம் பிறந்தநாள் வாழ்த்துகள்தான். Fb account -ஐ hack செய்யலாம்.
பின்.குறிப்பு: பழசை புறக்கணித்து புதுசை அரவணைக்கும் எனக்கு 1990 - கள் போலவே பணப் பரிமாற்றங்கள் மனிதர்களிடம் நேரடியாக மட்டுமே செய்ய வேண்டி இருப்பது நகைமுரணே.இதில் பாதுகாப்பு உண்டெண்பதை மறுக்க இயலாது. தள நண்பர்கள் DIGITAL HYGIENE, CYBER SECURITY PROTOCOLS போன்றவற்றைக் கடைப்பிடித்து எச்சரிக்கையாக இருக்கவும்.
என்னை பலர் கேலி செய்தாலும், இன்னும் debit card வாங்காமல், gpay இல்லாமல், fb account இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் சார். எச்சரிக்கைக்கு நன்றி சார்
Deleteகூடிய விரைவில் உங்கள் பிரச்சினைகள் தீரட்டும் சார் சமூக வலைத்தளங்களில், (பிறந்தநாள் உள்ளிட்ட) சொந்த விவரங்கள் பகிர்வதைத் தவிர்ப்பது, இத்தகைய தொல்லைகளைக் குறைக்கும் முதற்கட்ட அரணாக அமையும்!
DeleteAll will get normal soon sir.
Deleteபேசாம பண்டமாற்று முறைக்கே போய்டுங்க செனா அனா!
Deleteஉதாரணத்திற்கு சிவகாசியிலிருந்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு அதற்குப் பதிலாக தலைவலி மாத்திரைகள், விட்டமின் மாத்திரைகள், பேதி மாத்திரைகளை அனுப்பி வைக்கலாம்! :)
😀😀😀 E.V சார் ஏன் இப்படி?
Delete@ JSVP ஹிஹி! ஆத்திர அவசரத்துக்கு உதவுமேன்னுதான்!
Delete
Deleteஓ! தாராளமாகச் செய்யலாம் இசிஈஇளவரசே!!!
ஸ்பைடர் கதைகளுக்கு பேதி மாத்திரை,
ஜெரேமியா- க்கு தலைவலி மாத்திரை
லாரன்ஸ்& டேவிட் -க்கு தூக்க மாத்திரை
மாடஸ்டி போன்ற நாயகியர் கதை- க்கு விட்டமின் மாத்திரை
டெக்ஸ் கதைக்கு ஆம்பிட்டமைன் போன்ற புத்துணர்ச்சி ஊக்க மாத்திரை
பௌன்ஸர் போன்ற - குறிப்பாக இன்னும் வெளிவராத ஆல்ப கதைக்கு - sildenafil citrate ( நாட்டில் பார்த்து தெரிந்து கொள்க) மாத்திரை
இப்படி கதாநாயகர்கள்- க்கு தகுந்த மாதிரி அனுப்பலாம்.
பி.கு: டைகர் கதைக்கு - அனுப்ப சோப் கைவசம் உண்டு.
///ஸ்பைடர் கதைகளுக்கு பேதி மாத்திரை,
Deleteஜெரேமியா- க்கு தலைவலி மாத்திரை
லாரன்ஸ்& டேவிட் -க்கு தூக்க மாத்திரை///
செம்ம சார்😂😂😂😂😂
Deleteஉங்கள் விருப்பம் அதுவாயின் சரிதான்! ஆனால் திருடர்கள் நவீனத்தை அரவணைத்தால் அவர்களை தடுக்க முயல்வதும் தடுப்பதும் நவீன விஞ்ஞானமே.
நிறைய பாதுகாப்பு அம்சங்களும் உண்டு. அவற்றை பற்றிய புரிதலும், மொபைல் , கணிணி ஆப்களை அவ்வப்போது மேம்படுத்ததலும் பெரும்பாலான மோசடிகளை தடுத்து நிறுத்தும்.
குறைகளினால் நவீன முன்னேற்றங்களை அரவணைக்க தயங்குதல் கூடாது. அவற்றைக் களைய தீர்வுகளும் உள்ளன.
