Powered By Blogger

Saturday, August 31, 2024

வருஷத்தின் முக்கால்வாசி....

 நண்பர்களே,

வணக்கம். இது காலத்துக்கேற்ற மாற்றமா? அல்லது என் சோம்பேறித்தனத்தின் பிரதிபலிப்பா? அல்லாங்காட்டி மாறி வரும் பொழுதுகளின் கட்டாயமா? சொல்லத் தெரியலை!! ஆனால் கடந்த சில நாட்களாகவே நமது வாட்சப் கம்யூனிட்டியில் அரங்கேறி வரும் ரகளைகளானவை துவக்க நாட்களில் இங்கே பதிவுப் பக்கங்களில் நாமெல்லாம் தரிசித்த உற்சாகங்களின் mirror image-ஆக இருந்து வருவதைக் கண்டு வியக்காது இருக்க முடியவில்லை! ஏற்கனவே “தெருக்கோடி தேங்காய்கடை குரூப்”...”முனீம்மா மாங்காய் பத்தை க்ரூப்” என்ற ரேஞ்சுக்கு ஒரு வண்டி வாட்சப் குழுக்களில் ‘தலையெழுத்தே‘ என்று குப்பைகொட்டி வருவோர்க்கு நாமும் புதுசாய் டொங்ங்ங்.... டொங்ங்ங்... என்று உசிரை வாங்க ஆரம்பித்திருப்பது கடுப்பேற்றக் கூடும் தான்! ஆனால் - விரல் நுனிகளில் கருத்துப் பரிமாற்றம் சாத்தியம் என்ற இந்த அரங்கமானது, காமிக்ஸ் மீதான ஆர்வங்களைத் தழைக்க உதவிடும் என்றே தோன்றுகிறது!

இதோ - இந்தப் பகுதியை நான் எழுதிக் கொண்டிருக்கும் போதே ஒரு மீள்வருகையினை அங்கே சாத்தியமாக்கி சாதித்துக் காட்டியுள்ளதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது! ஏக காலமாய் வனவாசம் சென்றிருந்த கமான்சே தொடரை “மறுக்கா பார்த்தே தீரணும்” என்று நண்பர்களில் ஒரு கணிசமான எண்ணிக்கை கோரி வர அதனை வாக்கெடுப்புக்கு விட்டிருந்தோம்! திகிடுமுகுடான வித்தியாசத்தில் கமான்சே கெலிச்சும் வைக்க, 2025 சந்தாவோடு முன்னே b&wல் வெளியான ஓநாய் கணவாய் இதழினை ஒரு limited கலர் பதிப்பாக்கி, நமது அன்புடன் வழங்கிடவுள்ளோம்! Oh yes - அந்த நொடியில் தோன்றிய மகா சிந்தனையின் பின்னே நல்லதொரு செலவு காத்திருக்குமென்பது புரிகிறது தான்! ஆனால் அந்த உற்சாகப் பிரவாகங்களின் முன்னே பைசா கணக்கு - வழக்குகள் முக்கியத்துவத்தை இழக்கத் தான் செய்கின்றன! ஜெய் கமான்சே!

Moving on, செப்டம்பரின் இதழ்கள் சகலமும் பிரிண்டாகி, பைண்டிங்கில் உள்ளன! திங்கள் மாலை அவை நம்மை வந்து சேர, செவ்வாயன்று டெஸ்பாட்ச் இருந்திடும் என்பது திட்டமிடல்! பணிகளை 2 தினங்கள் முன்பாகவே முடித்திருக்க வேண்டும் தான் - ஆனால் V காமிக்ஸ் நீங்கலாய் பாக்கி சகலத்திலும் வண்டி வண்டியாய் பேனா பிடிக்கும் பணிகள் அவசியப்பட்டதால் கொஞ்சம் சுணங்கி விட்டது.

இம்மாதத்து ‘தல‘ சாகஸம் - “வல்லவர்கள் வீழ்வதில்லை” இதழினை நினைவுபடுத்தும் விதத்தில் ஒரு வில்லன் டீமையே கண்ணில் காட்டவுள்ளது! ஒரு மெயின் வில்லன்; சில துணை வில்லன்கள் மாத்திரமின்றி - ஒரு மெயின் வில்ல டீம்; இன்னொரு போக்கிரிகள் டீம் என்று இங்கே ஏகமாய் கதை மாந்தர்கள் உண்டு! நமது ரேஞ்சர்களும் முழு வீச்சில் களமிறங்குகிறார்கள்; again அணி - அணியாக! டெக்ஸ் & டைகர் ஒரு அணியாகிட., வெள்ளி முடியார் கார்சன் இன்னொரு அணியில் & சின்னக் கழுகார் கிட்டோ எதிரிகளோடு! In fact இங்கே ரேஞ்சர்கள் Vs ரேஞ்சர்கள் என்பதே கதையின் மையப்புள்ளி! கதாசிரியர் மௌரோ போசெலி வழக்கம் போல அழுத்தம் தந்திட, மாமூலான டமால் - டுமீல் - கும் - ணங் - சத் என்ற சாகஸமாய் இது அமைந்திடாது, மாறுபட்டு இருந்திடவுள்ளது! அங்கே இத்தாலியில் MAXI டெக்ஸாக வெளியானதே நமது ”சினம் கொண்ட சின்னக் கழுகு!” Don't miss it!  

இம்மாதத்து V காமிக்ஸ் நமது ஜம்பிங் பேரவையினை உற்சாகத்தில் துள்ளச் செய்யவல்ல சாகஸத்தோடு களம் காண்கிறது. 130 பக்க நீளத்து ஸாகோர் black & white அதிரடி - மெய்யாலுமே போனெலியின் ஆக்ஷன் பாணியில்! சும்மா ஈசி சேரில் குந்திக்கினு “அந்த நாளிலே ஸாகோர் என்ன பண்ணுனார் தெரியுமா?” என்ற ரீதியில் கதையை நகர்த்திடாது - வன்மேற்கின் பரபரப்பான களத்தில் கோடாரி மாயாத்மாவை இறக்கி விட்டுள்ளனர்! And துளியும் பிசிறின்றி ஸாகோர் கதை நெடுக எகிற அடிக்கிறார் - தொப்பையின் ஸீகோவின் துணையோடு! இங்கே மட்டும் ஸாகோர் & ஸீகோ என்ற ஜோடியை நகர்த்திப்புட்டு, டெக்ஸையும், கார்சனையும் உட்புகுத்திடும் பட்சத்தில் இம்மி கூட வித்தியாசம் தெரிந்திராது! அப்படியானதொரு Wild West களம்! And இதற்குப் பேனா பிடித்திருப்பது நம்ம மேச்சேரியார்! பெரியளவில் திருத்தங்கள் போடவோ, மாற்றியெழுதவோ அவசியமின்றி அவரது மொழிபெயர்ப்பு சுளுவாக அமைந்திருந்ததால் எனது பெண்டு லைட்டாகத் தப்பியது இந்த மாதத்தில்!

And இதோ - “வஞ்சத்திற்கொரு வரலாறு” அட்டைப்படம் மற்றும் உட்பக்க previews!! இழந்த மவுசை ஸாகோர் சிறுகச் சிறுக மீட்டு வரும் முயற்சிக்கு இந்த ஆல்பமும் கணிசமாய் உதவிடும் என்பதில் எனக்கு ஐயங்களில்லை! ஜம்பிங் செயலரே - over to you 👍


அப்புறம் போன வாரம் அட்டைப்படத்தை மட்டுமே கண்ணில் காட்டியிருக்க, கேரட் கேசத்து அழகி ரூபினின் உட்பக்க பிரிவியூவும் இதோ:

So 2 ப்ராங்கோ - பெல்ஜிய கலர் மேளாக்கள் & 2 இத்தாலிய b&w ரகளைகள் என்று செப்டம்பர் பயணிக்கவிருக்க - படிக்க நேரங்களைத் தேற்றும் வேலை மட்டுமே உங்களுக்குக் காத்திருக்கும்!

And further down the line - காத்திருக்கும் அக்டோபரில் இன்னொரு 4 இதழ் காம்போவும் வெயிட்டிங்! அது மாத்திரமன்றி அக்டோபர் 31-க்கு தீபாவளிப் பண்டிகை காத்திருப்பதால், அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே நவம்பரின் தீபாவளி மலர்களையும் உங்களிடம் ஒப்படைக்க வேண்டியிருக்கும்! So அக்டோபருக்கென செமத்தியான பணிகள் எங்களுக்குக் காத்துள்ளன! நீங்களுமே இயன்றமட்டுக்கு இம்மாதம் முதலாய் நிறைய தொக்கடிகளின்றி வாசிப்புகளைப் போட்டுத் தாக்கினால் தேவலாம் என்பேன்! வாட்சப் கம்யூனிட்டியில் காட்டும் அதே வேகத்தினை வாசிப்பிலும் காட்டினால் all will be super well!

தற்போதைய கவனமெல்லாம் 2025-ன் அட்டவணை மீதே எனும் போது, நெதமும் ஒரு புது யோசனை உதயமாவதும், பொழுது சாய்வதற்குள் இன்னொன்று உதயமாவதும் சமீப நாட்களின் வாடிக்கையாகி இருந்து வருகிறது! இதற்கென நான் ஆங்காங்கே வரவழைத்திருக்கும் கோப்புகள் ஒரு முழு லாரி லோடு தேறும்! நிஜத்தைச் சொல்வதானால் எனது லேப்டாப்பில் புதைந்து கிடக்கும் கதைகளைக் கொண்டு அடுத்த 20 வருஷங்களுக்கு - இருபது வெவ்வேறு பதிப்பகங்கள் செம சுளுவாய் வண்டி ஓட்டிட இயலும்! But நானோ உங்களின் உச்சத்திலான எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்திடுமோ - செய்யாதோ? என்ற பயத்திலேயே அவற்றின் பெரும்பான்மையை உள்ளே கிடத்திப் போட்டுள்ளேன் !

இதோ - எனக்குத் தெளிவு தேவைப்படும் சில சமாச்சாரங்கள் மீதான கேள்விகள்:

Voting link : https://strawpoll.com/e2naXX7lpyB

Next : ஹாரர் கதைகளை புத்தக விழாக்களில் கேட்டு வருகிறார்கள் என்று நம்மாட்கள் சொல்லுவதுண்டு! அந்த ஜானரை ரெகுலர் சந்தா தடத்தினுள் மெல்லிசாக நுழைப்பது குறித்து உங்க அபிப்பிராயம்ஸ் ப்ளீஸ்?

Last but not the least : ஆக்ஷன் + மெல்லிய காதல் கரம் கோர்க்கும் ஒரு ஒன் ஷாட் உள்ளது! சித்திரங்கள் வேற லெவல்! இது உங்களின் சுவாரஸ்யங்களை ஈர்க்க வாய்ப்புண்டோ? Answers please?

ரைட்டு, வண்டி வண்டியாய் அக்டோபர் பணிகள் காத்திருக்க, நான் நடையை கட்டுகிறேன் folks! See you around! Have a fun weekend  💪!

Saturday, August 24, 2024

வந்தாச்சுன்னு சொல்லு(ங்க) !!

 நண்பர்களே,

ஒவ்வொரு மாதமும் புக்ஸ்களை சூட்டோடு சூடாய் வாசித்து அலசிடும் நண்பர்கள், இந்தப் பதிவின் முதல் பாதியினை  அலேக்காகத் தாண்டிப் போய்விடலாம் !! அந்தப் பாதியானது வாசிக்க நேரமின்றியோ ; ஆர்வம் குன்றியோ  அல்லாடும் சங்கத்தினருக்காக  மட்டுமே !!

வணக்கம். ”சனிக்கிழமைக்குப் பதிவு” என்ற வாடிக்கைக்கு மறுக்கா திரும்பியாச்சு! படுத்தியெடுக்கும் தோள் வலிக்கோசரம் வாரயிறுதிகளில் வைத்தியம் பார்க்கும் படலம் கடந்த 2 1/2 மாதங்களாய்த் தொடர்ந்திடும் நிலையில், பதிவுகளை அதே ஸ்லாட்டுக்குள் புகுத்துவது ஒரு பிரயத்தனமாகவே இருந்து வந்தது! 'பச்சக்...பச்சக்' என்று வூடூ பொம்மைகளுக்குள் இறக்கும் குண்டூசிகளைப் போல, அக்குபங்ச்சர் நீடில்களை கழுத்திலும், தோளிலும் இறக்கிப்புட்டு அவற்றைக் கொண்டு தசைகளுக்குள் ஒரு சுற்றுப்பயணத்தை டாக்டர் முடிக்கும் நொடியில், அந்தத் தசைப் பகுதிக்கான பிரேத்யேகப் பயிற்சிகளை மேற்பார்வையிட டிரெய்னர்கள் காத்திருக்கும் போது பார்த்திபனோடு போகும் வடிவேலைப் போலவே ஒரு பீலிங்கு தான் மேலோங்கும் !  'ஆத்தீ...இங்கனல்லாம் ஒரு தசை இருக்குதா ?' என்ற கேள்வி அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ஆட்டிப்படைக்க - "இந்த வலி சாஸ்தியா ? நோயின் வலி சாஸ்தியா ?" என்ற பட்டிமன்றமே உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ! அந்த நொடியினில், ஏதாச்சும் ஒரு தேவ வாக்கை உலகுக்குச் சொல்லும் பொறுப்பை நம்மகிட்டே கடவுளே ஒப்படைத்திருந்தாலும் - " இதை நாளைக்கி பாத்துக்கலாமே தெய்வமே ?" என்று தான் சொல்லத் தோன்றும் ! So அந்தத் தருணத்தினில் ஒரு புதுப் பதிவை 'மாங்கு மாங்கு' என்று டைப்பிடித்து ரெடி பண்ணும் உத்வேகத்தை சல்லடை போட்டுத் தான் தேட அவசியமாகி வந்தது !! ஆனால் இப்போதோ டாக்டரே 3 வாரங்களுக்கு அயல்நாட்டுக்குப் பயணமாகப் புறப்பட்டிருப்பதால் - ஒன்னரைக் கை டோரியாவாக back to the saturday routine!

