நண்பர்களே,
வணக்கம்.
சொற்பமான
தருணங்கள் நீங்கலாக,
அநேக
நேரங்களில் பேப்பரையும்,
பேனாவையும்
கையிலெடுத்துக் கொண்டு
உட்காரும் வரையிலும் அந்த வாரத்தின் வலைப்பதிவினில்
என்ன எழுதப் போகிறேன் என்பது பற்றியெல்லாம் பெரியதொரு
திட்டமிடல் என்னுள் ஓடுவதில்லை!
அப்போதைக்கு
அறிமுகம் காணக் காத்திருக்கும்
கதையைப் பற்றியோ;
நாயகரைப்
பற்றியோ முன்னோட்டமிடத்
தொடங்கினால் சிறுகச் சிறுக
பாக்கி விஷயங்கள் தத்தம்
இடங்களில் நிலைகொண்டு விடுவது
தான் வழக்கம். இந்த
வாரமும் அதற்கு விதிவிலக்கல்ல!
ஈரோட்டுப்
புத்தக விழாவிற்கு நம்மவர்கள்
தயாராகி
வருவதையும்,
அதற்கான
பிரதிகளைப் பண்டலிடுவதையும்
பார்த்துக் கொண்டிருந்த
சமயம் தான் இந்தப் பதிவின்
plot எனக்குள்
உதயமானது! கிட்டத்தட்ட
3
½ ஆண்டுகளாய்
கர்ணமடித்து இதழ்களின்
கையிருப்பு எண்ணிக்கையை
80க்கு
அருகாமைக்குக் கொணர்ந்திருக்கும்
நிலையில் நமது ஸ்டாக் ரிப்போர்ட்டை
மீண்டுமொரு முறை புரட்டிப்
பார்த்தேன்! ‘அட...
இதில்
இன்னமும் இவ்வளவு இருப்பு
உள்ளதா ?‘; ‘ம்ம்ம்...
இந்தத்
தொடரை ஜாக்கிரதையாய் தான்
கையாளணும் போலும்;‘
என்றபடி
scroll செய்த
போது “டெக்ஸ்
வில்லர் கதைகள்“
என்ற தலைப்போடு இருந்த பகுதியில்
என்
கவனம் நிலைகொண்டு நின்றது!
அது
சொன்ன சேதி இதுவே:
- சிகப்பாய் ஒரு சொப்பனம் - 2
- பூத வேட்டை - 4
- நில்... கவனி... சுடு - 61
- வல்லவர்கள் வீழ்வதில்லை - 120
- கார்சனின் கடந்த காலம் - 55
- நிலவொளியில் நரபலி - 427
- LMS - ஹி! ஹி! ஹி!
- காவல் கழுகு - 3
அதன்
பின்னே நமது இரும்புக்கையாரின்
இருப்பு விபரத்தையும் பார்த்து
விடுவோமே என்று முயற்சித்த
போது –
‘நயாகராவில்
மாயாவி‘
–
‘நஹி ஸ்டாக் மாயாவி‘யாகி
விட்டதைப் பார்த்திட முடிந்தது!
ஜனவரி
சென்னைப் புத்தக விழாவின்
போதே வாசகர்கள் குமுறு
குமுறென்று குமுறியதைத்
தொடர்ந்து இந்த இதழின்
கையிருப்பு தரைதட்டிப்
போயிருக்கும் என்பதை
எதிர்பார்த்திருந்ததால்
அதன் பொருட்டு பெரியதொரு
ஆச்சர்யமில்லை
என்னுள் !
டெக்ஸின்
இந்தத் தாண்டவமும் பெரியதொரு
வியப்பைத் தந்திடவில்லை
என்றாலும் –
சில hard facts-களை
மேஜைக்குக் கொண்டு வரும்
வேளையாக இது எனக்குப்பட்டது !
- 2012ன் நமது மறுவருகையைத் தொடர்ந்து நாம் இது வரை வெளியிட்டுள்ள இதழ்களின் எண்ணிக்கை 100!
- இந்த நூறுக்குள் டெக்ஸின் சாகஸங்கள் எத்தனை என்று பார்த்த போது 10 இதழ்கள் என்று தெரிந்தது (லயன் 250ம் சேர்த்து)
- 10 இதழ்களில் இருந்த கதைகளின் எண்ணிக்கை – 13!
- So - இந்த மூன்றாண்டுகளில் நமது flagship நாயகரின் பங்களிப்பு வெறும் 10% மாத்திரமே!
- “நிலவொளியில் நரபலி“ ரொம்பவே சீக்கிரமாய் காலியாகிப் போனதைத் தொடர்ந்து அதனை 2014-ல் மறுபதிப்பு செய்ததால் அதனில் மட்டும் ஓரளவிற்கு ஸ்டாக் உள்ளது.
- அதன் (சமீபக்) கையிருப்பை மறந்து விட்டு இரவுக் கழுகாரின் இருப்புக் கணக்கைப் பார்த்தால் காற்றோட்டமான கிட்டங்கி மாத்திரமே கண்ணில் தட்டுப்படுகிறது!
- சென்ற மாதம் வெளியான The லயன் 250 சந்தா / ஆன்லைன் நண்பர்களிடம் சாதித்தது ஒரு பக்கமெனில் – விற்பனையாளர்கள் பலரையும் கூடப் பரபரப்படையச் செய்துள்ளது தான் icing on the cake! குட்டி ஊரான அருப்புக்கோட்டையில் கூட இது வரை 40 பிரதிகள் (நேரடி) விற்பனை செய்துள்ளார் அங்கிருக்கும் முகவர்! நெய்வேலி புத்தக விழாவில் ஸ்டால் அமைத்திருந்த இரு விற்பனையாளர்களுமே அங்கே சொல்லிக் கொள்ளும் விற்பனை காட்டவில்லை – மின்னும் மரணம் & The லயன் 250 நீங்கலாக!
மோவாயைத்
தடவிக் கொண்டே இந்தப்
புள்ளிவிபரங்களை திரும்பவும்
அலசத் தொடங்கிய போது எனக்குள்
இரண்டு கேள்விகள் தான் எஞ்சி
நின்றன!
- டெக்ஸ் கதைகளின் ஆக்கிரமிப்பு சற்றே அதிகமென்று கடந்த ஆண்டின் கருத்துக் கணிப்பில் நண்பர்களின் ஒரு சாரார் அபிப்பிராயம் தெரிவித்திருந்தது சரி தானா?
- ஏழே நாட்களுக்கு முந்தைய எனது பதிவில் தான் “எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருத்தல் நலம்; அளவுக்கு மீறினால் பஞ்சாமிர்தம் கூட தித்திப்பின்றித் தெரியக் கூடும் !" என்று நான் நீ்ட்டி முழக்கியிருந்த பொதுவான கருத்துக்களெல்லாமே ‘டெக்ஸ்‘ எனும் இந்தப் பிரத்யேக phenomenon-க்குப் பொருத்திப் பார்ப்பது தான் தவறோ?
டெக்ஸ்
கதைகள் வெளியாகும் வேளைகளில்
பாராட்டுக்களோடு, விமர்சனங்களும் எழுவதை நான் அறியாதில்லை ! டுமீல்; ‘ணங்
–
சத்‘ என்ற அதிரடிகள் தான்
கதை நெடுகிலும் ;
கதைகளிள்
twist கிஞ்சித்தும் கிடையாது ; நேர்கோட்டில்
பயணிக்கும் plot-கள் ! என்று ஆங்காங்கே படிக்க நேரிடுவது வாஸ்தவமே ! ஆனால்
end of the day – இந்த
மஞ்சள் சட்டை மாவீரரை ஆராதிப்பதில்
நாம் அனைவருமே ஓரணியே என்பதை
இந்த விற்பனை stats தெள்ளத்
தெளிவாய்ப் பறைசாற்றுகின்றன
–
அதுவும் ஒரு நாற்பது மாத
அவகாசத்தினில்! 'ஒரு
வேளை வெறும் 10%
இடஒதுக்கீட்டில்
மட்டுமே நம் ரேஞ்சர்கள்
செயலாற்றி வருவதால் தான்
இந்த டிமாண்டோ?
எண்ணிக்கையில்
டெக்ஸ்
கதைகள் மிகுந்திடும் பட்சத்தில்
இந்த விறுவிறுப்பைத் தக்கச்
செய்வது சாத்தியமாகுமோ?'
என்ற
கேள்வியும் எனக்குள் ரவுண்டடிக்கத்
தான் செய்கிறது! ஆனால்
–
இந்த ஈரோட்டுப் புத்தக விழாவில்
‘தல‘யின் குறைச்சலான கையிருப்பின்
பொருட்டு நாமொரு guaranteed
விற்பனை இலக்கத்தைத் தவற விடுகிறோமோ
என்ற உறுத்தல் அந்தக் கேள்வியை
override செய்கிறது!
இன்றைய
தேதியில் விற்பனை விறுவிறுப்பும்,
ரொக்க
வரவுகளும் பாலைவனத்தில்
பதநீரைத் தேடுவது போல அரிதான
விஷயங்களாகி விட்ட நிலையில்
–
கண்முன்னே காத்திருக்கும்
வாய்ப்புகளை தேவைக்கதிகமான
நமது முன்ஜாக்கிரதையால் தவற
விடுகிறோமோ ? என்ற சிந்தனை
பலமாகவே குடிகொண்டு விட்டது!
சரி –
ஸ்டாக்கில் இல்லாத இதழ்களை
‘மள மள‘வென்று மறுபடியும்
தயார் செய்யலாம் என்று
பார்த்தால் இரு விஷயங்கள்
சிகப்புக் கொடியை உயர்த்தி
நிற்கின்றன!
முதலாவது
சமாச்சாரம் –
இன்றைய பேப்பர் விலைகள்!
2013ல்
வெளியான “சிகப்பாய் ஒரு
சொப்பனம்“ & “பூத
வேட்டை“ இதழ்களை அதே தரத்தில்
இன்று மறுபதிப்பு செய்யும்
பட்சத்தில் அவற்றை பழைய
விலைக்கே திரும்பவும் கொணர்வது
சாத்தியமே ஆகாது! டன்
ஒன்றிற்கு சுமார் ரூ.21,000
விலையேற்றம்
நிகழ்ந்துள்ளது - பேப்பர்
விலைகளில் –
இடைப்பட்ட 2 ½ ஆண்டுகளில் ! சிக்கல்
# 2 – நடப்பு
வெளியீடுகளின் பணிகளுக்கு
மத்தியில் இந்த மறுபதிப்பு
மசாலாக்களையும் அரைக்க
முயற்சிக்கும் போது முதலீட்டில் ;
பைண்டிங்கில்,
நமது
மிக்ஸி திணறத் தொடங்கி
விடுகிறது!
So- இனி
வரும் நாட்களில் “விற்பனைகளின்
தலைமகனுக்கு“ சற்றே கூடுதலான
print run ஒதுக்குவது
காலத்தின் கட்டாயமென்பது
புரிந்தாலும் what will
be right number in a year for TEX? என்ற மண்டைக் குடைச்சல் ஆரம்பித்து விட்டது! “தனியாகவொரு TEX சந்தா“ என்ற சிந்தனை எப்போதுமிலா
வகையில் இப்போது கவர்ச்சிகரமாய்
என் மனக்கண் முன்னே rampwalk
செய்து
வந்தாலும் –
அதை நடைமுறைக்குக் கொண்டு
வருவது அத்தனை சுலபமல்ல
என்பதும் புரியாதில்லை!
இத்தாலிய
மொழிபெயர்ப்புகளைத் துரிதப்படுத்த
ஜுனியர் எடிட்டரின் புண்ணியத்தில்
சிலபல ஏற்பாடுகள் உருவாகியிருப்பினும்
–
“30 நாட்களுக்கொரு
complete டெக்ஸ்“
என்ற கதிக்கு ஈடு கொடுப்பது
சாத்தியமா ? என்பதைப் பார்க்கத்
தான் வேண்டியிருக்கும்!
இத்தாலிய
மார்கெட்டில் மாதமொரு 100
பக்க
டெக்ஸ் இதழ் வெளிவந்தாலும்
–
அவை பெரும்பாலும் ஒரு கதையின்
துவக்க பாகமாகவோ;
இறுதி
பாகமாகவோ இருப்பது தான்
வாடிக்கை! 110 பக்கங்கள்;
160 பக்கங்கள்;
224 பக்கங்கள்;
340 பக்கங்கள்
என ஏகப்பட்ட மாறுபட்ட நீளங்களில்
TEX உருவாக்கப்படுவதால்
‘சடக்‘கென்று தொடரும்
பலகையைப் போட்டு விட அவர்கள்
தயங்குவதில்லை! நாமும்
கூட முன்பு இந்தத் ‘தொடர்கதை
டெக்ஸ்‘ தண்டவாளத்தில் இரயில்
விட்டுப் பார்த்தவர்கள்
தான்; ஆனால்
நல்ல விறுவிறுப்பான
கட்டத்தில்
“மீதச் சாத்துகளை 30
நாட்களுக்குப்
பின்னே நம்மவர் பட்டுவாடா
செய்திடுவார் ! To be continued“ என்று நான்
அறிவிக்க நேரிடும் போதெல்லாம்
–
ஒரு வண்டி மானசீகக் குத்துக்கள்
சிவகாசி நோக்கிப் பயணமாவது
உறுதி என்பது புரிவதால் இந்தச்
சாலையில் குதிரையை விடத்
தயக்கமாக உள்ளது!
என்
முதல் கேள்வியானது :
சீரான விலையோடு, இரண்டல்லது /
மூன்று
பாகங்களாய் டெக்சின் கதைகள் தொடர்கதைகளாய் வலம் வர என்றேனும் ஒரு வேளை
புலர்ந்தால் –
அதன் சாதக-பாதகங்கள்
என்னவாக இருந்திடும் –
உங்கள் பார்வைகளில்?
“விலையைப்
பற்றிப் பிரச்சனையில்லை;
கதைகளைப்
பிரிக்க வேண்டாமே!“
என்ற
school of thought-ன்
மாணாக்கர்களாக நீங்கள்
இருக்கும் பட்சங்களில் –
கேள்வி எண்:2 இது
தான் :
முழு
நீளக்கதைகளெனும் போது ஓராண்டில்
எத்தனை செட் மஞ்சள் சட்டைகளை நம்மவர் தயார் செய்து கையில்
வைத்திருப்பது சரி வரும்
என்று நினைக்கிறீர்கள் ?
Maxi டெக்ஸ் ;
Color டெக்ஸ் ;
Giant டெக்ஸ்
என்று விதவிதமான
format-களில்
இத்தாலியில் அவர்கள் செய்யும்
அதகளங்களைப் பார்த்து நாமும்
சூடு போட்டுக் கொள்ளாது –
நமக்கு ஏற்றதொரு பார்முலாவாக அமைத்துக் கொள்ளக்கூடியது தான் எதுவாக இருக்க முடியும் ? இது
பற்றி ஜுனியர் எடிட்டர் ஒரு
குட்டியான project report தயார்
செய்து என்னிடம் ஒப்படைத்துள்ளாரென்ற
போதிலும் –
நமது ஒட்டுமொத்த ஆதர்ஷ நாயகரின்
அட்டவணையை நிர்ணயிப்பது
பற்றிய உங்களது inputs
நம்
திட்டமிடலுக்கு வலு சேர்க்குமே?!
“இல்லை...
இது
பொன்முட்டையிடும் வாத்தைப்
பொரியல் போடும் முயற்சியாக
மாறி விடக்கூடும்!
வேண்டாமே
இந்த ஓவர்டோஸ்!“ என்ற
சிந்தனை உங்களை ஆட்கொள்கிறதா?
அப்படியானால் கேள்வி எண் 3 இதோ :
ஆண்டின் வழக்கமான அட்டவணையில் நார்மலாக இடம்பிடிக்கக் கூடிய
மூன்றோ –
நான்கு டெக்ஸ் அதிரடிகள்
நீங்கலாக நாம் திட்டமிடக்கூடிய
கூடுதல் கதைகளை ‘customized
imprints’ குடையின்
கீழே ஐக்கியமாக்குவது பற்றிய
உங்கள் அபிப்பிராயங்கள்
என்னவோ? ஆயிரம்...
ரெண்டாயிரம்
என்ற விலைகளில் அல்லாது –
தாக்குப் பிடிக்கக் கூடியதொரு
விலையோடு ‘தேவையானோர் முன்பதிவு
செய்து வாங்கிக் கொள்ளலாம்‘
என சந்தாக்களோடு சம்பந்தப்படுத்தாது
ஒரு தனிப்பட்ட ‘புல்லட்
டிரெயின்‘ தடத்துக்கு TEX -ன் கூடுதல் எண்ணிக்கைகளைத் திசைதிருப்பினால் நலம் தருமா?
Thoughts on that please? திரும்பவும்
சொல்கிறேன் –
ரெகுலர் சந்தாக்களில் /
அட்டவணைகளில்
டெக்ஸின் தற்போதைய பங்களிப்பு
தொடரும் போதே கூடுதலான
திட்டமிடல்களை மாத்திரமே
இன்னொரு parallel தடத்தில்
ஏற்றுவது பற்றியான உரத்த
சிந்தனையே இது! What would be your take on this guys ?
