Powered By Blogger

Sunday, September 03, 2023

இன்னும் கொஞ்சம் பதில்ஸ் ப்ளீஸ் ?!

 நண்பர்களே,

வணக்கம். தங்கை பையனுக்கு திருமண நிச்சயம் ஒருபக்கம் ; செப்டெம்பர் இதழ்களின் இறுதிக்கட்டப் பணிகள் இன்னொரு பக்கம் - இங்கே எட்டிப் பார்க்கக் கூட இயலா சூழல் இவ்வாரம் முழுவதிலும் ! ஒரு வழியாய் பதிவுக்கென சனியிரவு ஆஜராகிடும் போது பார்த்தால் பின்னூட்ட எண்ணிக்கை "359" என்று நிற்கிறது ! "ஆகாகா...மூ.ச.படலம் வெயிட்டிங் போலும் ; இந்தப் பதிவை டைப்பிய பிற்பாடு போய்ப் பார்த்துக் கொள்ளலாமென்று" லேப்டாப்பை தட்ட ஆரம்பித்தால் Wi-fi சதி செய்கிறது !! எப்படியோ - தக்கி முக்கி ஒப்பேற்றியுள்ளேன் - அடஜஸ்டூ ப்ளீஸ் !  

First things first....புக்ஸ் சகலமும் பைண்டிங் முடிந்து சனி மாலையே தயாராகி விட்டன ; ஆனால் இங்கு கொட்டித் தீர்க்கும் மாலை மழைகளுக்குக்  கொஞ்சம் மருவாதி தர வேண்டிப் போயுள்ளது ! ரிப் கிர்பி ஸ்பெஷல் - ஹார்ட் கவர் பைண்டிங் புக் என்பதால், இந்த ஈர நேரத்தில் இன்னமும் காய்ந்த பாடில்லை ! So ஓரிரு நாட்கள் காய்ந்திட அவகாசம் தந்தான பிற்பாடே டெஸ்பாட்ச் இருந்திடும் folks ! ஏற்கனவே செய்த பிழையினை இன்னொருவாட்டி செய்து வாங்கிக்கட்டிக் கொள்ள முதுகு தயாரில்லை ; so அருள்கூர்ந்து நம்மாட்களை "இன்னும் அனுப்பலியா ???" என்ற கேள்வியோடு மூக்கில் குத்த வேணாமே - ப்ளீஸ் ? புக்ஸ் புறப்படும் வேளையினில் இங்கு நானே அறிவிப்பேன் ; thanks for your understanding guys !!

இதோ - செப்டெம்பரின் V காமிக்சின் பிரிவியூ - நெடுநாள் விளம்பரமாய் மாத்திரமே தொடர்ந்த மிஸ்டர் நோ சகிதம் ! 


மிஸ்டர் நோ !! 'ஜெரி டிரேக்' என்பது நிஜப் பெயர் ; ஆனால் கதை முழுக்கவே மனுஷனை மிஸ்டர் நோ என்றே விழிக்கின்றனர் ! 1975-ல் தற்போதைய போனெலி குழுமத் தலைவரின் தந்தையாரான செர்ஜியோ போனெலி அவர்களின் கைவண்ணத்தில் உருவான நாயகர் இவர் ; 31 ஆண்டுகளுக்குத் தொடர்ந்துள்ளார் - 379 இதழ்களுடன் ! And சமீபமாய் இன்னொரு 14 கதைகளும் வெளிவந்துள்ளன எனும் போது - கானகங்களில் உலவும் இந்த பிளேபாய் பைலட்டின் தொடரில் நானூறுக்குக் கொஞ்சம் குறைவான கதைகள் உள்ளன ! That is a huge number indeed ! 1950 என்ற காலகட்டம் ; அமேசான் கானகங்களும், தென்னமெரிக்க தேசங்களும் கதைகளின் பின்புலங்கள் ! காரணங்கள் மாறுபட்டாலும், வருகை தருவோரை அமேசானின் மேலே பறக்க இட்டுச் செல்லும் மனுஷன் ரகம் ரகமான இக்கட்டுகளில் சிக்குகிறார் and நேர்கோட்டுக் கதைகளாக இருப்பினும் ரசிக்கும் விதமாய் உள்ளன ! சமீப ஆண்டுகளில் இந்த நாயகர் அமெரிக்காவிலும் வெற்றி நாயகராய் தடம் பதித்து வருகிறார் - ஆங்கிலப் பதிப்புகளுடன் ! சிறுகச் சிறுக ஜெரி ட்ரேக் நம் மத்தியிலும் பாப்புலர் ஆகிடுவாரென்று நம்புவோமாக !  

And இதோ - ரிப் கிர்பி & நெவாடா இதழ்களின் உட்பக்க டிரெய்லர்களுமே :

REPRINT


முதல் பக்கம் - எந்தக் கதையின் மறுபதிப்பென்று யூகிக்க முடிகிறதா guys ?

And இதோ நெவாடா


லேட்டஸ்ட் டிஜிட்டல் கலரிங் பாணியினில் ஒவ்வொரு பக்கமும் அதிரச் செய்கிறது !!  

Moving on, 2024-க்கான அட்டவணையினில் "உள்ளே-வெளியே" ஆட்டம் ஜரூராய் அரங்கேறி வருகிறது ! சமீப காலமாய் அவ்வளவாய் சோபித்திருக்கா ரிப்போர்ட்டர் ஜானிக்கு, ஓராண்டு ஒய்வை வழங்கச் சொல்விடுவீர்களென்ற எதிர்பார்ப்பில் பாஸ்டர் நாயகருக்கு டிக் அடித்திருந்தேன் ; ஆனால் சோடாவை ஓரமாய்ப் போடா என்று நீங்கள் சொல்லியிருக்க, அட்டவணையில் பண்டமாற்று நடந்துள்ளது ! இதே பாணியில் இன்னும் ஓரிரு கேள்விகள் என்னிடம் உள்ளன guys - ரெகுலர் தடத்தில் இடம் தருவதா ? அல்லது ஆன்லைன் மேளா நாட்களின் on demand தடத்துக்கு மடைமாற்றம் செய்வதா ? என்று ! கேள்விகளை இங்கும் கேட்டுள்ளேன் ; ஆன்லைன் வோட்டிங் தளத்திலும் கேட்டுள்ளேன் ! வசதிப்படும் இடத்தினில் பதிலிடலாம் மக்கா ! 

1.ஒல்லி பிச்சான் கௌபாய் நமது லிஸ்டில் முதல் ஆளாய் இடம் பிடிப்பதை அறிவோம் ; but அந்த ஒல்லிப் பிச்சான் வெட்டியானுக்கு ஏற்ற இடம் எதுவென்பது தான் இந்த நொடியில் எனது குழப்பம் ! Given a choice - இவரை ரெகுலர் தடத்திலேயே புகுத்தி விடுவேன் தான் ; ஆனால் சந்தாவில் உள்ள நண்பர்கள் இது குறித்து என்ன எண்ணுகிறார்கள் ? கடைகளில் செலெக்ட் செய்து வாங்கும் நண்பர்கள் என்ன அபிப்பிராயப்படுகிறார்கள் ? என்றறிந்தால் தேவலாம் என்று பட்டது ! So சொல்லுங்களேன் - "ஸ்டெர்ன்" : ரெகுலர் தடத்துக்கானவரா ? அம்புட்டு ஒர்த் இல்லாதவரா ? 


2.அடுத்த கேள்வி பவுன்சர் சார்ந்தது ! நடப்பாண்டினில் இவரது ஆல்பத்தினைப் புகுத்த ஸ்லாட் இல்லை எனும் போது  2024 தான் இவருக்கான பொழுதாகிறது ! Again அதே கேள்வி தான் !! விரசம் இல்லாமல் நகற்ற முடியும் எனில், இந்த மனுஷனை ரெகுலர் சந்தாவினில் இணைப்பது ஓ.கே.வா ? அல்லது - நோ poison tests ; முன்பதிவுத் தடமே மதி ! என்பீர்களா ? நானூறு ரூபாய்க்கான தெறி  சாகசம் எனும் போது, அதற்கான பொருத்தமான இடமெது ? என்பதை நீங்களே சொல்லி விட்டால் நலம் ! So your thoughts ப்ளீஸ் ? 


இரு வினாக்களுக்குமான உங்களின் பதில்கள் 2024 அட்டவணையினைப் பூர்த்தி செய்திட பெரிதும் உதவும் என்பதால் - ப்ளீஸ் do share your thoughts ! 

Before I sign out - சில ஜாலி updates :

A.ஒரு ஒன்-ஷாட் கவ்பாய் கி.நா.கண்ணில் பட்டுள்ளது - ரொம்பவே ஜாலியானதொரு சித்திர பாணியில் ! And கலரிங்கிலும் அட்டகாசமாய் ஜாலம் செய்கிறது ! புடிச்சி போடுவோமுங்களா ?  

