Powered By Blogger

Wednesday, August 07, 2024

Citius...Altius...Fortius..!

 நண்பர்களே,

வணக்கம். மலையேற்றத்தைக் காட்டிலும் சிரமமானது எதுவென்று யாரும் என்னிடம் விசாரிக்கப் போவதில்லை தான், but அப்படி யாரேனும், என்னிக்கேனும்  தப்பித்தவறி வினவிடும் பட்சத்தில், இம்மி தயக்கமுமின்றிச் சொல்வேன் -"Actual பயணத்தைக் காட்டிலும், அந்த அனுபவத்தை ; அந்த சந்தோஷ நினைவுகளைப் பகிர்வது தான் ஆகச் சிரமமான task" என்று !! இதோ, ஞாயிறு நடந்து முடிந்த "ஈரோட்டில் லயன் 40" அதகளத்தினில் அந்த உண்மையை yet again உணர்ந்திட முடிந்துள்ளது !! 

விழாவுக்கு ஒன்னரை மாதங்களுக்கு முன்பிலிருந்தே துவங்கிய முஸ்தீபுகள் - நாட்கள் நெருங்க நெருங்க ஒரு fever pitch-க்கு மாற்றம் கண்டதை நானும் சரி, டீம் ஈரோடும் சரி - உணர்ந்திருந்தோம் ! அந்தத் தன்னிகரில்லா தன்னார்வலர் டீம் + குறும்படத்தினில் தெறிக்க விட்டிருந்த நவரச நண்பர்கள், கடைசி வாரத்தினில் தூக்கங்களையும் சரி, தங்களின் சொந்த ஜோலிகளையும் சரி, முழுசுமாய் தொலைத்து விட்டு, தம் வீட்டு விசேஷம் ஜொலித்திட வேணுமே என்ற அக்கறையில் ஓடோ ஓடென்று ஓடிக்கொண்டிருந்த அழகையெல்லாம் வார்த்தைகளுக்குள் அடக்குவது - (ஒரிஜினல்) கவிஞர்களுக்கே சவால் விட்டிருக்கும் !! எங்கென்று ஆரம்பிப்பது ? எதை சிலாகிப்பது ? எதையெதையெல்லாம் எண்ணிப் புளகாங்கிதம் கொள்வது ? மண்டைக்குள் இன்னமுமே அலையடிக்கும் ஓராயிரம் சந்தோஷக் கீற்றுகளை எவ்விதம் வரிசைப்படுத்துவது ? - சத்தியமாய் I have no clue !! 

**ஒரு பெரிய பொட்டி நிறைய சிறுதானிய வகை பிஸ்கெட்கள் (ஸ்ரீபாபு சார் - டேஸ்ட் ஆஹா-ஓஹோ ரகம் !!) ; பாட்டில் நிறைய துளியும் கலப்படமில்லா அசல் மலைத் தேன் ; ப்ளஸ் இன்னும் என்னென்னவோ உசத்தியான அசல் spices !! அம்புட்டையும் நீட்டாக பேக் பண்ணி, அதை என்னைத் தூக்கக் கூட அனுமதியாமல் என் ரூம் வரைக்கும் கொண்டு வந்து வைத்து விட்டுப் போன அன்பை முதற்புள்ளியாக்குவதா ?

**விழா அரங்கில் நுழைந்த நொடி முதலாய், முகம் முழுக்க மகிழ்வோடு என்னை வரவேற்று, "தோள் இப்போ எப்படியுள்ளது ?" என்று ஆள் மாற்றி ஆள் நலம் விசாரித்த வாஞ்சையை ஆராதிப்பதா ?

**அன்றைய பொழுதினில் எடுக்கப்பட்ட எண்ணற்ற போட்டோக்களிலும் - "கிட்டக்க நின்றால் போதாது - என் தோளில் கை போடுங்க சார் !" என்று உரிமையோடு கோரிய நண்பர்களின் அன்பை சிலாகிப்பதா ?

**மதிய உணவு இடைவேளையின் போது வெளியே போய்விட்டுத் திரும்பிய நொடியில் வாங்கியாந்திருந்த சாக்லேட் பர்பியை எனக்கும், ஜூனியருக்கும் தந்திட்ட அன்பை குறிப்பிடுவதா ?

**'உடல்நலம் சரியில்லை' என்பது அப்பட்டமாய்த் தெரிந்த போதிலுமே, முந்தைய இரவு 8 மணிக்கு விழா அரங்கினில் ஆஜராகி, மறுநாள் மாலை ஊர் திரும்பிடும் வரையிலும், தரப்பட்ட அத்தினி வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்த நம்ம மகளிரணித் தலைவிக்கு ஒரு "ஓ" போடுவதா ?

**அல்லது, கல்லூரி துவங்கி விட்டிருக்கும் சூழலிலும், ஒரு நாள் லீவைப் போட்டு விட்டு நமது விழாவின் ஏற்பாடுகளுக்கென ஆஜராகிய நமது பிள்ளைகள் மனோஜ் + காயத்ரியின் அர்ப்பணிப்பை எண்ணி அகம் மகிழ்வதா ?

**இல்லாங்காட்டி, புத்தம் புது ரோஜா மலராட்டம்,அப்பாவுடன்  காலையிலேயே அரங்கில் ஆஜராகி, வீடியோ நேரலை ஒளிபரப்புக்கு இயன்ற ஒத்தாசைகளையெல்லாம் செய்து வந்த அந்த சுட்டிக் குழந்தையை உச்சி முகர்வதா ? (கோவை பிரகாஷ் சார் - கண்ணம்மாவுக்கு சுற்றிப் போடச்சொல்லுங்கள் !!)

**அன்றைய பொழுதினை நம்மோடு கழித்திட, எங்கெங்கிருந்தெல்லாமோ, ஏதேதோ பல்டிகளெல்லாம் அடித்து வந்து சேர்ந்திருந்த நண்பர்களின் முயற்சிகளுக்கு தலைவணங்குவதா ? 

**கேடயங்கள் ; நினைவுப் பரிசுகள் ; tokens of love என்று அமர்க்களப்படுத்திய உங்களின் உள்ளன்பை எண்ணி நெகிழ்வதா ?

Phewwwwwwwww !!! சத்தியமாய் ஆஸ்டெரிக்ஸ் கதைகளைக் கூட தமிழில் மொழிபெயர்த்து விடலாமுங்க - ஆனால் உங்கள் நேசங்களின் வெளிப்பாடுகளைப்  பட்டியல் போடுவதென்பது அதைவிடவும் சிரமக்காரியம் !

தி TEAM ERODE !!!!!!!!!

நண்பர் ஸ்டாலினில் துவங்கி, இந்த விழாவின் ஏற்பாடுகளுக்கென literally  ராப்பகலாய் முட்டி மோதிய டீம் ஈரோட்டின் ஒவ்வொரு துளி வியர்வைக்கும் நாம் ஒற்றை ரூபாய் சன்மானம் தருவதாய் இருந்தால் கூட, இன்றைக்கு அவர்களுக்கு கோடி ரூபாய் கடன்பட்டிருப்போம் !! உழைப்பென்றால் - சொல்லி மாளா அசாத்திய உழைப்பு ! நான் இங்கே சிவகாசியில் சொகுசாய் குந்தியபடிக்கே - "ஆஅ...இங்கே பூஸ்....ரைட்லே பூசுங்க...ஆங்...லெப்ட்ல பூசுங்க !' என்று கவுண்டராட்டம் நெளித்துக் கொண்டே ரோசனைகளை மட்டும் அள்ளி வீசிக் கொண்டிருக்க, அங்கோ ஈரோட்டின் வீதிகளை டீம் ஈரோடு அளந்து கொண்டிருந்தது !! தங்கும் அறைகளின் ஏற்பாடுகளுக்கென குறைந்த பட்சமாய் எட்டுப் பத்து ஹோட்டல்களுக்கு நடை போட்டிருப்பார்கள் !! கேட்டரிங் ஏற்பாடுகளுக்கென ஏறி இறங்கிய உணவகங்களைக் கணக்கில் கொண்டால், ஒரு ஈரோடு Food Directory போட்டு விடலாம் !! வாட்டர் பாட்டில்களுக்கு அலைச்சல் ; வடையா - பஜ்ஜியா -சமோசாவா ? என்ற தேடலுக்கொரு அலைச்சல் !!  கோப்பைகள், மெடல்கள் மாத்திரமன்றி, அவற்றினுள் பொறிக்க வேண்டிய பெயர்ஸ் + போட்டோஸ் ஒருங்கிணைப்பென்பது இன்னொரு அசாத்தியப் பணி !! And அந்த முயற்சிகளில் உறுதுணையாய் இருந்தவரோ ஈரோட்டில் பிரம்மாண்டமாய் டிஜிட்டல் பிரின்டிங் செய்து வரும் வாசக நண்பர் !! நாமடிக்கும் ராக்கூத்துக்களுக்கு இம்மியும் முகம் சுளிக்காது அத்தனைக்கும் இசைவு சொன்னார் !! 

அப்புறம் அரங்கத்தில் செய்திட வேண்டிய ஏற்பாடுகளுக்கென இன்னொரு திக்கில் ஓட்டம் !! ரவுண்டு டேபிள் ; அதன் மேல் விரிக்க satin துணி ; மேடைக்கு focus lights ; சவுண்ட் effect-க்கென ஸ்பீக்கர்கள் ; இம்முறை அகிலால் உதவிட இயலா சூழல் என்பதால் போட்டோ + video எடுக்க ஆள் ஏற்பாடு - என்று அது தடதடத்து வந்தது ! இதில் கூத்தென்னவென்றால் அமைந்த போட்டோகிராபரோ, நமது தீவிர வாசகரும் போல !! போட்டோ எடுக்கும் போதே முகம் முழுக்க கொப்பளித்த உற்சாகம் ஒரு பக்கமெனில், கிடைத்த சந்தர்ப்பத்தில் என்னிடம் வந்து தனது காமிக்ஸ் ஆர்வத்தைப் பற்றியும் ஒப்பித்து விட்டுச் சென்றார் ! ரூம்கள் போட்டாச்சு ; ஆனால் யார்-யாருக்கு எங்கே ? என்ற பொறுப்பினை அடுத்து எடுத்துக் கொண்டனர் நண்பர்கள் !! அத்தனை பேருக்குமே முன்கூட்டியே தகவல் தெரிவித்து, துளியும் இடரின்றி check in செய்திட ஏற்பாடுகளை துளியும் குழப்பமின்றிப் பார்த்துக் கொண்டார்கள் ! அப்புறம் மாடஸ்டி, ஸ்பைடர் & லக்கி லுக் கட்-அவுட் செய்திடும் பொறுப்பை கோவையில் உள்ளதொரு தயாரிப்பாளரிடம் தந்து விட்டு, அதனையும் co-ordinate செய்து கொண்டார்கள் நண்பர்கள் !! பலூன் தோரணத்துக்கு ஆள் ஏற்பாடு ; ஐஸ்க்ரீமுக்கு ஏற்பாடு ; பீடாவுக்கு ஏற்பாடு - பிறந்தநாள் கேக்குக்கு ஆர்டர் ; பந்தியில் பரிமாற சுவீட்டுக்கான ஆர்டர் - என ஒரு கல்யாண வீட்டுக்கு இம்மியும் குறைச்சலில்லா அலைச்சல் ! ஊரில் இருந்தபடிக்கே ரெண்டு நாட்களுக்கொரு தபா ராவின் பாதிப் பொழுதுக்கு ஸ்டாலின் சாரும், நானும் போனில் பேசிக் கொண்டே இருந்தோம் ; yet பணிகள் மலையாய் மிரட்டுவதாகவே எனக்குப் பட்டது ! In fact - இத்தனை சிரமங்களை நண்பர்களின் சிரங்களில் சுமத்தி வருகிறோமே -  இதெல்லாம் தேவை தானா ? என்ற எண்ணம் எனக்குள் சுழற்றியடிக்கத் துவங்கியது ! நாலு நாளாய் உச்சா போகாத வானரமாட்டம் 'உர்ர்ர்ர்' என்றே ஆபீசில் கடைசி வாரத்தின் முழுமைக்கும் திரிந்து கொண்டிருந்தேன் !! 

தேவையான பேனர்கள் ; டிஜிட்டல் பிரிண்ட்ஸ் ; டிசைன் தயாரிப்புகள் ; அப்புறம் ஓவியக்கண்காட்சிக்கான படங்கள், மாண்ட்ரேக் புக்ஸ் ; நண்பர்களுக்கு gift bags என நம் தரப்பிலிருந்து வந்திட வேண்டிய ஐட்டங்களையெல்லாம் வெள்ளி இரவு ரெடி பண்ணிவிட்டு "லாரிக்கு அனுப்பி விடுங்கள்" என்றபடிக்கே வீட்டுக்குப் போனால் - பின்னாடியே இடியாய் சேதி வந்தது "நாளைக்கு (சனிக்கிழமை ஈரோட்டில் லாரி ஷெட் லேதாம் சார் ; தீரன் சின்னமலை நினைவு தினம் + ஆடிப் பெருக்கு என்பதால் விடுமுறை ! ஞாயிறும் நஹி !" என்று !! கிழிஞ்சது போ - என்றபடிக்கே ஆபீசுக்கு திரும்பவும் ஓடிப் போய் திருப்பூர் செல்லும் தினசரி பார்சல் சர்வீஸில் பேசினோம் ! "காலங்கார்த்தாலே ஆறரை மணி சுமாருக்கு ஈரோட்டை கடக்கும் போது பார்சல்களை போட்டு விட்டுப் போகலாம் ; அவ்வளவு தான் செய்ய முடியும் !!" என்றார்கள் ! அதற்கும் நண்பர்கள் சளைக்கவில்லை ; அதிகாலையிலேயே அரங்கு வாசலில் ஆஜராகி பண்டல்களை பத்திரமாய் வாங்கி வைத்து விட்டனர் ! 