இது
2016ன்
அட்டவணைத் தயாரிப்பின் final
stages என்பதோடு
–
இப்போதைய திட்டமிடல்கள் தான்
2016 ஜனவரியின்
சென்னைப் புத்தக விழாவிலாவது
டெக்ஸின் புஷ்டியான பங்களிப்பை
உறுதிப்படுத்த உதவும் என்பதாலும்
இந்தக் கேள்விகள் இப்போது
அவசியமாகின்றன ! So-
தொப்பி
போட்ட நம் ஆத்ம நண்பர்களின்
அட்டவணையை நிர்ணயிக்கும்
பொருட்டு நமது சிந்திப்புத்
தொப்பிகளை தலையிலேற்றிப்
பார்ப்போமா ? And - here is a little surprise too !
Moving on, CCC-ன்
மூன்று இதழ்கள் ஏற்கனவே
அச்சாகி பைண்டிங்கில் உள்ளன !
ஆனால்
நமது நீலக் குட்டி மனிதர்களின் கதையுடனான இதழ் # 4
தயாராவதில்
தான் தாமதமே தலைதூக்குகின்றது!
For a change – நம்
பக்கத்துப் பணிகளை சுணக்கங்கள் ஏதுமின்றி முடித்து
விட்டிருந்தாலும் -
அவற்றின்
ஒவ்வொரு சிறு நுணுக்கங்களும்
படைப்பாளிகளின் பலகட்ட
ஒப்புதல்களுக்கு உட்பட்டவைகளாக உள்ளன ! நமது
இத்தனை கால அனுபவத்தில் இத்தனை
துல்லியத் தர ஒப்பீட்டை
வேறெந்தப் படைப்புப் பதிப்பகமும்
நடைமுறைப்படுத்தியதாக எனக்கு
நினைவேயில்லை! So-
அவர்களது
தலையசைப்பிற்காகக் காத்துள்ளது
வண்டி! அது
கிட்டிய 3 நாட்களுக்குள்ளாக
இதழ் தயாராகி விடும் என்ற
நிலையில்- கடந்த
சில பல நாட்களாகவே மெயில்பாக்ஸை
உற்று நோக்கிய வண்ணமே எங்கள்
பொழுதுகள் கரைந்து வருகின்றன!
நிலவரம்
இது தான் என்பதால் CCC-ன்
வெளியீட்டுத் தேதி நிச்சயமாய்
ஆகஸ்டின் துவக்கத் தேதிகளில்
தானிருக்க முடியும்!
ஒரு
உலகளாவிய வெற்றிப் படைப்பை
நிர்வகித்து வரும் நிறுவனத்துடன்
இது தான் நமது முதல் வியாபாரத்
தொடர்பு என்பதால் –
‘நொய் நொய்'யென்று‘ அவர்களை
நச்சுப் பிடுங்கிடத் தயக்கமாகவும்
உள்ளது; அதே
சமயம் நாசூக்கான நினைவூட்டல்களோடு
நமது அவசரத்தையும் தெரியப்படுத்தாமல்
நாமில்லை! And இன்னொரு விஷயமும் கூட : ஒரு
வழியாக தமிழ் பேசும் ஸ்மர்ப்களின்
“பொடி பாஷைக்கு“ படைப்பாளிகளின்
சம்மதத்தை வாங்கி விட்டோம்
–
அவர்களையும் குஷிப்படுத்தக்
கூடியதொரு 'பொடி ஏற்பாட்டோடு !' So- தற்போதைய
quality check-ல்
பச்சைக் கொடி சிக்னல் கிட்டி
விட்டால் –
ஸ்மர்ப் எக்ஸ்பிரஸ் குதூகலமாய்
கிளம்பி விடும்!
இம்மாதத்து
“கார்ட்டூன் மேளா“ பிரதான
இடத்தைப் பிடித்திருப்பினும்
–
நமது “சிரஞ்சீவிகளும்“ சத்தமின்றி
ஒளிவட்டத்தை ஈர்க்கக் காத்திருக்கிறார்கள்!
மின்சாரத்தை
மதிய லஞ்ச் ஆக்கிடும் மாயாவியும்,
சிலந்தி
வலைகளை வாஞ்சையோடு நாம்
பார்க்கவொரு காரணம் கண்டுபிடித்த
குற்றச் சக்கரவர்த்தியும்
தான் அந்த சிரஞ்சீவி ஜோடி!
சாலையின்
மறுபக்கம் பென்ஸ் கார் ஓடினாலும்
சரி; BMW; போர்ஷே
என ஒசத்தி ரகங்கள் ஷண்டிங் அடித்தாலும்
சரி- எங்களது
அம்பாஸிடர் கார் அலுங்காமல்,
குலுங்காமல்
சவாரியைத் தொடரும் என்று
நிரூபித்து வரும் இந்த 1960
ஆசாமிகளின்
preview இதோ!
1984ல்
இந்த இதழ் தயாரான சமயம் நாம்
ரூ.60/- கொடுத்துப்
போட்டு வாங்கிய ஒரிஜினல்
டிசைன் இன்றளவிற்குப்
பத்திரமாய், நயமாய்
இருப்பதால் அதனையே ஸ்கேன்
செய்து லேசான வர்ணமாற்றங்களோடு
களமிறக்குகிறோம்!
சமீப
மாதங்களைப் போலவே இம்முறையும்
மறுபதிப்புகளுக்கு மட்டும்
அந்த natural shade காகிதம்
என்பதால் ஒரு நிஜமான antique
feel இருக்கப்
போவது உறுதி! நியூயார்க்கை
அட்லஸில் மட்டுமே நம்மில்
பலரும் பார்த்து வந்த வயதுகளில்
வெளியான இந்த சாகஸம் –
சுமார் 30 ஆண்டு
இடைவெளிக்குப் பின்னே மீண்டுமொரு
முறை தலைகாட்டுகிறது!
இன்று
நியூயார்க்கிலேயே வசிக்கும்
வாசகர்களும் நம்மிடையே
உண்டென்ற நிலையில் அந்த நகரையே
நகற்றிச் செல்ல எத்தனிக்கும்
எத்தன் பற்றிய இந்தக் கதைக்கு
நாம் எவ்விதம் react
செய்திடவுள்ளோமென்று
அறிய ஆவல்!
ஒன்று
மட்டும் நிச்சயம் – Fleetway குழுமம்
கரைந்து போய் காலம் நிறையக்
கடந்து விட்டது ! அவர்கள்
மட்டும் இன்னமும் உயிரோடிருப்பின்
–
தமிழ் கூறும் காமிக்ஸ் உலகிற்கு
நிச்சயமாய் இலண்டனில் ஒரு
சிலை எழுப்பியிருப்பார்கள்!!
என்றும்
மாறா இளமையோடு அவர்களது
படைப்புகளை நம்முலகில்
வெற்றிநடை போடச் செய்துள்ள
பெருமை நிச்சயமாய் உங்களது
guys!
Before I wind off – ஈரோட்டிற்கு
ஆகஸ்ட் 8 & 9 தேதிகளில்
எட்டிப் பார்ப்பதாய் திட்டமிட்டுள்ளோம் !
ஸ்மர்ப்ஸ்
சங்கதி சற்றே துரிதமாய்
அரங்கேறியிருப்பின் பணிகளை
சீக்கிரமே முடித்துக் கொண்டு
அதற்கு முந்தைய வார இறுதியில்
ஈரோடு செல்ல சாத்தியமாகி
இருந்திருக்கும்!
But என்னால்
உறுதி சொல்ல இயலா ஒரு சூழலில்
ஈரோடு வர எண்ணிடும் உங்கள்
பயணத் திட்டங்களையும்
தொங்கலிலேயே தொடர விட எனக்குப்
பிரியமில்லை. So CCC அதற்கு
முன்பே தயாராகி /
வெளியாகி
விடும்; வாரயிறுதியில்
உங்களை சந்திப்பதை மட்டுமே
agenda-வாகக்
கொண்டு புத்தக விழாவுக்கு
டிக்கெட் போட்டுள்ளேன்!
Please do visit us folks – with family!!
ஞாயிறின்
பகல்பொழுதில் ஒரு பயணம்
காத்திருப்பதால் இந்தப்
பதிவை சற்றே அட்வான்ஸ்
செய்துள்ளேன்! And before I sign off - சமீபமாய் தேவையில்லா சர்ச்சைகளுக்கு இடம் தந்து வரும் இந்த அனாமதேய ஐ-டி-க்கள் பற்றிய எனது காலம் கடந்த two cents ! சொல்ல வரும் அபிப்பிராயம் சாதகமானதோ ; பாதகமானதோ - அதனை ஒரு மாற்றுப் பெயரில் முன்வைக்கும் அவசியம் எழும் போதே அவர் நம்மோடு ரெகுலராய் உறவாடி வரும் ஒரு வாசகரே என்பது தெளிவு தான் ! கருத்து யுத்தங்களும், ஈகோ மோதல்களும் அரங்கேறும் தளமாக நமது வலைப்பக்கம் இருந்த ஆரம்பத்து நாட்களில் தொடங்கிய இந்த "அனாமதேயக் கலாச்சாரம்" தானாகவே ஒயட்டுமென்று நான் அதற்கு பெரியதொரு கவனத்தைத் தந்திடவில்லை. தேவையின்றி நாமே வெளிச்சத்தை இது போன்ற முயற்சிகளுக்குத் தந்து இதனைக் கூடுதலாய் வளர்க்க உதவுவானேன் ? என்று நான் இதனில் ஒரு studied silence -ஐ தொடர்ந்து வந்தேன். ஆனால் இன்றைக்கு நமது வாசக வட்டம், ஒருவரையொருவர் பெர்சனலாகத் தெரிந்து வைத்துக் கொள்ளும் நெருக்கத்துடன் செயல்பட்டுவரும் ஒரு சந்தோஷ சூழலிலும் அந்த முகமூடிகளின் பிரயோகத்தை முன்பு போலவே விட்டேந்தியாய்ப் பார்க்க முடியவில்லை ! உரிமையோடு நாம் உறவாடும் நபருக்கொரு முகமூடி முகமும் உண்டெனும் போது அது நெருடலாகவே இருப்பது மட்டுமன்றி - 'இது இவர் தானோ ? இது அவர் தானோ ?' என்ற ரீதியில் அடிமனதில் மெல்லிய சந்தேகங்கள் எழுவதும் இயல்பு தானே ?
Yes, of course - "இது இன்னார் தான் !" என்று தெரிந்து இந்த பூலோக வாசத்தை நாம் கூடுதல் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளப்போவதில்லை தான் ! போர்வையோடு "அவர்கள்" காலமெல்லாம் கடந்தாலும் பூமி எப்போதும் போலவே தான் சுழலப் போகிறது ! ஆனால் பதிவிடும் சிந்தைகளுக்குச் சொந்தம் கொண்டாடக் கூடவொரு முகமூடி தேவைப்படுமளவுக்கு இங்கே இருப்போர் கொடுங்கோலர்களோ ; புல்தடுக்கிப் பயில்வான்களோ இல்லையே ! Why then the need or the craving for anonymity ???
காலணாவுக்குப் பெறாததொரு விஷயத்தின் பொருட்டு நிறையப் பேரின், நிறைய எனர்ஜி விரயம் ஆவது மட்டுமன்றி, தேவையிலா விவாதங்களும், மனக்கசப்புகளும் மட்டுமே மிஞ்சுகின்றன ! ஒரு மைல்கல் இதழ் வெளியான 3 வாரங்களுக்குள்ளாகவே ; இன்னுமொரு மைல்கல் ஒரே வாரத்தில் காத்திருக்கும் வேளைதனில் - இங்கே ஓடும் நமது பின்னூட்டங்களின் பெரும்பகுதி தேவையற்ற திசைநோக்கிப் பயணம் போகும் போதே - நாம் செல்லும் பாதை சரியில்லை என்பது புரிவதில் சிரமம் தானேது ? எனக்கொரு சூப்பர் சக்தி கிட்டி - நித்தமும் இங்கே வருகை தந்து moderator ஆகச் செயல்படுவது சாத்தியமே ஆகினும் கூட அதனை நான் செய்திடப் பிரியம் கொள்ள மாட்டேன் - simply because இங்கு வருகை தருவோர் சகலருமே நம் நண்பர்கள் ; காமிக்ஸ் காதலர்கள் ! "இது சரி ; இது சரியல்ல".... என்று நான் சொல்லியா சகலகலா வல்லவர்களான நம்மவர்களுக்கு discipline பற்றித் தெரியவொரு அவசியம் எழுந்திடப் போகிறது ? ஒரு துரதிர்ஷ்ட நாளில் அப்படியொரு வேளையும் புலர்ந்தே விட்டதெனில் - இந்தப் பதிவுப் பக்கத்தைச் 'சிவனே' என்றொரு தகவல் பலகையாக மட்டுமே உருமாற்றி விட்டு நடையைக் கட்டத் தான் தீர்மானிப்பேனே தவிர்த்து - வகுப்பறை வாத்தியாராய் அவதாரமெடுக்க நிச்சயம் முனைந்திட மாட்டேன் ! Call that a sign of weakness..? sure enough, but I'd rather err on the side of softness towards friends ! And simply because I still trust better sense will prevail !
நம்மிலிருக்கக் கூடிய குழந்தைத்தனங்களை ஸ்மர்ப்களை ரசிப்பதற்கும், பென்னியை பாராட்டுவதற்குமே விட்டு விட்டு - பாக்கி சமயங்களில் நம் திறன்களுக்கேற்ற மனிதர்களாய் நிஜ முகம் காட்டும் தைரியத்தோடு உலா வருவோமே ? போதுமே இந்தப் போர்வைகளும், முகமூடிகளும் ! Bye for now all ! See you around !
படிச்சுட்டு வருகிறேன் சார்
ReplyDelete2nd.
ReplyDeleteSpider reprint covers superb. Also happy to see Tex coming to visit this Deepavali. Hatsoff sir.
Deletemeanwhile regarding your question Whether we run a parallel Tex prints. My personal opinion it wont be a good idea. All comic lovers cant afford 2 parallel subscriptions and also it will divide comics buyers into affordable and nonaffordable. Also a few may stop reading comics at all when they cant buy all the comics.
But still you can call for a poll both online and offline. Meanwhile instead of parallel prints, You can plan special editions like you did this year and within limited nos.
3rd -a??? Sokka Sokka..Naan third..naan third..
ReplyDeleteWe need tex every month.... 12 is not a big number for one year.... please release tex books in natural shade paper
ReplyDeletesrini : Natural shade காகிதத்தின் விலைகள் புது இதழ்களுக்குக் கட்டுபடியாகாதே...! And இதற்கும் மேலாய் விலைகளைக் கூட்டுவதிலும் எனக்கு உடன்பாடில்லை !
Deleteவணக்கம் நண்பர்களே... படிச்சுட்டு வந்திடறேன்....
ReplyDeleteதனி சந்தாவாக 24 இதழ்கள்.. ப்ளஸ் ரெகுலர் சந்தாவில் ஸ்பெசல் மற்றும் இரண்டு மூன்று இதழ்களாக வரும் தொடர் இதழ்கள் 12 ...இப்போது சந்தா அறிவித்தால் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் எண்ணிக்கை நிலவரம் தெரிந்து விடும்... இது ஒரு ரெகுலர் ரொட்டேசனுக்கு வந்து விடலாம்... மற்ற சந்தாக்கள் எப்பவும் போல NOV or DEC announce செய்யலாம்...
Delete+1
DeleteI TOO . ..படிச்சுட்டு வருகிறேன் சார். . .
ReplyDeleteநானும் படிச்சுட்டு வாரேன்.
ReplyDelete10 th pass...
ReplyDeleteQuestion 1: சீரான விலையோடு, இரண்டல்லது / மூன்று பாகங்களாய் டெக்சின் கதைகள் தொடர்கதைகளாய் வலம் வர என்றேனும் ஒரு வேளை புலர்ந்தால் – அதன் சாதக-பாதகங்கள் என்னவாக இருந்திடும் – உங்கள் பார்வைகளில்?
ReplyDeleteWe had already experienced this before with INR 10 books. Please don’t split the same stories into different parts. We can’t see a single action movie in monthly episodes. Instead we can try small Tex full stories.
Question 2: “இல்லை... இது பொன்முட்டையிடும் வாத்தைப் பொரியல் போடும் முயற்சியாக மாறி விடக்கூடும்! வேண்டாமே இந்த ஓவர்டோஸ்!“ என்ற சிந்தனை உங்களை ஆட்கொள்கிறதா?
Yes certainly. We can’t have Avatar or Bahuballi each month.
But with Maxi Tex, Color Tex, Giant Tex and recent new Tex plans, we can certainly try different variety.
Question 3: ‘customized imprints’
My same old question – Whether any chance of releasing TEX with bigger art size in customized imprints. The landscape of the TEX stories will be more great in bigger IMAX screen size. But at what cost is the million dollar questions, with regards to the number of pages the stories goes.
In the customized imprints you can plan to release all the old hit reprints and also the new TEX you had mentioned some months ago.
Rama Karthigai : //we can try small Tex full stories.//
DeleteNot many around...and "காவல் கழுகு" போன்ற நீளத்தில் குறைச்சலான ; சுவாரஸ்யத்திலும் குறைவான கதைகளாக அவை அமைந்து விட்டால் சிக்கலே !
