நண்பர்களே,
வணக்கம். ஒரு வழியாய் நேற்றைக்கு கூரியர் டப்பிக்கள் இங்கிருந்து புறப்பட்டு விட்டன - சுக்காய்க் காய்ந்த ஹார்ட் கவர் புக்சின் பைண்டிங் சகிதம் ! So கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு பெட்டியாட்டம் தென்படும் ரிப் கிர்பி இதழினை தைரியமாய்ப் புரட்டலாம் ! கூடவே தோர்கல் ; நெவாடா & மிஸ்டர் நோ இடம் பிடித்திருப்பதால் - ரொம்பவே varied ஜானர்களில் வாசிப்பு இம்முறை(யும்) வெயிட்டிங் !
இங்கி -பிங்கி போட்டு எதை முதலில் வாசிப்பதென்று தேர்வு செய்தாலும் சரி, உங்களின் ரசனைகளுக்கேற்ப தேர்வு செய்தாலும் சரி - எனது பார்வையில் இம்மாத show stealer - நமது கண்ணாடிக்கார ஜென்டில்மேன் டிடெக்டிவின் டைஜஸ்ட் தான் ! தெள்ளத் தெளிவான கதைகள் ; சிம்பிளான கதை மாந்தர்கள் and ரொம்பவே நேசமான புன்னகையுடனான ரிப் கிர்பி 8 கதைகளில் ஜாலம் செய்திருக்க, நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்க இது செம தேர்வாக இருக்கக்கூடும் ! And எட்டில் ஒரு குட்டிக்கதைக்கு நமது குடந்தை நண்பர் J பேனா பிடித்துள்ளார் ! அது எந்தக் கதையென்று spot செய்திட முடிகிறதாவென்று பாருங்களேன் !
இம்மாதத்தின் இன்னொரு black & white இதழான மிஸ்டர் நோ சாகசமும் செம நேர்கோடு & செம சுவாரஸ்யம் ! சிம்பிளான கதைக்கருவே என்றாலும் அந்த அமேசான் கானகப் பின்னணி சூப்பராக ரசிக்கச் செய்கிறது ! பர பர ஆக்ஷன் & நம்ம V காமிக்சின் வாடிக்கைப்பாடி செம crisp வாசிப்பும் இங்கு கியாரண்டி ! So வாரயிறுதி வரைக்கும் அதிக நேரம் தந்திட இயலா நண்பர்களுக்கு - இது செம apt choice ஆக இருக்கக் கூடும் !
And தோர்கல் !! கணிசமான மொத்துக்களை அட்டைப்படம் ஈட்டியிருப்பினும், உள்ளிருக்கும் 2 கதைகளும் காப்பாற்றி விடுமென்ற நம்பிக்கையுள்ளது ! க்ளாஸிக் கதைகள் என்பதால், இரண்டுக்குமே நமது கருணையானந்தம் அவர்களே பேனா பிடித்துள்ளார் ! தோர்கலின் பயணம் தொடர்ந்து செல்கிறது - கொஞ்சமாய் வளர்ந்த ஜோலனுடன் ! பின்னாட்களில் அந்தக் குட்டிப்பையனுக்குமே இத்தொடரில் முக்கிய பங்கிருக்கவுள்ளது என்பதை கதாசிரியர் லைட்டாக கோடிட்டுக் காட்டுவதாக எனக்குத் தோன்றியது !! பார்ப்போமே !
And இறுதியாய் புது வரவு நெவாடா ! வன்மேற்கினுள் மோட்டார் சைக்கிள் ஓட்டிப் போகும் நாயகர் ! மனதில் படுவதை பட்டென்று பேசும் மனுஷன் ! இவருக்குப் பேனா பிடிக்கும் போது லைட்டாக 'டெட்வுட் டிக்' எட்டிப் பார்த்தார் தான் ! புதியவரை எடை போடும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன் !
Online ஆன்லைன் லிஸ்டிங்கும் போட்டாச்சு folks & இன்று கடைகளுக்கும் புக்ஸ் புறப்படுகின்றன ! So சந்தாவின் அங்கமாய் அல்லாத நண்பர்கள், ஏதேனுமொரு மார்க்கத்தில் புக்ஸை பெற்றுக் கொள்ளலாம் ! இதோ லிங்க் : https://lion-muthucomics.com/monthly-packs/1124-september-pack-2023.html
Happy shopping & Reading all !!
Before I sign out, சின்னதொரு பகிரல் : சுகவீனத்தில் விழுவதில் அப்பாவுக்கு போட்டியாய் தற்போது அம்மா மருத்துவமனையில் இருக்க, இந்த வாரத்தின் பொழுதுகளில் இங்கே பிளாக்கில் ரொம்பவெல்லாம் எட்டிப்பார்க்கவே தீரவில்லை ! So 386 பின்னூட்டங்கள் என்ற முந்தைய பதிவுக்குள் நுழைந்திருக்க முடிந்திருக்கவில்லை ! அங்கு நீங்கள் பதிவிட்ட பின்னூட்டங்களில் ஏதேனும் கவனத்துக்குரியவை என்று எண்ணிடும் பட்சங்களில், இங்கே copy - paste ப்ளீஸ் !
Bye all...see you around ! Take care !
I first
ReplyDelete🙏🙏
ReplyDelete2ப்பு பாஸ்
ReplyDeleteஎடிட்டர் சார் விதி எழுதிய வெள்ளை வரிகள் கிராபிக் நாவல் இந்த மாதம் வரவில்லையே.
ReplyDeleteதனியாக அடுத்த வாரத்தில் வரவுள்ளது நண்பரே ! மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே அதற்கான ஆர்டர் உள்ளதால், அதற்கென பிரத்யேக பேக்கிங் பாக்ஸ் செய்வதற்குப் பதிலாய் தனியாய் அனுப்பிவிட தீர்மானித்திருக்கிறோம் !
Deleteசின்ன quantity க்கு பாக்ஸ் செய்து தர மறுக்கிறார்கள் !
Deleteஇதற்காக தனி Courier உங்களுக்கு தேவையற்ற செலவுதானே Sir
Deleteஅதற்கு பதிலாக அடுத்த மாதம் சந்தா புத்தகங்களுடன் அனுப்பலாமே
யெஸ் இதுவும் நல்ல பாயிண்ட் தான்.
Deleteரொம்ப எதிர்பார்க்கிறேன் சார் அட்டைக்காய்
DeleteHi..
ReplyDeletepresent sir
ReplyDeleteWelcome
ReplyDeleteWithin top ten
ReplyDeletePhew
புதிய அறிமுகங்களை படிக்க ஆவலுடன் இருக்கிறேன் சார்
ReplyDeleteSecond
ReplyDeleteஉள்ளேன் ஐயா...!!
ReplyDeleteபார்சலும் வாங்கியாச்சு..😍
DeleteST ??
Deleteயெஸ் சார்...😍
Deleteஆஜர்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவெளியீடுகளுக்கு மகிழ்ச்சி சார். நெவாடாவை வரவேற்கிறேன்.தோர்கலே முதல் ரீடிங். அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்..
ReplyDeleteதாயாரின் உடல்நிலை சீக்கிரமே குணமடைந்து நல்ல நலமுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
ReplyDelete🙏🙏🙏
Deleteஅம்மா நலமடைய எனது பிரார்த்தனைகளும் சார்...
Deleteஎனது பிரார்த்தனைகளும் அம்மாவுக்காக...
Deleteபோன வாரம் 386 பின்னுட்டத்துக்கு காரணம் மங்கா படலமெ, ஆசிரியரே 😊😊😊
ReplyDeleteமங்கா கதைகள் தமிழில் வர வாய்புள்ளதா, ஆசிரியரே
21st
ReplyDeleteதங்களின் தாயார் தற்போது எப்படி உள்ளார், ஆசிரியரே?
ReplyDeleteReading list
ReplyDelete1. Thorgal
2. Nevada
3. Mister no
4. Rip kirby
நானும் இதே வரிசையில்...
Deleteவந்துட்டேன்...
ReplyDeleteவணக்கம் ஆசிரியர் சார்.தங்களின் தாயார் தற்போது நலமா? அவர்கள் வெகு விரைவாக நலமடைய எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகின்றேன்.
