Powered By Blogger

Saturday, September 09, 2023

தேர்தல்கள் ஒரு தொடர்கதையே !

 நண்பர்களே,

வணக்கம். செப்டம்பர் ஒரு decent ஆரம்பத்தினைக் கண்டிருப்பதில் ஆந்தையன் & கோ.செம ஹேப்பி அண்ணாச்சி ! என்ன தான் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றாத குறையாய் எந்த மாதத்துக்கு-எந்த இதழ்களென்ற திட்டமிடல்களைச் செய்தாலும் - சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும் உருவாக்கித் தரும் கூட்டணிகள் தம் பங்குக்கு ஊட்டிடும் சுவாரஸ்யமே தனி ரகம் தான் ! இதோ இந்த மாதம் அகஸ்மாத்தாய், நெவாடா & மிஸ்டர் நோ - என 2 புது வரவுகள் களம்காண்பது கூட அத்தகையதொரு நிகழ்வே ! And இதுவரைக்குமான அலசல்களில், அந்த 2 புதியவர்களுமே அழகாய் ஸ்கோர் செய்திருப்பது இந்த செப்டெம்பரின் உற்சாகங்களுள் பிரதானம் என்பேன் ! Thanks a ton folks !

வீடியோ பதிவோடு இதழ்களை அறிமுகம் செய்து கொஞ்ச காலம் ஆகி விட்டதென்பதால், நேரம் கிட்டும் போது நமது YouTube சேனலில் இம்மாதத்து இதழ்களைப் பற்றி மேற்கொண்டு பேசிட எண்ணியுள்ளேன் ! அதற்கு மத்தியில், இங்கே சமீப வாரங்களின் பாணியினில் ஓரிரு முக்கிய கேள்விகளை மாத்திரம் உங்கள் முன்வைத்து விட்டு நடையைக் கட்டிடவுள்ளேன்  ! புது இதழ்கள் உங்கள் கரங்களில் உள்ள பிரெஷ்ஷான பொழுதிது என்பதால், எனது மொக்கைகளைக் காட்டிலும் உங்களின் அலசல்களுக்கே முன்னுரிமை தந்திட வேண்டும் ! So இந்த வாரயிறுதியில் 'என் கேள்விக்கென்ன பதில் ?' என்பதே நிலவரம் guys !!

எனது முதல் கேள்வியானது நமது போன மாதத்து டெக்ஸ் இதழானது ஆங்காங்கே எழுப்பியுள்ள சில உரையாடல்களின் நீட்சியே ! என்ன தான் நமது வலைப்பக்கத்தைத் தாண்டி, வேறெந்த சமூக ஊடகப் பக்கங்களிலும் நான் தலை காட்டுவதில்லை என்றாலும், ஆங்காங்கே அரங்கேறிடக்கூடிய சில சுவாரஸ்ய topics மீதான விவாதங்கள், நண்பர்களின் உபயத்தில் என்னை எட்டிடத் தவறுவதில்லை ! அவ்விதம் வந்ததொரு சமீப பட்டிமன்றம் - டெக்ஸ் கதைகளில் மெபிஸ்டோ ஒரு பலமா ? பலவீனமா ? என்ற தலைப்பினில் ! இங்கே நான் மட்டும் சாலமன் பாப்பையாவாய் அமரும் வாய்ப்பு கிட்டியிருப்பின்,  மெபிஸ்டோவுக்குத் தடா போடும் ஆப்பையாவாக மாறியிருப்பேன் என்பதில் no secrets ! நமது இரண்டாம் வருகையினில் - டெக்ஸ் பங்கேற்கத் துவங்கிய "சிவப்பாய் ஒரு சொப்பனம்" இதழிலிருந்தே நம் மத்தியில் நம்மவருக்கொரு முறையான branding தந்திட ரொம்பவே கவனமாய் இருந்திருந்தோம் ! அதற்கு முன்பான காலகட்டத்தினில் டெக்ஸ் & கோ. மாயாஜால எதிரிகளை ; விட்டலாச்சார்யா பாணி வில்லன்களைச் சந்திக்கும் கதைகளையும் தயக்கங்களின்றிக் களமிறக்கியிருந்தோம் ! ஆனால் post 2012 - டெக்ஸ் கதைகளுக்கென ஒரு டெம்ப்ளட் செட் செய்திட ஓசையின்றி முனைந்திருந்தோம் ! 'தல'யின் வரிகளில் பன்ச் வீரியங்கள் சற்றே தூக்கலாகியதும், வெள்ளிமுடியாரின் அலப்பறைகள் ஒரு மிடறு ஜாஸ்தியானதும் மாத்திரமன்றி, டைகர் ஜாக் பேசுவதில் கூட ஒரு pattern ஏற்படுத்தியிருந்தோம் ! முன்னாட்களின் நமது மொழியாக்கங்களில் டைகர் ஜாக் டெக்சிடம் பேசும் போது "நீ...வா..போ..." என்றே இருந்திருக்கும் ! ஆனால் கடந்த 11 ஆண்டுகளாய் "இரவுக்கழுகார் " என்ற அடையாளத்துடனே டைகர் ஜாக் கண்ணியமாய் உரையாடிடுகிறார் ! (இது தேவை தானா ? செவ்விந்தியன்னா இளப்பமா ? டெக்ஸுக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு ?? வா..போ..என்று பேசினால் என்ன குறைஞ்சிடும் ?" என்ற வினாக்கள் நம்மில் ஒரு அணியினருக்குத் தோன்றாது போகாது தான் - அதை அடுத்த பட்டிமன்றத்துக்கான தலைப்பாக வைச்சுக்குவோமுங்களா ?) And கிட் கூட "அங்கிள் கார்சனை" உரிமையோடு கலாய்ப்பதையும் பார்த்திருக்கலாம் & "என் பிள்ளை கிட் " என்று சுக்கா ரோஸ்ட் காதலர் காட்டிடும் பாசப் பிரவாகங்களுமே highlight ஆகிடுவதற்கு கவனம் தந்திருந்தோம் ! In fact - கிடைக்கும் வாய்ப்புகளில் கார்சன் சுக்கா ரோஸ்ட்களை வெளுத்துக் கட்டுவதையும் கதையின் போக்கிற்கொரு much needed relief ஆகப் பார்த்திடவும் தொடங்கியிருந்தோம் ! 

இத்தனை கண்டிஷன்களைப் போட்டுக் கொண்ட கையோடு துவக்கம் முதலாய் நான் கொண்டிருந்த மேஜர் கொள்கையே - நோ to மெபிஸ்டோ என்பதே ! இது குறித்து  ரெகுலராய் கேள்விகள் எழுந்ததும், ஓட்டை ரெக்கார்டாய் அதே பதிலை நான் சொல்லி வந்ததையும் இந்தத் தளம் அறியும் ! நான் வேணாம் என்பதும், போட்டாலென்ன ? என்று நண்பர்கள் அவ்வப்போது வினவுவதும் தொடர்கதையாகவே இருந்து வந்தது ! But ரொம்ப ரொம்ப காலத்திற்குப் பின்னே மெபிஸ்டோ நம் மத்தியில் மீள்வருகை செய்திடும் சூழல் தானாய் அமைந்து போனது - "இளம் டெக்ஸ்" கதைத் தொடரானது அவரையும் தீண்டிச் சென்ற காரணத்தால் ! போன வருஷத்து தீபாவளி மலராய் வெளியான அந்த கலர் ஆல்பத்தில் மெபிஸ்டோவின் அறிமுகம் எவ்விதமிருந்தது என்பதை போச்செல்லி அவர்களின் கைவண்ணத்தில் பார்த்திருந்தோம் ! ஒரு சாதாரண மேடை மாயாஜாலக்காரனாய் மெபிஸ்டோ அறிமுகமான அந்த ஆல்பம் நம்மிடையே மாஸ் ஹிட் ! So இந்தத் தொங்குமீசை வில்லன் நமது ராடாருக்குள் மறுக்கா புகுந்தது இவ்விதமே ! And டெக்சின் ஆண்டு # 75-ன் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாய், மெபிஸ்டோவுக்கு ஒரு fresh lease of life தந்திட போனெல்லி எடிட்டர்கள் தீர்மானித்திருக்க, சரமாரியாக டெக்ஸ் vs மெபிஸ்டோ மோதல்களுடனான கதைகள் களமிறங்கின ! அவற்றுள் "மீண்டு(ம்) மாயன்" சாகசமும் ஒன்று ! ரொம்ப ரொம்ப சமீபப் படைப்பு & more than anything else - டாப் கதாசிரியர் போசெல்லியின் கைவண்ணம் என்பதால், நடப்பாண்டில் அட்டவணைக்குள் இந்த ஆல்பத்தினை இணைத்திருந்தேன் ! 

And அந்தப் புள்ளியில் துவங்கியது தான் இது சார்ந்த விவாதங்கள் ! "ஆத்தீ....மிடிலே !!" என்று ஓரணியும்..."அட்றா சக்கை...அட்ரா சக்கை" என்று இன்னொரு அணியும் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து கொண்டதை ஆங்காங்கே காண இயன்றது ! Given a choice - நான் டெக்சின் ரெகுலர் கதைகளோடே  பயணிக்க விழைவேன் ; ஆனால் எந்தவொரு விஷயத்திலும் நான் 'வேணாம்...வேணாம்..' என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே அந்தச் சமாச்சாரம் மீது நண்பர்களில் சிலருக்கொரு கூடுதல் ஈர்ப்பு ஏற்படுவதை பார்த்து வருகிறேன் !  And எனது தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகளைக் கொண்டு உங்களின் வாசிப்புகளை ரொம்பவே கட்டுப்படுத்திடலாகாதே என்ற சிறு நெருடல் என்னுள் ! So சொல்லுங்களேன் புலவர்களே : 

*டெக்ஸ் கதைகளில் அவ்வப்போதாவது இந்த மாந்த்ரீக பார்ட்டி தலைகாட்டிட வேண்டிய அவசியம் என்ன ?

OR

*டெக்ஸ் கதைகள் இருக்கும் தெருப் பக்கமாய்க் கூட இந்த தொங்குமீசையனை நடமாட விடப்படாது - என்பதற்கான காரணங்கள் என்ன ?

காரமின்றி, சாரத்தோடு விவாதிப்போமா ப்ளீஸ் ? And வோட்டு போடுவதாயின் - இதோ லிங்க் : https://strawpoll.com/40Zmq5WE2Za

And இந்த வாரயிறுதிக்கான எனது இரண்டாவது கேள்வியானது நாம் நிறையவே பேசியுள்ளதொரு topic தான் ! ஆனால் ரசனைசார் விஷயங்களில் ஐந்தாண்டுகளுக்கு முன்பானதொரு கருத்தானது இன்றைக்கும் அதே நிறத்தோடும், அதே சார்போடும் காட்சி தர வேண்டுமென்ற கட்டாயங்கள் கிடையாதெனும் போது - ஒரு மறுவிவாதத்தில் தப்பில்லை என்று தோன்றுகிறது ! Moreso நாம் பயணித்து வரும் இந்த நாட்களில் இந்தத் தலைப்புக்கு முக்கியத்துவம் முன்னெப்போதையும் விடக் கூடுதலாயுள்ளதால் - இந்த விவாதம் அத்தியாவசியமானதுமே என்பேன் ! மேட்டர் இது தான் :

 • சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் -1
 • உயிரைத் தேடி 
 • கார்சனின் கடந்த காலம் 
 • யார் அந்த மாயாவி ?
 • நியூயார்க்கில் மாயாவி !
 • சூ..மந்திரகாளி !
 • வானவில்லுக்கு நிறமேது ?
 • The BIG BOYS ஸ்பெஷல் 

மேற்படி லிஸ்ட்டில் உள்ள நாயக / நாயகியர் ஒருவருக்கொருவர் பெரியதொரு தொடர்பில்லாதோராக இருப்பினும், ஒற்றை விஷயத்தில் இவர்கள் அனைவரும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து நிற்கின்றனர் ! And அது தான் - "வெளியாகிய மிகச் சொற்பமான அவகாசத்திலேயே விற்றுத் தீர்ந்த இதழ்ககளின் நாயகப் பெருமக்கள்" என்ற  அடையாளம் ! And இவை சகலமுமே மறுபதிப்புகள் என்பது கொசுறுத் தகவலும் ! 

***ஒரு லியனார்டோ தாத்தாவின் கார்ட்டூன் இதழும் சரி, நீலப் பொடியர்களின் ரவுசுகளும் சரி, கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பின்னேயும் கையிருப்பில் இருக்க, அதே கார்ட்டூன் ஜானரின் பிரதிநிதிகளான சுஸ்கி & விஸ்கி 'பச்சக்'கென்று விற்றுக் காலியாவதன் மாயம் தான் என்ன ? 

***உயிரைக் கொடுத்து உருவாக்கிய "பிஸ்டலுக்குப் பிரியாவிடை"களும், அர்ஸ் மேக்னாக்களும், "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்களும்" கையிருப்பில் கணிசமாய்க் கிடக்க, "உயிரைத் தேடி" ஜிலோவென்று விற்று, சொற்ப கையிருப்பே இருப்பதன் காரணமென்ன ?

***Fantasy ஜானரில் தோர்கல் மிளிர, நாம் மங்கு மங்கென்று குட்டிக்கரணங்கள் அடிக்கும் அதே பொழுதினில், ஸ்பைடராரும், மாயாவிகாருவும் BIG BOYS ஸ்பெஷலில் ஜாலியாக ஆஜராகி அதகள வெற்றி காணும் ஜாலம் தான் what ?

One to one ஒப்பீட்டில், விற்றுத் தீர்ந்த கதைகள் - இன்றைய நடப்பு ஆல்பங்களை விடவும் பன்மடங்கு ஒசந்தவை என்றெல்லாம் சத்தியமாய்ச் சொல்லிட வாய்ப்பில்லை ! கதைக்கள நவீனங்களில், சித்திர முன்னேற்றங்களில், கலரிங் ரம்யங்களில் புதுயுகக் கதைகள் any day outscore the oldies !! ஆனாலும் இந்த பால்யத்துப் பார்ட்டீஸ் மீதான நமது மோகங்கள் மட்டுப்படும் அறிகுறிகளைக் காணோமே என்பதில் தான் ஆச்சர்யமே !! 

