Powered By Blogger

Friday, July 07, 2023

புரஃபஷனலாய் ஒரு டெஸ்பாட்ச் !

 நண்பர்களே,

வணக்கம். இன்று மாலை உங்களின் கூரியர் டப்பிக்கள் புறப்பட்டாச்சு & இம்முறை ஒரு சர்ப்ரைஸ் மாற்றத்துடனும் ! இத்தனை ஆண்டுகளாய் ST & DTDC கூரியர்களில் புக்ஸை அனுப்பி விட்டு, பட்டுவாடாவில் தாமதங்களென அவர்களோடு கணிசமான WWF போட்டுப் பார்த்து விட்டோம் ! அதிலும் சமீப மாதங்களில் கூரியர் சார்ந்த புகார்கள் கணிசம் எனும் போது, நமது front office பெண்கள் பட்ட அவஸ்தைகளும் கணிசமோ, கணிசம் ! To cut a long story short - புரஃபஷனல் கூரியரில் ஒரு மாதிரியாய் பேசி, அவர்களது வழக்கமான கட்டணங்களில் அல்லாது - சற்றே ஸ்பெஷல் கட்டணத்தினில், இனி நமது பார்சல்களை தமிழகத்தினுள் கையாண்டிட அவர்களின் இசைவைப் பெற்றுள்ளோம்  ! இதர சேவைகளைக் காட்டிலும் இவர்களிடம் வேகம் ஒரு மிடறு கூடுதல் என்பதோடு, இங்கே புக்கிங் ரசீதுகள் முழுமையாய் கணினிமயம் என்பதால், நம்மாட்களுக்கு உங்களின் டிராக்கிங் நம்பர்களை பார்த்துச் சொல்லும் வேலைகள் எளிதாகிடும் ! So உதகை ; குன்னூர் ; கொடைக்கானல் போன்ற மலை மேல் குந்தியிருக்கும் நகர்களை தவிர்த்த அனைத்து தமிழக நகரங்களிலும், இனி புரஃபஷனல் கூரியர் தான் நமது பார்சல்களைக் கொணர்வர் ! So நாளை முதலாய் DTDC & ST கூரியர்களின் கதவுகளைத் தட்டிட வேண்டியிராது folks ! வெளி மாநிலங்களைப் பொறுத்தவரையிலும் மாற்றங்கள் இராது - DTDC & பதிவுத் தபால்கள் - as usual !  Of course - "எக்ஸ்டரா நம்பர் நா கேட்டேனா ? புரஃபஷனல் கூரியர் நா கேட்டேனா ?" என்று நாளையே சொக்காயைப் புடித்து உலுக்கும் படலங்களும் அரங்கேறுமென்பதில் எனக்கு ஐயங்கள் இல்லை தான் ! But எங்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப, நாளைக்கே அனைவருக்கும் டெலிவரி ஆகிவிட்டால் (புக்ஸ் தானுங்க!!!) - கொஞ்சமாய் மண்டை தப்பிக்கும் ! ஜெய் புரஃபஷனல் !! 

And yes, லக்கி ஆண்டுமலர் + கைதியாய் கார்சன் + And "நதி போல ஓடிக்கொண்டிரு" (வன்மேற்கின் அத்தியாயம் # 2- ரெகுலர் சந்தா தடத்தினில் இடம்பிடித்திடுகின்றன ! இதோ - நீங்கள் இன்னமும் பார்த்திரா இம்மாத TEX அட்டைப்படம் + preview :


"நதி போல ஓடிக்கொண்டிரு" இதழையுமே இன்னமும் நீங்கள் preview-ல் பார்த்திருக்க மாட்டீர்கள் எனும் போது - here you go ! வழக்கம் போலவே ஒரிஜினல் அட்டைப்படம் & அடர் வண்ணங்களில் உட்பக்கங்கள் & அந்த வன்மேற்கின் வாழ்வியலில் உள்ள இன்னல்கள் பற்றிய சித்தரிப்பு - என "ந.போ.ஓ.கொ" அழகாய் பயணிக்கிறது !


இம்மாதத்தின் இதழ் # 4 : நம்ம V காமிக்ஸ் and அக்கட ஒரு slot இரவல் வாங்கியுள்ளோம் - வன்மேற்கின் அடுத்த அத்தியாயத்தை உட்புகுத்த !! So "பள்ளத்தாக்குப் படலம்" வாயிலாக, வன்மேற்கின் கதை தனது மூன்றாம் அத்தியாயத்தினில் தொடர்கிறது ! And அடுத்த ஆல்பத்தோடு (Part 4) முதல் சுற்றுக் கதை நிறைவுறுகிறது என்பது கொசுறுச் சேதி ! 

ஞாபகமாய் V காமிக்சின் மூன்றாம் quarter சந்தாத்தொகையான ரூ.300-ஐ அனுப்பி விட்டிருக்கும் நண்பர்களுக்கு, பார்சல்களில் 4 புக்ஸ் இடம்பிடித்திருக்கும் ! So பார்சலினுள் மூன்று புக்ஸ் மாத்திரமே தென்படும் பட்சத்தில், நம்மாட்களின் பொடதியினில் சாத்த ஆவேசம் கொள்ளும் முன்பாய், சந்தா நிலவரம் பற்றி ஒரு quick think ப்ளீஸ் ?! இன்று காலையில் V சந்தாத் தொகைகளை அனுப்பியோருக்குமே books on the way ; அதன் பின்பாய் அனுப்பியிருக்கும் பட்சத்தில் - sorry folks ; a bit late ! இதோ V காமிக்சின் வெள்ளோட்டம் : புக்ஸ்களுக்கான ஆன்லைன் லிஸ்டிங்கும் அடுத்த 1 மணி நேரத்திற்குள் ஆகிடும் ; so ஆன்லைனில் வாங்கிடும் நண்பர்களுக்கு - happy shopping !


ரைட்டு...நான் நடையை கட்டும் முன்பாய் இதோ - இன்னொரு கேள்வி for you !! கார்சனின் கடந்த காலம் - அட்டைப்பட கலர் தேர்வினில் உங்களின் choices பற்றி அந்த இரகசிய வோட்டெடுப்பில் பார்க்க முடிந்தது ! And a decision is almost done there ! அதன் மத்தியினில் இள வயது ஜெமினி கணேசனை, ஆங்...சாரி கார்சனையும், லீனாவையும் அட்டையில் போடாட்டி தெய்வ குற்றமாகிப் போகுமோ ? என்று யோசிக்க வைத்திருந்தனர் நண்பர்களில் ஒரு அணியினர் ! So ஆனது ஆச்சு ; இன்னொரு பெயிண்டிங்கை போட்டுப்புடலாமென்று முயற்சித்தோம் ! இதோ - அதன் முதல் version :

ஆட்டுதாடியும், மீசையும் வெள்ளிமுடியாருக்கே கெத்தாக இருப்பதாக எனக்குப் படுகிறது ; "காதலிக்க நேரமில்லை" ரவிச்சந்திரன் போல் தோற்றமளிக்கும் இந்த "கருமுடியார்" உங்கள் பார்வைகளில் எவ்விதமோ ? A quick reply இங்கேயே ப்ளீஸ் ?

Bye all....see you around ! Have a fun weekend !!

236 comments:

 1. உள்ளேன் ஐய்யா

  ReplyDelete
 2. Just firstnu போட்டுக்கலாமா

  ReplyDelete
  Replies
  1. Just Miss என்று போட்டுக் கொள்ளுங்கள்.

   Delete
 3. வணக்கமுங்க 🙏😁

  ReplyDelete
 4. எதிர்பாராத இன்பப் பதிவு.🙏🙏🙏🙏

  ReplyDelete
 5. ஆசிரியரே
  கோவை புத்தக விழா ??

  ReplyDelete
 6. எல்லாம் ஓகே சார்.
  ஆனால் கார்சன் & லீனா முகம் ஒத்துப் போகலை .

  அதாவது மேட்ச் ஆகலை .

  ReplyDelete
 7. நாட்டாமையின் கடைசி தம்பி மாதிரி இருக்கு கார்சனை பார்க்க.

  ReplyDelete
 8. Professional கூரியர் சர்வீஸ் இருப்பதிலேயே படுமோசம் என்பதால் தான் ST தேர்வு செய்து இருந்தோம். Professional கூரியரில் டெலிவரி ஆட்கள் படு மோசம்‌ ஏனிந்த திடீர் முடிவு சார்? 😟
  இளவயது அட்டை இன்னும் பலமடங்கு ஒழுங்கு பண்ண வேண்டும் சார். முகங்கள் ஒத்துப் போகவே இல்லை சார் 🫤

  ReplyDelete
 9. கார்டனின் இளவயது படம் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் வரும் வில்லன் நடிகர் மாதிரி எனக்கு தோன்றுகிறது

  ReplyDelete
 10. இளமையான கார்சன் அட்டைபடமா கேட்டது தப்புதானுங்க ஆசானே ..