ReplyDeleteதோர்களின் அட்டைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது .... கதை அதைவிட பிரமாதமாக இருக்கும் என்று நம்புகிறோம் சார்
ReplyDeleteநா இன்னும் அட்டையை பார்க்க வில்லை. ப்ரட்சனைக்குரிய அட்டைப்படம் என்றால், நானே தோர்கலை ஏபோர் சீட்டில் வரைந்து, நான் விரும்பும் வண்ணம் கொடுத்து, புத்தகத்தின் அட்டையின் மேல் ஒட்டி அழகு பார்ப்பேன்.
Deleteஹைய்யா ஜாலி... ஜாலி..
எனக்கோர் அட்டை
Deleteஅன்னையார் பூரண நலம் பெற செந்தூரான் அருளை வேண்டுகிறேன்
ReplyDeleteWe waiting for 2024 Books Schedule sir
ReplyDeleteசார் நெப்போலியன் பொக்கிசம் பார்ட் 1 படிச்சாச்சு...விறுவிறுப்பான கதை....
ReplyDeleteசிறு வயதில் இவரை ஏன் பிடிக்காம போச்சு என்பது ஆச்சரியமே...
நிச்சயமா ஓவியம்தான் என்பது நினைவில்...ஆனா அந்த ஓவியங்க இப்ப சூப்பரா தெரிவது காலம் போட்ட கோலமே....
நெப்போலியன் பொக்கிசத்த சீக்கிரமா தாங்க
தோர்கல் & ரிப் கிர்பி அட்டைப் படம் தவிர்த்து புத்தகங்கள் அருமையாக உள்ளது.
ReplyDeleteபைண்டிங் & உட் பக்கங்கள் நன்கு காய்ந்து வந்துள்ளது.
நெவேடா அட்டைப்படம், கலரிங் & ஓவியங்கள் தாறுமாறாக, நச்சுன்னு இருக்கு.
///நெவேடா அட்டைப்படம், கலரிங் & ஓவியங்கள் தாறுமாறாக, நச்சுன்னு இருக்கு.///
Deleteநான் காத்திருக்கிறேன்....
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteமிஸ்டர் நோ.
ReplyDeleteஅட்டைப்படம் அருமை.
ஓவியங்கள் நல்லா இருக்கு.
அமேசான் காடுகள் & ஆறுகளின் பிண்ணனின்றதால இந்த புக் கலரில் வந்தால் ரசிக்க நன்றாக இருக்கும் என தோன்றியது எனக்கு.
இனி வரும் இது போன்ற கதைகள் கலரில் வெளிவர வாய்ப்பு உண்டுங்களா எடிட்டர் சார்.
+1
Delete+1 என் கருத்தும் அதேதான் கலரில் வந்தால் நன்றாக இருக்கும்
Deleteசெப்டம்பர் இதழ்களை கைப்பற்றியாச்சி...
ReplyDeleteமுந்தா நாள் இரவு பயலுவல வெரட்டிட்டு மீண்டு வந்த மாயன் புரட்டுனா அடேயப்பா பரபரப்பா பாயும் பக்கங்கள நிறுத்த முடியல...இரண்டுபாகங்கள்
ReplyDeleteஅந்த துவக்கத்தில் நால்வர் வரும் கட்டங்கள் ஈர்க்க..அதைத் தாண்டி கோயில்கள் ஈர்க்க...அந்த மனநோயாளிகள் காப்பகம் கலக்க...விநோத பயங்கர உருவங்களால் கட்டி சண்டி இழுக்கிறார் ஓவியரும் மாயாஜால மன்னன் கதை சொல்லியும்...
கதை மெஸ்மெரிசம் ...போதைப் பொருள் கலந்து சூன்ய விபரீத கற்பனைகள்..அதும் மாறும் டெக்ஸ் முகம்...படுத்தபடி எலிகளோடு போராடும் கார்சன்...சிறுவன்...அவனை விரட்டும் கொடூரன்...எல்லாத்தையும் தாண்டி அந்த ஜிம் பட்டாளம்...நண்பர்கள் நால்வரின் ஹீரோயிசத்த உடைத்து தாக்க...காக்க....
மூன்றாம் பாகத்த நேத்து முடிக்க
என்னா ஓர் கதை...நானாக நானில்லை ....சூப்பர் சார்
இது போல் மாடஸ்டி கதை ஒன்று உண்டே...மன நோயாளிகள்காப்பக கதை
///மாடஸ்டி கதை ஒன்று உண்டே...மன நோயாளிகள்காப்பக கதை///
Deleteரீ-பிரிண்ட் கேக்கலாமா...
விமர்சனம் சூப்பர்... பொன்ராஜ்...
Deleteவந்து.ஒரு வருசம் தானே ஆச்சு நண்பரே...
Deleteமீண்ட மாயன் படிச்சாச்சா
COPY PASTE
ReplyDelete@inigo ::
நாம படிச்ச கதைகளில் நமக்கு புடிச்ச கதைகளை தமிழில் கொண்டுவர ஆசிரியருக்கு Suggestion பண்ணலாமா...??
என்னுடைய மண்டைக்குள்ள ரொம்ப நாளா ஓடிட்டு இருந்த கொஸ்டின் இது..?
@திருச்செந்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்
//சொல்லுங்க நண்பரே...ஆசிரியரின் பீரோக்குள்ளும் துயிலலாம்...ஆசிரியர் பாக்க வாய்ப்புண்டு...இல்லாட்டியும் ஓர் பார்வை விடலாம்//
EMPTY EYES
Script by Diego Agrimbau
உலகப் போர் நடக்கும்போது நிகழும் கதையாக தேர்வு செய்து இருப்பாங்க
இது ஒரு ஹாரர் திரில்லர்
THE MASK WITHOUT A FACE
author kid-toussaint
இது ஒரு பேண்டஸி ஸ்டோரி
இது கொஞ்சம் வித்தியாசமா இருந்தது
THE GRÉMILLET SISTERS
Script by Giovanni Di Gregorio
இது ஒரு மிஸ்டரி திரில்லர் ஸ்டோரி கொஞ்சம் புதுசா வித்தியாசமா
All you need is kill
இது ஒரு மாங்கா. வடிவேலு காமெடி ல வர்றது போல செத்து செத்து விளையாடுவோமா என்று கேட்கிற மாதிரி
இதுவரை டைம் லூப் சயின்ஸ் பிக்சன் ஸ்டோரி இது ஹாலிவுட் படமா வெளிவந்து இருக்கு டாம் குரூஸ் நடிச்ச டுமாரோ எட்ஜ்
Death note ( manga)
டெத் நோட்டை பத்தி சொல்லவே வேண்டாம் வேற லெவல் master piece
இதைத் தவிர சின்ன சின்ன கதைகள் இருக்கு நம்ம ஆசிரியர் கூட பழைய பதிவில ஒன்னு மாங்காய பத்தி சொல்லி இருந்தாரு
NARUTO
நறுட்டவ பத்தி சொல்லனும்னா நறுட்டோ பஸ்டு நார்மலா தான் போகும் மத்த காமிக்ஸ் படிக்கிறவங்களுக்கு நறுட்ட படிக்கும்போது ஸ்டார்டிங் கொஞ்சம் ஸ்லோவா போனது மாதிரி கதை என்ன இது வித்தியாசமா இருக்கு அப்படின்னு சொல்லிட்டு தான் தோணும் ஆனா கொஞ்சம் தூரம் கூட நம்ம படிச்சாச்சுனா அதுக்கு பிறகு வந்து naruto வேற லெவல்ல போயிட்டு இருக்கும்
ஃபர்ஸ்ட் நான் படிக்கும் பொழுதும் என்ன இது மொக்கையா இருக்கு அப்படித்தான் நினைச்சேன் கொஞ்சம் தூரம் படிச்ச பிறகு அதை முடி இடையில நிறுத்த முடியல அடுத்து என்ன நடக்கும் வில்லன் இவ்வளவு ஸ்ட்ராங்கா இருந்தா எப்படி அவன தோற்கடிப்பான் அப்படின்னு தோணும் அதும் இல்லாம வில்லனுக்கும் பேக்ரவுண்ட் ஸ்டோரி கொடுத்து அவனை கூட நமக்கு பிடிக்க வைத்துவிடுவார்கள்
இது எல்லாம் தமிழ்ல வர நமக்கு ஆசைதான் ஆசிரியர் மனது வைப்பாரா🥰🥰🥰
@திருச்செந்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்
1.கடல் கொள்ளயர் கதை
2. தொல் பொருள் கதை
3. ஏதாவதொரு மேன் கதை
4. அறிவியல் புனைவு கதை
5. நீங்க முன்னரே சொன்ன... இது நடந்திருந்தால் மாதிரியான கதை
6. ஒரு பேய் கதை
7. சிறுவர்கள் துப்பறியும் கதை
8. டிராகன் கதை
9.அரசர் கதை
9.டிராகுலா கதை
10 . எகிப்து சார்ந்த மம்மி கதை
11. ஏதாவது நாய்...சிறுத்தை வளத்த சிறுவன் கதை...//
@inigo::
Vara level 😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😳 என்னங்க எனக்கு புடிச்ச எல்லா கதைகளையும் சொல்லுறீங்க
எக்ஸ்ட்ரா நாமும் ரெண்டு மூணு சொல்லுவோம் 😄😄
Mythology comics( வேற நாட்டு)
Fantasy 😉😉😆😁😁
கிரேக்க கதைகள்
காலப்பயணம்சார் கதைகள்
zaroff vol 2 நில் கவனி வேட்டையாடு ஆங்கிலத்தில் வெளியானதாக கேள்விப்பட்டேன் தமிழில் எப்போது ஆசிரியரே more excitement 😀 😄
Delete// zaroff vol 2 நில் கவனி வேட்டையாடு ஆங்கிலத்தில் வெளியானதாக கேள்விப்பட்டேன் //
Deleteஅடடே அட்டகாசமான தகவல்...
