நண்பர்களே,
வணக்கம். வழக்கம் போலவே த்ரில்லிங்காக, குட்டிக்கரணம் ; பல்டி - என ஏதேதோ எக்கச்சக்கமாய் அடித்த கையோடு, (புதுச்சந்தாவின்) ஏப்ரல் இதழ்களை இன்று சுடச் சுட டப்பிகளினுள் அடைத்து, கூரியர்களில் அனுப்பியாச்சு ! So நாளைய தினம் Good Friday ஆக மாத்திரமன்றி, ஒரு புது வாசிப்புப் பயணத்தின் துவக்கப் புள்ளியாகவுமே அமைந்திடவுள்ளதென்பேன் ! And ஆன்லைன் லிஸ்டிங்களும் ரெடி என்பதால், இந்த ஈஸ்டர் வாரயிறுதியினில் நமது புது வரவுகளுக்கு ஆர்டர் போட்டீர்களெனில் -- ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய செவ்வாய்க்கு முன்பாகவே புக்ஸ் உங்கள் இல்லங்கள் தேடி வந்திடும் !
Online Listings :
https://lion-muthucomics.com/latest-releases/825-2021-april-pack.html
அல்லது
https://lioncomics.in/product/2021-april-pack/
இம்மாத இதழ்களுள் வெவ்வேறு காரணங்களின் பொருட்டு, நிறைய கவனக்கோரிகள் உள்ளதை நாளை நீங்கள் உணர்ந்திடுவீர்கள் ! சிலவற்றைப் புரட்டும் போதே கவனிக்க இயலும் ; சிலவற்றை ஊன்றிப் படிக்கும் போதே உணர இயலும் !
முதல் பார்வையில் 'தல' hardcover இதழான "கழுகு வேட்டை" உங்களை மெர்செலாக்கினால் நான் துளி கூட ஆச்சர்யம் கொள்ள மாட்டேன் ; வண்ணத்தில் நம்மவர் சும்மா தகதகக்கிறாரே !! பற்றாக்குறைக்கு கிட்டத்தட்ட 175 நண்பர்கள் தம் (குடும்ப) போட்டோக்களை அனுப்பியிருக்க, புக்கைப் புரட்டும் போது, அவர்களுக்கெல்லாம் டிஜிட்டல் அச்சில் ஒரு சுய தரிசனம் வெயிட்டிங் ! அவரவர் இல்லத்துக் குட்டீஸ் போட்டோக்கள் கணிசமாய்த் தென்பட்டன ; would love to see their reactions !! இயன்றால் குட்டீஸ்களிடம் இந்த புக்கைத் தந்து ஒரு க்ளிக் ப்ளீஸ் ?
புரட்டும் போதே உணரக்கூடிய சில சமாச்சாரங்கள் சிக் பில் குழுவின் "நீரின்றி அமையாது உலகு" இதழினில் பார்த்திடலாம் !! அவை பற்றிய உங்களின் எண்ணங்களும் most welcome !!
படிக்கும் போது உணரவல்ல சங்கதிகள் SODA இதழினில் ! ஏற்கனவே சொன்னதையே இன்னொருக்கா ஒப்பிக்கிறேன் folks ; 'தடதட'வென படித்துத் தாண்டிப் போகாது, சித்திரங்களுக்கும் கவனம் தந்திடுங்களேன் - ப்ளீஸ் ?
Saving the best for the last - ஜம்போவின் "ஜெரோனிமோ" இதழின் முதல்பார்வையில் நீங்கள் கிறுகிறுத்துப் போகாவிடின், அசாத்தியக் கல்மனிதர்களாய் நீவிர் இருந்திட வேண்டும் ! சித்திரங்களை, state of the art கலரிங் யுக்தியில் வேறொரு உச்சத்துக்கு இட்டுச் சென்றுள்ளனர் படைப்பாளிகள் ! இதோ தெறிக்க விடும் சில சாம்பிள்ஸ் :
ஜம்போ சீசன் 4-க்கு சந்தா செலுத்தியிரா நண்பர்கள் நிச்சயமாய் ஒரு சித்திர விருந்தை miss செய்திடுகிறீர்கள் !! And இதனை கல்லா கட்டும் தொனியில் நான் சொல்லவில்லை !
Before I sign out - முக்கிய சமாச்சாரம் !! போன பதிவின் அந்த 3 மண்டையன்களின் கேப்ஷன் போட்டிக்கு நடுவர்களாக நமது நிஜாரில்லா தலீவரும், இசைக்காவலரான செயலரும் கூடிப் பேசி, நல்லதொரு தீர்ப்பை வழங்கிடுவார்கள் !! நாம அல்லாரும் இப்போ ஜோரா ஒருவாட்டி நடுவர்களுக்குக் கை தட்டறோம் ; முடிவுகள் வெளியான பின்னே கெலிச்சோருக்குத் தட்டறோம் !
Happy Easter all....happy reading too !!
மீண்டும் சந்திப்போம் !! Bye for now !
P.S : Yakari & Kenya முழுசுமாய் காலி !! 😀
1
ReplyDeleteஇளநி கடை ஏகாம்பரத்தையும் பதநீ கடை பரமசிவத்தையும் முந்திக்கிட்டு எப்படி முன்னால வரமுடிஞ்சுது.!?
Deleteகம்பேனிக்காரவுகளுக்கும் உமக்கும் என்னா லிங்கு.?!
தண்ணீப்பழக் கடை தேனப்பந்தேன் ! பொருத்தமான எடம்தேன் ! நாளைக்கி புரியுந்தேன் !
Deleteவாழ்திடறோம்னேன்..
Delete//தண்ணீப்பழக் கடை தேனப்பந்தேன் ! பொருத்தமான எடம்தேன் ! நாளைக்கி புரியுந்தேன் !//
Deleteகழுகு வேட்டை?!
கழுகு வேட்டை கந்தசாமி !
Deleteசாதாரண அன்பை சாதாரணமாவே எடுத்துக்குங்க. கார்பரேட் சதின்னு கிளப்பி விட்டுடாதீங்க சாமீகளா..!
Delete//தண்ணீப்பழக் கடை தேனப்பந்தேன் ! பொருத்தமான எடம்தேன் ! நாளைக்கி புரியுந்தேன்//
Delete----போட்டோக்கள் சும்மா வாட்டர்கலர் ஃபினிஷிங்ல போட்டு இருப்பீங்கனு நினைக்கிறேன்.... தீபாவளிமலர் இலவச இணைப்பு ஸ்டைலில்... நாம் அனைவரும் மிகவும் ரசித்த ஸ்டைல் ஆயிற்றே அது!
கழுகு வேட்டை கந்தசாமி
Deleteஆஹா.. ஓஹோ.. என்ன ஒரு யூகம்!? என்ன ஒரு ஞான த்ருஷ்டி!?
இதையே வேறு ஒரு தளத்தில் செய்து இருந்தால் எனக்கு தாதா சாகேப் பால்கே விருதே கிடைத்து இருக்கும். ஹ்ம்ம்.. என்ன செய்ய?! ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு ... ...
ச்சும்மா தற்பெருமை மை லார்ட் !!
Wow 2
ReplyDelete2nd. Top ten!
ReplyDeleteOK 3rd
ReplyDeleteSorry நண்பரே.
Deleteஆஹா....நாலாவது.
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete7th
ReplyDeleteஹையா...ஜாலி...ஜாலி.பொட்டி கிளம்பிவிட்டதடா சரவணா.
ReplyDeleteஅதே அதே. நாளையில் இருந்து தளம் களை கட்ட போகிறது.
Deleteஅட்டகாசம் சார். Caption போட்டி முடிவுக்காக வெயிட்டிங். தலைவருக்கும் செயலருக்கும் எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteதலீவருக்கும் செயலருக்கும் வாழ்த்தூக்கள்..!
ReplyDelete💐💐💐
வெற்றிபெறப்போகும் நண்பர்களுக்கு முன்கூட்டிய கைதட்டல்கள்..!
👏👏👏
பதுங்குகுழியிலேர்ந்து புகை சிக்னலிலே தீர்ப்பு சொல்லவிருக்கும் தலீவர ஈ லோகத்தில் வேறெங்கும் காணில்லா !!
Deleteஆங்..பதுங்கு குழிக்குள்ளார போறதுக்கு முன்னாடி ஏதாச்சும் முக்கிகயமான சமாச்சாரம்னா மட்டும் சொல்லுய்யான்னு சொல்லிட்டு போனார் சார்.!
Deleteநல்லவேளையா ஞாபகப்படுத்துனிங்க.. ஓடிப்போய் கல்லுவுட்டுட்டு வந்திடுறேன்.!
// ஞாபகப்படுத்துனிங்க.. ஓடிப்போய் கல்லுவுட்டுட்டு வந்திடுறேன் //
Deleteஹா ஹா. பார்த்து பெரிய கல்லா தலைவர் மண்டையில் போட்டுவிடாதீங்க :-)
// P.S : Yakari & Kenya முழுசுமாய் காலி !! //
ReplyDeleteSuper
🙏🙏
ReplyDelete1st expectation - Chick Bill :)
ReplyDeleteGeronimo - Low resolution படங்கள் போல் இருக்கு
Yes sir...நம்மாட்கள் இம்மியூண்டு file களாக்கித் தந்துள்ளனர் ; நாளைக்கு மாற்றிடலாம் !
Deleteஆவலுடன் எதிர்பார்த்த பதிவு. நாளைமாதாந்திரக்கடமை ஆற்றும்நாள் உற்சாகத்துடன் கொண்டாட்டம். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஎன்ஜாய்...