B.ஒரு கணிசமான ஏற்றுமதி ஆர்டர் + ஒரு மீடியமான ஏற்றுமதி ஆர்டர் என 2 export ஆர்டர்கள் கிட்டியுள்ளன - வெகு சமீபமாய் ! முதலாம் ஆர்டரில் கிட்டத்தட்ட நமது கையிருப்பில் பெரும்பான்மை titles புறப்பட்டுள்ளன ! கடல்கடந்த புது வாசகர்களைத் தேடிச் செல்லும் நமது நாயகர்களுக்கு good luck சொல்வோமா ? 

C.எதிர்பார்த்தபடியே THE BIG BOYS ஸ்பெஷல் இதழின் கையிருப்பு தரைதட்டி விட்டது ! அடுத்த சில நாட்களில் "காலி" என்ற போர்டை மாட்டிப்புடலாம் ! க்ளாஸிக் வாசகாஸ் - அசத்துறீங்கோ !!! புது இதழ்களின் பக்கமாகவும் உங்களின் கடைக்கண் பார்வைகளை சித்தே ஓட விடலாமே - ப்ளீஸ் ?

D.'தல' டெக்சின் 75-வது பிறந்தநாளுக்கென போனெலியில் உருவாக்கியிருப்பது ஒரு 132 பக்க கலர் இதழ் தான் ; but அதன் கோப்புகளை வரவழைத்துப் பார்த்தால் தெறிக்க விடுகிறது ! அனல் பறக்கும் ஆக்ஷன் ; டெக்சின் மனைவி லலித் வருகை - என்று மின்னலாய் ஓட்டமெடுக்கிறது கதை ! சடுதியில் இங்கே தூக்கி வந்திடலாமென்று எண்ணுகிறேன் !!  

E.சில புது ஆல்பங்கள் சுடச் சுட உருவாகி வருகின்றன ! Bye all...see you around !! 
"தல" பிறந்தநாள் மலருக்கென இங்கே நாம் திட்டமிட்டிருக்கும் 700 பக்கங்களுக்குள் உருண்டு புரளக் கிளம்புகிறேன் ! See you around ! Have a great Sunday !

387 comments:

 1. படங்கள் அனைத்தும் தெறிக்க விடுகின்றன

  ReplyDelete
 2. டெக்ஸ் சித்திரம் அருமையாக உள்ளது

  ReplyDelete
 3. வணக்கம் ஆசிரியர் சார் & நண்பர்களே....

  ReplyDelete
 4. பிக் பாய்ஸ் ஸ்பெஷல் மாயாவி அட்டையுடன் வேண்டும் என்று ஆர்டர் கமெண்ட்டில் போட்டும் எனக்கு இரண்டு புத்தகங்களும் ஸ்பைடர் அட்டையுடன் வந்து பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

  அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது வாட்ஸ்ஆப்பில் தகவல் தெரிவிக்காததால் அனுப்பவில்லை என்று அன்போடு ஒரு குண்டைப் போட்டார்கள்.

  என்போன்று ஏமாற்றமடைந்தவர்களுக்கு ஒரு மாயாவி டஸ்ட் கவர் ஒரு விலை நிர்ணயம் செய்து கொடுத்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன்.

  ஆசிரியர் சார் கொஞ்சம் மனது வையுங்கள்.

  முன்கூட்டியே எனது நன்றிகள் பல.

  ReplyDelete
 5. Rip Kirby காசில்ல kodeswaren

  ReplyDelete

 6. D.'தல' டெக்சின் 75-வது பிறந்தநாளுக்கென போனெலியில் உருவாக்கியிருப்பது ஒரு 132 பக்க கலர் இதழ் தான் ; but அதன் கோப்புகளை வரவழைத்துப் பார்த்தால் தெறிக்க விடுகிறது ! அனல் பறக்கும் ஆக்ஷன் ; டெக்சின் மனைவி லலித் வருகை - என்று மின்னலாய் ஓட்டமெடுக்கிறது கதை ! சடுதியில் இங்கே தூக்கி வந்திடலாமென்று எண்ணுகிறேன் !! ///

  வரவேற்கின்றேன்.சும்மா போட்டுத் தாக்குங்கள் எடிட்டர் சார்.

  ReplyDelete
  Replies
  1. தீபாவளிக்கு,
   இன்னுமோர் லட்டு....!

   Delete
 7. ஜோன்ஸ் +அண்டர்டேக்கர்+ஸ்பைடர் வரவேற்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. அடா..அடா...
   வாங்க... வாங்க.. அடுத்த வருடம் விரைவில் வருக...

   Delete
 8. சனநாயகக் கடமையை ஆத்தியாச்சுங்க எடிட்டர் சார்.

  ReplyDelete
  Replies
  1. பொறுப்பான காமிக்ஸ் மைந்தன்...

   Delete
 9. இரவு வணக்கம் நண்பர்களே 🙏

  ReplyDelete
 10. ஜோன்ஸ் அட்டைப்படம் அசத்தல்

  ReplyDelete
 11. ஸ்டெர்ன் ரெகுலர் தடத்தில் வேண்டாம்.

  பவுன்சர் எடிட்டிங் செய்யாமல் முன்பதிவுக்கு வர எனது ஓட்டு.

  ஒன் ஷாட் கவ்பாய் ஆல்பம் வரட்டும்.

  ஸ்பைடர், ஜோன்ஸ், அன்டர்டேக்கர் வரட்டும்.

  ReplyDelete
 12. இன்னும் கறி கடை திறகக்கலை...‌ ஆனால் பதிவு வந்து.

  ReplyDelete
 13. வெட்டியான்கள், பௌன்சர்... வன்மேற்கு காந்தம் போல் இழுக்கிறது, அமேசான் காடுகளுக்காகவும் வெயிட்டிங், Welcome Mr NO. இந்த வசீகரம் நவீன நகரங்களில் நடக்கும் கதைகளில் இல்லை. லார்கோ, ஷெல்டன் & James Bond 2.0 விதிவிலக்கு

  ReplyDelete
 14. @எடிட்டர் சார்..😍😘

  காலங்காத்தால வணக்கம் சார்..😄😄🙏

  ReplyDelete
 15. எல்லாமே வரட்டும்.. 👍

  எம்புட்டு வேணும்னாலும் வரட்டும்..👍

  படிக்க நாங்க ரெடிங்..😍😘

  ReplyDelete
 16. Stern, soda இவையெல்லாம் தனித்தடத்தில் வருவது பிரச்னை இல்லே. ஆனா வருவாங்களா? இந்த இரண்டுமே நல்லா இருந்த தொடர்கள்.

  ReplyDelete
  Replies
  1. That is the question which is nagging me for every polls like this sheriff.

   Delete
 17. A: ஏ அமுக்கிப் போடு…அப்படிப் போடு…
  B. கலக்குங்க மக்கா..!
  C. இதே தான் என்னோட வேண்டுகோளும். பழய புக்கு புடிக்காத நாங்களும் வாங்கி ஆதரவு தல மாதிரி பழய புக் மட்டுமே வாங்கற நண்பர்கள் கொஞ்சம் புதுசையும் கண்டுகிட்டா நல்லதே.
  D. குளிர்கால ஆன்லைன் புத்தக விழாவில் இறக்கிடலாங்களா?
  E. E ன்னு விரிஞ்சு கடவாய் பக்கமா ஒழுகுதுங்கோ ( ஜோன்ஸைப் பாத்தா)

  ReplyDelete
  Replies
  1. மஹேந்திரன்... Screen shot எடுத்து யாராவது வீட்டம்மாவுக்கு அனுப்புனா
   உங்க நெலம என்னாகும் னு... கொஞ்சமாவது யோசிசீங்களா.. 🤭

   Delete
  2. Enga sheriff vitalstatix maadhiri
   Edhaiyum thaangum idhayam

   Delete
 18. அப்பாடா.. கமெண்ட் எப்படி போடறதுன்னு இப்பதான் sir..
  புரியுது... மகேந்திரன் ஜோன்ஸ் ஐ "உத்து, உத்து பாத்திட்டிருந்த
  பொழுதுக்கே நானும் spot க்கு
  வந்தேன்.. Once என்பதை தொடாமல்..
  Always..என்பதை தொட்டால்.. கமெண்ட் publish
  ஆவுதுங்க.. நான், பௌன்செர் friend ங்க...அவரு கதையில குண்டக்க, மண்டக்க ஏதாவது
  இருந்தா பெரிய பலூன தூக்கி
  வீசுங்க.. 😄😄❤️👍..

