நண்பர்களே,
வணக்கம். புரட்டாசி என்பதால் கொஞ்சம் புளிசாதத்தை கட்டிக்கினு, கொறிக்க கொஞ்சம் சிப்ஸையும் அள்ளிக்கினு, தொண்டையை நனைச்சுக்க கொஞ்சமா லைம் சூசையும் போட்டுக்கினு, ராவிலே மேட்ச் பாக்கலாம்னு திட்டம் போட்டா - பரமபிதாவும், பாகிஸ்தானும் வேறு திட்டம் வைத்திருந்திருக்கின்றனர் ! இன்னிக்கி பச்சை சட்டை போட்டு வந்த அம்புட்டு பேரும் படித்துறை பாண்டி ரேஞ்சுக்கே ஆடி வைக்க, நாலு சிப்ஸை மொசுக்கும் நேரத்துக்குள்ளாற - "மேட்ச் முடிஞ்சிடுச்சி ; ஊட்டுக்குப் போங்கப்பான்னு" ஸ்டேடியம் கதவை அறைஞ்சு சாத்திப்புட்டதால், புளிசாதத்தோடே டைப்ப கிளம்பி வந்தாச்சூ ! Phew....talk about an anti-climax !!
அட, anti-climax மேட்சிலே தான் என்றில்லையே - இம்மாதத்து நமது இதழ்களிலும் தானே - at least இந்த முதல் வாரத்திலாவது !
* 724 பக்கங்கள் சுப்ரீமோ ஸ்பெஷலில் மட்டுமே !!
*120 பக்கங்கள் "விதி எழுதிய வெள்ளை வரிகள்" - கிராபிக் நாவலில் !
*64 பக்கங்கள் "எல்லாம் கிழமயம்" - தாத்தாஸ் கிராபிக் நாவலில் !
*128 பக்கங்கள் - சாம் வில்லரின் கதையில் (சகோதரனின் சகாப்தம்)
*32 பக்கங்கள் - டைலன் டாக் குறும் கதையில் !
1072 பக்கங்களின் வாசிப்பு காத்துள்ள இம்மாதத்தினில், புக்குகளைப் புரட்டிப் பார்ப்பதைத் தாண்டி வேறெதெற்கும் நேரம் ஒதுக்க நண்பர்களின் பெரும்பான்மைக்கு இப்போது வரை நேரம் கிட்டியிருக்கவில்லை என்பது obvious ! So "குண்டு புக்" என்ற concept எல்லாம் இந்த நொடியில் ஷாஹீன் அப்ரீதியின் பந்து வீச்சைப் போலவே சற்றே தட்டையாய் தென்பட, என்னுள் கலவையான சிந்தைகள் ! And காத்திருக்கும் புது அட்டவணையினில் இந்த நொடியின் பாடங்களை உட்புகுத்த வேண்டிய அவசியமும் புரிகிறது !!
எது, எப்படியோ - இம்மாதத்தின் ஆன்லைன் ஆர்டர்களும் சரி, ஏஜெண்ட் ஆர்டர்களும் சரி - literally தெறி தான் ! Of course - 'தல' ஸ்பெஷலும், V காமிக்ஸ் இதழும் தான் இம்மாதத்தின் வேகப் பயணிகள் ; கி.நா.க்களின் takers சொற்பம் தான் ! "அட போவியா - வூட்டிலுள்ள பெருசுகளை சமாளிக்கவே தாவு தீருது ; இந்த அழகிலே கதையிலேயுமே மூணு பெருச்சாளிப் பெருசுகளின் வாழ்க்கைப் பயணம்லாம் எங்களுக்குத் தேவையா ?" என்று நண்பர்கள் நினைத்திருக்கலாம் என்பது புரிகிறது ! "வாசிப்பில் நொய்யு நொய்யென்ற கதைபாணிகளெல்லாம் நேக்கு ரசிக்காது !!" என்போர் தாத்தாக்களிடமிருந்து காத தூரம் விலகி இருப்பர் என்பதை யூகிக்க பெரும் சிரமமெல்லாம் இருக்கவில்லை தான் ; but yet இந்த தாத்தாக்கள் அழுகாச்சிப் பார்ட்டிகளே கிடையாது என்பதால் தான் என்னுள் ஒரு சிறு ஆதங்கம் - நண்பர்கள் இன்னும் கொஞ்சம் பரவலாய் இவர்களோடு பழகிப் பார்த்திருக்கலாமே ?! என்று !!
In fact - வாழ்க்கையின் அந்திமத்தில் மூவரும் இருந்தாலுமே, தத்தம் பாணிகளில் தம்மைச் சுற்றியுள்ளோரின் வாழ்வுகளுக்கொரு அர்த்தம் கற்பிக்க முயலும் பார்ட்டிகள் தானே - ஒவ்வொரு தாத்தாவும் ?! ஒரு பெருசு சதா நேரமும் கார்பரேட்களுக்கு எதிரான போராட்டங்களில் பிசி ; இன்னொரு தாத்ஸ் - யூனியன் ஆட்களோடு பிசி ; மூணாவதோ - பேத்தியின் பொம்மலாட்ட ஷோவில் ; குழந்தைகளை மகிழ்விப்பதில் பிசி ! So இதனை ஒரு அழுகாச்சிப் படைப்பென்று நண்பர்கள் ஒதுக்கியிருக்கக்கூடுமோ என்பது தான் உதைக்கிறது உள்ளுக்குள் !! Far from it - இந்தத் தொடரே பாசிட்டிவான பல சமாச்சாரங்களை நமக்குச் சொல்லிட முனையும் ஒரு முயற்சி அல்லவா ? பல் போன காலத்தில் காலனின் வருகையினை எண்ணிப் பதறிக் கிடப்பதற்குப் பதிலாய் தில்லாய் நடை போடும் இந்தப் பெரியவர்களை நம் சிறுவட்டம் தயக்கங்களின்றி ஏற்றுக் கொண்டால் இன்னும் குஷியாக இருக்கும் !
தாத்ஸ் ஜாலி கி.நா. என்றால் "விதி எழுதிய வெள்ளை வரிகள்" அந்த வானவில்லின் மறுமுனை !! டார்க்கான கதை பாணி ; மிரட்டும் பின்புலங்கள் ; சோகமான முடிவு என்று பயணிக்கும் இந்த ஆல்பத்தின் முதல் தூணே அந்தச் சித்திரங்கள் தான் ! சித்திரங்களையும் உள்வாங்கியபடியே கதையோடு டிராவல் செய்வோராய் நீங்கள் இருப்பின், இது நிச்சயமாய் உங்களை மெய்ம்மறக்கச் செய்யும் என்பேன் ! என்ன - துணையாய் வரும் ஆட்களில் யார் யாரென்று அடையாளம் கண்டு கொள்ள நான் மொக்கை போட்டேன் ! அந்தச் சிரமம் உங்களுக்கு வேணாம் என்பதாலேயே கதை மாந்தரை அறிமுகம் செய்திடும் ஒரு பக்கத்தையும் உருவாக்கியிருந்தோம் ! லைட்டாக சந்தேகம் எழும் இடங்களில் மட்டும் 'பச்சக்' என அந்தப் பக்கத்துக்கு ஒரு தாவு தாவினீர்களெனில் - பணியில் பயணம் சுளுவாய் தொடர்ந்திடும் ! நாம் பார்த்திரா ஒரு பூமியில் ; நாம் அறிந்திரா ஒரு காலகட்டத்தில் அரங்கேறிய வாழ்க்கையின் yet another இருண்ட அத்தியாயத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதுமே ஒரு வித சுவாரஸ்யமாய் இருக்கக்கூடும் என்பேன் ! Why not give it a try folks ?
Of course - இன்றில்லாவிடினும் நேரம் கிட்டும் ஒரு பொழுதினில் சுப்ரீமோ ஸ்பெஷலுக்குள் புகுந்திடுவீர்களென்பதில் எனக்கு ஐயங்களில்லை ! And இங்கு உள்ள 724 பக்கங்களுள் - PATAGONIA என்ற பெயருடன் வெளியான மௌரோ போசெல்லியின் படைப்பான "வந்தார் வென்றார்" சாகசத்தினை நீங்கள் (சு)வாசிக்கப் போகும் வேளைக்கென ஆவலாய் காத்திருப்பேன் ! முற்றிலுமாய் ஒரு புது மண்ணில் ; முற்றிலுமாய் ஒரு புது அவதாரில் ; முற்றிலுமாய் ஒரு புதுப் பொறுப்பில் நம்மவர் தெறிக்க விடுவதை நீங்கள் எவ்விதம் ரசித்தீர்களென்று தெரிந்து கொள்வதில் கிடைக்கக்கூடிய ஒரு சின்ன திருப்தியினை எதிர்நோக்கியே அந்த ஆவல் ! Oh yes - 'இன்னாபா கதை இது ? வழக்கமான பாணி இல்லாம இந்த எக்ஸ்டா நம்பர்லாம் தேவை தானா ??' என்று நண்பர்களில் ஒரு அணியினர் கேட்டாலும் வியப்பு கொள்ள மாட்டேன் தான் ; but still உங்களின் எண்ணவோட்டங்களை அறிந்திட முயல்வதும் எனது பணிகளின் ஒரு அங்கம் எனும் போது - சிலாகிப்புகளோ ; சிராய்ப்புகளோ they'd all be welcome !!
ரைட்டு....இந்த மாதத்துக் கத்தையையே கையாள நீங்கள் தடுமாறி வரும் வேளையினில் தீபாவளிக்கென காத்துள்ள 'தல' vs தளபதி battle க்கு நான் தயாராகி வருகிறேன் ! அதற்குள் ஐக்கியமாகிடப் புறப்படும் முன்பாய், உங்களுக்கு ஒரு சின்ன exercise !! 2024-க்கான அட்டவணை இன்னும் 2 வாரங்களில் ரிலீஸ் என்பதை நாமறிவோம் ! என்னிடத்தில் நீங்களிருப்பின், 2024-ன் அட்டவணையினை எவ்விதம் அமைத்திருப்பீர்களென்று காட்டுங்களேன் ப்ளீஸ் ?
இவற்றை வழிகாட்டிகளாய் வைத்துக் கொள்ளுங்கள் :
- +டெக்ஸ் டபுள் ஆல்பங்கள் நடப்பைப் போலவே தலா ரூ.160 விலைகளில் !
- +லக்கி லூக் ; சிக் பில் போலான 48 பக்க கலர் இதழ்கள் தலா ரூ.120 விலைகளில் !
- +ஏஜெண்ட் சிஸ்கோ ; ஆல்பா போலான டபுள் ஆல்பமெனில் ரூ.250 வீதம் !
- +Supreme '60s தனித்தட திட்டமிடலை இந்த ரெகுலர் சந்தாவோடு சேர்த்திட வேண்டாம் ; அதனை ஏப்ரலில் தனியாய் அறிவிக்க உள்ளோம் !
- +V காமிக்ஸ் சராசரியை ரூ.90 அல்லது ரூ.100 என்ற விலையில் போட்டுக் கொள்ளுங்கள் !
- +வழக்கம் போல மொத்த சந்தா தொகையினை ரூ.5750 என்றோ ரூ.5850 என்று வைத்துக் கொள்ளுங்கள் !
மேற்படி hints சகிதம் - யார் அட்டவணைக்கு உள்ளே ? யார் நம் மனசுகளின் உள்ளே ? என்று திட்டமிட்டு இங்கே உங்களின் அட்டவணைகளாகப் போடுங்களேன் guys ? ரெடியாகியுள்ள நமது அட்டவணையோடு நெருங்கிச் செல்லும் திட்டமிடலுக்கு 2024-ன் சகல இதழ்களும் நம் அன்புடன் அனுப்பிடப்படும் ! So why not give it a shot all ?
Bye all...see you around ! Have a cool Sunday !!
And அக்டொபர் இதழ்களுக்கு கொஞ்சம் நேரம் தந்திட முயற்சிக்கலாமே - ப்ளீஸ் ?
P.S : மதுரை புத்தக விழாவில் நமக்கான விற்பனை 🔆🔆🔆பின்னிப் பெடலெடுத்து வருகிறது ! இம்முறை பள்ளி மாணாக்கரை அவ்வளவாய் அழைத்து வரக்காணோம் என்றாலும், overall response செம !! அடுத்த ஞாயிறு வரை தொடரும் விழாவினில் வர்ண பகவான் மட்டும் கலந்து கொள்ளாதிருந்தால் சூப்பராக இருக்கும் ! Fingers crossed !!
1 st...
ReplyDelete2nd
ReplyDeleteசெல்ஃபி அனைத்தும் அருமை. இங்கே இன்னும் புத்தகம் வரவில்லை
ReplyDelete4th std....
ReplyDeleteவந்தார் வென்றார் கதை அனல் பறக்கிறது. கதை தேர்வு அருமை.
ReplyDeleteநன்றி சார் !
Deleteவந்தாச்சுங்கோ
ReplyDeleteI am in...
ReplyDeleteவருசா வருசம் இதே போல டெக்ஸுக்கு பிறந்த நாள் மலர் விட்டா ரொம்ப சந்தோசப்படுவோம்
ReplyDeleteஆமா...
Deleteரெண்டு கலர்..
ரெண்டு கருப்பு வெள்ளை...
ஒரு வெள்ளை கருப்பு...
அட...அம்புட்டு வசதியாவா இருக்கு தலைக்கு தாக்கான் குடுக்க ?
