Powered By Blogger

Saturday, October 28, 2023

தி லயன்-முத்து யுனிவெர்ஸ் !!

 நண்பர்களே,

வணக்கம். 2011-ன் ஏப்ரல் மாதம் அது! தேசமே ஆரவாரமாய் டி.வி. ‘பொட்டிகளின்‘ முன்னே தவமிருந்த நாட்களவை! ஒரு மறக்க முடியாத மும்பை இரவில் மகேந்திர சிங் தோனி ‘பொளேர்‘ என சிக்ஸர் ஒன்றைச் சாத்திய கையோடு, பேட்டை கக்கத்துக்குள் செருகியபடியே நடையைக் கட்ட – இந்தியாவே ஆர்ப்பரித்தது – கிரிக்கெட் உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வாரிய சந்தோஷத்தில்! இப்போ அப்டியே ‘கட்‘ பண்ணி ஒரு டஜன் ஆண்டுகளுக்குப் பிற்பாடான இந்தியாவிலேயே மறுக்கா land ஆனாக்கா – இன்னொரு 50 ஓவர் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் இப்போதும் நடந்து வருவது தெரிகிறது ! செம form-ல் செட் ஆனதொரு இந்திய அணி எதிர்ப்படுவோரை சப்பளித்துப் போய்க் கொண்டேயிருக்கிறது & கோப்பை # 3 நமக்கே நமக்குத் தான் என்ற நம்பிக்கை நாடு முழுவதிலும் ரீ்ங்காரமிட்டு வருகிறது! ஆனால் நம்ம ‘ஜும்மை” இன்னும் சித்தே tight க்ளோஸ்-அப்புக்குக் கொண்டு போய்ப் பார்த்தால் – ‘இன்னா மேன் நிறைய மேட்ச்களில் சீட்ஸ்  காலி-காலியா கீது?” என்ற கேள்வி எழுகிறது! 12 ஆண்டுகளுக்கு முன்பாய் இமை தட்டாது 50 ஓவர்களையும் பார்த்து ரசித்து வந்த நாமளே, அப்பப்போ டிஸ்னி ஹாட்ஸ்டாரில் மேட்சை மேலோட்டமாய் highlights பார்த்துப்புட்டு, “ஆங்... மாப்பு... இன்னா அடி தெரியுமா?” என்று நட்பு வட்டத்தில் அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறோம்!! கிரிக்கெட் மீதான மோகம் இன்னமும் உள்ளது தான்; கோலியின் கவர் ட்ரைவைப் பார்க்கும் போது டையடிச்ச தலைமுடியெல்லாம் நட்டுக்கிறது தான்... ஆனால்... ஆனால்... இன்னிக்கு நம் வசம் நேரம் மட்டும் முன்போல் இல்லையே! 

இதை முன்கூட்டியே எதிர்பார்த்த உலக கிரிக்கெட் நிர்வாகிகள் என்ன செய்கிறார்கள்? “நோக்கு 50 + 50 ஓவர்களை நாள் முழுக்கப் பார்க்கத் தானே தீரலை அபிஷ்டூ? நோ ப்ராப்ளம்! 20 + 20 ஓவர்களில் எண்ணி நாலே மணி நேரத்திலே மேட்சை முடிச்சுக் காட்டறேன்டா! பற்றாக்குறைக்கு ஆஃப் ட்ராயர் போட்ட அமெரிக்க சியர் லீடர் பார்ட்டிகளையும் ஸ்டேடியத்துக்கே இட்டாந்திடறேன்! ஜமாய்!! என்றபடிக்கே T20 என்ற போட்டிகளை அறிமுகம் செய்து விடுகிறார்கள்! IPL; BPL; CPL – என்றும் தேசத்துக்கு தேசம் இந்தச் சுருக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் வேரூன்றி நமது இன்றைய சூழலுக்கேற்ற என்டர்டெயின்மென்டைத் தரத் துவங்கி விட்டன!

கிட்டத்தட்ட ஒரு டஜன் ஆண்டுகளுக்கு முன்பாய் நாம் உலகக் கோப்பையை தட்டிய அதே காலகட்டம் தான் நமது இரண்டாவது இன்னிங்ஸின் துவக்கப் புள்ளியுமே! அன்று சக்கை போடு போட்டு வந்த 50 ஓவர் மேட்ச்களைப் போல நாமும் வண்டி வண்டியாய் பெரிய இதழ்கள்; குண்டு புக்ஸ், கதம்பக் கூட்டணிகள் என்று இப்போது வரை தாக்கி வந்து கொண்டிருக்கிறோம்! அட இந்த நடப்பாண்டு 2023 நிறைவு கண்டிருக்கும் போது, நாமே இனியொரு தபா கற்பனை கூட பண்ணிப் பார்த்திட இயலா ஒரு நம்பரோடு ஆண்டுக்கு ‘சுபம்“ போட்டிருப்போம்! சின்னதாய் ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தோம் ஆபீஸில்!

- 67 இதழ்கள்

- 8856 பக்கங்கள் 

என்பதே இந்த 2023-ன் நமது ‘பொம்ம” புக் உற்பத்தி stat ஆக இருந்திடும்! ஆக மாதம் ஒன்றுக்கு 750 பக்கங்களுக்கு கொஞ்சமே கொஞ்சம் குறைச்சலான எண்ணிக்கையிலான வாசிப்பை உங்களுக்கு தந்து வந்திருக்கிறோம்! And அதுவும் இந்த T20 யுகத்தினில்! திரும்பிப் பார்க்கையில் எனக்கே மலைப்பாக உள்ளது - இத்தனை பெரும் பளுவை துளியும் முகச்சுளிப்புகளின்றி நீங்கள் இந்த ஆண்டு முழுவதிலும் சுமந்திட சம்மதித்தமையைக் கண்டு! வேறு எதைப் பற்றியும் எழுதவோ – அலசவோ – அறிவிக்கவோ முற்படுவதற்கு முன்பாய் இந்த பாகுபலி பொறுமைகளுக்கு எங்களது மெகா சல்யூட் செய்வது எங்களது கடமையாகிறது folks! ஒரு கோடி நன்றிகள் all! You have been simply incredible! அதே சமயம் இந்த 8856 பக்கங்களில் பாதியையாவது வாசித்திருக்கும் நண்பர்களின் எண்ணிக்கை என்னவாக இருக்குமென்று அறிய ஒரு குறுகுறுப்பு !! 

நமது இதே வேகமோ; இதே பாணியோ தொடரும் ஆண்டுகளிலும் தொடர்ந்தால் – ஆங்காங்கே உள்ள பரண்களும், பீரோக்களும் நிரம்பி வழியத் தொடங்குவதோடு நாம் நேசிக்கும் இந்தச் சித்திரக் கதை உலகின் மீதே ஒரு அயர்வும் எழுவது தவி்ர்க்க இயலா சங்கதியாகிப் போகுமோ என்ற மெல்லிய பயம் எழுகிறது ! And அது மாத்திரமின்றி, எனது தேடல்கள் என்னைக் காடு மேடெல்லாம் இட்டுச் சென்றாலுமே, இறுதியில் நான் திரும்பிட வேண்டியது நமது ஆபீஸிக்கும் கிட்டங்கிக்குமே என்ற புரிதலும் முன் எப்போதையும் விட இம்முறை அதிகமாய் நெருடுகிறது! Simply becos – கிட்டங்கியானது பகாசுரனின் வயிற்றைப் போல ரொம்பத் துவங்கி விட்டது! So கடந்த 12 ஆண்டுகளாய் எனது ரசனைகளோ; ஆசைகளோ; உங்களின் அவாக்களோ தீர்மானித்து வந்த அட்டவணையினை நிர்ணயம் செய்வதில் இம்முறை திருவாளர் கிட்டங்கியும் ஒரு முக்கியக் குரலாகிடுகிறார்!

- அள்ளியடித்து மாதம்தோறும் எக்கச்சக்க புக்ஸைத் திணித்தாலும் – வாசிக்க உங்களிடம் உபரியாக உள்ள நேரம் குறைச்சலே என்பது கண்கூடு! Fact of life!

- புதுசாய் வாசகர்கள் உட்புகுவது இருந்தாலுமே நமது முதுகெலும்பே தற்போதைய இந்தக் காமிக்ஸ் காதல் மிகுந்த சிறுவட்டமே என்பதை தலீவரின் பட்டாப்பெட்டி மீது பிரமாணமாய் சொல்வேன்! இந்தச் சிறுவட்டத்தினை தெடர்ந்து கட்டுண்டு வைத்திருப்பதே தலையாய கடமை ! Fact of a பட்டாப்பெட்டி!

- கிரிக்கெட் காதல் இன்னமும் உயிர்ப்போடு உள்ளது தான்! காமிக்ஸ் காதலுமே தான்! ஆனால் 12 ஆண்டுகளின் ஓட்டமானது – நமது தொந்திகளையும், பொறுப்புகளையும் அதிகமாக்கியுள்ளன ! So மாறி வரும் சூழலுக்கேற்ப நமது பயண பாணியை சற்றே tweak செய்து கொள்வது மாத்திரமே முன்செல்லும் தாரக மந்திரம் என்பது புரிகிறது!

- இங்கே ஜுனியர் எடிட்டரின் அந்த V காமிக்ஸ் பாணி சுவாரஸ்யமாய்த் தென்பட்டது! Oh yes – ஜம்பிங் பேரவையின் நாயகரது டார்க்வுட் நாவல்ஸ் இன்னும் சற்றே better ஆக இருந்திருக்கலாம் தான்; ஆனால் அவை தவிர்த்த ஏஜெண்ட் ராபின் கதைகள்; மிஸ்டர் நோ சாகஸம்; ஸாம் வில்லர் ஆல்பம்; ஸாகோர் Vs இளம் டெக்ஸ் அதிரடி என்று crisp வாசிப்புகள் இந்த T20 யுகத்துக்குப் பொருந்திடுவதாய்பட்டது! அதற்காக ஒற்றை நாளிரவில் சீரியஸ் ஜானர்களை ஜன்னல் வழியே கடாசி விட்டு ஜாலியான கதைகளை மட்டுமே களமிறக்கப் போகிறோம் என்றெல்லாம் இல்லை ! மாறாக, குறைந்து வரும் உங்களின் வாசிப்பு மணித்துளிகளுக்கேற்ப வாகான இதழ்களுக்கு முன்னுரிமை தருவது என்பதே இந்தாண்டு முதலான நமது பார்முலாவாக இருந்திடவுள்ளது ! 

- தயக்கங்களேயின்றி அனைவரும் வாங்கவும் சரி, வாசிக்கவும் சரி, தோதான ஆல்பங்கள் மட்டுமே மெயின் சந்தாவினில் இடம் பிடித்திடும்! “The UNIVERSAL சந்தா” என்ற இந்தத் தடத்தின் இதழ்கள் சகலமும் உங்களை வாசிக்கத் தூண்டுபவைகளாகவும்; உங்களிடம் கொள்ளை நேரங்களை டிமாண்ட் செய்திடாதவைகளாகவும் இருந்திடும்! மதில் மேலான பூனைகள் யாருக்குமே இங்கு இடமிராது !

- அதே நேரம், தீவிர காமிக்ஸ் ஆர்வலர்களை மாத்திரமே ரசிக்கச் செய்யும் தொடர்கள் / ஆல்பங்கள் மெயின் சந்தாத் தடத்தில் இடம் பிடித்திடாமல். “M.Y.O.M.S” என்ற பிரத்தியேகத் தண்டவாளத்தில் இனி சவாரி செய்வார்கள்! நிஜமாகவே இந்த முடிவெடுப்பது எனக்கு எட்டிக்காயாய் கசக்கிறது தான் ; ஆனால் சுடுகிறதென்பதற்காக நிஜத்தை போர்வை போட்டு மூடி விடுவதில் ஆதாயம் ஏதுமில்லையே ? விற்பனையின் முகங்கள் நான்கு நம்மைப் பொறுத்தவரை ! பிரதானமாய் சந்தாக்கள் ; அடுத்தது ஆன்லைன் ஆர்டர்ஸ் ; மூன்றாவது ஏஜெண்ட் விற்பனை & நான்காவது புத்தக விழா விற்பனைகள் ! வெளியாகிடும் சகலத்தையும் வாங்கிடும் சந்தா நண்பர்கள் எல்லா இதழ்களுக்கும் துணை நிற்பது obvious ! ஆனால் ஆன்லைன் ஆர்டர் செய்திடும் நண்பர்களும் சரி, முகவர்களிடம் வாங்கிடும் நண்பர்களும் சரி, ரொம்ப ரொம்ப தேர்வு செய்தே selective ஆக வாங்கிடுகின்றனர் ! டெக்ஸ்சா ? ரைட்டு... லக்கி லூக்கா ? ரைட்டு...! க்ளாஸிக் நாயகர்களா ? ரைட்டு ....கிராபிக் நாவலா ? வாணாம் ! சோடாவா ? வாணாம் ! கார்டூனா ? ஊஹூம் ! என்று filter செய்து விடுகிறார்கள் ! அவ்விதம் பில்டர் ஆகிடும் இதழ்கள் அடுத்த ஏழோ - எட்டோ வருஷங்களுக்கு கிட்டங்கிகளில் கிடந்த லோல்படுகின்றன ! அடுத்தடுத்து புக்ஸ் வெளியாகிடும் போது இவை உள்ளுக்குள் புதைந்து விடுகின்றன and புத்தக விழாக்களில் யாரேனும் புண்ணியவான்கள் வாங்கினால் மாத்திரமே ஏதாச்சும் கரை சேருகிறது ! So என்ன தான் மாறுபட்ட பாணிகளில் புதியவர்கள் களமிறங்கினாலுமே அதி தீவிர வாசக வட்டத்தைத் தாண்டி அவர்களால் அடுத்த சுற்று வாசகர்களை ஈர்க்க முடியவில்லை ! இது தான் கொஞ்ச வருஷங்களாகவே இருந்து வரும் நடைமுறை ! இதற்கு மேலும் நமது பாணியினில் மாற்றம் கொணராவிட்டால் திருமலை நாயக்கர் மஹாலை வாடகைக்கு கேட்டுப் பார்ப்பதைத் தாண்டி வேறு வழியே இராது !

M.Y.O.M.S – Make Your Own Mini Santha

இங்கே இடம்பிடிக்கும் நாயக / நாயகியரின் ஆல்பங்களுக்கு சந்தா நம்பருக்கேற்ற ப்ரிண்ட்ரன் மட்டுமே இருந்திடும்! So விலைகள் சற்றே கூடுதலாகிடுவது தவிர்க்க இயலாது போகும்! ஆனால் இவை கடைகளிலும், கிட்டங்கிகளிலும் கிடந்து சீரழிந்திடாது! "எனக்கு நேரத்துக்குப் பஞ்சமில்லை! இத்தனை காலமாய் ரசித்தும், பழகியும் வந்த variety எனக்குத் தொடர்ந்திடவே வேண்டும்!" என்று கருதிடும் நண்பர்களுக்கான Super exclusive தடமாக M.Y.O.M.S இருந்திடும்!

- இந்த இரண்டு மட்டுமே முக்கிய சந்தாத் தடங்களாக இருந்திட, சின்னதாய் ஒரு உட்பிரிவுச் சந்தாவும் இருந்திடும் – தாத்தாஸ் போன்ற niche கிராபிக் நாவல்களை உள்ளடக்க! தாத்தாஸ் கதைகள் டாப் க்ளாஸ் தான்; சந்தேகம் லேது தான்! ஆனால் எப்படி நமது ஸ்மர்ஃப்களை ரசிக்கவே இயலவில்லை என நண்பர்களின் ஒரு சாரார் மிரண்டார்களோ, அதே போல தாத்தாக்களைக் கண்டால் தெறித்தடித்து ஓடும் ‘யூத்‘களும் உண்டு! அவர்களை சிரமப்படுத்தாமல் இருக்க “The கி.நா. சந்தா” உதவிடும்! இவற்றை வாங்குவதோ- தவிர்ப்பதோ உங்களது choice ஆகவே இருந்திடும்!

- And இறுதியாக ஜுனியரின் V காமிக்ஸ் சந்தா! நடப்பாண்டை விடவும் - 2024-க்கென V-ல் தேர்வாகியுள்ள ஒவ்வொரு இதழும் ஒரு மினி டைனமைட் ரகமாய் எனக்குப்படுகிறது! இங்கே நாம் கோரிடப் போவதோ ஜனவரி to ஜுன் 2024 முடிய 6 மாதச் சந்தாத் தொகையினையே! கடைசி 6 மாதங்களுக்கான இதழ்கள் சார்ந்த அறிவிப்பும், சந்தாத் தொகையும் ஏப்ரல் 2024-ல் வந்திடும்!

- Ditto with வேதாளர், மாண்ட்ரேக், சார்லி, ரிப் கிர்பி, காரிகன் etc! சுப்ரீம் `60s தடமானது மார்ச் 2024ல் தான் நிறைவுறும் என்பதால் அதற்கடுத்த க்ளாஸிக் நாயகர் சீஸன் ஏப்ரல் 2024ல் தான் அறிவிக்கப்படும்!

- இவையே அறிவிப்புகளுக்கு முன்பான பொதுவான premises! இதுவே ஒரு முழுப் பதிவு நீளத்துக்கு ஓட்டமெடுத்திருப்பதால் - இதற்கு மேலும் நீட்டி முழக்காது அறிவிப்புகளுக்குள் நுழையலாமா guys?

Here we go!


- "The Universal சந்தா" என்றான நொடியில் இதற்குள் டைரக்டாக entry பெற வேண்டிய நாயகப் பெருமக்கள் யாரென்று யோசிக்க பெருசாய் தேவையிருக்கவில்லை ! காத்திருப்பது நமது லயனின் 40-வது ஆண்டெனும் போது, மாதம்தோறும் ஜாலியான இதழ்களாய் ரவுண்டு கட்ட வேண்டுமென்று எண்ணினோம்!