Deleteயகாரி & கென்யா காலி 😊 சூப்பர்ப் ... சார்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசந்தாவில் இல்லாத வாசகர்களுக்கு கழுகு வேட்டை புத்தகத்தில் இடம்பெறும் நாள் அறிவிபப்பு எப்போதுங்க டியர்எடி ...??
ReplyDeleteபஞ்சாயத்துக்கள் பெருசாய் இல்லாது நாளைய பொழுது கழிந்து விட்டால், நாளை மறுநாள் அந்த அறிவிப்பைப் பண்ணிடலாம் சம்பத் ! "என் போட்டோ மாறிடுச்சு ; இது நானே இல்ல " என்ற ரேஞ்சுக்கு நாளைக்கு நம்மாட்கள் சாத்து வாங்காது தப்பிக்க புனித மனிடோ தான் அருள்பாலிக்கனும் !!
Deleteயாராச்சும் ஆதார்கார்டுல இருக்குற போட்டோவை அனுப்பியிருப்பாங்களோ.!?
Deleteஎன்ற போட்டோ மாறிருந்தாலும் பரவால்லை. ஆனா லட்சணமா மட்டும் வரலைன்னா அப்புறம் சும்மா இருக்க மாட்டேன். சொல்லிப்புட்டேன்.
Deleteஉன்ற போட்டோ மாறியிருந்தா கண்டீப்பா லட்சணமாத்தான் வரும்..!
Delete// உன்ற போட்டோ மாறியிருந்தா கண்டீப்பா லட்சணமாத்தான் வரும்..! //
Delete:-) LOL
இந்தியா டூ அபேரிக்கா லட்சனம் குறைய வாய்ப்புண்டு .. ஒரு வருசம் பின்னோக்கி போய்ருக்கும் அதுக்கெல்லாம் கவலைப்பட்டா எடி என்ன செய்வார் .. 😱😱
DeleteDEar Edi .. நான் வேற வித விதமான போட்டோக்களை கைல வச்சிட்டு பராக்கு பார்த்திட்டிருக்கேன் ..
Deleteநீங்க இப்படி ஒரு குண்டை தூக்கி *தல* மேல போட்டா எப்படியாம் ... !!????? 😢😢
அதுக்கெல்லாம் கவலைப்பட்டா எடி என்ன செய்வார் //
Deleteஅதெல்லாம் போட்டோ ஷாப், ப்ரஷ் யூஸ் பண்ணி மாடல்களையெல்லாம் அழகாக்கிப் புத்தகங்களில் போடறாங்களே. அப்படியெல்லாம் போட மாட்டாங்களா?
///இது நானே இல்ல " என்ற ரேஞ்சுக்கு நாளைக்கு நம்மாட்கள் சாத்து வாங்காது தப்பிக்க புனித மனிடோ தான் அருள்பாலிக்கனும் !!//.
Delete---ஏதோ புதுமை.... செம...😍
///என்ற போட்டோ மாறிருந்தாலும் பரவால்லை. ஆனா லட்சணமா மட்டும் வரலைன்னா அப்புறம் சும்மா இருக்க மாட்டேன். சொல்லிப்புட்டேன்.///
Delete😂😂😂😂😂😂
/// உன்ற போட்டோ மாறியிருந்தா கண்டீப்பா லட்சணமாத்தான் வரும்..! //
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
///புரட்டும் போதே உணரக்கூடிய சில சமாச்சாரங்கள் சிக் பில் குழுவின் "நீரின்றி அமையாது உலகு" இதழினில் பார்த்திடலாம் !! அவை பற்றிய உங்களின் எண்ணங்களும் most welcome !!///
ReplyDeleteஒருவேளை தலைப்பை நியாயப்படுத்துறோம்னு சொல்லி புக்குக்குள்ள சாஷேவுல சீமைத்தண்ணியை பின் பண்ணி அனுப்பியிருப்பாங்களோ.!? :-)
அப்படியிருக்க வாய்ப்பில்லை...
Deleteஏன்னா புக்க தண்ணீல முக்கி முக்கியே படிக்கணுமோ...
இல்லை.. நாம கழுத்தளவு தண்ணியில உக்காந்துக்கிட்டு படிக்கணும்..!
Delete(அடுத்து வந்து லங்கோடு இருக்கணுமா கூடாதான்னு டவுட்டு கேக்காதிங்க J ண்ணே.! )
அப்படி எல்லாம் சந்தேகம் வரவே வராது.
Deleteஏம்ணே...லங்கோடு யூஸ் பண்றதே இல்லையா.!? :-)
Deleteஜெரோனிமோ..
ReplyDeleteட்ராயிங் செம்ம ஈர்ப்பாக இருக்கு சார்.! ஒரு செவ்விந்திய தலை யை ஹிரோவா வெச்சி நாம படிக்கப்போற முதல் கதைன்னு நினைக்கிறேன்.!
இனிய இரவு வணக்கம் நண்பர்களே.
ReplyDeleteபுதுக்கணக்கு துவங்கும் இந்த நல்ல நாளில், புதிய சந்தா இதழ்களின் கணக்கை துவக்கி, நாளைய good Friday தினத்தை இனிமையாக்கியதற்கு ஆசிரியருக்கு நன்றிகள் பல.
யாகாரியும், கென்யாவும் காலியான செய்தி சந்தோஷம் தருகிறது.
இந்த நிலைமை இந்த ஆண்டு முழுவதும் நீடித்துத் தொடர வாழ்த்துக்கள்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் அவசியமான தேவை. கைவசம் உள்ள இதழ்கள் விற்பனை அதிகரித்தால் தான், புதிய இதழ்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
போட்டியின் வெற்றியாளர்களை தேர்வு செய்யும் நடுவர்களுக்கும். வெற்றி பெறப் போகும் நண்பர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
நெம்ப நாளக்கெப்பறமா நம்ப ஷெரீப் கெவுண்டரும் கிட் செந்திலுமா...
ReplyDeleteமனசு வுட்டு சிரிச்சு மாமாங்கமாயிடிச்சி
ஆமாசாமீ...
DeleteSODA ...
ReplyDeleteDrawing 2.0
Kenya ஃபுல் செட் வாங்கியாச்சு. ஆனால் படிக்க மனது ஒன்ற வில்லையே... இன்னொரு முறை ஃபுல் ஃப்ரீயா இருக்கும் போது ட்ரை பண்ணணும்...
ReplyDeleteபுத்தகங்கள் கிளம்பியது மகிழ்ச்சி சார்...
ReplyDeleteநாளை கிடைத்தாலும் சனிக்கிழமை தான் புரட்ட முடியும்...
ஆவலுடன் காத்திருக்கிறேன்...
36
ReplyDeleteஒரு நூடுல்ஸ் போட்டு வரதுக்குள்ள எவ்ளோ கமெண்ட்ஸ். நேனூ 37
ReplyDeleteபழையன கழிதலும் புதியன புகுதலும் ன்னு இப்பதான் கமெண்ட் போட்டேன். அனு சிஸ்டர், நான் மாறிட்டேன்., அப்ப நீங்க ன்னு உப்புமாலேர்ந்து நூடுல்ஸ்க்கு மாறிட்டாங்க. வாழ்க வையகம்.
Deleteநம்மாளுங்க பார்ம்லே இருந்தாக்கா இந்த நேரத்திலே பொங்கலே வைச்சிடுவாங்க !
Deleteஆமாம் பத்து சார். புஸ்தகம் வந்தாச்சு. Subscription kick started.
DeleteHi..
ReplyDeleteஅடுப்பை பத்த வெச்சாச்சு..#கழுகு வேட்டை..
ReplyDeleteவெறகுன்னு நினைச்சு நீங்க உள்ளாற செருகிட்டு இருக்கிறது உங்க காலுங்கோ ! சாக்கிரதை !
Deleteசார் அருமை....புத்தகத்துக்காய் காத்திருக்கிறேன்...சிக் பில் பேருக்கு பதிலாய் அட்டையில் கிட் பேர்...
ReplyDeleteCaptions:-
ReplyDelete1)
A.கரை வரப்போகுது...இந்த டார்ச் லைட்ட வச்சு இங்க ஒரு கலக்கு கலக்கிடுவோம்
C.ஆமாண்ணே அசத்திடலாம்
B.அடேய் அது டார்ச் இல்லடா...பைனாகுலர்..
இது கூட தெரியல...
இவனுங்கலலாம் வசசுகிட்டு....
2)
A.ஆணழகன் போட்டிக்கு நான் போறது இவனுகளுக்கு தெரியக் கூடாது...பரிசு எனக்குதான்..ஹையா...
B.ஆணழகன் போட்டிக்கு நான் போறது இவனுகளுக்கு தெரியக் கூடாது...பரிசு எனக்குதான்..ஹையா...
C.ஆணழகன் போட்டிக்கு நான் போறது இவனுகளுக்கு தெரியக் கூடாது...பரிசு எனக்குதான்..ஹையா...
3)
C.அண்ணே புதுக் கொடி...புது வெப்பன்ஸ்..
நம்மள பார்த்து தமிழ்நாட்டுல எல்லோரும் மிரளப் போறாங்க பாருங்க
B.அதுவும் நான் மஞ்ச சொக்கா...
A.பகல் கொள்ளை அடிக்கற ஊருல நாமலாம் எம்மாத்திரம்...ரொம்ப சாதாரணம்டா.
4)
C.மேகம் கருக்குது...ஜம்ஜிக்கு ஜம்ஜம்
B.மின்னல் சிரிக்குது ஜம்ஜிக்கு ஜம்ஜம்
A.டேய் நாம கடல் கொள்ளை காரங்கடா...விட்டா அயிட்டம் சாங்குக்கு ஆட விட்டிருவிங்க போல
B.என்னை பார்த்து ஏண்டா அந்த கேள்வி கேட்ட
C.அது வந்துண்ணே
B.அடேய் இத்தனப் பேரு இருக்கப்ப என்னை பார்த்து எதுக்குடா அந்த கேள்விய கேட்டா
C.அது வந்து
A.அப்படி என்னதாம்பா கேட்டான்
B.மேல கொடில இருக்கற மண்டை ஓடு யாரோட போட்டோனு கேட்கறாம்பா..
5)
B.அண்ணே ஆறாம் தேதிக்குள்ள போயிட முடியுமா
A.பக்கமா வந்தாச்சு நினைக்கறேன்...அதோ கரை தெரியுது...
C.ஓட்டு போடற உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லையாடா..குழில இருந்து எழுந்திரிச்சு வரணுமா....முடியலடா
அடடா..
Deleteவயசான காலத்துல நடுவர்கள் ரெண்டு பேரும் வெள்ளெழுத்து கண்ணாடிய மாட்டிக்கிட்டு தடுமாறி தடவிக்கிட்டு திரியிற சிரமத்தை குறைப்பதற்காக.. இங்கேயும் பதிவிட்டுள்ள உங்க நல்ல மனசை பாராட்டுறேன் சார்.! :-)
செயலர் நிலையாவது பரவால்லை மச்சான். தலீவர் நிலைமையை நினைச்சாத்தான் பாவமா இருக்கு.
Deleteஎன்னது..?!?!
Deleteவெள்ளெழுத்து கண்ணாடியா?
இது தெரியாம நான்
கேப்சன் போட்டிக்கு கறுப்பெழுத்துல எழுதி அனுப்பிச்சுட்டனே. .?!?!
@ Partheeban
Delete😂😂😂😂 பின்னுறீங்க பாஸ்!! எல்லாமே அசத்தல்!!
நான்கு இதழுமே எதிர்பார்ப்பில்...கழுகு வேட்டை போட்டாவுக்காகயும்....ஹார்டு கவருக்காகயும்...அந்த அதகள அதிரடி கலர் கதைக்காயும்....உட்சிடி அதிக பக்கம் ஆர்டின்...டாக்....சோடா போன முறை அசத்திய எதிர்பார்ப்பில்...ஜெரோனிமா...ஒரு தலைவனின் கதைக்காய்...சூப்பர்
ReplyDelete///Yakari & Kenya முழுசுமாய் காலி !! 😀///
ReplyDeleteகார்ட்டூன்ஸ்க்கு வரவேற்பு சாஸ்தியாகிட்டே போகுது.. மேலிடம் கடைக்கண் காட்டினால் தேவலை..! :-)
அண்ணோவ்...KENYA ராப்பர்ல தடி தடியா நிக்கிறதுலாம் பொம்மை இல்லீங்கோ ; வுட்டாக்கா பராகுடாவையும் கார்டூன்னு சொல்லிப்புடுவீங்க போலிருக்குதே !
Deleteசார்...
Deleteகென்யா தொடரில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட கதைகளை படிச்சிருக்கேன்..
யாகாரியை மட்டும்தான் சார் குறிப்பிட்டேன்..
ப்பூஊஊஊஊ என்னைய அம்புட்டு வெவரமில்லாதவன்னு நினைச்சிப்போட்டிங்களே சார்.!
நாளை நம் கைகளில் பொக்கிஷம்
ReplyDeleteயகாரிக்கும்...கென்ய தேசத்துக்கும் சீக்கிரமா தமிழ் காத்துக் குடுத்துடுங்க ஆசிரியரே
ReplyDeleteவணக்கம். மகிழ்ச்சி.
ReplyDeleteசுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் நாளை காலை விருதுநகர் கிளம்புகிறோம். மாலையில் விருதுநகரில் புத்தகங்களை கைப்பற்றி படிக்க முடியவில்லை என்றாலும் படங்களை பார்க்க வேண்டியது தான்.
பொங்கலா ? ஜமாயுங்கள் சார் !! எங்க ஊர் பிந்திடித்து இம்முறை !
DeleteYes. 2019 தீபாவளிக்கு பிறகு (தூத்துக்குடி & விருதுநகருக்கு) ஊருக்கு செல்லவில்லை கொரோனா காரணமாக. தற்போது பொங்கல் மற்றும் சில சொந்த வேலைகளை முடிக்க செல்கிறோம், ஒரு மாத காலம் ஊர்ப்பக்கம் இருந்து ஆபீஸ் வேலையை பார்த்துக்கொண்டே மற்ற வேலைகளை முடிக்க நினைத்துளேன்! மற்றவை இறைவன் பாதங்களில்!
DeleteCaption contest
ReplyDeleteA: (மைண்ட் வாய்ஸ்) ஹம்ம்ம்ம் நம்ம வூட்டம்மா தான் வூட்டுல விறகு அடுப்பை ஊது ஊதுன்னு படுத்தியெடுத்து நம்ம கண்ணை அவிச்சுபுடுச்சுன்னு பாத்தாக்கா நம்ம குரூப் ஃபுல்லா அதே நிலமை தான் போல... புவர் பாய்ஸ்...
B: நம்ம ஊதுகுழல் தல அண்ணாத்தே மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு உளறிப்புட்டாபுள்ள...
C: அடங்கொப்புரானே நாம தான் அந்த குழாயை டெலஸ்கோப்ன்னு நினைச்சு ஏமாந்துபுட்டோம் போல... கண்ணில்லாத கபோதிங்களா உங்க எலும்பை எண்ணிட்டு தான் மறுவேலை இன்னிக்கு 😠😠😠
ஜெரோனிமோ....நம்ம டைகர் இவர்கிட்ட செமயா மொத்து வாங்கினதா ஞாபகம. என் பெயர் டைகர் செக் பண்ணணும்.
ReplyDeleteஎங்க தல சாத்து, மொத்து வாங்காத ஆள் கிடையாது.
Deleteகுமார் செம ஹா ஹா ஹா
Deleteஎடிட்டரும், நண்பர்களும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்!
ReplyDeleteநடுவராகப் பணியாற்றிடத் தேவையான சூழ்நிலையிலும், மனநிலையிலும் நான் தற்போது இல்லை என்பதால் முழு பொறுப்பையும் தாரைத் தலீவரிடமே ஒப்படைத்துவிட்டு.. நடுவராகத் தேர்ந்தெடுத்த எடிட்டருக்கு என் நன்றியையும், அன்பையும் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி நன்றி!!🙏🙏
தலீவர் 'சோலோ பெர்ஃபாமன்ஸு' காட்டி வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்! வெற்றிபெறயிருக்கும் நண்பர்களுக்கு என் முன்கூட்டிய வாழ்த்துகள்!!
என்ன இப்படி சொல்லிடீங்க! தலைவரை இன்னும் எத்தனை நாள் தான் அம்போவென்று தனியாக விடுவீங்க! :-)
Deleteஇணையமும் தொலைதொடர்பும் எட்டாத அளவுக்கு தலீவர் ரொம்ப ஆழத்துக்கு போயிருந்தாரு போல.. நேத்து விட்டெறிஞ்ச கல்லு இப்பத்தான் உச்ந்தலையில நங்குன்னு விழுந்துச்சாம்.!
Deleteஉடனே கூப்பிட்டு தன்னோட தார்மீக கடமையை ஆத்த தயாராக இருப்பதாக தெரிவித்துவிட்டார்.!
என்ன..அவ்ளோ ஆழத்துல இருந்து உடனடியா வெளியே வரமுடியாததால., அங்கிருந்தே போட்டிக்கான கேப்சன்களை பரீசீலிச்சி நீதிநெறி தவறாம..
அண்ணந்தம்பி சொந்தபந்தம்னு ஆரையும் பாக்காம நாயமுடா நேர்மீடான்னு நடுநிலை தீர்ப்பை பொறா காலுல கட்டி அனுப்புவதாக (அவர்தான் பொறாவே.. அவரோட கால்லயே கட்டிக்கிட்டு வருவாராம்) மாடஸ்டி ப்ளைசி மற்றும் அமாயா ரெண்டு புள்ளைங்க மேலயும் சத்தியம் பண்ணியிருக்காரு.!
///தலைவரை இன்னும் எத்தனை நாள் தான் அம்போவென்று தனியாக விடுவீங்க///
Deleteசே சே! இது தலீவருக்கு நான் கொடுக்கும் கெளரதை!
BREAKING NEWS !!!
Deleteகூட்டணிக்குள் களேபரமா ? தர்மயுத்தம் 3 .0 காத்துள்ளதா ?
இன்றைய விவாத மேடையில்...!
