YOUTUBE LIVESTREAM லிங்க் : https://www.youtube.com/watch?v=ndu1YDQ8GqM&t=16504s
வணக்கம் நண்பர்களே,
அமோர் வின்ச்சிட் ஆம்னியா !! AMOR VINCIT OMNIA !!
இன்னா மேன் மேட்டரு ? ஆம்னி பஸ்...மோர்...பால்..தயிர்னு நீட்டி முழக்குறியே ? என்கிறீர்களா ? அது ஒன்னும் இல்லீங்கண்ணா....கி.மு.38-ல் விர்ஜில் எனும் இத்தாலியப் புலவர் எழுதிய வரியாம் இது !
கிருஸ்துக்கு முன்னேயே பதிவு செய்யப்படதொரு வரியானது, யுகங்களைத் தாண்டி இன்று வரைக்கும் நிலைத்து வருகிறதென்றால், அதனில் சாரம் இருக்காது போகாதில்லியா ? So அதன் அர்த்தம் என்னவென்று பார்க்க முனைந்தேன் ! "காதல் சகலத்தையும் ஜெயம் கொள்ளும்" என்பது போலான பொருளாம் !! கடந்த சனியிரவில் நமது ஈரோட்டுச் சந்திப்பு மேளா ஒரு அட்டகாச நிறைவு கண்டான பின்னே, ரூமுக்குப் போய் மல்லாந்து கிடந்த நொடியில் மேற்படி வரி தான் என் மனதில் ஓடியது ! "மெய் தான் விர்ஜில் சார் ; காதல் தன்முன்னே இருப்போர் சகலரையும் வாரிச் சுருட்டி அள்ளிச் சென்றுவிடுமென்பது சந்தேகமற நிரூபணம் ஆகிவிட்டது !" என்று புலவர்வாளிடம் சொல்லத்தோன்றியது ! Becos அந்த அசாத்தியச் சனியன்று நாம் பார்த்த சகலமுமே "காமிக்ஸ் காதல்" ஈட்டிய வெற்றிகளைத் தானே ?! அந்தக் காதலின் சுனாமி போலான வீச்சின் முன்னே, பேரன் பேத்தி எடுத்தோர் கூடப் பச்சிளம் பாலகர்களாய் உருமாற்றம் கண்ட அதிசயங்களைப் பார்த்தோம் ! வயதுகளோ, தூரங்களோ, சொந்தப் பணிகளோ ; செலவுகளோ ஒரு பொருட்டாகிடாது என்பதை நிதரிசனமாய் தரிசித்தோம் ! வீட்டிலிருப்போரிடம் உருப்படியாய் பேசவே நேரமில்லை என்றான இன்றைய பொழுதினில் "மனதுக்குப் பிடித்ததை ரசிக்க அந்த ஒற்றை நாளின் முழுமையையும் செலவிடுவதில் தப்பே இல்லை !!" என்ற ஆர்ப்பரிப்பைப் பார்த்தோம் ! பழமைக்குள் பயணம் செய்யும் பரவசங்களை உணர்ந்தோம் ; இளமையின் வசீகரத்துக்குக் கட்டுண்டோம் ! நட்பின் நிழலில் அழகாய் இளைப்பாறினோம் ; நம்மைச் சுற்றியிருப்போருக்கு மின்சாரமூட்டி, நாமும் அதனை உறிஞ்சிக் கொண்டோம் ! கிடைக்கும் தண்ணீரை சேமித்துக் கொள்ளும் ஒட்டகத்தைப் போல, அந்த ஒற்றை நாளின் உற்சாகங்களை உள்ளுக்குள் சேமித்துக் கொண்டோம் - புனித மனிடோவின் அருளால் அடுத்ததாய் இப்படியொரு பொழுது புலர்ந்திடும் வரைக்கும் ! Phewwww !! என்னவொரு நாளது !!!!
சனியின் திருவிழாக் கோலங்கள் பூர்த்தியான பின்னே ஊருக்குத் திரும்பிய கையோடு பதிவொன்றைப் போட எண்ணியிருந்தேன் தான் ; ஆனால் ஒரு நாளுக்கு முன்வரையிலும் நம் மத்தியில் ஓடியாடிக் கொண்டிருந்த நண்பர் பாபுவின் குழந்தைக்கு சீரியஸ் ; ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறார்கள் என்ற தகவல் கிட்டிய போது, கால்கள் தரையில் இருந்திட வேண்டியதன் அவசியம் புரிந்தது ! மேடையேறி நமக்கெல்லாம் நன்றி சொல்லிய கையோடு, பிள்ளைக்காக தொடர்ந்து வேண்டிக்கொள்ளக் கோரிய அந்தத் தாய் பரிதவித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் நாம் இங்கே குதூகலிப்பது முறையாகாதென்று பட்டது ! ஆண்டவன் அருளால் பையன் இப்போது தேறி வருகிறான், இரண்டொரு நாட்களில் நலமாய் வீடு திரும்பி விடுவான் என்ற சேதி இன்று கிடைத்த பிற்பாடு தான் எழுத மனம் ஒப்பியது ! God be with the child !!
ஈரோடு !! ஒரு தசாப்தமாகிறது இந்த நகருடன் நமது பந்தம் துவங்கி ! அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஈரோடென்றால் நல்லதொரு விற்பனைக்களம் ; அங்கிருக்கும் ஏஜெண்டிடமிருந்து கவர் வருகிறதென்றால், உள்ளுக்குள் வெயிட்டான DD இருக்கும் ; ரயிலில் தாண்டிச் செல்லும் போது செங்கற்கட்டி போலான அல்வா பாக்கெட்கள் கணிசமாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கடைகளிருக்கும் என்பதைத் தாண்டி பெருசாய் வேறெதுவும் தோன்றியதில்லை ! 2013-ல் மொத தபாவாய் ஸ்டால் கிட்டி, ஈரோட்டுக்கு ரயிலேறிய அனுபவமும் சரி, பயணத்தின் போது ஜூனியர் எடிட்டரின் தேர்வான "இரவே..இருளே..கொல்லாதே.." ஆல்பத்தின் ஆங்கில வார்ப்பைப் படித்தபடிக்கே நடுச்சாமத்தில் இறங்கி LE JARDIN ஹோட்டலுக்குச் சென்றதும் சரி, மறு நாள், ஸ்டாலில் கொஞ்சூண்டு புக்ஸ் சகிதம், கொஞ்சூண்டு நண்பர்களோடு மரத்தடியில் நின்று அரட்டையடித்ததும் சரி, 120 மாதங்களுக்கு முன்பான நிகழ்வுகள் என்பதை சத்தியமாய் நம்ப முடியவில்லை ! இடைப்பட்ட இந்தப் பத்தாண்டுகளில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் !!!!! நம் ரசனைகளில் ; வாசிப்புகளில் ; கேசங்களில் ; விஸ்தீரணங்களில் ; வசதிகளில் ; வாய்ப்புகளில் ; நட்புக்களில் - என்று அடுக்கிக் கொண்டே போகலாம் ! And இதோ - கடந்த சனியின் அசாத்தியங்கள் சகலமுமே 2013-ல் விதைத்தவற்றில் மலர்ந்திருக்கும் புய்ப்பங்கள் தானெனும் போது, நாம் பயணித்திருக்கும் தூரத்தின் பரிமாணத்தை உணர்ந்திடலாம் ! அன்றைக்கு ஒற்றை செல்போனின் காமெராவுக்குள் அடங்கிய நண்பர் அணியானது, இன்றைக்கு ஒரு மெகா அரங்கத்தினுள் ஆர்ப்பரிக்கின்றது !! காமிக்சில் நமது இரண்டாவது இன்னிங்சில் நாம் சாதித்திருப்பது என்னவென்று யாரும் என்னிடம் கேட்கப் போவதில்லை தான் ; but யாரேனும் தப்பித்தவறிக் கேட்டாக்கா - "COMICS AMOR VINCIT OMNIA" என்பேன் ! நாம் பதிப்பிடும் புக்ஸ் பேரீச்சம்பளங்களுக்குப் போக நேரிடலாம் ; பரணில் ஒரு கோடியில் ஐக்கியமும் ஆகிவிடலாம் ; but இவற்றினூடே துளிர்த்திருக்கும் இந்த நட்புக்களும் சரி, இத்தகைய சந்திப்புகளின் சந்தோஷங்களும் சரி, ஆயுட்காலப் பொக்கிஷங்களாய் தொடருமென்பதில் யாருக்கும் ஐயங்களிருக்க முடியாதென்பேன் !
எல்லாமே துவங்கியது ரொம்ப ரொம்ப சொற்ப நாட்களுக்கு முன்னே தான் ! அப்பாவுக்கு சர்ஜரி ; அம்மாவுக்கும் சுகவீனம் ; ஆளாளுக்கு ஆஸ்பத்திரிவாசம் என்ற நோக வைத்த ஏப்ரலின் போதெல்லாம் - "ஈரோடா ? ஈ ரோட்டில் கால் பதிச்சு நடக்க முதல்லே வழி பார்ப்போம் சேட்டா !!" என்றே சொல்லியிருப்பேன் ! ஆனால் மனதளவில் ரொம்பவே தளர்ந்திருந்த அப்பாவை தேற்ற ஏதேதோ முயற்சித்துத் தோற்றுப் போன நொடியில், உள்ளுக்குள் பளீரிட்டது தான் ஈரோடெனும் குச்சி முட்டாயும், குருவி ரொட்டியும் ! "சீக்கிரமா ரெடியாகுங்கப்பா..ஈரோட்டில் இந்த வருஷம் ஸ்பெஷலா ஏதேதோ ஏற்பாடுகள் பண்ணி வர்றாங்க !!" என்று சொல்லி வைத்த போது, லேசாய் ஒரு பொரி தெரிந்தது சீனியரின் விழிகளில் ! நாட்கள் ஓட ஓட அப்பா கொஞ்சமாய் தேறிய போது, நான் விட்டிருந்த ஈரோட்டுப் பீலா பற்றி மறந்தும் போயிருந்தேன் ! ஒன்றோ, ஒன்னரை மாதங்களுக்கோ முன்பாய் நண்பர் ஸ்டாலின் வழக்கம் போல ஈரோட்டு சந்திப்புக்கான ஹொட்டேல் புக்கிங் பற்றிய பேச்செடுத்த போது மாமூலான LE JARDIN அரங்கே போதுமென்று தான் சொல்லியுமிருந்தேன் ! ஆனால் அந்த ஹோட்டல் மராமத்தின் பொருட்டு மூடப்பட்டிருப்பது தெரிந்த பிற்பாடு அருகாமையில் ஏதேனும் சின்னதாய் அரங்கோ, கல்யாண மண்டபமோ கிடைத்தாலே போதும் என்ற கிளையில் குந்திக்கிடந்தேன் ! In fact ஜூன் மாதம் வேறொரு வேலை நிமித்தம் ஈரோட்டுக்கு போயிருந்த சமயம், ஸ்டாலின் சாருடன் , பஸ் நிலையத்துக்கு பின்வாசலில் அமைந்திருந்த நகராட்சி திருமண மண்டபத்தில் சந்திப்பை வைத்துக் கொள்ளலாமா ? என்று எண்ணமெல்லாம் இருந்தது ! அதுவும் ஆடி மாதமெனும் போது ஈயோட்டிக் கொண்டு தான் இருப்பார்கள் ; ரெம்போ சல்லிசாய் வேலை முடிந்து விடும் என்று நமக்குள் இருந்த செல்லூரார் ஆரூடமும் சொன்னார் ! ஆனால் AC இல்லை ; வெளிச்சமும் குறைவு ; அரங்கமும் ரொம்பவே பெருசாய் உள்ளதென்றுபட்டதால் வேண்டாமென்று தீர்மானித்தோம் !
தொடர்ந்த வாரங்களில் நிறைய பேசினோம் ; ஆனால் பட்ஜெட் பத்மநாபனாய் இருந்தால் போதுமென்று நான் பிடித்துக் கொண்டிருந்த பிடிவாதத்தால் வத்தலும் , தொத்தலும் ஆன அரங்குகளே சாத்தியப்பட்டு வந்தன ! "ஈரோடு விஜய் மடியிலே நாலு பேரு ; செந்தில் சத்யா மடியிலே ஆறு பேருன்னு உட்கார வைச்சா அடிச்சுப் புடிச்சு ஒரு 100 பேரை உள்ளாற திணிச்சுப்புடலாம்" என்பது போலான குட்டிக் குட்டி ஹால்களோடு கூத்தடித்து வந்தோம் ! அவற்றின் மத்தியில் இந்த OASIS அரங்கின் போட்டோக்களும் வந்திருக்க, "ஆத்தீ...தீயா இருக்கே ?" என்ற சபலம் எட்டிப்பார்க்கத் துவங்கியது ! ஒரு வடிவுக்கரசி போலவோ, காந்திமதி போலவோ பொண்ணு பாத்தா போதும்னு கிளம்பிட்டு இருக்கவன்கிட்டே, ப்ரியா பவானிஷங்கர் போட்டோவைக் காட்டிப்புட்டா என்னாகுமோ, அதுவே தான் கனகச்சிதமாய் அடுத்து அரங்கேறியது ! அதன் பின்பாய்ப் பார்த்த இதர அரங்குகளில், "வாஸ்து சுகப்படலை ; மண்டபங்களில் திசை ரசிக்கவில்லை" என்ற ரீதியில் கழித்துக் கொண்டே போய் ஒரு வழியாய் ஜூலை 19 தேதியன்று தான் OASIS அரங்கினுள் தலைநுழைப்பதென்று இறுதி செய்தோம் !
"ரைட்டு...அரங்கம் ஜூப்பர் ; அதுக்கேத்தா மெரி இனி கொஞ்சம் உள்ளுக்குள் ஜோடனைகளும் செஞ்சா சிறப்பா இருக்குமே சார் ; அந்த ரவுண்டு டேபிள்களை எடுத்திருவோமா ? ஐஞ்சாயிரம் தான் ஆகும் ?!" என்று நண்பர் கேட்டார் ! நானோ, ஆளுக்கொரு ரவுண்டு பன்னை கொடுக்காம, காக்கா கடி கடிக்க வைச்சா எப்டி இருக்கும் ? என்று சந்திராயனை ஏவிய விஞ்ஞானிகள் ரேஞ்சுக்கு யோசித்துக் கொண்டிருந்தேன் ! "டேபிள் எடுத்திட்டு, மேலே துணி போடாட்டி நல்லா இருக்காதே சார் ? காலுக்குள் கார்பெட் போட்டா ?" வாசலிலே பேனர் ? ; உள்ளே நுழையுற சாலையில் வைக்க பேனர் ?; அப்பாலிக்கா உள்ளே மேஜைகளில் வைக்க ஸ்டைலாய் standees ? ; கட்டித் தொங்கவிட danglers ?? Focus lights ? Speakers ? Buffet சாப்பாடு ; இருபதே பேர் சாப்பிட்டாக்கூட குறைந்தபட்சமாக 120 பேருக்கான கட்டணம் தரணும் என்ற ஒயாசிஸின் நிபந்தனை" என்று நாளொரு மேனி, பொழுதொரு மஹாசிந்தனையாய் திட்டமிடல்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருந்தன !! எனக்கோ செலவுகள் ஒருபுறமிருக்க, "கூட்டம் தேறாம போயிட்டா அம்புட்டும் வேஸ்ட்டாகிப் போகுமே ?" என்ற பயம் ! "சமீப காலமாய் blog-லேயே ஈயோட்டிட்டுத் தானே இருக்கோம், இந்த அழகிலே பெருசா பிளான் பண்ணி, செமையா பல்பு வாங்கிடப்புடாதே பெருமாளே ?!!" என்ற டர்ர் !! அது மட்டுமன்றி, "10 மணிக்கு ஆரம்பிச்சா 2 மணி வரைக்கும் நாலு மணி நேரங்களை இன்னான்னு ஓட்டுறது ?" என்ற பீதியும் as usual தலைதூக்கியது ! அதன் பின்னே தான் "பட்டிமன்றம்" என்ற ரோசனை உதித்தது !!அவ்வப்போது touch-ல் இருந்த நண்பர்களிடம் கேஷுவலாக கேட்பது போல கொக்கி போட்டுக் கொண்டே இருந்தேன் - "ஆங்...ஒரு அறுபது-எழுபது பேராச்சும் தேறுவாங்களான்னு ?!!" இதற்கு மத்தியில் ஒரு வாரம் முன்பாக ஈரோட்டிலேயே நம்ம கிரிக்கெட் வீரர்கள் களமிறங்கப் போகிறார்கள் என்ற போது , எனது டர்ர் இன்னும் டாரானது ! "அய்யனாரே ...தொப்பைக்கு கீழே கட்டைவிரலை பாக்கவே மொக்கை போடக்கூடிய நம்ம வீரர்களை பத்திரமா பாத்துக்கோங்கய்யா !!" என்று வேண்டிக் கொண்டேன் ! அந்த நொடியே இன்னொரு பயமும் தொற்றிக் கொண்டது - "அடங்கொன்னியா ...ஆறே நாள் கேப்பில மறுக்கா ஈரோட்டுக்கு நம்ம வாசக சந்திப்புக்கோசரம் வீரர்கள் வர வேண்டியிருக்குமே ? அதிலே எத்தனை பேர் மட்டம் போட்டுப்புடுவாங்களோ ?" என்று குழப்பிக் கொண்டேன் ! ஆனால் நண்பர்களோ, சனியன்று தவறாது கலந்து கொள்வோமென்று வாக்குத் தந்திருந்தனர் !