So முதல் 3 சீட்களை தமதாக்கிட்டோர் 3 சர்வதேச ஜாம்பவான்கள்! அவர்களின் முதலாமவரை ”டின்டின்..........டின்டின்” என்று உலகெங்கும் கொண்டாடுகிறார்கள். 94 ஆண்டுகளாய், உலகெங்கும் கோடிகளில் விற்பனை கண்டுள்ள இந்த சாகஸ வீரர் - 2024-ன் நமது highlight-களில் பிரதானமானவராக இருந்திடப் போகிறார்! டின்டின் உலகினுள் தலைநுழைப்பது தான் நமக்குப் பிரம்மப் பிரயத்தனமாய் இருந்ததென்றால் - அதன் பின்பாய் இந்த சூப்பர் ஸ்டாரைத் தமிழ் பேசச் செய்வதென்பது ராட்சஸப் பிரயத்தனமாக இருந்து வருகிறது ! Anyways - “திபெத்தில் டின்டின்” என்ற அதகள சாகஸத்தோடு டின்டினின் பயணம் நம்மோடு துவங்கிடுகிறது! இவரது 3 ஆல்பங்களையும் ஒரு தனித்தடமாகக் கொண்டு செல்லும் சபலம் தலைதூக்கியது தான்; ஆனால் உலகே கொண்டாடும் ஒரு சூப்பர் ஸ்டாரைத் தனித்தடத்துக்குக் கொண்டு சென்று தனிமைப்படுத்த எனக்குப் பிடிக்கவில்லை. "Universal ஆக சிலாகிக்கப்படும் ஒரு நாயகர் இல்லாமல் என்ன புடலங்கா Universal சந்தா?” என்று என் மண்டை சொல்ல, 2024ன் முதல் பயணியாகிறார் டின்டின்.And more than anything else, அனைவருமே இந்த நாயகரோடு கரம் குலுக்க வேண்டும் என்பது எனது அவா ! So-

- 1 x சிங்கிள் ஆல்பம் 

- 2 x சிங்கள் ஆல்பம்ஸ் (ஒரே கதை - 2 அத்தியாயங்களில்)

என்பதே இவருக்கான ஒதுக்கீடு! MAXI சைஸில்; முழு வண்ணத்தில்; உலகெங்கும் நாம் வெவ்வேறு மொழிகளிலும் பார்த்திடும் டின்டின் இதழின் அச்சு அசலான வார்ப்பாய் நமது தமிழ் பதிப்புகளும் இருந்திடும்! காலத்தை வென்ற இந்தத் தொடரை லயனின் ஒரு மைல்கல் ஆண்டில் கொண்டு வருவது பெரும் தேவன் மணிடோவின் வரமன்றி வேறில்லை! God be with us!!


- தி Universal சந்தாவின் பயணி # 2 நமது தலைமகன் TEX! நம்மோடு 39-வது ஆண்டாய் பயணம் செய்திடப் போகும் டெக்ஸ் & டீமுக்கு சந்தாவில் உள்ள ஸ்லாட்ஸ் மொத்தம் 9. ஆன்லைன் புத்தக மேளாவின் போது மேற்கொண்டு 1 ஸ்லாட்; V காமிக்ஸின் July-Dec சந்தாவில் இன்னொரு ஸ்லாட் என்ற கணக்குப் போட்டிருக்கிறேன்! So லட்சியம் 11... நிச்சயம் 10!

And இம்முறையுமே லயன் தீபாவளி மலரில் டெக்ஸ் & டீமுமே மிரட்டுகிறார்கள் - ஒரு 4 பாக ஆக்ஷன் அதகளத்தில்! நடப்பாண்டு நம்மவரின் 75-வது பிறந்தநாள் ஆண்டென்பதால் டாப் கியர்; பாட்டம் கியர் என்று சிக்கிய சிக்கிய கியர்களையெல்லாம் போட்டு சில ஆயிரங்களில் டெக்ஸுக்கு மட்டுமே பக்கங்களைத் தந்திருக்கிறோம்! ஆனால் பாதாம் அல்வாவாகவே இருந்தாலும் திகட்டிட அனுமதிக்கலாகாது அல்லவா guys? So நிறைய க்ரிஸ்பான டெக்ஸ் சிங்கிள் / டபுள் / கலர் ஆல்பங்கள் 2024-ன் தேர்வில் இருந்திடும்! தவிர டெக்ஸுக்கென பட்ஜெட் எகிறிடும் பட்சத்தில் மற்ற ஹீரோக்களுக்கு ஸ்லாட்ஸ் குறைந்து கொண்டே போகவும் நேர்கிறது ! So டெக்ஸுக்கு ரெகுலர் தடத்தில் ஒரு மிடறு குறைவாகவே பட்ஜெட் ஒதுக்கியுள்ளோம் - ஆனால் "கார்சனின் கடந்த காலம்" போல out of the blue இதழ்கள் இராதென்று சொல்ல மாட்டேன் ! அதிலே மோரிஸ்கோ வருவாரா - வர மாட்டாரான்னும் சொல்ல மாட்டேன் ! 


 

- மெயின் சந்தாவிற்குள் ராயலாக நுழையும் மூன்றாம் பயணி நமது ஒல்லி நாயகர் லக்கி லூக் தான்! 1987-ல் அறிமுகமான நாள் தொட்டு இன்று வரையிலும் நம்மோடு ஜாலியாய் ஜாலி ஜம்பரோடு பயணித்து வரும் இந்த ஜாம்பவான் as usual - ஆண்டு மலரின் முதல் புக்கில் இடம் பிடித்திடுகிறார்! And வழக்கம் போல 2 புத்தம் புது லக்கி சாகசங்கள் இதனில் இடம் பிடித்திருக்கும் !


- லயனின் 40-வது ஆண்டுமலரின் புக் # 2 - டெக்ஸின் கலர் சாகஸம் தான்! போன மாதம் - ‘தல‘ 75-வது anniversary-க்கென போனெலி வெளியிட்ட முழு நீள கலர் அதிரடியே இது! டெக்சின் மனைவி லிலித் இந்தக் கதையோட்டத்தில் ஒரு முக்கிய பங்கெடுக்கிறார் ! And சித்திரங்களில் ஓவியர் க்ளாடியோ வில்லா சும்மா அதகளம் செய்துள்ளார் ! And கதை நெடுக முழு டீமும் பயணிப்பது செம ப்ளஸ் ! அதிலும் கார்சன் அடிக்கும் லூட்டி A 1 ரகம் !

- And லயன் 40-வது ஆண்டுமலரின் புக் # 3 - நமது துவக்கப் புள்ளியின் flagship நாயகருக்கான ஒரு tribute! இந்தத் தேர்வானது கணிசமான புருவங்களை உசத்திடப் போகிறதென்பதில் எனக்கு சந்தேகமே இல்லை ! ஆனால் எனக்கோ இது natural ஆன தேர்வாகத் தென்படுகிறது ! ஸ்பைடரும் அவர் கொணர்ந்த வேகமும், விறுவிறுப்பும், விற்பனையும், வெற்றியும் மட்டும் இல்லையெனில் - 1984-ஐ நாம் கடந்திருக்க மாட்டோம் என்பதே வார்னிஷ் பூசா நிஜம்! ஒரு கட்டத்தில் லயன் காமிக்ஸ் என்றாலே "ஸ்பைடர்" தான் அடையாளம் என்றிருந்ததை யாரும் மறக்க இயலாது ! வருடங்கள் 40 ஓடிவிட்டிருக்க, நமது ரசனைகளில் ஏகப்பட்ட மாற்றங்களும் நிகழ்ந்திருப்பது கண்கூடு! ஆனால் - ஒரு landmark தருணத்தில், நமக்கான ஏணியாய் செயல்பட்டதொரு ஜாம்பவானுக்கு சீட் தர மறுத்தால் தாத்தாக்களுக்கு ஸோஃபி செய்தது போலான முட்டை அபிஷேகத்தை எனக்கும் செய்து விடுவார்கள் க்ளாஸிக் லயன் காதலர்கள்! So - நமது குற்றச்சக்கரவர்த்தி மீண்டும் வலம் வரவிருக்கிறார் - தெறிக்கும் முழு வண்ணத்தில்; MAXI சைஸில்! And guess what? “விண்வெளிப் பிசாசு” தான் அந்த அதிரடி ஆல்பம்!

“போச்சுடா!” என்று புதுயுகக் கதைக்காதலர்கள் முகம் சுளிக்க அவசியமே நஹி; Simply becos இந்த ஸ்பைடர் ஆல்பமானது மெயின் சந்தாவினில் அங்கமாக இருப்பினும், இதை வேண்டாமென்று நினைப்போர் - ரூ.250 கழித்துக் கொண்டே பணம் அனுப்பலாம்

And “சினிஸ்டர் 7” மொழிபெயர்ப்புப் பொறுப்பேற்றுக் கொண்ட பிற்பாடு கன்னத்தில்; மூக்கில்; காதில் என்று சிக்கிய காலியிடத்திலெல்லாம் மருக்களை ஒட்டிக் கொண்டு ஜார்க்கண்ட் ரயிலைப் பிடித்த நமது கரூர் டாக்டர் சார் ”விண்வெளிப் பிசாசு”க்குப் பேனா பிடிப்பார்! ஜார்கண்டுக்கே மைதீனை அனுப்பி டாக்டரை மடக்கிவிடத் திட்டமிட்டுள்ளோம்! இது அவருக்கே தெரியாத தகவல்!

- Universal சந்தாவின் அடுத்த direct தேர்வு - நமது மறதிக்கார நண்பரின் லேட்டஸ்ட் ஆல்பம்! இந்த இரண்டாம் சுற்றின் இறுதிக்கு முன்பான ஆல்பமென்று சொல்லப்படும் “நதிமூலம் க்யூபா” ஏப்ரல் அல்லது மே 2024ல் வெளிவந்திடும்! XIII என்றாலே நினைவுக்கு வருவது நண்பர் பழனிவேல் தான் எனும் போது, அவரது குடும்பத்துக்கு ஆண்டுதோறும் நாம் செய்வதாய் வாக்களித்திருக்கும் சிறு உதவியானது இந்த ஆல்பத்தின் விற்பனையிலிருந்தும்  சென்று சேர்ந்திடும்! And இது XIII வரிசையின் ரெகுலர் கதையே என்பதால் கி.நா. சந்தாக்கு சென்றிடாது மெயின் தடத்திலேயே பயணம் பண்ணும்!

- அவரது டிக்கெட்டை ‘டிக்‘ அடித்து விட்டு நிமிர்ந்தால் இன்னொரு செம்பட்டைத் தலையர் தென்பட்டார் - மலர்ந்த முகத்தோடும், கம்பீரமான வதனத்தோடும்! நானாகத் தீர்மானித்திருந்தால் - கறுப்பு அங்கிப் “பாதிரி பாதி / போலீஸ் மீதி“ என்று கானம் பாடுபவரை இந்த சீட்டில் ஏற்றியிருப்பேன்! ஆனால் உங்களின் வாக்கெடுப்பின் அனுகூலம் ரிப்போர்ட்டர் ஜானிக்கே சாதகமாகியிருக்க, மரியாதையாய் அவருக்கொரு ஜன்னலோர சீட் போட்டுத் தந்தாயிற்று! And இந்த நாயகரின் நம்முடனான 38 ஆண்டுப் பயணம் மேற்கொண்டும் தொடர்வதில் எனக்கு வேறொரு விதத்தில் சந்தோஷமே! அதைப் பற்றி கொஞ்சம் பின்னே எழுதுகிறேன் guys! மறந்து - கிறந்து தொலைத்து விட்டேனெனில் நண்பர் சேலம் குமார் சிண்டைப் பிடித்து நினைவூட்டி விடுவார் என்பது தெரியும்! So no worries! 

- அடுத்ததாய் ”நானு... நானு... நானு...? நானு....?” என்று ஒன்றுக்கு நான்காய் குரல்கள் கேட்க - யாரென்று பார்த்தால் உட்சிட்டியின் சிறப்பு + சிரிப்பு போலீஸார் மலர்ந்த முகங்களோடு காத்துள்ளனர்! டாக்புல் & கிட் ஆர்டின் முன்னிலை வகிக்க, ஆளுக்கொரு பொட்டலம் மிக்சரோடு சிக் பில்லும், குள்ளனும் தம் கடமைகளை ஓரமாய் நின்றபடிச் செய்து முடிக்க, “கடமையைக் கைவிடேல்” கலக்கிடக் காத்துள்ளது!

- ”ஆரானோ நெக்ஸ்ட் சேட்டா?” என்று பார்த்து நின்றால் - ”உர்ர்ர்ர்” என்று உறுமல் சத்தத்தோடு ஒரு முரட்டு உருவமும், ஒரு செம்பட்டைத் தலையரும் கோச்சுக்குள் ஏறிக் கொண்டிருப்பது தென்படுகிறது! அது வேறு யாருமல்ல, மர்ம மனிதன் மார்டினும், அவரது விசுவாச சகா ஜாவாவுமே! Crisp ஆனதொரு black & white சாகஸத்தில் - ‘பர பர‘ வாசிப்பு தரக் காத்துள்ளனர்!

- உங்களின் ஆசிகளோடு ஜன்னலோர சீட்டில் ஒய்யாரமாய் அமர வந்திடும் அடுத்த நபர் ஒரு க்ரைம் த்ரில்லர் ஸ்பெஷலிஸ்ட்! இவருக்குமே கேசம் ஒரு வித்தியாசமான நிறத்திலானது தான்! Enter டிடெக்டிவ் ரூபீன்! இரண்டே சாகஸங்களில் இவரை இதுவரை சந்தித்துள்ளோம் & இரண்டிலுமே அவரது ஸ்கோர் ரொம்பவே impressive! அந்த செமி-கார்ட்டூன் பாணிச் சித்திரங்கள் - கதைக்களம் காமெடியானதோ ? என்று எண்ணச் செய்தாலும், உட்புகுந்த இரண்டாவது நிமிடமே புரிந்து விடும் இதுவொரு க்ரைம் த்ரில்லர் என்பது! இதுவரையிலும் கூட்டணி இதழ்களில் களமிறங்கியுமே கவனத்தை ஈர்த்தவர் - ஸோலோவாக ஒரு சிங்கிள் ஆல்பத்தில் ஆவர்த்தனம் செய்திட உள்ளார்! “மங்களமாய் மரணம்” - போட்டுத் தாக்கவிருக்கும் தெறி சாகஸம்!

- அம்மணிக்கு இருக்கையினை உறுதி செய்த கையோடு இவருடனே அறிமுகம் கண்ட இன்னொரு சமகாலத்து நாயகரின் பெயரையும் பரிசீலனைக்கு எடுத்தோம்! “லோன்ஸ்டார் டேங்கோ” ஒரு மந்தகாசப் புன்னகையோடு தென்னமெரிக்காவின் ஏதோவொரு மூலையிலிருந்து நம் திக்கில் கைகாட்டுவது தெரிந்தது! “எக்வெடோ என்ற நாட்டின் வழியாய் பயணம் போய்க்கிட்டிருக்கேன்... வரட்டுமா?” என்று அவர் கேட்க, “ஓடியாங்க சாமி... “தவணையில் துரோகம்” காத்திருக்குது!" என்று தூது சொல்லியனுப்பினோம்! ரொம்பவே வித்தியாசமான கதைக்களம்... ஒவ்வொரு ஆல்பத்திலும் ஒவ்வொரு தென்னமெரிக்க தேசம்... மூச்சிரைக்கச் செய்யும் சித்திரங்கள்... யதார்த்தமான, சமகாலக் கதைபாணி.. என்று இவரது தொடரில் கணிசமான ப்ளஸ்கள் இருப்பதால் ’டிக்’ அடித்தோம் ’டக்’கென்று! 

“சமகாலமே சாகஸக்களமும்” என்ற தாரக மந்திரத்தை இன்னும் கொஞ்சம் அழுந்த தலையில் ஏற்றிக் கொண்டு சுற்றுமுற்றும் பார்வைகளை ஓடவிட்ட போது ஒரு பரிச்சயமான முகம் தென்பட்டது – ஆனால் லேட்டஸ்டானதொரு அவதாரில்! இவரது தொடரின் ஒரிஜினல் கதைகளெல்லாம் 35 ஆண்டுகளுக்கு முன்னான காலகட்டத்தில் நமக்கு லட்டுகளாய்த் தித்தித்தவை; ஆனால் சமீப நாட்களில் அவற்றைப் புராதனச் சின்னங்களாகவே பார்த்து வந்தோம்! படைப்பாளிகளுக்கே அந்த நெருடல் தோன்றியிருக்குமோ என்னவோ – அந்த நாயகரையும் அவரது டீமையும் ’ஜில்’லென்று புது அவதாரில், அட்டகாசமான ஆக்ஷன் கதைகளில் தெறிக்க விட்டுள்ளனர்! Enter ப்ரூனோ ப்ரேசில் 2.0 & முதலைப்பட்டாளம் 2.0! 1986-ல் திகிலில் அறிமுகமான இந்த ஸ்டைலிஷ் நாயகர் கடந்த நான்கு ஆண்டுகளாய் இந்த makeover சகிதம் கலக்கி வருகிறார்! So பழகிய முகம்... புது பாணியில்! “பனிக்கடலில் முதலைகள்” 2024-ன் highlight ஆக இருந்திடும்!