தற்போது வெளிவரும் லக்கிலுக் கதைகளை விட சிக்பில் & கோ கதைகள் நன்றாகவே உள்ளன!கடைசியாக படித்த ஆர்டின் ஓர் ஆச்சர்யக்குறி வித்தியாசமாக இருந்தது, அதனாலேயே ஆர்டின் மீதும் ஒரு கண் உள்ளது!டெக்ஸ் கதை படித்த கதையென்றாலும் தலையை வண்ணத்தில் தரிசிப்பதே ஒரு சுகானுபவம்தான்! ஜெரோனிமா சொல்லவே வேணாம் எனக்கு செவ்விந்தியர்கள் கதைகள் என்றாலே ரொம்பப் பிடிக்கும் அதனாலேயே அவர்களது (ரியல் கதைகள்) கதைகளை தேடிதேடிப் படிப்பேன்! இதில் என்ன செவ்விந்திய வரலாறை சொல்லியிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதிலும் ஒர் ஆர்வமே! சோடா முதல் கதையிலேயே வித்தியாசமான பாணியில் வலம் வந்தவர் இதிலும் சோடா சோடை போகமாட்டாரென்றே நினைக்கிறேன்! ஆகையால், இம்மாதம் வெளிவரும் எல்லாக் கதைகள் மீதும் ஒரு ஆர்வமும் எதிர்ப்பார்ப்பும் உள்ளது! பார்க்கலாம் யார் யாரை முந்துகிறார்களென்று 😊
ReplyDeleteஉண்மை ஜி லக்கியை விட சிக்பில் சற்று அதிகமாக கிச்சு கிச்சு மூட்டுகிறார்
Deleteஉண்மைதான் ஜி லக்கி முன்பு தான் செம கலக்கு கலக்கினார். இப்போ சிக்பில் & கோ தான் பட்டய கெளப்புகிறார்கள்
Delete69th
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கங்கள்
ReplyDeleteஅவரவர் இல்லத்துக் குட்டீஸ் போட்டோக்கள் கணிசமாய்த் தென்பட்டன //
ReplyDeleteநானே குழந்தை என்பதால் எனது போட்டோவைக்காண ஆவலுடன்...சார்..
ஏன் அந்த காமிக்கான் போட்டோவை அனுப்பி வைக்கலையா?
Deleteவக்கீல் வேண்டாம் நேரா டைவர்ஸ்தான் தலைவரே....
Delete3,4 போட்டோ நம்மகிட்ட இருக்கு...😉😉😉
Deleteபழனி வீட்டுக்கு நேர்ல போறச்சே யாருக்கு என்ன புக்கு வேணுமோ நம்ம விருப்பத்தை தெரிவிச்சா அன்போடு தந்திடுவாராக்கும்...!!
ஆஹா...
Deleteஆனா பாருங்க விஜயராகவன் நம்ப பழனி வீடு முழுவதும் வைத்து இருப்பது இ.பம்ல :-)
Deleteகரீட்டு நண்பரே..
DeleteYakari & Kenya முழுசுமாய் காலி !! 😀//
ReplyDeleteபுதிய ஆண்டு துவக்கத்தில் அருமையான செய்தி சார்...
88th
ReplyDelete👍👍👍👍👍👌
ReplyDeleteஅந்த காமிக்கான் போட்டோ ப்ளாக்ல காட்டுங்க ப. ஆ. சார்
ReplyDeleteYakari & Kenya முழுசுமாய் காலி ///. அப்படியே எல்லாம் காலியாகட்டும்.......
ReplyDeleteபார்சலை கைப்பற்றியாச்சே...!!
ReplyDeletePFB நீங்க நம்பமாட்டிகன்னு உங்க வாட்ஸ்அப்ல போட்டோ போட்டாச்சே..!
கழுகு வேட்டை
Deleteஅட்டை செம்ம மாஸ்..! இந்த Decadeன் சிறந்த அட்டை எனலாம்.! ஹார்ட் கவரில் சும்மா டாலடிக்குது.. டெக்ஸை விட வில்லன் ஓவரா மின்னுறாரு..!
பின்னிட்டிங்க எடிட்டர் சார்..!
கழுகுவேட்டையை அன்பளிப்பாய் வழங்கிய அந்த முகம்தெரியாத காமிக்ஸ் காதலருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளும் அன்பும்.!
டெரரான வில்லனாச்சே சார் - மிரட்டலாய்க் காட்டணுமில்லியா ?
Deleteஅன்பைக் காட்டியது அசாத்திய நண்பராச்சே சார் - புக்கும் ஜொலிக்கணுமில்லியா ?
அதேன் !
😍😍😍😍😍
Delete///கழுகுவேட்டையை அன்பளிப்பாய் வழங்கிய அந்த முகம்தெரியாத காமிக்ஸ் காதலருக்கு///
Deleteபலமுக மன்னன் ஜோ'வையே தோற்கடிக்கும்படியான அவர் முகம் காட்டாதவரை தான் நமக்கெல்லாம் நல்லதுன்றது உங்களுக்குத் தெரியாததல்லவே கிட்?!! ;)
///பலமுக மன்னன் ஜோ'வையே தோற்கடிக்கும்படியான அவர் முகம் காட்டாதவரை தான் நமக்கெல்லாம் நல்லதுன்றது உங்களுக்குத் தெரியாததல்லவே கிட்?!! ;)///
Deleteஆமா குருநாயரே..!
ஆனாப்பாருங்க எல்லோரும் பேரைச்சொல்லி அவரை வெளிப்படுத்திடுவாங்க போலிருக்குககு..!
புக்குல இருந்தாலும் நானெல்லாம் ஏன் இன்னும் முகதெரியாத ன்னு சொல்றேன்னு உங்களுக்காச்சும் புரிஞ்சுதே..!!:+)
பொழுது விடியட்டும், வருவாரு !
Deleteஅப்புறம் இன்னொரு விசயம்..!
Deleteஎனக்கு வந்ந கழுகுவேட்டை புக்குல அச்சாகியிருந்த போட்டோவைப் பார்த்துட்டு பயத்துல புக்கை விசிறியடிச்சி கத்திப்புட்டேன்.. அப்புறம் வீட்டம்மாதான் வந்து..
யோவ்.. உன்னோட போட்டோதான்யா அதுன்னு அன்பா தலையில கொட்டி சொல்லிட்டு போனாங்க..!
இருந்தாலும் மறுக்காப் பாக்க பயமா இருக்குன்றதால தாண்டிப் போயிட்டு இருக்கேன்.!
(வேற யாரும் முந்திக்கிறதுக்கு முன்ன நம்மளை நாமளே கலாய்ச்சிடனும்.)
ஹலோ மாப்ள.
Deleteஎனக்காக ஒரு போட்டோ அனுப்ப சொல்லியிருந்தேனே, அனுப்பினியா?
பார்த்துட்டேன் கண்ணா உங்கள் குடும்ப போட்டோவை. மிகவும் அருமை.
Deleteஅப்புறம் விருதுநகர் வந்து ஒருமணிநேரம் ஆகிறது. சிவகாசி இங்கு இருந்து அரைமணிநேரம் தான். ஒரு நாள் முடிந்தால் சிவகாசிக்கு சென்று வரலாம் என உள்ளேன். அனைத்தும் கொரோனா கையில்.
சார் ... ரெண்டாம் ஷாட் போடற வரைக்கும் WFH ஆயிட்டு ! So ஈ மாசம் ஞான் ஆபீஸ் வரில்லா !
Deleteஇரண்டாம் டோஸ் எப்போ சார். இந்த மாதம் இறுதி வரை விருதுநகர் மற்றும் தூத்துக்குடிதான் ஜாகை :-)
Delete///ஹலோ மாப்ள.
Deleteஎனக்காக ஒரு போட்டோ அனுப்ப சொல்லியிருந்தேனே, அனுப்பினியா?///
அனுப்பினேன் மாப்ள..!
நீ சொல்லியிருந்த மாதிரியே "எனக்காக" ன்னு சொல்லி அனுப்பினேனா.. சொதப்பிடுச்சி.!மன்னிச்சூ...!
Sir
DeletePlease take enough care even after double shots ! While the shots entitle upto 80% efficacy for those who take the shots - they can still be carriers and pass it on to others! It's really a "damned if you do and damned if you dont" situation.
100 வது..
ReplyDeleteஏப்ரலில் ஏப்ரல்-காக வெயிட்டிங்.
கடைகளுக்கு என்னிக்கு சார் அனுப்புவீங்க
ReplyDeleteஇன்று சார் !
Deleteஏழுகழுதை வயசாயிடுச்சி.. வாலிபன் ஆயிட்டேன்.. ஆனாலும்கூட..
ReplyDeleteமாசாமாசம் இந்தக் காமிக்ஸ் பார்சலை பிரிச்சி.. திரும்ப திரும்ப பொஸ்தகங்களை புரட்டி புரட்டி குதூகலமடையிற குழந்தைத்தனம் மாத்திரம் போகவே மாட்டேங்குது..!(இந்தப் பழக்கம் கடைசி வரைக்கும் போகக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன்)
அடுத்த வெளியீடூகள்
கொரில்லா சாம்ராஜ்யம் - மாயாவி மாமா கலரில்
ரௌத்திரம் கைவிடேல் - ட்யூராங்கோ அதிரடி
நெஞ்சே எழு - இரவுக்கழுகு சரவெடி
ஒரு தோழனின் கதை - இது Sci- ficஆ..?? கி.நா வா..?? கார்ட்டூனா..?? அப்படின்னு இன்னும் எடிட்டர் சாருக்கே தெரியாதாம்..!? :-)
///இந்தப் பழக்கம் கடைசி வரைக்கும் போகக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன்///
Deleteபோகாது! தொட்டில் பழக்கமாச்சே!!
எனக்கும் இதே குதூகலம் ஒவ்வொரு முறை டப்பியைப் பிரிக்கும்போதும் ஏற்படுவதுண்டு!
கூடவே கொஞ்சம் பயமும் இருக்கும் - பேக்கிங் பண்ணும்போது ஏதாவது புக்கை மறந்து வைக்காம விட்டிருப்பாங்களோன்னு!
எல்லா புத்தகமும் இருக்குதுன்னு தெரிஞ்சாலும் கூட அவ்வளவு லேசில மனசு திருப்தியடைஞ்சுடாது - ஏதாச்சும் இலவச இணைப்பை வைக்க மறந்துருப்பாங்களோன்னு!
சும்மாவாச்சும் பக்கத்துக் கடைக்குப் போய் 'இலவச இணைப்பு தாய விளையாட்டை' கேட்டு வாங்கிக்கிடலாமான்னு இப்பவும் நினைக்கறதுண்டு!
// (இந்தப் பழக்கம் கடைசி வரைக்கும் போகக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன்) //
Deleteபோகாது போகாது நாம்தான் என்றும் காமிக்ஸ் குழந்தைகளே கண்ணா. நாம் காமிக்ஸ் குழந்தைகளே என பெருமை கொள்வோம்.
கூரியர் கிடைத்து விட்டதாக வீட்டில் இருந்து தகவல்...
ReplyDeleteநன்றி சார்...
எனினும் இதழ்களை புரட்ட நாளைதான் நேரம் வாய்க்கும்...படபடப்புடன் காத்திருக்கிறேன்...
101..
ReplyDelete/// குதூகலமடையிற குழந்தைத்தனம் மாத்திரம் போகவே மாட்டேங்குது ///
ReplyDeleteஅதனால் தான் எடிட்டரும் சில சமயங்களில் பன், கேக், சாக்லேட்ன்னு பார்சலுக்குள்ளே வச்சு அனுப்புறாரு போலிருக்கு.
Wow!Books received!
ReplyDeleteகொரியர் வந்துவிட்டது. கழுகு வேட்டை புத்தகத்தில் என் போட்டோ மிஸ்ஸிங். நான் மார்ச் 7ம் தேதியே Photo வை மெயிலில் அனுப்பி விட்டேன்.
ReplyDeleteஓஓஓஓஓஓஓஓயாயாயா....ஆஆஆஆஆஆய்யய்யய்யய்யாஆஆஆஆஆஆ.....ஹீஹீஈஈஈஈஈஈஈஈஈஈ....ய்ய்யாஆஆஆஆஆஆஆ!!!
ReplyDeleteஇம்மாத பார்சலை கைப்பற்றி உடைச்சவுடன் கண்ணில்பட்ட காட்சிகள் கொண்டு வந்த உற்சாகம் அது... கடை என்பதால் மனசுக்குள் ஒய்யாரமாக விசிலடித்தேன்...!!!
செம...செம...செம...ஆசிரியர் சார்.
வேற லெவல் மேக்கிங்ஸ்....!!
வார்த்தைகள் சொல்ல வர மாட்டேங்குது...!!
கழுகு வேட்டை அட்டைகள்... மாஸ்...சும்மா தெறிமாஸ்!!!😍😍😍😍😍
395 லயன் காமிக்ஸ் அட்டைகளில் இதை டாப்பில் வைப்பேன்....!!!
கதையின் ஹைலைட்டான சீன் முன்பக்கம்.
பின் அட்டையில் இத்தாலியில் இதுவரை அதிகமுறை எல்லா வகையிலும் மறுபதிப்பான வில்லனின் முகம் அசத்துகிறது.
எனக்கு ஒரு டவுட்டு. ஏற்கெனவே சமீபத்தில், சென்னையில் இருக்கும் பத்மநாபன் என்பவருக்கு அனுப்பவேண்டிய புக்ஸ் எனக்கு வந்தது. திருப்பி அனுப்பினேன்.அது மாதிரி புத்தகம் முகவரி மாறி சென்று விட்டதா?
ReplyDeleteசார் ..ஒரேயொருநாள் பொறுத்துக் கொள்ளுங்கள் ! உங்கள் போட்டோவுடனான புக் உங்களிடமே வந்து சேர்ந்து விடும் !
Deleteசார். மிக்க நன்றி. தயவுசெய்து அனுப்ப வேண்டாம். பரவாயில்லை. இதற்காக சிரமம் வேண்டாம். இது போன்ற ஒரு ஆக்கத்தின்போது சில விடுபடுதல்கள் இருக்கக்கூடியதே. மறுபடியும் கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து அனுப்பவேண்டாம்.
Deleteஎன் photo வை விட டெக்ஸ் மிகஅழகாகவே இருக்கிறார்.
Deleteபுத்தகங்கள் வந்து சேர்ந்தது. கழுகு வேட்டை தரம் அருமை. ஒரு சிறு சந்தேகம் கழுகுவேட்டை சற்றே ஒல்லியாக இருக்கிறதே ஒரிஜினல் ஒப்பிடும்பொழுது. அது எப்படி சார்?
ReplyDeleteபக்கங்களை எண்ணிப் பாத்திடுங்க சார் - சந்தேகம் தீர்றதுக்கு ! ஒரிஜினலிலேயும், கலரிலேயும் அதே நம்பர் தேறுதா ? குறையுதாவென்று பார்த்தால் குழப்பம் நீங்கிடுமில்லையா ?
DeleteAnd பக்கங்களை எண்ணிய கையோடு போனெல்லியின் தளத்துக்குப் போய் ஊர்ஜிதம் செய்திட்டால் டபுள் ஒ.கே . ஆகிடுமில்லையா ?
Deleteபக்கங்கள் சரியாக இருக்கு சார். (நன்றி விஜய்) ஆர்ட் பேப்பரில் இருப்பதால் ஒல்லியாக இருக்கிறது போல. மற்றொரு சந்தேகம் சார் வில்லன் பெயர் எல் மியூர்டோ க்கு பதிலாக *எல் ம்வெர்தோ* ஆன காரணம் என்ன சார்.
Deleteபுதிய பெயர் படிக்க கஷ்டமாக உள்ளது.
நண்பர் கிருஷ்ணா 'ஒரிஜினல்' என்று குறிப்பிடுவது கருப்பு-வெள்ளையில் வந்த நமது முந்தைய பதிப்பை என்றே நினைக்கிறேன், எடிட்டர் சார்! கருப்பு-வெள்ளைக்காக அன்றைய நாட்களில் உபயோகப்படுத்தப்பட்ட தாள்களும் தடிமனாக இருந்ததால் புத்தகமும் புஷ்டியாக இருந்திருக்கக் கூடும்! அந்தப் பழைய புத்தகத்தின் தடிமனோடு ஒப்பிடும்போது இது சற்றே சவலைப்பிள்ளையாய் தோன்றுவதும் உண்மைதான் எடிட்டர் சார்!
Delete//எல் ம்வெர்தோ* ஆன காரணம் என்ன சார்.//
Deleteதப்பாய் அடிக்கப்பட்ட அந்நாட்களது ஈயை இன்றைக்கு சரியாக அடிக்கும் முயற்சி ! "எல் ம்வெர்தோ" தான் சரியான உச்சரிப்பு !
உபயம் YOUTUBE....
தகவலுக்கு நன்றி சார் 🙏🏼
Delete//நண்பர் கிருஷ்ணா 'ஒரிஜினல்' என்று குறிப்பிடுவது கருப்பு-வெள்ளையில் வந்த நமது முந்தைய பதிப்பை என்றே நினைக்கிறேன்//
Deleteஅதே தான் விஜய் மேலும் அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகள் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்
இருக்கு ரிப் Kirby கதை ஒன்றும் பழைய கழுகு வேட்டையில் உண்டு.
Deleteமுந்தைய கழுகு வேட்டை தீபாவளிமலர் 1992 சிறப்பிதழ்...ரூ10...அதிகப்படியான பக்கங்கள் 244்பக்கங்கள் கொண்ட குண்டு புக் என்பதால் பல்க் ஆக தோன்றியது.
Deleteஇம்முறை ஹார்டு பவுண்ட் அதே பல்க் எஃபெக்ட்டை தருகிறது.
ஆர்ட் பேப்பரெல்லாம் நடப்பாண்டோடு நம்மளவிலாவது வழக்கொழிந்து போயிடும் போலும் ; தெறிக்க விடுகிறார்கள் விலைகளை இன்னமுமே ! அடுத்தாண்டில் CINEBOOK போல மினுமினுப்பு இல்லா வெள்ளைத் தாளுக்கே நாமும் பயணமாவது காலத்தின் கட்டாயமாய்த் தெரிகிறது !
DeleteUnless a miracle happens & ஏற்றிய விலைகளை நம்மூர் முதலாளிகள் பெரிய மனசு பண்ணி குறைக்கத் தீர்மானித்தாலன்றி டாட்டா to ஆர்ட் பேப்பர் தான் !
Sir,
DeleteThen with available paper it's time for a a final ART PAPER SPECIAL for Deepavali please - not announced one but extra !!
புத்தகங்களை கைப்பத்தியாச்சு... அருமையான ஆக்கம் சார்.. நண்பர் மகேந்திரன் பரமசிவத்திற்க்கு அவரது நல்ல உள்ளத்திற்க்கும் எனது சிரம்தழ்ந்த வணக்கங்கள்..
ReplyDeleteநமது அனைத்து காமிக்ஸ் உறவுகளின் சார்பாக மகேந்திரன் பரமசிவத்திற்க்கு மிக்க நன்றிகள்...மறக்க இயலா ஒருஇதழை நாம் பெற காரணமாக இருந்ததற்க்கு...
ReplyDeleteஉண்மை நண்பர் மகி அவர்களுக்கு மிக்க நன்றி.
Deleteபுத்தகங்கள் கிட்டி!
ReplyDelete'கழுகு வேட்டை' புத்தக வடிவமைப்பு - பிரம்மிக்க வைக்கிறது!
உள்பக்கத்தில் என் குழந்தைகளின் ஃபோட்டோ மிக அருமையான பிரின்ட் குவாலிட்டியில் அசத்தலாக வந்திருக்கிறது! இதுவொரு பரவச அனுபவம்!😇😇
மிக அழகான, என்றென்றும் நினைவுகூறத்தக்க பரிசை அளிக்க முன்வந்த ஷெரீப்புக்கும், அதை அழகாக வடிவமைத்துக் கொடுத்த எடிட்டருக்கும் - நன்றிகள் பல!! 🙏🙏🙏🙏💐💐
💕💕💕💕💕💕💕💕
ReplyDeleteகழுகு வேட்டை.....
வேறுலெவல் ஆக்கம்!
சிறப்பான மறுபதிப்பு!
ஹார்ட்கவர்!
உள்ளத்தை கொள்ளை கொள்ளும் போட்டோக்கள்...
பெரும்பாலும் குடும்பத்தாரோடு...
நான் எடிட்டர் சாரோடு உள்ள போட்டோ.
ஹேப்பீ....சோ ஹேப்பீ...
💕💕💕💕💕💕💕💕
இந்த இதழை காமிக்ஸ் ரசிகர்களுக்கு மஹி சரா்பில் அளித்துள்ளார் எடிட்டர் சார்.
மஹியின் அன்பு+ எடிட்டர் சாரின் அசாத்திய முயற்சி இதழை சூப்பர் ஹிட் ஆக்கியுள்ளது.
இந்த இதழில் உள்ள என் போட்டோ சிறப்பாக வர டெக்ஸ் படம் போட்ட டீசர்ட்டை அன்பு பரிசாக அளித்த அன்பு தம்பி Sivakumar Siva சிவா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
இந்த இதழை முழுவதும் அன்பு பரிசாக வழங்கிய அன்புள்ள நண்பர் மஹி!
Deleteஇதழை போட்டி போட்டுக்கொண்டு சிரத்தை எடுத்துக்கொண்டு வேற லெவலில் ஆக்கிய அன்புள்ள எடிட்டர்
என் புத்தகத்தில் போட்டோ சிறப்பாக அமைய காரணமாக இருந்த டெக்ஸ் படம் போட்ட டீசர்ட்!
அந்த டீசர்ட் கொண்டு வந்த 2016விழா இனிய நினைவுகள்!
அதே 2016 விழாவில் நம்ம நண்பர் புன்னகை ஒளிர் தன்னுடைய அன்பு பரிசாக வண்ண லக்கி இதழை அளித்து இருந்தார்....
விழா தொடங்க சற்று முன்னர் எனக்கு பதிலாக பேபி (எ) சுசீ அங்கிள் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்தினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் திரு சொக்கன் அவர்கள் குறுகிய நேரத்தில் நம்மை பற்றி கிரகித்து, நம் காமிக்ஸ் காதல் பற்றி பாஸிடிவ்ஆக பேசினார்கள்.
எடிட்டர் சாரின் தாயார் அவர்கள் எடிட்டர் மேல் நாம காட்டும் அன்பு கண்டு கண்கலங்கிட்டே பேசினார்கள்.
அன்னிக்கும் ரொம்ப எமோசனல். அதே ஃபீலிங் டுடே ஆல்சோ!
தேங்ஸ் கழுகுவேட்டை& காமிக்ஸ் வேல்டு
மொத்தத்தில் இந்த நட்புகளை நண்பர்களாக அமைய பெற்ற நானும் பாக்கியவானே!
ரொம்ப எமோசனலாக இருப்பதால் நிறைய டைப்ப முடியல
நிறைவாக உணர்கிறேன்.
தேங்ஸ் ஃப்ரம் த பாட்டம் ஆஃப் த ஹார்ட் ப்ரெண்ட்ஸ் 😍😍😍😍😍😍😍😍😍
Excellent
Deleteகழுகு வேட்டை இதழ் அட்டகாசமாக வந்துள்ளது. மேக்கிங் வேற லெவல். அட்டை டூ அட்டை வர்ணத்தில் அசரடிக்கிறது. கழுகு வேட்டை முதன் முறையாக, அதுவும் வண்ணத்தில் எனும் போது உற்சாக மீட்டர்கள் எகிறுகிறது!
ReplyDeleteஇந்த இதழை அன்பளிப்பாக வழங்கிய நண்பர்க்கும், அதனை சாத்தியமாக்கிய எடிட்டருக்கும் பெரிய நன்றிகள்.
அப்புறம், இதழில் நம்ம போட்டோ மிஸ்ஸிங்!? சார். 190 பக்கங்களும் புரட்டு, புரட்டுன்னு புரட்டியாச்சி.
பெயர் குழப்பத்தில் இங்கே ஆபீசில் கீது சார் !! இன்று அனுப்புவார்கள் !
Deleteநம்ம பெயரில் யாருப்பா டபுள் ஆக்ட்டிங் கொடுக்குறது!
Deleteவரும் இதழுக்கு GPay ல பணம் அனுப்புகிறேன்.
ஒரு தலைவனின் கதை (ஜெரோனிமோ): வரலாற்றுப் பின்ணணியில் மென்சோகம் இழையோடும் வீரமான
ReplyDeleteகோயாக்லாவின் கதை. செவ்விந்தியர்களை வெள்ளையர்கள் தாய் மண்ணை விட்டுத்துரத்தி நிலங்களையும் வளங்களையும் அபகரிக்க.... கோயாக்லாவின் இனம் படுகொலை செய்யப்பட பொங்கியெழுகிறான் கோயாக்லா. பழிக்கு பழி வாங்க உதவிக்கு கோஸைசும் பிற செவ்விந்திய தலைவர்களும் இணைய சூடுபிடிக்கிறது கதை... பரந்து விரிந்த செவ்விந்திய பூமி சித்திரங்களில் உயிர்பெற்றது போன்ற பிரமிப்பு கதை நெடுக விரவிக் கிடக்கின்றன. ஒரு இனம் அழிக்கப்பட்டதன் வரலாறு சித்திரக் கதையாக கண்முன் விரிகிறது. ஜெரோனிமோ கதையல்ல - வாழ்வின் விதை.
நண்பர் மகேந்திரன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நமது லயன் காமிக்ஸ் மீது எவ்வளவு ஈடுபாடு இருந்தால் இப்பேர்ப்பட்ட மகத்தான காரியம் செய்திட இயலும். அதுவும் செய்துவிட்டு அமைதியாக, அடக்கமாக இருப்பது...Really great Sir. உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
ReplyDeleteஎடிட்டர் சார்.. உண்மையில் எங்கள் போட்டோவை விட , நண்பர் மகி அவர்களின் போட்டோ தான் முதல் பக்கத்தில் வந்திருக்க வேண்டும். அது தான் நியாயமும் கூட.
சித்தே பொறுங்க சார் ; "அது தான் எற்கனவே முன்னட்டையிலயும் , பின்னட்டையிலேயும் போட்ருக்கே"ன்னு லந்து பண்ண குருவும், சிஷ்யப்புள்ளையும் ஆஜராகிடுவாங்க !
Deleteநண்பர் மகி அவர்களின் போட்டோ தான் முதல் பக்கத்தில் வந்திருக்க வேண்டும். அது தான் நியாயமும் கூட.//
Deleteஅட்டைப்படத்துலயே போட்டுட்டாருங்களே பத்து சார். ஒரு வேளை முதுகு காமிச்சிட்டிருக்கறதால உங்களுக்கு அடையாளம் தெரியலையோ என்னமோ 🤣🤣🤣
முகம் தெரியுதான்னு அட்டைப்படத்தை உள்ளே திருப்பிப்பார்த்தேன். அப்பவும் தெரியல. ஆனாலும் இவ்வளவு தன்னடக்கம் கூடாதுங்க மகி..
Delete///அட்டைப்படத்துலயே போட்டுட்டாருங்களே பத்து சார்.///
Deleteஆனாலும் உங்களுக்கு இவ்வளவு தற்பெருமை ஆகாதுங்க ஷெரீப்! அட்டைப்படத்திலே இருப்பது எல் ம்யூர்டோ! ரொம்ப அழகானவன்!!
பொக்கிஷங்களை இன்று மதியம் பெற்றேன் ப்பா கழுகு வேட்டை என்னா மேக்கிங் சூப்பர் இந்த இதழை பெற உதவிய மகி ஜி க்கும் அதனை சிறப்பாக தற உழைத்த ஆசிரியருக்கும் கணக்கில்லா நன்றிகள்
ReplyDeleteமகேந்திரன் உங்கள் காமிக்ஸ் ஆர்வம் வாழ்க. பாராட்ட வார்த்தைகள் இல்லை. உங்கள் காமிக்ஸ் காதலுக்கு தலை வணங்குகிறேன். 🙏
ReplyDeleteகாமிக்ஸ் காதலை தாண்டிய அந்த பெருந்தன்மை!!! வார்த்தைகளே இல்லை சார்🙏🙏🙏
Deleteமிக்க நன்றி மகிஜி. உங்கள் அர்ப்பணிப்புக்கு ஒரு Guard of Honour 🙋🙏🙏🙏
ReplyDeleteநீரின்றி அமையாது உலகு :-
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப்பிறகு கிட்ஆர்டின்& கோ வை சந்தித்ததே பேரானந்தம்.! அதுவும் 62 பக்கங்கள் கொண்ட முழு நீளக்கதைன்றப்போ கேக்கவே வேணாம்.. பரமானந்தம்.!
கண்ணை உறுத்தாத வண்ணங்களில் உட்பக்கங்கள் ஜொலிக்க.. அட்டையோ டாலடிக்கிறது.!
வுட்சிடியில் தண்ணீர்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.! அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப்படும் தண்ணீர் வண்டிகள் வழியிலேயே மறிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகின்றன.! வுட்சிடியில் தண்ணீர் திருட்டுத்தனமாக அநியாய விலைக்கு விற்கப்படுகிறது.! இதற்கிடையே வுட்சிடியில் நீர் ஆதாரத்தை கண்டுபிடிக்க கவைக்குச்சியோடு (மகுடம் படத்தில் தலைவர் கவுண்டமணி கொண்டு வருவாரே..அதே குச்சி) ஆஜராகிறார் மிஸ்டர் வாட்டர் ப்ரூஃப்.!
செவ்விந்திய வரைபடத்தின் உதவியோடு நீர் ஆதாரத்தை தேடிப்போகும் அவரை வில்லன் கும்பல் அமுக்கி ஆதாயமடையப் பார்க்கிறார்கள்.!
இவற்றையெல்லாம் சமாளித்து வுட்சிடியின் தண்ணீர் பஞ்சத்தை சிக்பில் குழு எப்படி தீர்த்துவைக்கிறது என்பதை நகைச்சுவை தூவி சொல்லியிருக்கிறார்கள்.!
(க்ளைமாக்ஸில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தண்ணீர்பஞ்சம் தீர்கிறது.)
கதையிலும் சித்திரங்களிலும்.. புன்னகைக்க பலப்பல இடங்களும் சிரிக்க பல இடங்களும் வாய்விட்டு சிரிக்க சில இடங்களும் இருக்கின்றன.!
சொன்னதையே திரும்பச் சொல்லும் வியாதி ஒவ்வொருவருக்காய் தொற்றிக்கொண்டு வருவது..
டாக்புல்லின் தலையை தேடிவந்து கற்கள் விழுவது..
கிட் ஆர்டின்.. ஹெட் ஆஃப் த ஈகிள் பாறை மேலேயே நின்று கொண்டு நாள்முழுக்க அதைத்தேடுவது..
ஹெல்மெட்.. ஆர்டினை ஏமாற்றி சிறையிலிருந்து தப்புவது..
இப்படி மனம்விட்டு சிரிக்க ஏராளமான சம்பவங்கள் கதையில் நிறைந்துள்ளன.!
குறையென்று பார்த்தால் 9ஆம் பக்கத்தில் வாட்டர்புரூஃப் பேசும் ஒரு வசனம் கோர்வையில்லாமல் அச்சாகியிருந்ததைச் சொல்லலாம்.! அதைத்தவிர்த்து.. மிக நிறைவான ஒரு கார்ட்டூன் இதழ்.!
ரேட்டிங் 100/10
100 / 10 :)
Deleteநண்பர்கள் கதையை வெளியிடாமல் விமர்சனம் பதிவிட்டால் நன்றாக இருக்குமே
ReplyDeleteஎன்னை போல் நிறைய பேர் இன்னும் புத்தகம் வந்து சேராமல் இருக்க கூடும்..
கதையை முழுதாகச் சொல்லாமல் பட்டும்படாமல் சொல்லி படிக்கும் ஆவலை தூண்டுவதும் ஒரு வகை நண்பரே.!
Deleteநான் அதற்குத்தான் முயற்சிக்கிறேன்.!
மைசூர்பாக்கு ஆசை பட்டு தானே..
Deleteமைசூர்பாக்கா...!?
Deleteபுரியலைய்யா ரம்மி.!!
:-) :-)
Deleteஆஹான்..!
Deleteரம்மி..
இப்பத்தான்யா மைசூர்பாகு மேட்டர் என்னன்னு விஜயராகவன் கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டேன்.!
நன்றி விஜி மாமா.!
இது தெரிஞ்சிருந்தா காத்தாலை 11மணிக்கே விமர்சனத்தை போட்டிருப்பேன்..அப்பவே படிச்சிட்டேன்.! மைசூர்பாகு கிடைக்கும்னு சொல்லியிருக்கலாமேய்யா..கோட்டை விட்டுட்டேனே..!
பிறர் முகத்தில்
ReplyDeleteபுன்னகை கண்டு
மனம் மகிழும்
மகேந்திரன் நண்பரே!
செயற்கரிய செயல்!
உங்கள் நேசத்திற்கு
நன்றிகள்!! வாழ்த்துகள்!!!
அப்புறம்.. கொஞ்சம் லேட்டாகத்தான் ஞாபகம் வந்தது! என் ஞாபகத்தில் - (வலிக்காதமாதிரி) இடிவிழ!
ReplyDeleteஅதாவது, யாரோ ஒரு பெயர் வெளியிட விரும்பா அன்பு நண்பர் ஒருவர் எனக்கான சந்தா தொகை மொத்தத்தையும் செலுத்தியிருக்கிறார். ஜம்போ உட்பட! இந்த மாதம் என் கைகளில் தவழ்ந்திடும் புத்தகங்கள் பாரபட்சமில்லா அந்த அன்புள்ளத்தின் அழகிய வெளிப்பாடுகளில் ஒன்று என்ற எண்ணம் எனக்குள் பிரம்மிப்பையும்😲, அந்த அன்புக்கு நானும் தகுதியுள்ளவனாயிருக்கிறேன் என்ற நினைப்பு மிகுந்த மகிழ்ச்சியையும் 😁, இந்த அன்புக்கு நிஜமாகவே நான் தகுதியானவன்தானா என்ற நினைப்பு துளியூண்டு கிலேசத்தையும் 🤔, இது எல்லாமே காமிக்ஸ் என்ற மந்திரச் சொல்லினால் சாத்தியமாகியிருப்பது எக்கச்சக்க பெருமையையும் 😇 - ஒருசேர ஏற்படுத்தியிருக்கிறது!!
நன்றிகள் பல அன்பு நண்பரே! 🙏🙏
இந்தமாத 'ஹாட் லைன்' ஏனோ ரொம்பவே பிடித்திருக்கிறது! ஷெரீப்பின் நல்ல மனதை மிக அழகாக எடுத்துச் சொல்லியிருப்பதோடு, நமது வாசகர் வட்டத்தைப் பற்றி உள்ளத்திலிருந்து வெளிப்படும் உன்னதமான வார்த்தைகளால் அழகாக எழுதியிருக்கிறார் நம் எடிட்டர்!!
ReplyDeleteரொம்பவே அருமையான அந்த வரிகள் கீழே:
பல இலட்சங்களிலும், பல்லாயிரங்களிலும் விற்பனை காணும் பத்திரிக்கைகள் உண்டு தான் நம் ஊர்களில்; பல்லாயிரத்தோரைக் கட்டிப்போடும் எழுத்தாற்றல் கொண்ட ஜாம்பவான்களின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் பிரவாகமெடுக்கும் பதிப்பகங்களும் உண்டுதான் இங்கே!
ஆனால்....
ஒரு பதிப்பகத்தின் இதயத் துடிப்பினை தங்களதாக எண்ணிடக்கூடிய ஒரு வாசக வட்டம் சத்தியமாய் அவர்களில் யாருக்குமே சாத்தியப்பட்டிராது என்பதைப் பெரும் கர்வத்துடன் பறைசாற்றத் தோன்றுகிறது! Take a bow - you wonderful people! எங்களின் ஆயுட்கால சாதனை இரும்புக்கை மாயாவிகளோ; டெக்ஸ் வில்லர்களோ; கேப்டன் டைகர்களோ; XIIIகளோ; லக்கி லூக்கோ அல்லவே அல்ல! ஓராயிரம் நிஜ வாழ்க்கை ஹீரோக்களை எங்களது வாசகர்களாய் கொண்டு பயணிப்பதே அந்தச் சாதனை!
நெகிழ்ச்சியான வரிகள்!! இதைவிடவும் வேறு என்ன பெருமை வேண்டும் ஒரு சாமானிய வாசகனுக்கு?!!😇😇😇😇🙏🙏
நிச்சயமா நண்பரே.. காலம் முழுவதும் ஆசிரியரோடும் காமிக்ஸோடும் பயனிப்போம்...
Deleteஅப்போ நானு தலீவரு எல்லோருமே ஹீரோஸ்தானா..!?
Deleteமமழையில நனைஞ்சிகிட்டு டூயட்டு உண்டுதானே.!?
This comment has been removed by the author.
Delete//நிச்சயமா நண்பரே.. காலம் முழுவதும் ஆசிரியரோடும் காமிக்ஸோடும் ஜேசனோடும் பயனிப்போம்...//
Deleteநீங்க போட்ட கமெண்ட்னா 👆🏻 இப்படித்தானே இருந்திருக்கணும் பழனி?!! 😝😝
சரி, என் கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக இருக்குமென்பதையும் நானே சொல்லிவிடுகிறேன் - "காமிக்ஸ்னாலே ஜேசன் தானே நண்பரே?!!" 😁😁
Delete///
அப்போ நானு தலீவரு எல்லோருமே ஹீரோஸ்தானா..!?
மமழையில நனைஞ்சிகிட்டு டூயட்டு உண்டுதானே.!?///
அதுக்குன்னு எங்க ரெண்டுபேரைபையும் ஒண்ணா ஆடச்சொல்லிடாதிகப்பு..!
ஹீரோயின்ஸ் கூடன்னா சொல்லுங்க.. தலீவரோட ஆடுறதுக்கு நான் வில்லனாவே இருந்துக்குவேன்.. ஹீரோயினை கையைபுடிச்சி இழுக்குற சீனைவது இருக்கும்..!
///அப்போ நானு தலீவரு எல்லோருமே ஹீரோஸ்தானா..!?///
Deleteதலீவர் இருக்கும்போது அவர் தான் என்னிக்குமே மெயின் ஹீரோ! நாமெல்லாம் சைடு ஹீரோ தான்! சீக்கிரமே நம்ம தலீவரும் தாதா சாகேப் பால்கே விருதை வாங்கிடுவார்னு தோனுது!