  உங்களுக்கே ரவிசந்திரன் மாதிரி தோனுது ன்னா எங்கள மாதிரி சின்ன பசங்களுக்கு இவர் யாருன்னே தெரியலைங்க ஆசானே..

  தயவு செஞ்சு நல்ல இளமையான கார்சன் படத்த போடுங்க தெய்வமே !!

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி ஆமா சார் இதுக்கு அதுவே பரவாயில்லை

   Delete
 11. அன்னாலின் வில்லன் மாதிரி இருக்கார்!! இவர் தான் கார்சன் என்று சொன்னால் எப்படி ஏற்பது!!!

  ReplyDelete
 12. Cover design not impressive.
  Not in Tex comics standard
  Please Reject it

  ReplyDelete
 13. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 14. V Comics சந்தாவை Miss பண்ண மாட்டேன் Sir,,

  கார்சனின் கடந்த காலம் - இந்த Young கார்சன் சுகப்படவில்லை Sir

  ReplyDelete
 15. லீனாவை கவர்ந்து செல்லும் வில்லன் போல் உள்ளார் ‌. இவரா கார்சன் போல் இருக்கார்?? ஆசானே

  ReplyDelete
 16. வெள்ளி முடியார்.....பெயருக்கு ஏற்றார் போல் வெண் தாடி உடன் இருத்தலே அழகு என் வகையில்.
  என்ன தான் கா.க.காலமாகவே இருந்தாலும் டெக்ஸின் 75 வது பிறந்தநாள் சிறப்பு மலரில் தலயின் முக தரிசனம்(அட்டையில்) இல்லாமல் வருவது ஒரு சிறு நெருடலாக உள்ளது..

  ReplyDelete
  Replies
  1. ரைட்டு ....அடுத்த டிசைனை போடணுமோ ?

   Delete
  2. முதல் பதிப்பில் இரு இதழ்களில் ஏனோ ஒன்றில் கார்ஸனின் இளவயது முகம் தொப்பியுடன் அழகாய் இருந்ததாய் நினைவு,அதன் அப்டேட் வெர்ஷன் இல்லையா சார்...

   Delete
  3. ரைட்டு சார்....அவருக்கு இதயத்ல இடம் குடுத்தாச்சே....அதாவது கார்சனிதயத்ல

   Delete
  4. ரைட்டு ....அடுத்த டிசைனை போடணுமோ

   புண்ணியமாய் போகும் ஆசிரியரே வேறு டிசைன் முயற்சி செய்யுங்கள்

   Delete
  5. வேணாம் தோழரே
   நாட்கள் கம்மியா இருக்கு
   நம்ம வோட்டு போட்ட ஐந்திலிருந்து ஒரு டிசைன் கிடைத்தால் போதும்

   Delete
  6. நான் புது டிசைன் கேட்டது யங் கார்சனுக்குதான்தோழி ஓல்டு கார்சன் என்றால் எனது ஓட்டு ஸ்கை ப்ளூ விற்க்கு அதற்கு புது டிசைன் தேவையில்லை 👍

   Delete
 17. Professional courier நல்ல தேர்வு.
  கார்சனின் கடந்த காலம் ஒரிஜினல் அட்டைப்படத்தை பார்த்து, மலை முகட்டில் பிண்ணனியில் கார்சனின் இளமை முகம் மிக அழகாக இருந்ததால், வருவது ஒருமுறை அதை பெஸ்டாக வாங்கினால் நல்லதென்ற எண்ணத்தில் அட்டைப்படத்துக்கு சலசலப்பு எழுந்தது உண்மைதான்.
  ஆனா அதுக்காக இப்படியொரு புதிய அட்டைப்படத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை.
  டோட்டலி அப்செட்..

  ReplyDelete
  Replies
  1. சார் ...ஒவியங்கள் வரைவதென்பது ஒரு பிரேத்தியேகக் கலை ! அதிலும் அயல்நாட்டு முகங்களை வரைந்திடுவது சுலபமே அல்ல ! டெக்சுக்கு எண்ணிலடங்கா references உண்டெனும் போது சிரமமின்றி ஒவியர் சாதித்து விடுகின்றார் ! முதிய கார்சனுக்குமே references அநேகம் ! ஆனால் இள வயது கார்சனுக்கு அவ்விதமல்ல ! அதனால் தான் துவக்கத்திலேயே இளைஞரை ரெடி செய்திட முனைந்திடவில்லை !

   நண்பர்கள் விரும்பியதால் முயற்சித்தோம் ; சரி வரவில்லை எனும் போதே வெள்ளிமுடியாரோடு we move on சார் ...இதில் வருத்தப்பட என்ன உள்ளது ? ஓவியரைக் கடிந்து ஒரு போதும் நாம் எதிர்பார்ப்பதை வரவழைக்க இயலாதே !

   பட்டா பாக்கியம் ; படாட்டி லேகியம் !

   Delete
  2. /* பட்டா பாக்கியம் ; படாட்டி லேகியம் ! */ - Ha Ha - Kris Srikkanth's golden punch :-)

   Delete
 18. Ashes பார்த்துக்கொண்டே அவசரத்தில் புரஃபஷனலாய் ஒரு டெஸ்ட்மாட்ச்  என்று படித்துவைத்தேன் :-) பார்க்கலாம் PC எவ்வளவு வேகம் என்று .. usually they are on dot.

  ReplyDelete
 19. புக் கிளம்பிவிட்டது இதைவிட மகிழ்ச்சி தரும் செய்தி வேறு எதுவும் இல்லை...

  ReplyDelete
 20. Professional கூரியர். நல்ல. தேர்வு ,

  ReplyDelete
 21. // "காதலிக்க நேரமில்லை" ரவிச்சந்திரன் போல் தோற்றமளிக்கும் இந்த "கருமுடியார்" உங்கள் பார்வைகளில் எவ்விதமோ //
  கார்ஸனைப் பார்த்தால் சீயானுக்கு மாறுவேஷம் போட்ட மாதிரியும் லீனாவைப் பார்த்தால் கங்கனா ரணாவத் போலவும் தோன்றுவது எனக்கு மட்டும் தானா...!!!

  ReplyDelete
  Replies
  1. இன்றைய டாப் ஹீரோவும், ஹீரோயினியும் போலவா உள்ளது சார் ? அப்டி கிப்டி சொல்லி வைச்சு நான்பாட்டுக்கு இதை அட்டைப்படமாக்கி வைத்து விடப் போகிறேன் சார் !

   Delete
 22. // நாளைக்கே அனைவருக்கும் டெலிவரி ஆகிவிட்டால் (புக்ஸ் தானுங்க!!!) - கொஞ்சமாய் மண்டை தப்பிக்கும் ! ஜெய் புரஃபஷனல் !! //
  எனக்கு அழகாய் கைக்கு வந்து விடும் பிரச்சனை இல்லை,ஆவலாய் காத்திருக்கிறேன்,இந்த மாசம் தட்டி தூக்கனும்...

  ReplyDelete
 23. வன்மேற்கின் அத்தியாயம் ஆவலைக் கிளப்புகிறது...

  ReplyDelete
 24. இது கார்சன்னு சொன்னால் லினாவே நம்பாது சார்.எதோ அவசர அவசரமா ரெடி பண்ணியது போலுள்ளது.

  ReplyDelete
 25. ஓ! குட்னஸ்! எங்கள் ஊரில் புரபஷனல் கூரியரே கிடையாது! அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்தவர்கள் செய்த குளறுபடிகள் காரணமாக எங்கள் ஊருக்கு franchise கொடுக்க மறுத்து விட்டதாக கேள்வி. நீங்கள் அந்த புரபஷனல் கூரியரில் அனுப்பினால் 23 கிமீ பயணம் செய்துதான் பார்சலைப் பெற இயலும். எனவே இயன்றால் ST கூரியரில் அனுப்பவும். இல்லையெனில் பதிவு தபாலில் அனுப்ப வகை செய்யவும். ( பெற தாமதமாகும். எனினும் பரவாயில்லை. அலுவலகத்துக்கும் இது பற்றி ஒரு மெயில் அனுப்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Professional Courier இல்லாததொரு ஊரா சார் ? வியப்பே ! வழக்கம் போல ST -ல் அனுப்பி விடலாம் சார் !

   Delete
  2. ஏதேனும் காரணங்களுக்காக Professional கூரியர் வேண்டாமென்று சொல்லக்கூடிய அத்தனை நண்பர்களுக்குமே பழைய மாதிரியே அனுப்பச் சொல்லி விடலாம் ! So யாரேனும No to Professional எனில் - தகவல் சொன்னால் போதும் !

   Delete
  3. சார் திருவண்ணாமலையில் எனக்குமே பு. கொ. சரியான நேரத்தில் வருவதில்லை. எஸ் டி. என்றால் மறுநாளே வந்து சேரும்.

