நண்பர்களே,
வணக்கம்.
சொற்பமான
தருணங்கள் நீங்கலாக,
அநேக
நேரங்களில் பேப்பரையும்,
பேனாவையும்
கையிலெடுத்துக் கொண்டு
உட்காரும் வரையிலும் அந்த வாரத்தின் வலைப்பதிவினில்
என்ன எழுதப் போகிறேன் என்பது பற்றியெல்லாம் பெரியதொரு
திட்டமிடல் என்னுள் ஓடுவதில்லை!
அப்போதைக்கு
அறிமுகம் காணக் காத்திருக்கும்
கதையைப் பற்றியோ;
நாயகரைப்
பற்றியோ முன்னோட்டமிடத்
தொடங்கினால் சிறுகச் சிறுக
பாக்கி விஷயங்கள் தத்தம்
இடங்களில் நிலைகொண்டு விடுவது
தான் வழக்கம். இந்த
வாரமும் அதற்கு விதிவிலக்கல்ல!
ஈரோட்டுப்
புத்தக விழாவிற்கு நம்மவர்கள்
தயாராகி
வருவதையும்,
அதற்கான
பிரதிகளைப் பண்டலிடுவதையும்
பார்த்துக் கொண்டிருந்த
சமயம் தான் இந்தப் பதிவின்
plot எனக்குள்
உதயமானது! கிட்டத்தட்ட
3
½ ஆண்டுகளாய்
கர்ணமடித்து இதழ்களின்
கையிருப்பு எண்ணிக்கையை
80க்கு
அருகாமைக்குக் கொணர்ந்திருக்கும்
நிலையில் நமது ஸ்டாக் ரிப்போர்ட்டை
மீண்டுமொரு முறை புரட்டிப்
பார்த்தேன்! ‘அட...
இதில்
இன்னமும் இவ்வளவு இருப்பு
உள்ளதா ?‘; ‘ம்ம்ம்...
இந்தத்
தொடரை ஜாக்கிரதையாய் தான்
கையாளணும் போலும்;‘
என்றபடி
scroll செய்த
போது “டெக்ஸ்
வில்லர் கதைகள்“
என்ற தலைப்போடு இருந்த பகுதியில்
என்
கவனம் நிலைகொண்டு நின்றது!
அது
சொன்ன சேதி இதுவே:
- சிகப்பாய் ஒரு சொப்பனம் - 2
- பூத வேட்டை - 4
- நில்... கவனி... சுடு - 61
- வல்லவர்கள் வீழ்வதில்லை - 120
- கார்சனின் கடந்த காலம் - 55
- நிலவொளியில் நரபலி - 427
- LMS - ஹி! ஹி! ஹி!
- காவல் கழுகு - 3
அதன்
பின்னே நமது இரும்புக்கையாரின்
இருப்பு விபரத்தையும் பார்த்து
விடுவோமே என்று முயற்சித்த
போது –
‘நயாகராவில்
மாயாவி‘
–
‘நஹி ஸ்டாக் மாயாவி‘யாகி
விட்டதைப் பார்த்திட முடிந்தது!
ஜனவரி
சென்னைப் புத்தக விழாவின்
போதே வாசகர்கள் குமுறு
குமுறென்று குமுறியதைத்
தொடர்ந்து இந்த இதழின்
கையிருப்பு தரைதட்டிப்
போயிருக்கும் என்பதை
எதிர்பார்த்திருந்ததால்
அதன் பொருட்டு பெரியதொரு
ஆச்சர்யமில்லை
என்னுள் !
டெக்ஸின்
இந்தத் தாண்டவமும் பெரியதொரு
வியப்பைத் தந்திடவில்லை
என்றாலும் –
சில hard facts-களை
மேஜைக்குக் கொண்டு வரும்
வேளையாக இது எனக்குப்பட்டது !
- 2012ன் நமது மறுவருகையைத் தொடர்ந்து நாம் இது வரை வெளியிட்டுள்ள இதழ்களின் எண்ணிக்கை 100!
