Powered By Blogger

Saturday, November 11, 2023

தீ = தீ = தீபாவளி !

 நண்பர்களே,

வணக்கம். போன பதிவின் தலைப்பை ஒரு ரைமிங்குக்காக "தீ" என்று வைத்தேன் ; ஆனால் தொடர்ந்த இந்த வாரத்தின் தினங்கள் ஒவ்வொன்றுமே "தீயாய்" ஓட்டமெடுத்துள்ளன ! For starters - எங்களின் பட்டாசு நகரின் நிலவரம் பற்றி : 

ஊருக்குள் பெருசாய் பரபரப்போ ; வேகங்களோ பஜாரில் கண்ணில்படக் காணோம் ! In fact வெள்ளி மாலையில் கூட மக்கள் 'தேமே' என்று மாமூல் வேலைகளில் ஈடுபட்டிருப்பது போலவே தென்பட்டது ! ஆனால்...ஆனால்...ஊருக்கு வெளியே ; ஒவ்வொரு திக்கின் எல்லைகளிலும் அதகளமாய் கார்களின் அணிவகுப்பு ! 'இன்னா மேட்டரு..? ஆரேனும் கட்சி தலீவர் வந்திருக்கிறாரா ?' என்று பார்த்தால் அத்தனையுமே வெளியூர்களிலிருந்து ; வெளிமாநிலங்களில் இருந்து பட்டாசு வாங்க வந்திருந்த வண்டிகள் ! என்ன விலைக்கும் ஒரேயொரு gift box கூட லேது எனும் அளவிற்கு - ஊரைச் சுற்றிக் குவிந்து கிடக்கும் அத்தனை பட்டாசுக் கடைகளிலும் மொத்தமாய் சரக்கு காலி ! போன மாசம் வரைக்கும் "வியாபாரமே இல்ல ; ஈயோட்டுறோம் !" என்று பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டிருந்த பட்டாசார்கள் இன்று குவியும் கரென்சிக்களை எண்ண நேரமின்றி, மூட்டைகளாய்க் கட்டி, கிட்டங்கியில் போட்டுவிட்டு பண்டிகை முடிஞ்சா பிற்பாடு சாவகாசமாய் எண்ணிக் கொள்ளலாமென   குமிக்க ஆரம்பித்துள்ளனர் ! நம்புங்கள் guys - இது நிஜம் ! 'அனல் பறக்கும் வியாபாரம்' என்றால் இது தானுங்கோ அது !!

சரி, நமக்கெல்லாம் அந்த ரேஞ்சிலான வியாபாரங்கள் கனவில் கூட சாத்தியமல்ல எனும் போது, நம்மளவிற்கு என்ன நிலவரமென்று பார்க்கலாம் என்றபடிக்கே செவ்வாயன்று ஆபீசுக்குப் போன போதே பேக்கிங் செம விறுவிறுப்பாய் ஓடிக்கொண்டிருந்தது ! ஒரு பக்கம் செல்போன்கள் கூப்பாடு போட்டுக்கொண்டே இருக்க, அதன் மத்தியினில் நம்மவர்கள் பிரவுன் டேப்பை போட்டு பெட்டிகளுக்கு பேண்டேஜ் போட்டுக் கொண்டிருந்தனர் ! இப்போதெல்லாம் ஒரு சிறு எண்ணிக்கை தவிர்த்த பாக்கியெல்லாமே Professional கூரியர் தான் எனும் போது அவர்களே வண்டியனுப்பி பார்சல்களை புக்கிங் செய்திட எடுத்துப் போய்விடுகிறார்கள் ! And மாலையில் 'டாணென்று' கம்பியூட்டரில் டைப் செய்த ரசீதுகளை ரெடி செய்து, மறு நாள் காலையில் கையில் திணித்து விடுகிறார்கள் ! So 'தல' + 'தளபதி' உங்களை நோக்கிப் படையெடுப்பதை ரசித்த கையோடு ஆன்லைன் லிஸ்டிங்ஸ் போடச் சொல்லி விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன் ! தொடர்ந்த 3 தினங்கள் தான் நான் சொன்ன "தீ" !! 

புதன் காலையில் ஆபீசுக்கு வந்த போதே நம்மாட்கள் கிறுகிறுத்து நிற்பதைக் காண முடிந்தது ! அப்போவே லைட்டாக யூகிக்க முடிந்தது - 'தல' + 'தளபதி' மேஜிக் ஒர்க் பண்ண ஆரம்பித்திருக்குமோ - என்று ! Oh yes அதுவே தான் நிகழ்ந்திருந்தது ! ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தோரும் சரி ; G Pay-ல் பணம் அனுப்பிவிட்டு ஆர்டர் செய்திருந்தோரும் சரி, புதன், வியாழன் & வெள்ளியில் அடித்துள்ளதெல்லாமே ரோஹித் ஷர்மா பாணியிலான சிக்ஸர்கள் ! Uffffff .....எனக்கு ஞாபகமிருக்க, "இரத்தப்படலம்" - முதல் வண்ணத்தொகுப்பு வெளியான வேளையிலும் சரி, டெக்சின் டைனமைட் ஸ்பெஷல் வெளியான தருணத்திலும் சரி, இது போலான கொலை மாஸ் வேகத்தினைப் பார்த்திருக்கிறேன் ! இந்த 3 நாட்களில் பார்க்கச் சாத்தியப்பட்டிருப்பது அவற்றுக்கு செம tough தந்திடும் அதிரடிகளை !! புதன் மாலை மட்டுமே கிட்டத்தட்ட அறுபது கூரியர்கள் & தொடர்ந்த 2 தினங்களுமே அதற்கு இணையான நம்பர்ஸ் ! கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளிருக்கும் என்று நினைக்கிறேன் - "என் பெயர் டைகர்" வெளியாகி ! அதன் பின்பாய் நூறு மாத சுமாருக்கு துயில் பயின்று கொண்டிருந்த புலியார் இந்த தீபாவளிக்குக் களமிறங்குவதே இந்த அதிரடி உற்சாகத்தின் பின்னணி என்பது புரியாதில்லை ! போன வருஷம் அட்டவணையினில் இதனை நுழைக்கத் திட்டமிட்ட வேளையே எனக்கு கலர் கலரான கனவுகள் இருந்தன தான் - இரு ஜாம்பவான்கள் ஒன்றிணையும் இந்தப் பண்டிகைத் தருணம் களை காட்டினாள் எவ்விதமிருக்குமென்று ! And அந்தக் கனவு கச்சிதமாய் மெய்ப்பட - நமது காமிக்ஸ் களம் on fire !!

இது போதாதென - ஒரு மெகா ஸ்கூலிலிருந்து வன்மேற்கின் அத்தியாயம் 1 to 4 வரையிலான நான்கு இதழ்களிலும் தலா 100 புக்ஸ் வீதம், 400 பிரதிகள் வேண்டுமென்று ஆர்டர் தந்துள்ளனர் ! அவர்களது பள்ளியில் இந்த 4 பாக கதைச்சுற்றை மாணவியருக்குப் பரிசாய் வழங்கிடவுள்ளாராம் ! அந்தப் பள்ளியின் தாளாளர் நமது அதிதீவிர வாசகர் என்ற முறையில் பள்ளி நூலகத்துக்கு நமது புக்ஸ்களை ரெகுலராய் தருவிப்பது மாத்திரமன்றி, அவற்றை மாணவியர் மத்தியில் ஒரு பழக்கமாக்கிட தன்னால் இயன்ற சகலத்தையும் செய்து வருகிறார் ! சமீபமாய் அவர்களது நூலகப் பொறுப்பிலிருக்கும் டீச்சருடனான உரையாடலை என்னுடன் பகிர்ந்திருந்தார் - 7th & 8th STD மாணவியருக்கு, நமது புக்ஸ்களில் பிடித்தது எவை ? புரியாத வார்த்தைகள் எவை ? என்ற ரீதியில் ! மெய்யாலுமே மிரண்டு விட்டேன் - ஓசையின்றி அங்கு அரங்கேறிக் கொண்டிருக்கும் ஒரு காமிக்ஸ் வாசிப்பு movement-ஐ கண்டு !! இன்று அவர் விதைக்கும் விதைகள் விருட்சமாகிடும் நாளில் - வானமே எல்லையாகிடும் இந்தச் சித்திரக்கதைச் சோலைக்கு ! And surprise.....துவக்கத்தில் கொஞ்சமாய் நமது தமிழை உள்வாங்கிட மாணவியர் திணறினாலும், இப்போதெல்லாம் சுலபமாய் வெளுத்து வாங்குகிறார்களாம் ! And மாணவியரின் கைகளில் மிளிர்வதெல்லாமே கார்ட்டூன்கள் என்பது எனது கவனத்துக்குத் தப்பவில்லை ! So ....so .... கார்ட்டூன்களில் வறட்சி என்ற பொதுவான புகாருக்கு ஒரு தீர்வாகவும், அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு காமிக்ஸ் நுழைவாயிலாக இருந்திடவும் -  ஆன்லைன் புத்தக விழாவினில் 2 கார்ட்டூன் ஸ்லாட்ஸ் உறுதி பண்ணிடுவோமா folks ? இன்ன பிற நாயகர்களை கண்டால் தானே நீங்கள் ஓட்டமெடுக்கிறீர்கள் ? உங்களின் ஆதர்ஷ ஒல்லியார் லக்கி லூக்கையே அந்த 2 ஸ்லாட்களிலும் நுழைத்து விட்டால் ? புதுக் கதைகளோடு ? What say guys ?  