Deleteதலகாணியாவும் யூஸ் ஆகுதே சார்....
Delete+11111111
Deleteதலையணை = இறகுகள் அல்லது வேறு மென்மையான பொருட்களால் நிரப்பப்பட்ட ஒரு செவ்வகதுணிப்பை.,தூங்கும்
Deleteபோது தலைக்கு வைக்க பயன்படுவது = தலைக்கு தாக்கான்
KOK@ நீ தொப்பை மேலயே வெச்சி படிக்கிலாம்யா....!!!!😉
Deleteநீ உப்ப சுப்ரீமோவை அப்படி படிப்பதை ஆசிரியர், 4மாசம் முன்பே ஓரோபோரஸ்ல வந்து பார்த்துட்டு போயிருப்பாருள்ள...😜
ஞான் உறங்கான் போயி.......
Deleteடெக்ஸ் எல்லாம் தக்கானாக வாய்ப்பே இல்லீங்க சார். வாசிப்பு மறு வாசிப்புக்கு உகந்த இதழ்கள் டெக்ஸ் தான்.
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஆஜர்
ReplyDeleteவணக்கம் ஆசிரியர் சார்.
ReplyDeleteவணக்கம் காமிக்ஸ் காதலர்களே.
ReplyDelete14th
ReplyDeleteவந்துட்டேன்.
ReplyDeleteV காமிக்ஸ் தனி தானே சார். அதுவும் சந்தாவில் சேர்த்தி இல்லை தானே
ReplyDeleteஆடு...குட்டி...
Deleteகுட்டி...ஆடு...
All the same தானே சார் ?!
இன்னும் ரெண்டு நாளைக்கு. கேரட், காளான், காலிப்ளவருனு தானுங்க நினைக்கனும்.....!!!
Deleteவணக்கம் ஆசிரியர் சார்&காமிக் ஸுவாசகர்களே
ReplyDelete// நமது அட்டவணையோடு நெருங்கிச் செல்லும் திட்டமிடலுக்கு 2024-ன் சகல இதழ்களும் நம் அன்புடன் அனுப்பிடப்படும் ! So why not give it a shot all ? // I'm game sir
ReplyDeleteAlready completed Sam willer, dilen and first 2 tex stories. Dont assume we dont read sir. Print more tex books like this. Havent read more than 30 pages of oru nodi 9 thota. Thats the reality
ReplyDeleteநண்பரே, இதைப் படிக்கணும் ; அதைப் படிக்கணும் என்ற கட்டாயங்கள் லேது ! பிடிக்கும் எதையோ படிக்கும் வரை எல்லாமே ஒ.கே தான் !
Delete////+V காமிக்ஸ் சராசரியை ரூ.90 அல்லது ரூ.100 என்ற விலையில் போட்டுக் கொள்ளுங்கள்///
ReplyDelete--ஙே...ஙே.....
குண்டு புக்ஸ் குறைக்கும் முடிவு சரிதான் சார்..
ஆனாக்கா V ஐயை ரெகுலர் சந்தாவில் இணைத்தால் சந்தா பார்டிகள் பலரும் ட்ராப் ஆக கூடுமே????
ஆமாங்க ஆமா
Deleteஅட, இதுக்கொரு சந்தா . அதுக்கொரு சந்தா என்பது தானே நமது நடைமுறை சார் ? அதே போலவே போடுங்க !
Deleteஆனால் இரண்டும் சேர்ந்து 5850 ககுள் வரவேண்டுமா சார்?
Deleteஇல்ல சார் ; தற்போது போலவே தான் ! ரெகுலர் லயன்- முத்து சந்தா around 5750
DeleteV எப்போதும் போல ! 3 மாதச் சந்தாக்கள் or 6 மாதச் சந்தாக்கள் !
அப்போ சரி திஸ் இஸ் வாட் ஐ வாண்ட். சூப்பர் சார்.
Deleteநாளை காலை பேனா, பேப்பர் உடன் உக்காந்து அட்டவணை போட்டு பார்க்கிறேன்.
Deleteமானே.... தேனே ...என்றபடிக்கே ஒரு ஆண்டுமலர் ; தீபாவளி மலர் ன்னும் சேர்த்துக்கோங்க சார் !
DeleteDefinitely definitely.
Delete/!!!தற்போது போலவே தான் ! ரெகுலர் லயன்- முத்து சந்தா around 5750
DeleteV எப்போதும் போல ! 3 மாதச் சந்தாக்கள் or 6 மாதச் சந்தாக்கள் !///
----யம்மாடி... பாயசத்தை வார்த்தீர்கள் சார்....!!
பகல்ல அட்டவணை போடுறான்; பரிசு அடிக்கிறான் நம்பிள்...😍
(அதென்ன பால் தானே வார்ப்பாங்க ஓய்னு கேட்பவர்களுக்கு...இன்னிக்கு எங்குட்டு போனாலும் வடை, சொய்யான், பாயாம்னு முக்கிட்டாங்க....ஹூம்!)
///மானே.... தேனே ...என்றபடிக்கே ஒரு ஆண்டுமலர் ; தீபாவளி மலர் ன்னும் சேர்த்துக்கோங்க சார் !///
Deleteஆமா..ஆமா..வாத்தியாரய்யா😍💕🎇🎆
தீவாளிமலர் ஒண்ணுதானாம்.... கேட்டுச்சாப்பா... ரம்மி, கடல், KS, கிரி, காங்கேயத்தாரு.... உள்ளிட்ட டைகர் வகையறா...🤣
சார் 4 புத்தகங்களை படித்து விட்டு, டெக்ஸில் இரண்டு கதைகளை படித்து விட்டேன்
ReplyDeleteஉள்ளேன் அய்யா 👍🥰
ReplyDeleteSupremo special
ReplyDeleteமுதல் இரண்டு கதைகள் படிச்சாச்சு..!
திக்கெட்டும் திகில் :
போறபோக்குல வண்டியை நிறுத்தி ஒரு டீ சாப்பிடுறது மாதிரியான குட்டி (குட்டின்னா சின்ன... பெண்குட்டி அல்ல) சாகசம்..!
கார்சன் டெக்ஸ் போர்சன்கள் செம்ம..! அபாச்சேக்களின் எல்லைக்குள் மாட்டிக்கொள்ளும் ஒரு பெண்மணியையும் அவரின் மகளையும் மீட்டுவருவதோடு.. அபாச்சே ரவுடி சில்வர் என்கிற பிளாட்டியோடாவையும் ராணுவ உதவியோடு சோலி முடிக்கிறார்கள்..! எண்பதே பக்கங்களில் கொஞ்சமும் தொய்வில்லாத நச் சாகசம் திக்கெட்டும் திகில்.! கலரிங் அட்டகாசம்.!
சர்பத்தின் சின்னம்:
காலங்காலமாய் உருட்டப்படும் உலகின் மிகப்பெரிய உருட்டுகளில் ஒன்றான இரசவாதத்தை கையில் எடுத்துக்கொண்டு.. எளிமையான சம்பவங்களைக் கோர்த்து நன்றாகவே ஒரு கதையை கொடுத்திருக்கிறார்கள்..! ஓவியங்கள் மட்டும் கொஞ்சம் சுமார் ரகம்..! சில க்ளோஸ்அப் காட்சிகளில் கார்சனையும் டெக்ஸையும் பார்க்கும்போது ஐ படத்தில் ஊசிப்போடப்பட்ட விக்ரம் மாதிரி... அதுக்கூம் மேலேன்னு சொல்வாரே.. அந்த கெட்டப்பில் தெரிகிறார்கள்..!
கதை பரவாயில்லை.. படிக்க நன்றாகவே இருக்கு.!
மீதி ரெண்டு கதைகளையும் கொஞ்சம் கேப் விட்டுப் படிக்கணும்..!!
12 டெக்ஸ்- 6 டபுள் ஆல்பம். 2 ட்ரிப்ள் ஆல்பம். 1 பிறந்த நாள் மலர். ஒரு தீபாவளி மலர்.
ReplyDeleteலக்கி-2 டபுள் ஆல்பம்.
சிக்பில் -1 டபுள் ஆல்பம்.
ஆல்பா, சிஸ்கோ, ஜானி இதெல்லாம் மானே தேனே பொன்மானேங்கற மாதிரி போட்டுக்க வேண்டியது தான்.
அப்படியே அந்த ரூட் 66 லிஸ்ட்.
Deleteமாப்பு @ ரூட்டு, கேரட்டு, அல்வாலாம் ஈரோடு ஸ்பெசல்கள்ல தான்...
Deleteவந்தார் ..வென்றார் டெக்ஸின் ஒரு க்ராபிக் நாவல் அவ்வளவு தான் என்னை பொறுத்த வரை..மறுவாசிப்புக்கு எல்லாம் கஷ்டம் தான்...4கதைகளில் சர்ப்பதின் சின்னம் டாப்.
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDeleteMe in..😍😘
வணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteடெக்ஸ் கதைகள் என்றாலே மறுக்கா மறுக்கா வாசிப்புக்கு உகந்தவைதானே சார்... இதில் குண்டு புக் என்ன.. சிண்டு(!!!) புக் என்ன..? எனக்கு இன்னும் புத்தகங்கள் வராததால் இப்போதுகூட 'நெஞ்சே எழு' கதையினை படித்துக் கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteஇப்போதுதான் நெஞ்சே எழு அட்டைப்படத்தை கவனித்துப் பார்க்கிறேன். என்ன.. அந்த செவ்விந்தியனை சற்று கீழே வரைந்திருக்கலாம்., அல்லது டெக்ஸின் வின்செஸ்டரை சற்று மேலே தூக்கி வரைந்திருக்கலாம். அப்படி வரையப்படாததால் நன்றாக குறி பார்த்து சுட்டுக் கொண்டிருக்கிறார் நம்ம தல.
ReplyDeleteஇத அப்பவே நம்ம ஈ . வி. சுட்டி காமிச்சுட்டு இருக்காரு.
Deleteஅது நாம வரைஞ்சதில்லீங்கோ ; ஒரிஜினல் போனெல்லி டிராயிங் ! நாம பின்னணி கலரிங்கை மட்டுமே மாத்தியிருக்கோம் !
DeleteThis comment has been removed by the author.
Deleteபஞ்சு வெடிச்சா அது நூலா போகும்..
Deleteநெஞ்சி வெடிச்சா அது தாங்காது...
தாத்தாக்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ரசிக்க வேண்டிய உணர வேண்டிய புத்தகமே. நிறைய விஷயங்களை நையாண்டியோடு சொல்லிச் செல்லும் தொடர் இது. முக்கியமாகப் பாராட்ட வேண்டியது மொழிபெயர்ப்பை. கரடுமுரடான கதைக்கேற்ற கச்சடாவான மொழிபெயர்ப்பு. எல்லாம் கிழமயம் தாத்தாக்களின் லூட்டி மயம்.
ReplyDeleteஇதோ முழுமையான சாம்பிள் அட்டவணை முதல் ஆளாக,
ReplyDeleteபட்ஜெட் தொகை - 5750 to 5850
1. டெக்ஸ் டபுள் ஆல்பம் - 160
2. டெக்ஸ் டபுள் ஆல்பம் - 160
3. டெக்ஸ் டபுள் ஆல்பம் - 160
4. டெக்ஸ் டபுள் ஆல்பம் - 160
5. டெக்ஸ் டபுள் ஆல்பம் - 160
6. டெக்ஸ் கலர் டபுள் ஆல்பம் - 250
7. டெக்ஸ் டிரிபிள் ஆல்பம் - 225
8. டெக்ஸ் Single ஆல்பம் - 90
9. டெக்ஸ் தீபாவளி மலர் - 400
(இதில் இளம் டெக்ஸை எங்கும் வேண்டுமானாலும் புகுத்தி கொள்ளலாம்)
10. லக்கி டபுள் ஆல்பம் - 250
11. தோர்கல் டபுள் ஆல்பம் - 250
(முத்து ஆண்டு மலர்)
12. XIII டபுள் ஆல்பம் - 250
13. கோடை மலர் - 500 (டேங்கோ, ரூபின், ஆல்பா, சிக்பில்)
14. ப்ளூகோட்ஸ் - 120
15. IRS - 250
16. ஜானி- 120
17. வன்மேற்கின் அத்தியாயங்கள் பாகம் 5 - 125
18.வன்மேற்கின் அத்தியாயங்கள் பாகம் 6 -125
19. நெவாடா - 125
20. டெட்வுட் டிக் - 120
21. ஸ்டெர்ன் - 150
22. பதுமுகம் 1 - 250
23. புதுமுகம் 2 - 120
24. புதுமுகம் 3 - 120
Last but not least
25. லயன் 50வது ஆண்டு மலர் - 1200
Total - Rs.5835/-
V Comics
1. Zagor - 90
2. Zagor - 90
3. Zagor - 90
4. Zagor - 150
5. Robin - 100
6. Robin - 100
7. Mr. No - 100
8. Mr. No - 100
9. வன்மேற்கின் அத்தியாயங்கள் பாகம் 7 -125
10. வன்மேற்கின் அத்தியாயங்கள் பாகம் 8 -125
11. இளம் டெக்ஸ் - 100
12. புதுமுகம் - 100
மொத்தம் - Rs.1270/-
ஆசிரியர் கொடுத்த டிப்ஸை வைத்து முதல் ஆளாக மாதிரி அட்டவணையை வெளியிட்டுள்ளேன். இது போன்ற போட்டிகளில் பின்னால் வருபவர்களுக்கு தான் சாதகமாக அமையும். ஆனால் அதையும் மீறி பதிவிட்டுள்ளேன். புனித மானிடோ அருள் புரியட்டும்.
