Powered By Blogger

Saturday, August 26, 2023

ஒரு "சிக்" பதிவு !

 நண்பர்களே,

வணக்கம். போன வாரம் பதிவைப் போட்ட கையோடு, சட்டி பெட்டிகளைக் கட்டிக் கொண்டு நம்ம 'தல' உலவிடும் மண்ணுக்குப் பயணமாகியவன், இன்றைக்கு காலையில் தான் வீடு திரும்பினேன் - காலை எது ? இரவு எது ? என்று கிஞ்சித்தும் தெரியாதவனாய் ! நம்மூருக்குக் கொஞ்சமும் சளைக்காது அங்கே போட்டுச் சாத்திய வெயிலில் சிரம் கொஞ்சமாய் இளகி விட்டதோ - என்ற சந்தேகம் எழாத குறை தான் ! So தத்து-பித்தென்று க்வாட்டரடிச்ச பக்கிரி பாணியில் பதிவில் எதையாச்சும் உளறி வைக்கப்படாதென்பதால், இதனை சிக்கென்ற பதிவாக மட்டுமே அமைத்திட எண்ணியுள்ளேன் ! 

September !  தோர்கலார் முடிந்து பைண்டிங் கிளம்பிப் போய்விட்டார் ! இன்னொரு வண்ண இதழான "நெவாடா" பாதிக் கிணறு தாண்டிய நிலையில் வெயிட்டிங் - அடுத்த ஓரிரு நாட்களில் மொழிபெயர்ப்பினை நான் பூர்த்தி செய்திடுவதற்கென ! கர்ம சிரத்தையாய் அதன் ஒரிஜினல்களையும் அமெரிக்காவுக்குத் தூக்கிப் போயிருந்தும் எட்டுப் பத்துப் பக்கங்களுக்கு மேலாக எழுத நேரம் கிட்டிய பாடில்லை ! ஆனால் இதுவரைக்கும் பயணித்துள்ள 29 பக்கங்களில் - நமக்கென காத்திருப்பவர் ஒரு தெறி பார்ட்டி என்பது மட்டும் சர்வ நிச்சயமாய்ப் புரிகிறது ! வன்மேற்கின் அடுத்தகட்ட காலகட்டத்தில் நிகழும் கதை எனும் போது - நமக்கு பரிச்சயமான பூமியை புதிதாய் பார்ப்பது போலுள்ளது ! And ஹீரோ நெவாடா முற்றிலும் வித்தியாசமானதொரு கதாப்பாத்திரம் ! செம refreshing !!  அடுத்த ஓரிரு நாட்களில் மொழிபெயர்ப்பினைப் பூர்த்தி செய்த கையோடு - DTP முடித்து அச்சும் முடித்து விடுவோம் ! இதோ - அதற்கென ரெடியாகவுள்ள அட்டைப்பட முதற்பார்வை : And yes - அந்த எழுத்துரு நண்பர் ஜெகத் உபயம் ! 

And ஒரு குட் நியூஸுமே : எழுத்துப் பிழைகளைக் களைய முனையும் நமது முயற்சிகளுக்கு உதவிட, நெடும் அனுபவம் கொண்டதொரு தமிழ் புரஃபஸர் நம்மோடு அடுத்த வாரம் முதலாய் கரம் கோர்க்கிறார் ! இவருக்கு ஏற்கனவே ஊடக proof-reading அனுபவமும் இருப்பதால், இனி அரிசியில் கலந்த கற்களாய் பிழைகள் இடறிடாதென்று நம்பலாம் ! Of course - ஏற்கனவே ரெடியான புக்ஸ் அவரது பார்வைக்குச் சென்றிராது தான் ; அவற்றை நண்பர்களில் இருவர் வெகு கவனமாய் கையாண்டுள்ளனர் ! So hopefully சிக்கல்கள் இருந்திடாதென்று நம்புவோம் ! நண்பர்களின் லேட்டஸ்ட் பிழை திருத்த உழைப்போடு வெளிவரக் காத்துள்ள இதழின் first look இதோ : 

இதுவும் நமது சென்னை ஓவியரின் கைவண்ணமே ; King Features நாயகர்கள் அனைவருமே நாளேடுகளில் தொடர்களாக அறிமுகம் காண்போர் எனும் போது அவர்களது ஆல்பங்களென்று பொதுவாய் எக்கச்சக்கமாய் இருப்பதில்லை ! இருக்கும் கொஞ்ச ஆல்பங்களுமே  Black & white படங்களை பிரதானமாய் கொண்ட டிசைன்கள் ! So references கிடைப்பது அத்தனை சுலபம் அல்ல தான் ! இதுவோ - ஒரு செம க்ளாஸிக் ரிப் கிர்பியின்  கவரிலிருந்து ரெடி செய்தது ! வழக்கம் போல நகாசு வேலைகள் இருக்கும் - அட்டைப்படத்தினை செம ரிச்சாக சித்தரிக்க ! 

And டிடெக்டிவ் சார்லி ஸ்பெஷலின் அதே சைசில் ரிப்பும் வரவுள்ளார் - உங்களின் சுலப வாசிப்புக்கு உதவிட ! So நல்ல குண்டு புக்காய் காத்திருப்பது - இதழின் முதுகின் விஸ்தீரணத்தைக் கவனித்தாலே புரியும் ! வழக்கம் போல நிறைய புதுக் கதைகள் & கொஞ்சமாய் மறுபதிப்புகள் இம்முறையும் ! மினி-லயனில் வெளியான cult classic -"காசில்லாக் கோடீஸ்வரன்" இந்த இதழில் இடம்பிடித்திருப்பது கொசுறுச் சேதி ! மொழிபெயர்ப்பினை சற்றே நவீனமாக்கினால் சிறப்பாக இருக்குமே என்று தோன்றியது தான் ; ஆனால் மறுக்கா புளியமரத்தில் தொங்க விட்டுச் சாத்துவது போலவே கெட்ட கெட்ட சொப்பனங்களாய் வந்ததால் - 'எதுக்கு வம்பு?" என்று ஒரிஜினல் தடத்திலேயே பயணித்துள்ளோம் ! க்ளாஸிக் காதலர்களுக்கு ஒரு விருந்து வெயிட்டிங் என்பேன் ! 

கண்ணை  சுழற்றும் தூக்கத்துக்கு அடிபணிய நடையைக் காட்டும் முன்பாக - இதோ உங்களின் வோட்டெடுப்பின் பலன்கள் ! 2024 ரெகுலர் தடத்தில் SODA / ரிப்போர்ட்டர் ஜானி / டிடெக்டிவ் ரூபின் ஆகிய மூவரின் மத்தியில் ஒரேயொருவரை ஓரம் கட்ட வேண்டுமெனில் யாரைத் தேர்வு செய்வீர்களோ ? என்று கேட்டிருந்தேன் ! இதோ உங்களின் பதில்கள் !!

துவக்கம் முதலே ரூபின் safe zone-ல் இருந்தது செம சர்ப்ரைஸ் ! So மெய்யாக சட்டையைக் கிழித்துச் சண்டை போட்டுக் கொண்டோர் - ரிப்போர்ட்டரும் ; NYPD ஆபீசருமே !! And சின்னதொரு வித்தியாசத்தில் உள்ளே இருப்பவர் ஜானி ; maybe புத்தக விழா ஸ்பெஷல் வரிசைகளுக்குள் இடம் பிடிக்கக்கூடியவர் SODA என்றாகிறது ! கிட்டத்தட்ட 164 பேர் வோட் போட்டுள்ளதால் - இதனை ஒரு decent வழிகாட்டலாய் கருதலாமென்று தோன்றுகிறது ! Thanks for your time guys !!

மீண்டும் சந்திப்போம் ; have a fun weekend all ! Bye....see you around !

369 comments:

  1. Replies
    1. "காசில்லாக் கோடீஸ்வரன்"
      அன்றைக்குள்ள நியூஸ்பிரின்ட் வெளிவந்ததை நல்ல தரமான தாளில் மறுபதிப்பு செய்தது அற்புதமானது... மறுபதிப்பு கேட்பதன் நோக்கமே நல்ல தாளில் வரவேண்டும் என்பதே...ஒரிஜினல் லே அவுட் இல்லை எனக்கு ஏமாற்றமே....

      Delete
    2. நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமாய் கெளபாய் கதைகளே பெரிதும் லயன் காமிக்ஸை ஆக்கிரமிக்கிறது என்பதில் இரகசியம் ஏதுமில்லை.

      லயன் 40 ஆண்டில் இம்முறை லயனின் விசிட்டிங் கார்டு லயனின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ஸ்பைடருக்கு மரியாதை செய்யலாமே...

      சூப்பர் ஸ்டார் ஸ்பைடர் சூப்பர் ஸ்பெசல்!

      ஸ்பைடர் படை!
      மீண்டும் ஸ்பைடர்!
      மிஸ்டர் மர்மம்!
      நீதிக்காவலன் ஸ்பைடர்!
      (ஸ்பைடர் மிக அழகாக உள்ள இந்த கதை மட்டும் முழு வண்ணத்தில்)
      யார் அந்த மினி ஸ்பைடர்?
      தவளை எதிரி!
      வீனஸ் கல் மர்மம்!
      விண்வெளி பிசாசு!
      கோப்ரா தீவில் ஸ்பைடர்!
      மரண மாஸ்டர்!
      பாட்டில் பூதம்!
      சினிஸ்டர் செவேன்!

      #கலெக்டர்_எடிஷன்
      #Maxi_சைஸ்
      #hard_binding.

      1988ல் இலவச இணைப்பாக நீங்கள் வெளியிட்ட "சூப்பர் ஸ்டார் ஸ்பைடர்" 16 பக்க மினி நாவல் 100 சதவீத உள்ளது உள்ளப்படியான ரிப்பிளிக்கா இலவச இனிப்பாக.

      ப்ளாகில் அல்லாது வரும் இதழ்களில் இது குறித்து அறிவிப்பு அல்லது சர்வே செய்து பார்க்கலாமே...

      (பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்த கமெண்ட் ஆசிரியருக்கு மட்டுமே....
      சக வாசகர் பதில் சொல்ல வேண்டாமே, ப்ளீஸ்)

      - ஸ்பைடர் ஸ்க்வாட் நண்பர்கள்

      Delete
    3. "ஹா ஹா இன்று எனது நாள்"
      - ஸ்பைடர்

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. கொலைப்படை
      இருவண்ணத்தில் மறுபதிப்பு.
      80களில் எட்டாத கனியாயிருந்த இந்த ஸ்பைடர் சாகசம் ஒரு வெள்ளியன்று எனக்கு சொந்தமானது. படிக்கும்போதே பூரித்து படித்த கதை.
      வாசகர் விருப்பம் தேடல் அறிந்து விஜயன் சார் ஒரு diehard fan ஆக அவரே மாறி கனவை நினைவாக்கியுள்ளார். தயாரிப்புத் தரம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. 8 வரையிலான பக்கங்களின் சித்திரத் தரம் 1984ன் முதல் பதிப்பையே தட்டி தூக்குகிறது... மாயாவி கதை சித்திர அச்சு தரம் அசத்துகிறது. ஸ்பைடருக்கு அன்றைக்கு இருந்த சூப்பர் ஸ்டார் மவுசுக்கு 100க்கு 200 மதிப்பெண் கொடுப்பேன்...
      ஆனால் யதார்த்த கதையே தற்போதைய தேடல் ஆகி விட்டதால் 4.0/5.0 எனது நியாயமான ரேட்டிங்...