“தனியாகவொரு TEX சந்தா“
ReplyDelete+1111111111111111111111111111
நானும் படிச்சுட்டு வாரேன்.
ReplyDeleteஇரவு +ஞாயிறு காலை வணக்கம் நண்பர்களே படிச்சிட்டு வருகிறேன்
ReplyDelete//“தனியாகவொரு TEX சந்தா“//
ReplyDeleteஇதற்காகத்தானே இவ்வளவு நாளா காத்திருந்தோம் ... மாதமிருமுறையா .. மும்முறையா? சீக்கிரம் அறிவிக்கவும்
//..சீரான விலையோடு, இரண்டல்லது / மூன்று பாகங்களாய் டெக்சின் கதைகள் தொடர்கதைகளாய் வலம் வர என்றேனும் ஒரு வேளை புலர்ந்தால் – அதன் சாதக-பாதகங்கள் என்னவாக இருந்திடும் – உங்கள் பார்வைகளில்? ..//
... என்னால் ஒத்துக்கமுடியாது :)
//..“விலையைப் பற்றிப் பிரச்சனையில்லை; கதைகளைப் பிரிக்க வேண்டாமே!“ ..//
எம்புட்டு செலவானாலும் பரவாயில்லை... தல-யின் கும்மங்குத்துக்கள் முழுசா வேணும்
//..முழு நீளக்கதைகளெனும் போது ஓராண்டில் எத்தனை செட் மஞ்சள் சட்டைகளை நம்மவர் தயார் செய்து கையில் வைத்திருப்பது சரி வரும் என்று நினைக்கிறீர்கள் ? ..//
கலர்-ல பார்த்து ருசி கண்ட பின் இனிமேல் தல-யை கருப்பு வெள்ளையில் பார்த்தால் சரி வராது .. So, மாதமிருமுறை or ஒருமுறை வண்ணத்தில் வந்தே ஆக வேண்டும் .. அது normal-லோ, giant-டோ, maxi ஆகவோ
//..ஆண்டின் வழக்கமான அட்டவணையில் நார்மலாக இடம்பிடிக்கக் கூடிய மூன்றோ – நான்கு டெக்ஸ் அதிரடிகள் நீங்கலாக நாம் திட்டமிடக்கூடிய கூடுதல் கதைகளை ‘customized imprints’ குடையின் கீழே ஐக்கியமாக்குவது பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள் என்னவோ? ஆயிரம்... ரெண்டாயிரம் என்ற விலைகளில் அல்லாது – தாக்குப் பிடிக்கக் கூடியதொரு விலையோடு ‘தேவையானோர் முன்பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம்‘ என சந்தாக்களோடு சம்பந்தப்படுத்தாது ஒரு தனிப்பட்ட ‘புல்லட் டிரெயின்‘ தடத்துக்கு TEX -ன் கூடுதல் எண்ணிக்கைகளைத் திசைதிருப்பினால் நலம் தருமா? ..//
"தல-க்கு தனி சந்தா" - உடனடியா செயல்படுத்தவும்
Periyar : //எம்புட்டு செலவானாலும் பரவாயில்லை... தல-யின் கும்மங்குத்துக்கள் முழுசா வேணும்//
Deleteநிச்சயம் வருவீர்கள் ; இதைத் தான் பதிவிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் ! :-) :-)
//மாதமிருமுறையா .. மும்முறையா? சீக்கிரம் அறிவிக்கவும் //
Delete//"தல-க்கு தனி சந்தா" - உடனடியா செயல்படுத்தவும்//
+1
என்னைக் கேட்டால் டெக்ஸை தனித் தண்டவாளத்தில் ஒரு வருடம் ஓட விட்டுத்தான் பார்க்கலாமே.... ஜெயிக்கின்ற குதிரைக்கு அதிக வாய்ப்புகள் கொடுப்பது ஒன்றும் தவறில்லையே.
ReplyDeleteRummi XIII : ஒ.வா. ..தி.வா. !
Delete+1 sir please try.....
DeleteTex separate subscribe best
ReplyDeleteஸ்பெசல்கள் கலரில்.... மீதி ஈஸ்ட்மென்ட்டில்....
ReplyDeleteEvery quarterly 2-3 TeX stories in CCC format (Box set) can be published, with option of buying separate books. For this a separate subscription is also a good option. TeX will never be over dose, I really liked the first story in TeX 250.
ReplyDeleteMahesh : //I really liked the first story in TeX 250//
Deleteஅது Maxi டெக்ஸ் # 1 ! தீபாவளிக்கு வரக் காத்துள்ளது # 2 !
கொடுமைஸ் ஆஃப் இந்தியா.
ReplyDeleteநான் ஏற்கனவே 1ஆம் தேதி வருவதற்கான பயணஏற்பாட்டை செய்து விட்டேன். நண்பர்களுடன் இணைந்து வருவதால், இனிமேல் மாற்றவும் இயலாது.
ஆக, ஈரோட்டிற்கு மறுபடியும் அடுத்த வாரம் வரவேண்டிய சூழலை ஏற்படுத்தி விட்டீர்களே?
ஜூனியர் எடிட்டர் மட்டுமாவது தலையை 1ஆம் தேதி தலையைக் காட்டுவாரா? இல்லை, அவரும் எட்டாம் தேதி தான் வருகிறாரா?
King Viswa : சாரி...சார்...ஸ்மர்ப் படலம் எதிர்பாராத் திருப்பம் என்பதால் எங்களின் பயணத் திட்டங்களில் மாற்றம் தவிர்க்க இயலா ஒன்றாகி விட்டது !
Deleteஆஹா..... அப்படியெனில் ஈரோட்டிற்கு இருமுறை விஜயம் செய்வதை தவிர்க்கவே இயலாது போலிருக்கிறதே?
Deleteஅப்படி எனில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மறுபதிப்புகள் மட்டும் தான் கிடைக்குமா?
முத்து 350 எட்டாம் தேதி தான் வருமா?
பின் குறிப்பு: உங்களை சந்திப்பதற்காக ஒரு நண்பர் தன்னுடைய திருமண நிச்சயதார்த்ததை தள்ளி வைத்து விட்டு, ஒன்றாம் தேதி வர திட்டமிட்டுள்ளார். அவருக்கு நேற்றே தகவல் சொல்லி விட்டேன். அவர் ஓக்கே தான், ஆனால் அவருடைய வருங்கால மனைவி தான் உங்கள் மீது சற்று (கொஞ்சமா? ஹூம்) கோபத்தில் இருக்கிறார். ஜாக்கிரதை.....
வணக்கம் விஷ்வா சார்!உங்களையும் ஈரோட்டில் சந்திக்கலாமா?மிக்க சந்தோசம்..!
Deleteநீண்ட நாட்கள் கழித்து இங்கே தலை காட்டிய விஸ்வா சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ..:)
DeleteEditor Vijayan sir
ReplyDeleteThank u very much for what we r going to have as Diwali treat. Great sir. I have no words to express my happiness.
Tex monthly? Super sir. If others think it as over dose, then 'bi-monthly issue' would be fine sir.
I never support customized imprints for tex stories as every comic lover should get tex stories in a normal rate.
Waiting to meet u at erode book fair sir
Good night friends.have a funfilled sunday.
Ramaiya Raja : சிந்தித்துச் செயலாற்றுவோம் சார் !
Deleteஸ்பெசல்கள் கலரில்.... மீதி ஈஸ்ட்மென்ட்டில்....
ReplyDeleteசனிக்கிழமை இரவு வணக்கம் மற்றும் ஞாயிறு காலை வணக்கம் சார் .....
ReplyDeleteஎன்னது சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கும் ....டெக்ஸுக்கு தனி சந்தா கிடையாது ...என்ற நிலை மாறி.....மாதம் ஒன்றா...இரண்டா .....ஆண்டவாஆஆஆஆஆஆஆஆஆஆஆ
இது கனவல்லவே....இல்லை வலிக்கு...நிஜமான நிஜம் தான் ....சூப்பர் ...சூப்பர் .....பாகுபலி ஸ்டைலில் ....
"" எல்லை இல்லாத ஆதியே ....
எல்லாம் உணர்ந்த சோதியே ...." மாதம் 1ஆ 2ஆ ....உங்கள் முடிவுக்கே விடுகிறோம் ....சார் ....
ஆனாலும் என் தனிப்பட்ட விருப்பம் .....
12இதழ்கள் ...மாதம் ஒன்று ....ஒரு மாதம் கருப்பு வெள்ளை....மறுமாதம் கலரில் ....
.......தன்னைத்தானே சுமந்து கிட்டு தனிசந்தாவை நோக்கி டெக்ஸ் வில்லர் குதிரையில் போகிறார் ......
டெக்ஸ் விஜயராகவன்.!டெக்ஸ் கதைகள் காலி.!தனிசந்தா ஐடியா.!உங்கள் வாயில் சர்க்கரை அள்ளி போடவேண்டும்...!அப்படியே ஒருகுத்தாட்டம் போட்டுருங்க சூப்பராக இருக்கும்.!
Delete32வது
ReplyDelete///சேலம் Tex விஜயராகவன்6 July 2015 at 11:07:00 GMT+5:30
ReplyDeleteநண்பர் ஜேடர்பாளையம் சரவணகுமார் எனக்கு இன்று காலை போன் செய்தார் சார் ,அவர் உங்களுக்கு தெரிவிக்க விரும்புவது.....
"வணக்கம் சார் ...நான் நீஈஈஈண்ட நாள் வாசகன் சார் . உங்களுக்கு பல முறை கடிதம் எழுதி உள்ளேன்.கடைசியாக LMSல் என் கடிதம் லயனும் நானும் பகுதியில் வந்தது சார் . தி லயன் 250கிடைக்கப் பெற்றேன் சார் ....மகிழ்ச்சியில் துள்ளி குதித்தேன் சார் ...கலரில் இவ்வளவு பெரிய குண்டு புத்தகம் வேண்டிய எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது சார் ....இங்கே நான் எப்போதும் மெளன பார்வையாளன் சார் ...லோட் மோர் வரை அனைத்து கமெண்ட்களையும் எப்போதும் படித்து விடுவேன் சார் ...என்னுடைய கோரிக்கைகள் சார் ..... இன்னும் இரண்டு டெக்ஸ் புத்தகங்கள் ப்ளான்ல உள்ளன சார் 75+100 விலையில் உள்ள அவைகளை ஒன்றிணைத்து ஒரே தீபாவளி மலராக போடுங்கள் சார் ....கருப்பு வெள்ளை குண்டு புக்கையும் இந்த ஆண்டு தீபாவளி மலராக தந்து விட்டீர்கள் என்றால் ஓரே ஆண்டில் டெக்ஸ்க்கு கலர் +கருப்பு வெள்ளை என இரு குண்டு புத்தகங்கள் கிடைக்கும் சார் . அவை இரண்டின் மூலம் லேண்ட் மார்க் டெக்ஸ் ஆண்டாக இந்த 2015 திகழும் சார் ....நன்றி -ஜேடர்பாளையம் சரவணகுமார்.""///-----
இது நண்பர் சரவணகுமார் சொல்ல நான் இங்கே படப்பெட்டி வந்துடிச்சே--- பதிவில் போட்டது சார் ........நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க டெக்ஸ் கருப்பு வெள்ளை தீபாவளி மலர் போட்டு - டெக்ஸ் ஆண்டாக ஆக்கியதற்கு நன்றி சார் .....நம் எதிர்காலத்தை கட்டியம் கூறும் நிகழ்வாகவும் எடுத்து கொள்ளலாம் அல்லவா சார் ?????.....
சரவணகுமார் --- மகிழ்சியா நண்பரே???...... (MV சார் பக்கத்து இலைக்கு பாயாசம் இல்லை .....அனைவருக்கும் தீபாவளி இனிப்பு )
சேலம் Tex விஜயராகவன் : //பக்கத்து இலைக்கு பாயாசம் இல்லை //
Deleteநம்பிட்டோம் !! நம்பியே விட்டோம் !! (mind voice ;) யே....அந்த ஜவ்வரிசிப் பாயாச வாளியை இந்தப் பக்கமா கொண்டு வாங்கப்பா !
TeX news very happy news I want every month as following schedule 4 SPL( maximum 3 like lion 250 ) 6 ordinary 110 ,222 and 300 hundred pages with 2 reprints.
ReplyDeleteCiao Vijayan sir!
ReplyDeleteGreetings. Having a separate subscription for Tex is really a nice idea.
I am happy to hear about it. Please try it out in 2016.
So no need to wait for "ஒலியும் ஒளியும்" on Friday night (in main stream Lion/Muthu subscription).
Music lovers (Tex fans), who need more music, will subscribe for this "Tex Tamil Comics".
P.S:
Please do not reserve good Tex stories, only for main Lion/Muthu subscription.
Please have few good Tex stories in this new "Tex Only" subscription too.
And please let us know the Tex subscription amount asap. :)
Gracias!
Mahesh Kumar : //Please do not reserve good Tex stories, only for main Lion/Muthu subscription. //
DeleteWhat a notion !!! கதைகளில் எல்லாமே ஒரே ரகம் அன்றோ ?
Moreover 650+ கதைகள் உள்ளதொரு கிட்டங்கியில் இருந்து தேர்வு செய்யும் சுதந்திரம் நமதாக இருக்கும் வேளையில் "மோசமான கதைகள்" என்றொரு பிரிவின் பக்கமாய் தலையாவது வைப்போமா - என்ன நண்பரே ?
Vijayan sir,
DeleteThank you for the clarification.
Sorry, I should not have thought like that.
நன்றிகள் பல!
Vijayan sir,
Thank you for the clarification.
Sorry, I should not have thought like that.
STRENGTH OF TEX WILLER ACCORDING TO ME:
I bought all Largo Winch stories from Cinebook and read, before they were published in Tamil (Simply I could not wait an year to get the Tamil version).
Most of the Tex Willer books published by our Lion Comics is not at all exist in English.
(I could not find more than one English Tex Willer books in USA during my travels, the one I found was pretty costly and already published by Lion and before it was published in English).
So Tex in Tamil is always never heard story line and new story (at least for me), hence "Tex from Lion comics", never failed to excite me.
My other opinions on your post is given below.
SPLITTING ONE STORY LINE TO MULTIPLE BOOKS:
Splitting his series as part 1 of 3 etc... won't work out in this faster world.
"Largo Winch" would not have been successful like this, if we have released his stories "1 of 2" and "2 of 2" way.
CUSTOMIZED REPRINTS:
For me, customized prints of Tex Willer books is ok.
It woululd be bit costlier than regular books, but it's ok, Tex Willer deserves it.
Few color and few black one white Tex Willer books would be a feast for Tex fans.
Looking forward to hear more from you on this new Tex subscription in upcoming weeks.
Regards,
Mahesh kumar . S
டெக்ஸ் கதைன்னா அது முழுசாத்தான் வரணும் சார். இடைவெளிவிட்டா தலயோட துப்பாக்கி சூடு ஆறிடும்!
ReplyDeleteஎத்தனுக்கு எத்தன் அட்டை படம் அருமை! இந்த முறையாவது ஸ்பைடரை முதல் வரிசையில் வலம்வர செய்ததற்கு நன்றி!
ReplyDeleteநண்பர்களை உண்மையான i-d பதிவிட சொன்னது நல்ல விஷயம்.
டெக்ஸ்/டைகர் கதைகளை 2-3 பாகம்களாக பிரித்து வெளி இட வேண்டாம். கண்டிப்பாக இவர்களின் கதைகளை ஒரே புத்தகமாக வெளி இடவும்.
வணக்கம் விஜயன் சார்
ReplyDeleteபதிவை படித்து விட்டு வருகிறேன்
டெக்ஜ் கதைகள் வருடத்திற்கு 12 என்பதை மட்டும் மறந்திடாதீங்க சார்
சார்,
ReplyDeleteவசூலில் பட்டையைக் கிளப்பும் டெக்ஸ் கதைகளை சற்று அதிகமாக வெளியிடுவதில் தவறில்லையே...?
வருடத்தில் 5 ரெகுலர் இதழ்கள் நீங்கலாக, நான்கு இதழ்களை நான்கு குவாட்டர்களாக வெளியிடலாம். அதாவது, ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் வெளிவருமாறு கொண்டுவரலாம். (2 இதழ்கள் 244 பக்கங்கள், 2 இதழ்கள் 330 பக்கங்கள்) தயாரிப்பிற்கு இடைவெளியும் கிடைக்கும், இதழ்களும் வந்தது போலாகும்!
இன்று / இங்கு டெக்ஸ் தான் நம் வண்டி ஓட பெட்ரோல் எனும் போது அதிரடியாக இடது பக்கம் இன்டிகேடர் போட்டு வலது பக்கம் திரும்பி போய் கொண்டேயிருக்கணும், அதைவிடுத்து, ரொம்ப யோசித்தால் 'உடம்பிற்கு ஆகாதென்பது" உத்தரவாதம்!
Customised Imprint எனக்கு கொஞ்சம் risk - காக தெரிகிறது? வேண்டுமென்றால், ஒரு இதழ் ட்ரையல் விட்டுப் பார்கலாம்.
அப்புறம், கூர்மண்டையாரின் அட்டைப்படம் அட்டகாசம் போங்கள்! கலக்கிடீங்க.. மிகவும் பேசப்பட்ட இக்கதையை நான் இதுவரை (மறுபதிப்பில் கூட) வாசிக்காததால் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்!
