Powered By Blogger

Saturday, April 27, 2019

மிஸ்டர் மௌனம் !

நண்பர்களே,

வணக்கம். ஒரு கஷ்டமான வாரத்தைத் தாண்டிய மட்டிற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்லத் தான் தோன்றுகிறது முதலில் ! And நலமாகிட வேண்டி அன்பைத் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் # 2 ! பதிவினில் சமீபமாய் எழுந்த சர்ச்சையினில் நான் தலைகாட்ட அவசியமாகிப் போனதால் மட்டுமே எனது உடல்நிலை ; இத்யாதி பற்றியெல்லாம் பகிர்ந்திட நேரிட்டது ! இல்லாவிடின் வழக்கம் போல் வண்டி ஒட்டவே முனைந்திருப்பேன் ! என் பாடுகளை ஒப்பித்து உங்கள் பொழுதுகளைப் பாழ் செய்திட நிச்சயமாய் எனக்கு உடன்பாடிருந்திராது ! Anyways - இதுவும் கடந்து போகுமென்ற நம்பிக்கையோடு looking ahead !! Moreso முன்னிற்பது இந்தாண்டின் ஒரு மெர்சலூட்டும் மாதம் எனும் போது - அதனை சிலாகிக்காது போனால் சுகப்படுமா - என்ன ? காத்திருக்கும் மெகா இதழ்கள் மூன்றெனும் போது அவற்றுள் இரண்டின் previews புண்ணியத்தில் கடந்த 2 வாரங்களைக் கடத்தியாச்சு ! So எஞ்சியிருக்கும் மூன்றாம் biggie பற்றிப் பேசுவது தானே இவ்வாரத்து கோட்டா ?


சத்தமின்றி வந்தார்....யுத்தம் பல செய்தார்....! இடியாய் முழங்கியது அவரது பிஸ்டலாய் இருந்தாலும் மௌனமே மனுஷனின் அடையாளமாய்த் தொடர்ந்தது ! வன்மேற்கில் தறுதலைகளுக்குப் பஞ்சமே கிடையாதெனும் போது இவர் 'வதம் செய்ய விரும்பு' வதில் ஆச்சர்யம் தான் ஏது ? அந்த "இவர்" - மௌனப்புயல் ட்யுராங்கோ தான் என்பதை யூகிப்பதில் சிரமமே இராது தானே folks ? 2017 முதலாய் ஆண்டுக்கு ஒருவாட்டி ஒரு hardcover தொகுப்போடு நம்மை வசீகரித்து வரும் இந்த வன்மேற்கின் ஆக்ஷன் ஸ்டாரை நான் தேர்ந்தெடுத்த பின்னணி பற்றிச் சொல்லியுள்ளேனா ? என்று ஞாபகமில்லை ; 'மறு ஒலிபரப்பாக' இருக்கும் பட்சத்தில் மன்னிச்சூ ! Editions Soleil என்ற பிரெஞ்சுப் பதிப்புலக ஜாம்பவான்களே இந்தத் தொடரின் சொந்தக்காரர்கள் !  ஏற்கனவே வேறொரு நிறுவனத்தில் பணியாற்றிய சமயம் நமக்குத் தெரிந்திருந்த நண்பர் இங்கே கொஞ்ச காலம் நிர்வாகப் பொறுப்பில் இருந்தது தெரிய வர - அவருக்கு அவ்வப்போது மின்னஞ்சல் போட்டுக் கொண்டேயிருப்பேன் - Soleil நிறுவனத்துடன் கைகோர்க்க நமக்கு ஆசையுள்ளது என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு ! ஆனால் பதில் வந்தபாடைக் காணோமே என்ற மண்டையைச் சொரியும் படலம் தான் தொடர்ந்தது ! ஆனால் ஒரு ஐந்தாறு மாதங்கள் கழிந்த நிலையில் சோலில் நிறுவனத்திலிருந்து மின்னஞ்சலும் ஒரு pdf file-ம்  ஒருசேரக் கிட்டின ! பார்த்தால் - இந்தியாவை பின்னணியாய்க் கொண்டு உருவாக்கப்பட்டிருந்ததொரு புதுத் தொடர் பற்றிய விபரங்களும், அதன் 46 பக்க சாம்பிள்களும் இருந்தன ! இந்திய சார்ந்த கதை என்பதால் maybe நமக்கு ஆர்வம் இருக்கக்கூடுமோ ? என்றும் வினவியிருந்தனர் !! நமக்கோ எப்போதுமே நம் பேட்டைகளைப் பற்றிய கதைகளை விடவும் - அசலூர் ; அசல்நாடு மீதே மையல் ஜாஸ்தி என்பதை அவர்கட்குச் சொன்ன கையோடு அவர்களது கேட்டலாகையும் கோரிப்பெற்றேன் !

இது எல்லாமே 2015 / 2016-ன் ஏதோவொரு தருணத்தில் என்பதால் அன்றைக்கு எனது தேடல்கள் வேறொரு கோணத்திலிருந்தன ! யுத்தக் கதைகள் ; விமானக் கதைகள் ; நிஜ சம்பவங்கள் etc., etc., என்று ஒரு மார்க்கமாய்த் தேர்வுகளைச் செய்த கையோடு உரிமைகளுக்குப் பேச்சு வார்த்தைகளையும் துவக்கியிருந்தேன் ! புதுசாய் பரிச்சயம் என்பதால் நொய் நொய்யென்று நச்சரிக்காது - அவர்களது வேகத்துக்கே நாமும் பயணிப்பது நலமென்று பட்டது ! So அவர்களது டிசம்பர் விடுமுறைகள் ; புத்தாண்டு விடுமுறைகள் என்பனவெல்லாம் முற்றுப் பெற்று வரும்வரைக்கும் பிளேடு போடாதிருந்தேன்! அவர்களுக்கோ ஜனவரி மத்தியில் துவங்கி, மே மாதம் வரையிலும் வரிசையாய் முக்கிய புத்தக விழாக்கள் உண்டு ! ஒவ்வொன்றின் பொருட்டும் அவர்கள் வெகு முன்கூட்டியே தயாராகிட வேண்டிவரும் எனும் போது மீண்டும் ஒரு பெரிய கால இடைவெளி நேர்ந்தது ! ஆனால் இங்கு அதற்குள் "சிப்பாயின் சுவடுகள்" ; "பிரளயத்தின் பிள்ளைகள்" ; அப்புறமாய் அந்த "வானமே எங்கள் வீதி"  ("விண்ணில் ஒரு வேங்கை" அப்போதே ரிலீசா ?? நினைவில்லை !!) இதழ்களெல்லாமே வெளியாகி குமட்டில் கும்மாங்குத்து வாங்கியிருக்க - War stories வேலைக்கு ஆகாது ; கி.நா. ரக நிஜக் கதைகளும் உங்களுக்கு (அப்போதைக்குப்) பிடிக்கவில்லை என்பது புரிந்திருந்தது ! So நான்பாட்டுக்கு முதலில் செய்திருந்த தேர்வுகளுக்கு Soleil மட்டும்  சட்டென்று இசைவு சொல்லியிருக்கும் பட்சத்தில் கதைகளை அவசரம் அவசரமாய் வாங்கி அடுக்கியிருப்பேன்!!(ஏற்கனவே விண்ணில் ஒரு வேங்கை பாகம் 2 & 3 கைவசமுள்ளதுங்கோ !!! Any takers ? 😄)

அவசரம் அவசரமாய்  இன்னொருவாட்டி அவர்களது கதைக்களங்களைப் பரிசீலனை செய்த போது முதலில் கண்ணில்பட்டது ஒரு முரட்டுத் தோரணையிலானதொரு 6 பாக கவ்பாய் தொடரே !  வேகமாய் மின்னஞ்சல் அனுப்பி - "யுத்தம் next ; கவ்பாய் first ப்ளீஸ் ?" என்று கேட்டு வைத்தேன் ! அவர்களோ அந்தத் தொடருக்கான டிஜிட்டல் கோப்புகள் நஹி என்று சொல்லி விட, மறுக்கா கேட்டலாக் பரிசீலனை நிகழ்ந்த போது கண்ணில் பட்டவர் தான் நமது மிஸ்டர்.மௌனம் ட்யுரங்கோ ! இத்தனை மாதங்களாய்ப் பேசிக் கொண்டேயிருந்துவிட்டு எதும் உருப்படியாய் வாங்காது கையை வீசிக் கொண்டு போயிடக்கூடாதே என்று தோன்றியதால் - ட்யுராங்கோவினைத் தீவிரமாய் நெட்டில் அலசினேன் ! இவர் உலகை உலுக்கப் போகும் சூப்பர் ஸ்டாரெல்லாம் கிடையாது ; ஆனால் விறுவிறுப்பான களங்களுக்கு உத்திரவாதம் என்று புரிந்தது !! சரி, அந்தத் தொடர் ; இந்தத் தொடர் என்றெல்லாம் வாய் பேசிவிட்டு கடைசியில் ஒரேயொரு கதை மட்டும் போதுமென்று சொல்ல ஒரு மாதிரியாய்க் கூச்சமாயிருக்க, வாங்குவது தான் வாங்குகிறோம் - மொத்தமாய் 4 கதைகளாய் வாங்கி, ஒரு தொகுப்பாக்கினால் என்னவென்று தோன்றியது !! அதன் பலனே "சத்தமின்றி யுத்தம் செய் !!" பின்னாட்களில் இந்தத் தொகுப்பு வெளியாகிய சமயம் - 4 கதைகளை ஒட்டு மொத்தமாய் வெளியிட்ட எனது மேதாவிலாசத்தை (!!!!) நீங்கள் பாராட்டினீர்கள் !! ஆனால் அங்கே அடியேனின் ஆணி பிடுங்கல்கள் கொஞ்சமும் நஹி ; சூழல்கள் ஏற்படுத்திய தீர்மானமே அது என்பதே நிஜம் !! So திருவாளர் ட்யுராங்கோ தமிழுக்கு வருகை தந்தது இவ்விதமே !

சில தருணங்களில் நாம் பெரிதாய் மெனெக்கெடாமலே எல்லாமே தத்தம் இடங்களில் குடியேறிடுவதுண்டு !! தலைப்பு தூக்கலாய் அமைந்து விடும் ; அட்டைப்படம் தானாய் அழகாய் அமைந்து போகும் ; அச்சு பளிச் என்று டாலடிக்கும் ; making தெளிவாய் அமைந்திடும் ! வேறு சில வேளைகளிலோ முட்டு முட்டென்று முட்டினாலும் பலன் வெகு சுமாராய்த் தானிருக்கும் ! ட்யுராங்கோ முந்தைய ரகமே !! இதுவரையிலுமான 2 தொகுப்புகளும் classy ஆக அமைந்து போனதில் எங்களது ஸ்பெஷல் முனைப்புகளெல்லாம் கிஞ்சித்தும் கிடையாது ; routine-ல் பணியாற்றும் போதே அழகான மலரொன்று துளிர் விடக்கண்டோம் - அவ்வளவே !! And இதுவரைக்குமான அந்த 2 ஆல்பங்களுமே கிட்டத்தட்ட காலி என்பது சந்தோஷத்துக்கு icing தந்திடும் சமாச்சாரம் ! So ஒரு ஹாட்ரிக் வெற்றியினைத் தர வல்ல இதழாய் "வதம் செய்ய விரும்பு" அமைந்திட்டால் அட்டகாசமாக இருக்கும் ! And இதோ இம்முறையும் இதன் அட்டைப்படத்தை டிசைன் செய்துள்ள பொன்னனின் கைவண்ணம் :
ஒரிஜினல் அட்டைகளே இரு பக்கங்களுக்கும் - நமது நகாசு வேலைகளோடு ! And இதுவொரு hardcover இதழ் என்பதால் special effects-க்கும் பஞ்சமிராது ! அட்டைப்படம் நன்றாக வந்திருப்பதாய்த் தோன்றியது எனக்கு ; உங்களுக்கும் பிடித்திருப்பின் சூப்பர் ! And இதோ உட்பக்க previews-ம் !!

