Powered By Blogger

Wednesday, November 08, 2023

"த" + "த" = தீ !

 நண்பர்களே,

வணக்கம். நேத்திக்கு உங்களின் கூரியர்களும், பதிவுத் தபால்களும் இங்கிருந்து சிக்கென்று புறப்பட்டு விட்டன ! இளம் 'தல' + இளம் 'தளபதி' centerstage எடுத்துக் கொள்ள - V காமிக்சின் வன்மேற்கு அத்தியாயம் # 4 துணைக்கு இணைந்து கொண்டுள்ளது ! So இம்மாதம் முழுக்கவே ஒரு Wild West மாதம் எனலாம் ! சாரி guys - ரிப்போர்ட்டர் ஜானியின் பணிகளுக்குள் இருந்த வேளையில் தான் வைரஸ் காய்ச்சல் துவைத்து எடுத்திருந்தது ! ஏற்கனவே கிறுகிறுக்கச் செய்யும் ஒரு கதைக்களத்துக்குள் கிறுகிறுத்துக் கிடந்த நிலையில் புகுந்திட 'தம்' இருக்கவில்லை - so அதுவும் டிசம்பர் கும்பலுக்குள் ஐக்கியமாகிறது ! இந்த நொடிக்கு - 184 + 384 + 96 = 664 பக்கங்கள் என்ற குவியலோடு பண்டிகையினை ஜமாய்ச்சிடலாமா ?

டெக்ஸும், டைகரும் தத்தம் பாணிகளில் கலக்கிடக் காத்துள்ளனர் எனில், V காமிக்சின் இந்த இதழும் in many ways important too ! அந்த வன்மேற்கின் அத்தியாயத்தின் முதல் சுற்று இங்கே நிறைவுற, நான்கு ஆல்பங்கள் கொண்ட இந்த story arc-ஐ நீங்கள் எவ்விதம் பார்த்திடுகிறீர்களென்று அறிந்திட ஆவலாய் இருப்போம் ! Becos உங்களின் ரேட்டிங்குகளைப் பொறுத்தே நம் மத்தியினில் இந்தத் தொடரின் எதிர்காலம் தீர்மானமாகும் ! So 'தல' first ஆ ? தளபதி first ஆ ? என்ற இங்கி -பிங்கி-பாங்கி ஆடும் சமயத்தினில் "மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்" இதழினையும் சேர்த்துக் கொள்ளக் கோருகிறேன் guys !!   

And yes - "குற்றத்தின் குரல்" - டெக்சின் 32 பக்க மினி கலர் சாகசம் நம் அன்புடன் கூரியரில் இருந்திடும் !  

Online லிஸ்டிங்ஸ் ரெடி : 

https://lion-muthucomics.com/latest-releases/1144-november-pack-2023.html 

So சந்தாக்களில் அல்லாத நண்பர்கள் ஜல்தியாய் ஆர்டர் செய்தால் தொடரும் நாட்களில் தீபாவளிச் சரவெடிகள் உங்கள் இல்லம் தேடிப் பாய்ந்தோடி வந்து விடும் ! சனிக்கிழமை மதியம் வரை நம்மாட்கள் அலுவலகத்தில் இருப்பார்கள் - அதன் பின்பாய் செவ்வாயே அடுத்த working day !  

Bye guys...happy shopping...and happier reading !

And முடிந்தால் 'தல' + தளபதி' சகிதம் ஒரு selfie அனுப்புங்களேன் - இங்கும் நமது FB பக்கத்திலும் போட்டுத் தாக்கிடலாம் ? 

See you around ! Have a lovely week ! And 2024 சந்தாக்களுக்கும் பட்ஜெட்டில் இடம் ஒதுக்கிட முயற்சிக்கலாமே - ப்ளீஸ் ? 




171 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே🙏

    ReplyDelete
  3. தல + தளபதி = தீபாவளி 😁😁😁

    ReplyDelete
  4. I hope you’re doing good sir. Take care of your health.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆசிரியரே
      தங்கள் உடல்நலம் பரவாயில்லையா?

      Delete
    2. தொண்டை மாத்திரம் அண்ணா அவர்களும், கலைஞர் அவர்களும், புரட்சித் தலைவர் அவர்களும் ஒன்றிணைந்தது போலுள்ளது - மத்தபடிக்கு all is well !! தேங்க் யூ !

      Delete
  5. இன்று பார்சல் பட்டாசு

    ReplyDelete
  6. / சாரி guys - ரிப்போர்ட்டர் ஜானியின் பணிகளுக்குள் இருந்த வேளையில் தான் வைரஸ் காய்ச்சல் துவைத்து எடுத்திருந்தது //
    ஓ காட்,உங்களுக்கும் சோதனை,ஜானிக்கும் சோதனை...

    ReplyDelete
    Replies
    1. இந்த நொடியில் ஜானியோடு தான் பயணம் சார் !

      Delete
    2. டிசம்பர் மாசம்,ஜல்பு மாசம் கவனமா இருங்க சார்...

      Delete
  7. ஹைய்யா வெயிட்டிங் டூ தல தளபதி கொரியர்......

    செல்ஃபி தானே போட்டா போச்சுதுங் சார்..

    ReplyDelete
  8. இரண்டு குண்டு படிச்சு முடிக்க இந்த மாதம் தேவைப்படும்
    ஜானி மெதுவாக அடுத்த மாதம் வரட்டும்

    ReplyDelete
  9. டேக் கேர் த ஹெல்த் சார்....🙏

    வருடம் ஒரு ஃபீவர் தாக்கிட்டே இருக்கு... உசாராக இருக்கவும்....!!

    ReplyDelete
    Replies
    1. இத்தனைக்கும் நான்லாம் வருஷா வருஷம் flu shot போட்டுக் கொள்ளும் கேசும் கூட !! Pheww !!

      Delete
  10. ///இந்த நொடிக்கு - 184 + 384 + 96 = 664 பக்கங்கள்// அம்புட்டும் கெளபாய் களமா...போடு வெடியை.....🎆🎇🎆🎇🎆🎇🎆🎆🎇🎆🎆🎇

    ReplyDelete
    Replies
    1. அத்தோடு ஒரு 32 பக்கங்களையும் சேர்த்துக்கோங்க - "குற்றத்தின் குரல்" - டெக்ஸ் மினி கலர் சாகசம் !

      Delete
    2. ஆஹா... அப்படி போடுங்க சார்....

      இது இது இதைத்தான் எதிர் பார்த்தோம்...😍

      Delete
  11. மீ வெயிட்டிங் பார் த கொரியர்... முதல் தீபாவளி மலர் கொரியர் யாருக்கு கிடைச்சதுப்பா????

    யார் அந்த அதிர்ஷடசாலி????

    ReplyDelete
    Replies
    1. மதியத்துக்கே எல்லாப் பார்சல்களும் கிளம்பி விட்டன சார் & நேத்திக்கு இக்கட no மழை ! So இன்று பட்டுவாடாக்கள் துவங்கிட வேண்டும் - அந்தப் பக்கங்களிலும் வருண பகவான் ஓய்வாய் இருக்கும் பட்சத்தில் !

      Delete
  12. ///டிசம்பர் கும்பலுக்குள் ஐக்கியமாகிறது !///

    ஒன்றும் ப்ராப்ளம் இல்லைங் சார்... மெதுவாக வரட்டும்.....அவசரமே இல்லைன்னேன்....😜😜😜

    (இந்த கமெண்ட் மாத்திரம் மேச்சேரி பக்கம் தெரியாம பார்த்துகிடணும்...🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️)

    ReplyDelete
  13. ஹேப்பி தீபாவளி

    ReplyDelete
  14. தலையோடு தீபாவளி கொண்டாட வேண்டியது தான்.

    ReplyDelete
  15. கொரியர் ஆபீஸ் கிளம்பிட வேண்டியதுதான். போயி தீபாவளி மலர கைப்பற்ற போறேன்.

    ReplyDelete
    Replies
    1. சட்டு புட்டுனு போட்டோ போடுங்க ஜி. ஹேப்பி தீபாவளி....

      Delete
    2. நேற்று சந்தாவில் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுப்பி இருக்கிறார்களாம் எனக்கு இன்று அல்லது நாளை அனுப்புவார்களாம் ஆபீசில் விசாரித்து விட்டாச்சு.

      Delete
  16. உடல்நிலை சரியான பின் மெதுவாகவே வாருங்கள் சார், எதும் அவசரமில்லை,உங்கள் உடல்நலமே முக்கியம்.
    வன்மேற்க்கின் அத்தியாயம் படிக்க படிக்க விறுவிறுப்பாக இருந்தது. அமெரிக்கா தோன்றும் காலகட்டத்துக்கு முந்தி, எப்படி இருந்திருக்கும் என்பதை படிக்கவே அருமையாக இருந்தது.
    அழகான சித்திரங்கள், தெளிவான கதையோட்டம் என மூன்று பாகங்களும் அழகு.
    ரெகுலர் தவிர,
    சென்ற வருட தீபாவளி போலவே ஸ்பெஷல் புக்ஸ் எதுவும் இல்லீங்களா?.