பி்கு : கா சோ, pfb போன்றோரின் கவனத்திற்கு: நான் ஒரு எத்திக்கல் ஹேக்கரை சென்னையிலிருந்து வரவழைக்க நேர்ந்தது.காரில் அவரை சென்னையில் இருந்து அழைத்து வந்து திரும்பி கொண்டு விட்டு விட்டேன். இது தவிர ஒரு மணி நேர வேலைக்கு 12000₹ என 6 மணி நேரம் வேலைக்கான ஊதியம் வழங்கப்பட்டது. நான் இதுநாள்வரை IT ஊழியர்கள்தான் அதிக சம்பளம் பெறுவதாக எண்ணி இருந்தேன்.அவர் இருப்பது சென்னை என்றாலும் சொந்த ஊர் பெங்களூர்தான்.
ஆக பெங்களூர் தண்ணீர் பஞ்சத்துக்கு காசோ, pfb போன்றோர் மட்டும் காரணமல்ல போலும்.:D
மேலுள்ள பதிவு நண்பர் SURYAJEEVA அவர்களுக்கானது.
Delete@செ.அ.:
Delete//இதுநாள்வரை IT ஊழியர்கள்தான் அதிக சம்பளம் பெறுவதாக எண்ணி இருந்தேன்//
இல்லீங் டாக்டர், உங்களை விட கம்மியா தான் வாங்குறோம்! :-D
@ஈ.வி.:
//ஒரு மணி நேர வேலைக்கு 12000₹//
நம்ம செனா.அனா. காரில் கடத்திக் கொண்டு வந்த ஆசாமி, ஒரு freelancer என்பதாகவும், அவருக்கு தினமும் 8 மணி நேரம் வேலை செய்யும் அளவுக்கு பணிகள் மாதம் 26 நாட்களுக்குக் கிடைப்பதாகவும் வைத்துக் கொண்டால்,
12000 * 8 hours * 26 days * 12 months = 3 கோடி ஆண்டு வருமானம்
Freelancer என்பதால் tax கட்டாமல் டபாய்க்கும் வாய்ப்பும் உண்டு!
மக்களே, சும்மா சும்மா காமிக்ஸ் & பிளாக் கமெண்டுகள் படிச்சுட்டு இருக்காம, udemy.com-இல் Ethical Hacking Course-ஐ 300 ரூபாய்க்கு வாங்கி, சட்டுபுட்டுனு படிச்சு முடிச்சு, ஆண்டுக்கு 3 கோடி சம்பாதிக்க வாழ்த்துக்கள்! :-D
ஹா ஹா! இதோ இப்பவே அந்த கோர்ஸுக்கு ஆர்டர் பண்ணிடறேன் கார்த்திக்!
Deleteசீக்கிரமே நீங்களெல்லாம் என்னை 'Ethical hacker E.V'னு அழைச்சாலும் ஆச்சரியப்படறதுக்கில்லே!! :)
செல்வம் அபிராமி சார். Thanks for your reply.
Deleteஎடிட்டர் சார், பேசாமல் நீங்கள் காரனேஷன் பன்னுக்கு ஒரு தனிச் சந்தா அறிவித்து விடலாம்! புத்தகப் பெட்டிகளை மாதக்கணக்கில் ஓப்'பன்' செய்யாமல் வைத்திருக்கும் என்னைப் போன்ற சோம்'பன்'களுக்கு இருக்கும் ஒரே பயம், எந்தப் பெட்டியிலிருந்து எந்த (கெட்ட) பன் கிளம்புமோ என்பது தான்! இந்த தடவை பன் பெட்டியை உடனே ஓப்பன் செய்து விடலாம் என்று நினைக்கும் போது, "அட, நீ தான் ரெண்டு மூணு சந்தாவுக்கு இன்னும் பணமே கட்டலியே" என்று உரைக்கிறது.
ReplyDelete:-))))))
DeleteThis comment has been removed by the author.
Deleteஅதான் பன்னு உரைப்போடு உரைக்குது...
Deleteசந்தா பண்ணு...
சந்தோசமா பன்னு...
சங்கடமிலாம தின்னு
Delete
ஆசிரியர் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை! ஆனால், இந்த அளவு passive marketing பண்ணும் ஒரு நிறுவனம் காணக் கிடைப்பது இன்றைய தேதியில் மிக அரிது! இப்போதெல்லாம், ஏதாவது ஒரு பொருளை வாங்கும் போது மொபைல் எண்ணைக் கொடுத்த அடுத்த நொடியில் இருந்தே வாட்ஸ்அப்பில் "நீங்க ஏன் இந்த டிஷர்ட்டை வாங்கக் கூடாது, 50% தள்ளுபடி விலையில் வாங்க நாளையே கடைசி நாள், நீங்க ஆர்டர் போட்டு ஒரு வாரம் ஆயிடிச்சு, வி மிஸ் யூ" என்று நை நை என்று படுத்தி எடுக்கிறார்கள்.