இம்முறை ஓவராய் உம்மணாம்மூஞ்சியாய் முறைத்துத் திரியாது, மனுஷன் லைட்டாக ரொமான்ஸ் மூடும் காட்டுகிறார் ; ஆனால் கதைகள் எப்போதும் போலவே crisp & straight !! இதன் மொழியாக்கம் கருணையானந்தம் அவர்கள் செய்திருக்க - அவரது வழக்கமான பாணி, ட்யுராங்கோவின் கரடு முரடான களத்தில் சற்றே நெருடுவது போலப்பட்டது எனக்கு ! கதை மாந்தர்கள் எல்லோருமே முரட்டு பீஸ்களே எனும் போது அவர்கள் பேசும்  வரிகளில் அத்தனை நயம் அவசியமல்ல என்று நினைத்தேன் ! So ஊருக்கு கிளம்பும் 1 மணி நேரத்துக்கு முன்வரையிலும் நெடுக திருத்தங்களை / மாற்றங்களை செய்திட்டேன் ! முதல் 2 கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருக்க ; episode # 3 ஒரு one shot !! பரபரப்பிற்குப் பஞ்சமிராது - வழக்கம் போல் !

வண்டி வண்டியாய்த் தண்ணீரை குடித்த கையோடு ,ஓய்வென்று வீட்டில் படுத்துக்  கிடப்பதே அடுத்த பரிசோதனை வரையிலான prospects எனும் போது - லேப்டாப்பை அருகே வைத்துக்கொண்டு லொட்டு லொட்டென்று தட்டுவதும், அடுத்த கிராபிக் நாவலான "நித்திரை மறந்த நியூயார்க்" பக்கமாய்க் கவனத்தைத் தந்திடுவதுமே  பொழுதுபோக்குகளாய்த் தென்படுகின்றன    !! IPL கூட (எனக்கு) போரடிக்கிறது என்பதாலோ - என்னவோ, டுபுக்கு ஐ.டி-யில் களமிறங்கி சுவாரஸ்யமூட்ட Mr.அனாமதேயர் முயன்றுள்ளார் போலும் ! பொதுவாய் ஞாயிறுக்கு அப்பால் நான் வாரநாட்களில் இங்கே பதிவுப்பக்கம் வருவது அரிது என்பதை புரிந்திருந்தது, இடைப்பட்ட தருணத்தில் இயன்ற குளறுபடியை அரங்கேற்றி விட்டு - நண்பர்கள் அடித்துக் கொள்வதையும், யாரேனும் தடித்த வார்த்தைகளை என்பக்கமாய் பிரயோகிப்பதை  ரசிப்பதுமே அன்னாரின் பரந்த நோக்கமென்பது புரிகிறது ! தவிர, இங்கு நிலவிடும் நட்புக்கள் நிறையவே உறுத்தல்களையும் சம்பாதித்து வருவதும் அப்பட்டம் !! இரக்கமிலா உலகிது என்பதிலோ ; இங்கே anything & everything goes என்பதிலோ சந்தேகமிருந்ததில்லை எனக்கு ! ஆனால் இத்தனை தரமிறங்கிப் போகும் அந்த mindset- ல் தான் எத்தனை  வன்மம்  என்பதையும், இத்தனை கூத்துகளுக்கும் நேரம் எங்கிருந்து கிடைக்கிறதோ என்பதையும் புரிந்து கொள்வது தான் சிரமமாக உள்ளது !! End of the day - நாலு பேர் அடித்துக் கொள்வதைப் பார்ப்பதில் அத்தனை புளகாங்கிதம் கிட்டுகிறதெனில் - அது நிச்சயமாயொரு உளவியல் பிரச்னையே ! Anyways நல்லதோ-கெட்டதோ, இன்று நாம் சேர்ப்பவற்றின் பலன்கள் போய்ச் சேர்வது  நம் சந்ததிக்கே !! அனாமதேயர் என்றைக்கேனும் அதனைப் புரிந்திடாது போகப் போவதில்லை ! And கொஞ்சமாய் நான் தேறிய பிற்பாடு - சைபர் க்ரைமில் உயர்நிலையில் பணியாற்றும் தன் உறவினரை அறிமுகம் செய்திட வாக்களித்துள்ளதொரு  வாசக நண்பரின் சகாயத்தை ஏற்றுக் கொள்வதாகவும் உள்ளேன் !

அப்புறம் இன்னொரு விஷயம் பற்றிய எனது எண்ணங்களுமே !! Oft repeated by now ; but worth broadcasting once more I guess ! பொதுவாய் இங்கே நம் பதிவுப் பக்கங்களுக்கு வருகை தந்திடும் நண்பர்கள் ஒவ்வொருவருக்குமென ஒரு பாணி இருந்திடுவது உண்டு !  வைகை எக்ஸ்பிரஸ் போல தட தடக்கும் நமது கோவை ஸ்டீலார் ஒரு பாணியில் பதிவிடுவாரெனில் ; 68 ; 78 என்று வருகையைப் பதிவிடுவது நண்பர் texkit-ன் பாணியாக இருந்திடும் ; "மாடஸ்டி" என்று உச்சரிப்பது நண்பர் ராவணன் இனியனின் பின்னூட்டமாக இருந்திடும் !! இன்னும் சிலரோ hi என்ற ஒற்றை சொல்லோடு நிறுத்திக் கொள்வரெனில் ; "me the 7-th ; mee the 200-th" என்று மைல்கல்களை விளையாட்டாய்ச் சொந்தம் கொண்டாடும் நண்பர்களும் நிறைய !! அதே சமயம் நான் முன்வைக்கும் கேள்விகளுக்கு துல்லியமாய்ப் பதில் சொல்ல மட்டுமே நேரம் எடுத்துக் கொண்டு பதிவிடும் நண்பர்களும் உண்டு ; பொருளாளர் செனா அனா-வைப் போல சங்க இலக்கியம் முதல், சுஜாதா இலக்கியம் வரை ரவுண்ட் கட்டியடிக்கும் அன்பர்களும் உண்டு ! இன்னும் சிலரோ - நட்புக்களை ஜாலியாய் சந்தித்து ; உரையாடி ; கலாய்த்து மகிழும் களமாகவும் இதனை பாவித்து வருவதுண்டு !! சமீபமாய் இந்த டுபுக்கு ஐ-டி அனாமதேயர் முன்வைத்த வரிகளை பார்க்கும் போது - இங்கு நிலவிடும் இந்த சகஜ ; சௌஜன்ய பாணிகளின் மீதான கடுப்ஸ் தூக்கலாய்த் தெரிந்ததாய் எனக்குத் தோன்றியது ! I might be wrong on that of course -  ஆனால் ஒற்றை விஷயத்தை இங்கு நான் தெளிவாக்கிக் கொள்ள விரும்புகிறேன் guys :

பின்னூட்டமிடும் பாணிகளிலும், பாங்குகளிலும் வேற்றுமை இருப்பினும், இங்கு யாரும், யாருக்கும் காமிக்ஸ் காதலிலோ ; அதன் ஆழங்கள் பற்றிய ஞானத்திலோ ; உலக விஷயங்களிலோ சளைத்தவர்களில்லை என்பது உறுதி !! And இது பரபரப்பான வாழ்க்கைகளின் மத்தியில், லேசாய் இளைப்பாற வழி தேட முனையும் காமிக்ஸ் இதழ்களின் வலைப்பக்கமே எனும் போது - "இங்கே இப்படித் தான் பதிவிட வேண்டும் ; அறிவுஜீவி குல்லாவுடனான பதிவுகளே இங்கு சுகப்படும்" என்ற கெடுபிடிகளோ ; சட்ட திட்டங்களோ இருத்தல் அபத்தம் என்பேன் ! Of course - காமிக்ஸ் பற்றிய அலசல்களுக்கே இங்கு முன்னுரிமை என்பதில் துளியும் மாற்றுக் கருத்தில்லை என்றாலும், நட்புக்களின் விளைநிலங்களாகிட இது உதவிடின் - BRAVO.... FULL STEAM AHEAD !! இந்த மாதம் படிக்கும் புக்கின் கதை எனக்கு மறு மாசம் மறந்து போகலாம் ; இந்த மாதம் கலாய்த்த கார்ட்டூன் உங்களுக்கு ஆறு மாதங்களுக்கு அப்பால் நினைவில்லாது போகலாம் ! ஆனால் இங்கு துளிர்க்கும் நட்புக்களுக்கு ஆயுட்காலம் ரொம்ப ரொம்ப அதிகம் அல்லவா ? So "பாத்ரூம் போறச்சே கூட இங்கிலீபீஸில் தான் கதைச்சாகணும் ; இல்லாங்காட்டி ஐம்பது ரூபாய் fine" என்று குச்சியைத் தூக்கித் திரியும் கண்டிப்பான ஹாஸ்டல் வார்டானாய் இங்கு செயல்பட நினைப்பது யாருக்கு என்ன பலனைத் தந்திடப் போகிறது ?   இங்கு வருகை தருவோரில் எவரும் முதிர்ச்சியிலா சிறாரில்லை ; அத்தனை பேருமே காமிக்ஸை நேசிக்கும் முதிர்குழந்தைகளே எனும் போது, யாருக்கும், எதுவும் கற்றுத் தரும் அவசியங்களோ, தகுதிகளோ இருப்பதாய் நான் நிச்சயமாய்க் கருதிடவில்லை ! So be yourselves folks ; இது உங்களின் ஆடுகளமே !! Oh yes -இதை படித்த கணமே  'முதுகு சொரிஞ்சிவிட ஆள் தேடறியாக்கும் ?" என்று "அன்பாய்" சில பல க்ரூப்களிலும், பக்கங்களிலும் நொடியில் விமர்சனம் எழுமென்பது தெரியாதில்லை ! ஆனால் கிட்டத்தட்ட 7 வருடங்களை முழுசாய் இங்கு செலவிட்ட பின்னேயும் அத்தகைய விமர்சனங்களுக்கு நான் காது கொடுப்பின், என்னை மிஞ்சிய பேமானி வேறு யாரும் இருக்க முடியாது ! So more power to the critics - ஏதோவொரு விதத்தில் அவர்களது பொழுதுகளையுமே சுவாரஸ்யமாக்குகிறேன் என்ற மட்டில் க்ஷேமம் !!

And a request on this please guys : இந்த விவகாரம் பற்றிய எனது நிலைப்பாடைச் சொல்லவே இந்த வரிகள் ! PERIOD !!! So மேற்கொண்டு இவற்றின் மீதான அலசல்களோ ; கூடுதல் எண்ணங்களோ, விவாதங்களோ  இங்கு வேண்டாமே - ப்ளீஸ் ! 

Back on track - மே மாதத்து குண்டூஸ் புக்ஸ் மூன்றும் விறு விறுப்பாய்த் தயாராகி வருகின்றன !! ட்யுராங்கோ & Lone ரேஞ்சர் அச்சு முடிந்து, பைண்டிங்கில் உள்ளன !! பராகுடாவினில் முன்கதைச் சுருக்கம் மாத்திரமே pending இருந்தது - சென்ற ஞாயிறு நான் சென்னைக்குப் புறப்பட்ட பொழுதில் ! நான் ஊர் திரும்ப குறைந்தது நாலைந்து நாட்களாகிடக்கூடும் என்பதனாலேயே முன்கதைச் சுருக்கத்தில் நண்பர்களின் ஒத்தாசையைக் கோரியிருந்தேன் ! ஆனால் சர்ச்சைகளுக்கே நேரம் போதவில்லையெனும் போது யாருக்கும் இதற்கான அவகாசம் இருந்திருக்கவில்லை போலும் ! So நான் ஊர் திரும்பிய பிற்பாடு மைதீன் தயக்கத்தோடு நினைவூட்ட - "ஆண்டவா !!" என்று தலையில் குட்டிக்கொள்ளத் தான் தோன்றியது !  "அலைகடலின் அசுரர்களை" புரட்டியபடியே  மெது மெதுவாய் எழுதித் தந்திட, அதனை டைப்செட் செய்து இன்று (சனியன்று) தான் அச்சுக்குச் சென்றுள்ளது !! மொத்தம் 168+ பக்கங்கள் கொண்ட இதழ் எனும் போது, இதன் பிரின்டிங் வேலைகளே 2 நாட்களை விழுங்கி விடும் ! அப்புறம் தான் பைண்டிங்கே !!  இங்கு மாத்திரம் ஓரிரு நாட்கள் முந்தியிருக்க முடிந்திருக்கும் பட்சத்தில் திங்களன்று உறுதியாய் despatch சாத்தியப்பட்டிருக்கும் ! ஆனால் இப்போது that is out of question ! மே தின விடுமுறையின் போது உங்களை எட்டிப்பிடித்திட வாய்ப்புகள் லேது !! Sorry guys !!