      Delete
    6. ஸ்பைடர் கதைகளுக்கு நானும் 🙋

      Delete
    7. @udhay adi:

      ஸ்பைடர் ஸ்பெஷல் அருமையான சிந்தனை!

      ஸ்பைடர் வந்தாலே ஸ்பெஷல்... இதுவும் அருமையான சிந்தனை!

      கனவு மெய்ப்பட முதல் வரிசையில் நானும் இருப்பேன்!

      Delete
    8. நன்றி நட்புகளே💐

      Delete
  2. வணக்கம் நண்பர்களே.வணக்கம் ஆசிரியர் சார்.

    ReplyDelete
  3. Replies
    1. ஈரோடு புத்தகத் திருவிழா ஸ்பெஷலாக வந்த "THE BIG BOYS SPECIAL" உண்மையில் அருமையான க்ளாசிக் இதழ்.

      எப்போதோ படித்து, ரசித்து, ஆனந்தித்த நாயகர்களை மீண்டும் அகலமான புத்தகமாக வெளியிட்டு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள் சார்.
      இந்த புத்தகத்தை படிக்கும் போதே அந்த கதைகளின் மீது இன்னும் அதிக பிரியம், புதிய உற்சாகம். இன்னமும் பக்கங்களை புரட்டி பார்க்க மகிழ்வாக உள்ளது.
      மூன்று கதைகளும் முத்துக்களாக ஜொலிக்கின்றன.

      மீண்டும் எங்களை குழந்தை பருவத்துக்கு இட்டு சென்ற " THE BIG BOYS SPECIAL" தந்த ஆசிரியருக்கு அழகான நன்றிகள் பல.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நானும் வந்திட்டேன் .வணக்கம் எல்லாருக்கும் வணக்கம்

    ReplyDelete
  6. ரிப்போர்ட்டர் ஜானி..😍😍😍

    ReplyDelete
  7. காசில்லா கோடீஸ்வரன் வருவது ரொம்ப ரொம்ப சந்தோசம் சார் .சூப்பர் சூப்பர் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  8. Replies
    1. சோடா தான் எதிரிகளை போடா என்று சொல்வார். 3 ஹீரோக்களும் தேவையானவர்களே... அந்த ஆப்ஷன் சர்வேயில் சேர்த்திருக்க வேண்டும்.

      Delete
    2. ./// 3 ஹீரோக்களும் தேவையானவர்களே... அந்த ஆப்ஷன் சர்வேயில் சேர்த்திருக்க வேண்டும்.///

      இது மிக சரியே.
      இந்த ஆப்சன் இல்லாததால் ஓட்டெடுப்பில் நான் கலந்து கொள்ள வில்லை...
      நான் எடுத்த முடிவு சரியானது...

      Delete
    3. நானும் ஓட்டு போடவில்லை, ஐயா

      Delete
    4. ./// 3 ஹீரோக்களும் தேவையானவர்களே... அந்த ஆப்ஷன் சர்வேயில் சேர்த்திருக்க வேண்டும்.///

      Good suggestion! யாரையாவது வெளியே உட்கார வைத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடி போலிருக்கிறது. அதனால் தான் நீங்கள் சொன்ன ஆப்ஷன் கொடுக்கவில்லை என்பது என் கருத்து!

      Delete
  9. சார் இப்பொழுது வெளிவந்த பிக் பாய் ஸ்பெஷல் Variant cover இரும்புக்கை மாயாவி முன்புறம் உள்ள புத்தகத்தை 5000 க்கு விலை பேசி கொண்டு இருப்பதாக கேள்விபட்டேன் . நீங்களே அந்த variant கவர் புத்தகத்தை சில காப்பிகள் வெளி இடலாமே

    ReplyDelete
    Replies
    1. முந்நூறு ரூபாய்க்கு மூணு மாசமா கூவியுமே வாங்காதோர், ஐயாயிரத்துக்கு வாங்குவார்களென்று நான் நம்பவில்லை நண்பரே !

      சும்மா பில்டப் பண்ணி விட்டால் எதாச்சும் தேறும் விலைக்குத் தள்ளி விடும் முயற்சியாக இருக்கும் !

      Delete
    2. சார் கொலைப்படை போதிய விளம்பரம் அவகாசம் கொடுக்கப்படவில்லை... சென்னை சந்தா நண்பர் நான் சொன்ன பிறகே ஆன்லைனில் உடனே 3புக்ஸும் புக் செய்தார்...

      Delete
    3. அது தான் கைவசம் ஸ்டாக் உள்ளதே ஆதி ..வேண்டியமட்டுக்கு வாங்கிக் கொள்ளலாமே ?

      Delete
    4. RTM அண்ணா மூலம் 4 புக்ஸும் வெளிவந்த நாளே நான் வாங்கி விட்டேன் சார்... மாயாவி variant அட்டை தான் மிஸ்ஸிங்... முதல் நாளே தீர்ந்து போன அதை தான் நண்பரும் கேட்டார்.

      Delete
    5. நான் இரண்டாம் நாள் சொல்லியிராவிட்டால் சென்னை நண்பர் கார்சனை கடந்து போக விட்டிருப்பார். Just எஸ்கேப்.

      Delete
    6. //சும்மா பில்டப் பண்ணி விட்டால் எதாச்சும் தேறும் விலைக்குத் தள்ளி விடும் முயற்சியாக இருக்கும் !//

      இதெல்லாம் காமிக்ஸ் வாழ்க்கையில் ஜர்வ ஜாதாரணமாக நடக்குதுங்கய்யா!

      Delete
  10. காசில்லா கோடீஸ்வரன் ..செம சர்ப்ரைஸ் சார்.

    ReplyDelete
  11. சோடா வாக்கெடுப்பில் தோற்றது எனக்கு வருத்தமே. என்ன கொடுமை சார் இது

    ReplyDelete
    Replies
    1. எனக்கே கொஞ்சம் வருத்தம் தான் சார் ! வித்தியாச பாணிகளுக்கு நம்மவர்கள் அத்தனை பெரிய கிராம்ப்டன்கள் அல்ல தான் !

      Delete
    2. எதுவும் கடந்த பின்னர், முன்நோக்கி செல்வதே உத்தமம். நிகழ்ந்ததை மாற்ற முடியாது...

      Delete
    3. தோற்கவில்லை என்பதே சரியாகும்!

      மயிரிழையில் கீழே இறங்கியிருக்கிறார். இல்லையென்றால் ரிப்போர்ட்டர் ஜானி போன்ற இடியாப்ப ஜாம்பவானுக்கு முன்பு டஃப் கொடுத்திருக்க இயலுமா?

      எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது, அம்மணி ரூபினுக்கு விழுந்த ஓட்டுகள் தான்! சமீபத்தில் எழுதிய இவர் கதைக்கு ஒரு விமர்சனத்தில், என்னமோ ஒரு இனம்புரியாத வசீகரம் - ஈர்ப்பு இருப்பதாக எழுதிய நினைவு! விழுந்திருக்கும் ஓட்டுகளை பார்க்கையில் இது எனக்கு மட்டுமான ஃபீலிங் இல்லை என தெரிகிறது...

      Delete
  12. Neveda பட்டையை கிளப்பும் போல் உள்ளது அதன் அட்டைப்படம்

    ReplyDelete
  13. #மினி-லயனில் வெளியான cult classic -"காசில்லாக் கோடீஸ்வரன்" இந்த இதழில் இடம்பிடித்திருப்பது கொசுறுச் சேதி !#
    காசில்லாக் கோடீஸ்வரன் மட்டும்தானா...இன்னொரு கதையான மாயாஜால மோசடியும் இருக்கா எடிட்டர் சார்?

    ReplyDelete
  14. S60-கிளாசிக் ஹீரோ ஜென்டில்மேன் டிடடெக்டிவ் ரிப் கிர்பி க்கு 1000 of warm welcome Kisses..😘😍❤💛💙💚💜

    சார்லி சைஸ் Hard bound எல்லாம் Ok சார் 👍👌

    ஆனால் அந்த அட்டையிலதான்..
    ரிப் கிர்பி ரொம்ம்ப இளமையா தெரியராரு.😃
    பின் அட்டையில இருக்கிற ரிப் கிர்பிக்கும் , முன் அட்டையில இருக்கிற ரிப் கிர்பிக்கும் நிறைய வித்தியாசம் தெரியறது எனக்கு மட்டும்தானா..😃

    பழசும் புதுசும் வருதுன்னா.. "ரோஜா மாளிகை ரகசியம்", "மூன்றுதூண் மர்மம்" எல்லாம் வருதுங்களா எடிட்டர் சார்..😃

    ReplyDelete
    Replies
    1. ///ஆனால் அந்த அட்டையிலதான்..
      ரிப் கிர்பி ரொம்ம்ப இளமையா தெரியராரு.😃///

      ஆமாங்க ஜி! எனக்கும் அப்படித்தான் தெரியராரு! பின்னாடி நின்று தலையைச் சாய்த்து ஸ்டைலா லுக்குவிடும் அந்த அம்மணிக்கோசரம் கொஞ்சம் மேக்அப் போட்டிருக்காரோ என்னமோ!!

      அதுலபாருங்க... இப்பல்லாம் 'மேக்அப்'னாலே நம்ம STVRதான் ஞாபகத்துக்கு வரார்!! ;)

      Delete
    2. ஆனாலும், சிவனேன்னு அவரு அவரோட ஜோலியா இருக்காரு. அவரு நிமிண்டலாமா. இது நியாயமா அடுக்குமா.

      Delete
  15. Dear Editor Sir,

    இந்த மாதம் வெளிவந்துள்ள The big boys special இதழ் தயாரிப்புத்தரம் மிக அருமை

    ஒரு சிறிய சந்தேகம்

    முதல் 68 பக்கங்கள் பால் வெள்ளை நிற காகிதத்திலும் 69 ம் பக்கம் முதல் 140 ம் பக்ம் வரை இள மஞ்சள் நிற காகிதத்திலும் உள்ளன ஏன்

    இள மஞ்சள் நிற மறு பதிப்புகளுக்கு ஒரு Nostalgic effect தருகிறது, எனவே அதையே முழுமையாக பயன்படுத்துங்கள் Sir

    காகித வேறுபாடு இத்தரத்திலான புத்தகத்திற்கு வித்தியாசமாக உள்ளது

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. அந்த இள மஞ்சள் நிறக் காகிதத்தில் 2 வண்ணங்கள் சோபிக்காது நண்பரே ; அது black & white புக்ஸுக்கெனவே தயாரிக்கப்படும் ரகம் ! And வெள்ளை காகிதத்தை விடவும் விலையில் சல்லிசும் கூட ! இது போன்ற விஷயங்களில் பின்னணியில் ஒரு காரணம் இல்லாது போகாதென்று நம்பிடலாம் !

      Delete
    2. அப்படி எனில்
      இந்த ரக பேப்பரில் ப்ளாக் & ஒயிட் கதை ஒன்றை சோதனை முயற்சியாக வெளியிடலாமே...