  ReplyDelete
 19. ஸ்டெர்ன் எப்படி வந்தாலும் சரி
  பவுன்சர் எடிட்டிங் செய்யாமல் முன்பதிவுக்கு வர எனது ஓட்டு.
  ஒன் ஷாட் கவ்பாய் ஆல்பம் வரட்டும்.
  ஸ்பைடர், ஜோன்ஸ், அன்டர்டேக்கர் கண்டிப்பாக வரட்டும்.
  Online check செய்தபோது Spider விண்வெளி பிசாசு முழு ஆல்பம் என்று தெரிகிரது. Finally

  ReplyDelete
  Replies
  1. ஆஹா..ஆஹா..😍😘
   "ஸ்பைடரின் விண்வெளி பிசாசு".. 😍❤💛💙💚ஆஹஹா...💋💋👼

   Delete
  2. ஓ அப்படியா...இப்பதான் நினைவுக்கு வர்து....விண்வெளிப் பிசாசு வேடமெடுக்குமே

   Delete
 20. பவுன்சர் ரெகுலர் இடத்திலேயே வரலாம்.வெட்டியான் .சோடா ரெகுலர் தடத்தில் இடம்வேண்டும். தவிர்க்க முடியாத இவர்கள் தனித்தடத் தில் வந்தாலும் நிச்சயம் ஹிட் அடிப்பார்கள் அதே ரெகுலர் இல் வேண்டாம் என்பது .அவர்களுக்கு மரியாதை குறைவு.தனித்தடத்தில் வருவதால் வேறு கதைகள் ரெகுலர் இல் வரும் வாய்ப்பு அதிகம் .தனித்தடத்திலும் புத்தகங்கள் நிச்சயம் அதிகம் வரும் வாய்ப்புகள் அதிகம் என்றாலும் பவுன்சர் ரெகுலருக்கே நான் வாக்களித்துள்ளேன் . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 21. ஒன் சாட் கவ் பாய் வேண்டும் சார். சாக்லேட் வேணுமானு கேட்டா எந்த குழந்தை வேணாமுன்னு சொல்லும்.

  ReplyDelete
 22. //முதல் பக்கம் - எந்தக் கதையின் மறுபதிப்பென்று யூகிக்க முடிகிறதா guys ?//

  வாராயோ வைர நெக்லஸ் (ராணி காமிக்ஸ்: 157)

  சுட்டவன் யார்? (மாலைமதி காமிக்ஸ்: 23)

  இதுவரை ஆங்கிலத்தில் மற்றும் தமிழில் வந்துள்ள ரிப் கிர்பி கதைகள் லிஸ்ட். 👇

  https://worldcomicscollectionwcc.blogspot.com/search?updated-max=2022-02-13T10:52:00%2B05:30&max-results=20&start=4&by-date=false&m=0

  ReplyDelete
 23. வணக்கம் எடிட்டர் சார்.ஒன்ஷாட் கெளபாய் சாகசத்தைப் பிடிச்சுப் போடுங்க எடிட்டர் சார்.அடுத்த மாசமே போட்டாலும் சரிதானுங்க ஆசிரியர் சார்.இதுக்கலாமா சார் அனுமதி கேட்கனும்.பிடிச்சுப் போடுங்க சார்.

  ReplyDelete
 24. வணக்கம் V காமிக்ஸ் எடிட்டர் விக்ரம் சார். உங்களிடம் ஒரு கோரிக்கை அல்லது விண்ணப்பம். V காமிக்ஸ் முதலாம் ஆண்டு சிறப்பிதழை நல்ல குண்டு மலராகத் தரவேண்டி பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.நீங்கள் ஆவன செய்வீர்களா? செய்வீர்களா?

  ReplyDelete
 25. அருமையான காமிக்ஸ் மலரும் நினைவுகள்.சிறிய வயதில் தெரு தெருவாக அலைந்திருக்கின்றேன் நண்பர்களிடம் இரவல் காமிக்ஸ் வாங்கிப் படிக்க.எங்கள் வீட்டில் வறுமை கோரத் தாண்டவமாடியதால் விலைக்கு வாங்கிப் படிக்க இயலவில்லை. 5 ,10 பைசா எனக் கிடைக்கும் பாக்கெட் மணியைச் சேமித்து காமிக்ஸ்களை வாடகைக்கு வாங்கிப் படித்ததும் உண்டு.இன்று 47 வயதாகிறது சாப்பிடும் போது கூட காமிக்ஸ் படித்துக் கொண்டே தான் சாப்பிடுகின்றேன். 2012 முதல் 2016 வரை காமிக்ஸ்களை வாங்க நேரடியாக சிவகாசிக்கே சென்றுவிடுவேன். மாதா மாதம் காமிக்ஸ்களை பார்சல் பண்ணிக் கொண்டிருப்பார்கள் சிவகாசி லயன் அலுவலகத்தில். நான் சுடச் சுட அன்றே வாங்கி பஸ்ஸில் வரும் போதே படித்து மகிழ்வேன். சிறுவயதில் எங்கள் ஊரான உத்தமபாளையத்திலிருந்து பக்கத்து ஊரான சின்னமனூரில் உள்ள வீரபத்ரன் கடைக்கு (மறைந்த நமது காமிக்ஸ் காதலர் ஜெகன் அண்ணா அவர்களின் தந்தையின் வெற்றிலை பாக்குக் கடை தான் இது) நடந்தே போய் வந்து காமிக்ஸ் வாங்கிப் படிப்பேன். கிட்டத் தட்ட 8+8=16 கி மீகள் நடை பயணம் அது.உடன் எனது பயண நண்பர்கள் அப்துல் ரஹிம் மற்றும் சிராஜிதீன். அதுவொரு அழகிய காமிக்ஸ் காலம் நண்பர்களே.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ. நானும்,58
   வயசாவுது.. சில சமயத்துல சாப்பிடும் போது காமிக்ஸ் படித்து வீட்டம்மணி சத்தம் போயிடுவாள்.. முன்பு அம்மா... ❤️😄🙏👍

   Delete
  2. நானும் 80 களில் சாப்டபடியே படிப்பேன்...வரவர நடந்தபடியே படித்ததும்...சைக்கிளை அண்ணன் ஓட்ட பின்னால்மர்ந்தபடியே படித்ததும்....பஸ்ஸில் ஊருக்கு செல்லில் லைட்டை அணைக்கும் முன் படித்தது நினைவில்..இப்ப அவ்விடத்தை ஆக்கிரமிக்குது செல்ஃபோன் ...என் தாயார் ஆசிரியரிடம் திட்டிய படி சொல்வது பெருமையாக சொல்வது போலவே பட்டது சாப்பிடும் போது புத்தகம் கையிருப்பதை

   Delete
  3. எல்லோரும் வெளையாடயில ...வெள்ளாட்டு வெறியனான நான் படிப்பத கண்டு அக்கம்பக்க பெரிசுக எப்படி கவனம் சிதறாம படிக்கிறான்னு பாராட்டியதும் கதைகளோடு போட்டி போட்டு தீனி போட்டது....அந்தளவுக்கு அன்னைக்கு நம்மை கட்டிப் போட்டது சித்திர விருந்து

   Delete
  4. அருமை அருமை அருமை
   சகோதரர்களின் மலரும் நினைவுகளை படிப்பதில் அருமை
   😍😍😍😍😍

   Delete
 26. @Editor sir
  பிக் பாய்ஸ் ஸ்பெஷல் மாயாவி அட்டையுடன் வேண்டும் என்று ஆர்டர் கமெண்ட்டில் போட்டும் எனக்கு இரண்டு புத்தகங்களும் ஸ்பைடர் அட்டையுடன் வந்து பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

  அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது வாட்ஸ்ஆப்பில் தகவல் தெரிவிக்காததால் அனுப்பவில்லை என்று அன்போடு ஒரு குண்டைப் போட்டார்கள்.

  என்போன்று ஏமாற்றமடைந்தவர்களுக்கு ஒரு மாயாவி டஸ்ட் கவர் ஒரு விலை நிர்ணயம் செய்து கொடுத்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன்.

  ஆசிரியர் சார் கொஞ்சம் மனது வையுங்கள்.

  முன்கூட்டியே எனது நன்றிகள் பல.

  ReplyDelete
 27. பவுன்சர் நோ சென்சார்..
  அதனால தனித்தடம் தான் அவருக்கு சரிபட்டு வரும்..

  வெட்டியான் எல்லாருக்கும் பிடிக்குமான்னு சொல்ல தெரியல அதனால தனித்தடமே நல்லது ஆசானே..

  அந்த காமெடி கதையை தீபாவளிக்கு போட ஆவண பண்ணுங்க ஆசானே..

  ReplyDelete
 28. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 29. சூப்பர் சார்....அதிரடிகள்....

  மிஸ்டர் நோ அட்டைப்படம் இரண்டுமே அருமை...மேலும் ஆவலைத் தூண்டுது உங்க முன்னோட்டம்
  இரவின் அதிர்வும்...பகலின் வெயிலும் போட்டுத் தாக்கும் நெவாடா செம தூள்...


  டெஸ்மாண்ட் திருடனா தான அது


  ReplyDelete
 30. ஸ்டெய்ன் ரெகுலர்ல...
  பவுன்சர் தனியா வரட்டும்...அந்த நானூறுக்கு பட்டய கிளப்பும் இதழ் 40 ம் ஆண்டு கொண்டாட்டத்த பிறப்பிக்கப்படும்....