“ரொம்பவே சமகாலத்திலேயே பயணம் பண்ணிக்கிட்டுத் திரிஞ்சா நாங்கள்லாம் சுண்டல் சாப்பிடறதா?” என்ற குரல் ஆஜானுபாகுவான அழகனிடமிருந்து வர – திரும்பிப் பார்த்தால் நின்று கொண்டிருந்தது பிரபஞ்சத்தின் புதல்வரான தோர்கல் தான்! பிரமாதமான fantasy தொடர் தான்; ஜாம்பவான் வான் ஹாமின் கலக்கலான உருவாக்கம் தான்; கடந்த பத்தாண்டுகளாய் ரெகுலராய் நம்மோடு பயணித்து வருபவர் தான் ! இந்நேரத்துக்கு மனுஷன் ஒரு லக்கி லூக்கைப் போல; டெக்ஸ் வில்லரைப் போல, நமது பயணத்தின் இன்றியமையா தேர்வாகியிருக்க வேண்டியவரே தான்! ஆனால்... ஆனால் வாழ்க்கையின் சில புதிர்களுக்கு எல்லாத் தருணங்களிலுமே விடைகள் அத்தனை சுலபத்தில் கிட்டிடுவதில்லையே?! அத்தகையதொரு enigma தான் தோர்கலோடும்! நிஜத்தைச் சொல்வதானால் இவரை “M.Y.O.M.S” சந்தாவிற்குள் புகுத்திடவே எனக்குத் தோன்றியது! ஆனால் ஏற்கனவே கடைசியில் வந்த தோர்கல் இதழுக்கு அட்டைப்படம் சொதப்பல் என்ற காரணத்தால் மத்தளம் கொட்டிய ரசிகக் கண்மணிகள் படுக்கப் போட்டு ரோடு ரோலரையே மேலே உருட்டி விடுவார்கள் என்றுபட்டது! So தோர்கல் ரெகுலர் தடத்திலேயே பயணமாகிறார் – விற்பனையில் இனி மேற்கொண்டாவது கூடுதல் உத்வேகம் காட்டிடுவாரென்ற நம்பிக்கையில்!

- தோர்கல் அளவிற்கு அடுத்த நாயகர் காலத்தில் பின்நோக்கிப் பயணிப்பாரெல்லாம் கிடையாது தான்; ஆனால் மனுஷன் 1800-களின் பிரதிநிதியே! போன வருடமே அறிவிப்பில் ஆஜரான Badass பார்ட்டியான பௌன்சர் தான் இம்முறை ரெகுலர் களத்திலேயே களமிறங்குகிறார் – ஒரு riveting வெஸ்டர்ன் சாகஸத்துடன்! இந்த சாகஸத்தில் விரசமோ? பப்பி-ஷேம் சீன்களோ இராது; raw ஆன ஆக்ஷன் மாத்திரமே இடம்பிடித்திடும் என்பதால் இதனை கி.நா. சந்தாப் பக்கமாகவும் பந்தாடும் அவசியம் எனக்குத் தோன்றவில்லை! Of course – “இதை வன்மையாய் கண்டிக்கிறேன் யுவர் ஆனர் !” என்று கறுப்புக் கோட்கள் போடாமலே நண்பர்களில் ஒரு அணியினர் வசை பாடுவர் என்பது பச்சைக் குழந்தைக்கே தெரியும் தான்! But நமது target audience யாரென்ற யதார்த்தங்களை மறந்திட நான் தயாரில்லை என்பதால் “சாபம் சுமந்த தங்கம்” வழக்கமான தடத்திலேயே பயணமாகிடும்!

கௌபாய் தேசத்தில் travel செய்யும் நொடியினில் ஒரு லேண்ட்மார்க் தருணத்தை – ஒரு லேண்ட்மார்க் இதழோடு கொண்டாடும் வாய்ப்பை மறக்கலாகாது தானே! So முத்து காமிக்ஸின் 52-வது ஆண்டுமலரை அலங்கரிக்கவுள்ளதும் ஒரு extraordinary கௌபாய் களமே!

- 17 படைப்பாளிகள்!

- 14 அத்தியாயங்களில் தடதடக்கும் கதைக்களம்!

- 175 ஆண்டுகளாய் பரவிப் படரும் கதைப்பின்புலம்!

- ஒற்றைச் சங்கிலியில் travel ஆகிடும் ஆக்ஷன் அதிரடி!

மேற்கே போ மாவீரா!” என்ற தலைப்பில் வரக்காத்துள்ள ஹாலிவுட் கௌபாய் படம் போலான இந்த ஆலபத்துக்குத் தான் மேற்படி அடையாளங்கள் சகலமும்! ரொம்பவே வித்தியாசமான பாணிகளில்; நெட்ப்ளிக்ஸில்; அமேசான் ப்ரைம்; ஹாட்ஸ்டார் போன்ற தளங்களில் வெளியாகிடும் “ஒரே ரசனை; but வெவ்வேறு படைப்பாளிகளின் கைவண்ணம்” என்ற பாணியினை ப்ராங்கோ-பெல்ஜியப் படைப்பாளிகளுமே கையிலெடுத்து உருவாக்கியுள்ள முதல் ஆல்பமிது! ஜனவரியில் முத்துவின் ஆண்டுமலரில் இந்த அதிரடி களமிறங்குகிறது!

Honestly இந்த ஆண்டுமலர் ஸ்லாட்டில் நமது ப்ளூஜீன்ஸ் பில்லியனரான லார்கோ வின்ச்சின் லேட்டஸ்ட் ஆல்பத்தை இறக்கிடவே எண்ணியிருந்தேன்! ஆனால் அந்த 2 பாகப் படைப்பின் க்ளைமேக்ஸ் அத்தியாயம் ப்ரெஞ்சு மொழியிலேயே நவம்பரில் தான் வெளிவரவுள்ளது! So ஒரு செம ஹிட் தொடரின் ஒரிஜினல் படைப்பு அங்கே ரிலீஸ் ஆன பிற்பாடே நமக்கு அனுமதி தருவார்கள் ! நமது அட்டவணையோ அதற்கு முன்பே தயாராகிடும் சமாச்சாரம் என்பதால் சற்றே பொறுமை காக்க வேண்டியுள்ளது ! In any case - ஆண்டுமலர் ஸ்லாட்டில் இல்லாங்காட்டியும் - கோடை மலர் ஸ்லாட்டில் லார்கோ புது டபுள் ஆல்பத்தில் ஜொலிஜொலிப்பார் ! "இரவின் எல்லை' டிரெய்லரை பார்க்க நேர்ந்த போது, கதாசிரியர் வான் ஹாமின் பிரிவுக்குப் பின்னேயும் இந்தத் தொடருக்கு ஜீவன் இருக்கிறது தான், என்பதை புரிந்து கொள்ள முடிகிறது ! தெறிக்க விடும் சித்திரங்கள் ; மிரளச் செய்யும் கலரிங் என ஆல்பம் முழுசும் அசாத்திய அழகு ! And of course - கண்ணுக்குக் குளிர்ச்சியோ-குளிர்ச்சியும் வெயிட்டிங் !!

குளிர்ச்சி எனும் போது ஜிலீரிடும் பனிமண்டலத்தில் அரங்கேறிடும் ஒரு ஜீவ மரணப் போராட்டத்தை ரசிக்காமல் விட்டால் எப்படி ? ZAROFF !! "நில்...கவனி..வேட்டையாடு" ஆல்பத்தில் தெறிக்க விட்ட அந்த வேட்டையனையோ ; அந்தச் சித்திர அதகளத்தையோ அத்தனை சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க இயலாது ! அந்தத் துவக்கம் அமேசான் கானகத்தினில் எனில், இந்த இரண்டாம் அத்தியாயம் தடதடப்பது ரஷ்யாவில் ! அசாத்திய வேகத்தில் பயணிக்கும் இந்த ஆல்பம் முத்து காமிக்சின் தீபாவளி மலராக தெறிக்க விடவுள்ளது ! 

அப்புறம் யாராச்சும் ஒரு புது அறிமுகம் இல்லாமல் தடத்தில் சுவாரஸ்யம் குறைந்திடக்கூடுமே ? அது மட்டுமன்றி கார்ட்டூன் ஜானரில் கடும் வறட்சி நிலவும் வேளையில் ஒரு வித்தியாசமான சிரிப்பு டீமை களமிறக்கி விட்டாலென்ன என்றுபட்டது ! So இதோ வருகின்றனர் நியூ யார்க் போலீஸ் டிபார்ட்மெண்ட்டின் 2 மொக்கை போல்ஸ்கார்ஸ் - ஸ்பூன் & ஒயிட் !! மட்டமான இந்த இருவருக்கும் வாழ்க்கையின் லட்சியம் ஒன்றே ஒன்று தான் - அது வாளிப்பான டி-வி தொகுப்பாளினியான கோர்ட்னி பால்கனியின் காதலனாகிட வேண்டும் என்பதே ! இத்தனை உயர்ந்த லட்சியத்தோடு இவர்கள் நியூயார்க் நகரத்தைக் காப்பாற்றும் அழகை செம கார்ட்டூனி ஸ்டைலில் போட்டுத் தாக்கியுள்ளனர் ! ரொம்பவே ஜாலியான கதைக்களமாக இருப்பது மாத்திரமன்றி சமகாலக் கதையாகவும் இருப்பதால் நம் மத்தியில் செட் ஆகிடுவார்கள் என்றே தோன்றுகிறது ! Fingers crossed tight !! 

இதே ஜோரில் – நேரடியாய் confirmed டிக்கெட் கிடைத்திருக்கும் ஒரு பிரத்யேக வகுப்பில் அமர்ந்துள்ள பயணிகளையும் பார்த்து விடலாமா?

1. The தெறி தாத்தாஸ்:

எனது பார்வையிலாவது நமது சமீபத்தைய அணிவகுப்பின் Knights in Shining Armor – இந்தக் குசும்புக்கார பெருசுகளே! மூன்று தாத்தாக்கள்! ஆளுக்கொரு ப்ளாஷ்பேக்! And ஒவ்வொன்றும் விரிய விரிய, கதாசிரியர் லுபானோ போட்டு வைத்திருக்கும் மெகா ப்ளானின் ஒவ்வொரு பரிமாணமும் கண்முன்னே முடிச்சவிழ்கின்றன! சமீப காலங்களில் “இது பொங்கல் – மெதுவடை யுனிவர்ஸ்”; “அல்வா & மிக்சர் யுனிவர்ஸ்” என்றெல்லாம் சொற்பிரயோகங்களைப் பார்த்து வருகிறோம்! If ever there was a creation that deserved the “UNIVERSE” tag – அது கதாசிரியர் “லுபானோவின யுனிவர்ஸ்” தான் என்பேன்! காத்திருக்கும் நான்காவது ஆல்பம் – பேத்தி ஸோஃபியா மீது ஒளிவட்டத்தைப் பாய்ச்சி நகர்ந்திடவுள்ளது!

And yes – சுவையாக இருந்தாலுமே கடுங்காப்பியை அத்தனை பேரும் ரசித்து ’மடக்... மடக்’ என்று குடித்து வைப்பதில்லை தானே? ரிலாக்ஸ்டாய் பொழுதுபோக்கிற்கென காமிக்ஸை நாடும் நண்பர்களுக்கு தாத்தாக்கள் ருசிப்பதில்லை என்பதால் அவர்களை ஒரு பிரத்யேகப் பெட்டியில் பயணிக்கச் செய்யத் திட்டமிட்டுள்ளோம்! So “மாயமில்லே... மந்திரமில்லே” – தாத்தாக்களின் ரவுசு – The கி.நா. யுனிவர்ஸில்!

2. அடுத்த சீட்டில் தெனாவட்டாய் வந்து அமர்வதோ வன்மேற்கின் இன்னொரு badass பார்ட்டி! And yes – அது போனெலியின் டெட்வுட் டிக் தான்! கறுப்பினச் சிப்பாயாக வலம் வந்த இந்தக் கெட்ட பயலின் இறுதி சாகஸம் இது! 18+ வயதிலான வாசகர்களுக்கான படைப்பிது என்பதால் “தென்றல் வந்து என்னைக் கொல்லும்” நேரடியாக இந்தக் கி.நா. யுனிவர்ஸின் அங்கமாகிறது!

3. ஸ்லாட் # 3 தான் என்னளவில் மண்டை காயச் செய்து வருகிறது! இருப்பது ரூ.500-க்குள்ளான பட்ஜெட் மட்டுமே – ஆனால் அந்த ஒற்றை ஸ்லாட்டுக்கென கரம் தூக்கி நிற்கும் ஆல்பங்கள் இரண்டு!

- நாகரீக வெட்டியான் ஸ்டெர்ன்

(or)

- துணைக்கு வந்த மாயாவி! (கமர்ஷியல் கிராபிக் நாவல்)

இரு கதைகளுமே நம்மிடம் உள்ளன... அவற்றுள் ஏதேனும் ஒன்றை கி.நா.யுனிவர்ஸிலும் அங்கமாகிடத் தயாராகவுள்ள நண்பர்கள் தேர்வு செய்து தந்தால் இந்த மினி யுனிவர்ஸ் நிறைவு கண்டிடும்! 

இதோ – இந்த ஒற்றை ஸ்லாட்டுக்கு உங்கள் தேர்வைத் தெரிவிக்க வோட்டுப் போடும் லிங்க்: https://strawpoll.com/YVyPmK5KknN

I repeat – “நான் கி.நா.க்களுக்குச் சந்தா கட்டப் போறதில்லே!” எனும் நண்பர்கள் இந்த ஓட்டெடுப்பில் கலந்திட வேணாமே – ப்ளீஸ்?

ரைட்டு... டிக்கெட் confirm ஆனோரைப் பார்த்த கையோடு, V காமிக்ஸின் அணிவகுப்பைப் பார்த்திடலாமா? இனி தொடரும் பத்திகள் – நம்ம ’V-ன் எடிட்டரின்  எழுத்துக்களில்!

====================================================================

வணக்கம் பாஸ்!

நம்ம V காமிக்ஸின் முதல் வருஷம் இன்னமும் not over தான் ; என்னைக் கேட்டால் இப்போது போலவே மூன்று-மூன்று மாதங்களுக்கான புக் அறிவிப்பு + மினி சந்தா என்றே continue செய்ய நினைப்பேன் ! So இப்போதே அவசரம் ஏன் ? என்று நினைத்தேன் ! ஆனால் வருஷத்துக்கு 4 முறை பணம் அனுப்புவது சிரமமாக உள்ளது என்று நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்; நமது டெஸ்பாட்ச் டீமும் சொல்கிறார்கள் ! அதனால் 6 மாத இதழ்கள் ப்ளானிங் + 6 மாத சந்தா என்ற ஃபார்முலா 2024-ல் try பண்ணுவதாக இருக்கிறோம் ! அது மாத்திரமன்றி ஒரே நேரத்தில் 12 புக்ஸையும் லயன் – முத்து ஸ்டைலில் இறக்கி விட எனக்கு இன்னும் கொஞ்சம் அனுபவம் தேவை என்று நினைக்கிறேன். இந்த split up சந்தா முறையில் உள்ள பெரிய வசதியே - புதுசாய் ஏதாச்சும் கதைகள் கிடைத்தால் அதை நமது schedule-ல் நுழைக்கவும் ஈஸியாக இருக்கும். So ஜனவரி 2024 to ஜுன் 2024 புக்ஸ் லிஸ்ட் இதோ!

கடிக்கக் கஷ்டமான கமர்கட்களை லயனுக்கு ஒதுக்கி விட்டு, லைட்டான, க்ரிஸ்பான கடலைமிட்டாய்களை மட்டும் V காமிக்ஸ் புக்ஸாக செலக்ட் பண்ணியிருக்கிறோம்! எடுத்தோமா - அரை மணி நேரத்துக்குள் படிச்சு முடிச்சோமா என்ற மாதிரியே இந்த முறையும் V இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன்!

1. வேதாளர் – in full கலர்!

இரண்டு வருஷங்களுக்கு முன் Smashing 70’s முதல் இதழாக Phantom வெளியாகி சூப்பர் ஹிட் போட்ட நேரத்திலேயே எனக்குக் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது - நான் படித்திருந்த Phantom கதைகள் எல்லாமே கலரில் இருந்தவை ! So வேதாளரை கலரில் போட முடியும்னா V காமிக்ஸில் அவரைக் கடத்திக் கொண்டு போகிறேன் ! என்று சொன்னேன். கொஞ்சம் யோசித்து விட்டு, black & white வேதாளரை முத்து காமிக்ஸில் வைத்துக் கொள்வது ; கலர் கதைகளை V-ல் வெளியிடலாம் என்று அப்பா சொன்ன அந்த டீலிங் எனக்குப் பிடித்திருந்தது ! So கதையும், “வீரனுக்கு மரணமில்லை” என்ற ஒரு title-ம் கொசுறாய் சேர்த்தே கிடைக்க – ஜனவரி 2024-ல் Phantom கலரில் கலக்குவார்! லேட்டஸ்டாய் உருவான கதைகளிலிருந்து வேகமான கதைகளையும், க்ளாஸிக் சூப்பர்ஹிட் கதைகளிலிருந்து கொஞ்சத்தையும் கலரில் போடப் போகிறோம். And நம்ம  V காமிக்ஸின் வழக்கமான சைஸிலேயே தொடரும்.

2. மாடஸ்டி பிளைஸி:

இங்கேயும் இன்னொரு கடத்தல் ! ரெகுலர் schedule-ல் நிறைய ஹீரோஸ் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதை லயன்-முத்துவின் ப்ளான்னரில் பார்த்தேன். அண்ணா யுனிவர்சிடியில் சேர லைனில் நிற்கும் எக்கச்கக்க ஸ்டூடண்ட்ஸ் போல, அங்கே ஒரு வண்டி ஹீரோஸ் இருக்கும் போது, எல்லோருக்கும் சீட் கிடைக்கிறது கஷ்டம். So அங்கே தடுமாறிக் கொண்டிருந்த லயனின் first ஹீரோயினை நம்ம V காமிக்ஸில் சந்தோஷமாய் சேர்த்துக் கொண்டோம். லேபில் மட்டும் மாறியிருக்கும்; ஆனால் தனது முதல் ஹீரோயி்னுக்கு அப்பாவே தான் translation செய்யப் போகிறார். அப்புறம் அந்தப் பெயரைப் பார்க்கும் போதே – title உபயமும் அப்பா தான் என்பது புரிந்திருக்கும் . “படலம்” என்ற வார்த்தையை நான்லாம் கேள்விப்பட்டதே நம் காமிக்ஸில் இருந்து தான்!

3. ஸாகோர்:

இந்த 2023-ல் ஸாகோருக்கு நிறையவே ஸ்லாட்ஸ் தந்திருந்தோம். டார்க்வுட் நாவல்ஸ் என்ற அந்த மினி தொடர் லைட் ரீடிங்குக்கு நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ரொம்ப ரொம்ப லைட்டான ரீடிங்காக அவை அமைந்து போனதால் மீதம் இருக்கும் டார்க்வுட் நாவல்ஸ் 5 & 6 ஐ இப்போதைக்கு மறந்து விட்டு, ஸாகோர் மெயின் தடத்தில் இருந்து ஒரு 132 பக்க ஆக்ஷனை தேர்வு செய்திருக்கிறோம். “வஞ்சத்திற்கொரு வரலாறு” ஸாகோரின் செகண்ட் இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பிக்கும்.

4. கேப்டன் ப்ரின்ஸ்:

கட்டக் கடைசியாய் இன்னொரு கடத்தலுமே! இவரும் ஒரு லயன் family-ன் க்ளாஸிக் ஹீரோ தான்! கேப்டன் ப்ரின்ஸ் தொடரில் ஒரேயொரு ஆல்பம் மட்டும் லயனில் போடாமல் இருந்தது. அந்த ஆல்பத்துக்கான காப்பிரைட்டில் ஏதோ internal சிக்கல் என்பதால் அதை தராமல் இருந்தார்கள். சமீபமாய் அந்த problem தீர்ந்து விட்டது என்பதால் நான் தற்செயலாகக் கேட்டவுடன் ஓ.கே. சொன்னார்கள். So கேப்டன் ப்ரின்ஸ் & உதவியாளர் பார்னே நம்ம V-ல் ஒரு புது adventure-ல் கலரில் வரப் கோகிறார்கள். இந்த புக் மட்டும் லக்கி லூக் வெளியாகிடும்  அதே சைஸில் இருக்கும்.

5. மிஸ்டர் நோ:

இந்த வருஷம் ரொம்ப recent அறிமுகமான ஹீரோ! க்ரிஸ்பான வாசிப்புக்கு இவரது ஸ்டைல் ரொம்பவே ஒத்துப் போவதைப் பார்க்க முடிந்தது. அமேசான் காடு என்ற உடனே நிறைய நிறைய adventures-க்கு ஒரு ஜன்னல் திறந்த மாதிரியிருக்க, சூப்பர் சூப்பரான ஒன்-ஷாட் கதைகள் கிடைக்கின்றன. “பாலையில் ஒரு போராளி” ரொம்ப நீட் டிராயிங் ஸ்டைலில் உருவானது என்பதால் அது கூடுதல் ப்ளஸ்ஸாகிறது!

6. ஏஜெண்ட் ராபின் 2.0

New age ராபின் ! ப்ளாஷ்பேக்கிலும், நிஜத்தில் அப்போது நடக்கும் சம்பவங்களிலும், Big Apple-ன் க்ரைம் முகத்தை நமக்குக் காட்டி வருகிறார். 96 பக்கங்கள் தான் எனும் போது வாசிக்க இங்கே கஷ்டமே இருக்காது என்று நினைக்கிறேன்.

So இந்த 6 தான் நம்ம V காமிக்ஸின் முதல் 6 மாத இதழ்கள்! 2023-ல் செய்த தப்புகளிலிருந்து பாடம் படித்து, கதை செலக்ஷனில் more கவனம் தந்திருக்கிறோம். அவை உங்களை திருப்திப்படுத்தும் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன். லயன்-முத்து க்ரூப்பின் புக்ஸ் என்ற அடையாளத்தையும் தாண்டி V-க்கென ஒரு எதிர்பார்ப்பை create செய்ய உங்கள் ஆதரவு தேவை ப்ளீஸ்! 

See you again in April / May 2024.

======================================================================

ரைட்டு...

- UNIVERSAL சந்தா  - 30   புக்ஸ் (3 கி.நா. சேர்த்து) 

- சந்தா ‘V’                   –   6 புக்ஸ் (January to June'24)

Total -                                  36 புக்ஸ்

- இவையே 2024ன் முதுகெலும்பாய் இருந்திடவுள்ளன! V காமிக்ஸின் ஜுலை to டிசம்பருக்கான 6 இதழ்களையும் சேர்த்தோமெனில் புக்ஸின் எண்ணிக்கை 42-ஐ தொட்டு நிற்கும்!

- And of course - க்ளாஸிக் நாயகர்களான வேதாளர், மாண்ட்ரேக், ரிப் கிர்பி, சார்லி, காரிகன், விங் கமாண்டர், ஜார்ஜின் black & white சாகஸங்கள் Smashing '70s & Supreme '60s பாணிகளில் அல்லாது சற்றே மாறுபட்ட templateல் 2024ன் பிற்பகுதியினில் துவக்கம் காணும்! காத்திருக்கும் அந்த க்ளாஸிக் தடத்தில் வண்டி வண்டியாய் புக்ஸ் இராது; there will be just a handful ! ஆனால் உங்களது தேடல்களில் உள்ள வைரஸ் X ; மடாலய மர்மம் ; போன்ற க்ளாஸிக் ஹிட்ஸ் அவற்றில் இடம் பிடித்திடவுள்ளன ! அது பற்றி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அறிவிப்பு வந்திடும்! So அந்த க்ளாசிக்ஸ் வரிசையில் வெறும் 3 புக்ஸ் என்று வைத்துக் கொண்டால் கூட, 2024-ன் output 45 புக்ஸ்களென்று இருக்கும் ! நிச்சயமாய் ஒரு டீசென்ட் நம்பரே !

டிக்கெட் உறுதியான பார்ட்டிகள் சகலரும் ‘ஜம்‘மென்று ஏ.ஸி. கோச்சுகளில் ஏறியமர்ந்து வூட்டிலிருந்து கொணர்ந்த பிரியாணிகளையும் தயிர் சாதங்களையும் பிரித்துக் கொண்டிருக்கும் வேளைதனில் வெயிட் லிஸ்டில் உள்ளோரைப் பரிவோடு பார்த்திடலாமா? இந்த லிஸ்டில் உள்ளோரின் பெரும்பான்மை சமீப வரவுகளே & சமகால சாகஸக்காரர்களே! ஆனால் எத்தனை தான் தலைகீழாய் நின்று அவர்கள் தண்ணீர் குடித்தாலும், எத்தனை தான் ‘தம்‘ கட்டி முட்டுத் தர நான் முற்பட்டாலும, சந்தா வட்டத்து நண்பர்களைத் தாண்டி கடைகளிலும் ஆன்லைனிலும் வாங்கிடுவோரைப் பெரிதாய் reach செய்ய முடியவே இல்லை என்பது தான் bottom line! டேங்கோவைப் போல, ரூபீனைப் போல, தாத்தாக்களைப் போல் புதுசாய் வந்து உங்களது துரித அங்கீகாரங்களையும் பெற்றிடும் வரம் எல்லோருக்கும் வாய்க்க மாட்டேன்கிறது! So ஒரு சிறு சந்தா வட்டத்திடம் விற்றது போக பாக்கி கிடக்கும் பிரதிகளை ஆண்டாண்டு காலங்களுக்குச் சுமந்து திரிய நான் முகம் சுளிக்காது போனாலுமே, நமது கிட்டங்கிகளும், ரேக்குகளும் பளுவில் முக்குவது காதில் கேட்கிறது! So இனி வரும் காலங்களில் - ஏகோபித்த விற்பனைத் தேர்வுகளாக அல்லாதோர் அனைவருமே இந்த Make My Own Mini Santha-வில் தான் இடம்பிடிப்பர்! 

This is how MYOMS will work:

- ரெகுலர் தடத்தில் இடம்பிடிக்கப் பலம் குறைவானவர்கள்! அதே சமயம் பொதுவெளிகளில் - “யாரு அவரா? பயங்கரமானவராச்சே?!” என்று உங்களால் பேசப்படுவோர் இனி பரண்களுக்கு பேக்-அப் ஆகிடவும் மாட்டார்கள்; வம்படியாய் ரெகுலர் தடத்தின் அங்கமாகி கைக்குள்ளும், காலுக்குள்ளும் கிடந்து லோல்படவும் மாட்டார்கள்!

- மாறாக - ஒவ்வொரு வருடமும் அவர்களது ஆல்பங்களை நமது அட்டவணைகளில் விலைகளை மட்டும் குறிப்பிடாது விளம்பரப்படுத்திடுவோம்! அவை சகலத்தையுமே அந்த ஆண்டே வெளியிட்டாக வேண்டுமென்று அல்லாது - அவற்றிலிருந்து ஏதேனும் நான்கு ஆல்பங்களைத் தேர்வு செய்யும் option-ஐ உங்களிடம் ஒப்படைத்து விடுவோம். I repeat - நீங்கள் தேர்வு செய்திட வேண்டியது 4 ஆல்பங்களை மட்டுமே !

- அவ்விதம் தேர்வாகும் இதழ்களை மட்டும் கொண்டு ஒரு முன்பதிவினை பிப்ரவரியில் அறிவித்திடுவோம் !

- குறைந்தபட்ச முன்பதிவு நம்பர்களைத் தொட்டான பின்னே - அந்த 4 இதழ்களும் சீரான இடைவெளிகளில் தயாராகி வெளிவந்திடும்!

- இவை முன்பதிவுகளுக்கு மாத்திரமே என்பதால் மிகச் சரியாக அந்த எண்ணிக்கைக்கான பிரிண்ட்ரன் மட்டுமே இருந்திடும்! Which means - இதழ்களின் விலைகள் நார்மலை விட அதிகமாகவே இருக்கும் & இவை முன்பதிவில் இணைந்து கொள்ளும் முகவர்களைத் தவிர்த்து மற்ற கடைகளில் கிடைத்திடாது!

- So in effect - இவை பிரத்தியேகமாய் உங்களுக்கே உங்களுக்கென மட்டுமே உருவாகிடும் புக்ஸாக இருந்திடும்!

- ஒருக்கால் குறைந்த பட்சமாய் 400 என்ற நம்பரை நல்லதொரு அவகாசத்திற்குள்ளும் எட்டிப்பிடிக்க இயலாது போயின், வெயிட்டிங் லிஸ்டில் உள்ள இதே நாயக / நாயகியர் காலம் கனியும் வரை காத்திருக்கவே வேண்டி வரும்! And of course - பணம் அனுப்பியிருக்கக்கூடிய நண்பர்களுக்கு refunds செய்திடப்படும் ! 

2024ல் உங்கள் சம்மதம் கோரி நிற்கும் நாயகப் பெருமக்கள் இதோ:

1. C.I.A. ஏஜெண்ட் ஆல்பா:

இவரது சிங்கள் ஆல்பங்கள் விற்பனையில் ரொம்பத் தடுமாறவில்லை தான்! ஆனால் டபுள் ஆல்பங்கள்; ரூ.200; ரூ.250 என்ற விலைகௌனில் - லக்கி லூக் தவிர்த்த பாக்கி ஈரோ சார்களுக்கெல்லாமே டாஸ்மாக் காதலர்களைப் போல கால்கள் குளறுவதே நடைமுறை என்றாகி விட்டது! இன்றைய சிங்கிள் ஆல்பங்களின் விலைகளைக் காட்டிலும் 10 வருஷங்களுக்கு முன்பான லார்கோ டபுள் ஆல்பங்களோ, ஷெல்டன் டபுள் ஆல்பங்களோ விலை குறைச்சலே என்பது கொடுமை! But yet - அவை இன்னமும் தேங்கிக் கிடப்பது கொடுமைஸ் ஆஃப் சிவகாசி!

So ஆல்பாவின் அடுத்த ஆல்பம் ஒரு டபுள் டமாக்கா என்ற ஒரே காரணத்தால் அவருக்கு ரெகுலர் சந்தாக்குள் இடமின்றிப் போயுள்ளது! ”தீதும்... துரோகமும் பிறர் தர வாரா...!” ஆல்பாவின் career-ல் ஒரு முக்கிய திருப்பத்தை உருவாக்கிடும் சாகஸம்! தேர்வாவாரா இந்த ஸ்டைலிஷ் நாயகர்? விடை உங்கள் விரல்களில்! இதோ - வோட் போடும் லிங்க் : _______________________

2. I.R.$:

பரபரப்பான ஆக்ஷன் அறிமுகம்; முதல் ஆல்பத்தில் செம decent ஆக சாகஸமும் செய்திருந்தார் தான்! ஆனால் அந்த டபுள் ஆல்பம் Syndrome காரணமா - என்னவென்பது தெரியவில்லை; கடைகளிலும், புத்தக விழாக்களிலும் பெருசாய் அவர் கவனத்தை ஈர்த்த பாடைக் காணோம்! And yes - ஒரே வாய்ப்போடு ஒரு புது வரவுக்குத் தீர்ப்பெழுதுவது knee jerk reaction போலத் தென்படலாம் தான்! ஆனால் I.R.$ கதைகள் சகலமுமே டபுள் ஆல்பங்களே எனும் போது 2035 வரை இவரது புக்ஸை கிட்டங்களிலும் நிறைத்துக் கொண்டு ஊர் ஊராய்த் தூக்கித் திரிய ‘தம்‘மில்லை!

I repeat - இந்த வெயிட்டிங் லிஸ்டில் உள்ள நாயக / நாயகியருக்கு வெகுஜன appeal கிட்டாமல் போயுள்ளது வாழ்க்கையின் புதிர்களில் ஒன்றே தவிர, இவர்களது தரங்கள் மீதான பிரகடனமே அல்ல! So இன்னமும் பந்து உங்கள் தரப்பில் folks!

3. SODA:

நிஜத்தைச் சொல்வதானால் - பெர்சனலாக எனது favourite-களுள் இந்தத் தொடருக்கு ஒரு உச்ச இடமுண்டு! ஆனால் ரூபீனா? ரிப்போர்டர் ஜானியா? SODA-வா? என்ற மும்முனைப் போட்டியில் இவருக்கு நீங்கள் தந்திருந்தது கடைசி இடத்தையும், குருவி ரொட்டியையுமே ! Frankly எனக்கு அதனில் பெரும் நெருடலே! ஆனால் இந்த “போலீஸ் பாதி - பாஸ்டர் மீதி” என்ற நாயகரின் dark பாணிகள் நம்மில் சிலருக்கு டார்க் சாக்லேட் போலவே படுவதை நான் மதித்தாக வேண்டியுள்ளது!

But still, இன்னமும் குடி முழுகிடவில்லை! “கரமெல்லாம் குருதி” சோடாவின் தொடரில் 2023-ல் உருவான செம லேட்டஸ்ட் த்ரில்லர்! சித்திரங்களும் கலரிங்கும் அள்ளுது! ரொம்பவே offbeat ஆன இந்த நாயகரை 2024-ல் ஒரு wildcard entry ஆகப் பார்க்க முடிந்தால் சூப்பராயிருக்கும்!

4. ஏஜெண்ட் சிஸ்கோ:

மறுக்கா அந்த டபுள் ஆல்பம் சமாச்சாரமே! குண்டூ புக்; பெரிய கதைகள் என்றெல்லாம் நாம் மெய்மறந்து ரசித்த நாட்கள் மலையேறிக் கொஞ்ச காலம் ஆகிவிட்டதென்பதை உதட்டளவில் மறுத்தாலும் உள்ளுக்குள் நிலவரத்தை நாமறிவோம்! So ஒரு லார்கோ போலவோ; ஒரு லக்கி லூக் போலவோ ஜாம்பவான்களாக இருந்தாலன்றி டபுள் ஆல்பங்கள் சோபிக்கத் திணறுவதை தவிர்க்க எண்ணியே இந்த ப்ரெஞ்ச ஏஜெண்டை "MYOMS" சந்தாவினுள் புகுத்தியிருக்கிறோம்.

5. ப்ளூகோட் பட்டாளம்:

அப்படியே SODA பற்றி நான் எழுதிய சகலத்தையும் இங்கேயும் copy-paste செய்து விடலாம் தான்! ஏற்கனவே கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப் போய் காட்சி தரும் கார்ட்டூன் களங்களில் ப்ளூகோட்ஸ் கொஞ்ச காலமாகவே தள்ளாடி வருவது தான் கசப்பான நிஜம்! யுத்தம்; அதில் நிகழும் இழப்புகள் என்று ஒருவிதமான நெகடிவ் பாணி நம்மில் கணிசமானோருக்குப் பிடிக்கவி்ல்லையோ; என்னவோ இந்தத் தொடருக்கு சொல்லிக் கொள்ளும் அளவில் வரவேற்பில்லை! இந்தாண்டின் சென்னைப் புத்தக விழா துவங்கி மற்ற விழாக்களிலும் சரி, நமது ஆன்லைன் ஸ்டோரிலும் சரி ப்ளூகோட்ஸ் புக்ஸ் என்ன விற்றுள்ளதென்பதை இங்கே போட்டுடைத்தால் சங்கடமாயிருக்கும்!

