Powered By Blogger

Friday, May 24, 2024

999 !!!

நண்பர்களே,

வணக்கம். நம்ம சேலம் குமார் வந்து பூச்சாண்டி காட்டுவதற்கு முன்பாக, எனக்கு நானே புளியைக் கரைச்சுக்கிறேனே ; இது பதிவு நம்பர் 999 guys !! இந்த நம்பர் விளையாட்டுக்கள் இந்தியாவுக்கே ஒரு தேசீய பொழுதுபோக்கெனும் போது, நாம் மட்டும் அதற்கொரு விதிவிலக்கா - என்ன ? So ஆயிரமெனும் ஒரு மைல்கல்லின் முகப்பிலிருக்கும் இந்த நொடியில், வழக்கம் போலவே ஜாலியாய் வண்டியை அடிச்சு ஓட்டுவோமா ?

மே '24 !! நிறைய விதங்களில் செம த்ரில்லான மாதமிது என்பேன் ! ரெகுலர் தடத்தில் ஆட்டத்தைத் துவக்கிய போது, மூன்று இதழ்களுமே தத்தம் பாணிகளில் தெறிக்க விட்டது, பரபரப்பான இந்த மாதத்துக்கொரு டிரெய்லர் போல அமைந்தது என்பேன் !! 

டேங்கோ :

ஒரே நேரத்தில் மூணு பேர் ஞானப் பழம் இல்லாங்காட்டியும், வாழைப்பழம் தேடிப் புறப்பட்டனர் - நமது முத்துவின் ஐம்பதாவது ஆண்டுமலரினில் ! மூவருமே தத்தம் பாணிகளில் ஆற்றலாளர்கள் என்ற போதிலும், ஒருத்தருக்கே முழுச் சீப்பு வாழைப்பழமும் கண்ணில் பட்டிருந்தது ! And அவர் தான் நம்ம லோன் ஸ்டார் டேங்கோ ! இவரது முதல் சாகசத்துக்குப் பேனா பிடிக்கும் போதே எனக்கு இவரை நிரம்பப் பிடித்திருந்தது ; but கதாசிரியர் பின்னணியில் பேசிக் கொண்டே கதையை நகற்றும் அந்த monologue பாணிக்கு நீங்கள் எவ்விதம் ரியாக்ட் செய்வீர்களோ ? என்ற ஐயம் என்னுள் ஒரு மூலையில் இருக்கவே செய்தது ! ஆனால் கடலும், கடல் சார்ந்த சாகசங்களும் நமக்கு எப்போதுமே மனதுக்கு நெருக்கமானவை எனும் போது, டேங்கோவின் voyages நிச்சயமாய் நம்மிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டிருந்தேன் ! And அது பொய்க்கவில்லை என்பதற்கு சான்று - டேங்கோ தனது நான்காவது ஆல்பத்தை வெற்றியோடு பூர்த்தி செய்திருப்பதே ! 

And இங்கே ஒரு தகவலுமே folks : வாழைப்பழம் தேடி பந்தயத்தில் டேங்கோவுடன் பங்கேற்ற இதர 2 நாயகர்களான C.I.A ஆல்பா & சிஸ்கோ ; அப்புறம் ப்ளூகோட் பட்டாளம் & க்ளாஸிக் நாயகர்களின் 4 ஆல்பங்களுடனான Make My Own Mini Santha (MYOMS) இரண்டு மாதங்களாகியும் பெருசாய் take-off ஆகியிருக்கவில்லை என்பதே சங்கடமான நிலவரம் ! ரொம்பச் சமீபமாய்த் தான் 100 எனும் எண்ணிக்கையினையே தாண்டியுள்ளது & இலக்கான 400 ரொம்பத் தொலைவில்.....ரொம்ப ரொம்பத் தொலைவில் இருப்பதாகவே இப்போதைக்குத் தெரிகிறது ! ரெகுலராய் சந்தாக்களோடு விளம்பரங்கள் செய்து வருகிறோம் ; தலா 256 பேர் கொண்ட ஒன்பது வாட்சப் க்ரூப்களில் நம்மிடம் புக்ஸ் வாங்கிடும் நண்பர்களின் நம்பர்களை சேமித்து வைத்து, அம்புட்டுப் பேருக்குமே ரெகுலராய் அனுப்பும் தகவல்களோடு, இந்த MYOMS பற்றியுமே தெரிவித்து வருகிறோம் ! போன் பண்ணும் வாசகர்கள் அத்தனை பேரிடமும் இது குறித்து நம்மாட்கள் சொல்லியும் வருகின்றனர் ! But ஒரு தானைத் தலைவருக்கு உருவாகிடும் எழுச்சியில் கால்வாசி கூட புதியவர்களுக்குத் தேற மாட்டேங்குது என்பதே யதார்த்தம் ! 

இது போலான சந்தர்ப்பங்களில் தான் க்ளாஸிக் நாயகர்களும் சரி, அவர்களை ஆராதிக்கும் நண்பர்களும் சரி, என்னை நோக்கி நீள நீளமான விரல்களை நீட்டியபடிக்கே - "உனக்கு இது தேவையா ? தேவையா ??" என்று கேட்பது போலவே உள்ளது ! இதோ - இம்மாதத்து கமர்ஷியல் கி.நா.ஹிட் அடித்திருப்பது போலான தருணங்களில், புது இதழ்களின் அணி செம வீரியமாய், தாட்டியமாய் RCB டீம் போலவே தென்படுகிறது ! ஆனால் "கூட்டிக் கழிச்சுப் பாரு, கணக்கு சரியா வரும் !" என்று கோரஸாக, கெத்தாக சவுண்டு விடும் ஸ்பைடர்களும், வேதாளர்களும், மாயாவிகளுமே இறுதியில் IPL கோப்பைகளைத் தட்டிப் போய்விடுகின்றனர் !! And காசியப்பன் பாத்திரக்கடை பக்கமே புதியவர்களைக் கூட்டிக்கினு போகும்படியாகிப் போகிறது ! இந்த MYOMS முயற்சிக்கும் அவ்விதமொரு தலைவிதி நிகழாதிருக்க பெரும் தேவன் மனிடோ அருள் பாலிப்பாராக !!

"பிட்டு-பிட்டா, நடுநடுவே ஸ்பெஷல் இதழ்களை அறிவிச்சுப்புட்டு, அப்பப்போ பணம் அனுப்பப் சொல்லுறதுக்குப் பதிலா, வருஷ ஆரம்பித்திலேயே ஒரு நல்ல தொகையை வசூல் பண்ணிப்புட்டு, குறுக்கால, நெடுக்கால, சைடாலே போடக்கூடிய அம்புட்டு புக்ஸையும் அனுப்பலாமே ? மீதம் இருந்தாக்கா அடுத்த வருஷத்துக்கு மாற்றிடலாமே ?" என்ற நண்பர்களின் வினவல்களில் உள்ள லாஜிக் இத்தகைய தருணங்களில் புரிகிறது தான் ; ஆனால் இதற்கொரு மறுபக்கம் இருப்பதை பெரும்பாலும் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை ! சரியான திட்டமிடலோடு, முறையான இதழ் அறிவிப்புகளோடு, நாம் ஓராண்டுக்கென வசூலிக்கும் சந்தாக்களிலேயே, சில நண்பர்களிடம் காரசாரமான பேச்சுக்களை நம்மவர்கள் வாங்க நேரிடுகிறது ! இதோ - சமீபத்தில் நிறைவுற்ற அந்த Supreme '60s தனித்தடத்தினில் 5 இதழ்களுக்கென தொகை வசூலித்திருந்தோம் ! இடையே ஏகமாய் ஸ்பெஷல் இதழ்கள் குறுக்கிட்டபடியால், இந்த தடித்தடி புக்ஸுக்குள் புகுந்து பணி முடித்திட எனக்குத் தீர்ந்திருக்கவில்லை and so 2023-ல் முடிந்திருக்க வேண்டிய சந்தாவானது நடப்பாண்டின் மூன்று மாதங்கள் வரை நீண்டு விட்டது ! Phewww ....இதற்கே நம்மாட்கள் வாங்கிய பூசைகள் சொல்லி மாளாது ! இந்த அழகில், வருஷ ஆரம்பத்தினில், ரெகுலர் சந்தா தவிர்த்த வேறெந்த planning-ம் பெருசாய் எனக்கே இல்லாததொரு தருணத்தில் உருட்டுப் பொதியாய் காசை வசூலித்தோமேயானால் - ஆண்டு முழுக்க நம்மாட்கள் கத்தி மேல் நடந்தது போலாகவே இருந்திடும் ! இந்த வம்பே வேண்டாம் என்பதற்காகவே - "சுடப் போறது ரவா தோசையா ? ராகி தோசையா ? பேப்பர் ரோஸ்ட்டா ? ஊத்தப்பமா ?" என்பதையெல்லாம் ஸ்பஷ்டமாய் அறிவித்து விட்டு, அதற்கேற்ப மட்டுமே காசை வசூலிப்பது சாலச் சிறந்தது என்று தீர்மானித்து வருகிறேன் ! இந்த நொடிக்கு MYOMS கரை சேர்ந்தால் சரி தான் என்பதே நிலவரம் ! 

டாக்புல் & கிட் ஆர்டின் :     

நம்ம உட்ஸிடியின் நீதிக் காவலர்களுக்கு முதல் ரசிகர்கள் நீங்களோ - நாங்களோ நஹி என்பேன் !! கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாய் நமக்கு பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்ப்புகள் செய்து தரும் கோவை நகரத்து மொழிபெயர்ப்பாளரே சிக் பில் & கோ.வின் பிரதம ரசிகை ! ஆறேழு மாதங்களாய் மாடு மேய்க்கும் பசங்களின் வறட்சியான கதைகளையாய் அனுப்பிக் கொண்டிருந்தால், அவரே கேட்டு விடுவார் - "சிக் பில் இன்னும் ரெடியாகலியா ?" என்று !! And அவர் மட்டுமன்றி, நாமுமே ஏகமாய் ரசிக்குமொரு வாய்ப்பாக இம்மாதத்துக் "கடமையைக் கைவிடேல்" அமைந்து விட்டது இந்த மாதத்தின் இன்னொரு highlight ! இதற்குப் பேனா பிடித்திருந்தது நம்ம மேச்சேரிக்காரர் & நானும் ஆங்காங்கே மெருகூட்டல்களைச் செய்திருந்தேன் ! ஒவ்வொருவாட்டி அந்த மொக்கைச்சாமித் திருடனிடம் சாத்து வாங்கத் தயாராகும் போதெல்லாம் நம்ம டெபுடி ஷெரீபின் expressions வேற லெவல் ! இறுதியில் கொஞ்சம் சினிமாத்தனமான க்ளைமாக்ஸ் என்றாலும், லாஜிக் அவசியமாகிடாத  கார்ட்டூன் உலகில் இதெல்லாமே par for the course என்பேன் ! சூப்பராக விற்பனை கண்டுள்ள இதழ்களுள் இதுவும் ஒன்று !!

ஏஜெண்ட் ராபின் :

இந்த மாதத்து ரெகுலர் தடத்தின் surprise என்னைப் பொறுத்தவரையிலும், ராபினின் "தலைவனுக்கொரு தாலாட்டு" தான் ! வழி நெடுக ரேடியோ பாடிக் கொண்டேயிருக்க, அங்கெல்லாம் கவிதைகள் (ஹி..ஹி..ஹி..சரி...வஜனங்கள்) எழுத நேர்ந்த போது கடுப்பாய் இருந்தது தான் ! ஆனால் கொஞ்ச நேரத்திலேயே புரிந்தது - இதுவும் ஏதோவொரு விதத்தில் கதையோடு தொடர்பு கொண்டிருக்கும் என்று !! ரிப்போர்ட்டர் ஜானி பாணியில் dramatic நிகழ்வுகள் ஏதுமின்றி ; ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ரகளைகளுமின்றி, யதார்த்தமாய்ப் பயணித்த ராபினின் இந்த ஆல்பத்தினை நீங்கள் ரசித்திருப்பது செம refreshing ! Maybe ராபினும் நம்மோடே முதிர்ந்திருப்பது, இந்த flashback கதைகளை ரசிக்க நமக்கொரு கூடுதல் முகாந்திரத்தைத் தருகிறதோ - என்னவோ !! 