Deleteநாம் அந்த ரேஞ்சுக்கு போகாவிட்டால் கூட, நமது சந்தாதாரர்கள், சாராததாரர்கள், புத்தக விழாவில் ஒற்றை புத்தகம் வாங்கியவர்கள் என்று அனைத்து தரப்பினரின் மொபைல் எண்களுக்கும், மாதம் ஒருமுறை அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது "எங்களிடம் இன்னின்ன சந்தாக்கள் இருக்கின்றன, இந்த மாதம் இந்த இந்த புத்தகங்கள் வெளியாகி உள்ளன, ஆன்லைன் புத்தக விழா இந்த வாரயிறுதியில் நடைபெறுகிறது, ஈரோடு புத்தக விழா அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது" என்று வாட்ஸ்அப்பில் எதையாவது அனுப்பி வைக்கலாம்!
வலைப்பூ என்னும் இந்த சின்ன வட்டத்துக்குளேயே அனைவற்றையும் அறிவிப்பது அன்னியோன்யம் & conversations இவற்றிக்கு உதவும் தான்! ஆனால், புதியவர்களை விடுங்கள், தொடர்பு அறுந்த/குறைந்த பழைய வாசகர்களை மீண்டும் ஈர்க்க உதவுமா?
நச்சுனு கேட்டீங்க கார்த்திக்!
Deleteமேலே அந்த 'பன் சந்தா' சமாச்சாரமும் ரொம்பப் பிடிச்சிருக்கு! :)
Delete// மாதம் ஒருமுறை அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது "எங்களிடம் இன்னின்ன சந்தாக்கள் இருக்கின்றன, இந்த மாதம் இந்த இந்த புத்தகங்கள் வெளியாகி உள்ளன, ஆன்லைன் புத்தக விழா இந்த வாரயிறுதியில் நடைபெறுகிறது, ஈரோடு புத்தக விழா அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது" என்று வாட்ஸ்அப்பில் எதையாவது அனுப்பி வைக்கலாம்! //
Good idea!
// நாம் அந்த ரேஞ்சுக்கு போகாவிட்டால் கூட, நமது சந்தாதாரர்கள், சாராததாரர்கள், புத்தக விழாவில் ஒற்றை புத்தகம் வாங்கியவர்கள் என்று அனைத்து தரப்பினரின் மொபைல் எண்களுக்கும், மாதம் ஒருமுறை அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது "எங்களிடம் இன்னின்ன சந்தாக்கள் இருக்கின்றன, இந்த மாதம் இந்த இந்த புத்தகங்கள் வெளியாகி உள்ளன, ஆன்லைன் புத்தக விழா இந்த வாரயிறுதியில் நடைபெறுகிறது, ஈரோடு புத்தக விழா அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது" என்று வாட்ஸ்அப்பில் எதையாவது அனுப்பி வைக்கலாம்! //
Deleteநல்ல யோசனை சார் . புத்தக விழாவில் இதற்கான ஒரு ரெஜிஸ்டர் தயார் செய்து அதில் புத்தகம் வாங்குபவர்களின்
அலைபேசி whatsapp எண்ணை வாங்குவதற்கு அலுவலக பணியாளரும் அல்லது நம்பகமான வாசகர் நண்பர் ஒருவர் இருந்தால் மட்டுமே சாத்தியம் புத்தக விழாவில் மேடம் ஒருவரே விற்பனையும் கவனித்துக் கொண்டு இந்த ஏற்பாட்டையும் சமாளிப்பது மிகவும் கடினம் அனுபவ ரீதியாக உறுதியாக சொல்கிறேன்.
மற்றபடி உங்கள் யோசனை நல்ல யோசனை தான்...
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஇனிய கலை வணக்கங்கள் 😊💐
ReplyDeleteSis, நேத்து நீங்க லீவ் oh?
Deleteஇரவு சீக்கிரமா தூங்கிட்டேன் சகோ
Delete@JSVP சகோ
Deleteஎங்கள் காமிக்ஸ் வாட்சப் க்ருப்பில் இணைந்து கொள்கிறீர்களா?