      Delete
  16. ஜானி வென்றதில் மிக மகிழ்ச்சி Sir

    ReplyDelete
  17. வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
    Replies
    1. ரிப் அட்டைப்படம் செம!!

      Delete
  18. சார் வெரி ஸாரி. அட்டைப் படங்கள் நீங்கள் என்ன தான் சமாதானம் கூறினாலும் சமீபத்திய அட்டை படங்கள் (ரிப் தோர்கல் இளவயது கார்சன் etc ) பெரும்பான்மை வாசகர்களை ஈர்க்கும் வகையில் இல்லை!வேறு மார்க்கமே இல்லையா? பிக் பாய்ஸ் ஸ்பெஷல் பின்அட்டையிலேயே ஸ்பைர் என்ற பிழை எல்லாம் ஹம்ம்ம்ம். 😟

    ReplyDelete
    Replies
    1. சமாதானம் எதற்கு சார் சொல்லப் போகின்றேன் ? இன்னும் அடுத்த லெவலில் ஒவியங்கள் போட அயல்நாட்டு artist ஒருவர் தயாராக உள்ளார் தான் - கதைக்கு ஆகும் செலவிற்கு நிகரான தொகை கேட்கிறார் ! சக்தி இருந்தாலல்லவா அதை கருத்தில் கொள்ள ?

      ஓராண்டின் 50+ இதழ்களில், ஒன்றிரண்டு ஒச்சங்களோடு இருக்காது போகாது சார் - end of the day வரைபவர்களும் மனிதர்கள் தானே ?

      Delete
    2. AI சீக்கிரமே இந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் நாள் புலரும் போது இத்தகைய குறைகள் இராது !

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. "அந்நாள் மற்றும் இந்நாள் ஓவியர்களை எட்டி பிடிப்பது..."

      Delete
    5. எடி சார்... I Strongly Agree that AI is going to a strong Game Changer in our generation itself.

      Reference இருந்தாலும் அந்த மேற்கத்திய கலைஞர்களின் நேர்த்தியுடன் அட்டைப்படம் வரைவதற்கு நமது ஆர்ட்டிஸ்ட் இன்னும் தேரவில்லை என்பது தான் உண்மை நிலவரம்

      உயிரை தேடி டஸ்ட் கவருக்காக அதை செய்த எனக்கு தெரியும் அதற்கு கொடுத்த Promptகள் எத்தனை என்று... பொத்தாம் பொதுவாக விஷயம் தெரியாமல் தொழில் முறை ஆர்டிஸ்டுகள் இதற்கு தர்க்கம் செய்யலாம்.

      ஆனால், Only those who embrace the trending tech will survive, on their respective field... This is indeed the universal truth for anyone, so does the artist fraternity.

      Delete
  19. @எடிட்டர் சார்..😍😘

    "தல"உலவிடும் மண்ணுக்கு சர்ப்ரைஸ் ஆக சென்று திரும்பி இருப்பதால் "தல 75" க்கு சர்ப்ரைஸ் கிப்டை நாங்களும் பெரிதாக எதிர்பார்க்கலாமா..😍😘


    "எதிர்பாராததை எதிர்பாருங்கள்" னு பதில் போடுவீங்கனு எதிர்பார்க்கிறேன்..😍😃😘😀🙏

    ReplyDelete
    Replies
    1. கம்பெனியின் அன்புப் பரிசாய் ஒரு மானசீக உம்மா ஜம்பிங் பேரவைக்கு அனுப்பப்பட்டும் சார் !

      Delete
    2. "உம்மா"😘 accepted Sir..😍😍

      Delete
    3. ஆஹான்!! ஒருத்தர் 'மானசீகம்'ன்றார்.. இன்னொருத்தர் 'accepted'ன்றார்... என்னதான் இங்கே?!!🧐🧐

      Delete
  20. மதியில்லா மந்திரி..
    ஸ்மர்ஃப்ஸ்..
    லியனார்டோ தாத்தா..
    கர்னல் கிளிப்டன்..
    ரின்டின்கேன்..

    உள்ளிட்ட ஜாம்பவான்களைத் தொடர்ந்து இப்போது அந்தப் பட்டியலில் சோடாவும்!! :(

    எங்கே செல்லும் இந்தப் பாதை...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் எவ்வளவு நாள் துப்பறியும் சாணியை அடிச்சுக்கிட்டிருக்க போறோமோ ? :-( :-) ;-)

      Delete
    2. SODA எப்படியாச்சும் ஒரு கேப்புக்குள் நுழைந்து விடுவார் என்று நம்புவோம் சார் !

      அவரது லேட்டஸ்ட கதையை போன வாரம் தான் வரவழைத்துப் பார்த்தேன் - அட்டகாசமாய் தெரிந்தது !

      Delete
    3. நன்றி எடிட்டர் சார்! ஆனாலும் சோடாவுக்கு நேர்ந்த கதியை ஜீரணிக்க முடியலை!!

      Delete
    4. ஜீரணிக்க முடியாத சோடாவோ...!!!

      Delete
    5. // SODA எப்படியாச்சும் ஒரு கேப்புக்குள் நுழைந்து விடுவார் என்று நம்புவோம் சார் ! // நுழைத்து விடுங்கள் சார். தயவு செய்து.

      Delete
    6. ///மதியில்லா மந்திரி..
      ஸ்மர்ஃப்ஸ்..
      லியனார்டோ தாத்தா..
      கர்னல் கிளிப்டன்..
      ரின்டின்கேன்..

      உள்ளிட்ட ஜாம்பவான்களைத் தொடர்ந்து இப்போது அந்தப் பட்டியலில் சோடாவும்!! :( ///

      அப்படியானால்
      இவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு தண்டி புக் வெளியிட கேட்போம்.
      மனம் இரங்காமலா போவார் ஆசிரியர்...

      Delete
  21. போன முறை மிஸ் ஆச்சு, ஆனால், இந்த முறை மிஸ் ஆகாதுனு நீங்க சொல்லுகிற மாதிரி இருக்கு சார், காசில்லாக் கோடீஸ்வரன் இப்போது இடம் பிடிப்பதைதான் சொல்கிறேன். Thanks a lot.
    அட்டைப்படமும் ஓரிஜனலை விட நன்றாக வந்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. புக்காக கையில் ஏந்திப் பார்க்கும் போது இன்னமும் ஒரு லெவல் கூடுதலாக மிளிர்கிறது சார் !

      வரும் நாட்களில் ஒரிஜினல் கவர்ஸ் அல்லாத இதழ்களின் ராப்பர்களை இங்கே முன்கூட்டியே பிரிவியூ செய்திடாது, புக்ஸ் வரும் சமயம் ரசிக்கவோ,விமர்சிக்கவோ செய்து கொள்ளுங்கள் folks என்று விட்டு விடணும் போலும் !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. மீண்டும் சொல்கிறேன்! நூற்றுக்கணக்கான நேர்த்தியான சித்திரங்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பின் அட்டைப்படமும் அங்கஹீனங்களற்ற நேர்த்தியான படைப்பாய் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பிலேயே உரிமையோடு என் கருத்துக்களை இங்கே வெளிப்படுத்தியிருந்தேனே தவிர, எந்தவொரு படைப்பாளியையும் வருந்தச் செய்திடுவது என் நோக்கமல்ல. நண்பர்கள் பலரும் அட்டைப்படம் சரியில்லை என்பதை கடந்தபதிவில் நாசூக்காகவே சொல்லியிருந்தனர். 'தீண்டத் தகாத படைப்பு' என்ற அளவுக்கெல்லாம் யாரும் எதுவும் சொல்லிடவில்லை!

      தவிர, தோர்கல் தொடரின் ஒரிஜினல் அட்டைப்படங்கள் அனைத்துமே நன்றாகத்தான் இருக்கிறது எனும்போது மீண்டும் அதை ஓவியரை வைத்து வரைவது எதற்காக என்பது புரியவில்லை!! ஒரிஜினல் அட்டைப்படத்தில் கோகிலாவின் கைவண்ணமும், ஜெகத்தின் எழுத்துருவும் போதாதா - என்று மனதுக்குள் எழும் கேள்வி இயல்பானதுதானே?!!

      காஸ்மெடிக் சர்ஜரி செய்து கன்னத்துத் தழும்பை நீக்கிக் கொண்ட - தாடை நீண்ட தோர்கல்... சிறுமியாய் மாறிப்போன ஆரிசியா... தலை தடம் புரண்ட கோன் மண்டையன்... - இந்தத் தவறுகளை எடிட்டர் எப்படி கவனிக்காமல் விட்டார் என்ற கேள்வி எழுவதும் இயல்பானதுதானே?!!

      எனக்கு அந்தச் சென்னை ஓவியரின் மீது எந்தப் பகையும் கிடையாது. அவர் யார் என்பது கூட எனக்குத் தெரியாது! ஒரு படைப்பு நன்றாக இருந்தால் பாராட்டுவேன்.. குறைகளோடு இருந்தால் சுட்டிக் காட்டுவேன் - இத்தனைகாலமும் அப்படித்தான்!

      எடிட்டரும், ஆர்ட்டிஸ்ட் உதய் ப்ரோவும் இங்கே எழுதியிருக்கும் விதம் 'ஓவியர் எதைக் கொடுத்தாலும் அதை அப்படியே வாங்கி ரசிச்சுப் பழகுப்பா.. குறை சொன்னா அவர் மனசு சங்கடப்படுமில்லே' என்று சொல்வதைப் போலுள்ளது!

      ஹம்ம்ம்... 🙄

      Delete
    4. நான் உங்களை சொல்லவில்லை நண்பரே... நாம் தான் உரையாடிவிட்டோமே... பொதுவாக சொன்னது...

      Delete
    5. //தவிர, தோர்கல் தொடரின் ஒரிஜினல் அட்டைப்படங்கள் அனைத்துமே நன்றாகத்தான் இருக்கிறது எனும்போது மீண்டும் அதை ஓவியரை வைத்து வரைவது எதற்காக என்பது புரியவில்லை!! ஒரிஜினல் அட்டைப்படத்தில் கோகிலாவின் கைவண்ணமும், ஜெகத்தின் எழுத்துருவும் போதாதா - என்று மனதுக்குள் எழும் கேள்வி இயல்பானதுதானே?!!//

      உள்ளே இருக்கும் சித்திரங்கள் வெளிநாட்டு ஓவியருடையது எனும் போது ஒரிஜினல் அட்டை படத்தை பயன்படுத்துவதே பொருத்தமாக இருக்கும்.

      சில சமயம் ஒரிஜினல் அட்டை படங்கள் சுமாராக தெரியலாம். ஆனால் நாம் உருவாக்கும் அட்டை படத்தை விட அது மோசமில்லை என்பதே எனது நிலைபாடும்.

      இனியும் அட்டை படங்களில் எந்த சமரசமும் வேண்டாம் சார். வராத ஒன்றை ஏன் செலவு செய்து முயற்சிக்க வேண்டும்.

