நண்பர்களே,
வணக்கம். செப்டம்பர் ஒரு decent ஆரம்பத்தினைக் கண்டிருப்பதில் ஆந்தையன் & கோ.செம ஹேப்பி அண்ணாச்சி ! என்ன தான் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றாத குறையாய் எந்த மாதத்துக்கு-எந்த இதழ்களென்ற திட்டமிடல்களைச் செய்தாலும் - சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும் உருவாக்கித் தரும் கூட்டணிகள் தம் பங்குக்கு ஊட்டிடும் சுவாரஸ்யமே தனி ரகம் தான் ! இதோ இந்த மாதம் அகஸ்மாத்தாய், நெவாடா & மிஸ்டர் நோ - என 2 புது வரவுகள் களம்காண்பது கூட அத்தகையதொரு நிகழ்வே ! And இதுவரைக்குமான அலசல்களில், அந்த 2 புதியவர்களுமே அழகாய் ஸ்கோர் செய்திருப்பது இந்த செப்டெம்பரின் உற்சாகங்களுள் பிரதானம் என்பேன் ! Thanks a ton folks !
வீடியோ பதிவோடு இதழ்களை அறிமுகம் செய்து கொஞ்ச காலம் ஆகி விட்டதென்பதால், நேரம் கிட்டும் போது நமது YouTube சேனலில் இம்மாதத்து இதழ்களைப் பற்றி மேற்கொண்டு பேசிட எண்ணியுள்ளேன் ! அதற்கு மத்தியில், இங்கே சமீப வாரங்களின் பாணியினில் ஓரிரு முக்கிய கேள்விகளை மாத்திரம் உங்கள் முன்வைத்து விட்டு நடையைக் கட்டிடவுள்ளேன் ! புது இதழ்கள் உங்கள் கரங்களில் உள்ள பிரெஷ்ஷான பொழுதிது என்பதால், எனது மொக்கைகளைக் காட்டிலும் உங்களின் அலசல்களுக்கே முன்னுரிமை தந்திட வேண்டும் ! So இந்த வாரயிறுதியில் 'என் கேள்விக்கென்ன பதில் ?' என்பதே நிலவரம் guys !!
எனது முதல் கேள்வியானது நமது போன மாதத்து டெக்ஸ் இதழானது ஆங்காங்கே எழுப்பியுள்ள சில உரையாடல்களின் நீட்சியே ! என்ன தான் நமது வலைப்பக்கத்தைத் தாண்டி, வேறெந்த சமூக ஊடகப் பக்கங்களிலும் நான் தலை காட்டுவதில்லை என்றாலும், ஆங்காங்கே அரங்கேறிடக்கூடிய சில சுவாரஸ்ய topics மீதான விவாதங்கள், நண்பர்களின் உபயத்தில் என்னை எட்டிடத் தவறுவதில்லை ! அவ்விதம் வந்ததொரு சமீப பட்டிமன்றம் - டெக்ஸ் கதைகளில் மெபிஸ்டோ ஒரு பலமா ? பலவீனமா ? என்ற தலைப்பினில் ! இங்கே நான் மட்டும் சாலமன் பாப்பையாவாய் அமரும் வாய்ப்பு கிட்டியிருப்பின், மெபிஸ்டோவுக்குத் தடா போடும் ஆப்பையாவாக மாறியிருப்பேன் என்பதில் no secrets ! நமது இரண்டாம் வருகையினில் - டெக்ஸ் பங்கேற்கத் துவங்கிய "சிவப்பாய் ஒரு சொப்பனம்" இதழிலிருந்தே நம் மத்தியில் நம்மவருக்கொரு முறையான branding தந்திட ரொம்பவே கவனமாய் இருந்திருந்தோம் ! அதற்கு முன்பான காலகட்டத்தினில் டெக்ஸ் & கோ. மாயாஜால எதிரிகளை ; விட்டலாச்சார்யா பாணி வில்லன்களைச் சந்திக்கும் கதைகளையும் தயக்கங்களின்றிக் களமிறக்கியிருந்தோம் ! ஆனால் post 2012 - டெக்ஸ் கதைகளுக்கென ஒரு டெம்ப்ளட் செட் செய்திட ஓசையின்றி முனைந்திருந்தோம் ! 'தல'யின் வரிகளில் பன்ச் வீரியங்கள் சற்றே தூக்கலாகியதும், வெள்ளிமுடியாரின் அலப்பறைகள் ஒரு மிடறு ஜாஸ்தியானதும் மாத்திரமன்றி, டைகர் ஜாக் பேசுவதில் கூட ஒரு pattern ஏற்படுத்தியிருந்தோம் ! முன்னாட்களின் நமது மொழியாக்கங்களில் டைகர் ஜாக் டெக்சிடம் பேசும் போது "நீ...வா..போ..." என்றே இருந்திருக்கும் ! ஆனால் கடந்த 11 ஆண்டுகளாய் "இரவுக்கழுகார் " என்ற அடையாளத்துடனே டைகர் ஜாக் கண்ணியமாய் உரையாடிடுகிறார் ! (இது தேவை தானா ? செவ்விந்தியன்னா இளப்பமா ? டெக்ஸுக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு ?? வா..போ..என்று பேசினால் என்ன குறைஞ்சிடும் ?" என்ற வினாக்கள் நம்மில் ஒரு அணியினருக்குத் தோன்றாது போகாது தான் - அதை அடுத்த பட்டிமன்றத்துக்கான தலைப்பாக வைச்சுக்குவோமுங்களா ?) And கிட் கூட "அங்கிள் கார்சனை" உரிமையோடு கலாய்ப்பதையும் பார்த்திருக்கலாம் & "என் பிள்ளை கிட் " என்று சுக்கா ரோஸ்ட் காதலர் காட்டிடும் பாசப் பிரவாகங்களுமே highlight ஆகிடுவதற்கு கவனம் தந்திருந்தோம் ! In fact - கிடைக்கும் வாய்ப்புகளில் கார்சன் சுக்கா ரோஸ்ட்களை வெளுத்துக் கட்டுவதையும் கதையின் போக்கிற்கொரு much needed relief ஆகப் பார்த்திடவும் தொடங்கியிருந்தோம் !
இத்தனை கண்டிஷன்களைப் போட்டுக் கொண்ட கையோடு துவக்கம் முதலாய் நான் கொண்டிருந்த மேஜர் கொள்கையே - நோ to மெபிஸ்டோ என்பதே ! இது குறித்து ரெகுலராய் கேள்விகள் எழுந்ததும், ஓட்டை ரெக்கார்டாய் அதே பதிலை நான் சொல்லி வந்ததையும் இந்தத் தளம் அறியும் ! நான் வேணாம் என்பதும், போட்டாலென்ன ? என்று நண்பர்கள் அவ்வப்போது வினவுவதும் தொடர்கதையாகவே இருந்து வந்தது ! But ரொம்ப ரொம்ப காலத்திற்குப் பின்னே மெபிஸ்டோ நம் மத்தியில் மீள்வருகை செய்திடும் சூழல் தானாய் அமைந்து போனது - "இளம் டெக்ஸ்" கதைத் தொடரானது அவரையும் தீண்டிச் சென்ற காரணத்தால் ! போன வருஷத்து தீபாவளி மலராய் வெளியான அந்த கலர் ஆல்பத்தில் மெபிஸ்டோவின் அறிமுகம் எவ்விதமிருந்தது என்பதை போச்செல்லி அவர்களின் கைவண்ணத்தில் பார்த்திருந்தோம் ! ஒரு சாதாரண மேடை மாயாஜாலக்காரனாய் மெபிஸ்டோ அறிமுகமான அந்த ஆல்பம் நம்மிடையே மாஸ் ஹிட் ! So இந்தத் தொங்குமீசை வில்லன் நமது ராடாருக்குள் மறுக்கா புகுந்தது இவ்விதமே ! And டெக்சின் ஆண்டு # 75-ன் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாய், மெபிஸ்டோவுக்கு ஒரு fresh lease of life தந்திட போனெல்லி எடிட்டர்கள் தீர்மானித்திருக்க, சரமாரியாக டெக்ஸ் vs மெபிஸ்டோ மோதல்களுடனான கதைகள் களமிறங்கின ! அவற்றுள் "மீண்டு(ம்) மாயன்" சாகசமும் ஒன்று ! ரொம்ப ரொம்ப சமீபப் படைப்பு & more than anything else - டாப் கதாசிரியர் போசெல்லியின் கைவண்ணம் என்பதால், நடப்பாண்டில் அட்டவணைக்குள் இந்த ஆல்பத்தினை இணைத்திருந்தேன் !
And அந்தப் புள்ளியில் துவங்கியது தான் இது சார்ந்த விவாதங்கள் ! "ஆத்தீ....மிடிலே !!" என்று ஓரணியும்..."அட்றா சக்கை...அட்ரா சக்கை" என்று இன்னொரு அணியும் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து கொண்டதை ஆங்காங்கே காண இயன்றது ! Given a choice - நான் டெக்சின் ரெகுலர் கதைகளோடே பயணிக்க விழைவேன் ; ஆனால் எந்தவொரு விஷயத்திலும் நான் 'வேணாம்...வேணாம்..' என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே அந்தச் சமாச்சாரம் மீது நண்பர்களில் சிலருக்கொரு கூடுதல் ஈர்ப்பு ஏற்படுவதை பார்த்து வருகிறேன் ! And எனது தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகளைக் கொண்டு உங்களின் வாசிப்புகளை ரொம்பவே கட்டுப்படுத்திடலாகாதே என்ற சிறு நெருடல் என்னுள் ! So சொல்லுங்களேன் புலவர்களே :
*டெக்ஸ் கதைகளில் அவ்வப்போதாவது இந்த மாந்த்ரீக பார்ட்டி தலைகாட்டிட வேண்டிய அவசியம் என்ன ?
OR
*டெக்ஸ் கதைகள் இருக்கும் தெருப் பக்கமாய்க் கூட இந்த தொங்குமீசையனை நடமாட விடப்படாது - என்பதற்கான காரணங்கள் என்ன ?
காரமின்றி, சாரத்தோடு விவாதிப்போமா ப்ளீஸ் ? And வோட்டு போடுவதாயின் - இதோ லிங்க் : https://strawpoll.com/40Zmq5WE2Za
And இந்த வாரயிறுதிக்கான எனது இரண்டாவது கேள்வியானது நாம் நிறையவே பேசியுள்ளதொரு topic தான் ! ஆனால் ரசனைசார் விஷயங்களில் ஐந்தாண்டுகளுக்கு முன்பானதொரு கருத்தானது இன்றைக்கும் அதே நிறத்தோடும், அதே சார்போடும் காட்சி தர வேண்டுமென்ற கட்டாயங்கள் கிடையாதெனும் போது - ஒரு மறுவிவாதத்தில் தப்பில்லை என்று தோன்றுகிறது ! Moreso நாம் பயணித்து வரும் இந்த நாட்களில் இந்தத் தலைப்புக்கு முக்கியத்துவம் முன்னெப்போதையும் விடக் கூடுதலாயுள்ளதால் - இந்த விவாதம் அத்தியாவசியமானதுமே என்பேன் ! மேட்டர் இது தான் :
- சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் -1
- உயிரைத் தேடி
- கார்சனின் கடந்த காலம்
- யார் அந்த மாயாவி ?
- நியூயார்க்கில் மாயாவி !
- சூ..மந்திரகாளி !
- வானவில்லுக்கு நிறமேது ?
- The BIG BOYS ஸ்பெஷல்
மேற்படி லிஸ்ட்டில் உள்ள நாயக / நாயகியர் ஒருவருக்கொருவர் பெரியதொரு தொடர்பில்லாதோராக இருப்பினும், ஒற்றை விஷயத்தில் இவர்கள் அனைவரும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து நிற்கின்றனர் ! And அது தான் - "வெளியாகிய மிகச் சொற்பமான அவகாசத்திலேயே விற்றுத் தீர்ந்த இதழ்ககளின் நாயகப் பெருமக்கள்" என்ற அடையாளம் ! And இவை சகலமுமே மறுபதிப்புகள் என்பது கொசுறுத் தகவலும் !
***ஒரு லியனார்டோ தாத்தாவின் கார்ட்டூன் இதழும் சரி, நீலப் பொடியர்களின் ரவுசுகளும் சரி, கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பின்னேயும் கையிருப்பில் இருக்க, அதே கார்ட்டூன் ஜானரின் பிரதிநிதிகளான சுஸ்கி & விஸ்கி 'பச்சக்'கென்று விற்றுக் காலியாவதன் மாயம் தான் என்ன ?
***உயிரைக் கொடுத்து உருவாக்கிய "பிஸ்டலுக்குப் பிரியாவிடை"களும், அர்ஸ் மேக்னாக்களும், "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்களும்" கையிருப்பில் கணிசமாய்க் கிடக்க, "உயிரைத் தேடி" ஜிலோவென்று விற்று, சொற்ப கையிருப்பே இருப்பதன் காரணமென்ன ?
***Fantasy ஜானரில் தோர்கல் மிளிர, நாம் மங்கு மங்கென்று குட்டிக்கரணங்கள் அடிக்கும் அதே பொழுதினில், ஸ்பைடராரும், மாயாவிகாருவும் BIG BOYS ஸ்பெஷலில் ஜாலியாக ஆஜராகி அதகள வெற்றி காணும் ஜாலம் தான் what ?
One to one ஒப்பீட்டில், விற்றுத் தீர்ந்த கதைகள் - இன்றைய நடப்பு ஆல்பங்களை விடவும் பன்மடங்கு ஒசந்தவை என்றெல்லாம் சத்தியமாய்ச் சொல்லிட வாய்ப்பில்லை ! கதைக்கள நவீனங்களில், சித்திர முன்னேற்றங்களில், கலரிங் ரம்யங்களில் புதுயுகக் கதைகள் any day outscore the oldies !! ஆனாலும் இந்த பால்யத்துப் பார்ட்டீஸ் மீதான நமது மோகங்கள் மட்டுப்படும் அறிகுறிகளைக் காணோமே என்பதில் தான் ஆச்சர்யமே !!
Oh yes - ஒரு பதிப்பாளனாய் நான் புகாரே வாசிக்கப் போவதில்லை ; கிட்டங்கிகளை நிரப்பும் முகாந்திரங்கள் தராத சகலத்தையும் ஆரத் தழுவிடவே செய்வேன் தான் ! And சக்கரங்களைச் சுழலச் செய்யும் புண்ணியவான்களுமே இவர்கள் தான் ! So இவை இன்னமும் தேவையா - தேவை இல்லையா ? நோஸ்டால்ஜியாவுக்குள் எத்தனை காலம் தான் திளைத்திருக்க இயலும் ? என்ற கேள்விகளெல்லாம் என்னிடமில்லை !! ரசனைசார் சமாச்சாரங்களில் each to his own என்பதை எப்போதோ நான் புரிந்து கொண்டு விட்டேன் ! And பழசை ரசிப்போரின் ரசனைகளில் பழுதுள்ளது என்றோ, புதுசின் கொடி பிடிப்போர் புதுயுகங்களின் பிள்ளைகள் என்றோ ஒரு நொடி கூட நான் கருதிடப்போவதில்லை ! என் கேள்வி ரொம்ப ரொம்ப சிம்பிளானது :
"நோஸ்டால்ஜியா" என்ற ஒற்றை விஷயத்தின் வீரியம் அந்தப் பழம் நாயகர்களின் கதைகளுக்குள் இன்றைக்கும் ஈர்ப்போடு புகுந்து வாசிக்க உதவிடுகிறதா ? நீங்கள் ஆவலாய் கோரிப் பெற்றிடும் இந்த மறுபதிப்புகளையெல்லாம் மெய்யாலுமே வாசிக்கவும், அந்நாட்களைப் போலவே ரசிக்கவும் முடிகிறதா ? இது மாத்திரமே எனது வினா !
புரிகிறது தான் - "கார்சனின் கடந்த காலம்" ஒரு கலெக்டர்'ஸ் எடிஷனாய் தகதகக்கும் போது - அதனை ஒரு காமிக்ஸ் ஆர்வலராய் கைப்பற்றும் வேட்கை மேலோங்குகிறது ! "இரத்தப் படலம்" போலான மறுபதிப்புகள் ரொம்பவே புராதனம் கொண்ட படைப்புகள் அல்ல எனும் போது - அதனூடே எப்போது மறு சவாரி செய்தாலும் அலுக்காது போகலாம் தான் !
ஆனால் in general - "இயவரசி ஸ்பெஷல்" ; "இரட்டை வேட்டையர் ஸ்பெஷல்" ; "பாட்டில் பூதம்" ; "ஜான் மாஸ்டர் ஸ்பெஷல்" ; "அலி பாபா ஸ்பெஷல்" என்று பிரவாகமெடுக்கும் விண்ணப்பங்களின் பின்னணியில் வாசிப்பின் அவாக்களும் உள்ளன தானா ? என்பதே என்னை நெருடும் கேள்வி ! காசைக் கொடுத்து வாங்குகிறீர்கள் ; சிலாகிக்கிறீர்கள் - அத்தோடு என் பாடு ஓய்ந்து விடவேண்டும் தான் ; வாங்கியதை நீங்கள் பேரீச்சம்பழத்துக்குப் போட்டால் கூட கேள்வி கேட்கும் உரிமை நேக்கு லேது தான் ! But அகவைகள் கூடிப் போனாலும், இந்தப் பழமை மீதான மோகம் அட்டகாசமாய் தொடர்வதன் மாயம் என்னுள் எழுப்பிடும் curiosity தான், உங்கள் மௌனங்களைக் கரைக்க முயற்சிக்க நினைக்கின்றது !
Again - "இது மட்டம் - அது ஒஸ்தி" என்ற பஞ்சாயத்துக்களின்றி, மனதில் படுவதைப் பகிர்ந்திடுவோமே ப்ளீஸ் ? And again - இதோ வோட்டுக்கான லிங்க் :https://strawpoll.com/PKgl3A2OEnp
எனது கேள்வி # 3 - மேலுள்ள வினாவின் நீட்சியே ! In fact அதை முன்வைத்தால் - "பிள்ளையையும் கிள்ளிப்புட்டு , தொட்டிலையும் ஆட்டுறியே ப்ளடி ராஸ்கோல் !" என்று உங்களுக்குத் திட்டத் தோன்றும் ! But நாமெல்லாம் என்னிக்கி துடைப்பங்களைப் பார்த்துப் பின்வாங்கியிருக்கோம் ? சுத்தமான வீரர்களுக்கு மு.ச.வும் ; மூ.ச.வும் ஒன்று தானே ?
விஷயம் இது தான் guys :
ரொம்ப நாள் கோரிக்கைகளுள் ஒன்று - அந்நாட்களில் ஜூனியர் லயனிலும், மினி-லயனிலும் வெளியான "அலி பாபா" கதைகளின் மறுபதிப்பு என்பதை நாமறிவோம் ! அவற்றின் டிஜிட்டல் கோப்புகள் எங்குமே பத்திரப்படுத்தப்படவில்லை என்பதால் மறுபதிப்பு செய்திட வழியின்றியே இத்தனை காலமாய் இருந்து வந்தது ! ஆனால் அந்தக் குறை சமீபப் பொழுதுகளில் நிவர்த்தி செய்யப்பட்டிருக்க,இன்று அலி பாபா வண்ணத்தில் மிளிர வாய்ப்புகளுண்டு ! ஆனால்...ஆனால்...இதன் உரிமைகளுக்கென படைப்பாளிகள் எதிர்பார்த்திடும் தொகையானது\ நாம் வாடிக்கையாய் தந்து வரும் ராயல்டிக்களை விடவும் கணிசமாய்க் கூடுதலாக இருப்பதால் ரிவர்ஸ் அடித்து விட்டோம் ! 48 பக்கங்கள் கொண்டதொரு ஆல்பமானது வழக்கம் போல லக்கி லுக் சைசில் வெளியாவதாக இருந்தால் அதன் விலையினை ரூ.230 சுமாருக்கு நிர்ணயிக்க வேண்டி வரும் போலுள்ளது ! இந்த விலைக்கு பொதுவாய் கடைகளில் விற்பதெல்லாம் கடினமே என்பதால் - this will need to be a முன்பதிவு இதழ் only ! இத்தனை பணத்துக்கு அது ஒர்த் தானா ? என்பதே இங்கு எனது கேள்வி # 3. இங்கே டிஜிட்டலில் பிரிண்ட் போட்டு "சேவை" செய்து வரும் அடியார்களின் விலைக்கு முன்பாய் ரூ.230 என்பதெல்லாம் ஒரு பெரிய மேட்டராகவே தென்படாது போகலாம் தான் ; ஆனால் அந்த உட்டாலக்கடிகளையெல்லாம் ஒரு அளவீடாகக் கொள்ளாது, அந்த விலைக்கு இந்த இதழ் சுகப்படுமா ? என்று சொல்லுங்களேன் ப்ளீஸ் ? நீங்கள் ஓ.கே. எனும் பட்சத்திலும் இது நனவாகிட அவகாசமெடுக்கும் தான் ; ஆனால் இது பயணிக்க வேண்டிய பாதையா ? இல்லையா ? என்பதைத் தீர்மானிக்க வேண்டியோர் நீங்களே என்பதால் பந்து இப்போது உங்களின் தரப்பில் ! So சொல்லுங்களேன் folks !!
ரைட்டு....இந்த வாரக் கேள்விகளைக் கேட்டாச்சு ! போன வாரத்து கேள்விகளின் விடைகளை பார்க்கலாமா ?
BOUNCER : ரொம்பவே டைட்டானதொரு விடை தந்துள்ளீர்கள் folks ! Phewwww !!
ஒல்லிப்பிச்சான் ஸ்டெர்ன் விஷயத்திலோ ஸ்பஷ்டமாய்த் தீர்ப்பளித்து விட்டீர்கள் - thank you !!
Bye folks....see you around ! Have a great weekend !! And செப்டெம்பரின் அலசல்களும் தொடரட்டுமே - ப்ளீஸ் ?