நண்பர்களே,
வணக்கம். 'புலி வருது... புலி வருது' என்று நாடெங்கும் பரவியிருந்த தீபாவளிப் பரபரப்பு இதோ நமது நினைவுகளுக்குள் ஐக்கியமாகி வாரம் ஒன்றாகிறது. பட்டாசுகளும், பட்சணங்களும் இனி 365 நாட்களுக்கு பிறகே என்ற புரிதலில் அடுத்த விடுமுறைகள் நோக்கிப் பார்வைகள் நீள்கின்றன. Hello Christmas sir...... நமஸ்காரம் New Year sir..... கிட்டக்க நெருங்குறீங்க !! பண்டிகை கடந்து போயிருந்தாலுமே, அதன் நினைவுகள் தொடர்வது இயல்புதானே guys ? நமக்கோ வழக்கத்தைக் காட்டிலும் இந்த தபா நினைவலைகள் சற்றே தூக்கலாய் அலையடிக்கின்றன, மெபிஸ்டோ and Co-வின் உபயத்தில்.
"அசுரர்கள் அடங்குவதில்லை". இந்த 4 பாக மெகா சாகசமானது ஒரிஜினலாய் 2026-ன் அட்டவணையில் கிடையவே கிடையாதுதான். ஆனால் 2025-ன் ஈரோட்டுச் சந்திப்பின் போது இந்தப் பூச்சாண்டி வில்லனுக்கென எழுந்த கோரிக்கைக் குரல்கள் வழக்கத்தைக் காட்டிலும் உரக்கவே ஒலிக்க, சம்மதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை. ஆனால் அக்டோபரில் அட்டவணையினை ரெடி செய்திருந்த சமயத்தில் தேர்தல் வாக்குறுதி போல ஈரோட்டு ப்ராமிஸ் மறந்தே போயிருந்தது. அதிர்ஷ்டவசமாகவோ, துரதிர்ஷ்டவசமாகவோ - அட்டவணையினை வெளியிட தயாரான நாளில் இந்த மெபிஸ்டோ மேட்டர் நினைவுக்கு வந்திட, அப்புறம் நிகழ்ந்த சகலமும் உங்களுக்கே தெரியும்.
சில வாக்குறுதிகள் வாழைப்பழமாட்டம் வழங்கிட சுலபமானவைகளே. ஆனால் அவற்றை நிறைவேற்றும் பொழுதுகளில் தான் பலாப்பழத்தை அறுப்பது போல் நாக்கு தொங்கிடுவது புரியும்.இந்த ஆல்பத்தினைக் கையில் எடுப்பதற்கு முன்பாக, இதன் துவக்க பாகங்களான "மீண்டு வந்த மாயன்" இதழினை ஒரு தபா புரட்டி முடித்தால் தேவலாம் என்று தோன்றியது தான். ஆனால் மேஜையின் மீது 464 பக்கங்கள் முறைப்பாகக் காத்திருக்கும் போது, flashback-ல் இன்னொரு 330 பக்கங்களுக்குள் தலையை நுழைக்க சக்தியைத் திரட்டவே முடியவில்லை. So, இஷ்ட தெய்வங்களை எல்லாம் கும்பிட்ட கையோடு உள்ளே புகுந்தேன்.
இங்கே ஓவியர் சிவிட்டெல்லியின் ஜாலங்களைப் பற்றிக் குறிப்பிட்டே தீர வேண்டும். நமது ரேஞ்சர்கள் டீம் full strength-ல் கதை நெடுக ஆஜராகி இருக்க, ஒருத்தருக்கொருத்தர் tough கொடுத்துக் கொண்டிருந்தனர் கம்பீரத்தில். அதிலும் வெள்ளிமுடியார் கார்சனை இந்த கதை முழுக்கப் பார்க்கும் போதெல்லாம்- "நீ அழகன்டா, நீ அழகன்டா' என்று ஒப்பிக்கவே தோன்றியது. ஒரு வார்னிஷ் பூசாத நிஜத்தை நான் இங்கே சொல்வதாயின், இந்த மெகா சாகசத்தின் காவல் தெய்வமே திருவாளர் கார்சன் தான் - at least என்னளவிற்கு.
