நண்பர்களே,
ஜிலீரென்ற வட இந்தியாவிலிருந்து வணக்கம். ஆளாளுக்கு கோட்டும், ஸ்வெட்டரும், மப்ளரும் மாட்டிக் கொண்டு நவீன பூச்சாண்டிகள் போல் உலாற்றித் திரியும் ஒரு பனிக்காலத்து அதிகாலையை ஹோட்டல் அறையின் கண்ணாடிக்குப் பின்னிருந்து ரசிப்பது சுகம்மாகத் தானிருக்கிறது ! "அட.. 25 வருஷங்களுக்கு முன்னாடி கல்யாணத்துக்கு வாங்கின கோட்டு-சூட்டை அந்து உருண்டைகளிலிருந்து காப்பாற்றி கையோடு கொண்டு வந்திருக்கலாமோ ? இது தோணாமப் போச்சே....!!" என்று மண்டையில் ரோசனை ஓடும் நேரமே ஊரிலிருந்து போன் - நமது ஆல்-இன்-ஆல் மைதீனிடமிருந்து !! "கிராபிக் நாவல் முழுசும் நைட்டே பேக்கிங் செஞ்சாச்சு ! ; மற்ற புக்குகள் காலையில் ரெடியாகிடும் !" என்று ! Oh yes....டிசம்பரின் கடைசிப் பணிநாளுக்கே, ஜனவரியின் இதழ்கள் உங்கள் கைகளில் இருந்திடும் ! இன்று 2018 -ன் சந்தாதாரர்கள் அனைவருக்குமே புத்தாண்டின் இதழ்கள் புறப்பட்டு விட்டன !
"டிசம்பரில் ஜனவரி" என்றோ ; "17-ல் '18" என்றோ ; "மார்கழியில் தை" என்றோ இந்தப் பதிவுக்குத் தலைப்பு வைக்கலாம் தான் ! ஆனால் மெய்யாகவே பொருத்தமானதலைப்பெனில் - "ஒரு குட்டி அணியின் விஸ்வரூபம்" என்பதாகவே இருக்கும் ! நிறைய மெகா projects களில் நம்மவர்கள் பணியாற்றியுள்ளனர் தான் ; மின்னும் மரணங்களும் ; LMS-களும் ; க்யூபா படலங்களும் ; இரத்தக் கோட்டைகளும் just like that தாண்டிச் சென்ற அனுபவங்களாகியுள்ளன தான் ! ஆனால் இம்முறையோ ஒட்டு மொத்தமாயொரு புத்தம் புது அனுபவம் எங்கள் சகலருக்குமே ! On track இருக்கும் போது நித்தமும் தலைக்குள் ஒரு ரேடார் ஓடிக் கொண்டேயிருக்கும் : "பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருக்கு 2019-ன் jobs போயாச்சா ?" (ஹி..ஹி..நம்புங்கள் ; நிஜமே !! 2019-ன் பாதித் தொலைவில் உள்ளோம் -பிரெஞ்சு to ஆங்கில மொழிபெயர்ப்புகளில் !) ; "கருணையானந்தம் அவர்களுக்கு என்ன வேலை அனுப்பி இருக்கிறோம் ?" ; "மாலையப்பன் என்ன பெயிண்டிங் போட்டுக் கொண்டிருக்கிறார் ?" ; உள்ளே DTP-ல் என்ன வேலைகள் ஓடிக் கொண்டுள்ளன ? "அட்டைப்படம் டிசைன்கள் என்ன பாக்கி உள்ளன ?" என்ற ரீதியில் ! யாரும் சும்மா இருந்து விடக் கூடாதே என்பதில் ரொம்பவே கவனமாய் இருந்திடுவேன் ! ஆனால் - திருமணப் பணிகள் வேகமெடுத்த நாள் முதலாய் - "ஏதாச்சும் பண்ணிக்கோங்கப்பா ; நானே இங்கே தெரு தெருவாச் சுத்திட்டு இருக்கேன் !" என்றபடிக்கு இந்த ரேடார் குப்புறக் கவிழ்ந்து விட்டது ! மீண்டும் தண்டவாளம் ஏற வேண்டிய நேரத்தில் நிச்சயமாய் ஒரு தள்ளாட்டம் காத்துள்ளது என்பது மண்டைக்கு எட்டியிருந்தாலும், "அந்நேரம் பார்த்துக் கொள்ளலாம்" என்ற அசட்டுத் தைரியம் இல்லாதில்லை ! ஒரு மாதிரியாய் back to routine என்ற பொழுதும் புலர்ந்த போது தான் - "தொடர்ச்சி" ; "கோர்வை" இத்யாதிகளின் மகிமை என்னவெனப் புரிந்தது !
