Powered By Blogger

Saturday, April 10, 2021

யார் அந்தப் பாதாள பைரவர்கள் / பைரவிகள் ?

 நண்பர்களே,

வணக்கம். அனலடித்த பிரச்சாரங்கள், தேர்தல் என சகலமும் முற்றுக்கு வந்திருக்க, இன்னமும் தொடர்ந்து அனலைக் கக்குவது ஏப்ரலின் வானங்கள் மட்டுமே ! பற்றாக்குறைக்கு 'இரண்டாவது அலை' ; 'ஒன்பதாவது அலை'யென செய்திகளும் தீயாய்க் காதில் விழ, "ஆணியே பிடுங்க வேணாம் !" என்ற தீர்மானத்தில் வீட்டிலிருந்தே வேலைகளைக் கவனித்த வண்ணமுள்ளேன் ! திரும்பிப் பார்த்தால், போன வருஷம் இதே நேரத்தில், இதே கூத்துக்களே அரங்கேறி வந்தது நிழலாடுகிறது ! 'ஷப்ப்பா..முடிலே சாமி !' என்றபடிக்கே மோட்டை வெறித்துப் பார்க்கும் வேளையினில், ஒரு annual ritual பாக்கி நிற்பது நினைவுக்கு வந்தது ! அது வேறேதுமில்லை - "கடந்த 12 மாதங்களின் நம் வெளியீடுகளில் உங்களது TOP 3 தேர்வுகள் எவையோ ? BOTTOM 3 எவையோ ?" என்ற வினவலே ! டிசம்பர் '20 வாக்கில் இதே கேள்வியை இங்கு கேட்டது நினைவுள்ளது தான் ; ஆனால் கொரோனா ஆண்டின் சந்தாவானது முற்றுப்புள்ளி காண்பது மார்ச் 2021-ல் தான் எனும் போது - அந்தக் கேள்வி இப்போது தான் முழுமையடைவதாய்ப் பட்டது ! (ஹ்க்கும்...இன்னும் 'கொரில்லா சாம்ராஜ்யம்' இருக்கு பாக்கி !!)

TOP 3 என, என்னளவில் நினைவில் இதழ்கள் தங்கிட காரணங்கள் வெவ்வேறாக இருந்திடலாம் ! ரொம்பவே மெனெக்கெட்டு உரிமைகளை வாங்கிய கதை என்ற காரணமோ, ரொம்பவே மெனெக்கெட்டுப் பணியாற்றிய கதை என்ற காரணமோ ; ரொம்பவே சிலாகிப்பை ஈட்டித் தந்த கதை என்ற காரணமோ - என் பக்கமிருக்கக்கூடும் ! ஆனால் அத்தகைய புறக்காரணிகளின்றி, வாசிப்பனுவத்தின் பலனாய் மட்டுமே நீங்கள் போட்டிடக் கூடிய ரேங்கிங் தான் மெய்யாலுமே இங்கு முக்கியம் ! So என்னளவில் 'சூப்பர்' என்று பட்ட இதழ்களின் பட்டியலை இங்கு தருகிறேன் ; அதனுள்ளிருந்து உங்கள் சாய்சை தெரியப்படுத்தினால், சம்பந்தப்பட்ட படைப்பாளிகளிடம் அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்த திருப்தி நமதாகிடக்கூடும் ! இதோ - இம்மாத "ஜெரோனிமோ" இதழின் தமிழ் pdf கோப்புகளைப் பார்த்து விட்டே, அதன் கதாசிரியரும், ஓவியரும், பதிப்பகமும் செம குஷியில் உள்ளனர் ! "ஏர்-மெயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் பிரதிகளை நேரில் பார்க்க ஆவலாய் வெயிட்டிங்" என்றும் பதிவிட்டுள்ளனர் ! அளவினால் இம்மியூண்டு வாசக வட்டமாய் நாமிருப்பினும், ஆசியத் துணைக்கண்டத்தினில் அவர்களது படைப்புகளை மொழிமாற்றம் செய்து வாசிக்கும் / சிலாகிக்கும்  ஒரே கூட்டமாகவும் நாமிருப்பது நாம் யூகிப்பதை விடவும் சில தருணங்களில் நம் வட்டத்துக்குக் கூடுதலாய் வெயிட் தருவது புரிகிறது ! அதிலும், நாம் புதிதாய்க் கரம் கோர்க்கும் பிரெஞ்சுப் பதிப்பகங்களுக்கு நமது உற்சாக வரவேற்புகள் - இன்ப அதிர்ச்சிகளாகவே உள்ளன ! வெகு சமீபத்தில் கூட "அர்ஸ் மேக்னா'வின் கதாசிரியர் + ஓவியர் கூட்டணியானது உங்களுக்குத் தம் அன்பினைத் தெரிவித்திருந்தனர் ! So இந்த TOP 3 தேர்வானது எம்பட முதுகை சொரிஞ்சுபோட இல்லீங்கோ ; நெசமான நம்ம அன்பை சம்பந்தப்பட்டோர்க்கு சொல்லிப்போடத்தா கண்ணு !  Here you go with my short list :

 • பிரிவோம் சந்திப்போம் - ஜம்போ சீசன் 3 
 • கண்ணான கண்ணே ..!
 • லக்கி 36 -வது ஆண்டுமலர்
 • பனியில் ஒரு குருதிப்புனல் - லயன் கிராபிக் நாவல்
 • மா துஜே சலாம்
 • தீபாவளி with டெக்ஸ்
 • தோர்கல் - ஒரு அழகிய அகதி !
 • ARS MAGNA
 • லக்கி லுக் - "ஒரு கௌபாய் எக்ஸ்பிரஸ்" (MAXI)


Of course - உங்களின் நினைவாற்றல்கள் செழிப்பாயிருந்து, முற்றுப்பெற்றுள்ள 2020-ன் சந்தா இதழ்களின் இதர memorable புள்ளிகளையும் உங்களுக்கு நினைவிருப்பின், அதனிலிருந்துமே உங்களது TOP 3 தேர்வுகளை சொல்லிடலாம் !! எனது இந்தப் பட்டியலானது, 2020-ன் முழுமையிலும் & 2021-ன் துவக்க 3 மாதங்களிலும் நாங்கள் உழைத்தவற்றுள் நினைவில் தங்கிய சமாச்சாரங்களின் பட்டியல் மட்டுமே ! So உங்களின் தேர்வுகள் இவற்றிற்கு வெளியிலிருந்தும் தாராளமாய் இருந்திடலாம் ! 

அதே போல - 2020 & 2021 என்ற இந்தப் 15 மாத பொழுதினில் - 'என்ன கொடுமை சறுக்குமண்டை சார் ?' என உங்களை நெளியச் செய்த BOTTOM 3 இதழ்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆர்வமாய் உள்ளேன் ! If not for anything else - ஏகமாய் அயர்ச்சியை ஏற்படுத்தியோரை வரும் காலங்களில் தவிர்க்கவாவது இந்த BOTTOM 3 தேர்வானது உதவிடும்  அல்லவா ? So நீங்க 'உசக்கே உள்ள 3 ' யாரென்று தேர்வு செய்ய சோம்பல் கொண்டாலுமே, "பாதாள பைரவிகளாய்" திகழ்ந்துள்ளோர் யாரென்று அடையாளம் காட்டவாவது முனைந்தால் மகிழ்வோம் ! அதுக்குமே ஒரு குறும்பட்டியல் தந்திட ஆசை தான் எனக்கு ; ஆனாக்கா எம்பட முதுவை சொரிஞ்சுக்கிறேனோ இல்லியோ, நானே எண்ணையைத் தடவிக்கிட்டு தயாரா நிக்க வோனாமேன்னு பாத்தேன் கண்ணு ! 

Moving on, நமது "இரத்தப் படலம்" முன்பதிவுகள் பற்றி ! முகவரொருவரின் ஆர்டரையும் சேர்த்து - முன்பதிவின் எண்ணிக்கை 216 -ல் நிற்கிறது ! இது தவிர, இன்னமும் 15 + 10 பிரதிகளை நமது ஏஜெண்ட்களுள் இருவர் உறுதி செய்திருக்க, 230 என்ற நம்பரை உறுதிபடுத்த சாத்தியம் இந்த நொடியினில் ! மே 31 வரைக்குமான மீத 50 நாள் அவகாசத்தினில் இன்னுமொரு 100 பிரதிகள் முன்பதிவில் தேறினால் கூட வண்டி தாக்குப் பிடித்து விடும் ! எது - எப்படியோ ; ஜூன் முதல் தேதிக்கு அச்சுக்கான முஸ்தீபுகளில் இறங்கிடவுள்ளோம் என்பதால், 'வரும்...ஆனா வராது..' என்ற ஹேஷ்யங்கள் உறுதிபட இராது ! என் சக்திக்குட்பட்ட காலத்திலாவது, இந்தப் படலம் மறுமருமறுக்கா மறுபதிப்பு காணவிருப்பது இதுவே இறுதி முறை என்பதால், புக் செய்ய நினைப்போர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திடக் கோருகிறேன் folks ! 'எப்டியும் ஒரே புக்கா போடுவாய்ங்கள்லே ; அப்பாலிக்கா வாங்கிக்கலாம் !" என்ற தீர்மானத்தில் தற்போதைக்கு இருந்திடும் பட்சங்களில், நாலாயிரமோ, ஏழாயிரமோ தந்து, பின்னாட்களில் இதனை கைமாற்ற நினைப்போரிடமே கொள்முதல் செய்ய வேண்டிவரும் ! So the absolute last call folks !! Don't ever tell me you missed out please !

NO

NAME

PLACE

1

Mr.K.V.GANESH

CHENNAI

2

Mr.K.PARTHIBAN

TRICHY

3

Mr.V.HARIHARAN

COIMBATORE

4

Mr.S.SENTHIL KUMAR

TIRUPUR

5

Mr.KRISHNA MOORTHY

DHARAPURAM

6

Mr.ARUN KUMAR

NAMAKKAL

7

Mr.ARUN KUMAR

NAMAKKAL

8

Mr.M.BABU MOHAMED ALI

SALEM

9

Mr.T.SOUNDRA PANDIAN

RAJAPALAYAM

10

Mr.T.SOUNDRA PANDIAN

RAJAPALAYAM

11

Mr.R.ANBALAGAN

GOBICHETTIPALAYAM

12

Mr.R.ANBALAGAN

GOBICHETTIPALAYAM

13

Mr.R.GANESH

MADURAI

14

Mr.AUGUSTIN SAINTLYDOSS

HOSUR

15

Mr.A.D.BASKARAN

CHENNAI

16

Mr.SARAVANAN SUNDARAVEL

NOIDA

17

Mr.SARAVANAN VADIVEL

NAGAPATTINAM

18

Mr.MOHAMMED ARAFARTH

MAYILADUTHURAI

19

Mr.SURESH NATARAJAN

AUSTRALIA

20

Mr.SURESH NATARAJAN

AUSTRALIA

21

Mr.SURESH NATARAJAN

AUSTRALIA

22

Mr.SRINIVASARAGHAVAN RAMAN

CHENNAI

23

Mr.PRABHUDASS PALANI

CUDDALORE

24

Mr.MAHENDRAN PARAMASIVAM

COIMBATORE

25

Mr.A.SATHISH KUMAR

VELLORE

26

Mr.PRASANNA SRIDHAR

COIMBATORE

27

Mr.S.S.KARTHIK

BANGALORE

28

Mr.A.PALANIVEL

TRICHY

29

Mr.A.PALANIVEL

TRICHY

30

Mr.RAJ KUMAR SIVANANDI

MADURAI32

Mr.MA.SENTHIL

COIMBATORE

33

Mr.MA.SENTHIL

COIMBATORE

34

Mr.SANKAR CHELLAPPAN

CHENNAI

35

Mr.V.RAJEEV

COIMBATORE

36

Mr.SELVAM ANNAMALAI

ERODE

37

Mr.S.ANANTHA SANKAR

TIRUNELVELI

38

Mr.R.SARAVANAN

ERODE

39

Dr.PRASANNA

SRILANKA

40

Dr.PRASANNA

SRILANKA

41

Dr.PRASANNA

SRILANKA

42

Mr.A.PALANIVEL

TRICHY

43

Mr.M.RAMKUMAR

UNKNOWN

44

Mr.V.V.KRISHNA

CHENNAI

45

Mr.N.SHANMUGAM

TIRUCHENGODE

46

Mr.MOHAMED RAFIQ RAJA

BANGALORE

47

Mr.MANI.MB

CHENNAI

48

Mr.MANI.MB

CHENNAI

49

Mr.MANI.MB

CHENNAI

50

Mr.MANI.MB

CHENNAI

51

Mr.MANI.MB

CHENNAI

52

Mr.SUBRAMANIAN

CHIDAMBARAM

53

Dr.A.K.K.RAJA

KARUR

54

Dr.A.K.K.RAJA

KARUR

55

Dr.A.K.K.RAJA

KARUR

56

Mr.K.V.GANESH

CHENNAI

57

Mr.YOGI SIVAKUMARAN

SRILANKA

58

Mr.SELVAM ANNAMALAI

ERODE

59

Mr.SELVAM ANNAMALAI

ERODE

60

Mr.S.BALA SUBRAMANIYAN

BANGALORE

61

Mr.VIJAY

ERODE

62

Mr.V.R.SRINIVASA RAGHAVAN

CHENNAI

63

Mr.V.R.SRINIVASA RAGHAVAN

CHENNAI

64

Mr.SUNDARALINGAM MATHINATH

SRILANKA

65

Mr.R.S.SHARMA

SRILANKA

66

Mr.VIMALAKANDHAN THANUSHAN

SRILANKA

67

Mr.VIMALAKANDHAN THANUSHAN

SRILANKA

68

Mr.A.S.SOUNDERA RAJ

BANGALORE

70

Mr.RAM KUMAR GOPALA KRISHNAN

CHENNAI

71

Mr.JEBARATHINAM ALEXANDER

CHENNAI

72

Mr.D.V.KANNAN

CHENNAI

73

Mr.M.ANANDAPPAN

KARAIKAL

74

Mr.SANKAR CHELLAPPAN

CHENNAI

75

Mr.L.BOOPATHI

CHANDRAPUR

76

Mr.R.GANESH

MADURAI

77

Mr.KUMARESAN PALANIVEL

VIRUDHACHALAM

78

Mr.A.JEGAAN DHARMENRA

SRILANKA

79

Mr.YOGANATHAN

KODUMUDI

80

Mr.M.KARTHIKEYAN

PALAKKAD

81

Mr.KUMAR

SALEM

82

Dr.RAJESH

BANGALORE

83

Dr.RAJESH

BANGALORE

84

Mr.BALAMURUGAN MARUTHAN

TRICHY

85

Mr.IGNATIUS LORAN

KORBA

86

Mr.M.KUMAR

KANCHIPURAM

87

Mr.THIRUCHELVAM PRAPANATH

FRANCE

88

Mr.A.M.CHANDRA KUMAR

TIRUPUR

89

Mr.SIVAKUMAR SUBRAMANIAN

CHENNAI

90

Mr.KARTHIGAI PANDIYAN

COIMBATORE

91

Mr.SURESH KUMAR

MADURAI

92

Mr.MUTHIAH PALANIAPPAN

CHENNAI

93

Mr.K.ELAVARASU

BANGALORE

94

Mr.R.MUJAHIRUDEEN

CHENNAI

95

Mr.PRAKASH BALA

CHENNAI

96

Dr.V.VIKRAM

TRICHY

97

Mr.S.SATHIYA MOORTHY

TIRUPUR

98

Mr.L.BOOPATHI

CHENNAI

99

Mr.MAHESH KUMARSELVARAJ

CHENNAI

100

Mr.SENTHIL SATHYA

CHENNAI

101

Ms.NARMADHA

CHENNAI

102

Mr.DALAXSHAN

SRILANKA

103

Ms.ELEZABETH ANTONY

TRIVENDRUM

104

Mr.BHAVANI SRIDHAR

BANGALORE

105

Mr.P.SARAVANAN

CHINNAMANUR

106

Mr.M.BOOBALACHANDER MANI

CHENNAI

107

Mr.RAJESH RANGANATHAN

CHENNAI
109

Mr.SURESH RANGASAMY

AVINASHI

110

Mr.SURESH RANGASAMY

AVINASHI

111

Mr.N.MANI KANDAN

KULITHALAI

112

Mr.J.SENTHI LKUMAR

CUDDALORE

113

Mr.M.KANISHK

TRICHIRAPALLI

114

Mr.M.KANISHK

TRICHIRAPALLI

115

Mr.M.VEL

DHARMAPURI

116

Mr.K.PARIMELALAGAN

CHENNAI

117

Mr.K.PARIMELALAGAN

CHENNAI

118

Mr.M.SELVAM

THIRUVANNAMALAI

119

Mr.B.MANIMARAN

RANIPET

120

Mr.S.MOHAN

NAGAPATTINAM

121

Mr.SARABESAN

CHENNAI

122

Mr.ARULDASS

CHENNAI

123

Mr.M.SELVAKUMAR

PALANI

124

Mrs.TAMILSELVI SARAVANAN

KARAIKAL

125

Mr.K.V.GANESH

CHENNAI

126

Mr.LUTHUFUR RAHMAN

CHENNAI

127

MR.SANTHIRAKUMAR ABIRAJ

SRILANKA

128

Mr.IGNATIUS LORAN

TRICHY

129

Mr.S.SURESH BABU

CHENNAI

130

Mr.D.ASLAM BASHA

MADURAI

131

Dr.P.KARUNANITHI

PUDUKOTTAI

132

Mr.JOSEPH JEYACHANDRAN

ODDANCHATHIRAM

133

Mr.JOSEPH JEYACHANDRAN

ODDANCHATHIRAM

134

Mr.A.PALANIVEL

TRICHY

135

Mr.V.THILAGAR

MADURAI

136

Mr.NIRUN SANTHANANTHAN

SRILANKA

137

Mr.V.JAWAHARLAL NEHRU

MADURAI

138

Mr.SRIVATHSAN

BANGALORE

139

Dr.PRASANNA

SRILANKA

140

Mr.N.KUMAR

TIRUPUR

141

Mr.K.DHANAULLAH

GUDALUR

142

Mr.M.SIVASAMY

COIMBATORE

145

Mr.SHANTHAKUMAR

CHENNAI

146

Mr.VEERA PANDIYAN

TIRUNELVELI

147

Mr.ILANGO

MADURAI

148

Mr.C.BASKARAN

BANGALORE

150

Mr.K.V.GANESH

CHENNAI

151

Mr.H.SURESH CHAND

COIMBATORE

152

Mr.G.RAJA SEKARAN

CHENNAI

153

Mr.R.MARIMUTHU

ERODE

154

Mr.RAJA RAJAN

SALEM

155

Mr.R.KUMAR

DINDUGAL

156

Mr.C.MARIMUTHU

CHENNAI

157

Mr.KANAGARAJ

CHENNAI

158

Mr.G.JEGADEESWARAN

ARANTHANGI

159

Mr.ELAVIJAY

SALEM

160

Mr.KARTHICK MOHANRAM

U.S.A

161

Mr.A.KALEEL

PONDICHERRY

162

Mr.A.KALEEL

PONDICHERRY

163

Mr.THARAN

ARANTHANGI

164

Mr.T.UDAYA KUMAR

OOTY


165-214

AGENT BOOKING

215

Mr.N.ARUL

VADAMADIMANGALAM

216

Mr.K.SENTHIL NATHAN

CHENNAI


அப்புறம் " சந்தாவில் அல்லாதோருக்கு & கூடுதல் பிரதிகளுக்கு ஆர்டர் தந்திருப்போருக்கு - "கழுகு வேட்டை" இதழினில் போட்டோக்கள் இணைக்க இன்னும் ஒரு நாள் அவகாசத்தை நீட்டிக்கிறோம் ! நம்மவர்கள் அனைவருமே கடைசி நிமிடத்தில், ரன்னிங்கில் தொற்றியே பழகி விட்டதாலோ, என்னவோ - இன்றைக்கு ஒரு வண்டி போன் அழைப்புகள் & கோரிக்கைகள் ! So திங்கள் (12 ஏப்ரல்) ஒரே ஒரு நாள் மட்டும் அவகாசம் நீட்டிப்பு செய்திடுகிறோம் & செவ்வாய் காலை முதலாய் கிட்டும் ஆர்டர்களில் போட்டோக்கள் இணைக்க சாத்தியமாகிடாது ; so please do remember !


Before I sign out - இதோ "
கொரில்லா சாம்ராஜ்யம்" இதழின் finished cover - கீழே உங்கள் பார்வைகளுக்கு :  

உட்பக்க அச்சும் நிறைவுற்றிருக்க, புக் தக தகவென்று ஜொலிக்கிறது ! இது 2020 சந்தாவின் எஞ்சிய கடைசி இதழ் என்பதால், இன்னமும் சந்தா 2021-ல் இணைந்திரா ஒரு சிறு எண்ணிக்கையிலானோருக்கு இதனை மட்டும் அனுப்பிட எண்ணியுள்ளோம் - இந்த சிறு சந்தா நினைவூட்டலோடு

பாக்கிப் பேருக்கு மே மாதத்து புக்ஸுடன் "கொ.சா" இதழினை அனுப்பிட எண்ணியுள்ளோம் ...ஓ.கே. தானுங்களே ? Bye all....see you around ! Have a great weekend !

245 comments:

 1. வந்தனம் from வாட்டர் கூஜா

  ReplyDelete
 2. ஆனால் பாருங்க ஆர்டின் கதையின் வாட்டர் கோல்மால் தண்ணீர் மேப் வரைந்து வைத்த இடம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. செம சிந்தனை. காமெடி.

  ReplyDelete
 3. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 4. இந்த காது வழியாக குறட்டை விடும் டயலாக் எப்படி சார் தோன்றியது. மிகவும் ரசித்து சிரித்த இடம் இது.

  ReplyDelete
 5. Top 3

  தனித்திரு...தணிந்திரு...
  கண்ணான கண்ணே..
  எதிரிகள் ஓராயிரம்...

  பாட்டம் 3
  அமாயா அக்கா
  மீதி ரெண்டை சொன்னா எனக்கு இங்கே அடி விழும்.

  ReplyDelete
  Replies
  1. அட..சும்மா சொல்லுங்க சார் ! நாம பாக்காத அடியா ? இடியா ?

   அமெரிக்காவிலேயும் முட்டுச் சந்து இருக்கில்லியா ?

   Delete
  2. ஸ்பைடர் தாத்தாவும் சட்டித் தலையனும் தாங்க சார். ஆனா வண்ண இதழாக வந்திருந்த ஆர்ச்சி ஓகே. எனக்கு பிடிக்கலைன்னாலும் மகளுக்கு வாசித்து காட்டினேன். அவருக்கு பிடித்திருந்தது.

   Delete
  3. கோர்த்து விட்டாச்சுல்லே...! கோர்த்து விட்டாச்சுல்லே !!

   Delete
  4. 🤣🤣🤣🤣. நான் இப்பவே எஸ்கேப் 🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️

   Delete
  5. கிர்ர்ர்ர்ர்...

   Delete
 6. டியர் எடி ஒரு வேண்டுகோள் ... சந்தாவில் இல்லா நண்பர்களுக்கு போட்டோ அனுப்பச்சொல்லி இருந்தீங்க இன்றுதான் என்னால் அனுப்ப முடிந்தது .. எனது மகனாரின் புத்தகங்களுக்கு நடுவே உட்கார்ந்திருக்கும் புகைப்படைத்தை மட்டும் சைடு வாக்கில் போட்டோவை போட்டு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ..


  கூடவே போட்டோவில்

  லயன் முத்து காமிக்ஸ் சிவகாசி

  என்கிற வாசகத்தையும் சேர்த்து பிரிண்ட் செய்து தந்தால் அந்தப்பிரதியை தனியே எடூத்து பிரேம் செய்து சுவற்றில் மாட்டிட ஏதுவாக இருக்கும் .. ரவுண்ட் சீல் என்றாலும் ஓகே..

  ReplyDelete
 7. 2020 சந்தாவில் 80% மேற்பட்ட கதைகள்பிடித்திருந்தது. மீதி 20% கதைகளுக்கு தனிப்பட்ட வாசகர்கள் இருக்கிறார்கள்; கூட்டுறவே காமிக்ஸ் உயர்வு என்பதால் நோ கம்ப்ளெயிண்ட்ஸ்.

  ReplyDelete
 8. வணக்கம் நண்பர்களே...

  ReplyDelete
 9. அன்புள்ள எடிட்டர் திரு. விஜயன் sir அவர்களுக்கு வணக்கம்.

  மற்றும் காமிக்ஸ் வாசக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

  கடந்த (9/ஏப்ரல்/2021) வெள்ளிக்கிழமை அன்று என் வாழ்வில் இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சத்தியமாக நான் எதிர் பார்க்கவில்லை. விஷயத்தை சொல்லும் முன்னால் என்னைப்பற்றி கூறிவிடுகிறேன். பெயர் ராஜ்குமார் ஊர் திருப்பூர். லயனில் வந்த அதிசய தீவில் ஆர்ச்சி தான் என் காமிக்ஸ் வாசிப்பின் பிள்ளையார் சுழி. சிறுவயதில் கையில் கிடைக்கும் காசையெல்லாம் தின்பண்டங்கள் வாங்கித் தின்னாமல் காமிக்ஸ்சாக மாற்றுவது என் விருப்ப பொழுதுபோக்கு. எங்கள் ஊரையே சைக்கிளில் வலம் வந்து லயன், முத்துவின் முந்தைய இதழ்களை தேடி அலைந்து சேகரித்து பின்நாட்களில் சில ஏமாற்றுக்கார வாசகர்களிடம் அவற்றை இழந்தும் இருக்கிறேன். பின்னர் வாழ்வில் நிறைய மாற்றங்கள்.. திருமணம் ஆகி குடும்பத்தை பட்ஜெட் போட்டு ஒட்டிக்கொண்டு முன்பு போல காமிக்ஸ் வாங்க முடியவில்லையே என்று குமைந்து கொண்டிருந்த வேளையில்... சொன்னேனே!

  அதிர்ஷ்டம்!

  சமீபத்தில் வாசக நண்பர் ஜானி அவர்களின் முகநூல் பதிவில்.. காமிக்ஸ் வாசிக்க அதீத ஆர்வம் உள்ளது ஆனால் சந்தா கட்ட இயலவில்லை, சந்தா கட்டி உதவிட அக்கம்பத்தில் நெருங்கிய வாசக நண்பர்களும் இல்லை என்று கமெண்ட் செய்திருந்தேன்.

  என் கமெண்டை வாசித்த வாசக நண்பர் ஒருவர் என் தனிசெய்தியில் வந்து... உங்கள் விவரமும், முகவரியும் அனுப்புங்கள் நான் எடிட்டருக்கு அனுப்பி வைக்கிறேன், வாய்ப்பிருந்தால் உங்களுக்கு இவ்வருட சந்தா கிடைக்க கூடும். சங்கோஜம் வேண்டாம் அனுப்புங்கள். என்றிருந்தார்.

  உண்மையில் நிறைய கூச்சமாகத்தான் இருந்தது. சரி எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அனுப்பி வைப்போம் என்று அவரது வாட்ஸப்பிற்கு சுருக்கமாக என்னைப்பற்றி அனுப்பி வைத்தேன். விடிந்தால் எலெக்சன், மற்றும் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமை ஒருவர் முதன்முறையாக இம்முறை தேர்தல் களம் காண்கிறார் என்பதால் தொடர்ந்து இந்த விஷயத்தை மறந்தும் விட்டேன்.

  வெள்ளிக்கிழமை மதியம் st கொரியரில் இருந்து அழைப்பு, பார்சலில் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் என்ற வாசகத்தை பார்த்ததுமே மனதில் சந்தோச மின்னல் வெட்டியது. ஆம்.. சந்தாவில் என்னையும் இணைத்திருந்தார் எடிட்டர் விஜயன் அவர்கள். உடனே... இந்த சலுகையை எடிட்டரிடம் கோரி பெற்று தந்த நண்பருக்கு போனில் அழைத்து நன்றி நவின்றேன்.

  மற்றும் அன்பிற்குரிய எடிட்டர் திரு விஜயன் அவர்களுக்கு என் அன்பும் பிரியமும். மற்றும் என் போன்ற எளிய வாசகர்களையும் அவர்களும் நம்மோடு ஓடி வரட்டும் என்று எங்களின் கரம் பற்றி இழுத்து செல்ல ஸ்பான்சர் செய்திடும் வாசக நண்பர்களுக்கும் என்றென்றும் என் அன்பும் பிரியமும்.

  ஆங்... அப்புறம்.. அதிசய தீவில் ஆர்ச்சியை 2 பிரதிகள் வைத்திருந்து ஒரு பிரதியை 'சரி இந்த ராஜ்குமாருக்கு ஒன்றை கொடுப்போம், போயிட்டு போறான் போ..' என்று நினைக்கும் நண்பர்களுக்கும் தனி செய்தியில் என் முகவரியை தர விருப்பம். :) அந்த என்னுடைய முதல் ஆர்ச்சி புக்கை 90களின் இறுதியில் மிஸ் செய்துவிட்டேன். :(

  2016ல் சந்தா கட்டியிருந்தேன்.. மாதாமாதம் புத்தகம் வரும்போதெல்லாம் மனைவியின் முறைப்பு அதிகமாகும். இதெல்லாம் ஒரு வாசக நண்பர் அனுப்பியது. லயன் நிறுவனத்திலிருந்து அதன் ரெகுலர் வாசகர்களுக்காக விலையில்லாது அனுப்பி வைக்கிறார்கள் என்றெல்லாம் ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒன்றை கூறி சமாளித்தேன். (முன்பு மின்னும் மரணம் வந்த போது வாங்கி கொண்டு வந்து ஒளித்து ஒளித்து பீரோவுக்குள் வைத்தது தனிக்கதை.) ஆனால் இப்போது அதுதான் உண்மையாகி உள்ளது. இனி ஒவ்வொரு மாதமும் என்ன கூறி சமாளிப்பது என்ற டெலிகேட் பொசிசனில் இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அருமை ராஜ்குமார் சார். மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். உங்களுக்கு சந்தா கிடைக்க காரணமாக இருந்த நண்பருக்கும், உங்களுக்கு சந்தா sponsor செய்த நண்பருக்கும் எனது வாழ்த்துக்கள். அடிக்கடி தளத்திற்கு வரவும்.

   Delete
  2. "ஒவ்வொரு முகத்திலும் புன்னகை"

   எடிட்டர் சார் அவ்வப்போது சொல்லிவரும் முத்தான வாசகம்.

   இதை வாசகர்கள் எந்தளவு மதிக்கிறார்கள் என்பதற்கு- இங்கே குவிந்துவரும் ஸ்பான்சர்களும், சந்தா அறிவிப்பு சமயத்தில் நண்பர்களுக்கு அளக்கப்படும் சந்தா பரிசுகளுமே சாட்சி.

   இந்த கடினமான நாட்களில் உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைத்த அந்த நண்பருக்கும், ஸ்பான்சருக்கும், எடிட்டர்சாருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்!!!!

   வாழ்த்துகள் & என்சாய் பண்ணுங்க ராஜ்குமார்.

   Delete
  3. நண்பரே, வாழ்வின் பொருளாதாரங்கள் நம்மை வேறுபடுத்தி வைத்திருப்பினும், காமிக்ஸ் நேசமென்ற ஒற்றை விஷயத்தில் அனைவரும் இங்கு ஓரினமே ! உங்களின் சந்தோஷமே ஸ்பான்சர் செய்த நண்பருக்கான ஆத்மதிருப்தியாய் இருந்திடும் !

   நன்றிகள் அவருக்கு ; நல்வரவு உங்களுக்கு !

   Delete
 10. Top 3
  1. அர்ஸ் மேக்னா
  2. அழகிய அகதி
  3. பிரிவோம் சந்திப்போம் / லக்கி ஆண்டு மலர்

  ReplyDelete
 11. சார்.. அதெல்லாம் இருக்கட்டும்.. பதிவு வர வர ரொம்பக் குறுகிட்டே போகுதுங்களே..?!! மெயின் பதிவே இப்பல்லாம் மினி பதிவு மாதிரியோ, மைக்ரோ பதிவு மாதிரியோதானே இருக்கு?! இப்படியே போனாக்கா நாளைக்குப்பின்னே 'நண்பர்களே வணக்கம்! see you around soon'னு மட்டும்தான் வரும்போலிருக்கே...?!!

  இதெல்லாம் சரியில்லைங்க சார்! சொல்லிட்டன்!

  ReplyDelete
 12. இந்த வருட காமிக்ஸ் வெளியீடுகளில் சில பல டைட்டில்கள் இன்னும் வாங்கவில்லை.

  புத்தக திருவிழாவுக்கு எங்கள் ஊரு பக்கமா காமிக்ஸ் கேரவன் வரும்போது வாங்கிக்கொள்ளலாம் என்ற எண்ணம்.

  அர்ஸ் மேக்னா.

  கதை இரண்டாம் உலக யுத்த காலகட்டத்தில் நடைபெறுவது போல் தொடங்கி, அதிலிருந்து இயேசு கிறிஸ்து காலத்துக்கும் பின்னோக்கி பயணப்படுவது ஒருவித தொய்வை ஏற்படுத்தியது.சமகால கதைகளாக இருந்திருந்தால் கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கும்.

  ஓவியருடைய திறன் தான் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.
  ஒரு காட்சியை பிரமாண்டமாக காட்சிப்படுத்துவதில் தேர்ந்தவராக உள்ளார்.ஒவ்வொரு ப்ரேமும் மிளிர்கிறது.பாராகுடாவுக்கு பிறகு ஓவியங்களில் அசரடித்த படைப்பு இது.

  அழகிய அகதி.

  ஒவ்வொரு திரைக்கதை இலக்கணத்துக்கும் ஒரேயொரு கதைதான் எழுதப்படும்.இது ஷான் வான்ஹம் அவர்களுடைய தியரி.
  லார்கோ தொடரில் இருந்து தோர்கல் தொடரில் ""சிகரங்களின் சாம்ராட்"வரையிலும் இதே நிலைதான்.
  அவருடைய படைப்பில் (சிகரங்களின் சாம்ராட்)ஒரு மாஸ்டர் பீஸ் படித்த பின்பு அழகிய அகதி என்பது சாதாரண கதைதொடராகத்தான் தெரிகின்றது.

  ஆனால் கதைகளம் கற்பனை செய்ய இயலாதவாறு விரிவுபடுத்தி உள்ளது புரிகிறது.

  3.பிரிவோம் சந்திப்போம்.

  பாதாள பைரவர்கள்.


  1. ரிப்கிர்பி.

  மொழி பெயர்ப்பில் பழைய நெடி அடிப்பதை தவிர்த்திருக்கலாம்.மொழிபெயர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இதுவும் சிறப்பான வெளியீடாக இருந்திருக்கும்.புத்தக வடிவம் மிகவும் இரசிக்கும் விதமாக இருந்தது.

  கோவையில் புத்தக திருவிழாவையும், உங்கள் காமிக்ஸ் கேரவனையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இந்த ஆண்டு வந்த ரிப்கிர்பியின் கதை அருமையான மொழிபெயர்ப்பில் வந்ததாகவே தோன்றுகிறது சார். பழமையான நெடியில் இருப்பதாக சொல்வதை, இங்கே நான் பலமாகவே பார்க்கிறேன். பலவீனமாக அல்ல...

   Delete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. இல்லத்தில் அனைத்தும் விரைவில் சரியாகும் பத்மநாபன். Don't worry.

   Delete
  2. கலகலப்பு தளத்தில் கன்டின்யூ ஆவதற்கு, கமெண்ட் டெலிட்டட்.

   Delete
  3. எமுச்சார்...

   இதுவும் கடந்தே போகுங்க...

   Delete
 14. /* என் சக்திக்குட்பட்ட காலத்திலாவது, இந்தப் படலம் மறுமருமறுக்கா மறுபதிப்பு காணவிருப்பது இதுவே இறுதி முறை என்பதால், புக் செய்ய நினைப்போர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திடக் கோருகிறேன் folks ! */

  You said that last time sir ;-) :-p :-D :-D

  Jokes(!) apart,

  Bottom of last year was only one book - that story in the private woods - man hunting genre. Forgot the title - yabbaa saameee - therichu odavitta booku !

  ReplyDelete
 15. டாப்-3
  1.நில் கவனி வேட்டையாடு,
  2.ஒரு அழகிய அகதி,
  3.கோழைகளின் பூமி.

  பாட்டம்-3
  1.வானமும் வசப்படும்,
  2.மீண்டும் கிங்கோப்ரா,
  3.அலைகடலில் அதகளம்.

  ReplyDelete
 16. // என் சக்திக்குட்பட்ட காலத்திலாவது, இந்தப் படலம் மறுமருமறுக்கா மறுபதிப்பு காணவிருப்பது இதுவே இறுதி முறை என்பதால், புக் செய்ய நினைப்போர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திடக் கோருகிறேன் folks ! //
  இதற்கு புதிய வெளியீட்டு எண் கொடுப்பீர்களா சார் ???!!!

  ReplyDelete
 17. என்னளவில் 2020 ஆம் ஆண்டு வெளியீடுகளில் கிட்டதட்ட 90 % நிறைவாகவே இருந்தது,பாக்கி 10 % கொஞ்சம் சோதித்து விட்டது...
  எனினும்,மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பிடித்திருக்கலாம்,அதே நேரத்தில் அவை விற்பனையிலும் சாதித்திருந்தால் நலமே...

  ReplyDelete
 18. பாய்ண்ட் வரட்டும். பாய்ண்ட் வரட்டும். அதுவரை ஒன்லி அட்டெனன்ஸ் கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 19. என்னதான் சொல்லுங்கோ, இரும்புக்கை மாயாவி 'முத்து காமிக்ஸ்' logo உடன் இன்னும் ஜொலித்திருப்பார் !

  ReplyDelete
 20. 1. கௌபாய் எக்ஸ்பிரஸ்
  2. அர்ஸ் மேக்னா
  3. லக்கி ஆண்டு மலர்

  ReplyDelete
 21. முத்து காமிக்ஸ், இரும்புக்கை மாயாவி ...synonymous/inseparable, is n't it?

  ReplyDelete
 22. நில் கவனி வேட்டையாடு ஒரு சிறப்பு ஜூரி அவார்டு நில் கவனி கொல் கூட அப்பிடியே

  ReplyDelete
 23. பல வருடங்களுக்கு முன்னர் பழைய புத்தகக்கடையில் 1970s முத்து காமிக்ஸ் logo வை பார்த்தவுடன் ஒரு ஷாக் அடிக்கும் பாருங்கோ ....அதை அனுபவித்த நண்பர்களுக்கே இது புரியும்.

  ReplyDelete
  Replies
  1. ஙே‌...

   என்னாது...

   பழ்ய புத்தக கடயா...

   முடியல...

   Delete
  2. சாரி நண்பரே நான் தெளிவான வார்த்தையை போடவில்லை போல. (இப்போது பழைய புத்தக்கடையில் 1970s புத்தகம் கிடைப்பது அசாத்தியம் ) 1990 களின் முதல் பாதியில் கிடைத்தன. மிகவும் சிரமப்பட்டு சேகரித்தேன். கொரில்லா சாம்ராஜ்ஜியம் இப்போது நண்பர் வசம். Just 11 வருஷங்கள்தான் ஆச்சு வாங்கிப்போய் !. விரைவில் தந்துவிடுவார். அவர் நாம எல்லாம் கற்பனை பண்ண முடியாத அளவிற்கு பழைய முத்து காமிக்ஸ் ரசிகர். (பி.கு. என்னுடைய பெய்ரூட்டில் ஜானி first print கூட அவர் வசமே . Reprint ஒரு பிரதி வாங்கிக் கொடுத்தும் அவருக்கு பழசைத் தர மனமில்லை)

   Delete
 24. நான்லாம் தற்பொழுது ( கடந்நந 2 1/2 வருடங்களாய் ) எப்பவாவதுதான் பிளாக் பக்கம் வருகிறேன் ..

  ஒரு வேண்டுகோளை என் டியர் எடியிடம் வைத்தால் அதற்கு பதிலில்லை .. இப்படியே போனால் இங்கு எதையும் கேட்டு பெற முடியாமல் நானும் மௌன வாசகனாய் இருந்திடலாம் போல் ..

  முடியாது என்று சொன்னால் கூட பரவாயில்லை எடி நமக்கு பதிலளித்துவிட்டார்ன்னு சந்தோசமா கடந்து போய்டுவேன் .. 😍

  பட்

  பார்த்தும் பார்க்காததும் போல் போவதை பார்த்தால்தான் சற்று சங்கடமாக இருக்கிறது ... 😣😣


  மிக்க வருத்தங்கள் டியர் விஜயன் சார்

  ReplyDelete
  Replies
  1. பாவஞ் சார்...

   Delete
  2. பார்கலாம் J அண்ணா பதில் வருதான்னு ?!!!!

   Delete
  3. நல்ல பாவம் சார்

   Delete
  4. அது எப்படி சம்பத் - நான் பதிவைப் போட்ட நேரம் முதலாய் இங்கேயே தேவுடு காத்திருப்பேன் என்ற யூகம் ?

   சனிக்கிழமைகள் கோவிலுக்குப் போவது எனது வாடிக்கை ; வீட்டம்மாவோடு போய் விட்டு வந்து, IPL மேட்சை பார்த்து விட்டு, சாப்பிட நண்பர்களோடு வெளியே போய் விட்டு, 11 மணிவாக்கில் வீடு திரும்பியுள்ளது இந்த மாலையின் எனது அட்டவணை.

   நீங்களோ ஆபிசுக்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய தகவலை எனக்கு இங்கே அனுப்பிய கையோடு - அதற்கு நான் நொடியில் பதிலளிக்கவும் வேண்டுமென்று எதிர்பார்ப்பதை என்னென்பது ? ஆபிசுக்கு நான் போயே பத்து நாட்களிருக்கும் என்ற நிலையில், நீங்கள் மெயிலில் அனுப்பிய படங்களை எற்கனவே டிஜிடல் பிரிண்ட் போட அனுப்பி விட்டார்களா - இல்லையா ? எனபதே தெரியாது எனக்கு ! மணி ஆறை தொடும் முன்பே அத்தனை பெண்களும் செல்லை ஆப் செய்து விட்டு வீடுகளுக்குப் புறப்பட்டுவிடுவார்கள் என்பதே நடைமுறை ! இனி திங்கள் காலையில் தான் அவர்களைக் கேட்க முடியும் எனும் போது - இடைப்பட்ட நேரத்தில் உங்களை ஆபீசுக்கொரு மின்னஞ்சலைத் தட்டி விடச் சொல்லுவோமென்று நினைத்திருந்தேன் ! ஆனால் அதற்குள்ளாக உங்கள் வருத்தங்கள் + இனி மௌன வாசகனாகவே தொடரணும் இத்யாதி, இத்யாதி என்ற பின்னூட்டம் !

   நான் எடிட்டர் தான் ; ஆனால் எடிட்டர் மட்டுமே கிடையாதுங்க சம்பத் ! எனக்குமே இன்ன பிற பொறுப்புகள், பொழுதுபோக்குகள் உண்டு தான் !

   ஒரு வார அவகாசம் இருக்கும் போதே போட்டோக்களை அனுப்பியிருப்பின், கடைசி நாளில் இப்படி அவசரப்படத் தேவையிராதே என்று நான் சுட்டிக்காட்டலாம் தான் ; ஆனால் இன்றைய எனது மாலையைப் போலவே உங்களது வாரத்தை பிசியாக்கிட நிறைய விஷயங்கள் இருந்திருக்கக்கூடும் என்ற புரிதல் என்னை மௌனம் காக்கச் செய்கிறது. அந்தப் புரிதல் பரஸ்பர விஷயமாகிடின் மகிழ்வேன் !

   Delete
  5. And உங்கள் கோரிக்கையை copy - paste செய்து ஆபிசுக்கு ஒரு மெயிலாக அனுப்பியும் உள்ளேன். திங்கள் காலை அதனைப் பார்த்த பின்னே நம்மாட்கள் ஆக வேண்டியதைப் பார்ப்பார்கள் சார் !

   Delete
  6. நீங்களோ ஆபிசுக்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய தகவலை எனக்கு இங்கே அனுப்பிய கையோடு - அதற்கு நான் நொடியில் பதிலளிக்கவும் வேண்டுமென்று எதிர்பார்ப்பதை என்னென்பது ?

   இடைப்பட்ட நேரத்தில் உங்களை ஆபீசுக்கொரு மின்னஞ்சலைத் தட்டி விடச் சொல்லுவோமென்று நினைத்திருந்தேன்
   ////


   அப்போ நீங்க நான் பதிஞ்ச விசயத்தை பார்த்தீங்க தானே டியர் எடி ...

   என் பதிவில்
   முடியாது என்று சொன்னால் கூட பரவாயில்லை எடி நமக்கு பதிலளித்துவிட்டார்ன்னு சந்தோசமா கடந்து போய்டுவேன் .. 😍

   நீங்க என் கமண்ட்டை பார்த்த அந்த விநாடி வெய்ட் ன்னு ஒரு வார்த்தை போட்டிருக்கலாமே
   டியர் எடி

   எனே மகன் என் தொழில் தவிற என் பொழுதுபோக்கே காமிக்ஸ் தான் என்பது உங்களுக்கு தெரியாது


   நீங்க என் மதிப்பிற்க்குறியவர் உங்களிம் நான் வாதம் பண்ண எப்பவும் தயாரில்லை

   இப்பவும்

   என் ஆதங்கத்தை இங்கே வெளியிட்டேன் அவ்வளவே ...

   சாரிங்க எடி

   Delete
  7. ஆனாலும் J அண்ணே நான் எடிகிட்ட கேள்வி கேட்கும்போது நடுவே வந்து பதில் போடுறீங்களே .. இந்த மாதிரி விசயம் பிளாக்கில வரவங்களுக்கு நிறைய பேர்க்கு பிடிக்காத ஒன்னு

   ஏன்
   எனக்கும் கூட

   (இதை நீங்க புரிஞ்சுக்கிட்டா சரி)

   நீங்க எல்லாம் தெரிஞ்சவர்தான்
   ஆனா இங்கே வர எல்லாரும் எல்லாம் தெரிஞ்சவங்க இqல்லை நான் உட்பட

   நீங்க சொன்ன அந்த ஒற்றை எழுத்துக்களை நான் எவ்விதம் எடுத்துக்கொள்வது ?

   Delete
 25. Top 3: Geronimo, மா துஜே ஸலாம்,அர்ஸ் மேக்னா

  ReplyDelete
 26. டியர் சார்,
  2020ஆம் ஆண்டை பலவித காமிக்ஸ் வாசிப்பு அனுபவத்துடன் கடந்து வந்து விட்ே டாமே...
  இதில் Top என்ன Bottom என்ன..
  அனைத்தும் சிறப்பே.
  என்ன நான் சந்தோசமாய் ரசித்தது."கம்பி நீட்டிய குருவி - ரிப் கிர்பி " - தான்..

  ReplyDelete
 27. வணக்கம்

  எனது டாப் 3

  1. எதிரிகள் ஓராயிரம்
  2. நில் கவனி வேட்டையாடு
  3. ஆறாது சினம்

  Bottom 1
  நிறைய கதைகள் இன்னும் படிக்கவில்லை. இதுவரை படித்ததில் பிடிக்காதது

  வழி அனுப்ப வந்தவன் !

  ReplyDelete
 28. ஏப்ரல் இதழ்கள் என் இல்லம் தேடி வந்துவிட்டன.இரண்டு நண்பர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன்.முதலில் பெங்களுர் பரணி சார் அவர்கள்.எனக்குச் சந்தா கட்டிய பெருந்தகையாளர் அவர்.நம் காமிக்ஸ் சந்தா குடும்பத்தில் என்னையும் இணைத்த அன்புக்குரியவர் அவர்.அவரை என்றென்றும் மறவேன்.
  இரண்டாமவர் நண்பர் மகேந்திரன் பரமசிவம் அவர்கள்.கழுகுவேட்டை புத்தகத்தை இலவசமாக சந்தாதாரர்களுக்கு அளித்த அவரின் அன்புள்ளத்தை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.என் அன்பு மகனின் படத்தை கழுகுவேட்டை முன்பக்கத்தில் அச்சிட்டுத் தந்த அன்பின் அதிபர் ஆசிரியர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.மிகச் சிறந்த காமிக்ஸ் வாசகர் குடும்பத்தில் நானும் ஒருவன் என்பதை நினைந்து பெருமிதம் கொள்கின்றேன்.நன்றி நண்பர்களே.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே, பெரிய வார்த்தைகளையெல்லாம் வேண்டாமே ப்ளீஸ் ? ஜாலியாய்த் தொடருவோம் !

   Delete
 29. கோழைகளின் பூமி மற்றும் பனியில் ஒரு குருதிப் புனல் மற்றும் வழியனுப்ப வந்தவன் என்னை மிகவும் சோதித்துவிட்டன.
  இந்த மூன்று இதழ்களைத் தவிரப் பாக்கி அனைததும் மிக நன்றாகவே இருந்தன.

  ReplyDelete
 30. பரணி அவர்களுக்கு,
  "இருளோடு யுத்தம்" புத்தகம் அனுப்பி வைத்ததற்காக நன்றி செலுத்தி கொள்கிறேன் சார். சென்ற ஆண்டு சந்தாவில் இருந்தும் எனக்கு அனுப்பப்பட வில்லை.ஆபீசில் வினவியபோது Stock இல்லை என்று சொல்லி விட்டார்கள். அந்த புத்தகத்தை கடைசிவரை படிக்க முடியாமல் போய்விடுமோ என்ற வருத்தத்தில் இருந்தேன்.நீங்கள் என் நெஞ்சில் பால் வார்த்தீர்கள். இருந்தும் ஆசிரியர் மேல் வருத்தமாய் இருக்கிறேன். எனக்கு புத்தகம் அனுப்பப்படாததை நான் இங்கே பதிவு செய்தேன். ஆனால் அவர் பதில் தரவே இல்லை. ஒருவேளை நான் அவரது நெருங்கிய வட்டத்தில் இல்லையோ. அவர் பதில் இடாததே நெருஞ்சி முள்ளாய் நெஞ்சை வருடுகிறது.அது ஒரு புத்தகம் தானே என்று கடந்து செல்ல முடியவில்லை. தொப்புள்கொடி உறவு கொணடதாகவே இந்த காமிக்ஸ் உறவுகளை எண்ணுகிறேன். ஆனால் இது போன்ற மனவருத்தம் எழும்போது மௌனமாய் இருப்பதே மேலானதாக தோன்றுகிறது. இந்த வரிகள் உங்களை சங்கடபடுத்துவதற்காக அல்ல. நான் எங்கே வைக்கப்பட்டிருக்கிறேன் என்று காட்டுகிறதோ என்று அஞ்சுகிறேன். சிலநாட்கள் சற்று விலகி இருப்பதை நலமே என்று எண்ணுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். எனது வார்த்தைகளையும் கூட.

  ReplyDelete
  Replies
  1. சத்தியமாக மிடில ; ராவிலே தான் ஒரு பஞ்சாயத்துக்கு பதில் சொல்லி முடித்தால் பின்னாலேயே அடுத்ததா ?

   சார் - இந்தத் தளம் காமிக்ஸ் சார்ந்த அலசல்களுக்கு மாத்திரமே ; அலுவலகத்தினர் கவனிக்க வேண்டிய பணிகள் சார்ந்த வினவல்களுக்கான இடமல்ல ! இங்கே நீங்கள் பதிவிடும் விசனங்களை சம்பந்தப்பட்டோர் பார்ப்பதில்லை எனும் போது தீர்வுக்கு வழி ஏது ?

   எனக்கு பதில் தெரியா கேள்விகளை இங்கு கேட்டு விட்டு - "நான் ஒதுக்கப்படறேன் ; நாட்டை விட்டு விலகப் போறேன் " என்று பதிவிடுவது என்ன லாஜிக்கென்று தெரியலை ! இது எனக்கு 37-வது வருஷம் இந்தப் பணியில் ; இன்னமும் ஒவ்வொரு குண்டூசிக்கும் எனது எண்ணங்களும், செயல்களும் சீர் தூக்கிப் பார்க்கப்படுவதே நடைமுறையாக இருப்பின், அயர்ச்சி தான் மேலோங்குகிறது !

   கவலைப்படாதீர்கள் நண்பரே ; இன்னும் ஆறே வருஷங்கள் தான் என் ரோதனைகளைத் தாங்கிட வேண்டி இருக்கும். அப்புறமா நெருங்கிய வட்டத்தில் இருக்கிறோமா ? ஒதுக்கப்படுறோமா ? என்ற கழிவிறக்கங்களுக்கு அவசியங்களே இராது !

   Delete
  2. And guys : நூற்றியெட்டாவது முறையாக வேண்டுகோள் :

   தயை கூர்ந்து " புக் வரலை ; என் நம்பர் பதிவாகலை " என்ற ரீதியிலான புகார்களை மின்னஞ்சலில் அல்லது அலுவலக நம்பரில் வாட்சப் குறுந்தகவல்களாக மட்டுமே அனுப்பிடுங்கள் ப்ளீஸ் ; இங்கே பதிவிடாதீர்கள் ப்ளீஸ் !

   இப்பொதெல்லாம் எனக்கு ஞாபக சக்தி முன்னைப் போல இருப்பதில்லை ; இங்கே நீங்கள் பதிவிடும் வருத்தங்களை ஆபீசுக்கு கொண்டு சேர்க்க பல சமயங்களில் மறந்து விடுகின்றது ! இதுவும் ஆளாளுக்கு வனவாசம் போகவொரு காரணியாய்த் தென்பட்டால் - இந்த கொரோனா காலத்தில், சிவனே என நானே காட்டுக்குப் புறப்பட சீசன் டிக்கெட் எடுக்கத் தான் தோன்றுகிறது !

   Delete
  3. அப்படியே நீங்க போக நினைத்தாலும் இப்போதெல்லாம் காடு எங்கே சார் இருக்குது. ஆற்காடு ஏற்காடு களக்காடு அப்படின்னு பேர்ல மட்டும் தான் காடு இருக்குது.

   Delete
  4. புன்னகை ஒளிர் - ஆசிரியர் வாசகர்களாகிய நம் அனைவரையும் ஒரே இடத்தில் தனது இதயத்தில் வைத்து உள்ளார். நம் அனைவரையும் ஒன்றாகவே பாவிக்கிறார் என்பதுதான் உண்மை. நமக்கு பல காரணங்கள் இருப்பது போலவே ஆசிரியர் பதில் சொல்லவில்லை புத்தகங்கள் அனுப்பவில்லை என்றால் பல நூறு காரணங்கள் இருக்கும் என்பதை கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் ப்ளீஸ்.

   Delete
 31. கொரில்லா சாம்ராஜ்யம்...ஜிலீர்....அட்டய பாத்து கோடைகால குளீர்....எழுத்துக்கள் நடுவே கொரில்லா....அருமை....இது வர வந்ததிலே டாப் அட்டை இதானுங்களே...

  ReplyDelete
 32. என்னுடைய டாப் 3 -
  கண்ணான கண்ணே!
  தீபாவளி வித் டெக்ஸ்
  அர்ஸ் மேக்னா

  பாதாள பைரவர்கள் - புராதான நெடியடக்கும் பால்ய கால ஆதர்ச் ஹீரோக்கள்

  ReplyDelete
 33. இந்த வருட டாப் 3 இதழ்கள் ( என்னளவில் )

  1.எதிரிகள் ஓராயிரம்...


  2. நில் கவனி வேட்டையாடு...


  3. அழகிய அகதி

  ReplyDelete
 34. இந்த வருடம் என்னை கவராத இதழ்கள் ...


  1. ஸ்பைடர் தாத்தா


  2. இரும்பு தாத்தா...


  3. கர்னல் தாத்தா...

  ReplyDelete
  Replies
  1. தலைவரே நீங்களா இது???

   வரவர கிராஃபிக் நாவல் குரூப் kku மாறி விடுவீர்கள் போலவே.

   Delete
 35. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. பாசிட்டிவ் எனர்ஜி ..

   :-)


   வாழ்த்துக்கள் பத்து சார்..:-)

   Delete
  2. அதையுமே காணாமல் செய்துவிட்டீர்களா

   அதற்கும் என்னுடைய வாழ்த்துக்கள் சார்..

   Delete
  3. இல்லீங்கோ. கீழே பாருங்கோ.

   Delete
 36. கொரில்லா சாம்ராஜ்யம் அட்டைப்படம் உண்மையிலேயே தகதக்க்கிறது சார்..


  ஓவியருக்கு பலமான பூங்கொத்து..

  ReplyDelete
 37. 1.பிரிவொம் சந்திப்போம் 2.. A R Sமேக்னா 3.லக்கி ஒரு கௌபாய் கலைஞன்பொபொக்கிசம் தேடிய பயணம் பாதாள பைரவர்கள் 1.வானம் வசப்படும் 2அலைகடலில் அதகளம் கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 38. கழுகு வேட்டை புத்தகத்தில் என் போட்டோ வரவில்லை என்பது வருத்தமாக இருந்தது ஆனால் கொரில்லா சாம்ராஜ்யம் அட்டைப்படத்தின் மூலம் ஆசிரியர் என் வருத்தத்தைப் போக்கி விட்டார.
  எம்புட்டு அழகா இருக்கேன். என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. பக்கத்துல நிக்கிறவுங்கள்ளாம் யாருங்க சாரே. என்னை மாதிரி புக்குல போட்டோ பிரிண்ட் மிஸ்ஸானவுங்களா?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா!! பத்து சார்.. இரட்டைப் புயல் வீசும்போது கூட இப்படியொரு கெக்கபிக்கே பதிவை இட உங்களுக்கு எப்படி சாத்தியமாகிறது?!! :)))))))

   Delete
  2. ஒரு புயல் உள்ளே உறக்கத்தில். ஒரு புயல் பெங்களூரில். அதுதான்.

   Delete
  3. இடுக்கண் வருங்கால் ...........

   ஆனாலும் நீங்க வள்ளுவர் சொல்லை அற்புதமாய்ப் பின்பற்றுறீங்கோ பத்து சார் !

   Delete
  4. பெங்களூர் புயலை அடுத்த மாதம் மீட் பண்ணி சரி செய்திடலாம் பத்மநாபன் :-)

   Delete
 39. பாதாள பைரவி(கள்), இல்லை. ஒன்லி பைரவி. நோட் த பாய்ண்ட் புறக்கணிக்கப்பட்ட லிஸ்ட்டில் இளவரசி இல்லை ஹாப்பி. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 40. Sri ram sir கிர்பி மொழி பெயர்ப்பில் பழைய நெடி. தேங்க்ஸ். அதைத்தான் வேண்டுமென்று கேட்டு கேட்டு வாங்கினோம். பழைய நெடி இல்லை சார். 70களில் ஈர்த்த அந்த மொழிபெயர்ப்பை நன்கு கவனித்துள்ளீர்கள் மீண்டும் ஒருஓய்வு நாளில் படியுங்கள்.கிர்பி. அந்தமொழிபெயர்ப்புவேண்டுமென்றுநீங்களும் கேட்க ஆரம்பித்துவிடுவீர்கள். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. @ Sri ram : பழைய கதைகளில் நவீன மொழிபெயர்ப்பு குறித்து இந்தப் பதிவிலோ, முந்தையதிலோ பார்த்த நினைவிருந்தது ; அதற்கு நான் பதிலிடாது போனதற்குக் காரணம் ராஜசேகர் சார் போன்றோரின் அவாக்களே ! அது மட்டுமன்றி ஓடுவது டிஜிட்டல் remastering செய்யப்பட்ட தியாகராஜ பாகவதர் திரைப்படமே எனும் போது அங்கே Yo dude ; wassap man...என்ற பாணியில் வரிகளை நுழைப்பின் எவ்விதம் நேரிடுமோ, அதே நெருடல் தான் க்ளாஸிக் கதைகளுக்கு நவீனத்துவத்தைப் புகுத்திட முனையும் போது நேர்ந்திடும் என்பது எனது அபிப்பிராயம் நண்பரே !

   Delete
  2. புரிந்து கொள்ள முடிகிறது sir.

   மேலான உங்களது பதிவுக்கு நன்றிகள் ஆசானே !.


   Delete
 41. TOP-3ல எதையாவது போடலாம்னு பார்த்தா அந்த லிஸ்ட் Top-10 அளவுக்காவது வந்து நிக்குது!

  ஆனால் போனவருடம் வெளிவந்த இதழ்களிலேயே அல்டிமேட் - 'கண்ணான கண்ணே' தான் என்று என்னளவிலாவது அடித்துச் சொல்வேன்! காரணம் - அது வெறுமனே காமிக்ஸ் படைப்பு மட்டுமல்ல! அது ஒரு உணர்வுக் குவியல்!!

  படித்து முடித்துப் பல மாதங்களான பிறகும் கூட, இன்றுவரை அதன் தாக்கம் மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டேதான் இருக்கிறது!

  (இங்கே தமிழ்நாட்டிலும்) விருதுகொடுத்து கெளரவிக்கப்படவேண்டிய ஆகச் சிறந்த படைப்பு!

  ReplyDelete
  Replies
  1. // ஆனால் போனவருடம் வெளிவந்த இதழ்களிலேயே அல்டிமேட் - 'கண்ணான கண்ணே' தான் என்று என்னளவிலாவது அடித்துச் சொல்வேன்! // என் அளவிலும்

   Delete
  2. போன வருஷம் இந்நேரத்துக்குத் தான் "கண்ணான கண்ணே" புக்கை ரெடி செய்து விட்டு, அனுப்ப வழியின்றி முடங்கிக் கிடந்தோம் !! எனக்கோ, இதை எவ்விதம் ஏற்கப் போகிறீர்களோ ? என்ற பீதி கலந்த வெயிட்டிங் ! ஹ்ம்ம்...ஓடி விட்டது ஒரு வருஷம் !

   Delete
 42. 1. ARS MAGNA

  2. பனியில் ஒரு குருதிப்புனல் - லயன் கிராபிக் நாவல்

  3. பனி அசுரர் படலம் 😁

  கீழே 3

  எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத நெருடல்...

  ReplyDelete
 43. 37 வருடங்களாக உங்களுடன் பயணித்தும் இன்னும் உங்களது சிரமங்களைப் புரிந்துகொள்ளாத ஓரிரு நண்பர்களின் பொருட்டு ஒரு நள்ளிரவிலும், ஒரு அதிகாலையிலும் இந்த அளவுக்கு உங்கள் BPயை ஏற்றிக் கொள்ளவும்தான் வேண்டுமா எடிட்டர் சார்?!! இதைவிடவும் காரசாரமான கேள்விகளையெல்லாம் கூட கடந்துவந்தவராயிற்றே நீங்கள்?!! என்னவாயிற்று இப்போது?!!!!

  'இன்னும் 6 வருடங்கள் தான்', 'வனவாசம் போய்விடத் தோன்றுகிறது' என்ற உங்களது பதில்களெல்லாம் மிகுந்த வருத்தமளிக்கிறது!

  இன்றைய நாள் சரியில்லை போல தெரிகிறது! இந்த பதிவின் தலைப்பை 'ஒரு நாசகார ஞாயிறு' என்று மாற்றிவைத்துவிடுங்களேன்?

  ReplyDelete
  Replies
  1. பரவலான 'தக்காளிச் சட்னி' கலாச்சாரம் தான் கஷ்டப்படுத்துகிறது சார் !

   'கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலைங்காட்டி, பள்ளிக்கூடங்களில் மாணவனை 'மக்கு' என்று சொல்லி மண்டையில் குட்டுவார்கள் ! ஆனால் இங்கோ பதிலே தெரிந்திருக்க வாய்ப்பில்லா கேள்விகளைக் கேட்டு விட்டு நான் பேந்தப் பேந்த முழிக்கும் தருவாயில் - 'அயோக்கியன்' என்கிறார்கள் !

   சரி, தாம் சார்ந்த ஒற்றைக் கேள்விக்கு பதிலின்றிப் போகும் போதே இத்தனை விசனங்கள் பிரவாகமெடுக்கின்றனவே - பொது சார்ந்த ஒரு நூறு கேள்விகளை வாரா வாரம் கேட்டு விட்டுக் காத்திருக்கும் எனக்கு பதிலிட எத்தனை பேருக்கு நேரமோ, முனைப்போ சாத்தியப்படுகிறது சார் ? அட, இதோ - இந்த வாரம் கூட

   ஓராண்டின் TOP & BOTTOM 3-களை அடையாளம் காட்டச் சொல்லிக் கோரியுள்ளதற்கே அந்த நண்பர்களின் பங்களிப்பைக் காணோம் தானே ?அதற்கெல்லாம் நானுமே விசனம் கொண்டு வனவாசம் புறப்படுவதாயின், பத்து சார் குறிப்பிடுவது போல ஏற்காட்டுக்கோ ; களக்காட்டுக்கோ தான் சீசன் டிக்கெட் போட்டு வைக்கணும் !

   Delete
  2. ///
   இதோ - இந்த வாரம் கூட ஓராண்டின் TOP & BOTTOM 3-களை அடையாளம் காட்டச் சொல்லிக் கோரியுள்ளதற்கே அந்த நண்பர்களின் பங்களிப்பைக் காணோம் தானே ?///

   நெத்தியடி சார்!! சம்மந்தப்பட்டவர்களுக்குப் புரிஞ்சா சரி!!

   Delete
  3. ஓராண்டின் TOP & BOTTOM 3-களை அடையாளம் காட்டச் சொல்லிக் கோரியுள்ளதற்கே அந்த நண்பர்களின் பங்களிப்பைக் காணோம் தானே ?அதற்கெல்லாம் நானுமே விசனம் கொண்டு வனவாசம் புறப்படுவதாயின், பத்து சார் குறிப்பிடுவது போல ஏற்காட்டுக்கோ ; களக்காட்டுக்கோ தான் சீசன் டிக்கெட் போட்டு வைக்கணும் !

   #####


   :-)))

   Delete
 44. Top3 மிகவும் சிரமம் சார்.
  1. கண்ணான கண்ணே
  2. அழகிய அகதி
  3. ARS மேக்னா

  ReplyDelete
 45. மனவருத்தங்கள் அனைத்தையும் வரும் காலங்களில் காமிக்ஸ் காதல் முறியடித்து விடும்.

  My TOP 3
  1. ARS Magna
  2. நில் கவனி வேட்டையாடு
  3. பனியில் ஒரு குருதிப்புனல்

  Bottom 3
  1. வானம் வசப்படும் (அமாயா)
  2. மீண்டும் கிங் கோப்ரா (லாரன்ஸ் & டேவிட்)
  3. ஸ்பைடர் & ஆர்ச்சி

  என்னளவில் "மாடஸ்டி & 13ஆம் தளமும்" மனதை கவரவில்லை.


  ReplyDelete
  Replies
  1. 2021-ல் காத்திருக்கும் மாடஸ்டி உங்களைக் தவறாது போனால் வியப்பேன் சார் !

   Delete
  2. ஆஹா ஆஹா ஆஹா...:)

   அடுத்த வருசம் இளவரசி இருப்பை கண்டுபிடிச்சுட்டேனே...:-)

   Delete
  3. தலீவரே...பதுங்கு குழிக்குள்ளாற எப்படின்னு தெரில ; ஆனாக்கா வெளிலெலாம் 2021 னா நடப்பு வருஷம் தான் !

   Delete
  4. எடிட்டர் சார் :))))

   Delete
 46. Hi Editor
  SODA was refreshing!
  Regards
  Arvind

  ReplyDelete
  Replies
  1. அழுத்தமான கதையை, சிம்பிளான சித்திர பாணியில் சொல்வதிலும் ஒரு பெரிய ப்ளஸ் உண்டென்பதை மறுக்கா உணர்த்தும் தொடரிது !

   Delete
  2. I agree - SODA is again refreshing. I would rate it as one of the best of 2020 as well. Surely in my TOP 3.

   What is surprising is SODA clicks but Jil Jordan - similar type - does not click :-(

   Delete
  3. Jil Jordan is one of favorites too.

   Delete
 47. My Top 3
  1.Ethirigal orayiram
  2.ARS Magna
  3.Archie big book
  Bottom 3
  1.Amaya
  2.13 th floor
  3.Diabolique

  Regards
  Arvind

  ReplyDelete
  Replies
  1. சந்தா D தேர்வுகளே பரவலான பாதாள பார்ட்டிக்களாய் இருப்பது தெரிகிறது ...!

   Delete
 48. போன பதிவில் நான் எழுதிய சோடா விமர்சனம்.

  நித்தமும் உந்தன் நிழலில்

  சோடா ஒரு தவிர்க்க முடியாத ஸ்டார் ஆக மாறி கொண்டு இருக்கிறார் என்று உறுதியாக சொன்ன கதை. எனக்கு மிகவும் பிடித்த ஹீரோக்களில் ஒருவராக இந்த போலீஸ்காரர் இருக்கிறார். Action sequences எல்லாம் ஹாலிவுட் திரைப்படம் பார்ப்பது போல உள்ளது.

  ஓவியர் பற்றி சொல்லியே ஆக வேண்டும் அந்த முதல் பக்க ஒவியமே வேற லெவல். கதை முழுக்க சும்மா பிரித்து எடுத்து விட்டார்.

  அந்த climax எல்லாம் சும்மா பரபர என்று போகிறது.

  எனது மதிப்பெண் 10/10

  ReplyDelete
  Replies
  1. அமெரிக்காவை கண்முன்னே கொணரும் ஓவியரின் நேர்த்தியையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும் சார் ! ஒரு greyhound பஸ்ஸில் ஏறி மெய்யாலுமே பிராவிடன்ஸ் பயணம் போன உணர்வை அந்த up & down பயணப் பக்கங்களில் கொண்டு வந்திருக்கிறார் ! Striking backdrops ...

   Delete
  2. அந்த Greyhound பஸ் ஒரு கேரக்டர் ஆகவே மாறி விட்டது சார். அதுவும் அந்த காரை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் போகும் சீன் செம்ம செம்ம...

   Delete
  3. // greyhound பஸ்ஸில் ஏறி மெய்யாலுமே பிராவிடன்ஸ் பயணம் போன உணர்வை அந்த up & down பயணப் பக்கங்களில் கொண்டு வந்திருக்கிறார் ! //

   Completely agreed. I like the சித்திரங்கள் very much.

   Delete
 49. இப்போது தான் ஜெரோனிமோ படித்து முடித்தேன். Simply superb. என்னா art work. செவ்விந்தியர்கள் எப்படி வெள்ளையர்களால் அவர்களது நிலத்தில் இருந்து விரட்டி அடிக்க பட்டனர் என்று விளக்கிய கதை. நமது நண்பர் ஒருவர் விமர்சனத்தில் சொன்னது போல இதை படித்தால் வெள்ளையர்கள் மீது நமக்கு கோபம் வரும். இதுவரை வில்லனாக பார்த்த செவ்விந்தியர்கள் எல்லாம் இப்போது ஹீரோவாக தோன்றுவார்கள்.

  ரொம்ப feel செய்ய வைத்த கதை. 2021 அமோக ஆரம்பம் சோடா விற்கு பிறகு இந்த கதைக்கும் 10/10.

  வாழ்க ஆசிரியர் வளர்க லயன் காமிக்ஸ்

  ReplyDelete
  Replies
  1. இன்னும் கொஞ்சமாய் கதையாக்க அத்தியாவசியங்களைக் கலந்து தந்திருந்தால் 'ஜெரோனிமோ'வின் தாக்கம் இன்னும் கூடுதலாய் இருந்திருக்கும் என்பது எனது அபிப்பிராயம் சார் !

   Delete
  2. உண்மை தான் சார்

   Delete
 50. //நான்லாம் தற்பொழுது ( கடந்த 2 1/2 வருடங்களாய் ) எப்பவாவதுதான் பிளாக் பக்கம் வருகிறேன்//

  நானும் இந்த வகையரா வாசகர் தான். சரி, அதற்கு இப்போ என்ன என்று கேட்கிறீர்களா ?!

  என்னுடைய அடுத்தப் பதிவை பார்க்கவும்.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே, பசித்தால் புசிக்கப் போகிறோம் ! கடை போட்டிருக்கும் ஹோட்டல்காரரை திருப்திப்படுத்த மட்டுமே கடைக்குள் நாம் கால் வைப்பதில்லை !

   காமிக்ஸ் வாசிப்பிலும் சரி, இங்கே பதிவிடுவதிலும் சரி, பரஸ்பர ஆர்வங்களும், சுவாரஸ்யங்களும் இருக்கும் வரையே எல்லாம் சாத்தியம் ! So இங்கு வருகை தருவதற்கோ ; தராது போவதற்கோ ; அலசல்களில் பங்கேற்பதற்கோ ; மௌனியாய்க் கடந்து செல்வதற்கோ அவரவர் மட்டில் உள்ள காரணங்கள் நியாயமாய்த் தோன்றிடலாம் தான் ; ஆனால் நிஜத்தின் முழுமை அதுவல்ல !

   Delete
  2. இங்கு வரும் வாசகர்கள் அனைவருக்கும் - எடிட்டர் அவர்களுக்கும், ஈரோடு விஜய்க்கும், j க்கும் வருவது போன்றே மனஸ்தாபம் ; கோபம் ; தாபம் ; எரிச்சல் ; ஏமாற்றம் ; இயலாமை ; புரிதல் இன்மை ; அவரவர் தொழில் பிரச்சனை ; அவரவர் குடும்பப் பிரச்சனை ; பொருளாதார பிரச்சனை ; நேரமின்மை ; சலிப்புத் தன்மை ; போலவே சகிப்புத்தன்மை ; விரக்தி ; வேதனை ; பணப் பிரச்சனை ; பாடாய்ப் படுத்தும் கொரோனா ; வருமானமின்மை ; எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை ; போலவே நிச்சயமின்மை ; இன்னும் பல என பல அல்லாடல்களுக்கும் நடுவே தான் இங்கு பதிவிட வருகிறார்கள். காரணம் காமிக்ஸ் என்ற ஒற்றை மந்திரச்சொல் ! அவரவர் பிரச்சினை அவரவர்களுக்குப் பெரியது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எல்லோரும் எல்லோரையும் புரிந்துகொள்ள இயலும் என்பதும் நடைமுறையில் சாத்தியமில்லை. அவரவர் புரிதல் அவரவருக்கு பெரியது. இதில் கிண்டலும் கேலியும் அவசியமற்றது. அப்படியிருக்க கீழ் கண்டுள்ள பதிவுகள் எதற்கு ?!


   1. இந்த பதிவின் தலைப்பை 'ஒரு நாசகார ஞாயிறு' என்று மாற்றிவைத்துவிடுங்களேன்?

   2. பாவஞ் சார்

   3. நல்ல பாவம் சார்

   கழுகு வேட்டையில் என் போட்டோ வரவில்லை ; என் கழுகு வேட்டை புத்தகம் மிஸ்ஸிங் என்று ஒருவர் பதிவு இடுபவருக்கு பதில் கிடைக்கும் போது மற்றவரும் இங்கு அது போன்ற பதிவுகள் இடுவதில் குற்றம் காண்பது பிழையோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

   பல நேரங்களில் அவசியமற்ற பதில்களும் ; சில நேரங்களில் அவசியமான விடுதலும் - பலவிதமான புரிதலின்மைக்கு காரணகர்த்தாவாக அமைகிறது என்பது மட்டுமே என்னுடைய கருத்து ❤️

   Delete
  3. நன்றி விஜயன் சார் ❤️

   //நண்பரே, பசித்தால் புசிக்கப் போகிறோம் ! கடை போட்டிருக்கும் ஹோட்டல்காரரை திருப்திப்படுத்த மட்டுமே கடைக்குள் நாம் கால் வைப்பதில்லை !//

   அதுவே நம் நெருங்கிய நண்பர் அல்லது உறவினரின் ஹோட்டலாக இருந்துவிட்டால்..?! வெளியே செல்ல மாட்டோம் அல்லவா?! ஆனால் கொஞ்சம் உப்பு சேர்க்கலாமே அல்லது காரம் கொஞ்சம் சேர்க்கலாமே அல்லது மிகவும் அலாதியான சுவையாக இருக்கிறது, சூப்பர் என்று ஒவ்வொரு முறையும் ஏதாவது வார்த்தைப் பரிமாற்றம் நடந்து கொண்டுதானே இருக்கும். அதுவே நட்பின் பரிமாணம் ; அதுவே அன்பின் வெளிப்பாடு ; அதுவே உள்ளத்தின் கலப்படமற்ற தூய அன்பு ; அதுவே எதிர்பார்ப்பில்லாத அக்கறை ; அதுவே தொலைவுகள் கடந்த பாசப்பிணைப்பு ; அதுவே தமிழ் காமிக்ஸ் என்ற உயிர்நாடி ❤️

   Delete
  4. ஐம்பது வயதைக் கடந்த ஒற்றை மனுஷனின் தலையில் மொழிபெயர்ப்பாளர் குல்லா ; எடிட்டர் குல்லா ; ஆபீஸ் பாய் குல்லா ; அவை விதூஷகன் குல்லா ; சகலரிடமும் சகல தருணங்களிலும் நெஞ்சைத் திறந்து காட்டும் ஆற்றல் கொண்ட Open heart surgery டாக்டர் குல்லா - என எக்கச்சக்க குல்லாய்களை மாட்டிப் பார்க்க எழும் அவாக்களையும் உங்களது காரணப் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளுங்களேன் சார் ! மொழு மொழுவென்றிருக்கும் முன்மண்டையில் ஒற்றைக் குல்லா அமரவே திணறும் போது, இத்தனையை மாட்டிட முனையும் போது ஒன்றில், அல்லது இன்னொன்றில் தோல்வி காண்பதையுமே சேர்த்துக் கொண்டால் பட்டியல் நிறைவு கண்டிடும் என்று தோன்றுகிறது !

   Delete
  5. //ஐம்பது வயதைக் கடந்த ஒற்றை மனுஷனின் தலையில்//

   என்னைப் போன்ற பல வாசகர்களுக்கும் தங்களைப் பற்றியும், தங்களின் பல விதமான இடர்பாடுகளையும் ;சங்கடங்களையும் ; துன்பங்களையும் ; பிரச்சனைகளையும் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளோம். தங்களுக்குள்ள காமிக்ஸ் சார்ந்த தொழில் இடர்பாடுகள் சாதாரணமானவை அல்ல என்பதும், மற்றவர்களால் கொஞ்சம் கூட சமாளிக்க இயலாது என்பதும் எங்களுக்கு நன்றாக தெரிந்தே தான் உள்ளது.

   சில நேரங்களில் சில விஷயங்கள் சிலருக்கு பிடிபடாமல் போவது மட்டுமே சில நல்லதுக்கும், சில சங்கடத்திற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

   //ஓராண்டின் TOP & BOTTOM 3-களை அடையாளம் காட்டச் சொல்லிக் கோரியுள்ளதற்கே அந்த நண்பர்களின் பங்களிப்பைக் காணோம் தானே ?அதற்கெல்லாம் நானுமே விசனம் கொண்டு வனவாசம் புறப்படுவதாயின்,//

   இந்த ஆண்டின் காமிக்ஸ் வெளியீடுகள் அனைத்தையும் படித்தவர்கள் விமர்சனம் செய்வது அவசியம் என்பது உண்மை தான் சார். ஆனால் பலவிதமான காரணங்களால் படிக்கவே முடியாத என்னைப் போன்ற வாசகர்கள் என்ன பாவம் செய்தோம்?! இருந்தும் உங்களின் நட்பை விட்டு விலகவில்லை; உங்களின் பதிவுகளை பல நேரங்கள் தவர விட்டாலும் சில நேரங்கள் நேசத்தோடு ஒன்றி தானே கிடக்கிறோம் ?!

   Delete
  6. அன்புக்கும், புரிதல்களும் நன்றிகள் சார் ! தியேட்டரில் உள்வரிசையில் அமர்ந்திருக்கும் போது , பாப்கார்ன் வாங்க வெளியேறிட முயற்சிக்கும் நேரங்களில், இடைப்படும் சில பல பாதங்கள் இடர்வது சகஜம் தானே ? அவற்றினை பொருட்படுத்தாது நகர்கிறோம் தானே ? அதே போலவே பொது வெளியினில் நமக்கு ஏற்பில்லா சில எண்ணங்கள் இடர்களாய்த் தென்படும் போதும் we'll agree to disagree என்றே நண்பர்கள் நகர்ந்திட்டால் எல்லாமே சுலபமாகிடும் சார் !

   Delete
  7. UK & எடிட்டர் சார்@

   மிகவும் ரசிக்க வைத்த சம்பாசணை!

   நிலவரத்தை இருவரும் ஸ்பஸ்டமாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

   உங்கள் இருவரையும் தளத்தில் அறிவேன் என்ற எண்ணமே சிலிர்ப்பூட்டுகிறது.

   உங்களின் பரஸ்பர புரிதல் வியக்க வைக்கிறது!