- இந்த நூறுக்குள் டெக்ஸின் சாகஸங்கள் எத்தனை என்று பார்த்த போது 10 இதழ்கள் என்று தெரிந்தது (லயன் 250ம் சேர்த்து)
- 10 இதழ்களில் இருந்த கதைகளின் எண்ணிக்கை – 13!
- So - இந்த மூன்றாண்டுகளில் நமது flagship நாயகரின் பங்களிப்பு வெறும் 10% மாத்திரமே!
- “நிலவொளியில் நரபலி“ ரொம்பவே சீக்கிரமாய் காலியாகிப் போனதைத் தொடர்ந்து அதனை 2014-ல் மறுபதிப்பு செய்ததால் அதனில் மட்டும் ஓரளவிற்கு ஸ்டாக் உள்ளது.
- அதன் (சமீபக்) கையிருப்பை மறந்து விட்டு இரவுக் கழுகாரின் இருப்புக் கணக்கைப் பார்த்தால் காற்றோட்டமான கிட்டங்கி மாத்திரமே கண்ணில் தட்டுப்படுகிறது!
- சென்ற மாதம் வெளியான The லயன் 250 சந்தா / ஆன்லைன் நண்பர்களிடம் சாதித்தது ஒரு பக்கமெனில் – விற்பனையாளர்கள் பலரையும் கூடப் பரபரப்படையச் செய்துள்ளது தான் icing on the cake! குட்டி ஊரான அருப்புக்கோட்டையில் கூட இது வரை 40 பிரதிகள் (நேரடி) விற்பனை செய்துள்ளார் அங்கிருக்கும் முகவர்! நெய்வேலி புத்தக விழாவில் ஸ்டால் அமைத்திருந்த இரு விற்பனையாளர்களுமே அங்கே சொல்லிக் கொள்ளும் விற்பனை காட்டவில்லை – மின்னும் மரணம் & The லயன் 250 நீங்கலாக!
மோவாயைத்
தடவிக் கொண்டே இந்தப்
புள்ளிவிபரங்களை திரும்பவும்
அலசத் தொடங்கிய போது எனக்குள்
இரண்டு கேள்விகள் தான் எஞ்சி
நின்றன!
- டெக்ஸ் கதைகளின் ஆக்கிரமிப்பு சற்றே அதிகமென்று கடந்த ஆண்டின் கருத்துக் கணிப்பில் நண்பர்களின் ஒரு சாரார் அபிப்பிராயம் தெரிவித்திருந்தது சரி தானா?
- ஏழே நாட்களுக்கு முந்தைய எனது பதிவில் தான் “எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருத்தல் நலம்; அளவுக்கு மீறினால் பஞ்சாமிர்தம் கூட தித்திப்பின்றித் தெரியக் கூடும் !" என்று நான் நீ்ட்டி முழக்கியிருந்த பொதுவான கருத்துக்களெல்லாமே ‘டெக்ஸ்‘ எனும் இந்தப் பிரத்யேக phenomenon-க்குப் பொருத்திப் பார்ப்பது தான் தவறோ?
டெக்ஸ்
கதைகள் வெளியாகும் வேளைகளில்
பாராட்டுக்களோடு, விமர்சனங்களும் எழுவதை நான் அறியாதில்லை ! டுமீல்; ‘ணங்
–
சத்‘ என்ற அதிரடிகள் தான்
கதை நெடுகிலும் ;
கதைகளிள்
twist கிஞ்சித்தும் கிடையாது ; நேர்கோட்டில்
பயணிக்கும் plot-கள் ! என்று ஆங்காங்கே படிக்க நேரிடுவது வாஸ்தவமே ! ஆனால்
end of the day – இந்த
மஞ்சள் சட்டை மாவீரரை ஆராதிப்பதில்
நாம் அனைவருமே ஓரணியே என்பதை
இந்த விற்பனை stats தெள்ளத்
தெளிவாய்ப் பறைசாற்றுகின்றன
–
அதுவும் ஒரு நாற்பது மாத
அவகாசத்தினில்! 'ஒரு
வேளை வெறும் 10%
இடஒதுக்கீட்டில்
மட்டுமே நம் ரேஞ்சர்கள்
செயலாற்றி வருவதால் தான்
இந்த டிமாண்டோ?