  ReplyDelete
 31. A. புடிச்சி போடுவோமுங்களா

  Double ok boss

  ReplyDelete
 32. ஏ.கௌபாய் கிநா..
  அதும் ஒன் ஷாட்டு..
  வண்ணச்சேர்க்கை ..அதிரடி ..
  இதென்ன கேள்வி..புடிச்சி உள்ள போடுங்க சாரதா
  பி...குட் லக்

  சி.சூப்பர்...40ம் ஆண்டு அதகளப்படுத்த வண்ண ஸ்பைடர் தொகுப்பு
  டி..இந்த வருடமே 75 மேலும் கலைகட்டட்டும் தீபாவளித் தோரணமாய்

  ReplyDelete
  Replies
  1. யாரு அந்த சாரதா?

   Delete
  2. குமார் இலக்கணத்ல இது ஆர்வப் போலி எனப்படும்..சாரதா என்பத ..காலெடுத்து பாக்கலாம் ஆர்வத்தால் கால நீட்டி சொல்வது ..கால் வச்சா சாறு எனப்படும் அதாவது இனிமையான பழச்சாறை கொண்டாங்கன்னும் போது ...இல்லாத ஒன்று இருப்பதாக நினைவுறுத்தச் சொல்லி எழுதியோருக்கு சப்போட்டா காணாமலே காணச்சொல்லி கண்டபடி(கண்ணால் கண்ட படியும்) வருவதால் இல்பொருள் இனிமையணின்னுஞ் சொல்லலாம்...இன்னுஞ் சொல்லலா

   Delete
  3. இனிமே கேப்பீங்க குமார்?

   Delete
  4. குமாரு அல்ரெடி தெறிச்சு ஜார்க்கண்ட் பக்கமா ஓடிட்டு இருக்காரு.

   Delete
 33. சுடச்சுட உருவாகும் புது ஆல்பங்கள் ஜோன்ஸ்....அண்டர் டேக்கர்... ஸ்பைடர்..சூப்பர் சார் ...சொல்லாம தயார் செய்றீங்க ஹோ ....தீபாவளிக்கு தந்துடுங்க வேலை முடிஞ்சா

  ReplyDelete
  Replies
  1. எல்லாத்தையும் விஞ்சுது ஸ்பைடர்...குற்றவியல் நிபுணர்களால..
   பொம்மை பேரரசர்...
   நீதிக்காவலன் வில்லன்...
   இவர் யார்னு தெரில..
   விண்வெளி பிசாசு...
   மிஸ்டர் மர்மம்...
   யார்னு தெரில( க்ரோ ஸ்காவன்சரா)

   எப்படியோ வலையில் சிக்கிய அறுவர்..சினிஸ்டர் செல்வனுக்கு முன்னே இந்த ஆறோ...
   ஸ்பைடரின் இவ்விரைகளை ஸ்பைடரோட சேத்து நம்ம லயன் வால்ல கட்டிப் போடுங்க...இதுக்குத் தான் சிங்கம் வால கைலயே வச்சிருந்திச்சோ

   Delete
  2. " ஸ்பைடரின் ..... "
   ஸ்டீல்ல்ல்ல்.......Why this kolaveri?..

   Delete
  3. ஸ்பைடர் விரைந்து செயல்பட்டு இரைகளை கவ்வுதலால்....இரு பொருள்பட வந்ததால் இரட்டைக் குமரி

   Delete
 34. ஓட்டு போட்டாச்சு.
  பவுன்சர், ஸ்டெர்ன் இருவரும் ரெகுலர் தடத்தில் வர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

  ReplyDelete
 35. புதிய ஆல்பம் அட்டைப் படங்கள் ஜீலிர் ரகங்கள்😀😀😀😀😀

  ReplyDelete
 36. 50வது.....காலை வணக்கம் அனைவருக்கும்..

  ReplyDelete
 37. வணக்கம் நண்பர்களே!!

  ReplyDelete
 38. Polling ல ஓட்டு போட்டாச்சு.

  ஒன் ஷாட் கௌபாய் Double OK

  அடடே இரண்டு Bulk ஆர்டர் அருமை. இது தொடர வாழ்த்துக்கள்.

  C: நல்ல தகவல்

  டெக்ஸ் 75 அடுத்த வருடமே இங்கே கொண்டு வந்து விடலாம் சார்.

  ReplyDelete
 39. சார் அப்படியே டெட் வுட் டிக் 3ஆவது புத்தகமும், மேகி காரிசன் 3ஆவது புத்தகமும் சீக்கிரமே வெளியிட வேண்டுகிறேன்...

  ReplyDelete
 40. இனிய காலை வணக்கங்கள் ஆசிரியரே
  இனிய காலை வணக்கங்கள் சகோதரர்களே

  ReplyDelete
 41. ஸ்டெர்ன் கட்டாயம் ரெகுலர் தடத்தில் வரட்டும் சார்... அதற்கு முற்றிலும் தகுதியானவரே!!

  பவுன்சரின் இந்த கதையில் எடிட் செய்ய அவசியம் இராது என நினைக்கிறேன் சார். அதனால் ரெகுலரிலேயே வரலாம்.

  ReplyDelete
  Replies
  1. // பவுன்சரின் இந்த கதையில் எடிட் செய்ய அவசியம் இராது என நினைக்கிறேன் சார். அதனால் ரெகுலரிலேயே வரலாம் // எடிட் செய்ய வேண்டி இருந்தால் தனி தடத்திலும், இல்லை என்றால் ரெகுலர் தடத்தில் வரலாம்.

   Delete
  2. //எடிட் செய்ய வேண்டி இருந்தால் தனி தடத்திலும், இல்லை என்றால் ரெகுலர் தடத்தில் வரலாம்//

   +999

   Delete
 42. ஸ்டெர்ன் ரெகுலர் தடத்தில் வரட்டும், ஆசாரியரே
  பவுன்சர் சென்சார் இல்லாமல் தனித்தடத்தில் வரட்டும், Don't want to loose the story coz of censor

  ReplyDelete
 43. ஜோன்ஸ்.அண்டர்டேக்கர்.ஸ்பைடர் ஆகா மனம் ஆனந்த கூத்தாடுதே

  ReplyDelete
 44. புது கதாநாயகருக்கு வரவேற்பு பண்ணிடலாம்

  B. மகிழ்ச்சியான செய்தி, ஆசிரியரே

  C. புது புக்ஸ் வீட்ல படிச்சுட்டு இருக்காங்க, என்னுடைய முறை இன்னும் வரல. ஆறு மாதங்களில் படிக்காத புத்தகங்கள் தான் படித்து கொண்டு இருக்கிறேன்

  D. அடுத்த வருடம் நம்ம ஸ்லாட்டில் கொண்டு வந்து விடுங்கள், ஆசிரியரே

  E. சூப்பர் ஆசிரியரே, எல்லாரையும் நம்ம ஊருக்கும் வர சொல்லிடுங்க, ஆசிரியரே 😊😊😊

  ReplyDelete
 45. டெக்ஸ் ஓவியங்கள் கலக்குகின்றன சார்...உடனே பிடித்து வாருங்கள்

  ReplyDelete
 46. One shot cow boys and new albums are welcome. Stern to continue in main stream. Hope he has got good feedback so far.

  ReplyDelete
 47. ஒரு கதை ஞாபகத்துக்கு வருது!

  கிணத்தை எட்டிப்பார்த்தபடியே ஒருத்தன் 'ஏழு ஏழு ஏழு ஏழு'ன்னு எண்ணிக்கிட்டிருந்தானாம். அந்த வழியே போன இன்னொருத்தன் இவன் பக்கத்துல வந்து 'என்னப்பா.. ஏழு ஏழு ன்னு எண்ணிக்கிட்டிருக்கே?'ன்னு கேட்டுக்கிட்டே ஒரு ஆர்வத்துல குனிஞ்சு கிணத்தை எட்டிப் பார்த்தானாம்! எட்டிப்பார்த்தவனின் பிட்**தில் எட்டி உதைத்து உள்ளே தள்ளிவிட்டு இவன் 'எட்டு எட்டு எட்டு எட்டு'னு எண்ண ஆரம்பிச்சுட்டானாம்!

  ஏழு - சோடா!!
  எட்டு - ஸ்டெர்ன்!!!

  கிணத்துமேட்டில் நின்று எண்ணிக் கொண்டிருப்பது சாட்சாத் - வாசகர்களாகிய நாம்தான்!!

  ஒருபுறம் - சங்க காலத்து நாயகர்கள் எல்லாம் ரோஸ் பவுடரைப் பூசிக்கொண்டுவந்து (மேக்ஸி சைஸ் - ஹார்டு பைன்டு) விற்பனையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க - மறுபுறம் யதார்த்தமான நவீன காலத்துப் படைப்புகள் பரிதாபமான நிலையில்!!

  கார்ட்டூன்களோ - கவலைக்கிடமான நிலையில்!!

  பேசாம ஒரு கார்கோ கப்பல்ல ஏத்தி, என்னை யாராச்சும் நாடு கடத்திட்டா பரவாயில்லைன்னு தோனுது!!