வில்லத்தனமும் + ஹீரோயிஸமும் கலந்த ஜாரோஃப்பின் அந்த அசாத்திய சாகஸத்திற்காக ஆவலுடன் வெயிட்டிங்...
போன வருஷமே சொல்லியிருந்தேனே சார் - ரஷ்யாவில் அரங்கேறும் விதமாய்க் கதை அமைக்கப்பட்டுள்ளதென்று ! உரிமைகளும் போன வருஷமே வாங்கியாச்சு !
Deleteசூப்பர் சார்
Deleteகிராஃபிக் நாவல் குரூப்புக்கு அனுப்பிருங்க.
Deleteமுத கதையை படிச்சப்ப ஏற்பட்ட கிறுகிறுப்பே இன்னும் அடங்கலை.
என்ன விட்டுருங்க சாமிகளா.
நண்பர்களே எஞ்சாய்...
..
// போன வருஷமே சொல்லியிருந்தேனே சார் - ரஷ்யாவில் அரங்கேறும் விதமாய்க் கதை அமைக்கப்பட்டுள்ளதென்று ! உரிமைகளும் போன வருஷமே வாங்கியாச்சு ! //
DeleteAda supppeeeeeeeeeeeeer sir! so next year this will be coming in our comics!
42nd
ReplyDeleteஅம்மா உடல்நலம் தேறிடப் பிரார்த்தனைகள்...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteஅப்புறம் வி காமிக்ஸ் சந்தா இப்போது போல 3 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்துவது எளிதாக இருக்கு என்னளவில்.
ReplyDeleteஇது இப்படியே தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.
Yes
Deleteஇரண்டு ஆப்சனும் குடுத்துட்டா வசதியா இருக்கும் சிவா. எனக்கெல்லாம் 3 மாதத்துக்கு ஒருக்கா யாராவது ஞாபகப்படுத்தலேன்னா மறந்துடும்.
Deleteஆமாங்கோ.
Delete3 மாச சந்தா ரொம்ப ஈசியாக இருக்கிறது.
தாயார் நலமடைய பிரார்த்தனைகள்.சார் கிராஃபிக் நாவல் அடுத்தமாதம் புத்தகங்கள் அனுப்பும்போது .அனுப்பலாம் சார்.இதற்காக தனி ஒரு வேலையாக இழுத்துப் போட்டுக்கொண்டு சிரமப்பட வேண்டாம் . கரூர் ராஜ சேகரன்
ReplyDelete// கிராஃபிக் நாவல் அடுத்தமாதம் புத்தகங்கள் அனுப்பும்போது .அனுப்பலாம் சார்.இதற்காக தனி ஒரு வேலையாக இழுத்துப் போட்டுக்கொண்டு சிரமப்பட வேண்டாம். //
DeleteYes.
அம்மா நலமடைய எனது பிரார்த்தனைகளும் சார்...
Delete// கிராஃபிக் நாவல் அடுத்தமாதம் புத்தகங்கள் அனுப்பும்போது .அனுப்பலாம் சார்.இதற்காக தனி ஒரு வேலையாக இழுத்துப் போட்டுக்கொண்டு சிரமப்பட வேண்டாம். //
DeleteYes.
ஆமாம் சார்...
ஆனால் நான் இதற்கு சந்தா கட்ட வில்லை.
கிராஃபிக் நாவல் என்றால்,
உலகின் கடை எல்லைக்கு ஓட்டம் பிடிப்பவன்...
// அம்மா மருத்துவமனையில் இருக்க //
ReplyDeleteI pray her to get well soon sir.
This comment has been removed by the author.
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteவயதான பெற்றோர் உடல்நலக்குறைவால் படும் சிரமங்களையும், அடிக்கடி மருத்துவமனையே கதி என ஆகிடும் நிர்பந்தங்களையும் அவ்வப்போது அனுபவித்துவரும் பிள்ளைகளில் நானும் ஒருவன் என்பதால் உங்களது சிரமங்களை என்னாலும் உணரமுடிகிறது எடிட்டர் சார்!! இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவிலும் எங்களுக்கு குறித்த நேரத்தில் புத்தங்களைத் தயார் செய்திடும் உங்கள் கடமை உணர்வை வியக்காமல் இருக்க முடியவில்லை!
ReplyDeleteபெரியவர்கள் சீக்கிரமே குணமடைய என் பிரார்த்தனைகளும்!🙏🙏
தங்கள் அன்னையின் உடல் நலம்,பரிபூரண நலம் பெற, கடவுள் கருணை கிடைக்கட்டும்.. சார்
ReplyDeleteஇன்னும் எனக்கு கொரியர் டப்பி வரவில்லை..
ReplyDeleteவந்தாலும் டப்பியின் கனம் மயிலிறகைப் போல மென்மையாகவே இருந்திடும்!!
ஏனென்றால் ரிப்கிர்பி ஸ்பெஷலும், மிஸ்டர் நோ'வும் டப்பியில் இருக்காது!
இரண்டுக்குமே சந்தா செலுத்தவில்லை!!
முன்னது - தெரிந்தே செய்த தவறு!
பின்னது - எனது கவனக் குறைவால் நிகழ்ந்த தவறு!
///ஏனென்றால் ரிப்கிர்பி ஸ்பெஷலும்///
Deleteசென்னை புக்பேர்ல வாங்கிக்கலாம்....
@Editor sir (copy paste from previous post)
ReplyDeleteபிக் பாய்ஸ் ஸ்பெஷல் மாயாவி அட்டையுடன் வேண்டும் என்று ஆர்டர் கமெண்ட்டில் போட்டும் எனக்கு இரண்டு புத்தகங்களும் ஸ்பைடர் அட்டையுடன் வந்து பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது வாட்ஸ்ஆப்பில் தகவல் தெரிவிக்காததால் அனுப்பவில்லை என்று அன்போடு ஒரு குண்டைப் போட்டார்கள்.
என்போன்று ஏமாற்றமடைந்தவர்களுக்கு ஒரு மாயாவி டஸ்ட் கவர் ஒரு விலை நிர்ணயம் செய்து கொடுத்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன்.
ஆசிரியர் சார் கொஞ்சம் மனது வையுங்கள்.
முன்கூட்டியே எனது நன்றிகள் பல.
ஆபிசில் சொல்லி விட்டேன் சார் ; செய்து தந்து விடுவார்கள் !
Deleteமிக்க மகிழ்ச்சி சார். நன்றிகள் பல
DeleteMe in Editor Sir..😍😘🙏
ReplyDelete@Editor Sir..🙏
ReplyDeleteதாயார் பூரண குணமடைய எல்லா வல்ல இறையிடம் வேண்டிகொள்கிறேன் சார்..🙏🙏
ரிப் கிர்பி நம்ம வூட்டாண்ட போயிட்டார்..
ReplyDeleteநெவாடா அட்டைப்படம் பளிங்கு கண்ணாடி போல பளபளக்க...