நாட்கள் நெருங்க நெருங்க நண்பர்கள் ஸ்டாலின் + விஜய் ஏதேதோ "மர்ம யோகி" பாணி வேலைகளை சத்தமின்றிச் செய்து வருகிறார்கள் என்பது புரியத் துவங்கியது ! அவற்றை சஸ்பென்சாக வைத்திருக்க அவர்கள் விரும்புவது புரிந்த அதே வேளையில், அவர்களது கைக்காசுக்கு வேட்டு வைச்சுடப்புடாதே ?! என்ற நெருடல் எனக்கு ! So தோணாமல் அவ்வப்போது அவர்களைக் கிண்டிக் கிழங்கெடுக்க ஆரம்பிக்க, வீடியோ ரெடியாகும் சமாச்சாரம் ; கான மழை சமாச்சாரம் ; பரிசுகள் ; மெடல்கள் ; இத்யாதி...இத்யாதி என்று ஒவ்வொரு பூனைக்குட்டியாய் கூடைக்குள்ளிருந்து வெளிப்பட்டது ! தொடர்ந்த நாட்களில் வீடியோவில் கொஞ்சம் over the top ஆகத் தென்பட்ட சித்தரிப்புகளையும் ; பாடலில் இருந்த ஓரிரு 'மிடிலே ' ரக வரிகளையும் எடிட் பண்ண நான் பட்ட பாடிருக்கே..அய்யய்யய்யயோ..ஆறு மார்ட்டின் கதைகளுக்கு பேனா பிடித்திருக்கலாம் ! மனசே இன்றி நான் சொன்ன திருத்தங்களுக்கு சம்மதித்தனர் நண்பர்கள் ! இங்கேயோ ஆபீசில் களேபரம் ; சொல்லி மாளா களேபரம் ! அண்ணாச்சி பணியில் நஹி ; அவருக்கு மாற்றாய் போட்ட நபரோ அத்தனை சோபிக்கவில்லை ; so front office ஜோதி ஈரோடு விழாவுக்கு கிளம்பியாச்சு ! எஞ்சியிருந்த ஸ்டெல்லாவுக்கோ வீட்டில் நெருக்கடி, தாயாருக்கு இடுப்பு முறிவு + ஆப்பரேஷன் என்ற ரூபத்தில் ! ஈரோட்டில் நண்பர்கள் காட்டிய அதே அர்ப்பணிப்போடு இங்கே ஸ்டெல்லாவும் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றிட, கூரியர் பேக்கிங் 3 தினங்களுக்கு நடந்தது !! ஆபீசில் திரும்பிய திக்கிலெல்லாம் டப்பிக்கள் ; மிக்ஸர் ; சிப்ஸ் பாக்கெட்கள் இறைந்து கிடக்க, எனக்கோ ஈரோட்டில் தேவைப்படக்கூடியவற்றை மறந்திடப்புடாதே என்ற பதட்டம் !! கடைசி நிமிடம் வரை ரவுண்டு பன் ஆர்டர் தர மறந்து போயிருக்க, தலை தெறிக்க பேக்கரிக்குப் போனால் அங்கே அவர்கள் கறாராய் கண்டிஷன் - 'இத்தினி பன் தான் தர முடியும் ; மதியம் 12.45 க்கு தான் டெலிவரி' என்று !! "பன் இல்லாத பயணம் பைசாவுக்குப் பெறாது " என்ற மூதறிஞரின் அறிவுரை நினைவுக்கு வர, காலை 9 மணி முதலே கிளம்பிக் காத்திருந்த அப்பாவை மதியம் 1 வரை கட்டையைப் போட்டு வெயிட் பண்ண வைத்து, காரில் அட்டைப்படப் பெயிண்டிங்ஸ் ; சிப்ஸ் ; மிக்ச்சர் ; பன் ; தாம்பூலப் பை - என்ற லோடுடன் அனுப்பி வைத்தேன் !
வெள்ளி மாலையே நானும் ஈரோட்டுக்கு சென்று விடுவது ; ஹாலில் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை உடனிருந்து பார்த்துக் கொள்வதென்று பேசியிருந்தோம் ! ஆனால் டெஸ்பாட்ச்சை பூர்த்தி செய்யாது ஆபிசிலிருந்து நகர்ந்திட எனக்கு 'தம்'மே இல்லை ! விழாவுக்கு வராதோரின் கைகளிலும் மறு நாள் காலையே புக்ஸ் மட்டும் இல்லாது போயின், பிரித்து மேய்ந்து விடுவார்களென்ற பயம் ! So "நான் சாமத்தில் ஈரோடு வந்து சேர்ந்து கொள்கிறேன் ; மன்னிச்சூ !" என்று நண்பர்களிடம் சொல்லி விட்டு, டெஸ்பாட்ச் முடியும் வரை ஆபீசில் இருந்து விட்டு, அதன்பின்பாய் மாலை ரயிலைப் பிடிக்க ஓடினேன் ! ரயில் பயணத்தின் போது மறு நாள் என்ன பேசுவதென்பதை ரெடி பண்ணிவிடலாம் என்பது திட்டம் ! ஆனால் அவ்வளவாய் கூட்டமில்லாத ரயிலின் கீழ் பெர்த்தில் சாய்ந்தவன், கரூர் தாண்டிய பின்னே தான் கண்ணே முழித்தேன் ! மலங்க மலங்க முழிக்கும் நேரத்தில் சிறப்புரைக்கு எக்கட போவது ? மேடையிலே பாத்துக்குவோம் !! என்றபடிக்கே ஈரோட்டில் ஹோட்டலில் போய் விழுந்த போது மணி நள்ளிரவைத் தாண்டிய 12-45. சம்பிரதாயத்துக்கு "Any help ப்ளீஸ் ?" என்று விஜய்யிடம் நான் கேட்கும் வேளையில், அரங்கில் கிட்டத்தட்ட ஒரு டஜன் நண்பர்கள் கண் விழித்து விடிய விடிய பணியாற்றிக் கொண்டிருந்தனர் !! அன்றைய இரவு மூணரை வரை விழித்திருந்து பணி செய்து விட்டு, அங்கேயே படுத்துறங்கி விட்டு. காலை ஆறரைக்கு எழுந்து finishing touches செய்து விட்டு, குளித்துக் கிளம்பித் தயாராகி ஒன்பதுக்கெல்லாம் 'ஜில்'லென்று அரங்கில் காத்திருந்தது - nothing short of a miracle !
ஒன்பதரைக்கு கொஞ்சம் முன்னமாய் நானும் ஜூனியர் எடிட்டரும் அரங்கிற்குள் வண்டியை விட்ட கணமே நமது பேனர்கள் வரவேற்றன ! சரி, "இப்போ தான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வர ஆரம்பிச்சிருப்பாங்க !' என்ற நினைப்போடு கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனால் - திக்பிரமையடைந்து போனேன் - அரங்கமும், நண்பர்களும் அங்கு காட்சி தந்த அழகில் ! Oh yes - போட்டோக்களில் அரங்கைப் பார்த்திருந்தேன் தான் ; நண்பர்களின் கைவண்ணத்தில் புது மணப்பெண் போல ஜொலிக்குமென்று யூகித்தும் இருந்தேன் தான் ; ஆனால் நேரில் அந்த ரம்யத்தை உள்வாங்கிய நொடியில் எனது யூகக்கோட்டைகள் சகலமும் தவிடுபொடி ! அட்டகாசம்...அதகளம்..அமர்க்களம்..என்பதையெல்லாம் தாண்டிய வார்த்தைகளைத் தேட வேண்டி இருந்தது - ஒட்டு மொத்த ஏற்பாடுகளையும் ஒவ்வொன்றாய் மண்டைக்குள் ஏற்றிடும் நேரத்தில் ! ஸ்டாலினின் ஜூனியர் மனோஜ் ஒரு தேர்ந்த வீடியோ எடிட்டர் போல ஒரு லேப்டாப்பின் முன் அமர்ந்து ஏதேதோ டெஸ்ட் பண்ணிக் கொண்டிருக்க, 4 ஆண்டுகளுக்கு முன்னே குட்டியூண்டு பையனாய்ப் பார்த்த அகில் தனது டீமுடன் ஆடியோ / வீடியோ / போட்டோ பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தான் ! இந்த விழாவினிலிருந்து ஒரு நூறு சந்தோஷ நினைவுகளை நான் வீட்டுக்கு எடுத்துச் சென்றேன் என்றாலும், இம்மி சந்தேகமுமின்றி அவற்றுள் TOP இடங்களை பிடித்திருந்தது மனோஜ் + அகில் என்ற அந்த இளம் புயல்கள் அன்று நிகழ்த்திக் காட்டிய அசாத்திய ஜாலங்களையே ! தேய்ந்து போன ஒரு டயலாக்கை நிறைய சினிமாக்களில், டிராமாக்களில், கதைகளில் நாம் கேட்டிருப்போம் - "என் கண் முன்னே வளர்ந்த பிள்ளை" என்று ! அன்றைக்கு நாம் பார்த்தது simply that - நம் கண் முன்னே வளர்ந்திருக்கும் பிள்ளைகளின் அதகளத்தினை !!
அந்த வரம் பெற்ற தினத்தினில் அடுத்த 8 மணி நேரங்களுக்கு நிகழ்ந்ததெல்லாம் pure magic மாத்திரமே ! சாரை சாரையாய் நண்பர்கள் எங்கெங்கிருந்தெல்லாமோ அணிவகுத்திட, அரங்கமே கொஞ்ச நேரத்தில் அதிரத் துவங்கியது கண்கூடு ! அதிலும் நமது அட்டைப்பட பெயிண்டிங்குகளை வரிசையாய் மேஜைகளில் நண்பர்கள் அடுக்கிய பிற்பாடு அங்கே குழுமியோரின் உற்சாகத்தினை மட்டும் ஒரு பாட்டிலில் பிடித்து மார்க்கெட் செய்ய சாத்தியப்பட்டிருந்தால், நாம் அன்றைக்கே கோடீஸ்வரர்களாகி இருப்போம் ! ஒவ்வொரு படத்தையும் பார்த்துப் பார்த்து நண்பர்கள் நினைவுகளுக்குள் மூழ்கி முத்தெடுத்த காட்சி - one for the ages !!! ஆயிரமாயிரம் போட்டோக்கள் ; உற்சாக அறைகூவல்கள் ; அலப்பறைகள் ; அளவளாவல்கள் ; கும்மிகள் ; கிண்டல்கள் ; கச்சேரிகள் என்று துவங்கிய விழாவானது நமது ஈரோட்டு ஸ்பெஷல் இதழ்களின் ரிலீஸுடன் சூடு பிடித்தது ! அதிலும் "கார்சனின் கடந்த காலம்" உயர்த்திய புருவங்கள் கிட்டத்தட்ட நானூறு இருக்கும் ! மாக்சி சைசில் ஒரு மறுக்கா மறுக்காப்பதிப்பு எனும் போது கணிசமான துடைப்பங்கள் இதுக்கோசரம் பறக்கும் என்பதை நான் எதிர்பார்த்திருந்தேன் தான் ; yet அந்த இதழின் பிரம்மாண்டத்தினை நேரில் காணும் போது உங்களின் reactions வேறு விதமாயிருக்கும் என்ற நம்பிக்கை உள்ளுக்குள் இருந்தது ! And அந்த சனிக்கிழமை எனது நம்பிக்கை மெய்யானதை உணர்ந்த போதே ஒரு பெரும் பெருமூச்சை சத்தமின்றி விட்டுக் கொண்டேன் !!
BIG BOYS ஸ்பெஷல் அடுத்து ரிலீஸ் ஆக, வாயெல்லாம் பல்லாய் கவிஞர் தந்த போஸ் - இந்தத் தளத்தின் தளரா அஞ்சாநெஞ்சனுக்கு ஒரு ஸ்பெஷல் memory என்பேன் ! "சந்துக்குள்ளாற சந்திராயனை சாயந்திரத்துக்குள்ளே விடறீகளா ?" என்ற ரேஞ்சுக்கு கவிஞர் ஸ்டீலின் கோரிக்கைகள் இருக்கும் என்றாலும், எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் மனுஷன் தொங்கோ தூங்கென்று தொங்கியது "கொலைப்படை" 2 வண்ண இதழுக்காகத் தான் ! லேட்டானாலும், லேட்டஸ்ட்டாக அந்தக் கோரிக்கை பூர்த்தி கண்டதில் ஹேப்பி அண்ணாச்சி ! தொடர்ந்து சுஸ்கி & விஸ்கி ; மார்ட்டின் என ரிலீசான பிற்பாடு ராட்சச கேக் வெட்டும் சம்பிரதாயம் தொடர்ந்தது !
In hindsight - இதற்கென எடுத்துக் கொண்ட அதீத நேரத்தினை மட்டும் சற்றே மாற்றித் திட்டமிட்டிருந்தால், அட்டைப்பட டூர் ஒன்றினையும் உங்களோடு ஜாலியாய் அடித்திருப்பேன் ! தொடர்ந்து அன்றைய தினத்தின் 2 highlights அரங்கேறின - MUTHU 50 - கடந்து வந்த பாதை குறித்தான ஒரு அட்டகாச வீடியோவும் ; பூனையாரின் குரலில் ஒரு கானமழையும் ! இரண்டுமே அரங்கிலிருந்தோரை கட்டுண்டு போகச் செய்தன என்றால் அதுவொரு understatement !! அவை இரண்டும் சரி, கொஞ்ச நேரத்துக்குப் பின்னே தொடர்ந்த கிரிக்கெட் போட்டி சார்ந்த வீடியோவும் சரி, அசாத்திய உச்சங்கள் !!
செம ஸ்டைலாய் லோகோக்கள் ; அட்டகாசமான டீம் ஜெர்சீக்கள் என்பதோடு நின்று விடாமல், மெய்யாலுமே பேட்டிங்கில், பவுலிங்கில் 4 அணியினரும் அசத்தியதைப் பார்த்த போது - "ஆஹா...நேரில் பாக்காம போயிட்டோமே !!" என்று நெருடியது !! Maybe the next time guys !!
பாராட்டுரைகள் ; கருணையானந்தம் அங்கிளின் உரை ; அப்பாவின் ஏற்புரை ; அடியேனின் டீ ஆத்தல் - என்று தொடர அவ்வப்போது பின்னிருந்த திரையினில் நான் கொண்டு வந்திருந்த மீம்ஸ் மாத்திரமன்றி, பசங்கள் ரெடி பண்ணிய ரவுசுகளும் ஓடிக்கொண்டிருந்தன ! நேரத்தை ஜவ்விழுக்க என்ன செய்வதென்று யோசித்தபடிக்கே வந்திருந்தவனுக்கு அதற்குள் லன்ச் டைம் ஆகிவிட்டதென்பதை சத்தியமாய் நம்ப முடியவில்லை ! கீழிருந்த ஹாலில் லன்ச் ஏற்பாடாகியிருக்க, ஒயாஸிஸ் நிர்வாகம் செமத்தியான சொதப்பலைச் செய்து அன்றைய பொழுதிற்கொரு திருஷ்டிப்பொட்டை பதித்து விட்டனர் ! அவர்களின் கிச்சன் வசதிகளே அத்தனை விசாலமல்ல என்பது அவர்கள் சொதப்பத் துவங்கிய பிற்பாடு தான் புரியவே செய்தது ! ஒரிஜினலான மெனுவின்படி உணவை சரியாய் ரெடி செய்திருந்திருக்கும் பட்சத்தில், அன்று ஒரு அட்டகாச லன்ச் அமைந்திருக்க வேண்டும் ! மாறாக , காலியான சட்டிகளை உற்றுப் பார்க்கும் சங்கடத்தினை ஏற்படுத்தி விட்டார்கள் ! Sorry folks ; இனியொருமுறை இது போலான தவறு நிகழ்ந்திடாது !
லஞ்சிற்குப் பின்பாய் கூட்டம் கலைந்து விடுமோ ? என்ற பயம் கொஞ்சம் இருந்தது தான் ; but surprise - துளியும் குறையாது மதிய ரகளைகளிலும் ஆரவாரமாய்ப் பங்கேற்றது நெஞ்சை நிறையச் செய்தது ! நேரம் குறைவாக இருந்த போதிலும் அந்த காமிக்ஸ் பட்டிமன்றத்தில் ரவுசுகளுக்குப் பஞ்சமே இருக்கவில்லை ! அதிலும் கண நேரத்துக்கு XIII -ஆக மாறிப் போன பாபு அரங்கையே கலக்கினார் !! நடுவரின் தீர்ப்பு ; தொடர்ந்து கிரிக்கெட் போட்டிக்கான கப் வழங்கல் ; மெடல் வழங்கல் என அரங்கேறிய சமயத்துக்குள் மாலையாகி இருந்தது ! நண்பர்களுக்கு நினைவுப்பரிசோடு விட கொடுத்தனுப்பும் நேரம் புலர்ந்த போது லைட்டாக தொண்டை கமறுவது போலிருந்தது !! ஏழு கழுதை வயசு தான் ; ஒரு நூறு கூத்துக்களை பார்த்தும் விட்டாச்சு தான் ; ஆனாலும் இம்முறை நண்பர்களுக்கு டாட்டா சொல்லும் போது நிஜமாகவே ஒரு பண்டிகைக்கு வந்த உறவுகள் ஊர்திரும்புவது போலான உணர்வே மேலோங்கியது ! This has been an awesome day to cherish guys !!
இதனை சாத்தியமாக்கித் தந்த அத்தனை நண்பர்களுக்கும், 'நன்றி' என்ற ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொள்வதில் உள்ளுக்குள் ரொம்பவே நெருடலாக உள்ளது ! எதிர்பார்ப்புகளே இல்லா இத்தனை அன்பையும், நேசத்தையும் ஈட்டுவதெல்லாம் கனவுகளில் மட்டுமே சாத்தியமாகிடும் சமாச்சாரங்கள் !! இன்னமுமே திளைத்துக் கொண்டிருக்கிறேன் - அன்றைய பொழுதின் உற்சாகங்களில் ! நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பது என்ன மாதிரியான வரம் என்பதை yet again எனக்கு மாத்திரமன்றி, சீனியர் + ஜூனியர் எடிட்டர்ஸ் & கருணையானந்தம் அங்கிளுக்கு உணர்த்தியுள்ளீர்கள் ! அதிலும் அந்த அசாத்தியமான இரும்புக் கர நினைவுப் பரிசுகள் - அசாத்தியங்களின் உச்சம் !! அவற்றின் போட்டோக்களை இரும்புக்கை மாயாவியின் (அசல்நாட்டிலுள்ள ஒரிஜினல்) படைப்பாளிகளுக்கு அனுப்பிடவுள்ளேன் ; நிச்சயமாய் இது போலொரு அங்கீகாரம் நமது லூயி கிராண்டேலுக்கு இன்னொரு மண்ணில் கிட்டியிராதென்பது சர்வ நிச்சயம் !! வரலாற்றில் தடம் பதித்திருக்கிறோம் folks !!
வண்டி வண்டியாய் பணிகளை அரவமில்லாத இரவுகளில் நிசப்தமாய்ச் செய்யும் நாட்களில், ஒரு மெலிதான அயர்வு நடுநடுவே தலைதூக்குவதை மறுக்க மாட்டேன் ! "ஊஞ்சலாடும் இளமைக்கு இது தேவையாடா தம்பி ?" என்றொரு குரல் தலைக்குள் ஒலிப்பது போலவே இருக்கும் ! ஆனால் அடுத்த 12 மாதங்களுக்காவது அந்தக் குரல் எனக்குள் தலைதூக்கவே வாய்ப்பில்லை ; simply becos அந்த சந்திப்பின் ஒற்றை நாளில் மாத்திரமன்றி, அதற்கு முன்பான lead up நாட்களிலும் நீங்கள் கொட்டித் தள்ளியிருக்கும் உழைப்பும், அன்பும், அக்கறையும் எனது பேட்டரிகளை அடுத்த ஆகஸ்ட் வரைக்குமாவது உயிர்ப்போடு வைத்திருக்கப் போவது உறுதி !! And காத்திருப்பது லயனின் ஆண்டு # 40 !
கச்சேரியினை ஆரம்பிக்கலாமுங்களா ?
Bye all....see you around !! Have a lovely week !!
அன்றைய பொழுதினை முழுமையாய் YouTube -ல் பார்த்திட : https://www.youtube.com/watch?v=ndu1YDQ8GqM&t=16504s
PHOTOS WILL BE UPLOADED TOMORROW !
1st
ReplyDeleteவிழாவுக்கு வரச் சொல்லி அழைக்க உங்களுக்கு ஃபோன் பண்ணேன் செனா அனா! நீங்க எடுக்கலை. திரும்பக் கூப்பிடவுமில்லை! :(
Deleteஸாரி ஈவி! உங்கள் வாட்ஸ் அப்புக்கு செய்தி அனுப்பியுள்ளேன்!
DeleteIn another way 1st too!
ReplyDelete:-)
Me 3 rd
ReplyDeleteவணக்கம் ஆசிரியர் சார் & நண்பர்களே...!!!
ReplyDeleteநானும் வந்துட்டேனே.😍😘😃💐💐.
ReplyDeleteமீ ஃபைவ்!!
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteவந்தணமுங்க 🙏🙏
ReplyDelete///And காத்திருப்பது லயனின் ஆண்டு # 40 !
ReplyDeleteகச்சேரியினை ஆரம்பிக்கலாமுங்களா ? ///
உய்.. உய்..உய்ய்ய்...
முத்து 50 ல் ஓவிய கண்காட்சி உங்கள் பார்வையில் நிகழ்ச்சி ரத்தானது மிகவும் வருத்தம் ஆசிரியரே ஒவ்வொரு ஓவியங்களின் பின்னணியில் மறைந்திருக்கும் சுவாரஸ்யமான கதைகளை லயனின் 40 ஆம் ஆண்டு விழாவில் ஆவது எங்களுக்கு சொல்லுங்களேன்
ReplyDeleteஅடுத்த வருஷம் பாத்துக்குவோம் சத்யா !
Deleteநா வந்துட்டேன்...
ReplyDeleteAnd காத்திருப்பது லயனின் ஆண்டு # 40 !
ReplyDeleteசார் இது என்ன கேள்வி ?
காத்திருக்கின்றோம் சார்.
ஜமாய்ச்சுப்புடுவோம்.
ஸ்பெஷல் இதழ்களுடன் ஸ்பெஷல் கொண்டாட்டம்.
இப்பவே மனது எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டது.
This comment has been removed by the author.
Deleteஎடிட்டர் சார்,
Deleteஎங்களை எப்பவும் இளமையோடு வைத்திருக்கணும்ன்னு முடிவு எடுத்துட்டீங்க.
இனி அதை நாங்க
மெயின்டன் செய்யனும். உடம்பு சைஸ்அ
குறைக்கிற வழி தேடணும்.. காலையில் 5 மணிக்கு எந்திரிக்கணும்.
கிரவுண்டுக்கு ஓடணும். கிரிக்கெட் டிரெயினிங் எடுக்கணும்...
படே கில்லாடி சார் நீங்க.
ஒரு மிலிட்டரி படையை, ஒரு சாட் டைமுல உருவாக்கிடீங்களே...
ஈரோட்டுத் திருவிழா என் இதய விழா. உற்சாகம் கரைபுரண்டோடியது.
ReplyDeleteஉங்களைச் சந்தித்துப் பேச முடியாமல் போனதில் எனக்கு வருத்தமுண்டுங்க நண்பரே!
Deleteகார்சனின் கடந்த காலம் செம தெறி மாஸ். அமைப்பும் அளவும் அழகோ அழகு.
ReplyDeleteஅந்த வெய்ட்டுமிதமே
Deleteஅடுத்த புக் பேர் 2024 எப்போ வரும் என காத்திருப்பில் EBF MEET 23 ஐ அசை போட்டுக்கொண்டே .. 😍
ReplyDeleteஅடுத்தவாட்டி பையனையும் கூட்டிட்டு வாங்க சம்பத் !
Deleteகண்டிப்பாங்க டியர் எடி .. 👍👍
Deleteஅடுத்த ஈரோடு மீட் ஐ ஞாயிற்று கிழமை வைத்தால் எல்லாரும் வருவார்களே டியர் எடி .. சனிக்கிழமை தான் கொஞ்சம் இடிக்கிறது ..
Deleteகார்சனின் கடந்த காலம் முடித்துவிட்டு மீண்டும் வந்த மாயனோடு கைகுலுக்கியுள்ளேன்.
ReplyDelete///நண்பர்களுக்கு நினைவுப்பரிசோடு விட கொடுத்தனுப்பும் நேரம் புலர்ந்த போது லைட்டாக தொண்டை கமறுவது போலிருந்தது !! ஏழு கழுதை வயசு தான் ; ஒரு நூறு கூத்துக்களை பார்த்தும் விட்டாச்சு தான் ; ஆனாலும் இம்முறை நண்பர்களுக்கு டாட்டா சொல்லும் போது நிஜமாகவே ஒரு பண்டிகைக்கு வந்த உறவுகள் ஊர்திரும்புவது போலான உணர்வே மேலோங்கியது ! This has been an awesome day to cherish guys !!///
ReplyDeleteமறக்க முடியாத அனுபவம் எடிட்டர் சார்...
"கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்" என்ற கவிஞர் பாரதிதாசன் அவர்களின் வரிகளுக்கேற்ப
ReplyDeleteஈரோட்டில் முத்துகாமிக்ஸ் பொன்விழாவின் நிகழ்வில் அசாத்தியமான அத்தனையையும் நண்பர்கள்
சாதித்தது சத்தியமாய் அந்த காமிக்ஸ் மீதான காதல்தான்❤💛..காதல்மட்டுமேதான்💙💚 என்பதை தாண்டி வேறு என்னவாக இருக்க கூடும்..💐💐
"குமரர்க்கு" அது சரி தான் சார்...! ஆனா....ஆனா....once upon a time குமரர்க்கு ??
Delete😄😄😄.. ஒன்ஸ் upon a time.. Ha, ha... Beautiful sir.. ❤️
Deleteநாம் அனைவரும் மனதால் இன்னும் குழந்தைகள்தானே சார்..😄😍👍
Deleteசார் அதான் இருக்கேனே ட்ரு சேலத்லர்ந்து குமார் வந்துடுவாரே
Delete///அந்த அசாத்தியமான இரும்புக் கர நினைவுப் பரிசுகள் - அசாத்தியங்களின் உச்சம் !! அவற்றின் போட்டோக்களை இரும்புக்கை மாயாவியின் (அசல்நாட்டிலுள்ள ஒரிஜினல்) படைப்பாளிகளுக்கு அனுப்பிடவுள்ளேன் ; நிச்சயமாய் இது போலொரு அங்கீகாரம் நமது லூயி கிராண்டேலுக்கு இன்னொரு மண்ணில் கிட்டியிராதென்பது சர்வ நிச்சயம் !! வரலாற்றில் தடம் பதித்திருக்கிறோம் folks !! ///
ReplyDeleteரொம்ப ரொம்ப குஷியா இருக்குங்க சார்!
👍👍
Deleteஆமாங்கோ...
Deleteஈரோடு விஜய் உங்கள் ஏற்பாடுகள் அனைத்தும் மிகவும் அற்புதமாக இருந்தது வந்திருந்த அனைவருக்கும் மெடலுடன் பையில் இனிப்பு கார வகைகள்இருந்ததுஅருமை.
Deleteஆஹா புதிதாய் ஓர் நண்பரின் குரல்....அருமை
Deleteநன்றிகள் காசி ஜி!! நண்பர்கள் பலரும் கொடுத்த ஒத்துழைப்பே அத்தனைக்கும் காரணம்! நேரம் கிடைக்கும்போது விரிவாக எழுத எண்ணியிருக்கிறேன்!
Delete"டீ" சுட சுட வேணும் ஈவி சார்... அதுவும் காலாகாலத்தில்... எங்களுக்கு எப்போதும் பொறுமை நஹி...
Delete🙏🙏
ReplyDelete## "காத்திருப்பது லயனின் ஆண்டு # 40 ! " ## 😍😘💐💐
ReplyDelete"COMICS AMOR VINCIT OMNIA" -உடன் ஆவலுடன் அனைவரும் காத்திருக்கிறோம்..👍✊💪😍😘
ஆழமான நினைவலைகளை நெஞ்சில் விதைக்கும் நெடிய பதிவு!
ReplyDeleteபுத்தக விழாக்களுக்கு வருவதை இன்னோரு ஆண்டு மிஸ் செய்து விட்டு, படித்து மனதை தேற்றிக் கொண்டுள்ளேன்...
அடுத்தவாட்டி ஞாயிற்றுக்கிழமைக்குத் திட்டமிட முயற்சிப்போம் சார் ! Maybe அது உங்களை போல் இன்னும் நிறைய நண்பர்களுக்கு வசதியாக இருக்கக்கூடும் !
DeleteThis comment has been removed by the author.
Deleteமிகச் சரி சார்..
Deleteஞாயிற்றுக் கிழமை என்றால் இன்னும் நிறைய நண்பர்கள் கலந்து கொள்ள 200% வாய்ப்பு அதிகம் சார்..
என் புதல்வன் நந்த கிஷோருக்கு சனியன்று விடுப்பு கிடைக்காததால் ரொம்பவுமே ஏமாந்து போனான்..
ஊர் திரும்பிய பிறகு அவனைத் தேற்றவே முடியவில்லை..
ஆமா சார் முதல்ல ஞாயிறுன்னே சரின்னேன்....சனிக்கிழமை அழைப்புகளை புறக்கனித்து செந்தூரானை வேண்டிக் கொண்டே நடப்பது நடக்கட்டும்னே பஸ்ஸேரினேன்
Deleteநமது காமிக்ஸ் நண்பர்களின் அக்கறையுடனான பங்களிப்புகளின் மூலம்
ReplyDeleteதற்போது எனது மகன் மருத்துவமனையிலிருந்து ஆரோக்கியமாக வீடு திரும்பி உள்ளார் என்பதை நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன்!
நன்றி நண்பர்களே!
மகிழ்வூட்டும் தகவல் பாபு!!
Deleteஅற்புதம் பாபு !!
Deleteஅருமை பாபு...
Deleteசூப்பர்
Deleteமகிழ்ச்சியான நல்ல செய்தி பாபு 🤝💐
Deleteமகிழ்ச்சி...
Delete🙏🙏
Deleteகுடும்பம் சார்ந்த அதிமுக்கிய கடமையில் செப்டம்பர் முதல் வாரம் வரை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பதால் லயன்-முத்துவின் மிக முக்கிய கொண்டாட்டத் தருணத்தில் கலந்து கொள்ள இயலாமல் போனது வருத்தமே.
ReplyDeleteநிழற்படங்களும்,காணொளிக் காட்சிகளும் அவ்வருத்தத்தை சிறிதளவேனும் போக்கத்தான் செய்கின்றன.
குழுமங்களில் நிகழும் உரையாடல்களில் காணப்படும் நகைச்சுவை முகத்தில் புன்னகை விரியச் செய்கின்றன.
பின்புலத்தில் உழைத்தவர்கள், பங்கேற்றவர்கள் அனைவரும் பாக்கியவான்கள்.அனைவர் மனதிலும் மகிழ்ச்சி பரவட்டும்.