   Delete
 26. // ; "காதலிக்க நேரமில்லை" ரவிச்சந்திரன் போல் தோற்றமளிக்கும் இந்த "கருமுடியார்" உங்கள் பார்வைகளில் எவ்விதமோ ? A quick reply இங்கேயே ப்ளீஸ் ? //

  Sorry sir. It doesn’t look like Karson sir. I am very sorry to say this sir. Last week one looks good to me while comparing with this.

  ReplyDelete
 27. கார்சன் அட்டை செம சூப்பர் சார்...இரண்டு அட்டைகளும் போட்டி போட...வழக்கம் போல நண்பர்களின் சரியான தேவைக்கு செவி சாய்த்ததற்கு நன்றிகள்..

  ReplyDelete
 28. Hello 👋 thorgal வாழ்க

  ReplyDelete
 29. கைதியாய் கார்சன் இது வரை வந்ததுலையே டாப்பட்டை இதான்னு குதிச்ச மனச கொஞ்சம் கீழ பாரு கண்ணாண்ணு வியாசர் வாயடைக்க வைக்க தடுமாறும் மனதுடன் கடக்கிறேன் மூனட்டைவளுஞ் சூப்பர்னே....

  ReplyDelete
  Replies
  1. //. கைதியாய் கார்சன் இது வரை வந்ததுலையே டாப்பட்டை //

   +1

   Delete
 30. /// காதலிக்க நேரமில்லை" ரவிச்சந்திரன் போல் தோற்றமளிக்கும் இந்த "கருமுடியார்" உங்கள் பார்வைகளில் எவ்விதமோ ? A quick reply இங்கேயே ப்ளீஸ் ///

  தம்பீ... நீங்க எம்ஜியார் மாதிரி சும்மா தகதகன்னு மின்னுறீங்க...
  யாரு..நானு.. ஏன்யா இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல..

  ReplyDelete
  Replies
  1. ரவிச்சந்திரன் மெரி கூட இல்லீங்களா ?

   Delete
  2. விஜயன் சார் 

   ரவிச்சந்திரனின் பெயரை மறந்து விட்டு நானுமே காதலிக்க நேரமில்லை ஹீரோ போல இருக்கேன்னு தான் நினைத்தேன் - முதல் பார்வையில். 

   Since this is a classic reprint - please resort to one of the original covers sir.

   Delete
  3. //நல்லா உத்து பாருங்க...கார்சன் தா அது//

   😂😂😂😂😂

   Delete
 31. 'தாய் மீது சத்தியம் ' படத்துல வர்ற ரஜினிக்கு தாடி ஓட்ட வச்ச மாதிரி இருக்கு

  ReplyDelete
 32. No for the new cover. Doesn't look like Carson at all.

  ReplyDelete
  Replies
  1. Carson's lingering image is his grey hair & goatee ! Nothing else comes close to that !

   Delete
  2. A person in the Kanavulagam whatsapp group has done a better job of young Karson.

   Delete
 33. கார்ஸனை காணவில்லை...அந்த அட்டையில்...

  ReplyDelete
 34. மேஜிக் கலை நிபுணர்களின் வெற்றி பார்வையாளர்களின் கவனத்தை திசை திருப்புவதில்தான் அடங்கியுள்ளது.
  பகட்டான ஆடைகள்,வசீகரமான பெண் உதவியாளர்கள் மற்றும் பல.

  வஞ்சம் மறக்கா வரலாறு ஆசிரியரின் உப தொழில் மேஜிக் கலை போலும். வாசகரின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் மகத்தான வெற்றி பெற்று இருக்கிறார்.

  கிரிஃபின் சரி! பரவாயில்லை.கதையோடு ஒட்டி உள்ள விஷயம். ரகசிய காதல் உறவை சந்திக்க செல்லும் ரஷ்ய குழு அங்கத்தினர் ஒருவர்.இதை பாராட்டியே ஆக வேண்டும்.

  இருமல்...அட! இருமல் ஐயா! இதை வைத்து நின்று விளையாடி இருக்கும் ஆசிரியரின் சாதுர்யம்.
  அம்மாடி!!!!

  கடைசி இரண்டு பக்கங்கள் ஐபிஎல் ஃபைனலில் டெத் ஓவரில் ஜடேஜா அடித்த கடைசி இரண்டு ஷாட்கள் மாதிரி ...தூள்!!!!!

  எல்லா ஆல்ஃபா கதைகளிலும் டமால் டுமீல்,துரத்தல் என்றல்லாது இது போல் அழுத்தமான கதையுடன் வருமாயின் சிறப்பே

  9/10

  ReplyDelete
 35. பனாமா படலம்

  ஜெயிலர் பட டிரெய்லர் பாட்டில்
  தமன்னாவை மட்டும் பார்த்து ரஜினியை புறக்கணித்த கண்கள் போல் கதையில் புதிதாக நுழைந்த நபரை சுற்றி எல்லாமே சுழல டேங்கோவை விட்டு கவனம் விலகுகிறது.டேங்கோ பற்றிய ஃப்ளாஷ்பேக் ஆறுதல்.

  8/10

  ReplyDelete
  Replies
  1. ///ஜெயிலர் பட டிரெய்லர் பாட்டில்
   தமன்னாவை மட்டும் பார்த்து ரஜினியை புறக்கணித்த கண்கள் போல்///

   உவமானத்தைப் உபயோகிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே செனா அனா!! :))))

   Delete
 36. இம்மாதம் மூன்று அட்டைப்படங்களில் மஞ்சள் சட்டை...

  எனக்கு ஜுன் புத்தகங்களை இம்மாத புத்தகங்களுடன் அனுப்புவதாக அலுவலகத்திலிருந்து தகவல்...

  காத்திருக்கிறேன்

  ReplyDelete
 37. சார் நண்பர்கள் கருத்துக்களை பார்த்தேன்....இள வயது கார்சன கச்சிதமா வரைய சிறந்த ஓவியர்களாலும் இயலாதென்பதல்ல...கார்சன பாத்து பாத்து இது ஒரு வகை காட்சிப் பிழை....ஆனா ஓவியம் நல்லாருக்கு....நம்பிப் பாருங்க நிச்சயமா கார்சன் தென்படுவார்....முன்னட்டை அது ...பின்னட்டை இது...லினாவுக்கென்ன குறை...
  கார்சன் துப்பாக்கியால் நோண்ட...லினா தோண்ட.....வண்டியோ பயணப்பாதையை தாண்ட...கனகச்சிதமாக வன் மேற்கு...

  ReplyDelete
  Replies
  1. இந்த கமெண்டுக்கு என்ன சொல்வது என்றே தெரியலையே

   Delete
  2. பட்டையக் கிளப்பறீங்க இரும்புக் கவிஞரே!! :)

   Delete
 38. நண்பர்களே

  நதிபோல் ஓடிக்கொண்டிரு கதையின் முதல் பாகம் எந்த மாதம் வந்தது? டைட்டில் என்ன? சொல்லுங்களேன் ப்ளீஸ். மீண்டும் குவிய ஆரம்பித்திருக்கும் காமிக்ஸ்களுக்கிடையில் தேடிப் படிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. புதிருக்குள் பெரும் பயணம், வந்தது மே மாதத்தில்

   Delete
 39. கார்சனின் இந்த அட்டைப்படம் சோபிக்க வில்லை சார் ...முன்னர் கொடுத்த அதே கார்சன் அட்டைப்படத்தையே நான் முன்மொழிகிறேன் சார் ..


  ****

  கொரியர் புரொபஷனல் கொரியரா...

  வடை போயிறும் சார்...

  எனக்கு எஸ்டி கொரியர் எனில் ஞாயிறே கூட கிடைக்கும் அளவிற்கு உள்ளது சார்..இந்த புரொபஷனல் கண்டிப்பாக வழக்கமான நாளை விட ஒரு வாரம் ஆக தாமதமாகி விடும் என்பதும் உண்மை..அதே போல் டிடிடிசி எனில் தகவலே சொல்லாமல் புத்தகத்தை திருப்பி அனுப்பி விடும் அனுபவத்தையே நான் பெற்றுள்ளேன்..

  எனவே எனக்கு என்றும் ,எப்பொழதும் எஸ்டி கொரியரே தேவை சார்..ப்ளீஸ்..

  ReplyDelete
  Replies
  1. தலீவருக்கு கொரியர் பிரச்சினை எனில் ஜகத்தினை எரித்திடுவோம்!

   Delete
  2. பாவங்க ஜகத் அவரை விட்டுடுங்க...

   Delete
  3. அறிவரசு ரவி 🤣🤣🤣🤣

   Delete
 40. ஏதேதோ வேலைகளினூடே V-காமிக்ஸுக்கு சந்தா செலுத்த மறந்துபோய் விட்டேன் சார்! :( தவறு என்னுடையதுதான்!

  ஆனால், சந்தாதாரர்களின் வாட்ஸ்-அப் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு நமது அலுவலக சகோக்கள் ஒரு ரிமைன்டரை தட்டிவிட்டிருக்கலாம்!

  மிஸ் ஆனதை EBFலதான் வாங்கணும் போலிருக்கு!

  கா.க.க - புதிய அட்டைப்படம் அத்தனை ரசிக்கவில்லை சார்! பின்னட்டைக்கு வேண்டுமானால் தகுதியாகிடுமோ என்னமோ!

  DTDCக்கும் எனக்கும் ஒருமாதிரியாய் செட் ஆகியிருந்த நிலைமையில் இப்போது PC!! பார்ப்போம் - இவர்களது பட்டுவாடா முறையை!!

  ReplyDelete
  Replies
  1. This was an issue I raised long back and everyone ignored. And I keep on reminding them for last 2 yrs.

   Create whatsapp broadcast list of all subscribers (may be less than 1000), and send whataspp message for every new announcement.

   Sonna yaaru kekkura?

   I am sending more than 12 client lists once a month message. It's not at all difficult.

   Vikram should see this message and act.

   Summa goodmorning message podaravanga kooda broadcast list ready panranga. Ivlo Peru love pannum lion comics, oru broadcast list ready panni, every month update pannina pothum.

   This falls under work of employees. They must do it and actually it's simple

   Delete
  2. ஆயிரம் லைக்ஸ் @Dr. Hariharan

   ஜூ.எடி கொஞ்சம் மெனக்கெட்டார்னா இதை சுலபமா செஞ்சுடலாம் தான்!

   Delete
 41. கார்சன்... சிரிப்பை அடக்க முடியலங்க.. 😄.. சும்மா நான் ஒன்னு உருவாக்கி பாக்கறேன்... ❤️..

  ReplyDelete
  Replies
  1. இன்னைக்கு இதுதான் என் பணி friends... முயற்சி பண்ணறேன்.. உருவாக்கி face book
   ல போடட்டுமா..? ❤️

   Delete
 42. டியர் சார்,
  எனக்கு DTDC-கொரியர் என்று இருப்பதை மாற்ற வேண்டாமே..
  தெரிந்த கொரியர் ஆபிஸ் - ஊர் எங்கேனும் சென்றிருந்தாலும் -வைத்திருப்பார்கள்-ஆபீஸில் போய் வாங்கிக்கொள்வேன்.. மற்றவர்கள் வீட்டில் இல்லை எனில் , திருச்செந்தூர்-தூத்துக்குடி என்று அலைய விடுவார்கள்..
  எனவே, எனக்கு DTDC_தான் வசதி - இளங்கோ - ஆத்தூர்..

  ReplyDelete
 43. புரொஃபெசனலோ புரோட்டாவோ சேலம் வண்டி கொடை சாயாம வந்திட்டா, எனக்கு பார்சல் கிடைச்சிடும்...🤩🤩🤩

  வன்மேற்கின் அடுத்த அத்தியாயங்களுக்கு ஆவலுடன்.....

  வழக்கம்போல கைதியாய் கார்சரில் இருந்து துவக்கிடலாம்....

  லீனா, இள கார்சன்--- ஏதும் செட் ஆகலனா போன பதிவில் வின் பண்ணிய க்ளாசிக் கார்சர் அல்லது ஒரிஜினல் கவரையே கூட போட்டுடலாம் சார்...

  உயிரைத்தேடி வண்ண புத்தக அட்டை மாதிரி மற்றோரு அட்டையை தாங்கிகொள்ளும் சக்தி இல்லை🤣

  (ஜஸ்ட் ஃபார் ஃபன், தி பெஸ்ட் ஆக கொடுப்பீங்கனு காத்துள்ளோம் சார்)

  ReplyDelete
 44. உள்ளேன் ஐயா..!

  எனக்கு ST கூரியரை மாற்றாமல் இருந்தால் மகிழ்ச்சி.!
  எனக்கு இதுவரை கூரியர் சர்வீஸில் எந்த கம்ப்ளெய்ன்டுமே இல்லை சார்..! ரெண்டு மூணு நாள் தாமதமானாலும் எனக்கு ST யே நிறைவானது சார்.!

  ReplyDelete
 45. ஆஹா....புத்தகம் வந்தாச்சாம்.....நா வேலை முடிஞ்சாலோ...இடையே வாய்ப்பு கெடச்சாலோ பிடிச்சிருவேன்....நன்றிகள் சார்

  ReplyDelete
 46. கார்ஸன் மாதிரியே இல்லை. எனக்கு லீனா பற்றி தெரியாது ஏன் என்றால் கார்சனின் கடந்த காலம் புத்தகம் என்னிடம் இல்லை. இந்த ஹார்டபௌண்ட் இதழுக்காக waiting . அதனால் முன்பு நீங்கள் அனுப்பி வைத்து இருந்த அட்டைப்படத்தில் எது ஓட்டில் ஜெயித்ததோ அதையே போட்டு விடுங்கள்.

  மிக மிக முக்கியம்: Big Boys ஸ்பெஷல் புக்கின் அல்டெர்னேட் கவர் என்னுடைய ஆஸ்தான நாயகனான மாயாவி படம் உள்ள அட்டை படத்தை காண்பிக்கவே இல்லையே?

  Is the alternate cover for Big Boys Special dropped?
  I was waiting for so long to see the cover then pay for Erode book Specials.

  So i will take risk and opt for Mayaavi cover, even though it is not been revealed.

  கார்சனுக்கு போட்ட உழைப்பை மாயாவிக்கு போட்டு இருந்தால், அதை பார்த்து ஒரு முடிவுக்கு வந்து இருப்பேன்.

  ப்ளீஸ் show us the Alternate Cover for Big Boys Special

  ReplyDelete
 47. நண்பர்களின் விருப்பத்தை நிறைவேற்ற இளம் வயது கார்ஸனை வரைந்து வாங்கிய உங்கள் அன்புக்கும், அர்பணிப்புக்கும் நன்றிகள் பல எடிட்டர் சார்!🙏💐💐
  சரியாக வொர்க்அவுட் ஆகவில்லையென்றாலும், உங்களது இந்த முயற்சியின் பலனாய் 'பழைய அட்டையே போதும் சாமிடா சாமீ!' என்ற உணர்வை நண்பர்களிடம் ஒட்டுமொத்தமாக ஏற்படுத்திவிட்டீர்கள்!! 😨

  என்னா ஒரு ராஜதந்திரம்!!😂😂

  ReplyDelete
  Replies
  1. நாங்களு களத்துல குதிப்போம்ல.
   முதல்ல டெஸ்டுக்கு என்னையே வரைஞ்சு பாத்துக்கிறேன். இந்த படத்தை யாருக்கு அனுப்ப...

   Delete
 48. Professional courier எனக்கு வேண்டாம் சார் எனக்கு எப்போதும் போல் ST courier ல் மட்டும் அனுப்புங்களேன்

  ReplyDelete
 49. R Saravanan
  Door no 85/31-B
  East New Street
  Chennimalai
  Chennimalai (p.o)
  Erode d.t -638051
  Tamilnadu
  Mobile number 9788207335
  6380696488
  மேற்கண்ட முகவரிக்கு St courier ல் மட்டும் அனுப்புங்களேன்

  ReplyDelete
 50. அதில் அனுப்புவதில் தங்களுக்கு ஏதாவது சிரமம் இருந்தால் அதையும் தெரிவித்து விடுங்கள் நன்றி

  ReplyDelete
 51. Here at Trichy ST courier no problem

  ReplyDelete
 52. புரபஷனல் கொரியர் உபயம் காலை 10:30 க்கே பார்சல் கைப்பற்றியாச்சு 😇😁

  ReplyDelete
 53. Dtdc courierல 10.30க்கு கைப்பற்றி விடுவேன்.....
  Professional courierல 10.30க்கு அவுங்களே கொண்டு வந்து தந்துட்டாங்க.....
  முன்னது நம்ம கடையில் இருந்து 500மீட்டர் தொலைவில்.. பின்னது 300மீட்டர் தொலைவில்....

  ஆண்டுமலர் ஆஸம் லுக்.....

  நேரில் பார்க்கும் போது தான் அட்டை தகதகக்குதுங் சார்....

  ReplyDelete
  Replies
  1. தூரத்துப் பாலைவன குத்துப்பாறைக் குன்றுகள் நிழலாக தெரிய....சிறு பாறைகள் பாம்பாக நெளிய...
   பாலைநில சிறு செடிகள் ஆங்காங்கே தலைநீட்ட....
   ஒற்றை மரத்தில் தொங்கும் ஒல்லிப்பிச்சார் லக்கி..கண்களில் உயிர் ஆபத்து... பக்கத்திலயே கபளீகரம் செய்ய காத்திருக்கும் பசித்த கழுகார்....அத்தனையும் நகாசு வேலைகளின் பின்னணியில்... 39ஆம் ஆண்டுமலர் அட்டைக்கு அழகு சேர்க்கின்றன.....

