Powered By Blogger

Wednesday, April 28, 2021

ஏப்ரலில் மே !

 நண்பர்களே,

வணக்கம். காத்திருக்கும் இந்த வாரயிறுதி, நெடும் விடுமுறைகளோடு என்பதால் இன்றைக்கே மே மாதத்து இதழ்களை உங்கள் இல்லங்கள் நோக்கிப் படையெடுக்க வழியனுப்பி வைத்தாச்சு ! ட்யுராங்கோ + டெக்ஸ் + மாயாவிகாரு என்ற தெறி மாஸ் கூட்டணி இம்முறை ! So வாரயிறுதியில் எந்தக் கட்சி பட்டாசு போட்டாலும் சரி, எந்தக் கட்சி  முகாரியினை இசைத்தாலும் சரி, நமது காமிக்ஸ் கட்சியின் சார்பாய் ஒரு ஜாலி சரவெடி வெடிக்கலாம் ! And அதற்கென நேர காலக் கட்டுப்பாடுகளோ ; ஊரடங்குகளோ அமலில் இராது ! 

இக்கட சின்னதாயொரு நினைவூட்டல்  guys

மாயாவியின் "கொரில்லா சாம்ராஜ்யம்" 2020 சந்தாவின் கிராபிக் நாவல்களின் E பிரிவினில் தொக்கி நின்ற தொகையினை சமன் செய்திடத்  தயாராகியுள்ள இதழ் என்பதை நினைவூட்டுகிறேன் !  So 2020-ல் கிராபிக் நாவல் பிரிவிற்கும் சந்தா செலுத்தியிருந்த பட்சத்தில் மட்டுமே  வண்ணத்திலான மாயாவியை இம்மாத டப்பியில் உங்களுக்கு சேர்த்து அனுப்பியிருப்பார்கள் ! And 2021 முதலாய் சந்தாவில் ஐக்கியமாகியுள்ள (புது) நண்பர்களுக்கு "கொ.சா."அனுப்பப்பட்டிராது ! 

இதோ, ஆன்லைனில் லிஸ்டிங்களும் போட்டாச்சு : 

https://lion-muthucomics.com/latest-releases/834-2021-may-pack.html

https://lioncomics.in/product/2021-may-pack/

கூரியர் நண்பர்கள் நாளைய பொழுதில் உங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டுவார்களென்றும் , இந்த வாரயிறுதியை இந்த powerful கூட்டணியோடு நாம் கலக்கலாமென்றும் நம்பிடும் கையோடு - ஜூன் மாதத்து காம்போவை நோக்கி நடையைக் கட்டுகிறேன் folks ! Bye for now !!  See you around !! 

Sunday, April 25, 2021

பண்டிகை..பட்சணங்கள்..பட்டாசு..புதுத்துணி !

 நண்பர்களே,

லாக்டௌன் தின வணக்கங்கள் ! நேத்திக்கே கறிக்கடை ; காய்க்கடை என கொள்முதல் படலங்களை முடித்த கையோடு இங்கே  வாக்குப்பதிவுகளைச் செய்திட நீங்கள் தெம்பாய் அணி திரண்டிருப்பதைப் பார்க்கும் போது குஷியாக உள்ளது ! முக்கிய கேள்வியெனும் போது, உங்களின் en masse பங்களிப்பானது  தீர்மானிக்கும் எனது பொறுப்பை இலகுவாக்கிடும் ; so தொடர்ந்து வாக்குச் சாவடிக்கு ஷண்டிங் please !

பின்னூட்டங்களுக்கு மத்தியில் நண்பர் மஹி குறிப்பிட்டிருந்ததொரு விஷயமானது எனது கவனத்தை ஈர்த்தது ! பொத்தாம் பொதுவாய் "கார்ட்டூன் ஸ்பெஷல்" ; "புதிய ஆல்பம்" ; "மாயாவி & ஆர்ச்சி" - என்றிராது - அவற்றிற்கு எந்தக் கதைகள் என்ற அடையாளங்களையும் தந்தால் தீர்மானங்கள் இன்னும் சற்றே தெளிவு காணலாம் தான் ! So here goes :

கார்ட்டூன் ஸ்பெஷல் என்றால் தற்சமயத்துக்கு மனசில் தோன்றும் முதல் ஆசாமி நம்ம ஒல்லியார் லக்கி லூக் தான் ! அவரது 2 ஹிட் கதைகளை ஒன்றிணைத்து ரூ.200 விலைக்கு தீபாவளிக்கு மலரச் செய்யலாம் தான் ! ஆனால் அதே template தான் கடந்த சில வருஷங்களாக நமது லயனின் ஆண்டுமலருக்கு நடைமுறையில் உள்ளதென்பதால் இங்கே வேலைக்கு ஆகாது ! எஞ்சியிருக்கும் கார்ட்டூன் பட்டாளத்தினிடையே அடுத்த நிலையினில் நிற்போர் உட்ஸிட்டி கோமாளிகளே ! And நடப்பு மாதத்தினில் (நீர் இன்றி அமையாது உலகு !) score செய்திடவும் இவர்களுக்கு முடிந்துள்ளதெனும் போது - தீபாவளிக்கு டாக் புல் & கிட ஆர்டினையே ஒரு டபுள் ஆல்பத்தில் குத்தாட்டம் போடச்செய்யலாம் ! அதாவது - கார்ட்டூன் ஸ்பெஷல் தான் வாக்கெடுப்பினில் வெற்றி காண்கிறதென்னும் பட்சத்தில் !

"புது ஆல்பம்" - என்று வரும் போது - கைவசம் 3 வெவ்வேறு தொடர்கள் உள்ளன ! முதலாவது ஒரு classic western ! ஒரு ஜாம்பவானின் தூரிகைகளில் ஓட்டமெடுக்கும் ஆக்ஷன் மேளா ! இரண்டாவதோ ஒரு ஆக்ஷன் அதிரடியாளரின் இரு பாக சாகசம் ! நாம் அதிகம் பார்த்திரா ஒரு இருண்ட கண்டத்தினில் அரங்கேறும் high voltage த்ரில்லர் அது ! மூன்றாவதோ ஒரு லேட்டஸ்ட் பாணியிலான சமகால க்ரைம் த்ரில்லர் ! அரசியல் சதுரங்கத்தில் நிழல் மனிதர்களின் பங்களிப்புகளை அதிரடியாய்ச் சொல்லும் கதையிது ! So - புதுசாய் ஏதாச்சும் பார்க்கலாமென்று எண்ணிடும் பட்சத்தில் மேற்படி மூன்றில் எதுவேனாலும் சாத்தியமே !! (அப்பாலிக்கா அதுக்கொரு மினி தேர்தல் வைக்கணும் !)

Last but not the லீஸ்ட், தேர்வாவது  "இரும்பு பெசல்" எனில் - Black & White "யார் அந்த மாயாவி ? ப்ளஸ் சட்டித்தலையனின் புதியதொரு சாகசம் + மாயாவி சிறுகதைகள் என்ற combo சாத்தியம் ! 

மத்தபடிக்கு தோர்கலோடு தீபாவளியெனில் அவரது தொடரினில் வரிசைக்கிரமப்படி அடுத்த 2 ஆல்பங்களைப் போட்டுத் தாக்கிடலாம் !

And 'தல' தீபாவளி தான் இம்முறையும் எனும் பட்சத்தில்  - டெக்சின் இளவலை தூக்கு மேடைக்கு அனுப்பும் சாகஸமொன்று 2022-ன் பட்டியலில் காத்திருக்கிறது ! Maybe அதனை இரவல் வாங்கிக் கொள்ளலாம் இந்த குண்டு புக்குக்கு !

So பட்சணங்கள்...பட்டாசு...புதுத்துணி....என சகலத்தையும் கடை விரிச்சாச்சுங்கோ - தேர்வு செய்வது உங்கள் பொறுப்பென்ற நம்பிக்கையில் ! 

இதன் மத்தியில் ஒரு நண்பரின் நெடும் மின்னஞ்சலும் வந்துள்ளது - நடப்பாண்டின் அட்டவணையிலிருந்து மேற்கொண்டு இன்ன-இன்ன கதைகளுக்கு கல்தா தந்து விட்டு - ஒரே ஆல்பமாய் "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" களம் காணட்டுமே என்ற கோரிக்கையுடன் ! ஓ.நொ.ஓ.தொ." ஒரு  smash hit கதை எனும் போது அந்த வாதத்திலும் சாரம் இல்லாதில்லை என்றே தோன்றுகிறது ! அது மட்டும் சாத்தியமானால் தீபாவளிக்கு ஆயிரம்வாலா சரவெடி உத்தரவாதம் தான் ! 

ஆனாலும் உங்க பாடு கஷ்டமுங்க !!  Bye again all !!

P.S : முந்தைய பதிவினைப் படித்திருக்கா நண்பர்களின் பொருட்டு, கேள்விகள் மட்டும் மறுக்கா : 

ஒருக்ககால் "டைகர் தீபாவளி மலர்" தள்ளிச் செல்ல நேரிடின், அதனிடத்தில் என்ன இட்டு நிரப்புவது ? 

OPTION # 1 : மேலே சொன்னது போல - "ஓ.நொ.ஓ.தோ" ஒரு option ஆக இருந்திடலாம் ; ஆனால் மேற்கொண்டு பணம் அனுப்பச் சொல்ல அவசியமாகிடுவது ஒரு நெருடலாகத் தென்படுகிறது !

OPTION # 2 : வழக்கம் போல தீபாவளியினைத் தெறிக்க விட, 'தல' தாண்டவத்தை வீரியமாக்கிடலாம் ! தற்போதைய திட்டமிடலான TEX & TESHA ஸ்பெஷல் வண்ண இதழோடு, மேற்கொண்டு ரூ.200 பெறுமானமான டெக்ஸ் கதையினை  b&w-ல் இணைத்து, ரூ.325 விலையில் ஒரே தீபாவளி மலராக்கிடலாம் ! 

OPTION # 3 : தோர்கல் ஆல்பங்களுக்கு நடப்புச் சந்தாவினில் ஒற்றை (சிங்கிள்) ஆல்பம் மட்டுமே தரப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் 2 சாகசங்களை ஒன்றிணைத்து - "தோர்கலோடு தீபாவளி" கொண்டாடிடலாம் ! ஆனால் தோர்கலின் appeal நம்மிடையே ஏகோபித்ததாக உள்ளதா ? என்ற கேள்விக்கு விடை சொல்ல தெரியவில்லை எனக்கு ! Maybe you can enlighten me on this folks ?

OPTION # 4 : அடுத்த ஆண்டிற்கான தேடல்களின் பொருட்டு எக்கச்சக்க புதுக் கதைகளை உருட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை ஏற்கனவே சொல்லியுள்ளேன் ! Maybe முற்றிலும் புதிதாயொரு டபுள் ஆல்பத்தை ரூ.200 விலைக்கு வெளியிட்டால் - like for like மாற்றமாக இருந்திடக்கூடும் ! 

OPTION # 5 : Given a choice - எனது தேர்வு இந்த ஆப்ஷன் # 5 ஆகத்தானிருக்கும் ; ஆனால் இது ஜாம்பவான்களோடு மோதும் சுயேச்சையாகவே இருந்திடும் என்பதும் புரிகிறது : இருப்பினும், முன்மொழிகிறேன் : ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல் ! (சுஸ்கி-விஸ்கி என்று பாய்ந்திட வேணாமே ப்ளீஸ் - அதற்கு நிறையவே அவகாசமும், திட்டமிடலும் தேவைப்படும் !)

OPTION # 6 : ஹி...ஹி...ஹி...ஒரு மாயாவி + ஆர்ச்சி  இடம்பிடிக்கும் "இரும்பு பெசல் ? சும்மா அதிராதா ? 

உங்களின் தேர்வுகள் எதுவாயிருப்பினும் OPT 1 ; OPT 2 என்ற ரீதியில் அவற்றின் நம்பரைப் போட்டுத் தெரிவிக்கக் கோருகிறேன் ! 


Saturday, April 24, 2021

கேள்வி நானு...பதில் நீனு !

 நண்பர்களே,

வணக்கம். சுமார் பத்தாண்டுகளின் இந்தப் பதிவுப் பயணத்தினில் - 'என்ன எழுதுவது ?' என்ற கேள்வியோடு பேந்தப் பேந்த முழித்த நாட்கள் கொஞ்சமே கொஞ்சமாய் உண்டு தான் !  ஆனால் பகிர்ந்திட சமாச்சாரங்கள் நிறையவே இருக்கும் போதிலும், பேனா நகர மறுத்துச் சண்டித்தனம் செய்வது இதுவே முதன்முறை ! 

நம்மைச் சுற்றிலும் ஒரு பேரலையாய் பெரும் அழிவு தலைவிரித்தாடி வருவதை நித்தமும் பார்த்து வரும் நாட்களில் ; நேற்று வரைக்கும் ஓராயிரம் கனவுகளோடும், பொறுப்புகளோடும் உலவி வந்த முகமில்லா சக மனுஷர்கள், இன்றைக்கு காக்காய்-குருவிகளைப் போல செத்து விழுந்து காலனிடம் ஐக்கியமாகும் அகோரத்துக்கு சாட்சி நிற்கும் நாட்களில் - 'மாதம் மும்மாரி மழை பொழிகிறது நண்பர்களே !' என்ற ரீதியில் எழுதிவிட்டு நகர கூசுகிறது ! ஒவ்வொரு இழப்பின் பின்னேயும் உள்ள அந்தக் குடும்பங்களின் வலிகளை எண்ணிப் பார்க்கவே தடுமாறும் போது - அந்த ரணங்களோடே வாழ்க்கையைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளோரின் மனங்கள் எத்தனை பாடுபடும் ? போன வருஷத்து இதே தருணங்களிலும் இதே ஊழித் தாண்டவங்களைப் பார்த்திட்டோம் தான் ; ஆனால் பாதிப்புகளின் பரிமாணங்களில் 2021 காட்டி வரும் உச்சங்கள் ஈரக்குலையை நடுங்கச் செய்கின்றன  ! இது அத்தனைக்கும் மத்தியில் வழக்கம் போல தேர்தல் ; IPL ; மேளா எனும் கூத்துக்களும் தொடரும் போது - நமது இன்றைய பொழுதுகளை என்னவென்று வர்ணிப்பதென்றே தெரியலை !! இறைவனின் அருளோடு இந்தக் கொடும் நாட்களை நாமெல்லாம் முழுசாய், திடமாய்த் தாண்டிடும் பட்சங்களில் - ஒரு தூரத்து எதிர்கால நாளினில், இதுவும் கடந்து போயிருக்குமோ - தெரியலை !! Maybe எல்லாமே சகஜத்துக்குத் திரும்பியிருக்கக்கூடிய அந்தத் தருணத்தில் - மறுக்கா 'BIG BOSS புடலங்காய் ஆர்மி' ;  'வலிமை அப்டேட்ஸ்' ; 'பச்சைக்கு விசில் போடு'  என்று நாமெல்லாம் திரிவோமோ என்னவோ ?! ஆனால் இன்றைய பிரளயப் பொழுதுகளை மறப்பது - ஒரு வரலாற்றுக் குற்றமாகிடும் என்று ரொம்பவே உறுத்துகிறது ! "Those who forget history are condemned to relive it..." என்று போலந்தின் ஆஷ்விட்ஸ் நாஜி வதைமுகாமின் மியூசியத்துச் சுவற்றில் 20 வருஷங்களுக்கு முன்னே வாசித்த இந்த வரி தான் மனசுக்குள் ஓடிக்கொண்டே உள்ளது ! In fact "வரலாற்றை மறக்கும் தவறைச் செய்வோர், அதன் ரணங்களை மறுக்கா உணர்ந்தே பாடம் படிப்பர் !" என்ற அந்த வரிகள் நம் தேசத்தின் இன்றைய நிலையினையும் சுட்டிக் காட்டுவதாகவே படுகிறது ! ஆற்றமாட்டாமை விஞ்சும் இந்த நாட்களின் மத்தியில், அவரவர் பாடுகளை பார்த்திட வேண்டிய சுயநலங்களும் முன்னுரிமை பெறுவதை குனிந்த தலையோடே ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது தான் ! So குதூகலமாய் இல்லாவிடினும், கடமையுடன் நமது வாரயிறுதி relax pill ஒன்றினை போட்டுக்கொள்ளும் முயற்சியினுள் புகுந்திடுகிறேன் !

மூன்றே புக்ஸ் இம்மாதம் ; அவற்றுள் ஒன்று மாயாவியாரின் மறுபதிப்ஸ் எனும் போது எனது பணிகள் கணிசமாய்க் குறைந்திருக்க வேண்டும் தான் ! ஆனால் ட்யுராங்கோ சார்ந்த 3 பாகப் பணிகள் செம்மையாய் சுளுக்கெடுத்த காரணத்தினால் பெருசாய் ஒய்வு கிட்டவில்லை & as always - டெக்ஸ் வில்லரின் பக்க நீளமானது அங்கேயும் பெண்டை நிமிர்த்தி விட்டது தான் ! ஆனால் புண்ணியத்துக்கு இம்மாதப் பணிகளை ரொம்பவே சீக்கிரம் ஆரம்பித்திட்டதால், இதோ - மூன்று இதழ்களுமே அச்சு பூர்த்தி கண்டு, பைண்டிங் புறப்பட்டு விட்டுள்ளன !  And மூன்று இதழ்களின் previews-ம் இங்கே நாம் பார்த்தாச்சு எனும் போது, புதுசாய் அவற்றைப்பற்றி பேசிட சமாச்சாரங்கள் நஹி ! 

So நேரடியாய் போன வாரத்தினில் நான் கேட்டிருந்த கேள்வி பக்கமாய் கவனத்தைத் திருப்பிடலாம் guys ! "கென்யா" மற்றும் "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" மெகா இதழ்களுள் நிறைய பணமும், உழைப்பும் முடங்கிக் கிடப்பது வாஸ்தவம் தான் ! இரண்டுமே சூப்பரான கதைகள் என்பதும் வாஸ்தவம் தான் & அவற்றை உங்களிடம் ஒப்படைக்கும் ஆவல் அலையடிக்கிறதுமே வாஸ்தவம் தான் ! ஆனால் ஏகப்பட்ட ஜீவனங்களே கேள்விக்குறியாகி நிற்கும் இன்றைய பொழுதினில், இந்தக் கதைச் சுமைகளை இன்னும் கொஞ்ச காலத்துக்குச் சுமப்பதில் தப்பே இல்லை தான் என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளேன் ! இதன் பின்னணியில் சமீபத்தைய சில சம்பாஷணைகளுக்கும் ஒரு பங்குண்டு ! புதுச் சந்தா ஏப்ரல் 2021 முதலாய்த் துவக்கம் கண்டிருக்க, சென்றாண்டின் சந்தா உறுப்பினர்கள் அனைவரையுமே இம்முறையும் சந்தா ரயிலில் இணையச் செய்திட முயற்சிக்கும்படி நம்மவர்களைப் பணித்திருந்தேன் ! சந்தா புதுப்பிக்காதோரின் பெயர்களையும், செல் நம்பர்களையும் ஒரு பட்டியலாய்ப் போட்டபடிக்கு, ஒவ்வொருவருக்கும் அழைத்துப் பேசிய கையோடு, அவர்களின் பதில்களையும் அதனிலேயே ஓரத்தில் குறிக்கச் சொல்லியிருந்தேன் ! And தினமும் மாலையில் வேலை முடித்துச் செல்லும் முன்பாய் அன்றைய தினத்தில் பேசியோர் பற்றி, அவர்களின் பதில்கள் பற்றிய updates எனக்குத் தந்திடவும் சொல்லியிருந்தேன் ! பரவலாய் 60% நண்பர்கள் - "மறந்து போச்சு ; இதோ பண்ணிடறோம் ; வாரயிறுதியில் பண்ணிடறோம் !" என்ற ரீதியில் சொல்லி, அதற்கேற்ப புதுப்பித்தல்களையும் செய்து விட்டிருந்தனர் ! ஆனால் எஞ்சிய சில நண்பர்களின் சூழல்கள் நிஜமாகவே கண்களைப் பனிக்கச் செய்தன ! 

"பையன் வெளிநாட்டிலே வேலைக்குப் போயிருக்கான்மா ; அவன் போன் பண்றப்போ இந்த வருஷத்துக்கு சந்தா கட்ட பணம் அனுப்ப சொல்லிக் கேட்டுப் பாக்குறேன் !"

"மாசத்தின் ஆரம்பத்திலே பென்ஷன் பணம் வரும்மா ; வந்த உடனே கட்டிடறேன் !"

"ரெண்டு இடத்திலே பணம் கேட்ருக்கேன்மா ; கிடைச்ச உடனே கட்டிடறேன் !"

"இந்த வருஷம் கொஞ்சம் கஷ்டமா இருக்கு ; மாசா மாசம் தேவையான புக்ஸ் மட்டும் வாங்கிக்க முயற்சி பண்றேன்மா !"

"மே மாசத்தில் ஒரு தவணையா சந்தா கட்டிடறேன் !"

"சொந்த ஊருக்கே போய்ட்டேன்மா ; கொஞ்ச நாளிலே பணம் தேற்றி அனுப்பிடறேன் !'

என்ற ரீதியில் நிதரிசனங்களின் நிஜ முகங்களை தரிசிக்க முடிந்தது ! இடர்களுக்கு மத்தியிலும் இந்த காமிக்ஸ் நேசத்தைக் கைவிட மனமின்றித் தட்டுத் தடுமாறிடும் நண்பர்கள் ஒரு சிறுபான்மையாக இருந்தாலுமே, நடப்பாண்டில் அவர்கள் சிரங்களில் கூடுதல் பாரத்தை ஏற்றி வைக்க மனம் மறுக்கிறது ! Of course - எனது தீர்மானமானது கொரோனாவைத் துரத்தியடிக்கப் போகும் அருமருந்துமல்ல தான் & இதன் புண்ணியத்தில், விக்ரமன் படத்து நிறைவு சீனைப் போல அத்தினி பெரும் கைகோர்த்தபடிக்கே சந்தோஷ குடும்பப்பாட்டை பாடிடவும் போவதில்லை தான் ! ஆனால் இந்த நொடியிலாவது பளுவினை ஏற்றாது கொஞ்சம் ப்ரீயா விடுவோமே என்று நினைத்தேன் !

"கென்யா" - 5 பாகத் தொகுப்பினை 2022-ன் சந்தாவுக்குள் நுழைக்க வழி கண்டுபிடித்து விட்டேன் ! And "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" ஆல்பத்தினை நடப்பாண்டின் தீபாவளித் தருணத்தில் புகுத்திட ஒரு சிறு வாய்ப்பும் கண்ணில்படுகிறது ! ஆனால் அதற்கு முன்பாய் நான் கொஞ்சம் துடைப்பக்கட்டைச் சாத்துக்கள் வாங்கிட வேண்டி வரலாம் : 

நடப்பாண்டின் தீபாவளிக்கு தளபதியாரின் 2 பாக புது ஆல்பம் வெளிவந்திடவுள்ளதாய் நமது அட்டவணையில் அறிவித்திருந்தேன் ! Of course - அந்த விளம்பரப் பக்கத்திலேயே - "இந்தக் கதையின் இரண்டாம் பாகம் பிரெஞ்சில் உருவாவதைப் பொறுத்தே இந்த இதழ் அமைந்திடும்" என்றும் கொஞ்சம் முன்ஜாக்கிரதையோடு குறிப்பிட்டிருந்தேன் ! முதல் பாகம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னமே வெளியான நிலையில், அதன் க்ளைமாக்ஸ் பாகமானது பிரெஞ்சில் ஜூன் 2021-ல் வெளிவந்திட வேண்டியது அவர்கள் தந்திருந்த அட்டவணை ! And ஜுனில் வெளியாகிட வேண்டிய படைப்பெனில், ஏப்ரல் வாக்கிலேயே நமக்கு டிஜிட்டல் கோப்புகள் வந்து விடும் & நாம் பணிகளை ஆரம்பித்து, சாவகாசமாய் நடப்பாண்டின் தீபாவளி வேளைக்கு ரெடி செய்துவிடலாம் என்பதே எனது திட்டமிடல் ! ஆனால் எதுவுமே நிலையில்லா இந்த நடப்பு ஆண்டில், டைகரின் புதிய படைப்பாளிகளிடமிருந்து இதுவரைக்கும் எவ்விதத் தகவல்களும் இல்லை ! நமது பதிப்பகத்தினில் இது குறித்துக் கேட்டுள்ளேன் ; and அவர்களிடமிருந்தும் இன்னும் பதில் இல்லை ! So ஒருக்கால் அந்த க்ளைமாக்ஸ் பாகத்தின் உருவாக்கம் இன்னும் கூடுதல் நேரமெடுக்கும் எனில், நாம் ரூ.200 விலையில் அறிவித்துள்ள டைகரின் தீபாவளி ஸ்லாட் காலியாகிடும் ! Of course - "கொள்ளை போகுதுன்னு அறிவிப்பை ஏன் செஞ்சே ?" என்ற கேள்விகளோடு டைகர் ரசிகர்கள் அன்போடு நீட்டிடக்கூடிய துடைப்பங்கள் கண்ணில்பட்டிடும் என்பது புரிகிறது தான் ; ஆனால் நவம்பர் 2019-ல் முதல் பாகம் வெளியான நிலையில், 2021 மத்தியில் பாகம் 2 உறுதிபட வந்திடுமென்று அவர்கள் தந்திருந்த நம்பிக்கையிலேயே நான் "தல-தளபதி தீபாவளி" என்று திட்டமிட்டிருந்தேன் ! இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் நிலவரம் குறித்த தெளிவு கிட்டிவிட்டால் - what next ? என்று யோசிக்கலாம் ! டைகர் அங்கே ரெடியாகி விட்டால், மாற்றங்களின்றி அதுவே தீபாவளிக்கு மெருகூட்டிடும் ! மாறாக அது தாமதம் காணும் எனில், maybe அந்த ஸ்லாட்டினில் "ஒற்றை நொடி ஒன்பது தோட்டா" இதழினை நுழைத்திடலாம் தான் - ஆனால் ரூ.200 விலையிலான இடத்தினில் ரூ.600 விலையிலான இதழ் புகுந்திடும் பட்சத்தில், சந்தா நண்பர்கள் அனைவரையுமே மேற்கொண்டு ரூ.400 அனுப்பப் சொல்லி உசிரை வாங்க வேண்டி வரும் ! நடைமுறையில் அது எத்தனை தூரத்துக்குச் சாத்தியமென்றும் இந்த நொடியில் சொல்லத் தெரியவில்லை ! 

So இப்போதைக்கு மே 31 வரை  "இரத்தப் படலம்" முன்பதிவுகளில் மட்டுமே கவனம் செலுத்துவது ; மேற்கொண்டு எதுவாயினும் ஜூன் முதல் தேதியில் பார்த்துக் கொள்ளலாமென்ற தீர்மானத்தில் உள்ளேன் ! "இரத்தப் படலம்" முன்பதிவுகள் ஸ்டெடியாய் முன்னேறி வருவதை இந்த நொடியில் குறிப்பிட்டாக வேண்டும் ! இன்றைய நிலவரப்படி முன்பதிவு 230-ஐத் தொட்டுள்ளது ! Considering the times we now live in, இதுவே நிச்சயம் ஒரு பெரிய விஷயம் தான் !

ஒருக்ககால் "டைகர் தீபாவளி மலர்" தள்ளிச் செல்ல நேரிடின், அதனிடத்தில் என்ன இட்டு நிரப்புவது ? என்ற யோசனையும் என்னுள் எழாதில்லை ! 

OPTION # 1 : மேலே சொன்னது போல - "ஓ.நொ.ஓ.தோ" ஒரு option ஆக இருந்திடலாம் ; ஆனால் மேற்கொண்டு பணம் அனுப்பச் சொல்ல அவசியமாகிடுவது ஒரு நெருடலாகத் தென்படுகிறது !

OPTION # 2 : வழக்கம் போல தீபாவளியினைத் தெறிக்க விட, 'தல' தாண்டவத்தை வீரியமாக்கிடலாம் ! தற்போதைய திட்டமிடலான TEX & TESHA ஸ்பெஷல் வண்ண இதழோடு, மேற்கொண்டு ரூ.200 பெறுமானமான டெக்ஸ் கதையினை  b&w-ல் இணைத்து, ரூ.325 விலையில் ஒரே தீபாவளி மலராக்கிடலாம் ! 

OPTION # 3 : தோர்கல் ஆல்பங்களுக்கு நடப்புச் சந்தாவினில் ஒற்றை (சிங்கிள்) ஆல்பம் மட்டுமே தரப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் 2 சாகசங்களை ஒன்றிணைத்து - "தோர்கலோடு தீபாவளி" கொண்டாடிடலாம் ! ஆனால் தோர்கலின் appeal நம்மிடையே ஏகோபித்ததாக உள்ளதா ? என்ற கேள்விக்கு விடை சொல்ல தெரியவில்லை எனக்கு ! Maybe you can enlighten me on this folks ?

OPTION # 4 : அடுத்த ஆண்டிற்கான தேடல்களின் பொருட்டு எக்கச்சக்க புதுக் கதைகளை உருட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை ஏற்கனவே சொல்லியுள்ளேன் ! Maybe முற்றிலும் புதிதாயொரு டபுள் ஆல்பத்தை ரூ.200 விலைக்கு வெளியிட்டால் - like for like மாற்றமாக இருந்திடக்கூடும் ! 

OPTION # 5 : Given a choice - எனது தேர்வு இந்த ஆப்ஷன் # 5 ஆகத்தானிருக்கும் ; ஆனால் இது ஜாம்பவான்களோடு மோதும் சுயேச்சையாகவே இருந்திடும் என்பதும் புரிகிறது : இருப்பினும், முன்மொழிகிறேன் : ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல் ! (சுஸ்கி-விஸ்கி என்று பாய்ந்திட வேணாமே ப்ளீஸ் - அதற்கு நிறையவே அவகாசமும், திட்டமிடலும் தேவைப்படும் !)

OPTION # 6 : ஹி...ஹி...ஹி...ஒரு மாயாவி + ஆர்ச்சி  இடம்பிடிக்கும் "இரும்பு பெசல் ? சும்மா அதிராதா ? 

உங்களின் தேர்வுகள் எதுவாயிருப்பினும் OPT 1 ; OPT 2 என்ற ரீதியில் அவற்றின் நம்பரைப் போட்டுத் தெரிவிக்கக் கோருகிறேன் ! உங்கள் தேர்வுகளுக்கான காரணங்களையும் விளக்கிட முற்படின் - இன்னும் சூப்பர் ! அப்புறம்  சிலபஸிலேயே இல்லாத பதில்களாய் - "மெபிஸ்டோ ஹார்ட்கவரில் போட்டா பிய்ச்சிக்கும் " ; "வைரஸ் X & ரோஜா மாளிகை ரகசியம்" போட்டா அத்துக்கும் " - என்ற ரீதியில் suggestions வேணாமே ப்ளீஸ் ? 

எது எப்படியிருப்பினும், டைகர் ரசிகர்களிடம் நான் சொல்லிக்கொள்ள விழைவது இது ஒன்றே

அடுத்த 60 நாட்களுக்குள் டைகரின் க்ளைமாக்ஸ் பாகம் பிரெஞ்சில் வெளியாகிடுமென்ற  சேதி  கிட்டினாலும் கூடப் போதும், தளபதியே நமது தீபாவளித் தேர்வாக இருந்திடுவார் ! பாகம் 1 செமையாய் இருப்பதாக நமது மொழிபெயர்ப்பாளர் ஏற்கனவே சர்டிபிகேட் தந்திருப்பதால், உங்களை போலவே இந்த இதழினைக் காண நானும் ஆவலாக உள்ளேன் ! So நான் இங்கு கேட்டுள்ள கேள்விகள் - தளபதியின் உருவாக்கம் இன்னும் லேட்டாகிடும் என்ற ரீதியில் பிரான்சிலிருந்து தகவல்கள் கிட்டிடும் பட்சத்தில், என்ன செய்வதென்று prepared ஆக இருந்திடும் பொருட்டு மட்டுமே !  So we'll still wait to know more.......and a big SORRY தளபதி ரசிகர்களிடம் ! அந்த க்ளைமாக்ஸ் பாகம் என்றைக்கு பிரெஞ்சில் தயாரானாலும் சரி, அங்கே வெளியாகும் சமயத்தை ஒட்டியே இங்கே நாம் வெளியிடவும் என்ன பல்டிக்கள் அவசியப்பட்டாலும் அடிக்கத் தயாராகயிருப்பேன் ! So "கவுத்திப்புட்டே ; ஏமாத்திப்புட்டே !" என்ற ரீதியில் துடைப்ப ஆலிங்கனங்களைத் தவிர்க்க இயன்றால், மனிடோவுக்கு நன்றி சொல்லுவேன் ! 

Bye all ..see you around ! Have a safe sunday !!

பி.கு. : இது நடப்புச் சந்தா சார்ந்த முக்கிய கேள்வியென்பதால், உங்களின் பதில்கள் எனக்கு ரொம்பவே அவசியமாகிடும் folks ! மௌன வாசகர்களாய் இதுநாள் வரை இருந்திருந்தால் கூட, இந்தவாட்டி, "OPT __" என்று பதிவிட மட்டுமாச்சும் நேரம் எடுத்துக் கொண்டால் மகிழ்வேன் ! 

Saturday, April 17, 2021

முன்பதிவுகள் முடிவதில்லை ?

 நண்பர்களே,

வணக்கம். இந்த "நியூ நார்மல் " உலகினில் திருவிழாக்களுமே புது தினுசாய்த் தானிருக்கும் போலும் ! நினைவு தெரிந்த நாள் முதலாய் அம்மன்கோயில் திருவிழாக்களின் பொருட்டு  ஒவ்வொரு ஏப்ரலிலும், மே மாதத்திலும் களைகட்டும் ஊரானது, போன வருஷம் ஆழ்ந்த மௌனத்தில் ஆழ்ந்திருந்ததெனில், இம்முறையோ subdued தொனியினில் தயாராகி வருகிறது ! விடிய விடிய ஜொலிக்கும் கோவில் வீதிகளோ இப்போது இரவு எட்டுக்கே அமைதியை அரவணைத்து விடுகின்றன !  ஆனால் தஞ்சைப் பெரிய கோவிலுக்கே பூட்டு ; மதுரையில் சித்திரைத் திருவிழாவினில் பக்தர்களுக்குத்  தடா எனும்  இந்த நாட்களில் - இந்தமட்டுக்காவது சாத்தியப்பட்டுள்ளதை எண்ணி மகிழ்ந்து கொள்ளணும் போலும் ! 'இரண்டாம் அலை' தேசத்தையே  துவைத்துத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், சமயப்பற்றைப் பறைசாற்றும் கும்ப மேளாக்கள் நமக்கு சுகப்படாது தான் என்று நினைத்துக் கொன்டேன் ! இப்போதெல்லாம் ஊடகங்களோடு நேரம் செலவிடும் போது கபாலம் கிறுகிறுக்கிறது ! போன வாரம் வரை 'மாஸ்க்கா ? அப்டின்னா இந்த வேதாளர், டயபாலிக்லாம் போடுவாங்களே - அந்த சமாச்சாரமா ?' என்று கேட்கும் விதமாய் ரணகளக் கூட்டங்கள் சேர்வதை  'தேமே' என்று வேடிக்கை பார்த்தோர், இன்றைக்கு மாய்ந்து மாய்ந்து அறிக்கை விடுவதைப் பார்க்கும் போது, சங்கிலி முருகன் ஆலமரத்தடியில் சட்டையைக் கிழிக்க முற்படுவதே நினைவுக்கு வருகிறது ! எது, எப்படியோ - ஒரு தூரத்து எதிர்கால தினத்தில் "மெகா சாத்துக்கள் வழங்கியது 2020-ஆ ? 2021-ஆ ?" என்று பட்டிமன்றம் நடத்துவார்களோ     - என்னமோ ?! இப்போதெல்லாம் டி-வியில் IPL எனும் அந்தக் கல்லா கட்டும் திருவிழாவைத் தாண்டி எதையும் பார்க்கத் தோன்றுவதில்லை & வாசிப்பெனில் நம்ம பொம்மை புக்கைத் தாண்டி வேறெதையும் கையில் தொடவே பயம்மா கீது !! ஒருவித ஆற்றமாட்டாமையும், கையாலாகாத்தனமும் பிடுங்கித் தின்பது போல் உள்ளுக்குள் உணறுகிறது - நாடெங்கிலும் அரங்கேறி வரும் நோயின் ருத்திர தாண்டவங்களைப் பார்க்கும் போது ! எங்கோ தூர தேசங்களில் இதே ரணங்களெல்லாம் நிகழ்ந்த போது வெறும் செய்திகளாய்த் தென்பட்ட விஷயங்கள் இன்றைக்கு நாமறிந்தோர் வசிக்கும் ஊர்களிலும் அகோரமாய் தாண்டவமாடும் போது , இரத்தத்தையும், தக்காளிச் சட்னியையும் தான் நினைவூட்டுகின்றன ! எது எப்படியோ - தகுதியுள்ளோர், கிடைத்த தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டு, முடிந்தமட்டும் பத்திரமாய் இருக்க முனைந்திடுவோம் guys !! மும்பையிலும், பூனேவிலும், நாஷிக்கிலும் அரங்கேறிடும் காலனின் ஊழித்தாண்டவம் நமக்கு வேண்டாமென்று வேண்டிக் கொள்வோமே !

Moving on to brighter stuff - கடுவன் பூனை மாதிரியான ட்யுராங்கோவுடன் இரண்டு வாரங்களாய்க் கட்டி உருண்டான பிற்பாடு, செம ஜாலியான அனுபவம் நம்ம 'தல' புண்ணியத்தில் கிட்டியுள்ளது ! ரொம்பவே மண்டை காய்ந்த நிலையில் டெக்சின் "நெஞ்சே எழு" பணிகளுக்குள் குந்திய போது - 'தெய்வமே...இதுவும் புரட்டி எடுக்கும் ரகமாய் இல்லாதிருந்தால் தேவலாமே ?!" என்று தான் எண்ணம் ஓடியது ! கதை "Mauro Boselli " என்பதை முதல் பக்கத்தில் பார்த்த போதே 'ரைட்டு...பாயசச் சட்டிக்கு  இந்தவாட்டி வேலை இருக்காதுடோய் !!' என்ற சந்தோசம் பெருக்கெடுத்தது ! And சித்திரங்கள் அசாத்திய அமர்க்கள ரகம் என்ற போது வாயெல்லாம் பல்லாகிப் போனது ! மெது மெதுவாய் உள்ளே புகுந்தால், சிங்கப்பூரின் சாலைகளில் சறுக்கிச் செல்லும் பென்ஸ் கார் போல கதை சும்மா சிட்டாயப் பறக்கிறது ! அடுத்த தபா கதாசிரியர் போசெல்லியைப் பார்க்கும் போது - 'நமக்குள்ளாற மட்டும் இருக்கட்டும் சார் ; ஆனா நீங்க பம்பாயில இருந்தச்சே உங்க பெயர் என்ன ?" என்று கேட்க நினைத்திருக்கிறேன் - simply becos, ஒரு blockbuster தமிழ் திரைப்படத்துக்கான சகல லட்சணங்களுடன் மனுஷன் இத்தாலியில் கதையெழுதுவது இது முதன்முறையே அல்ல ! தெறிக்கும் ஆக்ஷன் ; அழகாய் குடும்ப செண்டிமெண்ட் ; நண்பர்களின் அன்னியோன்னியம் ; மிரட்டலான வில்லன்கள் ; அதகள கிளைமாக்ஸ் என்று பின்னியெடுத்துள்ளார் ! இதோ - கீழுள்ள ஒற்றைப் பக்கத்தைப் பாருங்களேன் - இல்லாத கேசக்கால்களும் சிலிர்த்துக் கொள்ளும் ! பொதுவாய் அதிகாரியின் கதைகளில் பணிசார்ந்த அயர்ச்சி தென்படுவது அதன் நீளங்களின் பொருட்டே ! எழுத எழுத ; எடிட் செய்ய, எடிட் செய்ய, குதிரைச் சவாரிகள் நீண்டு கொண்டே போவது போலிருக்கும் ! ஆனால் இம்முறையோ டக்சனிலும், எல்லைக் கோட்டைத் தாண்டி மெக்சிகோவினுள்ளும் நாமே பயணம் போவது போலொரு உணர்வு ; மீசைக்கார மெக்சிக பேமானிகளை நம்மவர்கள் வறுத்தெடுக்கும் போது - 'அவன் மீசையைப் பிடுங்குங்க தல !' என்று ஆர்ப்பரிக்கும் வேகம் அலையடிக்கிறது ! "ரொம்பச் சின்ன knot இருந்தாலே போதும் ; டெக்ஸ் எனும் ஜாம்பவானும், வன்மேற்கினில் கதைகள் புனையும் எனது ஆற்றலுமாய் இணைந்து ரகளை செய்து விடுவோம் !" என்று MB அவர்கள் நிரூபித்திருப்பது நூற்றியோராவது தடவையாய் ! நடப்பாண்டில் டெக்ஸ் (புது) சாகசங்களுக்கு ஒரு துவக்கம் தந்திட இப்படியொரு பட்டாசு கிட்டியதில் செம ஹேப்பி அண்ணாச்சி ! And இதோ பட்டாசை அட்டையிலேயே கொளுத்தி நிற்கும் நம்மவர் - கோகிலாவின் வண்ண மெருகூட்டலுடன் : 


அப்புறம் நடப்பு மாதத்தின் அட்டவணையில் ஒரு சிறு மாற்றம் ! குறுக்கால புகுந்திடும் "கொரில்லா சாம்ராஜ்யம்" புக்கானது - 2020-ன் all in all அழகுராஜா சந்தாவினில் இருந்திட்ட நண்பர்களுக்கு விலையின்றியிருக்கும் தான் ; ஆனால் கடைகளில் வாங்கும் இதர நண்பர்களுக்கு அவ்விதமிராதே ?! ஏற்கனவே ட்யுராங்கோ 300 ரூபாயில் ; டெக்ஸ் 150-ல் என்றிருக்க, மாயாவியும் ஒருபக்கம் பட்ஜெட்டை ஏற்றிடுவதால் - இம்மாதம் வந்திருக்க வேண்டிய "ஒரு தோழனின் கதை" (கிராபிக் நாவல்) அடுத்த மாதத்துக்கு நகன்று கொள்கிறது ! தவிர, எனக்கு இன்னொரு சன்னமான பயமுமே :

ட்யுராங்கோ

டெக்ஸ் வில்லர்

மாயாவி

என இம்மாதத்து மூவருமே அதிரடி கமர்ஷியல் கிங்ஸ் ! இவர்கள் ஒருசேரக் களமிறங்கும் மாதத்தில், சவலைப் பிள்ளையைப் போல ஒரு கி.நா.புகுந்து, சட்னியாகிடப்படாதே என்ற பயமும் தான் ! (So அடுத்த மாதம் வரை வெயிட்டிங் சேலம் குமார் சார் !) புக்ஸ் மூன்றே எனும் போது ஏப்ரலில் ஏப்ரலுக்கு முயற்சிப்போம் - if all goes well ! 

Looking ahead, சுருக்கமான பதிவுகளோடு வாரயிறுதிகளுக்கு நான் பாடிடும் மங்களங்களில் மிச்சமாகிடும் நேரத்தைக் கொண்டு 2022-ன் திட்டமிடல்களை உரமேற்றிட முடிந்து வருகிறது !! Maybe இன்றைக்கு சற்றே 'சுருங்கின வாய் சுருளியாய் ' நான் தென்பட்டாலும், அதன் பலன்கள் காத்திருக்கும் ஆண்டினில் பிரதிபலிக்காது போகாது என்றே தோன்றுகிறது ! Fingers crossed ! 

கிட்டியுள்ள இந்த அவகாசத்தினில் செய்த தேடல்களில் - 2 அதிரடியாளர்கள் கிட்டி ! ஒருத்தர் மாமூலாய்க் குருத மேலே சவாரி போகும் ரகமெனில், இரண்டாமவர் ஒரு ஆக்ஷன் நாயகர் ! இதுவரைக்கும் நமது இதழ்களில் நாம் அதிகம் பார்த்திரா தேசங்களின் பின்னணியில் தட தடுக்கிறது இவரது சாகசம் ! இருவருமே 2022 அட்டவணைக்குள் ஏற்கனவே கட்டையைக் கிடத்தி விட்டார்கள் ! தவிர, இன்னும் 2 ஆக்ஷன் மேளாக்களும் நமது shortlist-ல் காத்துள்ளன ! இரண்டுமே இரு பாக சாகசங்களே என்ற நிலையில், முதல் பாகங்கள் வெளியாகி விட்டுள்ளன & அவை இரண்டுமே செமத்தியான action blocs ! க்ளைமாக்ஸ் பாகத்துக்கோசரம் வெயிட்டிங் & இரண்டுமே நடப்பாண்டில் ஜூலை & அக்டொபரில் வெளியாகிடுமாம் ! அவையும் முதல் பாகங்களின் டெம்போவுக்குக் குறையின்றி இருப்பின், 2022 will see a refreshing change from the cowboys !!

அப்புறம் போன பதிவினில் "சுஸ்கி & விஸ்கி' இதழ்களுக்கு ஓரளவுக்கு encouraging results கண்ணில்பட்டது நிச்சயமாய் எனக்கு ஆச்சர்யமே ! ஆனால் இவர்களுக்கு மீள்வருகை தருவதாயிருப்பின், நான் ஏற்கனவே சொன்னது போல - ஒரு தொகுப்பாக்கி, "முன்பதிவுகளுக்கு மட்டுமே" - என்ற ரீதியில் தான் களமிறக்கியாக வேண்டும் ! ரெகுலர் கார்ட்டூன் தடத்தில் இந்தப் புள்ளீங்களை இறக்கி விட்டு விஷப் பரீட்சை செய்திடல் எனக்கு விவேகமாய்ப் படவில்லை ! 

"முன்பதிவுகளுக்கு மட்டுமே" என்ற தலைப்பினில் நாம் நிலைகொண்டிருக்கும் வேளையில் - கொஞ்சம் அலசலை நீட்டித்திடுவோமா ? துவக்கம் - இதோ கீழுள்ள விளம்பரப்படி, நமது XIII தொகுப்பின் முன்பதிவுப் பூர்த்திகள் பற்றி ! 

இன்றைய நிலவரப்படி புக்கிங் நிற்பது நம்பர் 226-ல் ! தொடரும் நாட்களில் இந்த வேகம் தொய்வின்றி நகன்றிடும் பட்சத்தில் - XIII one last hurray-க்கு அழகாய்த் தயாராகி விடுவார் ! So மக்களே : இப்போதைக்கு பந்து உங்கள் பக்கமே !

"முன்பதிவுக்கு மாத்திரமே' என்று போன வருஷம் இதே சமயம் நாம் விளம்பரப்படுத்திய 2 மெகா புராஜெக்ட்கள் பற்றி இனி : 2004 டிசம்பர் வரையிலும் நம்மில் முக்காலே மூணு வீசத்தினரின் vocabulary களில் "சுனாமி " என்ற பதமே இருந்திராது தான் ; ஆனால் ஒரு டிசம்பரில் உக்கிர நாளுக்குப் பின்பாய் அதுவொரு இரத்தம் தோய்ந்த வார்த்தையாகிப் போய்விட்டதல்லவா ? அதே போல, போன வருஷத்தில் துவக்கம் வரைக்கும் "கொரோனா" என்பது சீனர்களின் உடமை என்பதாய் நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருந்த நாட்களில் :

ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா...!

கென்யா

என 2 ஸ்பெஷல் இதழ்களை 2020 ஈரோட்டுக்கென திட்டமிட்டிருந்தோம் ! ஆனால்..ஆனால்...தொடர்ந்தது என்னவென்று தான் அறிவோமே ?! வேறு வழியின்றி 2 திட்டமிடல்களையுமே ஒத்திப் போட்டோம் - 2021-ல் பாலும், தேனும் பெருக்கெடுத்து ஓடிடுமென்ற நம்பிக்கையில் ! நிலவரம் இன்னமும் கலவரமாகவே தொடர்ந்திட, எனக்கோ இவற்றை எவ்விதம் களம் காணச் செய்வதோ ? என்று தெரியலை ! பெரும் தொகைகள் & உழைப்பு இவற்றினுள் முடங்கியிருப்பது மாத்திரமன்றி, அடுத்ததாய் வேறெதுவும் திட்டமிடவுமே பயமுறுத்தி வருகின்றன ! Maybe இரண்டில் ஏதேனும் ஒரு புக்கை நடப்பாண்டின் தீபாவளி ஸ்பெஷல் இதழாய் முன்பதிவுகளுக்கென அறிவிக்கலாமா ? என்ற யோசனை எழுவதும், மங்குவதுமாய் உள்ளது ! சத்தியமாய் இந்த நொடியில் எனக்கு எதுவும் தீர்மானிக்கத் தெரியலை !!

உங்கள் சிந்தனைகள் என்னவோ folks ? 

'பொறுத்தது பொறுத்தோம் ; அடுத்த வருஷம் வரைக்கும் டிக்கியை மூடல் தேவலாம் !" என்பீர்களா ? 

அல்லது 

"தீபாவளி"க்குப் பட்டாசைப் போட்டு விடலாமா ? 

போடலாமெனில் இரண்டில் எது உங்கள் தேர்வாய் இருக்குமோ : ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாவா ? கென்யாவா ?


சொல்லுங்களேன் folks ? Bye all...see you around ! Have a safe weekend !

Wednesday, April 14, 2021

ஒரு புத்தாண்டின் சிந்தனைகள்..!

 நண்பர்களே,

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! நல் ஆரோக்கியமும், நல் வாழ்வும் இந்த ஆண்டின் அடையாளங்களாய் அமைந்திட ஆண்டவன் கருணை காட்டிட வேண்டிக் கொள்ளுவோமே ! 

ஏப்ரலின் முதற்பாதி ஓட்டமெடுத்திருக்க, மே மாதத்துப் பணிகள் இக்கட ஜரூராய் ஓடிய வண்ணமுள்ளன ! சொல்லப் போனால் இந்த மாதத்தின் highlight நமது முத்துவின் இதழ் # 450 என்பதால், மாதத்தின் துவக்கம் முதலே அதனில் பிசி ! இதோ - ட்யுராங்கோ தொடரின் இறுதித் தொகுப்பின் அட்டைப்பட முதல் பார்வை : 

தொடரின் துவக்கம் முதலே அட்டைப்படங்களைத் தெறிக்க விட்டு வந்த நமது பொன்னனே இம்முறையும் இந்த ராப்பரை டிசைன் செய்துள்ளார் ! வழக்கமான அட்டைப்பட நகாசு வேலைகளுடன், ஹார்ட்கவரில் உங்களை எட்டும் போது, புக் செம கெத்தாய் இருக்குமென்ற நம்பிக்கையில் பணியாற்றி வருகிறோம் ! And இங்கொரு இடைச்செருகலுமே : 

விலைவாசிகளைப் பற்றி நாளொரு ஒப்பாரி வைத்தாலும் கூட கஷ்டம் தீராது என்ற ரேஞ்சில் செலவினங்கள் எகிறி வரும் இந்த நாட்களில், கொஞ்சமே கொஞ்சமாய் cost cutting செய்திடல் காலத்தின் கட்டாயமாகிப் போகிறது ! So இனி வரும் நாட்களில் மாஸான மைல்கல் இதழ்களைத் தவிர்த்த இதர ஆல்பங்கள் ஹார்ட்கவர் கண்டிடாது ! ஒவ்வொரு ஹார்ட் கவர் பைண்டிங்கிலும் ஏறிடும் செலவுகளை இன்றைய சூழலில் கணக்கிட்டுப் பார்த்திடும் போது B.P  தான் அதனோடு போட்டியிட்டு எகிறுகிறது ! So காலங்களுக்கு ஏற்ப சற்றே அடக்கி வாசிக்க நாமும் கற்றாக வேண்டிய நெருக்கடி குரல்வளையை நெரித்து வருகிறது !

Back to DURANGO - வழக்கம் போலவே 3 பாகங்கள் கொண்ட ஆக்ஷன் மேளா - பரிச்சயமான அதே சித்திரங்களுடன் & சுருக்கமாய்ப் பேசும் அதே நாயகருடன்  ! ஆனால் மாற்றமென்று இம்முறை புகுந்திருப்பது  - இதுவரைக்குமான எல்லா ட்யுராங்கோ ஆல்பங்களுக்கும் பேனா பிடித்த நமது கருணையானந்தம் அவர்கள் இந்த இதழினில் பணியாற்றிடாது போயுள்ளது மட்டுமே ! நேர்கோட்டுக் கதை தான் ; ஆனால் இதன் பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு ரொம்பவே கஷ்டமாய் இருப்பதாய் அங்கிள் feel செய்திட, கதையையும், ஸ்க்ரிப்ட்டையும், திருப்பி அனுப்பச் சொல்ல வேண்டிப் போனது ! And நமது டீமின் ஒரு சமீப வரவான மொழிபெயர்ப்பாளரிடம் இந்தப் பணியினை ஒப்படைத்து விட்டு, நான் வேறு வேலைகளுக்குள் மும்முரமாகிப் போயிருந்தேன் ! ஒன்றரை மாத அவகாசத்தினுள் ஒவ்வொரு பாகமாய் அவரும் முடித்து அனுப்பிட, நம்மாட்கள் 'மட மட'வென டைப்செட் செய்து மேஜையில் 150 பக்கங்களைக் கொத்தாய்த் தூக்கிப் போட்டு விட்டனர் ! 

ட்யுராங்கோ கதைகளினில்  எடிட்டிங் செய்வதென்பது சுலபமும் அல்லாத ; சிரமும் அல்லாத ஒருவித மத்திமமான பணி ! நாயகரின் 'நறுக்' டயலாக்ஸ் மாற்றி எழுதிட வேண்டி வரும் என்பதோடு - பொதுவான அந்தக் கரடு முரடு கதைக்களத்துக்கு கொஞ்சமேனும் ஒத்துப் போகும் விதமாய் பொதுவான நடையிலும் மாற்றம் செய்திட முனைவேன் ! So எப்போதுமே கொஞ்சம் லைட்டான 'டர்' இருந்திடும் இந்த மனுஷனின் சாகசங்களோடு பயணிக்கும் தருணங்களில் ! No different this time as well ; மெது மெதுவாய் ஏப்ரலின் துவக்கம் முதலே எடிட்டிங்கை துவக்கி விட்டேன் ! ஆனால் எனது மாமூலான பயங்கள் இம்முறை பெரியளவில் நிஜமாகி விட்டன ! இதுவரைக்குமான ட்யுராங்கோ template-க்கும், இந்த ஆல்பத்தின் வரிகளுக்கும் துளியும் ஒத்துப் போகவில்லை ! இந்தப் பக்கம் "ஆறாது சினம்" முந்தைய ட்யுராங்கோ ஆல்பம் ; அந்தப் பக்கம் 160 பக்கங்களிலான பிரெஞ்சு to இங்கிலீஷ் ஸ்கிரிப்ட் & மூஞ்சிக்கு முன்னே டைப்செட் செய்யப்பட 147 பக்கக் கதைக் குவியல் & இன்னொரு கோடியில் நான் மாற்றி எழுதிடும் வரிகளுக்கான writing pad என்று மேஜையே நிறைந்து கிடந்து வருகிறது கடந்த 15 நாட்களாய் ! ஹோல்சேலாய் வரிகளை மாற்றியமைப்பது ; புரிதலில் இருந்த பிழைகளை சரிபார்த்துச் செப்பனிடுவது & அவசியப்படும் இடங்களில் ஹீரோவுக்கு புதுசாய் வரிகளை அமைப்பது என்று தொடர்ந்த WWF மல்யுத்தமானது சுத்தமாய் 12 நாட்களை விழுங்கிவிட்டது ! ஏறுவது முன்மண்டையின் கேச அடர்த்தி (!!) மட்டுமன்றி அகவைகளுமே எனும் போது -   இப்போதெல்லாம் தொடர்கதைகளாகிடும் இந்த ஒட்டுமொத்த ரிப்பேர் பணிகளைச் சமாளிக்க மெய்யாலுமே நாக்குத் தொங்குகிறது ! ஒவ்வொரு மாதமும் கதைகள் வேறாக இருப்பினும், எனது இந்தக் காலட்சேபக் கதை ஒன்றாகவே இருப்பது, எனக்கே  அயர்ச்சியூட்டுகிறது ! 

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் ஓசையின்றி இது வரையிலும் 5 தனிப்பட்ட  மொழிபெயர்ப்பாளர்களை இங்கும், அங்குமாய்த் தேடிப்பிடித்து, பணிகளை ஒப்படைத்து வாங்கிப் பார்த்து வருகிறேன் தான் ; ஆனால் ஒரேயொரு பெண்மணி நீங்கலாய் பாக்கிப் பேரிடம் நாம் விரும்பும் output கிடைத்த பாடில்லை ! இடையிடையே நமது நண்பர்களுள் ஓரிருவர் நமக்கென பேனா பிடிப்பதும் உண்டு தான் ; ஆனால் "மாதம் 4 புக்ஸ்" என்ற அட்டவணையினைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் நாட்களில், நண்பர்களின் அவ்வப்போதைய சகாயங்களை கொண்டு நாம் சாதிக்கக் கூடியது சொற்பமே என்றாகிறது ! So நடப்பாய் நமது மொழிபெயர்ப்பு டீமுக்கு ஆட்பலத்தினை கூட்டிடாது போனால், சிக்கல் உத்திரவாதம் என்பது கொட்டை எழுத்துக்களில் என்முன்னே எழுதப்பட்டிருப்பது தெரிகிறது ! கொஞ்சம் கி.நா. பாணியிலான கதைகளுக்கோ ; கார்ட்டூன்களுக்கோ ; புது நாயகர்களுக்கோ மல்லுக்கட்டும் போது கூட பணியின் சுமை அத்தனை நெருடுவதில்லை ; ஆனால் நேர்கோட்டுக் கதைகளில் உருண்டு புரள்வதென்பது என் வயதினை அடிக்கடி உணர்த்திக் காட்டுவது போலவே உள்ளது ! And எழுதுவோர் மாறிட்டால், உங்களுக்குக் கிட்டிடக்கூடிய வாசிப்பு அனுபவத்தில் கொஞ்சமாச்சும் புத்துணர்ச்சியும் தென்படுமல்லவா ? இதோ, இப்போது கூட தென் மாவட்டத்தின் ஒரு இளைஞி நமக்குப் பணியாற்ற முயற்சித்து வருகிறார் ; இதுவரைக்குமான துவக்கம் promising என்று தோன்றுகிறது ! அவரது பேனாவுக்கோ ; லேப்டாப்புக்கோ மனிடோ ஆற்றலை வழங்கிட்டால் மகிழ்வேன் ! Fingers crossed !

மூன்று பாகங்களின் பட்டி, டின்கரிங்க் செய்த ஸ்க்ரிப்டை நம்மாட்கள் மறுக்கா டைப்செட் செய்து வருகிறார்கள் ! அவற்றை இன்றும், நாளையுமாய் சரி பார்த்தால், வெள்ளியோ, சனியோ - அச்சுக்குச் சென்று விடலாம் ! ஆனால் எங்கள் ஊரின் அம்மன்கோவில் திருவிழாவானது இந்த வாரயிறுதி & திங்கள் எனும் போது, அதனையும் கணக்கிட்டே பணிகளை திட்டமிட வேண்டி வரும் ! Of course - அரசு ஆணைகளின்படி திருவிழாவின் பொருட்டு வழக்கமான விமரிசைகள் ஏதும் இம்முறை கிடையாது தான் ; ஆனால் விடுமுறைகள் இருக்குமென்றே தோன்றுகிறது ! இதோ - கூத்துக்கள் பல பார்த்த பக்கங்களின் ஒரு preview : 

ட்யுராங்கோவுக்கு டாட்டா சொல்லும் தருணமும் இதுவே எனும் போது - கதாசிரியர் cum ஓவியர் Yves Swolfs-ன் அடுத்த வெஸ்டர்ன் தொடரின் பக்கமாய்க் கவனத்தைத் திருப்பிட முனைந்துள்ளேன் ! LONESOME என்ற அந்தத் தொடரும் ட்யுராங்கோவின் ஒன்றுவிட்ட சித்தப்பா பையனாகவே தென்படுவதால் வேலை லேசு தான் ; ஆனால் ஒரே சிக்கலானது அந்த முதல் சுற்றின் கதை 4 பாகங்களிலானதாம் ; முதலிரண்டு வெளி வந்துவிட்டன & பாகம் 3 - அக்டொபர் 2021-ல் ரிலீசாகிறது ! ஆனால் இறுதி பாகமோ 2022 அல்லது 2023-ல் தானாம் ! So அதுவரைக்கும் அந்தத் தொடரினில் கை வைப்பதற்கு தயக்கமே மேலோங்குகிறது !

ட்யுராங்கோ தொடர் முற்றுப்புள்ளி காணவுள்ள இந்த நேரத்தில் ஒற்றை விஷயத்தைக் குறிப்பிடாதிருக்க இயலவில்லை ! இந்தத் தொடரின் அதிரடி வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம், நாம் இதனை தனித்தனி சிங்கிள் இதழ்களாய் வெளியிடாது, துவக்கம் முதலே தொகுப்புகளாகவே களமிறக்கியுள்ளதுமே என்று தோன்றுகிறது ! மொத்தம் ஐந்தே ஆல்பங்களில் ; ஐந்தாண்டுகளில் நிறைவுறும் இதே தொடரை தனித்தனி இதழ்களாய் ஜவ்வு இழுத்திருப்பின், குறைந்த பட்சம் எட்டோ-ஒன்பதோ-பத்தோ ஆண்டுகள் ஆகியிருக்கக்கூடும் ; and இதே தாக்கம் அதனில் சாத்தியமாகியிருக்குமா என்பது தெரியவில்லை ! So ஒரு மிதநீள புதுத் தொடரைக் கையிலெடுக்கும் வேளைகளில் - இந்த 'தொகுப்பு பார்முலா ' தேவலாம் போலும் ! தற்போது நாம் பயணித்து வரும் தொடர்களுக்குள் SODA ; க்ளிப்டன் ; 'அந்தியும் அழகே' தாத்தாஸ் கதை ; வெட்டியான் ஸ்டெர்ன் போன்றவை இந்த ட்ரீட்மென்டுக்கு ஒத்து வரக்கூடியவை !  Maybe ஏதேனும் ஒன்றை வரும் ஆண்டுகளில் தொகுப்புகளாக்கி அழகு பார்த்திடலாமா ? அல்லது அவர்களோடு இப்போது புழங்கும் அன்னம்-தண்ணியே போதும் என்பீர்களா ? What say folks ?

கிளம்பும் முன்பாய் இன்னொரு கேள்வியுமே : முந்நூற்றிச் சொச்சம் கதைகள் கொண்ட "சுஸ்கி & விஸ்கி" கதைகளை மறுக்கா நம் அணிவகுப்புக்கு கொண்டு வந்தாலென்னவென்று ? நண்பர் மின்னஞ்சலில் வினவியிருந்தார் ! ஏற்கனவே Smurfs ; பென்னி ; மந்திரி ; லியனார்டோ போன்றோர் வெற்றிலை போடாமலே வாய் சிவந்து திரியும் வேளையினில், இந்தத் தொடரின் வெற்றி குறித்து எனக்கு உள்ள நம்பிக்கை குறைச்சலே என்று பதிலிட்டிருந்தேன் ! But still - இந்த தொகுப்பு concept-ல் சுஸ்கி & விஸ்கியை முயற்சிப்பதாயின் உங்களின் ஆதரவு ரேஞ் எவ்விதம் இருக்கக்கூடுமோ என்ற கேள்வி என்னுள் ! So இந்தத் தொடரினை ஏற்கனவே வாசித்திருக்கும் நண்பர்கள் ; அதனில் என்ன எதிர்பார்த்திடலாம் என்று அறிந்திருக்கும் நண்பர்கள் மட்டும் தங்கள் எண்ணங்களை இங்கு பகிர்ந்திடலாமே ? Nostalgia சார்ந்த தேடலாய் இதுவும் அமைந்திட்டால் ரொம்ப காலத்துக்கு வண்டி ஓடாதென்பதால் - கதைகளின் தன்மைக்கென உங்கள் ஓட்டுகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ் ! 

Bye all...see you around ! Have a lovely year ahead !!

Saturday, April 10, 2021

யார் அந்தப் பாதாள பைரவர்கள் / பைரவிகள் ?

 நண்பர்களே,

வணக்கம். அனலடித்த பிரச்சாரங்கள், தேர்தல் என சகலமும் முற்றுக்கு வந்திருக்க, இன்னமும் தொடர்ந்து அனலைக் கக்குவது ஏப்ரலின் வானங்கள் மட்டுமே ! பற்றாக்குறைக்கு 'இரண்டாவது அலை' ; 'ஒன்பதாவது அலை'யென செய்திகளும் தீயாய்க் காதில் விழ, "ஆணியே பிடுங்க வேணாம் !" என்ற தீர்மானத்தில் வீட்டிலிருந்தே வேலைகளைக் கவனித்த வண்ணமுள்ளேன் ! திரும்பிப் பார்த்தால், போன வருஷம் இதே நேரத்தில், இதே கூத்துக்களே அரங்கேறி வந்தது நிழலாடுகிறது ! 'ஷப்ப்பா..முடிலே சாமி !' என்றபடிக்கே மோட்டை வெறித்துப் பார்க்கும் வேளையினில், ஒரு annual ritual பாக்கி நிற்பது நினைவுக்கு வந்தது ! அது வேறேதுமில்லை - "கடந்த 12 மாதங்களின் நம் வெளியீடுகளில் உங்களது TOP 3 தேர்வுகள் எவையோ ? BOTTOM 3 எவையோ ?" என்ற வினவலே ! டிசம்பர் '20 வாக்கில் இதே கேள்வியை இங்கு கேட்டது நினைவுள்ளது தான் ; ஆனால் கொரோனா ஆண்டின் சந்தாவானது முற்றுப்புள்ளி காண்பது மார்ச் 2021-ல் தான் எனும் போது - அந்தக் கேள்வி இப்போது தான் முழுமையடைவதாய்ப் பட்டது ! (ஹ்க்கும்...இன்னும் 'கொரில்லா சாம்ராஜ்யம்' இருக்கு பாக்கி !!)

TOP 3 என, என்னளவில் நினைவில் இதழ்கள் தங்கிட காரணங்கள் வெவ்வேறாக இருந்திடலாம் ! ரொம்பவே மெனெக்கெட்டு உரிமைகளை வாங்கிய கதை என்ற காரணமோ, ரொம்பவே மெனெக்கெட்டுப் பணியாற்றிய கதை என்ற காரணமோ ; ரொம்பவே சிலாகிப்பை ஈட்டித் தந்த கதை என்ற காரணமோ - என் பக்கமிருக்கக்கூடும் ! ஆனால் அத்தகைய புறக்காரணிகளின்றி, வாசிப்பனுவத்தின் பலனாய் மட்டுமே நீங்கள் போட்டிடக் கூடிய ரேங்கிங் தான் மெய்யாலுமே இங்கு முக்கியம் ! So என்னளவில் 'சூப்பர்' என்று பட்ட இதழ்களின் பட்டியலை இங்கு தருகிறேன் ; அதனுள்ளிருந்து உங்கள் சாய்சை தெரியப்படுத்தினால், சம்பந்தப்பட்ட படைப்பாளிகளிடம் அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்த திருப்தி நமதாகிடக்கூடும் ! இதோ - இம்மாத "ஜெரோனிமோ" இதழின் தமிழ் pdf கோப்புகளைப் பார்த்து விட்டே, அதன் கதாசிரியரும், ஓவியரும், பதிப்பகமும் செம குஷியில் உள்ளனர் ! "ஏர்-மெயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் பிரதிகளை நேரில் பார்க்க ஆவலாய் வெயிட்டிங்" என்றும் பதிவிட்டுள்ளனர் ! அளவினால் இம்மியூண்டு வாசக வட்டமாய் நாமிருப்பினும், ஆசியத் துணைக்கண்டத்தினில் அவர்களது படைப்புகளை மொழிமாற்றம் செய்து வாசிக்கும் / சிலாகிக்கும்  ஒரே கூட்டமாகவும் நாமிருப்பது நாம் யூகிப்பதை விடவும் சில தருணங்களில் நம் வட்டத்துக்குக் கூடுதலாய் வெயிட் தருவது புரிகிறது ! அதிலும், நாம் புதிதாய்க் கரம் கோர்க்கும் பிரெஞ்சுப் பதிப்பகங்களுக்கு நமது உற்சாக வரவேற்புகள் - இன்ப அதிர்ச்சிகளாகவே உள்ளன ! வெகு சமீபத்தில் கூட "அர்ஸ் மேக்னா'வின் கதாசிரியர் + ஓவியர் கூட்டணியானது உங்களுக்குத் தம் அன்பினைத் தெரிவித்திருந்தனர் ! So இந்த TOP 3 தேர்வானது எம்பட முதுகை சொரிஞ்சுபோட இல்லீங்கோ ; நெசமான நம்ம அன்பை சம்பந்தப்பட்டோர்க்கு சொல்லிப்போடத்தா கண்ணு !  Here you go with my short list :

  • பிரிவோம் சந்திப்போம் - ஜம்போ சீசன் 3 
  • கண்ணான கண்ணே ..!
  • லக்கி 36 -வது ஆண்டுமலர்
  • பனியில் ஒரு குருதிப்புனல் - லயன் கிராபிக் நாவல்
  • மா துஜே சலாம்
  • தீபாவளி with டெக்ஸ்
  • தோர்கல் - ஒரு அழகிய அகதி !
  • ARS MAGNA
  • லக்கி லுக் - "ஒரு கௌபாய் எக்ஸ்பிரஸ்" (MAXI)


Of course - உங்களின் நினைவாற்றல்கள் செழிப்பாயிருந்து, முற்றுப்பெற்றுள்ள 2020-ன் சந்தா இதழ்களின் இதர memorable புள்ளிகளையும் உங்களுக்கு நினைவிருப்பின், அதனிலிருந்துமே உங்களது TOP 3 தேர்வுகளை சொல்லிடலாம் !! எனது இந்தப் பட்டியலானது, 2020-ன் முழுமையிலும் & 2021-ன் துவக்க 3 மாதங்களிலும் நாங்கள் உழைத்தவற்றுள் நினைவில் தங்கிய சமாச்சாரங்களின் பட்டியல் மட்டுமே ! So உங்களின் தேர்வுகள் இவற்றிற்கு வெளியிலிருந்தும் தாராளமாய் இருந்திடலாம் ! 

அதே போல - 2020 & 2021 என்ற இந்தப் 15 மாத பொழுதினில் - 'என்ன கொடுமை சறுக்குமண்டை சார் ?' என உங்களை நெளியச் செய்த BOTTOM 3 இதழ்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆர்வமாய் உள்ளேன் ! If not for anything else - ஏகமாய் அயர்ச்சியை ஏற்படுத்தியோரை வரும் காலங்களில் தவிர்க்கவாவது இந்த BOTTOM 3 தேர்வானது உதவிடும்  அல்லவா ? So நீங்க 'உசக்கே உள்ள 3 ' யாரென்று தேர்வு செய்ய சோம்பல் கொண்டாலுமே, "பாதாள பைரவிகளாய்" திகழ்ந்துள்ளோர் யாரென்று அடையாளம் காட்டவாவது முனைந்தால் மகிழ்வோம் ! அதுக்குமே ஒரு குறும்பட்டியல் தந்திட ஆசை தான் எனக்கு ; ஆனாக்கா எம்பட முதுவை சொரிஞ்சுக்கிறேனோ இல்லியோ, நானே எண்ணையைத் தடவிக்கிட்டு தயாரா நிக்க வோனாமேன்னு பாத்தேன் கண்ணு ! 

Moving on, நமது "இரத்தப் படலம்" முன்பதிவுகள் பற்றி ! முகவரொருவரின் ஆர்டரையும் சேர்த்து - முன்பதிவின் எண்ணிக்கை 216 -ல் நிற்கிறது ! இது தவிர, இன்னமும் 15 + 10 பிரதிகளை நமது ஏஜெண்ட்களுள் இருவர் உறுதி செய்திருக்க, 230 என்ற நம்பரை உறுதிபடுத்த சாத்தியம் இந்த நொடியினில் ! மே 31 வரைக்குமான மீத 50 நாள் அவகாசத்தினில் இன்னுமொரு 100 பிரதிகள் முன்பதிவில் தேறினால் கூட வண்டி தாக்குப் பிடித்து விடும் ! எது - எப்படியோ ; ஜூன் முதல் தேதிக்கு அச்சுக்கான முஸ்தீபுகளில் இறங்கிடவுள்ளோம் என்பதால், 'வரும்...ஆனா வராது..' என்ற ஹேஷ்யங்கள் உறுதிபட இராது ! என் சக்திக்குட்பட்ட காலத்திலாவது, இந்தப் படலம் மறுமருமறுக்கா மறுபதிப்பு காணவிருப்பது இதுவே இறுதி முறை என்பதால், புக் செய்ய நினைப்போர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திடக் கோருகிறேன் folks ! 'எப்டியும் ஒரே புக்கா போடுவாய்ங்கள்லே ; அப்பாலிக்கா வாங்கிக்கலாம் !" என்ற தீர்மானத்தில் தற்போதைக்கு இருந்திடும் பட்சங்களில், நாலாயிரமோ, ஏழாயிரமோ தந்து, பின்னாட்களில் இதனை கைமாற்ற நினைப்போரிடமே கொள்முதல் செய்ய வேண்டிவரும் ! So the absolute last call folks !! Don't ever tell me you missed out please !

NO

NAME

PLACE

1

Mr.K.V.GANESH

CHENNAI

2

Mr.K.PARTHIBAN

TRICHY

3

Mr.V.HARIHARAN

COIMBATORE

4

Mr.S.SENTHIL KUMAR

TIRUPUR

5

Mr.KRISHNA MOORTHY

DHARAPURAM

6

Mr.ARUN KUMAR

NAMAKKAL

7

Mr.ARUN KUMAR

NAMAKKAL

8

Mr.M.BABU MOHAMED ALI

SALEM

9

Mr.T.SOUNDRA PANDIAN

RAJAPALAYAM

10

Mr.T.SOUNDRA PANDIAN

RAJAPALAYAM

11

Mr.R.ANBALAGAN

GOBICHETTIPALAYAM

12

Mr.R.ANBALAGAN

GOBICHETTIPALAYAM

13

Mr.R.GANESH

MADURAI

14

Mr.AUGUSTIN SAINTLYDOSS

HOSUR

15

Mr.A.D.BASKARAN

CHENNAI

16

Mr.SARAVANAN SUNDARAVEL

NOIDA

17

Mr.SARAVANAN VADIVEL

NAGAPATTINAM

18

Mr.MOHAMMED ARAFARTH

MAYILADUTHURAI

19

Mr.SURESH NATARAJAN

AUSTRALIA

20

Mr.SURESH NATARAJAN

AUSTRALIA

21

Mr.SURESH NATARAJAN

AUSTRALIA

22

Mr.SRINIVASARAGHAVAN RAMAN

CHENNAI

23

Mr.PRABHUDASS PALANI

CUDDALORE

24

Mr.MAHENDRAN PARAMASIVAM

COIMBATORE

25

Mr.A.SATHISH KUMAR

VELLORE

26

Mr.PRASANNA SRIDHAR

COIMBATORE

27

Mr.S.S.KARTHIK

BANGALORE

28

Mr.A.PALANIVEL

TRICHY

29

Mr.A.PALANIVEL

TRICHY

30

Mr.RAJ KUMAR SIVANANDI

MADURAI32

Mr.MA.SENTHIL

COIMBATORE

33

Mr.MA.SENTHIL

COIMBATORE

34

Mr.SANKAR CHELLAPPAN

CHENNAI

35

Mr.V.RAJEEV

COIMBATORE

36

Mr.SELVAM ANNAMALAI

ERODE

37

Mr.S.ANANTHA SANKAR

TIRUNELVELI

38

Mr.R.SARAVANAN

ERODE

39

Dr.PRASANNA

SRILANKA

40

Dr.PRASANNA

SRILANKA

41

Dr.PRASANNA

SRILANKA

42

Mr.A.PALANIVEL

TRICHY

43

Mr.M.RAMKUMAR

UNKNOWN

44

Mr.V.V.KRISHNA

CHENNAI

45

Mr.N.SHANMUGAM

TIRUCHENGODE

46

Mr.MOHAMED RAFIQ RAJA

BANGALORE

47

Mr.MANI.MB

CHENNAI

48

Mr.MANI.MB

CHENNAI

49

Mr.MANI.MB

CHENNAI

50

Mr.MANI.MB

CHENNAI

51

Mr.MANI.MB

CHENNAI

52

Mr.SUBRAMANIAN

CHIDAMBARAM

53

Dr.A.K.K.RAJA

KARUR

54

Dr.A.K.K.RAJA

KARUR

55

Dr.A.K.K.RAJA

KARUR

56

Mr.K.V.GANESH

CHENNAI

57

Mr.YOGI SIVAKUMARAN

SRILANKA

58

Mr.SELVAM ANNAMALAI

ERODE

59

Mr.SELVAM ANNAMALAI

ERODE

60

Mr.S.BALA SUBRAMANIYAN

BANGALORE

61

Mr.VIJAY

ERODE

62

Mr.V.R.SRINIVASA RAGHAVAN

CHENNAI

63

Mr.V.R.SRINIVASA RAGHAVAN

CHENNAI

64

Mr.SUNDARALINGAM MATHINATH

SRILANKA

65

Mr.R.S.SHARMA

SRILANKA

66

Mr.VIMALAKANDHAN THANUSHAN

SRILANKA

67

Mr.VIMALAKANDHAN THANUSHAN

SRILANKA

68

Mr.A.S.SOUNDERA RAJ

BANGALORE

70

Mr.RAM KUMAR GOPALA KRISHNAN

CHENNAI

71

Mr.JEBARATHINAM ALEXANDER

CHENNAI

72

Mr.D.V.KANNAN

CHENNAI

73

Mr.M.ANANDAPPAN

KARAIKAL

74

Mr.SANKAR CHELLAPPAN

CHENNAI

75

Mr.L.BOOPATHI

CHANDRAPUR

76

Mr.R.GANESH

MADURAI

77

Mr.KUMARESAN PALANIVEL

VIRUDHACHALAM

78

Mr.A.JEGAAN DHARMENRA

SRILANKA

79

Mr.YOGANATHAN

KODUMUDI

80

Mr.M.KARTHIKEYAN

PALAKKAD

81

Mr.KUMAR

SALEM

82

Dr.RAJESH

BANGALORE

83

Dr.RAJESH

BANGALORE

84

Mr.BALAMURUGAN MARUTHAN

TRICHY

85

Mr.IGNATIUS LORAN

KORBA

86

Mr.M.KUMAR

KANCHIPURAM

87

Mr.THIRUCHELVAM PRAPANATH

FRANCE

88

Mr.A.M.CHANDRA KUMAR

TIRUPUR

89

Mr.SIVAKUMAR SUBRAMANIAN

CHENNAI

90

Mr.KARTHIGAI PANDIYAN

COIMBATORE

91

Mr.SURESH KUMAR

MADURAI

92

Mr.MUTHIAH PALANIAPPAN

CHENNAI

93

Mr.K.ELAVARASU

BANGALORE

94

Mr.R.MUJAHIRUDEEN

CHENNAI

95

Mr.PRAKASH BALA

CHENNAI

96

Dr.V.VIKRAM

TRICHY

97

Mr.S.SATHIYA MOORTHY

TIRUPUR

98

Mr.L.BOOPATHI

CHENNAI

99

Mr.MAHESH KUMARSELVARAJ

CHENNAI

100

Mr.SENTHIL SATHYA

CHENNAI

101

Ms.NARMADHA

CHENNAI

102

Mr.DALAXSHAN

SRILANKA

103

Ms.ELEZABETH ANTONY

TRIVENDRUM

104

Mr.BHAVANI SRIDHAR

BANGALORE

105

Mr.P.SARAVANAN

CHINNAMANUR

106

Mr.M.BOOBALACHANDER MANI

CHENNAI

107

Mr.RAJESH RANGANATHAN

CHENNAI
109

Mr.SURESH RANGASAMY

AVINASHI

110

Mr.SURESH RANGASAMY

AVINASHI

111

Mr.N.MANI KANDAN

KULITHALAI

112

Mr.J.SENTHI LKUMAR

CUDDALORE

113

Mr.M.KANISHK

TRICHIRAPALLI

114

Mr.M.KANISHK

TRICHIRAPALLI

115

Mr.M.VEL

DHARMAPURI

116

Mr.K.PARIMELALAGAN

CHENNAI

117

Mr.K.PARIMELALAGAN

CHENNAI

118

Mr.M.SELVAM

THIRUVANNAMALAI

119

Mr.B.MANIMARAN

RANIPET

120

Mr.S.MOHAN

NAGAPATTINAM

121

Mr.SARABESAN

CHENNAI

122

Mr.ARULDASS

CHENNAI

123

Mr.M.SELVAKUMAR

PALANI

124

Mrs.TAMILSELVI SARAVANAN

KARAIKAL

125

Mr.K.V.GANESH

CHENNAI

126

Mr.LUTHUFUR RAHMAN

CHENNAI

127

MR.SANTHIRAKUMAR ABIRAJ

SRILANKA

128

Mr.IGNATIUS LORAN

TRICHY

129

Mr.S.SURESH BABU

CHENNAI

130

Mr.D.ASLAM BASHA

MADURAI

131

Dr.P.KARUNANITHI

PUDUKOTTAI

132

Mr.JOSEPH JEYACHANDRAN

ODDANCHATHIRAM

133

Mr.JOSEPH JEYACHANDRAN

ODDANCHATHIRAM

134

Mr.A.PALANIVEL

TRICHY

135

Mr.V.THILAGAR

MADURAI

136

Mr.NIRUN SANTHANANTHAN

SRILANKA

137

Mr.V.JAWAHARLAL NEHRU

MADURAI

138

Mr.SRIVATHSAN

BANGALORE

139

Dr.PRASANNA

SRILANKA

140

Mr.N.KUMAR

TIRUPUR

141

Mr.K.DHANAULLAH

GUDALUR

142

Mr.M.SIVASAMY

COIMBATORE

145

Mr.SHANTHAKUMAR

CHENNAI

146

Mr.VEERA PANDIYAN

TIRUNELVELI

147

Mr.ILANGO

MADURAI

148

Mr.C.BASKARAN

BANGALORE

150

Mr.K.V.GANESH

CHENNAI

151

Mr.H.SURESH CHAND

COIMBATORE

152

Mr.G.RAJA SEKARAN

CHENNAI

153

Mr.R.MARIMUTHU

ERODE

154

Mr.RAJA RAJAN

SALEM

155

Mr.R.KUMAR

DINDUGAL

156

Mr.C.MARIMUTHU

CHENNAI

157

Mr.KANAGARAJ

CHENNAI

158

Mr.G.JEGADEESWARAN

ARANTHANGI

159

Mr.ELAVIJAY

SALEM

160

Mr.KARTHICK MOHANRAM

U.S.A

161

Mr.A.KALEEL

PONDICHERRY

162

Mr.A.KALEEL

PONDICHERRY

163

Mr.THARAN

ARANTHANGI

164

Mr.T.UDAYA KUMAR

OOTY


165-214

AGENT BOOKING

215

Mr.N.ARUL

VADAMADIMANGALAM

216

Mr.K.SENTHIL NATHAN

CHENNAI


அப்புறம் " சந்தாவில் அல்லாதோருக்கு & கூடுதல் பிரதிகளுக்கு ஆர்டர் தந்திருப்போருக்கு - "கழுகு வேட்டை" இதழினில் போட்டோக்கள் இணைக்க இன்னும் ஒரு நாள் அவகாசத்தை நீட்டிக்கிறோம் ! நம்மவர்கள் அனைவருமே கடைசி நிமிடத்தில், ரன்னிங்கில் தொற்றியே பழகி விட்டதாலோ, என்னவோ - இன்றைக்கு ஒரு வண்டி போன் அழைப்புகள் & கோரிக்கைகள் ! So திங்கள் (12 ஏப்ரல்) ஒரே ஒரு நாள் மட்டும் அவகாசம் நீட்டிப்பு செய்திடுகிறோம் & செவ்வாய் காலை முதலாய் கிட்டும் ஆர்டர்களில் போட்டோக்கள் இணைக்க சாத்தியமாகிடாது ; so please do remember !


Before I sign out - இதோ "
கொரில்லா சாம்ராஜ்யம்" இதழின் finished cover - கீழே உங்கள் பார்வைகளுக்கு :  

உட்பக்க அச்சும் நிறைவுற்றிருக்க, புக் தக தகவென்று ஜொலிக்கிறது ! இது 2020 சந்தாவின் எஞ்சிய கடைசி இதழ் என்பதால், இன்னமும் சந்தா 2021-ல் இணைந்திரா ஒரு சிறு எண்ணிக்கையிலானோருக்கு இதனை மட்டும் அனுப்பிட எண்ணியுள்ளோம் - இந்த சிறு சந்தா நினைவூட்டலோடு

பாக்கிப் பேருக்கு மே மாதத்து புக்ஸுடன் "கொ.சா" இதழினை அனுப்பிட எண்ணியுள்ளோம் ...ஓ.கே. தானுங்களே ? Bye all....see you around ! Have a great weekend !