So இந்த ஸ்கூபி-ரூபி ஜோடியின் எதிர்காலம் இந்த MYOMS தடங்களிலேயே !! கருணை for கார்ட்ரூன் #

6. நெவாடா:

இவர் அறிமுகமானது ஒற்றை ஆல்பத்தில் தான்! And படிக்கவும் அலுப்புத் தட்டாமல் போனதாகவே எனக்குப்பட்டது. சித்திரங்களும் சரி, அந்த 1930-ஸ் ஹாலிவுட் சார்ந்த அமெரிக்க மேற்கின் களமும் சரி, ரொம்பவே fresh ஆக இருந்ததாகவும்பட்டது. ஆனால் நம்மில் நிறையப் பேர் பீரோக்களிலிருந்து ப்ளூ சட்டைகளை உருவியெடுத்து அவசரமாய் அணிந்தபடிக்கே “இவர் வந்து மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் அடிக்கிற காசுக்கு நாலு வடையும், பன்னும் மொசுக்கிட்டு வூட்டிலேயே குந்தினால் அவருக்கும் நல்லது; புக் படிக்க நினைக்கிற நமக்கும் நல்லது!" என்று அலசிவிட்டதால் மனுஷனை இங்கே மாற்றம் பண்ணியாச்சு!

நெவாடா - நீ வாடா” என்று நீங்கள் அழைத்தால் துள்ளிக் குதித்து வரக் காத்திருப்பார்!

7. மேகி கேரிஸன்:

துவக்கம் முதலே ரெகுலர் தடங்களில் இடம்பிடிக்காதவர் தான்; ‘டிடெக்டிவ்‘ என்று சொன்னால் துப்பறியும் சாம்புவே சிரிச்சுப் போடுவார்  தான்! ஆனாலும் அந்த laid back பப்ளிமாஸ் அம்மணியோடு லண்டனை வலம் வருவது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது! இன்னும் ஒரேயொரு ஆல்பத்தோடு மினி தொடர் பூர்த்தி காண்கிறதெனும் போது “இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி?” என்ற கேள்வியோடு அம்மணி நிற்கிறார்!

8.நாற்பதில் நோஸ்டால்ஜியா Special !!

உங்களின் ரொம்ப காலக் கோரிக்கைகளுள் ஒன்று !! 1985 & 86 காலகட்டத்தில் லயனில் அதகளம் செய்த பல நாயகர்களுக்கிடையே தமக்கென ஒரு தனித்துவ இடம் பிடித்திருந்த CID ஜான் மாஸ்டரும் ; இரட்டை வேட்டையரும் மறக்க இயலா ஹீரோஸ் ! இதோ - அவர்களின் 2 க்ளாஸிக் சாகசங்கள் கொண்டதொரு பாக்கெட் சைஸ் காம்போ இதழ் !! இதனையும் வாக்கெடுப்பில் இணைத்தாச்சு !  

தீர்ப்பு as always உங்கள் கைகளில். இதோ - மேலுள்ள எட்டிலிருந்து ஏதேனும் நான்கைத் தேர்வு செய்யும் லிங்க்  : https://strawpoll.com/e7ZJGKeK5y3

ரைட்டு... வழக்கம் போலவே அட்டவணையினைப் பார்த்த நொடியில் கலவையான ரியாக்ஷன்கள் இருக்குமென்பதை யூகிக்க முடிகிறது !

- தவறாமல் மாதம்தோறும் ‘பொம்ம புக்‘களுக்கு நேரமும், ஆர்வமும் தந்திடும் நண்பர்களின் வதனங்கள் இந்த நொடியில் இப்படியிருக்கக்கூடும்!


- தவறாமல் மாதம்தோறும் கூரியர் டப்பிகளைப் பிரித்தோ, பிரிக்காமலோ கர்ம சிரத்தையாக ஷெல்ப்களில் அடுக்கி விட்டு, அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பும் நண்பர்களின் கொட்டாவிகள் இந்த நொடியில் விட்டம் வரை இப்படி விரிந்து கொண்டிருக்கும்!


- “ஆங்... இதிலே உப்பில்லே... அதிலே காரமும் இல்லே!” என்று பொங்கிடும் நக்கீர நண்பர்களின் முகங்களில் இந்த expression ஓடிடலாம்!

- “எல்லாப் பாதைகளும் இட்டுச் செல்வது ரோமுக்கே” என்று ரோமாபுரியின் உச்ச நாட்களில் சொல்லிக் கொள்வார்களாம்! நம்மளவிற்கு அதை லைட்டாக tweak செய்து “எல்லாப் பாதைகளும் இட்டுச் செல்வது மூ/மு. சந்துகளுக்கே” என்று புரிந்து வைத்திருப்பதால் விஜயானந்தாவின் மூஞ்சி மேலே இருக்கக்கூடிய expression இதுவாக இருக்கலாம்!



எது எப்படியோ - வழக்கம் போல நீங்கள் கேட்பதற்கு முன்பாகவே பதில்களோடு ஆஜராகி விடுகிறேனே! தேசத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல இது உதவப் போவதெல்லாம் லேது தான்; ஆனால் சமூக வலைத்தளங்களில் நாம் active ஆக இருப்பதில்லை என்ற காரணத்தால் சிக்கிய சிக்கியதையெல்லாம், அள்ளி "யெஸ்..யெஸ்...bomb ப்ளாஸ்ட் பத்தி ஜார்ஜ் புஷ்ஷுக்கு பர்ஸ்ட் சொன்னதே நான் தான்" என்ற ரீதியில் தாளித்து வி்டும் சிலபல பிரதர்களுக்கு முன்கூட்டிய answer-களாக இவை இருந்துவிட்டுப் போகட்டுமே? So here goes: 

The கேள்வீஸ் & பதில்கள் Universe :

1. சந்தாவிலே புதுசாய் ஆரேனும் காணோமேடா சேட்டா? எவ்விட போயி?

- பிரதான பிரமுகர் டின்டின் ஒரு ground breaking அறிமுகம் தானே ? ப்ருனோ பிரேசில் 2.0 வும் தானே ?! Spoon & White ?

தவிர, புதுசின் பின்னே விடிய விடிய நான் தேடி ஓடினாலும், “நான்லாம் “ஒற்றை நொடி... ஒன்பது தோட்டாவை” புரட்டக் கூட இல்லை தெரியுமா?” “அர்ஸ் மேக்னாவை அட்டையைத் தாண்டிப் புரட்டலை- தெரியுமா?” என்று கெத்தாக வாசிப்பின் களங்களை பரிச்சயப்பட்ட நாயக / நாயகியரோடே நிறுத்திக் கொள்வது கண்கூடு! புதியவர்கள் அனைவருமே டெக்ஸ் வில்லர்களாகவோ, லக்கி லூக்களாகவோ, கேப்டன் டைகர்களாகவோ இருத்தல் எல்லா வேளைகளிலும் சாத்தியமாகிடுவதில்லை எனும் போது, நமது அணிவகுப்பின் ஆகிருதியைக் கூட்டிக் கொண்டே போய் விட்டு, அப்புறமாய் வெயிட்டிங் லிஸ்டில் இடநெருக்கடியை ஏற்படுத்துவானேன்?

- இதோ இப்போது கூட ஒரு ஆர்வத்தில் புதுசாய் ஒரு டார்க்கான anti-hero-வின் கதைகளை வாங்கியுள்ளோம் ! கைவசம் காத்திருக்கிறார்! Black & White-ல் !

- ஒரு Cold War யுகத்தின் உளவாளியுமே வெயிட்டிங்! Again Black & White-ல் !

நடப்பாண்டின் crisp வெளியீடுகள் உங்களுக்கு மேற்கொண்டும் வாசிக்க நேரத்தை வழங்கிடும் பட்சத்தில் இவர்களைக் களமிறக்கி விடலாம்!

2. "The Supremo Special" மாதிரி முரட்டு இதழாய் எதையும் காணோமே? ஏனி மேட்டரூ?

- இது காலமாய் நாம் பார்த்திரா ஒரு அசாத்தியப் பக்க எண்ணிக்கையினை நடப்பாண்டினில் உருவாக்க முடிந்துள்ளது தான்! ஆனால் இந்த ஆண்டின் இதுவரைக்குமான பொழுதுகளிலாவது, தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட இடர்களுக்கு மத்தியில் தான் பணியாற்றி வந்துள்ளேன் !  அம்மா-அப்பாவின் சுகவீனங்கள்; அம்மாவின் மறைவு; வேறு சில இடர்கள் என்று இந்தப் பத்து மாதங்களிலுமே டை்டோ டைட்டான பணி்ச்சுமைகளோடே டான்ஸ் ஆடி வந்திருக்கிறேன். இதோ, இந்தப் பதிவை நான் எழுதுவது கூட செம வைரஸ் காய்ச்சலின் மத்தியில் 3 பாட்டில் ட்ரிப்ஸ் போட்டுவிட்டுத் திரும்பிய கூத்தின் நடுவாக்கில் தான் ! ஆனால் இந்த சர்க்கஸ் வேலைகளெல்லாம்  காலத்துக்கும் இப்படியே சாத்தியமாகாது என்ற யதார்த்தம் புரிகிறது! அது மட்டுமன்றி உங்களி்ல் நிறையப் பேருக்குமே மெகா வாசிப்புகளுக்கு அவசியமாகிடக் கூடிய பொறுமைகள் ஒரு எட்டாக்கனியாகி வரும் சூழலில் - breezy reading will be the New King!

3. லயனின் 40-வது ஆண்டு மலருக்கு கதம்ப-குண்டு புக் லேதா? ஏனோ ஏமண்டி?

முத்துவின் 50-வது ஆண்டுமலரில் படித்த பாடம் என்பேன்! செம மிரட்டலாய் இரண்டு ஹார்ட் கவர் இதழ்கள்; ஆல்பாவின் 3 பாக அதிரடி; சிஸ்கோவின் 2 பாக அறிமுகம்; டேங்கோவின் ஸோலோ ஆல்பம், etc... etc... என்றும் 5 அத்தியாயங்களுடனான “ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள்” ஆல்பமும் களமிறங்கின! ஆனால் அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை விட மும்மடங்கு bang நிகழ்ந்தது - வேதாளரின் MAXI ஆல்பம் வெளியான சமயத்தில்! வரலாறு காணா சந்தாச் சேர்க்கை; சட்டையைக் கிழிக்கும் விற்பனை; ஆரவாரமான அலசல்கள் என்று முகமூடி மாயாத்மாவின் ரகளை பின்னியெடுத்தது!

So கூட்டணி இதழ்களுக்கு இப்போதெல்லாம் சம்மதிக்கத் திட்டவட்டமாய் மறுத்திடும் படைப்பாளிகளிடம் கையில், காலில் விழுந்து சம்மதம் வாங்கி, ஒரு பப்ளிமாஸ் புக்கை தயார் செய்வதற்குள் நாக்கெல்லாம் காலுக்கு வந்து, நீங்களும் காசைப் போட்டு அதை வாங்கி, பத்திரமாய் பீரோக்களுக்குள் அடுக்கிடுவதில் யாருக்குமே ஆதாயம் லேதே? ஆகையால் இன்றைய நமது டாப் நாயகர்களான டெக்ஸ் & லக்கி லூக்குடன் க்ரிஸ்பாக 2 கலர் ஆல்பம்ஸ் ; அப்புறம் கூர் மண்டையரோடு ஒரு கலர் கலக்கல் அதிரடி என்ற திட்டமிடல் should be good என்று  நினைத்தேன்! 500 பக்கம்...ஆயிரம் பக்கம் என்பதெல்லாம் கூட்டணி கதம்ப இதழ்களாய் இனி சாத்தியமே இல்லை என்றாகி விட்டது ! So ஒரே நாயகரின் பல கதைகளை இணைத்தால் மாத்திரமே ஒரு புஷ்டியான இதழ் சாத்தியம் ! அது ஒரு கட்டத்துக்கு மேல் அயர்வை உருவாக்கிடாதா ?

அப்புறமாய் "நாற்பதில் Nostalgia “ஸ்பெஷல்” என்று ஒரு black & white பாக்கெட் சைஸ் அதிரடியுமே அரங்கேறிட வாய்ப்புள்ளது ! அது பற்றிய விபரங்கள் / விளம்பரங்கள் மேலே பார்த்திருப்பீர்கள் ! வோட்டிங்கில் அதற்கு ஜெயமெனில் லயனின் ஆண்டுமலர் தருணத்தில் கூடுதல் 'ஜிலோ' தான் ! 

3. ஆங்... வேகமாய் ஓடிய வண்டி இப்போ திடீர்னு ஸ்பீடைக் குறைக்கிறதா மாதிரித் தோணுதே?

ரசனைகள் என்றைக்குமே நீரோட்டங்களைப் போலானவை தானே? மழைக் காலங்களில் ஓட்டம் வேகமெடுக்கும்; வெயில் காலங்களில் வேகம் மட்டுப்படும்! இங்கே அரங்கேறி வருவதுமே something similar guys! இன்று நம்மைச் சுற்றி ஒரு நூறு OTT தளங்கள் ஓயாத பொழுதுபோக்குக்கென படங்களையும், டி.வி.சீரியல்களையும், கிரிக்கெட் / புட்பால் மேட்ச்களையும் போட்டுத் தாக்கி வருகின்றன! YouTube-க்குள் தலை நுழைத்தாலோ - shorts பார்த்தே நாளை ஓட்டி விடலாம் போலுள்ளது! இத்தனையும் கோவிட் நாட்களுக்கு அப்புறமான வரவுகள் எனும் போது, ‘பழைய நினைப்புடா பேராண்டி‘ என்று நமது திட்டமிடல்களை மாற்றங்களேயின்றி பழைய மாதிரியே தொடரச் செய்வது விவேகமாய்ப் படவில்லை எனக்கு! செம வீரியமான இத்தனை பொழுதுபோக்கு option-களுக்கு மத்தியில் நமக்கென நண்பர்கள் நேரம் ஒதுக்குவதே எம்பிரானின் புண்ணியம்; So அதனைக் கருத்தில் கொண்டிட / கொண்டாடிடத் தவறலாகாதென்பதே தென்பதே bottom line!

4. கார்ட்டூன் கடையை இழுத்து மூடியாச்சு போல் தெரிகிறதே?

நிறையவே எழுதியாச்சு இது பற்றி! லக்கி லூக் தவிர்த்து விற்பனையில் ‘பரவால்லே‘ என்ற ஸ்லாட்டைப் பிடிப்பது சிக் பிக் & கோ மாத்திரமே.

- க்ளிப்டனைக் கொண்டு வந்தோம் - ‘ஊஹும்‘ என்று விட்டீர்கள்!

- மதியில்லா மந்திரியாருக்கு - டாட்டா... குட்டு பை! என்றீர்கள்!

-லியனார்டோவுக்கு - ‘ஓடியே யோயிடும் பெருசு‘ என்று அன்பான வழியனுப்பும் படலம் அரங்கேறியது!

- SMURFS - ‘தாங்கலைடா சாமி‘ என்றீர்கள்!

- சுட்டிப் பயல் பென்னி - "Not at all funny" என்றீர்கள்!

- மேக் & - ஜாக் - ‘ஹாவ்வ்வ்‘ என்று கொட்டாவி விட்டீர்கள்!

- ப்ளூகோட் பட்டாளத்துக்கு - "சிரிப்பே வரலியேப்பா தம்பிகளா" என்றீர்கள்!

- ரின்டின் கேனை - “ச்சூ... ஓடிடு!” என்று துரத்தியாச்சு!

சட்டையைக் கிழிக்காத குறை தான் - இவையெல்லாம் உலகெங்கும் கொண்டாடப்படும் வேளைதனில் இங்கு மட்டும் தர்மஅடி வாங்குவது ஏனென்று புரிந்து கொள்ள! நமது கையிருப்பு லிஸ்டைப் பார்த்தீர்களெனில் லக்கி லூக் தவிர்த்த பாக்கி சிரிப்புப் பார்ட்டிகள் அத்தனை பேரது இதழ்களும் இன்னமும் ஸ்டாக்கில் இருப்பது புரியும்! தக்கி முக்கி, புத்தக விழாக்களில் ஆகிய போணிகளில் Smurfs-ல் சில டைட்டில்கள் மட்டுமே காலி!

அட, "கதை சொல்லும் காமிக்ஸ்" - fairy tale முயற்சியுமே புஸ்வாணமாகிப் போச்சு! அதிலுமே நமது மாமூலான விமர்சனப் பார்வைகளைப் பொருத்தி்ட முனையும் போது, அடுத்த தலைமுறைகளை ‘பொம்ம புக்‘ லோகத்தினுள் நுழைத்திடக்கூடிய சுலப வாய்ப்புகளையும் இழந்ததே பலனாகியது! இதோ - பெரும் தேவன் மனிடோவை வேண்டிக் கொண்டு புது சிரிப்பு டீமான ஸ்பூன் & ஒயிட் களம் காணவுள்ளார்கள் ! இவர்களையாச்சும் ஏற்றுக் கொள்கிறீர்களா என்பதை பார்த்தாக வேண்டும் !

5. TIN TIN கார்ட்டூனா?

Not at all! ‘டின்டின்‘ ஒரு ரிப்போர்ட்டர்! பத்திரிகை ஆபீஸுக்குப் போகிறாரோ இல்லையோ, உலகமெல்லாம் பணி நிமித்தம் சுற்றி வருபவர்! அட- சந்திர மண்டலத்துக்கே போகும் 2 பாக சாகஸமும் கூட உண்டு! அற்புதமான ஆக்ஷன் கதைகள்... கலவையாய் சில நகைச்சுவை பாத்திரங்களோடு - என்பதே இந்தத் தொடரின் template! 94 ஆண்டுகளுக்குப் பின்னேயும் இவரது தொடரில் புராதன நெடி துளியும் கிடையாதென்பதே இந்தத் தொடரின் தரத்துக்கு ஒரு சான்று! உலகெங்கும் மறுவாசிப்பிலும் ஸ்கோர் செய்திடும் சொற்பமான தொடர்களில் டின்டின்னுக்கு ஒரு டாப் ஸ்லாட் என்பது இன்னுமொரு ப்ளஸ்! சாகஸ வீரர் டின்டின் - ஜாலியான சக கதாப்பாத்திரங்களோடு!