    ReplyDelete
  17. வணக்கம் ஆசிரியர் சார் & நண்பர்களே.

    ReplyDelete
  18. வந்துவிட்டதா தீபாவளி?!

    ReplyDelete
  19. ஆசிரியர் சார் தங்களின் உடல் நிலையை நன்றாகக் கவனித்துக் கொள்ளவும்.நன்றி சார்.

    ReplyDelete
  20. குற்றத்தின் குரல்" - டெக்சின் 32 பக்க மினி கலர் சாகசம் நம் அன்புடன் கூரியரில் இருந்திடும்

    தீபாவளி போனஸ் சூப்பர் சார்

    ReplyDelete
  21. இன்று பார்சல் கிடைக்குமா....ஆவுலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன் ...

    தங்கள் உடல்நலனையும் நன்கு கவனித்து கொள்ளுங்கள் சார்...

    ஜானி பொறுமையாய் அடுத்த மாதமே வரட்டும்..சிங்கமும் புலியும் ஒரே மாதத்தில் வரும் பொழுது அதுவே போதுமானது :-)

    ReplyDelete
  22. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  23. மீ த பர்ஸ்ட்....

    பார்சல் கிடைச்சாச்சே....

    தல& தளபதி தரிசனம் கிடைச்சாச்சே....

    ஒரே வார்த்தையில் விவரித்தால்....

    "ஆஸம்..."

    கிரேட் ஓர்க் சார்....🙏🙏💞💞

    ReplyDelete
    Replies
    1. // மீ த பர்ஸ்ட்....//

      அருமை... வாழ்த்துக்கள் நண்பா

      Delete
  24. அருமை !!!
    அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் 🎆🎇🧨🪔💐💐!!!

    ReplyDelete
  25. தீபாவளி ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்துள்ளது...அனைத்து இதழ்களும் அருமை...

    டாப் ஆஃப் த மன்த் ஆக இருக்கப் போவது.....

    """The தளபதி ஸ்பெசல்"""

    தீபாவளி மலர் 2023 என்ற டைட்டிலுக்கு மிகப் பொருத்தமான கனமான ஹார்டு கவர் இதழ்...சும்மா 200பக்கங்களில் சரவெடியாக அதிர்கிறது...

    மிடுக்குடுன் கெத்து காட்டும் டைகர் முதல் இரு பக்கங்களில்....

    காமிக்ஸ்X(அல்ல)
    "தளபதி டைம்" -- என வித்தியாசமான டைட்டிலில் ஆசிரியர் பக்கம் தீபாவளி வாழ்த்துடன்..

    1.பிங்கர்டன் தீர்வு
    2.சபிக்கப்பட்ட பாதையில்
    3.வாஷிங்டனுக்கான கடைசி ரயில்
    4.லிங்கன் செத்தாக வேண்டும்
    என்ற 4ஆல்பங்கள் கலக்கலான வண்ணத்தில்...

    இளம் டைகரின் ஆல்பங்கள் 10முதல்13 கொண்ட இந்த இதழ் ஷ்யூர் ஹிட்டாக அமையும்னு பார்த்த உடன் தெரிகிறது...

    மொழி பெயர்ப்பாளர்கள் மஹி & அருமை ஆசிரியர் விஜயன்அவர்கள் கூட்டணியில் என டைட்டில் கார்டுடன்..

    வாழ்த்துகள் மாப்பு மஹி எ மகேந்திரன் பரமசிவம்💐💐💐💐💐


    3வது எழுத்தாளராக அடியேனும் இடம் பெற்று உள்ளேன், கதை சுருக்கம் வாயிலாக....(ஆங்காங்க அடிக்க எடுத்த விறகு கட்டைகளை கீழே போடுங்கப்பா😜😜😜)

    இத்தகைய பிரமாண்டமான பொக்கிஷத்தில் என் வரிகளையும் காணும்போது ஜிவ்வுனு இருக்கு...💞💞💞💞💞

    ReplyDelete
    Replies
    1. இளம் டைகர் பாகம் 1 டு 9 என்ன புக் என்று போட முடியுமா

      Delete

    2. நண்பரே@திருச்சி விஜய்

      இளம்டைகர்...

      1,2&3=இளமையில் கொல்-3பாகங்கள்-
      லயன் கெளபாய் ஸ்பெசல்,2007

      4.மரணநகரம் மிசெளரி(வைல்டு
      வெஸ்ட் ஸ்பெசல்sep2012-இருபாக கதையின் முதல் பாகம்)
      5.கான்சாஸ் கொடூரன்
      (முத்துNBS jan2013-இருபாக கதையின் க்ளைமாக்ஸ்)

      6.இருளில் ஒரு
      இரும்புக்குதிரை(முத்து NBS
      jan2013-அடுத்த இருபாக கதையின் முதல் பாகம்)
      7. வேங்கையின் சீற்றம்(டிசம்பர்
      2013-NBSல் வந்த இருபாக கதையின் க்ளைமாக்ஸ் சாகசம்)

      8.அட்லான்டாவில் ஆக்ரோசம்
      9.உதிரத்தின்விலை...8&9-ஒரே
      இதழாக மார்ச்2014ல் வந்த இருபாக
      சாகசம்.


      இந்த தொடரில் 10 முதல் 13வரையிலான 4பாகங்கள் இம்மாத டைகர் புக்கில்....

      Delete
  26. மிக்க மகிழ்ச்சி ராகவன்.. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. ❤️👍.. எடிட்டர் sir.. "வந்தார் வென்றார் கதை பற்றி ஒரு பதிவு f b ல போட்டே ஆவணும் ".. என்ற ஆவலை ஏற்படுத்தியது... உங்கள் தேர்வு அட்டாஹாசம்... வாழ்த்துக்கள் sir.. ❤️👍

    ReplyDelete
  27. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மஹி... மிக்க மகிழ்ச்சி.. ❤️👍

    ReplyDelete
  28. அடுத்து டெக்ஸ் குண்டு புக் பக்கம் பார்வையை ஓடவிட்டா....ஆஆஆஆத்த்திஈஈஈஈஈ எத்தனை கணம் புக்கு.....💓💓💓💓

    தீபாவளி மலர் 2023ன் 2வது இதழான கறுப்பு வெள்ளை புக் The Tex சிக்ஸர் ஸ்பெசல்& Tex75 வரிசையில்..
    386 பக்கங்களில் மத்தாப்பு தோரணம் கட்டுது....

    புத்தகத்தின் முதுகு பக்கத்தில் உள்ள லயன் காமிக்ஸ் "லயன் தீபாவளி மலர்"- னு வாசிக்கும் போது முந்தைய தீபாவளி மலர்கள் சரசரனு ஒரு கணம் மனதில் வந்து குதூகல ராக்கெட்டை கிளப்புகின்றன...


    கிரேட் ஒர்க் ஆசிரியர் சார்& டீம் லயன்...💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  29. சார்,
    பிப்ரவரி மாத கிராபிக் நாவல் நிலுவையில் உள்ளது மற்றும் அட்டவணை போட்டி முடிவுகளும் pending. விடிய விடிய மண்டையை கசக்கி பதிவிட்டது. பலன் கிடைக்குமா.

    ReplyDelete
    Replies
    1. சொல்லுங்களேன் சார் - யாரது யூகங்கள் அசல் அட்டவணைக்கு நெருங்கிச் சென்றதென்று ? நமது ரூட் 2024-ஐ யாரேனும் எதிர்பார்க்கவாவது செய்திருந்தனரா ?

      நான் கவனிக்காது போயிருந்த என்ட்ரி ஏதேனும் இருந்தால் சொல்லுங்க - நிச்சயமாக சந்தாவினில் சேர்த்திடலாம் !

      Delete
    2. யாரும் நெருங்கவில்லை சார். உங்கள் யூகத்தை.

