நண்பர்களே,
வணக்கம். ஏப்ரலில் ஒரு இரவுப் பொழுது அது ! எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், ஹாஸ்பிடலில் ரொம்பவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார் சீனியர் எடிட்டர் ! வீட்டிலோ அம்மாவும் எக்கச்சக்க சுகவீனங்களோடு படுத்த படுக்கையாய் கிடக்கிறார் ! நிலமையைச் சமாளிக்க தம்பியும், நானும் ரொம்பவே நாக்குத் தள்ளிப் போயிருந்த நாட்கள் அவை ! இரவு எட்டு மணிவாக்கில் டாக்டர் ரவுண்ட்ஸ் வருவதற்காகக் காத்திருந்த வேளையில், கொஞ்ச நேரமாச்சும் வெளியே போய் காற்று வாங்கினால், மண்டைக்குள்ளான இறுக்கம் சற்றே தளருமென்று தோன்றியது ! படியிறங்கி, வாசலில் போய் நின்றால், ஜெகஜோதியாய் ஒளிவெள்ளம் என்னை வரவேற்றது ! உள்ளூர் அம்மன் கோவில் திருவிழாவுக்கு சொற்ப நாட்களே எஞ்சியிருக்க, சாலையின் இரு தரப்புகளிலும் வெளிக்கடைகள் கனஜோராய் வியாபாரம் பண்ணிக் கொண்டிருப்பது தெரிந்தது !! சிவகாசியின் மையத்திலிருந்த அந்த சாலையில் அப்படியொரு ஜனத்திரளும், உற்சாகமும், பரபரப்பும் அலையடித்துக் கொண்டிருப்பதை உணர முடிந்த போது, எல்லாமே வேறொரு உலகில் நடப்பது போலவே எனக்குத் தோன்றியது ! இங்கே மண்டைக்குள் எனக்கு இம்மியும் வெளிச்சமில்லை ; ஆனால் கண்ணெதிரே ஊரே மினுமினுத்துக் கொண்டிருந்தது ! சிந்தையில் என்னிடம் துளி கூட மகிழ்வில்லை ; ஆனால் ஊரே உற்சாகத்தில் ஓடியாடிக் கொண்டிருந்தது ! Sci-fi கதைகளில் வருவது போலான ஒரு இணைத்தடப் பிரபஞ்சத்தில் உலாவுவதான பீலிங்குடனே கொஞ்ச நேரம் அங்கே நிலைகொண்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் தலைக்குள் நிதானம் திரும்பியது ! 'உன் வீட்டு இன்னலுக்கோசரம் உலகமே ஸ்தம்பிக்காது கண்ணா ; சந்தோஷங்களும், சங்கடங்களும் மாறி மாறிக் கதவைத் தட்டும் சமாச்சாரங்கள் and இன்று பிந்தையது உனது கதவைத் தட்டி நிற்கின்றது - அவ்வளவே ! இது வரையிலுமாவது சந்தோஷ நாட்களை மிகுதியாயும் ; சங்கட தினங்களை சன்னமாகவும் தந்துள்ள ஆண்டவனுக்கு நன்றி சொல்லிவிட்டு நகரும் வழியைப் பாரு !' என்று உள்ளுக்குள் யாரோ சொல்வது போலிருந்தது ! படியேறி திரும்பவும் ஹாஸ்பிடலில் அப்பாவின் ரூமுக்குச் சென்ற போது அப்பாவை நிற்க வைக்க டாக்டர் முயன்று கொண்டிருந்தார் ! 'இன்னும் ஓரிரு நாட்களில் வாக்கரோடு நடக்கலாம் ; எல்லாம் ஓ.கே' என்றபடிக்கே அவர் புறப்பட்ட போது மனதின் பாரம் கொஞ்சமே கொஞ்சமாய் மட்டுப்பட்டிருந்தது போலிருந்தது !
அம்மா விடைபெற்றுச் சென்று ஒரு வாரமாகப் போகும் இந்த வேளையில் அந்த ஏப்ரலின் இரவு தான் என் சிரத்தினுள் ஓடிடுகிறது ! அத்தனை நோவுகளோடு அம்மா செய்த யுத்தம் மட்டுமன்றி, அவரது வேதனைகளுமே முற்றுப் புள்ளி கண்டிருப்பதை ஏற்றுக்கொண்டு அவர் சென்றுள்ள இடத்தில் அமைதியும், நிம்மதியும் கிட்டிடுமென்று வேண்டுவதே முன்செல்லும் வழியென்று தலைக்குள் ஒலிக்கிறது ! So இதுவும் கடந்து போயாகிட வேண்டும் ! R.I.P. அம்மா !
Back to reality, 'தல'யின் மெகா இதழ் பைண்டிங்கில் ஒட்டி ரெடியாக உள்ளது ! தொடரவுள்ள 3 நாட்களுக்கு ஈரம் காய்ந்திட மட்டும் அவகாசம் தந்துவிட்டால் - செமத்தியான ஒரு இதழாய் உங்களை வந்து சேர்ந்திடுவதில் சிரமங்களிராது ! And தாத்தாஸ் கதையும் பைண்டிங்கில் உள்ளது ; விடுமுறைகள் முடிந்த மறு நாள் தயாராகிடும் ! இந்த ஆல்பத்தை எதெற்காக நினைவு கூர்ந்திடுவேனோ - இல்லையோ ; இதனுள் பணியாற்றிய அனுபவம் நிச்சயம் அகன்றிடாது ! வியாழன் இரவு முதலே அம்மா வென்டிலேட்டரில் இருக்க நேரிட, இனி பெரிதாய் நம்பிக்கை கொள்ள ஏதுமில்லை என்பதை ICU பிரிவினர் ஞாயிறு இரவன்று தயங்கியபடியே சொல்லியிருந்தனர் ! காலையில் வீட்டுக்கு கூட்டிப் போய் விடுங்களென்று ஹாஸ்பிடலில் சொன்ன போதே காத்திருந்தது என்னவென்பது புரிந்தது ! வெளியூர்களில் இருந்த சகோதரிகளையும், அவர்களது பிள்ளைகளையும் அவசரமாய் புறப்பட்டு வரச் சொன்ன கையோடு, தொங்கிக் கொண்டிருக்கும் பணிகளையும் அவசரமாய் முடித்தாக வேண்டுமே என்பது உறைத்தது ! 62 பக்கங்கள் கொண்ட தாத்தாஸ் கதையிலோ, பத்தோ பன்னிரெண்டோ பக்கங்கள் வரை தான் அந்நேரத்துக்கு எழுதியிருந்தேன் ! பாக்கியினை ராவோடு ராவாய் முடிக்காவிடின் அம்போவாகிப் போகும் என்பது புரிந்தது ! தாத்தாஸ் கதைகளின் பாணி மாத்திரமன்றி, வசனங்களின் மிகுதியுமே எப்போதும் ஒரு சவாலாய் இருப்பதுண்டு !! பக்கங்களில் கட்டங்களும் ஜாஸ்தி ; பேசிடும் மாந்தர்களும் ஜாஸ்தி & ஏகப்பட்ட இடங்களில் கூகுளின் சகாயங்கள் அவசியமாகிடுவதுமுண்டு ! எப்படி 'தம்' கட்டி எழுதினேன் என்பது இப்போது புதிராக உள்ளது ; ஆனால் திங்கள் காலை புலர்ந்த தருணத்தில், என் கண்கள் சிவந்திருந்தன ; விரல்கள் கழன்று விழாத குறை தான் ; ஆனால் தாத்தாக்களுடனான பயணத்தினை முடித்திருந்தேன் ! Maybe பகலில் காத்திருந்ததை தாற்காலிகமாகவாவது மறக்க எனக்கு அந்தப் பணிகளின் கடுமை அன்றிரவுக்கு அவசியமானதோ - என்னவோ ! குரங்கு பல்டிகள் நமக்குப் புதிதே அல்ல தான் ; but still இது அவற்றுள் ஒரு புது அத்தியாயம் என்பேன் - simply becos of the circumstances !