கண்டிப்பாக Sis... With Pleasure 🙏😊
DeleteThis comment has been removed by the author.
DeleteOk Sis 👍👍👍
Delete100 😁😁😁
ReplyDelete"து.வ.ஆ." சித்திரங்கள் உண்மையாக பிரம்மிக்க வைக்கிறது, I am waiting.
ReplyDeleteவிஜயன் சார், ஓநாய் வேட்டை அட்டைப்படம் + உள்பக்க டீசர் சீக்கிரம் காட்டுங்கள் சார்😊
ReplyDeleteவந்ருக்கும்ல....பேர்ல் பாரு...அவரே பதிவ கடத்த பாக்குறாரு...நீ படுத்துரிய
Deleteநேர்ல...அதாவது பார்சல்ல
Delete'ஜம்' ம்மென்ற மணமெ
ReplyDeleteஅப்போ எங்களுக்கு ஜம்மு ஜம்முனு கொரியர் வந்திடும்
// க்ளாஸிக் சூப்பர்ஸ்டார்ஸ் ஸ்பெஷலில் ஒரு சின்ன மாற்றம் கீது folks ; அதுக்கோசரம் முன்கூட்டிய sorry ! நம்ம ஸ்பைடர் சாரும், ஆர்ச்சீ சாரும் மோதும் சாகசத்தைக் கண்டு பரவசமாகி, கதையினை ரெடியும் செய்து விட்டோம் ! ஆனால் எடிட்டிங் செய்திடும் போது தான் புரிந்தது - இந்த சாகசம் தொடரின் அத்தியாயம் # 2 என்பது ! So வேக வேகமாய் முதல் பாகத்தையும் வரவழைத்து, ராத்திரியோடு, ராத்திரியாய் மொழிபெயர்ப்பினையும் செய்து முடித்து, பிரிண்டும் செய்தாச்சு ! Surprise ...surprise ....இங்கே நம்ம ஸ்பைடரோடு சலம்புவது சாட்சாத் இரும்புக்கை மாயாவி தான் !! And கூர்மண்டையர் நயமாய் அல்வா தந்திடுகிறார் - மிஸ்டர் கிராண்டேலுக்கு !! //
ReplyDeleteஅப்படி என்றால் முதல் பாகம் இப்பொழுது பார்சலில் வருகிறதா அல்லது இரண்டு பாகங்களும் சேர்ந்து ஒரே புத்தகமாக இப்போது வருகிறதா? அல்லது முதல் பாகம் இப்பொழுது என்றால் இரண்டாம் பாகம் எப்போது வரும் சார் ?
எங்கயோ போய்ட்டல...நீ உருப்படியா கேட்ட மொத கேள்வி மக்கா...பன்ன எடு கொண்டாடு
Deleteஅப்படியே பன்ன தின்னுட்டு முழிக்காம.....புத்தகங்களையும் ஒரு பார்வ பாரு ...பதில் கெடச்சிரும்
Deleteஇப்போ முதல் பாகம் வருது. இரண்டாம் பாகம் பிறிதொரு நாளில் வரும்.
DeleteAugust
Deleteநன்றி சார்
Deleteபரணி ஜி ஏற்பட்ட சந்தேகங்கள் எல்லாம் கேட்டு விட்டீர்கள் தேங்க்ஸ்.அப்பாலிக்கா மே. 4.
ReplyDelete" டெக்னாலஜி ". தலைப்பு பதிவில் ஓநாய் வேட்டை முன்அட்டையும் ப்ரிவியூவும் வந்துவிட்டது ங்க சார் .
நன்றி சார்
Deleteவணக்கம் உறவுகளை..
ReplyDeleteபதிவின் முதல் பகுதி செம்ம ஹாஷ்யம் வாத்யாரே..
ReplyDeleteகெக்கே பிக்கேன்னு சிரிச்சு வயிறு வலிக்குது.. 😂😂😂😂😂😂😂
ஸ்பைடர், ஆர்ச்சி, மாயாவி மூவரும் இணைந்து கலக்கும் இதழா..??