ஆன்லைன் மேளாவின் ஸ்பெஷல் இதழ்களுள் நீங்கள் சன்னம் சன்னமாகத் தான் உட்புகுந்திருப்பீர்கள் என்பது உறுதி ! Of course - முழுசையும் ஏக் தம்மில் போட்டுத் தாக்கியோரும் இருப்பீர்களென்பது உறுதி ! வெளிவந்துள்ள அந்த 7 ஸ்பெஷல் புக்ஸ் மத்தியில் என்னை சுவாரஸ்யப்படுத்திய இதழ்கள் நான்கு !! Oh yes - டெக்சின் "ஓநாய் வேட்டை" மறுபதிப்பு என்பதாலும், எனது ரேட்டிங்குகளுக்கு அப்பாற்பட்டதொரு ஆளுமை நம்ம 'தல' என்பதாலும் அங்கே கருத்துக் கந்தசாமியாகிட எனக்கு அவசியங்களில்லை ! அவர்பாட்டுக்கு தனி வழியில் தடதடத்துப் போவார் !! 

என்னைக் கொக்கி போட்ட முதல் இதழ் நம்ம ஜம்பிங் நாயகர் ஸாகோர் தான் ! 

இந்தப் "பனிமலைப் பலிகள்" இருவித diverse அலசல்களுக்கு உள்ளாகியிருப்பதை கவனித்தேன் & in fact இவ்விதம் தான் நீங்கள் ரியாக்ட் செய்வீர்கள் என்பதையுமே யூகித்திருந்தேன் ! 'ஒரு அமானுஷ்ய எதிரியோடு மோதும் காதிலே புய்ப்பம் அவசியமா ?' என்ற கேள்விக்கு எனது பதில் ரொம்பவே சிம்பிளானது folks ! உருவாக்கத்தின்படியே ஸாகோர் மாயாஜாலங்கள் ; செவ்விந்தியப் பழங்குடி நம்பிக்கைகள் என்பனவற்றின் நடுவே ஜனித்தவர் ! அவரது அந்த அறிமுக ஆல்பத்திலேயே இதற்கான குறியீடுகள் தெள்ளத் தெளிவாய் தரப்பட்டிருந்ததை நினைவுபடுத்திப் பாருங்களேன் guys ?  And இன்னுமொரு படி மேலே போய் - "யார் இந்த ஸாகோர் ?" என்று விக்கிப்பீடியாவைக் கேட்டுப் பாருங்களேன் !! 

இங்கிலீஷ் விக்கிபீடியா சொல்வது இதோ : Zagor is not a typical western character, as his stories mix horror and science fiction by side with a bit of humour coming mostly from his sidekick Chico !

இத்தாலிய விக்கிபீடியா சொல்வது இதோ : The stories, starting from a western setting, are characterized by the variety of ideas, themes, characters and situations, with a notable mix of genres, from western to fantasy to science fiction ; can be defined as a "fantasy western". 

சொல்லுங்களேன் guys - "பனிமலைப் பலிகள்" - fantasy western என்ற அடையாளத்துக்குப் பொருந்துகிறதா ? இல்லையா ? என்று !

அட, அதே விக்கிப்பீடியாவில் இன்னும் கொஞ்சம் ஆழமாய்ப் போனால் கிடைக்கும் தகவல்கள் இவை !!

ஸாகோரின் ஜென்மப் பகைவர்கள் இவர்களெல்லாம் தான் :

புரஃபஸர் ஹெல்லிஞ்ஜன் : உலகையே ஆட்டிப்படைக்கும் வெறி கொண்டு ரோபாட்கள் ; நீர்மூழ்கிகள் ; கம்பியூட்டர்கள் என்றெல்லாம் கண்டு பிடித்துத் தள்ளும் விஞ்ஞானி !    

அக்ரோனியன்கள் : வேற்று கிரகத்திலிருந்து வந்தோர் ; பாதி மிருகம்-பாதி தாவரம் என்றான உயிரனங்கள் ! இவுகளை முதல் பத்தியில் உள்ள புரஃபஸர் ஒரு கம்பியூட்டர் வாயிலாகத் தொடர்பு கொண்டு பூமிக்கு வரவழைக்கிறார் !! பூமியை நோட்டமிடும் நோக்கில் துவக்கத்தில் வருவோர் - அப்புறமாய் படையெடுக்கத் தீர்மானிக்கின்றனர் !

டெவில் முகமூடி : சூனியக்காரன் ! 

பெல்லா ராக்கோசி : இதுவோ ஒரு ஹங்கேரிய நாட்டு இரத்தக் காட்டேரி ! 

இரும்பு மனிதன் : ஒரு மன்னர்காலத்துக் குதிரைப்படை வீரனைப் போல தலையில் ஹெல்மெட் ; நெஞ்சில் கவசம் என்று மாட்டிக்கொண்டு திரியும் வெறியன் !

ருநோக் : "அக்னியின் மைந்தன்" என்று அறியப்படுபவர் ; டைனோசார்கள் வசிக்கும் ஒரு பள்ளத்தாக்கில் வாழ்ந்து வரும் ஆசாமி !

காண்டராக்ஸ் : ஆயிரக்கணக்கான வருஷங்களாக வாழ்ந்து வரும் ஒரு மாந்த்ரீகர் !

Oh yes, நார்மலான கடாமாட்டு எதிரிகளும் உள்ளனர் தான் - நாட் மர்டோ ; மோர்டிமர் ; சூப்பர் மைக் என்றெல்லாம் ! ஆனால் அவை இந்த மந்திர-தந்திர எதிரிகளின் சாகசங்களை மத்தியில் புதைந்தே கிடக்கின்றன ! 

சிம்பிளாகச் சொல்லப் போனால் டெக்ஸை ஸாகோரில் தேடினால் 'பிம்பிலிக்கி பிலாக்கி' தான் பலனாகிடும் ! டெக்ஸ் ஒரு ரேஞ்சர் ; ஒரு நவஹோ இனத் தலைவர் ; நார்மலான நாதாரிகளை சுளுக்கு எடுத்து சற்றே போரடித்துப் போயிருக்கும் தருணத்தில், மெபிஸ்டோவுடன் ஒரண்டையை இழுப்பவர் !! So டெக்ஸை யமாவுடனோ ; மெபிஸ்டோ உடனோ மோதச் செய்யும் சாகசங்களை நான் தவிர்க்க எண்ணுவது - ஒரு யதார்த்த நாயகரின் சின்னஞ்சிறு fantasy முகத்தினை இயன்றமட்டுக்கும் வெளிச்சம் போட்டிட வேண்டாமே - என்ற ஆதங்கத்தில் தான் ! அதே சமயம் - ஸாகோரின் முக்கிய மெனுவே fantasy தான் எனும் போது - "விட்டிகோ வேட்டையில்" லாஜிக்கைத் தேடினால் ஞான் என்ன செய்யும் ? Simply put....முதலாமது நம்ம கோனார் மெஸ் போலானது ; அசைவத்தின் அம்புட்டு ரகங்களும் தடையின்றிக் கிடைக்குமிடம் ! So அங்கே போய் Nasi Goreng என்ற மெபிஸ்டோவை தேட வேணாமே என்பது தான் எனது எண்ணம் ! இரண்டாவது கடையோ - ஜப்பானிய Sushi பரிமாறும் ஹோட்டல் ! இங்கே ரக ரகமாய் exotic ஐட்டங்களே பிரதானமாய்ப் பரிமாறிடுவார்கள் எனும் போது - 'அண்ணாச்சி....... எனக்கொரு கொத்து பரோட்டா,ஆங்..அப்புறமொரு ஒன் சைட் ஆம்லெட் !' என்று ஆர்டர் செய்தல் சிரமமாச்சே ! 

யோசித்து மட்டும் பாருங்களேன் - அந்த அக்ரோனியன்ஸோடு கோடாரி மாயாத்மா மோதும் கதையினை மட்டும் நான் தேர்வு செய்திருந்தால் நிலவரம் என்னவாக இருந்திருக்குமென்று !! Of course - நார்மலான  ரவுடிப் பயபுள்ளைக உதார் விடும் கதைகளையே இயன்றமட்டுக்கு தேடி வருகிறேன் - காத்திருக்கும் "வஞ்சத்துக்கொரு வரலாறு" அந்த மாதிரியானது தான் ! But கொஞ்சமே கொஞ்சமாய் இந்த fantasy western ஜானருக்கும் நாம் பழகிக் கொள்ளல் அவசியம் என்பேன் - at least ஜம்பிங் பேரவையின் பார்வையிலாவது ! (பேரவைத் தலைவரே....முடிஞ்சா மட்டுக்கு முட்டு கொடுத்திருக்கிறேன் ; நீங்களும் உங்க பங்குக்கு  கொஞ்சம் பாத்து பண்ணுங்க !! )

துணைக்கு வந்த மாயாவி !

By now, இந்த கமர்ஷியல் கி.நா. நம் மத்தியில் நல்லதொரு ரவுண்ட் வந்திருக்கும் என்றே நினைக்கிறேன் - because இது வரையிலான word of mouth விமர்சனங்கள் செம பாசிட்டிவாக இருந்துள்ளன !! நிஜத்தைச் சொல்வதானால் இந்தக் கதையின் மாயாவிப் பொடியன் - "சூது கவ்வும்" படத்தில் விஜய் சேதுபதியின் மடியில் குந்திக்கினே ஊரெல்லாம் சுற்றி வரும் அந்த சஞ்சிதா ஷெட்டி அம்மணி போலவொரு கற்பனைக் கதாப்பாத்திரமாய் இருப்பானென்றே எண்ணியிருந்தேன் ! ஆனால் அவன் நெசம் தான் என்பதை க்ளைமாக்சில் அறிந்த போது - "சூது கவ்வும்" பாணியில் சத்தமில்லாமல் நாமும் மாற்றிப்புடுவோமா ? என்றெல்லாம் கூட நினைத்தேன் ! ஆனால் அங்கே, விஜய் சேதுபதிக்குத் தாண்டி வேறு யாருக்கும் அம்மணி புலப்படுவதில்லை ; வேறு யாரோடும் interact செய்திடுவதும் இல்லை ! ஆனால் இங்கேயோ அப்படியில்லை ; அந்த மெக்சிகப் பண்ணை முதலாளி பார்க்கிறார் ; சங்கை அறுத்துப்புடுவேன் என்று மிரட்டுகிறார் ; இராணுவ ஆபீசில் வாயில் காவலன் பார்த்திடுகிறான் etd etc....! So நான் பாட்டுக்கு அவனை மெய்யாலுமே ஒரு  மாயாவி என்று பிட்டைப் போட்டிருந்தால் வம்பாகிப் போய்விடும் என்பது புரிந்தது ! So பொடியன் நிஜமே என்ற ஒரிஜினல் க்ளைமாக்ஸுடன் சுபம் போட்டோம் ! 

Oh yes, இங்கே சித்திரங்கள் செமையாய் ஸ்கோர் செய்திருந்தது நிஜமே ! ஆனால் இந்த ஆல்பத்தை முதன்முதலில் பார்த்த சமயத்தில், சீரியஸான ஒரு கதைக்கு, இந்தக் கீச்சு பாணிச் சித்திரங்களை அமைத்திடத் தீர்மானித்தது யாராக இருக்குமென்று யோசித்தேன் ! அப்படியே பக்கங்களை நகற்றிய போது பார்த்தால் - கதை-வசனம்-சித்திரம்-கலரிங் என சகலமும் ஒருத்தரே என்பது தெரிந்தது !! அந்த ஒருத்தர் இவரே : 


இவரைப் பார்த்த கையோடு ஒருக்கா புக்கைப் புரட்டி, நாயகன் ஆம்பரோஷியஸ் மார்கனையும் பாருங்களேன் - ஏதாச்சும் ஒற்றுமை தெரியுதுங்களா ? 😀😀😀

பொதுவாகவே இந்த மாதிரியான ஒன்-ஷாட்ஸ் எனக்குப் பிடிக்கும் ; வித விதமான கதைக்களங்களுக்குள் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி வரிந்து கட்டிக் கொண்டு நுழைந்திட வாய்ப்புகள் கிட்டிடும் என்பதனால் ! ஜம்போ காமிக்ஸ் வண்டி ஓடிக்கொண்டிருந்த வரைக்கும், இந்த பாணிக்கு ஒரு தடம் சாத்தியப்பட்டு வந்தது ! But "வாசிக்கவே நேரமில்லே ; இதிலே முன்சாமி, கோயின்சாமிலாம் ஈரோவா ஆக்டு குடுக்கும் கதைங்களுக்குள் எங்க போறதாம் ?" என்ற கேள்வி எழுந்த பிற்பாடு, one-shots களின் பாடு திண்டாட்டமாகிப் போயுள்ளது ! இந்த நிலைமை மாறிட "துணைக்கு வந்த மாயாவி"  கொஞ்சமாய்க் கை கொடுத்தால் சூப்பர் !! What say people ?