Fire சேதிகளில் அடுத்ததாக - டின்டின் பற்றி ! ஒரு வழியாய் படைப்பாளிகளின் ஒப்புதல் கிட்டியாச்சூ - நமது தமிழ் பதிப்பின் முதல் இதழுக்கு ! இன்னமும் தயாரிப்பு சார்ந்த சில பல திருத்தங்களை செய்து வருகிறோம் ! So எப்படியேனும் ஜனவரியில், சென்னைப் புத்தக விழாவின் தருணத்துக்கு "திபெத்தில் டின்டின்" தயாராகி விடுவாரென்ற நம்பிக்கை துளிர் விட துவங்கிவிட்டுள்ளது ! இப்போதெல்லாம் கண்ணில்படும் கதைகளையெல்லாம் போட்டுத் தாக்கி தெறிக்க விட்டு வருவதால் - "ஆங்...வரட்டுமே..பாத்துக்கலாம் !!" என்ற ஒரு ஜாலி மூட் உங்களிடம் குடியிருப்பதாக எனக்கு சமீப நாட்களில் தெரிகிறது ! But எனக்கோ இந்த ஒற்றைத் தொடரானது ஒரு ஆயுட்கால பிரயத்தனமாய் தென்படுகிறது ! 1985-ல் கொயந்த புள்ளையாட்டம் டின்டினுக்கு உரிமைகள் கோரிப் போய் பல்பு வாங்கிய நாட்களிலேயே இந்த நாயகர் ஒரு ஜாம்பவான் ; அதற்குப் பின்பான இந்த சுமார் 40 ஆண்டுகளில் இன்னமும் அசுர உயரங்களுக்கு அவர் வளர்ந்திருப்பது கண்கூடு ! அவரை தமிழ் பேசச் செய்திட ஆகியுள்ள முயற்சிகளை பற்றியோ ; செலவுகளைப் பற்றியோ, அவரது தமிழாக்கத்துக்கு ஒப்புதல் பெற்றிட அடித்திருக்கும் குரங்கு பல்டிகளைப் பற்றியோ பேச  ஆரம்பித்தால், பொங்கல் நெருங்கி விடக்கூடும் ! So - 'வெள்ளித்திரையில் மீதத்தைக் காண்க' என்பதோடு விட்டு விடலாமே ? And yes - அச்சுக்குச் செல்லும் முன்பாய் previews எப்போதும் போல இருந்திடும் !

Moving on, 2024 அட்டவணையினில் கிராபிக் நாவல் சந்தாவின் ஒற்றை இதழ் குறித்தும், MYOMS சந்தாவின் 4 இதழ்களின் தேர்வினைப் பொறுத்தவரை ஒரு மாதிரியாய் ரிஸல்ட்ஸ் தெரியத் துவங்கி வருகின்றன ! அதன்படி கி.நா.வில் எந்த இதழ் ? என்று கிட்டத்தட்ட pick செய்தாச்சு ! And அந்த 4 இதழ்களின் தேர்வில் ஒரு பாதி நான் எதிர்பார்த்தது போலவும், மறு பாதி சற்றே வியப்பூட்டும் விதத்திலும் உள்ளது ! 

இன்னமும் வோட்டுப் போட்டிருகாதோரின் வசதிக்காக இதோ லிங்க் : https://strawpoll.com/e7ZJGKeK5y3

கடைசி நிமிஷ ஷாப்பிங்குக்கு நீங்க கிளம்பும் முன்பாய், எனக்கு இந்தாண்டு பண்டிகை கிடையாதென்பதால் சிஸ்கோவுக்குள் நான் மூழ்கிடும் முன்பாய் - another fire தகவல் !

  • ஒரு வன்மேற்குக் களம் !! 
  • அழகானதொரு பெண்மணியே இதனில் lead character ! 
  • யாரைத் தேடுகிறாள் ? எதற்குத் தேடுகிறாள் ? என்ற கேள்வியோடு நாம் காத்திருக்க, 5 வெவ்வேறு திக்குகளில் பயணமாகிறாள் !
  • ஒவ்வொரு திக்கின் பயணமும் ஒரு அத்தியாயம் !
  • ஒரே கதை - ஆனால் 5 ஆண்டுகளில் உருவாகியுள்ளது !
  • நாம் அத்தனை காலமெல்லாம் காத்திருக்காது - மாதம்தோறும் ஒன்று வீதம் 5 மாதங்களில் போட்டுத் தாக்கிடுவோமா - 2024-ன் பிற்பாதியில் ?
  • இதோ - ஒற்றை பக்க ட்ரெய்லர் :  

Bye all....உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! பட்டாசுகளோடு, பலகாரங்களோடு, புது துணிகளோடு, நம்ம புது புக்ஸையும் சேர்த்துக் கொள்ளுங்கள் இந்தக் கொண்டாட்டத்தில் ! Safe Diwali all !! See you around !!

179 comments:

  1. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே 🙏

    ReplyDelete
  3. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎆🎇

    ReplyDelete
  4. ஒரே புத்தகமா போட்றுங்க சார் :) இப்படிக்கு ஒரு குண்டு புக் காதலன்.. வன்மேற்கின் அத்தியாயம் முதல் சுற்று போல தான் இந்த கதை அத்தியாயங்களும் பிரிக்கப்பட்டிருக்குமென்றால், மாதா மாதமும் ஓக்கே தாங்க சார்.

    ReplyDelete
  5. காமிக்ஸ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  7. கிட் ஆர்டினுக்கும் ஒரு கூடுதல் ஸ்லாட்.

    அப்படியே லக்கி & கிட் ஆர்டின் ஒரே புக்காய் வெளி வந்தால் ஹாப்பி அண்ணாச்சி 🤩😁

    ReplyDelete
  8. லயன் தீபாவளி மலர் டெக்ஸ் சிக்ஸர் ஸ்பெஷல் அறிவிச்சது ஹார்ட் கவர். ஆனா வந்துருக்குறது பேப்பர் பேக்.என்ன ஆச்சு எடி சார்.?

    ReplyDelete
    Replies
    1. எல்லாவற்றையும் பேசும் நண்பர்கள் 'இதை பற்றி ஏன் பேசவில்லை என்பது!! ஏன் என்ற??? கேள்வி

      Delete
  9. 1. லக்கி லூக்: லட்டு…அதுவும் ரெண்டு லட்டு. திங்க ஆசையான்னு கேள்வி வேற கேக்கறாங்களே? போட்டுத் தள்ளுங்க😍😍😍😍

    2. அழகியின் தேடல்: பெண் பாவம் பொல்லாது. தனியாத் தேட விட்ட நல்லாருக்காது. நாங்களும்
    கூட சேந்து தேட ரெடி.

    ReplyDelete
  10. "திபெத்தில் டின்டின்"

    கையிலேந்தும் நாளையெண்ணி ஆவலுடன் waiting...

    😍🌹🔥❤️

    ReplyDelete
  11. // லக்கி லூக்கையே அந்த 2 ஸ்லாட்களிலும் நுழைத்து விட்டால் ? புதுக் கதைகளோடு ? //
    டன் சார்...

    ReplyDelete
  12. // மாதம்தோறும் ஒன்று வீதம் 5 மாதங்களில் போட்டுத் தாக்கிடுவோமா - 2024-ன் பிற்பாதியில் ? //
    தாராளமாக...

    ReplyDelete
  13. // ஜனவரியில், சென்னைப் புத்தக விழாவின் தருணத்துக்கு "திபெத்தில் டின்டின்" தயாராகி விடுவாரென்ற நம்பிக்கை துளிர் விட துவங்கிவிட்டுள்ளது //
    மகிழ்ச்சி...

    ReplyDelete
  14. லக்கி லூக் வருக வருக

    ReplyDelete
  15. //. மாணவியரின் கைகளில் மிளிர்வதெல்லாமே கார்ட்டூன்கள் என்பது எனது கவனத்துக்குத் தப்பவில்லை //

    Happy. Super news

    ReplyDelete
    Replies
    1. 🥳🥳🥳🥳🥳சிரிப்பே சிறப்பு 🥳🥳🥳🥳🥳

      Delete
  16. உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்...
    தீபாவளி எனக்கில்லை என்ற உங்கள் வார்த்தைகளில் தொனித்த வருத்தம் வருத்துகிறது தான்...
    அலுவலக பணியாளர்கள் யாவருக்கும் நெஞ்சார்ந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. உள்ளேன் அய்யா 😍🥰

    ReplyDelete
  18. //. ஆன்லைன் புத்தக விழாவினில் 2 கார்ட்டூன் ஸ்லாட்ஸ் உறுதி பண்ணிடுவோமா folks ? இன்ன பிற நாயகர்களை கண்டால் தானே நீங்கள் ஓட்டமெடுக்கிறீர்கள் ? உங்களின் ஆதர்ஷ ஒல்லியார் லக்கி லூக்கையே அந்த 2 ஸ்லாட்களிலும் நுழைத்து விட்டால் ? புதுக் கதைகளோடு ? //

    Athey athey. Please do sir. I am happy.

    ReplyDelete
  19. Always yes for wild west. Bring it on boss!

    ReplyDelete
  20. வாவ்... மகிழ்ச்சியான பதிவு சார்...
    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும்,ஊழிய நண்பர்களுக்கும், காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ❤️🔥❤️

    அருமையான பதிவுகளாக தருகிறீர்கள்.
    குழந்தைகள் மத்தியில் காமிக்ஸ் வாசிப்பு என்பது மட்டற்ற மகிழ்வான விசியம்.
    நமக்கு பின் அடுத்த தலைமுறை, "காமிக்ஸை விரும்பும் தலைமுறையாக உருவாக வேண்டும்" என்பதே ஒவ்வொரு காமிக்ஸ் வாசகர்களின் எண்ணமும், அதுக்கு ஊன்றுகோலாக இதுபோன்ற ஆசிரியர்கள் இருப்பது நம்பிக்கையை தருகிறது.