எண்ணிக்கையில்
டெக்ஸ்
கதைகள் மிகுந்திடும் பட்சத்தில்
இந்த விறுவிறுப்பைத் தக்கச்
செய்வது சாத்தியமாகுமோ?'
என்ற
கேள்வியும் எனக்குள் ரவுண்டடிக்கத்
தான் செய்கிறது! ஆனால்
–
இந்த ஈரோட்டுப் புத்தக விழாவில்
‘தல‘யின் குறைச்சலான கையிருப்பின்
பொருட்டு நாமொரு guaranteed
விற்பனை இலக்கத்தைத் தவற விடுகிறோமோ
என்ற உறுத்தல் அந்தக் கேள்வியை
override செய்கிறது!
இன்றைய
தேதியில் விற்பனை விறுவிறுப்பும்,
ரொக்க
வரவுகளும் பாலைவனத்தில்
பதநீரைத் தேடுவது போல அரிதான
விஷயங்களாகி விட்ட நிலையில்
–
கண்முன்னே காத்திருக்கும்
வாய்ப்புகளை தேவைக்கதிகமான
நமது முன்ஜாக்கிரதையால் தவற
விடுகிறோமோ ? என்ற சிந்தனை
பலமாகவே குடிகொண்டு விட்டது!
சரி –
ஸ்டாக்கில் இல்லாத இதழ்களை
‘மள மள‘வென்று மறுபடியும்
தயார் செய்யலாம் என்று
பார்த்தால் இரு விஷயங்கள்
சிகப்புக் கொடியை உயர்த்தி
நிற்கின்றன!
முதலாவது
சமாச்சாரம் –
இன்றைய பேப்பர் விலைகள்!
2013ல்
வெளியான “சிகப்பாய் ஒரு
சொப்பனம்“ & “பூத
வேட்டை“ இதழ்களை அதே தரத்தில்
இன்று மறுபதிப்பு செய்யும்
பட்சத்தில் அவற்றை பழைய
விலைக்கே திரும்பவும் கொணர்வது
சாத்தியமே ஆகாது! டன்
ஒன்றிற்கு சுமார் ரூ.21,000
விலையேற்றம்
நிகழ்ந்துள்ளது - பேப்பர்
விலைகளில் –
இடைப்பட்ட 2 ½ ஆண்டுகளில் ! சிக்கல்
# 2 – நடப்பு
வெளியீடுகளின் பணிகளுக்கு
மத்தியில் இந்த மறுபதிப்பு
மசாலாக்களையும் அரைக்க
முயற்சிக்கும் போது முதலீட்டில் ;
பைண்டிங்கில்,
நமது
மிக்ஸி திணறத் தொடங்கி
விடுகிறது!
So- இனி
வரும் நாட்களில் “விற்பனைகளின்
தலைமகனுக்கு“ சற்றே கூடுதலான
print run ஒதுக்குவது
காலத்தின் கட்டாயமென்பது
புரிந்தாலும் what will
be right number in a year for TEX? என்ற மண்டைக் குடைச்சல் ஆரம்பித்து விட்டது! “தனியாகவொரு TEX சந்தா“ என்ற சிந்தனை எப்போதுமிலா
வகையில் இப்போது கவர்ச்சிகரமாய்
என் மனக்கண் முன்னே rampwalk
செய்து
வந்தாலும் –
அதை நடைமுறைக்குக் கொண்டு
வருவது அத்தனை சுலபமல்ல
என்பதும் புரியாதில்லை!