Good job...
Deleteஇல்லை நண்பரே
Deleteமுதலில் வந்தது
உங்கள் பதிவே
வெற்றி
உங்களுக்கே
@VTK 😍😃
DeleteSuper..அருமையான தெளிவான லிஸ்ட்..👍👌
எனக்கு பிடிச்ச "தாத்தாஸ்" க்கு ஒரு ஸ்லாட் சேத்துக்குங்க..🙏💐
முதலில் வருபவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமலில்லை சார்.
Deleteஎடிட்டர் சொன்னது அவர் போட்ட அட்டவணைக்கு நெருக்கத்தில் யார் யூகம் பண்றாங்களோ அவங்களே வெற்றி பெறுபவர்.
Correction - லயன் 40வது ஆண்டு மலர்
ReplyDeleteஉங்களிடத்தில் நானிருந்தால்....
ReplyDeleteஇளம் டெக்ஸ் மாதா மாதம்...
நம்ம டெக்ஸ் 9 மாதம்
மார்ட்டின் 2 மாதம்
ஸ்பைடர் மறுபதிப்பு வண்ணத்ல 6 மாதம்
லக்கி இரு மாதம்
கிட்டிரு மாதம்
சுஸ்கி இரு மாதம்
ஸ்மர்ஃப் மூனு மாதம்
இரத்தப் படலம் 2 மாதம்
சிங்கிள் சாட் மூவிரு மாதம்
ஆல்ஃபா இரு மாதம்
ரூபினிரு மாதம்
தோர்கள் நாலே மாதம் அனைத்து கதைகளும்
தாத்தாஸொரு மாதம்
டேங்கோவோர் மாதம்
....நினைவுக்கு வந்தா தொடரும்
டேங்கோல ரெண்டு
Deleteமாங்கால ரெண்டு
மா துஜே சலாம் போல ரெண்டு
ஸ்போர்ட் கதை மினி லயன்ஸ் விட்டீர்களே எந்த கேம் தேர்ந்தெடுப்பதுன்னு திணறுவானே அது போலிரண்டு
ஆர்ச்சிரண்டு
ஸ்பின் ஆஃப் மூனு
டைலன்ல மூனு
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதாத்தாவ மூனு கதையும் மொத்தமா படிக்கணும்னு வெய்ட்டிங்...இரண்டாவது கதையை தேடுவேன்
ReplyDeleteவிதி எழுதிய பாதி தாண்டினேன் செம்மையான கதை...பணியாளர்கள் பேர் வரைல முன் பக்கம் வந்து கடந்து செல்வது பேருதவியாருந்தது...தொடரட்டும் இப்பாணி...
ReplyDelete
ஹைய்யா புதிய பதிவு....
ReplyDeleteHi..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவிக்ரமிடத்தில் இருந்தால்....
ReplyDeleteசாகோர்....8
சாகோர் டெக்ஸ்...4
வன்மேற்கு அத்தியாயம்...2
மிஸ்டர் நோ...4
சிறப்பு மலர்...500 விலையில் 2
வி காமிக்ஸ் எனது விருப்பம் வரும் ஆண்டுக்கு
Deleteசாகோர் - 3
வ மே அ - 2
Mr No - 3
இளம் தோர்கல் -3
ஆண்டு மலர் -1
மொத்தமாக 12 புத்தகங்கள்...
@TSK.. இரும்பு கையாரே..
Delete😍😃
V காமிக்ஸ் லிஸ்ட் ..O.k..💐🌷
// And அக்டொபர் இதழ்களுக்கு கொஞ்சம் நேரம் தந்திட முயற்சிக்கலாமே - ப்ளீஸ் //
ReplyDeleteநேரமின்மை சில,பல காரணங்களால் இன்னும் அக்டோபர் இதழ்களை வாசிக்க முடியவில்லை, ஆயுத பூஜை விடுப்பில்தான் வாசிக்கனும்...
Present sir
ReplyDeleteவந்தார் வென்றார். டெக்ஸ் வில்லர் என்னும் மாஸ் ஹீரோவின் போராட்டங்களின் ஒவ்வொரு துளியும் சிறப்பானவை என்பதை உணர்த்தும் கதை .ஆல் டைம் மறுவாசிப்பிற்கு ஏற்ற கதை." நீங்கள் மனிதர்களை கண்ணியமான விதத்தில் நடத்துவதால் நல்ல விளைவுகள் கிடைக்கின்றன. டெக்ஸ் ஒரு கௌச்சோவின் கையை முறித்து தோற்கடித்த பின்னும் அவனை நண்பணாக்கிக் கொள்வதுஎல்லாருக்கும் முடியாது" //என் வேலையைவிட என் கொள்கைகளுக்கு நேர்மையாக இருப்பது மிக முக்கியம்//மிகமிக ரசித்து படித்துக் கொண்டிருக்கிறேன் . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஅருமை ஜி... அனுபவித்து வாசிக்கிறீங்க.... அற்புதம்...
Deleteஎன் பார்வையில்
ReplyDeleteஇந்த ஆண்டின்
சிறந்த அட்டை படம்:
1. டைலன் டாக் மினி
2. மேகி கேரிசன்
டைலன் டாக் மினி
ReplyDeleteமதிப்பெண்: 10/10
விங் மாஸ்டர் ஜார்ஜ்:
ReplyDeleteஇலவச பதிப்பு
அந்த கோணல் ஓவியங்களில் ஓர் வசீகரம் இருக்கிறது. அதன் சிறந்த ரசிகன் நான்..
My choices
ReplyDeleteTex willer
Lucky luck
Chick bill
Suski and visky
அலிபாபா
Tiger blueberry
Modestly Blaise
Tango
Sisco
ஆல்ஃபா
Rubin
Thathas
Some graphic novels
Tex classic reprint
Reporter Jhonny
(Expecting new Largo, undertaker, new cowboy or Shelton and spin-off 13)
Big boys 2
Solomon David or stern வெட்டியான்
பவுன்சர்
Dylon dog mini free
Martin mystery
Thorgal
Nevada
V comics
Robin
Cowboy series வன்மேர்க்கு
Amazon hero mr No
Zagor
Place a budget too sir..
Deleteஆபீஸிலிருந்து வீடு திரும்பவே இரவு 10 மணி ஆகிவிடுகிறது. வீடு திரும்பினாலும் டாடியிடம் 11 மணி வரையிலாவது பேசிவிட்டு/ கதை கேட்டுவிட்டுதான் தூங்குவோம் எனக் காத்திருக்கும் செல்ல மகள்கள் (தற்போது தோர்கல் கதைகளை சொல்லி வருகிறேன். பெரிய மகள் - அவளே படித்துத்துக் கொள்கிறாள்.. சிறியவளுக்கு நான் படித்துக் கதை சொல்லி வருகிறேன்). இரு மகள்களுமே தோர்கல் கதைகளுக்கு தீவிர ரசிகைகளாகிவிட்டிருக்கிறார்கள்!
ReplyDeleteஆகவே, கைக்கு எட்டும் தூரத்தில் மசியின் வாசத்தோடு விதவிதமாய் புத்தகங்கள் இருந்தும்கூட படிக்க நேரமில்லாத நிலையே நிலவுகிறது. காலையிலும், இரவிலும் சாப்பிடும்போது சில பக்கங்களைப் புரட்ட முடிந்தாலே இப்போதெல்லாம் மனசு சமாதானமாகிவிடுகிறது!
இதுவும் கடந்துபோகும். சதா காலமும் நம் காமிக்ஸ் புத்தகங்களோடே அன்னம்தண்ணி புழங்கிக் கிடக்கவேண்டிய நாட்களும் வந்து சேரும். அதற்காக வெயிட்டிங்.....
பருவங்கள் மாறி வர....
Deleteவருஷங்கள் ஓடி விட..
நம் பாணிகளில் மாற்றங்களை கொணர்வது இன்றியமையா அவசியமே சார் !
/// சதா காலமும் நம் காமிக்ஸ் புத்தகங்களோடே அன்னம்தண்ணி புழங்கிக் கிடக்கவேண்டிய நாட்களும் வந்து சேரும்... ///
Deleteஇப்போதெல்லாம் நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.
நான்கு நாட்களில் அக்டோபரின் அனைத்து புத்தகங்களும் படித்தாகிவிட்டது.
DeleteErode விஜய்.. மனதை தொடுகிறது உங்கள் பதிவு
Delete.. நானும்.. மகனும், மகளும்
குழந்தைகளாக இருந்த போது அப்படித்தான் இருந்தேன்... ❤️... இப்ப பெரிதான குழந்தைகள்
போனைத்தான் பார்க்கிறார்கள்.. படிக்க நேரம் உள்ளது but, வரைய
நேரம் இல்லை. Editor சொன்ன மாதிரி அதுவும்
மாறும்.. நேரம் வரும்.. வாழ்த்துக்கள்.. ❤️👍
@Easwar
Deleteநன்றி நண்பரே! _/\_
@பத்து சார்
உங்களை மாதிரி ரிடையர் ஆகி நானும் காமிக்ஸே கதின்னு கிடக்க இன்னும் 35 வருசங்கள் கிடக்கேன்னு நினைக்கும் போதுதான்...
தோர்கல் VS நெவாடா
ReplyDeleteவிமர்சனம்:
தோர்கல், எனது சிறு வயதில் நான் பார்த்து வியந்த கதைகள். முக்கியமாக அட்டை படங்கள்.. அதன் வடிவமைப்பு. அதில் காணப்படும் அந்த லோகோ. கண்களை உறுத்தாத வண்ணங்கள். அந்த சொரசொரப்பான பக்கங்களில் மாயாஜாலங்களை கண்டு வியந்திருக்கிறேன். அந்த மயக்கம் இன்னும் எனக்கு உண்டு. ஒவ்வொரு பேனலும் பல்வேறு சங்கதிகளை உள்அடக்கி இருக்கும். பேனலின் கதையின் பின்புலத்திற்கேற்ப அதன் வண்ண கலவையில் மாயாஜாலங்கள் இருக்கும்.
இதிலும் நான் கிறங்கி தான் போனேன்.
மதிப்பெண் 8/10
தோர்கல் கதைகளை நாம ஆரம்பிச்சதே பத்து வருசங்களுக்கு முன்னே தானுங்கண்ணா ? உங்களுக்கு அப்போ சின்ன வயசுன்னா இப்போ விடலைப் பருவமா கீதுமோ ?
Deleteஹிஹிஹி இதை தான் நான் கேட்க வந்தேன். 🤭
DeleteL.C. and SK@ அவரு சிறுவயதுல வாசித்த மாயாஜால, பேன்டசி கதைகளை சொல்றாருங்க...
Deleteஅதை போல இப்ப தோர்கல் இருப்பதால அந்த சிறுவயது நினைவுகளை கிளறிட்டதுனு சொல்ல வர்றாருனு நினைக்கிறேன்.
This comment has been removed by the author.
DeleteSTVR சொல்வது தான் சரி.
Deleteஎனது சிறு வயதில் நான் ஆங்கில மொழியில் இருந்த தோர்கல் கதைகளை புரட்டி இருக்கிறேன். அந்த நினைவுகள்...
நெவாடா :
Deleteமுதல் கதை.
நண்பர்கள் பலரும் இந்த கதை பற்றி மிகுதியாக சொன்னார்கள்.
ஒருவித தயக்கத்துடன் உள் புகுந்தேன்.
ஆனால் இந்த ஹுரோ, அந்த கால ரஞ்சன் போல் அட்டகாசமாய் தெரிந்தார்.
முதல் அத்தியாயமே அட்டகாசம்.
அந்த இருண்ட பக்கங்களைத் தாண்டி. கிடைக்கப் படும் அசைன்மெண்ட் -ஐ பக்காவாக கிளியர் செய்கிறார்.
அந்த ஒப்பனிங் சீனே சூப்பர். அந்த பைக் பாலைவனம் துவங்கி நகர் வரைக்கும் பயணிக்கும் காட்சிகள் செம.
அந்த பைக் ஒய்யாரமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும், அந்த பேனலில்
அந்த ரயில் பயணத்தில் என்று அந்த ஒரு பக்கத்தில் பெரும் காட்சியே விரிந்திருக்கும்.பக்கம்- 19.
டைனமென்ட் குச்சிகளை தெறிக்க விட்ட ஸ்டண்ட் மேன் லேஸி ராபர்ட் -ஐ காப்பாற்றும் அந்த ஃபைட் பக்கா.
" அப்ப கடவுள் அனுப்பலயா..." எனும் டயலாக் நச் காமிடி.
மற்றும் அந்த பிசாசு மெலடி நடிகையை நெவாடா காப்பாற்றியவுடன், அவள் அடிக்கும் கமெண்ட் "நானுமே ரொம்ப சேட்டைகாரியாக்கும்" மஸ்த் சீன்.
ஹோலோ ஸ்டார் மேக்நாப், டான் வில்லாவின் மகள் ரோஸா வில்லாவுடன் காதல் களியாட்டம் போட, அதில் எழும் பிரட்சனையால் வாழ்வா சாவா என ஒத்தைக்கு ஒத்தை சண்டை செம கிளைமாக்ஸ்.
இறுதியில் " டான் வில்லாவின் நேர்மை".
