Powered By Blogger

Saturday, September 16, 2023

வருவார்....வெல்வார்....!

 நண்பர்களே,

வணக்கம். பல்வேறு சலூன்களில் பலதரப்பட்ட தறுதலைகளை நம்ம 'தல' குமட்டோடு 'கும்மு..கும்மு..' என்று கும்மியெடுப்பதைப் பார்த்திருப்போம் ! 'அப்டி போடுங்கண்ணே...இன்னும் ரெண்டு  சாத்துங்க' என்றபடிக்கே பக்கத்தைப் புரட்டிப் போயிருப்போம் ! ஆனால் பாவப்பட்ட அந்த மிஸ்டர் தறுதலைஸ், சேதாரமான பல்செட்களோடும், பின்னியெடுக்கும் பல்வலிகளோடும், அந்தக்காலத்து வைத்தியர்களிடம் போய் வைத்தியம் பாக்க என்ன பாடு பட்டிருப்பார்களோன்னு எப்போவாச்சும் யோசித்துப் பார்த்திருப்போமா ? அந்த ஞானோதய வேளை  கடந்த மூணு தினங்களாய் நேக்கு வாய்த்துள்ளது - கடைவாயில் தெறித்து வரும் பல்வலியின் உபயத்தில் !! போன வருஷமே 'ரூட் கெனால்' ட்ரீட்மெண்ட் என்று குடைந்து ரொப்பிய பல்லின் வேரில் மறுக்கா சீழ் பிடித்திருக்க, அதனை பொறுமையாய் தான் சீர் செய்திட இயலுமென்று டாக்டர் சொல்லி, மாத்திரைகளைத் தந்திருந்தார் ! மாத்திரையின் வீரியம் மட்டுப்படும் நொடியில், 'தல' கிட்டே சாத்து வாங்குற மெரியே feel ஆகத் துவங்கிட, தறுதலைஸ் பட்டிருக்கக்கூடிய கஷ்டங்களை எண்ணிப்பார்த்து கண்ணிலே ஜலம் வைப்பது போலாகிறது !! ஆனாலும் நீங்க பாவம்டா டேய் நீர்யானைகளா !!  வாழைப்பழத்தை விழுங்கவே மூணு தபா யோசிக்க வைக்கிற பல்வலியோட, என்னத்தை சாப்பிட்டு ஒடம்ப தேத்திக்கிட்டு,கடாமாடுகள் மாதிரி  மறுக்கா அடிவாங்க எப்புடித்தான் ஆஜராவீங்களோ ?!!

"இன்னா மேன் நேரா வன்மேற்கிலேர்ந்து இஷ்டார்ட் ஆகுது வண்டி ?" என்று கேட்கிறீர்களா - காரணம் கீதே !! ஒன்றல்ல..இரண்டல்ல..மூன்றல்ல....நான்கு காரணங்கள் கீதே !!  அந்த நான்குமே ஒற்றைப் புள்ளியில் இணைந்து "THE SUPREMO ஸ்பெஷல்" என்ற பெயருக்குள் ஐக்கியமாகின்றனவே !! And ஐயோ...சாமீ...தெய்வங்களே......இந்தப் பெயரினை நண்பர்களில் யாரேனும் முன்மொழிந்தீர்களா ? என்பது குறித்து இந்த நொடியில் எனக்கு திடீரென்ற சந்தேகம் தலைதூக்கிடுகிறது ! If yes - சிரமம் பார்க்காது ஞாபகப்படுத்திடுங்களேன் ப்ளீஸ் - ஹாட்லைனில் உரிய credit தந்திடத் தவறக் கூடாதல்லவா ?  

நிறைய டெக்ஸ் & டீம் கதைகளுக்குள் சடுகுடு ஆடியுள்ளோம் தான் ; 548 பக்க நீள ஒற்றைக் கதைக்குள்ளும் உலாற்றியாச்சு தான் ; ட்ரிபிள் ஆல்பம் + டபுள் ஆல்பம் + சிங்கிள் ஆல்பம் என்ற கூட்டணி இதழையும் பார்த்தாச்சு தான் - ஆனால் இரவுக்கழுகாரின் இந்த 75-வது ஆண்டின் சிறப்பிதழில் கிட்டி வரும் அனுபவங்கள் செம unique ! நான்கு தலைமுறைகளை சார்ந்த கதாசிரியர்கள் !! நான்கு காலகட்டங்களில் உருவான கதைகள் !! நாயகர் ஒருவரே என்றாலும் அவரது கதையோட்ட பாணிகளுக்குள் உள்ள நுட்பமான மாற்றங்கள் !! காலம் எத்தனை மாறியிருந்தாலும், அந்த வன்மேற்கின் கதைக்களங்கள் இம்மிகூட மாறியிருக்கா ஆச்சர்யங்கள் - என இங்கே எனக்குக் காணக் கிடைத்துள்ள அனுபவங்கள் அனைத்துமே செம fresh !! ஆனால் 712 பக்கங்கள் கொண்ட ராட்சஸ இதழ் எனும் போது, நடப்பாண்டின் அட்டவணையினை அறிவித்த நேரம் முதலாகவே, இதனில் பெண்டு கழறப் போவது சர்வ நிச்சயம் என்று கணிசமான அள்ளு விட்டுக்கொண்டிருந்தது ! முன்னெல்லாம் கருணையானந்தம் அங்கிளை டெக்ஸ் கதைகளை எழுதச் சொல்லி விட்டு டெக்ஸ் & கார்சனின் பகுதிகளை மட்டுமே நான் எழுதிக் கொண்டிருக்க,பெருசாய் கஷ்டம் தெரிந்திடாது ! But 224 பக்கக் கதையெல்லாம் இனி நமக்கு ஒத்து வராதென்று அங்கிள் ஜகா வாங்கிய பிற்பாடு, கடந்த 7 /8 ஆண்டுகளாகவே நம்மள் கி நாக்கார் தெருவை கூட்டாத குறை தான் ! And no different this month as well !! 

இதில் கூத்து என்னவென்றால் கடந்த 10 நாட்களாய் மொழிபெயர்ப்பு + எடிட்டிங் என ஒரே நேரத்தில் 4 கடைகள்  விரித்துப் பணியாற்றிடுவதால், உறக்கத்திலும், குதிரைப்படைகளின் அணிவகுப்புகளும், நள்ளிரவில் "யாஹூஹூ" என்ற கூக்குரல்களோடே பாயும் போக்கிரிகளும் ; பாலைவன மோதல்களுமே  கனவாய் வருகின்றன ! அர்ஜென்டினாவில் நடக்கும் இராணுவ மோதல்களில் இரவுக்கழுகாரும், சின்னப் பருந்தாரும் ஜோடி போட்டு செய்திடும் அதிரடிகளோடு கொஞ்ச நேரம்  ; அபாச்சே பூமியில் அரங்கேறும் ரகளைகளில் வெள்ளிமுடியாரும், டெக்ஸும் செய்திடும் சாகசங்களுடன் கொஞ்ச நேரம் ; மெக்சிகோ எல்லையோரக் கணவாயினுள் முழு டீமுடன் 'தல' நிகழ்த்திடும் அதிரடியோடு கொஞ்ச நேரம்  ; சியோக்ஸ் மண்ணில் ஆத்ம நண்பர்கள் இருவர் மட்டும் நடத்திடும் தேடலுடன் மீத நேரம்  - என முழுக்க முழுக்க வன்மேற்கில் தான் இப்போதெல்லாம் ஜாகை ! இதே ரீதியில் இன்னும் தொடர்ந்தால், ஆபீஸ் போவதற்கு குருத ஏதேனும் மேயுதா ? வழுக்கைக் கபாலத்தை மறைக்க stetson தொப்பி கீதா ? என்றும் தேடத் தோன்றும் போலும் ! 

குட்டிக்கரணங்கள் பல போட்டு கலரிலான 3 கதைகளின் பணிகளுக்கும் மங்களம் பாடியாச்சு & இதோ - "பூதம் காத்த புதையல்" black & white கதைக்குள் பேனா ஓடிக்கொண்டுள்ளது ! ஏற்கனவே அட்டைப்படமெல்லாம் ரெடியாகி, நகாசு வேலைகளுக்குப் போயிருக்க, செவ்வாய் முதல் அச்சும் துவங்கிடும் !! 712 பக்கங்கள் கொண்ட முரட்டு புக் + ஹார்ட் கவர் என்பதால், பைண்டிங்கில் போதிய அவகாசம் தந்திட வேண்டியிருக்கும் !! So இயன்றமட்டுக்கு நம் தரப்புப் பணிகளைத் துரிதப்படுத்தி விட்டால் "HAPPY 75-th தல & டீம் !!" - என உற்சாகமாக வாழ்த்துச் சொல்லி கேக்கை கொஞ்சம் விழுங்கிக்கொள்ளலாம் அல்லவா ? So full steam ahead என்று விரட்டி வருகிறோம் வண்டியை !

4 தலைமுறைகளைச் சார்ந்த படைப்பாளிகள் கதாசிரியர்களாக இருந்தாலும், இங்கே ஓவியப் பொறுப்பின் பெரும்பான்மை Galleppini என்ற ஜாம்பவானின் கையில் இருப்பதைக் காணவுள்ளீர்கள் ! 2 கதைகளுக்கு அவரது தூரிகை சித்திரங்கள் தீட்டியிருக்க, பாக்கி இரண்டில் வேறு ஓவியர்கள் களமிறங்கியுள்ளனர் ! 

ஒற்றை இதழாக இருப்பினும், 4 தலைமுறைகளில் வெளியான கதைகள் என்பதால் ஒவ்வொன்றிலும் காத்துள்ள அனுபவம் ரொம்பவே different : 