      மேலும் பின் அட்டையிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம் சார். குறிப்பாக டெக்ஸ் கதைகளில். அதாவது, டபுள் அல்லது ட்ரிபிள் ஆல்பங்களில் நாம் சிறந்த அட்டை படத்தை முன் அட்டையில் போட்டு விட்டு, பின் அட்டையில் மூன்று பெரிய வட்டங்களை போட்டு அதற்குள் கதையின் உள்ளே இருக்கும் ஆக்சன் படங்களை போடுவதற்கு பதில் பின் அட்டையிலும் ஒரிஜினல் அட்டை படத்தை பயன் படுத்தினால் பார்பதற்கு நன்றாக இருக்கும் சார். நண்பர்கள் கருத்தையும் எதிர்பார்க்கிறேன்.

      Delete
    6. ///தோர்கல் தொடரின் ஒரிஜினல் அட்டைப்படங்கள் அனைத்துமே நன்றாகத்தான் இருக்கிறது எனும்போது மீண்டும் அதை ஓவியரை வைத்து வரைவது எதற்காக என்பது புரியவில்லை!!///

      ஒரிஜினல் அட்டை படம் மிக சிறப்பாக இருக்கும் போது,
      நாம் ஏன் இத்தனை டச்அப் செய்கிறோம்.... கருத்து பதிவு சுதந்திரம் நீங்கள் தந்திருப்பதால் சொல்கிறேன்.
      ஒரிஜினல் படமே சிறப்பாக இருக்கிறது. அதற்கு மேல் முடிவு உங்களை சார்ந்தது.

      Delete
    7. பின் அட்டையில் இப்போதைய pattern நன்றாகவே உள்ளதாக எனக்கு தோன்றுகிறது.

      Delete
    8. //தீண்டதகாத படைப்பாய்//

      அந்த அளவுக்கு யாரும் இங்கே குறை சொல்லவில்லை

      //பொதுவாக சொன்னது...//

      பொதுவாக சொல்வதற்கான ஏற்ற வார்த்தைகள் அவை இல்லை

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. ////சில சமயம் ஒரிஜினல் அட்டை படங்கள் சுமாராக தெரியலாம். ஆனால் நாம் உருவாக்கும் அட்டை படத்தை விட அது மோசமில்லை என்பதே எனது நிலைபாடும்.////

      +555

      Delete
    11. Original cover mm சேர்த்து டிஃபரன்ஸ் வேரியண்ட் கவர் போடலாம்

      Delete
    12. அட்டைப்பட ஓவியங்களை ஆசிரியர் அல்லாது சிலர் விமர்சிப்பதை அந்த படைப்பாளி காண நேரிட்டால் நிச்சயமாக வருத்தப்படுவார்.

      Delete
  22. நான் ஓட்டே போடவில்லை சார்.. ஏனென்றால் எனக்கு மூவரும் பிடிக்கும்.

    ரிப் கிர்பி சார்லி சைசில் வருவது ஓகே. மேக்ஸி சைசில் பெரிய பேனல்களில் படங்கள் வந்தால் தான் நன்றாக இருக்கும்.

    பாக்கெட் சைசில் வந்த நிறைய கதைகள் துல்லியமான படங்களோடு இருந்தது இப்போது பெரிய அளவில் வரும்போது அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை என்று எனக்கு படுகிறது.

    ReplyDelete
  23. காசில்லா கோடிஸ்வரன் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச கதை ஆசானே..

    கொஞ்ச நாள் வண்ணத்தில் கேட்கலாம் ன்னு இருந்தேன். ..

    சர்ப்ரைஸ் ஆ இப்பவே வர்றதும் மகிழ்ச்சி. .

    ReplyDelete
  24. இரண்டாவதா ஜானி வருவார் ன்னு எதிர் பார்க்கலை ஆசானே..

    சோடா வுக்கு மனசுல மட்டும் ன்னு இடம் சொல்லிடாதீங்க‌ !

    ReplyDelete
    Replies
    1. சோடா ன்றதால வயித்துல இடம்னு சொல்லணுமோ சிவா.!?

      Delete
  25. தோர்கள் அதே அட்டைப்படம் தானா

    ReplyDelete
  26. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  27. ரிப்போர்ட்டர் ஜானி உயிர் தப்பியதில் மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சார்..அந்த துப்பறியும் பாணி மட்டுமல்ல அவரின் அழகான தெளிவான ஓவியமும் காணாமல் போய்விடுமோ என பயந்தேன்..நல்ல வேளை...:-)

    ReplyDelete
  28. எனக்கு ரிப்கெர்பியின் அட்டைப்படம் பிடித்து உள்ளது சார்...நன்றாகவே உள்ளது...

    பிறகு நீங்கள் கூறியபடி புத்தகம் வெளிவரும் வரை அட்டைப்படத்தை காட்டாமல் இருப்பது நல்ல விசயமே...இதழில் முதல்முதலாக அட்டைப்படத்தை பார்க்க நேரிடும் பொழுது இன்னும் ரசிக்க வைக்கும் ..இதனை நான் ஆமோதிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தலைவரே சொல்லி விட்டார். இதற்கு மறுப்பு கூற முடியாது.
      நா நேராக கதையை படிக்க போயிர்றேன். ப்ராப்ளம் சால்வ்...

      Delete
  29. நண்பர்களுக்கு இனிய வணக்கம் 🙏💐💐💐💐

    ReplyDelete
  30. இனிய காலை வணக்கங்கள் ஆசிரியரே
    இனிய காலை வணக்கங்கள் காமிக்ஸ் சகோதரர்களே

    ReplyDelete
  31. //தத்து-பித்தென்று க்வாட்டரடிச்ச பக்கிரி பாணியில் பதிவில் எதையாச்சும் உளறி வைக்கப்படாதென்பதால்//


    🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    ReplyDelete
  32. ரிப் கிர்பி அட்டைப்படம் அருமை


    ReplyDelete
  33. #சட்டி பெட்டிகளைக் கட்டிக் கொண்டு நம்ம 'தல' உலவிடும்#

    ஒரு வேளை நம்ப சட்டிதலயன் "ஆர்ச்சி" கதைகள் மீண்டும் வரப் போறான் என்பதைதான் நம்ப எடிட்டர் இப்படி சூசகமாக சொல்கிறாரோ..😍😘😘

    ஆர்ச்சி+ஸ்பைடர் இரண்டு பேரின் மனதை விட்டு நீங்காத classic சாகஞங்கள் ஒரு குண்டு புக்கா வர வாய்ப்பு இருக்குங்களா எடிட்டர் சார்..😍😘

    ReplyDelete
  34. ஆகஸ்ட் ஸ்பெஷல் இதழ்களை படித்து முடித்தாயிற்று...
    1.மார்ட்டின்-இயற்கை விதித்த வரையறைகளை மீறினால் விளைவு எப்போதும் வீபரீதம்தான்...
    மார்ட்டின் வண்ணத்தில் அசத்தல்...
    2.சுஸ்கி & விஸ்கி-கலகலப்பான வாசிப்புக்கு கியாரண்டி...
    நானும் ரெளடிதான்,பேரிக்காய் போராட்டம் என இரு களங்களுமே நல்ல வளமான கற்பனை...
    எப்போதும் போல் இந்த சாகஸங்களும் ஹிட் அடிக்கும்...
    3.பிக்பாய்ஸ் ஸ்பெஷல்-
    கொலைகாரக் குள்ளநரி-முதல் வாசிப்பு,ஓகே இரகத்தில் இருந்தது...
    கொலைப் படை-ஏற்கனவே பாக்கெட் சைஸில் படித்ததாக நினைவு,இரு வண்ணத்தில் அசத்தல்,லாஜிக் கண்ணாடியை கழற்றி விட்டால் மேஜிக் செய்யும் வாசிப்புதான்...
    மனித எரிமலை-சிறு பிராயத்தில் நார்மனும்,பாட்டில் பூதம் இதழும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் கிடைத்து வாசித்ததாய் நினைவு...
    இதில் நார்மன் கை சேதமானது போல,இந்த இதழும் சேதமாகியே எனக்கு கிடைத்தது,அதனால் கிடைத்ததை வாசித்து வைத்தேன்,அந்த வாசிப்பே அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது,பின்னாளில் மறுபதிப்பாய் இப்படி கிடைக்கும் என்று தோன்றவில்லை தான்...
    கடந்த காலத்தை ஒரு கணம் புரட்டிப் பார்த்த உணர்வு கிட்டியது...
    4.கார்சனின் கடந்த காலம்-
    என்ன ஒரு உணர்ச்சி பிரவாகமான கதை,எத்தனை முறை மீள் வாசிப்பு செய்தாலும் போரடிக்காத கதை,கதையின் பலமே நாம் கதையுடன் எளிதில் Emotional Connect ஆவதுதான்...
    கதையின் ஒவ்வொரு கேரக்டருமே கதையுடன் சரியாக Blend ஆகி இருப்பது மற்றுமொரு பலம்...
    கதை தொடங்கியதுமே நம்மை மந்திரச் சுழல் போல் உள்ளே இழுத்துக் கொள்கிறது...
    இக்கதையை படைக்கும் தருணத்தில் போசெல்லியின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்ற எண்ணம் மனதில் எழாமல் இல்லை...
    காலத்தைக் கடந்த ஒரு காவியமாக,ஒரு மைல்கல் இதழாக இந்த இதழ் திகழும் என்ற எண்ணம் அவர் மனதில் எழுத்திருக்குமா ?!
    வாசிப்பின் முடிவில் கலவையான உணர்வுகள் நம் மனதில் எழுவதும்,சற்றே மனம் கனப்பதும் தவிர்க்க இயலா நிகழ்வாய் போனது...
    ஆகச் சிறந்த ஒரு வாசிப்புக்கு உத்திரவாதம் அளிக்கிறது கார்சனின் கடந்த காலம்...

    ReplyDelete
  35. ஜானி கதைகள் நாம் வெளியிட்டால் அவை ரீப்ரிண்ட்ஸ் தானே
    அவர் ஏற்கனவே நம்முடயதில் வெளி வந்துள்ளார்
    புதியவர்களுக்கு வாய்ப்பு அளித்தால் நன்றாக இருக்கும்
    பழைய கதைகளையே வெளியீட்டு கொண்டு இருந்தால் புதியது எப்போது வரும்
    படிக்காத பார்த்திடாத கதைகளங்கள் எப்படி வரும்

    ஜானி வேண்டாம் என்று சொல்ல வில்லை
    புதிய கதைகளங்களுக்கு நம் வளர்ச்சியை செலுத்த வேண்டும் என்பதே என் கருத்து
    புதிய ஓவிய ஸ்டைலைகளுமே பார்க்கலாமே

    We can't grow with our current and the future generations, with our same repeated heroes alone...

    ReplyDelete
    Replies
    1. // ஜானி கதைகள் நாம் வெளியிட்டால் அவை ரீப்ரிண்ட்ஸ் தானே //
      ஜானியின் இன்னமும் படிக்காத,கிடைக்காத நல்ல கதைகள் உள்ளதே சகோ,வருடத்திற்கு ஒன்றுதானே...
      மறுபதிப்பில் சில இதழ்களைப் போல ஜானி பெரிய விலையில் இடத்தை ஆக்ரமிக்க போவதில்லையே...

      Delete
    2. ///ஜானி வேண்டாம் என்று சொல்ல வில்லை
      புதிய கதைகளங்களுக்கு நம் வளர்ச்சியை செலுத்த வேண்டும் என்பதே என் கருத்து
      புதிய ஓவிய ஸ்டைலைகளுமே பார்க்கலாமே///

      இது போன வாரம் சார்ந்த கதை... அது தான் சோடா
      வர்றார் தானே...

      Delete
  36. மன்னிக்கவும் நண்பர்களே! கடந்த பதிவில் சித்திரங்களைப் பற்றி துளி ஞானமும் இன்றி தோர்கல் அட்டைப்படம் குறித்து சின்னப்புள்ளைத்தனமாய் சில குறைகளை சுட்டிக்காட்டிவிட்டேன்! இதோ - சற்றே மாற்றிக் கொள்ளப்பட்ட எனது கருத்துக்களோடு ஒரு மறுபதிப்பு விமர்சனம் :

    ஆஹா!! மிக அருமையான, நேர்த்தியான அட்டைப்படம்! தழும்புகளற்ற தோர்கலின் பொலிவான முகம் காண - கண்கள் கோடி வேண்டும்!
    ஆறுவயதுச் சிறுமியாய் - அழகாய் காட்சிதரும் ஆரிசியாவின் முகத்தை ஆறேழு மாதங்களுக்கு ரசித்தாலும் சளைக்காது!

    கருப்பு அங்கி அணிந்த கூட்டத்தினர் நிற்கும் தோரணையைப் பார்த்தாலே மனதுக்குள் ஒரு பீதி பரவி, உடனே கதையைப் படித்திடும் ஆவல் எழுவதை ஏகத்துக்கும் அதிகரிக்கிறது!

    இந்த அட்டைப்படத்துக்காகவே இரண்டு எக்ஸ்ட்ரா காப்பிகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிடும் ஆசையும் எழுகிறது! ஆன்லைன் லிஸ்ட்டிங்காக ஆவலோடு வெயிட்டிங்!

    இனி இதுபோன்ற அட்டைப்படங்களே தோர்கல் தொடரின் முழுமைக்கும் இடம்பெற்றிட வேண்டுமாய் எடிட்டர் சமூகத்தைத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. // கடந்த பதிவில் சித்திரங்களைப் பற்றி துளி ஞானமும் இன்றி //
      ஞானம் இருப்பின் எப்போதோ ஞானி ஆகி இருப்போமே ஈ.வி...
      அட விட்டுத் தள்ளுங்க...

      Delete
    2. ஈவி சார்,
      தர்ம சங்கடம் நம்மை தவிப்புக்குள் உள் நிறுத்தி விடும்.
      ஒரிஜினல் - விட, வரைய பட்டது அதற்கு இணையாக இல்லை. அதுதான் வருத்தத்தை வரவழைக்கிறது. அதை‌ சொல்வதில் எந்த பிழையும் இல்லை.
      இந்த வார்த்தையாடல்கள், தோர்கல் வாசிப்புக்கு ஒரு உத்வேகம் வளைத்தளத்தில் தந்திருக்கின்றது என்றால் நாம் அதன் காரணிகள் என்று நினைவில் கொள்வோம்.


      Delete
  37. // And சின்னதொரு வித்தியாசத்தில் உள்ளே இருப்பவர் ஜானி //
    ரிப்போர்ட்டர் உள்ளே வந்து வெற்றிக்கான ரிப்போர்ட்டை கொடுத்தது மகிழ்ச்சி சார்,அடுத்த ஆண்டு முடிந்தால் புதுசு + பழசு காம்பினேசனில் ஜானி வந்தால் மகிழ்ச்சி...

    ReplyDelete
  38. Sir, Better not to include new arrivals like SODA in any polls sir - for the risk of getting whacked out. Especially with 'palaya irumbu jaamaan' Johnny ;-) Or the other way to handle this could be to have a separate classic line for Johnny etc.

    On any day SODA is more refreshing than Ric !

    ReplyDelete
    Replies
    1. சோடா எனக்கு பிடித்த தொடர். கார்ட்டூன் இல்லாத குறையை போக்கிய இதழ்களில் சோடாவும ஒன்னு

      Delete
  39. // அடுத்த ஓரிரு நாட்களில் மொழிபெயர்ப்பினைப் பூர்த்தி செய்த கையோடு - DTP முடித்து அச்சும் முடித்து விடுவோம் ! //
    ஆகஸ்டில் செப்டம்பர் எதிர்பார்க்கலாமா சார்...
    அல்லது செப்டம்பரில் செப்டம்பரா ???

    ReplyDelete
  40. //எழுத்துப் பிழைகளைக் களைய முனையும் நமது முயற்சிகளுக்கு உதவிட, நெடும் அனுபவம் கொண்டதொரு தமிழ் புரஃபஸர் நம்மோடு அடுத்த வாரம் முதலாய் கரம் கோர்க்கிறார் ! //
    நல்லது சார்,நேர்த்தியான இதழான கார்சனின் கடந்த காலம்,சுஸ்கி விஸ்கியும் கூட எழுத்து பிழைகளுக்கு தப்பவில்லை...
    சிறு திருஷ்டியாய் அமைந்து விட்டன,இந்நிலையில் இச்செய்தி மகிழ்வை அளிக்கிறது...

    ReplyDelete
  41. // And டிடெக்டிவ் சார்லி ஸ்பெஷலின் அதே சைசில் ரிப்பும் வரவுள்ளார் - உங்களின் சுலப வாசிப்புக்கு உதவிட ! //
    ரிப் கெர்பி ஸ்டைலிஷா இருக்கார் சார்,ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
  42. //And ஒரு குட் நியூஸுமே : எழுத்துப் பிழைகளைக் களைய முனையும் நமது முயற்சிகளுக்கு உதவிட, நெடும் அனுபவம் கொண்டதொரு தமிழ் புரஃபஸர் நம்மோடு அடுத்த வாரம் முதலாய் கரம் கோர்க்கிறார் ! இவருக்கு ஏற்கனவே ஊடக proof-reading அனுபவமும் இருப்பதால், இனி அரிசியில் கலந்த கற்களாய் பிழைகள் இடறிடாதென்று நம்பலாம் !//

    அருமை ஆசிரியரே

    ReplyDelete
  43. ஆர்வமூட்டும் புதிய நெவாடா,மாயாஜால தோர்கல்,பிடித்த ரிப் கெர்பி...
    இந்த மாதமும் போட்டி கடுமையா இருக்கும் போல...

    ReplyDelete
  44. நம் கதைகளில் வரும் எழுத்து பிழைகளை அச்சு பிழையாக
    அவை பாஸ்ட் டைப்பிங் மிஸ்டெக்காகவே கருதுகிறேன்

    நானும் படிக்கும்போது கதையோடு ஒன்றி படிக்கும்போது, எழுத்து பிழைகளை கண்டு கொண்டதில்லை
    சுட்டி காட்டபட்டால் மட்டுமே கவனித்ததுண்டு
    வசனங்கள் மற்றும் இலக்கணத்தில் பிழைகள் இருப்பின் அவை கதையின் போக்கை நம்மளுக்கு சொல்வதில் தவறாக விடும் என்பது என் கருத்து
    எழுத்து பிழைகளை பெரிதாக கண்டு கொண்டதில்லை, அவை எனக்கு பெரிதாக பட்டதுமில்லை
    கதை மற்றும் ஓவியங்களில் ஆர்வாமாய் இருக்கும் போது கவனித்ததில்லை

    ReplyDelete
    Replies
    1. படிக்கும்போது மட்டுமல்ல - நீங்கள் எழுதும்போதும் எழுத்து பிழைகளைக் கண்டுகொள்வதில்லை என்பது உங்கள் கமெண்ட்டுகளைக் கவனித்தாலே புரிகிறது சகோ! 😝😝

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ரிப் கிர்பி - இதழுக்கு ஆவலுடன் காத்திரிப்பு..
      அதுவும் எனக்கு பிடித்த சை ஸில்- 8 கதைகளை மொத்தமாக படிக்கும் வாசிப்பு அனுபவம் சுகமாக இருக்கும்..
      பொதுவாக இது போன்ற ஆரம்பகால கதைகள் நான்கு-ஐந்து சேர்ந்து ஒரே நேரத்தில் படிக்கும் போதுதான் அந்த ஹீரோ-வின் ஸ்டைலும்- கதாசிரியரின் புத்திசாலித்தனமான கதை சொல்லும் யுத்தியும் பிடிபடும். (உ-ம்) சார்லி ஸ்பெஷல்..

      Delete
    4. @Erode Vijay
      அது ஸ்பீட் டைப்பிங் சகோ😋😋😋😋😋😋😋😅😅😅😅😅

      கதையடன் ஒன்றி படிக்கும் போது கவனித்ததில்லை
      மற்றப்படி செக் செய்ய வேண்டும் எனும் கவனிப்பேன் சகோ

      Delete
  45. எனது கூகுள் கணக்கு அடிக்கடி Sing Out ஆகி விடுகிறது. ஒவ்வொரு முறை பதிவுக்கு வரும்போதும் Sing Inசெய்ய வேண்டியதாகவே இருக்கிறது இதற்கு காரணம் என்னவென்று தெரிந்த நண்பர்கள் கூறுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா நீங்க எந்த பிரவுசர் யூஸ் பண்றீங்க. ஒருவேளை நீங்க பிரவுசிங் ஹிஸ்டரிய நீங்க டெலிட் பண்ணா அதுல குக்கீஸை சேர்த்து டெலிட் பண்ண வாய்ப்பு இருக்கு அப்படி டெலிட் பண்ணா சைன் அவுட் ஆக வாய்ப்பு இருக்கு

      Delete
  46. அப்புறம் நான் ஓட்டு போடவில்லை ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த மூன்று நாய்களில் எவரையும் விலக்க எனக்கு விருப்பமில்லை.

    ReplyDelete
    Replies
    1. இந்த auto correctionன் தலையில் இடி விழ!!

      Delete
    2. ///அப்புறம் நான் ஓட்டு போடவில்லை ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த மூன்று நாய்களில் எவரையும் விலக்க எனக்கு விருப்பமில்லை.///

      அய்யோ சாமி.
      இனிமே இந்த ஆட்டம் வேணாம்...

      Delete
    3. சதாசிவம் சார்... டைப்பும் போது கவனம்.நாயகர்கள் நாய்கள் ஆகிவிட்டனர்.

      Delete
    4. // எனக்கு மிகவும் பிடித்த மூன்று நாய்களில் எவரையும் விலக்க எனக்கு விருப்பமில்லை.// இந்த auto correctionன் தலையில் இடி விழ!! :-)))))))

      Delete
  47. மீண்(டு)ம் வந்த மாயன்.
    அதுபோல் மேபிஸ்டோ லயன் காமிக்ஸ் வர வாய்ப்பு இருக்கிறதா இப்பொழுதே ஓட்டெடுப்பு நடத்த நண்பர்கள் ஏற்பாடு செய்யுங்கள்

    ReplyDelete
    Replies
    1. என்னது...
      அடுத்த ஓட்டெடுப்பா...ஓடிடு சின்ன தம்பி...

      Delete
  48. "தல"- உலவும் மண்ணிலிருந்து ஒரு செல்ஃபி போட்டுருக்கலாமேங் ஆசிரியர் சார்......