சனி காலையில் நானும் ஈரோட்டுக்கு சென்றிறங்க, காலையே கல்யாண வீட்டு feel வந்து விட்டது - ஸ்டாலின் சாரின் இல்லத்தில் டிபனுக்கு நண்பர்களோடு குழுமிய போதே !! யார் -யார் எந்தெந்தப் பொறுப்புகளை எடுத்துக் கொள்வதென்ற final call ; நிறைய discussions என்றதன் பின்னே காத்திருந்த இறுதிக் கட்டப் பணிகளை நிறைவு செய்ய ஆளாளுக்கு ஒரு திக்கில் கிளம்பிப் போயினர் ! மாலை ஒரு ஐந்து மணிவாக்கில் எனது ரூமிலிருந்து ரோட்டை தாண்டி மறுபக்கமிருந்த அரங்கிற்குப் போனால் - ஸ்டாலின்ஜி + கோவை நண்பர் பிரகாஷ் மாத்திரமே அங்கிருந்தனர் - "பே" என காட்சி தந்த அரங்கினில் !! கொஞ்ச நேரத்தில் ஒவ்வொருவராய் நண்பர்கள் வரவும், அடுத்தடுத்த வேலைக்கென புறப்படவுமாய் இருக்க, நான் வாய் பார்த்தபடிக்கே இருந்தேன் ! இரவு எட்டுவாக்கில் சீனியர் எடிட்டரும், கருணையானந்தம் அங்கிளும் வந்த நமது காரிலேயே ரவுண்டு பன்களும் வந்திறங்க, அவற்றை உள்ளே அடுக்கி விட்டு, நண்பர்களிடம் விடைபெற்று விட்டு ரூமுக்குக் கிளம்பினேன் ! நான் புறப்பட்ட போதோ அரங்கம் ரணகளமாய்க் கிடந்தது ; 'ஆத்தீ...பாக்கியிருக்கிற வேலைகளை ராவோடு ராவா முடிக்க பெரும் தேவன் ஓடின் நம்மவர்களுக்கு எக்ஸ்ட்ராவாக நாலு கைகளைத் தந்தால் தானுண்டு  !!' என்ற எண்ணமே எனக்குள் !!  அதிகாலை ரயிலில் வந்திறங்கிய ஜூனியர் எடிட்டருடன் காலையில் ஒன்பதே காலுக்கு அரங்கினுள் நுழைந்தால் - phewwwwww ; ஒரு மாய தேவதை தனது மந்திரக்கோலின் ஒற்றை வீச்சில் சகலத்தையும் அழகாக்கியது போலொரு பிரமையே எழுந்தது எனக்கு ! ஒன்பதடி உசர பேனர்கள் நான்கிலும் 'தல' டெக்ஸ் ; வேதாளர் ' ஆர்ச்சி & XIII மிரட்டிக் கொண்டிருந்தனர் ! அவற்றை அந்த ஒசரத்தில் எப்படித்தான் கட்டினார்களோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் ! மேஜைகள் அனைத்தும் கெத்தாய் காட்சி தர, அவற்றின் மீது நமது லேபிள்கள் போடப்பட்ட தண்ணீர் பாட்டில்களும், டிஜிட்டல் பிரிண்டவுட் அட்டைகளும் ஒய்யாரமாய் குந்தியிருந்தன ! ஓவியக் கண்காட்சிக்கும் சகலமும் ரெடியாக இருந்தது ! வாய் பிளக்கும் வேலை மட்டுமே எனக்கு பாக்கியிருக்க, டீம் ஈரோடு - டீம் பாகுபலியாய் எனக்குக் காட்சியளித்தனர் !!! Awesome job team - stunningly amazing !!! நீங்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கும் சாதனையானது தான் இந்தாண்டின் விழா வெற்றியின் முதுகெலும்பே !!! தலைவணங்குகிறேன் !!!!   பெருமிதம் கொள்கிறேன் !! கடன்பட்டிருக்கும்  குறுகுறுப்பையும் உணர்ந்து நிற்கின்றேன் !!

The நவரசத் திலகங்கள் !!

அன்றைய தினத்தின் highlight நம்ம நவரச நாயக / நாயகியரின் குறும்படமே என்பதில் யாருக்கும் ஐயம் இருந்திருக்க இயலாது ! கருங்கல்பாளையத்தின் தெருக்களிலும், வீதிகளிலும் ஓட்டமெடுத்து லூட்டி பண்ணியிருக்கும்  Alone Star-ல் துவங்கி, அவரை வெளுத்தெடுக்கும் ரோல்களில் பின்னிப் பெடலெடுத்த அத்தனை நண்பர்களும் ; கேமியோ ரோலில் அசல்தேசத்துக்காரும் ; டாக்டரம்மா சமுத்திர இசைக்கருவி ; காயத்ரி - என அம்புட்டுப் பேருமே மெர்சலூட்டியிருந்தனர் !! கொஞ்சமே கொஞ்சமாய் வாய்ஸ் மட்டும் இன்னும் தெளிவாய் அமைந்திருப்பின், இதன் தாக்கம் இன்னமுமே பிரமிப்பூட்டியிருக்கும் என்பதில் no doubts !! இதற்கான ஷூட்டிங் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே சாத்தியமாகி இருக்க , டப்பிங் செய்வதெல்லாம் இறுதி நிமிடம் வரை நீண்டு செல்ல, மனோஜின் எடிட்டிங் + தொழில்நுட்ப லாவகத்தில், சகலமும் balance ஆகி - ஞாயிறு காலையில் பத்தரை மணிக்கு all ready என்றாகியிருந்தது !! நல்லாவே அவகாசம் தந்து, இன்னும் சிறப்பான equipment சகிதம் படப்பிடிப்பை (!!!) நடத்திட இயன்றிடும்  பட்சத்தில், அடுத்த தபா நம்மவர்கள் அடிக்கக்கூடிய சிக்ஸரானது ஸ்டேடியத்துக்கு வெளியே பறக்கும் ரகமாக இருக்கும் என்பதில் இம்மியும் ஐயங்கள் வேண்டியிராது ! Absolutely fantastic show all !! எழுந்து நின்று அன்றைக்கே கைதட்டியிருக்க வேண்டும் கண்டு ரசித்த நாங்கள் அனைவரும் !! And என்னை இன்னமும் மண்டைக்குள் குடைந்து தள்ளிக் கொண்டேயிருக்கும் ஒரே சமாச்சாரமானது - குறும்படம் ஓடி முடிந்த நொடியினில் அதன் நவரசத் திலகங்களை, அவர்களின் இல்லத்தரசிகளோடு மேடையேற்றி கவுரவிக்க தவறி விட்டோமே என்ற ஆதங்கம் தான் !! Sorry சார்ஸ் - ப்ரோக்ராம் ஆரம்பித்ததே ரொம்ப லேட்டாக என்பதில் மண்டை கொஞ்சம் நிதானத்தில் இருந்திருக்கவில்லை ! தவிர, துவக்கத்தில் விருந்தினர் எண்ணிக்கை மிதமாகவே இருந்திட்டதால் - 'ஆஹா..சாப்பாடு ஏகமாய் விரயமாகிப் போகுமே !' என்ற நெருடலும் மனதை கவ்விக்கொண்டிருந்தது ! But நேரம் போகப்போக அரங்கம் நிறைந்ததைப் பார்த்த போது மனம் சமனம் கண்டது !! 236 பேர் - அன்றைக்கு நம்மை தம் வருகைகளால் சிறப்பித்தோர் !! சாத்தியமாகிடும் அடுத்த சந்திப்பினில் நவரசத் திலகங்கள் அனைவருக்கும் ஒரு ஸ்பெஷல் சல்யூட் தந்திட மறக்க மாட்டேன் !! Take a bow all !!!!! 

ஆத்திங் the உரை !!!

அன்றைய திட்டமிடலின்படி காலை ஒன்பதரைக்கே துவங்கியிருக்கும் பட்சத்தில் பன்னிரெண்டரைவாக்கில், மைக் என் கைகளுக்கு வந்திருக்க வேண்டும் & ஒரு 30 நிமிடங்கள் ஆத்தோ ஆத்தென்று நான் ஆத்தியிருந்தாலும் மதியம் ஒரு மணிக்கு லன்ச் மேளா துவங்கியிருக்க வேணும் ! ஆனால் ஆடி அமாவாசை என்பதால் விருந்தினர் வருகைகளில் தாமதம் என்ற போது, எல்லாமே got pushed back ! So அப்பா ரொம்பச் சுருக்கமாகவும், கருணையானந்தம் அங்கிள் சுருக்கமாகவும் பேசி முடிக்கும் போதே மணி 1-35 ஆகியிருந்தது ! 'சரி, ரைட்டு - ரெண்டு மணிக்கெல்லாம் மங்களம் பாடிப்புட்டு மக்களை சாப்பிடப் போக விடணும் !' என்பதே எனது தலைக்குள் மேடையேறும் போது ஓடியது ! ஆனால் ஒரு உரையினை முன்கூட்டியே தயார் செய்திடாது, ஊர் சுற்றும் கழுதையாட்டம் அந்த நொடியினில் சிந்தைகள் ஓடும் திக்கிலெல்லாம் சொற்பொழிவை இட்டுச் செல்வதன் flipside என்னவென்பதை மேடையிலிருந்து கீழிறங்கிய போது தான் உணர்ந்தேன் - simply becos மொத்தமாய் 56 நிமிடங்களுக்கு எனது உரை நீண்டிருக்கிறது  என்பதை கடிகாரம் சுட்டிக் காட்டியது !! Uffffffff !! மேடை மீது மைக்கைப் பிடித்து நின்றிருந்த சமயத்தில் சத்தியமாய் நேரத்தின் ஓட்டம் எனக்குள் register ஆகிடவே இல்லை folks !! இயன்றமட்டுக்கு ஒரு கோர்வையாய் பேசிட முற்பட்ட போது, one thing led to the other & கொஞ்ச நேரத்துக்குப் பின்னெல்லாம் உரை சுத்தமாய் எனது கட்டுப்பாட்டில் இல்லை - மாறாக autopilot mode -ல் அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது - என்னையும் தரதரவென இழுத்துக் கொண்டே !! 

ஆயுசில் இத்தனை நீளத்துக்கு நான் பேசியது இதுவே முதல் தபா & பேசும் போது emotional ஆனதுமே இது தான் முதல்வாட்டி ! எவ்வளவோ முயன்றும் தாத்தாவைப் பற்றிப் பேசத் துவங்கிய நொடியில் தொண்டை அடைப்பதையும், கண்கள் லைட்டாக பனிப்பதையும் தவிர்க்கவே இயலவில்லை ! நிச்சயமாய் அவரவருக்கு தத்தம் வீட்டோர் ரொம்பவே ஸ்பெஷல் தான் ; so எனது உணர்வுகளை புரிந்து கொள்ள யாருக்குமே இடரிருந்திராது தான் ! But தாத்தா சார்ந்த எனது நினைவுகள் ஒரு மிடறு தூக்கலானது becos - (பேரப்) பிள்ளைகளுக்காகவே வாழ்ந்தவர் அவர் ! இது நான் கேட்டதொரு நிகழ்வு - அதனை இங்கே narrate செய்வதில் தப்பில்லை என்று நினைக்கின்றேன் : 

அம்மா தான் தாத்தாவுக்கு ஒரே பிள்ளை ; so அம்மாவுக்கு கல்யாணம் ஆன நாள் முதலாகவே தாத்தா & பாட்டி கிட்டக்கவே வீடு பிடித்து, குடியிருந்து வந்தனராம். 1962 - எனது மூத்த சகோதரி பிறந்த வருஷம் ! முதல் பேத்தி என்பதால் தாத்தாவுக்கு செம வாஞ்சை ! ஒரு வயசுப் பிள்ளையாய் அக்கா இருக்கும் சமயம், சிவகாசியிலிருந்து மதுரைக்கு ஏதோவொரு திருமணத்துக்காக எல்லோரும் பயணமாகியிருக்கின்றனர் - பாசஞ்சர் ரயிலில் ! வெறும் 72 கிலோமீட்டர் தூரத்தை கடக்க அது 3 மணி நேரங்கள் எடுக்கும் போலும் ! போகும் வழியில் அக்காவோ செம அழுகையாம்  !! தொட்டில் இல்லாமல் தூங்க மாட்டேனென்று பயங்கர அடம் !! என்ன செய்வதென்று தெரியாமல் கள்ளிக்குடி எனும் அடுத்த சிறுநகர ஸ்டாப்பில் இறங்கி விட்டிருக்கிறார்கள் ! கொஞ்ச நேரத்தில் அக்கா மூச்சடக்கி அழ ஆரம்பிக்க, பதட்டத்தில் அங்கிருந்த தம்மாத்துண்டு ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்திற்குள் புகுந்து எங்காச்சும் தொட்டில் கட்ட வாய்ப்பிருக்குமா ? என்று தாத்தா பார்த்திருக்கிறார் ! ஊஹூம்....அங்கெல்லாம் உத்திரத்தில் தொட்டில் கோர்க்க வளையத்துக்கு என்ன வேலை இருக்கப் போகிறது ? So வேற வழி ஏதும் புலப்படாது போக, அங்கிருந்த ஜன்னல் கம்பியை ஒரு கையால் கெட்டியாய் தாத்தா பிடித்துக் கொள்ள, தாத்தாவின் கரத்திலேயே  தணிவாயொரு தொட்டிலைக் கட்டி, அக்காவை அதற்குள் படுக்கப் போட்டு தூங்கப் பண்ணியிருக்கிறார்கள் !! ஒரு மணி நேரமோ, ஒன்னரை மணி நேரமோ, தூங்கி முழிக்கும் வரைக்கும் ஜன்னல் கம்பியைப் பிடித்த கையை அசைக்காமல் சிலையாய் நின்றிருந்தாராம் தாத்தா !! And அக்கா சின்ன வயசில் நல்ல புஷ்டி !!! 