ReplyDeleteகூட கம்ப்யுட்டர் மேக்சின் 13 ம் மாடியும்
Deleteக்ளாசிக் ஸ்பெஷல்னா இதான்... மாஸ்.... 😍😍😍😍😍😍
Deleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteநண்பர்களே,
ReplyDeleteஜஸ்ட் now got the Parcel🤩💪
ஹை... ஆன்லைன் மேளா புக்ஸ் வந்தாச்சுனு ரொம்ப ஆவலா திறந்து பார்த்தேன்...🤑
உள்ளே, எனக்காக ரொம்ப மினுமினுப்புடன், பளபளப்புடன் காத்துக் கொண்டு இருந்தன................... ஆறு வட்ட நிலாக்கள் போன்ற, அழகிய ரவுண்டு "பன்"கள் 🍔🍔🍔🍔🍔🍔😳
நான் எதோ விளையாட்டுக்கு சொல்றாங்கனு நினைச்சேன்...
உண்மையாவே ரவுண்டு பன்ஸ்😂
தெரிஞ்சிருந்தா உண்மையாவே E.V சாருக்கு அனுப்ப சொல்லி இருப்பேன்... அவரு கிளவுட் நைன் ல மிதந்து இருப்பாரு😉
ஸார், பன் மட்டும் தானா, book வரும்ல?🤗
///
Deleteஸார், பன் மட்டும் தானா, book வரும்ல?
///
ஆமாம் எடிட்டர் சார்.. ஆன்லைன் மேளா புத்தகங்களோடு பன்னும் பரிசுன்னு சொல்லியிருந்தீங்க.
///உண்மையாவே E.V சாருக்கு அனுப்ப சொல்லி இருப்பேன்...///
எனக்கு வேண்டாம் நண்பரே! நன்றிகள் பல!
வீட்டிலோ, ஆபீசிலோ மெட்டல் டிடெக்டர் வச்சிருக்கீங்களா? ;)
///வீட்டிலோ, ஆபீசிலோ மெட்டல் டிடெக்டர் வச்சிருக்கீங்களா? ///
DeleteNo sir😟
பார்சல் வாங்க போய்ட்ருக்கமுல்ல
ReplyDeleteகலக்குங்க ஸ்டீல் சார்👌👌👌😊
ReplyDeleteவேங்கியாச்...வேங்கியாச்
ReplyDeleteஅப்போ அசத்துங்க😅👌
Deleteமுதன் முறையாக தி ஃபேமஸ் ரவுண்டு" பன்"னை சுவைக்கவிருக்கும் நண்பர் jsvpக்கு வாழ்த்துக்கள் .வெல்கம் டுதி ரவுண்டு பன் கிளப்.
ReplyDeleteThank u very much Raja sekar சார் 😍🤝🤝🤝
Deleteஇதுவரை பார்த்திராத புது மாதிரியான ஓவியங்கள். துணைக்கு வந்த மாயாவிஎதிர்பார்ப்பை தூண்டுது
ReplyDelete// அந்த முதல் சித்திரத்தைத் தான் பாருங்களேன் !! //
ReplyDeleteதெறிக்கச் செய்யும் சித்திரங்கள், ஜாலம் காட்டும் வர்ணச் சேர்க்கைகள் சார்..
துணைக்கு வந்த மாயாவிக்கு துணையாக இன்னொரு இதழை ஆர்டர் செய்யனும் போல...
பார்சலை கை பற்றியாயிற்று சார்....மிக்க நன்றி பன்னை வாரிசுகள் பதம் பார்க்க புத்தகங்களை பதம் பார்க்க நான் சென்று வருகிறேன் சார்...:-)
ReplyDeleteஅடேங்கப்பா பெட்டகத்தை பிரித்து புதையல்களை கண் குளிர ரசித்தாகி விட்டது...அனைத்து இதழ்களுமே அட்டைப்படத்திலும் சரி...உட்பக்க சித்தரங்களிலும் சரி...தரத்திலும் சரி...வண்ண இதழ்கள்..கறுப்பு வெள்ளை இதழ்கள்..பெரிய இதழ்கள்..சிறிய இதழ்கள்..குட்டி இதழ்கள் என பார்க்க பார்க்க ஒரு மிக்ஸிங் ஸ்வீட் பாக்ஸை திறந்து பார்த்து எதை முதலில் எடுப்பது எதை முதலில் ருசிப்பது என ஒரு திண்டாட்டம் வருமே அந்த திண்டாட்டம் இப்பொழுது சார்...என்ன செய்வேன் ஏது செய்வேன்.....ஹீம் இப்படி ஒரு திண்டாட்ட கொண்டாட்டமா....:-)
ReplyDelete///திண்டாட்ட கொண்டாட்டமா///
Deleteரைமிங்கா எழுதி அசத்தறீங்க தலீவரே!!