 1. பிதாமகர் போனெல்லியின் கைவண்ணத்திலான சாகசமோ உருவாக்கப்பட்டிருப்பது 1967-ல் ! அதன் பின்பாய் 1970 ; 1990 ; 2002 ; 2007 ; 2016 ; 2023 ஆகிய ஆண்டுகளில் இந்த 81 பக்க சாகசம் மறுபதிப்பு கண்டுள்ளது !! 
 2. அவரது புதல்வரான செர்ஜியோ போனெல்லியின் ஆக்கம் உருவானது : 1982-ல் ! பின்னாட்களில், 1985 ; 1997 ; 1998 ; 2003 ; 2009 ; 2010 ஆகிய ஆண்டுகளில் ரீப்ரின்ட் செய்துள்ளனர் ! 
 3. கிளாடியோ நிசி அவர்களின் கைவண்ணத்திலான கதை படைக்கப்பட்டது 1990-ல் & 2006 ; 2009 ; 2011 ஆகிய ஆண்டுகளில் மறுபதிப்பு கண்டுள்ளது !
 4. இன்றைய ஜாம்பவான் போசெலி அவர்களின் படைப்பான "வந்தார்....வென்றார்..." வெளியானது 2009-ல் ! And 2012 ; 2014 & 2016 ஆகிய ஆண்டுகளில் மறுபதிப்பு கண்டுள்ளது ! முதல் 3 கதைகளும் க்ளாஸிக் கமர்ஷியல் டெக்ஸ் பாணியில் இருக்குமென்றால், இதுவோ "கிங் ஸ்பெஷல்" இதழில் வெளியான ஆழமான, அழுத்தமான சாகசத்தின்  ஜாடையினில் இருந்திடும் ! In fact நிறைய டெக்ஸ் ஆர்வலர்களின் all time favorites பாட்டிலுக்குள் இந்த அதிரடிக்கு உயரிய இடமுண்டு ! Truth to tell, இந்த சாகசத்தினை ரொம்ப ரொம்ப முன்னமே வெளியிட எனக்கு செம ஆசை தான் ; ஆனால் அதன் மொழியாக்கம் நிச்சயம் சுலபமாய் இருக்கவே போவதில்லை என்பதை என்னுளிருக்கக்கூடிய சோம்பேறிமாடன் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்க, தள்ளிப் போட்டுக் கொண்டே சென்றேன் ! But finally we are there - in ஆர்ஜென்டினா ! கடல் கடந்து கியூபாவுக்கு தல பயணப்பட்ட பொழுது நமக்கு கிட்டிய அனுபவமானது, கொஞ்சம் விட்டலாச்சார்யா பப்படம் ரேஞ்சில் இருந்ததை நாம் மறந்திருக்க மாட்டோம் தான் ; but இம்முறையோ இது செம ரியலிஸ்டிக் கதைக்களம் கொண்டதொரு saga ! க்ளைமாக்சில் தந்தையும், மகனும் முன்னெப்போதும் நாம் பார்த்திரா sequence-ல் நம்மைக் கட்டுண்டு போகச் செய்வது க்ளாஸிக் போசெலியின் மாயாஜாலம் என்பேன் ! என்னை செமத்தியாய் நாக்குத் தொங்கச் செய்த சாகசமும் இது தான் ; பணியின் இறுதியில் ஒரு இனம்புரியா நிறைவைத் தந்த சாகசமும் இது தான் !   
இதோ - some ப்ரீவியூஸ் :


மீத 2 ஆல்பங்களிலிருந்தான ப்ரீவியூஸ் அடுத்த பதிவிற்கென வைத்துக் கொள்வோமே ? எனது செப்டெம்பரின் இதுவரைக்குமான பொழுதுகளை பிஸியாக்கித் தந்த பணிகள் இவையே ! புக்காக்கி, ஒரே தொகுப்பாய் அத்தனை கதைகளையும் உங்களிடம் ஒப்படைக்கவும் , உங்களின் அலசல்களை உள்வாங்கிடவும் இப்போதே ஆர்வம் அலையடிக்கிங்ஸ் ! இன்னும் 2 வாரங்களில் அதனை நனவாக்கிட புனித மனிடோ அருள் புரிவாராக !! 

கிளம்பும் முன் காத்திருப்பதும் 'தல' தகவலே !! And ஆச்சர்யங்கள் ஒரு போதும் மட்டுப்படுவதில்லை போலும் !! ஒரு காலத்தில் எனக்குள்ளே ஒருவித இறுமாப்பு இருந்ததுண்டு - உங்கள் கி பல்ஸ் நேக்கு ஸ்பஷ்டமாய் அறியும் என்று ! ஆனால் இப்போதெல்லாம் அவ்வித கற்பனைகளில் திளைப்பதில்லை - simply becos இண்டிகேட்டரே போடாம வண்டிய ஓட்டுற கலையில் நீங்கள் எனக்கு அண்ணன்களாகி விட்டீர்கள் ! நானாச்சும் புளிய மரம், முருங்கை மரம் என்று ஏற்றிக்கிட்டிருப்பேன் ;  நீங்களோ தண்ணிக்குள் ; குகைக்குள் ; ஆகாசத்தில் என்ற ரேஞ்சில் சவாரி பண்ணுகிறீர்கள் !! பாருங்களேன் மெபிஸ்டோ ரிசல்ட்டை :
"மெபிஸ்டோவே இனி வாணாம் !!" என்று வாக்கு குத்திய 15 ஜீவன்களுள் ஞானும் ஒருவன் !! ஆத்தீ !!!

And மறுபதிப்பு சார்ந்த வோட்டிங்குமே சுவாரஸ்ய பதில்களைத் தந்துள்ளன !!  Again surprised - but pleasantly !! 


ரைட்டு...."பூதம் காத்த புதையல்" முடித்த கையோடு , தாத்தாஸ் கூட்டணியோடு கும்மியடிக்க கிளம்புகிறேன் ! 2023-ன் அட்டவணையிலேயே நான் பேனா பிடிக்க ரொம்பவே ஆர்வமாக இருந்த ஆல்பம் அது தான் & ஒரு வழியாய் அந்த பாட்டையாஸ் லோகத்தில் உலவிடும் ஏகாந்தத்தை அனுபவிக்க வெயிட்டிங் ! Of course - அது வெகு ஜன ரசனைப்பட்டியலில் இடம்பிடிக்கும் ஆலபமல்ல என்பதில் no secrets - ஆனால் இந்த ஒற்றை ஆண்டு மாத்திரம் சந்தாவில் எனக்காக பொறுத்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ் ! 2024 முதலாய் இந்த முதியோர் ஆர்மி முன்பதிவுத் தனித்தட  பயணிகளாகி விடுவார் ! 

Bye all.....see you around ! Have a lovely long weekend ! முன்கூட்டிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களுமே !! கொழுக்கட்டைகளை உள்ளே தள்ளும் போது ஆவ்ரெல் டால்டனை நினைச்சுக்கோங்கோ !! 

315 comments:

 1. /// 712 பக்கங்கள் கொண்ட ராட்சஸ இதழ் எனும் போது...///
  ஒரு 38 பக்கத்த சேர்த்து 750 பக்கமா ஆக்கிப்புட்டீங்கன்னா டெக்ஸின் 75 வது வருடத்துக்கு 750 பக்க ஸ்பெஷல்னு கெத்தா சொல்லிக்கலாம்.

  ReplyDelete
 2. வணக்கம் ஆசிரியரே
  வணக்கம் சகோதரர்களே

  ReplyDelete
 3. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய இரவு வணக்கம்

  ReplyDelete
 4. சூப்பர் Sir
  டெக்ஸ் ஸ்பெசல்
  புதிய புத்தகத்திற்காக
  காத்திருப்பு ஆரம்பம் .
  இன்னும் 15 நாட்களே
  உள்ளன. நன்றி

  ReplyDelete
 5. வந்தார் வென்றார் ஓவியம் அட்டகாசம் சார்.

  ReplyDelete
 6. Sir Kozhukattainu ninaichu soppu kattiyai thinbavarache avrel

  ReplyDelete
 7. டெக்ஸ் வில்லர்-ஆரம்பகால கதைகள் எனில் நிச்சயம் சுவராஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.
  மேலும்-அந்த தடிப்புத்தகத்தை கையில் ஏந்தும் தருணத்திற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்..

  ReplyDelete
 8. அடுத்து கலர் மெபிஸ்டோவுக்காக வெயிட்டிங் வெகு விரைவாக.

  ReplyDelete
 9. வணக்கம் ஆசிரியர் சார் & நண்பர்களே....

  ReplyDelete
 10. Tex 75..😍😘

  வரட்டும்..💞💐🥰
  வெல்லட்டும்..😍😘💞

  ReplyDelete
 11. Jai thorgal ✋ போராடுவோம் போராடுவோம் ............... கிடைக்கும் வரை போராடுவோம்😁

  ReplyDelete
 12. என் அபிமான ரிப் கிர்பி -யை இந்த சைசில் வழங்கி - படிக்க சுவராஸ்யம் ஆக்கியதற்கு நன்றி./
  இதைப் படிப்பதில் உள்ள உற்சாகம்-புதிய கதைகளை படிக்க வர மாட்டேன்கிறதே..
  கதைகள்- களங்கள் சுமாராக இருந்தாலும், கிர்பியையும் - டெஸ்மண்ட்-டையும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பார்க்கும் போதும் சந்தோசம் கொப்பளிக்கத் தான் செய்கிறது..தலைவர் ரஜினியை
  ரசிப்பதைப் போல..

  ReplyDelete
 13. வந்தார்...வென்றார் அட்டைப்படம் வண்ணக் கலவையும் செம ப்ரெஷ்ஷாக உள்ளது..

  ReplyDelete
 14. @Editor Sir..😍😘

  "Tex 75-The Supremo ஸ்பெஷல்".. புத்தகத்துடன்
  கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக..😍

  Tex பேனா, 😍
  Tex படம் போட்ட Badge,😘
  'Tex டீம்' போட்டோ in laminated standees😍😘,..etc.,

  இப்படி ஏதாவது அதிரடி சர்ப்ரைஸ் உண்டுங்களா சார்..😍😘🙏

  ReplyDelete
  Replies
  1. @Editor Sir..😍😘

   Badge..😍
   அறுங்கோண நட்சத்திர வடிவில மெட்டல் ஃபினிஷிங்ல..😍
   ஷெரீப் அணியிற Badge மாதிரி center ல "தல"
   படத்தை போட்டு..😘
   படத்தை சுற்றி 'Tex 75 கொண்டாட்டம்'..னு எழுதி

   கொடுத்தா..பெருமையா சட்டையில pin பண்ணிக்குவோம் சார்..😍😘👍👌

   Delete
  2. Better to give a magnetic sticker. I still use that

   Delete
  3. அதில்,
   எங்க பேரோட
   ஷெரிப் ன்னு எழுதி கொடுத்தீங்கன்னா, நாங்களும் எங்கள் ஊரில் நீதியை நிலைநாட்டி, டெக்சாஸ் புகழ் பரப்புவோம்.

   Delete
 15. அடடே முன்னிரவு பதிவு

  ReplyDelete
 16. /// 712 பக்கங்கள் கொண்ட ராட்சஸ இதழ் எனும் போது, நடப்பாண்டின் அட்டவணையினை அறிவித்த நேரம் முதலாகவே, இதனில் பெண்டு கழறப் போவது சர்வ நிச்சயம் என்று கணிசமான அள்ளு விட்டுக்கொண்டிருந்தது.!///


  இனி ஒவ்வொரு வருசமும் தீபாவளி மலர் இப்படியே வரணும்னு ஆசையா இருக்கு சார்..!

  முழு வண்ணத்தில் இல்லாம கருப்பு வெள்ளைன்னாலும் பரவாயில்லை.. ஆனா இனி ஒவ்வொரு தீபாவளியும் இப்படி ஒரு Supremo specialடன்தான் கொண்டாடணும்..!

  அதுக்காக
  மைக் ஹோமர், ராமையா, ரிங்கோ, ஜானதான் கார்ட்லாண்ட், மேஜிக் விண்ட் போன்ற மாபெரும் ஹீரோக்களை இழக்க வேண்டி இருந்தாலும் பரவாயில்லே..!
  (தனிப்பட்ட முறையில் மாடஸ்டிய கூட நான் தியாகம் பண்ணத் தயாரா இருக்கேன் சார்)

  எப்படியாவது வருசாவருசம் தீபாவளி மலர் இப்படி ஒரு 750 பக்க டெக்ஸ்வில்லர் தொகுப்போடு கொண்டாடினா போதும்.!

  ReplyDelete
  Replies
  1. Supremo special டெக்ஸ் 75ஆவது பிறந்தநாள் சிறப்பிதழ்னு தெரியும்.. இப்படி ஒரு இதழ் வருசாவருசம் தீபாவளி மலரா வரணும்கிறதுதான் எங்களோட ஆசை..😍

   Delete
  2. வரவேற்கின்றேன்.ஆமோதிக்கின்றேன்.