And முன்கூட்டியே இன்னொருவாட்டி சொல்லி விடுகிறேன் guys - தாத்தாக்களின் இந்த ஆல்பமானது ஒரு வாழ்க்கைப் பயணத்தின் சித்தரிப்பே ! இங்கே பெரியதொரு கதை ; க்ளைமாக்ஸ் என்ற மாமூலான சமாச்சாரங்கள் துளியும் கிடையாது ! மூன்று பெருசுகளும், பேத்தி சோபியுமாய் வாழ்ந்திடும் ஒரு வாழ்க்கையினுள் எட்டிப் பார்த்திட நமக்கு வாய்ப்பளிக்கின்றனர் & that's about it ! இங்கே மாமூலான காமிக்ஸ் entertainment புள்ளிகளைத் தேடினால் ஏதும் தேறாது ! முன்கூட்டியே இன்னொருவாட்டி சொல்லி விடுகிறேன் guys - இதுவொரு வாழ்க்கைப் பயணத்தின் சித்தரிப்பே ! இங்கே பெரியதொரு கதை ; க்ளைமாக்ஸ் என்ற மாமூலான சமாச்சாரங்கள் துளியும் கிடையாது ! மூன்று பெருசுகளும், பேத்தி சோபியுமாய் வாழ்ந்திடும் ஒரு வாழ்க்கையினுள் எட்டிப் பார்த்திட நமக்கு வாய்ப்பளிக்கின்றனர் ; so இங்கே மாமூலான காமிக்ஸ் entertainment புள்ளிகளைத் தேடினால் ஏதும் தேறாது ! "ரைட்டு...இத்தனை ஸ்பீடு பிரேக்கர்களுடனான ஒரு தொடர் நமக்கு இந்த நொடியில் அவசியம் தானா ? இந்த ஸ்லாட்டில் இன்னொரு லக்கி லூக்கையோ ; ஒரு ரிப் கிர்பியையோ ; ஏதேனுமொரு கமர்ஷியல் நாயகரை இறக்கிப்புட்டா குன்சா இருக்குமே ?" என்ற கேள்வி எழலாம் தான் ! But அதற்கான பதிலை நீங்களே போன வாரத்து வாக்கெடுப்பில் சொல்லியுள்ளீர்கள் folks !! இதோ அதன் முடிவுகள் :
இது வரைக்குமான வோட்டெடுப்புகளில் இத்தனை நண்பர்கள் ஓட்டளிக்க மெனெக்கெட்டதில்லை ; 221 என்ற இந்த நம்பர் தான் இது வரையிலுமான பெஸ்ட் ! So அத்தகையதொரு வோட்டெடுப்பில் "புதுசு சார்ந்த தேடல்கள் என்றென்றும் அவசியமே !" என்ற தீர்ப்பு கிட்டியிருப்பதை கண்களைத் தேய்த்தபடிக்கே பார்த்திடுகிறேன் ; நிஜத்தைச் சொல்வதானால் Option # 2-க்கே மெஜாரிட்டி ஓட்டுகள் விழுந்திடுமென்றே எதிர்பார்த்திருந்தேன் ! தாறுமாறாய் இண்டிகேட்டரைப் போட்டபடிக்கே நானெல்லாம் ஆட்டோ ஓட்டும் சாலையில், நீங்களெல்லாம் JCB ஓட்டும் வித்வான்கள் என்பதை yet again நிரூபித்துள்ளீர்கள் ! பதிலிட நேரம் செலவழித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் ஒரு நூறு ; நிச்சயமாய் உங்களின் அவாக்களுக்கு உரிய மதிப்பளிக்கப்படும் ! And of course, புதுசு என்பதற்காகவே எதையும் இனி தேர்வு செய்திடாது - நீங்கள் எதிர்பார்த்திடும் அளவுகோல்களுக்கேற்ப சாரமும் அவற்றுள் இருக்கின்றதா? என்பதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றியபடியே பார்த்திடவும் செய்வோம் !
இதோ - இந்தப் புது "கமர்ஷியல் கி.நா." தேர்வினைப் போல !!
"இதென்ன புது உருட்டா இருக்கே ?" என்கிறீர்களா ! Yes - இது நமக்குப் பிடித்தமான வன்மேற்குக் களத்தினில் அரங்கேறிடும் ஒன்-ஷாட் சாகஸம் - ரொம்பவே வித்தியாசமான கதையோட்டத்துடன் ! கண்ணைக் கசக்கச் செய்யும் சமாச்சாரங்கள் இராது ; மாறாய் கண்களை அகல விரியச் செய்யும் சித்திரங்களும், கலரிங்கும் மிரட்டிடும் ! 78 பக்கங்களில் அரங்கேறும் இந்த western சாகஸத்தில் கமர்ஷியலான அடையாளங்களும் இருந்திடும் ; "கி.நா." என்று வகைப்படுத்திட வித்தியாசமான storyline-ம் இருக்கும் ! So இதனை ஒரு கமர்ஷியல் கி.நா. என்று விழிப்பதில் தவறில்லை என்று நினைத்தேன் !
அதே சமயம் ஒரு கனத்த "கி.நா."வுமே உங்களை நோக்கி வெகு சீக்கிரமே வந்திடவுள்ளது ! இதோ - "விதி எழுதிய வெள்ளை வரிகள்" black & white ஆல்பத்தின் பிரிவியூ :
தொடரும் நாட்களில், தொடரவுள்ள புத்தாண்டினில் கமர்ஷியல் குருதையில் எறியபடியே, புதுசு சார்ந்த தேடல்களையும் செய்திட எண்ணியுள்ளோம் ! So காத்துள்ள 2024 அட்டவணை மாத்திரமன்றி, காத்துள்ள பயணத்தின் template கூட ரொம்பவே சுவாரஸ்யமானதாக இருந்திடவுள்ளது ! Not too long a wait ; இம்மாதத்து இறுதி வாரப் பதிவினில் ரூட் 2024 பற்றிப் பார்த்திடலாமே !!
Bye all...see you around ! அம்மாவுக்காக, எங்களுக்காக பிரார்த்தித்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் எங்களது நன்றிகள் உரித்தாகட்டும் ! Have a good week ahead !
P.S : V காமிக்ஸும் பைண்டிங்கில் வெயிட்டிங் ! இங்கே சின்னதாயொரு திருத்தம் folks !! ஸாம் வில்லர் டெக்சின் அண்ணார் என்று போன பதிவில் ஏதோ ஒரு ஞாபகத்தில் தவறாகக் குறிப்பிட்டிருந்தேன் ! டெக்ஸ் தான் மூத்தவர் ; ஸாம் இளவலே ! கதாசிரியர் போசெல்லியின் கைவண்ணத்தில் ஸாம் வில்லர் ரொம்பவே மதிக்கத்தக்க மனிதராய் மிளிர்கிறார் ! நிச்சயமாய் 'தல' ரசிகர்களுக்கு இதுவொரு மிஸ் செய்திட இயலா இதழாய் இருந்திடுமென்பது உறுதி !
Hi
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம் 🙏
ReplyDeleteMe in Edi Sir..🙏🙏
ReplyDeleteகமர்ஷியல் கிநாவா ஆஆஆ? இப்போதே ஆவலை தூண்டுகிறதே சார்
ReplyDeleteவணக்கம் ஆசிரியர் சார்.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே...
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDelete@Edi Sir..🙏
ReplyDeleteதுக்க வேளையிலும் எங்களுக்கும் நேரம் ஒதுக்க மனது வைத்த உங்களுக்கு நன்றிகள் சார்..🙏🙏
புதிய கி.நா...சூப்பர் ஆசிரியரே
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகிராபிக் நாவலின் அந்த பனி படர்ந்த பக்கம் அட்டகாசமாக இருக்கு.
ReplyDeleteஇது கலரில் தானே சார் வெளிவருது
@Editor Sir..🙏
ReplyDelete"விதி எழுதிய வெள்ளை வரிகள்"..
நெப்போலியன் படையிடம் தப்பி ஓடும் ரஷ்ய அணியா.. (in Blog)
(அல்லது)
ரஷ்யாவிடம் தோல்வி கண்டு ஓடும் ப்ரெஞ்சு சேனையா.. (புத்தகத்தின் பின்பக்கம்) ..
எது சரியானது?..😶
புத்தகத்தின் பின்பக்கம் சொல்லியதுதான் சரியாக இருக்க முடியும்..
ஏனென்றால் ரஷ்ய பனிகாலத்தை பற்றி அறியாமல் மாட்டி கொண்டது நிச்சயம் ப்ரெஞ்சு படையினராகதான் இருக்க முடியும்..😐
சகோ
Deleteநொப்போலியன் பொக்கிஷம் முதல் பாகத்திலும் நொப்போலியன் ரஷ்யாவிடம் தோற்று போனதாக தான் வருகிறது
வரலாறைப் பார்ப்பின் இரண்டுமே சரி!
Deleteஆரம்பத்தில் நெப்போலியனின் படை ரஷ்யாவில் நுழைந்து வெற்றிகளைப் பெற்றது உண்மை.தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்யப் படைகள் பின்வாங்கி சென்றபடியே இருந்தன.இது பிரெஞ்சு படைகள் மாஸ்கோவை கைப்பற்றும் வரை தொடர்ந்தது.( அப்போது மாஸ்கோ ரஷ்ய தலைநகர் அல்ல.செயின்ட் பீட்டரஸ்பெர்க் அப்போதைய தலைநகரம்.) இதற்கு பிரான்ஸ் கொடுத்தவிலை மிகவும் அதிகம்.
போரில் இரண்டு வகை உண்டு .
Manoeuvre warfare : போர்த் தந்திரங்கள், சூழ்ச்சிகள், ராணுவ வியூகங்கள் போன்றவற்றின் மூலம் வெற்றி பெறுவது.
Attrition warfare: எதிரி ராணுவ வீரர்களை உடல் அளவில், மனதளவில் குன்றிப் போகச் செய்வது. அவர்களுக்கு தேவையான தளவாடங்கள், உணவு விநியோகம் ஆகியவற்றை தடை செய்வது மூலம்.
ரஷ்யர்கள் இரண்டாவதை செய்தனர்.
பின்வாங்கியபோது எல்லாவற்றையும் அழித்துக் கொண்டே பின்வாங்கினர். நெடிய தொலைவு பயணித்திருந்த பிரெஞ்சு படைகளுக்கு உணவு , பனிப் பாதுகாப்பு உடைகள் கிடைக்காதவண்ணம் ரஷ்ய குடியானவர்களும் ,சிதறியிருந்த ரஷ்ய வீரர்களும் கெரில்ல யுத்தம் செய்தனர்.மாஸ்கோவிலிருந்து திரும்பிய பிரெஞ்சு படைகள் சுமார் 5 லட்சம் பேரிலிருந்து 1 லட்சத்திற்கும் கீழாக குறைந்து விட்டனர்.திரும்பிக் கொண்டிருந்த யாருக்கும் யுத்தம் செய்யும் மனநிலை இல்லை.
ஆனால் எடிட்டர் சார் கொடுத்துள்ள முன்னோட்டப் பக்கத்தில் டிமிட்ரி என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.இது கிரேக்க மற்றும் ரஷ்ய பெயர்.எனவே
கதை பிரெஞ்சு படையால் துரத்தப்பட்டு பின் வாங்கிக் கொண்டிருந்த ரஷ்ய குடியானவர்கள் , சிதறிய ரஷ்ய வீரர்கள் அடங்கிய குழுவாய் இருக்கலாம்.ரஷ்யாவும் இந்த யுத்தத்தில் சுமார் 5 லட்சம் வீரர்களை இழந்தது சரித்திர உண்மை.