    வன்மேற்கு களத்தின் புதிய அறிமுகமே பட்டாசாய் வெடிக்கிறது. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    மீண்டும் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் ❤️🔥❤️...

    ReplyDelete
  21. // மாதம்தோறும் ஒன்று வீதம் 5 மாதங்களில் போட்டுத் தாக்கிடுவோமா - 2024-ன் பிற்பாதியில் ? //

    Yes sir.

    ReplyDelete
  22. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. வணக்கம் ஆசிரியர் சார்.

    ReplyDelete
  24. வணக்கம் காமிக்ஸ் காதலர்களே.

    ReplyDelete
  25. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  26. சூப்பர் ஆசிரியரே
    நான் ஸ்கூல் படிக்கும் போது இந்த மாதிரி காமிக்ஸ் புக்ஸ் கிடைச்சிருந்தா நல்லா இருக்கும்னு தோன்றிற்று

    மிக்க மகிழ்ச்சி
    அதிலும் கார்டூன்ஸ் அருமை
    ஏதேனும் விழாக்களில் கார்டூன்ஸ் ப்ளீஸ்

    ReplyDelete
  27. வன்மேற்கின் களம் பெண்மணி லீட் கதாபாத்திரம்
    கண்டிப்பாக வேண்டும் ஆசிரியரே

    ReplyDelete
  28. கண்ணா லட்டு தின்ன ஆசையா ?!

    கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா ?!

    கசக்குமா என்ன ?

    லக்கி லூக்கைப் போட்டுத் தாக்குங்கள் சார் !!!

    ReplyDelete
  29. வன்மேற்குக் களம் ....பெண் ஹீரோ. நீங்க கேட்கனுமாங்க சார் ?
    இந்த மாதிரி அதிரடிகளைத் தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம் சார்.

    ReplyDelete
  30. கார்டூனில் ஒரு ஸ்லாட், சுஸ்கி விஸ்கி ப்ளீஸ் சார்

    ReplyDelete
  31. உங்கள் அதிரடிகளை வரவேற்கிறோம்

    ReplyDelete
  32. ##நாம் அத்தனை காலமெல்லாம் காத்திருக்காது - மாதம்தோறும் ஒன்று வீதம் 5 மாதங்களில் போட்டுத் தாக்கிடுவோமா - 2024-ன் பிற்பாதியில் ?##
    Online அல்லது ஏதேனும் ஒருபுத்தக திருவிழாவில் ஒரே குண்டு இதழாக வந்தால் சிறப்புமாக இருக்கும் சார் 👍

    ReplyDelete
  33. லயன் முத்து V காமிக்ஸ் என 2024ன் அனைத்துச் சந்தாவில் இணைய விரும்புகின்றேன் சார். வழக்கம் போல் 3 தவணை தந்து உதவ வேண்டுகின்றேன் சார். விரைவில் முதல் தவணையை அனுப்புகின்றேன் சார். நன்றி சார்.

    ReplyDelete
  34. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். வாழ்க வளமுடன்🎆🎆🎇🎇🧨🧨🧨🧨🧨🧨🧨🎆🎆🎇🎇🎇🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨

    ReplyDelete
  35. லயன் முத்து+V காமிக்ஸ் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சீனியர் எடிட்டர் அவர்களுக்கும் மற்றும் என் அன்புக்குரிய நண்பர்கள் அனைவருக்கும் இதய கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💥💥💥💥

    ReplyDelete
  36. அன்பு லயன் காமிக்ஸ் ஆசிரியர் ஊழியர்கள் நம் இனிய வாசகர்கள் அனைவர்க்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. காமிக்ஸ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்......🎆🎇🎆🎇🎆🎇🎆🎇

    ReplyDelete
  38. வணக்கம் நண்பர்களே!

    அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
    Replies
    1. //ஆன்லைன் புத்தக விழாவினில் 2 கார்ட்டூன் ஸ்லாட்ஸ் உறுதி பண்ணிடுவோமா folks ?//

      அட்றா சக்கை!!

      Delete
    2. //மாதம்தோறும் ஒன்று வீதம் 5 மாதங்களில் போட்டுத் தாக்கிடுவோமா - 2024-ன் பிற்பாதியில் ?//

      கண்ணா 5 லட்டு தின்ன ஆசையா?

      அந்த 5 லட்டையும் ஒன்னா தின்ன பேராசைதான் சார்!!

      Delete
  39. Lady western ok

    Lucky Luke for book fair festival, double ok

    ReplyDelete
  40. லக்கி லூக் இரண்டு புதுக் கதைகள் .மாணவியர் புதிதாக படிக்க ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில் அவர்களை கவரும் வகையாக கூடவே (அடிதடி ஜேன் part 2 ..பேய் நகரம் மறு பதிப்பும்) வெளியிட முயற்சிக்கலாம் சார்.கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  41. வன்மேற்கின் இந்தக்கதை வெட்டியான் ஸ்டெர்ன் போல ஒரு வித்தியாசமான வாசிப்பு உலகத்திற்கு அழைத்து செல்லும் போல தோன்றுகிறது. அவசியம் வேண்டும் சார் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  42. அந்த கதையை ஒன்னா போட்டுருங்க sir.. ❤️👍🙏

    ReplyDelete
  43. குற்றத்தின் குரல் :
    நல்ல கதைக் களம்தான்,ஆனா சுமாரான ஓவியங்களும்,எஃபெக்ட் இல்லாத மொழிபெயர்ப்பும்,வீரியம் கூட்ட இயலாத வசனங்களும் குற்றத்தின் குரலை ரொம்பவே சுணக்கமாக ஒலிக்க வைத்து விட்டது...
    வசனங்களில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்,
    "ஷெரீப் டெபுடியிடம் சொல்லும் ஒரு டயலாக்கில் கழுத்தைத் திருகிக் காக்கைகளுக்கு இரையாக்கி விடுவேன்னு சொல்ற வார்த்தைகள் சரியா பொருந்தலையோன்னு தோணுது,"காக்கை" என்ற வார்த்தைக்குப் பதில் "கழுகு"ன்னு சொல்லி இருந்தால் அது கனகச்சிதமா பொருந்தி இருக்கும்"...

    ReplyDelete
  44. மோதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் :
    பயணமும்,தேடலும்,
    இடப்பெயர்வும் இக்கதைக்கு பெரும்பலம்,அடுத்து என்ன எனும் சுவாரஸ்ய கேள்வியை நோக்கி கதையின் நகர்வு அமைந்துள்ளது சிறப்பு...
    ப்ரெட்,ஸாகாகாவீயின் கூட்டணி ஒவ்வொரு நகர்விலும் பிரச்சனைகளை சந்திப்பினும் திறம்பட எதிர்கொண்டு போய்க் கொண்டே இருப்பது மகிழ்ச்சி...
    பயண நிகழ்வில் திடீர் கேரக்டர்களாக வரும் க்ரொகெட்,பெயரில்லா திருடனும் கதை நகர்வுக்கு வலுவூட்டுகின்றனர்...
    அமெரிக்கர்களை தென்திசையில் குடியேற்றம் செய்யும் ஆஸ்டின் கதாபாத்திரத்தின் தன்மை கூட நம் புருவத்தை உயர்த்த வைக்கிறது,அப்பாத்திரம் கதைக்கான இடைச்செருகலா அல்லது நிதர்சன பாத்திரத்தை அடிப்படையாக கொண்ட வார்ப்பா எனும் கேள்வி எழுகிறது ?!
    வசனங்கள் நேர்த்தி,
    கதையின் மையத்தோடு ஆழப் பொருந்திப் போகிறது...
    பாத்திரங்களின் மையத் தன்மையை புரிந்து கொள்ள நிறைய வசனங்கள் உதவுகின்றன...
    கமான்சேக்களிடம் இருந்து தப்பிக்க ப்ரெட் தீட்டும் திட்டங்களும்,வகுக்கும் உத்திகளும் சிறப்பு...
    இறுதியில் நடக்கும் தாக்குதலில் வரும் திருப்புமுனை எதிர்பாராதது....
    மொத்தத்தில் நிறைவான,மகிழ்வான வாசிப்பு...
    எமது மதிப்பெண்கள்-10/10.

    ReplyDelete
  45. இரண்டு கார்ட்டூன் என்றால் ஏன் இரண்டுமே லக்கி sir ?? .. ஒரு கிட் ஆர்டின் ட்ரை பண்ணலாமே .. Tiger ன் comebackற்கு இந்த impact என்றால் அடுத்த வருடத்தில் "தங்க கல்லறை" hard bound , maxi with original dialogues கா.க .கா மாதிரி வேண்டும் சார் .. இளமையில் கொல் மீதி பாகங்களும் போடுங்கள் சார் ..

    ReplyDelete
  46. தி டெக்ஸ் சிக்ஸர் ஸ்பெஷல் :
    என்னவொரு அட்டகாசமான களம்,இதுவரை களமாடிய இளம் டெக்ஸ் களங்கள் கமர்ஷியலில் மட்டுமே பெரும்பாலும் நடை போட்டிருப்பினும் தி சிக்ஸர் ஸ்பெஷல் அதிலிருந்து மாறுபட்டு வரலாறும் & கமர்ஷியலுமாய் கலந்து கட்டி அடித்துள்ளது...
    டெக்ஸ் கதை நெடுகிலும் சோதனைகளையே சந்திக்கிறார்,கம்பி மேல் நடக்கும் வித்தையாய் எப்போதும் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டே உள்ளது,எனினும் பின்வாங்காமல் சோதனைகளை சாதனைகளாக ஆக்கிக் காட்டும் வித்தை டெக்ஸ் பாத்திரத்திற்கு வாய்க்குமாறு கதாசிரியர்கள் கதைக் களத்தை அமைத்திருப்பது சிறப்பு...
    இனத்தைக் காட்டிக் கொடுக்கும் லூ,முதுகில் குத்தும் இராணுவ அதிகாரியும்,தற்பெருமை பேசித் திரியும் அகந்தைவாதி ஃபேர்ஃபேக்ஸ்,டெக்ஸை நிழலாய் பின் தொடரும் பிடிவாதக்கார போலீஸ் கார்ஸ்வெல்,நற்குணம் படைத்த அதிகாரியாய் கேப்டன் பெய்னே,செமினோல் வில்சன்,செமினோல்கள் தலைவர் ஹோலாடா,டெக்ஸின் தோழியாய் வரும் ஜோ,இக்கட்டான தருணத்தில் டெக்ஸிற்கு உதவும் கப்பல் கேப்டன் என களம் நெடுகும் பலவிதமான பாத்திரப் படைப்புகள்,ஒவ்வொன்றும் தனி முத்திரையுடன் அழுத்தமான தடங்களை களம் நெடுகிலும் பதிக்கின்றன.....
    இன்னொரு அம்சம் என்னவெனில்,எல்லா பாத்திர படைப்புகளுமே ஏதாவது ஒரு விதத்தில் நல்லதோ,கெட்டதோ ஏதேனும் ஒரு அம்சத்தை நோக்கியோ,கொள்கையை அடிப்படையாகக் கொண்டோ தவிர்க்க இயலாமலோ அல்லது ஏதாவது ஒரு கட்டயாத்தாலோ ஒரே சார்பில் நிலைத்து விடுகின்றன,ஆனால் டெக்ஸின் பாத்திரம் மட்டும்தான் ஓவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு பக்கம் நிற்கின்றது,அது நீதி மற்றும் நியாயத்தின் பக்கமாகும்,அந்த விதத்தில் சட்டத்தால் தேடப்படும் குற்றவாளி டெக்ஸ் என்பது கூட வெறும் வாதத்திற்கு சரியாக இருக்கலாம்,என்ன செய்வது சட்டத்திற்கு கண் இல்லையே...
    கிட்டத்தட்ட 400 பக்கக் கதை என்றாலும் கொஞ்சம் கூட போரடிக்காமல் கதை நகர்வு அமைந்திருந்தது...
    ஓவியங்கள் சிறப்பு,செவ்விந்திய கிராமங்களும்,மிரட்டலான சதுப்பு நிலக் காடுகளும்,கொட்டை கொட்டையான கொசுக்களும்,அச்சுறுத்தும் முதலைகளுமாய மிரட்டலான ஒரு களம்...
    இளம் டெக்ஸில் இதுவொரு அழுத்தமான,ஆழமான தடத்தை பதிக்கும் களம் என்பதில் ஐயமில்லை...
    இனிவரும் இளம் டெக்ஸ் படைப்புகளும் இந்த தடத்தை நோக்கித் தான் திரும்புமோ ?!
    எமது மதிப்பெண்கள்-10/10.
    இவ்விதழில் குறைகளாய் தோன்றியது,
    1.கெட்டி அட்டை இருந்திருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாகவும்,முழுமையான நிறைவானதொரு படைப்பாய் இருந்திருக்கும் என்று தோன்றியது...
    2.ஆறு பாகத்தில் ஒவ்வொரு பாகத்திற்கு ஏதேனும் ஒரு தலைப்பை சூட்டியிருந்தால் இன்னும் கலக்கலாய் இருந்திருக்கும்...
    -மற்றபடி முழுமையான,நிறைவானதொரு வாசிப்பு...

    ReplyDelete
    Replies
    1. Super sir. இளம் டெக்ஸை மிகவும் ரசித்தேன்.
      அனைத்து பாத்திரங்களும் மனத ில் அழுத்தமாக பதிந்துவிட்டன.
      நமது ஆசிரியரின் மொழிபெயர்ப்பு இன்னும் சூப்பராக இருந்தது குணக்குன்று திருத்தமாய் திரு உருவம் போன்ற வசனங்கள் மிக சிறப்பு.
      தோல்வி அடைவதும் ஒரு வகையில் நல்லது தான் என்ற டெகஸ். வாதம் மிகச் சிறப்பு

      Delete
    2. // தோல்வி அடைவதும் ஒரு வகையில் நல்லது தான் என்ற டெக்ஸ். வாதம் மிகச் சிறப்பு //
      டெக்ஸ் கேரக்டர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு யோசித்து செயல்படுமாறு அமைத்தது கதாசிரியரின் சிறப்பான உத்தி...

      Delete
  47. // MYOMS சந்தாவின் 4 இதழ்களின் தேர்வினைப் பொறுத்தவரை ஒரு மாதிரியாய் ரிஸல்ட்ஸ் தெரியத் துவங்கி வருகின்றன ! அதன்படி கி.நா.வில் எந்த இதழ் ? என்று கிட்டத்தட்ட pick செய்தாச்சு ! And அந்த 4 இதழ்களின் தேர்வில் ஒரு பாதி நான் எதிர்பார்த்தது போலவும், மறு பாதி சற்றே வியப்பூட்டும் விதத்திலும் உள்ளது ! //

    Please disclose the results soon sir. I am waiting.

    ReplyDelete
  48. உண்மைதான் சார், முத்து மார்க் பட்டாசு, லயன் பயர் ஒர்க்ஸ் என்று நீங்கள் சென்றிருந்தால், வியாபாரம் களை கட்டி இருக்குமோ என்னமோ?! NBS-ஐ விட சற்றே பெரிய Gift Box-க்கு 2900 அழுத கடுப்புடன் வீடு திரும்பி இருக்கிறேன்! இருந்தாலும், நாம் வாங்கும் ஒரு பாக்ஸ் பட்டாசுக்கு ட்ரிப் டு ஓசூர் பார்டர், சிவகாசி ஆன்லைன் ஆர்டர் எல்லாம் கட்டுப்படி ஆகாது என்பதால், மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்!

    டின் டின் படைப்பாளிகளை ஒப்பவைத்ததிற்கு வாழ்த்துக்கள் சார்! இவ்விதழ் புதிய வாசகர்களையும் சென்றடைந்து விற்பனை களை கட்டட்டும்.

    பி.கு.:
    வி காமிக்ஸ் குவாட்டர்லி சந்தாவை கவனிக்கத்/கட்டத் தவறி விட்டேன் போல!

    ReplyDelete
  49. Replies
    1. ///சாந்தாவின் சேர்ந்து விட்டேன்.///

      நீங்க சாந்தாவுடன் சேர்ந்துவிட்ட சமாச்சாரத்தை உங்க வீட்டுக்காரம்மாட்ட சொல்லிட்டிங்களா PfB? ;)

      Delete
    2. V காமிக்ஸ் 2024 காமிக்ஸ் அட்டவணையில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாயகர்/நாயகி கதை வருவது போல் அமைத்தது அருமை. ஆறு மாதங்கள் ஆறு வேறுபட்ட கதை களம். இதில் சிறப்பு நமது முத்து & லயனில் வந்த கிளாசிக் நாயகர்கள் கதையும் இணைத்த முறை அருமை; அருமையான ஐடியா வழக்கம் போல் நமதுவிக்ரம். இதில் கூடுதல் சிறப்பு வேதாளர் கதை வண்ணத்தில் சந்தோஷத்தில் குதிக்கச் செய்தது. விக்ரம் நறுக் சுருக் என்று கதை தேர்வைப் பற்றி எழுதியதை ரசித்தேன்.

      அப்புறம் வழக்கம் போல் V காமிக்ஸ் சந்தாவில் சேர்ந்து விட்டேன்.

      Delete
  50. நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  51. எடிட்டர் சார், விக்ரம் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  52. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  53. Lady cowboy story - Double OK. Instead of 5 months , 1 hardbound book will be better I think.
    One lucky Luke and one suske whisky please sir.

    ReplyDelete
  54. I think after long time this is the time without books for this month...
    Professional couriers only the name but worst service this time ..not receive books..
    And not sure will receive at all..
    Purely courier service mistake ..worst fellows ...not sure how to escalate ..
    If the customer care numbers not picking whom to inform...

    ReplyDelete
  55. சூப்பர் சார்...பள்ளிக்கு அத்தியாவசியமான கதையதுதானே...இரண்டு அறிவுப்புகளுமருமை

    ReplyDelete
  56. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  57. சபிக்கப்பட்ட பாதையில் பயணித்தாலும் காணும் காட்சிகளெல்லாம் சொர்க்கம் தான்...கால்நடைகளை கடத்த பாயும் நண்பர்கள் ....மின்னலாய் விரைய மறுபக்கம் மிட்செல் மாறி மாறி...உருமாறி தப்ப....கடைசில அதிர்ச்சியளிக்கும் விடயத்த அதிகாரி சொல்ல....டைகரின் நண்பர் அந்த இரகசியத்தை காதுல சொல்ல...அடுத்து வாஷிங்டன் ரயிலில் பயணம் 13 அ நினைவு படுத்த ......அந்த இரகசியம் அட்டைல வெளிப்படுது

    ReplyDelete
  58. ரயில்னாலே டைகர் வெளுத்து வாங்குகிறார்....ஸ்கார் ஃபேஸீடன் கிராண்ட்டை காக்க மோதல்...இங்க லிங்கன காக்க....பெயர்களை நினைவில் வைக்கத் திணறல்...வண்டி வண்டியாய் வசனங்கள்...சூப்பர் மகி...அடுத்த நான்கு பாகத்தையும் மீட்டெடுங்க....மீண்டுமோர் முறை படிச்சா தான் தெளிவாகும்....டைகர் கழுகுக் கண் கொண்டு பார்க்கிறார்....சூப்பர் சார்

    ReplyDelete
  59. எதிரிகள் ஆகும் நண்பர்கள். நண்பர்கள் ஆகும் எதிரிகள். ஏற்கனவே தேடப்படும் குற்றவாளி.திருப்பி தாக்கினால் மிகப்பெரிய குற்றவாளி யாகி விடும் நெருக்கடி.ஒரு பக்கம் ராணுவம் ,மறு பக்கம் செமினோல்கள். இருபக்கமும் மாறி மாறி இணைகிறார் டெக்ஸ். துரத்தும் துரோகிகள், நண்பர்கள் ,எதிரிகள் ,நொடிக்கு நொடி மாறும் காட்சிகள். சிக்ஸர் ஸ்பெசல் பக்கத்திற்கு பக்கம் சிக்ஸர் .அடித்திருக்கிறார்டெக்ஸ். ''தல தீபாவளி''முடிச்சாச்சு.அடுத்து. ''மகி தீபாவளி ''இதோ ஆரம்பிச்சாச்சு.

    ReplyDelete
  60. நண்பர்பள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    //அந்தப் பள்ளியின் தாளாளர் நமது அதிதீவிர வாசகர் என்ற முறையில் பள்ளி நூலகத்துக்கு நமது புக்ஸ்களை ரெகுலராய் தருவிப்பது மாத்திரமன்றி, அவற்றை மாணவியர் மத்தியில் ஒரு பழக்கமாக்கிட தன்னால் இயன்ற சகலத்தையும் செய்து வருகிறார்///

    போற்றுதலுக்குரிய செயல்! அந்தப் பள்ளியின் தாளாளருக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்!

    டின்டின்னுக்காக மிகுந்த ஆவலுடன்....

    ///ஒரு வன்மேற்குக் களம் !!
    அழகானதொரு பெண்மணியே இதனில் lead character ! ///

    வருக வருக என வரவேற்கிறோம்!

    ReplyDelete
  61. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  62. அன்பின் ஆசிரியருக்கும், அலுவலக பணியாளர்களுக்கும், அன்பு நண்பர்களுக்கும் இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  63. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  64. ஆசிரியர் அவர்களுக்கு, எனக்கு நேற்று தான் புத்தகம் கிடைத்தது. ஆர்வத்தில் மூன்று புத்தகங்களை படித்து முடித்து விட்டு 2024 அட்டவணையை புரட்டுவோம் என்று புரட்டிக் கொண்டிருந்தேன்.

    டின்டின் புத்தக விளம்பரத்தில் மட்டும் சந்தாக்களுக்கு 250 ரூபாய் என்று உள்ளது. அப்படி என்றால் சந்தா கட்டாதவர்களுக்கு டின்டின் விலை எவ்வளவு சார். ஆங்கில புத்தகத்துக்கு இணையாக 350 இருக்குமா?

    ReplyDelete
  65. முதலில் படித்த புத்தகம் குற்றத்தின் குரல்.

    பக்கத்துக்கு பக்கம் ட்விஸ்ட். சர வெடியாய் நகரும் கதை. இண்டெர்வெல் லுக்குள் கதை முடிந்து விட்டது போன்ற தோற்றம். என்னடா இது? என்று ஆர்வத்தில் பக்கத்தை புரட்ட புரட்ட கதை நம்மை அதற்குள் இழுத்து சென்று விடுகிறது. ஓவியங்கள் வித்தியாசமாக இருந்தது. சந்தா தாரர்களுக்கு இது தான் தீபாவளி பரிசு. என்ன தான் குண்டு புக் என்றாலும் நமக்கு இருக்கும் வேலை பளுவுக்கு 32 பக்கத்தை படித்தோமா ரசித்தோமா என்று கடக்க அருமையான கதை.

    அந்த பின் அட்டை படம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது. 30 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கி ஓரம் வைத்த தூரிகையை மீண்டும் கையில் எடுக்க ஆசை தூண்டியது. ஒரு வேளை தூரிகையை கையில் எடுத்தால் இங்கே சமர்ப்பிக்கிறேன்.

    9.95/10 (ஒரே ஒரு எழுத்துப் பிழைக்காக) இல்லையேல் 10/10 தான்

    ReplyDelete
  66. மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.

    வனமேற்கின் வரலாறு இந்த புத்தகத்தில் கொஞ்சம் குறைவு தான் ஆனால் ஆக்ஷனில் கலக்கி இருக்கிறார்கள். அதுவும் அந்த கொள்ளை கூட்டத்துடன் நடக்கும் சண்டை காட்சிகள் அதகளம். பாட் மற்றும் ரேஞ்சர் கலக்கி உள்ளார்கள். இந்த கதையை இத்துடன் நிறுத்த வேண்டாமே ப்ளீஸ். முழுவதையும் போட்டு தாக்கி விடுங்கள்.

    நான் படித்த இந்த புத்தகங்களை காமிக்ஸ் அவ்வப்போது படிக்கும் ஒரு 60 வயது இளைஞருக்கு தந்துள்ளேன். டெக்ஸ் கதைகளை படித்து விட்டு வனமேற்கின் வரலாறு புத்தகம் கிடைக்குமா என்று வினவினார். முதலில் வந்த மூன்று புத்தகங்களை கொடுத்துள்ளேன். அநேகமாக அவருக்கு பிடிக்கும் என்றே நினைக்கிறேன். Please continue this series sir

    10/10

    ReplyDelete
  67. விதி எழுதிய வெள்ளை வரிகள்.

    நேற்று இரவு கடைசியாய் படித்து முடித்த புத்தகம். இந்த புத்தகத்தை நான் முடிக்கும் பொழுது இரவு பத்து மணி. இரவு 12 மணி வரை உறக்கம் பிடிபடவில்லை. தூக்கம் கண்ணை கட்டி, விழியை மூடினால், அந்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாய் கண்ணுக்குள் வந்து நிற்கிறது. எழுந்து மீண்டும் படிடா என்று மூளை மிரட்டுகிறது.

    கதையை மெதுவாக படித்திருக்க வேண்டும் என்று மனம் அறரற்றுகிறது. இங்கு ஏன் இந்த வசனம் வந்தது? அங்கு ஏன் வசனம் வந்தது? எதையோ படிக்காமல் விட்டு விட்டோமா? படங்களை உள் வாங்காமல் விட்டு விட்டோமோ என்று தூக்கம் தொலைத்த இரவானது.

    மீண்டும் பொறுமையாய் கதையை உள் வாங்கி படிக்க முயற்சிக்கிறேன்.

    ஆனால் கதை அதகளம் தான்.

    10/10

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் படித்து விட்டு review எழுதுவேன். இது ஒரு முன்னோட்டம் மட்டுமே.

      Delete
  68. ஆசிரியருக்கும்..அவர் குடும்பத்தினர் அனைவருக்கும்...அவர்தம் பணியாளர்கள் அனைவருக்கும் ,இங்கு கூடும் காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  69. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  70. அதிகாரியின் அஞ்சு புய்தகத்தை குறைத்தாலும் பராவால்லை... லக்கி வேணும்

    ReplyDelete
  71. வன் மேற்கின் ஐந்து கதைகளையும் ஒரே புக்காக போட்டுத் தாக்கினால் சிறப்பாக இருக்கும் சார்!!! முன்பதிவில் கூட இறக்கி விடலாமே? அடுத்த ஆண்டு பிற்பகுதி வரை காத்திருப்பது ரொம்ப கடினம் சார்..

    ReplyDelete
  72. லக்கி லூக்கை களம் இறக்கினால் கசக்குமா எங்களுக்கு? எப்போ எப்போ என்று காத்துக் கிடக்கிறோம் சார் .கிட் ஆர்டினையும் சேர்த்து மூன்றாக போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் எடி சார்...

    ReplyDelete
  73. MYOMS ல் 'எட்டு புத்தகங்களும்' என்ற ஆப்ஷனும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் சார்...

    ReplyDelete
  74. Sir the MYOMS 40s nostalgia special may be moved out as online bookfair special please. Because other priority books are enlisted folks like me may not vote for this here but nevertheless would want to buy it.

    ReplyDelete
  75. ஸ்மர்ஃப் சில டைட்டில்க காலின்னீங்க.....அதையும் போடலாமே சிறார்கள் கும்...எங்களுக்கும்

    ReplyDelete
  76. டெக்ஸ் தீபாவளி..
    செம தீ பறக்குது..
    கா‌ க கா - த்தை தூக்கி சாப்பிட்டுருச்சு.
    வெறித்தனமாக கதை...
    பலவாட்டி படிச்சே ஆகணும்...எ டிராவல் பேக்குல வைச்சுக்க போறேன்.

    கா க கா.. பின்னர்

    [ வ வீழ்வதில்லை..

    வந்தார் வென்றார் ... ]

    இவைகளையும் மிரட்டி விட்டது.

    The tex sixer special" 75
    Lion Diwali malar ' 23

    எடிட்டர் அய்யாவுக்கு ஒரு டேங்ஸ் பார்சல்...

    ReplyDelete
  77. ஃத தளபதி ஸ்பெஷல் செம மாஸா போய்க்கிட்டு இருக்கு...

    " எந்த நோக்கத்திற்காக அவள் அதைச் செய்கிறாள் என்பதை நாம் கண்டு பிடித்தாக வேண்டும்"

    86 ம் பக்கத்தில் விட்ட இன்டர்வெல தொடர போறேன்.
    கேப்டன் டைகர் சும்மா செமையா இருக்கு.
    வசனங்கள் ரொம்ப பிரமாதம்.
    வசனங்கள் எழுதிய கைக்கு நூறு முத்தங்கள் கொடுக்கலாம்.
    எடிட்டருக்கு 50
    பரமசிவம் அவர்களுக்கு 50...

    இதுக்கு மேல கேட்காதீங்க எ கிட்ட ஸ்டாக் இல்லை.
    ஆமா சொல்லிபுட்டேன் ...

    ReplyDelete
  78. தளபதி தீபாவளி ஸ்பெஷல் படித்து முடித்தாயிற்று. அடுத்த ப்பாற்ட் கோசம் வெயிட்டிங். அடுத்த தீபாவளிக்காக காத்துருக்கணுங்களா. எடிட்டர் ஐயாகிட்ட கேட்டு யாராச்சும் சீக்கிரமாக சொல்லுங்க...

    ReplyDelete
  79. வன்மேற்கு - 4

    படித்தாயிற்று.
    கடந்த 3 பாகங்களும் எனக்கு பிடித்தே இருந்தது. ஆனால் இதுவோ மிகவும் பிரமாதமாக இருக்கிறது .
    1, வர்ண கலவைகள்
    2,வரிசையான சம்பவங்கள்
    3, கதாபாத்திரங்கள்
    4, மொழிபெயர்ப்பு
    5, தெளிவான ஓவியங்கள்
    6, அந்த 3D effects
    7, படிக்கும் போது சித்திரங்கள் அசைந்து காட்சிகளாக திரைப்படம் போல் விரிகிறது.

    பாட், ரேஞ்சர், ஓய் மீசைக்காரர், ஆஸ்டின், திருட்டு ராஸ்கல் அப்புறம் மம்மி என நான் ரசித்த கதாபாத்திரங்கள்.

    நிச்சயமாக இது சிறந்த தொடர் தான்.
    வன்மேற்கு -ன் அடுத்த சுற்றுக்கு நாம் தாராளமாக செல்லலாம். நண்பர்கள் ரசனைக்கு காத்திருக்கிறேன்.

    கதையின் நீதி :
    " ஒரு மனிதனை அவனுடைய தோற்றத்தை வைத்து மதிப்பீடு செய்யாதே. அவனுடைய குணத்தை வைத்து மதிப்பீடு."

    எனக்கு பிடித்த வரியும் கூட.

    பின்குறிப்பு:
    கதையை படிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. திருட்டு ராஸ்கல் உங்கள் மனதை கொள்ளை கொள்ளக் கூடும்.

    ReplyDelete
    Replies
    1. பிரமாதம் நண்பரே

      Delete
    2. // நிச்சயமாக இது சிறந்த தொடர் தான். //
      ஆம்,சிறந்த தொடர்தான்...

      Delete
    3. // கதையின் நீதி :
      " ஒரு மனிதனை அவனுடைய தோற்றத்தை வைத்து மதிப்பீடு செய்யாதே. அவனுடைய குணத்தை வைத்து மதிப்பீடு." // செம்ம செம்ம

      Delete
  80. இனி எல்லா புத்தக விழாவிலும் லக்கிலூக் மற்றும் சிக்பில் கதைகளையே போடுங்க சார். கார்ட்டூன் வறட்சி பிரச்சினை தீர்வதோடு இளம் தலைமுறையை நிச்சயம் கவர வேண்டும்.

    ReplyDelete
  81. தளபதி ஸ்பெஷல் :
    ஜனாதிபதி லிங்கன் கதையின் மையப்புள்ளி என்றாலும் 4 பாக நகர்விலும் ஏகப்பட்ட கேரக்டர்கள்,சில இடங்களில் ஒவ்வொரு கேரக்டரையும்,அதே நேரத்தில் முன்கதையின் நிகழ்வையும் நினைவூட்டிக் கொள்ள கொஞ்ச பொறுமையாகத்தான் வாசிப்பில் நாம் செல்ல வேண்டி இருக்கிறது...
    கதை நெடுகிலும் வடக்கும்,தெற்குமாய் போர் மேகம் சூழ்ந்திருந்தாலும் கதையும் நகர்ந்து கொண்டே இருக்கிறது, டைகரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்...
    நம்மாளுக்கு என்ன ராசியோ ஒன்னு பிரச்சினையை அவர் தேடிப் போறாரு,இல்லைன்னா பிரச்சனை அவரைதேடி வருது,அம்மாடி எம்புட்டு பிரச்சினை,இதுல கிளுகிளுப்பா ஆங்காங்கே ஜல்சா வேற...
    டெக்ஸிற்கோ,டைகருக்கோ நடக்கும் தொடர் பிரச்சனைகள பார்க்கும்போது இதெல்லாம் சாத்தியமான்னு இம்மியளவு எண்ணம் தோன்றினாலும் பரபரப்பான கதை நகர்வும்,நுணுக்கமான திரைக்கதை உத்தியும் அந்த சிறு எண்ணத்தையும் தவிடுபொடியாக்கி விடுகிறது...
    எல்னோர் மிட்செல் எனும் அழகிய பிசாசு கதை நெடுகிலும் போருக்கு இணையான இரத்தக் களரியை உண்டு செய்து கொண்டே பயணிப்பதும் இறுதியில் எல்லோருக்கும் கடுக்காய் கொடுத்து செல்வதுமாய் அடடா என்ன ஒரு கேரக்டர்...
    அட்டகாசமான ஓவியங்களும்,அற்புதமான காட்சி அமைப்புகளும்,நேர்த்தியான மொழிபெயர்ப்பும்,குழப்பமில்லாத வசனங்களும்,அருமையான கெட்டி அட்டையுமாய் நிறைவானதொரு படைப்பு...
    கதையை வாசித்து முடித்து விட்டாலும் ஆங்காங்கே முன்கதை குறித்தான முடிச்சுகள் இருப்பதால் அந்த கதைகளையும் எடுத்துக் வைத்துக் கொண்டு மீண்டுமொரு மீள்வாசிப்பை நிகழ்த்தினால்தான் நிறைவாக இருக்குமோ என்றதொரு எண்ணமும் மனதில் எழுந்தது,வார விடுப்பில் முயற்சிக்கனும்...
    அடுத்த சுற்றும் இதே விறுவிறுப்பும்,சுவராஸ்யமும் கொண்டதாய் இருப்பின் முழுமனதாய் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
    எமது மதிப்பெண்கள்-9/10.

    ReplyDelete
  82. Sixer ஸ்பெஷல்

    நிஜமாகவே சிக்ஸர் தான் இந்த முறை. இளம் டெக்ஸ் நன்றாகவே இருக்கும் இந்த முறை ரொம்பவே நன்றாக இருந்தது செமினோல்களுக்கு எதிரான போரில் கலந்து கொள்ளும் டெக்ஸ், எப்படி அவர்களுக்கு ஆதரவாக மாறினார் என்று முடியும் கதை. பட்டயை கிளப்பும் ஆக்சன் கதை நெடுக அதும் முதலைகளிடம் மாட்டிக் கொண்டவர்களை காப்பாற்ற டெக்ஸ் களம் இறங்கும் இடம் தெறி.
    எனது மதிப்பெண் 9/10

    ReplyDelete
    Replies
    1. ஹார்ட் பைண்டிங் இல்லைன்னு ஒரு மார்க் கொறைச்சதெல்லா ரொம்ப அநியாயம் நண்பா...

      Delete
  83. இன்னும் தங்கத் தலைவன் ஸ்பெஷல் மட்டுமே பாக்கி. அதையும் இன்று படித்து விட்டு வருகிறேன்.


    அட்டகாசமான தீபாவளி உங்களால் சாத்தியமானது சார். மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  84. தளபதி ஸ்பெசல் :
    அறிவரசுரவி சார் வழக்கம்போல அருமையான விமர்சனம்.

    ReplyDelete
  85. தி டெக்ஸ் சிக்ஸர் ஸ்பெஷல்...


    ஒன்றல்ல ..,இரண்டல்ல சரியாக நான்கு மணி நேரம்... அதுவும் இடைவிடாமல் தொடர்ந்து நான்கு மணி நேரம் டெக்ஸ் உடன் பயணித்து முடித்த அடுத்த நொடியே இதை எழுதுகிறேன்.

    அப்பப்பா...என்ன ஒரு அட்டகாச உணர்வு ..விவரிக்க வாரத்தைகளே இல்லாத அட்டகாசமான உணர்வை அளித்த படைப்பு டெக்ஸ் தீபாவளி மலரும்..சிக்ஸர் ஸ்பெஷல் மலருமான இந்த இதழ்...இவ்வளவு பெரிய சாகஸத்தை ஒரே மூச்சில் படிக்க வைக்க நேரமும் சூழலும் மட்டும் போதுமானது அல்ல அதை முடிக்க வைக்க அந்த கதையின் ஜீவ நாடியும் ,உணர்வும்..பரபரப்பும் விறுவிறுப்பும் ,மொழிநடையும் நமக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதும் உண்மை.. அது இந்த கதையில் நூறு சதவீதம் அப்படியே அடங்கி உள்ளது.. இளம் டெக்ஸ் கதை வரிசைகளில் என சொல்லலாமா அல்லது டெக்ஸ் கதைகளிலியே அனைத்திலுமே சொல்லலாமா என தெரியவில்லை ஆனால் மிக மிக மிக மனதை கட்டி போட வைத்த இதழ் இது என்பது மறுக்க முடியாத உண்மை..