அப்புறம் அடுத்த கதையை
எதிர் பார்க்க சில சுவாரஸ்யங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.
1.
"பொ ஷேமியன் கிளப்"ல் நடந்தது என்ன..?
2.
ஜெனரல் பெர்ஷப் ஏன் நெவாடாவின் தோலை உரிக்க காத்திருக்கிறார் .
3.
ஏவா, ஏன்
நெவாடா -வை மீண்டும் சந்தித்தால் கொலை செய்வேன் என்று எச்சரிக்கிறாள்.
4.
லூயிக்கு என்ன வாக்கு கொடுத்திருக்கிறான் நெவாடா.
முத்தாய்ப்பாக
"அதிஷ்ட தேவதைகளுக்கு ஸ்டார்களை ரொம்ப பிடிக்கும் போலும்.
மற்றும்
இப்படித்தான் ஓர் மனிதன் சூப்பர் மேனாக உருவாகிறான்".
மதிப்பெண் 4/5
நெவாடா...
Deleteவாங்கிய 600 + சொச்சம் பேரில் எனக்கு மட்டுமே பிடித்திருந்தது போல..
ஒருவேளை ஜூலியாவுக்கு நிகழ்ந்தது தான் இவருக்கும் நிகழுமோ..
என்ட குருவாயூரப்பா...
நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருக்கும் யுத்த களங்கள். //இந்த கொரில்லா தந்திரங்களில் பின்னால் இருப்பது யார் என்பது என்னைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும் சார் அவரை நம் நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததும் நானல்ல. டெக்ஸ் ஒரு மதி யூகி அவர் நம் பக்கம் இருந்தவரை எல்லாம் நல்லபடியாக நடந்து வந்தது//. பட்டையை கிளப்பிக் கொண்டுள்ளது .வந்தார் வென்றார்.பட்டாசு .
ReplyDelete:-)
Deleteவிதி எழுதிய வெள்ளை வரிகள் மற்றும் சகோதரனின் சகாப்தம் படித்துவிட்டேன். சித்திரங்கள் அமர்க்களம். பொதுவாக v comics is simple to read in short time I like it. விதி எழுதிய வெள்ளை வரிகளின் கதை சூழ்நிலை இன்றைய ரஷ்ய உக்ரைன் மற்றும் இஸ்ரேல் பாலஸ்தீன பேரை நினைவூட்டுகிறது. காலம் மாறினாலும் காட்சி மாறவில்லை. பாதிக்கபடுவது பொதுஜனம்தான்
ReplyDeleteடைலன் டாக் வண்ணத்தில் ஜொலிக்கிறார்.
ReplyDeleteஅதிகாரி 75...
ReplyDeleteபூதம் காத்த புதையல்...
இவரையை விடவும் ஒரு கெவுரவமான அதிகாரி ஒரு போரில் ( படுகொலை???) செத்து போயிடுறாரு... வருசேந்தரம் கும்பிடுறதுக்கு என்ற புருசன் பாடி வேணும்ன்னு அவரு சம்சாரம் கேட்குது ( புருசனுக்கு செத்தாலும் நிம்மதி இல்லீங்க) .நம்ம ஜென்டில் மேன் கார்சரும், அந்த அதிகாரியும் ஒரு கோட்டை கமான்டரை சந்திக்கும் போது நீங்க தா அந்த பாடிய கண்டு புடிச்சு கொண்டாரணும்ன்னு இல்லின்னா என்னைய உசிரோடையே பாக்க முடியாதுன்னு அந்த மிலிட்டரி காரர் அந்த செத்து போன கெவுரவமான அதிகாரியோட சம்சாரத்தை விட ஒப்பாரி வெக்கிறாரு ...இது ஒரு வெளங்காத வேலைன்னு நெனைச்ச நம்ம ரேஞ்சர் நைசா நான் முக்கியமான வேலையை பார்க்கனும்.. நீ வேணும்னா அந்த ஆனியை புடுங்கிக்கோன்னு சொல்லிட்டு அவருடைய கடமையைபார்க்க போயிடுறாரு..அடுத்து அக்கப்போறான ஒரு செவ்விந்திய பிராந்தியத்துக்கு அதிகாரி ஒரு வழி காட்டியா போறாப்பிலீங்க.. கூடவே கதை முடிவிலே திரும்பி வர மாட்ட்ங்கிற மாதிரி ஒரு அரை டசன், வந்தாலும் பரவாயில்லே ...வரலைன்னாலும் பரவாயில்லைங்கிற மாதிரி ஒரு ரெண்டு பேரு.. அப்புறம் என்ன சின்ராசு கெளம்பிட்டாரு ..
அது ஒரு ரத்த பூமி.. இருந்தாலும் அதிகாரி தன் கூட வர்றவங்க கிட்டே "ஒன்னும் பிரச்னை இல்லே .. என்கிட்டே துண்டும் , சொம்பும் இருக்குது .. நான் பஞ்சாயத்து பண்ணிக்கிறேன் நீங்க தெகிரியாம வாங்கன்னு" கூட்டிட்டு போறாப்பிலிங்க...
இடைவேளை...
இனிமேலே தா ட்விஸ்ட்டே ...
(அப்பிடீன்னு நெனைச்சு படிங்க )
கடமையை பார்க்க போற ரேஞ்சர் ஆரு கார்சரா??
DeleteRummi @ ROFL
Deleteகர்மா ஒரு பூமரேங்காம் !! எங்கோ படிச்சேன் !
Deleteஏனோ சொல்ல தோணுச்சு !
பூமராங் திரும்ப இன்னும் சில நாட்களே உள்ளன...🤭
Deleteஐ ஏம் வெயிட்டிங்..
Deleteஆனா ஒன்னு பாருங்க வருசத்துக்கு பத்து தடவையாவது அதிகாரி பாயச அண்டாவை கழுவி கழுவி கழுவி கழுவி ஊத்திட்டே இருக்கலாம்....ஆனா பூமராங்க் வர நாளாகும்... என்ன அது..
சார்.. அப்புறமுமே ஒன்னு மறுபடியும் சொல்ற மாதிரி ஆயிடுச்சு...
Deleteதங்க தலைவன் அட்டை படத்திலே இருந்தாலே போதுங்க சார்... மூனு வருசத்துக்கு பார்த்திட்டே இருப்பேன் சார்..
This comment has been removed by the author.
Deleteதங்க தலைவன் கிட்டங்கியிலே "தங்காத " தலைவனாவும் இருந்த்துப்புட்டா நானுமே துணைக்கு வர்றேன் - தளபதிய பாத்துக்கினே இருக்க !
Deleteஆன் தி வேல இந்த மாசத்து புக்ஸ் வந்துகினே கீது..
ReplyDeleteபூதம் காத்த புதையல் நல்ல விறுவிறுப்பான கதை தான்.ஆனால் டெக்ஸ் வில்லர் ரொம்ப நோஞ்சானாக தெரிவது எனக்கு மட்டும் தானா ? ஓவியங்கள் பரவாயில்லை ரகம் தான். ஆரம்பத்தில் தலை காட்டுவதோடு கார்சனின் பங்கு முடிந்தது.ஒற்றையாய் கலக்குகின்றார் தல. மரணவட்டம் +ஒற்றைக்கு ஒற்றை +கடைசியில் வரும் ட்வீஸ் என கதை பட்டாசாய் பொறி பறக்கிறது. இந்தக் கதையில் மட்டும் ஒரே ஒரு எழுத்துப் பிழை தான். 577ஆம் பக்கம் கடைசிப் பேனலில் சின்னம் என்பதற்குப் பதில் சின்ன என்றுள்ளது. வருடா வருடம் இதே போல் ஒரு தொகுப்பு இதழ் வர புனித மனிடோ ஆசிரியருக்கு ஆசி கூற வேண்டுகின்றேன்.
ReplyDeleteCan you give any hint if TINTIN is possible in this year sir? if so will it be in regular santha or EBF special
ReplyDeleteYes...TINTIN for 2024
DeleteSo tintin will be in regular சந்தா?
DeleteSo my guess is TINTIN is for EBF special
Deletewhat a good news sir. Thanks for the confirmation sir
DeleteTill EBF we can’t wait.Let’s start new year with TIN TIN 😃
Deleteஆமாம் பரணி சென்னை புத்தக விழாவில் 2 ரிலீஸ். EBF இல் மீதி இரண்டு ரிலீஸ்.
Deleteஎல்லாம் கிழமயம் - மூன்று தாத்தாக்களும் பேத்தியும் இந்த முறையும் என்னை ஏமாற்றவில்லை. வாழ்க்கையின் ஓட்டத்தில் தாத்தாக்களின் வாழ்க்கையில் நடந்த சிறு சிறு நிகழ்வுகளை அழகாக கோர்த்து ஒரு கதையாக கொடுத்துள்ளர். தாத்தாக்களுக்கு கொடுத்துள்ள வசனங்கள் மிகவும் இயல்பு. சிரிக்க வைத்தன.
ReplyDeleteஇந்த மாத வாசிப்பில் இந்த கதை தான் என்னைப் பொருத்தவரை டாப்.
நேரம் கிடைக்கும் போது இந்த கதைக்கான விரிவான விமர்சனத்தை எழுத ஆசைப்படுகிறேன்.
கமர்சியல் கதைகளை விரும்பி படிக்கும் போது தங்களது கவலைகள் மறந்து போகின்றன என சொல்லும் நண்பர்கள் இந்தக் கதையை கண்டிப்பாக ஒருமுறை வாசித்து பாருங்கள் . உங்களுக்கு மிகவும் பிடிக்கும்
நம்பிள் 6000 கட்றான். இந்த லிஸ்டில் ஆசிரியர் வெளியிடும் அனைத்து கதையும் படிக்கிறான். எனக்கு எந்த நாயகனையும் விலக்க விருப்பமில்லை. கீநாக்கள் எல்லாம் எனக்கு தண்ணிபட்ட பாடு. (தண்ணி போட்ட என்று நான் கூறவில்லை)
ReplyDeleteஇதில் என் வருத்தம் தளபதி லிஸ்டில் இல்லையே என்பதுதான். என்ன பண்ணுவது படைப்பாளர்களின் சதி இது. புனித மனிடோ வின் அருள் முழுக்க இத்தாலி பக்கமே இருக்கிறது. பாவப்பட்ட பிரான்ஸ் பக்கம் ஏனோ கிடைக்க மாட்டேன் என்கிறது. புனித மனிடோ இத்தாலி பக்கமும் உங்கள் அருளை கருணை கூர்ந்து அளியுங்கள்
ReplyDeleteபார்சல் வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது இன்னும் வேலைப்பளு காரணமாக இன்னும் கைப்பற்ற முடியவில்லை. நாளை தான் கைப்பற்ற வேண்டும். வேலை பளுவுக்கு இடையே படித்து இப்பொழுதுதான் ஏப்ரல் மாத புத்தகங்கள் வரை படித்து முடித்துள்ளேன். எப்படியும் தீபாவளி வருவதற்குள் அனைத்து புத்தகங்களையும் படித்து விடுவேன். தீபாவளியை தளபதியுடன் கொண்டாட விரும்புகிறேன். சதாசிவம் காங்கேயம்
ReplyDeleteடெக்ஸ் மொத்தம் 9 புத்தகங்கள் 160 வீதம் 1440
ReplyDelete(எனது கணிப்பு டெக்ஸ் 1300 தாண்டாது.)
டெக்ஸ் கிளாசிக் 450
டெக்ஸ் தீபாவளி மலர் 700
(என் கணிப்பு ஆயிரம் ரூபாய் வரை செல்ல வாய்ப்பு உள்ளது)
லக்கி லுக் லயன் ஆண்டு மலர் 250
சிக் பில் ரூபின் ஜானி இணைந்த கோடை மலர் 300
(எனது கணிப்பு 250 க்கு கூட வர வாய்ப்பு உள்ளது.)