      Delete
    3. // யாரும் நெருங்கவில்லை சார். உங்கள் யூகத்தை. //

      +1

      Delete
  30. நீண்ட காலத்திற்கு பிறகு நமது கேப்டன் டைகரை சந்திப்பது, என்றோ பிரிந்த மனதிற்கினிய நண்பரை மீண்டும் சந்தித்த மகிழ்வை தருகிறது.
    அட்டைப்படம், பைண்டிங், அச்சுதரம் என அனைத்தும் மிக நிறைவாக உள்ளது. 🥰🥰🥰🥰🥰

    தங்களின் "தளபதி டைம்" கூற்றுப்படி.. டைகரின் மெயின் தொடரின் ரேஞ்சுக்கு இளம் டைகர் இல்லையே என்று அங்கலாய்க்காது இதில் உள்ள நிறைகளை மாத்திரம் கொண்டாடி தீர்ப்போம் sir. பல அற்புத கதைகளோடு நம்மை மகிழ்வித்த டைகருக்கு ஒரு நல்ல காமிக்ஸ் ரசிகராக நாம் செய்யும் கைமாறாக இருக்க முடியும். 🙏🙏🙏🙏🙏

    டைகர் மெயின் தொடரில் கதைகள் முடிந்து ஆண்டுகள் பல ஆகியிருப்பினும்.. இன்றும் முத்துவின் டாப் நாயகர் யாரெல்லாம் என்று கேட்டால்.. நிச்சயமாக அனைவரும் டைகரை சுட்டிக்காட்டுவார்கள். தாங்கள் இதுவரை எத்தனையோ நாயகர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள் எனினும் அவர்களில் டைகர் ஒர் பெருமைமிகு அறிமுகம் sir... டைகர் நிச்சயமாக எங்கள் மனதில் காலத்திற்கும் வீற்றிருக்கும் அமரத்துவ நாயகர் sir. 😍😍😍😍😍

    இனிய தீபாவளி பண்டிகை நாளில் எங்கள் இனிய நாயகர் டைகரை முத்துவின் தீபாவளி மலராக வெளியிட்ட தங்களுக்கு மிக்க நன்றிகள் விஜயன் sir. மற்றும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் sir.
    💐💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. //டைகரின் மெயின் தொடரின் ரேஞ்சுக்கு இளம் டைகர் இல்லையே என்று அங்கலாய்க்காது இதில் உள்ள நிறைகளை மாத்திரம் கொண்டாடி தீர்ப்போம்//

      Well said sir !

      Delete
    2. முழுக்க முழுக்க உண்மை. அடங்காத காளை எங்கள் தங்கத்தலைவன் கேப்டன் டைகர்...

      Delete
  31. தீபாவளி வாரம் தான் ; பட்டாசுகளுக்கு சிவகாசியில் அனல் பறக்கிறது தான் !

    But இன்றைக்கு நமது அலுவலகத்திலும் அதே ரஷ் ; அதே ஆரவாரம்ஸ் & அதே ரகளைஸ் ! இன்று ஒற்றை நாளில் கிட்டியுள்ள ஆன்லைன் ஆர்டர்களும் ; GPAY மூலம் தொகையனுப்பி விட்டு செய்திடும் ஆர்டர்களும், ஒரு புது உச்சத்தைத் தொட்டுள்ளன ! Absolutely incredible stuff !!

    ReplyDelete
    Replies
    1. எல்லாப் புகழும் (இளம்) தலைக்கும், தளபதிக்குமே !

      Delete
    2. And ஒரு தனிப்பதிவு போடும் அளவிற்கு இன்றைய பொழுதினில் விஷயங்கள் உள்ளன ! Maybe சனியன்று !

      Delete
    3. மிக்க சந்தோஷம் சார். புது டைகர் கதை ஒன்று உருவாகி வருவதாகத் தாங்கள் சொன்ன ஞாபகம் சார். அதையும் வெளியிடுங்கள் சார்.

      Delete
    4. மிக்க மகிழ்ச்சிங் சார்.....

      இன்றைய விசயங்கள் அறிய ஆவலுடன் வெயிட்டிங்...

      Delete
    5. செம ஆசிரியரே💥💥💥🥳🥳

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. //புது டைகர் கதை ஒன்று உருவாகி வருவதாகத் தாங்கள் சொன்ன ஞாபகம் சார். அதையும் வெளியிடுங்கள்//

      நம்ம ஸ்டீல கதை எழுதச் சொல்லிப்புட்டு, நாமளா படம் போட்டா தான் உண்டு போலும் ; முதற்பாகத்தோடு மூட்டை கட்டிப்புட்டா மாதிரி தோணுது நண்பரே ! ஐஞ்சு வருஷங்கள் ஆகப் போகுது - முதல் ஆல்பம் வெளியாகி ! Phew !

      Delete
    8. உற்சாகமான தீபாவளிப் பதிவுக்காண்டி வெயிட்டிங்...

      Delete
    9. இன்னிக்கி வேலையே பாக்காம நம்மாட்கள் வேலை பார்த்து வந்ததைப் பராக்குப் பார்த்தது பற்றியே ஒரு பதிவு போடலாம் தான் ! சும்மா கிழி .. கிழி ...!

      Delete
  32. இளம் டைகர் கதைகளின் மீதத்தையும் வருடம் ஒரு தொகுப்பாக போட்டு முடிக்க புனித மனிடோ அருளாசி தர வேண்டுகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. பத்து வருஷங்கள் கழித்து வந்திருக்கும் 4 பாகங்களை காலத்தே படித்து, ரசிக்க அவர் வரம் தரட்டும் சார் முதலில் - அப்பாலிக்கா பறப்பதை பிடிக்கத் திட்டமிடுவோமே !

      Delete
  33. எனக்கும் புத்தகம் வந்து விட்டது. தீபாவளி 3 நாள் முன்பே வந்து விட்டது பார்சலில்.

    ReplyDelete
  34. Courier reached. I am in out of station .will return tomorrow.then courier will open.

    ReplyDelete
  35. சார்... 2024 அட்டவணை பார்சலில் இடம் பிடித்துள்ளதா?

    ReplyDelete
  36. Recd books. Read mini tex. Sumar storyline. Expected ending. Artwork good

    ReplyDelete
    Replies
    1. அந்த டெக்ஸ் மினி கதைகளை புதுப் படைப்பாளிகளுக்கான பயிலரங்கம் போல் பயன்படுத்துகிறார்கள் சார் ! ஜாம்பவான்கள் நடுநடுவே தலை காட்ட , நிறைய புதியவர்களுக்கு இங்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது !

      Delete
  37. சில நிமிடங்களுக்கு முன்பு கொரியர் டப்பி கையில் கிட்டியது! டப்பியின் டாப்பை கழற்றியதும் முதலில் கவனத்தை ஈர்த்தது - இளம் தலையின் ஆறுபாக குண்டுவே! கச்சிதமாய் அலங்கரிக்கப்பட்ட மணமகளைப் போல நச் என்ற மேக்கிங் ப்ளஸ் புத்தக சைஸ் - உள்ளத்தை அள்ளியது!
    அட்டைப்பட அசத்தல் ஒருபுறமிருக்க, 'லயன் தீபாவளி மலர்' என்ற எழுத்துக்களைப் பார்த்தபோது ஒருவகையான நோஸ்டால்ஜிக் குதூகலம் குபுக்கென்று வந்து ஒட்டிக் கொண்டது!
    பின்னட்டையில் இளம்தல படு ஸ்டைலாக போஸ் கொடுத்திருப்பதை ஒருநாள் முழுக்க கண்கொட்டாமல் ரசித்திடலாம்! இந்த ஸ்டைலைப் பார்க்கும்போது 'குலுவாலிலே முத்து வந்தல்லோ' பாடலுக்கு சூப்பர் ஸ்டார் குழுவோடு இணைந்து ஆடும் டான்ஸ் ஸ்டெப் - மனக்கண்ணில் ஓரமாய் வந்து போகிறது!!

    இதெல்லாம் போதாதுன்னு இளம் தளபதியின் தீபாவளி மலர் வேறு!! கைகள் நோவும் பருமனில் ஒரு கையில் தல'யயும், இன்னொரு கையில் தளபதியையும் ஏந்திடும்போது நமக்குள் ஊற்றெடுக்கும் உற்சாகம் இருக்கே... சத்தியமா அதான் - அந்தத் தருணம் தான் - நமக்கெல்லாம் நிசமான தீபாவளி!!💥✨✨💥🌟✨🌟

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்கி ஒரே வாசகர் 6 தளபதி பெசல்களை வாங்கியுள்ளார் !

      Delete
    2. // இன்னிக்கி ஒரே வாசகர் 6 தளபதி பெசல்களை வாங்கியுள்ளார் ! //

      Wow

      Delete
  38. தல& தளபதி-தீபாவளி கொண்டாட்டம் அட்டகாசம்..
    தளபதி பைண்டிங்கில் அசத்துகிறார்.
    நீங்கள் அருமையான அட்டைப்பட ஓவியத்தை தயார் செய்தாலும் - பைண்டிங்கில் ஒரு பிசிறு தட்டாமல் தயாரித்துவழங்கிய தோழர்களுக்கு எங்களது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்களேன்..
    இன்று புத்தகத்தை ரசிப்பதை தாண்டி ஒருபக்கம் கூட படிப்பதாய் இல்லை..
    அடுத்து இளம் Tex அட்டை ப்படத்த பார்க்கையிலேயே கதைக்குள்ளே போய் விட்ட உணர்வு..
    அதுவும், அட்டையின் முதுகுபக்கம் முதலில் ஏதோ சிகப்பு கலர் என்று நினைத்தேன்..
    கவனித்துப் பார்த்ததில் சரியான சரவெடிதான்..
    ரொம்ப ரசனையாகத்தான் தயாரித்து இருக்கிறீர்கள்..
    தங்கள் குடும்பத்தினருக்கும் - அலுவலக நண்பர்களுக்கும் என் இனியதீபாவளி வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  39. இந்த வருடத்தின் சிறந்த படைப்பாக தளபதி ஷ்பெசல் தெரிகிறது..!

    அட்டைப்படம் செம்ம..! சித்திரங்களும் கலரிங்கும் இதுவரை டைகர் கதைகளில் பார்த்திராத வகையில் பயங்கர தெளிவாகவும் ஈர்ப்பாகவும் இருக்கிறது..! எல்லாத்துக்கும் மேலாக... *மகேந்திரன் பரமசிவம்..* என்ற வார்த்தை இந் இதழை மேலும் ஷ்பெசலாக்குகிறது எனக்கு... கலக்குடா மச்சான்..😍

    இளம் டெக்ஸ்.. ச்சிக்குன்னு இருக்கு..! ஹார்ட் பவுன்ட் இல்லாததும் ஒரு ப்ளஸ் பாயின்டாகவே தோணுது..!

    பிரிச்சிப் பாத்துட்டு பத்திரமா வெச்சிருக்கேன்..! தீபாவளி முடிந்துமே மூன்று நான்கு நாட்கள் வரையிலும் எதையும் ரிலாக்ஸாக படிக்கமுடியாது... நிலமை அப்படி..!

    வீட்ல ஒரு தளபதி ரசிகர் இருக்காரு.. ( போனவாரம்
    இரத்தக்கோட்டையை படித்ததில் இருந்து.. இப்போ தங்கக்கல்லறை போயிட்டு இருக்கு..)

    அடுத்து இளமையில் கொல் லில் இருந்து வரிசையாக எடுத்து வைக்கச் சொல்லியிருக்காரு.. மெய்யாலுமே மகிழ்ச்சி.😍

    ReplyDelete
    Replies
    1. // வீட்ல ஒரு தளபதி ரசிகர் இருக்காரு.. ( போனவாரம்
      இரத்தக்கோட்டையை படித்ததில் இருந்து.. இப்போ தங்கக்கல்லறை போயிட்டு இருக்கு..) //

      Wow good to hear this

      Delete
    2. *மகேந்திரன் பரமசிவம்..* சலாம் சகோதரரே.

      Delete
  40. சுப்ரிமோ ஷ்பெசல் :

    வந்தார் வென்றார் :-

    டெக்ஸ் கதைகளில் பழக்கமான தடத்தில் இருந்து மாறுபட்டு எப்போதாவது.. குறிஞ்சி மலர் போல.. அத்திப் பூத்தாற் போல சில கதைகள் வருவதுண்டு..!

    அந்த அத்திப்பூ வரிசையில் வந்தார் வென்றார் கதையும் ஒன்று..! சித்திரங்களும் கலரிங்கும் ஆஹா ஓஹோ ரகம் இல்லையென்றாலும் நிச்சயம் மோசமில்லை ரகம்.!

    அமெரிக்காவில கர்த்தரேன்னு தினத்துக்கு நாலு பேரு சில்லுமூக்கை பேத்துக்கிட்டு.. தானுண்டு தன் முஷ்டி உண்டுன்னு நிம்மதியா சுத்திக்கிட்டு இருந்த மனுசனை நட்பைக் காட்டி... டெக்ஸோட செவ்விந்திய போர் அனுபவங்கள் தங்களுக்கும் கைகொடுக்கும்னு நம்பி.. அர்ஜென்டினாவுக்கு அலேக்கா தூக்கிட்டு போயிடுறாங்க..!
    நண்பருக்காக அர்ஜென்டினா ராணுவத்தில் நல்லெண்ணத் தூதுவரா போஸ்டிங் வாங்கிட்டு செவ்விந்தியர்களோட நடக்கவிருக்குற போர்ல கலந்துக்கிறாரு..!

    அதுக்கப்புறம்தான் திருப்பங்களே.. நண்பன் எதிரி ஆவதும் எதிரி நண்பன் ஆவதும்.. மீண்டும் நிகழ்வுகள் தலைகீழாவதும் என வழக்கத்துக்கு மாறான ஆழமான கதை..!

    வல்லவர்கள் வீழ்வதில்லை வரிசையில் (இப்போதைக்கு) அடுத்த இடம் வந்தார் வென்றார் கதைக்கு.!

    பூதம் காத்த புதையல் :

    வெளிநாடு போயிட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பின கதைதான் வந்தார் வென்றாருக்கு அடுத்து படித்த பூதம் காத்த புதையல்..!

    என்னதான் வெளிநாடுகளில் புதுப்புது இடங்களையும்.. வித்தியாசமான காட்சிகளையும் மாறுபட்ட மாந்தர்களையும் கண்டு ரசித்திருந்தாலும்... சொந்த ஊருக்கு திரும்பிய பிறகு பார்த்த முகங்களையே பார்ப்பதிலும்.. பழகிய இடங்களிலேயே பழகுவதிலும் கூட ஒரு சுகம் இருக்கத்தானே செய்யும்..!

    அதைப்போன்ற வழக்கமான டெக்ஸ் ஃபார்முலா கதை..! தொடர்ச்சியாக மூன்று வண்ணக்கதைகளை படித்துவிட்டு கருப்புவெள்ளைக்கு வரும்போது.. நம்ம இடத்துக்கு வந்துட்டோம்கிற மாதிரியான ஒரு ஃபீல்..!
    செவ்விந்திய போரில் வீரமரணமடைந்த கேப்டனின் பூதஉடலை செவ்விந்தியர்கள் புனிதமாக கருதும் மயயானத்திலேயே புதைத்துவிட்டதாக போரில் உயிர்தப்பிய சார்ஜென்ட் ஒருவர் மூலம் தகவல் கிடைக்கிறது..!

    நாட்டுக்காக உயிர்நீத்த இராணுவ அதிகாரியின் உடல் உரிய மரியாதையோடும் மதச்சடங்குகளோடும் முறைப்படி புதைக்கப்பட வேண்டுமேன இறந்தவரின் குடும்பத்தாரும்.. சில அதிகாரிகளும் ஆசைப்படுகிறார்கள்..!

    செவ்விந்தியர்களுடன் உறவும் சரியில்லை.. அதுமட்டுமின்றி செவ்விந்தியர்களின் நம்பிக்கைகளை மீறி அவர்களின் மயானத்தில் இருக்கும் உடலை தோண்டி எடுக்கவும் முடியாது..! இந்தச் சூழலில் டெக்ஸ் வில்லரின் உதவியை நாடுகிறது இராணுவம்.! டெக்ஸும் சியோக்ஸ் தலைவருடன் பேசி சம்மதமும் வாங்கி விடுகிறார்.. அதன் பின் அந்த மயானத்தை நோக்கி போகும்போது ஆரம்பிக்கிறது கதையில் சின்ன சின்ன ஆனால் சுவாரஸ்யமான ட்விஸ்டுகள்..!
    க்ளைமாக்ஸ் சிறப்பு..!

    மேற்கண்ட இரண்டு கதைகளிலும் முக்கியமாக குறிப்பிட்டே ஆகவேண்டிய சங்கதி.. வசனங்கள்..!
    எங்குமே டெக்ஸ்வில்லருக்கு தேவையற்ற பில்டப்புகளோ அதீத மரியாதையோ.. நம்பத்தகாக மதிப்புரைகளோ கொடுக்கப்படவில்லை..! எங்கே எப்படி பேசுவார்களோ.. அங்கே அப்படியே வசனங்கள் இருந்தன..! பஞ்ச் தேவைப்படும் இடத்தில் பஞ்ச்.. நக்கல் நையான்டி தேவைப்படும் ஆ
    இடத்தில் நக்கல் நையான்டி.. சீரியஸான கட்டங்களில் அதற்கேற்றாற்போல் தரமான தத்துவார்த்தங்கள் என படிப்பதற்கு அருமையாக எவ்வித உறுத்தலும் இல்லாமல் திருப்தியாக இருந்தது..!

    மனமார்ந்த பாரட்டுகளும் நெஞ்சார்ந்த நன்றிகளும் எடிட்டர் சார்.. 💓🙏🏻

    ReplyDelete
  41. நண்பர்கள் அனைவரின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இன்னிக்கு மிகவும் நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்த நாள்.

    என்னுடைய ஆதர்ச நாயகனின் கதையை மொழி பெயர்த்து, அது என் ஆதர்ச எடிட்டரால் திருத்தப்பட்டு, என் ஆதர்ச இதழில் வருவதே என்னளவில் எனக்கு மிகப்பெரிய விசயம்.

    வாய்ப்பு தந்து சிறப்பித்ததற்கு எடிட்டருக்கும் special thanks.