MH Mohideen : //கூர்மண்டையாரின் அட்டைப்படம் அட்டகாசம் போங்கள்! கலக்கிடீங்க.. மிகவும் பேசப்பட்ட இக்கதையை நான் இதுவரை (மறுபதிப்பில் கூட) வாசிக்காததால் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்!//
Deleteசில பல ஹி....ஹி..ஹி..க்களுக்குத் தயார் எனில் - எத்தனுக்கு எத்தன் செம சுவாரஸ்யமானதொரு சாகசம் !
Tex பற்றிய உங்கள் proposals - ஒரு மாறுபட்ட பார்வை !
// வசூலில் பட்டையைக் கிளப்பும் டெக்ஸ் கதைகளை சற்று அதிகமாக வெளியிடுவதில் தவறில்லையே...?
Deleteவருடத்தில் 5 ரெகுலர் இதழ்கள் நீங்கலாக, நான்கு இதழ்களை நான்கு குவாட்டர்களாக வெளியிடலாம். அதாவது, ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் வெளிவருமாறு கொண்டுவரலாம். (2 இதழ்கள் 244 பக்கங்கள், 2 இதழ்கள் 330 பக்கங்கள்) தயாரிப்பிற்கு இடைவெளியும் கிடைக்கும், இதழ்களும் வந்தது போலாகும்! //
Good suggestion.
//Customised Imprint எனக்கு கொஞ்சம் risk - காக தெரிகிறது? வேண்டுமென்றால், ஒரு இதழ் ட்ரையல் விட்டுப் பார்கலாம்.//
Delete+1
டெக்ஸ் வில்லர் கதைகளை இத்தாலிய பாணியில் 2 அல்லது 3பாகங்களாக வெளியிடுதல் நலம் ! நிலவொளியில் நரபலி போன்ற கதைகளை தவிர்த்தல் நலம் ! Customised imprints நமக்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை அதிலும் குறிப்பாக டெக்ஸ் வில்லருக்கு!எத்தனுக்கு எத்தன் wrapper colour combination அருமை .
ReplyDeleteமூன்று மாத இடைவெளி என்பது அதிகம்
Deletesenthilwest2000@ Karumandabam Senthil : //நிலவொளியில் நரபலி போன்ற கதைகளை தவிர்த்தல் நலம் ! //
Deleteமற்ற டெக்ஸ் கதைகள் காலியாக எடுத்துக் கொண்ட அவகாசத்தில் பாதிக்குள்ளாகவே நி.ஒ.ந.ப. விற்றுத் தீர்ந்து இருந்தது ! Was one of our hottest ever best sellers !
டெக்ஸ் கதைகள் மாதா மாதம் ஒரு முறை வந்தாக வேண்டும்
ReplyDeleteஒரு மாதம் விட்டு ஒருமாதம் கலரில் எதிர்பார்க்கிறேன்
மாதமாதம் கலரில் என்றால் உங்களுக்கு சிரமமே !!!
பிரித்து போடுவதென்பது தனி தவில் வாசிப்பது போலாகும்
இதை யாரும் விரும்ப மாட்டார்கள்
ஏன் நானே விரும்பவில்லை
தென் ஸ்டாக் உங்களுக்கு புல் லாகிடும் விஷப்பரிட்சை வேண்டாமே
மீடியம் சைஸ் கதைகள் 6 (காவல் கழுகு போல் அல்ல) அதுக்கும் மேல
ஸ்பெஷல் குண்டு புக் 6 ( ஸ்பெஷல் தீபாவளி பொங்கல் ஆண்டு மலர் கோடைமலர் என 4 ) என வெளி வருதல் நன்றே
ஸ்பைடரின் எத்தனுக்கு எத்தன் நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மறு பதிப்பு கதை
முன் அட்டை ஸ்பைடர் உங்களை போலவே இருக்கும் மர்மம் என்னவோ!! ( நீங்க ஸ்பைடர் மாதிரி யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்க
)
பின் அட்டையில் ஸ்பைடர் ஏதோ குள்ளமணி போலுள்ளார்
ஆகஸ்டு 2 3 தேதிகளில் ஆடி நோன்பு விஷேஷம் வருவதால் மாப்பிள்ளை மார்களை மாமனார் மார் கள் புக்பேர்க்கு அனுப்புவது இயலாத காரியம் என நீங்கள் முடிவெடுத்து தேதியை மாற்றியது போல் தெரிகிறது !!
வசூலில் பட்டையை கிளப்பும் டெக்ஸ் ஸை இன்னும் விட்டு வைத்திருக்கும் மர்மம் தான் என்ன விஜயன் சார்
முதலில் ஆறு மாதத்திற்கு மட்டும் தனி சந்தாவாக டெக்ஸ் ஸை ட்ரையல் பாருங்களேனௌ
உங்கள் விற்பனையின் அளவு தெரிந்து கொண்டு
தனி சந்தா அறிவித்து விடலாம்
அந்த ஆறு மாதமும் படா படா டெக்ஸ் கதைகள் வேண்டும் என்பதை இத்தருணத்தில் கூறிக்கொள்ள வேண்டுகிறேன்
Tex Sampath : //முன் அட்டை ஸ்பைடர் உங்களை போலவே இருக்கும் மர்மம் என்னவோ!!//
Deleteஊஹூம் ..தவறு .....!! நான் தவழப் பழகும் முன்பாகவே நியூயார்க்கைத் தனதாக்கும் ஆற்றல் கொண்டிருந்த சீனியர் ஆசாமி ஸ்பைடர் ! So நான் அவரைப் போல தோற்றம் தருவதாக இருக்கிறேன் என்று சொல்வது வேண்டுமானால் சரியாக இருந்திடக் கூடும் !
40 மாத இடைவெளியில் வெறும் பத்து % எனும்போதே
ReplyDeleteபோராட்டக்குழு தலைவரை வைத்து போராட்டம் நடத்தி இருகௌக வேண்டும்
தலைவர் பதுங்கு குழியில் பதுங்கி இருந்தத.தால் அவரைப்பிடிக்கால் விட்டதால் அவரை பிடிப்பது சிரமமே
Tex Tex Tex Tex Tex Tex Tex Tex Only
ReplyDeleteTex தனி சந்தா விற்கு
ReplyDeleteதனி பதிவுகள் வேண்டும் சார்
டெக்ஸ் வில்லர் தனி Track மிகவும் வரவேற்று கொண்டாடக்கூடிய ஒரு விசயம். அதனையும் Original அளவுகள் மற்றும் color ல் வந்தால் இன்னும் சிறப்பு. Custamised imprints என்ற பட்டியலுக்குள் கொண்டு வந்து விலை மாற்றத்தை கொண்டு வந்து விடாதீர்கள் சார். ரெகுலர் இதழ்களை ஒட்டியே விலைகளும் அமையாத பட்சத்தில் ரெகுலர் இதழ்களின் விற்பனையில் நீங்கள் நிச்சயம் ஒரு சோதனையை எதிர் கொள்ள வேண்டியது வரலாம். எதையும் நிதானமாக யோசித்து சரியான திட்டமிடல்களோடு செய்யும் பட்சத்தில் நிச்சயம் வெற்றி பெறும். மேலும் பல நூற்றுக்கணக்கில் கதைகள் இருக்கும்போது தொடரும் போட்டு வரும்போது சில எதிர்மறை விளைவுகளை சந்திக்கவேண்டியது வரலாம். எனவே புதிய முயற்சிகளின்போது வாசகர்களை திருப்திப்படுத்துவது முக்கியம். (Tex வரிசைகளை பொறுத்தவரை நாம் என்ன XIIIகதைகளைப்போல அனைத்தும் முடித்த நிலையிலா இருக்கிறோம்?) வேண்டாமே விஷப்பரீட்சை. நன்றிசார். நன்றி நண்பர்களே
ReplyDeleterajasekarvedeha : Relax.....கருத்துக் கேட்கும் ஆரம்பக் கட்டத்தினில் தான் நாம் இப்போது உள்ளோம் ; so "விஷப் பரீட்சை ; சோதனை" இத்யாதிகள் பற்றிய நினைவூட்டல்கள் தற்சமயம் ரொம்பவே premature !
Deleteடெக்ஸ் விஜயராகவன்.!உங்கள் வாயில் சர்க்கரை அள்ளி போடனும்.!அப்படியே ஒரு குத்தாட்டம் போடுங்க சூப்பராக இருக்கும்.!
ReplyDeleteதல ரசிகர்களுக்கு இன்று தித்திப்பான& சந்தோசமான செய்தி.!இன்று டபுள் சந்தோசம்.!
ReplyDeleteடியர் எடிட்டர் ஸர்ர்,
ReplyDeleteடெக்ஸ் இற்கு தனிச்சந்தர என்பது எனக்கு டபுள் ஓகே. இருக்கும் இதழ்களின் எண்ணிக்கையை எவ்வளவு கூட்டுவது என்பது நீங்கள்தான் ஸர்ர் முடிவெடுக்க வேண்டும். ஸ்பைடரின் அட்டைப்படம் அருமை.
Thiruchelvam Prapananth : சார்...இதுவொரு கருத்துக் கோரும் நிலை மாத்திரமே...! பொதுவான வாசக அபிப்பிராயங்களை அறிந்தான பின்னே, அவற்றுள் நமக்கு எது சாத்தியம் -எது முடியாது என்ற பரிசீலனைக்குப் பின்னே ஒரு தீர்மானம் எடுத்திடுவோம் !
Deleteபிளீஸ் ஸர்ர். ஒரே கதையரக டெக்ஸ் கதையை போடுங்கள் .
ReplyDeleteதல ரசிகர்களுக்கு இருப்பு கொள்ளவில்லை,! வாயெல்லாம் பல்லாக வலம் வருகிறார்கள்.!அப்படியே மாடஸ்டிக்கும் ஒரு நல்ல செய்தி சொல்லக்கூடாதா.?ஹும் என்னமோ போடா மாதவா.!
ReplyDeleteMadipakkam Venkateswaran : ஒரே ஒரு மாடஸ்டி customized imprint பார்சல் !! :-) :-)
DeleteM V ,
Deleteஇன்றைய பதிவு குறித்து நீங்க கிளி ஜோசியம் கேட்டிருந்ததை இப்போதுதான் பார்த்தேன்.!
தாமதமாயிடுச்சு! பதிவும் வந்திடுச்சு.! கவனக்குறைவுக்கு மன்னிச்சூ.!!!
சம்பந்தமே இல்லா இக்கேள்விக்கு மன்னிக்கவும். The லயன் 250 க்கு தனியாக சந்தா கட்டவேண்டுமா? (கடைசியாக வந்த டெக்ஸ் புக்) இன்று வரை புக் வரவில்லை. ஒருவேளை அதற்கு தனிச்சந்தா இருந்து அதையறியாமல் ,புக் வரும் வரும் என வீணே காத்திருக்கின்றோமோ என்று பயத்தில் கேட்கின்றோம்.
ReplyDeletesuji jeya : Not at all !! உங்களை அவை விரைவிலேயே எட்டி விடும் !!
Deleteடெக்ஸ் கதைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் தரப்பாருங்கள்.அள்ளிக் கொள்ள காத்திருக்கிறோம்.
ReplyDeleteவேறவேற கதைக்களங்கள் என வெரைட்டியாக தந்தால் அலுப்படிக்குமோ ?என்ற சந்தேகம் கூட இராது. தனி சந்தா தொடங்கினால் விரும்புபவர்கள் வாங்கிக் கொள்ள ஏதுவாகவும் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் மீது திணிக்கப்படாமலும் இருக்கும். சந்தா T - T for Tex :)
suji jeya : சந்தா T - T for Tex :) : இந்த அப்ரோச் நல்ல இருக்கே !
Deleteநல்லா இருந்தா சரி தான்
Deleteஷல்லூமோடு நானும் +1
DeleteT for Tex ...super..
DeleteT for Tex ...super..
T for Tex ...super..
T for Tex ...super..
Dear Edi,
ReplyDeleteTex as separate subscription is certainly something to try out in 2016, considering his popularity. But, I would advise not to overdo rule numbers by trying to release one edition every month. It is certain to not only oversell it to the readers, but might create a feeling of overdose to translators too.
I would recommend 4-6 titles in separate subscription over the year, with another 4-6 stories with regular subscription. But customized imprints would be a bad call, if the prices aren't controlled.
Btw, Spider cover is indeed attractive. Another win for Spider since the last reprints cover.
Rafiq Raja : ஒரிஜினல் இரவுக் கழுகாரே நமது இரவுப் பிரியங்களைக் கண்டு மிரண்டே போயிடுவார் ! :-)
Deleteநல்ல கருத்துக்கள் - குறிப்பாக மொழிபெயர்ப்பு விஷயத்தினில் !
எடிட்டர் சார்,
ReplyDeleteவில்லருக்கு தனீ ட்ராக். ஆஹா.! சூப்பர்.!
ஆனா கஷ்டமைசுடு இம்ப்ரின்ட்ஸ்னா, விலை தாறுமாறா இருக்குமோன்னு பயந்து வருது சார்.!
மேக்ஸி., மீடியம்., மினி., மைக்ரோமினி என எல்லா வகைகளும் சேர்த்து ஆண்டொன்றிற்கு பனிரெண்டு கதைகள் ஓ.கே.சார்.!
நிச்சயமான விற்பனை இலக்கில்லாத கி நா வே., ரெகுலர் விலையில் தனிசந்தாவில் கிடைக்கும் போது., விற்பனைக்கு உத்திரவாதமுள்ள வில்லர் கஷ்டமைசுடு இம்ப்ரிண்ட்ஸா? கேட்கவே கஷ்டமா இருக்கு சார்.!
அப்புறம்
அந்த
கார்ட்டூன்
தனி சந்தா வையும் …………………
ஓ.கே! ஓ.கே.!
கஷ்டமைசுடு இம்ப்ரிண்ட்ஸா கலர்ல ரீப்ரிண்ட் வந்தா எப்படி
Delete// நிச்சயமான விற்பனை இலக்கில்லாத கி நா வே., ரெகுலர் விலையில் தனிசந்தாவில் கிடைக்கும் போது., விற்பனைக்கு உத்திரவாதமுள்ள வில்லர் கஷ்டமைசுடு இம்ப்ரிண்ட்ஸா? கேட்கவே கஷ்டமா இருக்கு சார்.! // நல்ல சிந்தனை! நான் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்! டெக்ஸ் அனைவர் இல்லத்திற்கும் செல்ல வேண்டும்!
DeleteThis comment has been removed by the author.
Delete// ஒரு வழியாக தமிழ் பேசும் ஸ்மர்ப்களின் “பொடி பாஷைக்கு“ படைப்பாளிகளின் சம்மதத்தை வாங்கி விட்டோம் – அவர்களையும் குஷிப்படுத்தக் கூடியதொரு 'பொடி ஏற்பாட்டோடு !' //
ReplyDeleteஒரே சந்தோச பொடியா இருக்கு சார்.!
பொடியர்களை பொடிய ஒரே ஆர்வப் பொடியா இருக்கு. எப்போ கையில் பொடிக்குமோ பொடி இறைவா.???
விஜயன் சார், டெக்ஸுக்குத் தனி சந்தா (வழமையான இதழ்கள் தவிர்த்து) என்பது சரி. ஆனால் அவை பெரிசா (கறுப்பு வெள்ளை 500 பக். ரூ. 200 விலையில் 2/3 & வண்ணப் பதிப்பு 300 பக். ரூ. 200 விலையில் 2/3) என்று இருத்தல் நல்லா இருக்கும் என்று தோன்றுகிறது. ( எல்லா ரசிகர்களும் ரசனை விஷயத்தில் அம்பானி அதானி என்றாலும் பர்ஸ் விஷயத்தில்..?)
ReplyDelete1.//சீரான விலையோடு, இரண்டல்லது / மூன்று பாகங்களாய் டெக்சின் கதைகள் தொடர்கதைகளாய் வலம் வர என்றேனும் ஒரு வேளை புலர்ந்தால் – அதன் சாதக-பாதகங்கள் என்னவாக இருந்திடும் – உங்கள் பார்வைகளில்?//
ReplyDeleteஇந்த கேள்வி பார்வையிலேயே படமாட்டேங்குது
2.//பொன்முட்டையிடும் வாத்தைப் பொரியல் போடும் முயற்சியாக மாறி விடக்கூடும்! வேண்டாமே இந்த ஓவர்டோஸ்!“//
முதல்ல வாத்த முட்ட போட விடுங்கையா.....
3.//‘தேவையானோர் முன்பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம்‘ என சந்தாக்களோடு சம்பந்தப்படுத்தாது ஒரு தனிப்பட்ட ‘புல்லட் டிரெயின்‘ தடத்துக்கு TEX -ன் கூடுதல் எண்ணிக்கைகளைத் திசைதிருப்பினால் நலம் தருமா?//
நிச்சயமாய் தரும்
+100
Delete+1
DeleteThis comment has been removed by the author.
Delete+1
Deleteடெக்ஸ் இற்கு தனிச்சந்தர என்பது எனக்கு டபுள் ஓகே.
