நண்பர்களே,
வணக்கம்! ஆன்லைன் மேளா!! கொரோனா லாக்டௌன்களின் வேளையில் கொஞ்சமேனும் மூச்சு விட்டுக் கொள்ளும் பொருட்டு துளிர்விட்ட மகா சிந்தனை இது! ஆனால் மெள்ள மெள்ள நமது அட்டவணையினில் ஒரு நிரந்தரமான, முக்கியமான இடத்தை இது பிடித்துக் கொண்டிருப்பது கண்கூடு! In fact, இப்போதெல்லாம் ஆண்டின் அட்டவணையினைத் திட்டமிடும் சமயமே, உத்தேசமாய் ஆன்லைன் விழா சார்ந்த புக்ஸ் பற்றியும் மண்டைக்குள் வெள்ளோட்டம் விட்டுப் பார்க்கத் தவறுவதில்லை! And இதோ – 2024-ல் அதற்கான தருணமும் நெருங்கி விட்டது!
நிஜத்தைச் சொல்வதானால் – கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு முன்னமே MAY 4 & MAY 5-ல் தான் நடப்பாண்டின் மொட்டை மாடி மேளாவை அரங்கேற்றிட வேண்டுமெனத் தீர்மானித்திருந்தேன்! அதற்கு உருப்படியானதொரு முகாந்திரம் இருப்பதை அப்போதே உணர்ந்திருந்தேன்! ஆனால் இப்போதெல்லாம் எட்டு மாதங்களென்பது எட்டு யுகங்களுக்கான மாற்றங்களையும் கண்ணில் காட்ட வல்லதெனும் போது – ‘தேமே‘வென்று வாய்க்கு ஒரு லோட் பெவிகாலை பூசிக் கொண்டேன்! இதோ – ஒரு வழியாக மே 4-க்கு ஒற்றை தினமே பாக்கியிருக்க இனி ஓட்டைவாய் உலகநாதனாகிடத் தடையில்லை என்று பட்டது!
சுமார் 8 மாதங்களுக்கு முன்னே ஏதோவொரு தேடலின் போது கண்ணில் பட்ட தகவல் இது! உலக காமிக்ஸின் முதன்மை மார்க்கெட்டான அமெரிக்காவில் ஒவ்வொரு மே மாதத்தின் முதல் சனிக்கிழமையிலும், பெரும்பான்மையான காமிக்ஸ் பதிப்பகங்களும், காமிக்ஸ் விற்பனை செய்திடும் கடைகளும் வருகை தரும் வாசகர்களுக்கு – விலையின்றி, தேர்வு செய்யப்பட்ட காமிக்ஸ்களை வழங்கி வருகின்றனர்! அந்த ஒற்றை நாளின் சலுகையானது – புதுசாய் வாசகர்களை உருவாக்கவும், குடும்பங்களை காமிக்ஸ் நோக்கிப் பயணிக்க ஊக்குவிக்கவும் உதவிடும் என்பது அவர்கள் நம்பிக்கை! காமிக்ஸ் கலாச்சாரம் ஆலமரமாய் வேரூன்றி நிற்கும் அமெரிக்காவின் ஒவ்வொரு பட்டி-தொட்டியிலும் கூட காமிக்ஸ்கள் மட்டுமே பிரத்தியேகமாய் விற்றிடும் கடைகள் உண்டென்பதால், இங்கோ இதுவொரு திருவிழா போலவே களை கட்டுகிறது! இதோ – இந்த YouTube வீடியோவைப் பாருங்களேன் : https://www.youtube.com/watch?v=XfM1vlSUdcY
இதைப் பார்க்க வாய்த்த நொடியிலேயே மண்டைக்குள் குறுகுறுத்தது – “அடங்கொன்னியா.... புலியைப் பார்த்து பெருச்சாளி சூடு போட்டுக்கின மாதிரித் தெரிஞ்சாலும் தப்பில்லே ; நம்ம சத்துக்கேற்ப இதை ஒருவாட்டியாச்சும் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாமே...” என்று! மிகச் சரியாக மே துவக்கத்தின் வாரயிறுதியில் தான் நாம் ஆன்லைன் மேளாக்களை நடத்தி வந்துள்ளோம் என்ற போது, இந்த உடலுக்கு, அந்தத் தலையைப் பொருத்திடும் அவா எழுந்தது! So – தி கிரேட் கிரிகாலனின் மேஜிக் ஷோவுக்குப் போட்டியாக -
“The Great ஆன்லைன் காமிக்ஸ் மேளா‘24”
&
Free காமிக்ஸ் புக் டே
மே 4 & மே 5 தேதிகளில் அரங்கேறிடவுள்ளன!
ரைட்டு... இதை எவ்விதம் செயல்படுத்திட எண்ணியுள்ளோம் என்பதைப் பதிவின் வால்ப்பகுதியில் தெளிவாகத் தந்திடலாம் என்பதால் – இந்த மேளாவின் highlight ஆன ஸ்பெஷல் புக்ஸ் பக்கமாய்ப் பார்வைகளைத் திருப்பிடலாம் folks!
- ஏற்கனவே சொன்னதைப் போல 4 பெரிய புக்ஸ் – சகலமும் கலரில்!
- And 4 சின்ன புக்ஸ் – அதில் இரண்டு கலரில்!
Here we go with the details :
புக் #1 : டெக்ஸ் க்ளாஸிக்ஸ் – 6 :
”ஓநாய் வேட்டை”! Truth to tell – ஒரு வருஷத்துக்கும் மேலாச்சு இதன் ராப்பர் அச்சாகி! 2023-ல் ஈரோட்டுப் புத்தக விழாவின் போது இதை ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தோம் ! ஆனால் கடைசி நொடியில் ”கார்சனின் கடந்த காலம்” மெகா சைஸில் உட்புகுந்து பட்டாசாய்ப் பொரிந்து விட்டது! So அந்த க்ளாஸிக் டெக்ஸ் சாகஸம் – கலரில் ஹார்ட்கவரில் இப்போது பட்டையைக் கிளப்பிட வருகிறது! Of course இது மறுபதிப்பே & நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, என் வேலைப்பளுவை மட்டுப்படுத்திக் கொள்ளவும், விற்பனைகளுக்கு உரமேற்றிக் கொள்ளவும், மறுபதிப்புகளுக்கு ஸ்லாட்களை மறுக்க வழியில்லை! இது டெக்ஸின் க்ளாஸிக் கலர் மறுபதிப்பு வரிசையில் ஆறாவது ஆல்பம் & ஏற்கனவே 4 விற்றுக் காலியாகி விட்டன! So ‘இதன் இடத்தில் வேறு புக் போட்டிருக்கலாமே?!‘ என்ற விசனங்களை ஓரம் கட்டிடுவோமா folks? ‘நச்‘சென்ற கலரில், ஹார்ட் கவருடன், ரூ.300/- விலையில் வந்திடவுள்ள ஆல்பமிது!
புக் # 2: தண்டர் in ஆப்பிரிக்கா:
பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், க்ரோவேஷியா, ஸ்பெயின், ஹாலந்து, இங்கிலாந்து என ஐரோப்பாவில் எங்கெங்கோ எட்டிப் பார்த்து, அவர்களது நாயக / நாயகியரை தமிழ் பேசச் செய்துள்ளோம்! And அந்த வரிசையில் புதுசாய் ஒரு நாட்டையும் இனி இணைத்துக் கொள்ளலாம் – அது தான் டென்மார்க்! டின்டினுக்கு ஒன்றுவிட்ட சித்தாப்பாரு பையனாட்டம் தோற்றம் தரும் Kurt Dunder டேனிஷ் மொழியில், பிரபலமான நாயகர்! அவரை அண்டா-டண்டா – என்ற பெயருடன் அல்லாது க்ரே தண்டராக்கி, தமிழுக்கு இட்டு வந்துள்ளோம் – ஜாலியாக சாகஸம் செய்திட! டின்டின் நாயக பாணியை மட்டுமன்றி, சித்திர பாணியையுமே அந்த பெல்ஜிய ஜாம்பவானின் ஸ்டைலிலேயே அழகாக அமைத்துள்ளார்கள்! And டின்டினைப் போலவே இவரும் கார்ட்டூன் பார்ட்டியெல்லாம் கிடையாது ; ஜாலியானதொரு சாகஸ வீரரே! ”தண்டர் in ஆப்பிரிக்கா” – 48 பக்கங்களில் செம க்ரிஸ்பானதொரு சாகசத்துடன் அட்டகாசமான கலரில் வெளிவரக் காத்துள்ளது !
புக் # 3: ஸாகோரின் பனிமலைப் பலிகள்:
”டார்க்வுட் நாவல்கள்” என்றதொரு 6 இதழ் கொண்ட சுற்றில் – இருள்வனத்தின் மாயாத்மாவை crisp சாகஸங்களில் போனெலி களமிறக்கியிருந்தனர்! நம்ம V காமிக்ஸிலும் அதனை முயற்சித்திருந்தோம் – with mixed results! ஐநூறு – அறுநூறு சாகஸங்களுக்குப் பின்பாய் ஸாகோரை அந்த மினி சாகஸங்களில் இத்தாலியில் பார்த்திருக்கும் போது, அவை ரசித்திருக்கலாமோ – என்னவோ; but மிகச் சமீப வரவான நாயகரை இந்த மினி அவதாரில் ரசிப்பது நமக்குச் சிரமமாகவே இருந்தது! So அந்த மினி பாணிக்கு டாட்டா சொல்லி விட்டு, முழுநீள சாகஸ பாணிக்கே திரும்பியுள்ளோம் – “பனிமலைப் பலிகள்” வாயிலாக! 128 பக்கங்களில் இதுவொரு செம breezy ஆக்ஷன் த்ரில்லர்!
ஸாகோரின் இந்த இரண்டாம் அவதாரை ரசித்திட, ஒரு துவக்கப் புள்ளியாய் – டெக்ஸ் வில்லரோடு ஒப்பிடாது இவரையொரு தனித்துவமான ஹீரோவாகப் பார்க்க ஆரம்பிப்போமே folks! இருவருமே ஒரு குழுமத்தின் பிள்ளைகள் என்பதைத் தாண்டி பெருசாய் இருவருக்குமிடையே ஒற்றுமைகள் கிடையாது! And ஸாகோர் கதைகளின் பின்னணியே கொஞ்சம் மாந்த்ரீகம்; கொஞ்சம் அமானுஷ்யம் எனும் போது, நூல் பிடிச்சாற் போல லாஜிக்கை இங்கே தேடிடுவது சிரமம்! So டெக்ஸின் மெபிஸ்டோ; யமா கதைகளை ஏற்றுக் கொள்ளும் அதே mindset சகிதம் இங்கே புகுந்திட்டால் ஸாகோர் நிச்சயம் சோபிப்பார்! நடப்பாண்டிலேயே இன்னும் 2 முழுநீள ஆக்ஷன் த்ரில்லர்கள் நம்ம V காமிக்ஸில் காத்துள்ளன! So அந்த ‘மினிக்கள்‘ பதித்திருக்கக்கூடிய மேலோட்டோமான முத்திரையினை உதறிவிட்டு, வீறுகொண்டு ஜம்ப்பிங் மாயாத்மா எழுந்திட இந்தக் கலர் ஆல்பம் ஒரு துவக்கப் புள்ளியாக அமைந்திடுமென்ற நம்பிக்கை எனக்குண்டு! Fingers crossed!