  ReplyDelete
  Replies
  1. உங்களது துணைக்கு, நானும் வருகிறேன் தோழரே...

   Delete
  2. நீங்க பின்னாடியே கார்கோ பரிசல்ல வந்துருங்க ஜி! :)

   Delete
  3. Neenga paadikitte vandhaa kooda ellorume vandhuduvom sir

   Delete
 48. சார்,
  ஈரோடு ஸ்பெஷல் இதழ்கள் அட்டகாசம். கார்சனின் கடந்த காலத்தை கையில் ஏந்தி வாசித்த பிறகு , வேறு எந்த புத்தகத்தை கையில் எடுத்தாலும் ஏதோ தினசரியை கையில் வைத்திருப்பது போலிருக்கிறது. :-)
  விதவிதமான கௌபாய் நாயகர்களை பார்த்து விட்டோம். சற்று Sci - Fi Genre பக்கமும் பார்வையை திருப்பலாமே. கென்யா போல் வேறு சில கதைகளும் முயற்சிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. //Sci - Fi Genre பக்கமும் பார்வையை திருப்பலாமே//

   +9

   Delete
  2. Science fiction 😍👌👌👌👌

   Delete
  3. ஏற்கனவே ஒரு கதைய (VALERIAN )சார் வாங்கி வச்சிருந்ததா ஒரு போஸ்ட்ல கேள்விப்பட்டேன் இப்ப கொண்டு வந்தா சூப்பரா தான் இருக்கும்

   Delete
 49. ///தங்கை பையனுக்கு திருமண நிச்சயம் ஒருபக்கம் ; ///---

  எங்கள் அனைவரது வாழ்த்துகள்..💐💐💐💐💐💐

  2015ஈரோடு விழாவில் தங்களோடு விழா வந்திருந்தாரே அந்த தம்பியாங் சார்???

  ReplyDelete
 50. //!ரிப் கிர்பி ஸ்பெஷல் - ஹார்ட் கவர் பைண்டிங் புக் என்பதால், இந்த ஈர நேரத்தில் இன்னமும் காய்ந்த பாடில்லை ! //

  ----நெசமாவாவே...🤭🤭🤭

  இ..இ..இதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை தெய்வங்களா...

  ReplyDelete
 51. ///!So ஓரிரு நாட்கள் காய்ந்திட அவகாசம் தந்தான பிற்பாடே டெஸ்பாட்ச் இருந்திடும் folks///

  ---ஒண்ணும் அவசரம்லாம் இல்லைங் சார்... மெதுவாக நல்லா காய்ஞ்சி நச்சுனு வரட்டும்னு நம்ம சேலம் குமார், ஜம்பிங் பேரைவை உறுப்பினர்கள், ஸ்டீல் க்ளா.... எல்லாம் தெரிவிக்க சொன்னாங்க...

  ReplyDelete
 52. ///1975-ல் தற்போதைய போனெலி குழுமத் தலைவரின் தந்தையாரான செர்ஜியோ போனெலி அவர்களின் கைவண்ணத்தில் உருவான நாயகர் இவர் ////

  ///அமேசான் கானகங்களும், தென்னமெரிக்க தேசங்களும் கதைகளின் பின்புலங்கள் ! காரணங்கள் மாறுபட்டாலும், வருகை தருவோரை அமேசானின் மேலே பறக்க இட்டுச் செல்லும் மனுஷன் ரகம் ரகமான இக்கட்டுகளில் சிக்குகிறார் and நேர்கோட்டுக் கதைகளாக இருப்பினும் ரசிக்கும் விதமாய் உள்ளன ! ////

  ///31 ஆண்டுகளுக்குத் தொடர்ந்துள்ளார் - 379 இதழ்களுடன் ! And சமீபமாய் இன்னொரு 14 கதைகளும் வெளிவந்துள்ளன ///


  ஆஹா...ஏகப்பட்ட பாஸிடிவ்களுடன் வர்றாரு போல Mr.No.....வார்ம் வெல்கம்

  அவரை ஆண்டுதோறும் Mr.Yesஆக்கிடலாம் சார்..

  ReplyDelete
  Replies
  1. ///Mr.No.....வார்ம் வெல்கம்

   அவரை ஆண்டுதோறும் Mr.Yesஆக்கிடலாம் சார்..///

   டபுள் ஓகே..

   Delete
 53. நெவாடா இரவு காட்சி அசத்துகிறது....

  இம்முறை முதல் வாசிப்பு இந்த புதிய ஹீரோ தான் சார்..

  ReplyDelete
  Replies
  1. நானும் உங்க ரூட்ல வர்றேன் தோழரே...

   Delete
 54. ஆல்ரெடி சோடா, தாத்தாஸ் மூவிங் டூ புக்ஃபேர் தடம்..
  இதில் இன்னும் ஒருவரும் இணைய வாக்கெடுப்பா....ஹூம்...

  1.ஒல்லி வெட்டியான் ரெகுலர் சந்தாவிலயே வரட்டும் சார்

  2.பெளன்சர்ல இந்த பாகங்கள் 10&11ன் பிரெஞ்சு ஆல்பங்கள் பொம்மை பார்த்து உள்ளேன்...விரசம்லாம் இல்லை...இவரையும் ரெகுலர் தடத்திலயே போடுங்க சார்

  ReplyDelete
  Replies
  1. பேசாம இவங்களை சந்தா Oன்னு ஒரு பிரிவுல போட்டு விடுங்க. வேணுங்கறவங்க வாங்கிக்கறோம்

   Delete
 55. // So சொல்லுங்களேன் - "ஸ்டெர்ன்" : ரெகுலர் தடத்துக்கானவரா ? அம்புட்டு ஒர்த் இல்லாதவரா ? //
  ஸ்டெர்ன் சிந்திக்க தூண்டும் களம்,ஒர்த் ஆனவர்தான்,ரெகுலர் தடம் சிறப்பாக இருக்கும்...

  // அடுத்த கேள்வி பவுன்சர் சார்ந்தது ! அதற்கான பொருத்தமான இடமெது ? //
  ஆன்லைன் திருவிழாவில் வந்தால் சமரசம் இல்லாமல் பவுன்சரின் பவுன்சர் பயமுறுத்தும் என்று தோன்றுகிறது...

  ReplyDelete
 56. A.புடிச்சி பேசுங்க சார் அந்த கெளபாயை சந்தாவுக்கு உள்ளே...

  B.கிரேட் news...congrats sir💐.அவுங்களுக்கும் நம்ம வாழ்த்துகள்

  C.அப்புறமென்ன The big boys 2வை சட்டு புட்டுனு ப்ளான் பண்ணுங்க.ஆனா அந்த இரு வண்ண கதை ஏதாவது இருந்தாதான் அந்த 1980s feelingவரும்.

  D.தட்டி தூக்குங்க சார்...ஆன்லைன் மேளானு டிசம்பரில் தாக்கும்போதோ அல்லது நவம்பர் கடைசியில சேலம் விழாவின்போதோ ரீலீஸ் பண்ணிபுடலாம்

  E.ஜோன்ஸ் செம..அண்டர்டேக்கர் அசத்துவாரு வழக்கம்போல..

  ReplyDelete
 57. // A.ஒரு ஒன்-ஷாட் கவ்பாய் கி.நா.கண்ணில் பட்டுள்ளது //
  கரும்பு தின்ன கசக்குமா சார்...!!!

  // B.ஒரு கணிசமான ஏற்றுமதி ஆர்டர் + ஒரு மீடியமான ஏற்றுமதி ஆர்டர் என 2 export ஆர்டர்கள் கிட்டியுள்ளன //
  அருமை,அருமை...
  சீக்கிரமா கிட்டங்கி காலியாகட்டும்,புதிய தலைப்புகள் களம் காணட்டும்...

  // C.எதிர்பார்த்தபடியே THE BIG BOYS ஸ்பெஷல் இதழின் கையிருப்பு தரைதட்டி விட்டது ! //
  சிறப்பான செய்தி,அப்ப 2024 இல் THE BIG BOYS ஸ்பெஷல்-2 உறுதின்னு சொல்லுங்க...

  // D.'தல' டெக்சின் 75-வது பிறந்தநாளுக்கென போனெலியில் உருவாக்கியிருப்பது ஒரு 132 பக்க கலர் இதழ் தான்,சடுதியில் இங்கே தூக்கி வந்திடலாமென்று எண்ணுகிறேன் !! //
  சீக்கிரம் வந்தால் மகிழ்ச்சி,இருக்கவே இருக்கு ஆன்லைன் திருவிழா (தீபாவளிக்கு வந்தா நல்லாதான் இருக்கும்),பொங்கல் புத்தக விழா...

  ReplyDelete
 58. // E.சில புது ஆல்பங்கள் சுடச் சுட உருவாகி வருகின்றன ! //
  அண்டர்டேக்கரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,ஸ்பைடர் 2.0 ??? வரட்டும் பார்ப்போம்...