அட்டைப்படங்கள் ஒட்டு மொத்தமாய் தயாராகிட வேண்டியிருந்தன என்றான போது அதற்குள் தான் முதல் தொபுக்கடீர் ! பிரின்டிங் சென்றிட குறைந்த பட்சம் 4 + 4 ராப்பர் டிசைன்கள் தேவை என்பதால் நடப்பு மாதத்து இதழ்கள் மட்டுமன்றி, அடுத்த மாதத்து டிசைன்களையுமே ஏக் தம்மில் தயார் செய்ய வேண்டியிருந்தது ! 'பச்சையாக்கு ; சிவப்பாக்கு ; கறுப்பாக்கு !" என்று நல்ல நாளுக்கே அட்டைப்படங்களில் ஓராயிரம் குரங்குக் கூத்தடிப்பவன் நான் ; இப்போதோ புத்தாண்டின் முதலிரு மாதத்து இதழ்களின் ராப்பர்களெனும் பொழுது - கூடுதலாய் பயம் தொற்றிக் கொண்டது ! டெக்சின் ராப்பர்கள் ஒரிஜினல்களே என்பதால் அவற்றுள் ஜாஸ்தி மெனக்கெடல் அவசியமாகிடவில்லை ! அதே போல மறுபதிப்புக்குமே மாலயப்பனின் ஸ்பைடர் பெயிண்டிங் + பிப்ரவரியின் மறுபதிப்பான "மர்மக் கத்தி"-க்கு ஒரிஜினல் டிசைன் என்றானதால் அங்கேயும் smooth sailing ! பாக்கி ராப்பர்கள் அனைத்துக்கும் போட்ட லடாய் ஏகப்பட்ட work hours காலை விழுங்கி விட்டது !
கதைகளுக்குள் புகுந்தால் தோர்கல் வேறொரு கியரில் பயணிக்கும் 4 பாக ஆல்பம் இம்முறை எனும் பொழுது அதன் தயாரிப்பு + எடிட்டிங்கில் தாவு தீர்ந்து விட்டது ! Sheer intensity -க்கு சமீப இதழ்களுள் இதுவொரு செம அடையாளம் என்பேன் ! So அதனைக் கரை சேர்த்த கையோடு TEX சாகசத்தினுள் புகுந்தால் - "ஆரம்பத்திலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்!" பஞ்சாயத்து !! தருவிக்கப்படா அந்தத் துவக்க 41 பக்கங்களை வாங்கி, இத்தாலியில் கிருஸ்துமஸ் விடுமுறையில் இருந்த நமது மொழிபெயர்ப்பாளரை ஜுனியர் எடிட்டர் வாயிலாக அணுகி - "அம்மணி.....நீங்கள் மனசு வைக்காட்டி நாங்க அம்பேல்..புலீஸ் ஹெல்ப்பு !!" என்று கதற - ஒற்றை இரவில் 41 பக்க மொழிபெயர்ப்பைத் தாக்கி எடுத்தார் அவர் ! அவற்றை அடித்துப் புடித்து தமிழாக்கி - டைப்செட்டிங் செய்ய நினைத்தால் நம்மவர்கள் மொத்தமாய் கிராபிக் நாவலின் பணிகளுக்குள் புதைந்து கிடப்பது உதைத்தது ! 312 பக்கங்கள் எனும் பொழுது, தலையில் துண்டைக் காயப் போட்டுத் திரியும் ஷேக்குகளின் தேசங்களில், தோண்டத் தோண்ட கொப்பளித்துக் கொண்டேயிருக்கும் எண்ணையைப் போல கி.நா.வின் பணிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன ! நமது ஆத்திர - அவசர வெளிப் பணியாட்களும் ஆண்டின் இறுதி என்பதால் ஏதேதோ காலெண்டர் வேலைகளில் பிசியாக இருக்க - கையைப் பிசைந்து கொண்டிருப்பதைத் தாண்டி எதுவும் செய்திட இயலவில்லை எனக்கு ! அதற்காக கி-நா.வை அவசரம் அவசரமாய் ஒப்பேற்றவும் மனசு ஒப்பவில்லை ; தவணை தவணையை மாற்றி எழுதிய ஸ்க்ரிப்டை ஒட்டு மொத்தமாய் வாசிக்கும் போது நிச்சயம் நிறைய பட்டி-டிங்கரிங் அவசியமாகிடும் என்ற எனது யூகம் பொய்க்கவில்லை ; 2 பாகங்களையும் ஒன்றிணைத்து ஒட்டு மொத்தமாய்ப் படிக்கும் போது ஒரு வண்டி திருத்தங்கள் தேவைப்படுவது புரிந்தது ! விடாதே-பிடி- என சென்ற ஞாயிறும் முழு நாள் வேலை செய்து ஒரு மாதிரியாய் செவ்வாய்க்கிழமை கி.நா-வை அச்சுக்குத் தயாராக்கினோம் ! அச்சுக் கூடத்திலோ ஆண்டின் இறுதியெனும் rush ; ஆனால் நானோ, "எல்லாத்தையும் ஓரங்கட்டிப்புட்டு இதை முதலில் அடிச்சுக்க கொடுங்கப்பா !" என்று நான் கூப்பாடு போட - மாமூலாய் பணிகள் தரும் வெளிப் பார்ட்டிகள் கடுப்ஸ் ஆப் இந்தியா ! நானோ 'அலெர்ட் ஆறுமுகம்' போல முறைப்பாய் முகத்தை வைத்துக் கொண்டே உள்ளே போவதும், வெளியே வருவதுமாயிருக்க, யாரும் ஏதும் வாயைத் திறக்கவேயில்லை ! 'தப்பிச்சேன்டா சாமி !" என்றபடிக்கு டெக்சின் DTP பணிகள் அரங்கேறுவதை பராக்குப் பார்த்துக் கொண்டே - சுடச் சுட எடிட்டிங் வேலைகளையும் செய்ய முனைந்தேன் ! கிருஸ்துமஸ் தினத்துக்கு கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாது DTP இவாஞ்செலின் பணியாற்ற - ஒரு மாதிரியாய் புதனிரவு டெக்ஸ் அச்சுக்கு ரெடி !! மறுபடியும் அதே முறைப்போடு அச்சுக்கூடத்துக்குள் நான் ஆஜராக - 'இவனோடு ஒரே ரோதனையாய் போச்சே !!' என்ற மாதிரியான பார்வைகள் துளைப்பதை உணர முடிந்தது ! ஆனால் எனக்கு வேலை ஆகணும் ஷாமியோவ்....என்ற முனைப்பில் எதையும் பெரிது படுத்திக் கொள்ளவில்லை நான் ! இதற்கு மத்தியில் ப்ளூகோட் பட்டாளத்தின் மொழிபெயர்ப்பு ; தயாரிப்பு ; அச்சு - என சகலமும் ஜிலோவென்று துளி டென்ஷனுமின்றி அரங்கேறியிருந்தது தான் highlight !!
So வியாழன் காலையில் பைண்டிங்கில் படை பரிவாரங்களோடு போய் காவடியெடுத்தால் - குளிர் நேரத்தின் பொருட்டு கருப்பு மசி உணராது கழுத்தை அறுப்பது புரிந்தது !! பேப்பர்களை மடிக்க folding machine -ல் ஏற்றினால் - சாணியாய் மை ரோலர்களில் ஏறிக் கொண்டு படுத்தி எடுத்தது ! என்ன கொடுமை இரவுக் கழுகு சார் - என்றபடிக்கே நமது பைண்டரை "இம்முறை மட்டும் ஆட்களைக் கொண்டே கையால் மடித்து விடுங்களேன்" என்று உசிரை வாங்க - அவர் அதற்கும் சளைக்காது சம்மதித்தார் ! (இன்று) வெள்ளி காலையில் சீக்கிரமே பணிகளைத் துவக்கி, நண்பகலுக்குள் சந்தாப் பிரதிகளுக்கான தேவைக்கு புத்தகங்களை வழங்கி அசத்தி விட்டார் ! இந்தக் கூத்துக்கு மத்தியில் நானோ புதன் இரவே - "சலோ சப்பாத்தி தப்ப !!" என்று வடநாடு புறப்பட்டிருக்க, மைதீன் மட்டும்இங்கே ஒற்றை ஆளாய் சூறாவளியாய் சுற்றி வந்து கொண்டே இருந்தான் ! நானோ மணிக்கொரு முறை கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு "மைக் 1 ...மைக் 2 ....ஓவர்...ஓவர் !" என்று குடைந்து கொண்டேயிருக்க, இன்று பகலில் ஒட்டு மொத்த ஆபீசுக்குமே என் போனைப் பார்க்கும் போதெல்லாம் பேதி எடுத்திருப்பது உறுதி ! அத்தனை பேருமாக பேக்கிங்கில் பர பரத்து பணியாற்றியதால் பலனாக 4 மணிக்கெல்லாம் மொத்தமாய் டெஸ்பாட்ச் done & dusted !! புதன் மாலை வரைக்கும் டெக்ஸ் வில்லர் அச்சுக் கோர்ப்பில் துவண்டு நிற்க, எனக்குள் கலக்கமே - நிச்சயமாய் வெள்ளி அட்டவணை சொதப்பப் போகிறதென்று ! அதே போல பைண்டிங்கில் ஒரே நேரத்தில் அத்தனையையும் ஒப்படைத்துவிட்டு அவர் தலை மீது குடியிருப்பதும் நமக்குத் புதிதல்ல தான் என்றாலும், இது ஆண்டின் இறுதி rush தருணம் என்ற வகையில் என்ன எதிர்பார்ப்பது என்றும் தெரியவில்லை ! ஆனால் all 's well that ends well !
192 + 264 + 48 + 112 + 320 = 936 என்பதே இம்மாதத்து இதழ்களின் ஒட்டு மொத்த பக்க எண்ணிக்கை ! இவற்றை effective ஆக கடந்த 18 நாட்களில் நிறைவு செய்துள்ளது நமது டீம் !! இதழ்களை உங்களிடம் ஒப்படைத்து விட்ட திருப்தியும், அதனில் கிட்டக் கூடிய பாராட்டுக்களையும் - 'நாந்தேன்...நாந்தேன்' என்றபடிக்கு வாங்கி கொள்ள நான் நிற்கலாம் ; ஆனால் முகாமிலா அந்தப் பின்னணி டீம் ஓசையின்றி அடுத்த மாதப் பணிகளுக்குள் புகுந்திருக்கும் !
"உயரங்கள் தாண்டப்படுவதற்கே" என்பதில் எனக்கு ஐயமில்லை ; ஆனால் சில தருணங்களில் நான் அபத்தமாய் நிர்ணயம் செய்திடும் அசாத்திய உயரங்களையும் கூட நம்மவர்கள் சலனங்களின்றித் தாண்டிடப் பழகி விட்டுள்ளதே பிரமிப்பைக் கொணர்கிறது !! பாதி மறையோடு நான் சுற்றி வருவதெல்லாமே இப்போது இயல்பானதொரு நிகழ்வே - அவர்களைப் பொறுத்தமட்டில் ! இந்த "பொம்மை புக்குகளை" அவர்கள் படிப்பதில்லை ; ஆனால் இவற்றின் பின்னே நமக்கெல்லாம் உள்ள தீராக் காதலின் பரிமாணம் எத்தகையது என்பதை உணர்ந்துள்ளனர் ! நான் ராவில் முழித்திருந்து செய்யும் பணிகளை கரைசேர்க்க இவர்கள் பகலில் முனைப்புக் காட்டிடாவிட்டால் - 'பிம்பிலிகா பிலாக்கி' கூட முடிந்திடாது !! ஆண்டின் இறுதியினை நிறைவு செய்திட இதை விடவும் அழகானதொரு மார்க்கம் இருந்திடாது !!
Take a bow my team !!
சந்தா செலுத்தியிருக்கா நண்பர்களே - time now to rush ப்ளீஸ் !!!
And காத்திருக்கும் ஞாயிறை இனி எண்ணங்களாலும், அலசல்களாலும் அலங்கரிக்கும் பொறுப்பு உங்களது folks ! ஒன்றுக்கு ஐந்தாக இதழ்கள் உங்கள் கைகளில் எனும் போது - time for us to take the backseat ! Bye all !