பி.குறிப்பு:எடிட்டர் சாருக்கு தெரிந்திருக்காது.நெடுநாள் வாசகரும் சந்தாதாரரும் ஆன கோவை ஒண்டிப்புதூர் செந்தில் மாதேஷ் தனது 52 வயதிலேயே இறைவனின் திருப்பாதங்களை அடைந்த செய்திக்காக தாங்கள் ஒரு இரங்கல் தெரிவிப்பது அன்னாரின் ஆன்மாவை அவரது குடும்பத்தினரை குளிர்விக்கும் எனத் தோன்றுகிறது.MORS ANIMAE BONAE
ஐயோ !!! 52 வயதிலேயேவா ?? என்னாச்சென்று ஏதேனும் தெரியுமா சார் ?
Deleteஅவரையும், அவரது சகோதரியையும் தீவிர மாடஸ்டி ரசிகர்களாய் எனக்கு நினைவுள்ளது சார் !
Delete///நெடுநாள் வாசகரும் சந்தாதாரரும் ஆன கோவை ஒண்டிப்புதூர் செந்தில் மாதேஷ் தனது 52 வயதிலேயே இறைவனின் திருப்பாதங்களை அடைந்த செய்திக்காக தாங்கள் ஒரு இரங்கல் தெரிவிப்பது அன்னாரின் ஆன்மாவை அவரது குடும்பத்தினரை குளிர்விக்கும் எனத் தோன்றுகிறது.////
Deleteஈரோடு வாட்ப்அப் குரூப்பில் நண்பர் ஒருவர் இதை பதிவு செய்திருந்தார்.
அன்னாரின் இழப்பு, அவரது குடும்பத்தினருக்கு பேரிழப்பாக இருக்கும்.
நமது இரங்கலை அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் தெரிவிப்பது நமது கடமை.
@ editor sir! His sister posted this message in ஈரோடு புத்தகத் திருவிழா 2023 what's app group sir! She posted with his photo and this month's subscription parcel ( not opened).He perished one week before our function.(He had plans to attend the Muthu 50 function said his sister.)
Deleteமிகவும் வருந்துகிறேன் சகோ.. 😔..
Delete@VIJAYAN சார் ..& @SELVAM ABIRAMI ANNA நான் மீட்டிங்லயே ஈரோடு விஜய் & ஸ்டாலின் அண்ணாவிடம் இதை தெரிவித்தேன் சபையில் அப்போது சொன்னால் நண்பர்கள் வருத்தப்படுவார்கள் மீட்டிங் இறுதியில் அவர்கு இரங்கல் தெரிவித்து விடலாம் என கூறினார்கள் ..
Deleteஆமாம் சம்பத்! நண்பர்களின் கொண்டாட்ட மனநிலையை இப்படியொரு குண்டைத் தூக்கிப்போட்டு சிதைக்க மனம் வரவில்லை! நான் நிகழ்ச்சியின்போது கொஞ்சம் உற்சாகக் குறைச்சலாக இருந்ததற்கும் இதுதான் காரணம்! :(
Delete///கோவை ஒண்டிப்புதூர் செந்தில் மாதேஷ் ///
ReplyDeleteநண்பரின் ஆன்மா,
இறைவனிடம் ஆறுதல் பெற வேண்டிக் கொள்கிறேன்...
எனது வேண்டுதல்களும்....இரத்தப்படல வெளியீட்டு விழாவில் கடைசியாக அவரோட உரையாடியது நினைவில்
Delete"மனதுக்குப் பிடித்ததை ரசிக்க அந்த ஒற்றை நாளின் முழுமையையும் செலவிடுவதில் தப்பே இல்லை !!"
ReplyDeleteஆத்மார்த்தமான வரிகள் சார்.
"பார்க்க முடியாதா" என பலவருடங்களாக ஏங்க வைத்த லயன் ஆசிரியருடன் மூத்த சீனியர்களின் தரிசனம் கண்டு,
ஏதேதோ பேச நினைத்து,
மலைப்புடன்,தங்களுடன் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டு மகிழ்ந்ததே அற்புதமான தருணம்.
மகிழ்ச்சி ஆசிரியர் சார்.
உள்ளேன் ஐயா
ReplyDeleteஉங்களை இந்த வருடம் காணாதது வருத்தமே மஹி..
Deleteஆகஸ்ட் இன்னுமொரு வருடத்துக்கு எனக்கு எட்டாக்கனி போல குணா.
Deleteஅடுத்த ஆண்டும் வர இயலாதா??
Deleteநிச்சயம் வருவீங்க மகி...அப்படிப்பட்ட ஸ்பெசல ஆசிரியர் தயார் செஞ்சுட்டாருங்குது பட்சி
Deleteசனிக்கிழமை அலுவலகப் பணிகளுக்கிடையில் ஐந்தரை மணித்துளிகளுக்கு மனதளவில் ஈரோட்டில் இருந்தேன். நேரலை ஏற்பாடு மிக அருமை. இதற்கென உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஈரோடு சிறப்பு வெளியீடுகள் இங்கே வந்தடையும் நாளுக்கு காத்திருக்கிறேன்.
மீண்டுமோர் சூப்பர் பதிவு சார்..பதிமூன்று....கொலைப் படை...ஸ்பின் ஆஃப் நிச்சயமா வந்துரும்....கார்சன் கடந்த காலம்...தலை வாங்கிக் குரங்கு....மின்னும் மரணம்...இரும்புக் கை எத்தன்....கதைகள் வந்த பின்னே இனி பெரிய பட்ஜெட் பெரிதாய் இராது என எண்ணினேன்..அதனால் ஆசிரியர் இனிய பிரம்மாண்ட பட்ஜெட்டில் புதுக் கதைகளை அவர் பாட்டுக்கு விடட்டும்....இனி கோர வேண்டியது ஏதுமில்லையா என வெறுமை ஓடியது நினைவில்... ஆனா இங்க லயன் 40 என்றதும் மீண்டும் ஓர் இனம் புரியாத உற்ச்சாகம்.....
ReplyDeleteயார் அந்த மினி ஸ்பைடர்...இரும்பு மனிதன் ...நீதிக் காவலன் ஸ்பைடர்...யார் அந்த ஜுனியர் ஆர்ச்சி...விண்வெளிப் பிசாசு இதெல்லாம் நாங்க கேக்கமலே முழு வண்ணத்ல பெரிய சைசுல கார்சனின் கடந்த காலத்துக்கிணையா பிரம்மாண்ட சைசுல நீங்க போடத்தயார்னு தெரிது...அதாவது அந்தக் கால கோடை மலர்கள் மட்டம் தட்டுவதுக்கிணையா...
ஸ்பைடரின் மி/சினிஸ்டர் செவன் டாக்டர் மொழி பெயர்ப்புல சென்னை வருவது உறுதியான நிலைல வேறென்ன சார் வேணும்....
முத்து விழால ஸ்பைடர் பொறி பறக்க நின்ற ஓர் அற்புத கனம் போல
இனி வருடமோர் ஆயிரம் ரூபாய் மெகா கதைகள்...நண்பர்கள் கோரிய பாம் போன்ற கதைகள போட்டுத் தாக்குங்க...கார்சனின் கடந்த காலம் பற்ற வைத்த நெருப்பு தொடரட்டும்....
அப்புறம் திகில் நாப்பது ஜுனியர் லயன் நாப்பது...மினி லயன் நாப்பது என தொடர தயாராவோம்...
மிரட்டலான பரகுடாவை தொடர்ந்து கடல் சார் கதைகள் நீங்க அறிவித்தது நினைவில்...அக்கதை களை வான்ஹாம்மே மாலுமி கதைகளை நுழைக்க வாங்கன்னு இரு கரம் நீட்டி...கூப்பி கேட்டுக் கொள்கிறேன்
கொலைப்படை என்னை விட என் மகனையே அதிகம் கவர்ந்தது...ஆரஞ்சு...கிரீன்னு வண்ணங்களை கூவி...அந்த ஸ்படரை அறுக்காம விட்டுச் செல்லும் பொம்மையை கண்டு கண்டு மகிழ ...தினம் தவறாது உறங்குவது அக்கதைய கேட்டு புத்தகத்த கட்டிப் பிடித்த நிலையில்தான்...நண்பர் பாபுவின் மகனும் நினைவில் வர...நண்பரே கலங்காதீர்கள்...மீண்டு வருவோம் கடவுளின் துணையுடன்...சுறுசுறுப்பாக துருதுருவென அவன் ஓடியாண்டது நினைவில்...மீண்டும் அதியற்புத பலருடன் வர அல்லாவின் அருள் தொடரட்டும்
அதியற்புத பலருடன்...பவருடன்
DeleteHello
ReplyDelete"ஈரோடு புத்தக விழா கொண்டாட்டம் எனது பார்வையிலும் சார்.. :-)"
ReplyDeleteஅருமை ...அருமை...அருமை...
ஈரோடு புத்தகவிழா சிறப்பு நிகழ்வு நடந்த ஒரு நாள் முழுவதும் வருடம் முழுவதும் நினைவில் கொள்ளலாம்
கண்டிப்பாக விழா நடந்த அன்றைய நாள் அலுவலகத்தில் பகல் மற்றும் இரவிலும் இருக்க வேண்டிய சூழலில் விடுமுறை எடுக்க முடியாது என்ற நிலையில் நான் வருவது இயலாத ஒன்று என்றே நண்பர்களிடத்தில் பகிர்ந்து இருக்க மனதிலோ முன் வந்த நாள்களில் பல வித மனக்குழப்பங்கள் .... பல வருடங்கள் கழித்து ஆசிரியர் வருகை தருகிறார்கள் ..அதிலும் இந்த முறை முத்து பொன்விழா கொண்டாட்டமாக அமர்க்களமாய் விழா நடைபெறும் சமயம் நாம் அலுவலகத்தில் இருந்தாலும் மனது அங்கு பணியில் இருக்குமா என தவிப்பு வேறு...உடனடியாக முந்தின நாள் அலுவலகத்திற்கு என்னால் பகலில் வரமுடியாது மாலை ஐந்து மணி அளவில் தான் வரமுடியும் சமாளித்து கொள்ளுங்கள் என சொல்லி விட்டு நேராக இல்லத்தில் இருந்து விழா அரங்கிற்கே வந்து விட்டேன்..அங்கு ஆசிரியரையும் ,அறிந்த ,அறிமுகம் ஆகாத பல நண்பர்களையும் இந்த முறை சந்தித்ததில் மிக மிக மகிழ்ச்சி.. அழகான அரங்கு...அட்டகாசப்படுத்திய காமிக்ஸ் நாயகர்களின் தோரணங்கள் ,பல எதிர்பாரா சர்ப்ரைஸ் நிகழ்வுகள் ,முத்துவின் வரலாற்று வீடியோ ...."திரை மூலமாக".... என ஒவ்வொன்றாக அசத்தி கொண்டே இருந்தனர் ..அதுவும் கோவை கவிஞரின் வரியில் செயலரின் குரலில் பாடல் செம அட்டகாசம்..உண்மையிலேயே அப்பொழுது மனதில் மிகுந்த பரவச உணர்வு..செயலரின் பாடல் திறமை நான் ஏற்கனவே அறிந்தது தான் ..ஆனால் இந்த முறையில் அந்த ஒலி ,ஒளியில் கேட்கும்பொழுது தான் அவரின் திறமை இன்னமும் பட்டாசாய் வெடித்து தெரிந்தது ( செயலரே ஏற்கனவே நான் சொன்னது தான் தொலைக்காட்சி சூப்பர் சிங்கரில் கலந்து கொள்ள முயலுங்கள் என்று சொல்லி உள்ளேன் .அதை மீண்டும் சொல்லி கொள்கிறேன் ) ஆசிரியர் பேசும் உரையினை மிக விருப்பமாக ரசித்து கொண்டிருந்தாலும் பின் திரையில் வந்த மீம்ஸ்களை கண டவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை..., அதேசமயம் ஆஹா இப்படி ஆசிரியரை அதிகமாக கலாய்ப்பது போல் உள்ளதே இதை ஆசிரியர் பார்த்தால் அவர் வருத்தப்படமாட்டாரா என ஒருபக்கமும் நினைக்க இறுதியில் அந்த மீம்ஸை தயாரித்ததே நான்தான் என குண்டை தூக்கி போட்டார்..:-) மொத்தமாக அட்டகாச படுத்தி விட்டார்கள்..வந்திருந்த அனைத்து நண்பர்களுக்கும் இனிப்பு ,காரத்துடன் ,பதக்கத்தையும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய் ஆசிரியர் அளித்ததுடன் பரிசு பையில் ஒரு பழைய காமிக்ஸ் இதழையும் பரிசாக அளித்து இருந்தது உண்மையிலேயே அருமை...மிகுந்த மகிழ்ச்சிகள் சார்..
ஆசிரியர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பிக்க என்னை தேர்ந்தெடுத்த விழா நண்பர்களுக்கு நெகிழ்வுடன் நன்றிகள்...
அதே போல் காமிக்ஸ் கிரிக்கெட் போட்டி நடந்து அதில் முதல் பரிசு பெற்ற லக்கி சூப்பர் கிங்ஸ் அணியில் நான் இருப்பினும் போட்டி நடந்த அன்று நான் வர இயலா சூழல் இருந்தாலும் பரிசு கோப்பையை பெறும் பொழுது என்னையும் மேடையில் அழைத்து கெளரவபடுத்திய லக்கி கேப்டன் ரவிக்கண்ணன் அவர்களுக்கும்..அணியின் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது மனம் நெகிழ்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் நண்பர்களே..
இப்படி மகிழ்வும் ,நெகிழ்வாய் விழாவில் மூழ்கி இருக்க மாலை நான்கு மணி அளவில் இருந்து பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அலுவலகத்தில் இருந்து அலைபேசி வந்து விட்டீர்களா ,வந்து விட்டீர்களா என அழைத்து கொண்டே இருக்க இதோ ..இதோ என்று சொல்லிக்கொண்டே இருந்தாலும் ஆறுமணி வரையிலும் அங்கேயே இருந்து ரசித்து பின் இதற்கு மேலும் இங்கு இருந்தால் அலுவலகத்தில் சூடாகி விடுவார்கள் என பரபரக்க ஆசரியரிடமும் ,பல நண்பர்களிடமும் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிய சூழல் ..மன்னிக்க வேண்டுகிறேன்.
உண்மையிலேயே ஒரு நாளை திருநாளாக்கிய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...
பின்குறிப்பு :
சிறப்பான விழாவில் ஒரு சிறு குறை நிகழ்வு ஒன்று எனில் அது மதிய உணவு வேளை.. உணவுகள் மிக ருசியாக இருந்தது உண்மை ஆனால் சரியான முறையில் பரிமாற செய்யாதது ஒரு சிறு குறை..அது ஓட்டல் நிர்வாகத்தினரின் குறை தான் எனினும் அதை அடுத்த முறை இது போல் நிகழாதவாறு நண்பர்கள் உணவு நிர்வாகத்தினரை நிவர்த்திக்க வேண்டுகிறேன்..
மற்றபடி இவ்வளவு சிறப்பாக ,திறமையாக தன் சொந்த வேலைப்பளுக்களை மறந்து நமது காமிக்ஸ்ற்காக நாள் கணக்கில் பாடுபட்டு அந்த ஒரு நாளை காமிக்ஸ் நண்பர்களுக்கு மறக்க முடியாத நாளாக மாற்றிய ஸ்டாலின்ஜீ.. செயலர்..அகில் மற்றும் அவர்களுடன் இணைந்த அனைத்து நண்பர்களுக்கும் காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக பலத்த கைதட்டலுடன் கூடிய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்..சூப்பர்ப்...👏🏻👏🏻👏🏻💐💐💐
மீண்டும் வாழ்த்துக்களும் ,நன்றிகளும் நண்பர்களே...
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நண்பரே அந்த அட்டகாச பாடலை எழுதி பாடிக் கொண்டிருப்பவர் ஈவி னே போடனும்...பெருந்தன்மையாக எனக்கும் விருது கொடுத்துட்டார்... ..இதுக்கு முன்ன ஆசிரியர் வற்புறுத்தி திருத்திய பாடல் இன்னும் பட்டய கிளப்பும் ஈவி குயில் குரலில் கூவி...கானசிகா சிரோன்மணி இளவரசர்னு சேத்துக்க தகுதிவாய்ந்தவரே....