நா கேட்ட ஸ்பைடர் ஸ்டிக்கர் தவிர எல்லாமே இருக்கு....நல்லாவே இருக்கு....ஸ்பைடர் லேடி ஜேம்ஸ் அண்ட் செம....எல்லா அட்டையும் பட்டாஸ்....அதுவும் டெக்ஸ் வேற லெவல்
ReplyDeleteபன்ல சுட்ட ஆப்பம் போல
ReplyDeleteபிசி அப்பப்ப வாரேன்....
Deleteகொரியர் தெய்வம் ஃபோன் பன்'னினார்! பார்ஸலை வீட்ல கொடுத்துடறேன்னு சொன்னார்.. இப்போது நானிருப்பது ஆபீஸ் என்பதால் நவஹோக்களைப் போல கூக்குரலிடாமல் அடக்கிக் கொண்டு 'ஆங்.. பார்த்து பத்திரமா கொடுத்துட்டுப் போங்க' என்று பன்போடு சொன்னேன்.
ReplyDeleteஅடுத்த நிமிடமே வீட்டம்மாவுக்கு ஃபோன் செய்து பார்ஸல் வந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டதோடு 'பார்ஸலை ஷெல்ப்பில் வச்சு.. சுற்றிலும் கொஞ்சம் எறும்பு மருந்தைத் தூவிவிடு' என்று கெஞ்சும் குரலில் உத்தரவிட்டிருக்கிறேன்.
நைட் எல்லாரும் தூங்கினதுக்கப்புறம் ஓசையில்லாம பார்சலைப் பிரிக்கணும்!😋😋
எல்லாமே ரைட்டு ....ஆனா அந்த "உத்தரவிடற " சமாச்சாரம்லாம் நம்புறா மெரி இல்லியே ?
Deleteஎன்ன தான் பாகுபலியா இருந்தாலும் உசிர் பயம் இல்லாம போயிடுமா - என்ன ?
ஹிஹி.. வருஷத்துக்கு ஒன்னுரெண்டு வாட்டி இப்படி உத்தரவிடறதுக்கு ஏற்கனவே பர்மிஷன் வாங்கி வச்சிருக்கேன். அப்பத்தான் அவங்களுக்கு கோபம் வந்து என்னை மிதிக்கும்போதெல்லாம் நானும் கண்டும் காணாமலும் இருக்க முடியும்! :)
Deleteகொஞ்சும் குரலில் கதறினேன் என இங்கேவாது தைரியமாக சொல்லுங்கள் விஜய் :-)
Delete///கொஞ்சும் குரலில் கதறினேன் என இங்கேவாது தைரியமாக சொல்லுங்கள் விஜய் :-)///
Delete😂😂😂😂😂
// கெஞ்சும் குரலில் உத்தரவிட்டிருக்கிறேன் //
Deleteநம்பிட்டோம் :-)
PfB 😂😂😂😂 Same bloodu?!! 😂
Deleteஎடிட்டர் சார்..
ReplyDeleteஉங்களிடம் ஒரு கேள்வி! ஈ.பு.வி தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்களென்று நம்புகிறேன். நீங்கள் கடந்த ஆண்டு சே.பு.வி'க்கு ஒரு சர்ப்ரைஸ் விசிட் அடித்த அன்று நானும் நண்பர்களும் உங்களிடம் 'ஈரோட்டைப் போலவே சேலத்திலும் ஒரு வாசகர் சந்திப்பு விழா'வை நடத்துவது பற்றி பேசியது ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறேன்.
இவ்வாண்டு ஈரோட்டிற்கு பதிலாக சேலத்தில் கொண்டாட்டத்தை வைத்துக் கொள்வது பற்றி நண்பர்களிடம் 'கனவுலகம்' குரூப்பில் கருத்துக் கேட்டிருந்தேன்.
வாக்களித்திருந்தோர் விபரம் கீழே :
சேலம் ஓகே = 21
ஈரோடு தான் = 12
எங்கேன்னாலும் ஓகே = 18
ஆக, சேலத்தில் விழா நடப்பதை பெரும்பான்மை நண்பர்கள் விரும்புவதை அறிந்துகொள்ள முடிகிறது!