And மே மாதத்தின் 'தல' COLOR இதழும் போன மாதமே ரெடி என்பதால் - பராகுடா நிறைவுற்ற மறு நாளே டெஸ்பாட்ச் இருந்திடும் !! அதுவரையிலும் கொஞ்சமாய்ப் பொறுமை ப்ளீஸ் ? Bye all !! See you around !! Have a lovely weekend !!

Sunday, April 21, 2019

ஒரு கடலோரக் கதையிது...!

நண்பர்களே,

வணக்கம். மூன்று நாள் விடுமுறைகளில் பிய்த்துப் பிடுங்கிச் சென்ற 'மொழிபெயர்ப்பு வண்டி'  - தொடர்ந்த பணிநாட்களில் ஜட்கா வண்டியாய் மாறிப் போனது தான் கடந்த வாரத்தின் சேதி !! ஒரேயொரு பாகம் பராகுடா மட்டும் தொங்கி நிற்க - அதனை எழுத 'இந்தா-அந்தா' என்று தேருக்குத் தடிப் போடாத குறை தான் !! And ஒரு மாதிரியாய் வியாழனன்று தேர்தல் தினத்தின் விடுமுறையும் வசமாய  வந்து சேர, 'இதற்கு மேலயும் சால்ஜாப்புச் சொல்லித் திரிந்தால் வேலைக்கு ஆகாது தம்பி !' என்று தோன்றியது ! So மாலையில் போய் விரலில் மையிட்டுக் கொள்ளும் முன்பாய் அன்றைய பகலினை பராகுடாவின் க்ளைமாக்ஸோடு செலவிட்டேன் !! 'சுபம்' போட்ட பிற்பாடு - நெட்டி முறித்த கையோடே - முதல் பாகத்தின் 160+ பக்கங்கள் ; இந்த க்ளைமாக்சின் 168 பக்கங்கள் - ஆக மொத்தம் 330+ பக்கங்களையும் ஒருவாட்டி இலக்கின்றி சும்மா புரட்டிக் கொண்டே போனேன்....! 

ஒரு ரத்தக் களரியான ஆரம்பம் ; அந்த அடிமைத் தீவின் ரகளைகள் ; சிறுகச் சிறுக அறிமுகமாகும் கதை மாந்தர்கள் ; கஷார் வைரம் ;  கேப்டன் பிளாக் டாக் ; ரெட் ஹாக் ; இளம் ராபி....அவனது காதலி மரியா...ஸ்பானிஷ் ராஜவம்சம் என்று கொஞ்சம் கொஞ்சமாய் முதல் பாகத்தின் சமாச்சாரங்களை மறுக்கா அசை போட்டபடிக்கே, இரண்டாம் பாகத்தோடு பொருத்திப் பார்த்த போது மிரட்சியாயிருந்தது !! இத்தனையையும் ஒட்டு மொத்தமாய் துவக்க நாளிலேயே கற்பனையில் உருவகப்படுத்தி ; ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் தன்மையினையும் ஓவியருக்குப் புரியச் செய்து ; அதன் பின்பாய் அந்தத் தீவுகள் ; சமுத்திரங்கள் ; கப்பல்கள் ; கொள்ளையர்கள் ; அடிமைகள் ; அவர்களது உடுப்புகள் ; பின்புலங்கள் ; யுத்த களங்கள் ; இத்யாதிகளையும் தீர்க்கமாய் மனதில் வடிவமைத்து - ஒட்டு மொத்தமாய் ஓவியருக்கு mind transfer செய்வதென்று இங்கே கதாசிரியருக்கு இருந்துள்ள பணிகளின் பரிமாணத்தை நினைத்துப் பார்க்கும் போதே கிறுகிறுக்கிறது ! Of course இன்றைக்கு இணைய தளத்தில் ஒவ்வொன்றுக்கும் reference சுலபமாய்க் கிட்டும் தான் ; ஆனால் இங்கு அவசியப்பட்டிருக்கக் கூடிய research ஒரு முனைவர் பட்டத்து ஆராய்ச்சிக்கு கொஞ்சமும் சளைத்ததாயிராது என்பது எனது நம்பிக்கை ! இந்த க்ளைமாக்ஸ் தொகுப்பில் கதை சும்மா ரங்கராட்டினம் போல தலைசுற்றும் வேகத்தில் தெறித்து ஓடுகிறது !! ஒரு கணிசமான பட்ஜெட்டுக்கான ஏற்பாடோடு இந்த பராகுடா saga-வினை தமிழில் திரைப்படமாக்கிட யாரேனும் ஒரு டைரக்டர் மட்டும் முன்வந்தால் - பட்டையைக் கிளப்பும் ஒரு blockbuster நமக்கு உத்திரவாதம் !!

இதோ இந்த கிளைமாக்ஸ் பாகத்தின் அட்டைப்பட முதல்பார்வை :
ஒவ்வொரு அத்தியாயத்துக்குமே ஒரிஜினலாய் இருந்த அட்டைப்படங்கள் 'நான்...நீ...' என்று போட்டியிட்டுக் கொண்டிருந்தன - முன்னட்டையின் ஸ்லாட்டுக்கு ! இறுதியாய் இந்தத் தொடரின் நாயகனாய் வலம் வரும் ராபியை முன்னட்டைக்கும் ; கதையின் கிளைமாக்சில் அதகளம் செய்திடும் அவனது தந்தையைப் பின்னட்டைக்கும் தேர்வு செய்வதெனத் தீர்மானித்தேன் ! இரண்டுமே ஒரிஜினல் டிசைன்கள் - இம்மி கூட மாற்றங்களின்றி !! And இதோ - உட்பக்க previews :

இந்த 2 பக்கங்களில் மட்டுமே எத்தனை கேமரா ஆங்கிள்கள் என்று பாருங்களேன் !! ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளர் நம் மத்தியில் இருப்பின், இவற்றை இன்னமும் அட்டகாசமாய் சிலாகிக்க முடியும் என்பேன் ! நண்பர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் இங்கிருப்பின் - பிரமாதமாயிருக்கும் !! 

இங்கு ஓவியரின் ஆற்றல் பீறிட்டுக் கொண்டு தென்பட்டாலும் - எனது முதல் மாலை கதாசிரியருக்கு இருந்திடும் !! ஏனெனில் இந்த frames ஒவ்வொன்றையும் எவ்விதம் அமைத்திட வேண்டுமென்பதை அவரே நிர்ணயித்திருப்பார் !! பக்கம் # 12-க்கு கதாசிரியர் ஓவியருக்குக் கொடுத்திருக்கக் கூடிய குறிப்புகளை யூகிக்க முயற்சித்தால் இப்படித்தானிருக்கும் என்பேன் :

Frame 1 : மரியா & அவளைக் கைது செய்து கொண்டு செல்லும் 2 காவலர்களும் மைய்யமாய் நிற்கிறார்கள். மேலிருக்கும் மரக் கிளை வளைந்து ; வலுவாய்க் காட்சி தர வேண்டும். உயரமான மரம் என்பதைக் காட்ட மரத்தின் அடிப்பாகமும் ஆகிருதியாய் வரையப்பட்ட வேண்டும் ! பின்னணியிலும் மரங்கள் - இது அடர்ந்த கானகம் என்று சுட்டிக்காட்ட. அத்தனை பேருமே அண்ணாந்து பார்த்து நிற்க வேண்டும் ; அவர்கள் நிற்கும் மய்யம் மட்டும் வெளிச்சமாயிருக்க, சுற்றுப்புறத்தில் ஒரு மாற்று குறைவாய் ஒளி இருந்தால் போதும். பச்சையும் ; மஞ்சளும் கலந்த வர்ணக்  கூட்டணி ! மொத்தத்திற்கு மேலிருந்து கீழ் நோக்கும் top angle !

Frame 2 : நிற்பவர்களுக்குப் பின்னிருந்து இந்த பிரேம் வரையப்பட்ட வேண்டும். முதலாமவன் முன்னணியில் நின்றபடிக்கே பின்னே சட்டென்று திரும்பிப் பார்க்கும் தோரணை ;. Bust profile மட்டுமே ; முகத்தில் சவரம் செய்யாத தோற்றம் ; புகண்களில் திரான பார்வை ; மற்ற இருவரும் முதுகுகளை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மரியா முன்னே இருக்க - அவளது கூந்தல் முதுகு வரைக்கும். அடுத்தவன் அவளுக்கு ஒரு step பின்னே நிற்குமாறு வரையவும். பின்னணியில் மரம் & புத்தர். மஞ்சளும் ; ப்ரவுனும் கலந்த கலரிங்.

Frame 3 : நீளவாக்கில் ஒரு full frame ; ஒரு ஆணின் கைமட்டுமே மொச மொசவென்று தெரிய, ஒரு கூரான கத்தி பறந்து போகிறது. கத்தி மினுமினுக்கும் வெள்ளையில்..பின்னணியில் எதுவும் தெளிவாய்த் தெரியக் கூடாது - கத்தி செம வேகமாய் வீசப்பட்டுள்ளதை உணர்த்திடும் பொருட்டு. கைக்கு சமமான ஆங்கிளில் ஷாட் இருக்க வேண்டும்.

Frame 4 : முதலாமவனின் நெஞ்சில் கத்தி செருகி நிற்க ; அவன் கண்மூடி, வேதனையில் சரியத் தொடங்குவதை ஒரு 1/4th frame -ல் காட்டவும். நெஞ்சில் பாய்வதால் அவனது இடதுபுறத்தை focus செய்து வரையவும். இடது கை close up -ல் தெரிய வேண்டும். பின்னணியில் எதுவும் வேண்டாம் ; கவனம் முழுக்க ஓரிடத்தில் குவிய வேண்டும் என்பதற்காக !

Frame 5 : Mini frame : மரியாவின் அழகான முகத்தின் closeup ; கண்கள் திகிலில் விரிய ; வாய் லேசாய்த் திறந்து இருக்க வேண்டும். நெற்றியில் ஒரு சுருள் கேசம் மட்டும் ஸ்டைலாக விழுந்து கிடக்கட்டும்.மினி frame என்பதால் ஒரு கண் மட்டும் வரைந்தால் போதும். திருத்தமான நாசியும், உதடுகளும் தெளிவாய்த் தெரிந்திட வேண்டும். சற்றே low angle ஷாட்.

Frame 6 : Top angle - midway - மேலிருந்து ராபி கையில் நீளமான வாளுடன் குதிக்கிறான் ; அவனுக்கு நேர் மேலிருந்து focus செய்யும் விதமாய் shot அமைக்கவும். கழுத்தில் உள்ள சிகப்பு scarf நீளமாய் பறப்பது போல் வரைந்து ராபி விசையோடு குதிப்பதை உணர்த்தவும். கீழே முன்னணியில் எஞ்சியிருக்கும் காவலன் திகைத்து நிற்க வேண்டும். அவன் கையிலும் கத்தி ; இடுப்பு லெவெலில் ; பார்வையோ மேலே ராபி மீது. அவனுக்குப் பின்னே மரியா நிற்கும் முழு உருவம் ; அண்ணாந்து பார்த்தபடிக்கே ! ஓரத்தில் வீழ்ந்து கிடக்கிறான் செத்துப் போனவன். கால்களில் கனத்த பூட்ஸ் மாட்டியிருக்க, முரட்டு உருவமாய் அவன் தென்பட வேண்டும். சுற்றிலும் மரங்கள் ; நடுவில் மஞ்சளில் தரைப்பகுதி. ராபியின் உடுப்பு முழு கருப்பில்.

Frame 7 : தரையில் கால்பதிக்கும் வேகத்திலேயே ராபி எதிராளியின் கழுத்தைச் சீவுகிறான்.ராபியின் முகத்தில் கோபம் கொப்பளிக்கிறது. தலைமுடியும், சிகப்பு scarf ம் விசையோடு பறந்து நிற்கின்றன. கத்தியில் ரத்தக் கறை இருக்கவேண்டும் ; சீவிய வேகத்தில் கத்தி பிடித்திருக்கும் ராபியின் வலது கை பின்னே நீண்டு தெரிய வேண்டும். கழுத்து சீவப்பட்ட வேகத்தில் கைகள் இரண்டும் பின்தள்ளி இருக்க வேண்டும் எதிராளிக்கு. முழுக்க அவன் முதுகுப் பக்கம் மட்டுமே ! இரத்தம் கொப்பளித்துத் தெறிக்க வேண்டும் வன்முறையின் அழுத்தத்தைக் காட்ட. Full length frame !