புக் # 4: துணைக்கு வந்த மாயாவி:
“கமர்ஷியல் கிராபிக் நாவல்” என்ற அடைமொழியோடு விளம்பரப்படுத்தப்பட்ட இந்த ஒன்-ஷாட் ஆல்பம் நினைவுள்ளதா folks? 'இது வேணுமா? அல்லது நாகரீக வெட்டியான் ஸ்டெர்னின் அடுத்த ஆல்பம் வேணுமா?' என்ற கேள்வியோடு ஒரு வோட்டிங் கூட நடத்தியிருந்தோம்! And எனது ஞாபகம் சொதப்பாதிருக்கும் பட்சத்தில் – 40% வாக்குகள் பெற்றிருந்தது இந்த கமர்ஷியல் கி.நா.! ஸ்டெர்ன் ரெகுலர் அட்டவணைக்குள் புகுந்திருக்க, இதோ – ஆன்லைன் மேளாவின் ஸ்லாட்டை அந்த ஆல்பத்துக்கு ஒதுக்கியுள்ளோம்!
வழக்கமான வன்மேற்குக் களம்; வழக்கமான கௌபாய்கள்... ஆனால் அந்த மாமூலான டமால் – டுமீல் மாவுகளை அரைக்காது, இங்கே கதை முற்றிலும் புதிதாயொரு ரூட்டில் பயணமாகிறது! And இங்கே சித்திர பாணியில் அமரர் வில்லியம் வான்ஸுக்குப் போட்டி தரும் உத்தேசமெல்லாம் யாருக்குமே இருக்கவில்லை! தலைகாட்டும் அத்தினி ஆசாமிகளுக்கும் மூக்குக்குக் கீழே ஆலமரமாட்டம் மீசைகள் மட்டும் தவறாது இடம்பிடித்திட, இயற்கையின் வனப்புகளை வரைவதிலும், வர்ணமூட்டுவதிலும் பின்னிப் பெடல் எடுத்துள்ளனர்! ‘வள வள‘வென்று பேசும் கி.நா.க்களின் மத்தியில் இது மணிரத்னம் பாணியில் சுருக்கமாகப் பேசிடும் பாணியில் travel செய்கிறது!
உள்ளதைச் சொல்வதானால் – இந்த ஸ்லாட்டில் “கதிரவன் கண்டிரா கனவாய்” தான் வருவதாகயிருந்தது! ஆனால் அதன் மொழிபெயர்ப்பை எடுத்துப் பார்த்த போது, கணிசமாய் பட்டி-டிங்கரிங் பார்த்திடத் தேவையிருப்பது புரிந்தது! 156 பக்கங்களுக்கு செப்பனிடும் பணிகளைச் செய்யும் நேரத்துக்கு 78 பக்கங்களுக்குப் புதிதாய் பேனா பிடித்து விடலாமென்று ஆரம்பித்துள்ளேன்! தேவுடா!!!
இனி மினிஸ் !!
புக் # 5: லேடி ஜேம்ஸ் பாண்ட் ஸ்பெஷல்-1
தொடர்ந்திடும் 4 மினி புக்ஸும் பிரதானமாய் புத்தகவிழாவுக்கு வருகை தரும் மாணாக்கரை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டவை! எல்லாமே சின்ன விலைகளில்! அவற்றுள் நாமுமே ரசிக்கும் விதமான முதல் புக் – ஜேன் பாண்ட் என்ற பெண் உளவாளியை அறிமுகம் செய்திடும் 32 பக்க இதழ்! Fleetway-ன் பிரபலமான இந்தக் காரிகையை நாம் ஏற்கனவே நமது அணிவகுப்பில் பார்த்திருக்கிறோமா ? – நினைவில்லை எனக்கு! But இங்கிலாந்தில் JANE BOND Special என வெகு சமீபமாய் அட்டகாசமாய் வெளியிட்டுள்ளதைப் பார்த்த போது, அம்மணியை இட்டாந்திட ஏற்பாடுகளை செய்தோம்! லக்கி லூக் போலான பெரிய சைஸில், ஒரிஜினல் பக்க அமைப்புகளுடன், black & white-ல் 32 பக்கங்களுடன், ரூ.35/- விலையில் வரவிருக்கிறது! சிறுத்தை மனிதனைப் போல ஜேன் பாண்டும் புக் # 1; புக் @ 2; புக் # 3 என்று தொடர்ந்திடுவார்!
புக் # 6 : சிறுத்தையின் சீக்ரெட்:
ஸ்கூல் பசங்களிடையே இந்த சிறுத்தை மனிதன் தொடரானது நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது புத்தக விழாக்களின் விற்பனைகளில் பிரதிபலிப்பது தெரிகிறது! பெருநகர விழாக்களில் பெருசாய் impact இருப்பதில்லை தான்! ஆனால் அடுத்த லெவல் நகர்களில் அரங்கேறிடும் விழாக்களில் படையெடுக்கும் பள்ளிப் பிள்ளைகளுக்கு இந்த compact size; சின்ன விலைகள்; அந்தப் புதிரூட்டும் ஹீரோ ரொம்பவே ரசிக்கிறது! So தொடரின் புக் # 3 நமது ஆன்லைன் மேளாவில் இடம்பிடித்திடுகிறது!
சின்னதொரு ப்ரேக்குக்குப் பின்பாக, ஜுலை முதலாகத் துவங்கிவிருக்கும் புத்தகவிழாக்களின் circuit குறைந்தது அடுத்த 8 மாதங்களுக்காவது ஊர் ஊராய் நம்மை இட்டுச் செல்லும். So அங்கே வருகை தரக்கூடிய இளைய தலைமுறைக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் variety வளர்த்திட முனைந்து வருகிறோம்! Wish us luck please !!
புக் # 7: சக்கரத்துடன் ஒரு சாத்தான் (டைலன் டாக் மினி த்ரில்லர்)
Again ஒரு மினி புக்! ஆனால் இது பெரும்பாலும் நமக்கானது! அமானுஷ்யங்களை ஆராயும் நமது டைலன் இம்முறை வித்தியாசமானதொரு சக்தியை எதிர்கொள்கிறார்! டெக்ஸ் சைஸில்; கலரில் 32 பக்கங்கள் & again மினி விலையில்!!
புக் # 8 : The சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் – 1 :
ஹி! ஹி! ஹி! இந்த இதழைப் பார்க்கும் போது ஆங்காங்கே முகங்களில் LED பல்புகள் பளிச்சிடப் போவதும், ஆங்காங்கே பற்கள் நறநறக்கப்படுவதும் நிகழும் என்பதை யூகிக்க முடிகிறது! "ஒற்றைக் க்ளாஸிக் சூப்பர் ஹீரோவைச் சமாளிப்பதே இப்போதெல்லாம் பெரும் பிரயத்தனமா கீது... இந்த அழகிலே ரண்டு பேரு; அதுவும் ஒரே ஜாகஜத்திலா?? ஆத்தாடி!!" என்று நறநறப்போர் சங்கம் சொல்லிடும் தான்! ஆனால் நமது காமிக்ஸ் வாசிப்புகளுக்கு உரமிட்ட ஜாம்பவான்களை ஒருசேர ரசித்திடும் விதமாய், சில புதுக்கதைகளை இங்கிலாந்தில் வெகு சமீபமாய் உருவாக்கியிருப்பதைப் பார்த்த நொடியில் நம்மள் கீ ஆர்வங்ஸ்கி அடக்க முடியலைங்கி! சட்டித் தலையனும், வலை மன்னனும், பற்றாக்குறைக்கு பதிமூன்றாம் மாடிக் கம்ப்யூட்டரும் சேர்ந்து கொள்ளும் போது அங்கேயிருப்பது கதையோ - கேரட் கொத்சோ ; அதுபற்றியெல்லாம் கவலையின்றி உள்ளே பாய்ந்து விடாட்டி நானென்ன எடிட்டர்? So – ஜாம்பவான்களை தரிசிக்கிறோம் – முழு வண்ணத்தில்; லக்கி லூக் சைஸில்; ரூ.80/- விலையில்!! And....and....க்ளாஸிக் சூப்பர் ஸ்டார்ஸ் பெசல்களுமே தொடர வாய்ப்புகள் பிரகாசம் !! 😁😁😁
Thus end the ஸ்பெஷல் புக்ஸ்! இவை டின்டினுக்கோ; மின்னும் மரணத்துக்கோ சவால் விடப் போகும் படைப்புகளாக இருக்கப் போவதில்லை தான் – ஆனால் ஒவ்வொன்றுமே உட்புகுந்தால் காந்தமாய் உங்களை ஈர்த்து முழுசையும் வாசிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டவை! And பிரதானமாய் – no அழுகாச்சீஸ்; no சவ-சவ & no ஜவ்வு மிட்டாய்ஸ்! So டப்பி உடைக்காது, புக்ஸை பரணிலேற்றும் நம்ம ப்ளேட்பெடியா கார்த்திக் கூட இவற்றுள் ஒன்றோ – இரண்டையோ புரட்டும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன்!
And இம்முறை எட்டில் ஆறு கலர் இதழ்கள் எனும் போது புக்ஸுமே பிரமாதமாய் டாலடிக்கவுள்ளன!
ஜேன் பாண்ட் தவிர்த்த பாக்கியெல்லாமே ஒரிஜினல் அட்டைப்படங்கள்! இந்த லேடி J.B.க்கான கவர் நமது புது அமெரிக்க ஓவியையின் கைவண்ணம்!
ரைட்டு... இனி இந்த FCBD (Free Comic Book Day) & நமது மேளா செயல்படவிருக்கும் விதம் பற்றி சொல்லிடட்டுமா?
- நம் கையிருப்பில் உள்ள புக்ஸ் :
10% discount
20% discount
30% discount
50% discount
என்ற ரீதியில் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட் இங்கே pdf இதோ !
- நமது ஆபீஸ் நம்பர்களான 9842319755 or 7373719755 என்ற நம்பருக்கு “Stock List“ என்று வாட்சப் சேதி அனுப்பினாலும் இந்த pdf அனுப்பி விடுவார்கள்.
