Powered By Blogger

Saturday, September 23, 2023

பிரிவியூஸ் ஒரு தொடர்கதை !

 நண்பர்களே,

வணக்கம். மெகா டெக்ஸ் பணிகளை உருண்டு, புரண்டு ஒரு வழியாய் கரை சேர்த்தாச்சு ! 700 பக்கங்களாக துவங்கிய திட்டமிடல் 712 ஆக முன்னேறி, இப்போது 720 என்று நிறைவடைந்துள்ளது ! அதில் கிட்டத்தட்ட 500 பக்கங்கள் எனது பேனாவிலிருந்து எனும் போது, திருவாளர் நாக்கார் தெருவைக் கூட்டிக் கொண்டு கிடப்பதில் வியப்புகளில்லை தான் !  And அச்சும் முடிந்து, சகலமும் நாளை பைண்டிங் செல்கிறது ! அங்கே காலில் வெந்நீரை ஊற்றாது புக்ஸை நிறைவாய் முடித்து வாங்கிட இயலும் தருணத்தில் டெஸ்பாட்ச் இருந்திடும் - so அதுவரையிலும் பொறுமை ப்ளீஸ் guys ! 

And இம்மாதத்தின் இன்னொரு டெக்ஸ் சாகசமும் கூட திங்களன்று அச்சுக்குச் செல்லவிருக்கிறது - நம்ம V காமிக்சின் உபயத்தில் ! சகோதரனின் சகாப்தம் - டெக்சின் அண்ணாரின் கதை ! பென்சில் மீசையும், சாந்தமான முகமுமாய் காட்சி தரும் சாம் வில்லரோடு பயணிக்க, இந்த மாதத்து V பயணச்சீட்டினை வைத்துக் காத்துள்ளது ! இதோ - ஒரிஜினல் அட்டைப்படமும், உட்பக்க பிரிவியூவும் :



மறுக்கா நினைவூட்டி விடுகிறேன் folks ; இது V காமிக்சின் வெளியீடு ! So அதற்கான இறுதி க்வாட்டர் சந்தா செலுத்தி விட்டீர்களா ? என்று ஒருவாட்டி உறுதி செய்து கொள்ளுங்களேன் ப்ளீஸ் ? இன்னமும் செய்திருக்கவில்லை எனில் - இதோ உள்ளது அதற்கான விபரம் : 

*ரெகுலர் சந்தாக்களில் உள்ளோர் எனில் : ரூ.325 

*அல்லாதோர் - ரூ.425

Moving on, அக்டோபரின் இதழ் # 3 - நான் ரொம்பவே எதிர்பார்த்திடும் தாத்தாக்கள் படலம் ! இதோ - லூட்டியடிக்கும் பெருசுகளின் மூன்றாவது ஆல்பத்தின் பிரிவியூ : 





Again அட்டைப்படத்துக்கு ஒரிஜினல் டிசைனே - வண்ணச் சேர்க்கையில் மட்டுமே மாற்றத்துடன் ! கதைத்தலைப்பின் எழுத்துரு - நண்பர் ஜெகத்தின் ஜாலம் ! And கதையின் ஓட்டத்தைப் பொறுத்தவரைக்கும் வசன நடை எப்போதும் போலவே  raw ஆகவே இருந்திடவுள்ளது ; பிரிவியூ பக்கமே அதை பறைசாற்றிடுவதைப் பார்த்திடலாம் ! 'இதை இன்னும் கொஞ்சம் நாசூக்காய் கையாண்டிருக்கலாமே ?' என்ற விமர்சனங்கள் வருமென்பதை யூகிக்க முடிந்தாலும், இந்தத் தொடரின் தன்மைக்கும், கதாப்பாத்திரங்களின் இயல்புக்கும் - 'உள்ளது உள்ளபடியே" என்ற பாணி தான் suit ஆகுமென்பது எனது நம்பிக்கை ! அது மாத்திரமன்றி, "18+க்கான வாசிப்பு" என்ற பரிந்துரை சகிதம் வந்திடவிருக்கும் ஆல்பத்துக்கு வசன பாணியில் சமரசம் செய்திட அவசியங்களும் இராதென்பது எனது திண்ணமான எண்ணம் ! So முன்கூட்டியே be prepared ப்ளீஸ் !

ஒன்றுக்கு இரண்டாய் 'தல' ஆல்பங்கள் அதிரடியாய் களமிறங்கும் மாதத்தில், பொதுவாய் வேறெந்த இதழ் வெளியானாலும் விற்பனையில் சட்னி ஆவது வாடிக்கை ! அது தெரிந்திருந்தும், ஒன்றுக்கு மூன்றாய் பெருசுகளை இம்மாதம் களமிறக்கி விட்டுள்ளேன் ! "இழக்க ஏதுமில்லை" என்பதையே வாழ்க்கையின் தாரக மந்திரமாய்க் கொண்டு பயணிக்கும் பெருசுகள், இந்த மோதலில் இருந்து  எவ்விதம் வெளிப்படுகிறார்கள் என்று பார்ப்பதே இம்மாதத்தின் எதிர்பார்ப்புகளுக்குள் எனக்குப் பிரதானமானது ! பார்ப்போமே !! 

இம்மாதம் இன்னொரு இதழும் உண்டு ; and அதுவும் வண்ண இதழே ! "பேய் புகுந்த பள்ளிக்கூடம்" என்ற 32 பக்க டைலன் டாக் கலர் த்ரில்லர் தான் அது ! சந்தாக்களோடு நாம் பிராமிஸ் செய்திருந்த 4 விலையில்லா இதழ்களின் வரிசையில் இது # 2. மீதமிருக்கும் இரண்டுமே 'டெக்ஸ்' கலர் மினிஸ் - for November & December ! அமானுஷ்யங்களை ஆய்வு செய்திடும் இந்த புதிர் ஹீரோவின் லேட்டஸ்ட் பாணியிலான கதை இது ; ரொம்பவே crisp கதைக்களம் + சித்திரங்கள் + கலரிங் என வசீகரிக்கிறது ! As usual இங்கே லாஜிக்குக்கு பெருசாய் இடம் நஹி தான் - ஆனால் மின்னலாய்ப் பறக்கும் இந்த 32 பக்க ஆல்பத்தை மறுபடியும் வாசிக்கத்  தோன்றாது போகாதென்பேன் ! 

And that winds up the October previews !!

இதோ - 2 வாரங்களுக்கு முன்னே கேட்டிருந்த மறுபதிப்புகள் சார்ந்த கேள்விக்கான உங்களின் பதில்கள் !!


80 + 47 = 127 பேர் "வாசிப்பும் உண்டு" என்று பதிலளித்திருப்பதில் மெய்யாலும் எனக்கு வியப்பே ! And 176 பேர் இதனில் பொறுப்பாய் வோட்டளித்திருப்பதை பார்க்கும் போது, the poll stands credible ! இந்த பதிலானது தானாய் எனது அடுத்த கேள்வியையும் வரவழைக்கிறது ! 

இதோ இந்த லிஸ்டை சித்தே பாருங்களேன் guys : 

  1. லார்கோ வின்ச் 
  2. வெய்ன் ஷெல்டன் 
  3. ஜில் ஜோர்டன் 
  4. மேஜிக் விண்ட் 
  5. டைலன் டாக் 
  6. ஜூலியா 
  7. டயபாலிக் 
  8. டெட்வுட் டிக்
  9. தோர்கல் 
  10. ப்ளூகோட்ஸ் பட்டாளம் 
  11. ஜானதன் கார்ட்லேண்ட் 
  12. கமான்சே 
  13. ட்யூக் 
  14. ஜெரெமியா 
  15. பெளன்சர்  
  16. Smurfs 
  17. லியனார்டோ தாத்தா 
  18. ரின்டின் கேன் 
  19. மேக் & ஜாக் 
  20. கர்னல் க்ளிப்டன் 
  21. தாத்தாஸ் 
  22. ஏஜென்ட் சிஸ்கோ
  23. C.I.A ஏஜெண்ட் ஆல்பா 
  24. SODA 
  25. டிடெக்டிவ் ரூபின் 
  26. டேங்கோ
  27. ஸாகோர்  
  28. நெவாடா 
  29. அண்டர்டேக்கர் 
  30. ரிங்கோ ஸ்டார் 
  31. ஸ்டெர்ன் 
  32. I.R.$
  33. LADY S
  34. மிஸ்டர் நோ
  35. சுட்டிப் புயல் பென்னி  

கடந்த பத்தாண்டுகளில் நாம் அறிமுகப்படுத்தியுள்ள புது நாயக / நாயகியரின் பட்டியல் இது - எனக்கு ஞாபகப்படுத்திக் கொள்ள இயன்றமட்டுக்கு ! For sure - இந்த லிஸ்ட்டில் இன்னமுமே ஆட்கள் இருப்பர் என்பது நிச்சயம் !!  மேற்படிப் பட்டியலில் - இப்போதும் நம் மத்தியில் உலவிடுவோர் வெகு சொற்பம் and அந்த சொற்பமுமே பெரும்பாலும் எனது பிடிவாதங்களின் பொருட்டே என்பது தான் வார்னிஷ் அடிக்காத நிஜம் ! 

"ஒரு SODA ஆல்பம் போடவா ? ஒரு ஜான் மாஸ்டர் மறுபதிப்பு வெளியிடவா ?" என்று கேட்டால் பெரும்பான்மையின் பதில் என்னவாக இருக்குமென்பது நாமெல்லாமே அறிந்ததே ! "ஒரு கிளிப்டன் கார்ட்டூன் ஆல்பம் போடவா ? அல்லது அந்த ஸ்லாட்டில் ஒரு கவ்பாய் ஆல்பம் போடவா ?" என்ற choice உங்களிடம் தந்தால் என்ன பதிலளிப்பீர்கள் என்பது தெரிந்த சமாச்சாரம்  ! "ஒரு ஆல்பா ஆல்பமா ? ஒரு ரிப் கிர்பி கதையா ?" என்று one to one மோதலை முன்மொழிந்தால் , நம்ம CIA ஏஜெண்ட் ஏதேனும் முனிசிபல் குப்பை கிடங்கில் தான் பார்சலாகிக் கிடப்பார் ! அட, "லேடி S வேணுமாங்கோ ? இயவரசி மாடஸ்டி வேணுமா ?" என்ற கேள்வியை நான் கேட்டு முடிக்கும் முன்பாகவே மாடஸ்டிக்கு தோரணமெல்லாம் கட்டி முடித்திருப்பீர்கள் ! 

நிச்சயமாய் இங்கு யாரது ரசனைகளிலும் பிழை சொல்லிடவோ / இதையெல்லாம் ரசிக்க மாட்டேங்கிறீங்களே ! என்று விசனப்படுவதோ எனது நோக்கமே அல்ல ! மாறாக - ரொம்பவே சிம்பிளான வினா என்னிடம் !!

"புதுசு என்ற தேடல்களுக்கெல்லாம் பெருசாய் அவசியங்கள் லேதுவா ? கொஞ்சம் டெக்ஸ் ; கொஞ்சம் லக்கி ; கொஞ்சம் மற்ற நாயக / நாயகியரின் கலவையிலேயே வண்டியை ஓட்டிக்கலாமா ?" என்பதே my question ! 
  • கார்ட்டூன் - "அட மொக்கை போடாதேப்பா" என்று சொல்லி விட்டீர்கள் !
  • எதிர்கால அபோகாலிப்ஸ் தொடர் - "அட நீ ஓரமா போவியா ? ஒரு ஜெரெமியாவே போதும் நைனா" என்று தீர்ப்புச் சொல்லி விட்டீர்கள் !
  • டார்க் காமெடி பாணிகள் - 'என்னமோ நீ சொல்றே...அதுக்கோசரம் படிக்கிறோம்" என்று புரிய வைத்து விட்டீர்கள் !
  • கி.நா.ஸ்  - 'அடி வாங்காம ஓடிப்புடு !' என்று அன்பாய் எச்சரித்து விட்டீர்கள் !
  • Fantasy - "புடிக்கும் ; ஆனா விற்காது !" என்று மண்டையில் குட்டுடன் சொல்லியாச்சூ !
So - எஞ்சியிருக்கும் டிடெக்டிவ் + வெஸ்டர்ன் ஜானர்களிலேயே இன்னும் கொஞ்சம் புதியவர்களைத் தேடிக் குடாயணுமா ? அல்லது 'இப்போதுள்ளோருடனே க்ளாஸிக் பார்ட்டிக்களின் புதுக் கதைகளையும் கொஞ்சமாய் தொட்டுக்கினு கொட்டும் குப்பையே மதி !' என்பீர்களா ? Honest பதில்ஸ் ப்ளீஸ் ? 

இங்கு பதிலளிக்க விரும்பா நண்பர்களுக்கென poll லிங்க் இதோ :


Bye all....see you around ! Have a good weekend !

242 comments:

  1. Replies
    1. ஏன்னே உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரிலீங்களா ?

      Delete
  2. வந்துட்டேன் 🙏😁

    ReplyDelete
  3. வணக்கம் ஆசிரியர் சார் & நண்பர்களே...

    ReplyDelete
  4. வர வர பதிவு நீளம் குறைஞ்சுட்டே வருதே...

    ReplyDelete
  5. இந்த வாரம் பேச ,அலச நிறைய மேட்டர் இருக்கு . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. மேலுள்ள பட்டியலின் 35+ நாயக / நாயகியரின் வெற்றி / தோல்விகளுக்கான காரணங்களை அலச முனைந்தாலே தெறித்து விடும் சார் ! முயற்சித்துப் பார்ப்போமா ?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. I think you know the answer better than us. Can you enlighten why some stories are not getting what it deserves. I can see many negative comments of those who have not read the full book or who have not understood the story. May be because the lifestyle of that story is alien to us? I hope so.

      Delete
  6. சாம்வில்லர் டெக்ஸுக்கு தம்பியா இருப்பார்னு பார்த்தா ஸாகோருக்கு தம்பியா இருப்பார் போல.

    ReplyDelete
  7. காமிக்ஸ் ஜனநாயகக் கடமையை செஞ்சாச்சுங்க.

    ReplyDelete
  8. டயபாலிக் ஏற்கனவே வந்தவர்னு நினைகிறேன்

    ReplyDelete
  9. தாத்தாஸ் அட்டைப் படம் பளிச்சுன்னு இருக்கு 👌😍

    ReplyDelete
  10. மைக் ஹேமர் மிஸ்ஸிங்

    ReplyDelete
    Replies
    1. May be because it is one shot album sir

      Delete
    2. என்னமா பீதியை கிளப்புறீங்க... சின்ன துரை
      பிடி ஓட்டம்...

      Delete
    3. // என்னமா பீதியை கிளப்புறீங்க... சின்ன துரை
      பிடி ஓட்டம்... //

      LOL

      +1

      Delete
  11. புது வரவுகள் இல்லையேல் காமிக்ஸ் ருசிக்காதுங்களே. ஏதோ பார்த்துச் செய்யுங்க சார்.

    ReplyDelete
  12. அறிமுக லிஸ்ட்டுல நம்ம 'லோன் ரேஞ்சர்', 'சுட்டி லக்கி', 'மிஸ்டர் எலியப்பா" ஆகியோரையும் சேர்த்துக்கிடுங்க எடிட்டர் சார்!

    ReplyDelete
  13. லேடி S மற்றும் கமான்சே எனக்கு மிகவும் பிடித்த தொடர்கள்.

    ReplyDelete
  14. வணக்கம் சார்

    ReplyDelete
  15. ட்ரெண்ட் ஏன் பட்டியலில் இல்லை. ட்ரெண்டின் எட்டுக் கதைகளும் சரி சித்திரங்களும் சரி வண்ணக்கலவையும் சரி சும்மா தெறி மிரட்டலான ரகம். ஐ லவ் ட்ரெண்ட்.

    ReplyDelete
    Replies
    1. ஒட்டு மொத்தமாக, ஒரே நேரத்தில் படிச்சு பாருங்க... அந்த கதை வேற ரேஞ்ல இருக்கும் தோழரே...

      Delete
  16. "இம்மாதம் இன்னொரு இதழும் உண்டு ; and அதுவும் வண்ண இதழே ! "பேய் புகுந்த பள்ளிக்கூடம்" என்ற 32 பக்க டைலன் டாக் கலர் த்ரில்லர் தான் அது ! சந்தாக்களோடு நாம் பிராமிஸ் செய்திருந்த 4 விலையில்லா இதழ்களின் வரிசையில் இது..."

    சந்தாவில் இல்லாதவர்களும் டைலன் டாக் Story படிக்க சில Copy extra போட்டு கொடுங்க Editor sir... 14 years ah Comics Agent கிட்ட Comics வாங்கும் என்னை போல சில ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் அளிப்பதாய் இருக்கிறது...

    ReplyDelete
  17. இரவு வணக்கம் ஆசிரியரே நண்பர்களே

    ReplyDelete
  18. தாத்தாஸ். .ஒருபக்க பிரிவியூவே அசத்தலா. கீது சார்.இது நாள் வரை தாத்தாக்களை அசால்டாக பார்த்தவர்கள் கூட அடடே என்று ஆச்சர்யப்படுபடியாக வேகம் எடுப்பது போல தெரியுது.

    ReplyDelete
  19. Is there a chance of that 11th person in the list for re-entry (adey nnu yaaro koovurathu Inga kekkuthuppa)

    ReplyDelete
  20. என் ஓட்டு புதுசுக்குத்தான் எப்போதும்..

    ReplyDelete
    Replies
    1. அந்த கருப்பு கிழவி.. ம்ம்.. ம்ம்ம்...

      Delete
    2. Karuppu kizhavinna ettaiya sivakasikke transfer vangiduvare

      Delete
  21. Sam willar.. படங்கள்.. joom in ல் சிறியதாக்கினால்.. அட்டாகாசமாய், தத்ரூபமாய் இருக்கும் என்று தெரிகிறது sir..
    Joom out பண்ணி பாருங்களேன்
    ஓவியங்கள்.. Dots. புள்ளிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.. அல்லது, digital தொழில் நுட்பம்.. கோடுகளை புள்ளிகளாக மாற்றிஉள்ளது.. நான் சொல்வது
    சரிதான்ங்களா..? ❤️

    ReplyDelete
    Replies
    1. அண்ணா....நம்மாளுங்க எனக்கு அனுப்பியிருக்கிற file ரெசொலூஷன் அம்புட்டு குறைவா கீது ! அதுக்கோசரம் ஒரு ஆராய்ச்சிக் குழுலாம் தேவை இல்லை !

      Delete
    2. 😄😄😄சகோ.. அவங்க அனுப்பின file எல்லாம் super தான்.. சின்ன frame ஐ
      மைக்ரோஸ்கோப் ல பாத்தா
      அப்படித்தான் புள்ளியா தெரியும்.. 😄..நான் சொல்ல வந்தது.. Frame சின்னதாக, சின்னதாக படங்கள் மிகவும் நுட்பமானதாக மாறிவிடும் "அழகை, அட்டகாசத்தை" பற்றி..
      இரும்புக்கை மாயாவி எனக்கு அண்ணன்.. எடிட்டர்
      என் தம்பி என்று நினைத்து
      மனசுக்குள்ள சிரிச்சுக்குவேன்.. நிஜமாவே "அண்ணா.."ன்னுடீங்க.. ரொம்ப சந்தோசம்.. 😄

      Delete
    3. ஒரு நாள் சிவகாசி வந்து எப்படி காமிக்ஸ் print ஆகிறது என்று பார்க்க
      ஆவல்.. ❤️..நீங்கள் என்றாவது free ஆக இருக்கும் போது phone
      பண்ணிவிட்டு வருவேன்..
      பாருங்க... ❤️👍

      Delete
    4. நா மாச மாதம் அங்கே தா போறேன். பிரிண்டிங் பாக்க உள்ளே விட மாட்டேன்னு சொல்றாங்க மை lord...

      Delete
  22. ஹூம்...
    லிஸ்ட்டு போடும்போது கூட டிடெக்டிவ் ஜெரோம் ஞாபகம் வரவில்லையே சார்...😭

    ReplyDelete
    Replies
    1. பத்தாண்டுகளுக்கு முன்னரே அறிமுகமானவர்தான்.. இருந்தாலும்...😭

      Delete
  23. உயிரைத் தேடி ஒரு வெற்றிப் படைப்பு என்று நினைக்கிறேன். அதுவும் உலகப் பேரழிவுக்குப் பின் நிகழும் கதைக்களம்.. ஆனால் தொடர்ந்தும் அந்த ஜேனரை குறிப்பிட வேறு எந்த கதையும் தோன்றவில்லைதான்.. வெஸ்டர்ன் எப்போதுமே தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு பிடித்தம். இராணுவக் கதைகள் அவ்வப்போது கொண்டு வரலாம்.. ஆனால் அதுவும் கி.நா வரையறை இல்லாத சித்திரக்கதைகளாக இருக்கலாம்..

    ReplyDelete
  24. //கி.நா.ஸ் - 'அடி வாங்காம ஓடிப்புடு !' என்று அன்பாய் எச்சரித்து விட்டீர்கள் !//

    Ayyayyo idhu eppa?

    ReplyDelete
  25. அட்டைப்படம் டெக்ஸ் சகோதரர்....அந்த வாடாமல்லிப் பின்னணி பிரம்மாதம்....அட்டய தானா கைய புடிக்காம பின்ணணிலருந்து முன்னணிக்கதாவது டாப்புக்கு இழுக்க...
    தாத்தாக்களும் பறக்கிறார்கள் அட்டயப் போல பச்சையில் நுழைந்து மஞ்சளில் குளித்த மினுமினுப்பில்....அந்த எழுத்தில் காணப்படுவது முடியா அல்லது ஜகத் வேறு ஏதும் சொல்ல வாராரா....


    சார் புதிய நாயகர்கள் வரும் போதெல்லாம் கூடுதல் எதிர்பார்ப்பெழுவதே இயல்புதான

    ReplyDelete
    Replies
    1. அதிலும் லார்கோ...ஷெல்டன்...ஆல்ஃபா ....தோர்கள்....ஸ்மர்ஃப்...ரூபின்...டேங்கோ...சாகோர்...ட்யூராங்கோ...நெவாடா...மிஸ்டர் நோ....ரிங்கோ....அண்டர் டேங்கர்...ஸ்டெய்ன்....போன்றோறெல்லாம் அதிரடி காட்டயில் ஏக உற்ச்சாகமே

      Delete
    2. வித்தியாசம் காட்டிய வியட்நாம் கதை...தேவ ரகசியம் தேடலுக்கல்ல...ப்ரளயம்....பரகுடா...நீரில்லை நிலமில்லை...அந்த ஹாலோவீன் இரவுக்கதை....பிரிவோம் சந்திப்போம்....அந்த மகளெனும் கற்பனையில் பழிவாங்கும் கதை...பிஸ்டலுக்கு பிரியா விடை...அந்த ஹிட்லர் வந்த கதை...இன்ஸ்பெக்டர் ஓர் நொடி ஒன்பது தோட்டா இன்னும் மறந்த சில கதைகள் ...அந்த ரஷ்ய வேட்டயனின் மனித வேட்டை...அந்த சாலையில் வந்த குழந்தை ஆவி கதை ... .அடேயப்பா அது போலான ஒன் ஷாட் களம் லார்கோவுக்கே போட்டி போடுமே....மீதத்த நினைவு படுத்தி வருகிறேன்

      Delete
    3. மா துஜே சலாம் மறக்க முடியுமா ...சிறப்பு வண்ணங்கள் அப்படியே ஒரிஜினலாய் கொட்டி வார்த்ததாய் தாங்கள் சிலாகித்த ஜேசன் ப்ரைஸ்

      Delete
    4. ப்ரளயம் வரலல்ல...அந்த நாஜிக்கள் இரட்டை குழந்தைகளை தேடும் வதை முகாம்கள் கதை

      Delete
    5. மேஜிக் விண்ட்...டைலன் டாக்ல நெஞ்சைத் தொடும் கதைகளிருந்தா தேடிப் பிடித்து போடலாம்

      Delete
    6. உண்மை சகோ.. என்னால் வாராதோ ஒரு விடியலே... கதையை மறக்கவே முடியல... காமிக்ஸ் படித்து ஒரு துளி கண்ணீர் விட்டது
      இது முதல் கதை.. கிராபிக்
      படக்கதைகள் திகைக்கவும், பிரமிக்கவும் வைக்கிறது.. இதென்ன சோதனை.. வாசக நண்பர்களுக்கு
      பிடிக்கலையா.. ஓ my god.. 🤭😔

      Delete
    7. நன்றி ஸ்டீல் க்ளா.. சகோ.. கிராபிக் கதைகள் அவசியம்.. ஒவ்வொரு கதையும்.. ஒவ்வொரு விதத்தில் மனதை தொடுகிறது.. ❤️

      Delete
  26. நிச்சயம் புதுக்கதைகள் வேண்டும், ஆதரிப்போம், எல்லா கதாநாயகர்களும் ஏதோ ஒரு காலகட்டத்தில் புதிதாகத்தானே அறிமுகமாகி இருப்பார்கள்

    பழைய காமிக்ஸ் கேட்கக் காரணம் மறக்க இயலா அழகிய ஓவியங்களும் கதைக்களம்களும் தான், வெறுமனே Nostalgic Feeling மட்டும் காரணம் அல்ல,

    ஆரம்ப கால முத்து லயனில் வந்த கதைகள் கறுப்பு வெள்ளையில் கோட்டோவியங்களாக அவ்வளவு அழகாக இருக்கும்

    இப்போதைய லார்கோ, ஷெல்டன் ஓவியங்கள் தரத்தில் உச்சம் என்றாலும் கம்ப்யூட்டர் வரைந்தது போல் உள்ளது

    பழசு + புதுசு = 50:50 வேண்டும் Sir

    ReplyDelete
  27. 4
    11
    13
    14
    17
    30
    இவங்களை எல்லாம் இணைச்சி ஹார்டு பவுண்ட்ல.. மேக்சி சைசுல... முழு வண்ணத்துல... 2024க்கு தீபாவளி மலரா போட்ருவோமா.?

    ச்சும்மா தெறிக்குமுல்ல....

    ReplyDelete
  28. இளவரசிக்கு தோரணம் எல்லாம் கட்டி முடிச்சிருப்பீங்க.இதோ கிளம்பிட்டோம் சார்.

    ReplyDelete
    Replies
    1. கட்டி வைங்க... இந்தா பின்னாடியே வாரேன்.!

      Delete
    2. யார கட்டி வைக்கணும் ?

      Delete
  29. Thaaththaas vazhakkam Pola pattasu dhaane sir. Thanks

    ReplyDelete
  30. சாம் வில்லரின் ப்ரீவியூ பக்கம் ஃப்ளாஷ்பேக் காட்சின்னு நினைக்கிறேன்.. அதனால டாட்டேட் லைன்ஸா இருக்கலாம்..!

    ReplyDelete
  31. 4.மேஜிக் விண்ட் 17 .லியோனார்டோ தாத்தா . தீபாவளிக்கு இல்லைனாலும் ஏதேனும் ஒரு நாள் வருவாங்கனு நம்பறேன் .

    ReplyDelete
    Replies
    1. காசா-பணமா ? நம்பிக்கை தானே சார் ?

      Delete
  32. ஓட்டு போட்டாச்சேய். பழசோ, புதுசோ,கிநாவோ, கார்டூனோ, வெஸ்டர்னொ, பேன்டசியோ…எதா இருந்தாலும் ஓகே. நல்ல பொழுதுபோக்கு கதைகளாக வேண்டும். அவ்வளவே.

    ReplyDelete
    Replies
    1. அப்போ இந்த மாசம் நம்ம சகாக்களின் கதையை படிக்க போறதில்லீங்களா ?

      Delete
    2. என் மச்சான்னு நினைச்சு எங்கிட்ட பேசிட்டிருக்கீங்க போல சார்.

      Delete
    3. ஜோக்ஸ் அபார்ட், தாத்தாக்களின் தொடர் எனக்கு மிகவும் பிடித்த தொடர். சோடா, ரூபின், ஆல்பா, சிஸ்கோ, டேங்கோ என அனைவருமே எனக்கு பிடித்த இருந்தார்கள். இந்த வருடம் வந்த கதைகள் எதுவும் படிக்க வில்லை என்பதால் இந்த வருட அறிமுகங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை.

      Delete
    4. ///என் மச்சான்னு நினைச்சு எங்கிட்ட பேசிட்டிருக்கீங்க போல சார்.///

      சார் கரெக்டாதான் பேசுறாரு மச்சான்..
      உனக்குத்தான் உன் தோஸ்துகளை அடையாளம் தெரியல.. ஏன்னா.. உன்னைவிட சின்ன வயசா இருக்காங்க இல்லியா.?!

      Delete
    5. 2005 லிருந்து நீ தானப்பா அடையாளம்க/ண்ணுத் தெரியாம சிரம்பட்டுட்டிருக்கே. அவரு சரியாப் பேசறாருன்னா தாத்தாக்களை என்ன மாதிரி பேரனுகளுக்கு பிடிக்குமங்கற அர்த்தத்தில் சொல்லிருப்பாரு.

      Delete
  33. //இந்தா பின்னாடியே வாரேன்// .இல்லைங்க ஜி . முன்னால போய்க்கிட்டு இருக்கிங்க.

    ReplyDelete
  34. புதுசும் வேணும் பழசும் வேணும்... கார்ட்டூன் கதைகள் நிறையவே வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. கிட்டங்கியில் இடம் மாத்திரமல்ல ; கிட்டங்கிகளே நிறைய வேண்டி வரும் சார் !

      Delete
    2. //கிட்டங்கியில் இடம் மாத்திரமல்ல ; கிட்டங்கிகளே நிறைய வேண்டி வரும் சார் !//

      :-)))

      Delete
    3. வாசக வட்டம் விரிவடையட்டும் வாங்கும் திறன் கூடட்டும்.

      Delete
  35. நவம்பர் . டிசம்பர் மினி கலர் டெக்ஸ் இரண்டு புத்தகங்கள் இதுதான் சார் ஹை லைட் அக்டோபரில் ஆரம்பிக்கும் தீபாவளி டிசம்பர் வரை தொடருது .

    ReplyDelete
  36. கருப்பு கிழவி கதைகள் 2024 ல நிச்சயம் வருமுனு நம்பிக்கையா இருக்கோம் சார் .தயவு செஞ்சு அட்டவணை யப்ப பார்த்து செய்ங்க சார்

    ReplyDelete
    Replies
    1. சார்...எத்தனையோ சிகப்பு குமரிகளும் அயல் தேசங்களில் இருப்பாங்களே ? கருப்பு கியவியை தேடுறதுக்கு பதிலா அந்த குமாரிகளை தேட ஆரம்பிச்சா ஈவி மெரி ; கண்ணன் மெரி சிலபல யூத்துங்க புண்ணியமாச்சும் தேறுமில்லியா ?

      Delete
    2. எடிட்டர் சார்.

      கருப்புக் கிழவியின் கதைகளுக்கு இப்போதும் ரசிகர்கள் உள்ளனர்.

      அட்டவணையில் இல்லைன்னாலும ஏதாவது ஒரு புத்தக விழாவிலாவது கலரில் ஒரு தொகுப்பு வெளியிடலாமே.

      ஒரு 2 நாட்களுக்கு முன்பு கூட கனவுலக வாட்ஸ்அப் குழுவில் கருப்புக் கிழவியின் கதைகளுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

      Delete
    3. மாடஸ்டி வெள்ளைக்கிழவி. கறுப்பு கிழவியும் வந்துட்டா ரெட்டைக்கிளவியா இருக்கும்னு நினைக்கறாங்களா என்னவோ.

      Delete
    4. சார் கண்ணந்தா மாடஸ்டிய கட்டி வைங்கன்னு வாய் விட்டு கேட்டுட்டார...நல்ல நேரம் போறதுக்குள்ள பிடிச்சி போடுங்க ...பின்னாலயே வந்துட்ருக்காருன்னு மாடஸ்டிக்கா கம்ப்ளெய்ண்ட் தராம பாத்துக்றது நம்ம கடமை...மகி சொன்னது போல மாடஸ்டியும் கருப்பு கிழவிதானாமே...ஜோடிப் பொருத்தம் செமயாருக்குமே அந்த ஊத்துக்கு

      Delete
    5. மாடஸ்டியப் புடுச்சி புளியமரத்துல கட்டிவைக்கச் சொன்னேன் ஸ்டீல்... தூங்கி எழுந்து
      வாரதுக்குள்ள வளைகாப்புக்கு தேதி குறிச்சிருவிங்க போலிருக்கே....😱

      Delete
    6. ///கருப்பு கியவியை தேடுறதுக்கு பதிலா அந்த குமாரிகளை தேட ஆரம்பிச்சா ஈவி மெரி ; கண்ணன் மெரி சிலபல யூத்துங்க புண்ணியமாச்சும் தேறுமில்லியா ?///

      நல்லார் ஒருவர் உளரே - அவர்பொருட்டு
      எல்லோர்க்கும் பெய்யும் மழை...

      நீங்க நல்லா இருக்..கோணும் நாடு முன்னேற.. நாட்டிலுள்ள யூத்துகளின் வாழ்வு முன்னேற...

      Delete
    7. ஓடிர மாட்டாங்க கண்ணன்...மெதுவா போங்க....நிச்சயம் காத்திருப்பா கண்ணனுக்கேத்த மாடஸ்டி

      Delete
  37. லிஸ்ட்- ன் தனி மனிதப் பார்வை

    1. மேஜிக் விண்ட் : கதையை நடத்தி சென்ற விதம் கவரவில்லை . இவருக்கு தமிழில் பெயர் சூட்ட தளத்தில் அதகளமே நடந்தது நினைவில் உள்ளது.

    2. டயபாலிக் : அப்பாவிகளைக் கொல்வதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு இழந்த நபர்.
    பாட்டிகளையும் விட்டுவைக்காத நபர் என பெத்த பெயர் பெற்ற எதிர்மறை நாயகர். ( உங்கள் பாஸ்போர்ட்டை ஒரு பாட்டி திருட அதன் தொடர்ச்சியான அவஸ்தைகளை நீங்கள் அனுபவிக்க நேரிட அதனால் இவ்விஷயத்தில் டயபாலிக் மேல் கோபம் சற்று குறைந்தது உண்மை)

    3. சிஸ்கோ: டயபாலிக் 2.0 . ஒரு அரசாங்க கைக்கூலி படையின் அங்கத்தினன் என்ற வகையில் மிகவும் பிடிக்காத நாயகன். சராசரி மனிதர்களை கட்டளைக்கு கீழ்ப்படிந்து கொல்வதால் ரசிக்க இயலவில்லை.


    4. ஸாகோர் : ஏனோ மனம் இவ்வரிசையின் மேல் நாட்டம் கொள்ளவில்லை. அழுத்தமான சம்பவங்கள் இல்லை என்பதால் ஒருவேளை இருக்கலாம்.

    ஜில் ஜோர்டான் வர இயலாமல் போனது வருத்தம்.
    ஒரு ரசிகனாய் விற்பனையை கருத்தில் கொள்ளாமல் பார்த்தால் புது வரவுகள் மேல் மட்டுமே உள்ளத்தின் நாட்டம் செல்கிறது.
    பழையவை இப்போது போல் தொகுப்புகளாக வெளியிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. அட...நான் பாஸ்போர்ட்டை தொலைச்சதுக்கு இப்படி கூட ஒரு நல்ல பக்கவிளைவு இருக்கோ ? Interesting !!

      Delete
    2. அதான் பாட்டிய டயபாலிக்க கொன்னாச்சே....சும்மா விடாதீங்க...கருப்பு கிழவியா மாறி கதை சொல்லித் திரியுதாம்...அதையும் விடாம கதையா போடுங்க கருப்பப மாத்தி வண்ணமா... அதா சரியான தண்டனையாருக்கும்

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. அருமை சென அனா...:)

      Delete
    5. // 4. ஸாகோர் : ஏனோ மனம் இவ்வரிசையின் மேல் நாட்டம் கொள்ளவில்லை. அழுத்தமான சம்பவங்கள் இல்லை என்பதால் ஒருவேளை இருக்கலாம். //
      உண்மை...

      Delete
    6. Sagor என்னளவில் சுத்த போர், டெக்ஸ் போல் பஞ்ச் டயலாக் இல்லாததும் என்று நினைக்கிறேன் சார்.

      Delete
    7. ///டெக்ஸ் போல் பஞ்ச் டயலாக் இல்லாததும் ///

      அதுக்கும் மேல ஏதோ ஒன்னு குறையுது ஜி...

      Delete
  38. Sir, any update on tintin book? Coming in 2024?

    ReplyDelete
  39. So அதற்கான இறுதி க்வாட்டர் சந்தா செலுத்தி விட்டீர்களா ?//
    க்வாட்டர் க்வாட்டரா அடிக்க சிரமப்படும் சிலருக்காக ஃபுல்லை அடுத்த வருடம் அறிமுகப்படுத்திடுங்க.

    ReplyDelete
  40. *டெக்ஸ் மறுபதிப்புக்கான கதைகளின் புதுப்பிக்கப்பட்ட விருப்பப் பட்டியல்...*

    *இரத்த முத்திரை*
    *அதிரடிக் கணவாய்*
    *எமனுடன் ஒரு யுத்தம்*
    *இரும்புக் குதிரையின் பாதையில்*
    *நள்ளிரவு வேட்டை*
    *இரத்த நகரம்*
    *எல்லையில் ஒரு யுத்தம்*
    *மரண தூதர்கள்*
    *மெக்ஸிகோ படலம்*
    *ஓநாய் வேட்டை& இரத்த தாகம்*
    *சாத்தான் வேட்டை*
    *இரத்த ஒப்பந்தம், தணியாத தணல்& காலன் தீர்த்த கணக்கு*
    *மரணத்தின் முன்னோடி, காற்றில் கரைந்த கழுகு & எமனின் எல்லையில்*

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கதைகள் அனைத்தும் வெளிவர எத்தனை நாள் ஆகும்னு தெரியல. நாம பயங்கர பயணிகள் துயில் எழுந்த பிசாசுகள் கேட்க முடியும் என்றும் தெரியல
      😀😃😄😊😊😊😊😉😉😉😅😅😆

      Delete
  41. இளம் டெக்ஸ் கதைகளை இத்தாலியில் வருவது போல் மாதமாதம்வரும்படி செய்ய வாய்ப்பிருக்கிறதா? போன முறை விவரம் தெரியாமல் தொடராக வேண்டாம் என்று சொன்னோம். வழக்கம் போல மாதம் ஒரு டெக்ஸ் + இளம் டெக்ஸ் தொடர் என்றால் இப்போது வேண்டாம் என்று சொல்வார்களா எனத் தெரியவில்லை. அதுவம் சிக்ஸர் ஸ்பெசல் மாதிரியான கதைகளை படிக்க மாத மாதம் வருவது கூட நன்றாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது.

    ReplyDelete
  42. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  43. இனிய காலை வணக்கங்கள் ஆசிரியரே
    இனிய காலை வணக்கங்கள் சகோதரர்களே

    ReplyDelete
  44. டெக்ஸ் சகோதரர் ன் அட்டைப்படம் செம அழகு சார்..சூப்பர்..

    ReplyDelete
  45. டயபாலிக், சுட்டிப் புயல் பென்னி, கமான்சே, ஜெரெமியா, பௌன்சர் இவையெல்லாமே என் ஃபேவரைட்ஸாக இருந்தவை... இவை இப்பொழுதில்லை என்பது வருத்தமே...

    உங்களது தேடல்களை எதன் பொருட்டும் நிறுத்திட வேண்டாம் சார்... இன்னும் பொக்கிஷங்கள் சித்திர உலகில் கொட்டிக் கிடக்கின்றன... திறவுகோல் உங்கள் கையில்... காத்திருக்கிறேன் ஆவலோடு...

    ReplyDelete
  46. மகி ஜி . மறுபதிப்பு பட்டியலுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  47. *டெக்ஸ் மறுபதிப்புக்கான கதைகளின் புதுப்பிக்கப்பட்ட விருப்பப் பட்டியல்...*

    *இரத்த முத்திரை*

    *அதிரடிக் கணவாய்*

    *எமனுடன் ஒரு யுத்தம்*

    *இரும்புக் குதிரையின் பாதையில்*

    *நள்ளிரவு வேட்டை*

    *இரத்த நகரம்*

    *எல்லையில் ஒரு யுத்தம்*

    *மரண தூதர்கள்*

    *மெக்ஸிகோ படலம்*

    *தனியே ஒரு வேங்கை+ கொடூர வனத்தில் டெக்ஸ்+துரோகியின் முகம்*

    *ஓநாய் வேட்டை& இரத்த தாகம்*

    *சாத்தான் வேட்டை*

    *கபால முத்திரை + சதுப்பில் ஒரு சதிகார கும்பல்*

    *இரத்த ஒப்பந்தம், தணியாத தணல்& காலன் தீர்த்த கணக்கு*

    *மரணத்தின் முன்னோடி, காற்றில் கரைந்த கழுகு & எமனின் எல்லையில்*

    ReplyDelete
    Replies
    1. பயங்கரப் பயணிகள் & துயிலெழுந்த பிசாசுகள்
      எங்கேய்யா..!?
      பறக்கும் பலூனில் டெக்ஸ்
      எங்கேய்யா..??

      Delete
    2. கூடவே டைகர்து "இளமையில் கொல் 2&3" சேர்த்து கொள்ளலாம்.. அந்த இரு பாகங்கள் மட்டுமே கலரில் பார்க்கணும்... வந்திட்டா ஒரு டைகர் செட் கம்ப்ளீட் ஆகிடும்...

      Delete
  48. மரணத்தின் நிறம் நீலம் (தோர்கல்) :-

    தோர்கல் ஆல்பங்களிலேயே இதுவரை இல்லாத அளவு தெளிவான சித்திரங்கள்.. கண்கவர் வண்ணக்கலவை.. அடடா.. அபாரம்.!

    தன் குடும்பத்தாரை பீடித்திருக்கும் ப்ளூ ப்ளேக் நோயை குணப்படுத்த சாத்தியமே இல்லாத பயணத்தை மேற்கொள்ளும் தோர்கல் எப்படி அதை சாத்தியமாக்கினார் என்பதே கதை..!

    கதை முதல் பக்கத்தில் இருந்தே தீப்பிடித்த வேகத்தில் பறக்கிறது..! ஹீரோ எப்படியும் ஜெயித்துவிடுவார்.. ஹீரோவின் குடும்பம் எப்படியும் பிழைத்துவிடும் என்பது நம் உள்மனதுக்கு தெரிந்தாலுமே கூட.. அடுத்தடுத்த சம்பவங்களால் , அடடா.. அவ்வளவுதானா ஆரிசியா.. ஜோலனின் சோலி முடிஞ்சுட்டுதா.. ஓநாய்குட்டி குட்டியாகவே மரித்துப்போகுமோ என்றெல்லாம் எண்ணங்கள் மனதில் மாறிமாறி தோன்றுகின்றன.. இதுதான் கதாசிரியரின் வெற்றி..!
    ஜார் அரச சகோதரர்கள்.. சித்திரக்குள்ளர்கள் கிராமம் என சுவாரஸ்யங்களுக்கு சிறிதும் பஞ்சமில்லை..!
    நாற்பத்தியெட்டு பக்கங்களில் ஒரு பேனல் கூட போரடிக்காத கதையோட்டம்..!

    அட்டகாசம் தோர்கல் ஏஜிர்சன்..!

    மர்ம ராஜ்ஜியம் (தோர்கல்) :-

    முதல் கதைக்கு ஒருமாற்று குறைவுதான் என்றாலும் இதுவும் ஒரு இன்ட்ரஸ்டிங் தீம்தான்..!
    இலக்கற்ற பயணத்தின் நடுவே ஒரு தீவில் ஒய்வெடுத்துக்கொண்டிருக்கும் தோர்கலுக்கு ஆரிசியாவின் அறிவுறுத்தலால் கடைசியில் ஒருவழியாக புத்தி வந்துவிடுகிறது..! சரி.. சொந்த ஊருக்கே திரும்பி போய்விடலாம் என்ற முடிவோடு இருக்கும் தோர்கல் குடும்பத்தை.. தங்களுடன் வந்தே தீரவேண்டிய கட்டாயத்தை உருவாக்கி இரு மர்ம நபர்கள் அழைத்துச் செல்கின்றனர்.! யார் அவர்கள்.. அவர்களின் நோக்கம் என்ன.. அந்த இக்கட்டில் இருந்தும் தோர்கல் எப்படி தப்புகிறார் (வேறென்ன முடிவு இருக்க முடியும்).. என்பதை விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்து சொல்லியிருக்கிறார்கள்..!

    இதுவும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.!
    இம்முறை தோர்கலின் இரு கதைகளும் ரொம்ப குழப்பங்களின்றி படிப்பதற்கு நன்றாகவே இருக்கின்றன..!

    ReplyDelete
    Replies
    1. செம்ம விமர்சனம்...👏👏👏👏

      (கன்னிராசி கோபிகிருஷ்னா (கவுண்டமணி) ஞாபகத்துக்கு வர்ராரா.!?)

      Delete
  49. //எதிர்கால அபோகாலிப்ஸ் தொடர் - "அட நீ ஓரமா போவியா ? ஒரு ஜெரெமியாவே போதும் நைனா" என்று தீர்ப்புச் சொல்லி விட்டீர்கள் !டார்க் காமெடி பாணிகள் - 'என்னமோ நீ சொல்றே...அதுக்கோசரம் படிக்கிறோம்" என்று புரிய வைத்து விட்டீர்கள் !கி.நா.ஸ்  - 'அடி வாங்காம ஓடிப்புடு !' என்று அன்பாய் எச்சரித்து விட்டீர்கள் !Fantasy - "புடிக்கும் ; ஆனா விற்காது !" என்று மண்டையில் குட்டுடன் சொல்லியாச்சூ ! //

    Soooo SAD 😔 😟 🙁 😥 😞 😿 😔

    ReplyDelete
    Replies
    1. எனக்கு புடிச்சது எல்லாம் பிடிக்காத லிஸ்ட்ல இருக்கே so sad

      Delete
  50. // And அச்சும் முடிந்து, சகலமும் நாளை பைண்டிங் செல்கிறது ! அங்கே காலில் வெந்நீரை ஊற்றாது புக்ஸை நிறைவாய் முடித்து வாங்கிட இயலும் தருணத்தில் டெஸ்பாட்ச் இருந்திடும் - so அதுவரையிலும் பொறுமை ப்ளீஸ் guys ! //
    நம்பிக்கையோடு ஒரு காத்திருப்பு...

    ReplyDelete
  51. // சகோதரனின் சகாப்தம் - டெக்சின் அண்ணாரின் கதை ! //
    குடும்பமா களத்தில் குதிச்சிட்டாங்களோ...!!!
    சாம் வில்லர் பாணி எப்படி இருக்குன்னு பார்ப்போம்...

    ReplyDelete
  52. // And கதையின் ஓட்டத்தைப் பொறுத்தவரைக்கும் வசன நடை எப்போதும் போலவே raw ஆகவே இருந்திடவுள்ளது ; //
    கதையின் ஓட்டத்திற்கு வசனம் பலமெனில் வாசிப்பானுபவம் சிறப்பாய் அமையும்...

    ReplyDelete
  53. // So - எஞ்சியிருக்கும் டிடெக்டிவ் + வெஸ்டர்ன் ஜானர்களிலேயே இன்னும் கொஞ்சம் புதியவர்களைத் தேடிக் குடாயணுமா ? //
    தேடல் நல்லது...

    ReplyDelete
  54. இந்த 35 பேரில் எனது ஆர்வமான
    தொ டர்கள் :
    லார்கோ வின்ச்
    லேடி S *
    மேக் & ஜாக் *
    டயபாலிக்
    சோடா *
    ப்ளு கோட்ஸ்
    ஜூலியா *
    ஜில் ஜோர்டன்.
    ரின்டின் கேன்
    ஆல்பா
    டி. ரூ பின்.

    ReplyDelete
  55. தீபாவளிக்குப் பிறகு ஏதாவது ஆன்லைன் புத்தக காட்சிக்கு வாய்ப்பு இருக்குங்களா சார் ?!

    ReplyDelete
  56. புதிய ios அப்டேட்டினால் தமீழில் பதிய முடிகிறது படித்த உடனே.

    எனது ஓட்டு எப்போதுமே புதிய அறிமுகங்களுக்கு தான் ஆனால் அனைத்தும் வெற்றி அடைவது தான் கஷ்டமாக இருக்கிறது.

    எனக்கு பெரும்பாலும் அறிமுகங்கள் பிடித்திருந்தன.
    விற்பனையில் அது வெளிப்படாதது வருந்ததக்க விஷயம் தான் ஆனால் தேடலை நிறுத்திவிடாதீர்கள்

    மறுபதிப்புகள் அல்லது பழையஹீரோக்கள் மீள் வருகை எனக்கு பிடித்தே இருக்கிறது

    ஆனால் புதியதோ பழையதோ படிப்பது தான் குறைந்துவிட்டது
    டெக்ஸ் கூட எனக்கு இப்போ அதிகமாக தான் தெரிகிறது இளம் டெக்ஸ் சேர்ந்த பின்பு.

    இப்போதெல்லாம் பிடிப்பது ஒல்லியான லையிட் ரீடிங் புத்தகங்ள் தான் 😁






    ReplyDelete
  57. என்னை டயபலிக் அவ்வளவா
    கவரவில்லை சகோ.. 😔

    ReplyDelete
  58. ஈவா ப்ரவுனாச்சும் கவர்ந்தாங்களாண்ணே.?!

    ReplyDelete

  59. மரணத்தின் நிறம் நீலம்

    கதையில் ப்ளேக் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எலியும் காட்டப்பட்டுள்ளது.

    ப்ளூ ப்ளேக் என கதையிலும் கண்ணனின் விமர்சனத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

    Plague என்ற பதம் plaga என்ற லத்தீன் மூலத்தை அடிப்படையாகக் கொண்டது. பழைய ப்ரெஞ்சில் plage
    என அழைக்கப்பட்டது.

    Plaga என்றால் blow எனவும் plage என்றால் pestilence எனவும் பொருள்படும்.

    உயிரினப் பேரழிவை குறிப்பிடும் இச்சொல் plague கொத்து கொத்தான அல்லது கொள்ளைவாரி நோய் என்ற விதத்தில் கையாளப்படுகிறது.

    இதை எழுதக் காரணம் இந்த கதையில் மரணத்தின் நிறம் நீலம் என்பது சரிதானா ? என்ற கேள்வி எழுவதுதான்.

    பொதுவாக எலிகளால் பரவுவதாக சொல்லப்படும் ப்ளேக் black death அல்லது ப்ளாக் ப்ளேக் என்றே அழைக்கப்படுகிறது.காரணம் நோயின் ஒரு கட்டத்தில் தோலுக்கு கீழே ரத்தம் கசிவதால் அது உறைந்து கருந்திட்டுகளாக மாறுவதே .பெயருக்கு தொடர்பு இல்லை எனினும் கறுப்பின இளவயதினரை ப்ளேக் மிக கடுமையாக பாதிக்கும்.
    (மரபணு தொடர்பு).

    ஜோலன் சடலம் இருந்த படகில் ஏறியபோதே அவனுக்கு ப்ளேக் வர வாய்ப்பு வந்துவிட்டது உண்மை.
    ஆனால் கதையில் குறிப்பிடப்பட்டு இருப்பது போல் நேரடியாக சடலத்திடமிருந்தோ அல்லது மிக முக்கியமாக எலி கடித்தோ அல்ல.

    ப்ளேக் எலிகளிடமிருந்து நேரடியாக பரவாது. உண்மையில் எலிகள் பாதிக்கப்பட்ட தரப்பு. ப்ளேக் நோயை உருவாக்கும் Yersinia Pestis என்ற பாக்டீரியா எலிகளில் உடம்பில் ஒட்டுண்ணியாக இருக்கும் Xenopsylla Cheopis என்ற தெள்ளுப் பூச்சி கடிப்பதாலேயே மனிதனுக்கோ மற்ற பாலூட்டிகளுக்கோ பரவுகிறது.

    கதையில் சடலத்தின் மேலே உள்ள கம்பளியில் இருந்த தெள்ளுப் பூச்சிகள் மூலமாக ஜோலனுக்கு ப்ளேக் வந்திருக்கலாம்.மனிதன் மூலமாக இன்னொரு மனிதனுக்கு பரவ பாதிக்கப்பட்ட மனிதன் இரும ஏரோஸால் வடிவத்தில் பாக்டீரியா பிற மனிதனை சென்றடைய வேண்டும்.எலி கடித்து ப்ளேக் வருமா என்றால் வாய்ப்புகள் மிக குறைவு.ப்ளேக்கில் எலிகளின் உமிழ்நீரில் ப்ளேக் கிருமிகள் இருப்பதில்லை. அதற்கு லெப்டொஸ்பைரோஸிஸ் , எலிக் கடி காய்ச்சல் ,ஹண்ட்டா வைரஸ் நோய் என பிற நோய்கள் உள்ளன.

    ப்ளூ ப்ளேக் என ஏதேனும் உள்ளதா?

    ஆம். ப்ளேக் என்ற பதம் கொள்ளை வாரி நோய்களை பொதுவாக குறிப்பிட பயன்படுத்தலாம்.

    BLUE PLAGUE என அழைக்கப்படுவது காலரா . Vibrio cholera கிருமியால் ஏற்படும் இந்த நோயின் ஒரு கட்டத்தில் ஷாக் காரணமாக ஆக்ஸிஜன் அளவு குறைய தோல் நீல நிறத்தை அடைவதால் அப்படி அழைக்கப்பட்டது.

    IPL பனியன் கலர்கள் போல்

    YELLOW PLAGUE - மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் ஆர்போ வைரஸ் நோய் ( கொசு மூலம் பரவும்)

    WHITE PLAGUE - ட்யூபர்குலோஸிஸ் முன்பு இப்படி அழைக்கப்பட்டது. மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோஸிஸ் கிருமியால் பரவும் இந்த நோய் ரத்தக்குறைவு காரணமாக- paleness - உடலை வெளிரப் போகச் செய்வதால் இப்படி அழைக்கப்பட்டது.

    எனவும் உண்டு.

    எலிகளின் மூலமாக பரவும் ப்ளேக் எனச் சொல்லமுயன்றால் மரணத்தின் நிறம் கறுப்பு என்றே சொல்ல இயலும்.





    ReplyDelete
    Replies
    1. ///எலிகளின் மூலமாக பரவும் ப்ளேக் எனச் சொல்லமுயன்றால் மரணத்தின் நிறம் கறுப்பு என்றே சொல்ல இயலும்.///

      அப்படிச் சொன்னா ரேஷிஷம்னு சொல்லிடுவாங்கன்னு.. ப்ளூ ப்ளேக்குன்னு சொல்லியிருக்கலாமோ செனா.!?

      ஏற்கனவே நாம கருப்பு வண்டு கடிச்சி நிறம் கருப்பான ஊதாப் பொடியர்களை பார்த்திருக்கிறோமே.!?

      Delete
    2. //அப்படிச் சொன்னா ரேஷிஷம்னு சொல்லிடுவாங்கன்னு.. ப்ளூ ப்ளேக்குன்னு சொல்லியிருக்கலாமோ செனா.!?//

      வான் ஹாமே இந்த மாதிரி வரலாறில் இடம் பெற்றுள்ள நிகழ்வுகளுக்கெல்லாம் பெயரிட தயங்குவாரா என்ன? மிகைப்படுத்த உள்ள படைப்பாளியின் உரிமையை பயன்படுத்தி இருக்கலாம்.அல்லது வண்ண இதழில் கறுப்பை விட நீலம் அவர் சொல்ல விரும்பியதை வாசகர் மத்தியில் கொண்டு சேர்க்கும் என உத்தேசித்து இருக்கலாம்.

      அப்புறம் பொடியர்கள் வரிசையிலும் BLUE PLAGUE SMURFS என கதை உண்டு. YouTube - ல் காணக் கிடைக்கிறது.:-)

      Delete
    3. பாத்துடுறேன் செனா..😍

      Delete
    4. மொத்த அட்டைப்படத்திலும் அந்த தலைப்பு மட்டும் தான் சரியா இருக்குன்னு நினைச்சுட்டிருந்தேன்.. அதுவும் போச்சா?!! :D

      Delete
    5. //அப்படிச் சொன்னா ரேஷிஷம்னு சொல்லிடுவாங்கன்னு.. ப்ளூ ப்ளேக்குன்னு சொல்லியிருக்கலாமோ செனா.!?//

      ஸ்மர்ப்களின் அந்த ஆல்பமே சில நாடுகளில் வண்ணமாற்றத்துடன் வெளியானது என்றே நினைக்கிறேன்.

      Delete
    6. நண்பரே இது வான்ஹாம்மேவின் கடலாசையாலும்....தோர்கள் போன்ற வைக்கிங்குகள் கடல் பெற்ற பிள்ளை என்பதாலே எலிய காமிச்சு ப்ளேக் அதாவது கொள்ளை நோய்....அதாவது இவ்வுலகில் நீங்க சொல்ற கருப்பு நிறத்த ...அவர் அவ்வுலகில் காட்ட நீலமாக மாத்திருக்க லாம்...


      அது கடல்ல சுத்தும் அதாவது கப்பல்ல இருந்ததால் நீல நோய் ...மண்ணுல இருக்கைல கடிச்சிருந்தா அது கருப்பாயிருக்குமோ....



      மேலும் அந்தப் பிணங்களுக்கு ஏற்கனவே இந்நோயிருப்பதால் அது சார் கிருமி எலியின் உடலில் ஒட்டி ஜோலனுக்கு பாஞ்சிருக்கலாம் அந்த தொற்று நோய்...இங்கே எலி தொத்து பரப்பிதான

      Delete
    7. அந்த ஸ்மர்ஃப் தடை குறித்து ஆசிரியர் தளத்தில் ஏற்கனவே எழுதிய நினைவு...

      சார் அந்த ப்ளூ ஸ்மர்ஃப்ப

      Delete
  60. நான் ஆதரிக்கும் தொடர்கள்:

    ஜில் ஜோர்டன்
    ஜூலியா
    ப்ளூகோட்ஸ் பட்டாளம்
    லியனார்டோ தாத்தா
    ரின்டின் கேன்
    மேக் & ஜாக்
    கர்னல் க்ளிப்டன்
    SODA
    டிடெக்டிவ் ரூபின்
    டேங்கோ
    ஸாகோர்
    அண்டர்டேக்கர்
    ஸ்டெர்ன்
    I.R.$
    மிஸ்டர் நோ

    ReplyDelete
  61. வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  62. Poll link ஓபன் ஆகல சார்..??

    ReplyDelete
  63. வாக்கு செலுத்தியாயிற்று..

    ReplyDelete
  64. அந்த 35 பேரில் உங்களுக்கு பிடித்தமான தொடர்பு எது? நான் எதையும் பார்க்கல படிக்கல. ஓடிட்டுரா கைப்புள்ள.

    ReplyDelete
  65. எடி ஜி,
    Herlock sholmes சூப்பர் ஹிட் கதைகளில் இன்னும் வெளிவராத வாரிசு வேட்டை வெளியிடுங்கள். எழுந்து வந்த எறும்பு கூடு ,விற்பனைக்கு ஒரு
    பேய் வரிசையில் வயிறு நோக சிரிப்பை வரவழைக்கும் கதை அது.

    ReplyDelete
  66. அடுத்த முறை பட்டியல் வெளியிடும்போதுநேயர் விருப்பமாக. பயங்கரப் பயணிகள்,துயிலெழுந்த பிசாசுகள். +பறக்கும் பலூனில் டெக்ஸ் சேருங்கள் மகி ஜி.

    ReplyDelete
  67. பறக்கும் பலூனில் டெக்ஸ் "மை ஃ ஃபேவரைட்" அதனால் எனக்காகஹி ஹி ஹி.

    ReplyDelete
  68. சார் . ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் நாம் வெளியிடாத கதைகள் ஏதும் உள்ளனவாங்க சார். (சர். ஆர்தர் கானன் டாய்லின்.ஒரிஜினல்)

    ReplyDelete
  69. This comment has been removed by the author.

    ReplyDelete
  70. மீண்டு வந்த மாயன்*

    இந்த மீண்டு வந்த மாயன் சும்மா தெறி ரகம்.

    வழக்கமான துப்பாக்கி ஏந்திய எதிரிகளுக்கு மாற்றாக ஹிப்னாடிசம் & மாய தந்திரங்களை தெரிந்த மெபிஸ்டோவுடன் ஒரு மோதல்.

    டெக்ஸ்சின் ஆற்றலுக்கு சரியான சவால் தான் இந்த மெபிஸ்டோ.

    இறுதியில் எதிரியை வீழ்த்த முடியாமல் அவன் தப்பிப்பது ஓகே தான்.
    மாய தந்திரங்களை செய்பவன் தப்பிச் செல்வது சஜகம் தான்.

    இறுதிக் கட்டத்தில் அந்த ஜிம் பாய்ஸ் உள்ளே வந்து கோதாவில் இறங்கும் இடம் தெறி.

    இது போன்ற மெபிஸ்டோ கதைகள் வந்தால் நிச்சயமாக ரசிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. 2024 இல் மேபிஸ்டோவின் ஒரு கதையாவது ஆசிரியர் வெளியிடுவார் என்று நம்புவோம்.

      Delete
  71. கிளியோடு கூட்டணி

    இந்த வருட ரிப் கிர்பி தொகுப்பின் முதல் கதை. இந்த கதையின் ஹீரோ, ரிப் கிர்பியோ, பட்லர் டெஸ்மாண்ட்டோ அல்ல என்னும் அளவுக்கு, கிளி பியரி பின்னியெடுத்திருக்கிறது என்றால் மிகையல்ல...

    கவச மோட்டார் வண்டியில் செல்லும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறது மால்டோ தலைமையிலான கொள்ளைக் கும்பல்.

    இந்த கும்பலில் அவனுடைய மனைவி மாட்ஜ், நண்பர்கள் ஷ்ரிம்ப் உள்பட பியரி என்ற கிளியும் அடக்கம்...

    சொன்னதை, கேட்டதை திரும்ப செல்லும் அந்த கிளியை, அதன் உருவம் அப்பாவியாக தெரியும் வகையில் வரைந்திருக்கும் ஓவியருக்கு ஒரு சொட்டு... 👏🏽👏🏽👏🏽

    திட்டமிட்ட கொள்ளையை கனகச்சிதமாக நிறைவேற்றும் இந்த கும்பல், தங்களுக்குள் நடத்திக் கொண்ட உரையாடலில் பேசிய வார்த்தைகளை கிரகித்துக் கொண்டு, கிளி பேசத் தொடங்கும் போது கதை சூடு பிடிக்கிறது (வில்லனும் தான்)...

    கிளி பேசுவது பொறுக்காத மால்டோ அதை கொல்ல முயற்சிக்க, 5வது அறிவின் உந்துதலில் தப்பிச் சென்ற கிளி, மேலும் கனகச்சிதமாக ரிப் கிர்பியின் வீட்டு மாடியில் தரையிறங்குகிறது...

    பிறகென்ன, ரிப் - டெஸ்மாண்ட்டும், கிளியும் கூட்டணி சேர, கயவர்களுக்கோ கிளியால், கிலி பிடிக்கிறது 🤪

    கிளியை கொல்ல வேறொரு மிருகத்தை (அந்த பெரிய மனுஷர் பேரு தோர்) நைச்சியமாக அனுப்ப, அதில் எதிர்பார்த்த விளைவுக்கு நேரெதிர் விளைவு ஏற்படுகிறது ..

    ஒரு பக்கம், கொள்ளைக் கும்பலை பிடிக்க போலீசார் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்க, இந்த முக்கோணம் எப்படி முழுமையடைகிறது என்பதே இறுதிக் கட்டமாக அமைகிறது...

    அருமையான தொடக்கம் தந்துள்ளது ரிப் கிர்பி ஸ்பெஷலின் இந்த முதல் கதை...

    ரேட்டிங் : 9/10

    ReplyDelete
  72. **** மீண்டு(ம்) வந்த மாயன் *****

    படிப்பவர்களின் மனதிற்குள் இருளையும், திகிலையும் ஏற்படுத்தி 'இப்படியெல்லாம் கூட மெபிஸ்டோ கதையை அமைக்க முடியுமா!!' என ஆச்சரியப்பட வைத்திருக்கிறது முதல் இரண்டு அத்தியாயங்கள்!

    மூன்றாவது பாகம் வழக்கமான 'ணங் குத் சத்' பாணிக்குத் திரும்பிவிடுவதால் கொஞ்சம் - சவசவ!!

    ஓவியரே நிஜமான நாயகர்! நேர்த்தியான, பிரம்மிக்க வைத்திடும் சித்திரங்களால் - நம்மை மிரளச் செய்திருக்கிறார்!

    இந்தக் கதைக்குப் பிறகு மெபிஸ்டோவுக்கு ரசிகர்கள் அதிகரிப்பது உறுதி!

    9.8/10

    ReplyDelete
  73. இதுவரை ஆசிரியர் மெபிஸ்டோவை நாம் கேட்கும் போதெல்லாம் மெபிஸ்டோ ஒரு பூச்சாண்டி அவன் கண்ணை குத்தி விடுவான் என்று நம்மை பயமுறுத்தி வந்தார். ஆனால் மாயனோடு மோதல் மற்றும் மீண்டு(ம்) வந்த மாயன் கதைகளை அவரே வெளியிட்டார். ஆனால் இப்போது பார்த்தால் மேபி ஸ்டோர் ஒரு நல்ல வில்லன் அவன் நம் கண்களை குத்த மாட்டான் நம் கண்களுக்குத்தான் நல்ல விருந்தளிப்பான் என்பது தெரிகிறது. இதனால் ஆசிரியரிடம் நான் கேட்பது 2024 இல் ஒரு மெபிஸ்ட்டோ கதையாவது வெளியிடுங்கள் என்பதே. முன்பதிவுக்கான இதழாக இதை கொண்டுவரும் பட்சத்தில் ஜனவரியிலேயே அறிவித்து விடுங்கள். அது டேக்ஆப் ஆகும் வேகத்தை பொறுத்து அந்த இதுலே வெளியிட்டு கொள்ளலாம்.

    ReplyDelete
  74. ////! 700 பக்கங்களாக துவங்கிய திட்டமிடல் 712 ஆக முன்னேறி, இப்போது 720 என்று நிறைவடைந்துள்ளது ! அதில் கிட்டத்தட்ட 500 பக்கங்கள் எனது பேனாவிலிருந்து எனும் போது, ///---

    போடு வெடியை...500பக்கங்கள் எனும்போது பஞ் கள் பட்டையை கிளம்பும்... ஆஹா...

    ReplyDelete
  75. //புக்ஸை நிறைவாய் முடித்து வாங்கிட இயலும் தருணத்தில் டெஸ்பாட்ச் இருந்திடும் - so அதுவரையிலும் பொறுமை ப்ளீஸ் guys ! //

    --வெகு ஆவலுடன் காத்துள்ளேன் சார்....

    மெதுவாக ஃபர்பெக்ட் கன்டிசன்ல வரட்டும்... கூடுதல் நாட்களானுலம் வெயிட்டிங்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தாமதமாக வந்தாலும் தரமாக வந்தால் எல்லோரும் ஹாப்பி.

      அதுவே தரமான கதைகள் பைண்டிங் சொதப்பி வந்தால் எல்லோருக்கும் வருத்தமே.

      Delete
    2. ////தாமதமாக வந்தாலும் தரமாக வந்தால் எல்லோரும் ஹாப்பி.////

      எக்ஸாக்ட்லி...
      இரத்தப்படலம் பாகம்4ல ஒரு பயிற்சியை குறிப்பிட்ட டைமுக்குள் முடிக்க ஒரு வீரனோட உயிரை துச்சமாக எண்ணுவாங்க..

      ஆனா நம்ம XIII, ராஸ் டான்னர்ங்கிற பெயர்ல இருப்பாரு... மேலதிகாரியோட விவாதித்து பனிஷ்மென்ட் வாங்கி, அவனை காப்பாத்துவாரு.. தட் ஈஸ் வாட் இம்பார்டன்...

      எல்லோரும் மகிழ்ச்சினாதான் தல பர்த்டே சிறக்கும்..

      சோ, குறித்த நாளில் பர்த்டே கேக் வெட்டுவதை விட நிறைவோட வெட்டணும்... மேபி அடுத்த வாரம் கூட அனுப்பி வைக்கலாம்.. புக் நல்லா வரணும்..அதான் இம்பார்டன்..

      700வா புக் காலத்துக்கும் பார்த்து ரசிப்பது.. சிலர் ஆசைபடறாங்கனு ரிஸ்க் எடுப்பதில் அர்த்தம் இல்லை..

      இப்ப வந்த ரிப் குண்டு புக் மாதிரி சும்மா மிரட்டணும் குவாலிடி...

      Delete
    3. யோவ் க்ளா@

      சேனாபதி சொல்வாரு...
      சந்ருவ உனக்கு எத்தனை நாளாக தெரியும்.??
      அந்த புள்ளை 3வருசமானு சொல்லும்...

      "சந்ருவ எனக்கு 30வருசமா தெரியும், உன்ன விட எனக்கு தான் வலி ஜாஸ்தி"- னுட்டு சந்தரு வகுத்துல சொருகுவாரு!!!

      Delete
  76. //தோர்கல் - மரணத்தின் நிறம் நீலம்//

    வாழ்க்கைப் பயணம் மேடு பள்ளங்கள் நிறைந்தது. இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்தது சாமானியர்களுக்கு.

    நமக்கு வரக்கூடிய பிரச்சினைகள் & சவால்களை எவ்வாறு எதிர் கொண்டு அதிலிருந்து மீண்டு வெளியே வந்து வாழ வேண்டும் என்பதை தோர்கல் கதை மூலமாக கொஞ்சம் அழுத்தமாக சொல்கின்றார் கதாசிரியர்.
    ஓவியரும் கலரிங் ஆர்டிஸ்ட்டும் கூட சேர்ந்து கலக்க இந்த ஆல்பமும் பட்டைய கிளப்புது.

    ப்ளூ பிளேக் தொற்று நோய் அவர்களுக்கே தெரியாமல் தொற்றிக் கொள்ள அதிலிருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்ற தோர்கல் போராடும் களமே கதை.

    விரட்டி வரும் காலனின் பிடியிலிருந்து நோயோடு போராடும் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுகிறார் தோர்கல்?! என்பதை
    விறுவிறுப்பாக செல்கிறது கதை.

    இரண்டாவது கதையில், தொடரும் வாழ்க்கைப் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் புதிய தீவின் மனிதர்கள் எதிர்பாராத ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகின்றனர்.
    நவீன அறிவியலும் கடந்த கால அடலாண்டிஸ் நகரின் பிரம்மாண்ட தோற்றமும் பிரமிப்பை ஏற்படுத்துது.

    கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்கள் & தோர்கலின் மதியூகம் (புதிர் வளாகத்தில் இருந்து தப்பிப்பது) ரசிக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இந்த துருவத்தையும் அந்த துருவத்தையும் தொடுவதால்தான் ...அதாவது எதிரெதிர் துருவங்களை நெருங்கி ...இணைத்தால் உருவானதே இவ்வீர்ப்பு விசை

      ...வான்ஹாம்மேன்னா அவரேதான்

      Delete
  77. ///'டெக்ஸ்' கலர் மினிஸ் - for November & December//

    போடு வெடியை... வாமன டெக்ஸ்கள்(நன்றி: பொருளர் செனா அனா) எப்போதும் ஆச்சர்யம் உண்டு பண்ணுபவை.. இப்போதும் என்ன மாதிரியான கதைகள்னு பார்க்க ரொம்ப ஆவல் கிளம்புது...

    ReplyDelete
  78. ///80 + 47 = 127 பேர் "வாசிப்பும் உண்டு" என்று பதிலளித்திருப்பதில் மெய்யாலும் எனக்கு வியப்பே ! And 176 பேர் இதனில் பொறுப்பாய் வோட்டளித்திருப்பதை பார்க்கும் போது, the poll stands credible ! ///

    ----லயன்-முத்து வெளியீடுனு ஆனபிறகு அதன் தயாரிப்பு தரத்தில் தாங்கள் கோட்டை விட்டதில்லை என்பது அனுபவ பாடம் சார்....

    சோ, எந்த புக் வந்தாலும் வாசித்து விடுவோர் பலரும்..

    இப்போது கூட ரிப்கெர்பி மறுபதிப்பு இதழ், சுஸ்கி விஸ்கி-பேரிக்காய் போராட்டம், பிக் பாய்ஸ் வாசிப்பில தான்...

    S60 நான் வாங்கல... நம்ம மாப்பு மகேந்திரன் புக்கை தான் வாசிக்க லவட்டி வந்துள்ளேன்.. நல்லா தான் இருக்கு...💞

    இது ரிப்புக்கு மட்டுந்தான்.. இந்த கரண்டு பொட்டிக்குள்ள கைய விட்டு காணாம போவோர், பூப்போட்ட டவுசர்பார்டி,, குத்துனா அச்சு விழற ஆள்து, மந்திரவாதிலாம் முடியாதுங்கோ...

    குத்துனா அச்சு பார்டி கலர்ல வந்தா ட்ரை பண்ணலாம்...

    ReplyDelete
    Replies
    1. இந்த இடத்தில் இன்னொரு தகவல். முன்பு ஓரு முறை இரத்தப்படலம் இரண்டாம் முறையாக வண்ண மறுபதிப்பு பேச்சின்போது வேணாம்னு பலரும் சொன்னபோது ஈவியும் கூட இது இப்ப வேணாம் சார்னு சொல்லி இருந்தார்.

      ஆனா நிறைய பேர்வேணும்னு சொன்னபோது ஆசிரியர் அறிவித்த பின் தானும் ஆதரவு அளிக்க போவதாகவும், ஒரு இதழ் புக்கிங் உறுதினும் சொல்லி இருந்தார். அப்போது இ.ப. வேணாம்னு சொன்ன இன்னொரு சக வாசகர் ஈவிகிட்ட கேட்டாரு... //ஏன் நீங்களும் வேணாம்னுதான் சொன்னீங்க..இப்ப ஆதரவு தர்றீங்களே??.///-- னு..

      அதற்கு ஈவியோட பதில் செம...

      //ஒன்ஸ் லயன்-முத்து பேனர்ல ஓரு இதழ் வெளியாகுதுனா அதை எல்லா இதழ் போலத்தான் ஆசிரியர் கையாள்வார். ஒரு நெடுநாள் வாசகனாக அதை நான் ஆதரிப்பேன் //

      இன்னிக்கும் மறுபதிப்புகள் சக்சஸ் ஆக இதுவும் ஒரு பிரதான காரணம்!!!

      Delete
    2. சரி விடுங்க ஸ்டீல். அறியாப் பருவத்துல தெரியாம சொல்லியிருப்பேன்!😝😝😜😜

      Delete
  79. /////"புதுசு என்ற தேடல்களுக்கெல்லாம் பெருசாய் அவசியங்கள் லேதுவா ? கொஞ்சம் டெக்ஸ் ; கொஞ்சம் லக்கி ; கொஞ்சம் மற்ற நாயக / நாயகியரின் கலவையிலேயே வண்டியை ஓட்டிக்கலாமா ?" ////

    ////So - எஞ்சியிருக்கும் டிடெக்டிவ் + வெஸ்டர்ன் ஜானர்களிலேயே இன்னும் கொஞ்சம் புதியவர்களைத் தேடிக் குடாயணுமா ? அல்லது 'இப்போதுள்ளோருடனே க்ளாஸிக் பார்ட்டிக்களின் புதுக் கதைகளையும் கொஞ்சமாய் தொட்டுக்கினு கொட்டும் குப்பையே மதி !' என்பீர்களா ? Honest பதில்ஸ் ப்ளீஸ் ? //--

    ம்ம்ம்.. ரொம்பவே சிரமமான கேள்வி தான்....

    புதிய கதைகளை ரசிக்கணும் புதிய புதிய ஜானர்களை பார்க்கணும்.. நவீனயுக படைப்பாளிகளோட சிந்தனைக்கு ஈடு கொடுக்கணும் என்பதே எப்போதும் எழும் பேரவா!!!

    இந்த பேரவா கொணர்ந்தது பெரிய கிட்டங்கி ரொப்பிகளை எனும்போது கொஞ்சம் அடிவயிறை கலக்கவும் தான் செய்கிறது சார்..

    புதிய கதைகளின் வாசகனாக இந்த கேள்விக்கு பதிலாக A Bigggg No தான் சொல்லணும்...

    ஆனா ஈவியோட பழைய பதிலை ஓட்டிபார்த்து ஒரு நெடுநாள் வாசகனாக புத்தகங்கள் வருவதை உறுதி செய்யணும் எனும் பொறுப்பை உணர்வதால்,

    அட்லீஸ்ட் அடுத்த சில வருடங்களுக்கு இந்த

    "டெக்ஸ்..லக்கி, டிடெக்டிவ் வித் க்ளாசிக் பாணி"-க்கு தம்ஸ் அப் சொல்கிறேன் சார்....!!

    புதிய தேடல்களை கூட இந்த டிடெக்டிவ் & வெஸ்டர்ன் பாணிகளில் மட்டுமே தேடலாம்..

    எண்ட் ஆஃப் த டே சுவர் இருந்தா தானே சித்திரம் வரைய...!!
    சுவரை தற்போதைக்கு வலுபடுத்துவோம்.

    ஆல்ஃபா, பீட்டா, காமாலாம் கொஞ்ச நாள் ஒத்திவையுங்க சார்!!!

    ReplyDelete
  80. //கார்ட்டூன் - "அட மொக்கை போடாதேப்பா" என்று சொல்லி விட்டீர்கள் !///

    ஹூம்....லக்கியை தாண்டி மற்ற கார்டூன் இதழ்கள் வரும்போது ஒருசிலர் தாண்டி பெரும்பான்மை கிட்ட சுரத்தே இல்லாது இருப்பது கண்கூடு...

    ReplyDelete
  81. //எதிர்கால அபோகாலிப்ஸ் தொடர் - "அட நீ ஓரமா போவியா ? ஒரு ஜெரெமியாவே போதும் நைனா" என்று தீர்ப்புச் சொல்லி விட்டீர்கள் !////

    வாஸ்தவந்தான்..ஏற்றுக்கொள்ள வேண்டிய கசப்பு மருந்துதான்...

    ReplyDelete
  82. ///கி.நா.ஸ் - 'அடி வாங்காம ஓடிப்புடு !' என்று அன்பாய் எச்சரித்து விட்டீர்கள் !///

    --- கி.நா. ன உடனே தெறிச்சி ஓடும் காமிக்ஸ் மான்களாக மாறிடறோம்..என்ன பண்ண!!!

    தாத்தாஸ், இ.ப. ஸ்பின் ஆப் அளவுக்கு கழுதை தேஞ்சி கட்டெரும்பாக மாறிய கி.நா.களின் நிலையை கண்டு மனம் வெம்பத்தான் முடிகிறது....!!


    இன்னும் ஜோடரவ்ஸ்க்கி யுனிவர்ஸையெலாம் தரிசிப்போமானு பெருமூச்சி விடுவதை தாண்டி என்ன பண்ண!!
    😤😤😤😤

    ReplyDelete