Powered By Blogger

Saturday, April 27, 2019

மிஸ்டர் மௌனம் !

நண்பர்களே,

வணக்கம். ஒரு கஷ்டமான வாரத்தைத் தாண்டிய மட்டிற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்லத் தான் தோன்றுகிறது முதலில் ! And நலமாகிட வேண்டி அன்பைத் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் # 2 ! பதிவினில் சமீபமாய் எழுந்த சர்ச்சையினில் நான் தலைகாட்ட அவசியமாகிப் போனதால் மட்டுமே எனது உடல்நிலை ; இத்யாதி பற்றியெல்லாம் பகிர்ந்திட நேரிட்டது ! இல்லாவிடின் வழக்கம் போல் வண்டி ஒட்டவே முனைந்திருப்பேன் ! என் பாடுகளை ஒப்பித்து உங்கள் பொழுதுகளைப் பாழ் செய்திட நிச்சயமாய் எனக்கு உடன்பாடிருந்திராது ! Anyways - இதுவும் கடந்து போகுமென்ற நம்பிக்கையோடு looking ahead !! Moreso முன்னிற்பது இந்தாண்டின் ஒரு மெர்சலூட்டும் மாதம் எனும் போது - அதனை சிலாகிக்காது போனால் சுகப்படுமா - என்ன ? காத்திருக்கும் மெகா இதழ்கள் மூன்றெனும் போது அவற்றுள் இரண்டின் previews புண்ணியத்தில் கடந்த 2 வாரங்களைக் கடத்தியாச்சு ! So எஞ்சியிருக்கும் மூன்றாம் biggie பற்றிப் பேசுவது தானே இவ்வாரத்து கோட்டா ?


சத்தமின்றி வந்தார்....யுத்தம் பல செய்தார்....! இடியாய் முழங்கியது அவரது பிஸ்டலாய் இருந்தாலும் மௌனமே மனுஷனின் அடையாளமாய்த் தொடர்ந்தது ! வன்மேற்கில் தறுதலைகளுக்குப் பஞ்சமே கிடையாதெனும் போது இவர் 'வதம் செய்ய விரும்பு' வதில் ஆச்சர்யம் தான் ஏது ? அந்த "இவர்" - மௌனப்புயல் ட்யுராங்கோ தான் என்பதை யூகிப்பதில் சிரமமே இராது தானே folks ? 2017 முதலாய் ஆண்டுக்கு ஒருவாட்டி ஒரு hardcover தொகுப்போடு நம்மை வசீகரித்து வரும் இந்த வன்மேற்கின் ஆக்ஷன் ஸ்டாரை நான் தேர்ந்தெடுத்த பின்னணி பற்றிச் சொல்லியுள்ளேனா ? என்று ஞாபகமில்லை ; 'மறு ஒலிபரப்பாக' இருக்கும் பட்சத்தில் மன்னிச்சூ ! Editions Soleil என்ற பிரெஞ்சுப் பதிப்புலக ஜாம்பவான்களே இந்தத் தொடரின் சொந்தக்காரர்கள் !  ஏற்கனவே வேறொரு நிறுவனத்தில் பணியாற்றிய சமயம் நமக்குத் தெரிந்திருந்த நண்பர் இங்கே கொஞ்ச காலம் நிர்வாகப் பொறுப்பில் இருந்தது தெரிய வர - அவருக்கு அவ்வப்போது மின்னஞ்சல் போட்டுக் கொண்டேயிருப்பேன் - Soleil நிறுவனத்துடன் கைகோர்க்க நமக்கு ஆசையுள்ளது என்பதைத் தெரிவிக்கும் பொருட்டு ! ஆனால் பதில் வந்தபாடைக் காணோமே என்ற மண்டையைச் சொரியும் படலம் தான் தொடர்ந்தது ! ஆனால் ஒரு ஐந்தாறு மாதங்கள் கழிந்த நிலையில் சோலில் நிறுவனத்திலிருந்து மின்னஞ்சலும் ஒரு pdf file-ம்  ஒருசேரக் கிட்டின ! பார்த்தால் - இந்தியாவை பின்னணியாய்க் கொண்டு உருவாக்கப்பட்டிருந்ததொரு புதுத் தொடர் பற்றிய விபரங்களும், அதன் 46 பக்க சாம்பிள்களும் இருந்தன ! இந்திய சார்ந்த கதை என்பதால் maybe நமக்கு ஆர்வம் இருக்கக்கூடுமோ ? என்றும் வினவியிருந்தனர் !! நமக்கோ எப்போதுமே நம் பேட்டைகளைப் பற்றிய கதைகளை விடவும் - அசலூர் ; அசல்நாடு மீதே மையல் ஜாஸ்தி என்பதை அவர்கட்குச் சொன்ன கையோடு அவர்களது கேட்டலாகையும் கோரிப்பெற்றேன் !

இது எல்லாமே 2015 / 2016-ன் ஏதோவொரு தருணத்தில் என்பதால் அன்றைக்கு எனது தேடல்கள் வேறொரு கோணத்திலிருந்தன ! யுத்தக் கதைகள் ; விமானக் கதைகள் ; நிஜ சம்பவங்கள் etc., etc., என்று ஒரு மார்க்கமாய்த் தேர்வுகளைச் செய்த கையோடு உரிமைகளுக்குப் பேச்சு வார்த்தைகளையும் துவக்கியிருந்தேன் ! புதுசாய் பரிச்சயம் என்பதால் நொய் நொய்யென்று நச்சரிக்காது - அவர்களது வேகத்துக்கே நாமும் பயணிப்பது நலமென்று பட்டது ! So அவர்களது டிசம்பர் விடுமுறைகள் ; புத்தாண்டு விடுமுறைகள் என்பனவெல்லாம் முற்றுப் பெற்று வரும்வரைக்கும் பிளேடு போடாதிருந்தேன்! அவர்களுக்கோ ஜனவரி மத்தியில் துவங்கி, மே மாதம் வரையிலும் வரிசையாய் முக்கிய புத்தக விழாக்கள் உண்டு ! ஒவ்வொன்றின் பொருட்டும் அவர்கள் வெகு முன்கூட்டியே தயாராகிட வேண்டிவரும் எனும் போது மீண்டும் ஒரு பெரிய கால இடைவெளி நேர்ந்தது ! ஆனால் இங்கு அதற்குள் "சிப்பாயின் சுவடுகள்" ; "பிரளயத்தின் பிள்ளைகள்" ; அப்புறமாய் அந்த "வானமே எங்கள் வீதி"  ("விண்ணில் ஒரு வேங்கை" அப்போதே ரிலீசா ?? நினைவில்லை !!) இதழ்களெல்லாமே வெளியாகி குமட்டில் கும்மாங்குத்து வாங்கியிருக்க - War stories வேலைக்கு ஆகாது ; கி.நா. ரக நிஜக் கதைகளும் உங்களுக்கு (அப்போதைக்குப்) பிடிக்கவில்லை என்பது புரிந்திருந்தது ! So நான்பாட்டுக்கு முதலில் செய்திருந்த தேர்வுகளுக்கு Soleil மட்டும்  சட்டென்று இசைவு சொல்லியிருக்கும் பட்சத்தில் கதைகளை அவசரம் அவசரமாய் வாங்கி அடுக்கியிருப்பேன்!!(ஏற்கனவே விண்ணில் ஒரு வேங்கை பாகம் 2 & 3 கைவசமுள்ளதுங்கோ !!! Any takers ? 😄)

அவசரம் அவசரமாய்  இன்னொருவாட்டி அவர்களது கதைக்களங்களைப் பரிசீலனை செய்த போது முதலில் கண்ணில்பட்டது ஒரு முரட்டுத் தோரணையிலானதொரு 6 பாக கவ்பாய் தொடரே !  வேகமாய் மின்னஞ்சல் அனுப்பி - "யுத்தம் next ; கவ்பாய் first ப்ளீஸ் ?" என்று கேட்டு வைத்தேன் ! அவர்களோ அந்தத் தொடருக்கான டிஜிட்டல் கோப்புகள் நஹி என்று சொல்லி விட, மறுக்கா கேட்டலாக் பரிசீலனை நிகழ்ந்த போது கண்ணில் பட்டவர் தான் நமது மிஸ்டர்.மௌனம் ட்யுரங்கோ ! இத்தனை மாதங்களாய்ப் பேசிக் கொண்டேயிருந்துவிட்டு எதும் உருப்படியாய் வாங்காது கையை வீசிக் கொண்டு போயிடக்கூடாதே என்று தோன்றியதால் - ட்யுராங்கோவினைத் தீவிரமாய் நெட்டில் அலசினேன் ! இவர் உலகை உலுக்கப் போகும் சூப்பர் ஸ்டாரெல்லாம் கிடையாது ; ஆனால் விறுவிறுப்பான களங்களுக்கு உத்திரவாதம் என்று புரிந்தது !! சரி, அந்தத் தொடர் ; இந்தத் தொடர் என்றெல்லாம் வாய் பேசிவிட்டு கடைசியில் ஒரேயொரு கதை மட்டும் போதுமென்று சொல்ல ஒரு மாதிரியாய்க் கூச்சமாயிருக்க, வாங்குவது தான் வாங்குகிறோம் - மொத்தமாய் 4 கதைகளாய் வாங்கி, ஒரு தொகுப்பாக்கினால் என்னவென்று தோன்றியது !! அதன் பலனே "சத்தமின்றி யுத்தம் செய் !!" பின்னாட்களில் இந்தத் தொகுப்பு வெளியாகிய சமயம் - 4 கதைகளை ஒட்டு மொத்தமாய் வெளியிட்ட எனது மேதாவிலாசத்தை (!!!!) நீங்கள் பாராட்டினீர்கள் !! ஆனால் அங்கே அடியேனின் ஆணி பிடுங்கல்கள் கொஞ்சமும் நஹி ; சூழல்கள் ஏற்படுத்திய தீர்மானமே அது என்பதே நிஜம் !! So திருவாளர் ட்யுராங்கோ தமிழுக்கு வருகை தந்தது இவ்விதமே !

சில தருணங்களில் நாம் பெரிதாய் மெனெக்கெடாமலே எல்லாமே தத்தம் இடங்களில் குடியேறிடுவதுண்டு !! தலைப்பு தூக்கலாய் அமைந்து விடும் ; அட்டைப்படம் தானாய் அழகாய் அமைந்து போகும் ; அச்சு பளிச் என்று டாலடிக்கும் ; making தெளிவாய் அமைந்திடும் ! வேறு சில வேளைகளிலோ முட்டு முட்டென்று முட்டினாலும் பலன் வெகு சுமாராய்த் தானிருக்கும் ! ட்யுராங்கோ முந்தைய ரகமே !! இதுவரையிலுமான 2 தொகுப்புகளும் classy ஆக அமைந்து போனதில் எங்களது ஸ்பெஷல் முனைப்புகளெல்லாம் கிஞ்சித்தும் கிடையாது ; routine-ல் பணியாற்றும் போதே அழகான மலரொன்று துளிர் விடக்கண்டோம் - அவ்வளவே !! And இதுவரைக்குமான அந்த 2 ஆல்பங்களுமே கிட்டத்தட்ட காலி என்பது சந்தோஷத்துக்கு icing தந்திடும் சமாச்சாரம் ! So ஒரு ஹாட்ரிக் வெற்றியினைத் தர வல்ல இதழாய் "வதம் செய்ய விரும்பு" அமைந்திட்டால் அட்டகாசமாக இருக்கும் ! And இதோ இம்முறையும் இதன் அட்டைப்படத்தை டிசைன் செய்துள்ள பொன்னனின் கைவண்ணம் :
ஒரிஜினல் அட்டைகளே இரு பக்கங்களுக்கும் - நமது நகாசு வேலைகளோடு ! And இதுவொரு hardcover இதழ் என்பதால் special effects-க்கும் பஞ்சமிராது ! அட்டைப்படம் நன்றாக வந்திருப்பதாய்த் தோன்றியது எனக்கு ; உங்களுக்கும் பிடித்திருப்பின் சூப்பர் ! And இதோ உட்பக்க previews-ம் !!

இம்முறை ஓவராய் உம்மணாம்மூஞ்சியாய் முறைத்துத் திரியாது, மனுஷன் லைட்டாக ரொமான்ஸ் மூடும் காட்டுகிறார் ; ஆனால் கதைகள் எப்போதும் போலவே crisp & straight !! இதன் மொழியாக்கம் கருணையானந்தம் அவர்கள் செய்திருக்க - அவரது வழக்கமான பாணி, ட்யுராங்கோவின் கரடு முரடான களத்தில் சற்றே நெருடுவது போலப்பட்டது எனக்கு ! கதை மாந்தர்கள் எல்லோருமே முரட்டு பீஸ்களே எனும் போது அவர்கள் பேசும்  வரிகளில் அத்தனை நயம் அவசியமல்ல என்று நினைத்தேன் ! So ஊருக்கு கிளம்பும் 1 மணி நேரத்துக்கு முன்வரையிலும் நெடுக திருத்தங்களை / மாற்றங்களை செய்திட்டேன் ! முதல் 2 கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருக்க ; episode # 3 ஒரு one shot !! பரபரப்பிற்குப் பஞ்சமிராது - வழக்கம் போல் !

வண்டி வண்டியாய்த் தண்ணீரை குடித்த கையோடு ,ஓய்வென்று வீட்டில் படுத்துக்  கிடப்பதே அடுத்த பரிசோதனை வரையிலான prospects எனும் போது - லேப்டாப்பை அருகே வைத்துக்கொண்டு லொட்டு லொட்டென்று தட்டுவதும், அடுத்த கிராபிக் நாவலான "நித்திரை மறந்த நியூயார்க்" பக்கமாய்க் கவனத்தைத் தந்திடுவதுமே  பொழுதுபோக்குகளாய்த் தென்படுகின்றன    !! IPL கூட (எனக்கு) போரடிக்கிறது என்பதாலோ - என்னவோ, டுபுக்கு ஐ.டி-யில் களமிறங்கி சுவாரஸ்யமூட்ட Mr.அனாமதேயர் முயன்றுள்ளார் போலும் ! பொதுவாய் ஞாயிறுக்கு அப்பால் நான் வாரநாட்களில் இங்கே பதிவுப்பக்கம் வருவது அரிது என்பதை புரிந்திருந்தது, இடைப்பட்ட தருணத்தில் இயன்ற குளறுபடியை அரங்கேற்றி விட்டு - நண்பர்கள் அடித்துக் கொள்வதையும், யாரேனும் தடித்த வார்த்தைகளை என்பக்கமாய் பிரயோகிப்பதை  ரசிப்பதுமே அன்னாரின் பரந்த நோக்கமென்பது புரிகிறது ! தவிர, இங்கு நிலவிடும் நட்புக்கள் நிறையவே உறுத்தல்களையும் சம்பாதித்து வருவதும் அப்பட்டம் !! இரக்கமிலா உலகிது என்பதிலோ ; இங்கே anything & everything goes என்பதிலோ சந்தேகமிருந்ததில்லை எனக்கு ! ஆனால் இத்தனை தரமிறங்கிப் போகும் அந்த mindset- ல் தான் எத்தனை  வன்மம்  என்பதையும், இத்தனை கூத்துகளுக்கும் நேரம் எங்கிருந்து கிடைக்கிறதோ என்பதையும் புரிந்து கொள்வது தான் சிரமமாக உள்ளது !! End of the day - நாலு பேர் அடித்துக் கொள்வதைப் பார்ப்பதில் அத்தனை புளகாங்கிதம் கிட்டுகிறதெனில் - அது நிச்சயமாயொரு உளவியல் பிரச்னையே ! Anyways நல்லதோ-கெட்டதோ, இன்று நாம் சேர்ப்பவற்றின் பலன்கள் போய்ச் சேர்வது  நம் சந்ததிக்கே !! அனாமதேயர் என்றைக்கேனும் அதனைப் புரிந்திடாது போகப் போவதில்லை ! And கொஞ்சமாய் நான் தேறிய பிற்பாடு - சைபர் க்ரைமில் உயர்நிலையில் பணியாற்றும் தன் உறவினரை அறிமுகம் செய்திட வாக்களித்துள்ளதொரு  வாசக நண்பரின் சகாயத்தை ஏற்றுக் கொள்வதாகவும் உள்ளேன் !

அப்புறம் இன்னொரு விஷயம் பற்றிய எனது எண்ணங்களுமே !! Oft repeated by now ; but worth broadcasting once more I guess ! பொதுவாய் இங்கே நம் பதிவுப் பக்கங்களுக்கு வருகை தந்திடும் நண்பர்கள் ஒவ்வொருவருக்குமென ஒரு பாணி இருந்திடுவது உண்டு !  வைகை எக்ஸ்பிரஸ் போல தட தடக்கும் நமது கோவை ஸ்டீலார் ஒரு பாணியில் பதிவிடுவாரெனில் ; 68 ; 78 என்று வருகையைப் பதிவிடுவது நண்பர் texkit-ன் பாணியாக இருந்திடும் ; "மாடஸ்டி" என்று உச்சரிப்பது நண்பர் ராவணன் இனியனின் பின்னூட்டமாக இருந்திடும் !! இன்னும் சிலரோ hi என்ற ஒற்றை சொல்லோடு நிறுத்திக் கொள்வரெனில் ; "me the 7-th ; mee the 200-th" என்று மைல்கல்களை விளையாட்டாய்ச் சொந்தம் கொண்டாடும் நண்பர்களும் நிறைய !! அதே சமயம் நான் முன்வைக்கும் கேள்விகளுக்கு துல்லியமாய்ப் பதில் சொல்ல மட்டுமே நேரம் எடுத்துக் கொண்டு பதிவிடும் நண்பர்களும் உண்டு ; பொருளாளர் செனா அனா-வைப் போல சங்க இலக்கியம் முதல், சுஜாதா இலக்கியம் வரை ரவுண்ட் கட்டியடிக்கும் அன்பர்களும் உண்டு ! இன்னும் சிலரோ - நட்புக்களை ஜாலியாய் சந்தித்து ; உரையாடி ; கலாய்த்து மகிழும் களமாகவும் இதனை பாவித்து வருவதுண்டு !! சமீபமாய் இந்த டுபுக்கு ஐ-டி அனாமதேயர் முன்வைத்த வரிகளை பார்க்கும் போது - இங்கு நிலவிடும் இந்த சகஜ ; சௌஜன்ய பாணிகளின் மீதான கடுப்ஸ் தூக்கலாய்த் தெரிந்ததாய் எனக்குத் தோன்றியது ! I might be wrong on that of course -  ஆனால் ஒற்றை விஷயத்தை இங்கு நான் தெளிவாக்கிக் கொள்ள விரும்புகிறேன் guys :

பின்னூட்டமிடும் பாணிகளிலும், பாங்குகளிலும் வேற்றுமை இருப்பினும், இங்கு யாரும், யாருக்கும் காமிக்ஸ் காதலிலோ ; அதன் ஆழங்கள் பற்றிய ஞானத்திலோ ; உலக விஷயங்களிலோ சளைத்தவர்களில்லை என்பது உறுதி !! And இது பரபரப்பான வாழ்க்கைகளின் மத்தியில், லேசாய் இளைப்பாற வழி தேட முனையும் காமிக்ஸ் இதழ்களின் வலைப்பக்கமே எனும் போது - "இங்கே இப்படித் தான் பதிவிட வேண்டும் ; அறிவுஜீவி குல்லாவுடனான பதிவுகளே இங்கு சுகப்படும்" என்ற கெடுபிடிகளோ ; சட்ட திட்டங்களோ இருத்தல் அபத்தம் என்பேன் ! Of course - காமிக்ஸ் பற்றிய அலசல்களுக்கே இங்கு முன்னுரிமை என்பதில் துளியும் மாற்றுக் கருத்தில்லை என்றாலும், நட்புக்களின் விளைநிலங்களாகிட இது உதவிடின் - BRAVO.... FULL STEAM AHEAD !! இந்த மாதம் படிக்கும் புக்கின் கதை எனக்கு மறு மாசம் மறந்து போகலாம் ; இந்த மாதம் கலாய்த்த கார்ட்டூன் உங்களுக்கு ஆறு மாதங்களுக்கு அப்பால் நினைவில்லாது போகலாம் ! ஆனால் இங்கு துளிர்க்கும் நட்புக்களுக்கு ஆயுட்காலம் ரொம்ப ரொம்ப அதிகம் அல்லவா ? So "பாத்ரூம் போறச்சே கூட இங்கிலீபீஸில் தான் கதைச்சாகணும் ; இல்லாங்காட்டி ஐம்பது ரூபாய் fine" என்று குச்சியைத் தூக்கித் திரியும் கண்டிப்பான ஹாஸ்டல் வார்டானாய் இங்கு செயல்பட நினைப்பது யாருக்கு என்ன பலனைத் தந்திடப் போகிறது ?   இங்கு வருகை தருவோரில் எவரும் முதிர்ச்சியிலா சிறாரில்லை ; அத்தனை பேருமே காமிக்ஸை நேசிக்கும் முதிர்குழந்தைகளே எனும் போது, யாருக்கும், எதுவும் கற்றுத் தரும் அவசியங்களோ, தகுதிகளோ இருப்பதாய் நான் நிச்சயமாய்க் கருதிடவில்லை ! So be yourselves folks ; இது உங்களின் ஆடுகளமே !! Oh yes -இதை படித்த கணமே  'முதுகு சொரிஞ்சிவிட ஆள் தேடறியாக்கும் ?" என்று "அன்பாய்" சில பல க்ரூப்களிலும், பக்கங்களிலும் நொடியில் விமர்சனம் எழுமென்பது தெரியாதில்லை ! ஆனால் கிட்டத்தட்ட 7 வருடங்களை முழுசாய் இங்கு செலவிட்ட பின்னேயும் அத்தகைய விமர்சனங்களுக்கு நான் காது கொடுப்பின், என்னை மிஞ்சிய பேமானி வேறு யாரும் இருக்க முடியாது ! So more power to the critics - ஏதோவொரு விதத்தில் அவர்களது பொழுதுகளையுமே சுவாரஸ்யமாக்குகிறேன் என்ற மட்டில் க்ஷேமம் !!

And a request on this please guys : இந்த விவகாரம் பற்றிய எனது நிலைப்பாடைச் சொல்லவே இந்த வரிகள் ! PERIOD !!! So மேற்கொண்டு இவற்றின் மீதான அலசல்களோ ; கூடுதல் எண்ணங்களோ, விவாதங்களோ  இங்கு வேண்டாமே - ப்ளீஸ் ! 

Back on track - மே மாதத்து குண்டூஸ் புக்ஸ் மூன்றும் விறு விறுப்பாய்த் தயாராகி வருகின்றன !! ட்யுராங்கோ & Lone ரேஞ்சர் அச்சு முடிந்து, பைண்டிங்கில் உள்ளன !! பராகுடாவினில் முன்கதைச் சுருக்கம் மாத்திரமே pending இருந்தது - சென்ற ஞாயிறு நான் சென்னைக்குப் புறப்பட்ட பொழுதில் ! நான் ஊர் திரும்ப குறைந்தது நாலைந்து நாட்களாகிடக்கூடும் என்பதனாலேயே முன்கதைச் சுருக்கத்தில் நண்பர்களின் ஒத்தாசையைக் கோரியிருந்தேன் ! ஆனால் சர்ச்சைகளுக்கே நேரம் போதவில்லையெனும் போது யாருக்கும் இதற்கான அவகாசம் இருந்திருக்கவில்லை போலும் ! So நான் ஊர் திரும்பிய பிற்பாடு மைதீன் தயக்கத்தோடு நினைவூட்ட - "ஆண்டவா !!" என்று தலையில் குட்டிக்கொள்ளத் தான் தோன்றியது !  "அலைகடலின் அசுரர்களை" புரட்டியபடியே  மெது மெதுவாய் எழுதித் தந்திட, அதனை டைப்செட் செய்து இன்று (சனியன்று) தான் அச்சுக்குச் சென்றுள்ளது !! மொத்தம் 168+ பக்கங்கள் கொண்ட இதழ் எனும் போது, இதன் பிரின்டிங் வேலைகளே 2 நாட்களை விழுங்கி விடும் ! அப்புறம் தான் பைண்டிங்கே !!  இங்கு மாத்திரம் ஓரிரு நாட்கள் முந்தியிருக்க முடிந்திருக்கும் பட்சத்தில் திங்களன்று உறுதியாய் despatch சாத்தியப்பட்டிருக்கும் ! ஆனால் இப்போது that is out of question ! மே தின விடுமுறையின் போது உங்களை எட்டிப்பிடித்திட வாய்ப்புகள் லேது !! Sorry guys !!

And மே மாதத்தின் 'தல' COLOR இதழும் போன மாதமே ரெடி என்பதால் - பராகுடா நிறைவுற்ற மறு நாளே டெஸ்பாட்ச் இருந்திடும் !! அதுவரையிலும் கொஞ்சமாய்ப் பொறுமை ப்ளீஸ் ? Bye all !! See you around !! Have a lovely weekend !!

216 comments:

 1. பாரகூடாவிற்க்காக கத்துக்கொண்டிருக்கின்றேன்

  ReplyDelete
 2. Eagerly waiting for may books🤔🤔🤗🤗

  ReplyDelete
 3. Editor sir if time permits please publish that story having our national background🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  ReplyDelete
  Replies
  1. சார்...அது ரசிக்கக்கூடிய விதத்தில் இல்லை ! பொதுவாய் இந்தியா பற்றிய (காமிக்ஸ்) பார்வைகளில் பாம்பாட்டிகள் ; யானைகள் ; நடுரோட்டில் மாடுகள் ; ராஜா ; இளவரசி ; மந்திரவாதி என்ற template-களே மிகுந்திருக்கின்றன ! நிச்சயமாய் நாம் முகம் சுளிக்கவே செய்வோம் அவற்றைப் பார்த்தால் !

   Delete
  2. அந்த' விண்ணில் ஒரு வேங்கை' பாகம் 2.3 ஒரே புத்தகமாக வெளியிடலாமே.

   Delete
  3. விண்ணில் ஒரு வேங்கை யின் இரண்டாவது பாகம் ஆசிரியர் ஏற்கனவே வெளியிட்டுவிட்டார். அளவுக்கு அதிகமாக "பாராட்ட்ட்டுக்" களை பெற்றதால் முன்றாம் பாகம் வெளியிட வேண்டாம் என்று ஆசிரியர் முடிவு செய்து விட்டார்.
   (இத்தனைக்கும் முதல் பாகம் ஓரளவு ஹிட். எனக்கும் இரண்டாவது பாகம் பிடிக்க வில்லை).

   Delete
  4. சார்..."விண்ணில் ஒரு வேங்கை" பாகம் # 2 இன்னும் வெளியாகவில்லையே ?? அல்லது 'டுபுக்கு எடிட்டர்' அந்தப் புண்ணியத்தையும் ஈட்டி விட்டாரா ?

   "வானமே எங்கள் வீதி" தான் நீங்கள் குறிப்பிடும் இதழ் என்று நினைக்கிறேன் !!

   Delete
  5. Yes. அவர் சொல்வது அதையே.

   Delete
  6. "வானமே எங்கள் வீதி" முதல் பாகம்.


   "பாதைகளும் பயனங்களும்" என்று இரண்டாவது பாகம் வந்துள்ளது சார்.

   Delete
  7. ///"வானமே எங்கள் வீதி" முதல் பாகம்.


   "பாதைகளும் பயனங்களும்" என்று இரண்டாவது பாகம் வந்துள்ளது சார்.///

   யெஸ்!! இரண்டாம் பாகம் வெகு சுமாராக அமைந்ததால் அடுத்த பாகம் வெளியாவதில் தடங்கல் ஏற்பட்டது!

   Delete
  8. /////'டுபுக்கு எடிட்டர்' அந்தப் புண்ணியத்தையும் ஈட்டி விட்டாரா ?////

   'டுபுக்கு எடிட்டர்' வெளியிட்டாரா என்பது எனக்கு தெரியாது.
   இரண்டு வாரம் மூன்பு facebook க்கில் இருந்த காமிக்ஸ் group ல் சேரந்தேன். ஆனால் அங்கு தான் pdf வடிவில் க்ரே மார்கெட் நடக்கிறது என்று தெரிந்த, மறு நீமிடமே நான் அந்த group பை விட்டு வெளியேறி விட்டேன்.

   சிலசமயம் மனதில் படத்தை வெடுக்கென்று பதிவு செய்வேனே, தவிர திருட்டு விஷயத்திற்கு ஒருபோதும் துனை போக மாட்டேன்.

   தயவுசெய்து என் நேர்மையை சந்தேக பாடாதிர்கள்.

   Delete
  9. கணேஷ் ஜி உங்களது நேர்மை மேல் சிறிதும் சந்தேகம் இல்லை.

   Delete
 4. Replies
  1. மீரான் சார். நல்வரவு உங்கள் பதிவை பார்த்து மாதங்கள் பல ஓடி விட்டது.

   Delete
  2. மீரான் நலமா உங்களின் போன் நம்பரை மாற்றி விட்டீர்களா

   Delete
  3. நண்பர்களுக்கு நன்றி.! நான் மிகவும் ஆரோக்கியமாக உள்ளேன்.இனி முன்பு போல் இங்கே பங்கு பெறுவேன். என்னுடைய போன் நம்பர் 9962207637

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. This comment has been removed by the author.

   Delete
 5. அவசரகதியில் புத்தகங்களை கொண்டு வரும் முயற்சி மட்டும் வேண்டாம் சார். ஒரிரு நாட்கள் தாமதமானாலும் பரவாயில்லை! தனியொருவன் என்ன விலையில் வருகிறது சார்?

  ReplyDelete
  Replies
  1. அவசரகதியில் பணியாற்ற இம்மாதம் சாத்தியங்கள் பூஜ்யம் சார் ; எல்லாமே மெகா இதழ்கள் - அளவில் ; தயாரிப்பு அவசியங்களில் ; எதிர்பார்ப்புகளில் !

   "தனியொருவன்" - Rs.250

   Delete
  2. // அவசரகதியில் புத்தகங்களை கொண்டு வரும் முயற்சி மட்டும் வேண்டாம் சார். ஒரிரு நாட்கள் தாமதமானாலும் பரவாயில்லை //
   +1

   Delete
 6. Get well soon Sir! Take Care Sir! May month issues may be full of excitement!

  ReplyDelete
 7. சிகிச்சையின் வலி வேதனைகளிலிருந்து மீண்டுவந்து நீங்கள் வழக்கமான அதே பாணியில் இம்மாம்பெரிய பதிவை - அதுவும் இவ்வளவு சீக்கிரமாகவே - போட்டுத் தாக்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது எடிட்டர் சார்!

  ட்யூராங்கோ அட்டைப்படம் - அபாரம்!! சின்னதாகவேனும் 'கோடை மலர்' என்று குறிப்பிடப்பட்டிருப்பது குஜால் அளிக்கிறது! ட்யூவின் ரகளைகளைக் காண பலத்த ஆவல்!!

  சொல்ல மறந்துவிட்டேன்.. ஐயாம் 13th for the first time in my life!

  ReplyDelete
  Replies
  1. அந்த வலிகளிலிருந்து மண்டையைத் திசை திருப்பவே இந்தப் பதிவு !! எதிலேனும் கவனம் ஒருமுகப்பட்டால் அந்த நேரத்திற்காவது தாக்குப் பிடித்து விடலாமே என்ற நப்பாசை தான் !

   Delete
  2. ஈ வி
   இல்லாங்காட்டி " பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு" னு பாட்ட பாடிடுங்க.

   போன புக் ஃபேருக்கு மொத நாளு உங்க கந்தர்வ கான குரல்ல கெறங்கடிச்சீங்களே....

   Delete
  3. ///போன புக் ஃபேருக்கு மொத நாளு உங்க கந்தர்வ கான குரல்ல கெறங்கடிச்சீங்களே.////

   ///போன புக் ஃபேருக்கு மொத நாளு உங்க கந்தர்வ கான குரல்ல கெறங்கடிச்சீங்களே.////

   ///போன புக் ஃபேருக்கு மொத நாளு உங்க கந்தர்வ கான குரல்ல கெறங்கடிச்சீங்களே.////

   என் மொபைல்ல காப்பி-பேஸ்ட் பண்றதுல ஏதோ பிரச்சினை போல இருக்கு… ஹிஹி!

   பை த வே, டேங்க் யூ சோ மச் j ji!

   Delete
  4. @கரூர் சரவணன்

   ///போன புக் ஃபேருக்கு மொத நாளு உங்க கந்தர்வ கான குரல்ல கெறங்கடிச்சீங்களே.////

   ///போன புக் ஃபேருக்கு மொத நாளு உங்க கந்தர்வ கான குரல்ல கெறங்கடிச்சீங்களே.////

   அச்சச்சோ! மறுபடியும் காப்பி-பேஸ்ட்ல ஏதோ பிரச்சினை!

   Delete
  5. இல்லங்க அது உங்கங்கங்க கான குயில் கொரலோட எக்கோ...

   எக்கோ....

   எக்கோ....

   Delete
  6. 13ம்பெற்று பெருவாழ்வு வாழ்க.

   Delete
 8. வரப்போகும் 'தனியொருவன்' அவரது ஆரம்பக்கதையேவா சார்.அவர் எப்படி லோன் ரேன்ஜர் ஆகிறார் என்பது பற்றியா

  ReplyDelete
  Replies
  1. இல்லை சார் ! இது குறித்து 2 பதிவுகளுக்கு முன்பாய் நான் எழுதியிருந்ததிலிருந்து :

   https://lion-muthucomics.blogspot.com/2019/04/blog-post_13.html

   //இந்தத் தொடரின் துவக்கப் புள்ளியிலிருந்து ஆரம்பிக்கும் வாய்ப்பும் நமக்கு இருந்தது தான்! சின்னப் பையனாக இருந்து - தி Lone ரேஞ்சராய் பரிணாம வளர்ச்சிக்கு ஆளாகும் கதையை பிளாஷ்பேக்கில் சொல்லும் அந்த ஆல்பத்தையே நமது முதல் புள்ளியாக்கிட எனக்கு லைட்டாய் சபலம் எட்டிப்பார்த்தது ! ஆனால் நாயகரை முதலில் நம்மிடையே வாகாய் establish செய்தான பிற்பாடு-அந்த ப்ளாஷ்பேக் சாகஸம் பக்கமாய் கவனத்தைத் திருப்பலாம் மென்று நினைத்தேன்! பின்னோரு சமயம் அந்த முதல் ஆல்பத்தைப் படிக்க நேரும் போது எனது இன்றைய தீர்மானத்தின் லாஜிக் உங்களுக்குப் புரியாது! போகாது guys !//

   Delete
 9. கோடை மலர் - ஆஹா இதை முன்னட்டையில் பார்ப்பதற்க்கு, பழைய ஞாபகத்தில் மனசு பரவசமடைகிறது

  ’வதம் செய்ய விரும்பு’ அட்டை படங்கள் அருமை. ஆனால் டைட்டில் கொஞம் கீழே இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ என தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. புக்காகும் போது பாருங்கள் சார் - எல்லாமே உரிய இடங்களில் இருக்கும் காரணங்கள் புரியும் !

   Delete
 10. எல்லாம் சில காலம் மட்டுமே.

  ஆனால் மனதில் வடுக்களாய் அவை மாறிவிட்டால் சிரமம் சார்.

  பரவால்ல.உட்ருவோம்.

  ஆனாலும் எடிட்டரய்யா.

  நீங்க நெம்ப ஓவரு நல்ல மனுஷன் சாரே.

  ட்யூரங்கோ...
  இந்த வாட்டி ரொமான்ஸ் வேறயா...ஹிஹிஹ்ஹி...

  ReplyDelete
  Replies
  1. லீவுக்கு புக் இல்லனு ரெம்ப வருந்தந்தேன்.....
   பெரிய மனசு பண்ணி உட்டுட்டா போச்சு...
   எங்க அல்லாருக்கும் பெரிய மனசு தான் சார்.

   Delete
  2. பராகுடா சும்மாவே அடல்ட்ஸ் ஒன்லி புத்தகம்....இப்ப எப்டிருக்குமோ...

   Delete
  3. தனி ரேஞ்சரு படிச்சுதாம் பாப்பமே.

   Delete


 11. எடிட்டர் சார் @தாங்கள் விரைவில் நலம்பெற உங்களின் காமிக்ஸ் காதல் உதவட்டும்......!!!

  கம்பேக்கிற்கு முன்பு திகில், லயன் & முத்துவில் கோடைமலர்கள் வந்திருக்கலாம். ஆனா, கோடைமலர்னா அது லயன்ல வந்தவை தான், அன்றும் இன்றும் என்றும் டாப்....!!!!

  லயன் கோடைமலர்களும் பல்வேறு பெயர்களில் ஒவ்வொரு கோடையிலும் அசத்தின. கோடைமலர், சம்மர் ஸ்பெசல், ஹாலிடே ஸ்பெஷல், சென்சுவரி ஸ்பெசல், Top10 ஸ்பெசல், ட்ரீம் ஸ்பெசல், ஜாலி ஸ்பெஷல், கெளபாய் ஸ்பெசல்---- என, அவ்வப்போது காலத்திற்கும், சாதனை இதழ்களின் போதும் அவற்றிற்கு பெயராகச் சூட்டி, நம்மை மகிழ்வித்து- எடிட்டர் சாரும் மகிழ்ந்தவை

  *சதி வலை-1985
  *கோடைமலர்-1986
  *கோடைமலர்-1987
  *ட்ராகன் நகரம்-1988
  *வைக்கிங் தீவு மர்மம்-1989
  *திக்குத் தெரியாத தீவில்-1990
  *லயன் ஹாலிடே ஸ்பெஷல்-1992
  *இரத்த வெறியர்கள்-1993
  *லயன் சென்சுவரி ஸ்பெசல்-1994
  *லயன் Top10 ஸ்பெசல்-1995
  *மரணமுள்-1996
  *கார்சனின் கடந்த காலம்1&2-1997
  *மந்திர மண்டலம்-1999
  *இருளின் மைந்தர்கள்-2003
  *மெகா ட்ரீம் ஸ்பெசல்-2004
  *லயன் ஜாலி ஸ்பெஷல்-2005
  *லயன் கெளபாய் ஸ்பெசல்-2006

  இப்படி மனதில் நீங்கா இடம்பெற்ற கோடை மலர்கள், கம்பேக்கிற்கு 7ஆண்டுகள் கழித்து லயன்-முத்து கோடைமலராக சென்ற கோடையில் டியூராங்கோவின் மெளனமாயொரு இடிமுழக்கமாக முழங்கியது.

  இந்த கோடையில் மலரும் லயன்-முத்து கோடைமலர்- "வதம் செய்ய விரும்பு"- எல்லா விற்பனை சாதனைகளையும் வதம் செய்யட்டும்....!!!!!

  ReplyDelete
  Replies
  1. வந்துட்டாருய்யா நம்ப காமிக்ஸ் ரிக்கார்ட் ரூம் மாஸ்டரு...

   Delete
  2. இவற்றுள் by far the best - 1986 கோடை மலர் தான் ! At least எனக்காவது !

   Delete
  3. அனைவருக்கும்தான் சார்வாள்

   Delete
 12. Sir, All 3 books of May seem to be a little heavy dose (for me) because of Only Action and Adventure content.
  If there is a story of Comedy genre also released with these it will be more appropriate. Just a thought. Don't mistake me.

  ReplyDelete
  Replies
  1. அதானே..!

   கார்டூன் ப்ரியர்களெல்லாம், கொஞ்சம்
   உக்கிரமா ,
   கொடூரமா ,
   அக்னி நட்சத்திரமா,
   சிவப்பு சூரியனா ,

   எடிட்டரை மொறைச்சி பாப்போம்.

   அப்பத்தான் அடுத்தவாட்டி இப்படி நடக்காம பாத்துக்குவாரு.

   Delete
  2. Yes boss. Not a big hero,like Lucky Luke, is needed. Kid Ordinn group or Colonel Clifton would be enough.

   Delete
  3. வருஷ ஆரம்பத்திலேயே இம்முறை மொத்தமே 6 கார்ட்டூன்கள் தான் ; மீத 6 மாதங்கள் வறண்டவையே என்பது அறிவிக்கப்பட்ட போதே இந்த "முறைக்கும் பேரணி" முனைப்புக் காட்டியிருக்கக் கூடாதோ ?

   நான் என்ன செய்வது சார்ஸ் ? "கார்ட்டூன்" என்றால் டரியலாவோரல்லவா நம் மத்தியில் மிகுந்துள்ளனர் ?

   Delete
  4. ///நான் என்ன செய்வது சார்ஸ் ? "கார்ட்டூன்" என்றால் டரியலாவோரல்லவா நம் மத்தியில் மிகுந்துள்ளனர் ?///

   எனக்கென்னவோ அவங்கள்லாம் டிடெக்டிவ் கதையவே காமெடியா படிக்கறாங்களோன்னு தோனுது! :P

   Delete
 13. அதெல்லாம் இருக்கட்டும்க எடிட்டர் சார்.. இந்தப் பதிவைப் போட்டது நீங்க தானா?!! :D

  ReplyDelete
  Replies
  1. இல்ல....

   மீசைல மண்ணு ....சாரி மரு ஓட்டுன
   ஒங்க டபுள்ஸ் ஆக்ட்டா...

   Delete
  2. அந்தக் காலத்து ஜெய்ஷ்ங்கர் துப்பறியும் படங்களில் - மரு வைத்த அடியாட்கள் கடலுக்குள்ளிருந்து வரும் கடத்தல் படகுகளுக்கு லாந்தர் விளக்குகளில் சிக்னல் காட்டுவார்கள் ; படகுகளும் அங்கே கரை சேரும் ! அதே பாணியில் இனி நானொரு லாந்தரை பதிவின் இறுதியில் ஆட்டிக் காட்டுகிறேன் - 'நான் நானே தானென்று' அடையாளம் கண்டிட !!

   இல்லாங்காட்டி முன்கூட்டியே ஒரு சங்கேத பாஷையை நிர்ணயம் செய்து கொள்ளுவோம் : "கோழி முதல்லே வந்துச்சா ? முட்டை முதல்லே வந்துச்சா ?" என்பதை கேள்வியாக வைத்துக் கொள்வோம் ! "தயிர் பச்சடி தான் முதல்லே வந்துச்சு !" என்பது மாதிரியான அறிவான பதில்களை password ஆக செட் பண்ணிவிடுவோம் ! Ok ?

   Delete
  3. எடிட்டர் சார் 🤣🤣🤣🤣

   Delete
  4. எடிட்டர் சார்.. :)))))) இத்தனை வலியுடனும் ரணகளம் பண்ணுறீங்களே!! :))))

   Delete
  5. \\\தயிர் பச்சடி தான் முதல்லே வந்துச்சு !" என்பது மாதிரி\\\\.

   முதலில் புரியவில்லை.

   சார் நீங்கள் சிலசமயம் ஈ.வி யவே மிஞ்சும் அளவுக்கு லொள்ளு பன்றிங்க.

   Delete
  6. \\\தயிர் பச்சடி தான் முதல்லே வந்துச்சு !" என்பது மாதிரி\\\


   சிரிச்சு முடியல...:-)))))

   Delete
  7. ரொம்பச் சமீபத்தைய அனுபவம் சார் !

   ஒரு பெயர் வைக்கும் function க்குப் பத்து நாட்களுக்கு முன்னே போயிருக்க, அசைவம் பந்தியில் ! ஒரு தேக்சாவில் சிக்கன் '65 ; இன்னொன்றில் முட்டை பிரியாணி ; வாளியில் பாயா என்று சும்மா டாலடித்துக் கொண்டு நிற்க - அமர்ந்திருக்கும் அத்தனை பெரும் நாசூக்காய் உமிழ்நீர்ப்பிரவாகத்தை மறைக்கும் முயற்சியில் ஏதேதோ பாவ்லா காட்டிக் கொண்டிருந்தோம் ! பரிமாறும் ஆசாமிகளோ தயிர் பச்சடி ; ஊறுகாய் ; அப்புறமாய் பிரெட் அல்வா ; அப்பளம் என்று பொறுமையைச் சோதித்துக் கொண்டிருந்தார்கள் ! அந்த ஞாபகம் தான்...)))

   Delete
 14. வணக்கம். நான் தான்... எப்பவும் 200 க்கு போஸ்டுக்கு அப்புறம் வர உண்மையான அசோக்கு என தெரிவித்து கொண்டு...
  இனி ஆசிரியருக்கு ஒரு password கொடுத்துடனும் போல. பதிவை போடும் முன் அதை சொல்லி விட்டே போடணும் ��
  காமிக்ஸ் படிப்பவர்களிடம் , ரசிப்பவர்களிடம் இவ்வளவு வன்மமா...அதிர்ச்சியாக உள்ளது.. வேதனையாயும்....
  இதுவும் கடந்து போகும்...

  People don't realise the pain you take to keep the comics at international standard. Class, story selection, Quality and still keep the price at the lowest. Honestly you are a god's gift to our Comics fraternity. You held our finger and took us to the far corners of comics world. Without you, we wouldn't have known the heroes of the world. Your health is more important to us than the books. Kindly take care sir.
  Get well soon.

  ReplyDelete
  Replies
  1. ஆமாமா
   சொல்ல மறந்துட்டேன்.

   நானும் ஒரிஜினல்....

   அக்மார்க்...

   ISI...
   ISO 2019...

   BS....

   ஹால் மார்க்....

   J தான் சார்...பன்னீர் ஜாங்கிரி குடுப்பேன்ல .... அதே J தானுங்கங்கங்கக...   Delete
  2. அந்த பன்னீர் ஜாங்கிரியை கொடுக்கிறப்ப என்னை மறந்திட்டுங்களே.😭😭😭

   Delete
  3. @ Ashok : சார்...இந்தப் பெரிய வார்த்தைகளுக்கு ஒரு பத்து சதவிகித அருகதையாவது நான் கொண்டிருப்பின் - அதனை ஒரு ஆயுட்காலப் பெருமிதமாகக் கொண்டிடுவேன் ! கடமைகளைச் செய்வோம் சார் திறந்த மனதுகளோடு...... பலன்களை மேலிருப்பவர் பார்த்துக் கொள்ளட்டுமே !

   Delete
  4. ///Quality and still keep the price at the lowest. Honestly you are a god's gift to our Comics fraternity. You held our finger and took us to the far corners of comics world. ///

   Unma & semma!

   Delete
  5. ////நான் தான்... எப்பவும் 200 க்கு போஸ்டுக்கு அப்புறம் வர உண்மையான அசோக்கு என தெரிவித்து கொண்டு... ///

   ஹா ஹா ஹா!! :)))

   Delete
  6. ///J தான் சார்...பன்னீர் ஜாங்கிரி குடுப்பேன்ல .... அதே J தானுங்கங்கங்கக...///

   ஆங்! இப்பத்தான் ஞாபகத்துக்கு வருது... பன்னீர் ஜாங்கிரிய! :)

   Delete
  7. மனதிலிருந்து வந்த உண்மையான வார்த்தைகள் அவை சார்.. சற்றும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல
   கூட்டிலிருக்கும் குஞ்சுகளுக்காக இரை தேடி அலையும் தாய்ப்பறவை போல், எல்லா இடங்களிலும் சென்று Best of the best ஐ கொண்டு வந்து சேர்க்கிறீர்கள்..
   ஒரு கதை சோடை போனாலும் அர்ச்சனை செய்து விடுகிறோம்.
   You bear that too..
   So we are trully thankful. Take care please

   Delete

  8. @ Ashok,

   அருமையான உதாரணம்..!

   Delete
  9. @Ashok

   அழகான உண்மை! அருமையான உண்மை!
   தமிழிலோ, ஆங்கிலத்திலோ - சொல்ல நினைப்பதை அழகான வார்த்தைகளாக்குவது ஒரு கலை! அந்தக் கலை உங்களுக்கு நன்றாக வாய்த்திருக்கிறது!

   நீங்கள் மேற்கூறிய இவ்வுண்மை 'எல்லோருக்கும்' புரிந்திடும் நாளொன்று வாராதா என்பதே நம் அனைவரின் ஏக்கம்!!

   Delete
  10. என்னைடைய ஐ.டி யும் போலி இல்லை.

   டெக்ஸ் என்றாலே நோ டாங்ஸ் ஸுன்னு சொன்ன, அடியேன் பெங்களூர் கணேஷ் என்று அனைவருக்கும் புரிந்து விடும்.

   Delete
  11. Best of the best ஐ கொண்டு வந்து சேர்க்கிறீர்கள்..
   ஒரு கதை சோடை போனாலும் அர்ச்சனை செய்து விடுகிறோம்.////

   நிதர்சனமான உண்மை.

   Delete
  12. சார்...அவ்வப்போது கிடைக்கும் அர்ச்சனைகளின் புண்ணியத்தில் தானே வடிகட்டும் சல்லடை உருப்படியாய் உள்ளதாவென்று அடிக்கொருதடவை சரி பார்த்துக் கொள்ள முடிகிறது ! So (காயப்படுத்தாத) அர்ச்சனைகளும் நல்லதே !!

   Delete
 15. இந்த வாரம் கொஞ்சம் லேட்டாதான் பதிவு வரும்னு நினைச்சேன்.ஆனா வழக்கத்துக்கு மாறா முன்கூட்டியே வந்தது பரவசப்படுத்தியது.

  வாழ்க சனிக்கிழமைகள்.

  சம்பளமும் வருது.
  பதிவும் வருது.

  இதுக்கு மேல வேறென்ன வேண்டும் ?

  ReplyDelete
  Replies
  1. வீட்டில் ஈயோட்டுவது ரெம்போ சிரமம் சார் !! அதான் சீக்கிரமே ஆஜர் !

   Delete
  2. இதுக்கு மேல வேறென்ன வேண்டும் ?//
   இந்த சந்தோசத்தையும் சேத்துக்குங்க. ஆசிரியரால் Never AGAIN என்று சொல்லப்பட்ட Never Before Special புத்தகத்தை உங்களுக்கு அன்புப்பரிசாக தர நண்பர் ஒருவர் முன் வந்திருக்கிறார். ஆகஸ்ட்ல வேணுமா உடனே வேணுமான்னு மட்டும் சொல்லுங்க.

   Delete

  3. அட..!
   எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..! எனக்கும் தன்
   அன்பு நெஞ்சங்களின் ஓரம் இடம் கொடுத்து அழகு பார்க்கும் நண்பர்களை அடைந்தது மிகப் பெரிய வரம்.

   அப்படிப்பட்ட அன்பளிப்பை முன்பின் அறியாத கொரியர்காரர் கைகளில் வாங்குவதைவிட அன்பு அநாமதேயர் கைகளில் வாங்குவதையே நான் தேர்வு செய்கிறேன்.
   சென்ற வருடம் நண்பர் அறிவரசு அவர்கள் 'வல்லவர்கள் வீழ்வதில்லை 'பரிசளித்ததது மறக்கவியலாத நிகழ்வு.

   எட்டும் தொலைவில் ஆகஸ்ட் காத்துள்ளது எனும்போது கொண்டாட்டங்கள் இன்றிலிருந்தே ஆரம்பிக்கிறது.

   Delete
  4. @MP

   சூப்பர்!

   @GP

   வாழ்த்துகள்

   Delete
  5. G P இந்த வாட்டி ரெண்டு ஜாங்கிரியா குடுத்து சரி பண்ணீட்டா போச்சு.

   ஸ்வீட் எடு கொண்டாடு....

   Delete
  6. ஸ்வீட் எனும் போது நம் மக்கான் பேடா நண்பரும் நினைவுக்கு வருகின்றார் ! நலமாய் இருப்பாரென்று நம்புவோம் !!

   Delete
 16. ட்யூராங்கோ கமான்ன்ன்...

  ReplyDelete
 17. விஜயன் சார், வெல்கம் பேக்.

  டியுரங்கோவின் தலைப்பு கடந்த இரண்டு கதைகளையும் போலவே சூப்பர். அவரின் அமைதி மற்றும் மாஸ்க்கு ஏற்றது போல் ரகளையான தலைப்பு.

  பராகுடா 168 பக்கங்கள் என்றால் செம வாசிப்பு அனுபவம் உறுதி ஆகிறது. இது ஹார்ட்பௌன்ட்டில் வர வாய்ப்பு உள்ளதா?

  ReplyDelete
  Replies
  1. அப்படிப் பார்த்தால் இம்மாத இதழ்கள் மூன்றுமே hardcover-க்குத் தகுதியானவைகளே ! பட்ஜெட்டில்லை சார் அதற்கு & கூரியர் கட்டணங்களும் எகிறிப் போய் விடும் ! So பராகுடாவின் கிளைமாக்ஸ் பாகம் - அதன் ஆரம்ப பாகத்தைப் போலவே நார்மல் பைண்டிங்கில் தான் !

   Delete
 18. // பரபரப்பான வாழ்க்கைகளின் மத்தியில், லேசாய் இளைப்பாற வழி தேட முனையும் காமிக்ஸ் இதழ்களின் வலைப்பக்கமே எனும் போது - "இங்கே இப்படித் தான் பதிவிட வேண்டும் ; அறிவுஜீவி குல்லாவுடனான பதிவுகளே இங்கு சுகப்படும்" என்ற கெடுபிடிகளோ ; சட்ட திட்டங்களோ இருத்தல் அபத்தம் என்பேன் ! Of course - காமிக்ஸ் பற்றிய அலசல்களுக்கே இங்கு முன்னுரிமை என்பதில் துளியும் மாற்றுக் கருத்தில்லை என்றாலும், நட்புக்களின் விளைநிலங்களாகிட இது உதவிடின் - BRAVO.... FULL STEAM AHEAD !! இந்த மாதம் படிக்கும் புக்கின் கதை எனக்கு மறு மாசம் மறந்து போகலாம் ; இந்த மாதம் கலாய்த்த கார்ட்டூன் உங்களுக்கு ஆறு மாதங்களுக்கு அப்பால் நினைவில்லாது போகலாம் ! ஆனால் இங்கு துளிர்க்கும் நட்புக்களுக்கு ஆயுட்காலம் ரொம்ப ரொம்ப அதிகம் அல்லவா ? So "பாத்ரூம் போறச்சே கூட இங்கிலீபீஸில் தான் கதைச்சாகணும் ; இல்லாங்காட்டி ஐம்பது ரூபாய் fine" என்று குச்சியைத் தூக்கித் திரியும் கண்டிப்பான ஹாஸ்டல் வார்டானாய் இங்கு செயல்பட நினைப்பது யாருக்கு என்ன பலனைத் தந்திடப் போகிறது ? இங்கு வருகை தருவோரில் எவரும் முதிர்ச்சியிலா சிறாரில்லை ; அத்தனை பேருமே காமிக்ஸை நேசிக்கும் முதிர்குழந்தைகளே எனும் போது, யாருக்கும், எதுவும் கற்றுத் தரும் அவசியங்களோ, தகுதிகளோ இருப்பதாய் நான் நிச்சயமாய்க் கருதிடவில்லை //

  செம்ம செம்ம
  அழகான ஆத்மார்த்தமான வரிகள் சார் 🙏🏼🙏🏼🙏🏼

  இதுவும் கடந்து போகும்
  ஆனால் நண்பரின் ஆலோசனையை மறந்துவிடாதீர்கள் சார்

  உடல்நிலையை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள் சார்
  எல்லாம் வல்ல இறைவன் துணையிருக்கட்டும் 🙏🏼
  .

  ReplyDelete
  Replies
  1. //உடல்நிலையை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள்//

   அவஸ்தைப்பட்டாச்சே சார் ; இனி கவனிக்காது விடுவேனா ? அன்புக்கு நன்றிகள் சார் !

   Delete
 19. "வதம் செய்ய விரும்பு" அட்டைப்படத்திற்கு ஓவியர் வடிவமைத்தை தலைப்பு அற்புதம்!

  ReplyDelete
  Replies
  1. யெஸ்!! அட்டைப் படத்தில் அதிக கவனத்தைக் கோருவது அதுவே!!

   வாழ்த்துகள் - ஓவியர் சிகாமணிக்கும், மெருகூட்டிய பொன்னருக்கும்!

   Delete
 20. கேங்கோட வர்றவன் கேங்ஸ்டர் (டெக்ஸ்), ஆனா தனியா வர்றவன் மானஸ்டர் ( ட்யூராங்கோ)..

  ReplyDelete
  Replies
  1. அப்ப வின்செஸ்டர் எடுத்துக் கிட்டு வர்றவன் வின்ஸ்ட்டரா?

   Delete
  2. இவிங்களாவது பரவாயில்ல.துப்பாக்கியோடு வர்றாங்க.பின்னால ஒருத்தர் துப்பாக்கியே இல்லாம வர்றாரு.

   Delete
  3. இன்னும் சில ஸ்டார்ஸ்.

   லக்கி லுக் - லக்கிஸ்டார்


   Delete
 21. Replies
  1. டெக்ஸ்!
   டைகர்!!
   டியுரங்கோ!!!

   Delete
  2. சீக்கிரமே இந்தப் பட்டியலோடு தி LONE ரேஞ்சர் !!

   Delete
 22. While wait for the book, I will re reading the Durango and baracuda, update and admire these two books.
  So no problem,vijayan sir! I know you have the right reasons!and I always have lucky luke and kid artin to pass the time! (artinin ayutham, boom boom padalm!)

  ReplyDelete
  Replies
  1. I just read the last post comment about your health.
   Get well soon sir. may God give the strength to get through this!

   Delete
  2. Many thanks sir...God willing this too will pass !

   Delete
 23. ஆசிரியரே தங்களின் உடல்நிலை பூரணமாக குணடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் இது ஜால்ரா அல்ல நமக்கெல்லாம் நல்ல காமிக்ஸை தருவதே சந்தோஷமென நினைக்கும் ஆத்மா நலமடைய உண்மையாகவே கடவுளை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  ReplyDelete
 24. சார் அட்டைப்படம் அருமை...மீண்டும் சிவந்த கோடை மலராய் அட்டை...எழுத்துரு எடுப்பாய் தெரியுதி நாணயம் தாங்கிய கோடை மலருடன்....விண் வேங்கை இரு பாகத்தையும் விடலாமே நன்றாயிருப்பதாயோ...தேறலாமென தோனினாலோ....கோடை மலர்களுக்காக காத்திருக்கிறேன்..பரகுடாவ முழுதாய் படிக்க...கடல்(கதை) கொள்ளையில் பங்கு பெற

  ReplyDelete
  Replies
  1. Yes yes vinnil Oru vengai publish the other two parts Sir. Before the time expires

   Delete
  2. ///Yes yes vinnil Oru vengai publish the other two parts Sir. Before the time expires///

   time expire ஆனாக்கூட பரவாயில்லை.. படிச்சுட்டு நாம expire ஆயிடக்கூடாது! :D

   Delete
  3. ஹை...இங்கே கூட ஒரு வோட்டு பதிவாகியிருக்கே !!

   Delete
  4. EV செம்ம டைமிங்

   Delete
 25. சூப்பர் பதிவு......காத்திருப்போர் பட்டியலில்...

  ReplyDelete
 26. ///!(ஏற்கனவே விண்ணில் ஒரு வேங்கை பாகம் 2 & 3 கைவசமுள்ளதுங்கோ !!! Any takers ? 😄 ///

  பே.. பே .. பேபே ..

  (மௌணவிரதமாக்கும்)

  ReplyDelete
  Replies
  1. எங்க இதிக்கி பேரு தான் மௌன விரதமாக்கும்.பே பே பேன்னா ஊமை வெரதம்.கமெண்ட்( அந்த கேள்விக்கு)
   போடாம இருந்தா போதும்.

   நான் தான்

   Delete
  2. பதட்டத்துல பேச்சு வந்திடுச்சிங்க ஸ்வாமீ..! :-)

   Delete
  3. இல்லே..இல்லே...அது கள்ளாட்டை ! மௌனம் சம்மதம் என்று எடுத்துக் கொள்கிறேன் !

   ஏற்கனவே கோவை கவிஞர் ஒரு வோட்டுப் போட்டுவிட்டார் - மீத 2 பாகங்களுக்கு & அவர் ஒரு வோட்டுப் போட்டாக்கா அது 100 போட்டா மாதிரி !!

   Delete
 27. முன்னட்டையில் ட்யூஙங்கோ.. அப்படியே க்ளின்ட் ஈஸ்ட்வுட் .. 👌👌👌👌

  ReplyDelete
  Replies
  1. இதுதான் நெனச்சவுடனே சொல்லிரனும்! முந்திட்டீங்களே பாஸ்!!

   Really Durango looks like Clint Eastwood 👌👌👌

   Delete
 28. அன்பு எடிட்டர் ,உங்களுக்கு ஆண்டவர் பூரண நலத்தை தர வேண்டுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. கைகூப்பும் படங்கள் சார் !

   Delete
 29. போன வாரம் பதிவில் நடந்த விவாதங்களை தற்போது தான் பார்த்தேன்.
  ஆசிரியர் இதற்கு மேல் எதுவும் கூற வேண்டாம் என்று கூறி விட்டதால்.

  No comments.

  உடல்நிலையை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. No comments-க்கொரு நன்றி + get well soon-க்கு இன்னொன்று சார் !

   Delete
 30. // ஒரு கஷ்டமான வாரத்தைத் தாண்டிய மட்டிற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்லத் தான் தோன்றுகிறது முதலில் //
  பணிப் பளு காரணமாக அதிகம் எட்டிப் பார்க்க முடிவதில்லை,மே இறுதி வரை இதுதான் நிலை,தங்களுக்கு உடல்நலனில் சற்றே சிக்கல் என்ற தகவல் மட்டும்தான் தெரியும்,தற்போது தங்களின் உடல்நலன் பரவாயில்லையா அய்யா.
  மனச் சிக்கல் மிகுந்த சிலரை தாண்டி போவது தற்போதைய வாழ்வில் கடினமான செயலே,ஏதாவது ஒரு வகையில் உங்களை முடக்கி போடுவதே இதன் பிரதான நோக்கம்,அந்த மடமையர்களின் நோக்கம் என்றும் நிறைவேறப் போவதில்லை,எது எப்படி இருப்பினும் எல்லாவற்றையும் தாண்டி வரும் மனத் தெம்பு தங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறேன்,நீங்கள் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது அய்யா,எழுச்சியுடன் வாருங்கள்,தங்கள் உடல்நலனை கவனித்துக் கொண்டு மகிழ்வுடன் பணி ஆற்றுங்கள்,தங்களின் உற்சாகமான பணியே மடமையர்களுக்கு நீங்கள் தரும் சரியான பதிலடி...
  இதுவும் கடந்து போகும்....

  ReplyDelete
 31. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 32. சிறந்த கதைகளுக்காக நீங்கள் இவ்வளவு மெனக்கெடுவது , பின்புலத்தில் நீண்ட research செய்வது காமிக்ஸ் வாசகர்களான
  எங்களின் மகிழ்ச்சிக்காகவும், திருப்திக்காகவும் தான் என்று நினைக்கையில் சந்தோஷமாகவும், மறுபறம் ஒருவித குற்ற உணர்ச்சி அல்லது அதை....என்னவென்று சொல்லத்தெரியவில்லை....நண்பர் சொல்வது போல் கதை நன்றாக இருந்தால் பாராட்டுகிறோம், கதை சோடைபோனால்
  அர்ச்சனை செய்கிறோம். அவ்வளவே...ஆனால் காமிக்ஸ் என்கிற ரசனையின் மூலம் வாசகர்களாகிய எங்களை ஒருங்கிணைக்கும் உந்து சக்தி நீங்களும், உங்களின் எழுத்துக்களும் மட்டுமே..

  ReplyDelete
  Replies
  1. குற்ற உணர்வு என்பதெல்லாம் பெரிய வார்த்தை சார்...வேண்டாமே ப்ளீஸ் ? மனசுக்குப் பிடித்ததைச் செய்ய புனித தேவன் மனிடோ எனக்கொரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் ; அதை இயன்றமட்டிற்கும் எல்லோருக்கும் நிறைவாய்ச் செய்திட முயற்சித்து வருகிறேன் - அவ்வளவே ! சில நேரங்களில் அந்த முயற்சிகளில் வெற்றியும், நமக்கு மகிழ்ச்சியும் பலனாகின்றன ! சில தருணங்களில் சொதப்பல்ஸ் & எனக்கு அர்ச்சனைஸ் !

   End of the day - மகிழ்வித்துப் பார்க்கும் அந்த நொடிகளில் கிடைக்கும் சந்தோஷத்துக்கு விலையே கிடையாது சார் ! அது ஒன்றே என் வண்டிக்கான பெட்ரோல் !!

   Delete
  2. நான் எப்போதுமே நமது காமிக்ஸ் படிக்கும் போது மிகவும் மகிழ்வுடன் வுள்ளேன்

   Delete
 33. காட்டில் ஒரு சிங்க குட்டி யாம்
  விளையாட்டில் அது ரொம்ப சுட்டியாம்
  பெத்த அம்மா அப்பாவ
  அது விட்டு பிரிஞ்சு
  தன்னந்தனியா தத்திதாவி திரிஞ்சு
  அது காடு மலை மேடு எல்லாம்
  தாண்டி வந்திருச்சாம்.
  _ LONERANGER க்கு வரவேற்பு.
  (வாலி மன்னிப்பாராக)

  ReplyDelete
  Replies
  1. ஆவலாய்க் காத்துள்ளேன் சார் "தனியொருவன்" ஈட்டவுள்ள வரவேற்பினைக் கண்டிட !

   Delete
 34. //People don't realise the pain you take to keep the comics at international standard//

  All said is true.Salute Mr Vijayan

  ReplyDelete
 35. ரிப்போர்ட்டர் ஜானியின் இடியாப்ப சிக்கல் இல்லாத கதை எது என்று நண்பர்களுக்கு தெரியுமா? முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை ஜானி ஓடிக்கொண்டே இருப்பார்... வில்லன் அவரை வைத்து விளையாடுவான். முதல் பக்கத்தில் இருந்து கடைசி வரை விறுவிறுப்பாக இருந்தாலும் கதையில் குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை.