எப்படி? என்று சொல்லும் முன்பாய், டெக்ஸின் இது போலான மெகா ஆல்பங்களின் பணிகள் முன்னிறுத்தும் வித்தியாசமானதொரு சவால் பற்றி எழுத நினைக்கிறேன். நமது 2-வது இன்னிங்ஸ் துவங்கிய காலம் முதலாய், டெக்ஸ் கதைகளுக்கு கருணையானந்தம் அங்கிளின் பங்களிப்பு ஆகச் சொற்பமே என்றான பிற்பாடு, நமது டீமின் மகளிரணியே for some reason மொழிபெயர்ப்புகளின் முதல் வார்ப்பினை செய்து வந்தனர். அப்போதெல்லாம் மாதம் 2 அல்லது மிஞ்சிப் போனால் 3 இதழ்கள் மட்டுமே இருந்து வந்ததால், திருத்தி எழுதவும், மாற்றி எழுதவும் எனக்கு சுலபமாய் சாத்தியப்பட்டது. டைனமைட் ஸ்பெஷலில் தான் மகளிரணியின் மெகா தடுமாற்றம் முதல் முறையாக தலைதூக்கத் தொடங்கியது. யாராக இருந்தாலுமே ஒரு 500+ பக்கங்கள் கொண்ட கதையினை இரண்டோ-மூன்றோ வாரங்களுக்குள் நிறைவு செய்திடவெல்லாம் போவதே இல்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டு எழுதும் போது, மொழிநடைகளில் ஏகமாய் ஏற்ற இறக்கங்கள் தலை தூக்கிடுவதைப் பார்க்க முடிந்தது. "வா, போ" என்று ஆரம்பத்தில் அழைத்துக் கொண்டிருந்தோரை பிற்பாடு "வாங்க, போங்க" என்று கூப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். தவிர, எழுதுவோர் யாருமே அதுவரையிலும் டெக்ஸ் கதைகளைப் படித்துப் பழகியோர் அல்லவே அல்ல எனும்போது, நமது எழுதப்படா சில அரூப விதிகளை அவர்கள் எத்தனை முயற்சித்தாலும் நடுவழியே கழற்றி விட்டதே நேர்ந்து கொண்டிருந்தது. 2012-க்கு பிற்பாடே நான் வகுத்திருந்த சில டெக்ஸ் தமிழாக்க விதிமுறைகளை நம்மவர்கள் தவறாது பின்பற்ற வேண்டுமென விரும்பினேன்.
*டைகர் கதை நெடுக வந்தாலும் டெக்ஸை "இரவுக் கழுகாரே" என்று மட்டுமே அழைத்திட வேண்டும். பெயர் சொல்லிடலாகாது.
*கார்சனை "வெள்ளிமுடியார்" என்றும் கிட்டை "சின்னக் கழுகார்" என்றும் தான்.
*ஆனால் கிட் & டைகர் மட்டுமே தனித்திருக்கும் போது formality-கள் ஏதுமின்றி பேசிக் கொள்ளலாம், ஜாலியான நண்பர்களைப் போல.
*கார்சனின் காலை அவ்வப்போது டெக்ஸ் வாரிக் கொண்டே போகலாம் தான். ஆனால் அது சூழ்நிலைகளுக்கு ஏற்ப மட்டுமே. இக்கட்டான வேளைகளிலோ tight-ஆன தருணங்களிலோ ஜோக்களுக்கு இடம் இருக்கலாகாது.
*தீவிரமான கட்டங்களில் பார்ட்னர், நண்பா போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் மட்டுமே.
*ஆனால் கார்சனுக்கு மட்டும் டைட்டான வேளைகளிலும், ஏதாவது புலம்பலான பகடிகள் allowed.
*அதேசமயம் ஆத்ம நண்பனுக்கோ, நண்பனின் புதல்வனுக்கோ ஒன்றென்றால் உள்ளிருந்து கார்சன் பொங்கிட வேண்டும்.