   Delete
  3. மாடஸ்டியை கழட்டி விடுவதை ஆமோதிக்கிறேன். வரவேற்கிறேன்.

   Delete
  4. மஹி. இன்ஸ்டன்ட் பாயாசம் இப்பவே ரெடி... 😄😄😄

   Delete
  5. மாடஸ்டியை கழட்டி விடுவதை ஆமோதிக்கிறேன். வரவேற்கிறேன்....

   நாங்களுந்தான்...

   Delete
  6. /!Supremo special டெக்ஸ் 75ஆவது பிறந்தநாள் சிறப்பிதழ்னு தெரியும்.. இப்படி ஒரு இதழ் வருசாவருசம் தீபாவளி மலரா வரணும்கிறதுதான் எங்களோட ஆசை..😍//--

   +100000000..

   Delete
 17. மெபிஸ்டோ செயிச்சதுல நெம்ப சந்தோசமாத்தான் இருக்குது..
  இதைக் காரணம்காட்டி சைத்தான் சாம்ராஜ்யம் மறுக்காபதிப்பா வந்திடுமோன்னு நெனைச்சாத்தான் கெதக்குங்குது...😱

  ReplyDelete
 18. டெக்ஸ் இதழ் எதிர்பார்ப்புகளை கூட்டுகிறது.

  வந்தார் வென்றார் ஆங்கிலத்தில் Patagonia என்று Epicenter வெளியிட்ட அட்டை அருமை. அதே கதையா சார். ஆங்கிலத்தில் மேக்ஸி சைஸ் கருப்பு வெள்ளையில் படங்கள் ஆஹா ரகம்.

  இப்புத்தகம் என்ன சைசில் வருகிறது சார்?

  பிக் பாய்ஸ் ஸ்பெஷல் மாயாவி அட்டையுடன் அனுப்பியதற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 19. அப்டி போடுங்கண்ணே...இன்னும் ரெண்டு சாத்துங்க' என்றபடிக்கே பக்கத்தைப் புரட்டிப் போயிருப்போம் ! ஆனால் பாவப்பட்ட அந்த மிஸ்டர் தறுதலைஸ், சேதாரமான பல்செட்களோடும், பின்னியெடுக்கும் பல்வலிகளோடும், அந்தக்காலத்து வைத்தியர்களிடம் போய் வைத்தியம் பாக்க என்ன பாடு பட்டிருப்பார்களோன்னு எப்போவாச்சும் யோசித்துப் பார்த்திருப்போமா ? ///


  இது மீண்டு(ம்) வந்த மாயனிலிருந்து அதிகாரியின் சுய வாக்குமூலம் என்றே எடுத்து கொண்டு மேற்படி பதிவை படிக்கிறேன்...

  ReplyDelete
 20. செம சூப்பர் சார்...நேத்து தான் வியாரின் சாத்தான் டெக்ஸ் சாகோர படித்தேன்....சாரி....சாரி மலைத்தேன்....யப்பா என்னா கதை....இருவரின் சேர்த்த கதைகள் நிறைய வேண்டும்....விரிவாய் காலை வருகிறேன் அது குறித்து....

  ReplyDelete
 21. //"THE SUPREMO ஸ்பெஷல்" .. இந்தப் பெயரினை நண்பர்களில் யாரேனும் முன்மொழிந்தீர்களா ?//

  myself sir ..

  ReplyDelete
  Replies
  1. Yes, இந்த பதிவில் காணலாம் !
   http://lion-muthucomics.blogspot.com/2022/06/blog-post_22.html

   Delete
 22. இன்னும் இரண்டு கோரிக்கையுமே அதிகாரியின் 75 வேளையில்...

  1. கார்சனின் கடந்த காலம் மாதிரியான அதிகாரியின் அக்கப்போர் அதிகமில்லாத .. உண்மையான ஒரு கதாநாயகரின் சாகசம்...
  2. மெபீஸ்டோ வாரம் இருமுறை...
  (அதிகாரியின் 75 வருட சிறப்பு கொண்டாட்டமாக??))
  ஏன் கூடாதுங்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. என்னா முக்குனாலும் யங் பிலி தேறப்போறதில்லையாமேப்பா..☺

   Delete
  2. ஆகாத காயத்துக்கு ஏனுங்க கட்டுப் போட்டுட்டிருக்கீங்க??

   Delete
  3. ஆமா....வரம் இருமுறை தான் டாக்டர் சார்...மெபிஸ்டோன்னாலே மேஜிக்தான...ரம்மியவே மாத்திட்டாரே அண்டாவ ஆட்டயபோடாம மறயவச்சுட்டார்..அதா இவரு கார்சன் எலிகடிக்குதுன்னு படுத்துருப்பாரே மயக்கத்ல கட்டுண்டு அதைப்போல இவரையும் மாத்திட்டார் நம்ம டெக்ஸ் மெஸ்மெரிசத்தால

   Delete
  4. என்னா முக்குனாலும் யங் பிலி தேறப்போறதில்லையாமேப்பா..☺--- அதான் உன்ற மச்சான் தட்டி தட்டி தேத்திட்டு இருக்காராப்பா....தேறிடக்கூடுமோ??

   Delete
 23. வணக்கம் நண்பர்களே!!

  ReplyDelete
 24. அனைவருக்கும் வணக்கம் ...

  ReplyDelete
 25. ஆமாங்க சார். டெக்ஸ். 75/750. கேப்சன் ரொம்பவே அழகா கெத்தா இருக்கு . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 26. தனிப் பட்ட முறையில் மாடஸ்டி தியாகம் பண்ண கூட தயாரா இருக்கேன் . என்னங்க திடீர்னு இப்படி சொல்லிட்டீங்க மாடஸ்டி ரசிகர்கலயே அழகா . இளமையானஹேண்ட்சமாஇருக்கறது நீங்க மட்டும்தான்.கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 27. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 28. தல... வா தல வா தல....❤️❤️❤️❤️
  வந்தார் வென்றார்.... செம்ம டைட்டில் எடிட்டர் சார்....
  Images are amazing...
  Waiting for thala...
  And waiting for தாத்தாஸ்...

  ReplyDelete
 29. டெக்ஸின் மெயின் அட்டைப்பட சித்திரங்களும் ,உள்பட சித்திரங்களும் அட்டகாசமாய் உள்ளது சார்...மிகப்பெரிய இந்த டெக்ஸ் வில்லரின் சாகஸ இதழை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்..

  ReplyDelete
 30. //அந்த நான்குமே ஒற்றைப் புள்ளியில் இணைந்து "THE SUPREMO ஸ்பெஷல்" என்ற பெயருக்குள் ஐக்கியமாகின்றனவே !! And ஐயோ...சாமீ...தெய்வங்களே......இந்தப் பெயரினை நண்பர்களில் யாரேனும் முன்மொழிந்தீர்களா ? //

  ஆமாங்க ஆசிரியரே
  தலைப்புக்கு போட்டி வைத்து தேர்வு செய்தீங்க

  ReplyDelete
 31. வந்தார் .. வென்றார் .. 😍😍😘😘

  ReplyDelete
 32. மெபிஸ்டோ ரிசல்ட் 😂😂😂😂😂

  ReplyDelete
  Replies
  1. "மெபிஸ்டோ ரிசல்ட்"

   எதிர் தரப்பினர் செய்த சதி முறியடிக்க பட்டது...

   Delete
  2. நான் தான்ங்க அந்த எதிரணியில் ஓட்டு போட்டது😁😁😁

   Delete
  3. /!நான் தான்ங்க அந்த எதிரணியில் ஓட்டு போட்டது😁😁😁..////---🤣🤣🤣🤣🤣

   Delete
 33. டெக்ஸ் அட்டைப்படங்கள் செமயாக இருக்கு

  வாவ், நாமே அங்க ஒன்று (அ) இரண்டு முறை மறுபதிப்பு போட்டா, அவங்க நான்கைந்து மறுபதிப்பு போட்டு இருங்காங்க😮😮😮😮😮

  நான்கு கதாயாசிரியரின் கதைகள், அருமை
  Supremo Special பட்டைய கிளப்ப போவது உறுதி

  ReplyDelete
  Replies
  1. பயங்கரமான செலக்சன் தான் கடல்....ஆனா இளம் டெக்ஸ் சாகோர முந்தாநாளு படிச்சதுலருந்து நானாக நானில்லை...

   இளம் டெக்ஸ் இல்லாதது பெருங் குறேயே...
   போல..‌ 75 க்கு... அட 7500
   பேராசதா ்இல்லங்கல ...ஆனா 750 பக்கங்கூட இல்லன்னா எப்டிங்க....இன்னும் 15 நாள்தா கிடக்கே..அதனால இளம் டெக்ஸ் கதை ஒன்ன கீர்த்தி மிகு சாகோரோட இணைச்சு இளம் டெக்ஸ் ஸ்பெசல் போட்டா 750 அ தாண்டுனா மாதிரி இருக்குமே...

   Delete
  2. ஐடியா நல்லாதான் இருக்கு
   ஆனால் ஆசிரியர்க்கு வேலை பளு கூடுமே, சகோ
   அதனால, வசனம் எழுதி குடுத்தீங்கன்னா, போதும் சகோ😊😊😊

   Delete
 34. //2024 முதலாய் இந்த முதியோர் ஆர்மி முன்பதிவுத் தனித்தட பயணிகளாகி விடுவார் ! //

  வருத்தமே 😔

  ReplyDelete
 35. Wainting for Text 75 .
  அப்புறம்....ரிப் கெர்பி ஆல்பம் அருமை . மேக்ஸி சைஸோ அதைவிட அருமை. ஆனால் இனி அவர் இப்படி கலெக்ஷனில் வரமாட்டார் என்பது வருத்தமான செய்திதான்.

  ReplyDelete
 36. ரிப் கெர்பி ஸ்பெஷலை வாசித்தாயிற்று...
  மனதிற்கு நிறைவான வாசிப்பானுபவம் கிட்டியது...
  புத்தகத் தரமும்,கலக்கலான அட்டையும்,கையில் ஏந்திப் பார்க்கும் போது எடை குறைவான இதழும் மனதிற்கு நிறைவளித்தன...
  எல்லா கதைகளும் நிறைவு,குறிப்பாக கிளியோடு கூட்டணி,காசில்லாக் கோடீஸ்வரன் கதைகள் ரொம்பவே சிறப்பு,காசில்லாக் கோடீஸ்வரன் நல்ல எமோஷனல் டச் கொடுத்தது,கிர்பிக்கும் டெஸ்மாண்டிற்குமான கெமிஸ்ட்ரியும்,பிணைப்பும் கூடுதல் சிறப்பம்சங்கள்...
  சில நேரங்களில் கோடிகளைக் கொட்டி எடுக்கும் திரைப்படங்களை விட எளிய பட்ஜெட்டில் வரும் படங்கள் நம் மனதைக் கவர்ந்து விடும்,அதுபோல ரொம்பவே மெனக்கெட்டு மொழிபெயர்த்து,மிக எதிர்பார்த்து வெளியாகும் சாகஸங்களை விட எளிய கதையம்சங்கள் கொண்ட கதைக் களங்கள் மனதைக் கொள்ளை கொண்டு போய் விடுவதுண்டு...
  அந்த வகையில் ரிப் கிர்பி-2 ரொம்பவே ஸ்பெஷல்...

