நண்பர்களே,
வணக்கம். அக்னி நட்சத்திர பிரேக்குக்குப் பின்பாய் புத்தக விழா சீசன் afresh துவங்கியாச்சூ !! கோவையில் தற்போது பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் விழாவினைத் தொடர்ந்து ஈரோடு காத்துள்ளது ! And பெரும் தேவன் மனிடோவின் புண்ணியத்தில் கோவையில் நமக்கு ஸ்டால் நம்பர் 1 என்றால். ஈரோட்டில் ஸ்டால் நம்பர் 2 !! So விழாவுக்கு வருகை தருவோர் அனைவரின் பார்வைகளிலும் நமது புக்ஸ் ஜெகஜோதியாய் காட்சி தராது போகாதென்பது உறுதி ! பார்வைகள் விற்பனைகளாய் உருமாறுவது நமது சமர்த்தே என்பதால், குலுக்கலில் கிட்டியுள்ள இந்த அதிர்ஷ்டத்தினை சரியாகப் பயன்படுத்திடுவது நமது கைகளில் தானுள்ளது ! And ஆங்காங்கே ஸ்டாலில் உதவிட கடல்யாழ் போல நண்பர்கள் கிட்டிடும் பட்சத்தில், கலக்கிப்புடலாம் போலும் ! Thanks ரம்யா !! துவக்க தினம் பெரிதாய் விற்பனை இல்லையென்றாலும், இன்றைய (சனி) விற்பனை சும்மா தெறி ரகம் !! இம்முறை இங்கிலீஷ் காமிக்ஸ் பிரதிகளையுமே கோவைக்குக் கொண்டு சென்றுள்ளோம் எனும் போது - ஆஸ்டெரிக்ஸ்சும், லக்கி லூக்கும் கொங்கு மண்டலத்தில் புது இல்லங்களைச் சென்று சேர்ந்துள்ளனர் ! தொடரும் நாட்களில் ஒரு விற்பனை pattern புலப்பட்டதெனில், சென்னையின் ரசனைகளும், கோவையின் ரசனைகளும் எங்கு ஒத்துச் செல்கின்றன ? எங்கே வேறுபடுகின்றன ? என்பதை புரிந்து கொள்ள இயலும் ! Awaiting eagerly !!
கோவையில் விழா நடந்து கொண்டிருக்கவே, நமது கவனங்கள் ஈரோட்டின் பக்கமாயும் நிலைகொண்டுள்ளன ! And அங்கே விழா துவங்கிடவும், நமது வாசக சந்திப்பு அரங்கேறிடவும் 2 வாரங்களுக்கும் குறைவாகவே நாட்கள் இருப்பதால், ஆபீசில் ஒரு இனம் சொல்ல முடியா buzz !! BIG 3 - "கார்சனின் கடந்த காலம்" + சுஸ்கி-விஸ்கி ஸ்பெஷல் 2 & "THE BIG BOYS ஸ்பெஷல்" பைண்டிங் முடிந்து செவ்வாயன்று நம்மிடம் தேடி வந்து விடும் ! And "கா.க.கா." இதழினில் தங்களது குடும்ப போட்டோஸ் போட்டுக் கொள்ளப் பிரியப்பட்டுள்ள வாசகர்களின் புக்ஸ் சும்மா எகிறி அடிக்கிறது ! High resolution போட்டோக்களை அனுப்பியுள்ளோரின் இல்லங்களில் புக் கைக்குக் கிடைக்கும் வேளையில் செம உற்சாகம் காத்திருக்கும் என்பேன் ! Maxi சைசில் ; முதல் பக்கத்தில் தத்தம் குடும்ப உறுப்பினர்களுடனான pictures - 🔥🔥🔥தான் ! Will be a book to treasure for sure !
ஸ்பெஷல் புக்ஸ் ஒரு பக்கமிருக்க, ஈரோட்டில் காத்துள்ள 2 ஸ்பெஷல் நிகழ்வுகளின் பக்கமாகவும் நமது கவனங்கள் ஈர்க்கப்படாது போவது tough என்பேன் !! Because காத்திருக்கும் அடுத்த ஞாயிறில் (30 ஜூலை) விளையாட்டு உலகையே ஊத்தப்பம் போல புரட்டிப் போடவிருக்கும் ஒரு பெரும் க்ரிக்கெட் போட்டி காத்துள்ளது !! Ashes தொடரா ? வெஸ்ட் இண்டீஸ் தொடரா ? தம்பி...அப்பாலிக்கா ஓரமா போய் ஆடிக்கோங்க !!" என்று சொல்லும் விதமாய் COMICS CRICKET PREMIER LEAGUE வருகுதூ !! இதோ பாருங்களேன் :
4 டீம்ஸ் ; 44 பென் ஸ்டோக்ஸ் - ஈரோட்டையே அதிரச் செய்ய முஷ்டி மடக்கி ரெடியாகி வருகின்றனர் ! யூனிபார்ம் என்ன ; லோகோ என்ன ; விளம்பரங்கள் என்ன ; பயிற்சிகள் என்ன ; ஏற்பாடுகள் என்ன - என்று IPL-க்கு செம tough தரும் விதத்தில், நம்ம "இளம்" சிங்கங்களும், புலிகளும் இந்தப் போட்டியை ரணகளமாக்கிடவுள்ளனர் ! கராம்பா..... may the best team win !!
அடுத்த ஞாயிறில் போட்டியெடுக்கப் போகும் போட்டி எனில், அதனைத் தொடர்ந்திடப் போகும் சனியன்று ஈரோட்டில் "காமிக்ஸோடு ஒரு காலப்பயணம்" வெயிட்டிங் !! முத்துவின் பொன்விழா ஆண்டினை போன ஆண்டே கொண்டாடியிருக்க வேண்டியது ; ஆனால் ஓமைக்ரானின் ஒண்ணு விட்ட சித்தப்பூ புதுசாய் களம்காணக்கூடும் என்ற கொரோனா பீதி இருந்ததால், 2022-ல் அந்தச் சந்திப்பு சாத்தியமாகாது போனது ! "லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்ட்டாய் வரலாம்" என்று தஞ்சாவூர் கல்வெட்டுக்கு நிகரான போதனை நமக்கெல்லாம் கிட்டியுள்ளது தானே ? அந்தப் பொன்மொழியினை இந்த belated பொன்விழா ஆண்டின் கொண்டாட்டத்துக்கொரு முகாந்திரமாய் ஆக்கி விட்டால் போச்சு !!