பேரப்  பிள்ளைகளுக்கென எதையும் செய்யலாமென்ற எண்ணம் கொண்ட தாத்தாவைப் பற்றி, என்னோடு பிறந்த சகோதரிகளுக்கும், சகோதரனுக்கும் நிச்சயமாய் இது போலான ஒரு நூறு நிறைவான அனுபவங்கள் இருக்கும் தான் ! But பாட்டி இயற்கை எய்திய 1984 முதலாய், தனது கடைசிப் 13 ஆண்டுகளில் தாத்தா maximum time செலவிட்டது என்னோடு தான் !! அதனால் தான் தாத்தா பற்றி மேடையில் பேச முற்பட்ட போதே உள்ளுக்குள் என்னவோ செய்தது !! Sorry guys !!

And sorry too - உங்களின் லன்ச் டைம்களை எனது லன்ச் டைம் போல கோக்கு மாக்கி வைத்து விட்டதற்கு !! To your credit - நீண்டு கொண்டே போன எனது பேச்சின் மத்தியில் உங்களில் யாருமே முகம் சுளிக்கவுமில்லை & எழுந்து போகவுமில்லை !! அதற்கு மட்டுமே உங்களுக்கு ஓராயிரம் ஸ்பெஷல் தேங்க்ஸ் !! Maybe கொஞ்சமாய் எழுந்து லன்ச் ஹாலுக்கு நடையை கட்ட ஆரம்பித்திருந்தால், நிச்சயமாய் அங்கேயே ப்ரேக்கைப் போட்டு வண்டியை இழுத்து நிறுத்தியிருப்பேன் தான் !! And ஆத்தோ ஆத்தென்ற படலத்தை முடித்து விட்டு கீழே இறங்கிய போது, ஈரமான விழிகளோடு என் கைகளைப் பற்றிக் கொண்ட நண்பர்களும் இருந்தனர் ! இதில் எனது மாளா வியப்பென்னவெனில், நானெல்லாம் ஏதோ மிட்டா, மிராசுப் பரம்பரையில் வந்தவனென்று அதிகம் interact செய்திட வாய்ப்புக் கிட்டியிரா நண்பர்கள் சிலர் நினைத்திருந்தது தான் !! Not at all folks ....வசதியாய் வளர்ந்து, சகலத்தையும் தொலைத்து விட்ட குடும்பத்திலிருந்து, உள்ளங்கை ரேகைகளை மட்டுமே கையிருப்பாய்க் கொண்டு பிள்ளையார் சுழி போட்டவன் நான் !! பள்ளியின் டாப் மாணவன் ; ஆனால் ப்ளஸ் டூவில் கடைசி மாத fees கட்ட ரூ.60 கையில் லேது ; அதையுமே ஒரு கொட்டும் மழை இரவில் தாத்தாவிடம் போய் வாங்கி கட்டி விட்டு, கடைசியாய் ஹால் டிக்கெட் வாங்கிய பிருகஸ்பதியும் நானே ! பொதுவாக நம்மில் பலருக்கும் வாழ்க்கைப் பாதைகள் சுலபமானவைகளாக இருப்பதில்லை தான் என்பதால், நொய்யு நொய்யென்று அந்த நாட்களின் அழுகாச்சிகளை highlight செய்திட நான் விழைந்திடுவதில்லை ! 

எது எப்படியோ - ஒரு மைல்கல் தருணத்தில் தத்து-பித்தென்று உளறி வைக்காமல் வண்டியை ஓட்ட முடிந்தமைக்கு பெரும் தேவன் மனிடோவுக்கு நமது நன்றிகள் உரித்தாகட்டும் ! In fact - எனது உரையில் நான் நன்றி சொல்ல மறந்திருந்தது இருவருக்கு ! முதலாவது - ஒற்றை நபரன்றி, ஒரு அணிக்கே !!  நமது மீள்வருகை நாட்களில் நமக்கு சமூக வலைத்தளங்களில் இம்மியும் பரிச்சயம் கிடையாது ; சென்னை, மற்றும் இதர பெருநகரப் புத்தக விழாக்கள் எந்தத் திக்கில் அரங்கேறிடும் என்பது கூடத் தெரியாது !  நெட்டில் நம் மீது வெளிச்சம் போட்டுக் காட்டி, நமது மீள்வருகையினை இந்த வட்டத்துக்குச் சொல்ல முனைந்த bloggers ; துவக்க நாட்களில் விற்பனைகளுக்கு உதவிய நண்பர்கள் - என்று அந்த அணியில் நிறையப் பேர் உண்டு ! So அவர்கள் அனைவருக்குமே ஒரு நன்றி ! Last but not the least - பெரும் தேவன் மனிடோவுக்கு !! 

நானெல்லாம் ஒரு காமிக்ஸ் எடிட்டர் ஆவேனென்று எண்ணியதே கிடையாது ! ஒரு சிறார் பத்திரிகை துவக்கி, வாண்டுமாமா ரேஞ்சுக்கு "அன்புக் குழந்தைகளே !!" என்று உங்களை விழித்திருக்க வேண்டியவன் ! நான் டில்லிக்கு அனுப்பிய "டிங்-டாங்" பெயர் பதிவு விண்ணப்பத்தினை ஏதோவொரு மஹானுபாவ குமாஸ்தாவின் ரூபத்தில் கிடப்பில் போடச் செய்து, என்னை லயன் காமிக்ஸ் முதுகில் உப்புமூட்டை ஏற்றிடத் தீர்மானித்தவரே மனிடோ தானே ?! மாடஸ்டி துவக்கத்தில் மொக்கை போட்ட நாட்களில் அந்த முத்து காமிக்ஸ் பீரோவினில் ஸ்பைடராரை எனக்காகக் காத்திருக்க அவர் திட்டமிட்டிருக்காவிடின், 1984 டிசம்பர் வரைக்கும் கூட இந்த முழியாங்கண்ணனின் பதிப்புலக ஜாகஜம் தாக்குப் பிடித்திராது ! அதே போல Frankfurt புத்தக விழாவில், பம்பை மண்டையனாய் நான் போய் நின்ற முதல் நாளில், "போ..போ..அடுத்த வருஷம் பாக்க ட்ரை பண்றோம் !"என துரத்திவிட்ட மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தைப் போலவே பிரான்க்கோ-பெல்ஜிய நிறுவனங்களும் என்னை உதாசீனப்படுத்தியிருந்தால் - "ச்சீ..ச்சீ..இவய்ங்க கதைகளே சரியில்ல ! உவ்வே...யாருக்கு வேணும் இதுலாம் ?" என்றொரு கதையைக் கட்டிய கையோடு ஊர் திரும்பியிருப்பேன் ! ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் காக்கும் கரங்களுடன் நின்ற பெரும் தேவன் மனிடோவின் கருணையின்றி மட்டும் போயிருந்தால், இன்றைக்கு எனது நண்பர்களின் பட்டாசு ஆலைகளில் ஏதேனும் ஒன்றில், கணக்குப்பிள்ளையாய் பணியாற்றி விட்டு, ரிட்டயர்மெண்ட்டை எதிர்நோக்கிக் காத்திருந்திருப்பேன் -இந்நேரத்துக்கு !! So ஒரு கோடி நன்றிகள் படைத்தவருக்கு !! 

The விருந்து : 

போன வருஷத்து சாப்பாட்டு சொதப்பலுக்குப் பின்பாய் நாங்கள் அனைவருமே செம உஷாராய் இருந்தோம் - இம்முறையாச்சும் பசியாறும் படலங்களை சுவையானதாக்கிட ! மொத்தம் 4 கேட்டரிங் க்ரூப்களில் விசாரித்தார்கள் நண்பர்கள் ! இல்லை போட்டு சோறு, சாம்பார்.கூட்டு,பொரியல் என்று திட்டமிட்டோம் ! But பந்தியொன்றுக்கு 75 பேர் அமர்ந்தால் கூட, நிச்சயம் மூன்றல்லது, நான்கு பந்திகள் தேவைப்படும் அனைவரும் உண்டு முடிக்க என்ற யதார்த்தம் உதைத்தது ! So buffet ; அல்லது ரயில்களில் வருவது போல பேக் பண்ணி வரும் பூவா என்பதை வலியுறுத்தினேன் நண்பர்களிடம் ! இறுதியில் buffet என தீர்மானமாகி, அப்பாலிக்கா மெனு ! அதுவும் final ஆகி, ரேட்டும் பேசி பணம் தந்த பிற்பாடும் எனக்கு உள்ளுக்குள் லைட்டாய் உடுக்கடித்துக் கொண்டே இருந்தது - 'சாப்பாடு அனைவருக்கும் சுகப்பட வேணுமே !!' என்று !! And நான் போட்ட மெகா மொக்கைக்குப் பின்பாய், மக்கள் இரண்டரை மணிக்கு கை நனைக்க வந்திருந்த நிலையில், சாப்பாடு மட்டும் சரியில்லாது போயிருந்தால் தூக்கிப் போட்டு மொத்தியிருப்பார்களென்று ஒரு beethi உள்ளுக்குள் அலையடித்துக் கொண்டிருந்தது  !! But ஆண்டவன் yet again கரை சேர்த்து விட்டார் - செம டக்கரான லன்ச் சகிதம் ! சிம்பிளான மெனு ; yet வயிறார அனைவரும் உண்ண, செம சுவையுடன் லன்ச் கிட்டியதால் அனைவரின் முகங்களிலும் ஒரு திருப்தி !! மூச்சே அப்போது தான் திரும்பியது பின்னணியில் இருந்தோர் அனைவருக்கும் !!  

The அனுபவம் - ஒட்டுமொத்தமாய் !!

நிறைய தருணங்களில் முக்கிய முன்னேற்றங்கள் நிகழ்வது அகஸ்மாத்தாகவே என்பது எனது நம்பிக்கை ! பெருசாய் திட்டமிட்டெல்லாம் நமது இரண்டாம் இன்னிங்க்ஸை நாம் துவக்கியிருக்கவில்லை ! பெரிய ரோசனைகளுக்கு அப்புறமாயெல்லாம் ஈரோட்டில் வாசக சந்திப்புகளுக்கு அடிக்கோலிட்டிருக்கவில்லை ; they just happened !! அதே போல இம்முறையும் ஒரு பெரும் திட்டமிடலெல்லாம் இல்லாமலே அழகானதொரு முன்னேற்றத்துக்கு ரோடு போட்டிருக்கிறோம் என்றே படுகிறது ! 'குடும்பங்களோடு வரலாமே guys ?' என கேஷுவலாக போட்ட விதைக்கு பல நண்பர்கள் அட்டகாசமாய் இசைவு தெரிவித்திருக்க, அன்றைய தினத்தினில் கணிசமான மகளிர் எண்ணிக்கை மாத்திரமன்றி, குழந்தைகள் எண்ணிக்கையும் கண்ணில்பட்டது ! And பிள்ளைகள் மேடையேறியதும் ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமே ! 'இந்த லூசுக அடிக்கிற கூத்தை மேலோட்டமா வேடிக்கை பார்த்துப்புட்டு திரும்புவோம் !' என எண்ணியிருக்கக் கூடிய இல்லத்தரசிகள் கூட, விழாவின் முழுமைக்கும் அரங்கினில் இருந்தது icing on a beautiful cake ! And விழாவின் இறுதியினில் மேடையேறி நினைவுப் பரிசுகளையும், மெடல்களையும் பெற்றுக் கொள்ள அவர்களுமே ஆஜரானதே அந்த நாளின் absolute highlight என்பேன் !! இனி வரும் காலங்களில், "யோவ்...நீர் கெளம்பி வர்றீரா - இல்லாங்காட்டி நான் முன்னே காமிக்ஸ் விழாவுக்குப் போகட்டுமா ?" என அவர்கள் வினவும் நாட்கள் புலராது போகாதென்றே படுகிறது !! சர்வ நிச்சயமாய் இனி வரும் சந்திப்புகள் மெய்யான குடும்ப விழாக்களாகவும் அமைந்திடுமென்று ஸ்டீலின் பட்சி சொல்கிறது !! 

மாலையில் நண்பர்களின் தனித்திறமைகள் வெளிப்பாடு, டிராமா, கேள்வி-பதில் session ; கிரிக்கெட் கோப்பை வழங்கும் நிகழ்வு என நிகழ்ச்சி நிறைவு பெற்ற நேரம் வரைக்கும் 150 நண்பர்களுக்கு குறையாது காத்திருந்தது மனநிறைவினைத் தந்தது ! என்ன - கிரிக்கெட் போட்டிகளின் வீடியோ வராது போன சொதப்பல் ; கோப்பையினை, மெடல்களைப் பெற்றுக் கொள்ள கணிசமான போட்டியாளர்கள் ஆர்வம் காட்டாது போனது மாத்திரமே பிசிறடித்தது போலிருந்தது ! Anyways திருஷ்டிப்பொட்டு இல்லாது போனால் கண் பட்டுவிடுமல்லவா - so அந்தக் குறையுமே அதுக்கோசரமாச்சும் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று  எண்ணிக் கொண்டேன் !! 

Overall, this was a day to savour for a lifetime !!!!