ஒரேயொரு பக்கத்தை மட்டும் வரைந்திடவே  கதாசிரியர் தர அவசியப்படும் விவரிப்பு - இது போல் இன்னும் இரு மடங்கு இருக்கக்கூடும் !! அதன் பின்பாய் வசனங்கள் எழுதும் வேலை ஆரம்பிக்கும். அப்புறமாய்  ; வர்ணனைகள் ; அவற்றை house செய்திடும் பலூன்களையும், பெட்டிகளையும் எங்கே பொருத்த வேண்டும் என்ற குறிப்புகள் !! இத்தனையையும் ஒற்றையாளாய் கதாசிரியர் செய்தால் தான் ஓவியரின் பணியே துவங்கிடும் !! So இங்கொரு 338 பக்க சாகசமெனும் போது, கொஞ்சமே கொஞ்சமாய் யோசித்துத் தான் பாருங்களேன் - பின்னணியில் இருந்திருக்கும் உழைப்புகளின் இமாலய பரிமாணத்தை !! இதை மேலோட்டமாய் விவரிப்பதற்கே எனக்கு மூச்சு வாங்குதுடோய் !! அதே கையோடு 'பொம்மை புக்' என்ற முத்திரைகளையுமே இந்த நொடியில் நினைத்துப் பாருங்களேன் !! கெக்கேபிக்கே என்று சிரிக்கத் தான் தோன்றும்  - அந்தப் பொதுவான அபிப்பிராயத்தை நினைத்து !! 
கதாசிரியர் : Jean Dufaux
ஓவியர் : Jeremy
So ஜனவரியில் (நமக்குத்) துவங்கிய முற்றிலும் புதுத் திக்கிலான பயணம், இந்த மே மாதத்தோடு நிறைவுறுகிறது ! 47 ஆண்டுகளில் நாம் பார்த்திரா இந்தக் கடற்கொள்ளையர் பாணியினை நமக்கு அறிமுகம் செய்து தந்துள்ள பராகுடா - நம் வாசிப்புகளுக்கு மேலும் சிலபல கொள்ளையர்களைக் கொண்டு வரும் புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்வார்களா ? Million $$$ கேள்வி இப்போதைக்கு !!

And by the way, புண்ணியம் சேர்ப்பது பற்றிய டாபிக்கில் இருக்கும் போது ஒரு அவசர வேண்டுகோள் ப்ளீஸ்  :

சகல இதழ்களின் இறுதிக்கட்ட பணிகளுக்குள்ளும் புதைந்து கிடக்கும் இந்த நொடியில் தான் "ஆஹா...பராகுடா Climax பாகத்துக்கு ஒரு முன்கதைச் சுருக்கம் இருந்தால் தேவலாமே !!" என்ற ஞானோதயம்  பளீரிடுகிறது !! நண்பர்கள் யாருக்கேனும் ஆர்வம் இருப்பின் - "அலைகடலின் அசுரர்கள்" மூன்று பாகங்களிலிருந்து crisp ஆகவொரு 'மு.க.சு.' ரெடி பண்ணித் தர முடிந்தால் கோடிப் புண்ணியம் சேர்ந்திடும் !! நமது புத்தக அளவிற்கு 2 பக்கங்களுக்குள் அடக்கிட வேண்டும் என்பது முக்கியம் ப்ளீஸ் !!  Anyone folks ? In a day or two please ?

புறப்படும் முன்பாய் : போன வாரம் போலவே ஓரிரண்டு கேள்விகள் !! And இஷ்டப்படுவோர் மட்டுமே பதில் சொன்னாலும் போதும் folks ; படித்து விட்டுப் போய்க் கொண்டேயிருப்போரின்  மௌனங்களைக் கலைக்கச் சொல்லி torture செய்வதாய் எடுத்துக்கொள்ள வேண்டாமே - please !  

1 . இன்றைய நமது நாயகர்கள் பட்டியலில் தோர்கலுக்கு எவ்வித இடம் தருவீர்கள் guys ? சூப்பர் ஸ்டார் அந்தஸ்து ? ஷைனிங் ஸ்டார் அந்தஸ்து ? பவர் ஸ்டார் அந்தஸ்து !

2 மறுவாசிப்புக்கு தோர்கலை இதுவரையிலும் தேர்வு செய்துள்ளீர்களா ? Yes / No போதுமே !

3 .தோர்கல் தொடரானது உங்களுக்கு ரசிப்பின் - ஒற்றை வரியில் அதன் காரணத்தைச் சொல்ல முயற்சிக்கலாமா ப்ளீஸ் ? I repeat : In a single crisp line pls ?

"பிடிக்கவில்லை" என்ற அணியில் நீங்கள் இருப்பின் - "பிடிக்கலீங்கோ !" என்று மட்டுமே குறிப்பிட்டாலும் போதும் !
2020-ன் அட்டவணை கிட்டத்தட்ட முழுமை கண்டு வருகிறதெனும் போது - தொடரும் வாரங்களிலும்  இதுபோல் ஓரிரு கேள்விகளைக் கேட்டு வைப்பேன் ; இயன்றோர் பதிலளியுங்களேன் ப்ளீஸ் !! 

புறப்படும் முன்பாய் - இதோவொரு கொசுறுச் சேதி !! THE UNDERTAKER தொடரின் ஆல்பம் # 5 ஒரு one shot ஆக இருந்திடும் என்று 2017-ல் நமக்குச் சொல்லியிருந்தார்கள் ! இதோ - தற்போது நிறைவுற்றிருக்கும் அந்த ஆல்பத்தின் அட்டைப்பட முதல்பார்வை !! வெட்டியானின் ரகளைகள் முடிந்த பாடில்லை டோய் !

Bye folks !! See you around !! Have a lovely weekend !

P.S : @ செந்தில் சத்யா : நலம் பெற்ற  இல்லத்தரசியின் பிறந்தநாளை பற்றி நீங்கள் எழுதியிருந்ததை இன்றைக்குத் தான் படிக்க முடிந்தது சத்யா !! சகோதரிக்கு எனது (தாமதமான)வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !! இனி சந்தோஷம் மட்டுமே உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டட்டும் !! God be with you !!!

Saturday, April 13, 2019

ஒரு மிரட்டலான மே..!

நண்பர்களே,

வணக்கம். And தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் கொஞ்சமே அட்வான்ஸாய் folks! ஆங்கிலப் புதுவருடம் பிறந்ததே நேற்றைய நிகழ்வு போல் நினைவில் நிழலாடிட, இதோ சித்திரையும் பிறந்துவிட்டது கண்மூடித் திறப்பதற்குள் !! புது வரவானது அனைவருக்கும் நலனையும், வளத்தையும் தரும் அட்சய பாத்திரமாய் அமைந்திட பெரும்தேவன் மனிடோவிடம் வேண்டிக் கொள்வோமே! 

Moving on - போன வாரப் பதிவின் தொடர்ச்சியிலிருந்தே ஆரம்பிக்கிறேனே..? "குளிர்காலக் குற்றங்கள்" ஒட்டுமொத்தமாயொரு சொதப்பல் என்று சொல்ல முடியாது போலும் ! பெரும்பான்மைக்குக் கதை பிடிக்காது போய் 'ஐயேஎன்று முகம் சுளிக்கஒரு சிறுபான்மை அதனை சிலாகிக்க -  இடைப்பட்ட சந்தடிசாக்கில் லேசாய் குறட்டை விட்டுக் கிடந்த தளமும் சுறுசுறுப்பாகி விட்டது ஆன்லைன் விற்பனையிலும் "கு.கா.கு" pickup ஆகி வருகிறது ! "சாத்துவதற்காகவாவது வாங்கிப் படித்துப் பார்ப்போமே ?!என்ற லாஜிக்கா ?அல்லது "புது நாயகரை நம்ம பார்வையிலே எடை போட்டுத் தான் பார்ப்போமே ?!என்ற உந்துதலா ? என்று சொல்லத் தெரியவில்லை - but விற்று வருகிறது ! Sகதையின் கருத்து என்னவென்று கேட்கிறீர்களா ? Simple guys....கும்மியடித்தாலும் சரி... குமுறியெடுத்தாலும் சரி - அதன் தாக்கம் பெரிதே என்பது நூற்றிப்பத்தாவது தபாவாய் புரிகிறது ! ஹ்ம்ம்ம்.....!

அதே போல கார்ட்டூன் பிரியர்களின் ஆதர்ஷ நாயகன் இம்மாதம் செய்திருக்கும் score-ம் செம கணிசமானதே ! லக்கி லூக்கின் ஆல்பங்களில் ஒரு ரம்யமான விஷயம் உண்டு ! அது வேறொன்றுமில்லை... நமது டாப் நாயகர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால் Tex ; டைகர் லார்கோ லக்கி தோர்கல்  என்ற பெயர்கள் நினைவுக்கு வந்திடும் ! ஆனால் இவர்களுக்குக்கிடையே ஒரேயொரு விஷயத்தில் நமது ஒல்லியார் standout performer ஆக மிளிர்கிறார் ! எவ்விதத்தில் என்கிறீர்களா ? Simple ... 1987 முதல் லக்கி தொடரில் இதுவரையிலும் சுமார் 35 ஆல்பங்களைத் தமிழில் நாம் வெளியிட்டிருப்போம் ! இவற்றுள் 'ஹிட்' சதவிகிதம் எத்தனை சுமார் சதவிகிதம் எத்தனை சொதப்பல் சதவிகிதம் எத்தனையென்று கணக்குப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும் !! Simply becos -சொதப்பல்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பூஜ்யமாகவே இருந்திடக்கூடும் ! Of course 35 ஆல்பங்களுமே வெடிச் சிரிப்புகள் என்று சொல்ல மாட்டேன் தான் ஆனால் எவையுமே "வெடிக்க மறந்த வெடிகுண்டுகள்" அல்ல தானே டெக்ஸில் கூட நிறையவே சுமார் ரகக் கதைகள் வந்துள்ளன ; லார்கோவிலும் தான்தட்டைமூக்கரின் தொடரிலுமே தான் ! ஆனால் கிட்டத்தட்ட சிக்கிய எல்லாப் பந்துகளையுமே விளாசியுள்ளார்கள் லக்கி ஜாலி ஜம்பர் ஜோடி ! So  பலவிதங்களில் they are the first among equals!! அந்த விதத்தில் லக்கி லூக்கின் தொடர் நமக்கொரு அட்டகாச அட்சயப்பாத்திரம் ! ஒரே சிக்கல் என்னவெனில் இத்தனை காலமாய் கதைத் தேர்வின் போது ரொம்பவே இறுக்கமான சல்லடையைக் கையாண்டு வந்துள்ளதால் - ஒரு மாற்றுக் குறைவான லக்கி ஆல்பங்களை ஓரம்கட்டிவிட்டோம் ! இன்னுமொரு இரண்டோ/மூன்றோ ஆண்டுகளுக்கு இன்னுமும் நம் ரசனைகளுக்கேற்ப A-1 கதைகளாகத் தேர்ந்தெடுக்க முடியும் தான் ! ஆனால் அப்புறமாய் கொஞ்சம் தடுமாற வேண்டி வரலாம் ! துவக்க நாட்களது சுமார் ரகக் கதைகள் கணிசமாகவே உள்ளன ; so அவற்றையும் வெளியிட்டுத் தீர வேண்டிய தருணத்தில் ஜெர்க் அடிப்பது தவிர்க்க இயலாது போகலாம் ! அதன் மத்தியினில் ஒரு வெள்ளிக்கீற்றும் வானில் மிளிராதில்லை ! புதியதொரு படைப்பாளி டீம் சகிதம் புத்தம் புதுக் கதைளை உருவாக்கி வருகின்றனர் கடந்த 2 வருஷங்களாய் ! இதோ இந்தாண்டு வெளிவரக் காத்துள்ள "பாரிஸில் ஒரு கௌபாய்" கூட நவம்பர் '18-ல் வெளியான லேட்டஸ்ட் படைப்பே ! So புதியவர்களின் கைவண்ணத்தில் புதிய கதைகளும் பட்டையைக் கிளப்பத் தொடங்கிடும் பட்சத்தில் all will be well !! நம்பிக்கையோடு காத்திருப்போம் !