இத்தாலிய
மொழிபெயர்ப்புகளைத் துரிதப்படுத்த
ஜுனியர் எடிட்டரின் புண்ணியத்தில்
சிலபல ஏற்பாடுகள் உருவாகியிருப்பினும்
–
“30 நாட்களுக்கொரு
complete டெக்ஸ்“
என்ற கதிக்கு ஈடு கொடுப்பது
சாத்தியமா ? என்பதைப் பார்க்கத்
தான் வேண்டியிருக்கும்!
இத்தாலிய
மார்கெட்டில் மாதமொரு 100
பக்க
டெக்ஸ் இதழ் வெளிவந்தாலும்
–
அவை பெரும்பாலும் ஒரு கதையின்
துவக்க பாகமாகவோ;
இறுதி
பாகமாகவோ இருப்பது தான்
வாடிக்கை! 110 பக்கங்கள்;
160 பக்கங்கள்;
224 பக்கங்கள்;
340 பக்கங்கள்
என ஏகப்பட்ட மாறுபட்ட நீளங்களில்
TEX உருவாக்கப்படுவதால்
‘சடக்‘கென்று தொடரும்
பலகையைப் போட்டு விட அவர்கள்
தயங்குவதில்லை! நாமும்
கூட முன்பு இந்தத் ‘தொடர்கதை
டெக்ஸ்‘ தண்டவாளத்தில் இரயில்
விட்டுப் பார்த்தவர்கள்
தான்; ஆனால்
நல்ல விறுவிறுப்பான
கட்டத்தில்
“மீதச் சாத்துகளை 30
நாட்களுக்குப்
பின்னே நம்மவர் பட்டுவாடா
செய்திடுவார் ! To be continued“ என்று நான்
அறிவிக்க நேரிடும் போதெல்லாம்
–
ஒரு வண்டி மானசீகக் குத்துக்கள்
சிவகாசி நோக்கிப் பயணமாவது
உறுதி என்பது புரிவதால் இந்தச்
சாலையில் குதிரையை விடத்
தயக்கமாக உள்ளது!
என்
முதல் கேள்வியானது :
சீரான விலையோடு, இரண்டல்லது /
மூன்று
பாகங்களாய் டெக்சின் கதைகள் தொடர்கதைகளாய் வலம் வர என்றேனும் ஒரு வேளை
புலர்ந்தால் –
அதன் சாதக-பாதகங்கள்
என்னவாக இருந்திடும் –
உங்கள் பார்வைகளில்?
“விலையைப்
பற்றிப் பிரச்சனையில்லை;
கதைகளைப்
பிரிக்க வேண்டாமே!“
என்ற
school of thought-ன்
மாணாக்கர்களாக நீங்கள்
இருக்கும் பட்சங்களில் –
கேள்வி எண்:2 இது
தான் :
முழு
நீளக்கதைகளெனும் போது ஓராண்டில்
எத்தனை செட் மஞ்சள் சட்டைகளை நம்மவர் தயார் செய்து கையில்
வைத்திருப்பது சரி வரும்
என்று நினைக்கிறீர்கள் ?
Maxi டெக்ஸ் ;
Color டெக்ஸ் ;
Giant டெக்ஸ்
என்று விதவிதமான
format-களில்
இத்தாலியில் அவர்கள் செய்யும்
அதகளங்களைப் பார்த்து நாமும்
சூடு போட்டுக் கொள்ளாது –
நமக்கு ஏற்றதொரு பார்முலாவாக அமைத்துக் கொள்ளக்கூடியது தான் எதுவாக இருக்க முடியும் ? இது
பற்றி ஜுனியர் எடிட்டர் ஒரு
குட்டியான project report தயார்
செய்து என்னிடம் ஒப்படைத்துள்ளாரென்ற
போதிலும் –
நமது ஒட்டுமொத்த ஆதர்ஷ நாயகரின்
அட்டவணையை நிர்ணயிப்பது
பற்றிய உங்களது inputs
நம்
திட்டமிடலுக்கு வலு சேர்க்குமே?!
“இல்லை...
இது
பொன்முட்டையிடும் வாத்தைப்
பொரியல் போடும் முயற்சியாக
மாறி விடக்கூடும்!