6. “ரிப்போர்ட்டர் ஜானி தொடர்வதில் ஒரு விதத்தில் கூடுதல் மகிழ்ச்சி” என்று சொன்னா மேரி இருந்ததே தல! ஏனி மேட்டரூ?

1985ல் நம்ம முதல் ஃப்ராக்ங்பர்ட் விஜயத்தின் தொடர்ச்சியாய் கொணர சாத்தியப்பட்ட பல கதைகளுள் மூன்று ஆக்ஷன் நாயகர்கள் ரொம்ப ஸ்பெஷல்! மூவரையுமே தத்தாரித்துக் கிடந்த “திகில்” காமிக்ஸில் களமிறக்கி ரவுசு பண்ணினோம்! அந்த மூவர்:

- ரிப்போர்டர் ஜானி

- ப்ரூனோ ப்ரேசில்

- கேப்டன் பிரின்ஸ்

பின்நாட்களில் பிரின்ஸ் & ப்ரூனோ ப்ரேசில் தொடர்களில் புதுக்கதைகள் இல்லாத காரணத்தால் ஜானியோடு மட்டும் ஆவர்த்தனம் செய்து வந்தோம்! ஆனால் 2024-ல் இந்த மூவரையும், மூன்று புது சாகஸங்களோடு சந்திக்கவிருக்கும் மகிழ்ச்சியில் தான் அப்படி எழுதத் தோன்றியது! பிரின்ஸ் தொடருமே என்றைக்கேனும் தூசு தட்டப்பட்டு 2.0 version ஆக வெளிவந்தால் தவிர, இந்த மூவரணியை இணைந்து ரசிக்கும் வாய்ப்புகள் பூஜ்யம்! So 2024 அந்த விதத்தில் ஸ்பெஷல்! 

7. வன்மேற்கின் அத்தியாயம் எங்கே காணோம்?

இதோ இந்த நவம்பரில் அந்த முதற் சுற்று நிறைவுறுகிறது folks! அதுவும் வெளியான பின்னால் இந்த 4 பாக மினி சுற்றினை அலசிடலாம்! அதன் இடையே, அடுத்த சுற்று எத்தனை ஆல்பங்களுக்கு நீண்டிடவுள்ளது என்பதையும் நான் தெரிந்து வைக்கிறேன். உங்கள் அலசல்களில் இது பெற்றிடும் மதிப்பெண்களைக் கொண்டு அடுத்த சுற்றைத் துவக்குவது பற்றித் திட்டமிட்டுக் கொள்ளலாம்! இருக்கவே இருக்கிறது - V காமிக்ஸின் ஜுலை to டிசம்பர் ஸ்லாட்கள்!

8. அலிபாபா கார்ட்டூன் தொடர்?

தனிப்பட்ட முன்பதிவு ஒரு பொருத்தமான சமயத்தில் அறிவிக்கப்படும். அதற்கேற்ப 3 தனித்தனி இதழ்களாய் வெளிவரும்.

9. சுஸ்கி & விஸ்கியையும் காணோமே??

Truth to tell - முதல் ஆல்பத்துக்குக் கிடைத்த மாஸ் வரவேற்பு இரண்டாவது பாகத்துக்குக் கிட்டியிருக்கவில்லை! ஒரு கணிசமான கையிருப்பு தேங்கி நிற்கின்றது ! பழைய கதைகளை மறுக்கா பார்க்கும் அந்த நோஸ்டால்ஜியா factor-ஐ தாண்டி ஒரு வேகம் தென்பட்டிருந்தால் மகிழ்ந்திருப்போம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கார்ட்டூன்களுக்கும், தற்போதைய நண்பர்வட்டத்துக்கும் உள்ள ஏழாம் பொருத்தம் இங்கும் தொடர்கிறதோ - என்னவோ ! So 2024-ல் ஒரு சின்ன பிரேக் விட எண்ணியுள்ளோம்.

10. ஒரிஜினல் அண்டர்டேக்கர் என்னவானார்?

2 அத்தியாய புதுச் சுற்றில் க்ளைமேக்ஸ் பாகம் இன்னமும் தயாராகவில்லை. 2024-ல் அது ரெடியாகிடும் பட்சத்தில் 2025-ல் அட்டவணையில் இடம் பிடித்திடும்.

11. அந்த LONESOME தொடர் என்னாச்சு?

இங்கேயுமே அதே கதை தான்! க்ளைமேக்ஸ் பாகம் இன்னமும் வெளியாகவில்லை! 2024-ல் ரெடியாகிவிடும்; நம்மிடையே 2025-ல்!

12. ஏதாச்சும் புதுசாய்... அதிரடியாய்...??

ஆசையிருக்கு நிலா வரைக்கும் பயணம் போக!! ஆனால் அடக்கி வாசிக்கும் அவசியமும் இருக்குதே!!

***ஒரு அட்டகாச 5 பாக கௌபாய் தொடர்! மிரட்டும் கதைக்களம் + அட்டகாசச் சித்திரத் தரம்! இதற்கான உரிமைகள் வாங்கியாச்சு! மாதம் ஒரு அத்தியாயம் வீதம் 5 மாதங்களுக்கு இதனை நகர்த்திட இயன்றால் அட்டகாசமாக இருக்கும்! But ஏற்கனவே உள்ள ஈரோக்கள் வெயிட்டிங் லிஸ்டில் தொங்கலில் இருக்க இதனை எவ்விதம் நுழைப்பதென்று தெரியாமல் மண்டையைச் சொரிந்து வருகிறேன்!

***ஒரு black & white கிராபிக் நாவல்!! சித்திரங்கள் பிரமிப்பின் உச்சத்துக்கே இட்டுப் போகின்றன! And கதைக்களமோ ஒரு சர்வதேச விருது பெற்ற நாவலின் கரு! இதைக் கண்ணில் பார்த்த பின்னே வெளியிடாமல் போனால் தலையே வெடித்து விடும் எனக்கு! And இதனை வெளியிடுவதற்கான ஒரு perfect வாய்ப்பினையும் பார்த்து வைத்திருக்கிறேன்! வெறும் நூறே பேர் வாங்கினாலுமே no worries... இது போலான படைப்புகளை வெளியிடும் வாய்ப்புகள் ஆயுசுக்கு ஒருவாட்டியோ - ரெண்டுவாட்டியோ தான் அமையும் ! 

***இதுவுமே ஒரு கி.நா. தான் - but கலரில்! சித்திரங்களிலும், கலரிங்கிலும் ஒவ்வொரு பக்கமும் மிரட்டோ மிரட்டென்று மிரட்டுகின்றது ! இதை 2024-ல் வெளியிட வாய்ப்பு குறைவே! ஆனால் பார்க்கப் பார்க்க உள்ளுக்குள் ஒரு நமைச்சல்...! Phewwww !!

***கடற்கொள்ளையர் ஜானரில் பராகுடா செய்த அதகளம் மறந்திருக்காது! இது அது போலான சற்றே அடல்ட்ஸ் ஒன்லி ரகமாக இல்லாமல் ஒரு அக்மார்க் Ocean adventure ஆக இருந்திடும்! ஆர்ட்வொர்க் சும்மா தீயாய் தகிக்கிறது! இன்னமும் அங்கே வெளியாகியிருக்கவில்லை, நமக்கு preview மட்டும் காட்டியுள்ளனர்! இல்லாவிடின் சர்வ நிச்சயமாய் அட்டவணைக்குள் இந்நேரத்துக்குப் புகுத்தியிருப்போம்! எப்போதென்று தெரியாது - but நிச்சயமாய் வந்திடும் கடற் சாகஸம்!

***ஒரு 2 பாக ஆக்ஷன் த்ரில்லர்! கதை அரங்கேறும் களமோ ஆப்பிரிக்கா! ஆரம்பம் முதலே டாப் கியர் தான்... தெறி ஸ்பீடு! Again இட நெருக்கடி தான் சிண்டைப் பிய்க்கச் செய்கிறது!

ஹ்ம்ம்ம்... இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் தான்! நீங்கள் அத்தனை பேருமே வரணும் - பழைய பன்னீர் செல்வங்களாய் வரணும்! வாசிப்புக்கு நேரம் வாய்த்த அதிரடிக்காரர்களாய் வரணும்! அந்த நொடியில் ரைட்டுக்கா... லெப்டுக்கா போட்டுச் சாத்திட நாங்களும் தாயராகயிருப்போம்! அது வரை கொஞ்சமாய் அடக்கி வாசிப்போம்!

ஆகட்டும் folks... இதற்கு மேலும் பதிவை இழுத்துக் கொண்டே போனால் சத்தியமாய் வாசிக்க ‘தம்‘ இருக்கப் போவதில்லை உங்களிடம்! டெக்ஸ் சிக்ஸர் ஸ்பெஷலின் எடிட்டிங்கும் அழைக்கிறதால் நடையைக் கட்டுகிறேன்! எப்போதும் போலவே இயன்றமட்டுக்கு அனைவரையும் புன்னகைக்கச் செய்வதே இந்த அட்டவணையின் focus ஆக இருந்திட வேண்டும் என்று முயற்சித்துள்ளோம். தவிர தற்போதைய வாசிப்புச் சூழல்கள், விற்பனைக் கட்டாயங்களும் இதனில் இடம்பிடித்திருப்பதை மறுக்க மாட்டேன்! நிதானமாய் இதழ்களை, அறிவிப்புகளை உள்வாங்கிக் கொண்டு உங்களின் அபிப்பிராயங்களை பதிவிடுங்களேன் ப்ளீஸ்! Of course இது இல்லியா ? அது எதுக்கு ? என்ற ரீதியில் சில கேள்விகள் எழாது போகாதென்பது புரிகிறது ! ஆனால் ஒவ்வொரு தேர்வுக்குப் பின்னும் ஒரு காரணம் இருப்பதை போலவே ஒவ்வொரு தேர்வின்மைக்குப் பின்னேயும் உருப்படியான காரணம் இருக்கும் என்பதை நீங்கள் தைரியமாய் நம்பலாம் !

எப்போதும் போல உங்கள் ஒவ்வொருவரின் துணையுமின்றி இந்தப் பயணம் ஒரு இம்மி கூட முன்செல்லாது எனும் போது - உங்களை 2024 சந்தா எக்ஸ்பிரஸில் செம ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருப்போம்!! Please do join in all!

Bye all...see you around ! Have a great weekend !!

341 comments:

  1. யா! இட்ஸ மீ - த ஃபர்ஸ்ட்!! :)

    ReplyDelete
  2. வணக்கம் சார்

    ReplyDelete
  3. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  4. அடப்பாவிகளா...😂😂😂😂😂

    ReplyDelete
  5. ஒரே செகண்ட்ல 28 கமெண்ட்டா....!!

    ReplyDelete
    Replies
    1. ஆமா தல அத்தனை பேரும் இங்கே தான் இருக்காங்க.

      Delete
    2. அட ஆமால
      அதுவும் முக்கியமாக மீ பர்ஸ்ட் கிற மெஸச்சுடன் 😆😆😆😆😆

      Delete
  6. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  7. வணக்கம் .ஆசிரியர் சார்

    ReplyDelete
  8. அனைவருக்கும் வணக்கம்..

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  10. ஆத்தி அதுக்குள்ள இத்தன பேரா

    ReplyDelete
  11. தெய்வங்களா.....இன்றைய தளப்பார்வை அநேகமாய் ஒரு புது ரெகார்ட் போடப்போகிறது என்று நினைக்கிறேன் ! அதற்குள்ளாகவே 3262 பார்வைகள் !!

    ReplyDelete
    Replies
    1. சும்மாவா.. நாலாபக்கமும் புறாக்களை பறக்கவிட்ருக்கோமே..😂😂

      Delete
  12. நண்பர்களே, கரை புரண்டு ஓடட்டும் உற்சாகம். பணியை முடித்து விட்டு பொறுமையாக வரி வரியாக படித்து மகிழ வேண்டும். நள்ளிரவில் அல்லது காலையில் ஆனந்த கடலில் குதிக்க ரெடி.

    ReplyDelete
  13. செந்தூர் முருகா வரனும்...அருள் தரனும்...சார் வெறித்தனமா மேட்ச் பார்த்தத மறந்து...பாகிஸ்தான்...நியூசிலாந்து மட்டுமே பாத்தேன்

    ReplyDelete
  14. அருமை, வருக வருக டின் டின்

    ReplyDelete
  15. சந்தா கட்டியாச்சு. கமெண்ட்ல தான் முதலிடம் இல்லே. இதுலயாவது முதலாவ தான்னு பார்க்கணும்.

    ReplyDelete
    Replies
    1. பத்து சார் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லறேன். நான் 4ஆம் தேதியே சந்தா கட்டி விட்டேன். அதுக்கு முன்னாடி இன்னும் பலர்.

      Delete
  16. இத்தனை பெரும் பளுவை துளியும் முகச்சுளிப்புகளின்றி நீங்கள் இந்த ஆண்டு முழுவதிலும் சுமந்திட சம்மதித்தமையைக் கண்டு....யாரு சொன்னா சுளிக்கலன்னு ஆயிரம் பக்கம் கேட்டாக்க

    ReplyDelete
  17. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  18. 30 minutes to finish reading. Hats off to you sir. But you rolled the ball to us regarding some books and the difficult part is selecting 4 books and that is going to be hell of a task. You had listed 8 books and I need 7 of them. Is there any possibility to get all 7?

    ReplyDelete
  19. பதிவை முழுதாய் படித்தாயிற்று சார்..!

    மகிழ்ச்சி.. ரொம்ப மகிழ்ச்சி.. வருத்தம்.. அதீத வருத்தம்னு மாறிமாறி உணர்வுகள் அலையடித்தன.!

    எது எவ்வாறிருப்பினும் ஊரோடு ஒத்து வாழ்ந்தாக வேண்டுமென்ற யதார்த்தம் பிடரியில் அடிப்பதால்..... புரிந்துகொள்ள முடிகிறது சார்..!

    என்றென்றும் உங்களுக்கான ஆதரவோடே...😊😊

    ReplyDelete
    Replies
    1. இந்த அட்டவணையின் ஒரே நோக்கம் - வாங்கும் இதழ்களையெல்லாம் அனைவருமே வாசிக்க வேண்டும் என்பதே சார் ! பாதிக்குப் பாதி ஒரு மேலோட்டப் புரட்டலோடு பீரோக்களுக்குள் ஐக்கியம் ஆகும் நிலையினை மாற்றிட வேண்டும் என்பதே அவா !

      Delete
    2. Is there any other option to buy rest of the books in MYSMS sir

      Delete
    3. நண்பரே, பழைய பன்னீர்செல்வங்களாய் அனைவரும் எழுந்து வரட்டும் - வானமே எல்லையாக்கிடுவோம் !

      Delete
  20. With hard feelings I left agent Cisco soda and Nevada. It is unfair sir. I need those books too. Please reconsider sir.

    ReplyDelete
  21. மொத்தமா படிச்சாச்சு.. 36 நிமிடங்கள். எதிர்பார்த்த மாற்றங்கள் தான் சார். 2023 நிச்சயமாக ஒரு உச்சம். அதன் பிறகு ஒரு இளைப்பறுதல் வர வேண்டியது இயல்பே. அடுத்த மாரத்தான் ஓட்டத்திற்கான முதல் வருடமாக 2024 இருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு நன்றிகள் சார் !

      Delete
  22. இந்த பதிவை படித்து முடிக்க 40 நிமிடங்கள் ஆனது. என்ன ஒரு பதிவு. எனக்கு மிக்க மகிழ்ச்சி. எடிட்டர் சார் வாழ்க வாழ்க...

    ReplyDelete
  23. பனி மண்டல போராளிகள்

    பார்க்கும் போது Tex 1st colour book... நிலவொளியில் ஒரு நரபலி....நியாபகம் வருகிறது

    எடிட்டர் சார் இந்த "பனி மண்டல போராளிகள்" Colourல் வெளியிட்டால் இன்னும் பேஷாக இருக்குமே...

    ReplyDelete
    Replies
    1. பட்ஜெட் இல்லியே நண்பரே ! இதுவே 6400 ரூபாய்க்கு வந்து நிற்கின்றது !

      Delete
  24. // நான் எழுதுவது கூட செம வைரஸ் காய்ச்சலின் மத்தியில் 3 பாட்டில் ட்ரிப்ஸ் போட்டுவிட்டுத் திரும்பிய கூத்தின் நடுவாக்கில் தான் //

    Sir please take care of your health 🙏🏻

    ReplyDelete
  25. ஆப்ரிக்க சதி
    ஜென்ம சாபல்யமடைந்தேன் நன்றி சொல்ல வார்த்தைகளில்லை ஆசிரியரே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  26. உள்ளேன் ஐயா 🙏


    எவ்ளோ பெரிய பதிவு..

    எவ்ளோ நேரம் டைப் பண்ணியிருப்பாரு ?!!

    நினைச்சாலே கண்ணெல்லாம் வேர்க்குது..

    ReplyDelete
    Replies
    1. கோட்டை அழிச்சிப்புட்டு முதல்லேர்ந்து திரும்பவும் அடிச்ச கதையெல்லாம் தனி !

      Delete
    2. //கோட்டை அழிச்சிப்புட்டு முதல்லேர்ந்து திரும்பவும் அடிச்ச கதையெல்லாம் தனி !//

      😯😯😯😯😯

      Delete
  27. வழக்கம் போல் டெக்ஸ் களை கட்டுகிறார்
    கார்ட்டூன்ஸை மிஸ் செய்கிறேன்(ரொம்பவே)
    40 வது ஆண்டில் லயனின் முதல் நாயாகியை எதிர்பார்தேன்
    V காமிக்ஸ் வருவதில் மகிழ்ச்சியே

    வெயிட்டிங் லிஸ்டில் இவ்வளவு பேரா 😶😶😶😶😑😑😑😑😑

    எனது அட்டவனை லிஸ்ட் இங்கே பகிரவில்லை, வெயிட்டிங் லிஸ்ட் ஹீரோஸ் தான் என் பட்டியலில் இருந்தனர்

    கேப்டன் பிரின்ஸ் வருவதில் மகிழ்ச்சி
    டேங்கோ ஓவியர் Xavier பிரின்ஸின் ரசிகர்
    அம்மாவும் பிரின்ஸ் கேட்டு கொண்டு இருந்தார்

    லார்கோ க்ரேட்...