ரைட்டோ - தப்போ - இவற்றை மண்டைக்குள் உருவகப்படுத்தி வைத்திருந்தேன் & பேனா பிடிப்போர் இதனை தவறாது பின்தொடர வேண்டும் என்பதிலும் தீவிரமாய் இருந்தேன். ஆனால் தீவிர டெக்ஸ் வாசகர்களாகவும் / ரசிகர்களாகவும் இருந்தாலொழிய, இந்த ரூல்ஸ் ராமானுஜனின் அரிய கோட்பாடுகளை நினைவில் இருத்திக் கொள்வது சிரமமே. அது மட்டுமன்றி, நெடுங்கதைகளின் இறுதி 100 பக்கங்களில் பேனா பிடிப்போரின் அயர்வுகளும் தென்படத் துவங்கிவிடும். நமக்கோ அந்த finishing stretch தான் அதிமுக்கியம். டைனமைட் ஸ்பெஷலில் ஆரம்பித்த சோதனை - டெக்ஸ் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் தீவிரமாய்க் கலந்து கொள்ளும் அந்தக் கதையில் உச்சம் கண்டது. குருவி தலையில் பப்பாளியைச் சாத்திய கதையாக ஒரு செம fresh வருகையிடம் அந்த 330 பக்கக் கதையைத் தந்திருந்தேன். கொரோனாவிலிருந்து அவர் தப்பி விட்டார் தான் ; ஆனால் நான் ரெண்டு வாரங்களுக்கு அவரைப் படுத்திய பாட்டில் குளிர் ஜுரமே வந்திருக்கும் ! 100 பக்கங்களைக் கடக்க முடியாது அவர் ஏதோ காரணம் சொல்லிக் கழன்று கொள்ள - மிகச் சொற்ப அவகாசத்தில் மீதி 250 பக்கங்களை எழுதும் முயற்சியில் சட்னியாகிப் போனேன். அதன் பின்பாய் வந்த "மீண்டு வந்த மாயன்" நெடும் சாகசத்தில் "மாப்பிள்ளை இவர் தான் - ஆனா சட்டை என்னுது" என்ற கதை தான்! ஒவ்வொரு 50 பக்கங்கள் எழுதிய உடன் அதனை வரவழைத்து, வண்டி லேசாகத் திசை மாறினாலும் குய்யோ - முறையோ என்று கூக்குரலிட்டு ரிப்பேர் வேலைகளைச் சூட்டோடு சூடாய் செய்து முடித்தேன். And "பனிமண்டலப் போராளிகள்" 440 பக்க சாகசமானது has to count amongst the most thrilling works! அந்த ஆர்டிக் பனிக்களம் ; அமானுஷ்ய எதிரிகள் ; வரலாற்றில் பிணைந்த நிகழ்வுகளோடு பயணம் செய்தது மறக்கவியலா அனுபவம்.
And இந்த நெடும் கதைகளின் வரிசையில் லேட்டஸ்டான "அசுரர்கள் அடங்குவதில்லை" - பணிக்கான தருணம் புலர்ந்த சமயம் - 'வம்பே வாணாம் ; நாமளே எழுதிப்புடலாம்' என்று தீர்மானித்திருந்தேன் ! காத்திருந்த 464 பக்க வேலைப் பளுவைத் தாண்டி வேறு எந்த விதத்திலும் இந்த வேலை என்னை மிரட்டியிருக்கவில்லை ! மாயாஜாலம் + ஆக்ஷன் என்ற காம்போவை பெரிய நோவின்றிக் கடந்து விடலாமென்று நினைத்திருந்தேன். ஆனால் நான் கொண்டிருந்த நம்பிக்கை கதை துவங்கிய பத்து / இருபது பக்கங்களிலேயே தகர்ந்து போகத் தொடங்கியது. முந்தைய சாகசத்தில் முழுநேர மிக்சர் அரைக்கும் பணியிலிருந்த யமா இங்கே வீரியம் பெற்று எழுந்திட்டான் ! பற்றாக்குறைக்கு ரொம்பச் சீக்கிரமே "பத்மா" என்றொரு கேரக்டரும் பிரசன்னமாக, பேந்தப் பேந்தவே முழித்தேன். மோரிஸ்கோவும் ஐக்கியமான பிற்பாடு கதை மாய லோகத்தில் டாப் கியரில் டிராவல் பண்ண ஆரம்பித்த போதே எனக்கு உதறத் தொடங்கி விட்டது.
