Powered By Blogger

Saturday, August 19, 2023

மூணு மலைகளும் ஒரு மலையுழுங்கியும் !

 நண்பர்களே,

வணக்கம். இன்னொரு நெடும் பயணம் முன்நிற்க , பதிவை சித்தே சீக்கிரமாய்ப் போட்டு விட்டால் தலீவரைப் போல நேரத்தோடு கட்டையைக் கிடத்தும் மக்களுக்கு சுலபமாகிடுமே என்று எண்ணினேன் - and here I am !!  

ஜூலையில் கிட்டத்தட்ட இதே நேரம்.....! கோவைப் புத்தக விழாவுக்கு ரெடியாகிக் கொண்டிருந்தோம் ! And ஈரோட்டில் நமது சந்திப்புகளுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்தும் சீரியஸாகப் பேச ஆரம்பித்திருந்தோம் ! தொடர்ந்த பரபரப்பான முப்பது நாட்கள், ஒரு மின்னல் வேக ஓட்டத்தில் கடந்து சென்றிருக்க, இதோ - இன்றைக்கு கொஞ்சமே கொஞ்சமாய் மலைப்போடு திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது ! பொதுவாய் யாரேனும் மலையையே பெயர்த்து என் முன்னால் நட்டு வைத்தால் கூட - "ஓஹோ..?" என்றபடிக்கே மோவாயைத் தடவிக் கொண்டு நகரும் எருமைத்தோல் பார்ட்டி நான் ! என்னை மலைக்கச் செய்ய ரொம்பவே பெரிய மலைகள் அவசியமாகிடுவதுண்டு ! ஆனால் கடந்துள்ள இந்த 30 நாட்கள் வாய் பிளந்து அதிசயிக்கச் செய்ய, மூன்று மெகா முகாந்திரங்களைத் தந்துள்ளன என்றால் மிகையாகாது !! 

To start off - நாம் நிறையவே பேசிவிட்ட ஈரோடெனும் நிறைவான திருவிழாவின் நிகழ்வுகள் !! இப்போதெல்லாம் "ஈரோடு" என்பது ஒரு ஊர் என்ற நிலை தாண்டி ; ஒரு விற்பனை சேத்திரம் என்பதைத் தாண்டி ; ஒரு அழகான புத்தக விழா நகரம் என்பதையெல்லாம் தாண்டி - ஒரு உணர்வாய், ஒரு emotion ஆக உருமாறியிருப்பதை இந்தாண்டு பதிவு செய்துள்ளது  ! "காமிக்ஸ் கிரிக்கெட் லீக்" என்று நண்பர்கள் ஆரம்பித்த போது - லைட்டாய் உள்ளுக்குள் நான் 'என்னத்தே கன்னையாவாய்' மண்டையைச் சொரிந்தது மெய்யே ; ஆனால் end of the day அதகளப்படுத்திக் காட்டிவிட்டது மட்டுமல்லாது - இதுவொரு தொடர்கதையும் ஆகிடுவதற்கான  முதல் புள்ளியையும் போட்டு விட்டிருந்தனர் நண்பர்கள் ! லோகோ டிசைனிங் என்ன ; பயிற்சிகள் என்ன ; வீடியோ தயாரிப்புகள் என்ன ; டி-ஷர்ட்கள்  என்னவென்று துவக்கம் முதல் "சுபம்" போடும் தருணம் வரை தெறி  மாஸ் ! இது ஒரு பக்கமெனில், இன்னொரு பக்கமோ "மலைகளை இடம்பெயர்ப்பதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி மேட்டரு" என்று நிரூபிக்கும் விதமாய், கடைசி ஒற்றை வாரத்துக்குள் ஒரு சர்க்கஸையே நடத்திடும் அளவிலான முயற்சிகளை உள்ளே போட்டு, அந்தச்  சனிக்கிழமையின்  சந்திப்பினை ஒரு உச்சமாக்கிச் சாதித்துக் காட்டிய நண்பர்கள் குழுவின் விஸ்வரூபம் ! And அன்றைய பொழுதினை தங்களது வருகைகளால், மலர்ந்த முகங்களால், உற்சாகத் துள்ளல்களால் சிறப்பித்த வாசகப் பட்டாளம் ! இந்த ஒட்டுமொத்த புள்ளிகள் மூன்றுமே ஒன்றிணையும் நொடியினில், ஈரோடு ஒரு அட்டகாச ரங்கோலியாய் காட்சி தந்த அழகு நொடிகள் என்னை மலைக்கச் செய்த முகாந்திரம் # 1 !

இரண்டாவது முகாந்திரமோ - an even bigger canvas - முழுக்க முழுக்கவே விற்பனை சார்ந்த களம் !! கொரோனா லாக்டௌன் கொடுமைகள் ஒரு முற்றுப்புள்ளி கண்ட பிற்பாடு ; மீண்டும் புத்தக விழாக்களை  நடத்திட அரசு அனுமதி தந்த பிற்பாடு, மக்களிடையே ஒரு  உணர்ச்சிப் பிரவாகம் கரைபுரண்டோடியது அப்பட்டமாய்  தெரிந்தது ! பூச்சாண்டி முகமூடிகளைப் போட்டுக் கொண்டே திரிய இனியும் அவசியங்களில்லை என்றான அத்தருணத்தில் தமிழக  முடுக்குகளிலெல்லாம் புத்தக விழாக்கள் அரங்கேறின ; and வெகு சொற்பம் நீங்கலாய், பாக்கி அனைத்திலுமே அனைவருக்குமே அசாத்திய, அழகான விற்பனைகள் ! ஆனால் துரதிர்ஷ்டவசமாக நடப்பாண்டில் நிலவரம் சற்றே மாறுதல் ! பூட்டப்பட்டிருந்த கதவுகள் திறந்த நொடியின் euphoria ; அந்த உற்சாக வெள்ளம் ஆயுளெல்லாம் தொடர்ந்திடாதே ?! அது வடிந்தான பின்னே - அன்றாடங்கள், விலைவாசிகள் என்ற மல்யுத்தங்களில் மக்கள் ஈடுபடும் அவசியங்களின்  மத்தியில்,  புத்தகக் கொள்முதல்கள் சற்றே  பின்சீட்டுக்குச் செல்லும் சங்கடம் நடைமுறையானது ! சின்னவர்கள் ; பெரியவர்கள் ; புதியவர்கள் ; பழையவர்கள் என்ற பேதங்களின்றி, பதிப்பகத் துறையினில் கணிசமானோர் ஏதோவொரு ரூபத்தில் இந்த ரிவர்ஸ் கியரை நடப்பாண்டினில் சந்தித்தே வருகின்றனர் ! ஆனால்...நமக்கான ஸ்கிரிப்ட் எழுதப்படுவது விண்ணிலுள்ள புனித மனிடோவின் பிரேத்யேகப் பேனாவினால் எனும் போது, விதிவிலக்குகள் இல்லாது போகுமா - என்ன ? விண்ணில் உள்ளவரின் வரங்களும், இங்குள்ள உங்களின் வரவுகளும் ஒன்றிணைந்து - நடப்பாண்டை நமக்கொரு ரெகார்ட் பிரேக்கிங் ஆண்டாக அமைத்துத் தந்துள்ளன ! உங்கள் அன்பின் பிரதிபலனாய் - 2023-ன் சகல புத்தக விழாக்களிலும் நாம் தொட்டிருப்பது புதுப் புது உயரங்களை & சென்னையும், கோவையும், ஈரோடுமே அந்தப் பட்டியலில் on top of the list !  'பொம்ம' புக்ஸ் தான் ; சின்னஞ்சிறு வட்டம் தான் ; 'இன்னுமா இதையெல்லாம் படிக்கிறே ?' என்ற வினவல்களையெல்லாம் வரவழைக்கும் genre தான் - ஆனால் இந்தச் சிறு வட்டத்தின் மெய்யான ஆற்றல் எத்தகையது என்பதை upclose தரிசித்திட இப்படியொரு சந்தர்ப்பம் அமையும் போது மலைப்பில் மிரளாது இருக்கத் தான் முடியுமா ? You are simply incredible folks  !! So இதுவே எனது முகாந்திரம் # 2 !!

முகாந்திரம் # 3 - சொல்லலாமா ? வாணாமா ? சொல்வதானால் நிகழக் காத்திருக்கும் கூத்துக்கள் பற்றித் தான் தெரியுமே - அப்புறமும் அந்தத் திருவாயை மூடிக்கணுமா ? - இல்ல பரவால்ல ...பாத்துக்கலாம்னு தொடரலாமா ? என்ற குயப்பத்தை உள்ளாற ஏற்படுத்தியது ! But நானாக  சொல்லாது விட்டாலும், விஷயம் சீக்கிரமே வெளியே தெரியாது போகாதெனும் போது, நானே சொல்லிடலாமென்று தீர்மானித்தேன் ! அது வந்து ...அதாகப்பட்டது .....இப்போ நான் என்ன சொல்ல வர்றேன்னா ....well,how do I tell you ?....அது வந்துங்கண்ணா ....வெளியான பன்னிரெண்டாம் நாளே "கார்சனின் கடந்த காலம்" MAXI மறுபதிப்பு விற்றுத் தீர்ந்து விட்டது ! காலி....போயிண்டே... முடிஞ்ச்சூ..... finish .. ஸ்டாக் காலி ! 

Oh yes - நாம் அச்சிட்டிருந்தது ஒரு மெகா எண்ணிக்கை அல்ல தான் ! இதழ் அறிவித்த தருணத்தில் ஒரு ஏகோபித்த ஆதரவெல்லாம் பதிவாகியிருக்கவில்லை எனும் போது, ஒரு மாமூலான 'டெக்ஸ்' பிரிண்ட்ரன் திட்டமிட தைரியம் இருந்திருக்கவில்லை ! In fact - "ரொம்ப ஆவேசப்பட்டுட்டியோ சூனா.பானா ?" என்று கொஞ்சமாய் வயிற்றில் புளியைக் கரைக்கவும் செய்திருந்தது தான் ! ஆனால் காத்திருந்த MAXI தயாரிப்பில் இந்த இதழ் நிச்சயமாய் பிரமிப்பூட்டும் என்று எனக்குப்பட்டது ! அச்சுத்துறையினில் எத்தனை அனுபவம் இருந்தாலுமே, புதிதாய் ஒரு சைசில் ; ஒரு format-ல் ஒரு புக்கைத் திட்டமிடும் போது, பூர்த்தி செய்து அதனைக் கையில் ஏந்திப் பார்க்கும் வரையிலும், அது சார்ந்த மானசீக உருவகங்கள் எல்லாமே கொஞ்சம் முன்ன பின்ன தான் இருந்திடுவது வாடிக்கை !  ஆனால் இங்கு மட்டும் எனக்குள்ளான பட்சி செம உரக்கக் குரல் கொடுப்பது கேட்டது - இது ஷோக்கா சொக்க வைக்கும் ஒரு சொப்பன சுந்தரியாகிட தவறாதென்று ! மிகச் சரியாக அத்தருணத்தில் ஆச்சர்யமொன்று அரங்கேறியது - எனது திட்டமிடலுக்கு  உரமூட்டும் விதமாய் ! Would you believe it - ஆர்ட் பேப்பரின் விலைகள் மெள்ள மெள்ள குறையத் துவங்கின !! மறு நொடியே முதல் ரக பேப்பருக்கு ஆர்டர் - போட்டோம் "கா.க.கா"வுக்கு மேலும் புஷ்டி சேர்க்க உதவட்டுமே என்று !! அதுவுமே ஒரு காரணம் - உங்கள் கரங்களில் ஜொலிக்கும் பொழுது, அந்த இதழ் செம கனமாக இருந்ததற்கு  ! Add to that - மாக்சி சைசில் உங்களது குடும்ப போட்டோக்கள் முதல் பக்கத்தை மேற்கொண்டும் மெருகூட்ட - பேக்கிங்குக்கு முன்னே அடுக்கிக் கிடந்த புக்ஸைப் பார்த்த போது  ஜில்லென்று இருந்தது !! நிஜத்தைச் சொல்வதானால் - "கா.க.கா." ரிலீஸ் கண்டதற்கு 5 நாட்கள் முன்னமே books ரெடியாகி விட்டிருந்தன ! ஆனால் இம்மாதத்து டெஸ்பாட்ச் 8 இதழ்கள் கொண்டதொரு மெகா முயற்சி என்பதாலும், ஈரோட்டில் உங்கள் முன்னே unveil செய்திடவும் வேணும் என்பதாலும் , புக்ஸை மூடாக்குப் போட்டு பத்திரப்படுத்தி வர நேரிட்டது ! வெளியே ஆபீஸ் ரூமில் வைத்திருந்தால், வரக்கூடிய வாசகர்களின் கண்களில் பட்டுவிடுமே என்ற பயத்தில், எனது ரூமுக்குள்  குவித்திருந்தோம் ! 'ரெடியாகிடுச்சு ; ஆனா கண்ணிலே காட்ட வழியில்லை' என்ற போது பொறுமை காப்பது ரொம்பவே படுத்தி எடுத்தது தான் ! Finally ஈரோடும் வந்து, புக்ஸை ரிலீசும் செய்து , எனது எதிர்பார்ப்பினை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளும் அரங்கேறிய  தருணத்தில், உள்ளுக்குள் ஒரு நூறு ரைஸ்குக்கர்களின் விசிலையும் விஞ்சும் நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது ! ஆனாலும் வெறும் பன்னிரெண்டே நாட்களில் கிட்டங்கியை கார்சனார் காலி செய்யுமொரு சூழல் புலருமென்று சத்தியமாய் எதிர்பார்த்திருக்கவில்லை ! நம்மாட்கள் நேற்று காலை தகவல் சொன்ன போது காது வரைக்கும் நீண்டது எனது புன்னகை !! THANKS A TON GUYS !!! 

ஒரு நூறு முறை சொன்னதே தான் ; மறுக்காவும் சொல்லாதிருக்க முடியவுமில்லை - இந்த வாசக வட்டமானது, இந்தியாவின் வேறு எந்தவொரு காமிக்ஸ் எடிட்டருக்கும், கனவில் மட்டுமே சாத்தியமாகிடக் கூடிய ஒன்றாக்கும் !! ! For sure - நம்மை விடவும்  எண்ணிக்கைகளில் மிகக் கூடுதலாய் ஹிந்தியில்...பெங்காலியில் விற்கிறார்கள் தான் ; ஆனால் நாம் முயற்சிக்கும் குரங்கு மார்க் பல்ட்டிக்கள் அவர்களுக்குத் துளி கூட பரிச்சயம் நஹி !! புது முயற்சிகளை ; ஆத்மார்த்தத் தேடல்களை இத்தனை வாஞ்சையோடு வரவேற்க இனியொரு அணி புதுசாய் நிலாவிலிருந்து, சந்திராயனில் புட்போர்ட் அடித்து வந்தால்  தானுண்டு ! Truly unique guys !!

And...and...நம்ம ஸ்பைடராரின் "THE BIG BOYS SPECIAL" கூட ரொம்ப காலம் ஸ்டாக்கில் இராது போலும் !! "கொரில்லா சாம்ராஜ்யம்" காலி ! மறுபதிப்பு மாயாவியின் முக்காலே மூணு வீசம் காலி ! லக்கி லூக் கணிச இதழ்கள் தரை தட்டும் நிலவரத்தில் !! "கதை சொல்லும்  காமிக்ஸ்"  - கிட்டத்தட்ட காலி ! டெக்சின் மேஜர் ஹிட் இதழ்களெல்லாமே இரண்டிலக்க எண்ணிக்கைக்கு நகர்ந்தாச்சு ; லாரன்ஸ்-டேவிட் புக்ஸ் almost gone ; க்ளாஸிக் இதழ்களின் கையிருப்புமே (வேதாளன் ; சார்லி) குறைஞ்சூ !! இத்தனைக்கும் இந்த 2 இதழ்களும் புத்தக விழாக்களுக்கு பயணித்திருக்கவில்லை !! Stunning show !!! 

மேற்படித் தகவல்கள் உங்களில் பெரும்பான்மைக்கு மட்டில்லா மகிழ்வினைத் தந்திடும் என்பதில் எனக்கு ஐயங்களே இல்லை ! நம் பொருட்டு மகிழ்ந்து, கூடி இழுக்கும் இந்தத் தேரின் வேகத்தினைக் கண்டு வியப்பது 99% எனில் - இன்னொரு ஒற்றைச் சதவிகிதத்துக்கோ - "ஆஹா...ஆஹா...ஸ்டாக் அவுட்டான சகலத்தையும் டிஜிட்டல் பிரிண்ட் போட்டு "சேவை" பண்ற வாய்ப்பு அமைஞ்சிட்டதே பெருமாளே...பெருமாளே..!!" என்று துள்ளிக் குதிக்கும் குஷி பிறக்குமென்பது உறுதி ! இங்கே சின்னதாய் ஒரேயொரு இடைச்செருகல் folks - காலியாகி விட்ட புக்ஸ் எவையேனும் உங்களுக்குத் தேவைப்பட்டால் பொறுமை ப்ளீஸ் - அவை சார்ந்த ஒரு குறிப்பிட்ட அளவிலான கோரிக்கைகள் வரப்பெறும் வேளையில், நிச்சயமாய் reprint செய்திடுவோம் ! And rest assured - விலைகள் நியாயமாகவே இருந்திடும் ! 

Moving on - காத்திருக்கும் செப்டெம்பரின் இதழ்கள் சார்ந்த முதல் பிரிவியூ - பல்லடத்தில் பூரிப்பை ஏற்படுத்தத் தவறாதென்பேன் ! இதோ - பிரபஞ்சத்தின் புதல்வனின் நடப்பாண்டின் ஸ்லாட் - "மரணத்தின் நிறம் நீலம்" ! இரு தனித்தனி சாகசங்கள் ; ஆனால் தொடரும் ஒரு முடிச்சுடன் என்ற template இந்த ஆல்பத்துக்குமே பொருந்தும் ! Fantasy என்ற ஜானர் உங்களுக்கு பிரியமானதெனில் - தோர்கலும் அவரது பயணங்களும் உங்களை கட்டுண்டு வைத்திருக்கும் என்பது உறுதி ! இதோ - நமது சென்னை ஓவியரின் கைவண்ணம் + நமது கோகிலாவின் மெருகூட்டலுடனான முன்னட்டை ! And அந்த எழுத்துரு - நண்பர் ஜெகத்தின் கைவண்ணம் ! 

வழக்கம் போல உட்பக்கங்களில் சித்திரங்கள் ; வர்ணங்கள் என்று வசீகரிக்கின்றன ! புது வாசகர்களையுமே இந்த ஜானர் வசீகரிக்குமெனில் சூப்பர் ! அவ்வித casual வாசகர்களையும் கவர்ந்திட வேண்டுமென்பதற்காகவே ஒன்றுக்கு, இரண்டாய் இருந்த ஒரிஜினல் அட்டைப்படங்களை பயன்படுத்திட முனையவில்லை ! அவை இரண்டுமே ரொம்பவே வீக்காக தென்பட, புதிதாய் போட்டோம் இந்த டிசைனை - of course இன்னொரு தோர்கல் அட்டைப்படத்தின் தழுவலாய் ! So டெம்போவெல்லாம் வைத்துக் கடத்தியிருக்கோம் ; ஜெய் தோர்கல் !!

And போன வாரத்து அந்தக் கேள்விக்கான வோட்டெடுப்பில் ஒரு வேட்பாளர் க்ளியராக safe zone -ல் இருக்க, பாக்கி இருவருக்கு மத்தியில் குடுமிப்பிடி சண்டை நடக்காத குறை தான் ! Neck to neck ரேஸ் ! இன்னமும் நீங்கள் வோட்டுப் போயிருக்கா பட்சத்தில் - இதோ இன்னமும் வாய்ப்புள்ளது guys !! இதோ லிங்க் : https://strawpoll.com/Qrgebka1bZp

போன வாரம் மட்டுமே கேள்வியா - இதோ இப்போவுமே ஒரு வினா உள்ளது உங்களுக்கென ! Moreso - அந்தக் கேள்வி தொடர்பான இதழ் அடுத்த மாதம் ஆஜராகவிருப்பதால் :

லூட்டியடிக்கும் தாத்தாக்களின் மூன்றாம் ஆல்பம் அடுத்த மாதம் வெளிவரக் காத்துள்ளது ! ஸ்டெடியாக முன்னேறி வரும் இந்தத் தொடரினில் இப்போது வரை 7 ஆல்பங்கள் பிரெஞ்சில் உள்ளன ! இவர்கள் தொடரலாமா - வேணாமா ? என்பதல்ல எனது கேள்வி ; for sure இவர்கள் நம் மத்தியில் ஆஜராகியே தீருவர் ! My question is - ரெகுலர் அட்டவணையில் நடப்பாண்டைப் போலவே இவர்கள் தொடர்வது ஓ.கே.வா ? அல்லது - இவர்களை ஆன்லைன் மேளா தருணத்து ஸ்பெஷல் இதழ்களாய்க் கொண்டு செல்வது உத்தமமா ? தாத்தாக்களின் ஜாகஜங்களை நீங்கள் ரசிக்கிறீர்களா-அல்லது எனக்கோசரம் பொறுத்துக் கொள்கிறீர்களா ? பதில்ஸ் ப்ளீஸ் ?

Bye all....have a beautiful weekend ! See you around !

228 comments:

  1. நீன்ட நாட்களுக்கு பிறகு முதலிடத்தில்

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  3. அட 10 க்குள்ள 🤩🤩

    ReplyDelete
  4. சார் வணக்கம். மதுரை புத்தக திருவிழாவில் நண்பர்கள் சந்திப்பு நடத்த முயற்சி செய்து கொண்டு இருக்கின்றோம். நீங்களும் மதுரை புத்தக திருவிழா ஸ்பெசலாக ஒரு புத்தகம் வெளியிட்டால் நன்றாக இருக்கும். மதுரை புத்தக திருவிழாவில் நமது புத்தகங்களின் விற்பனையும் அதிகரிக்கும். இதற்கு நீங்கள் சற்றே மனது வைத்தால் போதும். நன்றி. ஸ்ரீதர் அருப்புக்கோட்டை.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் அனைவரும் மதுரை புத்தக விழா ஸ்பெசலுக்கு ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. ஸ்ரீதர் அருப்புக்கோட்டை.

      Delete
    2. அழைப்புக்கு நன்றி சார்.

      Delete
    3. மதுரை புத்தகவிழா நம் காமிக்ஸ் நண்பர்களாலும், ஸ்பெஷல் இதழ்களாலும் களைகட்ட வாழ்த்துகள்!!

      Delete
    4. மதுரைய கலக்க....நம்ம காளை ஸ்பைடரின் சினிஸ்டர் பொருத்தமாருக்கும் நண்பரே...சார் பரகுடா போல ஒரு பட்டய கிளப்பும் கதையை தேடிப் பிடிங்க

      Delete
    5. கோடை விடுமுறைக்கு ஆறாப்பு ஏழாப்பு படிக்கைல ...ஊருக்குப் போகும் வழியில் பஸ் ஸ்டாண்ட்ல என் தாயை தவிக்க விட்டு ஓடிப் போய் நம்மிதழ்கள் தொங்குமழக தரிசித்து கோடை மலரா உற்சாகமா வாங்கி வருவது நினைவில்....முன்னரே கோவைல வாங்குனாலும் தொங்குமழக பாக்கவே இறங்கி ஓடுவேன்....அந்த வகையில் மறக்கவியலா உற்சாகமூட்டி மதுரைதான்....சதி வலை அங்கதான் ஊர்லருந்து திரும்பி வரைல வாங்கினேன்....இல்லன்னா நிச்சயமா தவற விட்டிருப்பேன் ஆர்ச்சி யின் நதிக்கரை அரக்கனை

      Delete
  5. வந்துட்டேன்...😍😃😘😀

    ReplyDelete
  6. வாவ் 🤩😍 தோர்கல் அட்டைப்படம் அட்டகாசம் & வண்ணமும் கவர்ந்திழுக்குது.

    ஆவலுடன் வெயிட்டிங் ஃபார் தோர்கல்.

    ReplyDelete
  7. வணக்கம் ஆசிரியரே
    வணக்கங்கள் சகோதரர்களே

    ReplyDelete
  8. மகிழ்ச்சியான செய்தி கா. க. கா இவ்வளவு சீக்கிரம் ஸ்டாக் அவுட் ஆனது.

    அப்ப இதே போல தங்கக் கல்லறை இதழையும் வெளியிட வேண்டும்.

    ReplyDelete
  9. அருமையான தகவல் ஆசிரியர் சார்.
    கா க கா ஸ்டாக் அவுட் ஆனது மிக்க மகிழ்ச்சி. விரைவில் ஸ்பைடரும் ஸ்டாக் அவுட் ஆகிவிடும்.

    தாத்தாஸ் உங்களுக்காக மட்டுமில்லை சார், அவர்களின் ஆதங்கங்களும்,
    காமெடிகளும்,லூட்டிகளும் ரசிக்க ஏதுவானவை. ஸ்பெஷலில் இணைப்பதை விட, ரெகுலர் அட்டவணையில் வருவது சிறப்பு.

    ReplyDelete
  10. தாத்தாஸ் விருப்பப் பட்டே படிக்கிறோம்.

    புத்தக (ஆன் லைன்)விழாக்களில் வெளியிடலாம்.

    ReplyDelete
  11. @Editor Sir..😍😘

    தாத்தாவின் ஜாகஜங்கள் வந்தே தீரணும்..❤💛💐

    ரெகுலர்ல வந்தாலும் சரி..😍
    தனி தடத்துல வந்தாலும் சரி..😘

    ReplyDelete
    Replies
    1. எதுல என்று தான் கேட்கிறார்?

      Delete
  12. .///வெளியான பன்னிரெண்டாம் நாளே "கார்சனின் கடந்த காலம்" MAXI மறுபதிப்பு விற்றுத் தீர்ந்து விட்டது ! காலி....போயிண்டே... முடிஞ்ச்சூ..... finish .. ஸ்டாக் காலி !///

    காதல் மன்னன் கார்சன் னா சும்மாவா...😍

    ReplyDelete
  13. தோர்கல் ஹார்ட் கவரில் வரும் வாய்ப்புண்டுகளா, ஆசிரியரே?

    ReplyDelete
    Replies
    1. இந்த அட்டையை ஹார்டு பௌண்ட்ல போட்ருந்தா பின்னிப் பெடலெடுத்திருக்கும் கடல்....


      ஆனா காககா போல பிரம்மாண்ட சைசுல ஒரு தோர்கள் கதையாவது வரனும் வடிவம் மாறாம

      Delete
    2. ஆமா தோர்கல் கார்டு கவர் ல வந்தா வேற லெவல்ல இருக்கும்.

      Delete
  14. Sir what about the sales of economic comics of Rs 40( Agent tiger and Billy

    I would skip thatha if it is coming in BF special

    ReplyDelete
  15. - ரெகுலர் அட்டவணையில் நடப்பாண்டைப் போலவே இவர்கள் தொடர்வது ஓ.கே.வா ? அல்லது - இவர்களை ஆன்லைன் மேளா தருணத்து ஸ்பெஷல் இதழ்களாய்க் கொண்டு செல்வது உத்தமமா ?

    எங்குட்டு வந்தாலும் வாங்காம விடப்போறதில்லே... அதனால...!!

    ///தாத்தாக்களின் ஜாகஜங்களை நீங்கள் ரசிக்கிறீர்களா-அல்லது எனக்கோசரம் பொறுத்துக் கொள்கிறீர்களா ?///

    அதுவுந்தே.. இதுவுந்தே...

    ReplyDelete
  16. //சென்னையும், கோவையும், ஈரோடுமே அந்தப் பட்டியலில் on top of the list ! //

    சூப்பர் ஆசிரியரே

    ReplyDelete
  17. கார்சனின் கடந்த காலம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருப்பதற்கு டெகஸ் என்பதையும் தாண்டி, தயாரிப்புத் தரமும், maxi size உம், விலையும் முக்கிய காரணங்கள். ஆங்கிலத்திலோ இல்லை வேறு மொழிகளிலோ இந்தத் தரத்திலான புத்தகம் 900 ரூபாய்க்கு கிடைப்பது என்பது வாய்ப்பே இல்லை. Now that we have a successful proof of concept, இதே போன்ற சிறப்பு இதழ்கள் தொடரவேண்டும் என்பது எங்கள் தாழ்மையான கோரிக்கை சார்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் நண்பரே....இதே போலிதழ்கள்....
      ஆனா டெக்சை என்பதை விட....கார்சன் தான் சரி

      Delete
    2. // இந்தத் தரத்திலான புத்தகம் 900 ரூபாய்க்கு கிடைப்பது என்பது வாய்ப்பே இல்லை // 100% உண்மை

      Delete
    3. Yes sir. Maxi size தான் correct. இரத்த படலம் 4 அல்லது 5 புத்தகங்களாக Maxi size ல வந்தால் சும்மா அட்டகாசமாக இருக்கும்

      Delete
  18. தாத்தாக்கள் ரெகுலரில் தொடரலாம் சார்.

    ReplyDelete
  19. ///வெளியான பன்னிரெண்டாம் நாளே "கார்சனின் கடந்த காலம்" MAXI மறுபதிப்பு விற்றுத் தீர்ந்து விட்டது ! காலி....போயிண்டே... முடிஞ்ச்சூ..... finish .. ஸ்டாக் காலி !///

    அப்படியே அந்த தங்க கல்லறை மறுபதிப்பு "கார்சனின் கடந்த காலம்" MAXI formatல் போடவும் ..

    தாத்தாஸ் - FOR BF SPECIALS ..

    ReplyDelete
    Replies
    1. // ஆமா சார் ஆமா

      Delete
    2. #அப்படியே அந்த தங்க கல்லறை மறுபதிப்பு "கார்சனின் கடந்த காலம்" MAXI formatல் போடவும் #
      வழி மொழிகிறேன் எடிட்டர் சார்!

      Delete
  20. Sir, Can we print thaathaa's one for each book fair and one for regular subscription... (Konjam overaa dhaan poromo, povom)

    ReplyDelete
  21. Wow.. I bought the last copy in our erode meeting to get autograph from senior and karunaiyanandam sir. Otherwise I would have missed buying this wonderfully made book.

    ReplyDelete
  22. விஜயன் சார் தோர்கல் இம்மாத Front and Back Cover design சூப்பர் சார்.....

    ReplyDelete
  23. எல்லா இதழ்களுக்கும் அட்டைப்படமாக ஒரிஜினல் படங்களையே பயன்படுத்துங்கள் சார்.
    இன்று லயன் 400 புத்தகம் எடுக்க வேண்டியிருந்தது.
    அட்டைப்படம் செம மாஸ்.
    துப்பாக்கி ஏந்திய டெக்ஸின் கைவிரல் நரம்புகள் தெரிவது அவ்வளவு தத்ரூபமாக இருந்தது.
    சமீபத்தைய படங்களில் அதுமாதிரி இல்லாதது போல் எனக்கு தோன்றுகிறது.
    இது எனது கருத்து மட்டுமே.

    ReplyDelete
  24. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  25. எடிட்டர் சார்.. சற்றே காற்று வாங்கினாற்போலிருந்த EBF கூட்டம் கொஞ்சமாய் வயிற்றில் புளியைக் கரைத்ததென்னவோ உண்மை! ஆனால் இந்த மந்தநிலையிலும் நமது புத்தகங்கள் நல்லதொரு விற்பனையை எட்டியிருப்பது குறித்து மகிழ்ச்சி!

    CCPLல் நண்பர் வினோத் அடித்த சிக்ஸர்களுக்கு இணையாக நமது 'இ.சி.டெக்ஸாஸ் காதல் இளவரசர்' கார்ஸனும் விளாசித் தள்ளியிருப்பது ஆனந்தத்திலும் ஆனந்தம்!! பிரம்மிக்கச் செய்திடும் வடிவமைப்பும், ஈடிணையற்ற தரமுமே இந்தச் சாதனையை வெறும் பனிரெண்டே நாட்களில் சாத்தியமாக்கியிருக்கிறது என்பது கண்கூடு!!

    தோர்கல் அட்டைப்படம் என்னிடம் மிக்ஸட் ரியாக்ஷனைப் பெறுகிறது. தோனி போல தோற்றமளிக்கும் தோர்கலின் தோள்களுக்குப் பின்புறம் இருப்பது ஆரிசியாவா அல்லது ஆறுவயதுக் குழந்தையா (ஓநாய்க்குட்டி?!! - முடி கறுப்பு நிறமாச்சே?!!) என்ற குழப்பம் எழுகிறது! பூரான்களைப் போல தோற்றமளித்திடும் அந்த எழுத்துருவில் ஜெகத் குமார் மிரட்டியிருக்கிறார்!! அபாரத் திறமை அவருக்கு!! (பொன்விழாவுக்கு வந்திருக்கலாமே ஜெகத்?!!)

    தாத்தாஸ் - எனக்கு ரொம்பப் பிடிக்கும்! எந்தத் தடத்தில் வந்தாலும் வாங்கிப் படித்திட நான் ரெடி!!

    ReplyDelete
  26. வணக்கம் ஆசிரியர் சார் & நண்பர்களே..

    ReplyDelete
  27. செப்டம்பரில் தோர்கல் வாவ் அருமை,ஆனால் காமிக்ஸ் தலைமகனுக்கு இடம் இல்லை போல சார்,ஏதாவது மாற்றம் நிகழுமா ?!