சிஸ்கோ ஆல்பா டேங்கோ முத்து ஆண்டு மலர் 450
(எனது கணிப்பு 500க்கு வர வாய்ப்புள்ளது )
IRS 200
தோர்கல் 250
XIII 130
டெட்வுட் டிக் 100
நெவாடா 140
ப்ளூ கோட் 120
மேக் அண்ட் ஜாக் 100
அண்டர்டேக்கர் 200
சுசுகி விஸ்கி 330
தாத்தாஸ் 150
கிராபிக் நாவல் 130
ஸ்டெர்ன் 130
இரு புது வரவு 240
மொத்தம் 5850
இலவச புத்தகங்கள் 4
ஈரோடு புத்தக கண்காட்சி 4 புத்தகங்கள்
லார்கோ, டின்டின், route 66, அலிபாபா or (இளம் டைகர்)
ஆன்லைன் புத்தக கண்காட்சி
மேகி, மாடஸ்டி, மார்ட்டின், பவுன்சர்
பிக் பாய்ஸ் ஸ்பெசல்
வி காமிக்ஸ்
ஜாகோர் 6 புத்தகங்கள் 600
மிஸ்டர் நோ 2 புத்தகங்கள் 200
ராபின் 2 புத்தகங்கள் 200
வனமேற்கு 2 புத்தகங்கள் 200
இது இல்லாமல் எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக ஏதாவது ஒரு புத்தகம்
அது எங்கே எப்போது
அட்டவணை 2024
ReplyDelete1. 6 டெக்ஸ் Double ஆல்பம் -960/-
2. 1 டெக்ஸ் Triple ஆல்பம் -225/-
3. Young Tex Double ஆல்பம்(ஓநாய் வனத்தில் டெக்ஸ் போல) -80/-
4. கலர் டெக்ஸ் (கௌபாயின் காதலி போல)- 250/-
5. டெக்ஸ் தீபாவளி மலர்(மீண்டு வந்த மாயன் போல) -500/-
6. முத்து ஆண்டு மலர் (தோரகல் Double ஆல்பம்)-250/-
7. முத்து சம்மர் special(ஆல்ஃபா double ஆல்பம், டேங்கோ, ரூபின்)-500/-
8. லக்கி Double ஆல்பம் -250/-
9. லக்கி Single ஆல்பம் -120/-
10. சிக் பில் சிங்கிள் album-120/-
11. ஜானி -100/-
12. IRS -200/-
13. நெவாடா -135/-
14. Agent சிஸ்கோ -250/-
15. XIII ஸ்பின் off-125/-
16. பவுன்சர் Double ஆல்பம் -350/-
17. ஸ்டர்ன் -135/-
18. நில் கவனி வேட்டையாடு 2 -200/-
19. கலர் கௌபாய் கிராஃபிக் நாவல் -200/-
20. Action Hero அறிமுகம் கருப்பு வெள்ளை -250/-
21. லயன் 40ஆவது ஆண்டு மலர் -800/-
மொத்தம் 26 புத்தகங்கள். கூட்டு தொகை-6000/-
V காமிக்ஸ் 2024
Delete1. வன் மேற்கின் அத்தியாயம் 3 புத்தகங்கள் -375/-
2. ஸாகோர் 4 புத்தகங்கள் டார்க் வுட் தொடரின் மீதி 2 புத்தகங்கள்-140/-, 2 பெரிய கதைகள் 150 விலையில் -440/-
3. ராபின் 2 புக் -200/-
4. Mr. நோ 2 புக் -200/-
5. சாம் வில்லர் 1 புக் -100/-
மொத்தம் 12 புத்தகங்கள்
தொகை -1315/-
கிட்ட தட்ட 3 மணி நேரம் ஆனது இந்த உள்ளே வெளியே விளையாட. அப்போது தான் நினைத்தேன் நம்ம எடிட்டர் பாடு ரொம்பவே சிரமம் தான் என்று. Kudos for your efforts Sir.
Deleteசொல்லி மாளா கூட்டணிகளோடு நான் ஆடுமிந்த 'உள்ளே - வெளியே' ரவுசு ஒரு ஜாலியான அங்கம் சார் எனது பணியினில் !
Delete*யாருக்கு எது பிடிக்கும் என்பதைக்காட்டிலும் எது பிடிக்காது ? என்றறிய முயற்சிக்கணும் !
*வணிக நோக்கத்துக்கும் ; வாசிப்பு மோகத்துக்கும் இடையிலான ஒரு balance கிட்டுகிறதா ? என்று பார்க்க முயற்சிக்கணும் !
*பார்த்த உடனே புடிக்காட்டியும், பார்க்கப் பார்க்கப் புடிக்கும் என்ற நம்பிக்கையில், சில புதியவர்களோடு தொடர் பயணம் பண்ண முயற்சிக்கணும் !
*பார்ப்பதெல்லாம் பட்சணமாய் தெரி யும் என் ஆந்தைவிழிகளை சற்றே அடக்கி வாசிக்கச் சொல்ல முயற்சிக்கணும் !
*பழசோடு புதுசை நெருடல்களின்றித் தர முயற்சிக்கணும் !
And என்ன செய்தாலுமே காத்திருப்பது மூ.ச.தான் என்ற புரிதலோடே மூஞ்சியை சிரிச்சா மேரியே வைத்திருக்க முயற்சிக்கணும் !
செம கூத்தான அனுபவமே சார் !
// And என்ன செய்தாலுமே காத்திருப்பது மூ.ச.தான் என்ற புரிதலோடே மூஞ்சியை சிரிச்சா மேரியே வைத்திருக்க முயற்சிக்கணும் ! // என்ன கொடுமை சார் இது?
Deleteநான் பெரிய தடையாக நினைத்தது முதலில் அந்த பட்ஜெட் தான். 5850/- எழுதிக் கொண்டு அதற்கு பிறகு எல்லாரையும் அதற்குள் கொண்டு வருவது பிரம்மப் பிரயத்தனம் தான் சார். இதில் இன்னும் தீபாவளி மலர் ஆண்டு மலர், சம்மர் ஸ்பெஷல் எல்லாம் வர வேண்டும். நாக்கு தள்ளி விட்டது.
Delete// சொல்லி மாளா கூட்டணிகளோடு நான் ஆடுமிந்த 'உள்ளே - வெளியே' ரவுசு ஒரு ஜாலியான அங்கம் சார் எனது பணியினில் ! // ஆனால் ரொம்ப ஜாலியாக இருந்தது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன் சார்.
Delete// *யாருக்கு எது பிடிக்கும் என்பதைக்காட்டிலும் எது பிடிக்காது ? என்றறிய முயற்சிக்கணும் ! // முக்கியமான பாய்ண்ட்
Deleteகிட்ட தட்ட 5 முறை அழித்து மறுபடியும் எழுதி திரும்பவும் அழித்து எழுதியது இது.
Deleteநான் விட்டு விட்ட இரண்டு முக்கியமான விஷயங்கள்.
Delete1. டின்டின் ரெகுலர் சந்தாவில் வந்தால் 4 புத்தகங்கள் 1600 ரூபாய் அதனை கொண்டு வருவது வேறு புதுமுகங்களை உள்ளே நுழைக்க சாத்தியப் படவில்லை, அல்லது நமது பரிச்சயமான ஹீரோக்களில் யாரையாவது கழட்டி விட வேண்டும். இதனை யோசித்து Tintin தனித் தடத்தில் வருவதே சிறப்பு என்று முடிவு செய்தேன்.
2. நீங்கள் ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டு இருக்கும் ரூட் லிஸ்ட் 66போன்ற கதைகளை மாதம் ஒரு chapter ஆக வெளியிடலாம் என்றால் குறைந்தது மாதம் 100 ரூபாய் என்றால் வருடம் 1200 வருகிறது அதையும் எங்கே கொண்டு வருவது என்று தெரியவில்லை. எனவே இது இரண்டையும் ட்ராப் செய்து விட்டேன்.
ஆனால் உங்கள் அட்டவணை பதிவு பல விசயங்களை அலசி ஆராய்ந்து எங்களை ஆச்சரியப் படுத்தும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.
நான் ஒரு வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கும் பதிவு அட்டவணை பதிவு தான். 28 ஆம் தேதிக்கு I'm waiting so so so eagerly.
DeleteGood one Kumar!
Deleteநம்பள் கணக்கில் O.. Yes.. முட்டை
ReplyDeleteவாங்கினான்.. (1நாப்புல இருந்து
9ஆப்பு படிக்கற வரைக்கும்..) அதனாலே..ஸ்டாலின் bro கிட்ட
புத்தகம் வாங்கறான்... அத படிக்கிறான்.. பாராட்டறான்..அதோட நிப்பாட்டறான்..(2024 புத்தகம் பரிசாக வாங்க ஆசைப்பட்டு
அட்டவணை போட்டால்..2+2=4.
அப்படிங்கற சமாசாரத்தை மறந்துருவான் .. 😄😄)
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteலயன் & முத்து அட்டவணை 2024
ReplyDeleteமுத்து ஆண்டு மலர் (புது கதையாக இருக்கலாம்) ₹250
லயன் ஆண்டு மலர் 1100
(லக்கி 2 ஆல்பம் ₹250, குண்டு புக் -₹700, பழைய ரீபிரிண்ட் ₹ 150)
லயன் கோடை மலர் ₹ 500
(ரூபின், கிட் ஆர்டின், டேங்கோ, ஆல்பா)
லயன் தீபாவளி வித் டெக்ஸ் ₹500
ஜானி 1 ஆல்பம் ₹125
XIII ஆல்பம் ₹ 130
நெவேடா 2 ஆல்பம் ₹140
IRS 2 ஆல்பம் ₹ 200
1 தாத்தாஸ் ₹ 150
ஸ்டெர்ன் ₹ 135
1 ப்ளூ கோட் ₹ 125
டெக்ஸ் க. வெ. (6*160) ₹ 960
டெக்ஸ் 3 பாக ஆல்பம் ₹ 230
டெக்ஸ் 2 கலர் ஆல்பம் ₹ 500
1 கிராபிக் நாவல் ₹ 120
ஒரு புது வரவு டபுள் ஆல்பம் ₹ 250
நில் கவனி வேட்டையாடு ₹ 250
மொத்தத் தொகை ₹5800 (மேலேயுள்ள புத்தகங்களின் கூட்டுத் தொகை ₹5665 + 135 கொரியர்& பேக்கிங் சார்ஜ்.
மொத்தும் 25 புத்தகங்கள்)
வி காமிக்ஸ்
ReplyDeleteஸாகோர் மூன்று கதைகள் 70 * 3 210
ராபின் 2 கதைகள் 200
வன் மேற்கு 4 * 125 500
மிஸ்டர் நோ 1 கதை 100
டெக்ஸ் 2 * 100 200
மொத்தம் ₹ 1210/-
இவை தவிர டெக்ஸ் கிளாசிக் & பொளன்சர் & சுஸ்கி - விஸ்கி & சிரிப்பே சிறப்பு ஸ்பெசல் & டைலன் டாக் & டெக்ஸ் மினி இதழ்கள் போன்றவை தனியாக வர வாய்ப்பு இருக்கிறது.
ReplyDelete#காமிக்ஸ்_ஸ்நேகங்களுக்கு ...
ReplyDeleteடெக்ஸ்ன் 75 வது ஆண்டு மலர் #THE__SUPREMO_SPECIAL கொண்டாட்டம்.
இந்தாண்டு வெளி வந்த லயன் காமிக்ஸ்ன் சிறந்த படைப்புக்களில் இந்த "SUPREMO SPECIAL" ல் வந்த கதைகளுக்கு நிச்சயம் இடமுண்டு என்பது மட்டும் உறுதி.
730 பக்கங்கள் கொண்ட இந்த ஸ்பெஷலை
நீங்கள் படிக்க ஆரம்பித்தால், பாதியோடு கீழே வைக்கவே முடியாதபடி அவ்வளவு விறுவிறுப்பான கதைக்களங்கள் கொண்ட புத்தகமிது. வெறுமனே வார்த்தைக்காக அல்ல, ஒவ்வொன்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட, சலிப்பூட்டாத கச்சிதமான கதைகள்.
ஒரு ஒய்வு நாளில் உக்கார்ந்து படிக்க ஆரம்பித்தால் இது உண்மையென புலப்படும்.
ஒரு எக்ஸ்பிரஸ் ட்ரெயின் மெதுவாக கிளம்பி வேகமெடுத்து எங்குமே நிற்காமல் ஓடுவதைப் போல.
1)#திக்கெட்டும்_திகில்... என்ற தலைப்பில்
82 பக்கங்களில்,
பளீச் கலரில்,இதழின் முதல் அதிரடி ஆக்சன் கதையாக நம்மை வரவேற்கிறது.
தங்கத்தேடலுக்காக செவ்விந்திய பூமியில் டேரா போட்டிருந்த வெள்ளையனை வெறி கொண்ட கும்பல் கொன்றுவிட,
அங்கு மாட்டிக் கொண்ட அவனின் குடும்பத்தை மீட்கவும், கொள்ளைகும்பலுக்கு முடிவு கட்ட கிளம்பும் டெக்ஸ் & கோ நடத்தும் போராட்டமே இந்த கதை.
82 பக்கம்னாலும் சும்மா தெறிக்க விடுகிறது கலரும், காட்சிகளும்.
2)#சர்ப்பத்தின்_சவால்....
226 கலர் பக்கங்கள் கொண்ட இந்த கதையும் முந்தைய கதைக்கு சற்றும் சளைத்ததல்ல.
என்ன ஒண்ணு 1985களில் வந்திருக்க வேண்டிய கதை சற்று மெதுவாக வந்துள்ளது.
ஆனா சஸ்பென்ஸ் சஸ்பென்ஸ்....
வெள்ளி,செம்பு தோண்டியெடுக்கும் சுரங்கத்தில் நடந்த கொள்ளைக்கு ஆதாரங்களை தேடி, மெக்ஸிகோ எல்லை பள்ளத்தாக்கில் வரும் காவலர்களுக்கு காத்திருந்தது அவர்களுக்கான மரண சாசனம் மட்டுமே.
வழக்கம்போல களமிறங்கும் டெக்ஸ்ம்,கார்சனும், ஆக்சனுடன் நடத்தும் புலனாய்வில், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு புதிருக்கான மர்ம முடிச்சுக்கள் மிக அழகாக அவிழ்வது தான் கதையோட்டத்தின் சிறப்பு. கதை வழக்கமான டெம்ப்ளேட் என்றாலும்,சொல்லிய விதம் நல்ல சுவாரஸ்யம்.
3)#வந்தார்_வென்றார்...
226 பக்கங்கள் கலரில் உள்ள இந்த கதையை பற்றி குறிப்பிட வேண்டியது, முக்கியமாக வழக்கமான ஆக்சன்,அதிரடி கொண்ட டெக்ஸ் கதையாக அல்லாமல், வன்மேற்க்கின் வரலாற்றின் பிண்ணனியில் நடக்கும் டெக்ஸ் கதையாக உள்ளது. சொல்ல போனா படிக்கறப்ப இது டெக்ஸ் கதைனே தோணாது.
இந்த கனமான கதையை சற்று புரிந்து கொள்ள பொறுமை மிக மிக மிக அவசியம் என்பதை 10 பக்கங்களை தாண்டபோகும் முன்பே உணர்ந்து கொள்ளலாம்.
வெள்ளையர்களுக்கும், செவ்விந்தியர்களுக்கும் நடக்கும் நில உரிமை போராட்டமே இந்த கதையின் களம்.
இதில் டெக்ஸ், ஏன் எதற்காக எப்படி உள்ளே வருகிறான்?, அடுத்தடுத்து நடப்பது என்ன?.
வழக்கமாக டெக்ஸ் உடன் வரும் கார்சனுக்கு பதிலாக,டெக்ஸ்ன் மகன் கிட் டெக்ஸ்சுடன் களமிறங்கியுள்ளதாலும்,
முழுவதும் போர்,கலவரங்கள் கொண்ட கதையானதாலும் டெக்ஸ்ன் நக்கல் நையாண்டி பேச்சுக்கள் குறைந்து சீரியஸான டெக்ஸை இதில் படிக்கலாம்.
என்ன, முந்தைய இரண்டு கதைகளில் உள்ள விறு விறுப்பையும், அதிரடிகளையும் இதில் காண இயலாது.
அமைதியான நீரோட்டம் போன்ற கதை.
4)#பூதம்_காத்த_புதையல்....
174 பக்கங்கள் கருப்பு வெள்ளையில் உள்ள இந்த 4 வது கதையின் சிறப்பே,
முந்தைய கதையான "வந்தார் வென்றார்" கதையின் அடுத்த பாகம் போலவே,
ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாமல் செல்வதுதான்.
வெள்ளை ராணுவத்துக்கும்,செவ்விந்தியர்களுக்கும் நடந்த போரின் முடிவாக, இறந்து போன ராணுவ உயரதிகாரியின் உடலை, செவ்விந்தியர்களின் ஆதிக்கத்தில் உள்ள இடத்தில் இருந்து கொண்டு வரும் பொறுப்பை கையிலெடுக்கும் டெக்ஸ்க்கு
எதிர்பாராத விதமாக நடக்கும் சம்பவங்களை கொண்ட அட்டகாசமான கதை.
இதிலும் கார்சன் மிஸ்ஸிங். ஆனாலும் டெக்ஸை வெகுவாக ரசிக்க கூடிய கதை.
இந்த 4 கதைகளுக்கும் சித்திரங்கள் முன்பின் இருப்பினும் கலரிங் மிக அழகு.
அதிலும் பள்ளத்தாக்கு பகுதிகளும்,
குதிரைகளின் ஓட்டத்தில் சின்ன சின்ன கற்கள் கூட சிதறுவதும்,
மலைகளின் பிண்ணனியும் பார்க்க பார்க்க சலிப்பூட்டாத கச்சிதமான கலர்.
தீபாவளி மலர் போல இந்த டெக்ஸ்ன் 75 வது ஆண்டு மலரும் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதுடன்,
வருடா வருடம் இதேபோல ஒரு 730 பக்க குண்டு புக் வெளிவந்து வாசகர்களை மகிழ்விக்க வேண்டும்.
மத்தபடி,
"750 ரூபாயா? இத்தன காசுக்கு எங்க போக?",
"இத்தினி காசு கொடுத்து இத வாங்கனுமா?",
"கொள்ளையடிக்கும் முயற்சி" என அபத்தமான எண்ணங்களை விட்டு விட்டு,
நம் சந்தோஷம் மட்டுமே முக்கியம் என நினைத்து காமிக்ஸ் வாங்கலாம்.படிக்கலாம், சந்தோஷத்தை நண்பர்களுடன் கொண்டாடலாம்.
728 பக்கங்கள்/750₹ விலை கொண்ட இந்த ஸ்பெஷலை வாங்க
தொடர்பு/ வாட்சப் எண் - 98423 19755&
73737 19755
மற்றும்
ஆன்லைனில் பெற...
https://lion-muthucomics.com/
மீண்டும் அடுத்த பதிவில் 🌹🌹🌹
அருமையான விமர்சனம் சகோ... கீப் கோயிங்....
Deleteடெக்ஸ் 70
டெக்ஸ் 75னு வெற்றிகள் தொடருது...
சிறப்பு..
Deleteஅழகான அலசல் சார் !
Deleteஇன்றுதான் எல்லாம் கிழ மயம் படிக்க நேரம் கிட்டியது... பெட்டியை பிரித்து வயதான டெக்ஸூடன் ஒரு ஸெல்ஃபி எடுத்ததுடன் சரி... புரட்டவோ படிக்கவோ நேரம் அமையவில்லை... சில மாதங்களுக்கு முன் The Old Geezers படித்தேன்... அன்றிலிருந்து நமது தமிழ் பதிப்பிற்க்காக ஆவலுடன் காத்திருந்தேன்...
ReplyDeleteஎன் ஆங்கில வாசிப்பு அருமை என்றால்... நமது தமிழில், ஆசிரியரின் வரிகள் படு அழகு... நான்கு வரியில் ஆங்கிலத்தில் விளக்கியதை, மெருகு குறையாமல் இரண்டே வரிகளில் க்ரிஸ்பான மொழியாக்கம்... பட்டாஸ்... நமது லயன்முத்துவில் எனது ஃபேவரைட் ஸீரீஸ்களில் தாத்தாக்கள் முதலிடம் பிடிக்கிறார்கள். சோடா, டேங்கோ என நமது வரிசை வர வர பட்டையை கிளப்புகின்றது...
இனி தான் டெக்ஸை படிக்க எடுத்து வைத்த இருக்கின்றேன்... புத்தகத் தரம் அருமை... நமது பைண்டிங்கின் தரம் கூடிக்கொண்டே போவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது...
வெல்செட் டாக்டர்...தாத்தாஸ் மொழிநடை ஏ ஒன் ரகம்.
Deleteஒவ்வொரு கதாப்பாத்திரமும் ஒவ்வொரு விதத்தில் இங்கே unique அல்லவா சார் ?! கதை நெடுக கதாசிரியர் தந்திடும் டயலாக்களே அவர்களது குணங்களை நமக்குப் பறைசாற்றும் இண்டிகேட்டர்ஸ் ! So இயன்றமட்டுக்கு அந்த ஒரிஜினல் தொனியோடு பயணிப்பது என்பது இங்கொரு சமரசம் செய்திட இயலாக் கட்டாயம் ஆகி விடுகின்றது ! அதன் பலனாய் அவசியமாகிடும் சற்றே கூடுதலான மெனெக்கெடலே, ஸ்கிரிப்டில் பிரதிபலித்திருக்கக்கூடும் !
Delete// நமது தமிழில், ஆசிரியரின் வரிகள் படு அழகு... // yes yes yes. இந்த கதைக்கு உங்கள் மொழி பெயர்ப்பு வேற லெவல் சார்.
Delete
ReplyDeleteSTV யின் மாதிரி அட்டவணை 2024
A.Specials....புக்ஸ்-5-Rs1950
1.முத்து 52வது ஆண்டு மலர்...டின் டின்-500
2.முத்து கோடைமலர்-தோர்கல் டபுள்-250
3.லயன் 450வது மைல்கல் இதழ்- லயன் 40வது ஆண்டு மலரும் இதுவே...காம்போ பேக்கேஜ்ல தனி தனியாக....
-லக்கி டபுள்-250
-டெக்ஸ் வில்லர்-450
4.தீபாவளி மலர்-டெக்ஸ் வில்லர்-500
B.டெக்ஸ் வில்லர்....புக்ஸ்-8-Rs1355
1.டெக்ஸ் Double ஆல்பம்x5 -800
2.டெக்ஸ் Triple ஆல்பம்x1 -225
3.Young Tex Double ஆல்பம்x1-80
4.கலர் டெக்ஸ்x1- 250
C.ரெகுலர்ஸ்...புக்ஸ்-13-Rs2000
1.டேங்கோ சிங்கிள்-150
2.ஆல்ஃபா சிங்கிள்-120
3.சிஸ்கோ டபுள்-250
4.சிக் பில் சிங்கிள்-120
5.ஜானி சிங்கிள் -120
6.IRS டபுள் -200
7.நெவாடா சிங்கிள் அல்லது டெட்வுட் டிக் -120
8.நில் கவனி வேட்டையாடு பாகம்2 -200
9.கலர் கௌபாய் சிங்கிள் ஷாட் -200
10.புதிய ஹீரோ..150
11.ரூபின் சிங்கிள்-120
12.வன்மேற்கு அத்தியாயம்5-125
13.வன்மேற்கு அத்தியாம்6-125
கி.நா.ஸ்....புக்ஸ் 3...Rs420
1.XIII ஸ்பின் off-120
2. ஸ்டெரன் -150
3.தாத்தாஸ்-150
பேக்கேஜ்&கொரியர்-175
மொத்த புக்ஸ்= 29
சந்தா தொகை=5900
இலவச இணைப்புகள்....
விலையில்லா 4மினி இதழ்கள்.
எங்கே எப்போது??
3மாதங்களுக்கு 1வீதமாக 4....
1.பவுன்சர் Double ஆல்பம்
2.பிக் பாய்ஸ்2.
3.டெக்ஸ் க்ளாசிக்-7
4.ஸோகோர் கலர் குண்டுபுக்
V for We Comics....
12இதழ்கள்....ரூ1300
ஸோகோர், ராபின், வன்மேற்கு, Mr.No, சர்ப்ரைஸ் டெக்ஸ் எல்லாம் கலந்து..
*கோடை விழா, ஈரோடு ஸ்பெசல்ஸ், ஆன்லைன் விழா ஸ்பெசல்ஸ், சூழலுக்கு தக...!!
எங்கே எப்போது ல சுஸ்கி விஸ்கி ஸ்பெசல்3 ஐ சேர்த்து கொள்ளவும்..அது உறுதியாக வந்திடும்....
DeleteGood!
Deleteதிருத்தம்:- XIII spin offக்குப் பதிலாக ரெகுலர் சீரியஸ் சுற்று 2ன் க்ளைமாக்ஸ்!!
Delete(இம்முறை மெயின் சீரியஸே வரும் வாய்ப்பு உள்ளதால் ஸ்பின் ஆப் 2025ல)
இன்னிக்கு விதி எழுதிய வெள்ளை வரிகள் படிக்கலாம்னு இருக்கேன்...
ReplyDeleteஎன்னை ஆசிர்வதியுங்கள் பிரெஞ்ச்ஸ்....
குரூர விதியின் கோரமான ஆட்டத்தை சைபீரிய வெண் பனியில் காண்க...!!!
Deleteஅவ்ளோ மோசமாக எல்லாம் இல்லை கதை.
Deleteகொஞ்சம் தனிமையில், அமைதியான இடத்துல இருந்து படிச்சு பாருங்க அந்தக் கதையின் ஒரு ஆழம் & கடினமான உயிருக்கு போராடும் சூழலில் மனித மனம் எப்படி மாறும்றத அருமையாக சொல்லி இருக்காங்க.
90 பக்கம் வரை படிச்சுட்டேன்.
அந்த முட்டா பய மெய்க்காளன் மோரக்ஸ்ஸோ போரக்க்ஸோ நிதர்சனத்தை உணரத்தவறிட்டான்.....
Deleteபனியின் ஆதிக்க சக்தி அத்தனேஸை சரியாக சிந்திக்க வைத்தது...
அத்தனேஸ்தான் தலைவனாக இருந்து இருக்கணும்..அவன் அந்த பைத்தியக்காரனையும் மிலார்ட் தம்பதியினரையும் கொன்று இருப்பான்... மற்ற 5வரும் சர்வைவல் ஆகியிருக்கலாம்.....
இதுபோன்ற ஜீவமரண போராட்டங்களில் இரக்கத்திற்கு இடமேது.... பலசாலியே பிழைக்கலாம் என்ற அடிப்படை விதியை கடைபிடித்து இருந்தாலே போதுமானது..
எந்தவொரு திட்டமோ, உணவோ அடிப்படை தேவைகளோ இல்லாமல் அப்படி ஒரு முடிவை எடுத்த மெய்காளப்பானை உண்மையான கொலைகாரன்...
சைபீரிய பனியல்ல....!!
நல்ல வேளையா அந்த புஸ்தகம் எனக்கு வரலை..
Deleteசைபீரிய பனியினடியிலிருந்து பாருங்கள் நடந்தவற்றை....யார் பக்கமிருந்தாலும் சரியெனத் தோணும் வகையில் ஆசிரியரின் வரிகள்
Delete///யார் பக்கமிருந்தாலும் சரியெனத் தோணும் வகையில் ஆசிரியரின் வரிகள்///
Delete---ஆசிரியர் வசனங்கள் எப்போதும் போல....அவரது பிரசன்டேசனில் 1% வீதமும் குறைகாண இயலா படைப்பு...
"குறைபாடு இருப்பது கதையமைப்பில், பாத்திரபடைப்பில்..."
போர் மூண்டுட்டது...ருஷ்ய மக்கள் ஆராயாம, சம்பத்தமேயில்லாத மாஸ்கோவாழ் பிரெஞ்சு மேட்டுகுடிகளை கொன்னு போட்டிருக்கப்போவதில்லை...
கிளம்பியாச்சி, பலமானதே தப்பி பிழைக்கும் என்பற்கேற்ப
ஒரு வழிகாட்டி என்பவன் அனைத்து அம்சங்களை அலசி ஆராய்ந்து சர்வைவல்க்கு வாய்ப்பு உள்ள 5உயிர்களை காக்க, மற்ற 3உயிர்களை தியாகம் செய்திருக்கணும்..
தேவையற்ற இரக்கம் காட்டுறேன் பேர்வழினு எல்லாத்தையும் கொன்னுட்டான் வழிகாட்டி ப்ரோவ்க்ஸ்...
அத்தனை போராடியும் ஆரோராவின் இறப்பிக்கும் வழிகாட்டியின் தவறான முடிவே காரணமாகிடுது.
அவளுக்கு தெம்பிருக்கும் போதே நல்ல அத்தனேஸ் போல துணிச்சலுடன் முடிவெடுக்கும் தலைமை கிட்டியிருந்தால் பிழைத்திருப்பாள்..
உயிரைகாக்க விரலை வெட்டி எடுக்கும் அவசர சிகிச்சைதான் அங்கே தேவை...!!
ஆஹா.. அல்லாரும் ஏழுதறப்ப..
ReplyDeleteநானும் தான் ஏழுதுவேன்..
வுடமாட்டன்.. குருவும், சுக்கிரனும்
இந்தா மாசம் கூடவே இருக்கிறதா சோசியல்... அட.. இந்த போன் வேற ..😄 சோசியக்காரர் சொன்னாரு..
நாளைக்கு நானும் ஒரு பட்டியல்
போடறேன்.. ஆசிரியர் தர்ற
பரிசை அள்ளப் போறேன்.. 😄❤️👍....
யாருங்க அது காதோரம் pistol
ReplyDeleteமுனையை வச்சுக்கிட்டு போஸ்
குடுக்கறது.. தமாசா இருந்தாலும்
பாக்கறதுக்கு பயமா இருக்குதுங்க.. "சிம்பாலிக்" ன்னு
பாத்தா.. பலவித கருத்து வரும் சகோ..வேற போஸ் ல இன்னொரு படம் எடுத்து editor
க்கு அனுப்புங்க ப்ளீஸ்... 😄❤️🙏
விதி எழுதிய வெள்ளை வரிகள்....
ReplyDeleteசதுரங்க ஆட்டத்தில் துவக்கம் சரியில்லையெனில் தற்காப்பெல்லாம் நேரத்தை நீட்டிக்கவே....கதையை இவ்வரிகளை அசுபமாய் முடிக்க
...முடிக்க
துவக்கமே வண்டியை இழக்கும் மேட்டுக்குடி ஒரு குழுவானது....
வேறோர் குழுவின் வண்டியை பங்கு போட சுவாரஸ்யமான தன்னலம் ....தர்மசங்கடமாய் இடைஞ்சல் தருகிறோமே என குற்ற உணர்ச்சி என உரையாடல்களுடன் தளர்நடை போட்டு பயணம் துவங்க....நானோ பனியினூடே அப்புறமென கேட்டவாறே பயணிக்க...மேலும் அந்தக் கணத்தை கொண்டாடவும் திண்டாடும் முடியாமல் குழந்தை வரவு சுமையை கூட்ட.....விசுவாசமான வேலையாள் இருவரையும் விட்டுத் தராமல் பயணிக்கிறான்....
இதில் சுவாரஸ்யமாய் எனக்கு தோன்றியதோ பனியாட்களே...கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என துவங்கிய கதை இயலாதோரை கொல்ல அப்பெண்மணியும் சொல்ல...
தான் அந்த சூழலில் செய்தது தவறென உணர்ந்து காதல் வயப்படும் நாயகி...
சட்டென அவனை பரிதாபமாய் இழக்க...
கடைசியில் குழந்தை கணவன் என் இழந்து தானுமிழந்த....ராணியிழந்தபின் ஆட்டம் முடிவுக்கு வந்தாகனுமே என முடிவைச் சொல்ல....
ராணி இல்லாம விளையாட்டில் முடிவு வரலாம்...ஆனா நிச வாழ்க்கைப் போராட்டத்ல வெட்டப்படா சிப்பாயும் தப்பினால் வாழலாம்னு முடியுது கதை...
இந்தக் கதை படிக்க படிக்க நாமுமே அந்த மேட்டுக்குடி...பணியாட்கள்...அந்த வசதிமிக்க வண்டி இருந்தும் இயலா சூழலில் நடந்து வரும் தம்பதியினராய் மாறி மாறி அவர்கள் ஒவ்வொருவரையும் நியாயப்படுத்துவதை தவிர்க்க முடியாது...துணையாய் ஓநாய்களும்...வல்லூரும் பனி பெய்யும் இயற்கையுமே....கதை முடியும் போது நாமுனறும் தவிப்பும்...வெறுமையுமே அற்புதமாய் தோன்றினால் நீங்களும் நானுமோரினம்....சூப்பர் சார் நியாயங்கள் அவரவர் பார்வையில் சரிதானோ...
யப்பா போர் வேண்டாம்னு இஸ்ரேல் ஆப்கன் சமாதானப்படுத்த யாரையேனும் இறைதூதர் அனுப்ப சொல்லி வேண்டியபடி...
இக்கனத்த பாரத்த குறைக்க அடுத்து டெக்ஸோடோர் பயணம்
இஸ்ரேல் பாலஸ்தீன்
Deleteஅருமை சகோ.. ❤️👍
DeleteGood review
Deleteசி.ஐ.டி.ராபினின் வீடியோவில் ஒரு வெடிகுண்டு, மைடியர் மம்மி,பனியில் ஒரு பிணம் ஆகிய கதைகள் மீண்டும் வர வாய்ப்பிருக்கிறதா சார்?
ReplyDeleteகறுப்புக்கிழவி கதைகள், 007-ன் பறக்கும் பாவை படலம் ஆகியன மறுபதிப்பாக வந்தாலும் நன்றாக இருக்கும்.
ReplyDeleteதி சுப்ரிமோ ஸ்பெஷல்: வந்தார்! வென்றார்!!
ReplyDeleteதென் அமெரிக்காவின் சிலி மற்றும் அர்ஜன்டைனா நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் படகோனியா தீபகற்ப பகுதியே இந்த கதையின் நிகழ்விடம்.
அம்மண்ணின் பூர்விக மக்களோடு நல்லெண்ண அடிப்படையில் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ளும் பொருட்டு நியமிக்கப்பட்டிருக்கும் டெக்ஸின் நண்பர் மேஜர் ரிகார்டோ மென்டோஸாவின் அழைப்பின் பொருட்டு டெக்ஸ் வில்லர் மற்றும் கிட் வில்லர் இருவரும் வந்து சேர்கின்றனர். அப்பகுதியில் அமைதியைக் குலைக்கும் வகையில் படுகொலைகளை செய்திருந்த வடக்கு தவல்சீக்களின் தலைவன் கல்ஃப்யூகுராவை சிறைபிடிப்பதுடன் கைதிகளை விடுவிப்பதும் இந்நடவடிக்கையின் ஓர் அங்கம்.
தெற்கு தவல்சீக்களின் தலைவர் மன்குசேவின் நட்போடு ஒரு சீரிய திட்டத்தை வகுத்து கல்ஃப்யுகுராவின் பிடியிலிருந்து சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு அவன் கொல்லப்படுவதுடன் கதை முடிந்துவிட்டது என நினைத்தேன். ஆனால் பின்தொடரும் நிகழ்வுகள் எம்மாதிரியான ஒரு ரணகளமான நிகழ்வுக்கு வித்திடுகிறது என்பதை எண்ணும்போது உண்மையிலேயே மனம் கலங்கி விடுகிறது.
காலங்காலமாக பூர்வீக குடிகள் ஏமாற்றப் படுவதும் பின்தொடரும் படுகொலைச் சம்பவங்களும் ஏற்கனவே வாசித்தவை என்றாலும் மீண்டும் மனம் கனத்து விடுவதை மறுப்பதற்கில்லை. இனவெறித் துவேஷமும் இரத்த வெறியும் போர்க்களங்களில் தாண்டவாடும் பொழுது நீதியும் நியாய தர்மங்களும் அவ்விடத்தை விட்டு அகன்று விடுகிறது.
தங்களின் வாழ்விடத்தை விடுத்து உயிர்வாழ வேண்டி உயர்ந்திருக்கும் ஆண்டிஸ் பனிச் சிகரங்களைத் தாண்டி பயணிக்கும் மக்களின் இயற்கையோடான போராட்டம்... அம்மக்களின் உயிர்காக்கும் பொருட்டு தன்னுயிரை துச்சமாக மதித்து சொற்ப வீரர்களுடன் போர்க்களம் புகும் டெக்ஸ் மற்றும் செயல்க்கின் தீரம்... இறுதியில் நிகழ்வது என்ன?
தடாலடியான இராணுவ உத்தரவுகளை பின்பற்றுவதா? தன் மதிக்கும் கொள்கைகளுக்கு முன்னுரிமை தருவதா? தன் நட்பின் காரணமாக உதவ வந்திருக்கும் டெக்ஸின் எண்ணங்களை சாத்தியப்படுத்துவதா? இந்த கேள்விகளுக்கிடையே திணறும் மேஜர் ரிகார்டோவின் நிலை பரிதாபகரமாகவே உள்ளது.
இது டெக்ஸுக்கான கதை இல்லை. இக்கதையில் டெக்ஸும் ஓர் அங்கம். அவ்வளவே! மேற்கொண்டு அறிய படகோனிய பகுதிக்கு நீங்களும் சென்று வரலாம் நண்பர்களே! ரொம்பவும் வித்தியாசமான சாகசம் காத்திருக்கிறது.
அருமை நண்பரே.....
Deleteஇன்னும் 12 நாட்களே அட்டவணைக்கு
ReplyDeleteயெஸ்... டின் டின்னை பொறுத்து சூப்பர் ஸ்டாரை ஒப்பத்தம் போட்டாச்சுது. ஆல்ரெடி ஏகப்பட்ட தாமதம்...மேலும் அடுத்த ஈரோடு விழா வரை அவரை தள்ளிபோடுவது அத்தனை உசிதமல்ல...
Deleteசந்தாவில் டின்டின் இருந்தா அந்த சந்தாவோட வேல்யூ கணிசமான அளவு அதிகரிக்கும்... கூடுதலான சந்தாக்களை கவரும் அம்சமாக டின்டின் இருக்கும்..
சோ, ஓகே கிடைச்சிட்டது எனில் நான் டின்டின்னை உடனடியாக களம் இறக்கவே செய்வேன்..
பெஸ்ட் பேட்ஸ்மேன் பெஞ்சில அமர்ந்திருப்பதில் அணிக்கும் இழப்பு; ஆட்டக்காரருக்கும் இழப்பு.
டெக்ஸ், லக்கி வரிசையில் அடுத்த அட்ராக்ஷனாக
டின்டின் இருக்கும்...!!
சந்தாவில் டெபுட் பண்ணிட்டு
ரெண்டு ஸ்லாட் கொடுத்தாகணுதம், 4கதையாவது போட்டாவணும்னு இருந்தால் என் லிஸ்ட்ல உள்ள புதிய அறிமுகம்& கெளகாய் ஒன்ஷாட்டை ரீமூவ் பண்ணிட்டு டின்டின்க்கே அந்த இடங்களை வழங்குவேன்...
ரோஹித்& கில் ஒரே மேட்சில ஃபயர் பண்ணினா ரிசல்ட் எப்படி இருக்கும்னு பாருங்க.. அதுவும் நாக்அவட் ஆட்டத்தில்னா...💪
நீங்க சொன்னது எல்லாமே valid Points தான் டெக்ஸ். நானும் கண்டிப்பா முத்து ஆண்டு மலரில் இதை வருட துவக்கத்தில் இறக்கி விடுவேன். சென்னை புத்தக விழாவிலும் நமக்கு அட்டகாசமான ஆரம்பமாக இருக்கும் 2024. I would Love to see Tintin in our காமிக்ஸ்.
Delete// பெஸ்ட் பேட்ஸ்மேன் பெஞ்சில அமர்ந்திருப்பதில் அணிக்கும் இழப்பு; ஆட்டக்காரருக்கும் இழப்பு //
Delete+1
172nd
ReplyDeleteவிஜயன் சார்,
ReplyDelete2023 சந்தா அறிவிப்பில் மேக்-ஜாக் மற்றும் இளவரசிக்கு கண்டிப்பாக 2024 சந்தாவில் இடம் இருக்கும் என நீங்கள் சொன்னதை தாழ்மையுடன் நினைவுபடுத்துகிறேன் சார்.