The Future :

ரைட்டு...லயனுக்கு இப்போ வயசு 40 ....இந்த வளர்ந்தமாடனுக்கு வயசு 57 ! What next ? என்பது பற்றியும் மேடையில் maybe பேசியிருக்க வேணுமோ - என்னமோ ?! But அந்த நொடியில் லயனின் பயணத்தைத் தாண்டி வேறெதுவும் பெருசாய் பேசுபொருளாகிட வேணுமென்றே எண்ணம் எனக்குத் தோன்றியிருக்கவில்லை !! நான்லாம் ஒரிஜினலாய் திட்டமிட்டது 58-ல் பாதி ரிட்டயர்மெண்ட் ; 60-ல் முழுசாய் என்பதே !! ஆனால் அந்தத் தருணமானது தொட்டு விடும் அண்மையிலிருக்கும் போது, 'ஆத்தீ...இப்போவே வூட்டுல குந்த நெனைச்சா வௌக்குமாத்தாலே சாத்தி பத்தி விட்ருவாளே !' என்ற டர் தலைதூக்காதில்லை ! So இந்த நொடியினில் ஸ்கூல் மேடையில் ஒப்பித்ததொரு இங்கிலீபீஷ் கவிதையின் வரிகள் தான் மண்டைக்குள் ஓடுகின்றன :

The woods are lovely, dark & deep..

But I have promises to keep..

And miles to go before I sleep...

And miles to go before I sleep..!

-Robert Frost-

நாம தான் கவிஞர் முத்துவிசய மேஜர் சுந்தர்ராஜனார் ஆச்சே - இதையும் நமக்கேற்றாற்போல மொழிபெயர்க்காது விட்ருவோமா ?

ஓய்வெனும் வனமோ  ரம்யமாய் சபலமூட்டுது...!

ஆனால் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளோ ஒரு வண்டி கெடக்குது...!

இழுத்துப் பொத்திப் படுத்துறங்கும் நாள் புலர இன்னும் ஏக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது...

......ஏக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது !!

-கவிஞர் முத்துவிசயனார்-

Thanks a ton all - for all the love that you have given us this many years !!! இந்த அன்புக்குத் தொடர்ந்து அருகதையானவராய்த் திகழ்ந்திட, இயன்ற சகலத்தினையும் செய்திடுவோம் என்பது எங்களது ப்ராமிஸ் !! God be with us all !! சலோ - லயன் 50 நோக்கி !! வண்டிய உட்றா சம்முவம் !!

P.S : பாரிசில் Olympics அரங்கேறி வரும் வேளைதனில், இந்த விழா தந்துள்ள அசாத்திய உற்சாகத்தோடு ஒலிம்பிக்சின் motto-வை நினைவுகூர்ந்திட ஆசை எழுகிறது !! Citius ...Altius ...Fortius .....!! 

Together Stronger....Higher...& Faster இந்தப் பயணத்தினைத் தொடர்ந்திடுவோம் all !!


P.P.S. : ஆங்...சொல்ல மறந்து போய்விட்டேன் : நம்மிடம் பெரும் எண்ணிக்கையில் உள்ள முந்தைய இதழ்களில் 24 டைட்டில்களை செலெக்ட் செய்து, மாணவர்களுக்கென ஒரு செம ஸ்பெஷல் விலையில் ஈரோட்டில் ஸ்டாலில் வைத்திருக்கிறோம் ! இனி தொடரவிருக்கும் எல்லா புத்தக விழாக்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்திடும் !!

241 comments:

  1. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  2. இரவு வணக்கம்..

    ReplyDelete
  3. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  4. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  5. இரவு வணக்கம்

    ReplyDelete
  6. ஒவ்வொரு வருடமும் தங்களது சாதனையை முறியடித்துக்கொண்டே இருக்கிறார்கள் ஈரோடு நண்பர்கள்
    அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    ReplyDelete
  7. Together Stronger....Higher...& Faster இந்தப் பயணத்தினைத் தொடர்ந்திடுவோம் all !!// Godspeed Sir.

    நீண்டு கொண்டே போன எனது பேச்சின் மத்தியில் உங்களில் யாருமே முகம் சுளிக்கவுமில்லை//
    பல தடவை சொன்னது தான். மெயின் டிஷ்ஷே உங்க பேச்சு தான். அதைக் கேக்கத்தான் வரதே. பதிவோ பேச்சோ நீளமா இருப்பதில் சந்தோசப்படுவது நாங்களாத்தான் இருக்கும்.

    ReplyDelete
  8. அருமை சார் வாழ்த்துகள்..

    😍♥️🌹🔥

    ReplyDelete
  9. @Edi Sir..😍😘

    Definitely Sir..😍👍👌✊

    Together..❤
    Stronger..💛
    Higher..💙 &
    Faster..💚

    👍✊✊👌👌

    ReplyDelete
  10. முன்னதாக பதிவு செய்தோர் 245.அட்டனென்ஸ் 236. எங்களுக்கு நாங்களே பாராட்டிக்கிறோம். .ராஜ சேகரன் .கரூர்

    ReplyDelete
  11. // இதில் கூத்தென்னவென்றால் அமைந்த போட்டோகிராபரோ, நமது தீவிர வாசகரும் போல !! //
    வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நண்பர் கூட வாசகர் போல,மாண்ட்ரேக் ஸ்பெஷல் இதழைப் பற்றி ஆர்வமாய் விசாரித்தார் சார்...

    ReplyDelete
  12. இவ்வளவு நீண்ட உரையை அலுப்பில்லாமல் கேட்டது இதுவே முதல் முறைங்க சார்.ஏனென்றால் இது எங்கள் மூச்சு.நாங்கள் வளர்ந்த கதை .ராஜ சேகரன்

    ReplyDelete
  13. காமிக்ஸ் படிக்க வாய்ப்பு கிடைத்ததை வரம்
    சின்ன வயதில் "சிங்கத்தின் சிறு வயதில்" படிக்கும் போது இரண்டு ஆசை ஏற்பட்டது

    1)தங்களை சந்திக்க வேண்டும்
    2) லயன் காமிக்ஸ்க்காக வேலை செய்ய வேண்டும்

    இரண்டுமே 2016-இல் இருந்து நிறைவேறி வருகிறது, ஆசிரியரே

    ReplyDelete
  14. 5 nallaa pathivukku vantha antha 1 hr gap la vanthudchuu...poi thoongivon

    ReplyDelete
  15. ஈரோடு வாசக சந்திப்புக்கு வர்றதே 2 விசியங்களுக்காக மட்டுமே சார்.
    1)(சீனியர்)எடிட்டர்களின் உரையை கேக்க.
    2) நண்பர்களை மீட் பண்ண.
    இந்த இரண்டு தவிர மற்றதெல்லாம் அடுத்ததுதான்,
    ஒருகாலத்தில் நாம் சிலாகித்து படித்த கதைகளின் பின்னணியை பற்றி கேட்க கசக்குமா என்ன? அப்படி கசக்கும் நண்பர்கள் விழாவுக்கு வரவே தேவையில்லையே?
    பிரியாணியும் சப்பாத்தியும் எங்க வேணா கிடைக்குமே.
    எதுக்காக விழாவுக்கு வர்றோம் என்றே சிலருக்கு தெரியறதில்லை என்பது சற்று வருத்தம் தான்.

    ReplyDelete
  16. சார் எவ்வளவு அருமையான ஒரு பதிவு. நான்கு நாட்கள் காத்து இருந்தது சரி தான். எம்மாம் பெரிய பதிவு. நன்றிகள் சார். இந்த நினைவுகளுக்கு

    ReplyDelete
  17. தங்களுக்கு கிடைத்தவர் சூப்பர் தாத்தா சார்

    ReplyDelete
  18. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  19. Super சார்
    ஈரோடு நண்பர்களுக்கு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. @ALL : ஆங்...சொல்ல மறந்து போய்விட்டேன் : நம்மிடம் பெரும் எண்ணிக்கையில் உள்ள முந்தைய இதழ்களில் 24 டைட்டில்களை செலெக்ட் செய்து, மாணவர்களுக்கென ஒரு செம ஸ்பெஷல் விலையில் ஈரோட்டில் ஸ்டாலில் வைத்திருக்கிறோம் ! இனி தொடரவிருக்கும் எல்லா புத்தக விழாக்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்திடும் !!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சார். அருமையான செயல். எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்...

      Delete
  21. உங்களுக்காகவும் காமிக்ஸ் நண்பர்களுக்காகவும் பணி புரிந்திட வாய்ப்பளித்தற்க்கு உங்களுக்குதான் நன்றி சொல்லியாக வேண்டும் நன்றி ஆசிரியரே இதில் குறிப்பிட வேண்டிய மூவர் சேலம் குமார் & ரகுராமன் திருநெல்வேலியிலிருந்து வந்த நண்பர் வைரமுத்து இவர்கள் ஈரோடு டீமில் இல்லை ஆனால் காலையிருந்து அனைத்து வேலைகளிலும் உதவியாக ரவுண்டு டேபிள் சேர் போடுதிலிருந்து ஒவிய கண்காட்சிக்கு உதவி செய்தது மெடலில் ரிப்பன் கட்டியது பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டியது என் அருமையாக வேலை செய்தனர் ஈரோடு டீம் செய்த வேலைக்கு ஷீல்டு கிடைத்தது ஆனால் இவர்கள் மூவரும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உதவிகள் செய்தனர் நன்றி நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. பம்பரங்கள் பொறாமையில் ஏங்கிப் போயிருக்கும், அந்த சனி & ஞாயிறு நீங்கள் அனைவரும் சுழன்ற வேகங்களைப் பார்த்து !!

      Delete
    2. இந்த மனித பம்பரங்களை சுழல் விட்டதே உங்கள் அன்பெனும் சாட்டை தானே ஆசிரியரே 🙏🙏🙏🙏

      Delete
  22. ///ஓய்வெனும் வனமோ ரம்யமாய் சபலமூட்டுது...!

    ஆனால் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளோ ஒரு வண்டி கெடக்குது...!

    இழுத்துப் பொத்திப் படுத்துறங்கும் நாள் புலர இன்னும் ஏக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது...

    ......ஏக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது !!

    -கவிஞர் முத்துவிசயனார்-///

    அட்டகாசம் சார் 🤩🤩🤩🤩🤩
    இது இது இதுதான் எதிர்பார்த்தோம்🙏🌹🌹

    ReplyDelete
    Replies
    1. //இதுதான் எதிர்பார்த்தோம்//

      கவிதையையா?🤭

      Delete
    2. கவிதையையா? இல்லை சார் இன்னும் ஏக தூரம் பயணிக்க வேண்டி உள்ளதை ❤️

      Delete
  23. தாத்தா வை பார்க்காத எனக்கு உங்கள் பதிவு ஆறுதலாக அமைந்தது ஆசிரியரே ஒரு காமிக்ஸ் ஆலமரத்தை இந்த மண்ணில் விதைத்த மகான் தாத்தாவுக்கு காலம் கடந்த நன்றிகள்

    ReplyDelete
  24. ///அங்கிருந்த ஜன்னல் கம்பியை ஒரு கையால் கெட்டியாய் தாத்தா பிடித்துக் கொள்ள, தாத்தாவின் கரத்திலேயே தணிவாயொரு தொட்டிலைக் கட்டி, அக்காவை அதற்குள் படுக்கப் போட்டு தூங்கப் பண்ணியிருக்கிறார்கள் !! ஒரு மணி நேரமோ, ஒன்னரை மணி நேரமோ, தூங்கி முழிக்கும் வரைக்கும் ஜன்னல் கம்பியைப் பிடித்த கையை அசைக்காமல் சிலையாய் நின்றிருந்தாராம் தாத்தா !! ///

    உங்கள் தாத்தா எங்கள் மனதிலும் உயர்ந்து கொண்டே செல்கிறார் சார்

    ReplyDelete
  25. காணக்கிடைக்காத ஒரு உறவு உங்கள் தாத்தா டியர் எடி ( எனக்கு என் அம்மா)

    காலையில் விரிவான கமண்ட் இடுகிறேன் சார்

    ReplyDelete
  26. அடுத்த ஈரோடு திருவிழாவில் - காமிக்ஸின் எதிர்காலம் பற்றிய ஒரு கருத்தரங்கம்.. எடிட்டருடன் ஒரு கலந்துரையாடல்.. புதிய தலைமுறை வாசகர்களை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கொண்டு நான்கு மணி நேரம் நிகழ்ச்சி நிகழ்த்தப்பட வேண்டும். மதிய விருந்துக்கு பிறகு அவரவர் தங்கள் விருப்பப்படும் இடத்துக்கு செல்லட்டும்.. அது புக் ஃபேர் ஆகவும் இருக்கலாம் அல்லது கிரிக்கெட் மைதானமாகவும் இருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. அருமையான suggestion. அடுத்த ஈரோடு விழாவில் நிகழ்ச்சிகள் இப்படி அமைந்தால் நன்றாக இருக்கும். 👍😊

      Delete
  27. ' இது போன்ற ஒரு விழா சேலத்தில் நடந்தால் நன்றாக இருக்குமே' என்று நான் நினைத்ததுண்டு.. ஆனால் ஒவ்வொரு வருடமும் ஈரோட்டில் இவ்விழா நடப்பதே சிறப்பு என்பதை இப்பொழுது என் மனம் உரக்கச் சொல்கிறது

    ReplyDelete
    Replies
    1. சகோ உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?