So ஆகஸ்ட் 5 (சனி) காலையில் ஈரோட்டில் THE OASIS எனும் ஹோட்டலின் "மகேஸ்வரி அரங்கில்" காலை 10 to மதியம் 2 வரை நாம் சந்திக்கலாமா guys ?
முத்துவின் துவக்க நாட்களின் பிரதிநிதிகளாய் இன்றும் நம்மோடு சுறுசுறுப்பாய்ப் பயணித்து வரும் சீனியர் எடிட்டரோடும், பிரதம மொழிபெயர்ப்பாளர் கருணையானந்தம் அவர்களோடும் இந்த அரை நூற்றாண்டுப் பயணத்தினை அசை போடலாம் ! And வழக்கம் போலவே நிறைய அரட்டை ; நிறைய ரவுண்டு பன் ; நிறைய போட்டிகள் ; சூப்பரான மதிய லஞ்ச் - என்று நான்கு ஆண்டுகளுக்கு பின்பான இந்த மீட்டிங்கை ஜாலியாக்கிடலாமா folks ? Oh yes, ஈரோட்டின் ஸ்பெஷல் இதழ்கள் ரிலீஸ் & அவற்றை அங்கு பெற்றுக்கொள்ள opt செய்திருக்கும் நண்பர்களுக்கு ஸ்டேஜில் வைத்து வழங்கிடல் என்பனவும் agenda-வில் இருந்திடும் ! நாம் வழக்கமாய் சந்தித்து வரும் Le Jardin ஹோட்டலானது மராமத்துக்கென மூடப்பட்டிருப்பதால் நண்பர் (ஈரோடு) ஸ்டாலினின் முயற்சிகளில் சூப்பரான இந்த ஹாலில் இடம் பிடித்திருக்கிறோம் ! ஈரோடு பஸ் நிலையத்திலிருந்து ரொம்பவே அருகாமையிலான இடம் ! இதோ உள்ள map உங்களுக்கு உதவிடலாம் guys !
உள்ளேன் ஐயா...!!
ReplyDelete💃💃💃💃💃
Deleteஒரு அணித்தலைவர் இந்நேரத்துக்கு உறங்கி, ஓய்வெடுத்து சூதானமா இருக்க வாணாமா ?
Deleteவியூகம் வகுத்துக்கிட்டு இருக்கேன் சார்...😇
Deleteகுப்பண்ணாவா ? தலப்பாக்கட்டியான்னா ?
Deleteஇருந்துட்டு போ..
Delete😂😂😂
Delete2 வது வந்துட்டேன் சார்
ReplyDeleteவணக்கம் சார்
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteஆஜர்
ReplyDeleteவந்துட்டேன் 😁😇
ReplyDelete8வது பாஸ்ங்கோ
ReplyDeleteI am in..😍
ReplyDeleteWelcome friends
ReplyDeleteஆவலுடன் வெயிட்டிங் ஈரோடு மீட்டிங்கிற்கு 🤩😍
ReplyDeleteபட்டி மன்றத்திற்கு நான் தாயார்
ReplyDeleteமன்னிக்கவும் நான் தயார்
நீங்க தாயார்னா நாங்களும் தாயார் சத்யா !
Deleteஹிஹி!! :)
Deleteநானும் மன்னிக்க தயார் சத்யா
Deleteவணக்கம் சார்
ReplyDelete13
ReplyDeleteவணக்கம் நண்பர்களே...
ReplyDeleteஇன்று கோவை புத்தக விழாவில் சிலபல புத்தகங்களை வாங்கியாச்சு...!
ReplyDeleteவீட்டுக்கும் வந்து சேர்ந்தாச்சு...!
மற்றதை ஈரோட்டில் பார்த்துக்கிடலாம்...!!
😆😆
வாங்கோ சார்...வாங்கோ !
Deleteஆகா தொடரும் பதிவா செம்ம செம்ம
ReplyDeleteவரும் ஞாயிறும், அதற்கு அடுத்த சனியும் கண்டிப்பாக நான் வந்து விடுவேன்.
ReplyDeleteவாங்க சார்...! அவசியம் வாங்க !
Deleteநீங்க இல்லாமலா KS?!!
Deleteநானும் வரலாமா
Deleteநீங்க இல்லாமலா சத்யா. ❤️
Delete🤝🤝🕺🕺🦸
Deleteமுத்து 50 ஆண்டு கொண்டாட்டம் எல்லாம் என் வாழ்வில் ஒரு முறை நடக்கும் நிகழ்வு. தவற விட கூடாது.
ReplyDeleteஈரோட்டில் நமது குடும்பத் திருவிழாவில் கலந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். 99 % வரமுடியும் என்ற நம்பிக்கையில் உள்ளேன். என்ற முதலாளி மனசு வைக்க புனித மனிடோவின் அருள் கிட்டட்டும்.ஜெய் புனிதமனிடோ !!!
ReplyDeleteவரவேற்கக் காத்திருப்போம் நண்பரே!
Deleteடெக்ஸ் அணியை வழிநடத்த 30ந் தேதி ஞாயிறும், (தமிழ்) காமிக்சின் செம சுவாரஸ்ய காலகட்டம்
ReplyDelete💙நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நடப்பு நாட்களே என முழங்க ஆகஸ்ட்டு 5ம் ஆஜர் ஆகிடுவேனுங்கோ.....!!!
அட்ரா சக்கை !
Deleteவருவதற்கு மிகவும் ஆசை. ஆனால் வர இயலாத சூழ்நிலை. Have a blast friends. நண்பர்களின் write up களுக்கும் , புகைப்படங்களுக்கும் waiting :)
ReplyDelete:(
Deleteடால்டன்களோடு தக தமி தா - இறுக்கமாக இருந்த என்னை வாய்விட்டு சிரிக்க வைத்து மனதை லகுவாக்கியது. டால்டன் இருந்தால் சிரிப்பு மழை அதுவும் இந்த முறை ரின் டின் கேனும் இவர்களுடன் சேர சிரிப்பு அடை மழை போல் பக்கத்துக்கு பக்கம் சிரிக்க செய்தது, இவர்கள் கூடவே சுண்டெலி சாரி சுண்டெலி அளவில் நாயும் சேர்ந்து நிறைவான வாசிப்பு அனுபவத்தை கொடுத்து.
ReplyDeleteசிரி சிரி சிரி சிரிப்பு.
கூடுதலாக நாளை முதல் லயன் புத்துயிர் பெற்ற 2012 ஈரோடு தொடங்கி, 2019ஈரோடு முடிய ஆடிய ஆட்டங்கள், சந்தித்த முகங்கள், ரீலீஸ் ஆன ஸ்பெசல்ஸ், சுவாரஸ்யமான நிகழ்வுகள், உண்டு மகிழ்ந்த திண் பண்டங்கள் என புகைப்படங்கள், நண்பர்களது பதிவுகள், மைன்ட் வாய்ஸ்கள் என "சேலம் டூ ஈரோடு 2013 டூ 2019" எட்டாண்டு பயணங்களை மீண்டும் பயணித்து பார்க்கும் படலமும் அரங்கேறிடும்.....ஆங்காங்கே....😍
ReplyDeleteபோட்டுத் தாக்குங்க !!
Deleteஅட்டகாசம்!! பட்டையக் கிளப்புங்க STVR!
Deleteசூப்பர்
Deleteசகோ ரம்யா உள்ளிட்ட மற்ற நண்பர்களின் ஆதரவோடு கோவை புத்தகத் திருவிழா விற்பனையில் பெரு வெற்றி கண்டிட வாழ்த்துகள்!
ReplyDeleteஈரோடு திருவிழா - இதுவரை இல்லாத அளவுக்கு கோலாகலத் திருவிழாவாக நடைபெறப்போவது உறுதி! வருகை புரிந்திடும் நண்பர்களுக்கு இதுவொரு மறக்க இயலா தருணமாக தங்கள் வாழ்நாளில் அமையயிருக்கிறதென்பதும் உறுதி!
அச்சச்சோ...பாட்டு மேளா கிடையாதா அப்போ ?
Deleteசார்.. 'மறக்க இயலாத் தருணம்'னு நான் வேற எதைச் சொன்னதா நினைச்சீங்க?!! :)
Deleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDelete34th
ReplyDeleteஈரோட்டில் டின் டின் வர வாய்ப்பு உண்டா சார்?
ReplyDeleteSorry no sir...
Deleteஆஹா...சர்ப்ரைசா வரும்னு இருந்தமே.....வேற ஏதாவது சர்ப்ரைசா தாக்கிடுங்க
Delete45 வது
ReplyDeleteகிரிக்கெட் டூர்னமெண்டா...
ReplyDeleteஈரோடு திருவிழாவா..
இரண்டுமே கண்ண கட்டி இழுக்குது.
இங்கி பிங்கியா..
இரண்டுமே வா...
வாங்க வாங்க இரண்டுக்குமே வாங்க
Deleteநண்பரே நீங்க இரண்டுக்கும் வர வேண்டும் என்பது எனது ஆசை
Deleteஇரண்டு திருவிழாக்களுக்கும் வாருங்கள் சகோ
Deleteகண்டிப்பாக வருகிறேன் சகோ, சகோதரி.
Deleteவாங்க sir...
DeleteYaeeee 👋 🫂
ReplyDelete🙏🙏
ReplyDeleteகார்சனின் கடந்தகாலம் புத்தகத்தில் Family photo இடம்பெறும் வாய்ப்பை இந்த முறை Miss பண்ணிட்டேன். பேரிழப்பு!
ReplyDelete
ReplyDelete(தமிழ்) காமிக்சின் செம சுவாரஸ்ய காலகட்டம் 1970's & '80's தான்
என்கிற தலைப்பில் நான் வாயாட போகிறேன் பக்கத்தில் கல் சோடாபாட்டில் முட்டை (தக்காளி 🍅 விக்கிற விலையில அது கிடைச்சாலும் யாரும் வாங்குற சூழ்நிலை இல்லை ) போன்ற எந்த வஸ்துகளும் கிடைக்காமல் பார்த்து கொள்வது உங்கள் பொறுப்பு ஆசிரியரே
ஒங்க சைடுக்கு வலை வீசி தான் ஆள் தேடணும் போல தெரியுதே சத்யா ?
Deleteஎங்கள் படையப்பர் J எங்கள் சைடு வர்றாரு சார் மோதி பாத்துக்கலாம் ஆசிரியரே
DeleteJooper !
Deleteபட்டிமன்றத்தில் கலந்துகொள்ள விரும்புகிறேன்.
ReplyDelete(தமிழ்) காமிக்சின் செம சுவாரஸ்ய காலகட்டம்
💙நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நடப்பு நாட்களே என்பதை ஆணித்தரமாக நிறுவ ஆசை!
❤️👍🙏
ReplyDeleteஉள்ளேன் ஐயா!!
ReplyDeleteசூப்பர் சார்...இரண்டு அட்டைகளும் தூள் கிளப்ப பச்சைப் பிண்ணனி சாகோர் மனசக் கவருது
ReplyDeleteகுழந்தைகள் வருகை தூள் கிளப்புது
ReplyDeleteகடல் சூப்பர்....
ReplyDeleteவாருங்கள் சகோ
Deleteரெண்டு கால் கட்டமுமே சூப்பர்னு கலக்க ஆசைப்படுகிறேன் சார்
ReplyDeleteரெண்டு காலகட்டமாக சூப்பர்ரா கலக்க ஆசைப்படுகிறேன் சார் .//கவிஞர் ஜி . நீங்க இப்ப சொன்னதுதான் நடுவர் தீர்ப்பு.//நீங்க அதயும் இப்பவே பேச ஆரம்பிச்சா எப்படிங்க .
ReplyDelete😂😂😂😂😂
Deleteஅவர்லாம் தீர்ப்புகளுக்கு அப்பாலானவர் சார் !
DeleteHi..
ReplyDeletehi sir ,
ReplyDeletenice update .we are expecting to receive your special release , especially " Big 5 ".
and i want to remember one thing .. at starting you say as "Giving a free books for yearly subscribers, but still now we did received any update ??? ".
No worries sir...நிச்சயமாக உண்டு !
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete// And நமது இரவு கழுகார் தனது full டீமோடு களமிறங்க சரவெடி அதிரடிகள் தான் ! //
ReplyDeleteசிறப்பு,சிறப்பு...
இன்று கோவை புத்தக விழாவுக்கு 9 மணிக்கு மகளுடன் செல்ல ரெடி
ReplyDeleteவரும் ஞாயிறு டெக்ஸ் அணிக்காக விளையாட ரெடி
அடுத்த சனியன்று ஈரோடு புத்தக விழாவுக்கு லீவு போட்டாச்சு
அங்கு
"நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நடப்பு நாட்களே" என்ற பட்டிமன்ற தலைப்பிற்கு வாதிடவும் ரெடி
வணக்கம் சகோ
Delete10:30 மணிக்கு மேல் வாங்க சகோ
அப்போது தான் ஓபனிங் நேரம்
நன்றி sako
DeleteWelcome sir...
Deleteஇனிய காலை வணக்கங்கள்😊😊😊
ReplyDeleteபட்டிமன்றத்துக்கு தயார்
ReplyDeleteநடப்பு நாட்கள் பக்கம் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கிறேன்
ஆஹாங் ...அத்தினி பேரும் நடப்பு நாட்கள் பக்கமேவா ? எதிரணிக்கு ஆளே தேறாது போலுள்ளதே ?
Deleteபேசாம "தலயா ? தளபதியா ?" ன்னு தலைப்பை மாத்திப்புடலாமோ ?
எடிட்டர் சார்,
Deleteஇப்படி ஒரு ஆசையா.
எல்லாம் நல்லா தானே போய்க்கிட்டு இருக்கிறது.
வேணும்னா இரண்டு அடி அடிச்சிருங்க.
அப்புறம் சேலம் டெக்ஸ் பெரும் சூறாவளியா மாறுவாரு.
இந்த வம்பு எனக்கு தேவையா சொல்லுங்க.
////அத்தினி பேரும் நடப்பு நாட்கள் பக்கமேவா ? எதிரணிக்கு ஆளே தேறாது போலுள்ளதே ?///--
Deleteசரி விடுங்க சார்....
நான் மாற்று அணிக்காக பேசுகிறேன்.... எல்லாம் நம்ம காமிக்ஸ்தானே....!!!
80s வந்தவைகளை பற்றி பொளந்து கட்டிடலாம்..
பார்டா 😀😃
Deleteநானும் சார்
Deleteதலயா??..தளபதியா??? வைச்சா
Deleteதல க்கு தான் நிறைய பேர் வருவாங்க
This comment has been removed by the author.
Deleteசகோதரி நீங்களுமா.
Deleteஆமா
ஒரு முடிவோடதா இருக்கீங்க.
அப்ப
நாங்க எல்லாம் சும்மா இருப்போன்னா நீங்க எல்லாம் நினைச்சீங்க.
எங்க குரு நாதர் ரம்மி சார் நூறு பேருக்கு சமம்.
அவரு பேச ஆரம்பிச்சாருன்னா...
அப்புறம் கொஞ்சம் சோடாபாட்டில் வாங்கி வைச்சுருங்க.
அப்ப அப்ப நாலு மடக்கு குடிச்சு நாலு மணி நேரம் நிப்பாட்டாம பேசிகினே இருப்பாரு.
அப்புறம் எதிர் அணியே எங்க கைல கப்ப எடுத்து கொடுத்துருவாங்க.
நான் நேற்று சந்தித்த காமிக்ஸ் சகோதரர்கள்
ReplyDeleteமெய்ஞான மூர்த்தி
மிதுன் சக்கரவர்த்தி
செல்வராஜ்
மஹாதேவன்
மகேஷ் கண்ணன்
கார்த்திக் சோமலிங்கா
அனைவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
Good to hear this.
Deleteவெரிகுட் அப்டேட் கடல்..
Deleteசூப்பர் கடல்
Deleteஅப்படிங்களா சகோதரி?! ஒருவேளை எனது டூப்பாக இருக்குமோ? யார் அந்த மினி சோமலிங்கா?! :-D
Delete@Karthik Somalinga
Deleteமன்னிக்க சகோதரரே
அவர் பெயரும் கார்த்திக்
அவர்தான் தாங்கள் என்று நினைத்து விட்டேன் 😅😅😅😅😅
// கோவையில் நமக்கு ஸ்டால் நம்பர் 1 என்றால். ஈரோட்டில் ஸ்டால் நம்பர் 2 !! So விழாவுக்கு வருகை தருவோர் அனைவரின் பார்வைகளிலும் நமது புக்ஸ் ஜெகஜோதியாய் காட்சி தராது போகாதென்பது உறுதி ! //
ReplyDeleteWow super sir. It will create lot of visibility to everyone.
அதிர்ஷ்டம் சார் !
Deleteஈரோடு புக் ஃபேர் என்றாலே உற்சாகம் களை கட்டுது டியர் எடி உங்களையும் நம் எல்லா காமிக்ஸ் நண்பர்களையும் ஒரு சேர பார்ப்பதும் உற்சாகத்திற்க்கு குறைவிருக்காது ..
ReplyDeleteWell said ji
Deleteமுடிந்தால் பையனையும் கூட்டிட்டு வாங்க சம்பத் !
DeleteKovai Book fair- Very good job Ramya
ReplyDeleteநன்றி பரணி சகோ 😊
Deleteபட்டி மன்றம்...
ReplyDelete70ஸ் - 80 ஸ் அணியில் நான் பேச விரும்புகிறேன்...
J
Super sir...
DeleteStill you want to be young..
Deleteசிங்கம் களம் இறங்கிடுச்சி
Deleteபட்டி மன்றம் அப்டேட்டட் பேச்சாளர்கள் & அணிகள்....
ReplyDeleteகாமிக்சின் செம சுவாரஸ்ய காலகட்டம் 1970's & '80's தான்
1.STV
2.செந்தில் சத்யா
3.J
நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நடப்பு நாட்களே...
1.பாபு
2.திருநாவுக்கரசு
3.கடல்யாழ் ரம்யா
இணைய இணைய சேர்ந்துகொண்டு விடலாம்...
நானும் 70....80 க்கு
Deleteஆங்.அப்படி அணியை சொல்லுய்யா க்ளா.....
Deleteபட்டி மன்றம் அப்டேட்டட் பேச்சாளர்கள் & அணிகள்....
Deleteகாமிக்சின் செம சுவாரஸ்ய காலகட்டம் 1970's & '80's தான்
1.செந்தில் சத்யா
2.J எ ஜனா
3.ஸ்டீல் க்ளா...
நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நடப்பு நாட்களே...
1.ப்ளைசி பாபு
2.திருநாவுக்கரசு
3.கடல்யாழ் ரம்யா
STV on waiting list, அடுத்து இணைபவர் எந்த அணினு பார்த்துட்டு ஸ்லாட் உள்ள அணியில் இணைந்து கொள்கிறேன்..
சுட்டிகளின் கைகளில் காமிக்ஸ் ...அருமை !
ReplyDeleteஒரு ஊர்லே ஒரே ஒரு அதிகாரி இருந்தாராம்... அவருக்கு ஒரே ஒரு நண்பர் இருந்தாராம்... அந்த அதிகாரி அந்த உண்மையான நண்பரை கூட்டீட்டு மெக்சிகோ போனாறாம்... அப்புறம் அந்த நண்பரின் கதி பற்றி சொல்லவே வேண்டியதில்லீங்களே..
ReplyDeleteஏனுங்கணா ...அந்தச் சட்டியில இன்னுமா ஈயம் இருக்கு ?
Deleteசார் செம்ம டைமிங்
DeleteRummi & Edior sir @ ROFL
Deletehttps://news7tamil.live/lokesh-kanagarajs-dream-movie-who-is-the-iron-guy-mayavi-descriptive-collection.html
ReplyDeleteஅட விடுங்க ஸ்டீல் ...இம்மா நீள கட்டுரை எழுதுறவங்களுக்கு முத்து காமிக்ஸ்ன்னு ஒற்றை வார்த்தை அதில குறிப்பிட தீரலை !
Deleteஅந்த டைரக்டரும் "பத்து வருஷமா எழுதுறேன்...எழுதுறேன்னு" கூவுறாரு - 50 வருஷமா நாம போட்டு வர்ற கதையை ; 60 ஆண்டுகளுக்கு முன்ன
உருவான கதையை ! சிரிச்சிட்டு போயிட்டே இருங்க !
ஆனாலும்..முத்துவோட லோகோவை தவிர்க்க முடியல.:-)
Deleteநான் 70's. And 80's பேசலாம்னு....
Delete//ஆனாலும்..முத்துவோட லோகோவை தவிர்க்க முடியல.:-)//
Delete"Original மாப்பிள்ளை யாரு ? ; சட்டையும் யாரோடது ?"ங்கிறது சம்பந்தப்பட்ட அத்தினி பேருக்குமே தெரியும் தான் !
ஆனா ...ஆனா ...அதை ஓபனா எழுதினாக்கா - "10 years ...10 years" ன்னு மேடையேறி தொண்டை தண்ணி வற்ற இன்னிக்கி மைக் புடிக்கிறவரின் கவுரத குறைஞ்சிடுமே சார் ?1
நம்ம நகர்வு தொடரும் சார்
Deleteஉள்ளேன் ஐயா.
ReplyDeleteசென்னை டூ பெங்களூரு சூறாவளி பைக் பயணத்திலிருப்பதால்.... அப்பாலிக்கா கண்டுக்கிறேன். 🥰
ஆத்தீ ...நம்மாளுங்க அம்புட்டு பேருக்கும் இளமை திரும்புதே ?
Deleteஇளமை புதுமை என்றென்றும் நம்பிக்கை 😎😁
Deleteடியர் விஜயன் சார்,
ReplyDelete"Breaking Bad" சீரிஸை பிப்ரவரியில் பார்க்கத் துவங்கி, அதன் ஸ்பின்-ஆஃப் "Better Call Saul" வரை கடந்த மாதம்தான் பார்த்து முடித்தேன். லோகேஷ் கனகராஜ் அவர்களின் விக்ரம் படத்தை கடந்த ஆண்டு வெளியான உடனேயே தியேட்டரில் பார்த்து ரசித்திருந்தாலும், கமலின் பாத்திரப் படைப்பு மற்றும் அவரது குடும்பப் பின்னணி சார்ந்த அம்சங்கள், பெட்டர் கால் சால்-இல் இருந்து உருவப் பட்டிருப்பது (கோலிவுட் மொழியில் inspired) சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பதிவு பார்த்த பின் தான் உறைத்தது!
உட்கார்ந்து யோசித்தால், வில்லன் குடும்பத்தின் பாசப் பிணைப்பு (Salamanca Family = Sandhanam Family), போதைப்பொருள் சார்ந்த கதைக்களன் ஆகிய இன்ன பிற அம்சங்களும் இவ்விரு தொடர்களில் இருந்தே inspiruvap பட்டிருப்பதும் புரிகிறது!
அத்தனை பெரிய கைகளிடமே கைவரிசை காட்டியவர்கள் என்பதால், "இரும்பு கை" என்று எழுதும் போது நடுவில் "க்" போடாமல், முத்து காமிக்ஸின் இரும்புக்கை மாயாவியில் இருந்து வேறுபடுத்திக் காட்டி இருக்கிறார்களோ என்னவோ?! சொல்லி விட்டுச் செய்தால் inspiration, சொல்லாமல் செய்தால் உருவல். இதில் லோகி எதைச் செய்யப் போகிறார் என்பது "இரும்பு கை மாயாவி" படம் வெளியானால் தான் தெரியும்!
அதற்காக லோகியையோ, அவரது திறமையையோ எந்த விதத்திலும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவருக்கு என்ன கட்டாயமோ, அழுத்தங்களோ நமக்குத் தெரியாது திரைத்துறை மிகவும் சிக்கலான, நமது எளிய புரிதல்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று! ஏற்கனவே ஒரு அரைகுறை "முகமூடி" வந்த கதையும் நமக்குத் தெரியும் தானே?!
தமிழ் பத்திரிகைகளில் வெளியாகும் தமிழ் காமிக்ஸ் குறித்த அரைவேக்காட்டுக் கட்டுரைகள் பற்றி முன்னொரு காலத்தில் விரிவாக எழுதி இருந்தேன். உங்கள் புண்ணியத்தில் தமிழ் காமிக்ஸ் (மட்டுமே படிக்கும்) வாசகர்கள் பல் வேறு கதைக்களங்களைக் கடந்து வந்திருந்தாலும், நமது பத்திரிகைகார நண்பர்கள் மட்டும் இன்று வரை இரும்புக்கை மாயாவியை தாண்டி வரவில்லை என்பது தான் பரிதாபம்!