//உன் வீட்டு இன்னலுக்கோசரம் உலகமே ஸ்தம்பிக்காது கண்ணா ; சந்தோஷங்களும், சங்கடங்களும் மாறி மாறிக் கதவைத் தட்டும் சமாச்சாரங்கள்//
ReplyDeleteஉண்மைதான் சார். நாம்தான் நம்மை தேற்றிக் கொள்ள வேண்டும்.
நீங்கள் சற்று மெதுவாகவே வந்திருக்கலாம்.
ஆயினும் உங்கள் வருகை சந்தோஷமே.
ஒன்றும் அவசரமில்லை sir..
ReplyDeleteஉங்கள் பணிச்சுமை நன்றாகவே
புரிகிறது.. ❤️
உள்ளேன் ஐயா
ReplyDeleteஇறுக்கமான சூழ்நிலையிலும் புத்தகத்தை எழுதி முடித்து தயார் செய்த தங்களின் இந்த காமிக்ஸ் காதல் தான் இங்கு பலரையும் ஒன்று கூட வைத்துள்ளது & இவ்வளவு காலம் பிணைத்து வைத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
ReplyDeleteமனதார அனைவரின் சார்பாகவும் மரியாதை கலந்த வணக்கங்கள் ஆசிரியர் சார்.
உங்களின் எழுத்துக்களில் பக்குவமான மனதின் மேன்மையை உணர முடிகிறது 🙏.
// இறுக்கமான சூழ்நிலையிலும் புத்தகத்தை எழுதி முடித்து தயார் செய்த தங்களின் இந்த காமிக்ஸ் காதல் தான் இங்கு பலரையும் ஒன்று கூட வைத்துள்ளது & இவ்வளவு காலம் பிணைத்து வைத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.// சத்தியமான உன்மை.
Deleteஇந்தப் பணியில் நிறைய நண்பர்களின் மகிழ்வுகளும் கலந்திருக்கும் போது அதற்கான நியாயம் செய்திட வேண்டியதும் எனது கடமை ஆச்சே சார் ?
Deleteதவிர, அந்த இரவினில் எனக்கு அந்த distraction ரொம்பவே தேவைப்பட்டதும் கூட !
Really we proud of you sir.
Deleteகமர்சியல் கிராபிக் நாவலின் ஒரு பக்கமே அசத்துகிறது Sir, வெற்றிக்கு கட்டியம் கூறுவது போல
ReplyDeleteதுயரமான நேரங்களில் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்திக் கொள்வதோ அல்லது ஏதாவொரு காமிக்ஸில் மூழ்கி விடுவதோ எனது வழக்கம். காலம் காயத்தை ஆற்றும் வரை இவை தான் சிறந்த வலி நிவாரணி.
ReplyDeleteLife moves on. நிதானமாக புத்தகங்கள் வரட்டும்.
// துயரமான நேரங்களில் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்திக் கொள்வதோ அல்லது ஏதாவொரு காமிக்ஸில் மூழ்கி விடுவதோ எனது வழக்கம். காலம் காயத்தை ஆற்றும் வரை இவை தான் சிறந்த வலி நிவாரணி. // உண்மை தான் ஷெரீஃப். மனதை வேறு ஒரு செயலை செய்வதன் மூலம் திசை திருப்ப முயற்சிப்போம்.
Delete+1
Delete@Mp
Deleteஉண்மை. என் தாய் இறந்த போது என்னை அந்த துயரிலிருந்து மீட்டது நம்ம லயன் காமிக்ஸ் தான் .
விதி எழுதிய வெள்ளை வரிகள்
ReplyDeleteஇந்த ஓவியங்களை பார்க்கும்போதே மனம் கஷ்டப்படுகிறது
புத்தகத்தை படித்தால்
அருமையான ஓவியங்கள்
இந்த ஆல்பத்தை தேர்வு செய்ததே பிரதானமாய் அந்தச் சித்திரங்களுக்காகத் தான் ரம்யா !
Delete///இந்த ஓவியங்களை பார்க்கும்போதே மனம் கஷ்டப்படுகிறது///
Deleteயெஸ்!!
வணக்கம் சார். நீங்கள் இவ்வளவு சீக்கிரம் திரும்பி வருவீர்கள் என்று நினைக்கவில்லை.நீங்கள் தேறுதல் பெற்று வந்தது சரியே. உங்களை நினைத்துப் பெருமைப்படுகின்றேன். தங்கள் துக்கத்தை தேற்றிக் கொண்டு எங்களுக்காக வந்த உங்களை நினைத்து பெருமிதம் கொள்ளுகின்றேன்.
ReplyDeleteவரிக்கு வரி ஆமோதிக்கிறேன் நண்பரே.
Deleteசார் ...காரியங்கள் சகலமும் முடிந்து அனைவரும் அவரவர் ஊர்களுக்குப் போய் 4 தினங்கள் ஆகிவிட்டன ! ஆபிஸ் ஒரு பக்கம் இயங்கி வருகிறது ! மெது மெதுவாய் யதார்த்தத்தோடு ஒன்றிட வேண்டிய அவசியம் புரிகின்றது !
Deleteஆசிரியரின் பக்குவமான மனநிலை அறிந்து மகிழ்ச்சி. புத்தகங்கள் நிதானமாகவே வரட்டும் சார்.
ReplyDeleteசூப்பர் சார்....எல்லாம் கடந்து போகும்.....
ReplyDeleteவிதி எழுதிய... அட்டைப்படம் ஏதோ எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது கருப்பு வெள்ளை காட்ட காட்ட ...சூப்பர் சார்
அதிலும் ஒரு பக்க பனியில் செம சார்...அத்தனை ஓவியங்களையும் தூக்கிப் போடும் போல...நம்ம டாப்பான எமனின் திசை மேற்க தூக்கிச் சாப்பிடுமோ
அந்த கிநா இந்த வருடமே வர வாய்ப்பிருக்கா சார்
Deleteஸ்டீல் என்ன இப்படி கேட்கறீங்க? உங்க பாணியில் கேளுங்க இன்றே இந்த கி.நா வேண்டும் என்று.
Deleteஇளம் டெக்ஸ் யாலே வேற லெவல் சார்...ஓநாய் வனத்தில் டெக்சோடு முந்தா நேத்து தான் உலாவினேன்...வேற லெவல் வாழ்க்கை...டெக்சின் சகோதரர் கதையும் நமக்கின்னோர் கார்சனின் கடந்த காலமாய் அமையுங்குது பட்சி
ReplyDeleteசாம்இல்லர் ரொம்பவே மதிக்கத்தக்க மனிதராய் மிளிர்கிறார்.நல்ல வேளை இல்லனா இவருக்காக வா டெக்ஸ் தேடப்படும் குற்றவாளியானார் என்ற எண்ணம் தோன்றி டெக்ஸின்கம்பீரம் சற்று குறைந்துவிடும் . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteவந்துட்டேன். எதிர்பாராத பதிவு சார்.