- அப்புறம்... அப்புறம்... இன்னொரு பிரிவில் 40 முந்தைய இதழ்களை லிஸ்ட் செய்திருக்கிறோம்! இவை தான் முற்றிலும் விலையில்லா இதழ்கள்!
- கைவசமுள்ள முந்தைய வெளியீடுகளிலிருந்து நீங்கள் டிஸ்கவுண்ட் கழித்து ஆயிரம் ரூபாய்க்கு ஆர்டர் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன் – அதே ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கான Free புக்ஸ்களை மேலேயுள்ள பட்டியலிலிருந்து தேர்வு செய்து விலையின்றிப் பெற்றுக் கொள்ளலாம்! தமிழகம் எனில் கூரியருக்கு ரூ.100/- மட்டும் extra செலுத்திட வேண்டியிருக்கும்! வெளி மாநிலம் எனில் ரூ.160/-.for the couriers.
- கையிருப்பு back issues இதழ்களின் லிஸ்டிலேயே, ஒவ்வொரு புக்குக்கும் நேராக உள்ள பாக்சில் டிக் அடித்து உங்களின் ஆர்டர்களை பதிவு செய்திடலாம். நம்மாட்கள் கணக்கிட்டு, நீங்கள் அனுப்ப வேண்டிய தொகையினை வரிசைக்கிரமமாகத் தெரிவிப்பார்கள் ! பணம் அனுப்பிய கையோடு நீங்கள் அந்த Free Comics லிஸ்டிலிருந்து, உங்கள் ஆர்டர்களின் மதிப்புக்கு ஈடான தொகைக்கு புக்ஸ் தேர்வு செய்து அந்த லிஸ்டினை அனுப்பிட வேண்டும் !
- கூரியர் கட்டணங்களும் சரி, பேக்கிங் பொருட்களும் சரி, கணிசமாய், ரொம்பக் கணிசமாய் உயர்ந்திருப்பதாலும், டிஸ்கவுண்டுகளில் பாதாளங்களைத் தொட நாம் தயராகி விட்டதாலும், இம்முறை ரூ.3000/-க்கு மேலான ஆர்டர்களுக்கு மட்டுமே கூரியர் கட்டணங்கள் இராது. மூவாயிரத்துக்குக் குறைவான ஆர்டர் தொகைகளுக்கு கூரியர்கள் கட்டணமிருக்கும்; So இது குறித்து நம்மவர்களிடம் லடாய் வேணாமே ப்ளீஸ்!
- And புது புக்ஸிற்கு (ஏப்ரல் & மே ’24) ; ஆன்லைன் மேளா ஸ்பெஷல் இதழ்களுக்கு இந்த Free Comics சலுகைகள் இராது !! அவை பிரத்யேகமாய் back issues வாங்குவோருக்கு மட்டுமே !!
- "FCBD-யில் (Free Comics Book Day) தேர்வு செய்திடும் விலையில்லா இதழ்களை கொண்டு நேக்கு பெருசா எதுவும் பிரயோஜனம் இல்லேடா தம்பி ; அவற்றை உறவினர்களுக்கோ, பள்ளி / கல்லூரி / அலுவலக நூலகங்களுக்கோ அனுப்பிட நினைக்கிறேன் ! இன்னான்கிறே அதுக்கு ?" - என்கிறீர்களா ? பேஷாய் அதனைச் செய்திடவும் இயலும். தெளிவாக முகவரிகள் + ரூ.100/- or ரூ.160/- கூரியர் கட்டணங்கள் தந்தால் போதும்!
- இந்தத் திட்டங்கள், Free Comics என்பனவெல்லாம் May 4 & 5 தேதிகளுக்கு மட்டுமே! இது குறித்தும் நம்மவர்களோடு விவாதங்களைத் தவிர்த்திடுவதற்கு முன்கூட்டிய நன்றிகள்! செயல்படுத்தும் பொறுப்பு மட்டுமே அவர்களிடம் இருக்கும் என்பதால், எனது தீர்மானங்களின் plus / minus சார்ந்த குட்டுக்களை அவர்களது தலைகளில் இறக்கிட வேண்டாமே ப்ளீஸ்!
- FCBD – விலையில்லா இதழ்களில் உங்களது தேர்வுகளைத் தெரிவிக்க அந்த Free Comics லிஸ்டையும் வாட்சப்பில் பெற்றுக் கொள்ளலாம். தயைகூர்ந்து அந்த லிஸ்டில், ஒவ்வொரு புக்குக்கும் நேராக உள்ள பாக்சில் டிக் செய்து, அதனை வாட்சப்பில் மட்டுமே எங்களுக்கு அனுப்பிடுங்கள்! அவற்றை போனில் ஒப்பித்து, நம்மாட்கள் குறித்துக் கொள்வது என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமே ஆகாது! இங்கும் உங்களது புரிதலுக்கு நன்றிகள்!
- அதே போல, "இது யாரு கதை ? இவரு சிரிப்பு காட்டுவாரா ? சண்டை போடுவாரா ?" என்ற ரீதியிலான விலாவரி வினவல்களையும் தவிர்த்திட்டால் நலம் - ப்ளீஸ் !! அடுத்தடுத்து கால்கள் வந்து கொண்டிருக்கும் போது, நம்மாட்கள் வரிசையாய் அவர்களிடம் திட்டு வாங்க நேரிடுகிறது ! So நமது சமீப புக்ஸ் பாணியில், crisp calls ப்ளீஸ் !
- In a nutshell:
- வாட்சப்பில் கையிருப்பில் உள்ள இதழ்களின் முந்தைய ஸ்டாக் லிஸ்ட் பெற்றுக் கொள்ளலாம். Numbers : 98423 19755 or 73737 19755.
- வாட்சப்பில் விலையில்லா 40 இதழ்களின் லிஸ்டையும் பெற்றுக் கொள்ளலாம்.
- முந்தைய இதழ்களில் நீங்கள் ஆர்டர் செய்திடப் போகும் (டிஸ்கவுண்ட் கழித்த) கிரயத்துக்கு ஈடாக Free Comics லிஸ்டிலிருந்து புக்ஸ் தேர்வு செய்து விலையின்றிப் பெற்றுக் கொள்ளலாம் !
- இரண்டு லிஸ்ட்களையும் பூர்த்தி செய்து, பணம் அனுப்பியுள்ள விவரத்தோடு, உங்கள் அட்ரஸ் சகிதம் நமக்கு வாட்சப் அனுப்பினால் போதும்.
- இரு தினங்களும் பணிநேரம் : காலை 10 to மாலை 6 வரை!
- And நமது GPay நம்பரில் (90039 64584) போன் அடிக்க வேண்டாமே - ப்ளீஸ் ! அதனை attend செய்திட யாரும் இருக்க மாட்டார்கள் !
PLEASE NOTE : ஆன்லைன் மேளாவின் ஸ்பெஷல் புக்ஸில் 5 ரெடி !! இன்னும் 3 தயாராகிட வேண்டியுள்ளன! So புது புக்ஸ் எல்லாமே மே 15 முதலே டெஸ்பாட்ச் ஆகிடும்! ஆகையால் புது புக்ஸ் ஆர்டர் செய்திடுவோர் - சற்றே பொறுமை ப்ளீஸ் !!
என் மண்டைக்குள் உருவகமான திட்டமிடல் என்பதால் பஞ்சாயத்துக்கு வரும் சுனா-பானா வடிவேலைப் போல எனக்குள் எல்லாமே தெளிவாகவுள்ளது ! ஆனால் பஞ்சாயத்து பண்ண வரும் சங்கிலி முருகனாட்டம் நம்மில் எம்புட்டு பேர் குழப்பத்தில் கிறுகிறுக்கக் காத்துள்ளார்களோ - தெய்வமே !!! அவர்களையும், 2 நாள் மேளாவைக் கையாளப் போகும் நம்மவர்களையும் காத்தருளும் கையோடு, இந்த 2 நாள் திருவிழாவை அதகள வெற்றியாக்கி, கிட்டங்கியும், நாமும் சற்றே பெருமூச்சிட்டுக் கொள்ள பெரும் தேவன் மனிடோ வரம் தந்திடுவாராக !! Bye all! See you around! Have a great weekend!
And ரெகுலர் தடத்தின் இதழ்கள் டெஸ்பாட்ச் செய்தாச்சு !! வெள்ளியன்று உங்களைத் தேடி வந்திடுமென்று எதிர்பார்த்திடலாம் folks !! ஆன்லைன் லிஸ்டிங்குமே ரெடி : https://lion-muthucomics.com/latest-releases/1199-2024-may-pack.html
Happy Reading !! இதழ்களின் முதல் பார்வை பற்றிய ரேட்டிங் செய்ய மறந்திட வேணாமே - ப்ளீஸ் ?
சூப்பர் நியூஸ் சார் 🤗
ReplyDeleteவாழ்த்துகள் சகோ
Delete🤗🙏 சகோ
Deleteமணிவண்ணன் சார் சொல்ற மாதிரி "அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே" moment. Nice list சாரே
ReplyDeleteHi..
ReplyDeleteஉள்ளேன் ஐயா!!
ReplyDeleteஅருமை!! Free Comics is another surprise.
ReplyDeleteAwesome!!
No 5
ReplyDeleteFree book day வெல்லலாம் கனவிலும் நெனச்சேன் இல்லங்க சார்..நம்முடைய அடுத்த படிக்கட்டு இது .வெற்றிக்கு வாழ்த்துக்கள் புதிய பழைய நண்பர்களை வாங்கவைக்கமுயற்சசிக்கிறோம் சார் . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteக க போ!🤣
Deleteசக்தி, நம்ம டவுசர் காலத்தில் எடிட்டர் இப்படியெல்லாம் யோசிக்கலயே!😌 நாம் குடுத்து வெச்சது அவ்வளவுதான்.
good news for online mela.
ReplyDeleteபணத்தை கட்றோம். ஜோதியில ஐக்கியமாகிறோம்.
புத்தக விழா என்றாலே தவிர்க்க முடியாத டெக்ஸ் மறுபதிப்பு தவிர மீதி எல்லாமே புத்சு தான். வெரைட்டியா வேற இருக்கு.
ReplyDeleteஆஹா பேக்டர் (வெரைட்டி), ஓஹோ ஃபேக்டர்(FCBD), ஹி…ஹி…ஃபேக்டர் (சட்டித்தலை+ ஸ்பேடர்), பேஷ் பேஷ் ஃபேக்டர்(தல(காணி) புக்) என உடனே ஆர்டர் பண்ண பல ஃபேக்டர் இருக்கு.
Amount transferred.
ReplyDeleteமே மாதத்தில் ஒரு தீபாவளி 💥💥💥💥👏👏👏👏👏👏👏 பாட்டாச கெளப்பிட்டீங்க சார்.