டைலன் டாக் :

இந்தக் கலர் மினி இதழை கையில் ஏந்திப் பார்த்த நொடியில் புரிந்தது - இது நிச்சயம் நமக்கெல்லாம் ரசிக்குமென்று !! ஒரு மித தூரத்துப் பொழுதில், நமது வாசிப்புகளெல்லாமே இந்த ரேஞ்சுக்கே அமைந்து போனாலும் வியப்புக் கொள்ள மாட்டேன் ! Because - இவை போலான மினி புக்செல்லாமே கையில் ஏந்திடும் நொடிதனில், "இதை வாசிக்க எம்புட்டு நேரம் புடிக்கும் ?" என்ற கேள்வியினை முன்வைத்திடாதவை ! "அட..." என்றபடிக்கே கையில் எடுத்தால், அடுத்த பத்தாவது நிமிடத்தில் வாசித்து முடித்திருப்போம் !! அதிலும் இந்த டைலன் ஜாகஜத்தில் வசனங்கள் குறைவு, சித்திரங்களின் முதுகிலேயே கதையின் பெரும்பங்கு சவாரி செய்து விடுகிறதெனும் போது - செம breezy ride & read ஆகிப் போகிறது ! பற்றாக்குறைக்கு இங்கே டைலன் நடத்திடும் undercover புலனாய்வுகளும், நிச்சயம் நம் மத்தியில் ஒரு பேசுபொருளாகிடுமென்று எதிர்பார்த்திருந்தேன் - நம்ம பன்பாண செயலரின் உபயத்தில் அதுவும் பொய்த்திருக்கவில்லை ! So ஜாலியான வாசிப்பு ; yet நமக்கு ரசிக்கக்கூடியதொரு களம் அமைந்ததில் ஹேப்பி ! 

தானைத் தலைவர் & இரும்புக்கரத்தார் !!

மேலே சொன்ன அதே காரணங்களுக்காக எனக்கு ரசித்த இன்னொரு குட்டி சாகசம் தான் நம்ம க்ளாஸிக் சூப்பர்ஸ்டார்ஸ் ஸ்பெஷல் 1 !! Of course மாயாவியை தண்ணீர் குடிக்கச் செய்யும் அந்தக் கதை பாணி கடுப்பைக் கிளப்பவே செய்தது - but still நமது பிரதான நாயக / நாயகியர் ஒன்றிணையும் சாகசத்தினை skip செய்வது உசிதமாகாதென்று பட்டது ! தவிர, இந்தப் புதுயுக பாணிச் சித்திரங்கள், டிஜிட்டல் கலரிங் என்று எல்லாமே பட்டையைக் கிளப்பிடுவதை நீங்களும் பார்த்தே தீரணும் என்று தலைக்குள் குடைந்தது ! More than anything else - நம்ம தானைத் தலைவருக்கு பேனா பிடிக்கும் வாய்ப்பு ரொம்ப காலம் கழித்து இங்கே வாய்த்திருப்பதை miss பண்ண மனசு கேட்கலை !! (அதுக்கோசரம் முழுநீள SINISTER SEVEN கதைக்குள் குதிக்கவெல்லாம் மாட்டேனுங்கோ !!) 

கொசுறுத் தகவல் : இந்தத் தொடரின் அத்தியாயம் # 2 - ஆகஸ்ட்டில் - ஈரோட்டுப் புத்தக விழாவின் போது !! நம்ம ஆர்ச்சி பயல் தானைத் தலைவரை தட்டாமாலை சுற்றுவதை அந்நேரம் பார்த்திடலாம் !!

So மே மாதத்தினை செம bright ஆக்கிட (என்னளவிலாது) உதவிய இதழ்கள் இவையென்றால், காத்துள்ள ஜூன் ரெகுலர்ஸ், தம் பங்குக்குப் பட்டாசாய்ப்  பொரிந்து தள்ளியுள்ளனர் !! 

XIII .... நம் மத்தியில் எப்போதுமே அதிர்வலைகளை உருவாக்கிடும் நம்பர் இது ! And அந்த மறதிக்கார ஜேசன் மக்லேன், எல்லாமே துவக்கம் கண்ட க்யூபாவுக்குப் பயணமாவதே காத்திருக்கும் சாகஸத்தின் highlight !! சமீப வருடங்களாகவே XIII-க்குப் பேனா பிடிக்கும் போதெல்லாம் எக்கச்சக்க நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட மாதிரியுள்ளது - அமெரிக்க அரசியல் பற்றி ; யுத்த நுணுக்கங்கள் பற்றி etc etc ! இம்முறையும் அதற்கு விதிவிலக்கல்ல ! ஒவ்வொரு கதையின் பின்னணியில் எவ்வளவு research உள்ளது ; எத்தனை தேடல் உள்ளதென்பதையெல்லாம் பார்க்கும் போது மலைப்பாக உள்ளது ! அனல் பறக்கும் ஆக்ஷனில் ஓட்டமெடுக்கும் இந்த சாகஸத்தின் முடிவில் நம்மாள் க்யூபாவிலிருந்து நேராக மாஸ்கோவுக்குப் பயணமாகிறார் and அங்கே இந்த இரண்டாம் சுற்று நிறைவு காணப்போவதாகத் தகவல் ! அமெரிக்க ப்ரெசிடெண்டை போட்டுத் தள்ளிய குற்றச்சாட்டோடு நமக்கு அறிமுகமான மனுஷன் இன்று வெள்ளை மாளிகைக்குள் உதவி ஜனாதிபதியாக நுழைந்திடும் தருவாயில் நிற்கிறார் ! பார்க்கணும் - க்ளைமாக்ஸ் பாகத்தில் என்ன காத்துள்ளதென்று !! And மூன்றாவதாய் ஒரு சுற்றுக்குள் ஜேசனை இறக்கி விடும் சபலத்தை படைப்பாளிகள் தவிர்ப்பார்களா - இல்லையா ? என்பதையுமே பார்த்தாகணும் !! இதோ - துளியும் மாற்றங்களில்லா ஒரிஜினல் அட்டைப்படம் & அடர் வர்ணங்களில் மிளிரும் உட்பக்கம் !! 


நம்ம XIII தான் பட்டையைக் கிளப்புகிறாரென்றால் - ஜூன் மாதத்தில் இரவுக்கழுகாரும் ஆயிரம்வாலாவாய் பொரிந்து தள்ளுகிறார் ! கதையின் துவக்கத்திலேயே ஒரு ட்விஸ்ட் உள்ளது - கார்சன் லேது ; கிட் லேது ! டெக்ஸ் & டைகர் ஜாக் மட்டுமே கதையின் முழுமையிலும் அதிரடி பண்ணி வருகிறார்கள் !! நவஹோ தலைவரும், சிகப்பின சகோதரனுமாய் செய்திடும் அதிரடிகள் 224 பக்கங்களிலும் எதிரொலிக்கிறது ! And கதைக்களமோ செம சுவாரஸ்யம் - அவனை இவர்கள் பின்தொடர ; இவர்களை வேறொருவர் பின்தொடர ; அப்புறம் வரிசை மாறி மறுக்கா பின்தொடரல் தொடர்ந்திட, இக்ளியூண்டு கூடத் தொய்வே இல்லாமல் கதை சீறிப் பாய்கிறது ! ஏஜெண்ட் ராபின் ; மேஜிக் விண்ட் தொடர்களிலெல்லாம் பணியாற்றியுள்ள ஓவியரின் கைவண்ணத்தில், சித்திரங்களும் செம க்யூட்டாக இருக்க, கண்களுக்குமே ஒரு விருந்து வெயிட்டிங் என்பேன் ! இதோ - மறுக்கா ஒரிஜினல் அட்டைப்படம்ஸ் & உட்பக்கங்கள் !!  


நாளை XIII & டெக்ஸ் என இருவருமே அச்சுக்குச் செல்கின்றனர் !! And நம்ம V காமிக்ஸ் பணிகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன ! ஆன்லைன் ஸ்பெஷலில் விடுபட்டிருந்த க்ரே தண்டருமே இம்மாத கூரியர்களோடு ஐக்கியமாகிடுவார்  ! 

அப்புறம் சின்னதாயொரு change : தாத்தாஸ் ஜாகஜம் அடுத்த மாதத்திற்கு இடமாற்றமாகிறது ! நிறையவே கூகுள் செய்து, பின்னணித் தகவல்களைப் புரிந்து கொண்டு, எழுதினால் மட்டுமே இந்தத் தொடருக்கு நியாயம் செய்திட இயலும் என்பதால் காலில் வெந்நீரை ஊற்றிக் கொள்ளாது, கொஞ்சமாய் டைம் எடுத்துக் கொண்டு பணியாற்ற நினைக்கிறேன் ! சாரி guys !! 

ரைட்டு....குவிந்து கிடக்கும் பணிகளுக்குள் ஐக்கியமாகிடப் புறப்படுகிறேன் !! And நம்ம next meet - ஆயிரமாவது பதிவில் எனும் போது இப்போதிலிருந்தே வவுத்தை என்னமோ செய்றா மெரியே ஒரு பீலிங்கு !!  தெய்வமே....என்ன எழுத ? என்று இந்த நொடி வரைக்கும் தெரியாமல் பேந்தப் பேந்த முழிச்சிக்கினு திரியும் இந்தப் பச்சை மண்ணை, மானாவாரியாய் அள்ளி விடக்காத்திருக்கும் கவிஞரிடமிருந்தும், நண்பர்களின் பெரும் எதிர்பார்ப்புகளெனும் இமயமலையிடமிருந்தும் காப்பாத்துவீராக !! Bye all....see you around !! Have a super cool weekend !!

409 comments:

  1. Replies
    1. வேகம் போதாது..அடுத்த வாரம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் முதலிடம் பிடிக்க

      Delete
    2. அவரு வந்தாலே வவுத்த கலக்குறதா சிவகாசியில் இருந்த டிரங்க் கால்! 😄😂

      Delete
  2. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  3. ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  4. // ரிப்போர்ட்டர் ஜானி பாணியில் dramatic நிகழ்வுகள் ஏதுமின்றி ; ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ரகளைகளுமின்றி, யதார்த்தமாய்ப் பயணித்த ராபினின் இந்த ஆல்பத்தினை நீங்கள் ரசித்திருப்பது செம refreshing ! //

    கிளாசிக் ஹீரோ ஜெஸ் லாங் & ஸ்லிம் இடத்தில் எனக்கு ராபின் கதைகள் பொருந்தி போகிறது சார். என்னால் தீவிரமாக ரசிக்க முடிகிறது

    பனியில் ஒரு பிணம் என்ன மாதிரி ஒரு கதை அன்றைக்கு ஆரம்பித்த அதிரடியான படபடப்பு இன்னும் எனக்கு குறையவே இல்லை

    ReplyDelete
    Replies
    1. பனியில் ஒரு பிணம்!

      மெய்யாலுமே என்னை உறையச் செய்த ஒரு அற்புதமான டிடெக்டிவ் திரில்லர்!

      அதிலும் கதையின் துவக்கத்திலேயே அதுவும் முதல் இரண்டு பக்கங்களிலேயே பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்து கிடக்கும் சடலத்தை கண்டறிவதும், வீட்டில் பூச்சிகளாக வரும் பெண்களை வில்லன் குத்தூசியினால் குத்திக் கொல்வதும் திக் திக் திகிலாக இருக்கும்!

      இந்த புத்தகத்தில் வரும் காமிக்ஸ் டைம் பகுதியில், நியூ ஆர்ட் என்ற புதுவித பணியில் ஒரு பிணம் கதையின் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளதாக எடிட்டர் சொல்லி இருப்பார்! அவருடைய முன்னுரைக்கு ஏற்ப சித்திரங்களும் தெள்ளத் தெளிவாக கண்களுக்கு விருந்தளிக்கும்!

      Delete
  5. ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிகாமணி ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  7. வணக்கம் நண்பர்களே ❤️💥

    ReplyDelete
  8. டெக்ஸ்ன் கலர்ஃபுல் அட்டைப்படம் அள்ளுகிறது 🔥🔥🔥❤️👌.