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரியாக சொன்னீங்க அண்ணா. வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். ரிப் கிர்பி இந்த மாத சூப்பர் ஹிட்.

   Delete
 37. அடடே விமர்சன புயல். கிர்பி அருமையான விமர்சனம்.

  ReplyDelete
 38. இந்த மாதம் டெக்ஸ் இல்லைனு ரொம்ப ஃபீலிங் பண்ணிக்கிட்டு இருந்தோம் .60நாட்களுக்குபிறகு அட்டகாசமான ஆர்ப்பாட்டமான ஒரு குண்டு புத்தகத்தில் நான்கு கதாசிரியர்களின் கைவண்ணத்தில் டெக்ஸ் (75/750)திருவிழா அனல் பறக்க போகுது . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 39. குண்டூஸ்னாலே குஷிதான்!
  அதுவும் டெக்ஸ் குண்டுன்னா கொண்டாட்ட குஷிதான்.
  அதுவும் 700+ பக்க மெகா டெக்ஸ் குண்டு என்றால் குத்தாட்ட கொண்டாட்ட கும்மாள குஷிதான்!!

  வெயிட்டிங் ஃபார் சுப்ரிமோ ஸ்பெஷல் குண்டு!

  வந்தார்.. வென்றார் - உள்பக்க சித்திரங்களும், வண்ணக்கலவைகளும் - வேற லெவல்!!

  அட்டைப்படம் இப்பத்தான் ரெடியாகிட்டிருக்கும்னு நினைக்கிறேன். ஹிஹி.. ஆகட்டும் ஆகட்டும்!!

  ReplyDelete
  Replies
  1. //700+ பக்க மெகா டெக்ஸ் குண்டு என்றால் குத்தாட்ட கொண்டாட்ட 0கும்மாள குஷிதான்!!//

   🥳🥳🥳🥳🥳

   Delete
  2. மொத்தமாக 777 பக்கங்கள் இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் எடிட்டர் சார்...

   Delete
 40. This comment has been removed by the author.

  ReplyDelete
 41. வணக்கம் ஆசிரியர் சார்,
  ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளியான "கொலைப்படை" க்ளாசிக் ஸ்பெஷல்,
  சமீபத்தில் படித்து முடித்தேன்.
  மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அட்டைகளுடன், BIG size படங்களுடன் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
  எப்போதோ கைவிட்டு போன (கொலைப்படை) புத்தகம் திரும்ப கிடைத்த மகிழ்ச்சி இந்த புத்தகம் வாங்கியதும்.
  இன்னும் இந்த புத்தகம் இல்லாமல் வாங்கியவர்களுக்கும் இந்த வெளியீடு மகிழ்ச்சிதான்.
  இது போன்ற க்ளாசிக் கதைகளை,
  இதே சைஸில், 3 கதைகளாக வெளியிட வேண்டும். நன்றி சார் ❤️🌹❤️.

  பிறகு..
  அடுத்த வெளியீடுகள் குறித்த அறிவிப்புகள் ஒவ்வொருமுறையும் ஆவலை தூண்டுவதாக உள்ளது, இம்முறையும்.❤️

  "மெபிஸ்டோவே இனி வாணாம் !!" என்று வாக்கு குத்திய 15 ஜீவன்களுள் ஞானும் ஒருவன் !! ஆத்தீ !!!
  ஆச்சரியமாக உள்ளது நீங்களே இப்படி சொன்னது.

  மே பி அதிக ஓட்டுக்கள் வாங்கிய மெபிஸ்டோ இனி தொடர்ந்து வரவேண்டும்.

  ReplyDelete
  Replies

  1. ///மே பி அதிக ஓட்டுக்கள் வாங்கிய மெபிஸ்டோ இனி தொடர்ந்து வரவேண்டும்.///


   நெஞ்சமெல்லாம் தேனாறு பாயுது...

   Delete
 42. // எனது செப்டெம்பரின் இதுவரைக்குமான பொழுதுகளை பிஸியாக்கித் தந்த பணிகள் இவையே ! புக்காக்கி, ஒரே தொகுப்பாய் அத்தனை கதைகளையும் உங்களிடம் ஒப்படைக்கவும் , உங்களின் அலசல்களை உள்வாங்கிடவும் இப்போதே ஆர்வம் அலையடிக்கிங்ஸ் ! //
  செப்டம்பர் இறுதியில் வார நாட்களுடன் கூடிய சில விடுப்பு நாட்கள் வெயிட்டிங்,ஆகவே செப்டம்பரில் அக்டோபரை கொண்டாட வாய்ப்பை உண்டாக்குங்கள் சார்...!!!

  ReplyDelete
  Replies
  1. அதே அதே டெக்ஸின் பிறந்த நாளான 30 ஆம் தேதி அன்று எங்கள் கையில் புத்தகம் கிடைத்தால் நன்றாக இருக்கும் சார்.

   Delete
 43. https://lion-muthucomics.blogspot.com/2022/10/blog-post_30.html?m=0

  இது இந்தாண்டு ப்ளானர்....போன அக்டோபரில் வந்திருந்தது...

  இதில் டெக்ஸ் 75 ஸ்பெசல் ரூ750வா, 700பக்கங்களில்னு அறிவிப்பு உள்ளது..

  இப்ப 712 பக்கங்களாக வருது போல....
  போனஸ் 12 பக்கங்கள் சேர்ந்து கிடைக்கிறது...

  ரொம்ப மகிழ்ச்சி....


  ReplyDelete
 44. பிக் பாய்ஸ் ஸ்பெஷல்:

  இந்தக்கதையில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளுமே எனக்கு முதல் வாசிப்புதான். புத்தக தயாரிப்புத் தரம் படு அட்டகாசம். அதற்காகவே இந்த புத்தகத்தை வாங்கலாம்!

  ஸ்பைடர்: கொலைப்படை
  பால்யத்தில் எல்லோரையும் போலவே இரும்புக்கை மாயாவி மற்றும் ஸ்பைடரின் கதைகள் என்றால் எனக்கும் கொண்டாட்டம்! நண்பர்கள் சிலாகித்து கூறியதின் அடிப்படையில் மிகுந்த எதிர்பார்ப்புடனேயே ஆரம்பித்தேன். அக்மார்க் ஸ்பைடர் கதை. ஆனால் அந்த இருவண்ணம் ரசிக்க முடியவில்லை. கதையோட்டத்தில் நிறைய ஜம்ப் இருப்பது போல தெரிந்தது. ஸ்பைடர் ரசிகர்களுக்கு விருந்து.

  இரும்புக்கை நார்மன்: மனித எரிமலை
  கதை தொய்வில்லாமல் வாசிக்க நன்றாகவே இருந்தது. இந்த மாதிரியான கிளாசிக் கதைகள் கட்டாயம் மறுபதிப்பு செய்வதன் மூலம் எங்களைப் போன்றவர்கள் அதை முதன்முறை வாசிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

  இரும்புக்கை மாயாவி: கொலைகாரக் குள்ளநரி

  மாயாவிக்கு மார்க்கெல்லாம் போட முடியாது என்பது உலகறிந்த விஷயம். குள்ளநரி ஜாக்காலை இப்போது வாசிக்கவும் நன்றாகவே இருக்கிறது. இவையெல்லாம் முதன்முறை வெளிவந்த போது வாசித்த நமது சீனியர் நண்பர்களை நினைத்துப் பார்க்கிறேன். அந்த காலகட்டத்தில் காமிக்ஸ் மீது மிகப்பெரிய வசீகரத்தை ஏற்படுத்த இந்த மாதிரியான கதைகள் எந்த அளவு இம்பாக்ட்டை ஏற்படுத்தி இருக்கும் என்பதை அறிய முடிகிறது. அருமை!

  மொத்தத்தில் பிக் பாய்ஸ் ஸ்பெஷல் அட்டகாசமான கிளாசிக் விருந்து! S70, S60 கிளாசிக் சீரிஸை இதுபோல கலவையான நாயகர்களுடன் வெளியிட்டால் அதையும் எங்களைப் போன்றோரால் வாசிக்க முடியும் எனத் தோன்றுகிறது.

  ReplyDelete
 45. https://lion-muthucomics.blogspot.com/2022/06/blog-post_22.html?m=0

  இதுவும் போன செப்டம்பர் பதிவு....
  தல 75வருதுனு ஒரு 3பதிவுக்கு பெயர் வைக்கும் போட்டி நடந்து இந்த பதிவுல நம்ம சிவ்காசி நாட்டாமை தீர்ப்பு தந்திருந்தாரு....

  //தி நாட்டாமையின் தி தீர்ப்பு !
  நண்பர்களே,

  ஏதேதோ பணிகளுக்கு மத்தியில், ஜாலியாய் இதற்கென நேரம் தந்த அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள் !! You've made the last 2 days an absolute riot all !!! 😁😁பொறுமையாய் உங்களின் பொங்கல்ஸை 'ஏக் தம்மில்' பரிசீலனை செய்த போது கவனத்தை ஈர்த்த பெயர்கள் இவை :

  Sankar C - TEX DIAMOND ஸ்பெஷல்
  STV - The TEX 75
  ஈரோடு விஜய் - THE THALA 75 SUPER SPECIAL
  The Legend’s ஸ்பெஷல் -மகேந்திரன் பரமசிவம்.
  The Magnificent Tex ஸ்பெஷல் - P கார்த்திகேயன்
  Tex Diamond Jubilee ஸ்பெஷல் - ராகவன்
  The Terrific Tex 75 - Giridharasudarsan
  TEX 75- THE SUPREMO SPECIAL - MKS .Ramm
  The TEX Seventy Five Sensational Special (SSS) - Thirunavukkarasu Vazzukkupparai

  முதலிரண்டு பெயர்கள் short & sweet ! 'நறுக்'கென சொல்ல வேண்டிய சமாச்சாரத்தைப் பறைசாற்றுகின்றன தான் ! Ditto with Tex Diamond Jubilee ஸ்பெஷல் - by ராகவன்ஜி ! வாழ்த்துக்கள் நண்பர் Sankar C & STV & Raghavan சார் ! ஆனால் தற்போதைய தமிழ் சினிமாவின் டிரெண்ட் - ஒரு படத்தை அறிவித்த கையோடு 'தளபதி 65 " ; 'தல 70 " என்ற ரீதியினில் working title என்று அறிவித்து விட்டு பூஜையையும் போட்டு விட்டு, ஷூட்டிங்குக்கு கிளம்பிவிடுகிறார்கள் ! சாவகாசமாய் வேறொரு பெயர் சிக்கும் போது அந்த working title-ஐ காலி பண்ணிவிட்டு புதுசான பெயரைச் சூட்டிவிடுகின்றனர் ! TEX 75 என்பதும், DIAMOND SPECIAL / DIAMOND JUBILEE SPECIAL என்பதும் கிட்டத்தட்ட அந்த working title போலிருப்பதால் சற்றே அவை பின்தங்குகின்றன ! Sorry sirs !

  தி பூனையை DP-யிலும், குசும்பை வரிகளிலும் கொண்டிருக்கும் ஆயிரம் பன் கண்ட அபூர்வ சிகாமணியின் "தல 75 சூப்பர் ஸ்பெஷல்" செம மாஸ் தான் ! ஆனால் for obvious reasons அதனைத் தேர்வு செய்திடத் தயக்கம் மேலோங்குகிறது ! தமிழ் பேசும் நல்லுலகத்தின் முக்காலே மூன்றுவீசத்தினருக்கு 'தல' என்றாலே மனதுக்கு வருவது வேறொரு ஜாம்பவான் தானே ? So சற்றே சிந்தனைகளோடே பரிசு லாரியை ஈரோட்டிலிருந்து திசைதிருப்பத் தீர்மானித்தேன் ! Sorry-ங்கோ ; புண்பட்ட மனதை, பண்பட்ட ஒரு டஜன் பன்னால் அடுத்தவாட்டி ஆற்றிடலாம் !

  சரி, ரைட்டு...டெக்சஸ் தலைமகனின் சிறப்பிதழுக்கு LEGEND'S SPECIAL என்று பெயரிட்ட டெக்சஸ்காரவுகளுக்கே பரிசு வண்டியை அனுப்பிடலாமென்று நினைக்கும் தருணத்தில் இன்னொரு சமீபத்தைய (திரை) LEGEND கண்முன்னே வந்து வந்து போகிறார் ! 'ஆஹா....ஆஹாஹாஹா...நம்மாட்கள் மீம்ஸ் போட்டே ஒரு வழியாக்கிப்புடுவார்களே !!' என்ற பயத்தில் லாரியை ஜகா வாங்கிடத் தீர்மானித்தேன் ! Sorry again sir !

  ReplyDelete
  Replies
  1. ஆக, 9 பெயர்கள் கொண்ட தேர்வினில் எஞ்சியிருப்பன 4 titles :

   The Terrific Tex 75 - Giridharasudarsan
   The Magnificent Tex ஸ்பெஷல் - P கார்த்திகேயன்
   TEX 75- THE SUPREMO SPECIAL - MKS .Ramm
   The TEX Seventy Five Sensational Special (SSS) - Thirunavukkarasu Vazzukkupparai
   நான்குமே அதனதன் விதங்களில் powerful ஆகத் தென்பட, இந்த நாலுக்குள் ஒன்றைத் தேர்வு செய்யுங்களேன் என்று பந்தை உங்கள் திக்கில் திருப்பிவிட நினைத்தேன் ! ஆனால் இன்னொருக்க 'தி பொங்கலோ-பொங்கல்' ஆரம்பித்தால், முக்கால்வாசிப் பேர் தி ஓட்டமோ-ஓட்டம் பிடித்துவிடுவார்கள் என்பதால் shortlist செய்திடும் பணியைத் தொடர்ந்தேன் !

   நண்பர் கார்த்திகேயனின் THE MAGNIFICENT TEX ஸ்பெஷல் என்ற தலைப்பு சிறப்பென்றாலும், டெக்சின் 75-வது ஆண்டினைக் குறிப்பிட எதுவுமில்லை என்பதால் sorry சார் !

   நண்பர் வழுக்குப்பாறை திருநாவுக்கரசு முன்மொழிந்துள்ள பெயரும் (TEX Seventy Five Sensational Special) நயமாய் இருப்பினும் - டெக்ஸ் சைசிலான புக்கில் இத்தனை நீளமான பெயரை எழுதுவதென்பது ரொம்ப ரொம்ப கஷ்டம் ! So அதனையும் பின்தங்க அனுமதிக்க நினைத்தேன் ! Sorry நண்பரே !

   ஆக finals - நண்பர் கிரிதரசுதனின் The Terrific TEX 75-க்கும் நண்பர் MKS. ராமின் TEX 75 - THE SUPREMO SPECIAL-க்கும் மத்தியினில் தான் என்றாகிறது ! த்ரிஷாவா ? நயன் தாராவா ? என்றெல்லாம் இன்னமும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தால் விக்னேஷ் சிவன் விளக்குமாற்றால் சாத்துவார் என்பதால், சட்டென்று ஒரு தீர்மானத்துக்கு வந்தேன் - ரொம்பவே simple ஆனதொரு காரணத்தின் பெயரைச் சொல்லி :

   "Terrific Tex" - உச்சரிக்க, எழுத, வாசிக்க ரொம்பவே எளிதான பெயரே ! ஆனால் கொஞ்சம் plain ஆனதொரு பெயராக இருக்கக்கூடுமோ என்று லைட்டாக நெருடியது !! இங்கே பிரவாகமெடுத்திருந்த வேகங்களுக்கு ஈடு தரும் விதமாய் ; இன்னும் கொஞ்சம் ஸ்டைலிஷான பெயராய் இருந்தால் அழகாக இருக்குமே என்று நினைத்தேன் !

   அதற்கு 'நச்' என்று பொருந்தியதாய் நண்பர் MKS ராமின் "TEX 75 - THE SUPREMO SPECIAL" அமைந்தது போல்பட்டது ! கொஞ்ச வருடங்களுக்கு முன்பாய் வெளிவந்த "சர்வமும் நானே" இதழில் டெக்ஸ் & கோ.வுக்கு tough தந்த எதிராளிக்கு ஒரிஜினலில் "EL SUPREMO" என்று தான் பெயர் ! "சர்வ வல்லமை படைத்த தலைவன்" - என்ற பொருள்தரும் பெயரானது - நமது இரவுக்கழுகாருக்கு கனகச்சிதமாய்ப் பொருந்துவதாய் மனசில் தோன்றியது ! So - 2023-ல் காத்திருக்கும் 'தல 75 ' இதழுக்கு :

   TEX 75 - THE SUPREMO ஸ்பெஷல் !! என்ற பெயரினைச் சூட்டிடுவோமே folks ?

   வாழ்த்துக்கள் நண்பர் ராம் !!//

   ----அப்படீனு தீர்ப்பு தந்த நாட்டாமைக்கு ஒரு டன் வல்லாரை வாங்கி கொடுத்தாலும் பலன் இருக்குமானு தெரியல..😜

   வெற்றி பெற்ற MKSராம்க்கு மீண்டும் வாழ்த்துகள் உடன்..இதழை ஆவலுடன் எதிர் பார்த்த வேளையும் வந்திட்டது...💞💞💞💞

   Delete
  2. புதுசா சேர்ந்த ஆதிகால நண்பர்கள் எப்பங்க இந்த போட்டி நடந்துச்சினி கேட்க கூடாது பாருங்க... இந்த பதிவுலநான்...

   https://lion-muthucomics.blogspot.com/2022/06/blog-post_18.html?m=0

   பெயர் வைப்பதுனா நாம சும்மா இருப்பதா..ஆடி தீர்த்துட்டோம்ல...சோ ஒரே நாளில் வந்த உப பதிவும், தொடரும் பெயர்களும் இதில்....

   https://lion-muthucomics.blogspot.com/2022/06/the.html?m=0

   ---

   Delete
  3. அதிகாரி.. 75 Knock out...

   Delete
 46. // ஒற்றை இதழாக இருப்பினும், 4 தலைமுறைகளில் வெளியான கதைகள் என்பதால் ஒவ்வொன்றிலும் காத்துள்ள அனுபவம் ரொம்பவே different : //
  தி சூப்பர்மோ ஸ்பெஷல் இதழுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்,4 கதைகளையும் சேர்த்து குண்டு ஸ்பெஷலாக பார்க்கவே ஆசையா இருக்கு,இது போன்ற இதழுக்கு வெற்றி சதவீதம் அதிகம் என்பதால் ஆண்டிற்கொரு இதழ் இது போல் முயற்சிக்கலாமே...

  ReplyDelete
 47. ///செப்டெம்பர் 30,1948 தான் டெக்ஸ் உலகைப் பார்த்த பொழுது ! So சரியாக அந்த தினத்தினில் அவரது 75th பிறந்த நாள்மலரை நாம் வெளியிட வேண்டுமென்று எண்ணியுள்ளேன் ///

  ---இதுவும போன வருட ஜூலை பதிவுல இருந்து....!!!!

  ---வல்லாரை ச்சே நாட்டாமை சார்@ தாங்கள் எண்ணியது போலவே இந்த இதழ் தல பர்த்டே அன்றே ரீலீஸ் ஆகும் வாய்ப்பு உள்ளதாங் சார்???🎂🎂🎂

  ஒரு 10நாள் ஆகும்னாலும் எனக்கு ஓகே தான்.. காத்திருக்க தயார்!! ஆனா இந்த ********, *******, *********, **********, ......... இவுங்களுக்குலாம் ஓகேவானு அவுங்கதான் சொல்லணும்!!🤣

  (ஏதோ நம்மாள முடிஞ்சது..வரட்டுங்களா....)

  ReplyDelete
  Replies
  1. இன்னைக்கே அனுப்புனாலும் செப் 30 க்கே பிரிப்போம்னு எல்லாரும் உறுதி மொழி எடுப்போம் கை நீட்டி

   Delete
  2. எனக்கு ஓகே இல்லை. 30 September Book கிடைத்து விடுமா சார்?

   Delete
  3. காயாமா வந்தா பரவாயில்லையா சகோஸ்?
   மழைக்காலம் வேற

   நல்லா வந்தாலே குறை கண்டுபிடிக்கப்படும்

   மெதுவாக நன்றாக தயாராகி வரட்டும்

   Delete
  4. அது எதுக்கு காயப் படுது?

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
 48. அப்படியே அந்ந 700+ குண்டு டெக்ஸ் புத்தகத்தில் இதுவரை வராத டெக்ஸ் பத்தி தகவல்கள் (அ) போனெல்லி பற்றி தகவல்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆராச்சும் எழுதி அனுப்புங்க ரம்யா ; போட்ரலாம் !

   Delete
 49. //கொழுக்கட்டைகளை உள்ளே தள்ளும் போது ஆவ்ரெல் டால்டனை நினைச்சுக்கோங்கோ !! //

  கொழுக்கட்டையில் கோதுமை ஆவி😂😂😂😂😂

  இரண்டு வாரங்கள் முன்னர் தான் படித்தேன்
  ஆவ்ரேலின் அட்டகாசம் வயிறு வலிக்க சிரிப்பை தந்தது
  கூட ரின்டின் வேற 😂😂😂😂😂
  இந்த தடவை மாட்டியது எமிலியோ😆😆😆

  டால்டன்களோடு தகதிமிதா

  அருமையான சிரிப்பு இதழ்

  ReplyDelete
  Replies
  1. அருமையான வசனங்கள் பக்கத்துக்கு பக்கம் வெடிச்சிரிப்பு....

   கனவுலகம் போட்டிக்காக இருமுறை வாசித்து மகிழ்ந்த இதழ்....!!

   புத்தகமும் ஜாலியா இருந்தது வாசிக்க..
   போட்டியும் கலந்துக்க அதைவிட ரொம்ப ஜாலியா இருந்தது...

   Delete
  2. டால்டன்களோடு தகதிமிதா !

   லக்கி வரிசையிலொரு க்ளாசிக் !

   And அந்த வில்லன் எலிப்ளுகாஸ் கூட செம character !

   Delete
 50. மெஃபிஸ்டோ மீண்டு வந்து மாயன்‌ டெக்ஸ் கதைகளில் refreshing ஆக இருந்தது. டீவி சானல்களில் வரும்‌ மெகா சீரியல் போல இருந்த most of the Tex கதைகளில் இருந்து நல்ல வித்யாசம். திகில் கலந்த விறுவிறுப்பான கதை.
  முஷ்டியின் பலமோ, வின்செஸ்டர் இன் பலமோ அல்ல தலையின் மனோபலம் தான் பெரியது என்று தெள்ளத் தெளிவாக உணர்த்தும் கதை.

  (பி.கு) எதிரிகள் சுட்ட பல்லாயிரம் குண்டு களில் ஒன்று கூட அவர் உயிருக்கு பங்கம் விளைவிக்கலை தாண்டி என் தானைய தலைவர் மெஃபிஸ்டோ ஒன்றும் பெரிய விட்டலாச்சாரியர்தனம் செய்துவிடவில்லை

  இப்படிக்கு
  மாவீரன் மெஃபிஸ்டோ ரசிகர் மன்ற உறுப்பினர்.

  ReplyDelete
  Replies
  1. உங்க தானைத் தலைவர் ; நம்ம தலீவர் !

   ஒரு தொங்குமீசையை ஒட்டி விட்டு ; நீளமா ஒரு பைஜாமாவும் போட்டு விட்டாக்கா - யோசிச்சு பாருங்க ?

   Delete
  2. டெக்ஸ் சீரியல் பல்பு வாங்குனாவே கொண்டாடுவோம்.. இதில் மெர்க்குரி/ஹேலஜன் 1000W வாங்குனா....!!! அந்த குஷி இருக்க தானே செய்யும்😉

   Delete
 51. திரு. வெ. இறையன்பு.. அவர்கள்
  "காமிக்ஸ் படித்தே பின்பே எல்லாம்
  படிக்க ஆம்பித்தேன்.."என்று புகழ்ந்ததாக .. அறிந்து மிகவும் மகிழ்ந்தேன் friends.. 😄❤️🙏👍

  ReplyDelete
  Replies
  1. அட, அப்டியா சார் ? எங்கே படிச்சீங்க இந்தத் தகவலை ?

   Delete
  2. நண்பர் காமிக்ஸ் எனும் கனவுலகத்தில் பதிவிட்டிருந்தார் sir.. கீழே
   பாருங்க. மிகவும் மகிழ்ந்தேன்.. Sir.. முத்து காமிக்ஸ்.. இன் மாயாவி.. 😄😄😄❤️❤️❤️👍👍👍..

   Delete
 52. ////'ரூட் கெனால்' ட்ரீட்மெண்ட் என்று குடைந்து ரொப்பிய பல்லின் வேரில் மறுக்கா சீழ் பிடித்திருக்க, அதனை பொறுமையாய் தான் சீர் செய்திட இயலுமென்று டாக்டர் சொல்லி, மாத்திரைகளைத் தந்திருந்தார் ///

  --ஓவ்...பல்வலி எப்படி இருக்கும் னு எனக்கு நிறைய அனுபவம் உண்டுங் சார்... காலேஜ்ல ஸ்டிச்சிங் பால் முகத்தில அடிச்சி ரெண்டு பல் தெறிச்சி ரூட் கேனல் & பெரிப்ரல் சர்ஜரிலாம் பண்ணியிருக்கேன்...கேப் போட்டு இருப்பதால் எலும்பு கடிப்பதும் சிரமம்...

  டேக்கேர் சார்....!! கொஞ்சம் கொஞ்சமாக தான் ஹீல் ஆகும்...


  பல்வலி பற்றி நம்ம ஐயா கலைவாணரும் ஜோக்காக சோல்லி இருப்பார்...

  ஒண்ணு உட்டன்னா பல்லு 31ம் கொட்டிடும்னு உதவியாளர்கிட்ட சொல்லுவார்..
  உதவியாளர் கேட்பாரு, ஐயா பல்லு மொத்தம் 32ங்களேனு...
  ஐயா சொல்லுவாங்க, "அந்த 1ம் உனக்கு பல் வலி வரத்தான்னு...😉"

  ReplyDelete
 53. Rip Kirby இம்முறை அனைத்து கதைகளும் அருமை, நான் பொக்கிஷம் தேடிய பிசாசு ,ஆப்ரேஷன் அலாவுதீன், இரண்டில் ஏதாவது ஒன்று வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். காசு இல்லா கோடீஸ்வரன் எனது பேவரைட் மினி லைன் காமிக்ஸ்.
  இந்தச் 70s and 60s வரும் 2024 இல் தொடருமா எடிட்டர் ஜி

  ReplyDelete
  Replies
  1. க்ளாசிக் நாயகர்கள் தொடர்வார்கள் சார் ; சற்றே மாறுபட்ட டெம்ப்லேட்டில்

   Delete
 54. திரு. வெ. இறையன்பு... சொல்கிறார்.. இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் டேவிட், இமயத்தில் மாயாவி, பஞ்சத்தந்திரகதைகள், ஈசப் கதைகள் எல்லாம் நமக்கு ஒரு
  வெளிச்சம் தரும்.. பிறகு நாம் பல நூல்களை படிக்க ஆரம்பித்து விடுவோம்" என்று காமிக்ஸ் ஐ ஒரு வெளிச்சமாக உருவகப்படுத்துகிறார்.. அற்புதம்.. அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி... கடை கால் மணி நேர பாருங்களேன் friends... ❤️❤️❤️❤️🙏🙏👍

  ReplyDelete
 55. முழுதும் பார்க்க நேரம் இப்ப நேரம் இல்லை என்றால்.. கடைசி
  கால் மணி நேரம் பாருங்களேன்... Excellent ❤️..
  எத்தனை புத்தகம் எழுதியிருப்பார்.. Wow .. 🙏

  ReplyDelete
 56. புதிய தலைமுறை... பேட்டியில்
  சொல்கிறார் sir.. U tube ல் உள்ளது...இன்றைய நிகழ்வு.
  என்று நினைக்கிறேன் sir😄😄❤️❤️👍

  ReplyDelete
 57. இரவே.....இருளே.....
  கொல்லாதே....!  ஹாலோவின் இரவு அன்று தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது சிறுவர் மற்றும் சிறுமிகள் வீட்டினுள் அமைதியாக உறங்கிக் கொண்டுள்ளனர் போலீஸ் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர் மக்கள் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பயத்தில் இருந்தனர், இவை அனைத்திர்க்கும் காரணம் அவ்வூரில் நிகழ்ந்து வரும் தொடர் கொலைகள்...

  சில நாட்களுக்கு முன்பு, மாண்டானாவில் இருந்து லாஸ் ஏஞ்சிலிஸ் செல்லும் வழியில் பெட்ஸி மகோர்ன் என்னும் சினிமா நடிகை விபத்துக்குள்ளானாள்,பின்னர் பெட்ஸி சிகிச்சைக்காக அருகிலுள்ள ஒரு சின்னஞ்சிறு ஊருக்கு அழைத்துச் செல்லப்பாட்டாள் , நினைவு திரும்பிய பின் அவளுக்கு விபத்தின் போது உதவி செய்ய வந்தவர் அவளது கண்முன்னரே பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். அந்தக் கொலைக்கும் பெட்ஸிக்கும் ஒரு தொடர்பிருப்பதாக எண்ணிய அவ்வூரின் ஷெரீப் அனுமதி இல்லாமல் அவள் ஊரை விட்டு வெளியேரக் கூடாது என்று தடை விதித்தார். பின்னர் அவ்வூரில் நடந்த தொடர் கொலைகள், அதற்கு காரணம் என்ன?,யார் அந்த கொலையாளி? என்பது தான் இக்கதை.

  இந்த கதைல நிறைய Flashback இருக்கறதால படிக்க ரொம்ப சுவாரசியமா இருந்தது. கடைசிவரை யார் அந்த கொலையாளின்னு கண்டுப்பிடிக்க கஷ்டமா இருந்துச்சி அதுக்கு காரணம் கதாபாத்திரங்களை வடிவமைச்ச விதம் , எந்த கேரக்டரப் பாத்தாலும் இவங்க தான் கொலையாளியா இருப்பாங்களோன்னு சிந்திக்க வெச்சது. வியப்பான ட்விஸ்ட் அன்ட் டர்ன்ஸ் நிறைய உள்ள கதை. இந்த கதை என்னோட favourite கதைகள் லிஸ்ட்ல சேர்ந்துடுச்சி.

  இதேமாதிரி நிறைய கதைகள் படிக்கணும்னு ஆசையா இருக்கு. வெளியிடுவிங்க என்று எதிர்பார்கிறேன் சார்.

  ReplyDelete
  Replies
  1. //இதேமாதிரி நிறைய கதைகள் படிக்கணும்னு ஆசையா இருக்கு. வெளியிடுவிங்க என்று எதிர்பார்கிறேன் சார்.//
   இது போல் நாம் பார்க்காத கதைகள் இன்னும் பல குவிந்து கிடக்கிறது, உங்களை போல் புதியவர்கள் நிறைய பேர் இணைந்து தான் இப்போது இருக்கும் நிலையை மாற்ற வேண்டும். அதுவரை இது போன்ற கதைகளை இனி பார்க்க முடியாது.

   Delete
  2. ரசணையான விமர்சனம் மது!! ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது!
   ரொம்பவே வித்தியாசமான, வியக்கச் செய்திடும் படைப்பு இது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது வாசகர்களின் ஒரு பகுதிக்கு இந்த கி.நா பாணி கதையின் போக்கை சரிவரப் புரிந்துகொள்ளமுடியாமல் போனதில் - ஜூனியர் எடிட்டரின் தேடுதலில் கிடைத்த இந்தப் பொக்கிஷம்- கமர்ஷியல் வெற்றியை எட்டிப் பிடிக்கமுடியாமல் போனது!

   என்னளவில் இதுபோன்ற கதைகளையே அதிகம் விரும்புகிறேன்!

   இதுபோன்ற கதைகளுக்காகக் காத்திருப்பேன்!

   Delete
  3. செம விமர்சனம் மது...!!

   ஓரு கட்டத்தில் நாமே குத்துவது போன்ற பிரமையை ஏற்படித்திவிடும் கதை...

   பட்டாசான கதை..

   நேர்த்தியான விமர்சனம்..

   கீப் கோயிங்...

   அடுத்து "யுகம் தாண்டியொரு யுத்தம்" & எமனின் திசை மேற்கு, தேவரகசியம் தேடலுக்கல்ல, படித்து பாருங்க... உங்க ரசனைக்கு செமயாக விருந்து போடும் அவைகள்...

   Delete
  4. ஒற்றை நொடி ஒன்பது தோட்டா, கென்யா, பாராகுடா, ஒரு முடியா இரவு, ஜேசன் பிரைஸ், நீரில்லை நிலமில்லை, பவுன்சர் - சர்ப்பங்களின் சாபம், விடுதலையே உன் விலை என்ன, இவைகளையும் சேர்த்து கொள்ளுங்கள்

   Delete
  5. @Erode VIJAY

   தேங்க்ஸ் Uncle ........

   Delete
  6. @சேலம் Tex விஜயராகவன்

   தேங்க்ஸ் Uncle....

   Delete
  7. @Madhu M S D

   நல்ல கதை.. நல்ல விமர்சனம்..

   உங்கள் அப்பாவிடம் கேட்டு சிப்பாயின் சுவடுகளில்...
   தேவரகசியம் தேடலுக்கல்ல.. ஜேசன் ப்ரைஸ்..
   எமனின் திசை மேற்கு..
   எல்லாம் படியுங்கள்..!

   அப்பப்போ இடையில்..
   வல்லவர்கள் வீழ்வதில்லை..
   தலையில்லா போராளி.. மரணமுள்..மின்னும் மரணம்.. ரத்தக்கோட்டை.. தங்கக்கல்லறை.. மாதிரியான கமெர்சியல் கதைகளையும் படியுங்கள்..!

   அப்புறம் ரத்தப்படலம் ஆரம்பிச்சி முதல் பாகத்தோட நிற்குதுன்னு கேள்விப்பட்டேன்.. அதையும் கவனிங்க..!

   லார்கோ.. ஷெல்டன்னு லிஸ்ட் பெருசா இருக்கு..
   இதுபோக கார்ட்டூன்ஸ் வேற தனியா இருக்கு...
   எல்லாம் படிச்சிங்கன்னா சந்தோசம்..!
   வாழ்த்துகள் மது சார்..!

   Delete
  8. @Thirunavukkarasu vazzukkupparai

   என் அப்பா தான் கதைகள் எல்லாம் Suggest பன்னிட்டிருக்காரு, நீங்க
   suggest பண்ணின இந்த கதைகளையும் நான் என் லிஸ்ட்டில் சேர்த்திக்கிறேன் சார். அதுமட்டுமல்லாம நான் காலேஜ் போய்ட்டு வர்ரதுனால ஃப்ரீ டைம் கிடைக்கும்போதுதான் காமிக்ஸ் படிக்க முடியுது , ஆனா கண்டிப்பா நீங்க சொன்ன கதைகளை படிச்சு விமர்சனம் எழுதிடுறேன் சார்.

   இந்த மாதிரி Sugggest செய்வதற்க்கு உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

   Delete
  9. @KID ஆர்டின் KANNAN
   //நல்ல கதை.. நல்ல விமர்சனம்..

   உங்கள் அப்பாவிடம் கேட்டு சிப்பாயின் சுவடுகளில்...
   தேவரகசியம் தேடலுக்கல்ல.. ஜேசன் ப்ரைஸ்..
   எமனின் திசை மேற்கு..
   எல்லாம் படியுங்கள்..!

   அப்பப்போ இடையில்..
   வல்லவர்கள் வீழ்வதில்லை..
   தலையில்லா போராளி.. மரணமுள்..மின்னும் மரணம்.. ரத்தக்கோட்டை.. தங்கக்கல்லறை.. மாதிரியான கமெர்சியல் கதைகளையும் படியுங்கள்..!

   அப்புறம் ரத்தப்படலம் ஆரம்பிச்சி முதல் பாகத்தோட நிற்குதுன்னு கேள்விப்பட்டேன்.. அதையும் கவனிங்க..!

   லார்கோ.. ஷெல்டன்னு லிஸ்ட் பெருசா இருக்கு..
   இதுபோக கார்ட்டூன்ஸ் வேற தனியா இருக்கு...
   எல்லாம் படிச்சிங்கன்னா சந்தோசம்..!
   வாழ்த்துகள் மது சார்..! //


   அப்டியா சார் சரிங்க சார்
   ட்ரை பண்ணுறேன் சார்

   Delete
  10. @KOK யோவ் மாமா@ மது சார் புதுசா வாசிக்க ஆரம்பிக்கிறார்யா....

   இரத்தப்படலம், தோர்கல் மாதிர்ரியான நெடுந்தொடர் இப்ப வேணாம்யா....

   டெக்ஸ், தங்க கல்லறை&
   யுகம் தாண்டி யொரு யுத்தம், எமனின் திசை மேற்கு, தேவரகசியம் தேடலுக்கல்ல மாதிரி பரபரப்பானதாக சொல்லுய்யா....

   கல்லூரி போக கிடைக்கும் நேரத்தில் தான் வாசிக்க இயலும்னு போட்டுள்ளார்..

   சோ ஒன்லி டாப் ரேட்டிங் மட்டுமே ரெகமண்ட் பண்ணலாம்!!!

   பிற்பாடு நம்ம செட்டில அவரே இணைந்திடுவாரு...

   Delete
  11. கரெக்டுதான் மாமா..
   ஆனா இரத்தப்படலம் ஸ்கூல் படிக்கிறப்பவே ஆரம்பிச்சி பாதியில நிறுத்தியிருக்கிறதா சொன்னாரு மாமா..!

   அதுமட்டுமில்லாம சட்டக்கல்லூரி எல்லாம் அரைநாள்தான் வகுப்புகளாம்.. டைம் கிடைக்கும்னு மது சாரே சொன்னாரு மாமா..😃

   Delete
  12. வாவ்... நிறைய தகவல்களை விசாரித்து அறிந்து உள்ளாய் போல மாமா.. செம...!!

   சட்டக்கல்லூரி னா நிறைய நேரம் இருக்கத்தான் செய்யும்..

   அவருக்கு அப்ப லார்கோ ஃபுல் சீரியஸ் வாசிக்க ரெகமண்ட் பண்ணலாம்....

   கம்பெனி ஆக்டுகள், நிதிநிலமை, கையகபடுத்தல், உலகம்ச சுற்றுதல், பூகோளம்னு நிறைய கதையோடு தேவையான ப்ராக்டிகல் விசயங்கள் இருக்குமே!

   இ.ப.வும் நல்ல ஆப்சன் தான்...!!

   Delete
  13. இதெல்லாம் ரொம்ப ஓவர் -.சொல்லிட்டன்!!😬

   Delete
  14. மது சார்..என்னோட சூப்பர் சீனியர்கள் அல்ரெடி உங்களுக்கு என்னென்ன புக்கு படிக்கனும்னு சொல்லிட்டாங்க. அதனால நான் தனியா சொல்லப் போறதில்லே. விமர்சனம்
   எல்லாம் நல்லா எழுதறீங்க. தொடர்ந்து விமர்சனம்
   எழுதுங்க… அந்ததந்த மாதக்கதைகளுக்கும் எழுத ட்ரை பண்ணுங்க சார்…

   Delete
  15. ////இதெல்லாம் ரொம்ப ஓவர் -.சொல்லிட்டன்!!😬///
   ---ஈவி@ இல்லையே... லார்கோ மொத்தமே 10புக் தானே!!!!

   Delete
  16. ஷெரீப்@ ////சூப்பர் சீனியர்கள் அல்ரெடி உங்களுக்கு என்னென்ன புக்கு படிக்கனும்னு சொல்லிட்டாங்க////---யோவ் மாப்பு போன வாரந்தானே பிறந்தநாள் கொண்டாடினாய்.. அது எத்தினியாவதுனு தெரியும் எங்களுக்கு.....😉


   இன்னும் ஒரு ரன் அடிச்சா கிரிக்கெட்ல பேட்ஸ்மேன்களாம் பேட்டை தூக்கி காட்டுவாங்கனு ரசிகர்கள் ஆவலோடு பார்ப்பாங்க... கிரவுண்ட்டே கைதட்டும்....பச்சாஸ் ரன் பூரி ஹே னு தூர்சர்ஷன் வாய்ஸ் நம்ம காதுல விழுகும்....

   நாங்க இப்பதான் மது சார் போலவே கல்லூரி போகும் இளந்தலைமுறையோடு கிரிக்கெட் ஆடுறோம்யா...😍

   Delete
 58. இது ரொம்பவும் வருந்த தக்கதாக உள்ளது. மேபிஸ்டோ வேண்டாம் என்பவர்கள் டெக்ஸ் வேண்டாம் என்பது போல் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. அட விட்டு தள்ளுங்க செந்தில் சார்.....!!!! கூல்..கூல்...!!! வருத்தம்லாம் வேணாம்... அனைவருக்கும் அவரவர் கருத்தை கூறும் சுதந்திரம் உள்ளது... நாம அதை ஏற்றுக்கொள்ளனும்.

   டெக்ஸ் கதையை வாசிப்போர் ஒரு சில விசயங்களை புரிந்து கொண்டால் போதும்....

   TeXகதைனா ஆரம்பம் முதல் டூமீல் டூமீல் மட்டுமே ஒலிப்பதா?

   அரிசோனாவுல போறவன் வர்றவன் எல்லோரையும் சில்லுகளை சிதற வைப்பதா???

   கும்...ணங்...சத்... மட்..மடார்..படார்னு சத்தம் வந்தா தான் அது மனதை கவருமா???,என்றால் நிச்சயமாக இல்லை,

   "டெக்ஸ் கதைலயும் எல்லா வெரைட்டியும் உண்டு."

   மெபிஸ்டோவும் ஒரு வெரைட்டி...

   டெக்ஸ் கதைகள்னா அடிதடி மட்டுமே சாஸ்வதம் அல்ல.

   டெக்ஸ் வில்லரை ஒரு அடியாள் கணக்காத்தான் ஆரம்பத்தில் படைத்தார்கள். ஆனா அதுமட்டுமே போதாது என காலம் உணர்த்தியது.

   வெறும் அடிதடி கலாட்டாக்களில் இருந்த டெக்ஸை மெல்ல மெல்ல சட்டத்தின் காவலராக மாற்றினார்கள்.

   பின்பு பலதரப்பட்ட வெரைட்டிகளை டெக்ஸ் கதைகளில் புகுத்தினார்கள்.

   வெறும் அடிதடி ஆளாக இருந்த டெக்ஸை நவஹோ தலைவராக ஆக்கினார்கள்.

   சட்டத்தின் காவலராகவும் டெக்ஸை பரணமிக்கச் செய்தனர்.

   கொலைகளை துப்பறியும் கதைகள்,
   மோரிஸ்கோவுடன் சேர்ந்து அமானுஸ்ய மர்மங்களை கட்டவிழ்ப்பது,
   நவஹோக்களை உரிமைக்காக போராடவைப்பது,
   சட்டத்தை கையில் எடுக்கும் உள்ளூர் பிரமுகர்களை ஒடுக்குவது,
   நிலங்களை அபகரிக்கும் டான்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பது,
   ஷெரீஃப் இல்லா இடங்களில் சட்டத்தை நிலைநாட்டுவது,
   ராணுவ தில்லுமுல்லுகளை களைவது,
   டாலர்களை போலியாக அடிக்கும் கும்பல்களை பிடிப்பது,
   கான்ஃபெடரேட் போராளிகளை அடக்குவது,
   வெளிகிரக ஆபத்துகள் துப்புதுலக்குவது,
   குழந்தைகள் கடத்தல் கும்பல்களை வேறருப்பது,
   மெபிஸ்டோ , யமா என்ற மந்திரவாதிகளோடு மோதுவது,
   நவஹோக்களின் உட்பிரச்சினைகள் தீர்த்து வைப்பது,
   --------------------
   -------------------
   இப்படி பல வெரைட்டிகள்ல உட்புகுந்து வரும்போது, எல்லா மாதிரியும் தான் கதைகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

   கியூபா படலம், மீண்டு வந்த மாயன் மாதிரியும் உண்டு!

   கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் ஆன கேரக்டர் தான் டெக்ஸ்!!!

   900டெக்ஸ் கதைகள் வந்திருக்கு இத்தாலியில், அதில் இதுமாதிரி ஒருசிலது இருக்கும்.

   நாம முதன்முதலில் இந்த வகை முழுநீள கதை பார்ப்பதால் இதன் தாக்கம் எல்லா மாதிரியும் இருப்பது புரிந்து கொள்ள முடிகிறது.

   மெபிஸ்டோவையும் ஆண்டுக்கொரு முறை ரசிக்க பழகிக்கிவோம் தோழர்களே!!!!💕💕💕

   Delete
  2. எதுக்கு ஒரு முறை. ஒரு நாலைந்து முறை ரசிக்கணும் இனிமே

   Delete
  3. குமார் ஜி, டெக்ஸ் ரசிகர்கள் பாதி பேர் தெறித்து ஓடி விடுவார்கள். என்னையும் சேர்த்து தான்.

   Delete
  4. மொத்தமே 15 பேர் தான் வேண்டாம் என்று சொன்னவர்கள். நமது எடிட்டர் சாரையும் சேர்த்து.

   Delete
  5. மொத்தமே 15 பேர் தான் வேண்டாம் // டெக்ஸு வாங்கி கட்டறதை ரசிக்க இத்தினி பேரு இருக்காங்களா

   Delete
  6. KS@ அம்புட்டு வெறி மாப்பிள்ளைக்கி....

   ஷெரீப்@ பொறுய்யா...பொறு... தீவாளிக்கி "அரை ட்ரவுசர்" வந்து எப்படி கிழியப்போகுதுனு பார்க்கத்தானே போறோம்.

   (அருஞ்சொற்பொருள்,அரை ட்ரவுசர்= யங் டைகர், யங் டைகருக்கு இப்படியொரு பெயரை வழங்கிய மஹிக்கு நன்றி🤭)

   Delete
 59. ****** மரணத்தின் நிறம் நீலம் ******

  பதைபதைக்க வைத்த கதை! ப்ளூ ப்ளேக்கினால் மரணத்தின் வாயிலைத் தட்டிக்கொண்டிருக்கும் குடும்பத்தினர்.. உயிர் காத்திடும் மருந்தைத் தேடி ஓடும் தோர்கல்... 5 நாட்களுக்குள் மருந்துடன் வராவிட்டால் குடும்பத்தினரை காவு கொடுக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலை...
  எப்படியும் சாதித்துவிடுவான் தோர்கல் - என்பது நமக்குத் தெரியும் தான்! ஆனாலும் நெஞ்சுக்குள் அந்தப் பதைபதைப்பு நீங்காதிருக்கும் மாயாஜாலத்தைச் செய்திருப்பது கதாசிரியரும், ஓவியரும்! நமது கருணையானந்தம் ஐயாவும் தன் பங்கிற்கு பின்னிப் பெடலெடுத்திருக்க - நமக்குக் கிடைத்திருப்பதோ ஒரு தங்குதடையில்லா திக்திக் வாசிப்பு அனுபவம்!

  கதையின் இறுதியில் எனக்குத் தோன்றிய சமாச்சாரம் இதுதான்: தன் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிடும்பொருட்டு, தினமும் சர்க்கஸ் சாகஸத்திற்கு இணையான சாலைப் பயணங்களிலும், விழிபிதுங்கச் செய்திடும் வேலைப் பளுவையும், திணுசு திணுசாய் பிரச்சினைகளையும் சந்தித்துவிட்டு இரண்டாம் ஜாமத்தில் வீடுதிரும்பிடும் ஒவ்வொரு நடுத்தரவர்க்கத்து ஆணும் - ஒரு தோர்கலைப் போன்றவரே!

  இரண்டாவது கதை - தோர்கலின் வழக்கமான டெம்ப்ளேட்டில் பயணிக்கும் ஒரு நேர்கோட்டுக்கதையே!! சித்திரங்களில் சில பேனல்களில் கார்ட்டூன் பாணி முகங்கள் வரையப்பட்டிருப்பது ஏனென்று புரியவில்லை!!

  தங்கக் காசு புதையலைக் காத்து நிற்கும் மண்சட்டிக் கலயம் - அட்டைப்படம்!

  10/10

  ReplyDelete
  Replies
  1. //தங்கக் காசு புதையலைக் காத்து நிற்கும் மண்சட்டிக் கலயம் - அட்டைப்படம்!//

   உடைச்சதனாலதானே புதையலே கிடைச்சது ஈவி!

   Delete
  2. ///உடைச்சதனாலதானே புதையலே கிடைச்சது ஈவி!///

   அது ஒரு டூப்ளிகேட் சட்டிங்க SK. நல்லா -
   பொங்கப் பானைக்கு பெயிண்ட் அடிச்ச மாதிரி இருந்தாலும், ஓட்டைகளோட இருந்துச்சு! அதான் மட்'டுனு போட்டு உடைக்க வேண்டியதாகிடுச்சு! ;)

   Delete
  3. தங்க கலயத்தில் வராட்டிகள் பெற்ற அபூர்வமான அனுபவங்களும் நாம் பெற்றதுண்டுதானே இசிஈ இளவரசே! அதற்கு இது மேல் என எண்ண வேண்டியது தான்:-)

   Delete
  4. அதுவும் சரிதானுங்க செனா அனா! :)

   Delete
 60. நான் செபிஸ்டோவுக்காக ஓட்டெடுப்பு நடத்தலாம் என்று எதார்த்தமாகத்தான் கூறினேன். ஆனால் ஆசிரியர் ஓட்டெடுப்பு நடத்தி விட்டார். ஓட்டெடுப்பில் மேபிஸ்டோ வென்றதில் மிக்க மகிழ்ச்சி. அப்ப அடுத்த வருடம் மேபிஸ்டோ கலரில் வெளியிடுவீர்களா சார். ஒருவேளை அடுத்த வருடம் முன்பதிவுக்காக இருந்தால் முதல் புத்தகமாக என்னுடையதை பதிவு செய்து கொள்கிறேன்.

  ReplyDelete
 61. வேறஎது...!! 😜குண்டாக இருந்தாலும் மகிழ்வு கொள்ளாத மனது டெக்ஸ் புக்ஸ் மட்டும் குண்டாக இருக்கும் போது பறக்கிறது இறகு இல்லாமலே ...

  ReplyDelete
  Replies
  1. புக்கோ குண்டாக
   மனசோ இறகாக
   பறப்பதோ வண்டாக
   ........

   Delete
 62. நள்ளிரவு வேட்டை. டெக்ஸ் நண்பர்களில் ஒருவர் தனக்கு ஒரு இக்கட்டு தனக்கு உதவி செய்ய வருமாறு வேண்டுகோள் விடுகிறார்.டெக்ஸ் வீலர் அங்கே செல்லும் முன் அந்த நண்பர் எதிரியின் கும்பலால் கொல்லப்படுகிறார்.தாமதமாக செல்லும் டெக்ஸ் தன் நண்பரின் குழந்தையை காப்பாற்றியதுடன் அந்தக் கும்பலை பற்றிய தகவலை கண்டறிந்து அந்த கும்பலை வேர் அறுத்தாரா. அந்த கும்பலின் தலைவனை கண்டுபிடித்தார் என்பதுதான் கதை. ஆரம்பம் சில பக்கங்கள் தொய்வாகச் செல்லும் கதையை அதன்பின் பட்டாசாக செல்லும். டெக்ஸின் ஆத்மா கதைகளில் இதுவும் ஒன்று. நான் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்த 1995களில் இருந்து என்பதால் இது ஆரம்ப கால கதை. முதல் நான் படித்த முதல் கதையான பாலைவன பரலோகத்திலேயே நான் டெக்ஸிடம் மனதை பறிகொடுத்தேன். அடுத்து வந்த மரணமுள் டெக்ஸை என்னுள் எங்கோ சென்று உட்கார வைத்து விட்டது. இத்தனைக்கும் மரணமுள் எந்த ஒரு ஆக்ஷனும் இல்லாத கதை. டென்ஷன் டெம்ப்ளேட் இல்லாத கதை என்றும் கூட சொல்லலாம்.அதன்பின் படித்த மூன்றாவது கதை தான் இந்த நள்ளிரவேட்டை. பாலைவன பரலோகம் மரண முள் போல் இந்தக் கதையும் ஆரம்பம் முதல் இறுதி வரை மனப்பாடம் ஆகிவிட்டது. இந்த நள்ளிரவு வேட்டை எப்பொழுது மறு பதிப்பாக வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.
  STV அண்ணா இந்த கதை பற்றி உங்களுடைய நினைவையும் பகிரவும். எதிர்பார்ப்புடன் சதாசிவம் காங்கேயம்

  ReplyDelete
  Replies
  1. அருமை சதா...செமயான நினைவுகள்.. ஒன் ஆஃத த ஜெம் இந்த ஸ்டோரி....!!

   Delete
 63. நாளைக்கு தோர்கல் ஆரம்பிக்கலாமின்னு இருக்கேன்...

  தெகிரியமா போலாமா.. ஒண்ணும் பிரச்சினை இல்லையே.?

  ReplyDelete
 64. பேரிக்காய் போராட்டம் : FUNNY 8/10

  தோர்கல் :

  மரணத்தின் நிறம் நீலம் :

  கதையை எழுதியவரான வான் ஹாமேக்கு BLUE PLAQUE கிடைப்பது உறுதி. 8.5/10

  மர்ம சாம்ராஜ்யம் : பழனி முருகன் மாதிரி குடும்பமே உலகம் என தோர்கல் ஞானோதயம் பெறுவது மகிழ்ச்சி.8/10

  மிஸ்டர் நோ ( அமேஸானில் அதகளம்): அலுப்புடன் படிக்கத் துவங்கிய கதை. நேர்கோட்டில் , வேகத்துடன் ,அளவான கதை நீளத்துடன் பயணித்த சாகசம்.
  ஆசியா பைனலில் முகமது சிராஜ் பந்து வீச்சு போல. Line and length and speed.

  எதிர்பாராத இன்ப அதிர்ச்சி 9.1/10

  ராக் கிர்பி : பின்னொரு நாளில் வாசிக்க உத்தேசம்.

  ReplyDelete
  Replies
  1. அட்டகாச முடிவு...குடும்பம்னவுடன் தொடருமா ஏக்கத்துடன்...அடுத்த கதைக்காகதான்

   Delete
  2. ///கதையை எழுதியவரான வான் ஹாமேக்கு BLUE PLAQUE கிடைப்பது உறுதி.///

   புரியலீங்களே செனா அனா?!!

   Delete
  3. ஆங்! கூகுள்ல பார்த்ததுக்கப்புறம் கொஞ்சம் புரியுது. அது ஏதோ அவார்டு போல!!

   Delete
 65. Dr ji.காசில்லா கோடீஸ்வரனில் ஆரம்பியுங்கள் . சாவறியா சிரஞ்சீவிகள்.கடைசிக்கா வச்சுக்கங்க . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 66. விநாயகர் சதுர்த்திக்கு ஒரு விசேஷ பதிவு வேண்டும் சார்....

  ReplyDelete
 67. டெக்ஸ் ஸ்பெஷல், நான்கு தலைமுறை படைப்புகள், உங்கள் அறிமுகம் ... ஆர்வத்தை தூண்டி விடுகின்றன, எடி ....

  I am Waiting 😎

  ReplyDelete