      Delete
  28. சிறப்பான பதிவுக்கு நன்றி சார். ஆறின கஞ்சி பழங்கஞ்சியாகி விடுமே என்று பயந்தேன்.
    சூடான, சுவையான பாயாசமாகவே பரிமாறி விட்டீர்கள்.
    திகில் லைப்ரரி பற்றிய தகவல் எதிர்பார்த்தேன். இல்லாதது ஏமாற்றமே

    ReplyDelete
  29. அருமையான அழகான நாமும் கலந்து கொள்ள வில்லையே என்று ஏங்க வைக்கும் பதிவு

    ReplyDelete
  30. வணக்கம் சார். லயன் 40 ஆம் ஆண்டு விழாவில் தங்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக நான் ஈரோடு வருவது சீனியர் ஆசிரியர் கருணை ஆனந்தம் சார் மற்றும் தாங்கள் குட்டி ஆசிரியர் பார்க்கவும் தான். அதிலும் தங்களின் பேச்சை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் எழுத்து எனக்கு எப்படி பிடிக்குமோ அப்படியே பேச்சும் பிடித்தது. லயன் காமிக்ஸ்ஸை தாங்கள் உருவாக்க பட்ட பாடுகளை தங்கள் உரையில் கேட்டு என் மனம் நெகிழ்ந்து போனது. இன்னும் கொஞ்சம் பேச மாட்டீர்களா என்று என் மனதில் தோன்றியது. புது மனைவியின் பேச்சை கணவன் எப்படி ரசித்து கேட்பானோ அப்படியான ஈர்ப்பு தங்கள் உரையில் இருந்தது. தாங்கள் பெற்ற வரம் தான் தங்களுக்கு ஒரு அருமையான தாத்தா கிடைத்தது.
    உங்களுக்கு என்றென்றும் நான் உறுதுணையாக இருப்போம். லயன் காமிக்ஸ் வேறு நாங்கள் வேறு அல்ல. நாம் எல்லாம் ஒரு குடும்பம் தான். இன்னும் நீங்கள் பல சிறப்பான இதழ்களைத் தர வேண்டுகின்றேன். எட்டுத்திக்கும் சென்று பல சிறப்பான சித்திரக் கதைகளை எங்களுக்காக கொண்டு வந்து சேர்க்கும் தங்களை நினைத்து நான் அல்ல நாங்கள் பெருமைப்படுகின்றோம். நன்றி வணக்கம் சார்.

    ReplyDelete
    Replies
    1. // புது மனைவியின் பேச்சை கணவன் எப்படி ரசித்து கேட்பானோ அப்படியான ஈர்ப்பு தங்கள் உரையில் இருந்தது. // ஓ ஹோ

      Delete
  31. லயன் நாற்பதாம் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடந்தது. மிகச் சிறப்பாக நடத்திய ஈரோட்டு நண்பர்களை வாழ்த்தி பாராட்டி மகிழ்கின்றேன். அவர்கள் உழைப்புக்கு நான் தலை வணங்குகின்றேன். அவர்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று வெட்கப்படுகின்றேன். மிகச் சிறப்பாக இந்த இடமும் விழாவை நடத்திய ஈரோட்டு நண்பர்கள் என்றென்றும் எங்கள் மனதில் குடி கொண்டு இருப்பர். ஒத்துழைப்பு தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

    ReplyDelete
    Replies
    1. சரவணன் ஜி விழாவிற்கு குடும்பத்துடன் வந்ததே பெரிது உங்கள் சார்பாக தான் நாங்கள் இருக்கிறோமே நீங்கள் ஏன் வெட்கப்பட வேண்டும் இது நம்ம குடும்ப விழா

      Delete
    2. நன்றி செந்தில் ப்ரோ

      Delete
  32. மதிய உணவு மிகச் சிறப்பாக இருந்தது சார். என் மகனார் மிகவும் ரசித்து சாப்பிட்டார்.

    ReplyDelete
  33. திகில் லைப்ரரி இதனை நான் எதிர்பார்க்கவே இல்லை சார். சும்மா அசத்தி விட்டீர்கள் சார். மற்றொரு இதழையும் வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் சார்.

    ReplyDelete
  34. மாண்ட்ரேக் இரண்டாம் ஸ்பெஷல் இதழ் மிக மிக சூப்பர் சார். தினம் ஒரு கதையாக படித்து மகிழலாம். உருவாக்கம் மிக மிக அருமை சார். அட்டைப்படம் மிக மிக அழகாக இருந்தது.

    ReplyDelete
  35. எனக்கு உண்மையான தீபாவளி ஆகஸ்ட் 4 என்று தோன்றுவது எனக்கு மட்டுமேவா?

    ReplyDelete
  36. சகோதரி கடல் ரம்யா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தும் விழாவிற்கான பங்களிப்பை சிறப்பாக செய்துவிட்டார். அவருக்கு என் பாராட்டுகளை தெரிவிக்கின்றேன்.

    ReplyDelete
  37. ஈரோடு விஜய் சார்... மாரிமுத்து சார்... கும்பகோணம் ஜே சார்.... நாமக்கல் ஸ்ரீ பாபு சார்.... கோவிந்தராஜ் பெருமாள் சார்.... ஸ்டாலின் சார்... செந்தில் சத்தியா மற்றும் பலர் லயன் நாள் பாதி விழாவை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டி விட்டார்கள். அவர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  38. மிக அருமையான நீண்ட பதிவு சார். மிக சிறப்பான பதிவு சார்.

    ReplyDelete
  39. இந்த மாதம் வெளிவந்துள்ள வேதாளர் கதை ஏற்கனவே ராணி காமிக்ஸ் இல் வெளிவந்த கதை என்று நினைக்கின்றேன் சார்.

    ReplyDelete
  40. சிறு வயதில் B&W இல் துவங்கி நமது வயது அதிகரித்து வந்த இக்காலத்தில் தன் தோற்றத்தில் பொலிவையும் வண்ணத்தையும் சேர்த்து கொண்டு இளமையை தக்க வைத்து கொண்டு LION COMICS ற்கு வயது 40😍🥰💐.விழா மிக சிறப்பாக அமைந்தது கண்டு மிகவும் மகிழ்ந்தேன். சிதம்பரத்தில் இருந்து பிரயாணித்து ஈரோடு வந்து சேர்ந்த நேரம் நள்ளிரவு என்றாலும் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்ட மெட்ரோ ஹோட்டலில் அடுத்த நாளின் நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க ஏதுவாக இருந்தது. நிகழ்ச்சி நாள் அன்று நண்பர் ஷாம் மற்றும் மதுரை அஸ்லம் பாஷா உடன் வந்து இறங்கிய போது வாசலில் மற்ற நண்பர்கள் வரவேற்கும் முன் வரவேற்ற அந்த இளைஞரை கண்டதும் (வேறு யார் நம்ம எடிட்டர் சார் தான் ) I was spellbound. அதென்னவோ அவரை சந்திக்க கூடிய வேளைகளுக்கு முன்னர் சார் இடம் இதை பற்றி பேச வேண்டும் அதை பற்றி பேச வேண்டும் என்று மனம் பட்டியல் போட்டு ஒத்திகை பார்க்கும். ஆனால் வாய்ப்பு அமையும் போது பிரமிப்பாய் சற்று தொலைவில் இருந்து ஆர்வமாய் அவரின் பேச்சுக்களை கூறும் comics சார்ந்த விஷயங்களை சந்தோஷமாய் கிரகித்து கொண்டு உற்சாகமாய் நடையை கட்டுவேன். MUTHU 50 போலவே LION 40 யும் பல மகிழ்ச்சியான தருணங்களை எப்போதும் மனதில் இருந்து நீங்கா வண்ணம் என் நினைவு பேழையில் பதிக்க பட்டு விட்டது. Thanks a lot for arranging such a function, and also for the sweet memories which will linger in my heart till the end of my life span Editor Sir. Last but not the least.... It is true that you still have to go lots of miles sir...... So that we can also travel along with nlots of COMICS😁😍🥰💐

    ReplyDelete
    Replies
    1. ஆத்மார்த்தமாக எழுதி இருக்கிறீர்கள் நண்பரே

      Delete
    2. 😊🙏 நீங்கள் விழாவில் கலந்து கொண்டீர்களா. நீங்கள் எப்படி feel பண்ணீங்க? Still நாங்க நிறைய பேர் கனவுலகில் மிதந்து கொண்டு இருக்கின்றோம். 😍🥰

      Delete
    3. எஸ் நானும் விழாவுக்கு வந்திருந்தேன் நண்பரே.. ஒரு கறுத்த & பெருத்த உருவம் தன் தொப்பையில் இருந்து நழுவும் பேண்டை அடிக்கடி மேலே இழுத்து விட்டபடியே எந்த வேலையும் செய்யாமல் இங்கேயும் அங்கேயும் நடந்து கொண்டிருந்ததே.. அது நான் தான்!😂😂😂

      Delete
  41. Citius... Altius... Fortius. That's a good one. The Olympic motto suits the occassion (LION 40)👍😍🥰💐😊

    ReplyDelete
  42. I came late to event around 11 am. At that time, painting exhibition started. Stayed till lunch and went home. I saw the remaining events in youtube at home. I request all friends who have not attended the function to see the youtube video. Our editor s speech was soo good, funny and emotional. Never seen him speak like this before.

    ReplyDelete
  43. //பயணத்தைக் காட்டிலும், அந்த அனுபவத்தை ; அந்த சந்தோஷ நினைவுகளைப் பகிர்வது தான் ஆகச் சிரமமான task" என்று//

    அது என்னவோ உண்மைதான் சார், சற்றே அலுப்பைத் தரும் சங்கதியும் கூட !  இருந்தாலும் , வழக்கமான நகைச்சுவைப் பாணியில், தகவல்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள்! நானெல்லாம் , கீபோர்ட் வாரியர் ரகம்  களத்தில் இறங்கிப் பணியாற்றுவதில் எல்லாம் பெரிய ஆர்வம் காட்டியது கிடையாது. இதன் காரணமாக,  ஈரோடு மற்றும் சுற்றுவட்டார வாசக நண்பர்களின் மிதமிஞ்சிய ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் சற்றே மலைப்பாக (எட்ட நின்று ) பார்ப்பதுண்டு! உற்சாகத்திற்கு வயதாகாமல், விழாவை ஏற்பாடு செய்து, வெற்றிகரமாக நிகழ்த்தி, பட்டையைக் கிளப்பிச் சிறப்பித்திருக்கும் அப்பகுதி வாசக நண்பர்கள் ஒவ்வொருவருக்கும், வழக்கம் போல ஒரு கீபோர்ட் வணக்கம்! :-)

    அப்படியே விழாவில் எடுக்கப்பட்ட வீடியோக்களை எடிட் செய்து, பகிர்ந்தால் புண்ணியமாகப் போகும் ! ராகவன் ஒரு யூடியூப் இணைப்பை அனுப்பி இருந்தார், கிட்டத்தட்ட 9 மணி நேரங்கள்! ஆடியோவும் சரியாக இருந்த மாதிரி தெரியவில்லை...
    https://www.youtube.com/watch?v=P5fECJ_IthU

    //நான்லாம் ஒரிஜினலாய் திட்டமிட்டது 58-ல் பாதி ரிட்டயர்மெண்ட் ; 60-ல் முழுசாய் என்பதே !!//
    நானெல்லாம் 45-இல் ரிட்டயராகி வீட்டுக்குள்ளே சீட்டைத் தேய்க்கலாம் என்றிருந்தேன்... "நீங்க வேலை செய்வதே அப்படி தானே , சம்பளமாவது வந்து தொலைக்கும்..." என்று குமட்டில் குத்தப்பட்டு அந்த யோசனையை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. "ரிட்டயர்மெண்ட்"...."ஒய்வு" என்றெல்லாம் லேசாய் சொல்லி விடுகிறோம் கார்த்திக்...ஆனால் அது நெருக்கத்தில் இருக்கும் போது தான் முழுப் பரிமாணமும் கொஞ்சம் கொஞ்சமாய் புரிபடத் துவங்குகிறது !!

      சன்னம் சன்னமாய் பொறுப்புகளை தலையிலிருந்து தோளுக்கு, அப்பாலிக்கா இடுப்புக்கு...பின்னே கைகளுக்கு... என்று ஒரு Phased retirement-க்கு திட்டமிடணும் போலும் !! வூட்டிலே நம்மளையெல்லாம் வைச்சு முழு நேரமும் மேய்க்க நிச்சயமா முடியாது !

      Delete
    2. உண்மைதான் சார்..😍😘

      Delete
  44. சார் நல்ல ஆடியோ குவாலிட்டியுடன் youtube லிங்க் தர கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  45. நம்ப 13 ம் தளத்திற்கு வந்து சேர்கிறார்கள் தானைத்தலைவரும் சட்டித்தலையனும் ...மாக்ஸிடம் சிக்கி சீரழிந்து இறுதியில்தமது பாணியில் தளத்தை விட்டுதடுமாறிவெளியேறுகிறார்கள். கிளாசிக் சூப்பர் ஸ்டார்ஸ் வித்யாசமான கற்பனை.விறுவிறுப்பாக உள்ளது. ஸ்பைடர் ,ஆர்ச்சி ரசிகர்களை ஏமாற்றவில்லை.கரூர் ராஜ் சேகரன்

    ReplyDelete
  46. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.என்னை மேடையிலேற்றி எனக்கு மந்திரவாதி மாண்ட்ரேக் ஸ்பெசலை அன்பளிப்பாக வழங்கிய ஆசிரியருக்கு நன்றிகள்.மிகவும் நெகிழ்வாக உணர்ந்தேன் .எனது வாழ்நாளில், நான் வாழ்ந்தற்கு அடையாளம் இந்த ஒரு நாளே.

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் உலகின் தவிர்க்க முடியாத நபர் நீங்கள் என்பதை இதன் மூலம் நீங்கள் உணரலாம் ஜி

      Delete
    2. உங்களுக்கு புத்தகம் வழங்கப் பட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. You deserved it.

      Delete
    3. புத்தகத்தை கையில் ஏந்தியதும் தங்கள் முகத்தில் அதிக பூரிப்பைக் காண கிடைத்ததில் மகிழ்ச்சி சகோதரரே 💐💐💐

      Delete
  47. வணக்கம் நண்பர்களே..

