Powered By Blogger

Sunday, April 25, 2021

பண்டிகை..பட்சணங்கள்..பட்டாசு..புதுத்துணி !

 நண்பர்களே,

லாக்டௌன் தின வணக்கங்கள் ! நேத்திக்கே கறிக்கடை ; காய்க்கடை என கொள்முதல் படலங்களை முடித்த கையோடு இங்கே  வாக்குப்பதிவுகளைச் செய்திட நீங்கள் தெம்பாய் அணி திரண்டிருப்பதைப் பார்க்கும் போது குஷியாக உள்ளது ! முக்கிய கேள்வியெனும் போது, உங்களின் en masse பங்களிப்பானது  தீர்மானிக்கும் எனது பொறுப்பை இலகுவாக்கிடும் ; so தொடர்ந்து வாக்குச் சாவடிக்கு ஷண்டிங் please !

பின்னூட்டங்களுக்கு மத்தியில் நண்பர் மஹி குறிப்பிட்டிருந்ததொரு விஷயமானது எனது கவனத்தை ஈர்த்தது ! பொத்தாம் பொதுவாய் "கார்ட்டூன் ஸ்பெஷல்" ; "புதிய ஆல்பம்" ; "மாயாவி & ஆர்ச்சி" - என்றிராது - அவற்றிற்கு எந்தக் கதைகள் என்ற அடையாளங்களையும் தந்தால் தீர்மானங்கள் இன்னும் சற்றே தெளிவு காணலாம் தான் ! So here goes :

கார்ட்டூன் ஸ்பெஷல் என்றால் தற்சமயத்துக்கு மனசில் தோன்றும் முதல் ஆசாமி நம்ம ஒல்லியார் லக்கி லூக் தான் ! அவரது 2 ஹிட் கதைகளை ஒன்றிணைத்து ரூ.200 விலைக்கு தீபாவளிக்கு மலரச் செய்யலாம் தான் ! ஆனால் அதே template தான் கடந்த சில வருஷங்களாக நமது லயனின் ஆண்டுமலருக்கு நடைமுறையில் உள்ளதென்பதால் இங்கே வேலைக்கு ஆகாது ! எஞ்சியிருக்கும் கார்ட்டூன் பட்டாளத்தினிடையே அடுத்த நிலையினில் நிற்போர் உட்ஸிட்டி கோமாளிகளே ! And நடப்பு மாதத்தினில் (நீர் இன்றி அமையாது உலகு !) score செய்திடவும் இவர்களுக்கு முடிந்துள்ளதெனும் போது - தீபாவளிக்கு டாக் புல் & கிட ஆர்டினையே ஒரு டபுள் ஆல்பத்தில் குத்தாட்டம் போடச்செய்யலாம் ! அதாவது - கார்ட்டூன் ஸ்பெஷல் தான் வாக்கெடுப்பினில் வெற்றி காண்கிறதென்னும் பட்சத்தில் !

"புது ஆல்பம்" - என்று வரும் போது - கைவசம் 3 வெவ்வேறு தொடர்கள் உள்ளன ! முதலாவது ஒரு classic western ! ஒரு ஜாம்பவானின் தூரிகைகளில் ஓட்டமெடுக்கும் ஆக்ஷன் மேளா ! இரண்டாவதோ ஒரு ஆக்ஷன் அதிரடியாளரின் இரு பாக சாகசம் ! நாம் அதிகம் பார்த்திரா ஒரு இருண்ட கண்டத்தினில் அரங்கேறும் high voltage த்ரில்லர் அது ! மூன்றாவதோ ஒரு லேட்டஸ்ட் பாணியிலான சமகால க்ரைம் த்ரில்லர் ! அரசியல் சதுரங்கத்தில் நிழல் மனிதர்களின் பங்களிப்புகளை அதிரடியாய்ச் சொல்லும் கதையிது ! So - புதுசாய் ஏதாச்சும் பார்க்கலாமென்று எண்ணிடும் பட்சத்தில் மேற்படி மூன்றில் எதுவேனாலும் சாத்தியமே !! (அப்பாலிக்கா அதுக்கொரு மினி தேர்தல் வைக்கணும் !)

Last but not the லீஸ்ட், தேர்வாவது  "இரும்பு பெசல்" எனில் - Black & White "யார் அந்த மாயாவி ? ப்ளஸ் சட்டித்தலையனின் புதியதொரு சாகசம் + மாயாவி சிறுகதைகள் என்ற combo சாத்தியம் ! 

மத்தபடிக்கு தோர்கலோடு தீபாவளியெனில் அவரது தொடரினில் வரிசைக்கிரமப்படி அடுத்த 2 ஆல்பங்களைப் போட்டுத் தாக்கிடலாம் !

And 'தல' தீபாவளி தான் இம்முறையும் எனும் பட்சத்தில்  - டெக்சின் இளவலை தூக்கு மேடைக்கு அனுப்பும் சாகஸமொன்று 2022-ன் பட்டியலில் காத்திருக்கிறது ! Maybe அதனை இரவல் வாங்கிக் கொள்ளலாம் இந்த குண்டு புக்குக்கு !

So பட்சணங்கள்...பட்டாசு...புதுத்துணி....என சகலத்தையும் கடை விரிச்சாச்சுங்கோ - தேர்வு செய்வது உங்கள் பொறுப்பென்ற நம்பிக்கையில் ! 

இதன் மத்தியில் ஒரு நண்பரின் நெடும் மின்னஞ்சலும் வந்துள்ளது - நடப்பாண்டின் அட்டவணையிலிருந்து மேற்கொண்டு இன்ன-இன்ன கதைகளுக்கு கல்தா தந்து விட்டு - ஒரே ஆல்பமாய் "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" களம் காணட்டுமே என்ற கோரிக்கையுடன் ! ஓ.நொ.ஓ.தொ." ஒரு  smash hit கதை எனும் போது அந்த வாதத்திலும் சாரம் இல்லாதில்லை என்றே தோன்றுகிறது ! அது மட்டும் சாத்தியமானால் தீபாவளிக்கு ஆயிரம்வாலா சரவெடி உத்தரவாதம் தான் ! 

ஆனாலும் உங்க பாடு கஷ்டமுங்க !!  Bye again all !!

P.S : முந்தைய பதிவினைப் படித்திருக்கா நண்பர்களின் பொருட்டு, கேள்விகள் மட்டும் மறுக்கா : 

ஒருக்ககால் "டைகர் தீபாவளி மலர்" தள்ளிச் செல்ல நேரிடின், அதனிடத்தில் என்ன இட்டு நிரப்புவது ? 

OPTION # 1 : மேலே சொன்னது போல - "ஓ.நொ.ஓ.தோ" ஒரு option ஆக இருந்திடலாம் ; ஆனால் மேற்கொண்டு பணம் அனுப்பச் சொல்ல அவசியமாகிடுவது ஒரு நெருடலாகத் தென்படுகிறது !

OPTION # 2 : வழக்கம் போல தீபாவளியினைத் தெறிக்க விட, 'தல' தாண்டவத்தை வீரியமாக்கிடலாம் ! தற்போதைய திட்டமிடலான TEX & TESHA ஸ்பெஷல் வண்ண இதழோடு, மேற்கொண்டு ரூ.200 பெறுமானமான டெக்ஸ் கதையினை  b&w-ல் இணைத்து, ரூ.325 விலையில் ஒரே தீபாவளி மலராக்கிடலாம் ! 

OPTION # 3 : தோர்கல் ஆல்பங்களுக்கு நடப்புச் சந்தாவினில் ஒற்றை (சிங்கிள்) ஆல்பம் மட்டுமே தரப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் 2 சாகசங்களை ஒன்றிணைத்து - "தோர்கலோடு தீபாவளி" கொண்டாடிடலாம் ! ஆனால் தோர்கலின் appeal நம்மிடையே ஏகோபித்ததாக உள்ளதா ? என்ற கேள்விக்கு விடை சொல்ல தெரியவில்லை எனக்கு ! Maybe you can enlighten me on this folks ?

OPTION # 4 : அடுத்த ஆண்டிற்கான தேடல்களின் பொருட்டு எக்கச்சக்க புதுக் கதைகளை உருட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை ஏற்கனவே சொல்லியுள்ளேன் ! Maybe முற்றிலும் புதிதாயொரு டபுள் ஆல்பத்தை ரூ.200 விலைக்கு வெளியிட்டால் - like for like மாற்றமாக இருந்திடக்கூடும் ! 

OPTION # 5 : Given a choice - எனது தேர்வு இந்த ஆப்ஷன் # 5 ஆகத்தானிருக்கும் ; ஆனால் இது ஜாம்பவான்களோடு மோதும் சுயேச்சையாகவே இருந்திடும் என்பதும் புரிகிறது : இருப்பினும், முன்மொழிகிறேன் : ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல் ! (சுஸ்கி-விஸ்கி என்று பாய்ந்திட வேணாமே ப்ளீஸ் - அதற்கு நிறையவே அவகாசமும், திட்டமிடலும் தேவைப்படும் !)

OPTION # 6 : ஹி...ஹி...ஹி...ஒரு மாயாவி + ஆர்ச்சி  இடம்பிடிக்கும் "இரும்பு பெசல் ? சும்மா அதிராதா ? 

உங்களின் தேர்வுகள் எதுவாயிருப்பினும் OPT 1 ; OPT 2 என்ற ரீதியில் அவற்றின் நம்பரைப் போட்டுத் தெரிவிக்கக் கோருகிறேன் ! 


301 comments:

 1. trailer


  Option One Operation two

  ஒருவேளை, இந்த தேர்தலில் டெக்ஸ் வில்லர் ஜெயித்துவிட்டால் வரப்போகும் என் பதிவின் சிறு முன்னோட்டம்...

  நல்ல மனம் படைத்த காமிக்ஸ் வாசகர்களுக்கு - டெக்ஸ் வில்லரின் கதைகள் யாவும் கெட்டவனை ; தீயவனை அழித்து - நீதிடா ; நேர்மைடா ; ஞாயம்டா ; டெக்ஸ் வில்லர்டா என்று அவர்களை குதுகூலப்படுத்தலாம் ; பரவசப்படுத்தலாம் ; கொண்டாட வைக்கலாம் ! தவறில்லை ; சந்தேகமும் இல்லை !

  ஆனால் என்னைப் போன்ற மன சஞ்சலம் உள்ளவர்களின் மனநிலையை, என்றாவது யாராவது அறிய முற்பட்டு இருக்கிறீர்களா ?!இருக்க மாட்டீர்கள் அல்லவா ?!

  இதோ...

  Postscript : பயந்து பயந்து பதிவிட வேண்டி இருக்கிறது (சிரிக்கும் ஸ்மைலி ஒன்று). யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள் நண்பர்களே ! ஏன்னா இது கார்ட்டூன் கதை மாதிரி ❤️

  ReplyDelete
  Replies
  1. கிராபிக் நாவல்களையே இங்கே யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளா நாட்களிவை ; so டிரெய்லர்லாம் வைச்சு கடத்திட தேவையே இல்லை என்பேன் ! தவிர டெக்ஸ் ரசிகர்கள் விமர்சனங்களை சந்திப்பது முதன்முறையுமல்ல ; இறுதி தபாவுமல்ல எனும் போது அவர்களது உலகுகளை உங்கள் பின்னூட்டங்களோ, இன்ன பிற அபிப்பிராயங்களோ உலுக்கிடப் போவதுமில்லை என்றமட்டுக்கு உறுதி நண்பரே !

   Delete
  2. நன்றி விஜயன் சார் !

   ஒரு சில பதிவுகளால் அடுத்தவர்களை உலுக்கி விட முடியும் என்பது சாத்தியமுமில்லை ; என் நோக்கமும் அதுவல்ல !

   நாணயத்திற்கு இன்னொரு பக்கமும் உண்டு என்பதை ஜாலியாக, ஒரு சிலரின் பார்வையிலாவது பட வைக்க வேண்டும் என்பதே என் ஆவல் !

   Delete
 2. புதிய ஆல்பங்களைப் பற்றிய உங்களது முன்னோட்டம் இந்த கதைகளை உடனே தமிழில் படித்து விட வேண்டும் என்று தோன்றுகின்றது.
  நீங்கள் கூறியது போல எங்களது பாடு திண்டாட்டம் தான் சார்.
  வாசக நண்பர்களின் கோரிக்கைகளைபொருத்து வழக்கம் போல் முடிவு செய்யுங்கள் சார்!நன்றி!

  ReplyDelete
 3. எல்லாருக்கும் சலாம் வைப்பது சின்னமனூர் சரவணர்ங்க.

  ReplyDelete
 4. ஆஹான்

  புது ஆல்பத்து கதை ரொம்ப நன்னா இருக்கே

  பேசாம கோட்ட அழிச்சிட்டு

  புது ஆல்பத்துக்கே எங்களது ஓட்டு

  எப்படியும் தல வந்திடுவாரு அதனால் புது ஆல்பத்துக்கே ஓட்டு போடுங்கோ அய்யாக்களா
  .

  ReplyDelete
  Replies
  1. தோர்கல் சாத்தியம் இல்லை எனில் புதிய கதைக்கே எனது வாய்ப்பு

   Delete
  2. புதிய கதைக்கு எனது ஓட்டு

   Delete
  3. மாத்தி மாத்தி போடறீங்களே!

   எடிட்டர் சொன்னா மாதிரி கஷ்டம்தான் நம்ம பாடு!

   Delete
 5. // நண்பரின் நெடும் மின்னஞ்சலும் வந்துள்ளது - நடப்பாண்டின் அட்டவணையிலிருந்து மேற்கொண்டு இன்ன-இன்ன கதைகளுக்கு கல்தா தந்து விட்டு - ஒரே ஆல்பமாய் "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" களம் காணட்டுமே என்ற கோரிக்கையுடன் ! ஓ.நொ.ஓ.தொ." ஒரு smash hit கதை எனும் போது அந்த வாதத்திலும் சாரம் இல்லாதில்லை என்றே தோன்றுகிறது ! அது மட்டும் சாத்தியமானால் தீபாவளிக்கு ஆயிரம்வாலா சரவெடி உத்தரவாதம் தான் // இந்த idea அருமை

  ReplyDelete
 6. இந்த ஆட்டத்தல பாண்ட் 2.0 வும் சேர்த்துகோங்க சார் .. அதுவும் இந்த வருசம் இல்ல சந்தாவுல ..

  ReplyDelete
  Replies
  1. ஆமா அருமையான ஆப்ஷன். பாண்ட் அண்ட் டெக்ஸ் சும்மா தெறிக்கும் தீபாவளி

   Delete
 7. Replies
  1. போன பதிவுலயே 3தடவை தோர்கலுக்கு ஓட்டு போட்டாரு... இது 4வது ஓட்டு சாரே!

   Delete
  2. அதே நண்பரே நானும் கவனித்தேன். இதுபோல் நிறைய இருக்கிறது.

   Delete
 8. chick bill கதைகளை முயற்சி செய்யுங்கள் ஜி, ஆரம்பகால கதையான அதிரடி மன்னன் கதைக்கு ஒரு இடம் தரவும்,
  பனியால் வடிந்து வரும் தண்ணீரை திசைதிருப்ப வரும் வெடி வைக்கும் நிபுணர் மூலம் நடக்கும் காமெடி ஆக்ஷன் கதை அது. consider please, அப்போதே இந்த கதையை வண்ணத்தில் வந்தது.

  ReplyDelete
 9. எல்லாக் கதையும் போடச் சொல்லிக் கேட்டு ஒரு மெகா தீபாவளி ஸ்பெஷலா கொண்டாட ஆசையாத் தான் இருக்கு..

  ReplyDelete
 10. காலை 10:30, முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்....

  OPT1: 5

  OPT2: 50

  OPT3: 14

  OPT4: 7

  OPT5: 9

  OPT6: 10

  சென்ற பதிவுல் பதிவான அனைத்து ஓட்டுகளும் எண்ணப்பட்டு விட்டன...

  குண்டுபுக் எனும் காரணியே இங்கு லேண்ட்ஸ்லைட் லீடிங்கிற்கு காரணம் என்பது ஸ்பஸ்டமாக தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. Contest முடிந்து விட்டது. அப்படியே பாயை சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு கிளம்பலாம்.

   Delete
  2. Thorgal 14 மட்டுமேவா ? 🧐🧐🧐

   Delete
  3. சென்ற தேர்தலில் தோற்றதற்கு சேர்த்து வைத்து விட்டார் தல அனைத்தையும் கூட்டினால் கூட அவர் இடத்தை பிடிக்க முடியாது போலிருக்கிறது..

   Delete
  4. ஆசிரியர் சார்@

   ஆம் சார்! 14 வாக்குகள் தான்.

   தோர்கல் இன்னும் பயணிக்க வேண்டிய தொலைவு அதிகம் போல...!!

   Delete
  5. Saran selvi@ நண்பா அந்த தேர்தலின் போக்கு வேறு மாதிரி!

   அரிதாக கிடைக்கும் சந்தர்ப்பம்; அங்கே இடம் கிடைக்காத நாயகருக்கு, அதுவும் இரும்புக் கையார் வண்ணத்தில் எனும்போது- அதுதான் தேர்வாகனும்.

   இப்போது இது தீபாவளிக்கான புத்தகம்; இங்கே என்ன தேவைனு நாம் அனைவரும் அறிவோம். அதை சொல்லியும் உள்ளோம்.

   இரண்டு தேர்தல்களையும் கம்பேர் பண்ணுவது பொருந்தாது.

   Delete
  6. உண்மைதான் நண்பா...

   Delete
  7. இந்த ஓட்டை வைச்சு தோர்கலுக்கு ஆதரவு இல்லைன்னு முடிவு கட்டிராதீங்க. இங்கே குண்டு புக்கு தான் காரணி. என்னோட ஓட்டை தலக்கு இருந்து தோர்கலுக்கு மாத்திடறேன்.

   Delete
 11. ஆசிரியர் சார்@ இனிவரும் சந்தாக்களில் முதல் புத்தக ஸ்லாட் " டெக்ஸ் தீபாவளி குண்டுபுக்"-- கிற்கே என்பதை நண்பர்கள் மீண்டும் பதிவு செய்துட்டார்கள்...!!
  தாங்களும் இதையொட்டியே ப்ளானிங் பண்ணுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக சரியாக சொன்னீர்கள் நண்பா

   Delete
 12. ங்ஙே.! நான் இன்னும் பழைய பதிவுலயே டான்ஸ் ஆடிட்டு இருந்துட்டேன்.!

  ReplyDelete

 13. ///விஜயன் சார், இது போன்ற சாய்ஸ் கேள்விகளில் இனி டெக்ஸை சேர்க்க வேண்டாமே. இவரை இதுபோன்ற கேள்விகளில் தவிர்த்தால் புதிய கதை களங்கள் அல்லது பிற கதாநாயகர்கள்/கதாநாயகிகள் கதைகளை தரிசிக்க முடியும். ப்ளீஸ்.///

  இல்லை பரணி.!

  யோசித்துப் பார்த்ததில்..

  இது தீபாவளிமலர்..
  டைகர் கதைக்கு மாற்றாக வரவுள்ள கதை..
  சிறப்பிதழை சிறப்பிக்கவேண்டிய கதை..
  எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் டெக்ஸ்வில்லர் தேர்வாவதுதான் சரியான முடிவு.!

  இங்கே கார்ட்டூனை ஒரு ஆப்சனாக வைத்ததுதான் பிழையே தவிர டெக்ஸை வைத்தது அல்ல.!

  புதிய களங்கள், கார்ட்டூன்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை டெக்ஸ் ஆக்கிரமித்தால் நீங்கள் சொல்வதுபோல் டெக்ஸை ஆப்சனாக வைக்கக்கூடாது.! ஆனால் இங்கே தீபாவளிமலர் எனும்போது டெக்ஸ் பொருத்தமான ஆப்சன்தான்.! கார்ட்டூனுக்கான இடம் இதுவல்ல.. வேறு இடங்களில் அல்லது முன்பதிவில் கேட்போம்.!

  ReplyDelete
  Replies
  1. உண்மை மாம்ஸ்!

   இங்கே களம் கார்டூனுக்கானது அல்ல!

   நம்ம ரசிகர்கள் மிகத்தெளிவாக உள்ளனர்.

   எந்த ஸ்லாட் எதற்கு என!

   தீபாவளினா டெக்ஸ் குண்டுபுக்!

   அரிதான சந்தர்ப்பங்களில் பழைய எவர்கீரின் இரும்புக்கையார் அல்லது ஆர்ச்சி!

   கார்டூன் முன்பதிவில் வர தடையேதும் இல்லையே! இப்போது காட்டும் உத்வேகத்தை கார்டூன் ரசிகர்கள் அப்போது காட்ட வேணும்...

   Delete
  2. மிக அழகான விளக்கம் சூப்பர்👌👌👌👌

   Delete
  3. ////
   புதிய களங்கள், கார்ட்டூன்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை டெக்ஸ் ஆக்கிரமித்தால்..
   ///

   --- அதே...அதே.. கார்டூனுக்கான இடங்களை டெக்ஸ் தட்டிப்பறித்திடவில்லை. தனக்கான சிம்மாசனத்தில் உட்கார்ந்துட்டார்.

   சந்தாவில் உள்ள இடங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கடமை கார்டூன் க்கு தானே அன்றி....!!

   மேலும் ஏற்கனவே தள்ளாடிட்டு இருக்கும் கார்டூனை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் மேடையேற்றனும் என எதிர்பார்ப்பதும் சரியல்லவே!

   Delete
  4. // நம்ம ரசிகர்கள் மிகத்தெளிவாக உள்ளனர்.

   எந்த ஸ்லாட் எதற்கு என!

   தீபாவளினா டெக்ஸ் குண்டுபுக்! //

   பாயிண்ட்...

   Delete
 14. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 15. மறுபடியும் தோர்கல் தான் எனது தேர்வு!
  தோர்கலோடு தீபாவளி!!

  ReplyDelete
 16. ///தல' தீபாவளி தான் இம்முறையும் எனும் பட்சத்தில் - டெக்சின் இளவலை தூக்கு மேடைக்கு அனுப்பும் சாகஸமொன்று 2022-ன் பட்டியலில் காத்திருக்கிறது ! Maybe அதனை இரவல் வாங்கிக் கொள்ளலாம் இந்த குண்டு புக்குக்கு !
  ///

  அடிசக்கை.!
  இரத்ததாகம், ஓநாய்வேட்டை மாதிரி இருக்கும்போல.! அதன் வில்லன் ராக்கிடர்பினை இன்னும் மறக்கமுடியவில்லை.!

  ReplyDelete
  Replies
  1. தலீவரே@ செம்ம...செம்ம... கண்ணரை மடக்கிட்டீங்க!!!
   51 கன்ஃபார்ம்டு.

   Delete
  2. உளறிட்டனா... உளறிட்டனா..

   Delete
 17. ///தீபாவளிக்கு டாக் புல் & கிட ஆர்டினையே ஒரு டபுள் ஆல்பத்தில் குத்தாட்டம் போடச்செய்யலாம் ! அதாவது - கார்ட்டூன் ஸ்பெஷல் தான் வாக்கெடுப்பினில் வெற்றி காண்கிறதென்னும் பட்சத்தில் !///

  ஹைய்யா..😍😍😍

  ஆசையாத்தான் இருக்கு.. ஆனா அம்சம் இல்லையே.!

  ReplyDelete
 18. ஹைய்யா!! மறுக்காவும் பதிவு!!

  லாக்டவுன் வாழ்க!!!

  ReplyDelete
 19. ///And 'தல' தீபாவளி தான் இம்முறையும் எனும் பட்சத்தில் - டெக்சின் இளவலை தூக்கு மேடைக்கு அனுப்பும் சாகஸமொன்று 2022-ன் பட்டியலில் காத்திருக்கிறது///

  சூப்பர்ங்க சார்!!

  ReplyDelete
 20. தங்க தலைவனே தான் வேண்டும்..

  ReplyDelete
  Replies
  1. அங்கே வந்தால் இங்கும் வரும்....!!!

   டெக்ஸ் தீபாவளிமலர் வந்தா தொடர்ச்சியாக சிலமுறை வாசித்துட வேண்டியது. இங்கே வந்து கமுக்கமாக பாயச அண்டாவை ஏத்த வேண்டியது! என்ன சிம்ரன் இதெல்லாம்???

   Delete
 21. குட்டி டெக்ஸ் க்கு தூக்கு மேடையா அய்யய்யோ இந்த கதையை உடனே படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கிறது.

  ReplyDelete
 22. Dear Editor
  Your choice of story for Tex book
  makes it easy 2 decide for it ahead of all other options
  Tex plus tesha 1st story and Kit willer
  2nd story makes it a winning combo.
  So option 2 for tex diwali it is!
  Regards
  Arvind

  ReplyDelete
 23. Dear Editor
  I want to read onot this year.Also kenya.To bring them in,Killing other books in the sandha is not a great option .
  Just like xiii , both books can be released via prebooking if possible from your side.Both will be surefire hits amd atleast one can light up diwali .why not ask friends for a poll regarding prebooking?
  Regards
  Arvind

  ReplyDelete
 24. Tex அட்டையைப்பார்க்கும் போது ...Lionking படத்துல சிம்பாவை காப்பாத்த பாய்ந்து வரும் முஃபாஸா போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானான்னு தெரியலே

  ReplyDelete
 25. ///And 'தல' தீபாவளி தான் இம்முறையும் எனும் பட்சத்தில் - டெக்சின் இளவலை தூக்கு மேடைக்கு அனுப்பும் சாகஸமொன்று 2022-ன் பட்டியலில் காத்திருக்கிறது///


  ஆப்ஷன் 2...

  ஐயம் வெயிட்டிங்:-)

  ReplyDelete
 26. தீபாவளிக்கு டெக்ஸ் குண்டு புக் எப்பவுமே சிறப்பான தேர்வுதான்..!
  எனவே டெக்ஸ் வெற்றிபெறப்போவதில் சந்தேகமும் இல்லை சஞ்சலமும் இல்லை.!

  வருடம் 48ல் 24ஐ தாராளமாக தைரியமாக டெக்ஸ்க்கு ஒதுக்கிவிடலாம்.! விற்பனைக்கு நூறுசத உத்திரவாதம்.!

  இப்போது இரத்தப்படலம் முன்பதிவுக்கு மட்டும் என்பது போல சுஸ்கி விஸ்கி முன்பதிவுக்கு மட்டுமே வரவிருக்கிறது என்று யூகிக்கிறேன். அது வெற்றியடையும் பட்சத்தில் வருடம் ஒருமுறை வெவ்வேறு கார்ட்டூன் தொடர்களை அவ்வாறு முயற்சிக்கலாம் சார்.!

  இன்னொரு வேண்டுகோள் :

  **நமது இதழ்களில் குடும்பத்தினரின் புகைப்படங்களை பார்ப்பது உவகையளிக்கிறது சார்.!
  சிரமங்கள் பெரிதாக இல்லையென்றால் வருடம் ஒரு சிறப்பிதழில் இந்தமுறையை பின்பற்றலாமே.? எல்லோருமே சந்தோசமாக சம்மதம் சொல்வார்களென்று நம்புகிறேன்.!**


  (மீள் பின்னூட்டம்)

  ReplyDelete
 27. எனக்கு தல தான் வேண்டும்.புதுசு மற்றும் கார்ட்டூன்களை 2022ல் பார்த்துக் கொள்ளலாம்.
  சரவணன் வாக்கு ஆப்ஷன் 2க்கே.நன்றி.

  ReplyDelete
 28. Opt 2 and opt 3 again. How many times u ask same. Hehe

  ReplyDelete
 29. அமைதி அமைதி தலைகீழாகத் தான் குதிப்பான் இந்த எவர்திங் ஏகாம்பரம்
  என்னுடைய சாய்ஸ் ஆஃப்ஷன்.6

  ReplyDelete
 30. ஆக்ஷன் டிடெக்ட்டிவ் கதை என்றால் ஆப்பிரிக்கா வில் நடக்கும் high வோல்ட்டேஜ் திரில்லர் க்கே my vote .

  ReplyDelete
 31. ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்னா மாதிரி.
  Deepavali with டெக்ஸ் குண்டு புக்.

  ReplyDelete
 32. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 33. கிட்ட தட்ட ஒரு வருடம் கழித்து இங்கு நான் பதிவிடுகிறேன். blog அப்புறம் படிக்கலாம் என்று தள்ளி போட்டு கொண்டே வந்ததில் திடிரென்று பார்த்தால் மாதம் ஒரு 5 டு 6 பிளாக் மிஸ் பண்ணி விடுகிறேன். நாட்கள் கடந்த பின் பதிவிட்டால், அதை யாரும் படிக்க போவதில்லை. இனி ஒவ்வொரு ஞாயிறே சுட சுட படித்து என் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.

  நான் இன்னும் 2020 இதழ்கள் படிக்காமல் வைத்து கொண்டு இருக்கிறேன். சீக்கிரம் அதை எல்லாம் படித்து மே 2021 க்கு அப்டேட் ஆக வேண்டும்.

  என்னுடைய சாய்ஸ் Option 2 தான். தீபாவளி வித் டெக்ஸ் என்றே பழகி விட்டது. அதனால் அதற்கு முதல் இடம்.

  அடுத்தது Option 3 , தோர்களின் தீவிர ரசிகன். இது இரண்டு மட்டும் தான் என் சாய்ஸ்

  ReplyDelete
 34. நண்பர் சேலம் விஜயராகவன் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நானும் கணக்கெடுப்பு நடத்தினேன்....
  எப்பப்பா எவ்வளவு கஷ்டமான விஷயம்.. நண்பர்கள் மன்னிக்கவும் எனது வாதத்தில் தவறு இருந்தால்... ஜனநாயக முறைப்படி நம் மக்கள் யாரிடம் எல்லாம் பணம் வாங்கினார்கலோ அவர்களுக்கு எல்லாம் ஓட்டு போடுவது போல். நம் வாசகர்கள் யாருக்கெல்லாம் தோன்றுகிறதோ அவங்களுக்கு எல்லாம் ஓட்டுப் போட்டாங்க. தயவுசெய்து ஓட்டுகிறது ஒன்னே ஒன்னு அதுக்கு அழகா போட்டோல போதுமே. இன்னும் சிலர் என்னன்னே தெரியாம புரியாம ஓட்டை போடுகிறார்கள் 😭😭😭😭😭..

  ReplyDelete
 35. எனது ஓட்டு மாற்றுக் கருத்தில்லாமல் OPTION-2 ற்கே...

  ReplyDelete
 36. இது அல்லது அது அதையும்... ஒருவரே பல முறை போட்டதையும் கள்ள ஓட்டாக கருத்தில்கொண்டு சென்ற பதிவின் படி எனது கணக்கெடுப்பு :
  மொத்த ஓட்டுகள் 89 ( இன்னும் பலர் வெறும் பார்வையாளர்களாகவே இருப்பது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது 😭😭😭😭)
  ஆப்சன் 1 :4
  ஆப்ஷன் 2 :48
  ஆப்ஷன் 3 :11
  ஆப்ஷன் 4:6
  ஆப்ஷன் 5 :11
  ஆப்ஷன் 6 :9
  நன்றி வணக்கம்

  ReplyDelete
 37. ஆஆஆஆஆ...

  டைகரூ...கெடையாதா...

  ரெண்டாம் பாகம் வந்துட்டா 2022 வருஷ பொறப்பு ஸ்பெஷலா போடுங்க...

  இப்ப ஓட்டு போடணுமா...

  கிட்டோட தூக்கு கவுற குறி தவறாம சுடுறவரோட கதய படிப்போம்...

  வருஷமா வருஷம் அதான நடக்குது...

  புதுசா என்ன இருக்குது...

  கியூபா காரங்க கூட போயி வட சுட்ட கதை மாதிரி ஆயிடக்கூடாது...

  ReplyDelete
 38. கார்ட்டூன்,புதிய கதைகள்,தோர்கல் போன்றவைகளுக்கு நாம் எதிரிகள் அல்ல,சொல்லப்போனால் புதிய கதை வரிசைகளில் நில் கவனி வேட்டையாடு,பிரிவோம் சந்திப்போம் போன்ற கொண்டாடும் கதைகள் கூட கிடைக்கலாம்...
  கார்ட்டூன்கள் இந்த இடர்ப்பாடான நேரத்தில் நம்மை நெகிழ்வுபடுத்தலாம்....
  தோர்கலின் பேண்டஸி உலகம் நம்மை ஆற்றுப்படுத்தலாம்...
  எனினும் தீபாவளி நேரத்தில் டெக்ஸ் குண்டு இதழ் இருப்பதே சாலச் சிறப்பு...
  முந்தைய தரவுகளும்,வரவேற்புகளும்,விற்பனைகளும்,கொண்டாட்டங்களுமே இதற்கு சாட்சி...
  பின் ஏன் வீண் குழப்பங்கள்...
  மற்றவைகளை உரிய நேரத்தில் உள்நுழைக்க வாய்ப்பு அமையும் என்று நம்புவோமாக...

  ReplyDelete
 39. சார்! டெக்ஸ் வரப்போவது உறுதியாகி விட்டது, 2022 முத்து ஆண்டு மலரில் ஒரு மெகா தோர்கல் ஸ்பெஷல் வெளியிட்டு விடலாம்!!

  ReplyDelete
  Replies
  1. அப்படி சொல்லுங்க SK

   Delete
  2. ////2022 முத்து ஆண்டு மலரில் ஒரு மெகா தோர்கல் ஸ்பெஷல் வெளியிட்டு விடலாம்!!///

   2022 முத்துவின் பொன்விழா ஆண்டு! தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டிய தருணமது!! ஆனால் இந்தப் பாழாய்ப் போன கோவிட்டு வழிவிடுமான்னு தெரியலை!

   ஆனாலும் ஒரு மெகா இதழ் முத்துவின் பொன்விழா ஆண்டு மலராக, சீனியர் எடிட்டரின் சிறப்புத் தலையங்கத்துடன் வெளியாகிட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை! அந்த இதழ் முத்துவின் ஐம்பதாண்டு பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பதாய் இருந்திட வேண்டும்! அதுவொரு (தோர்கல் போன்று 'தொடராக' இல்லாமல்) முழுமையான - something unique ஆல்பமாக இருந்திடவேண்டும்!

   இது குறித்து எடிட்டர் என்னமாதிரியான திட்டமிடல் வைத்திருக்கிறார் என்பதும் குழப்பமாகவே நீடிக்கிறது!

   Delete
 40. மாற்று கருத்தே வேண்டாம் ஆசானே,தீபாவளி என்றால் அது தலையோட மட்டும் தான்,குண்ண்டாடா புக்கு போடுங்க போதும்,நாங்கள் தீபாவளிக்கு,பட்டாசு எல்லாம் வெடிக்க மாட்டோம்,தல கையில் இருக்கும் அந்த துப்பாக்கி வெடித்தால் மட்டும் போது,தீபாவளி என்றால் தல மட்டும் தான்,அவ்வளவு தான்,பஞ்சாயத்து முடிந்து விட்டது, பாயை எடுக்கலாம்

  ReplyDelete
 41. சிரிப்பு போலீசுக்கே அடியேனின் வோட்டு !

  தீபாவளிக்கு துப்பாக்கி சத்தம் மட்டும் போதுமா ??? கொஞ்சம் சிரிப்பு சத்தமும் இருக்கட்டுமே ஸார் !!

  பொழுதன்னிக்கு எப்ப பாத்தாலும் டுமீல் டுமீல்'னுட்டு ;) ;)

  ReplyDelete
 42. பொறுப்பு துறப்பு : இந்த தொடர் பதிவில் வரும் கருத்துகள் யாவும் கற்பனையே ! துளியளவும் உண்மையோ அல்லது உண்மையைப் போன்ற எதுவோ அல்லது ஜாடைமாடையாகவோ எதுவும் இல்லை, இல்லவே இல்லை !


  முன்னுரை: (மீள்) வழக்கமாக காலையில் சாப்பிடும் இட்லி போன்றது டெக்ஸ் வில்லரின் கதைகள் ; அதுமட்டுமல்ல பயணம் செய்யும் போது கூடவே எடுத்துச் செல்லும் இட்லி பார்சல் போன்றது ; ஒரே வகையானது ; சட்னி மட்டும் வேறாவது ; இலகுவானது ; சுலபமானது ; சமைக்க மட்டுமல்ல சாப்பிடவும் எளிதானது. வயிற்றுக்கு சேதாரம் இல்லை ; வாய்க்கு சுவையும் இல்லை. அவ்வளவுதான் ! அதற்காக கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் டெக்ஸ் வில்லர் டெக்ஸ் வில்லர் என்று துண்டு போட்டு இடம் பிடிக்கத் தான் வேண்டுமா என்ன ?!


  One more comment to follow this...

  ReplyDelete
  Replies
  1. பொருளுரை: இந்த கொரோனா காலத்தில் வருமானம் இல்லை ; வாழ்வாதாரம் இல்லை - உண்மைதான் ! அதனால் சில காமிக்ஸ் வாசகர்கள் புதியதாக அறிவிக்கப்படும் வெளியீடுகளை வாங்குவது மிகவும் சிரமம். அவர்களைத் தனியே தவிக்க விட்டுப் பயணிப்பது மனதிற்கு மிகவும் சங்கடம் தரும் விஷயம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். எனவே தான் ஸ்பெஷல் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன அல்லது நிறுத்தப்பட்டன ! இது நம் காமிக்ஸ் குடும்பத்தின் பெருந்தன்மையை காட்டுவதாக அமைகிறது. நன்றிகள் நண்பர்களே ; நன்றிகள் விஜயன் சார் !

   ஒரு சில வாசகர்களுக்காக இப்படி கரிசனம் காட்டுவது மிகவும் அற்புதமான விஷயம் என்பதில் சந்தேகமில்லை !

   அதே நேரம் சற்றும் எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பில் கூட டெக்ஸ் வில்லர் வருவதுதான் மிகவும் வருத்தமாக இருக்கிறது. என்னைப் போன்ற ஒரு சில வாசகர்களுக்கு டெக்ஸ் வில்லர் கதைகள் யாவும் ஒரே மாதிரியாகவும், சலிப்புத் தன்மை மிகுந்ததாகவும் அமைந்து விடுகிறது. தற்போதெல்லாம் டெக்ஸ் வில்லர் கதைகள் என்றாலே கொஞ்சம் பயமாகவும் ; நிறைய வெறுப்பாகவும் தோன்ற ஆரம்பித்துவிட்டது !

   ஒரே மாதிரியான கதைகள் ; ஒரே மாதிரியான சவடால்கள் ; எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத ஆணவப் பேச்சு ; பெரியவர்களுக்கு மரியாதை தராத கேலியும் கிண்டலும் ; தான் என்ற அகங்காரம் ; தன்னை மீறியவன் இவ்வுலகில் எவனுமில்லை என்ற செருக்கு - என ஒவ்வொரு கதை நெடுக தப்பாட்டம் கோலோச்சுகிறது !

   கொஞ்சமே கொஞ்சம் சற்று யோசித்து தான் பாருங்களேன் - இப்படி ஒரு மனோபாவம் கொண்டவர் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் நம் நண்பராக இருந்து விட்டால் - நல்லவர் அவர் ; வல்லவர் இவர் என்று அவரிடம் அனுசரணையாக நாம் நடந்து கொள்வோமா?! வெடுக் என்ற பேச்சுகள் சடுக் என்று கோபத்தை வரவழைத்து விடாதா ?!

   நல்ல மனம் படைத்த காமிக்ஸ் வாசகர்களுக்கு - டெக்ஸ் வில்லரின் கதைகள் யாவும் கெட்டவனை ; தீயவனை அழித்து - நீதிடா ; நேர்மைடா ; ஞாயம்டா ; டெக்ஸ் வில்லர்டா என்று அவர்களை குதுகூலப்படுத்தலாம் ; பரவசப்படுத்தலாம் ; கொண்டாட வைக்கலாம் ! தவறில்லை ; சந்தேகமும் இல்லை !

   ஆனால் என்னைப் போன்ற மன சஞ்சலம் உள்ளவர்களின்
   மனநிலையை, என்றாவது யாராவது அறிய முற்பட்டு இருக்கிறீர்களா ?! இருக்க மாட்டீர்கள் அல்லவா ?!

   இதோ..

   Delete
  2. இது நாணயத்தின் மறுபக்கமாகவும் இருக்கலாம் அல்லது விதண்டாவாதமாகவும் இருக்கலாம். ஆனால் உண்மையே இல்லை என்று சொல்ல முடியாது தானே ?!

   நம்ம தல'யும் கார்சனும் ஒவ்வொரு முறை தாகசாந்தி செய்யும் போதும் என் மனம் வீட்டின் அருகிலுள்ள டாஸ்மாக் கடையை எண்ணிப் பேரானந்தம் அடைகிறது ; ஒவ்வொரு முறையும் அவர் சிகரெட் புகைக்கும் போது எனக்கு கோல்ட் பிளேக் கிங்ஸ் ஞாபகமே வருகிறது - தூண்டுதல் இல்லாதவரை நானுமே சராசரி மனிதன் தான் என்பது எத்தனைப் பேருக்கு தெரியும் ?!


   Contd.,

   Delete
  3. கால் நூற்றாண்டாய் இதோ அதோ என்று ஏழை எளியவர்களுக்கு போக்குக் காட்டி தன் கல்லாப்பெட்டியை நிரப்பிய துரோகிகளைக் கண்டால் நையப்புடைக்கத்தான் தோன்றுகிறது ; உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் ; உயிர் பயம் காட்டியும் - கொரோனா காலத்திலும் 120 கோடியில் சல்லாபம் செய்யும் பச்சோந்திகளைப் பார்த்தால் கையும் காலும் பரபரக்கிறது ! இது யாரால்?! டெக்ஸ் வில்லர் என்ற காமிக்ஸ் அவதார புருஷனால் தான் !

   போராட்டம் என்ற பெயரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐம்பதினாயிரம் தனிநபர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்த அந்நியக் கைக்கூலிகளைக் கண்டால் - டெக்ஸ் வில்லர் போன்று பட்டென போட்டுத்தள்ள சட்டெனத் தோன்றுகிறது !

   இன்னும், இன்னும் முடிவே இல்லாத முகவுரைகள் நம்மைச் சுற்றி தினம் தினம் எழுதப்படுவதைக் காணும்போது கையாலாகாதத்தனமே மிஞ்சுகிறது !

   ஏன் இப்படி அளவுக்கு மீறிய கோபம் ; அநியாயம் கண்டு பொறுக்கமாட்டாமை வருகிறது என்று யோசித்துப் பார்த்தால் அதற்கு காரணம் நம் காமிக்ஸ் தல டெக்ஸ் வில்லரின் நீதிடா : நேர்மைடா ; ஞாயம்டா - போன்ற கதைகளே என்பதில் ஐயமேது?!

   இது போல் நம்மை சுற்றிச் சுற்றி நடக்கும் அநியாயங்களை கூட தட்டிக் கேட்க இயலாத சராசரி மனிதனுக்கு டெக்ஸ் வில்லரின் வீரம் ; விவேகம் ; வேகம் எந்த விதத்தில் பயன் தரும் என்று புரியவில்லை ! கதையை கதையாகப் பார் ; கற்பனை உலகில் சஞ்சரிக்க மட்டுமே காமிக்ஸ் கதைகள் என்றால் - அதற்கு எங்கள் தானைத் தலைவன் டைகர் கதைகள் கூட போதுமே, டெக்ஸ் வில்லர் எதற்கு ?!

   அட, அதுகூட வேண்டாம் லார்கோ வின்ச் போல் - ஒரு சுகபோக வாழ்க்கையை அதே நீதி ; நேர்மை ; போராட்டம் ; சாதனை ; சிற்றின்பம் என்று நவரசத்தோடு - கற்பனையில் ; கனவுலகில் பேரின்பத்தோடு வாழ்ந்து விட்டுப் போகலாமே எது தடுக்கிறது ?!

   இங்கே குரூப் ஸ்டடி போன்று ஒரே விதமான பதில்கள் ; பதில்களுக்கான வாகான கேள்விகள் ; கேள்விகளுக்கான தோதான வாய்ப்புகள் என்று - மரத்தில் கட்டப்பட்ட பசுமாடாய் நுனி புல் மேய்வதற்கு ஒப்பானவர்களாக மாறி விடுவோமோ என்ற ஐயம் - கொரோனா கால பயம் போல் தலை விரித்தாடுகிறது !


   தொடர்கிறது..

   Delete
  4. நண்பரே, வாக்கு சேகரிப்பதில் இரண்டு விதங்கள் உள்ளன !

   "நான் நல்லவன்...வல்லவன்...நாலும் தெரிஞ்சவன் ! நான் தேர்ந்தெடுக்கப்பட்டா ஊரு சிங்கப்பூரு ஆகும் ; ரோடு சலவைக்கல் ஆகும் !" என்று வாக்குறுதிகள் சொல்லி வோட்டு கேட்கலாம் !

   மாறாக -

   "அதோ நிக்குறானே எதிராளி...அவன் சுத்த மொள்ளமாரி..முடிச்சவுக்கி.. குடிகார பயபுள்ளை ! குடிச்சே சீரழிச்சுப்புடுவான் உங்களையும் !" என்று எதிரணியை நோக்கி கணைகள் வீசுவது பாணி # 2 !

   உங்கள் அபிமானங்களின் நிறைகளைச் சுட்டிக் காட்டி நண்பர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பது சுலப முயற்சியாய் இருந்திடாதா ?!

   பீரடிப்பதை பார்க்கும் போதெல்லாம் மனசானது சலனம் கொள்ளும் எனில், அது டெக்ஸுக்கு மாத்திரமன்றி லக்கி லூக்குக்கும் சரி ; சிக் பில் அணிக்கும் சரி சலனம் கொள்வதன்றோ நியாயம் ?! அட, பாரிலேயே குடியிருக்கும் டைகர் ? பாதிரி உடுப்பில் உலவிட்டாலும் இடுப்பு மடிப்பில் ஒரு க்வாட்டரைப் பதுக்கி வைத்து மடக் மடக்கென அடிக்கும் SODA ?

   கோடீஸ்வரக் கோமகன் லார்கோவையும் ; மீசைக்கார ஷெல்டனையும் ஜேம்ஸ் பாண்டாரையும் பெண்களிடமிருந்து நூறடியில் விலக்கி நிறுத்தி வைத்து தினமும் தோப்புக்கரணங்கள் நூறு நூறாய்ப் போடச் சொல்லிடணுமல்லவா ? தொழிலதிபர்களோடு மீன்பிடிப் படலங்களில் சரளமாய்ப் பழகிப் பார்க்கும் நம் இளவரசியை அப்படியே எதிர்பக்கமுள்ள சீர்திருத்த முகாமுக்கு pack up பண்ண வேண்டி வருமல்லவா ? ஊருக்கொரு பெண்ணோடு சல்லாபிக்கும் ட்யுராங்கோ ?

   ஒழுக்கசீலர்களே உங்களின் தேர்வெனில் SMURFS & சுட்டிபுயல் பென்னி & சட்டித்தலையன் ஆர்ச்சி நீங்கலாய் பாக்கி அத்தினி பேரையும் சீர்திருத்தப் பள்ளிக்கல்லவா அனுப்ப வேண்டி வரும் ?

   Maybe அடுத்த பதிவினில் பொம்மை புக் நாயகர்களின் லீலைகல்ல்ல்ல்ல்ல்...!! நடந்தது என்ன ? என்றொரு அலசலைப் போட்டுப்புடலாம் போலும் !

   Delete
  5. வாத, பிரதி வாதங்களை முழுமையாகக் கேட்ட பின்பு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்!

   Delete
  6. டெக்ஸ் வில்லர் வேண்டவே வேண்டாம் என்று கூறவில்லை. இதுபோன்ற ஏடாகூடமான வாய்ப்புகளில் கூட அவரை நுழைக்கத்தான் வேண்டுமா என்பதே என் ஆதங்கம் ?!

   காலம் சுருங்கிக் கொண்டே போகிறது ; மணித்துளிகள் நாட்களாய் பரிமாணம் அடைந்து விட்டது ; நாட்களை எண்ணுவதற்குள் மாதம் என்ற அவதாரம் எடுக்கிறது ; மாதத்தை மனதில் திணிப்பதற்குள் வருடம் வாகாய் வாசலைத் திறக்கிறது ! இந்த இலட்சணத்தில் நம் வாழ்க்கையின் சுக போகங்கள் இன்னும் எத்தனை காலமோ?! யாரறிவார் ?!

   செல்லப் பிள்ளையான டெக்ஸ் வில்லரை இன்னும் டெக்சு டெக்சு என்று கொஞ்சுவதை விடுத்து - வரிசையில் நிற்கும் சவலைப் பிள்ளைகளை புஷ்டியாக்க நண்பர்கள் யோசித்தால் நன்றாக இருக்கும். யோசிக்கா விட்டாலும் பரவாயில்லை - நாங்கள் அதாவது என்னைப் போன்ற நாங்கள் தனி வரிசையில் நின்று வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவாவது சந்தர்ப்பம் அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை‌!

   ஒன்று மட்டும் நிச்சயம் நண்பர்களே, யாருக்காகவும் எதற்காகவும் காலம் கை கட்டிக் காத்து நிற்பதில்லை !

   இன்னும் எழுதிக் கொண்டே போகலாம் இருந்தாலும் இது போதும். நன்றி !!

   எனவே என்னுடைய Option is One

   ஐய்யய்யோ.. மறந்தே விட்டேன் இந்த பின்னூட்டங்களின் தலைப்பு... அதாவது...


   Option One Operation two ❤️

   Delete
  7. ///ஒரே மாதிரியான கதைகள் ; ஒரே மாதிரியான சவடால்கள் ; எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத ஆணவப் பேச்சு ; பெரியவர்களுக்கு மரியாதை தராத கேலியும் கிண்டலும் ; தான் என்ற அகங்காரம் ; தன்னை மீறியவன் இவ்வுலகில் எவனுமில்லை என்ற செருக்கு - என ஒவ்வொரு கதை நெடுக தப்பாட்டம் கோலோச்சுகிறது !

   கொஞ்சமே கொஞ்சம் சற்று யோசித்து தான் பாருங்களேன் - இப்படி ஒரு மனோபாவம் கொண்டவர் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் நம் நண்பராக இருந்து விட்டால் - நல்லவர் அவர் ; வல்லவர் இவர் என்று அவரிடம் அனுசரணையாக நாம் நடந்து கொள்வோமா?! வெடுக் என்ற பேச்சுகள் சடுக் என்று கோபத்தை வரவழைத்து விடாதா ?!///

   சற்றே சிந்திக்க வேண்டிய கேள்விதான்.!

   நிஜவாழ்வின் அநியாயங்ளை தட்டிக்கேட்க முடியாமல் இதுபோன்ற கதைகளில் அதைக்கொண்டாடி ஆனந்தம் அடைந்துகொள்ளும் கோழைமனநிலையை வளர்த்துவிட வாய்ப்புண்டு.! இப்படிப்பட்ட மனநிலை ஒருபடி மேலே போய் இதுபோன்ற நாயக பிம்ப வழிபாடுகள் நம் தலைவிதியை நிர்ணயிக்கும் தகுதியையே அவர்களுக்கு வழங்கத்தயாராகிவிடும்.!

   Delete
  8. விஜயன் சார், நான் நாலுவரிியில் டைப் அடித்து வருவதற்குள் நீங்கள் 40 வரையில் கேள்விக் கணைகளைத் தொடுத்து விட்டீர்கள்.

   எல்லாவற்றிற்கும் பதிலாக பொறுப்பு துறப்பில் உள்ளதே என்னுடைய பதிலாக இருக்கலாம் சார்!

   //பொறுப்பு துறப்பு : இந்த தொடர் பதிவில் வரும் கருத்துகள் யாவும் கற்பனையே ! துளியளவும் உண்மையோ அல்லது உண்மையைப் போன்ற எதுவோ அல்லது ஜாடைமாடையாகவோ எதுவும் இல்லை, இல்லவே இல்லை !//

   Delete
  9. ///ஒழுக்கசீலர்களே உங்களின் தேர்வெனில் SMURFS & சுட்டிபுயல் பென்னி & சட்டித்தலையன் ஆர்ச்சி நீங்கலாய் பாக்கி அத்தினி பேரையும் சீர்திருத்தப் பள்ளிக்கல்லவா அனுப்ப வேண்டி வரும் ?///

   ஹாஹாஹா... சரியான கேள்வி.! ஆனா கிட் ஆர்டினை விட்டுட்டிங்களே சார்.!
   நண்பரின் பதிவில் ஒழுக்கத்திற்கான அளவீடாக தீர்த்தம் சாப்பிடுவது இருக்கும்பட்சத்தில்..

   டீட்டோட்டலர் என்று சொல்லிக்கொண்டு திரியும் எத்தனையோ மோசமானவர்களை சமூகத்தில் அடையாளம் காட்டமுடியும்.!
   குடிப்பவன் எல்லாம் அயோக்கியன் அல்ல.. குடிக்காதவன் எல்லாம் யோக்கியனும் அல்ல.!

   டீட்டோட்டலராக இருந்து லட்சக்கணக்கான உயீர்களை காவு வாங்கிய சர்வாதிகாரிகளை வரலாறு அறியும்.! குடிப்பழக்கம் இருந்தும் யாருக்கும் தீங்கிழைக்காமல் மக்களை மகிழ்வித்த கலைஞர்களையும் வரலாறு அறியம்.!

   Delete
  10. ///
   செல்லப் பிள்ளையான டெக்ஸ் வில்லரை இன்னும் டெக்சு டெக்சு என்று கொஞ்சுவதை விடுத்து - வரிசையில் நிற்கும் சவலைப் பிள்ளைகளை புஷ்டியாக்க நண்பர்கள் யோசித்தால் நன்றாக இருக்கும்.///

   மிகவும் நியாயமான ஆதங்கம்தான்..!


   பின்குறிப்பு : நாம எல்லோருக்கும் பொதுவாப் போயிடுறதுதான்.!:-)

   Delete
  11. //உங்கள் அபிமானங்களின் நிறைகளைச் சுட்டிக் காட்டி நண்பர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பது சுலப முயற்சியாய் இருந்திடாதா ?! //

   எனக்கு இவர் தான் வேண்டும் என்று எந்த கதாநாயகரும் இல்லை ! கதையே நாயகன் ; கதையுடன் கதாநாயகனும் சேர்ந்து விட்டால் அதை விட வேறு என்ன வேண்டும் ?! என்பதே பொருள் !

   அதேநேரம் டெக்ஸ் வேண்டாம் என்று சொல்லவில்லை ; இந்த சைக்கிள் கேப்பில் அவர் வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் கூறினேன் !

   //பாதிரி உடுப்பில் உலவிட்டாலும் இடுப்பு மடிப்பில் ஒரு க்வாட்டரைப் பதுக்கி வைத்து மடக் மடக்கென அடிக்கும் SODA ? //

   மன்னிக்க வேண்டும் சார்.. நான் மிகவும் ரசித்து லயித்த கட்டம் அது. குடிக்கும் முன்பும், குடித்த பின்பும், SODA வின் முக பாவங்கள் - ஆஹா ரசித்துக் கொண்டே இருக்கலாம். ஆஹா அற்புதம் சார் அது !!

   Delete
  12. //நண்பரின் பதிவில் ஒழுக்கத்திற்கான அளவீடாக தீர்த்தம் சாப்பிடுவது இருக்கும்பட்சத்தில்..//

   அப்படியெல்லாம் ஒழுக்கத்தின் அளவீடு இல்லை நண்பரே. இன்று அது சகஜமானதாக ஆகிவிட்டது. என் வருத்தம் என்னவென்றால் இந்த கொரோனா காலத்தில் பணமுடை அதிகமாக இருக்கிறது ; ஆசைப்பட்டாலும் செலவு செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் தான் !

   (எதுக்கும் இங்கே ஒரு சிரிப்பு ஸ்மைலி போட்டு விடுவோம்)

   :))

   Delete
  13. நண்பரே ; வார்த்தைகள் நாசூக்காய் இருக்கலாம் தான் ; ஆனால் பின்னுள்ள விரல்நீட்டல்கள் அவ்விதமில்லை !

   //ஒரே விதமான பதில்கள் ; பதில்களுக்கான வாகான கேள்விகள் ; கேள்விகளுக்கான தோதான வாய்ப்புகள் என்று - மரத்தில் கட்டப்பட்ட பசுமாடாய் நுனி புல் மேய்வதற்கு ஒப்பானவர்களாக மாறி விடுவோமோ என்ற ஐயம் //

   ஒற்றை வரியில் நீங்கள் இங்கே மண்டையில் தட்ட முற்படுவது என்னையும், இங்கே டெக்ஸுக்கு வாக்களித்துள்ளோரின் ரசனைகளையும் ! வெகுஜன (டெக்ஸ்) ரசனைகள் தரத்தில் குன்றியவைகளென்ற எண்ணம் என்ன மாதிரியான mindset என்று புரியவில்லை எனக்கு ?! ஒரு நட்சத்திர ஹோட்டல் மெனுவில் Ravioli di Erbette ; Chicken Tagine Makful ; Tuna Carpaccio என்றும் இருக்கும், இடியாப்பம், பாயா ; பரோட்டா நெஞ்சுக்கறி என்றும் இருக்கும் ! முன்னவற்றைத் தேர்வு செய்வோர் ரசனைகளில் உசந்தோர் என்றும் பின்னவற்றைத் தேர்வு செய்வோரை ஆட்டு மந்தை என்றும் சொல்வது போலுள்ளது !

   அதே போல - Many is Commonplace & Few is Elite என்பதாகவும் உங்கள் வாதத்தில் அர்த்தம் தொனிக்கிறது ! நிறைய டெக்ஸ் வில்லரை வாசிப்பதால் அது சந்தைச் சரக்காகவும், குறைச்சலாய் சுவாசிப்பதால் இதர ரசனைகள் உசத்தியானவைகளாகவும் ஆகிடப்போவதில்லை !

   End of the day - இங்கே டெக்ஸ் வில்லர் யாருக்கும் பங்காளியுமல்ல ; மற்றோர் பகையாளியும் அல்ல ! அவரவரின் பார்வைகளில், அவர்களது எதிர்பார்ப்பெனும் அளவீடுகளை யாரொருவர் நிறைவாய்ப் பூர்த்தி செய்கிறாரோ, அவரே மனதிலும் இடம் பிடித்திடுகிறார் ! So இதர நாயக / நாயகியர் எங்கே falling short என்ற அலசலில் உங்கள் 'தம்'மை செலவிட்டால் பிரயோஜனப்படக்கூடும் நண்பரே ! (அச்சச்சோ..'தம்' என்று சலனம் கொள்ளச் செய்து விட்டேனோ ?)

   Delete
  14. அட, பெர்சனலாக எனக்கு கார்ட்டூன் நாயகர்களென்றால் உசிர் ! ஆனால் அவர்களை களமிறக்கினால் - "உசிரை வாங்குறியே ?" என்பதே நண்பர்களின் பொதுவான ரியாக்ஷனாக உள்ளது ! சொல்லுங்களேன், நானும் உங்களை போல விசனம் கொள்வதாயின் என் செய்வதென்று ?

   யதார்த்தத்தை ஏற்பது காலத்தின் கட்டாயம் - உங்களுக்கும் ; எனக்கும் ; நம்மவர்களுக்கும் !

   Delete
  15. முகமூடி வீரர் மாயாவி - ராணி காமிக்ஸ் தொடர்ந்து ஒரே கதைகளை போட்டு, வாசகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி பின் காணாமல் போனது தான் மிச்சம்!

   ஒரே வருமானத்தை நம்பி வாழ்க்கை ஓட்டுவது ஆபத்தானது என நிதித்துறையில் சொல்வதுண்டு! (தனிப்பட்ட முறையில் கொரானா நல்ல அனுபவத்தை வழங்கிவிட்டது எனக்கு!!!)

   டெக்ஸ்க்கு ஒரு Control Board இருந்தால் தேவலாம்!

   Delete
  16. பிழையான புரிதல் நண்பரே ; ஜாம்பவான் பதிப்பகத்தில் காமிக்ஸ் வெளியீடுகள் முற்றுப்புள்ளி கண்டதற்கு முகமூடி மாயாவி காரணமில்லை ! ஒரு வாதத்துக்கு அப்படியே அது தான் காரணமென்று வைத்தும் கொள்வோமே - முத்து காமிக்ஸ் கடை மூடும் நிலைக்கு எண்பதுகளில் சென்றதற்கு எதைத் தொடர்ச்சியாய் வெளியிட்டதைக் காரணமென்பீர்களாம் ?

   நமக்குப் பிடிக்காததை மட்டம் தட்ட, கண்ணுக்குத் தட்டுப்படும் புறக்காரணிகளை தேடுவது நமது பொதுவான இயல்பு & அதனையே இங்கு நீங்களும் பிரதிபலிக்கிறீர்கள் ! அந்தக் காரணிகள் சரியானவைகளா - இல்லையா ? என்று அலசிட ஒற்றை நிமிடத்தை செலவிட்டால் தேவலாமே ?

   Delete
  17. And நானிங்கே இதர ரசனைகளுக்கு இடம் தராதும் இல்லையே ? கொரோனா இடர் குறுக்கிடும் வரையிலும் கிராபிக் நாவல்களுக்கென ஒரு தனித் தடத்தை தந்து வந்தோம் தானே ? விற்றாலும், விற்காவிட்டாலும் கார்ட்டூன்களுக்கு சம வாய்ப்புகள் தந்து வந்தோம் தானே ? வித்தியாசமான கதைகளுக்கென்றே ஜம்போ காமிக்ஸ் துளிர் விடவும் செய்தொம் தானே ?

   அட, நடப்பாண்டில் April to டிசம்பர் அட்டவணையில் உள்ளவை மொத்தம் 32 புக்ஸ் & அவற்றுள் டெக்ஸ் இடம்பிடித்து இருப்பது வெறும் 6 ஸ்லாட்கள் !! சொல்லுங்களேன் சார் - control board இன்னும் எவ்விதம் அமைந்திட வேண்டுமென்று ?

   டெக்ஸ் என்ற பிம்பம் larger than life என்பதே யதார்த்தம் ; பூச்சாண்டி..பூச்சாண்டி என நீங்கள் அலறுவது அவரது அந்த பிம்பத்தைக் கண்டே என்று தோன்றுகிறது சார் !

   Delete
  18. //ஒற்றை வரியில் நீங்கள் இங்கே மண்டையில் தட்ட முற்படுவது என்னையும், இங்கே டெக்ஸுக்கு வாக்களித்துள்ளோரின் ரசனைகளையும் ! வெகுஜன (டெக்ஸ்) ரசனைகள் தரத்தில் குன்றியவைகளென்ற எண்ணம் என்ன மாதிரியான mindset என்று புரியவில்லை எனக்கு ?!//

   சார், நீங்கள் வேறொரு கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டீர்கள். நான் அந்த அர்த்தத்தில் எழுதவில்லை. இங்கு எல்லோருமே டெக்ஸ் வில்லரின் ரசிகர்கள். எனவே அனைவரும் டெக்ஸ் வில்லர் என்றே பதில் பதிவிடுகிறார்கள் அப்படி என்றால் டெக்ஸ் வில்லர் மீண்டும் டெக்ஸ் வில்லர் என்று தானே படித்துக் கொண்டிருப்போம் என்பதே என் கருத்து. டெக்ஸ் வில்லரின் கதைகளம் ; சாரம் ; கதை கரு என்று எல்லாமே நமக்கு அத்துப்படி ; அதில் புதியதாக என்ன இருக்கிறது - இந்தக் கோணத்தில் தான் நான் யோசித்தேன் !

   அதேநேரம் தாங்கள் கேள்வியில் டெக்ஸ் வில்லரின் Option 2 தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது இன்னொரு கருத்து.

   உங்களுக்கே தெரியும், கடந்த இரண்டு வருடங்களாக நான் எத்தனை முறை கென்யா என்றும் ஒற்றை நொடி ஒன்பது தோட்டா என்று ஓட்டு அளித்து விட்டு காத்துக் கொண்டிருக்கிறேன் என்று.

   மீண்டும் மீண்டும் டெக்ஸ் வில்லர் என்று நிறைய புத்தகங்கள் வந்து கொண்டிருந்தால் என்ன செய்வது?!

   அதுவே பெரும்பான்மை என்றால், ஓட்டு அளித்து விட்டு காத்திருப்பது வேதனை அன்றோ ?!

   Delete
  19. வோட்டளித்துக் காத்துக் கொண்டிருப்பது வேதனையென்றால் தோராயமாய் 11 தனிப்பட்ட சிங்கிள் ஆல்பங்களின் தயாரிப்புக்கு நிகரான தொகையினை எற்கனவே 20 மாதங்களுக்கும் மேலாய் முடக்கிக் கொண்டு , அவை வெளிச்சத்தைப் பார்க்கக் கூடிய பொழுது எதுவென்று இன்னமும் தெரியாது காத்திருக்கும் என் பிழைப்பை என்னவென்பதோ நண்பரே ?

   Delete
  20. //டெக்ஸ் என்ற பிம்பம் larger than life என்பதே யதார்த்தம் ; பூச்சாண்டி..பூச்சாண்டி என நீங்கள் அலறுவது அவரது அந்த பிம்பத்தைக் கண்டே என்று தோன்றுகிறது சார் !//

   தவறான புரிதல் சார் ! நான் அலறுவதிற்கு காரணம், அவரின் அதிகமான புத்தகங்களை பார்த்து மட்டுமே ! அதிக அளவிலான டெக்ஸ் புத்தகங்கள் மற்றைய ஸ்பெஷல் வெளியீடுகளையும் ; சில புது தொடர்களின் ஸ்லாட்களையும் முழுவதுமாக விழுங்கிவிடுவதே காரணம். அதற்கு உதாரணம் இன்றைய ஓட்டெடுப்பு. காரணம் அனைவரின் விருப்பமும் டெக்ஸ் வில்லர் என்பதால் தானே?! அப்படி எனில் அவர் போட்டிக்கு வரும் ஒவ்வொரு முறையும் இது தானே நடக்கும் ?!

   Delete
  21. //அட, நடப்பாண்டில் April to டிசம்பர் அட்டவணையில் உள்ளவை மொத்தம் 32 புக்ஸ் & அவற்றுள் டெக்ஸ் இடம்பிடித்து இருப்பது வெறும் 6 ஸ்லாட்கள் !! சொல்லுங்களேன் சார் - control board இன்னும் எவ்விதம் அமைந்திட வேண்டுமென்று ?//

   Delete
  22. //வோட்டளித்துக் காத்துக் கொண்டிருப்பது வேதனையென்றால் தோராயமாய் 11 தனிப்பட்ட சிங்கிள் ஆல்பங்களின் தயாரிப்புக்கு நிகரான தொகையினை எற்கனவே 20 மாதங்களுக்கும் மேலாய் முடக்கிக் கொண்டு , அவை வெளிச்சத்தைப் பார்க்கக் கூடிய பொழுது எதுவென்று இன்னமும் தெரியாது காத்திருக்கும் என் பிழைப்பை என்னவென்பதோ நண்பரே ?//

   Correct Sir ❤️

   இப்படி கைவலிக்க, இன்றைய தினம் முழுவதும் பதிவிட்ட பின்னூட்டங்களுக்குக் காரணமே உங்களுக்காகத் தான் சார் ; அதுவும் மேற்கூறிய காரணம் மட்டுமே தான் சார் 🙏

   Delete
  23. ரைட்டு ...ஒரு வாதத்துக்கு இப்படி வைத்துக் கொள்வோமே :

   அடுத்த வருஷத்துச் சந்தாவில் டெக்ஸை முற்றிலுமாய்த் தவிர்த்திடலாம் ! முழுக்க முழுக்க , திளைக்க திளைக்க கார்ட்டூன் ; கி.நா . வித்தியாச ஆக்ஷன் கதைகளை மட்டுமே போட்டுத் தாக்குவோம் !

   மறுயோசனைகளின்றி நண்பர்கள் அனைவரும் சந்தாக்களைப் புதிப்பிப்பார்கள் என்ற உத்திரவாதம் தர யாருக்கேனும் சாத்தியமாகுங்களா ?

   Delete
  24. //அட, நடப்பாண்டில் April to டிசம்பர் அட்டவணையில் உள்ளவை மொத்தம் 32 புக்ஸ் & அவற்றுள் டெக்ஸ் இடம்பிடித்து இருப்பது வெறும் 6 ஸ்லாட்கள் !! சொல்லுங்களேன் சார் - control board இன்னும் எவ்விதம் அமைந்திட வேண்டுமென்று ?//

   இது ஒரு எதிர்பாராத ஸ்லாட் சார். அதில் ஒற்றை நொடி ஒன்பது தோட்டா கொண்டுவர முயற்சித்தால எல்லாம் சுகமே ! கொரோனா காலம் இது என்பதால் இறுதி முடிவு எடிட்டரின் கையில் மட்டுமே என்பதை அனைவரும் அறிவர் !

   Delete
  25. அக்கறைக்கு நன்றி நண்பரே ; ஆனால் போன பதிவிலேயே சொல்லியிருந்தேன் நமது ஒரு சிறு அணியினரின் சிரமக்கதைகளை ! அவற்றின் முன்னே எனது பாடு ஒன்றுமே இல்லை என்பதால் தான் அவர்கள் தலைகளில் பாரத்தை இம்முறை சுமத்த நான் பிரியம் கொள்ளவில்லை !

   தவிர இந்த ஆரூடமும் ஆண்டின் இறுதிப் பகுதி சார்ந்த பார்வைகளை இருளூட்டுகின்றன :

   https://www.oneindia.com/india/karnataka-covid-19-crisis-experts-suggest-14-day-lockdown-warn-of-third-wave-by-october-3249618.html

   So பொறுத்தது பொறுத்தோம் - தருணம் வாய்க்கும் வரைப் பொறுப்போம் என்பதே எனது நிலைப்பாடு ! நிஜத்தைச் சொல்வதனால் சென்றாண்டின் பதட்டத்தில் அறிவித்த "இரத்தப் படலம்" புராஜெக்டை எண்ணி நான் தடுமாறிய நாட்கள் ஏகம் ! அதே தடுமாற்றத்தை மறுக்கா ஏற்படுத்திக் கொள்ள விழையவில்லை நான் !

   Delete
  26. //அடுத்த வருஷத்துச் சந்தாவில் டெக்ஸை முற்றிலுமாய்த் தவிர்த்திடலாம் ! முழுக்க முழுக்க , திளைக்க திளைக்க கார்ட்டூன் ; கி.நா . வித்தியாச ஆக்ஷன் கதைகளை மட்டுமே போட்டுத் தாக்குவோம் ! //

   சார் நான் அப்படி கூறவில்லை ; டெக்ஸ் வேண்டாம் என்றும் கூறவில்லை ; இந்த தேர்தலில் இருக்கும் ஆப்ஷன்களை எடுத்து விட்டால் போதுமானது என்பது என் ஆசை. பிறகு ஒற்றை நொடி ஒன்பது தோட்டா வெளியிட்டு விடலாம் என்பது மட்டுமே என் வாதம். ஏற்கனவே கலரில் அங்கு டெக்ஸ் வில்லர் இருக்கிறார். தீபாவளிக்கு இதைவிட வேறு என்ன வேண்டும் ?!

   முடியாது என்றும் தெரியும், இருந்தாலும் என் பக்க பார்வைகளை பொதுவில் விவாதத்திற்கு வைத்து விட்ட திருப்தி மட்டுமே எனக்கு போதும் !

   Delete
  27. சந்தாவில் உள்ள அனைவரையும் மேற்கொண்டு ரூ.400 அனுப்பச் சொல்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அறிவீர்களா நண்பரே ? பத்துக்கு நான்கு பேர் போனில் கடித்துத் துப்புவார்கள் என்பதை அறிவீர்களா நண்பரே ? இல்லே - நான் மேற்கொண்டு பணம் அனுப்புறதா இல்லை ! என்று மறுத்திடுவோரும் இருப்பார்கள் என்பதையும் அறிவீர்களா நண்பரே ? அவர்கட்கெல்லாம் ரூ.200 திரும்ப அனுப்பி வைத்து அதற்கும் சாத்து வாங்க வேண்டி வரும் என்பதை அறிவீர்களா நண்பரே ?

   மேற்படி சகலத்தையும் நானறிவேன் ; அதனாலேயே விரலுக்குள் வீக்கமும் இருக்கட்டுமென்று எண்ணினேன் !

   Delete
  28. // யதார்த்தத்தை ஏற்பது காலத்தின் கட்டாயம் - உங்களுக்கும் ; எனக்கும் ; நம்மவர்களுக்கும் ! //
   யதார்த்தம் புரிந்தாலும் சிலர் அதை ஏற்க மறுப்பதுதான் வியப்பே சார்,எல்லாமே பொம்மை புக்தான் எனினும்,வாதம் என்கிற பெயரில் விற்பனைக்கு உத்திரவாதமும்,பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியையும் அளிக்கும் டெக்ஸ் வில்லர் கதை வரிசைகளை கண்டு வெறுப்பை உமிழ்வது வியப்பையும்,ஆச்சிரியத்தையுமே வரவழைக்கிறது...
   ஒருவேளை வில்லர் காமிக்ஸின் பில்லராக இருப்பதுதான் பிரச்சனையோ ???!!!

   Delete
  29. // சந்தாவில் உள்ள அனைவரையும் மேற்கொண்டு ரூ.400 அனுப்பச் சொல்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அறிவீர்களா நண்பரே ? பத்துக்கு நான்கு பேர் போனில் கடித்துத் துப்புவார்கள் என்பதை அறிவீர்களா நண்பரே ? //
   உண்மையோ உண்மை,இது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதை.....

   Delete
  30. நன்றி சார் !

   முடியாது என்று தெரியும், இருந்தாலும் என் பக்க பார்வைகளை பொதுவில் விவாதத்திற்கு வைத்து விட்ட திருப்தி மட்டுமே எனக்குப் போதும் !

   குறைந்தபட்சம், விவாதத்திற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது என்பது ஒரு சிலருக்காவது புரிய வைப்பதில் வெற்றி பெற்று இருந்தால் அதுவே போதும் சார் ! தோல்வியே கண்டு இருந்தாலும் பிரச்சனையில்லை ; இன்றைய பொழுது நன்றாக அமைத்து தந்ததற்கு தங்களுக்கு நன்றி !

   Delete
  31. // டெக்ஸ் என்ற பிம்பம் larger than life என்பதே யதார்த்தம் //
   உண்மையோ உண்மை சார்,டெக்ஸை ஒரு நாயக பிம்பத்தில் அடைத்தாலோ,ஆராதித்தாலோ அது அந்த நபரின் பிரச்சனை,அதே நேரத்தில் மற்ற ஸ்லாட்களையும் இதேதான் வேண்டும் எங்களுக்கு என்று கேட்கும்போது இதற்கும்,அதற்குமான வித்தியாசங்கள் பெரிதாக ஒன்றும் இல்லைதான்...
   டெக்ஸ் கதை வரிசைகள் நம் மனக் குமுறல்களின் வடிகால்கள் போன்ற பல்வேறு காரணிகள் அதைத் தாங்கி நிற்கின்றன...
   மீண்டும்,மீண்டும் சொல்வது போல் ”விற்பனைக்கு உத்திரவாதம் “...
   ஒருவேளை இதுதான் பிரச்சனையோ என்னவோ ???!!!
   இல்லை உளவியல் ரீதியான ஏதேனும் காரணங்கள் இருக்குமோ ???!!!

   Delete
  32. Kind attention to Mr. Arivarasu @ Ravi Sir !

   பிரச்சனை வில்லரிடமோ ; பில்லரிடமோ இல்லை சார். புதியதாக பதிவிடும் வாசகர்களின் கெமிஸ்ட்ரி சரியாக புரியாத காரணத்தால் மட்டுமே. அவர் நல்லவரா கெட்டவரா என்று தெரியாத குழப்பமும் ஒரு காரணம் ! அதனால் ஏற்படும் தடுமாற்றங்கள் !

   இன்றையப் பதிவில் ஆசிரியரின் கீழே வரும் வரிகளை யாராவது படித்தீர்களா ?!


   //இதன் மத்தியில் ஒரு நண்பரின் நெடும் மின்னஞ்சலும் வந்துள்ளது - நடப்பாண்டின் அட்டவணையிலிருந்து மேற்கொண்டு இன்ன-இன்ன கதைகளுக்கு கல்தா தந்து விட்டு - ஒரே ஆல்பமாய் "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" களம் காணட்டுமே என்ற கோரிக்கையுடன் ! ஓ.நொ.ஓ.தொ." ஒரு  smash hit கதை எனும் போது அந்த வாதத்திலும் சாரம் இல்லாதில்லை என்றே தோன்றுகிறது ! அது மட்டும் சாத்தியமானால் தீபாவளிக்கு ஆயிரம்வாலா சரவெடி உத்தரவாதம் தான் ! //

   //இதன் மத்தியில் ஒரு நண்பரின் நெடும் மின்னஞ்சலும் வந்துள்ளது - நடப்பாண்டின் அட்டவணையிலிருந்து மேற்கொண்டு இன்ன-இன்ன கதைகளுக்கு கல்தா தந்து விட்டு - ஒரே ஆல்பமாய் "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" களம் காணட்டுமே என்ற கோரிக்கையுடன் ! ஓ.நொ.ஓ.தொ." ஒரு smash hit கதை எனும் போது அந்த வாதத்திலும் சாரம் இல்லாதில்லை என்றே தோன்றுகிறது ! அது மட்டும் சாத்தியமானால் தீபாவளிக்கு ஆயிரம்வாலா சரவெடி உத்தரவாதம் தான் ! //

   Delete
  33. அறிவு சார்,

   //இல்லை உளவியல் ரீதியான ஏதேனும் காரணங்கள் இருக்குமோ ???!!!//

   அது எப்படி சார்? உங்களால் மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது ?!

   Delete
 43. ஆஹா ஆஹா மிகவும் ரசித்து படித்தேன் இந்த விவாதத்தை. கலக்கல் சார் ஒவ்வொன்றும்... அனைவரும் பின்னி பெடலெடுத்து விட்டீர்கள்...
  இதனால் எனக்கு தோன்றிய கருத்து: ப்ளான் செய்த வண்ண டெக்ஸ் + இன்னொரு சவலை பிள்ளை இணைப்பு புக் உதயின் வாதத்திற்கு பதிலாக இருக்கலாமே.‌ ஓவர் டூ ஆசிரியர்.

  ReplyDelete
  Replies
  1. மௌனமாய் உள்ளோரையும் இங்கே நான் வாக்களிக்கக் கோரி விட்டு, அப்புறமாய் - "இல்லீங்கண்ணா ; நானே தீர்மானிச்சுக்கிறேன் !" என்று கடுப்படிப்பதாக இல்லை சார் ! So நண்பர்களின் தீர்ப்பே இறுதியானது - of course டைகர் தயாராகாத பட்சத்தில் மட்டும் !

   Delete
  2. And ஆரோக்கியமான பிள்ளையை உதாசீனப்படுத்துவதே ஒரு சவலைப் பிள்ளையை தேற்றும் வழியாகிடாது சார் ! அதற்கு அனைவருமே மனசு வைத்தால் தானுண்டு !

   Delete
  3. நன்றாகவே புரிகிறது சார். இந்த விவாதங்களின் சாராம்சம், அதற்கென மேற்கொண்ட முயற்சிகள், மெனக்கெடல்கள் இதற்காக சிந்திய மணித் துளிகள், கருத்து பரிமாற்றங்கள் இத்யாதி இத்யாதி இன்னும் அதிலேயே லயித்து கிடக்க வைக்கின்றன. வாழ்க பொம்மை புத்தகங்கள்

   Delete
  4. இந்த பொம்ம புக் ரசனையும் சரி, அதனை ரசிப்போரும் சரி - எனக்கு என்றைக்குமே ரொம்ப உசத்தி சார் ! So அதற்கென நேரம் செலவிடுவது எனது கடமை மட்டுமல்ல - களிப்பும் தான் !

   Delete
  5. சிம்ப்ளி கிரேட் சார் 🙏🙏🙏

   Delete
  6. இந்த பொம்ம புக் ரசனையும் சரி, அதனை ரசிப்போரும் சரி - எனக்கு என்றைக்குமே ரொம்ப உசத்தி சார் ! So அதற்கென நேரம் செலவிடுவது எனது கடமை மட்டுமல்ல - களிப்பும் தான் !//

   அப்ப நாலு வருசமா மெபிஸ்டோ & டெகஸ் கதை வேணும்னு கேட்க்கிறவங்க ரசனை எல்லாம் உங்களுக்கு கணக்குல வராதுங்களா சார்....இல்ல அந்த ரசனை உள்ளவங்க எல்லாம் உசத்தி இல்லை மட்டம்னு நினைக்கிறிங்க போல.....டெக்ஸ் யை வெறுக்கிறவங்கக்கிட்ட , சாதாரண பொம்மை புக்க பாருங்க னு சொல்ரிங்க...ஆனா டெக்ஸ் & மெபிஸ்டோ கதை வேணும்னு கேட்க்கிறவங்கக்கிட்ட , டெக்ஸ ரேஞ்சராவே பார்த்து பழகியாச்சி வேற மாதிரி பார்க்க முடியலைனு சொல்லி .இனி இந்த மாதிரியான கதைகளே தான் வரும்னு சொல்ரீங்களே சார்..அப்ப உங்களுக்கு ஒரு நியாயம்...மத்தவங்களுக்கு ஒரு நியாயமாங்க சார்..??

   Delete
 44. டைகர் வராத பட்சத்தில் மட்டுமே

  ReplyDelete
 45. அவரவர் விருப்பத்தை ஒட்டாக போட்டாயிற்று.வின்னர் டெக்ஸ் தான்.
  டெக்ஸ் ஓவர் டோஸ் எனக்கு பிடிக்காத விஷயம் நீ ஏன் அதற்கு ஒட்டு போட்ட என யாரையும் கேட்க முடியாது.
  என் விருப்பம் என் உரிமை.உங்களுக்கு என்ன வேண்டுமோ? அதை கேளுங்கள்.இப்போவோ இல்ல அப்புரமாவோ கிடைக்கலாம்.
  அட டெக்ஸ் அலுத்து போகட்டும் அப்புறம் நீங்க கேட்கிறது கிடைக்கும்.
  ஆனால் ஒன்று சொல்லி கொள்கிறேன்.
  TEX EVERGREEN HERO.

  ReplyDelete
  Replies
  1. //டெக்ஸ் ஓவர் டோஸ் எனக்கு பிடிக்காத விஷயம் நீ ஏன் அதற்கு ஒட்டு போட்ட என யாரையும் கேட்க முடியாது.
   என் விருப்பம் என் உரிமை.உங்களுக்கு என்ன வேண்டுமோ? அதை கேளுங்கள்//

   நன்றி ப்ரோ !

   நான் இங்கு எந்த ஹீரோவுக்கும் ஓட்டு கேட்டுப் பிரச்சாரம் செய்யவில்லை. நான் ஏன் ஓட்டுப் போடவில்லை என்பதற்கான பதில் மட்டுமே அளித்துள்ளேன். நேரமிருந்தால் மீண்டுமொருமுறை படித்துப் பார்க்கவும். Evergreen ஆக இருந்தாலும் Nevergreen ஆக இருந்தாலும் கடைசியில் எல்லாமே பொம்மை புக்கு தான் என்பது எனக்கும் தெரியும் நண்பரே !!

   Delete
  2. சாரி நண்பரே நான் எதார்த்தமாக பதிவிட்டது.
   தவறாக இருப்பின் என்னை மன்னிக்கவும்.
   நமக்குள் எது வேண்டும் வேண்டாம் என்பது தான்.
   நாம் அனைவரும் நன்பர்கள் தானே எதிரிகள் அல்லவே.
   இது சாதாரண கருத்து மோதல்கள் மட்டுமே.
   நன்றி நன்பரே.

   Delete
 46. சிக் பில் மற்றும் லக்கி லூக் repeated template காரணமாக நான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால் அதை விரும்பும் வாசகர்களை நான் ஒருபோதும் குறை கூறவோ judge பண்ணவோ மாட்டேன்.
  டெக்ஸ் வில்லருக்கும் இது பொருந்தும். நான் உட்பட பல வாசகர்கள் Tex Willer Template விரும்புகிறார்கள்.

  சில சமயங்களில், குறிப்பாக தீபாவளிக்கு கதைத் தேர்வில் எடிட்டர் இவளவு open ஆக இருப்பது அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். பெரும்பான்மை விரும்புவதை அவரே தேர்ந்தெடுக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. சார் ...உங்கள் முகம் காட்டும் கண்ணாடி நான் ! அதனை அவ்வப்போது காட்டிட இவையெல்லாம் சந்தர்ப்பங்களே !

   Delete
  2. ஆனால் அதை விரும்பும் வாசகர்களை நான் ஒருபோதும் குறை கூறவோ judge பண்ணவோ மாட்டேன்.//

   +1. எனக்கு இந்தக் கதை பிடிக்கலை...இந்தக் கதை பிடிக்குது என்று சொல்லி விட்டு நகர்ந்து விடுவது தான் சரி. பிடிக்காத கதைகளின் ரசிகர்களை குறை சொல்வது சரி அல்ல. டெக்ஸ் ஓட்டெடுப்பில் ஜெயிக்கும் போதெல்லாம் இதே பிரச்னை தான்.

   போன தடவை மாயாவி செயிச்சப்ப எந்த டெக்ஸ் ரசிகர்களும் வந்து மாயாவி ரசிகர்களை குறை சொன்னதாக நினைவில்லை.

   தீபாவளி குண்டு புக் என்பது டெக்சுக்கான ஸ்லாட். ஆண்டு மலர் என்பது லக்கிக்கான ஸ்லாட் என்பது போல.This result is very normal.

   Delete
 47. தளபதி இல்லாத நிலையில் தான் இந்த விவாதம் ஒட்டு எடுப்பு.
  தளபதி வந்துட்டா தல தளபதி தீபாவளி இல்லனா தல தீபாவளி தான்.

  ReplyDelete
 48. நீங்க என்ன வேனாலும் விவாதம் பண்ணிக்கோங்க. தீபாவளி ஏன் பண்டிகை என்றாலே டெக்ஸ் குண்டு புக்தான். அதனால்.......

  மறுக்கா..மறுக்கா... Option # 2

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் உங்க டீலிங் பிரமாதம் சார் !

   Delete
  2. நச்சுனு சொன்னீங்க கார்த்திகேயன் ஜி!

   Delete
 49. நான் எல்லா கதைகளையும் வாங்குவதில்லை காரணம் .......
  ஆனால் டெக்ஸ் என்றால் வாங்காமல் விட்டதில்லை.
  ஆனால் டெக்ஸின் மைல்கல் இதழ் 70 வது ஆண்டு சிறப்பு மலர் 700 விலை என்பதால் வாங்க இயலவில்லை.
  அதே போல் கணவாய் யுத்தமும் தவற விட்டு விட்டேன்.
  தவறாமல் Diwali with டெக்ஸ் வாங்கி விடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் தவிர பிற கதைகளையும் வாங்கி வாசித்து பார்த்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே சார்

   Delete
  2. ஒரு சிலவற்றை நண்பர்கள் பரிந்துரையின் பேரில் வாங்கியுள்லேன் சார்.
   நில் கவனி வேட்டையாடு
   சதியின் மதி
   இரத்த படலம் கலர் எடிசன்.
   Detective special
   All ஜேம்ஸ் பாண்ட்
   மார்டின்
   லார்கோ
   Durango etc.

   Delete
  3. ஓ..‌‌சூப்பர் சார். தற்போது வந்த தோர்கல் வேற லெவல் சார். பிரமிக்க வைக்கும் படைப்பு சார். அசர வைத்து விடும் வகை சார்

   Delete
  4. Thorkal தொகுப்பு வரும் போது வாங்க வேண்டும் என்று இருக்கிறேன்.

   Delete
 50. மௌனமாய் உள்ளோரையும் இங்கே நான் வாக்களிக்கக் கோரி விட்டு, அப்புறமாய் - "இல்லீங்கண்ணா ; நானே தீர்மானிச்சுக்கிறேன் !" என்று கடுப்படிப்பதாக இல்லை சார் ! So நண்பர்களின் தீர்ப்பே இறுதியானது - of course டைகர் தயாராகாத பட்சத்தில் மட்டும் !
  பிளஸ் ஓ பிளஸ் சார்.

  ReplyDelete
 51. எப்படியும் வெல்லப்போகிறவர் தலதானென்று தெரிந்தும் அவருக்கே வாக்களித்தது ஏனென்றால், ஒரு சில கதைகள் அங்கங்கே சுவாரஸ்யம் குறைந்தாலும் பெரும்பாலானவை தடுமாறியதில்லை. 600+ இருக்கும் கதைகளை இப்படி எங்காவது கொணர்ந்தால் தானே கண்ணில் பார்க்க முடியும்?

  தோர்கல், கார்ட்டூன், புதுக் கதைகள் அனைத்தையும் தந்தாலும் வாங்கிடும் வகையறாதான் நான். ஆனால் யதார்த்தம் எதுவென்பதுதானே முக்கியம்?

  ReplyDelete
 52. நானு இன்னிக்கு நெம்ப லேட்...😳😳😳

  ReplyDelete
  Replies
  1. நான் ரொம்ப சீக்கிரம் ஏன் என்றால் தல தளபதி தான் காரனம்.

   Delete
 53. டெக்ஸ் கதை பிடிக்கிறதோ இல்லையோ ஆனா அது ஒரு மேட்டரே இல்லை! டெக்ஸோட அட்டைப்படத்தை பார்த்தாலே நெஞ்சே எழு(ந்து) விடும்! அதுதான் தலயோட ஸ்பெஷாலிட்டியே! யாருக்கும் அடிபணியாதவர் (அவரோட மேலேதிகாரியாக இருந்தாலும் கூட) எப்போதுமே உண்மையின் (நேர்மையின்) பக்கம் இருப்பவர். நாட்டுல நடக்கும் அநியாயங்களை பார்க்கும் போது நாமளும் தட்டிக்கேட்கணும்னு தோணும் ஆனால், அது முடியாது!ஆனால், நம்மில் ஒருவராக இருந்து அவர் தட்டிக் கேட்கும் போது (அது கதையாக இருந்தாலும் கூட) கொண்டாடத்தான் தோன்றுகிறது! இதை டெக்ஸை ரசிப்பவர்களுக்கும் அவரை நேசிப்பவர்களுக்கு மட்டுமே புரிய வரும்

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் ஜி அருமையான கருத்து

   Delete
  2. மறுக்க முடியாத உண்மை!

   Delete
 54. I couldn't read all the comments....
  During this covid 19 hardships and lockdown, option 1 is not feasible for all (400 extra) dropping 4 or 5 books from subscription which we have already paid for is also not sounding as a better option(my own opinion).
  Option 2 is my choice - Tex willer.
  This is not a 'gap' which Tex has to do anything with, due to unavoidable delay this opportunity presented itself and I prefer Tex willer stories.
  Other options are not so bad either but if I have to choose between them and Tex, it is always gonna be Tex.

  How I choose my options?!? I follow this simple method,
  எங்கிட்ட 200 ரூபாய் தான் இருக்கு, ஒரே புக் தான் வாங்க முடியும் என்ன புக் வேணும் அப்டினு ஒரு நெலமை வந்தா, நான் டெக்ஸ் புக் வாங்குவேன்.... மத்தது தடவி பார்த்துகுவேன்

  ReplyDelete
 55. நண்பர் Udhaya kumar அவர்களுக்கு
  உங்களுடைய Point of view தவறாக இருக்கே நண்பரே! ஒட்டெடுப்பு வந்திட்டால் எல்லோருமே டெக்ஸைதான் தேர்வு செய்வதால் அவரை option லயே வைக்காதிங்க! அவர் Option la இருந்தால் வேற யாரும் தேர்வாவது கஷ்டம்னு சொல்றீங்க! இதுக்கு முன்பு நடந்த முதல் ஒட்டெடுப்பில் தேர்வானது அர்ஸ் மேக்னா (அதிலேயும் டெக்ஸ் Option la இருந்தார்) இரண்டாவது ஒட்டெடுப்பில் நம்ம மாயாவிகாரு வெற்றி பெற்றுள்ளார் (கொரில்லா சாம்ராஜ்யம்) அதுலேயும் டெக்ஸ் Option ல இருந்தாரு! நம்மவர்கள் எதை எப்போ ரசிக்கணுமோ (கேட்கணுமோ) அதுல தெளிவாக இருக்கிறார்கள்! அதை நீங்க சொல்லியோ நான் சொல்லியோ ஏன் எடிட்டர் சொல்லியோ யாரும் மாறிடப் போவதில்லை! எனக்கு கூட ஒற்றை நொடி ஒன்பது தோட்டா வருவது ரொம்ப இஷ்டம்தான்! ஆனால், அது வந்தால் இன்னொரு நானூறு ரூபாய் கூடுமென்பதால் அதற்கு வாய்ப்பு குறைவு என்பதால் மவுனமாக கடந்து செல்ல வேண்டியதாகி விட்டது! எப்படியும் அடுத்த வருடத்தில் நிச்சயம் ஒற்றை நொடி ஒன்பது தோட்டா வரும் அதுவரை கொஞ்சம் பொருத்திருப்போமே!

  ReplyDelete
  Replies
  1. Kaleel

   //நண்பர் Udhaya kumar அவர்களுக்கு
   உங்களுடைய Point of view தவறாக இருக்கே நண்பரே! //

   விவாதங்கள் நீண்டுக் கொண்டே போகும் போது, கருத்துக்கு கருத்து ; பதிலுக்கு பதில் என்று பதிவிட வேண்டி வருகிறது. அப்பொழுது நாம் குறிப்பாக சொல்ல வந்த விஷயம் மையக்கருத்தை விட்டுப் பல மைல்களுக்கு அப்பால் சென்று விடுகிறது ; அதாவது கடைசியாக பதிவிடும் பின்னூட்டங்களில் ! அதுபோன்ற புரிதல் நிலைப்பாடு தான் இதுவும் !

   நான் டெக்ஸ் வில்லர் வேண்டவே வேண்டாம் என்று கூறவில்லை. நடப்பு ஆண்டுக்கான கதைகளும் டெக்ஸ் வில்லரின் வெளியீடுகளும் முறையாக ஏற்கனவே அட்டவணை படுத்தப் பட்டுவிட்டது அல்லவா?!

   இது எதிர்பாராத ஒரு நல் வாய்ப்பு. எப்படி என்று சில உதாரணங்கள் கூறுகிறேன்.

   1. நமக்கு வரும் சம்பளப் பணத்தை வைத்து முழுவதுமான பட்ஜெட் போட்டு வைத்திருப்போம். அதில் கைவைக்க வாய்ப்பே இருக்காது !

   2. போனஸ் வரும்போது அதை பண்டிகை செலவுக்காக பயன்படுத்திக்கொள்வோம். புதிய துணி மற்றும் பண்டிகைக் கொண்டாட்டம் போன்றவைகளுக்காக. அதிலும் கைவைக்க வாய்ப்பே இருக்காது !

   3. நாம் நீண்ட நாட்களாக ஏதோ ஒன்றுக்கு ஆசைப்பட்டு வாங்க வேண்டும் என்று காத்திருப்போம். அது புதிய ஃபோன் ஆக இருக்கலாம் ; அல்லது பிராண்டட் ஷூவாக இருக்கலாம் ; அல்லது பைக்கை சர்வீசுக்கு விடுவதாக இருக்கலாம். இந்த செலவினங்களை எதைக் கொண்டு சமாளிப்பது ?!

   கெடு வாய்ப்பில் நல் வாய்ப்பாக கொரோனா நிவாரணம் ரூபாய் 2500 கிடைத்தால் - நம் நீண்ட நாள் ஆசையை / தேவையை நிறைவேற்றிக் கொள்வோம் அல்லவா ?! சரி சரி வேண்டாம், இதை வீட்டம்மா பிடுங்கிக் கொள்வார்கள் :)

   TDS refund வருகிறது என்று வைத்துக் கொள்வோம், நிச்சயம் நம் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வோம் அல்லவா.. தவர விடமாட்டோம் தானே ?!

   அதுபோன்ற ஒரு எதிர்பாராத வாய்ப்பில் நீண்ட நாள் கிடப்பில் இருக்கும் ஏதோ ஒன்றுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே என் பதிவின் சாராம்சம் !

   98% வாசகர்களுக்கு டெக்ஸ் வில்லர் பிடித்தமானவர் என்றால் மீதமுள்ள 2 சதவீதம் வாசகர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் என்பதுதான் யதார்த்தம் ; யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள ஏன் இத்தனைப் போராட்டம் ?!

   ஏனெனில் ஒரு பக்கம் வேண்டாம் என்றால் இன்னொரு பக்கம் வேண்டும் என்றுதான் பதில் வரும், அதை பக்குவமாக ஏற்றுக் கொண்டால் ஆரோக்கியமான விவாதத்திற்கு என்றும் தொய்வு இருக்காது !!

   Delete
  2. Udhai kumar
   இது விவாததத்திற்கான பதில் அல்ல சொல்ல மறந்து போன பதில்! அர்ஸ் மேக்னா ஒட்டெடுப்பு நடைபெற்ற போதும் நான் டெக்ஸ் வில்லருக்கு ஒட்டளிக்காமல் அர்ஸ் மேக்னாவுக்குத்தான் ஒட்டளித்தேன்! அதே போல கொரில்லா சாம்ராஜ்யம் வேணுமா டெக்ஸ் வேணுமா எனும் போது இரும்புக்கை மாயாவியாரை அதுவும் வண்ணத்தில் காண வேண்டுமென்பதற்காக இரும்புக்கை மாயாவிக்குத்தான் ஒட்டளித்தேன்!இதுல சொல்ல வருவதென்பது என்ன வென்றால்? புதிய களங்களையும் வரவேற்போம் அதே சமயம் டெக்ஸையும் ரசிப்போம் (நேசிப்போம்) கருத்தை சொல்ல வாய்ப்பு தந்தமைக்கு நன்றி நண்பரே!
   பி.கு
   கருத்து சொல்வதற்கு எல்லோருக்குமே உரிமை உள்ளது

   Delete
  3. Kaleel Sir,

   //பி.கு
   கருத்து சொல்வதற்கு எல்லோருக்குமே உரிமை உள்ளது//

   நண்பரே, என்னுடைய முந்தையப் பதிவு தங்களுக்கான குறிப்பிட்ட / தனிப்பட்ட பதில் அல்ல ! இன்றைய விவாதத்தின் தொடர்ச்சியாகவே அது அமைந்துவிட்டது ; அது உங்களுக்கானது அல்ல ஆனால் பொதுவானது ! எனவே அந்த பதில் தங்களை எந்த விதத்திலும் காயப்படுத்தாது அல்லது குற்றம் சாட்டாது.

   நான் இங்கு பழையவற்றை கிளறவே இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் டெக்ஸ் தோற்று இருக்கலாம் ஆனால் விவாதம் முழுவதும் இன்றைய தேர்தல் சம்பந்தப்பட்டது என்பதை உணர்த்த மிகவும் கடமைப்பட்டுள்ளன் !

   நன்றி நண்பரே !

   Delete
 56. My choice is this :

  /** OPTION # 2 : வழக்கம் போல தீபாவளியினைத் தெறிக்க விட, 'தல' தாண்டவத்தை வீரியமாக்கிடலாம் ! தற்போதைய திட்டமிடலான TEX & TESHA ஸ்பெஷல் வண்ண இதழோடு, மேற்கொண்டு ரூ.200 பெறுமானமான டெக்ஸ் கதையினை b&w-ல் இணைத்து, ரூ.325 விலையில் ஒரே தீபாவளி மலராக்கிடலாம் ! **/

  ReplyDelete
 57. வாத பிரதிவாதங்கள் அனைத்தும் அருமை....பாராட்டுகள்....


  எனது ஓட்டு...


  டெக்ஸ் குண்டு புக்கு...

  ReplyDelete
 58. மஞ்ச சட்டை அதாவது csk வின்னர்.

  ReplyDelete
 59. ஹப்பா....
  அனைத்து பின்னூட்டங்களை படித்து முடித்து வந்தாச்சு.
  நல்ல வேளை, CSK வெற்றி பெற்றது 14 over la தெரிஞ்சதால தான் படிக்க முடிந்தது. இங்க வந்தா டெக்ஸ் வில்லர் வெற்றி....
  எனக்கு தோன்றிய சில எண்ணங்கள்,
  .
  .
  .
  வேண்டாம், சண்டை வரும் 😂

  ReplyDelete
 60. இங்கு டெக்ஸ் என்ற ஒரு விசயம் இல்லாது இருந்தால் மௌன வாசகணாய் கட்ந்து போயிருப்பேன்.

  ReplyDelete
 61. சாரே. ஒரு ரோசனை. 600 ரூபாய் விலையுள்ள ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாவுல, அந்த 200 ரூபாய்க்கு எத்தினி தோட்டா வருமோ, அத தீவாளிக்கு குடுங்க. மிச்ச மீதி தோட்டாவ அப்புறமாகண்டி குடுங்க. கணக்கு சரியா பூடும். சரிங்களா.. நாஞ்சொல்றது?..

  ReplyDelete
  Replies
  1. 5 பாகக் கதையை ஒரே இதழா படிக்கும் அனுபவம் தான் நன்றாக இருக்கும் பத்து சார்.

   Delete
  2. உண்மைதான் மகி சார் . சும்மா ஒரு ஜாலிக்காக சொன்னது அது. மொத்த பாகங்களையும் ஒன்றாகப் படித்தால் தான் சுவாரஸ்யமே. எனவே ஒரே தொகுப்பாக வருவதே என் விருப்பமும். அது தாமதமானாலும் ok தான்.

   Delete
 62. OPT2 டெக்ஸ் தான் வேண்டும்

  ReplyDelete
 63. காமிக்ஸ் சொந்தங்களுக்கு வணக்கம்
  opt 2 டெக்ஸ்
  டெக்ஸ்
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .டெக்ஸ்
  வேண்டும்
  வேண்டும்
  வேண்டும்

  ReplyDelete
 64. அதுசரி டெக்ஸ் வேண்டுமா என்பது என்ன கேள்வி
  அவர் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர் அல்லவா
  சொல்லுங்கள் நண்பர்களே

  ReplyDelete
 65. தீபாவளிக்கு சரவெடியே அவர்தானே

  ReplyDelete
 66. ஒருக்ககால் "டைகர் தீபாவளி மலர்" தள்ளிச் செல்ல நேரிடின், அதனிடத்தில் என்ன இட்டு நிரப்புவது ?

  ஆலையில்லா ஊருக்கு அதிகாரிப்பூ சக்கரை...

  ReplyDelete
  Replies
  1. ///ஆலையில்லா ஊருக்கு அதிகாரிப்பூ சக்கரை...///

   நீ ஸ்லீப்பர்செல்லுங்கற சமாச்சாரம்தான் ஊருக்கே தெரிஞ்சுபோச்சே.. அப்புறமும் ஏன் சுத்த்த்தி வளைக்கிற..😜😜.!

   Delete
 67. இந்த பதிவு இது வரை சரவெடி லெவலில் போயிட்டு இருக்கு 👌👌👌

  ReplyDelete
 68. ஒரு வேளை தீபாவளி புக் டிஸ்கஷன் என்பதாலோ 🤗

  ReplyDelete
 69. ஒரு சமூக விரோதியின் நடத்தைக்காக வாரிசு தண்டிக்கப்படலாமா??

  ReplyDelete
 70. தன்னுடைய சகோதர்களை வீண் வதந்திகளின் அடிப்பைடைநில் கொன்ற ஒரு அதிகார வெறி பிடித்த ஒரு அதிகாரியை எதிர்த்து நிற்கும் ஒரு உண்மையான வீரனை பற்றிய விமர்சனம் காத்திருக்கிறது..

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நாளாவே காத்து இருக்கு

   Delete