    ReplyDelete
    Replies
    1. ஃபெண்டாஸ்டிக் ஒர்க் மாப்பு...
      💐💐💐💐💐💐

      மீதமுள்ள 8பாகங்களையும் இதேபோல ஆசிரியர் வாய்ப்பு தரும்போது பண்ணி, டைகருக்கு சிறப்பு செய் மாப்பு..
      பாகங்கள் 14 டூ21க்கு வெயிட்டிங் ஆவலுடன்... பாகம் 20ஐ ஆங்கிலத்தில் பார்த்து ரொம்பவே ஸ்டன்னிங் ஆகிட்டடேன்...அற்புதமான ஓவியங்கள்..

      அப்படியே உன் காதைக் கொடு மாப்பு...
      "உன்னோட இன்ஃப்ளூயன்ஸ்ஸை உபயோகித்து, இளமையில் கொல் பாகம்2&3 ஐ வண்ணத்தில் வெளியிட கோரிக்கை வை மாப்பு; ரொம்ப காலமாக அது காத்துள்ளது. அவைகளும் வத்துட்டா டைகர் எல்லாமே கலர்ல வந்திடும்😍😍😍. இந்த மெசேஜை ஆசிரியர் சார் கண்ல படாம பார்த்துக்க..."""😜😉

      Delete
    2. @ம.ப.:
      சமீப சில ஆண்டுகளில் படித்த சில கதைகளுல் ஒன்று "பிஸ்டலுக்குப் பிரியாவிடை", மிகவும் சிறப்பாக மொழிபெயர்த்திருந்தீர்கள்! இம்முறையும் கலக்கி இருப்பீர்கள் என நினைக்கிறேன், மனமார்ந்த வாழ்த்துக்கள்!

      Delete
    3. மனமார்ந்த வாழ்த்துக்கள் மஹி ஜி !!!

      Delete
  42. எல்லாத்துக்கும் மேலாக. ''மகேந்திரன் பரமசிவம் ''என்ற வார்த்தை இந்த இதழை மேலும் ஸ்பெசலாக்குகிறதுஎங்களுக்கும் . வாழ்த்துக்கள் மகி ஜி.

    ReplyDelete
  43. இன்னிக்கு ஒரே வாசகர் 6 தளபதி ஸ்பெசல் கள் வாங்கியுள்ளார்..மெய்யாலுமே அவர்தான் தீபாவளி ய கொண்டாடுரார் ஹாப்பி தீபாவளி நண்பரே . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  44. Wild west series- interesting. Already it covered may be 20 years. I think when it reaches the end, 100 year history would be told.

    ReplyDelete
  45. Received my books yesterday. Happy Diwali

    ReplyDelete
  46. குற்றத்தின் குரல் கம்பீரமாக ஒலித்தது!!!

    ReplyDelete
  47. கெளம்பிடுச்சா .. 😍😍

    ReplyDelete
  48. முதல் புரட்டலில் டைகர் கெட்டி அட்டையில் அசத்துகிறார்,டெக்ஸ் குண்டு புக்காய் அட்டகாச அட்டையில் கலக்குகிறார்,V காமிக்ஸ் படிக்க ஆவலை தூண்டுகிறது...
    நேற்று மதியமே கூரியர் வீட்டுக்கு வந்து விட்டது எனத் தகவல் வந்தாலும் அலுவல் பணி நேரத்தை விழுங்கி ஏப்பம் விட்டபடியால் இரவுதான் பெட்டியை பிரித்து இதழ்களை புரட்ட முடிந்தது,இதழ்களைப் புரட்டியதும் பணி சார்ந்த அலுப்பைத் தாண்டி சற்றே மகிழ்ச்சி என் முகத்தில் ததும்பியதை என்னால் பட்டவர்த்தனமாய் உணர முடிந்தது,இறுக்கமான சூழல் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது...
    இலவச இணைப்பாய் டெக்ஸ் மகிழ்ச்சி...
    என்னதான் அட்டவணையை பதிவில் பார்த்திருந்தாலும் கையில் ஏந்திப் பார்க்கும்போது அது ஒரு அலாதியான அனுபவம்தான்...
    அதே நேரத்தில் குண்டு புக்கும்,கெட்டி அட்டையுமான இதழ்களையும் பார்த்து நீங்க எல்லாம் அடுத்த வருஷம் இருப்பீர்களா,இல்லையா என எண்ணம் எழுவதை தவிர்க்க இயலவில்லை...

    ReplyDelete
  49. மழையின் காரணமாக தாமதமாகினும் நேற்றைய. மாலைப்பொழுதினுள் இம்மாத இதழ்கள் பத்திரமாக கைக்கு வந்து சேர்த்து விட்டனர் எஸ்டி கொரியர் நண்பர்கள்..

    வழக்கம் போல் இரவு பொறுமையாக அனைத்து இதழ்களையும் புரட்டி ரசித்து பார்த்தாயிற்று...என்ன தான் இருந்தாலும் டெக்ஸ்ன் அந்த வழக்கமான அளவில் குண்டாக இதழ் வரும் பொழுது அதை கையினிள் ஏந்தும் பொழுதே "குஷி" தன்னால் பிறந்து விடுகிறது...என்னை பொறுத்தவரை ஹார்ட் பவுண்ட் இதழ்களை விட குண்டான இந்த வழக்கமான அட்டை கொண்ட இதழ்களே நிரம்பவே ரசிக்க வைக்கிறது...பின் நீண்ட நாட்கள் கழித்து டைகர் இதழை பாரப்பதில் சந்தோஷம்..அட்டைப்படமும் , உள்ளேஓவியங்களும் அமர்க்களம்...மொழிப்பெயர்ப்பாளர் ஷெரீப் அவர்களுக்கு மேலும் ஓர் பாராட்டு... இதழை படித்து விட்டு முடித்தால் தான் கதை நிலவரம் தெரியும் அறிய காத்திருக்கிறேன்..டெக்ஸ் மினி இலவச இதழும்..மோதாமல் ஒருநாளும் இருக்க. வேண்டாம் இதழும் வழக்கம் போல் முதல் பார்வையிலேயே அழகு...

    வலைத்தள பக்கத்தில் 2024 சந்தா அறிவிப்பில் இதழ்கள் குறைவோ ,குண்டு இதழ்கள் இல்லையோ என்ற வருத்தம் சிறிது காணப்பட்டாலும் அட்டவனை இதழை பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியே ..அனைத்து இதழ்களும் எதிர்பார்க்கும் இதழ்களாய் அமைந்து உள்ளது..இனி ஒவ்வொரு இதழ்களாய் வாசித்து விட்டு வருகிறேன்..

    ReplyDelete
  50. லயன் தீபாவளி மலர் டெக்ஸ் சிக்ஸர் ஸ்பெஷல் அறிவிச்சது ஹார்ட் கவர். ஆனா வந்துருக்குறது பேப்பர் பேக்.என்ன ஆச்சு எடி சார்.??

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஆம்!!!!என்ன ஆச்சு எடி சார்????

      Delete
    3. + காகித தரம். வழக்கமாக பயன் படுத்தும் வெள்ளை தாள் இது இல்லை. படு சுமாரான தாள் இது. நான் தவறாக கூறி இருந்தால், மன்னிக்கவும். சரியாக கூறி இருந்தால், நான் standard க்கு இது அழகல்ல

      Delete
  51. நேத்து நம்ம சப்ளையர் அவுட் ஆஃப் கனைக்சனுக்கு போக....காந்திபுரம்...சுத்தி ராமகிருஷ்ணா தான் எங்க பிரான்ஞ்ஞுன்னி கண்டு பிடிச்சி...அங்க சப்ளையர் நம்பர் மாத்தியாச்சுன்னு நம்பர தொடர்பு கொள்ள ....தொடரும்

    ReplyDelete
  52. *மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்*


    வன்மேற்கின் அழகான கதை தொகுப்பு ..இந்த இதழுடன் அழகுடன் ,மகிழ்வுடன் முடிந்து உள்ளது மகிழ்ச்சி.. மீண்டும் ஒரே தொகுப்பாக கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.. இதில் ஓர் சிறப்பு எனில் இதில் எந்த இதழை தனியாக படித்தாலும் கதை புரியும் படி இருப்பது சிறப்பு..அதே போல் இந்த சாகஸத்தில் ப்ரெட் தன் மனைவியிடம் நாம் வசிக்கும் இருப்பிடம் இதுதான் என அந்த அழகான இடத்தை காட்டும் பொழுது நாமும் அந்த இடத்தில் குடியேற வேண்டும் போல் அவ்வளவு அழகு...அதே போல் இந்த இதழின் நாயகர் ப்ரெட்டா அல்லது அவரின் மகனா என சந்தேகப்படும் அளவு அவரின் மகனின் சாகஸம் அமைந்து உள்ளது...

    மொத்தத்தில் ஓர் அழகான நிஜ வன்மேற்கு சாகஸத்தை காட்டும் இதழ் இந்த மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்

    ரசிகர்கள் வாங்காமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்..:-)

    ReplyDelete
    Replies
    1. தலீவரே செம்ம விமர்சனம். மின்னல் வேக விமர்சனம்.

      Delete
  53. சார் இந்த கொரியர் இல் புத்தகம் அடிபட்டு வருதுங்க

    ReplyDelete
  54. professional courier delay delivery ST courier is on time in Trichy

    ReplyDelete
  55. தீபாவளி மலர் பொட்டி வந்தாச்சு.
    ST கொரியர்.

    ReplyDelete
  56. அப்புறம் சுங்கத்ல போய் வாங்கிக்கங்கன்னு சப்ளையர் சொல்ல...அங்க ரொம்ப பிசி....முடியவே முடியாது ஏகப்பட்ட பார்சல்....இரவு 8 மணிக்கு வந்து பாருங்க அவரே வந்துருவாருங்க....இரவு 8 க்கு நம்மாள் கூட்ட 9.30 க்கு வாங்குங்க...நாம் அவரால்தான் போறோமோன்னு தோண....காலைல வேலைல பிசியாக வரட்டும்னு இருக்க...ஒரு மணிக்கு ராமகிருஷ்ணாட்ட வாங்குங்க....நா சுங்கத்ல இருக்கேன்ங்க....அடடா சரி வீட்ல குடுத்துபுடுங்கங்க ...சார் மொத புக்க உங்களுக்காக எடுத்துட்டு வந்திருக்கேன் இங்கயேவாங்க....சரி வரும் போது வாங்குவேங்க...மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து ராமகிருஷ்ணாலருக்கேங்க...அவரு பிரசாந்த் பேக்கரிங்க...அங்கிருந்து 200 மீட்டர்தான் வீடு....பக்கத்த ஃபைனான்ஸ் கம்பெனில குடுங்கங்க....ஒரு வழியா...


    இப்பதான் பார்சல பிரிக்கப் போறேன்....நல்ல கனந்தான்...நல்லகணந்தான்

    ReplyDelete
  57. அட்டைப் படங்கள் சும்மா அதகளம்.....

    டைகர் பாத்து அசந்து நின்னா...என்னைப்பார்னு அழகி நிக்க....என் கன்னை பார்னு டைகர் கன்னை நீட்ட... புரட்ட அடேயப்பா முன்னட்டைல முழங்கி வரும் டைகர் சிலிர்க்க....முன்னட்டையா பின்னட்டையான்னு பிரம்மிக்க....


    டெக்ஸ் தீபாவளி வாழ்த்து அட்டை பளபளக்குது வந்ததிலே டாப் நாந்தாங்க...இலவச இணைப்பு டெக்ஸ் சிலிர்க்க வைக்க...

    ரூட்2024... வேதாளனும் டெக்சும் உள்ள வந்து பார்த்து தன்னை காட்டி இழுக்க....முதல்ல நீங்கதான்னுட்டு அடுத்த....

    அந்த சிக்ஸர் ஸ்பெசல் வழவழ கண்ணாடியட்டைதான் சூப்பர்ன என் எண்ணத்தை மாத்தி சொரசொர அட்டைன்னா சும்மாவா... இது வரை வந்ததிலே டாப்னு நாஞ்ஞொன்னா சாதாரணமாகிடும் ....இதுக்கும் மேல் வார்த்தையை போட்டுக்குங்க பின்னிப் பெடலெடுக்குதிரட்டையுமே.

    கத்தியோட பாயும் முன்பக்க முற்கால டெக்சும்....துப்பாக்கியோட வீரநடைபோடும் பின்பக்க பிற்கால டெக்சும் காண கண் கோடி வேண்டும்....பாக்க பாக்க இன்பம்...பரவசம்...செம் சூப்பர் சார்....தீபாவளி மலர்கள் அதகளம்....அடுத்த வருட குண்டு புக் ஏக்கத்த ...சோர்வ
    நீக்கிடுச்சிரண்டும்...


    மோதாமல் ஒரு நாளுமிருக்க வேண்டா..அட்டை கலைகளுக்கும் நசுக்கப்பட்டாலும் வழக்கம் போல வி காமிக்ஸின் பெஸ்ட்....ராணி காமிக்ஸ் பூனைத்தீவுல டேவிட்னு ஓர் அறிமுகம் இதே தொப்பியோட சாயலாய் வந்து போவுது நினைவில்..


    சரி ரூட் னு ஒரு குண்டு புக்க சொன்ன ஆசிரியர் அதே தலைப்பை நீட்டிய அட்டவணைக்குள்ள முதல் கையடியை எடுத்து வைக்கிறேன் ரூட் 65 வரும்னு நம்பிக்கையோடு 24 ல

    ReplyDelete
  58. அட்டவணை பஸ்ல ஏறுனா முதல் சீட்ல டின் டின் ஆஹான்னு திருப்ப முயல் ட்ரைவர் சீட்ல லார்கோ....இதுக்கு மேல வேறென்னன்னு லார்கோ பாத்து துள்ள...அடுத்த சீட்டுல கிட்டும்....தவிர்க்க இயலா பணியும் புன்னகைக்க...ஆண்டும் வர்றது சீட்ல தெரியாம ஒளிஞ்சிருந்த டால்டன் லக்கி...அடுத்த சீட்ல அந்த கிணற்ற பார்த்ததுமே பால்ய கால கௌபாய்கள் நீரெடுக்க வரும் கதைகள் தூண்ட....நட்ட நடுவாக எல்லாரும் அன்னாந்து பாக்க அடுத்த சீட்ட பாக்க விடாம வலை மன்னன் நிறைத்து நிக்க....முதலைகள் பார்ப்போமே பேசித்தான்னு காட்டுனா...க்யூபா போவோம் வாரியான்னு வலையிலிருந்து நழுவ வைக்கிறார் என்னையும் மறக்கடித்த 13... ஜானியோ இரவு பயணம்னு கலவரப்படுத்த...அடுத்த பயணி அடிமையாய் அப்பெண்ணோடு ஆஹான்னு நகர ....ரூபின் பக்கத்து சீட்டு கலக்க...ஜன்னல் மூடுப்பா ஐசா குளுருதுன்னு பாக்க சூடான ரத்தம் பாய...இளம் டெக்ஸ் ஆஹாஹான்னு தொப்பியை தூக்கி வரவேற்க...கிட் ஓட்டத்து குலுக்கல்ல விழுந்து பகுடு பேர்...பௌன்சரோ டிக்கெட்டுக்கு கட்டணமாக தங்கத்த தாரை வாக்க...அடுத்த சீட்ல திரைப்படமோட...

    ReplyDelete
    Replies
    1. அடுத்த குளிரில் மார்ட்டின் ஜன்னல் வழியே பாக்க...புதுசா ஒரு அழகிய பரிதாபமா பார்த்தபடி கடக்கிறேன்....இந்த ஜன்னல் வழி காட்சிகள்தான் எவ்ளோ அழகுன்னு டேங்கோவோடு அமர....எல்லாம் மாயைதானோன்னு தேவதாஸ் பாடலை பாடியபடி இருவர் சீட்டுக்கு சண்டை போட இருவரையும் ஒரே சீட்ல அமர வைக்கலாமே என டிக்கட் போட்டவரை திட்டியும் திட்டாமலும் கடக்க முதியோர்களுக்கான இருக்கையில் வசமாய் இருந்த அவர்களை புன்னகையோடு கடக்கிறேன் நாமும் கடந்தாகனுமே...பேசலாமா வேணாமான்னு பரிதவிப்புடன் கடக்கிறேன் டிக்கை இன்னும் பழகவில்லை யென்ற பரிதவிப்பு டன்...

      Delete
  59. இது தான் சார் ஒரிஜினல் தீபாவளி பண்டிகை. இந்த பக்கம்... டைகர்.... அந்த பக்கம் டெக்ஸ்... சூப்பர்... சூப்பர்

    ReplyDelete
  60. இந்த மாத புத்தக பார்சல் இன்று வந்தது! பார்சலை பிரிந்தவுடன் டைகர்தான் என்னை முதலில் கவர்ந்தார், கடந்த இரண்டு தினங்களாக வந்தார் வென்றார் கதையை படித்து கொண்டுள்ளேன்; அதனை முடித்தவுடன் டைகர் கதையை படிக்க வேண்டும்!

    தீபாவளி புத்தகங்கள் மேக்கிங் அனைத்தும் அருமை; இருப்பதில் டாப் என்றால் டைகர் மேக்கிங் தான்.

    டெக்ஸின் கலர் சிறு கதையை படித்து விட்டேன், ஒகே, கடந்த மாதம் வந்த டைலன் கதை இதனை விட நன்றாக இருந்தது! பட் ஐ லைக் இட் :-)

    ReplyDelete
    Replies
    1. பழகிய முகம் மாடஸ்டி கார்வினை புன்முறுவலுடன் கடக்க....அட சாகோர் நல்லா பருத்திருக்க அவர் மடியிலர்ந்து...திரும்பிப்பாத்தா வேதாளர் குத்திகிட்டிருக்கிறார் அடுத்த சீட்ல பிரின்சோட சேந்து...அடுத்து ஒரே போராளி என்னை பிடிக்காமலா என நோன்னு கத்துறார்....கார் விபத்து பாத்து ராபின காக்க சொல்லி...

      அப்புறம் வெயிட்டிங் லிஸ்ட்ல புகைப்படம் மட்டும் தொங்குது ஆல்ஃபா ஐஆர்எஸ் சோடா நெவாடா ப்ளூ கோட் மேகி சிஸ்கோஜான் மாஸ்டர்னு....பின்னால் காலி சீட்ல அகலமான இருக்கைகள் காட்சி தர நிச்சயமா அதிரடியாக அந்த சிவப்பு மை நாயகர்கள் தூள் கிளப்ப வருவாங்கன்னு தம்பி லார்கோ லோடு அமர்கிறேன் முதல் சீட்டில்...ஸ்டார்ட்

      Delete
  61. தளபதி டைம்.....வீரர்களே சூப்பர்...ஆனா இளம் வீரர்களே ட்ரு என்னயு சேத்து அழைச்சிருக்கலாம்...முதல்ல படிக்கப் போவதிதுவே

    ReplyDelete
  62. Sir. The booklet for next year books is simply amazing. I think it's better to release this booklet first and post in blog the next day. Because when I saw the booklet, I immediately felt happy. Blog la ivlo Maas a illa

    ReplyDelete
  63. எல்லோருக்கும் வணக்கம். இந்த வருடம், எங்களுக்கு (காமிக்ஸ் ரசிகர்களுக்கு) தீபாவளி கடந்த புதன் கிழமையே வந்து விட்டது. ஆமாம், லயன்/முத்து/வி காமிக்ஸ்ன் தீபாவளி மலர்'23 தான், எங்களுக்கு தீபாவளியை முன்கூட்டியே கொண்டு வந்தது. நீண்ட காலத்துக்கு பிறகு, தல (டெக்ஸ்) மற்றும் தளபதி (கேப்டன் டைகர்) இதழ்கள் ஒன்றாக வெளி வந்திருக்கிறது.

    அட்டைப்படம் மற்றும் புத்தக வடிவமைப்பில் இரண்டுமே தூள். நான் தல ரசிகனாய் இருந்தாலும், நீண்ட வருடங்களுக்கு பிறகு வந்திருக்கும் தளபதியே என்னை கவர்ந்திழுத்தார். அட்டை படத்துக்கு பின்புறமும், கேப்டனின் ஓவியங்கள் அருமை. அதைத் தாண்டி கொஞ்சம் முன் கதையை படித்து விட்டு, கதைக்குள் நுழைந்தேன்.

    முதல் படமே, லாங் ஷாட்டில்.கதை ஆரம்பிப்பது 1864ல் ( பக்கம் 104ல், 1884 என்று தவறுதலாக இருக்கிறது). ஒரு நாடக நடிகரிடம் இருந்து துவங்கும் கதையில், அவரை நாம் முற்றிலும் மறந்து விட்ட நிலையில், மீண்டும் கொண்டு வருவதில் தான், கேப்டனின் கதைகள் மற்ற கதைகளிலிருந்து மாறுபடுகிறது.

    வழக்கம் போலவே, இம்முறையும் ஆடுகளம் தெற்கத்தியர்களுக்கும், வடக்கத்தியர்களுக்கும் ( இது நடந்தது அமெரிக்காவில்) போர் நடைபெறும் இடம் தான். தெற்கத்தியர்களுக்கு (மேற்கு பிரிவிற்கு என்று கதையில் இருக்கிறது) படைத் தலைவராக இருப்பவர் ஜெனரல் ஜான் பெல்வுட் ஹீட். வடக்கத்தியர்களுக்கு படைத் தலைவராக இருப்பவர் ஜெனரல் ஷெர்மான்.

    வாஷிங்டனில், அடுத்து வரக்கூடிய தேர்தலில் பிரஸிடெண்டாக மறுபடியும் லிங்கன் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே போவதால், அவருக்கே தெரியாமல் தெற்கத்திய ஜெனரல்களையும், கிளர்ச்சியாளர்களையும் கட்டம் கட்ட தனியார் துப்பறியும் நிறுவன தலைவர் பிங்கர்டன் தலைமையில் முடிவு செய்கிறார்கள்.அந்த கூட்டம் ஒட்டு கேட்கப்படுகிறது.

    இதற்கிடையில் போரை விரும்பாத குடியரசு கட்சி மற்றும் சில நாளிதழ்கள் ஆதரவு பெற்ற ஒரு குழு, சமாதானம் பேச போர் முனைக்கு வருகிறது. நமது பழைய தமிழ் படங்களில், ஹீரோ கதாநாயகியை சந்திப்பது போல, அடங்காத குதிரைகளால் இழுத்து வரப்படும் ஒரு வண்டியில் சமாதான குழுவின் பெண் உறுப்பினர் வந்து சேர்கிறார். அது என்னவோ தெரியவில்லை, கேப்டன் கதைகளில் வரும் ஹீரோயின்களை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. சிகுவாகுவா சில்க்கை மறந்த காமிக்ஸ் ரசிகர்கள் யாரேனும் உண்டா என்ன? இனிமேல், அவர்கள் மிட்செல் எலனர் என்ற பெயரையும் மறக்க மாட்டார்கள்.

    சமாதான குழுவுடன் சேர்ந்து கேப்டனும் அட்லாண்டா செல்கிறார். அவர்கள் ஜெனரல் ஹீட்டை சந்திக்கும் வேளையில் நடக்கும் குளறுபடிகளில் அணிகள் இடம் மாறுகின்றன. கேப்டன் கைது செய்யப்பட, அவர் தனது முன்னாள் நண்பர்களையும், எதிரி போமேனையும் சந்திக்க நேர்கிறது.

    ஒரு கட்டத்தில், குருதி வாள் குழுவின் திட்டமான, லிங்கனை கொலை செய்வது பற்றி தெரிய வருகிறது. அந்த முயற்சி என்னவானது என்பது தான் கதை.

    கேப்டன் மேசனிடம் சண்டை போட்டுக்கொண்டு எதிரணி கேம்புக்குள் அதிரடியாக தனியாளாக நுழைவதாகட்டும், மந்தையை கைப்பற்றும் முயற்சியாகட்டும், ரயில் சேசிங் ஆகட்டும், அதிரடிகளுக்கு பஞ்சமேயில்லை. அமர்களமான சித்திரங்கள். அட்லாண்டாவின் மழை நாளாகட்டும், பறக்கும் பலூனையும், கீழே ரயில் நிலையத்தையும் கவர் செய்யும் படமாகட்டும்...வேற லெவல்.

    வசனங்கள் நச்சென்று இருக்கிறது. நமது சக வாசகர் ஒருவர் திரு.மகேந்திரன் பரமசிவம் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார்.கூடவே ஆசிரியரும். ஒரே ஒரு சாம்பிள்..."மிஸ்டர் ப்ரெஸிடெண்ட்... இறங்கும் நேரம் வந்துவிட்டது.." .உடனே இன்னொரு குரல் கேட்கும்....."இல்லை இறக்கும் நேரம் வந்துவிட்டது"

    மொத்தத்தில் விறுவிறுப்பான கதை. புத்தகம் கிடைத்த அன்றே பின்னிரவில் துவங்கி, முடிக்க முடியாமல் விடிகாலையில் எழுந்ததும் படித்து முடித்த கதை இது. மின்னும் மரணத்தை நினைவு படுத்துகிறது.

    டைகரின் அடுத்த கதைக்காக இப்போதிருந்தே காத்திருக்க வேண்டியதுதான். இதையெல்லாம் தமிழில் சாத்தியப்படுத்திய ஆசிரியர் அவர்களுக்கும், அவரது அணியினருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.

    மா.ஹரிஹரன், கோயமுத்தூர்

    ReplyDelete
    Replies
    1. Super. என்னைப் பொறுத்தவரை இளம் டைகர் நன்றாகத்தான் இருக்கிறது.

      Delete
    2. ஹரிஹரன் ப்ரோ செமையான விமர்சனப் பதிவு.

      Delete
    3. Thankyou all for your encouragement....

      Delete
  64. மகி ஜி மொழி பெயர்ப்பு மிகவும் அருமை எங்குமே உறுத்த வில்லை இயல்பான நடையில் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 💐

    ReplyDelete
  65. டியர் எடி,

    நேற்றே பார்சல் வந்து சேர்ந்து விட்டது. நான் ஊரில் இல்லாததால், ப்ராக்ஸி வச்சாவது Unboxing போட .... I am Waiting 😎

    ReplyDelete
  66. Super professional courier doing gr8 job..
    Either they want to keep the parcel or what...
    No proper customer care ..
    Simply showing holding in some place. Even though received in Chennai on 8th...will they give or they want to keep themselves no idea.
    Atleast ST courier looked better

    ReplyDelete
  67. புத்தக பார்சல் இன்றுதான் வந்து சேர்ந்தது. கேப்டன் டைகரின் நான்கு பாக தளபதி ஸ்பெஷல் ஹார்ட்பவுண்டில் அருமையாக இருக்கிறது.

    இளம் டெக்ஸ் ஆறு அத்தியாய குண்டுபுத்தகம்!! ஹார்டுபவுண்டுக்கான தகுதிகள் இருந்தும் வண்ணமில்லாததால் கைவிடப்பட்டுள்ளது.

    வன்மேனற்கின் அத்தியாயங்கள் நான்கையும் இனிதான் வாசிக்க வேண்டும். சந்தா 2024க்கான புக்லெட் அருமையாக உள்ளது. தளத்தைத் தாண்டியுள்ள நண்பர்களிடமும் ஓட்டெடுப்புக்கான செயல்திட்டம் நல்ல முயற்சி. ஆனால் அந்த லிங்க்-களை QR கோடுகளாக கொடுத்திருந்தால் அதை ஸ்கேன் செய்து நுழைவது மிக எளிமையாக இருந்திருக்கும்.

    மினி டெக்ஸ்தான் முதல் வாசிப்பு.

    ReplyDelete
  68. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சார்.இன்று பதிவுக்கிழமை.

      Delete
  69. Read captain tiger. Need one more reading to completely understand it

    ReplyDelete
  70. சார் தீபாவளி இதழ்கள் அனைத்து கிடைத்தது. முதலில் அசத்தியது கேப்டன் டைகர் இதழ் தான். அட்டகாசமான ஹார்ட் பவுண்ட் அட்டை. அந்த நகாசு வேலைகள் அசத்தும் அழகான டைகர் ஓவியம்.

    ReplyDelete
  71. முதலில் புரட்டி பார்த்தது Route 2024 நமது அட்டவணை புத்தகம் தான். நண்பர் சொன்னது போல என்னதான் தளத்தில் படித்தாலும் கையில் புத்தகமாக பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு எதுவும் இணை ஆகாது. செம்ம சார் உங்களுக்கும் உங்கள் டீமுக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  72. அடுத்து படித்தது மினி டெக்ஸ் குற்றதின் குரல் இது வரை வந்த மினி டெக்ஸ் இல் மிக சுமாரான கதை இதுதான்.

    எனது மதிப்பெண் 4/10

    ReplyDelete
  73. பேய் புகுந்த பள்ளிக்கூடம் - 32 பக்கங்களில் அருமையான கதை. தனக்கு இருக்கும் ஒரு சக்தியால் தன்னுடன் படிக்கும் நண்பர்கள் பாதிக்க கூடாது என்ற நல்லுள்ளம் கொண்ட ஒரு சிறுவனின் கதை. கதை சொன்ன விதம் அருமை, முடிவு மனதை கனமாக்கியது. தெளிவான சித்திரங்கள் அட்டகாசமான வண்ணம் மற்றும் புத்தக வடிவமைப்பு மிகப்பெரிய ப்ளஸ்.

    ReplyDelete
  74. அதற்கு அடுத்து படித்தது V காமிக்ஸ்.

    மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.

    நம்ம தலீவர் சொன்னது போல அருமையான, சுபமான முடிவு. அந்த ஓவியங்கள், கதையும் இந்த முறை சரியான வேகம். தந்தை ப்ரெட்,மகன் பாட் இருவருமே தூள் கிளப்புகின்றனர்.

    எனது மதிப்பெண் 9/10.

    ReplyDelete
  75. இப்போது படித்துக் கொண்டு இருப்பது சிக்சர் ஸ்பெஷல். பக்கம் 168 இல் இருக்கிறேன். செம்ம வேகமான கதை செமினோல்ஸ்க்கு எதிராக போருக்கு கிளம்பிவிட்டார். முழுதும் படித்து விட்டு வந்து விமர்சனம் பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  76. கலவர பூமியில் கனவை தேடி
    அருமையான மொழிபெயர்ப்ப
    தெளிவான சித்திரங்கள்
    அங்கங்கே மாறி மாறி நடக்கும் கதைகள் ஒருங்கிணைக்கப்பட்ட விதம் மிகவும் அருமை.
    வி காமிக்ஸ்சீன் மணி மகுடம் மணி மகுடம்.

    ReplyDelete
  77. குற்றத்தின் குரல்....தலைப்பே கதையை அடக்கியுள்ளது....

    ஓவியங்கள் சுமார்...ஆனா கதை அருமை...முடிச்சாச்சுன்ன பிறகு குற்றவாளிகள் தப்பமுடியாதுன்னு தொடருது கதை...விடுவாரா டெக்சதை...ஆர்பாட்டமில்லா அழகிய நதியா தெளிவா நகருது அருங்கதை

    ReplyDelete
  78. இளம்டைகரோடு நானும் போர்க்களத்திலிருந்து தூதுவனாய்...சூப்பரா போய்ட்டிருக்கேன்

    ReplyDelete
  79. தீபாவளிப்பதிவு ஏதேனும் ஸ்பெசல் அறிவிப்பு வந்தா நல்லாருக்கும்...புது ஸ்பைடர்னாலும் கூட சரிதான்...துணையா அந்த கடற்கொள்ளையர் குறித்த பக்கங்களாவது

    ReplyDelete
  80. இளம் டைகர்....இப்புத்தகத்தின் முதல் பாகம்....டைகர் குற்றவாளியாக்கப்பட்டு தப்பாமல் குற்றவாளியல்லன்னு முடிவு செய்தாலும்...டைகரை தேடி வரும் துரதிர்ஷ்டம் ஃபயரிங் ஸ்குவார்ட் முன் நிறுத்த...அதைத் தொடரும் அதிர்ஷ்டம் அவருக்கு சில நிபந்தனைகளுடன் தப்பிக்க வழிவகுக்கிறது...வழக்கம் போல சோர்வறியா தீரனாய்...தீயாய் டைகர்... அந்த அழகி வந்ததுமே ஓர் உற்சாகம் தொத்திக் கொள்ள நண்பரின் மொழி பெயர்ப்பில் கதை சவாரி செய்ய கடிவாளமாய் ஆசிரியருமிருக்க ..கதை துள்ளலாய் விறுவிறுப்பாய்....அந்த அழகியின் கொலை முயற்ச்சி ...அந்த படைப்பிரிவு தலைவரின் கொலை முயற்சியில் திடீர் திருப்பம்...தப்பிக்க உதவும் கழிவுநீர்க் பாதை தொழிலாளி என தீடீர் திடீரென ரவுண்டு கட்டி அடிக்குது கதை...செம சூப்பர் சார்...

    ReplyDelete
    Replies
    1. ஆனால் வெளியே இரட்டிப்பான புயலின் வேகம் டைக்ரின் சிந்தனைச் சங்கிலியை துண்டித்து. பின்னர் இரவு ஒரு வழியாகத் தொடங்க விவாதமும் பல்வேறு திசைகளில் சிறிது சிறிதாக சிதறியது...

      என்னா வரிகள் அனுபவித்து வார்த்தைகளை கோர்த்திருக்கிறீர்கள் மகி அதகளம்

      Delete
    2. அவர்கள் வெற்றி பெற நூற்றில் ஒரு சதவீதம் வாய்ப்பு கூட இல்லை என்பதையும்...அவர்கள் பாதை விரைவில் சபிக்கப்பட்ட வேர்களின் பாதையாக மாறப்போவதையும் உணராமல் தொடர்ந்து பயணிக்கலானார்கள்.....

      இவ்வரிகள் இரண்டாம் பாகத்திற்கு ஈர்ப்பாய் அழைப்பதால் நானும் உடனே அவர்களுடனே பயணிக்கிறேன்

      Delete
  81. நான் ஒரு கேப்டன் டைகர் ரசிகன் ஆனால் இம்முறை தி சிக்ஸர் ஸ்பெஷல் கையில் எடுத்த பிறகு முடிக்காமல் கீழே வைக்க இயலவில்லை. குற்றவாளியான டெக்ஸ் குற்றவாளி பட்டியலில் இருந்து வெற்றிகரமாக வெளியே வரும் கதை. ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகர்கள் இருக்க வேண்டிய கதை. நீண்டடடட நாளுக்கு பிறகு அற்புதமான கதை.

    டைகர் கதையும் வேற வேற லெவல்.

    ReplyDelete
  82. இன்று தீபாவளி ஸ்பெஷல் பதிவு உண்டாங்க சார் ?!

    ReplyDelete
  83. யங் டெக்ஸ் பட்டையைக் கிளப்புது,எக்ஸ்பிரஸ் வேகம்,தற்போது 3 ஆம் பாகத்தில் பயணம்...

    ReplyDelete
  84. இன்று இளம் புயல் வரவு. 🔥பாவளி ஆரம்பம்

    ReplyDelete
  85. Super this Diwali no books thanks to world class courier service professional service...the arrogant persons.
    No proper customer service have two numbers not reachable last 3 days..

    ReplyDelete
  86. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete