நண்பர்களே,
வணக்கம். கோவை விழா துவங்கியது நேற்றைக்குப் போலுள்ளது ; அதற்குள்ளாக அவர் பழைய மாப்பிள்ளையாகிடும் பொழுதும் புலர்ந்து, கூப்பிடு தொலைவில் புதியவராய் ஈரோடு மினுமினுத்துக் கொண்டிருக்கிறார் ! But பழைய மாப்பிள்ளைக்கு இன்னமும் ஞாயிறின் விற்பனை காத்திருக்க, தெறிக்க விடும் புதிய ரெக்கார்டை அவர் தொடப் போவது நிச்சயம் ! இந்த வியாழன் ஒரு நாளைத் தவிர்த்த பாக்கி அனைத்து நாட்களிலும் கோவைக்காரவுக அடித்திருப்பதெல்லாமே சிக்ஸர்ஸ் ! நாளைக்கும் போட்டுச் சாத்தி விட்டீர்களெனில், "யே...சூப்பரப்பு...சூப்பரப்பு.." என்றபடிக்கே கேரவனை ஈரோட்டுக்கு திசைதிருப்பிடுவோம் ! புனித மனிடோ - மனசு வைப்பீராக !
And நாளை சிக்ஸர் மேளா வேண்டிக் காத்திருப்பது நம்மள் கி காமிக்ஸ் கிரிக்கெட் லீகிலுமே தான் என்பதில் no secrets !! Ashes தொடர் ; மேற்கிந்தியத் தீவில் நடைபெற்று வரும் இந்திய ஒரு நாள் போட்டிகள் ; ஸ்ரீலங்கா vs பாகிஸ்தான் தொடர்களையெல்லாம் நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தி வைக்க அவசரம் அவசரமாய் உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு கோரிக்கையினை முன்வைத்திருப்பதை BBC-ன் புண்ணியத்தில் கேள்விப்பட்டிருப்போம் ! பெருந்துறையில், நாளை பெரும் துரைகள், மட்டை பிடிக்கவிருக்கும் கண்கொள்ளாக் காட்சியினை உலகமே ரசிக்க ஆவலாய்க் காத்திருக்க, நானும் அதற்கு விதிவிலக்கல்ல ! இக்கட மட்டும் வழக்கம் போல பணிகள் கடைசி நிமிடம் வரையிலும் நாக்குத் தொங்கச் செய்யாதிருப்பின், நேரில் கண்டு களிக்கும் ஜனத்திரளினில் நானும் ஐக்கியமாகியிருப்பேன் ! So நாளை நேரலை இல்லாவிடினும், சைடு அலை ; ஒரு ஒர அலை - என்று ஏதாச்சுமொரு அலையில் இங்கே updates செய்ய முனைந்தால் சூப்பராக இருக்கும் !! கெலிக்கப் போவது டெக்சா ? ஸாகோரா ? லக்கியா ? டைகரா ? மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருப்போம் - அங்கே மூச்சிரைக்க நம் மூத்த குடிமக்கள் பஸ்கி எடுக்கப் போவதை எதிர்நோக்கி !! May the best team win gentlemen ! God be with you !! நீங்கள் முன்னெடுத்திருப்பது ஒரு அசாத்திய நட்பின் கொண்டாட்டத்தினை ! நாளை அந்தப் போட்டியில் கோப்பைக்கு உரிமை கோரவிருப்பது ஒரேயொரு அணியாக மட்டுமே இருக்கப் போகிறது தான் ; ஆனால் நட்பெனும் சமாச்சாரத்தில் அனைவருமே winners all the way !!
டைகரை போட்டோமோ ; டெக்ஸை கண்ணில காட்டினோமோ ; லக்கியை வெளியிட்டோமோ - அவையெல்லாமே பெரும் சாதனைகள் என்றிட மாட்டோம் ; but இதோ, இந்த நட்புக்கு சின்னதாயொரு பாலம் அமைக்க சாத்தியமானதே, அதுவே எங்களின் ஆயுட்கால சாதனை என்பேன் !!
ஈரோட்டில் நாளை கிரிக்கெட் திருவிழா என்றால், வெள்ளியன்று துவங்குகிறது புத்தகத் திருவிழா & சனியன்று களை கட்டவிருப்பது நமது முத்துவின் பொன்விழா ஆண்டுக் கொண்டாட்ட திருவிழா ! புத்தக விழாவினில் இம்முறை கோவை மக்களின் வாசிப்பு ரசனைகளுக்கேற்பவே புக்ஸை பிரதானப்படுத்திட எண்ணியுள்ளோம் ! கோவையில் மாயாவிக்கு மவுசு அத்தனை ஜாஸ்தியாய் இருக்கக் காணோம் ; மாறாக டெக்ஸ் & லக்கி லூக் தூள் கிளப்பியுள்ளனர் ! சிறார்களுக்கான "பீன்ஸ்கொடியில் ஜாக்" ; "சிண்ட்ரெல்லா" போன்ற கதை சொல்லும் காமிக்ஸ் இதழ்களும் அழகாய் விற்பனை கண்டுள்ளன ! Black & white இதழ்களில் விலை குறைவான புக்ஸ் எல்லாமே decent விற்பனை ! And surprise...surprise...மேகி கேரிசன் நல்ல விற்பனை கண்டுள்ளார் ! So ஈரோட்டிலும் இதே template தொடரும் என்றே எண்ணியுள்ளோம் ; பார்க்கலாமே !!
நமது ஈரோட்டு ஸ்பெஷல் வரிசையில் BIG 3 ரெடியாகி ஜம்மென்று காத்திருக்க, நான்காவது இதழான மர்ம மனிதன் மார்ட்டினோடு மல்யுத்தம் துவங்கியது ஒற்றை தினத்துக்கு முன்னே தான் ! இந்த முழுவண்ண லேட்டஸ்ட் மார்ட்டின் தொடரினை உறுதி செய்து விட்டிருந்த போதிலும், பணம் அனுப்ப ஜவ்விழுத்திருந்தோம் என்பதால் கதைகள் கைக்கு வந்திருக்கவில்லை ! அவசரம் அவசரமாய் பணத்தைப் புரட்டி அனுப்பிய பின்னே கோப்புகள் நம் கைக்கு வந்ததே இந்தச் செவ்வாய் மதியம் தான் ; ஜூனியர் எடிட்டரின் உபயத்தில் இரண்டே நாட்களில் இத்தாலியிலிருக்கும் மொழிபெயர்ப்பாளரிடம் இதனை எழுதி வாங்கிட வியாழன் ஆகியிருந்தது ! ஆஹா....64 பக்க கதை ; கருணையானந்தம் அங்கிளிடம் தள்ளி விட்டு ஞாயிறுக்குள் எழுதி வாங்கிவிட்டாலும், இரண்டே தினங்களுக்குள் DTP ; பிரின்டிங் என சகலத்தையும் மின்னல் வேகத்தில் செய்து முடித்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன் ! ஆனால் அவரோ, "மார்ட்டினா ? ஒரு வாரம் ஆகுமேப்பா ?" என்று சொல்ல, confusion என்று மண்டையை சொரிய ஆரம்பித்தேன் ! வேறு வழியின்றி பேனாவையும், பேடையும் தூக்கிக் கொண்டு வெள்ளி காலையில் எழுத அமர்ந்தால், கதையின் ஓட்டம் சும்மா காந்தமாய் இழுப்பதை உணர முடிந்தது !
Oh yes ...மாமூலான மார்ட்டின் template தான் ; ஒரு வரலாற்றுப் புள்ளியோடு நிறைய கற்பனையைக் கலந்து கட்டி எப்போதும் போல வெளுத்துக் கட்டியுள்ளனர் தான் ! ஆனால் இம்முறையோ கணிசமான வித்தியாசங்களுடன் !! For starters - முழு வண்ணம் ! And இது லேட்டஸ்ட் மார்ட்டின் ! செம ஸ்டைலாய் வலம் வருவது நம்ம மர்ம மனிதன் மாத்திரமல்ல, டயானாவும், 'உர்ர்..கிர்ர்...ஜாவாவும் தான் ! Drone பயன்படுத்துகிறார் மார்ட்டின் ; GPS கொண்டு தேடல்களை நடத்துகிறார் ; ஸ்டைலாய் சண்டை போடுகிறார் ; 64 பக்கங்களே எனும் போது சும்மா 'ஜிவ்'வென்று பறக்கிறது கதை ! வழக்கம் போலவே ஆங்காங்கே விஞ்ஞானம் ; இரசாயனம் ; ரசவாதம் என்று கதாசிரியர் டாப் கியரைப் போட்டு விட, அவசரம் அவசரமாய் கூகுளுக்குள் மண்டையை நுழைக்கவும் வேண்டிப் போனது ! முட்டி மோதிட வேண்டி இருந்தாலும் கதை செம சுவாரஸ்யமாக இருக்க, பிசாசாய் ஓட்டமெடுத்த பேனா, இரவு 8 மணிவாக்கில் "சுபம்" போட்ட போது எனக்கே கொஞ்சம் மிரட்சியாகத் தானிருந்தது ! பிட்டத்துக்குக் கீழே தார்குச்சி வைத்தால் வண்டியின் வேகமே வேற மாதிரி போலும் ! என்று நினைத்துக் கொண்டே கத்தையாக பக்கங்களை DTP க்குத் தந்தேன் ! And இதோ - இந்தப் பதிவை டைப் செய்திட அமர்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னே DTP முடிந்து ; எடிட்டிங்கும் முடிந்து - திங்களின் பிரிண்டிங்குக்கு all set !! நிறைய 'ஆட்றா ராமா...தான்றா ராமா' பண்ணியிருக்கிறோம் தான் ; but நமது குட்டிக்கரண அளவுகோல்களுக்குமே இது லைட்டாக டூ மச் என்பேன் ! Anyways - இந்த மினி மார்ட்டின் வெளியான பின்னே ஆங்காங்கே கணிசமான கேச இழப்புகள் guaranteed !!
And இதோ - ஆகஸ்டின் ரெகுலர் இதழ்களின் லிஸ்டில் கடைசி இதழின் preview !! ட்ரெண்ட் !! 8 ஆண்டுகளுக்கு முன்பாய் ஆரவாரங்களின்றி அமைதியாய் நம் மத்தியில் அறிமுகம் ஆன மனுஷன் ! கனடாவின் காவல்துறை ; பறந்து விரிந்து பனிவனங்களில் பணி ; ஒருவிதத் தனிமை விரும்பி ; மென்சோகம் இழையோடும் கதாப்பாத்திரம் ! என்றைக்குமே ஆக்ஷனில் அதிரடிகள் காட்டியதுமில்லை ; வசனங்களிலும் அனல் பறக்க அனுமதித்தவரில்லை ! பற்றாக்குறைக்கு சகலத்தையும் சோலோவாய் செய்து முடிக்கும் ஜித்தர் ! டெக்ஸுக்கு ஒரு கார்சன் ; டைகருக்கு ஒரு ஜிம்மி ; பிரின்சுக்கு ஒரு பார்னே ; ரிப் கிர்பிக்கு ஒரு டெஸ்மாண்ட் என்று துணைக்கதாநாயகர்கள் தோள் கொடுப்பதோடு, கொஞ்சமாய் கதைகளுக்கு இலகுத்தன்மை வழங்கவும் காரணமாக இருப்போர் ! But இங்கே ஒரேயொரு நாய்க்குட்டி தான் டிரெண்ட்டோடு ரவுண்ட் அடித்து வந்தது and அதையுமே கதாசிரியர் கொஞ்ச நாட்களில் பேக் அப் பண்ணிவிட்டார் ! So வெற்றியோ-தோல்வியோ ; ஹிட்டோ-சொதப்பலோ - அதன் பூரணமும் டிரெண்டின் கணக்கிலேயே ! And சூப்பர்-டூப்பர் ஹிட் என்றெல்லாம் இவர் ஒரு நாளும் நம் மத்தியினில் தெறிக்க விட்டதில்லையென்றாலும், மினிமம் கியாரண்டி நாயகராகவே இருந்து வந்திருக்கிறார் ! மொத்தம் எட்டே கதைகள் கொண்ட தொடர் ; ஆண்டுக்கு ஒன்றென இதோ - finish line-ல் நின்று கொண்டிருக்கிறோம் !! ஒரு மென்மையான தொடரை அழகாய் நகர்த்திச் சென்று அதன் இயல்பான முடிவு வரை இட்டுச் செல்ல சாத்தியப்பட்டிருப்பதில் செம ஹேப்பி ! அதே சமயம், இனி இந்த சிகப்புச் சட்டைக்காரரை நாம் பார்க்கவே போவதில்லை எனும் போது சற்றே அடைக்கும் தொண்டையோடு டாட்டா சொல்லிடும் தருணம் இது ! "பனிவனப் பிரியாவிடை" - எப்போதும் போலான டிரெண்ட் ஆல்பம் ! எப்போதும் போலவே ஓவியரும், கலரிங் ஆர்டிஸ்ட்களும் ரவுசு பண்ணியுள்ளனர் ! Adieu Trent !! உங்களை அறிந்திட இயன்றது எங்களின் சந்தோஷம் !!
இதுவரை வெளியாகியுள்ள 7 டிரெண்ட் ஆல்பங்களில் நீங்கள் படித்திருப்பது எத்தனை folks ? உங்களின் பார்வையில் இந்த நாயகருக்கு / இந்தத் தொடருக்கு என்ன மார்க் ?
ஒரு தொடர் முற்றுப் பெற்றிருக்க, "முற்றும்" என்றெண்ணியிருந்த இன்னொரு தொடரில் ஒரேயொரு ஆல்பம் கூடுதலாய் தலை காட்டவுள்ளது ! கதாசிரியர் ஷான் வான் ஹாம்மின் கைவண்ணத்தில் "வேய்ன் ஷெல்டனின்" ஆல்பம் # 14 தயாராகி வருகிறதாம் !! 2024 ரிலீஸ் ! What say guys - மீசைக்காரரை மறுக்கா தரிசிக்கலாமா ?
And XIII spin-off தொடரினில் 3 பாக ஸ்பெஷல் spin-off காணவிருக்கும் "ஜோன்ஸ்" கூட ரெடியாகி வருகிறார் !
Before I sign out - நமது ஈரோட்டு சந்திப்பு பற்றி !!
காலை 9-30 க்கே ஆஜராக ஆரம்பித்தால், லூட்டிகளுக்குப் பொழுதுகள் சரியாக இருக்கும் என்பேன் ! So சனி காலை ; OASIS ஹோட்டலின் மகேஸ்வரி ஹாலில் ; ஒன்பதரைக்கு சந்திப்போமா all ? உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்க செம ஆர்வமாய் வெயிட்டிங் ! Please do drop in !!!
Bye all....see you soon ! Have a Cricketing Sunday !!
Me the first
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇரண்டாவது
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDeleteவணக்கம் நண்பர்களே 🙏
ReplyDelete7th
ReplyDeleteஆட்டக்காரர்கள் இன்னும் தூங்காம இன்னா பண்ணிட்டு ??
ReplyDeleteபிராக்டிசாம் சார்
DeleteI am in..
ReplyDelete9th r 10th first time in history
ReplyDeleteபதிவின் தலைப்பு அட்டகாசம் எடிட்டர் சார்! ஹா ஹா!! :)
ReplyDeleteட்ரெண்டின் ஆல்பங்கள் எல்லாமே எனக்குப் பிடித்தமானவையே!
இதுதான் ட்ரெண்டின் இறுதி ஆல்பமென்பது உறுதியானால் டிரெண்டை நான் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்பதை அறுதியிட்டுக் கூறிவிடமுடியும்!! ட்ரெண்ட் தொடருக்கு 9.75/10 மார்க்குகள் சார்!
+1 - we will miss Trent. Silent and different storyline.
Delete@Editor,
Do we have copies of all Trent albums sir?
Hii
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteவணக்கம் நண்பர்களே 😍🥰
ReplyDeleteசெல்டனுக்கும் ஜோன்ஸூக்கும் இப்பவே ஸ்லாட் ஒதுக்கி 2024அட்டவணை ஆரம்பிச்சுருங்க சார்
ReplyDelete// தெறிக்க விடும் புதிய ரெக்கார்டை அவர் தொடப் போவது நிச்சயம் ! இந்த வியாழன் ஒரு நாளைத் தவிர்த்த பாக்கி அனைத்து நாட்களிலும் கோவைக்காரவுக அடித்திருப்பதெல்லாமே சிக்ஸர்ஸ் ! //
ReplyDeleteGood to hear this sir. Feeling happy 😃
ட்ரெண்ட்..?
ReplyDeleteஎல்லாம் படிச்சாச்சு...
Deleteபடிச்சாச்சு...
இதுக்கு மேல நான் என்ன சொல்ல...
// நீங்கள் முன்னெடுத்திருப்பது ஒரு அசாத்திய நட்பின் கொண்டாட்டத்தினை ! நாளை அந்தப் போட்டியில் கோப்பைக்கு உரிமை கோரவிருப்பது ஒரேயொரு அணியாக மட்டுமே இருக்கப் போகிறது தான் ; ஆனால் நட்பெனும் சமாச்சாரத்தில் அனைவருமே winners all the way !! //
ReplyDeleteSema sema sir. Very well said.
////துரைகள், மட்டை பிடிக்கவிருக்கும் கண்கொள்ளாக் காட்சியினை உலகமே ரசிக்க ஆவலாய்க் காத்திருக்க, ////
ReplyDeleteஇப்பவே பெருந்துறை கொழுந்து விட்டு எரியுதுங்க...
அனல் பறக்கும் பவுலிங்...
அடிக்கிற அடியில் பந்து சிவகாசிக்கும், ஈரோடுக்கும் அப்படியே பெங்களூருக்கும் பறக்குதுங்க.
டே மேச்சுன்னாங்களே....இரவுக்கு நிறமேது
Deleteசாரி நிறம் வேறு
Delete
ReplyDeleteசிறப்பானதொரு அப்டேட் ஐயா... புதுயுக மார்ட்டினை பற்றிய வாசிப்பு ஆர்வமூட்டுகிறது.
டிரெண்ட் - இதுவரை வந்த அனைத்து கதைகளையும் படித்துள்ளேன். தர்மான, ஆர்ப்பாட்டம் இல்லாத கதைகள். திரும்ப திரும்ப படிக்கவில்லை என்றாலும் தொய்வில்லாமல் செல்லும் தெளிந்த நீரோடை...!
கவிஞன் ஒருவனை தூக்கில் போடுவார்களே அந்த கதையும், காதல் தோல்வியில் விரக்தியடையும் டிரெண்ட் மற்றும் கடைசியாக வந்த தேவையில்லாத தேவதை எல்லாம் மென்மையான வாசிப்பை கொடுத்தன...
மட்டைப்பந்து விளையாட்டில் களமிறங்கும் மாமனிதர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்! 🫸🫷🏏🇹🇰🏏 . விளையாட்டாக தொடங்கிய விளையாட்டு, அருமையாக ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுவதை எண்ணி வியக்கிறேன்....
இதற்காக உழைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்...!
23rd
ReplyDeleteபெருமதிப்பிற்குறிய அன்பு ஆசிரியர் அவர்களுக்கும், நமது லயன் குடும்ப சொந்தங்களுக்கும் அஸ்ஸலாமு அலைகும் ...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
அடடே... ரொம்ப காலம் கழித்து மறுவருகை !! Welcome back !! நலமா சார் ?
Deleteஈரோட்டுக்கு ஒரு எட்டு வர முடிகிறதாவென்று பாருங்களேன் ?
முட்டிக்காலில் சின்னதாய் ஒரு அறுவைச்சிகிச்சை சார்....
Deleteநான்கு மாத Bed rest ..!!
அடுத்த முறை கலந்துக்கொள்வேன் இன்ஷா அல்லாஹ்...!!
நமது சொந்தங்கள் அனைவரும் நலமா..?
Warm welcome back Basha. Get well soon.
DeleteRegarding Trend finished reading all the books so far published by our publication. A different type of hero this one (Trend) and wat to say other than.... 😊 he is trending. It is very hard to bid adieu to our favourite hero. 😍🥰
ReplyDeleteட்ரெண்ட் கதைகள் வந்தது
ReplyDeleteஅனைத்தும் படிச்சுட்டேன்
சார்.. எல்லாமே அருமை
தான்... ❤️👍
ட்ரெண்ட் கதைகள் அனைத்தும் அருமையாக இருந்தன 10/10
ReplyDelete+1
Deleteட்ரெண்ட் - அனைத்தையும் படித்து இருக்கிறேன். வண்ணமும், சித்திரங்களும், அந்த அமைதியும், பனிமலைகளையும் இனி மிஸ் பண்ண போவதில் வருத்தம். ஆர்பாட்டமில்லாத ஒரு ரஹானே போல் ஒரு
ReplyDeleteஸ்டைலான இன்னிங்ஸ் ட்ரெண்டினுடையது. அட்டை டூ அட்டை மிளிருவது இவரது புத்தகங்களுக்கே உள்ள தனி சிறப்பு.
8.5/10
+1
Deleteஷெல்டன் வேண்டும் சார்.
ReplyDeleteவந்துட்டேன் நானும் வந்துட்டேன்.
ReplyDeleteOk... Ready... பெருந்துறை நோக்கி கிளம்பியாச்சு...
ReplyDeleteகேப்டன் கிஆக... சீக்கிரம் தூங்க சொன்னா தூங்கலையா...!? நேர்ல பார்த்த உடன இருக்கு உங்களுக்கு பூசைகாப்பு....!!!
வெற்றி வெற்றி...ஸ்பைடரயும்
Deleteசூப்பர் சார்....துரைகள் கலக்குவதை அறிய ஆவலுடன்...
ReplyDeleteமார்ட்டின் ஹல்க் துணையோட வாராரோ......பச்சை மனிதன் ஆவலைத் தூண்டுதலால்....வண்ணமில்லா இதழில் வண்ணம் காரணத்தோடுதானோ
...ட்ரெண்ட் கடைசி கதைன்னாலும் கண்ண திறந்துட்டு சொல்வேன் இதான் டாப்பென அட்டைப்பட வரிசையில்....
எல்லாத்துக்கும் மேலன்னாலும் கீழ போட்டீங்க பாருங்க வான்ஹாம்மேன்னு ....செமயான அறிவிப்பு சார்...
அதும் லார்கோ போல ஷெல்டன் ஓவியருடன் கலக்கும் நாளுக்காயும்....மூனு பாக ஜோன்சா ...அடேயப்பா என ஏக்த்தோடும்..மூனு பாகம்ங்கிறது ஆவலைத் தூண்டுது ஜோன்ஸ் மேல் பெரிய ஆவலில்லா விட்டாலும்...சீக்கிரமா போட்டுத் தாக்குங்க
விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteட்ரெண்ட் அட்டைப்படம் மிக அழகு ...குழந்தையுடன் ஒரு நாயகர் அதுவும் க்ளோஸ்அப் ஷாட்டில் ..வித்தியாசமாய் அழகாய் ரசிக்க வைக்கிறது ..அருமை சார்...
ReplyDeleteட்ரெண்ட்டின் அனைத்தும் கதைகளுமே படித்து முடித்தாயிற்று சார்... ஆரம்பத்தில் சிறிது மெதுவாக போவது போல் தோன்றினாலும் ஆர்ப்பாட்டமில்லாமல் மிக அழகாக தொடர்ந்து ரசிக்க வைத்த ஒரு வித்தியாச நாயகர் இவர்..கண்டிப்பாக இவரின் இந்த இறுதி சாகஸ இதழ் வந்தவுடன் கண்டிப்பாக ஒட்டுமொத்தமாக மீண்டும் ஒரு மறுவாசிப்பில் ஈடுபடுவேன் என்பது உறுதி..
******
ஷெல்டன் மீண்டும் வருகிறாரா...ஆஹா..ஆஹா...அட்டகாசம் கண்டிப்பாக அவர் வெளிவந்தால் அந்த வருடமே எங்கள் கண்ணிலும் காட்டுங்கள் சார்..டெக்ஸை அடுத்து அதிகம் மறுவாசிப்பில் ஈடுபட்டது ஷெல்டன் தான்...அவர் வருகை அறிவிப்பு மிக சந்தோசத்தை அளிக்கிறது..
******
இன்று விளையாடும் நான்கு அணிகளுமே முதலிடத்தை பிடித்து வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்...:-)
ReplyDeleteநிச்சயமா....பேட் தூக்கவும் முடியாம பால வீசும்ஆ முடியாம கிரவ்ண்ட சுத்தி தவளுராங்களாம் நாலணியும்
DeleteHehe.much wished to participate but cant
Deleteசிறப்பு வெளீடு
ReplyDelete// கதாசிரியர் ஷான் வான் ஹாம்மின் கைவண்ணத்தில் "வேய்ன் ஷெல்டனின்" ஆல்பம் # 14 தயாராகி வருகிறதாம் !! 2024 ரிலீஸ் ! //
ReplyDeleteவேய்ன் ஷெல்டன் பரபரப்புக்கு பஞ்சமில்லா நாயகர்,எனக்கு ரொம்பவுமே பிடித்தவரும் கூட...
வருக,வருக வேய்ன் ஷெல்டன்...
ட்ரெண்ட் அனைத்து கதைகளையும் படித்தாயிற்று. எனது பார்வையில் 8/10.
ReplyDelete// இதுவரை வெளியாகியுள்ள 7 டிரெண்ட் ஆல்பங்களில் நீங்கள் படித்திருப்பது எத்தனை folks ? உங்களின் பார்வையில் இந்த நாயகருக்கு / இந்தத் தொடருக்கு என்ன மார்க் ? //
ReplyDeleteஎல்லாமே படிச்சாச்சி,ட்ரெண்ட் ஆல்பங்களை பொறுத்தவரை மெல்லிய சலசலப்பாய் ஓடும் ஒரு நீரோடை போல,மாலை நேரத்தில் வாசிக்கும் ஹைக்கூ கவிதை போல,இரவுக் காற்றில் வரும் மெல்லிய புல்லாங்குழலின் இசையைப் போல மனதிற்கு நெருக்கமானவரே...
மார்க்கை பொறுத்தவரை என்னளவில் பாஸ் நாயகர்தான்...
// ஆனால் இம்முறையோ கணிசமான வித்தியாசங்களுடன் !! For starters - முழு வண்ணம் ! And இது லேட்டஸ்ட் மார்ட்டின் ! //
ReplyDeleteஅடடே,ஆர்வமுடன் காத்திருக்கிறேன்...
// And இதோ - ஆகஸ்டின் ரெகுலர் இதழ்களின் லிஸ்டில் கடைசி இதழின் preview !! //
ReplyDeleteசீக்கிரமாய் ஆகஸ்ட் இதழ்களை அனுப்புங்கள் சார்...!!!
4ம் தேதி சார் ! சனியன்று ஈரோட்டில் ரிலீஸ் செய்யும் நேரத்துக்கு எல்லோருக்குமே கிடைத்திடும் என்று நம்பலாம் !
DeleteProfessional Courier வேண்டாம் என்போர் மட்டும் சிரமம் பார்க்காமல் ஒரு மின்னஞ்சலோ ; போனோ பண்ணி விடுங்கள் folks !! ஏற்கனவே சொல்லி விட்டவர்கள் மறுக்கா மெனெக்கெடத் தேவையிராது !
நல்லது சார்...
Deleteவருக,வருக வேய்ன் ஷெல்டன்....
ReplyDeleteவணக்கம் நண்பர்களே..
ReplyDeleteபெருந் துரைகளின் முதல் போட்டி..
ReplyDeleteடெக்ஸ்&லக்கி
லக்கி டீம் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது!
இரண்டாவது போட்டி..
ReplyDeleteஸாகோர் & டைகர்..
ட்ரெண்ட்..
ReplyDeleteஇந்தத் தொடரில் ஒரு ஆழமான,அழுத்தமான இனம் புரியா ஒரு ஈர்ப்பு இருக்கிறது..
குறிப்பாக நாயகனின் நினைவலைகளில் வெளிப்படும் தூரிகை ஜாலங்களும்,அந்த சூழ்நிலை யதார்த்தங்களும் ஒரு மாதிரி அடி மனதை பிசையக் கூடிய சம்பவங்கள்.
எனக்கு ட்ரெண்டின் மேல் பெருங் காதலுண்டு..♥♥
நமது இதழ்களில் வெளிவந்த இவரின் சாகச சோகங்களை அணு அணுவாக ரசித்ததுண்டு!
ட்ரெண்டிற்கான எனது மதிப்பெண்..
ReplyDelete100/100
Trent is a wonderful hero. One of my favorite. Art work, clear stories... Entertaining like Raja's melody.
ReplyDeleteLovely comparison sir...
Deleteவாவ்!!! ஷெல்டன் மறு வருகை தருகிறாரா , சூப்பர் சார்.....
ReplyDeleteடைகரை வென்றார் ஸாகோர்..
ReplyDeleteWow
Deleteஒல்லிப் பிச்சானுக்கும்,கல்கதாயுத மாயாத்மாவுக்கும் இறுதிப் போட்டி..
ReplyDeleteதலயும்,தளபதியும்..
ReplyDeleteஅந்தோ பரிதாபம்..
பவுன்சரை இன்னும் 12th Man ஆகத்தான் கையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் சார்.. இறக்கி விட்டால் பவுன்சர் போடுவார் இல்லையா?
ReplyDeleteMe and my family getting ready to visit cbe bookfair
ReplyDeleteSuper..super sir !!
Deleteராகுல் டிராவிடை நாம் விரும்பத்தானே செய்கிறோம்.
ReplyDeleteடிரெண்டும் அது போலத்தான் சார்!!
Trent. Smooth, silent comic with powerful stories and artwork. 7.5/10
ReplyDeleteJones vendame
ஜோன்ஸ் ....சித்திரங்கள் எப்படியோ??
ReplyDeleteXIII மர்மம் - "எந்தையின் கதை" க்கு சித்திரங்கள் போட்ட ஓவியர் சார் ! அது பிடித்திருந்தால், இதுவும் ரசிக்கும் !
Deleteஈரோடு மீட்டிங்கிற்கு வரவேண்டும் என்று ஆசையோடு இருந்தேன் . Reprint கள் சோர்வடையச் செய்து விட்டன.... சரி, இரண்டை மட்டும் தனியாக வாங்கிக் கொள்வோம்...
ReplyDeleteஈரோடு புத்தக திருவிழா என்பது புத்தகங்களை வாங்க, பார்வையிட மட்டுமல்ல நண்பரே..
Deleteஆசிரியரும்,சீனியரும்,மற்றும் லயன முத்து அலுவலக உறவுகளும் ,தேசமெங்கும்,உலகெங்கும் ஆங்காங்கே வாசிப்பை சுவாசித்துக் கொண்டிருக்கும் காமிக்ஸ் நேசர்களின் ஓர் அளவிட முடியாத,அளப்பரிய இனம் புரியாத உணர்ச்சிக் குவியல்களின் சங்கமம் அது..!!
மூன்றாண்டுகளுக்குப் பிறகு நம் குடும்ப நண்பர்கள் அனைவரும் இந்த பொன் விழா ஆண்டில் ஒன்று கூடி ஆனந்த பள்ளு பாட அதீத ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறோம்!
@Guna : நிறைய பேருக்கு இது புரிவதே இல்லை....
Deleteபுத்தகங்கள் தான் வாங்க வேண்டும் என்றால், ஈரோடு சந்திப்பு என்று ஒன்று உருவாகியே இருக்காது
உண்மை ரபீக் ஜி..
Deleteகடந்த பதினைந்து நாட்கள் யுகங்களாக மெல்ல கடப்பது போல் தோன்றுகிறது..
எப்போது ஆகஸ்டு 3-ம் தேதி வரும்..எப்போது இரும்புக் குதிரையில் பயணிப்பது என்று ஒரே படபடப்பு + பரபரப்பு.
ஒவ்வொருவரது எதிர்பார்ப்புகளும் ஒவ்வொரு மாதிரி சார் !
Delete(அந்நாட்களில்) சர்க்கஸில் trapeze ஆடுவதைப் பார்க்க வருவோர் ஒரு அணி ; சிங்கம் - புலிகளைக் காண வருவோர் இன்னொரு அணி ; ஜோக்கர்களைப் பார்த்து நகைக்க முனைவோர் ஒரு அணி..அட...அங்கே கிடைக்கும் snacks-ஐ மொசுக்க வருவோர் இன்னுமொரு அணி !
Each to their own !!
Trent - I like it especially for the art work and calm story line.
ReplyDeleteWayne Sheldon - double yes
Jones - yes, we can try.
அட..ஷெல்டனுக்கு டபுள் ரைட்டா ?
Deleteகாமிக்சில் அடித்தாடும் தலையும் தளபதியும் கிரிக்கெட்டில் அவுட்டா... ஹ்ம்ம்...
ReplyDeleteலக்கி காமிக்ஸ் + கிரிக்கெட்டில் வெற்றி பெறுவது... அருமை அருமை.
யார் கோப்பையை வெல்லப்போவது... கண்டிப்பாக நம் நண்பர்கள் தான்..
முன்கூட்டியே எனது வாழ்த்துகள்.
I am trying to join In Erode. From Trichy its 5hr journey
ReplyDelete9.30 க்கே ஆஜராகி விடுவோம் எடிட்டர் ஐயா... 🥰
ReplyDeleteSuper duper !!
DeleteCCL சாம்பியன் லக்கி சூப்பர் கிங்ஸ் டீமுக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteமூன்றாண்டுகளுக்கு பிறகு நிகழும் ஓர் அற்புத காமிக்ஸ் உறவுகளின் சங்கமம்..
ReplyDeleteஎத்தனை பேருக்கு முடி நரைத்துப் போயிருக்கும்..
எத்தனை பேருக்கு முடி கொட்டி சொட்டையாயிருக்கும்..
எத்தனை பேருக்கு கன்னத்திலும், வயிற்றிலும் தொப்பை போட்டிருக்கும்..
நரைத்து,விரைத்த கால்வாசி கிழங்களாய்...
மனதளவில் இன்னமும் அதே பதின்ம வயது சிறு பிள்ளைகளாய்
சந்திப்பில் பங்கேற்கவிருக்கும் காமிக்ஸ் குழந்தைகளைக் காண இன்னும் சொற்ப நாட்களே..!!
ஆறே
DeleteWell said
DeleteAge is just a number sir....ஒரு 83 வயது இயைஞர் இக்கட செம குஷியா ரெடியாகிட்டு இருக்க, நாமெல்லாம் விடலைப் பசங்க ரேஞ்னு வைச்சுக்கலாம் !
Deleteகாமிக்ஸ் கிரிக்கெட் 2023
ReplyDeleteவின்னர் லக்கி சூப்பர் கிங்ஸ்
ரன்னர் ஸாகோர் டைட்டன்ஸ்
பின்னே இருந்து மொத இடத்தை பிடிச்சிருக்கது யாரு சாமி ?
DeleteThis comment has been removed by the author.
Deleteநாங்க தான் சார் Legendary Tigers. ஹிஹிஹி
Deleteட்ரெண்ட் எல்லாம் படிச்சாச்...சூப்பர் சார்
ReplyDeleteசார் கிரிக்கட் பதிவுண்டா
ReplyDeleteவென்ற நாலு டீமயும் சந்தோசப் படுத்த டின்டினுக்கு மாற்றா புதுசா நாலு புக்காச்சுமுண்டா
Deleteவணக்கம் ஸ்டீல் க்ளா..
Deleteரொம்ப நீட்டமா Id பேர் முதல்ல வச்சது நீங்கதான்னு நெனக்கிறேன்..
இப்ப செந்தில் சத்யாவும் ஃபாலோ பண்றார்..
ஆஹா இது வேறயா.....
Deleteஸ்டீல் க்ளான்னுதான் மொத வச்சேன் நண்பரே....நண்பர்கள்தான் ...அது பத்து வருட ஃப்ளாஷ் பேக்
Zagor team win panitta, shribabuvai kaila pudikka mudiyathe. Already enthusiastic a irukkar 😁
ReplyDeleteபுனித மனிடோவின் திருக்கருணையினால் ஈரோட்டுக் காமிக்ஸ் தீபாவளித் திருவிழாவில் கலந்து கொள்ள வீட்டம்மாவின் அனுமதியும் என் முதலாளியின் அனுமதியும் கிடைத்துள்ளது.சில பல பொய்ப் பிரச்சாரங்களினால் கிடைத்த வெற்றி இது.மனசு குதூகலிக்கிறது. மனசு நெறஞ்சு கிடக்குது. வயதானாலும் நண்பர்களை காணும் ஆவல் மேலோங்கி உள்ளது.திருவிழாவில் ஆசிரியப் பெருமக்களையும் நண்பர்களையும் காண ஓடோடி வருகின்றேன்.நன்றி.
ReplyDeleteலயன் ,முத்துவின் முதன்மை வாசகர் சரவணரே வாங்க வாங்க
ReplyDeleteவருகின்றேன் சகோ.நன்றி.
Deleteஅடடே...வாங்க வாங்க சார் !
Deleteகிரிக்கெட் போட்டியில் பல்வேறு அணிகள் கலந்து கொண்ட நிலையில் நமது காமிக்ஸ் வாசக அணிகள் முதல் நான்கு இடத்தைபிடித்ததுமகிழ்ச்சியான விசயம்
ReplyDelete😅
Deletetrent 8.5/10
ReplyDeleteLucky Super Kings ன் சிங்கங்களுக்கும்..
ReplyDeleteZagore.. Tex.. Tiger teamsன் தங்கங்களுக்கும் நன்றியோ நன்றிகள்..💛💛💛
Lucky Super Kings சாம்பியன் ஆனதற்கு அணியின் அத்தனை வீரர்களின் பங்களிப்பும் இன்றியமைதாதக இருந்தது..!
Delete🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாராட்டுகளுக்கு நன்றி நண்பர்களே...🙏
Deleteவாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் சார் !
Deleteஅதிலேயும் உங்க அணி விக்கெட்கீப்பர் தோனி ரேஞ்சுக்கு வியூகம் வகுக்க உங்களுக்கு ஒத்தாசை பண்ணினாராமே ? பேசிக்கிட்டாங்க...!!
பி.கு. தென்னைமரக்குடி எண்ணெய் 16 பாட்டில் பார்சல்னும் பேச கேட்டேன் !
நிழலை விட வேகமாக சுடும் நாயகரின் டீம் வெற்றி பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Deleteகளத்தில் சளைக்காமல் போராடிய மற்ற அணியினருக்கும் பாராட்டுக்கள் 💐🤝
செமயா வெளான்டதுக்கு வாழ்த்துக்கள்
Delete
Delete//பி.கு. தென்னைமரக்குடி எண்ணெய் 16 பாட்டில் பார்சல்னும் பேச கேட்டேன் !//
தவறான தகவல் அது 16 பாட்டில் அல்ல 16 டின் அதில் எனக்கு மட்டும் 6 டின்
Lucky Super Kings சாம்பியன் ஆனதற்கு அணியின் அத்தனை வீரர்களின் பங்களிப்பும் இன்றியமைதாதக இருந்தது..!
ReplyDeleteலக்கினாலே காமெடி தான்...
பாசத் தலைவனுக்கொரு பாயாசம் !
Deleteஅதிகாரி அணி மண்ணை கவ்விவிவிவிவிவியதில் உளமாற திருப்தி... ஒரு வேளை ஜெயிச்சிருந்தா...
Deleteஐயோ ராமா... ஒரு வருசத்துக்கு யாரும் தூங்க முடியாத துயரம் சம்பவிச்சருக்கும்...
புனித மானிடோ இருக்கான்...
கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும். வெற்றி பெற்ற லக்கி லூக் அணிக்கு ஸ்பெஷல் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.
ReplyDelete🙏🙏
ReplyDeleteஷெல்டனுக்கு வார்ம் வெல்கம் சார்.
ReplyDeleteஜோன்ஸ்க்குமே.
ஈரோடு விழாவிற்கு வர முடியாத சூழல்.
மே 31 ல் பணி ஓய்வு பெற்று, கடந்த வியாழன் அன்று திருவண்ணாமலைக்கு குடிபெயர்ந்தாகி விட்டேன். அமெரிக்காவில் இருந்து விடுப்பில் வந்திருக்கும் என் மகளும், மாப்பிள்ளையும் இந்த வாரம் அமெரிக்கா கிளம்புவதால் என்னால் அங்கு வர முடியாத நிலைமை.
புத்தக விழா சந்திப்பில் கலந்துகொள்ளும் நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
// ஷெல்டனுக்கு வார்ம் வெல்கம் சார்.
Deleteஜோன்ஸ்க்குமே. // ஆமா சார்
25 வயசுலயே பணி ஓய்வா...என்ன கொடும சார்
Deleteநண்பேன்டா...
DeleteCongrats lucky super kings team. Let's hope next year 6 teams joins
ReplyDelete💛
ReplyDeleteநம்முடைய CCPL 2023ல்
தம்பிகள் அகில்.. செல்வா மற்றும் பிரசாந்த் ஆகியோரின் பணி சிறப்பான ஒன்று..!
அதிலும் பிரசாந்த் விக்கெட் கீப்பர்.. பௌலர்.. ஃபீல்டர்னு எல்லார் பக்கத்துலயும் நின்னு வீடீயோ கவரேஜ் செய்தார்..!
வேற லெவல் டெடிகேசன்..
சிறப்பான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள் தம்பிகளே..!
// ஒரு 83 வயது இயைஞர் இக்கட செம குஷியா ரெடியாகிட்டு இருக்க, //
ReplyDeleteசூப்பர் சார்! நமது சீனியர் எடிட்டர் ஐயா விழாவுக்கு தயாராகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது!
எல ஒன்ன சொன்னா
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteடிரெண்ட் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. நினைவில் நிற்கும் கதைகளில் டிரெண்ட் கதைகள் முதன்மையானவை.
ReplyDeleteடிரெண்ட் தொடரில் படித்தது 7ம். நான் அவருக்கு கொடுக்கும் மதிப்பெண் 10/10. மிகவும் வித்தியாசமான கதைகள். நமது பாணியில் இருந்து விலகி இருந்தாலும் மனதுக்கு ரொம்பவே நெருக்கமான நாயகர்.
ReplyDeleteஇன்னும் 3 நாட்கள் மட்டுமே இடையில். ஆகஸ்ட் 5 க்கு
ReplyDeleteசார் ஆகஸ்ட் மாத புத்தகங்கள் எப்போது கிளம்பும்??? மெபிஸ்டோக்கு வெறியோடு வெயிட்டிங்.
ReplyDeletewayne sheldon double ok
ReplyDeleteYesterday only our job in Income tax return filing finished
ReplyDeleteமீசைக்காரர் வரட்டும் .. டும்
ReplyDeleteகாமிக்ஸ் மீசை போலீஸ் அதிகாரி...தண்டி புக்காகவா...
Deleteஹைய்யா...ஜாலி... ஜாலி...
138th
ReplyDeleteEditor Sir..🙏💐
ReplyDeleteஉடல்நலம் கருதி ஈரோடு வர வாய்ப்பில்லை என்பதால்,
EBF books கூரியரில் வாங்கி கொள்ள விருப்பம் தெரிவித்து பணம் செலுத்தியிருந்தேன்.🙏
ஆனால், தற்போது நண்பர்களின் உற்சாகத்தை பார்க்கும்போதும், அன்பு நண்பர்களை பார்க்க கிடைக்கும் வாய்ப்பினை விட்டுவிடக்கூடாது என்பதாலும்,
5ம்தேதி ஈரோடு வந்தே தீருவது என முடிவு செய்து விட்டேன்.🙏😄
எனவே
" எனது EBF special booksகளை ஈரோட்டில் நேரடியாக தங்களிடமிருந்து 5ம்தேதி பெற்றுகொள்ள வாய்ப்பு கிடைக்குங்களா?"🤔🤔🙏😎
ஸ்ரீபாபு,
நாமக்கல்😎
வாருங்கள் சார். மகிழ்ச்சி.
Deleteபேக்கிங் ஓடிக்கொண்டுள்ளது சார் ; உங்கள் பார்சலை நாளை கூரியர் போகும் கத்தையிலிருந்து எடுக்கச் சொல்லி விடலாம் ! Most Welcome to Erode சார் !
DeleteEditor Sir..😍😘💐💐🌷
Deleteரொம்ப நன்றீங்க சார்..❤ 🙏
Sriபாபுஜி. வாங்க. நீங்க வருவது சந்தோசம்.அப்படியே officeநம்பருக்கு ஒருவாட்ஸ் அப்message அனுப்பி விடுங்கள் புத்தகங்கள்erode ல் பெற்றுக் கொள்வதுகுறித்து..
ReplyDelete😘💐Ok..ங்க ஜி
Deleteஅப்படியே எனக்கு...
Deleteஜென்டில் மேன். ப்ளே பாய் சாகச வீரர் முரட்டு சிங்கிள் துப்பறிவாளர் தயாளர் சிறந்த நண்பர் இப்படி பல விதமாக மனதில் பதிந்திருக்கும் செல்டன் மீண்டும் வருவதை ஆவலுடன் வரவேற்கிறேன்
ReplyDeleteஹோலீ ஹோலீ ஹோலீ ஹோலீ
ReplyDeleteஹோலீ ஹோலீ ஹோலீ ஹோலீ
தானானான தானானா னானா
தானா தானன தானா தானன தானனனானா
தானா தானன தானா தானன தானனனானா
முத்து விழாவுக்கு பாராட்டு மின்னும்
வாழ்த்தை சொல்ல வார்த்தைகள் துள்ளும்
முத்து விழாவுக்கு பாராட்டு மின்னும்
வாழ்த்தை சொல்ல வார்த்தைகள் துள்ளும்
சௌந்தரார் கையால் கதையை அள்ளி கொடுத்த பின்னும்
எழுதித் தந்த கருணை
ஆனந்தும் வாழ்த்திட எங்கும்
எழுதிக் கொடுக்கையிலே நம் மனம் பாடும்
விசயனும் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்
எழுதிக் கொடுக்கையிலே நம் மனம் பாடும்
விசயனும் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்
உள்ளங்கைச் சூடுபட்டு கதை கொஞ்சம் மாறும்
உள்ளங்கைச் சூடுபட்டு கதை கொஞ்சம் மாறும்
வாசகர் நாம் பிடித்து வந்தால் அது கொஞ்சம் வாழும்
முத்து விழாவுக்கு பாராட்டு மின்னும்
வாழ்த்தை சொல்ல வார்த்தைகள் துள்ளும்
முத்து விழாவுக்கு பாராட்டு மின்னும்
வாழ்த்தை சொல்ல வார்த்தைகள் துள்ளும்
சௌந்தரார் கையால் கதையை அள்ளி கொடுத்த பின்னும்
எழுதித் தந்த கருணை
ஆனந்தும் வாழ்த்திட எங்கும்
தானன தானனா தானனனானா
தானன தானனா தானனனானா
தானன தானனா தானனனானா
தானன தானனா தானனனானா
முத்து விசயே முத்து விசயா ஸ்பைடரை விடாதே
லயனே இவரின் துணையே
முத்து விசயே முத்து விசயா ஸ்பைடரை விடாதே
லயனே இவரின் துணையே
தினம் தித்திக்கும் நினைவலைகள் முத்தை விடாதே
அட துவக்கிய மாயாவியே
கரண்டை
தொடாதே
தொடாதே தொடாதே.
முத்து விழாவுக்கு பாராட்டு மின்னும்
வாழ்த்தை சொல்ல வார்த்தைகள் துள்ளும்
முத்து விழாவுக்கு பாராட்டு மின்னும்
வாழ்த்தை சொல்ல வார்த்தைகள் துள்ளும்
சௌந்தரார் கையால் கதையை அள்ளி கொடுத்த பின்னும்
எழுதித் தந்த கருணை
ஆனந்தும் வாழ்த்திட எங்கும்
தேவை எடுக்கையிலே கதைகிடைக்காதோ
வியும் தவள்ந்து வந்து அதை கொடுக்காதோ
தேவை எடுக்கையிலே கதைகிடைக்காதோ
வியும் தவள்ந்து வந்து அதை கொடுக்காதோ
கிடைத்த கதைகளுக்கு
துணையிருக்காதோ
கிடைத்த கதைகளுக்கு
துணையிருக்காதோ
லயன்கள் பாய்ந்து வந்து கதை கொடுக்காதோ
முத்து விழாவுக்கு பாராட்டு மின்னும்
வாழ்த்தை சொல்ல வார்த்தைகள் துள்ளும்
முத்து விழாவுக்கு பாராட்டு மின்னும்
வாழ்த்தை சொல்ல வார்த்தைகள் துள்ளும்
சௌந்தரார் கையால் கதையை அள்ளி கொடுத்த பின்னும்
எழுதித் தந்த கருணை
ஆனந்தும் வாழ்த்திட எங்கும்
தானானனா தானாதனா தானானானனா
தானானனா தானாதனா தானானானனா
Subscription Books கிளம்பி விட்டதா sir
ReplyDeleteஇன்று கிளம்புகிறது சார். நாளை புத்தகம் கிடைத்து விடும்
Deleteநாளை தான் கிளம்பும் நண்பரே....சனிக்கிழமதான வெளியீட்டு விழா
Deleteஸ்டீல் அவர் கேட்டது சந்தா புத்தகங்களை
Deleteஆர்வமுடன் காத்திருக்கிறேன்...
DeleteReply
Arivarasu @ Ravi30 July 2023 at 08:56:00 GMT+5:30
// And இதோ - ஆகஸ்டின் ரெகுலர் இதழ்களின் லிஸ்டில் கடைசி இதழின் preview !! //
சீக்கிரமாய் ஆகஸ்ட் இதழ்களை அனுப்புங்கள் சார்...!!!
Reply
Replies
Vijayan30 July 2023 at 22:40:00 GMT+5:30
4ம் தேதி சார் ! சனியன்று ஈரோட்டில் ரிலீஸ் செய்யும் நேரத்துக்கு எல்லோருக்குமே கிடைத்திடும் என்று நம்பலாம் !
Professional Courier வேண்டாம் என்போர் மட்டும் சிரமம் பார்க்காமல் ஒரு மின்னஞ்சலோ ; போனோ பண்ணி விடுங்கள் folks !! ஏற்கனவே சொல்லி விட்டவர்கள் மறுக்கா மெனெக்கெடத் தேவையிராது !
ஆசிரியர் பதில்தா குமார்
Deleteநன்றி நன்றி ஸ்டீல்.
Deleteடுர்ர்ர்ஹா
ReplyDeleteஓஹோஓஓஹோஓ
ஓஹோஓ
ஹஹஹஹஹா(3)
டுர்ர்ர்ஹா
பாரப்பா ஈரோடப்பா
பொன்விழாவாம் பொன்விழாவாம்
பாரப்பா ஈரோடப்பா
பொன்விழாவாம் பொன்விழாவாம்
கூட்டமிது சிறியதப்பா
உள்ளம்தான் பெரியதப்பா
கூட்டமிது சிறியதப்பா
உள்ளம்தான் பெரியதப்பா
பாரப்பா ஈரோடப்பா
பொன்விழாவாம் பொன்விழாவாம்
வெண்ணிற தாள்களெல்லாம்
அழகழகாய்
இருக்குதப்பா
விதி எழுதிய
வரிகளையே அடுக்கடுக்காய்
சுமக்குதப்பா
ஏட்டினிலே இனிக்குதப்பா
எடுத்து வந்தா
டெக்சின்
நண்பனப்பா
ஏட்டினிலே இனிக்குதப்பா
எடுத்து வந்தா டெக்சின் நண்பனப்பா
கார்சனுக்குதான் கடந்த காலமப்பா
நமக்கு அது காவியம்ப்பா
ஹஹஹஹஹா
கார்சனுக்குதான் கடந்த காலமப்பா
நமக்கு அது காவியம்ப்பா
பாரப்பா ஈரோடப்பா
பொன்விழாவாம் பொன்விழாவாம்
கூட்டமிது சிறியதப்பா
உள்ளம்தான் பெரியதப்பா
பாரப்பா ஈரோடப்பா
பொன்விழாவாம் பொன்விழாவாம்
அந்தக்கால
மார்டினுக்கு
கருவெள்ளை பக்கமப்பா
பொன்விழா கதைகளுக்கு
வண்ணமய தாள்களப்பா
ஸ்பைடர்கதை வருகுதப்பா
ஹெலி காரு பறக்குதப்பா
சுஸ்கி விஸ்கி பயணஞ்ஜெஞ்சா
லயனுப்பக்கம் சிறக்குதப்பா
ஹஹஹஹஹா
சுஸ்கி விஸ்கி பயணஞ்ஜெஞ்சா
லயனுப்பக்கம் சிறக்குதப்பா
பாரப்பா ஈரோடப்பா
பொன்விழாவாம் பொன்விழாவாம்
பாரப்பா ஈரோடப்பா
பொன்விழாவாம் பொன்விழாவாம்
கூட்டமிது சிறியதப்பா
உள்ளம்தான் பெரியதப்பா
பொன்விழாவாம் பொன்விழாவாம்
டுர்ர்ர்ஹா
இரும்புக் கவிஞரே.. ஹா ஹா பட்டையக் கிளப்பறீங்க!! :))))
Deleteஇப்போ தான் ஆரம்பித்து இருக்கிறார். இன்னும் இருக்கு. 1 நாள் இடையில் இருக்கு.
Deleteஅடிச்சு கேட்டாலும் நிதமொன்னுதா
Deleteகவிஞர் ஜி க்கு ஒரு பூங்கொத்து.
ReplyDelete" மேரி கேரிசன் " முதல் கதை நான் படிக்க வில்லை. அதை படிக்க மிகுந்த ஆவலாக உள்ளேன்.
ReplyDeleteதோழர் யாராவது ஈரோடு புக்பேர் சந்திப்பில் கொடுக்க முடியுமா.
முந்தி முந்தி நிறுவனரே
ReplyDeleteமுப்பது முக்கோடி வாசகர்ர்களே
முந்தி முந்தி நிறுவனரே
முப்பது முக்கோடி வாசகர்ர்களே
வந்து வந்தெம் வாழ்த்தை ஏத்துக்கய்யா
வந்து வந்தெம் வாழ்த்தை ஏத்துக்கய்யா
வந்தனம் வந்தனம் தந்தோமையா
வந்தனம் வந்தனம் தந்தோமையா
இரும்புக் கரம் தந்த முத்தய்யா
மாதமாதம் கொடுத்தே வணக்கமையா
இரும்புக் கரம் தந்த முத்தய்யா
மாதமாதம் கொடுத்தே வணக்கமையா
லயனுடனே அதை படித்தேன்
வியுடனே துணை இருப்பேன்
நிச்சயம் ஆஸ்ட்ரிக்ஸயுந் தாருமையா
நிச்சயம் ஆஸ்ட்ரிக்ஸயுந் தாருமையா
கடலுல மெதக்குதயா
ஓரேழு கண்டம்
அங்கர்ந்து மாத்தி தந்தே
தமில்காமிக்ஸ் பண்டம்
ஊரு உலகம் சுத்திவரும்
பதிமூனோட ஸ்பின் ஆஃப் தரனும்
தேடிதவிக்கும் ஜனங்க இந்த
கதயகேட்டு வரனும்
கோவை திருநெல்வேலி
நம் மதுரை ஜில்லா
சென்னை தஞ்சை பல
வாககர் வந்தார் நல்லா
சௌந்தரனார் கருணையானந் பேர
சொல்லி படிச்சேன்
தேசாதி தேசமெல்லா
கதயா வாங்கி ரசிச்சேன்
ஈரோடு இடி முழக்கம்
கொட்டு மேளம் கேட்டு
கூட ஒலிக்குதடி
பொன் விழா பாட்டு
சோடை சோணக்கமில்லை
அச்சு ஏறும் கதைக
வாடி பழக்கமில்லை
வசீகரமான கலரு
உன்ன எதிர்த்து நின்னு
ஜெயித்த காமிக்ஸ் இல்ல
அதகளமா மிஸ்டர் நோ தந்திருக்கு
உன்னோட பேரப் புள்ள
அவரோடட கதைகளெல்லாம் ஹிட்டு
அதான நாங்க பயணம் போவும் ஜெட்டு
we will meet at erode
ReplyDeleteWelcome sir
Deleteஈரோட்டில் கங்கை பூந்தேன் மலர் சூடி
ReplyDeleteபொன்விழா அரங்கில் ஓடி
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம் காமிக்ஸின் சங்கமம்
முத்துத் தேரில் நான் தேடிய சௌந்தர்
இரும்புக்கை புகழ் சுந்தரர்
மேடை கட்டி கதைய தட்டி
போடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்..
எனது நெஞ்சில் ஹேய்.. கதைகள் தாளம்.. ஹா
எனது நெஞ்சில் ஹேய்.. கதைகள் தாளம்.. ஹா..
இந்த வேளை பாடும் பூபாளம்
மன்னா ஏ..நீ... உன் தேரிலே...
எழுதும் கை தானே நட்பே துணை தானே
கருணை ஆனந்துடன் இந்நாளில் அரங்கேறுமே..
முத்துத் தேரில் நான் தேடிய சௌந்தர்
இரும்புக்கை புகழ் சுந்தரர்
மேடை கட்டி கதைய தட்டி
போடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்..
கதைக யாவும் ஹேய்.. ஹேய்.. ஹேய்..
தீர்ந்த பினும் ஹூ.. ஹூ.. ஹூ..
கதைக யாவும் ஹேய்.. ஹேய்.. ஹேய்..
தீர்ந்த பின்னும் ஹூ.. ஹூ.. ஹூ..
விஜயன் நெஞ்சம் தேடிப் போராடும்
ஊர் கூடியே கதகேட்டதும்
தந்தான் பல நூறு பருக கனி சாரு
போராடும் என்மனது போதாது அவர் தேடல்..
ஈரோட்டில் கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்விழா அரங்கில் ஓடி
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம் காமிக்ஸின் சங்கமம்
முத்துத் தேரில் நான் தேடிய சௌந்தர்
இரும்புக்கை புகழ் சுந்தரர்
மேடை கட்டி கதைய தட்டி
போடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்..
சவுந்தர் ராஜபாளையத்துக்கு குடி மாறி ரொம்ப காலமாச்சு கவிஞரே ; கேட்டா சொல்லியிருப்பேன்லே ? முத்து தேரில் வெட்டியா தேடுவானேன் ?
Deleteஆஹா....அப்ப சிவகாசிலலில்லயா
Deleteஇன்னைக்கு இடத்த மாத்திரலாம் சார்
Deleteஈரோடு நிகழ்ச்சியோட லைவ் ரிலே உண்டா? யாராவது ஏதாவது ஐடியா வெச்சிருக்கீங்களா? அப்படியாச்சும் என்னை மாதிரி வர முடியாமல் இருக்கிறவங்க கலந்துப்போம்..
ReplyDeleteஇருந்தால் பகிருங்கள் நண்பர்களே...
முன்கூட்டியே எனது நன்றிகள்.
உண்டு நண்பரே! இன்றிரவோ, நாளை காலையோ எடிட்டர் இங்கே லிங்க் கொடுப்பார்!
Deleteமிக்க நன்றி நண்பரே
Delete