    என்னை போல பாஸ்போர்ட்டே இல்லாத ஆள்லாம் தலை தேசத்தை ரசிக்க இதானே வழி...

    ReplyDelete
  49. நெவாடா அட்டை தூள் பறத்தது....
    கதையும் கெளபாய் பாணி என்பதுனால ஷூயூர் ஹிட்டு தான்....

    ReplyDelete
  50. ரிப் பர்பி ச்சே கிர்பிலாம் நமக்கு ரொம்ப தூரம் அதனால் அந்த பேராவை அப்படியே ஸ்கிப்பியாச்சி....

    ReplyDelete
  51. ///மறுக்கா புளியமரத்தில் தொங்க விட்டுச் சாத்துவது போலவே கெட்ட கெட்ட சொப்பனங்களாய் வந்ததால் - 'எதுக்கு வம்பு?" என்று ஒரிஜினல் தடத்திலேயே பயணித்துள்ளோம் ! ///

    --- தங்க கல்லறையில வாங்கிய சாத்து இன்னும் மறக்கல போலங்களே தங்களுக்கு... ஹி...ஹி...

    ReplyDelete
  52. சோடா வை போடா ன்னுட்டாங்களா தோழர்கள்...மம்ம்ம்..சரி பரால்ல...
    புக்ஃபேர் ஸ்பெசல் இருக்கு போடாம போய்டுவீங்க...அப்ப குடிச்சிகிடலாம்


    சானி ச்சே ஜானி காதலர்களுக்கு வாழ்த்துகள்..💐💐💐

    ReplyDelete
  53. சோவியத் யூனியன் என இருந்தபோதிலிருந்தே விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரஷ்யாவின் லூனா -25 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக மென் இறங்கல் செய்யும் ; இந்தியாவின் சந்திரயான் அதை செய்ய இயலாமல் தோல்வியுறும் என பிற நாட்டவர்கள் எண்ணியதற்கு மாறாக நடந்தது போல் ஓட்டெடுப்பில் ரூபின் உள்ளிருக்க ஸோடா வெளியேறியது அதிர்ச்சியே.

    புத்தக விழாக்களில் இடம் பெற்றாலும் ரெகுலர் தட அந்தஸ்தினை இழப்பது வருத்தமே!

    ReplyDelete
  54. நம்மவர்களுக்கு எப்பவுமே தாய்க்குலத்தின் மீது பாசம் கொஞ்சம் சாஸ்தி. அதான் ரூபின் பாப்பா உள்ளே.

    ReplyDelete
    Replies
    1. ரூபின் பாப்பாவோட கட்டங் ஆன பேனல்கள்லாம் போட்டிருந்தா பாப்பா டிஸ்டிங்சன்ல பாஸாகியிருக்கும்னேன்....😜😜😜

      Delete
    2. கம்பெனி ரகசியத்தை பப்ளிக்கா சொல்லாதீங்க ஜீ..
      .
      நமக்கு இருக்கிறதே ஒரே ஒரு குஜிலி பாப்பா.

      பாப்பா இல்லைனா பாலைவனமாயிடுமே.

      Delete
  55. சோடாவை எனக்கும் பிடிக்கும். என்ன செய்வது. இங்கு கேள்வி சோடா வேண்டுமா, வேண்டாமா என்று இருந்திருந்தால் நிச்சயமாக சோடா தான் வென்றிருப்பார்.
    ஆனால் சோடா, ஜானி, ரூபின் ஆகியோரில் இருவர் எனும் போது, சமீபத்திய வரவான ரூபின், இரண்டு தெறிக்கும் சாகசங்களில் குறை சொல்ல முடியாதபடி இருப்பை நிலை நாட்டிவிட்டார்.

    80களில் தொடங்கி இன்று வரை Active ஆக இருக்கும் ஜானியின் இருப்பு சாதாரணமானது அல்ல. இவருக்கு என்று நான் உட்பட ஒரு ரசிகர் கூட்டம் இன்றும் உண்டு. ஆகையால் இவரையும் இவரது சாகசத்தையும் விட்டு கொடுக்க முடியாது.
    இருவரையும் வைத்து பார்க்கும் போது சோடாவை வேறு வழயில்லாமல் விலக்க வேண்டியதாய் போயிற்று.


    ReplyDelete
    Replies

    1. 80களில் தொடங்கி இன்று வரை Active ஆக இருக்கும் ஜானியின் இருப்பு சாதாரணமானது அல்ல. இவருக்கு என்று நான் உட்பட ஒரு ரசிகர் கூட்டம் இன்றும் உண்டு. ஆகையால் இவரையும் இவரது சாகசத்தையும் விட்டு கொடுக்க முடியாது

      அதே அதே சூப்பரா சொன்னிங்க

      Delete
    2. ///இவருக்கு என்று நான் உட்பட ஒரு ரசிகர் கூட்டம் இன்றும் உண்டு.////--- யெஸ் நிறைய ஜானி ரசிகர்கள் உள்ளனர்...
      ஜானி வேணாமேனா ரொம்பவே வருத்தப்பட்டுப்போகும் ரசிகர்கள் நிறைய பேரை அறிவேன்...
      ஜானி பெயரை பார்த்து உள்ளூர ஓரு ஐயம் தோன்றியது...இவர் எப்படி எலிமினேஷன் ரவுண்டுக்கு தள்ளப்பட்டார்னு.....??

      மேபி புத்தகவிழா சேல்ஸ் எதிரொளியாக இருக்ககூடும்...

      எனிஹவ் ஜானி தப்பிட்டார்..


      ஆனா சோடா, தாத்தானு ரொண்டு வாரங்களில் ரெண்டு புதியவர்கள் புக்ஃபேர் ஸ்பெசலுக்கு தள்ளப்பட்டது கொஞ்சம் எதிர்பாரா ரிசல்ட்டே

      Delete
  56. Big boys special, தரமான தயாரிப்பு, spider இரு வண்ணத்தில் அழகா இருந்தது
    நார்மன் மனித எரிமலை ,முதல் முறையாக படிக்கிறேன், நார்மன்
    மீதி உள்ள கதைகளையும் வரும் வருடத்தில் தி பிக் boys 2 என்று போட்டு விடுங்கள்.
    The big boys 2 வில் spider, Robot Archie இரு வண்ணத்தில் போட்டு விடுங்கள்



    ReplyDelete
  57. எடி ji

    The big boys 2 வாய்ப்புள்ளதா ஜி

    ReplyDelete
  58. சிக் என்று நீங்க சொன்ன இந்த பதிவு நச் என்று எழுதி இருக்கிறீர்கள் சார்.

    ReplyDelete
  59. கொலைப்படை இருவண்ண ஸ்பெசல்@

    நம்ம தெருவுக்கு எதிர் தெருவில் உள்ள பழைய ரசிகரும் நானும் ஒன்றாகவே சந்தாவில் பயணிக்கிறோம்..
    அவருக்கு புக்ஃபேர் ஸ்பெசல்ஸ் எப்போதும் ஈரோடுல இருந்துவாங்கிட்டு போய் தருவேன்..

    இரு வாரம் ஊரில் இல்லாத அவருக்கு இன்று ஈரோடு ஸ்பெசல்களை அளித்தபோது
    spider இரு வண்ணத்தில் ஜோராக இருந்தது கண்டு மனிதர் துள்ளக்குதித்து விட்டார்...

    "என்னங்க விஜய் நாம சின்ன வயசில பார்த்த அம்புலிமாமாவுல உள்ளது மாதிரியே கலர் சூப்பரா இருக்குதேனு..." னு ஆச்சர்யபட்டாரு...

    "300ரூவாக்கு செம புக்குங்க"--- என ரொம்ப ஹேப்பி அவரு..

    அவருக்கு எடிட்டர் பத்தியோ, நம்ம கொண்டாட்டம் திருவிழா பத்தியோ தெரியாது.... ஆனா நம்ம வெளியீடுகள்ல வித்தியாசமாக இருப்பதுலாம் ரொம்ப ரசிப்பாரு....


    ReplyDelete
    Replies
    1. இந்த மாதரியுள்ள பல நூறு சைலன்ட் வாசகர்கள் தான் தங்களின் உண்மையான பலம் ஆசிரியர் சார்.

      அவுங்களுக்கு எழுத்து பிழையோ, அச்சு குறையோ, அட்டைப்பட குறைபாடோ எதுவும் தெரியாது...
      அவுங்க அனைவருக்கும் சேர்த்து தான் ஈவி,கடல் போன்ற நண்பர்கள் நயமாக குறைகளை எடுத்து கூறுகிறார்கள்...

      சென்னை ஓவியரோ, பெல்ஜிய ஓவியரோ சரியில்லை எனும்போது நாம ஒரிஜினல் களின் பக்கமே நிற்போம் சார்..

      இது ஒரு வெளியீடு தானே என நம்ம தோழர்கள் எண்ணுக்கும் பார்த்தது இல்லை.. காலத்துக்கும் வைத்து ரசிக்கும் பொக்கிஷங்களாகவே பாவிக்கிறோம்...

      நல்ல அட்டைகளையே உபயோகிக்க வேணும்னு கேட்டுக்கொள்கிறேன் சார் நானும் நட்புகளோடு...🙏🙏🙏

      Delete
    2. ///இந்த மாதரியுள்ள பல நூறு சைலன்ட் வாசகர்கள் தான் தங்களின் உண்மையான பலம் ஆசிரியர் சார்.///

      +555

      Delete
    3. ///இது ஒரு வெளியீடு தானே என நம்ம தோழர்கள் எண்ணுக்கும் பார்த்தது இல்லை.. காலத்துக்கும் வைத்து ரசிக்கும் பொக்கிஷங்களாகவே பாவிக்கிறோம்...///

      +666

      நீங்கள் செய்யும் இந்த காமிக்ஸ் வெளியீடுகளுக்கு, உங்களை சிறப்பிக்கும் வண்ணம், கொடுப்பதற்கு
      சிறந்ததாக என்னிடம் ஒன்றும் இல்லை.
      ஆனால்
      என் நெஞ்சம் முழுக்க நன்றிகள் மட்டுமே நிறைந்திருக்கிறது.

      Delete
  60. டியர் எடி,

    சோடா ஓட்டெடுப்பில் பின்னால் தங்கி போனதில் எனக்கு வருத்தமே. அருகி வரும் துப்பறியும் கதாநாயகர்களில் இவரும் இல்லை என்ற நிலையினால்.

    தனிபட்ட முறையில் இந்த ஓட்டெடுப்பில் நான் பங்ககெடுக்காத காரணம், டிடெக்டிவ் ரூபின் கதைகளை இன்னும் படிக்கவில்லை என்பதால் தான். படிக்காத ஒரு கதையை ஓட்டெடுப்பில் இருண்டு போக செய்யாமல், படித்தவர்கள் மட்டும் பங்கெடுக்கட்டும் என்று ஒதுங்கி கொண்டேன்.

    இந்த ஜனநாயக முறையில் ஓட்டெடுப்பு என்பதே ஒரு கேள்விக்குறி கொண்ட நடைமுறைதான். உதாரணத்திற்கு நமது தற்போதைய அரசியல் தேர்வுகளையே சொல்லாம். 60 சதவிகிதம் பேருக்கு மட்டும் அவர்கள் சார்புக்காக பிடித்து போனதை, மற்ற 40 சதவிகிதம் பேரும் ஒப்புக்கு ஒத்துழைக்கும்படி வரும் தர்மசங்கடம் தான்.

    இதே போக்கை தான் நமது காமிக்ஸ் கதாபாத்திரங்கள் மற்று வெளியீடுகள் தொடர்பாகவும் நடக்கும் ஓட்டெடுப்புகளிலும் காண்கிறேன். முதலில் நமது வாசகர்களின் ஒரு சிறு கூட்டமே இங்கு ஓட்டெடுப்புகள் பங்கெடுப்பது, நாம் அனைவரும் அறிந்ததே. அப்படி எடுக்கபட்ட ஒரு Opinion Poll ஒரு சாம்பிளிங்காக எடுத்துகொள்ளலாம் என்பதையே மறந்து தேர்தல் நேரங்களில் TRP என்ற ஒற்றை விஷயத்திற்காக மீடியாக்கள் நடத்தும் Hit and Miss ஆருடங்கள் போல தான்.

    எப்போதும் எல்லோருக்கும் பிடித்தமான கேரக்டர்கள் என்று ஒருவரை உருவகபடுத்துவது மிகவும் கடினம். அதுவும் வித்தியாசமான ஓவிய பாணி, ஆனால் ஸ்ட்ராங்க கதைக்களம் என்ற அரிதான கதைதொடர்களில், நமது வாசகர்கள் இன்னும் பரிச்சயமாகவில்லை என்பதற்கு சான்றே, இந்த கம்மி ஓட்டுகள்.

    ஒரே ஒரு நல்ல விஷயம், இறுதி முடிவை எப்போதும் நீங்கள் கையில் வைத்திருப்பதே. பலவித காமிக்ஸ் ரசனைகளை நமது மக்களுக்கு தொடர்ந்து பழக்கபடுத்தி கொண்டே இருக்கும் விதத்தில் என்றும் உங்கள் தேர்வுகளின் மீது எனக்கு தனி மரியாதையே உண்டு.

    அதிகம் விற்கபடாமல், அதிகம் படிக்கபடாமல் இருந்த கிளாசிக் தொகுப்புகளை, விற்பனைக்கு சிக்கான முறையில் கையடக்கமாக வெளியிட்டால் சிறப்பாக தொடரமுடியும் என்ற முடிவை எடுத்ததுமில்லாமல், அதற்கு வந்த ஒருசில அர்த்தமற்ற எதிர்ப்புகளை புறம்தள்ளிய பாங்கை எடுத்துகாட்டலாம்.

    அதற்கு போற்கொடி தூக்கி இனி லயன் முத்து பொறுத்தவரை மனதில் மட்டுமே இடம்... என்று கூறியவர்கள் ஒவ்வொருவரும் மீண்டும் இணைய தடத்தில் சேர பண்ணும் இதயம் சொட்டும் வரிகள் தான் ஹைலைட்டே.

    அவ்வகையில், வாசகர்கள் முடிவின்படி மொத்தமாக மூடுவிழா என்று அறிவிக்காமல், புத்தக விழாகாலங்களில் அவ்வப்போது வரும் என்னும் அறிவிப்பே எனக்கு போதுமானது.

    பிந்தைய பதிவின் தோர்கல் அட்டை, மற்றும் இந்த பதிவின் ரிப்கிர்பி இரண்டும், குறைகள் தெரிந்தாலும் எனக்கு ஓரளவுக்கு பிடித்தமே, மொத்தமாக பார்க்கும்போது. Reference Image இல்லாமல் அனாடமி மட்டும் முக பாவனைகளை வரைவது நம் நாட்டிலிருக்கும் ஓவியர்களுக்கு பெரிய சொதப்பல் காரியமாகவே இருக்கிறது. இதற்காக அன்னிய ஓவியர்களை பெத்த பணத்தில் புக் செய்வதும் நடவாது என்ற காரியத்தால், நம் நாட்டு ஓவியர்கள் AI துணை கொண்டு தம்மை எப்போது மேம்படுத்தி கொள்கிறார்களோ அப்போது தான் இதற்கு நமது விலைக்கு கட்டுபடியான ஒரு முகாந்திரம் அமையபெறும்.

    அதுவரை காசுகேத்தே தோசை என்று நாம் பழகிகொள்ள வேண்டும், நான் பழகிகொண்டேன். செப்டம்பர் இதழ்களுக்கு ஆவலுடன் வெயிட்டிங்.

    ReplyDelete
    Replies
    1. கூடவே, மேற்கூறிய என் கருத்து ரிப்கிர்பி, மாயாவி, போன்ற கிளாசிக் தொடர்களுக்கு மட்டுமே பொருந்தும்... ஏனென்றால் அவற்றுக்கு அட்டைகள் நடப்பில் ஒரிஜினலிலேயே இல்லை என்பதால்....

      மற்றபடி தோர்கல், லார்கோ, போன்ற ஐரோப்பிய தொடர்களுக்கு அட்டைகள் ரெடிமேடாக ஒரிஜினலிலே இருக்கும்போது அதையே உபயோகிப்பதே நமக்கு சிறந்த வழிமுறை... அதையே தொடருங்கள் டியர் எடி.

      Delete
    2. i///ஐரோப்பிய தொடர்களுக்கு அட்டைகள் ரெடிமேடாக ஒரிஜினலிலே இருக்கும்போது அதையே உபயோகிப்பதே நமக்கு சிறந்த வழிமுறை... அதையே தொடருங்கள் டியர் எடிட்டர்.///

      +555

      Delete
    3. ///ஒரே ஒரு நல்ல விஷயம், இறுதி முடிவை எப்போதும் நீங்கள் கையில் வைத்திருப்பதே. பலவித காமிக்ஸ் ரசனைகளை நமது மக்களுக்கு தொடர்ந்து பழக்கபடுத்தி கொண்டே இருக்கும் விதத்தில் என்றும் உங்கள் தேர்வுகளின் மீது எனக்கு தனி மரியாதையே உண்டு///.

      +555

      Delete
  61. பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்த கமெண்ட் ஆசிரியருக்கு மட்டுமே அல்ல....
    சக வாசகர்கள் தாராளமாக பதில் சொல்லலாம், ப்ளீஸ்.... 😊

    - நன்றி:- "எந்த குழுவிலும் அங்கம் வகிக்காமல் காமிக்ஸை மட்டும் ரசிக்கும் குழுவினர்"

    ReplyDelete
  62. ரிப் கிர்பி போன முறை வந்த சைஸில் வரவில்லை என்பது என்னைப் பொருத்தவரை வருத்தமே...

    அடுத்தது... அட்டைப் படங்களைப் பொருத்தவரை... ஒரிஜனல் அட்டைப் படங்களை அப்படியே உபயோகிப்பதில் பிரச்சனைகள் எதுவும் உண்டா சார்...!? உள்ளிருக்கும் படங்கள் எதையும் டச்சப் செய்யாமல், வேற்று மொழி இருக்கும் இடத்தில் தமிழ் இடம் பெறுவது போல்... அட்டைகளிலும் செய்ய முடியாதா சார்...!?

    ரிப்பின் நமது அட்டை ஒரிஜனலை ஒப்பிடும்போது சுமார் ரகமே...

    ReplyDelete
    Replies
    1. அப்பட்டமான உண்மை.. AKk.. சகோ.. ❤️... ஆனால் நம்மால் முடியும்.. ❤️👍

      Delete
    2. இதைத்தான் நானும் சொல்ல விழைகிறேன்!

      ஒரிஜினல் அட்டையை அப்படியே பயன்படுத்தினால் இன்னும் மெருகேற வாய்ப்புகளுண்டு...
      க்ளீன் ஷேவ் செய்த ரிப் கிர்பி பார்ப்பதற்கு ஹிஹிஹி!


      கையில் புத்தகம் வரட்டும், அப்போது என்னுடைய கருத்துக்கள் பொய்த்துப் போகவும் வாய்ப்பிருக்கலாம்!

      Delete
  63. இப்போ இருக்கும் வசதிகள் கொண்டு "ஒரிஜினல்"அட்டைப்படத்தை விட அட்டாகாசமாய் ஒரு படத்தை
    உருவாக்க முடியும் நண்பர்களே..
    நேரம் வரும் போது பண்ணி காமிக்கிறேன்.. 😄❤️👍

    ReplyDelete
  64. எனக்கும் வரைகலை கொஞ்சம் தெரியும். ஏனோ அதில் ஆர்வம் காட்டி கொள்ள வில்லை.
    அதன் நுணுக்கமான நுட்பங்களை நான் கற்றுக் கொண்டால் மட்டுமே, நான் ஓவியன் என்று சொல்ல முடியும்.
    இருப்பினும் சிறு வயதில் சமூகம் சார்ந்த கருத்துக்களை , கார்டூன் ஆக வரைந்திருக்கிறேன். அது ஒரு காலம்.

    ReplyDelete
  65. ஈரோடு புக்பேர் -ல்
    நமது அன்றைய ஆர்ட் அட்டை படங்களை எண்ணில் அடங்கா ஒரிஜினல் -ஐ பார்த்து
    இதற்கு இணையான சித்திரங்கள் இப்போது யாரும் வரைவதில்லையே
    என்று பெருமூச்சு விடுகின்றேன்.

    ReplyDelete
  66. ஒளிர் ஐயா@ ஒரு ஐயம்... அதென்ன +555....அது ஏதும் புடிச்ச விசயங்களா????😉

    ReplyDelete
    Replies
    1. கண்டு பிடிச்சிட்டீங்க தோழரே...

      Delete
  67. ஆசிரியர் அவர்களுக்கு,

    நான் ஈரோடு புத்தகங்களை ஆர்டர் செய்த போது பிக் பாய்ஸ் ஸ்பெஷல் புத்தகம் ஸ்பைடர் & மாயாவி அட்டைகளுடன் தேவை என்று தெரிவித்திருந்தேன். ஆனால் என் சென்னை முகவரிக்கு இரண்டுமே ஸ்பைடர் அட்டைகளுடன் வந்துள்ளன. தயவுசெய்து மாயாவி அட்டையுடன் பிக் பாய்ஸ் ஸ்பெஷல் புத்தகம் எனக்கு கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். அதற்கான தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுகிறேன். மிக்க நன்றி

    ReplyDelete
  68. காசில்லா கோடீஸவரன் கதையில் டெஸ்மாண்ட் தான் ஹீரோ போல கலக்கி இருப்பார்... அருமையான தேர்வு!

    அப்படியே அந்த புதையல் வேட்டை, சூரிய சாம்ராஜ்யம் போன்ற கதைகளையும் அடுத்த ஸ்பெஷல் இதழ்களில் கொடுத்தால் புல்லரித்துப் போய் விடுவோம்!

    ReplyDelete
  69. என்னவோ ஒரு பிரச்னை நடந்திருக்கு!

    கருத்து சொன்னா எங்கிருந்து யார் டின் கட்டுவாங்கன்ன தெரியலை! அந்து கருத்தும் டெலீட் ஆகிட்டதால என்ன போட்டிருந்தார் என தெரியலை! இப்போதைக்கு ஜம்பிங் மாயாத்மாவை துணைக்கு அழைச்சிட்டு ஒதுங்கிக்கிறேன்!

