நண்பர்களே,
வணக்கம். சனியன்று 'தம்' கட்டி அட்டவணைப் பதிவினை போட்ட கையோடு ஞாயிறன்று கிரிக்கெட் மேட்சையும் பார்த்தவன் தான் - நேற்று வரை தலையைத் தூக்கக் கூட திராணியில்லை வைரஸ் ஜுரத்தின் நீட்சியாய் ! வறட்டு இருமலும் நாள் முழுக்க உசிரை வாங்கிட, ஒற்றை வேலையும் பார்த்த பாடில்லை ! என்ன ஒரே அனுகூலம் - நாலு மாசமாய் தொப்பையை சித்தே குறைக்கச் செஞ்சு பார்த்த முயற்சிகளெல்லாம் பப்படமாகியிருக்க, இந்தப் பத்து நாட்களில் ரெண்டரை கிலோஸ் போன இடமே தெரியலை !! அந்த மட்டுக்கு சந்தோஷம் என்றபடிக்கே மெதுமெதுவாய் பணிகளுக்குத் திரும்ப ஆரம்பிச்சாச்சூ !
தீபாவளி இதழ்கள் பைண்டிங்கில் இருக்க, தொடரவுள்ள திங்களுக்கு despatch இருந்திடும் ! Hardcover டைகர் இதழில் ஈரப்பதம் இருக்கலாகாது என்பது மட்டுமே அந்நேரத்து கவனத்தினைக் கோரிடும் ! Anyways இளம் புலியாரின் புக் கலரில் அட்டகாசமாய் வந்துள்ளது ; தீபாவளி வேளையினில், பட்சண துவம்சங்களின் நடுவாக்கில் டைகர் செம கம்பெனியாக இருப்பாரென்று எதிர்பார்த்திடலாம் ! And இளம் தல சாத்திடும் சிக்ஸர் ஸ்பெஷல் இன்னொரு பக்கம் தெறிக்க விடுகிறது ! இளம் டெக்ஸ் தொடரினில் இத்தாலியில் அவர்களது தனித்தடமானது பிய்த்துப் பிடுங்கி கொண்டு # 54-ல் தற்சமயம் நிற்கின்றது ! (என்ன - எல்லா இதழ்களும் 62 பக்கங்கள் மட்டுமே கொண்டவை என்பதால் நெடும் கதைகள் ரெண்டோ, மூணோ, நாலோ - அதிக இதழ்களிலேயே நிறைவுறுகின்றன ! அப்படிப் பார்க்கும் போது இதழ் # 54 என்றாலும், கதைகள் உத்தேசமாய் 25-க்குள் தானிருக்கும்). இந்த மௌரோ போசெல்லி brain child-ன் ஹைலைட்டே நாம் தற்போது வாசித்திடவுள்ள 6 பாக சிக்ஸர் ஸ்பெஷல் கதைச் சுற்று தான் ! போன மாதம் டெக்ஸும், கிட் வில்லரும் பேடகோனியா சென்று அதகளம் செய்ததை ரசித்தோமெனில், இம்முறை ரொம்பவே வித்தியாசமான பிளாரிடா கானகப் பகுதியினில் இளம் டெக்ஸ் தெறிக்க விடுகிறார் ! 384 பக்கங்களில் மூச்சிரைக்கச் செய்யும் ஒரு ஓட்டம் ; ஒரு போராட்டம் ; ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் என்று அரங்கேறுகிறது ! ஏற்கனவே SUPREMO ஸ்பெஷல் வாசிப்பு தேங்கியிருப்பின், அத்தோடு இதனையும் கோர்த்திடாது, இதை இந்தப் பண்டிகையின் வேகத்தில் போட்டுத் தாக்கிடலாமே guys ? இதோ - அட்டைப்பட முதல் பார்வை & உட்பக்க previews :
Moving on, அட்டவணை 2024 !! நண்பர்களில் ஒரு அணியினருக்கு இத்தனை காலமாய் பரிச்சயப்பட்டிருந்த "அந்த ஸ்பெஷல்"....."இந்த ஸ்பெஷல்"" என்ற ரகத்திலான வாணவேடிக்கைகள் இம்முறை கலந்து கட்டி அடிக்காதது குறித்து ஒரு letdown இருப்பதை புரிய முடிகிறது ! Moreso காத்திருப்பது லயனின் 40-வது ஆண்டு எனும் போது எதிர்பார்ப்புகள் ஒரு மிடறு தூக்கலாகவே இருந்திருக்கும் என்பதும் obvious ! ஆனால் உங்களின் இந்த reactions குறித்து எனக்கு கிஞ்சித்தும் வியப்பில்லை - becos இது நான் ஸ்பஷ்டமாய் எதிர்பார்த்ததே !!
உங்களால் எவ்வளவு சாப்பிட முடியுமென்ற தயக்கங்களெல்லாம் இல்லாது, கடந்த 12 ஆண்டுகளாய், நமது ஒவ்வொரு அட்டவணைத் திட்டமிடல்களிலும், மெனுவின் முக்கால்வாசி ஐட்டங்களை மேஜையில் இறக்கி விட்டுக் கொண்டிருந்தோம் ! So ரெண்டு இட்லியும், ஒரு வடையும் சாப்பிட எண்ணி வந்திருந்த நண்பர்களுக்குக் கூட - விருந்தின் பிரம்மாண்டம் "ஏஏஏஏயப்பா!!" என்ற மலைப்பைத் தரத் தவறியிருக்கவில்லை ! ஆக பந்தியில் அமரும் போதே பசியாறும் ஆவலைக் கூட பின்தள்ளிவிட்டு "என்னென்ன காத்திருக்கிறதோ ?" என்று கண்டு ரசிக்கும் அந்த ஆர்வமுமே ஒரு முக்கிய factor ஆகிப் போய்விட்டிருந்ததை உணர்ந்திடுவதில் சிரமங்களே இருக்கவில்லை ! ஆனால் கல்யாண வீட்டுப் பந்தியில் ரொமாலி ரொட்டி ; ஸ்ப்ரிங் ரோல் ; டக்கிலோ ; கபாப் என்று நாங்கள் ரக ரகமாய்க் கூத்தடித்துக் கொண்டிருந்தாலும், அவற்றை வாங்கி ஒரு ஓரமாய் கிடத்தி விட்டு, "சாதம் எங்கேடா தம்பி ? அப்டியே அந்த சாம்பாரை கிண்டி ஊத்து ! கோசும், கிழங்கும் கொண்டு வா !!" என்று காலமாய் விருந்துணவுகளில் நாம் பழகிய ஐட்டங்களை மட்டும் உங்களில் பலரும் போட்டுத் தாக்கிடுவது, சில காலங்களாய் இருந்து வரும் நடைமுறையுமே ! பந்தியில் அமர்ந்திருக்கும் நீங்கள் அதனை முழுசாய் கவனிக்க வாய்ப்பில்லை தான் ; ஆனால் பரிமாறும் போதும், இலையெடுக்கும் தருணத்திலும், கீழே போகும் பதார்த்தங்களைப் பார்ப்பதென்பது செம கஷ்டமான தருணம் ! காசும்...உழைப்பும்....உணவும் யாருக்கேனும் பயன்பட்டால் அற்புதம் ; விடிய விடிய கூட வெறும் கும்மட்டி அடுப்பில் மேல் நோவ சமைத்து விடலாம் தான் ! ஆனால் ஒரு ஆடம்பரத்துக்கோசரம் மட்டுமே மேஜையினை அலங்கரித்து விட்டு, பசியாற்ற உதவிடா பண்டங்களால் பலனேதும் இருந்திடாதே ?!
அந்தப் புரிதலின் பலனே இந்தாண்டின் திட்டமிடல் !!
"சார்....இது சவுத் இந்தியன் பாரம்பரியப் பந்தி ; இங்கே fancy ஐட்டங்கள்லாம் கிடையாது ! ஆனா நீங்க இஷ்டப்பட்டு சாப்பிடற சமாச்சாரங்களுக்கு குறைச்சலே இருக்காது ! திருப்தியா சாப்பிடுங்க !! And சாப்பிட்டு முடிச்சா பிற்பாடு - அதோ அந்தப்பக்கமா ஸ்வீட்சோ ; பாதாம் பாலோ ; பீடாவோ உங்களுக்கு தேவைக்கு ஏற்ப இருக்கும் ! வேணும்னா ருசிச்சிக்கிலாம் !" என்று நிதானமாய் பந்திக்கொரு வரைமுறை தந்துள்ளோம் இம்முறை ! "ஆத்தீ...போச்சு !" என்று குரல் தரும் நண்பர்கள் கொஞ்சமே கொஞ்சமாய் இதனை உள்வாங்கிக் கொள்ள முனைந்தால் புரியும் - இது உங்கள் பணம், உங்கள் வாசிப்புகளாகவும் உருமாறிட வேண்டுமே என்ற ஆதங்கத்தின் பலன் என்பது ! "நா வாங்கி ஊட்டுக்குள்ளே அடுக்கிட்டு போறேன் ; என்னிக்கோ படிச்சிட்டு போறேன் ; இல்லே அப்டியே கிடந்துட்டு போகுது ! உனக்கென்னப்பா ?" என்ற சில உஷ்ணக் குரல்கள் ஒலிப்பது கேட்கிறது தான் ! ஆனால் இடி இடிக்கும் ஒரு மழை நாளில், மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டே , "ச்ச்சே...ச்ச்சே...இடி இங்கெல்லாம் விழாதுப்பா !!" என்று 'தகிரியம்' காட்ட முனைவது எவ்வித விவேகமோ - அதே விவேகமே - "யாரு படிச்சா என்ன..? படிக்காட்டி நமக்கு என்னா ? அதான் காசு தர்றாங்கள்லே ? கேட்டதை போட்டுப்புட்டு போய்க்கிட்டே இருப்போம்!" என்று இந்தச் சூழ்நிலையினைத் தொடர நான் அனுமதிப்பதுமே !!
"இந்த அட்டவணை எனக்கு ஏமாற்றமே" என்று பொங்கிடும் நண்பர்களும் சரி, ஏற்றுக் கொண்ட நண்பர்களும் சரி, நாங்களும் சரி, தொடர்வன - மறுக்க இயலா நிஜங்கள் :
- ஆண்டுக்கு ஆண்டு இந்தச் சிறு காமிக்ஸ் வாசிப்பு வட்டம் சுருங்கிச் செல்கிறது ! ஒவ்வொரு தமிழ் காமிக்ஸ் சார்ந்த FB க்ரூப்பையும் எடுத்துக் கொள்ளுங்களேன் : பத்தாயிரத்துக்கும் ஜாஸ்தி அங்கத்தினர் இருப்பர் ! ஆனால் அவர்களில் வெறும் 10% கூட இன்றைய காமிக்ஸ் இதழ்களைப் பின்தொடர்வோராகவும், ரெகுலர் வாசகர்களாகவும் இருந்தால் ரொம்பவே வியப்பேன் !
- காமிக்ஸ் தான் என்றில்லை ; பொதுவான வாசிப்புகள் சகலமுமே தர்ம அடி வாங்கிடும் நாட்களிவை ! சமீபத்தைய புத்தக விழாவின் பொதுவான விற்பனை நிலவரம் குறித்து "ஹிந்து" நாளிதழில் 2 வாரங்களுக்கு முன்னே வந்திருந்த கட்டுரையைப் படித்தீர்களா - தெரியலை ; but worth a read for sure !! "ஜனம் வர்றாங்க....பாக்குறாங்க...போய்க்கிட்டே இருக்காங்க" என்பதே பொதுவான பதிப்பக ஆதங்கக் குரல்கள் !
- ஆண்டுக்கு ஆண்டு நமது ஓட்டங்கள் கூடிக் கொண்டே செல்கின்றன ! கொரோனா நாட்களில் ஆதாரத்துக்கே ஆட்டம் என்ற நிலையில் இருந்த சமயத்தில் தேவைப்பட்ட ஓட்டம் ஒருவிதமெனில் இந்த Post Covid யுகத்தின் செலவுகளுக்கு ஈடு தர ஓட வேண்டியிருப்பது இன்னொரு மாரத்தான் !
- இன்று நம்மைச் சுற்றிலும் முன்னெப்போதையும் விட உச்சத்தில் உள்ளன - பொழுதுபோக்குக்கான சாளரங்கள் ! மொத்தமாய் ஆண்டொன்றுக்கு ஒரு ரெண்டாயிரம் செலவிட்டாலே - தமிழ், இங்கிலீஷ் ; ஹிந்தி ; etc etc விலிருந்து போஜ்புரி வரைக்குமான திரைக்காவியங்களை (!!) செல்லபோன்களில் நினைத்த நேரத்துக்கெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் ! "அட, பஸ்ஸில் ஏறினோம் ; ரயிலில் ஏறினோம் - ஒரு புக் படிப்போம் !" என்ற சிந்தனை இன்று முதல் priority ஆக இருப்பதில்லை ! "ஏய்....ப்ளூசொக்கா தாறன் அந்தப் படத்தை தொங்க விட்ருக்காராம் ; ஹெட்போனை போட்டுக்கிட்டு அதை ரசிக்கலாம் ! அட...கோபி-சுதாகர் பரிதாபங்கள் புதுசு வந்திருக்கும்...அதை பாப்போம் !! புதுசா ரீல்ஸ் வந்திருக்குமோ ?" என்றெல்லாம் தானே நாம் மாற்றம் கண்டுள்ளோம் ? இது தகவல் தொழில்நுட்ப யுக முன்னேற்றத்தின் இயல்பான நீட்சி ! Agreed ?
- காலமாய் ஆராதித்து வரும் இந்த பொம்ம புக்குகளை மறந்துப்புடப்படாதே என்ற அன்பு கலந்த வைராக்கியத்தில் இந்தப் பயணத்தினை 'தம்' கட்டிக்கொண்டு தொடரும் நண்பர்கள் கணிசம். அவர்களின் அந்த அன்பிற்கு நாம் செய்திடக்கூடிய கைம்மாறு - இயன்றமட்டுக்கு அந்த வாசிப்பினை அவர்கள் விரும்பும் விதமாய் ; அவர்களது நேரக்கட்டுப்பாடுகளுக்குள் பொருந்தும் விதமாய் அமைப்பதாக மட்டும் தானே இருக்க முடியும் ?
And that's exactly what we are trying to do !
குறைவான நேரமா ? பரவால்லீங்க,,,அலுப்புத்தட்டாம வாசிக்க breezy reads தர முயல்கிறோம் !
"எனக்கு நேரத்துக்கு பஞ்சமில்லேப்பா !" என்கிறீர்களா ?!! சூப்பருங்க...உங்களுக்கு கூடுதலாய் புக்ஸ் வழங்கவும் வழி பண்ணிடலாம் - MYOMS மூலமா !
இதுவே காத்திருக்கும் ஆண்டுக்கு மாத்திரமல்ல ; இனி வரவுள்ள நாட்களுக்குமான templates !! And இதனை உணர்ந்திட எனக்கு உதவிய சின்னதொரு புள்ளிவிபரம் இதோ :
2023 - அது தானுங்கோ நடப்பாண்டு ! சந்தாவில் ; Supreme '60s தனித்தடத்தில் ; ஈரோட்டு ஸ்பெஷலில் ; ஆன்லைன் புத்தக மேளாவினில் என்று மொத்தம் 14 ஹார்ட்கவர் இதழ்கள் இந்த ஒற்றை ஆண்டினில் மட்டுமே !! இனியொரு தபா நாமளே கற்பனை கூட செய்து பார்த்திட இயலா ஒரு எண்ணிக்கை இது ! அட்டகாசமான வாணவேடிக்கை பார்த்த சந்தோசம் நமக்கெல்லாம் இருந்தது தான் ; ஆனால் இந்தப் பதினான்கில் ஸ்டாக் காலியான இரண்டே இதழ்கள் எவையென்று யூகிப்போருக்கு கம்பெனி சார்பில் நயமான கோவில்பட்டி கடலைமிட்டாய் பாக்கெட் ஒன்றினை வழங்கிடலாம் !
காலியாகியுள்ள இரண்டே இதழ்கள் : "கார்சனின் கடந்த காலம்" & "BIG BOYS ஸ்பெஷல் !!"
இந்த ஒற்றை தகவலிலேயே நமது சமீப வாசிப்புகள் pattern அப்பட்டமாய் புலனாகிறது folks - என்மட்டிலாவது !
- இரண்டுமே க்ளாஸிக் மறுபதிப்புகள் !
- இரண்டுமே புதுப்பிக்கப்பட்ட பிரம்மாண்ட formats-களில் வெளியான visual delights !
- இரண்டுமே முற்றிலும் எதிர்பாரா ஒரு நொடியில் வெளியானவை !
- இரண்டுமே உங்களின் நோஸ்டால்ஜியா factors கலந்தவை !
- இரண்டுமே உங்களை நேர நோவுக்கு ஆட்படுத்திடாது "படிக்கணும்னு தோணுறச்சே படிச்சுக்கலாம் !" என்ற ரகத்தில் விழுகின்றவை !
- இரண்டுமே in their own ways - செம breezy reads !
உசிரைக் கொடுத்து உழைத்த பாக்கி 12 ஹார்ட்கவர் இதழ்களும் கிட்டங்கியில், நார்மல் புக்ஸ் பிடிக்கும் இடத்தைப் போல நான்கு மடங்கு இடத்தைப் பிடித்தபடியே துயின்று வருகின்றன ! இது தான் வார்னிஷ் பூசா நிஜம் !
இந்தப் பின்னணியினில் - "அதெல்லாம் எனக்கு தெரியாது !! ஆடலும், பாடலும் தொடர்ந்துக்கிட்டே இருக்கணும் ! மேடையிலே ஜிகு-ஜிகுன்னு இருந்தா தானே திருவிழாவுக்கு வர்றதுக்கே 'ஜிலோ'ன்னு இருக்கும் !" என்ற எதிர்பார்ப்பினை நான் எவ்விதம் கையாள்வதோ - சொல்லுங்களேன் guys ?
20 நாயக-நாயகியர் ரெகுலர் சந்தா தடத்தினில் இடம் பிடித்துள்ளோர் - V காமிக்சின் July டு December லிஸ்டை சேர்க்காமலே !!
குறைந்த பட்சம் இன்னொரு 4 நாயகர் - Make My Own Mini Santha உபயத்தினில் ! ஆக - 12 மாத காலகட்டத்தினில் 24 நாயகர்கள் இடம்பிடிக்கின்றனர் !!
கிஞ்சித்தும் செண்டிமெண்ட் பார்க்காது - உங்களின் பெரும்பான்மையின் ஆதர்ஷ ஆக்கங்களுக்கு மட்டுமே இடமளித்துள்ளோம் - வேறு எவ்வித considerations-ம் இல்லாது ! இதோ - நெவாடாவின் முதல் 3 ஆல்பங்களுக்கு உரிமை வாங்கியிருந்தோம் ; முதல் அத்தியாயமே உங்களுக்கு சுகப்படவில்லை என்ற நொடியில், மீத இரண்டையும் தலையில் திணிக்க முனையவில்லை !
ஸ்பைடர் in கலர் - எனக்கு வேண்டவே வேண்டாம் என்போரா ? No problems உங்க சிரத்தில் கூர்மண்டையரை சவாரி செய்திட அனுமதிக்க மாட்டோம் !
மாதம்தோறும் கனமான பொட்டிகளை உடைத்து அழகாய் ரசித்து விட்டு, ஆங்காங்கே ரெண்டு கமெண்ட்டைப் போட்டு விட்டு, புக்ஸை ஒரு ஓரத்தில் கிடத்தி விட்டு அடுத்த வேலைக்குள் ஈடுபட்டு வரும் நம்மில் பலரது சமீபத்தைய இந்தப் பழக்கத்தை கொஞ்சமாய் மாற்றியமைக்க நாம் செய்திடக்கூடிய ஒரே விஷயம் - வாசிப்பினை நறுக்கென்றும் ; விறுவிறுப்பாக மாற்றிடுவதும் மட்டுமே ! மாறாக என்றைக்கோ காலாவதியாகிப் போன குண்டு புக் template-ஐ இன்னமும் விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டு, உங்களுக்கு எப்படியாச்சும் நேரம் வாய்ச்சுப்புடும் ; புக்ஸை முன்போலவே படித்து ரசித்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்தியதெல்லாம் போதுமென்று எண்ணினேன் !
அவ்வளவே !
Of course - மாதத்தின் சகலத்தையும் தவறாது கரைத்துக் குடித்து விடும் நண்பர்களும் இல்லாதில்லை தான் ; மறுக்கவே மாட்டேன் ! அவர்கட்கு நான் குறிப்பிடும் சமாச்சாரங்கள் பொருந்திடவே செய்யாது தான் ! But அவர்கள் ஒரு சிறு அணி என்பது யதார்த்தம் என்பதால் தான், தம் கட்டி நமது பயணப்பாதையினை கொஞ்சம் மாற்றியமைக்க விழைந்து வருகிறேன் !
ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் - why fix something that ain't broken ? என்று ! உடைஞ்சு போயிருக்கா ஒண்ணை சரி பண்ண முயற்சிப்பானேன் ? என்பது நல்ல கேள்வியே ! But உடைந்து போகும் சாத்தியங்கள் கண்முன்னே தென்படும் போது பழமொழி பேசியபடியே குந்தியிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை folks !
And இங்கு இன்னொரு சத்தமில்லா சமாச்சாரம் பற்றியும் நாம் பேசியாக வேண்டும் ! அது தான் இன்றைக்கு புக்ஸ் அனுப்பிட ஆகிடும் செலவினங்கள் !!
- மாதா மாதத்து அட்டை டப்பிக்கள்
- பாலிதீன் கவர்கள்
- செல்லோ டேப்
- கூரியர் கட்டணம்
'தேமே' என்று காட்சி தரும் இந்த நான்கு ஐட்டங்களுக்குமாய் ஓராண்டினில் ஆகும் செலவென்னவென்று அகஸ்மாத்தாய்ப் பார்த்தோம் ! நம்பினால் நம்புங்கள் guys - GST வரி சேர்த்து மொத்தம் ஆகியுள்ள தொகை ஏழேகால் லட்சம் ரூபாய்கள் !! நம்மவாவது முடிகிறதா ?? அரூபமாய் இத்தனை அசாத்திய தொகை ஆண்டொன்றுக்கு செலவாகிடுவது ஒரு பக்கம் ; ஆனால் அத்தனை காசை செலவிடுவதற்காகவாவது அந்த டப்பிக்களில் பயணிக்கும் புக்ஸ் உங்கள் வாசிப்புக்கு active ஆக பயன்பட்டிட வேண்டாமா folks ?
Moving further ahead - அட்டவணையோடு கேட்டிருந்த அந்த 2 ஓட்டெடுப்பு கேள்விகளுக்கான உங்களின் பதில்களை ரொம்பவே சுவாரஸ்யமாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ! இங்குமே ஸ்பஷ்டமாய் உங்களின் எண்ணவோட்டங்களைப் பார்க்க முடிகிறது !
கி.நா.தேர்வில் உங்கள் choice எது ? என்ற கேள்விக்கு கி.நா.விரும்பாதோர் ஓட்டளிக்க வேணாமே ப்ளீஸ் என்று கோரியிருந்தேன் ! அதற்கேற்ப இது வரைக்கும் வோட்டு போட்டுள்ள மொத்த நண்பர்களில் கிட்டத்தட்ட 25% - "நேக்கு நோ கி.நா.ஸ்" என்று சொல்லாமல் சொல்லியுள்ளனர் ! So கி.நா.க்களை வம்படியாக உங்கள் தலைகளில் கட்டக்கூடாதென்ற எங்களின் தீர்மானம் உருப்படியானதாய் தென்படுகிறது !
And Make My Own Mini சந்தா திட்டமிடலில் 8 இதழ்களுள் நான்கைத் தேர்வு செய்யும் படலம் ரொம்பவே சுவாரஸ்யமான பதில்களைக் கண்ணில் காட்டி வருகின்றது ! அங்கே முன்னணியில் இருக்கும் இதழ்கள் பற்றிப் பேச வாய் துறுதுறுக்கிறது தான் - but அது உங்களின் தேர்வுகளை எவ்விதத்திலும் influence செய்திடக்கூடாது என்பதால் வாயில் பசையைப் போட்டுக் கொண்டு கிளம்புகிறேன் !
இதோ - crisp ஆக சந்தா விபரங்கள் - ஏதாச்சும் புரிதல்களில் சிக்கல் கொண்டிருக்கக்கூடிய நண்பர்களுக்கென :
THE UNIVERSAL சந்தா -
மொத்தம் 30 இதழ்கள் - மூன்று கி.நா.க்கள் சேர்த்து !
The N.G.N. சந்தா -
மொத்தம் 27 இதழ்கள் - மூன்று கிராபிக் நாவல்கள் மட்டும் இல்லாது !
V காமிக்ஸ் சந்தா -
6 இதழ்கள் - ஜனவரி to ஜூன் 2024 ! ஜூலை to டிசம்பர் - பின்னர் அறிவிக்கப்படும் !
M.Y.O.M.S - சந்தா :
"எனக்கு ரெகுலர் சந்தாவின் 30 புக்ஸ் + V காமிக்சின் 6 புக்ஸ் போதாது ; மேற்கொண்டும் வேணும் !" என்று எண்ணுவோரா நீங்கள் ? All you have to do is - நாம் தந்துள்ள 8 இதழ்களுள் உங்களுக்கு பிடித்த 4 எவையென்று வோட்டு போட்டுச் சொல்லி விட்டு ஆராமாய் அமர்ந்திடுவதே ! டிசம்பரின் இறுதியில் கூடுதல் ஓட்டுக்கள் பெற்றிருக்கும் 4 ஆல்பங்கள் எவை என்று பார்த்த கையோடு அவற்றை மட்டும் பிரேத்யேகமாய் ; உங்களுக்கே உங்களுக்காக ஒரு முன்பதிவாய் அறிவிப்போம். And அதனில் ஒரு டீசென்ட் முன்பதிவு கிட்டியான பின்னே, இந்த நான்கு இதழ்களும் உங்களுக்கு மட்டும் அனுப்பிடப்படும் ! இவை முன்பதிவு செய்யாத பிற தளங்களில் கிடைத்திடாது !
Make My Own Mini சந்தா - நீங்கள் தேர்வு செய்திடும் நான்கு இதழ்களுடன் - ஏப்ரல் 2024 முதலாய் !
புத்தாண்டும் புலர்ந்து, அதன் நகர்வோடு மாதா மாதம் நமது இதழ்களும் இணைந்து கொள்ளும் போது, அவை தரக்காத்துள்ள breezy வாசிப்புகள் எனது இன்றைய திட்டமிடலை நியாயப்படுத்திக் காட்டிடும் என்ற நம்பிக்கையில் கிளம்புகிறேன் folks ! Bye all...see you around ! இந்தியாவின் அதிரடிகளை இன்னமும் தொடரவுள்ள நாட்களில் ரசிப்போம் !
1st ?
ReplyDeleteYes
Deleteயெஸ் மாப்பு...கன்கிராட்ஸ்💐
Delete😊😊😊
Deleteஅட ஆமாம் :-)
ReplyDeleteGood evening
ReplyDeleteரொம்ப நாளைக்கு அப்புறம் நான் first .ராஜ சேகரன்
ReplyDelete5th
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteWelcome friends
ReplyDelete//. 'தேமே' என்று காட்சி தரும் இந்த நான்கு ஐட்டங்களுக்குமாய் ஓராண்டினில் ஆகும் செலவென்னவென்று அகஸ்மாத்தாய்ப் பார்த்தோம் ! நம்பினால் நம்புங்கள் guys - GST வரி சேர்த்து மொத்தம் ஆகியுள்ள தொகை ஏழேகால் லட்சம் ரூபாய்கள் !! நம்மவாவது முடிகிறதா ? //
ReplyDeleteUnbelievable sir.
எனக்கு கிறுகிறு என்று வருகிறது சார்.
Deleteபேக்கிங் பொருட்கள் + boxes இரண்டரை மடங்கு கூடியுள்ளன சார் ! And பத்து வருடங்களுக்கு முன்னே வெறும் 18 ரூபாய் இருந்த கூரியர் கட்டணங்கள் இன்று ரூ.42 பிளஸ் GST.
Deleteஇதில் கனம் கூடுதலான பெட்டிகளில், வெயிட் கூடுதலான புக்ஸ் பயணிக்கும் போது - எல்லாமே extra தெறிக்க ஆரம்பித்து விடுகின்றன !
Deleteதூக்கமே போய் விட்டது சார்...
Deleteகுமார் எனக்கும் தலை கிறு, கிறுக்கிறது.. ஆத்தி.. 🤭
Delete🥺🥺😯😯
Deleteவணக்கங்கள்
ReplyDeleteவணக்கம் நட்புகளே...
ReplyDeleteஇல்லே4th
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteபுத்தகங்கள் வாசிக்கப்படாமல் இருப்பது புத்தகங்களின் மீது காட்டப்படும் வன்முறை ..எப்பவோ ,எங்கயோ,படித்தது
ReplyDeleteநானும் படித்தேன். இதை.
Deleteரிப் கிர்பி ஸ்பெசல் இல் ஒரு கதை மட்டும் ,மொழி பெயர்ப்பு நம்ம j சார் .அந்த கதை எது வென்று அறிவிச்சாச்சுங்களாங்க சார்
ReplyDeleteSir,,Take care of your health 🙏🙏🙏
ReplyDeleteSure sir
Deleteவணக்கம் ஆசிரியர் சார் & நண்பர்களே....!!!
ReplyDeleteசிக்ஸர் ஸ்பெசல் முன்பின் அட்டைபடங்கள் 2மே ஒரிஜினல் கலக்குதுங் சார்......💕💞💓
ReplyDeleteஆமா ஆமா. டெக்ஸ், டைகர் தீபாவளிக்கு வெயிட்டிங்.
Delete/////தீபாவளி இதழ்கள் பைண்டிங்கில் இருக்க, தொடரவுள்ள திங்களுக்கு despatch இருந்திடும் ////
ReplyDeleteயாஹீ...ஈஈஈஈ....🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🎇🎆
நமக்கு தீபாவளி வாரம் ஆரம்பிக்குதேஏஏஏஏஏஏஏ....
நினைக்கும்போதே ஒரு குளிர் ஓடுது சார் எப்ப வரும் இதழ்னு...
ஊத்தித் தள்ளும் மழை தான் கொஞ்சம் கருணை காட்டணும் சார் !
Deleteஎப்படியோ தீபாவளிக்கு முன்பு புத்தகங்கள் வந்தால் சரி. எனக்கு எப்போதும் புத்தகம் கையில் கிடைக்கும் நாளே தீபாவளி. உங்கள் தயவில் மாதா மாதம் தீபாவளி தான் சார். நன்றிகள்.
Deleteசந்தா குறித்த தங்களின் விளக்கங்கள் சுட்டுவது நிதர்சனத்தை என தெளிவாக புரிகிறதுங் சார்..
ReplyDeleteஇனி வருங்காலங்களில் இது தொடரும் என்ற உண்மையும் பிடரியில் உரைக்கிறது...
கொஞ்சம் கசப்பு மருந்தாக இருந்தாலும் வேறு வழி இல்லையே!!
Time and Tide Stops for no one.
DeleteThis comment has been removed by the author.
Deleteஇதில் கசப்புகளே லேது என்பது தான் கொடுமையே சார் !
Deleteமெய்யான கசப்பு எதுவென்று சொல்லட்டுமா ? 724 பக்கங்களில் ; 4 வெவ்வெறு ஜாம்பவான்களின் படைப்புகளை, படைப்பாளிகளே முனைந்திருக்கா ஒரு விசாலத்தில் களமிறக்கி விட்டு - அதனில் பாதியைக் கூட நம்மவர்களில் பாதிப் பேர் இன்னமும் வாசித்திருக்கா யதார்த்தம் இருக்கே - அது தான் நிஜமான கவலை !
"வாண வேடிக்கை இல்லையே" என்று
ஆளாளுக்கு படும் கவலைகளைக் காட்டிலும் - வாண வேடிக்கைகள் அதகளம் செய்து வந்த நொடியிலும் குழுமியிருந்தோரில் பாதிக்கும் மேற்பட்டோர் செல்போனில் பிக் பாஸ் பார்த்துக் கொண்டிருந்தனர் என்றெண்ணி கொண்ட கவலைக்கே ஆழம் அதிகம் !
அதை உணராது, "இது கசப்பான ரியாக்ஷன்ஸ் தரக்கூடும்" என்ற பயத்தில் நான் எப்போதும் போலவே தொடர்ந்திருப்பின் - என்னை விடவும் பெரிய வாத்து வேறு யாருமே இருந்திட முடியாது சார் !
////"இது கசப்பான ரியாக்ஷன்ஸ் தரக்கூடும்" என்ற பயத்தில் நான் எப்போதும் போலவே தொடர்ந்திருப்பின் - ////
Delete--மிகவும் சங்கடமாக உள்ளதுங் சார், யதார்த்தத்தை எதிர்கொள்ள...ஆயினும் இதான் நிலவரம் எனும் போது ஏற்போம்.....
சிலருக்காக பழசையே தொடர்ந்தால் ஐமீன் சந்தா ட்ரெண்ட், தங்க முட்டை வாத்தை அறுத்த கதையாக ஆகியிருக்கும்னு தெரிகிறது..
இது காமிக்ஸ், அல்ல வாசிப்பு கொரோனா என எடுத்து கொள்வோம்.. இதற்கும் ஒரு கோவாக்ஸின் வரும்னு காத்திருப்போம் சார்....
சின்னதாய் ஒரு ஒப்பீடு :
Delete2014 LMS ரிலீஸ் - நாலைந்து கதைகளுடன் !
2015 சர்வமும் நானே 4 பாக இதழ் ரிலீஸ் !
2023 சுப்ரீமோ ஸ்பெஷல் ரிலீஸ் !
எட்டும்,ஒன்பதும் வருடங்களுக்கு முன்பான நிலவரத்தை இன்றோடு ஒப்பிடுங்களேன் - நிஜத்தின் வீரியம் புரிபடும் !
அன்றும் அதே நாயகர்கள் ....அதே வாசக வட்டம் ! இன்றும் எதுவுமே மாறவில்லை - 9 கூடுதல் அகவைகளைத் தாண்டி !
DeleteBut மனசாட்சியை தொட்டுச் சொல்வோமே - அதே வேகமும், வாசிக்க நேரமும் நம்மிடம் உள்ளதா என்று ?
இந்த ஒன்பது ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள்... நேரத்தை குதறி எடுக்கும் காரணிகள் கூடுதலாக இணைய இணைய வாசிப்பும் சுருங்க செய்கிறது சார்....
Deleteநேரடியாக தாக்கத்தை உணர இயல்கிறது.
இதை ஓரளவு ஈடுகட்ட ஆல்பம் தாங்கள் சரியான மார்கத்தில் வண்டியை திருப்பி உள்ளீர்கள் சார்.
Breezy readingஎன்ற தாரக மந்திரம், ஒவ்வொரு முகத்திலும் புன்னகை என்பதை ரீப்ளேஸ் செய்வது காலத்தின் கட்டாயம்.
ஒன்மோர் சஜஸன் சார்.. இது எப்படி சாத்தியமானு தெரியல..
LMS, NBS, the lion 250சர்வமும் நானே--லாம் வந்த போது ஒரேயொரு புக் தான் வந்தது.. மீண்டும் அதே பார்முலாவை கையாண்டு பார்க்கலாமாங் சார்...
சுப்ரீம் வந்த போது அதை மட்டுமே தந்திருந்தால் ஒளிவட்டம் அதனில் மட்டுமே இருந்திருக்க வாய்ப்பு உள்ளது தானே?? ஹீம்...
கரெக்ட் ப்ரோ!
Deleteமாதம் 1 புக் வந்த போது கிடைத்த வாசிப்பு அனுபவம், மாதம் 4 புக் வரும் போது குறைந்து வருகிறது. அதுவும் நம் கண்களுக்குத் தெரியாமலே!
நிறைய புக், நிறைய கதைகள், நிறைய வாசிப்பு என்பது நிறைவான வாசிப்பாய் மாறும் கியர் மாற்றம் இந்த மாற்றமாக இருக்குமோ!
1 புக் அனுப்பினா ரூ.46 ; 4 புக் அனுப்பினா ரூ.58 ...கூரியர் கணக்குப் போடுங்களேன் !
Deleteசரி...ரைட்டு ...கூரியரை கூட அப்புறமாய் பார்த்துக் கொள்ளலாமென்று மாசம் 1 புக் என்ற பார்முலாவுக்கு திரும்பவாச்சும் இயலுமா சார் ? இதுக்கே கும்மி எடுப்போர் அதற்கு எவ்விதம் ரியாக்ட் செய்வர் ?
///மாசம் 1 புக் என்ற பார்முலாவுக்கு திரும்பவாச்சும் இயலுமா சார் ?///
Delete95% வாய்ப்பே இல்லைங் சார்..
எனக்கும் அதில் விருப்பம் இல்லை....
சுப்ரீமோ ஸ்பெசல் போன்ற பெரிய புக்ஸ் வரும்போது மட்டுமே அப்படி செய்து பார்த்து இருக்கலாம்...ஆனா அடுத்த ஆண்டுக்குதான் இதுபோல குண்டு புக் ஏதும் ப்ளான்ல இல்லை எனும்போது இது பொருந்தாத ஒன்றாகிடுது.. லெட்ஸ் மூவ் ஆன் ஃப்ரம் திஸ் சார்.
// சுப்ரீமோ ஸ்பெசல் போன்ற பெரிய புக்ஸ் வரும்போது மட்டுமே அப்படி செய்து பார்த்து இருக்கலாம்... //
Delete+1
வந்துட்டேன்...
ReplyDeleteவருத்தப் படும் நண்பர்களுக்காக நீங்கள் கொடுத்து உள்ள விளக்கங்கள் இந்த பதிவு நெடுகவும் உள்ளது. ஆனால் எனக்கு இந்த விளக்கம் எதுவும் தேவை இல்லை சார். நான் உங்களுடன் கடைசி வரை தொடருவேன்.
ReplyDeleteஇது விளக்கமே அல்ல சார் ; ஒரு அவசியம் சார்ந்த statement !
Deleteபுரிகிறது சார்.
Delete2023-ன் ஹார்ட்கவர் இதழ்கள் சொல்லும் கதையினை புரிந்து கொள்ள சிறிதேனும் முயற்சி எடுக்காவிடின் மண்ணுக்குள் தலையைப் புதைத்த தீக்கோழி ஆகிடுவோம் சார் ! இந்தப் பதிவின் மைய நோக்கமே அந்த முக்கிய தரவினை பகிர்வதே !
Deleteஇன்னும் நிறைய சர்ப்ரைஸ் பாக்கி உள்ளதே சார். ஆன்லைன், ஈரோடு புத்தக விழாக்கள், MYMOS ஹீரோக்கள், S60 புதிய Format அறிவிப்பு, V Comics ஜூலை முதல் டிசம்பர் வரைக்குமான புத்தகங்கள். இன்னும் விருந்து முடியவில்லையே
DeleteOf course sir !
Delete///MYMOS ஹீரோக்கள், S60 புதிய Format அறிவிப்பு, V Comics ஜூலை முதல் டிசம்பர் வரைக்குமான புத்தகங்கள்.////
Deleteயெஸ்...கொண்டாட்டங்கள் காத்துள்ளது தான்...
ஆனா ஆசிரியரின் பதிவு சொல்லும் சேதி தான் சற்றே யோசிக்க செய்கிறது.
MYMOS பொறுத்து 400முன்பதிவு எனும்போது அது 100% சேப் ஸோன்ல உள்ளது....
V comics segment 2 வழக்கம் போல வந்திடும்.
ஆனா இந்த S70 and ஆன்லைன், ஈரோடு விழா இதழ்களின் தேக்கம் தான் நிஜமான கலக்கத்தை தருகிறது KS.... விற்பனை இல்லைனா அவைகள் தொடரவது மிக கடினமே....
இந்த MYMOS மாதிரி ஆன்லைன் and ஈரோடு விழா, கோடை விழாக்களுக்கும் ஏதாவது பொருத்தமான ஃபார்முலா கண்டுபிடியுங்கள் சார்..
வெறுமனே கிட்டங்கி காதலை தொடரசெய்யும் நிலை தவிர்க்கம்படணும்...
//ஆனா இந்த S70 and ஆன்லைன், ஈரோடு விழா இதழ்களின் தேக்கம் தான் நிஜமான கலக்கத்தை தருகிறது//
DeleteS70- ஐ இந்த லிஸ்டில் சேர்க்க அவசியம் இல்லை ப்ரோ. அது ஏற்கனவே, வெகுஜன ஆதரவோடு வந்து கொண்டுள்ளது...
S70 முடிந்த முதற்சுற்று நண்பரே ! அவை நான்கும் முற்றிலுமாய் காலியும் கூட !
Deleteஇரண்டாம் சீசன் சுப்ரீம் 60s ....வந்து .. அது வந்து ...என்ன சொல்ல வர்ரேன்னா ...அதாச்சும்...ஐ மீன் ....ஆங் ...
// இரண்டாம் சீசன் சுப்ரீம் 60s ....வந்து .. அது வந்து ...என்ன சொல்ல வர்ரேன்னா ...அதாச்சும்...ஐ மீன் ....ஆங் ... //
DeleteIt means here also the sales is not good sir?
//அது ஏற்கனவே, வெகுஜன ஆதரவோடு வந்து கொண்டுள்ளது...///
Deleteஹா....ஹா....காலையிலயே சிரிக்க வெச்சிட்டிங்க பூபதி ....
க்கும் உள்ளூர் செலாவணிக்கு வக்கில்லாமதான் டீ கடையில உக்காந்திருக்கோம், இதுல அந்நிய செலாவணி மோசடி பண்ணிட்டாலும்னு.....கவுன்டர் அடிப்பாரு....
உள்ளூர் (காமிக்ஸ்) ஜன ஆதரவே பல ஜானர்களுக்கு கிடைக்கல...இதுல வெகுஜன ஆதரவு கிடைச்சிட்டாலும்...🤭🤭🤭
யங் டைகர் 2014ல இருந்து இத்தனை ஆண்டு ஏன் பிரேக் ஆனது??
கி..நா..ஏன் காலியானது??..
புதிய ஹீரோஸ்னா வேப்பங்ஸ்னு ஏன் த சோ கால்டு வெகுஜனம் நினக்குது??
கார்டூன்னா சப்பு சப்புனு ஏன் பெருவாரியான ஜனம் வெளுக்கிறாங்க...???
சீ, S70க்கு நான் எதிரியும் அல்ல.... கெளபாய்களின் காப்பாளனும் அல்ல...
மொத சீசன் S70 ஏன் க்ளிக் ஆச்சு? சுஸ்கி விஸ்கி 1ஏன் அள்ளிகிட்டாங்க??
S60ஏன் தடுமாறுது??
சுஸ்கி விஸ்கி 2ஏன் ஜர்க் அடிக்கிறது????
நிதர்சனம் இதான்....,
""பீரோ ஃபில்லிங் ஆக மட்டுமே ஒரு இதழ் அல்லது ஜானர் இருக்கும் னா அதற்கு கூடிய விரைவில் இதான் நடக்கும்""
வாசிச்சி விமர்சனம் எழுதி விவாதிச்சி சிலாகிக்க ஒரு சிலர் தான் இருந்தாங்க, எனில் அந்த கதை 2வது ஆண்டில் நொண்டுவதுதானே நடக்கும்.
பீரோவில அடுக்கும் 100, 150பேரை தாண்டி போகலனா எதுவும் சோபிக்கா!!
வெகுஜன ஆதரவுலாம் இருந்தா ஆசிரியர் தலைகீழா ஜம்ப் அடிச்சி ஆண்டுக்கு 100புக்கு போடுவாரு...
நம்ம ஆளுங்க எல்லா ஜானருக்கும் ஆதரவு கொடுத்தாவே போதுமே...
நம்ம 1980s தேவ கானம், நிலா காயுது நேரம் நல்ல நேரம்ல ஒரு வரி வரும்,
"ஆக்கி வெச்ச சோத்தை காக்க வெக்கலாமா..!!"" னு
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
வாசிங்கப்பா எல்லோரும் அட்லீஸ்ட் மாசம் ஒரு புக்காவது....
அப்பே S60-ம் தடுமாறுதுன்னு சொல்றீங்களா? - இதுவரைக்கும் வந்த வேதாளரும், ரிப்கிர்பியும் நன்றாகத் தானே இருக்கு.
Deleteபூமராங் உலகத்தில் வேறு பக்கமும் யூஸ் பண்ணியிருக்காங்கனு சொன்னாவே ஆஸ்திரேலியர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்....🤣🤣🤣🤣அவர்களால் தாங்கி கொள்ளவே இயலாது.
Delete(தகவல் ஐயன் சுஜாதா அவர்கள்)
////Lion Comics3 November 2023 at 00:36:00 GMT+5:30
S70 முடிந்த முதற்சுற்று நண்பரே ! அவை நான்கும் முற்றிலுமாய் காலியும் கூட !
இரண்டாம் சீசன் சுப்ரீம் 60s ....வந்து .. அது வந்து ...என்ன சொல்ல வர்ரேன்னா ...அதாச்சும்...ஐ மீன் ....ஆங் ...////
----இது ஆசிரியர் கூறியுள்ளது....
அப்போ S 60ம் ஊத்திக்கிச்சு! தேவுடா...
Deleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteHi..
ReplyDeleteஅருமையான பதிவு சார்...
ReplyDeleteதீபாவளி ஸ்பெஷல் மலரை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.
2024 ன் தங்களது அட்டவணை மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அட்டவணை என்பதில் மிக்க மகிழ்ச்சி. . போட்டதை வாங்குபவர்கள் தான் ஒரு ரகம் என்றால், அதில் வாங்கி வைத்து விட்டு படிக்காதவர்கள் ஒரு ரகம் ஆனால் படித்தவர்கள் படிக்காதவர்கள் என இருவருமே காமிக்ஸ் காதல் உள்ளவர்கள் தான். ஒவ்வொரு ஆண்டும் புதிய புத்தகங்களை ஆவலுடன் எதிர்பார்ப்பவர்கள் தான், இதில் யாரை குறை சொல்ல?.
"நீங்கள் படிச்சாத்தான் நா போடுவேன், ஏற்கனவே போட்ட புக்ஸ் விக்கலை" என்பது எந்த விதத்தில் சரி என தெரியவில்லை. போடும் எல்லா புக்சும் விற்க்கும் என்பது எங்குமே நடவாதது,விருப்பமுள்ள காமிக்ஸ் நண்பர்கள் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். சிரமத்திலும்
முடிந்தவரை உங்களுக்கு ஆதரவு தரும் நண்பர்களே இங்கு அதிகம்.நீங்களே நிதர்சனம் என்ற பெயரில் நெகடிவ் ஆக பதிவிடுவதுதான் என்ன சொல்வதென தெரியவில்லை.
நெவாடா கதைக்கு வரவேற்பு தரவில்லை என்கிறீர்கள், ஆனால் புத்தகம் முழுவதும் டார்க் என்ற குறை ஏகதேசம் ஒலிக்கிறது, எப்படி வெளிச்சத்தில் வைத்து படித்தாலும் அந்த டார்க்கை தவிர்க்க முடியவில்லை,
இதை சரி செய்து அடுத்த பாகத்தை வெளியிட்டால் வரவேற்பு கிடைக்குமோ?.
குண்டு புக் படிக்க முடியாது என்கிறீர்கள்,
படிக்காதவர்களை பற்றி கவலைப்படும் நீங்கள், படிப்பவர்களை பற்றி ஏன் நினைக்கவில்லை.?.
சென்ற பதிவில், அட்டவணை தந்த மகிழ்ச்சியை விட, மேற்கண்ட குறைகள் மட்டுமே மனதில் ஓடுகிறது.
நீங்கள் போடுவதை படிக்க நாங்கள் ரெடி, அதுக்காக படிக்காதவர்களை பற்றி படிப்பவர்களுக்கு என்ன கவலை?.
10000 பேர் உள்ள குழுவில் 50 பேர்க்கு மேல் லைக் கமெண்ட் வராது, 200 பேர் உள்ள வாட்சப் குழுவில் 20 பேருக்கு மேல் ஆக்டிவ் இருக்காது என்பது உலகறிந்த விசியம்.
பேசதாவர்களை பற்றி, லைக் செய்யாதவர்கள் பற்றி நமக்கென்ன கவலை?.
"நா காமிக்ஸ் படிச்சேன், என்னோட திருப்திக்கு நான் பதிவிடுகிறேன்". பிடிச்சவங்க 10 பேர் விரும்பினா எனக்கு போதும்.
காமிக்ஸ் படிப்பவர்கள், ஆர்வமுள்ளவர்கள் நீங்கள் எது கொடுத்தாலும் படிக்க தயார்,
அதுக்காக படிக்காதவர்களுடன் சேர்த்து படிப்பவர்களையும் ஒப்பிடுவது அவர்களை இரிடேட் செய்வது போல் உள்ளது.
ஆயிரம் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது, அதையெல்லாம் ஏன் காமிக்ஸ் உடன் ஒப்பிட வேண்டும்?.
இதையெல்லாம் தாண்டிதான் காமிக்ஸ் வாசிப்பு உள்ளது என்பது தாங்கள் அறியாததா?.
முடிந்தவரை காமிக்ஸ் வாங்கும் நண்பர்கள் இன்றும் உண்டு.
உங்களது ஆதங்கத்திற்கு நீங்க என்ன காரணம் சொன்னாலும் உங்களுடன் பயணம் செய்ய நாங்கள் உண்டு.
நெடும் பின்னூட்டம் நன்றி சார் !
Deleteஒரு பத்தாயிரமோ, இருபதாயிரமோ விற்கும் ஊடகமெனில் - படிக்கிறவங்க படிக்காதவங்களை பாலன்ஸ் செய்து விடுவார்களென்று போய்க்கொண்டே இருக்கலாம் ! நிஜம் அதுவல்ல !
அட, சின்ன வட்டமே தான் ; பரவாயில்லை -
எல்லாவற்றையும் படிக்கும் உங்களைப் போன்றோர் மெஜாரிட்டியாக இருந்து விட்டாலும் சிக்கலில்லை - போய்க்கொண்டே இருக்கலாம் ! நிஜம் அதுவல்ல !
இங்கே வாசிக்காதவரைப் பற்றி வாசிக்கும் என்னிடம் புகார் சொல்லி எரிச்சலைக் கிளப்புவானேன் ? என்பது உங்களின் வினா ! ரொம்பவே சிம்பிள் நண்பரே - இது சன்னமானதொரு பரிசல் பயணத்துக்கு நிகரானது ! சுற்றி அமர்ந்திருப்போரின் எண்ணிக்கையும், எடையும், ஒரு அளவிற்கேனும் அனுசரித்துப் போகாவிட்டால் பரிசல் குடை சாய்ந்து விடும் என்பதே நிஜம் ! அதனை உரக்கச் சொல்வது இரிடேட் செய்யும் சமாச்சாரமாக தோன்றிடும் பட்சத்தில் , sorry cant be helped !
And இத்தனை வருத்தங்களை லைட்டாக ஓரம் கட்டி விட்டு ஒரு கேல்குலேட்டரை கையில் எடுங்களேன் :
*டின்டின் புக்ஸ் - ரூ.750
*டெக்ஸ் ஒராண்டின் கோட்டா - ரூ.1750
*பெளன்சர் - ரூ.400
*கி.நா - ரூ.500
*கூரியர் / பேக்கிங் வகைக்கென - ரூ.400
வெறுமனே இந்தப் பட்டியலின் கிரயமே ரூ.3800 ஆகின்றது. And இங்கு இடம் பிடித்திருப்பது வெறும் 6 நாயகர்களின் ஆல்பங்களே !
மீத 14 நாயகர்களின் புக்ஸுக்கென என்னிடம் மீதமிருக்கும் பட்ஜட் ரூ.2000 மட்டுமே ! And அதிலும் லார்கோ ; மேற்கே போ மாவீரா ; Zaroff என்ற மெகா திட்டமிடல்களை புகுத்தியுள்ளேன் !
சொல்லுங்களேன் இன்னும் வேறென்ன செய்திருக்க முடியும் இந்த பட்ஜெட்டுக்குள் என்று ?
தங்களது பட்ஜெட் பற்றியும், தேர்வுகள் பற்றியும் எதுவுமில்லை சார். எப்படி இருப்பினும் ஓகேதான். வெறும் லாபத்துக்காக விற்பனை செய்பவரும் அல்ல தாங்கள். அதை சரியாகவே செய்வீர்கள் என நம்புகிறோம்.
Deleteநீங்கள் செய்வது அனைத்தும் நியாயமானதே. அதை ஏற்றுக் கொள்கிறோம் சார். என்ன அதற்கு சில நாட்கள் ஆகும். ஆனால் உண்மையை எடுத்துச் சொன்னதற்கு நன்றி.
Deleteஆறு பாக தேடப்படும் குற்றவாளியின் கதை.. அதுவும் உண்மையான ரேஞ்சர் கார்சன் அவர்கள் இல்லாமல் எனும் போது ஏழு விசிலில் வெந்து குழைந்த சுடு சோற்றில் ப்ரீசரில் வைத்திருந்த தயிரை சேர்த்து சாப்பிடுவது போல... ஜீரனிக்கவே முடியலீங்க..
ReplyDeleteஅண்ணா...இதே சமயத்திலே குளிக்காம கொள்ளாம ஒரு தட்ட மூக்கு பார்ட்டியும் மாடு பத்திட்டு வருது ! உசாருங்கோ !
Deleteஎன்னமோ பேசிக்கிறீங்க புரியுது.
Deleteபுரியாத மாதிரி நான் இருந்து கொள்ளலாம் தானே.
சென்ற வாரம் 2024 அட்டவணை குறித்த பதிவினை படித்த போது புரிந்து கொண்டேன்.
ReplyDeleteவாசிப்பில் என்ன மாதிரியான கட்டத்தில் நண்பர்கள் பலர் தற்பொழுது உள்ளோம் என்று.
ஆர்வம் மற்றும் நிதர்சனம் , இரு வேறு துருவங்கள்.
தற்போதைய நிதர்சனம் என்ன என்பது ஆசிரியர் தெளிவாக புரிய வைத்து விட்டார்.
அதை ஏற்றுக் கொள்ள ஆர்வம் தடையாக இருப்பது புரிகிறது.
என்னால் ஒரே ஒரு முடிவுக்கு தெளிவாக இக்கணத்தில் வர முடிகிறது. மிகுந்த ஆர்வத்தின் காரணமாக சூழ்நிலையை எனக்கு சாதகமாக மாற்ற நான் முயற்சிக்க போவதில்லை, சூழ்நிலைக்கு தகுந்தவாறு என்னை வரும் 2024 வாசிப்பில் இன்னும் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான்.
2024 அட்டவணை குறித்து ஆசிரியரின் அக்கறையான இந்த ஸ்டேட்மெண்ட் பல வருடங்களில் நான் எங்கும் காணாத ஒரு வெளிப்படையான ஸ்டேட்மெண்ட் அதை இன்னும் விரிவாக விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.
//ஆர்வம் மற்றும் நிதர்சனம் , இரு வேறு துருவங்கள்.//
DeleteExactly sir. நேற்று வரைக்கும் சாக்லேட் ; ஐஸ்க்ரீம் என்ற ரகளை செய்திருக்கின்றோம் ! ஆனால் - "சொத்தைப் பல் வருதுப்பு - இனிப்பை குறைச்சுக்கோ" என்ற டென்டிஸ்ட் எச்சரிக்கைக்கு பின்னராச்சும் கவனம் தேவையாச்சே என்ற அக்கறை தான் சார் என்னது !
This comment has been removed by the author.
ReplyDeleteவெறும் லாபத்திற்கு மட்டுமே புத்தகங்களை விற்பனை செய்ய எண்ணாமல் வாங்குபவர்கள் அதைப் படிக்கும் வண்ணம் நீங்கள் எடுக்கும் இந்த முயற்சிக்கும் & உங்களின் அந்த நல்ல மனதுக்கும் ஒரு சல்யூட்
ReplyDeleteநிதர்சனமான உண்மை தான்.
ReplyDeleteவயது ஏற ஏற பொறுப்புகள் கூடி நமக்கு என்று ஒதுக்கும் நேரம் மிகவும் குறைந்து விட்டதை மறுக்க முடியாது.
எனக்கு எல்லாம் ஆர்வம் இருந்தாலும் நேரம் ஒதுக்குவது குதிரைக் கொம்பாகவே உள்ளது.
தங்களின் இந்த புதிய திட்டமிடல் நிச்சயமாக பயனளிக்கும் & நண்பர்களும் இதை சரியாகவே புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
நன்றிகள் நண்பரே ! மூ .ச. புதுசா - என்ன எனக்கு ?
Deleteஇந்த அட்டவணையினை தயார் செய்த தருணமே கணித்திருந்தேன் - யார் யார் எவ்விதம் ரியாக்ட் செய்வார்களென்று ! So முன்கூட்டியே மூ.ச.வில் பிளீச்சிங் பவுடரை கணிசமாக தூவி விட்டு, ஒரு 60 வாட்ஸ் குண்டு பல்பையும் மாட்டி ரெடி பண்ணி வைத்து விட்டேன் ! So no worries !
இந்த ஆண்டு சந்தாவில் இணையாமல் புத்தகங்களை வாங்கி கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால் உண்மையில் இந்த பதிவு என்னை யோசிக்க வைத்து விட்டது.
Deleteநான் பொதுவாக வேலை பளு காரணமாக படிப்பதற்கு நேரம் அமையாது. அதோடு ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு இடங்களில் பணிக்கு செல்கிறேன். ஆகவே நான் புத்தகங்களை படிப்பதற்காக விடுமுறை எடுத்து மதுரை வருகிறேன். அந்த இரண்டு நாட்கள் அனைத்து காமிக்ஸ்யையும் படிப்பதே எனது ஒரே வேலை. உங்களது இந்த ஆதங்கம் நியாயமானதே.
ரெகுலர் 30 + V காமிக்ஸ் 6
ReplyDeleteஉடன், MYOMS 4
மொத்தம் 40 புக்...
ஒருவேளை, எனக்கு MYOMS இல் முன்மொழியப்பட்ட 8 புத்தகங்களும் வேண்டும் என்றால், அதாவது 44 புக் வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
கணக்கில பிழை நண்பரே :
Deleteரெகுலர் தடம் 30
V காமிக்ஸ் முதற் ஆறு மாதங்கள் 6
இரண்டாம் ஆறு மாதங்கள் 6
கிளாசிக் ஹீரோஸ் தனித்தடம் 3
ஆக மொத்தம் - 45 இதழ்கள் .
அப்புறமாய் MYOMS - 4 இதழ்கள்
ஆக 49 இதழ்கள் - அதிகாரபூர்வமாக 2024 க்கு !
ஆன்லைன் மேளா ; ஈரோடு விழா என எதையுமே சேர்க்காமல் ! இது குறைவான நம்பரா நண்பரே ?
இது நிறைவான நம்பர் தான் ஐயா...
DeleteMYOMSஇல் தேர்வு செய்து வெளியிடப்படும் 4 இதழ்களைத் தாண்டி, முன்மொழியப்பட்ட மற்ற கதைகளை பெறுவது எப்படி?
முதற் 4 நடைமுறை காண்பதில் சுணக்கம் இராதென்று நம்ப வேண்டியது தான் சார் ! அது வெற்றி காணின் அடுத்த செட் களமிறங்க தடைகள் இராது !
Deleteஇது மேட்டரு. அனைத்தையும் தட்டி தூக்குறோம் ...
Deleteசூப்பர் சார்...உண்மைய சொன்னா இப்பதா பந்த முழுதுமாக எங்க கைல தந்திருக்கீய
Deleteதட்றோம்!
Deleteதூக்குறோம்!
Why don't we go for print on demand format sir?
Deleteவாசிப்பில் உள்ள தேக்க நிலையை உடைப்பதற்கான ஒரு சிறிய முயற்சி தான் ஆசிரியர் தற்பொழுது முன்மொழிந்து உள்ளார்.
ReplyDeleteவாசக நண்பர்களை,மீண்டும் வாசிப்பில் பழைய பாதைக்கு அழைத்து செல்லும் ஆசிரியர் முயற்சிக்கு, புனித மானிடோ துணை புரிய, கருணை காட்ட வேண்டுகிறேன்...
புரிதலுக்கும் , அன்புக்கும் நன்றிகள் சார் !
Delete// புரிதலுக்கும் , அன்புக்கும் நன்றிகள் சார் ! //
ReplyDeleteஎன்றும் உங்கள் உடன், காமிக்ஸ் உடன் சேர்த்து பயணிப்போம் சார்
இன்னும் சில தினங்களில், சூழ்நிலை நீங்கள் விரும்பிய பாதையில் பயணம் இனிதே துவங்கும் சார்.
எனது பணிவான வாழ்த்துக்கள்
சார் உடம்ப பாத்துக்கங்க....
ReplyDeleteஅட்டைப் படம் பிரிச்சு மேயுதுன்னா....அந்த இது வரை வந்த டாப்பட்டை இது விட வேற ஏது வரிகளுமே சுவாரசியமே
மீண்டும் கிரிக்கட் பார்க்க ஈடுபாடு எகிறியதப் போல அதிரடிகளுக்கு திரும்ப MYOMS
உதவட்டும்...
படிக்க படிக்க வேதனையான பதிவு...கென்யா...ஒற்றை நொடி ஒன்பது தோட்டா போல கதைகளுக்கும் சோதனை போல...MYOMS கை கொடுத்து உதவும்னு நம்புவோமாக என் போன்றோர்
இங்க காட்டிய அட்டைப்படம் சிறுவயது 80 கள் அன்று பார்த்த இரும்பு மனிதன் போன்ற அட்டைகளுக்குள் கொண்டு செல்ல தயங்கவில்லை...செம சூப்பர்...நேரில் காண ஆவலுடன்
DeleteEDI sir. You have given detailed explanation during release of 2024 planner. Even after your explanation, this week you have taken time, care and again explained the reasons behind your decision with supportive data. Your responsibility of acknowledging us and giving such long explanation is awesome. You are doing again and again. Thanks sir, we will be with you. Take care of your health, and God be with you Sir.
ReplyDeleteI am a lover of bigger size books. This yr Tex , I have read it immediately and it's very good. I used to read Tolstoy , Dowtoevsky etc.but now I am not able to read other books except comics. I agree same situation may come for comics book too. You have pointed out facts, which is very difficult to digest. But is true. Will try to change. As you said, the proposed list is also not small. You have tried to bring as many Heros as possible in the list. Very much delighted to see John Master again. We will go long way sir... Thanks for giving inner peace, pleasure by way of comics. I have seen that whoever read our comics do not have bad habits. That way, you have created good society. Continue your great work sir we will be with you in all your decisions.
ReplyDelete// I have seen that whoever read our comics do not have bad habits. That way, you have created good society. Continue your great work sir we will be with you in all your decisions // very well pointed out.
Delete
Delete// I have seen that whoever read our comics do not have bad habits. That way, you have created good society. //
Well said sir. Completely agreed
அட...சமூகச் சிற்பி ரேஞ்சுக்கெல்லாம் நாம ஒர்த் கிடையாது சார் ! இந்தச் சிறுவட்டத்துக்குள்ளும் மனிதனின் சகல குணங்களும் சேர்த்தி என்பதை நாமறிவோம் ! So "காமிக்ஸ் வாசிப்பு நல்வழிப்படுத்துகிறதென்ற statement-ஐ விட "வாசிப்பு நல்வழிப்படுத்துகிறது" என்ற பொதுப்படையான statement பொருத்தமென்பேன் !
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete// ஒரு ஆடம்பரத்துக்கோசரம் மட்டுமே மேஜையினை அலங்கரித்து விட்டு, பசியாற்ற உதவிடா பண்டங்களால் பலனேதும் இருந்திடாதே ?!
ReplyDeleteஅந்தப் புரிதலின் பலனே இந்தாண்டின் திட்டமிடல் !!
"சார்....இது சவுத் இந்தியன் பாரம்பரியப் பந்தி ; இங்கே fancy ஐட்டங்கள்லாம் கிடையாது ! ஆனா நீங்க இஷ்டப்பட்டு சாப்பிடற சமாச்சாரங்களுக்கு குறைச்சலே இருக்காது ! திருப்தியா சாப்பிடுங்க !! And சாப்பிட்டு முடிச்சா பிற்பாடு - அதோ அந்தப்பக்கமா ஸ்வீட்சோ ; பாதாம் பாலோ ; பீடாவோ உங்களுக்கு தேவைக்கு ஏற்ப இருக்கும் ! வேணும்னா ருசிச்சிக்கிலாம் !" என்று நிதானமாய் பந்திக்கொரு வரைமுறை தந்துள்ளோம் இம்முறை ! //
Understand and very good decision sir🙏🏻
உண்மைதான் சார். எனது திருமணத்தின் போது இதே போன்ற ஒரு அனுபவம் உள்ளது. பாரம்பரிய உணவுகளை சமைத்து பரிமாறினோம். ஸ்பெஷல் ஐட்டமாக பிரட் அல்வா மட்டும் வைத்திருந்தோம். அனைத்து உணவுகளையும் மகிழ்ச்சியுடன் திருப்தியாக சாப்பிட்டு சென்றார்கள். இலையில் யாரும் உணவை வேஸ்ட் செய்யவில்லை சார்.
Deleteஇதுலென்னல ஆச்சரியம்...மாப்ளைங்றதால நீ சமைச்சிருக்க மாட்ட அன்னைக்கு மட்டும்
Deleteஸ்டீல் கிளா.. 😄😄😄😄
DeleteYelaey @ LOL
Delete😂😂😂😂😂
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதீபாவளி மலர் இண்டும் ஒரிஜினல் படங்களுடன் அட்டையில் வருவது Super.
ReplyDelete@Editor Sir..😍😘
ReplyDeleteMe in Sir..😃
உங்கள் கூற்று வித்தியாசமானதுதான் சார்! பதிப்பாளர் என்ற பார்வையில் மட்டுமல்லாது ரசிகனாய் நின்று அளித்துள்ள நீண்ட உரை முற்றிலும் மாறுபட்ட ஒன்று. உங்கள் பதிவு முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றுமே கூட.
ReplyDeleteஆனால் நேரமில்லை யாரும் கூறுவதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது. ஆர்வக் குறைபாடு காரணமாக இருக்கலாமே ஒழிய வாசிக்க நேரம் ஒதுக்குவது இயலக் கூடிய காரியமே.
சமீபத்தில் இதுவரை வந்த சுப்ரீம் 60 இதழ்கள் வாசிக்க இயன்றது. சலனமற்று ஓடிக் கொண்டிருக்கும் கதைகள் மனச் சமன்பாட்டிற்கு பேருதவி புரிந்தன. இவற்றை இந்நாள்வரை ஒதுக்கி வைத்ததன் காரணம் ஆர்வமின்மைதானே தவிர நேரமின்மை அல்ல. ஒரு prejudiced மனப்பான்மையோடு இவற்றை அணுகிவிட்டோமோ என்ற குற்ற உணர்வும் மேலிடுகிறது.
விமர்சனம் எழுத நேரம் , வாசிக்கும் அனைவரும் ஒதுக்குதல் அவசியம்.
இரு வரிகளாவது எழுதலாம்.
வாசிப்பவர்கள் தங்கள் கருத்தை பதிவிடாவிட்டால் ஆசிரியருக்கு வாசகர்களின் மனப்போக்கை அறிய சிரமமாக இருக்கும்.
பழசோ புதுசோ எதுவாயினும் அவற்றை ஆர்வத்துடன் வாசிக்க நேரம் ஒதுக்குவது மட்டுமல்லாமல் அவற்றை பற்றி நான்கைந்து வரிகளாவது எழுத வேண்டும் என்ற
வாசகர்களாகிய நாம் அனைவரும் உறுதி பூண வேண்டிய நேரம் இது.
மனைவி உணவு சமைத்து வைத்திருக்க அதனை நேரத்துக்கு வயிறார உண்பது மட்டுமல்ல உணவின் சுவையை பாராட்டுவதும் கூட்டில் உப்பு இன்னும் கொஞ்சம் கூடுதலாக சேர்த்திருக்கலாம் , குழம்பில் காரம் கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்பதை நயமாகச் சொல்வதும் ஒரு கணவனின் கடமையும் உரிமையுமாகும்.
சரியாக கருத்துக்கள் சார்...
Delete// பழசோ புதுசோ எதுவாயினும் அவற்றை ஆர்வத்துடன் வாசிக்க நேரம் ஒதுக்குவது மட்டுமல்லாமல் அவற்றை பற்றி நான்கைந்து வரிகளாவது எழுத வேண்டும் என்ற
Deleteவாசகர்களாகிய நாம் அனைவரும் உறுதி பூண வேண்டிய நேரம் இது. //
Totally agreed
சூப்பர் செனா...ஆனா நேரமில்லை என்பதை விட மோசமானது ஆர்வமில்லை என்பதுதான
Deleteஆர்வமில்லாமல் யாரும் வாங்கப்போவதில்லை...கிடைக்கும் நேரத்துக்கு நாம் கொடுக்கும் முன்னுரிமை களே எவை என தீர்மானிக்கும்...டிவி..செல்...குழந்தை...சுற்றுதல்.விளையாட்டு..சும்மா கிடக்கலாம்னு ஓய்வு..குழந்தை அல்லது பிறர் படிப்புக்கு நேரம் செலவிடல்...புத்தகங்கள்...இல்லாத இடத்தைத் கட்டாயம் இவற்றிலோ அல்லது எதுவவோயேதோ ஒன்று நிறைவு செய்யும்...உங்களுக்கு சுப்ரிமோ படிக்க நேரம் வாய்த்திருக்குது
Deleteசார்.."நேரமின்மை" என்ற போது முற்றிலுமாய் நேரமே இல்லாமல் நாமெல்லாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம் என்ற ரீதியில் நான் mean பண்ணவில்லை ! மாறாக, எதற்கு - எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம் ? என்பதில் (காமிக்ஸ்) வாசிப்பு வாங்கிடும் உதை பற்றியே குறிப்பிட்டிருந்தேன் !
DeleteAnd yes - ஆர்வமின்மை அதை விடவும் பெரியதொரு malaise தான் ! அதற்கு இடம் தந்திடாது தவிர்க்கவே வாசிப்புகளுக்குள் இயன்றமட்டுக்கு சுவாரஸ்ய factors களைக் கூட்டிட விழைகிறோம் !
வணக்கம் எடிட்டர் சார் 🙏🏼,
ReplyDeleteஎனக்கு லயன் முத்து காமிக்ஸ் பழக்கம் கடந்த 10 வருடமாக மட்டும் தான். முதல் 5 வருடம் முழு சந்தாதாரர், பிறகு தனி தடம் தற்போது தேவையான புக்கை மட்டும் வாங்குவோர் சங்கத்தில் ஐக்கியம் ஆகிட்டேன். எனது விருப்பம் கிராபிக் நாவல் மற்றும் one shot கதைகளே. அதனால் சந்தா எனக்கு சரப்படவிலை. எடிட்டர் சொன்ன படி படிக்கும் ரசனை குறந்து விட்டதோ வயசு ஏறிய மாற்றமா தெரியவில்லை.
ஆர்வமுடன் துவங்கிய நெவாடா மாதிரி கதைகள் பரணில் போவதும் அடுத்த பாகம் வர 2 ஆண்டுகள் ஆகுமா என்பதெல்லாம் ஏமாற்றமே. முன்பு bouncer தொடரை அந்தரத்தில் விட்டு போனீர்கள். தனி கதை தனி புத்தகம் பாணி தான் என் சாய்ஸ் அதுவே போதும்.
இது ஒரு சங்கடமான விஷயம்தான்...MYOMS லும் கூட....500 பேர் வாங்குவோம் துவக்கத்தில் என்றால் கூட 300 பேருக்கு பிடிக்கல பாதி கிணறு தாண்டும் போதுன்னா எல்லோரும் எங்க விழுவோம்...தவிர்க்க குண்டுகள் MYOMSயிலும்
Delete//முன்பு bouncer தொடரை அந்தரத்தில் விட்டு போனீர்கள்//
Deleteபுரிதலில் உள்ள பிழைகள் எவ்விதம் தவறான எண்ணங்களுக்கு உரம் சேர்க்கின்றன ? என்பதற்கு உங்களின் மேற்படி வரிகள் ஒரு க்ளாஸிக் உதாரணம் நண்பரே ! பௌன்சர் தொடரை நாம் துவங்கியது 2015-ல் ! And எனது ஞாபகம் சரியாக இருக்கும் பட்சத்தில் 2016-க்குள் அதன் 6 அத்தியாயங்களை, மூன்று ஆல்பங்களில் வெளியிட்டு முடித்திருந்தோம் !
எஞ்சியிருந்த ஆல்பம் 7 & 8 - விரசங்களின் உச்சத்துடனான கதைக்களத்துடன் இருந்ததால் அதனைத் தொடவில்லை / தொடரவில்லை !
அதன் பின்பாய் 2018-ல் தான் படைப்பாளிகளே இந்தத் தொடரினை தூசு தட்டி எடுத்து புதுக் கதை ஒன்றினை உருவாக்கியுள்ளனர் ! இது தான் நிலவரம் எனும் போது நாங்கள் அந்தரத்தில் விட்டுச் சென்றது எதையோ நண்பரே ?
And இதில் இன்னுமே விஷயம் உள்ளது என்பதை அறிவீர்களா ?
பௌன்சர் 1 to 6 வரைக்கான உரிமைகள் முதல் நிறுவனத்திடம் !
பௌன்சர் 7 & 8 முதலாய் உரிமைகள் அடுத்ததாய் வேறொரு நிறுவனத்திடம் ! So 6 முடிந்து 7 என்று இயல்பாய் கொள்முதல்களைத் தொடரவும் வாய்ப்புகள் கிடையாதிங்கே ! முற்றிலும் புதுசாய் பேச்சு வார்த்தைகளுடன் தான் அடுத்த நிறுவனத்தினை அணுகிட வேண்டி இருந்தது !
அபிப்பிராயங்களுக்குமே சில தருணங்களில் facts முதுகெலும்புகளாகிட்டால் நலம் சார் !
எடிட்டர் சார் குறை சொல்ல அதை பதிவு செய்யவில்லை பதிப்பக உரிமை பற்றி நிங்கள் எழுதியது நியாபாகம் இருக்கு. ஒரு செட் கதை புத்தகம் நம்மிடம் வரும் சந்தோஷம் அலாதியானது அந்த வகையில் bouncer ஐ வழியில் தவற விட்ட வருத்தம் இருக்கிறது மறுபடியும் வருவதில் சந்தோஷமே. இளம் டைகர் கதைகளும் 2 பாக செட் ஆகபொடலாம் என கேட்டதாகவும் நியாபாகம். பல வருஷம் தாண்டி மறுபடியும் டைகரை பார்க்க வாசிக்க ஆவலுடன். செட் குண்டு புக்குகள் சார்த்த விற்பனை பற்றி பதிப்பாளர் ஆக உங்கள் வருத்தம் புரிகிறது.
Deleteஆரம்ப கால ஐரோப்பிய கிராபிக் நாவல்கள் தான் எப்போதும் என் மறு வாசிப்பு சாய்ஸ். அதே மாதிரி one shot டார்க் கிராபிக் நாவல்கள் மறுபடியும் எதிர்பார்க்கும் அணியில் நான் இருக்கிறேன்.
2024 ஆம் ஆண்டுக்கான நமது காமிக்ஸ்ன் ஆண்டு சந்தாவில் நான் இணைந்து விட்டேன் நண்பர்களே. நீங்களும் நமது காமிக்ஸ் சந்தாவில் விரைவில் இணையுங்கள் நண்பர்களே🙏🏻
ReplyDeletePerfect sir.
Deleteஇயன்றவர்கள் சாந்தாவின் இணையுங்கள்...செலவினங்களை...விலை உயர்வை கட்டுப்படுத்த உதவலாம்....நமக்கு நாமே
Deleteசூப்பர் பரணி.
Delete//உசிரைக் கொடுத்து உழைத்த பாக்கி 12 ஹார்ட்கவர் இதழ்களும் கிட்டங்கியில், நார்மல் புக்ஸ் பிடிக்கும் இடத்தைப் போல நான்கு மடங்கு இடத்தைப் பிடித்தபடியே துயின்று வருகின்றன ! ///
ReplyDeleteI don't have any word's to speak sir. The truth always like a mirror. Just I stand before like a speechless Bird.
Myoms
Delete// Post Covid யுகத்தின் செலவுகளுக்கு ஈடு தர ஓட வேண்டியிருப்பது இன்னொரு மாரத்தான் ! //
ReplyDeleteTrue True 100%True. 90% of peoples are in this state only sir.
இது பழசைக் காட்டிலும் கடும் மாரத்தானாக இருப்பது தான் கொடுமையே சார் !
DeleteMost of us are in this position only sir. 😞
Delete///டிசம்பரின் இறுதியில் கூடுதல் ஓட்டுக்கள் பெற்றிருக்கும் 4 ஆல்பங்கள் எவை என்று பார்த்த கையோடு அவற்றை மட்டும் பிரேத்யகமாய் ; உங்களுக்கே உங்களுக்காக ஒரு முன்பதிவாய் அறிவிப்போம். And அதனில் ஒரு டீசென்ட் முன்பதிவு கிட்டியான பின்னே, இந்த நான்கு இதழ்களும் உங்களுக்கு மட்டும் அனுப்பிடப்படும் ! இவை முன்பதிவு செய்யாத பிற தளங்களில் கிடைத்திடாது ! ///
ReplyDeleteஎனக்கு என்னமோ இது செமையாக பட்டையை கிளப்பும் என்று தெரிகிறது. "வரையறுக்கப்பட்ட எண்ணிக்கை" சிலரிடம் மட்டுமே இருக்கும். மதிப்பில் அடங்கா விலையுயர்ந்த ரத்தினங்களைப் போல்...
.
///மாதா மாதத்து அட்டை டப்பிக்கள்
ReplyDeleteபாலிதீன் கவர்கள்
செல்லோ டேப்
கூரியர் கட்டணம்
'தேமே' என்று காட்சி தரும் இந்த நான்கு ஐட்டங்களுக்குமாய் ஓராண்டினில் ஆகும் செலவென்னவென்று அகஸ்மாத்தாய்ப் பார்த்தோம் ! நம்பினால் நம்புங்கள் guys - GST வரி சேர்த்து மொத்தம் ஆகியுள்ள தொகை ஏழேகால் லட்சம் ரூபாய்கள் !! நம்மவாவது முடிகிறதா ?? அரூபமாய் இத்தனை அசாத்திய தொகை ஆண்டொன்றுக்கு செலவாகிடுவது ஒரு பக்கம் ; ஆனால் அத்தனை காசை செலவிடுவதற்காகவாவது அந்த டப்பிக்களில் பயணிக்கும் புக்ஸ் உங்கள் வாசிப்புக்கு active ஆக பயன்பட்டிட வேண்டாமா folks ? ///
மொத்தமா பண்டல் போட்டு ஒருத்தருக்கு அனுப்பி அவரே டெலிவரி செய்யலாம் போல். பொதுநல சேவையாக.
///Anyways இளம் புலியாரின் புக் கலரில் அட்டகாசமாய் வந்துள்ளது ; தீபாவளி வேளையினில், பட்சண துவம்சங்களின் நடுவாக்கில் டைகர் செம கம்பெனியாக இருப்பாரென்று எதிர்பார்த்திடலாம் ! And இளம் தல சாத்திடும் சிக்ஸர் ஸ்பெஷல் இன்னொரு பக்கம் தெறிக்க விடுகிறது !///
ReplyDeleteபடிக்க நான் தயார். முத ஆளாக படிக்க நான் ரெடி. சுட சுட விமர்சனம் கூட வரும்தானா. தலைத்தீபாவளி கொண்டாட்டம் தளபதியோட...
// காலாவதியாகிப் போன குண்டு புக் template-ஐ இன்னமும் விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டு, உங்களுக்கு எப்படியாச்சும் நேரம் வாய்ச்சுப்புடும் ; புக்ஸை முன்போலவே படித்து ரசித்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்தியதெல்லாம் போதுமென்று எண்ணினேன் ! //
ReplyDelete😞😞😞😞😞
///20 நாயக-நாயகியர் ரெகுலர் சந்தா தடத்தினில் இடம் பிடித்துள்ளோர் - V காமிக்சின் July டு December லிஸ்டை சேர்க்காமலே !!
ReplyDeleteகுறைந்த பட்சம் இன்னொரு 4 நாயகர் - Make My Own Mini Santha உபயத்தினில் ! ஆக - 12 மாத காலகட்டத்தினில் 24 நாயகர்கள் இடம்பிடிக்கின்றனர் !! ///
"மதி" சாலு' ன்னு சொல்லத்தான் ஆசை. ஆனா இப்போ என்னோட ஆர்வம் எல்லாம் அந்த 4 புக்கு மேலேதான். (Limited printed books )
காமிக்ஸ் அன்பர்கள் 10,000 பேர் இருக்கலாம். ஆனா இந்த 4 புக்கு வெறும் 400 பேருக்கிட்டதான் இருக்கும். அதுலே நானும் ஒருவன். செம திரில் அனுபவம்... ம்ம்... ம்ம்ம்.....
//காமிக்ஸ் அன்பர்கள் 10,000 பேர் இருக்கலாம்//
Deleteஆங்...அமர் சித்ர கதாக்கு தானே சார் ?
TEX: The Supremo Special
ReplyDeleteசர்பத்தின் சின்னம்
பொதுவாக டெக்ஸ் கதைகளில் மோரிஸ்கோ இடம்பெறும் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதில் கலந்திருக்கும் அமானுஷ்யமோ அல்லது அறிவியலோ எதுவாக இருந்தாலும் அந்த வாசிப்பின் தாக்கம் நெடுநாட்கள் என்னுள் நிலைத்திருக்கும்.
புதிர் விஞ்ஞானி மோரிஸ்கோவின் உதவியாளர் யூஸேபியாவின் உள்ளுணர்வு டைகரைப் போன்றே அசாதாரணமானது.
டெக்ஸ் குழுவினர் தங்களால் இனம் காண முடியாத புதிர்களை விடுவிக்க மோரிஸ்கோவிடம் செல்வது வழக்கமான ஒன்றுதான். இம்முறை செல்வதோ தங்கள் புலனாய்வில் கிடைத்த இரட்டைத் தலை சர்பத்தின் சின்னத்தைப் பற்றி அறிந்துகொள்ள. இக்கதையில் மோரிஸ்கோவின் பங்களிப்பு மிக அதிகமாகவே உள்ளது. ஆதிகால பேகனிசம் சார்ந்த நூல்கள், அவற்றில் இடம்பெற்றுள்ள அமானுஷ்யம் சார்ந்த தடை செய்யப்பட்ட விஷயங்கள், இரசவாதம் இப்படி பல நம்ப இயலாத புதிர்கள் கதையில் வந்தாலும் சொல்லப்பட்ட விதம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. இக்கதையின் முக்கிய கதாபாத்திரமாக மோரிஸ்கோவே இடம் பெறுவதால் தொய்வில்லாமல் செல்கிறது.
என்ன அந்த புத்தகத்தைக் கைப்பற்றி மோரிஸ்கோவிடம் தந்திருக்கலாம். தங்கம் மதிப்பற்ற உலோகமாக மாறியிருக்கும். நடைமுறை சித்தாந்தங்களுக்கு உட்பட்டு புத்தகம் எரிக்கப் படுகிறது.
கிளாசிக் டெக்ஸ் சாகசப் பிரியர்களுக்கு அட்டகாசமான விருந்து.
இச்சமயத்தில் ஆசிரியரிடம் ஒரு கோரிக்கை. இத்தாலியில் டெக்சுடன் மோரிஸ்கோ இடம்பெறும் கதைகள் தனியாகவே வெளிவருகிறது என நினைக்கிறேன். இங்கும் வருடத்தில் ஒன்றிரண்டு கதைகளிலாவது மோரிஸ்கோவை இடம்பெறச் செயயலாம்!!
இல்லை சார்....டெக்ஸ் சாகசங்களில் எப்போதேனும் ஒட்டிக் கொள்ளுபவர் மோரிஸ்கோ ; தனியாகவெல்லாம் இதெற்கென தடம் ஏதும் கிடையாது ! And இந்த பப்ளிமாஸ் ஆராய்ச்சியாளரின் எல்லாக் கதைகளும் ஹிட்டென்றெல்லாம் கிடையாது சார் ! ஒரு நெடும் சாகசம் உள்ளது - காதில் மீட்டர் கணக்கில் புயப்பம் கோர்த்திடும் ஆற்றலோடு !
DeleteNice review
Deleteகி நா... வை "கை விட்டு"விடாதீர்கள் sir...😄 மறக்க முடியாத கதைகள் உண்டு.. விதி எழுதிய வெள்ளை வரிகள்.. சாகற வரைக்கும் எனக்கு மறக்காது...அரோரா.. அத்தனாஸ்.. இம்ம்ம் ஹீம்...வருஷம் ஒரு 4 book ஆவது.......பாத்து போட்டுடுங்க sir... 😄
ReplyDeleteஅட ஏன் சார்....நீங்க வேற ! முன்பதிவு செய்து வாங்கிய நண்பர்களைத் தவிர்த்து இந்த கி.நா.வை தொட ஆள் நஹி !
Deleteகுதிரைவண்டில்லாம் வைச்சு கடத்தியிருக்கோம் - அதுக்காச்சும் ஏதாவது பாத்து பண்ணியிருக்கலாம் !
அது என்ன சாகசம் சார்...புய்பம்னாலே அழகுதான்
Deleteகி நா.. Super ஆதான் இருக்கு ..நீங்க சொல்றதும்
Deleteசரிதாங் sir.. 😔😔
Sir, andha tharaikku vandha vaanam marandhudaatheenga
Delete128th
ReplyDeleteசுப்ரிமோ ஸ்பெசல் . ! 80களின் லயன், முத்து ,ஜுனியர் லயன் ,மினி லயன் போட்டிபோலவே(4 டெக்ஸ் கதைகளுக்கும் போட்டி.)இல்லையென்றால் ''வந்தார் வென்றார்''.
ReplyDeleteசர்வமும் நானே ,சட்டத்திற்கொரு சவக்குழி,நில். கவனி. சுடு. போன்ற மாஸ் ஹிட் வரிசையில் இணைந்திருக்கும் . கரூர் ராஜ சேகரன்
Supremo special super sir
ReplyDeleteவந்தார் வென்றார் இன்னும் பாதி இருக்கிறது சார் தீபாவளிக்குள் பூதம் காத்த புதையலயும் முடித்து விடுவேன்.
பெரும்பாலான நேரத்தை செல்போன் கபலீகரம் செய்து விடுகிறது.
ReplyDeleteரீசார்ஜ் செய்யாமல் சமாளிக்கலாம் என்று பார்த்தால் ஏதோ ஒரு காரணத்தால் திரும்ப ரீசார்ஜ் செய்ய வேண்டி உள்ளது.
திக்கெட்டும் திகில்
ReplyDeleteசர்பத்தின் சின்னம்
இரண்டும் டாப் கிளாஸ் ரகம்.
செவ்விந்தியர்கள் வரும் கதைகள் என்றாலே அது அலாதியாக தான் இருக்கிறது.
மேலும் வந்தார் வென்றார்
கொடூர வனத்தில் டெக்ஸ் போல் டெக்சுட்ன் கிட்டும் சாகசத்தில் ஈடுபடுகிறார்.
நண்பர்களே ஆண்டு சந்தா கட்டுவதற்கு எனக்கும் இந்த முறை ஆசையாக இருக்கிறது ஆனால் அதில் டின் டின் வாங்குவதற்கு எனக்கு விருப்பமில்லை ஏனென்றால் படிப்பதை விட அனிமேஷன் பார்ப்பதில் எனக்கு அதிக விருப்பம் அதனால் ததன் கதைகள் எனக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை தவிர்த்து ஆண்டு சந்தாவில் இணைய ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா?
ReplyDeleteV காமிக்ஸ்ல இளம் டெக்ஸ் கதைகள் வரும்போது சிங்கிள் ஸ்லாட் வேண்டாம் சார் இரண்டு மூன்று அலலது நான்கு
ReplyDeleteஇது போன்றே வெளியிடவும்.
வந்தார்.. வென்றார்...
ReplyDeleteஒரு சில சிந்தனை துளிகள் ஐடியா மணியின் டிப்போவில் இருந்து ...
ReplyDelete1. கதைகளின் டயலாக் நீளத்தை குறைத்து கிரிஸ்ப்பாக அமைத்தால் படிப்பதற்கு சுலபமாக இருக்கும். கூடவே பாண்ட் சைஸ்சை பெரிது ஆக்கினால் படிக்கும் போதுஅயர்ச்சி ஏற்படாது.
2.இல்லை டன் டன்னாக டயலாக் வேண்டும் என்றால் சினிமாவுக்கு சப் டைட்டில் தனியே வெளியிடுவதை போல கதைகளின் டயலாக் டெக்ஸ்ட் பைலை வெளியிட்டால் , அதை customized மொபைல் ஆப் தமிழ் டெக்ஸ்ட் டு ஸ்பீச் மூலம் கேட்டு கொண்டு ஓவியங்களை ரசித்தபடி தாள்களை புரட்டலாம்.
3.கதம்ப மலருக்கு வாய்ப்பில்லை எனும்போது ஸ்டேக்கபில் புத்தகங்களாக ஒரே ஸ்டாண்டர்ட் அளவுகளில் வெளியிட்டால், அவற்றை அவரவர் விருப்பம் போல் ஸ்டேக் செய்து "ஈரோடு விஜய் புதுமனை புகுவிழா மலர்" அல்லது "ஸ்டீல் க்ளா இல்ல மொட்டை காதுகுத்து மலர்" என்று விருப்பம் போல டஸ்ட் கவர் தயாரித்து அழகு பார்க்கலாம். ஸ்டேக் செய்வதற்கு ஹார்ட் பெண்ட் டம்மி அட்டை தயாரிக்க சிறிது R&D தேவை படலாம்.
Extra book வேண்டும்..... க்கு link எப்போ வரும் ஆசான்...
ReplyDeleteDetailed explanation of ur stand sir. I accept and stand with you.
ReplyDeleteI am worried about future. If we continue with old style,in another few years only 100-200 oldies like me will be there.
Your new step will create new readers and improve sustainability. Amar chitra katha all stories end exactly in 31 pages and still successful.
We have to change or perish. I was skeptical about v comics, now I understand it's need.
I have read all issues from 2012, but rip Kirby and supremo still pending.
I think, when we are young, getting a comic is rare and we read it immediately. Now rain or shine,, 4 books comes to my home every month.
I reread our comics many times. Just now realized I have not reread any old issues in last 6 months. ☹️
சார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteஎனக்கு அட்டவணை டபுள் ஓகே. காரணம் இந்த தடவை மொக்கை போடற ஹீரோ யாரும் இருக்கற மாதிரி தெரியலை. ஓடற குருதை மேல சவாரி செய்யறதை வரவேற்கிறேன்.
ReplyDeleteஅதுமில்லாம நமக்கு 5800 ன்னு ஒரு சீலிங் இருக்கு. அந்த சீலிங்குள்ளே எல்லாம் கொண்டு வரணும் எனும் போது எதோ ஒண்ணை தியாகம் பண்ண வேண்டியது தான்.
இந்த வருடமில்லேன்னா அடுத்த வருடம் வராதயா போயிடும். நல்லபடியா சந்தாக்கள் சேர்ந்து நாமளும் படிச்சு விமர்சனம் எழுதினா ஆட்டோமேட்டிக்கா கால் கட்டை விரலை கடிப்பார் எடி. ஆன்லைன் புத்தக விழா மற்றும் ஈபுவி ல குண்டு புக்கா கேட்டு வாங்கிடுவோம்.
2023 ல அதிவேக மரத்தான் ஓடிருக்கோம். கொஞ்சம் ரெஸ்ட். அது போக சந்தா எண்ணிக்கை மற்றும் ஜனவரி புத்தக விழால நல்லாப் போச்சுன்னா எப்படியாவது கேட்டு வாங்கிடலாம்.
நாம உற்சாகமா இருந்தா அது எடிட்டரையும் தொத்திக்கும் & viceversa. So நாம உற்சாகமாக ஆரம்பிக்கலாமா?
/.காரணம் இந்த தடவை மொக்கை போடற ஹீரோ யாரும் இருக்கற மாதிரி தெரியலை. //
Deleteமாடஸ்டியையும் சேத்துதானே சொல்றீங்க? :-)
நான் ஹீரோன்னு தானே சொன்னேன். வில்லியை பத்தி சொல்லலீயே. 🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️
Deleteஆமாமா வில்லி கார்வின் தான் இருக்காரே
Delete///மாடஸ்டியையும் சேத்துதானே சொல்றீங்க? :-)///
Deleteஹை டாக்டர்களுக்கு நகைச்சுவையும் வருதே...🤭🤭🤭
MYOMS ஒரு நல்ல தொடக்கம் என்றே நினைக்கிறேன். வெகுஜன வரவேற்பில்லாமல் நிறுத்தப்பட்ட நாயகர்களின் கதைகள் முன்பதிவின் அடிப்படையிலாவது வெளிவரும் என புதிய கதவு திறந்துள்ளது.
ReplyDeleteஇந்த தடம் சுகப்பட்டால் அடுத்தடுத்த முன்பதிவு புத்தகங்கள் அறிவிக்க வாய்ப்பு கூடும். குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ச்சியாக இதை முயற்சிக்கலாம்!
MYOMS க்கு இன்னோரு கோணமும் உள்ளது நண்பரே....
Deleteமெயின்லயே சோபிக்கிலனுதான் MYOMSக்கு ட்ராப் ஆகியிருக்கு இவைகள்....
அங்கேயுள்ள 8யும் பாருங்க ஆல்மோஸ்ட் த சோ கால்டு வெகுஜன ஆதரவை இழந்து மெயின்ல ஸ்லாட் பிடிக்க இயலாம போனவைகள்... பெரும்பாலும் புதிய நாயகர்கள்..
அவைகள் சந்தாவில இருந்தபோது பலருக்கும் வேப்பங்காயாக கசந்தது..இப்ப ஸ்பெசல் புக்கிங்ன உடன் லட்டாக இனிக்குமா?? ஐ டோன் திங் சோ.. சந்தாவில் அவைகளை தவிர்க்கப்பார்த்தவங்க எப்படிங்க 400எண்ணம் வர முன்பதிவு பண்ணுவாங்க????
MYOMS equal to relegation to 2nd division in a league system...
MYOMS ஏற்பாடு சரி..ஆனா அதற்கான கன்டென்ட் சரியல்ல..
அதில் அறிவிக்கப்பட்ட இரட்டை வேட்டையர்& ஜான் மாஸ்டரை V comicsக்கு மாற்றிட்டோ அல்லது ஈரோடு ஸ்பெலுக்கு நகர்த்திட்டோ...இதுவரை வெறும் அறிவிப்புகளாக இருந்து வரும் ரூட்666, கடல் கொள்ளையர்ஸ், சிங்கிஸ்ஷாட் கமர்சியல்கள்களை ட்ரை பண்ணினால் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம்.
அதெல்லாம் சரிதான் நண்பர்களே ...விலை அதிகமாக இருக்கும்ங்களே ?
Deleteஎண்ணிக்கைக்கேற்ப விலை நிர்ணயம் இருக்கலாம்
Delete@STV
Deleteஅனைத்து வகை காமிக்ஸ்களையும் படிக்கும் நண்பர்கள் 400 பேர் கூட இருக்க மாட்டார்களா? வெரி சேட்!!
@SK
Deleteஇருக்க கூடும் தான்...
ஆசிரியர் சார் சரியான எண்ணிக்கையை அறிவார். இதை அறிந்தே இந்த திட்டமிடலை செய்திருப்பார்னு நினைக்கிறேன்....
அந்த 7மே எனக்கு பிடிச்ச நாயகர்கள் தான்.. சோடாவுக்கு வாக்களித்து இருந்தேன், ஆனா ஜானி ஜயிச்சிட்டாரு..ஹூம்.
எல்லோருக்கும் பிடிக்கும்னு நம்பி காத்துள்ளேன்..
மேகி வந்தே ஆகணும்.. ரொம்ப இன்ட்ரஸ்ட் ஆன இடத்தில கதை நிற்கிறது.. க்ளைமாக்ஸ் பாகம் இப்படி இதில் சிக்கும்னு நினைக்கல....
ஆமாங்க மேகி ஒரே ஒரு புத்தகம் தான் அது வந்தே ஆகணும்.
Delete//அதில் அறிவிக்கப்பட்ட இரட்டை வேட்டையர்& ஜான் மாஸ்டரை V comicsக்கு மாற்றிட்டோ அல்லது ஈரோடு ஸ்பெலுக்கு நகர்த்திட்டோ...இதுவரை வெறும் அறிவிப்புகளாக இருந்து வரும் ரூட்666, கடல் கொள்ளையர்ஸ், சிங்கிஸ்ஷாட் கமர்சியல்கள்களை ட்ரை பண்ணினால் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம்.//
Deleteகிளாசிக் பார்ட்டிகள் தான் விற்பனையில் பிக்சுக்குதே, பிறகு ஏன் இங்கேயும் துண்டை விரிக்க விரித்து வர வேண்டிய புதிய கதைகளை தடுக்க வேண்டும். அல்லது இந்த கிளாசிக் பார்ட்டிகள் இருந்தாலாவது புக்கிங்கில் முன்னேற்றம் வரும் என்பதற்காகவா.
இதில் குழப்பம் என்னவென்றால், நான்கு கதைகளுக்கும் சேர்த்து ஒரே புக்கிங்கா அல்லது தனி தனி புக்கிங்கா. அப்படி தனி தனி புக்கிங் என்றால் இந்த கிளாசிக் பார்ட்டிகள் இங்கேயும் ஒரு புதிய கதைக்கு ஆப்பு வைத்து விடுவார்கள். பிறகு இந்த முயற்சி அர்த்தமற்றதாகி விடும்
திரு@
Deleteக்ளாசிக் பார்டிகளுக்கான தனிசந்தானு ஒண்ணு இப்பலாம் இல்லை.... மெயின்ல இதை நுழைக்க இயலாது...சோ, இந்த
"என் சந்தா என் உரிமை" --ல செலக்ட் பண்ணிகிட இது இடம்பெற்றுள்ளதுனு நினைக்கிறேன்....
அத்தோடு ஆப்பரிக்க சதி, ஜான் மாஸ்டர்லாம் பெரும்பாலோரிடம் இல்லை, சோ அதுவும் புதுசு மாதிரிதான்😉
குழப்பமே இல்லை.. தெளிவான திட்டமிடல்....
8க்கும் வாக்களிக்கிறோம்..
டாப் 4ல வரும் 4க்கும் இத்தனை தொகை+ கொரியர் னு ஒரே அறிவிப்புல புக்கிங் செய்யப்படும், இந்தாண்டு "மே மாச கோடை விழா" ஸ்டைலில்.. இது ஒரு மினி கோடை விழானு வைச்சிகிடலாம்....
சிங்கிள் ஷாட் கமர்ஷியல்களாக இருந்து இருந்தா கூடுதல் வலுவாக இருந்து இருக்க கூடும்...!!
ஆசிரியர் இத்தனை நாட்களாக ஓவியங்கள் ஆக மாத்திரமே காட்டியுள்ளவைகளில் சிலது வந்திருக்கும்....!!😍😍😍
நண்பரே ; ப்ளூசட்டை மாறர்களாகிடுவதில் தப்பே இல்லை தான் ! ஆனால் ஒரு சர்வதேச ; சர்வமொழி ஜாம்பவான் நம் மத்தியில் அடியெடுத்து வைக்கவிருக்கும் ஒரு மைல்கல்
Deleteநொடியினில் அது பற்றி ரெண்டு வரி எழுதக்கூட பொறுமையின்றி "ஜான் மாஸ்டரை இங்கே போடுவானேன் ?" என்ற விசனங்கள் சற்றே hollow ஆகத் தோன்றவில்லையா ?
எந்தவொரு க்ளாஸும் எப்போதுமே முழுசாய் இருப்பது கடினம் ! Moreso ராமநாதபுரம் மாதிரியான ஊர்களில் !
DeleteBut சதா காலமுமே கண்ணில் தென்படுவது நிறைந்துள்ள பாதியல்ல என்பது தான் வாழ்க்கையின் புதிர்களில் ஒன்று !
கரெக்டா சொன்னிங்க விஜய் . நீங்க சொன்ன single shot வந்த நல்ல இருக்கும்
ReplyDeleteரைட்டு ...சிங்கிள் ஷாட்ஸாக போட்டும் விடலாம் தான் நண்பரே ! ஆனா "ஆல்பா ...சிஸ்கோ ...சோடா .. ப்ளூகோட்ஸ் இத்யாதிகளை எந்த ஆத்திலே கரைச்சுப்புட்டியோ ? " என்ற கேள்வியை அப்போது நீங்களே தானே எழுப்புவீர்கள் ?
DeleteRoute 66 மட்டுமே சுருக்கமான printrun-ல் ரூ.800 அல்லது கூடுதலாகிடும் சார் !
DeleteAnd நடப்பாண்டின் லட்சியமே நெடும் தொடர்களை படிக்க நம்மவர்கள் திணறுவதால் crisper reading வழங்கிட முற்படுவது தான் எனும் போது -:5 அத்தியாயங்களும், 275 பக்கங்களும் கொண்டதொரு தொடரை கிட்டத்தட்ட அரை டஜன் இதழ்களின் விலையில் அறிவிப்பதில் என்ன லாஜிக் இருக்க முடியும் ?
உங்களுடைய நிலைமை எனக்கும் புரிகிறது. இந்த வருடம் நான் வாங்கிய புத்தகங்களை வேலை இப்பொழுது காரணமாக ஜூலை வரை உடைக்கவே இல்லை. ஜூலைக்குப் பின்னர் அதற்கென அவகாசம் ஏற்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வருடம் முடிவதற்குள் அனைத்து புத்தகங்களையும் படித்து விடுவேன் என்பது திண்ணம். இப்பொழுதும் கூட நான் யுனிவர்சல் சந்தா தான் கட்டப் போகிறேன். எப்போதும் எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு பிடிக்குதோ பிடிக்காமல் போகிறதோ அனைத்து இதழ்களையும் வாங்கி வைத்துக் கொள்வேன். வரும் 40 இதழ்களில் ஒரு இதழ் பிடிக்காமல் இருந்தால் என்ன. இது என் அளவில் ஆன ஒப்பீடு மட்டுமே. ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது என்பதும் உண்மையே. அதற்காக உன்னிடம் பணம் இருக்கிறது நீ வாங்கலாம் எங்களால் வாங்க முடியுமா என்று சிலர் கேட்கலாம்.போன அட்டவணை பதிவிலேயே நான் கேட்டிருந்தேன் ஆசிரியரிடம் இந்த வருடமும் சந்தாவை இரண்டு தவணையாக கட்ட முடியுமா என்று. இருப்பதோ சிறு வட்டம். இந்நிலையில் புத்தகங்களும் சுருங்கிக் கொண்டே வந்தால் ஒரு கட்டத்தில் காமிக்ஸ் என்பது இருக்குமா என்கிற நிலையில் தள்ளி விடுமோ என்பது அச்சமாக உள்ளது. ஆகவே ஆசிரியரின் இந்த முடிவு வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
ReplyDeleteஉங்களில் நிலையையும், கருத்தையும் உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டீர்கள் சார் பாராட்டுக்கள்.
Delete2024 சந்தா கட்ட தங்களின் முடிவிற்கு வாழ்த்துக்கள் சார்
என் போன்ற கிராபிக் நாவல் மற்றும் கார்ட்டூன்
ReplyDeleteகதைகளை விரும்பும் சிறு அணிக்கு ஏமாற்றமாகவே இருக்கிறது.
2024 இல் நடுவில் புனித மானிடோ கை கொடுப்பார் சார்.
Deleteநண்பரே... இல்லாததைத் தேடுவதில் இருப்பதை ரசிக்க மறப்பதும் இயல்பு தானோ ?
Deleteஇதோ - 128 மொழிகளில் கோலோச்சிடும் ஒரு 94 வயது ஜாம்பவான் தமிழுக்கு வரவிருக்கிறார் ! அவரது உரிமைகளுக்கு ஒரு கையையும், ஒரு காலையும் விற்காத குறை தான் ! 51 ஆண்டு அனுபவம் கொண்ட நமக்கு "டின்டின்" என்ற பெயரை உச்சரிக்க நாலு தசாப்தங்கள் பிடித்துள்ளன ! Yet - ஏதேதோ காரணங்களின் பொருட்டு ஏமாற்றம் பற்றியே பேசிட விழைகிறோம் !
நிஜமான ஏமாற்றம் எதுவென்று என்னிடம் கேளுங்கள் நண்பரே - சொல்லுகின்றேன் !
விதி எழுதிய வெள்ளை வரிகள்!
ReplyDeleteலயன் காமிக்ஸ் இல் இருந்து மிக அற்புதமான ஒரு காவியம்.
ரஷ்யா மற்றும் பிரான்ஸ் இடையேயான
உலகப்போர் சமயத்தில் நடந்த கதையாக கதைக்களம்.
இரு வேரு குடும்பங்கள் ரஷ்யா எல்லையை பனி சூழலில் சிரமப்பட்டு கடைக்கும் அந்த குளிர் பிரதேசம்... நம் முதுகுத்தண்டை உறையச்செய்திடும்.
சித்திரங்கள் கருப்பு வெள்ளையில் அதகலப்படுத்தி உள்ளது. இரவில் பின் தொடரும் ஓநாய்கள், வானுயர்ந்த மலைகள், பறந்து விரிந்த பனிப் பாலைவனம்...அதில் மனிதர்களின் காலடித் தடங்கள், Coach வண்டியின் தடங்கள்...மலை குகை..முதலியன... பார்த்து வியந்து
ரசிக்கலாம்.
அந்த பனிப்பிரதேசத்தை 9 பேர் பேரும் கடந்து பிரான்ஸ் சென்று சேர்ந்து விட மாட்டார்களா என்று மனம் பதறிக் கொண்டே இருந்தது..
கதை மெதுவாக நகர்ந்தாலும்…அந்த 9 பேரின் ஜீவ மரணப் போராட்டம் …ஒருவித பதைபதைப்புடனே படிக்க நேர்ந்தது.
இந்த கதை சூழல் GREY, REVENANT போன்ற சில ஆங்கிலப்படங்களை நினைவு படுத்தின.
கதையின் சில பக்கங்களை வசனங்களே இல்லாமல் வெரும் ஓவியங்கள் மூலம் மட்டுமே நகற்றி இருப்பது அழகோ அழகு. (Page No 78, 83,87 89, 90,91, 106, 107, 108 , 110).
கதையின் முடிவு அதிர்ச்சி தந்தாலும்.. மனதை
ஏதோ ஒரு விதத்தில்... பாதித்து விட்டது.. அது தான் இந்த கதையின் வெற்றிக்கு சாட்சி.
இந்த கதை அனைவருக்கும் பிடிக்குமா என்று தெரியவில்லை.ஆனால் அனைவரும் சற்றுப் பொருமையுடன் அமைதியான சூழலில் படித்தால் நிச்சயம் பிடிக்கும்.
எல்லாரும் படிக்க வேண்டிய கதை.
Thanks to Editor Sir for givings us opprtunity to read these kind of wonderful stories. A Tight HUG to Our Dear EDITOR...!!
Regds,
Senthil-Madurai
அருமையான விமர்சனம். கதைக்களம் பற்றிய பின்புலம் ஆசிரியர்" நறுக் 'கென்று கொடுத்திருப்பதால் வாசிப்பு மிகவும் எளிதாகிறது.
Deleteபோர்ச்சூழலில் ரஷ்யாவிலிருந்து தாயகம் நோக்கி ஓடும் பிரெஞ்சு குடும்பத்தினர்க்கு ரஷ்ய வழிகாட்டிகள் மற்றும் பாதுகாப்பாளர்கள் என்பதே லேசான அபஸ்வரமாகப் பட்டது.
கதை மாந்தர்கள் மனதில் ஒட்டுமுன்னே கதை முடிவடைகிறது.
கதை பலகீனமாக கையாளப்பட்டுள்ளது என்பது ஒரு வாசகனாய் தனிப்பட்டஅபிப்பிராயம்.
சித்திரங்கள் அதகளப் படுத்தியுள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இங்கும் முகநூலிலும் பல்வேறு வாசகர்கள் இதனை " மிக அற்புதமான படைப்பாக " கருதி பதிவிட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
நெஞ்சை அள்ளும் ஓவியங்கள் மற்றும் தனித்துவம் உள்ள கதைக்களம் ஆகியவற்றுக்காக இதனை வாங்கி வாசிப்பது ஒரு வேறுபட்ட வாசிப்பனுபவத்தை நல்கும் என்பது உறுதி
செனா ரஷ்ய வழிகாட்டிகள் ....அதனை தெளிவாகவே ஆசிரியர் கூறியுள்ளார்....அவர்களிடம் வேலை செய்தவர்கள்....அதனால் தாங்களும் பாதிப்புக்கு ஆளாகி நேரிடுமோ என அஞ்சுவதாய்..பணத்துக்காக ஆசைப்பட்டு என...நம்பிக்கையான விசுவாசி...ரஷ்ய வழிகாட்டிகள் பாதையை அறிந்தவர்கள்...யாருமே இல்லையென்றும் போது இருப்பவர்களைத்தானே நம்பியாக வேண்டும்...அந்த பைத்தியம் பிடித்த வழிகாட்டியுமே சொல்லாமல் சொல்கிறாரே
Delete//அந்த பனிப்பிரதேசத்தை 9 பேர் பேரும் கடந்து பிரான்ஸ் சென்று சேர்ந்து விட மாட்டார்களா என்று மனம் பதறிக் கொண்டே இருந்தது..//
Deleteஆமாம் சகோ
Good review
Deleteஇந்த தீபாவளி செலவுகளை சமாளித்து வெற்றிகரமாக பண்டிகையை கடந்து சந்தாவுக்குனு ஒரு தொகையை தேத்திட்டம்னா நாமே மாஸ்கோவில இருந்து பாரீஸ்க்கு தப்பி வந்த மாதிரி தான்....
Deleteஎன்ன நான் சொல்றது????🤣🤣🤣🤣🤣🤣
அப்படி வந்துட்டா நாம ஒவ்வொருவருமே ஒரு அத்தனேஸ் தான்🤭🤭🤭
நன்றி நண்பரே ! இதுவொரு சோக முடிவு கொண்ட கதை என்பதோடு செனா அனா சார் சொன்னது போல இன்னமும் சற்றே வீரியமாய்க் கையாளப்பட்டிருக்கலாமோ ? என்ற கேள்வியை என்னுள் எழுப்பிய கதையும் கூட ! அதனால் தான் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பின்பாய் கரை சேர்ந்துள்ளது ! Nevertheless நாம் அடிக்கடி பார்க்க வாய்ப்பில்லா ஒரு களம் எனும் போது அந்த அதகள சித்திரங்களில் ரசிப்பது ஒரு த்ரில் தான் !
DeleteJust now finished supremo special. Only left to read is half of rip kirby
ReplyDeleteSir.. You deserved a medal from தங்க தலைவன் பாசறை....
Deleteஎனக்கு எற்கனவே ஒரு மெடல் குடுத்திருக்காங்க ஸ்லீப்பர் சார் ! எந்தப் பாசறையிலேர்ந்து ? எதுக்குன்னு பண்டிகைக்கு அப்பாலிக்கா சொல்றேன் !
Deleteஅதிகாரி ஆப்கானிஸ்தான் போயி பண்ணின சாகசம் வரலாற்றில் இடம்பெற வேண்டிய ஒன்றே...
ReplyDeleteநான் கழுவி ஊத்துறதுக்காகவது ஒரு தடவை முழுசா படச்சிடுவேன்... ஆனா இது என்னோட சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்னுங்க... இன்னும் முப்பது பக்கம் முக்கிட்டு இருக்கு...
அதிகாரியும் ..ஆப்கானிஸ்தானும்..
வடகறியும்... கேசரியும் போல சில வைத்தியர்களுக்கே பிடித்த காம்பினேசன்..
ஆசிரியர் சமூகத்துக்குமே ஒரு வேண்டுகோள்... அதிகாரியை மெக்சிகோ, கனடா தாண்டி வேற எங்கியும் அனுப்பாதீங்க...
கார்சர் இல்லாத அதிகாரி கதைகளை இனம் காண ஒரு எக்ச்ட்றா ஸ்டிக்கர் ஒன்றையும் ஒட்டுமாறு ஆசிரியர் சமூகத்தை வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்..
Argentina boss
Deleteடெக்ஸ்ட் கலாய்க்கிற மாதிரி புகழ்றாருங்க உங்களுக்கு புரியல.
Deleteரம்மி சார் நீங்க இன்னும் ஒன்னு சொல்லியே ஆகணும் நிறைய பேரு டெக்ஸ உங்கள மாதிரி அதிகாரியின் நிறைய இடத்துல சொல்றாங்க கவனிச்சீங்களா.
Deleteஇந்த ரம்மி மாதிரி ஸ்லீப்பர்ஸ் இருக்குற வரை மாசம் ஒரு டெக்ஸ்க்கு பஞ்சம் இல்லைன்னேன்....😻
Deleteசிக்ஸர் ஸ்பெஷல் முன் அட்டையை விட பின் அட்டை சூப்பராக இருக்கிறது
ReplyDeleteதீபாவளி மலர் கூடவே சேர்த்து நான் வாங்காத சில டெக்ஸ் கதைகளுக்கும் ஆர்டர் போட்டாச்சு.
ReplyDeleteவாவ் சூப்பர்....ஹேப்பி ரீடிங் ஜி.💐
DeleteSuper
Deleteவந்தார் வென்றார் உண்மையில் டெஸ்ட் வில்லர் வந்தார் வென்றார் இது தனி இதழாக வந்திருந்தால் இன்னும் ஸ்பெஷலாகவே இருந்திருக்கும்.
DeleteSupremo special வாசித்து முடித்துவிட்டேன்.
ReplyDeleteபோடு வெடியை.... ஒவ்வொன்றும் ஒவ்வொரு அதிர்வேட்டுகள்.....!!!!
Deleteஅடுத்த அதிரடிகளுக்கு தயார் ஆகிட்டீங்க போல..
Good to hear this
Delete// தீபாவளி இதழ்கள் பைண்டிங்கில் இருக்க, தொடரவுள்ள திங்களுக்கு despatch இருந்திடும் ! //
ReplyDeleteமகிழ்ச்சி சார்...
This comment has been removed by the author.
ReplyDeleteபூதம் காத்த புதையல்.
ReplyDeleteபூதத்தை அதாவது இருந்த ராணுவ வீரரை புதைச்சாச்சு.
அவர் புதைத்து வைத்த புதையல் என்ன ஆச்சு. கதையின் முடிவில் அது தெளிவாக இல்லையே. ஒரிஜினல் ஏயிலும் அப்படியா அல்லது ஆசிரியர் அந்தப் பக்கத்தை தவறவிட்டு விட்டாரா
ஏனுங்க சார் ...இஸ்கூலிலே லப்பரை தவற விடற வயசா எனக்கு ?
Deleteலொடுக்கு பாண்டி டயலாக் தான் நினைவுக்கு வருது !
வந்தார் வென்றார் கிராபிக் நாவல் டெக்ஸ் வில்லர் ஆனால் அதிரடிக்கும் குறைச்சல் இல்லை.
ReplyDeleteஎல்லாம் கலந்து கட்டி அடிக்கும் ஒரு ஸ்பெஷல்.