Delete///உண்மையிலேயே ஒரு நாளை திருநாளாக்கிய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...///
Deleteஇந்த நிகழ்வுக்காய் நேரம் காலம் பார்க்காமல் உழைத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
அந்த பாட்ட பாடி முதல்ல அனுப்பைல அந்த மியூசிக்கும்...அந்த பபபபாபாபா...யப்பா செம்...செம்...செம...
Deleteகாதலியின் முதல் முத்தம்பாங்களே அதை விட...என் மகனின் அப்பா என அழைத்த குரல் போலது...
முதல் முறை கேட்டதும் ஈவிக்கு ஃபோன் போட்டு நானுமே பாடிட்டேன்....சரியான குரல்
///இவ்வளவு சிறப்பாக ,திறமையாக தன் சொந்த வேலைப்பளுக்களை மறந்து நமது காமிக்ஸ்ற்காக நாள் கணக்கில் பாடுபட்டு///
Deleteஉழைத்திட்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் பாராட்டுக்கள்...
////காதலியின் முதல் முத்தம்பாங்களே அதை விட...என் மகனின் அப்பா என அழைத்த குரல் போலது...///
Deleteமயிர்கூச்செறிய வைக்கிறீங்க ஸ்டீல்! மிகப்பெரிய பாராட்டு இது!!🙏🏻🙏🏻
தலீவரே.. உங்க பாராட்டு ரொம்பவே மகிழ்ச்சியளிக்குது! ஆனா ரொம்பவும் தான் உசரத்துல நிறுத்தறீங்களோன்னு பயமாவும் இருக்கு!
Deleteஇம்மாத இதழ்களை மிக பெரிய்ய்ய்ய பொக்கிஷ பெட்டியை விழா அரங்கிலியே பெற்று தூக்க முடியாமல் தூக்கி வர முடிந்தது ஒரு சுகமான சுமையே...இரவு ஏழுமணி அளவில் நேராக அலுவலகம் சென்று ஓர் அரைமணி நேரம் சரிபார்ப்புகளை செய்து விட்டு பின் உணவருந்தி விட்டு அலுவலகத்திலேயே எட்டு மணி அளவில் பொக்கிஷபெட்டியை பிரித்தேன்..ஹைய்யோ...ஒவ்வொரு இதழையும் எடுக்க எடுக்க அட்சயப்பாத்திரம் போல் காமிக்ஸ் இதழ்கள் வந்து கொண்டே இருக்க ..அதுவும் பாதி இதழ்கள் பல்க் ,பல்க் இதழ்களாய் வர உண்மையிலேயே அப்படி ஒரு சந்தோசம்..ஒவ்வொரு இதழாய் எடுத்து ஒவ்வொரு பக்கமாய் ரசித்து ..அட்டைப்படம் முன்பின் பார்த்து....அதுவும் ஒரு வரி கூட படிக்காமல் இதழை மட்டும் ரசித்து முடிந்த பொழுது சரியாக மணி 11.30 ...ஆசிரியர் அவர்களுக்கும் ,அவர்தம் அனைத்து பணியாளர்களுக்கும் எழுந்து நின்று ஒரு ராயல் சல்யூட் சார்...இத்தனை இதழ்களை அளித்தற்காகவா என்றால் இல்லை...எந்த இதழைகளையும் குறை ஏதும் சொல்ல முடியா நிலையில் வருகை தந்ததிற்கா என்றால் இல்லை...இத்தனை இதழ்களை நாங்கள் நினைத்ததை விட நூறு சதவீதம் அதிகம் மிக மிக சிறப்பாய், மிக மிக மிக தரமாய் அளித்த காரணத்திற்கு தான் அந்த மானசீக ராயல் சல்யூட் சார்...அப்பா ...ஒவ்வொரு இதழையும் புரட்டும் பொழுது டேய் இது சூப்பர் இத தான் முதலில் படிக்க வேண்டும் என மனது நினைக்கும் அடுத்த இதழை எடுத்தவுடன் மீண்டும் டேய் இதை தான் முதலில் படிக்க வேண்டும் செமயாய் இருக்கு என ஒவ்வொரு இதழ்களுக்குமே மனது மாறி மாறி போட்டி போட்டு கொண்டு இருக்கிறது...அதுவும் ஸ்பைடர் மாயாவி இதழை ஒவ்வொரு பக்கமாய் பிரித்து ரசித்த பொழுது நான் அந்த காலங்களுக்கே சென்று விட்டதான ஓர் மனப்பிரமை...ஒவ்வொரு இதழுமே கூட ஒவ்வோரு மகிழ்வை அளித்து கொண்டே இருந்தது....அது பெரிய இதழ்களுக்கு மட்டும்அல்ல சிறிய இதழ்களுக்குமே.
ReplyDeleteமேடையில் ஒரு நண்பர் சொன்னபடி அன்று காமிக்ஸ் குவியலாய் கிடைக்கும் எழுந்தால் கனவாய் இருக்கும் ....,ஆனால் இன்று இது நிஜத்தில் நடக்கிறது என்று ..உண்மை...உண்மை...உண்மை...எதை முதலில் படிக்க என மண்டையை உடைக்க வேண்டியதாய் இருக்கிறது இன்று...
இம்மாதம் இப்படி ஒரு அட்டகாச பொக்கிஷத்தை அதுவும் தங்களின் கரங்களின் மூலமே அளித்த தங்களுக்கும் ,தங்கள் அணியினருக்கும் மனதால் மட்டுமே என்னால் பதக்கத்தை அளிக்க முடியும் சார்...சாரி ..
மீண்டும் மனம் கனிந்த நன்றிகள்..பாராட்டுகள்...அன்று கறுப்பு வெள்ளை இரத்தப்படலம் வந்த பொழுது தொலைக்காட்சியும் சரி ,அலைபேசியும் சரி அமைதியை மட்டுமே நிலைக்கொண்டது...இனி இம்மாத பொக்கிஷ இதழ்களை படித்து முடிக்கும் வரை மீண்டும் அதே நிலைக்கு செல்ல போகிறேன் ....
மீண்டும் நன்றி சார்..
///இரவு ஏழுமணி அளவில் நேராக அலுவலகம் சென்று///
Deleteதலைவரே,
காலாகாலத்தில் வீட்டுக்கு செல்ல வேண்டாமா.
குடும்ப சகிதமா பார்சல் பிரிக்கலாம் அல்லவா. இது நியாயமா, சின்ன பசங்க நாங்க உங்கள மாதிரி செய்வோமா இல்லையா...
:-))))
DeleteHi..
ReplyDeleteவந்துட்டேன்.
ReplyDeleteஇனி வர கூடிய பல விழாக்களின் போதும் அசை போட கூடிய நினைவுகளை "முத்து- 50 " நம் அனைவரின் மனதினுள்ளும் விதைத்து சென்று உள்ளது என்றால் அது மிகை ஆகாது. பால்யம் முதல் நம்முடன் பயணித்த நண்பனுக்கு வயது 50. அடேங்கப்பா... Love those precious moments of the function Editor sir, thanks for everything. 😍🥰
ReplyDeleteஆமாங்க. ஆப் செஞ்சுரி பிரமாத படுத்திட்டீங்க. இனி அந்த செஞ்சுரி தா நம்ம டார்கெட். ...
Deleteஅதையும் கண்ணால் பாக்கிற பாக்கியம் இருக்கே...
நன்றிகளெல்லாம் எதற்கு சார் - இது நம் குடும்ப விழாவாச்சே !
Deleteவணக்கம் நண்பர்களே!!!
ReplyDeleteEBF நிகழ்வுகளை இன்னும் முழுதாக பார்க்க இயலவில்லை. வீட்டு சூழல் என்னை இன்னும் ஓய்வெடுக்க விடவில்லை.
ReplyDeleteஅசாத்தியங்களை சாத்தியமாக்கிய நண்பர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்கள் .
'சின்ன நூல் கண்டா நம்மை சிறைப்படுத்துவது' என்பது எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின் ஒரு புத்தகத்தின் தலைப்பு.
இங்கோ காமிக்ஸ் என்னும் ஒரு சின்ன நூல் கண்டு நம் எல்லோரையும் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது.
நாம் அனைவரும் இந்த சிலந்தி வலையில் விரும்பி விழுந்த பூச்சிகள்.
இந்த நேசம் என்றும் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.
அருமையா சொன்னீங்க தோழரே...
Deleteஸ்பைடர் போல
Deleteஅடுத்தவாட்டி நீங்களும் கலந்து கொள்ள முயற்சியுங்கள் பத்து சார் !
Deleteஇதையெல்லாம் மேடையில் நீங்க பேசியிருந்தீங்கன்னா எத்தனை கைதட்டல்களை அள்ளியிருக்கலாம் தெரியுமா பத்து சார்?!!
Deleteவணக்கம் சார், ஹாய் ப்ரெண்ட்ஸ்...🌹
ReplyDelete"முத்து 50"---- சிம்ப்ளி ஒரே வார்த்தையில் சொன்னால் ஸ்டன்னிங்...
ReplyDeleteஈரோட்டில் நடந்துள்ள வாசகர் சந்திப்பில் நடந்த விழாக்களில் one of the best இதுவும்...!!
"லயன் 40"---அடுத்த ஆண்டு " the best of the bests"-- ஆக அமைய வாழ்த்துகள் சார்💐💐💐💐💐
நிறைவான விழா! இதன் நினைவுகள் அடுத்த ஆண்டு விழா வரை அகலாது . சிறப்பாக பணியாற்றிய நண்பர்களுக்கு வாழ்த்துகள்
ReplyDelete😀😃
Deleteகால் வலியால் அவதிப்பட்ட போதும் காமிக்ஸ் விழாவுக்கு வருகைதந்து மரியாதை செலுத்திய உங்களுக்கும் என் நன்றிகள் ஜி!
Deleteமுத்து 50 ன் டாப் நிகழ்வுகள்.....
ReplyDeleteகிரிக்கெட் போட்டியில் தொடங்கி ஓயாஸிஸ்ல சிறப்பாக நடந்தது....
தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்து,
ஏற்பாடுகளில் சில புதுமைகள்,
விழா நாயகர்களை ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து அமர வைத்தது, தொடர்ந்து பிரமாண்டமான முத்து50 கேக் செலிபரேசன், நீஈஈஈஈஈண்ட வரவேற்புரை, அதைதொடர்ந்த மிக சிறந்த முறையில் கெளரவப்படுத்தல், முத்து 50வீடியோ டிஸ்ப்ளே, ஸ்பெசல் ரீலீஸ் இதழ்கள், கானம் பாடும் குயில்கள், விழா நயாகர்கள் உரை, லஞ், புத்தகங்கள் வழங்குதல், பட்டிமன்றம், மெடல் செரிமனி, வாசகர்கள் கிஃப்ட், நினைவு பரிசுகள என கோலாகலமாக நிறைவடைந்தது...😍😍😍😍
ஓரு நாளும் என்ஜாய் மன்டின் உச்சமாகவே அமைந்து போனது...
This comment has been removed by the author.
Deleteஃபைனல் டச்சா, அந்த மெடல் செர்மணி செம செம டாப்புங்க... நண்பர்களே, உங்கள் அனைவரின் தன்னலமற்ற உழைப்பு எங்கள் நினைவில் என்றென்றும் இருக்கும்...
Deleteஉறங்காது... உண்ணாது.. நீங்கள் செய்த தியாகங்கள்
வேறு யாராலும் ஈடு செய்ய முடியாதது...
+100
Deleteகளப்பணியாற்றிய அத்தனை பேர் சார்பாகவும் உங்கள் அன்பான வார்த்தைகளை ஏற்று நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் புன்னகை ஒளிர் ஜி!
Deleteஎடிட்டர் எப்போதும் நம்மை இளமையில் வைத்து இருப்பார் என்பதற்கு உதாரணம் அவரது மேலேயுள்ள வலைப்பதிவில் சீனியரான திரிஷா நயன்தாரா பேரைச் சொல்லாமல் பிரியா பவானி சங்கர் பேர சொன்னாரே பாக்கலாம்...
ReplyDeleteஇம்முறை ஈரோடு வர இயலாத பணி பளு. அடுத்த முறை கலந்து கொள்ளலாம்.
இம்மாத இதழ்கள் மற்றும் ஈரோடு ஸ்பெஷல் இதழ்கள் அனைத்தும் வேற லெவல். டெக்ஸ் மிக மிக வித்தியாசமான கதை. மாபெரும் ஹாலிவுட் திரில்லருக்கு இணையானது.
///சீனியரான திரிஷா நயன்தாரா பேரைச் சொல்லாமல் பிரியா பவானி சங்கர் பேர சொன்னாரே பாக்கலாம்...///
Deleteநாமே இன்னும் 17 வயசை தாண்டலைங்க. அப்புறம் எப்படி ஆண்டீஸ் பேரை சொல்லுவாரு...
நண்பரே ; "நதி போல ஓடிக்கொண்டிரு" என்பதைத் தலைப்போடு நிறுத்திப்பானேன் ? நம்ம யூத்தான ரசனைகளுக்குமே அதை apply செய்தால் போச்சு !
Deleteமுத்து காமிக்ஸின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் அற்புதமாக நடந்தது நேரம் போனதே தெரியவில்லை வந்திருந்த அனைவருடனும் ஒரு கலந்துரையாடல் இருந்தால் நன்றாக இருக்கும். மாலையில் வந்திருந்த அனைவருக்கும் எடிட்டர் மெடல் அணிவித்து ஒரு பையில் ஜானி நீரோவின் கொலைகாரக் கலைஞன் காமிக்ஸுடன் ஸ்நாக்ஸும் கொடுத்தது மிகவும் அருமை.
ReplyDeleteவிட்ட குறை ; தொட்ட குறையை அடுத்த முறை சரி செய்து விடுவோம் நண்பரே !
Deleteமுத்து50ல,
ReplyDelete1.வாசகர்கள் அறிமுகத்தை ஆரம்பித்து வைத்தது....
2.விழா நாயகர்களில் ஒருவரான ஜீனியர் எடிட்டருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றது....
3.கார்சனின் கடந்த காலம் ஸ்பெசல் புக் கருணையானந்தம் ஐயா ரீலீஸ்-முதல் பிரிதியை பெற்றுக் கொள்ள என்னை தாங்கள் அழைத்தபோது ராக்கெட்ல பறப்பது போல இருந்ததுங் சார்🥰🥰🥰🥰🥰🙏தன்யனானேன் சார்.🙏🙏🙏 என் உயிர் சொந்தங்கள் KOK,பேபி& மஹியுடன் இணைந்து பெற்றது காமிக்ஸில் உச்ச தருணம்💕💕💕💕💕
4.ஸ்பெசல் ரீலீஸ்& ஆகஸ்ட்டு இதழ்களின் 3.5கிலோ பார்சலை தங்களிடம் இருந்து பெற்றது...
5.பட்டிமன்றத்தில் எங்க மாடர்ன் இளைஞர்கள் அணிக்கு தலைமையேற்று பேச்சு...
6.கிரிக்கெட்ல 3வது இடத்திற்கான மெடல் தங்களது கைகளில் பெற்றது...
7.தங்களிடம் இருந்து வாசகர்களுக்கான கிஃப்ட் பெற்றது.& மெடல் பெற்றது...
--- என நாள்முழுதும் எனக்கு வாய்ப்பு வழங்கி திக்குமுக்காட வைத்து விட்டார்கள் சார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஸ்டாலின் ஜி& ஈரோடு விஜய்🥰🥰🥰🥰🥰
முத்து 50விழாவில் அதிக ஈவன்ட்ல பார்டிசிபிடேட் பெற்றது நானாகத்தான் இருக்கும், இந்த சந்தோசம் நெடுநாள் நீடித்து இருக்கும் சார்..🤩🤩🤩🤩🤩🤩🤩
இந்த வாய்பை வழங்கிய விழா குழுவினரது அன்புக்கும், தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன் சார்🙏🙏🙏🙏😍😍😍😍😍
தலீவர்னா சும்மாவா ?
Deleteநன்றிகள் STVR!
Delete///தலீவர்னா சும்மாவா ?//--- ஹா...ஹா... சார்... பட்டிமன்ற அணிக்கு தான் அது.
Deleteமற்றபடி எங்க வேப்பிலை பார்ட்டியோட போராட்ட குழுவில் ஒரு சாதாரண தொண்டனே!