சமீப வாரங்களில், சமீபமாய் உருவாக்கிய அந்த வாட்சப் கம்யூனிட்டியில் கேள்விகளைக் கேட்பதும், மினி போட்டிகள் நடத்துவதுமாய் பொழுதுகளை நகர்த்திடுவதில் கணிசமான பாசிட்டிவ்ஸ் தெரிவதை நான் மறுக்க மாட்டேன்! தலைகீழாய் நின்று தண்ணீர் குடிச்சாலும், சில மௌனங்களை இங்கே தகர்க்க முடிந்ததேயில்லை! ஆனால் அங்கோ குறைந்தபட்சமாய் 200 நண்பர்கள் தங்களது எண்ணங்களைப் பகிர்வது சாத்தியமாவது பிரதான ப்ளஸ்! அது மாத்திரமன்றி இன்னொரு ஜாலியான அனுபவமும் அக்கட உண்டு ! அட... ‘நாங்கள்லாம் காமிக்ஸ் தா(த்)தாக்களாக்கும்...இதையெல்லாம் படிக்கிற பச்சாக்கள் நாங்க நஹி ..!‘ என்று வெளியே கம்பு சுற்றும் பார்ட்டிகள் கூடத் தவறாது வந்து ஒவ்வொரு ஓட்டெடுப்பிலும், ஆகச் சிறந்த நெகட்டிவ் பதில்களைத் தேர்வு பண்ணிப் பதிவு செய்யும் வாடிக்கையுமே வாட்சப் கம்யூனிட்டி ஜாலிகளில் இன்னொரு அத்தியாயம்! On the flip side - மேகி 2 மினிட் நூடுல்ஸ் போலான அந்தப் பக்கத்தினில் இங்கு ப்ளாக்கில் சாத்தியமாகிடும் விஸ்தீரணம் not possible at all! அது மட்டுமன்றி.- சாவகாசமாய் எப்போதாச்சும் வாசிச்சுக்கலாம்; பதில் பின்னூட்டங்களையும் பார்த்துக்கலாம்‘ என்ற வசதி‘ அங்கே குறைச்சல்! So fast food ஆர்வலர்களுக்கு அக்கட ஒரு கடை; மீல்ஸ் ரசிகர்களுக்கு இக்கட எப்போதும் போல கடை என்பதே தொடர்ந்திடும் template ஆக இருந்திடும்! Just in case - நீங்கள் அங்கே நமது கம்யூனிட்டி ஜோதியில் ஐக்கியமாகியிருக்கவில்லை எனும் பட்சத்தில், அதில் இணைந்து கொள்வதற்கான லிங்க் இதோ:

சமீப பொழுதுகளில் அங்கும் சரி, இங்கும் சரி, நான் கேட்டு வரும் கேள்விகளுள் பிரதானமானது டின்டின் சார்ந்ததே! அதற்கு ஏன் இம்புட்டு மெனக்கெட வேண்டும்? என்ற கேள்வி நம்மில் சிலருக்குத் தோன்றலாம் தான் - becos நேரமின்மை காரணமாய் நம்மில் நிறையப் பேர் படிக்காது வைத்திருக்கும் பரண் மீதான கையிருப்பு பொதுவாகவே கணிசம் என்பதில் no secrets! இவ்விதமிருக்க, டின்டினை நீங்கள் படிக்காதிருப்பது மட்டும் இம்புட்டு பெரிய விசாரமாகிட வேண்டிய அவசியம் என்னவென்று உங்களுக்குத் தோன்றிடலாம் ! இருக்குதே......! காரணங்கள் இருக்குதே!

1. செம முரட்டு சிங்கிளாய்; செம solo பார்ட்டியாய் காலம் தள்ளி வந்த ஒரு பையன், அற்புதமானதொரு பெண்ணை, பெரும் பிரயத்தனப்பட்டு 'லவ்ஸ்' பண்ணி, நெடும் காத்திருப்புக்குப் பின்னே அந்தப் பெண்ணையே வீட்டின் சம்மதத்தோடு கண்ணாலமும் கட்டிக்கினான் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! பச்சே கண்ணாலம் ஆன ரெண்டாவது மாசத்திலேயே அந்தப் புள்ளையாண்டான் நடுக்கூடத்தில் குந்தியபடியே ‘ஹாாவ்வ்‘ என்ற கொட்டாவியோடு தனது PubG கேமைத் தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தால் வூட்டிலே இருக்கும் பெருசு எவ்விதம் react செய்திடும்? That பெருசு தான் me & அந்த PubG பார்ட்டி தான் நீங்கோ...and that பொண்ணு தான் டின்டின் ! ஒரு காமிக்ஸ் உலக ஜாம்பவானுடனான ஹனிமூனுக்கே இன்றைய தேதியினில் இம்புட்டு தான் shelf life ஆ ? என்பதே எனது வியப்புகளில் பிரதானமானது !

2. ஒரு “டின்டின் ஆல்பம்” என்பது - ஆயிரத்துச் சொச்சம் புக்ஸ் போட்டு ஒரு நூறு மு.ச. & மூ.ச. பார்த்த அனுபவசாலிக்கே கிட்டத்தட்ட இரண்டு மாதப் பணி! So டபுள் ஆல்பம் எனும் போது, கிட்டத்தட்ட மூணு to நாலு மாதங்களின் உழைப்பு இதன் பின்னணியில் உள்ளது! Of course, காசு தந்து புக்ஸ் வாங்கி விட்டீர்கள் தான்! Yet பின்னணியிலுள்ள உழைப்ப்பானது நீங்கள் தரும் பணத்துக்கோசரம் மட்டுமே ஆனதல்லவே?! காசு தான் பார்க்க வேண்டுமெனில், ஒரு டெக்ஸ் வில்லர் கலர் க்ளாசிக் ஆல்பத்தை ”கார்சனின் கடந்த காலம்” சைஸில் போட்டுப்புட்டு ஒரே மாதத்தில் கல்லா கட்டிவிட்டு, 'லல்லால்லா' ..என்று கர்ணகொடூரமாகவேனும் பாட்டுப் பாடிக்கினே, போய்க்கினே இருந்திடவும் முடியுமே - இம்மி நோவுகளுமின்றி ?! So பரண் மீது சயனம் செய்திடுவோர் சங்கத்தில் தான் கணிசமானோருக்கு டின்டினுமே இணைந்திடப் போகிறார் எனும் பட்சத்தில் - உங்களுக்கு ரெண்டு காசையும், எங்களுக்கு ரெண்டு மாச உழைப்பையும் மிச்சம் பிடித்துவி்ட்டுப் போகலாமில்லீங்களா?

3. More importantly - there is a bigger picture at stake here! 

‘தல‘ ஆல்பங்களை கொஞ்சம் லேட்டா படிக்கலாம்னு தீர்மானமா? புரியுதுங்கோ - ‘தல‘ தான் மாசா மாசம் வர்றாரே! 

கி.நா.களை கொஞ்சம் வாகான சந்தர்ப்பம் அமையும் போது பார்த்துக்கலாம்னு தீர்மானமா? அதுவும் சரி தான் - சற்றே கனமான களங்களுக்கு relaxed பொழுதுகள் அவசியம் தான்! 

ஆனால் காமிக்ஸ் உலகின் சிலபல கோடானு கோடி வாசகர்களின் கனவு நாயகன் உங்கள் ஹாலிலுள்ள மேஜையில் ‘தேமே‘ என்று காத்திருக்கும் போதுமே அதை வாசிக்க ஒரு வேகம் நமக்கு ஊற்றெடுக்கவில்லை ; அதற்கான அவகாசத்தினைத் தேற்றிட முடியவில்லை என்றால், அது ஒரு எச்சரிக்கை மணி folks! ஒரு 'தளபதி' / 'தல' பட அனுபவம் போலான டின்டினால் உங்களை உசுப்ப இயலாது போகிறதெனில் - பாக்கி இரண்டாம் நிலை ஈரோக்களும், ஈரோயினிகளும் நடிச்ச படங்களை எங்கே கொண்டு திரையிட்டு வெற்றி காண்வதோ ? என்ற விசாரமே உள்ளுக்குள் ! And இதுவே யதார்த்தம் எனும் போது - “அந்த குண்டு புக்; இந்தத் தொகுப்பு” என்ற கோரிக்கைகளெல்லாமே உதட்டதளவு உச்சரிப்புகளாகவே இருந்திடுமோ ? என்று பயந்து பயந்து வருது !

ஒவ்வொரு டின்டின் ஆல்பமும் என் கைக்குக் கிட்டிடும் வரைக்கும், நான் அவற்றை எதிர்பார்த்துக் கிடந்து, தொலைத்த இரவுகளின் தூக்கங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் - அது ஒரு டபுள் ஆல்பத்தின் அளவிற்கு நீண்டு விடும்! இதோ - இன்றைக்கும் டின்டின் இதழ்களை மீள்வாசிப்புக்கு உட்படுத்தும் தருணங்களில் முகரை முழுக்கப் புன்னகையே ஈஷியிருப்பது வாடிக்கை ! So எனக்கு அத்தனை big deal ஆகத் தென்பட்டதொரு நாயகர், இன்றைக்கு பத்தோடு பதினொன்றாய் பாவிக்கப்படுகிறாரே என்ற ஆதங்கம் தான் என்னை மாலைக்கண் வந்த கவுண்டரைப் போல நாலு சுவர்களுக்குள் புலம்பச் செய்கிறது!

4. The பணம்!!! கதைகளுக்கென பல்லாயிரங்களை வாரியிறைக்கும் கிறுக்கு நமக்குப் புதிதே அல்ல! வாங்கினவற்றை ஏதேதோ காரணங்களால் பீரோவில் பூட்டிப்போடும் குடாக்குத்தனமுமே நமக்குப் பரிச்சயமே! ஆனால் டின்டினார் சமாச்சாரத்தில் சின்னதொரு வித்தியாசம் உண்டு! இக்கட நாம் சிதற விட வேண்டியதோ - பல்லாயிரங்களை அல்ல; சில லட்சங்களை! So கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகவே டின்டினுக்கென பிரத்யேகமாய் ஒரு தொகையினை earmark செய்திட வேண்டும் ! அந்த மெனக்கெடல் உங்களது வாசிப்பினில் மகிழ்ச்சியாய் பிரதிபலிக்கும் பட்சத்தில் சூப்பர்! ”ஊஹும்... இவரும் என் வீட்டு பீரோவுக்கு அழகு சேர்க்கப் போகிறவரே!” என்பீர்களேயானால் - tough ! And டின்டினுக்கான பணத்தை உரியில் போட்டு வைத்து சேகரிக்க வேண்டிய வேளை இதுவே என்பதால் தான் திரும்பத் திரும்ப ஒரே சமாச்சாரத்தோடு கும்மியடித்து வருகிறேன்!

For sure 2025-ல் டின்டின் நம் மத்தியில் வலம் வருவார் தான்! ஆனால் நாம் இப்போதே பணம் அனுப்ப வேண்டியது அதற்கு மறுவருட ஆல்பங்களுக்குமே சேரத்துத் தான்! So 2026 மீது விரவிக் கிடக்கின்றது எனது ஆந்தைவிழிப் பார்வை இந்த நொடியில் !

5. The பயணம் more சுவாரஸ்யம் than the இலக்கு!!

இது கொஞ்ச காலமாகவே கண்ணில் பட்டு வரும் ஒரு செம trend தான்! 

வாட்சப் கலாய்களா? Oh yess!! 

FB கும்மிகளா? ஜமாய்ச்சிடலாம்! 

பதிவில் கூத்துக்களா? நானாச்சு! 

வாசக சந்திப்புகளா? ஜாலிலோ ஜிம்கானா!!! 

இவை தானன்றோ கொஞ்ச காலமாகவே நடைமுறை ? இந்த சமூக வலைத்தள யுகத்தினில் social interactionகள் செம பிரதானம் பெறுவதில் வியப்பே லேது! In fact, முற்றிலும் அந்நியர்களான ஒரு சிறு வட்டம், காமிக்ஸ் எனும் குடையின் கீழ் குழுமி்; நட்பு வளர்த்து, அதன் கதகதப்பில் பொழுதுகளை ஓட்டுவதென்பது ஓராயிரம் ‘பொம்ம புக்‘ வெளியீடுகளையும் விட மகத்தானது என்பது சர்வ நிச்சயம்! And நமக்கு அசாத்தியப் பெருமிதம் தந்திடும் சமாச்சாரமும் இதுவே!