    புதுசு அதிகமாய் இல்லாதது லைட்டா வருத்தமே...படிக்கும் டைம் கம்மிதான்
    இந்த ஓடிடி காலத்தில்...

    அட்டவணை நன்றாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. படிக்க 30 நிமிடங்கள் ஆயிற்று

      Delete
    2. Biting the bullet என்பார்கள் ரம்யா ....! யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளத்தானே வேணும் ? இந்த உள்ளங்கைக்குள் ஜாலம் காட்டும் OTT தளங்களைத் தவிர்க்க எனக்கே சிரமமாய் உள்ளது ; 2k கிட்ஸ் பற்றிக் கேட்கவும் வேணுமா ?

      Delete
  28. // இந்த அட்டவணையின் ஒரே நோக்கம் - வாங்கும் இதழ்களையெல்லாம் அனைவருமே வாசிக்க வேண்டும் என்பதே சார் //

    Completely agreed sir. Very good decision.

    ReplyDelete
  29. @Editor Sir..😍😘

    57 minutes for me to read Sir..👍👌

    ReplyDelete
  30. அதிரடிகள்இல்லாத சந்தாவாக தெரிகிறது சார் ஒரு காலத்தில் பல வகைகளாக பிரித்து ஒவ்வொன்றிலும் இவ்வளவு புத்தகங்கள் என்று பார்கும் போதே பட்டாசு வெடிக்கும்

    ஆனால் கால மாற்றம் மக்கள் ரசனைகள் ஏற்ப மாற்றம் வந்து தானே ஆக வேண்டும்.

    உண்மையில் குண்டு புத்தகங்கள் எல்லாம் படிக்கவே முடிவதில்லை கைகள் முதலில் ஒல்லி புத்தகத்திற்கு தான் செல்கிறது எனக்கு.

    படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருகின்றன 😔

    டெக்ஸ் புத்தகங்களுக்குமே அது தான் நிலை என்பதை நினக்கும் போது கஷ்டமாக தான் இருக்கிறது.

    எனக்கு இவ்வருடம் டெக்ஸ் கதைகள் குறைத்து மொத்தமாகவே 6 வந்திருந்தாலே போதுமாக தோன்றியது.

    ஆனாலும் குறையாதது சந்தா தொகை தான் 6400.

    ReplyDelete
  31. இந்தவாட்டி சந்தாதாரர்களுக்கு எதுவும் இலவசம் புக்குகிடையாதா சார்

    ReplyDelete
  32. சந்தா 6400/ கட்டி ஆகிவிட்டது சார்..

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார் !! அதற்குள் 18 பேர் போட்டுத் தாக்கியுள்ளனர் !

      Delete
    2. Wow..சிறப்பு சார்..😍😘👍✊👌👌👌

      Delete
  33. ok Sir
    ஆனால்
    V. காமிக்ஸ்
    செம சூப்பர்
    100/100

    ReplyDelete
  34. Sir is there option for a person to select only 4 books in MYSMS. He doesn't need main subscription.

    ReplyDelete
    Replies
    1. Now I know how to get all books sir

      Delete
    2. வெளியாகப் போவது நான்கே இதழ்கள் தான் நண்பரே ; எந்த நான்கென்பதை சொல்லிட வலைக்கு அப்பாலுள்ள வாசகர்களுக்கும் வாய்ப்பு இருந்திடப் போகிறது !

      Delete
  35. முழுவதுமாக படித்து விட்டேன்

    இதைவிட மகிழ்ச்சியான தேர்வு கிடையாது Sir

    எனக்கு பிடித்த பல ஹீரோக்கள் உள்ளனர், இரட்டை வேட்டையர், ஜான் மாஸ்டர், பிரின்ஸ்,ஸ்பைடர், முதலைப்பட்டாளம், (.சுஸ்கி விஸ்கி இல்லாத குறையை Tintin போக்கி விட்டார்,

    சந்தா தொகையை கூட்டாமல் இருக்க பகீரதப் பிரயத்தம் செய்துள்ளீர்கள் அதே சமயம் சிறப்பான தேர்வுகளும் கூட

    Thank You very much sir

    ReplyDelete
    Replies
    1. // சந்தா தொகையை கூட்டாமல் இருக்க பகீரதப் பிரயத்தம் செய்துள்ளீர்கள் அதே சமயம் சிறப்பான தேர்வுகளும் கூட // மிகச் சிறப்பான தேர்வுகள்.

      Delete
  36. சந்தா 2024

    Tin Tin: வாவ்...!

    3 ஆல்பங்கள் ஒரே புத்தகத்திலா சார்?

    ReplyDelete
    Replies
    1. இல்லை 2024ல் ஒரு ஆல்பம் மட்டுமா?

      Delete
    2. No sir...3 தனித்தனி ஆல்பங்களாய் !

      Delete
  37. அருமை...!!
    அட்டகாசம்...!!!
    அற்புதம்...!!!!

    இளவரசியின் புது மனை புகு விழாவை ஆவலுடன் எதிர்பார்த்து...!!!!

    😍🌹🔥♥️

    ReplyDelete
  38. இனிதான் பொறுமையாக உள்ளே வெளியே அட்டெண்டன்ஸ் பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  39. MYOMS ல் ஏன் நான்கு என்று லிமிட் செய்து விட்டோம் சார் ? எட்டையும் விருப்பப்பட்டால் செலக்ட் செய்து வாங்கிக் கொள்ளும் ஆப்ஷனை கொடுத்தால் நன்றாக இருக்கும் அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. பரீட்சார்த்த முயற்சி சார் ! எவ்விதம் ஸெல்ப் எடுக்கிறதென்று பார்ப்போமே முதலில் !

      Delete
    2. @Nagaraj sethupathi S..😃
      Correct Sir.. Valid point..👍

      Delete
  40. ஜார்ஜ் & ட்ரேக்
    ஸ்பைடர்
    ஜான் மாஸ்டர்
    பிரின்ஸ்
    ப்ரூனோ ப்ரேசில்
    ஒரு பக்கம் ரீ எண்ட்ரி கொடுத்து கலக்குனா
    மறு புறம்
    பௌண்சர்
    லார்கோ நாங்களும் வரோமுன்னு விசிலடிக்க வைக்கிறாங்க

    ReplyDelete
  41. இது போன்ற அட்டவணையை கடந்த வருடமே ஏதிர்பார்த்தேன்: விற்பனையில் சாதிப்பவர்களுக்கு மட்டும் இருக்கும் என நினைத்தேன், இந்த முறை நீங்கள் அந்த வழிமுறையை கையில் எடுத்தது மிகவும் மகிழ்ச்சி மற்றும் சரியான முடிவு, வழக்கம் போல் எல்லா சந்தாவிலும் உங்களுடன் பயணம் செய்வேன் (வோம்) சார்,

    ReplyDelete
    Replies
    1. விற்பனை அளவுகோல்களில் தடுமாறிடும் நாயகர்களை variety என்ற ஒற்றைக் காரணத்தின் பொருட்டு தாங்கிப் பிடிப்பதில் நாமே தள்ளாடும் நிலை வந்திடலாகாது என்பது புரிகின்றது சார் !

      Delete
    2. சொல்லப் போனால் இந்த அட்டவணை யாரும் யுகிக்க முடியாத முறையில் வந்துள்ளது சார், மீண்டும் உங்களது வழக்கமான இடதுபக்கம் ன்டிக்கேட்டர் போட்டு வலதுபக்கம் கையை காண்பித்து நேரே செல்லும் பாணிக்கு திரும்பி வந்தது சிறப்பு,

      Delete
  42. //ஆனால் "கார்சனின் கடந்த காலம்" போல out of the blue இதழ்கள் இராதென்று சொல்ல மாட்டேன் ! அதிலே மோரிஸ்கோ வருவாரா - வர மாட்டாரான்னும் சொல்ல மாட்டேன் !//
    சூப்பர்!!
    வருடத்திற்கு ஒரு டெக்ஸ் வித் மோரிஸ்கோ வேண்டும் சார்!!

    ReplyDelete
  43. டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️
    டின்டின் 😍🌹🔥❤️

    ReplyDelete
  44. ஐம்பதாமாண்டு ஸ்பெஷல் அறிமுகத்தில் தப்பிப் பிழைத்தது டேங்கோ மட்டுமென்பதில் வருத்தமே சார்...

    ஆல்பாவும் வந்திருக்கலாம்!!

    ReplyDelete
    Replies
    1. உண்மை... ஆல்ஃபா மிஸ் ஆனது வருத்தமே...

      Delete
    2. எனக்கு சிஸ்கோ மிஸ் ஆனது தான் வருத்தம்.

      Delete
    3. இன்னமும் வாய்ப்புகள் தான் உள்ளனவே சார் ?!

      Delete
  45. அட்டகாச 5 பாக கௌபாய் தொடர்

    black & white கிராபிக் நாவல்!!

    இதுவுமே ஒரு கி.நா. தான் - but கலரில்

    கடற்கொள்ளையர் ஜானரில்

    2 பாக ஆக்ஷன் த்ரில்லர்! கதை அரங்கேறும் களமோ ஆப்பிரிக்கா!

    மேலே சொன்னவற்றையெல்லாம் MYOMS ல் வெளியிட்டால் பட்டாசாய் இருக்கும் சார் !!


    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஆமா இது சூப்பர் ஐடியா....

      Delete
  46. தானைத் தலைவர் 🔥 தானைத் தலைவர் 🔥தானைத் தலைவர் 🔥தானைத் தலைவர் 🔥 தானைத் தலைவர் 🔥தானைத் தலைவர் 🔥தானைத் தலைவர் 🔥 தானைத் தலைவர் 🔥தானைத் தலைவர் 🔥தானைத் தலைவர் 🔥 தானைத் தலைவர் 🔥தானைத் தலைவர் 🔥தானைத் தலைவர் 🔥 தானைத் தலைவர் 🔥தானைத் தலைவர் 🔥

    ReplyDelete
    Replies
    1. இவரு(ஸ்பைடர்) ஊதறதையும்.. அவுக(மாடஸ்டி) ஆடுறதையும்...

      பாக்குறப்போ...

      Delete
  47. கார்ட்டூன்கள் பக்கம் வாசகர்கள் பார்வையை திருப்ப ,ஏதேனும் ஒரே ஒரு கார்ட்டூன் கதையை மட்டும்தற்போதைய சைஸில் அல்லாமல் டெக்ஸ் புத்தகங்கள் சைஸில் வெளியிட்டு பார்க்கலாங்களா சார்.ஒரு மாறுதலுக்காக.கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. எனது கோரிக்கையும் அதுவே...
      பக்கத்துக்கு 6 கட்டங்கள் என்ற விதத்தில் கதை படிக்கும் சுவராஸ்யமே தனிதான்..
      படைப்பாளிகள் அனுமதி மறுப்பு என்ற கோணத்தில்..
      காட்டூன் கதை தொடர்கள் நிறைய மிஸ் ஸாகின்றன..
      எனக்கு மேக் & ஜாக் மிகவும் பிடித்த தொடர்..

      Delete
    2. எழுத்துக்கள் ரொம்பவே குட்டியாகிப் போகும் சார் !

      Delete
  48. சந்தா உறுப்பினர்களுக்கு இலவச இணைப்பு எதுவும் இல்லையா ஜி இந்த வருடம்.

    ReplyDelete
  49. லயன் 40 ஸ்பெஷல்! 3 புத்தகங்கள்;
    லக்கி, டெக்ஸ், ஸ்பைடர்!

    நல்ல பிளானிங் சார்! 👌👌

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் 3 டாப் நாயகர்கள்...

      Delete
  50. இந்த முறை உங்கள் வழக்கமான பாணியில் இருந்து மிகவும் வித்தியாசமாக அனைவரையும் திருப்திபடுத்துவதாக மட்டும் அல்லாது விற்பனையில் சாதிக்கும் கதைகளாக/நாயகர்களாக தேர்ந்தெடுத்து சிறப்பு,

    வழக்கமாக புதிய/அறிமுக நாயகர்கள் விற்பனையில் சாதிக்கவில்லை என்றாலும் இரண்டாம் வாய்ப்பு கொடுப்பீர்கள், இந்த முறை அந்த முறையை நடைமுறை படுத்தவில்லை, குறைந்த வாசகர்கள் வட்டம் உள்ள நிலையில் இதுபோன்ற முடிவை எடுத்தது மிகவும் சரியான முடிவு சார்,

    ReplyDelete
    Replies
    1. இல்லை சார்....எங்களிடம் தேங்குகிறதென்று ஆனால் கூட ஒரு மாதிரி சமாளிக்கலாம் ; உங்கள் தரப்பிலும் வாசிப்பின்றி அவை தேங்கிட்டால் மொத்தத்துக்கே அர்த்தமின்றிப் போகிறதே !

      Delete
  51. லயனின் "40வது ஆண்டு "-என்ற முக்கியத்தினால்-சில பேர் கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டும் என்று (கர்..புர்...என்று உருமிக்கொண்டு) நினைத்துக்கொண்டிருந்தேன்..
    பரவாயில்லை ...iiலெப்டுக்கா..
    ரைட்டுக்கா..என்று அனைத்தையும் நிறைவேற்றிவிட்டீர்கள்..
    குறிப்பாக..இளவரசி-- பரவாயில்லை..பண்டமாற்று பண்ணி இருந்தாலும்..
    V காமிக்ஸ் லேபிலில் இளவரசி அனைவரையும் வசீகரித்து லயன் காமிக்ஸின் அடையாளத்தை நிருபிப்பாள்..
    அப்றம் - ப்ருனோ ப்ரேசில் - இரட்டைவேட்டையர். பிரின்ஸ், ஸ்பைடர்-என்று.. அந்த90..காலகட்டத்தை மீண்டும் கொண்டுவந்துவிடலாம்..சார்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  52. V காமிக்ஸ் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. கலர் வேதாளர், ஸாகோர், Mr நோ, ராபின், மாடஸ்டி, கேப்டன் பிரின்ஸ் தெறிக்கப் போகிறது 2024. இது வெறும் தொடக்கம் தான். இன்னும் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நிஜமே சார் ; ஆறும் செம picks !

      Delete
  53. எடிட்டர் சார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை கடந்த இரண்டு வருடங்களாக டெக்ஸ் தவிர மற்ற அத்தனை புத்தகங்களும் படிக்கவில்லை வி காமிக்ஸ் உள்பட புதிதாக அறிமுகமாகும் நாயக நாயகர் பற்றி கருத்து சொல்ல இயலவில்லை விகாமிக்ஸ் சேர்த்து நீங்களும் மற்ற நண்பர்கள் சொல்வதை வைத்து கணிக்க முடிகிறது வயது ஆக ஆக வேலை குடும்பம் மற்ற பணிகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது ஒரு வித சலிப்புஏற்படக்கூடுமோ என்று பயமாக உள்ளது எனவே காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் தேவை

    ReplyDelete
    Replies
    1. கொஞ்ச காலமாகவே வாசிப்பின்றி நிறைய புக்ஸ் தேங்கிடுவதை எனக்கு உணர முடிந்தது நண்பரே ! அதன் பின்னே தான் 2024-ன் அட்டவணையிலிருந்தாவது மாற்றத்துக்கு ஒரு முதல் எட்டு எடுத்து வைப்போமே என்று தோன்றியது !

      Delete
  54. பவுன்சர், லார்கோ, ஜாரோப்!!

    விசில் போடு!!!

    ReplyDelete
    Replies
    1. 3 தெறிக்க விடும் நாயகர்கள்.

      Delete
  55. தோர்கல்! டபுள் ஆல்பம்!!

    மூன்றையும் போட்டு ஆர்க் முடித்திருக்கலாம்...

    ஆனால் நெருக்கடி புரிகிறது...
    நல்லவேளையாக யுனிவர்சல் சந்தாவில் கொண்டு வந்தீர்கள்!!!

    நன்றிகள் சார்!!

    ReplyDelete
    Replies
    1. Just உள்ளே புகுந்த ஆல்பம் சார் !

      Delete
  56. டெட் வுட் டிக், தாத்தாஸ், எனக்கு ஸ்டர்ன் வந்தால் மிக்க மகிழ்ச்சி... கிராஃபிக் நாவல் இந்த முறை செம்ம...

    ReplyDelete
  57. சுஸ்கி விஸ்கி இரண்டாவது ஆல்பம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது, இரண்டு கதைகளில் நானும் ரௌடிதான் என்னை மிகவும் கவர்ந்தது,

    ஆனால் இந்த புத்தகம் விற்பனையில் சாதிக்கவில்லை என்றவுடன் மனதுக்கு கஷ்டமானது, இவரின் புதிய கதைக்கு நாஸ்டாலஜி நண்பர்கள் ஆதரவு தராது மிகவும் வருத்தமாக உள்ளது,

    ஒரு நல்ல காமெடி தொடர் இப்படி நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது மிகவும் வருத்தமாக உள்ளது,

    ReplyDelete
  58. ஸ்டெர்னுக்காக கி.நாவை தியாகம் செய்து விட்டேன்!!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நானும் அதே முடிவுதான் எடுத்து இருப்பேன்.

      Delete
    2. எடுத்துவிட்டேன் இதே முடிவை

      Delete
  59. வணக்கம் ஆசிரியர் சார். வணக்கம் காமிக்ஸ் காதலர்களே. வணக்கம் சொல்வது சின்னமனூர் சரவணன்.

    ReplyDelete
  60. மிகப்பெரிய பதிவு டின் டின் வருவது மற்றும் வேதாளர் வண்ணத்தில் வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இரண்டு ஜாம்பவான்களுமே சாதிப்பார்களென்று நம்புவோம் சார் !

      Delete
  61. வணக்கம் சார். மன்னிக்கனும் சார். ஏமாற்றம் சார் . ஒரு குண்டு புக்கு கூட இல்லையே சார்.

    ReplyDelete
    Replies
    1. பதிவை பொறுமையாய் ஒருமுறை வாசியுங்கள் நண்பரே !

      Delete
  62. எடி ஜி,எனக்கு முழு மன நிறைவாக உள்ளது இந்தத் தொகுப்பு , எனக்கு பிடித்த பலர் 2024 பட்டியலில் இருக்கின்றனர்.

    வண்ணத்தில் Spider 🕷️
    இரட்டை வேட்டையர்
    பிரின்ஸ்
    Bruno
    மாஸ்கோவில் மாஸ்டர்
    Modesty
    அலிபாபா
    Reporter Jhonny
    Robin
    வண்ணத்தில் phantom
    Classic heros
    Phantom
    சார்லி
    George
    Mandrake
    Ripkirby
    Corrigon
    Largo winch
    Bouncer
    Chickbill
    Martin mystery
    மேலும் Tintin

    Vcomics சந்தா selection அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார் ; இது யதார்த்தத்தில் காலூன்றிட முனையும் அட்டவணை !

      Delete
  63. #அட்டகாச 5 பாக கௌபாய் தொடர் #
    இதை lion 40வது ஆண்டு மலராக அல்லது ஈரோடு specialஆக வெளியிட முயற்சிக்கலாம் சார்

    ReplyDelete
    Replies
    1. இல்லை நண்பரே....5 பாகங்களை ஒருசேரப் படிக்கும் mindset இன்று அத்தனை பரவலாக இல்லை !

      Delete
  64. குண்டு புத்தகம் பற்றிய உங்கள் முடிவு சிறப்பு, கடந்த வருடம் வந்த ஒற்றை நொடி ஒன்பது தோட்டா இன்னும் படிக்கவில்லை, இந்த கதையை முதலில் பேச ஆரம்பித்த வருடத்தில் வெளியிட்டு இருந்தால் ஒருவேளை படித்து இருப்பேனோ என நினைத்த, ஆனால் இந்த வருடமும் சில குண்டு புத்தகங்களை படித்து முடிக்கவில்லை எனும் போது இரண்டு காரணங்கள் புரிபட ஆரம்மித்தது 1 நேரம் இல்லை 2 நேரம் கிடைத்தாலும் அதனை வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விஷயங்களில் செல்கிறது சார்,

    ஆனால் இதுவரை படிக்காமல் வைத்துள்ள புத்தகங்களை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் படித்து விடுவேன் சார்,

    ReplyDelete
    Replies
    1. சார்...வயதும், பொறுப்புகளும் கூடிடும் போது சிற்சில மாற்றங்கள் இன்றியமையாதவைகளாகிப் போகின்றன தான் !

      Delete
  65. Martin mystery சாகசம் ஆர்டிக் அசுரன், அதன் படங்கள் ஆர்வத்தை தூண்டுகிறது.

    ReplyDelete
  66. ஓட்டுப் போடும் லிக் இந்த பதிவில் உள்ளதா? என் கண்களுக்கு மட்டும் தென்படவில்லையா நண்பர்களே?

    ReplyDelete
    Replies
    1. நானே தேடிப்பார்த்துதான் கண்டுபிடிச்சேன்...

      Delete
    2. ஆசிரியர் அதனை பதிவில் இறுதியில் கொடுத்து இருந்தால் சிறப்பாக இருக்கும்,

      Delete
  67. வண்ணத்தில் வேதாளர் வி காமிக்ஸில்! அட!!

    மாடஸ்தி மற்றும் பிரின்ஸ்... அட... அட!!

    மிஸ்டர் நோ, ராபின், ஸாகோர்!

    இது ரொம்பவே நல்லாதான் இருக்கு...

    ReplyDelete
  68. இரண்டு தவணையாக சந்தா கட்டிடம் வாய்ப்பு இந்த வருடம் மும் உள்ளது தானே ji

    ReplyDelete
  69. சந்தா கட்டியாச்சு

    ReplyDelete
  70. நாளைக்கு கம்யூட்டர் பெரிய ஸ்கிரினில் மீண்டும் ஒரு முறை பதிவைப் படித்து மீதம் உள்ள கமெண்ட்களை போட வேண்டும், good night friends,

    ReplyDelete
  71. ஆசிரியரே நீங்க என்ன மாய மந்திரம் செய்வீங்களோ தெரியாது... மாயமில்லே! மந்திரமில்லே!! ஜனவரி மாதமே வேணும்!!
    வேணும்!!
    வேணும்!!

    ReplyDelete
  72. சரியாக 2 டரை மணி நேரம் படிக்கவே..செம சார்...அற்புதமான தேர்வுகள்...அனைவரையும் இது ஈர்க்குமென நம்புவோமாக

    ReplyDelete
  73. கடைசில சிவப்பு மைல் தீட்ன அனைத்தையும் இவ்வருடம் சரியாக களமிறக்குவீர்கள் எனும் ஏக நம்பிக்கை உண்டு லிமிட்டெட்டிலாவது

    ReplyDelete
  74. எடிட்டர் சார்
    2024 அட்டவணை மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. நீங்கள் சொல்வது உண்மைதான் தற்போது எல்லாம் படிக்க அதிக நேரம் கிடைப்பதில்லை. இதுவரை வந்த புத்தகங்களில் டெக்ஸ் மட்டும் ஒரு மூன்று நான்கு படித்திருக்கிறேன். அதேபோல் வந்த V காமிக்ஸில் சில Zagor கதைகளும் கடைசியாக வந்த மிஸ்டர் நோ கதைகளையும் படிக்க முடிந்தது. மிஸ்டர் நோ சூப்பராக இருந்தது. இனி வரும் காலங்களில் எல்லா புத்தகங்களையும் படிக்க முடிவு செய்துள்ளேன்.

    மொத்தத்தில் நீங்கள் எத்தனை மற்றும் எது தந்தாலும் வாங்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்குவது உங்கள் அன்பின் வெளிப்பாடு சார் ; வாசிக்கச் செய்ய முயற்சிப்பது எனது கடமை ! 'போணி பண்ணியாச்சுலே' என்று நான்பாட்டுக்கு நகர்ந்திட்டால் அது விவேகமே ஆகாதல்லவா ?

      Delete
  75. பிடியுங்கள் ஒரு ஆயிரம் மலர்கள் கொண்ட பூங்கொத்தை....💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
    இன்றைய சூழலில் ஆகச்சிறந்த அட்டவணை சார்...

    நிறைய மெனக்கெட்டு உள்ளீர்கள் என்பது புரிகிறது....

    வருடந்தோறும் விழும் ஒவ்வொரு கமெண்ட்டின் முக்கியத்துவம் இப்போது தெரிய வருகிறது..

    உள்ளே:வெளியே ஆட்டத்தின் போக்கு --வாசிப்பு, கமெண்ட், விமர்சனம், விற்பனை.... என 101% ரியாலிட்டியை அளவுகோல் ஆக கொண்டுள்ளதை அட்டவணை பிரதிபலிக்கிறது சார்.

    நிறை குறைகள் இருப்பினும் காமிக்ஸ் அணியின் கேப்டன் Vijayan அவர்களின் முடிவை ஒரு பிளேயராக விருப்பு வெறுப்பின்று முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன் சார்...

    வருங்காலம் வசப்படட்டும்....


    ReplyDelete
    Replies
    1. நிறை குறை, பிடிச்சது,சர்ப்ரைஸ், ஏமாற்றம்...எல்லாம் விலாவரியாக பகலில்....

      Now going to Stade de France to watch Rugby world cup final ---New Zealand vs south Africa....

      The all Black's making some Ha ka..before every match...

      Some selection induce me to make that Ha ka....Bouncer and Deadwood and thorgal and thathas in Universe Santha...

      Thanks a ton sir🙏🙏🙏

      Delete
    2. //ரியாலிட்டியை அளவுகோல் ஆக கொண்டுள்ளதை அட்டவணை பிரதிபலிக்கிறது //

      "Ear to the ground" என்று சொல்வார்கள் அல்லவா சார் - எனது முதல் பொறுப்பே அது தான் ! நிஜமான கள நிலவரம் என்ன ? ஒரு சோப்புக் குமிழிக்குள் போய் குந்திக்கொண்டு, மாதம் மும்மாரி பொழிகிறதென்று நானாக எண்ணிக் கிடந்தால் அந்தக் குமிழ் வெடிக்க ரொம்ப நேரம் ஆகாதில்லையா ?

      அதனால் தான் இந்த அட்டவணை விராட் கோலியின் பாணியில் ஒரு ரன்னும், ரெண்டு ரன்னுமாய் எடுக்க முனைகிறது ! நிலவரம் ஐந்தாண்டுகளுக்கு முன்போல இருந்திருந்தால் ரோஹித் ஷர்மா பாணியில் வாண வேடிக்கை காட்டியிருக்கலாம் !

      Delete
  76. உடம்ப மனச் பாத்துக்குங்க..
    பாக்கெட் சைஸ் செம் சூப்பர்...ஆனா நாலுல என்பது அநியாயம்....எத விட எத எடுக்க....
    ஸ்பைடரின் அதகளம் சூப்பர் சார்...டின் டின் மேக்கிங்கிற்கும் ...நம்ம கிங்கினுக்கும் மாறுபாடிராது

    கிளாசிக் ஹீரோக்களின் க்ளாசிக் கதைகளுக்கு ஆவல்

    ReplyDelete
  77. நண்பர்கள் சிலாகித்த....மேரி கேரிசன் இன்னும் படிக்கல...இந்த வாரம் அது படிச்சிட்டு வாரேன்....ஆனா நம்ம ஆல்ஃபா நிச்சயம் வேணும்...

    பதிமூன்று ஸ்பின் ஆஃப் மறந்துட்டீங்களா

    ReplyDelete
    Replies
    1. ஸ்பின் ஆப் இல்லை. XIII கதைத் தொடர்ச்சி வருகின்றதே.

      Delete
  78. இந்த வருடம் என்னைக் கவர்ந்த தலைப்புகள் :

    தவணையில் துரோகம்
    மங்கலமாய் மரணம்
    தென்றல் வந்து என்னை கொல்லும்
    பகைவருக்கு பஞ்சமேது
    இது பிழையுதிர் காலம்

    ReplyDelete
  79. 2023 அட்டவணை தந்த சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் ஏனோ 2024 தரவில்லை என்பது என் கருத்து.

    ReplyDelete
  80. துணைக்கு வந்த மாயாவி யா...நவீன வெட்டியானா இரண்டும் ஒன்று எண்பது அநியாயத்தின் உச்சம்...இரண்டுமே வேணும்...அதனால் அதுக்கு ஓட்டு கிடையாது

    ReplyDelete
  81. அட்டவணைப் போட்டியில் யார் ஜெயித்திருப்பார்கள் ?

    ReplyDelete
    Replies
    1. யாரும் ஜெயிக்கல என்பதே நிலவரம் நண்பா....

      இம்முறை பரிசு பெரும் அளவு அட்டவணை யாருமர போடலனு நினைக்கிறேன்...

      Delete
  82. @Editor Sir..😍😘

    வழக்கம்போல 2024 சந்தா லிஸ்ட் சூப்பர் ஹிட்..😍❤💛💙💚💜

    But..
    ஜான் மாஸ்டர் & இரட்டை வேட்டையரை இந்த voting லிஸ்ட்லேயே சேத்திருக்க கூடாது..😶

    Evergreen எம்ஜிஆர் & சிவாஜி ய..
    தல & தளபதியோட கம்பேர் பண்ணின மாதிரி...😀😀

    ReplyDelete
    Replies
    1. இதிலே யாரு - யாரு சார் ?

      Delete
  83. ரொம்ப நாள் படிக்காமல் வைத்திருந்து சமீபத்தில் வாசித்த புத்தகங்கள் இரண்டு.

    1.IR$
    கதை ஓகேதான். ஆனால் அந்த ஹீரோமீது பெரிதாக ஒரு அபிப்ராயம் வரவில்லை...

    2. ப்ளூகோட்ஸ்- பின்விளைவுகள் ஜாக்கிரதை!

    கதையை படிக்க படிக்க சிரிப்பும் படித்து முடித்த பின்னர் மனமும் கனத்து விட்டது. ஒரு கார்ட்டூனால் இவ்விதம் கலவையான உணர்வுகளை ஏற்படுத்த முடியுமானால் அது ப்ளூகோட்ஸ் மட்டும்தான்.

    இப்போது இவை இரண்டுமே மெயின் அட்டவணையில் இடம் பெறாமல் MYOMS ல் இடம் பெற்றிருப்பது முரண்!

    ப்ளூகோட்ஸ்! கார்ட்டூன் என்பதை தாண்டி வாசிக்க வேண்டிய தொடர்!!

    ReplyDelete
    Replies
    1. @Palladam saravanakumar ji..

      Me too.. like நீலசட்டை பார்டிஸ் ..👍

      Delete
  84. Editor Sir..😍😘

    வழக்கம்போல 2024 சந்தா லிஸ்ட் சூப்பர் ஹிட்..😍❤💛💙💚💜

    But..
    ஜான் மாஸ்டர் & இரட்டை வேட்டையரை இந்த voting லிஸ்ட்லேயே சேத்திருக்க கூடாது..😶

    Evergreen எம்ஜிஆர் & சிவாஜி ய..
    தல & தளபதியோட கம்பேர் பண்ணின மாதிரி..😃😀

    நல்லாயிட்டில்லா..😃

    மனசிலாயோ சாரே..😍😘

    ReplyDelete
  85. எங்களுக்காக காமிக்ஸ்க்காக நிறையச் செய்துவிட்டீர்கள். உடல் நலனையும் கவனத்தில் கொள்ளுங்கள் சார்.உங்கள் மனமும் உடல் நலமும் நலமாய் இருக்கட்டும்.இறையருள் ஆசிகள் என்றென்றும் உண்டு உங்களுக்கு.

    ReplyDelete
  86. ஆசிரியர் சார்@

    தங்கள் உடல் நலனில் அக்கறையும் கவனமும் கொள்ளுங்கள் சார்.....
    பழைய ஆட்டமெல்லாம் பார்க்க பார்க்க ஆசையாத்தான் உள்ளது..

    ஆனா தாங்கள் 60ஐ நெருங்க,்நாங்க 50ஐ நெருங்க...நிதானம் மிக அவசியம் னு பல சூழல் உணர வைக்கிறது...,

    சோ ராக்கூத்துக்களை குறைத்து கொண்டு உடல் நலம் பேணுங்கள்....🙏🙏🙏🙏🙏

    4நாட்கள் புத்தகங்கள் வெளிவர தாமதமானாலும் ஒன்றும் ஆகிவிடாது... நாங்களும் நிதான வாசிப்புக்கு வந்திட்டோம்..தாங்களும்......!!!!

    ReplyDelete
    Replies
    1. இந்த வாரத்தின் முக்கால் பொழுது ஹாஸ்பிடலிலேயே தான் செலவழித்த கதையாகியுள்ளது சார் ! இந்த அட்டவணையில் வேலைப் பளுவினையும் மனதில் கொண்டு தான் திட்டமிட்டுள்ளேன் !

      Delete
    2. உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள் ஆசிரியரே 100 சதவிகிதம் மனதுக்கு நிறைவான அட்டவணையை தந்துள்ளீர்கள் இந்த நிறைவோடு நன்றாக ஓய்வெடுத்து மீண்டும் பழைய மன பலம் உடல் பலத்தோடு களம் காணுங்கள்

      Delete
  87. 2022 மற்றும் 2023 அட்டவணைகள் கொணர்ந்த சந்தோஷத்தை சத்தியமாகத் தரவில்லை என்பது என் தாழ்மையான கருத்து. மன்னிக்கவும் சார்.

    ReplyDelete
    Replies
    1. இதில் மன்னிக்க என்னவுள்ளதென்று புரியலை நண்பரே ! பிடித்தது பிடிக்கப் போகிறது ; பிடிக்காதது பிடிக்கப் போவதில்லை ! அதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எவ்விதச் சங்கடங்களும் கிடையாது !

      Delete
  88. 2024ல் டைகர் இல்லையா சார்?

    ReplyDelete
  89. 1. ஆல்பா.
    2.ப்ளுகோட் பட்டாளம்.
    3.சிஸ்கோ.
    4.ஜான்மாஸ்டர்.

    என் வாக்கு.

    ReplyDelete
  90. ஈரோடு ஸ்பெஷல் இதழ்கள் உண்டா சார்?

    ReplyDelete
  91. தங்க தலைவனுக்கு நாலு சிலாட் ஒதுக்கினதுக்கு உறுப்பினர்கள் சார்பாக நன்றி சார்

    ReplyDelete
  92. நான் எதிர்பார்க்காத இருவர் பிரின்ஸ் மற்றும் ப்ரூனோ. நன்றிகள் சார்.

    ReplyDelete
  93. //இந்தப் பதிவை நான் எழுதுவது கூட செம வைரஸ் காய்ச்சலின் மத்தியில் 3 பாட்டில் ட்ரிப்ஸ் போட்டுவிட்டுத் திரும்பிய கூத்தின் நடுவாக்கில் தான் ! ஆனால் இந்த சர்க்கஸ் வேலைகளெல்லாம் காலத்துக்கும் இப்படியே சாத்தியமாகாது என்ற யதார்த்தம் புரிகிறது!//

    உடல்நலத்தில் கவனம் சார்! சுவரிருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்!!

    தற்போதைய சூழலில் ஓய்வு கண்டிப்பாகத் தேவை.

    ReplyDelete