    ReplyDelete
  28. // வெளியான பன்னிரெண்டாம் நாளே "கார்சனின் கடந்த காலம்" MAXI மறுபதிப்பு விற்றுத் தீர்ந்து விட்டது ! //
    வாவ் அருமை,இதைவிட மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும் சார்...
    இந்த அசுரத்தனமான வெற்றி மகிழ்வூட்டுகிறது...
    ஜெயிலர் ஹிட்டுக்கு இணையாக கா.க.கா வின் ஹிட்டும் அசத்தல்..

    ReplyDelete
  29. தத்தாக்கள் எனக்கு double ok. சந்தாவிள் தொடர்ந்தால் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. ரசித்து படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்...

      Delete
  30. தாத்தாவின் ஜாகஜங்கள் வந்தே தீரணும்..❤💛💐

    ரெகுலர்ல வந்தாலும் சரி..😍
    தனி தடத்துல வந்தாலும் சரி..😘..

    ReplyDelete
  31. சார் கார்சனின் மாபெரும் வெற்றியை அந்த அட்டைப்படமே தட்டிச் சென்றுள்ளதுன்னு பதிவிடனும்னு நெனச்சு கீழ வந்தா தோர்கள்....அந்த நீல வண்ணம்...பெண் குழந்தை முகம்....அந்த சித்திரக் கதையில் வரும் சித்திரக் குள்ளன் ...மூவர் ...பின்னட்டை....மரணத்தின் நிறம் இருப்பைக் கருப்பைக் காட்டி நீலம்னு வண்ணமாற்றம்....அங்கே மரணமே அழகுதானன்னு அந்தப் பட்டாம் பூச்சியா மாறிய பெண் நினைவில் வர....ஆவலுடன் காத்திருக்கிறேன்....பல்லடத்தாரை விட பரணியை விட....கார்சனின் கடந்த கால அட்டைஸ்லாம் சும்மாங்குறார் தோர்கள்....கோகிலா...ஜகத்...வாழ்த்துக்கள்...ஆயிரம் கோடி நன்றிகள் நண்பர்களே....பாதித் தோர்கள் நீலமாயும்....அப்பெண் முழு நீலமாயும் அட்டையே தலைப்பை சொல்லுதோ....இறந்து பிழைக்கும் தோர்கள


    சூப்பர் சார்....
    40 க்கு வண்ண ஸ்பைடர் முதன்முறையாக தெறிக்க விடுவோமே கிளாசிக்கில்....

    ReplyDelete
    Replies
    1. தாத்தா படுத்துட்டு போத்துனா என்ன....போத்திட்டு படுத்தா என்னன்னு கேக்க ஆசைப்பட்டாலும்...ஸ்பெசல் வெளியீடுகள் 400 க்கு குறையக் கூடாது...40 ம் ஆண்ட கௌரவிக்க...


      கோடை மலர் போல ஓர் பாக்கெட் சைசும்...
      காக்கா போல ஓர் பக்கட் சைசும் சென்னைத் திருவிழாவ கலங்கடிக்கனும்....

      Delete
  32. // ரெகுலர் அட்டவணையில் நடப்பாண்டைப் போலவே இவர்கள் தொடர்வது ஓ.கே.வா ? அல்லது - இவர்களை ஆன்லைன் மேளா தருணத்து ஸ்பெஷல் இதழ்களாய்க் கொண்டு செல்வது உத்தமமா ? //
    தாத்தாக்கள் தொடர்வது ஓகேதான் சார்...விற்பனை அளவில் நன்றாக போகிறதெனில் ரெகுலரில் தொடரலாம்,மெதுவான விற்பனை நகர்வு,தேர்ந்து எடுக்கும் விருப்ப நண்பர்கள் குறைவெனில் ஆன்லைன் மேளாவில் தாத்தாக்களை உட்கார வைக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. ///மெதுவான விற்பனை நகர்வு,தேர்ந்து எடுக்கும் விருப்ப நண்பர்கள் குறைவெனில் ஆன்லைன் மேளாவில் தாத்தாக்களை உட்கார வைக்கலாம்...///

      ///தாத்தா எப்படி வந்தாலும் ஓகே. ஆன்லைன் புத்தக விழா என்றால் முன்பதிவுக்கான கு. ப. எண்ணிக்கையில் ஒரே குண்டு புக்காக போட்டு குஷிப்படுத்தவும்.///

      + 555

      Delete
  33. Thorgal தோர்கல் Thorgal yaeeeeeeeeeee...!
    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
    Hard cover aa erukumoo..?! 🤔

    ReplyDelete
  34. // க்ளாஸிக் இதழ்களின் கையிருப்புமே (வேதாளன் ; சார்லி) குறைஞ்சூ !! இத்தனைக்கும் இந்த 2 இதழ்களும் புத்தக விழாக்களுக்கு பயணித்திருக்கவில்லை !! Stunning show !!! //
    நிறைய இதழ்கள் ஸ்டாக்கில் இருந்து காலியாவது மகிழ்ச்சி...

    ReplyDelete
  35. 1. கா. க. கா. ஸ்டாக் அவுட். ஐ யம்வெ ரி ஹேப்பி. சாத்தான் வேட்டை அல்லது டெக்ஸின் கடந்த காலமான காற்றில் கரைந்த கழுகு சீரிஸைக் கூட இப்படி போட்டுத் தாக்கலாமே.

    2. ஈபுவி சேல்ஸ், குடோன் காலி ஆனது எல்லாம் வெரி வெரி ஆப்பி. அடுத்த சென்னை புத்தக விழா அல்லது குளிர்கால புத்தக விழா வருது. அப்ப என்ன ஸ்பெலு வரும் ஆபிசர்?

    3. தாத்தா எப்படி வந்தாலும் ஓகே. ஆன்லைன் புத்தக விழா என்றால் முன்பதிவுக்கான கு. ப. எண்ணிக்கையில் ஒரே குண்டு புக்காக போட்டு குஷிப்படுத்தவும்.

    ReplyDelete
    Replies
    1. #சாத்தான் வேட்டை அல்லது டெக்ஸின் கடந்த காலமான காற்றில் கரைந்த கழுகு சீரிஸைக் கூட இப்படி போட்டுத் தாக்கலாமே#
      +1

      Delete
    2. #கா. க. கா. ஸ்டாக் அவுட். ஐ யம்வெ ரி ஹேப்பி. சாத்தான் வேட்டை அல்லது டெக்ஸின் கடந்த காலமான காற்றில் கரைந்த கழுகு சீரிஸைக் கூட இப்படி போட்டுத் தாக்கலாமே#
      சாத்தான் வேட்டை உடன் போனஸாய் தலை வாங்கி குரங்கும்.... மேக்சியில்! 🙏🙏🙏

      Delete
    3. Remember nalliravu vettai? Came during same year as kkk. That is also a mass book

      Delete
  36. இந்த மாத ஆகஸ்ட் ரெகுலர் இதழ்கள் படிச்சாச்சி,
    1) ஸாகோர் - வழக்கம்போல் நேர்கோட்டு வாசிப்பு,மடமடன்னு ஒரு ஓட்டம்...
    2) ட்ரெண்ட் - நெஞ்சம் நிறைய நேசமும்,முகத்தில் எப்போதும் கொஞ்சம் சோகமுமான ஒரு எளிய காவலர் நம்மை விட்டு பிரிவது வருத்தம்தான்...
    பனிவனப் பிரியாவிடை,அழகான கதை நகர்வு,பிடித்தமான வாசிப்பு...

    ReplyDelete
    Replies
    1. 3)மீண்டு(ம்) வந்த மாயன்:
      ஆக்‌ஷனும்,
      அமானுஷ்யமும்,
      திரில்லருமாய் சரியான காம்போவில் கதை பயணித்தது...
      ஆங்காங்கே லாஜிக் பற்றிய சிந்தனைகள் எழுந்தாலும் ஆக்‌ஷனும்,
      கமர்ஷியலுமாய் கலந்து கட்டி விறுவிறுப்பாய் போகும் கதையின் நகர்வு அதை சரிசெய்து விடுகிறது...
      டெக்ஸ் சாகஸங்களில் இதுபோன்ற வித்தியாசமான பாணிகளும் இரசிக்கத்தக்கவையே..
      பிடித்தமான வாசிப்பாய் மாயன் அமைந்தார்...
      வருடத்திற்கு ஒருமுறையாவது இந்த பாணி கதைகளை முயற்சிக்கலாம்...
      டெக்ஸின் ஆகச் சிறந்த சவாலான வில்லனாய் மெபிஸ்டோ மிளிர்வது தனிச் சிறப்பு...

      Delete
  37. புத்தக விழா இதழ்களை இனிதான் படிக்கனும்...

    ReplyDelete
  38. ....வெளியான பன்னிரெண்டாம் நாளே "கார்சனின் கடந்த காலம்" MAXI மறுபதிப்பு விற்றுத் தீர்ந்து விட்டது ! காலி....போயிண்டே... முடிஞ்ச்சூ..... finish .. ஸ்டாக் காலி !
    👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️💪💪💪💪💪💪

    ReplyDelete
  39. # தாத்தா எப்படி வந்தாலும் ஓகே.. ஆனா வரணும்..

    # தங்க கல்லறை மறுபதிப்பும் கா.க.கா formatல வந்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  40. தாத்தாக்கள் ரெகுலர் அட்டவணையில் தொடர்வது உத்தமம்!

    ReplyDelete
  41. தாத்தா கதைகள் சந்தாவில் வருகிறது என்ற காரணத்தினால் தவிர்க்க முடியவில்லை. தனி தடத்தில் வந்தால் வாங்க மாட்டேன்

    ReplyDelete
  42. // வெளியான பன்னிரெண்டாம் நாளே "கார்சனின் கடந்த காலம்" MAXI மறுபதிப்பு விற்றுத் தீர்ந்து விட்டது ! காலி....போயிண்டே... முடிஞ்ச்சூ..... finish .. ஸ்டாக் காலி ! //


    Wow super sir. Really happy to hear this.

    ReplyDelete
  43. குற்ற நகரம் கல்கத்தா:


    இது ஒரு ஆக்சன் கதையா - ஆம்
    இது ஒரு சைக்கோ த்ரில்லரா - ஆம்
    இது ஒரு க்ரைம் த்ரில்லரா - ஆம்
    இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரா - ஆம்
    இது லவ் ஸ்டோரியா - ஆம்
    இது ஃபேமிலி சென்டிமென்ட் கதையா - ஆம்
    இது ஒரு இனவெறி பேசும் கிராபிக் நாவலா - ஆம்

    இப்படியாக
    ஆக்சன்.. க்ரைம்.. சஸ்பென்ஸ்.. சைக்கோ கொலைகள்... இனவெறி.. காதல்.. ஃபேமிலி சென்டிமென்ட்... பழிக்குப்பழின்னு அத்தனை வகைகளையும் கலந்துகட்டி அடி பின்னியிருக்கிறார்கள்..!

    கேன்வாஸில் பென்சிலால் வரையப்பட்டவை போன்று தோன்றும் சித்திரங்கள் கதைக்கு மிகப்பெரிய பலம்..! பல உணர்வுகளை சித்திரங்களே வெளிப்படுத்துகின்றன..! குறிப்பாக டைகர் சாண்டோகன் மற்றும் யானோஸ்.. இவர்களின் முகபாவங்களும் கண்களுமே பல உணர்வுகளை வெளிப்படுத்தின..!

    தன் தாயை தன் தாயென்றே அறியாமல் தாய் போலவே எண்ணி வாழும் இன்ஸ்பெக்டர் கத்திபோர்ட் ரொம்பவே ரசிக்க வைத்த கேரக்டர்.!

    தனது கிராமத்தையே அழித்த படைப்பிரிவை சாண்டோகனும் யானோஸும் தனி இருவர்களாக கொன்று குவிக்கும் புத்திசாலித்தனம் "அட" போடவைத்தது.!

    கதையில் அழகழகான பெண்களை காட்டுவதும் அடுத்த பக்கத்திலேயே அவர்களை கொன்றுவிடுவதுமே வாடிக்கையாக இருந்ததால் இறுதியில் ஜேன் தப்பிக்கும்போது ஒரு மனநிறைவு உண்டாகிறது..!
    பிரிட்டிஷ் அதிகாரிகளிலும் நியாயவான்கள் இருந்தார்கள் என்பதை கர்னல் ஹாட்சன் மற்றும் சர் தாமஸ் போன்றோரின் செயல்கள் காட்டுகின்றன..!

    இறுதியில் டைகர் சாண்டோனும் யானோஸூம் ராணுவத்தின் பிடியில் மாட்டாமல் தப்பிச்சென்றதும்.. அவர்களின் மீதான பயம் அப்படியே தொடர்வதும் நல்ல முடிவு..! சாண்டோகனின் செல்லப் பிராணியைப் பார்த்தாலே திகிலாக இருந்தது..!

    குற்ற நகரம் கல்கத்தா - காமிக்ஸ் காக்டெய்ல்

    ReplyDelete
  44. /////ரெகுலர் அட்டவணையில் நடப்பாண்டைப் போலவே இவர்கள் தொடர்வது ஓ.கே.வா ? அல்லது - இவர்களை ஆன்லைன் மேளா தருணத்து ஸ்பெஷல் இதழ்களாய்க் கொண்டு செல்வது உத்தமமா ? தாத்தாக்களின் ஜாகஜங்களை நீங்கள் ரசிக்கிறீர்களா-அல்லது எனக்கோசரம் பொறுத்துக் கொள்கிறீர்களா ?////


    ரெகுலர் தடத்திலேயே வெளியிடுங்கள் ஆசானே..

    ReplyDelete
  45. ////.இதுவொரு தொடர்கதையும் ஆகிடுவதற்கான முதல் புள்ளியையும் போட்டு விட்டிருந்தனர் நண்பர்கள் ! லோகோ டிசைனிங் என்ன ; பயிற்சிகள் என்ன ; வீடியோ தயாரிப்புகள் என்ன ; டி-ஷர்ட்கள் என்னவென்று துவக்கம் முதல் "சுபம்" போடும் தருணம் வரை தெறி மாஸ்///


    அடுத்த மேட்ச் ஆரம்பிக்கலாமா நண்பர்களே ?!!

    October 1&2 காந்தி ஜெயந்தி லீவ் வேற வருது..

    ReplyDelete
  46. ரெகுலர் அட்டவணையில் நடப்பாண்டைப் போலவே இவர்கள் தொடர்வது ஓ.கே.வா ? அல்லது - இவர்களை ஆன்லைன் மேளா தருணத்து ஸ்பெஷல் இதழ்களாய்க் கொண்டு செல்வது உத்தமமா ?

    ஆன்லைன் மேளா தருணத்து ஸ்பெஷல் உத்தமம்

    தாத்தாக்களின் ஜாகஜங்களை நீங்கள் ரசிக்கிறீர்களா-அல்லது எனக்கோசரம் பொறுத்துக் கொள்கிறீர்களா ?

    உங்களுக்காக மட்டுமே. என்னவோ தெரியல, இந்த சீரிஸ் இதுவரை பிடிக்கல...

    ReplyDelete
    Replies
    1. நமது எதிர்காலத்தில் இது போன்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு யோசிப்பதை விடவும் முன்கூட்டியே படிப்பது நல்லது தானே

      Delete
  47. தாத்தாக்கள் எப்படி வந்தாலும் சரிங்க சார்

    ReplyDelete
  48. புதிய பதிவுக்கு நன்றி ...
    தோர்கல் எதிர்பார்த்து கத்துக்கு உள்ளேன் ....
    தாதாஸ் ....ஆன்லைன் மேளா அல்லது விரும்பவோர் வாங்கும்படி செயலாம் .....
    நான் தங்குள்ளக்காக தான் படித்தான் .... எனக்கு ஒன்று அவ்ளோவா செட் அகலா சார்ரே ...

    ஓட்டு போட்டாச்சு .....

    ReplyDelete
  49. ரொம்ப நேரமாக 99 லையே இருக்கே. இந்தாங்க 100

    ReplyDelete
  50. // கதை சொல்லும் காமிக்ஸ்" - கிட்டத்தட்ட காலி ! //

    Ada sema happy news sir :-)

    ReplyDelete
  51. // ரெகுலர் அட்டவணையில் நடப்பாண்டைப் போலவே இவர்கள் தொடர்வது ஓ.கே.வா ? அல்லது - இவர்களை ஆன்லைன் மேளா தருணத்து ஸ்பெஷல் இதழ்களாய்க் கொண்டு செல்வது உத்தமமா ? //

    ஆன்லைன் மேளா தருணத்து ஸ்பெஷல் இதழ்களாய் please sir :-)

    ReplyDelete
  52. கார்சனின் கடந்த காலம் stocks out... இதுல வியக்க ஒன்றும் இல்லை.. மிக அருமையான தயாரிப்பு தரம்... மிக அருமையான கதை.. It is simply the best..

    ReplyDelete
  53. தாத்தாக்கள் வேண்டும் சார்... Special or regular track anything is fine...

    ReplyDelete
  54. நேற்று மாலை முதல் இப்பொழுது வரை திருமண விழாக்களிலியே பிஸியாக இருக்க பதிவை இப்பொழுது தான் படிக்க நேரந்தது..பதிவில் மிக மிக மகிழ்வான செய்திகள் சார்..மிகுந்த மகிழ்ச்சியாய் நானும் உணர்கிறேன்

    ReplyDelete
  55. கார்ஸனின் கடந்த காலம் அதற்குள் ஸ்டாக் அவுட்டா சூப்பர் ஸார்

    ReplyDelete
  56. போன மாத (?)ரெகுலர் இதழ்கள் ,புத்தகவிழா ஸ்பெஷல் இதழ்கள் என அனைத்துமே படித்தாயிற்று சார்..இந்த மாதத்தை பொறுத்தவரை எனக்கு ஒரு வாரம் நாள் போனதே தெரியவில்லை என்பதே உண்மை..கையில் தினம் ஒரு காமிக்ஸ் என்றால் சொல்லவும் வேண்டுமா என்ன..

    ReplyDelete
  57. விஜயன் சார், முடிந்தால் டிராகன் நகரம் ஒரு reprint போடுங்களேன். நன்றிகள் பல.

    ReplyDelete
  58. "டிராகன் நகரம்" நான் வாங்கிய புத்தகம் தொலைந்து விட்டது. Pre owned books group களிள் விலை அதிகமாக உள்ளது. It shows the demand for this book. So நீங்க இன்னும் ஒரு முறை இதனை பிரசுரித்தால் நன்றாக இருக்கும். Thanks again!

    ReplyDelete
  59. கார்சனின் கடந்த காலம் இவ்வளவு சீக்கிரத்தில் ஸ்டாக் அவுட் ஆனதற்கு congrats சார்.

    நான் கார்சனின் கடந்த காலம் இப்பொழுது தான் முதன் முறையாக படித்தேன். எனக்கு இதற்கு முன் அதன் கதை என்ன என்பது தெரியாது. செம அசத்தலான கதை. அது மட்டும் அல்ல, அதன் மாக்ஸி சைஸ், அந்த மேக்கிங், உள்ளே நான் சீனியர் எடிட்டர் மற்றும் கருணையானந்தம் இருவரிடமும் வாங்கிய கைஎழுத்து அதன் அப்புறம் திருப்பினால் என் பேமிலி போட்டோ. வீட்டில் இந்த புத்தகத்தை பிரித்து எங்கள் பேமிலி போட்டோவை பார்த்த என் மகனும் மகளும் கண்களை அகல விரித்து ஷாக் ஆனதை பார்த்து சந்தோஷப்பட்டேன்.

    அப்புறம் எனக்கு ஸ்மாஷிங் 60'ஸ் மாக்ஸி சைஸில் வராதது மிகுந்த வருத்தத்தை தருகிறது. மாக்ஸி சைஸ்க்காக தான் சந்தா கட்டினேன். இப்படி திரென்று குண்டு புக் formatil வந்தால், அதற்கு என்ன சிறப்பு இருக்க போகிறது. தயவு செய்து இந்த வருடம் வரும் புத்தகங்களை மட்டுமாவது மாக்ஸி சைஸில் குடாக்கவும். வரிசையாக அடுக்கி அழகு பார்த்து கொண்டு இருந்தேன், திடீரென்று புஸ் சாயர் மட்டும் சின்னதாக. என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. இந்த விஷயத்திற்கு vote வையுங்கள். let the next season which might come in color be in gundu book format. atleast for this year let all the remaining smashing 60's come in maxi size.

    தாதாக்கள் கண்டிப்பாக வர வேண்டும். இதில் வந்தாலும் எனக்கு அது பிரச்னை இல்லை.

    தோர்கள் .... அப்பாடா, இதற்காக இவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியதாக போயிற்று. ஆனால் அட்டைபடம் என்னமோ சரியாக வரவில்லையோ என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  60. விஜயன் சார்,
    இரத்த படலம், தங்க கல்லறை, மின்னும் மரணம் எல்லாம் Maxi size ல் இன்னொரு முறை போட்டு கொடுங்களேன்.

    ReplyDelete
  61. விஜயன் Sir,
    தோர்களில் ஒரிஜினல் அட்டைப்படத்தை உட்பக்கமாக இணைத்து விடுங்கள்

    ReplyDelete
  62. தாத்தாக்கள் தனித்தடத்தில் வரட்டும் Sir

    ReplyDelete
  63. மன்னிக்கவும் சார், தோர்கலின் இந்த அட்டைப்படமும் வெகு சுமாராகவே உள்ளது. ஒரிஜினலையே பயன்படுத்தவும்.

    தாத்தாக்கள் ரெகுலரிலேயே வரட்டும் சார்.

    ஏற்கனவே ரெகுலரில் வர வேண்டிய பிப்ரவரி மாத கிராபிக் நாவலும், ஈரோடு புத்தக விழாவுக்கு வந்திருக்க வேண்டிய கிராபிக் நாவலும் எப்போது சார் வரும்.

    வாசகர்கள் வரவேற்பு இருந்தும் "ஸ்டெர்ன்" & "டெட்வுட் டிக்" ஆகிய இருவருக்கும் இந்த வருடத்தில் ஸ்லாட் கொடுக்காதது பெரும் ஏமாற்றமே

    ஏன் கிராபிக் நாவல்களுக்கு மட்டும் இந்த நிலை சார்.




    ReplyDelete
    Replies
    1. ///வாசகர்கள் வரவேற்பு இருந்தும் "ஸ்டெர்ன்" & "டெட்வுட் டிக்" ஆகிய இருவருக்கும் ///

      புக்பேர் -ல special edition ஆக வெளியிடுங்கள்..
      எடிட்டர் சார்...

      Delete
  64. வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதம் தோர்கல் வருவதில் மகிழ்ச்சி! அட்டைப்படம் பற்றி கருத்து சொல்ல முடியவில்லை. வெளிநாட்டு முகங்களை வரைவதில் நமது ஓவியருக்கு இருக்கும் சிரமங்களை ஏற்கனவே சொல்லி இருக்கிறீர்கள்...

      ரோசின்ஸ்கியின் இந்த இரு ஆல்பங்களுக்கான அட்டைப்பட ஓவியங்கள் குறித்துமே கலவையான கருத்துகளே எனக்கு உண்டு... அந்த ராட்சச ஆக்டோபஸை நமது டிசைனரின் கைவண்ணத்தில் கொஞ்சம் செப்பனிட்டு இருக்கலாம்... வித்தியாசமான அட்டைப்படமாக இருந்திருக்கும்...

      தோர்கலையும் நமது ஓவியர் கைவண்ணத்தில் பார்த்தாயிற்று.

      Delete
    2. தாத்தாக்கள் ரெகுலர் தடத்திலேயே வரட்டும் சார்...

      முடிந்தால் கி.நா ஜானரில் இன்னொரு புத்தகமும் போடலாம்!!!

      Delete
  65. Thathas can continue in regular subscription

    ReplyDelete
  66. Replies
    1. Thorgal's covers are not good. The original covers look amazing, can we try that in future?

      Delete
    2. And சாத்தான் வேட்டை கார்சனின் கடந்த காலம் போலவே அதே size மற்றும் தரத்தில் மறுபதிப்பு வேண்டும் sir..

      Delete
  67. தோர்கல் ரசிகையாக அட்டைபடத்துக்கு முழு மனதோடு ஏற்று கொள்ள முடியவில்லை, மன்னிக்கவும் ஆசிரியரே

    Casual readers நம் பககம் இழுக்க இந்த புதிய டிசைன் உதவிடும் எந்த மாற்று கருத்துமில்லை
    டிசைன் வொர்க் அருமை
    தோர்கலை தரிசித்திட ஆவலுடன் வெயிடிங், ஆசிரியரே


    சென்னை ஓவியருக்கு பாராட்டுகள்👏👏👏
    சகோதரி கோகிலாவுக்கும், சகோதரர் ஜெகத்துக்கும் பாராட்டுகள்👏👏👏👏👏👏

    ReplyDelete
  68. எடிட்டர் சார்..

    மேலே அட்டைப்படமாகியிருக்கும் தோர்கலின் ஒரிஜினல் சித்திரத்தை நமது வாட்ஸ்அப் குழுவில் நண்பர்கள் பகிரக் கண்டேன். 'ஒரிஜினலே நன்றாகத்தானே இருக்கிறது.. எதற்காக மெனக்கெட்டு வரைய வேண்டும்' என்று ஒருநிமிடம் தோன்றாமலில்லை தான்! நமது சென்னை ஓவியர் நன்றாகவே வரைந்திருக்கிறார்.. எனினும், உடற்கூறு அளவீடுகளில் துளியூண்டு தவறு செய்திருப்பதை உணரமுடிகிறது! இந்த அட்டைப்பட ஓவியத்தில் தோர்கலின் தாடைப்பகுதி சற்றே பெரிதாக இருப்பதைப் போல தோன்றுகிறது. காரணத்தை ஒரிஜினலோடு ஒப்பிட்டபோது கீழ்உதட்டிற்கு கீழே உடனே வரவேண்டிய shade வெகுதூரம் தள்ளி விழுந்திருப்பதே அப்படித் தோன்றக் காரணம் என்றும் புரிந்தது! அதேபோல ஆரிஸியாவின் உதடு மற்றும் பல் அமைப்பை வரைந்த விதமும், வட்டமான தாடை அமைப்பும் அவளை 'சிறுமி ஆரிஸியா' ஆக்கியிருக்கிறது!
    சிறுமி ஆரிஸியாவின் முகத்திற்கும் உடைக்கும் ஒரே வண்ணத்தைப் பயன்படுத்தியிருப்பதால் அவை உடையா.. அல்லது கழுத்து மடிப்புகளா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. இது நீங்கள் வலுக்கட்டாயமாக ஆரிசியாவின் முடிக்கு மஞ்சள் குளிக்க வைத்ததால் ஏற்பட்ட விளைவு என்பதை ஒரிஜினலோடு ஒப்பிடும்போது புரிந்துகொள்ள முடிகிறது!

    கீழே கருப்பு அங்கியுடன் நிற்கும் கோன் மண்டையர்களில் இடதுகோடியில் தனியாக நிற்பவனின் தலை சுமார் 10 செ.மீ அளவுக்கு தோள்பட்டையிலிருந்து இடம் பெயர்ந்து, அவனது இடது புஜத்தை நோக்கிப் பயணிப்பதுபோல தோற்றமளிக்கிறது! இதெல்லாம் என்னவகையான மேஜிக்கோ தெரியவில்லை!!

    நானொன்றும் ஓவியம் வரைவதில் பெரிய அப்பாடக்கர் இல்லைதான்.. ஆனால் உடல்கூறு அளவீடுகளில் நிகழும் இதுபோன்ற சிறூஊ குறைகளையும் நமது சென்னை ஓவியர் களைந்திடும்பட்சத்தில் ஒரிஜினலைக் காட்டிலும் சிறப்பான அட்டைப்படங்கள் நமக்குக் கிடைத்துவிடுமே என்ற ஆதங்கத்தாலேயே காமிக்ஸ் படிக்கவென்று கிடைத்த தக்கணூண்டு நேரத்தையும் புறம்தள்ளிவிட்டு இதை எழுதுகிறேன்! தவறென்றால் மன்னிச்சூ!!

    ReplyDelete
    Replies
    1. +1

      விஜயன் சார்,
      இதுவரை தோர்கல் கதை அட்டைப்படத்திற்கு ஒரிஜினல் அட்டை பயன்படுத்தி வந்தது சிறப்பாக அனைவரையும் கவரும் வகையில் இருந்தது! ஆனால் இந்த முறை அட்டைப்படம் சிறப்பாக இல்லை சார்!

      // அவளை 'சிறுமி ஆரிஸியா' ஆக்கியிருக்கிறது! //
      நல்லா பாருங்க விஜய், தோர்கல் காலயந்திரத்தில் சென்ற போது ஆரிசியாவை குழந்தையாக பார்த்த போது உள்ள ஒரு ஸீன் :-)

      // அட்டைப்பட ஓவியத்தில் தோர்கலின் தாடைப்பகுதி சற்றே பெரிதாக இருப்பதைப் போல தோன்றுகிறது. காரணத்தை ஒரிஜினலோடு ஒப்பிட்டபோது கீழ்உதட்டிற்கு கீழே உடனே வரவேண்டிய shade வெகுதூரம் தள்ளி விழுந்திருப்பதே அப்படித் தோன்றக் காரணம் என்றும் புரிந்தது! அதேபோல ஆரிஸியாவின் உதடு மற்றும் பல் அமைப்பை வரைந்த விதமும், வட்டமான தாடை அமைப்பும் அவளை 'சிறுமி ஆரிஸியா' ஆக்கியிருக்கிறது! //

      விஜய், ஆரிஸியாவை சரியாக வரையாததால் ஏற்பட்ட கோபம் இது என உங்க சிஸ்யபிள்ளை ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு திரிகிறார் :-)

      Delete
    2. அவருக்கு அதுக்கெல்லாம் நேரம் கிடையாதுங்க PfB!! அவர் ரொம்ப பிஷீ!! :)

      Delete
  69. Replies
    1. Always I would like to appreciate artist, because I know invaluable criticism will down the creative spirit. Well done.

      Delete
    2. invaluable?!!

      வலி தாங்கிடும் கற்கள் தானே அழகான சிலையாகிடும் சகோ?!!

      Delete
    3. விமர்சனம் நல்லதே சகோ... ஆனால் நமது பிரத்யேக அட்டை ஓவியத்தை குறை சொல்வது என்பது ஆழம் தெரியாமல் பேசுவது போன்றது என்பது எனது கருத்து... டெக்ஸ் வில்லரின் பூத வேட்டை அட்டையை சிலர் குறை சொல்லும் போதே நான் நிறைய மட்டுமே கூறினேன். இப்போது வந்த பாக்கெட் டைகர் அட்டை மட்டுமே லயன் அட்டை தயாரிப்பில் சொதப்பல் ரகம்.
      மற்றபடி இப்போ கொலைப்படையில் ஒரிஜினல் அழகிய ஸ்பைடர் முகம் விகாரமாக காட்டியது எனக்கு வருத்தமே, ஆனால் குறை சொல்லும் அளவுக்கு அல்ல.

      நான் அதிகமாக டென்சன் ஆனது சார்லியின் லே அவுட் ஆர்ட்டிஸ்ட் உதவியின்றி பரிதாபமாக சொதப்பியதால் தான், ஆனால் அது ஒன்றை மட்டுமே நான் அதிருப்தியாக கடுமையாக எதிர்த்தேன்...

      மற்றப்படிக்கு எனது கமெண்டுகள் எதுவும் குறை சொல்பவையாக இருந்திருக்க வே முடியாது.

      Delete
    4. @ஆதி சகோ
      🤣🤣🤣🤣🤣🤣

      'சொல்லலை.. சொல்லலை'னுட்டே நீங்கதான் அதிகமா குறை சொல்லியிருப்பீங்க போலிருக்கே?... 🤣🤣🤣

      சரி விடுங்க - நாம எதுவும் சொல்லலை.. யாரையும் பார்க்கலை! 😝😝

      Delete
    5. இந்தக் களேபரங்களுக்கு நடுவே இன்னொன்றையும் குறிப்பிட மறந்துவிட்டேன்... நினைவூட்டிய நண்பர்களுக்கு நன்றி!!

      அதாவது தோர்கலின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான - அவரது வலது கன்னத்தில் இருக்கும் - ஒரு நீளமான தழும்பு! நம்ம STVRன் மேக்அப் ஐட்டங்களைப் பயன்படுத்தியோ என்னவோ அந்தத் தழும்பை மறைத்துத் தோர்கலின் கன்னத்தை மொழுமொழுவென்று ஆக்கிவிட்டிருக்கிறார் நம் சென்னை ஓவியர்! அவர்தான் அதைச் செய்துவிட்டாரென்றால் நம் எடிட்டரும் இதை கண்டுகொள்ளாமல் விட்டது தான் மிகப்பெரிய ஆச்சரியமே!!

      நூற்றுக்கணக்கான நேர்த்தியான சித்திரங்களை உள்ளடக்கிய ஒரு புத்தகத்தின் அட்டைப்படச் சித்திரமும் நேர்த்தியாக இருந்திடவேண்டுமென்று நினைப்பதில் தவறென்ன இருக்கமுடியும்?!!

      'கறை நல்லது'ஐப் போல Contructive criticismம் நல்லதே!

      Delete
    6. //சரி விடுங்க - நாம எதுவும் சொல்லலை.. யாரையும் பார்க்கலை! 😝😝//
      Check all my FB posts if you want. I follow my consciousness. Don't trust second hand information... Without trusting me none cant be my friend.

      Delete
    7. எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சனம் செய், உன்னால் முடியாததை ஒருவர் செய்யும் ஒன்றை குறை என்ற பேரில் குத்தி கந்தலாக்காதே என்பது எனது கொள்கை சகோ.

      Delete
    8. If you want to clarify any doubts with me, am open for discussion.
      My no. 9840919464

      Delete
    9. 'சொல்லலை.. சொல்லலை'னுட்டே நீங்கதான் அதிகமா குறை சொல்லியிருப்பீங்க போலிருக்கே?... 🤣🤣🤣

      ஆதாரமற்ற வார்த்தைகள் நண்பரே

      Delete
    10. ///ஆதாரமற்ற வார்த்தைகள் நண்பரே///

      ஏங்க.. ஜாலியா பேசறதுக்கும் சீரியஸா பேசறதுக்கும் கூடவா வித்தியாசம் தெரியலை?!!!

      ///சொல்லலை.. சொல்லலை'னுட்டே நீங்கதான் அதிகமா குறை சொல்லியிருப்பீங்க போலிருக்கே?..///

      இப்படி நான் சொல்லியிருப்பது 10:59க்கு நீங்க போட்டிருக்கும் கமெண்ட்டைத்தான் சகோ!! :)

      உங்களைப்பற்றி யாரும் எதுவும் சொல்லலை.. நானும் உங்களைத் தப்பா நினைக்கலை. விடுங்க. கூல்!!

      Delete
    11. ////// உன்னால் முடியாததை ஒருவர் செய்யும் ஒன்றை குறை என்ற பேரில் குத்தி கந்தலாக்காதே என்பது எனது கொள்கை சகோ.///

      நல்ல கொள்கைதான்.. பாராட்டுகிறேன்!

      உங்க கொள்கையை நீங்க சொன்னமாதிரி என்னோட கொள்கையையும் நான் சொல்லணுமில்ல?

      அதாவது.. ஒருவரின் மனதை ரொம்பக் காயப்படுத்தாமல் அவர் செய்த குறைகளை முடிந்தவரை இதமாய், பதமாய் எடுத்துரைத்து மீண்டும் அதுபோன்ற குறைகள் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்ளவேண்டும். இது சம்மத்தப்பட்டவரை இன்னும் மேம்படுத்துமே தவிர கீழே தள்ளிவிடாது! இதைத்தான் 'வலி தாங்கிடும் கற்களே அழகான சிற்பமாக உருவெடுக்கும்' என்று சொன்னேன்.

      // I know invaluable criticism will down the creative spirit.///

      இது நீங்கள் சொன்ன வார்தைகள் தான்! இதனால் தான் உங்களுக்கு பதில் கமெண்ட் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன்! மற்றபடி யாருடைய மனதையும் கஷ்டப்படுத்திப் பார்க்கும் நோக்கம் எல்லாம் எனக்கில்லை.

      Delete
    12. ///Cool n chill bro//

      குட்!! :)

      Delete
    13. ராணி காமிக்ஸ் TILL 500 புக் இறுதிநாட்களில் போட்டோஷாப் செய்யப்பட்டே வெளிவந்தது. ஏனோதானோ என்று இருந்த அவற்றை நாம் விமர்சனம் செய்ய வாய்ப்பு கிடைத்ததா? உலகளவில் வேண்டாம் நம் தமிழ் பத்திரிக்கை விளம்பரத்தில் கூட வெளிவரும் அட்டைப்படம் வாசகர் குறை கூறி மாற்றியதாக சரி செய்து உள்ளனரா என்று யோசித்து பார்க்கவேண்டும்.
      புத்தகம் வெளிவந்த பிறகு அட்டையை விமர்சனம் செய்வது கூட சாத்தியமில்லாத ஒன்றாக தான் படுகிறது.
      லயன் 80களிலேயே அட்டைப்படங்களில் தத்தனி முத்திரை பதித்து எவரும் எட்ட இயலா உயரத்தில் இருந்தது.
      இப்போது மாலையப்பன் போன்ற ஓவியர்கள் இல்லை... ஆனால் பட்ஜெட் பொறுத்து இன்னும் அட்டைப்பட தயாரிப்பில் அவ்வப்போது ஆசிரியர் முயற்சி செய்வது நல்ல விஷயமே...

      Delete
    14. ராணிக் காமிக்ஸ் வெளியானப்போ நான் ரொம்பக் குட்டிப் பையன். 'எடிட்டர்'ன்றவர் என்ன வேலை செய்வார்ன்றது கூட அப்ப எனக்குத் தெரியாது. அப்போ எந்த எடிட்டரும் என் கண்ணில் படவுமில்லை! பின்னாளில் ஆளும் வளர்ந்து, (கொஞ்சூண்டு) அறிவும் வளர்ந்ததுக்கப்புறம் தான் 'எடிட்டர்ன்றவர் ஒரு நல்லகதையை அப்படி இப்படி வெட்டியொட்டி குட்டிச்சுவரா பண்றவர்'ன்றதைப் புரிஞ்சுக்கிட்டேன். எடிட்டர்ன்ற பேர்ல யாராவது கையில மாட்டமாட்டாங்களான்ற கடுப்புலயே சுத்திக்கிட்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் பெங்களூரில் காமிக்கான் நடக்கயிருப்பதைக் கேள்விப்பட்டு, நகங்களை மரப்பட்டையில் தேய்த்துக் கூர்தீட்டிக் கொண்டு அங்கே போய்ச்சேர்ந்தேன்! அங்கே ஒரு ஸ்டாலில் ஒல்லியான உடல்வாகோடு ஒருவர் 'ஹலோ.. ஐயாம் லயன் காமிக்ஸ் எடிட்டர்' என்று கைகுலுக்கி என்னை வரவேற்றார்! மனதுக்குள் கொப்பளித்த குரூரத்தோடு அவரது கண்களை ஏறிட்டு நோக்கினேன். நான் செய்த பெரிய தவறு அதுதான்! முகத்தில் முக்கால்வாசிக்குப் படர்ந்துகிடந்த அந்த விழிகளில் மான்ட்ரேக்கின் மாயாஜாலம் விரவிக்கிடப்பதை உணர்ந்தேன். மதம் கொண்ட யானை ஒன்று மனோவசியத்தில் சிக்கிய பூனையாகிப் போயிற்று!

      என்னதான் புஸிகேட்டாக மாறியிருந்தாலும், அவ்வப்போது அந்த ம.கொ.யா விழித்துக் கொண்டு கரும்புக்காட்டை கபளீகரம் செய்யக் கிளம்பிவிடுகிறது!

      அப்பயொரு நாள்தான் இன்று! :)

      Delete
    15. ஒரு கணவன் மனைவி தம்பதியினருக்கு அடிக்கடி கடும் வாக்குவாதம் வந்து தினமும் நிம்மதியற்று வாழ்ந்தனர். கணவனுக்கு மனைவி தன்னை தாண்டி வாதம் செய்வதை. ஏற்க.இயலவில்லை.
      தனது அனுபவசாலி நண்பரிடம் அவர் பிரச்சனையை பகிர்ந்து கொண்டார்...

      மனைவி வாயை மூட வைத்து தனது வார்த்தையே இறுதி வார்த்தையாக முடிக்க வேண்டும் என்ற விருப்பத்தினை கூறினார்.

      நண்பரும் அவ்வாறு அவர் தன் மனைவியிடம் பின்பற்றும் வழிமுறை ஒன்றை அவரிடம் கூறினார்.

      அடுத்தநாளும் தம்பதியினருக்கு வாக்கு வாத சண்டை மூண்டது...

      மனைவி அவரிடம் கத்தி ஓய்ந்த பின்னர் இறுதி வார்த்தையாக கணவர் சொன்னார்...

      "Yes, You are right...!"
      மனைவி மேற்கொண்டு பேசவில்லை... தன் வார்த்தையே இறுதி வார்த்தையானதில் கணவருக்கு செம்ம சந்தோஷம்.

      Delete
    16. வாழ்த்துகள் ப்ரோ! ஒருவழியாக பிரச்சினைகளிலிருந்து மீண்டுவந்து, தற்போது நீங்கள் சந்தோசமாய் இருப்பதில் எனக்கும் ஏக மகிழ்ச்சியே!! 😀😀😀
      சரியான நேரத்தில் சரியான ஆலோசனை வழங்கிய உங்களுடைய நண்பருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுங்கள்! 💐💐

      Delete
    17. ஹா ஹா ஹா நான் கார்சனை போன்று தனிக்கட்டை சகோ...

      Delete
    18. அப்படீன்னா உண்மையாவே சந்தோஷமாவும், நிம்மதியாவும் இருக்கீங்கன்னு சொல்லுங்க! :)

      Delete
    19. 🤣🤣🤣
      மதியம் உணவை வெளியே உணவை வாங்கும் போது,
      வரவேண்டியவ வந்திருந்தா இந்த பிரச்சனை இருக்காதே என்று அசை போட்டு கொண்டே நடந்தேன். இக்கரைக்கு அக்கரை பச்சை சகோ.

      Delete
    20. யெஸ்! இந்தப் பிரச்சினை இருக்காதுதான்.. ஆனா வேற பிரச்சினைகளுக்கு பஞ்சமே இருக்காதுன்றதுதான் உண்மை! :)

      உங்களுக்காண்டி ஒரு கவிதை :

      சத்தமாய் திறந்துவிடப்படும் குளியலறை குழாய் நீரினுள்
      சத்தமின்றி அடங்கிப் போகிறது
      குலுங்கி அழும் கணவன்மார்களின் கூக்குரல்!!

      - அனுபவக் கவிஞர் ஈ.வி

      Delete
    21. கவிதை பிரமாதம் சாரே.
      No pain, No Gain right?

      Delete
    22. Yes, you are right!

      😝😝 (ச்சும்மா விளையாட்டுக்கு.. no offense intended! )

      Delete
  70. *சென்று வா.. கொன்று வா..!*
    மீள் வாசிப்புக்கு உகந்த, ஆர்ப்பாட்டம் இல்லாத அதிரடியான கதை.. இந்த மாதிரி அதிரடியாக சென்று.. விறுவிறுப்பான பாணியில் முடியும் கதையும் கதைக்ககளமும் தான், சிறு வயதில் மிகவும் ஈர்த்த கதைகள், இம் மாதிரியான கதையமைப்பு உள்ளவையே V comics இன் வெற்றிக்கான விதைகளாக இருக்கும். நிச்சயம் இளம் வாசகர்களை ஈர்க்கும் பாணியில் உள்ளது. இம்மாதிரி அதிரடி பாணியிலான, தொய்வில்லாத கதைகள் தொடர்ந்து வெளிவர ஆவலுடன் உள்ளேன்... ஆசிரியர்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அந்த அடல்ட் ஒன்லி ஒரு பக்கத்தை தாண்டி பார்த்தால் செம கதை..

      Delete
    2. டெக்ஸ் மற்றும் ஜாகோர் கதைகளில் இப்படி வருவது ஏற்பதாக இல்லை.

      Delete
  71. மீண்டும் வந்த மாயன்: கடைசி வரைக்கும் டெக்ஸ் & கோ அடி வாங்கி அந்த காப்பகத்திலயே செட்டில் ஆகிட்டாங்க, ரொம்ப மெதுவா கதை நகருது, டாப் ஹீரோஸ் மற்றும் வில்லன் இருந்தும் இந்த கதை below avg .. ஏன் இப்படி மொக்கையா எழுதினாங்கன்னு தெரியல..

    ReplyDelete
  72. மீண்டு(ம்) வந்த மாயன்..!

    உள்ளபடி உண்மையை சொல்ல வேண்டும் என்றால்... டெக்ஸ் வில்லரின் அதிரடியில்... என்று சொல்வதை விட மெபிஸ்டோ வின் பட்டையை கிளப்பும் அதிரடியில் என்று தான் சொல்ல வேண்டும்.

    இந்த வருடம் வந்த டெக்ஸ் வில்லரின் டாப் 3 கதைகளில் நிச்சயமாக இதுவும் ஒன்று. மேபிஸ்டோவின் மாயாஜால தந்திரங்களும், வெறித்தனமான பழி வாங்கும் திட்டமிடல்களும் அதை செயல்படுத்தும் விதமும் கதை முழுவதும் ஒரு பரபரப்பை, கிலியை ஏற்படுத்தி விடுகிறது. இந்தக் கதையின் வெற்றிக்கு காரணம் நிச்சயம் மெபிஸ்ட்டோ தான்.

    பொதுவாக டெக்ஸ் வில்லரின் கதைகளில் அவரது கீர்த்தியை பார்த்து வில்லன்கள் பயப்படுவார்கள் நடுங்குவார்கள்... ஹி ஹி ஹி... இந்த கதையில் நம் கீர்த்திமிகு வில்லன் மெபிஸ்ட்டோ விடம்அந்த பயத்தை பார்க்க முடியவில்லை.

    அதையும் கிளைமாக்ஸ் இல் டெக்ஸ் வில்லர் மற்றும் கார்சனிடம் நேருக்கு நேராக சொல்லும் அந்த வில்லத்தனம்... இருக்கே... ம்ம்... ம்ம்... சூப்பர்.

    அதான் கிளைமாக்ஸ்ல வழக்கம் போல வில்லன்கள் தோற்றுவிடுவார்களே என நினைத்தால் அதுவும் கிடையாது... நம் மெபிஸ்ட்டோ & விசுவாசிகள் திட்டத்தை மாற்றிக்கொண்டு , விலகி சென்று விடுகின்றனர்... அவ்வளவுதான். டெக்ஸ் வில்லர் அண்ட் கோ , இந்தக் கதையில் ஒவ்வொரு இடத்திலும் தப்பி பிழைப்பது பெரும் பிரயத்தனமாக இருந்தது. அப்புறம் எங்கே மெபிஸ்ட்டோ வை வீழ்த்துவது அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

    விரைவில் எதிர்பாருங்கள் மெபிஸ்ட்டோ & கோ வின் அதிரடி சாகசத்தை... ஹி ஹி ஹி...

    ReplyDelete
    Replies
    1. ////விரைவில் எதிர்பாருங்கள் மெபிஸ்ட்டோ & கோ வின் அதிரடி சாகசத்தை... ஹி ஹி ஹி...///

      +555
      நா காத்திருக்கிறேன்...

      Delete
  73. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்...,

    வெகு நாளாக நிறைவேறாத ஒரு எதிர்பார்ப்பு... கருப்பு கிழவியின் கதைகளை ஒரே தொகுப்பாக வெளியிட்டால் அட்டகாசமாக இருக்கும். வாய்ப்பு உள்ளதா சார்...

    ஹாரர் கதைகளை படித்து வெகு வெகு காலமாகிவிட்டது சார். கொஞ்சம் உங்கள் கவனத்திற்காக...

    ReplyDelete
  74. தங்க கல்லறை கா.க.கா. formetல் சீக்கிரம் முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடுங்கள் சார் .தோட்டா தலை நகரம் போல் சிங்கிள் சாட் டைகர் கதைகளில் ஏதேனும் மிச்சம் மீதி இருக்கிற தாங்க சார். இருந்தா தேடி கண்டுபிடிச்சு கொண்டாங்க சார் .ப்ளீஸ் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  75. தோர்கல் ஒரிஜினல் அட்டைப்படத்துடன் வருவதே சிறப்பு.

    ReplyDelete
  76. தோர்கல் அட்டைப்படம்: திருப்தியாக இல்லை
    தாத்தாக்கள்: ஆன்லைன் மேளா

    ReplyDelete
    Replies
    1. ///தோர்கல் அட்டைப்படம்: திருப்தியாக இல்லை///

      ஆகவே
      ஒரிஜினல் அட்டை படத்தை கொடுக்க வேண்டும்.

      Delete
  77. தோர்களின் ஒவ்வொரு பாக அட்டைப்படத்திலும் அந்தக் கதையின் சில முக்கியமான பகுதிகளை மறைத்து வைத்திருப்பார்கள் கதையை முழுமையாக படித்து முடித்துவிட்டு அட்டை படத்தை பார்த்தால் அந்த விஷயங்களை நாம் கண்டுபிடிக்க முடியும். எனவே ஒரிஜினல் அட்டை படத்தை கொடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம் இருந்தாலும் வேற அட்டைப்படம் கொடுத்தாலும் ஒரிஜினல் அட்டை படத்தை உட்பக்கமாவது இணைத்து விடுங்கள்

    ReplyDelete
  78. , ஆசிரியர் விஜயன் sir அவர்களுக்கு வணக்கம் இன்று காலை ஆபீஸ் கு
    Phone செய்து க.க.க புத்தகம்
    கேட்டேன் ஸ்டாக் அவுட் என்று
    சொன்னார்கள் என்னை போல்
    பல வாசகர்கள் இன்னும் வாங்காமல் இருக்கிறார்கள் எங்களுக்கு இந்த
    புத்தகம் கிடைக்க வாய்ப்பு உண்டா
    ஆசிரியர் sir?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. From Editor

      // இங்கே சின்னதாய் ஒரேயொரு இடைச்செருகல் folks - காலியாகி விட்ட புக்ஸ் எவையேனும் உங்களுக்குத் தேவைப்பட்டால் பொறுமை ப்ளீஸ் - அவை சார்ந்த ஒரு குறிப்பிட்ட அளவிலான கோரிக்கைகள் வரப்பெறும் வேளையில், நிச்சயமாய் reprint செய்திடுவோம் ! And rest assured - விலைகள் நியாயமாகவே இருந்திடும் ! //

      So No worries

      Delete
  79. ஒரு சிலர் மொத்தமாக வாங்கி
    மறு விற்பனைக்கு வைத்து கொண்டதால் ஸ்டாக் அவுட்
    ஆகி விட்டதா????

    ReplyDelete
  80. Sir - the front cover of Thorgal needs a change sir - the current medley of colors is not appealing !

    ReplyDelete
  81. Whatever the debate upwards sir, this cover plain and simple sucks :-)

    ReplyDelete
  82. கௌபாய் ஸ்பெஷலில் வெளியான இளம் டைகரின் இளமையில் கொல் மூன்று பாக சாகசத்தில் முதல் பாகம் மட்டும் வெளியாகி மீதம் இரண்டு பாகங்கள் தொங்கலில் உள்ளதே எடிட்டர் சார்? ப்ளீஸ்... இதனை சரி செய்யுங்கள் சார்! 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் எடிட்டர் சார்.. லிமிடெட் எடிசனாக வெளியிங்கள்.

      Delete
    2. // கௌபாய் ஸ்பெஷலில் வெளியான இளம் டைகரின் இளமையில் கொல் மூன்று பாக சாகசத்தில் முதல் பாகம் மட்டும் வெளியாகி மீதம் இரண்டு பாகங்கள் தொங்கலில் உள்ளதே எடிட்டர் சார்? // பார்த்து செய்யுங்கள் சார்.

      Delete
  83. Ilamaiyil kol+ young tiger combo edition.

    ReplyDelete
  84. Inigo .//தோர்கல் ஒவ்வொரு பாக அட்டைப்படத்தில் அந்தக்கதையின் முக்கியமான பகுதிகளை மறைத்து வைத்திருப்பார்கள்//.தோர்கல் அற்புதங்கள் தோட்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கிறது.சும்மாவா பல்லடம் ஆசிரியரும் சேலம் k.s. சாரும் தோர்கல் தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள் .

    ReplyDelete
    Replies
    1. 🌍🏔🌲👨‍👩‍👧‍👧Thorgal 🐕☮

      Delete
    2. தோர்கல் காத்திருப்புக்கு ஹாட் கவரில் போட்டுக் கொடுத்தால் மகிழ்ச்சியின் மேல் மகிழ்ச்சி

      Delete
    3. சூப்பர் அந்த முதல் பாக அட்டை விருந்து விளக்கலாமே நண்பர்களே....சுவாரஷ்யமாருக்கும்...நாங்களும் தெரிஞ்சுக்குவோம்

      Delete
  85. சார், எனக்கு டெக்ஸ் கதைகள் ரொம்ப பிடிக்கும். கா. க. கா டெக்ஸ் கதைகள்ள ஒரு பிளாக் பஸ்டர். என்னால 900 கொடுத்து வாங்க இயலாது. என்னை மாதிரி மிட் ரேஞ்ச் ரசிகர்களுக்காக 450 கா. க. கா விடலாமே.. கொஞ்சம் யோசிங்க எடிட்டர் சார். 🙏

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஆமாம் சார்... கலெக்டர் களுக்கு விலை பொருட்டே இல்லை... 10000 மட்டுமே மாத வருமானம் பெறும் நண்பர்கள் பலர் உண்டு இங்கே... அவர்கள் பொருட்டு வழக்கமான சைசில் கருப்பு வெள்ளையில் ஒரு 200 விலையில் வெளியிட முடியுமா என்று பாருங்கள்... அல்லது கொரில்லா சாம்ராஜ்யம் சைசில் முழு வண்ணத்தில் economy பிரதி தயார் செய்ய முடியுமா என்று முயற்சிக்கவும். epic கார்சனின் கடந்த காலம் புத்தகவிழாக்களில் எப்போதும் கிடைத்திடவும் ஏற்பாடு செய்யுங்கள், please.

      Delete
    3. ...வழக்கமான சைசில் கருப்பு வெள்ளையில் ஒரு 250 விலையில்...

      Delete
  86. ஒரு நல்ல பாடகர் .என்பது பொன்விழா மேடையில் உலகிற்கே தெரிந்துவிட்டது . நல்ல கவிஞர் என்பது தற்போதுதான் மெல்ல மெல்ல நம்ம குரூப்பிற்கே தெரிய வருகிறது. விரைவில் உலகிற்கு தெரியும் நாள் வர வேண்டும் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. நானே பஞ்சத்துக்குப் பாடிட்டும்.. பசிக்கு எழுதிட்டும் கிடக்கேன்.. இதுல நீங்க வேற, ராஜசேகர் ஜி!!

      நம்ம எடிட்டர் ஒரு அட்டகாசமான கவிஞர்ன்ற விசயம் நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்?!!

      அவரோட கவிதைத் தொகுப்பை புக்கா வெளியிடச் சொல்லி பத்துவருசமா கேட்டிட்டிருக்கேன்!

      Delete