    ReplyDelete
  9. இனிய மாலை வணக்கங்கள் ஆசிரியரே

    ReplyDelete
  10. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  11. 500 தொட்டுவிடலாம் என்றிருந்த போது புது பதிவு
    சகோதரர்கள் இன்று பதிவுக்கிழமை என்று ஆயத்தமாகும் முன், அதுவிம் நம்ம சேலம் குமார் சகோ 999வது பதிவுக்கிழமை என்று சொல்லும் முன்பே பதிவு குடுத்து சர்ப்ரைஸ் செய்து விட்டீர்கள் ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. அதே.. இன்று 500 பதிவு தொடும் என்றே நினைத்தேன் மேடம். சரியாக சொன்னீர்கள்

      Delete
  12. //பற்றாக்குறைக்கு இங்கே டைலன் நடத்திடும் undercover புலனாய்வுகளும், நிச்சயம் நம் மத்தியில் ஒரு பேசுபொருளாகிடுமென்று எதிர்பார்த்திருந்தேன் - நம்ம பன்பாண செயலரின் உபயத்தில் அதுவும் பொய்த்திருக்கவில்லை ! //

    வாய்விட்டு சிரத்தேன், அதுவும் 'undercover' புலனாய்வுகள் 😂😂😂
    நம்ம "பன்"பான இளவரசரின் கிண்டல்கள் எல்லாம் நினைவுக்கு வர ROFL தாங்க ஆசிரியரே

    ReplyDelete
  13. //இதற்குப் பேனா பிடித்திருந்தது நம்ம மேச்சேரிக்காரர் & நானும் ஆங்காங்கே மெருகூட்டல்களைச் செய்திருந்தேன் //

    பாராட்டுகள் & வாழ்த்துகள் சகோ @கிட் ஆர்டின் கண்ணன் 💐💐💐🌷🌷🌷🌷🌷💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    அதிகமான ROFL moments

    ReplyDelete
  14. //ஒவ்வொருவாட்டி அந்த மொக்கைச்சாமித் திருடனிடம் சாத்து வாங்கத் தயாராகும் போதெல்லாம் நம்ம டெபுடி ஷெரீபின் expressions வேற லெவல் ! //

    ஆமாங்க ஆசிரியரே, ROFL கொண்டு வரும் expressions 😂😂😂😂😂

    ReplyDelete
  15. //Maybe ராபினும் நம்மோடே முதிர்ந்திருப்பது, இந்த flashback கதைகளை ரசிக்க நமக்கொரு கூடுதல் முகாந்திரத்தைத் தருகிறதோ - என்னவோ//

    இருக்கலாங்க ஆசிரியரே
    பத்து ரூபாயில் வந்த ராபின் எதைகள் ஒரு க்ரைம் நிகழ்வில் ஆரம்பிக்கும்
    ஆர்வத்தை தூண்டும், யார், ஏன், எப்படி என்ற கேள்விகளுடன்

    இன்று, ராபின் ப்ளாஷ் பேக் கதைகள் ஏனோ பிடித்துள்ளன

    ReplyDelete
    Replies
    1. // பத்து ரூபாயில் வந்த ராபின் எதைகள் ஒரு க்ரைம் நிகழ்வில் ஆரம்பிக்கும் //
      சரியான பதிவு... அந்த விலையில் ஒரே ஒரு கதையை தவிர மற்ற அனைத்து கதைகளும் பிடிக்கும்

      Delete
    2. //அந்த விலையில் ஒரே ஒரு கதையை தவிர மற்ற அனைத்து கதைகளும் பிடிக்கும்//

      அருமை சகோதரரே

      Delete
  16. மிகப் பெரிய பதிவு 🙏

    ReplyDelete
    Replies
    1. 999 ஏ இப்படின்னா அப்போ 1000 மாவது பதிவு எப்படி இருக்கும்😅

      Delete
    2. கரெக்ட் ஒரு வாரம் இருக்கு content பிடிக்க. நீங்க எழுத ஆரம்பித்தாலே தன்னாலே வரிகள் வந்து விழுகின்றன சார். சும்மா பட்டையை கிளப்பப் போகும் பதிவுக்கு வெயிட்டிங்.

      Delete
  17. 'கடமையைக் கைவிடேல்' - ஒரு காமெடி விருந்து! ஆரம்பம் முதல் இறுதிவரை துளியும் தொய்வின்றி சித்திரங்களுக்கேற்ற சிரிப்பு வசனங்களையும், சூழ்நிலைகளுக்கேற்ற சொல்லாடல்களையும் அம்சமாய் அமைத்து ஆச்சிரியப்படுத்தியிருக்கும் KOKக்கு பலத்த கைதட்டல்களும், பாராட்டுகளும்!!
    நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல மறு மறு மறு வாசிப்புகளின் போதும் சிரிக்க வைத்திடும்!! 👏👏👏👏👏👏💐💐💐👍👍

    ReplyDelete
  18. ///ஸாகோரின் முக்கிய மெனுவே fantasy தான் எனும் போது - "விட்டிகோ வேட்டையில்" லாஜிக்கைத் தேடினால் ஞான் என்ன செய்யும் ?///

    புரிந்து கொண்டேன் ஸார்! ஸாகோரின் அறிமுகப் புத்தகத்திலே இதற்கான அறிகுறிகள் இருந்ததை உணர்ந்தேன் என்றாலும், பெரும்பாலான கதைகள் fantasy western களத்திலேயே அமைந்திருக்கும் என்பதை இப்போதுதான் அறிந்துகொண்டேன்! தெளிவான விளக்கங்களுக்கு நன்றிகள் எடிட்டர் சார்!

    முடிந்தவரை இந்த fantasy westernக்கு பழகிக் கொள்ள முயற்சிக்கிறேன். முடியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது - பரண்!!

    ReplyDelete
  19. கைக்கெட்டும் தூரத்தில் ஆயிரமாவது பதிவு... வாவ்...
    'ஆயிரம் பதிவு வாங்கிய அற்புத வலைத்தளம்.'

    ReplyDelete
  20. டெக்ஸ் அட்டைப்படம் செம
    முன்னும், பின்னும் அடர் நிறம் சூப்பர்

    முன் படத்தில் ஒருவரை துப்பாக்கி முனையில் டெக்ஸ் வைத்திருக்க, பின் பக்க சித்திரத்தில் அதே நபரை டெக்ஸ் & டைகர் காப்பாற்ற முனைகிறனர்🤔🤔🤔

    உட்பக்க ப்ரிவூய்வில், ஓநாயின் விழிகள் சித்திரம் அருமை

    ReplyDelete
  21. டியர் விஜயன் சார்,

    ஒருவழியாக விடுபட்ட சந்தாக்களை இந்த வாரம் கட்டினேன், புத்தகங்கள் வந்து சேர்ந்தன, ஒரு சிலவற்றைப் படிக்கவும் செய்தேன்!

    துணைக்கு வந்த மாயாவி - பரவாயில்லை ரகம், அட்டகாசமான சித்திரங்கள் தான் காப்பாற்றுகின்றன! 

    டைலன் டாக் என் விருப்ப நாயகர் பட்டியலில் இருந்ததில்லை, இந்தக் கதையும் அதை உறுதி செய்திருக்கிறது.

    அப்புறம் அந்த பழைய/ரீமிக்ஸ் பிரிட்டிஷ் கதைகளைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை (சிலந்தி, சிறுத்தை & ஜேன்). விலை குறைவு என்ற ஒரே காரணத்திற்காக, இன்றைய பள்ளி மாணவர்கள் புத்தக விழாக்களில் வாங்கக் கூடிய இதழ்களாக அவை இருக்கும் என்பது தான் என் வருத்தத்தை அதிகரிக்கிறது, they deserve better comics! ஏதாவது செய்ய வேண்டும்... 

    மீதமிருக்கும் தடிப்புத்தகங்கள் இரண்டையும், இன்னொரு மழை நேர மாலைக்காக முருங்கை மரத்தில் ஏற்றியுள்ளேன்...:-)

    //இவை போலான மினி புக்செல்லாமே கையில் ஏந்திடும் நொடிதனில், "இதை வாசிக்க எம்புட்டு நேரம் புடிக்கும் ?" என்ற கேள்வியினை முன்வைத்திடாதவை ! "அட..." என்றபடிக்கே கையில் எடுத்தால், அடுத்த பத்தாவது நிமிடத்தில் வாசித்து முடித்திருப்போம் !!//

    அது என்னவோ உண்மைதான் சார்! ஒல்லி காமிக்ஸ்களில் உள்ள ஒரே சிக்கல், கதைகளில் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது (கூடாது)! 

    ReplyDelete
    Replies
    1. சகோ உங்கள் காமிக்ஸ் பதிவுகளின் ரசிகன்...மீண்டும் அதை தொடருங்கள் பிளீஸ் 🤌

      Delete
    2. அவரு ரொம்ப பிஸி :-)

      Delete
    3. @KARTHICK:
      நன்றி நண்பரே! அந்த விமர்சனங்களை எல்லாம்  இப்போது படித்துப் பார்த்தால் எனக்கே  ஒரு மாதிரியாகத் தான் இருக்கும் (இன்றைய பாணியில் சொல்ல வேண்டுமென்றால் cringy), ஏன் தான் இப்படி வளவளவென்று விமர்சித்து, தமிழ் காமிக்ஸ் வெளியிடும் ஒரே எடிட்டரை சங்கடப்படுத்தினோமோ என்று! இருந்தாலும், பிறவிக்குணம் என்பதால் அவ்வப்போது தலையைக் காட்டி விடும், மேலே எழுதியுள்ளதைப் போல! தவிர, நீண்ட பதிவுகள் எழுதுவது, அவற்றை வாசிப்பது - இவையெல்லாம் வழக்கொழிந்து வருடங்கள் ஆகி விட்டன! நம் லயன் பிளாக் போன்ற ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர!

      @Parani from Bangalore:
      Busy-ன்னா என்னன்னு தெரியுங்களா? வெட்டியா இல்லாத மாதிரி நடிக்கிறது தான்! :-)

      Delete
  22. ///But கொஞ்சமே கொஞ்சமாய் இந்த fantasy western ஜானருக்கும் நாம் பழகிக் கொள்ளல் அவசியம் என்பேன்///

    ஸாகோரை பொறுத்த வரை நார்மலான எதிரிகள் கதைகளை விட, Fantasy western என்னும் ஜானரில் வரும் கதைகளே better
    என நினைக்கிறேன் ஸார் 😊👿👹👽🤖🤡🎃👺

    ReplyDelete
  23. டெக்ஸ் அட்டைப்படம் - வேற லெவல்!! முன்னட்டை & பின்னட்டை இரண்டுமே அசத்தல்!!
    டெக்ஸும், டைகர் ஜாக்கும் மட்டுமே இணைந்து கலக்கப்போகும் இந்த முழுநீள சாகஸத்தைப் படித்திட ஆவோடு வெயிட்டிங்...

    ReplyDelete
  24. ////one-shots களின் பாடு திண்டாட்டமாகிப் போயுள்ளது ! இந்த நிலைமை மாறிட "துணைக்கு வந்த மாயாவி" கொஞ்சமாய்க் கை கொடுத்தால் சூப்பர் !! What say people ?///

    one-shot கெள-பாய் கதைகளுக்கு எப்போதுமே என் ஆதரவு உண்டு ஸார்! ஒன்று பிடிக்கலாம்; ஒன்று கொஞ்சம் சுமாராகத் தோன்றலாம்.. ஆனால் எப்போதும் என் ஆதரவைத் தொடர்ந்து கொண்டே இருப்பேன்!

    ReplyDelete
  25. //சில நண்பர்களிடம் காரசாரமான பேச்சுக்களை நம்மவர்கள் வாங்க நேரிடுகிறது//
    நானெல்லாம் காராசாரமாக சாப்பிடுவதோடு சரி சார், அப்படிப் பேசவெல்லாம் வராது! You have your reasons, ஆல் இன் ஆல் சந்தா பற்றி மேற்கொண்டு உங்களை சங்கடப் படுத்த விரும்பவில்லை...

    ReplyDelete
  26. Hi Editor sir! Tex wrapper is awesome! Preview is also looking very good. Looking forward to read it sir. Eagerly waiting for 1000th post sir :)

    ReplyDelete
  27. // சொல்லுங்களேன் guys - "பனிமலைப் பலிகள்" - fantasy western என்ற அடையாளத்துக்குப் பொருந்துகிறதா ? //

    Yes

    ReplyDelete
  28. வாங்கிய 3 நாட்களில் அனைத்தையும் படித்து முடித்து
    விடுவேன் Sir . . .ஈரோடு ஸ்டாலின் சகோ இல்லம் சென்று
    BOOKS வாங்கி வரத்தான் தாமதம் பண்ணுவேன் . .அவர்
    எனக்கு வாங்கி வைத்திருப்பார் .

    ReplyDelete
  29. ஆஹா . . .Sir . .ராகவன் கனவுலகம் குழுவில் பகிர்ந்த
    பதிவை பார்த்தீர்களா? இறையன்பு அவர்கள் இரும்புக்கை மாயாவி . . பற்றி பேசியதை ..அற்புதம் . . . என் மனதில்
    இருப்பது . . .