Looking ahead... மிரட்டலான மே எங்களை இப்போதே ட்ரில் எடுத்து வருகிறது ! போன பதிவில் எழுதியிருந்து போல - கிடைத்த 3 நாள் திருவிழா விடுமுறைகளில் அடிக்க சாத்தியமான பல்டிகளும் தாண்டிட இயன்றுள்ள தூரமும் - குரங்குக் கூத்து ஸ்பெஷலிஸ்டான எனக்கே கொஞ்சம் அசாத்திய ரகம் தான் ! தி Lone ரேஞ்சர் மொத்தம் 138 பக்கங்கள் கொண்டதொரு சாகஸம் பராகுடாவோ 168 பக்கங்கள் ! ஆக ஒட்டு மொத்தமாய் 306 பக்கங்கள் - இந்த 2 ஆல்பங்களிலுமாய்ச் சேர்த்து ! குதிரை மேலே சிறிது நேரம் அலைகளோடே கொஞ்ச நேரம் என்று மாற்றி மாற்றி சவாரி செய்ததில் அலுப்புத் தெரியாது போனதா அல்லது வீராப்பாய் விளம்பரங்களைப் போட்டு விட்டு மாதக் கடைசியில் தட்டு தடுமாறிடக் கூடாதே என்ற பயமா அல்லது இந்த லீவுகளை விட்டால் பணியாற்ற இப்படியொரு slot வாய்க்கவே வாய்க்காது என்ற புரிதலா அல்லது ஜானதன் கார்ட்லண்ட் தந்த கும்மாங்குத்தை மறந்திடும் பொருட்டு அடுத்த பணிகளுக்குள் பிசாசாய் புகுந்திட முடிந்ததா என்று சொல்லத் தெரியவில்லை... ஆனால் கடந்த நாலரை நாட்களின் புண்ணியத்தில் 250 பக்கங்களை எழுதித் தள்ளிட முடிந்துள்ளது ! தற்சமயம் பராகுடாவின் ஒரேயொரு பாகம் மாத்திரம் pending ! என்னென்னமோ 'ஆட்றா ராமா... தாண்ட்றா ராமாசர்க்கஸ் வேலைகளெல்லாமே செய்துள்ளேன் தான்! பெங்களுர் காமிக்-கானுக்கென TEX ஸ்பெஷல் இதழை திடுதிடுப்பெனத் திட்டமிட்ட கையோடு 3 நாட்களில் "நிலவொளியில் நரபலியைஎழுதியது நினைவுள்ளது காலையில் ஆரம்பித்து மாலைக்குள் க்ளிப்டனின் "7 நாட்களில் எமலோகம்" ஆல்பத்தின் 44 பக்கங்களைப்  பூர்த்தி செய்ததும் ஞாபகத்தில் நிற்கிறது!அனால் இம்முறை போட்டுத் தாக்க முடிந்திருப்பது என்னையே லைட்டாக ஜெர்க் அடிக்கச் செய்யும் ஒரு குவியல்! எனக்கென்னமோ அவ்வப்போது ஒரு "கு.கா.கு" மாதிரியான அனுபவம் அமையும் பட்சத்தில்  பிட்டத்தில் யாரோ பட்டாசைச் செருகி விட்ட வேகம் தானாய் வாய்த்து விடும் போலும் என்றுபடுகிறது! இங்கே இன்னொரு சமாச்சாரமுமே என் கவனத்தை ஈர்க்காது போகவில்லை!

அரைத்த மாவையே தினுசு தினுசாய் அரைப்பதை விடவும்புதுசாய் சவாலாய் எதற்குள்ளாவது கையை விடும் போது உள்ளுக்குள் பதிவாகும் சுவாரஸ்ய மீட்டரின் spikes தான் இந்த வேகங்களுக்கு இன்னொரு பின்னணி என்றும் படுகிறது! பராகுடா - செம different ; செம மிரட்டலான களம்! அதுவும் இது கிளைமேக்ஸ் பாகம் எனும் போது தெறிக்கிறது வேகம்! So உள்ளே புகுந்தால் விரல்கள் நோவெடுத்து ஓய்வு நாடும் வரையிலும் சலிப்பே தெரிந்திருக்கவில்லை! இன்னொருவர் தி Lone ரேஞ்சர்!! இவரோ நமக்கு yet another புதுரக கௌபாய் அனுபவத்தைத் தரக் காத்துள்ளார் என்பதால் அங்குமே துளிகூட போரடிக்கவில்லை! ஆக கார்டூன்களோகனமான கிராபிக் நாவல்களோஅல்லது இது போன்ற refreshing புதுக்களங்களோ அமைந்திடும் பட்சத்தில் நம்மையுமறியது ஒரு புது கியரைக் கண்டுபிடிக்க முடியும் போலும்!


எல்லாம் சரி....பயணத்திட்டம் போட்டாச்சு...டிக்கெட்டும் எடுத்தாச்சு...விமானத்திலும்  எறியாச்சு... கதவையும் அடைத்து விட்டாச்சு... உசரமான ஏர்ஹோஸ்ட்டஸ் அம்மணிகள் நீட்டிய தட்டிலிருந்து ஒரேயொரு சாக்லேட்டை மட்டும் ஸ்டைலாய் எடுத்திருக்க பக்கத்து சீட்டுக்காரனோ  அரை டஜனை அசால்டாய் அள்ளுவதைக் கடுப்போடு பார்த்தும் விட்டாச்சு... லொஜக் -மொஜக் என்று சீட் பெல்ட்களையும் போட்டாச்சு... ஹம் ஆப்கே கௌன் ஹைஎன்று கேப்டன் ஹிந்தியில் செப்பும் பயண அறிக்கையும் கேட்டபடிக்கேகாதுக்குள் திணிக்க கால் ிலோ பஞ்சை ரெடி பண்ணிக் கொண்டிருக்கும் போதே பிளேன் வேகமிழக்கிறது! ரன்வேயிலேயே முட்டையிட்ட கோழி போல் சித்த நேரம் காத்திருந்து விட்டு அப்புறமாய் back to pavilion என்று புறப்பட்ட இலக்கிற்கே ரிவர்ஸ் பண்ண - "எஞ்சினில் பழுதுங்கோஇந்த விமானம் பறக்காதுங்கோ - புது விமானம் ஆத்தா ஹை... தும் அதிலே ஜாத்தா ஹை..." என்று அறிக்கை ஒலிக்கிறது! எத்தனை தபா இதை  பயணங்களில்  நாம் அனுபவித்திருப்போம்


கிட்டத்தட்ட அதே கதை தானே இம்மாதம் ஜம்போ காமிக்ஸின் சீஸன் 2-ன் துவக்க இதழோடுமே? "கால வேட்டையர்" கதை வந்தாச்சு... ராப்பர் ரெடியாகிடுச்சு... preview & பில்டப் தந்தாச்சு... டைப் செட்டிங்கும் பணியாச்சுஆனால் இறுதியில் take-off abortஆகிப் போனது! (யோசித்துத் தான் பாருங்களேன்-"கு.கா.கு" + இன்னொரு சுமார் இதழ் ஒரே மாதத்தில் எனில்-என்னமாய் WWF நடந்திருக்கும் என்னைப் படுக்கப் போட்டு?!)


So பழுதான விமானத்துக்குப் பதிலாய் வரும் மாற்று விமானமானது செமத்தியானதாக இருக்க வேண்டும் தானேஇதோ அந்தப் புது விமானத்தின் முதற்பார்வை! 
முன்னட்டையும் சரிபின்னட்டையும் சரி அக்மார்க் ஒரிஜினல்களே என்பதால் இங்கே நாம் செய்ய வேண்டியிருந்தது எழுத்துக்களை நுழைப்பது மாத்திரமே அதனை நமது மூத்த ஓவியர் சிகாமணியும்டிசைனிங் கோகிலாவும் கச்சிதமாய்  செய்திட-ரொம்பவே வித்தியாசமானதொரு அட்டைப்படம் ரெடி! முன்னொரு காலத்திலென்றால்-"ஐயே... ஒரே சிவப்பாய் கீதே... மஞ்சளைக் காணோம்ப்ளூ கலரைக் காணோம்" என்ற கையோடு சாந்துக் கரண்டியில் வர்ணங்களைத் தூக்கி "ஆ..இங்கே பூஸ்....ஆ..இங்கே பூஸ் !!" என்று ஆங்காங்கே அப்பச் செய்திருப்பேன் ! ஆனால் உங்கள் புண்ணியத்தில் எனது ரசனையிலும் கொஞ்சமாவது மாற்றம் தெரியாது போகுமா - என்ன? So படைப்பாளிகளின் ஒரிஜினல்களை  நோண்டாது அப்படியே விட்டுவிடத் தீர்மானித்தேன் ! பலன்ஒரு மிரட்டலான முன்னட்டை !!

தி Lone  ரேஞ்சர் !! (அது சரி... முழுசையும் தமிழில் எழுதுவதற்கு என்னவென்று கேட்கிறீர்களா தமிழில் "லோன் ரேஞ்சர்" என்றால் ஏதோ கொசமட்டம் பைனான்ஸ் கம்பெனியிலோஅட்டிகா கோல்ட் கம்பெனியிலோ "லோன் அரேஞ்சு" செய்து தருவார் என்பது மாதிரியாக sound  செய்தது! So  இது ஸ்டைலாகவும் உள்ளதுசரியாகவும் உள்ளதென்று நினைத்தேன்!) இந்த முகமூடி நாயகர்  நமது கௌபாய் ரசனைகளுக்கு புது மெருகூட்டக் காத்திருக்கிறார் என்று தைரியமாகச் சொல்லுவேன் ! Simply becos - ஜேம்ஸ் பாண்ட் 007-ஐ புத்தம் புது யுக நாயகராய் வடிவமைத்துள்ளது போலவே Lone Ranger  & அவரது சகா டோண்டோவையுமே முற்றிலும் புதுசாய் reinvent செய்துள்ளது இந்த லேட்டஸ்ட் படைப்பாளி டீம் ! செவ்விந்திய சகா என்றாலே ஒரு 'அறிவிக்கப்படா அல்லக்கைஎன்ற ரீதியில் இல்லாது இந்த 2 நாயகர்களிடையே ஒரு செம கெத்தான உறவு நிலவுகிறது ! சுருக்கமாய்ப் பேசினாலும் உலக அனுபவமும்ஞானமும் கொண்டவராய் இருந்து Lone ரேஞ்சரை வழி நடத்தும் பொறுப்பு டோண்டோவிடம் உள்ளது ! முகமூடி நாயகருமே அரவங்காடு தோட்டா பேக்டரியைக் குத்தகைக்கு எடுத்தவரைப் போல பக்கத்துக்குப் பக்கம் லோடு லோடாய்த் தோட்டாக்களை பொழிவதில்லை! அதிரடியாய்அவசியம் எழும் போதெல்லாம் மட்டுமே அதகள ஆக்சனில் இறங்கிக் கலக்குகிறார்! 


இந்தத் தொடரின் துவக்கப்  புள்ளியிலிருந்து ஆரம்பிக்கும் வாய்ப்பும் நமக்கு இருந்தது தான்! சின்னப் பையனாக இருந்து - தி Lone ரேஞ்சராய் பரிணாம வளர்ச்சிக்கு ஆளாகும் கதையை பிளாஷ்பேக்கில் சொல்லும் அந்த ஆல்பத்தையே நமது முதல் புள்ளியாக்கிட எனக்கு லைட்டாய் சபலம் எட்டிப்பார்த்தது ! ஆனால் நாயகரை முதலில் நம்மிடையே வாகாய் establish செய்தான பிற்பாடு-அந்த ப்ளாஷ்பேக் சாகஸம் பக்கமாய் கவனத்தைத் திருப்பலாம் மென்று நினைத்தேன்! பின்னோரு சமயம் அந்த முதல் ஆல்பத்தைப் படிக்க நேரும் போது எனது இன்றைய தீர்மானத்தின் லாஜிக் உங்களுக்குப் புரியாது! போகாது guys ! 1933 முதல் டி.வி. தொடர்களாய்காமிக்ஸில் தினசரி strip-களாய்சின்னக் கதைகளாய்நாவல்களாய்ஹாலிவுட் திரைப்படமுமாய் ரவுண்டடித்துக் கொண்டிருக்கும் இந்த நீதிக்காவலரின் கதைகளுக்கு வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும் simply awesome! ஆறு அத்தியாயங்கள்  ஒன்றிணைந்த ஆல்பம் என்பதால் உள்ளே 6 ஒரிஜினல் அட்டைப் படங்களும் உண்டு !So ஜம்போவின் புது சீஸனைத் துவாக்கித் தர ஏற்பாடாகியுள்ள இந்தப் புது விமானம் செம sleek dreamliner என்பேன் ! இதுவரையிலும் ஜம்போ சீஸன் 2-க்கு சந்தா  செலுத்தியிரா நண்பர்களே : இன்னமுமே நேரமுள்ளதுஉள்ளே தொற்றிக் கொள்ள ! என்ன ஒரே வித்தியாசம் - மிட்டாயை நீட்ட உசரமான பணிப்பெண்களுக்குப் பதிலாகதிரு திரு முழியோடு நான் காத்திருப்பேன்! But still - தைரியமாக jump in guys!!