ஈ.பு.வி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் 100% என்றால், சே.பு.வி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் சுமார் 90% மட்டுமே என்பதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது!
இது நண்பர்களின் விருப்பத்தை முன்மொழிந்ததாக மட்டுமே அர்த்தமாகிடுமே தவிர என் தனிப்பட்ட விருப்பமல்ல என்பதை நண்பர்கள் அனைவருக்குமே சொல்லிக்கொள்கிறேன்.
இது குறித்து உங்கள் எண்ணங்களை அறிந்து கொள்ள ஆவல் எடிட்டர் சார்! இதன் சாதக/பாதகங்களை நீங்கள் மட்டுமே அறிவீர்கள்! காமிக்ஸ் உலகின் உண்மையான ஜட்ஜய்யா நீங்கள் தான்!
சேலம் புத்தகவிழா நடைபெறுவதில் ஐயங்கள் நஹி சார் ; நமக்கு மட்டுமென்றில்லை - புத்தக விழா circuit-ல் உள்ள அனைவருக்குமே இதுவொரு அற்புதமான களமாகியுள்ளது ! விழா நடைபெறும் ஊரின் மையம் ; விழா ஏற்பாடுகள் ; வாசக ஆதரவென்பன சேலத்தை இன்றியமையா விழாக்களில் ஒன்றாக்கியுள்ளது !
DeleteSo நண்பர்களின் தேர்வு சேலமாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் பரிசீலிக்கலாம் ! Ball is in your court guys !
சேலத்தில் நடத்த ரசிகர்கள் ஆதரவு பெருகுவது மகிழ்ச்சி சார்..😍
Deleteஅனைத்து ஊர் ரசிகர்கள் வாக்களித்து விருப்பத்தை தெரிவிக்க இங்கே ஒரு Pollingஏற்பாடு செய்யுங்கள் சார்...🙏
// அனைத்து ஊர் ரசிகர்கள் வாக்களித்து விருப்பத்தை தெரிவிக்க இங்கே ஒரு Pollingஏற்பாடு செய்யுங்கள் சார் //
Delete+1
Salam OK for me Sir👍
ReplyDeleteஇப்போதுதான் பார்சலை கைப்பற்றினேன். ரவுண்ட் பன்னையும் கைப்பற்றிய ஆச்சு. இனி என்ன மொஜக் மொஜக் தான். அப்புறம் தான் புத்தகத்தின் மீது கண் விழும்
ReplyDeleteநமக்கு இன்னும் வரலியே... ☹️☹️
ReplyDeleteபன்னையும் முடிச்சாச்சு. பாண்டையும் முடிச்சாச்சு. காங்கேயத்திற்கு ஒரே நாளில் வந்து விடும்ங்க
ReplyDeleteWow. Unexpected Surprise. Waiting for courier.
ReplyDeleteஜென் பாண்டு கதை அட்டகாசமாக உள்ளது.
ReplyDelete8/10. ஓவியங்களுக்காக இரண்டு மார்க் கம்மி.
கிளாசிக் சூப்பர் ஸ்டார் ஸ்பெஷல் 1. இரும்புக்கை மாயாவியின் தனிக்கதை முன்னர் வெளிவந்த கௌபாய் ஸ்பெஷலில் இடம் பெற்ற கதை. ஸ்பைடர் மாயாவையும் மோதிக் கொள்ளும் கதை அட்டகாசமாக இருந்தது. ஆனால் ஓவியங்களை பொறுத்தவரை எனக்கு திருப்தி இல்லை. ஓவியங்களில் யாருடைய முகமும் தெளிவாக இல்லை. பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக். ஸ்பைடர் Vs மாயாவி
கதை 10/10
சித்திரங்கள் 4/10
பலருக்கும் இன்று ஜென்பாண்டின் விமர்சனம் திங்களன்று
ReplyDeleteதற்போது டைலனுடன் அண்ணம் தண்ணீர் புழங்கிக் கொண்டிருக்கிறேன். சில பணிகள் இருப்பதால் திங்கள் அன்று சந்திக்கிறேன்
Surprised. Received the courier. Will be opening the package after reaching home in the night.
ReplyDeleteu hav received ur parcel in saturday for the first time in ur life!!
Deleteவாழ்த்துகள் PfB!! :)
Congrats Parani sir...👏👏👏
DeleteYESSSSSSS! Thank you!!!