Oh yes - ஒரு பதிப்பாளனாய் நான் புகாரே வாசிக்கப் போவதில்லை ; கிட்டங்கிகளை நிரப்பும் முகாந்திரங்கள் தராத சகலத்தையும் ஆரத் தழுவிடவே செய்வேன் தான் ! And சக்கரங்களைச் சுழலச் செய்யும் புண்ணியவான்களுமே இவர்கள் தான் !  So இவை இன்னமும் தேவையா - தேவை இல்லையா ? நோஸ்டால்ஜியாவுக்குள் எத்தனை காலம் தான் திளைத்திருக்க இயலும் ? என்ற கேள்விகளெல்லாம் என்னிடமில்லை !! ரசனைசார் சமாச்சாரங்களில் each to his own என்பதை எப்போதோ நான் புரிந்து கொண்டு விட்டேன் ! And பழசை ரசிப்போரின் ரசனைகளில் பழுதுள்ளது என்றோ, புதுசின் கொடி பிடிப்போர் புதுயுகங்களின் பிள்ளைகள் என்றோ ஒரு நொடி கூட நான் கருதிடப்போவதில்லை ! என் கேள்வி ரொம்ப ரொம்ப சிம்பிளானது

"நோஸ்டால்ஜியா" என்ற ஒற்றை விஷயத்தின் வீரியம் அந்தப் பழம் நாயகர்களின் கதைகளுக்குள் இன்றைக்கும் ஈர்ப்போடு புகுந்து வாசிக்க உதவிடுகிறதா ? நீங்கள் ஆவலாய் கோரிப் பெற்றிடும் இந்த மறுபதிப்புகளையெல்லாம் மெய்யாலுமே வாசிக்கவும், அந்நாட்களைப் போலவே ரசிக்கவும் முடிகிறதா ? இது மாத்திரமே எனது வினா !

புரிகிறது தான் - "கார்சனின் கடந்த காலம்" ஒரு கலெக்டர்'ஸ் எடிஷனாய் தகதகக்கும் போது - அதனை ஒரு காமிக்ஸ் ஆர்வலராய் கைப்பற்றும் வேட்கை மேலோங்குகிறது ! "இரத்தப் படலம்" போலான மறுபதிப்புகள் ரொம்பவே புராதனம் கொண்ட படைப்புகள் அல்ல எனும் போது - அதனூடே எப்போது மறு சவாரி செய்தாலும் அலுக்காது போகலாம் தான் ! 

ஆனால் in general - "இயவரசி ஸ்பெஷல்" ; "இரட்டை வேட்டையர் ஸ்பெஷல்" ; "பாட்டில் பூதம்" ; "ஜான் மாஸ்டர் ஸ்பெஷல்" ; "அலி பாபா ஸ்பெஷல்" என்று பிரவாகமெடுக்கும் விண்ணப்பங்களின் பின்னணியில் வாசிப்பின் அவாக்களும் உள்ளன தானா ? என்பதே என்னை நெருடும் கேள்வி ! காசைக் கொடுத்து வாங்குகிறீர்கள் ; சிலாகிக்கிறீர்கள் - அத்தோடு என் பாடு ஓய்ந்து விடவேண்டும் தான் ; வாங்கியதை நீங்கள் பேரீச்சம்பழத்துக்குப் போட்டால் கூட கேள்வி கேட்கும் உரிமை நேக்கு லேது தான் ! But அகவைகள் கூடிப் போனாலும், இந்தப் பழமை மீதான மோகம் அட்டகாசமாய் தொடர்வதன் மாயம் என்னுள் எழுப்பிடும் curiosity தான், உங்கள் மௌனங்களைக் கரைக்க முயற்சிக்க நினைக்கின்றது ! 

Again - "இது மட்டம் - அது ஒஸ்தி" என்ற பஞ்சாயத்துக்களின்றி, மனதில் படுவதைப் பகிர்ந்திடுவோமே ப்ளீஸ் ? And again - இதோ வோட்டுக்கான லிங்க் :https://strawpoll.com/PKgl3A2OEnp

எனது கேள்வி # 3 - மேலுள்ள வினாவின் நீட்சியே ! In fact அதை முன்வைத்தால் - "பிள்ளையையும் கிள்ளிப்புட்டு , தொட்டிலையும் ஆட்டுறியே ப்ளடி ராஸ்கோல் !" என்று உங்களுக்குத் திட்டத் தோன்றும் ! But நாமெல்லாம் என்னிக்கி துடைப்பங்களைப் பார்த்துப் பின்வாங்கியிருக்கோம் ? சுத்தமான வீரர்களுக்கு மு.ச.வும் ; மூ.ச.வும் ஒன்று தானே ? 

விஷயம் இது தான் guys :

ரொம்ப நாள் கோரிக்கைகளுள் ஒன்று - அந்நாட்களில் ஜூனியர் லயனிலும், மினி-லயனிலும் வெளியான "அலி பாபா" கதைகளின் மறுபதிப்பு என்பதை நாமறிவோம் ! அவற்றின்  டிஜிட்டல் கோப்புகள் எங்குமே பத்திரப்படுத்தப்படவில்லை என்பதால் மறுபதிப்பு செய்திட வழியின்றியே இத்தனை காலமாய் இருந்து வந்தது ! ஆனால் அந்தக் குறை சமீபப் பொழுதுகளில் நிவர்த்தி  செய்யப்பட்டிருக்க,இன்று அலி பாபா வண்ணத்தில் மிளிர வாய்ப்புகளுண்டு ! ஆனால்...ஆனால்...இதன் உரிமைகளுக்கென படைப்பாளிகள் எதிர்பார்த்திடும் தொகையானது\ நாம் வாடிக்கையாய் தந்து வரும் ராயல்டிக்களை விடவும் கணிசமாய்க் கூடுதலாக இருப்பதால் ரிவர்ஸ் அடித்து விட்டோம் ! 48 பக்கங்கள் கொண்டதொரு ஆல்பமானது வழக்கம் போல லக்கி லுக் சைசில் வெளியாவதாக இருந்தால் அதன் விலையினை ரூ.230 சுமாருக்கு நிர்ணயிக்க வேண்டி வரும் போலுள்ளது ! இந்த விலைக்கு பொதுவாய் கடைகளில் விற்பதெல்லாம் கடினமே என்பதால் - this will need to be a முன்பதிவு இதழ் only ! இத்தனை பணத்துக்கு அது ஒர்த் தானா ? என்பதே இங்கு எனது கேள்வி # 3. இங்கே டிஜிட்டலில் பிரிண்ட் போட்டு "சேவை" செய்து வரும் அடியார்களின் விலைக்கு முன்பாய் ரூ.230 என்பதெல்லாம் ஒரு பெரிய மேட்டராகவே தென்படாது போகலாம் தான் ; ஆனால் அந்த உட்டாலக்கடிகளையெல்லாம் ஒரு அளவீடாகக் கொள்ளாது, அந்த விலைக்கு இந்த இதழ் சுகப்படுமா ? என்று சொல்லுங்களேன் ப்ளீஸ் ?  நீங்கள் ஓ.கே. எனும் பட்சத்திலும் இது நனவாகிட அவகாசமெடுக்கும் தான் ; ஆனால் இது பயணிக்க வேண்டிய பாதையா ? இல்லையா ? என்பதைத் தீர்மானிக்க வேண்டியோர் நீங்களே என்பதால் பந்து இப்போது உங்களின் தரப்பில் ! So சொல்லுங்களேன் folks !!


ரைட்டு....இந்த வாரக் கேள்விகளைக் கேட்டாச்சு ! போன வாரத்து கேள்விகளின் விடைகளை பார்க்கலாமா ? 

BOUNCER : ரொம்பவே டைட்டானதொரு விடை தந்துள்ளீர்கள் folks ! Phewwww !!

ஒல்லிப்பிச்சான் ஸ்டெர்ன் விஷயத்திலோ ஸ்பஷ்டமாய்த் தீர்ப்பளித்து விட்டீர்கள் - thank you !! 

Bye folks....see you around ! Have a great weekend !! And செப்டெம்பரின் அலசல்களும் தொடரட்டுமே - ப்ளீஸ் ? 

347 comments:

 1. நீண்ட நாட்களுக்கு பிறகு அடியேன்

  ReplyDelete
 2. வணக்கம் நண்பர்களே!!!

  ReplyDelete
 3. எச்சூஸ் மீ…நானும் வந்துட்டேன்..!

  ReplyDelete
 4. அலிபாபா கண்டிப்பாக வேண்டும். அதுக்கு ஓட்டெடுப்பு இல்லாததால் இங்கே. மீதி ரெண்டுக்கும் ஓட்டு போட்டாச்சு.

  மறு பதிப்புகளை பொறுத்தவரை மாயாவி, ஸ்பேடர், லா& டே தவிர மத்ததெல்லாம் வாசிக்க. ஏன்னா இதெல்லாம் பலமுறை மறுபதிப்பில் வந்தவை. வராதவைன்னா கண்டிப்பா வாசிக்க முயற்சியாவது செய்வேன்.

  ReplyDelete
  Replies
  1. // அலிபாபா கண்டிப்பாக வேண்டும். அதுக்கு ஓட்டெடுப்பு இல்லாததால் இங்கே. மீதி ரெண்டுக்கும் ஓட்டு போட்டாச்சு.// வேண்டுமே வேண்டும்

   Delete
 5. ஹை.. அலிபாபா!! 😍😍😍😍😍😍😍😍😍😍😍

  230 ரூபாய்னா எனக்கு ஓகே தான் சார்!!

  ReplyDelete
  Replies
  1. நீங்களா.... இந்த புள்ளைய UKG ல இருந்து யாரது 1st standard க்கு பாஸ் பண்ணி விடுங்கய்யா.....
   இன்னும் கோமாளிகளை ரசிச்சுக்கிட்டிருக்கு

   Delete
 6. வணக்கமுங்க 🙏🙏

  ReplyDelete
 7. அலிபாபா மட்டுமல்ல.. கார்ட்டூன்னா... புலிபாபா எலிபாபா எதுவா இருந்தாலும் என்னோட ஓட்டு ஆதரவாத்தான் விழும் சார்....😍

  ReplyDelete
  Replies
  1. @Kok..😍😘😃

   "புலிபாபா"..😃😃😃

   குசும்பனய்யா நீர்..😃😃😃👍👌

   Delete
 8. Regarding your second question after watching readers comments in my limited social media exposure, I think

  People want to buy the book which has exposure. They don't want to buy some book which is new. Some books are exposed too much. Some books are never on many people's radar.

  You are choosing such books(books not on many people's radar) and introduce to us. Even now people are posting negative comments on Nevada.

  My guess is theriyadha boothathai Vida therinja pisasu Mel endru makkal ninaikkiraargal.

  Today I saw a poll asking about uyirai thedi and most of the comments were negative.

  ReplyDelete
 9. As far as Alibaba is concerned I had not had the option of reading it. So I will say yes to read it.

  ReplyDelete
 10. //*டெக்ஸ் கதைகளில் அவ்வப்போதாவது இந்த மாந்த்ரீக பார்ட்டி தலைகாட்டிட வேண்டிய அவசியம் என்ன ?//

  'TEX AND CO' "பல்பு" வாங்க கூடிய ஒரு சில வில்லன்களில் மெபிஸ்டோவும் ஒருத்தன் .. வில்லன் STRONGஆக இருந்தா தான் SIR கதை சுவாரசியம் ஆக இருக்கும் .. அப்புறம் இதில் லாஜிக் இல்லை என்று சொன்னால் எந்த TEX கதைலயும் லாஜிக் இல்லை தானே சார்.. மேலும் ஒரே TEMPLATE TEX கதைகள் படிக்க BORE அடிக்கிறது சார் .. SO NEED MEFISTO AT LEAST ONCE A YEAR ..

  ReplyDelete
  Replies
  1. ஒரே டெம்ப்ளேட் டெக்ஸ் கதைகள் bore அடிக்கிறது. மெஃபிஸ்டோ ஒரு மாற்றத்தை கொண்டு வருகிறார். சந்தேகமின்றி. மெபிஸ்டோ வுக்கு ஜே ஜே ஜே

   Delete
 11. மெபிஸ்டோ Vs டெக்ஸ் அடிக்கடி வேண்டாம் சார்.. வருசம் ஒண்ணு வந்தா போதும்..😇

  ReplyDelete
 12. Mefisto vs tex

  The story line gets muddled when the villain is more powerful than a hero. You can never defeat mefisto by legal methods. A hero can never indulge himself in a war of fraudulent nature. So tex can never defeat mefisto.

  The thing I dislike about mefisto character is he disappears right at the time tex looks like winning. Because logically mefisto can never be defeated. But to keep tex and mefisto meeting each other the characters are designed in such a way.

  I don't think mefisto will defeat tex or tex will defeat mefisto.

  It is like the arch rival nemesis of every super human characters.

  Once a year release mefisto will keep tex haters from buying tex books. So please indulge us now and then sir

  ReplyDelete
 13. Wow to see all three comments above has the same theme

  ReplyDelete
 14. தோர்கலின் தோழரே!! (பல்லடம் சரவணகுமார்)

  அந்த 'வேற லெவல்' விமர்சனத்தை மீண்டும் ஒருமுறை இங்கே பதியும் ப்ளீஸ்!!

  ReplyDelete
 15. ரிப் கிர்பி ஸ்பெஷல் 2வில் வந்த கதைகளையும் அப்டேட் செய்து விட்டேன் வாசக நண்பர்களே!

  https://worldcomicscollectionwcc.blogspot.com/search?updated-max=2022-02-13T10:52:00%2B05:30&max-results=20&start=4&by-date=false&m=0

  ReplyDelete
 16. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 17. //உயிரைக் கொடுத்து உருவாக்கிய "பிஸ்டலுக்குப் பிரியாவிடை"களும், அர்ஸ் மேக்னாக்களும், "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்களும்" கையிருப்பில் கணிசமாய்க் கிடக்க, "உயிரைத் தேடி" ஜிலோவென்று விற்று, சொற்ப கையிருப்பே இருப்பதன் காரணமென்ன ?//

  நான் என்ன நினைக்கிறேன்னா
  1.புத்தகத்தை பத்தி எல்லாரும் பெருமையா பேசறது ஒரு காரணமாக இருக்கலாம்
  2. இந்த புத்தகம் தீர்ந்துவிடும் அதற்கு முன்னாலே வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம்
  3. அட்டைப்படம் கூட சில நேரம் தீர்மானிக்கலாம்
  don't judge a book by its cover என்று கூறுவார்கள் இல்லையா இருந்தாலும் பெரும்பாலும் மக்கள் புத்தகத்தில் அட்டை படத்தை பார்த்து தான் முடிவு செய்வார்கள் என நினைக்கிறேன்

  ReplyDelete
 18. சூப்பர் சார்....


  மெபிஸ்டோ மூன்றாம் பாகம் மட்டும் சிறிது இழுப்பாய் தோன்றியது....

  ஆனா கதையின் வேகம் டெக்ஸ் கார்சன் முகம் மாறினாலும் வெறுக்கலை என்பதை கவனித்தீர்களா....எனது சிறு வயது முதல் ஆவதே ஸ்பைடரை அடுத்து அம்மானுஷ்யமே...திகில் பேர பாத்து இரத்தக் காட்டேரி மர்மம்னு ஜானி கதய கொண்டாட்டமா எதிர்பார்த்து கதையை ரசிச்சாலும் ஏமாந்ததே அதிகம்....இரத்தக் காட்டேரி வரையே...
  இங்கோ நம்ம டெக்ஸ் அண்ட் கோ பின்னிப் பெடலெடுக்குதே....நாம் தேடுவதும் அமானுஷ்யம் சார் கதைகள்ன போது நாயகர் யாராருந்தா என்ன...

  கதைதான் முக்கியம்...விறுவிறுப்பு முக்கியம்....எம்ஜிஆர் நடிச்சா விஜய் நடிச்சா கூடுதல் பலம் எனும் போது கதைதான் முக்கியம்...நாயகரல்லவே

  ReplyDelete
 19. சுஸ்கி விஸ்கியை தொடர்ந்து விட்டிருந்தா எனது பால்யங்கள் இன்னும் தூக்கலாயிருந்திருக்கும்....அன்று ஏன் தயங்குனீர்களோ தெரியல...ஒரு. வேளை விற்பனை சுமாரோ அன்று....ஆனா பூச்சுற்றல் அது இதுன்னு பின் வாங்கி இருந்தா மன்னியுங்க சார் உங்களுக்கு மன்னிப்பே கிடையாது என்னளவில்

  ReplyDelete
 20. இரும்புக் கை மாயாவி என்ன ஓர் அபார கற்பனை...இப்ப படிச்சாலுமே ஜிவ்வுதான்

  ReplyDelete
 21. லக்கி லூக் மறுபதிப்பு தேவையில்லை ...ஏன்னா கைலருக்கேன்னு நினைப்பேன்...சில கதை தவிர பல ஆனா மறதி அதிகமாவதால்...மறுபதிப்பில் இப்ப படிக்கயிலும் பின்னிப் பெடலேடுக்கும் ...வியப்பேன்

  ReplyDelete
 22. அப்படியே அந்த சிக்பில் மறுபதிப்புகள்... ம்.. ம்ம்.. ம்ம்..

  ReplyDelete
  Replies
  1. ஆட்டத்தை ஆரம்பிக்கலையேன்னு நினைச்சேன். நமக்கு ஒரு காப்பி ப்ளீஸ்...

   Delete
 23. காக்கா...இப...இந்த உலகமே அழிஞ்சு ஏலியன்ஸ் வந்து படிச்சாலும் புரட்டிப் போடும் உன்னத காவியங்கள்

  ReplyDelete
 24. அலி பாபா என்ன கேள்வி சார் இது....சுஸ்கி விஸ்கியை பார்த்தும் இது அவசியமா...என் கைல கூட இருக்கு அதும் அந்த மீன் குழம்பு சமையல் இப்ப படிக்கைல நெனச்சா விழுந்து எழுந்து சிரிப்பேன்...நிச்சயமா வேனும் காலத்தின் கட்டாயம்...40 கொண்டாட்டத்துக்கு அட்டகாச இதழ்...இரு கதைகளும் வரட்டும்....பெரிய சைசு காககா போல பட்டய கிளப்பும்னு தோன்றினால் தயங்காம அதே சைசுல போடவும்...
  தயவு செஞ்சு ஊதா பொடியர்கள லிமிட்டெட்லயாச்சும் போடுங்க

  ReplyDelete
 25. மெபிஸ்டோ கண்டிப்பாக வேண்டும்... டெக்ஸ்க்கு இணையான எதிரி மெபிஸ்டோதான் என்பது என் கருத்து... 2024ல் மூன்று டெக்ஸ் இதழ்களை மெபிஸ்டோவுக்கு ஒதுக்கலாம் சார்... (டெக்ஸ் & கோ Vs மெபிஸ்டோ என் மார்க் 10/10)

  அடுத்து மிஸ்டர் நோ... தொடர்ந்து களம் காண்பது காமிக்ஸ் வாசகர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கும் ஆரோக்கியமான விசயம் சார்... அவ்வப்போது மிஸ்டர் நோவை கலரில் காட்டுங்கள்... (மிஸ்டர் நோ- என் மார்க் 8/10)

  அடுத்து படிக்க தோர்கலை கையில் எடுத்துள்ளேன்....

  ReplyDelete
  Replies
  1. ///மெபிஸ்டோ கண்டிப்பாக வேண்டும்... டெக்ஸ்க்கு இணையான எதிரி மெபிஸ்டோதான் என்பது என் கருத்து... 2024ல் மூன்று டெக்ஸ் இதழ்களை மெபிஸ்டோவுக்கு ஒதுக்கலாம் சார்... (டெக்ஸ் & கோ Vs மெபிஸ்டோ என் மார்க் 10/10)///


   + 10000

   Delete
 26. This comment has been removed by the author.

  ReplyDelete
 27. அமேசானில் அதகளம்....

  தலைப்பே சொல்லிடுச்சு அதகளந்தா

  துவக்கம் முதல் ஜெட் வேகம்...மூச்சு விடாம பாயுது கதையும் நதியின் போக்கில்...

  மறைந்து வாழும் பணக்கார குற்றவாளிக்கு உடந்தையாய்....
  அதனை படம் பிடிக்க...அவரை துரத்த...நம்ம ஹீரோட்ட கேமரா கைமாற...நாவல் போல கேள்வி ஒரிடத்திலும் தொடர்ச்சியாய் பதில் வேறிடத்தும் மாறும் காட்சிகளும் அருமை....

  அதுவும் சந்து பொந்து போல நதிக்குள் பாயும் மிஸ்டர் நோ இயற்கைத் தடைகளால் எதிரிகளை வீழ்த்துவதும் அருமை...

  அடுத்த தொகுப்பில் மிஸ்டர் நோக்கு இடமில்லையா...
  முதலாமாண்டு மலர்ல வருவாரோ

  ReplyDelete
 28. டெக்ஸ் கதைகளில் அவ்வப்போதாவது இந்த மாந்த்ரீக பார்ட்டி தலைகாட்டிட வேண்டிய அவசியம் என்ன ?

  டெக்ஸ்க்கு தண்ணி காட்டக்கூடிய ஒரே வில்லன் மெபிஸ்டோ தான் ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக சென்றாலும் முடிவில் நன்றாகவே இருந்தது. டெக்சை நிறைய இடங்களில் மண்ணை கவ்வ வைத்தது நன்றாக இருந்தது .எப்போதுமே ஹீரோ ஜெயிச்சுக்கிட்டே இருக்க கூடாது அப்பப்ப தோக்கவும் செய்யநும்.

  ReplyDelete
  Replies
  1. //எப்போதுமே ஹீரோ ஜெயிச்சுக்கிட்டே இருக்க கூடாது அப்பப்ப தோக்கவும் செய்யனும்.///

   இது நல்லா இருக்கே

   Delete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
 30. Please publish Tex viller first story even if it is not good

  ReplyDelete
  Replies
  1. அது ஏனோ நண்பரே - சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொள்ளும் அவா ?

   Delete
 31. லியோனார்டோ எல்லாம் ஒரு கதையா. தலைவலி. Smurfs எல்லாம் நிலமாக இருப்பதால் ஒரு அயர்ச்சி.

  சுஸ்கி விஸ்கி கதைகள் பிரமாதமா இருக்கும்.

  உயிரை தேடி நல்ல கதை.

  மாயாவி கதைகளும் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. 47 ஆண்டுகள் ....54 ஆல்பங்கள்.. தோராயமாய் 2400 பக்கங்கள் ....ஆறோ - ஏழு உலக மொழிகளில் மறுபதிப்புகள் ! "தலைவலி " லியனார்டோவின் விசிட்டிங் கார்டு இது !

   ஆங்காங்கே வாசித்தும், சிலாகித்தும் இதனை இன்று வரைத் தொடரச் செய்வோரெல்லாமே க்ரோசின் மாத்திரைக்கு டீலர்களாகவும் இருந்திருக்க வேணும் போலும் !

   அப்புறமா அந்த அயர்ச்சி தரும் நீலப் பொடியர் பற்றி ....ஆங் ...அவர்களது முழு resume போட வேணுமாயின் மேற்கொண்டு நாலு இட்லியை விழுங்கிட்டு வர வேண்டியிருக்கும் ! அப்புறமா வாரேனுங்க !

   Delete
 32. அலிபாபா கண்டிப்பாக வேண்டும். அதுக்கு ஓட்டெடுப்பு இல்லாததால் இங்கே. மீதி ரெண்டுக்கும் ஓட்டு போட்டாச்சு.

  அலிபாபாவும் சுஸ்கி விஸ்கி போல இரண்டு கதைகளுடன் ஹார்ட் அட்டையுடன் முன்பதிவுக்கு வந்தால் நன்று. இது எனது கருத்து மட்டுமே.

  ReplyDelete
 33. மொத்தத்தில் நிறைய கார்ட்டூன் கதைகள் வேண்டும்

  ReplyDelete
 34. அலிபாபா கட்டாயம் வேண்டும்

  ReplyDelete
 35. அப்படியே அந்த மாடஸ்டி டைஜஸ்ட்

  ReplyDelete
 36. பழைய கதைகளை / புத்தகங்களை பார்க்கும்போதே மனசு ஜிவ்வுன்னு ஜெட் வேகத்தில சிறு வயது ஞாபகப் பேழைக்குள்ள போயிட்டு ஒரு ரவுண்டு வருது, இது எல்லாம் நம்முடைய சிறுவயது மகிழ்ச்சிய அசைபோட வைச்சு நிகழ்கால இறுக்கத்தையும் குறைக்குது...

  பெரும்பாலும் இது தான் எல்லோரின் அனுபவமாக இருக்கலாம்...

  இது ரசனையை விட பல படி மேல...

  அதே போல பழசை அசை போட்டுக் கிட்டே ரசிச்சு படிக்கவும் செய்வோம். 🤷‍♂️😍🤩

  ReplyDelete
 37. அப்படியே BAT-MAN ம் 🎃😂😂😂

  ReplyDelete
 38. கருப்பு வெள்ளைல படிச்ச அந்நாளைய கதைகள் தான் இன்னமும் பசுமையாக மனசுல அப்படியே இருக்கு...

  ReplyDelete
 39. Inigo.. நீங்கள் சொல்வது அப்பட்டமான உண்மை.. அட்டைப்படத்தை "காதல் "என்ற
  உணர்வுடன் ஒப்பிடலாம்.. ஒரு ஆணும், பெண்ணும் முதலில்
  பார்வையால் தான் காதல் வயப்படுகிறார்கள்.."அண்ணலும்
  நோக்கினான், அவளும் நோக்கினாள்.." கம்பர் மிக அழகாக சொல்லிவிட்டார்..
  அட்டையை பார்த்தவுடன்
  புத்தகத்தை கையில் எடுக்க
  வேண்டும்...என்னால் மறக்கவே முடியாத முத்து காமிக்ஸ் ன்
  அட்டைபடங்களில் ஒன்று..
  தலை கேட்ட தங்க புதையல்
  முதல் பதிப்பு... பாக்கெட் சைஸ் தான்.. ஆனால், close up ல் லாரன்ஸ் ன் pistol ன் சுடப்பட்ட
  புல்லட் ன் எதிர் விசையை தாங்கும் கைகளும், முகமும்.. பின்னால் டேவிட் ஐம் அப்படியே
  பறக்கும் காலி தோட்டா கூடுகள்..
  2டே முகம்.. அது உணர்த்தும் செய்தி அபாரம்.. அநேகமாய் அது ஒரிஜினல் அட்டைpadam என்று நினைக்கிறேன்...அட்டை இல்லாத முதல் பதிப்புதான் இப்ப என்கிட்ட இருக்கு... ஆனால் அந்த reaction இப்பவும் மனசில இருக்கு... கா. க. கா.. ரிப் கிர்பி, தோற்கல்.. இம்ஹூம்... காரிகன்
  சுமார்..50 இன்ச் x50 இன்ச்.. Chart
  பேப்பர் ல் ஒரு அட்டைப்படம் உருவாக்கி அனுப்ப ஆசைதான்...
  இந்த textile வேலை என்னை விட மறுக்கிறது.. ஆனால், நான் விடப்போவதில்லை... So.. கல்யாணம் பண்ணி அப்பாலிக்கா புருஷனும், பொண்டாட்டியும் அடிதடி போட்டுக்கரதெல்லாம் அப்புறம்...ஆனாக்க, love ல
  விழறதுக்கு பார்வை முக்கியம்... தோற்றம் முக்கியம்...அதுதான் அட்டை படம்... பார்க்கலாம்
  "பிரபஞ்ச சக்தி" அனுக்கூலமாய்
  இருந்தால் என்னிடம் இருந்தும்
  சூப்பர் அட்டை படங்கள் வரலாம்.... எல்லோரையும் திகைக்க வைக்கும் படைப்பை... ஆசிரியராலும், உங்களாலும் மறுக்க முடியாது தானே...
  அன்புடன்.. பாரதி நந்தீஸ்வரன்... ❤️❤️❤️🙏🙏👍👍

  ReplyDelete
  Replies
  1. திறமையை வெளிப்படுத்துங்கள்.

   நான் கூட ஆர்ட் பேப்பரில் தோர்கலை வரைந்து, நான் விரும்பிய வண்ணங்களை கொடுத்து, இந்த மாத தோர்கல் புத்தகத்தில் ஒட்டி இருக்கிறேன்.
   ஆகா.. என்ன அழகு...எனது கலெக்ஷன் - ல் மிக சிறந்த புக்.
   இன்னும் கதையை படிக்கலை.
   நான் வரைந்த அட்டை படம் சூப்பரோ சூப்பர்...படு சூப்பர்...

   Delete
  2. நன்றி.. புன்னகை ஒளிர். ❤️👍

   Delete
  3. நம்முடையது நமக்கு சூப்பர்
   டூப்பர் ஆகதான் தெரியும்.. 😄😄.. Face book ல்.. குழுவில் போடுங்க.. அப்படியே ஆசிரியருக்கும் அனுப்புங்கள்.. சின்ன, சின்ன step ஆக தானே எடுத்து வைக்கணும்.. 😄❤️👍

   Delete
 40. Sorry..50x50 cm.. 😄😄😄❤️🙏👍

  ReplyDelete
 41. அப்படியே அந்த இரட்டை வேட்டையர் ஸ்பெஷலுக்கும் மனசு வையுங்க ஆசிரியரே

  ReplyDelete
 42. சார்.இரும்புக்கை நார்மன் போன்று உணர்ச்சிகரமாகவும்ஆக்சனுடனும் வரும் கதைகள் மறுபதிப்பு வர வேண்டும் . வெறும் ஆக்சனுடன் மட்டும் வந்த கதைகள் தற்போது சொதப்பல் ஆகவே தோன்றும்.ஜாக்கி சானே தற்போது ஆக்சன்&செண்டிமெண்ட் என்று மாறிவிட்டார்.

  ReplyDelete
  Replies
  1. ஜாக்கி சானே மாறியும் , நாம இன்னும் மாறலியே சார் !

   Delete
  2. ஜாக்கி.. மாறியும் நாம் மாறவில்லை... 😄😄😄
   Beautiful.. உண்மை sir.. ❤️

   Delete
 43. மெபிஸ்டோ. நிச்சயமாய் மாறுதல் ஆகவே உள்ளது.டெக்ஸே தடுமாறும் ஒரு வில்லனாக மிரட்டுகிறார் மெபிஸ்டோ.அலிபாபா வேண்டும் . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. ///டெக்ஸே தடுமாறும் ஒரு வில்லனாக மிரட்டுகிறார் மெபிஸ்டோ///

   முழுக்க முழுக்க உண்மை...

   Delete
 44. //நீலப் பொடியர்களின் ரவுசுகளும் சரி, கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பின்னேயும் கையிருப்பில் இருக்க, அதே கார்ட்டூன் ஜானரின் பிரதிநிதிகளான சுஸ்கி & விஸ்கி 'பச்சக்'கென்று விற்றுக் காலியாவதன் மாயம் தான் என்ன ?

  ***உயிரைக் கொடுத்து உருவாக்கிய "பிஸ்டலுக்குப் பிரியாவிடை"களும், அர்ஸ் மேக்னாக்களும், "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்களும்" கையிருப்பில் கணிசமாய்க் கிடக்க, "உயிரைத் தேடி" ஜிலோவென்று விற்று, சொற்ப கையிருப்பே இருப்பதன் காரணமென்ன ?

  ***Fantasy ஜானரில் தோர்கல் மிளிர, நாம் மங்கு மங்கென்று குட்டிக்கரணங்கள் அடிக்கும் அதே பொழுதினில், ஸ்பைடராரும், மாயாவிகாருவும் BIG BOYS ஸ்பெஷலில் ஜாலியாக ஆஜராகி அதகள வெற்றி காணும் ஜாலம் தான் what ?//


  வருத்தம்தான் சார்....இது போன்ற சிறந்த அல்லது புதியவர்கள் கதைகள லிமிட்டெட்லயே தரலாமே

  ReplyDelete
  Replies
  1. இதான் அறிவை விட உணர்ச்சிகளின் செயலென்பதா....
   நண்பர்களின் சிறிய சிறிய தேவைய கொடுத்த பின்னர் புதுகள் ஈர்க்கும் வாய்ப்பிருக்கலாமோ

   Delete
 45. தோர்கல்: மரணத்தின் நிறம் நீலம்!

  இன்னலில்லா வாழ்விடத்தைத் தேடி ஓடும் தோர்கலின் பயணத்தில் இன்னுமோர் சிக்கல். இம்முறை தோர்கல் பயணிப்பது தன் குடும்பத்தை ஜீவமரணப் போராட்டத்திலிருந்து காப்பாற்ற மட்டுமல்ல... காப்பார் யாரும் இல்லாமல் கைவிடப்பட்டு அவல நிலையில் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மற்ற அபலைகளுக்கும் சேர்த்திதான்.

  உள்ளிருந்தே கொல்லும் விஷமாய், வேதனையான மரணமே கதியாய், தன்னுயிரை சடுதியில் விட விடுதலைப் பாறையில் காத்திருப்போரைக் கண்டு உள்ளம் பதறுகிறது.

  காலனோ அனுதினமும் எவ்வித தயவும் இன்றி, வயது பால் வேறுபாடு இன்றி சகலரையும் கவர்ந்து செல்ல காத்திருக்கிறான். மரணவாடை எங்கும் வீசுகிறது. நமக்கோ தொண்டையில் துக்கம் அடைக்கிறது.

  விவரணைகள் தேவையில்லாமல் வெருண்டோடும் கதையோட்டத்தில் நாமும் ஓடுகிறோம் அந்த ஐந்தாவது நாளை நோக்கி... அய்யகோ... அதுவும்தான் விரைந்து வந்தும் விட்டதே!

  அம்மா ஆரிசியா, கணவனை அனுப்பிவிட்டு காத்திருக்கும் வேளையிலே உன்மக்கள் உன்முன் செல்ல நேரிடுமோ என்ற வேதனையில் பெற்றமனம் துடிப்பதைக் கண்டு கலங்கிடாதா நெஞ்சும் உண்டோ...

  ஜோலனின் தன்மொழியில் ஆரம்பிக்கும் கதை அடுத்த 24 பக்கங்களில் தொட்டுவிடுவதோ உச்சவேகம்! பூமிக்கடியில் புதைந்தோடும் ஆற்றில் தோர்கலுக்கு முன்னாக நாம் நீந்திச் செல்கின்றோம்! மூச்சடைக்கிறதே எதனாலோ....

  விடுதலைப் பாறையோ... விமோச்சன மேடையோ... காக்க வேண்டிய காவலனே கொன்று களிப்புறுகிறான் எனும்போது கடைசி வரை நெஞ்சம் எரிகிறது.

  தோர்கல் விரைந்து வா! நேரமில்லை... காலன் காத்திருக்கிறான்... உன் காதல் குடும்பத்தின் கதை முடிக்க!!!

  ...

  ReplyDelete
 46. ஜி, மாயாஜால வில்லன், டெக்ஸ் கதைகளுக்கு வருடத்துக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ வேண்டும். வழக்கமான ஆக்சன் கதைகளில் இருந்து இது ஒரு மாற்றம் தருகிறது.
  அலிபாபா தளரமாக முயற்சி செய்யலாம், எங்களது பாலிய வயது நினைவுகளை ஏற்படுத்தும் மறு பதிப்பு கதைகளை நாங்கள் ஒன்றுக்கு மூன்றாக வாங்கி சேகரிக்கிறோம் படிக்கிறோம் எங்கள் இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தவும் முயற்சி செய்கிறோம்.

  ReplyDelete
 47. அலிபாபா மறுபதிப்பை விஸ்கி சுசுகி போல ஹாட் பவுண்ட் இரண்டு கதைகளாக போடவும்

  ReplyDelete
 48. மெபிஸ்டோ வருடத்துக்கு ஒரு முறை அதை விரும்பும் நண்பர்களுக்காக வரட்டும் சார்... அப்படியே மோரிஸ்கோ கதைகள் பக்கமும் கொஞ்சம் கவனத்தைத் திருப்புங்க சார்...

  ReplyDelete
 49. //நோஸ்டால்ஜியா" என்ற ஒற்றை விஷயத்தின் வீரியம் அந்தப் பழம் நாயகர்களின் கதைகளுக்குள் இன்றைக்கும் ஈர்ப்போடு புகுந்து வாசிக்க உதவிடுகிறதா ? நீங்கள் ஆவலாய் கோரிப் பெற்றிடும் இந்த மறுபதிப்புகளையெல்லாம் மெய்யாலுமே வாசிக்கவும், அந்நாட்களைப் போலவே ரசிக்கவும் முடிகிறதா ?//

  உண்மையைச் சொல்லப்போனால் மறுபதிப்பாகும் பெரும்பாலான கதைகளை நான் பால்யத்தில் வாசித்தது இல்லை.(மரணமுள், காககா போன்றவை தவிர்த்து) அதனால் நோஸ்டால்ஜியா என்பது எனக்கு பெரிய பாதிப்பேற்படுத்துவது இல்லை. அதேசமயம் அதை முன்னரே வாசித்த நண்பர்களின் சிலாகிப்புகள் அவற்றின் மீதான ஆர்வத்தைக் கூட்டுகின்றன. (இப்போது கூட நெப்போலியன் பொக்கிஷம், இந்த அலிபாபா)

  மறுபதிப்புகள் தேவைதான். ஒரு அப்கிரேட் உடன்...

  படிப்பதை பொறுத்தவரையில்... உடனடியாக இல்லாவிட்டாலும் ஏதேனும் ஒரு சமயத்தில் படித்துவிடுவேன் என்று நம்புகிறேன். மறுவாசிப்பு என்பது வெகு சொற்பமாகத்தான் இருக்கும்.

  ReplyDelete
 50. அலிபாபாவும் நான் படித்ததில்லை. நண்பர்களின் சிலாகிப்புகள் அதன் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது. வரட்டும் சார்

  ReplyDelete
 51. நான் வேலை செய்திடும் கம்பெனி ஒரு கிராமத்தில் அமைந்துள்ளது, அங்கு ஒரு சிறு நூலகம் உண்டு, லஞ்ச் டைம் நான் அங்கு செல்வது உண்டு அந்தப் ஊரில் உள்ள பள்ளி முதல்வர் வாரத்துக்கு ஒரு நாள் அந்த நூலகத்துக்கு பள்ளி மாணவர்களை அழைத்து சென்று சென்று வருவதை பல நாட்கள் பார்த்திருக்கிறேன். அந்த மாணவர்களும் ஆர்வத்தோடு இருப்பதை பார்த்தேன். காமிக்ஸ் ஒன்று கூட அந்த நூலகத்தில் கிடையாது என்பதும் தெரிந்தது, ஆகையால் முதல் காமிக்ஸ் நமது காமிக்ஸ் lion and muthu அறிமுகப்படுத்தலாம் என்று தோன்றியது அதன் பலனாக
  அந்த நூலகத்துக்கு நமது லைன் முத்து காமிக்ஸ் எனது சேகரிப்புகள் கொடுத்திருக்கிறேன். நமது காமிக்ஸ் தான் அந்த நூலகத்துக்கு முதல் காமிக்ஸ்,

  ReplyDelete
 52. தோர்கல்: மர்ம சாம்ராஜ்யம்

  அப்பாடா... ஒரு வழியா தோர்கல் தன் பயணங்களை முடிச்சிட்டு வீட்டுக்கு திரும்ப முடிவெடுத்துட்டார்னு நினைச்சா அங்கேயும் சிக்கல்... அவங்களோட படகும் உடமைகளும் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்துவிடுகிறது.

  சரி உதவிக்கு பாலைவனத்தைத் தாண்டி கிராமத்துக்குப் போனால்... அட அங்கிருக்கிறவங்க சாதாரண மனுசங்க இல்லை... அப்புறம் அவங்க யார்? அவங்க நோக்கம் என்னன்னு பார்த்தா கதை மறுபடியும் ஆரம்பிக்குது. தோர்கல் பற்றியும் அவரோட பூர்வீகம் பற்றியும் ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் இந்த கதையில தெளிவாகிடும்.

  தோர்கலோட முந்தைய ஆல்பத்தின் கதைக்கும் இந்த கதைக்கும் நிறையவே வித்தியாசம். இந்த பன்முகத்தன்மை தோர்கலில் நான் ரசிக்கிற ஒன்று.

  இது முழுக்க ஒரு சை-பை கதையாகவே போகுது. புது வகையான ஆயுதங்கள், கிராவிட்டிக்கு எதிரான பெல்ட், இன்ட்ராஸ்பெக்டர்னு நிறைய விஷயங்கள் வருது.

  இரண்டு பக்கங்களும் சேர்ந்தாற்போல வரும் அந்த ஓவியம் டாப் கிளாஸ். அதை உற்றுப் பார்த்தாலே முழுக் கதையையும் திருப்பிப் படிச்ச மாதிரி அத்தனையும் ஞாபகம் வருது. அட்டகாசம்!

  கிளைமாக்ஸ் இறுதியில் கொஞ்சம் மனக்கஷ்டம் இருந்தாலும் முடிவு சுபமாகவே இருக்கு.

  இரண்டு வித்தியாசமான ஆல்பங்கள் ஒற்றை இதழில் வந்தது அருமை. இந்த ஆல்பத்தின் தலைப்பு 'மர்ம சாம்ராஜ்யம்' என்பதற்கு பதிலா 'மண்ணில் புதைந்த ராஜ்யம்'னு நான் யோசித்து வைத்திருந்தேன்.

  சில குறைகளும் சொல்லியாகனும்... அட்டைப்படம் ஏனோ பெருசா ரசிக்கலை.. சில எழுத்துப்பிழைகள்... பலூன்களில் வசனங்கள் மாறி இருக்கு. மற்றபடி இந்த இதழ் ஒரு கேரண்டியான எணடர்டெயினர்.

  தவற விடவேண்டாம் நண்பர்களே!!!

  ReplyDelete
  Replies
  1. உங்க முயற்சிகளுக்காகவாச்சும் தோர்கல் தேறினாரென்றால் தேவலாம் சார் ! நம்மவர்களை இந்த ஜானருக்குள் இன்னும் உத்வேகத்தோடு நுழையச் செய்ய வேறென்ன செய்யலாமென்று யோசித்து வருகின்றேன் !

   Delete
  2. இனிதான் படிக்கனும்,உங்கள் தோர்கல் விமர்சனம் எப்போதும் தனி இரகம் தான்...

   Delete
 53. டெக்ஸ் vs மெபிஸ்டோ...

  அடிக்கடி இல்லை என்றாலும் கண்டிப்பாக ஒரு முறையோ இரண்டு முறையோ வரலாம் சார்...டெக்ஸ் வில்லர் ஒரே பாணி என்பவருக்கான பதிலாகவும் அவர் சாகஸம் இருக்கும்...டெக்ஸ் வில்லரின் துப்பாக்கி குண்டு மட்டும் எதிரிகளை சரியாக சுடுகிறது..வில்லனின் குறி தவறுவதே இல்லை என்பதற்கான பதிலாகவும் அந்த சாகஸம் அமையும்...என்னை போன்ற டெக்ஸ் ரசிகர்களுக்கோ டெக்ஸையே தலைசுற்ற வைக்கும் எதிரியா என அதுவும் ஒரு பாணியாக ரசிக்க வைக்கும்..என்னை பொறுத்தவரை மீண்டு(ம்) வந்த மாயன் ரசித்தே படித்தேன்..

  ReplyDelete
  Replies
  1. அப்புறம்..
   நெவாடாவை பகல்ல படிச்சிப் பாத்திங்களா தலீவரே..? ஏதாச்சும் தெரிஞ்சுதா.!?

   Delete
  2. நோ ஜென்டில்மேன் ரிப் வாசிக்க ஆரம்பித்து உள்ளேன் அய்யா அதனை முடித்து விட்டு தான் நெவாடா ..பார்க்கலாம்

   Delete
  3. பங்குனி பொறந்த உடனே தலீவர் பிடிக்கிறதா கீறார் !

   Delete
  4. இந்த மாதம் டெக்ஸ் புக் கொரியர் பாக்ஸ்ல இல்லையே.
   ஏதோ வெளி நாட்டு சதியா இருக்குமோ...

   Delete
 54. பழம் கதைகள் ..

  கண்டிப்பாக மீள்வாசிப்பு தான் சார்...அதே சமயம் இதழ் வருவதற்கு முன் உள்ள எதிரபார்ப்பும்..ரசிப்பும் ,அவரவரின் ரசனையும் அந்த நாயகர்களின் சாகஸம் அன்று போல் ரசிக்க வைத்தால் மீண்டும் எதிர் நோக்க வைக்கிறது...சுஸ்கி விஸ்கி இதழ் எல்லாம் நமது ஆரம்ப இதழ் என்ற ஆர்வத்தில் மிகவும் ஆவுலுடன் வாங்கி படிக்க வைத்தது...அன்று போலவே இன்றும் சுஸ்கி விஸ்கி நன்றாகவே ரசிக்க வைத்து மீண்டும் அவர்களை காண எதிர்நோக்க வைத்தது...அதே சமயம் அதே எதிர்பார்ப்பில் தான் உயிரை தேடி அனைவரும் வாங்கியது...ஆனால் அன்று அது ரசித்தது போல் இந்த முறையும் என்னை ரசிக்க வைத்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை..ஒரே அறையில் திரும்ப திரும்ப சுற்றி வருவது போல ஓர் எண்ணம் தான் மேலோங்கியது..( ஆச்சர்யமாக இதை பற்றி காமிக்ஸ் குழு வாட்ஸ்அப்பில் இரண்டு நாள் முன்பாக தான் பேசி இருந்தோம் சார்..அதே எண்ணமே பலருக்கும்)

  எனவே இதன் முடிவை பற்றி ஆணித்தரமாக என்னால் சொல்ல முடியவில்லை..ஆனால் கதைகள் வந்தால் கண்டிப்பாக வாங்குவேன்..கண்டிப்பாக வாசிக்கவும் செய்வேன்..ஆனால் அதன் முடிவு தான் கலவையாக அமைகிறது..:-)

  அதே சமயம் சுஸ்கி விஸ்கி போல அலிபாபா சாதிப்பார் என்றே நம்புகிறேன் சுஸ்கி விஸ்கி போலவே இதழை வெளியிடலாம் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தலீவரே....கமல் படம் பாத்தீங்களோ நேத்திக்கு ?

   Delete
  2. 😄😄😄.. Editor sir.. Ha, ha..
   Beautiful.. "கடவுள் இல்லை.. இருந்தா பரவால்ல.." கமல்
   பேசற மாதிரிதான் இருக்கு.. 😄😄😄

   Delete
  3. ஹாஹா...:-)

   அதான் எனக்கும் குழப்பமா இருக்கு சார்...:-)

   Delete
 55. சார் எல்லா கேள்வியும் கேக்கறிங்க கலர்ல மாடஸ்டி பத்தி கேக்கவே மாட்டேங்கறிங்க.மௌனம் சம்மதம் என்றாலும் சொன்னா நிம்மதியா தூங்குவோம் . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் காலங்கார்த்தாலே துளியும் காட்டிக்காது செம லந்து பண்றீங்கோ சார் !

   Delete
  2. இளவரசியே தூங்கினாலும் ராஜசேகரன் தூங்க மாட்டார் போல.....
   இளவரசியின் உண்மைத் தொண்டர்....

   Delete
  3. சகோ.. இங்க இன்னொரு
   ஆள் இருக்கோணுங்கோ.. 😄😄❤️❤️

   Delete
 56. // டெக்ஸ் கதைகளில் மெபிஸ்டோ ஒரு பலமா ? பலவீனமா ? என்ற தலைப்பினில் ! //
  ஆண்டிற்கு ஒருமுறை மெபிஸ்டோ கதைகளை முயற்சிக்கலாம் தவறில்லை சார்,என்னைப் பொறுத்தவரை டெக்ஸை எல்லா தடங்களிலும் முயற்சிப்பதில் தவறில்லை,ஆனால் அந்த தடங்கள்,கதைக் களங்கள் நம்மோடு கனெக்ட் ஆகனும் அவ்வளவுதான்,மெபிஸ்டோ & டெக்ஸ் காம்பினேஷன் என்னோட ரசனையில் கனெக்ட் ஆகுது,மத்தபடி லாஜிக் கண்ணாடியை இதில் நான் பொறுத்தி பார்ப்பதில்லை,அப்படி பார்த்தால் கமர்ஷியல் ஜானரில் டெக்ஸ் தடங்களில் பல லாஜிக் குளறுபடிகளை காணலாம்....
  சர்வமும் நானே போன்ற கமர்ஷியல் பிளாக் பஸ்டர்களையும் என்னால் இரசிக்க முடிகிறது,அதே போல் கார்சனின் கடந்த காலம்,வல்லவர்கள் வீழ்வதில்லை,புயலுக்கொரு ஒரு பிரளயம் (டெக்ஸ்-70) போன்ற தடங்களும் மனதை கொள்ளை கொண்டது,அதே நேரத்தில் டெக்ஸ் & மெபிஸ்டோ கூட்டணியும் பிடித்துள்ளது...
  என்னளவில் டெக்ஸிற்கு கொஞ்சம் வலுவா,கடினமா சோதனை கொடுப்பதில் மெபிஸ்டோ கேரக்டர் இருப்பதும் ஒருவகையில் பிடித்துள்ளது...

  ReplyDelete
  Replies
  1. ///மெபிஸ்டோ & டெக்ஸ் காம்பினேஷன் என்னோட ரசனையில் கனெக்ட் ஆகுது,மத்தபடி லாஜிக் கண்ணாடியை இதில் நான் பொறுத்தி பார்ப்பதில்லை,அப்படி பார்த்தால் கமர்ஷியல் ஜானரில் டெக்ஸ் தடங்களில் பல லாஜிக் குளறுபடிகளை காணலாம்....
   டெக்ஸிற்கு கொஞ்சம் வலுவா,கடினமா சோதனை கொடுப்பதில் மெபிஸ்டோ கேரக்டர் இருப்பதும் ஒருவகையில் பிடித்துள்ளது...டெக்ஸிற்கு கொஞ்சம் வலுவா,கடினமா சோதனை கொடுப்பதில் மெபிஸ்டோ கேரக்டர் இருப்பதும் ஒருவகையில் பிடித்துள்ளது...///

   வாவ்... வாழ்த்துக்கள் ஜீ...

   Delete
 57. // அதே கார்ட்டூன் ஜானரின் பிரதிநிதிகளான சுஸ்கி & விஸ்கி 'பச்சக்'கென்று விற்றுக் காலியாவதன் மாயம் தான் என்ன ? //
  ஒருவேளை சுஸ்கி & விஸ்கி போல தாத்தாவும்,நீலப் பொடியர்களும் இன்னும் 20 அல்லது 30 வருடங்கள் கழித்தவுடன் தேடப்படுவாங்களோ ?!

  ReplyDelete
 58. // உயிரைத் தேடி" ஜிலோவென்று விற்று, சொற்ப கையிருப்பே இருப்பதன் காரணமென்ன ? //
  ம்ம்,ஆனா கண்டிப்பாக காரணங்கள் பல இருக்கும்,ஆனா அது என்னாவா இருக்கும் ?!

  ReplyDelete
 59. // BIG BOYS ஸ்பெஷலில் ஜாலியாக ஆஜராகி அதகள வெற்றி காணும் ஜாலம் தான் what ? //
  ஒருவேளை BIG BOYS என பேர் வெச்சதுதான் காரணமா இருக்குமோ ?!

  ReplyDelete
 60. // 48 பக்கங்கள் கொண்டதொரு ஆல்பமானது வழக்கம் போல லக்கி லுக் சைசில் வெளியாவதாக இருந்தால் அதன் விலையினை ரூ.230 சுமாருக்கு நிர்ணயிக்க வேண்டி வரும் போலுள்ளது ! //
  போட்டுத் தாக்குங்க சார் முன்பதிவுக்கு,வெளிச் சந்தையின் விலை ஒப்பீடுகளை பார்க்கும்போது இது பரவாயில்லைதான்,மேலும் இந்த கதை எல்லாம் நான் பார்த்தது கூட கிடையாது...
  பழைய இதழ்களில் தகுதியானவற்றை & விற்பனையில் சாதிப்பவைகளை கொஞ்சம் கொஞ்சமாய் களமிறக்கினால் என்னைப் போலானவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்...

  ReplyDelete
 61. சின்ன வயதில் கடன் வாங்கி படிப்பது அல்லது கஷ்டப்பட்டு வாங்கி படித்த பின் வீட்டீல் பழைய கடைக்கு போட்டு விடுவர்
  அப்போ புத்தக உரிமை என்பது, நமக்கு பாட புத்தகத்தை தவிர மற்ற புத்தகங்களுக்கு கிடைப்பது அரிது
  இப்போ வாங்க முடியும் போது, நாங்கள் நிறையாவே வாங்குகிறோம், சேகரித்து வைக்கிறோம், மற்றவர்களுக்கு வாங்கியும் தருகிறோம்

  பழைய கதைகள் நிறைய படிக்க கிடைத்ததில்லை, படிக்கப்பட்டும், படிக்கபடாமலும் மிஸ் ஆன கதைகள் நிறையா, அவைகள் மீள் வாசிப்புக்கும், படிக்காத கதைகள் கிடைக்கும் போது அவற்றை முதலில் வாங்க தோன்றுகிறது
  பழைய ஜாம்பவன்ஸ் படித்து இருப்பதால், அவர்களை ரசிக்கவும் முடிகிறது

  என் அம்மா படித்த கதைகள் மீண்டும் வருவது எனக்கு புதியவை, அவருக்கு அது மீள் வாசிப்பு

  அம்மா புதிய கதைகள் தான் கேட்கிறாங்க
  எனக்கு பழைய கதைகளும் வேண்டும், புதுசும் வேண்டும்

  ReplyDelete
 62. சகோ இங்க இன்னொரு ஆள் இருக்கேனுங்கோஈஸ்வர்சார். நிறையப் பேர். இருக்காங்க சார். சொன்னா
  மத்தவங்க கழுவி ஊத்துவாங்கனு அவங்களே பயங்கரமா கலாய்ப்பாங்க இன்னைக்கு போட்டி நடைபெறுவதால் அவர் பிஸியா இருப்பார் சார்.

  ReplyDelete
  Replies
  1. போட்டி முடிஞ்சிடுச்சி சார்.. வந்துட்டேன்...😜

   Delete
  2. ஆமாம் சக்தி bro.. 😄😄😄.

   Delete
 63. உயிரைக் கொடுத்து உருவாக்கிய "பிஸ்டலுக்குப் பிரியாவிடை"களும், அர்ஸ் மேக்னாக்களும், "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்களும்" கையிருப்பில் கணிசமாய்க் கிடக்க, "உயிரைத் தேடி" ஜிலோவென்று விற்று, சொற்ப கையிருப்பே இருப்பதன் காரணமென்ன ?//

  காரணம் நீங்கள் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்கிறீர்கள்
  ஆனால் வாசகன் அவனுக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்கிறான் Sir

  Comics என்றுமே போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது போன்று Current Affairs அல்ல, பழசு புதுசு என்று சொல்லிக்கொள்ள, நீங்கள் என்னதான் நேற்று Release ஆன Tex கதை என்று சொன்னாலும் கதைக்களம் 18 ம் நூற்றாண்டுதானே

  ஆனால் இரட்டை வேட்டையர் கேட்டால் பழங்கதை என்று அறிவுறுத்தல்கள் ஏன்

  காமிக்சின் தரத்திற்கு உண்மையான உரைகல் விற்பனையே, அவரவர் ரசனை அவரவருக்கு உயர்வு

  தாங்கள் சொல்ல வருவது தரமற்ற பழங்கதைகள் நன்றாக விற்கிறது, தரமான புதிய கதைகள் தேங்குகிறது என்ற கருத்து

  ஆனால் உண்மை என்பது வாசகனுக்கு பிடித்தது விற்கிறது,

  ReplyDelete
  Replies
  1. பதிவை மறுக்கா படிக்க கொஞ்சமாய் நேரம் எடுத்துக் கொண்டால் தேவலாமே சார் ?! என் கேள்வியையே உள்வாங்கிக் கொள்ளாது , இது தான் நான் கேட்டிருப்பேன் என்ற யூகத்தில் பதிலிட்டுருப்பது கண்கூடு !

   Delete
 64. எடிட்டர் sir.. ன் ரசனையும் நம் போன்ற வாசகர்களின் ரசனையும் ஒரே அலைவரிசையில் இருப்பதால் தான்... இத்தனை வருடங்கள்
  சீராக அவரால் பதிப்பு துறையில்
  NH 47. bybass ரோட்டில் பயணம் பண்ணுவது போல்" top gear"ல் அட்டாகாசமாக போய்க் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்... சில புத்தகங்கள் தேங்கிட காரணம்.. புதிய ஹீரோக்களை முதலில்
  Oru60,70பக்க கதைகளில் அறிமுகம் பண்ணிவிட்டு அப்புறமாக 200பக்கத்துக்கு
  தாவி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..3மே புதியவர்கள்...3இன் அட்டைப்படமும் படு action ல் இருந்திருக்க வேண்டும்.. (Yes.. சிண்டை பிடித்துக்கொண்டு 😄)
  அப்புறம் 3ஐம் black and white ல்
  போட்டிருந்தால் நலம் என்பேன்..
  என் கருத்து இது சகோ.. ❤️

  ReplyDelete
 65. வணக்கம் சார்!!
  மேபிஸ்டோ""இனி வேண்டுமா??வேண்டாமா? என்பதன் கேள்வி!!

  ஏன் இப்படி ஒரு கேள்வி!!!

  மேபிஸ்டோ ஒரு மாயாஜால வில்லன் அவனோடு மோத சரிசமமான ஒரு எதிரி டெக்ஸ் மட்டுமே" ஒரு அதிகாரியோடு மோதவிடுவது பலம் வாய்ந்த ஒரு வில்லனோடு மோதுவதற்க்கு சமம் நிச்சயம் வெற்றியடையும் ஆண்டுக்கு இருமுறை மேபிஸ்டோ வருவது போல் பார்த்துக்கொள்ளுங்கள்

  இப்படிக்கு!!! மேபிஸ்டோ பாசறை!!

  ReplyDelete
  Replies
  1. ஏன் இப்படி ஒரு கேள்வி!!!
   இப்படிக்கு!!! மேபிஸ்டோ பாசறை!!
   இது சூப்பரு.


   Delete
  2. அண்ணா...பாசறைக்கு பெயரை சரியாய் இடுங்களேன் மொதல்ல !

   Delete
  3. மெபிஸ்டோ பாசறை.. 😄😄😄... ❤️

   Delete
 66. அலிபாபா வெண்டும்

  ReplyDelete
 67. ஐயய்யோ வந்துட்டிங்களா ?எனக்கும் மாடஸ்டி பிடிக்காதுங்க. நாம் எல்லாரும் lady. . S .ரசிகர்கள் ஓ.கே ங்களா.

  ReplyDelete
 68. அலி பாபா வண்ணத்தில் மிளிரட்டும் சார்.வரவேற்று கொண்டாடுவோம்

  ReplyDelete
 69. ஆ......ஆ...ஆஅ... ஓ..ஓ..
  வெளிநாட்ல காமிக்ஸ் வர அதிலாசிரியர் ஸ்மர்ஃப் பிடிக்க
  காத்திருந்த சுஸ்கி அதை விஞ்சிக்கொண்டு போவதும் ஏன்?
  வெளிநாட்ல காமிக்ஸ் வர அதிலாசிரியர் ஸ்மர்ஃப் பிடிக்க
  காத்திருந்த சுஸ்கி அதை விஞ்சிக்கொண்டு போவதும் ஏன்? கண்ணம்மா
  கண்ணம்மா அதைப் பாத்து அவர் தயங்குவதேன் சொல்லம்மா

  கதைக போட்டு விக்க விட்டு பலனெடுக்கும் நாளையிலே
  வந்ததெல்லாம் பதுக்கொருவன் வாங்கிப் போவதும் ஏன்
  கதைக போட்டு விக்க விட்டு பலனெடுக்கும் நாளையிலே
  வந்ததெல்லாம் பதுக்கொருவன் வாங்கிப் போவதும் ஏன் ஏன் கண்ணம்மா
  கண்ணம்மா கதையை புடிச்சவனும் தவிப்பதும் ஏன் சொல்லம்மா
  கதையை புடிச்சவனும் தவிப்பதும் ஏன் சொல்லம்மா

  நன்னானே நானே நானே நானேனன்னானே
  நன்னானே நன்னானே நானேனன்னானே
  நன்னானே நானே நானே நானேனன்னானே
  நன்னானே நன்னானே நானேனன்னானே

  புத்தம்புதுசா பதப்படுத்தி பக்குவமா நூல்நூற்று
  விறுவிறுப்பா புத்தகம் நெய்தோம் கண்ணம்மா - இங்கு
  கந்தலதை கேட்பதேன் சொல்லம்மா
  புத்தம்புதுசா பதப்படுத்தி பக்குவமா நூல்நூற்று
  விறுவிறுப்பா புத்தகம் நெய்தோம் கண்ணம்மா - இங்கு
  கந்தலதை கேட்பதேன் சொல்லம்மா ஆ..
  காத்திருக்கும் புத்தம் புதுசு கிட்டங்கிய நிறைக்கையிலே
  நேத்து வந்த கார்சனுக்கே மீண்டும்மாலை போடுவதேன்
  காத்திருக்கும் புத்தம் புதுசு கிட்டங்கிய நிறைக்கையிலே
  நேத்து வந்த கார்சனுக்கே மீண்டும்மாலை போடுவதேன்
  கண்ணம்மா கண்ணம்மா அவன்
  மீண்டும்வர துடிப்பதும் ஏன் சொல்லம்மா

  நன்னானே நானே நானே நானேனன்னானே
  நன்னானே நன்னானே நானேனன்னானே
  நன்னானே நானே நானே நானேனன்னானே
  நன்னானே நன்னானே நானேனன்னானே

  பழமையில் இளமையியும் விற்பனையும் இவ்வுலகில் இருப்பதுதான்
  இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா
  பழமையில் இளமையியும் விற்பனையும் இவ்வுலகில் இருப்பதுதான்
  இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா - இதை
  விசயனுக்கு நீ எடுத்து சொல்லம்மா கண்ணம்மா
  விசயனுக்கு நீ எடுத்து சொல்லம்மா

  வெளிநாட்ல காமிக்ஸ் வர அதிலாசிரியர் ஸ்மர்ஃப் பிடிக்க
  காத்திருந்த சுஸ்கி அதை விஞ்சிக்கொண்டு போவதும் ஏன்?
  வெளிநாட்ல காமிக்ஸ் வர அதிலாசிரியர் ஸ்மர்ஃப் பிடிக்க
  காத்திருந்த சுஸ்கி அதை விஞ்சிக்கொண்டு போவதும் ஏன்? கண்ணம்மா
  கண்ணம்மா அதைப் பாத்து அவர் தயங்குவதேன் சொல்லம்மா

  நன்னானே நானே நானே நானேனன்னானே
  நன்னானே நன்னானே நானேனன்னானே
  கண்ணம்மா.. சொல்லம்மா.. கண்ணம்மா சொல்லம்மா
  (நன்னானே நானே நானே நானேனன்னானே
  நன்னானே நன்னானே நானேனன்னானே)

  ReplyDelete
 70. @Editor Sir..😍😘

  "அலிபாபா கதைகள்" வண்ணத்தில, குண்டுபுக்கா, தனிதடத்துல கொண்டு வாங்க சார்...😍👍👌🙏

  ReplyDelete
  Replies
  1. மொத்தமே மூணே கதைகள் தான் சார் தொடரில் !

   Delete
  2. அலிபாபா மொத்தம் 4 கதைகள் சார்.
   1) மாயத்தீவில் அலிபாபா.
   2) சொர்க்கத்தின் சாவி.
   3) உலகம் சுற்றும் அலிபாபா.
   4)வெள்ளைப்பிசாசு.

   Delete
 71. அலிபாபா வேண்டும் ஆனால் இந்த விலையில் வேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. Sir...please bring Alibaba back...in one single Digest...All 4 stories...in pre booking...we are ready to buy...

   Delete
 72. இந்த மாதம் வாசிப்பில் முதலில் கையில் எடுத்தது புது வரவான நெவாடா" கதை மெதுவாக போனாலும் படிக்க நன்றாக இருந்தது - அடர் வண்ணம்+இருட்டில் தொடரும் கதை மட்டுமே மைனஸ் மற்றபடி ஓகே


  அடுத்த புது வரவான ஜெரி ட்ரேக்
  அல்லது மிஸ்டர் நோ
  அமேசானில் அதகளம்.......
  தெளிவான சித்திரங்களில். அழகான மொழிபெயர்ப்பில்.
  வசீகரிக்கும் இதழ் .எதிர்ப்பார்ப்பு களை பூர்த்தி செய்யும் கதை சூப்பர் 💫💫💪👌

  அடுத்த இதழ் வாசிப்பில் தோர்கல் 🥰

  ReplyDelete
 73. அலிபாபா படித்ததில்லை
  வந்தாலும் ஓகே, வரலினாலும் ஓகே

  மெபிஸ்டோ, எப்பவாச்சும் வந்தா ஓகே

  ReplyDelete
 74. ரிப் கிர்பி இந்த தடவை சின்ன சைஸ்
  பிடிக்காது என அபிப்பிராயம் கொண்டேன்
  கையில் ஏந்தும்போது பிடித்து போனது
  இந்த மாத புத்தகத்தங்களை ஆன்லைனில் ஆர்டர் போட்டு வாங்கியாச்சு

  தோர்கல் படிக்க வெயிட்டிங்

  தற்போது ரிப் கிர்பி தான் பர்ஸ்ட்

  ReplyDelete
 75. இந்த காபி பேஸ்ட்டை கண்டுபிடிச்சவக்ன மட்டும் பார்க்கணும் போலவே இருக்கு. இங்க ஒரு நூறு பேர் கொல வெறியில் தேடிக்கிட்டு இருக்கோம்சார் பார்த்தா ரகசியமா சிக்னல் குடுங்க

  ReplyDelete
 76. இருந்தாலும்கவிஞரின் விடாமுயற்சியை பாராட்டியே ஆக வேண்டும்சார்.கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 77. சார் நெவடா கதை எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை. படித்து முடிப்பதற்கே இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.

  ReplyDelete
 78. அலிபாபாவின் மூன்று கதைகளையும் ஒரே கலெக்டர் எடிசனாக முன்பதிவுக்கு என்று வெளியிடலாம் ஆசிரியர் சார்! கார்சனின் கடந்த காலத்தில் ஒரு வசனம் வரும்... "நல்ல நட்பு தங்கத்தை விட மேலானது" என்று! அதே போல் தான் நல்ல காமிக்ஸ் என்பது விலைமதிப்பு அற்றது... மேலும், இன்று நமது பழைய லயன் முத்து காமிக்ஸ்கள் விற்பனை குழுக்களில் விற்பனையாவதை விட நீங்கள் வெளியிடும் விலை எங்களுக்கு குறைவே!


  ReplyDelete
  Replies
  1. அலிபாபாவின் மூன்று கதைகளையும் ஒரே கலெக்டர் எடிசனாக முன்பதிவுக்கு என்று வெளியிடலாம் ஆசிரியர் சார்

   ###₹

   வழிமொழிகிறேன்

   Delete
  2. ஆம்!
   அலிபாபா!
   மூன்று கதைகள் !
   முன்பதிவில் மட்டும்!
   வரும் டிசம்பரில்
   வெளிவந்தால் போதும் 💪💪

   Delete
 79. தோர்கல் :
  நீல நிற மரணத்தின் சுவடை ஒழிக்க தோர்கலின் பரபரப்பின் உச்சம் நம்மையும் பதட்டத்தில் ஆழ்த்துகிறது...
  பாவம் தோர்கலின் சோதனைகளுக்கு முடிவே இல்லையா,ஏனுங்க கதாசிரியர் வான்ஹாம் அவர்களே பாவங்க தோர்கல் எப்ப பார்த்தாலும் ஒரு பிரச்சனையில் போய் மாட்டிக்கிறாரு,இவரு மாட்டறது மட்டுமா ஆரிஸியா,ஜோலன்,ஓநாய்க் குட்டி எல்லாத்தையும் வம்பில் இழுத்து விட்டுடறாரு...
  பாவங்க அவங்க எல்லாம், இனிமேல் வரும் சாகஸத்திலாவது,அட ஒரு சாகஸத்திலாவது அவங்களை நிம்மதியா இருக்க விடுங்க...
  நம்ம மைண்ட் வாய்ஸ் காண்டார்க்கிற்கும் கேட்டுடுச்சி போல,
  "இவனும் இவன் குடும்பத்தினரும்,கடந்த 25 வருடங்களாக அனுபவித்த துயரங்கள் சொல்லவொண்ணாத சோகக் கதை "
  -வில்லனே சொல்றாரு...
  முதல் பாகத்தில் ஆர்மெனோஸின் கண்டுபிடிப்பான பறக்கும் இறக்கை கண்டுபிடிப்பும்,ஜார்காஜ் மற்றும் ஜாஜ்கார் சுவராஸ்ய முடிச்சுகள்...
  மர்ம சாம்ராஜ்யமும் விறுவிறுப்பிற்கு குறைச்சல் இல்லை,பறக்கும் பெல்ட்களும் புதிர் வளாகமும்,வித்தியாசமான பிஸ்டலும்,நினைவுப் பேழைகளை திறக்கும் கண்டுபிடிப்புகளும்,பறக்கும் ஷட்டில்,விண்கலங்கள் என வியப்பிற்கு பஞ்சமில்லை...
  சந்தேகம் என்னன்னா,இவர்கள் மட்டும் டெக்னாலஜியில் ரொம்ப அப்டேட்டா இருக்கற மாதிரி வருகிறார்களே அது ஏன் ?!
  தோர்கல் மட்டும் இன்னும் பழைய முறைகளில் மட்டுமே போரிட்டு வருவது ஏன் ?!

  ReplyDelete
  Replies
  1. இவனும் இவன் குடும்பத்தினரும்,கடந்த 25 வருடங்களாக அனுபவித்த துயரங்கள் சொல்லவொண்ணாத சோகக் கதை "
   -வில்லனே சொல்றாரு

   ####

   ஆம் ..இதனை வாசிக்கும் பொழுது ஓ...இவர் மிக நல்ல மனிதர் போல..தோர்கலை காப்பாற்ற வருகிறார்..தோர்கல் தான் புரியாமல் இருக்கிறார் என நினைத்தால் வில்லனே அவர்தான்...:-))

   Delete
  2. Arivarasu @ Ravi

   */ஸ்பாய்லர் அலர்ட்/*
   அவங்க அட்லாண்டியன் ரேஸ். பன்னிரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாடியே இந்த பூமியை விட்டு கிளம்பி விண்வெளியில் செட்டிலானவங்க. ஜார்கோஸ் டீம்க்கு அடுத்து கடைசியா அங்கிருந்து கிளம்பினவங்க. அதனால அவங்க டெக்னாலஜியில முன்னேறியிருப்பதில் வியப்பில்லைங்களே!

   தோர்கல் அதே ரேஸ்தான் என்றாலும் சாதாரண வைகிங் மக்களோட வாழ்ந்து வர்றவன். அவர்கள்கிட்ட அந்நாளில் இருந்த ஆயுதங்களே தோர்கல் பயன்படுத்த இயலும்.

   Delete
  3. இந்த சாகஸத்திலும் வழக்கம் போல எந்த பேனலிலாவது முன் தொடர்புகளுக்கான புள்ளியை கனெக்ட் செய்திருப்பாரே கதாசிரியர், அது எங்கேன்னு முதல் வாசிப்பில் எனக்குத் தெரியலை,ஆனால் வாசிப்பினூடே அந்தக் கேள்வி என்னை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது...
   மீண்டுமொரு மீள் வாசிப்பில் அந்தப் பொறியைத் தேடனும்...

   Delete
 80. //உயிரைக் கொடுத்து உருவாக்கிய "பிஸ்டலுக்குப் பிரியாவிடை"களும், அர்ஸ் மேக்னாக்களும், "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்களும்" கையிருப்பில் கணிசமாய்க் கிடக்க, "உயிரைத் தேடி" ஜிலோவென்று விற்று, சொற்ப கையிருப்பே இருப்பதன் காரணமென்ன ?//

  வேணும்னா பாருங்க சார் அலிபாபா சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும்
  × ஏண்ணா நம்ம மக்களுக்கு ரேர் பீஸ் மேல ஒரு கண்ணு ×

  ReplyDelete
 81. மிஸ்டர் நோ,
  அமேசான் காடுகளும்,பைலட் ஜெரி ட்ரேக்கின் சுறுசுறுப்பும் விறுவிறுப்பான கமர்சியல் எண்டர்டெயினராக மாற்றி விட்டது,சின்னதொரு சம்பவத்தை மையப் புள்ளியாக வைத்து பரபரன்னு கதை பின்னியிருக்காங்க...
  அடுத்தடுத்த சாகஸங்களில் பைலட் நம் மனதில் வலுவா இடம் பிடிப்பார்னு தோணுது...

  ReplyDelete
 82. நட்சத்திர வேட்டை,
  நெவாடா ஓகே இரகம்,இறுதியா சின்னதொரு ட்விஸ்ட் நல்லாவே இருந்திச்சி,
  "ஒரு மனுஷன் சூப்பர்மேனாக உருமாறுவது இப்படித்தான்"...
  போக போக பிடிக்கும்னு நினைக்கிறேன்...
  ஓவியங்கள் டல்லான எஃபெக்ட் மட்டும் கொஞ்சம் உறுத்தலா இருந்தது...

  ReplyDelete
 83. ரிப்கெர்பியின் கிளியோடு கூட்டணி மற்றும் தீங்கும் பகையும் பிறர் தர வாரா .. என இரண்டு சாகஸங்களை மட்டும் முதலில் படித்தேன்..இந்த ஆர்ப்பாட்டம் இல்லாத நாயகர் முதல் தொகுப்பை போலவே மிகவும் ரசிக்க வைக்கிறார் ...அதே சமயம் ஒரே மூச்சில் ரிப்கெர்பியை படிப்பதற்கு முன் நம்ம தோர்கல் காத்து கொண்டிருக்கிறாரே ..மாறுதலுக்கு இடையில் அவரை சந்தித்து விட்டு மீண்டும் ஜென்டில்மேனை சந்திக்கலாமே என யோசனை செய்து மரணத்தின் நிறம் நீலத்தை எடுத்தேன்..

  தொகுப்பாக இருப்பதால் ஒரே கதை என நினைத்தேன்..ஆனால் தோர்கலின் அழகான இரண்டு கதைகள்...மரணத்தின் நிறம் நீலமும் சரி..மர்ம சாம்ராஜ்யமும் சரி ஒரே மூச்சில் படிக்க வைத்தன...இரண்டாம் கதையில் தோர்கலின் முழு வரலாறே ஒரே பக்கத்தில் தெரிவிப்பது இதுவரை தோர்கலை அறியாதவர்களுக்கு தெரிய ஓர் அழகான வாய்ப்பும் கூட...கதையின் ஓட்டமும் விறுவிறுப்பாக அமைய சித்திரங்களோ நம்மை தோர்கலின் உலகில் நம்மை அழகாக நுழைய வைக்கிறது...அவ்வளவு அழகான சித்திரங்கள்...மொத்தத்தில் தோர்கல் மீண்டும் ஓர் அட்டகாச படைப்பு...

  ReplyDelete
  Replies
  1. 67 ஆம் பக்க கடைசி பேனலில் மூவரின் நினைவுப் பேழைகளை தூண்டி விட காண்டார்க் கூறியவுடன் 68 மற்றும் 69 ஆம் பக்கத்தில் ஒட்டு மொத்த கேரக்டர்களும் கூட்டுக் கலவையான படங்களாக காட்சிப்படுத்தப்பட்டது நல்ல உத்தி...

   Delete
 84. /// கடைசீல ஓடிப் போய் ம*ராபோச்சுன்னு மறைஞ்சு போய்ட்டானுங்க///

  😝😝😝😝

  ஏனுங்க காமிக் லவ்வரே.. வில்லன்னா கடைசீல மண்ணையப் போட்டே ஆகணுமா உங்களுக்கு?!!😝

  நீங்க எல்லாம் ரொம்ப நல்லா வருவீங்க அய்யா.

  என்னா கொலை வெறி...


  ReplyDelete
 85. "மெபிஸ்டோ"

  அலிபாபா தொகுப்பு, கிராஃபிக் நாவல், ஜேம்ஸ் பாண்ட் 2.0, நிக்கட்டும் கவனிக்கட்டும் வேட்டையாட இரண்டாவது ரவுண்ட் கூட போங்க.

  எங்களுக்கு "மெபிஸ்டோ" ஆடலும் பாடலோட
  அப்ப அப்ப வெளியிட்டே ஆகணும்..

  ReplyDelete
 86. // அலி பாபா //

  No. Not interested sir. Sorry friends .

  ReplyDelete
  Replies
  1. If you are planning to give collectors edition with all four stories in suski wiski size I am ready for that 😁

   Delete
 87. அலிபாபா! தனிப்பட்ட முறையில் வேண்டாம் என்பதே பதில். ஆயினும் முன்பதிவு அறிவிக்கப்பட்டால் இரண்டு பிரதிகள் வாங்கிவிடுவேன்.
  படித்துப் பார்க்கவும் செய்வேன்.
  இந்த விலையில் அதே இடத்தில் வேறு புது இதழ் வரலாமே எனச் சொல்லமுயன்றால் இது இல்லையேல் அவ்விடத்தில் வேறெதுவும் இருக்காது என எடிட்டர் சார் பதிலளிப்பார். அவரது பொருளாதாரச் சிக்கல்கள் சார்ந்த நியாயமான பதில் அது என்பதை அறிவேன். ஒரு மைல்கல் தருணம் என்பதாலேயே மாடஸ்டி இதழ் கேட்கப்பட்டது. மற்றபடி புதுமை நாயகர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதில் மாடஸ்டியும் விதிவிலக்கல்ல. நான் அறிந்தவரை புதுமை நாயகர்களுக்கு போதுமான இடங்களை எடிட்டர் சார் வழங்கியே வருகிறார். விற்பனையில் அவர்கள் வெற்றிக் கொடி நாட்டுவது தவறிப் போனால் எடிட்டர் சார் மீது குறை சொல்ல இயலாது. தனிப்பட்ட முறையில் பழைய காலத்தின் நிகழ்வுகள் , நினைவுகள் ஆகியவற்றிலிருந்து விலகி நிகழ்காலத்தோடு இயைந்து வாழ விரும்புகிறேன். இனிமையாகவே இருந்த போதும் கடந்த காலத்தில் நினைவுகள் தேங்கி நிற்பதை உள்ளம் ஏற்பதில்லை.

  ஆனால் எடிட்டர் சார் பழைய பதிப்புகளை மீள்வெளியீடு செய்கையில் அவை அவரின் பொருளாதார நிலையை மேம்படுத்துமாயின் பங்களிப்பு செய்ய தயங்காததன் காரணம் பொதுநலம் கருதி மட்டுமின்றி எடிட்டர் சார் வலுவாக இருந்தால்தான் புது இதழ்கள் நமக்கு கிட்டும் என்ற சுயநலமுமே.

  In nutshell alibaba is not welcome. If he does come he will be embraced without
  any grunt.

  ReplyDelete
  Replies
  1. // எடிட்டர் சார் வலுவாக இருந்தால்தான் புது இதழ்கள் நமக்கு கிட்டும் என்ற சுயநலமுமே // 100%true.

   Delete
 88. Rip Kirby special stories

  As far as I had read the stories, i guess the first story kiliyodu koottani is written by our Mr.J. hope I am right?

  ReplyDelete
 89. Facebook ல் எழுதியது இங்கும்.

  ரிப் கிர்பி ஸ்பெஷல் 2
  முத்து காமிக்ஸ் - 479
  கிளியோடு கூட்டணி! (கதை 1)

  பணம் கொண்டு செல்லும் கவச மோட்டார் வண்டி ஒன்றை கொள்ளையடிக்க மால்டோ என்பவனால் திட்டம் தீட்டப் படுகிறது. அந்த திட்டங்கள் அனைத்தையும் மால்டோவின் மனைவி மாட்ஜ் வளர்க்கும் ஒரு கிளி ஒன்று பார்த்துக் கொண்டிருக்கிறது. அது ஒரு சாதாரணக் கிளி அல்ல, பேர் சொல்லும் பிள்ளை போல பேசுவதை அப்படியே அட்சரம் பிசகாமல் சொல்லக்கூடிய பேசும் கிளி.

  மால்டோ போட்ட திட்டப்படி வெற்றிகரமாக கொள்ளை அரங்கேறி மில்லியன் கணக்கான பணம் அவனது வீட்டிற்க்கு வந்து சேருகிறது. கொள்ளையர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் அந்த வேளையில்... அதுவரை “பியரிக்கு ஊறுகாய் வேண்டும் உச்ச்” என்றே எப்போதும் உச்சரிக்கும் கிளி இப்போது... “மால்டோ கவச மோட்டார் வண்டியை கொள்ளையடித்தார்... உச்ச்” என்று சொல்ல ஆரம்பிக்கிறது. கிளி இவ்வாறு உண்மையை சொல்வது தமக்கு விபரீதத்தில் முடிந்து விடும் என்று அந்த கிளியை கொல்லப் பாய்கிறான் மால்டோ.

  ஆனால் அந்தக் கிளியோ அவன் கைகளுக்கு அகப்படாமல் வேறொரு இடத்தில் சென்று தஞ்சமைடகிறது. ஆம், நம் தோழர்கள் ரிப் கிர்பி, டெஸ்மாண்ட் வசிக்கும் அபார்ட்மெண்டுக்கு போய் விடுகிறது. கிளியை கொல்ல பின்தொடர்ந்து வந்த மால்டோவுக்கு இது பெரும் அதிர்ச்சி ஆகிறது. தொடர்ந்து அந்தக் கிளியை கொல்ல அவன் போடும் திட்டமனைத்தையும் அந்தக் கிளி நொறுக்கி தள்ளி அவனையும் சட்டத்தின் பிடியில் நிறுத்துகிறது.

  *****

  ஒரு கொள்ளை கும்பல், நியூயார்க்கின் பிரசித்திபெற்ற பிரைவேட் டிடெக்டிவ் ரிப் கிர்பி, டெஸ்மாண்ட் மற்றும் ஒரு பேசும் கிளி என 42 பக்கங்களில் நகரும் மிகவும் அழகிய கதை இது.
  ஒரிஜினலாக Perils of Pierre எனும் தலைப்பில் 1971-03-22 / 1971-06-26 தேதிகளில் நாளிதழில் வெளியான ரிப் கிர்பி வரிசையின் 87 வது கதை இது. கதையை Fred Dickenson எழுதியுள்ளார் சித்திரம் John Prentice அவர்கள்.
  கதை வெளியாகி சுமார் 52 ஆண்டுகள் ஆகியிருப்பினும் வாசிக்கும் இளைய தலைமுறையினர் மனதை கொள்ளை கொள்ளும் வண்ணம் மிகவும் அழகிய மொழிபெயர்ப்பை நமது முத்து காமிக்ஸ் வழங்கியுள்ளது இங்கு பாராட்டத்தக்கது.
  மற்றும் நல்ல அச்சுதரத்துடனும் அருமையான பைண்டிங்குடனும் ரிப் கிர்பியின் எட்டு கிளாசிக் கதைகளுடன் வெளியாகியுள்ளது கூடுதல் சிறப்பு.

  ReplyDelete
 90. கேள்வி 2

  பழைய கதைகளை மீள்வாசிப்பு செய்வதில்லை எனும்போது அவற்றை ரசிப்பது என்பதெல்லாம் இயலாத காரியம்.

  கா.க.காலமும் அவ்விதழின் அழகியலை ரசித்ததோடு சரி.

  மி.மரணம், ர.படலம் ஆகியவை ஆகச் சிறந்த இதழ்களின் வரிசையில் இடம் பெற்றிருக்கலாம். அவற்றிலேயே மனம் உழல்வது சரியல்ல. பழம்பெருமைகள் பேசிக் கிடப்பதில் வாசகனாய் பலனேதுமில்லை..

  சிறப்பு வாய்ந்த இதழ்கள் மீள்பதிப்பாய் வருகையில் அதை வாங்க வாசக மனம் தயங்குவதில்லை. ரசிக மனம் மறுபடி வாசிக்க ஒப்புக் கொள்வதில்லை.

  ReplyDelete
  Replies
  1. But some readers like me who missed out reading stories of yesteryears depend upon the reprints so that we also cheish those stories.

   Delete
 91. நெவாடா

  இம்மாதம் வெளிவந்த புது நாயகர் "நெவாடா" வாசித்தேன். வாசிக்க சிறிதும் சுவாரஸ்யம் இல்லாத கதை.. மொக்கையோ மொக்கையான கதை. கதையின் வசனங்களும் அடுத்த மொக்கை பார்ட் 2. இவற்றை எல்லாத்தையும் விட பெரிய மொக்கை சித்திரங்கள் தாம். படு டார்க்கான கலரிங் சேர்க்கையுடன் கூடுதலாக எரிச்சலூட்டுகிறது. இவ்வருடத்தில் மைக் ஹேமருக்கு பிற்பாடு வந்துள்ள படு மொக்கை கதை இது. இவ்வருடத்தில் வந்திருந்த இன்னுமொரு அறிமுக நாயகர் I.R.S எவ்வளவு அட்டகாசமாக இருந்தது. அந்தளவிற்கு இந்த நெவாடா ஸ்கோர் செய்யவில்லை. ஆகையால்.. நெ"வாடா " இல்லை நெ"போடா" என்றுதான் சொல்ல வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. It may be because the story revolves in night time. I Will wait for one or two more stories to form a opinion whether the stories are good or bad. Hope the plot thickens and we get more answers.

   Delete
 92. Rip Kirby

  Finished the whole book
  Found it difficult to read after three stories but somehow made my mind and sat down to finish the book. And voila except the first story rest of the stories are refreshing

  And the story kasilla kodeeswaran reminds me of a tamil movie acted by Trisha and vivek. I think the movie name is laysa laysa.

  8.5/10

  ReplyDelete
 93. இன்று

  கார்சனின் கடந்த காலம்

  338 பக்கங்கள் அருமையானதொரு week end வாசிப்பனுபவம்...! 8/10
  +
  சுஸ்கி விஸ்கி (கார்ட்டூன்களுக்கு பழையது புதியது என கால வரையறை கிடையாது) 9/10

  ReplyDelete
 94. இம்மாத உயிர்மை இதழில் காமிக்ஸ் வாசிப்பு குறித்து நீண்ட ஒரு நேர்காணல் கொடுத்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். வாயில் நுழையாத வெளிநாட்டு பெயர்களாக கூறியுள்ளார். இடையிடையே முத்து , லயன் , இரும்புக்கை மாயாவி குறித்தும், தான் சிவகாசிக்கு நேரடியாகச் சென்று காமிக்ஸ் வாங்கி வந்த நிகழ்வு குறித்தும் கூறியுள்ளார்.

