Powered By Blogger

Friday, August 04, 2023

Welcome to ஈரோடு !!

 நண்பர்களே,

வணக்கம். தொலைவில் தூரத்துப் புள்ளியாய்த் தென்பட்ட ஈரோட்டு புத்தகத் திருவிழா இதோ, இன்று மாலை துவங்கிடவுள்ளது & நமது சந்திப்பானதும் நாளைக் காலைக்கென காத்துள்ளது !! Time flies....and how !!!! மின்னலாய் ஓடி வருவன நாட்கள் மாத்திரமல்ல, மாமூலான நமது சந்திப்பினை இம்முறை முத்து பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டமாகவும் முன்னெடுத்துச் சென்றிட விழையும் நண்பர்களுமே !! போன ஞாயிறே கிரிக்கெட் திருவிழாவோடு போட்ட பிள்ளையார் சுழியினை நண்பர்கள் இம்முறை வேற லெவெலுக்கு எடுத்துச் சென்று கொண்டுள்ளனர் ! நிறைய போனில் பேசுவதைத் தாண்டி எனது பங்களிப்பு இக்கட பூஜ்யமே ; தம் வீட்டு விசேஷமாய் எண்ணி ராப்பகலாய் பணிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து வருகின்றனர் ! நாளை காலை ஹாலுக்குப் போய்ப் பார்க்கும் போது  தான் நண்பர்களின் உழைப்பின் முழுப் பரிமாணமும் புலப்படும் !!  Phewww.....! எதெற்காக இந்த விழா வெற்றி காண வேணுமோ - இல்லியோ,நண்பர்களின் முயற்சிகளுக்காகவேணும் வெற்றி கண்டிட வேண்டும் !! புனித மனிடோ  அருள்வாராக !! 

இங்கே நமது ஆபீஸுமே 2 நாட்களாய் போர்க்கோலத்தில் தான் காட்சி தந்து வருகிறது !! ஈரோடு ஸ்பெஷல்ஸ் + சந்தா புக்ஸ் +  V காமிக்ஸ் போன மாதம் லேட்டாய் சந்தாத்  தொகைகள் அனுப்பியோருக்கான புக்ஸ் என்று தினுசு தினுசான பேக்கிங் ஓடி வருகிறது ! அப்பாலிக்கா கார்சனின் கடந்த காலத்தில் போட்டோ போட்டுக் கேட்டவர்கள் ; ஈரோட்டில் நேரில் பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளோர்  ; மாயாவி வேரியண்ட் கவருடனான புக்ஸுக்கு ஆர்டர் தந்துள்ளோர்  என்றும் இன்னொரு கத்தை உள்ளது ! ஒவ்வொன்றையும் பிரித்து பேக் செய்வதென்பது நல்ல நாளைக்கே நாக்குத் தொங்கச் செய்யும் சமாச்சாரம் ; இந்த அழகில் front office-ல் திருமதி.ஜோதி ஈரோட்டில் புத்தக விழாவில் இருக்க, ஏதேதோ சர்க்கஸ் அரங்கேறி வருகிறது  ! அண்ணாச்சி திடு திடுப்பென டாட்டா காட்டி விட்டுப்  புறப்பட்டிருக்க, இன்னொரு ஆளை போட்டு விட்டாச்சு தான் ; but ஆபீசின் பேலன்ஸ் திரும்ப கொஞ்ச காலமாகும் என்பது அப்பட்டம் ! Anyways - ஸ்டெல்லா சோலோவாய் செய்து வரும் சாகசங்களின் பலனாய் நாளை பார்சல்கள் உங்களை எட்டிப் பிடித்திடுமென எதிர்பார்க்கலாம் ! 

And lest I forget, சந்தா நண்பர்களுக்கென பிராமிஸ் செய்திருந்த விலையில்லா 4 இதழ்களில் முதலாவதும் இம்மாத சந்தா பார்சல்களில் இடம்பிடித்திடும் ! விங்-கமாண்டர் ஜார்ஜின் black & white சாகசமாய் "புதையலுக்கொரு பாதை" தான் இந்த இதழ் ! இது "நெப்போலியன் பொக்கிஷம்" சூப்பர் ஹிட் கதைக்கு முன்பான ஆல்பம் என்பது கொசுறுச் சேதி ! Prequel to a superhit !!  நீங்கள் சந்தாக்களின் அங்கமாக இல்லாத பட்சத்தில், இந்த குட்டி புக்கை வாங்க எண்ணினால் டிசம்பரில் சாத்தியமே ! சுப்ரீம் 60ஸ் வரிசையினில் - விங் கமாண்டர் ஜார்ஜ்-ஸ்பெஷல் - 1 வெளியாகும் தருணத்தில் இதை சின்னதொரு விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் !

And yes - ஈரோடு ஸ்பெஷல் இதழ்களுக்கு நீங்கள் முன்பதிவு செய்திருக்கும் பட்சத்தில் மூணரை கிலோ இடையிலான பார்சல் நாளை உங்கள் இல்லங்களில் லேண்ட் ஆகிடும் ! அறிவிக்கப்பட்ட 5 ஸ்பெஷல்  இதழ்களுள், கிராபிக் நாவலான "விதி எழுதிய வெள்ளை வரிகள்" மாத்திரம் இந்தப் பார்சலில் இடம்பிடித்திருக்காது ; அதன் எடிட்டிங்கில் கொஞ்சம் தாமதம் என்பதால் அச்சு + பைண்டிங் உரிய நேரத்துக்குள் பூர்த்தியாகிடவில்லை ! So அந்த ஒற்றை புக் மட்டும் அடுத்த கூரியரோடு பயணிக்கும் guys ! ரொம்பவே சாரி ! 

Professional கூரியர் வேண்டாமென்று சொல்லியிருந்தோர் நீங்கலாய், பாக்கி அனைவருக்குமே இம்முறையும் Professional-ல் தான் அனுப்பியுள்ளோம் என்பதால், நாளை ஈரோட்டில் புக்ஸ் ரிலீஸ் காணும் தருணத்தில் உங்களிடமும் புக்ஸ் இருந்திட வேண்டும் ! புனித மனிடோ அருள்புரிவாராக !

And of course, பெரும் தேவனின் கருணை நாளையும் நமக்கு முன்னெப்போதையும் விட அதிகமாயத் தேவைப்படும் - simply becos இம்முறைக்கென அரங்கேறி வரும் திட்டமிடல்களும், மெனெக்கெடல்களும் extraordinary ! நாளை காலை 9-30-க்கு ஈரோட்டிலுள்ள OASIS அரங்கினில் உங்களைச் சந்திக்க பேராவலுடன் காத்திருப்போம் folks ! மதியம் வரை இருந்து, விழாவையும், விருந்தையும் சிறப்பிக்க வேணுமாய் அன்போடு வரவேற்கிறோம் ! Please do drop in !!    

Bye all....see you around !! Have a super cool weekend !!


237 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. Have fun and enjoy the day friends! Make this function as grant suggess friends!

    ReplyDelete
    Replies
    1. ///Have fun and enjoy the day friends///
      Have bun - அப்படீன்னு எழுதியிருந்தீங்கன்னா சூப்பரா இருந்திருக்கும்!

      Delete
    2. Bun அவ்விட வந்தாச்சூ !

      Delete
  3. // நாளை ஈரோட்டில் புக்ஸ் ரிலீஸ் காணும் தருணத்தில் உங்களிடமும் புக்ஸ் இருந்திட வேண்டும் ! //
    அருமை,மகிழ்ச்சி...

    ReplyDelete
  4. Have a great meeting folks ! Enjoy the occasion after so many years !! Would be good if someone does an youtube live in our official channel - Editor to note.

    ReplyDelete
    Replies
    1. youtube live உண்டு ராக் ஜி! விவரங்கள் நாளை காலையில்!

      Delete
  5. நா ஈரோடு வந்துட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. @புன்னகை ஒளிர்..😃

      ஜி..நாளை நேரில் சந்திக்க பேராவலுடனும், பெரு மகிழ்ச்சியுடனும்..💐💐

      Delete
    2. வருக வருக புன்னகை ஒளிர் ஜி!