///தலீவரோட ஆடுறதுக்கு நான் வில்லனாவே இருந்துக்குவேன்.. ஹீரோயினை கையைபுடிச்சி இழுக்குற சீனைவது இருக்கும்..! ////
அப்படீன்னா இந்த நிமிஷத்துலேர்ந்து நானும் வில்லன் தான்! நீங்க சொன்னமாதிரி சீன்களை நிறைய வைக்கச் சொல்லி டைரக்டர் விஜயன்'ட்ட சொல்லிடலாம்!! எடுக்கும்போது நிறைய எடுத்துக்கிட்டு அப்புறமா வழக்கம்போல அவர் எடிட்டிங் வேலையை செஞ்சுக்கிடட்டுமே!!
(நீங்க டெலிட் பண்ண சீனே நல்லாத்தான் இருந்துச்சு..ஹிஹி!)
தலீவர்னு ஒரு பார்ட்டி எக்கட போயி ? எலெக்ஷன் பிரச்சாரத்துக்குப் போயிட்டாரோ ?
Deleteஒரு டூயட் கறுப்புக் கிழவி கூட !! ஆர் வாரா சோடி போட ?
Delete//ஹீரோயினை கையைபுடிச்சி இழுக்குற சீனைவது இருக்கும்..!//
Deleteகுச்சி கையி ; அப்டியே பிய்ச்சிக்கிட்டு வந்தாலும் பரால்லியா ?
///ஒரு டூயட் கறுப்புக் கிழவி கூட !! ஆர் வாரா சோடி போட ?///
Deleteசார்.. நம்ம JSCஜானி ஓடிவந்துடுவார் சார்!
///தலீவர்னு ஒரு பார்ட்டி எக்கட போயி ? எலெக்ஷன் பிரச்சாரத்துக்குப் போயிட்டாரோ ?///
Deleteரொம்ப ஆழத்துல இருக்கார் சார்.. போட்டிக்கான பதிவுகளை கவனமா பரிசீலிச்சிக்கிட்டு இருக்கார்.! தீர்ப்பு சொல்ல வந்திடுறேன்னு உறுதியா சொல்லியிருக்கார்.!
///
ஒரு டூயட் கறுப்புக் கிழவி கூட !! ஆர் வாரா சோடி போட ?///
என்னைவிட என்ற குருநாயருக்கு கொஞ்சம் தெகிரியம் சாஸ்தி..அவரே ஆட்டும் சார்..!
கறுப்பு கிழவியோட பேத்திகள் யாரவது செவப்பா இருந்தாங்கள்ளா நான் ஆடிக்கிறேன்.!
நான் அவருக்கு அமாயா புள்ளையை சொல்லி , ஜோடி சேர்த்திடறேன் ! மொத ஆளா ஆஜரான குருவும் , சிஷ்யப்புள்ளையும் வருத்தப்படக் கூடாதில்லயா ?
Delete///(நீங்க டெலிட் பண்ண சீனே நல்லாத்தான் இருந்துச்சு..ஹிஹி!)///
Deleteஞான் ஒரு கள்ளமில்லா வெள்ளப் பனியாராமாக்கும்..(சரி சரி கருப்பட்டி பனியாரம்)..!
குருநாயர் பேச்சைக்கேட்டா கெட்டுப்போயிருவேன்..அதனால நல்லபிள்ளையா சோடாவை படிக்கப் போறேன்.!
Hai
ReplyDeleteகாமிக்ஸ் காதலன் மகேந்திரன் அவர்களுக்கு என் நன்றி
ReplyDeleteஇந்தமுறை சில ஃபில்லர் பேஜஸ் கண்ணில் பட்டது கொஞ்சம் ஆச்சரியம்!!
ReplyDelete* 'அந்த நாள்' என்ற தலைப்பில் 'கெளபாய் ஸ்பெஷல்' புத்தகம் குறித்த ஒரு மீள்பார்வை..
* 'உண்மையின் உரைகள்' என்ற தலைப்பில் போன மாத புத்தகங்கள் குறித்து ஒரு நறுக்-சுருக் விமர்சனம்..
* 'குட்டீஸ் கார்னர்' - நம் வீட்டுக் குழந்தைகளின் ஓவியத் திறமைக்கு ஒரு வாய்ப்பளிக்கும் விதமாக!
* 'மாதம் ஒரு ஹீரோ' பகுதி - இதில் டெக்ஸ் வில்லருக்கு அறிமுகம் கொடுத்திருப்பதுதான் செம காமெடி! (சூரியனுக்கே டார்ச் லைட்டாங் சார்?!!)
இவற்றோடு, வார இறுதிகளில் ஒரு மினி ஆன்லைன் விற்பனை குறித்த தகவல்களும்!
ஃபில்லர் பக்கங்களுக்கு ஒரு ஜே!!!
இந்த வருட சந்தா வின் முதல் பெட்டி கிடைத்துவிட்டது நன்றிகள்
ReplyDeleteஅட!! தமிழர்கள் தங்கள் குடும்ப உறுப்பினரின் இறப்புக்கு சோகத்தை வெளிப்படுத்தும் விதமாக மொட்டையடித்துக் கொள்ளும் அதே பழக்கம் அபாச்சே செவ்விந்தியர்களிடமும் இருந்ததாமே?!! ஆச்சரியம் தான்!!
ReplyDeleteதற்போது வாசிப்பில் : ஒரு தலைவனின் கதை!
இதழ்களை இன்று காலை புரட்டிப் பார்த்தாச்சி,கழுகு வேட்டை தகதகக்கிறது,ஸ்பெஷல் இதழுக்கு வழிவகுத்த ஷெரீப்பிற்கு நன்றிகள்,பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் கழுகு வேட்டை,பல ஸ்பெஷல் நினைவுகளை தாங்கி வந்துள்ளது,விற்பனையிலும் சாதனை படைக்குமாக...
ReplyDeleteசோடா புதுவித பாணியில் கலக்குகிறது...
சிக்பில் & கோ பக்கங்கள் அதிகமாய் ஆர்வத்தை கூட்டுகிறது...
ஜெரோனிமா சித்திர அதகளம்...
ஒவ்வொரு இதழ்களையுமே கொஞ்சம் பொறுமையாகத்தான் படிக்க வேண்டும்...
புதுவித முயற்சியாக பழைமையும் & புதுமையுமாக பக்க நிரப்பிகள் இடம் பிடித்துள்ளது கூடுதல் சுவராஸ்யம்...
Delete200
ReplyDelete**** ஜெரோனிமோ : ஒரு தலைவனின் கதை! *******
ReplyDeleteஒரு மதிப்புக்குரிய மாந்திரிகனாக தன் இனத்தவரிடையே வலம்வந்த கோயாக்லா என்ற அபாச்சே செவ்விந்தியன் ஒருவன் - எப்படி 'ஜெரோனிமா' என்ற போராளியாக மாறித் தன் இன மக்களை வழிநடத்தினான் என்பதை இயல்பாக, வலியோடு சொல்லும் கதை இது!
நான்கு பாகங்களைக் கொண்ட கதை என்றாலும், நேர்கோட்டில் பயணிப்பதாலும், வசனங்கள் குறைவு என்பதாலும், விறுவிறுப்பாகப் பக்கங்களைப் புரட்ட வைத்து, குறித்த நேரத்திற்கு முன்பே படித்து முடித்துவிட முடிகிறது!
அடர்நிறச் சித்திரங்கள் - வேற லெவல்!! அருகிலிருக்கும் உருவங்கள் மிகுந்த அடர் நிறத்தில் கலரிங் செய்யப்பட்டு, தொலைவிலிருப்பவை எல்லாம் மங்கலாக்கப்பட்டிருக்கிறது! கதைக்குப் பொருத்தமான இந்தச் சித்திரபாணி அவ்வப்போது 'அட!' போட வைக்கிறது!
முழுக்க செவ்விந்தியர்களைப் பற்றிய கதை எனினும் 'வோ'க்களோ, 'யாயாஹீஈஈ'க்களோ மருத்துக்கும் இல்லாமலிருப்பது ஒரு ஆச்சரியம் தான்!
ஒவ்வொரு பாகத்தின் இறுதியும் டாக்குமென்ட்ரி பாணியில் விவரிக்கப்பட்டிருப்பதும், க்ளைமாக்ஸ் - ஜெரோனிமாவின் அந்திமக் காலம் வரை இல்லாதுபோனதும் - சிறு குறைகள்!!
ஜொரோனிமா பற்றி விக்கியில் லைட்டாக மேய்ந்தபோது அவருக்கு 9 மனைவிகள் என்பதும், தன் கடைசி காலம் வரை அமெரிக்கப்படையினரிடம் ஒரு மதிப்புமிக்க கைதியாகவே இருந்ததும், 1898 வாக்கில் ஒரு கண்காட்சியில் உயிருள்ள காட்சிப் பொருளாகப் பங்கேற்றதும், அதன் வெற்றியைத் தொடர்ந்து நிறைய கண்காட்சிகளில் பங்கேற்று நிறைய ஓவியங்களையும், செவ்விந்தியர்கள் பயன்படுத்திய பொருட்களையும் விற்றுக் காசாக்கிய சில சுவாரஸ்யச் சம்பவங்களையும் அறியமுடிகிறது! கைதியாக இருக்கும்போதே ஜெரோனிமாவை டெக்ஸாஸுக்கு அழைத்துப்போய், அங்கே பொதுமக்கள் முன்னிலையில் 'காட்டெருமைகளை வேட்டையாடும் ஷோ' எல்லாம் கூட நடத்திக் காட்டியிருக்கிறார்கள்! இறுதிக் காலத்தில் தன் சுயசரிதையைக் கூட எழுதி வெளிட்டிருக்கிறாராம் இந்த வீரபுருஷன்!
ஒரு வரலாறு - திகைப்பூட்டும் சித்திரங்களின் வடிவில்!
என்னுடைய ரேட்டிங் : 9/10
சூப்பர் விமர்சனம் ஜி.
Delete