காலம் காலமாய் - டெக்ஸை வெறும் ரேஞ்சர் அவதாரில் பவனி வந்திடச் செய்ய நான் ஆசைப்பட்டது ஏன் ? என்பதெல்லாம் தலைக்குள் ஓட ஆரம்பித்தன ! 'இந்த மாந்த்ரீகம் - மாயாஜால வித்தையெல்லாம் ஒரு வலிமையான நீதிக்காவலருக்கு வேணாமே !!' என்று எதன் பொருட்டெல்லாம் நான் தயங்கியிருந்தேனோ - அந்தப் பயங்களெல்லாம் தலைவிரித்தாடிடுவது போலிருந்தது. கதைக்குள் 'நர்பாஸ்' என்ற அதிரடிப் பார்ட்டியும் இணைந்து கொண்ட போது அகலத் திறந்த வாய் - பக்கம் 464 வரை மூடவே இல்லை ! ரொம்பச் சீக்கிரமே புரிந்தது - டெக்ஸை இந்த சாகசத்தின் மையப்புள்ளியாக்க விழைந்தால் பல்பு தான் கிடைக்கும் என்பது. கதையின் நாடியே "மாந்த்ரீகங்களுக்கு இடையிலான மோதல்" என்ற ரீதியில் கதாசிரியர் கையாண்டிருக்க, நமது ரேஞ்சர்கள் நதியோட்டத்தோடு பயணித்தே தான் ஆக வேண்டும் என்பதை உணர்ந்தேன். அந்த நொடியில் தான் கார்சனை 'கபக்'கென்று பற்றிக் கொள்ளத் தோன்றியது. டைட்டான சூழல்களைக் கூட தனது பகடிகளால் இதுநாள் வரை இலகுவாக்கி வந்த வெள்ளி முடியாருக்கு, இங்கே "பகடிகளின் பகலவன்" ரோல் தந்திட்டால் மட்டுமே மலர்க்காடுகள் வழியே பயணம் செய்ய முடியுமென்று தீர்மானித்தேன் ! அதன் நீட்சியே இந்த 4 பாக சாகஸம் நெடுக கார்சன் அள்ளி விடும் வரிகள் ! இதில் ஹைலைட்டே - ஒரிஜினலில் கூட இம்முறை லைட்டான பகடி வரிகள் இருந்தது தான் ! வழக்கமாய் ரொம்பவே மேலோட்டமான காலை வாரும் வரிகளோடு தாண்டிப் போய் விடும் மௌரோ பொசெல்லியே , இங்கே கார்சனுக்கு மட்டுமின்றி, டீமின் இதர உறுப்பினர்களுக்குமே மெலிதான எள்ளல் வரிகளை வழங்கியிருந்தார். அதையும் உணர முடிந்ததால் தான் - கார்சன் நாயனம் ஊத, தவில், கஞ்சிரா என இதர கருவிகளை மற்றவர்களிடம் தந்திட முனைந்தேன்.
பொதுவாகவே இந்த எக்ஸ்ட்ரா நம்பர்கள் போடும் போது, முன்நிற்கும் பிரதானச் சவாலே - அந்தந்த ப்ரேம்களில் கார்சனின் முகபாவங்களுக்கோ, உடல் மொழிக்கோ நாம் சேர்க்கும் வரிகள் ஒத்துப் போக வேண்டுமென்பதே ! படத்தில் அவர் ஏதாச்சும் செய்து கொண்டிருக்க, நான் மாக்கானாட்டம் எதையாச்சும் எழுதி வைத்தால் அது sync ஆகிடவே செய்யாது. இங்கேயோ வழக்கத்தை விடவும் கூடுதலாய் பகடிகள் இடம் பிடிக்க, ரொம்பவே நிதானத்தோடு டிராவல் செய்ய வேண்டிப் போனது ! And பேனாவின் பயணத்தினூடே என்னால் உணர முடிந்த மலர்ச்ச்சூட்டல் அனுபவத்தைப் பற்றி லேசாய் உங்களுக்குக் கோடிட்டுக் காட்டவும் முனைந்தேன் - நமது வாட்சப் கம்யூனிட்டியில் ! Of course இது நம்ம 'தல' டெக்ஸின் சாகஸம் என்பதால் - என்னைத் தர தரவென மூத்திரச் சந்து பக்கமாயெல்லாம் இழுத்துப் போக மாட்டீர்களென்ற நம்பிக்கை கணிசமாகவே இருந்தது தான் ! ஆனாலும் இங்கே என்ன எதிர்பார்ப்பது ? என்பது குறித்து உங்களை லேசாக உஷார்ப்படுத்தி வைக்க நினைத்தேன் ! பச்சே நீங்களோ - "வா தலைவா... வா தலைவா...!" என்று மெஃபிஸ்டோவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டிருந்தீர்கள் ! பற்றாக்குறைக்கு "நர்பாஸ்" யாரென்றே தெரியாமலே அவருக்கு 'லவ்ஸ்' விடும் முயற்சியில் இங்கொரு தாட்டியமான உருவம் வேறு உருகிக்கொண்டிருந்தது. நர்பாஸை நெசத்தில் பார்க்கப் போகும் போது அந்தக் காதல் இளவரசரின் முகம் என்னமாய் மாறக் கூடுமென்று யூகித்த போது கெக்கே - பிக்கேவென்று சிரிக்கத் தான் தோன்றியது.
To cut a very long story short - இந்த நொடியில் எனது கேள்வி ஒன்றே !
• நமது ரேஞ்சர்கள் மாயலோகத்தில் வாள் சுழற்றாமல் சக மானிட வில்லன்களோடே பொருதினால் போதுமே - ப்ளீஸ் ? என்று காலமாய் நான் கதறி வருவதில் சாரம் உள்ளதா ? நஹியா ?
• மெஃபிஸ்டோ எனும் அரூப எதிரிக்கு ஆசை தீர ஸ்லாட் தந்து விட்டோம் ! இனி "கோட்டுக்கு இந்தப் பக்கம் நீயும் வர வாணாம் - நானும் வர மாட்டேன் !" என்ற ஒரு ஜென்டில்மேனின் ஒப்பந்தத்துக்கு வந்து விடலாமா ? அல்லது "அரசியல் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் தானேப்பா !!" என்று மகான் கவுண்டமணியாரின் பாணியில் நடை போடலாமா ?
இத்தாலியில் டெக்ஸ் சாகஸங்கள் மாயாஜால ட்ராக்கில் இன்னமும் அவ்வப்போது தொடரவே செய்கின்றன ! ஆனால் நமக்கோ, எடுத்தது யானையும் இல்லே ; அடிச்சது ராஜாவும் இல்லே என்றாலும் செம confident ஆக மூர்த்தி அண்ணாவின் அதே confidence சகிதம் நாமுமே நடை போடுவதா ? அல்லது மரியாதையாய் இனி கோட்டுக்கு இந்தப் பக்கமாவே இருந்துக்கலாமா ? சொல்லுங்களேன் guys ? பந்து இப்போது உங்கள் தரப்பில் !!
Bye all ..ஆண்டின் இறுதி மாதத்துப் பணிகளுக்குள் மூழ்கிடக் கிளம்புகிறேன் ! Before I sign out :
1.கிங்ஸ் ஸ்பெஷல்-4 ரெடி & தெறி சேல்ஸ் கண்டு வருகிறது !! ஆன்லைனில் சும்மா அனல் வேகம் தான் நேற்றைக்கு !!
2. மதுரைப் புத்தக விழாவின் முதல் இரண்டு தினங்களுமே டாப் கியர் தான் !! சும்மா ரவுண்டு கட்டி கெத்து காட்டியுள்ளனர் தூங்கா மாநகரின் மக்கள் !! Keep it going folks !!!
3.சந்தா ரயிலுமே இம்முறை ராக்கெட் ஸ்பீடில் பறந்து வருகிறது !! அட்டவணையின் மஹிமையா ? என்று சொல்லத் தெரியலை - but எக்கச்சக்க மார்ஷல்கள் தயாராகி வருகிறார்கள் !! Thanks a ton folks - and let's keep going too !!
Have a lovely Sunday all...See you around !!