      Delete
  6. அந்த மீம்ஸ் .. 😆😆😆😆😆

    ReplyDelete
  7. வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  8. // நண்பர்களின் முயற்சிகளுக்காகவேணும் வெற்றி கண்டிட வேண்டும் !! //
    விழா இனிதே நடைபெறவும்,புத்தக விழாவில் விற்பனை அதகளம் காணவும் வாழ்த்துகள் சார்...

    ReplyDelete
  9. வணக்கமுங்கோ 🙏🙏

    ReplyDelete
  10. விழா கொண்டாட்டங்கள் இனிதே சிறக்க, விற்பனையில் சாதனை புரிய மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. வாழ்த்துகள் அனைவருக்கும்

    ReplyDelete
  12. எதிர் பார்த்தோம். எதாவது ஒரு சர்ப்ரைஸ் இதழ் தருவீங்க அப்படினு.ஆனா இப்படி ஒரு(பவிங் கமாண்டர் ஜார்ஜ்)அதிரடியை எதிர்பார்க்கவே இல்லைங்க சார் .சத்தியமா நீங்க தெய்வம் சார்

    ReplyDelete
  13. ஆஹா சூப்பர் சார்....நெப்போலியன் பொக்கிசம் பல நண்பர்கள் சிலாகித்து இதழ்....ஆனா கிபா அடுத்த மாதம் வருத்தமின்னாலும் கார்சனுக்காக பரவால்ல....

    ReplyDelete
  14. ஆவலுடன் விடியலுக்காக ...

    ReplyDelete
  15. விலையில்லா இதழ்..

    சர்ப்ரைஸ் இதழ்..


    விங் கமாண்டர் ஜார்ஜ்..


    ஆஹா...அட்டகாசம் சார்..

    ReplyDelete
  16. அந்த have bun. ரவுண்ட் பன்னுங்களா

    ReplyDelete
  17. அந்த have bun ரவுண்ட் பன்னுங்களா

    ReplyDelete
  18. நாளைய கொண்டாட்டங்கள் சிறக்க வாழ்த்துகள். Have a blast friends .. :) please dont forget the live updates :) :)

    ReplyDelete
  19. முத்து
    பொன்விழா
    கொண்டாட்ட.....
    வாழ்த்துக்கள்
    அனைத்து
    நண்பர்களுக்கும்

    ReplyDelete
  20. காமிக்ஸ் பொன்விழா கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக சிறப்புடன் நடந்திடவும், ஈரோடு புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெறவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    ( நண்பர் ஈரோடு விஜய் அவர்கள் என்னை மதித்து தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தும், விழாவில் கலந்துகொள்ள இயலாத நிலை. Iam really sorry Vijay.)

    ReplyDelete
  21. விழா வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  22. அனைவரும் ஒன்று சேரும் விழா மகத்தான வெற்றி பெற , விற்பனை சிறக்க வாழ்த்துகள்!!!!

    ReplyDelete
  23. I am waiting for tomorrow meeting and meet all my friends

    ReplyDelete
  24. நாளை சந்திப்போம் நண்பர்களே... ❤️🙏

    ReplyDelete
  25. செம்ம பதிவு சார். அப்படியே உற்சாகம் கொப்பளிக்கிறது. எங்களுக்கும் அப்படியே பரவுகிறது. நாளை காலை உங்களையும், நண்பர்களையும் புத்தகங்களையும் சந்திக்க வெகு ஆவலுடன்.

    ReplyDelete
  26. பெண் : தந்தன தத்தன தையன தத்தன…
    தனன தத்தன தான தையன தந்தானா…

    ஆண் : ஆஹான்… லயனு இருக்குது முத்தும் இருக்குது…
    படித்து பார்க்க கிநா இல்லடி ராஜாத்தி…

    பெண் : லல லலலல லல லலலல லல…
    லாலல லாலல லலலா லாலாலா…

    ஆண் : லார்கோ இருக்குது ஸ்பின்ஆஃப் மிதக்குது…
    கதைக போட ஸ்லாட்டும் இல்லடி ராஜாத்தி…

    ஆண் : லயனு இருக்குது முத்தும் இருக்குது…
    படித்து பார்க்க கிநா இல்லடி ராஜாத்தி……
    லார்கோ இருக்குது ஸ்பின்ஆஃப் மிதக்குது…
    கதைக போட ஸ்லாட்டும் இல்லடி ராஜாத்தி…

    பெண் : ம்ம்ம்…

    ஆண் : புத்தகங்கள்…

    பெண் : நானா னா…

    ஆண் : காமிக்ஸானால்…

    பெண் : @ரி ச ரி@…

    ஆண் : @சம்மதம்@…

    பெண் : ம்ம்ம் ஹம்ம் ஹ்ம்ம்…

    ஆண் : நானாவேன்…புத்தகங்கள் காமிக்சானால்…
    சம்மதம் நானாவேன்…

    ஆண் : லயனு இருக்குது முத்தும் இருக்குது…
    படித்து பார்க்க கிநா இல்லடி ராஜாத்தி……
    லார்கோ இருக்குது ஸ்பின்ஆஃப் மிதக்குது…
    கதைக போட ஸ்லாட்டும் இல்லடி ராஜாத்தி…

    —BGM—

    பெண் : நனன நானா…

    ஆண் : கம் ஆன் சே புட் இட் அகைன்…

    பெண் : நனன நானா…

    ஆண் : ம்ம்ம்… சிரிக்கும் கார்ட்டூனும்…

    பெண் : தர நன தரர நானா…

    ஆண் : க்ரீக் மண்ணு ஆஸ்ட்ரிக்ஸ் திரட்டும்… ஓகே…

    பெண் : தானே தானே தானா…

    ஆண் : அப்படியா… தேவை வாசக பார்வை…

    பெண் : தத்தன தன்னா…

    ஆண் : நினைக்க வைத்து…

    பெண் : நான லல லலல லாலா…

    ஆண் : நெஞ்சில் நின்று ஈரோட்டில் வந்து…

    பெண் : நநன நநனனா…
    தன னா லல லா தன னா…

    ஆண் : பியூட்டிபுல்… மயக்கம் தந்தது யார்…
    ஸ்பைடரோ கார்சனோ சுஸ்கியோ…

    ஆண் : லயனு இருக்குது முத்தும் இருக்குது…
    படித்து பார்க்க கிநா இல்லடி ராஜாத்தி……
    லார்கோ இருக்குது ஸ்பின்ஆஃப் மிதக்குது…
    கதைக போட ஸ்லாட்டும் இல்லடி ராஜாத்தி…

    ஆண் : புத்தகங்கள்…

    பெண் : ஆஹாஹா…

    ஆண் : காமிக்சானால்…

    பெண் : ஆஹாஹா…

    ஆண் : சம்மதம்…

    பெண் : ஆஹாஹா…

    ஆண் : நானாவேன்…

    பெண் : ஆஹாஹா…

    —BGM—

    பெண் : இப்போ கேக்கலாம்…
    தனன தனன நானா…

    ஆண் : ம்ம்ம்… புதையல் பாதை மின்ன…

    பெண் : தன்ன நானா தனன நன்னா நன்னா…

    ஆண் : அதனை கண்டால் நெப்போலியன் பொக்கிசம் துள்ள…

    பெண் : தனன நான தனன நான தன்னா…

    ஆண் : அம்மாடியோ…
    தனன நானா தனன நானா தானா… ஆ…
    ரசிகர் நாடும் சைசில் ஆடும் கார்சன்…

    பெண் : சபாஷ்…

    ஆண் : கவிதை உலகம் கெஞ்சும்…
    லினாவை கண்டால் கார்சன் இதயம் கொஞ்சும்…

    பெண் : ம்ம்ஹ்ம்ம்…

    ஆண் : கொடுத்த சந்தாக்களில்…
    புது இலவசத்தை நீ அறிய…
    நான் உரைத்தேன்…

    ஆண் : கொடுத்த சந்தாக்களில்…
    புது இலவசத்தை நீ அறிய…
    நான் உரைத்தேன்…

    —BGM—

    பெண் : சிப்பி இருக்குது முத்தும் இருக்குது…
    திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது…
    சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை…
    பாடி கலந்திருப்பது எப்போது…

    பெண் : லயனு இருக்குது முத்தும் இருக்குது…
    கிநா பார்க்க நேரம் வந்தது இப்போது…
    லார்கோ இருக்குது ஸ்பின்ஆஃப் மிதக்குது கதைக…
    கூடி கலந்திருப்பது எப்போது…

    ஆண் : ம்ம் ஆஹாஹா…
    லலலா ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்… ஆஹாஹா

    ஆண் & பெண் : லலலா லலலா…
    லலலா லலலா…

    ReplyDelete
    Replies
    1. நெறய பேர் பலாப்பழ லாரியிலே ஏறியாச்சும் ராவோடு ராவா ஈரோட்டை காலி பண்றதா பேசிக்கிறாங்க கவிஞரே !