    ரிப்போர்ட்டர் ஜானி மரண கண்டத்திலிருந்து தப்பி வந்ததில் அடியேனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. பொதுதளத்தில் ஏதாவது குறையா சொன்னா அதுக்கு சரியான பதில் தந்துருவாங்க.
      அப்றம் அவங்க திருப்பி கேக்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.
      அதை தவிர்க்கதான் அந்த கவச குறிப்பு.
      அதை தாண்டி யாரும் அதுக்கு கமெண்ட் போட முடியாதுங்கற போலி தைரியம்.
      ஆசிரியருக்கு மட்டும்னா அவரோட தனிச்செய்தியில் போடனுங்கற அடிப்படை சென்ஸ் கூட இல்லனா என்ன செய்ய?.

      சரி,
      இப்ப அதுக்கு வேற யாராவது பதில் சொன்னாதான் என்ன?.ஆசிரியரேதா பேசனுமா?.
      வேற யாராவது பேசினா,
      ஏன் அதுக்கு சரியான முறையில் பதில் தருவதில் என்ன பயமும், தயக்கமும்?.
      தலயா போகும்?.

      அந்த குறிப்பு சொன்னதும்தா யாரும் பதில் சொல்லலனு நினைச்சிருப்பாங்க.
      உண்ம அதில்ல, "நீ இப்டியே உளறிட்டு இரு" ன்னு நெனச்சு ஸ்கிப் பண்ணிருப்பாங்க.

      வலைதளமே ஒரு மறைமுகமான இடந்தான்,
      அதிலும் கேள்விக்கு பதில் கேக்க முடியாம, பேச முடியாம ஓளியறாங்கனா?...
      🤦🏻‍♂️
      காலக்கொடும....

      Delete
    2. யோவ் க்ளா@ தத்ரூபமாக யாருய்யா கேட்டா???

      ஒரிஜினலே நல்லா இருக்கும்போது, காசு செலவு பண்ணி எக்ஸ்ட்ரா நம்பர் எதுக்குங்கனு தான் எல்லோரும் ஃபீல் பண்ணியுள்ளார்கள்யா!!

      மாசம் 4, 5னு போயாச்சி..ஆசிரியர் சாருக்கு ஒர்க் லோட் அதிகம்...இனியும் ஓவியர்களை கொண்டு வரைவானேன்....லட்டு மாதிரி ஒரிஜினல்ஸ்கள் இருக்கும் போது அவற்றை உபயோகித்து கொள்வது ஆசிரியர் சாருக்கு வேலையையும் குறைக்கும்.. அந்த நேரங்களில் ஆசிரியர் சார் மீண்டும் சரிபார்க்க நினைக்கும் விசயங்களில் கவனம் செலுத்தலாம்

      "லயன்-முத்து நம்ம குடும்பம், நாம அனைவரும் அதில் ஒரு அங்கம்னு நினைக்கவும்தான்யா இங்கே கெடந்து அல்லாடறாங்க..."

      Delete
    3. ///"லயன்-முத்து நம்ம குடும்பம், நாம அனைவரும் அதில் ஒரு அங்கம்னு நினைக்கவும்தான்யா இங்கே கெடந்து அல்லாடறாங்க..."///

      நச்சுனு நெத்திப் பொட்டுல அடிக்கறமாதிரி சொன்னீங்க STVR! இந்த அட்டைப்பட களேபரங்களின் ஒட்டுமொத்த சாராம்சத்தையும் ஒற்றை வார்த்தையில விளக்கிட்டீங்க!!

      Delete
    4. ///ஒரிஜினலே நல்லா இருக்கும்போது, காசு செலவு பண்ணி எக்ஸ்ட்ரா நம்பர் எதுக்குங்கனு தான் எல்லோரும் ஃபீல் பண்ணியுள்ளார்கள்யா!!

      மாசம் 4, 5னு போயாச்சி..ஆசிரியர் சாருக்கு ஒர்க் லோட் அதிகம்...இனியும் ஓவியர்களை கொண்டு வரைவானேன்....லட்டு மாதிரி ஒரிஜினல்ஸ்கள் இருக்கும் போது அவற்றை உபயோகித்து கொள்வது ஆசிரியர் சாருக்கு வேலையையும் குறைக்கும்.. ///

      இந்த கருத்தை வலியுறுத்தியே நாங்கள் எழுதினோம் நண்பரே...

      Delete
  70. சார் நெவாடா அட்டைப்படம் செம சூப்பர்....பின்னட்டை பல விசயங்களை கொண்டதுடன் அக்கால கட்டத்துக்கே அழைக்கிறது....குதிரைக்கு பதிலாய் என்ஜின் ...புல்லட் ஆவலுடன் காத்திருக்கிறேன்....மிஸ்டர் நோன்னு அடுத்த மாதம் அதகளந்தா....ரிப்கிர்பி இம்முறை ஒரிஜினல் அழகாய் படுவது எனக்குமட்டுந்தானா....குண்டு புத்தகத்துக்காயும் காய்கிறேன் ஆவலால்

    ReplyDelete
  71. பனி வனப் பிரியா விடை

    ஒரு வித மென்சோகத் தொடர் முடிவுக்கு வருகிறது. தொடர் முடிவடைவதில் மனதில் பெரிய- ஏன்- சிறிய சோகம் கூட ஏதுமில்லை. ட்ரெண்ட் இதயத்தில் தாக்கம் ஏற்படுத்த தவறிவிட்டது.

    8/10

    ஒட்டுமொத்த தொடருக்கும் கூட.

    ******************,

    மீண்டும் ஒரு அசுரன்

    வழக்கமான மார்ட்டின் கதைகளுக்கே உரித்தான ஆழமில்லை. மஞ்சள் முடியுடன் மார்ட்டினை பார்க்க வியப்பும் கொஞ்சம் சிரிப்பும்.

    8.5/10

    ReplyDelete
    Replies
    1. மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே.
      பழைய மார்டீன் கதை போல வீரியம் இப்போது இல்லை. ஒருவேளை நமது ரசனை ரொம்ப high -ஆக உயர்ந்து விட்டதா.

      ட்ரெண்ட் முடிந்தது சந்தோஷம். அந்த ஸ்லாட் வேறு ஒருவருக்கு கிடைக்கும் அல்லவா.
      ம்... எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு.

      Delete
  72. எனக்கென்னவோ ரிப் கிர்பியை பார்ப்பதற்கு (ஒரிஜினல் அண்ட் தமிழ்) அந்த கால சூப்பர்மேன் மாதிரி தெரிகிறார்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா!! Radja அவர்களே.. எனக்கும் சூப்பர்மேன் மாதிரிதான் தெரிந்தார். ட்யூட்டியில் இல்லாத நேரங்களில் சூப்பர் மேனின் தோற்றம் இப்படித்தான் இருக்கும்! நேத்திக்கே இதை எழுதலாம்னு நினைச்சேன்.. ஆனா ஏற்கனவே இங்கே ரத்த ஆறு ஓடிட்டிருப்பதால், நமக்கெதுக்கு ஊர்வம்புன்னு விட்டுட்டேன்! :)

      Delete
  73. சென்று வா .. கொன்று வா..

    வசீகரிக்கும் கதைப் போக்கு.சற்றே அலுப்பூட்டிய ஸாகோர் தொடர் இம்முறை சிறிது வித்தியாசமாக.

    8.9/10

    ReplyDelete
    Replies
    1. பெரிய கதை இன்னும் நிறைய அனுபவத்தை தரும் என்று நினைக்கிறேன்...

      Delete
  74. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே STV...

    ReplyDelete
  75. பிரச்சனை என்னவென்றால், அவரவருக்கு இருக்கும் ஈகோ தான்... நண்பர்களே. நமக்குள்ளும் அது உண்டு... ஆனால், அதை எப்படி நாம் கையாள்கிறோம், அடுத்தவரை காயப்படுத்தாமல் என்பதில் தான் ஒவ்வொருவரும் வேறுபடுவோம்.

    ஒரு காலத்தில் கூடி வேலை செய்திருப்போம், அன்னம் தண்ணி உண்டு பழகியிருப்போம்.. ஆனால், எதிர்பார்ப்புகளை தாங்களாகவே வளர்த்து கொண்டு விலகி போய் விட்டபின் அவர்களை கரை வைத்து போகும் இடங்களில் எல்லாம் பொங்கும் ஆசாமிகளை கண்டாலே நமக்கு ஆகாது.

    முன்பு எடிட்டரின் அட்டை ஜாலங்கள் சூப்பர் என்று பதிவு பதிவாக போட்ட நபர், அவருக்கும் தமக்கும் ஒரு பிரச்சனை என்றவுடன் அவரை அதே அட்டை ஓவியங்கள் திருட்டு என்று சந்து பொந்தில் எழுதி விமர்சித்ததை ஞாபக படுத்தலாம்.

    இது போல, பிரதிபலன் பாராமல் வேலை செய்தவரை, "பிரதிபலன் எதிர்பார்த்து" நொந்து போனவர், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தேவையில்லாமல் சீண்டி பார்க்கும் வேலையைதான் இப்போது பூ வின் உயிர் நண்பர் செய்து கொண்டிருக்கிறார்.

    தனக்கு ஆகாதவர் மற்றவர்களுக்கு எல்லாம் விரோதி போல தெரிய வேண்டும் என்ற அதே கோக்குமாக்கு க்ரூப் எண்ணம் தான்.

    என் கருத்துகள் எப்போதும் யாரையும் புண்படுத்தாது என்று போன பதிவில் கூறியதை இந்த பதிவில் கூட காப்பாற்றும் திறனி இல்லாதவர்.

    என் பதிவில் கருத்துகள் யாரும் இட வேண்டாம் என்று கூறி கொண்டு, கிடைக்கும் அனைத்து கருத்துகளிலும் Wanted'க்காக படியேறி கருத்திடும் குழப்ப மனநிலை கொண்டவர்.

    அவரை கடந்து செல்வதே நமக்கெல்லாம் நல்லது.

    ஆனால் பொதுவாக கருத்தில் அடுத்தவர்களை குத்தும்போது, அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க நாம் தான் எப்போதும் இருப்போமே... அதை செம்மயைக செய்வோம்.

    ஏனென்றால், புத்தரை போல காந்தியை போல ஒரு கன்னத்தில் அறைபவரிடம் மறு கண்ணத்தை காட்டும் மகான் நாமல்ல... ஒரு சராசரி மனிதேனே...

    So, every Public Action, will be treated with an Equal Reaction... Always ... and Unbiased 😊

    ReplyDelete
    Replies
    1. அருமையான, தெளிவான சிந்தனை ரஃபீக் ஜி!

      Delete
  76. This comment has been removed by the author.

    ReplyDelete
  77. ஆகஸ்ட் மாத இதழ்கள் அனைத்தையும் படிச்சு முடிச்சாச்சு. அத்தனையும் தெவிட்டாத தேன் பலாச் சுளைகள். இந்த மாதிரி அப்பழுக்கில்லாத கதைகள் தந்ததற்கு எடிட்டர் சாருக்கு நன்றிகள்.

    ReplyDelete
  78. This comment has been removed by the author.

    ReplyDelete