பச்சே, ஒரு கட்டத்தில் பயணம் சார்ந்த ஜாலிகளுக்குத் தர சாத்தியமாகிடும் அவகாசங்கள், இலக்கை ஆராயும் போது மிஸ்ஸிங் ஆவது தானே இக்கட்டே ?! பயணத்தின் மீதான வாஞ்சை - இலக்கின் மீதான மையலைக் காட்டிலும் மிகுந்து சென்றால் அது சிக்கலின் முதற்புள்ளி ஆகிடாதா ? பழம் நினைவுகளை அசைபோடுவதும்; பாட்டும் கூத்துமாய் பயணத்தை ஜமாய்ப்பதும் ஜுப்பரே - but பஸ்ஸிலிருந்து இறங்கிடும் தருணத்தில் அங்கிருக்கக்கூடிய கல்லணையையோ; தஞ்சாவூரின் பெரிய கோவிலையோ; மகாபலிபுரத்து சிற்பங்களையோ; அதே ஆர்வத்தோடு ரசித்திட்டால் all is well என்றாகிடும்! மாறாக ஊர்களில் இறங்கிய நொடிகளில் ”ஹாாாவ்வ்வ்... நேக்கு தூக்கம் தூக்கமா வருது பெருசு! அது தான் சின்னப் பிள்ளையா இருக்கப்போவே பார்த்த ஊர்கள் தானே ?! நாங்க பஸ்ஸிலேயே சித்த உறங்கிக்கிறோம்!" எனும் போது பஸ் டிரைவரும், கண்டக்டரும் பேந்தப் பேந்த முழித்த கதையாகிப் போகும்! And சும்மாவே அந்த டிரைவருக்கு முட்டைக் கண்கள் வேற !! முழிக்கிறப்போ கர்ண கொடூரமாகிப்புடாதா ?

So பயணத்தையும் சரி, இலக்கையும் சரி, சமமான சுவாரஸ்யத்தோடு அணுகிட சாத்தியமாகினால் - புச்சு புச்சாய் ஊர்களைத் தேடிப் பிடித்து பயண அட்டவணையில் இணைத்திடும் ஆர்வம் மேலோங்கிடும்! மாறாக பயணங்களின் முடிவில் உறக்கமே வெயிட்டிங்ங்ங் என்றாகிப் போனால் புளியங்குடிக்கும், கொட்டாம்பட்டிக்கும் வண்டிகளை விட்டாலே மதி என்று பஸ் சர்வீஸுக்கு தோன்றிடாதா?

In a nutshell - எங்கிட்டு கூடியாச்சும் வாசிக்க நேரத்தைத் தேற்றுங்கோ மக்கா! Becos இந்தத் தாஜ்மஹால் எழும்பியுள்ளதே ”காமிக்ஸ் வாசிப்பு” எனும் காதலின் அஸ்திவாரத்தில் தான்! அந்த பேஸ்மெண்ட் வீக்காகிப் போனால் மேலே உள்ள பில்டிங் எத்தினி சொகுசாக இருந்தாலும் அது சுகப்படாது! Bottomline - வாசிப்பு ப்ளீச்ச்!!

ஹய்யாா!! சில வாரங்களாய் மனசில் அரித்துக் கொண்டிருந்த சமாச்சாரங்களை இறக்கி வைத்து விட்ட நிம்மதியில், அடுத்த பல்டிக்குள் மும்முரமாகிடலாம் இனி ! In the meantime - சந்தோஷம் தரும் ஒரு சேதியும் உள்ளது உங்களிடம் பகிர்ந்திட! நம்மிடம் மிகுந்து கிடக்கும் க்ளிப்டன்; ப்ளூகோட்; ஷெல்டன்; லியனார்டோ தாத்தா போலானோரின் 2 டஜன் புக்குகளை மாணவர்களுக்கென ரூ.25; ரூ.30 என்ற விலைகளில் புத்தக விழாக்களில் ஸ்பெஷலாக வழங்கிடுவம் முயற்சியானது செம smash ஹிட்! செம ஆர்வமாய் சின்ன விலைகளுக்கு, கலரில் தரமான புக்ஸ்களை ஈரோட்டிலும் சரி, இப்போது நாகப்பட்டினத்திலும் சரி, வாங்கிப் போகிறார்கள் பள்ளி / கல்லூரி மாணாக்கர்கள்!! கையிலிருக்கும் சொற்ப பணத்துக்கே இந்த புக்ஸ் சாத்தியம் எனும் போது, அடியும் பிடியுமாய் அந்தக் கையிருப்பு பறக்கிறது! And நேற்றைய பொழுது (Friday) செம highlight !! ஸ்டாலில் இருக்கும் ஜோதி பின்மதியப் பொழுதில் போனில் அழைத்த போது அவரது குரலில் அப்படியொரு உற்சாகம், சந்தோஷம் ! திங்களும் பள்ளி விடுமுறை என்பதால், மாவட்ட ஆட்சியரின் முன்னெடுப்பில் அத்தனை ஸ்கூல்களிலிருந்தும் பசங்கள் ஸ்கூல் பஸ்களில் வந்து புத்தக விழாவில் குவிந்து விட்டனர் ! And நம்ம ஸ்டாலில் சொல்லி மாளா கூட்டம் போலும் !! கையிருப்பிலுள்ள 300+ டைட்டில்களையும் புரட்டோ புரட்டென்று புரட்டி விட்டு, ஆளுக்கொரு புக் என்று ஏதேதோ வாங்கிச் சென்றது மட்டுமல்லாமல் - "அடுத்த வருஷமும் நீங்க இங்கே கடை போடுவீங்களா ?" என்றும் பசங்க கேட்டுள்ளனராம் !! "மாலை நாலேகால் மணிக்குத் தான் மதிய சாப்பாடே சாப்பிட முடிந்தது ; அப்படியொரு மின்சார ஆர்வம் ஸ்டாலில் !!" என்று அவர் சொன்னதைக் காதில் போட்டுக் கொண்ட போது, வாக்கு எண்ணிக்கை நிலவரத்தைக் கேட்டபடிக்கே சீட்டில் நிமிர்ந்து உட்கார ஆரம்பிக்கும் நாகராஜா சோழன் M.A .வின் முகம் தான் மனசில் ஓடியது !! ஒரு விழாவிற்கு 200 பசங்கள் கொள்முதல் பண்ணி; அவர்களுள் வெறும் 10 சதவிகிதத்தினர் ரெகுலர் வாசகர்களானாலுமே ஊருக்கு 20 புது வரவுகள் என்றாகி விடும்! இந்த ”விதைக்கும் படலம்” ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சமாய் 15 நகரங்களில் தொடர்ந்தாலுமே வருஷத்துக்கு 300 வாசகர்கள் வரவு என்று entry போட்டுக் கொள்ளலாம்! அது போதுமே புது இரத்தம் உட்புகுந்திட!

And தொடரவுள்ள பொழுதுகளில் மதுரை, விருதுநகர், திருச்சி - என்று புத்தகவிழா கேரவன் ரவுண்டடிக்க உள்ள நிலையில் மாணவர்களுக்கான பிரத்தியேக புக்ஸ்களை இன்னும் ஜரூராய் ரெடி பண்ணி வருகிறோம்! ரொம்பச் சீக்கிரமே கிட்டங்கி காலியாகிடும் பட்சத்தில், பசங்களுக்கென்ற விலைகளில் ஒரு தனி ரேஞ்ச் புக்ஸ் உருவாக்கிடவும் திட்டங்கள் உள்ளன! காத்திருக்கும் சென்னைப் புத்தகவிழாவில் அவற்றைக் களமிறக்க ஒரு ஐடியாவும்  உள்ளது! Fingers crossed!

Looking ahead, செப்டம்பரின் நாற்கூட்டணி தயாராகி வருகிறது! And இந்த முறை ஒரு கோணங்கி புதுமுக டீம் உங்களை சந்திக்கக் காத்துள்ளது! And இதுவொரு புதுயுக சிரிப்புப் போலீஸ் டீம்! பொதுவாகவே நமது கார்ட்டூன் ஜாம்பவான்களான லக்கி லூக் & சிக் பில் நீங்கலானோரெல்லாமே ஸ்மர்ப்ஃஸ் போல ஒரு கற்பனை லோகத்திலோ; மேக் & ஜாக்; பஞ்சு மிட்டாய் தாத்தா; மதியில்லா மந்திரி போலானோரின் புராதன காலகட்டங்களிலோ நடமாடுவதே வழக்கம்! ஆனால் “பால் டப்பி” பற்றித் தெரியாங்காட்டி பூமர் பார்ட்டியாகிடக் கூடிய இந்தப் புது யுகத்தில் அந்தப் புராதன சிரிப்பு வகையறாக்கள் பெருசாக எடுபடாது போனதில் வியப்பில்லையோ - என்னவோ? So ஆஜராகவிருக்கும் ஸ்பூன் & ஒயிட் போல்ஸ்கார்ஸ் ஒரு நவீன களத்தில் காமெடி கூத்தடிக்க முனைகின்றனர்! ஸ்பூன் - குள்ளமானவன்; பூப்போட்ட ஜட்டியோடு மிக்கி மவுஸ் பொம்மைகளை துணைக்கு தூக்கித் திரியும் வீரன்! ஒயிட் - நெடுநெடுவென்ற உசரத்தோடு, உருட்டும் முட்டைக் கண்களோடு வலம் வருபவன். இருவருக்கும் மத்தியில் உள்ள ஒரே ஒற்றுமை - BNN சேனலின் அழகான ஆங்கரான மிஸ் பால்கனி மீது கொண்டிருக்கும் வெறித்தனமான காதல்! ட்யூட்டியா? காதலா? என்ற கேள்விக்கு ”ரெண்டும் தான்!” என்றபடிக்கே இந்தக் கோணங்கி ஜோடி அடிக்கும் கூத்துக்கள் தான் செப்டம்பரின் “கைதியாய் ஒரு அழகி”யின் one-liner! இங்கே கவனிக்க வேண்டியதொரு சமாச்சாரமும் உண்டு! ஒரிஜினலில், ப்ரெஞ்சில் இந்தக் கதைகளில் ஹாலிவுட்டின் க்ளாஸிக் படங்களையும், டயலாக்குகளையும் போட்டுக் கலாய்த்திருக்கிறார்கள்! தமிழாக்கம் செய்யும் போது, அவற்றை அப்படியே மொழிமாற்றம் மட்டும் செய்தால் சரிப்படாது என்பதால் தமிழ் சினிமா டயலாக்களையும், பாட்டு வரிகளையும் தான் நுழைக்க அவசியமாகியுள்ளது! So ”சினிமாப் பாட்டை நான் கேட்டானா?” என்ற கண்சிவத்தல்களில் எனர்ஜியை வீண் பண்ண வேண்டாமென்பேன்! இது கதையோடு பயணிக்கும் template என்பதால் அதைக் களைய வழியில்லை!


இது கார்ட்டூன் தொடரே ; ஆனால் நவீன யுகக் கதைக்களம் கொண்டது !! So let's give it a try folks ? செம வித்தியாசமான கலரிங்கில் இந்த இதழ் டாலடிக்கிறது !!

அப்புறம் செப்டம்பரின் கலர் இதழ்களுள் ஒரு சிறு மாற்றமும் இருந்திடவுள்ளது! திட்டப்படி ரிப்போர்ட்டர் ஜானி களமிறங்கியிருக்க வேண்டும் தான்! And அதற்கான கதையும் வந்தாச்சு; அட்டைப்படமும் ரெடி! ஜானியின் மொழிபெயர்ப்பினை வெகு காலம் கழித்து கருணையானந்தம் அங்கிளிடம் தந்திருந்தோம் - ஸ்க்ரிப்டும் வந்து DTP முடித்து ரெடியாகியும் விட்டது! ஆனால் ஜானி தொடரின் மிக சமீபத்தைய கதைகளுள் ஒன்றான “நள்ளிரவின் நாயகன்” இதழுக்கு அங்கிளின் க்ளாஸிக் பாணி அத்தனை சுகப்படவில்லை! கணிசமாகவே மாற்றியெழுத வேண்டிய அவசியம் இருப்பது போல் படுகிறது! So அதை மறுக்கா பட்டி-டிங்கரிங் பார்க்கும் நேரத்திற்கு, இன்னொரு பக்கம் தயாராகயிருக்கும் டிடெக்டிவ் ரூபினை போட்டுத் தாக்க நினைத்தேன்! So ரிப்பேர்ட்டர் ஜானி மறு மாதத்திற்கும், ரூபின் செப்டம்பருக்கும் என்பதே இந்த நொடியில் திட்டமிடல். இதோ - சிகாகோவின் அழகிய ராட்சஸிக்கென நமது அமெரிக்க ஓவியை போட்டுத் தந்துள்ள அட்டைப்பட டிசைன்!