    ReplyDelete
  48. இவ்வருடமும் மறக்கவியலா நினைவுகளைத் தந்த டீம் ஈரோடு&நண்பர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.. 🙏🏻🙏🏻

    ReplyDelete
  49. முக்கியமாக பாராட்டப்பட வேண்டியவர்கள் செந்தில் சத்யா&ரகுராமன் .செந்தில் சத்யா முழங்கால் வலியுடனே யே அனைத்து வேலைகளையும் செய்தார் . ரகு சாரோ நம்முடன் கலந்து சுமார் இரண்டு வருடங்கள் மட்டுமே இருக்கும் .ஆனால் 2012ல் இருந்துகாமிக்ஸ்காக நாம் அனைவரும் செய்துள்ளகளப்பணிகளை விட அவர் ஒருவரே இந்த இரண்டுவருடங்களில்அதிக அளவில் களப்‌பணி ஆற்றியுள்ளார்.அதிலும் குமார் சார் எல்லாம் தனது வீட்டு விசேசத்தில்கூட களமிறங்கி வேலை செய்திருக்க மாட்டார் ஆனால் இங்கு மிக உற்சாகத்துடன் பணியாற்றினார்.மாரிமுத்து விசால்&கடல் சகோ இருவருக்கும் ஸ்பெசல் நன்றிகள்.ராஜ சேகரன்.கரூர்

    ReplyDelete
  50. 1984 ல எனக்கு 1 ரூபாய் என்பதே பெரிய தொகை.கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து முத்து , லயன் , பூந்தளிர் , ரத்னபாலா , அம்புலிமாமா வாங்குவதற்குள் நாக்கு தள்ளிவிடும்.

    அந்த காலத்தில் 40,000 ரூபாயெல்லாம் மகா பிரமாண்ட தொகை.

    உங்கள் தாத்தாவுக்கு மிகப் பெரிய மனசு சார் !

    ReplyDelete
    Replies
    1. அதனால் தான் சார் - மேடையில் அந்த நொடியில் தொண்டை தகராறு பண்ண ஆரம்பித்தது !

      Delete
    2. 🙏Sir..
      Always தாத்தாஸ் are ஸ்பெஷல் to us..😍😘

      Delete
  51. இன்னுமொரு சிறப்பான சம்பவத்தை அரங்கேற்றிய நண்பர்கள் குழாமை மறக்கவே முடியாது..
    🇱 🇮 🇴 🇳  -🇸 🇺 🇵 🇪 🇷 - 🇸 🇵 🇪 🇨 🇮 🇦 🇱  🔥🔥🔥🔥குண்டோ குண்டு புக்!!!
    எனது கனவு இதழ்..
    புத்தகம் வெளியான அந்நாட்களில் றெக்கை கட்டி பறக்காத குறைதான் எனக்கும் என் அண்ணனுக்கும்..
    அந்த தடிமனில் அதுவரை காமிக்சை பார்த்ததேயில்லை..
    ஒட்டு மொத்தமாய் 12 சித்திரக் கதைகளை தாங்கிய புத்தகம்..
    அதுவும் அட்டையிலே ஸ்பைடரும்,பேட்மேனும் செம்ம கலக்கலாய் தெறிக்க விட்டிருந்தனர்...
    இந்த இதழின் மேலான எனது தீராக் காதலுக்கு இன்னுமொரு வலுவான காரணம்,எங்களது லயனின் முதல் வாசகர் கடிதம் இடம் பெற்றிருந்தது மட்டுமல்லாமல் அந்த வாசகக் கேள்விக்கு எடி அவர்கள் பதிலும் சொல்லியிருந்தது..
    எங்களது வகுப்புத் தோழர்கள் அனைவரிடமும் அந்த வாசக கேள்வியையும்,எடி அவர்களின் பதிலையும் காட்டி இறுமாந்து போனது வேறு விசயம்..
    இந்த இதழிலே இன்னுமொரு சிறப்பும் உண்டு..
    ஆம்..
    எடிட்டரின் ஹாட் லைன் இடம் பெற்ற முதல் இதழ் இதுவே..
    இவ்வளவு சிறப்பம்சங்கள் வாய்ந்த இதழை,மார்க்கெட்டில் ஏகமாய் விலை போகும் இந்த இதழை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல்,காமிக்ஸ் காதல் என்ற ஒற்றைச் சொல்லே மந்திரமாகிப் போகிட...
    எனது இந்த நீண்ட நெடு வருட கனவை நனவாக்கிய ஈரோடு நண்பர்களுக்கு சிரம் தாழ்த்துகிறேன்..
    மேடையேற்றி எடி அவர்களின் கையால் பரிசினை வழங்க...
    பார்சலின் மேல் போர்த்தியிருந்த ஜிகினா காகிதத்தைப் பிரிக்க,பிரிக்க பல்ஸ் எகிறியது..
    காகிதம் பிரிபட்டு ஸ்பைடரும்,பேட்மேனும் எனைப் பார்த்துச் சிரிக்க...
    ஒரு சில விநாடிகள் தொண்டையை ஏதோ கவ்வ..
    சட்டென்று விழிப் படலங்களில் உப்பு நீர் கோர்த்ததை தவிர்க்க இயலவில்லை..நேசத்தில் உறைந்து போன சில நொடிகள்..
    காமிக்ஸ் காதலில் கறைந்து போன சில நொடிகள்...
    என்ன கைம்மாறு...
    அன்பைத் தவிர...!!!

    ReplyDelete
  52. டியர் எடி,

    லயன் 40 என்ற ஒரு உன்னத கொண்டாட்டத்தில், உங்களையும் நண்பர்களையும் சந்திக்க கிடைத்த வாய்ப்பை பெருமிதமாக கருதுகிறேன். திட்டமிடாமல் வந்து குவிந்த முந்தா நாள் வரை சென்னை அலுவலிலும், மாலை பயணம் அடுத்த நாளுக்கு பெங்களூரில் இருந்து (முன்னமே டிக்கெட் போட்டு விட்டபடியால்) அடித்து பிடித்துப் போய் சேர்ந்ததும், போய் சேர்ந்தே சில மணி நேரங்களிலேயே, ஈரோட்டிற்கு வண்டி பிடித்ததும், என்று கடைசி வரை சாத்தியமாகி இருக்குமோ என்று கேள்வியுடனே வந்து சேர்ந்தேன்.

    தொடர்ந்த 2 வாரங்கள் குடும்பத்தை பிரிந்து இருந்தபோதும், அவர்களை விட்டுவிட்டு, இத்தனை சிரமங்கள் பட்டு இந்த பயணம் மேற்கொள்ள தான் வேண்டுமா, என்று கேள்விகள் மனதில் குடிகொண்டிருந்தன. ஆனால், நேராக ஈரோட் வந்து சேர்ந்தவுடன், ரூமுக்கு போகாமல் நேரடியாக மண்டப வேலைக்கு துணையாக போகலாம் என்று நடராஜா சர்வீஸில் வந்து சேர்ந்தபின், நண்பர்களை பார்த்ததில், கவலைகள், உடம்பு வழிகள், சோர்வுகள் அனைத்தும் பறந்து விட்டது.

    அவர்களுடன் சேர்ந்த வேலையை பிரித்து, குடும்ப நிகழ்ச்சி போல பங்கெடுத்தில் பயண களைப்பும் போய் சேர்ந்து விட்டது. எப்போது ரூமுக்கு சென்று படுத்தேன், எப்போது விழித்தேன் என்று தெரியாமல், அடுத்த நாள் அரங்கம் வந்து சேர்ந்து, மாலை வரை நண்பர்களுடன் செலவழித்த நேரம், நம் பால்ய கால காமிக்ஸ் பயண நினைவுகூறுகள் என்று அனைத்தையும் காலத்திற்கும் நினைவில் தங்கும்.

    என்னை பொறுத்த வரை நிகழ்ச்சியின் இரு அருமையான கட்டங்கள்.... உங்களின் பால்ய கால நினைவுகூறல், மற்றும் நண்பர்களின் குறும்படம்.

    All Credits to the Fellowship of Tamil Comics. Proud to be part of this august gathering, and looking forward for the #Muthu60 and #Lion50 already 🙌

    ReplyDelete
    Replies
    1. #Lion40 will be legendary.... More to Come 😎

      Delete
    2. விழாவுக்கு முந்தைய நாள் நைட் எதோ ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல டின்னர் சாப்டீங்களாமே.. அதைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க ரபிக்😁

      Delete
    3. முத்து 60 & லயன் 50-க்கும் பைக்லேயேவா சார் ?

      Delete
  53. சூப்பர் சார்...அட்டகாச பதிவு....ஸ்பைடரின் ரெண்டாவது வருகை பட்டய கிளப்புது...50 ம் ஆண்டுக்கு இன்னுமோர் துணை புதிய வார்ப்பில்

    ReplyDelete
  54. ///சலோ - லயன் 50 நோக்கி !! வண்டிய உட்றா சம்முவம் !!///

    👍👏👏👏👏

    ReplyDelete
  55. வழக்கம்போலவே இந்த ஆண்டும்,
    நிகழ்வுகள் மறக்க இயலாமல் அமைந்து விட்டன.
    நிகழ்ச்சியில் தங்கள் குரல் எங்கள் காதுகளுக்குள் நுழைந்து கண்களை நனைத்தது போலவே இன்றைய
    தங்கள் எழுத்துக்களும் கண்கள் வழியே நுழைந்து அதே வேலையை
    செய்கின்றன.
    இது எங்கள் விழா.

    ReplyDelete
    Replies
    1. //இது எங்கள் விழா//

      அருமை!

      Delete
    2. இந்த அன்பு தான் சார் - நமது பெட்ரோலே !!

      Delete
    3. //இது எங்கள் விழா//

      +9

      Delete
  56. Unforgettable moments. Well done Erode team. Lunch is so good. Editor sir your speech great inspiration to me. Till last I am not able to participate in the function. To catch the bus I left the function 4.30pm itself. Past 2 years unable to visit book fair. Unfortunately book fair venue is changed the convenient venue is VOC park where now vegetable market is going on.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார் !! இந்தமுறை திருச்சியில் புத்தக விழா அமைந்தால் நிச்சயம் உங்களை எதிர்பார்த்திருப்போம் !

      Delete
  57. *சூறாவளியின் தடத்தில்*

    டெக்சின் அதிரடியே இல்லாத ஒரு விறுவிறுப்பான கதை. ஓவியங்கள் மனதை அள்ளுகிறது. மசாகா எனும் வீரனின் கதாபாத்திரம் சரியாக செதுக்கப் படாவிட்டாலும், மிம்பரே இனத்தவரின் கடைசி எதிர்ப்பு குரலாக இருந்ததாக பதிவு செய்கிறார் ஆசிரியர்.

    அதையொட்டி கூகிளில் தேடிய பொழுது மிம்பரே இனத்தவர் அடைந்த சொல்லொண்ணா துயரங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது. மசாகா மீது கதை, ஒரு பச்சாதாபத்தை ஏன் உணர்த்துகிறது என்பதை இணையத்தில் கிடைத்த தகவல்கள் உறுதி செய்கின்றது. 

    எது நடந்தாலும் நன்மைக்கே என்று நினைக்கும் பங்கு எனக்கு இல்லை இருந்தாலும் தவறுதலாக பிரிண்ட் செய்யப்பட்ட டெக்ஸ் கதையால் இந்த கதை நமக்கு கிடைத்துள்ளது. நன்றி ஆசிரியரே. 

    கதை 10/10
    ஓவியம் 10/10
    மேக்கிங் 9/10 (ஒரே ஒரு எழுத்துப்பிழை கண்ணில் பட்டது)

    ReplyDelete
    Replies
    1. ஒரு எழுத்துப் பிழைக்கு ஒரு மார்க் கழிக்கலாமா ப்ரோ? இது நியாயமா?😅

      Delete
  58. *அதிர்ஷ்டத்தை தேடி*

    எப்பொழுதோ படித்த கதை போல் தோன்றினாலும், படித்தது மறந்து போய் இருந்ததால் ஆர்வமாகவே படிக்க முடிந்தது.42 ஆம் பக்கம் வரை கொஞ்சம் சுவாரசியமுடன் நகர்ந்த கதை அதன் பின்பு மெதுவாக நகர ஆரம்பிக்க, எப்படா முடியும் என்று கடைசி பக்கத்துக்கு போய் படிச்சுடுடா என்று மனதின் கூக்குரல் எழும்பினாலும் அதை கட்டுப்படுத்தி தட்டுத்தடுமாறி படித்து முடித்து விட்டேன். மேக்கிங்கில் சில பல குறைபாடுகள் இருந்தாலும் வேதாளரின் ரசிகர்களுக்கு இது விருந்தாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

    கதை 9/10

    ஓவியம் 8.5/10

    மேக்கிங் 7/10

    ReplyDelete
  59. *மாயமில்லே மந்திரமில்லே*

    SIMPLY SUPERB தாத்தாஸ்களின் லூட்டி மிகவும் குறைவே, ஆனால் நம் ஹீரோ தாதாக்களை தவிர்த்து, இந்தக் கதையில் வரும் பிற தாத்தாக்கள் அடிக்கும் லூட்டி ஆகா ரகம். அதிலும்  கேப்டன் பஸ்ஸு சில பேனல்களே வந்திருந்தாலும் தெறி ரகம்.

    இந்த கதை முழுக்க முழுக்க சோஃபிக்கு நேர்ந்து விட்டிருக்கிறார் ஆசிரியர். நடுவில் சோஃபியை கலாய்ப்பது போல் சுய பகடி  செய்துக் கொள்கிறார். அரசியல் நெடி அள்ளி வீசுகிறது. ஒவ்வொரு அரசியல் பார்வையின் மறுபக்கத்தை போகிற போக்கில் LEFT HANDடில் DEAL செய்து விட்டு போகிறார் ஆசிரியர். 

    நான் தொழிற்சங்க இயக்கத்தில் இருந்த பொழுது, ஒரு அற்புதமான விஷயத்தை நாங்கள் அனைவருக்கும் பதிய வைப்போம். எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை என்பதே. அதை இந்த புத்தகம் உறுதி செய்கிறது. நீங்கள் வலதுசாரியோ அல்லது இடதுசாரியோ, இந்தக் கதை இரண்டு திசையிலும் பயணிக்கிறது. 

    சுற்றுச்சூழலை காக்கப் போராடும் ஒரு தாத்தா, வேலைவாய்ப்புக்காக சுற்றுச்சூழலாவது மண்ணாவது என்று போராடும் மற்றொரு தாத்தா, வேலை வாய்ப்பே முக்கியம் என்று ஒரு பார்வை, என்னடா வேலைவாய்ப்பு என்று அதை கிழித்து தொங்க விடும் மற்றொரு பார்வை, LGBTQ வுக்காக ஒரு கை ஓசை, மத வெறுப்புணர்விற்கு ஒரு குட்டு, என்று உலகில் உள்ள அரசியலின் அ முதல் அக்கன்னா வரை பிழிந்து தொங்க விட்டது ஹேப்பி அண்ணாச்சி.

    நகைச்சுவையில் ஊற போட்டு அடித்துள்ளார் கதாசிரியர். அதிலும் அந்த 17 ஆம் பக்கம் மற்றும் 18 ஆம் பக்கம் சில நிமிடங்கள் மனதில் பயத்தை கிளப்பியது, எதோ ஒரு பக்கத்தை மிஸ் பண்ணிட்டாங்க என்று மொத்த புத்தகத்தையும் ஆராய்ந்து ஒரு வழியாய் திரும்பவும் 17 ஆம் பக்கத்துக்கும் 18 ஆம் பக்கத்துக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்போம் என்று கிளம்பி, ஓ இது தான் கதையா என்று அந்த இரண்டு பக்கத்தை புரிந்துக் கொள்ள நான் பட்ட பாடு, ஏண்டா கி.நா ன்னா இப்படி தெறிச்சு ஓடுறாங்க என்று புரிய வைத்தது. ஆனால் கி நா வின் அழகே இது போன்ற தலை சுற்றும் அம்சம் தான் என்பது தான் என் பார்வை. 

    எடிட்டர் அவர்கள் முந்தைய கதைகளை படித்து விடுங்கள் என்று கூறி இருந்தார். ஆனால் ஒரு சில விஷயங்கள் தவிர்த்து முன்னாடி வந்த கதைகளை படிக்காமல் இந்த புத்தகத்தை தொட்டாலும் நமக்கு ஒன்று இரண்டு கேள்விகளே எழும். அதுவும் இந்த கதையின் அழகில் தொலைந்தே போயிருக்கும். 

    அதுவும் அந்த கடைசி பக்கமும் கடைசி மூன்று பேனலும், அந்த ஆசிரியரையும் அந்த ஓவியரையும் என்ன பாராட்டினாலும் தகும். ஒரு தந்தையாக நெடுநேரம் என் மனம் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தது. 

    கம்பியூட்டர் ஜித்து அர்னாட், நெட்ஒர்க் தேடி அலையும் காட்சிகள் செம. இது போல் ஒவ்வொரு கேரக்டருக்கும் எழுதிக் கொண்டே போகலாம். அதுக்கு பேசாம அந்த கதையை ஒரு தடவையாவது படிங்கன்னு இந்த புத்தகத்தை தூக்கி கையில் கொடுத்து விடலாம்.

    கதை 10/10

    ஓவியம் 10/10

    மேக்கிங் 10/10

    ReplyDelete
    Replies
    1. அருமையான விமர்சனம் சகோ. நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள்.

      Delete
    2. சார்.... "ஆசிரியர் " என நீங்கள் குறிப்பிடுவது கதாசிரியரையா? என்னையா? என்ற குழப்பம் பின்னூட்டத்தை வாசிக்கும் நண்பர்களுக்கு எழக்கூடும்!

      Delete
    3. சார் நீங்களும் ஆசிரியர்தான். அவங்களும் ஆசிரியர்கள் தான் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை 😁

      Delete
    4. "அவர்கள்" படைப்பின் ஆசிரியர்கள் சார் !
      அடியேன் "பதிப்பின்" ஆசிரியன் மட்டுமே அல்லவா ?

      Delete
  60. சார்... விழாவில் கலந்து கொண்டதில் எனது மனைவியாருக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ததாம்... அதைவிட எனது மூன்று வயது மகளிருக்கு ஜாலியாக இருந்ததாம்.. அடுத்த நாள் இன்றைக்கும் போகலாமா என்று கேட்கிறார்.. எங்கள் ஒரு நாளை மிக மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றியதற்கு தங்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் சார்...

    ReplyDelete
    Replies
    1. இது தான் ultimate பாராட்டு சார்!

      Delete
    2. அடுத்தவாட்டி மகளிர்க்கு மட்டும் தனியா ஒரு போட்டி வையுங்கள் எடிட்டர் சார் 🤩🤩
      பன் சாப்பிடும் போட்டி மாதிரி சின்ன பசங்களுக்கான போட்டியா இல்லாம ' பிரியாணி வித் லெக் பீஸ்' போட்டியா வைங்க 😁

      Delete
    3. ஈரோட்டின் அந்த முதல் சனி ஆடிப்பெருக்குண்ணா...
      ஞாயிறு ஆடி அமாவாசைங்கணா...

      So லெக் பீஸ் போட்டா, வீட்டம்மாக்கள் கண்ணைக் குத்திப்புடுவாங்கணா !!

      Delete
    4. சார் மாறுவேஷத்தில் இங்கே உலவும் என்னை அடையாளம் கண்டுபிடித்து விட்டீர்கள் போலிருக்கிறதே!!😁😁😁

      Delete
    5. //எங்கள் ஒரு நாளை மிக மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றியதற்கு தங்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் சார்...//

      💐💐💐💐💐

      Delete

  61. In a lighter vein

    விழாவுக்கு முதல் நாளே வந்து இருந்து ஒரு வேலையும் செய்யாமல் ஒய்யாரமாய் உட்கார்ந்து இருந்து " ட்ரிக்னாமெட்ரி, கால்குலஸ், பிராபபல்ஸ் இது எல்லாம் வச்சு கணக்கு பார்த்தா இந்த வாட்டர் பாட்டில் மேல ஸ்டிக்கர் இப்படி தான் ஓட்டணும் " அப்படின்னு அட்வைஸ் பண்ணி எரிச்சல் மூட்டி,

    இந்த மூஞ்சி அழகா இருக்கே ஸ்பைடர் மூஞ்சி அழகா இருக்காதே அப்படின்னு கிண்டல் பண்றதா நினைச்சுக்கிட்டு ஸ்பைடர் போஸ்டர் பத்தி கமெண்ட் அடிச்சு எரிச்சல் மூட்டி

    குறும்படத்தைப் பார்த்து லைட் மீட்டர் யூஸ் பண்ணி இருக்கலாமே?
    கிளவுட்ஸ் நிறைய இருக்கிற மாதிரி இருக்கே, ஸ்கிரிப்ட் அக்கினோக்ரோசோவா படம் மாதிரி இருக்க வேணாமா? குறும்படத்துல வர்ற ரம்யா உடைய வலது காது வலது பக்கமாக இருக்கே அப்படின்னு விமர்சனம் பண்றதா நினைச்சுக்கிட்டு எரிச்சல் மூட்டி

    எடிட்டர் சார் பேசும்போது மைக்க ஒரு பக்கமா புடிச்சிட்டதனால வலது காதில் டெசிபல் அதிகமாகவும் இடது காதில் டெசிபல் மிக குறைவாகவும் கேட்டது என சொல்லி எரிச்சல் மூட்டி

    இப்படி ஒரு கிரின்ச் மெண்டாலிட்டியோட செயல்பட்டு இருக்கக்கூடிய ஒரு அரியலூர் வாசகர் விழாவுக்கு வராததன் மூலம் விழாவை சிறப்பித்ததனால் ஈரோடு டீம் அவருக்கு ஒரு ஷீல்ட் தரப்படாதா? 😄

    On serious note

    தமிழ் காமிக்ஸ் உலகின் ஒரு மிக முக்கியமான தருணத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது மிகவும் வருத்தமே. எடிட்டர் சாரை நேரில் பார்த்து அவர் பேச்சை கேட்பது, நேரில் பார்க்க முடியாத பல காமிரேடுகளை நேரில் பார்க்கக்கூடுவது, எடிட்டர் கையால் நல்ல உணவு உண்பது என பல விஷயங்களை தவறவிட்டது சோகமான விஷயம்.

    போன மாதம் பெல்ஜியம் தாத்தாக்கள். இந்த மாத துவக்கத்தில்பிரெஞ்சு தாத்தாக்கள். விழாவிலோ இந்தியன் தாத்தா ( அந்த 2 தாத்தா இல்லீங்க ). இந்த இந்தியன் தாத்தாவினால் நமக்கு ஒரு அற்புதமான எடிட்டர் கிடைக்க சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளோ நல்லதொரு அக்கவுண்ட்டட்டை இழந்து விட்டன.
    😄.

    மேம்படுத்தப்பட்ட ஆடியோவுடன் விழா நிகழ்வுகளுக்கான வீடியோ தொகுப்பை வெளியிடுங்கள்.

    மரத்தடி மீட்டிங்கில் ( இந்த phrase இன்னமும் அப்ளிகபிளா? ) லார்கோ தொடரின் ஒரு கதை ஏன் இன்னும் வரவில்லை என ஏன் யாரும் கேட்கவில்லை?





    ReplyDelete
    Replies
    1. ROFL doc - for the first para :-)

      Delete
    2. Message from @Team Erode
      😍😘

      https://t.me/+U7xKz0dz2OUxNWNl

      லயன் 40 ஆண்டுவிழவின் அனைத்து புகைப்படங்களும் வீடியோக்களும் மேலே உள்ள டெலிகிரமில் பதிவேற்றபட்டு கொண்டே உள்ளது.

      நண்பர்கள் அனைவரும் மேலே உள்ள Telegram link னை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்..

      இணைந்திருங்கள் நட்புக்களே 🙏❤💛

      Delete
    3. @செல்வம் அபிராமி சகோ
      அருமை அருமை அருமை சகோ

      தங்கள் காமெடி எழுத்துக்கள் 😂😂😂😂😂
      அதுவும் முதல் பேரா

      சகோதரர் ஈரோடு விஜய் அவர்களின் எண்ட்ரி பதெதி குறிப்பிடாமல் விட்டீர்கள், கொஞ்சம் அதை பற்றியும் கமெண்ட் போட்டால் நன்றாக இருக்கும் 😁😁😁

      Delete
    4. // சகோதரர் ஈரோடு விஜய் அவர்களின் எண்ட்ரி பதெதி குறிப்பிடாமல் விட்டீர்கள், கொஞ்சம் அதை பற்றியும் கமெண்ட் போட்டால் நன்றாக இருக்கும் //

      இதுக்கு நீங்கள் ஓரே வார்த்தையில் ஈரோடு விஜய்யை கலாய்ஙக என எழுதலாமே 😆

      Delete
  62. டியர் எடிட்டர் 

    One suggestion please :

    நமது டீம் Erode செய்த சாகசங்களை முன்னிட்டு அவர்களின் பொருட்டு ஒரு ஸ்பெஷல் இதழ் வெளியிடுங்களேன் ப்ளீஸ் ! இது ஒரு Tex கிளாசிக் reprint-ஆகவோ அல்லது புதிய சாகசமாகவோ இருக்கலாம். டீம் Erode நண்பர்களுக்கு அன்புடன் விலையில்லாமலும், ஏனையோருக்கு அதே மாறாத அன்புடனும் எனினும் புத்தகத்திற்கான விலையுடனும் வெளியிடலாம் ! They deserve it that much and அவர்களை மகிழ்விக்க விலை வைக்க முடியா அன்பளிப்பாய் ஒரு லயன் காமிக்ஸ் அல்லவா சிறந்தது ?

    TEAM ERODE THANKSGIVING SPECIAL - TETS 2024 !!

    ReplyDelete
  63. என் பணியிடத்தில் ஏற்பட்ட சின்ன சிக்கலால் என்னால் ஈரோடு மாற முடியவில்லை வருத்தமாய் இருக்கிறது. ஏனென்றால் முந்தின நாள் ஆடி 18 என்பதால் அரிசி ஆலைகள் அனைத்தும் விடுமுறை விட்டு விட்டார்கள். எங்கள் அரிசி அலையில் அவர் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை விட்டுவிட்டுஓனர் அண்ணனும் மேனேஜர் அண்ணனும் சென்று விட்டார்கள்.வே பிரிட்ஜ் மட்டும் இரண்டு நாளும் இயங்கியது. ஞாயிற்றுக்கிழமை அன்று என்னை மாற்றி விடுவதாக சொன்ன மேனேஜர் அண்ணன் அன்று வராமல் இருந்ததால் என்னால் ஈரோட்டுக்கு வர முடியவில்லை.

    ReplyDelete
  64. விழா நிகழ்வுகளையும்..நண்பர்களின் அனுபவங்களை வாட்ஸ்அப் ன் மூலமும் இங்கேயும்.. தங்கள் பதிவின் மூலமும் ..வாசிக்கும் பொழுது ஒரு மிக சிறந்த கொண்டாட்ட அனுபவத்தை தவற விட்ட வருத்தம் அதிகமாகிறது தான் ..ஆனாலும் ஞாயிறு நானும்..மகனும் புறப்படும் சமயம் சில தவிர்க்க இயலா காரணங்களால் என்னால் வர இயலா சூழல்..

    நண்பர்களுக்கும் ,ஆசிரியர் குழுவிற்கும் ,மனமார்ந்த பாராட்டுகளும் ,வாழ்த்துகளும் ..


    *ஒரு பின் குறிப்பு *
    சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பு உண்டு என்ற வாட்ஸ்அப் தகவல் உண்மையா என தங்கள் மூலம் அறிய விரும்புகிறேன் சார்..உண்மை எனில் தங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்...:-)

    ReplyDelete
    Replies
    1. ஆமா தலீவரே உண்மை தான். நானும் what's app மூலம் தான் அறிந்தேன்.

      Delete
  65. ஈரோடு வாசகர்கள். சந்திப்புக்கு. ஒவ்வொரு. வருடமும். வந்துகொண்டு. இருக்கிறேன். இப்போதைய. பத்திரிகை.
    உலகில் இப்படியும். ஒரு மகா. வாசக நிகழ்ச்சியை. இப்படி. ஒரு அர்ப்பணிப்புடன்(ஈரோடு. நண்பர்கள். குழு)நடத்த முடியுமா என்று வியந்து. கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு வருடமும். நண்பர்கள். விழாவினை நடத்தும். விதம். மற்றும் தரம். உயர்ந்து. கொண்டே இருக்கிறது. எனக்கு. விழாவில் குறை. எதுவும். தெரியவில்லை. நிறைகள். மட்டுமே.
    என் கண்களுக்கு. தெரிகிறது விழாவிற்காக. இரவு. பகலாக. உழைத்த. பாடுபட்ட ஈரோடு. நண்பர்கள். குழு. அனைவருக்கும். என் மனமார்ந்த. வாழ்த்துக்கள் நான் லயன்னில். எடுத்த. உடன். படிப்பது. எடிட்டர் ரின். ஹாட். லயன். பகுதியே. பல வருடங்களுக்கு பிறகு. இந்த. மாத இதழ்களில். எழுதவில்லை. அதை. விழாவில். நம்மை. எல்லாம். மெய் சிலிர்க்கும். வகையில். வாசித்தார். என்பது தான் உண்மை. எடிட்டர். உரை. அருமையாக. இருந்தது. Dekshinamurthy. Thiruvarur

    ReplyDelete
  66. சார் இன்று பதிவுக் கிழமை

    ReplyDelete
  67. ஈரோடு விழாவில் நான் கவனித்தது...
    ஜூனியர் எடிட்டர் விக்ரமின் மௌன விரதம்.
    சீனியர் எடிட்டரும், கருணையானந்தம் அவர்களும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகச் சுருக்கமாக தங்கள் உரையை முடித்துக் கொள்ள, நமது எடிட்டரோ தனது 'சிங்கத்தின் சிறு வயது' நேரலை நிகழ்ச்சியை நிதானமாகவும், சுவாரசியமாகவும் நிகழ்த்திக் கொண்டிருந்தார். அமர்ந்திருந்த வாசகர்களின் வயிற்றில் அமிலம் சுரக்க ஆரம்பித்து இருந்தாலும், எடிட்டரின் எமோஷனலான உரையில் கட்டுண்டு கிடந்தனர் என்பதே உண்மை. இம்முறையாவது ஜூனியர் எடிட்டர் தன் மௌனம் கலைப்பாரா என்று காத்திருந்த என் போன்ற இளைய தலைமுறை வாசகர்களுக்கு ஏமாற்றமே பதிலாக கிடைத்தது. V- காமிக்ஸ் இல் வருவது போல ' ஹலோ நான் தான் ஜாகோர் பேசுகிறேன்' என்றாவது நான்கு வரிகள் பேசி இருக்கலாம்.V காமிக்ஸ் வெள்ளிவிழா காணும் நாள் வெகு தொலைவில் இல்லை எனும் போது அப்போதாவது நான்கு வார்த்தைகள் பேசுவாரா அல்லது ஏதேனும் ஒரு ரோபோவை கொண்டு வந்து மேடையில் நிறுத்தி அதை பேச வைப்பாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Junior is always அமைதி மனிதர் 😊

      Delete
    2. // Junior is always அமைதி மனிதர் 😊 //

      அமைதி இல்லை... அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு வருகிறார்.

      V காமிக்ஸ் எடிட்டர் விழாவில் முதல் வரிசையில் அமர்ந்து ரசிக்கவில்லை. கடைசி வரிசையில் அமர்ந்து கவனித்தார். திறமையை பக்குவமாக மெருகேற்றிக் கொண்டு உள்ளார்.

      Delete
    3. அது உண்மை தான் ரகு 😊

      Delete
    4. ||| V காமிக்ஸ் எடிட்டர் விழாவில் முதல் வரிசையில் அமர்ந்து ரசிக்கவில்லை. கடைசி வரிசையில் அமர்ந்து கவனித்தார். திறமையை பக்குவமாக மெருகேற்றிக் கொண்டு உள்ளார்.|||

      ஜூனியரின் மைண்ட் வாய்ஸ் : இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே டாடியோட உடம்பை ரணகளம் பண்ணது போதாதுன்னு இப்ப என்னையும் கைய புடிச்சு இழுக்குறாங்களே.. 😅

      Delete
  68. சதாசிவம் ஜி .அரிசி ஆலைகளில் ஆடி18,ஆகஸ்ட் 15,போன்ற மீடியம் விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியில் எங்கும் செல்ல முடியாது. கேட்டில் வாட்ச் மேனனுக்கு துணையாக கம்பெனி கொடுத்துக்கொண்டே,ஒரு சிப்பம் அரிசி வாங்க யாராவது வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.நானும் அனுபவித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

      Delete
  69. என்ன இருந்தாலும் வரதாவங்களுக்கும் திகில் லைப்ரரி அனுப்பி இருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. என்ன இருந்தாலும் இத்தனை வருடத்தில் நீங்க ஒரு வாட்டியாவது விழாவுக்கு வந்து இருக்கலாம் 😅

      Delete
    2. என்ன இருந்தாலும் கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் செய்யாமல் இருந்துருக்கலாம்....

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. அட நம்ம டெக்ஸ் கிட் பதிலுக்கு பதில் எழுத பழகி விட்டார் 😂🤩

      Delete
    5. என்ன இருந்தாலும் பதில் போட்டதக்காக கூட கொடுக்கலாம்...

      Delete
  70. ஈரோடு லயன் 40 கொண்டாட்டம் அபார வெற்றி பெற்று இருப்பது மிக்க மகிழ்ச்சி 🥰
    விழாவில் கலந்து சிறப்பித்த வாசக நண்பர்கள் & குடும்பத்தினர் அன்பிற்கும், விழா ஏற்பாடுகளை வெகு சிறப்பாக செய்து அசத்திய ஈரோடு 40 குழுவினருக்கும், நவரசங்களை காட்டி அமர்க்களப் படுத்திய நண்பர்களுக்கும், விழா நாயகர் எடிட்டர் சாருக்கும், senior & Junior எடிட்டர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்👏👏👏🙏🙏🙏
    Keep Rocking Sir👍👍👍

    ReplyDelete
  71. மாயப் பந்துகள் ஏழு : முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை விறுவிறுப்பு. நடு நடுவே ஸ்னோயி மற்றும் கேப்டன் நம்மள நன்றாக சிரிக்க வைக்கிறார்கள்; இந்த முறை கேப்டனுக்கு கொடுக்கபட்ட வசனங்கள் அனைத்தும் செம செம, சூப்பர் சார். கதைக்கு நீங்கள் கொடுத்த மொழி பெயர்ப்பு கதையை ரசிக்கும் படி செய்தது.

    இதழின் தயாரிப்பு தரம் மற்றும் அச்சு அருமை.

    டின் டின் இந்த முறையும் six அடித்துள்ளார்.

    ReplyDelete
  72. @உறவுகளுக்கு
    என் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளால் மனம் ஒடிந்து போன சமயங்களில் என்னை தூக்கி நிறுத்த லைன் காமிக்ஸ் தான் ஒரு ஊன்றுகோலாக இருந்தது. வேலைப்பளு இருந்ததால் அது குறித்து ஈரோடு வீடியோ பதிவில் நான் அதை பதிவு செய்ய முடியவில்லை. ஆசிரியரின் அடுத்த பதிவில் என் அனுபவங்களை பகிர்கிறேன். இதுவரை யாரிடமும் வெளியில் சொல்ல முடியாத நிகழ்வை இங்கே சொல்லும்போது மனதுக்கும் கொஞ்சம் லேசானது போல் இருக்கிறது.

    ReplyDelete
  73. குடும்பத்து இல்ல விழா என்று சொன்னால் அதற்கு சென்று இருக்க iருக்க வாய்ப்பு இல்லை... அதனிலும் மேலான ஒரு வைபவம் என்றுப்படுகிறது எனக்கு.

    ReplyDelete
  74. //இந்த நடைமுறை தொடர்ந்திடும் !!//

    சிறப்பிலும் சிறப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  75. இது போன்ற ஒரு ரூபாய் விலையில் வந்த "துப்பாக்கி முனையில்..." மற்றும் 64 பக்கங்களுக்கு உட்பட்ட தான ஸ்பைடர் ஆrச்சி, இரட்டை வேட்டையர், பாக்கெட் சைஸில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் சார்... முடிந்தால் இரு வண்ணத்தில் ப்ளீஸ்..

    ReplyDelete
  76. நட்புக்காக "உலகப்போரில் ஆர்ச்சி" அவ்வாறு 64 pg பாக்கெட்
    சைஸில் மாற்றி தர என்னால் இயலும் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்... வண்ணமும் அவ்வாறே கொடுக்க இயலும்.

    ReplyDelete
  77. "இது யுத்த பூமி..!"
    வி காமிக்ஸ்ல் வந்து விட்டதா...

    ReplyDelete
  78. Replies
    1. கடந்த வாரத்தில் ஏற்பட்ட அலைச்சல்களின் பலனாக வலது தோள்பட்டையின் வலி சற்று அதிகரித்திருக்க கூடும். வார இறுதியான இன்று சென்னையில் முகாமிட்டு பிசியோதெரபி பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கலாம். பின்னி பெடல் எடுக்கும் பிசியோதெரபி வலிகளினூடே ' ஆருசியா ' என்றோ ' அமையா' என்றோ கத்திக் கொண்டிருக்கக் கூடும் - பாவம்!😔

      Delete
    2. சாரி சிஸ்டர்.. எடிட்டருக்கு மாடஸ்டி இப்போ எக்ஸெல் கிடையாது.. வெறும் எக்ஸ் மட்டும்தான் 😁

      Delete
  79. டின் டின் நேற்று காலை ஆரம்பித்து மாலையில் இரண்டு கதைகளையும் படித்து முடித்து விட்டேன். இரண்டு கதைகளும் அருமையான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. ஆசிரியர் சார் டின் டின் கதைக்கு கொடுத்து வரும் மொழி பெயர்ப்பு fresh ஆக உள்ளது. இத்தனை வருடங்கள் மொழி பெயர்ப்பு செய்து வரும் அவர்கள் ஒவ்வொரு கதையிலும் புதிது புதிதாக எழுதி நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்.

    இந்த கதை எந்த இடத்திலும் போரடிக்காமல் விறுவிறுப்பாக சென்றது. டின் டின் கதை அனைத்து வயதினரையும் கவரும் வகையில் உள்ளது. டின் கதையை ரெகுலர் சந்தா தடத்தில் கொடுத்தது சிறப்பு.


    அடுத்த டின் கதை எப்போது வரும் சார்.

    ReplyDelete
  80. இந்த மாதம் புத்தகங்களை படித்த நண்பர்கள் அவைகளை பற்றிய விமர்சனம் எழுதலாமே.😊

    ReplyDelete
  81. Erode நினைவுகளை அசை போட்டுக்கொண்டே இருக்கிறேன்.விமர்சனம் டைப்ப நினைத்தால் மீள முடிவில்லை

    ReplyDelete
    Replies
    1. மாடஸ்டி கட்டவுட் பக்கத்துல நின்னு வளைச்சு வளைச்சு செல்பி எடுக்கும் போதே நினைச்சேன்😁

      Delete
  82. LMS'சில் வெளிவந்த 'அந்தி மண்டலம்' என்ற டைலன் டாக் கதையில் தான் 'எட்கர் ஆலன் போ' முதன் முதலில் எனக்கு அறிமுகம் ஆனார். ஆனால், அதில் கூட அவர் ஒரு மர்ம நாவலாசிரியர் என்று கூறப்படவில்லை. உயிர் கூடை விட்டு பிரியும்போது ஏதோ ஆராய்ச்சி செய்பவராக சொல்லப்பட்டது. அதை படித்த போது 'எட்கர் ஆலன் போ' என்பவர் அமானுஷ்ய சம்பவங்களின் ஆராய்ச்சியாளர் என்று நினைத்தேன். ஆனால், அவர் ஒரு மர்ம நாவலாசிரியர் என்பதை இந்த திகில் லைப்ரரியை படித்தப் பின்புதான் தெரிந்துக்கொண்டேன்.

    "இரத்த வீதி" -கதையின் ஒவ்வொரு பக்கத்திலும் இரத்த வாடை மட்டும் தான் அடிக்கவில்லை. பக்கங்களை தொட்டு புரட்டிய கை விரல்களில் இரத்தம் தெரியாமல் ஒட்டிக்கொண்டதோ என விரல்களை தேய்த்து உற்றுப் பார்க்க வேண்டும் போன்ற ஒரு உணர்வை கதை ஏற்படுத்திவிட்டது. கதை சொல்லப்பட்ட விதமும், உங்களுடைய மொழிபெயர்ப்பும் கனக்கச்சிதம். நானும் மாதா மாதம் கடைகளில் 30, 40 ரூபாயில் விற்கும் மர்ம நாவல்களை வாங்கி படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இப்படிப்பட்ட எழுத்து நடையில் யாரும் கதை அமைப்பதில்லை. சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இவரது இந்த கதை படிக்க நன்றாக இருக்கிறது. திகில் லைப்ரரியில் இவரது கதைகளை வரவேற்கிறேன். அடிக்கடி வெளியிடுங்கள். நன்றி!

    ReplyDelete