  ஆம். அந்த கதை திகில் கனவு. நண்பர் ஒருவரிடம் கடந்த வருடம் book exchange முலம் கிடைத்தது.‌இன்று தான் படிக்க நேரம் கிடைத்தது.

  கதையின் வில்லன் பெயர் யாருக்காவது ஞாபகம் உள்ளதா?

  ReplyDelete
  Replies
  1. //கடைசி பக்கம் வரை ஜானி ஓடிக்கொண்டே இருப்பார்... வில்லன் அவரை வைத்து விளையாடுவான்//

   2 ஆண்டுகளுக்கு முன்பாய் வந்த "ஒரு சிலந்தியின் வலையில்" கூட இதே மாதிரியான கதை தானே சார் ?

   Delete
  2. ///கதையின் வில்லன் பெயர் யாருக்காவது ஞாபகம் உள்ளதா?///

   பெருந்தலைவர்னு நினைக்கிறேன்.!

   Delete
  3. விஜயன் சார், ஆனால் இந்த அளவு அந்த கதை நேர்கோடு + சிக்கல் இல்லாத கதை கிடையாது என்பது எனது கருத்து.

   Delete
  4. கதையின் வில்லன் பெயர் சித்திரவதையன்

   Delete
  5. எனது மனைவிக்கு கூட இந்த கதை பிடித்து இருந்தது. பதினைந்து நிமிடத்தில் படித்து விட்டார்கள்... ஆமாம் முதல் பத்து பக்கம் அடுஊஅடு கடைசி பத்து பக்கங்கள். எப்படி?

   Delete
  6. ரிப்போர்ட்டர் ஜானியை ஒரு புதிர் அரங்கு போன்ற தீவில் ஓடவிட்டு உட்கார்ந்த இடத்திலிருந்தே எல்லாவற்றையும் இயக்குவானே வில்லன்.. அந்த கதைதானே பரணி.!?
   அதில் அவனை பெருந்தலைவன் என்றும் ஓரிரு இடங்களில் குறிப்பிட்டதாக ஞாபகம்.! இல்லை அது வேறு கதையா என்றும் தெரியவில்லை.. பரண் மேல் ஏறினால் பஞ்சாயத்து ஆகிவிடும் (சாப்பாட்டு பிரச்சினைப்பா. ) என்பதால் நினைவில் இருந்ததை வைத்து சொன்னேன்..! :-)

   Delete
  7. இதையெல்லாம் படிக்க வெச்சிட்டிங்களே என்று பரணியை ஏதாவது சொல்லி திட்டியிருப்பார்கள்.. அதை சொல்ல கூச்சப்பட்டுக்கிட்டு டைப்பிங் மிஸ்டேக் மாதிரி பரணி சமாளிச்சிருக்கார் சார்.!

   Delete
  8. /அடுஊஅடு// ஆட்டோ correction பிராப்ளம் சார். "அடுத்து" என்பதே மொபைல் கொலை செய்து விட்டது.

   கண்ணா @ அதே கதைதான். சித்திரவதையன் என ஜானி அவனை குறிப்பிடுவார். அவனை இதற்கு முன்னர் வேறு கதையில் எதிர் கொண்டதாக ஜானி சொல்வார். அந்த கதை எது என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரியுமா?

   Delete
 36. காமிக்ஸ் சந்திப்புக்காக (EBF போன்ற) எத்தனை சிரமங்கள் இருந்தாலும் சமாளித்து தவறாமல் ஆஜராகும்..

  நமது நண்பர் ஷல்லூம் ஃபெர்னான்டஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

  ReplyDelete
  Replies
  1. அடடே...நம் சார்பில் வாழ்த்துக்களும் !! நலமும், வளமும் உடனிருக்கட்டும் நண்பரே !

   Delete
  2. ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

   Delete
  3. ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார்,.!

   Delete
  4. தவறாமல் ஆஜராகிறார்னா...புரில KOk

   வெளிநாட்டலருந்து வர்றாரோ....

   எனிஹவ் ஹேப்பி பர்த்டே பேபி ...

   Delete
  5. ஷல்லூம் ஃபெர்னான்டஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

   Delete
  6. ///தவறாமல் ஆஜராகிறார்னா...புரில KOk

   வெளிநாட்டலருந்து வர்றாரோ....///

   ஹாஹாஹா..

   வெளிநாட்டு மாப்பிள்ளை வேறொரு அன்பர்.. அவரும் அப்படித்தான் Jஜி.!

   ஷல்லூம் EBFகளின் போது ஜாம்நகர்,ஹைதராபாத் , போன்ற ஊர்களில் இருந்தெல்லாம் ட்ரெய்ன் கிடைக்காமல் விடிய விடிய பஸ்ஸில் பய்ணித்து வந்து சேர்ந்திருக்கிறார் ஜி.!
   வாழ்த்தும்போது ஏதாவது நல்லதைச் சொல்லி வாழ்த்தணுமில்லயா.. தேடிப்பாத்ததுல இதுமட்டும்தான் கிடைச்சுது.. அதான்....ஹிஹி..!

   Delete
  7. ///வாழ்த்தும்போது ஏதாவது நல்லதைச் சொல்லி வாழ்த்தணுமில்லயா.. தேடிப்பாத்ததுல இதுமட்டும்தான் கிடைச்சுது.. அதான்....ஹிஹி..! ///

   ஹிஹி!! கிடைச்ச கேப்ல பர்த்துடே பேபிய ஒரு ஓட்டு ஓட்டியாச்சு!! :))

   Delete
 37. டியர் எடி, ட்யூராங்கோ அட்டை அதகளம்...

  நீங்கள் அடிகோட்டீய அந்த இந்திய சம்பந்தமான கிராஃபிக் கதை, சில வருடங்கள் படித்த Indian Dreams போன்றே தெரிகிறது... அப்படி என்றால் அதை வெளியிடமாலே இருக்கலாம். பாம்பாட்டி, யானை என்று நம்மை இன்னும் கட்டம் கட்டுவதில் அவர்கள் மாறவே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. டின்டின் கதைகளிலேயே நம்மை காமெடி பீஸ்களாய் சித்தரித்துப் பழகியவர்கள் தானே சார் ? நாம் மாறிவிட்டோம் என்பதை அவர்கள் இன்னமும் உணர்ந்த மாதிரி எனக்குத் தென்படலை !!

   Delete
 38. Replies
  1. தனி புக்காக வந்தது போல் நினைவில்லை சார் ; maybe இந்தக் கதையானது ஏதேனும் ரெகுலர் இதழினுள் இடம்பிடித்திருக்கலாம் ! Not sure though !

   Delete
  2. முத்து மினி காமிக்ஸில் இன்ஸ்பெக்டர் கருடா துப்பறியும் "மயக்கும் மாது மர்மம்" புத்தகம் வெளிவந்தா? இதன் விளம்பரத்தை நேற்று நமது பழைய புத்தகத்தை புரட்டும் போது பார்த்தேன்.

   Delete
  3. சிக்கென்ற சைஸ் சிக்கனமான விலை (2 ரூபாய்) என விளம்பரபடுத்தி இருந்தீர்கள்.

   Delete
 39. சொல்ல முடியாத உடல்வலியிலும் இந்த வார பெரும் பதிவு வாசக நண்பர்களின் கமெண்டுகளுக்கு பதில் என சிரத்தை மேற்கொள்வதற்க்கு நன்றிகள் சார் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க சார்

  ReplyDelete
  Replies
  1. இத்தனை அன்பும்..பாசிட்டிவ் எனர்ஜியும் இழையோடும் இடத்தினில் இளைப்பாறுவது கூட ஒரு ரெஸ்ட் தானே சத்யா ?

   Delete
  2. அட்டை பெட்டி பாகுபலி சத்யா சார்.

   நம்ம எடிட்டராவது ....
   ரெஸ்ட் எடுக்குறதாவது....

   Workaholic கேள்விப்பட்டிருப்பீர்கள்..

   ஆனா அவரு Comicshaholic ...

   நாமளுந்தான்.

   சரிதானே எடிட்டர் சார்

   நாடி நரம்பெல்லாம் காமிக்ஸ் ஏறுன நம்மள மாதிரி காமிக்ஸ் சிஷ்யர்களின் குருபாட்ஷா அவர்.

   Am I correct Editor sir.

   Correct me if not so...

   Delete
  3. J ஐயா அட்டைப்பெட்டி பாகுபலி சத்யா போதுமே அந்த சார் வேண்டாமே

   Delete
 40. மாடஸ்டி பிளைசி

  ReplyDelete
 41. வல்லவர்கள் வீழ்வதில்லை. நீங்க சொன்னது தான சார் .இடைஞ்சல் கொடுப்பதன் மூலம் சம்பந்தபட்டவரின் உடல் மற்றும் மனவுறுதியை குலைக்க முயலும் நபர்களின் செயல்களை இதுவும் கடந்து போகும் என அமைதியாக இருப்பதை விட நீங்கள் அந்த பிரச்சனைகளின் தலை மீது ஏறி நடந்து சென்றால் உங்கள் அடிச்சுவட்டில் பயணிக்க காமிக்ஸ் கனவில் வாழும் முதிர்ச்சியுராத காமிக்ஸ் குழந்தைகள் பின் தொடர்ந்து வருவார்கள் என்பது உறுதி என்ற போதிலும் அதற்கு Bலைமையேற்றுச் செல்ல உங்களின் உடலையும் மனசையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புவது ஏனென்றால் உங்களால் தான் எனது பணிச்சுமை. மன சோர்வு ஆகியவை குறைகிறது. நீங்கள் வழங்கும் காமிக்ஸ் எல்லோருடைய அன்பையும் ஆயுளையும் நீட்டிக்கட்டும்.

  ReplyDelete
 42. டியர் விஜயன் சார்,
  என் மகள் +2 பாஸ் செய்து விட்டாள்'. அடுத்த கட்ட படிப்பு நிறைய ஆலோசனைகள் (மார்க் 5 5 2 - maths_Biology). எனவே, பிண்ணூட்டத்திற்கு இரண்டு மாத விடுப்பு கேட்க எண்ணியிருந்தேன்.
  ஆனால் , தாங்கள் உடல் நலக்குறைவிலும், பதிவு வெளியிடும் போது உள்ளே வராமல் இருக்க முடியவில்லை சார்
  தாங்கள் உடல் நலம் பெற்று உங்களுக்கு ( எங்களுக்கு ) பிடித்த பணி செய்ய இறைவனை பிரார்த்திக்கிறேன் சார்..

  ReplyDelete
  Replies
  1. மகளுக்கு எங்களுடைய வாழ்த்துகள் சார்.!!

   Delete
 43. எடிட்டர் அவர்கள் உடல் நலம் தேறிவந்தமைக்கு இயற்கைக்கு நன்றி. என்றும் நலமோடிருந்து பல்லாண்டுகள் எமக்கு பல காமிக்ஸ் படைப்புகளைக் கொண்டுவருவீர்கள் சார். லோன் ரேஞ்சர் - எதிர்பார்க்கவைக்கிறார். முன்பு வேறொரு பிப்பக வெளியீடாக 'முகமூடி வீரன் பில்லி' என்ற கதாபாத்திரம் வந்துகொண்டிருந்தது. அவர் சொல்லும் 'ஹிப் ஹிப் ஹிப் ஹூர்ரே' யில் ஆரம்பித்த முகமூடி குதிரை வீரர்கள் மீதான ஈர்ப்பு இன்றும் தொடர்கிறது. 'ஸோரோ' எனக்கு தனிப்பட மிகப்பிடித்தவர் அவரை தேடியபோது லோன் ரேஞ்சரின் சில கதைகளும் கிடைத்து படித்திருக்கிறேன். அபாரம். சித்திரங்களும் கதையோட்டமும் நிச்சயம் நம் நண்பர்களையும் ஈர்க்குமென்று நம்புகிறேன்.

  ReplyDelete
 44. விண்ணில் ஒரு வேங்கையின் அடுத்த பாகங்களும் வரட்டுமே! அது ஒரு தனிரகமான தொடர். எனக்குப் பிடித்திருந்தது. வதம் செய்ய விரும்பு - அட்டைப்பட டிசைன் - வித்தியாசமாக உள்ளது. பின்னடைப் படங்கள் முன்னட்டையிலும் முன்னட்டைப் படங்கள் பின்னட்டையிலும் பின்னணியில் ரிப்பீட் ஆவது ஏன்? என்பதற்கு விடை புத்தகத்தை கையிலேந்தும்போது கிடைக்குமென்று நம்புகிறோம்.

  ReplyDelete
 45. இந்த வருடத்தின் பிளாக்பஸ்டரான தங்க தலைவனின் அந்த மூன்று பாக இளமையில் கொல் பற்றிய அறிவிப்பு ஏன் இன்னும் வரவில்லை..??

  ReplyDelete
 46. விண்ணில் ஒரு வேங்கை: முதல் பாகம் ஓகே. ஆனால் அடுத்து வந்த கதை முடியவில்லை.. படிக்க முடியாமல் கஷ்டப்பட்டு படித்தேன். எனவே இவர்கள் பரணில் இருப்பதே மிக நன்று. சாரி.

  ReplyDelete
  Replies
  1. கரெக்டா சொல்லனும்னா முதல் பாகம் interesting ஆக இருந்தது.

   Delete
  2. சார் ,விண்ணில் ஒரு வேங்கை ஓரே புத்தகம்தான் வந்தது.
   நீங்கள் சொல்வது 'வானமே எங்கள் வீதி 'தொடர்.

   Delete
  3. Thanks for the correction Govindaraj. ஆம் அது வானமே எங்கள் வீதி.

   Delete
  4. Thanks for the correction Govindaraj. ஆம் அது வானமே எங்கள் வீதி.

   Delete
 47. பராகுடா வுக்காக வெயிட்டிங் ..முன்கதை சுருக்கம் எழுதித்தர எழுத்தாளர் யாருமில்லை என்பது வருத்தமே.நேரம் போதாமை காரணம் என்று நினைக்கிறன்.தனிஒருவன் வருகையும் சிறந்ததே.டுராங்கோ ஒரே மாதிரி கதை இதுவரையும் .வரும் கதை வித்தியாசமாக அமையும் என நம்புகிறேன் .

  ReplyDelete
 48. விண்ணில் ஒரு வேங்கை ? பின்னாளில்.என்றாவது..

  ReplyDelete
 49. பதிவை நிதானமா படிச்சு முடிச்சாச்சு. வலிகளையும் வசவுகளையும் வயிறு குலுங்க சிரிக்கச் செய்யும் காமெடிகளாக மாற்றும் கலை உங்களுக்கு நன்றாகவே வருகிறது.

  டியூராங்கோ அட்டைப்படம் நன்றாக இருக்கிறது. வன்மேற்கின் உக்கிரத்தைக் காட்ட சிவப்பை விட சிறந்த கலர் ஏது. டியூராங்கோவின் முதல் இரண்டு இதழ்களுமே நன்றாக இருந்தது. இந்த இதழுக்கும் வெயிட்டிங்

  விரைவில் குணமடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. //வலிகளையும் வசவுகளையும் வயிறு குலுங்க சிரிக்கச் செய்யும் காமெடிகளாக மாற்றும் கலை உங்களுக்கு நன்றாகவே வருகிறது.// உண்மை இதுதான் நானும் என்னுடைய வாழ்க்கையில் கடைபிடிக்க நினைப்பது

   Delete
  2. @Kumar Salem

   ///உண்மை இதுதான் நானும் என்னுடைய வாழ்க்கையில் கடைபிடிக்க நினைப்பது///

   குட்! ஆனாப்பாருங்க.. வாழ்க்கைன்னா ரெண்டு சமாச்சாரங்கள் இருக்கு - வீட்டுக்கு வெளியே, வீட்டுக்கு உள்ளே'ன்னு! எடிட்டரின் வழிமுறையை 'வீட்டுக்கு உள்ளே' கடைபிடிச்சீங்கன்னா மாடஸ்டியோட கொண்டை சைஸுக்கு உங்க மண்டை வீங்க வாய்ப்புகள் இருக்கு! ;)

   Delete
  3. கரெக்ட் சார். ரெண்டு சம்சாரத்தையும் வீட்டுக்கு உள்ளே வச்சிக்கிட்டா மண்டை வீங்கத்தான் செய்யும். அதனால ஒண்ணு வெளியில் ஒண்ணு உள்ளே அப்டிங்கறதுதான் சரி.

   Delete
 50. டியூராங்கோ மொத்தம் எத்தனை பாகங்கள்? மீதமுள்ள பாகங்கள் எத்தனை?

  ReplyDelete
 51. டியர் விஜயன் சார்,
  என் மகள் +2 பாஸ் செய்து விட்டாள்'. அடுத்த கட்ட படிப்பு நிறைய ஆலோசனைகள் (மார்க் 5 5 2 - maths_Biology). எனவே, பிண்ணூட்டத்திற்கு இரண்டு மாத விடுப்பு கேட்க எண்ணியிருந்தேன்.
  ஆனால் , தாங்கள் உடல் நலக்குறைவிலும், பதிவு வெளியிடும் போது உள்ளே வராமல் இருக்க முடியவில்லை சார்
  தாங்கள் உடல் நலம் பெற்று உங்களுக்கு ( எங்களுக்கு ) பிடித்த பணி செய்ய இறைவனை பிரார்த்திக்கிறேன் சார்..

  ReplyDelete
 52. டியூராங்கோவின் அட்டைப்படம் அக்னி நட்சத்திரம் போல கொதிக்குது.(சிவப்பு கலரைச் சொன்னேன் )'வதம் செய்ய விரும்பு 'எழுத்துருக்களின் கீழே நிழல் விழும்படி அமைத்தது 3D எபெக்டை உண்டுபண்ணுகிறது.

  முன்னட்டையில் டியூராங்கோ வலதுபக்கம் பார்க்க ,பின்னட்டை கிருதா மீசைக்காரர் இடது பக்கம் பார்க்கும்படி அமைத்தது சிறப்பு.அதாவது இருவரும் ஒருவரையொருவர் திரும்பிப் பார்ப்பது நன்றாகவே பொருந்துகிறது.

  அதாவது,
  டியூராங்கோவும் நோக்கினார்.
  கிருதாகாரரும் நோக்கினார்.

  ReplyDelete
 53. Nice post விஜயன் சார், நான் எதிர்பார்த்த பதிவு Durango வின் preview அட்டகாசம். என்ன ஒரே ஒரு ஏமாற்றம் என்றால் புத்தகங்கள் late ஆக வருவது தான் ஆனால் Editor in உடல் நலமே முக்கியம் என்பதால் அதனை ஏற்றுக்கொள்கிறோம் . இந்த மாதம் செம்ம ஹிட் அடிக்க போகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. நான் almost 3 வாரங்களாக காத்து இருக்கிறேன் இந்த புத்தகங்களுக்கு . அசோக் சொன்னது மிகவும் சரி எந்த மிகை படுத்தலும் இல்லை அவர் சொன்னது.

  ReplyDelete
  Replies
  1. //இந்த மாதம் செம்ம ஹிட் அடிக்க போகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை//

   Fingers crossed !

   Delete
 54. கோடை என்றாலே ஸ்பெஷல் தான். நானும் என் நண்பனும், மாயூரத்தில் ஒரு நாள் முழுதும் சைக்கிளில் காமிக்ஸ் வைத்திருந்தவர்கள் வீடுகளுக்கு சென்று தேடியது நினைவில் வருகிறது. இப்போது வீட்டுக்கே வந்து விடுகிறது. அப்போதெல்லாம் subscribe செய்ய வசதியில்லை. வெறும் 60ரூபாய் தான். ஆனால் அதுவே கஷ்டம்.

  கோடையில் சொந்தக்காரர்கள் வீட்டில் இருக்கும் போது அந்தக்காலத்தில் டிவி கூட கிடையாது. ஒரு காமிக் புக் கிடைத்தால் பயங்கர சந்தோஷம் ஆகிவிடும். அந்த நாள் ஞாபகம்

  வெல்கம் கோடை. Month of comics and happiness

  ReplyDelete
  Replies
  1. உண்மை. அந்த காலம் திரும்ப வராது

   Delete
 55. ஆசிரியருக்கு வணக்கம் 🙏.அன்றாட வேலைகளில் ஆரோக்கியமாக உங்களை மீண்டும் ஈடுபடுத்திய ஆண்டவனுக்கு நன்றி.வெளியூர் சென்று திரும்பியதால் தாமதமான பதிவு.மிஸ்டர் மௌனம் மிக மிக பொருத்தமான சிறப்பான தலைப்பு.விஞ்ஞானத் தோடு போட்டி போட்டிக் கொண்டு பயணிக்கும் கால இயந்திரயங்களாய் மாறியுள்ள இப்புவியில் பொறுமை நிதானம் என்பது எட்டாக்கனியே.இன்றைய வாழ்வில் நாம் நாள்தோறும் எதிர் நோக்கும் இன்னல்கள் ஏராளம்.நாம் இதனை எதிர்த்து போராட விழைந்தால் நமது நிலைப்பாட்டை நாம் ஒவ்வொருக்கொருவராக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் ஏற்படுவதோ மன உளைச்சல்,சினம்,வெறுப்பு,சலிப்பு.இதனை எளிமையாக எதிர் கொள்ள ஒரே ஒரு தீர்வு உண்டு.அதுவே மௌனம்.சில இடங்களில் பேசுவது சிறந்தது.பல இடங்களில் பேசாது மௌனிப்பதே சாலச் சிறந்தது. அந்த வகையில் நமது வலைத்தளம் மௌனமாய் இருந்து மிஸ்டர் மௌனமாய் வெளிவந்தது மிக்க மகிழ்ச்சி ஆசிரியரே. 2019 ஆண்டின் மிகச் சிறந்த மாதமாக அமையுமென்பதில் எள்ளவும் ஐயமில்லை ஐயா.குளிர்கால குற்றங்கள் வெளியீட்டில் இருந்து நமது வலைத்தளத்தில் அதிகமான பின்னூட்டங்கள் காரமும் கசப்பும் மட்டுமே.இதற்கான தீர்வினை தர வருகிறார் மௌன வீரர் டுயூராங்கோ.அட்டைப் படம் அருமையாக உள்ளது ஐயா.

  ReplyDelete