      Delete
  27. // சுப்ரீம் 60ஸ் வரிசையினில் - விங் கமாண்டர் ஜார்ஜ்-ஸ்பெஷல் - 1 வெளியாகும் தருணத்தில் இதை சின்னதொரு விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் ! // அப்போ விங் கமாண்டர் ஜார்ஜ் ஸ்பெஷலில்
    நெப்போலியன் பொக்கிஷம் இருக்கா சார்?

    ReplyDelete
  28. எடிட்டர் சார்..😍😘😃

    "இன்றைய Flash news":

    ஈரோடு குலுங்குகிறது..😍

    அலை..அலையாய் வரும் காமிக்ஸ் ரசிகர்கள்..😘😘

    நாளை காலை முத்து, லயன் & V காமிக்ஸ் மூலம் மூன்று தலைமுறைகளாய் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களை கட்டி போட்டிருக்கும் மும்மூர்த்திகளான எடிட்டர்களின் வருகைக்காக தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் படையெடுப்பு..😃😍👍👌✊

    ஓட்டல் ஓயாசிஸில் முத்துகாமிக்ஸின் 50 வது ஆண்டுவிழா கொண்டாட்டம் ..😍😃💐💐

    "நாளைய தலைப்பு செய்தியும் இதுதான்"..😃👍✊👌

    ReplyDelete
  29. மிகவும் அருமை எடிட்டர் சார் ...
    ஈரோடு புத்தக கண்காட்சி நன்றாக அமைய வாழ்த்துக்கள் ...
    என் ஆருயிர் நண்பன் பழனியை ரொம்ப மிஸ் பன்றேன் .....
    நாளை வரப்போகும் கூரியர் எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கான் ...
    இலவச அறவிப்புக்கு நன்றி .....

    ReplyDelete
  30. காமிக்ஸ் குடும்ப விழா இனிதே சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. ஈரோடு நிகழ்ச்சியோட லைவ் ரிலே உண்டுன்னு ஒரு நண்பர் சொன்னார். லிங்க் கொடுங்கள் ஐயா.. அப்படியாச்சும் என்னை மாதிரி வர முடியாமல் இருக்கிறவங்க கலந்துப்போம்..

    இருந்தால் பகிருங்கள் நண்பர்களே...

    முன்கூட்டியே எனது நன்றிகள்.

    ReplyDelete
  32. காமிக்ஸ் குடும்ப விழா இனிதே சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐💐💐💐

    ReplyDelete
  33. குழு: ஹோலா..ஹோலா..ஹோலலலா
    ஹோலா..ஹோலா..ஹோலலலா
    ஹோல.. ஹோலா
    ஹோல.. ஹோலா
    ஹோலா.. ஹோலா..ஹோலா..ஓஓஒ

    --Music--


    ஆ: பொன் விழா தேரில்
    சௌந்தர ராஜன் கருணையோ டானந்தமாகின்றான்

    பொன் விழா தேரில்
    சௌந்தர ராஜன் கருணையோ டானந்தமாகின்றான்
    முத்தோ வியின் நிழலில்
    லயனோ ரசிகனின் நினைவில்
    பணியாளத் தோழர் வாழ்த்தும் இதமே
    காமிக்ஸ் தேவனின் பொன்விழா நாளினில்

    பெ:பொன் விழா தேரில்
    சௌந்தர ராஜன் கருணையோ டானந்தமாகின்றான்

    பொன் விழா தேரில்
    சௌந்தர ராஜன் கருணையோ டானந்தமாகின்றான்



    ஹோலா.. ஹோலா..ஹோலா..ஓ
    ஹோலா.. ஹோலா..ஹோலா..ஓ
    ஹோலா.. ஹோலா.. ஹோஓஒ..லா
    ஹோலா.. ஹோலா.. ஹோஓஒ..லா
    ஹோல.. ஹோலா.. ஹோலலலா
    ஹோல.. ஹோலா.. ஹோலலலா




    ஆ: முத்து விழாவில் அன்பு வாசகர் நாமு/னும்
    நன்றி ராகம் பாடியே



    நண்பர்கள் நாடும் அந்த காமிக்ஸ்கதைதனில் தானோ
    விசயன் ஏவும் பாணமோ..
    நாமே வரவானோம் ..
    படிக்க சுக வேளை தாமே ..

    பெ: பொன் விழா தேரில்
    சௌந்தர ராஜன் கருணையோ டானந்தமாகின்றான்

    பொன் விழா தேரில்
    சௌந்தர ராஜன் கருணையோ டானந்தமாகின்றான்

    ஆ: முத்தோ வியின் நிழலில்
    லயனோ ரசிகனின் நினைவில்
    பணியாளத் தோழர் வாழ்த்தும் இதமே
    காமிக்ஸ் தேவனின் பொன்விழா நாளினில்

    பெ: பொன் விழா தேரில்
    சௌந்தர ராஜன் கருணையோ டானந்தமாகின்றான்
    பொன் விழா தேரில்
    சௌந்தர ராஜன் கருணையோ டானந்தமாகின்றான்

    Uploaded by @Shanthi20

    ஓஓஒ..
    ஹோலா.. ஹோலா..
    ஹோலா..ஹோலா.. ஹோலா..ஓ
    ஹோலா.. ஹோலா..
    ஹோலா.. ஹோலா..ஓஓஒ

    --Music--

    பெ: விழாவினில் தோழர் கருணை ஆனந்தோடு கூடி

    புகழ்பாட மனந் துள்ளுதே

    --Music--

    வாழ்த்தொலி மேளம் நட்பின் சங்கம தாளம்
    காமிக்ஸ் கோவில் பூஜையில்
    நானே வாழ்த்தானேன் ஈரோட்டில்
    சுப வேளை தானே..

    பொன் விழா தேரில்
    சௌந்தர ராஜன் கருணையோ டானந்தமாகின்றான்
    பொன் விழா தேரில்
    சௌந்தர ராஜன் கருணையோ டானந்தமாகின்றான்
    முத்தோ வியின் நிழலில்
    லயனோ ரசிகனின் நினைவில்
    பணியாளத் தோழர் வாழ்த்தும் இதமே
    காமிக்ஸ் தேவனின் பொன்விழா நாளினில்
    காதலர் தேவனின் பூஜையில் நாளினில்

    ஆ:பொன் விழா தேரில்
    சௌந்தர ராஜன் கருணையோ டானந்தமாகின்றான்

    பெ: லாலாலாலா...லாலாலாலா..
    லாலாலாலா..

    ReplyDelete
  34. Sorry sir ஈரோடுலயே இருந்தாலும் வர முடியல. College கண்டிப்பா வர சொல்லிட்டங்க so sorry. Evening உங்க எல்லோரையும் கண்டிப்பா மீட் பண்றேன். Miss u all

    ReplyDelete
  35. In Gandhipuram bus stand... will start in sometime...meet you friends

    ReplyDelete
  36. https://m.youtube.com/live/ndu1YDQ8GqM?feature=share

    ReplyDelete
  37. முத்து காமிக்ஸ் பொன் விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள். 💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  38. விழா அரங்கிலிருந்து

    ReplyDelete
  39. ஈரோட்டில் விழா அரங்கத்திலிருந்து விழாவை ரசித்துக் கொண்டுள்ளேன்.

    ReplyDelete
  40. ஈரோடு வாசகர் சந்திப்பு... வாழ்வில் மறக்க இயலா தருணங்கள்... நன்றிகள் எடிட்டர் சார்!