ஆங்... கன்னம் அம்மைக்கட்டு வந்தா போல கீது,.. கால்கள் முருங்கைக்காயாட்டம் உள்ளன” என்ற கலையார்வலர்களின் கவனத்துக்கு: ரூபினின் சித்திரம் ஒரிஜினல்! So அம்மணியை படைப்பாளி உருவகப்படுத்தியுள்ள விதத்திலேயே வழங்கியுள்ளார் நமது ஓவியை! இந்த ஆல்பம் பற்றிய preview & முன்னோட்டம் அடுத்த வாரப் பதிவினில்!

Before I sign out - இதோ இங்குமே சில கேள்விகள் - நமது 2025 அட்டவணையின் பொருட்டு:

1. ஓராண்டின் வாசிப்புக்கு சரியான நம்பர் என்னவாக இருக்குமென்பீர்கள்? 

நிதானமாய் யோசித்து; ”அவர் என்ன சொல்லுவாரோ? இவர் என்ன கலாய்ப்பாரோ?” என்ற கவலைகளெல்லாம் இல்லாமல் ஒற்றை ஆண்டின் வாசிப்புக்கென எத்தனை புக்ஸ் வந்தால் தேவலாம் என்று சொல்லுங்களேன் ?! கோவைக் கவிஞர் பாணியில் அள்ளி விடாது let's have a realistic number please!

a. 24

b. 30

c. 32

d. 36

கேள்வி # 2: ஆண்டொன்றுக்கு ‘தல‘ எத்தனை புக்ஸ்களில் தலைகாட்டுவது சரியென்பீர்கள்?

a. 9

b. 10

c. 12

கேள்வி # 3: ஆண்டொன்றுக்கு டின்டின் எத்தனை ஆல்பங்கள் சரியென்பீர்கள்?

a. 3

b. 2

c. 1

கேள்விகளில் சில, ஏற்கனவே கேட்டவை போல தோன்றிடலாம் தான் ; but வேகமாய் மாறி வரும் நமது வாசிப்புகள் சார்ந்த வினாக்களுக்கு current பதில்கள் கேட்டறிவதில் தப்பில்லை என்று நினைத்தேன் !! So answers ப்ளீஸ் ?

Bye all...see you around ! Have a super weekend !!

Thursday, August 15, 2024

ஒரு டின்டினக்க படலம் !!

 நண்பர்களே,

 வணக்கம். ஈரோட்டில் நமது விழா ஓவர்...! புத்தக விழாவும் ஓவர்... ஓவர்....! ஆகஸ்டின் ஒரு பாதியும் ஓவர்... ஓவர்... ஓவர்...! பொழுதுகளின் ஓட்ட வேகமோ ஓவரோ ஓவர்! Phewwww!!!

 

மெய்யாலுமே மண்டைக்குள் மழை பெய்து ஓய்ந்தது போலொரு பீலிங்கு! And - இதோ கூப்பிடு தொலைவில் தீபாவளியும், தீபாவளி மலர்களும், 2025 அட்டவணையும், Electric '80s தனித்தடத்தின் முதல் இதழும் காத்திருக்க - அவை நோக்கிய நமது அடுத்த ஓட்டம் ஆரம்பிக்கிறது! நிஜத்தைச் சொல்வதானால் - ”வாசக விழா வெயிட்டிங்... வெயிட்டிங்” என கிட்டத்தட்ட ஒரு மாதத்தை ஓ.பி. அடித்து விட்டு இப்போது மறுக்கா ரெகுலர் பணிக்குள் திரும்பிட மாடு சண்டித்தனம் பண்ணுகிறது! ஒரு மாதிரியாய் ”ம்பா... ம்பா...” என்று மாட்டை வண்டியில் பூட்டும் வேளையில், ஆகஸ்டின் இதழ்கள் பற்றி நாம் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டோமென்று உறைக்கிறது! ஓ.கே. - வேதாளர் கலரில் வந்திருந்தாலும் க்ளாஸிக் ரசிகர்களைத் தாண்டி பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க மாட்டார் தான்! So அவருக்கோசரம் no problems ; விற்பனையில் அவர்பாட்டுக்கு fire விட்டுக்கொண்டிருக்கிறார் ! ஆனால் -

 

- டபுள் ஆல்பங்களில் டின்டின்

&

- தெறிக்க விடும் தாத்தாஸ்

 

இவர்களோ அவ்விதமாய் லூஸில் விடக்கூடிய நாயகர்களல்லவே?! 


விழாவுக்கு ரெடியாகும் ஜோரில் ஆகஸ்ட் துவக்கத்தையும், விழா முடிந்த குஜாலை மறு வாரமும் ரசித்துத் திளைத்தான பின்னே - நீங்களும் back to the வாசிப்பு modes-க்குத் திரும்பினால் தானே நலம் guys?! And உலகை வென்ற டின்டினின் ஒரு க்ளாஸிக் அதிரடியினை படம் பார்த்தபடிக்கே பீரோவில் போட்டுப் பூட்டி வைப்பது தப்பாச்சுங்களே...? So டின்டினோடு சாகசப் பயணம் போக எனக்குத் தெரிந்த சில காரணங்களைக் கொண்டே இந்தப் பதிவினை உருவாக்கிடலாமுங்களா ? 

 

The மாறிப் போன ஊர்ஸ்:


போன தபா நேபாளத்தின் பனிச்சிகரங்கள் என்றால் இந்த முறை இரண்டு அத்தியாயங்களில் இரண்டு zone-களில் கதையும், டின்டின் & கோவும் பயணிக்கிறார்கள்! முதலாம் பாகத்தில் கதை சுழல்வது கேப்டன் ஹேடாக் வசிக்கும் இங்கிலாந்தில்!

 

இங்கே சின்னதொரு அட்ஜெஸ்மண்ட் இல்லாதில்லை guys! ஹெர்ஜ் உருவாக்கிய ஒரிஜினல் கதைகளின்படி கேப்டன் ஹேடாக்கும், பட்லர் நெஸ்டாரும் குடியிருக்கும் அந்த மார்லின்ஸ்பைக் மாளிகையானது இருப்பது பெல்ஜியத்தில்! And அதன் ஒரிஜினல் பெயர் மௌலின்ஸார்ட்! ஆனால் டின்டினை இங்கிலீஷில் மொழிபெயர்த்து வெளியிட்ட சமயத்தில் அந்த ஆங்கிலப் பதிப்பின் மொழிபெயர்ப்பு டீமானது எப்படியோ கேப்டன் ஹேடாக்கின் ஜாகையை “இங்கிலாந்து” என்று மாற்றி, அந்த மாளிகைக்கும் “மார்லின்ஸ்பைக்” என்று பெயரிட்டு அதற்கு ஹெர்ஜின் சம்மதத்தையும் வாங்கி விட்டுள்ளனர் ! பிரெஞ்சு பதிப்புகளை விடவும் இங்கிலீஷ் பதிப்புகள் உலகமெங்கும் பரவலாகிய காரணத்தால், கேப்டன் ஹேடாக் குடியிருப்பது இங்கிலாந்தில் என்பதாகவே டின்டின் ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டது (me included) !. பற்றாக்குறைக்கு அந்த பட்லர் பணிவிடைகள் செய்யும் பாணியானதுமே  ஒரு பிரிட்டிஷ் அடையாளமே எனும் போது, யாருக்குமே அந்த இடக்குறியீட்டில் நெருடல்கள் நேரவில்லை!

 

In fact இந்தக் கதைக்குப் பேனா பிடிக்கத் தொடங்கும் வரைக்கும் எனக்குமே இது குறித்த ஞானம் லேது! “திபெத்தில் டின்டின்” ஆல்பத்தில் நம்மவர்கள் டில்லி... காட்மண்டு... திபெத் என்று சுற்றிக் கொண்டிருந்ததால் - இந்த topic எழக்கூடவில்ல. ” ஆனால் “மாயப் பந்துகள் 7” கதையோடு சவாரி செய்திட்ட சமயம் தான் ஆங்காங்கே நெருடல்கள் தோன்றின. 


டின்டின் ரயிலிலிருந்து இறங்கும் துவக்க சீன்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோ ஒரு இங்கிலீஷ் கிராமீய ரயில் நிலையமல்ல! 


அதே போல கதை நகர, நகர, புரபஸர் மார்க் பால்க்னர் டாக்ஸி பிடித்து டின்டினின் வீட்டுக்கு வரும் போது, சித்திரங்களில் தென்பட்டதோ பிரிட்டிஷ் டாக்ஸி அல்ல! 


அப்பாலிக்கா புரபஸர் கேல்குலஸைக் கடத்திப் போகிறார்களென்ற sequences-களில் சாலையோரம் தடுப்புகளைப் போட்டு விட்டு காவல் காப்போருமே பிரிட்டிஷ் போலீஸாரல்ல! 


அப்புறம் தான் ப்ரெஞ்சு ஒரிஜினல்களையும், இங்கிலீஷ் பதிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்க ஞானம் பிறந்தது! பார்த்தால் - டின்டினும், கேப்டன் ஹேடாக்கும் பயணமாகும் துறைமுக நகரமெல்லாம் பெல்ஜியத்தில் இருப்பதாக ஒரிஜினலிலும், இங்கிலாந்தில் இருப்பதாக இங்கிலீஷ் பதிப்பிலும் பதிவாகியிருப்பது தெரிந்தது! சரி, ரைட்டு - நம் மத்தியில் உள்ள நண்பர்களில் almost all இங்கிலீஷ் பதிப்புகளையும் படித்து வளர்ந்தவர்களாகவே இருப்பர் எனும் போது, பிரட்டிஷ் அடையாளத்தோடே தொடர்வது தான் மதியென்று தீர்மானித்தேன்.

 

The உலகம் சுற்றும் டின்டின்:


மார்லின்ஸ்பைக்... அங்கிருந்து துறைமுக நகரம்... அப்புறம் அங்கிருந்து பெரூ தேசம்... அங்கிருந்து அமேசான் கானகம்... அப்புறமாய் இன்கா பூமி என்று இங்கே நமது சாகஸக் குழுவினர் அடிப்பது தெறி ஷண்டிங்! மாற்றம் காணும் கதை பூமிகளோடு அந்தந்த ஊர் மக்களை, இடங்களை, கலாச்சாரங்களை நமக்கு ஹெர்ஜ் அட்டகாசமாய் காட்சிப்படுத்துகிறார்! இதில் ஒரு சுவாரஸ்யப் பின்னணியும் உள்ளது!

 

மாயப்பந்துகள் 7” ஒரு பத்திரிகையில் தொடர்கதையாக துளிர்விட்டது 1943-ன் இறுதியில்! அந்நேரமெல்லாம் பெல்ஜியம் - நாஜிக்களால் வீழ்த்தப்பட்டு அவர்களது ஆக்கிரமிப்பில் அடங்கிக் கிடந்தது. பெல்ஜியத்தை ஆண்டு வந்த நாஜிக்களோடு ஹெர்ஜ் அவர்களுக்கு நல்லதொரு நட்புறவு இருந்ததாக ஒரு சந்தேகம் நிலவி வந்த நாட்கள் அவை! And 1944 செப்டம்பரில் நேசநாட்டுப் படைகள் பெல்ஜியத்தினுள் புகுந்து, நாஜிக்களை விரட்டியடித்த தருணத்தில் ஹெர்ஜ் மீது "நாஜி அனுதாபி" என்ற முத்திரை குத்தப்பட்டது மட்டுமல்லாது, அவரது படைப்பான இந்த டின்டின் சாகஸமும் முடக்கப்பட்டது! 2 வருடங்களுக்குப் பின்னால் அந்த நாஜி அடையாளத்தை ஹெர்ஜ் அழித்த பிற்பாடே, ”மாயப்பந்துகள் 7” & அதன் க்ளைமேக்ஸ் பாகமான “கதிரவனின் கைதிகள்” 1946 செப்டம்பர் முதலாய் மறுபடியும் பிரசுரிக்கப்பட்டது and 1948 வரைக்கும் நீண்டு சென்று சுபம் கண்டது! So இந்தக் கதைக்கு இரண்டாம் உலக யுத்தத்தின் வயதாக்கும்!! 84 ஆண்டுகள் கழிந்த பின்னருமே இதனில் பெருசாய் புராதன அடையாளங்களின்றி, அந்தப் பழம் நெடியின்றி (சு)வாசிக்க முடிவதே கதாசிரியரின் ஜாலங்களுக்கொரு tribute!

 

முழு புக்காய் வெளியான சமயம் தெறி வெற்றி கண்டது மட்டுமன்றி - டின்டின் தொடரின் டாப் சாகஸங்களுள் ஒன்றாகவும் இது கொண்டாடப்பட்டது! 130 மொழிகளில், கிட்டத்தட்ட 24 கோடி வாசகர்கள் ரசித்துள்ள இவற்றை நீங்களும் (சு)வாசிக்க வேணாமோ? உலகின் ஏதேதோ கோடிகளிலிருக்கும் கோடானு கோடிகள் ஆராதிப்பதற்குக் காரணம் என்னவென்று பார்த்திடத்தான் வேணாமுங்களா?

 

The கதை மாந்தர்கள்:


இந்தக் கதையை தவறாமல் படிக்க இன்னொரு காரணமும் உள்ளதென்பேன்! Oh yes - இந்த டபுள் டமாக்காவில் கிட்டத்தட்ட டின்டின் யுனிவெர்ஸின் முக்கால்வாசிப் பேர் ஆஜராகி விடுகின்றனர்!

 

- டின்டின் & ஸ்நோயி & கேப்டன் ஹேடாக் வழக்கம் போல கதையின் பிரதான தூண்களாகின்றனர் !


- புரபஸர் கேல்குலஸ் தனது குடாக்கு பாணியில் இந்தக் கதையில் முதுகெலும்பாகிறார்! அவர் கடத்தப்பட, அவரை மீட்டே தீருவேனென்று டின்டின் & ஹேடாக் புறப்படுவதே கதையின் அடிநாதம்! And க்ளைமேக்ஸில் சும்மா கலக்கலாய் ஒரு உடுப்பில் மனுஷன் பிரசன்னமாகிறார்!


- ‘ப்‘ போட்ட தாம்ப்ஸனும், ‘பாப்பா போட்ட தாப்பா‘வில் வருவது போலான ‘ப்‘ போடாத தாம்ஸனும் - இந்த டபுள் சாகஸத்தின் ரவுசு பார்ட்டிகள்! கதை நெடுக இந்தத் துப்பறியும் ஜோடி அடிக்கும் லூட்டிகளை ரசிக்காது போனால் - நாமெல்லாம் VGP கோல்டன் பீச்சின் சிலை போன்ற வாயில்காப்பான்களுக்கு tough தரும் பார்ட்டிகளாகிடுவோம்! அற்புதமான பாத்திரப்படைப்பு these detectives என்பேன்!

 

பியான்கா காஸ்டப்பியாரே: பாடகி! திடுபீரங்கி ! கேப்டன் ஹேடாக்கை இன்னொரு ஆல்பத்தில் விரட்டி விரட்டி லவ்ஸ் விடும் இத்தாலியப் பெண்மணி! டின்டின் யுனிவர்ஸில் அம்மணிக்கொரு முக்கிய இடமுண்டு!

 

ஜெனரல் அல்கஸார்: கத்தி வீசும் வித்தைக்கரராக இங்கே அறிமுகமாகும் மனுஷன் ஒரு தென்னமெரிக்க குட்டி தேசத்தின் ப்ரெஸிடெண்ட்! அங்கே புரட்சி வெடிப்பதும்; ஆட்சியாளர்கள் மாறுவதும் பாப்கார்ன் சாப்பிடுவது போல சராசரி நிகழ்வுகளே! (இது தவிர்த்து) மொத்தம் 3 ஆல்பங்களில் இடம் பிடித்திடும் மனுஷன் இவர்!

 

புரபஸர் கேன்டனோ: மாயப்பந்துகளின் தாக்கத்தால் தூக்கத்தைத் தழுவுவோரில் ஒருத்தரான புரபஸர் “எரிநட்சத்திர வேட்டை” (The Shooting Star) சாகஸத்திலும் வருகை தருபவர்!

 

So டின்டின் யுனிவெர்ஸின் ஒரு landmark சாகஸத்தினை படிக்காமல் பூட்டிப் போடுவது நியாயமாரே?

 

The கதை:


கொஞ்சம் இஸ்திரி; கொஞ்சம் மாந்த்ரீகம்; நிறைய அட்வென்சர்; எக்கச்சக்கமாய் ஜாலியான நகர்த்தல்கள் என்று ஓட்டமெடுத்திடும் கதையின் மையப்புள்ளி yet again நட்பு தான்! போன தபா நண்பர் சேங்கை பனிமலை யெடியிடமிருந்து மீட்க உயிரையே பணயம் வைக்கும் டின்டின் இம்முறை ஆப்த சகாவான புரபஸர் கேல்குலஸை மீட்பதுக்கோசரம் செய்திடும் சாகஸங்கள் எண்ணிலடங்கா! ரயிலை நாசம் செய்து போட்டுத் தள்ள முயற்சி; அடர் கானகத்தின் தீரா இன்னல்கள்; மோட்டாவான முதலைகளோடு மல்லுக்கட்டுதல்; கான்டோர் மலைக் கழுகுகளோடு மோதல் -  என டிசைன் டிசைனாக எழுகின்றன - டின்டின் & கோ தாண்டிட வேண்டிய இடர்கள்!! So இதனை ஒரு “கார்ட்டூன் கத” என்று புறம்தள்ளக் கூடிய நண்பர்கள் - சற்றே மறுபரிசீலனை ப்ளீஸ்!

 

இம்புட்டுக் காரணங்கள் போதாதென்றால் - இன்னமுமே இரு முக்கிய காரணங்கள் உள்ளன டின்டினோடு தாமதகளின்றி அன்னம் - தண்ணி புழங்கிட!

 

1. முதலாவது of course - ரூ.600 செலவிட்டு வாங்கின பொஸ்தவங்கள் கொஞ்சமாச்சும் சேவை செய்திட அனுமதித்தல் அவசியமன்றோ?

 

2. More importantly - டின்டின் போன்றதொரு மெகா ப்ளாக்பஸ்டர் ஹீரோவுடன் ‘பொம்ம புக்‘ பயணம் புறப்படவே நமக்கு நேரம் குறைச்சலாகிறதெனில் சிக்கல் around the corner என்பேன் ! டின்டின் எனும் ஒரு காமிக்ஸ் உலக உச்சத்தின் தெருப்பக்கம் தலை வைத்துப் படுக்கவே நமக்கு 40 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன என்பதில் no secrets ! யதார்த்தம் அவ்விதமிருக்க, மெகா தம் கட்டி ஏறியுள்ளதொரு சிகரத்தின் உச்சியிலிருந்தான பார்வைகள் கூட நம்மை பரவசம் கொள்ளச் செய்யாது, கொட்டாவியை விடச் செய்கிறதெனும் பட்சத்தில், நிலவரம் கலவரமே !! சிஸ்கோ ; ஆல்பா ; Soda ; மேக் & ஜாக் ; IR$ ; நீலப்பொடியர்கள் ; லேடி S ; etc etc என்ற தொடர்கள் உங்களை துள்ளிக் குதிக்கச் செய்யாது போயிருப்பின், அதனைப் புரிந்து கொள்ள இயல்கிறது ! பச்சே, டின்டின் எனும் ஒரு அசாத்திய ஆளுமையும் நொண்டியடிக்க நேரிடும் பட்சத்தில் - phewwwww !!  


டின்டினுக்கே நம்ம கையிலே படிக்க நேரமில்லை எனும் பட்சத்தில், புதுசாய் தொடர்களைத் தேடுவதில் பெருசாய் லாஜிக்கும் இல்லாது போகிடும் ; ஜிலோன்னு கபிஷ் ; இஸ்பிடர் ; ஆர்ச்சி என்று ட்ராவல் பண்ணவே அப்பாலிக்கா சபலமும் எழுந்திடும் என்பது தானே யதார்த்தம் guys ? More importantly, வாசிப்பு எனும் சுவர் இருந்தாலன்றோ, சந்திப்புகள், கலாய்கள், க்ரூப்கள், கலாட்டாக்கள், பதிவுகள் எனும் சித்திரங்களைத் தீட்டிட இயலும் ? So சுவர் பலஹீனமாகிச் செல்வதை முன்னிருக்கும் சித்திரங்களில் அழகியலில் மறந்திட்டோமெனில் அது சிக்கலுக்கான பாதையாகிப் போயிடாதா folks ?


இங்கு இந்த டாபிக்கை நான் திறக்க இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது guys ; ஆண்டொன்றுக்கு 3 டின்டின் = ரூ.900 என்பதே இப்போதைய திட்டமிடல் ! அந்தப் பணத்தை நீங்கள் தரத் தயாராக இருந்தாலும், அது விரயமாகிடலாகாதே என்ற நெருடல் உள்ளுக்குள் உள்ளது ! So அரும்பாடுபட்டு எட்டிப் பறித்ததொரு மாம்பழத்தை அழுகிப் போக அனுமதியாது, சுவைப்போமே ? என்பதே ஈ பாலக்காட்டு மாதவனின் வேண்டுகோள் ! Final தீர்ப்பு நிண்ட கரங்களில் !!

 

So இன்றைய விடுமுறையையோ - தொடரவுள்ள வாரயிறுதியினையோ டின்டின் தினங்களாக மாற்றிப் பார்க்கலாமா? Give it a read please & let's celebrate Tintin the way the world has been celebrating !!


Bye all....see you around !!


P.S : அப்புறம் தாத்தாக்களும் உள்ளாருங்கோ இந்த மாதத்தினில் !!



Wednesday, August 07, 2024

Citius...Altius...Fortius..!

 நண்பர்களே,

வணக்கம். மலையேற்றத்தைக் காட்டிலும் சிரமமானது எதுவென்று யாரும் என்னிடம் விசாரிக்கப் போவதில்லை தான், but அப்படி யாரேனும், என்னிக்கேனும்  தப்பித்தவறி வினவிடும் பட்சத்தில், இம்மி தயக்கமுமின்றிச் சொல்வேன் -"Actual பயணத்தைக் காட்டிலும், அந்த அனுபவத்தை ; அந்த சந்தோஷ நினைவுகளைப் பகிர்வது தான் ஆகச் சிரமமான task" என்று !! இதோ, ஞாயிறு நடந்து முடிந்த "ஈரோட்டில் லயன் 40" அதகளத்தினில் அந்த உண்மையை yet again உணர்ந்திட முடிந்துள்ளது !! 

விழாவுக்கு ஒன்னரை மாதங்களுக்கு முன்பிலிருந்தே துவங்கிய முஸ்தீபுகள் - நாட்கள் நெருங்க நெருங்க ஒரு fever pitch-க்கு மாற்றம் கண்டதை நானும் சரி, டீம் ஈரோடும் சரி - உணர்ந்திருந்தோம் ! அந்தத் தன்னிகரில்லா தன்னார்வலர் டீம் + குறும்படத்தினில் தெறிக்க விட்டிருந்த நவரச நண்பர்கள், கடைசி வாரத்தினில் தூக்கங்களையும் சரி, தங்களின் சொந்த ஜோலிகளையும் சரி, முழுசுமாய் தொலைத்து விட்டு, தம் வீட்டு விசேஷம் ஜொலித்திட வேணுமே என்ற அக்கறையில் ஓடோ ஓடென்று ஓடிக்கொண்டிருந்த அழகையெல்லாம் வார்த்தைகளுக்குள் அடக்குவது - (ஒரிஜினல்) கவிஞர்களுக்கே சவால் விட்டிருக்கும் !! எங்கென்று ஆரம்பிப்பது ? எதை சிலாகிப்பது ? எதையெதையெல்லாம் எண்ணிப் புளகாங்கிதம் கொள்வது ? மண்டைக்குள் இன்னமுமே அலையடிக்கும் ஓராயிரம் சந்தோஷக் கீற்றுகளை எவ்விதம் வரிசைப்படுத்துவது ? - சத்தியமாய் I have no clue !! 

**ஒரு பெரிய பொட்டி நிறைய சிறுதானிய வகை பிஸ்கெட்கள் (ஸ்ரீபாபு சார் - டேஸ்ட் ஆஹா-ஓஹோ ரகம் !!) ; பாட்டில் நிறைய துளியும் கலப்படமில்லா அசல் மலைத் தேன் ; ப்ளஸ் இன்னும் என்னென்னவோ உசத்தியான அசல் spices !! அம்புட்டையும் நீட்டாக பேக் பண்ணி, அதை என்னைத் தூக்கக் கூட அனுமதியாமல் என் ரூம் வரைக்கும் கொண்டு வந்து வைத்து விட்டுப் போன அன்பை முதற்புள்ளியாக்குவதா ?

**விழா அரங்கில் நுழைந்த நொடி முதலாய், முகம் முழுக்க மகிழ்வோடு என்னை வரவேற்று, "தோள் இப்போ எப்படியுள்ளது ?" என்று ஆள் மாற்றி ஆள் நலம் விசாரித்த வாஞ்சையை ஆராதிப்பதா ?

**அன்றைய பொழுதினில் எடுக்கப்பட்ட எண்ணற்ற போட்டோக்களிலும் - "கிட்டக்க நின்றால் போதாது - என் தோளில் கை போடுங்க சார் !" என்று உரிமையோடு கோரிய நண்பர்களின் அன்பை சிலாகிப்பதா ?

**மதிய உணவு இடைவேளையின் போது வெளியே போய்விட்டுத் திரும்பிய நொடியில் வாங்கியாந்திருந்த சாக்லேட் பர்பியை எனக்கும், ஜூனியருக்கும் தந்திட்ட அன்பை குறிப்பிடுவதா ?

**'உடல்நலம் சரியில்லை' என்பது அப்பட்டமாய்த் தெரிந்த போதிலுமே, முந்தைய இரவு 8 மணிக்கு விழா அரங்கினில் ஆஜராகி, மறுநாள் மாலை ஊர் திரும்பிடும் வரையிலும், தரப்பட்ட அத்தினி வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்த நம்ம மகளிரணித் தலைவிக்கு ஒரு "ஓ" போடுவதா ?

**அல்லது, கல்லூரி துவங்கி விட்டிருக்கும் சூழலிலும், ஒரு நாள் லீவைப் போட்டு விட்டு நமது விழாவின் ஏற்பாடுகளுக்கென ஆஜராகிய நமது பிள்ளைகள் மனோஜ் + காயத்ரியின் அர்ப்பணிப்பை எண்ணி அகம் மகிழ்வதா ?

**இல்லாங்காட்டி, புத்தம் புது ரோஜா மலராட்டம்,அப்பாவுடன்  காலையிலேயே அரங்கில் ஆஜராகி, வீடியோ நேரலை ஒளிபரப்புக்கு இயன்ற ஒத்தாசைகளையெல்லாம் செய்து வந்த அந்த சுட்டிக் குழந்தையை உச்சி முகர்வதா ? (கோவை பிரகாஷ் சார் - கண்ணம்மாவுக்கு சுற்றிப் போடச்சொல்லுங்கள் !!)

**அன்றைய பொழுதினை நம்மோடு கழித்திட, எங்கெங்கிருந்தெல்லாமோ, ஏதேதோ பல்டிகளெல்லாம் அடித்து வந்து சேர்ந்திருந்த நண்பர்களின் முயற்சிகளுக்கு தலைவணங்குவதா ? 

**கேடயங்கள் ; நினைவுப் பரிசுகள் ; tokens of love என்று அமர்க்களப்படுத்திய உங்களின் உள்ளன்பை எண்ணி நெகிழ்வதா ?

Phewwwwwwwww !!! சத்தியமாய் ஆஸ்டெரிக்ஸ் கதைகளைக் கூட தமிழில் மொழிபெயர்த்து விடலாமுங்க - ஆனால் உங்கள் நேசங்களின் வெளிப்பாடுகளைப்  பட்டியல் போடுவதென்பது அதைவிடவும் சிரமக்காரியம் !

தி TEAM ERODE !!!!!!!!!

நண்பர் ஸ்டாலினில் துவங்கி, இந்த விழாவின் ஏற்பாடுகளுக்கென literally  ராப்பகலாய் முட்டி மோதிய டீம் ஈரோட்டின் ஒவ்வொரு துளி வியர்வைக்கும் நாம் ஒற்றை ரூபாய் சன்மானம் தருவதாய் இருந்தால் கூட, இன்றைக்கு அவர்களுக்கு கோடி ரூபாய் கடன்பட்டிருப்போம் !! உழைப்பென்றால் - சொல்லி மாளா அசாத்திய உழைப்பு ! நான் இங்கே சிவகாசியில் சொகுசாய் குந்தியபடிக்கே - "ஆஅ...இங்கே பூஸ்....ரைட்லே பூசுங்க...ஆங்...லெப்ட்ல பூசுங்க !' என்று கவுண்டராட்டம் நெளித்துக் கொண்டே ரோசனைகளை மட்டும் அள்ளி வீசிக் கொண்டிருக்க, அங்கோ ஈரோட்டின் வீதிகளை டீம் ஈரோடு அளந்து கொண்டிருந்தது !! தங்கும் அறைகளின் ஏற்பாடுகளுக்கென குறைந்த பட்சமாய் எட்டுப் பத்து ஹோட்டல்களுக்கு நடை போட்டிருப்பார்கள் !! கேட்டரிங் ஏற்பாடுகளுக்கென ஏறி இறங்கிய உணவகங்களைக் கணக்கில் கொண்டால், ஒரு ஈரோடு Food Directory போட்டு விடலாம் !! வாட்டர் பாட்டில்களுக்கு அலைச்சல் ; வடையா - பஜ்ஜியா -சமோசாவா ? என்ற தேடலுக்கொரு அலைச்சல் !!  கோப்பைகள், மெடல்கள் மாத்திரமன்றி, அவற்றினுள் பொறிக்க வேண்டிய பெயர்ஸ் + போட்டோஸ் ஒருங்கிணைப்பென்பது இன்னொரு அசாத்தியப் பணி !! And அந்த முயற்சிகளில் உறுதுணையாய் இருந்தவரோ ஈரோட்டில் பிரம்மாண்டமாய் டிஜிட்டல் பிரின்டிங் செய்து வரும் வாசக நண்பர் !! நாமடிக்கும் ராக்கூத்துக்களுக்கு இம்மியும் முகம் சுளிக்காது அத்தனைக்கும் இசைவு சொன்னார் !! 

அப்புறம் அரங்கத்தில் செய்திட வேண்டிய ஏற்பாடுகளுக்கென இன்னொரு திக்கில் ஓட்டம் !! ரவுண்டு டேபிள் ; அதன் மேல் விரிக்க satin துணி ; மேடைக்கு focus lights ; சவுண்ட் effect-க்கென ஸ்பீக்கர்கள் ; இம்முறை அகிலால் உதவிட இயலா சூழல் என்பதால் போட்டோ + video எடுக்க ஆள் ஏற்பாடு - என்று அது தடதடத்து வந்தது ! இதில் கூத்தென்னவென்றால் அமைந்த போட்டோகிராபரோ, நமது தீவிர வாசகரும் போல !! போட்டோ எடுக்கும் போதே முகம் முழுக்க கொப்பளித்த உற்சாகம் ஒரு பக்கமெனில், கிடைத்த சந்தர்ப்பத்தில் என்னிடம் வந்து தனது காமிக்ஸ் ஆர்வத்தைப் பற்றியும் ஒப்பித்து விட்டுச் சென்றார் ! ரூம்கள் போட்டாச்சு ; ஆனால் யார்-யாருக்கு எங்கே ? என்ற பொறுப்பினை அடுத்து எடுத்துக் கொண்டனர் நண்பர்கள் !! அத்தனை பேருக்குமே முன்கூட்டியே தகவல் தெரிவித்து, துளியும் இடரின்றி check in செய்திட ஏற்பாடுகளை துளியும் குழப்பமின்றிப் பார்த்துக் கொண்டார்கள் ! அப்புறம் மாடஸ்டி, ஸ்பைடர் & லக்கி லுக் கட்-அவுட் செய்திடும் பொறுப்பை கோவையில் உள்ளதொரு தயாரிப்பாளரிடம் தந்து விட்டு, அதனையும் co-ordinate செய்து கொண்டார்கள் நண்பர்கள் !! பலூன் தோரணத்துக்கு ஆள் ஏற்பாடு ; ஐஸ்க்ரீமுக்கு ஏற்பாடு ; பீடாவுக்கு ஏற்பாடு - பிறந்தநாள் கேக்குக்கு ஆர்டர் ; பந்தியில் பரிமாற சுவீட்டுக்கான ஆர்டர் - என ஒரு கல்யாண வீட்டுக்கு இம்மியும் குறைச்சலில்லா அலைச்சல் ! ஊரில் இருந்தபடிக்கே ரெண்டு நாட்களுக்கொரு தபா ராவின் பாதிப் பொழுதுக்கு ஸ்டாலின் சாரும், நானும் போனில் பேசிக் கொண்டே இருந்தோம் ; yet பணிகள் மலையாய் மிரட்டுவதாகவே எனக்குப் பட்டது ! In fact - இத்தனை சிரமங்களை நண்பர்களின் சிரங்களில் சுமத்தி வருகிறோமே -  இதெல்லாம் தேவை தானா ? என்ற எண்ணம் எனக்குள் சுழற்றியடிக்கத் துவங்கியது ! நாலு நாளாய் உச்சா போகாத வானரமாட்டம் 'உர்ர்ர்ர்' என்றே ஆபீசில் கடைசி வாரத்தின் முழுமைக்கும் திரிந்து கொண்டிருந்தேன் !! 

தேவையான பேனர்கள் ; டிஜிட்டல் பிரிண்ட்ஸ் ; டிசைன் தயாரிப்புகள் ; அப்புறம் ஓவியக்கண்காட்சிக்கான படங்கள், மாண்ட்ரேக் புக்ஸ் ; நண்பர்களுக்கு gift bags என நம் தரப்பிலிருந்து வந்திட வேண்டிய ஐட்டங்களையெல்லாம் வெள்ளி இரவு ரெடி பண்ணிவிட்டு "லாரிக்கு அனுப்பி விடுங்கள்" என்றபடிக்கே வீட்டுக்குப் போனால் - பின்னாடியே இடியாய் சேதி வந்தது "நாளைக்கு (சனிக்கிழமை ஈரோட்டில் லாரி ஷெட் லேதாம் சார் ; தீரன் சின்னமலை நினைவு தினம் + ஆடிப் பெருக்கு என்பதால் விடுமுறை ! ஞாயிறும் நஹி !" என்று !! கிழிஞ்சது போ - என்றபடிக்கே ஆபீசுக்கு திரும்பவும் ஓடிப் போய் திருப்பூர் செல்லும் தினசரி பார்சல் சர்வீஸில் பேசினோம் ! "காலங்கார்த்தாலே ஆறரை மணி சுமாருக்கு ஈரோட்டை கடக்கும் போது பார்சல்களை போட்டு விட்டுப் போகலாம் ; அவ்வளவு தான் செய்ய முடியும் !!" என்றார்கள் ! அதற்கும் நண்பர்கள் சளைக்கவில்லை ; அதிகாலையிலேயே அரங்கு வாசலில் ஆஜராகி பண்டல்களை பத்திரமாய் வாங்கி வைத்து விட்டனர் ! 

சனி காலையில் நானும் ஈரோட்டுக்கு சென்றிறங்க, காலையே கல்யாண வீட்டு feel வந்து விட்டது - ஸ்டாலின் சாரின் இல்லத்தில் டிபனுக்கு நண்பர்களோடு குழுமிய போதே !! யார் -யார் எந்தெந்தப் பொறுப்புகளை எடுத்துக் கொள்வதென்ற final call ; நிறைய discussions என்றதன் பின்னே காத்திருந்த இறுதிக் கட்டப் பணிகளை நிறைவு செய்ய ஆளாளுக்கு ஒரு திக்கில் கிளம்பிப் போயினர் ! மாலை ஒரு ஐந்து மணிவாக்கில் எனது ரூமிலிருந்து ரோட்டை தாண்டி மறுபக்கமிருந்த அரங்கிற்குப் போனால் - ஸ்டாலின்ஜி + கோவை நண்பர் பிரகாஷ் மாத்திரமே அங்கிருந்தனர் - "பே" என காட்சி தந்த அரங்கினில் !! கொஞ்ச நேரத்தில் ஒவ்வொருவராய் நண்பர்கள் வரவும், அடுத்தடுத்த வேலைக்கென புறப்படவுமாய் இருக்க, நான் வாய் பார்த்தபடிக்கே இருந்தேன் ! இரவு எட்டுவாக்கில் சீனியர் எடிட்டரும், கருணையானந்தம் அங்கிளும் வந்த நமது காரிலேயே ரவுண்டு பன்களும் வந்திறங்க, அவற்றை உள்ளே அடுக்கி விட்டு, நண்பர்களிடம் விடைபெற்று விட்டு ரூமுக்குக் கிளம்பினேன் ! நான் புறப்பட்ட போதோ அரங்கம் ரணகளமாய்க் கிடந்தது ; 'ஆத்தீ...பாக்கியிருக்கிற வேலைகளை ராவோடு ராவா முடிக்க பெரும் தேவன் ஓடின் நம்மவர்களுக்கு எக்ஸ்ட்ராவாக நாலு கைகளைத் தந்தால் தானுண்டு  !!' என்ற எண்ணமே எனக்குள் !!  அதிகாலை ரயிலில் வந்திறங்கிய ஜூனியர் எடிட்டருடன் காலையில் ஒன்பதே காலுக்கு அரங்கினுள் நுழைந்தால் - phewwwwww ; ஒரு மாய தேவதை தனது மந்திரக்கோலின் ஒற்றை வீச்சில் சகலத்தையும் அழகாக்கியது போலொரு பிரமையே எழுந்தது எனக்கு ! ஒன்பதடி உசர பேனர்கள் நான்கிலும் 'தல' டெக்ஸ் ; வேதாளர் ' ஆர்ச்சி & XIII மிரட்டிக் கொண்டிருந்தனர் ! அவற்றை அந்த ஒசரத்தில் எப்படித்தான் கட்டினார்களோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் ! மேஜைகள் அனைத்தும் கெத்தாய் காட்சி தர, அவற்றின் மீது நமது லேபிள்கள் போடப்பட்ட தண்ணீர் பாட்டில்களும், டிஜிட்டல் பிரிண்டவுட் அட்டைகளும் ஒய்யாரமாய் குந்தியிருந்தன ! ஓவியக் கண்காட்சிக்கும் சகலமும் ரெடியாக இருந்தது ! வாய் பிளக்கும் வேலை மட்டுமே எனக்கு பாக்கியிருக்க, டீம் ஈரோடு - டீம் பாகுபலியாய் எனக்குக் காட்சியளித்தனர் !!! Awesome job team - stunningly amazing !!! நீங்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கும் சாதனையானது தான் இந்தாண்டின் விழா வெற்றியின் முதுகெலும்பே !!! தலைவணங்குகிறேன் !!!!   பெருமிதம் கொள்கிறேன் !! கடன்பட்டிருக்கும்  குறுகுறுப்பையும் உணர்ந்து நிற்கின்றேன் !!

The நவரசத் திலகங்கள் !!

அன்றைய தினத்தின் highlight நம்ம நவரச நாயக / நாயகியரின் குறும்படமே என்பதில் யாருக்கும் ஐயம் இருந்திருக்க இயலாது ! கருங்கல்பாளையத்தின் தெருக்களிலும், வீதிகளிலும் ஓட்டமெடுத்து லூட்டி பண்ணியிருக்கும்  Alone Star-ல் துவங்கி, அவரை வெளுத்தெடுக்கும் ரோல்களில் பின்னிப் பெடலெடுத்த அத்தனை நண்பர்களும் ; கேமியோ ரோலில் அசல்தேசத்துக்காரும் ; டாக்டரம்மா சமுத்திர இசைக்கருவி ; காயத்ரி - என அம்புட்டுப் பேருமே மெர்சலூட்டியிருந்தனர் !! கொஞ்சமே கொஞ்சமாய் வாய்ஸ் மட்டும் இன்னும் தெளிவாய் அமைந்திருப்பின், இதன் தாக்கம் இன்னமுமே பிரமிப்பூட்டியிருக்கும் என்பதில் no doubts !! இதற்கான ஷூட்டிங் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே சாத்தியமாகி இருக்க , டப்பிங் செய்வதெல்லாம் இறுதி நிமிடம் வரை நீண்டு செல்ல, மனோஜின் எடிட்டிங் + தொழில்நுட்ப லாவகத்தில், சகலமும் balance ஆகி - ஞாயிறு காலையில் பத்தரை மணிக்கு all ready என்றாகியிருந்தது !! நல்லாவே அவகாசம் தந்து, இன்னும் சிறப்பான equipment சகிதம் படப்பிடிப்பை (!!!) நடத்திட இயன்றிடும்  பட்சத்தில், அடுத்த தபா நம்மவர்கள் அடிக்கக்கூடிய சிக்ஸரானது ஸ்டேடியத்துக்கு வெளியே பறக்கும் ரகமாக இருக்கும் என்பதில் இம்மியும் ஐயங்கள் வேண்டியிராது ! Absolutely fantastic show all !! எழுந்து நின்று அன்றைக்கே கைதட்டியிருக்க வேண்டும் கண்டு ரசித்த நாங்கள் அனைவரும் !! And என்னை இன்னமும் மண்டைக்குள் குடைந்து தள்ளிக் கொண்டேயிருக்கும் ஒரே சமாச்சாரமானது - குறும்படம் ஓடி முடிந்த நொடியினில் அதன் நவரசத் திலகங்களை, அவர்களின் இல்லத்தரசிகளோடு மேடையேற்றி கவுரவிக்க தவறி விட்டோமே என்ற ஆதங்கம் தான் !! Sorry சார்ஸ் - ப்ரோக்ராம் ஆரம்பித்ததே ரொம்ப லேட்டாக என்பதில் மண்டை கொஞ்சம் நிதானத்தில் இருந்திருக்கவில்லை ! தவிர, துவக்கத்தில் விருந்தினர் எண்ணிக்கை மிதமாகவே இருந்திட்டதால் - 'ஆஹா..சாப்பாடு ஏகமாய் விரயமாகிப் போகுமே !' என்ற நெருடலும் மனதை கவ்விக்கொண்டிருந்தது ! But நேரம் போகப்போக அரங்கம் நிறைந்ததைப் பார்த்த போது மனம் சமனம் கண்டது !! 236 பேர் - அன்றைக்கு நம்மை தம் வருகைகளால் சிறப்பித்தோர் !! சாத்தியமாகிடும் அடுத்த சந்திப்பினில் நவரசத் திலகங்கள் அனைவருக்கும் ஒரு ஸ்பெஷல் சல்யூட் தந்திட மறக்க மாட்டேன் !! Take a bow all !!!!! 

ஆத்திங் the உரை !!!

அன்றைய திட்டமிடலின்படி காலை ஒன்பதரைக்கே துவங்கியிருக்கும் பட்சத்தில் பன்னிரெண்டரைவாக்கில், மைக் என் கைகளுக்கு வந்திருக்க வேண்டும் & ஒரு 30 நிமிடங்கள் ஆத்தோ ஆத்தென்று நான் ஆத்தியிருந்தாலும் மதியம் ஒரு மணிக்கு லன்ச் மேளா துவங்கியிருக்க வேணும் ! ஆனால் ஆடி அமாவாசை என்பதால் விருந்தினர் வருகைகளில் தாமதம் என்ற போது, எல்லாமே got pushed back ! So அப்பா ரொம்பச் சுருக்கமாகவும், கருணையானந்தம் அங்கிள் சுருக்கமாகவும் பேசி முடிக்கும் போதே மணி 1-35 ஆகியிருந்தது ! 'சரி, ரைட்டு - ரெண்டு மணிக்கெல்லாம் மங்களம் பாடிப்புட்டு மக்களை சாப்பிடப் போக விடணும் !' என்பதே எனது தலைக்குள் மேடையேறும் போது ஓடியது ! ஆனால் ஒரு உரையினை முன்கூட்டியே தயார் செய்திடாது, ஊர் சுற்றும் கழுதையாட்டம் அந்த நொடியினில் சிந்தைகள் ஓடும் திக்கிலெல்லாம் சொற்பொழிவை இட்டுச் செல்வதன் flipside என்னவென்பதை மேடையிலிருந்து கீழிறங்கிய போது தான் உணர்ந்தேன் - simply becos மொத்தமாய் 56 நிமிடங்களுக்கு எனது உரை நீண்டிருக்கிறது  என்பதை கடிகாரம் சுட்டிக் காட்டியது !! Uffffffff !! மேடை மீது மைக்கைப் பிடித்து நின்றிருந்த சமயத்தில் சத்தியமாய் நேரத்தின் ஓட்டம் எனக்குள் register ஆகிடவே இல்லை folks !! இயன்றமட்டுக்கு ஒரு கோர்வையாய் பேசிட முற்பட்ட போது, one thing led to the other & கொஞ்ச நேரத்துக்குப் பின்னெல்லாம் உரை சுத்தமாய் எனது கட்டுப்பாட்டில் இல்லை - மாறாக autopilot mode -ல் அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது - என்னையும் தரதரவென இழுத்துக் கொண்டே !! 

ஆயுசில் இத்தனை நீளத்துக்கு நான் பேசியது இதுவே முதல் தபா & பேசும் போது emotional ஆனதுமே இது தான் முதல்வாட்டி ! எவ்வளவோ முயன்றும் தாத்தாவைப் பற்றிப் பேசத் துவங்கிய நொடியில் தொண்டை அடைப்பதையும், கண்கள் லைட்டாக பனிப்பதையும் தவிர்க்கவே இயலவில்லை ! நிச்சயமாய் அவரவருக்கு தத்தம் வீட்டோர் ரொம்பவே ஸ்பெஷல் தான் ; so எனது உணர்வுகளை புரிந்து கொள்ள யாருக்குமே இடரிருந்திராது தான் ! But தாத்தா சார்ந்த எனது நினைவுகள் ஒரு மிடறு தூக்கலானது becos - (பேரப்) பிள்ளைகளுக்காகவே வாழ்ந்தவர் அவர் ! இது நான் கேட்டதொரு நிகழ்வு - அதனை இங்கே narrate செய்வதில் தப்பில்லை என்று நினைக்கின்றேன் : 

அம்மா தான் தாத்தாவுக்கு ஒரே பிள்ளை ; so அம்மாவுக்கு கல்யாணம் ஆன நாள் முதலாகவே தாத்தா & பாட்டி கிட்டக்கவே வீடு பிடித்து, குடியிருந்து வந்தனராம். 1962 - எனது மூத்த சகோதரி பிறந்த வருஷம் ! முதல் பேத்தி என்பதால் தாத்தாவுக்கு செம வாஞ்சை ! ஒரு வயசுப் பிள்ளையாய் அக்கா இருக்கும் சமயம், சிவகாசியிலிருந்து மதுரைக்கு ஏதோவொரு திருமணத்துக்காக எல்லோரும் பயணமாகியிருக்கின்றனர் - பாசஞ்சர் ரயிலில் ! வெறும் 72 கிலோமீட்டர் தூரத்தை கடக்க அது 3 மணி நேரங்கள் எடுக்கும் போலும் ! போகும் வழியில் அக்காவோ செம அழுகையாம்  !! தொட்டில் இல்லாமல் தூங்க மாட்டேனென்று பயங்கர அடம் !! என்ன செய்வதென்று தெரியாமல் கள்ளிக்குடி எனும் அடுத்த சிறுநகர ஸ்டாப்பில் இறங்கி விட்டிருக்கிறார்கள் ! கொஞ்ச நேரத்தில் அக்கா மூச்சடக்கி அழ ஆரம்பிக்க, பதட்டத்தில் அங்கிருந்த தம்மாத்துண்டு ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்திற்குள் புகுந்து எங்காச்சும் தொட்டில் கட்ட வாய்ப்பிருக்குமா ? என்று தாத்தா பார்த்திருக்கிறார் ! ஊஹூம்....அங்கெல்லாம் உத்திரத்தில் தொட்டில் கோர்க்க வளையத்துக்கு என்ன வேலை இருக்கப் போகிறது ? So வேற வழி ஏதும் புலப்படாது போக, அங்கிருந்த ஜன்னல் கம்பியை ஒரு கையால் கெட்டியாய் தாத்தா பிடித்துக் கொள்ள, தாத்தாவின் கரத்திலேயே  தணிவாயொரு தொட்டிலைக் கட்டி, அக்காவை அதற்குள் படுக்கப் போட்டு தூங்கப் பண்ணியிருக்கிறார்கள் !! ஒரு மணி நேரமோ, ஒன்னரை மணி நேரமோ, தூங்கி முழிக்கும் வரைக்கும் ஜன்னல் கம்பியைப் பிடித்த கையை அசைக்காமல் சிலையாய் நின்றிருந்தாராம் தாத்தா !! And அக்கா சின்ன வயசில் நல்ல புஷ்டி !!! 

பேரப்  பிள்ளைகளுக்கென எதையும் செய்யலாமென்ற எண்ணம் கொண்ட தாத்தாவைப் பற்றி, என்னோடு பிறந்த சகோதரிகளுக்கும், சகோதரனுக்கும் நிச்சயமாய் இது போலான ஒரு நூறு நிறைவான அனுபவங்கள் இருக்கும் தான் ! But பாட்டி இயற்கை எய்திய 1984 முதலாய், தனது கடைசிப் 13 ஆண்டுகளில் தாத்தா maximum time செலவிட்டது என்னோடு தான் !! அதனால் தான் தாத்தா பற்றி மேடையில் பேச முற்பட்ட போதே உள்ளுக்குள் என்னவோ செய்தது !! Sorry guys !!

And sorry too - உங்களின் லன்ச் டைம்களை எனது லன்ச் டைம் போல கோக்கு மாக்கி வைத்து விட்டதற்கு !! To your credit - நீண்டு கொண்டே போன எனது பேச்சின் மத்தியில் உங்களில் யாருமே முகம் சுளிக்கவுமில்லை & எழுந்து போகவுமில்லை !! அதற்கு மட்டுமே உங்களுக்கு ஓராயிரம் ஸ்பெஷல் தேங்க்ஸ் !! Maybe கொஞ்சமாய் எழுந்து லன்ச் ஹாலுக்கு நடையை கட்ட ஆரம்பித்திருந்தால், நிச்சயமாய் அங்கேயே ப்ரேக்கைப் போட்டு வண்டியை இழுத்து நிறுத்தியிருப்பேன் தான் !! And ஆத்தோ ஆத்தென்ற படலத்தை முடித்து விட்டு கீழே இறங்கிய போது, ஈரமான விழிகளோடு என் கைகளைப் பற்றிக் கொண்ட நண்பர்களும் இருந்தனர் ! இதில் எனது மாளா வியப்பென்னவெனில், நானெல்லாம் ஏதோ மிட்டா, மிராசுப் பரம்பரையில் வந்தவனென்று அதிகம் interact செய்திட வாய்ப்புக் கிட்டியிரா நண்பர்கள் சிலர் நினைத்திருந்தது தான் !! Not at all folks ....வசதியாய் வளர்ந்து, சகலத்தையும் தொலைத்து விட்ட குடும்பத்திலிருந்து, உள்ளங்கை ரேகைகளை மட்டுமே கையிருப்பாய்க் கொண்டு பிள்ளையார் சுழி போட்டவன் நான் !! பள்ளியின் டாப் மாணவன் ; ஆனால் ப்ளஸ் டூவில் கடைசி மாத fees கட்ட ரூ.60 கையில் லேது ; அதையுமே ஒரு கொட்டும் மழை இரவில் தாத்தாவிடம் போய் வாங்கி கட்டி விட்டு, கடைசியாய் ஹால் டிக்கெட் வாங்கிய பிருகஸ்பதியும் நானே ! பொதுவாக நம்மில் பலருக்கும் வாழ்க்கைப் பாதைகள் சுலபமானவைகளாக இருப்பதில்லை தான் என்பதால், நொய்யு நொய்யென்று அந்த நாட்களின் அழுகாச்சிகளை highlight செய்திட நான் விழைந்திடுவதில்லை ! 

எது எப்படியோ - ஒரு மைல்கல் தருணத்தில் தத்து-பித்தென்று உளறி வைக்காமல் வண்டியை ஓட்ட முடிந்தமைக்கு பெரும் தேவன் மனிடோவுக்கு நமது நன்றிகள் உரித்தாகட்டும் ! In fact - எனது உரையில் நான் நன்றி சொல்ல மறந்திருந்தது இருவருக்கு ! முதலாவது - ஒற்றை நபரன்றி, ஒரு அணிக்கே !!  நமது மீள்வருகை நாட்களில் நமக்கு சமூக வலைத்தளங்களில் இம்மியும் பரிச்சயம் கிடையாது ; சென்னை, மற்றும் இதர பெருநகரப் புத்தக விழாக்கள் எந்தத் திக்கில் அரங்கேறிடும் என்பது கூடத் தெரியாது !  நெட்டில் நம் மீது வெளிச்சம் போட்டுக் காட்டி, நமது மீள்வருகையினை இந்த வட்டத்துக்குச் சொல்ல முனைந்த bloggers ; துவக்க நாட்களில் விற்பனைகளுக்கு உதவிய நண்பர்கள் - என்று அந்த அணியில் நிறையப் பேர் உண்டு ! So அவர்கள் அனைவருக்குமே ஒரு நன்றி ! Last but not the least - பெரும் தேவன் மனிடோவுக்கு !! 

நானெல்லாம் ஒரு காமிக்ஸ் எடிட்டர் ஆவேனென்று எண்ணியதே கிடையாது ! ஒரு சிறார் பத்திரிகை துவக்கி, வாண்டுமாமா ரேஞ்சுக்கு "அன்புக் குழந்தைகளே !!" என்று உங்களை விழித்திருக்க வேண்டியவன் ! நான் டில்லிக்கு அனுப்பிய "டிங்-டாங்" பெயர் பதிவு விண்ணப்பத்தினை ஏதோவொரு மஹானுபாவ குமாஸ்தாவின் ரூபத்தில் கிடப்பில் போடச் செய்து, என்னை லயன் காமிக்ஸ் முதுகில் உப்புமூட்டை ஏற்றிடத் தீர்மானித்தவரே மனிடோ தானே ?! மாடஸ்டி துவக்கத்தில் மொக்கை போட்ட நாட்களில் அந்த முத்து காமிக்ஸ் பீரோவினில் ஸ்பைடராரை எனக்காகக் காத்திருக்க அவர் திட்டமிட்டிருக்காவிடின், 1984 டிசம்பர் வரைக்கும் கூட இந்த முழியாங்கண்ணனின் பதிப்புலக ஜாகஜம் தாக்குப் பிடித்திராது ! அதே போல Frankfurt புத்தக விழாவில், பம்பை மண்டையனாய் நான் போய் நின்ற முதல் நாளில், "போ..போ..அடுத்த வருஷம் பாக்க ட்ரை பண்றோம் !"என துரத்திவிட்ட மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தைப் போலவே பிரான்க்கோ-பெல்ஜிய நிறுவனங்களும் என்னை உதாசீனப்படுத்தியிருந்தால் - "ச்சீ..ச்சீ..இவய்ங்க கதைகளே சரியில்ல ! உவ்வே...யாருக்கு வேணும் இதுலாம் ?" என்றொரு கதையைக் கட்டிய கையோடு ஊர் திரும்பியிருப்பேன் ! ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் காக்கும் கரங்களுடன் நின்ற பெரும் தேவன் மனிடோவின் கருணையின்றி மட்டும் போயிருந்தால், இன்றைக்கு எனது நண்பர்களின் பட்டாசு ஆலைகளில் ஏதேனும் ஒன்றில், கணக்குப்பிள்ளையாய் பணியாற்றி விட்டு, ரிட்டயர்மெண்ட்டை எதிர்நோக்கிக் காத்திருந்திருப்பேன் -இந்நேரத்துக்கு !! So ஒரு கோடி நன்றிகள் படைத்தவருக்கு !! 

The விருந்து : 

போன வருஷத்து சாப்பாட்டு சொதப்பலுக்குப் பின்பாய் நாங்கள் அனைவருமே செம உஷாராய் இருந்தோம் - இம்முறையாச்சும் பசியாறும் படலங்களை சுவையானதாக்கிட ! மொத்தம் 4 கேட்டரிங் க்ரூப்களில் விசாரித்தார்கள் நண்பர்கள் ! இல்லை போட்டு சோறு, சாம்பார்.கூட்டு,பொரியல் என்று திட்டமிட்டோம் ! But பந்தியொன்றுக்கு 75 பேர் அமர்ந்தால் கூட, நிச்சயம் மூன்றல்லது, நான்கு பந்திகள் தேவைப்படும் அனைவரும் உண்டு முடிக்க என்ற யதார்த்தம் உதைத்தது ! So buffet ; அல்லது ரயில்களில் வருவது போல பேக் பண்ணி வரும் பூவா என்பதை வலியுறுத்தினேன் நண்பர்களிடம் ! இறுதியில் buffet என தீர்மானமாகி, அப்பாலிக்கா மெனு ! அதுவும் final ஆகி, ரேட்டும் பேசி பணம் தந்த பிற்பாடும் எனக்கு உள்ளுக்குள் லைட்டாய் உடுக்கடித்துக் கொண்டே இருந்தது - 'சாப்பாடு அனைவருக்கும் சுகப்பட வேணுமே !!' என்று !! And நான் போட்ட மெகா மொக்கைக்குப் பின்பாய், மக்கள் இரண்டரை மணிக்கு கை நனைக்க வந்திருந்த நிலையில், சாப்பாடு மட்டும் சரியில்லாது போயிருந்தால் தூக்கிப் போட்டு மொத்தியிருப்பார்களென்று ஒரு beethi உள்ளுக்குள் அலையடித்துக் கொண்டிருந்தது  !! But ஆண்டவன் yet again கரை சேர்த்து விட்டார் - செம டக்கரான லன்ச் சகிதம் ! சிம்பிளான மெனு ; yet வயிறார அனைவரும் உண்ண, செம சுவையுடன் லன்ச் கிட்டியதால் அனைவரின் முகங்களிலும் ஒரு திருப்தி !! மூச்சே அப்போது தான் திரும்பியது பின்னணியில் இருந்தோர் அனைவருக்கும் !!  

The அனுபவம் - ஒட்டுமொத்தமாய் !!

நிறைய தருணங்களில் முக்கிய முன்னேற்றங்கள் நிகழ்வது அகஸ்மாத்தாகவே என்பது எனது நம்பிக்கை ! பெருசாய் திட்டமிட்டெல்லாம் நமது இரண்டாம் இன்னிங்க்ஸை நாம் துவக்கியிருக்கவில்லை ! பெரிய ரோசனைகளுக்கு அப்புறமாயெல்லாம் ஈரோட்டில் வாசக சந்திப்புகளுக்கு அடிக்கோலிட்டிருக்கவில்லை ; they just happened !! அதே போல இம்முறையும் ஒரு பெரும் திட்டமிடலெல்லாம் இல்லாமலே அழகானதொரு முன்னேற்றத்துக்கு ரோடு போட்டிருக்கிறோம் என்றே படுகிறது ! 'குடும்பங்களோடு வரலாமே guys ?' என கேஷுவலாக போட்ட விதைக்கு பல நண்பர்கள் அட்டகாசமாய் இசைவு தெரிவித்திருக்க, அன்றைய தினத்தினில் கணிசமான மகளிர் எண்ணிக்கை மாத்திரமன்றி, குழந்தைகள் எண்ணிக்கையும் கண்ணில்பட்டது ! And பிள்ளைகள் மேடையேறியதும் ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமே ! 'இந்த லூசுக அடிக்கிற கூத்தை மேலோட்டமா வேடிக்கை பார்த்துப்புட்டு திரும்புவோம் !' என எண்ணியிருக்கக் கூடிய இல்லத்தரசிகள் கூட, விழாவின் முழுமைக்கும் அரங்கினில் இருந்தது icing on a beautiful cake ! And விழாவின் இறுதியினில் மேடையேறி நினைவுப் பரிசுகளையும், மெடல்களையும் பெற்றுக் கொள்ள அவர்களுமே ஆஜரானதே அந்த நாளின் absolute highlight என்பேன் !! இனி வரும் காலங்களில், "யோவ்...நீர் கெளம்பி வர்றீரா - இல்லாங்காட்டி நான் முன்னே காமிக்ஸ் விழாவுக்குப் போகட்டுமா ?" என அவர்கள் வினவும் நாட்கள் புலராது போகாதென்றே படுகிறது !! சர்வ நிச்சயமாய் இனி வரும் சந்திப்புகள் மெய்யான குடும்ப விழாக்களாகவும் அமைந்திடுமென்று ஸ்டீலின் பட்சி சொல்கிறது !! 

மாலையில் நண்பர்களின் தனித்திறமைகள் வெளிப்பாடு, டிராமா, கேள்வி-பதில் session ; கிரிக்கெட் கோப்பை வழங்கும் நிகழ்வு என நிகழ்ச்சி நிறைவு பெற்ற நேரம் வரைக்கும் 150 நண்பர்களுக்கு குறையாது காத்திருந்தது மனநிறைவினைத் தந்தது ! என்ன - கிரிக்கெட் போட்டிகளின் வீடியோ வராது போன சொதப்பல் ; கோப்பையினை, மெடல்களைப் பெற்றுக் கொள்ள கணிசமான போட்டியாளர்கள் ஆர்வம் காட்டாது போனது மாத்திரமே பிசிறடித்தது போலிருந்தது ! Anyways திருஷ்டிப்பொட்டு இல்லாது போனால் கண் பட்டுவிடுமல்லவா - so அந்தக் குறையுமே அதுக்கோசரமாச்சும் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று  எண்ணிக் கொண்டேன் !! 

Overall, this was a day to savour for a lifetime !!!!

The Future :

ரைட்டு...லயனுக்கு இப்போ வயசு 40 ....இந்த வளர்ந்தமாடனுக்கு வயசு 57 ! What next ? என்பது பற்றியும் மேடையில் maybe பேசியிருக்க வேணுமோ - என்னமோ ?! But அந்த நொடியில் லயனின் பயணத்தைத் தாண்டி வேறெதுவும் பெருசாய் பேசுபொருளாகிட வேணுமென்றே எண்ணம் எனக்குத் தோன்றியிருக்கவில்லை !! நான்லாம் ஒரிஜினலாய் திட்டமிட்டது 58-ல் பாதி ரிட்டயர்மெண்ட் ; 60-ல் முழுசாய் என்பதே !! ஆனால் அந்தத் தருணமானது தொட்டு விடும் அண்மையிலிருக்கும் போது, 'ஆத்தீ...இப்போவே வூட்டுல குந்த நெனைச்சா வௌக்குமாத்தாலே சாத்தி பத்தி விட்ருவாளே !' என்ற டர் தலைதூக்காதில்லை ! So இந்த நொடியினில் ஸ்கூல் மேடையில் ஒப்பித்ததொரு இங்கிலீபீஷ் கவிதையின் வரிகள் தான் மண்டைக்குள் ஓடுகின்றன :

The woods are lovely, dark & deep..

But I have promises to keep..

And miles to go before I sleep...

And miles to go before I sleep..!

-Robert Frost-

நாம தான் கவிஞர் முத்துவிசய மேஜர் சுந்தர்ராஜனார் ஆச்சே - இதையும் நமக்கேற்றாற்போல மொழிபெயர்க்காது விட்ருவோமா ?

ஓய்வெனும் வனமோ  ரம்யமாய் சபலமூட்டுது...!

ஆனால் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளோ ஒரு வண்டி கெடக்குது...!

இழுத்துப் பொத்திப் படுத்துறங்கும் நாள் புலர இன்னும் ஏக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது...

......ஏக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது !!

-கவிஞர் முத்துவிசயனார்-

Thanks a ton all - for all the love that you have given us this many years !!! இந்த அன்புக்குத் தொடர்ந்து அருகதையானவராய்த் திகழ்ந்திட, இயன்ற சகலத்தினையும் செய்திடுவோம் என்பது எங்களது ப்ராமிஸ் !! God be with us all !! சலோ - லயன் 50 நோக்கி !! வண்டிய உட்றா சம்முவம் !!

P.S : பாரிசில் Olympics அரங்கேறி வரும் வேளைதனில், இந்த விழா தந்துள்ள அசாத்திய உற்சாகத்தோடு ஒலிம்பிக்சின் motto-வை நினைவுகூர்ந்திட ஆசை எழுகிறது !! Citius ...Altius ...Fortius .....!! 

Together Stronger....Higher...& Faster இந்தப் பயணத்தினைத் தொடர்ந்திடுவோம் all !!


P.P.S. : ஆங்...சொல்ல மறந்து போய்விட்டேன் : நம்மிடம் பெரும் எண்ணிக்கையில் உள்ள முந்தைய இதழ்களில் 24 டைட்டில்களை செலெக்ட் செய்து, மாணவர்களுக்கென ஒரு செம ஸ்பெஷல் விலையில் ஈரோட்டில் ஸ்டாலில் வைத்திருக்கிறோம் ! இனி தொடரவிருக்கும் எல்லா புத்தக விழாக்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்திடும் !!