தல டெக்ஸ்க்கும் தொண்டனே....!
டெக்ஸ் டீம்க்கும் துணை கேப்டனே....!
தலீவர் போஸ்ட்டு எவ்வளவு சிரமம் னு யான் அறிவேன்...
🤭
எனக்கு விழா சிறப்பு முடிந்தவுடன் அடுத்து என்ன ....?!வாசிக்கும் விழா தானே...பாதி இதழ்களுக்கு மேல் ..:-) வாசித்து முடித்தாயிற்று
ReplyDelete*மீண்டும் வந்த மாயன்*
ReplyDeleteஎந்த இதழை முதலில் படிப்பது என்ற பல குழப்பத்தில் நேரம் நீட்டித்து பின் முதலில் நான் வாசிக்க தேர்ந்தெடுத்தது டெக்ஸ் வில்லரின் மீண்டு ( ம்) வந்த மாயனே...
வழக்கமான அளவில் ஆனால் அதிக பக்கங்களில் கனத்த இதழாய் செம திகிலான அட்டைப்படத்தால் என கவர்ந்த இந்த இதழை ஒரே மூச்சில் வாசிக்க ஆரம்பித்து இதழை முடித்து விட்டு நான் நேரத்தை பார்த்த பொழுது சரியாக இரண்டே முக்கால் மணி நேரம் கழிந்து இருந்தது.அந்த இரண்டே முக்கால் மணி நேரமும் டெக்ஸ் கார்ஸன் குழுவினருடன் நானுமே அந்த மாயதந்திர திகில் அனுபவத்தில் நுழைந்து இருந்தேன் என்பது உண்மை..எடுத்த ஆரம்பித்திலியே விட்டலாச்சாரியர் போலேவே ஆரம்பிக்க என்னடா ஆரம்பித்திலியே நம்ப முடியாத அளவாக கதை செல்கிறதே என நினைக்க பின் அது கனவாக அமைந்து இருக்க அதன் பின் கதை களம் பலமாக அமையை ஆரம்ப பக்கங்களில் போல் மீண்டும் அந்த பாணி ஆங்காங்கே தொடர நேர்ந்தாலும் இந்த முறை அது நெருடலாய் அமையவே இல்லை...காரணம் வில்லன் மெபிஸ்டோவும் ,அவர் மகனும் .நாயகன் மட்டும் தான் வாரிசுடன் வர வேண்டுமா நானும் வாரிசுடன் வருவேன் என மெபிஸ்டோவும் களம் இறங்க கதை செம சூடாக பறந்தது..முந்நூறு ப்ளஸ் பக்கங்கள் வரை மட்டுமல்ல இறுதி வரையிலும் இங்கே வில்லன் மெபிஸ்டோவின் ஆதிக்கமே...அதனாலேயே அதிக அச்சத்துடனே இதழை வாசிக்க முடிந்தது...ஆதிக்கம் மட்டும் அல்ல இறுதி வரை டெக்ஸ்க்கு சவாலாய் மெபிஸ்டோ அமைய வெற்றி பெற்றதும் மெபிஸ்டோ தானோ என்ற எண்ண வைக்கிறது கதையின் க்ளைமேக்ஸ்...ஆனால் அதுவே கதைக்கு ப்ளஸ்ஸாக அமைந்து இருப்பது தான் சிறப்பு..திகில் அனுபவத்திலியே கதை முழுவதும் செல்ல இறுதி அத்தியாயங்களில் வில்லனின் மகனிடம் டெக்ஸும் ,கார்ஸனும் பேசும் வசனங்கள் அந்த அச்சத்தை குறைத்து நம்மை சிரிக்கவும் வைக்கின்றனர் அந்த இக்கட்டான சமயத்திலும்..கதையின் இன்னொரு சிறப்பு அதன் ஓவியங்களே வெகு அழகு...வித்தியாசமான கதை களம் ..டெக்ஸ்க்கு ஈடு கொடுக்கும் மாயாஜால வில்லன் என கதை மிக வேகமாய் சென்றது...சிறிது மாயாஜால பழிவாங்கல் கதைபாணி ரகமாய் இருந்தாலும் செம விறுவிறுப்பாய் ஒரே மூச்சில் படிக்க வைத்ததே இந்த கதையின் வெற்றி உண்மையை சொன்னால் மீண்டும் மெபிஸ்டோ டெக்ஸை எந்த பாணியில் கலவரத்தை உண்டு பண்ண போகிறான் என எதிர்பார்க்கவும் வைத்து விட்டான்..கண்டிப்பாக ஏமாற்றம் அளிக்காத இதழ்..சிறப்பு..
சுஸ்கி விஸ்கி யின்
ReplyDeleteநானும் ரெளடிதான் ,பேரிக்காய் போராட்டம்...
ஒரு புதுக்கதை ,ஒரு க்ளாசிக்கான மறுபதிப்பு கதை...ஆனால் அந்த மறுபதிப்பு கதை பேரிக்காய் போராட்டத்தை நானே இதுவரை படித்ததில்லை எனும்பொழது பலருக்கும் இந்த இரண்டுமே புதுக்கதை போலத்தான்...இந்த இரண்டு கதைகளையும் படித்தவுடன் தான் இவர்களின் அனைத்து சாகஸங்களுமே டைம்மெஷினில் சென்று அதிரடியுடன் கூடிய காமெடி சாகஸங்களால் மனதை ரசிக்க வைப்பவர்கள் என்பதை அறிந்து கொண்டேன்..சுஸ்கி விஸ்கி எல்லாம் இந்த சமயத்தில் படிக்க முடியுமா ..சிறுபிள்ளைத்தனமாக இருக்குமே என்ற பலரின் நினைப்பை முதல் தொகுப்பு எப்படி முறியடித்ததோ அதே போலத்தான் இந்த இரண்டாவது தொகுப்பும் முறியடித்து உள்ளது...முதலில் ஒரு கதை மட்டும் வாசித்து விடலாம் நாளை இன்னொரு கதையை வாசித்து விடலாம் என்று நினைத்து இதழை புரட்ட ஆரம்பித்தால் இரண்டு கதைகளையுமே முடித்து விட்டுத்தான் இதழை கீழே வைக்க முடிந்தது ..இரண்டு கதைகளுமே பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க முடிந்தது..இந்த சுஸ்கி விஸ்கி சாகஸங்களில் பல இடங்களில் பூச்சுற்றும் ரகம் போல் ஆக்ஷன் காட்சிகள் இருப்பினும் காமெடி கதையோட்டத்தில் அது இன்னமும் நகைச்சுவையை உயர்த்தி பிடிக்கிறது..அழகான அட்டைப்படமும்..உள்ளே சிறப்பான சித்திரத்தரமும் ,அசத்தலான நகைச்சுவையான மொழி ஆக்கமும் இதழை அருமையாக ரசிக்க வைத்தது...பின் அட்டையில் பேரிக்காய் போராட்டத்தின் அப்பொழுதைய அட்டைப்படத்தையே வெளியிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்குமோ என்ற எண்ணமும் (எனக்குள் ) .
இதழில் சுஸ்கி விஸ்கியின் மூன்றாவது தொகுப்பிற்கு பயணம் செய்யலாமா என்று வினவி இருந்தார்கள் ..மிக மிக ஆவுலுடன் அந்த மூன்றாவது தொகுப்பில் சுஸ்கி விஸ்கியுடன் பயணம் செய்ய இப்பவே ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்...
//அடுத்த ஆண்டு லயன் 40 வது ஆண்டு.//
ReplyDeleteஇந்த 40 வது ஆண்டிலாவது எல்லா வாசகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தங்களின் "சிங்கத்தின் சிறு வயதில் " தனி தொகுப்பாக ஈரோட்டு விழாவில் வாசகர்களுக்கு மறுக்காமல் தர வேண்டுகிறேன்.
எத்தனை ஸ்பெஷல் இதழ்கள் அறிவித்து வெளி வந்தாலும் இது இந்த 40வது ஆண்டில் வெளி வந்தால் அவற்றிற்கு எல்லாம் கிரீடம் வைத்தது போல இருக்கும் என்பது என் எண்ணம்.
ஈரோட்டு மரத்தடி மீட்டிங் நடந்திருந்தால் இந்த கோரிக்கையை ஸ்ட்ராங்காக வலியுறுத்தி இருப்பேன். ஆனால் எதிர் பாராவிதமாத நேரமின்மையால் மரத்தடி மீட்டிங் கேன்சல் ஆனது வருத்தமே.
மக்களின் கோரிக்கைகளை கேட்டும் கேளாத அரசியல்வாதி போல இல்லாமல் இந்த கோரிக்கையை தாங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று எல்லா நண்பர்களின் சார்பாக முன் வைக்கிறேன்.
பி. கு. அரசியலோடு ஒப்பிட்டதற்கு காரணம் இதை நீங்கள் மறுபடியும் மறுக்கக் கூடாது என்பதற்காக மட்டுமே.
ஆஹா...ஆஹா்.ஆஹா....கையை கொடுங்கள் சார்...சரியாக கேட்டீர்கள் ...ஆம்..சிங்கத்தின் 40 வது ஆண்டில் வருகை தருவதற்கான சிறப்பு தருணம் இது...ப்ளீஸ் சார்...யாரையாவது கடத்துனா தான் சிங்கத்தின் சிறு வயதில் வரும் என்றால் அதையும் சொல்லுங்கள் சார்...கடத்தி விடுகிறோம்
Deleteஒண்ணு வேணும்னா பண்ணலாம் தலைவரே.
Deleteஎல்லாரும் லயன் ஆபிஸ் போறோம் ஆபிஸ் முன்னாடி உக்காந்து தர்ணா போராட்டம் பண்றோம்.
நான் ரெடிங்கோ நாள் குறிங்கோ...:-)
Deleteவேண்டும் வேண்டும் சிங்த்தின் சிறுவயதில் வேண்டும்...
Deleteஎதிர்கட்சி தலைவர் உடனடியாக முதல் அறிவிப்பாக இதைசெய்யா விட்டால் சிலபல போராட்டங்களை முன்னெடுப்போம்னு போரட்ட குழு தலைவர் மேல சத்தியம் செய்கிறோம் சார்...
///எல்லாரும் லயன் ஆபிஸ் போறோம் ஆபிஸ் முன்னாடி உக்காந்து தர்ணா போராட்டம் பண்றோம்.///
Deleteநம்ம ஆபீஸ் முட்டு சந்துக்குள்ள இருக்குது. ஏதாவது அட்டாக் நடந்தா...
அதோ கதி தான்.
அப்புறம்
டீக்கடை, மினி ஹோட்டல் எதுவும் பக்கத்தில் இல்லைங்க.
சகல தயாரிப்போட திடமான நெஞ்சத்தோடு களம் இறங்குவோம் தோழர்களே.
ஞாபகம் வைச்சுகோங்க.
Yes, as i want to read the whole thing. I also need singathin siruvayathil part 1 atleast
Deleteபோராடுவோம் போராடுவோம்!
Deleteவி காமிக்ஸ்
ReplyDeleteசென்றுவிடு கொன்று விடு..
மீண்டும் ஸாகோரின் ஓர் நறுக்சுருக் சாகஸம்...வில்லியாக நினைத்திருக்க அவர் நாயகி பாணியில் திருப்பம் வைத்த மற்றோர் அதிரடி இதழ் இருபது நிமிடங்களில் விறுவிறுப்பாக படிக்க வைத்த ஓர் இதழ்.....கதையை விட டெக்ஸ் வில்லரின் சகோதரரின் கதையும் சாகஸமாக வருகிறது என்ற விளம்பரம் இன்னும் மகிழ்ச்சியை விதைத்தது எனில் அது மிகையல்ல..ஆவலுடன் காத்திருக்கிறேன்..
******
விங் கமாண்டர் ஜார்ஜ் ன் "புதையலுக்கொரு பாதை "
சந்தா நண்பர்களுக்கான இலவச இதழ் ...அட்டைப்படம் இருந்து இருந்தால் இன்னும் கலக்கலாக இருந்து இருக்கும் என்பது உண்மை.புதையல் கதை என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் கிடையாது..இது நெப்போலியன் பொக்கிஷம் புதையல் கதையின் முதல்பாகம் என்ற அறிவிப்போடு வந்த கதை எனும் போது விறுவிறுப்பு குறையுமா என...? கதை படுவேகமாக சென்றது..இந்த கதையை வெளியிட்டு விட்டீர்கள் சார்..எனவே தயவு செய்து அடுத்த பாகமான நெப்போலியன் பொக்கிஷத்தை கண்டிப்பாக விரைவில் வெளியிடுங்கள் சார் எவ்வகையிலாவது...ஆவலுடன் காத்திருக்கிறேன்.
******""
மார்ட்டினின் மீண்டும் ஓர் அசுரன்..
முதல்முறையாக மார்ட்டினை வண்ணத்தில் ரசிக்கிறேன் ..மிக அழகு இதழ் மட்டுமல்ல மார்ட்டின் மற்றும் அவரின் தோழனும்..போன முறை போல் குழப்பம் வைக்காத அதே சமயம் அவரின் அதே புதிர்பாணி கதை..வழக்கம்போல எதிர்பாரா முடிவுடன் விறுவிறுப்பாகவே சென்றது இந்த சாகஸமும் ..என் அளவில் ஓகே ரகத்தில் மார்ட்டின்..
இதை நீங்கள் ஏதாவது காரணம் சொல்லி மறுக்கும் பட்சத்தில் சில அறப் போராட்டங்களை திட்டமிட்டு வைத்திருக்கிறேன்.
ReplyDeleteஙே....இதறகாக பல போராட்டம் நடத்மியாயிற்று நண்பரே...ஆசிரியர் மனம் மாறவே இல்லை அல்லது போரட்டத்திற்கு அச்சப்படவே இல்லை என்பதே உண்மை நண்பரே...
Deleteஎனவே இது ப்ளான் B மூலம் தான் நிறைவேற்ற முடியும் ...அதுதான் அந்த கடத்தல் ரகசியம்..அதையும் முன.கூட்டியே அறிவித்து விட்டு பார்க்கலாம் இதற்காகவது மசிகிறாரா என...
///முன.கூட்டியே அறிவித்து விட்டு///
Deleteதலைவரே,
உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது...
///சில அறப் போராட்டங்களை திட்டமிட்டு வைத்திருக்கிறேன்.///
Deleteநீங்களாவது அறப்போராட்டம் நடத்தறீங்க. நாங்கல்லாம் தலீவரை வச்சு 'அரைகுறை' போராட்டமே நடத்தினவங்களாக்கும்!
பலன் - தலீவரின் மானம் கப்பலேறியதுதான் மிச்சம்!
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஅறப் போராட்டத்தின் சில பல வழிமுறைகள்.
Deleteநமது ஆஸ்தான கவிஞர் தன்னுடைய கவிதையால் கவிதை எழுத நம்முடைய ஈ. வி கானம் பாடி எடிட்டரின் மனதை உருக வைப்பது (நம்ம டால்டன்ஸ் அளவுக்கு இல்லைன்னாலும், ஏதோ நம்மாள முடிஞ்ச அளவுக்காவது).
இதற்கு மசியவில்லை என்றால்...
அனைவரும் லயன் ஆபிஸ் முன்பு திரண்டு அதி தீவிரமான உண்ணா விரதப் போராட்டம் நடத்துவது.
1) (காலை சிற்றுண்டிக்குப் பின்) 9 மணி அளவில் தொடங்கும் உண்ணா விரதம் மதியம் 1 வரை நீடித்திடும். (1-2 நண்பர்கள் வலிமையை ஏற்றிக் கொள்ள ஒரு மினி கறி விருந்து)
2) பிறகு 2 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை தீவிரமாக நடைபெறும். (9-10 இரவு ஒரு சிறு உணவு இடைவேளை)
அப்புறம் இரவு கடையை பூட்டிவிடுவதால் அந்த நேரமே நமக்கு ஓய்வு நேரமும் ஆகும்.
இப்படி நாம் உண்ணா விரதம இருந்தால் நம்முடைய எடிட்டரின் இளகிய மனது கஷ்டப்படும் என்பதால் அவர் மனக் கஷ்டத்தை நம்மளாலும் தாங்க முடியாது என்பதாலும் அவருடைய சிறு பங்களிப்பாக நம்முடைய உண்ணா விரதப் போராட்டத்தின் போது எடுத்துக் கொள்ளும் உணவுக்கான பில் தொகையை அவருக்கே அனுப்பி வைத்து விட்டு மறுபடியும் நம்முடைய அறப் போராட்டத்தை நம் கோரிக்கை நிறைவேறும் வரை இடைவிடாது தொடங்குவோம் 🤷🏻♂️
நண்பரே - தலீவருக்கு "வேப்பிலை அண்டடாயர்" போட்டு விட்டு நடத்திய போராட்டமே வேலைக்கு ஆகலை எனும் போது,இன்னும் ஒரு படி மேலே போய் ஆவேசமாய் சிந்திக்க வாணாமா ? என்ன போராட்ட குழுவோ - போங்க !
Delete///என்ன போராட்ட குழுவோ - போங்க !///
Deleteசார்.. இப்படியெல்லாம் நீங்க அவநம்பிக்கையோட பேசவேண்டியதில்லை! சீக்கிரமே தேறிடுவாங்க - இன்னும் கொஞ்சம் டயம் கொடுங்க!
///தலீவருக்கு "வேப்பிலை அண்டடாயர்" போட்டு விட்டு நடத்திய போராட்டமே வேலைக்கு ஆகலை எனும் போது,இன்னும் ஒரு படி மேலே போய் ஆவேசமாய் சிந்திக்க வாணாமா ? என்ன போராட்ட குழுவோ - போங்க !///
Deleteஒரு படி மேலே போய் சிந்திக்கணும்னா....
அந்த வேப்பிலை அண்டடடாயரை ஒரு அடி மேலே ஏத்தி தலீவரின் முகத்துல கட்டிவிட்டு ஆடவிடணுமா இருக்குமோ..!?
//அந்த வேப்பிலை அண்டடடாயரை ஒரு அடி மேலே ஏத்தி தலீவரின் முகத்துல கட்டிவிட்டு ஆடவிடணுமா இருக்குமோ..!??//
Deleteகண்ணன் சார்...
எதற்கும் தயார் தான் போல 😂🤣😆
எனக்கென்ன பிரச்சினை சிவா..
Deleteநான் எப்பவுமே தலீவருக்கு பத்தடி பின்னால நிக்கிற தொண்டன்தானே....
எதிர்கட்சியை நினைச்சாத்தான்....😨
//இன்னும் ஒரு படி மேலே போய் ஆவேசமாய் சிந்திக்க வாணாமா//
Deleteஅன்பான ஆசிரியர்கிட்ட கோரிக்கை வைக்கறதுல ஏன் ஸார் ஆவேசம் வேணும். எப்படியும் ஏதாவது ஒரு நாளில் கிடைக்கப் போவது தானே.
அது இந்த 40வது ஆண்டுல கிடைச்சா ஐசிங் ஆன் தி கேக் தானே 🤷♂️
@ஆல் நண்பர்கள்.
ReplyDeleteஅனைவரும் இந்த கோரிக்கையை வலியுறுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🏻🙏🏻
This comment has been removed by the author.
ReplyDeleteஈரோடு திருவிழா முழுவதும் இருந்து மகிழ முடியவில்லை என்னால் .ரயில் பயணம் மட்டுமே சாத்தியம் .எனவே மாலையே பரபரவென கிளம்பி விட்டேன். அடுத்த வருடமாவது தெளிவாக திட்டமிட வேண்டும். . . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteசார் ...இத்தனை நேரம் நீண்டு செல்லுமென்பதை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை ! அடுத்த வருஷம் திட்டமிடலை இன்னும் 'சிக்' என்று பண்ணி விடலாம் !
Deleteகேள்வி பதில் பகுதியோ,
Deleteமரத்தடி மீட்டோ மிஸ் ஆனதை தெரியாம வீடியோ டிஸ்ப்ளே மூன்றும் பார்த்துக் கொண்டன சார்...
என் ஒரேயொரு குறை ரவுண்ட் பண்ணை சுவைக்க ஓரு வாய்ப்பு வழங்காம விட்டது தான்...ஹி..ஹி..
ஈவி@ அடுத்த விழா ஷெட்யூல்ல ஓரு 12மணி வாக்கில் இதை உள்நுழைக்க சிவகாசி பண் ரசிகர்கள் சார்பில் கேட்டு கொள்கிறோம்😋😋😋
ஆக்சுவலா கொறிக்க ஒண்ணு ; பைக்குள்ளாற போட்டு அனுப்ப இன்னொன்னு என்பதே கணக்கு சார் ! But நண்பர்களின் எண்ணிக்கை நம் யூகத்தைக் காட்டிலும் அதிகமாகிப் போனதால் ஏக் மட்டுமே சாத்தியமானது !
Delete@ விஜயன் சார்,
ReplyDeleteஈரோடு வாசகர் சந்திப்பு சிறப்பாக நிகழ்ந்தததில், குறிப்பாக நமது சீனியர் எடிட்டர் அவர்களுக்கு தெம்பூட்டி, அவரின் உடலையும் மனதையும் தேற்றும் வகையில் இந்நிகழ்வு அமைந்ததில் மிக மிக மகிழ்ச்சி! குழந்தைகளின் கைகளில் மொபைல்கள் தவழும் முன்னரே, அவர்களுக்கு காமிக்ஸ் புத்தகங்களை அறிமுகம் செய்து விடுங்கள் என்ற சிறப்பான கருத்தைக் கூறி இருக்கிறார்! முத்துவுக்கு கை கொடுத்த கையாக இருந்த இரும்புக் கையையே அவருக்கு பரிசளித்தது தரமான செய்கை!
ஐயா கருணையானந்தம் அவர்களும், அவரது எழுத்துக்களை போலவே எளிமையாகவும், எதார்த்தமாகவும் பேசியது இனிமை!
நீங்கள் (விஜயன்) ஒவ்வொரு வரி பேசும்போதும், "நான் பாத்து வளர்ந்த பசங்க" என்ற பூரிப்பைக் காண முடிந்தது :) அப்படியே உங்க பையரையும் கொஞ்சம் பேசச் சொல்லி இருக்கலாம்!
@ நண்பர்கள்,
ஸ்டாலின், ஈரோடு விஜய், அகில் மற்றும் சந்திப்பைச் சிறப்பாக ஒருங்கிணைத்த, நேரலையில் ஒளிபரப்பிய, நிதியளித்த, பணியாற்றிய மற்றும் பங்கேற்ற அனைத்து காமிக்ஸ் நண்பர்களுக்கும், வாழ்த்துகளும் நன்றிகளும்! இந்த ஒருங்கிணைப்பு அனுபவம், அடுத்த ஆண்டு விழாவை மென்மேலும் சிறப்பிக்க வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை!
சிரிப்புக்கு மட்டும்:
எடிட்டர் PBS ரசிகர் என்று யாராவது சொல்லி இருந்தால், என் நினைவுக்கு P.B.ஸ்ரீனிவாஸ் தான் வந்திருப்பார்! ஆனால் அவரோ, "எடுத்துக்கோ எடுத்துக்கோ, அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ" என்று தற்போது விளம்பரங்களில் பாடி வரும் PBS-இன் இரசிகராக இருப்பதை, ஒரு சிலர் தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள் போல! :-)
ஒரு வெள்ளந்தி மனசை இன்னொரு வெள்ளந்தியால் தானே புரிஞ்சுக்க முடியும் கார்த்திக் ?! அம்புட்டு பேருக்கும் அது சாத்தியமாகுமா - என்ன ?
Deleteநன்றிகள் கார்த்திக்! நீங்களும் வந்திருந்தா விழா இன்னும் களைகட்டியிருக்கும்!!
Deleteகாத்திருப்பது லயனின் ஆண்டு # 40 !
ReplyDeleteகச்சேரியினை ஆரம்பிக்கலாமுங்களா 👍👍👍👍🎉🎉🎉💯💯💯
கார்சனின் கடந்த காலம் :-
ReplyDelete(மறுபதிப்பிக்கோர் மறுபதிப்பு)
*கதைச்சுருக்கம் :தன்னை திர்த்துகட்ட நினைத்த நபரின் கதையை முடிக்கும் கார்சனுக்கு , அவன் பாக்கெட்டில் கிடைத்த துண்டு செய்தித்தாள் மூலம் பழைய நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. வில்லருக்கு விசயத்தை தெரிவிக்கச் சொல்லிவிட்டு., பழைய எதிரிகளை சந்திக்க கிளம்பிவிடுகிறார் கார்சன்.
*கார்சனுடன் சேர்ந்து கொள்ள செல்லும் வழியில் மகனுக்கு கார்சனின் கடந்த காலத்தை விவரிக்கிறார் வில்லர்.கடந்த காலம் நிகழ்காலம் ரெண்டும் கலந்துகட்டி விறுவிறுவென செல்லும் வில்லரின் கதை சொல்லும் பாணி.!அந்நாளைய மான்டனாவின் பன்னாக் நகரம். சுற்றிலும் தங்கம் விளைந்த சொர்க்கபூமி.
*தங்கத்தை சம்பாதிக்க இரண்டே வழிகள். நாள்முழுதும் பாடுபட்டு தோண்டி எடுப்பது ஒரு வழி, தோண்டியதை துப்பாக்கியை காட்டி ஆட்டயை போடுவது அடுத்த வழி. அப்படி ஆட்டை போடும் "அப்பாவி " கும்பலை வேரறுக்க ரேஞ்சர் கார்சன் சுயஅடையாளத்தை மறைத்து பன்னாக்கில் வசிக்கிறார்.
*மெல்ல மெல்ல முடிச்சவிழ்க்கப்படும் மர்மத்தில் பேரதிர்ச்சியாய் அப்பாவிகளின் தலைவன் , பன்னாக்கின் ஷெரீஃப்பும் தனது நெருங்கிய நண்பனுமான ரே க்ளம்மன்ஸ் என்பது கார்சனுக்கு தெரியவருகிறது.ஆனால் க்ளம்மன்ஸோ கார்சனுக்கும் அப்பாவி கும்பலுக்கும் மொத்தமாய் அல்வா வழங்கிவிட்டு மொத்த தங்கத்தோடு தப்பிவிடுகிறான்.
*க்ளம்மன்ஸ்., மீண்டும் பன்னாக் , வந்திருப்பதை அறிந்த அப்பாவிகள் அவரை பழிதீர்க்க ஒன்று கூடீயிருக்கும் வேளையில் கார்சனும் பன்னாக் வந்தடைகிறார். வில்லர் அப்பாவி கும்பலுக்குள் ஐக்கியமாகிவிட., கார்சன் க்ளம்மன்ஸுடன் சேர்கிறார். அப்பாவிகள் பிணைக்கைதியாக க்ளம்மன்ஸ் மற்றும் லினாவின் மகளான டோனாவை பிடித்துக்கொண்டு க்ளம்மன்ஸை வஞ்சம் தீர்க்க காத்திருக்கும் வேளையில்.,
*வில்லர் , கார்சன்., கிட்., க்ளம்மன்ஸ் குழு அப்பாவிகளை நிர்மூலமாக்கி டோனாவையும் தங்கத்தையும் மீட்டுவிடுகின்றனர்.காலங்காலமாக மாறத விதிமுறைப்படி வில்லன்கள் இறந்துவிட., ஹீரோ குழுவினர் கும்பலாக சிரித்தடி போட்டோ எடுத்து கதையை சுபமாக முடித்து வைக்கின்றனர்.
Delete*இக்கதை கொண்டாடப்படும் காரணங்களில் சில. :- நண்பனுக்காக எதையும் செய்வேன் , என்று அடிக்கடி கூறும் ரே க்ளம்மன்ஸ்., நண்பர்களை காப்பாற்ற உயிரையே இழக்கும் இடம் ஒன்று போதும். கெட்டவனுக்குள்ளும் நட்பு இருக்கும் , சூழலுக்கேற்றார் போல் நட்பின் முக்கிய்த்துவம் மாறுபடும். நண்பனைக் காப்பாற்ற உயிரையே விலையாக கொடுத்த க்ளம்மன்ஸ்தான்., நண்பனால் தனக்கு ஆபத்து வரலாம் என்றெண்ணி., அந்த நண்பனையே காவு கொடுக்க துணிகிறான். நட்பின் பல பரிமாணங்களை மிக அழகாக சொல்லிய காவியம்
*பாடகி லினா மேல்., கார்சன் கொண்டிருந்த ஒரு தலைக் காதல், ரொம்பவும் ரம்மியமான ஒன்று. லினாவின் காதல் ரே க்ளம்மன்ஸ் மீதே எனத் தெரிந்தாலும்., காதலை வெளிக்காட்டாமலேயே தொடரும் கார்சன் , கண்களின் ஓரம் நீர்கோர்க்க வைக்கிறார்.
*நான் தனித்திருப்பது தெரிந்திருந்தால் என்னைத்தேடி வந்திருப்பீர்களா? என்ற லினாவின் கேள்விக்கு., மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன் என்ற கார்சனின் பதிலில் எத்தனை சஞ்சலங்கள். உன் குழந்தையின் தந்தையை காப்பாற்றவே என்னை பின்னந்தலையில் தாக்கியிருக்கிறாய் என்று புரிகிறது லினா என கார்சன் சொல்லும்போது காதலியின் மனம் வேறொருவனுக்குச் சொந்தம் என்ற கார்சனின் ஏமாற்றம் கலந்த ஆதங்கம் தெளிவாக தெரிகிறது.
*க்ளம்மன்ஸை தொடரவிடாமல் லினாவால் பின் மண்டையில் தாக்கப்பட்டது., இன்னும் வலிக்கிறது என்று சொல்லும் இடத்தில் கார்சனின் காதலின் வலி நமக்கும் புரிகிறது.மீண்டும் லினாவை பாடச்சொல்லி கூட சேர்ந்து பாடுவது ஒன்றே லினா மேல் கார்சனுக்கிருக்கும் காதலை ஆணித்தரமாக நிரூபிக்கிறது. முக்கோண காதலையும் மிக அழகாக சொல்லிய காவியம் இது.
* "தேசஞாணம் கல்வி ஈசன் பூசையெல்லாம் காசுமுன் செல்லாதடி குதம்பாய் காசுமுன் செல்லாதடி., ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் காசுக்கு பின்னாலே குதம்பாய் காசுக்கு பின்னாலே " என்ற உடுமலை நாராயண கவியின் வைரவரிகளுக்கு இக்கதை மிக அற்புதமான உதாரணம். உதாரண புருசன் - ரே க்ளம்மன்ஸ்.
*தங்கத்திற்காக., உயிர் நண்பனையே கொல்லச் சொல்கிறான். அந்த தங்கத்தை தேட்டை போடுவதில் அவனுக்கு உதவிய அத்தனை நண்பர்களுக்கும் நாமம் சாத்துகிறான். காதலியை முழுமாத கர்ப்பினியாக தவிக்கவிட்டு ஓடுகிறான். இறுதியாக புதைத்த தங்கத்தை தோண்ட உதவியர்கள் இருவரையும் கூட இறுதிப் பயணம் அனுப்பிவிடுகிறான். பணத்தாசை பத்தாயிரம் செய்யும் என்று மிக அழகாக சொல்லிய காவியம்இது.
*பொன்னாசையால் நட்பு காதல் விசுவாசம் அனைத்துக்கும் துரோகமிழைக்கும் க்ளம்மன்ஸ்., புத்திர பாசத்திற்காக அந்த தங்கத்தையே தாரைவார்க்க தயாராகிறான். பெற்ற பிள்ளைகளுக்கு சொத்தை கொடுத்துவிட்டு தெருவில் நிற்க்கும் எத்தனையோ பெற்றோரை நாம் பார்த்திருப்போம் . ஆகவே பிள்ளை பாசத்திற்க்கு முன் பொன் பெரிதல்ல என்பதையும் மிக அழகாக சொன்ன காவியம் இது.
*பூன்., வாகோ டோலன்., ஒற்றைக்கண்ணன்., பில்லி க்ரைம்ஸ்., ரோஜர் லாவல்., செஸ்டர்., ஜானி லேம்., அக்கவுண்டன்ட் லேரி , டோப்ஸ் சகோதரர்கள் ஸ்கின்னர் மற்றும் பல கொடூர வில்லன்கள் அப்பாவிகள் என்ற பெயரில். சங்கேத பாஷைகள்., சிவப்பு ஸ்கார்ஃப்., கைகுலுக்கும் விதம்., ஈவிரக்கமற்ற கல்மனசு என காலத்திற்க்கும் மறக்க முடியாத பாத்திரப் படைப்புகள் இவர்கள். கூட இருந்து குழிறித்த க்ளம்மன்ஸின் கையாட்களின் கொலை முய்ற்ச்சியில் இருந்து கார்சன் தப்பும் சம்பவம் ..