ReplyDeleteவிஜயன் சார்,
ReplyDelete//1. சீரான விலையோடு, இரண்டல்லது / மூன்று பாகங்களாய் டெக்சின் கதைகள் தொடர்கதைகளாய் வலம் வர என்றேனும் ஒரு வேளை புலர்ந்தால் – அதன் சாதக-பாதகங்கள் என்னவாக இருந்திடும் – உங்கள் பார்வைகளில்? //
சிறிய கதையாக இருந்தாலும், பெரிய கதையாக இருந்தாலும் பிரிக்காமல் ஒரே இதழில் கொடுப்பதே சிறந்தது. கொத்துகறி மீண்டும் வேண்டாமே pls ....
//2. முழு நீளக்கதைகளெனும் போது ஓராண்டில் எத்தனை செட் மஞ்சள் சட்டைகளை நம்மவர் தயார் செய்து கையில் வைத்திருப்பது சரி வரும் என்று நினைக்கிறீர்கள் ? //
என்னை பொறுத்தவரை அதிகமாக 12 கதைகள் ஓகே ... ஆனால் மாதம்தோறும் இல்லை ....
//3. ஆண்டின் வழக்கமான அட்டவணையில் நார்மலாக இடம்பிடிக்கக் கூடிய மூன்றோ – நான்கு டெக்ஸ் அதிரடிகள் நீங்கலாக நாம் திட்டமிடக்கூடிய கூடுதல் கதைகளை ‘customized imprints’ குடையின் கீழே ஐக்கியமாக்குவது பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள் என்னவோ? //
ஜனவரி - சென்னை புத்தக திருவிழா (3 கதைகள் கலர் / B & W) - தனி இதழ்கள் - customized imprints
பெப்ரவரி
மார்ச் -- 1 கதை - லயன் சந்தாவில்
ஏப்ரல் -- -- 1 கதை - லயன் சந்தாவில்
மே
ஜூன் -- லயன் ஆண்டு மலர் - 3 டெக்ஸ் (கலரில்) -- லயன் சந்தாவில்
ஜூலை
ஆகஸ்ட் - -- 1 கதை - லயன் சந்தாவில்
செப்டம்பர் -- 1 கதை - லயன் சந்தாவில்
அக்டோபர்
நவம்பர் - தீபாவளி மலர் - 2 டெக்ஸ் கதைகள் B & W -- லயன் சந்தாவில்
டிசம்பர்
ஆக மொத்தம் 12 கதைகள் .... மாதம் தோறும் டெக்ஸ் மட்டும் இல்லை டைகர் கதைகள் வெளிவந்தாலும் ஒரு கட்டத்தில் திகட்ட ஆரம்பித்து விடும் ... எனவே கொஞ்சம் இடைவெளி விட்டு வருவதே நமக்கும், டெக்ஸ்கும் நல்லது ....
டெக்ஸ் தனி சந்தா என்பது ஓவர்டோஸ் என்கிற சூழ்நிலைகள்/அபிப்ராயங்கள், தென்படும் பட்சத்தில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என நிர்ணயிக்கலாமே சார்....?
ReplyDeleteஅவை அனைத்துமே முழு இதழாக இருத்தல் அவசியம்.(தொடர் கதைகள் என துண்டு துண்டாக இனி மறுபடியும் தொடர வேண்டாமே ப்ளீஸ்)
வழக்கமான வரும் சந்தாவில் டெக்ஸ்சின் ஸ்பெஷல் இதழ்களை இனைத்துவிட்டு. தனி சந்தாவில் முதல் முயற்ச்சியாக 1000,1500 என்ற விலையில் தனியாக டெக்ஸ்க்கு தனி சந்தா ஆரம்பிக்காலம் சார்.இப்போது வரும் காமிக்ஸ் கிளாசிக் போல இரண்டு மாதத்திற்குள் ஒருதடவை டெக்சின் தனி சந்தா வெளி இடலாம் சார்.
ReplyDeleteஎடிட்டர் சார்.,
ReplyDeleteநடப்பாண்டில் வில்லரின் ஐந்து கதைகளை இரண்டே ஷ்பெசலில் வெளியிட்டது போலவே.,
அடுத்தாண்டும் ஒரு நான்கோ அல்லது ஐந்தோ ஷ்பெசலாக., இடைவெளி விட்டு வெளியிடுதல் சிறப்பு என்பது என் கருத்து. மாதாமாதம் என்றால் திகட்டிப்போகும் வாய்ப்புகள் அதிகம்.
தவிரவும் இடைவெளி இருந்தால் எதிர்பார்ப்பும் இருக்கும். எதிர்பார்ப்பு இருந்தால் உறுதியான வெற்றியும் இருக்கும்.!!!
பிரியாணி பிடிக்கும் என்பதற்காக தினந்தோறும் கட்ட முடியுமா.?
பிரியாணி சுவைக்காக ஏங்கியிருந்து ருசிக்கும்போதுதான் தித்திக்கும்.!!!
(ஓவர் இடைவெளியும் ஒவ்வாமைக்கு இடமளிக்கும் என்பது சொலவடை)
தொடராக வேண்டவே வேண்டாம் சார்.
ஓங்கிய முஷ்டி ஒரு மாதத்திற்கு பிறகே தாடையில் இறங்கும் என்றால் சலிப்பாக இருக்கும்.!!!
// “விலையைப் பற்றிப் பிரச்சனையில்லை; கதைகளைப் பிரிக்க வேண்டாமே!“ //
ReplyDeleteஇதிலேயே பதிலும் உள்ளது ஆசிரியரே.
தலைக்கு தனி மிகவும் மகிழ்ச்சியான செய்தி,
ReplyDelete"இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே" என்ற வரிக்கு பொருத்தமான செய்தி ஆசிரியரே.
// “இல்லை... இது பொன்முட்டையிடும் வாத்தைப் பொரியல் போடும் முயற்சியாக மாறி விடக்கூடும்! வேண்டாமே இந்த ஓவர்டோஸ்!“ என்ற சிந்தனை உங்களை ஆட்கொள்கிறதா? //
ReplyDeleteதல கண்டிப்பாக ஓவர்டோஸ் ஆக வாய்ப்பே இல்லை ஆசிரியரே,அப்படி ஒரு சந்தேகம் இருப்பின் அடுத்த ஆண்டு தனி சந்தாவின் இதழ்களின் நாடியை பிடித்து பார்த்தால் ஆயிற்று,கூடவே நமது வாசகர்களின் கருத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
இந்த இரு தராசு தட்டுக்களும் சமநிலையில் இருப்பின் தனி சந்தவை தொடருவதில் என்ன சிக்கல் வந்து விட போகிறது.
ஸ்பைடர் அட்டை படம் சூப்பர் சார். டெக்ஸ் கதைகள் முன்று மாதம் ஒரு ஸ்பெஷல் 200அல்லது 300 விலையில். அதை தவிர ஆண்டு மலர் +தீபாவளி மலர் குண்டு புத்தகங்கள் வெளியிடலாம்
ReplyDeleteமாதம் மாதம் மற்றும் தொடர்களை தவிர்க்கவும்
// கூடுதல் கதைகளை ‘customized imprints’ குடையின் கீழே ஐக்கியமாக்குவது பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள் என்னவோ? ஆயிரம்... ரெண்டாயிரம் என்ற விலைகளில் அல்லாது – தாக்குப் பிடிக்கக் கூடியதொரு விலையோடு ‘தேவையானோர் முன்பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம்‘ //
ReplyDelete‘customized imprints’ -இது சரி வராது என்று நினைக்கிறேன்,இது "எட்டாக்கனி" என்ற தோற்றத்தை உண்டு செய்ய வாய்ப்பு உண்டு.
தனி சந்தாவில் மாதாமாதம் வருவதே சிறப்பாக இருக்கும்,நிறுவனத்தின் சீரான விற்பனைக்கும் இது உதவி செய்ய வாய்ப்பு உண்டு.
நான் 50 வது. ெடக்ஸ் சந்தா ைவ நான் வரவேற்கிறேன்.
ReplyDeleteTo: Edit,
ReplyDeleteபின்னட்டை ஸ்பைடர், 'மினி ஸ்பைடர்' ரேஞ்சுக்கு குழந்தைத்தனமான முகத்தோடு இருக்கிறார் :-).
முன்னட்டையும் நமது ஆர்ட்டிஸ்ட் முன்பு வரைந்ததுதானா சார்? இல்லை, அது ஒரிஜினலா??
// ரெகுலர் சந்தாக்களில் / அட்டவணைகளில் டெக்ஸின் தற்போதைய பங்களிப்பு தொடரும் //
ReplyDeleteரெகுலர் சந்தாக்களில் வேண்டுமானால் டெக்ஸ்சின் பெரிய இதழ்களை சிறப்பு வெளியீடாக வெளியிடலாம்.
தனியாகவொரு டெக்ஸ் சந்தா ...வரவேற்கிறேன்
ReplyDeleteநார்மலாக வரும் கதைகளிலும் இப்போது போலவே டெக்ஸ் தொடரட்டும்
கூர் மண்டையர் அட்டையில் கலக்குகிறார்,எனது முதல் ஆதர்ச நாயகரைப் பார்ப்பதும்,அவரின் சாகசத்தை தரிசிப்பதும் இனிமையானதோர் அனுபவம்.
ReplyDelete// இப்போதைய திட்டமிடல்கள் தான் 2016 ஜனவரியின் சென்னைப் புத்தக விழாவிலாவது டெக்ஸின் புஷ்டியான பங்களிப்பை உறுதிப்படுத்த உதவும் என்பதாலும் இந்தக் கேள்விகள் இப்போது அவசியமாகின்றன.//
ReplyDeleteஅப்படியானால் அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒரு குண்டு இதழ் எதிர்பார்க்கலாம் என்று சொல்லுங்கள்.
// ஒரு துரதிர்ஷ்ட நாளில் அப்படியொரு வேளையும் புலர்ந்தே விட்டதெனில் - இந்தப் பதிவுப் பக்கத்தைச் 'சிவனே' என்றொரு தகவல் பலகையாக மட்டுமே உருமாற்றி விட்டு நடையைக் கட்டத் தான் தீர்மானிப்பேனே தவிர்த்து - வகுப்பறை வாத்தியாராய் அவதாரமெடுக்க நிச்சயம் முனைந்திட மாட்டேன் ! //
ReplyDeleteஎனது எண்ண ஓட்டமும் அதுவே ஆசிரியரே.
டெக்ஸ்சின் இரண்டு இதழ்களையும் சேர்த்து ஒரே இதழாக வெளியிடுவது நல்ல முடிவு ஆசிரியரே,தலையை அதிக பக்கங்களில்,பெரிய இதழில் வாசிப்பது ஒரு அலாதியான அனுபவம்தான்.
ReplyDeleteடெக்ஸ் தனி சந்தா சூப்பர்.!ஒவ்வொரு மூன்று டெக்ஸ் கதைகள் நடுவில் ,ஒரு அக்மார்க் கி.நா.வெளியிடுங்கள் சலிப்பே தட்டாது.!எப்படி மதுரை தங்கரீகல் தியேட்டர் எதிரில் உள்ள திருநெல்வேலி லாலா கடையில் அல்வா வாங்கி சாப்பிட்டால் ஒரு கை காரபூந்தி கொடுப்பாங்களே அந்த மாதிரி.!
ReplyDeleteDear Editor,
ReplyDeleteThis is the news we all wants to hear from you for long time! My full support for separate Tex series.
comic sunday ! Reply / Delete / ignore !?
ReplyDeleteநண்பர்களே, வணக்கம். நம்முடைய மிகச் சிறு வயதில், நம் வீட்டிற்கு வருகைத் தரும் சொந்தங்களில் ஒரு சிலராவது, நம்மிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார்கள் ; அனேகமாக தாய்வழிப் பாட்டி நிச்சயம் அதில் இடம் பிடித்திருப்பார் - உனக்கு அம்மாவை ரொம்பப் பிடிக்குமா? அப்பாவை ரொம்பப் பிடிக்குமா? என்ற கேள்வி தான் அது. உடனே நாம், எனக்கு ரெண்டுப் பேரையும் ரொம்பப் பிடிக்கும் ஆயா என்று கூறியிருப்போம். உடனே நம் பாட்டி, யாராவது ஒருத்தரை மட்டும் சொல் என்றவுடன், எனக்கு அம்மாவை மட்டும் தான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும் ஆயா... என்று உணர்ச்சி மேலிடக் கூறி, அவரை சந்தோஷத்தில் திளைக்கச் செய்திருப்போம். ஏனெனில்,
ஜனிக்கும் முன்பே தாயின் கருவறையில் உண்டு ; உறங்கி ; சுவாசித்து ; யாசித்து - ஜனித்தப் பின்பும் ஒட்டி உறவாடி, தொட்டுத் தழுவி, உச்சிமோந்து, அவளுடனே அழுது, சிரித்து, துடித்து, துவண்டு வளர்ந்த அந்த சிறுவயதுப் பிராயத்தில், தாயை விட சிறந்த உலகம் வேறு எதுவுமே இருந்திருக்காது அல்லவா ?! போலவே,
இந்தக் காமிக்ஸ் வலைதளமா அல்லது என்னுடைய மிஸ்டர் மரமண்டை என்ற பெயரா என்ற கேள்வி எழுந்தால், எனக்கு இரண்டுமே அவசியம் வேண்டும் என்றே கூறுவேன். இல்லையில்லை ஏதாவது ஒன்று மட்டுமே சாத்தியம் என்றால், மிஸ்டர் மரமண்டை என்ற அடையாளத்தை மட்டுமே தேர்ந்தெடுப்பேன் :)
தெரிந்தோ, தெரியாமலோ மரமண்டை என்ற பெயரில் மட்டுமே அறிமுகம் ஆனேன் ; மரமண்டை என்ற ஒரு ஐடியில் மட்டுமே பதிவிட்டு வந்தேன், வருகிறேன் ; இரண்டு ஐடியில் பதிவிட நான் கோழையும் அல்ல, மரமண்டை என்ற புனைப்பெயரில் இருப்பதால் நான் குற்றவாளியும் அல்ல - ஆனால், அனைவரையும் போன்றே நானும் ஒரு சராசரி காமிக்ஸ் வாசகன் மட்டுமே !
இதுவரை எந்தப் புத்தகக் கண்காட்சிக்கும் சென்றதுமில்லை, இனி, செல்லப் போவதும் இல்லை. இதுவரை ஆசிரியரை சந்தித்ததும் இல்லை, இனிமேல் சந்திப்பேனா என்பதற்கு, தற்போது என்னிடம் விடையே இல்லை. இதுபோன்ற என் விளக்கப் பதிவுக்கு என்னை ஆளாக்கிய நண்பர்கள் பெரியதாக சந்தோஷப்பட்டுக் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே, சென்ற டிசம்பரில் இருந்து, ஜூன் வரை, 6 மாதங்கள் முழுமையாக இங்கிருந்து நான் ஒதுங்கியே தான் இருந்தேன் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். ஏனெனில், என் மீதான, Palani kumar, Vinoth kannan அவர்களின் கீழ்த்தரமான / தரங்கெட்ட பதிவும், அதை ஆசிரியர் அவர்கள் Delete செய்யாமல் அப்படியே விட்டு வைத்திருந்த காரணமும் தான் என்பதில் என்னிடம் மாற்றுக் கருத்து இல்லை. அவ்வளவு ஏன், இதோ இப்போதும் கூட, ''கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்'' அவர்களின், ''மாமா, உங்கள் சேவை நாட்டுக்கு தேவை, கழிசடை'' போன்ற வார்த்தைகள் அடங்கியத் தரம் தாழ்ந்தப் பதிவுகள், அப்படியேத் தானே இருக்கிறது ? ஏனென்றால், அவர் உண்மை பெயரில் பதிவிடுவது மட்டுமே காரணமாக இருக்க முடியும் :)
//ஒரு மைல்கல் இதழ் வெளியான 3 வாரங்களுக்குள்ளாகவே ; இன்னுமொரு மைல்கல் ஒரே வாரத்தில் காத்திருக்கும் வேளைதனில் - இங்கே ஓடும் நமது பின்னூட்டங்களின் பெரும்பகுதி தேவையற்ற திசைநோக்கிப் பயணம் போகும் போதே - நாம் செல்லும் பாதை சரியில்லை என்பது புரிவதில் சிரமம் தானேது ?//
அப்படியில்லை விஜயன் சார், இந்த வலைதளத்தில் முன்பிருந்த காமிக்ஸ் மீதான ஈர்ப்பும் / அது சம்பந்தமான பதிவுகளும் தன்னுடைய வலிமையை இழந்து விட்டதே காரணம். ''மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்'' என்ற காலத்தை கடந்து, தற்போது ''தேவைக்கு மட்டுமே காமிக்ஸ் வாசிப்பு'' என்ற நிலைக்கு வந்து விட்டோமா என்ற சிறுச் சிந்தனை கூட ஒரு விதத்தில் உங்களுக்கு நன்மை பயக்கும் எ.எ.தா.கருத்து. மேலும், இன்னும் வரப்போகும் நாட்களில், புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்திக்க வரும் வாசகர் வட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தே போகும் என்பதிலும் சந்தேகம் ஏது ? டெக்ஸ் வில்லரின் ஆர்வங்கள் கூட ஒரு விதத்தில் தீபாவளியை எதிர்நோக்கும் சிறுவர்களின், மனோநிலையை ஒத்திருப்பதாக தங்களால் யூகிக்க முடியவில்லையா ? தினம் தினம் தீபாவளி என்றால் தித்திக்குமா? திகட்டுமா? என்பதை காலம் தான் தீர்மானிக்கும். நன்றி !
சின்னத் திருத்தம் - புத்தக விழாக்களுக்கு நான் செல்வது அங்கே வருகை tharum வாசகர்களைச் சந்திக்கும் பொருட்டே தவிர - not the other way around !
Delete//இந்த வலைதளத்தில் முன்பிருந்த காமிக்ஸ் மீதான ஈர்ப்பும் / அது சம்பந்தமான பதிவுகளும் தன்னுடைய வலிமையை இழந்து விட்டதே காரணம்//
Delete-1
//இந்த வலைதளத்தில் முன்பிருந்த காமிக்ஸ் மீதான ஈர்ப்பும் / அது சம்பந்தமான பதிவுகளும் தன்னுடைய வலிமையை இழந்து விட்டதே காரணம்//
Delete_1
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteதனிச் சந்தா ஓகே. ஆனால் 12 இதழ்கள் வேண்டாம். 4 அல்லது 6 இதழ்கள் தனிச் சந்தாவில். 4 அல்லது 6 இதழ்கள் ரெகுலர் சந்தாவில் - அவற்றில் பாதி கருப்பு/வெள்ளை. பெரும்பாலும் 220 அல்லது 330 பக்கங்கள். ஒரு கலர் ஸ்பெஷல் 500+, ஒரு கருப்பு/வெள்ளை ஸ்பெஷல் 500+ பக்கங்கள்.
ReplyDeleteகாலை வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே,
ReplyDeleteடெக்ஸ் தனி சந்தா சூப்பர்.!
மதிப்புக்குரிய மாதவா ( மானசீக தமிழ் வாத்தி),
ReplyDelete* என்னிக்காச்சும் ஒருநாள் நீங்கள் 'தல' விசயத்தில் இப்படியொரு முடிவை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தது வீண்போகவில்லை ( யேய் தம்பி... அந்த இத்தாலி டிக்கெட்டை கேன்சல் பண்ணிப்புட்டு காசை திருப்பிக் கொண்டாப்பா. சந்தா கட்டணுமில்ல?). மகிழ்ச்சிX10000!!
* பலதரப்பட்ட வாசகர்களைத் திருப்திபடுத்துவதிலாகட்டும்; விற்பனை முனைகளில் வெற்றிக்கொடி நாட்டுவதிலாகட்டும் டெக்ஸுக்கு நிகர் டெக்ஸே எனும்போது இப்போதிருக்கும் 10% கோட்டாவை 30% வரை உயர்த்துவது எல்லா தரப்புக்குமே கணிசமான பலனளிக்கும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமிருக்க முடியாதே!
* 560 பக்கங்களில் மீண்டும் டெக்ஸ் குண்டுபுக்!!!! யீப்பீஈஈ!!!!!! இந்தத் தீபாவளிக்கு இத்தாலி 'தல'ப்பா கட்டு பிரியாணியை வெளுத்துக்கட்டப் போகிறோம்றதை நினைத்தாலே உற்சாகம் பிச்சுக்குது சார்! ( சென்ற வருட தீபாவளிக் கொண்டாட்டத்தை 'இ.இ.கொ' கி.நா' வைரஸால் பாதிக்கப்பட்டு இழந்த நண்பர் S.V.வெங்கடேஷ் அவர்கள் நினைவுக்கு வருகிறார்)
* டெக்ஸ் கதைகளுக்கு 'தொடரும்' போடும் ஐடியாவெல்லாம் வேண்டாம் சார்! single shotல் தலயின் அதகளத்தை ரசித்திடுவதே பேரானந்தம்!
* Customized imprints டெக்ஸ் இதழ்களுக்கு வேண்டாம் சார்! சந்தா என்ற கட்டுக்குள்ளெல்லாம் அகப்படாமல் டெக்ஸ் /லக்கிலூக் கதைகளை மட்டும் கடைகளில் வாங்கி சந்தோசப்பட்டுக்கொள்ளும் நூற்றுக்கணக்கான சாமானிய வாசகர்களை இது ஏமாற்றமடையச் செய்துவிடும் வாய்ப்புகள் அதிகம்!
# ஓவர்டோஸ் அபாயத்தைத் தடுக்க ஒவ்வொரு மாதமும் வெவ்வேறான கதைக்களங்களை உபயோகித்தாலே போதும்! ( 'The lion-250'ல் இருப்பதைப்போல)
அல்லது
ஒரு பரிட்சார்த்த முறையாக ('திகில்'கு அறிவித்ததைப் போல ) 'ஒருவருடத்திற்கு மட்டுமே' என்று அறிவிக்கலாம். டெக்ஸுக்கான டிமான்ட் கூடுகிறதா அல்லது குறைகிறதா என்பதை இந்த ஒருவருட காலத்தில் உற்றுநோக்கிவிட்டு, தொடரும் வருடங்களில் இந்த பாணியை மேற்கொண்டு தொடரலாமா வேண்டாமா என முடிவு செய்திடலாம்! இந்த முயற்சியில் பலன் கிடைக்காது போகுமென்றாலும்கூட ஓரிரு இறகுகள் மட்டுமே ஒடிந்து தொங்கும் நிலையில் பொன் முட்டையிடும் வாத்தும் அதிக சேதாரமின்றி தப்பித்துக்கொள்ளும்!
எது எப்படியோ, டெக்ஸ் கதைகளின் எண்ணிக்கை கனிசமாகக் கூடப்போவது உற்சாகத்தை பலமடங்காக்கியிருக்கிறது!
This comment has been removed by the author.
Deleteஈரோடு விஜய்.!எங்கள் மனதில் உள்ள சந்தோசத்தை அப்படியே வெளியே சொல்லிவிட்டீர்கள்.!:அதுசரி.,சென்ற தீபாவளி இ.இ.கொ.வைரஸில் பாதிக்கப்பட்டது எஸ்.வி.வெங்கடேஸ் மட்டுமல்ல எல்லா வெங்கடேஸ்களும்தான்.!
Delete//பலதரப்பட்ட வாசகர்களைத் திருப்திபடுத்துவதிலாகட்டும்; விற்பனை முனைகளில் வெற்றிக்கொடி நாட்டுவதிலாகட்டும் டெக்ஸுக்கு நிகர் டெக்ஸே எனும்போது இப்போதிருக்கும் 10% கோட்டாவை 30% வரை உயர்த்துவது எல்லா தரப்புக்குமே கணிசமான பலனளிக்கும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமிருக்க முடியாதே!//
Delete+1
செயலாளர் அவர்களே ...நீங்கள் இத்தாலி செல்வது கேன்சல் ஆகிவிட்டதால் அந்த பணம் நமது சங்கத்தில் இருந்து எடுக்க பட்டது என்பதை நினைவு படுத்தும் நிலையில் நான் உள்ளேன் ..மறந்து விட வேண்டாம் ..
Deleteநமது சங்க நிதி நிலைமை பதுங்கு குழியை விட பல மடங்கு ஆழத்தில் உள்ளதை அறீவீர்கள் தானே ...:(
ஆசிரியர் அவர்களுக்கு ...
ReplyDeleteமிக பெரிய சந்தோச செய்தியை சொல்லியுள்ளதறகு முதலில் கணக்கு வழக்கு இல்லாத கைதட்டல் படங்களை தெரிவித்து கொள்கிறேன் ...ஈரோட்டில் எங்கள் போராட்ட குழு சார்பாக இந்த கோரிக்கையை கொண்டு தான் முதல் கட்ட போராட்டமாக போராட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு வழியே இல்லாமல் பண்ணிவிட்டீர்கள் ...அதற்கு ஒரு நன்றி சார் ..
டெக்ஸ் இதழ்களை பொறுத்தவரை எனது கருத்து ...
வழக்கமான தண்டவாளத்தில் இந்த வருடம் போல டெக்ஸ் கதைகளை 10% இணையுங்கள் ...வழக்கம் போல அந்த சந்தாவாசகர்கள் தொடர்வார்கள் ..நண்பர் சொன்னபடி சந்தா டி. (சந்தா டெக்ஸ் ) ..என்ற தனிவரிசை தண்டவாளத்தில் டெக்ஸ் இதழ்கள் மட்டும் தனியாகவும் கொண்டு வாருங்கள் ...வழக்கமான சந்தாதார்ர்களை விட. ஐந்து வாசகர்கள் ஆவது கூடுதல் சந்தாதார்ர்களை அது கொண்டு வராவிட்டால் எனது பெயரையே மாற்றி கொள்கிறேன் சார் ...
அடுத்து சில நண்பர்களின் கருத்து படி டெக்ஸ் இதழ்கள் மாதாமாதம் வந்தால் திகட்டி விடும் என்ற கருத்தை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை ...டெக்ஸ் கதை என்பது இட்லி சாம்பார் போல சார் ..தினம் காலை சாப்பிட்டாலும் திகட்டாது என்பதே உண்மை சார் ...
எனவே டெக்ஸ் கதை தண்டவாளத்தில் மாதம் ஒரு டெக்ஸ் .....அதில் கருப்பு வெள்ளை ..வண்ணம் ...பெரிய கதைகள் ...காவல் கழுகு போல சிறிய கதைகள் என எப்படி இருந்தாலும் ஓகே ...மாதம் ஒரு டெக்ஸ் என்ற கான்செப்ட் மட்டும் மாற்றாதிருங்கள் சார் ..அது போதும் ....ஆனால் கண்டிப்பாக பிரித்து என்ற கதை மட்டும் வேண்டவே வேண்டாம் ..
ஆரவாரத்துடன் அடுத்த வருட புத்தாண்டு முதல் வெளிவர போகும்
"டெக்ஸ் காமிக்ஸ் " இதழுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை கணக்கில்லா "பூங்கொத்து "படங்களுடன் தெரிவித்து கொள்கிறேன் சார் ...
உண்மையில் இந்த சந்தோச உற்சாகத்தில் இன்னும் ஏதோதோ எழுத வேண்டும் போல உள்ளது ...ஆனால் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை சார் .....
நன்றி ...நன்றி ...நன்றி .....
//அடுத்து சில நண்பர்களின் கருத்து படி டெக்ஸ் இதழ்கள் மாதாமாதம் வந்தால் திகட்டி விடும் என்ற கருத்தை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை//
Delete+1
+1
Deleteமறந்துட்டேன் சார் ....ஸ்பைடர் அட்டை படம் அட்டகாசம் சார் ...அருமை ...
ReplyDeleteபிறகு ஒரு வேண்டுகோள் சார் ...
அலைபேசி பதிவில் இந்த பதிவின் வண்ணம் அருமை .தெளிவாக படிக்க முடிகிறது .ஆனால் கத்திரி ப்ளூ கலரில் உள்ள உங்கள் பாயிண்ட்கள் சுத்தமாக படிக்க முடியவில்லை .இருட்டை தேடி போக வேண்டியுள்ளது சார் ..எனவே அந்த வண்ணத்தை இனி அதிகம் பயன்படுத்த வேண்டாம் .ப்ளீஸ் சார் ...
எப்படி தலைவரே.?கத்தரி பூ கலரில் சிரமப்பட்டு படித்தேன்.!இதை எடிட்டருக்கு தெரியப்படுத்த வேண்டுமே என்று எனக்கு தோன்றவில்லை பாருங்கள்.!
Deleteதலைவரே! இன்னொரு விஷயம்! நீண்ட நாட்களாக என் மனசில் உறுத்திக்கொண்டிருக்கும் விஷயம்.,நான் இந்த தளத்திற்கு வரும்முன்னே உங்களையும் மற்றும் நமது நண்பர்களையும் சுத்தமாக பிடிக்காது.!எடிட்டரின் செல்லப்பிள்ளைகள் என்று கொஞ்சம் காரம் அதிகமாகவே நிறைய கடிதங்கள் உங்களையும் நண்பர்களையும் திட்டி எடிட்டருக்கு கடிதம் எழதியுள்ளேன்.!இதில் சில எக்ஸ்ரா ஸ்டாம்ப் ஒட்டி எழதிய கடிதங்களும் உண்டு.!பிறகு தான் உணர்ந்தேன் நீங்களும் நண்பர்களும் பத்தரை மாற்று தங்கம் என்று.என்னை, நீங்களும் நண்பர்களும் தவறாக நினைத்து திட்டி கடிதம் அனுப்பி என்னை மன்னித்து கொள்ளுங்கள்.____/\____
ஈரோடு புத்தக கண்காட்சியில் 7&8தேதிகளில் உங்களை சந்திக்க முடியுமா.???
@ மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன்
Delete7&8 தேதிகள் அல்ல...8 & 9 தேதிகளில் தான் எடிட்டர் வருவதாக கூறியுள்ளார்..!முதல் சனிக்கிழமை, மாதத்தின் முதல் தேதியில் வெளியிடு இருக்கும் என்ற கனவில் நிறையவே நண்பர்கள் முதல் சனிக்கிழமைக்கு கிட்டதட்ட தாயாராகி விட்டார்கள். ஆனால் புத்தகமும் இல்லை.மாதவரும் இல்லை என்னும்போது...திட்டம் இரண்டாவது சனிக்கிழமை என்பதாக இல்லாமல்...பொரும்பாலான நண்பர்களின் வருகை இரண்டாவது ஞாயிறுகிழமையில் இருக்கும்..! அதாவது 9 -ம் தேதியில் இருக்கும் என்ற தகவலை
நண்பர்களுக்கும், தலீவருக்கும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்..!
மடிப்பாக்கம் வெங்கடேஷ் சார் ...உங்களை திட்டி கடிதம் எழுதுவதா ...எதிரிகளுக்கே பாராட்டி எழுதும் என்னை சாரி எங்களை போன்றோர்க்கு நண்பர்களை திட்டி எப்படி எழுதுவது ...இருந்தாலும் நீங்கள் விரும்பி கேட்டதால் இதோ ...
Deleteநீங்கள் எந்த காலமும் எந்த மனகுழப்பமும் ...மனகஷ்டங்களும் ஆட்படாது அப்படியே ஏற்பட்டாலும் மாடஸ்தி கார்வின் அதை முறியடிப்பதை போல தாங்களும் முறியடித்து என்றும் இந்த காமிக்ஸ் குடும்பத்தில் இணைந்து இருக்கவும் ...இனி வரும் உங்கள் வாரிசுகளும் காமிக்ஸ் குடும்பத்தில் இணைந்து எந்நாளும் மகிழ்ச்சியுடன் திளைத்து இருக்குமாறு கண்டபடி திட்டுகிறேன் ....ஓகே சார் ...
கண்டிப்பாக ஆசிரியர் வரும் இரண்டு நாளும் நான் புத்தக காட்சிக்கு நண்பர்களுடன் வருவேன் சார் ..என்ன ஒன்று 1&2என்ற நாளை முடிவு செய்து எங்கள் போராட்ட குழு ...சேந்தம்பட்டி குழு அனைவரும் டூர் போல ஈரோடு கொண்டாத்தை கொண்டாடுலாம் என இருந்தோம் ..திடீரென தேதி மாறியதால் பலருக்கு பல சிக்கல் ...சனி அன்று சிலர் வரமுடியா விட்டாலும் ஞாயிறு அனைவரும் வந்து விடுவார்கள் ..தங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ....ஆனால் ஈரோடு வந்தவுடன் எங்களை எப்படி எப்படி திட்டினீங்கன்னு எங்கள் காதில் மட்டும் சொல்லி விடுங்கள்..:)
தேதியை சரியாக திருத்தியதற்கு மிக்க நன்றி மாயாவி சார்.!
Deleteபெருந்தன்மைக்கு நன்றி தலைவரே.!
This comment has been removed by the author.
ReplyDeleteடியர் எடிட்டர்ஜீ !!!
ReplyDeleteகாலை வணக்கம் ஸார். உங்கள் சமீப பதிவுகளில் இன்றைய பதிவை போல் வாசகர்களை குதூகல படுத்தும் பதிவு வேறில்லை.மஞ்சள் சட்டையாருக்கு கூடுதல் வாய்ப்பு என்ற எங்கள் ஆரம்பகால கோரிக்கை இன்று அவருக்கென தனி ட்ராக் உருவாக்கம் என்ற பரிணாமத்தை சாத்தியமாக்கிடும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய ஞாயிறை ஒரு கொண்டாட்டமிக்கதாய் மாற்றியதற்கு மிக்க நன்றி ஸார் !
இத்தாலிய மொழியில் வில்லர் 650+ கதைகளோடு தொடரும் நிலையில் அவருக்கென்று தனி இதழை வெளியிடுவதே பொருத்தமான ஒன்றாயிருக்கும்.மாதாமாதம் ஒரு வில்லர் கதை சாத்தியமில்லை எனில் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் ஒரு வில்லர் இதழ் (குறைந்த பட்சம் 2 கதைகள்.கண்டிப்பாக வண்ணத்தில்) உங்களால் சாத்தியமே.
வில்லர் கதைகள் எனக்கு பிடிக்காது என்று சொல்வார் எவரும் இங்கில்லை.எனவே ‘customized imprints’ என்ற முறையில் வில்லரை "தனிமைப்படுத்த" அவசியமில்லை.நீங்கள் கூறியபடி தனிப்பட்ட ‘புல்லட் டிரெயின்‘ தடத்துக்கு TEX -ன் கூடுதல் எண்ணிக்கைகளைத் திசைதிருப்பினால் நிச்சயம் எங்கள் எல்லோருக்கும் நலன் தரும்.
நமது ஆதர்ச நாயகர்கள் பலரது கதைகள் கிட்டதட்ட காலியாகி வரும் நிலையில் வில்லர் மட்டுமே நமது இதழ்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பார் என்பது எனது அபிப்ராயம்.ஆகவே உங்களிடம் உள்ள "முன்ஜாக்கிரதை" முனியப்பாவை ஓரங்கட்டிவிட்டு "அதிரடி"அண்ணாமலையை களமிறக்கி "மலைடா...அண்ணா..மலை" என்று பொங்கி எழவேண்டிய தருணம் இது.நிச்சயம் நல்லதே நடக்கும் என நம்புகிறேன்.
அப்புறம் ஒரு வேதனையான விஷயம்.மரமண்டை மற்றும் mr.மரமண்டை என்ற புனைப்பெயரில் இங்கு பதிவிடுவது யார்? என்ற (தேவையற்ற) ஆராய்ச்சி "புலனாய்வு" எனும் பெயரில் ஆரம்பித்து, "கேலிக்கூத்து" என்ற நிலையை அடைந்து, இன்று "பரஸ்பர குற்றச்சாட்டு"என்ற அவலத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.மரமண்டை அவர்கள் பயன்படுத்துவது புனைப்பெயர்.ஆனால் அவரை சாடுவதற்கு இங்கே ஆஜராகும் புண்ணியாத்மாக்கள் தான் உண்மையில் போலி ஐ.டி.க்களோ என்ற சந்தேகம் வருகிறது.மரமண்டையாரை ஹிட்லராக வருணித்து வசைபாடுபவர்கள், உங்களை "ஆசானே ஆசானே" என்று பரிகாசத்துடனும் வன்மத்துடனும் நையாண்டி செய்து பதிவிடும் போலி ஐ.டி.காரர்களை ஒரு நாளும் "யார்?" என்று ஆராய்வதில்லையே ?அது ஏன் ? அவர்கள் "நம்ம" ஆட்கள் என்பதாலா ?
என்னை பொறுத்தவரை நான் மரமண்டை அவர்களின் ஆதரவாளனும் அல்ல.எதிர்ப்பாளனுமல்ல.மிகவும் கண்ணியமாகவும் நாகரிகமாகவும் தனது கருத்துகளை இங்கு பதிவிடும் ஒருவரை அவர் "புனைப்பெயரில்" வருகிறார் என்ற அற்ப காரணத்திற்காக வெறுத்து ஒதுக்குவது "நியாயமா" ?
இதுதான் "நியாயம்" என்றால்,நமது நண்பர்களின் இந்த நியாயத்தை முழுமனதோடு எதிர்க்கிறேன்.ஆயிரம் குற்றவாளிகளை தப்பவிட்டுவிட்டு ஒரு அப்பாவியை தண்டிக்கும் இந்த நியாயத்தில் அடியேனுக்கு சற்றும் உடன்பாடில்லை !!!
This comment has been removed by the author.
Delete//என்னை பொறுத்தவரை நான் மரமண்டை அவர்களின் ஆதரவாளனும் அல்ல.எதிர்ப்பாளனுமல்ல.மிகவும் கண்ணியமாகவும் நாகரிகமாகவும் தனது கருத்துகளை இங்கு பதிவிடும் ஒருவரை அவர் "புனைப்பெயரில்" வருகிறார் என்ற அற்ப காரணத்திற்காக வெறுத்து ஒதுக்குவது "நியாயமா" ?//
Delete+1
//இதுதான் "நியாயம்" என்றால்,நமது நண்பர்களின் இந்த நியாயத்தை முழுமனதோடு எதிர்க்கிறேன்.ஆயிரம் குற்றவாளிகளை தப்பவிட்டுவிட்டு ஒரு அப்பாவியை தண்டிக்கும் இந்த நியாயத்தில் அடியேனுக்கு சற்றும் உடன்பாடில்லை !!!//
Delete+1
அப்பவியோ, குற்றவாளியோ, நடுநிலையரோ...அதை பற்றி ஆராயும் அவசியமென்ன? இது தேவையற்ற ஆராய்வு.. அவர் பதிவிடும் கருத்து பிடிக்கவில்லை என்றால் கடந்து செல்வதை விட்டுவிட்டு, அதை ஒரு பெரிய அநாவசியமான விவாதமாக்கி, இந்த தளத்தை ரணகளம் ஆக்கி விடுகிறார்கள்...
இது போன்ற தேவை இல்லாத ஆராய்ச்சிகளால், நமது தளத்தின் தன்மை மாறிவிடுமோ? தளத்தை முடக்கும் நிலை வந்துவிடுமோ? என்று அச்சம் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை....
புனித சாத்தான்.!மரமண்டை விஷயத்தில் எனக்கும் வருத்தமே.!போலி ஐ.டி.க்கள் விஷயத்தில் மிஸ்டர் மரமண்டை விதிவிலக்கு.!எனக்கு மரமண்டை மூன்று மாதங்கள் மட்டுமே தெரியும்.!இதற்கு முன்என்ன நடந்தது என்று தெரியாது!.முகம் தெரிந்தவர்கள் மற்ற நண்பர்களை" ஜால்ரா", "சொம்பு", "குப்பை," சைக்கோ"என்று கடுமையாக சாடும்போது கண்ணியமாகவே எழதும் மி.ம.ம.மீது எனக்கு நல்ல எண்ணமே உண்டு எல்லோரிடமும் நல்ல குணம் கெட்ட குணம் உண்டு நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு கெட்டதை தாண்டி சென்று சென்றால் பிரச்சினை இல்லை.! போலி ஐ.டி.யை ஊக்குவிக்கும் போது மற்ற குரூரமனம் கொண்டவர்களுக்கு அல்வா சாப்பிடுவதுபோல் ஆகிவிடும் எனவே ஆசிரியர் இந்த கருத்து வருத்தமே என்றாலும் வேறுவழி? காலமே பதில் சொல்லவேண்டும்.!!!வேலைகள் மற்றும் பிரச்சினைகள் நடுவில் காமிக்ஸ் என்னும் ஆலமர நிழலில் கொஞ்சநேரம் ஜாலியாக இளைப்பாற வருகிறேன்.!அதனால் எனக்கு மரமண்டை மீது கோபமோ வருத்தமோ கிடையாது.காமிக்ஸ் படிக்கும்&ரசிக்கும் அனைவரையுமே எனக்கு பிடிக்கும்.!இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.!!!
Delete+1
Delete+1
Deleteமகேந்திரன் பரமேஸ்வரன் சார்.!. வணக்கம் சார்!!மி.ம.ம.யின் புகழ் அமெரிக்கா வரை பரவியுள்ளதா ரெம்ப சந்தோசம்.!!!
Deleteநண்பர்கள் பலர் இங்கு சொல்லி இருக்கும்
ReplyDeleteCBF ..இரண்டு முழு கதைகள் வண்ணத்தில்
EBF ...இரண்டு முழு கதைகள் வண்ணத்தில்
கோடைமலர் ....2 கதைகள் b&w
தீபாவளி மலர் ..2 கதைகள் b&w
இதனுடன் 4 டெக்ஸ் கதைகள் ரெகுலர் சந்தாவில்
என்ற கான்செப்ட் மிகவும் கவர்ச்சிகரமானதாக தோன்றுகிறது ...
டெக்ஸ் இதழ் தனி சந்தா என்று நீங்கள் முடிவெடுத்தால்,தனி சந்தா கருப்பு & வெள்ளை என்றும்,ரெகுலர் சந்தாவில் வரும் சிறப்பு இதழ்கள் முழு வண்ணத்தில் என்ற யோசனையையும் முடிந்தால் பரிசீலிக்கலாமே.
ReplyDelete+1. Good idea
Delete+1
DeleteIf different different subscriptions added together soon I afraid the yearly subscription will reach 10000. And I hope this will satisfy only affordable regular readers only. It will not going to bring neither new readers nor satisfy unaffordable regular readers. It will bring the conclusion, comics is only for people who have money to afford.
ReplyDeleteThis i am writing here to bring this point of view to your consideration. Anybody can reply how this factor going to be accommodated in the subscription fixing. A person who cant pay big subscription amount will never going to comment online.
அன்பு எடி அவர்களுக்கு ,
ReplyDeleteஎனக்கு வயது 32. எனது ஆயுள் 100 தாண்டும் என்று கனவிலும் எண்ணியதில்லை. ஆண்டுக்கு 10 டெக்ஸ் இதழ்கள் என்று வைத்தாலும் கூட இதுவரை வெளிவந்த இதழ்களை வாசித்து முடிக்கவே இன்னும் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
ஆகையால் இரவுக்கழுகார் அவர்களுக்கு தனி பயணம் என்று நீங்கள் முடிவெடுத்தால் அந்த பயணத்தில் உடனிருக்க நான் மிகுந்த சந்தோசத்துடன் தலையசைப்பேன்.
PS : எனது பெயர் அருண். வசிப்பிடம் திருப்பூர். நான் சுமார் 22 ஆண்டுகளாக லயன் வாசகன். எனக்கு வேறு பெயரில் ஐடென்டிடி இல்லை.
சிம்பா @ அருண்
Deleteஉங்களை இந்த காமிக்ஸ் உலக தளத்திற்கு வருக..வருக..என அனைத்து நண்பர்கள் சார்பாக வரவேற்கிறேன்..!
டெக்ஸ் கதைகளை பொருத்தவரை என் நிலைப்பாடு இதுதான்
ReplyDeleteவருடத்திற்கு நான்கு இதழ்கள்:
சென்னை புத்தக விழா - ஜனவரி
கோடைமலர் - மே
ஈரோடு புத்தகவிழா - ஆகஸ்ட்
தீபாவளி சிறப்பிதழ் - நவம்பர்
இவை அனைத்தும் வண்ணத்தில் முடிந்தால் டெக்ஸ் Maxi அளவிலேயே வந்தால் சிறப்பாக இருக்கும்.
இடையில் தேவைப்படும் போது கருப்பு வெள்ளை இதழ்கள்.
பரவலான விற்பனையை கொண்டிருக்கும் டெக்ஸ் இதழ்கள் Customized Print ல் வருவதில் விருப்பம் இல்லை. மேலும் மாதாமாதம் தொடராக வெளியிடுவதும் வேண்டாம்.
திரு விஜயன் & நண்பர்களுக்கு மதிய வணக்கங்கள்..!
ReplyDeleteவாழ்க்கை கொண்டாடபடவேண்டிய ஒரு திருவிழா..! திருவிழாவாக கொண்டாட நான் பெரிதும் நம்பியிருப்பது...தேர்ந்தெடுப்பது...இந்த காமிக்ஸ் உலகைத்தான். இது வேண்டும், அது வேண்டும், அது வந்தால் சந்தோஷம் என ஏங்காமல்...எது வந்ததோ அதை வைத்து திருவிழாவாக கொண்டாடுகிறேன்..! இது எல்லோருக்கும் பொருந்தா என்றால் பொருந்தாது..!
ஆனால், காமிக்ஸைவைத்து கொண்டாடும் திருவிழாவில் பங்குகொள்ளும் ஆர்வம் மட்டும் சமீபமாக எல்லோர் மனதிலும் காட்டுத்தீயாக பரவிவருகிறது..! அதற்கு காரணம் LMS,பௌன்சர்,மின்னும் மரணம் என சென்னை மற்றும் ஈரோடு புத்தகத்திருவிழாவின் வெளியிடுகளில், பங்குகொண்ட காமிக்ஸ் காதலர்களின் கொண்டாட்டமே..! நாமும் இனி பங்குகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் விருச்சகமாய் வளர ஆரம்பித்துவிட்டது.
இந்த கொண்டாட்டத்தின் தாக்கம்... காமிக்ஸ் உலகம் தாண்டி, வெளியில் உள்ளவர்களை உள்ளே வரவைக்கும் அருமையான சூழல் உருவாகியுள்ளது என்பது கவனிக்க வேண்டிய நுட்பமான வாய்ப்பு..! இந்த வாய்ப்பை திரு விஜயன் அவர்களுக்கும் சரி,இந்த காமிக்ஸ் உலகிற்கும் சரி போட்டி போட்டுக்கொண்டு, அருமையான பலன் தரும் ஒரு சின்னவழியை தீர்க்கமாக உணர்கிறேன்..!
அந்த வழியை வெறும் எழுத்தால் சொன்னால், எனக்கும் 10% திருப்தியே..! 90% பலன் தரும் ஆழமான பதிலுடன் மாலையில் வருகிறேன்..!
மாலை வணக்கங்கள் நண்பர்களே..!
Deleteஎன்றுமே சுவைகுறையாத, சீரான வளர்ச்சியாக, நமக்கு காமிக்ஸ்புத்தகங்கள் கிடைக்கவேண்டும்... வட்டமும் விரியவேண்டும் என்ற மையபுள்ளியை நோக்கிய சிந்தனையில் எனக்கு தோன்றி...பலருக்கும் தெரிந்த...விரும்பும் ஒரு கருத்தை என் மனதில் ஒரு விதையாக உள்ளது. அதை அப்படியே எழுத்தில் போட்டால்..அதன் வீரியம் தெரியாமலேயே காணாமல் போக நிறையவே வாய்ப்புள்ளது..! எனவே அந்த விதையை இங்கு புதைத்து ஒரு சின்ன செடியாக வளர்க்கும் முயற்சியில்...முதல் நாளாக...முதல் இங்கே'கிளிக்'
உங்கள் விதை விருட்சமாக வளர வேண்டும் என்பதே எனது அவா
Deleteமுயச்சியால் அடையாதது இவ்வுலகில் எதுவும் இல்லை
வாழ்த்துக்கள் மாயாவி சார்
ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு
ReplyDelete'காமிக்ஸ் ரசிகன் (எ) புதுவை செந்தில்' என்ற பெயரை 'புதுவை செந்தில்' என்று மாற்றியிருக்கிறேன்.
அடுத்த மாதம் வரப்போகும் இதழ்கள் என்னென்ன? தெரிந்தவர்கள் பகிருங்களேன்.
ReplyDeleteஇரண்டு மாதத்திற்கு ஒரு டெக்ஸ் என்பதே சரியான எண்ணிக்கை. அதற்கு மேலான எண்ணிக்கை ரொம்ப அதிகம் என நினைக்கிறேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteடெக்ஸ்க்கு தனி சந்தா .... ? ஓகே ..
ReplyDeletecustomized imprint ணா என்ன .?சார்
ReplyDeleteSir .. If we cant publish monthly issue of TEX .. At least publish once every 2 months ..
ReplyDeleteAlso publish a Special issue like LION 250 every year along with it ..
இந்த பக்கம் வந்து ரொம்ப நாளாகிவிட்டதே என்று நேற்றிரவு மெல்ல எட்டி பார்த்தேன்........ போர்க்களமாக காட்சியளிக்கிறது.
ReplyDeleteகாமிக்ஸ் பற்றிய விமர்சனம் மற்றும் விவாதம் என்ற நோக்கத்திற்காக தொடங்கபட்ட தளம் திசைமாறி வேறெங்கோ போய்கொண்டிருக்கிறது.
புனைபெயரில் பதிவிடுவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா......? நான் மிஸ்டர் மரமண்டையிடம் கேட்டுகொள்வதெல்லாம் இது தான்........ தொடர்ந்து பதிவிடுங்கள்...,, கிண்டல் செய்பவர்களை கண்டுகொள்ளாதிர்கள். கொஞ்சநாள் கத்தி விட்டு தாமாகவே அமைதியாகிவிடுவார்கள்.
//காமிக்ஸ் பற்றிய விமர்சனம் மற்றும் விவாதம் என்ற நோக்கத்திற்காக தொடங்கபட்ட தளம் திசைமாறி வேறெங்கோ போய்கொண்டிருக்கிறது.//
Delete+1
//புனைபெயரில் பதிவிடுவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா......?//
Delete+1
@மூர்த்தி சார்.!+1111111111111.கார்னிவல் திருவிழா வில் போடும் முகமூடிக்கும்.மாடஸ்டி கதையான காட்டேறி கானகத்தில் வில்லன் செபாஸ்டியன் அணியும் முகமூடிக்கும் வித்தியாசம் தெரியாமல் போனது துரதிருஷ்டமே.!
Deleteஆனா.... குற்றச் சக்கரவர்த்தி மூஞ்சியிலே யாரு தக்காளி சட்னியை ஊற்றியது??????
ReplyDeleteஆனா.... குற்றச் சக்கரவர்த்தி மூஞ்சியிலே யாரு தக்காளி சட்னியை ஊற்றியது??????
ReplyDelete158th
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteடியர் விஜயன்
ReplyDeleteஉங்களுக்கு அனுபவம் அதிகம் என்பது என் எதிர்பார்ப்பு
தனி மாதாந்திர டெக்ஸ் வில்லர் தொடர் ஒரு பெரிய நல்ல முயற்சி. நன்றி. நாம் மிக விரைவில் ஒவ்வொரு மாதமும் எங்கள் டெக்ஸ் படிக்க முடியும் என்று நம்புகிறேன்.
ReplyDeletePhew! Finally i managed to put it in Tamil. Don't hesitate a bit. This will be a great hit.
Aldrin Ramesh from Muscat
டியர் விஜயன் சார்,
ReplyDeleteசிறப்பாக விற்பனையாகும் வில்லர் கதைகளுக்கு தனிச் சந்தா எதற்கு? ரெகுலர் சந்தாவில், டெக்ஸ் கதைகளின் எண்ணிக்கையை அதிகரித்து, விற்பனையில் அதிகம் வரவேற்பு காணாத கதைத் தொடர்களையும், ஒன்ஷாட் கதைகளையும் தவிர்த்து விடலாம் - மாதம் ஒரு டெக்ஸ் இதழ், சரியான எண்ணிக்கையாகப் படுகிறது! Customized imprints-ல், வாசகர்களின் வரவேற்பைக் கணிக்க இயலாத இதர genre-களை (sci-fi, fantasy, horror, romance etc) முயற்சிக்கலாமே? இவை தவிர, வருடம் ஒரு முறை, டெக்ஸ் வில்லரின் ஏதாவது ஒரு புஷ்டியான கதையை, பெரிய அளவில், deluxe edition ஆக, முன்பதிவின் பேரில் வெளியிடலாம்!
This comment has been removed by the author.
DeleteKarthik Somalinga : Romnce கதைகளை முயற்சித்துப் பார்க்க எத்தனை பேருக்கு ஆர்வம் என்று அறிவதில் ஆர்வம் ! ஈரோட்டில் ரெண்டு கைகளையும் தூக்கிக் கொண்டு ஓர் ஆஜானுபாகு உருவம் நிற்பதில் ரகசியம் இல்லை தான்......
Deleteடெக்ஸ் வில்லரின் கதைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது சரியான முடிவே. மெயின் ஸ்ட்ரீம் ரசிகர்களுக்கு தீனி போடுவது வரவேற்கத்தக்கதே. முடிந்த அளவு வண்ணத்திலும் மீதம் கருப்பு வெள்ளையிலும் வெளியிடலாம். தீபாவளி, பு. கா, சமயங்களில் ஒரு வண்ண குண்டு புக் சிறப்பிதழ் இப்பொழுது வந்த மாதிரி வரட்டுமே. தனி சந்தாவாக இல்லாமல் மெயின் சந்தாவிலேயே வரட்டும். மெயின் சந்தா டெக்ஸ்(+12), லார்கோ, மாடஸ்டி, ஷெல்டன், கார்டூன்(12), டைகர் மற்றும் sure ஹிட் கதைகளாக இருக்கட்டும்.
ReplyDeleteநான் கடந்த பதிவில் கூறியது போல கி நா, தோர்கல், ரத்தப் படலம் போன்ற குறைந்த வரவேற்பு உள்ள கதைகளை கஸ்டம் இம்ப்ரின்ட் முறையில் தனி சந்தாவில் தள்ளி விடலாமே. மெயின் சந்தா cash cow வாகவும் தனி சந்தா பரிசோதனை முயற்சியாகவும் இருக்கட்டுமே? இதன் மூலம் உங்களுக்கு கிட்டங்கியும் முடிந்த அளவு காலியாக இருக்கும்.
ஒரே ஒரு கேள்வி தான். நீங்கள் பட்ஜெட் Rs.5000க்கும் குறைவாக இருக்கும் என்கிறீர்கள். 12 திகில் 12 டெக்ஸ் என்று அதிகமானால் நீங்கள் மற்ற கதைகளின் எண்ணிக்கைகளை குறைத்து விடுவீர்களோ? அப்படி செய்தால் எனக்கு வருத்தமே. பரிசோதனைக் கதைகள் தனி சந்தாவாக வரும் பொழுது நண்பர்கள் அவர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப அவற்றை தவிர்த்து விடலாமே? குறைந்த அளவு பிரிண்ட் ரன் மற்றும் விலை அதிகம் எனும் போது உங்களுக்கு சரியாக இருக்குமா? உங்களுடைய சிக்கல்கள் எனக்கு தெரியாது. மற்ற கதைகள் குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் வரும் பிதற்றலே.
+1....
Deleteசந்தா கொஞ்சம் அதிகரித்தாலும் பரவாயில்லை சார் ....புத்தக வரிசையை குறைத்து விடாதீர்கள் ...
மகேந்திரன் பரமசிவம்.!+1111111111111111111111111111………………………………!
DeleteMahendran Paramasivam : ஆண்டுக்கு ரூ.5000 என்ற பட்ஜெட் நண்பர்களில் நிறையப் பேருக்கு மட்டுமன்றி, நமக்குமே ஒரு மெகா சுமையாகவே இருந்திடும். So அந்த நம்பரை வரும் ஆண்டுக்கு எதிர்பார்த்திடல் வேண்டாமே ? ஆர்வங்களுக்கும் தீனி போடத் தவறாது , அயர்ச்சிகளும் தலைகாட்ட இடம்தரா ஒரு மத்திம நிலையைத் தேடுவதே இப்போது நம் முன்னே உள்ள சவால் !
Deleteசவாலே சமாளி
Deleteவிஜயன் சார்
நீங்க சமாளிப்பீங்க என்ற நம்பிக்கையோடு காத்திரு.கிறேன்
ஓர் ஒற்றை நொடியின் மின்னல் கீற்றில்
ReplyDeleteஉன்முகம் எனக்கு
பரிச்சியமா அந்நியமா
தெரியாது
வெகு வெகு தொலைவினி ன்றும் வரும் வாடைக்காற்று
மெல்ல உச்சரிக்கும் உன்பெயர்
நான் அறிவேனோ மாட்டேனோ
தெரியாது
இது தலை முறை தாண்டிய பந்தம்
டெக்ஸ்
இது என் முன்னோர்களின் ரத்தத்தில் கலந்த பெயரா
இருந்தி ருக்கலாம் இல்லாமல் போகலாம் ..ஆனால்
CONTINUED
ஒரு மார்கழிக் குளிரின் மங்கலான இருட்டில்
ReplyDeleteஎன் கம்பளிக்குள் ஒளிந்து கொண்டு கதகதப்பை மூட்டி யது யார்
சுட்டெரிக்கும் கோடையில் சுடுமணல் பரப்பில்
நா வறண்டு நான் தவிக்க குளிர் நீர் கொண்டு
குதூ கலி க்க வைத்தது யார்
அது வேறு யாராகக் கூட இருக்கலாம் ...ஆனால்...ஆனால்..
அந்தப் பெயர் ...டெக்ஸ் எனும் அந்தப் பெயர்
மாசா மாசம் உன்னைத் தரிசிக்க முடிந்தால்
அதைக் கொண்டுவர முடிந்தால் நான் மட்டுமல்ல
நிலவின் முழுமதியை நித்தமும் ஆராதிக்கும் ரசிகர் கூ ட்டம் போல்
தொழாத கைகளும் தொழும் ..விழாத மாலைகள் விழும்
+111111111
DeleteMarupadiyum niraya urulaikilangu vaitha Samoa sapida ennaippolave ellorum asai padugreirgal vanga sapdalam 2016il
ReplyDelete@ ஸ்ரீதர்
Deleteவருத்தகறி...பீன்ஸ் விட்டிங்களே..!!! ( கார்சன் ஆட்டு தாடியை சொரிந்து கொண்டே சிரிக்கும் படம் ஒன்று)
@ Friends : சமோசா....வருத்த கறி.....ஆஹா...கொலஸ்டிரால் நம் நாயகர்களுக்கு அந்நியமாய் இருக்கலாம்...அனால் நமக்கு ..?
Delete@ திரு விஜயன்
Delete//நாயகர்களுக்கு அந்நியமாய் இருக்கலாம்...அனால் நமக்கு ..?//
அதற்கு ஒரு விதி செய்யவே ஒரு விதை வளர்ந்து வருகிறது. சில நாட்களின் (எல்லோர் மனதிலும் உள்ள) பூக்கும் பதில்...நல்ல முடிவுக்கு வழிவகும் என நம்புகிறேன் ஸார்..!
Ipothelam urulai kilangu parthaley TeX TeX willerthan thondrukirar vijayamayavi sir.
DeleteTeX gold enru onrum ulathuthane
வில்லரின் விஸ்வரூபம் 2016 :-
ReplyDeleteமேக்ஸி 330 பக்கங்களுக்கு மேல் , கலரில் 1 ., க / வெ யில் 2.
மொத்தம் = 3
மீடியம் 240 பக்கங்களில்., கலரில் 3 , க / வெ யில் 6.
மொத்தம் = 9
மினி 110 பக்கங்களில் ,
கலரில் 4 , க / வெ யில் 8 .
மொத்தம் 12.
மைக்ரோ மினி ( பாங்க் கொள்ளை., எரிந்த கடிதம் சைஸில்.) ,
இந்த சைசில் எத்தனை கதைகள் இருக்கின்றன., என்று தெரியாத காரணத்தால் குறிப்பிட முடியவில்லை.
மைக்ரோ மினி இல்லாமலேயே., 24 கதைகள் வருகின்றன.
இவற்றை., மாதமொருமுறை., இரண்டு மாதங்களுக்கொருமுறை., குண்டு புக்., தீபாவளி மலர்., ஆண்டு மலர் என எல்லா விதங்களிலும் வரவேற்க்கிறேன்.
(ஆனாலும் என்னுடைய சாய்ஸ் இரண்டு மாதங்களுக்கொருமுறை என்பதே)
தனி சந்தா., ரெகுலர் விலையில் என்றால் டபுள் ஓ.கே.
யானறிந்த காமிக்ஸ் வாசகர்களில் டெக்ஸ் வில்லர் கதைகளை வாங்காமல் சாய்ஸில் விட்டோர் எவருமிலர்.
"கஷ்ட"மைஸுடு இம்ப்ரிண்ட்ஸ் என்றால்., பலர் விலையைகண்டு மிரண்டு பின் வாங்கக்கூடும்.
அந்த ஒரு முயற்சி மட்டும் வேண்டவே வேண்டாம் சார்.!!!
+1111
Deleteவில்லரின் விஸ்வரூபம், வில்லரின் வாட்டர்லூவாகிடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் நமக்குண்டு சார் ! :-):
Delete// ஆனாலும் என்னுடைய சாய்ஸ் இரண்டு மாதங்களுக்கொருமுறை என்பதே //
Deleteஇரண்டு மாதங்கள் என்பதே அதிகம் கண்ணன்
முப்பது நாட்கள் என்பதே சரியான ஒன்று
எங்கே டெக்ஸ் விஜயராகவன்? ஆளையே காணோம்.!சந்தோச செய்தியில்"தொப்'" என்று விழந்துவிட்டாரா?
Deleteஎங்க டெக்ஸ் மாமாவுக்கு வாரத்துக்கு ஒரு டெக்ஸ் புக் குண்டா கொடுத்தாக்கூட பத்தாது M V.. இதுக்கெல்லாம் மயங்கிடுவாரா என்ன.? இன்னும் எவ்வளவோ பாக்க வேண்டியிருக்கு. .
Delete(ஏழுமலையான் தரிசனத்திற்கு குடும்பத்தோடு தயாராகிக் கொண்டிருக்கிறார்.)
SMURFS தமிழ் காமிக்ஸ் உலகில் அடியெடுத்து வைக்க காரணம் நண்பர் லக்கி லிமாட் என்பது நாம் அறிந்ததே - இன்று அவர் தொடங்கி வைத்த "பொடி" பாஷையும் ஒரு சர்வதேச பதிப்பகத்தாரால் அங்கீகரிக்கப்பட்டிருப்பது தமிழ் காமிக்ஸ் உலகில் ஒரு சாதனையே - first ever fan-based-script style getting recognized for vernacular tongue !!
ReplyDeleteCongratulations Lucky Limat - தமிழ்செல்வன் - வாழ்த்துக்கள் !!
டியர் எடிட்டர்,
நமது முதல் smurf இதழில் லிக்கி லிமாட்டுக்கு ஒரு அங்கீகாரம் அளிக்கலாமே !
இங்கே'கிளிக்'
Delete+1
Deleteமாதம் ஒரு டெக்ஸ் என்பது வாத்தின் வயிற்றை இருப்பது போலாகிவிடலாம்... பௌன்சர் போல் ஒரு ஸ்பெசல் சந்தா முயற்சிக்கலாமே.... Exclusively For TEX என்று..... இரண்டு மாத்திற்க்கு அல்லது மூன்று மாத்திற்க்கு நான்கு என்ற ரீதியில்....
ReplyDeleteஅப்புறம்., எதையெதையோ கேட்டுட்டு இதை கேட்காம விட்டுட்டா., பஞ்சாயத்தை கூட்டி., என்னோட ஆரும் அண்ணந்தண்ணி பொழங்கக்கூடாதுன்னு., ஊரைவிட்டே தள்ளி வெச்சிருவாங்க.!!!
ReplyDeleteகார்ட்டூன்ஸ் கலக்கல் 2016 :-
லக்கி லூக் - 2
மறுபதிப்பு - 1
சிக்பில் - 3 (ஆசைதான்)
மறுபதிப்பு - 1
ப்ளுகோட்ஸ் - 2
சுட்டி லக்கி - 1
ரின்டின் கேன் - 1
கர்னல் க்ளிப்டன் - 2
ஸ்மர்ஃப் - 2
விஞ்ஞானி தாத்தாவ்ஸ் - 1
மதியில்லாமந்திரி -1
(வி.தாத்தா மாதிரி ட்ரை பண்ணலாமே சார்)
இத்தோட
ஜில் ஜோர்டான் - 1
ஆக மொத்தம் பதினெட்டு ச்சியர்ஸ்!!!
தனிசந்தா எல்லாம் கூட தேவையில்லை சார். லயன் முத்துவில் இவ்வாறு கலந்துகட்டி அடித்தாலே போதுமே.!!
இந்த கனவு நிறைவேறுமா!!!!?????
ReplyDelete///பதிவிடும் சிந்தைகளுக்குச் சொந்தம் கொண்டாடக் கூடவொரு முகமூடி தேவைப்படுமளவுக்கு இங்கே இருப்போர் கொடுங்கோலர்களோ ; புல்தடுக்கிப் பயில்வான்களோ இல்லையே ! Why then the need or the craving for anonymity ??? ///
கண்டிப்பாக இதுவொரு அவசியமான கேள்வியே! இந்தக் கேள்விக்குத் தொடர்புடையவர்கள் கொஞ்சம் கூடுதலாக மண்டையைக் கசக்கி ஒரு நல்ல முடிவை எடுத்தால் இந்தத் தளத்தின் ஆரோக்கியத்துக்கு (அட்லீஸ்ட் இனியாவது) நல்லது!
my last two எட்டணாஸ்... "வக்கிர எண்ணம்கொண்ட யாரோ சிலருக்கு இங்கே வந்து சகலரையும் திட்டி அவமானப் படுத்த முகமூடியொன்று அவசியமாகிடலாம் தான்! ஆனால் நியாயமான கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வருபவர்களுக்கு அப்படியொரு முகமூடி என்றுமே அவசியமில்லை!" என்பது என் தாழ்மையான கருத்து!
///ஒரு துரதிர்ஷ்ட நாளில் அப்படியொரு வேளையும் புலர்ந்தே விட்டதெனில் - இந்தப் பதிவுப் பக்கத்தைச் 'சிவனே' என்றொரு தகவல் பலகையாக மட்டுமே உருமாற்றி விட்டு நடையைக் கட்டத் தான் தீர்மானிப்பேனே தவிர்த்து - வகுப்பறை வாத்தியாராய் அவதாரமெடுக்க நிச்சயம் முனைந்திட மாட்டேன் ! ///
இத்தளத்தில் இப்படியொரு வார்த்தையை விதைக்க எடிட்டர் எவ்வளவு மனப்போராட்டத்தை நடத்தியிருப்பார் என்பதை உணரமுடிகிறது. எனினும், இப்படி எழுதவேண்டிய சூழலை ஒன்று இங்கே உருவாகியிருப்பது வாசகர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட சிறியதொரு தலைகுனிவாகவே கருதுகிறேன்! :(
ஹம்... இதுவும் கடந்துபோகும்; குனிந்த தலையோடாவது!
@ இத்தாலி விஜய் @ நண்பர்களுக்கு
Deleteஎடிட்டரின் மனபோரட்டத்திற்க்கும், அப்படியொரு வார்த்தை விதைத்ததற்கும் நானும் ஒரு (முக்கிய காரணம்) என்பதால் இங்கு தலை முதல் நபராக தலைகுனிகிறேன்..! ஆனால் ..பதிவிடுபவர், பங்குகொள்பவர் என்ற வித்தியாசம் மட்டுமே அன்றி...மனபோராட்டங்களின் வலிகளில் வித்தியாசமுண்டோ..!!! :-(((
This comment has been removed by the author.
ReplyDeleteErode VIJAY : தலைகுனிவு என்பதெல்லாம் பெரிய வார்த்தை ....! சங்கடங்களை மறந்து விட்டுசந்தோஷங்களை நோக்கி திரும்பவும் நடை போட நமக்குத் தெரியாதா - என்ன?
ReplyDelete