லக்கி லூக் - 2 கதைகள் லயன் ஆண்டு மலராக ரூ.250
ப்ளூ கோட் பட்டாளம் - 1 கதை ரூ.120
சுஸ்கி விஸ்கி - 2 கதைகள் ஒரு ஆல்பமாக ரூ.250
மேக் & ஜாக் - 1 கதை ரூ.120
IRS - 2 கதைகள் ஒரு ஆல்பமாக ரூ.200
தோர்கல் - 2 கதைகள் ஒரு ஆல்பமாக ரூ.250 [இது ஒரு கதையாக மட்டும் வர வாய்ப்புகள் அதிகம் (ரூ.120)]
வான்மேற்கின் அத்தியாயம் - 2 கதைகள் ஒரு ஆல்பமாக ரூ.135
மாதம் 1 டெக்ஸ் கதை - 11 கதைகள் (தீபாவளி மலர் தவிர) ரூ.1600
டெக்ஸ் தீபாவளி மலர் ரூ.750
இளவரசி + 007 கிளாசிக் ரூ.100
சம்மர் ஸ்பெஷல் ரூ.500
===============
டேங்கோ - 1 கதை
ஆல்பா - 1 கதை
ரூபீன்- 1 கதை
சிக்-பில் - 1 கதை
நெவாடா - 1 கதை ரூ.135
ஜானி - 1 கதை ரூ.120
டெட்வுட் டிக் - 1 கதை ரூ.125
கிராபிக் நாவல்
==============
XIII ஸ்பின் ஆப் கதை ஒன்று ரூ.120
நவீன வெட்டியான் - 1 கதை ரூ.120
அண்டர்டேக்கர் - 2 கதைகள் ஒரு ஆல்பமாக ரூ.200
ஒரு புதிய கிராபிக் நாவல் ரூ.120
தாதாஸ் - 1 கதை ரூ.150
நில் கவனி வேட்டையாடு - அடுத்த பாகம் தயார் என்றால் 2024 சந்தாவில் இடம் பிடிக்க வாய்ப்புகள் அதிகம். - ரூ.150
மொத்தம் 30 புத்தகங்கள்; சந்தா விலை ரூபாய்.5,515
டின் டின் - புத்தக திருவிழா ஸ்பெஷல் ஆக வருவார் என்ற நம்பிக்கையில் இந்த அட்டவணையை தயாரித்து உள்ளேன் சார்.
DeleteSema
Deleteநல்ல முயற்சி PfB...
Deleteஇளவரசி, 007க்கெலாம் மனசுலயே இடம் விசாலமாக உள்ளதே...
மேக்& ஜாக் கூட நம்ம கூட்டத்துக்கு தேவையான பரபரப்பை கொணரல...
ரூபினா சோடாவா ஜானியானு வாக்கெடுப்பு வைத்த போதே அந்த கம்பைண்டு கோடைமலர் ஆப்சன்ல இல்லைனு தெரிஞ்சிடுத்து...
நில் கவனி வேட்டையாடு , பாகம்2---99பக்கங்கள்.. அது 250வதாவது வரக்கூடும்...!
நெவாடா - என்னை பொறுத்தவரை கதை அந்த அளவுக்கு ஈர்க்கவில்லை , அடுத்த வருடம் 2024 சந்தாவில் இடம் கொடுக்க விருப்பம் இல்லை; ஆனால் எந்த ஒரு புதிய தொடரையும் ஒரு கதையை வைத்து முடிவு செய்வது சரியில்லை என்பதை ஆசிரியரிடம் இருந்து கற்று கொண்டதால் நெவாடாவுக்கு 2024 சந்தாவில் இடம் கொடுத்து உள்ளேன் :-)
Deleteவிஜயராகவன் @
Deleteசோடா அடுத்த வருடம் வராமல் இருப்பது எனக்கு வருத்தமே! ஆனால் ஆசிரியர் ரெகுலர் சந்தாவில் இல்லாவிட்டாலும் ஏதாவது வகையில் வரும் என சொல்லி உள்ளதால் சந்தோசமாக உள்ளது!
மேக்-ஜாக் & இளவரசி பற்றி ஆசிரியர் 2023 அட்டவணையில் இவர்களை பற்றி நம்பிக்கையூட்டியதால் அவர்களுக்கு இடம்; கடந்த வருடம் வந்த இளவரசி & கிளாசிக் 007 நன்றகா இருந்தது!
சோடா அடுத்த வருடம் வராமல் இருப்பது எனக்கு வருத்தமே! ஆனால் ஆசிரியர் ரெகுலர் சந்தாவில் இல்லாவிட்டாலும் ஏதாவது வகையில் வரும் என சொல்லி உள்ளதால் சந்தோசமாக உள்ளது!
மேக்-ஜாக் & இளவரசி பற்றி ஆசிரியர் 2023 அட்டவணையில் இவர்களை பற்றி நம்பிக்கையூட்டியதால் அவர்களுக்கு இடம்; கடந்த வருடம் வந்த இளவரசி & கிளாசிக் 007 நன்றகா இருந்தது!
// - இளவரசி ப்ளைஸி: 2023-ல் இவருக்கு ஒரு குட்டி விடுமுறை! கண்டிப்பாக டாக்டர்களுடன் மட்டும் அல்ல ! இந்த விடுமுறைக்கான பின்னணியினை next பதிவில் சொல்லிடுறேன் guys ! நம்புங்கள் - நம்புங்கள் - அது ரசனையோ, விற்பனையோ சார்ந்த காரணமே அல்ல !
- மேக் & ஜாக்: முந்தைய பத்தியில் விவரித்திருந்தேன் பின்னணியை! இந்த சிகாகோ ஜோடி சர்வ நிச்சயமாய் 2024-ல் இடம்பிடிப்பர் – on may be even earlier too - நீங்கள் மனசு வைத்தால் ! //
ம்ம்ம்ம்.. பழையை தகவலை நீங்களும் தேடி வைத்துள்ளது இளவரசி மேல உள்ள பிரியத்தை காட்டுது PfB...வெரிகுட்..💐
Deleteஇத்தனை ஆண்டுகாலம் ஆசிரியர் சாரோடு பழகி, பாலோ பண்ணியுள்ளதன் அடிப்படையில் பார்த்தால் இந்த சமாதானங்கள், அந்நேரத்துக்கு இளவரசி பிரியர்களை ஆறுதல் படுத்த சொல்லப்பட்டது போலதோனு தோணுது..குறிப்பாக டாக்டர்களை..ஹி.ஹி...
ஆனா விற்பனை முனை, ஜானி போன்ற பழம் பீசுகளே எலிமினேசன் சுற்றுக்கு வந்ததை வைத்து பார்த்தா இளவரசி, 007, மேக்&ஜாக் போன்றவற்றின் ஜோலி இப்போதைக்காவது அவ்வளவுதான்னு தெரியவருது...
பட்டா பாகியம்; படாட்டி லேகியம்னு எடுத்து கொள்ள வேண்டியது தான்...ஹி.ஹி.. பாவனாவை ரசிக்க தமிழ் கமெண்டரி பார்த்து.......
This comment has been removed by the author.
Deleteஇளவரசி கதைகளை விரும்பி படிப்பேன்; ஆனால் விற்பனையில் அவர் சாதிக்கவில்லை என ஆசிரியர் சொன்ன பிறகு சமாதானம் கொண்டேன்; இது எனக்கு விருப்பமான நாயகர்/நாயகி (கமான்சே / ரின்-டின் / ஸ்மூர்ப்ஸ் / விஞ்சானி தாத்தா) யார் என்றாலும் விற்பனையில் கொடி
Deleteகட்டி பறக்கவில்லை என்றால் ஆசிரியருடன் உடன்பட ஆரம்பித்து விட்டேன் சில காலமாகவே!
மேற்படி சொன்னது இளவரசி திருப்ப வர போகிறார் என்ற ஆர்வத்தால் இல்லை, ஆசிரியர் 2023 அட்டவணை பதிவில் சொன்னதால் அவர்களுக்கு இங்கு (2024 சந்தா அட்டவணையில்) இடம் கொடுத்தேன் :-)
அடுத்த ஆண்டு "லயன் காமிகஸ்" -க்கு ஒரு முழுமையான ஆண்டு-.
Deleteஎனவே - ஆண்டு மலராக லக்கிலூக்-(இரண்டு ஆல்பங்கள்) இடம்பிடித்தாலும்..
மேலும், ஒரு ஆண்டு மலராக-இளவரசியின் (இரண்டு ஆல்பங்கள்) -(எங்களுக்கெல்லாம் மாடஸ்டி கதைகள் ஆல்பம் மாதிரிதான்) - கொண்ட சிறப்பிதழை வெளியிட்டு "டெக்ஸ் வில்லரை"-
போல நீதியையும் , நேர்மையையும் ஆசிரியர் நிலைநாட்டுவார் என்று நம்புகிறேன்.. ij.
2024-யில் "இளவரசி" வேண்டும்..
Delete////ரெடியாகியுள்ள நமது அட்டவணையோடு நெருங்கிச் செல்லும் திட்டமிடலுக்கு 2024-ன் சகல இதழ்களும் நம் அன்புடன் அனுப்பிடப்படும் ! So why not give it a shot all ?//
ReplyDelete@ஆசிரியர் சார்
ஆறுதல் பரிசுலாம் ஏதும் இல்லைங்களா சார்.
பன்னு, கேக்குனு ஏதுனாச்சும்....ஹி..ஹி...!!!
பேய் புகுந்த பள்ளிக்கூடம்....
ReplyDeleteபிஜிலி வெடி சின்னதுதான்..ஆனா பகல் பூரா பண்டிகை அன்று அதான் துணை.....
கதை குட்டுயூண்டுனாலும் தேவையான சரக்கு இருப்பது விசேசம்..அமானுயஸ்யம், சயின்ஸ்னு கலந்து கட்டி சுவாரயஸ்யமாக சொல்லப்பட்டுள்ளது.
ஷரிலுக்கு கருணை காட்டும் பாவப்பட்ட ஸ்காட் ஒரு நொடி முரட்டு வடிவம் மறைந்து நம் பரிதாபங்களை அள்ளிடறான்.
முந்தைய இலவச இணைப்பில் தவறியது இம்முறை நேர்த்தியாக பண்ணப்பட்டுள்ளது.
தடிமனான தாள்கள்,
அடர் வண்ணக்கலவை கதைக்கு கூடுதல் வலு!
தயாரிப்பு 10/10
கதை 9/10
வசனங்கள் 10/10
இனிவர உள்ள இரு டெக்ஸ் வாமன அவதாரங்களும் இதே தரத்தில் நேர்த்தியாய் வரட்டும் சார்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஒருவருக்கு ஒரு பதிவு தானா சார் ?
ReplyDeleteYES :-)
Deleteசின்னமனூர் பி சரவணனின் 2024க்கான மாதிரி அட்டவணை....
ReplyDeleteA.டெக்ஸ்
1.மூன்று பாக ஆல்பம் 1.225.
2.இரண்டு பாக ஆல்பம் 4x160=720
3.இளம் டெக்ஸ் கலர் 1.80.
4.இளம் டெக்ஸ் க/வெ-300.
5.கலர் டெக்ஸ் 1 -250.
B.ஸ்பெஷல் புக்ஸ்.
1.டெக்ஸ் வித் தீபாவளி மலர் -500.
2.கோடை மலர் - 500.
( ஆல்பா+டேங்கோ+ரூபின் +கிட் ஆர்டின் டாக்புல்).
3.லக்கி லயன் ஆண்டு மலர் -500.
C.ப்ளு கோட் 120.
D .
1.IRS 200.
2.நெவாடா 135.
3.தாத்தாஸ் 150.
4.வன்மேற்கின் அத்தியாயம் 2 இதழ் 270.
5.XIII 130.
6.தோர்கல் 250.
7.ஏஜெண்ட் சிஸ்கோ 250.
8.ரிப் ஜானி 100.
9.ஸ்டெர்ன் 120.
10.கிராபிக் நாவல் 2க்கு 200.
11.அண்டர் டேக்கர் 200
12.டெட்வுட் டிக் 130.
13. புதிய ஹீரோ அறிமுகம் 250.
மொத்தம் -5580+
பேக்கேஜிங்-220= 5800.
மொத்தம் 26 இதழ்கள். புதிய அறிமுகம் இருவராக இருந்து இரண்டு சிங்கிள் ஆல்பங்கள் என்றால் 27 இதழ்களாகிவிடும்.
டின் டின் + சுஸ்கி விஸ்கி + கிளாஸிக் கதைகள் +ஸாகோர் வண்ண இதழ் +பெளன்சர்எங்கே ? எப்போது ? பகுதியில் வரும் எனக் கணித்துள்ளேன்.
V காமிக்ஸ்:::
ஆறு மாத சந்தா 650.
1.வன்மேற்கு 1- 125.
2.ஸாகோர் 2 - 225.
3.சாம்வில்லர் 1. 100.
4.ராபின் 1. 100.
5.Mr.நோ 1.100.
மொத்தம் 6 இதழ்கள்.
Very nice
DeleteSelfi எப்படி அனுப்புவது
ReplyDeleteஆரம்ப காலத்தில் வந்த புக் மார்க்கெட் பகுதி யை மீண்டும் கொண்டு வரலாம் சார்
ReplyDeleteஇல்லை சார் ; அதில் நிறையவே சிக்கல்கள் எழுந்தன ! தவிர இப்போது தான் இந்தச் சேவை ஆற்ற எக்கசக்க க்ரூப்களும் உள்ளனவே !
Deleteபுக் மார்க்கெட் பகுதி வேண்டாம். ஆசிரியர் சார் சொன்னது சரி தான். அதற்குப் பதில் வாசகர்களை போட்டோவுடன் அறிமுகம் செய்யும் பகுதி ஆரம்பிக்கலாம்.
Deleteவிதி எழுதிய வெள்ளை வரிகள் புத்தகம் மட்டும் பாக்கி. இன்றிரவு சாமிய கும்பிட்டுவிட்டு ஆரம்பிக்கனும்.😀😀😀
ReplyDelete