Delete*வில்லரும் கிட்டும்., வழியில் சந்திக்கும் இரு அப்பாவிகளிடம் மோதும் கட்டம்.,டோனாவை கிட்வில்லர் காப்பாற்றும் சம்பவம்., கையில் துப்பாக்கி இல்லாமல் அப்பாவிகளின் மத்தியில் வில்லர் கலக்கும் கட்டம்.,பாழடைந்த நகரத்தில் நடக்கும் பயங்கர க்ளைமாக்ஸ் மோதல் என பரபரப்பான ஆக்சன்களையும் பஞ்சமில்லாமல் மிக அழகாக சொல்லிய காவியம் இது
*காலத்தால் அழியாத காவியமாம் கார்சனின் கடந்த காலத்தின் சிறப்புகளைப் பற்றி இங்கே நான் குறிப்பிட்ட சங்கதிகள் சில. சொல்லப்பட வேண்டிய சமாச்சாரங்கள் பல. டெக்ஸ் வில்லரின் ஆகச்சிறந்த கதைவரிசையில் என்மனதில் என்றென்றும் நீங்கா முதலிடம் பிடித்திருக்கப்போவது இந்த காவியம்தான். நன்றிகள் பல.!!!
---------கிட் ஆர்டின் கண்ணன்.
*****-------------*****------------*****----------*****
பல்லடம் பக்கமா இருக்கிற ஒரு சீட்டாட்டத்தின் பெயர் கொண்ட பெருமகனுக்கு இந்த அலசலை அனுப்ப ஏதாச்சும் கூரியர் கீதா guys ?
Delete😆😆
Delete////பல்லடம் பக்கமா இருக்கிற ஒரு சீட்டாட்டத்தின் பெயர் கொண்ட பெருமகனுக்கு இந்த அலசலை அனுப்ப ஏதாச்சும் கூரியர் கீதா guys ?///
Deleteசார், இந்த அலசலை எழுதி அனுப்பியதே கூட அந்த சீட்டாட்ட பார்ட்டியாக இருக்கலாமில்லையா?!! ;)
குர்நாயரே...
Deleteபுஹாஹாஹாஹாஹா.....
சூப்பர்..சூப்பர் மாமா....
Deleteகார்சனின் கடந்த காலத்துக்கு மிகச்சிறந்த விமர்சனம்....
மாம்ஸ்..😍
Deleteசார் .தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் . நாள் முழுவதும் இருக்கும்படியாக (அல்லது முதல்நாளே வந்திருந்து களப் பணி)எனது திட்டமிடலைசொன்னேன் . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteநீங்க வந்ததே போதும் சார்...செம மகிழ்ச்சி !
Deleteகார்சனின் கடந்த காலம் இதழ் தந்த பிரமிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கின்றேன். இதழ் அமைப்பும் வண்ணமும் சித்திரப் பிரமாண்டமும் ஒரு மிடறு தூக்கலான அழகு தான். ஏற்கனவே கருப்பு வெள்ளை வண்ணம் எனப் படித்தது தான்.இருந்தாலும் மேக்ஸியில் ஹார்ட்கவரில் பக்கங்களை பரபரவென புரட்ட வைத்த மாயம் தான் என்ன ?! பன்னாக்கில் நானுமே உலவித் திரிந்தேன் என்பதை மறுக்க முடியாது. கார்சனின் காதலியை நானும் காதலித்தேன். இதுவொரு காமிக்ஸ் காவியம். ஹாட்ஸ் ஆப் எடிட்டர் சார்.
ReplyDelete//கார்சனின் காதலியை நானும் காதலித்தேன்//
Deleteகுதிரையைப் போட்டுப்புட்டு சின்னமனுர் வரைக்கும் ஒரு நடை வந்துப்புடுவார் சார் ; உசார் !!
Sir - for Lion 40th year the following would be good:
ReplyDeletea) One 6 in 1 Hard Bound Lucky Luke Maxi
b) Another Tex Maxi featuring favourites
c) Spider reprints (that featured in Lion Comics) along with Archie in Maxi size
d) If possible - republish of classic lion stories (various star-cast) - like the Diabloic story No 1
Basically 12 months of featured Lion classic and new hero stories as a line - including a KATHAMBA GUNDU Kodai malar
Tagine - 40 years of Lion Comics with the logo is a must in all the books
a)Rs.725
Deleteb)Rs.350
c)Rs.300
d)Rs.100 each
இப்போவே பட்ஜெட் கண்ணை கட்டுதே சார் & இன்னமும் மெயின் பிக்சருக்கான கணக்கே சேரலை !!
a and b
Deleteசெம பிரமாதம்.
இப்பவே பணம் கட்டலாமா.
a க்கு 1000 லைக்ஸ்..😍
Delete1. ரெகுலர் சந்தா (லயன், முத்து, V, & S70 வகையறா
Delete2. புத்தக விழா ஸ்பெசல் 1 (ஆன்லைன்)
3. புத்தக விழா ஸ்பெசல் 2 (ஈரோடு)
4. புத்தக விழா ஸ்பெசல் 3 (சென்னை)
மேற்கண்டவற்றை சந்தால இணைக்காம புத்தக விழா ஸ்லாட்டுக்குன்னு திட்டமிட்டுக்கலாம். ரெகுலர் சந்தாவில் இருந்துகிட்டு புத்தக விழாக்களுக்கு வந்துவிட்டு வெறும் கைய வீசிட்டு போக மிகுந்த சங்கடமா இருக்கு. எனவே புத்தக விழாக்களுக்கென கண்டிப்பாக ஸ்பெசல் இதழ்கள் குறிப்பாக இந்த வருடம் வந்தது போல் பழசு பாதி புதுசு மீதி கலந்த கலவையாக கட்டாயம் இருத்தல் வேண்டும்.
ஸ்பெசல் இதழ்கள் இல்லாத புத்தக விழாக்களை நினைத்துப
பார்க்கவே கர்ண கொடூரமாக இருக்கிறது. ஜனவரி, மே, ஆகஸ்ட் என தகுந்த இடைவெளியில் அடுத்த ஆண்டும் போட்டுத் தாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
And then that July 40th year annual - 1000 pages - hard bound - maxi size - he he !
ReplyDeleteஇதுவும் சூப்பர்...
Deleteஸ்டீல் ID மாறி வந்துப்புட்டாரோ ?
Deleteஇரும்புக்கை நார்மன் கதை அருமை.
ReplyDeleteஇப்போதுதான் முதல் முறையாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மற்ற கதைகளையும் தொடர்ந்து வெளியிடுங்கள் சார்.
இவற்றை முன்னமே வாசித்தது கிடையாதா சார் ? வியப்பே !!
Deleteசெப்டம்பர் தோர்கல் ,நெவாடா,மிஸ்டர் நோ. +கிர்பி .....
ReplyDelete,அதுவந்து.....நான் என்ன சொல்ல வர்றேன்னா. ..... சார்.....டெக்ஸ் இல்லைங்களே
அது வந்து .... 330 பக்கங்கள் - மாயன் + 330 பக்கங்கள் கா.க.கா.சார் ! ஆக மொத்தம் எம்புட்டு ஆவுது - ஆங் ...660 ஆச்சா ? இத வைச்சே ஒரு மாசத்த ஒட்டிப்புட முடியும்லே ?
Deleteஅப்புறமா ஆக்டொபர்ல 700 பக்கங்கள் ; நவம்பரில் 360 ---- அல்லாமே ' தல'தான் ! போதாது சார் ?
முடியாது முடியாது...
DeleteAtleast 10 பக்க டெக்ஸ் கதையாவது வெளியிடுங்கள் எடிட்டர் சார்..
இல்லைன்னா, அந்த மாசம் எதையோ பறி கொடுத்தாப்புல இருக்கும்.
ஒரேயடியாக தீபாவளிதான்
அடுத்த டெக்ஸ் னா ... நாங்க என்ன செய்வோம்...
ஹைய்யா புது பதிவு...
ReplyDeleteகொஞ்சம் தாமதமா வந்துட்டேன் போல...
DeleteThanks for sharing the video in YouTube.
ReplyDeleteCredit goes to Akhil & team sir...
DeleteThorgal valiya valiyavae
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteலயன் 40 ற்கு எனது Choice ''எத்தனுக்கு எத்தன் " அதே சைசில் அதே அட்டையுடன் அல்லது
ReplyDelete"சைத்தான் விஞ்ஞானி "அதே சைஸ் அதே அட்டையுடன்
Deleteநல்ல பெரிய சைசில், தெளிவாய் , வெறும் 50 ரூபாய் விலையில், ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னமே வெளியிட்டு, அதை இன்னமும் ஸ்டாக்கில் வைத்திருக்கிறோமே நண்பரே ? மறுக்கா அதை குட்டி சைசில் வெளியிட்டு என்ன செய்வதோ ?
லயன் 40 வது வருடம் இரட்டை வேட்டையர்களின் மொத்த கலெக்ஷனை ஒரே புத்தகமாக ஹார்ட் பவுண்டில் பார்க்க ஆசை புனித மானிடோ அருளும் ஆசியும் விஜயனாரின் கருனையும் கிடைத்தால் நடக்கும் ,🙏🙏🙏
ReplyDeleteஎனக்கு அம்புட்டு பேராசை லாம் கிடையாது ஜி.இரண்டு கதைகள் மட்டும்(. முக்கியமாஆப்பிரிக்க சதி ) ஒரே புத்தகமாக கலரில் வந்தாலே போதும் .ஆசிரியர் மனசு வைப்பாரா .
ReplyDelete// And காத்திருப்பது லயனின் ஆண்டு # 40 !
ReplyDeleteகச்சேரியினை ஆரம்பிக்கலாமுங்களா ? //
அருமை சார்,ஸ்பைடர் இதழ்களில் ஏதேனும் மறுபதிப்பிடும் திட்டமிருப்பின் பாட்டில் பூதம் இதழை மறுபதிப்பு செய்யும் திட்டத்தை கொஞ்சம் அன்புடன் பரிசீலிக்கலாமே சார்...
சமீபமா கோவை பக்கமா போனீங்க ? அல்லங்காட்டி கோவையிலிருந்து ஆராச்சும் விசிட்டர்ஸ் சார் ?
Deleteசார் லயனுபக்கம் போனா ...அதும் 40 வருடத்துக்கு முன்னால போனா...
Deleteதன்னால வராதா
// ஆண்டவன் அருளால் பையன் இப்போது தேறி வருகிறான், இரண்டொரு நாட்களில் நலமாய் வீடு திரும்பி விடுவான் என்ற சேதி இன்று கிடைத்த பிற்பாடு தான் எழுத மனம் ஒப்பியது ! //
ReplyDeleteநலம் உண்டாக விரும்புகிறது மனம்...
// இம்மி சந்தேகமுமின்றி அவற்றுள் TOP இடங்களை பிடித்திருந்தது மனோஜ் + அகில் என்ற அந்த இளம் புயல்கள் அன்று நிகழ்த்திக் காட்டிய அசாத்திய ஜாலங்களையே ! //
ReplyDeleteஅருமை,அருமை...
லயன் 40 ஸ்பெஷல்
ReplyDeleteகா.க. காலம் சைஸில் 4 கதைகள்
ஒய் நாட்?
லயனின் முதல் நாயகி!
ஆளுக்கு ஒரு ஆசை:-)
படிக்கும்போது லயனின் முதல் ஆசை நாயகி என்று படித்து விட்டேன் :-)
DeleteRADJA@ :-)))
DeleteRadja..
Deleteஅதுவுந்தேன்.. இதுவுந்தேன்! ;)
உண்மை நம்மையறியாமல் வருங்றது உண்மைதான
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteஅந்த அல்லோகளப்பட்ட இரவுக்குப் பின் ...வாகோடோலனை பொது ஜனம் வம்பிழுக்க....அவனை சுட தயாராகும் காட்சி..அந்த பொது ஜனத்துடன் வந்த நபர் மாரியாத்தா காளியாத்தாவ வேண்டியபடி வியர்வையொழுக கையறுநிலையில்..கார்சன் அதே கேள்வியை நானும்தான் கேட்கிறேன் என வர...அந்த பொது ஜனம் பேசாம நழுவும் காட்சி...அதைத் தொடர்ந்து நானும்தான் கேட்கிறேன் என கார்சனை கேள்வி கேட்கும் வாகோ...ஜாடையாய் எல்லாம் மாறி விட்டது என எச்சரிக்கும் அப்பாவி தலைவன்...இவன்தான் சொல்வான் என ஜானி லேம் குதிரையை பிடித்தபடி காது கொடுக்கும் கட்டம்...நம்மோடு அதாவது இரண்டாவது முறைக்கு மேல் படித்த எனைப் போன்றோரும் கண்டுபிடித்தது போல சாதாரணமா சொல்லும் கிட்...கலிபோர்னியா போல என வாகோவ தாக்கும் கார்சன் ..கார்சனை கண்டு வாகோ துப்பாக்கிய தூக்கலன்னு நினைச்சா....அவன் தயார்தான்னு அடுத்த கட்டம் காட்டும் முன் வந்து தடுக்கும் க்ளம்மன்ஸ்....கார்சன் எசகுபிசகா சிக்கித் தவிக்கும் தெறிக்கும் பக்கங்கள்....என எல்லாமே இதான் கதைன்னு காட்டக் காட்ட....ஆனாலும் எத்தனை முறை படித்தாலும் சுவாரஸ்யத்தை கூட்டும் இக்கதைக்கு இது ஓர் அற்புத மரியாதை எல்லாத்துலயும் நம்ம லயனால்...வழக்கமான இப்படிதான் நடக்கும்னு முதல் பக்கத்லயே தெரிஞ்சாலும் பாயாச ரம்மிய சார் கையெழுத்துன்னு எல்லார் முன்னாடியும் தயங்காம ஒப்புக் கொள்வத போல காககா லத்துல கையெழுத்து கேட்ட ரம்மிய போல ...முதலில் எதிர்த்த ராகவன் போன்றோரை மாத்தி காககா சாதாரணமா தன்னுள் வைத்தது ஏராளம் ... இதுக்கு தயாரிப்பு தரம் இப்ப முதன்மையான பட்டாலும்...நம்ம காமிக்ஸ் காவியத்தில் ...இதிகாசத்தில் ஒன்றான இக்கதை மேல் ஈர்ப்பின் காரணத்த எல்லா பாத்திரங்கள் மேல் போட்டபடி அப்பாவிகள துரத்துவோம் கார்சன் குதிரை மேலேறி....குதிரைன்னதும்தா நினைவு....என்னப்பிரியாதுன்னு குதிரையோடு வண்டில வரும் கார்சன்...குதிரை மிதக்கும் போது சாதாரணமா செல்வாரே அது பத்தி அலசுவோமா
ReplyDeleteமுப்பது ரூபாய்க்கு மூணு புத்தகம்... (மூணு புத்தகம் முப்பது ரூபாய் அல்ல)
ReplyDeleteசிறுத்தை மனிதன்..
வேங்கையோடு மோதாதே..
வல்லவனுக்கு வல்லவன்..
மூன்றில் சிறுத்தை மனிதன் கதை கொஞ்சம் பரவாயில்லை.. அந்த சித்திரங்கள் நம்முடைய நாஸ்டால்ஜியாவை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிடுகின்றன..!
ஆனால் இந்த சூப்பர்ஹீரோ டைகர் மிடீலே.... அந்தகாலத்துலயே தெறிச்சி ஓடியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.!
இந்த குட்டியூண்டு சைஸ் செம்ம க்யூட்டா இருக்கு.!
டைகரை ஏறக்கட்டிட்டு வேற மாதிரி.. ஹீரோயிசம் இல்லாத.. வித்தியாசமான கதைகளை ட்ரை பண்ணினால் இந்த சைஸூம் தனித்தடத்தில் மாதம் ஒன்றோ இரண்டோ வெளியிடும் அளவுக்கு வளரும்னு மெஃபிஸ்டோ சொல்றாருங்கோ.!!