//"இந்திரஜால் காமிக்ஸ், ஃபால்கன் காமிக்ஸ், அமர் சித்திர கதா எனத் தமிழில் காமிக்ஸ் இதழ்கள் 1960-களிலேயே ரெகுலராக வரத் தொடங்கிவிட்டன...."//
"சரிங்க பத்திரிகையாளரே, ஆனால் அவற்றில் எல்லாம் இரும்புக்கை மாயாவி வந்தாரா?!" - என்று கேட்டால், முத்து காமிக்ஸ் என்பதை மட்டும் கவனமாகத் தவிர்த்து விட்டு,
//"1972-ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியான `இரும்புக் கை மாயாவி’தான் தமிழ் காமிக்ஸ் உலகுக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கியது"//
என்று நீட்டி முழக்கி இருப்பதைப் பார்க்கும் போது, எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் எழுந்தது! இந்தக் கட்டுரையின், இரும்புக்கை போர்ஷனை எழுதி, எடிட் செய்து கொடுத்தது யார்?
யார் அந்த பத்திரி கை மாயாவி?! ;-)
Exactly my point too கார்த்திக் !
Deleteஇது எதோவொரு மாமூலான ; காமிக்ஸ் அறியா ஊடகஜீவியின் கைவண்ணமே அல்ல என்பது blatantly obvious ! தப்பித் தவறி கூட Fleetway பற்றியோ ; முத்து காமிக்ஸ் பற்றியோ எங்குமே mention இருக்கலாகாது என்பதில் கர்ம சிரத்தையாய் பணியாற்றியுள்ளனர் !
ஈயம் பூசுனா மாரியும் இருக்கோணும் ; பூசாத மாரியும் இருக்கணும் என்பதே agenda ! But தெரியாம கூட credit உரியவர்களுக்கு சேர்ந்திடப்படாது !
டைரக்டரும் சிக்கும் தருணங்களில் எல்லாமே இது தனது உருவாக்கம் என்பதாகவே காட்ட முனையும் போது, அந்த narrative-க்கு ஒத்துப் போகவேண்டிய கட்டாயம் கட்டுரையாளருக்கு !
Yes sir. I felt the same.
DeleteTrue Karthik
//டைரக்டரும் சிக்கும் தருணங்களில் எல்லாமே இது தனது உருவாக்கம் என்பதாகவே காட்ட முனையும் போது, அந்த narrative-க்கு ஒத்துப் போகவேண்டிய கட்டாயம் கட்டுரையாளருக்கு//
Deleteஒரேயடியாக அப்படிச் சொல்லிவிட முடியாது சார்! அப்படி இருந்திருந்தால், கட்டுரை முழுவதையும் ஒரே ஒரு நபரே எழுதி இருந்திருப்பார்!
//இரும்பு கை மாயாவி என்னும் கதாபாத்திரமானது 90களின் பிற்பகுதியில் பிரபலமாக இருந்த ஒன்று. இந்த கதை இன்றும் 90கிட்ஸ்களின் ஃபேவரைட் லிஸ்ட்ல் ஒன்று .//
கட்டுரையின் இந்தப் பகுதி வரை எழுதியிருப்பவர் யாரோ ஒரு 90ஸ் கிட் இணையப் பத்திரிகை எடிட்டர் போல! அவருக்கு பாவம் இரும்புக்கை மாயாவி 70ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ்களின் வெறித்தனமான ஃபேவரைட் என்ற உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை! 90-களின் பிற்பகுதியில் நாம் டெக்ஸ், டைகர், லக்கி லூக், பிரின்ஸ் என்று வேறு பல relatively புதிய ஹீரோக்களுடன் பிஸியாக இருந்தோம்!
//இந்திரஜால் காமிக்ஸ், ஃபால்கன் காமிக்ஸ், அமர் சித்திர கதா எனத் தமிழில் காமிக்ஸ் இதழ்கள் 1960-களிலேயே ரெகுலராக வரத் தொடங்கிவிட்டாலும், 1972-ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியான `இரும்புக் கை மாயாவி’தான் தமிழ் காமிக்ஸ் உலகுக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கியது. //
அந்த 90ஸ் குழந்தையின் அரைகுறை புரிதலுக்கு முற்றிலும் மாறாக, தமிழ் காமிக்ஸ் உலகின் ஆதி அந்தத்துடன் மேற்கண்ட பகுதியை விலாவாரியாக எழுதிக் கொடுத்திருப்பவர் நமது அபிமான "பத்திரி கை மாயாவி"!
இப்படி இருவரின் "கை" வண்ணத்துடன், split personality ஆக கட்டுரையில் மிளிர்கிறார் நமது இரும்புக்கை மாயாவி!
இப்படி நம்மள குழப்ப அந்த அதி மேதாவி எழுதி கெடுத்திருக்கலாம் கார்த்தி....நிச்சயமா70- 80 கள்னு உணர்ந்தவர்தான்
Deleteஇரண்டாம் ஸ்டால் ....நமக்கான விளம்பரம் லோகேஷ் கனகராஜின் படம் வருமோ வராதோ தெரியாது....இதோ இரண்டாம் ஸ்டாலில் ஒரிஜினல் இரும்புக் கை....அதே முத்துவின் புதிய பொலிவாய்
Delete// கார்த்தி....நிச்சயமா70- 80 கள்னு உணர்ந்தவர்தான் //
Deleteஅப்படி என்றால் அவரின் வயது 45-50குள் இருக்கலாம் என சொல்லுலே :-)
நீயில்லல
Deleteமீண்டும் ஒரு பெஸ்டிவல் mood வந்து விட்டது தளத்தில் ...
ReplyDeleteநன்றிகள் சார். அடுத்த இரண்டு வாரங்கள் மிக விரைவில்
மீண்டும் ஒரு பெஸ்டிவல் மூட் வந்துவிட்டது தளத்தில் ஆகஸ்ட்5 மிக விரைவில் . இடையில் கிரிக்கெட் டோர்னமெண்ட்.&//*மறக்க இயலா தருணம்//. கொண்டாட்டம் கொண்டாட்டம் -. *E.v
ReplyDeleteதீபாவளிக்காக காத்திருந்து பல நாட்களாக ஒரு டிசைனை மனதில் நினைத்திருந்து தேடி தேடி கண்டுபிடித்து வாங்கி விடிய விடிய டைலர் கடையில் தேவுடு காத்து தீபாவளியன்று புதுசட்டை அணியும் சந்தோசம்70'. S 80'sகாலகட்டம் (என்றாவது ஒருநாள் திடீரென்று கடையில் கண்ணில் படும் லாரன்ஸ் &டேவிட் கதையைப் பார்க்கும்போது குபீர் என்று அடிவயிற்றிலிருந்து ஒரு சந்தோசம் பொங்கிவரும் )அந்த சந்தோசங்கள் இன்று மாதத்திற்கு 5, வாரத்திற்கு1என்றுபல இதழ்கள் கிடைக்கும்போது
ReplyDeleteஒத்திகையா
Deleteகாமிக்ஸ் பட்டி மன்றம்
ReplyDeleteநடுவர்: மரியாதைக்குரிய கருணையானந்தம் ஐயா அவர்கள்....
அப்டேட்டட் பேச்சாளர்கள் & அணிகள்....
காமிக்சின் செம சுவாரஸ்ய காலகட்டம் 1970's & '80's தான்
1.செந்தில் சத்யா
2.J எ ஜனா
3.ஸ்டீல் க்ளா...
4.GP
நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நடப்பு நாட்களே...
1.ப்ளைசி பாபு
2.திருநாவுக்கரசு
3.கடல்யாழ் ரம்யா
4.STV
ஒரு பேச்சாளருக்கு தலா 5நிமிடங்கள் என 40 & நடுவர் துவக்க உரை& தீர்ப்புக்கு 15நிமிடங்கள், 5நிமிடங்கள் ரிசர்வ் என மொத்தமாக ஒரு மணி நேரங்கள் ஆகும் ஆசிரியர் சார்...
4நிமிடங்கள் பேசிய உடன் ஒரு ரிமைன்டர் பண்ணிடலாம்.. அடுத்த ஒரு நிமிடங்களில் கம்ப்ளீட் பண்ண... 5நிமிடங்கள் ஆகிட்டதுனா நடுவர் அவர்கள் டைம்அப்னு முடிக்க சொல்லிடலாம்...!!!
ஃபைனல் டிஸிஸன் யுவர்ஸ் சார்....!!
ஸ்டீல் கவிதைகளுக்கு ஒரு அரை அவர் சேர்த்துக்கோங்க சார் !!
Deleteஅதான் இங்கே வாரா வாரம் அரங்கேறுதேங் சார்.....
Deleteஅங்கே ஸ்ட்ரிக்ட்லி பேச்சு ஒன்லி & அதுவும் 5நிமிடங்கள் னு சொல்லிடுவோம்....
இல்லைனா பாட்டுக்கச்சேரியில கூட்டத்தை கலைக்க நடுவே இந்திபாட்டு போடுவாங்களே அதுமாதிரி ஆகிட கூடாது...🤣
சார் உங்களுக்கு தனியா பாடிடுறேன்....வருந்தாதீய
Delete96 மணி நேரங்கள்...!
ReplyDelete- டிடெக்டிவ் ரூபின்
மிக அற்புதம்...!
நல்ல விருவிருப்பான கதையோட்டம்
9/10
இதன் கதாசிரியர் ரொம்பவே வித்தியாசமானவர் சார் !!
Deleteரூபின் இரண்டு கதைகளும் வேற லெவல்.
DeleteCOMIC CON சென்னைக்கு வரவிருக்கிறது !! பிப்ரவரி 2024-ல் !!
ReplyDeletehttps://www.newindianexpress.com/cities/chennai/2023/jul/20/chennai-to-host-comic-con-in-2024-2596476.html
வாரே வா. இந்த முறை comic con நேரில் பார்க்க முடிகிறதா என்று பார்க்கலாம்.
Delete17 & 18 பிப்ரவரி சார் - வாரயிறுதியாகத் தானிருக்கும் !
Deleteதலீவருக்கும், செயலருக்கும் ஏதாச்சுமொரு costume போட்டு கூட்டிக்கினு போனால் சும்மா 'ஜிலோ'ன்னு இருக்கும் ! Maybe தலீவரை ஸ்பைடராய் & செயலரை சட்டித்தலையனாய் ?
Delete//தலீவருக்கும், செயலருக்கும் ஏதாச்சுமொரு costume போட்டு கூட்டிக்கினு போனால் சும்மா 'ஜிலோ'ன்னு இருக்கும்//
DeleteWhy costumes? They are naturals!
;-)
அட...ஆமாம்லே !
Delete///Why costumes? They are naturals!///
Deleteஓஹோ!!😼
EBFக்கு வரீங்கதானே செனா அனா?!! வரணும்.. நீங்க வரணும்!!😼😼😼
பாத்து பத்திரமா வாங்க செனா
Delete:-)))))
Deleteசார், அந்த "மறக்க இயலா தருணத்"திற்கு டைம் ஒதுக்கலே .ப்ளீஸ் கன்சிடர்
ReplyDeleteபுத்தகத் திருவிழா, நண்பர்களின் கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடக்கவும், விற்பனை சிறக்கவும் , புதிய வாசகர்கள் கிடைக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💖
ReplyDeleteமன்னிக்கவும், எனக்கு கல்யாணம் செப் 17 க்கு நிச்சயமாகி அந்த வேலைகளில் சற்றே மூழ்கி இருப்பதால் பிளாக், காமிக்ஸ் உலகம், சமூக வலைத்தளங்கள் பக்கம் அதிகம் தலை காட்ட முடியாமல் இருக்கின்றது. இந்த முறையாவது ஈரோட்டுக்கு வர, ஆசிரியரையும் நண்பர்களையும் சந்திக்க போட்ட பிளான்கள் வேறு பணாலாகி விட்டது. 😪
30
Delete😍❤💐💐 வாழ்த்துக்கள் அபிஷேக் டியர் ..👍
வாழ்த்துக்கள் அபிஷேக் sir.
Deleteவாழ்த்துக்கள் அபி. அடுத்த வருடம் ஈரோடு புத்தக விழாவுக்கு குடும்பத்துடன் வாங்க.
Deleteவாழ்த்துக்கள் அபிஷேக்! அடுத்த வருடம் ஈரோடு புத்தக விழாவுக்கு குடும்பத்துடன் வாங்க.💐💐
Deleteமனமார்ந்த வாழ்த்துக்கள் அபிசேக்
Deleteவாழ்த்துக்கள் தம்பி அபிஷேக் ...
Deleteவாழ்த்துகள் அபி..😍💐💐💐
Deleteஅற்புதமான சேதி நண்பரே !! மனமார்ந்த வாழ்த்துக்கள் !!
Deleteநன்றி நண்பர்களே 🙏
Deleteநன்றி எடிட்டர் சார் 🙏
அடுத்த வருடம் ஈரோடு புத்தக விழாவுக்கு குடும்பத்துடன் வாங்க//
Deleteஅன்புக்கு நன்றி, கண்டிப்பாக வர முயற்சிப்பேன்ங்க
😍❤💐💐 வாழ்த்துக்கள் அபிஷேக் டியர் ..👍
ReplyDeleteநன்றி சார் 🙏
Deleteவாழ்த்துக்கள் அபிஷேக் அடுத்த வருடம் ஈரோடு புத்தக திருவிழாவிற்கு குடும்பத்துடன் வாங்க.
ReplyDeleteநன்றி சார் 🙏
Deleteஸ்பைடர் இரு வண்ணம் அசத்தல் .ஆவலைத் தூண்டுகிறார் தானைத் தலைவர். சீக்கிரம் ஆகஸ்ட்5 வரணும்
ReplyDeleteநமது ஆபீஸ் ஸ்டாப் ஜோதி Madam
ReplyDeleteமிக அருமாய் மேனேஜ் செய்கிறாங்க
புத்தங்களின் பெயர், அதன் ஹீரோ, அதன் விலை எல்லாமே பார்த்த அடுத்த நொடியே சொல்றாங்க
இருப்பது புத்தங்கள் பில் போடா பட்டாலும் எல்லாவற்றவையும் ஞாபகம் வைக்கிறார்
புத்தங்கள் பார்வையாளர்களால் கலைக்க பட்டு நான் திருப்பி அடுக்கும் பொது எந்த புத்தகம் எங்கே என்று தேடுவேன்,,,புத்தங்கள் எங்கே எந்த ராக் வலப்புறத்திலிருந்து எத்தனையாவது இடம் என்று கரெக்டாக சொல்லி எனக்கு உதவி புரிவார்
சந்தகாரர்களை நன்றாக நினைவில் உள்ளார்
ரொம்ப வேகமாக கூட்டல் போட்டு விடுகிறார்
வாடிக்கையாளர்களை மிக சிறப்பாக கையாளுகிறார்
நம்ம ஆபீஸ் ஸ்டாப்ஸை யாரும் குறை சொல்வதை ஏற்று கொள்ள முடியாது
I am so impressed...she is awesome
அருமை....
Deleteபாராட்டுகள் ...
வாழத்துக்கள்..
செம்ம கடல் செம்ம. நமது சகோதரி ஜோதிக்கு வாழ்த்துக்கள்.
Deleteஅருமையான அப்டேட் கடல்... புத்தக விழா சிறக்கட்டும்.....
DeleteSema good to hear this.
Delete@Paranirharan.k நன்றி தலீவரே😊
Delete@Kumar Salem நன்றி சகோதரரே 😊
@சேலம் Tex விஜயராகவன்
வாழ்த்துகளுக்கு நன்றி சகோ 😊
@Parani from Bangalore
ஆமா சகோ, செமல 😊
ரொம்பவே சந்தோஷமாக உள்ளது ரம்யா - உங்களின் observations-ஐ வாசிக்கும் போது !! ரெகுலராக front office-ல் அனைவருடனும் பேசுபவர் என்பதால் அவருக்கு நம்மவர்கள் அனைவரும் நல்ல பரிச்சயம் !!
Deleteஈரோட்டிலும் இருப்பார் !!
சூப்பர்
Deleteசிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் காமிக்ஸ் படிப்பதில் ஆர்வம் காட்டுவதும்
ReplyDeleteபெற்றோர்கள் அவர்களை காமிக்ஸ் வாங்கி தந்து ஊக்க படுத்துவது பார்க்க மிக சிறப்பு
2016, 2017, 2018 கோவை புத்தக விழாவனை கம்பேர் பண்ணும் போது இது அதிகமாகி உள்ளது
நம்ம லயன் ஸ்டாலில் sale எப்படி போகுது?
DeleteWow. Good news about kids started reading comics 👏🏻
Delete@Kumar Salem
Deleteதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் சகோ
விற்பனை நன்றாகவே உள்ளது சகோ
அச்சோ சிஸ்டர் நீங்க அட்டகாசமான பணி செய்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்க மெதுவாகவே வந்து பதில் சொல்லலாம். மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டியது இல்லை. நன்றி சகோதரி தகவலுக்கு.
Deleteசார் மாதக் கடைசி ஆகி விட்டது புத்தகம் எப்போது கிடைக்கும்?
ReplyDeleteபதில் நாளைய பதிவில் 😋😋😋😁😁
DeleteI'm waiting
DeleteNext week during book fair meet:-)
Deleteநாளை
Deleteஐயோ ...ஐயோ....இன்னுமோர் வாரம் இருக்கு...
ReplyDeleteநாட்கள விரைவாக நகுத்த ஆசிரியர் தினமோர் பதிவு நிதமும் போட்டா எப்படியிருக்கும்...
கொலைப் படையயும் சுஸ்கிவிஸ்கியயும் காண கொலை வெறியுடன்
சார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteஇன்றைய பதிவில் டின் டின்னுக்கு பதிலா..,
Deleteஆச்சு அந்த நாளும் வந்திருச்சு .வீட்டிலிருந்து அமைதியா போவாங்க வருவாங்க .புத்தகம் படிச்சுகிட்டு இருப்பாங்க.அவ்வளவுதான்.என்று இருந்த அமைதியான வாசகர்களின் உண்மை சொரூபம்(விஸ்வரூபம் ) வெளியில் தெரியப்படும் இந்நாள் ஜுலை 30.நாளை கிரிக்கெட் விளையாடப்போகும் மற்றும் விளையாட்டை நேரில் காண வரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇன்று பதிவுக்கிழமை ஆசிரியர் சார்.
ReplyDelete### 200 ###
ReplyDelete