    ReplyDelete
  30. சூப்பர் சார்...திங்களன்று முக்கால்வாசி படிச்ச கையோடு விசாகத்துக்கு ஊருக்கு கிளம்ப பரபரக்கும் கையை கட்டிப் போட்டேன்...இராணுவ வீரன் கண்ணுக்குத் தட்டுப்பட்ட மாயாவி யோடு நிறுத்தி...

    இன்னைக்கு தான் ரிட்டர்ன்...பஸ்ஸிலிருந்து படி தட்டுகிறேன்....

    க்யூபா அநேகமாக 13 க்கு பயிற்ச்சி எப்படி இருந்திருக்கும் எனும். ஆர்வம் நண்பர்களனைவருக்குமிருந்நிருக்கும்....அட்டைப்படம் முன்னட்டைய பாத்த நிலையில் பின்னட்டை பிரம்மாதபடுத்த இதான் டாப்ன்னா...சற்றே விலகியிராம் பிள்ளாய்ங்குது டெக்சட்டை...சாம்சனுக்கு ஆவலாயிருந்தா தாத்தாஸ் தள்ளிப் போவது வருத்தமளித்தா 999 ஆஹான்னு துள்ளச் செய்யுது...1000 பக்க கதைகள் காத்
    திருக்குமென ஏற்கனவே மியாம்ஸில் இடம் பெறாத மாயாவி அதற்கு முன்னர் என அறிவித்த பக்ஷ்சி போல...மியாம்சின் சந்தா தேரிடும் என கனமான நம்பிக்கையை பக்ஷ்க்ஷி பகிருது

    ReplyDelete
    Replies
    1. 13 முடியக்கூடாது ...தொடரனும்...
      தொடரும் ஒன் ஷாட் கதைகளை தொடரை விட அதிகம் ரசிக்கும் எனக்கும்

      Delete
  31. சார்.. இன்னிக்கு பதிவுகிழமை!! (அதானுங்களே KS?)
    அதுவும் இன்னிக்கு 1000வது பதிவுக்கிழமை!

    விஷேசமா ஏதாவது எதிர்பார்க்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா EV ரொம்ப உக்கிரமாக இருக்கீங்க போல...😀

      Delete
    2. கண்டிப்பா E.V ஸார், ரொம்ப ஆவலா இருக்கோம்... எப்படியும் 1st comment போட்டுடுவிங்க ல்ல?😅

      Delete
    3. ///எப்படியும் 1st comment போட்டுடுவிங்க ல்ல?///

      வாழ்க்கையில் முதன்முறையா அப்படியொரு வாய்ப்புக் கிடைச்சா சந்தோசம் தானுங்க JSVP ji!

      1000வது பதிவில் முதல் கமெண்ட் போடுபவருக்கு ஆயிரம் பன் பரிசுன்னு கம்பேனி சார்பா அறிவிப்பு வருமோ என்னமோ!!

      Delete
    4. இப்படி லாம் நீங்க (பன்) குண்டை தூக்கி போட்டிங்கன்னா எடிட்டர் சார், 999 பதிவுக்கு அப்புறம் நேரா 1001 வது பதிவுக்கு போயிடுவாரு😅

      Delete
  32. வணக்கம் உறவுகளே.. 🙏🏻🙏🏻

    ReplyDelete
  33. ஓநாய் வேட்டை அட்டைப் பட தலைப்பில் ஓநாய் என்ற எழுத்துருவில் ஓநாயின் வாலைப் போலவே அமைத்திருப்பது அருமை.. 👌🏻👌🏻

    ReplyDelete
  34. இதுவரை நாம் பார்க்காத வித்தியாசமான ஓவிய பாணியில் ஸ்பைடரின் புதிய சாகசம்..
    கலரிங் ச்சும்மா அள்ளுது..
    இரும்புக் கரத்தாரையே டர்ராக்கி விடுகிறான் தானைத் தலைவன்..
    இதன் தொடர்ச்சியாக வரவிருக்கும் அடுத்த சாகசத்தில் நம்ம சட்டித் தலையனோடு மோதவிருக்கிறான் ஸ்பைடர்..
    ஆனால் அடுத்த சாகச விளம்பரத்தில் சட்டித் தலையன் தானைத் தலைவனை அலேக்கா தலைக்கு மேல தூக்கி தட்டாமாலை சுத்தறானே..
    ஆவலோடு வெய்ட்டிங்... ❤️❤️❤️❤️

    மறுக்க சொல்றேன்..

    கலரிங் செம்ம.. செம்ம.. 👌🏻👌🏻👌🏻

    ReplyDelete
  35. புதிய வரவாக லேடி ஜேம்ஸ் பாண்ட் அவதாரத்தில் உளவாளி ஜேன் பாண்ட்..
    சோடை போகவில்லை..
    கதையை வாசிக்கும் போது நமது சிறுபிள்ளை பிராயத்தை லேசாகக் கிளறிப் போகிறது இந்த இதழ்..
    அந்நாட்களில் இது போன்ற கதைககளை அதிகம் நேசித்து வாசித்ததால் இருக்குமோ இந்த உணர்வு..!!😍😍

    ReplyDelete
    Replies
    1. //கதையை வாசிக்கும் போது நமது சிறுபிள்ளை பிராயத்தை லேசாகக் கிளறிப் போகிறது இந்த இதழ்..//

      எனக்கும் அதே உணர்வு ஏற்பட்டது, சகோ

      Delete
  36. டைலன் டாக்கின் மினி சாகசம்..
    கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை..
    ஓவியங்களும், வர்ணச் சேர்க்கையும் கலக்கல்.. 👌🏻👌🏻👌🏻

    ReplyDelete
  37. சிறுத்தையின் சீக்ரெட்...

    கடந்த இரண்டு கதைகளை விட இந்த கதை நன்றாக இருக்கிறது.. 👌🏻👌🏻
    சிறுசுகளை வெகுவாக கவரும்..
    இதில் கதை முற்றுப் பெறவில்லை.. தொடர்ச்சி அடுத்த இதழில் வரும் போல..

    ReplyDelete
  38. துணைக்கு வந்த மாயாவி..

    வர்ண ஜாலம்...

    பெற்ற மகளைத் தேடி அலையும் ஒரு சராசரித் தந்தையின் கதை..

    முதுகெலும்பாய் ஓவியங்களும், உயிர்நாடியாய் அட்டகாசமான கலரிங்கும் இதழைத் தனித்துவமாக்குகிறது..

    ReplyDelete
  39. ஸாகோர் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.தற்போது வெளியான பணி மழை பணிகள் கதை கூட அட்டகாசமாகத்தான் இருந்தது. அட்டகாசமாக சென்ற கதையின் முடிவு மட்டுமே ஏமாற்றத்தை அளித்தது.ஸாகோர் பேண்டஸி கதைதான். அதை ஏற்றுக் கொள்கிறேன். அதனால்தான் எனக்கு அவரை பிடிக்கும். ஆனால் பனிமலை பலிகளை பொறுத்த வரை முடிவு வரை அட்டகாசமாக சென்ற கதையில் முடிவு எனக்கு நெருடலாகப்பட்டது. கதையின் முடிவு இன்னும் கொஞ்சம் அதிரடியாக இருந்திருக்கலாம். அதைத்தான் நான் இங்கே குறிப்பிடுகிறேன். இது போன்ற மாற்றுக் கதைகள் தான் தற்போது நமக்குத் தேவை. எனக்கும் இது போன்ற கதைகள் தான் பிடிக்கும் என்பதால் இதைத் தொடர்ந்து வெளியிடுங்கள் விஜயன் சார்.

    ReplyDelete
  40. /// பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்ப்புகள் செய்து தரும் கோவை நகரத்து மொழிபெயர்ப்பாளரே சிக் பில் & கோ.வின் பிரதம ரசிகை ! ///

    எங்களுக்காக இல்லைனாலும் அவங்களுக்காக வாவது அப்பப்போ சிக் பில் வெளியிடுங்கள் சார்🤗

    ReplyDelete
  41. ///இவரைப் பார்த்த கையோடு ஒருக்கா புக்கைப் புரட்டி, நாயகன் ஆம்பரோஷியஸ் மார்கனையும் பாருங்களேன் - ஏதாச்சும் ஒற்றுமை தெரியுதுங்களா ? ///

    ஒரு வேளை இருக்குமோ🤔

    ReplyDelete
  42. ஹய்ேயா..
    எதிர்பார்க்காத நம்பர்-x 111.
    ப்ரிவியூ சூப்பர்..

    ReplyDelete
  43. /// ஒரு மித தூரத்துப் பொழுதில், நமது வாசிப்புகளெல்லாமே இந்த ரேஞ்சுக்கே அமைந்து போனாலும் வியப்புக் கொள்ள மாட்டேன் ! ///

    அப்படி இல்லாமல் போனால் சந்தோசம் ஸார் 🙁😊

    ReplyDelete
  44. அப்பாடி .. இன்று கூட்டமில்லை..
    மனம்போல் பின்னூட்டமிடலாம்..
    டேங்கோ - பிடித்துப்போனது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது.. கதை என்று ஒன்றும் அழுத்தமாக இல்லை..
    ஆனால் - அந்த ஓவிய அழகும் - ஹீரோ - தோரணையும் - ப்ரெண்ட் ஒருவரை மட்டும் கூட்டு சேர்த்துக் கொண்டு ஊர் சுற்றுவது ரொம்பவே வசீகரிக்கிறது..
    சம்பாசனையெல்லாம் ஓவியத்தில் அம்புகுறியால் கெடுக்காமல் - வெள்ளை கட்டத்தில் என்றால் இன்னார் பேசுகிறார். கலர் கட்டத்தில் என்றால் இவர் பேசுகிறார் என்பது அழகாய் அமைந்துவிட்டது.
    நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது போல் இருந்தது..
    ( மற்ற இதழ்களிலும் இதை பரிசீலனை செய்து பாருங்களேன்..!)

    ReplyDelete
  45. டைலன் முணுமுணுக்கும் இன்றைய பாடல் :

    தேடும் என் போர்வை தவிக்க.. துடிக்க...
    ஒரு சைக்கிள் காற்றில் போனதோ... அது மாயமானதோ..

    பெண் கிளையண்ட் :
    தேடும் உன் போர்வை தவிக்க.. துடிக்க..
    கொஞ்ச நேரம் நீயும் காத்திரு.. ஒரு போர்வை போர்த்திரு...

    ReplyDelete
    Replies
    1. கவிதை கவிதை
      டைலன் புலனாய்வு உபாயத்தால் பாட்டு (போர்வை)மழை கொட்டுது

      Delete
  46. சிகபில் - (கிட் ஆர்டின் & டாக் புல்) - செமத்தியான கதை..
    இந்த கதையை Maxi - Size - யில் வெளிட்டு சிறப்பு செய்திருக்கலாம்..
    என்னோட ஆசை இது ஒன்றுதான்..
    புதிய கதைகளோ (அ) பழைய இரண்டு கதைகளை இணைத்து.
    Maxi Size யில் ஒரு தடவை யாவது
    வெளியிட வே ண்டும் என்பதே.

    ReplyDelete
  47. CID - ராபின் கதைகள் தற்போது ப்ளாஸ்பேக் பாணியிலேயே அமைந்து விடுவதால்
    கதை முடிவில் அவர் நிகழ்காலத்திற்கு திருப்பி விடுகிறார்..
    நாங்கள் தான் நினைவுகளில் பின்னோக்கிச் சென்று ...
    அப்ப படித்த க்ளாஸிக் கதைகளை படித்ததையே அசை போடுவதால்..
    புதிய இதழ்கள் அறிவுப்புகள் (ஆன்லைன் மேளா ) - ஒன்றிலும் மனம் ஒட்ட மாட்டேன்கிறதே..
    (இது எனக்கு மட்டும் தானோ..? i )
    (இது மாதிரி யாரோ கேட்டு முன்பு பதிவிடுவாங்களே..?? ii)

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. பனிமலை பலிகள் - simply super. ஸ்கோர் முதல் கதைக்கு பிறகு மிகவும் ரசித்தேன். குட் come back story.

    ReplyDelete
    Replies
    1. Parani sir please reply to my message on your Facebook inbox🙏

      Delete
    2. Yes. அருமையான ஒரு கதை இது

      Delete
    3. I am not very active in Facebook. I will check and get back to you sir.