    ReplyDelete
  41. சார் மதுரை ஒரு வாடகை வந்ததால் கிளம்ப வேண்டியதா போச்சு....நன்றிகள் சார்....நண்பர்களே....
    எப்படியாச்சும் விண்வெளிபிசாசயும் யாரந்த மினி ஸ்பைடரையும் வண்ணத்துல வாங்கிடுங்க

    ReplyDelete
  42. புத்தகங்கள் கை பற்றியாச்சி!🥰
    கா க காலம் சூப்பர் தரம்!❣️இப்படி ஒரு புத்தகம் கொடுத்த ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல 👏👏👏 காலத்தால் அழியாத ஒரு காவியம் வாங்க தவர விடாதீர்கள் நண்பர்களே!!

    ReplyDelete
  43. Received the books and I'm very impressed by all of them! Big Boys Special மாயாவி variant cover opt செய்த எனக்கு spider cover அனுப்பியுள்ளீர்கள். மாற்றிக்கொள்ள வழிஉள்ளதா??

    ReplyDelete
  44. Received jumbo courier by dtdc in my home now .

    ReplyDelete
  45. "முத்து காமிக்ஸ்" - பொன்விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.."
    "முத்து காமிக்ஸ்" - ஆசிரியருக்கு
    எனது பணிவான வணக்கங்கள்-.பொன்விழா இதழ் ஆசிரியருக்கு வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  46. ஜம்போ பேக்கிங்கை தூக்க முடியாமல் தூக்கி, பிரித்து எட்டு புத்தகங்களையும் பார்த்து அசந்துபோனேன்.
    கா.க.கா.அற்புதமான தரத்திலான மேக்கிங்.
    பாராட்டுக்கள் எடிட்டர் சார்.

    ReplyDelete
  47. Replies
    1. இன்னைக்கு மீட்டிங் கேன்சல் ஆகி விட்டது ஸ்டீல்.

      Delete
  48. கார்சனின் கடந்த காலமும்,பிக் பாய்ஸ் ஸ்பெஷலும் ஹார்ட் பைண்டிங்கில் பட்டையைக் கிளப்புது...
    அதிலும் கார்சனின் கடந்த காலம் அல்டிமேட் தரம் சார்,புக் நல்ல வெயிட்,கெட்டி அட்டை சும்மா மிரட்டுது,தயாரிப்புத் தரமும் இதுவரை வந்த இதழ்களை என்ன சேதின்னு கேட்குது...
    உண்மையில் தவறவிடக் கூடாத இதழ்தான்...
    இந்த ஆகஸ்டின் ஸ்டார் கார்சனின் கடந்த காலம்தான்...

    ReplyDelete
    Replies
    1. // இந்த ஆகஸ்டின் ஸ்டார் கார்சனின் கடந்த காலம்தான்... // Without a Doubt.

      Delete
  49. விழா நிகழ்வு மிக நிறைவு...
    நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி அளித்தது...

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவே மகிழ்ச்சி அளித்த நிகழ்வு. இந்த முறை ஒரு முழு நாள். காலை 11 மணிக்கு ஆரம்பித்த விழா மாலை 6 மணி வரை.

      Delete
  50. புத்தகம் கைக்கு வந்துவிட்டது .....
    எல்லா புத்தகமும் அருமையமாக உள்ளது ...
    ஹார்ட் பைண்டிங் புக்ஸ் ரொம்ப நல்லாருக்கு ....
    பிக் பாய்ஸ் ஸ்பெஷல் மிகவும் அருமை ... பழைய காலா நினைவுகள் மீண்டும் வந்தது போல உள்ளது .... ( கடைசி பக்கத்தில் கதை உள்ளது கூட .... :) )...
    கார்ஸ்ன் கடந்த காலம் மிகவும் நன்றாக உள்ளது குறிப்பாக எனது மற்றும் என் துணைவின் புகைப்படம் அருமையாக உள்ளத்து ( அவர் சொல்லச்சொன்னார் ... ஹி ஹி ஹி .... )...

    ReplyDelete
  51. Thanks to Professional Couriers - அழகாக 11:30 க்கு பெரிய பெட்டி வந்து சேர்ந்தது. KKK and SPIDER புக் மேக்கிங் அபாரம். முதல் வாசிப்பில் நம்ம ஊரு காவல்காரன் - ட்ரெண்ட் பாண்டி !!

    ReplyDelete
  52. இந்த வருடமும் புத்தக திருவிழா வருவது கனவாகி விட்டது! நண்பர்கள் பகிர்ந்த போட்டோக்கள், வீடியோக்கள் பார்த்து திருக்திப்பட்டுக் கொள்ள வேண்டும் என்பதே இப்போதைய நிலை!

    அதிலும் அட்டைப்பட டிசைன் ஓவியங்களை காட்சிப்படுத்தி இருந்தது அருமை! விற்பனைக்கு இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே...!

    அடுத்த வருடம் பு. தி வர மீண்டும். முயற்சிப்போம்!

    நன்றி...!

    ReplyDelete
  53. யப்பா ...

    செம்ம உற்சாகமான
    முத்து 50 காமிக்ஸ் மீட் ..

    எதை சொல்வது எதை விடுவது .. ??

    டியர் எடி முத்து குழுமத்தை இனி நேரில் கண்டோர் இல்லை .. ..

    மிக்க மகிழ்ச்சியில் தன்யனானேன் .. இன்று ..

    நண்பர்களுடன் அளவாவியதும் .. தெரியா பார்க்கா சில பல நண்பர்களை நேரில் சந்தித்ததுமே ஒரு வித பரவசம் .. குறிப்பாக ( குமரன் வேலூர் ) ..

    நண்பர்கள் தங்கள் அனுபவங்ஙளை வரும் நாட்களில் இங்கே பகிர்ந்திடுங்க ..
    . 🙏🙏🙏❣️

    ReplyDelete
  54. நேரில் வந்தவர்களுக்கு ஏதோ பரிசு கொடுப்போம் என்று ஆசிரியர் கூறினார். என்னைப்போல் நேரலையில் வந்தவர்களுக்கு பரிசேதும் உண்டா சார்?

    ReplyDelete
  55. சூப்பர் விமர்சனம் பூபதி. வன் மேற்கின் கதை ஒரு டிரெண்ட் செட்டர்.

    ReplyDelete
  56. நண்பர்கள் கிளம்பியாச்சுன்னு வாட்சப் குழுவில் போடப் போட உற்சாகத்துடன் நானும் பஸ்ஸிலேறி கிளம்ப ஈரோட்டை அடைந்தேன்.

    அங்கே கூடியிருந்த சில பரிச்சயமான நண்பர்களுடன் பேசிக் கொண்டும்.....பல நண்பர்களளுடன் பேசவில்லைன்னாலும் ஒரு சினேகமான பார்வை என கடந்து ஆசிரியரை அடைந்தேன்.......எத்தனை நண்பர்கள் அடேயப்பா....தயக்கம் களைந்து ஒரு ஹாயாவது தளத்ல போடுங்க நண்பர்களே...தளத்தில் கதைகள் நல்லாருக்கு ...நல்லால்ல ...பிடிச்சிருக்கு ...பிடிக்கல...தளம் கொஞ்சம் ஃப்ரஸாகுமல்லவா...
    ஆசிரியரை மடக்கி பல இரும்புக் கரங்கள் கொக்கி போட்டு கரண்ட் இழுத்து சார்ஜ் ஏந்திக் கொண்டிருக்க....ஆசிரியரோ அவர்களிடமிருந்து சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தார்...
    விக்ரமோ அமைதியாக ஆசிரியருக்கு காவலாய் நின்று கொண்டிருக்க ....ஒரு ஹாய் சொல்லிக் கொண்டே போகிறேன் சீக்கிரமா பேச ஆரம்பிங்க விக்ரம் தயக்கம் களைந்து ஆர்ப்பரிங்க கதைக்கடலுக்குள் தேடலுடன் மூழ்குவது போல நண்பர்களுடன்.....
    விழா நாயகர்களை விட்டு வைக்காமல் நண்பர்கள் குடைந்து தங்கமெடுத்துக் கொண்டிருக்க மகிழ்ச்சி....மகிழ்ச்சி எங்கு நோக்கிடினும்...நானும் என் பங்குக்கு கரண்டை உறிய மாயமாகிட்டது பிற தேவையற்ற நினைவுகள்...மகிழ்ச்சியில் கரைந்தேன் மறைத்தேன்...அட்டை படங்களில் உறைந்தேன் அட்டையாய்...அட்டைப் பூச்சியாய் நான் படித்த இரும்பு மனிதனில்...