    இப்போதைய டெக்ஸ் சாகஸங்களில் ராணுவத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு .. அனைத்து அதிகாரிகளிடமும் அவருக்கான பலத்த அறிமுகங்கள்..அனைத்து செவ்விந்தியர்களும் டெக்ஸ் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை இதெல்லாம் ஓவரோ என நினைக்கும் வாசகர்களுக்கு இந்த ஒரே சாகஸத்தின் மூலம் இப்பொழுது அவருக்கு கொடுக்கப்படும் அதிதீவிர மரியாதை கூட சரியானது தான் என்று இந்த இளம் டெக்ஸ் சாகஸம் நிரூபிக்கிறது...கதையை படித்து முடித்தவுடன் தான் கதையின் தலைப்பையே காணவில்லையே என உணர்ந்தேன்..

    டெக்ஸ் டெக்ஸ் தான் என பல இதழ்கள் நிரூபித்து உள்ளன தான்...ஆனால் இந்த இளம் டெக்ஸ் அதற்கும் மேல்...இதழில் அறிவித்தப்படி இது சூறாவளி சாகஸமே...டெக்ஸ் மட்டுமல்ல கதையில் வரும் பல மாந்தர்களும் இன்னமும் மனதில் நிழலாடுகிறார்கள்..கதை மட்டுமா ஓவியங்களும் டெக்ஸ் உடன் நம்மையும் நிஜ உலகில் நுழைவது போல் நுழைய வைக்க மொழி ஆக்கத்தில் ..எழுத்து பிழையில் என ஒரு சிறு தடங்கல் கூட இல்லாதவாறு சரவெடியாய் நம்மை வாசித்து அழைத்து செல்கிறது இந்த சூறாவளி சாகஸம்.

    என்னை பொறுத்தவரை இந்த வருடத்தில் எத்தனையோ இதழ்கள்..எத்தனையோ சிறப்புகள் கொண்டு இருந்தாலும் என்னுடைய ஆதர்ஷ முதலிடமாக இந்த இளம் டெக்ஸ் இதழ் தான் மனதில் நிற்கும் என்பது சத்தியமான உண்மை..

    இந்த இதழில் குடி இருந்த அந்த நான்கு மணி நேரம் தான் என்னுடைய உண்மையான தீபாவளி சார்..

    இப்படிப்பட்ட இதழை அளித்த தங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை சார்.. நன்றியை தவிர வேறு எதுவும் சொல்ல தோன்றவும் இல்லை சார்..



    நன்றி நன்றி நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தலைவர் ரொம்ப சுறுசுறுப்பாக தான் இருக்காரு. நீ கலக்கு தலைவா...

      Delete
    2. அட்டகாசம் சூப்பர் சார்.

      Delete
  86. Ellorum book padichachuu pola..
    Intha super duper courier service not delivered yet...
    Customer care service pudicha periya visayam pola +91-44-2066202200..

    ReplyDelete
  87. The தளபதி ஸ்பெசல்

    நீண்ட நாட்களுக்கு சாரி சாரி நீண்ட வருடங்களுக்கு பிறகு நம்ம தளபதியை சந்திக்க போகிறோம் அதுவுமில்லாமல் நம்ம விஜயன் சார் தனது தளபதி டைமில் சொல்லியுள்ளபடி புதிய படைப்பாளிகளின் கதை நகர்த்தல் எப்படி இருக்கப்போகிறதோ என்ற ஆவலில் முதல் பாகத்தை படிக்க ஆரம்பித்தேன்

    வழக்கம் போலான வடக்கு vs தெற்கு உள்நாட்டு போராக துவங்கிய கதை துவக்கத்திலேயே தளபதியின் துணிச்சலான சாகசத்துடன் ஆரம்பித்த முதல்பாக கதை

    பரபரவென தீபாவளி பட்டாசாக கொளுத்தியெடுக்கிறது

    கதையின் மிகப்பெரிய ட்விஸ்டாக அமெரிக்க ஜனாதிபதி லிங்கன் அவர்களின் கொலைமுயற்சியும் அதனை நமது தளபதி தனக்கேயுரித்தான பாணியில் எப்படி கையாளுகிறார் என்பதை சொல்லும் மீதியுள்ள மூன்றுபாக கதை நம்மை அக்காலத்திற்கு அழைத்து செல்கிறது

    முதல்பாக இறுதியில் தளபதி ஒப்புக்கொண்ட பணி என்ன
    பிங்கர்டன் ஏஜென்சியின் வேலைகள் என்ன
    ஜனாதிபதி லிங்கன் அவர்களை கொல்ல முயலும் குழுக்கள் என்னென்ன

    ஜனாதிபதி லிங்கன் என்னவானார் அவரை தளபதி காப்பாற்றினாரா எப்படி என்பதை தெரிந்துகொள்ள உடனே படியுங்கள்

    The தளபதி ஸ்பெசல் 2023

    மகேந்திரன் பரமசிவம் @ ஷெரிப்பய்யா மற்றும் நமது எடிட்டரின் கைவண்ணத்தில் மொழிபெயர்ப்பு அருமையாக இருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்

    சின்சினாட்டியின் கசாப்புகாரனை சந்திக்க மிகமிக ஆவலுடன் காத்திருக்கிறேன் சார் நண்பர்களும் இதனை வழிமொழிவார்கள் என்ற நம்பிக்கையுடன் 🙏🏼😇

    ReplyDelete
    Replies
    1. ///சின்சினாட்டியின் கசாப்புகாரனை சந்திக்க மிகமிக ஆவலுடன் காத்திருக்கிறேன் சார் நண்பர்களும் இதனை வழிமொழிவார்கள் என்ற நம்பிக்கையுடன் 🙏🏼😇///

      நானும் தான் வெயிட்டிங்...

      Delete
  88. இளம் டைகர் சாகஸத்தை முதன்முறையாக பரபரப்பாக ,விறுவிறுப்பாக படித்து முடித்தாயிற்று...டைகர் கதை ஒவ்வொரு முறையும் அந்தரத்தில் தொங்குவதின் பிண்ணனி சரியாக இல்லை என்றாலும் இந்த முறை ஓர் சரியான இடத்தில் முடிவுற்றது சிறப்பு...இன்னமும் கதை தொடர்ந்தாலும் கூட ..

    இதழின் அட்டைப்படமும் ..உட்பக்க ஓவியங்களும் ,அச்சுத்தரமும் இந்த முறை இந்த இதழில் வழக்கத்தை விட மிளிர்வது போல இதழின் மொழி ஆக்கமும் சிறப்பு ..முன்வந்த இளம் டைகர் கதைகளில் வடக்கு ,தெற்கு குழப்பம் மண்டையை சுழன்றி அடிக்க வைக்கும்...இம்முறையும் அதே வடக்கு ,தெற்கு பாணி என்றாலுமே கூட குழப்பத்தில் தலை சுற்ற வைக்காமல் புரியும் படியும் ஒரே நேர்க்கோட்டில் செல்வதும் போலவும் டைகரின் பயணம் இருந்தது தான் சிறப்பு...நீண்ட மாதங்கள் கழித்து வந்த இந்த தீபாவளி டைகர் இதழும் டெக்ஸ் இதழை போலவே ஏமாற்றம் அளிக்க வில்லை...உண்மையை சொன்னால் அடுத்த இளம் டைகர் தொடரை எதிர்பார்க்க வைத்து உள்ளது இந்த சாகஸ தொகுப்பு..

    இந்த வருட தீபாவளியில் லயன் ( டெக்ஸ்) ,டைகர் இரண்டுமே அதிரடி சரவெடியே...

    ReplyDelete
  89. /// சின்சினாட்டியின் கசாப்புகாரனை சந்திக்க மிகமிக ஆவலுடன் காத்திருக்கிறேன் சார் நண்பர்களும் இதனை வழிமொழிவார்கள் என்ற நம்பிக்கையுடன் ///
    அதீத ஆவலுடன் நானும்.
    இப்போதுதான் டைகர் ஸ்பெஷல் முடித்தேன்.
    நேற்று இரவு தொடங்கியது.
    நீண்ட வருட காத்திருப்பு.
    நான்கு பாகங்களும் அமர்க்களம்.
    அடுத்த பாகத்தில் எலனர் மிட்செல் இருப்பாளா?
    லட்சிய கொலையாளி. அவள்
    செல்லும் வழியெங்கும் மரணம். முதல் பாகம் தொடங்கி இறுதிவரை டைகருடன் அவள் ஆடும் ஆடுபுலி ஆட்டம் செம்ம விறுவிறுப்பு.
    தீபாவளிக்கு கிடைத்த அருமையான சரவெடி.
    திரியை பற்ற வைத்த ஆசிரியருக்கும், கடைசி வரை வெடிக்க வைத்த மகி ஜிக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
    hats off mahi ji & editor Sir.