      Delete
  50. டியர் விஜயன் சார்,பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் வார வெள்ளிகிழமை வந்து விட்டாலே பரபரப்பு தொற்றி கொள்ளும்..விகடன், குமுதம் இதழ்களை கைப்பற்ற..
    அதனை படித்து முடித்தால்தான் அந்த வெள்ளிகிழமை நிம்மதியாக கழியும்..அந்த வாரம் அதனை படிக்க முடியா விட்டால் எதனையோ இழந்தது போல் இருக்கும்..கொரானாவிற்கு பிறகு,அச்சு இதழ்களின் சகாப்தம் ஏறக்குறைய முடிந்து விட்டது..குமுதம் விகடன் படிக்காமலேயே அந்தந்த வார வெள்ளிகிழமைகள் கடந்தன..
    ஆனால்,
    மாத கடைசியிலேயோ அல்லது மாத முதல் வாரத்திலோயோ,பாக்ஸில் வரும் காமிக்ஸை அன் பாக்ஸிங் செய்யும் போது வரும்குதூகலம் இன்னும் நீடிக்கின்றது..
    அதுவும் டெக்ஸ் புத்தகத்தினை கையில் ஏந்தும்போது அடையும் குதூகலத்திற்கு அளவே கிடையாது..
    இந்த டிஜிட்டல் யுகத்திலும்அச்சு வடிவத்தில் காமிக்ஸ் தரும் தங்களுக்கு ஒரு கோடி பூச்செண்டுகள்!!!
    இந்த மாத ஸகோர் அருமை..
    ஸகோரின் பலமே அந்த செவ்விந்திய அமானுஸ்யங்கள் தான்...அதனால் அமானுஸ்யம் நிறைய உள்ள ஸகோர் கதைகளை வெளியிடுங்கள் சார்..

    ReplyDelete
    Replies
    1. // மாத கடைசியிலேயோ அல்லது மாத முதல் வாரத்திலோயோ,பாக்ஸில் வரும் காமிக்ஸை அன் பாக்ஸிங் செய்யும் போது வரும்குதூகலம் இன்னும் நீடிக்கின்றது// நூற்றுக்கு நூறு உண்மை.

      Delete
    2. // இந்த மாத ஸகோர் அருமை..
      ஸகோரின் பலமே அந்த செவ்விந்திய அமானுஸ்யங்கள் தான்...அதனால் அமானுஸ்யம் நிறைய உள்ள ஸகோர் கதைகளை வெளியிடுங்கள் சார்..// one More vote in our favor

      Delete
    3. // இந்த டிஜிட்டல் யுகத்திலும்அச்சு வடிவத்தில் காமிக்ஸ் தரும் தங்களுக்கு ஒரு கோடி பூச்செண்டுகள்!!! //

      +1

      Delete
    4. இன்னமும் நான் வேலை செய்யும் இடத்தில், நான் இல்லாத போது, நம்ம புக் பார்சல் வந்தால் பயபக்தியுடன் எடுத்து வைத்து, எனக்கு போட்டோ அனுப்பி வைப்பார்கள் உடன் பணி செய்பவர்கள். ஏனென்றால், அந்த புத்தக பெட்டியை ஒவ்வொரு மாதமும் நான் பிரித்து, புதிய புத்தகங்களின் வசம் முகர்ந்து விட்டு என் முகத்தில் தெரியும் ஆயிரம் வாட்ஸ் விளக்கின் வெளிச்சம் ஆறுகள் எல்லோருக்குமே மிகவும் பரிச்சயம்!

      அது கொடுக்கும் பாசிட்டிவ் வைப்ரேஷன் உடன் அன்று நாள் முழுவதும் எனக்கு இனிமையாக செல்லும்!

      பணி தொடர்பாகவும் அல்லது தனிப்பட்ட வகையிலே டென்ஷனாக இருந்தால், அந்த மன அழுத்தத்தை குறைக்கும் மிகப் பெரும் மருந்தாக இந்த புத்தகப் பெட்டி இருப்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்!

      நன்றி ஐயா!
      (இதை நினைவுபடுத்திய டாக்டர் சுந்தர் அவர்களுக்கும் நன்றி)

      Delete
  51. சார் மேலே கூறிய ஒவ்வோர் அமானுஷ்யர்களின் கதைகளையும் சாகோரோடு போராட சட்டுபுட்னு விடலாமே

    ReplyDelete
  52. ஜேன் பாண்ட்

    ஒரு மினி ஆக்ஷன் சீரியஸ் பார்த்த உணர்வு, அந்நாட்களின் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் ஸ்டேலில் கதை இருக்கிறது
    மேலே குணா சகோவும் சொல்லி இருந்தார்,
    //நமது சிறுபிள்ளை பிராயத்தை லேசாகக் கிளறிப் போகிறது இந்த இதழ்..//

    எனக்கும் அதே உணர்வு ஏற்பட்டது 😊😊😊
    ஆன்லைன் மேளாவிற்கு நல்ல ஒரு மினி தேர்வுங்க, ஆசிரியரே

    சிறுவர்களுக்கு இதை பரிந்துரைக்கலாம்(பேய் கதை வேண்டும் என கேட்காதவர்களிடம்)

    ReplyDelete
  53. ///டெக்ஸ் & டைகர் ஜாக் மட்டுமே கதையின் முழுமையிலும் அதிரடி பண்ணி வருகிறார்கள் !! ///

    அப்போ இந்த முறை டைகர் ஜாக்கிற்கு ' வோ 'வை தாண்டி பல வசனங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்😜

    ReplyDelete
  54. ///XIII .... நம் மத்தியில் எப்போதுமே அதிர்வலைகளை உருவாக்கிடும் நம்பர் இது ! And அந்த மறதிக்கார ஜேசன் மக்லேன், எல்லாமே துவக்கம் கண்ட க்யூபாவுக்குப் பயணமாவதே காத்திருக்கும் சாகஸத்தின் highlight///

    மிக மிக ஆவலுடன் waiting for Our Great XII🥰
    எப்போவுமே பட்டையை கிளப்பும் தொடர் இந்த முறையும் கலக்கும் என்பதில் சந்தேகம் இல்லை👌👌👌

    ///And மூன்றாவதாய் ஒரு சுற்றுக்குள் ஜேசனை இறக்கி விடும் சபலத்தை படைப்பாளிகள் தவிர்ப்பார்களா - இல்லையா ? என்பதையுமே பார்த்தாகணும்///

    கண்டிப்பாக மூன்றாம் சுற்று ஆரம்பிக்க வேண்டும் ஸார்... இத்தொடர் வந்து கொண்டே இருக்க வேண்டும் 🤩

    ReplyDelete
  55. வோ!! இன்னிக்கு பதிவு வருமா வராதான்னு யாராவது சொல்லுங்களேன்?

    ReplyDelete
  56. ///And அவர் தான் நம்ம லோன் ஸ்டார் டேங்கோ ! ///

    சார்,
    "லோன் ஸ்டார் டேங்கோ" என்பதை,
    " லோன்லி ஸ்டார் டேங்கோ "என சொன்னால் இன்னும் better ஆக இருக்குமோ?😊

    ReplyDelete
  57. Awaiting eagerly for the 1000th posting sir.

    ReplyDelete
  58. ரொம்ப ஜாலியான பதிவு சார். மே மாதம் லோன் ஸ்டார் டேங்கோ மற்றும் ராபின் இருவரும் கலக்கல். கிட் ஆர்டின் ஓகே தான்.

    ஆனால் ஆன்லைன் புத்தக விழா புத்தகங்கள் இந்த முறை ரொம்பவே பிடித்திருந்தது.

    துணைக்கு வந்த மாயாவி, ஸாகோர், ஓநாய் வேட்டை மூன்றுமே அருமை
    மினி புக்ஸ் 4மே எனக்கு பிடித்தே இருந்தது.

    மொத்தத்தில் சம்மர் உங்கள் புண்ணியத்தில் நன்றாகவே இருந்தது.

    ReplyDelete
  59. ஆயிரம் என்பது சாதாரண விசயமல்லவே...அடுத்த சிறப்பு 2000 க்கு கூட கிடையாது ....ஐயாயிரத்துக்குத்தான்....முதலா'ளி...நாம் வைத்த செடியிலே முதல் மலர்ந்த பூ...முதல் கனி...முதல் முத்தம்... முதல் காதல்...முதலிரவு ...முதல் ....முதல் இரு வண்ணக் கொலைப் படை....முதல் இரத்தப் படலம்...என்பது போல இந்த முதலாயிரத்துக்கு பாத்துப் பன்னுங்க முதலா'ளி சார்

    ReplyDelete
    Replies
    1. முதல் கோடை மலர் போல எங்களை வாயைப் பிளக்க வைக்கும்...அதுவே இவ்வாயிரத்துக்கு நாம் செய்யும் சிறப்பு...இது வரை இது போல் மெகா இதழ் வந்ததில்லை ....இது போல் வரப் போவதுமில்லை....இதான் இதற்கான விளம்பரமாருக்கனும்

      Delete
    2. முதல் நூறு ரூவா இதழ்...முதல் ஜீனியர் லயன்....முதல் தீபாவளி மலர்....முதல் கோடை மலர்....முதல் டெக்ஸ் அறிமுகம்....முதல் டைக்ரிஸ் தங்கக் கல்லரை......தொடரும்

      Delete
    3. ஜேசனிடம் அந்த மழையில்...உயிர் பிரியும் நிலையில் முதல் முத்தம் பெறும் மார்த்தா போல

      Delete
    4. பத்து பக்கம் கதை போட்டாலே வாய் பிளக்கும் உனக்கு ஆயிரம் பக்கங்கள் கதை எல்லாம் தேவையில்லை எப்படி என்றாலும் அதே மாதிரிதான் வாயை திறக்க போறலே -😄

      Delete
  60. மனாலியிலிருந்து வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  61. Superstar special ஸ்பைடர் கதை ok. லூயிஸ் கிராண்டலா அது?!!! அனைத்து முகங்களையும் பார்க்கும்போது !!!!!!.
    ஓவியரை கிஷ்கிந்தா காண்டம் கிராஃபிக் நாவலுக்கு புக் செய்யவும். சும்மா கலக்கிவிடுவார்

    ReplyDelete
  62. டைலன் டாக் - சிறிய கதை ஆனால் அது கொடுத்த அனுபவம் புதுமை. சிறுவயதில் சைக்கிள் இல்லாமல் நாம் யாரும் அந்த பருவத்தை கடந்து வந்து இருக்க மாட்டோம். அது கொடுக்கும் திரில் கதையில் வரும் சிறுவன் மற்றும் டைலன் எப்படி ஆட்டுவிக்கிறது என சொன்ன விதம் சிறப்பு.
    முடிவு இது போன்ற கதைக்கு ஏற்ற முடிவு.

    இது போன்ற கதைகள் தொடர்ந்து வரலாம். வாசிக்க குறைவான நேரம் கிடைக்கும் இந்த காலத்தில் வாசிப்பை இது போன்ற கதைகள் ஊக்குவிக்கும்.

    முதல் பக்கம்தான் அட்டைப்படம் எனும் போது அதை கொஞ்சம் கடினமாக கொடுத்தால் பாதுகாக்க உதவும்.

    ReplyDelete
    Replies
    1. ///முதல் பக்கம்தான் அட்டைப்படம் எனும் போது அதை கொஞ்சம் கடினமாக கொடுத்தால் பாதுகாக்க உதவும்.///

      கெட்டி அட்டை ரெடியாகறதுக்குள்ள தன் புலனாய்வை ஆரம்பிச்சுட்டாரு நம்ம டைலன்! அம்புட்டு ஆர்வம்!!

      Delete
    2. அந்த போர்வை கதையில் வரவில்லை என்றால் ஈரோடு விஜய் இந்த கதையை படிக்காமல் இருந்து இருப்பார். 🤣

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. ///கெட்டி அட்டை ரெடியாகறதுக்குள்ள தன் புலனாய்வை ஆரம்பிச்சுட்டாரு நம்ம டைலன்! அம்புட்டு ஆர்வம்!!///
      😂😂😂😂😂😂😂😂

      Delete
  63. சக்கரத்துடன் சாத்தான் திரில்லர் கதை என்று எனது மகளிடம் சொன்ன உடனே தமிழ் எழுதப்படிக்க தெரியாத அவள். google translator உதவியுடன் முழு கதையை படித்து விட்டாள். 😊

    ReplyDelete
  64. ஏன் செயலால்ரே (Vijay Erode⁩) உங்கள் சிஸ்ய (Ravikannan⁩) பிள்ளைய இப்ப அடிச்சிஙக ?

    பின்ன என்ன தலைவரே (தாரை Paranidharn⁩ ) சக்கரத்துடன் சாத்தான் கதையில் டைலன உபயோகப்படுத்திய போர்வை இப்ப யாருகிட்ட இருக்கிறது என்று கேட்கிறான் 🙃

    ReplyDelete
    Replies
    1. 😂😂😂😂😂 பின்றீங்க PfB

      Delete
    2. உங்கள் அளவுக்கு முடியாது விஜய் :-)

      Delete
    3. என்னா ஒரு பெருந்தன்மை!! 😂

      Delete
  65. ///இது பதிவு நம்பர் 999 guys //

    பதிவு நெ.1000க்கு முன்கூட்டிய ஆயிரம் வாழ்த்துகள் சார்...💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. STV சார், சேலத்தில் பொக்கே shop எதுவும் வைத்து இருக்கீங்களா?😅

      Delete
    2. JS@ ஹி..ஹி....நம்ம பாத்திரகடைக்கு எதிர்லதான் பொக்கே ஷாப் இருக்குது...