ReplyDeleteஇதான் டாப்னு கத்திய மனதை சமனப்படுத்தியது தோர்களின் வண்ணமய அட்டையும் அந்த வண்ணச்சேர்க்கையும் டாலடிக்கும் உள்வண்ணப் பக்கங்களும் இறைவன் படைப்பான இயற்கை சிறந்ததா ஓவியரின் படைப்பில் இயற்கை சிறக்குதான்னு விடை தெரியா கேள்வியெழுப்பி மலைக்க வைக்க...ரிப்கிர்பியின் அட்டை கத்தரி பூ வண்ணத் தலைப்பும் லோகோவும் பளபளக்க ரிப்கிர்பி கீர்த்தி சுரேஷுக்கு வழிகாட்ட அந்த அட்டையும் சபாஷ் வாங்க...
அப்படியே தழுவி விழுந்த மிஸ்டர் நோவை அள்ளிக் கொள்ள ...புரட்டிய பக்கங்கள் என்னைப் புரட்டிப் போட...மூன்றில் எதைப் புரட்ட என போராடுவது மனது...நெவடான்னா...நோ மிஸ்டர் நோன்னு குரலொலிக்க... தோர்களும் நாந்தா முதலிலென காட்டும் மாயந்தானென்ன
எடிட்டர் சார்.. அடுத்த காலாண்டுக்கான V-காமிக்ஸ் சந்தா தொகையை வரும் பதிவுக்கிழமைப் பதிவில் பதிவிடுமாறு இங்கே என் கோரிக்கையைப் பதிகிறேன்!
ReplyDelete325
Delete@lion comics
ReplyDelete//போன வருஷமே சொல்லியிருந்தேனே சார் - ரஷ்யாவில் அரங்கேறும் விதமாய்க் கதை அமைக்கப்பட்டுள்ளதென்று ! உரிமைகளும் போன வருஷமே வாங்கியாச்சு !//
அட சூப்பரு 😊
அக்டோபர்ல அட்டவணைக்கு தேதி குறிச்சாச்சுங்களா? எப்ப? இந்த வருடம் கிளாசிக் இதழ்கள் ஜனவரி வரை வருவதால் ரெகுலர் மற்றும் வி சந்தா முன்னமே அறிவிக்கப்படுமா?
ReplyDeleteஅக்டோபரின் கடைசி வாரப் பதிவில் சாரே ! 28 சனி அல்லது 29 ஞாயிறுக்கு !
Delete@Editor Sir..😍😘😃
Deleteவாவ்..வாவ்..அருமை
..😍💐
October 28..
இப்போதே வந்துவிட கூடாதா..😃😍😘👍👌
அதெதுக்கு..அட்டவணை இப்பவே வந்துடக் கூடாதா...சூப்பர் சார்
Deleteஅப்ப அட்டவணைக்கு இன்னும் 51 நாட்கள்
Deleteரொம்ப நாள் இருக்க மாதிரி தெரிகிறதே...
Delete@Editor Sir..😍😘😃
ReplyDelete"V காமிக்ஸ் காலாண்டு சந்தா (October to December)" ..ரூ.325/- gpay மூலம் அனுப்பிச்சாச்சுங்க சார்.😍👍👌✊❤💐.
@ஆசிரியர் சார்
ReplyDeleteஅம்மா பூரண குணமடைய எல்லா வல்ல எம்பெருமானை வேண்டிகொள்கிறேன் சார்..🙏🙏
சார் வி காமிக்ஸ் சந்தா325 செலுத்தியாச்
ReplyDeleteNevada Marquez
ReplyDeleteDifferent storyline. The paintings are little bit dark because the story runs all along in the night time. Little bit straining to distinguish between things in the art.
But I will give
9/10
Mr.No
ReplyDeleteSimple storyline almost cliche
But some scena are refreshing like the boat chase. Hope the next story will be greater than this.
7.5/10
Rip Kirby
ReplyDeleteMaking is awesome. It will take sometime for me to start reading the book
Thorgal
Will finish by tomorrow afternoon
தங்களது தாயார் விரைவில் குணமடைந்து நலம்பெற இறைவனை பிரார்திக்கிறேன். சார்..
ReplyDeleteஎனது தந்தையை நினைவுபடுத்தும் ரிப் கிர்பி - அந்த ஓவிய அழகும்-நிதானமான அணுகுமுறையும் - அட்டகாசமான தொகுப்பு-படித்து ரசிக்க கைகளில் தவழ்கிறது..
ReplyDeleteஅதிலும்-பக்கத்துக்கு 6 கட்டங்கள் என நீண்டு படிக்க உதவுகிறது..
வாழ்த்துக்கள் தோழரே...
Deleteஇந்த மாத பெஸ்ட்டுன்னா ரிப் கிர்பிதான்..
ReplyDeleteசெம்ம சைஸ்..😍
அடுத்து புதுவரவு நெவாடா மற்றும் மிஸ்டர் நோ..
கலரிலும் கறுப்புவெள்ளையிலும் பட்டையை கிளப்புகின்றன..!
இறுதியாக தோர்கல்..
இதுவரை வந்தவற்றிலேயே தெளிவான சித்திரங்களோடு வந்திருப்பது இந்த இதழ்தான்...!
V காமிக்ஸில் சாம் வில்லர் கதை வரப்போவது அட்டகாசம்..😍
என்ன ஜி..
Deleteலிஸ்ட தலைகீழா சொல்றீங்களே.இது நியாயமா...தர்மமா...
எல்லாமே இனி இந்த மாங்கா நாவல் ஸ்டெயில் தான்...
நானும் பழகிக்கிறேன்..
///எல்லாமே இனி இந்த மாங்கா நாவல் ஸ்டெயில் தான்...
Deleteநானும் பழகிக்கிறேன்..///
அது நெம்ப கஷ்டம் பாஸ்..!
சட்டையை கீழே போட்டு பேன்ட்டை மேலே போடணும்.. பரால்லியா.?!
பேண்ட் தரைல போட்டுட்டு...சட்டய வானத்லயா
Deleteவனரேஞ்சர் ஜோ கதைகள் நாக்கு ச்சால இஷ்டம்கிறதால.. அதேபோல இருக்கும் மிஸ்டர் நோ வுடன் அமேசான் காடுகளில் பயணிக்கப்போகிறேன்....
ReplyDeleteடாட்டா..!
அம்மா அவர்கள் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்,
ReplyDeleteஎனக்கும் புக் வந்து விட்டது. முதலில் நெவாடா உடன் bike பயணம். பிறகு Mr. No உடன் அமேசான் பயணம்.
ReplyDeleteநெவாடா ஓவியங்கள் அருமை சார். படித்து விட்டு வருகிறேன்.
வாங்க ...வாங்க சார் !
Deleteஅருமையான சைஸ் ரிப்கெர்ப்பிக்கு செட்டாகியிருக்கு .. ஒரு பேஜ்க்கு ஆறு பேனல்கள் .. அதிலும் கடைசி கதை GENDIL MAN இன் GENDIL MAN STORY அரூமையோ அருமை .. படிப்பதற்க்கு ககண் உறுத்தல் இல்லாமல் இருப்பது பெஸ்ட் ஆப்சன் ..இனி இது போலவே அனைத்து 70'ஸ் ஹீரோக்களுக்கும் தொடர்ந்தால் நலம். கைகளில் ஏந்தி பிடித்து படிக்க ஏதுவாக இருக்கிறது ..
ReplyDeleteதேங்க் டியர் எடி 😍😍😍😍
ரிப்கெர்பி புத்தகம் வாங்கியவுடன் படிக்கத் தொடங்கி அடுத்த ஒன்னரை மணி அளவில் படித்து முடித்தாச்சு .. அனைத்தும் முத்துக்கள் .. .. ரிப் பின் இரண்டாவது தொடரும் ஆகப்பெரும் மிகப்பெரிய வெற்றி ..
ReplyDeleteWow...90 நிமிடங்களில் 375 பக்கங்களா ? செம ஸ்பீட் தான் சம்பத் !
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபுக்க தூக்குனா ஆளத்தூக்குது ரிப்கிர்பி உள்பக்கங்கள் ஓவிய பளிச்....சற்றே மஞ்சள் நிறம் தூக்கும் தாள்.....இதே தாள்ல ஸ்பைடரும் வரும்னு ஏங்குனா வண்ணத்லதான் வரனும்னு தூங்குது மனம்....மேக்சி இல்லைன்னாலும் கச்சிதமா வந்திருக்கு அக்கால கோடை மலர் போல குண்டாய்....அட்டை அருமை
ReplyDeleteநெவாடா மௌனமாய் அழைத்துச் செல்லுது முதல் இருபக்கங்கள் வண்ணம் தூள் கிளப்ப...
மிஸ்டர் நோ பட்டய கிளப்புது விமான பைலட்டாக கனவு கண்டோர் பறக்க....தடவினால் தாள் ரப்பர் போல தெரிவது எனக்கு மட்டும்தானா...சூப்பர் சார்....அதும் டெக்ஸ் சகோதரன் கதை...
மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்..
இவன் யாரோ..வியாரின் ஆண்டு மலரோ
தோர்கள் என்னத்த சொல்ல...எல்லாமே வண்ணந்தா கதைகூட...
அடுத்த மாதம் 700 பக்க பிரம்மாண்ட டெக்ஸ்...டெக்ஸ் சகோதரன்...தாத்தாஸ் அடி தூளு
இனி மிஸ்டர் நோல துவங்குவோம நாளை
ReplyDeleteஅமேசானில் அதகளம் :
ReplyDeleteவனரேஞ்சர் ஜோ கதைகளை ரொம்பவே ரசித்திருந்தேன் என்பதால் அதே ஆர்வத்தோடு மிஸ்டர் நோ வின் அமேசானில் அதகளத்தையும் அணுகினேன்.. ஏமாற்றமில்லை.!
அமேசான் காட்டுக்குள்ளார ஆளுகளை இட்டுக்கிட்டு போயி... தோ இதுதான் மரம்.. இது மங்கி.. இது தண்ணி.. இதுதான் தவக்களைன்னு சுத்திக்காட்டுற கைடுதான் நம்ம ஹீரோ மிஸ்டர் நோ.!
அவராண்ட காட்டையும் மேட்டையும் சுத்திக்காட்டச் சொல்லி பென்னி ப்ராஸ்காட்ன்ற அமெரிக்க புள்ள ஒண்ணு வந்து சேருது.!
ஒரு நாள் பார்ல ஃபுல்லா பீரடிச்சிட்டு மப்புல போற பென்னிமேல ஒரு பய ஓடிவந்து மோதி.. வுழுந்து பெரண்டு அவசரத்துல கேமேராவை மாத்தி தூக்கிட்டுப் போயிடுறான்.. அங்குட்டு இருந்துதான் கதையே ஆரம்பிக்குது.!
மாறிப்போன கேமிராவுல தலைமறைவா வாழுற தாதா ஒருத்தனோட போட்டோ ஆதாரம் மாட்டிக்க.. அதை விடியறதுக்குள்ள கொண்டாந்து சேத்துங்கடா சோத்துமூட்டைகளான்னு அடியாளுகளை அனுப்பி வைக்குறாரு தாதா..!
அதுக்குள்ளார அந்த அமெரிக்க புள்ள பென்னியும் நம்மாளு நோ வும் சின்ன மோட்டார் போட்டை எடுத்துக்கிட்டு காட்டுக்குள்ள டூர் போயிடுறாங்க..!
அவங்களை வெரட்டிக்கிட்டு.. முதல்ல ரெண்டு அடியாளுகளும் தொடர்ந்து ஒரு டஜன் தடியாளுகளும் காட்டுக்குள்ள இறங்குறாங்க..!
காட்டுக்குள்ள திரும்பின பக்கமெல்லாம் அடியாட்கள் தடிமாடுகளாட்டம் திரிய.. அமெரிக்க புள்ள பென்னியையும் , ஆதாரமான பிலிம் ரோலையும் அண்ணன் நோ எப்படி காப்பாத்தி கொண்டாராருன்றதுதான் கதை!
சின்ன படகை வெச்சிக்கிட்டு.. பெரிய மோட்டார் படகுகளுக்கு தண்ணிகாட்டுறது.. காமிரா பேகை புதைச்சி வெச்சி , அதுல ஒரு பொறி வெச்சி எதிராளியை சாய்க்கிறது.. முக்கியமா... பென்னி ப்ராஸ்காட்டைப் பாத்து ஜொள்ளு விடுறதுன்னு மிஸ்டர் நோ நிறையவே ஸ்கோர் பண்ணியிருக்காரு.!
கறுப்பு வெள்ளையில் சித்திரங்கள் நேர்த்தியாக தெரிகின்றன..! கதை சீட்டின் நுனியில் உக்கார வைக்கலேன்னாலும் படிக்க ஜாலியாவும் சுவாரஸ்யமாவும் இருக்கு.! மிஸ்டர் நோ வுக்கு தொடர்ந்து வாய்ப்பு குடுக்கலாம் என்பது என் கருத்து.!
க்ளாசிக் பொனெல்லி நாயகர் சார் !
Deleteரெகுலராக V comicsல் வாய்ப்பு தரலாம் சார்..
Deleteரிலாக்ஸான ரீடிங்கிற்கு உத்திரவாதம்.!
இதழ்களில் முதலில் புரட்டியது ரிப் கிர்பி தான். அட்டகாசமான Making. அப்படியே சூட்டோடு சூடாக கா. கோ. கதையையும் படிச்சாச்சு. உண்மையிலேயே ஒரு ஆக சிறந்த க்ளாஸிக் கதை. ஏற்கனவே படித்து தவறவிட்ட இதழ். வெளியிட்டமைக்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteநெவாடா காலின் வில்சன் ஓவியங்கள் அருமை. ஆனால் இந்த கலரிங்தான் கொஞ்சம் அடர் வர்ணத்தில் இருக்கிறது.
தோர்கலின் மாயாஜால உலகம் பிரிண்டிங் தரத்தில், அட்டகாசமான வர்ணத்தில் வசீகரிக்கிறது.
மிஸ்டா நோ பார்த்தவுடன் வன ரேஞ்சர் ஜோ ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஓவியங்கள் அட்டகாசம்.
காசில்லாக் கோடீஸ்வரன் அந்நாட்களிலேயே நம்ம மினி-லயனில் ஒரு க்ளாசிக் சார் ! டெஸ்மாண்ட் சோலோவாய் ராப்பரில் இடம்பிடித்திருப்பார் !
Deleteநெவாடா - நட்சத்திர வேட்டை
ReplyDeleteபுதுமையான கதைக் களம்.
மனதை ஈர்த்தது.
9.1/ 10
தவிர்த்திருக்கலாம் 1
பக்கம் 14 மூன்றாவது பேனல் . முதல் பெட்டி .
"நீச்சல் குளம் ' என்றே தமிழாக்கம் செய்திருக்கலாம் .
உதாரணமாக FORD தனது PINTO காரை அதே பெயரிலேயே பிரேஸிலில் அறிமுகம் செய்தது. பிரேஸில்- போர்ச்சுகீசிய மொழியில் அதற்கு small genitals என அர்த்தம் ( in rugged way it's actually small penis) . I own a pinto என யாரும் சொல்ல முடியுமா என்ன?
தவிர்த்திருக்கலாம் 2
உண்மையான மெக்ஸிக - அமெரிக்க நடிகையான LOPITA TOVAR ஐ வேசி என பக்கம் 37-ல் கூறியிருப்பதை கதாசிரியரே தவிர்த்திருக்கலாம்.
(அதே பக்கத்தில் வருவது போல் Lupita Tovar - ஐ போனில்தான் அவரது பின்னாள் கணவர் பால் கோனர் டோவர் மீதான தனது காதலைத் தெரிவித்தார். )
கதை ஆஸ்கர் விருது புதிது எனக் கூறுவதால் 1935-40 களில் நிகழ்வதாய் இருக்கலாம்.
Thorgal first story is as usual excellent. Second story konjam action kammi thaan. But both were interesting reads with great artwork and imagination
ReplyDeleteYes sir...the powers of human imagination at it's best !
Deleteசார்..தங்களின் தாயார் பூரண நலமடைய மனமார்ந்த வேண்டுதல்கள்..
ReplyDeleteஎஸ்டி கொரியரின் புண்ணியத்தில் வழக்கம்போல் இதழ் அனுப்பிய அடுத்த நாளே அதாவது நேற்றே இதழை கைப்பற்றி விட்டேன் சார்..
ReplyDeleteநெவாடா ,தோர்கல் ,ரிப்கெர்பி,மிஸ்டர் நோ என அனைத்து நாயகர்களின் இதழ்களையும் வழக்கம் போலவே ரசித்தும் முடித்தாயிற்று...விகாமிக்ஸ் அட்டைப்படமும் ,நெவாடா அட்டைப்படமும் அருமை...ரிப்கெர்பி அட்டைப்படம் ஓகே ரகம் ..அவர் கையில் உள்ள துப்பாக்கியை சிறிது பெரிது பண்ணியிருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும் ..தோர்கல் அட்டைப்படத்தை பொறுத்தவரை பிண்ணனி தோர்கலும் ,அவர் வாரிசின் ஓவியமும் சிறப்பாக அமைந்து இருந்தாலும் முண்ணனியில் உள்ள உருவங்களின் ஓவியம் தான் திருஷ்டி பொட்டு போல் ஆகி விட்டது சார்..ஆனால் அனைத்து இதழ்களின் உட்பக்க சித்திரங்களும் ,தரமும் அருமை...அதுவும் இந்த அளவில் குண்டாக ரிப்பின் சாகஸ இதழை பார்க்க பார்க்க ஆனந்தம்..அருமை அட்டகாசம் ..இனி படித்து விட்டு..
கா.க.கா பிறகு அருமையான தயாரிப்பு ,கிர்பி ஸ்பெசல் . .மேக்கிங் அற்புதம்.சுப்ரீம் 60'sஅனைத்து புத்தகங்களும் இதே சைசிலேயே தொடர வேண்டும் சார் . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteமுன்னமே அறிவித்த மாதிரி ஞாபகம் உள்ளதே சார் - all புக்ஸ் இதே சைஸ் தான் !
Deleteபுது அறிமுகம் ..கெளபாய் சாகஸம் ..ஆனால் மோட்டார் சைக்களில் வலம் வருகிறார்.. இது என்ன புது பாணியாய் தென்படுகிறதே என இரவில் முதல் இதழாய் மூவிங் ஸ்டாரை கையில் எடுத்தேன்..வாசிக்க ,வாசிக்க சித்திரங்கள் சிறப்பாக இருந்தாலும் பிண்ணனிகள் மணிரத்னத்தின் பெரும்பான்மையான படமும் , படக்காட்சிகளும் இரவு நேர காட்சிகளாக வந்து ஒன்றி போவதே ( என்னளவில் ) பெரும் காரியமாய் இருக்கும்..அது போலவே இந்த நாயகரின் சாகஸமும் இரவில் மட்டுமே சாகஸம் செய்பவர் போல பாதிக்கும் மேலாய் அப்படியே இரவிலியே கதை நகர்ந்து சென்ற ஓவிய பிண்ணனி காரணமாய் அதனை தொடர்ந்து வாசிக்கும் ஆர்வம் குறைந்து விட்டது சார்..எனவே இவர் பகலில் வாசித்தால் தான் சுகப்படுவாரோ என்ற எண்ணத்தில் அடுத்த அறிமுக நாயகர் மிஸ்டர் நோ வை கையில் எடுத்து கொண்டேன்...
ReplyDeleteதலீவரே...உங்க ராப்பொழுதில் பொதுவா சூரியனே அஸ்தமிச்சிருக்க மாட்டாரே ?
Deleteநான் இன்னிக்கு நெவாடாவை எடுத்திருக்கேன் தலீவரே..!
Delete:-)
Deleteநானும் ரௌடிதான்
ReplyDeleteஎண்டெர்டெயினர். படிக்க ஜாலியா இருந்துச்சு.
அஃறிணை பொருள்களை நகர்த்தும் சக்தி சுஸ்கிக்கு வருவதை படிச்சப்ப
அந்த சக்தி கொஞ்சூண்டு இருந்தால் கூட காலை டிபன் என உப்புமா தட்டில் போடப்படும்போது நைஸாக தட்டை குப்பைத் தொட்டியில் கொட்டுவது போலவும் பறந்து வரும் பூ. கட்டையை திசைதிருப்பி தோட்டத்தில் விழுமாறு செய்வது போலவும் எண்ணங்கள் தோன்றுவதை ஏக்கப் பெருமூச்சுடன்
அவதானிக்க முடிகிறது.
9.2/10
ஒபாமா இல்லாத அமெரிக்கா கூட தாக்குப் புடிச்சிடும் போல - உப்மா இல்லாம தமிழ்நாடு ஊகூம் !
Deleteஇன்னிக்கி இக்கடவும் உப்மாவே சார் !
சார்ஸ் ...
Deleteவீட்டம்மா கைலருந்து பறந்தா பூமராங்னு மறந்து போச்சா...எங்க போனாலும் திரும்பி அங்கேயே போய் உங்களுக்கே வரும்....பெருமூச்சு விட்டுட்டு வேலய பாருங்க
:-))
Deleteநில்... கவனி... வேட்டையாடு...
ReplyDeleteபிரேஸில் கடற்கரைப் பகுதியிலிருந்த ஒரு தீவு.
அத்தீவில் வேட்டைநாய்கள் துரத்த ,உயிர் பிழைப்பதற்காக இருவர் கடற்கரையை நோக்கி கைகளில் துப்பாக்கிகளோடு ஓடிக் கொண்டிருந்தனர்.
அவர்களை வேட்டையாடி கொன்ற அந்த கும்பலின் தலைவன் தான் இக்கதையின் கதாநாயகன் நிகோலாய் ஜாரோப்.
இப்படியாகக் கதை நகர்ந்துக் கொண்டிருக்க , ஜான்ஜெர் ரெயின்ஸ்போர்ட் எனும் ஒரு பிரசித்தி பெற்ற வேட்டையன் ஒருவன் அந்த கும்பலிடமிருந்து தப்பிப் பிழைத்து அமெரிக்கா சென்றுவிட்டான், பின் அத்தீவை புலனாய்வு செய்ய அனுப்பப்பட்ட
குழுவினர் வெறுங்கையோடு திரும்பினர். இவை அனைத்தையும் அறிந்து கொண்ட பியோனா ப்ளானாகன் தன் தந்தையைக் கொன்ற ஜாரோப்பைப் பழிதீர்க்க, ஜாரோப் 15வருடங்களுக்கு முன் பிரிந்த அவனுடைய தங்கை மற்றும் அவனுடைய மருமான் மற்றும் மருமாள்களை தேடிப்பிடித்து அவர்களை ஜாரோப்பின் வேட்டையாடும் பாணியில் அவனுடைய தீவுக்கு அனுப்பினாள்.
பின்னர் ஜாரோப்பின் கும்பலைச் சார்ந்த அனைவரையும் தன் ஆட்களைக் கொண்டு கொன்றுவிட்டாள். இப்பொழுது ஜாரோப் எவ்வாறு தன் தங்கை மற்றும் அவளுடைய பிள்ளைகளை காப்பாற்றினார் என்பது தான் இக்கதை.
ஜாரோப்பின் வேட்டை மீதான கட்டுக்கடங்கா அபிலாஷைகள்:
ஜாரோப் ஒரு ரஷ்யப் பிரமுகர் 1917ன் புரட்சியின் போது நாட்டை விட்டு வெளியேறியவன். அவன் அந்த தீவில் குடியேறியதன் காரணமே வேட்டை மீது அவனுக்கு உள்ள விருப்பம் தான்.
ஜாரோப் கடற்கரை சென்று அங்கு கப்பலுக்கு காவலாக இருந்த அனைவரையும் கொன்று குவித்துவிட்டு அவர்கள் சுலபமாக அந்த தீவை விட்டு வெளியேறப் பயனுள்ளதாக இருந்த கப்பலை தீயிட்டுக் கொளுத்தி விட்டான்!
இதிலிருந்து ஜாரோப்பின் வேட்டை மீதான அளவில்லாத ஆசையை நான் புரிந்து கொண்டேன்.
என்னை வியக்க வைத்த தருணம் :
ஜாரோப்பின் தங்கை இறக்கும் பொழுது "என் குழந்தைகளுக்கு
இரத்த உறவு என்று மிஞ்சி இருப்பது நீ ஒருவன் மட்டும் தான் நீதான் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினாள்.பின்னர் ஜாரோப் அவனுடைய மருமான் மற்றும் மருமாள்களை மக்கள் நிறைந்த ஒரு தீவின் கடற்கரையில் இறக்கிவிட்டு , செழிப்பானதோர் புதிய பிராந்தியத்தில் புதிய இரைகளைத் தேடித் தன் பயனத்தை மேற்கொண்டான்.
இக்கதையில் அநாயகனாக இருக்க வேண்டிய ஜாரோப்பை இறுதியில் கதாநாயகனாக காட்டிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.!
சூப்பர்
Deleteகொரோனா லாக்டௌன் காலத்துக் கதை என்பதால் எப்போதோ ஒரு யுகத்தில் வெளியானது போலானதொரு பிரமை எனக்கு !
DeleteThis comment has been removed by the author.
Delete@ச.பொன்ராஜ்
Delete//சூப்பர்//
தேங்க்ஸ் சார்.....
@ Lion Comics
Delete//கொரோனா லாக்டௌன் காலத்துக் கதை என்பதால் எப்போதோ ஒரு யுகத்தில் வெளியானது போலானதொரு பிரமை எனக்கு ! //
நல்ல நல்ல கதைகள் எல்லாம் இப்போதான் சார் அப்பா கிட்ட கேட்டு படிச்சுகிட்டிருக்கேன். புது கதைகள் படிக்க கொஞ்சம் டைம் ஆகும் சார்..
நெவாடா முதலுக்கு மோசமில்லை அதிரடியில் பின்னியெடுக்கிறார் நம்பலாம் நம்மோடு ஒரு ரவுண்டு வருவாரென்று
ReplyDeleteஆசிரியர் ரிப் கெர்பியின் ஸ்பெஷலில் மரண மயக்கம் இடம் பெறுவதை சொல்ல மறந்து விட்டாரென நினைக்கிறேன் பாட்டில் பூதம் புத்தகத்தில் இடம் பெற்ற கதை மரண மயக்கம் மறு பதிப்பென்றாலும் அற்புதமான கதைக்களம் டெஸ்மாண்டே இதிலும் ஹீரோ
ReplyDeleteடெஸ்மாண்ட் தான் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலுமே ஆஜராகி விட்டிருக்காரே சத்யா ?!
Deleteஎடிட்டர் சார்,
ReplyDeleteஐயகோ !
புதனன்று உட்கார்ந்து மாங்குமாங்கென்று (225 விலை கொடுத்து) 336 பக்கம் மேபிஸ்டோ படித்தால் கடைசீல ஓடிப் போய் ம*ராபோச்சுன்னு மறைஞ்சு போய்ட்டானுங்க @#*@&#&@#& ! Grr !! இன்னா விளையாடுறானுகளா Bonnelli ? இனிமேல் மேபிஸ்டோ வேண்டவே வேண்டாம் சாமீ !!
ஆள விடுங்கப்பா ! Feeling lost :-(
நமது இரண்டாம் வருகைக்குப் பின்பாய் டெக்சின் மாயாஜால ரகக் கதைகளை நான் அறவே ஒதுக்கியது இத்தகைய காரணங்களுக்காகத் தான் சார் ! இந்த சாகசம் ரொம்பவே சமீபத்தையது என்பதாலும் ; இதன் கதாசிரியர் மௌரோ பொசெல்லி என்பதாலுமே தேர்வு செய்தேன் !
Delete/// கடைசீல ஓடிப் போய் ம*ராபோச்சுன்னு மறைஞ்சு போய்ட்டானுங்க///
Delete😝😝😝😝
ஏனுங்க காமிக் லவரே.. வில்லன்னா கடைசீல மண்ணையப் போட்டே ஆகணுமா உங்களுக்கு?!!😝
அதுல வேற EV நடுவால நடுவால hypnotism செய்யறேன்னு நம்ம ஜுராசிக் பார்க் வஸ்துக்களெல்லாம் பலூன் பொம்மை மாதிரி வேற வந்துட்டு வந்துட்டு போவுது - ஆத்தாடி !
Delete///ஜுராசிக் பார்க் வஸ்துக்களெல்லாம் பலூன் பொம்மை மாதிரி வேற வந்துட்டு வந்துட்டு போவுது ///
Delete😝😝
சிறுவர்களையும் கவரணும்னு ரெடி பண்ண கதையாக இருக்குமோ என்னவோ!!
Pan India (இன்னும் கொஞ்சநாளில் Pan Bharath) மூவி மாதிரி.. இது Pan-Gender கதையா இருக்கலாமில்லையா?!!😝😝
". கிளியோடு கூட்டணி".
ReplyDeleteபியரிக்கு ஊறுகாய் வேண்டும் என்று அடிக்கடி கூறிக் கொண்டேஇருக்கும் கிளியின் காதுகளில் மால்டோ கவச மோட்டார் வண்டியை கொள்ளையடித்தனர் என்ற செய்தி விழ அதையே திருப்பி திருப்பி கூற கொள்ளையர்களால்கொலை முயற்சிக்கு ஆளாகிறது .தப்பி வந்து சேருமிடம் கிர்பியின் இல்லம்.நம்ம டெஸ்மண்ட்கிளியை நேசிக்கிறார் .கொலை முயற்சியின் அடுத்த கட்டமாக ஒரு பூனை ஏவி விடப்படுகிறது.(எதிர்பாராத திருப்பமாக பூனை யும் கிளியும் நட்புஆகின்றன.) கொள்ளையர்கள் கைது செய்யப் படுகின்றனர் .பூனையின் உரிமையாளரான
ஒரு பெண்ணிடம் பூனையும் கிளியும் ஒப்படைக்கப்படுகின்றன.நம்ம டெஸ்மண்ட்துயரத்தில் மூழ்க நமக்கும் மனது கனமாகிறது.ஒரு கிளியை வைத்துப் பின்னப்பட்ட அழகான கதை.கிர்பி கதைகள் பழைய கதைகள் அல்ல .எக்காலத்திற்கும் பபுதிதாகத் தோன்றும் .கிராஃபிக் நாவல்கள்.ஒரு ஹீரோவின் கதை என்று நினைதக்காமல் ஒரு கதையா படித்தால் அருமையான கிராஃபிக் நாவல் . கரூர் ராஜ சேகரன்
பார்டா ...நம்ம ஜென்டில்மேன் கி.நா . ஈரோ ஆயிப்புட்டாரா ?
Deleteமிஸ்டர் நோ..உண்மையிலேயே அதகளமான சாகஸமே...வி காமிக்ஸின் இந்த இதழை கைகளில் ஏந்திய பொழுது இந்த முறை இதழ் கனமாக..,பருமனாக இருப்பது போல ஓர் எண்ணம்...கதையை வாசிக்க ஆரம்பித்ததும் தெரிய வில்லை ..முடித்து கீழே வைத்ததும் தெரியவில்லை...பழைய பாணி கதையே...பழைய பாணி ஓவியமே ..ஆனால் அதே பழைய பாணியில் மாற்று கேமராவை கொண்டு மிகவும் ரசிக்க வைத்த ஓர் நறுக் சுருக் சாகஸம்...மிஸ்டர் நோ வை தைரியமாக தொடர்ந்து படை எடுக்க வைக்கலாம் சார்.. இவரின் சாகஸம் நிறையவே இருப்பதாக அவரே சொல்லி உள்ள காரணத்தால் ஆவலுடன் அவரை மீண்டும் தரிசிக்க காத்திருக்கிறேன்..
ReplyDeleteநெவாடா முதலில் படித்து விட்டேன். அட்டகாசமான அறிமுகம். Truly Refreshing. நல்ல கதை பெரும்பாலும் படங்களால் கதையை நகர்த்தி செல்வது ரொம்பவே நன்றாக உள்ளது. ஆரம்பித்ததும் தெரியவில்லை முடிந்ததும் தெரியவில்லை. ஒரே ஒரு எதிர்பாராத டுவிஸ்ட் இறுதியில் எனக்கு ரொம்பவே பிடித்தது.
ReplyDeleteஎனது மதிப்பெண் 10/10
அடுத்து படித்தது மிஸ்டர் நோ V காமிக்ஸ் எப்பொதும் பரபர என்று போகும் இந்த முறையும் அதே போல . விறுவிறுப்பான கதை. கதை சூடு பிடிக்க ஆரம்பித்ததும் செம்ம ஸ்பீட் கடைசிவரை. இன்னும் இந்த ஹீரோவை பற்றிய ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
ReplyDeleteஎனது மதிப்பெண் 7/10.
நட்சத்திர வேட்டை :
ReplyDeleteசூட்டிங்கிற்கு கல்தா கொடுத்துட்டு காணாமல் போய்விடும் ஹாலிவுட் ஸ்டார்களை தேடிப்பிடிச்சி இழுத்துவந்து தயாரிப்பாளர்களிடம் ஒப்படைப்பதுதான் நம்ம ஹீரோ மார்க்கஸ் நெவாடாவின் வேலை.!
அப்படி காணாமல் போய்விட்ட சோலோ ஸ்டாரை தேடி மெக்சிகோ போகும்போதுதான்... அண்ணன் சோலோஸ்டார் மெக்சிகோவின் மிகப்பெரிய தாதாவான டான் வில்லா டி ரோஸாவின் மகளிடம் வாலாட்டி மாட்டிக்கொண்டது தெரிகிறது..! கடுமையான காவலில் மாட்டியிருக்கும் சோலோஸ்டாரை எப்படி நம்மாள் நெவாடா காப்பாத்தி ஹாலிவுட்டுக்கு கொண்டுவந்து சேர்த்துறார் என்பதே கதை..!
கதை... ஓவியங்கள்.. எல்லாமே அட்டகாசம்..! ஒரே ஒரு குறை.. அதுவும் கொஞ்சம் பெரிய குறை.. ஏதோ அரையிருட்டில் நடப்பது போலவே முழுக்கதையின் கலரிங்கும் இருப்பதுதான்..!
டான் வில்லா டி ரோஸாவின் மாளிகையை லாங்ஷாட்டில் காண்பிக்கும் பக்கங்களில் மட்டுமே வெளிச்சமாக தெரிகிறது.. மற்றபடி எத்தனை வாட்ஸ் வெளிச்சத்தில் பார்த்தாலும் இருட்டுதான்.!
சோலோ ஸ்டாரை மீட்டுக்கொண்டுவர.. பழைய தோழியுடன் சேர்ந்து நெவாடா போடும் திட்டம் படு அட்டகாசம்.!
சாப்ளின் காலத்து T மாடல் காரில் கேட்லிங்கை வைத்துக்கொண்டு கோட்டையையே அதகளப்படுத்தி விடுகிறார்கள்.!
க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பார்த்ததுதான்.. இருந்தாலும் நன்றாகவே இருந்தது..!
மார்க்கஸ் நெவாடா சுவாரஸ்யமாகவே தெரிகிறார்... தொடந்து பார்க்கலாம் தவறில்லை.!
அடுத்த சாகசத்தை வெளிச்சத்துல செஞ்சார்னா நல்லா இருக்கும்.!
சார்..தங்களின் தாயார் பூரண நலமடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்.
ReplyDeleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteNevada. Really enjoyed the character. Color thaan konjam darkka irukku. Uthu uthu paakka vendiyirukku. Nice story. Waiting for further episodes
ReplyDelete@Editor Sir..😍😘
ReplyDelete"Mr.No"-..❤💛.. தமிழ் காமிக்ஸ் நல்லுலகிற்கு புதிய நல்வரவு..😍💐💐
ஆரம்பித்ததுதான் தெரியும்..😃😍
முடிந்ததே தெரியவில்லை..👍
"அமேசானில் அதகளம்" மிகவும் சுவராஸ்யமாக இருக்கிறது..
😍🌷💐💛💙
Big "YES" to "Mr.No"..
💜💚💐💐😃
Courier received yesterday evening.
ReplyDeleteAmount paid for V comics.
சென்றுவா கொன்றுவா :- சித்திரங்கள் அருமை/தெளிவு, விறுவிறுவென்று போனது. கதையில் புதுமை ஒன்றும் இல்லை!
ReplyDelete7/10
தோர்கல் தோர்கல் தோர்கல் தோர்கல்
ReplyDeleteசொல்ல வார்த்தைகளே இல்லை😍
ஜோலனோட பார்வையில கதையை சொன்னது நல்லா இருந்துச்சு🥲
யாருங்க அந்த ட்ராயிங் பெயிண்ட் பண்ணது வேற லெவல்ல பண்ணி இருக்காங்க🤯 வாட்டர் கலர் என்று நினைக்கிறேன் போக போக தோர்கலோட தரம் கூடிட்டே போகுது😮😲
ஒரே ஒரு சின்ன வருத்தம் என்னன்னா
தோர்கள் உலகத்தில் இருந்து கொஞ்ச நேரத்துல வெளிய வந்த மாதிரி இருந்துச்சு
அடுத்த தடவை தோர்கள் குண்டு புத்தகமாக போட ட்ரை பண்ணுங்க சார் ப்ளீஸ் ப்ளீஸ் 🥰🥺🥺🥺
மரணத்தின் நிறம் நீலம் - செம கதை; எளிதில் புரிந்து கொள்ளும்படியான மொழிபெயர்ப்பு; தோர்கல் குடும்பம் நீலம் வியாதியில் இருந்து எப்படி தப்பிக்க போகிறார்களா என படபடப்புடன் சென்றது!
ReplyDeleteமர்ம சாம்ராஜ்யம் - தனது மனைவி & மகன் விருப்படி சொந்த ஊர் செல்லலாம் என முடிவெடுத்து தோர்கல் குடும்பத்துடன் பயணிக்க ஆரம்பிக்கும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளே கதை, கொஞ்சம் புரிந்து கொள்ள கஷ்டமாக இருந்தது இறுதியில் நெஞ்சை கனக்க செய்யும் கிளைமாக்ஸ் என இனிதே முடிந்து தோர்கல் மீண்டும் தனது பயணத்தை தொடர்கிறார்!
மரணத்தின் நிறம் நீலம் - தோர்கல்.
ReplyDeleteகொஞ்சம் கொரோனா டைப் வியாதி. கொஞ்சம் உத்தமபுத்திரன், துளியூண்டு oneside love கலந்து உருவான கதை. சித்திரங்கள் அருமை. சுவாரஸ்யமான கதை. ஏக் தம் ரீடிங்.
தோர்கல்: மரணத்தின் நிறம் நீலம்!
ReplyDeleteஇன்னலில்லா வாழ்விடத்தைத் தேடி ஓடும் தோர்கலின் பயணத்தில் இன்னுமோர் சிக்கல். இம்முறை தோர்கல் பயணிப்பது தன் குடும்பத்தை ஜீவமரணப் போராட்டத்திலிருந்து காப்பாற்ற மட்டுமல்ல... காப்பார் யாரும் இல்லாமல் கைவிடப்பட்டு அவல நிலையில் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மற்ற அபலைகளுக்கும் சேர்த்திதான்.
உள்ளிருந்தே கொல்லும் விஷமாய், வேதனையான மரணமே கதியாய், தன்னுயிரை சடுதியில் விட விடுதலைப் பாறையில் காத்திருப்போரைக் கண்டு உள்ளம் பதறுகிறது.
காலனோ அனுதினமும் எவ்வித தயவும் இன்றி, வயது பால் வேறுபாடு இன்றி சகலரையும் கவர்ந்து செல்ல காத்திருக்கிறான். மரணவாடை எங்கும் வீசுகிறது. நமக்கோ தொண்டையில் துக்கம் அடைக்கிறது.
விவரணைகள் தேவையில்லாமல் வெருண்டோடும் கதையோட்டத்தில் நாமும் ஓடுகிறோம் அந்த ஐந்தாவது நாளை நோக்கி... அய்யகோ... அதுவும்தான் விரைந்து வந்தும் விட்டதே!
அம்மா ஆரிசியா, கணவனை அனுப்பிவிட்டு காத்திருக்கும் வேளையிலே உன்மக்கள் உன்முன் செல்ல நேரிடுமோ என்ற வேதனையில் பெற்றமனம் துடிப்பதைக் கண்டு கலஙகிடாதா நெஞ்சும் உண்டோ...
ஜோலனின் தன்மொழியில் ஆரம்பிக்கும் கதை அடுத்த 24 பக்கங்களில் தொட்டுவிடுவதோ உச்சவேகம்! பூமிக்கடியில் புதைந்தோடும் ஆற்றில் தோர்கலுக்கு முன்னாக நாம் நீந்திச் செல்கின்றோம்! மூச்சடைக்கிறதே எதனாலோ....
விடுதலைப் பாறையோ... விமோச்சன மேடையோ... காக்க வேண்டிய காவலனே களிப்படையவது கொலையில் எனும்போது கடைசி வரை நெஞ்சம் எரிகிறது.
தோர்கல் விரைந்து வா! நேரமில்லை... காலன் காத்திருக்கிறான்... உன் காதல் குடும்பத்தின் கதை முடிக்க!!!
...
ப்பா!! வேற லெவல் விமர்சனம் இது நண்பரே!! கதையோடு கதையாக, தோர்கல் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராகவே மாறிவிட்டிருக்கிறீர்கள்!!
Delete@Parani from Bangalore
ReplyDelete//மரணத்தின் நிறம் நீலம் - செம கதை; எளிதில் புரிந்து கொள்ளும்படியான மொழிபெயர்ப்பு//
ஆமா நானும் கவனித்தேன் யாருங்க அது translation பண்ணது. Translation ரொம்ப நல்லா இருந்துச்சு 🫀1️⃣0️⃣0️⃣
எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!! :)
ReplyDelete