வேண்டாமே
இந்த ஓவர்டோஸ்!“ என்ற
சிந்தனை உங்களை ஆட்கொள்கிறதா?
அப்படியானால் கேள்வி எண் 3 இதோ :
ஆண்டின் வழக்கமான அட்டவணையில் நார்மலாக இடம்பிடிக்கக் கூடிய
மூன்றோ –
நான்கு டெக்ஸ் அதிரடிகள்
நீங்கலாக நாம் திட்டமிடக்கூடிய
கூடுதல் கதைகளை ‘customized
imprints’ குடையின்
கீழே ஐக்கியமாக்குவது பற்றிய
உங்கள் அபிப்பிராயங்கள்
என்னவோ? ஆயிரம்...
ரெண்டாயிரம்
என்ற விலைகளில் அல்லாது –
தாக்குப் பிடிக்கக் கூடியதொரு
விலையோடு ‘தேவையானோர் முன்பதிவு
செய்து வாங்கிக் கொள்ளலாம்‘
என சந்தாக்களோடு சம்பந்தப்படுத்தாது
ஒரு தனிப்பட்ட ‘புல்லட்
டிரெயின்‘ தடத்துக்கு TEX -ன் கூடுதல் எண்ணிக்கைகளைத் திசைதிருப்பினால் நலம் தருமா?
Thoughts on that please? திரும்பவும்
சொல்கிறேன் –
ரெகுலர் சந்தாக்களில் /
அட்டவணைகளில்
டெக்ஸின் தற்போதைய பங்களிப்பு
தொடரும் போதே கூடுதலான
திட்டமிடல்களை மாத்திரமே
இன்னொரு parallel தடத்தில்
ஏற்றுவது பற்றியான உரத்த
சிந்தனையே இது! What would be your take on this guys ?
இது
2016ன்
அட்டவணைத் தயாரிப்பின் final
stages என்பதோடு
–
இப்போதைய திட்டமிடல்கள் தான்
2016 ஜனவரியின்
சென்னைப் புத்தக விழாவிலாவது
டெக்ஸின் புஷ்டியான பங்களிப்பை
உறுதிப்படுத்த உதவும் என்பதாலும்
இந்தக் கேள்விகள் இப்போது
அவசியமாகின்றன ! So-
தொப்பி
போட்ட நம் ஆத்ம நண்பர்களின்
அட்டவணையை நிர்ணயிக்கும்
பொருட்டு நமது சிந்திப்புத்
தொப்பிகளை தலையிலேற்றிப்
பார்ப்போமா ? And - here is a little surprise too !
Moving on, CCC-ன்
மூன்று இதழ்கள் ஏற்கனவே
அச்சாகி பைண்டிங்கில் உள்ளன !
ஆனால்
நமது நீலக் குட்டி மனிதர்களின் கதையுடனான இதழ் # 4
தயாராவதில்
தான் தாமதமே தலைதூக்குகின்றது!
For a change – நம்
பக்கத்துப் பணிகளை சுணக்கங்கள் ஏதுமின்றி முடித்து
விட்டிருந்தாலும் -
அவற்றின்
ஒவ்வொரு சிறு நுணுக்கங்களும்
படைப்பாளிகளின் பலகட்ட
ஒப்புதல்களுக்கு உட்பட்டவைகளாக உள்ளன ! நமது
இத்தனை கால அனுபவத்தில் இத்தனை
துல்லியத் தர ஒப்பீட்டை
வேறெந்தப் படைப்புப் பதிப்பகமும்
நடைமுறைப்படுத்தியதாக எனக்கு
நினைவேயில்லை! So-
அவர்களது
தலையசைப்பிற்காகக் காத்துள்ளது
வண்டி! அது
கிட்டிய 3 நாட்களுக்குள்ளாக
இதழ் தயாராகி விடும் என்ற
நிலையில்- கடந்த
சில பல நாட்களாகவே மெயில்பாக்ஸை
உற்று நோக்கிய வண்ணமே எங்கள்
பொழுதுகள் கரைந்து வருகின்றன!