      பொக்கே ஷாப்ல உயிரோடயே ரோஜா ஓன்று நடமாடுது என்பது கொசுறு செய்தி...☺

      Delete
    3. என்னமோ தெர்ல.. STVRஐ உடனே அவரோட கடைக்குப் போய் சந்திக்கணும் போல ஒரே பாசம் பாசமா வர்து..

      Delete
    4. 😂😂😂
      பொக்கே கடைக்காரர் காலைல இருந்த பொக்கேவை லாம் காணோம் nu shock ஆகி இருப்பார்...🧐

      Delete
    5. ///பொக்கே ஷாப்ல உயிரோடயே ரோஜா ஓன்று நடமாடுது என்பது கொசுறு செய்தி...///
      கவிதை கவிதை சார்💐இருந்தாலும் கொஞ்சம் உஷாரா இருங்க...
      ரோஜா முள்ளா மாறிடப் போவுது😂

      Delete
    6. /// STVRஐ உடனே அவரோட கடைக்குப் போய் சந்திக்கணும் போல ஒரே பாசம் பாசமா வர்து..//

      ஆஹான்.. 😜

      இந்த 12வருட பழக்கத்தில ஒரு முறையாச்சும் கடை பக்கம் எட்டி பார்த்திருப்பீங்களா? 🤭

      Delete
    7. // இந்த 12வருட பழக்கத்தில ஒரு முறையாச்சும் கடை பக்கம் எட்டி பார்த்திருப்பீங்களா? 🤭 //

      எல்லாம் அந்த உயிருடன் நடமாடும் ரோஜாவின் மகிமை 🤩

      நீங்கள் என்றாவது அவர் ஆபிசுக்கு போய் இருக்கீங்களா விஜயராகவன் 🤔

      Delete
    8. என்ன அவரும் இதே போல் உயிரோட உள்ள ரோஜா ஏதாவது இருக்கஉ என்று சொல்லி இருக்கலாம் 🤣

      Delete
    9. அந்த பொக்கே ஷாப் ரோஜாவின் ராஜா பேரு விஜயரா(ரோ)ஜா....😃😍😘😃😄

      Delete
  66. // Make My Own Mini Santha (MYOMS) இரண்டு மாதங்களாகியும் பெருசாய் take-off ஆகியிருக்கவில்லை என்பதே சங்கடமான நிலவரம் ! ரொம்பச் சமீபமாய்த் தான் 100 எனும் எண்ணிக்கையினையே தாண்டியுள்ளது ///

    விரைவில் முன்பதிவு வேகமெடுத்து உரிய இலக்கை அடைய புனித மனிடோ அருளட்டும் சார்..

    ReplyDelete
  67. //ஸ்பைடர்களும், வேதாளர்களும், மாயாவிகளுமே இறுதியில் IPL கோப்பைகளைத் தட்டிப் போய்விடுகின்றனர்///

    அப்புறம் என்னங்க சார் சட்டுபுட்டுனு S70 season 3ஐ அறிவிச்சிடுங்க...

    இம்முறை ஸ்பைடர் க்ளாசிக் இடம்பெற்றே தீரணும்...ஆமா,தலைகீழாகத்தான் குதிப்போம்😍😍😍

    ReplyDelete
    Replies
    1. ///அப்புறம் என்னங்க சார் சட்டுபுட்டுனு S70 season 3ஐ அறிவிச்சிடுங்க...///
      +1000

      Delete
    2. ///இம்முறை ஸ்பைடர் க்ளாசிக் இடம்பெற்றே தீரணும்...ஆமா,தலைகீழாகத்தான் குதிப்போம்😍😍😍///

      கண்டிப்பா ஸ்பைடர் கிளாசிக் வேண்டும் சார்🤝🤝🤝

      Delete
  68. // "கடமையைக் கைவிடேல்" அமைந்து விட்டது இந்த மாதத்தின் இன்னொரு highlight ! இதற்குப் பேனா பிடித்திருந்தது நம்ம மேச்சேரிக்காரர் //

    வாழ்த்துக்கள் கண்ணா 😊

    ReplyDelete
    Replies
    1. படங்கள் ஒரு பக்கம் இந்த கதையை சிரிப்புடன் நகர்த்தியது என்றால் உங்கள் மொழிபெயர்ப்பு வாய்விட்டு சிரிக்க செய்தது கண்ணா.

      Delete
    2. என்னுடைய வாழ்த்துகளும் KOKஅங்கிளுக்கு....

      Delete
  69. ///டெக்சின் "ஓநாய் வேட்டை" மறுபதிப்பு என்பதாலும், எனது ரேட்டிங்குகளுக்கு அப்பாற்பட்டதொரு ஆளுமை நம்ம 'தல'////

    😍😍😍😍😍😍😍😍😍😍😍
    ஆமா ஆமா நம்ம காமிக்ஸ் மந்திரம்,

    """"Tex is Comics
    Comics is Tex""""

    தானுங்களேங் சார்...

    ReplyDelete
  70. ///அனல் பறக்கும் ஆக்ஷனில் ஓட்டமெடுக்கும் இந்த சாகஸத்தின் முடிவில் நம்மாள் க்யூபாவிலிருந்து நேராக மாஸ்கோவுக்குப் பயணமாகிறார்///

    ஆஹா...அங்கிட்டு எப்படியும் டொன்கோவா, பால்கோவானு ஏதாவது ஓரு சிட்டு வந்திடும்..💕💓

    இ.ப. அட்டைப்படம் வெகு பிரமாதம் சார்....
    அப்புறம் நம்மாளு மக்லேன் கூட இருக்கும் குட்டி ஆரானு??😍

    நம்ம ஈவி கேட்க சொன்னாருங்க...

    ReplyDelete
  71. நம்ம மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக 1000 ஆவது பதிவை நோக்கி வேகம் எடுக்கின்றனர்.

    ReplyDelete


  72. // இது போலான சந்தர்ப்பங்களில் தான் க்ளாஸிக் நாயகர்களும் சரி, அவர்களை ஆராதிக்கும் நண்பர்களும் சரி, என்னை நோக்கி நீள நீளமான விரல்களை நீட்டியபடிக்கே - "உனக்கு இது தேவையா ? தேவையா ?? //

    கிளாசிக் நண்பர்கள் "காற்றில் கரைந்த நண்பர்கள்"
    பலரும் ஒருவரை ஒருவர் அறியாவிட்டாலும் ஒருமித்த கருத்துகளை உடையவர்கள்.
    கிளாசிக் நாயகர்கள், கதையைப் பற்றி சங்கடமான கருத்துக்கு " ஓகே, வாழ்த்துக்கள் விடைபெறுகிறேன்" என அந்த இடத்திலேயே தங்களுக்கு ஒரு சுய முற்றுப்புள்ளி வைத்து கொள்வார்கள். "தங்கள் விருப்பத்தை தொடர்ந்து கொள்ளுங்கள்"என அமைதியாகி விடுவார்கள்.

    வீண் விவாதம் பண்ண விரும்பாத ஒரு கிளாசிக் நண்பரின் கருத்து சில மாதங்களுக்கு முன்பு என்னிடம்.

    ReplyDelete
  73. 999. பதிவுகள். வாவ். ஏகப்பட்ட தகவல்கள் கொட்டிக் கிடக்கிற என்சைக்ளோபீடியாவாக வலைப்பூ மிரட்டுகிறது. வாழ்த்துக்கள்.. ஒன்ஷாட் கதைகளின் பரம விசிறி நான். புதிய புதையல்களை சாத்தியமாக்கிடும் ஒன் ஷாட்களுக்கு பலத்த வரவேற்பினை நல்கிக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  74. @Edi Sir..😍😘

    1) அடுத்த S70 புதியபாணியில் வரும் என்று சொன்னதாக ஞாபகம்😍
    எப்ப வரும்?
    புக்கிங் எப்போ ஸ்டார்ட் ஆகும்?..😶

    2)V காமிக்ஸ் 2nd half year சந்தா அறிவிப்பு எப்போ வரும்?..✊😄

    3)1000 வது பதிவுக்கு கிடா வெட்டு எதுவும் உண்டா?..😍👍

    4)அடுத்த சந்திப்பு ஈரோடா?.. சேலமா?..
    சீக்கிரமா சொல்லுங்க சார்.. டிக்கெட் புக் பண்ணணும்..😃😀

    ReplyDelete
    Replies
    1. ஆமா S60 புதிய பாணி அறிவிப்புக்கு வெயிட்டிங்.

      V காமிக்ஸ் அடுத்த ஆறு மாத சந்தா அறிவிப்பு எப்போ?

      1000 ஆவது பதிவில் MMS பற்றி அறிவிப்பு, நமது 1000 ஆவது பதிவுக்கான ஸ்பெஷல் பற்றிய அறிவிப்பு.

      நம்ம வாசகர் சந்திப்பு இந்த முறை எங்கே என்ற அறிவிப்பு எல்லாம் கலந்து கட்டி வெயிட்டிங்.

      Delete
  75. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  76. MYOMS பிக் அப் ஆனால் நன்று!

    அப்படி ஒரு வேளை பிக் அப் ஆகாமல் போனால், தயவு செய்து வேறு ஏதாவது சிறப்பு வெளியீடாக வெளியிட்டு விடலாம் ஐயா!

    ஆல்ஃபா, சிஸ்கோ எல்லாம் இன்னும் நிறைய களம் காண வேண்டியவர்கள்!

    ReplyDelete
    Replies
    1. நல்ல மாற்று யோசனை... சார்,

      ஆனால் நம் நண்பர்கள் முன்பதிவில் ஏதேனும் மேஜிக் செய்வார்களா பார்ப்போம்

      Delete
    2. அலட்டலில்லா ஆல்ஃபா அதிகப்படுத்தும் போறார்....சிஸ்கோ வேற சூட்டை கிளப்பியுள்ளார்....மாஸ்கோவில் மாஸ்டர் வேறு....போதாதா பட்டய கிளப்ப..மியாம்ஸ் நிச்சயம்

      Delete
    3. // ஜுஜுஜுபி 400 வராமலா போயிடும்...//

      30- ஜூன் வரை மட்டுமே முன்பதிவுக்கான நேரம் என்பதாக ஞாபகம். சார்

      Delete
  77. XIII வராருங்கறதை அவரைப் போலவே நானும் மறந்துட்டேன்!

    வருவார்!
    வெல்வார்!
    உள்ளங்களை கொள்ளை கொள்வார்!

    ReplyDelete
  78. // Make My Own Mini Santha (MYOMS) இரண்டு மாதங்களாகியும் பெருசாய் take-off ஆகியிருக்கவில்லை என்பதே சங்கடமான நிலவரம் ! //

    Pick ஆகிவிடும் சார். கவலை வேண்டாம் சார்,

    ReplyDelete
  79. Wood city kid Ordinn in கடமையை கைவிடல், மீண்டும் அவர்களது பழைய விட்ட இடத்தைப் பிடித்தது போல உணர்ந்தேன்.semma comedy வசனங்கள். கொலைகார காதலி, விசித்திர ஹீரோ, இரும்பு cowboy, வரிசையில் இந்த கதை சேர்க்கலாம்.

    ReplyDelete
  80. This comment has been removed by the author.

    ReplyDelete
  81. சார் ஜூன் மாத புத்தகங்கள் எப்போது கிடைக்கும்?

    வெயிட்டிங் ஃபார் தண்டர் இன் ஆப்பிரிக்கா

    ReplyDelete
  82. Completed ஓநாய் வேட்டை 🤘

    பொதுவாகவே டெக்ஸ் கதைகளை பொறுத்த வரையில், " அதிரடிகளுக்கு " நடுவே வரும் கதையை விட, "கதைக்கு" நடுவே வரும் அதிரடிகள் பிடிக்கும்😊

    ஓநாய் வேட்டை இரண்டாம் வகையைச் சார்ந்தது...
    கதை மிக இயல்பாகவும், அதே நேரம் விறுவிறுப்பாகவும் செல்கிறது🤜

    பணம் எடுத்து வரும் கோச் வண்டியை தாக்க வரும் கொள்ளையர் கூட்டத்தை டெக்ஸ் & கார்சன் மட்டுமே டீல் செய்யாமல், ஒரு ரேஞ்சர் டீமே தாக்குவது பொருத்தம் எனில், டைனமைட்டை வில்லன் தூக்கி எறியும் போது, ஹீரோயிசம் பண்ணாமல் டெக்ஸ் & கார்சன் ஓட்டம் எடுப்பது படு இயல்பு👏

    கிட் வந்த உடன் கதை மேலும் சூடு பிடிக்கிறது🔥 சலூனில் நடக்கும் சம்பவங்களும், கிட் கைது ஆவதும், செவ்விந்திய கிழவன் கார்லோசின் குள்ள நரித் தனமும், வில்லனின் திட்டமும் என கதை ஸ்பீட் எடுக்கிறது💥

    மெக்சிகோ வரும் டெக்ஸ் அண்ட் கோ செயல் படும் விதமும், ஒவ்வொரு இடமாக செல்வதும், அங்கு நடக்கும் அளவான அதிரடிகளும் அருமை👌

    கதையில் சில குறைகளும் இல்லாமல் இல்லை... வில்லனுக்கு இன்னும் முக்கியத்துவம் தந்து இருக்கலாம்,

    வில்லன்களான டர்பின், ப்ளாக் நைஃப் ஆகியோரை போகிற போக்கில் போட்டுத் தள்ளுவது தவிர்க்கப்பட்டு இருக்கலாம்,

    முக்கியமாக கிட் அவ்வளவு சொல்லியும் நம்பாமல் கைது செய்த லெப்டினன்ட் ஒர்டேகா, டெக்ஸ் வந்த பிறகு "மனிதருள் மாணிக்கம் " ஆக செயல் விடுவது கொஞ்சம் நம்பும் படி இல்லை🤗

    இது போன்ற சில குறைகள் இருந்தாலும், இறுதியில் டெக்ஸ்க்கு வேலை தராமல்,
    'வோ' போடு புகழ் டைகர் ஜாக் கிட்டை காப்பாற்றுவதும், பின் தொடரும் எதிரிகளை கார்சன் தடுத்து நிறுத்துவதும் கதைக்கு சுவாரசியம் சேர்க்கின்றன😍

    மொத்தத்தில் டெக்ஸ் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து ரசிகர்களுக்குமான அருமையான வேட்டை இந்த ஓநாய் வேட்டை🦊🏹

    💐💐💐

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் STV சார்❤️🤝

      Delete
    2. வாவ்!! அட்டகாசமான விமர்சனம்!! ரசிக்கச் செய்திடும் எழுத்து நடை விக்ரம் ஜி!! தொடர்ந்து கலக்குங்க!!

      ///'வோ' போடு புகழ் டைகர் ஜாக் ///
      🤣🤣🤣🤣🤣

      Delete
    3. பெருந்தன்மையான பாராட்டுக்களுக்கு நன்றி E.V ஸார் 😍
      நமது தளத்தில் எழுதும் பல ஜாம்பவான்களின் (நீங்கள் உட்பட) விமர்சனங்களை ரசித்து உள்ளேன் சார், அதன் பாதிப்பு என்னை அறியாமலே வந்து இருக்கலாம் 🤗

      Delete
  83. கடமையைக் கைவிடேல் - வாசிக்க எளிதாகவும், கலகலப்பாகவும் இருந்தது! இறுதி பத்து பக்கங்கள் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மொழிபெயர்த்த கிட் ஆர்டின் கண்ணன் அவர்களுக்குப்  பாராட்டுகள். இவை போன்ற இலகுவான கதைகளை - கருப்பு வெள்ளையில், மலிவு விலையில், புத்தக விழாக்களின் போது வெளியிடுவது சாத்தியமா?

    ReplyDelete
  84. வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete

  85. கிளாஸிக் சூப்பர் ஸ்டார் ஸ்பெஷல்

    மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய இதழ் .
    இந்திய மற்றும் பிரிட்டிஷ் தொல்லியல் பாதுகாப்புத் துறைகளால்:D

    அடுத்து ஸ்பைடர் + ஆர்ச்சி இதழ் வருகையில் இரு நாட்டு அகழ்வாராய்ச்சி துறைகளிடம் ஒப்படைத்து விட வேண்டியது அவசியம்:D

    ReplyDelete

  86. லேடி ஜேம்ஸ் பாண்ட்

    ஹா,ஹா!ஹா! இது போன்ற முழுநீள நகைச்சுவைக் கதைகள் படித்து எவ்வளவு நாளாகி விட்டது.

    பள்ளிப் பருவத்தில் அயனிக் பாண்ட், கோவேலண்ட் பாண்ட், மெட்டாலிக் பாண்ட் , ஹைட்ரஜன் பாண்ட் போன்றவற்றைக் கூட எளிதில் படிக்க முடிந்தது. நம்ம லேடி ஜேம்ஸ் பாண்டை படிக்க ......

    Fun Fact:பக்கம் 8- ல் ஜேன் " என் துரதிர்ஷ்டம். உலகிலேயே நீந்தத் தெரியாத ஒரே நாய் டைனியாகத்தான் இருக்கும்" எனச் சொல்வதாக வருகிறது. இது தவறான கருத்து .
    லாப்ரடோர், போர்ச்சுகீஸ் போன்ற நாய் வகைகள் இயல்பாகவே தண்ணீர் மேல் நாட்டம் உடையவைதான். புல் டாக் , பாக்ஸர், டெர்ரியர் போன்ற நாய்களுக்கு தண்ணீரைக் கண்டாலே ஆகாது.டோபர்மேன் போன்ற breeds நம்ம டைகரைப் போன்றவை.அவ்வப்போது குளிக்கும். நீந்தும்.படங்களில் நீச்சலே தெரியாத நடிகைகள் டூ பீஸ் உடையில் முழங்கால் அளவு தண்ணீரில் போஸ் கொடுப்பது தனிக் கதை .

    எங்கள் ஊர் முல்லாங்கேணி ஏரியில் நீச்சல் பழகியது நினைவுக்கு வருகிறது. பெண்களுக்கு தனிப்படித்துறை. கற்பனையை ஆர்ப்பரிக்க விட வேண்டாம். அது எதிர்க்கரை. வெகு தூரத்தில்.எங்கள் பக்கத்தில் எருமை மாடுகள்தான் குளிக்கும். சமயத்தில் எது எருமை எது நான் எனப் புரியாமல் நண்பர்கள் குழம்பியதுண்டு.

    ReplyDelete

  87. சக்கரத்துடன் ஒரு சாத்தான்.

    30 ரூபாய் விலையில் டார்கெட் ஆடியன்ஸ் குழந்தைகள் என்றால் வருத்தமே. " வேப்ப மர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு நீ விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க.உன் வீரத்தை முளையிலே கிள்ளி வைப்பாங்க" என்று பட்டுக்கோட்டையார் பாடியது நினைவுக்கு வருகிறது.

    1980-களில் பிரபலமாய் இருந்த மரியோவை அடியொற்றி பல ரன் கேம்கள் வெளியாகிக் கொண்டுள்ளன.அதில் ஒன்றின் டீஸரில் " இந்த விளையாட்டு உங்களுக்கு பௌதீகத்தைச் சொல்லித் தரும்' எனப் போட்டிருந்தது.உள்ளே நுழைந்துப் பார்த்தால் நெம்புகோல்( lever), கப்பி (உருளைகள்) [pulleys] தத்துவங்களை போகிற போக்கில் விளையாட்டோடே அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.நாம்
    "சக்கரத்துடன் ஒரு சாத்தான்"
    உக்கிரத்துடன் எனைப் பாத்தான் எனப் போய்க் கொண்டு இருக்கிறோம். அடுத்த மூணு சக்கர சைக்கிளில் முனி; மூச்சா வருமா இனி?" என வருமோ என்னவோ?

    ReplyDelete

  88. ஓநாய் வேட்டை

    9.2/10

    RCB IPL 20 கப்பை வென்று விடும் காலம் கூட வரலாம். நம்ம ஜேம்ஸ் பாண்ட் கூட ஆரம்ப ரிஷ்ய சிருங்கர் முனிவரைப் போல பெண்களையே பார்த்திராத பிரம்மச்சாரி போல கதைகளில் வலம் வரக்கூடும் . ஆனால் டெக்ஸ் கதைகளில் அலுப்பு என்பதே வராது போலிருக்கிறது. முதல் முறையாக ப் படிக்கிறேன்.மிகச் சிறந்த பொழுதுப் போக்குகதை.

    ReplyDelete

  89. பனிமலைப் பலிகள்

    9.5/10

    மன உரு புனைக்கதைகளை ஏற்பது கதை சொல்லப்பட்ட பாங்கினைப் பொறுத்தது.இங்கோ கதை மிக வலிமையோடு சொல்லப்பட்டிருக்கிறது.அதற்கு காரணம் வட அமெரிக்க அல்கான்க்வென் மொழி பேசும் பழங்குடியின மக்களின் நம்பிக்கையில் நிஜமாகவே இருந்ததுதான் விடிகோ என்ற வெண்டிகோ.கதையில் வெண்டிகோ பற்றிச் சொல்லப்பட்ட அனைத்து விஷயங்களும் இணையத்தில் உள்ளன.

    மருத்துவத் துறையால் அதனால் சட்டத்தால் அங்கீகரிக்கப் படாத வெண்டிகோ சைகோஸிஸ் என்ற மன நோய் உண்டு. இதன் பல அறிகுறிகளில் முக்கியமானது மனித மாமிசத்தின் மேல் ஏற்படும் கட்டுக்கடங்காத இச்சை.

    ஸோஷியல் கன்னிபாலிசம்

    உண்மையில் ஐரோப்பியர் வருகையால் தங்களுக்கு ஏற்பட்ட உயிர்கள், சமூக , கலாச்சார இழப்பால் அல்கான்க்வென் மக்கள் ஐரோப்பியர்களை உருவகப்படுத்தியதுதான் விடிகோ என்ற வெண்டிகோ எனச் சிலர் சொல்கிறார்கள்.

    நம்மைச் சுற்றிலும் பார்த்தால் எத்தனையோ விடிகோக்கள் . தனது சுய நலனுக்காக பேராசையால் பிற சக மனிதர்களை, சமூகத்தை அழித்து வாழ்பவர்களும் விடிகோக்களே. சொல்லப் போனால் நம்மில் ஒவ்வொருவருக்கும் சோஷியல் விடிகோவாக மாறுவதற்கான பொட்டென்ஷியல் உள்ளதுதான்.

    கனடாவின் அல்பெர்ட்டா பிராந்தியத்தில் ஸ்விப்ட் ரன்னர் என்ற மனிதர் 1878-ல் ஒரு குளிர்காலத்தில் தனது மனைவி மற்றும் 5 குழந்தைகளை உணவுப் பற்றாக்குறை காரணமாக கொன்று தின்றிருக்கிறார். ஹட்சன் பே குழுவின் உணவு வழங்கும் டெப்போ வெறும் 20 மைல் தொலைவில் இருக்க இவர் இப்படி
    செய்தது இவருக்கு வெண்டிகோ சைகோஸிஸ் இருப்பதாக முடிவெடுக்க செய்து மரண தண்டனை வழங்கப்பட்டது.

    நியூ கினி பழங்குடியினருக்கு ஒரு வழக்கம் இருந்தது.இறந்த தனது மூதாதையர்களின் மூளையை எடுத்துச் சாப்பிடுவது.இதனால் அவர்களுக்கு குரு எனப் படும் புரதப் பீழை நோய்களில்( prion disease) ஒன்றானது ஏற்பட்டது. ( நான் அக்காலத்தில் பிறந்து இறந்திருந்தாலும் எனது மூளை சாப்பிடப்பட்டிருக்க வாய்ப்பில்லை.:-)]

    Mad cow disease நோயால் பாதிக்கப்பட்ட மாட்டுக் கறி சாப்பிட்டாலும் மனிதர்களுக்கு prion disease வரலாம்.

    உங்கள் மெனு கார்டில் பக்கத்து வீட்டு பரமசிவம் கால் காலை டிபனுக்கு , எதிர்த்த வீட்டு ஏகாம்பரம் கை லஞ்சுக்கு, மாடி வீட்டு மங்களத்தக்கா தலைக்கறி டின்னருக்கு என எழுதப்படவில்லையாயின் உங்களுக்கு வெண்டிகோ சைகோஸிஸ் கண்டிப்பாக இல்லை
    என உத்தரவாதம் அளிக்கிறேன்.

    கதையில் ஸீகோ பாத்திரம் கதையின் போக்கில் சிறந்த நகைச்சுவை வடிகால்.


    ReplyDelete
    Replies
    1. கதையை விட, உங்கள் விமர்சனத்தைப் படிப்பது பரபரப்பை ஏற்படுத்துதுங்க செனா அனா!

      Delete