    நண்பர்கள் ஸ்டாலினையும் ...விஜய்யும் பாக்க பாக்க ...கேக்க கேக்க பிம்மிப்பே...ஸ்டாலினோ ராக்கெட் விஞ்ஞானியை வேலை வாங்கி தன் குடும்பத்தை நுழைத்திருக்க......சூப்பர் நண்பர்களே...இவர்கள் செய்த காரியங்கள் வீணாகிடாமல் வாழ்த்து சொல்ல வந்த நண்பர்கள் இல்லையெனில் எல்லாமே விழலுக்கிழைத்த நீரே...எந்த அடையாளத்தையும் விட்டுச் செல்லலாம் சந்தோசத்தை கொடுத்துச் சென்ற நண்பர்களுக்கும் இம்முறை பரிசளித்து அசத்தி விட்டார்கள் நம் முத்துக் குடும்பத்தினர்...ஆனாலும் இதனை வாரம் தோறும் தொடர்ந்து தளத்தில் வருகை தந்து தயக்கம் களைங்க நண்பர்களே.....
    எனக்கோ வாய்ப்பிருந்தும் சரியாக செயல் படவில்லை...அடுத்த வருடம் தூள் கிளப்பிடுவோம் நண்பர்களே...

    ReplyDelete
  57. இரு வண்ண ஸ்பைடர் ...அட்டைப்படம்... முன்னட்டை கலக்க... பின்னட்டை மாயாவி நேரில் ஈர்க்க...வீட்டுக்கு கொண்டு வந்தா என் மகனும் மாயாவி கதையை கேக்க ....மதுரை போகவிருந்த வாடகையை கெஞ்சிக் கூத்தாடி நாளை காலை வருகிறேன் என வாடிக்கையாளரிடம் கூறி விட்டு என் மகனுக்கு கொலைப் படை கதையை கூறி தூங்க வைத்தேன்...குவியலில் அவன் சுட்டிக் காட்டியது ...அப்பா சாகோர் சாகோரேன...என் மகனுக்கும் ஓர் ஆசிரியர் விக்ரமாய்

    ReplyDelete
  58. என் மகனின் புகைப்படத்தை வீட்டில் அவன் கையால் பிரிச்சு பாக்கனும்னு அப்படியே கொண்டு வந்து ...என் மெடல்களை அவனுக்கு போட்டு...கவரை பிரிக்க கார்சனின் கடந்த காலம்...அட்டைப்பட அந்த மேப் நீல பின்னணி...கொள்ளையர் முன்ணணியென கார்பனை சுற்றி வளைக்க...என்னை உள்ளிழுக்குது ஃபோட்டோ வை கூட பார்க்க தோணாமல்...விழா ஹால்ல கூர்ந்து கவனிக்கவில்லை வீட்டில் போய் பொறுமையா ரசிப்போம்னு இருந்ததால்...சுதாரித்து என் மகனின் ஃபோட்டோ வை என் இல்லத்தோரிடம் காட்ட அந்த பக்கத்தில் காணப்பட்ட வரிகள் இல்லமெங்கும் நிறைய....கார்சனின் கடந்த காலம் கையில் தூக்கும் போது தெரியும்னு சொன்ன ஆசிரியரின் வரிகள் பேசியது...செம் சூப்பர் சார் அந்த அகன்ற பேனல்கள்...வண்ணமய துள்ளலாய் இள வயது கார்சன்...க்ளமண்ட்...லீனா....அப்பாவிகள் குழு என அனைவரும் ஈர்க்க....கடந்த காலத்துக்குள் நுழைந்து நானும் காளைப்பருவத்திற்குள்....எழுதி வச்சிக்கங்க சார் நீங்க அடுத்த வருடம் போடப் போகும் முழு வண்ண யாரந்த மினி ஸ்பைடரும்...விண்வெளிப் பிசாசும்...பாட்டில் பூதமும் சத்தியமா இது கூட போட்டி போட முடியாது...எக்காலமும் நிலைக்கும் டெக்ஸ் கதை போல எக்காலமும் இந்த அட்டையை மிஞ்ச அட்டை வராது....இள வயது கார்சன் கேட்ட நண்பர்கள் கூட வாயடைத்துப் போயிருப்பார்கள் என நினைக்கிறேன்...உங்க அர்பணிப்ப பாராட்ட வார்த்தைகள் போதாதே 247 எழுத்துகள் கொண்ட தமிழாலும் மின்னல் வேக விசயரே

    ReplyDelete
  59. என் அருகே அமர்ந்து கரைந்த நண்பர்கள் காமிக் செல்வா..ராசாராமுக்கும் நன்றிகள்...பழய படி அடிக்கடி தளத்துக்கு வாருங்கள் நண்பர்களே

    ReplyDelete
  60. கிரிக்கட் நான் இழந்த பேரிழப்பு...கலக்கிக் கட்டிப் போட்டுட்டீங்க நண்பர்களே...அடுத்த வருடம் நிச்சயமா நானுமிருப்பேன் சூப்பர் நண்பர்களே

    ReplyDelete
  61. இந்த இரு மிரட்டலான புத்தகங்கள் அமுக்கிப் போயின சாகோர் ...மார்ட்டின்...டெக்சின் மெபிஸ்டோ கூட....மறுபதிப்புக்கான பவர் என்பதை விட மேக்கிங்கின் வீரியம் ரே சொல்லனும்...நண்பரே கார்சா உன் நினைவுகளில் மூழ்குவதே என் வேலை முடிந்ததும் என் அடுத்த வேலை...காத்திருக்கு வாகாய் வேளை...செந்தூரானும் ஆசியாய் காட்டுகிறான் வேலை...
    செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம.செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..செம...செம..செம....செம..சார்

    ReplyDelete
  62. நம்ம பரணிப் பய வராததும் வருத்தமே......எண்ண அலைகள் ஈர்ப்பென்பார்களே...கருணையானந்தம் அவர்களோடு பேசும் போது நண்பர்கள் கமண்ட ரசிப்பார் கூற...என் பாடலை சத்தியமா சொல்லலை நண்பர்களே...பரணிக்கு நான் போட்ட கமண்டை நண்பரொருவர் போட்டதை ரசித்தேன் என அவர் என்னிடமே கூற....அது நான்தான்னு சொல்லி வைத்தேன்...

    ReplyDelete
  63. டெக்ஸின் சகோதரர் கதை....
    முழு நீள சாகோர்...அடுத்த அமேசான் என வியார் வெகுவாய் ஈர்க்கிறார் விளம்பரத்தில்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஆமா நான் சொல்ல வந்ததை நீங்க சொல்லிட்டீங்க

      Delete
  64. அமேசான்...நெவாடா...அமேசானின் அதகளம் என அடுத்த மாதமும் எதிர்பார்ப்பில் அனைத்தும்

    ReplyDelete
    Replies
    1. நம்ம தோர்கல்லும். மரணத்தின் நிறம் நீலம். சும்மா தெறிக்கப் போகுது.

      Delete
    2. தோர்கல் வாழ்க வாழ்க வாழ்க 🤣🤣🤣

      Delete
    3. தோர்கல் ஹார்ட் கவர் புக் கிடைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும் 🥰🥰🥰🥰

      Delete
  65. Stalin ji & Vijay & Friends excellent job👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻😊

    ReplyDelete
  66. முத்தான 8 புத்தகங்கள். அந்த இலவச புத்தகத்தையும் சேர்த்து எந்த புத்தகத்தை முதலில் படிப்பது என்று முடிவு செய்ய ஒரு இரவு ஆகி விட்டது.

    அதும் கார்சனின் கடந்த காலம் புத்தகத் தரம் உலகத் தரம். முதலில் படிக்க தொடங்கியது அதைத் தான். சும்மா 116 பக்கங்கள் படித்ததே தெரியவில்லை. அவ்வளவு அழகு ஓவியங்கள், coloring, சும்மா அள்ளுது. கதையை பற்றி சொல்லவா வேண்டும்.

    ReplyDelete
  67. அந்த 116 பக்கங்களுடன் KKK நிறுத்தி விட்டு அடுத்து எடுத்தது ஸாகோர் எடுத்ததும் தெரியல முடித்ததும் தெரியல. பட்டாஸாக பொறிகிறது கதை. இந்த கதையில் ஓவியம், வசனம் எல்லாமே அருமை. V காமிக்ஸ் செம்ம

    எனது மதிப்பெண் 9/10.

