Powered By Blogger

Saturday, April 13, 2019

ஒரு மிரட்டலான மே..!

நண்பர்களே,

வணக்கம். And தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் கொஞ்சமே அட்வான்ஸாய் folks! ஆங்கிலப் புதுவருடம் பிறந்ததே நேற்றைய நிகழ்வு போல் நினைவில் நிழலாடிட, இதோ சித்திரையும் பிறந்துவிட்டது கண்மூடித் திறப்பதற்குள் !! புது வரவானது அனைவருக்கும் நலனையும், வளத்தையும் தரும் அட்சய பாத்திரமாய் அமைந்திட பெரும்தேவன் மனிடோவிடம் வேண்டிக் கொள்வோமே! 

Moving on - போன வாரப் பதிவின் தொடர்ச்சியிலிருந்தே ஆரம்பிக்கிறேனே..? "குளிர்காலக் குற்றங்கள்" ஒட்டுமொத்தமாயொரு சொதப்பல் என்று சொல்ல முடியாது போலும் ! பெரும்பான்மைக்குக் கதை பிடிக்காது போய் 'ஐயேஎன்று முகம் சுளிக்கஒரு சிறுபான்மை அதனை சிலாகிக்க -  இடைப்பட்ட சந்தடிசாக்கில் லேசாய் குறட்டை விட்டுக் கிடந்த தளமும் சுறுசுறுப்பாகி விட்டது ஆன்லைன் விற்பனையிலும் "கு.கா.கு" pickup ஆகி வருகிறது ! "சாத்துவதற்காகவாவது வாங்கிப் படித்துப் பார்ப்போமே ?!என்ற லாஜிக்கா ?அல்லது "புது நாயகரை நம்ம பார்வையிலே எடை போட்டுத் தான் பார்ப்போமே ?!என்ற உந்துதலா ? என்று சொல்லத் தெரியவில்லை - but விற்று வருகிறது ! Sகதையின் கருத்து என்னவென்று கேட்கிறீர்களா ? Simple guys....கும்மியடித்தாலும் சரி... குமுறியெடுத்தாலும் சரி - அதன் தாக்கம் பெரிதே என்பது நூற்றிப்பத்தாவது தபாவாய் புரிகிறது ! ஹ்ம்ம்ம்.....!

அதே போல கார்ட்டூன் பிரியர்களின் ஆதர்ஷ நாயகன் இம்மாதம் செய்திருக்கும் score-ம் செம கணிசமானதே ! லக்கி லூக்கின் ஆல்பங்களில் ஒரு ரம்யமான விஷயம் உண்டு ! அது வேறொன்றுமில்லை... நமது டாப் நாயகர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால் Tex ; டைகர் லார்கோ லக்கி தோர்கல்  என்ற பெயர்கள் நினைவுக்கு வந்திடும் ! ஆனால் இவர்களுக்குக்கிடையே ஒரேயொரு விஷயத்தில் நமது ஒல்லியார் standout performer ஆக மிளிர்கிறார் ! எவ்விதத்தில் என்கிறீர்களா ? Simple ... 1987 முதல் லக்கி தொடரில் இதுவரையிலும் சுமார் 35 ஆல்பங்களைத் தமிழில் நாம் வெளியிட்டிருப்போம் ! இவற்றுள் 'ஹிட்' சதவிகிதம் எத்தனை சுமார் சதவிகிதம் எத்தனை சொதப்பல் சதவிகிதம் எத்தனையென்று கணக்குப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும் !! Simply becos -சொதப்பல்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பூஜ்யமாகவே இருந்திடக்கூடும் ! Of course 35 ஆல்பங்களுமே வெடிச் சிரிப்புகள் என்று சொல்ல மாட்டேன் தான் ஆனால் எவையுமே "வெடிக்க மறந்த வெடிகுண்டுகள்" அல்ல தானே டெக்ஸில் கூட நிறையவே சுமார் ரகக் கதைகள் வந்துள்ளன ; லார்கோவிலும் தான்தட்டைமூக்கரின் தொடரிலுமே தான் ! ஆனால் கிட்டத்தட்ட சிக்கிய எல்லாப் பந்துகளையுமே விளாசியுள்ளார்கள் லக்கி ஜாலி ஜம்பர் ஜோடி ! So  பலவிதங்களில் they are the first among equals!! அந்த விதத்தில் லக்கி லூக்கின் தொடர் நமக்கொரு அட்டகாச அட்சயப்பாத்திரம் ! ஒரே சிக்கல் என்னவெனில் இத்தனை காலமாய் கதைத் தேர்வின் போது ரொம்பவே இறுக்கமான சல்லடையைக் கையாண்டு வந்துள்ளதால் - ஒரு மாற்றுக் குறைவான லக்கி ஆல்பங்களை ஓரம்கட்டிவிட்டோம் ! இன்னுமொரு இரண்டோ/மூன்றோ ஆண்டுகளுக்கு இன்னுமும் நம் ரசனைகளுக்கேற்ப A-1 கதைகளாகத் தேர்ந்தெடுக்க முடியும் தான் ! ஆனால் அப்புறமாய் கொஞ்சம் தடுமாற வேண்டி வரலாம் ! துவக்க நாட்களது சுமார் ரகக் கதைகள் கணிசமாகவே உள்ளன ; so அவற்றையும் வெளியிட்டுத் தீர வேண்டிய தருணத்தில் ஜெர்க் அடிப்பது தவிர்க்க இயலாது போகலாம் ! அதன் மத்தியினில் ஒரு வெள்ளிக்கீற்றும் வானில் மிளிராதில்லை ! புதியதொரு படைப்பாளி டீம் சகிதம் புத்தம் புதுக் கதைளை உருவாக்கி வருகின்றனர் கடந்த 2 வருஷங்களாய் ! இதோ இந்தாண்டு வெளிவரக் காத்துள்ள "பாரிஸில் ஒரு கௌபாய்" கூட நவம்பர் '18-ல் வெளியான லேட்டஸ்ட் படைப்பே ! So புதியவர்களின் கைவண்ணத்தில் புதிய கதைகளும் பட்டையைக் கிளப்பத் தொடங்கிடும் பட்சத்தில் all will be well !! நம்பிக்கையோடு காத்திருப்போம் !

Looking ahead... மிரட்டலான மே எங்களை இப்போதே ட்ரில் எடுத்து வருகிறது ! போன பதிவில் எழுதியிருந்து போல - கிடைத்த 3 நாள் திருவிழா விடுமுறைகளில் அடிக்க சாத்தியமான பல்டிகளும் தாண்டிட இயன்றுள்ள தூரமும் - குரங்குக் கூத்து ஸ்பெஷலிஸ்டான எனக்கே கொஞ்சம் அசாத்திய ரகம் தான் ! தி Lone ரேஞ்சர் மொத்தம் 138 பக்கங்கள் கொண்டதொரு சாகஸம் பராகுடாவோ 168 பக்கங்கள் ! ஆக ஒட்டு மொத்தமாய் 306 பக்கங்கள் - இந்த 2 ஆல்பங்களிலுமாய்ச் சேர்த்து ! குதிரை மேலே சிறிது நேரம் அலைகளோடே கொஞ்ச நேரம் என்று மாற்றி மாற்றி சவாரி செய்ததில் அலுப்புத் தெரியாது போனதா அல்லது வீராப்பாய் விளம்பரங்களைப் போட்டு விட்டு மாதக் கடைசியில் தட்டு தடுமாறிடக் கூடாதே என்ற பயமா அல்லது இந்த லீவுகளை விட்டால் பணியாற்ற இப்படியொரு slot வாய்க்கவே வாய்க்காது என்ற புரிதலா அல்லது ஜானதன் கார்ட்லண்ட் தந்த கும்மாங்குத்தை மறந்திடும் பொருட்டு அடுத்த பணிகளுக்குள் பிசாசாய் புகுந்திட முடிந்ததா என்று சொல்லத் தெரியவில்லை... ஆனால் கடந்த நாலரை நாட்களின் புண்ணியத்தில் 250 பக்கங்களை எழுதித் தள்ளிட முடிந்துள்ளது ! தற்சமயம் பராகுடாவின் ஒரேயொரு பாகம் மாத்திரம் pending ! என்னென்னமோ 'ஆட்றா ராமா... தாண்ட்றா ராமாசர்க்கஸ் வேலைகளெல்லாமே செய்துள்ளேன் தான்! பெங்களுர் காமிக்-கானுக்கென TEX ஸ்பெஷல் இதழை திடுதிடுப்பெனத் திட்டமிட்ட கையோடு 3 நாட்களில் "நிலவொளியில் நரபலியைஎழுதியது நினைவுள்ளது காலையில் ஆரம்பித்து மாலைக்குள் க்ளிப்டனின் "7 நாட்களில் எமலோகம்" ஆல்பத்தின் 44 பக்கங்களைப்  பூர்த்தி செய்ததும் ஞாபகத்தில் நிற்கிறது!அனால் இம்முறை போட்டுத் தாக்க முடிந்திருப்பது என்னையே லைட்டாக ஜெர்க் அடிக்கச் செய்யும் ஒரு குவியல்! எனக்கென்னமோ அவ்வப்போது ஒரு "கு.கா.கு" மாதிரியான அனுபவம் அமையும் பட்சத்தில்  பிட்டத்தில் யாரோ பட்டாசைச் செருகி விட்ட வேகம் தானாய் வாய்த்து விடும் போலும் என்றுபடுகிறது! இங்கே இன்னொரு சமாச்சாரமுமே என் கவனத்தை ஈர்க்காது போகவில்லை!

அரைத்த மாவையே தினுசு தினுசாய் அரைப்பதை விடவும்புதுசாய் சவாலாய் எதற்குள்ளாவது கையை விடும் போது உள்ளுக்குள் பதிவாகும் சுவாரஸ்ய மீட்டரின் spikes தான் இந்த வேகங்களுக்கு இன்னொரு பின்னணி என்றும் படுகிறது! பராகுடா - செம different ; செம மிரட்டலான களம்! அதுவும் இது கிளைமேக்ஸ் பாகம் எனும் போது தெறிக்கிறது வேகம்! So உள்ளே புகுந்தால் விரல்கள் நோவெடுத்து ஓய்வு நாடும் வரையிலும் சலிப்பே தெரிந்திருக்கவில்லை! இன்னொருவர் தி Lone ரேஞ்சர்!! இவரோ நமக்கு yet another புதுரக கௌபாய் அனுபவத்தைத் தரக் காத்துள்ளார் என்பதால் அங்குமே துளிகூட போரடிக்கவில்லை! ஆக கார்டூன்களோகனமான கிராபிக் நாவல்களோஅல்லது இது போன்ற refreshing புதுக்களங்களோ அமைந்திடும் பட்சத்தில் நம்மையுமறியது ஒரு புது கியரைக் கண்டுபிடிக்க முடியும் போலும்!


எல்லாம் சரி....பயணத்திட்டம் போட்டாச்சு...டிக்கெட்டும் எடுத்தாச்சு...விமானத்திலும்  எறியாச்சு... கதவையும் அடைத்து விட்டாச்சு... உசரமான ஏர்ஹோஸ்ட்டஸ் அம்மணிகள் நீட்டிய தட்டிலிருந்து ஒரேயொரு சாக்லேட்டை மட்டும் ஸ்டைலாய் எடுத்திருக்க பக்கத்து சீட்டுக்காரனோ  அரை டஜனை அசால்டாய் அள்ளுவதைக் கடுப்போடு பார்த்தும் விட்டாச்சு... லொஜக் -மொஜக் என்று சீட் பெல்ட்களையும் போட்டாச்சு... ஹம் ஆப்கே கௌன் ஹைஎன்று கேப்டன் ஹிந்தியில் செப்பும் பயண அறிக்கையும் கேட்டபடிக்கேகாதுக்குள் திணிக்க கால் ிலோ பஞ்சை ரெடி பண்ணிக் கொண்டிருக்கும் போதே பிளேன் வேகமிழக்கிறது! ரன்வேயிலேயே முட்டையிட்ட கோழி போல் சித்த நேரம் காத்திருந்து விட்டு அப்புறமாய் back to pavilion என்று புறப்பட்ட இலக்கிற்கே ரிவர்ஸ் பண்ண - "எஞ்சினில் பழுதுங்கோஇந்த விமானம் பறக்காதுங்கோ - புது விமானம் ஆத்தா ஹை... தும் அதிலே ஜாத்தா ஹை..." என்று அறிக்கை ஒலிக்கிறது! எத்தனை தபா இதை  பயணங்களில்  நாம் அனுபவித்திருப்போம்


கிட்டத்தட்ட அதே கதை தானே இம்மாதம் ஜம்போ காமிக்ஸின் சீஸன் 2-ன் துவக்க இதழோடுமே? "கால வேட்டையர்" கதை வந்தாச்சு... ராப்பர் ரெடியாகிடுச்சு... preview & பில்டப் தந்தாச்சு... டைப் செட்டிங்கும் பணியாச்சுஆனால் இறுதியில் take-off abortஆகிப் போனது! (யோசித்துத் தான் பாருங்களேன்-"கு.கா.கு" + இன்னொரு சுமார் இதழ் ஒரே மாதத்தில் எனில்-என்னமாய் WWF நடந்திருக்கும் என்னைப் படுக்கப் போட்டு?!)


So பழுதான விமானத்துக்குப் பதிலாய் வரும் மாற்று விமானமானது செமத்தியானதாக இருக்க வேண்டும் தானேஇதோ அந்தப் புது விமானத்தின் முதற்பார்வை! 
முன்னட்டையும் சரிபின்னட்டையும் சரி அக்மார்க் ஒரிஜினல்களே என்பதால் இங்கே நாம் செய்ய வேண்டியிருந்தது எழுத்துக்களை நுழைப்பது மாத்திரமே அதனை நமது மூத்த ஓவியர் சிகாமணியும்டிசைனிங் கோகிலாவும் கச்சிதமாய்  செய்திட-ரொம்பவே வித்தியாசமானதொரு அட்டைப்படம் ரெடி! முன்னொரு காலத்திலென்றால்-"ஐயே... ஒரே சிவப்பாய் கீதே... மஞ்சளைக் காணோம்ப்ளூ கலரைக் காணோம்" என்ற கையோடு சாந்துக் கரண்டியில் வர்ணங்களைத் தூக்கி "ஆ..இங்கே பூஸ்....ஆ..இங்கே பூஸ் !!" என்று ஆங்காங்கே அப்பச் செய்திருப்பேன் ! ஆனால் உங்கள் புண்ணியத்தில் எனது ரசனையிலும் கொஞ்சமாவது மாற்றம் தெரியாது போகுமா - என்ன? So படைப்பாளிகளின் ஒரிஜினல்களை  நோண்டாது அப்படியே விட்டுவிடத் தீர்மானித்தேன் ! பலன்ஒரு மிரட்டலான முன்னட்டை !!

தி Lone  ரேஞ்சர் !! (அது சரி... முழுசையும் தமிழில் எழுதுவதற்கு என்னவென்று கேட்கிறீர்களா தமிழில் "லோன் ரேஞ்சர்" என்றால் ஏதோ கொசமட்டம் பைனான்ஸ் கம்பெனியிலோஅட்டிகா கோல்ட் கம்பெனியிலோ "லோன் அரேஞ்சு" செய்து தருவார் என்பது மாதிரியாக sound  செய்தது! So  இது ஸ்டைலாகவும் உள்ளதுசரியாகவும் உள்ளதென்று நினைத்தேன்!) இந்த முகமூடி நாயகர்  நமது கௌபாய் ரசனைகளுக்கு புது மெருகூட்டக் காத்திருக்கிறார் என்று தைரியமாகச் சொல்லுவேன் ! Simply becos - ஜேம்ஸ் பாண்ட் 007-ஐ புத்தம் புது யுக நாயகராய் வடிவமைத்துள்ளது போலவே Lone Ranger  & அவரது சகா டோண்டோவையுமே முற்றிலும் புதுசாய் reinvent செய்துள்ளது இந்த லேட்டஸ்ட் படைப்பாளி டீம் ! செவ்விந்திய சகா என்றாலே ஒரு 'அறிவிக்கப்படா அல்லக்கைஎன்ற ரீதியில் இல்லாது இந்த 2 நாயகர்களிடையே ஒரு செம கெத்தான உறவு நிலவுகிறது ! சுருக்கமாய்ப் பேசினாலும் உலக அனுபவமும்ஞானமும் கொண்டவராய் இருந்து Lone ரேஞ்சரை வழி நடத்தும் பொறுப்பு டோண்டோவிடம் உள்ளது ! முகமூடி நாயகருமே அரவங்காடு தோட்டா பேக்டரியைக் குத்தகைக்கு எடுத்தவரைப் போல பக்கத்துக்குப் பக்கம் லோடு லோடாய்த் தோட்டாக்களை பொழிவதில்லை! அதிரடியாய்அவசியம் எழும் போதெல்லாம் மட்டுமே அதகள ஆக்சனில் இறங்கிக் கலக்குகிறார்! 


இந்தத் தொடரின் துவக்கப்  புள்ளியிலிருந்து ஆரம்பிக்கும் வாய்ப்பும் நமக்கு இருந்தது தான்! சின்னப் பையனாக இருந்து - தி Lone ரேஞ்சராய் பரிணாம வளர்ச்சிக்கு ஆளாகும் கதையை பிளாஷ்பேக்கில் சொல்லும் அந்த ஆல்பத்தையே நமது முதல் புள்ளியாக்கிட எனக்கு லைட்டாய் சபலம் எட்டிப்பார்த்தது ! ஆனால் நாயகரை முதலில் நம்மிடையே வாகாய் establish செய்தான பிற்பாடு-அந்த ப்ளாஷ்பேக் சாகஸம் பக்கமாய் கவனத்தைத் திருப்பலாம் மென்று நினைத்தேன்! பின்னோரு சமயம் அந்த முதல் ஆல்பத்தைப் படிக்க நேரும் போது எனது இன்றைய தீர்மானத்தின் லாஜிக் உங்களுக்குப் புரியாது! போகாது guys ! 1933 முதல் டி.வி. தொடர்களாய்காமிக்ஸில் தினசரி strip-களாய்சின்னக் கதைகளாய்நாவல்களாய்ஹாலிவுட் திரைப்படமுமாய் ரவுண்டடித்துக் கொண்டிருக்கும் இந்த நீதிக்காவலரின் கதைகளுக்கு வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும் simply awesome! ஆறு அத்தியாயங்கள்  ஒன்றிணைந்த ஆல்பம் என்பதால் உள்ளே 6 ஒரிஜினல் அட்டைப் படங்களும் உண்டு !So ஜம்போவின் புது சீஸனைத் துவாக்கித் தர ஏற்பாடாகியுள்ள இந்தப் புது விமானம் செம sleek dreamliner என்பேன் ! இதுவரையிலும் ஜம்போ சீஸன் 2-க்கு சந்தா  செலுத்தியிரா நண்பர்களே : இன்னமுமே நேரமுள்ளதுஉள்ளே தொற்றிக் கொள்ள ! என்ன ஒரே வித்தியாசம் - மிட்டாயை நீட்ட உசரமான பணிப்பெண்களுக்குப் பதிலாகதிரு திரு முழியோடு நான் காத்திருப்பேன்! But still - தைரியமாக jump in guys!!


விண்ணில் பறக்கக் காத்திருப்பது ஜம்போ எனில் அலையடிக்கும் சமுத்திரத்தில் அட்ராசிட்டி செய்திடும் பராகுடா இன்னொரு classic அட்டைப்படத்துடன் தயாராகி வருகிறது ! இந்த ஞாயிறின் பொழுதில் எஞ்சியிருக்கும் பராகுடாவின் இறுதி பாகத்துக்கும்  "சுபம்" போட சாத்தியமாகின் - கொஞ்சம் லேசாக மூச்சு விட்டுக் கொள்வேன் ! மே முதல் தேதி விடுமுறையெனும் போது-அதற்கு முந்தைய தினமே புக்குகள் உங்கள் கைகளில் இருந்திட வேண்டுமென்பது புரிகிறது ! So full steam ahead என்று விரட்டிட முனைகிறோம் வண்டியை ! 
  

See you around folks! Have a lovely Sunday! Bye for now!


P.S : 1 .ஏப்ரலின் விமர்சனங்கள் தொடரட்டுமே folks ?

2 இதுவரையிலுமான லக்கி லூக் சாகசங்களுள் 'டப்ஸா' ரகம் என்று ஏதேனும் உண்டா ? If yes - அவற்றைச் சுட்டிக் காட்டுங்களேன் - ப்ளீஸ் ?

3 And - லுக்கியின் THE VERY BEST என்று ஒரேயொரு ஆல்பத்தைத் தேர்வு செய்வதாயின் எதைச் செய்வீர்களோ ?   

267 comments:

 1. Replies
  1. 2 weeks in a row I can't believe my luck

   Delete
  2. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... உர்ர்ர்..

   Delete
  3. // கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... உர்ர்ர் //

   கறி சோறு நாளைக்கு தான் :-)

   Delete
  4. ///
   கறி சோறு நாளைக்கு தான்///

   சார்வாள் வீட்டுல இன்னிக்கு பழைய கஞ்சியாக்கும்? :)

   Delete
  5. என்ன அங்க சத்தம்?

   Delete
  6. பழைய கஞ்சின்னு சலிசசுக்காதீங்க. இப்பல்லாம் பழைய சோறே ஜி.எஸ்.டியோட 50 ரூபாய்.

   Delete
  7. இன்னைக்கு புது வருடம் என்பதால் நோ கறி சோறு :-)

   Delete
 2. வருக வருக மே. உழைப்பாளர் மாதம்.

  ReplyDelete
  Replies
  1. ஃபோட்டோ finish பரணி just miss. உங்களுக்கு முதல் இடம் கிடைத்து இருந்தால் நான் ஹேப்பி

   Delete
  2. நன்றி. நான் பின் சீட்டில் பயணிப்பதையே விரும்புகிறேன்.

   Delete
 3. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே

  ReplyDelete
 4. 3 And - லுக்கியின் THE VERY BEST என்று ஒரேயொரு ஆல்பத்தைத் தேர்வு செய்வதாயின் எதைச் செய்வீர்களோ ?

  புரட்சி தீ. அதுவும் அந்த பத்திரிகையாளர் பாத்திரம் செம. எல்லா நேரமும் எல்லா இடத்திலும் வெளிப்படும் பத்திரிகை காதல்.

  ReplyDelete
  Replies
  1. பேப்பர் கிடைக்காத போது பத்திரிகையை மக்களிடம் சேர்க்க செய்யும் லக்கியின் ஜடியாக்கள் அனைத்தும் செம கிளாஸ்.

   Delete
  2. புரட்சித் தீ EVER GREEN .

   Delete
 5. தி Lone ரேஞ்சர்.. முன் அட்டைப்படம் மிரட்டலாக அட்டகாசமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. Simply அட்டைப்படம் அனல் பறக்கிறது.

   Delete
 6. ஜனாதனன் இரண்டாம் கதை மிகவும் நன்றாக இருந்தது. இதனை 350 சிறப்பிதழாக இல்லாமல் சாதாரணமாக வெளியிட்டு இருந்தால் மிகப்பெரிய குறையாக தெரிந்து இருக்காது.

  ReplyDelete
  Replies
  1. விடுங்க சார். யானைக்கும் சில நேரம் அடி சறுக்கத்தான் செய்யும். எனக்கு 27 வருஷத்துக்கு முன்னாடி சறுக்கிச்சு. ஹி..ஹி..

   Delete
 7. விஜயன் சார், ப்ளாக் செட்டிங் மீண்டும் மாற்ற ஆரம்பிச்சுட்டீங்க போல் தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. உஷ்ஷ்ஷ்.. (குசு குசு குசு) சார் இப்பத்தான் கம்ப்யூட்டர் கத்துக்கிட்டிருக்காரு! கற்றுக்கொடுப்பது நம் ஜூனியராம்!
   ( வெண்ணிற ஆடை மூர்த்திக்கு வடிவேல் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுப்பாரே...ஹிஹி.. அதைவிட மோசமாம்!)

   Delete
  2. ஏன் சார் சாய்றிங்ன்னு ஆரம்பிப்பாரே.. அதானே.. புரிஞ்சிடுத்தூ..!!:-)

   Delete
  3. இதுவும் " நல்லா " இருக்கு...:-)

   Delete
 8. // கு.கா.கு" + இன்னொரு சுமார் இதழ் ஒரே மாதத்தில் எனில்-என்னமாய் WWF நடந்திருக்கும் //

  உங்கள் நல்ல நேரம் (முந்தைய அனுபவங்கள்) காப்பாற்றி விட்டது.

  ReplyDelete
 9. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள் ஷெரீஃப்

   Delete
 10. Replies
  1. அப்படியே இருக்கட்டும் :-)

   Delete
 11. ////தி Lone ரேஞ்சர் !! (அது சரி... முழுசையும் தமிழில் எழுதுவதற்கு என்னவென்று கேட்கிறீர்களா ? தமிழில் "லோன் ரேஞ்சர்" என்றால் ஏதோ கொசமட்டம் பைனான்ஸ் கம்பெனியிலோ; அட்டிகா கோல்ட் கம்பெனியிலோ "லோன் அரேஞ்சு" செய்து தருவார் என்பது மாதிரியாக sound செய்தது!///

  ஹா ஹா ஹா!

  ////
  யோசித்துத் தான் பாருங்களேன்-"கு.கா.கு" + இன்னொரு சுமார் இதழ் ஒரே மாதத்தில் எனில்-என்னமாய் WWF நடந்திருக்கும் என்னைப் படுக்கப் போட்டு?!///

  சே! ஜஸ்ட் மிஸ்!!

  ஹிஹிஹி!

  ReplyDelete
  Replies
  1. என்ன ஜஸ்ட் மிஸ்? கூடவே நீங்களும் தலீவரும் தான் இந்தக் கதையை செலக்ட் பண்ணிக் குடுத்தீங்கன்னு கிளப்பி விட்டு அதுக்கு தனியா உங்க ரெண்டு பேருக்கும் சேத்தி சாத்து தர தனியா ஒரு கூட்டம் இருக்கு. . பரவால்லீயா?

   Delete
  2. ///உங்க ரெண்டு பேருக்கும் சேத்தி சாத்து தர தனியா ஒரு கூட்டம் இருக்கு. . பரவால்லீயா?///

   அந்தக் 'கூட்டம்' இப்ப அமெரிக்கால இருக்கிறாப்ல இருக்கே... :)

   Delete
  3. கு.க.ன்னாலே குற்றம் தான் போல.

   Delete
  4. // கூடவே நீங்களும் தலீவரும் தான் இந்தக் கதையை செலக்ட் பண்ணிக் குடுத்தீங்கன்னு கிளப்பி விட்டு அதுக்கு தனியா உங்க ரெண்டு பேருக்கும் சேத்தி சாத்து தர தனியா ஒரு கூட்டம் இருக்கு. //

   இந்த ஐடியா நல்லா இருக்கு:-)

   Delete
 12. // And தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் கொஞ்சமே அட்வான்ஸாய் folks! ஆங்கிலப் புதுவருடம் பிறந்ததே //

  உங்களுக்கும்
  அலுவலக பணியாளர்கள் மற்றும்
  காமிக்ஸ் நண்பர்கள்
  அனைவருக்கும்

  முன்கூட்டிய
  இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🙏🏼💐💐💐
  .


  ReplyDelete
 13. அலோ!! புரோபைல் போட்டோ டெஸ்டிங்!!
  1
  2
  3

  ReplyDelete
  Replies
  1. தொலைஞ்சு போன லக்கிலூக் புரோபைல் போட்டாவ இட்டாந்துடம்ல!!

   🤣🤣🤣

   Delete
 14. Lone ரேஞ்சரின் அட்டைப்படத்தை கையில் ஏந்திப் பார்க்கும்போது தான் அதன் வசீகரம் புரியவருமென்று தோன்றுகிறது!

  ReplyDelete
 15. ///ஆனால் கடந்த நாலரை நாட்களின் புண்ணியத்தில் 250 பக்கங்களை எழுதித் தள்ளிட முடிந்துள்ளது ///

  பின்றீங்க எடிட்டர் சார்!

  ReplyDelete
 16. ஒரேயொரு லக்கிலூக் ஆல்பத்தைத் தேர்வு செய்வதாயின் எதைச் செய்வீர்களோ ?

  உலகத்துலேயே பதில் சொல்ல முடியாத கேள்வி இது ஒன்னுதான்!!

  🤨🤨🤨🤔🤔🤔

  ReplyDelete
 17. லக்கில எனக்கு பிடிக்காத ஆல்பம்னு ஒன்னு லேது.
  ரொம்ப பிடிச்ச ஆல்பம் பயங்கர பொடியன்.

  ReplyDelete
 18. லக்கி ஆல்பத்துல மொக்கை னு ஏதும் இல்ல சார் ..
  என் favorite னா பூம் பூம் படலம் தான் ..

  ReplyDelete
 19. லக்கியின் பெஸ்ட் ஆல்பம்?

  பதிலே சொல்ல முடியாத டப் கேள்வி.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் புரோபைல் போட்டோவ எடுக்கலயா GP??

   Delete
 20. ஹே...!
  தனியொருவன் அட்டைப்படம் என்னமா ஸ்டைலா இருக்கு.!

  ReplyDelete
 21. ///தி Lone ரேஞ்சர் !! (அது சரி... முழுசையும் தமிழில் எழுதுவதற்கு என்னவென்று கேட்கிறீர்களா ? தமிழில் "லோன் ரேஞ்சர்" என்றால் ஏதோ கொசமட்டம் பைனான்ஸ் கம்பெனியிலோ; அட்டிகா கோல்ட் கம்பெனியிலோ "லோன் அரேஞ்சு" செய்து தருவார் என்பது மாதிரியாக sound செய்தது! So ///

  ஆனாலும் அநியாயயத்துக்கு அலாட்டா இருக்கீங்க சார்.

  ReplyDelete
 22. ///இதுவரையிலுமான லக்கி லூக் சாகசங்களுள் 'டப்ஸா' ரகம் என்று ஏதேனும் உண்டா ? If yes - அவற்றைச் சுட்டிக் காட்டுங்களேன் - ப்ளீஸ் ?///

  யெஸ்!!

  அதுவொரு 8 பக்க சிறுகதை! செம மொக்கை!! கதையின் பெயர் - "ஒரு சீன ஷெரீஃபின் கதை" மொழிபெயர்த்த மகான் : ஈரோடு விஜய்!

  ReplyDelete
  Replies
  1. குருநாயரே..
   கேள்வியை நல்லாப் படிங்க.. டாப் ரகம்னு கேட்கலை.. டப்ஸா ரகம்னு கேட்டிருக்காங்க.!:-)

   ஆனா.. அந்தக் கதையில் வரும் சைனா ஷெரீப் ஒரு போக்கிரியுடன் ஒற்றைக்கு ஒற்றை "நின்னே" டயர்டாக்கி அரெஸ்ட் செய்வாரே.. ஹாஹா..மறக்கமுடியாத காமெடி.!

   Delete
  2. அடடே! என்னவொரு ஞாபக சக்தி!! நன்னிகள் பல!

   Delete
 23. ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

  ReplyDelete
 24. ///
  2 இதுவரையிலுமான லக்கி லூக் சாகசங்களுள் 'டப்ஸா' ரகம் என்று ஏதேனும் உண்டா ? If yes - அவற்றைச் சுட்டிக் காட்டுங்களேன் - ப்ளீஸ் ?

  3 And - லுக்கியின் THE VERY BEST என்று ஒரேயொரு ஆல்பத்தைத் தேர்வு செய்வதாயின் எதைச் செய்வீர்களோ ? ///


  டப்ஸா ரகம்னு எதையுமே சொல்ல முடியாது சார்.! டாப் க்ளாசுக்கு சற்றே குறைலானன்னு வேண்ணா சொல்லலாம்..! ஆனா அப்படி சொல்றதுக்கும் எதுவுமே இல்லைன்னு நினைக்கும்போதுதான்....


  The very bestன்னா... அய்யோ.. நிறைய இருக்கே..!! சொக்கா.. நான் எதைச் சொல்வேன்..! ஆங்..

  லக்கி லூக்கே The Very Best தான் சார்.!

  ReplyDelete
  Replies
  1. ///
   லக்கி லூக்கே The Very Best தான் சார்///

   செம & உண்ம!

   Delete
 25. Dear Editor,

  Lucky Luke "Dapsa" album - was the one that came immediately in our comeback - the Pinkertons story.

  Lucky Luke's best by us is undoubtedly BOOM BOOM PATALAM !

  ReplyDelete
 26. ஆசிரியருக்கு வணக்கம் 🙏. மேமாத முன்னோட்டம் சிறப்பு. ஆசிரியருக்கும் காமிக்ஸ் உறவுகளுக்கும் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 27. அவைத்தலைவர் எடிட்டர் உள்ளிட்ட அவையின் சான்றோர் அனைவருக்கும் அடியேனின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!💐💐

  ReplyDelete
  Replies
  1. அடியேனின் வாழ்த்துகளும்!

   Delete
  2. வாழ்த்துக்கள் kok

   Delete
  3. Kumar salem.. வாழ்த்துகள் சார்.!

   Delete
  4. KOK sir எல்லாம் வேண்டாமே

   Delete
 28. பூம்பூம் படலம்
  பரலோகத்திகொரு "பாலம்"
  சூப்பர் சர்க்கஸ்
  ஜென்டில்மேனின் கதை
  Barbed wire on the prairie

  ஒரு பட்டா போட்டி
  (நான் மிகவும் ரசித்தது! அதுவும் 25ஆம் பக்கம் ஒன்று போதும் அன்றைய அமெரிக்காவின் சூழ்நிலையை விளக்க!? Dopey தேர்தலில் ஜெயிக்கும் காட்சிகள் மறக்கவே முடியாது!! குறைந்தபட்சம் 50 தடவைக்கும் மேலே தான் படித்திருப்பேன் தமிழிலும், ஆங்கிலத்திலும் சேர்த்து)

  லேட்டஸ்ட் ரிலீஸான
  "பரலோகத்திற்கு ஒரு படகு" ம் ஆகச் சிறந்த கதைகளின் வரிசையில் இடம் பிடிக்கத் தகுதியானதே!!

  மற்ற கதைகளை பற்றியும் நாள் முழுக்க பேசலாம்!

  என்னளவில் லக்கிலூக்கின் கதைகள் மட்டும் நமது லயன் காமிக்ஸ்ல் வராது போயிருப்பின், நான் தொடர்ந்து காமிக்ஸ் படித்திருப்பது என்பது சந்தேகமே!!??

  நானும், என் அண்ணனும், இன்னும் இரண்டு நண்பர்களும் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அடித்துக் கொண்டதெல்லாம் மறக்கவே முடியாது!!?

  இத்தனை காலம் கழித்தும் என் அண்ணன் நான் இல்லாத போது என் பிரோவில் இருக்கும் லக்கியின் புக்கை மட்டும் ஆட்டையை போடுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது!!

  ReplyDelete
  Replies
  1. ///இத்தனை காலம் கழித்தும் என் அண்ணன் நான் இல்லாத போது என் பிரோவில் இருக்கும் லக்கியின் புக்கை மட்டும் ஆட்டையை போடுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது!! ///

   அதுக்குத்தான் என்னை மாதிரி - ஒரு ட்ரங்க் பெட்டியில் போட்டு பூமிக்கடியில புதைச்சு வைக்கணும்றது!

   Delete
  2. அதுக்குத்தான் நான் லக்கிய ரண்டு ரெண்டா வாங்கி வைச்சிருக்கேன்!

   ஒன்னுதானே இங்கே இருக்கும்! இன்னொன்னு எங்கேனு யாருக்கும் சொல்ல மாட்டேனே!!

   Delete
  3. அந்த இன்னொண்ணுதான் சார் இது.

   Delete
 29. Best of lucky Luke ஒரு கோச் வண்டியின் கதை

  ReplyDelete
  Replies
  1. அப்புறம். அந்த, ' ேஜன்இருக்க பயமேன்'..செம.

   Delete
 30. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 31. ஆசிரியருக்கும் அவரது பணியாளர்களும் நமது காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. ஆசிரியர் மற்றும் அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 33. லயனின் 350வது இதழ், சொதப்பியதற்கு காரணம்... கதையில் லாஜிக் இல்லாமல் செல்லுவது தான். நாம் விரும்பும் கௌபாய் கதைகளை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று - டெக்ஸ். இரண்டு - டைகர்.டெக்ஸ் கதையை எப்படி இருந்தாலும்(லாஜிக் இல்லாமல்) படிக்க முடியும்...
  அதை டைகரை எடுத்து கொண்டால்... கொஞ்சம் வரலாறு... கொஞ்சம் கற்பனை என்று கலந்து படைத்து இருப்பார்கள்.
  இந்த 350வது இதழ் கதாநாயகன்... முதல் கதையில்,எதற்கு செவ்விந்தியனை கொல்ல காரணமானவர்களை தேடி செல்கிறார்...அதை தடுத்து இருக்க வேண்டும்... பிறகு தேடி கண்டு பிடித்து கொண்டு வருவது போல் காட்சிகள் அமைத்து இருந்தால்... கதையில் விறுவிறுப்பு கூடியிருக்கும். வில்லனாக வரும் அந்த கேப்டனும்(வழக்கம்போல) சொதப்பல் திலகம்...அங்கும் வலுவான காரணங்கள் இல்லை... ஏன் அவர் செவ்விந்தியர்களை வெறுக்கிறார்...வேகமாக காட்சிகள் நகருகின்றன...கதையை முடிப்பதற்காக என்று தான் தோன்றுகிறது.
  நமது ஆசிரியர் 350 இதழை சொதப்பல் இதழாக தந்தது இல்லாமல்... ஏமாற்றத்தை தந்தார். 350 இதழில் Top 3 இதழ்களை பற்றி கேட்டுவிட்டு...அவரின் Top 3 இதழ்களை பற்றி எழுதி இருக்கலாம். பிறர் எழுதி இருப்பதை போட்டு இருக்கலாம்...Top 3 பற்றி கேட்டு விட்டு... அதைப்பற்றி ஒன்றும் சொல்லாதது...எழுதாது...ஏமாற்றமே..!!

  ReplyDelete
  Replies
  1. நல்லதொரு அலசல் பதிவு!

   Delete
  2. // அவரின் Top 3 இதழ்களை பற்றி எழுதி இருக்கலாம். பிறர் எழுதி இருப்பதை போட்டு இருக்கலாம்...Top 3 பற்றி கேட்டு விட்டு... அதைப்பற்றி ஒன்றும் சொல்லாதது...எழுதாது...ஏமாற்றமே //

   மறக்கமுடியாத நிறைய ஏமாற்றங்களை தந்துவிட்டு போனதுதான் இந்த 350 வது இதழின் சிறப்பு. :(

   Delete
  3. விரிவான அலசல் ...அனைத்தும் வழிமொழிகிறேன்..நண்பரே..

   Delete
 34. Dear editor sir

  Last month issues rating
  Lucky. 10/10
  Tex. 6/10
  Prince 5/10

  Jonathan - bye bye

  ReplyDelete
 35. ஆசிரியர் அவர் தம் குடும்பத்தினர் ,அலுவலர்கள் மற்றும் இங்கே வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள் ...


  ReplyDelete
 36. தி Lone ரேஞ்சர் !! (அது சரி... முழுசையும் தமிழில் எழுதுவதற்கு என்னவென்று கேட்கிறீர்களா ? தமிழில் "லோன் ரேஞ்சர்" என்றால் ஏதோ கொசமட்டம் பைனான்ஸ் கம்பெனியிலோ; அட்டிகா கோல்ட் கம்பெனியிலோ "லோன் அரேஞ்சு" செய்து தருவார் என்பது மாதிரியாக sound செய்தது!

  ₹######

  :-)))))

  ReplyDelete
 37. என்னுடைய favorite கதை எப்போதும் " சூப்பர் சர்க்கஸ்" தான் . புரட்சி தீ, பயங்கர பொடியன் அடுத்தடுத்த இடங்களை பெறுகின்றன . No tapsa books of lucky Luke ever.

  ReplyDelete
 38. தோட்டா பேக்டரியைக் குத்தகைக்கு எடுத்தவரைப் போல பக்கத்துக்குப் பக்கம் லோடு லோடாய்த் தோட்டாக்களை பொழிவதில்லை! அதிரடியாய்; அவசியம் எழும் போதெல்லாம் மட்டுமே அதகள
  ஆக்சனில் இறங்கிக் கலக்குகிறார்!

  ₹######

  இந்த ரேஞ்சரையும் டெக்ஸ் வில்லர் மாதிரி வயசாகாம பாத்துக்க சொல்லுங்க சார்..வயசான ஆளுக ஏனோ "செட் " ஆக மாட்டேங்கிறாங்க...

  ( ஷெல்டனுக்கு பித்த நரை...)

  ReplyDelete
 39. // தி Lone ரேஞ்சர் மொத்தம் 138 பக்கங்கள்
  கொண்டதொரு சாகஸம் //

  தி Lone ரேஞ்சர் 6 பாகங்கள் என்று விளம்பரம் செய்திருக்கிறீர்கள், 138 பக்கங்கள் என்று இப்போது கூறுகிறீர்கள் Tally ஆகலையே சார்!? அப்போ ஒரு பாகம் எத்தனை பக்கங்கள் சார்?

  ReplyDelete
  Replies
  1. அதனே....சொல்லுங்க சார்..சொல்லுங்க்..:-)

   Delete
  2. 6 பாகங்கள் அல்ல. 6 அத்தியாயங்கள் தான். Note that point your Honor.

   Delete
  3. American comics usually are 23-25 pages each part - monthly. Therefore they would run six parts for six months with a total of 138-150 pages.

   Delete
 40. 2 இதுவரையிலுமான லக்கி லூக் சாகசங்களுள் 'டப்ஸா' ரகம் என்று ஏதேனும் உண்டா ? If yes - அவற்றைச் சுட்டிக் காட்டுங்களேன் - ப்ளீஸ் ?

  3 And - லுக்கியின் THE VERY BEST என்று ஒரேயொரு ஆல்பத்தைத் தேர்வு
  செய்வதாயின் எதைச் செய்வீர்களோ ?

  ######


  அதிகம் எதிர்பார்த்து கொஞ்சம் ஏமாற்றிய இதழ் என வேண்டுமானால் குறிப்பிட்டு சொல்லலாம் எனில்...

  பயங்கர பாலம்...( முழுநீள கதையாக எதிர்பார்த்து சிறுகதைஙபோல் முடிந்த காரணம்..)

  இரண்டு லயன் கம்பேக் ஸ்பெஷலில் வந்த லக்கி சாகஸம்...

  ******


  சூப்பர் ஹிட்..


  சூப்பர் சர்க்கஸ் ...புரட்சி தீ...

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா என்னுடைய choice அதே தான்

   Delete
 41. Lucky luke - best ( not only one)
  but my favarite one -super circus.

  ReplyDelete
  Replies
  1. முதலும் பெஸ்டும் . எஸ் எஸ்

   Delete
 42. ////உசரமான ஏர்ஹோஸ்ட்டஸ் அம்மணிகள் நீட்டிய தட்டிலிருந்து ஒரேயொரு சாக்லேட்டை மட்டும் ஸ்டைலாய் எடுத்திருக்க பக்கத்து சீட்டுக்காரனோ அரை டஜனை அசால்டாய் அள்ளுவதைக் கடுப்போடு பார்த்தும் விட்டாச்சு... ////

  சார்.. எழுதும்போது ஒரு பெருந்தன்மைக்காண்டி சில விசயங்களை நாம உல்ட்டாவா எழுதுவதுண்டுதானுங்களே...

  இதுவும் அப்படித்தானோன்னு தோனறது! :D

  ReplyDelete
  Replies
  1. ஊஹூம்...நாங்கள்லாம் துவக்கத்தில் பந்தா பரமசிவம்கள் ... அப்பாலிக்கா 'வட போச்சே' வளையாபதிகள் !

   Delete
 43. என்னுடைய ரசனை சார்ந்து, எந்த டெக்ஸ் கதை எனக்கு மிகவும் பிடித்தது என்று யாராவது கணிக்க முடியுமா?\\\

  போன பதிவில் கேட்ட கேள்விக்கு "வல்லவர்கள் வீழ்வதில்லை" என்று செந்தில் சத்யா சரியாக சொல்லி விட்டார். யாராலும் கனிக்க முடியாது என்று நினைத்தேன்.

  நன்றி செந்தில் சத்யா.

  குமார் சேலம் "கார்சனின் கடந்த காலம்" என்று சொல்லி இருந்தார். கா.க.கா வில் முதல் பாகம் படித்த பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு, மறுபதிப்பு போதுதான் இரண்டாவது பாகம் படிக்க முடிந்தது. முதல் பாகம் பிடித்த அளவுக்கு இரண்டாவது பாகம் பிடிக்க இல்லை. ஆனாலும் அதுவும் நல்ல காமிக்ஸ் தான்.

  வல்லவர்கள் வீழ்வதில்லை நிறைய பேருக்கு பிடிக்க வில்லை என்று ஆசிரியர் ஒரு பதிவில் கூறி இருந்தார். டெக்ஸ் கதை எனக்கு பிடித்து இருந்தால் நிறைய பேருக்கு பிடிக்காமல் போகும் என்பது இயற்கை விதி.அது எப்படி மாறும்.

  ஆனால் நான் நிறைய முறை மீள்வாசிப்பு செய்தது டெக்ஸ் காமிக்ஸ் "வல்லவர்கள் வீழ்வதில்லை".

  சித்திரங்கள் அருமையாக இருக்கும். டெக்ஸ் வில்லர் டெக்ஸ் வில்லர் மாதிரியே இருப்பார்.

  காதல், ஆக்ஷன், தியாகம், துரோகம் மற்றும் சுதந்திர உணர்வு என்று அனைத்து விதத்திலும் அருமையாக அமைந்த காமிக்ஸ்.

  தற்போதைய காலகட்டத்தில் "வல்லவர்கள் வீழ்வதில்லை" வந்து இருந்தால், வ. வீ வெற்றி அடைந்து இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ரொம்பவே கஷ்டமான/வில்லங்கமான/விவகாரமான போட்டியில் பங்கேற்று சரியான விடையைக் கணித்த செந்தில் சத்யாவுக்கு என் பாராட்டுகள்!

   (செந்தில் சத்தியாவுக்கு பரிசு ஏதும் இல்லீங்களா கணேஷ்குமார்?)

   Delete
  2. கணேஷ் குமார் . சூப்பர் செந்தில் சத்யா . வாழ்த்துக்கள். EV சொன்னது .போல பரிசு?

   Delete
  3. ///வல்லவர்கள் வீழ்வதில்லை நிறைய பேருக்கு பிடிக்க வில்லை என்று ஆசிரியர் ஒரு பதிவில் கூறி இருந்தார். ///

   நிறைய பேருக்கு இல்லை கணேஷ்.!
   வெகு சிலருக்குத்தான் பிடிக்கவில்லை.!
   என்னுடைய டாப் டெக்ஸ் இதழ்கள் லிஸ்டில் கார்சனின் கடந்த காலத்துக்கும் வல்லவர்கள் வீழ்வதில்லைக்கும் எப்போதும் இடம் உண்டு.!

   Delete
  4. நான் சரியாக கணித்தேன்..ஆனா பெயர் நினைவுக்கு வரவில்லை..செந்தில் சத்யா சொன்னவுடன் அப்போது சொல்ல வேண்டாம் என்று விட்டு விட்டேன்..

   எனக்கு டெக்ஸ் ன் மிக சுமாரான கதையாக வ.வீ தோன்றியது..எனவே அது கண்டிப்பாக உங்களுக்கு பிடித்ததாக இருக்கும் என அப்போதே கணித்தேன்..:-)

   Delete
  5. வெளியான சமயம் இந்தக் கதைக்களத்தின் கனத்தைப் பார்த்து நண்பர்கள் சிலர் நெளிந்தது நிஜமே ! இந்தக் கதையானது more suited to கேப்டன் டைகர் என்றும் நிறைய அபிப்பிராயங்கள் அப்போது சுற்றி வந்தன ! TEX கதைகளுள் பணியாற்ற நிறையவே சிரமப்பட்ட வெகு சொற்பமான கதைகளுள் இதுவும் ஒன்று என்பேன் !

   Delete
  6. (செந்தில் சத்தியாவுக்கு பரிசு ஏதும் இல்லீங்களா கணேஷ்குமார்?)\\\

   TINTIN காமிக்ஸ் இருக்கிறது(இரண்டு உள்ளது). அதில் ஒன்று தரட்டுமா செந்தில் சத்யா.

   Delete
  7. கரீக்டா கண்டுபிடிச்ச செந்தில் சத்யாவுக்கு காமிக்ஸ் கனவுலகம் ஈபுவி ஸ்பெசல் புத்தகங்களை பரிசாக வழங்குகிறது. கணேஷ் நீங்க வந்தா நீங்களே உங்க கையாலே குடுத்துடலாம்

   Delete
  8. ///வல்லவர்கள் வீழ்வதில்லை நிறைய பேருக்கு பிடிக்க வில்லை என்று ஆசிரியர் ஒரு பதிவில் கூறி இருந்தார். ///

   எனக்கு பிடித்தே இருந்தது.. நான் அதை பல முறை படித்து இருக்கிறேன்.. முதன்முறையாக இரண்டாவது புத்தகம் வாங்க நினைத்த இதழும் அதுவே.. ஆனால் அது விற்று தீர்ந்து விட்டதாகத் தெரிகிறது..

   Delete
 44. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். Editor sir Durango பற்றி ஏன் எதும் கூறவில்லை. இன்னும் வேலை தொடங்க வில்லையா ? மே மாதம் உண்மையிலேயே காத்திருக்க வைத்து விட்டது. இன்னும் இம்மாத இதழ்களை இன்னும் படிக்க நேரம் கிடைக்க வில்லை . படித்தவுடன் விமர்சனம்.

  ReplyDelete
  Replies
  1. //இன்னும் இம்மாத இதழ்களை இன்னும் படிக்க நேரம் கிடைக்க வில்லை //

   :-(

   Delete
  2. எடிட்டர் ஐயா இரண்டு புத்தகங்களை படித்து முடித்து விட்டேன் . Lucky Luke மற்றும் டெக்ஸ் இரண்டுமே அருமை . 10/10, 8/10 இன்னும் இரண்டு புத்தகங்களை படித்து முடித்து விட்டு விமர்சனம் செய்கிறேன் இன்று மாலை. Lucky Luke அட்டகாசம். நிறைய தகவல்கள் உள்ளது கதையில். நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான மீள் வரவு. டெக்ஸ் இந்த முறை சோடை போகவில்லை. So far so good!

   Delete
 45. Lone ranger திரைப்படமாக பார்த்துள்ளேன் Johnny Depp டோன்டாவாக நடித்திருப்பார். Technical ஆக படம் சிறப்பாக இருக்கும். காமிக்ஸில் தேறுகிறாரா என we will wait & see!

  ReplyDelete
 46. புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  ReplyDelete
 47. குளிர்கால குற்றங்கள் :

  அதான் அந்த செவ்விந்தியன் இரட்டைத் துப்பாக்கி ( டூ கன்ஸ்) மரணத்துக்கு காரணமான காக்கா சகோதரர்களை (க்ரோ ப்ரதர்ஸ்) தேடிக் கண்டூபிடிச்சி (அப்கோர்ஸ்.. அவனுகளாவேதான் வந்து மாட்றானுங்க.) போட்டுத் தள்ளிடுறாரில்லே..! அப்புறமும் ஏன் ஜானதானை திட்றிற்க சாமி..!?

  அந்த கேப்டனோட சூழ்ச்சியையும் முறியடிச்சிடுறாரே..!

  இன்னும் என்ன பண்ணுவாராம்.. சும்மா சும்மா திட்டாதிங்க மக்களே..
  ஒரு வயது முதிர்ந்த நீளமுடிக்காரர் என்றும் பாராமல்...


  ஏதோ.. அந்த புள்ள குட்டிநிலா (லிட்டில் மூன்) அந்தண்ட இந்தண்ட போகையில ஜானதானைப் பாத்து பாத்து வினையமா சிரிச்சி வெச்சிருக்கும்.!
  அந்த புள்ளையோட ஆசையை நிறைவேத்தனுமேன்னு பிரயாசைப் பட்டு ஒரு எருமைமாட்டக் கொன்னு அதோட தோலை உரிச்சி இன்னொரு எருமைமாட்டுக்கு.. சாரி சாரி.. லிட்டில் மூனோட அப்பரிடம் குடுத்து முறைப்படி பொண்ணு கேட்டு கன்னாலம் கட்டிக்கிறாரு. இதிலென்ன குறையைக் கண்டீங்க மக்களே..! ஐம்பதிலும் ஆசை வரும்னு நீங்க கேள்லிப்பட்தில்லையா.!?

  அப்புறம் பொண்டாட்டி போன சோகத்துல ஏதோ கொஞ்சம்.. கழுத்துவரைக்கும் குடிச்சிட்டு தாடி வளத்திக்கிட்டு திரியாறாரு.!அது ஒரு குத்தாமாங்க.!? அம்புட்டு சோகத்திலேயும் கூட ராணுவ வீரர்களை காப்பாத்தணும்னு லராமி கோட்டைக்கு பயணம் போறாரே..! நல்ல சரக்கு கிடைக்கும்னா கோட்டைக்கு பொனாரு.. !? அதைப்போய் கிண்டல் பண்றீங்களே.!

  என்ன ஒண்ணு. .

  ஒரு முப்பது வருசத்து முந்தி வந்திருக்கலாம்.!

  ReplyDelete
  Replies
  1. ச்சே.. புது மொபைல்ல டைப் பண்றதுக்குள்ள தாவு தீர்ந்திடுது.. எத்தனை பிழைகள்.. ச்சேச்சே..!!


   ( புது மொபைல் வாங்கியிருக்கிறதை சொல்லணும்னு இப்படி கமெண்ட் போட்டிருக்கேன்னு தயவுசெய்து நினைச்சிடாதிங்க.. ஹிஹி)

   Delete
  2. ///முறைப்படி பொண்ணு கேட்டு கன்னாலம் கட்டிக்கிறாரு. இதிலென்ன குறையைக் கண்டீங்க மக்களே..! ஐம்பதிலும் ஆசை வரும்னு நீங்க கேள்லிப்பட்தில்லையா.!? ///

   இன்னும் ஒரு ரெண்டுமூனு வருசத்தில் உங்களுக்கும் இப்படியாப்பட்ட ஆசை வரும்போது யாரும் எதுவும் பேசிடக்கூடாதுன்னுதான் இப்போலேர்ந்தே பிட்டுப் போட்டு வைக்கறீங்க போலிருக்கே? ;)

   ///புது மொபைல் வாங்கியிருக்கிறதை சொல்லணும்னு இப்படி கமெண்ட் போட்டிருக்கேன்னு தயவுசெய்து நினைச்சிடாதிங்க.. ஹிஹி///

   சே.. சே! உங்களுக்கு வேணும்னா இது புதூ மொபைலா இருக்கலாம்.. ஆனா இதுக்கு முன்னாடி இந்த மொபைலை வச்சிருந்த சொப்பனசுந்தரிக்கு?

   Delete
  3. . கரகாட்டக்காரன்கவுண்டமணி கமெண்ட் Pasted here

   Delete
  4. ///இன்னும் ஒரு ரெண்டுமூனு வருசத்தில் உங்களுக்கும் இப்படியாப்பட்ட ஆசை வரும்போது யாரும் எதுவும் பேசிடக்கூடாதுன்னுதான் இப்போலேர்ந்தே பிட்டுப் போட்டு வைக்கறீங்க போலிருக்கே? ;)///

   இருபத்தியொன்றும் சில மாதங்களுமே வயதான என்னைப் போய்....

   Delete
  5. விமர்சனம் நன்று...


   :-))))


   ஆனா ஒரு கெளபாய் நாயகனை இப்படி கேலி செய்வதை வன்மையாக " கண்ணடிக்கிறேன்"

   Delete
  6. அருமையான விமர்சனம். 🤣🤣😆.

   Delete
  7. //ஒரு வயது முதிர்ந்த நீளமுடிக்காரர் என்றும் பாராமல்...
   //
   இது தாம்பா மேட்டரு. கண்ணர்ர் ஏன் திட்டாதீங்கன்னு சொல்றாருங்கறதுக்கான காரணம் புரிஞ்சுதா மக்கழே.

   Delete
  8. எங்கள் கார்குழல் கண்ணரை காலை வாரிவிடுவதே இந்த ஷெரிப்புக்கு வேலையாப் போச்சு..

   Delete
  9. அதானே....

   நான் கோவமாப் போய் காஜல் அகர்வாலோட சேர்ந்து டூயட் பாடி ஆடப்போறேன்... கனவுல.!

   Delete
 48. சார் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......அட்டைப் படம் மீண்டும் கோடையின் செம்மலர்கள் சென்ற கோடை மலரில் ட்யூராங்கோவில் போல மே ஃபிளவராய் பூக்கச் செய்ய முடிவு செய்து விட்டீர்கள் போலும்...இருந்தாலும் ஊதாவை தெளித்து பச்சையில் முக்கி எடுத்திருந்தால் தூள் கிளப்பியிருக்கும் என்ற தங்களின் இன்னொரு சிந்தையும் மிகச் சரியாகத்ிதான் இருந்திருக்கும் ....ஆனாலும் ஜம்போ என்பதால் ஆகச் சிறந்ததையே செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் யுவர்honour..தங்களுக்குத் தெரியாத நிறமில்லை....எது சரியோ அதை தாராளமாய் தெளித்து உற்சாக வெள்ளத்தைச் சிதற விடுங்கள்...சரி நேரில் வரட்டும்...லக்கி பிடித்தது முதல் இதழ் வாய் பிளக்கச் செய்த வண்ணம் வாழ்வில் முதலாய் அதும் சர்கஸூடன் முடியுமா மற/றுக்க...நெளிந்தது பிசாசுப்பண்ணை சமீபத்தில் கிடைத்துப் படித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. குதிரையையும் சேர்த்து பச்சையில் முக்கி எடுத்தால், என்னை முச்சந்தியில் வைத்துத் துவைத்து எடுப்பார்கள் சாமி !! டைனமைட் ஸ்பெஷல் பச்சை அதற்குள் மறந்து போச்சா ?

   Delete
 49. வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 50. அப்பாடி i?
  உள்ளே வந்துட்டேன். இனி Image_யைத் தான் கொண்டு வரனும்.

  ReplyDelete
  Replies
  1. இந்தச் சிக்கல் ஒருசில நண்பர்களுக்கு மட்டும் ஏனோ ?

   Delete
 51. குளிர்கால குற்றங்கள்: மனைவியுடன் அமைதியாக வாழ்கை நடத்தி வரும் ஜனாதனன் வாழ்வில் திடீர் புயல். அதில் இருந்து எப்படி எழுந்து வருகிறார் மனைவியை கொன்றவனை பழிவாங்கினாரா என்பது கதை.

  மனைவி இறந்த சோகத்தை மறக்க குடித்து விட்டு அலையும் ஜனாதனன் வாரணம் ஆயிரம் படத்தில் காதலியை வெடி விபத்தில் இழந்து விட்டு கதாநாயகன் அடிக்கும் கூத்துக்கள் மற்றும் எப்படி வெளிவருகிறார் என்பதை நினைவு படுத்தியது. இந்த பகுதியை நான் மிகவும் ரசித்தேன்.

  இவர் நம்மை போன்ற சாதாரண மனிதர்,விருப்பு, வெறுப்பு, பழிவாங்கல் எல்லாம் உண்டு அதனை சரியான விதத்தில் கலந்து சொன்ன விதம் அருமை.

  இவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்கலாம்.

  ReplyDelete
 52. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 53. லக்கி லூக் கதைகளில் சுமார் என்றால் 8-10 பக்கங்களில் வந்த சில சிறுகதைகளை சொல்லலாம்.

  ReplyDelete
  Replies
  1. பக்க நிரப்பிகள் என்ற வகையில் அவற்றை படைப்பாளிகளும் அவ்வளவு சீரியஸாக எடுத்திருக்க மாட்டார்கள் போலும் !

   Delete
 54. வாரணம் ஆயிரம் படத்தில் காதலியை வெடி விபத்தில் இழந்து விட்டு கதாநாயகன் அடிக்கும் கூத்துக்கள் மற்றும் எப்படி வெளிவருகிறார் என்பது குளிர்கால குற்றங்கள் கதையில் இருந்து எடுக்கப்பட்டது என நம்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. க்வாட்டர் அடித்துக் குப்புறக் கிடப்பதற்குமா சார் inspiration தேடப் போகிறார்கள் - 45 ஆண்டுகளுக்கு முன்னே வெளியானதொரு காமிக்ஸ் இதழில் ?

   Delete
  2. அதை மட்டும் சொல்லவில்லை. அதன் தொடர்ச்சியாக யாரும் செய்யத் துணியாத செயலை வெற்றிகரமாக கோட்டைக்கு சென்று படைப்பிரிவு ஆபத்தில் இருப்பதை‌ சொல்லி அந்த சிரிய படைப் பிரிவை காப்பாத்துவது. அந்த படத்தில் தனியாக கடத்தப்பட்ட குழந்தையை காப்பாற்றுவது.

   Delete
  3. முடிந்தால் நண்பர்கள் அந்த படத்தை நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

   Delete
 55. //இதுவரையிலுமான லக்கி லூக் சாகசங்களுள் 'டப்ஸா' ரகம் என்று ஏதேனும் உண்டா ? If yes - அவற்றைச் சுட்டிக் காட்டுங்களேன் - ப்ளீஸ் ?//


  அம்மா புடிச்சு தருகிற லட்டுல எந்த பக்கம் கசக்கும் ? சொல்லுங்களேன் ப்ளீஸ்!!!!

  ReplyDelete
  Replies
  1. கீழே கொஞ்சம் பாருங்களேன் சார் !!

   Delete
 56. பரலோகத்திற்கு ஒரு படகு ..

  நேத்திக்குதான் படிச்சேன் !!!

  நைட்ரஸ் ஆக்சைடு !!!!

  9.9 /1௦

  செம !!!

  ReplyDelete
  Replies
  1. ///பரலோகத்திற்கு ஒரு படகு ..

   நேத்திக்குதான் படிச்சேன் !!!

   நைட்ரஸ் ஆக்சைடு !!!!///

   அப்படீன்னா 'குளிர்காலக் குற்றங்கள்' கிளிசரினுங்களா? ;)

   Delete
  2. ஒரு சிறு இடைச்ச்செருகல் இக்கட :

   நேற்றைக்கு வந்த மின்னஞ்சல் இது :

   //ஐயா,
   நான் ஒரு நீண்ட கால வாசகன் . பரலோகத்திற்கு ஒரு படகை படிக்கும் போது டயலாக் பேசும் விதமானது பழைய ஆனந்த விகடனை படிக்கும் உணர்வை ஏற்படுத்தியது. ஐயர் பாஷைக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்? ஒரு கேரக்டர் பேசினால் பரவாயில்லை, கிட்டத்தட்ட அனைவரும் ஐயர் பாஷை பேசுவது, ஜாலி ஜம்பர் உட்பட, பெறுமையை சோதிக்கிறது . தமிழில் வசன நடைக்கா பஞ்சம்? கிராபிக் நாவல் அளவுக்கு முன்னேறிய நீங்கள் ஏன் இன்னும் ஐயர் மொழி வழக்கில் முங்கி உள்ளீர்கள்? கதை பாத்திரங்கள் பெரும்பாலும் எளிய மனிதர்கள். அவர்களுக்கு ஏற்ற வசனமா இது? மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் நண்பரே. நன்றி வணக்கம்.//

   --------------------------------------------------------------------------------------------------------------

   புரியா விஷயங்கள் இரண்டு :

   1.ஐயர் பாஷையிலா இந்தக் கதையின் மொழிநடை இருந்தது ??? Surprised !! And எனக்கு அந்த பாஷை தான் வருமா - என்ன ? News to me !!

   2.And if at all எனக்கு ஐயர் பாஷையும் வரும் பட்சத்தில் - அது ஒதுக்கப்பட வேண்டியதொரு சமாச்சாரமா - என்ன ?? புரியலையே !!

   ஜாலி ஜம்பருக்கு ஒரிஜினலாய் இந்தக் கதையில் வசனமே கிடையாது ! நான் தந்துள்ளவை :

   Page 5 : இந்த பிரேக் போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா ?

   Page 9 : நேக்கும் ஒரு பெர்த் உண்டுன்னா டபுள் ஓ.கே.

   Page 10 : போறோம்..பெர்த்தைப் போடுறோம்..கட்டையைக் கிடத்துறோம் !

   Page 11 : இந்த தாத்தா சாரை எனக்கு ரொம்பவே புடிக்குது !

   Page 13 : நல்ல நேரம் பார்த்தீங்க பாஸ் அதை ஞாபகப்படுத்த !

   Page 27 : புடிக்கலை...புடிக்கலை...எனக்கு தண்ணியும் புடிக்கலை ! ஆகாசமும் புடிக்கல்லை !

   Page 29 ; பாஸ்! அப்படியே ஒரு ஓட்டம் புடிச்சாக்கா, ரெண்டே நாளிலே ஊர் திரும்பிடலாம் ! என்ன சொல்றீங்க ?

   இந்த வரிகளுள்"நேக்கு" என்ற ஒற்றை வார்த்தை வேண்டுமானால் நண்பர் குறிப்பிடும் பாணியில் இருந்திருக்கலாம் ; அதுவே பொறுமையைச் சோதிக்கிறதெனில், இன்றைய பொறுமைகளின் thresholds ரொம்பவே குறைந்து போய் விட்டன என்று தான் சொல்லத் தோன்றுகிறது !

   Delete
  3. ஒரு குதிரை ஐயர் பாஷை பேசுதேன்னு ஆச்சரியப்பட்டிருக்க வேணாமா?!! இதுக்கெல்லாமா ஒரு முழுநீள மெயிலைத் தட்டி விடுவாங்க? பாராட்ட எத்தனையோ நல்ல விசயங்கள் இருக்கே அதில்? அதைவிட்டுட்டு...

   இதையெல்லாம் கண்டுக்கிடாதீங்க எடிட்டர் சார்!

   Delete
 57. தனியொருவன் வருகிறதா??? வெரிகுட்!!!

  ReplyDelete
 58. முழுநீள...சிறுகதைகள் என சுமார் 35 கதைகளில் லக்கிலூக் தமிழ் பேசியிருக்கிறார் என எடி சொல்கிறார்.அநேகமாக எல்லா கதைகளையும் வாசித்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.எல்லாமே ஹிட்...சூப்பர் ஹிட்....சூப்பர் டூப்பர் ஹிட் ரகங்கள்தான்.சொதப்பல் என்று ஏதும் கிடையாது.இனிமேல் புதுக்கதை ஏதாவது வந்து சொதப்பினால்தான் உண்டு.பிடித்த கதைகள் என்று பார்த்தால் நிறைய சொல்லலாம்.ஒன்றே ஒன்று எனும்போது...., சூப்பர் சர்க்கஸை நினைவு கூர்வதே நியாயம்.முதன் முறையாக ஒரு முழுநீள கார்ட்டூன் என்று முழுவண்ணத்தில் இரண்டு ரூபாய் விலையில் வாங்கிப்படித்த பரவசம் இன்னும் எத்தனை வருடங்களானாலும் மறக்க முடியாதது.ஒரு அட்டகாசமான....ஜாலியான...வெடிச்சிரிப்புகளை அள்ளி இறைத்துச்சென்ற சூப்பர் சர்க்கஸ் எனது கண்ணோட்டத்தில் THE VERY BEST ஆல்பம்.சுட்டி லக்கி பிடிக்கவில்லை.லக்கி கதைகளில் இடம்பெறும் ரின் டின் கேன் மிகவும் பிடிக்கும்.ஆனால் அதுவே தனி ஆல்பமாக வந்நபோது படிக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. //லக்கி கதைகளில் இடம்பெறும் ரின் டின் கேன் மிகவும் பிடிக்கும்.ஆனால் அதுவே தனி ஆல்பமாக வந்நபோது படிக்கவில்லை.//

   காமெடி நாயகர்கள் ஹீரோவாக புரமோஷன் காணும் பெரும்பான்மையான வேளைகளில் வெற்றி அத்தனை சுலபமாய்க் கிட்டியதில்லை ! நமது ரின்னாரும் அந்தப் பட்டியலில் தான் போலும் சார் !

   Delete
  2. //லக்கி கதைகளில் இடம்பெறும் ரின் டின் கேன் மிகவும் பிடிக்கும்.ஆனால் அதுவே தனி ஆல்பமாக வந்நபோது படிக்கவில்லை.//


   +1

   Delete
  3. Saravana Kumar ji. நான் சொல்ல நினைத்தது இது தான் . முதல் முறை கலரில் படித்த போது சூப்பர் சர்க்கஸ் கொடுத்த அனுபவம் அலாதியானது. அதற்காகவே முதல் இடம்.

   Delete
 59. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 60. எனக்கு பிடித்த லக்கி லுக் "பேய் நகரம்".

  ஜாலி ஜம்பர் மற்றும் அதன் ஜோடியும் சரக்கடித்துவிட்டு பன்னும் ரகளை அல்டிமேட்.
  அதுவும் பார் அட்டன்டர்
  "அவளை பிசாசுன்னு தான் எல்லோரும் அடையாளம் சொல்றது வழக்கம்! போற இடமெல்லாம் வம்பு வளக்கிற அந்த பெண் ராட்சஸியோட பேரு "காலமிட்டி ஜேன்"" ன்னு ஜோன் கிட்டயே சொல்லி அடி வாங்குவது செம..

  ReplyDelete
  Replies
  1. பேய் நகரம் படித்த மாதிரி ஞாபகம் இல்லை. வீட்டில் இருந்தால் தேடிப்பிடித்து படிக்க போகிறேன்.

   Delete
  2. பேய் நகரம் LMSல் வந்த கதை.

   Delete
  3. Lion magnum special? இதில் அந்த கதை இல்லை.

   Delete
  4. LMS ரெண்டாவது புக்ல இருக்கு சார்.

   Delete
  5. tiger kathai bookila? let me check tonight!

   Delete
 61. அப்பாடி i?
  உள்ளே வந்துட்டேன். இனி Image_யைத் தான் கொண்டு வரனும்.

  ReplyDelete
 62. Lucky Luke கதை அருமையாக இருந்த்து.
  யோனதன் போர்ட்லன்ட் பரவாயில்லை.
  Details மிகவும் குறைவு. சில இடங்கள் dances with wolves படத்தின் சாயல் தெரிகிறது.
  உ.ம. எருமை வேட்டை மற்றும் அதையொட்டி செவ்விந்தியர் புதிய இடங்களை தம் குடியிருப்பின் தேர்வு செய்வது.
  Two guns க்கும் Garland க்கும் என்ன உறவு என்பது கதையில் சொல்லப்படவில்லை

  ReplyDelete
 63. தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள

  ReplyDelete
 64. பச்சோந்தி பகைவன் !!!!

  டாப் கிளாஸ் டெக்ஸ் கதை !!!!


  Soft core டேஞ்சர் டயபாலிக் மாதிரி இருந்தாலும் வில்லன் அப்டிங்கறதால எல்லாருக்கும் புடிச்சு போச்சு ...


  அட்டையில இருக்கிறதே டெக்ஸ் வில்லர் கிடையாது ..நெசத்துல வில்லன் பெர்ரிதான் அப்டின்னு ஊருக்குள்ளே பேசிக்கிடறாங்க !!! ;-)

  9.4/10

  ReplyDelete
  Replies

  1. ///அட்டையில இருக்கிறதே டெக்ஸ் வில்லர் கிடையாது ..நெசத்துல வில்லன் பெர்ரிதான் அப்டின்னு ஊருக்குள்ளே பேசிக்கிடறாங்க !!!////

   ஹா ஹா! நல்ல கற்பனை! :)))

   Delete
  2. அட்டையில இருக்கிறதே டெக்ஸ் வில்லர் கிடையாது ..நெசத்துல வில்லன் பெர்ரிதான் அப்டின்னு ஊருக்குள்ளே பேசிக்கிடறாங்க !!!//

   😁😁😁😁

   Delete
  3. Dr selvam - Believe it or not - I was expecting such a climax. Hopefully it does happen in a future encounyer and our hero has to prove it all. :)

   Delete
 65. அனைத்து கதைகளும் படித்து முடித்து விட்டேன். எனக்கு Jonathan பெரிய ஏமாற்றமாக தெரியவில்லை. இது ஒரு original Western எனக்கும் முதல் கதையை விட இரண்டாவது கதை பிடித்தது. I'll give Jonathan 9/10. Prince in கதை முதலில் படித்த நினைவு சிறிதும் இல்லை. Captain Prince எப்போதுமே ஏமாற்றுவது இல்லை. அருமையான படங்கள் நல்ல கதை. I'll give 8/10. So இந்த மாதம் எனக்கு சற்றும் ஏமாற்ற வில்லை. 4 out of 4.

  ReplyDelete
  Replies
  1. Very True - we are used to falsely created western stories like Tex Willer and Blueberry - though a real character the stories are quite fictional in Blueberry. So when a real WILD WEST story was presented folks did not like it :-( :-( :-(

   Delete
 66. ஆசிரியர் அவர்களே, குளிர்காலக் குற்றங்கள் நீங்கள் சொன்ன அளவிற்கு மிகவும் மோசமான கதையாகத் தெரியவில்லை. டமால் டுமீல் ஆக்ஷனையும், டைகரின் புத்திசாலித்தனத்துடன் சேர்ந்த கதையையும் எதிர்பார்க்காமல் ஜானதன் கார்ட்லேண்ட் அவர்களை படித்தால் நன்றாகவே இருக்கும். பாஸ்மார்க் மட்டுமல்ல, 75% மதிப்பெண் கொடுக்க முடியும் வேட்டையருக்கு.

  ReplyDelete
  Replies
  1. காமிக்ஸ் ரசிகர்கள் கதையைப் பார்த்தார்களே தவிர அந்த ஓவிய அழகையும் , கலரிங் - கையும் ரசிக்க மறந்தது ஏனோ?ii
   கேப்டன் டைகர், கதைகளையும், டெக்ஸ் வில்லலரையும் கரைத்து குடித்த நமக்கு கதையில் சில இடங்களை இப்படி கொண்டு சென்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று திருத்தங்கள் சொல்லும் அளவிற்கு புலமை வந்துவிட்டது என்னம்மோ வாஸ்தவம் தான்.
   ஆனால் புதிதாக ஒருவருக்கு படிக்கக் கொடுத்தால் அவர்கள் நிச்சயம் பரவசம் அடைவார்கள்.
   கதை, ஒவ்வொருவரின் சுவா வங்கள், ஓவியநேர்த்தி என்று மெர்சலாகிப் போய் விடுவார்கள். என்பதே உண்மை.

   Delete
  2. காமிக்ஸ் ரசிகர்கள் கதையைப் பார்த்தார்களே தவிர அந்த ஓவிய அழகையும் , கலரிங் - கையும் ரசிக்க மறந்தது ஏனோ?ii
   கேப்டன் டைகர், கதைகளையும், டெக்ஸ் வில்லலரையும் கரைத்து குடித்த நமக்கு கதையில் சில இடங்களை இப்படி கொண்டு சென்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று திருத்தங்கள் சொல்லும் அளவிற்கு புலமை வந்துவிட்டது என்னம்மோ வாஸ்தவம் தான்.
   ஆனால் புதிதாக ஒருவருக்கு படிக்கக் கொடுத்தால் அவர்கள் நிச்சயம் பரவசம் அடைவார்கள்.
   கதை, ஒவ்வொருவரின் சுவா வங்கள், ஓவியநேர்த்தி என்று மெர்சலாகிப் போய் விடுவார்கள். என்பதே உண்மை.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. ///காமிக்ஸ் ரசிகர்கள் கதையைப் பார்த்தார்களே தவிர அந்த ஓவிய அழகையும் , கலரிங் - கையும் ரசிக்க மறந்தது ஏனோ?///


   'ஜாகஜ வீரர் ரோஜர்' ஆல்பங்கள் எல்லாமே சித்திரத் தரம் கண்ணுல ஒத்திக்கற மாதிரிதான் இருக்கும்! ஆனா அதுக்காண்டி?!! 'தம்பி ரோசரூ.. உங்கிட்டே சரியான கதை எதுவுமில்லேன்னா அப்படி ஓரமாப் போய் வெளாடுப்பா'னு சொல்லி அனுப்பிச்சவங்க நாங்க!
   இந்த 'கமான்சே' தொடரை எடுத்துக்கிட்டீங்கன்னா, அதுல பக்கத்தைப் புரட்டும்போது திடீர்திடீர்னு ஸ்தம்பிக்க வைக்கும் அழகோட ஓவியங்கள் கண்ணில் படும்! ஓவியர் ஹெர்மனுக்கு மனித முகங்களை வரையறதுல மட்டும்தான் சிக்கல் - மத்தபடி இயற்கைய வரையறதுல அந்த அண்ணாச்சிய அடிச்சுக்க ஆளே கிடையாது! ஆரம்பத்துல அருமையாப் போய்க்கிட்டிருந்த கதை, அப்புறமா திக்குத் தெரியாம தடுமாற ஆரம்பிச்சது! சொன்னோமுல்ல 'ஐ ஸே யூ கெட்அவுட்'னு!!
   அட அவ்வளவு ஏனுங்க.. நம்ம வில்லியம் வான்ஸு.. அட்டகாசமான ஓவியங்கள்னாலும் கூட, முகமற்ற கண்கள்.. முடியில்லா மண்டை'ன்னெல்லாம் பேர்வச்சுக்கிட்டு பழைய பாணி மசாலா கதையோடு வந்தவரை அப்படியே திருப்பி அனுப்பினோமுல்ல!! யார்கிட்டே? கடைசியா வந்த லார்கோ கதைக்கும் அதானுங்களே கதி?

   இதிலிருந்து சொல்லப்படும் நீதி என்னவென்றால்... தமிழ்நாட்டு காமிக்ஸ் வாசகர்களை வெறுமனே படத்தை மட்டும் காட்டி யாரும் மயக்கிவிடமுடியாது என்பதே!

   கதை.. கதை வேணுங்க கதை!


   Delete
  5. இதெல்லாம் கூட பரவாயில்லை குருநாயரே..

   வறண்டு கிடக்கும் நிலத்தில் நன்னீருற்றாய் தோன்றி நம் நெஞ்சங்ளை தன் அழகென்னும் கலப்பையால் உழுது கவர்ச்சியென்னும் விதையைத் தூவி குதூகலம் என்னும் பழமரங்களை விளைவித்து முரட்டு கதாநாயகர்களுடன் பாலைவன வெய்யிலில் அலைந்து திரிந்த நம்மை தன்னுடைய சோலைவனத்தில் இளைப்பாற வைத்த Lady S என்னும் அந்த அழகுதேவதை ஷானியாவை விரட்டியதை நினைக்கும்போதுதான்......

   Delete
  6. KOK...

   என்னைப் போலவே, நீங்களும் ஷானியாவை எம்புட்டு நேசிச்சிருக்கீங்கன்னு இப்பப் புரியுது!

   மூச்.. மூச்.. ப்பூஊஊஊவ்..

   Delete
  7. ///என்னைப் போலவே, நீங்களும் ஷானியாவை எம்புட்டு நேசிச்சிருக்கீங்கன்னு இப்பப் புரியுது!///

   இந்த விஷயத்தில தான் நம்மளுக்குள்ள நெம்ப ஒத்து போகுது!!

   🤣🤣🤣

   Delete
  8. நான் தான் அப்பவே, ஆசிரியரிடம் கேட்டேனே. நீங்கள் "மாட ஸ்டி" யை கைவிடுவதானால் " சானியா"வையாவது சேர்த்துக் கொள்ளுங்களேன். என்று? ii
   இப்ப புரிந்திருக்கும் பலருக்கு ஜானதனுக்கு (வயசான கெளபாய் - க்கு) சானியா வே தேவலாம் என்று.

   Delete
  9. நான் தான் அப்பவே, ஆசிரியரிடம் கேட்டேனே. நீங்கள் "மாட ஸ்டி" யை கைவிடுவதானால் " சானியா"வையாவது சேர்த்துக் கொள்ளுங்களேன். என்று? ii
   இப்ப புரிந்திருக்கும் பலருக்கு ஜானதனுக்கு (வயசான கெளபாய் - க்கு) சானியா வே தேவலாம் என்று.

   Delete
 67. லக்கிலூக்கைப் பொறுத்த வரையிலும் உங்களுடைய கருத்தை ஏற்பதே சரி. எந்த குறையும் வைக்காத ஒல்லிப்பிச்சானுக்கு எப்பொழுதும் 90-க்கும் மேலே தான் மதிப்பெண்

  ReplyDelete
 68. ஆசிரியர் அவர்களே ஜானதனுக்கு இன்னொரு வாய்பு குடுங்கள்

  ReplyDelete
 69. Cartoon காமிக்ஸ் எல்லாமே எனக்கு பிடித்தவை தான்.
  லியானர்டோ தாத்தா இரண்டாவதாக வந்த காமிக்ஸை படிக்க சிரமமாக இருந்தது.

  மற்றப்படி cartoon க்கு நான் எப்பவுமே ஜே போடுபவன்.

  ReplyDelete
 70. ஒரு சிறு தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆங்கில comics compare செய்யும் போது தான் தமிழ் comics எவ்வளவு விலை குறைவு என்பது தெரிகிறது . ஒரு புத்தகம் குறைந்தது 350-400 . மேலும் அது ஹார்டு கவர் என்றால் இன்னும் 200 அதிகம். நமக்கு எளிதாக கிடைப்பதால் ஒரு பொருளின் அருமை நமக்கு புரிவது இல்லை. The more the merrier!. புத்தகங்கள் தமிழில் கிடைக்கும் வரை பயன் படுத்தி கொள்வது தான் நமக்கு நல்லது.

  ReplyDelete
 71. அறிவுசார் காமிக்ஸ் ரசிகர்கள் - ஆசிரியர் " ல க்கி லூக்"யில் டாப் கதை எது என்று கேட்டதும் டக்கென்று "தாயில்லாமல் டால்டனில் லை " - "மனதில் உறுதி வேண்டும்" _ என்று இரண்டில் ஒன்றை சொல்ல வேண்டாமோ?i
  அட்டகாசமான கதைகளன்றோ? i
  (நீயூஸ் பிரிண்ட் பேப்பரில்).

  ReplyDelete
 72. அறிவுசார் காமிக்ஸ் ரசிகர்கள் - ஆசிரியர் " ல க்கி லூக்"யில் டாப் கதை எது என்று கேட்டதும் டக்கென்று "தாயில்லாமல் டால்டனில் லை " - "மனதில் உறுதி வேண்டும்" _ என்று இரண்டில் ஒன்றை சொல்ல வேண்டாமோ?i
  அட்டகாசமான கதைகளன்றோ? i
  (நீயூஸ் பிரிண்ட் பேப்பரில்).

  ReplyDelete
 73. குளிர்கால குற்றங்கள்

  இப்போதுதான் முழுக்கதையையும் படித்துமுடித்தேன்.!
  இரண்டாவது கதை முன்னதைவிட நன்றாகவே இருந்தது.!
  ஓவியங்கள்தான் கதைத்தொடரின் முதுகெலும்பே.!
  அந்நாளைய வன்மேற்கில் ஒரு நடுத்தரவயது வேட்டையரின் வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்கக்கூடும்.!

  குறைகள் என்றால் சம்பவங்கள் Fast forward செய்தது போல் ஓடிக்கொண்டே இருப்பதுதான்.!அப்படி ஓடும் சம்பவங்களுக்கு தெளிவான பின்னனி சொல்லப்படாததும் ஒரு குறைதான்.! ஆனாலும் சம்பவங்களுக்கான காரணங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியும்.!
  இந்த அளவுக்கு கழுவி ஊத்தவேண்டிய கதையல்ல என்பது என் கருத்து.!

  ஜெரெமயாவை விட பலமடங்கு ஜானதான் கார்ட்லண்ட் பரவாயில்லை என்பதும் என் கருத்து.!

  முழு இதழையும் படித்து முடித்தபோது எனக்குத் தோன்றியது..

  நல்லாத்தான் இருக்கு.. ஆனா ஏதோ குறையுறமாதிரி இருக்கு.!

  பெரும்பான்மை நண்பர்களின் விருப்பம் மற்றும் விற்பனை நிலவரத்தைப் பொறுத்து ஜானதான் தொடரலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்பதும் என் கருத்து.!

  ReplyDelete
  Replies
  1. இன்னொரு கொடுத்து பார்க்கலாம்!!

   Delete
  2. "வாய்ப்பு" மிஸ் ஆயிடுச்சு

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. KOK..

   எல்லாமே நியாயமான கருத்துகள் தான்!
   லேட்டாகப் படிப்பதில் ஒரு செளகரியம் என்னன்னா.. 'எதிர்பார்ப்பு மீட்டர்'ன் அளவு ஏகத்துக்கும் குறைஞ்சு போயிருக்கும் - 'அப்படியொன்னும் மோசமில்லையே'ன்னு தோனுவதும் ஜகஜமே!

   ஆனா நான் படிக்கும்போது மீட்டர் செவப்புக் கோட்டைத் தாண்டி சல்லுனு எகிறிக் கிடந்ததால கொஞ்சம் ஏமாற்றத்தின் அளவும் தூக்கலா ஆகிப்போச்சு!

   பக்கத்துக்குப் பக்கம் யாராவது யாரையாவது கொன்னுக்கிட்டே இருந்தாப் போதும் - மத்தபடிக்கு கோர்வையா கதை சொல்லனும்றது அவசியமில்லேன்னு கதாசிரியர் நினைச்சுருந்தார்னா.. அடுத்த ஆல்பமும் தேறுவது சிரமமே!

   Delete
 74. Replies
  1. நான்
   நீங்க
   ஜேம்ஸ் பாண்டு ஹீரோயினிகள்

   :)

   Delete
 75. //ஆறு அத்தியாயங்கள்  ஒன்றிணைந்த ஆல்பம் என்பதால் உள்ளே 6 ஒரிஜினல் அட்டைப் படங்களும் உண்டு !//Sப்பர்

  ReplyDelete
 76. ///ஆறு அத்தியாயங்கள் ஒன்றிணைந்த ஆல்பம் என்பதால் உள்ளே 6 ஒரிஜினல் அட்டைப் படங்களும் உண்டு !//

  சூப்பர்! எல்லா அட்டைப் படங்களுமே ஹார்டு பைன்டிங்கில் தானே? ஹிஹிஹி!

  இப்ப டிக்கி,
  ஏடாகூட ஏகாம்பரம்

  ReplyDelete
 77. லக்கி Top இதழ்,

  பூம் பூம் படலம்.

  ReplyDelete
 78. Jonathan Garland முழுக்கதையையும் படித்த பிறகு. விமர்சனம் செய்வது போல மோசமான கதைகள் அல்ல. Super duper hit என்றும் சொல்ல முடியவில்லை. Yearly once slot ல் தொடரலாம் என்பது என் கருத்து. ஆயினும் இந்த கதைகளில் இனந்தெரியாத ஒரு ஈர்ப்பு உள்ளது என்பது உண்மை.

  ReplyDelete