ReplyDeleteஅடிக்கிற வெய்யிலுக்கு ஏற்ப குளுமையான ஆன்லைன் அறிவிப்புகள்.
இதில் "ஓநாய் வேட்டை "தவிர மற்றதெல்லாமே "புதுசு கண்ணா புதுசு"தான்.
இரண்டு அறிவிப்புக்கள் ஆச்சரியமானவை...
1)க்ளாசிக் ரசிகர்களுக்காக "ஆர்ச்சி & ஸ்பைடர் ” வெளியிட்டது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
2)1000ரூபாய்க்கு புக்ஸ் வாங்கினால்/1000 ரூபாய்க்கு ஃப்ரீ புக்ஸ். செம்ம ஆஃபர் இது.
நம்மாளு "காமிக்ஸ் சித்தர்" விஜயராகவன் அப்பவே சொன்னாரு,'டெக்ஸ் க்ளாசிக் கண்டிப்பா இருக்கும்னு " 👌 சரியான கணிப்பு.
மொத்தத்தில் அனைவரும் விரும்பும் விதத்தில் உள்ளது ஸ்பெஷல் புக்ஸ்.
வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் சார் 💐.
இனிய காலை வணக்கங்கள்
ReplyDeleteஅடடே வந்துட்டேன்...
ReplyDeleteGood morning all. 🥰
ReplyDeleteஎன்ன ஒரு இன்ப அதிர்ச்சி... சூப்பர் சார். அருமையான 8 புத்தகங்கள். எனக்கு 8ம் வேண்டும். டெக்ஸ், ஸாகோர், கி. நா, சாகச வீரர் கிரே தண்டர், டைலன் டாக், ஸ்பைடர் & ஆர்ச்சி, ஜேன் பாண்ட், சிறுத்தை மனிதன் என்ன ஒரு variety. சூப்பர் சூப்பர் சார். தங்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை
ReplyDeleteBulk order போட வேண்டி இருப்பதால் வாங்க வேண்டிய புத்தகங்களின் லிஸ்ட் ஐ ரெடி செய்வதில் பிஸி ஆக போறேன். 🥰
ReplyDeleteAha
ReplyDeleteவணக்கம் ஆசிரியரே. வணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteWow Super Dear Edi ... 😍😍😍
ReplyDeleteசம்மர்ல அசத்திப்புட்டீங்க போங்க ..
மேலும் FREE COMICS LISTLA
சைத்தான் துறைமுகம் / வி.வி.விஞ்ஞானி இருமுறை இடம் பெற்றுள்ளார் ..
Free Comic Book Day அருமையான ஐடியா சார். பல தெறிக்கும் புத்தகங்கள் இதில் உள்ளது. நானும் பங்கு பெற்று ஆக வேண்டும் போலவே.
ReplyDeleteஇன்று மாலை தானே பதிவு என்று நினைத்துக் கொண்டே காலை எழுந்து வர அடடா மே= மேளா புது பதிவு.
ReplyDeleteஉங்களால் இந்த நாள் இனிய நாளாக தொடங்கியது சார். நன்றிகள்
அதே,அதே...
Deleteசபாபதே
DeletePresent sir
ReplyDeleteஆன்லைன் புத்தகத் திருவிழாவுக்கு கதைத் தேர்வுகள் அட்டகாசம் சார்!
ReplyDeleteபுதிதாகக் களமிறங்கும் தண்டரையும், லேடி ஜேம்ஸ் பாண்டையும் வரவேற்கத் தயாராய் இருக்கிறோம்! லேடி ஜேம்ஸ் பாண்ட் அம்மணியை ஏனோ பார்த்தவுடன் பிடித்துவிட்டது. Love at first sight! ☺️☺️🫠
'free book day' அபாரமான திட்டம்! எடைக்கு எடை தங்கம்!
க்ளாசிக் சூப்பர் ஹீரோஸ் புதிய வடிவில் வரயிருப்பதும் 'அடடே.. பார்டா!!' என்று ஆச்சரியப் படுத்துகிறது!! க்ளாசிக் பிரியர்களின் கால்கள் தரையில் இருக்கப் போவதில்லை என்பது நிச்சயம்!!
ஆன்லைன் மேளா புத்தகங்கள் மே-15க்கு மேல்தான் பட்டுவாடா என்பது மட்டும் கொஞ்சம் 'ஙே' சொல்ல வைக்கிறது!
மொத்தத்தில் இந்த ஆன்லைன் புத்தகத் திருவிழா + free book day அட்டகாசமான வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை!!
// 'free book day' அபாரமான திட்டம்! எடைக்கு எடை தங்கம்! //
Deleteஅதே.அதே...
First look
ReplyDelete1. Tango
2. Robin
3. Chick bill
ஸாகோர் ,ஆர்ச்சி ஸ்பைடர்,ஜேன் பாண்ட் இன்ப அதிர்ச்சிங்க சார் . இப்படி ஒரு அதிரடியை எதிர்பார்க்கவே இல்லை . மெய்யாலுமே இந்த ஆன்லைன் மேளாசூப்பர் சார்
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteFree book day - அருமை சார், லிஸ்டில எல்லா புக்குஸும் இருக்கு, எங்கள் அப்பார்ட்மெண்ட்ல இருக்கும் லைப்ரரி க்கு இதில் கிடைக்கும் புக்ஸை குடுக்க போறேன்
ReplyDeleteசட்டிதலையன் தான் என்ஆர்வத்ததை தூண்டுகிறது
///எங்கள் அப்பார்ட்மெண்ட்ல இருக்கும் லைப்ரரி க்கு இதில் கிடைக்கும் புக்ஸை குடுக்க போறேன் ///
Deleteஅருமை அருமை!!
This comment has been removed by the author.
Deleteபுத்தகங்கள் அருமையான தேர்வுங்க ஆசிரியரே
ReplyDeleteFree Book Day
செம்மங்க 👏👏👏👏👏💐💐💐💐
இன்னைக்கு double தமாக்கா. மே மாத புத்தகங்களும் வந்து விடும். ஆன்லைன் புத்தக விழா பற்றிய அறிவிப்பும் வந்து விட்டது.
ReplyDeleteதண்டர் மற்றும் ஸாகோர் உடன் துணைக்கு வந்த மாயாவியும் சும்மா பட்டைய கிளப்ப போகுது.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteஆ.பு.வி. புத்தகங்கள் தேர்வு சூப்பர்!
Free comic book day plan super sir...
// And ரெகுலர் தடத்தின் இதழ்கள் டெஸ்பாட்ச் செய்தாச்சு !! வெள்ளியன்று உங்களைத் தேடி வந்திடுமென்று எதிர்பார்த்திடலாம் folks !! //
ReplyDeleteசிறப்பு,சிறப்பு...
சார் செம செம செம செம செம செம சார்....
ReplyDeleteஇது வரை முதன் முறையா கோடை மலர்...தீபாவளி மலர்....இரத்தப் படலம்...லார்கோ மீள் வருகை...கார்சனின் கடந்த காலம்...இரு வண்ண கொலைப்படை....இதெல்லாம் தந்த சந்தோசத்த விட அதிகமாக போட்டுக்கொள்ள...
ஒரு கதை விடாம அனைத்தும் ஏக எதிர்பார்ப்ப கூட்டுவது இதுவே முதல் முறை...
டெக்ச தாண்டுனா...ஆராய்ச்சி அதிரடி ரவுண்டு கட்டி...அந்த விளம்பர வரிகள் பழங் காலத்துக்கு கொண்டு போனா...பின்னட்டையோ அந்த கால சிறுவர் கதைகள் நினைவூட்ட ஆஹான்னு கீழ் மூழ்குனா...
சாகோர் ..ஆஹா பெரிய கதை...பெரிய கதைன்னபடி வடிவேலு போல தடவிய படி முங்கி கீழ உந்துனா....
அடடா நேற்றைக்கு முந்தய நாள் 2024 அட்டவனய புரட்டுனா ...அந்த மாயாவி ...இந்தக்கதை நிச்சயம் மேல் மேலா வரும்னு எதிர்பார்த்த படி பட்சி கூவ...இதப்பாக்கைல துள்ளிக் குதிக்கின்றேன் சனிக்கிழமை புக் கிட்டிடாதாவென...வந்ததும் புரட்ப் போகும் இதழ் இதாகத்தானிருக்கும்...ஆனாலும் டின்டின் சாயலும் முதுக சொறிய....
கீழ மூழ்க...என் மகன்களுக்கான கதைகள் அள்ளுடான்னு பாய ...லேடி பாண்ட் அட்டை டாப் டக்கர் சார்...சிறுத்தை போல நீரில் நடக்க முயற்ச்சிக்க கால்களுக்கு கீழே தரையில்ல...
இன்னும் முங்குடான்னு சுறா போல பாய ஆழ்கடலினடியில் முத்து....
ஆர்ச்சி ...ஸ்பைடர் இணைந்தா...இப்படி கதை பாக்க ஏங்கிய சிறுவயது நாட்கள் அதிகம்...அடுத்த வெளியீட்டு விளம்பரங் கண்டு வராது வாடியதுமதிகம்...நண்பர்கள் தம்பியிடம் கதை கட்டியதும் அதிகம் இருவரிணைந்து என...இரண்டாம் பேராவோட மேல் சொன்ன கதைகளும் சேத்துக்கங்க....
இதுக்கு மேல என்ன சார் வேணும்...தேடலை நிறுத்துடா ..பணத்தை அனுப்புடாங்குது மனது...999ன்னுதான் நினைத்தேன்...
இவ்விதழ்கள் கார்சனின் கடந்த காலத்தையும்...இரத்தப் படலம் விற்பனைகளையும் புரட்டிப் போடும் நிச்சயமா
சந்தோசத்ல டயலன மறந்தாச்....கடைசியாக இவரின் பள்ளிக் கூடத்தில் ஆவி செம சூப்பர்...அடுத்து ஏக எதிர்பார்ப்பில் இவருமே...
Delete15...ஆறாம் நம்பர்...முருகன்னு நீங்க காட்ன் குறிப்புகள் செந்தூரான் அருளால் நாம் அடுத்த அதிரடிப் பாய்ச்சலை எடுத்து வைத்துள்ளோம்...
பணம் 999 கட்டியாச் சார்
ஒரு வேண்டுகோள் சார்...ஸ்பைடர் ஆர்ச்சின்னு வண்ண வண்ண ஸ்டிக்கர்கள் தந்தா 80 களுக்குள்ள போன மாதிரியா இருக்கும்...
அருமையான அறிவிப்பு 🔥🥳
ReplyDelete// ஏற்கனவே சொன்னதைப் போல 4 பெரிய புக்ஸ் – சகலமும் கலரில்!
ReplyDeleteAnd 4 சின்ன புக்ஸ் – அதில் இரண்டு கலரில்! //
கொளுத்தும் வெயிலில் காமிக்ஸ் அடைமழை...