    அடுத்து அந்த 192 பக்க கதைக்கு வெயிட்டிங்.

    ReplyDelete
    Replies
    1. Very fast in reading and review of the books 👏🏻👏🏻👏🏻👏🏻

      Delete
  68. கார்சனின் கடந்த காலம் படித்து முடித்து விட்டேன். படிக்காத புத்தகங்களை விட்டுவிட்டு படித்த புத்தகத்தை மீண்டும் படிக்க காரணம் அந்த Making தான். Absolute Delight. அட்டை, Hardbound, ஹாட் லைன் என அனைத்தும் A1. அந்த Maxi சைசில் சித்திரங்கள், கலரில் கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல.

    கூடிய விரைவில் தங்கக் கல்லறையும் இதே போல Maxi சைசில் பழைய மொழிபெயர்ப்பில் கொடுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. இதுக்காகவே இனிமே மொத மறுபதிப்பில் வஜனங்களை மாத்தி போடணும் போலிருக்கே ?!

      Delete
  69. நதி போல ஓடிக் கொண்டிரு!

    வன்மேற்கின் 3வது கதை...

    பாத்திரங்கள்: ஜான் கால்டர், பர்ன்ட் ஹெட், பிரெட் மக்டொனால்ட், மானுவல் லிஸா, செவ்விந்தியன் ஸ்கின்போன்ஸ், செவ்விந்திய தலைவர் லிட்டில் உல்ப் மற்றும் மக்டொனால்டின் செவ்விந்திய மனைவி சிச்சாவேஜா (எ) ஸாகாவீ...

    வன்மேற்கின் முகங்களை அப்பட்டமா தோலுரித்து காட்டும் இன்னொரு கதை.

    அமெரிக்காவில் எப்படியெல்லாம் குடியேற்றங்கள் உருவாகின என்று இன்னொரு அலசலும் இதுவே...

    கொலம்பஸ் தன்னையறியாமல் கண்டறிந்த புதிய உலகத்தில், வாழ்க்கையை தேடி, பூர்வகுடிகளை தேடி சென்று அவர்கள் கைகளில் விபரம் தெரியாமல் அகப்பட்டு மாண்டவர்கள் ஆயிரம் பேர் என்றால், யார் அங்கே முதலில் வியாபாரத்தை பெருக்குவது என்ற குறுகிய சிந்தனையோடு செயல்பட்டு, பூர்வகுடி மக்களை மது பித்தர்களாக்கி, எதிரிகளுடன் மோத விட்டு சாகடிக்கப்பட்டவர்கள் பல்லாயிரம் பேர்...!

    இப்படியான இரத்த வரலாற்றை கொண்ட நவநாகரீக தேசம் தான் இன்றைய அமெரிக்கா!

    கதையின் தொடக்கத்தில் ஜான் கால்டரின் மரண தூதர்களாக வரும்போதும், செவ்விந்திய குடியிருப்பை சூறையாடி லிட்டில் உல்ஃபை கொல்லும் போதும் சாதாரண வெறியாக இருந்த விஷயமெல்லாம், அதன் பின்னே கனடியர்களின் வணிக நோக்கம் இருப்பதை உணர்ந்த போது, போட்டி நிறுவனங்களை அழிக்க உதவும் மிகப்பெரிய பொறியாக, கொடூரமாக தெரிந்தது...! (இன்றும் கூட பொருந்தும் கான்செப்ட்)

    மிசௌரி நதியின் ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தின் போக்கில், அதிவேகமாக பயணித்து சென்ற நதி போல ஓடிக் கொண்டிரு அருமையான டாப் கிளாஸ் கதை (உண்மை) எனலாம்...!

    ரேட்டிங்: 10/10

    ReplyDelete
  70. Finally got the time to watch the video. Will there be a post today?

    ReplyDelete
  71. ஊதைக்காற்று உடலைத் துளைக்குது..
    கொட்டும் மழையோ பார்வையை மறைக்குது..
    எண்ணமெல்லாம் அந்தச் சின்னப் பெண்ணைப் பற்றி..
    அழகு தேவதை அவள்..
    நான் விட்டுப் பிரிந்து வந்த கன்னிப்பெண் அவள்....

    பன்னாக்கில் உலவுது நெஞ்சம்..😍

    ReplyDelete
    Replies
    1. நிஜமாக கண்ணா. இந்த வரிகளை புத்தகத்தில் படித்து கண் கலங்கி விட்டது.

      Delete
    2. காதலின் வல்லமை குமார்....😍

      Delete
    3. முதல் முறை படிக்கையில் மனதை உருக்கிய பாடல்

      Delete
  72. சார் ஈரோடு புத்தக விழாவை பற்றி உங்கள் பதிவு எங்கே? I am Waiting

    ReplyDelete
  73. எடிட்டர் சார்!
    கார்சனின் கடந்த காலம் இதழினை பார்த்தவுடன் தங்களிடம் கேட்கத் தோன்றியது ...
    1. டெக்ஸ் வில்லரின் முதல் சாகசமாக வந்த தலை வாங்கி குரங்கு இரண்டு முறை மறு பதிப்பிட்டும், சிறப்பாக வரவில்லை என்ற ஒரு குறை உள்ளது. இதில் டெக்ஸ் தனியாகவே சாகசம் செய்வார். டெக்ஸ் தனியாக சாகசம் செய்யும் மற்றொரு இதழ் சாத்தான் வேட்டை!
    தலை வாங்கி குரங்கும்,சாத்தான் வேட்டையும் இணைத்து கார்சனின் கடந்த காலம் போல் ஒரு கலெக்டர் ஸ்பெஷலாக வரவேண்டும்.
    2. டைகரின் முதல் சாகசமாக வெளிவந்த தங்க கல்லறை கார்சனின் கடந்த காலம் போல் ஒரு கலெக்டர் ஸ்பெஷலாக வரவேண்டும்.
    வசனங்கள் பாடல்கள் மாற்றாமல்!
    👆 இது இரண்டும் எனது கோரிக்கைகள் மட்டுமே 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. சார் ....இவை போன்ற கோரிக்கைகளை நீங்கள் முன்வைக்கும் கணமே, அவற்றை டிஜிட்டலில் அச்சிட்டு மூவாயிரம், நாலாயிரம் என சுந்தரமாய்க் கல்லா கட்ட தயாராகி விடுவார்கள் !

      பொறுமையாய் இருங்கள்...உரிய வேளைகளில் சரியான விலைகளில், ஒரிஜினல் தரங்களில் கிளாஸிக்ஸ் வெளிவராது போகாது !

      Delete
    2. அர்த்தமேயின்றி நம்மை நோக்கிக் கல்லெறியும் படலங்கள் துவங்கும் நொடியே புரிந்து கொள்ளலாம் - ஆங்காங்கே சில பல பிசு + நசுகள் பாதிப்பு காண்கின்றன என்பதை !

      Delete
    3. சார்,
      இந்த கதை
      நீங்க special edition வந்தாக் கூட ₹ 125/- ல (அ) ₹ 150/- ல எங்களுக்கு கிடைக்கும்.

      Delete
    4. நிச்சயமாக வரும் நண்பரே !

      Delete
  74. நண்பர்களே.. நமது 'ஜம்ப்பிங் பேரவைத் தலீவரின்' சீரிய முயற்சியின்பேரில் 'புதிய.தலைமுறை' தொலைக்காட்சியில் நமது 'முத்து பொன்விழா கொண்டாட்ட தருணங்கள்' செய்தியாக வெளியாகியிருக்கிறது!

    அதைக் காண :

    "இங்கே கிளிக்குங்க பாஸு"

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் shribabu ji!

      Delete
    2. அட்டகாசம்..

      நன்றிகள் Shribabu ji...😍

      Delete
    3. நண்பர்களே..🙏😍😘

      ராமர் பாலம் கட்டிய போது அணில் சிறுஉதவி செய்தது போல தங்களது அரும்பெறும் முயற்சியில் அடியேனால் இயன்ற சிறு உதவி..🙏

      முதல்நாள் இரவு 10.30 மணியளவில் நண்பர் திருப்பூர்சிவா "பத்திரிக்கையில் நமது கொண்டாட்ட நிகழ்வு வெளிவர ஏற்பாடு செய்ய இயலுமா?" என்று கேட்டார்.

      இரவாகிவிட்டது.. இருப்பினும் முயற்சிக்கிறேன் என்றுகூறி புதியதலைமுறை TVநண்பர்களை தொடர்புகொண்டு ஏற்பாடு செய்யபட்டது.👍

      நன்றி Puthiya Thalaimurai TV நண்பர்களுக்கு💐🌷🙏

      முன்னதாக தெரிந்திருந்தால் இன்னும் பல பத்திரிகை நண்பர்கள் வருகை தர ஏற்பாடு செய்திருக்கலாம்.👍 பரவாயில்லை..

      அடுத்த ஆண்டு பட்டைய கிளப்பிடலாம்..👍✊✌😘


      Delete
    4. வாழ்த்துக்கள் ஜம்பிங் ஜாக் தலைவரே

      Delete
  75. சுஸ்கி விஸ்கி..

    செம்ம கலரிங்... க்யூட்டான சித்திரங்கள்...

    சின்னதா.. ரசிக்கும்படியான ஃபேன்டஸி...

    நானும் ரௌடிதான் முடிச்சாச்சு...😍

    ReplyDelete
  76. @KoK ji..😍

    நானும் சுஸ்கி விஸ்கி முதலில் படித்துவிட்டேன்..😘

    அருமையான புத்தக தரம்..👍

    கலரிங் மனதை அள்ளுகிறது..😍😘

    நீரோடை போன்ற அழகான மொழிபெயர்ப்பு..💐👌👍

    படிக்க..படிக்க..
    சிரிப்பு..சிரிப்பு..
    😃😍😘😀

    நன்றி Kok ஜி..🙏
    சிரிப்பாக..சிறப்பாக மொழிபெயர்த்தமைக்கு...💐💐❤💛💙💚💜


    ReplyDelete
  77. அடுத்து படித்தது இலவச புத்தகம் விங் கமாண்டர் ஜார்ஜ் தோன்றும் புதையலுக்கொரு பாதை. சும்மா சொல்லக் கூடாது அப்படியே சின்ன வயதில் படித்த காமிக்ஸ் நினைவுகளை கொண்டு வருகிறது. ஒரு மர்மமான மரணம் ஜார்ஜ் மற்றும் அவரது நண்பர் முன் நிகழ அதை ஆராய செல்லும் நண்பர்கள் தொடர் பிரச்சினையில் மாட்டிகொள்ள என்ன ஆனது என்று விவரிக்கும் கதை.

    கிளாசிக் 8/10. இப்போ நெப்போலியன் பொக்கிஷம் படிக்க பல மடங்கு ஆவலுடன்.

    ReplyDelete
    Replies
    1. ஒரே ஒரு குறை அட்டை இல்லாமல் இந்த புத்தகம் வந்தது தான்.

      Delete
    2. நெப்போலியன் பொக்கிஷம் cult classic ரகம் சார் !

      Delete
    3. அது கிடைக்குமா சார்..
      அது மறு பதிப்பு உண்டா சார்
      .

      Delete
    4. விங்-கமாண்டர் ஜார்ஜ் ஸ்பெஷலில் இருக்கும் சார் !

      Delete
  78. மர்ம மனிதன் மார்ட்டின் எனக்கு பிடித்த நாயகர்களில் ஒருவர். அதும் இந்த 2.0 வெர்சன் ரொம்பவே ரசிக்க வைக்கிறது.

    Coloring, ஓவியம் கதை எல்லாம் அருமை. Frankenstein Monster பற்றிய கதை கேட்க வேண்டுமா? ரசவாதம், Coding எல்லாம் சேர்ந்து சூப்பர் கதை அதுவும் இறுதியில் மார்டின் பேசும் வசனம் "தனது சொந்த மண்ணே பரந்த இந்த இந்த உலகுக்கு சமானம் என்று நிம்மதி காணும் மனிதனிடம் மகிழ்ச்சிக்கு குறைவிராது."

    எனது மதிப்பெண் 10/10.

    இந்த வரிசையை தொடரலாம் சார்.

    ReplyDelete
    Replies
    1. Short & crisp stories sir ! இவை கூட நல்லாத்தான் இருக்கு !

      Delete
  79. எடிட்டர் சார்! The Big Boy Special ஐ போல இரும்புக்கை நார்மனின் மற்ற கதைகளையும், ஸ்பைடரின் விண்வெளி பிசாசு, பாட்டில் பூதம் போன்ற கதைகளையும் எதிர்பார்க்கிறேன். நன்றிகள் சார்! 🙏🙏🙏

    ReplyDelete
  80. வழக்கம்போல டெக்ஸ் சுவாரஸ்யத்திற்கும் விறுவிறுப்பிற்கும் குறைவில்லாமல் செல்கிறது . .குற்றவாளிகள் தண்டனையாகபிளாக் மௌண்டன் மனநல காப்பகத்திற்க்கு அனுப்பப்படுகின்றனர் கள். மேலும் பணக்காரர்கள் மனநோயாளிகள் என்று அதே காப்பகத்திற்கு அனுப்பப்படுகின்றார் கள்.காரணம்மெபிஸ்டோ (சுவாரஸ்யமான.முடிச்சு) )டெக்ஸயும் கார்சனயும் மஎபஇஸ்டஓ முடக்கிவிட யுமாவை வைத்தே தப்பிக்கிறார்டெக்ஸ் .மீண்டுவந்த மாயன் .இந்த வருடத்தின் மற்றுமொரு சூப்பர்ஹிட்கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அதுக்குள்ளாற படிச்சாச்சா சார் ?

      Delete
  81. கார்சன் கடந்த காலம் .இதுநாள் வரை புத்தகம் எப்படி வருமோ என்று மிக ஆவலுடன் எதிர்பார்த்த ,ஏங்க வைத்துக் கொண்டிருந்த கனவு இதழ். .எதிர்பார்ப்புகளையும் லாம் தாண்டி ,கற்பனையிலும் நினைத்துப்பார்க்க இயலாத ஒரு சூப்பர் ,பிரமாண்ட தயாரிப்பு தரத்துடன் வந்துள்ளது .

    ReplyDelete
  82. மனித எரிமலை .நார்மன் முரட்டுத்தனம் ரசிக்க வைக்கிறது. வெகு நாட்களுக்கு முன் படித்த இரண்டு கதைகளும் தற்போதும் நன்றாக உள்ளது. நார்மன். கதைகள் தொடர்ந்து வேண்டும் சார். ராணுவ கதைகள் நம்மிடையே இல்லை அந்த ஜேனர் வேண்டும் என்று விரும்பும் வாசகர்களுக்காக ஏற்கனவே வெற்றி பெற்ற நார்மன் கதைகள் தொடர்ந்து வேண்டும் சார் . கரூர் ராஜ சேகரன்.

    ReplyDelete
    Replies
    1. எனக்குமே நார்மன் கதைகளில் புராதனமே தென்படவில்லை சார் ! பார்க்கலாமே !

      Delete
  83. சார் கார்சன் அட்டை செம சார் பாக்க பாக்க பாத்துட்டே இருக்கலாம்னு தோணுது....அந்த கண்ணாடி வழுவழுப்பில் அடடா கார்சன்

    ReplyDelete
    Replies
    1. பாத்துட்டே இருக்கிறதிலே படிக்க மறந்துப்புடாதீங்க கவிஞர்வாள் !

      Delete
    2. சார் பத்து பதனஞ்சு தாண்டியாச்...அந்த மாடண்டானா புல் வெளி..அப்பாவிக அறிமுகம்..அந்த அழிந்து போன நகரம்....பொழிய காத்திருக்கும் கரு மேகங்கள்....இயலாமை...கோபம்...பழி வாங்கும் சந்தோசம்.....டெக்ஸ் ...கிட் மலைத் தொடர்கள்...அடுத்த ஆபத்தை எதிர் கொள்ளும் சந்தோசம்...நண்பனுக்காக....கணவாய்கள்...இரவினூடே...பாலைவனத்தை எண்ணிய படி அப்பாவிகளை விட்டு 900 கிமீ தொலைவில்...சுகமாய் தீ காய்ந்து காஃபி குடித்த படி படுத்துக் கொண்டும்....கூட பயணிக்கிறேன்...அட்டகாச உரையாடல்கள்....பெரிய சைஸ் படங்கள் என்ன தவம் செய்தமோ...எல்லாத்துக்கும் மேல அந்த பக்கத்துக்கைந்து பேனல்கள் ...தெளிவான படங்கள்...