விண்ணில் பறக்கக் காத்திருப்பது ஜம்போ எனில் அலையடிக்கும் சமுத்திரத்தில் அட்ராசிட்டி செய்திடும் பராகுடா இன்னொரு classic அட்டைப்படத்துடன் தயாராகி வருகிறது ! இந்த ஞாயிறின் பொழுதில் எஞ்சியிருக்கும் பராகுடாவின் இறுதி பாகத்துக்கும்  "சுபம்" போட சாத்தியமாகின் - கொஞ்சம் லேசாக மூச்சு விட்டுக் கொள்வேன் ! மே முதல் தேதி விடுமுறையெனும் போது-அதற்கு முந்தைய தினமே புக்குகள் உங்கள் கைகளில் இருந்திட வேண்டுமென்பது புரிகிறது ! So full steam ahead என்று விரட்டிட முனைகிறோம் வண்டியை ! 
  

See you around folks! Have a lovely Sunday! Bye for now!


P.S : 1 .ஏப்ரலின் விமர்சனங்கள் தொடரட்டுமே folks ?

2 இதுவரையிலுமான லக்கி லூக் சாகசங்களுள் 'டப்ஸா' ரகம் என்று ஏதேனும் உண்டா ? If yes - அவற்றைச் சுட்டிக் காட்டுங்களேன் - ப்ளீஸ் ?

3 And - லுக்கியின் THE VERY BEST என்று ஒரேயொரு ஆல்பத்தைத் தேர்வு செய்வதாயின் எதைச் செய்வீர்களோ ?   

Sunday, April 07, 2019

முன்னும், பின்னும் பார்க்கும் படலம் !!

நண்பர்களே,

வணக்கம். ஏப்ரலின் கோவில் திருவிழா – வழக்கம் போல ஊரையே உற்சாகமாக்கிக்கொண்டிருக்க – சந்தடிசாக்கில் கிட்டும் 3 நாள் வி்டுமுறைகளை நினைத்து இப்போதே சப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறேன் ! காலை 4 மணிக்கெல்லாம் கோவில் நடை திறக்க – மக்கள் அந்த அதிகாலைக்கே வரிசைகட்டி நிற்பதை ‘ஆ‘வென பார்ப்பது ஒரு பரவசமெனில், நேற்று வரை ‘தேமே‘ என்று கிடந்த வெயில் படர்ந்த வீதிகள் திடீரென எக்கச்சக்க வர்ணங்களை ஏற்றிக் கொண்டு நண்டு முதல் தொண்டு கிழம் வரைக்கும் குதூகலிக்கும் விதமாய் உருமாறிடும் அதிசயத்தை ரசிப்பது இன்னொரு பரவசம் ! கிடைக்கும் ஞாயிறு, திங்கள் & செவ்வாய் விடுமுறைகளில் The Lone Ranger & பராகுடா கதைகளை முழுசுமாய் எழுதி முடிக்கவொரு சூப்பர் வாய்ப்பு கிட்டியுள்ளதே என்பது என்னளவிலான பரவசம் # 3 ! So குதிரையிலேறி தெறிக்க விடும் நாயகரிலிருந்து – அலைகடலில் ஆட்சி செய்யும் அசுரர்களென மாறி, மாறிச் சவாரிசெய்வதே எனது இந்த விடுமுறைகளின் லட்சியமாகயிருக்கும் !

ஏப்ரலின் இதழ்களைப் பொறுத்தவரையிலும் இன்னமும் உங்களின் எண்ணச் சிதறல்களை முழுமையாய் உள்வாங்கிட இயலவில்லை தான்... நிறையப் பேர் அந்த முதல் புரட்டலைத் தாண்டி வாசிக்க நேரம் எடுத்துக் கொண்டதாய் தெரியக் காணோம் ! ஆனால் – ஒரு தேக்ஸ்சா ஆம்பூர் பிரியாணிக்கு ஒரு தம்மாத்துண்டு சாம்பிளே போதும் தான் எனும் போது – இதுவரையிலான அபிப்பிராயங்களை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொள்வதில் தவறிராது என்றே தோன்றுகிறது !

எனது பார்வையில் ஏப்ரலின் best லக்கியின் “பரலோகத்திற்கொரு படகு” தான் ! And கார்ட்டூன்கள் என்றாலே காததூரம் ஓட்டமெடுக்கும் நண்பர்கள் நீங்கலாய் – மற்ற அனைவருக்குமே இதனில் உடன்பாடிருக்கும் என்றே தெரிகிறது ! Of course இதுவுமே “சூப்பர் சர்க்கஸ்” தரத்திலோ ; “புரட்சித் தீ”யின் சிரிப்புத் தோரண பரிமாணத்திலோ இல்லை தான் ! பக்கத்துக்குப் பக்கம் ‘கெக்கே பிக்கே‘வெலாம் நஹி தான்... ஆனால் முற்றிலும் புதுசான அந்த ‘படகு ரேஸ்‘ சமாச்சாரம் & அது சார்ந்த கதையோட்டம் செம fresh எனும் போது கொஞ்சமும் அலுப்புத் தட்டாது நகன்ற ஆல்பமிது என்பது அப்பட்டம் ! And இது போன்ற ஜாலியான இதழ்களில் பணியாற்றும் போது தான் நடப்பாண்டின் கார்ட்டூன் வறட்சியின் தாக்கம் ஒரு மிடறு ஜாஸ்தியாகத் தெரிகிறது ! Already 3 gone for the year எனும் போது – இந்தாண்டின் முழுமைக்குமென எஞ்சியிருப்பது இன்னும் நான்கே கார்ட்டூன்ஸ் தான் ! என்னவொரு கொடுமையிது guys ??!!

ஏப்ரலின் இரயிலை லேட்டாகப் பிடித்தாலும் லேட்டஸ்டான அட்டைப்படத்தோடு, அசத்தலாய்க் களமிறங்கிய டெக்ஸ் இம்மாதத்தின் இரண்டாமிடத்தில் – again எனது கண்ணோட்டத்தில் ! மெஃபிஸ்டோ; யமா; மோரிஸ்கோ; கர்னல் ஜிம் ப்ராண்டன்; யூசெபியோ போன்ற சில கதாப்பாத்திரங்கள் மட்டும் டெக்ஸின் தொடரினில் தொடர் பயணம் செய்வது வழக்கம். அந்தப் பட்டியலில் இம்மாதம் நாம் பார்த்துள்ள – ‘மிஸ்டர் P‘ கூட சேர்த்தி தான் ! வெகு சமீப இதழொன்றில் கிட்-வில்லர் போலவே மாறு வேஷம் போட்டுக் கொண்டு ஏகப்பட்ட ரகளை செய்ததும் இந்த மனுஷனே ! So 35 ஆண்டுகளாய் டெக்ஸோடு பயணிக்கும் நாம் இந்த வில்லனை யாரென்றே அறியாதிருப்பது தப்பாச்சே என்று நினைத்தேன் ! அதன் பலனாய்த் தேர்வான ஆல்பமிது ! And பெரியவர் போனெல்லியின் கைவண்ணம் எனும் போது, அதனை விமர்சிப்பதெல்லாம் எனக்கு வேண்டாத வேலை என்பதால் இந்த இதழின் ஏராளமான positive-களை மட்டுமே ரசித்திட நினைக்கிறேன் ! And there are plenty... ஓவியரின் இதமான சித்திர பாணியில் துவங்கி, பரபரவென ஓட்டமெடுக்கும் கதைக்களம், டைகர் ஜாக் நீங்கலாய் பாக்கி ரேஞ்சர்களின் முக்கூட்டுப் presence என்று ஏராளமாய் ! ஆனால் க்ளைமேக்ஸில் வில்லனை இன்னும் கொஞ்சம் ரகளையோடு அமுக்குவது போல் போனெல்லி அவர்கள் அமைத்திருப்பின் ‘மிஸ்டர் P` யின் அறிமுக இதழே சரவெடியாகியிருக்கக் கூடும் தான் ! டைனமைட் ஸ்பெஷலின் அந்த நீ-ள ஆல்பத்தின் முடிவுரையைப் போலவே இதனிலும் வில்லனை சிறைப்பிடிக்கும் படலத்தை சடுதியில் முடித்து விட்டது தான் லேசாய் நெருடியது ! ஆனால் தற்சமயம் ஒரு 110 பக்க ஆல்பம் தான் என்ற விதத்தில் not complaining at all !

ஏப்ரலின் மறுபதிப்புப் பற்றி எனக்கும் சரி, உங்களுக்கும் சரி, பெரிதாய் எதிர்பார்ப்புகளோ – ஏமாற்றங்களோ இராதென்றே நினைக்கிறேன் ! ஏற்கனவே படித்தான கதை தான் எனும் போது, வண்ணத்தில் அதன் மேக்கிங் மட்டும் தரமாய் அமைந்துவிடின் – கிணற்றின் தொண்ணூறு சதவிகிதத்தைக் கடந்து விட்டது மாதிரித் தான் ! அட்டைப்படமும் சரி, வண்ணப்பக்கங்களும் சரி, கலரிங் பாணியும் சரி, அச்சும் சரி – டீசண்டாக அமைந்து போனதால் விறுவிறுப்பாய் ஓடியதொரு இதழாக இது அமைந்திருக்கும் தானே folks ? Correct me if I am wrong please ?!

ஏப்ரலின் ஏகோபித்த ஏமாற்றம் ; in fact நடப்பாண்டின் முதல் மெகா ஏமாற்றமும் “குளிர்காலக் குற்றங்கள்” தான் என்பதை உங்களின் இதுவரையிலான பாசமும், நேசமும் நிறைந்த (!!!) பின்னூட்டங்கள் தெரிவிக்கின்றன ! காரமான வார்த்தைகளெல்லாம் இப்போது commonplace என்றான பிற்பாடு, அவற்றை எண்ணி தூக்கத்தைத் தொலைப்பதை விடவும், சொதப்பலின் பின்னணியினை ஆராய்வதும், இது போன்ற boo boos மறுக்கா நேராதிருப்பதுமே முக்கியமென்று படுகிறது ! இந்த இதழின் சுருதி ரொம்பவே குறைவாகயிருப்பதை நான் உணர்ந்தது அதன் எடிட்டிங் பணிகளுக்குள் புகுந்த தருணத்திலேயே ! இதனைத் தேர்வு செய்த சமயமோ, நெட்டில் காணக் கிடைத்த விமர்சனங்களையே ஒரு வழிகாட்டியாகக் கொண்டிருந்தேன் ! கிட்டத்தட்ட எல்லாமே இதற்கு பாசிட்டிவாக thumbs up தந்திருக்க, அந்த clear சித்திர பாணிகளும் எனது தீர்மானத்தை influence செய்திருந்தன ! Of course இவையெல்லாமே எனது தேர்வை நியாயப்படுத்திடவோ ; பிழையினைச் சரியென்று தர்க்கம் செய்திடும் பொருட்டோ அல்ல ! பொதுவாய் கௌபாய் கதைகளின் அந்த நேர்கோட்டு பாணிகளில் not too many things can go wrong என்பது போலொரு நம்பிக்கை என்னுள் குடியிருந்ததே – ஜானதன் கார்ட்லேண்டின் அறிமுகத்தக்குப் பின்னணி ! And நிஜத்தைச் சொல்வதானால் ஒவ்வொரு ஆண்டின் அட்டவணையிலும் ஏதேனுமொரு புதுவரவை நுழைத்து உங்கள் புருவங்களை உயர்த்திட வேண்டுமென்றதொரு அரூப அவசியம் இருப்பது போல் எனக்குத் தோன்றிடும் ! So இயன்றமட்டிலும் புதுசுகளை இணைக்கப் பார்க்கும் படலங்கள் சாத்தியப்படுவதெல்லாமே சந்தா A-வின் ஆக்ஷன் களங்களில் மட்டுமே ! Simply becos – சந்தா B-யில் டெக்ஸின் நிழலில் மார்ட்டின்; ராபின்; ஜுலியா; டைலன் டாக் ஆகியோர் ஒண்டுக் குடித்தனம் நடத்தவே நாக்குத் தள்ளுகிறது ! And சந்தா C-யில் ஏற்கனவே செம கத்திரி விழுந்திருக்க, அங்கு ஏது இடம் ? So புதுவரவுகளை வரவேற்க சந்தா A மாத்திரமே களமென்பதால் ஒவ்வொரு தடவையும் அங்கே இயன்ற தேடல்களை நடத்துவது என் குரங்குச் சேட்டை ! சில தருணங்களில் அவை க்ளிக் ஆவதுண்டு... சில தருணங்களில் not so ! இது பின்னது !