    ReplyDelete
  90. டைகர் ஸ்பெஷலின் அட்டைப்படங்கள், உள் பக்கங்களின் ஒவியங்கள் அனைத்தும் அருமை. ஆர்ட் பேப்பரும் சற்று பிரைட்டாகவே உள்ளது. தெளிவான ஓவியங்களும், அச்சுத்தரமும் அருமை.

    ReplyDelete
  91. ..மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்...
    சிறப்பான கதையோட்டம். தெளிவான சித்திரங்கள்.
    நெருடல் இல்லாத கலரிங். அருமையான கதை.
    நான்கு பாகங்களையும் மீண்டும் ஒன்றாக மறுவாசிப்பு செய்ய வேண்டும்
    "ஒரு மனிதனை அவனுடைய தோற்றத்தை வைத்து மதிப்பீடு செய்யாதே. அவனுடைய குணத்தை வைத்து மதிப்பிடு."
    அருமையான வரிகள்.
    அவசியம் படிக்க வேண்டிய கதை.

    ReplyDelete
  92. டெக்ஸ் சிக்ஸர் ஸ்பெஷல் அடுத்த வாசிப்பு.

    ReplyDelete
  93. இந்த மாதம் வந்த அனைத்து இதழ்களையும் வாசித்து முடித்து விட்டேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன் சார்...:-)

    ReplyDelete
  94. எனவே நேற்று இரவு முதல் உறங்குவதற்கு முன் மீண்டும் ஒரு காமிக்ஸ் இதழையாவது படிக்க வேண்டும் என்பதால் இரத்தப்படலம் தொகுப்பை மீண்டும் எடுத்து உள்ளேன்..தினம் ஒரு பாகம் என்ற விதத்தில் 18 நாட்களுக்கு இனி இரத்தப்படலத்துடன்...

    ReplyDelete
  95. வன் மேற்கு கதை தொடர் ஒரே இதழாக வந்தால் மனம் மகிழும். ஆசிரியர் ஆவண செய்வாரா????

    ReplyDelete
  96. நமது காமிக்ஸ் உடன் தீபாவளி இனிதே முடிவுற்றது. தீபாவளி மலர் இல்லை என்றால் தீபாவளியே இல்லை என்பது போன்று மனம் சோர்ந்து விடும்.

    ReplyDelete
  97. ஆகவே மனம் நிறைந்த நன்றிகள் பல ஆசிரியருக்கு.....

    ReplyDelete
  98. டெக்ஸ் தீபாவளி ஸ்பெஷல் படித்தாகிவிட்டது.
    அருமையான கதை.
    ஆறு பாகங்களும் செம விறுவிறுப்பு.
    டெக்ஸ் ஆறு பாகங்களிலும் இடைவிடாத ஓட்டம் தான்.
    அவரை ஆறு பாகங்களிலும் விடாமல் துரத்தும் காவல் அதிகாரி கார்ஸ்வெல் நம்மை வெகுவாக கவர்கிறார்.
    படிக்கத் தவறவிடக் கூடாத விறுவிறுப்பான கதை.

    ReplyDelete
  99. கத்தி முனையில் மாடஸ்டி யில் இருந்து இன்று டெக்ஸ் சிக்ஸர் ஸ்பெஷல் வரை.... லயன் முத்து வின் இனிய பந்தம் தொடரட்டும் என்றென்றும்... எங்களுடன்... நன்றி🙏💕 நண்பரே

    ReplyDelete
  100. வேளாளர் ஸ்பெஷல் மற்றும் சுஸ்கி விஸ்கி ஸ்பெஷல் இதழ்கள் எனக்கு கிடைக்கவில்லை. நண்பர்கள் யாரேனும் தந்து உதவி னால் மிக்க நன்றி. படித்து விட்டு தந்து விடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. பாரதி நூல் நிலையம் , சிவகாசியில் இருக்கும் நண்பரே ! அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் !

      Delete
  101. Finally received books
    Super duper courier service delayed as much as possible...

    ReplyDelete
  102. Dear Editor Sir!

    வன்மேற்கின் 4 தொடர்களும் மிகவும் அருமையாக இருந்தது.
    இந்த தொடரின் மிக பெரிய பிளஸ் Points
    1. Coloring
    2. Artwork
    3. Affordable Price to all
    4. Crispy reading
    5. Not an usual Wild West story
    6. A mixed kind of Fictional and Historic events
    7. And very important one…without a Big Hero this story Plot is really Awesome.

    விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் கதை நகர்த்திய விதம் அருமை. மாதம் ஒரு கதை என்றாலும் கூட இத்தொடர் முடிய 5 வருடங்கள் எடுக்கும். வித்தியசமான இத்தொடருக்கு வாசகர்கள் அனைவரும் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள்.

    மிக அழகான ஒரு தொடர் லயன் காமிக்ஸ் இல் வெளி வருவது நமக்குப் பெருமையே!!

    PLEASE BRING THIS WILD WEST SERIES WITHOUT ANY HINDERANCE!!!

    Thank You Sir.

    ReplyDelete
  103. //மாதம்தோறும் ஒன்று வீதம் 5 மாதங்களில் போட்டுத் தாக்கிடுவோமா - 2024-ன் பிற்பாதியில் ?//

    Sir..

    The Above Mentioned Story book is "MONDO REVERSO"?? Last year 2022 you have promised/mentioned to bring that. Any update on bringing that story Sir?

    ReplyDelete
  104. Replies
    1. 48 pages - Rs.120 sir. இது மாதந்திர இதழ்களின் விலை !

      அப்டியே ரெண்டாலே பெருக்குனா ?

      Delete
    2. @ Sridhranrckz ...96 Color Pages . Rs.125/- only (Wild West) not Rs.250/- Sir. (I dont know which book you are referring to). Also price includes not only paper quality, color etc. it also includes copy Right Cost also sir. I hope our editor brings all books at reasonable price only.

      Delete
    3. The price offered by our Editor is low compared to the english and french versions.

      Delete
    4. The price offered by our Editor is better price than any other publisher in India. There are so many other things constitute for the price of the book Sir.

      Delete
  105. நானும் இந்த மாதம் வந்த அனைத்து இதழ்களையும் வாசித்து முடித்து விட்டேன்.

    ReplyDelete
  106. வணக்கம் உறவுகளே

    ReplyDelete
  107. தல தீபாவளி..
    சூறாவளி தீபாவளி..

    ReplyDelete
    Replies
    1. யெஸ்... டைகர் ஸ்பெசல் "அரிகேன்" தான்....

      அதென்னப்பா அரிகேன் என வினவுபவர்களுக்கு....

      அமெரிக்காவுல அடிக்கிற சூறாவளிக்கு அரிகேன்னு பெயராம்...அத்தனை வலிமையாம்.. சிலது சுனாமிகளையே வரவைச்சுடுமாம்..

      (STVRன் உருட்டல்கள்ல சேர்க்காதீங்கப்பா..நெசந்தான் இது😜)

      Delete
    2. எப்படி இப்படி தகவல் கலெக்ட் பண்றீங்க தோழரே. சூப்பர்.

      Delete
  108. தீபாவளி மலர்களை வாங்கி பவுசா போட்டோ மட்டும் போட்டுவிட்டு உலக கோப்பையில் ஐக்கியமாகி இருந்தேன்....

    பைனல்ஸ்க்கு இரு நாள் உள்ள இந்த இடைவேளையில் இன்று டைகர் ஸ்பெசலை வாசிக்க எடுத்தேன்...

    சரசரவெனு மூன்று அத்தியாயங்கள் ஓடிட்டது...

    அருமையான கதையோட்டம்... இலகுவான கதைப்பின்னல்.

    நேர்த்தியான வசனங்கள் என டாப் கியரில் கதை பயணிக்கிறது...

    மொழி பெயர்ப்பில் மாப்பு மஹி கலக்கியுள்ளார் . ஆசிரியர் சாரின் கைவண்ணங்களையும் ஆங்காங்கே காண இயல்கிறது...

    பக்கம் 34 நள்ளிரவில், எலெனர் மிட்செல் டைகரை முத்தமிடும் காட்சியில் வசனம் செம.. 😉😉😉
    நாட்டி (பாய்ஸ்)மென்ஸ்....

    அத்தியாயம் 3 ஆரம்பத்தில் 1884என ஆண்டு பிழையாக உள்ளது..அதை 1864னு வாசிச்சிக்குங்க ப்ரெண்ட்ஸ்...

    மஹியின் கைவண்ணம்னு விளங்க வைக்கும் வசனம் பக்கம்141ல உள்ளது...கனவுலகம் ப்ரெண்ட்ஸ் அறிவார்கள்🤣🤣🤣..

    க்ளைமாக்ஸ் அழைக்கிறது...

    எலெனரா? டைகரா? யார் வின்னர்னு பார்த்துடலாம்....!!

    ReplyDelete
  109. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  110. டைகர் ஸ்பெசல் பாகம் 4, "லிங்கன் செத்தாக வேண்டும்"-- அரிகேன் வேகத்தில் பயணிக்கிறது.....

    ஒரு சிறு பிழையை திருத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே....

    பக்கம்158, தெற்கின் பிரசிடென்ட்- "தாமஸ் ஜெஃபர்ஸன்"- என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது..
    உள் நாட்டு யுத்த காலத்தில் 4ஆண்டுகால தற்காலிக நாடான தெற்கின் ஒரே பிரசிடென்ட்-"ஜெஃபர்ஸன் டேவிஸ்".

    தாமஸ் ஜெஃபர்ஸன்- அமெரிக்காவின் 3வது பிரசிடென்ட் ஆக 1801முதல்1809 ஆட்சி செய்தவர்.

    ReplyDelete
  111. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete