நண்பர்களே,
வணக்கம். சுமார் பத்தாண்டுகளின் இந்தப் பதிவுப் பயணத்தினில் - 'என்ன எழுதுவது ?' என்ற கேள்வியோடு பேந்தப் பேந்த முழித்த நாட்கள் கொஞ்சமே கொஞ்சமாய் உண்டு தான் ! ஆனால் பகிர்ந்திட சமாச்சாரங்கள் நிறையவே இருக்கும் போதிலும், பேனா நகர மறுத்துச் சண்டித்தனம் செய்வது இதுவே முதன்முறை !
நம்மைச் சுற்றிலும் ஒரு பேரலையாய் பெரும் அழிவு தலைவிரித்தாடி வருவதை நித்தமும் பார்த்து வரும் நாட்களில் ; நேற்று வரைக்கும் ஓராயிரம் கனவுகளோடும், பொறுப்புகளோடும் உலவி வந்த முகமில்லா சக மனுஷர்கள், இன்றைக்கு காக்காய்-குருவிகளைப் போல செத்து விழுந்து காலனிடம் ஐக்கியமாகும் அகோரத்துக்கு சாட்சி நிற்கும் நாட்களில் - 'மாதம் மும்மாரி மழை பொழிகிறது நண்பர்களே !' என்ற ரீதியில் எழுதிவிட்டு நகர கூசுகிறது ! ஒவ்வொரு இழப்பின் பின்னேயும் உள்ள அந்தக் குடும்பங்களின் வலிகளை எண்ணிப் பார்க்கவே தடுமாறும் போது - அந்த ரணங்களோடே வாழ்க்கையைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளோரின் மனங்கள் எத்தனை பாடுபடும் ? போன வருஷத்து இதே தருணங்களிலும் இதே ஊழித் தாண்டவங்களைப் பார்த்திட்டோம் தான் ; ஆனால் பாதிப்புகளின் பரிமாணங்களில் 2021 காட்டி வரும் உச்சங்கள் ஈரக்குலையை நடுங்கச் செய்கின்றன ! இது அத்தனைக்கும் மத்தியில் வழக்கம் போல தேர்தல் ; IPL ; மேளா எனும் கூத்துக்களும் தொடரும் போது - நமது இன்றைய பொழுதுகளை என்னவென்று வர்ணிப்பதென்றே தெரியலை !! இறைவனின் அருளோடு இந்தக் கொடும் நாட்களை நாமெல்லாம் முழுசாய், திடமாய்த் தாண்டிடும் பட்சங்களில் - ஒரு தூரத்து எதிர்கால நாளினில், இதுவும் கடந்து போயிருக்குமோ - தெரியலை !! Maybe எல்லாமே சகஜத்துக்குத் திரும்பியிருக்கக்கூடிய அந்தத் தருணத்தில் - மறுக்கா 'BIG BOSS புடலங்காய் ஆர்மி' ; 'வலிமை அப்டேட்ஸ்' ; 'பச்சைக்கு விசில் போடு' என்று நாமெல்லாம் திரிவோமோ என்னவோ ?! ஆனால் இன்றைய பிரளயப் பொழுதுகளை மறப்பது - ஒரு வரலாற்றுக் குற்றமாகிடும் என்று ரொம்பவே உறுத்துகிறது ! "Those who forget history are condemned to relive it..." என்று போலந்தின் ஆஷ்விட்ஸ் நாஜி வதைமுகாமின் மியூசியத்துச் சுவற்றில் 20 வருஷங்களுக்கு முன்னே வாசித்த இந்த வரி தான் மனசுக்குள் ஓடிக்கொண்டே உள்ளது ! In fact "வரலாற்றை மறக்கும் தவறைச் செய்வோர், அதன் ரணங்களை மறுக்கா உணர்ந்தே பாடம் படிப்பர் !" என்ற அந்த வரிகள் நம் தேசத்தின் இன்றைய நிலையினையும் சுட்டிக் காட்டுவதாகவே படுகிறது ! ஆற்றமாட்டாமை விஞ்சும் இந்த நாட்களின் மத்தியில், அவரவர் பாடுகளை பார்த்திட வேண்டிய சுயநலங்களும் முன்னுரிமை பெறுவதை குனிந்த தலையோடே ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது தான் ! So குதூகலமாய் இல்லாவிடினும், கடமையுடன் நமது வாரயிறுதி relax pill ஒன்றினை போட்டுக்கொள்ளும் முயற்சியினுள் புகுந்திடுகிறேன் !
மூன்றே புக்ஸ் இம்மாதம் ; அவற்றுள் ஒன்று மாயாவியாரின் மறுபதிப்ஸ் எனும் போது எனது பணிகள் கணிசமாய்க் குறைந்திருக்க வேண்டும் தான் ! ஆனால் ட்யுராங்கோ சார்ந்த 3 பாகப் பணிகள் செம்மையாய் சுளுக்கெடுத்த காரணத்தினால் பெருசாய் ஒய்வு கிட்டவில்லை & as always - டெக்ஸ் வில்லரின் பக்க நீளமானது அங்கேயும் பெண்டை நிமிர்த்தி விட்டது தான் ! ஆனால் புண்ணியத்துக்கு இம்மாதப் பணிகளை ரொம்பவே சீக்கிரம் ஆரம்பித்திட்டதால், இதோ - மூன்று இதழ்களுமே அச்சு பூர்த்தி கண்டு, பைண்டிங் புறப்பட்டு விட்டுள்ளன ! And மூன்று இதழ்களின் previews-ம் இங்கே நாம் பார்த்தாச்சு எனும் போது, புதுசாய் அவற்றைப்பற்றி பேசிட சமாச்சாரங்கள் நஹி !
So நேரடியாய் போன வாரத்தினில் நான் கேட்டிருந்த கேள்வி பக்கமாய் கவனத்தைத் திருப்பிடலாம் guys ! "கென்யா" மற்றும் "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" மெகா இதழ்களுள் நிறைய பணமும், உழைப்பும் முடங்கிக் கிடப்பது வாஸ்தவம் தான் ! இரண்டுமே சூப்பரான கதைகள் என்பதும் வாஸ்தவம் தான் & அவற்றை உங்களிடம் ஒப்படைக்கும் ஆவல் அலையடிக்கிறதுமே வாஸ்தவம் தான் ! ஆனால் ஏகப்பட்ட ஜீவனங்களே கேள்விக்குறியாகி நிற்கும் இன்றைய பொழுதினில், இந்தக் கதைச் சுமைகளை இன்னும் கொஞ்ச காலத்துக்குச் சுமப்பதில் தப்பே இல்லை தான் என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளேன் ! இதன் பின்னணியில் சமீபத்தைய சில சம்பாஷணைகளுக்கும் ஒரு பங்குண்டு ! புதுச் சந்தா ஏப்ரல் 2021 முதலாய்த் துவக்கம் கண்டிருக்க, சென்றாண்டின் சந்தா உறுப்பினர்கள் அனைவரையுமே இம்முறையும் சந்தா ரயிலில் இணையச் செய்திட முயற்சிக்கும்படி நம்மவர்களைப் பணித்திருந்தேன் ! சந்தா புதுப்பிக்காதோரின் பெயர்களையும், செல் நம்பர்களையும் ஒரு பட்டியலாய்ப் போட்டபடிக்கு, ஒவ்வொருவருக்கும் அழைத்துப் பேசிய கையோடு, அவர்களின் பதில்களையும் அதனிலேயே ஓரத்தில் குறிக்கச் சொல்லியிருந்தேன் ! And தினமும் மாலையில் வேலை முடித்துச் செல்லும் முன்பாய் அன்றைய தினத்தில் பேசியோர் பற்றி, அவர்களின் பதில்கள் பற்றிய updates எனக்குத் தந்திடவும் சொல்லியிருந்தேன் ! பரவலாய் 60% நண்பர்கள் - "மறந்து போச்சு ; இதோ பண்ணிடறோம் ; வாரயிறுதியில் பண்ணிடறோம் !" என்ற ரீதியில் சொல்லி, அதற்கேற்ப புதுப்பித்தல்களையும் செய்து விட்டிருந்தனர் ! ஆனால் எஞ்சிய சில நண்பர்களின் சூழல்கள் நிஜமாகவே கண்களைப் பனிக்கச் செய்தன !
"பையன் வெளிநாட்டிலே வேலைக்குப் போயிருக்கான்மா ; அவன் போன் பண்றப்போ இந்த வருஷத்துக்கு சந்தா கட்ட பணம் அனுப்ப சொல்லிக் கேட்டுப் பாக்குறேன் !"
"மாசத்தின் ஆரம்பத்திலே பென்ஷன் பணம் வரும்மா ; வந்த உடனே கட்டிடறேன் !"
"ரெண்டு இடத்திலே பணம் கேட்ருக்கேன்மா ; கிடைச்ச உடனே கட்டிடறேன் !"
"இந்த வருஷம் கொஞ்சம் கஷ்டமா இருக்கு ; மாசா மாசம் தேவையான புக்ஸ் மட்டும் வாங்கிக்க முயற்சி பண்றேன்மா !"
"மே மாசத்தில் ஒரு தவணையா சந்தா கட்டிடறேன் !"
"சொந்த ஊருக்கே போய்ட்டேன்மா ; கொஞ்ச நாளிலே பணம் தேற்றி அனுப்பிடறேன் !'
என்ற ரீதியில் நிதரிசனங்களின் நிஜ முகங்களை தரிசிக்க முடிந்தது ! இடர்களுக்கு மத்தியிலும் இந்த காமிக்ஸ் நேசத்தைக் கைவிட மனமின்றித் தட்டுத் தடுமாறிடும் நண்பர்கள் ஒரு சிறுபான்மையாக இருந்தாலுமே, நடப்பாண்டில் அவர்கள் சிரங்களில் கூடுதல் பாரத்தை ஏற்றி வைக்க மனம் மறுக்கிறது ! Of course - எனது தீர்மானமானது கொரோனாவைத் துரத்தியடிக்கப் போகும் அருமருந்துமல்ல தான் & இதன் புண்ணியத்தில், விக்ரமன் படத்து நிறைவு சீனைப் போல அத்தினி பெரும் கைகோர்த்தபடிக்கே சந்தோஷ குடும்பப்பாட்டை பாடிடவும் போவதில்லை தான் ! ஆனால் இந்த நொடியிலாவது பளுவினை ஏற்றாது கொஞ்சம் ப்ரீயா விடுவோமே என்று நினைத்தேன் !
"கென்யா" - 5 பாகத் தொகுப்பினை 2022-ன் சந்தாவுக்குள் நுழைக்க வழி கண்டுபிடித்து விட்டேன் ! And "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" ஆல்பத்தினை நடப்பாண்டின் தீபாவளித் தருணத்தில் புகுத்திட ஒரு சிறு வாய்ப்பும் கண்ணில்படுகிறது ! ஆனால் அதற்கு முன்பாய் நான் கொஞ்சம் துடைப்பக்கட்டைச் சாத்துக்கள் வாங்கிட வேண்டி வரலாம் :
நடப்பாண்டின் தீபாவளிக்கு தளபதியாரின் 2 பாக புது ஆல்பம் வெளிவந்திடவுள்ளதாய் நமது அட்டவணையில் அறிவித்திருந்தேன் ! Of course - அந்த விளம்பரப் பக்கத்திலேயே - "இந்தக் கதையின் இரண்டாம் பாகம் பிரெஞ்சில் உருவாவதைப் பொறுத்தே இந்த இதழ் அமைந்திடும்" என்றும் கொஞ்சம் முன்ஜாக்கிரதையோடு குறிப்பிட்டிருந்தேன் ! முதல் பாகம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னமே வெளியான நிலையில், அதன் க்ளைமாக்ஸ் பாகமானது பிரெஞ்சில் ஜூன் 2021-ல் வெளிவந்திட வேண்டியது அவர்கள் தந்திருந்த அட்டவணை ! And ஜுனில் வெளியாகிட வேண்டிய படைப்பெனில், ஏப்ரல் வாக்கிலேயே நமக்கு டிஜிட்டல் கோப்புகள் வந்து விடும் & நாம் பணிகளை ஆரம்பித்து, சாவகாசமாய் நடப்பாண்டின் தீபாவளி வேளைக்கு ரெடி செய்துவிடலாம் என்பதே எனது திட்டமிடல் ! ஆனால் எதுவுமே நிலையில்லா இந்த நடப்பு ஆண்டில், டைகரின் புதிய படைப்பாளிகளிடமிருந்து இதுவரைக்கும் எவ்விதத் தகவல்களும் இல்லை ! நமது பதிப்பகத்தினில் இது குறித்துக் கேட்டுள்ளேன் ; and அவர்களிடமிருந்தும் இன்னும் பதில் இல்லை ! So ஒருக்கால் அந்த க்ளைமாக்ஸ் பாகத்தின் உருவாக்கம் இன்னும் கூடுதல் நேரமெடுக்கும் எனில், நாம் ரூ.200 விலையில் அறிவித்துள்ள டைகரின் தீபாவளி ஸ்லாட் காலியாகிடும் ! Of course - "கொள்ளை போகுதுன்னு அறிவிப்பை ஏன் செஞ்சே ?" என்ற கேள்விகளோடு டைகர் ரசிகர்கள் அன்போடு நீட்டிடக்கூடிய துடைப்பங்கள் கண்ணில்பட்டிடும் என்பது புரிகிறது தான் ; ஆனால் நவம்பர் 2019-ல் முதல் பாகம் வெளியான நிலையில், 2021 மத்தியில் பாகம் 2 உறுதிபட வந்திடுமென்று அவர்கள் தந்திருந்த நம்பிக்கையிலேயே நான் "தல-தளபதி தீபாவளி" என்று திட்டமிட்டிருந்தேன் ! இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் நிலவரம் குறித்த தெளிவு கிட்டிவிட்டால் - what next ? என்று யோசிக்கலாம் ! டைகர் அங்கே ரெடியாகி விட்டால், மாற்றங்களின்றி அதுவே தீபாவளிக்கு மெருகூட்டிடும் ! மாறாக அது தாமதம் காணும் எனில், maybe அந்த ஸ்லாட்டினில் "ஒற்றை நொடி ஒன்பது தோட்டா" இதழினை நுழைத்திடலாம் தான் - ஆனால் ரூ.200 விலையிலான இடத்தினில் ரூ.600 விலையிலான இதழ் புகுந்திடும் பட்சத்தில், சந்தா நண்பர்கள் அனைவரையுமே மேற்கொண்டு ரூ.400 அனுப்பப் சொல்லி உசிரை வாங்க வேண்டி வரும் ! நடைமுறையில் அது எத்தனை தூரத்துக்குச் சாத்தியமென்றும் இந்த நொடியில் சொல்லத் தெரியவில்லை !
So இப்போதைக்கு மே 31 வரை "இரத்தப் படலம்" முன்பதிவுகளில் மட்டுமே கவனம் செலுத்துவது ; மேற்கொண்டு எதுவாயினும் ஜூன் முதல் தேதியில் பார்த்துக் கொள்ளலாமென்ற தீர்மானத்தில் உள்ளேன் ! "இரத்தப் படலம்" முன்பதிவுகள் ஸ்டெடியாய் முன்னேறி வருவதை இந்த நொடியில் குறிப்பிட்டாக வேண்டும் ! இன்றைய நிலவரப்படி முன்பதிவு 230-ஐத் தொட்டுள்ளது ! Considering the times we now live in, இதுவே நிச்சயம் ஒரு பெரிய விஷயம் தான் !
ஒருக்ககால் "டைகர் தீபாவளி மலர்" தள்ளிச் செல்ல நேரிடின், அதனிடத்தில் என்ன இட்டு நிரப்புவது ? என்ற யோசனையும் என்னுள் எழாதில்லை !
OPTION # 1 : மேலே சொன்னது போல - "ஓ.நொ.ஓ.தோ" ஒரு option ஆக இருந்திடலாம் ; ஆனால் மேற்கொண்டு பணம் அனுப்பச் சொல்ல அவசியமாகிடுவது ஒரு நெருடலாகத் தென்படுகிறது !
OPTION # 2 : வழக்கம் போல தீபாவளியினைத் தெறிக்க விட, 'தல' தாண்டவத்தை வீரியமாக்கிடலாம் ! தற்போதைய திட்டமிடலான TEX & TESHA ஸ்பெஷல் வண்ண இதழோடு, மேற்கொண்டு ரூ.200 பெறுமானமான டெக்ஸ் கதையினை b&w-ல் இணைத்து, ரூ.325 விலையில் ஒரே தீபாவளி மலராக்கிடலாம் !
OPTION # 3 : தோர்கல் ஆல்பங்களுக்கு நடப்புச் சந்தாவினில் ஒற்றை (சிங்கிள்) ஆல்பம் மட்டுமே தரப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் 2 சாகசங்களை ஒன்றிணைத்து - "தோர்கலோடு தீபாவளி" கொண்டாடிடலாம் ! ஆனால் தோர்கலின் appeal நம்மிடையே ஏகோபித்ததாக உள்ளதா ? என்ற கேள்விக்கு விடை சொல்ல தெரியவில்லை எனக்கு ! Maybe you can enlighten me on this folks ?
OPTION # 4 : அடுத்த ஆண்டிற்கான தேடல்களின் பொருட்டு எக்கச்சக்க புதுக் கதைகளை உருட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை ஏற்கனவே சொல்லியுள்ளேன் ! Maybe முற்றிலும் புதிதாயொரு டபுள் ஆல்பத்தை ரூ.200 விலைக்கு வெளியிட்டால் - like for like மாற்றமாக இருந்திடக்கூடும் !
OPTION # 5 : Given a choice - எனது தேர்வு இந்த ஆப்ஷன் # 5 ஆகத்தானிருக்கும் ; ஆனால் இது ஜாம்பவான்களோடு மோதும் சுயேச்சையாகவே இருந்திடும் என்பதும் புரிகிறது : இருப்பினும், முன்மொழிகிறேன் : ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல் ! (சுஸ்கி-விஸ்கி என்று பாய்ந்திட வேணாமே ப்ளீஸ் - அதற்கு நிறையவே அவகாசமும், திட்டமிடலும் தேவைப்படும் !)
OPTION # 6 : ஹி...ஹி...ஹி...ஒரு மாயாவி + ஆர்ச்சி இடம்பிடிக்கும் "இரும்பு பெசல் ? சும்மா அதிராதா ?
உங்களின் தேர்வுகள் எதுவாயிருப்பினும் OPT 1 ; OPT 2 என்ற ரீதியில் அவற்றின் நம்பரைப் போட்டுத் தெரிவிக்கக் கோருகிறேன் ! உங்கள் தேர்வுகளுக்கான காரணங்களையும் விளக்கிட முற்படின் - இன்னும் சூப்பர் ! அப்புறம் சிலபஸிலேயே இல்லாத பதில்களாய் - "மெபிஸ்டோ ஹார்ட்கவரில் போட்டா பிய்ச்சிக்கும் " ; "வைரஸ் X & ரோஜா மாளிகை ரகசியம்" போட்டா அத்துக்கும் " - என்ற ரீதியில் suggestions வேணாமே ப்ளீஸ் ?
எது எப்படியிருப்பினும், டைகர் ரசிகர்களிடம் நான் சொல்லிக்கொள்ள விழைவது இது ஒன்றே :
அடுத்த 60 நாட்களுக்குள் டைகரின் க்ளைமாக்ஸ் பாகம் பிரெஞ்சில் வெளியாகிடுமென்ற சேதி கிட்டினாலும் கூடப் போதும், தளபதியே நமது தீபாவளித் தேர்வாக இருந்திடுவார் ! பாகம் 1 செமையாய் இருப்பதாக நமது மொழிபெயர்ப்பாளர் ஏற்கனவே சர்டிபிகேட் தந்திருப்பதால், உங்களை போலவே இந்த இதழினைக் காண நானும் ஆவலாக உள்ளேன் ! So நான் இங்கு கேட்டுள்ள கேள்விகள் - தளபதியின் உருவாக்கம் இன்னும் லேட்டாகிடும் என்ற ரீதியில் பிரான்சிலிருந்து தகவல்கள் கிட்டிடும் பட்சத்தில், என்ன செய்வதென்று prepared ஆக இருந்திடும் பொருட்டு மட்டுமே ! So we'll still wait to know more.......and a big SORRY தளபதி ரசிகர்களிடம் ! அந்த க்ளைமாக்ஸ் பாகம் என்றைக்கு பிரெஞ்சில் தயாரானாலும் சரி, அங்கே வெளியாகும் சமயத்தை ஒட்டியே இங்கே நாம் வெளியிடவும் என்ன பல்டிக்கள் அவசியப்பட்டாலும் அடிக்கத் தயாராகயிருப்பேன் ! So "கவுத்திப்புட்டே ; ஏமாத்திப்புட்டே !" என்ற ரீதியில் துடைப்ப ஆலிங்கனங்களைத் தவிர்க்க இயன்றால், மனிடோவுக்கு நன்றி சொல்லுவேன் !
Bye all ..see you around ! Have a safe sunday !!
பி.கு. : இது நடப்புச் சந்தா சார்ந்த முக்கிய கேள்வியென்பதால், உங்களின் பதில்கள் எனக்கு ரொம்பவே அவசியமாகிடும் folks ! மௌன வாசகர்களாய் இதுநாள் வரை இருந்திருந்தால் கூட, இந்தவாட்டி, "OPT __" என்று பதிவிட மட்டுமாச்சும் நேரம் எடுத்துக் கொண்டால் மகிழ்வேன் !
its me!
ReplyDeleteவாழ்த்துக்கள்
Deleteசார் கார்ட்டூன்களுக்கேஎன் ஓட்டு.
DeleteOPT 5
சிக்பில்லும் மற்ற கதை வரிசைகளில் பல கதைகளையும் இணைத்துப் பரிமாறினால் தீபாவளிக்கு ரிலாக்ஸ்டாக கொண்டாட்டத்தில் ஈடுபட உதவும் என்பது என் தனிப்பட்ட கருத்து..
வெல் செட் ஜானி.
Deleteவந்துட்டேன்
ReplyDeleteசூப்பர் ஸ்டார்னா சும்மாவா...
Deleteஹா ஹா ஹா
DeleteHmm...
ReplyDeleteHee
Delete4
ReplyDelete4.25
Deleteஉள்ளேன் ஐயா.!!
ReplyDeleteஇருக்கோம் ஐயா..
Deleteஆப்ஷன்.6
ReplyDelete👍🏻
Delete💪💪
DeleteHi..
ReplyDelete///OPTION # 5 : Given a choice - எனது தேர்வு இந்த ஆப்ஷன் # 5 ஆகத்தானிருக்கும் ; ஆனால் இது ஜாம்பவான்களோடு மோதும் சுயேச்சையாகவே இருந்திடும் என்பதும் புரிகிறது : இருப்பினும், முன்மொழிகிறேன் : ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல் ! (சுஸ்கி-விஸ்கி என்று பாய்ந்திட வேணாமே ப்ளீஸ் - அதற்கு நிறையவே அவகாசமும், திட்டமிடலும் தேவைப்படும் !)//
ReplyDeleteஐய்ய்ய்யா....
ஆப்சன் 5யே தேர்தெடுங்க ஐய்ய்ய்யா..!!
🙏🙏
ReplyDeleteOption 6 'இரும்பு பெசல்'
ReplyDeleteOption 3
ReplyDeletewelcome..
Deleteவணக்கம்.
ReplyDeleteதீபாவளி என்றாலே டெக்ஸ்தானே சார்!
எனது சாய்ஸ் OPTION 2 சார்.
Option 2 or 5
ReplyDeleteஷ்ஷ்ஷப்பாடி.. நான் ஒருத்தன் மட்டும்தான் மழைத்தவளையாட்டம் கத்தவேண்டியிருக்குமோன்னு பயந்து கிடந்தேன்.!
Deleteடாங்ஸ் மாப்ளேய்.!
எப்படியும் கார்ட்டூன் வரப்போறதில்லை..!
Delete😂😂😂
டெக்ஸும் டேகுசாவும்தான் வரப்போறாங்க..!
இருந்தாலும் நம்ம கடமையை செஞ்சிட்டோமேனு ஒரு திருப்திதான்.!
😝😝😝😝
PFB-க்கு டெலிகேட் பொசிஷன் : வீட்டம்மாவுக்கோசரம் தோர்கலுக்கு 'ஜெ' போடறதா ? பசங்களுக்காக கார்ட்டூனுக்கா ? Confusion !!
Delete@KOK
Deleteதோர்கல் மட்டும் ஆப்சன்ல இல்லேன்னா கார்ட்டூன் ஸ்பெஷலுக்குத் தான் என் ஓட்டு சார்!
மாயாவி + ஆர்ச்சி இடம்பிடிக்கும் "இரும்பு பெசல் ? சும்மா அதிராதா ? //// அது எப்படி சார் உங்களால மட்டும் இந்த மாதிரி எல்லாம் பேரு வெக்க முடியுது? என்னவோ போங்க சார்.
ReplyDeleteஒருத்தருக்கு கையிலே இரும்பு சார் ; சட்டித்தலையனுக்கு உடம்பெல்லாம் இரும்பு - இது போதாதா பெயர் காரணத்துக்கு ?
DeleteThis comment has been removed by the author.
Deleteஇரும்பு பெசல் 3 பிரதிகளுக்கு பணம் எவ்வளவு அனுப்ப வேண்டும் சார்? ....இத கேட்டா நம்பள பைத்தியமுனு நெனப்பாங்க. என்ன உலகம் இது!
DeleteThis comment has been removed by the author.
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteOption:2: எனது விருப்பம்:
ReplyDeleteTEX & TESHA ஸ்பெஷல் வண்ண இதழோடு, மேற்கொண்டு ரூ.200 பெறுமானமான டெக்ஸ் கதையினை b&w-ல் இணைத்து, ரூ.325 விலையில் ஒரே தீபாவளி மலராக்கிடலாம் !
ஆப்சன் 6: இது தவிர மீதி எல்லா ஆப்சனும் எனக்கு ஓகே.
ReplyDeleteஇப்புடி பொத்தாம்பொதுவா சொன்னா எப்புடி.?
Deleteதேங்கா உடைச்சமாதிரி தோர்கல்தான் வேணும்னு சொல்றது.!
இல்லேன்னா போனாப்போகுதுன்னு கார்டூனுக்காச்சும் ஆதரவு குடுக்குறது.!
அதைவுட்டுபோட்டு..!
யெஸ் மக்களே : நோ பொத்தாம் பொது தேர்வுகள் ப்ளீஸ் !
Deleteதோர்கல் வேணும்னு தான் மனசு சொல்லுது. இருந்தாலும் குடோன்ல இருக்கற எண்ணிக்கை மொத குறையட்டும். அதனால விற்பனைக்கு என்றும் உத்தரவமான ஆப்சன் 2.
Deleteஓட்டு மாறிப் போச்சே!? ஹூம்.....!
Delete//ஆனால் தோர்கலின் appeal நம்மிடையே ஏகோபித்ததாக உள்ளதா ? என்ற கேள்விக்கு விடை சொல்ல தெரியவில்லை எனக்கு ! Maybe you can enlighten me on this folks ? //
Delete@Mahi இந்த பாயிண்டை கணக்கில் எடுக்கலையா நீங்க?
26th
ReplyDeleteஆப்சன்6ok
ReplyDeleteOption 2
ReplyDeleteவந்துட்டேன்😊
ReplyDeleteஎன்னது டைகர் தாக்கப்பட்டாரா?
ReplyDelete😂🤣
Delete🤣🤣🤣
DeleteOption One
ReplyDeleteOpt 2
ReplyDelete(தயவுசெய்து ஆப்ஷன் 5 வேண்டாம்)
OPT 2
ReplyDeleteசார் Option 1.5 இரண்டு பாகங்கள் மட்டும் 200 to 300 அளவில். மீதம் அடுத்த வருடம்.
ReplyDeleteமற்ற 2 to 6 க்கு நோ.
Opt 2 காரணம் தல. மட்டுமல்ல குண்டு புக் ரசிகர்களையும் திருப்தி படுத்தலாம். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteOPT 1
ReplyDeleteOPT : - 6
ReplyDeleteஇந்த Option க்கு எல்லாம் விளக்கம் தேவையா Sir, மாயாவியும் ஆர்ச்சியும் சேர்ந்தா சும்மா Arnold and stallone சேர்ந்த மாதிரி, Safe option, confirmed hit, நம்ம வாசகர்களும் காதுல பூசுத்தல்னு வெளிய சொல்லிட்டு ரெண்டு மூணு Books வாங்குவாங்க 😄😄😄
" இருப்பினும், முன்மொழிகிறேன் : ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல் ! (சுஸ்கி-விஸ்கி என்று பாய்ந்திட வேணாமே ப்ளீஸ் - அதற்கு நிறையவே அவகாசமும், திட்டமிடலும் தேவைப்படும் !) "
😄😄😄😄😄 எங்க Mind voice அப்படியே Catch பண்ணிடுறீங்க Sir
ஒவ்வொரு முட்டுச்சந்தா போயி, மொத்து வாங்குற வேளைகளிலே உங்க மைண்ட்வாய்ஸ்களை கொஞ்சமாச்சும் படிச்சுக்காட்டிப் போனா எப்புடி சார் ?
Delete// இன்னும் 2 சாகசங்களை ஒன்றிணைத்து - "தோர்கலோடு தீபாவளி" கொண்டாடிடலாம் ! //
ReplyDeleteதோர்கல் ஓகேதான் சார்,என்ன கெட்டி அட்டையில் குறைந்தபட்சம் 4 பாக சாகஸங்களாய் இருந்தால் மகிழ்ச்சி...
// வழக்கம் போல தீபாவளியினைத் தெறிக்க விட, 'தல' தாண்டவத்தை வீரியமாக்கிடலாம் // இது கூட நல்ல யோசனைதான் சார்...
ReplyDeleteஹிஹி வழக்கம் போல முதல்ல தென்னமரம். இப்ப அடுத்தது பன மரம். Opt 4 //முற்றிலும் புதியதொரு டபுள் ஆல்பத்தைrs 200விலைக்கு வெளியிட்டால் like for likeமுற்றிலும் புதியதொரு மாற்றமாக இருக்கக்கூடும்//கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteOPT 5
ReplyDeleteமு பாபு
GANGAVALLI
SALEM
முதலில் ஒரு பூங்கொத்து எனக்கு நானே கொடுத்துக் கொள்கிறேன். ( ஆசை பலி ப்பது போல் உள்ளது )...
ReplyDelete1. நீங்கள் அறிவித்தபோது மனது கஷ்டப்பட்டது டைகரின் தளபதி தீபாவளி. இப்போது தள்ளி போவதில் மிகுந்த சந்தோஷம். காரணம் 2022ல் வரப்போகும் முத்து 50ஆவது ஆண்டு மலரில் இந்த கதை வந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசை. லார்கோ தானில்லை தளபதியாக இருக்கட்டுமே என்ற நப்பாசை.. அது பலிக்கும் போல் தெரிகிறது
ஐ அம் ஹாப்பி அண்ணாச்சி.
2. 110 பக்கத்தில் டெக்ஸ் கதையை வெளியிட்டு தல தீபாவளி கொண்டாட உங்களுக்கு எப்படி மனசு வந்ததோ தெரியவில்லை. தல தீபாவளி ஒத்த வெடி போல் சுருங்கியதில் மிகுந்த வேதனை அடைந்தேன். இப்போது கொடுத்த option ரெண்டில் டெக்ஸின் ஒரு குண்டு வெடி வருகிறது என்றால்.,..
டபுள் ஹாப்பி அண்ணாச்சி...
.. இரும்பு ஸ்பெஷல் கார்ட்டூன் ஸ்பெஷல் வலை ஸ்பெஷல் இன்னும் எவ்வளவு ஸ்பெஷல் இருந்தாலும் எல்லோரையும் கொஞ்சம் ஓரமாக விளையாட வைத்துவிட்டு தீபாவளி தல குண்டு ஸ்பெஷலாக ஒவ்வொரு வருடமும் உங்களின் பெயரை பிள்ளைக்கு பெண் பார்க்கும் படலம் வந்தாலும் ( உங்களின் டயலாக்) உறுதிமொழி தாருங்கள்..
இதுபோன்ற முடிவு எடுத்த உங்களுக்கு ஒரு மிகப்பெரிய பூங்கொத்து 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சாரே...இங்கு நான் தந்திருப்பது options ! நீங்கள் அனைவருமாய்ச் சேர்ந்து செய்திடும் தேர்வே தீர்மானமாகிடும் - அது எந்த ஆப்ஷனாக இருந்தாலுமே !
Deleteஆப்ஷன் 6 ஐ தவிர எந்த ஆப்ஷன் என்றாலும் எனக்கு ஓகே...
ReplyDeleteதல. கரீக்டா ஒரே ஒரு ஆப்சனா செலக்ட் பண்ணுங்க. இல்லன்னா செல்லாத ஓட்டாயிடும்.
Deleteதலீவர் நாட்டுக்கு நடக்கும் பொதுத்தேர்தல்லயே இப்படித்தான் ஓட்டுப் போடுவாராம்.!
Deleteஇங்க மட்டும் மாத்திக்கச்சொன்னா அவரை அவமானப் படுத்துறமாதிரி ஆயிடாதா.?!
எனில்...
Deleteஆப்ஷன் 2 ஆப்ஷன் 2 ஆப்ரேஷன் 2
///
Deleteஆப்ஷன் 2 ஆப்ஷன் 2 ஆப்ரேஷன் 2///
அந்த ஆப்ரேசன்லாம் ரெண்டுதடவை பண்ணமாட்டாங்க தலைவரே.!
ஒருதபா அஞ்சிகிலோ அரிசி வாங்கிட்டிங்கன்னா அவ்ளோதான்.!
😃😃😃😄😆
Deleteபேரப்பிள்ளை க்கு
ReplyDeleteடைகர் கதை வெளிவரத் தாமதமானால் Option -2 வான டெக்ஸ் ஸ்பெஷல் புக்காக் போட்டுத் தாக்கலாம் சார்! சென்ற வருடம் வெளிவந்த தீபாவளி ஸ்பெஷல் புக்கின் விற்பனையே உங்களுக்கு சேதி சொல்லும்! தீபாவளி என்றாலே வாசகர்கள் குண்டு புக்கு அதுவும் டெக்ஸ் புத்தகம் என்றாலே மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் இருப்பார்களே! தீபாவளிக்கு வேறு எந்த நாயகர்கள் கதை வந்தாலும் டெக்ஸின் விற்பனையை தொடுவது சாத்தியமில்லா இலக்கே! அதனால் டெக்ஸே நல்ல தேர்வாக இருப்பார் என்பதே எனது தேர்வு மற்றது உங்கள் கைகளில் 😊
ReplyDeleteஅதே +1234566799999999999
Deleteமிக அழகாக சொன்னீர்கள் நண்பரே எனது ஆசையும் அதுவே. தீபாவளி என்றால் தல தல என்றால் தீபாவளி குண்டு புக் ❤❤❤❤
Deleteஇன்னமும் நம்மாட்களை உலுக்கியெடுக்கிறார்கள் சார் - "அதுக்குள்ளாறவா தீபாவளி மலர் காலின்னு ? "
Deleteபிறகு ஏன் சார் குண்டு புக்கை தவிர்க்கிறார்கள் 😭😭😭😭
Deleteஇன்னமும் நம்மாட்களை உலுக்கியெடுக்கிறார்கள் சார் - "அதுக்குள்ளாறவா தீபாவளி மலர் காலின்னு ? "/// சார் ஒரு டவுட்டு வாசகர்களுக்கும் ஏமாற்றம் இருக்காது, கம்பெனிக்கும் நல்லது என்ற நிலையில் உத்திரவாதம் தரும் தல பெசல் புக்கை மட்டும் கூடுதலாக அச்சடிப்பதில் என்ன சிக்கல்?
DeleteOPT:4. மாற்றம் மட்டுமே மாறாதது. ஒரு புதிய கதை டபுள் ஆல்பத்தில் வரும் எனில், அதுவும் டெக்ஸ்,தேஷா & கோ.வுடன் எனில், தீபாவளிக்கு டபுள் சவுண்டு வெடி பட்டையக் கிளப்பிடாதா என்ன?
ReplyDeleteஆனால் தல, தளபதி இருவருடனான தீபாவளி கொண்டாட்டத்திற்கே முன்னுரிமை.
தளபதி வந்திடும் பட்சத்தில் no மாற்றங்கள் to அட்டவணை சார் !
Deleteநன்றிகள் சார். அட்டவணையில் இல்லாத ஒரு புதிய கதையை களமிறக்க ஒரு வாய்ப்பு, தற்செயலாக ஏதோ ஒருவகையில் கிடைக்கும்போது, அதை தவறவிடவேண்டாமே என்பதே என் எண்ணம்.
Delete// ஆனால் மேற்கொண்டு பணம் அனுப்பச் சொல்ல அவசியமாகிடுவது ஒரு நெருடலாகத் தென்படுகிறது ! //
ReplyDeleteஇது கொஞ்சம் ரிஸ்க் பிடிச்ச வேலை சார்...
OPT 2 100 % ஓகே...
ReplyDeleteஅதே நேரத்தில் OPT 3 ற்கு வாய்ப்பு கிடைத்தாலும் மகிழ்ச்சியே...
DeleteOPTION # 2 : வழக்கம் போல தீபாவளியினைத் தெறிக்க விட, 'தல' தாண்டவத்தை வீரியமாக்கிடலாம் ! தற்போதைய திட்டமிடலான TEX & TESHA ஸ்பெஷல் வண்ண இதழோடு, மேற்கொண்டு ரூ.200 பெறுமானமான டெக்ஸ் கதையினை b&w-ல் இணைத்து, ரூ.325 விலையில் ஒரே தீபாவளி மலராக்கிடலாம்
ReplyDelete👍👍👍👍
DeleteOption Number நான்கு
ReplyDeleteபழைய மாவையே அரைக்காம இந்த கட்ட காலத்துல புதுசா (அழுவாச்சி காவியம் மட்டும் வேணவே வேண்டாம்....!!!) ஏதாவது இறக்கி வுடுங்க சார்...
தங்கத் தலைவன பாக்கலாம்ன்னு ஆசையா இருக்கோம்... தலை இல்லைன்னா புதுசுதான் வேணும்...
அடுத்த சில வருஷங்களுக்காச்சும் no அழுகாச்சி காவியங்கள் சார் ! ஏற்கனவே உள்ள சூழலில் மிடிலே !
Deleteஆக..
ReplyDeleteடெக்ஸும் டேக்ஸாவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.!
விற்பனைக்கு உத்திரவாதம் என்பதால் எல்லோருக்கும் மகிழ்ச்சியே.! :-)
பஞ்சாயத்தை கலைச்சு, ஜமுக்காலத்தையும் முடிச்சாச்சு போலிருக்குதே !!
Deleteமுடிஞ்சிபோன கல்யாணத்துக்கு மோளம் அடிச்சி என்ன ஆகப்போகுது சார்..😝😝😝.!!
Deleteதல வில்லர்தானே வரப்போறார்.!
தீபாவளின்னாலே கார்சன் அண்ட் கோ வோடதான் கடந்த பல வருடங்களாக பழகிட்டோமே.! :-)
OPTION # 2 : அது என்னமோ தெரியல OPTION # 2வ தவிர வேறு எதையும் யோசிக்க முடியல :-)
ReplyDelete👌👌👌👌👌🌹🌹🌹🌹
DeleteOpt 2 sir
ReplyDelete👌👌👌🌹🌹🌹🌹
Deleteதோர்கலுக்கு போட ஆசைதான்.
ReplyDeleteஆனா..
விற்பனைனு வரும் போது டெக்ஸுக்கு போடுவதே பெஸ்ட்.
எனவே OPTION 2
கரும்பு தின்ன கூலியா கண்டிப்பா 😍😍😍
ReplyDeleteOpt 2 👍🏼
ஆனாக்கா தளபதி கண்டிப்பா வர வாய்ப்பிருந்தாக்கா
நவம்பர் அல்லது டிசம்பர் மாத புத்தகங்களில் ஒன்றை முன்னுக்கு கொண்டுவந்திட்டு தளபதியை டிசம்பருக்கு மாத்திடுங்கோ சார் 🙏🏼🙏🏼🙏🏼
.
இரும்பு ஸ்பெசல் எனது விருப்பம்.
ReplyDelete(எனக்கும் டெக்ஸை பிடிக்கும். தொகை 125/ அதிகமாக இருப்தால் தவிர்க்கிறேன்)
புரியவில்லை நண்பரே
Deleteஎனக்கும் புரியலை சார் ! அட்டவணையினை இன்னொருவாட்டி பாருங்கள் ஜெகன் சார் : டெக்சின் T & T ஸ்பெஷல் இதழானது ரூ.125 விலைக்கு வரவுள்ளது ! டைகர் இதழ் ரூ.200 விலையினில் வரவுள்ளதாக அறிவிப்பும் உள்ளது ! இப்போது Option 2 -ல் நான் முன்மொழிவது இரு தொகையையும் ஒன்றிணைத்து ரூ.325 க்கு ஒரே டெக்ஸ் ஸ்பெஷல் இதழாய் வெளியிடுவதை !
Deleteஒற்றை நொடி ஒன்பது தோட்டா நீங்கலாய், வேறெந்த Option களுக்கும் கூடுதலாய்ப் பணம் அனுப்பிட அவசியமாகிடாது !
Option # 2
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபேரிடர் காலங்களில் புதிய செலவுகள் கஷ்டமானதாய் இருக்கலாம்..விரலுக்கேத்த வீக்கமாய் என் ஆப்சன்-6
ReplyDeleteபிழையான புரிதல் ! Option 1 நீங்கலாய் பாக்கி சகல ஆப்ஷன்களுக்கும் கூடுதலாய் அரையணா கூட அனுப்ப வேண்டியிராது !
DeleteOpt1 or opt6
ReplyDelete71
ReplyDeleteOPT#2 :)
ReplyDeleteOPTION # 3: நடப்புச் சந்தாவினில் ஒற்றை (சிங்கிள்) ஆல்பம் மட்டுமே தரப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் 2 சாகசங்களை ஒன்றிணைத்து - "தோர்கலோடு தீபாவளி" கொண்டாடிடலாம் ...
ReplyDeleteஅப்படி சொல்லு தம்பி
DeleteHope .. தல - தளபதி diwali stays as per schedule ..
Deleteஅதேதான்! தோர்கலோடு தீபாவளி!!
DeleteOpt 4
ReplyDeleteOpt 5
Opt 6
Order of preference.. if opt 4 is serious type then opt 5 first choice
மண்டையை பிறாண்டப் போகிறார்கள் சார் - வாக்கெடுப்பினை டோட்டல் போடும் வேளையினில் !! ஒற்றை ஆப்ஷனை குறிப்பிட்டால் அனைவருக்கும் சுலபமாகிடுமே !
Deleteமண்டைய பிராண்ட அவசியமே இல்லை சார் இவையெல்லாம் செல்லாத ஓட்டுக்கள்....
DeleteEdi Sir. Opt 5
DeleteMy choice option 3 if that's not possible then option 4
ReplyDeleteஒற்றை option என்றால் option 3 மட்டுமே
Deleteஅருமை KS!
Deleteஆப்சன் 1 : மேற்கொண்டு பணம் அனுப்புவதில் உள்ள சிக்கல்.. ( சில வருடங்களுக்கு முன்பு தீபாவளிக்கு இரவே இருளே கொல்லாதே வந்தது. ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட் என்ற கதையாக மாறியது அந்த தீபாவளி. தீபாவளி என்றாலே இனிப்பு வெடி புது உடை என்பதோடு டெக்ஸின் குண்டு புக் என்றும் மாறிவிட்டது. நம்மைப் பொறுத்தவரையில்...
ReplyDeleteஆப்சன் 3 : தோர்க லை பொறுத்தவரை 4 அல்லது ஐந்தாக சேர்த்து தொகுப்பாக வரும்போது மட்டுமே சுக படுகிறது.
ஆப்ஷன் 4 : தீபாவளிக்கு வேண்டாமே புது ஆல்பம். ( ஆப்ஷன் ஒன்னில் கூறியதுதான் )..
ஆப்ஷன் 5 : சுசுகி அண்ட் விஸ்கி ஆக இருந்தால் ஒருவேளை எல்லோரும் இதற்கு ஓட்டுப்போட்டு இருப்போமோ? யார் அறிவார். மற்றபடிக்கு தீபாவளிக்கு ஏற்ற தலம் அல்ல இது....
ஆப்ஷன் 6 : இரும்பு ஸ்பெஷல் இதனை ஏதேனும் புக் பேரில் களமிறங்கினால் நன்றாக இருக்கும்.
""" ஏதோ தீபாவளி மலர் புத்தகம் வந்து இருக்காமலே மக்கா?அது என்ன விலை? பழைய பாக்கிலே பாதியை இன்னைக்கே போட்டு விடுறேன்.. அந்தப் புது புத்தகத்தை போட்டு விட முடியுமா??? என்ற கோரிக்கைகள்!. சத்தியமாய் டெக்ஸ் என்ற அந்த அசாத்தியனை தாண்டி வேற யாருக்கும் இத்தகைய ஜாலங்களை செய்திடும் ஆற்றல்கள் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை!!!!
இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா... ஆசிரியரே ஆப்ஷன் ரெண்டுக்கு.
Option 2
Option 2
Option 2🙏🙏🙏🙏🙏🙏🙏
Option 2 Deepavali with Tex
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதங்களின் இவ்வருட தீபாவளி அட்டவணை மாறாது sir.. எப்படியும் எங்கள் தளபதி அங்கு ரெடியாகி விடுவார். So.. தீபாவளிக்கு இம்முறை நம்ம தளபதி டைகரோடு கொண்டாடுறோம்.
ReplyDelete('நம்பிக்கை' அதானே எல்லாம். 🙂)
எல்லாருக்கும் சலாம் வைப்பது சின்னமனூர் சரவணர்ங்க....
ReplyDeleteOPT #3
ReplyDeleteஅப்படி சொல்லு கண்ணா
Delete_/\_
Deleteநெஜம்மா இது ப்ரனேஷோட ஓட்டு..!? நாங்க நம்பணும்..!?
Delete18 வயசு ஆகணும் பிரனேஷ் கண்ணு...
Deleteடெக்ஸ்க்கு போடறதா இருந்தா கண்டுக்க மாட்டோம்.😉
Pranesh@ சூப்பர்!!
DeleteOPTION # 2 : வழக்கம் போல தீபாவளியினைத் தெறிக்க விட, 'தல' தாண்டவத்தை வீரியமாக்கிடலாம் ! தற்போதைய திட்டமிடலான TEX & TESHA ஸ்பெஷல் வண்ண இதழோடு, மேற்கொண்டு ரூ.200 பெறுமானமான டெக்ஸ் கதையினை b&w-ல் இணைத்து, ரூ.325 விலையில் ஒரே தீபாவளி மலராக்கிடலாம் ! //எனக்கு தல தீபாவளி மட்டுமே போதும்..அதுவே எப்போதும் சிறப்பாக இருக்கும். ஹி.ஹி.
ReplyDeleteExcept OPTION 6:
ReplyDeleteபிரிட்டிஷ் காமிக்ஸ்கள் தற்போது மிகவும் போரடிக்கின்றன. அந்.....த காலத்தில் ஸ்பைடரின் தீவித ரசிகன் நான். இப்போது அண்ணனின் சாகஸங்களை படிக்கும்போது தூக்கம் வந்துவிடுகிறது.
Dear Editor,
ReplyDeleteMy choice is Tex book
2 stories
We are used 2 Tex Diwali
Regards
Arvind
Option - 5
ReplyDeleteCartoon special
டைகர் கதை வெளிவரத் தாமதமானால் Option-3
ReplyDeleteஅட்டகாசமான தேர்வு சார்!
DeleteDear sir, my choice is option 2. Tex only
ReplyDeleteOPT 2
ReplyDeleteசும்மா, கும்ம்ம்ம்ம்...ணங்ங்ங்ங்ங்ங்ங்...சத்த்த்த்த்துனே ஓட்டிங் டேபிளே அதிரும்படி.....,
ReplyDelete"""""OPT:2""""""
For டெக்ஸ் குண்ண்ட்ட்டு புக்!!!
இதற்கு விளக்கம் தேவையா என்ன???
டெக்ஸ் வண்ண இதழோடு, கருப்பு+வெள்ளை இதழும் சேர்த்து, அதிரடி தீபாவளி மலரோட,அந்த இரும்பு வைரங்கள் இரண்டு பேரும் சேர்ந்து,நம்ப தலையோடு வரட்டும்,ஆசானே,விற்பனையில் சோடை போகாத இவர்கள் வந்தால்,சந்தோஷமே, மற்றவை தங்கள் முடிவே,ஆசானே
ReplyDeleteவாக்கு எண்ணிக்கைக்கு வேலையா இல்லாதபடி தல லீடிங்ல இருக்காரு...
ReplyDeleteதீபாவளிமலர்னா தலங்கிறது காமிக்ஸ் மந்திரம்.😍😍😍
இந்த வாட்டி என்ன வேண்டிய வேலை இல்லைன்னு நினைக்கிறேன் தலைவருக்கு...❤❤❤.
Deleteஒருவேளை.. எதை அழுத்தினாலும் அதுக்கே ஓட்டுவிழுதோ என்னமோ.!:-)
Deleteஓடீர்ர்ர்ரா கைப்புள்ள......
OPT : 6
ReplyDeleteOPT
ReplyDelete5.30
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநித்தமும் உந்தன் நிழலில் :- SODA
Deleteவசனங்கள் ஒருபுறம் கதைசொல்லும் வேளையில் மறுபுறம் சித்திரங்களும் தங்கள் பங்கிற்கு கதையை சொல்கின்றன.!
சித்திரங்களில் பொதிந்திருக்கும் சிறுசிறு டீட்டெய்ல்ஸ் கதையின் போக்கை புரியவைக்கினன்றன.!
சில இடங்களிவ் கதைக்கு முக்கியத்துவம் இல்லாத சிறு நிகழ்வுகளையும் கூடுதலாக சொல்லிச் செல்கின்றன.!
உதாரணத்திற்கு ஒன்று..
பேருந்தில் கொள்ளையடித்துவிட்டு இறங்கப்போகும் நண்பனுக்காக காத்திருக்கும் போக்கிரி.. அவன் மிகவும் நேசிக்கும் அவனுடைய பளபள காரின்மீது சிறுபூச்சி அமர்வதையே பொறுத்துக்கொள்ள முடியாமல் துடையோ துடையேன்று துடைக்கிறான்.. ஆனால் அடுத்த நொடி.. பஸ் அவனுடய காரின் பாதிப்பகுதியை இடித்து நொறுக்கிவிட்டு சென்றுவிடுகிறது..! இது கதைக்கு சம்மந்தமில்லாத சித்திர விளக்கம்.!
சோடாவை கொல்லவரும் நபர் ரயிலில் அடிபட்டு இறப்பது கதைக்கு சம்மந்தப்படும் சித்திர விளக்கம்.! இத்த சம்பவத்தில் ரயிலையே காட்டாமல் ரயிலில் அடிபடுவதை புரியவைத்திருக்கும் சித்திரஜாலம்.!
மேற்கண்ட இரண்டு சம்பவங்களிலும் வசனம் இருக்காது.!
SODA. வித்தியாசமான பாணி..! எனக்குப் பிடித்திருக்கிறது.!
ரேட்டிங் 10/10
எதுவும் சரியில்லை என்றால், ஆப்ஷன்,2"தல குண்டு புக்கா வரட்டும், வரவேற்கிறேன்🌹🌹🌹🌹🌹🌹
ReplyDeleteOption 2
ReplyDeleteOPTION 3
ReplyDeleteதீபாவளி என்றாலே டெக்ஸ் ஸ்பெஷல் என்று மனதில் செட் ஆகிவிட்டது.
ReplyDeleteஎனவே டெக்ஸ் கே எனது vote
இன்னும்பதிவிடா நண்பர்களே. OPT 5 கார்ட்டூன் ஸ்பெஷலுக்கு என் ஆதரவை தெரிவித்திருக்கிறேன்.. தாங்கள் அனைவரும் மௌனம் கலைத்து உங்கள் விருப்பங்களை சொல்லி சிங்கத்துக்கு நிலவரம் தெரிய உதவலாமே ப்ளீஸ்..
ReplyDeleteதிருவண்ணாமலையிலிருந்து ஜானி சின்னப்பன்..
காக்கிக்குள் ஈரம்..😍😍
DeleteOpt 2
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteஎனது சாய்ஸ் Option 3, தோர்கலோடு தீபாவளி!
அடுத்த 2 ஆல்பங்கள் சேர்த்து மொத்தம் 3 ஆல்பங்கள்!
அருமை!!
OPT 2
ReplyDeleteOPT 2
ReplyDeleteOption 3 Thorgal
ReplyDelete155th
ReplyDeleteIf possible Thorgal hardbind book with 3 or 4 albums
ReplyDelete// OPTION # 5 : Given a choice - எனது தேர்வு இந்த ஆப்ஷன் # 5 ஆகத்தானிருக்கும் ; ஆனால் இது ஜாம்பவான்களோடு மோதும் சுயேச்சையாகவே இருந்திடும் என்பதும் புரிகிறது : இருப்பினும், முன்மொழிகிறேன் : ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல் ! //
ReplyDeleteகார்டூன் ஸ்பெஷல் இந்த தீபாவளிக்கு கிடைத்தால் இதனை விட இனிமையான காமிக்ஸ் தீபாவளி வேறு எதுவும் இருக்காது.
டெக்ஸ் ஏற்கனவே தீபாவளி திட்டமிடலில் உள்ளார் என்பதால் மற்றும் ஒரு டெக்ஸ் வேண்டாமே.
இந்த முறையாவது கார்டூன் ஸ்பெஷஸை வர விடுங்கள் நண்பர்களே. கார்டூனை வளர விடுங்கள். ப்ளீஸ் 🙏🙏🙏🙏
///இந்த முறையாவது கார்டூன் ஸ்பெஷஸை வர விடுங்கள் நண்பர்களே. கார்டூனை வளர விடுங்கள். ப்ளீஸ் 🙏🙏🙏🙏 ///
Deleteஅதெல்லாம் முடியாது.!
இருக்குற ரெண்டு மூணு கார்ட்டூன் சீரீஸையும் சோலிய முடிக்காம ஓயமாட்டோம்.!
வாழ்க கும் ணங் சத்
This comment has been removed by the author.
Deleteவிஜயன் சார், இது போன்ற சாய்ஸ் கேள்விகளில் இனி டெக்ஸை சேர்க்க வேண்டாமே. இவரை இதுபோன்ற கேள்விகளில் தவிர்த்தால் புதிய கதை களங்கள் அல்லது பிற கதாநாயகர்கள்/கதாநாயகிகள் கதைகளை தரிசிக்க முடியும். ப்ளீஸ்.
Deleteடெக்ஸ் நல்லவர் வல்லவர் நமது விற்பனையில் முதன்மையானவர் விற்பனையில் கில்லி என்பதை ஒத்துக்கொள்கிறேன். அவருக்கு வேண்டும் என்றால் அடுத்த வருடம் முதல் டெக்ஸின் தனி தடத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு/இரு டெக்ஸ் கதைகளை வெளியிடுங்களேன் ப்ளீஸ்.
மீ 160
ReplyDeleteWeightஆ.?
Deleteஒய்.. அப்ப நீர் 161 கிலோவா 🤣
Deleteஎன் உள்ளத்துல இருக்குற அன்பு கருணை இரக்கம் ஈகை பாசம் நேசம் இதெல்லாம் சேர்த்தா அவ்ளோ வரும் அனு.!
DeleteThis comment has been removed by the author.
Deleteஎன் உள்ளத்துல இருக்குற அன்பு கருணை இரக்கம் ஈகை பாசம் நேசம் இதெல்லாம் சேர்த்தா அவ்ளோ வரும் அனு.!///
Deleteஅதெல்லாம் மொத்தமா ஒரு கிலோ. கொழுப்பு 150 கிலோ. தலைக்கு கறுப்பு மை்10 கிலோ. ஆக மொத்தம் 161 கிலோ.