   Delete
  2. பின்னட்டை லக்கிக்கே உரிய பிரத்யேக வெண்ணிறத்தில் கானம் பாடும் டால்டன்ஸ்....
   பிங் நிறத்தில் 39வது ஆண்டு மலரும், பர்த்டேவைக் கொண்டும் சிங்கமும்...சரக்குனு 1990sகளுக்கு தள்ளிட்டு போயிட்டது...

   ஆங் முதல் ஆண்டுமலர் பூம் பூம் படலம்...இரு வண்ணத்தில் அந்த நைட்ரோவுடன் லக்கி அடிக்கும் கூத்துக்களால் பதம் பார்த்த வயிறு இன்று பெருத்துப் போனாலும் அந்த சுகமான நினைவுகள் சற்றும் சிறுத்துப் போகல சார்...

   ஆண்டு மலர் தயாரிப்பு ஆஸம்.....

   Delete
 54. வன்மேற்கின் அடுத்த இரு அத்தியாயங்கள் அதே அச்சு அசலான சைஸில் அழகு வண்ணங்களில் நறுக்குனு தெறிக்கிறது....

  ReplyDelete
 55. தலயின் தடியான இதழ் ஓர்டிஸின் வித்தியாசமான ஆர்ட்டில் அனல் பறக்கும் பக்கங்களோடு.....
  நேர்த்தியான தரத்தில் சென்ற மாத கைக்கு அடக்கமான சிக்"-னு பிஸ்டலை போல அல்லாமல் சும்மா பேங் பேங் குனு அதிரவைக்கும் வின்செஸ்டர் கணக்கா மாஸ் காட்டுதுங் சார்....

  பார்ப்போம் தலயா? லக்கியா? டாப் ஸ்பாட் யாருக்குனு.....

  ReplyDelete
  Replies
  1. இதில் என்ன சந்தேகம்.
   ஆக்சனுக்கு டெக்ஸ்,
   சிரிப்புக்கு லக்கி.

   Delete
  2. கவலையை மறக்க லக்கி,
   கோபத்தை தணிக்க ,
   யாரையாவது புரட்டி எடுக்க
   டெக்ஸ்.
   எப்படியாவது கோபம் தீர்ந்தா போதும் பாஸ்.
   நம்ம ஆளு யாரையாவது புரட்டி எடுத்தா, நம்ம எதிரிகளா நினைச்சுக்க வேண்டியதுதான்.

   Delete
  3. ///நம்ம ஆளு யாரையாவது புரட்டி எடுத்தா, நம்ம எதிரிகளா நினைச்சுக்க வேண்டியதுதான்//---- அப்படியே மனசுல உள்ளதை புட்டு புட்டு வைக்கிறீங்க ஓளிராரே....

   Delete
  4. ஹிஹிஹி...
   கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்ல வேண்டாம் தோழரே.

   Delete
 56. பார்சல் வந்து விட்டது 11.30க்கே ஜெய் Professional கூரியர்

  ReplyDelete
 57. @All
  சகோதரர்களே
  தங்களுக்கு சரியான கொரியர் சேவை விவரத்தை லயன் வாட்சப் அல்லது மெயிலில் விவரம் தெரிவித்தால் ஆபிஸ் ஆட்களுக்கு நோட் செய்து கொள்வதில் சுலபமாக அமையும்

  ReplyDelete
 58. DTDC எனில் காலையிலேயே அழைப்பு வந்துவிடும்,PC என்பதால் தற்போதுதான் வந்தது...
  ஜூலை இதழ்களை கைப்பற்றியாச்சி...

  ReplyDelete
 59. அடுத்த வெளியீட்டில் டெக்ஸ்- மெபிஸ்டோ மோதல் சூப்பர்,ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
  ட்ரெண்ட் வருகுறார் வழக்கம்போலான சிறப்பான ஓவியங்களுடனும்,கனடிய கானங்களுடனும்...
  பனிவனப் பிரியாவிடை- தலைப்புதான் முழுமையற்றதாய் தோன்றுகிறது...

  ReplyDelete
  Replies
  1. மீண்டு வந்த மாயன் கெட்டி அட்டையில் வந்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்...
   லக்கி ஆண்டுமலர் கெட்டி அட்டையில் வந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி...

   Delete
 60. நா போறதுக்குள்ள எம் மொவன்
  பிரிச்சு மேஞ்சுட்டன்ன்ன்....
  என்னடா பாக்ஸ்ல அடுக்குறானேன்னு பாத்தா அந்த வழவழ வேலைப்பாடமைந்த சர்ப்ரைஸ் ஸ்டிக்கர் 75 ம் ஆண்டு கொண்டாட்டத்த நிறைவாய் துவக்கி வைக்க...நான் அழகாய் எடுத்து ஒளித்து வைத்து விட்டு புத்தகங்கள் தூக்கிக் கொண்டு தனியாக ஒதுங்கி விட்டேன்....சூப்பர் சார்...எங்க புகைப்படங்களுக்கும் இது போல் வேலைப்பாடமைந்தா கலக்கல் தான்..

  ReplyDelete
 61. சத்தியமா நேற்றிரவு போஸ்ட்ல பாக்கைல டெக்ஸுக்கும் வியாரின் அட்டைக்கு ம்தான் போட்டிக்கு நெனச்சா ...நாங்களுமிருக்கோம்னு லக்கி விடாப் பிடியாக தொங்க..‌‌நதி போல ஒடி கொண்டிரு...மனசுல தங்க...நாலுமே வெகு சிறப்புன்னாலும்...
  கைதியாய் கார்சன் அந்த வண்ணச் சேர்க்கைகளும்.....பள்ளத்தாக்கின் வெண்மையோடு சிவப்பு பின்ணணியும்...நதியும் பாயும் படகும் கடத்தும் துடுப்பும் விரையும் நண்பர்களும் நிறுத்த... ஹார்டு பௌண்டு லக்கிஅந்த அழகிய வண்ணங்கள மினுமினுக்க வைக்கும் சொரசொரப்பும் பளிச்சென முதலிடத்தில் குதிக்கச் செய்யுது லக்கிய....தடதடக்கும் இதயத்தோடு அடுத்த மாத வெளியீடுகள் பாக்க புத்தகத்த பொரட்டப் போறேன்....கொஞ்சம் பொறுங்க

  ReplyDelete
 62. புத்தகங்கள் எனக்கும் வந்துவிட்டன 11மணிக்கெல்லாம்.நண்பர்கள் பலருக்கும் புத்தகங்கள் கிடைத்துவிட்டதாகத் தகவல்கள்.புரபசனலுடன் தொடர்வதுநலம் என்றே தோண்றுகிறது .

  ReplyDelete
 63. ஆண்டு மலர் ஹாட் லைன் தோட்டங்களும் கலக்க....அடுத்த மாதம் மாயன் கதை....மிஸ்டர் நோ....ட்ரெண்டுன்னு உற்சாகத்தை கூட்ட....அதனுடன் ஸ்பைடரோடிணைந்த ஐந்தும் கலை/ளை க/காட்ட...டின் டினும் யார்னு வந்தா...எண்ணிப் பாருங்கள்....இதோட வன்மேற்கின் முதல் சுற்ற அடுத்த மாதமே முடிக்கலன்னு வருத்தம் மேலிட அவ்விதழ்கள புரட்டுனா எத்தைனை கோடி வண்ணம் வைத்தாய் இறைவான்னு பாடிட....மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்ற அட்டகாச தலைப்பு...போடாமல் ஒரு மாதமும் இருக்க வேண்டாம்னு அந்த 70 சொச்ச கதைகளின் சார்பாக கேட்டுக் கொண்டு...வெள்ளைப் பின்னணி லக்கியின் பின்னட்டை செம கலக்கல்னு இது வரை வந்த பின்னட்டைல பின்னிட்டு முதலிடம் கேட்டுக் கொண்டே....
  நம்ம கார்சனின் வெண் பின்னணி அட்டை கலக்கலாருக்கும்னு பாடிட்டே....
  கடக்கிறேன் பழம் கார்சன் விளம்பரத்ல தெரியும் மாய முகம் கார்சன்தானான்னு

  ReplyDelete
 64. கைதியாய் கார்சன்....

  லக்கியா, தலயானு பார்த்து தலயிலயே கைவெச்சாச்சி.....

  ஆரம்பமே அதகள ஆக்சன்...

  பட்டாசு வேடிக்கைக்கு நடுவே,
  "அந்நியர்கள் இருவர் இன்று காலைதானே வந்தனர்"---னு கேட்டபோதே அது நம்ம ஜோடிதான்னு புரிஞ்சிபோச்...