Deleteஇன்னிக்குப் பதிவுக் கிழமை! ஏன் யாருமே பதிவு கேட்கலை!
ReplyDeleteஅவர் அப்படித்தான் சொல்வார்.. அதுக்காண்டி நாம கேட்காம இருக்க முடியுமா?!!
கண்டிப்பா சார்... கேளுங்க😉
DeleteRECEIVED BOOKS ..
ReplyDelete1. DYLAN DOG .. GOOD STORY IN COLOR .. NEED A FULL FLEDGED STORY OF DYLAN ..
2. SPIIDER AND IRUMBUKAI .. NICE TO SEE BOTH CLASSIC HEROES IN SAME PANELS ..ALSO IN COLOR .. என்ன "இரும்பு கை மாயாவி "தான் இரும்பு சத்து இல்லாத மாயாவி மாதிரி தெரிகிறார் ..
3.JANE BOND .. TYPICAL "WORLD SAVING " AGENT STORY .. OK ..
4. SIRUTHAI .. DECENT STORY .. KIDS WILL LIKE IT ..
5. ROUND BUN ALSO COMPLETED ..
so fast :-)
Deleteசார் பார்சல பிரித்ததும் என்பதுகளில் தியேட்டரில் விளம்பரத்தில்...பிரிட்டானியா பிஸ்கட் தீவுல பயங்கர தங்க பொக்கிஷங்கள் பாத்து ரசித்து அது போல கண்டுபிடிச்ச வளமான வாழலாம்னு நம்பியதோர் காலம்னா....அது நிஜமாகிடிச்சோங்குது இந்த பார்சல்...காலைல ஸ்கூலுக்கு போய் மகனுக்கு புத்தகத்துக்கு பணத்தை காட்டி வாங்கிட்டு....லேட்டாகும்ன கொரியர்காரர வழில மடக்கி பார்சல் படிச்சு...வீட்ல செந்தூரானுக்கு காட்டி...எங்க ரெண்டு பேருக்கும் புத்தக பண்டல்...பன்ன தங்கை மகளுக்கு தந்துட்டு பார்சலோட கிளம்பி....
ReplyDeleteவலை மன்னன் அட்டைபடத்ல ஆர்ச்சிய வலைத் பாத்து அதிர்ந்த எனக்கு அட்டைப்படம் நேர்ல வேறயா பட்டய கிளப்ப...ஈவி பாத்தத பார்வைல ஜெல்லியிழந்த ஸ்பைடர் உடலிளைக்க வண்ணத்ல தலைம கலக்க.... அடுத்து தடுமாறி விழுந்த ஜேன் அட்டை ஆளை அசத்த .....குட்டியா ம் சிறுத்தை மனிதன் அழகாய் வசீகரிக்க அடுத்து வருகிறது விளம்பரம் யானையோடு அவனும் 80 கோளின் பெருமூச்சு வெளிப்படுத்த...டயலன் வண்ணத்ல அழகாய் மனதோடமர..மாயாத்மா சும்மா மிரட்ட.....துணைக்கு வந்த மாயாவி அட்டைப்படமா....மோனலிசாவ ரசிக்க தெரியாட்டியும். இப்படித்தான் ரசிப்பாங்கன்னு என்னையும் கலாரசிகனாக்க உள் பக்கங்களோ அடேயப்பா வண்ணம்னா அதான்...அந்த ரோஸும் நீலமும் அரஞ்சும் நடத்தும் வான வேடிக்கைகளும் வண்ண வாடிக்கைகளும் அடேயப்பா....இரண்டு மூன வாங்கி வச்சிக்கிடனும்டோய்னு மூளையை மேலும் வெளுக்க....
டெக்ஸ் முன்னட்டையுஞ் சரி பின்னட்டையுஞ் சரி இது வரை வந்த டெக்ஸ்லயே பெஸ்டாக....இனிமேலுமிதா பெஸ்டுங்குது மாயவித்தை காட்டியோ என்னமோ மயக்கிய மாயாவி துணைக்கு வந்த மாயாவி....டெக்ஸ். உள்ளே வர்ணஜாலம் ....எல்லாத்துக்கும் மேலே....
ஆசிரியர் எழுதிய ஒரு பக்கம் குறைவுங்றத தவிர குறையொன்றுமில்லை....விஜயானந்தா