நிலவரம்
இது தான் என்பதால் CCC-ன்
வெளியீட்டுத் தேதி நிச்சயமாய்
ஆகஸ்டின் துவக்கத் தேதிகளில்
தானிருக்க முடியும்!
ஒரு
உலகளாவிய வெற்றிப் படைப்பை
நிர்வகித்து வரும் நிறுவனத்துடன்
இது தான் நமது முதல் வியாபாரத்
தொடர்பு என்பதால் –
‘நொய் நொய்'யென்று‘ அவர்களை
நச்சுப் பிடுங்கிடத் தயக்கமாகவும்
உள்ளது; அதே
சமயம் நாசூக்கான நினைவூட்டல்களோடு
நமது அவசரத்தையும் தெரியப்படுத்தாமல்
நாமில்லை! And இன்னொரு விஷயமும் கூட : ஒரு
வழியாக தமிழ் பேசும் ஸ்மர்ப்களின்
“பொடி பாஷைக்கு“ படைப்பாளிகளின்
சம்மதத்தை வாங்கி விட்டோம்
–
அவர்களையும் குஷிப்படுத்தக்
கூடியதொரு 'பொடி ஏற்பாட்டோடு !' So- தற்போதைய
quality check-ல்
பச்சைக் கொடி சிக்னல் கிட்டி
விட்டால் –
ஸ்மர்ப் எக்ஸ்பிரஸ் குதூகலமாய்
கிளம்பி விடும்!
இம்மாதத்து
“கார்ட்டூன் மேளா“ பிரதான
இடத்தைப் பிடித்திருப்பினும்
–
நமது “சிரஞ்சீவிகளும்“ சத்தமின்றி
ஒளிவட்டத்தை ஈர்க்கக் காத்திருக்கிறார்கள்!
மின்சாரத்தை
மதிய லஞ்ச் ஆக்கிடும் மாயாவியும்,
சிலந்தி
வலைகளை வாஞ்சையோடு நாம்
பார்க்கவொரு காரணம் கண்டுபிடித்த
குற்றச் சக்கரவர்த்தியும்
தான் அந்த சிரஞ்சீவி ஜோடி!
சாலையின்
மறுபக்கம் பென்ஸ் கார் ஓடினாலும்
சரி; BMW; போர்ஷே
என ஒசத்தி ரகங்கள் ஷண்டிங் அடித்தாலும்
சரி- எங்களது
அம்பாஸிடர் கார் அலுங்காமல்,
குலுங்காமல்
சவாரியைத் தொடரும் என்று
நிரூபித்து வரும் இந்த 1960
ஆசாமிகளின்
preview இதோ!
1984ல்
இந்த இதழ் தயாரான சமயம் நாம்
ரூ.60/- கொடுத்துப்
போட்டு வாங்கிய ஒரிஜினல்
டிசைன் இன்றளவிற்குப்
பத்திரமாய், நயமாய்
இருப்பதால் அதனையே ஸ்கேன்
செய்து லேசான வர்ணமாற்றங்களோடு
களமிறக்குகிறோம்!
சமீப
மாதங்களைப் போலவே இம்முறையும்
மறுபதிப்புகளுக்கு மட்டும்
அந்த natural shade காகிதம்
என்பதால் ஒரு நிஜமான antique
feel இருக்கப்
போவது உறுதி! நியூயார்க்கை
அட்லஸில் மட்டுமே நம்மில்
பலரும் பார்த்து வந்த வயதுகளில்
வெளியான இந்த சாகஸம் –
சுமார் 30 ஆண்டு
இடைவெளிக்குப் பின்னே மீண்டுமொரு
முறை தலைகாட்டுகிறது!
இன்று
நியூயார்க்கிலேயே வசிக்கும்
வாசகர்களும் நம்மிடையே
உண்டென்ற நிலையில் அந்த நகரையே
நகற்றிச் செல்ல எத்தனிக்கும்
எத்தன் பற்றிய இந்தக் கதைக்கு
நாம் எவ்விதம் react
செய்திடவுள்ளோமென்று
அறிய ஆவல்!