  பெயருக்கு ஏற்றார்போல கார்சர் தான் கலக்குறார்..(அதென்ன ஓய் கார்சனை, கார்சர்ங்கிறீர்னு கேட்பவர்களுக்கு....ஒரு மருவாதைதான்)

  சலோன் குட்டிக கிட்ட ஜொள்ளு விடுவதாட்டும், வழியில் வாய் காதுவரை பேசுவதாட்டும் கார்சர் ஸ்கோரிங் 100/100..

  செமத்தியான ரைட்டிங்ஸ் அசல் சார்...

  ReplyDelete
  Replies
  1. கதை படு ஸ்பீடா போகுது.... செம ட்விஸ்ட்...

   கார்சருக்கும் அடிசறுக்கும்....


   சென்ற மாத டெக்ஸ் கதை கரையெல்லாம் குருதி& இம்மாத டெக்ஸ் கதை 2லும் அகஸ்மாத்தாக ஒரே ஏரியாவான ஆகுவா நெஹராவில் கதைகள் நடக்கின்றன...

   Delete

  2. அத்தியாம் 1.....

   விறு விறுப்பான திரைக்கதையை செம இங்குள்ள போனெல்லி கையாண்டுள்ளார்கள்....

   மடமடவென சம்பவங்கள் தல கட்டுப்பாட்டை மீறி சடுதியில் நடக்கின்றன.....

   வழக்கமான பாணியில் தலையும் கார்சனும் யுக்தி அமைக்க, எதிர்பாராத ட்விஸ்ட் ஆகி தலையை பெரும் இக்கட்டில் மாட்டிவிட...
   நண்பனுக்காக சட்டத்தை வளைக்க இறங்குகிறார்...

   அனல் பறக்கும் அத்தியாம் 2ல் தொடர்கிறது என இடைவேளை விட்டுட்டாங்க...

   பாப்கார்ன், டீ சாப்பிட்டுட்டு சுட சுட ஆக்சன்..

   Delete
 65. எடிட்டர் ஐயா!! இன்றைக்கு பதிவு என்பதை மறந்துவிடாதீர்கள் 😘

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்ய்யா.
   இன்னைக்கு பதிவுக் கிழமை.

   Delete
  2. அடடே ஆமாம் சார் இன்று பதிவுக் கிழமை...

   Delete
 66. லக்கியா தலயான்னு பாத்து தலையிலேயே கைய வச்சா ச்சு .வழக்கமா அப்படித்தானே .

  ReplyDelete
  Replies
  1. ஏதோ ஆண்டு மலர், கோடைமலர்னாங்களேனு ஒரு ஷண நேர......
   தலையை பார்த்தவுடன் கையை கட்டுபடுத்த முடியலயே

   Delete
 67. VALERIAN surprise 😮 வாய்புகள் உண்டா 😆💜💜

  ReplyDelete
 68. தல கதைனா ஒவ்வொரு கதையும் ஸ்பெசல் மலர்தானே..நமக்கு.

  ReplyDelete
 69. ST courier. னா எனக்கு இன்றே புத்தகங்கள் கிடைத்திருக்கும். பு.ரபொஷனல் கொரியர் எத்தனை நாள் ஆகும் என்று தெரியவில்லை. ஒரு முறை வேறு ஒரு பார்சல் வரவே ஐந்து நாட்கள் ஆகிவிட்டது.

  ReplyDelete
 70. Professional courier prompt delivery

  ReplyDelete
 71. இன்று புத்தகங்கள் ✋ பற்றியாச்சி

  ReplyDelete
 72. இரும்புக் கையாரின் ஃபோட்டோ போடுவதாக என்றோ சொன்னதாக நியாபகம் 😘

  ReplyDelete
 73. On time delivery by Professional Couriers. ST would have come only Monday.

  ReplyDelete
 74. கோவைக்கு இன்னும் வரவில்லை🤒🤒🤒

  ReplyDelete
 75. சரியாக வந்துவிட்டது பார்சல்.

  ReplyDelete
 76. கைதியின் கார்சன் . கீச்சு கீச்சு கோட்டோவியங்கள் .113ம் பக்கம் டைனமைட்டை மீண்டும் பார்க்கும் டெக்ஸ் இன் முகத்தில் தெரியும் பரவசம் . (என் செல்லக்குட்டி தானே அது)அசத்தல் .இதுபோன்ற கோட்டோவியங்கள் டெக்ஸ் கதைகளில் வரும்போது(டைகர்கதைகள்போலவே) ஒருவிதமான இறுக்கம்கதை முழுவதும் இருந்து கொண்டே இருக்கும்.ரிலாக்சேசனே இருக்காது.இம்முறையோ மாறுதல் .வழக்கம்போல நண்பர்களுக்கிடையிடலான கலாய்ப்புகள் சுவாரஸ்யமாக உள்ளன. மொத்தத்தில் எனது மதிப்பெண்10க்கு/10

  ReplyDelete
 77. புதிய பதிவு. . "கொழுக்கட்டையிலே கோதுமை ஆவி" க்கிப் பின்னாடி

  ReplyDelete
  Replies
  1. ///கொழுக்கட்டையிலே கோதுமை ஆவி///

   இந்த பலகாரம் நல்லா இருக்கும் போலிருக்கு..

   Delete
 78. Prompt delivery to Chennai after a long long time

  ReplyDelete
 79. கைதியாய் கார்சன் படித்து விட்டேன். சும்மா பட்டாசாக பொறியும் கதை. ஆரம்பம் முதலே அதிரடி. எதிர்பாாதவிதமாக வில்லன்களிடம் மாட்டிக் கொள்ளும் கார்சன் . அவரை விடுவிக்க போராடும் டெக்ஸ்.அதும் இந்த கதையில் டெக்ஸை துரதிருஷ்டம் பிடித்து ஆட்ட படிக்கும் நமக்கே பரிதாபமாக இருக்கு. மொத்தத்தில் நல்ல கதை.

  எனது மதிப்பெண் 9/10.

  ReplyDelete
 80. Replies
  1. உசுபேத்தி விடுறாரே

   Delete
  2. இனி பதிவு வரும் என்று???😌

   Delete
  3. காத்திருந்து காத்திருந்து வீக் எண்ட் போனதே

   Delete
 81. தமிழ்நாட்டில். முதல் முதலில். உருவானது. Professional. அதிக. பணியாட்கள். நெட்வொர்க் சர்வீஸ் சொந்தவாகனம். என. நன்றாகவே. செயல்படுகிறது. பண்டிகை. காலங்களில். தீபாவளி. பொங்கல். அனைத்து. நிறுவனங்களும். சொதப் பவே. செய்கின்றன st. Dtdc. பல. வருடங்கள். பார்த்தாகி. விட்டது. கொஞ்சம். நாட்கள். (தமிழ்நாடு மட்டும்),Professional. சேவையை. பார்ப்போமே

  ReplyDelete
 82. 96 மணி நேரங்கள்...!

  அருமையான திரில்லர் கதை. ஆண்கள் டிடெக்டிவ் ஆக வரும் கதைகளில் இப்படியொரு முடிவை சுலபமாக யூகிக்க முடிந்திருக்கும். ஆனால், கேரட் கேச அழகியின் கதையில் கவனம் வேறு திசையில் திரும்பி விட்டது என்பதால் யூகம் எழவில்லை. ஜுலியா-ஜார்விஸ் தம்பதிகளின் வாழ்வில் விதி எப்படியெல்லாம் விளையாடி விட்டது என்பதை 96 மணி நேரங்கள் திரில்லிங்காக விவரித்துள்ளது. கதை ஆரம்பம் முதல் முடிவு வரை வெண்பனியிலேயே நடப்பதால், படிக்கும் நமக்கும் கூட நடுக்கமெடுக்கும்.


  ரேட்டிங் - 9/10

  வஞ்சம் மறக்கா வரலாறு!

  மீண்டும் ஒருமுறை ஆல்ஃபாவின் அசத்தல்! இந்த முறையும் ரஷ்ய உளவாளிகளின் நடமாட்டம் கணிசமாக இருக்கிறது, ஆனால் வாஷிங்டனில் அரசுப் பயணமாக! ஆல்ஃபா சகவாசம் வைக்கும் ஆட்களைப் பார்க்கும் போது, அவரு CIA-வா, KGB-ஆ என டவுட் வரும். ஆனால், கடைசியில் மனுசன் தான் என தெரிகிறது. இந்த கதையில் அசத்திய விஷயம் ஆசிரியரின் தங்கு தடையற்ற வசனங்களே. மொழிபெயர்ப்பாக இருந்தாலும் கூட, நாமெல்லாம் உளவாளிகள் என்ற போர்வையில் சேல்ஸ்மேன் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லுவது நச் வசனம்! மிகவும் ரசித்தேன். உளவும், களவும், துரோகமும் இந்த கதையின் அச்சாணியாக இருந்து, பழி வாங்கும் நடவடிக்கைகளாக பயணித்து வேகமாக நடத்திச் செல்கின்றன. கதையில் சில பல பெண் கதாபாத்திரங்களும் ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் உலவி வருகிறார்கள். ஆல்ஃபாவுக்கு மச்சம்! ஆல்ஃபாவின் கதையில், வசனங்கள் அதிகம் என்று சொல்வார்கள், ஆனால் அந்த வசனங்கள் திணிக்கப்பட்டவைகாளகத் தெரியவில்லை, இந்தக் கதையிலும். நல்ல கதை!

  ரேட்டிங் - 9/10


  பனாமா படலம்!

  லோன்ஸ்டார் டேங்கோ கடலோடியாக திரிந்து கொண்டிருக்கும் மற்றுமொரு சாகசம். கதையின் க்ளைமாக்ஸ் வசனங்களைப் படிக்கும் போது, அடுத்து வரும் நெடும் கதைகளுக்கு தொடக்கப்புள்ளி இந்த கதையாகத் தோன்றுகிறது. சிறுவயது டேங்கோ, இளவயது டேங்கோ என சில பல பரிணாமங்களும் இந்த கதையில் ஜொலிக்க, டேங்கோவின் பழைய சகா அவனை அடையாளம் கண்டு கொள்கிறார். மேற்கிந்திய தீவுக்கூட்டங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் டேங்கோவும், மரியோவும் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக கிராசிங்கா என்ற சிறு தீவுக்கு செல்கிறார்கள். அங்கே வழிப்போக்கராக சந்திக்கும் ஒருவர், வாண்டட் ஆக வண்டியில் (கப்பலில்) அவர்களுக்கே தெரியாமல் ஏறிக் கொள்ள, அங்கே தொடங்குகிறது இந்த எபிசோட். அந்த வழிப்போக்கனோ சாதாரணமானவன் அல்ல, அவனுடைய வாலை மோப்பம் பிடிக்கும் பெருந்தலைகள், அந்த பெருந்தலைகளை பெண்டெடுக்க நினைக்கும் DEA என ஆக்ஷன் படலம் நீளுகிறது. மரியோவும், டேங்கோவும் இறுதிப்பக்கங்களில் பேசிக் கொள்ளும் வசனங்கள் அருமை!

  ரேட்டிங் - 9/10

  மக்களே! சிக்பில் கதையை படிக்கவில்லை. மன்னிச்சு! ஆனால், நமது ஃபேவரைட் கார்ட்டூன் நாயகரை மேற்கண்ட 3 அதகள ஆக்ஷன் கதைகளுக்கு நடுவே படிக்காமல், ஒருநாள் இடைவெளி விட்டு படிக்க உள்ளேன்.

  கதைகளைப் பொறுத்த வரையில், கோடைமலர் 2023 ஒட்டுமொத்தமாக பாதுகாக்கப்பட வேண்டிய புத்தகமாகிறது.

  நன்றி 🙏🏾

  ReplyDelete
  Replies
  1. அருமையான விமர்சனம். 3 கதைகளுக்கும் ஒரே நேரத்தில். சூப்பர் பூபதி

   Delete
 83. Weekend பதிவு where? :-)

  ReplyDelete
 84. இந்த போஸ்டில் ஒரு கமென்ட்டாய் ஈரோடு விஜய், ஒரு மேட்டரைப் போட்டிருந்தார். அதற்கான என் பதிலைப் பார்க்கவும். அதன் நீட்சியாக இதை எழுதுகிறேன்.

  2012ல் சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் கலரிலான குவாலிடி காமிக்ஸ் வந்தது, பிளாக் ஆரம்பித்தது எல்லாம் தான் கடந்த 11வருட காலங்களின் வெற்றி எனலாம். ஆனால் அதை தக்க வைப்பதில், வளர்த்து எடுப்பதில் பல சிரமங்கள் உள்ளன, அதை நிர்வாகம் சுமாராக கையாண்டு கொண்டிருக்கிருக்கிறது.

  கடந்த சில வருடங்களில் பாதி வருடம் கழிந்த பின், ஆசிரியருக்கு மூடு வந்து ஏதேதோ சொல்வார். நாமும் பணத்தைக் கட்டுவோம் (ஆறு மாத சந்தா, பெயர் மறந்து விட்டது). பணம் இங்கு பிரச்சினையில்லை. ஞாபகம் வைத்து கட்டுவதே பிரச்சினை.

  பின்னர் அந்த ஸ்பெஷல், இந்த ஸ்பெஷல், புக் பேர் ஸ்பெஷல், V காமிக்ஸ் சந்தாவென மாதம் ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை மறக்காமல் சந்தாவோ அல்லது முன்பதிவோ செய்ய வேண்டும். இதை நான் குறை சொல்லவில்லை. ஆசிரியரின் கற்பனைக் குதிரை ஓடுதல் நாம் எல்லோர்க்கும் நலமே. ஆனால், ஈரோடு விஜய் போன்ற வயதான பார்ட்டிகளுக்கும், என்போன்ற நரை ஆரம்பிக்கும் ஆட்களுக்கும் எந்த போஸ்டில் ஆசிரியர் என்ன சொன்னார், Gpay போட்டோமா இல்லையா, போட்ட பணத்துக்கு என்ன வேண்டும் என அட்ரஸ் அனுப்பினோமா இல்லையா, என் சப்ஸ்கிரைபர் நம்பர் என்ன? என்பதெல்லாம் ஞாபகம் வைத்திருப்பது காமிக்ஸ் மட்டுமே வாழ்க்கை என்று இருப்பவர்களால் மட்டுமே முடியும். சாமானியனுக்கு முடியாது. ஞாபகமறதியில் தள்ளாடும் நிர்வாகத்துக்கு, எங்கள் attention span அதைவிடக் குறைவு என்பதை உணர்த்தத்தான் இந்தப் பதிவு.

  நான் current V comics க்கு 300பணம் கட்டி, உங்களுக்கு ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனுப்பிய நாள் 22.06.2023. Ok sir noted எனும் ரிப்ளை வந்த நாள் 03.07.2023. அதாவது பேக் செய்யும் முன் பார்த்திருப்பார்கள் போல. இப்படியிருந்தால் விளங்க வேண்டியது தான். இன்றைய வேகமான உலகத்தில் வாட்சப் தான் எல்லாமே. சமூக சேவகர்கள் தவிர்த்து அனைவரும் 24மணிநேரத்திற்குள் பதில் அனுப்பிவிடுவார்கள். அனுப்பியவர்களும் அதையே எதிர்பார்ப்பார்கள்.

  பலமுறை சொல்லிவிட்டேன். இம்முறையும் சொல்கிறேன்.

  இந்தப் பிரச்சினைக்கு, முதலில் காலையில் வேலைக்கு வந்தவுடன், அனைத்து வாட்சப் செய்திகளையும் பார்த்து செக் செய்து பதிலிட வேண்டும்.

  அடுத்து "என்ன சேதி வந்துச்சு, அது நமக்கு வேணுமா, வேணாமா, காசு குடுத்தோமா, அதுக்கு acknowledgement வந்துச்சா" என எங்களின் முக்கிய கேள்விகளுக்கு டெடிகேடட் வாட்சப் ரிப்ளையர் தேவை.

  முதலில் எல்லா சந்தாதாரர் பெயர் மற்றும் நம்பரை போனில் சேமியுங்கள். Broadcast list ரெடி செய்யுங்கள். ஒரு லிஸ்ட் full ஆனவுடன் அடுத்த லிஸ்ட் ஆரம்பியுங்கள். வரும் புதிய வாசகரை, புதிய லிஸ்டில் சேருங்கள். அந்த லிஸ்டுகளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் (ஒரு விரல் சொடுக்கில் செய்யலாம்)
  1. "ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே, இங்கே க்ளிக் செய்யவும்"
  2. புதிய சந்தா விபரம்
  3. புதிய அறிவிப்புகள்
  4. கூகிள் பார்ம் கேள்விகள் லிங்க்

  இது ஒன்றும் கஷ்டமான வேலையில்லை.

  ஆசிரியர் என்ன செய்ய வேண்டும்?: வாசகர்களுக்கு தரப்பட்ட வாட்சப் நம்பர் உள்ள போனை வாரம் ஒரு முறை வாங்கிப் பார்க்க வேண்டும். ஒரு அரைமணி நேரம் செலவிட்டு, வாசகர்களுக்கு மெசேஜ் போயிருக்கிறதா? அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தரப்பட்டுள்ளதா எனப் பார்க்க வேண்டும். இருக்கும் வாசகர்கள் ஆயிரம் பேர் எனில் அரை மணி நேரம் போதும் இதை செய்ய.

  எனக்கு 12,000 காண்டாக்ட்ஸ். வருடம் ஒருமுறை அவர்களுக்கு மெசேஜ் அனுப்பி பாலோ செஎவ்ன். தனியாளாக. வருடம் 1000 கிளையண்ட்ஸ், மாதம் ஒருமுறை அவர்களுக்கு ஹலோ சொல்வேன். அனைவரும் ஹாப்பி அண்ணாச்சி.

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் நண்பரே...
   எனக்கும் இது நேர்ந்தது....
   வண்ண உயிரைக் தேடி வரலை....
   பணம் அனுப்பலைன்னு அப்புறம்தான் தெரிய வந்தது....

   Delete
  2. அருமையான கருத்துக்கள்! ஆயிரமாயிரம் லைக்ஸ்!

   Delete
  3. ஆனா நாலாவது பாராவின் நடுவால வர்ற வரி மட்டும் துளிகூட பிடிக்கலை!!

   Delete
  4. எனக்கு அது பிடிக்கலை. அழுகை அழுகையா வருது.

   Delete
 85. இளம் வயது கார்சனின் டிசைன் இனி போடவேண்டாம் சார்!! ஏற்கனவே போட்ட பல டிசைன் ஃபோட்டோ அதில் ஒற்றை போட்டு விடுங்கள். முடிந்தது ஜோலி

  ReplyDelete
 86. புரபஷனல் கூரியரின் மகத்தான சேவையின் காரணமாக இந்த நிமிடம் வரை தி. மலை. புத்தகம் வரவில்லை. வழக்கமாக எஸ் டி. கூரியரில் அனுப்பிய மறுநாளே தி. மலைக்கு வந்து விடும். கடுப்பேத்துறாங்க மை லார்ட்.

  ReplyDelete
 87. Door delivery refused to my area by pro.courier in tiruvannamalai.so I was received directly in office today. And sent a message to lion office to change the courier service to me as usual by dtdc.

  ReplyDelete
 88. ஆண்டு மலராக-லக்கிலூக்-அட்டைப்படம் கலரிங் செம கலக்கலாக அமைந்துவிட்டது..
  அந்த ஹார்டு பவுண்ட் அட்டையும் சேர்ந்து அம்சமான இதழாக அமைந்துவிட்டது.
  இன்னொன்று வாங்கி யாருக்கேனும் பரிசளிக்க ஆசையாக உள்ளது..(நிச்சயம் வாங்குவேன்.) கதைகள் இன்னும் படிக்கவில்லை. எப்படியும் காமெடியில் கலக்கும் என்பதில் ஐயமில்லை..

  ReplyDelete
 89. வார இறுதிக்குள் மாட்டி விட்டதால், திங்கள் மாலை தான் கிடைக்க பெற்றது எடி. இனி திறந்து பார்த்துபுடுறேன்.

  அட்டையில் இளம் கார்சன் விஷப்பரீட்சை வேண்டாமே இளமையா ஆக்குறேன்னு ஏதோ கோலிவுட் அம்மாஞ்சி நடிகர் அரிதாரம் பூசி வந்தது போல பேன்னு இருக்கு.

  நம் பழைய அட்டை தேர்வுகளையே களமிறக்குங்கள்.

  ReplyDelete
 90. இன்று பிறந்தநாள் காணும் தோழர் செந்தில் சத்யாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்😊😊😊🥳🥳🥳🥳🥳🥳💐💐💐💐💐💐💐💐💐🥳🥳🥳🥳🥳

  ReplyDelete
 91. இன்று பிறந்தநாள் கொண்டாடும் சகோதரர் செந்தில் சத்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 92. நேற்று அழகாக பார்சலை கைப்பற்றியாயிற்று...பார்சலை பிரித்தவுடன் முதலில் கண்ணுக்கு அழகாக தென்பட்டது " கைதியாய் கார்சன்" இதழ்தான்...மீண்டும் அந்த அழகான அளவில் பருத்த இதழாக செம மாஸான அட்டைப்படம் என டெக்ஸ் இதழையே சிறிது நேரம் எடுத்து எடுத்து ரசித்து பார்த்து கொண்டு இருந்தேன்...உள்ளே சித்திரங்களோ செம அட்டகாசமாய் அமைந்து இருக்க படிக்கும் முன்னரே ஒரு மணி நேரத்திற்கு நாம் வேறு உலகில் நுழைய போவதை இதழ் பறைசாற்றி விட்டது...அடுத்த இதழாக வன்மேற்கின் அத்தியாய இதழ்கள் இரண்டு ..இரண்டு படைப்புகளும் ஒரே மாதத்தில் வெளிவந்தமைக்கு மகிழ்ச்சி ...அட்டைப்படமும் ,வண்ண சித்திரங்களும் வழக்கம் போல அருமை.. அடுத்து லக்கி ..ஏற்கனவே பார்த்த அட்டை ..ஆனால் ஹார்ட்பவுண்ட் அட்டையில் இன்னமும் அழகாக அதே அட்டை ரசிக்க வைத்தது..இரண்டு இதழ்களின் தலைப்புகளும் ,சித்திரங்களும் ,டால்டன் பிரதர்ஸ்ன் ஓவிய பக்கங்களும் சிறப்பான ,சிரிப்பான தருணத்திற்கு தயாராக்க வைத்திருப்பதையும் உணரமுடிகிறது...நேற்று இரவு முழுவதும் இந்த ஒவ்வொரு இதழ்களையும் ஒவ்வொரு பக்கமாக நிதானமாக ரசித்து விட்டாகிவிட்டது ...இன்று முதல் வாசிக்க இதழை தேர்ந்தெடுக்க முயன்றால் கண்கள் டெக்ஸ் இதழை தான் எடுக்க தோன்ற வைத்தாலும் முதலில் வன்மேற்கின் அத்தியாயங்களை முடித்து விட்டு தல அவர்களை ரசிக்கலாம் என மனது சொல்வதால் இதழ்களை படித்து விட்டு..

  ReplyDelete
 93. நேற்றிரவு நானும் கொரியர் டப்பியைக் கைப்பற்றிவிட்டேன். ஜாலி ஜாலி!!

  ReplyDelete
 94. july month reviews:

  டெக்ஸ் இன்னும் படிக்கவில்லை, இன்று இரவு படிக்கப்போகிறேன்
  முதலில் படித்தது லக்கிலூக். ஒரிஜினல் மோரிஸ்-கோசின்னி கூட்டணி என்றாலே சூப்பர் தான். அதிலும் தகதிமிதா ஒரு அட்டகாச பிரயாணம். காமிக்ஸ் லவர் ராகவன் என்னிடம் ஒரு காலத்தில் வினவியிருந்தார். இந்த தகதிமிதா வை மட்டுமே அவருக்கு சிபாரிசு செய்திருந்தேன். அவர் ஒரிஜினல் Cinebook வாங்குவதில் கண்டிப்பானவர் (நான் Pdf ல் ஆங்கில பதிப்பினை படித்திருந்தேன். ஹிஹி). இன்று கனவு மெய்ப்பட்டது. ஒரிஜினல் ஆங்கிலத்திலேயே வெடிச்சிரிப்புகள் பல இடங்களில் நிகழுமென்றால், நம் ஆசிரியரின் கைவண்ணத்தில் சொல்லவே வேண்டாம். பக்கத்துக்கு பக்கம் ஹஹாஹா கரெம்பா, லக லக லக்கி லூக், கொழுக்கட்டையில் கோதுமை ஆவி என தூள் பறத்துகிறார் ஆசிரியர்.

  அடுத்த இதழான கானம் பாடும் கம்பிகள், டைட்டிலே வேற லெவல். அதன் அட்டைப்படம், நீங்கா புகழ்பெற்றதொரு படம். செம விறுவிறுப்பான, காமெடி மேளா. நமது கெளபாய் எக்ஸ்பிரஸின் நீட்சி எனக் கொள்ளலாம். நாமெல்லாம் கெளபாய் எக்ஸ்பிரஸ் இதழை வாய் திறந்து, அண்ணாந்து பார்த்தது நினைவில் இருக்கலாம்.

  அடுத்ததாக இரட்டை வந்மேற்கு மேளா. முதல் இதழில் சுப்புனியாக இருந்தவன், அடுத்த பாகத்தில் ஹீரோ. உலக பேமஸ் சக்காஜியாவுடன் வாழ்கிறான். பல இடங்களுக்கு இரண்டு பாகங்களுக்கு சுழல்கிறான். XIII போலவே இங்கு ஆயிரக்கணக்கான கேரக்டர்கள். சில பேரை படித்தது மாதிரியே இல்லை. ஆனாலும் வன்மேற்கின் நிஜபக்கங்க்களை கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர். செவ்விந்தியர்களும் சமாதானாமாய் போய்விடலாம் என்று இருக்கையில், சில சுயநல வெள்ளையர்களால் எப்படி பூமி சீரழிந்தது என்பதே கதை. அவ்வப்போது டைகர் ஞாபகம் வருகிறது

  ReplyDelete