  ReplyDelete
 59. ஸ்டெர்ன் . வெட்டியான் மட்டுமல்ல . நம்மைப் போலொரு வாசகர். எனவே ரெகுலர் தடத்தில் முதல் பெயராக இடம் பிடிக்க தகுந்தவர்.

  ReplyDelete
 60. // "தல" பிறந்தநாள் மலருக்கென இங்கே நாம் திட்டமிட்டிருக்கும் 700 பக்கங்களுக்குள் உருண்டு புரளக் கிளம்புகிறேன் ! //
  அக்டோபர் ஸ்பெஷலா,ஹைய்யா அடுத்த மாசம் அதிரி புதிரிதான்.....
  செப்டம்பர் 28 மிலாடி நபி அரசு விடுமுறை (வியாழன்),29 மற்றும் 30 இல் கூரியர் இருக்கும்,அக்டோபர்1 ஞாயிறு,2 காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை நாட்கள்...
  அக்டோபர் இதழ்களை செப்டம்பர் இறுதியில் அனுப்ப திட்டமிட்டால் வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் இதழ்களை கொண்டாட ஏதுவாக இருக்கும் என அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன் சார்...

  ReplyDelete
 61. புதியவர்கள் நெவாடாவும்,மிஸ்டர் நோ வும் ஆர்வமூட்டுகிறார்கள்...

  ReplyDelete
  Replies
  1. எனக்குமே...அன்றைய வருகிறது நாயகர்கள் விளம்பரம் போல்...அதும் ஜெர்ரி ட்ரேக் பேரு ரட்டை வேட்டயர நினைவூட்டுவது எனக்கு மட்டுந்தானா

   Delete
 62. டியர் சார்.
  யார் ரெகுலர் தடத்தில் இருக்கிறார்களோ -இல்லையோ,
  அடுத்த வருட அட்டவணையில். _இளவரசி-இருப்பது போல் பார்த்துக்கொள்ளுங்கள்...
  Maxi_சைஸ் எல்லாம் வேண்டாம்.
  பாக்கெட் சைஸ் கூட போதும்.
  ரசித்துக் கொள்வோம்..

  ReplyDelete
 63. ஊப்ப்ஸ்..
  என்ன மாதிரியான கதை..
  ஆரம்பம் தொடங்கி கடைசி வரை பட்டாசாய் வெடிக்கிறது..
  மெபிஸ்டோவின் மாயாஜாலத்தில் சிக்குண்ட டெக்ஸ் &கோ..
  பதை பதைக்கும் விநாடிகள்..
  ஜீவ மரண போராட்டத்தின் விளிம்பில் நண்பர்கள்..
  டெக்சும் கார்சனும் அனுபவிக்கும் நரக வேதனைகள்..
  பிரம்மையில் தோன்றும் படு பயங்கரமான கற்பனைத் தோற்றங்கள் வாசிக்கும் நம்மையும் பயமுறுத்துகின்றன..
  336 பக்கமும் வாசித்து முடித்த போது ஏதோ ஒரு பயங்கரமான மாய லோகத்திலிருந்து மீண்டு வந்ததைப் போல தோன்றுகிறது..
  ஒரு சித்திரக் கதை புதினத்தில்தான் எத்தனை எத்தனை கற்பனைகள்..
  வரி வடிவக் கதைகளில் வர்ணனைகளோடு கதாசிரியரின் கற்பனைத் திறனோடு எளிதாகச் சொல்லி விடலாம்..
  ஆனால் சித்திரக் கதைகளில் அது சாத்தியமல்ல..
  கதாசிரியரின் மனதினூடான கற்பனைகளை அப்படியே ஓவியத்தில் கொண்டு வர வேண்டும்..
  வரையும் ஓவியங்கள் வாசகனின் எண்ணவோட்டத்தோடு கலந்து கதையின் தீவிரத்தையும் உணர்த்த வேண்டும்...
  குறிப்பாய் இக் கதையின் ஓவியங்கள் நம்மை மிரட்சியடையச் செய்கின்றன..

  BOSELLI யின் மிரட்டலான கதைக் களத்திற்கு CESTARO வின் சித்திரங்கள் உயிரூட்டியிருக்கின்றன..

  மீண்டு(ம்) வந்த மாயன்!
  டெக்ஸ் வில்லர் & கோவின் மூன்று பாக அமானுஷ்யம்+பரபரப்பான த்ரில்லர் சாகசம்!
  லயன் காமிக்ஸின் கிரீடத்தில் இன்னுமொரு கோஹினூர்!

  ReplyDelete
  Replies
  1. குணா கரூர்,

   சிறந்த பார்வை.
   உங்களது விமர்சனம் அருமையா இருக்கிறது.

   Delete
  2. // டெக்ஸ் வில்லர் & கோவின் மூன்று பாக அமானுஷ்யம்+பரபரப்பான த்ரில்லர் சாகசம்! //
   அதே,அதே...
   பரபரப்பான கதைக் களம்...

   Delete
  3. நன்றி நண்பர்களே

   Delete
 64. ஸ்டெர்ன் மற்றும் அண்டர்டேக்கருக்குத் தனித்தடம் தேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து.மன்னிக்கவும் சார்.

  ReplyDelete
 65. வணக்கம் சார்,

  எங்களுடைய பதில்கள் அட்டவணையை பூர்த்தி செய்ய உதவுவது மகிழ்ச்சி. ஆனால் சென்ற ஆண்டு அட்டைவணையை அறிவித்த போது தாங்கள் சொன்ன சில விஷயங்களை நினைவு படுத்த விரும்புகிறேன்.

  1. தரைக்கு வந்த வானம் - பிப்ரவரியில் வந்திருக்க வேண்டியது. இன்னும் வரவில்லை, இது குறித்து எந்த அறிவிப்பையும் காணோம். மேலும் இந்த புத்தகம் compact size என்று விளம்பரப்படுத்தபட்டது. உண்மையிலேயே அந்த சைஸ் தானா அல்லது விலையை குறைக்க நாம் சுருக்கி விட்டோமா. சுருக்க வேண்டாம் என்பது எனபது எனது கோரிக்கை. வருட கடைசி quarter க்கு வந்து விட்டோம். இது குறித்து தங்களிடம் இருந்து ஒரு update வேண்டும்.

  2. ​எல்லாம் கிழமயம் - அட்டவணையில் ரெகுலரில் வரும் என அறிவித்தது, தள்ளி போய்க் கொண்டே இருக்கிறது.

  3. மீண்டும் வந்த மாயன் - Varient Cover மற்றும் மாற்று அட்டை போஸ்ட் கார்டு சைசில் அடுத்த மாதம் தருவதாகவும் குறிப்பிட்டு இருந்தீர்கள்.

  4. டெக்ஸ் வில்லர் 75 ஆண்டில் மாத மாதம் தவறாமல் டெக்ஸ் இடம் பிடிப்பார் - இந்த September மாதம் டெக்ஸ் இல்லை.

  5. சந்தாதாரர்களுக்கு இலவச அறிவிப்பு - 4 (2 கலர் மினி டெக்ஸ், 1 கலர் மினி டைலன், 1 விங் கமாண்டர் ஜார்ஜ்). வருட கடைசியில் இருக்கிறோம், இதுவரை வந்திருப்பது ஒன்று அதுவும் சட்டை/அட்டை இல்லாமல். இந்த அன்பு பரிசுகளை பற்றி கொஞ்சம் இப்போது அதுவும் அட்டவணையை இறுதி செய்யும் நேரத்தில் அலசுவது நல்லது என நினைக்கிறேன்.

  எலியப்பா மற்றும் கைப்புள்ள ஜாக். மாத மாதம் இலவசமாக சந்தாதாரர்களுக்கு வந்தது. இதில் எலியப்பா மட்டும் முழுமையாக வந்தது. கைப்புள்ள ஜாக் அமர்க்களமாக ஆரம்பித்து, பிறகு அளவில் குறைந்து, கடைசியில் பாதியிலேயே நின்றும் விட்டது. எதற்கு சார் இதை ஆரம்பித்து பிறகு பாதியில் அரைகுறையாக விட வேண்டும்.

  மேலும் வாசகர்களுக்கு இதில் உள்ள சிரமங்களை தெரிய படுத்த விரும்புகிறேன். அட்டையில்லாமல் சிறு சிறு புத்தகங்களாக வரும் இவற்றை சேகரித்து வைப்பதும், maintain செய்வதும் சிரமம். அதற்கு பதில் முழு தொகுப்பாக அட்டையுடன் எங்களுக்கும் (சந்தாதாரரர்களுக்கும்) தரமானதாக வருட துவக்கத்திலோ அல்லது கடைசியிலோ கொடுத்து விடுங்கள். என் வாதம் கொடுத்தால் (மன்னிக்கவும்) உருப்படியாக கொடுங்கள் இல்லையென்றால் வேண்டாம் என்பதே.

  உங்களுக்கே தெரியும் நமது புத்தகங்களை நாங்கள் எவ்வாறு பொத்தி பொத்தி போற்றி பாதுகாக்கிறோம் என்று. இப்போது இலவசமாக கொடுத்திருக்கும் விங் கமாண்டர் ஜார்ஜ் புத்தகத்தை இந்த தரத்தில் நான் துளியும் எதிர்பார்க்கவில்லை. ஆகையால் கொடுப்பதாக முடிவெடுத்து விட்டால் சந்தாதாரர்களுக்கும், அதில் இல்லாதவர்களுக்கும் கொடுக்கும் புத்தகத்தின் தரத்தில் எந்தவித நெருடலும் இல்லாமல் தரமானதாக ஒரே மாதிரியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  (மேலும் எந்த ஒரு பதிப்பக ஜாம்பவானும் இதுவரை செய்யாததை, வருட வருடம் செலவு செய்து ஈரோடு புத்தக விழாவை நடத்தி வாசகர்களை ஒரு குடும்பமாக அரவணைத்து சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்படி இருக்கையில் இந்த மாதிரி சங்கடங்களையும் வரும் நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை)

  6. "ஒவ்வொரு மாதமும் கூரியரில் கலரில் 4 பக்க flyers, இல்லத்தரசிகளையும், குட்டீஸ்களையும் திருப்தி படுத்துமாறு ஒரு சர்ப்ரைஸ் இருக்கும்". இதுவரை ஒரு மாதம் கூட இப்படி ஒன்று எனக்கு வந்ததில்லை. ஆகையால் இவ்வகை அறிவிப்புகள் வேண்டாம் சார். மேலும் இது போன்ற அறிவிப்புகளுக்கும், இலவசங்களுக்கும் பதில் மேகி கேரிசன் கதைகளுக்கு அட்டையை கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். நூறு ரூபாய் கொடுத்து வாங்கியும் அதில் அட்டை இல்லாமல் இருப்பது நமது standard க்கு உகந்தது அல்ல சார்

  ReplyDelete
 66. 7. சிறப்பு வெளியீடுகள் -
  பவுன்சர், Zagor, சிரிப்பே சிறப்பு, இவைகள் அனைத்தும் வருட இறுதிக்குள் ஏதாவது ஒரு தருணத்தில் வரும் என தெரிவித்து இருந்தீர்கள், இப்போது பவுன்சர் அடுத்த வருடம் சென்று விட்டது, அதே நிலைதான் மற்ற இதழ்களுக்குமா.

  8. "கிராபிக் நாவல் பிரியர்களுக்கு தெறிக்க விடும் இரண்டு புதிய கதைகள் காத்துள்ளது. அதில் ஒன்றை maxi சைசில் கலரில் போட்டு தீருவேன்" - இது குறித்தும் இது வரை எந்த தகவலும் இல்லை சார்.

  மேற்கூறிய அனைத்தும் சென்ற ஆண்டு அட்டவணையில் அறிவித்தவை இன்று வரை நிறைவேறாமல் உள்ளது. ஒன்றிரண்டு என்றால் OK. ஆனால் இவ்வளவு நிலுவையில் உள்ளது. எப்படி இனி இருக்கும் குறுகிய காலத்தில் நிறைவேற்ற முடியும்.

  இவற்றில் சிலவற்றிற்கு கால அவகாசம் இல்லாததால் முடியவில்லை என கூறியுள்ளீர்கள். ஆனால் அறிவித்த கதைகளுக்கும், அறிவுப்புகளுக்கும் முதலில் முக்கியத்துவமும், முதல் உரிமையும், கால நேரமும் கொடுத்து விட்டு பிறகு கிடைக்கும் நேரத்தில் புதிய அறிவிப்புகளுக்கு செலவிடலாம் சார்.

  அட்டவணை அறிவிக்கும் நேரத்தில் அனைவரது முகத்திலும் புன்னகை வேண்டும் என்பதற்காக கிராபிக் நாவல், சிரிப்பே சிறப்பு என அனைவரையும் திருப்தி படுத்த வெளிவந்த அறிவிப்புகள் கிடப்பில் கிடக்க, கிடைத்த கேப்பில் எல்லாம் மறுபதிப்புகளும், கிளாசிக் நாயாகர்களும் வருவது அனைவரின் முகத்திலும் புன்னகையை கொணராது சார்.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. @Thirunavukkarasu Vazzukkupparai

   உங்கள் நினைவாற்றலுக்கும், நேர்மையான, வெளிப்படையான கருத்துக்களுக்கும் என் வந்தனங்கள்!!

   சற்றே சுள்ளென்ற பாணி எழுத்துக்களென்றாலும், அடுத்த அட்டவணை வெளியாக இருக்கும் இந்தச் சமயத்தில் இது ரொம்பவே அவசியமானதும் கூட!!

   Delete
 67. புதுசு எத வேணாக்க கொண்டு வாங்க..
  அதையும் வாசிப்போம்..
  ஆனாக்கா..
  அந்த க்ளாசிக் னு சொல்லும் போதே முதுகுத் தண்டோட அடிப்பகுதியில பாம்பு மாதிரி சுருண்டு கெடக்கற ஏதோ ஒன்ன தட்டி எழுப்பற மாதிரி..
  அந்த பாம்பு கொஞ்சம் கொஞ்சமா மேலெலும்பி முதுகு தொட்டு,சிரசு தொட்டு உச்சி மண்டைல போயி அப்படியே வெடிக்குமாம்..
  அது நூறு கூடலுக்குச் சமமாம்..

  அந்த ஃபீலீங் இருக்கே..!!?

  அதாங்க க்ளாசிக்♦.!!

  நம்ம இளவரசிய ஹார்டு பவுண்டு டைஜஸ்டுல கொண்டு வாங்க வாத்யாரே..!?
  40 ஆண்டுகால மொத்த புண்யமும் உங்களுக்கே!

  ReplyDelete
  Replies
  1. Aathaadi
   Maamanukku avvalavu verinnu oru dialog varume adhu dhaan ninaivukku varudhu sir

   Delete
  2. வந்தால் நல்லது தான்.

   Delete
  3. எனக்கு அவ்வளவு ஆசையெல்லாம் கிடையாது..
   கடந்த ஆண்டு வெளிவந்தது போல இரண்டு கதைகள் இணைந்த ஒரு டைஜஸ்டு-வந்தாலே பெருமகிழ்ச்சி கொள்வேன்..

   Delete
 68. பவுன்சர் கதை விறுவிறுப்புதான்...ஆனா...ஆனா...என்ன சொல்லன்னு குழப்பம்....அதனால் தள்ளியே நிக்கிறேன்

  ReplyDelete
 69. If the votes indicate bouncer to be on special release please continue from where we had left it sir. Don't skip those rest of the stories and publish with missing pieces

  ReplyDelete
 70. சார் ஜோன்ஸ்...வெட்டியான் ஸ்பைடர் மூன்றுமே தயார்னா தீபாவளிக்கு ஸ்பைடரை தரலாமே

  ReplyDelete
 71. காமிக்ஸ் காதலர்களுக்கு வணக்கம் 🙏

  இது என்னுடைய முதல் பதிவு 😃

  ReplyDelete
  Replies
  1. வருக...வருக...வாங்கோ.

   Delete
  2. @சேலம் TEX விஜயராகவன்
   @Parani from Bangalore
   @ச.பொன்ராஜ்
   @Psaravananpsaravanan
   @KiD ஆர்டின் KannaN

   என்னை வரவேற்ற Senior காமிக்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

   Delete
  3. @M ~ S ~ D
   நல்வரவு நண்பரே!! மற்ற நண்பர்களின் வரவேற்பை வைத்துப் பார்த்தால் ஏற்கனவே அறிமுகமானவர் போல தெரிகிறதே?!!

   இவர்கள் அளவுக்கு நான் சீனியர் இல்லையென்றாலும் ஒரு சக இளம் வாசகராக உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!

   Delete
  4. @Erode vijay
   நன்றி சார் 😍


   //இவர்கள் அளவுக்கு நான் சீனியர் இல்லையென்றாலும் ஒரு சக இளம் வாசகராக உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!//

   நேரில் சந்திக்கும்போது நீங்கள் இளைஞரா என்று தெரிந்துக்கொள்கிறேன் சார்..😉

   Delete
  5. ///இவர்கள் அளவுக்கு நான் சீனியர் இல்லையென்றாலும் ஒரு சக இளம் வாசகராக உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!///

   மாடஸ்டியக்காவே 'இள'வரசின்னு சொல்லிட்டு திரியும்போது உங்களுக்கென்ன குருநாயரே.. நீங்களும் இளைஞர்னே சொல்லிக்கோங்க..
   நாங்க ரெண்டுத்துக்கும் சிரிச்சி வெச்சிக்கிறோம்..!

   Delete
  6. ///நேரில் சந்திக்கும்போது நீங்கள் இளைஞரா என்று தெரிந்துக்கொள்கிறேன் சார்..😉////

   🤣🤣🤣🤣🤣
   இங்கிட்டு பூரா அரை சதம் போடபோற பார்டிங்கதான்.....

   மஹி சார்லாம் 60ங் கண்ணாலத்துக்கு ரெடியாகுறாரு🤭

   Delete
 72. என்னை தெரியல...உத்து உத்து பாக்கிறேன்.. வெறித்தனமாருக்கு ஸ்பைடரின் அட்டைப்படம்....
  ஸ்பைடர் முகத்த மட்டும் மாத்திட்டு அப்படியே தாங்க வாய்ப்பிருந்தா

  ReplyDelete
  Replies
  1. அண்ணா...கவிஞரண்ணா.... அட்டைப்படத்தில் மூஞ்சி மாத்தும் இந்த ஆட்டத்துக்கு ஞான் வரில்லா ! இது தான் படைப்பாளிகளின் ஒரிஜினல் கவர் ! இந்த இதழினை நாம் வெளியிடும் பட்சத்தில் அதுவே நமக்கும் மதி !

   Delete
 73. நம்ம இளவரசிய ஹார்டு பவுண்டுல . கலர்ல கொடுங்க சார் .இந்த 40வது ஆண்டுல நம்ம முதல் நாயகிக்கு நல்ல ஒரு சிறப்பு செய்ய வேண்டியது நமது கடமை . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. அட்டை கலர்லதானே இருக்கும்.... அதை எதுக்கு மறுபடி கேட்குறீங்க ஜி🤔

   Delete
  2. சார்..ஹார்ட் பவுண்ட் புக்ஸ் - குறைந்த பட்சமாய் ஒரு 150 பக்க இதழுக்கே சோபிக்கும் ! அந்த 150 பக்கங்களுக்கும் இளவரசியின் கதைகளெனில் நம்மவர்கள் அத்தினி பேரும் தாக்குப்பிடித்து விடுவார்களென்று தோன்றுகிறதா ?

   Delete
 74. இன்று திருமணநாள் கொண்டாடும் நண்பர் சேலம் குமார் சாருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இனிய திருமணநாள் வாழ்த்துகள் குமார்..💐💐💐

   இன்னிக்காச்சும் எங்க சகோதரியை வெளியே கூட்டிப்போய் சாப்பிட வைங்க..! டெய்லி உங்க சமையலை சாப்பிட்டு நொந்துபோயிருப்பாங்க..!

   Delete
  2. இனிய திருமணநாள் வாழ்த்துகள் KS....💐💐💐


   Delete
  3. இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் குமார் ப்ரோ.

   Delete

  4. /.இன்னிக்காச்சும் எங்க சகோதரியை வெளியே கூட்டிப்போய் சாப்பிட வைங்க..! டெய்லி உங்க சமையலை சாப்பிட்டு நொந்துபோயிருப்பாங்க..!//---
   ஏப்பா அவர் என்ன நம்ம மஹியா...🤭🤭🤭

   Delete
  5. அடடே...இனிய திருமணநாள் வாழ்த்துகள் சார் !

   Delete
 75. ஜெர்ரி ட்ரேக். இந்திர ஜால் காமிக்ஸில்கெரி ட்ரேக் என்ற பெயரில் ஒரு ஹீரோ இருந்தது ஞாபகத்தில் உள்ளது . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. ஆமா சார்....சித்திரங்கள் கொஞ்சம் சுமாரான ரகம் ; கதைகளுமே just ஓ.கே. ரகத்தில் இருக்கும் ! இந்திராஜாலில் கடைசி நாலைந்து ஆண்டுகளில் தலை காட்டியவர் !

   Delete
  2. அவர் கெர்ரி
   நம்மவர் ஜெர்ரி

   Delete
 76. A.சரிங்க
  B.எப்பவும் தாங்கள் தானுங்க எங்களுக்காக கடல் கடந்து சென்று வாந்திங்க
  தங்களின் படைப்பு கடல் கடப்பதுக்கு வாழ்த்துகள் அண்ணா
  C.வாய்ப்பே இல்லைங்க
  D.அருமமையான படைப்புங்க
  E.கண்ணை கவரும் மனதையும் கொள்ளை அடிக்கும் ஸ்பைடர் சிறப்பிலும்சிறப்புங்க

  ReplyDelete
 77. ஒரு சிறிய அறிமுகம் :


  என்னை பத்தி சொல்லனும்னா நான் வளர்ந்ததே காமிக்ஸ்களுக்கிடையேதான். என் தந்தை ஒரு மிகப்பெரிய காமிக்ஸ் வெறியர் ரெஸ்ட்ருமுக்கே காமிக்ஸ் புத்தகத்தோடதான் போவார்னா பாத்துக்கோங்களேன். இப்படியாக என் சிறு வயதில் அவ்வப்போது காமிக்ஸ் படித்து வந்தேன் .பிறகு ஒரு நீண்ட இடைவேளைக்குப் பின்னர் இப்போதுதான் "நில் கவனி வேட்டையாடு,கார்சனின் கடந்தகாலம்,பிரிவோம் சந்திப்போம்" போன்ற புத்தகங்களை படித்தேன் . "தேவ ரகசியம் தேடலுக்கல்ல" புத்தகத்தை படிப்தற்காக எடுத்து வைத்துள்ளேன் .அது போக நான் ஒரு ரிப்போடர் ஜானி ரசிகன் ,ஆகையால் ரிப்போர்டர் ஜானி கதைகள் நிறைய படித்துள்ளேன் (ரிப்போட்டர் ஜானி பதிப்புகளை நிறுத்தினால் உண்ணாவிரதம்,சாலைமறியல் போன்ற போரட்டங்களில் ஈடுபடுவேன்).

  ReplyDelete
  Replies
  1. சாரே கிரிக்கெட் தல தோனினா...காமிக்ஸ் தல டெக்ஸ்... டெக்ஸ் அணியில சேர்ந்துடுங்கோ....

   நல்ல வேளை ரெண்டு வாரம் முன்பு நீங்கள் இங்கே இணையல...ஜானி மிகப்பெரிய சோதனை லயிருந்து தப்பினாரு... Umpires call ஆக போயி நாட் அவுட் னு ரிசல்ட் வந்தது..

   Delete
  2. அடேயப்பா ரெஸ்ட் ரூமுக்கே புக்கோட போற வெறியரா???
   பெரிய கை தான் போல..அவரை சந்திக்கணுமே...

   ஈரோடு பக்கம் ஆகஸ்ட் மொதவாரம் வந்திடுங்க..

   Delete
  3. ரிப்போர்ட்டர் ஜானிக்கோசரம் வோட்டு போட்டோரில் எத்தினி பேர், கடைசி 3 ஆண்டுகளின் ஜானி கதைகளை முழுசாய் வாசித்தார்கள் என்றும் கணிக்க இயன்றால் சூப்பராக இருக்கும் !

   Delete
  4. @சேலம் Tex விஜயராகவன்

   கார்சனின் கடந்த காலம் மட்டுமே படித்துள்ளேன் அதனால் டெக்ஸ் பற்றி தெரியவில்லை போக போக தெரிந்துக்கொள்கிறேன் சார்.

   Delete
  5. @சேலம் Tex விஜயராகவன்

   // அடேயப்பா ரெஸ்ட் ரூமுக்கே புக்கோட போற வெறியரா???
   பெரிய கை தான் போல..அவரை சந்திக்கணுமே...

   ஈரோடு பக்கம் ஆகஸ்ட் மொதவாரம் வந்திடுங்க..//

   கண்டிப்பா வந்துட்றேன் சார்....

   Delete
  6. டெக்சில் நீங்கள் படித்திருக்கும் முதல் சாகசம் "கார்சனின் கடந்த காலம்" தான் எனில், செம லக் தான் ! தொடரின் all time best-ஐ முதலில் ஸ்பரிசித்திருக்கிறீர்கள் நண்பரே !

   Delete
 78. பாக்கெட் சைஸ் காமிக்ஸ் வந்து ரொம்ப நாளாச்சு. ஒரு 500 பக்க ஸ்பெஷலை ஹார்ட் பவுண்டில் பாக்கெட் சைஸ்ல்ல போட்டு தாக்குங்க சிங்கமே.

  ReplyDelete
  Replies
  1. வெறியரே....மொதல்ல ஒரு கதை அமையணும் ....அதுக்கு பாக்கெட் சைஸ் அவசியமாகிடனும்....அப்புறமா அதன் பக்க எண்ணிக்கையைப் பார்த்தாகணும்....அது கணிசமாக இருக்கும் பட்சத்தில் ஹார்ட் பவுண்ட் பற்றி யோசிக்கணும் ! அதன் பின்னே அதை வெளியிட ஒரு ஸ்லாட் தேடணும் ! இது தான் ஒரு புக்கின் பிளானிங் நடைமுறை !

   அது எதுவுமே இல்லாம, நேரா "500 பக்கம் ; பாக்கெட் சைஸ் ; ஹார்ட் பவுண்ட்" என்பது நம்ம ஸ்டீல் கவிஞரின் கற்பனைகளுக்கு மட்டுமே ஒத்துப் போகும் !

   Delete