கதையின் தேர்வில் வெற்றி கிட்டும் போது – காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளத் தோன்றும் அதே மூச்சில், சொதப்பல்களின் பொருட்டு முதுகில் மத்தளம் கொட்டப்படுவதையும் ஏற்றுக் கொள்வதில் தயக்கமிருக்கலாகாது என்பது புரிகிறது ! So இந்த நொடியில் வெப்பத்தை உமிழும் நண்பர்கள் மீது எனக்கு no ஆதங்கம்ஸ் ! ஆனால் ஒரு சுமாரான தேர்வோ; ஒரு மிதமான கதையோ உங்களுக்குத் தரக்கூடிய ஏமாற்றத்தை ஒரு படி மேலாகவே நானும் உணர்ந்திடுகிறேன் என்பதையும் சேர்த்தே உணர்ந்திருப்பின், லேசாய் மகிழ்ந்திருப்பேன் ! We take pride in what we do guys & ஒரு சுமாரான இதழ் உங்களளவில் கூட சடுதியில் மறக்கப்படலாம் ; ஆனால் எனக்குள்ளோ அவை காலத்துக்கும் வடுவாய்த் தங்கிடுவதுண்டு ! So இம்முறை உங்கள் அளவுகோல்களில் பின்தங்கிவிட்டதொரு தேர்வை செய்ய நேரிட்டதற்கு my heartfelt apologies !! நான்கில் ஒன்று பழுதில்லை... என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்பவனல்ல நான் ; நாற்பதில் கூட ஒரு பழுதில்லாது கரைசேர்க்கத் துடிப்பவன் ! So நிச்சயமாய் இதனில் ஒரு பாடம் கற்றிடாது போக மாட்டேன் என்பது எனது promise !

On the same breath – இதே போன்ற அனுபவங்கள் இதற்கு முன்பாய் எப்போதெல்லாம் எழுந்துள்ளன ? என்ற ரீதியில் மண்டையில் சிந்தனைக் குதிரைகள் ஓடத் தொடங்கின ! அட... இந்த வாரப் பதிவுக்கு இதுவே கூட ஒரு spark ஆக இருந்திடலாமே என்று தோன்றிட – “இது சொ-த-ப்-ப-ல்-ஸ் வாரம் !!” என்று தீர்மானித்தேன் !

நினைவுக்கு வரும் முதன் முதல் அனுபவத்தில் எனக்கு ஓரளவு பரிச்சயமுண்டு ; ஆனால் பங்களிப்பு லேது ! ஆனால் இந்த சிந்தனைச் சங்கிலி தொடங்கிய முதல் நொடியே அது தான் தோன்றியது எனும் போது அங்கிருந்தே ஆரம்பிக்கட்டுமா ? 1970‘களின் இறுதிகளில் முத்து காமிக்ஸ் செம பிஸியாய்த் தடதடத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை ! கதைகள் எல்லாமே Fleetway உபயம் ; அல்லது அமெரிக்க நிறுவனமான King Features-ன் ஆக்கங்கள் எனும் போது அவர்களது இந்திய ஏஜெண்ட்களிடமிருந்து கொள்முதல் செய்வதே வழக்கம். மும்பையில் King Features-ன் முகவர்கள் இருப்பது எனக்குத் தெரியும். ஊரின் மையத்தில் ஒரு பரபரப்பான பழைய காலத்து ஆபீஸ் காம்ப்ளக்ஸின் நான்காவது மாடியில் இருப்பார்கள் ! ஏதோவொரு ஆண்டின் முழுப்பரீட்சை விடுமுறைகளின் போது என் தந்தையோடு நானும் மும்பை சென்றிருக்க, அப்போதைய காமிக்ஸ் கொள்முதலில் நானும் கலந்து கொள்ள முடிந்தது. கூரியர்களெல்லாம் அந்நாட்களில் கிடையாதெனும் போது, நீள நீளமான துணிக்கவர்களில் கதைகள் தபால் மூலமே நம்மை வந்தடையும் அப்போதெல்லாம் ! வந்த அதே மாலையில் அவற்றை வீட்டுக்குத் தூக்கிச் சென்று படிக்கும் முதல் ஆளாக நானே இருப்பேன் என்பதால் Phantom; Mandrake; Cisco Kid; Johnny Hazard (விங் கமாண்டர் ஜார்ஜ்); Buz Sawyer (சார்லி) காரிகன்; கிர்பி போன்ற நாயகர்களெல்லாமே எனக்கு அத்துப்படி ! இத்தனை நாட்களாய் கதைகளைத் தருவித்து அனுப்பும் ஆபீஸ் இது தானா ? என்று பராக்குப் பார்த்தபடியே என் தந்தை அவர்களது நிர்வாகியுடன் பேசிக் கொண்டிருப்பதை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தேன் ! அப்போது தான் அந்த நிர்வாகி Dr.Kildare என்றதொரு தொடர் பற்றிப் பேசினார் ! ”இதுவுமே King Features நிறுவன விற்பனையில் கிட்டிடும் என்பதால் உங்களுக்கு ஆர்வமிருப்பின் வெளியிடலாம்!” என்று அவர் சொன்னார். கையோடு ஒரு முழுநீளக் கதையின் strips-களை ஆர்ட் பேப்பரிலான பிரிண்டில் கையில் தந்தார் ! நானும் எட்டிப் பார்க்க, படங்களெல்லாமே பிரமாதமாய்த் தான் தெரிந்தன ! அப்பாவும் சரி சொல்லிய கையோடு அதற்கும் சேர்த்து பில் போட்டு வாங்க – தமிழ் பேசத் தயாரான முதல் (காமிக்ஸ்) டாக்டர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார் Dr.கில்டோர் ! ஊருக்கு வந்த பின்னே மொழிபெயர்ப்பு; அச்சுக்கோர்ப்பு ; அச்சு என்று பணிகள் துவங்கிய நிலையில் எனக்கு அவற்றுள் பங்கேதும் இருக்கவில்லை ! “விசித்திர வேந்தன்” என்ற பெயரில் அந்த இதழ் வெளியான போது தான் – 'அட நம்ம பார்த்த கதையாச்சே' என்று புரட்டினேன். இங்கிலீஷில் படித்த போதே கதை அத்தனை சுகப்படவில்லை எனக்கு; இருந்த போதிலும் அபிப்பிராயம் சொல்லுமளவிற்கான அப்பாடக்கரெல்லாம் இல்லை என்பதால் எதுவும் சொல்லவில்லை ! ஆனால் இதழ் வெளியாகி, ரொம்பவே சுமாரான வரவேற்புப் பெற்றதாய் அப்புறம் தெரிந்து கொண்டேன் ! அதன் பின்பாய் டாக்டர் கில்டோரின் கதை இன்னும் ஒன்று மட்டும் வெளிவந்ததா? இல்லையா? என்பது கூட நினைவில் இல்லை; ஆனால் அந்த  stylish டாக்டரின் சேவை நமக்கு வேணாமே என்று முத்து காமிக்ஸில் தீர்மானித்தனர் என்பது மட்டும் நினைவுள்ளது!

நினைவில் நிற்கும் அடுத்த சறுக்கல் ஒரு செம famous நாயகருக்கு ! 1982-ல் முத்து காமிக்ஸ் வாரமலர் வெளியாகவிருந்த சமயம். என் தந்தை டெல்லியிலிருந்து முகம் முழுக்கப் புன்னகையோடு திரும்பியிருந்தார்கள் – ப்ரூஸ் லீயின் காமிக்ஸ் தொடருக்கு உரிமைகள் வாங்கிவிட்டதாய்ச் சொல்லியபடிக்கே ! அந்தக் காலகட்டத்தில் ப்ரூஸ் லீ என்ன மாதிரியானதொரு legendary ஹீரோவென்பது உலகுக்கே தெரியும் ! So அவரது திரைப்பிரபல்யத்தைப் பயன்படுத்தி ஒரு காமிக்ஸ் தொடரையும் ஏதோவொரு அயல்தேசத்து நிறுவனம் துவக்கியிருக்க, அதன் முகவர்கள் டெல்லியில் இருந்துள்ளனர் ! அவர்களிடம் பேசி, கதையை வாங்கி வந்து முத்து காமிக்ஸில் ஒப்படைத்து விட்டார் சீனியர் எடிட்டர் ! அது “டிங் டாங்” என்ற இதழை வெளியிடும் எனது கனவுகள் சிதைந்து கிடந்த நாட்கள் என்பதால் ஆபீஸுக்குப் போவதே எட்டிக்காயாய்க் கசப்பதுண்டு ! வேண்டாவெறுப்பாக ஆபீசுக்கு மாலைகளில் போனால் “வாரமலர் கலரில் வரப் போகிறது !” என்று ஆளாளுக்கு அக்னிச்சட்டியைத் தூக்கியது போல ஆபீஸ் நெடுக கரகம் ஆடிக் கொண்டிருப்பது எனக்கு கடுப்பை மேலும் அதிகமாக்கிய சமாச்சாரம் ! அப்போதெல்லாம் “கலர்” என்பது நம் காமிக்ஸுக்கெல்லாம் ஒரு உச்சபட்ச luxury ! So ப்ரூஸ் லீயும் கலரில் கலக்கப் போகிறாரென்று நமது ஓவியர் சிகாமணி மூலமாகத் தெரிந்து கொண்டேன். கறுப்பு வெள்ளையிலான ஒரிஜினல் படங்கள் மீது மெலிதான ஒரு பட்டர் பேப்பரைப் போட்டுக் கொண்டு எங்கெங்கே என்ன வர்ணங்கள் வேண்டுமோ – அவற்றை போஸ்டர் கலர்களைக் குழைத்து சிகாமணி பூசித் தருவார் ! அந்த வர்ணம் பூசப்பட்ட பட்டர் பேப்பரே – தொடரவிருக்கும் கலர் பிராசஸிங் நிபுணர்களுக்கான color guide ! இந்தந்த இடங்களுக்கு இந்த இந்த வர்ணங்கள் வர வகை செய்ய வேண்டுமென பார்த்துத் தெரிந்து கொண்டு நெகட்டிவ்களில் பணி செய்வார்கள் ! ப்ரூஸ் லீக்கு கலர் பூசும் போது பக்கத்தில் உட்கார்ந்து பராக்குப் பார்த்தவனுக்குக் கதையை வாங்கிப் படித்துப் பார்க்கக் கூடத் தோன்றவில்லை ! “டிங்-டாங்குக்கு முக்காடு போட்டு போட்ட சூழலில் புதுவரவுக்குப் பகட்டா?” என்ற பொருமலே உள்ளுக்குள் ! அதிலும் ப்ரூஸ் லீ என்றால் எனக்கு ரொம்பவே இஷ்டம் ! நிச்சயம் இந்தக் கதை பட்டையைக் கிளப்பப் போகிறதென்பதை மண்டை சொன்னாலும், அதைக் காதில் போட்டுக் கொள்ள மனசுக்கு மூட் நஹி ! ‘ஐயே... படமே சரியில்லியோ...? சண்டைலாம் ஜாஸ்தி இல்லியே...? ப்ரூஸ் லீ முகமே சரியில்லியே !” என்று ஏகப்பட்ட “சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்” ரகங்கள் தான் எனக்குள் ஓடின ! ஆனால் நான் ரசித்தாலும், ரசிக்காது போனாலும் பணிகள் நடக்காது போகுமா – என்ன? இரண்டே வாரங்களில் வாரமலரின் முதல் இதழ் வண்ணத்தில் டாலடித்தது என் கைகளில் !

திட்டமிடல்களை மட்டும் பிசகின்றி நிறைவேற்ற அன்றைக்குச் சாத்தியப்பட்டிருப்பின் அதுவொரு அசாத்திய வெற்றியாகியிருக்க வேண்டிய முயற்சி என்பதில் சந்தேகமே கிடையாது ! Conceptwise it was close to brilliant ! Maybe அதன் content இன்னும் கொஞ்சம் rich ஆக இருந்திருக்கலாம் என்பதைத் தாண்டி இன்றைக்குமே அதனைப் புரட்டும் போது பிரமாதமாகவே தென்படும் ! இரும்புக்கை மாயாவியின் தொடர்கதை (வண்ணத்தில்); ப்ரூஸ் லீ தொடர்கதை ; அதிமேதை அப்பு (கலரில்) ; ராமு & சோமு ; கபிஷ்; அப்புறம் மு.த.வின் மாயாஜாலத் தொடர்களை என்று 16 பக்கங்களுக்குள் செம variety – சொற்ப விலையில் எனும் போது தமிழ் காமிக்ஸ் உலகிற்கு அதுவொரு மைல்கல்த் துவக்கமாய் இருந்திருக்க வேண்டியது ! ஆனால் ஏதேதோ காரணங்களின் பொருட்டு கிளம்பிய வேகத்திலேயே புஸ்வாணமும் ஆகிப் போயிட – வாரமலர், வராமலராகிப் போனது ! அந்நேரத்துக்குள் +2 பரீட்சைகள்; என் பாட்டி தவறிப் போன சோகம் என்று ஏதேதோ சொந்தக் காரணங்களுக்குள் நான் சிக்கியிருக்க - வாரமலரின் முன்னேற்றத்தையோ / பின்னேற்றத்தையோ தொடர்ந்திட எனக்குத் தோன்றியிருக்கவில்லை ! ஆனால் நான் ஆர்வத்துடன் பின்தொடர்ந்த ஒரே விஷயம் அந்த கலர் ப்ரூஸ் லீ தொடரையே ! துவக்கம் முதலே பதம் தவறிய அல்வா போல தொண்டையில் சிக்கிய தொடரானது, போகப் போக பாடாவதியாகிக் கொண்டே செல்வதை உணர ரொம்பச் சுலபமாய் முடிந்தது ! வாரமலரின் துவக்க நாட்களது promise பின்நாட்களில் தொடர்ந்திடாது போனதற்கு ப்ரூஸ் லீ தொடரின் சொதப்பலும் ஒரு முக்கிய காரணமென்பேன் ! ரொம்பவே எதிர்பார்க்கச் செய்து ரொம்பவே ஏமாற்றம் தந்த தொடர்களுள் ப்ரூஸ் லீ பிரதானமானவர் !

‘அடுத்த இலையில் பதம் தப்பிய அல்வாக்களின் கதை போதும்... நம் பாட்டைப் பார்ப்போமே ?‘ என்று தோன்றுவதால் லயனின் first ever குச்சி முட்டாய் நாயகர் பறறி பார்ப்போமே ? இவருமே ஒரு டாக்டர் தான் & இவரையுமே தவமாய் தவமிருந்து கூட்டி வந்தேன் பாரிஸிலிருந்து ! “டாக்டர் ஜஸ்டிஸ்” என்பது அவரது நாமகரணம் & “கராத்தே டாக்டர்” என்ற பெயரில் களமிறக்கினோம் 1987-ல் ! லயன் காமிக்ஸின் உச்ச நாட்களுள் அதுவுமொரு முக்கிய காலகட்டம் ! அதுவரையிலான 40 இதழ்களுமே ‘ஹிட் ‘; ‘ஓ.கே ‘; `decent` என்ற ரகத்தில் இருந்தவை ! So மிதமிஞ்சிய நம்பிக்கையோடு நமது இதழ்களை நீங்கள் வாங்கி வந்த நாட்களுமே அவை ! படைப்பாளிகளின் கேட்லாக்கில் பார்த்த போது மிரட்டலான சித்திரங்கள் ; செம ரகளையான கதைக்களமாய்த் தோன்றிய கதையைக் காவடியெடுத்து வாங்கி, பிரெஞ்சிலிருந்தும் மொழிபெயர்த்து அப்பாலிக்கா பணி செய்த போது நொந்தே போக நேரிட்டது !! Gear மாறத் திணறும் வண்டியைப் போல, நெடுக திக்கத் திணறிச் சென்றவரை ஒரு மாதிரியாய் ஒப்பேற்றி இதழாக்கிய போது வயிற்றைக் கலக்கியது ! பற்றாக்குறைக்கு இதன் அட்டைப்படமும் ஒரிஜினல் என்றாலுமே செம சுமார் !! எதிர்பார்த்தபடியே மெகா சொதப்பலாகிட,இந்த கராத்தே டாக்டர்வாளை ஓய்வுக்கு அனுப்பிடத் தீர்மானித்தோம் - நம்மளவில் !

அதே தருணத்தில் ; அதே படைப்பாளிகளின் ; அதே மாதிரியான குருவிரொட்டி சாகஸமும் இல்லாது போகவில்லை – “மறையும் மாயாவி ஜாக்” உபயத்தில் !! அந்நாட்களில் கண்ணுக்குத் தெரியாது கரைந்து போகக் கூடிய சிட்டுக்குருவி சிக்கியிருந்தாலே குதூகலித்திருப்பேன்- இரும்புக்கை மாயாவியின் தாக்கம் அப்படியொரு உச்சத்தில் இருந்த காரணத்தினால் ! இந்த நிலையில் மாயமாகிடக்கூடிய ஒரு ஆக்ஷன் ஹீரோ முழுசாய் கிட்டினால் விட்டிருப்பேனா – என்ன ? “கூடையைப் போட்டு ஒரே அமுக்காய் அமுக்கு !!” என்றபடிக்கு இந்த மாயாவியையும் பாரிஸிலிருந்து வண்டியேற்றினோம் தமிழ் பேசும் பொருட்டு ! If I remember right – மினி லயனில் களமிறங்கினார் இந்த ஹீரோ ! ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்த மினியை மேற்கொண்டும் தடுமாறோ-தடுமாறென்று ஆட்டம் காணச் செய்ய இவரும் உதவினார் ! என்றே சொல்ல வேண்டும் ! ரொம்பவே சுமார் ரகத்திலான கதை !! மெகா ரகத்திலான ஏமாற்றம் ! அங்கே நாயகரைக் காணோம் என்பதை விட, கதையையே காணோம் என்பது தான் நிஜம் ! ஏகமாய் எதிர்பார்ப்புகளை ஏற்றி விட்டு அவற்றிற்கு நியாயம் செய்திட முடியாது நான் தவித்த தருணம் # 2 அதுவே !

தொடர்ந்த நாட்களில் லயனில், திகிலில், முத்துவில், மினி லயனில் என ஏகப்பட்ட அயல்மொழிக்கதைகள் வெளிவரத் துவங்கிய பிற்பாடு நிறையவே hit & miss கதைகள் தலைகாட்டத் துவங்கின தான் ! ஆனால் ஒரு சுவாரஸ்யமான தொடரில் ஒன்றிரண்டு கதைகள் குறைச்சலான பரபரப்போடு வலம் வருவது சகஜம் தானென்று அவற்றைச் சுலபமாய்த் தாண்டிச் சென்றோம் ! உதாரணத்திற்கு சாகஸ வீரர் ரோஜரின் தொடரில் ஒன்றுக்கு மேற்பட்ட மித வேகக் கதைகள் இருந்துள்ளன தான் ; ப்ரூனோ ப்ரேசில் தொடரிலும் தான் ; அவ்வளவு ஏன் – டெக்ஸ் வில்லரின் தொடரிலுமே ! “துயிலெழுந்த பிசாசு” கதையினை மறந்திருக்க மாட்டோம் தானே ? அது போலவே “வெடிக்க மறந்த வெடிகுண்டு” இன்னமுமே என்னை ஓட்டப் பயன்படும் அணுகுண்டு தானே ? So ஒரு தொடரின் ஒரு பகுதியில் மிதமாய் இருப்பனவற்றை, “மறப்போம்; மன்னிப்போம்!” என்பதே நமது அணுகுமுறையாக இருந்து வந்துள்ளது ! At least – எக்கச்சக்கமாய் எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டு ப்யூஸ் பிடுங்கி விட்ட பெட்டி பார்னோவ்ஸ்கியின் spin-off கதை போன்ற சில தருணங்களை மட்டும் கணக்கில் சேர்த்துக் கொள்ளாதிருப்பின் !! ஆனால் நாயகரே மிஸ்டர் சுமாரார் எனும் போது ‘மன்னிப்பு‘ என்ற பதம் அகராதியில் இல்லாததொரு வார்த்தை என்றாகிவிடுவது புரிகிறது ! On the flip side – விளக்குமாற்றுப் பூசை சர்வ நிச்சயமென்று நான் அஞ்சிக் கிடந்துள்ள தருணங்களில் நேர்மாறான reactions-ம் கிட்டியுள்ளன தான் ! So அவ்வப்போது கிடைக்கும் சாத்துக்களும் ; எப்போதாவது கிடைக்கும் போனஸ்களும் ஒன்றுக்கொன்று சமன் செய்து கொள்கின்றன என்று எடுத்துக் கொள்கிறேன்!

End of the day, the buck stops with me என்பதில் எவ்வித மாற்றங்களும் கிடையாதெனும் போது பொறுப்பைத் தட்டிக் கழிக்க நிச்சயமாய் நான் முயன்றிடப் போவதில்லை ! 'அங்கே பாருங்க .முத்து காமிக்சிலேயும் அந்நாட்களிலேயே சொதப்பியிருக்காங்க ; நாங்க புதுசா எதுவும் செய்யக் கிடையாதே !!" என்ற சிறுபிள்ளை வாதங்களை செய்வதும் எனது நோக்கமல்ல !!  இனியொரு முறை இது போலொரு நெருடல் உங்களுக்கு நேர்ந்திட இடம் தராது இயன்றமட்டிலும் நம் தேடல்களைத் துல்லியப்படுத்த முயற்சிப்பேன் ! Forgive me this once please !

புறப்படும் முன்பாய் சில updates :

- ட்யுராங்கோ : இந்த அடக்கி வாசிக்கும் நாயகருக்கும் அட்டகாச அட்டைப்படங்களுக்கும் ஏதோவொரு ராசியுண்டு போலும் ; தாமாய் கலக்கலாய் அமைந்து விடுகின்றன ! காத்திருக்கும் மே இதழும் அதற்கு விதிவிலக்கல்ல ! Blazing cover & blazing action !!

- The Lone Ranger: கௌபாய் கதைகளில் ஊறிப் போயுள்ள நமக்குமே இவரொரு whiff of fresh air என்பேன் ! சும்மா மிரட்டுகிறார் மனுஷன் !

(ஜடாமுடிக்கார கௌபாயின் பில்டப்பில் ஏகமாய் பல்பு வாங்கி நிற்கும் போதே அடுத்த பில்டப்பா ? என்று கேட்கிறீர்களா ? பழக்கதோஷமல்ல இது...!!! மே மாதம் நீங்களே பார்க்கத் தானே போகிறீர்கள்?!)

- பராகுடாThe Climax ! இதனைப் படிக்கப் போகும் வேளையில் கைவசம் ஒரு கர்ச்சீப் இருந்தால் தேவலாமென்பேன் ! புரட்டி எடுக்கும் ஆக்ஷன் அதிரடிகள் உங்கள் நெற்றிகளில் கொணரவுள்ள வியர்வைத் துளிகளைத் துடைக்கவும்; அப்புறம் கடைவாயோரமாய் அகஸ்மாத்தாய் ஊற்றெடுக்கக் கூடிய ஜலத்தை ஒற்றி எடுக்கவுமே பயன்படுமல்லவா ? Is absolutely scintillating stuff !!

May !! Bring it on Lord !! Can't wait for it to unfold.......!!

மீண்டும் சந்திப்போம் guys! Have a wonderful Sunday ! Bye for now !