Option 2
ReplyDeleteOPT 5
ReplyDeleteOPT 6
ஒரு தலைவனின் கதை : முதல் இரண்டு பாகங்களை முடித்து விட்டேன். படங்கள் வண்ணத்தில் நன்றாக உள்ளது ஆனால் கதையின் மாந்தர்களை கொஞ்சம் நன்றாக வரைந்து இருந்தால் சித்திரங்களை இன்னும் கொஞ்சம் ரசிக்க செய்து இருக்கும். அட்டைப்படம் உண்மையில் டாப் கிளாஸ்.
ReplyDeleteகதை தலைப்பே சொல்லி விடுகிறதே... அந்த தலைவர் யார் அவர் தலைவராக உயர்ந்தது எப்படி என ஒரு டாக்குமெண்டரி ஸ்டைலில் சொல்லி இருக்கிறார்கள். அதர பழசான கதை பெரிய திருப்பங்களோ சுவாரசியமான விஷயங்களோ இல்லை இதுவரை படித்த வரையில்.
இரண்டு பாகங்களை படித்து முடித்த வரை புரிந்து கொண்ட விஷயம் கதையில் சொல்லி கொள்ளும் படி எதுவும் இல்லை.
சாரி தலைவரே.
நாளைக்கு ஜெரேனிமோவைத்தான் படிக்கலாம்னு இருந்தேன்..!
Deleteஇப்படி சொல்றிங்களே பரணி.!
சரி.. ம்ப்வ்ர்த்த்தொத் கலக்கிய கதையையாச்சும் படிக்கிறேன்.!
Opt 2
ReplyDeleteOpt 2 - Tex
ReplyDeleteடேக்ஸ் வித் தீபாவளி.
ReplyDeleteஆண்டு மலர் லக்கி ஸ்பெஷல்.
Opt 2 and opt3
ReplyDeleteOpt 2 and opt3
ReplyDeleteOpt 2 and opt3
ReplyDeleteOpt 4
ReplyDeleteதோர்கல் இந்த வருடம் வந்து விட்டது. அதுவும் குண்டு ஹார்ட் பௌன்டில் எனவே நோ தடுமாற்றம்.
ReplyDeleteகார்டூன் தான் வேண்டும்.
Option2
ReplyDeleteதீபாவளின்னாலே டெக்ஸ்தானே?
ReplyDeleteOption 2
Option 6
ReplyDeleteOpt 3 or opt 4
ReplyDeleteதீபாவளி என்றாலே என் நினைவுக்கு வருவது நம்ம தல டெக்ஸ் தான்.சும்மா விற்பனையிலே தெறிக்கவிடுவாப்ல.எனவே என் தேர்வு OPTION 2 தான் ஆசானே.
ReplyDeleteoption 2 சார்.. விற்பனையும் பாதிக்காது குடோனும் ரொம்பாது...இந்த 2020 வருடதீபாவளியமலர் உடனடியாக ஸ்டாக் அவுட் ஆகி கையகடிக்காம இருக்கும் உங்களுக்கும் எங்களுக்கும்...
ReplyDeleteOPTION 2. 90%
ReplyDeleteOPTION 6. 10%
தளபதி இன் கிளைமாக்ஸ் பாகம் வந்தால் மகிழ்ச்சி.. இல்லாவிடில் OPT # 1 தவறினால் OPT 5 சார்!
ReplyDeleteஏப்ரல் மாத இதழ்கள் கரங்களில் தவழ்கின்றன சார். காரணமான தங்களுக்கும், டீம் இற்கும் நன்றிகள் கோடி.
ReplyDeleteஆப்ஷன் 5 கார்ட்டூன் ஸ்பெஷல்
ReplyDeleteபுத்தி: விற்குமா? வரவேற்பு இருக்குமா?
மனசு: முழு வண்ணத்தில் கார்ட்டூன் கதைகள் வந்தா எப்படி இருக்கும்.. தீபாவளியை கொண்டாடிலாம் போங்க...
இந்த கடின நேரத்தில் மனதிற்கு அமைதியளிக்கும், மகிழ்ச்சியளிக்கும் கார்ட்டூனுக்கே எனது ஓட்டு..
// இந்த கடின நேரத்தில் மனதிற்கு அமைதியளிக்கும், மகிழ்ச்சியளிக்கும் கார்ட்டூனுக்கே எனது ஓட்டு. //
Delete+1
Opt _ 2
ReplyDeleteOpt 5
ReplyDeleteOpt 2
ReplyDeleteவாசகர்கள் தங்களுக்கு என்ன வேணுங்கறதுல தெளிவா இருக்காங்க. மாயாவியின்கொரில்லா சாம்ராஜ்யத்துக்கு மாங்கு மாங்குன்னு விழுந்த ஓட்டெல்லாம் இன்னிக்கு தலக்கு விழுந்திருக்கு. கார்ட்டூனிலோ அல்லது வேறு ஆப்சன்களிலோ இது தான் கதை என்று தெரிந்திருந்தால் இது தான் முடிவாக இருந்திருக்குமா என்று தெரியாது.
ReplyDeleteGeneric டெக்ஸின் முன் எந்த ஒரு ஜெனரிக் கதைக்கும் இது தான் நிலை போலும். ஒரு வேளை ஆப்சன் ஆறில் விண்வெளிப் பிசாசு வண்ணத்தில் என்று இருந்திருந்தால் முடிவு எப்படி இருந்திருக்குமோ?
டைகரின் இதழ் வந்து விடும் என 100% நம்பிக்கை இருக்கு ஐயா!
ReplyDeleteஇல்லையென்றால் எனது தேர்வு Option 6 for 200% 😎😇 (இதில் ஒரே ஒரு வேண்டுகோள், ஏற்கனவே௱ எந்த வகையிலாவது மறுபதிப்பாக வந்த கதைகளை போட வேண்டாம், ப்ளீஸ்)
எனது ஒட்டு - Options - 1 & 2... maybe 4
ReplyDeleteOption 1 - இது சூப்பர் கதை என்பதால் கண்டிப்பாக ஹிட் ஆகும்.
Option 2 - 'தல' தீபாவளி. 'nuf said!
Option 4 - புதிய கதை ரொம்ப நல்ல ஒன்றாக இருப்பின் பார்க்கலாம் சார். But 'ஒ.நொ.ஒ.தோ' இருக்க ஏன் சிரமப்படனும்.
Option 3 - என்னைப் போன்ற ஒரு சிலர் தோர்கல் போன்ற fantasy விரும்பாதவர்களாக இருக்கலாம்
Option 5 - Cartoon படிப்பேன் என்றாலும் தீபாவளி ஸ்பெஷல்க்கு அது வேண்டாமே
Option 6 - கலர்புல் தீபாவளி வேண்டும் சார். பழைய கதைகள் nostalgia பிரியர்களுக்காக வெளியிட்டால் என்னைப் போன்ற புதியவர்கள் எங்கே போவது.
கோரொனா பற்றிய நீங்கள் எழுதிய ஒவ்வொன்றும் மிகச்சரியே.
ReplyDeleteகடந்த மாதம் இதே நேரத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்த போது ரோட்டில் மாஸ்க் அணிந்து செல்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இப்போது மாக்ஸ் அனைவர் முகத்திலும் பார்க்கும் போது மீண்டும் ஒரு போராட்டதிற்கு தயாராகி விட்டது தெரிகிறது. ஆனால் இந்த மாக்ஸ் அணிவதை கொரோனா குறைந்து இருந்த நேரத்தில் நாம் அனைவரும் செய்து இருந்தால் பாதிப்பு இன்னும் கொஞ்சம் குறைந்து இருக்குமே என்ற ஆதங்கம் மனதில் ஓடுகிறது.
ஒவ்வொரு நாட்களையும் நாம் அனைவரும் நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் சார். நாம் மீண்டு வருவோம். இதுவும் கடந்து போகும்.
opt 1. யாரையாவது கழட்டி விட்டு இதனை முயற்சி செய்யலாம்.
ReplyDeleteOPT 3
ReplyDelete