சொல்லிட்டு செய்யறதை விட,சொல்லாம செய்யறது சிறப்பு,உங்களின் இறுதிநேர அறிவிப்பு இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காட வைத்து விட்டது சார்...
அறிவிக்கப்பட்ட எல்லா இதழ்களுமே ஒரு எதிர்பார்ப்பை உண்டு செய்கிறது...
ReplyDeleteமே விடுப்பில் இருப்பவர்களுக்கு வாசிப்பு திருவிழாதான்...
🙏🙏
ReplyDeleteமேளா வணக்கமுங்க....🙏
ReplyDeleteFCBD அறிவிப்பு அருமை சார், ஆனால் ஒரு பதிப்பாளரின் பார்வையில் சற்றே சிரமம் தான். விற்காத புத்தகங்கள் ஆண்டுக்கணக்காக தேங்கி நிற்கும் வேதனைக்கு இது ஆறுதல் அளிக்கும் என நம்புகிறேன்! புத்தக விழாக்களில் இதை நடைமுறைப்படுத்தினால் நல்லதொரு விளம்பரமாக இருக்கும்! (ஒப்புக்கொள்ளவார்களா என்று தெரியவில்லை!).
ReplyDeleteஜேன் பாண்ட் - ராணி காமிக்ஸில் வந்ததாய் ஞாபகம்!
அந்த புதிய கார்ட்டூன் நாயகர் - தயிர் தண்டர் ஆர்வத்தைத் தூண்டுகிறார்!
அறிவிப்புகளை காலையில் பார்த்ததும், நானும் இதையே நினைத்தேன் சார். பதிவிடுவதற்கு சங்கடப்பட்டு தவிர்த்துவிட்டேன்.
Deleteஅதிலும், பரீட்சார்த்த ஒன்-ஷாட்ஸ் இது போலத் தேங்கிடும் சமயங்களில் - 'உனக்கு இது தேவையா ? தேவையா ?' என்று கண்ணாடி முன்னே நின்று நெற்றியை நோக்கி வடிவேல் பாணியில் விரல் நீட்டிக் கேட்கத் தோணும் ! 'சிவனே' என்று கமர்ஷியல் ஹிட்டடிக்கவல்ல புக்ஸை போட்டுப்புட்டு போயிடலாமே ? என்று தோணும் !! But அங்கேயும் குமட்டில் குத்து விழும் - 'அரைச்ச மாவையே அரைக்கிறியே !!' என்று !!
Deleteஇதில் சங்கடப்பட என்ன இருக்கு பத்து சார் - நானே இதை போட்டிருக்கோமா - இல்லியா ? என்ற சந்தேகத்துடன் தானே பதிவில் பிரிவியூ செய்துள்ளேன் ?! Anyways - இது பிரதானமாய் செல்லவிருப்பது புத்தக விழாக்களுக்கு வருகை தரவுள்ள மாணாக்கருக்கே எனும் போது அவர்கள் ராணி காமிக்ஸில் வாசித்திருக்க வாய்ப்பிருக்காது ! So no worries !
Deleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteஅருமையான அறிவிப்புகள் சார்.
ReplyDeleteஆன் லைன் புத்தக விழா வழக்கம் போல பட்டைய கிளப்பிட வாழ்த்துக்கள்.
நன்றிகள் சார் !
Deleteஅனைவருக்கும் வணக்கம் நண்பர்களே.
ReplyDeleteபுதிய பதிவு சும்மா கில்லியாய் எகிறி அடிக்கிறது.
ஐயா சந்தாவில் உள்ளவர்கள் ஆன்லைன் ஸ்பெஷல் புக்ஸ்களுக்காக தனியாக கொரியர் கட்டணம் அனுப்ப வேண்டுமா?
ReplyDeleteசந்தா புத்தகங்களுடன் சேர்த்து அனுப்பினால் போதுமானது.
ஆனா சந்தா புத்தகம் ஏற்கனவே கிளம்பி விட்டதே?
Delete999 குரியருக்கும் சேத்து (975+ 24 குரியர்)
Deleteசெஞ்சுடலாம்!
Deleteபணம் அனுப்பியாச்சு...
ReplyDeleteThanks sir !
Delete//ஆனால் பஞ்சாயத்து பண்ண வரும் சங்கிலி முருகனாட்டம் நம்மில் எம்புட்டு பேர் குழப்பத்தில் கிறுகிறுக்கக் காத்துள்ளார்களோ - தெய்வமே !!!//
ReplyDeleteசில வாரங்களுக்கு முன்னர் நீங்கள் ஏதோ சில புதிய புத்தகங்களை அறிவித்த ஞாபகம், தேடிப் பார்த்து பணம் கட்ட வேண்டும்! இது ஒன்று தான் சற்று தொல்லையான விஷயம், அடிக்கடி அறிவிப்புகள், தனித்தனி தடங்கள்! எல்லாவற்றையும் வாங்கி கொள்கிறோம், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மொத்தமாக ஒரு தொகையை வாங்கிக் கொள்ளுங்கள், மீதமுள்ளதை அடுத்த ஆண்டுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றால் அதற்கொரு வசதியில்லை! ஏம்பா, நான் சரியாத்தானே பேசறேன்?
///ஏம்பா, நான் சரியாத்தானே பேசறேன்?///
Deleteரெம்பச் சரி!! இதை போன வருடம் EBFல் எடிட்டரைத் தனியா தள்ளிக்கிட்டுப் போய் கெஞ்சாத குறையாகக் கேட்டுப் பார்த்துவிட்டேன் - ம்ஹூம்.. அசைந்துகொடுக்க மாட்டேனுட்டார்!!
கடந்தகாலத்தில் ஏதாவது கசப்பான சம்பவமோ என்னமோ!!
சர்ப்ரைஸ் நல்லது நண்பர்களே
Deleteஇல்லன்னா இந்த ப்ளாக்கையும் மறந்ருவியளே கார்த்தி
Deleteஇந்தச் சின்ன வட்டத்தின் ஆதாரமே அந்த அன்னியோன்யம் & conversations தான் கார்த்திக் & பன்னரே !! விடுமுறைகளில் ஊருக்குப் போவது மகிழ்வென்றால், பிள்ளைகளோடு அது குறித்த திட்டமிடலும் இணையான மகிழ்ச்சி தானே ?
Deleteஅறிவிப்புகள், அவை சார்ந்த கலந்துரையாடல்கள் ; புதுப் புதுத் தடங்களுக்கான திட்டமிடல்கள் ; அவற்றின் டிக்கெட் எடுக்கும் படலங்கள் என்பதில் பரஸ்பரம் ஈடுபடுவதே நம்மைப் பிணைத்திடும் பெவிகாலின் ஒரு பூச்சு !!
மொத்தத்துக்கு பணம் அனுப்பிட்டு, மாதா மாதம் பொட்டிகளை பரணில் ஏற்றிடுவதில் வேலை லேசாய் முடிந்து விடலாம் ; ஆனால் காசை வாங்கிக் கல்லாவில் போட்டுவிட்டு நான் சோம்பிடக் கூடும் ரிஸ்க் உள்ளதே !
பெருங்கனவு கலஞ்சு நிஜமாகுது
ReplyDeleteவணக்கம் ஆசிரியர் சார். எதிர்பார்க்கவே இல்லை சார்.மகிழ்ச்சியாக உள்ளது. மே மாதத்தில் ஒரு தீபாவளி கொண்டாட்டத்தை தந்த உணர்வு வருகிறது சார். நன்றி சார்.
ReplyDeleteHi @Editor sir !! Amazing offer sir. Didn't expected this. Thanks for doing it sir. Also the Online Comics Mela has good variety of books with affordable price. Thanks for including Thala book in this :). For some reason , i like to read Tex books in color. Thanks again sir :)
ReplyDeleteநன்றி சார் !
DeleteJane Bond
ReplyDeleteராணி காமிக்ஸ்ல 1988 ல் அறிமுகம் ஆகி உள்ளார். Title "நிழல் மனிதன்" Issue number 107.
வாங்க பாபு
Deleteஎனக்கு எங்கென்ற நினைவில்லை ; அதனால் தான் "உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக" என்ற பில்டப்கள் தந்திருக்கவில்லை !
Delete@Edi Sir..😍😘
ReplyDeleteMe in..😍😘
அருமையான அறிவிப்பு..❤
அட்டகாசமான அறிவிப்பு..💛
அசத்தலான அறிவிப்பு..💙
ஸாகோர் மீள் வருகை..😘😘
சங்கத்தை தட்டி எழுப்பணும் போலிருக்கே..💙💚💜
ஆர்ச்சி+ ஸ்பைடர்..😍😃
எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..😍😃💐💐
சங்கம் கோமாவிலே இருந்தா மெரி தோணுச்சு சார் ; நல்லாவே உசுப்பி எழுப்புங்க !!
Deleteபட்டையை கிளப்பும் ஆன்லைன் மேளா
ReplyDelete:-)
DeleteTransferred the money for 8 books sir.
ReplyDeleteThanks sir !
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDeletePayment made thro gpay for May மேளா 8 Books Sir..😃😍
Sir..
Free books list ல 3rd & 4th pages ல தமிழ் font சரியா வர்ல..😔
corrupt ஆயிடுச்சு போல..😔
கொஞ்சம் சரி பண்ணிடுங்க சாரே..👍👌
பண்ணியாச்சு சார் !
Deleteகோடை மழையாக ஆன்லைன் மேளா super 💪💪💪💪💪
ReplyDeleteவறுத்தெடுக்கும் வெயிலுக்கு இதமான தென்றல் காற்றாக ஆன்லைன் மேளா நன்றி ஆசியரே
ReplyDeleteOnline Book fair புத்தகங்கள் very interesting 👌🔥
ReplyDelete1.ஓநாய் வேட்டை - படித்தது இல்லை... So ஆவலுடன் waiting🙂
(Classic Tex தனி ஈர்ப்பு)
2. தண்டர் - டின் டின் சித்திர பாணி... Nice Welcome🥰
3. சாகோர் - இம்முறை திருப்தி படுத்தும் என்ற எதிர் பார்ப்பு🤝
4.துணைக்கு வந்த மாயாவி- (முதலில் இரும்புக்கை மாயாவி என நினைத்து விட்டேன்🤗)
கிராஃபிக் நாவல்kku பெரிய பேன் கிடையாது... என்றாலும் வெயிட்டிங் 👍
5. லேடி ஜேம்ஸ் பாண்ட் - ஆண் ஜேம்ஸ் பாண்ட் க்கே ஆதரவு தந்த நாம பெண் ஜேம்ஸ் பாண்ட் kku ஆதரவு தர மாட்டோமா, என்ன?😉
6. சிறுத்தை manithan- part 1,2 எனக்கு பிடித்து இருந்தது. எனவே முழு ஆதரவு Part 3 க்கும் 😍
7. டைலன்- Not a big like & not a big dislike🙂
8. Classic Super Stars - Big surprise... Thalaivar ஸ்பைடர் & ஆர்ச்சி Combo... Eagerly waiting 🥳
மொத்தத்தில் ஆன் லைன் புத்தக மேளா - 100% வெற்றி மேளா 🏆💪🔥
///லேடி ஜேம்ஸ் பாண்ட் - ஆண் ஜேம்ஸ் பாண்ட் க்கே ஆதரவு தந்த நாம பெண் ஜேம்ஸ் பாண்ட் kku ஆதரவு தர மாட்டோமா, என்ன?😉///
Deleteஆஹான்....😜🤭
😀😀🤗🤝
DeleteFree Comics Book Day - ஐடியா Great👌👌👌
ReplyDeleteஇதன் மூலம் நம் comics படிப்போர் எண்ணிக்கை சற்று உயர்ந்தாலும் அது நம் வெற்றியே...🤝👍
இதனால் கிட்டங்கியின் கனம் குறையப் போவது ஆசிரியருக்கும் சற்று ஆறுதல்🙂
நம்மில் பலர் miss செய்த சில புக்ஸ் இந்த idea மூலம் கிடைப்பது நம்முடைய அதிர்ஷ்டம் தான்☘️🎊
Thanks a Lot, Editor sir for Interesting Online Book Fair & FCBD🙏🙏🙏🤝🤝🤝🤗😀🥰
ReplyDelete// The சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் – 1 // Sema sema news!!!
ReplyDeleteசூப்பர்ஸ்டார் ஸ்பெஷல் ! தலைக்கு தில்'ல பாத்தியா
ReplyDeleteLady James bondனு எப்படி சொல்லலாம்னு மாடஸ்டி ரசிகர்கள் யாரும் பொங்கலியா
ReplyDeleteஅதான் வந்தன்னைக்கே... லேடி ஜேம்ஸ் பாண்ட் பட்டத்தைப் பிடுங்கியாச்சே.....!(நன்றி:GP)
Deleteஇனி பொங்கல்ஸ் மிளகு பொங்கலா சர்க்கரைப் பொங்கலானு பார்க்கணும்...😜🤣
அடுத்த டமாஸ்க்கா கதைல பட்டத்தை பிடுங்க நாலு பேரு..குட்டிசுவத்தில தடுக்கி விழுந்தா தாங்கி பிடிக்க 4 டாக்டர்னு பாட்டை எதிர்பாக்கலாமா?
Deleteஅண்ணா!!! நான் இலங்கை குடிவாசி ஒருத்தன். உங்க காமிக்ஸோட பித்தனும்கூட!! So, என்னோட நாட்டு கூரியர் பண்ணக்கூடிய வாய்ப்புகள் ஏதாச்சும் ஒரு ஆலோசனை சொல்லுங்க ப்ளீஸ்
ReplyDeleteகூரியர் எதற்கு ப்ரோ ; ஏர்-மெயிலிலேயே பெற்றுக் கொள்ளலாமே ?
DeleteSuper.. ❤️👍... 🙏
ReplyDeleteமே மாத இதழ்களை கைப்பற்றியாச்சி சார்...
ReplyDeleteமுதல் புரட்டலில் ஸ்டைலீஷ் ஸ்டார் டேங்கோ ஈர்க்கிறார்,கலகலப்புக்கு கடமையைக் கைவிடேல் அழைக்கிறது, நான் மட்டும் என்ன தக்காளி தொக்கான்னு அதிரடி தாலாட்டு பாட அழைக்கிறார் ராபின்...
முதல் வாசிப்பா டேங்கோ ஊர்சுத்தலாம்னு இருக்கேன்...
சூப்பர். ஆன்லைன் மேலாவிற்கு பணம் அனுப்பியாகிவிட்டது
ReplyDeleteWaiting for the books to read.
60 கிளாசிக் வரிசை அநௌன்ஸ்மென்ட்டை எதிர்பார்க்கிறோம்
அதற்கு இன்னும் நேரமுள்ளது நண்பரே !
Deleteஎப்பவும் தாமதமாகவே புத்தகங்களை அடையும் அறிவரசு ரவி சாருக்கு இம்மாதம் தாமதமில்லாமல் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றதற்கு வாழ்த்துக்கள் . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteநன்றி நண்பரே...
Deleteகிடைத்த ஸ்பீடுக்கு வாசிப்பிலும் ; அலசலிலும் பின்னி வருகிறாரே !!
DeleteWow..Super
ReplyDeleteமே மேளா பிரமாண்ட வெற்றி பெற வாழ்த்துகள் சார்...💐💐💐💐💐
ReplyDeleteநன்றிகள் சார் ! இன்றைய வாட்சப் & போன் விசாரிப்புகள் போட்டுள்ள கோட்டில் அடுத்த 2 தினங்களுக்கு லேசான மண் ரோடு போட்டாலே கூட விழா தெறி வெற்றியாகி விடும் !
Delete*தவணையில் துரோகம்*
ReplyDelete100% கலப்பிடமில்லாத டேங்கோ கதை. ஆப்புகளை தேடிப் போய் உட்கார்ந்து, பிரச்சினையை அதிரடியாய் சமாளிப்பது தான் கதையே. இந்த முறை கடல் வழி பயணம் அல்ல, தரை வழிப் பயணம்.
ஈக்வேடா நாட்டில் வரலாற்று வகுப்புடன் ஆரம்பிக்கும் கதையில் ஆங்காங்கே வரலாற்று புள்ளி விவரங்களுடன் கதை நெடுக தூவிக் கொண்டே செல்கிறார் கதாசிரியர். மேலும் சுவாரஸ்யமாக்கும் மொழியாக்கத்துடன் ஆங்காங்கே சிரிப்பை வரவழைத்தபடி செல்கிறது தமிழாக்கம்.
மீண்டும் கார்மென் தலைகாட்ட, புதிய நண்பர்களாக விக்டரும் ஹெர்மோசும் இணைய கதை பாசம், துரோகம், ஆக்ஷன் என்று அதகளமாகிறது. முடிவு கொஞ்சம் கனமாக இருந்தாலும் காலாபெகோஸ் தீவினில் முடியும்படி கொஞ்சம் இழுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது,
அடுத்த பாகம் உண்டா? அல்லது டேங்கோ தன் நாடோடி வாழ்க்கை முறையை விட்டு விடப் போகிறாரா என்று கேள்விகள் மூளையை பிராண்ட, ஏஜென்ட் ராபினை தேடி ஓடுகிறேன் நான்.
கதை 9/10
ஓவியம் 10/10
மேக்கிங் 9.5/10
Superb review 👌👌👌
DeleteOf course - பயணம் தொடர்கிறது சார் !
DeleteThe Great ஆன்லைன் காமிக்ஸ் மேளா‘24”
ReplyDelete&
Free காமிக்ஸ் புக் டே
--அமெரிக்க மண் எப்போதும் நம்மை கைவிட்டதில்லை.... நம் ஜாம்பவான் நாயகர்களுள் கணிசமானோர் உலவும் பூமி.. அவர்களது ஸ்டைலில் நடக்கும் சிவகாசி விழாவும் வெற்றி பெறும் என்பது திண்ணம்..💪💪💪
புக்1.... க்ளாசிக் 3ல் அறிவிக்கப்பட்டு இப்போது க்ளாசிக் 6ஆக வரவுள்ள ஓநாய் வேட்டை செம கதை...
ReplyDeleteகிட் வில்லர் சிக்கலில் மாட்டிகொள்ள அதை சாதுர்யமாய் தனக்கு உபயோக மாக்கி கொள்ளும் செமத்தியான வில்லன்... அழுத்தமான கதை... பரபரப்பு சிறிதும் குறையாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை சீட் நுனியில் படம்பார்க்க உள்ளோம்..
பவர் ப்ளே ஓவர்களில் 80அடிக்கும் SRH மாதிரி ஆபுவிக்கு எலக்ட்ரிக் ஸ்டார்ட் தர போறார் தல...😍
புக்2.... தண்டர் செமயாக அறிமுகம் செய்துள்ளீர்கள் சார்.... டீஸர்லயே அசத்துறார்....
ReplyDeleteஎக்குதப்பாக பஞ்சாப் வாங்கி 3ஆட்டங்களில் வெற்றி தேடி தந்த சசாங் சிங் மாதிரி சர்ப்ரைஸ் ஹிட் அடிப்பார்னு க்ளாவோட பட்சி சொல்லுது....
புக்3.... ஸாகோருக்கு வெற்றி தேடி தந்ததே அந்த ப்ரீ ப்ளோயிங் பாணி.. அதைவிடுத்து டார்க்வுட் நாவல்களில் ஒரு டெம்ப்ளேட்களில் அவரை அடைக்க, நமக்கு மண்டை காய்ஞ்சிட்டது...
ReplyDeleteமீண்டும் தன் பழைய பாணிக்கு திரும்பும் ஸாகோர், ப்ரீ ப்ளோயிங் ஸ்டைல் வாயிலாக டேபிள் டாப்பில உள்ள RRமாதிரி அதிரடி காட்டுவார்னு எதிர்பார்க்கிறோம்.... தங்களும் அதையே உறுதிபடுத்தியுள்ளதால் ஒரு 270+ உண்டு.......னு வெச்சிகிறோம்....
Comics heros - IPL connection super STV sir👌👌👌👏👏👏🎉
Delete270-லாம் கொஞ்சம் டூ மச் - த்ரீ மச்சாய் இருக்கும் சார் !! அதுலாம் தாறுமாறு - தக்காளிச்சோறு டெக்ஸ் SRH-க்கும் ; லார்கோ-RR க்கும் சுகப்படும் !
Deleteநம்ம ஜம்பிங் மாயாத்மா ருத்துராஜ் லெவலுக்கு ஆடுவார்னு சொல்லுவேன் !
"கடமையைக் கைவிடேல்..!"
ReplyDeleteநல்ல ஃபன்... அரை மணி நேரம் போனதே தெரியல... க்ளைமேக்ஸ் படு டிஃப்ரண்ட்... Martin Mystereயிவிட பெரிய ட்விஸ்ட்... 😍
கிஆக வசனங்கள் என எண்ணுகின்றேன்... அருமை... அருமை...
8/10
"தலைவனுக்கொரு தாலாட்டு.."
படு அழகான ஆர்ட்... வித்தியாசமான கதைக்களம்... பட்டாஸாய் போகும் வசனங்கள்...
ராபின் மறுபடியும் டாப் க்ளாஸ்...
9/10
"தவணையில் ஒரு துரோகம்"
டேங்கோ கதைகள் எப்பவும் எனக்குப் பிடிக்கும்... இதுவும் விதிவிலக்கல்ல...
சித்திரங்கள் அசத்தல் அழகு... வசனங்களை படிக்கவிடாமல் சித்திரங்களின் அழகு கண்ணைப் பறிக்கிறது...
டேங்கோ ஒதுங்கி ஒதுங்கி செல்ல நினைத்தாலும்... ஒன்று மாற்றி ஒன்று பிரச்சனைகள் வந்து சேர்கிறது...
ஒரு பக்கம் கார்மென், கொலை வெறியுடன் துரத்த, மறுபுறம் ரெய்ஸ் உதவி செய்யும் சாக்கில் மறுபுறம் நெருக்க, டேங்கோ இரு தலை கொள்ளி எறும்பாய் தத்தளிக்கிறான்... இடையில் அவனுக்கு உதவ வந்த தந்தையும் மகளையும் காப்பாற்றினானா...!?
தெறிக்க விடும் ஆக்ஷன்...
அனல் பறக்கும் வசனங்கள்...
இலவச வரலாற்றுப் பாடம்...
நெஞ்சையள்ளும் சித்திர விருந்து...
9.5/10
ஆக மொத்தம்... மே இதழ்கள் மூன்றும் அருமை...
அடுத்து ஆன்லைன் இதழ்களை ஆவலுடன் எதிர்பார்த்து...
😍♥️🌹🔥
What a Speed🔥 Super sir👌👌👌
Deleteஅட....இது ஸ்பீடு !!!
Deleteவழக்கமான மின்னல் வாசிப்பு தலீவர், குமார், சுரேஷ் தனபால், க்ளா, கடல்., SK...லிஸ்ட்ல இம்முறை டாக்டரும் இணைந்துள்ளார்...
Deleteஇதைப் போன்ற ரசிகர்கள் முன்னுதாரணமாக கொள்ளப்படணும்....
🔥🔥🔥🔥🔥
Deleteதீயாய் தகிக்கும் கோடையின் வெப்பத்தை தணிக்கின்றன ஆன்லைன் மேளா காமிக்ஸ் புத்தக மழை பொழிந்து.
ReplyDelete#### 100 ####
ReplyDeleteஆன்லைன் ஸ்பெஷல் புத்தகத் தேர்வுகள் மிக மிக அருமை சார்.
ReplyDeleteநன்றி சார் !
Deleteதவணையில் துரோகம்,
ReplyDeleteராக்கெட் வேகத்தில் பறக்கும் கதை, ஆக்ஷன் சீக்வென்ஸ் எல்லாமே செம...
டேங்கோ எங்கே போனாலும் அங்கே வில்லங்கமும் கூடவே போகுது...
இந்த வசனம் எப்படி சார் தோணுச்சி,
"சில நேரங்களில் இத்துப் போன காமிக்ஸ் எடிட்டரைப் போல நீ டாம்பிகமாக அள்ளிவிடும் வசனங்கள் எல்லாம் கேட்க மாஸாக இருக்கின்றனதான்...
ஆனால்,அவற்றை நீ எதிலிருந்து சுடுகிறாய் என்பதுதான் என் கேள்வி"
அசத்தும் ஓவியங்கள், உறுத்தாத வர்ணச் சேர்க்கைகள்...
தவணையில் துரோகம் தவணையில்லா பரபர வாசிப்புக்கு உத்தரவாதம்..
எமது மதிப்பெண்கள்-10/10...
Back to form 🤩
Delete//இந்த வசனம் எப்படி சார் தோணுச்சி,//
Deleteகண்ணாடியைப் பார்க்கும் போது தோணாது போகுமா சார் ? :=)
ஹா,ஹா,ஹா...
Delete#டேங்கோ: தவணையில் துரோகம்!
ReplyDeleteசூப்பராக இருக்கிறது டேங்கோ கதை. நெடுகிலும் வரலாற்று துளிகளோடும் பட்டைய கிளப்பும் ஆக்சனோடும் பயணிக்கிறது.
நாடு விட்டு நாடு தாண்டி வந்தாலும் விடாது பழி என்னும் கணக்காய் கார்மெனும் பின்னாடியே வர டேங்கோ ஓட அவள் துரத்த பூனை எலி விளையாட்டில் கிளைமாக்ஸ் என்ன?
சில இடங்களில் வசனநடை டெக்ஸ் & கார்சனை நினைவு படுத்துகிறது. வசனங்களாலே என்னை ஈர்த்த டேங்கோ கொஞ்சம் டெக்ஸ் ஆன மாதிரி உணர்வு.
8.5/10
நண்பர்கள் இருவர், ஒருவருக்கொருவர் கலாய்த்துக் கொள்வதைப் பார்க்கும் நொடியில் நமக்கு டெக்ஸ் & கார்சன் நினைவுக்கு வருவது சகஜமே - becos அவர்களை மாதந்தோறும் சந்தித்து வருகின்றோம் ! ஆனால் இங்கு ஒரிஜினல் ஸ்கிரிப்டில் என்ன உள்ளதோ, அதிலிருந்து விலகிடாதே பயணித்திருக்கிறோம் சார் !
DeleteMaybe டேங்கோவினை சற்றே உயர்த்திப் பிடிக்க கதாசிரியர் முனைகிறாரோ - என்னவோ ?!
// நெடுகிலும் வரலாற்று துளிகளோடும் //
Deleteஉண்மை குட்டி,குட்டித் தகவல்கள் சுவராஸ்யமூட்டுது,
அந்த ஆமைகளும்,கடற்சிங்கங்களும்...
மே மேளா பிரமாண்ட வெற்றி பெற வாழ்த்துகள் Sir !
ReplyDeleteநன்றிகள் சார் !!
Deleteதலைவனுக்கொரு தாலாட்டு,
ReplyDeleteகுற்றக் கூடாரங்களின் பாஸ் கரெலீ என்பவனை வளைக்க நம்ம ராபின் முயற்சி எடுக்க,பாஸ் கிரேட் எஸ்கேப் ஆக,இன்னொரு பக்கம் FBI டீமும் பாஸைத் தேட...
ரொம்ப நேரமா கதை நகராமல் ஒரே இடத்திலேயே சுத்திகிட்டு இருந்த மாதிரி ஒரு உணர்வு வாசிப்பினிடையே இருந்துகிட்டே இருந்தது...
ராபினும் விசாரணையில் அடுத்தக்கட்டத்துக்கு நகராமல் ஒரே முட்டுக்கட்டை...
என்னடா இது ராபினுக்கு வந்த சோதனை,குத்தம் பண்ற பன்னாடைகள் செம ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கானுங்களே கொஞ்சம் எரிச்சல் வர்ற நேரத்தில் நம்ம தலைவன் ராபின் மூளையில் சடக்னு தோணற ஒரு விஷயம் ட்விஸ்டை உடைக்குது...
கணிக்க கடினமான ட்விஸ்ட் தான்,கதையின் மிகப்பெரிய பலமும் அதுவே...
மழை விட்டும் தூவானம் விடவில்லை எனும் கதையாக கரெலீயை ராபின் டீம் கொத்திட்டாலும்,இன்னொரு ட்விஸ்ட் இருக்கத்தான் செய்யுது...
கலக்கலான ஒரு சாகஸம் தலைவனுக்கொரு தாலாட்டு...
எமது மதிப்பெண்கள்-9/10...
ஹி....ஹி....நெடுக கவிஞர் முத்துவிசயனாரின் கவிதைகளோடு சார் !
Deleteஅப்ப தலைவனுக்கொரு தாலாட்டு சரியான தலைப்புதான் சார் ஹி,ஹி...
Delete126th
ReplyDeleteபுக்4.... அந்த கமர்சியல் கி.நா.வை தாங்கள் கண்ணில் காட்டியபோதே அடுத்த மாதமே இதை வாசிக்க மாட்டோமானு இருந்தது...
ReplyDeleteநீஈஈண்ட நாள் காத்திருக்க வைக்காமல் சட்டுனு வந்தது ரொம்ப மகிழ்ச்சிங் சார்....
சொல்லி சொல்லி அடிக்கும் டுபே மாதிரி இது ஸ்ட்ராங் பர்பார்ம் பண்ணும் என்பது தெளிவு...
புக் 5....
ReplyDeleteஆஹா இந்த விழாவின் ஹைலைட்டே ஜேன் தான்....
உமன்ஸ் RCB அணி மாதிரி சும்மா சிலோர்னு உள்ளது அம்மனி....💓💕
சட்டுபுட்டுனு ஜேன் மன்றத்தை போடுறோம்....சந்தா 2025ல ஒரு ஸ்லாட் வாங்கி கொடுக்கிறதுதான் நம்ம லட்சியமே இனி💞💞💞💞💞
உடல் டெக்ஸ்க்கு உயிர் ஜேனுக்கு💓💓💓💓💓
+1
Deleteபுக் 6& 7....மினிஸ் புத்தக விழா வரும் சிறார்களுக்கு எனும்போது ஆதரவு அளிப்பது நம் கடமையாகின்றது.
ReplyDeleteபுக்8.... விழாவில் காமெடி புக் இல்லாத குறையை தீர்க்கும் ஸ்ட்ரெஸ் பஸ்டர்ஸ் இவுகதான்...
15ம் தேதிக்கு ஆவலுடன் வெயிட்டிங்கு...
ஆசிரியர் சார்@
ReplyDeleteஇம்மாத இதழ்களை ரசித்து கொண்டு இருக்கிறேன்..
ஆன்லைன் மேளா இதழ்கள் எதிர்பாரா சரவெடி இதழ்கள் சார்...அட்டகாசம்..
கண்டிப்பாக மாபெரும் வெற்றி அடையும் என்பது இப்பொழுதே தெரிகிறது..
இலவச இதழ்கள் அறிவிப்பு எதிர்பாரா யோசனை சார்..
சமீப வாசகர்கள்..மற்றும் தேர்ந்தெடுத்து வாங்கும் வாசகர்கள் இதன் மூலம் இன்னமும் அதிக பலனும் சந்தோசமும் அடைவார்கள்..மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் சார்..
--தலைவர் பரணிதரன், தாரமங்கலம்.
TEST
ReplyDeleteபாஸாகிட்டீங்க தலீவரே ! இனிமே +1 போகலாம் நீங்க !
Deleteஅயல்நாட்டு சதியை முறியடிச்சிட்டோம் !
Delete😆😆😆😆
Deleteஅவரு ஒன்னுக்கு போயிட்டாரு சார்
Delete:-))))
Deleteசார் இப்போது தான் தலைவனுக்கு ஒரு தாலாட்டு படித்து முடித்தேன். ராபின் 2.0 இது வரை ஏமாற்றவே இல்லை.லயன் காமிக்ஸ்க்கு டெக்ஸ் போல V காமிக்ஸ்க்கு ராபின்.
ReplyDeleteஒரு மாஃபியா கும்பல் பாஸை நமது NYPD தேடிக் கொண்டே இருக்க அவன் எவ்வாறு அவர்களுக்கு தொடர்ந்து டிமிக்கி கொடுத்து தப்பிச் செல்கிறான் அவனை எப்படி ராபின் பிடிக்கிறார் என்பது தான் கதை.
எனது மதிப்பெண் 9/10
முதல் பார்வையில்
ReplyDelete1. டேங்கோ
2. ராபின்
3. சிக் பில்
மீதி இதழ்களை நாளை படித்து விட்டு விமர்சனத்தோடு வருகிறேன். நன்றி சார்.
ReplyDeleteகிட் ஆர்டின - முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை சிரிப்பு சிரிப்பு. இந்த வருடத்தில் அட்டகாசமான காமெடி கதை இது. ஒரு மூச்சில் படித்து முடித்தேன். நன்றி சார்.
ReplyDeleteபாத்துல சிட்டியா மாறிடப்போற
Delete😂😂😂
Deleteகேட்பதற்கே சந்தோசமாக உள்ளது சார்😀👏👏👏
ReplyDeleteநெட் படுத்திருச்சி சார்....
ReplyDeleteசப்ளையர் லீவுன்னதும் ஹெட்டுக்கு பறந்தேன் இரும்புக்குதிரைக்கு தண்ணி காட்டாமலே...மதியம் புத்தகத்த எடுத்ததுமே கோவை கிளைமேட் டே ரெண்டு மாதத்துக்கப்புறம் முதன்முறையாக ஜில்லுன்னு மாற...புத்தகத்தால் மட்டுமல்ல ....
பார்சல் பிரிச்சா முதல்ல தட்டுப்பட்டது அதிரடி எட்டு தான்...குட்டி புக்கோன்னு விரிச்சா அது பிரியுது ரெண்டு பக்கமா...80 களின் சினிமா விளம்பரம் போல்...சூப்பர் சார்னு...
டேங்கோவ தூக்க அட்டைப்படம் கலக்க ...அதை விட முதன்முறயா ஈர்க்குது ராபின் அட்டை நானே டாப்புன்னு...காமடி பன்னாதப்பான்னு அதை பார்த்து விழுந்து சிரிக்குது கிட்டைப் போலவே கிட்டட்டை ...சூப்பர் சார்...
எல்லாத்தையும் விட்டு துளாவுனா ஒரு பக்க விளம்பரங்கூட இல்லை 8 ன் கதைகள்னு தேடைல சுனையா அடுத்த மாதம் நாலு...அதும் பதிமூன்று...டெக்ஸ்...தாத்தா...பாலைல போராளியாக நோன்னு...ஜீலீரிடும் வயித்த ரசித்தபடி...டேங்கோவ புரட்டுனா அந்த வசனங்கள் நம்மையும் ஈக்வடார்க்கு ஓவியங்களோட கடத்த...லக்கி பெற்ற நம்ம கிட்டின் துவக்கமும் முதலாளிகளால் ஈர்க்க ...கிட்டின் இரண்டு பேனல்கள் சேட்டையாய் மாறும் கிட்டின் பார்வை ரசிக்க வைக்க ...துணையாய் டாக்புல்லின் வசனங்கள் அதை நியாயப் படுத்த தூரமாய் ஆசிரியர் பேனா அதை கடத்த...
இரவு தூக்கியது டேங்கோவ...முதல் மூனு கதைகள் படிக்க இயலுமானு தள்ளி வைத்து இந்த டேங்கோவோட கண்ண திறந்தபடி கொலம்பியா கடந்து ஈக்வடாரின் இன்காக்களயும் இன்றைய நாகரிகங்கள்யும் ரசித்தபடி பயணிக்கிறேன்...மீதி காலையிலும் ஈக்வடார் சாலையிலும்
மே ..மேலா
ReplyDeleteசரி இதுக்கும் அப்ப ஆர்டர் போட்டு விடலாம் மூமெண்ட்.
ReplyDeleteகாலையில் எழுந்தவுடன் முதல் வேலை மேளாவில் இணைவது தான். 😁
This comment has been removed by the author.
ReplyDeleteபுத்தகங்கள் நேற்று மாலை கிடைத்தது.
ReplyDeleteடேங்கோ முதலாவதாக ஈர்க்கிறார்.
அட்டைப் படம் அருமை.
முதல் புரட்டலில் சித்திரங்களும், கலரிங்கும் அருமை.
நாளைக்கு முதல் வாசிப்பு இவரே. அடுத்து சிக்பில், இறுதியாக ராபின்.
ஆன்லைன் அறிவிப்புகள் அனைத்தும் அருமை.
நேற்று விடியற்காலை அறிவிப்பை பார்த்ததும், உடனே முதல் ஆளாக பணம் கட்டிவிட்டேன்.
ஆன்லைன் மேளா வெற்றி பெற வாழ்த்துக்கள்.
முதற் பார்வை
ReplyDeleteடேங்கோ
ராபின்
சிக்பில்
அம்மா ராபினை முதலில் படிக்க எடுத்து விட்டார்
மே 2024 ஆன்லைன் மேளா வெற்றி பெற வாழ்த்துகள்
ReplyDeleteபட்டைய கிளப்ப ரெடியா காமிக்ஸ் அன்பர்களே
Okay. I too wish the same 🙏🏻
Deleteவித்தியாசமான ஆன் லைன் மேளா - யோசனைக்கு எங்களது நன்றிகள் சார்..
ReplyDeleteஅந்த பழைய இதழ்களை - வாங்குவதும் - இலவசமாய் கிடைக்கும் இதழ்களும் எல்லாம் மற்றவர்கள் படிப்பதற்கே..
(கைவசமுள்ள இதழ்களை படிக்க குடுக்க மனசு ஒப்ப மாட்டேன்கிறது. ii)..
கல்யாண வீடு - ஆன்லைன் மேளா -
இரண்டு நாளும் களை கட்டும் .. ii. சார்.. i.
ஆசிரியர் சார்@
ReplyDeleteஇந்த ஆபுவி முந்தைய வெளியீடுகள் தள்ளுபடியில் வாங்குவது, FCBD இரண்டும் இன்றும் நாளையும் என குறிப்பிட்டுள்ளீர்கள் அது தெளிவு..
நண்பர் ஒருவரது ஐயம்...
//So புது புக்ஸ் எல்லாமே மே 15 முதலே டெஸ்பாட்ச்///...
ஆபுவியின் ஸ்பெசல் இதழ்களை ரூ999 செலுத்தி புக்கிங் செய்ய என்றுவரை நேரம் உள்ளது...?? மே4&5 க்கு பிறகும் ரூ999 புக்கிங் பண்ணிக்கொள்ள இயலுமா???
I think so - new books are NOT discounted - so same price whenever you order.
Deleteஅவற்றை எப்போது வேணும்னாலும் ஆர்டர் பண்ணிக்கலாம் சார் ; ஆனால் டெக்ஸ் வில்லர் தவிர்த்த பாக்கி புக்ஸ் எல்லாமே limited printrun கொண்டவை ! ஆகையால் எப்போது வரை ஸ்டாக் இருக்கும் ? என்று சொல்லத் தெரியவில்லை !
Deleteநேற்றைக்கே அந்த புக்சின் கால்வாசிக்கு ஆர்டர்கள் வந்து விட்டன !
ராக் ஜி@ நானும் இதைதான் சொன்னேன்.. அந்த நண்பரது கேள்வி வித்தியாசமான ஒன்றாக இருக்க இங்கே கேட்டேன்.. இப்பதான் அவர் கேட்டதின் அர்த்தம் விளங்குது..
Deleteஸ்டாக் அவுட் அபாயம் உண்டே...
அதை தவிர்க்க இயன்றவரை விரைவாக புக்கிங் பண்ணிடம்னு புரிகிறது..
ஆசிரியர் சார்@தகவலுக்கு நன்றிகள்..
ஆசிரியர் சார்@ அலுவலகம் வந்தாயிற்றா...??
ReplyDeleteமுதல் ஒரு மணி நேரம் ஆபுவி துவக்கம் எப்படி??
அவ்வப்போது இங்கே அப்டேட் பண்ணிட்டே இருங்க....
அனைத்து புக்ஸ்களும் இருந்தாலும் விழா எப்படி போவுதுனு அறிய ஆவலுடன் நாங்க வாட்ஸ்ஆப்களில் கூடியுள்ளோம்...
புதுப் பதிவாகவே போட்டுப்புட்டேன் சார் !
Deleteமே 2024 மாத இதழ்கள்..
ReplyDeleteஎனது முதல் பார்வையில்...
1) கிட் ஆர்டின் & டாக்புல்
2) டேங்கோ
3) ஏஜென்ட் ராபின்
ஆன்லைன் புத்தக விழா வெற்றி இலக்கினை நோக்கி இந்நேரம் பாதி கிணற்றை தாண்டி இருக்கும்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஆசிரியர் சாரின் புதிய ஆபுவி பதிவு ரெடி நண்பர்களே....!!! (ஈவி சார்பில்)
ReplyDeleteகேப்சன் போட்டிக்கான எனது பதிவு
ReplyDeleteகிட்: "ஹைய்யா அங்கிள் வந்துட்டாரு...அவருகிட்ட ஐடியா கேட்டு 'கண்மணி அன்போடு காதலன்...'பாட வேண்டிய நேரம் வந்துடுச்சு..😁."
D - கார்சன் : கழுத்துல சிவப்புத் துணி இருக்கு ஒரு வேளை அப்பாவி கும்பலா இருப்பானோ( மனக்குரல்)கத்தரி வெயிலுக்கு குடல் வேற கவ்வுதே..."தம்பி லக்கி டெக்கான் சார்ஜர்ஸ் ஜெயிச்சா சுக்கா ரோஸ்ட் வாங்கித் தர்றேன் னு சொன்ன"
டைகர் ஜாக் : "வோ!...இவனும் தல மாதிரியே நம்மள பேச வுடலனா இந்த ஒல்லிப் பயலுக்கு பில்லி போட்டுற வேண்டியது தான்" 👿
லக்கி : "அட கன்னிச் சாமியார்ஸ்...🤦♂️அந்தாளு நான் சம்மர் லீவுக்கு வர்றேன் னு சொல்லி உடனே ஓகே சொன்னப்ப யோசிச்சிருக்கணும்...
டெக்ஸ் மாம்ஸ் கு ஏதாச்சும் பொண்ணு இருக்கும் அப்படியே சீதனமா டைனமைட்ட வாங்கலாம் னு கயிறு லாம் கொண்டு வந்து... ப்ச்ச் ஒரே அசிங்கமா போச்சு குமாரு😩😭