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete/ அம்மாவுக்காக, எங்களுக்காக பிரார்த்தித்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் எங்களது நன்றிகள் உரித்தாகட்டும் ! //
ReplyDeleteவாய்ப்பிருப்பின் முடிந்தால் டெக்ஸ் ஸ்பெஷலில் அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாய் அம்மாவின் புகைப்படத்தை பதிவிட்டால் இன்னும் கூடுதலாய் மகிழ்ச்சி அடைவோம் சார்...
கனமான இதழுக்கு இன்னும் சற்றே கனம் சேர்க்கட்டுமே சார்...
👌👌👌🙏🙏
Deleteவாய்ப்பில்லை சார் ; முன்னமே அச்சாகி பைண்டிங்கும் முடிந்தது !
Delete///கனமான இதழுக்கு இன்னும் சற்றே கனம் சேர்க்கட்டுமே சார்.///
Delete👌👌🙏
One day Sachin Tendulkar s father died. Next day was an important match. He played and scored a century and cried. That was his unforgettable special century (i watched that match). This thathas issue is very special for you and all of us sir.
ReplyDelete🙏🏻🙏🏻
DeleteIndia vs Kenya WC 1999 Thalaivar 140* .. unforgettable innings !
DeleteWaiting for graphic novels. Been a long time
ReplyDeleteIf I remember correctly, we already published a horror graphic novel on returning Napoleon s soldiers from Russia.
ReplyDeleteYes sir...a Bonelli graphic novel !
Deleteபனியில் ஒரு குருதிப் புனல்
DeleteHi..
ReplyDelete🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ReplyDelete////வியாழன் இரவு முதலே அம்மா வென்டிலேட்டரில் இருக்க நேரிட, இனி பெரிதாய் நம்பிக்கை கொள்ள ஏதுமில்லை என்பதை ICU பிரிவினர் ஞாயிறு இரவன்று தயங்கியபடியே சொல்லியிருந்தனர் ! காலையில் வீட்டுக்கு கூட்டிப் போய் விடுங்களென்று ஹாஸ்பிடலில் சொன்ன போதே காத்திருந்தது என்னவென்பது புரிந்தது ! வெளியூர்களில் இருந்த சகோதரிகளையும், அவர்களது பிள்ளைகளையும் அவசரமாய் புறப்பட்டு வரச் சொன்ன கையோடு, தொங்கிக் கொண்டிருக்கும் பணிகளையும் அவசரமாய் முடித்தாக வேண்டுமே என்பது உறைத்தது ! 62 பக்கங்கள் கொண்ட தாத்தாஸ் கதையிலோ, பத்தோ பன்னிரெண்டோ பக்கங்கள் வரை தான் அந்நேரத்துக்கு எழுதியிருந்தேன் ! பாக்கியினை ராவோடு ராவாய் முடிக்காவிடின் அம்போவாகிப் போகும் என்பது புரிந்தது ! தாத்தாஸ் கதைகளின் பாணி மாத்திரமன்றி, வசனங்களின் மிகுதியுமே எப்போதும் ஒரு சவாலாய் இருப்பதுண்டு !! பக்கங்களில் கட்டங்களும் ஜாஸ்தி ; பேசிடும் மாந்தர்களும் ஜாஸ்தி & ஏகப்பட்ட இடங்களில் கூகுளின் சகாயங்கள் அவசியமாகிடுவதுமுண்டு ! எப்படி 'தம்' கட்டி எழுதினேன் என்பது இப்போது புதிராக உள்ளது ; ஆனால் திங்கள் காலை புலர்ந்த தருணத்தில், என் கண்கள் சிவந்திருந்தன ; விரல்கள் கழன்று விழாத குறை தான் ; ஆனால் தாத்தாக்களுடனான பயணத்தினை முடித்திருந்தேன் ! Maybe பகலில் காத்திருந்ததை தாற்காலிகமாகவாவது மறக்க எனக்கு அந்தப் பணிகளின் கடுமை அன்றிரவுக்கு அவசியமானதோ - என்னவோ ! ////
ReplyDelete'நதிபோல ஓடிக் கொண்டிரு' என்று சமீபத்தில் நீங்கள் வைத்த தலைப்புத்தான் ஞாபகத்துக்கு வருகிறது எடிட்டர் சார்!
'இனி நாம் செய்வதற்கு ஏதுமில்லை' என்று ஸ்பஷ்டமாக தெரியவரும்போது ஏதோ ஒருவகையாக அசாத்திய தைரியம் மனசுக்குள் வந்து நம்மை இயங்கச் செய்யுமாம்! அதை மேற்கண்ட உங்களது வரிகளால் மீண்டும் ஒருமுறை உணர்கிறேன்!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மனதில் ஆயிரம் ரணங்கள் இருந்தாலும் காமிக்ஸ் வாசகர்களை மகிழ்விக்க நீங்கள் இவ்வளவு சீக்கிரம் மீண்டு வந்ததற்க்கு வாழ்த்துக்கள் & நன்றிகள்
ReplyDeleteசிங்கத்தின் காயத்தை சிங்கம் தன் நாவால் சரி பன்னிக்கொண்டு மீண்டும் வேட்டைக்கு தயாராகும் அதுபோல் நமது காமிக்ஸ் பெயர் மட்டுமல்ல நீங்களும் லயனே👍👍👍👍
This comment has been removed by the author.
Delete👍👍🙏🙏🙏
Deleteஉண்மை செ.ச!🙏🏻🙏🏻
Deleterip for your mother sir,
ReplyDeletewe are eagerly waiting for the new G.N. AND WESTERN BOOKS
'விதி எழுதிய வெள்ளை வரிகள்' - அழுத்தமான கி.நா'க்களைப் படித்து பலப்பல வருடங்கள் ஆகிவிட்டபடியால் இந்த மாதம் என்னுடைய வாசிப்பு வரிசையில் முதலிடம் இந்தக் கி.நா'விற்கே!
ReplyDeleteஅட்டைப்படம் - மிரட்டல் ரகம்! மொபைல் வியூவில் சாதாரணமாகப் பார்த்தபோது தூரத்தில் தெரிவது நடுக்காட்டில் அமைக்கப்பட்ட பங்களா/கோட்டை என்று நினைத்திருந்தேன்.. ஜூம் செய்து பார்த்தபிறகே அது ஒரு கோச் வண்டி என்பது புரிந்தது! சற்றே நெருங்கிச் சென்று படித்தால்தான் கி.நா'க்கள் உண்மையின் பரிமாணத்தை உணரவைக்கும் என்பதற்கு இந்த அட்டைப்படமே உதாரணமாக அமைந்துவிட்டிருக்கிறது!
கதை - நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமென்பதை இப்போதே உணரமுடிகிறது! ஆவலுடன் வெயிட்டிங்!!
அட ஆமா....நானும் அப்படிதான் நெனச்சேன் ஈவி
Deleteஸ்டீல்.. அந்த அட்டைப்படத்துல இன்னொரு சமாச்சாரத்தை கவனிச்சீங்களா? பனிப்படுகையில் பாறை போல ஒன்று தெரிகிறதே.. அது விழுந்துகிடக்கும் ஒரு குதிரையின் பின்னங்கால் பகுதி!!
Deleteஅட்டைப்படத்திலேயே இத்தனை ட்விஸ்ட்டுகளா!!!
அனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteஎடிட்டர் சார்,
என் அறிவை பட்டை தீட்டியது காமிக்ஸ், காமிக்ஸ் வழியாக நீங்கள்தான்.
உங்களுக்கு ஆலோசனை வழங்கும் அளவுக்கு வளரவில்லை.
உங்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள், இன்னும் சில காலங்களுக்கு முடிந்தளவு தனிமையை தவிர்த்து விடுங்கள். காரணம் இல்லையென்றாலும் ஏதேனும் ஒரு பணியை செய்து கொண்டே இருங்கள்.
எனது 14 வயது முதல் 32 ஆண்டுகளாக, எனது தாயாரை இழந்த வேதனை வலிகள் இன்னும் எட்டி பார்ப்பது உண்டு. எனது அனுபவ வலி மூலம் தங்களுக்கு இந்த சிறு வேண்டுகோள்.
தனிமையை தவிர்த்து விடுங்கள் சார் சில காலத்திற்கு.
இதுவும் கடந்து போகும் ..
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்...
அப்போ இந்த மாதம் ரெண்டு கி.நா வா?
ReplyDeleteபுது கமர்ஷியல் கௌபாய் கி.நா ரொம்பவே ஆர்வம் கொள்ள வைக்கிறது.
ReplyDeleteஅந்த polling ரிசல்ட் என்னை கேட்டால் எல்லாமே புதுசு வேண்டும் என்று தான் சொல்லுவேன் ஆனால் உங்கள் பொருளாதார நிலைமையையும் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருப்பதால் ஆப்ஷன் 1 kku தான் வாக்களித்தேன்
ReplyDelete////இதுவும் கடந்து போகட்டுமே///---
ReplyDeleteநிதர்சனத்தை மிகுந்த பக்குவத்துடன் அணுகுகிறீர்கள் சார்....
எங்களுக்கெலாம் வழிகாட்டியாக உள்ள மூத்த சகோதரனாகத்தான் தங்களை பார்க்கிறோம்....
தொடரட்டும் சிங்கத்தின் பயணம் எப்போதும் போல தொடர நாங்கள் உண்டு தங்களோடு தோள்கொடுக்க....!!!
// எங்களுக்கெலாம் வழிகாட்டியாக உள்ள மூத்த சகோதரனாகத்தான் தங்களை பார்க்கிறோம்.... // ஆமாம்
Deleteஎனக்கு எல்லாத்லயும் அவர் ஆசிரியர்தான் என் எட்டு வயதிலிருந்து நூறு வரை
Delete
ReplyDelete"ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்...... "
*2016 ஈரோடு விழா லயன்-முத்து வாசகர்களால் நிறைந்திருந்த லீ ஜார்டின் மீட்டிங் ஹால். மேடையருகே இருந்த சோபாவில் சீனியர் சாரோடு அமர்ந்திருந்தார்கள் ஆசிரியரின் அன்னையார். முதன்முறையாக அவரை விழாவிற்கு அழைத்து வந்திருந்தார், நம்ம ஆசிரியர் சார்.
*நிரம்பி வழிந்த நண்பர்கள் கூட்டத்தின் உற்சாகத்தையும், ஆரவாரங்களையும் முதல் முறையாக நேரில் பார்த்த வண்ணம் இருந்தார்கள் அன்னையார். நம்ம அன்பின் ஆசிரியரிடம் உரிமையுடனும், தோழமையுடனும் தங்கள் அனுபவங்களை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டு இருந்ததை, ஆசிரியரின் தாயார் திகைப்புடன் கவனித்து கொண்டே இருந்தார்கள்....
*தன் மகன் காமிக்ஸ் புத்தகங்கள் வெளியிட்டு வருவதும் , அவ்வப்போது வாசகர் மீட்டிங் என போவதும் அவருக்கு தெரிந்து இருந்தாலும் , மீட்டிங் என்றவுடன் ஏதோ ஒரு கம்பெனி மீட்டிங் போல பேசுவாங்க என எதிர்பார்த்திருந்த அவருக்கு........
------ நண்பர்கள் ஆரவாரத்துடன் இங்கே அங்கே வளைய வந்து ஒவ்வொன்றும் செய்வதும், நண்பர்களுக்குள் நிகழ்ந்த ஆரப்பாட்ட உரையாடல்கள், உற்சாக ஆரவாரங்கள், ஆசிரியருடன் ஒவ்வொரு காமிக்ஸ் ஹூரோ பற்றியும் தத்தம் பழைய நினைவுகளை ஆர்வம் பொங்க விவரித்ததையும் , புத்தகங்கள் வாங்கிய நினைவுகளை பகிர்ந்ததையும் பார்த்து அவரது திகைப்பு, கூடிக்கொண்டே போனது.
* இந்த காமிக்ஸ் என்னும் சுவையை நமக்கு தந்ததுடன் மற்றவர்களுக்கு கிடைக்காத பல்வேறு வகையான காமிக்ஸ் ஹீரோக்களை அளித்ததற்கும் , குழந்தை பருவ வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்கியதற்கும், அதே அனுபவங்களை வாழ்நாள் முழுதும் தொடரச் செய்தமைக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஆசிரியருக்கு, நண்பர்கள் வாரியிறைத்தது கண்ட அன்னையரது திகைப்பு பெருமிதமாக மாறியது.
*ஆசிரியருக்கு சிறுவயதில் சாப்பாடு ஊட்டும்போது அந்த ஒரே மான்டரேக் கதையை பல நூறு முறைகள் சொல்லி அவரை வளர்த்த நினைவுகளை , சகோ கடல்யாழிடமும் அருகே இருந்த நம்ம நண்பர்களிடமும் பெருமிதம் பொங்க தாயார் அவர்கள் விவரித்து கொண்டு இருந்ததை, நானும் கவனித்து கொண்டே வந்தேன்.
*விழா முடிந்து ஆசிரியரின் அன்னையாருடன் பேசும் அரிய பேறு எனக்கும் கிடைத்தது. ஆசிரியர் மேல் நாம் வைத்திருக்கும் அன்புகலந்த மரியாதை கண்டு திக்குமுக்காடி போய்விட்டதாக தெரிவித்தார்கள். தன் மகனை பெற்றதற்காக "ஈன்ற பொழுதில் அடையாத ஆனந்தத்தை இப்போது அடைந்து விட்டதாகவும் , அந்த குழந்தை விஜயன் மேல் அவர் காட்டிய அன்புக்கு , இப்போது ஆசிரியர்மேல் நாம் அனைவரும் பொழியும் அன்பு மழை சற்றும் சளைத்ததல்ல என நா தழுதழுக்க தெரிவித்தார்கள்.
*இந்த நம்முடைய அன்பும் அரவணைப்பும் ஆசிரியர் மேல் மென்மேலும் தொடரவேணும் என கண்ணில் நீர் தளும்ப தாயார் அவர்கள் கேட்டு கொண்டார்கள். அவரின் கரத்தை பற்றிக்கொண்டு இதை இன்னும் சிறப்பாக செய்வோம் அம்மா என நாம் அனைவரும் உறுதியாக சொன்னபோது , நம் கண்களையும் கண்ணீர் திரையிட்டது நினைவுள்ளதா நண்பர்களே......??? காலம் அந்த கணங்களுக்குள் உறைந்து போகாதா என மனம் எண்ணுத்தான் செய்கிறது!!
அனைவரும் அன்னையார் & சீனியர் சாருடன் போட்டோ எடுத்து கொண்டு விடைபெற்று செல்லும்போது அம்மா சொன்னது.....,
"என் பையனை நல்லா பார்த்துக்குங்கப்பா"
ஆசிரியர் சார்@ தங்கள் உடன்பிறவா பலநூறு சகோதர சகோதரிகளை தங்களுக்குத் துணையாக விட்டுத்தான் சென்றுள்ளார்கள் அன்னையார்.... அன்று அம்மாவுக்கு தந்த உறுதிப்படி என்றென்றும் தங்கள் பயணத்தில் நாங்களும் பயணிப்போம் சார்!!!🙏🙏🙏
நெகிழ்ச்சியான நினைவுப் பதிவு! சூப்பர் STVR!
Deleteஎனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அன்றைய தினம் அம்மாவுடன் உரையாடிடும் நல்லதொரு வாய்ப்பை இழந்துவிட்டேன். அந்த உள்ளூர வருத்தம் நீடித்த வருத்தமாகிடுமென்று நினைக்கவில்லை!
Deleteஎன்றும் உங்களுடன் நாங்கள்
DeleteNice 🧡
Deleteஅன்பான அன்னையைப் பற்றிய தங்களது நினைவுப்பதிவுக்கு நன்றி
DeleteSTVR சார்..
எனது கண்ணிலும் திரை....
Deleteநிச்சயமா அம்மா
ஆசிரியர்தான் நம்மள கவனிக்கிறார்னு தெரியல போலும்...காமராசரின் தாயார் பார்க்கப் போனவரிடம் சொன்னது நினைவு படுத்துது அவரின் நினைவு நாளில்
Deleteநெகிழ்ச்சியான பதிவு விஜி நண்பா.கண்டிப்பாக என்றென்றும் நமது ஆசிரியர் அண்ணாவிற்கு தம்பிகளாக நாம் இருப்போம்.
Deleteநெகிழ்ச்சியான்பதிவு மாம்ஸ் ❤️❤️❤️
DeleteS.t.v.r.ன் நினைவுப் பெட்டகங்கள் வெறும் blash back மட்டுமல்ல.நமது லயன் வரலாற்றின் பக்கங்கள். அன்றைய பொழுது நானும் அங்கிருந்தேன்.தொலைவிலிருந்து கவனித்தேன்தேங்க்ஸ் stvrஜி.
ReplyDeleteகாலமும் காமிக்சும் அனைத்தையும் கடந்து போகச் செய்யும்.
ReplyDeleteஸ்டீல்..
ReplyDeleteஅந்த அட்டைப்படத்துல இன்னொரு சமாச்சாரத்தை கவனிச்சீங்களா? பனிப்படுகையில் பாறை போல ஒன்று தெரிகிறதே.. அது விழுந்துகிடக்கும் ஒரு குதிரையின் பின்னங்கால் பகுதி!!
அட்டைப்படத்திலேயே இத்தனை ட்விஸ்ட்டுகளா!!!
ஓ....அப்ப முன்னாலருக்கது....
Deleteஏனோ தெரியல ஆசிரியர் விளம்பரபடுத்தைல காட்னதிலிருந்தே இனம் புரியாத ஈர்ப்பு...காத்திருக்கோம் அட்டை காயவும்....பனியிலே நனைந்து கரையவும்
//அட்டைப் படத்திலேயே இவ்வளவு ட்விஸ்ட்டுகளா?//கி. நா. புத்தகங்களை ரசித்து, மனம் ஒருமித்து ,புரிந்துபடிக்க வேண்டும் .புரிகிறது. நாளும் புதுப்படம் சொல்லும் கி .நா. புத்தகங்கள் நிச்சயம் நமது ரசனையை ஒருபடி உயர்த்தும்இனிய அனுபவமே .
ReplyDeleteஸ்டீல் மட்டுமல்ல ஜி .நானும் கவனித்து விட்டேன் . நீங்க சொன்ன பிறகு. தேங்க்ஸ் .
ReplyDelete84th
ReplyDeleteஎழுதப்பட்ட விதி..!
ReplyDeleteலண்டனில் உள்ள ஒரு பழைய மாளிகைக்கு குடியேறிய தெரசா ப்ரெண்டர்காஸ்ட்டுக்கு " தி டெத் ஆஃப் தெரசா ப்ரெண்டர்காஸ்ட் " என்ற புத்தகம் கையில் கிடைத்தது. அவளை சுற்றி நடக்கும் அனைத்தும் அந்த புத்தகத்தில் முன்னரே எழுதப்பட்டிருந்தது .
இதை கண்டு பயந்த தெரசா ப்ரெண்டர்காஸ்ட் இவைகளை டிடக்டிவ் ஜேஸன் ப்ரைஸிடம் கூறினாள். அனைத்தையும் கண்காணித்துக் கொண்டும், பின்தொடர்ந்தும் சென்ற ப்ரைஸுக்கு ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது.
மார்கன் ஃபடாய் எழுதியது போலவே ஆண்டின் இறுதிக்கு முன்பாக மாளிகை தீக்கிரையானது , உள்ளே தெரசா ப்ரெண்டர்காஸ்ட் இறந்து கிடந்தாள், இதைக்கண்ட ஜேஸன் ப்ரைஸ் ஆச்சர்யத்துடனும் மிகுந்த பதட்டத்துடனும் இருந்தார்.
மாளிகையும் தீக்கிரையானது. தெரசா ப்ரெண்டர்காஸ்ட்டும் கொலை செய்யப்பட்டாள். எல்லாமே மார்கன் ஃபடாய் எழுதியபடியே நடந்ததால் அவரை கண்டுபிடித்தால் ஒரு தெளிவு கிடைக்கும் என்று எண்ணிய ஜேஸன் ப்ரைஸ் தேடலில் களமிறங்கினார். இதை தொடர்ந்து வரும் அடுத்த இரண்டு பாகங்கள் தான் "மறைக்கப்பட்ட நிஜங்கள்! " மற்றும் " ஒரு திரை விலகும் நேரம் ".
இந்த கதைய பத்தி பாத்திங்கன்னா.... நிறைய இன்ட்ரஸ்டிங்கான ட்விஸ்ட் அன்ட் டர்ன்ஸ் இருந்துச்சி. முதல் இரண்டு பாகம் ரொம்பவே சுவார்ஸ்யமா இருந்துச்சி, சொல்லப்போனா என்னோட Favorite புக்ஸோடா லிஸ்ட்ல சேந்துரும்னு நெனைச்சேன். ஆனா மூணாவது பாகம் ராகுல் ட்ராவிட் போல தடுத்துடுச்சிங்க... முதல் இரண்டு பாகத்துல குடுத்த ஹைப்புக்கு முணாவது பாகம் ஈடுகுடுக்க முடியலங்க... மத்தப்படி பாத்தா கதை எனக்கு புடிசிருந்தது .....
நண்பரே மிக மிக அட்டகாச கதையது....வண்ணங்களும் வித்தியாசமாயிருக்கும்....இதற்காக விலையுயர்ந்த ப்ரத்யேக மையை ஆசிரியர் தருவித்திருந்தார்.....இறுதிபாகம் சரியாக புரியலன்னா பொசுக்கின்னு போனதா தோன்றும்...மீண்டுமொரு முறை படிங்க ...அந்த அற்புதத்தில் திளைக்கலாம்....
Deleteவாய்ப்பிருந்தா டேங்கோக்குள்ள நுழைங்க....சிவந்த மண் முதலிரண்டு பக்கங்களை புரட்டுங்க...பணத்தின் அவசியத்தை ...தனிமையின் சுவைய ஒரு வித்தியாசமான சுத்து சுத்த வச்சு நமக்குச் சொல்லி ஓங்கியறைவார்...நாம நம்ம குற்றங்கள் உணராம பிறரை குறை கூறுவதை.....தெளிவான வரிகளை தெளிவில்லாம படிச்சா புரியாமல் போகலாம்....அங்கே வெளியுலகில் தேடல்கள் ஓவியத்தில் காட்டி உள்லுலக தீர்வுகள் வரிகளில் காட்டியிருப்பார் நமதாசிரியர்...
இது என்னைப் போல் சிலருக்கு ஓர் நேரில் அனுபவிக்க முடியா ஓசியிலோர் பயணம்
@ஸ்டீல்
Deleteஆம் நண்பா மூன்றாம் பாகத்தில் மார்க்கம் படாய் யார் என்ற விவரம் வெளிவரும். இந்தப் பாகத்தை சரியாக புரிந்தால் அட்டகாசமான ஒரு SI-FI திரில்லர் நம் கண்முன் விரியும். இதில் சித்திரங்களும் வண்ணக் கலைகளும் கதையை எங்கோ கொண்டு சென்று விட்டது.
அதே நண்பரே
Deleteரிப் கிர்பி - 2
ReplyDeleteகடந்த ரிப் கிர்பி - 1 போல் இதில் வந்த அனைத்து கதைகளையும் உடனே (புத்தகம் வந்த மாதம் முடிவதற்குள்) படித்து முடித்துவிட்டேன்! அனைத்து கதைகளும் அருமை, 2 கதைகளை தவிர :-) சில கதைகள் கண்களில் நீரை வர வைத்தன, காரணம் ரிப் & டெஸ்மாண்ட் இருவருக்கும் இடையே நிலவும் பாசம்/உறவு/பெரும் தன்மை! டெஸ்மாண்ட்ன் கள்ளமில்லாத மனம் அவருக்கும் மற்றும் ரிப்க்கு எழுதிய வசனங்கள் சிறப்பு!
ஜனா - உங்களின் மொழிபெயர்ப்பு நன்று!
ஆமா எந்த கதை அது? ஜனா வின் மொழிபெயர்ப்பு?
DeleteLast one I guess!
Deleteஅடி பலமோ
Deleteநட்சத்திர வேட்டை:- சுமாரான கதை பெரிய ஈர்ப்பு இல்லை, அழுத்தமான சம்பவகள் இல்லை!
ReplyDeleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDeleteTex 75..😍😘😃Adios..Amigos..😍😃😘❤💛💙
பார்சல் கிட்டியாச்சே...!!
ReplyDeleteTex 75ஐ கைப்பற்றியாஆஆஆஆஆச்சே.....💕💞💪🎇🎆
ReplyDeleteவாஆஆஆஆஆஆவ்வ....
கனத்த பார்சலைக் கொரியர்காரர் எடுக்கும் போதே சிலீர்னு இருந்தது சார்....
ReplyDeleteசெம வேட்டைனு பார்சல் வெயிட்டே காட்டிட்டது...
பரபரனு பிரித்தால் முதலில் கண்ணில் பட்டது அந்த டெக்ஸ் 75புக்மார்க் தான்... ஆஸம்.
அடுத்து தல 75 மலரை எடுத்து ஆசையாக தடவி பார்த்தாச்சி...ஒரு 4கிலோவில பாதி வெயிட்டில் சும்மா அசுரகனத்தில் வித்தியாசமான எழுத்துருக்களில் MKS ராம் வைத்த பெயர் மிரட்டுகிறது....
"75 ஆண்டுகளாய் டெக்ஸ்...!!"
ReplyDeleteமூன்றே வார்த்தைகளில் டெக்ஸ் பயணத்தை சொல்லிட்டது...
செம கேட்சிங் சார்
எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)
ReplyDelete