   Delete
 51. //கவலைப்படாதீர்கள் நண்பரே ; இன்னும் ஆறே வருஷங்கள் தான் என் ரோதனைகளைத் தாங்கிட வேண்டி இருக்கும்//
  தயவுசெய்து இனிமேல் இப்படி கமெண்ட் போடாதீர்கள் ஆசிரியரே அதை கற்பனை செய்து பார்ப்பது கூட கஷ்டமாக இருக்கிறது என் கண் மறையும்வரை நீங்களே நிரந்தரமான ஆசிரியர் என்று மனதுக்கு சமாதானம் கொடுத்துக்கொண்டே இந்த கமெண்டை கடந்து போகிறேன்

  ReplyDelete
  Replies
  1. எப்போதுமே எங்கள் நிரந்தர ஆசிரியர் நீங்கள் தான் சார்.

   Delete
  2. சார்..உயிர் காக்கும் மருந்துகளுக்கே ஒரு shelf life உண்டெனும் போது - ஒரு பொம்ம புக்கின் எடிட் குல்லாவுக்கு இராது போய் விடுமா - என்ன ?

   Delete
 52. டாப் 3 : ரொம்பவும் கஷ்டப்பட்டு சொல்கிறேன்
  1. பனி அசுரர் படலம்
  2.கண்ணான கண்ணே
  3. 2132 மீட்டர்

  பாட்டம் 3 : மூன்று இல்லை ஒன்றுதான் பனியில் ஒரு குருதிப்புனல்

  ReplyDelete
 53. என்னமோ தெரில எடி சாரே,பழைய காமிக்ஸ் கதைகள் மீண்டும் வருவது,மனசுக்குள் ஒரு மத்தாப்பு மழை தா போங்க,பழைய கதாநாயகர்கள்,புது வடிவில் காண்பது சந்தோஷமே,இந்த மாதம் கழுகு வேட்டை,அடுத்த மாதம்,கொ,சா,அதுக்கு அடுத்த மாதம்?? "எதிர்ப்பார்பது எங்களுடைய கடமை ஆசானே,நன்றிகள் நன்றிகள்,

  ReplyDelete
  Replies
  1. ஏனுங்க சகோ, மேலுள்ள பின்னூட்டங்களில் "பாதாள பைரவ பார்ட்டிக்களில்" முக்காலே மூன்று வீசத்தினர் நமது oldies என்பதைக் கவனிக்கலீங்களா ?

   Delete
  2. Sir - I dunno the reason - I loved the classics of last year - 2 diabolik, 1 L&D, Both the Archies (kids loved the comedy), and of course ISPAIDER. May be there are so many who do not comment here, who liked those titles.

   Delete
  3. Wish they'd be more expressive sir ; as of now it looks overwhelmingly against the classic heroes !

   Delete
  4. டேஞ்சர் டயபாலிக்-க்கு கிடைக்கும் ரேட்டிங்கை பார்த்தால், டயபாலின் in டேஞ்சர் என்று தெரிகிறது. சென்ற ஆண்டு வந்த 2 டயபாலிக் கதைகளுமே, வந்த நேரங்களில் நல்ல ரிவியூ கிடைத்த கதைகள். இப்போது கிடைத்துள்ள ரேட்டிங்கோ, ஓர வஞ்சனை கொண்டதாக இருக்கிறது.

   தயவு செய்து டயபாலிக்கை பாதாளத்திற்கு தள்ளி விட வேண்டாம் ஐயா!

   Delete
 54. அன்பு எடிட்டர் ,மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
  Bottom 3 or 5

  1)அமயா
  2)கிங் கோப்ரா
  3) ஸ்பைடர்
  4)டயபாலிக்
  5)13 ம் தளம்

  ReplyDelete
 55. இருண்ட கதைக்களம் கொண்ட கிராபிக் நாவல்களும் bottom range ல் சேரும்

  ReplyDelete
 56. பாதாள பைரவிகள்:

  டயபாலிக் இரண்டு கதைகள் அதிலும் அலைகடலில் அதகளம் சாரி.

  மாடஸ்டி ஆனால் கடந்த வருட கதையை விட இது கொஞ்சம் பெட்டர்.

  இன்னும் ஒன்று ஞாபகம் வந்த உடன் சொல்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆங் ஞாபகம் வந்து விட்டது அமாயா... சுத்தமா முடியலை வெரி சாரி.

   Delete
 57. ///ஜெரோனிமோ" இதழின் தமிழ் pdf கோப்புகளைப் பார்த்து விட்டே, அதன் கதாசிரியரும், ஓவியரும், பதிப்பகமும் செம குஷியில் உள்ளனர் ! "ஏர்-மெயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் பிரதிகளை நேரில் பார்க்க ஆவலாய் வெயிட்டிங்" என்றும் பதிவிட்டுள்ளனர் ! ///

  ---இருக்காதா பின்ன!!! அந்த அசாத்திய ஓவியங்கள் சும்மா மிரட்டலாக பிரிண்டிங்ல வந்திருந்தின. அவற்றின் PDFகள் சும்மா கண்ணை பறிக்கத்தான் செய்யும்...

  அதிலும் சிலபல டபுள் லேண்ட்ஸ்கேப் ஓவியங்கள் மெய்மறந்து சில நிமிடங்கள் ரசிக்க வைத்தன...!!

  ஓவிய உன்னதம் ஜெரோனீமோ!

  கதை சொல்லப்பட்ட விதமும் மாறுபட்ட பாணி!!! ஆண்டின் சிறந்த இதழ்களுள் இது தவறாது இடம்பிடிக்கும்.

  ரெகுலர் ஹீரோக்கள் பின்னே செல்ல இதுபோன்ற ஒன்ஷாட்களே லைம்லைட்டில் இருப்பது இப்பலாம் வாடிக்கை ஆகிட்டது.

  தேடல் தொடரட்டும் ஆசிரியர் சார்.

  ReplyDelete
 58. ///இன்ப அதிர்ச்சிகளாகவே உள்ளன ! வெகு சமீபத்தில் கூட "அர்ஸ் மேக்னா'வின் கதாசிரியர் + ஓவியர் கூட்டணியானது உங்களுக்குத் தம் அன்பினைத் தெரிவித்திருந்தனர் !///

  ---- """""""மகிழ்ச்சி""""""

  ReplyDelete
 59. இந்த வருடம் அல்ல,எந்த வருடம் ஆனாலும்,காமிக்ஸ் என்பது,எங்களை பொறுத்த வரை இன்றியமையாத எங்களோடு ஒன்றி விட்ட விசயம், அதில் இது நல்லா இருக்கா அது நல்லா இருக்கா என்பதை பிரிக்க முடியாது,ஐந்து விரலும் ஓரே மாதிரி இருப்பதில்லை,கதைகளும் அப்படி தான்,கதை நன்றாக இருக்கும்,அந்த கதை வெளியே வரும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை,சாதாரண கதை,அனா ஹிட் அடிக்கும்,சூப்பரான கதை சோடை போகும், கதையும்,கதையோட பயணிக்கும் இயற்கையும்,அதோட சேர்ந்த கதை களமும்,கதையோட கதாபாத்திரமும் ஒன்று சேர்ந்து நேர்கோட்டில் சென்றால், அந்த கதையும் ஹிட் ஆகும், அப்படி தான் பல கதைகள் ஹிட் ஆனவை,ஒரு சில கதைகளை தவிர அத்தனையும் அருமை, நன்றி

  ReplyDelete
 60. I forgot that i booked Ratha padalam book. 😁. Good to know that it will soon become a reality.

  ReplyDelete
 61. நம்ம டாப்3.....

  1.தீபாவளி with டெக்ஸ்

  #முதல் போர் கதை யுத்த டாகுமெண்டரி இதை சிலாகிப்பதை விட ரசித்துதான் உணர இயலும்.

  #2வது கதை "பனிவனப் படலம்"-ஹைலைட் ஆஃப் த தீபாவளிமலர்! கனடிய வெண்பனியில் ஒரு ரொமாண்டிக்+ எக்ஸ்பிரஸ் த்ரில்லர்.

  #இலவச இணைப்பாக வந்த மினி சர்ப்ரைஸ் விருந்து. பாட்ரீஷியாவும், புகைமண்டலத்தின் ஊடாக அந்த ஓவியங்களும், அபாச்சே ஆக்டேவியாவும் காலத்திற்கும் நினைவில் இருப்பார்கள்.

  இத்தனை விசயங்கள் போதாதா தலைவனை டாப் அந்தஸ்தில் நிறுத்த?????


  2.பிரிவோம்....சந்திப்போம்!

  #இதாண்டா வன்மேற்கு என முகத்தில் அறைந்து சொல்லிய கதைக்களம். கதையே இங்கு ஜீவன். எத்தனை ஆழமாக தன் சுவடை பதிந்துபோனது... தல இருக்கும் போது சில்வர் மெடல் கிடைச்சாலே அது பெரிய போக்கிஷம்னு அவுக காதுல போடுங்க எடிட்டர் சார்.

  3.அர்ஸ் மேக்னாவா, மா துஜே சலாமானு பார்க்கும் போது ஒரு தாயின் பாசப்போராட்டமும், யுத்தத்தின் கோரமுகமும் வெங்கலத்தை அந்த கதாசிரியர் க்கு அணிவிக்கிறேன்.

  #அர்ஸ்மேக்னா--- மெடல் பொஷிசன்ல இல்லைனாலும் பெஸ்ட் எண்டர்டெயின்னர் ஆஃப் த இயர் இதானு சொல்லலாம்.

  குறிப்பு:- தோர்கல் அந்த குறிப்பிட்ட கதை ஆர்க் பாதியில் நிற்பதால் இந்த டாப் 3 செலக்சனுக்கு தேர்வாகல.

  ReplyDelete
  Replies
  1. 'பிரிவோம்..சந்திப்போம்' இதழ் பற்றி பின்னொரு நாளில் சித்தே விரிவாய்ச் சொல்கிறேன் சார் ! வேடிக்கையான நிஜமொன்று அதன் பின்னணியில் கீது !

   Delete
  2. ஆசிரியர் சார்@ ஆவலுடன் காத்திருக்கேன் அந்த பதிவுக்கு....!!!

   இந்த ஆண்டு டெக்ஸ்க்கு அடுத்து மிகவும் ரசிக்க வைத்த இதழின் பின்னணியும் ரசிக்கும்!

   இரத்த பூமி,

   எமனின் திசை மேற்கு,

   வரிசையில் அசரடித்த ஒன்ஷாட் இந்த பிரிவோம் சந்திப்போம்.

   Delete
  3. காத்திரிக்கிறோம் சார்...

   Delete
 62. பாதாள பைரவிஸ்....

  1.அமாயா

  2.ஆர்ச்சி இருக்க பயமேன்

  3.மீண்டும் கிங் கோப்ரா

  4.சர்பத்தின் சவால்

  யுகத்திற்கு முன்னே ரசிக்க இயன்ற கதைகள் இப்போது சாத்தியமாக முடில. நம் பயணத்தில் இவைகள் ஸ்பீடு பிரேக்கர்கள் ஆக மாறும் முன்னே நிறுத்திக்கொள்வோம் சார். முன்னே செல்லும் பாதையில் அடிபோடுவோம்.

  ReplyDelete
 63. My Top 3

  1.நில் கவனி வேட்டையாடு

  2.பிரிவோம் சந்திப்போம்

  3.ஆர்ச்சி, ஸ்பைடர் & All old british heroes comics  Bottom 3

  Soda soda soda

  ReplyDelete
  Replies
  1. அடடே ,சோடா பிடிக்கலையா ? அதனில் உங்களுக்கு மொக்கையாய்த் தெரிவது எது சார் ?

   Delete
  2. I mean...கதைக்களமா ? அல்லது அந்த semi கார்ட்டூன் சித்திர பாணியா ? Or அந்தக் கதாப்பாத்திர அமைப்பேவா ?

   Delete
 64. தமிழர்களாகிய நாம் எதையும் உணர்வுபூர்வமாகவே அணுகுகிறோம், அன்பு செலுத்துதல், கோபம், குற்றம் கூறுதல், ஆதரவளித்தல் அனைத்திலும் Extreme தான்,

  ஒவ்வொரு நபரின் பணி வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்ற புரிதல் நமக்கு குறைவாகவே உள்ளது. மேலை நாடுகளில் பணிநேரம் அல்லாத மற்ற நேரங்களில் பணியாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூட தயங்குவார்கள்.

  ஆனால் நாம் வீட்டில் அலுவலகப் பணி பார்ப்பதும், அலுவலகத்தில் குடும்ப கதை பேசுவதுமாக வாழ்கிறோம், நமது தமிழினத்திற்கு பணி வேறு, தனிமனித வாழ்க்கை வேறு என்ற விசயத்தில் இன்னும் புரிதல் வேண்டும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 65. //அன்பு செலுத்துதல், கோபம், குற்றம் கூறுதல், ஆதரவளித்தல் அனைத்திலும் Extreme தான்,//

  :-)

  ReplyDelete
 66. //மேலுள்ள பின்னூட்டங்களில் "பாதாள பைரவ பார்ட்டிக்களில்" முக்காலே மூன்று வீசத்தினர் நமது oldies என்பதைக் கவனிக்கலீங்களா ?//

  ஆசிரியரே மன்னிக்கவும் இன்னும் ஆறேழு வருடங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் அதற்கு பிறகு பழசை கேட்க மாட்டோம் ஒன்னு கண்டு அவிஞ்சி போயிருக்கும் இல்லைன்னா காலஞ்சென்றிருப்போம் அதுவரை எங்களது பழமையை பொறுத்தருள்க (நாங்களும் உங்களை மாதிரியே பதில் சொல்ல முயற்சி பன்னுவோமில்ல குருவே)

  ReplyDelete
  Replies
  1. அம்மிணி அமாயாவைப் பாத்தே அவியாத கண்கள் செம ஸ்ட்ராங்கா இருக்கும் சத்யா !

   Delete
 67. படைப்பாளர்களின் பாராட்டுதல்களுக்கு எங்கள் நன்றியினையும் தெரிவித்து விடுங்கள் சார்..

  ReplyDelete
 68. எடிட்டர் சார்.. ஒரு டவுட்! உங்கள் பதிவில் கொரில்லா சாம்ராஜ்யம் அட்டைப்படத்திற்கு மேலே சிரித்த முகத்துடன் கூடிய அந்த ஃபோட்டோவிலிருப்பது நமது சீனியர் வாசகர் அறந்தாங்கி ஜெகன் என்றே நினைக்கிறேன்! பார்ப்பதற்கு பார்கோடு சகிதம் ஒரு பின்னட்டை போல காட்சி தரும் இது 'கழுகுவேட்டை'க்கான ஃபோட்டோவாகவும் தெரியவில்லையே?!! கொஞ்சம் குழப்புகிறது! விளக்குங்களேன் ப்ளீஸ்?

  ReplyDelete
  Replies
  1. அது அவரே கழுகுவேட்டைக்கென டிசைன் செய்து அனுப்பிய jpeg file சார் !

   Delete
  2. விளக்கத்திற்கு நன்றி எடிட்டர் சார்!

   இனி பொதுவான வேறொரு குழப்பம் : 'comics magazine' என்றும் 'Enjoy the stories every week' என்றும் அந்தப் படத்தில் இருக்கிறதே.. புதுசா ஏதாவது 'காமிக்ஸ் வார இதழ்' வரப்போகுதோ என்னவோ?!!

   விஷயம் தெரிஞ்ச யாராவது விளக்கினா தேவலை!

   Delete
  3. Over to அறந்தாங்கி ஜெகன் sir..

   Delete
 69. Not able to get a Top 3 list. There are too many. thorgal, soda, Kannana kanne, pirivon sandhipom, maa tuje salam, etc. After reading these books, I keep it my shelf to read again a couple of times. Some books like Nil kavani vettayadu, Durango, Thorgal are read again for the artwork

  Bottom 3.

  AMAYA. (For the first time, I did not finish reading a book) If Amaya gets published again, I will come personally to Sivakasi, to ensure that it is removed from my subscription list. :)

  All oldies fall under the bottom list. Rip Kirbi, Old 007, spider, Lawrence, Archie etc. But unlike Amaya, I complete these books and then straight to Attali.

  ReplyDelete
  Replies
  1. ////But unlike Amaya, I complete these books and then straight to Attali.///

   😁😁

   Delete
 70. இன்னும் சில புத்தகங்கள் படிக்கவில்லை. நான் படித்தவைகளில்....

  டாப் 3

  1. தீபாவளி வித் டெக்ஸ்
  2. அழகிய அகதி
  3. பிரிவோம் சந்திப்போல்

  ஸ்பெஷல் Top 3

  1. கண்ணான கண்ணே
  2. பணியில் ஒரு குருதிப்புனல்
  3. நில் கவனி வேட்டையாடு


  பிடிக்கவில்லை என்றில்லை, அவ்வளவாக கவரவில்லை என எடுத்திக்கொண்டால்...

  1. அமாயா
  2. 13 வது தளம்
  3. ஏதுமில்லை

  ReplyDelete
 71. நீரின்றி அமையாது உலகு:

  தலைப்பை பார்த்தவுடன் நீரைப் பற்றிய கதை என நீங்கள் புரிந்து கொண்டால் பாராட்டுக்கள் அதில் நமது உட் சிட்டி கரகாட்ட கோஷ்டிகளுக்கு என்ன வேலை என்றால் அதே அதுதான் நம்மை சிரிக்க வைத்து வயிற்றை பதம் பார்ப்பதே.

  வாட்டர் ப்ரூப் என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தின் பெயர் பலர் வாயில் இருந்து புது புது பெயராக செம காமெடி. இது தெனாலி பட காமெடியை நினைவு படுத்தியது என்றாலும் மிகவும் ரசித்தேன்.

  ஆர்டின் மற்றும் டாக்புல் வழக்கம் போல் கல கல. அதுவும் அந்த மீன் தொட்டி காமெடி சூப்பர். அதேபோல் கதையில் யாராவது அதிகம் கோபப்பட்டால் தண்ணீர் தாகம் எடுக்கும் என்பதை சொல்லும் வசனக்கோர்வை லக லக.

  சிக்பில் இந்த கதையில் டாக்புல்லை கலாய்ப்பது புதுமை. குள்ளன் வழக்கம் போல் துப்பறியும் வேலையை சிறப்பாக செய்து உள்ளார்.

  காமெடி வசனங்கள் இந்த முறை வித்தியாசமாக சிரிக்கும் படி இருந்தது மிகப்பெரிய பலம்.

  ஆர்டின் தொப்பையில் வாட்டர் ப்ரூப்பால் மறைத்து வைக்கப்பட்ட ரகசியம் செம திங்கிங், கண்டிப்பாக ஏதிர்பார்கவே இல்லை.

  நான் இனி காது வழியாக குறட்டை விட போகிறேன் அல்டிமேட் காமெடி. நிறைய வசனங்கள் வாய்விட்டு சிரிக்க வைத்தது.

  வண்ணத்தில் சித்திரங்கள் அருமை + அதிக பக்கங்கள் என்றாலும் தொய்வின்றி சென்றது சிறப்பு.

  நீரின்றி அமையாது உலகு - காமெடி இன்றி அமையாது உலகு.

  ReplyDelete
  Replies
  1. ரசிச்சுப் படிச்சிருக்கீங்க PfB! சிறப்பான விமர்சனம்!!

   Delete
  2. அதிலும் உப்பு மூட்டை தூக்கிச் செல்லும் இரண்டு கோஷ்டிகள் அடிக்கும் லூட்டி செம. சினைப்பன்னியை தூக்குவது போல் என டாக்புல் சொல்லும் இடம் விழுந்து விழுந்து ரசித்தேன்.

   Delete
 72. விஜயன் சார், நீங்க எந்த பக்கம் போனாலும் நாங்களும் கூடவே வருவோம். ஆமாம் சொல்லிவிட்டோம்.

  ReplyDelete
 73. அவரவர் பிரச்சினை அவரவர்களுக்குப் பெரியது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எல்லோரும் எல்லோரையும் புரிந்துகொள்ள இயலும் என்பதும் நடைமுறையில் சாத்தியமில்லை. அவரவர் புரிதல் அவரவருக்கு பெரியது. இதில் கிண்டலும் கேலியும் அவசியமற்றது. //// @ Udhayakumar ... You spoke my mind sir.

  ReplyDelete
 74. This comment has been removed by the author.

  ReplyDelete
 75. ரசித்த மூன்று

  பனிவனப்படலம்
  அழகிய அகதி
  நில் கவனி வேட்டையாடு


  தலையைச் சொரிந்த நான்கு

  அமாயா
  கிங்கோப்ரா
  13ம் தளம்
  டயபாலிக் 2

  ReplyDelete
 76. டாப் 4
  1) நில் கவனி வேட்டையாடு
  2) கண்ணான கண்ணே
  3) மா ஜே சலாம்
  4) அரஸ் மேக்னா

  ஏன் டாப் 3 மட்டுமா?
  சுகப்படவில்லை பட்டியலில் அமாயா அம்மணி, மட்டுமே

  ReplyDelete
 77. டாப் 4
  1) நில் கவனி வேட்டையாடு
  2) கண்ணான கண்ணே
  3) மா ஜே சலாம்
  4) அரஸ் மேக்னா

  ஏன் டாப் 3 மட்டுமா?
  சுகப்படவில்லை பட்டியலில் அமாயா அம்மணி, மட்டுமே

  ReplyDelete
 78. டாப் 4
  1) நில் கவனி வேட்டையாடு
  2) கண்ணான கண்ணே
  3) மா ஜே சலாம்
  4) அரஸ் மேக்னா

  ஏன் டாப் 3 மட்டுமா?
  சுகப்படவில்லை பட்டியலில் அமாயா அம்மணி, மட்டுமே

  ReplyDelete
 79. மார்ச் வரையான சந்தாவிற்கான பொக்கிஷத்தை கைப்பற்றியாச்சு. நன்றிகள் கோடி எடிட்டர் சார்!

  ReplyDelete
 80. நித்தமும் உன் நிழலில் : சோடா தனது தாயாருடன் சொந்த ஊர் செல்கிறார்: வீட்டில் இருந்து புறப்படும் போதே தாயார் மனதை கஷ்டப்படுத்த கூடாது என்பதை காட்ட உடனே அவர் சொல்வதை செய்யும் போது அவரின் தாய்ப்பாசம் புரிகிறது. எனது தாயார் இறக்கும் வரை நானும் எனது இளைய அண்ணனும் எனது தாயார் சொன்னதை ஒரு போதும் மறுத்தது இல்லை அவரின் சந்தோஷமே எங்களது சந்தோஷமாக இருந்தது. சாரி பார் தி ஃப்ளாஷ்பேக்.

  சோடா தனது தாயாருடன் சொந்த ஊருக்குள் நுழையும் போது மூன்று நபர்கள் கவனிக்கிறார்கள். யார் அவர்கள் அவர்கள் நல்லவர்களா இல்லை கெட்வர்களா என்பதை அடுத்த அடுத்த பக்கங்களில் விறுவிறுப்பாக சொல்கிறார்கள்; அந்த ஊரில் கட்டிய சர்ச்சுக்கு பணம் கொடுத்தவர் யார்; சரி ஒரு ஃப்ளாஷ்பேக் உள்ளது எப்போது வரும் என்ற ஆர்வத்தில் இருந்தால் கடைசி இரண்டு பக்கங்களில் வருகிறது செமையா ஃப்ளாஷ்பேக்; சாமி படத்தில் விக்ரம் லஞ்சம் வாங்குவதற்கு சொல்லும் காரணம் மனதில் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.

  சோடா பஸ்ஸில் பயணம் செய்யும் ஆக்சன் sequence சூப்பர். சொந்த ஊரில் இவர் யார் என கண்டுபிடிக்க நடக்கும் இடங்களில் இவர் தன்னை யார் என்று வெளிக்காட்டாமல் சண்டை போட்டு சமாளிக்கும் இடம் ரசனை.

  சட்டத்தை பரிபாலனை செய்யும் அந்த அதிகாரி கதாபாத்திரம் நன்று. அதேபோல் சோடாவின் மாமா கதாபாத்திரம் கொடுத்த வேலையை நன்றாக செய்துள்ளார்.

  சித்திரங்கள் மூலம் சொன்ன செய்திகள் பல அதற்கே ஒவியருக்கு ஒரு சபாஷ்.

  கார்டூன் பாணியில் ஆனால் மிகவும் அழுத்தமான கதை.

  கதைக்கு மிகவும் சரியான தலைப்பு.

  நித்தமும் உன்தன் நிழலில் - சோடா நமது காமிக்ஸ் குடும்பத்தின் நிழலில் நிரந்தரமாகி விட்டார்.

  ReplyDelete
  Replies
  1. சோடா வருடத்திற்கு மூன்று கதைகள் குண்டு புத்தகமாக இல்லை என்றாலும் மூன்று மாதங்களுக்கு ஒன்று என கொடுக்க முடியுமா. Just a kind request.

   Delete
  2. அப்படி கேளுங்க பரணி. 2 புத்தகம் ஆக அல்லது ஒரே புத்தகத்தில் 2 கதைகளாக

   Delete
  3. விற்பனையிலும் இவர் சாதித்தார் என்றால் ஆசிரியர் கண்டிப்பாக இவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்லாட் கொடுக்க வாய்ப்புகள் அதிகம். சோடா விற்பனையில் சாதிக்க வேண்டும் என வேண்டிக்கொள்வோம் குமார்.

   Delete
 81. கொரில்லா சாம்ராஜ்யம் அட்டைப்படம் மிரட்டுகிறது. மாயாவியை வரைந்த விதம் சூப்பர்; நேரில் பார்ப்பது போல் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. கொரில்லா சாம்ராஜ்யம் அட்டை அருமை. அடுத்த மாதம் இன்னும் ஒரு சரவெடி இருக்கு. Durango இருக்கார்.

   Delete
 82. 2021 ல் காத்திருக்கும் மாடஸ்டி உங்களைக் கவராது போனால் வியப்பென்பேன்./ ஆர்வத்தைத் தூண்டும் வரிகள்.. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 83. வாட்டர் லூ, வாட்டர் பால், வாட்டர் ட்யூப், வாட்டர் பாட்டில், வாட்டர் லூயி, வாட்டர் ஜுயி, வாட்டர் பீன்ஸ், வாட்டர் ப்ரூ, வாட்டர் டேங்க் வாட்டர் நெப்டியூன் வாட்டர் மெசின், வாட்டர் டேங்க், வாட்டர் டப், வாட்டர் கேட், வாட்டர் பன், வாட்டர் பாய், வாட்டர் ஹீட்டர் வாட்டர் போலோ, வாட்டர் கேன் அப்புறம் அந்த வெண்பறா சீக்வன்ஸ் ரசிக்கவைத்தது. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. வெண்புறா செம என்ன ஒரு பணிவு. நாமளும் இனிமேல் வெண்புறா ஃபார்முலாவை பாலோ பண்ணிட வேண்டியதுதான் :-)

   Delete
 84. பாதாள பைரவ பார்ட்டிகளில் முக்காலே மூணுவீசம்oldiesதானுங்க சார். ஆனால் oldiesன் புதுக்கதைகள்தானுங்க சார் மறுபதிப்புகள் இல்லைங்க சார்எனவே மறுபதிப்புகள் வருடத்திற்க்குஒன்றிரண்டாவதுகொடுக்கமுயற்ச்சியுங்கள் சார் தயவு செய்து. ப்ளீஸ். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete