நண்பர்களே,
வணக்கம். சுகவீனங்களுடனான நெடியதொரு போராட்டத்தினில் தோல்வியை ஒத்துக் கொண்டு அம்மா இயற்க்கையோடு ஒன்றாகிப் போய் விட்டார்கள் ! கடந்த வியாழனன்று நள்ளிரவுக்கு மேல் எதிர்பாரா நோவுகள் சுனாமியாய் தாக்கிட, அன்று தப்பிய நினைவு இறுதி வரைக்கும் திரும்பவேயில்லை ! ஏதேதோ முயற்சித்தும் இனி செய்வதற்கு ஏதுமில்லை என டாக்டர்களும் திங்களன்று கைவிரித்திட, வீட்டுக்கு அழைத்துச் சென்ற பத்தாவது நிமிடத்தில் அம்மாவின் மூச்சு அடங்கிப் போனது ! கண்ணெதிரே ஒரு ஜீவன் விடைபெறுவதை பார்க்கும் கொடுமையோடு துவங்கிய இந்த வாரம், சடங்குகள், சம்பிரதாயங்கள் என தொடர்ந்த தினங்களில் நீண்டு வந்துள்ளது ! And சகல காரியங்களும் முடிந்த கையோடு இங்கே இப்போது ஆஜராகியுள்ளேன் !
மரணம் இயற்கையின் நியதியே என்றாலும், அதனை மிக நெருக்கத்திலிருந்து பார்ப்பது ஒரு மிரளச் செய்யும் அனுபவமாய் இருப்பதை மறுக்க மாட்டேன் ! கடந்த ஐந்தாண்டுகளாகவே ஊர் ஊராய், ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியாய் அலைவதே அம்மாவின் விதி என்றாகிப் போயிருந்தது. அந்த 5 ஆண்டுகளில் 9 ஆபரேஷன்கள் என்ற ரணகளங்கள் அரங்கேறிய பொழுதுகளில் - 'இந்த வேதனைக்கு ஒரு நிரந்தர விடுதலை கிட்டினால் தேவலாமே ?' என நினைக்கத் தோன்றியது நிஜமே ! ஆனால் அம்மாவின் விரல் தொடும் அண்மையில் அந்த விடுதலை நின்ற போது, அதனை வரவேற்க எங்களுக்குத் திராணியே இருக்கவில்லை தான் ! But அனுமதி கேட்டுப் பெற்றுவிட்டெல்லாம் காலன் தனது கடமைகளைச் செய்வதில்லையே ?! வந்தார் & 2 தினங்களுக்கு முன்வரையிலும் ரத்தமும், சன்னமான சதையுமாய் இருந்ததொரு ஜீவனை இன்று போட்டோவில் புன்சிரிக்கும் நினைவாய் உருமாற்றிவிட்டு தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டார் ! கடைசி காலத்தில் நிறைய கஷ்டப்பட்டு விட்டார்கள் - இனியாவது இன்னல்களின்றி நிம்மதியாய் துயில்வார்கள் என்ற பிரார்த்தனைகளுடன் வழியனுப்பியுள்ளோம் ! புனித மனிடோ காத்தருள்வாராக !
October புக்ஸ் வரும் வாரத்தில் பெரிய தாமதங்களின்றிப் புறப்பட்டு விடும் ! கொஞ்சமாய்ப் பொறுத்துக் கொள்வீர்களென்ற நம்பிக்கையுடன் கிளம்புகிறேன் all ! God be with us all !
REST IN PEACE
ReplyDeleteRIP 💐😞
ReplyDeleteமிகவும் வருந்துகிறேன் sir...😔
ReplyDeleteRIP Amma
ReplyDeleteஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
ReplyDeleteஆண்டவன் இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பினை தாங்கிக் கொள்ள தங்களுக்கும் & தங்கள் குடும்பத்தினருக்கும் மன வலிமையை தருவாறாக...
ReplyDeleteபுத்தகங்கள் பொறுமையாகவே வரட்டும் சார்.
ReplyDeleteஎங்கப் போயிடப் போகுது.
அம்மாவின் ஆத்மா சாந்தியடையவும், உங்களுக்கும், சீனியர் எடிட்டர் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இந்த துயரமான தருணத்தை கடக்க உதவ எல்லாம் வல்ல இறைவனிடம
ReplyDeleteபிரார்த்தனைகள்.
ஆழ்ந்த இரங்கல்கள் சார்
ReplyDeleteRip .. Take ur time sir .. No need to rush books ..
ReplyDeleteஎதிர்பாராத துன்ப செய்தி சார்.அன்னையின் ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாறட்டும்.ஆழ்ந்த இரங்கல்.கண்ணீர் அஞ்சலி. ஓம்ஷாந்தி.
ReplyDeletemanam varunthugirathu sir..RIP
ReplyDeleteஅம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் Sir
ReplyDeleteRest in peace அம்மா..😞😞😞
ReplyDeleteதுயரமான செய்தி எடிட்டர் சார் 😔😔
ReplyDeleteகடந்த சில வருடங்களாக உடல் உபாதைகளால் அம்மா நிறையவே சிரமப்பட்டுவிட்டார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. வலிகளோடு கூடிய மருத்துவமனைப் பயணங்கள் நிறைவுபெற்று, இனி இலகுவான மலர்பாதையில் அம்மாவின் ஆத்மா பயணித்து இறைவனடியில் இளைப்பாறட்டும்! 🙏😞
ஆழ்ந்த இரங்கல்கள். இறைவனடியில் இளைப்பாறுதல்கிட்ட வேண்டிக் கொள்கிறேன்.
ReplyDeleteCondolences to the bereaved family 😔
ReplyDeleteRIP
ReplyDeleteI am deeply sorry to hear about the passing of your loved one
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார்...
ReplyDeleteஅம்மாவின் ஆத்மா சாந்தியடையவும், உங்களுக்கும், சீனியர் எடிட்டர் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இந்த துயரமான தருணத்தை கடக்க உதவ எல்லாம் வல்ல இறைவனிடம
பிரார்த்தனைகள்..🙏🙏🙏
ஆழ்ந்த இரங்கல்கள் சார்....
ReplyDeleteOur deepest condolences. RIP
ReplyDelete🙏🙏
ReplyDeleteசார்...புத்தகங்களுக்கு ஒன்றும் இப்போது என்ன அவசரம்.ஒன்றும் அவசரமில்லை சார். அன்னை என்ற தெய்வத்தின் இழப்பிலிருந்து மீண்டு வாருங்கள் சார்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார் 😥.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார்
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார். சீனியர் எடிட்டர் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் இந்தத் துயரமான தருணத்திலிருந்து கடக்க உதவ இறையருளை வேண்டுகின்றேன்.
ReplyDeleteகண்ணீருடன் ஆழ்ந்த இரங்கல்கள் ஆசிரியரே ஜூனியர் எடிட்டரின் திருமணத்தில் என்னோடும் நண்பர் பழனியோடும்
ReplyDeleteஅன்போடு உரையாடிதை எப்போதும் மறக்க இயலாது தாயே போய் வாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteஆத்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.
🙏🙏
அன்னையின் மரணம் என்பது சாதாரண செய்தியல்ல ஐயா!
ReplyDeleteஅமைதியுடன் அம்மா துயில் பயில வேண்டுகிறேன்..!
நட்புடன்,
பூபதி
@Editor Sir..😭😥😢😢
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார்..🙏
தாயாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..💐🙏
இந்த பெரும் துக்கத்திலிருந்து மீண்டு வர தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் மன வலிமையை தருமாறு ஆண்டவனை வேண்டி கொள்கிறேன் சார்..🙏
முதலில் இழப்புகளிலிருந்து மீண்டு வாருங்கள் அதன் பிறகு புத்தகங்கள் அனுப்பலாம்
ReplyDeleteஆமாம் புத்தகங்களை எப்போது வேண்டுமானாலும் அனுப்பலாம். நீங்களும், உங்கள் குடும்பமும் மீண்டு வருவதுதான் இப்போது முக்கியம்.
Deleteஆழ்ந்த இரங்கல்கள், ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்த கடுந்துயரத்தில் இருந்து தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் விரைவில் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteஅம்மாவின் ஆன்மா சொர்க்கத்தில் அமைதிகொள்ள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்....
ReplyDeleteஆழ்ந்த இரங்கல். ஆத்மா சாந்தியடையட்டும்.
ReplyDeleteஅம்மாவின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது.
ReplyDeleteமீண்டு வர நாங்கள் உங்களுக்கு துணையிருப்போம் சார்.
அவர்கள் ஆத்மா அமைதி கொள்ள இறைவனை வேண்டுகிறேன்.
காரியங்களை முடித்துவிட்டு பிறகு புத்தகங்கள் பற்றி பேசலாம் சார்.
ஆழ்ந்த இரங்கல்கள் 😭
ReplyDeleteஆழ்ந்த இரங்கல் 😢
ReplyDeleteஆழ்ந்த இரங்கல் சார்..😥
ReplyDeleteMy deepest condolences Sir.May her soul rest in peace 🙏
ReplyDeleteRip 😥
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் ஆசிரியரே 😭😭😭
ReplyDeleteபுத்தகங்கள் மெதுவாக வரட்டும் ஆசிரியரே 🙏🙏🙏
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் 😢😢😢
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார்.....
ReplyDeleteஆன்மா சாந்தியடையட்டும்..
ReplyDeleteஇறையருள் காத்து நிற்கட்டும்..
அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார்,..
ReplyDeleteMy heartfelt condolences sir
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள். அம்மாவின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனைகள்...
ReplyDeleteஅம்மாவிற்கு இணை அம்மா மட்டுமே,அம்மா எல்லாம் வல்ல பரபிரம்மத்தின் நிழலில் இனி ஓய்வு எடுக்கட்டும்,காலம் தங்களது காயத்திற்கு மருந்திடட்டும்...
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார். தாங்கள் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வரவும் அன்னையின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteMy heartfelt condolences to your family
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்,,,,. அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறை சக்தியிடம் பிரார்த்தனைகள்....
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார்
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார்!
ReplyDeleteMy heartfelt condolences to you and your family sir, may the departed soul rest in peace, om shanthi 🙏
ReplyDeleteஅவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏
ReplyDeleteமரணம் என்பது உலகச் சிறையிலிருந்து விடுதலை பெற்று .... இணைவதே என்றாலும்....
ReplyDeleteஇழப்பு என்பது எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வது கடினமே....
அன்னையார் உடனிருந்து கவனித்தது போதுமென தள்ளியிருந்து கவனிக்க சென்று விட்டார் போலும்...
தந்தையாரை ... அனைவரையும் செந்தூரான் அருள் மீட்கட்டும்...
பார்த்து கொண்டும் கடந்து கொண்டும் வந்தாலும் சில விசயங்கள் நமக்கென வரும் போது அதன் வலி என்பது...பல நேரங்களில் ..ஏன் திரைப்பட மரணம் கூட நம்மை விம்ம வைத்து விடும் ...புலம்ப வைத்து விடும் சிறப்பான பாத்திரமென்பது...
அன்னை தந்தை என்பது இறைவன் போலல்லவே... நாம் வாட ஏற்றுக் கொள்ள இயலா ஜீவன்கள்...
இந்த இழப்பிலிருந்து மீண்டு வர செந்தூரான் அருளை வேண்டுகிறேன்...
இறந்தவருடன் சென்று என்ன நிலையிலிருப்பார்...இன்னும் கூடுதலாய் கவனித்திருக்கலாமோ என ஆற்றாமை அலைகழிக்கும் போது...நம்மை நம்பி உள்ள ஜீவன்கள் நம்மை கீழே இழுத்து பிடித்து நிறுத்துவதே அவனது செயல்தானே....
கடந்து வந்திருக்கிறேன் உற்ச்சாகமாய் பல குழப்பமான நாட்களை தூங்கி எழுந்து நமது சில கதைகளை டெக்சை படிக்கும் போது...வாழ்க்கை நமக்கு அடுத்துத் தரப்போகும் பாடங்களுக்கு தயாராவோம் ஞாபக மறதி துணை கொண்டு...
அன்னையார் வலியில்லா உலகில் வாழ்கிறார் மகிழ்ச்சியோடு...அல்லது பழய உடை களைந்து புத்தம் புதிய உடையான உடல் கொண்டு மண்ணிலெங்கோ தவழ்கிறார்... என ஆற்றல் வேறோர் ஆற்றலாய் மாறுகிறது எனும் அறிவியலை ஏற்றுக் கொண்டு...
நல்லா ஓய்வெடுத்து...உறங்கி எழுந்து வாருங்கள்... உங்களை தேற்றும் வழியில்
ஆண்டவன் உங்களுக்கு துணையிருக்கட்டும்
ReplyDeleteஅம்மாவின் ஆத்மா சாந்தியடையவும், உங்களுக்கும், சீனியர் எடிட்டர் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இந்த துயரமான தருணத்தை கடக்க உதவ எல்லாம் வல்ல இறைவனிடம பிரார்த்தனைகள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteஅச்சச்சோ மிகவும் வருத்தமான செய்தி. அன்னையின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் சார். அன்னையின் ஆத்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனைகள்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார்! தாயாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார்!
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்.அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள் சார்..
ReplyDelete
ReplyDeleteமிகவும் வருத்தமான செய்தி...
அம்மாவின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும்...🙏🙏🙏
ஈடுசெய்ய இயலாத இழப்பில் இருந்து மீண்டு வாருங்கள் சார்..
மற்றதெல்லாம் பின்னர்.
Om Shanti Om....my heartful condolences to you and your family... take care sir. Let God be with you and family
ReplyDeleteஅம்மாவின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாவின் ஆன்மா அமைதிகொள்ள ஆண்டவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteஅம்மாவின் ஆன்மா சாந்தி அடையட்டும். 😞💐💐💐💐💐
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார். இந்த கடினமான தருணத்தை கடக்க இறைவன் உங்களுக்கு உதவியாக இருப்பார்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் ஐயா. ஓம் சாந்தி.
ReplyDeleteதாயாரை இழந்து வாடும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. மேலும் தாயாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..🙏
ReplyDeleteஎவ்வளவு வலி இருந்தாலும் பொறுத்துக் கொண்டு நாம் வருந்தக் கூடாது என நினைக்கும் தாயின் வலிமை யாருக்கும் வாராது. May her soul rest in peace.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல் சார். அவர்கள் நிம்மதியான ஒரு இடத்திற்கு சென்று உள்ளார்கள் என்று ஆறுதல் அடைவோம்
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்
ReplyDeleteSir,
ReplyDeleteI'm deeply sorry for the loss of your beloved mother.
Sending my most heartfelt sympathy to you and your family....
My heartfelt condolences sir
ReplyDeleteஈரோடு புத்தக விழாவில் மலர்ந்த முகத்துடன் சீனியர் எடிட்டருடன் அமர்ந்து நிகழ்வுகளை ரசித்து கொண்டிருந்தார். நிம்மதியாக உறங்குங்கள் அம்மா. அவருடைய இழப்பு சீனியர் எடிட்டருக்கு ஒரு வெற்றிடத்தை/தனிமையை உண்டாக்கும். கவனித்து கொள்ளுங்கள் சார். தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும் ஆழ்ந்த
ReplyDeleteஇரங்கல்
அம்மாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று சார்! அப்பாவிற்கு தனது துணைவி இல்லாதது இன்னும் கஷ்டமான விஷயம், அப்பாவின் மனதை தைரியமாக வைத்து கொள்ள உதவுங்கள் சார்! மீண்டும் எனது ஆழ்ந்த இரக்கல்கள் சார்!
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார், இதே போன்ற ஒரு சூழ்நிலையில் அம்மாவை இழந்ததால், அத்துயரத்தை உணர முடிகிறது. சீனியர் எடிட்டர் அவர்கள் மனம் தளராதிருக்க வேண்டுகிறேன்.
ReplyDelete// October புக்ஸ் வரும் வாரத்தில் பெரிய தாமதங்களின்றிப் புறப்பட்டு விடும் ! கொஞ்சமாய்ப் பொறுத்துக் கொள்வீர்களென்ற நம்பிக்கையுடன் கிளம்புகிறேன் all //
ReplyDeleteசார், உங்களின் குடும்பம் முக்கியம், அதுவும் இது போன்ற தருணத்தில் குடும்பத்தினருடன் உங்களின் நேரத்தை செலவிடுங்கள். அடுத்த சில மாதங்களுக்கு உங்களையும் உங்கள் குடும்பத்தினரை பற்றி மட்டும் நினையுங்கள் சார்! இன்னும் சில வாரங்களுக்கு எங்களுக்கு புத்தகங்கள் அனுப்புவதை பற்றி கவலை பட வேண்டாம்! என்றும் நாங்கள் உங்களுடன் இருப்போம் சார்!
ஆழ்ந்த இரங்கல்கள் சார்..🙏
ReplyDeleteதாயாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..💐🙏
Sorry to hear. Rest in peace.
ReplyDeleteLosing one's Mother hurts like no other. Sorry for your loss.
ReplyDelete. மிகவும் வருத்தமான செய்தி.ஆழ்ந்த இரங்கல்கள்....
ReplyDeleteஆழ்ந்த இரங்கல் சார்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல் சார் 😓😞
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் சார். தாயாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் 🙏
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார்
ReplyDeleteReply
அம்மாவின் இழப்பு, எதை கொண்டும் ஈடு செய்ய முடியாதது. அம்மாவின் ஆன்மா இறைவனிடம் ஆறுதல் பெற வேண்டிக் கொள்கிறேன்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார்
ReplyDeleteஅன்னையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தங்களின் குடும்பம் இந்த மாபெரும் இழப்பிலிருந்து மீண்டு வர அந்த இறைவனை வேண்டுகிறேன்
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் தாயாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteஆழ்ந்த. இரங்கல்கள். Dekshnamoorthy. Thiruvarur
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார் ,,,,,,,,,
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் ஐயா.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார். அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன் 🙏
ReplyDeleteநீங்கள் சொன்ன அதே அனுபவத்தை நானும் அனுபவித்தேன். உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்லும் போது வழியில் எதிர்பாராத விதமாக என் அம்மா கீழே விழுந்து விட்டார்கள். அந்தப் பகுதியில் தான் என் குடும்ப மருத்துவரின் மருத்துவமனை இருந்தது.உடனடியாக அங்கு கூட்டிச் சென்றேன். ஆனால் அந்த மருத்துவர் என்னிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து இங்கே முடியாது ஈரோடு சென்று குறிப்பிட்ட ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் செய்துவிட்டு குறிப்பிட்ட மருத்துவமனையில் சேர்ந்து விடு என்று கூறினார். அந்த குறிப்பிட்ட மருத்துவமனை இந்த மருத்துவர் தெரிந்தது என்பதால் என்னிடம் பணம் கேட்க மாட்டார்கள் என்றும் கூறினார். உரிய நேரத்தில் ஸ்கேன் செய்து விட்டு அந்த மருத்துவமனையிலும் சேர்த்தேன். ஆனால் கழுத்து நரம்பு அடிபட்டதால் என் தாயை காப்பாற்ற முடியவில்லை. பத்து நாள் நான் கூடவே இருந்தேன் ஆனாலும் சரி செய்ய முடியவில்லை. ஏதாவது உடம்புக்கும் மூளைக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்று அந்த மருத்துவமனை மருத்துவர் கூறிவிட்டார். அந்த மருத்துவரும் எங்களுக்கு தெரிந்தவர்தான். அவர் என்னிடம் ஒரு மணி நேரம் உன் தாயை காப்பாற்ற முடியாது என்றும் இனிமேல் எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்றும் ஒரு மணி நேரம் எனக்கு அறிவுரை கூறினார். உடல் உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கும் என்றும் கூறினார். இனி எதுவும் முடியாது என்கிற சூழ்நிலையில் வீட்டுக்கு அம்மாவை கூட்டிட்டு வந்தேன். ஆறு நாட்கள் கூடவே இருந்து குழந்தையை பார்ப்பது போல பார்த்துக் கொண்டேன். உடம்பு குண்டான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் உடம்பு இருப்பதே அவர்களுக்கு தெரியவில்லை. கடைசி வரை நன்றாக பேசினார். ஞாபகம் மாறவில்லை. ஐந்து நாட்களுக்குப் பின் வயிறு மட்டும் லைட்டாக சூரியது போல் இருந்தது. தோட்டங்களை சென்று விட்டு வரலாம் என்று நான் சென்ற நிலையில் என் அம்மா என்னை விட்டு பிரிந்து விட்டார். விபத்து நடந்த பின்னரும் உதவிகள் அனைத்தும் கிட்னி உரிய நேரத்தில் மருத்துவமனை கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை என்ற போது நம் கையை மீறியது என்று அமைதியாக இருந்துவிட்டேன். என் தாயின் இழப்பிலிருந்தும் அந்த சோகத்தில் இருந்தும் என்னை மீட்டுக் கொண்டு வந்தது நமது காமிக்ஸ் தான். நீங்களும் இந்த சோகத்தில் இருந்து மீண்டு வர வேண்டுகிறேன்.
ReplyDeleteSame feel sago ..my amma 35 zdays covid .. இதெல்லாம் இங்கே பேசும்போது அம்மா கண் முன்னாடியே இருக்காங்க .. முகத்தில் பிராண வாயு மாஸ்க்குடன் .. 😭😭😥
Deleteஇது நடந்தது 2016 ஆம் வருடத்தில்
ReplyDeleteRIP amma
ReplyDeleteRIP
ReplyDeleteHeartfelt condolences sir !
ReplyDeleteRIP
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார்..
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்
ReplyDeleteGMT+5:30
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள் சார்..
ஆழ்ந்த இரங்கல்கள் sir...
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் sir
ReplyDeleteHeartfelt Condolences Vijayan Sir.
ReplyDeleteDear Editor,
ReplyDeleteI am truly sorry for your loss, and please accept my deepest sympathies. May your mother rest in peace. It's always difficult to find the right words during such trying times, but I want you to know that you are in my thoughts and prayers. I can only imagine the immense impact she must have had on your life, and I'm sure her loving presence will be sorely missed. May the cherished memories you shared with your mother bring you comfort and solace.
Ramesh from Muscat
மிகவும் வருந்துகிறேன் ஆழ்ந்த இரங்கல் சார்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteOur deep condolences sir.
ReplyDeletetake care senior editor.
தாயாரின் பிரிவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றால், வயதான காலத்தில் மனைவியைப் பிரிவது அதைவிட வேதனை அளிக்கக்கூடியது. அவருக்கு ஆறுதல் சொல்லி துணையாய் இருங்கள்.
புத்தகங்கள் ஒன்றும் அவசரமான விஷயம் அல்ல, தற்சமயத்துக்கு.
நிதானமாக வரட்டும்
ஆழ்ந்த இரங்கல் அம்மா
ReplyDeleteஅம்மாவின் ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
ஆழ்ந்த இரங்கல்கள் சார்
ReplyDeleteஆழ்ந்த இரங்கல் சார்
ReplyDeleteHeartfelt condolences edi.. Let her soul rest in peace..
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் sir
ReplyDeleteமிக வருத்தமான செய்தி, ஆழ்ந்த இரங்கல்கள் sir
ReplyDeleteDeepest condolences Vijayan Sir and Senior Editor Sir... May God strengthen you all to pass through this way of bitterness.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் சார்
ReplyDeleteஆழ்ந்த இரங்கல் சார்.
ReplyDeleteMay her soul rest in peace....
ReplyDeleteMay you and a your family find strength to face this situation.
My prayers are with you and your family sir...
அன்னையின் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறோம்...
ReplyDeleteHeartiest condolences sir.
ReplyDeleteMay her soul rest in peace.....
ReplyDeleteDeep condolence
ReplyDeleteவருதமான செய்தி. அம்மாவின் கஷ்டங்கள் முடிந்தது.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்.
ஓம் சாந்தி
ReplyDeleteஆழ்ந்த இரங்கல் :(
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள். ஓம் ஷாந்தி.
ReplyDeleteஅன்னையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...சார்..