      இன்னோர் புக் நிச்சயமா வாங்கனும் சார்...

      ஆனா உங்கள பாத்தா பாவமாருக்கு...தலையில் லா போராளிய வண்ணத்ல அப்படியே போட பயப்படுவீங்களே

      Delete
  84. ஆகஸ்ட் இதழ்கள்,ஸ்பெஷல் இதழ்கள் எல்லாவற்றையும் தற்போது தான் கைப்பற்ற முடிந்தது,பெட்டி பெரிய சைஸ்,எடை கூடுதல் என்பதால் வேனில் தான் வரும்னு ST அலுவலகத் தகவல்,எப்படியோ வாங்கியாச்சி...
    எல்லா இதழ்களையும் புரட்டி மகிழ்ந்தாயிற்று,எதை முதலில் வாசிப்பதுன்னுதான் யோசனையா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. டிரெண்டிலே ஆரம்பிங்க சார் !

      Delete
    2. ட்ரெண்ட்-ட்ரெண்டிங் செட்டரா சார்...

      Delete
  85. எடிட்டர் சார் 
    KKK கலர் எதுக்கு என்று கெட்டவன் தான் நான் - ஆனால் இப்போ இதே தரத்தில் சைசில் - மின்னும் மரணம் மற்றும் தங்கக்கல்லறை வேணும் ! செய்வீர்களா ! செய்வீர்களா !!

    ReplyDelete
  86. Replies
    1. தெய்வமே ...இந்த நொடி வரைக்கும் என்னிடம் ஒற்றை போட்டோ கூட நஹி ! அவையெல்லாமே வந்தால் தானே பதிவிட ?! மின்னஞ்சலுக்கு அவரவர் போட்டுத் தாக்கிய படங்களை அனுப்பிடக் காத்திருப்பேன் !

      வாட்சப்பில் வேலைக்கு ஆகாது !

      Delete
    2. உங்களது நம்பர் என்னன்னு சொன்னீங்கன்னா இப்பவே அனுப்புவேன் சார்...

      Delete
    3. 80+ போட்டோ இருக்கு சார்..

      Delete
    4. //வாட்சப்பில் வேலைக்கு ஆகாது !//

      Delete
    5. //மின்னஞ்சலுக்கு அவரவர் போட்டுத் தாக்கிய படங்களை அனுப்பிடக் காத்திருப்பேன் !//

      Delete
  87. ஈரோட்டில் ஆசிரியர் அவர்களை சந்தித்தது வாழ்க்கையில் நான் பெற்ற பேறு. சீனியர் எடிட்டர் மற்றும் கருணையானந்தம் அவர்களின் ஆசி எனக்குக் கிட்டியது என் தவப் பயன். மகிழ்ச்சி.

    ReplyDelete
  88. Salem Book Fair and Chennai Book Fair : We need some special books.

    ReplyDelete
  89. The live telecast is excellent. I felt I was there in Erode along with everyone. By god's grace I want to join lion's 50th year celebrations.

    And 75th year of Muthu too.

    ReplyDelete
  90. I received my Chennai subscription copies. But unfortunately only one KKK printed with the provided photo and other one nothing printed.

    I hope my UK book will come with printed photo.

    Sir, any possibilities to get my 2nd subscription book of KKK with photo? Thank you in advance

    ReplyDelete
    Replies
    1. Sorry about that sir. .!

      And sorry again, will have to do a re-bind of KKK if a photo needs to be added.

      Delete
  91. Eagerly waiting for Suske Wiske book to reach me here. Happy to see positive comments of this book by friends. Hope next year Suske Wiske more stories can be excepted.

    ReplyDelete
  92. படித்த 5 ஆவது புத்தகம் பனி வனப் பிரியா விடை.

    டிரெண்ட் எப்போது படித்தாலும் கதை முழுதும் ஒரு மென் சோகம் இழையோடும். இந்த முறையும் அதே தான். Agnes அவளது சகோதரியை காண ஐரோப்பா சென்று விட தனிமையில் இருக்கும் டிரெண்ட் ஒரு பணிக்கு அழைக்கப்பட, கொடுமைக்கார கணவனை விட்டு பிரிந்த பெண்ணையும், அவளது மகனையும் அந்த பெண்ணுடைய தந்தையிடம் சேர்க்க கிளம்புகிறார். அவளுடைய வழியெங்கும் அவர்களை தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே வர, அந்த சிறுவன் டிரெண்ட் உடன் நட்பாகி விட இறுதியில் என்ன நடந்தது என்பது தான் கதை.

    இந்த அருமையான தொடருக்கு ஒரு அழகான முடிவு.

    எனது மதிப்பெண் 100/10.

    ReplyDelete
  93. எங்க தலைவர் தோர்கல் பெரிய சைஸ்ல வர வாய்ப்பு இருக்கிறாரா 🤣🤣🤣

    ReplyDelete
    Replies
    1. அடடா என்னத்த கேக்கலாம்னு யோசிச்சிட்டே...இனி புதுசே வரட்டும்னு நெனச்சா....சூப்பர் நண்பரே....சார் தோர்கள் சிறந்த கதைகள் தொகுப்புல ஏதாவது இரு கதையை கார்சன் கடந்த காலம் போல பிரம்மாண்ட படுத்தி விடலாமே

      Delete
  94. *பள்ளத்தாக்குப் படலம்!*

    _*வன்மேற்கின் அத்தியாயம் 4*_

    *பாத்திரங்கள்: பிரட் மக்டொனால்ட், ரோபாஸ்பரி, பிரிட்ஜெர், ஹாரிசன், பாட்டர், பார்ட், டேகும்சே, டாக்டெயில்*

    வன்மேற்கின் ஒவ்வொரு அத்தியாங்களையும் படிக்கும் போது, மனதை என்னவோ நெருடுகிறது...!

    அதுவும் ஓஹையோ நிலப்பகுதி பற்றி டெகும்சே சொல்லும் வார்த்தைகளை படித்த பின்னர், அதன் மேல் வன்மேற்கு செய்த வன்முறை தான் மேலே சொன்ன பத்தியின் ஆதாரம்...!

    கதையின் முதல் பாதியில் ரோபாஸ்பரியுடன் போராடும் மக்டொனால்ட், பின் பாதியில் டெகும்சேவுடன் இணைந்து பேராசை மிக்க அதிகார வரக்கத்திற்கு எதிராக போராடுகிறார்!

    அமெரிக்க வரலாற்றின் பக்கங்களை, சித்திரங்களாக நம் கண் முன்னே மிக அருகில் கொண்டு சேர்த்து பெருமை தேடிக் கொண்டது இந்த கதைதொடர்...

    *டெகும்சேயின் கனவு மட்டும் மெய்ப்பட்டிருந்தால், இன்றைய அமெரிக்க வரலாறு மிகவும் மாறிப் போயிருக்கும்.* கோசைஸ், விக்டோரியா போலவே டெகும்சேவும் சிறந்த போராளி மற்றும் தலைவராக இருக்கிறார்.

    பொன்னாசை+மண்ணாசையின் கருவிகளாக பிரித்தாலும் சூழ்ச்சியும், மதுவும் இருக்க, பூர்வ குடிகளின் இரத்தத்தில் வல்லரசின் அஸ்திவாரங்கள் எழுப்பப்படுகின்றன...!

    *விறுவிறுப்பாக சென்ற இந்த அத்தியாயத்தில் மக்டொனால்டின் பையன் டேகும்சேவின் மேற்பார்வையில் வில்வித்தை கற்றுக் கொள்வது இந்த அத்தியாயத்தின் அழகு...*

    ரேட்டிங்: 9/10

    ReplyDelete
  95. Karsonin Kadantha kalam is amazing... Quality of the paper, artwork, original translation, making and story everything were excellent. One of the best in the recent issues according to my opinion. The covers, colors, interiors, frame by frame by art.. hats off to the team and Thanks a lot editor sir...

    ReplyDelete