ஒன்று
மட்டும் நிச்சயம் – Fleetway குழுமம்
கரைந்து போய் காலம் நிறையக்
கடந்து விட்டது ! அவர்கள்
மட்டும் இன்னமும் உயிரோடிருப்பின்
–
தமிழ் கூறும் காமிக்ஸ் உலகிற்கு
நிச்சயமாய் இலண்டனில் ஒரு
சிலை எழுப்பியிருப்பார்கள்!!
என்றும்
மாறா இளமையோடு அவர்களது
படைப்புகளை நம்முலகில்
வெற்றிநடை போடச் செய்துள்ள
பெருமை நிச்சயமாய் உங்களது
guys!
Before I wind off – ஈரோட்டிற்கு
ஆகஸ்ட் 8 & 9 தேதிகளில்
எட்டிப் பார்ப்பதாய் திட்டமிட்டுள்ளோம் !
ஸ்மர்ப்ஸ்
சங்கதி சற்றே துரிதமாய்
அரங்கேறியிருப்பின் பணிகளை
சீக்கிரமே முடித்துக் கொண்டு
அதற்கு முந்தைய வார இறுதியில்
ஈரோடு செல்ல சாத்தியமாகி
இருந்திருக்கும்!
But என்னால்
உறுதி சொல்ல இயலா ஒரு சூழலில்
ஈரோடு வர எண்ணிடும் உங்கள்
பயணத் திட்டங்களையும்
தொங்கலிலேயே தொடர விட எனக்குப்
பிரியமில்லை. So CCC அதற்கு
முன்பே தயாராகி /
வெளியாகி
விடும்; வாரயிறுதியில்
உங்களை சந்திப்பதை மட்டுமே
agenda-வாகக்
கொண்டு புத்தக விழாவுக்கு
டிக்கெட் போட்டுள்ளேன்!
Please do visit us folks – with family!!
ஞாயிறின்
பகல்பொழுதில் ஒரு பயணம்
காத்திருப்பதால் இந்தப்
பதிவை சற்றே அட்வான்ஸ்
செய்துள்ளேன்! And before I sign off - சமீபமாய் தேவையில்லா சர்ச்சைகளுக்கு இடம் தந்து வரும் இந்த அனாமதேய ஐ-டி-க்கள் பற்றிய எனது காலம் கடந்த two cents ! சொல்ல வரும் அபிப்பிராயம் சாதகமானதோ ; பாதகமானதோ - அதனை ஒரு மாற்றுப் பெயரில் முன்வைக்கும் அவசியம் எழும் போதே அவர் நம்மோடு ரெகுலராய் உறவாடி வரும் ஒரு வாசகரே என்பது தெளிவு தான் ! கருத்து யுத்தங்களும், ஈகோ மோதல்களும் அரங்கேறும் தளமாக நமது வலைப்பக்கம் இருந்த ஆரம்பத்து நாட்களில் தொடங்கிய இந்த "அனாமதேயக் கலாச்சாரம்" தானாகவே ஒயட்டுமென்று நான் அதற்கு பெரியதொரு கவனத்தைத் தந்திடவில்லை. தேவையின்றி நாமே வெளிச்சத்தை இது போன்ற முயற்சிகளுக்குத் தந்து இதனைக் கூடுதலாய் வளர்க்க உதவுவானேன் ? என்று நான் இதனில் ஒரு studied silence -ஐ தொடர்ந்து வந்தேன். ஆனால் இன்றைக்கு நமது வாசக வட்டம், ஒருவரையொருவர் பெர்சனலாகத் தெரிந்து வைத்துக் கொள்ளும் நெருக்கத்துடன் செயல்பட்டுவரும் ஒரு சந்தோஷ சூழலிலும் அந்த முகமூடிகளின் பிரயோகத்தை முன்பு போலவே விட்டேந்தியாய்ப் பார்க்க முடியவில்லை ! உரிமையோடு நாம் உறவாடும் நபருக்கொரு முகமூடி முகமும் உண்டெனும் போது அது நெருடலாகவே இருப்பது மட்டுமன்றி - 'இது இவர் தானோ ? இது அவர் தானோ ?' என்ற ரீதியில் அடிமனதில் மெல்லிய சந்தேகங்கள் எழுவதும் இயல்பு தானே ?
Yes, of course - "இது இன்னார் தான் !" என்று தெரிந்து இந்த பூலோக வாசத்தை நாம் கூடுதல் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளப்போவதில்லை தான் ! போர்வையோடு "அவர்கள்" காலமெல்லாம் கடந்தாலும் பூமி எப்போதும் போலவே தான் சுழலப் போகிறது ! ஆனால் பதிவிடும் சிந்தைகளுக்குச் சொந்தம் கொண்டாடக் கூடவொரு முகமூடி தேவைப்படுமளவுக்கு இங்கே இருப்போர் கொடுங்கோலர்களோ ; புல்தடுக்கிப் பயில்வான்களோ இல்லையே ! Why then the need or the craving for anonymity ???
காலணாவுக்குப் பெறாததொரு விஷயத்தின் பொருட்டு நிறையப் பேரின், நிறைய எனர்ஜி விரயம் ஆவது மட்டுமன்றி, தேவையிலா விவாதங்களும், மனக்கசப்புகளும் மட்டுமே மிஞ்சுகின்றன ! ஒரு மைல்கல் இதழ் வெளியான 3 வாரங்களுக்குள்ளாகவே ; இன்னுமொரு மைல்கல் ஒரே வாரத்தில் காத்திருக்கும் வேளைதனில் - இங்கே ஓடும் நமது பின்னூட்டங்களின் பெரும்பகுதி தேவையற்ற திசைநோக்கிப் பயணம் போகும் போதே - நாம் செல்லும் பாதை சரியில்லை என்பது புரிவதில் சிரமம் தானேது ? எனக்கொரு சூப்பர் சக்தி கிட்டி - நித்தமும் இங்கே வருகை தந்து moderator ஆகச் செயல்படுவது சாத்தியமே ஆகினும் கூட அதனை நான் செய்திடப் பிரியம் கொள்ள மாட்டேன் - simply because இங்கு வருகை தருவோர் சகலருமே நம் நண்பர்கள் ; காமிக்ஸ் காதலர்கள் ! "இது சரி ; இது சரியல்ல".... என்று நான் சொல்லியா சகலகலா வல்லவர்களான நம்மவர்களுக்கு discipline பற்றித் தெரியவொரு அவசியம் எழுந்திடப் போகிறது ? ஒரு துரதிர்ஷ்ட நாளில் அப்படியொரு வேளையும் புலர்ந்தே விட்டதெனில் - இந்தப் பதிவுப் பக்கத்தைச் 'சிவனே' என்றொரு தகவல் பலகையாக மட்டுமே உருமாற்றி விட்டு நடையைக் கட்டத் தான் தீர்மானிப்பேனே தவிர்த்து - வகுப்பறை வாத்தியாராய் அவதாரமெடுக்க நிச்சயம் முனைந்திட மாட்டேன் ! Call that a sign of weakness..? sure enough, but I'd rather err on the side of softness towards friends ! And simply because I still trust better sense will prevail !
நம்மிலிருக்கக் கூடிய குழந்தைத்தனங்களை ஸ்மர்ப்களை ரசிப்பதற்கும், பென்னியை பாராட்டுவதற்குமே விட்டு விட்டு - பாக்கி சமயங்களில் நம் திறன்களுக்கேற்ற மனிதர்களாய் நிஜ முகம் காட்டும் தைரியத்தோடு உலா வருவோமே ? போதுமே இந்தப் போர்வைகளும், முகமூடிகளும் ! Bye for now all ! See you around !