ReplyDeleteஅன்னையின் ஆத்மா சாந்தியாடைய ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஎந்த அவசரமும் இல்லை.... புத்தகங்கள் காத்திருக்கட்டும். நீங்கள் குடும்பத்தோடு நேரம் செலவிடுங்கள் எடி....
நமது பிறப்பு இறப்பு பகவான் கையில் . நமக்கு ஆறுதல் தருவதும் அவனே. என் தாய் தந்தையர் இறக்கும்போதும் பிராத்தனையே ஆறுதல் அளித்தது. ஆழ்ந்த இரங்கல் சார்.அம்மாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல் நண்பரே
ReplyDeleteமாண்டவர் சுவாசங்கள்
ReplyDeleteகாற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!
RIP!
Our heartfelt condolences Sir
ReplyDeleteஎல்லாம் வல்ல இறைவன் அம்மாவின் ஆன்மாவிற்கு அமைதியை அளித்து தன்னுள் ஏற்றுக்கொள்வாராக🙏🙏
ReplyDeleteVery sorry to hear Sir. இதிலிருந்து மீண்டு வர தங்கள் குடும்பத்திற்கு இறைவன் துணையிருக்கட்டும்.
ReplyDeleteஅம்மா....
ReplyDeleteநீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஓர் ஆலயம்
மண்ணில் என்ன தோன்றக் கூடும்
மழை இல்லாத போது
மனிதனோ மிருகமோ
தாயில்லாமல் ஏது
அன்னை சொன்ன வார்த்தை இன்று
நினைவில் வந்தது
அன்பு என்ற சொல்லே தாயின்
வடிவில் வந்தது
எங்கே எங்கே
அம்மா..
வாழ வைத்த தெய்வம் இன்று
வானம் சென்றதேனோ
உலகிலே உன் மகன்
நீர் இல்லாத மீனோ
மீண்டும் இந்த மண்ணில் வந்து
தோன்ற வேண்டுமே
வாழ்க வாழ்க மகனே என்று
வாழ்த்த வேண்டுமே
எங்கே எங்கே
அம்மா...
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஒர் ஆலயம்
என் அம்மா இறந்த சமயத்தில் வெளிவந்த படத்தின் பாடல் இது. என் மனதில் ஆழப்பதிந்த ஒன்று. தாயின் பிரிவின் வலியை உணர்த்தும் அற்புதமான பாடல்.
ReplyDeleteடியர் எடி ..
ReplyDeleteஅம்மாவின் இறப்பு செய்தியை நேற்றுதான் அறிந்தேன் .. மனம் நிலைகொள்ளவில்லை சார் .. தாயாரின் இழப்பென்பது எவ்வளவு கொடியதென்பதை மனதார அனுபவித்தவன் நான் ..
அம்மா என்றும் உங்களுடனே ஆன்மாவாக இருப்பார்கள் டியர் எடி ..
எனது ஆழ்ந்த இரங்கல்கள் 😥😥😭😭😭 மற்றும் அம்மாவிற்க்காகன எனது கண்ணீர் அஞ்சலிகளும் .. 🙏🙏🙏
எப்போதும் மறக்க இயலா நம் ஒரே தெய்வம் அம்மாதான் .. 😢😢
Rest in peace Amma
ReplyDeleteRest in peace
ReplyDeleteசேர் உங்களின் தாயாரின் மறைவு செய்தி ஆழ்ந்த துயரத்தை தந்தது எமது அனுதாபங்களோடு அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் அவர்கள் மீண்டும் பேரக்குழந்தையாக உங்கள் மடியிலே விரைவில் வந்து தவழ்வார்கள்.
ReplyDeleteRest in Peace Maa
ReplyDeleteLosing mother at any age is unbearable. Pray to god to give you enough strength to cross this difficult period. Om Shanthi.
ReplyDeleteMy deepest condolences. RIP
ReplyDeleteதங்களின் தாயாரின் மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
ReplyDeleteRest in peace
ReplyDeleteஉங்களது இழப்பு ஈடுசெய்ய இயலாதது சார்
ReplyDeleteஅம்மா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼🙏🏼🙏🏼
எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!
ReplyDeletemy heart felt condolences...sir RIP
ReplyDelete