  ReplyDelete
 95. தோர்கல் நேற்றே படித்து விட்டேன். என்ன சொல்ல எப்போதும் போல ஒரு அருமையான கதை. ப்ளூ பிளேக் ஆல் பாதிக்கப்பட்ட தான் குடும்பத்தை காக்க போராடும் தோர்கல். 5 நாட்களுக்குள் திரும்பி எப்படி வர முடியும் என்ற கேள்விக்கு கிடைத்த பதில் உண்மையாகவே மெய் சிலிர்க்க வைத்தது. அந்த கடைசி நேரப் பரபரப்பு நம்மையும் தொற்றிக் கொண்டது.

  எனது மதிப்பெண் 10/10.

  ReplyDelete
 96. அடுத்து மர்ம சாம்ராஜ்யம். வைகிங் பூமிக்கு திரும்ப ஆரிஸியா வால் வற்புறுத்தப் படும் தனது குழந்தைகளின் நலன் கருதி சம்மதிக்க அதற்குள் அவர்களை மறைந்து இருந்து கவனிக்கும் இருவர் அங்கே வந்து சேர. அட்லாண்டிஸ் கண்டத்தின் பிரஜையான தோர்கல் வைக்கிங்களை அடிமைகளாக்கும் திட்டத்திற்கு சம்மதிக்க மறுக்க பிறகு என்ன நடந்தது என்பது தான் கதை. கடைசி இரண்டு பக்கங்கள் மின்னல் வேகம். மனதை உருக்கும் முடிவு.

  எனது மதிப்பெண் 10/10

  ReplyDelete
 97. கடைசியாக படித்து கொண்டு இருப்பது ரிப் கிர்பி. இது வரை 4 கதைகள் படித்து விட்டேன். நான்கும் நான்கு நல் முத்துக்கள். இதை சொல்லியே ஆக வேண்டும் எடிட்டர் சார் இந்த மாத Show Stopper இந்த இதழ் தான். புத்தக உருவாக்கமும் சரி இடம் பெற்று இருந்த 8 கதைகளும் சரி.

  கதைகள் முழுவதும் இடம் பெற்று இருக்கும் அந்த ஃபீல் good factor ரொம்பவே நன்றாக உள்ளது.

  ஒவ்வொரு கதையிலும் வில்லனின் கூட்டாளியாக வரும் பெண்கள் எல்லாம் ரிப்பின் பக்கம் சாய்வது, நமக்கே அவர் மீது பொறாமை வர வைக்கிறது.

  இன்னும் காசில்லா கோடீஸ்வரன் எல்லாம் படிக்கவே இல்லை. அதற்கு முன்பே நான் கொடுக்கும் மதிப்பெண் 1000/10.

  ReplyDelete
 98. Dear Editor Sir....
  I finished reading long awaited Mr. No..last night...It was fantastic...storey line, Action, storey location, drawing every thing is awesome. Why have you delayed this much years to bring this storey and publish. Without any doubt you can bring Mr. No regularly as TeX. I enjoyed the boat chasing Action Sequence in Amazon river....it just reminded me of James bond movie "Live and let Die" and another movie " Six days Seven Nights". It gave very thrilling experience...and hope definitely would have satisfied most of the readers. So big thanks to you to bring such kind of wonderful stories and hope you will bring rest of all 370+ albums...regularly....Warm Welcome to Mr. No.!!!!
  Thanks.

  ReplyDelete
 99. மெபிஸ்டோ ஏன் இடம் பெற வேண்டும்?

  1924- ம் வருடம் .

  "ஏன் நீங்கள் எவரெஸ்ட் சிகரத்தின் மேல் ஏற விரும்புகிறீர்கள்?"

  "ஏனெனில் அது அங்கு இருக்கிறது.
  (BECAUSE IT'S THERE.)"

  சொன்னது ஜார்ஜ் மெலோரி. பிரிட்டிஷ் மலையேறும் நிபுணரான இவர் மூன்றாம் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சிக்கையில் இந்த கேள்வி எழுப்பப்பட்டபோது சொன்னது.

  டெக்ஸ் கதை வரிசைகளில் மெபிஸ்டோ ஏன் இடம் பெற வேண்டும்? என்ற கேள்விக்கும் உலகப் புகழ் பெற்ற இந்த பதிலையே சொல்லலாம்.

  BECAUSE HE IS THERE.

  டெக்ஸ் கதை வரிசையில் மெபிஸ்டோ ஒரு வித்தியாசமான பாத்திரம்

  கடைசியாக வந்திருக்கும் மீண்டு வந்த மாயன் டெக்ஸ் வரிசையில் மெபிஸ்டோ தோன்றுவது 10 & 11 - வது முறை.

  7 பாகங்கள் என வந்துள்ளதுஇத் தொடர் .

  1 # 738 டாக்டர் வேலேண்ட் அஸைலம்

  2.# 739 சான் பிரான்சிஸ்கோ மர்மங்கள்

  3.#740 பெட்லாம்

  4.# 741 சியாரா நெவாடா

  5.# 742 பத்மாவின் மீள்வருகை

  6.#743 அல்டார் பாலைவனம்

  7. # 744 மெபிஸ்டோவின் வெற்றி

  நண்பர் காமிக் லவர் ராகவனின் "என்னய்யா ஓடிப் போய்ட்டான் ?" ரக
  கேள்விகளுக்கெல்லாம் பதில் இருக்கிறது எஞ்சிய பாகங்களில்.

  நண்பர் குமார் சேலம் அவர்கள் குறிப்பிட்ட எல் மோரிஸ்கோ # 742-ல் வருகிறார்.

  இத்தொடரின் இறுதியில் மெபிஸ்டோ தோன்றுவது இதுவே இறுதிமுறை எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

  இந்த இறுதி தொடரில் வரும் பல பாத்திரங்கள் ஏற்கனவே மெபிஸ்டோ தோன்றிய கதைகளில் வந்தவையே.

  உண்மையில் 7-ம் முறை மெபிஸ்டோ தோன்றும் கதையில் அவன் மரணிக்கிறான். யமா தோன்றும் கதைகளில் பாதாள உலகில் இருக்கும் அவன் சிறிதளவு வந்தாலும் கணக்கிலடங்கா ரசிகர்களின் வேண்டுகோளை பூர்த்தி செய்ய பதிப்பகம் மனித உலகிற்கு மீண்டும் அவனைக் கொண்டு வந்தது.

  மெபிஸ்டோ முதலில் வந்ததிலிருந்து
  மீண்டு வந்த மாயன் வரை எல்லா கதைகளின் ஸினாப்ஸிஸ் படித்தேன்.தெளிவான கதையோட்டம் இருப்பதை உணர்ந்தேன்

  ஒரு நண்பர் - புன்னகை ஒளிர் - கேட்டிருந்தார். யமா ஏன் பாதாள உலகில் சிறைப்பட்டிருக்கிறான் என்பது போன்ற கேள்விகள்.

  அனைத்துக்கும் மெபிஸ்டோ வரும் கதைத் தொடரின் கதைச்சுருக்கங்களில் இருக்கின்றன.

  Avengers: Endgame - ஐ எடுத்துக் கொள்ளுங்கள். ரியாலிட்டி ஸ்டோனை வைத்து தானோஸ் நிகழ்த்தும் ஆல்டர்னேட் ரியாலிட்டி - மாயை நிகழ்வை ஏன் கேள்வி கேட்காமல் ஒப்புக்கொள்கிறோம்?
  தானோஸை மிஞ்சும் அளவு டெலிகைனட்டிக் ஜாலங்களை எபோனி மௌ நிகழ்த்துகையில் உள்ளம் அதனை ஏன் ஏற்கிறது?

  கன்ஸிஸ்டன்ட் கதைத் தொடர்ச்சி ஒரு மிகப் பெரிய காரணம். நவீன விஞ்ஞானத்தின் மூலம் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் IRONMAN ஒருபுறம். Infinity stones என அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அடக்கிய gauntlet - ஐ அணிந்த தானோஸ் மறுபுறம்.

  இரண்டையும் மனம் ஏற்றுக் கொள்ள காரணம்தான் என்ன?

  ReplyDelete
  Replies
  1. மெபிஸ்டோ ஒரு யதார்த்த வன்மேற்கு நாயகனாக தோன்றி வருகையில் மெபிஸ்டோ போன்ற விச்த்திர ஜாலங்கள் புரியும் எதிர்மறை சக்தியின் வருகை ஒரு curious நிகழ்வே என்றபோதிலும் ஆரம்பம் முதல் முடிவு வரை வரிசைக் கிரமமாக வெளியிட்டிருப்பின் சங்கிலிக் கோர்வை சம்பவங்களின் தாக்கம் வாசகர்களின் மத்தியில் மெபிஸ்டோ என்ற பாத்திரத்தின் மேல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பினை ஏற்படுத்தியிருக்கலாம்.

   ஒட்டுமொத்த ஸினாப்ஸிஸ் படித்தே மெபிஸ்டோ மேல் ஒரு வாத்சல்யம் ஏற்படக் கூடுமாயின் கதைகளை முழுவதும் படித்திருந்தால் அது அதிகரித்திருக்குமோ என்னவோ?

   ஆனால் வேய்லாண்ட் அஸைலம் கதையே இறுதி. இனி மெபிஸ்டோ வரப்போவதில்லை எனப் போட்டிருப்பது உண்மை. ஏனெனில் கதையின் இறுதியில் #744 தலைப்புக்கு மாறாக.....வேண்டாம் அதன் எஞ்சிய பாகங்களை எடிட்டர் சார் வெளியிடக் கூடும்.

   சில சமயங்களில் we can put dumbness over our reasoning senses.

   Or

   As the famous saying goes

   " its okay to not to be okay"

   Delete
 100. //*ஒரு லியனார்டோ தாத்தாவின் கார்ட்டூன் இதழும் சரி, நீலப் பொடியர்களின் ரவுசுகளும் சரி, கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பின்னேயும் கையிருப்பில் இருக்க, அதே கார்ட்டூன் ஜானரின் பிரதிநிதிகளான சுஸ்கி & விஸ்கி 'பச்சக்'கென்று விற்றுக் காலியாவதன் மாயம் தான் என்ன ?

  ***உயிரைக் கொடுத்து உருவாக்கிய "பிஸ்டலுக்குப் பிரியாவிடை"களும், அர்ஸ் மேக்னாக்களும், "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்களும்" கையிருப்பில் கணிசமாய்க் கிடக்க, "உயிரைத் தேடி" ஜிலோவென்று விற்று, சொற்ப கையிருப்பே இருப்பதன் காரணமென்ன ?

  ***Fantasy ஜானரில் தோர்கல் மிளிர, நாம் மங்கு மங்கென்று குட்டிக்கரணங்கள் அடிக்கும் அதே பொழுதினில், ஸ்பைடராரும், மாயாவிகாருவும் BIG BOYS ஸ்பெஷலில் ஜாலியாக ஆஜராகி அதகள வெற்றி காணும் ஜாலம் தான் what ?//

  ரெகுலர் தடத்தில் இல்லாமல் முன்பதிவிற்கு மட்டும் அதுவும் limited print, அதனால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது, Miss பண்ணி விடாதீர்கள், பிறகு கிடைக்காது, இது முற்றிலும் collectors edition, என்று கிளாசிக் பார்ட்டிகளுக்கு அறிவிப்பது போல், நீஙகள் விற்காது என ஒதுக்கி வைத்திருக்கும் கிராபிக் நாவல்களுக்கும், சான்ஸ் கிடைக்காத நாயகர்களுக்கும் அதே அறிவிப்போடு ஒரு முன்பதிவை போட்டு பாருங்கள், ஒரு புத்தகமும் இருக்காது விற்று தீர்ந்து விடும். இது தான் உண்மை. நான் பல முறை வலியுறுத்துவதும் இதை தான்.

  உதாரணத்திற்கு கமான்சே, மேஜிக் வின்ட், மந்திரி, ரின் டின், கிராபிக் நாவல், etc., இவர்களில் ஒருவர்/அல்லது கலவையாக ஒருமுறை முயற்சித்து பாருங்கள். பிறகு தானே உண்மை நிலவரம் புரியும். மொத்தமாக போனியாகதவர்கள், குறைந்த பிரிண்டில் சாதிக்க வாய்ப்புண்டு. வாய்ப்பு கொடுத்து பார்க்காமலே முடிவு செய்ய வேண்டாமே.

  ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள் சார், product தரத்தில் மிளிர வேண்டும். உதாரணம்: ஹார்ட் பவுண்ட், maxi size என நார்மலாக வரும் கதைகளை விட வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும். அவ்வளவே.

  ஏன் இவ்வளவு உறுதியாக சொல்கிறேன் என்றால், இங்கே தரம் தான் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. கிளாசிக் நாயகர்களை உதாரணம், ரிப்கிர்பி கதைகளை சின்ன விலையில் நார்மல் புத்தகமாக வழக்கமான பிரிண்ட் ரன்னில் விட்டால் இப்படி விற்பனையில் சாதிக்குமா. ஆகவே புத்தக தரமும், எங்கே ஸ்டாக் காலியாகி விடுமோ என்ற பதற்றமுமே முக்கிய காரணம்.

  ஆகவே தங்களிடம் ஒரு அதிரடி முன் பதிவை அதற்கென்று ஒரு வாகான தமிழக தருணத்தில் எதிர் பார்க்கிறேன்.

  நன்றி

  ReplyDelete
 101. மெபிஸ்டோ - வேண்டாம் சார். மெபிஸ்டோ நினைத்தால் டெக்ஸை சுலபமாக கொல்ல முடியும். ஆனால் கொல்ல மாட்டான். டெக்ஸ் என்ன முயற்சித்தாலும் மெபிஸ்டோவை ஒன்றும் செய்ய முடியாது. தப்பித்து விடுவான். பிறகு இதையே எத்தனை முறை படிப்பது.

  அலிபாபா - நான் சற்று மேலே கூறி இருப்பது தான். முன்பதிவு, குறைந்த பிரிண்ட் ரன். விற்று விடும். ஆனால் விலை இரு மடங்காக இருப்பது ஆரோக்யமானதல்ல.

  இதே காரணத்திற்காக (ராயல்டி கட்டணம் அதிகம்) நிறுத்தி வைத்திருக்கும் ஜேம்ஸ் பாண்ட் 2.0 க்கும் ஒரு சான்ஸ் கொடுப்பது தானே நியாயம் சார். இரண்டு வருடங்களாக மனிதன் waiting.

  ReplyDelete