Powered By Blogger

Sunday, November 26, 2023

ஹல்லோ சேலம் !

 நண்பர்களே,

சேலத்திலிருந்து வணக்கங்கள் ! வேறொரு வேலையாய் இந்தப் பக்கங்களுக்குப் பயணமாவது அவசியமாகிட, சேலத்தில் நடந்து வரும் புத்தக விழாவினை ஞாயிறுக்கு எட்டிப் பார்க்கலாமே என்ற மஹா சிந்தனையும் தோன்றியது ! So திரும்பிய திக்கிலெல்லாம் மேம்பாலங்களுடன் காட்சி தரும் இந்த நகருக்கு சாமத்தில் வந்து சேர்ந்தேன் ! 'வந்த வேகத்திலேயே பதிவை போடுறோம்' என்ற வைராக்கியமெல்லாம் விட்டம் வரை விரிந்த கொட்டாவிகளில் காணாது போயிருக்க, கண் முழித்துப் பார்த்தால் மணி எட்டும் சொச்சம் !! "ஆத்தீ...கன்பார்மா வயசாச்சு நமக்கு !!" என்ற ஊர்ஜிதத்துடனே இதோ பதிவில் ஆஜர் ! 

ஆண்டின் கடைசி மாதம் எட்டும் தொலைவில் நிலைகொண்டிருக்க, நாற்கூட்டணியுடன் அதன் ஆரம்பத்தையும், ரெட்டைக் கூட்டணியோடு அதன் மத்திமத்தையும் அணுகுவதென்று திட்டமிட்டுள்ளோம் ! So - டிசம்பரில் துவக்கத்துக்கென ரெடியாகியுள்ள ஆல்பங்கள் இவை நான்கே :

ரிப்போர்ட்டர் ஜானி - "ஜானிக்கொரு தீக்கனவு" 

TEX - "உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி !"

V காமிக்ஸ் - "கொலைநோக்குப் பார்வை" (ஏஜெண்ட் ராபின்)

லயன் கிராபிக் நாவல் - "காலனின் கால்தடத்தில்" 

இவற்றுள் ஜானி & டெக்ஸ் முடிஞ்சது  ; நாளை V காமிக்ஸ் அச்சாகிடும் ! So இறுதி இதழாய் கி.நா.விற்கு எடிட்டிங் மட்டும் பண்ணி முடிச்சிட்டாங்காட்டி. all set for despatch ! இதோ - இது வரைக்கும் நீங்கள் பார்த்திருக்கா 2 இதழ்களின் அட்டைப்பட previews :  


இந்த சாகஸத்தில் நம்மவர்கள் டிடெக்டிவ் அவதாரில் ரகளை செய்கிறார்கள் & களமும் நாம் நிரம்பவே பரிச்சயப்பட்டிருக்கும் சான் பிரான்ஸிஸ்கொ தான் ! அங்கிருக்கும் போலீஸ் சீப் வழக்கம் போல மிக்ஸரை சுவைத்துக் கொண்டிருக்க, துப்புத் துலக்க வகையில்லாக் கொலைகளைக் கையாளும் பொறுப்பை இரவுக் கழுகாரும், வெள்ளி முடியாரும் எடுத்துக் கொண்டு கதை முழுக்க 'ஜம்'மென்று கோச் வண்டியில் வலம் வருகின்றனர் ! இம்முறை குறுக்கு ஒடிய no குருதைப் பயணம்ஸ் or ரயில் பயணம்ஸ் ! So வித்தியாசமான சித்திரங்கள் மட்டுமன்றி, மாறுபட்ட கதைபாணியுமே இம்முறை உங்களை எதிர்நோக்கிக் காத்துள்ளது என்பேன் ! கார்சன் மட்டும் உறங்கி முழித்து அப்படியே தலையைச் சீவாமல் வந்தது போல காட்சி தருவதை கண்டுக்காது விட்டால் - இந்தப் புது ஸ்டைலும் ரசிக்காது போகாது !  

And இதோ - ஆண்டின் இறுதி V காமிக்சின் preview : 
வழக்கம் போல ராபினின் முதிர் வயது ஆல்பமிது & அவர் இளம் வயதில் முடிச்சவிழ்த்த கேசின் நினைவுகூர்தலே இம்முறையும் ! வித்தியாசமான கதை knot ; அதனை சுலபமாய், சீராய் எடுத்துச் சென்றுள்ளனர் ! பெருசாய் கார் சேஸ் ; டுமீல் டுமீல் சமாச்சாரங்கள் கிடையாது தான் ; but still 94 பக்கங்களில் 'நறுக்' வாசிப்பு waiting ! என்ன - வில்லனை மட்டும் கொஞ்சம் வீரியமானவனாய் ஆக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ! 

So இந்த நான்கோடு டிசம்பரின் துவக்கத்தைக் கையாண்டோமெனில், 2023 அட்டவணையினில் பாக்கி நிற்கும் ஒரே இதழான ஏஜெண்ட் சிஸ்கோவின் "கலாஷ்னிகோவ் காதல்" இதழை டிசம்பரின் மத்தியினில் - Supreme '60s தடத்தின் அடுத்த இதழோடு கூட்டணி போட்டு டெஸ்பாட்ச் செய்திட எண்ணியுள்ளோம் ! So விங்-கமாண்டர் ஜார்ஜ் ஸ்பெஷல் # 1 & ஏஜெண்ட் சிஸ்கோ கைகோர்த்து அடுத்த கூரியரில் பயணமாகிடுவர் ! தடிமனான Supreme 60s புக்கையும் சேர்த்துக் கொள்ளும் போது கூரியர் செலவு சமாளித்துக் கொள்ள உதவிடும் என்பதால் இந்த ஏற்பாடு ! ஆக ஆண்டின் அறிவித்த இதழ்களை அந்தாண்டிலேயே சுபம் போட இயன்ற திருப்தியோடு முன்சென்றிடலாம் ! Supreme '60s-ல் மாத்திரம் ஒற்றை இதழ் தொக்கி நிற்கும் and அந்த ஸ்லாட்டுக்கென காரிகனும் ரெடியாகி வருகிறார் / மாண்ட்ரேக்கும் தயாராகி வருகிறார் ! காரிகனில் வைரஸ் X ; பழிவாங்கும் பாவை - போலான க்ளாஸிக் சாகசங்களும் இடம்பிடிப்பதால் இந்த காரிகன் ஸ்பெஷல் 2 முதல் இதழைப் போல தடுமாறிடாதென்று நம்பலாம் !  

Moving on, இன்னும் நான்கே நாட்களில் வோட்டிங் நிறைவுற இருக்கும் இந்த வினவலில் latest update : https://strawpoll.com/e7ZJGKeK5y3 

C.I.A.ஏஜெண்ட் ஆல்பா முதலிடத்தில் இன்னமும் ஆராமாய்த் தொடர்ந்திடுகிறார் ! And மூன்றாமிடத்திலும் எவ்வித மாற்றமும் இல்லை தான் ! ஆனால் வியப்பூட்டும் விதத்தில் ஸ்லாட்ஸ் 2 & 4 இடமாற்றம் செய்து கொண்டுள்ளன ! அதே போல கீழே உள்ள இதழ்கள் அதனதன் இடத்தினில் 'தேமே' என்று தொடர்கின்றன ! மேகி கேரிசன் & நெவாடா கடாசி இடங்களில் பாவமாய் தொடர்கின்றனர் - தொடக்கம் முதலாகவே !! காத்துள்ள வியாழனன்று வோட்டிங் நிறைவுற்றிடும் என்பதால் இன்னமும் வோட்டு போட்டிருக்கா நண்பர்கள் தங்களின் கடமையினை செய்திடலாமே ப்ளீஸ் ? 

ரைட்டு...மதியத்துக்கு மேல் வருண பகவானின் கருணை தொடர்ந்தால் நமது ஸ்டாலில் ஆஜராகிட உத்தேசித்துள்ளேன் ! இந்தப் பகுதிகளில் இருக்கக் கூடிய நண்பர்களை சந்திக்க இயன்றால் ஹேப்பி அண்ணாச்சி ! Bye all...see you around ! Have a cool Sunday !

192 comments:

 1. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 2. // நமது ஸ்டாலில் ஆஜராகிட உத்தேசித்துள்ளேன் //
  சிறப்பு,ஆவலுடன் சார்...

  ReplyDelete
 3. உள்ளேன் அய்யா....

  ReplyDelete
 4. வணக்கமுங்க எல்லாருக்கும் 🙏

  ReplyDelete
 5. இந்தப் பகுதிகளில் இருக்கக் கூடிய நண்பர்களை சந்திக்க இயன்றால் ஹேப்பி 🎉🎉🎉🙏🙏🙏

  ReplyDelete
 6. டிசம்பர் இதழ்கள் நமது ஸ்டாலில் கிடைக்குமா சார்...

  ReplyDelete
 7. வித்தியாசமான தலைப்பு உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி. விரைவில் சந்திக்க ஆவல்.

  ReplyDelete
 8. Rip Kirby more than half finished. Have ro finish it before next Supreme 60 s issue 😉

  ReplyDelete
 9. தளபதி ஸ்பெஷல் நிஜமாகவே 2023 ன் மிகப் பிரமாதமான இதழ்களில் முதலிடம் பிடித்திருக்கிறது என்னைப் பொருத்தவரை..... கதை,ஆர்ட்,கலரிங் எல்லாமே போட்டி போட்டுக்கொண்டு ஒன்றை ஒன்று முந்துகின்றன.. மொத்தமாக நாலு ஆல்பம் வந்ததால் கதையின் ஓட்டம் மிகத் தெளிவாகவே புரிகிறது.. டைகரின் அடுத்த ஆல்பங்களுக்காக இப்போது இருந்தே
  காத்திருக்க துவங்குகிறேன்... கதை மாந்தர்களைப் பற்றிய முன் சுருக்கமும் இருந்திருந்தால் புதிதாக படிப்பவர்களுக்கு இலகுவாக இருந்திருக்கும்..

  ReplyDelete
  Replies
  1. கதை மாந்தர்களைப் பற்றிய முன் சுருக்கமும் இருந்திருந்தால் புதிதாக படிப்பவர்களுக்கு இலகுவாக இருந்திருக்கும்......


   ++++++

   Delete
 10. ////மதியத்துக்கு மேல் வருண பகவானின் கருணை தொடர்ந்தால் நமது ஸ்டாலில் ஆஜராகிட உத்தேசித்துள்ளேன் ! இந்தப் பகுதிகளில் இருக்கக் கூடிய நண்பர்களை சந்திக்க இயன்றால் ஹேப்பி அண்ணாச்சி ///

  ஊய்...ஊய்...வாட் எ சர்ப்ரைஸ் சார்..

  சேலத்துக்கு தங்களது சர்ப்ரைஸ் வருகை எதிர் பாராத ஒன்று...இன்ப அதிர்ச்சி...தினம் ஆஜர் ஆகும் வருண பகவான் இன்று தங்களது வருகையின் பொருட்டு கருணை காட்டுவார்..

  மதியம் தங்களை சந்திக்க ஆஜர் ஆகி விடுகிறேன்..

  ReplyDelete
 11. Just missed Salem visit sir since my son sports day event in the morning and was over at 11:30. So missing comics friends meet and you sir.

  ReplyDelete
 12. திருச்சி புத்தக திருவிழாவில் நம் நிறுவனம் கலந்து கொள்கிறதா?

  ReplyDelete
 13. அனைவருக்கும் வணக்கம்

  ReplyDelete
 14. டெக்ஸ் and ராபின் அட்டை படம் சூப்பர், அதுபோலவே பெயர்களும் வித்தியாசமாக உள்ளது, கொலை நோக்கு பார்வை and உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி.
  மேலும் Survivor காலனின் கால் தளத்தில் கூட மிகவும் ஆவலாக எதிர்பார்க்கிறேன்.
  Wing jeorge commander டிசம்பர் நடுவாக்கில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

  ReplyDelete
 15. Replies
  1. ஆஹா டெக்சிலும் சுறாவா....அங்க முன்னழகு ...இங்க பின்னழகா பிரம்மாதம் சார்...அட்டை சூப்பர்...கதை பக்கங்கள் தாக்கிடும் ஓவியங்களும்...பேசாதன்னு டெக்ஸ் சாத்தும் கடந்த காலங்களின் திறவு கோள்களாய் காட்சி தர....ராபினும் கலக்க...கலானிஷ்கோ காதலொடு நம்ம பைலட்டுமா ...நெப்போலியன் பொக்கிசம் நமக்குமாய் கிட்டுமா என எதிர்பார்ப்புடன்....


   காரிகன் நான் பார்த்திரா ...நண்பர்கள் கொண்டாடும் வைரஸ் எக்ஸ்....பழி வாங்கும் பாவை ...என் கிளாசிக்காய் ஆஹா..


   சேலத்துக்கு விழா மலரில்லையா நீங்க நுழைந்தும்...அறிவிப்பாவது தரலாமே அந்த கிநா பொங்களுக்கு சிறப்பு மலரென

   Delete
  2. // சேலத்துக்கு விழா மலரில்லையா //
   சிறப்பான கேள்வி...

   Delete
 16. வணக்கம் நண்பர்களே!!

  ReplyDelete
 17. *காமிக்ஸ் எனும் கனவுலகம்*

  *போட்டி எண் 21*

  *இது ஒரு விமர்சனப் போட்டி*

  *2023 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலும் வெளியான, வெளியாகப்போகின்ற.. (லயன்.. முத்து.. கிளாசிக் மறுபதிப்புகள்.. V காமிக்ஸ்.. என எதுவானாலும் சரியே.. 2023ல் வெளியாகி இருந்தால் போதுமானது..) பிரகாஷ் பப்ளிசர்ஸ் வெளியீடுகள் அனைத்திலும் இருந்து ஏதேனும் ஒரு கதைக்கு விமர்சனம் எழுத வேண்டும்*

  *சிறப்பான விமர்சனங்களுக்கு.. பௌன்சர் செட் (மூன்று இதழ்கள்).. லயன் 400.. உள்ளிட்ட பல பரிசுகள் காத்திருக்கின்றன.!*

  *ஒரு வாசகர் அதிகபட்சம் மூன்று கதைகளுக்கு விமர்சனம் எழுதலாம்.!* *மூன்று விமர்சனங்களையும் தனித்தனியாகத்தான் அனுப்பவேண்டும்*

  *ஒவ்வொரு விமர்சனத்துடனும் போட்டியாளர்கள்.. காமிக்ஸ் எனும் கனவுலகம் விமர்சனப்போட்டி என்ற தலைப்பையும்.. தங்கள் பெயர்.. ஊர் பெயர்.. அலைபேசி எண் போன்றவற்றையும் குறிப்பிடவேண்டும்.. தவறும் விமர்சனங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.!*

  *போட்டிக்கான விமர்சனங்களை கனவுலகம் வாட்ஸ்அப் குழு.. கனவுலகம் முகநூல் குழு.. இரண்டிலும் இல்லாதோர் லயன் காமிக்ஸ் வலைத்தளம் ஆகிய இடங்களில் பதிவேற்றலாம்.! வேறு இடங்களில் பதிவிடப்படும் விமர்சனங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள இயலாது.!*

  *இந்தப் போட்டிக்கு நடுவர்களாக அட்மின் குழுவில் அல்லாத இரு பொது நண்பர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்..! அவர்கள் இன்னாரென்று அட்மின்ஸை தவிர வேறு யாருக்கும் தெரியாது.! நடுவர்களுக்கே ஒருவரை ஒருவர் இன்னாரென்று தெரியாது.*

  *ஒவ்வொரு விமர்சனத்திற்கும் நடுவர்கள் ஒருவரை ஒருவர் அறியாமலே மதிப்பெண்கள் இடுவார்கள்..! இறுதியில் இரண்டையும் கூட்டி மொத்த மதிப்பெண்களையும் வெற்றியாளர்களையும் கனவுலகம் குழு அட்மின் அறிவிப்பார்.!*

  *வெற்றியாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து பரிசுகள் கூடும் அல்லது குறையும்*

  *போட்டி 1/12/2023 வெள்ளிக்கிழமையில் இருந்து தொடங்குகிறது.. விமர்சனங்கள் வந்து சேரவேண்டிய கடைசித்தேதி 31/12/2023 ஞாயிறு.!*

  *போட்டியில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூட வாழ்த்துகள் நண்பர்களே.!*

  *என்றும் மாறா அன்புடன்*

  *காமிக்ஸ் எனும் கனவுலகம்*

  ReplyDelete
 18. சர்ப்ரைஸ்...சர்ப்ரைஸ்....சர்ப்ரைஸ்....

  @everyone சேலம் புத்தக விழா2023-சென்னையில் இருந்து ஒரு அவசர பணி காரணமாக சேலம் வந்திருந்த லயன்-முத்து காமிக்ஸ் ஆசிரியர் திரு விஜயன் Vijayan S அவர்கள் மாலை 4மணிக்கு லயன் காமிக்ஸ் ஸ்டாலுக்கு சர்ப்ரைஸ் வருகை... ரசிகர்கள் மகிழ்ச்சி....

  ஈரோட்டில் மிஸ் ஆன மரத்தடி மீட்டுக்கு பதிலாக சேலத்தில் கேள்வி & பதில்கள்& கலந்துரையாடல்....


  புகைப்படங்கள் பார்க்க...

  https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02kgHAGkMDihwLuFi2iPtqjRDgpNLHw8jKg6BpsWFMrBVv841xiXpd2WKSZcFqpSLPl&id=100036515580386&mibextid=Nif5oz

  ReplyDelete
  Replies
  1. ஃப்ளாஷ் நியூஸ்....

   டைகர் ஸ்பெசல் மாபெரும் வெற்றியை அடுத்து மீதமுள்ள யங் டைகர் கதைகள் தீவிர பரிசீலனையில்....

   பாகங்கள் 14&15 சேர்ந்த இருபாக கதை விரைவில்.....

   அதன் வெற்றியை பொறுத்து 4+2என மீதமுள்ளவை வெளியிடப்படும்னு தெரிகிறது.

   Delete
  2. உரையாடலில் ஆசிரியர் சார் தெரிவித்த சில சுவாரயஸ்யமானவை....

   #காமிக்ஸ்ஸின் உச்சமான ஆஸ்ட்ரிக்& ஓபலிக்ஸ்.... புதிய ஆல்பம் ரிலீஸ் ஆகும்போது ப்ரின்ட்ரன் 40லட்சங்கள்..இந்த எண்ணம் விற்று தீருவது ஜஸ்ட் 60ஏ நாட்களில்.... 61வது நாள்முதல் மறுபதிப்பு ஆர்டர் குவிகின்றனவாம்..

   #க்ளைமேட் சேஞ்சஸ் பற்றிய ப்ரெஞ்சு ஆல்பம் 7லட்சத்து 90ஆயிரம் பிரிதிகள் விற்று சோல்ட் அவுட்டாம்..சமீபத்திய ஆங்குலம் விழாவில் ஆசிரியர் சாரிடம் காண்பிக்கப்பட்டதாம்..நம்ம ரசனைக்கு சுகப்படுமானு ஆசிரியர் சாரை பாயை பிறாண்ட வைக்கிறதாம்.

   #காத்துவாக்குல விழுந்தவை: வேதாளர் வண்ண இதழ் நியூ இயர்ல வர்றாராம். டின்டின் அதிரடியாக தயாராகி வருகிறதாம்...அடுத்த ஆண்டு சேலத்தில் திட்டமிடப்பட்ட சற்றே பெரிய சந்திப்பு!

   Delete
  3. ///அந்தப் பூ போட்ட பாவாடைல சட்டை தச்சி போட்ருக்கது ஆரு?//

   நேக்கு வெட்க வெட்கமா இருக்குய்யா...😜

   Delete
  4. ///So Tin Tin confirmed for Chennai book fair.///

   அதிரடினா அந்த அதிரடி இல்லைங்க.... மிக மிக தரமாக, இப்படி ஒரு லாஞ்சிங் இதுவரை இல்லைனு சொல்றமாதிரியான தயாரிப்பில்....

   Delete
  5. ஆஸ்ட்ரிக்ஸ்னு படிச்சதுமே அட வாங்கிட்டாப்ல போல லயனுக்குன்னு நெனச்சேன்

   Delete
  6. நேக்கு வெட்க வெட்கமா இருக்குய்யா...😜

   நேக்கு கேவலமாரக்கு.....
   ஒரு துப்பாக்கியாவது தொங்க வுடலாம்ல...டெக்ஸ்னு கூப்டனுமா வேணாமா

   Delete
  7. // ஒரு துப்பாக்கியாவது தொங்க வுடலாம்ல...டெக்ஸ்னு கூப்டனுமா வேணாமா //

   அதானே! அப்படி கேளுலே :-)

   Delete
 19. எச்சூஸ் மீ..மே ஐ கம் இன்..?

  ReplyDelete
 20. Replies
  1. // ஹார்ட் பௌண்ட் இல்லை என்றாலும் பரவாயில்லை சார். //
   இந்த சைஸ் கதைகளுக்கு ஹார்ட் பைண்டிங் இருப்பதுதான் பல விதத்தில் சாதகம் PFB...

   Delete
  2. இளம் தல VS இளம் தளபதி

   இந்த தீபாவளி காமிக்ஸ் வாசிப்பை பொருத்தவரை தீயாகவே இருந்தது, இளம் தல மற்றும் இளம் தளபதியின் வரவால்!! இரண்டும் அருமையான கதையோடு, தீடிர் திருப்பங்களுடன், வில்லங்கமான வில்லன் மற்றும் வில்லியுடன், விறுவிறுப்புடன், ஆங்காங்கே "சீ போங்க வெட்க வெட்கமாக உள்ளது" (சிறுவயதில் டெக்ஸ் என்னா காதல் மன்னனா இருந்து இருக்கார்), சிறப்பான வாசிக்கும் அனுபவத்தை கொடுத்தது இரண்டு கதைகளும்.

   இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று சிறப்பான கதைகள்தான்! ஆனால் அதையும் மீறி இளம் தளபதி கதை எனக்கு நிறைவான வாசிப்பு அனுபவத்தை கொடுக்க காரணம் என நான் நினைப்பது, புத்தகத்தின் அளவு பெரியதாக இருந்ததால் அது படங்களை தெளிவாக மிக முக்கியமாக எழுத்தின் அளவு கொஞ்சம் பெரியதாக இருந்ததால் என்னை போன்ற இளைஞர்கள் படிக்க வசதியாக இருந்தது; வசனங்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் மேற் சொன்ன காரணங்கள் தடுமாற்றம் இல்லாமல் பகல் மற்றும் இரவில் படிக்கச் செய்தது!

   இளம் தல கதையில் இளம் தளபதியை போல் வசனங்கள் அதிகம் அவை கதையை புரிந்து கொள்ள மிகவும் முக்கியம் என்றாலும் சிறிய படம் மற்றும் எழுத்தின் அளவு படிக்கும் வேகத்தை தடை செய்வது போல் இருந்தது!

   இளம் தளபதியில் எல்னர் என்ற வில்லி செம கதாபாத்திரம், கதாநாயகனுக்கு சரியான போட்டி!

   இளம் தளபதியின் ப்ரெசிடெண்ட் செல்லும் இரயில் வண்டியை வித்தியாசப்படுத்தி காண்பிக்கும் யுக்தி, இன்னும் பல உள்ளன இளம் தளபதியியை பற்றி சொல்ல!

   இளம் தல இன்னும் 2 பாகங்கள் உள்ளன அதனை முடித்தவுடன் அவரை பற்றி விரிவாக சொல்கிறேன்!
   இளம் தளபதியில் மகேந்திரன் மற்றும் விஜயன் சார் அவர்கள் இருவரின் மொழிபெயர்ப்பு மிகப்பெரிய பிளஸ்!

   இப்ப என்ன சொல்லவரேன் என்றால் அடுத்து வரும் இளம் தல கதை புத்தகத்தின் அளவை பெரியதாக்கி எழுத்துருவின் அளவை கொஞ்சம் பெரியதாக்கி ஹார்ட் பௌண்டில் கொடுங்கள்; ஹார்ட் பௌண்ட் இல்லை என்றாலும் பரவாயில்லை சார். இது போன்ற சிறந்த கதைக்கு பட்ஜெட் பற்றி கவலைபடாமல் பார்த்து செய்யுங்கள் சார்.

   இப்படிக்கு தாரை பரணி எழுத சொன்னதாக சொல்லி எனது எண்ணங்களை இங்கு பதிவிட்டு உள்ளேன்! ஒன்னும் இல்லை பக்கத்துக்கு இலைக்கு பாயசம் தான் :-)

   Delete
  3. அறிவரசு @
   எனக்கும் இளம் டெக்ஸ் கதைகள் இது போன்று 4-6 கதைகள் சேர்ந்து வந்தால் அவை ஹார்ட் பௌண்டில் வருவதே நன்றாக இருக்கும் அறிவரசு! அதே போல் வசனங்கள் (கதையின் ஓட்டத்திற்கு வசனங்கள் மிக முக்கியம்)அதிகமாக உள்ளதால் படிப்பதற்கு ஏதுவாக வண்ணகதைகளின் புத்தக அளவில் இந்த கதைகள் வந்தால் படங்கள் இன்னும் கொஞ்சம் பெரியதாக அதே போல் எழுத்துருக்கள் பெரியதாக இருந்தால் படிக்க வசதியாக இருக்கும்.

   Delete
  4. // இன்னும் கொஞ்சம் பெரியதாக அதே போல் எழுத்துருக்கள் பெரியதாக இருந்தால் படிக்க வசதியாக இருக்கும். //
   யெஸ் நன்றாகத்தான் இருக்கும்...

   Delete
 21. சேலம் புத்தக விழா சிறப்பாக நடைபெற‌ வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 22. விதி எழுதிய வெள்ளை வரிகள்

  முதலில் இதுபோன்ற கதைகளை வெளியிட தைரியமும், தீரா காமிக்ஸ் காதலும் இருந்தால் மட்டுமே சாத்தியம். விடாப்பிடியாக, சிரமங்களுக்கு மத்தியிலும் அவ்வப்போது இது போன்ற படைப்புக்களை வெளியிட்டு காமிக்ஸ் ரசனையை விரிவாக்க தாங்கள் எடுத்து வரும் ஒவ்வொரு முயற்சிக்கும் ஒரு பெரிய சல்யூட்.

  ஒன்பது கதாப்பாத்திரங்கள் ஒன்பதும் ஒவ்வொரு விதம். எங்கும் பனிப்போர்வை, உயிர் பிழைக்க ஓட்டம், அதில் சோகம் முன்னிலை வகிக்க, இயலாமை, பசி, விசுவாசம், கடமை, மனப்பிறள்வு, துரோகம், சுயநலம், கௌரவம், நேசம், பாசம், தாய்மை, காதல் என்று பாதிக்கப்பட்ட மனித மனங்களை சமரசம் இல்லாமல் தோலுரித்து காட்டுகிறது இக்கதை.

  நமது காமிக்ஸ் தேடலில் கிடைத்த மேலும் ஒரு மாணிக்கம். நிச்சயம் காலம் கடந்தும் பேசப்படும் படைப்பு. லயன் வாசகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நன்றிகள் பல.

  படிக்க எடுத்துக் கொண்ட அவகாசம் - 2.5 மணி நேரம்

  ReplyDelete
  Replies
  1. ///நமது காமிக்ஸ் தேடலில் கிடைத்த மேலும் ஒரு மாணிக்கம். நிச்சயம் காலம் கடந்தும் பேசப்படும்///

   சூப்பர்!

   Delete
 23. Tintin part of universal santha or have to pay seperately??

  ReplyDelete
 24. புகைப்படங்கள் பார்க்க https; லிங்க்லஎனக்கு போட்டோ வரல.உள்ள போனா What's your qustionஅப்படினு வருதுகரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 25. சார்...கள்ளக்குறிச்சியில...எப்போ...புத்தக கண்காட்சி

  ReplyDelete
 26. டிசம்பர் இதழ்கள் இந்த வார இறுதியில் கிடைக்க வாய்ப்பிருக்கா சார் ?!

  ReplyDelete
 27. சேலத்தில் நம்ம ஸ்டால் விற்பனை நல்லா இருக்குங்களா சார் ?!
  மழை வேறு ஒரு பக்கம்,தீபாவளிக்கு அப்புறம் புத்தக திருவிழா,இன்னொரு பக்கம் மாசக் கடைசி பலருக்கு பட்ஜெட் கொஞ்சம் கையைக் கடிக்கும்,இப்படி பல்வேறு சூழலுக்கு மத்தியில் சவலாய் நிற்கிறது புத்தகத் திருவிழா.....

  ReplyDelete
  Replies
  1. ஒரு update கொடுங்க சார்.

   Delete
 28. V காமிக்ஸ் ரொம்ப பிக்கப் இல்லை என்பது என் கருத்து .. கொஞ்சம் வித்யாசமாய் கதைகளை போட்டால் தான் என்ன. ??

  தொட்டதையே திரும்ப திரும்ப போடுவதால் கொஞ்ம் அயற்சி ஏற்படுகிறது .. டிபரண்ட் ஆன கதைகளை தெடுது என் மனம்

  ReplyDelete
  Replies
  1. படிக்க எளிதாக உள்ளது. 1/2 மணி நேரத்துக்குள் படித்து முடிக்க ஏதுவாக உள்ளது.

   Delete
  2. அடுத்த வருட V-காமிக்ஸ் அட்டவணை மிகவும் சுவாரசியமான கதை நாயகர்களுடன் உள்ளது.

   Delete
 29. அனைவருக்கும் வணக்கம் .

  ReplyDelete
 30. வித்தியாசமான தலைப்பில் டெக்ஸ். கதையும் வித்தியாசமாக இருக்குமோ?ஆவலுடன்எதிர் பார்ப்பு. . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. அதே அதே.....

   தலைப்பை பார்த்துட்டு இளம் டெக்ஸோனு வினவினேன்....

   ரெகுலர் டெக்ஸ் தான்...

   சற்றே வித்தியாசமான பாணி.. ரொம்பவே கவரும் விதத்தில் இருக்கும் என தெரிய வந்தது...

   Delete
  2. இன்னொரு விளம்பரத்தில் நார்மல் டெக்ஸ் என்று இருந்ததே

   Delete
  3. இளம் டெக்ஸ்னு பார்த்துட்டு தான் ஆசிரியர் கிட்ட கேட்டேன், ஞாயிறு மாலை நேரில்.... "ரெகுலர் டெக்ஸ்தான்.. செம அதிரடி ஆட்டம் பண்ணுவாங்க டெக்ஸ்& கார்சன்"-னு தெரிவித்தார்.

   சோ, அதகள கதை காத்துள்ளது...


   Delete
 31. ஆசிரியர் சார்@

  டின்டின் ஜனவரியில் ஆர்ப்பாட்டமாக டெபுட் பண்ணுவார்னு நேற்றைய புக்கிங் விளம்பரத்தில் தெரிவித்து உள்ளீர்கள்....

  ஆல்ரெடி டெக்ஸ் உண்டு ஜனவரிக்கு...

  முத்து 52வது ஆண்டுமலர் 17படைப்பாளிகள் கைவண்ணத்தில் உருவான ₹மேற்கே போ மாவீரா"- ப்ளானர்ல உள்ளது...

  V comics கலர் வேதாளரும் ஜனவரி யில வர்றார்னு தெரிவித்தீர்கள்.

  1.டின்டின்

  2.டெக்ஸ்

  3.மேற்கே போ மாவீரா

  4.வேதாளர்

  ஆஆஆஆஆத்தி..செம ஹெவி வெயிட் மாதமாக புத்தாண்டு அமையும் போல உள்ளதேங் சார்.😻😻😻😻

  3சூப்பர் ஸ்டார்கள் மோத போறாங்களா???

  """"டெக்ஸ் x டின்டின் x வேதாளர்"""


  அல்லது எனி சேஞ்சஸ் உண்டுங்களா சார்????

  ReplyDelete
 32. மோதினால் தானே யாரு சாம்பியன் என்று தெரியும். மோதட்டும்

  ReplyDelete
  Replies
  1. காமிக்ஸ் ஆன்டைஸ் டெக்ஸ்& வேதாளர் இருவரும் ஈஸியா பைனல் போயிடுவாங்க.....

   தென் எனி படிஸ் கேம்...

   Delete
 33. "டைகரின் "-தீபாவளி மலர்-படித்து முடித்துவிட்டேன்..
  தீபாவளி முடித்து ரெண்டு நாள்கழித்துதான் படிக்க உட்கார முடிந்தது..
  . முதல் அத்தியாயம் படித்து-புரிந்து, உள்வாங்கிக்கொள்ள கொஞ்சம்திணறத்தான் செய்தது.
  அப்றம்தான் படிக்க சுவாஸ்யம்
  ஏற்பட்டது..(இடையிடையே இளம் Tex-ம் படிக்க ஆரம்பிப்பேன்..இரண்டு அத்தியாயம் தான் முடித்திருக்கிறேன்..)
  இரண்டையும் -படிப்பதில் உள்ள தடுமாற்றத்தை சொல்ல முயற்சிக்கிறே
  ன்..கேப்டன் டைகர் செம கதைதான்..எனக்கென்னவோ இரண்டு மூன்று கதாசிரியர்கள் ஒன்றுகூடி - சார் அவர்களிடம் டை
  கர் மாட்டட்டும் - அப்றம் இவர் மூலமாய் தப்பிக் கட்டும் என்று -மாட்டுவதும் தப்பிப்பதுமாய் கதையில் பல ட்விஸ்டுகள்..
  இது யாரு?.. அது யாரு? என்றே மறுபடி கதையை
  பின்னோக்கிப்படிக்க வேண்டி உள்ளது.
  நமக்கெல்லாம்-'அந்த நேரத்தில், - அந்த ஊரில்.. அந்த படையில்..
  என்று படித்தால்தான் கதையே புரியும்.. ஏனென்றால் - கதை வடக்கு-தெற்கு சண்டை என்று மட்டும் செல்லவில்லை. இடையில் நிறைய அணிகள் மூக்கை நுழைக்கிறார்கள்..
  என்னுடைய ஆசை என்னவென்றால். -இனிவரும் டைகர் கதைகள்-இரண்டு பாகமாக வெளியிடுங்கள்..அதாவது Maxi சைஸில் .
  ஏனெனில், பக்கத்துக்கு 8-10 படங்கள் என்னும்போது படங்களை மறைத்து நிறைய எழுத்துக்கள் அடைத்துக்கொள்கின்றன..
  இதில் நான் கேட்கும் - அந்த இடத்தில் - அந்த படையில் - என்று விளக்கங்களை கொடுத்தால் - படமே இருக்காது..
  எனவே - புதிய டைகர் கதைக்கு படங்கள் அட்டகாசம்- இனிவரும் டைகர் இதழ்களை
  ஹார்டு பவுண்ட் இல்லாமல்-இரண்டு இரண்டு பாகங்கள் இணைத்து maxi - சைஸில் வெளிவந்தால் சிறப்பாக இருக்கும்..
  - இளம் Tex-யில் வேறு பிரச்சனை..
  நான் எப்போதும் ஹார்டு பவுண்ட்-டை விரும்புபவன் அல்ல..பீரோவில் நிறைய புக்குகளை வைக்க முடியாமல் இடத்தை அடைக்கிறதே என்று_
  ஆனால், Tex- கதைகளில்-230. - 250-பக்கங்கள் என்றால் தான் சாதாை பைண்டிங் சரியாக உள்ளது..
  இளம் Tex - 400 பக்கங்களில் அனும்போது உள்பக்க படங்கள்-வசனங்கள் சரியாக தெரியவராமல் படிப்பு சுவராஸ்யத்திற்கு தடையாக உள்ளது..(இப்போதுதான் இரண்டு பாகம் முடித்திருக்கிறேன்..)
  எனவே - இரண்டு ஒப்பீடுகளையும் தங்களால் முடிந்த அளவு இனிவரும் காலங்களில் பரிசீலிக்கும்படிே ட்டுக்கொள்கிறேன்..சார்..

  ReplyDelete
 34. 2024 ஆம் ஆண்டு சந்தாவில் இணைய விரும்பும் நண்பர்கள், வாசகர்கள்... சேலம் புத்தக கண்காட்சியின் மூலம், ஆண்டு சந்தாவில் இணைந்து, சேலம் புத்தக கண்காட்சி விற்பனையை உற்சாகப்படுத்துங்கள் நண்பர்களே... சேலம் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தாருங்கள் நண்பர்களே...🙏🙏🙏

  ReplyDelete
 35. இதோ டின் டின் அடித்து ஆட வரப்போகிறார்...நண்பர்கள் வாட்ஸப்பில் களை கட்டுகிறார்...அடுத்த திருவிழா 40 அடுத்த மாதம் பல கொண்டாட்டங்கள்...

  கதைகள் ந்றையன்னாலும் வேற ஏதாவது கதைகள் இன்ப அதிர்ச்சியா கேக்க அந்த கண்கள பாத்து கேக்க பயமாதான் இருக்கு...ஆனா

  ReplyDelete
  Replies
  1. // கதைகள் ந்றையன்னாலும் வேற ஏதாவது கதைகள் இன்ப அதிர்ச்சியா கேக்க அந்த கண்கள பாத்து கேக்க பயமாதான் இருக்கு...ஆனா // ஸ்டீல் ROFL ...

   Delete
 36. இன்றிலிருந்து தொடங்குகிறது விமர்சனப்போட்டி..! டிசம்பர் 31 இரவு 12 மணிவரை பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.!

  வாழ்த்துகள் நண்பர்களே..!!

  ReplyDelete
 37. காமிக்ஸ் எனும் கனவுலகம் விமர்சனப் போட்டி 
  பெயர் - சுரேஸ் தனபால் 
  ஊர் - திருவண்ணாமலை 
  அலைபேசி எண் : 9489842624

  பனிவனப் பிரியாவிடை

  என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு சந்தோஷப் படும் கணவராக இல்லாமல் ஐரோப்பாவுக்கு மனைவியை வழி அனுப்பி  வைத்து விட்டு அவள் நினைவாகவே நாட்களை மெதுவாக கடத்தி வந்த புது மாப்பிள்ளை டிரெண்டுக்கு வித்தியாசமான ஒரு பனியை அவரது மேலதிகாரிகள் தருகின்றனர். 

  பிலிப் டிரெண்ட் குறித்து சொல்வதென்றால் அவர் ஒரு தனிமையே துணைவன் என்று வாழ்ந்த லக்கி லூக்குக்கு போட்டியான ஒரு ஆள் தான். ஆனால் அப்படியே எதிர்மாறான கேரக்டர். ரொம்ப அமைதி. அமைதியோ அமைதி. அதனாலேயே அவரது கதை தட தட என்று செல்லாமல், நின்று பெய்யும் மழை போல் ஆழமாய் மனதில் ஊடுருவும் வகையை சேர்ந்தது. 

  இவரது கதையில் எட்டாவது பாகமான பனிவனப் பிரியாவிடை எனும் இந்த நூலே கடைசி. இவரது கதையில் சிறந்தது "களவும் கற்று மற" கதை தான், என்றாலும் அவரது பிற கதைகளை விட இந்த எட்டாவது பாகம் கொஞ்சம் வித்தியாசமானது. உங்களுக்கு பயணங்கள் பிடிக்கும் என்றால் இந்த கதையை எடுங்கள். குதிரை சவாரி, கொச்சு வண்டியில் பயணம், ரயில் வண்டியில் சிறிது தூரம், கப்பலில் அதகளம் என்று பல்வேறு விதமான பயணங்களில் நாம் அவர்களுடனேயே பயணிக்கும் ஒரு பீலிங். 

  அதிலும் அந்த கப்பல் மற்றும் ரயில் வண்டி, ஓவியத்தில் நிஜம் போலவே தெரிகிற அளவுக்கு வரைந்து இருக்கிறார் லியோ. 

   ஆங்காங்கே கவிதைகளை தூவி செல்வது இந்த கதைகளின் ஒரு அங்கம். அதற்கு குறைவில்லாமல் இந்த கதையிலும் ஜியார்ஜ் வில்க்ரோப்ட் அவர்களின் அருமையான வரிகளால் வாழ்க்கை குறித்து பதிவு செய்கிறார் ஆசிரியர்.
  மனைவியை பிரிந்து இருக்க முடியாத ரோட்னி, பிரிந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவன் மனைவி, தந்தை தவறு செய்தாலும் அவர் மீது பாசமாக உள்ள ஜெரிமி, இவர்களை சுற்றியே கதை. மனைவியை பிரிந்து இருக்கும் டிரெண்ட் க்கு உள்ள உணர்ச்சிகள். மணமானவர்களின், குழந்தை வேண்டும் எனும் ஆசை என்பது போன்ற உணர்ச்சிக்  குவியலுடன் கதை நெடுக டிரெண்டை அலைக்கழிக்கிறார் கதாசிரியர் ரோடோல்ப். டிரெண்ட்டை மட்டுமா வாசகர்களாகிய நம்மையும் தான். 

  ஜெரிமியை காப்பாற்ற யோசிக்காமல் நீரில் குதிக்கும் டிரெண்டுக்கு, தன் மனைவியிடம் இருந்து வந்த  படிக்காமல் வைத்த கடிதம் நீரில் நனைந்ததால் உண்டாகும் சஸ்பென்ஸ், நம்மையும் ஒட்டிக் கொள்கிறது. ஒரு உயிரினத்தை கூட அவசியம் இல்லாமல் கொல்லக் கூடாது என்று நினைக்கும் டிரெண்ட்,  தனக்கு பிறக்கப் போகும் மகன் ஜெரிமி போலவே இருப்பதாக உருவகம் செய்துக் கொண்டதால் எடுத்த விபரீத முடிவு கதையை கணமாக்குகிறது. 

  "தீர்மானங்கள் கோரி பிரச்சனைகள் நாட்டியமாடிக் கொண்டிருக்கும்", என்று வாழ்க்கையின் அன்றாட நிகழ்வை, இவ்வளவு கனமான விஷயத்தை சாதாரணமாக மொழி பெயர்த்து செல்கிறார் மொழிபெயர்ப்பாளர். ரோட்னி என்ன முடிவு எடுக்கப் போகிறான் என்பதை இந்த பக்கத்திலேயே சொல்லிச் செல்கின்றார் ஆசிரியர். 

  46 பக்க கதை ஒரு பிரீசி ரீட் தான் என்றாலும் குற்றாலத்தில் நீர் வரத்தின் பொழுது உள்ள  சாரலுடன் கூடிய தென்றல் காற்றுக்கு சமம். கனடாவை சுற்றிப் பார்க்க டிரெண்ட் கதைகள் உத்திரவாதம். ஆனால் 120 ரூபாயில் நீரிலும் நிலத்திலும் கனடாவை சுற்றிப் பார்ப்பது என்பது அசாதாரணம்.

  இந்த கதையை படிக்க இதற்கு முன்பு வந்த கதைகளை படிக்க வேண்டுமா என்று குழம்ப வேண்டாம். இந்த கதையில் இதற்கு முன் உள்ள கதையின் தொடர்ச்சியான சம்பவம் என்று எதுவும் இல்லை. இருந்தாலும் அந்த எட்டு கதைகளையும் படித்து விடுங்களேன்.

  கதையின் ஆரம்பத்தில் ஆக்னெஸ்சுக்கு பிரியாவிடை அளிக்கும் டிரெண்ட், கதையின் முடிவில் ஜெரிமிக்கு பிரியாவிடை அளிக்கும் டிரெண்ட், வீடு திரும்பி ஆனந்தம் அடையும் பொழுது பிரியாவிடை அளிக்க நாமும் தயாராகி விடுகிறோம். மீண்டும் இந்த சிகப்பு சட்டைக்காரருடன் நடக்கப் போகும் நகர்வலத்துக்கு இப்பொழுதிருந்தே காத்திருக்கிறேன். வருவாரா வரமாட்டாரா என்பது காலத்தின் கையிலும் உங்கள் ஆதரவின் ஆரவாரத்திலும் உள்ளது.

  10/10

  ReplyDelete
  Replies
  1. 👏👏👏👏👏👏👏

   முதல் பதிவு...


   வாழ்த்துகளும் நன்றிகளும் சுரேஷ் சார்...


   👏👏👏👏👏👏👏👏

   Delete
  2. அருமை சகோ 👏👏👏💐💐

   Delete
  3. ஒரு எழுத்துப் பிழை, திருத்தி கீழே பதிந்துள்ளேன்

   Delete
  4. நன்றிகள் நண்பர்களே

   Delete
 38. வோட்டிங் முடிந்தது
  எட்டில் நால்வர் யார் என்று அறிவிப்போடு வரும் புதிய பதிவை எதிர்நோக்கி காத்திருப்பு

  ReplyDelete
  Replies
  1. +10000

   மேகி எப்படியும் வெற்றி பெற்று இருக்கும்....

   Delete
 39. காமிக்ஸ் எனும் கனவுலகம் விமர்சனப் போட்டி
  பெயர் - சுரேஸ் தனபால்
  ஊர் - திருவண்ணாமலை
  அலைபேசி எண் : 9489842624

  பனிவனப் பிரியாவிடை

  என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு சந்தோஷப் படும் கணவராக இல்லாமல் ஐரோப்பாவுக்கு மனைவியை வழி அனுப்பி வைத்து விட்டு அவள் நினைவாகவே நாட்களை மெதுவாக கடத்தி வந்த புது மாப்பிள்ளை டிரெண்டுக்கு வித்தியாசமான ஒரு பணியை அவரது மேலதிகாரிகள் தருகின்றனர்.

  பிலிப் டிரெண்ட் குறித்து சொல்வதென்றால் அவர் ஒரு தனிமையே துணைவன் என்று வாழ்ந்த லக்கி லூக்குக்கு போட்டியான ஒரு ஆள் தான். ஆனால் அப்படியே எதிர்மாறான கேரக்டர். ரொம்ப அமைதி. அமைதியோ அமைதி. அதனாலேயே அவரது கதை தட தட என்று செல்லாமல், நின்று பெய்யும் மழை போல் ஆழமாய் மனதில் ஊடுருவும் வகையை சேர்ந்தது.

  இவரது கதையில் எட்டாவது பாகமான பனிவனப் பிரியாவிடை எனும் இந்த நூலே கடைசி. இவரது கதையில் சிறந்தது "களவும் கற்று மற" கதை தான், என்றாலும் அவரது பிற கதைகளை விட இந்த எட்டாவது பாகம் கொஞ்சம் வித்தியாசமானது. உங்களுக்கு பயணங்கள் பிடிக்கும் என்றால் இந்த கதையை எடுங்கள். குதிரை சவாரி, கொச்சு வண்டியில் பயணம், ரயில் வண்டியில் சிறிது தூரம், கப்பலில் அதகளம் என்று பல்வேறு விதமான பயணங்களில் நாம் அவர்களுடனேயே பயணிக்கும் ஒரு பீலிங்.

  அதிலும் அந்த கப்பல் மற்றும் ரயில் வண்டி, ஓவியத்தில் நிஜம் போலவே தெரிகிற அளவுக்கு வரைந்து இருக்கிறார் லியோ.

  ஆங்காங்கே கவிதைகளை தூவி செல்வது இந்த கதைகளின் ஒரு அங்கம். அதற்கு குறைவில்லாமல் இந்த கதையிலும் ஜியார்ஜ் வில்க்ரோப்ட் அவர்களின் அருமையான வரிகளால் வாழ்க்கை குறித்து பதிவு செய்கிறார் ஆசிரியர்.
  மனைவியை பிரிந்து இருக்க முடியாத ரோட்னி, பிரிந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவன் மனைவி, தந்தை தவறு செய்தாலும் அவர் மீது பாசமாக உள்ள ஜெரிமி, இவர்களை சுற்றியே கதை. மனைவியை பிரிந்து இருக்கும் டிரெண்ட் க்கு உள்ள உணர்ச்சிகள். மணமானவர்களின், குழந்தை வேண்டும் எனும் ஆசை என்பது போன்ற உணர்ச்சிக் குவியலுடன் கதை நெடுக டிரெண்டை அலைக்கழிக்கிறார் கதாசிரியர் ரோடோல்ப். டிரெண்ட்டை மட்டுமா வாசகர்களாகிய நம்மையும் தான்.

  ஜெரிமியை காப்பாற்ற யோசிக்காமல் நீரில் குதிக்கும் டிரெண்டுக்கு, தன் மனைவியிடம் இருந்து வந்த படிக்காமல் வைத்த கடிதம் நீரில் நனைந்ததால் உண்டாகும் சஸ்பென்ஸ், நம்மையும் ஒட்டிக் கொள்கிறது. ஒரு உயிரினத்தை கூட அவசியம் இல்லாமல் கொல்லக் கூடாது என்று நினைக்கும் டிரெண்ட், தனக்கு பிறக்கப் போகும் மகன் ஜெரிமி போலவே இருப்பதாக உருவகம் செய்துக் கொண்டதால் எடுத்த விபரீத முடிவு கதையை கணமாக்குகிறது.

  "தீர்மானங்கள் கோரி பிரச்சனைகள் நாட்டியமாடிக் கொண்டிருக்கும்", என்று வாழ்க்கையின் அன்றாட நிகழ்வை, இவ்வளவு கனமான விஷயத்தை சாதாரணமாக மொழி பெயர்த்து செல்கிறார் மொழிபெயர்ப்பாளர். ரோட்னி என்ன முடிவு எடுக்கப் போகிறான் என்பதை இந்த பக்கத்திலேயே சொல்லிச் செல்கின்றார் ஆசிரியர்.

  46 பக்க கதை ஒரு பிரீசி ரீட் தான் என்றாலும் குற்றாலத்தில் நீர் வரத்தின் பொழுது உள்ள சாரலுடன் கூடிய தென்றல் காற்றுக்கு சமம். கனடாவை சுற்றிப் பார்க்க டிரெண்ட் கதைகள் உத்திரவாதம். ஆனால் 120 ரூபாயில் நீரிலும் நிலத்திலும் கனடாவை சுற்றிப் பார்ப்பது என்பது அசாதாரணம்.

  இந்த கதையை படிக்க இதற்கு முன்பு வந்த கதைகளை படிக்க வேண்டுமா என்று குழம்ப வேண்டாம். இந்த கதையில் இதற்கு முன் உள்ள கதையின் தொடர்ச்சியான சம்பவம் என்று எதுவும் இல்லை. இருந்தாலும் அந்த எட்டு கதைகளையும் படித்து விடுங்களேன்.

  கதையின் ஆரம்பத்தில் ஆக்னெஸ்சுக்கு பிரியாவிடை அளிக்கும் டிரெண்ட், கதையின் முடிவில் ஜெரிமிக்கு பிரியாவிடை அளிக்கும் டிரெண்ட், வீடு திரும்பி ஆனந்தம் அடையும் பொழுது பிரியாவிடை அளிக்க நாமும் தயாராகி விடுகிறோம். மீண்டும் இந்த சிகப்பு சட்டைக்காரருடன் நடக்கப் போகும் நகர்வலத்துக்கு இப்பொழுதிருந்தே காத்திருக்கிறேன். வருவாரா வரமாட்டாரா என்பது காலத்தின் கையிலும் உங்கள் ஆதரவின் ஆரவாரத்திலும் உள்ளது.

  10/10

  ReplyDelete
  Replies
  1. ஏதோவொரு மகாமகத்தினில் வெளியான இதழாய் நினைவில் நிழலாடிடும் ஆல்பமிது ; ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள வரி இன்னமும் நினைவில் உள்ளது நண்பரே ! டிரெண்டுக்கு பேனா பிடிக்கும் போது ஒரு மென்சோகம் நம்மை அறியாது ஆட்கொண்டு விடுவது வாடிக்கை - no different here as well !

   Delete
 40. காமிக்ஸ் எனும் கனவுலகம் விமர்சனப் போட்டி.. பெயர்..கோவிந்தராஜ் பெருமாள்... *.* .. ஈரோடு 9965705372. "பகை பல தகர்த்திடு"(டெக்ஸ் வில்லர்.)

  கர்னல் ஷெல்பி நீங்க என்ன பண்றீங்கன்னா..ஒரு விபச்சாரியைக் கொன்னுட்டு வேற பேர்ல ஜெயில்ல உக்காத்துக்கிறீங்க..

  ஜானி பட்லர் ..ஏற்கனவே வேற பேர்ல சட்டப்படி ஜெயில் தண்டனை அனுபவிக்கிற ஷெல்பியை வெளியேத்தி அவனோட உண்மையான பேர்ல தண்டனை வாங்கிக் கொடுக்க..வக்கீல் வேசத்துல அந்த ஊருக்குப் போறீங்க..உடனே உங்களையும் ஜெயில்ல போட்டுறாங்க..அதுக்கு முன்னாடி நான் ஜெயிலுக்குப் போறேன்னு மறக்காம டெக்ஸுக்கு தந்தி கொடுக்கிறீங்க..

  லோலா மேடம்..நீங்க ஜானியோட லவ்வர்ங்கிறதால அந்த ஊர்ல ஜானிக்காக உளவு பார்க்க டான்சராக வேவு பாக்காம நடனமாடி பொழுதை ஓட்டுறீங்க.

  டெக்ஸ் & கார்சன் நீங்க ரெண்டுபேரும் நீட்டா குளிச்சு..வயிறார சாப்பிட்டு ..ஷு..குளம்புக்கெல்லாம் பாலீஷ் போட்டு வெயிட் பண்ணுங்க.ஜானியோட தந்தி கெடச்சதும் டக்னு கிளம்பி போய் லோலாவைப் பாத்துட்டு அப்புறம் ஜானியை ஜெயில்லேர்ந்து மீட்கணும்..நடுவுல லோலாவோட டான்ஸ் ப்ரோக்ராம் இருக்கு.சலூன் அல்லோலோகல்லோலோ படற சீன் இருக்கு.இதையும் தாண்டி நாப்பது பக்கத்துக்குள்ள முடிச்சாகணும்.

  கோகன்...நீ பிங்கர்டன்னோட முன்னாள் ஆளு. உன் வேலை என்னான்னா ஷெல்பியை மீட்க ஆபிஸர் ..வார்டனை கைக்குள் போட்டு ரகசியமாக பக்கத்திலிருக்கிற லோலாவுக்கு கேக்கிற மாதிரி ப்ளான் போடுற.

  டெக்ஸ் &கோ..ஷெல்பியை மீட்க எதுவும் மெனக்கெடாதீங்க..அதை கோகன் க்ரூப் பாத்துக்குவாங்க..அவங்க ஷெல்பியை காப்பாத்திட்டு தூங்கும்போது நீங்க போய்..அலேக்காக அவனை தூக்கி வந்தாப் போதும்..

  ரெஸிட்டரி..நீ கர்னலோட படையில இருந்த ஆளு..கோகன் மூலமா ஷெல்பியை காப்பாத்துறது நீதான்.உன்னாலதான் தேவையேயில்லாத ஆணி..தேவையான ஆணியா மாறுது...

  தன்னை எதுக்கு ஆளாளுக்கு காப்பாத்த நினைக்கிறாங்கன்னு குழம்பிய ஷெல்பிக்கு உன்னாலதான் விடை கிடைக்குது.

  அப்புறம்...எப்பவும்போல
  கோகன் கும்பலோட ஒரு பைட்..
  ரெசிட்டரி கும்லோட ஒரு பைட்..
  சிறை வார்டன் கும்பலோட ஒரு பைட்னு மிச்ச பக்கத்தை தேத்திடலாம்..ஒரு மாறுதலுக்கு கோச் வண்டில ஒரு பைட்னு சேத்திக்கலாம்.

  ஏம்மா.. லோலா க்ளைமாக்ஸ்ல உனக்கு முக்கியமான ட்விஸ்ட் இருக்குது..ஒரு தியாகம் இருக்கு..பாக்கிறவங்க பரிதாபப்படற மாதிரி சீக்வென்ஸ் இருக்கு.அதை நம்பிதான் இருபது பக்கத்தை அலாட் பண்ணிருக்கேன்.எங்கேயும் போயிடாத..

  கோகன் ..உனக்குமே குண்டடிப் படற மாதிரி சீன் இருக்கு. பாத்துக்கோ..

  அடடா..டெக்ஸை விட்டுட்டோமே..சுபம் போட்டு முடிச்சுவைக்கிறது நீங்கதானே.அதனால லோலாவை முதுகில் சுட்ட ஷெல்பியை நெஞ்சில் சுட்டு ஆளை முடிச்சுட்டு..கதையை முடிக்கிறீங்க..

  சுபம்...சுபம்.

  பி.கு..
  ஜானி க்ளைமாக்ஸுல கண்ணீர் விட்டு கதறியழுததற்கு வெளியே தெரியாத வேற காரணமும் இருக்கு..
  'வேற பேர்ல ஒளிஞ்சிட்டிருக்கிற ஷெல்பியை அவனோட உண்மையான அடையாளத்தை உலகுக்கு காட்டி தண்டனை வாங்கித் தரவேண்டுமென்ற ஜானியின் கனவு ..லட்சியம்.. அயராத. உழைப்பு அத்தனையும் ஒரு தோட்டாவால் சில்லு சில்லா சிதறியதை நினைத்துதான் அந்த அழுகை..

  இதுக்கு அவனை முதல் பக்கதிலேயே
  போட்டுத் தள்ளியிருக்கலாமோ.
  .

  ReplyDelete
  Replies
  1. அருமை... வாழ்த்துகள் G.P..!
   👏👏👏👏👏👏

   Delete
  2. செம GP..👌

   இம்முறை இரு சர்ப்ரைஸ் நடுவர்களும் தீர்ந்தாங்க.....
   எண்ட்ரி ஒவ்வொன்றும் கொல மாஸ்....

   இன்னும் டிசம்பர் புக்ஸ் வந்தா களை கட்டும்.

   Delete
  3. @Govind சகோ
   வெற்றி பெற வாழ்த்துகள்💐💐💐

   Delete
  4. சார்....உங்க பெயரைச் சொல்லி இந்த இதழை நான் மறுக்கா புரட்டிட்டு இருக்கேன் - விமர்சனம் செம !

   Delete
  5. இந்த வருசம் வந்த கதைகள்லே நாலைஞ்சு கதைதான் படிக்க முடிஞ்சது..
   அதுல மூணு..டெக்ஸ் கதை..

   ஒரிஜினலாகவே விமர்சனம் போடலாம்னு இருந்தது மீண்டு வந்த மாயனை.செமத்தியான கதை.

   ஆனா ..அதை எங்க சேவ் பண்ணேங்கிறது தெரியாததால ..முன்னால இருந்த இதை போஸ்ட் பண்ணிட்டேன்.

   😀😀😀

   Delete
 41. """காமிக்ஸ் எனும் கனவுலகம் விமர்சனப்போட்டி..."""

  பெயர்:விஜயராகவன் V. (எ) STV

  ஊர்:சேலம்

  அலைப்பேசி எண்:96******00

  (என்ட்ரி:1)

  ஒரு கெளபாயின் காதலி....

  நாம இலக்கியங்களில் பார்த்த முதன்முதல் கசமுசா காதல் "ட்ராய் இளவரசன் பாரிஸ் vs ஹெலன் ஆஃப் ஸ்பார்டா"-(உலகிலேயே மிகவும் அழகான பெண்)....!!! அந்த காதலை சுற்றி ஹோமர் தன்னுடைய படைப்பை விஸ்வரூபம் எடுக்க செய்திருப்பார்.... அந்த காதலை சுற்றி சாம்ராஜ்யங்களின் மோதல், மாவீரர்களின் ஆக்ரோசங்களை உணர்வு பூர்வமாக உணர்ச்சிகரமாக கவர்ச்சிகரமாக கவரும் விதத்தில் கட்டமைத்து இருப்பார்...இலியட்-ஒடிசி என்ற காலத்தால் அழியா காப்பியங்களாக நாம் கல்லூரி நாட்களில் பயின்று இருப்போம்.

  கிமு காலத்திய அந்த கசமுசா காதல்தான் "கெளபாயின் காதலி"-யோட கதையும்......

  போனெல்லியும் அந்த காதலை சுற்றி இத்தனை அழுத்தமான கதையமைப்பை கட்டமைத்ததோடு தல டெக்ஸ்ஸை கச்சிதமாக உலவ விட்டுள்ளார்கள்...

  தலயோடு சேர்ந்து நாமுமே இந்த காதல் ஜோடி டாம்& ரூபியை சேர்த்து வைக்க போராடுவோம்.

  முதல் மோதலிலேயே தலை நுழைக்கும் டெக்ஸ்& கார்சன் ஜோடி இம்முறை ஃப்ரீ ப்ளோயிங் ஆக பட்டையை கிளப்புறாங்க...

  ரொம்ப நாளைக்குப்பிறகு மனசை இலவம் பஞ்சாக மிதக்க வைத்த கதை...

  உருவாக்கியதே அசத்தலான கலரிங் என்பதால் சும்மா டாலடிக்கிறது பிரிண்டிங்கில...

  கலரிங்கும் ஓவியங்களும் கதைக்கு கூடுதல் வலுசேர்க்கின்றன...

  ஆங்காங்கே தெறிக்கும் லயன் காமிக்ஸ் ஆசிரியர் சாரோட இளமையான பஞ்சிங் வசன நடை உற்சாகமீட்டரை ஒரு பக்கம் எகிறச் செய்கிறது...

  ஒன் ஆஃப் த ஆல்டைம் பெஸ்ட்ஸ் ஆஃப் டெக்ஸ் லிஸ்ட்ல "கெளபாயின் காதலி"- இடம்பிடிப்பது உறுதி...

  கதைக்கு ஈடுசெய்யும் சித்திரங்களை தெறிக்க விட்டுள்ளார் ஓவியர் Scascitelli....

  துவக்க பேனலே அதற்கு அத்தாட்சி....
  மெக்ஸிக பாலைவனங்கள், பாறை முகடுகள், காற்றாழைகள்,குதிரைகள், மெக்ஸிகோ தொப்பிகள், ரியோ க்ராண்டே....என எல்லாமே நேரில் பார்ப்பது போன்ற நேரத்தியான ஓவியங்கள்... அந்த ஓவியங்களின் அழகை கண்கவரும்படி கச்சிதமாக அமைக்கப்பட்ட கலரிங்பாணி தான் உச்சம்...

  துவக்க பேனலில் அசத்தும் ஓவியப்பாணி...,தெறிக்கும் பாலைவன புழுதியில் ஆரோகணிக்கும் புரவிகள்...அசத்தும் மெக்ஸிகன்களின் முகபாவனைகள்.. மயக்கும் அழகி ரூபியின் வதனம் என கதை முழுதும் கவருகிறது....

  63ம் பக்க பச்சைக்கல் கிராம காட்சி சான்சேயில்லை..மரணமாஸ்..

  91&94 பக்க வல்ரோசா பாசறை லாங் ஷாட் காட்சிகள் நெடுநேரம் பக்கத்தை திருப்ப விடாமல் கட்டிப்போடுகின்றன...

  107ல மெக்ஸிக காவலர்களை டான் சந்திக்கும் காட்சி..

  110ல டெக்ஸ் & கோ அப்படியே வளைவில் திரும்ப எதிர்படும் ரியோ கிராண்டே ஆறு ஆஹா அள்ளிடுது மனசையும் மதிப்பெண்களையும்...

  122 டூ 125 டெக்ஸ்& கோ--ஒரு சைடு, டான் கோஷ்டி அவுங்களை நெருங்க வரும் காட்சிகள்லாம் செதுக்கப்பட்டு இருக்கும்...

  131&132 ல ரூபியைக் காப்பாற்ற க்ராண்டேயின் நீரில் பாயும் டாமின் உணர்வுகளோடு கதையோட்டமும் ஓவியமும் இணையும்போது அதகளம்....

  147ல பழைய மிஷினில் நுழைவாயிலில் கயிறில் தொங்கும் டாம், அவனை பார்த்தபடி காதலில் பொங்கும் ரூபி---இரவில் அப்படியே போர்ட்ராய்டாக வரைந்துள்ளார், செம..

  155ல டாமின் கயிறை சுட்டு வீழ்த்தும் பழைய காதல் நெஞ்சன் கார்சன்னா நினைச்சீங்கே, சாட்சாத் நாமே...கதையும், ஓவியமும் அப்படி ஈர்த்து விடுகிறது அங்கே...

  கதையின் கடைசி பக்கத்தில டெக்ஸ் சொல்லும் கார்சனின் காதல் மனசு அவரைமட்டுமல்ல நம்மையும் ஒரு நொடி பன்னாக், பாடகி லீனானு சிறகடிக்க வைக்கிறது.....

  ReplyDelete
  Replies
  1. கதையின் இளமை, ஓவியங்கள், வர்ணஜாலம், வேகமான கதையோட்டம் இவைகளுக்கு இணையாக குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம், "வசனங்கள்"...குறிப்பாக டெக்ஸ்& கார்சன் வரும் பல இடங்களில், குபீர்னு வாய்விட்டு சிரிக்க வைக்கிறது... நக்கல் ,நையாண்டி என
   ஆசிரியர் விஜயன் சார் ரொம்ப ஜாலியாக ரசித்து எழுதி உள்ளார்...

   #பக்கம்27..ரிகோ கோஷ்டியை சேர்ந்த இருவர் தப்பிஓட மலையைச்சுற்றி வந்து கார்சன்& டெக்ஸ், அவுங்களை அமுக்குவாங்க..

   ///கார்சன்: என் கணிப்பு எப்படி தம்பி?

   டெக்ஸ்: பெருசு...தோளில் ஒரு பையை மாட்டிக் கொண்டு நீ குறி சொல்லப் போகலாம்!///

   #பக்கம்28..மடக்கப்பட்ட இருவரும் இவுங்களை நோக்கி சுட... அதில் ஒருவன் கார்சனை நோக்கி..

   ///செத்தோலி...

   கார்சன்: சாகிற வயசாடா எனக்கு?!.... மீசையையும் தாடியையும் பார்த்த நொடியிலேயே சங்கு ஊதும் வயசு தான் என்று நீங்களாகத் தீர்மானித்தால் எப்படியாம்?//!

   #பக்கம் 42ல டான் மனுவலின் மாளிகையில் ட்ரிங் தந்து உபசரிப்பாங்க...டான் ஒவராக அலட்டுவதை கண்டு, கார்சன்&டெக்ஸ் உரையாடுவது!

   #பக்கம் 45- தன் முன்னால் காதலன் டாமிடம் ஓவராக டானின் மனைவி ரூபி ஈசுவதைக் கண்ட, கார்சன், டாம்&ரூபிக்கு மத்தியில் ஏதோ ஒன்று உள்ளதோ என தன் ஐயத்தை டெக்ஸிடம் கேட்க,

   //டெக்ஸ்:- பெரியவருக்குப் புகைகிறதோ?!//

   #பக்கம்49- பச்சைக் கல் விடுதியில் செமத்தியாக உண்டபின்...
   டெக்ஸ்& கார்சன் உரையாடல் வழக்கமான வாரிவிடல் ரகத்தில் செம..

   #பக்கம் 53- அதே பச்சைக் கல் நகரில், டெக்ஸ்& கார்சன் விடுதி ரூமில் நையாண்டியான உரையாடல்..முத்தாய்ப்பாக,

   கார்சன்: சத்தியசோதனை....!

   #பக்கம்70- ரூபியை டாம் தள்ளிட்டு போன ஆத்திரத்தில் பச்சைக்கல் நகர விடுதியில் தங்கியிருக்கும் டெக்ஸ்& கோ வை அடித்து துவைக்க வந்த டானின் ஆட்களை இவுங்க இருவரும் புரட்டி எடுத்தபின் வரும் டெக்ஸ்& கார்சன் உரையாடல்கள்....& பக்கம்72- தொடரும் மோதலில்......

   #பக்கம்92-93:- வால்ரோசா பாசறையில் அடைக்கப்பட்ட டாம்& ரூபி தழுவிக்கொண்டு இருப்பதை அடுத்து சார்ஜெண்ட்டின் வசனம்...💞

   #பக்கம்97- டாம்& ரூபியை மீட்கும் டெக்ஸிடம் சார்ஜெண்ட் கொதிப்பதை அடுத்து டெக்ஸ்ஸின் நக்கலான வசனம்..

   #பக்கம்104-105:- டாமின் பாஸ் மோரிஸ், இப்படி இக்கட்டில் மாட்டிவிட்ட டாமை "அன்போடு" கவனிப்பதை அடுத்து கார்சன்...

   ///கார்சன்: என் நண்பனோடு கொஞ்ச நேரம் பழகியதிலேயே உங்கள் பாஸ் செமத்தியான சில்லுமூக்குச் சிதறடிப்பவனாக உருவெடுத்து விட்டாரே!?//!--- அமர்க்களம்!

   #ரியோ க்ராண்டேயில் டானின் ஆட்களோடு டெக்ஸ் பேசும் வசனங்கள், டெக்ஸை காக்க கார்சன் அடிக்கும் நக்கல் வசனங்கள் னு தொடருது....

   #பக்கம் 147- டானிடம் அகப்பட்டுக் கொள்ளும் ரூபி& டாமை மீட்க ரியோ கரையில் டெக்ஸ் சொல்லும் திட்டத்தை அடுத்து சரவெடியான கார்சன்& டெக்ஸ் உரையாடல்கள்....

   #பக்கம் 152- பழைய மிசனை அடையும் டெக்ஸ்& கார்சனை கண்டுகொள்ளும் டானின் ஆட்களில் ஓருவனை காலால் முகத்தில் எத்திவிட்டு கார்சன் அடிக்கும் நக்கலான வசனம் செம.....

   ///அடியாள்: ஹேய்! நீ ரஃபேல் இல்லை!

   கார்சன்: கூர்மையான மூளைக்காரச் செல்லம்... ஐ லவ் யூ..!!!

   "தடால்... ஒளச்"///

   #பக்கம் 167- இணைந்த காதலர்கள் டாம்& ரூபியின் காதல் வசனங்கள்..💞💞💞 & அவர்கள் கிஸ் அடிப்பதைக் கண்டு,

   //கார்சன்: கண்ணைக் கூசுதே!

   டெக்ஸ்: தாத்தா சார்! கண்ணைப் பொத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் அந்தப் பாவப்பட்ட இதயம் பணாலென்று வெடித்து வைத்து விடும்...!///

   ----STV.

   Delete
  2. கெளபாயின் காதலியின் தத்ரூபமான ஓவியங்கள் காண இந்த லிங்கை சொடுக்குங்கள் சீஃப் நடுவர் ஐயா& ரகசிய நடுவர்கள்@

   https://m.facebook.com/groups/2563733947186727/permalink/4052898454936928/?mibextid=Nif5oz

   Delete
  3. சூப்பர் மாமா...👏👏👏👏👏

   Delete
  4. சக போட்டியாளர்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்💐💐💐💐💐


   இங்குட்டு மாதிரி சாந்தமாக இருக்க மாட்டேன்....போட்டி களத்தில கொஞ்சம் உக்கிரமாக இருப்பேன்...😉

   வாங்க பழக ச்சே மோதலாம் ப்ரெண்ட்ஸ்💪💪💪💪💪

   Delete
  5. @STV சகோ

   ஆக தாங்கள் நடுவர் இல்லை என்று சொல்கிறீர்கள்

   Delete
  6. கடல்யாழ் @

   அவர் நடுவரா இருந்தா போட்டியில எப்படி கலந்துக்குவாரு சகோ..!

   இந்தப் போட்டிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ரெண்டு நடுவர்களை உங்களால கண்டேபிடிக்க முடியாதுங்க..😂

   Delete
  7. As usual நெத்தியடி பிரதர்

   Delete
  8. அனேகமாக ஒருவர் நமது ஆசிரியர் குடும்பத்தில் உள்ளவர் என நினைக்கிறன் :-)

   Delete
  9. // இந்தப் போட்டிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ரெண்டு நடுவர்களை உங்களால கண்டேபிடிக்க முடியாதுங்க //

   உங்களால கூட கண்டுபிடிக்க முடியாது என ஊருக்குள் பேசிக்கிறாங்க :-)

   Delete
  10. கடல்@
   அட்டு KOK@
   PfB@
   சுரேஷ்@

   தேங்ஸ் ப்ரெண்ட்ஸ்...

   Delete
  11. கடல்@ மீ ஆல்வேஸ் தொண்டன்..... ரொம்ப ரொம்ப தவிர்க்க இயலாத நேரங்களில் தான் நடுவர் அணிக்கு போறது....இம்முறையும் பிரதான போட்டியாளர்கள் ல இருக்கணும்..

   As usual my target is: A place in the top 3


   தலைக்கு ஒரு எண்ட்ரி போட்டாச்சி...

   அடுத்து தளபதிக்கு ஓரு மாஸ் எண்ட்ரி ரெடியாகுது....

   Delete
  12. ///இந்தப் போட்டிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ரெண்டு நடுவர்களை.....//!

   @KOK மாமா

   பண்ணை வீடு..ரெண்டே பேரு..மொத்த டாகுமெண்ட் அபேஸா மாமா???🤣

   Delete
  13. @கண்ணன் சகோ
   ஹெர்லாக் ஷோம்ஸ் ஆக மாறி கண்டு பிடிச்சாச்சு
   ரகசியம் காரணமாக மெய்ன்டென் பண்றேன் 🤐🤐🤐

   Delete
  14. @STV சகோ
   தாங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ💐💐💐

   Delete
  15. ஒரு தபா ஞானும் ஈ போட்டியிலே கலந்துக்குறான் ! செமத்தியா ஆளாளுக்கு கலக்குறாகளே !!

   Delete
  16. @STV சகோ

   //தலைக்கு ஒரு எண்ட்ரி போட்டாச்சி...//

   "தல"க்கு தாங்கள் இந்த கதையினை தேர்வு செய்ததில் எனக்கு மகிழ்ச்சி சகோ

   Delete
  17. ///ஒரு தபா ஞானும் ஈ போட்டியிலே கலந்துக்குறான் ! செமத்தியா ஆளாளுக்கு கலக்குறாகளே !!///

   ஆஹா... எங்கள் பாக்கியம் சார்....

   வெல்கம்.. வெல்கம்💐💐💐💐💐


   தங்களின் எண்ட்ரி எது என அறிய மிக ஆவலுடன்.....!!

   Delete
  18. ///ஒரு தபா ஞானும் ஈ போட்டியிலே கலந்துக்குறான் ! செமத்தியா ஆளாளுக்கு கலக்குறாகளே !!///

   இமயமலைக்கே ஜஸ் விக்க முடியுங்களா சார்..!?

   Delete
  19. // ஒரு தபா ஞானும் ஈ போட்டியிலே கலந்துக்குறான் ! செமத்தியா ஆளாளுக்கு கலக்குறாகளே !! //

   Wow. Super sir.

   Delete
 42. காமிக்ஸ் எனும் கனவுலகம் விமர்சனப் போட்டி 
  பெயர் - சுரேஸ் தனபால் 
  ஊர் - திருவண்ணாமலை 
  அலைபேசி எண் : 9489842624
  ENTRY - 2

  எந்தையின் கதை

  XIII மர்மம் என்ன என்பது இரத்தப் படலம் படித்த மக்களுக்கே தெரியும். ஆனால் இந்த கதையில் மூழ்கி திளைக்க இரத்தப் படலம் குறித்து கிஞ்சிற்றும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதே இந்த கதையின் பலம். 


  கதை சம்பந்தமே இல்லாமல் அனிடா என்ற பெண்ணின் சாகசத்தில் இருந்து தொடங்குகிறது. முதல் மூன்று பக்கங்கள் நிதானமாய் நடை போடும் கதை, நான்காவது பக்கத்தில் அரசியல் சூடு பிடித்து பரபர என்று பற்றிக் கொள்கிறது. அதன் பிறகு கதை நெடுக நிதானமாக நின்று எரிந்து கிளை கிளையாய் தாவி முடிவு அதிர வைக்கிறது.

  பாஸ்டர் ஐஸாயா - ஜானதன்   மக்லேன் எனும்  ஜானதன் ப்ளை - ஜேஸன் மக்லேன் எனும் ஜேஸன் ப்ளை - ஜெஸ்பர் கோன்ராட் க்ளோவர் என்பவர்கள் தான் இந்த கதையின் பிரதான நாயகர்கள்.

  பக்கங்கள் 48,49,50 படங்களின் மூலம் இருவேறு நிகழ்வுகளை இணைக்க தூரிகை விளையாடியிருக்கிறது. பிளாஷ் பேக் சீன்களுக்கு செபியா டோன் உபயோகித்திருப்பது மேலும் வலு சேர்க்கிறது. பல இடங்களில் வர்ணங்களும், முகத்தில் பொங்கும் உணர்ச்சிகளும் நம்மை ஓவியத்தில் இருந்து கண்ணை எடுக்க முடியாமல் செய்து விடுகிறது.

  அமெரிக்க ரஷ்ய பணிப்போர் - கு கிளக்ஸ் க்ளான் - எப் பி ஐ அமைப்பின் பகாசுர நெட்ஒர்க் - அரசுக்கு எதிரானவர்களை சத்தமே இல்லாமல் காலி செய்வது போன்ற பல வரலாற்றில் கிசு கிசுவாக வலம் வந்த செய்திகளை கதை நெடுக தூவி செல்கின்றனர். ஆனால் பிரதான கதை வேறு. 

  தந்தை மகனின் உறவு எப்பொழுதுமே சிக்கல் நிறைந்தது தான். இத்தனைக்கும் தந்தை தான் மகனின் முதல் ஹீரோ. அந்த உறவை பேணிக் காக்க ஒவ்வொரு தந்தையும் போராட்டம் நடத்துகிறான். அப்படி பட்ட ஒரு போராட்டமான வாழ்க்கை குறித்து தான் இந்த கதை. 

  ஒவ்வொரு மனிதன் மீதும் இலக்கு என்ற ஒரு பிம்பம் கட்டி வைக்கப் படுகிறது. அதிலும் ஆண்களுக்கு அந்த இலக்கை அடைய வில்லையென்றால் தோற்றவன் என்று முத்திரை குத்தப் படுகிறான். 


  ஓட்டப் பந்தயத்தில் இலக்கை அடைய எண்ணற்ற தியாகங்கள் செய்ய வேண்டும். அங்கே தான் ஒரு தந்தை என்பவன் தன்னை ரோல் மாடலாக கருதும் மகனை அல்லது மகளை மறந்து விடுகிறார்கள். பிள்ளைகளுடன் நேரம் ஒதுக்குவது, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதோ அனாவசியம் என்னும் ஒரு மாயையில் சிக்கி யாருமில்லாத அனாதையாகி விடுகிறார்கள். 

  இந்த கதையிலோ சமூகத்துக்கு எதையாவது செய்ய வேண்டும் எனும் எண்ணம் ஒருபுறம், பக்குவம் அடையாத மகனுக்கு அரசியலை புரிய வைக்க முடியாத இயலாமை ஒரு புறம். படு பயங்கரமான ஒரு அமைப்பை எதிர்த்து புரியும் வேள்வி ஒரு புறம். அந்த அமைப்பினால் தன் மகனுக்கு ஆபத்து நேரக் கூடாது எனும் பதைப்பு ஒரு புறம். கடமை ஒரு புறம். என்று ஜானதன் சிக்கி சின்னாபின்னமாகிறார். 


  "பொய்கள் ஆட்டம் போடக் கூடாது என்றதொரு பெரும் கோபம் உனக்குள்ளே இருப்பது புரிகிறது", என்று வில்லன் ஜேசன் ப்ளையிடம் கூறுவதன் மூலம் ஜேசனின் மனதை வில்லன் புரிந்து வைத்து உள்ள அளவுக்கு அவன் தந்தை ஜானதன் புரிந்துக் கொள்ளாமலா இருந்திருப்பார். ஆனால் பாசம் பல சமயங்களில் தன் இரத்த உறவுக்கு ஆபத்து நேரக் கூடாது என்று பொய் வடிவில் புரண்டோடி உறவுக்கே ஆபத்தாகிறது. 

  சொன்னால் புரியாது என்று குழந்தைகளை தட்டி வைக்காமல் உண்மைகளை உடைத்து பேசி புரிய வைக்க முயற்சித்தாலாவது தந்தைகள் வயதான காலத்தில் அனாதைகள் ஆக மாட்டார்கள். அது மட்டுமன்றி பெரியவர்கள் பேசும் பொய்கள் குழந்தைகளுக்கும் தொற்றிக் கொள்கிறது என்பதும் ஒரு பெற்றோராக மறக்கக் கூடாது என்பதை கதையின் போக்கில் சொல்லி செல்கிறார் ஆசிரியர்.

  “புணர்ந்தகாதலியிற் புதல்வன் தலையும்
  அமர்ந்தஉள்ளம் பெரிதாகின்றதே
  அகன்பெரும் சிறப்பில் தந்தை பெயரன்
  முறுவலின்இன்நகை பயிற்றிச் 
  சிறுதேர்உருட்டும் தளர்நடை கண்டே”                                      
   - (ஐங்குறு நூறு: 403)

  ஐங்குறுநூற்றின் இந்த பாடலை ருசிக்க நாம் நம் மகனிடம் நண்பனாக வேண்டும். இந்த கதையை படித்து முடித்த பின் ஜானதன் செய்த தவறை நான் செய்யக் கூடாது என்று உணர்ந்தேன். 

  54 பக்கங்களில் 120 ரூபாயில் ஒரு தந்தையாக நீங்கள் இருந்தால் உணர்ச்சி குவியலுக்குள் புகுந்து வெளிவருவீர்கள் என்பதற்கு நான் கியாரண்டி. 

  10/10

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் நண்பரே...பதிமூன்றின் தந்தை குறித்த உணர்ச்சிப் பிளம்பான சில பக்கங்களை ....தகிப்பாக நிறைவு செய்த கதை...

   பதிமூன்று கற்கும் ஹீரோ தந்தையே என கண்ணீர் ஓவியங்களால் கல் மனதையும் கரைக்கும் கதை...எந்தையின் கதை...தலைப்பே எங்கப்பா டான்னு அடிச்சு சொல்லும்

   Delete
  2. @Suresh சகோ
   தாங்கள் வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐💐

   Delete
  3. பழனிவேல் சார்பிலும் ஒரு சபாஷ் நண்பரே !

   Delete
 43. உங்களை கொன்றதில் மகிழ்ச்சி - என்னா அட்டைப்படம்! அதுவும் தல இருக்கும் தொட்டிக்குள் சுறா!! சுறாவை தல என்ன பண்ணுவாரோன்னு பதட்டமாக இருக்கிறது! கார்சனுக்கு சுறா ரோஸ்ட் ரெடி தல புண்ணியத்தில் :-)

  ReplyDelete
 44. அடுத்த மாத புத்தகங்கங்கள் இன்னும் ஆன்லைனில் லிஸ்ட் செய்யவில்லை யுவர் ஆனர் :-)

  ReplyDelete
  Replies
  1. பிரியாணி 5ந் தேதிக்கு தானே ரெடி ஆகும்.....🤔

   Delete
  2. இன்று அல்லது நாளை பிரியாணி ஆகி விடும்னு நினைத்தேன்

   Delete
  3. உலை நல்லா கொதிச்சா தானே அரிசி நல்லா வேகும், ருசி கூடும்....ஒரு வாரமாத்தான் விறகுலாம் நமத்து போய் கெடக்கே மழையில...


   எந்திரன் 3.0க்கள்லாம் டென்சன் ஆகப்போறாங்க...ஹி..ஹி....

   Delete
  4. டெக்ஸ் தண்ணிககுள்ள கெடந்தும சுடும் நமத்துப் போகா துப்பாக்கி வெச்சிருக்காரே

   Delete
  5. க்ளா@ யோவ்- தலை வாங்கி குரங்கு கதையை ஞாபகபடுத்துய்யா...

   தலைவாங்கியை தனியே எதிர்கொள்வாரு... துப்பாக்கியை நீட்டியவாறு..டெக்ஸ் நின்று இருக்கும் பாறை திடீர்னு வழுக்கி விட, தொபீர்னு கழுகு குளத்தில் விழ, தலைவாங்கி நெறுங்க...டெக்ஸின் கை தன்னிச்சையாக துப்பாக்கியை தூக்கி மாத்திரமே எறியும்..அதிர்ச்சியான தலை வாங்கி சுதாரிப்பதற்குள் நீரோட்டம் தன்னை இழுத்து செல்ல டெக்ஸ் அனுமதிப்பார்..

   செவ்விந்திய மாந்தீரகன் கிட்ட அந்த ரகசியத்தை அறிந்து கொண்டு, நீர் புகாத ஒரு ப்ளாஸ்டிக் கவர்ல துப்பாக்கியை வைத்துக்கொண்டு போய் அந்த குகையில் ஆராய்ச்சி பண்ணுவாரு...

   சோ, நமத்து போகா துப்பாக்கி தலை கிட்டயே இல்லை எனும்போது......!!!

   Delete
  6. ஓ...மழை பற்றி மறந்து போய் விட்டேன் சகோ

   Delete
 45. மாதத்தின் முதல் தேதியன்று புத்தகங்கள் வெளி வந்து ரொம்ப நாள் ஆயிற்று, புது ஆண்டில் இருந்தாவது கொஞ்ச காலம் கடை பிடித்த அந்த நல்ல விசயத்தை தொடரலாமே சார்

  ReplyDelete
  Replies
  1. //மாதத்தின் முதல் தேதியன்று புத்தகங்கள் வெளி வந்து ரொம்ப நாள் ஆயிற்று//

   சமீபகாலமாக ஆசிரியரின் உடல் நிலையும், திடீரென்று ஏற்பட்ட உறவின் இழப்பும்... கருத்தில் கொண்டு நாம் ஆசிரியருக்கு சற்று உறுதுணையாக இருப்போம் சார் . சிறிது கால தாமதம் என்பது நாம் ஏற்றுக் கொள்ள முடியும்...

   Delete
  2. // சமீபகாலமாக ஆசிரியரின் உடல் நிலையும், திடீரென்று ஏற்பட்ட உறவின் இழப்பும்... கருத்தில் கொண்டு நாம் ஆசிரியருக்கு சற்று உறுதுணையாக இருப்போம் சார் . சிறிது கால தாமதம் என்பது நாம் ஏற்றுக் கொள்ள முடியும்... //

   +1

   Delete
 46. சார் இன்று பதிவுக் கிழமை...

  ReplyDelete
  Replies
  1. அந்த நான்கு பேர் யார் என்பதை அறிய ஆவலுடன்

   Delete
  2. ஞாயிறுக்கு அடுத்து திங்கள் என்பது எத்தனை உறுதியோ.. அத்தனை
   உறுதியாக ப்ளுகோட்ஸ் செலக்ட் ஆகியிருக்காது..!

   Delete
  3. // உறுதியாக ப்ளுகோட்ஸ் செலக்ட் ஆகியிருக்காது //

   😞😞😞😞😞😢😢😢

   Delete
  4. ஆனா ஆசிரியர் சொன்னதோ வேற....: https://strawpoll.com/e7ZJGKeK5y3

   C.I.A.ஏஜெண்ட் ஆல்பா முதலிடத்தில் இன்னமும் ஆராமாய்த் தொடர்ந்திடுகிறார் ! And மூன்றாமிடத்திலும் எவ்வித மாற்றமும் இல்லை தான் ! ஆனால் வியப்பூட்டும் விதத்தில் ஸ்லாட்ஸ் 2 & 4 இடமாற்றம் செய்து கொண்டுள்ளன ! அதே போல கீழே உள்ள இதழ்கள் அதனதன் இடத்தினில் 'தேமே' என்று தொடர்கின்றன ! மேகி கேரிசன் & நெவாடா கடாசி இடங்களில் பாவமாய் தொடர்கின்றனர் - தொடக்கம் முதலாகவே !! காத்துள்ள வியாழனன்று வோட்டிங் நிறைவுற்றிடும் என்பதால் இன்னமும் வோட்டு போட்டிருக்கா நண்பர்கள் தங்களின் கடமையினை செய்திடலாமே ப்ளீஸ் ?

   Delete
 47. நம்ம நண்பர்கள் நா படிக்காத டெக்ஸ் கதை விமர்சனங்களை தூள் கிளப்புவதை பாத்து நாமும் ஏதாவது டெக்ச படிச்சு ரீசார்ஜ் செய்யலாம்னு
  போனா....கண் முன்னே என்னைப் புடி அப்புறமா படின்னு ஒரு கதை தாவி விழுந்தது.....


  அசத்தலான பல வண்ண அட்டைப் படம் தாங்கி...பல முறை படிக்கமுயன்று என் பந்தமான மகனால் படிக்க இயலாம போன பந்தம் தேடிய பயணம்தான்...

  கதை மூன்று சாலைகளில் தெறிக்குது வேகம் வேகமென...புதிய துணை நாடிச் செல்லும் உறுதியான தலைமை கொண்ட வண்டிகளில் பயணிக்கும் பெண்கள் குழு....அப்பாவியான... பயத்தால் செல்லும் பாதை வழிகளில் கொலை செய்யும் கொலைகாரன் மிடுக்கான குதிரையில்....கொலைகாரனின் சிறிய தந்தை....அவ்வழியில் கிளை வழிகளும் பாலமுமாய் இயற்கையின் கொடையுடன் குறுக்கிடும் ஆற்றுப் பாதையும் ...பெண் வேட்டை செவ்விந்தியரும்....
  அனைத்துப் பாதைகளும் சிறப்பாய் ஓரிடத்தில் டெக்சோடு குவிய முடிவை அறிவித்து அவரவர் வழியில் பயணமாக தொடருது முடிவாய்...


  கதையின் துவக்கமே பரபரப்பை தருது...ரேஞ்சராய் இளைஞன்...மேல்குடி தோற்றம் கொண்ட ஒருவன் குதிரை பற்றி பேச வெகுண்டெழுந்து ரேஞ்சரின் ஸ்டாரை பொத்தல் போட்டு நெஞ்சைத் துளைக்க பற்றியெறியுது பக்கங்கள்....

  முதல் பக்கமே குதிரையால்தானென வழக்கம் போல கதாசிரியர் சொல்லி விட ...தேடி விரட்டும் போது டெக்சும் சந்தேகப்பட நமக்கு நாமே சபாஷ் போட வைத்து நகருது கதை...இதான் டெக்ஸ் கதைகள் மேல் ஈடுபாட்டை கூட்டுதோ....
  ஆனா டெக்ஸ் வழில நாம் பயணிக்க முடியாதே...அதான் அப்படிப் போடுன்னு ஆர்ப்பரிக்கும் பார்வையாளனாக மாறிடுகிறோம்...மாற்றி விடுகிறார்கள் கதாசிரியரும்..ஓவியரும்...வரி மாற்றியும்

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் பெண்களை காப்பதும்....அவர்களோடு துணையாய் செல்ல தலைவி பாடாய் படுத்தும் போது நமக்கும் கடுப்பேற...அவர்களை அதிரடியாய் மிரட்டிப் பணிய வைக்க ...நாங்க எங்க வழில போறோம்னு தலைவி சொல்ல கார்பனை வைத்து சமாளிக்க...லக்கி லூக் ஐரிஸ் உணவைத் தின்ற ஞாபகம்...நமக்கும் சிறிது சலிப்பூட்ட....ஆனா சிறிது நேரமே ....அப்புறம் பெண்கள் பாய்ச்சலோடு புலியாய் பாயுது கதையுமே....மழை பார்த்தாலே கதை இது வரை எப்படி பொழிஞ்சாலும் மகிழ்வாய் நனைந்த படி பயணிக்கும் எனக்கு....கார்சன் வார்த்தைகளை போல வாளியால் அள்ளி கத்தியது போல பக்கங்கள் மசமசவென நிஜமாக நனைந்தத போல கடுப்பேற்ற சபாஷ் ஓவியரே...அந்த ஆறுகளும் அடடா

   தூண்டில் மீன்களாய் பெண்கள்ன அதிகாரிய ஒரே குத்துதல் வீழ்த்திய பின்...கதை மீண்டும் சரியான பாதையை பிடிக்க....விடை தெரிஞ்சாலும் ஏன்னு வேட்கையோடு இரையே தேடும் வேட்டை நாயாய்...வேட்கை நாயாய் பாய் ....அப்பாவியின் கதை....பணக்காரனாயிருந்தாலும் ஒரு முரடனால் தொடர்ந்து அவமானப்பட....தந்தை மகன் இருவருமே தெரியாதத போல காட்டிக் கொள்ள...முடிவாய் தந்தை நீயே சமாளிப்பாய் என நினைத்தேன்...பரவால்லன்னு படிக்க மடைமாற்றி அனுப்பிட....
   கடைசியில் விதியின் பாதையில் குற்றவாளியாக....


   அந்தக் குதிரையாலே ப்ளாக் மெய்லரும் கொல்லப்பட

   கதாசிரியர் நடத்திய நாடகத்தில் சில அப்பாவிகள் கொல்லப்பட முக்கிய குற்றவாளி கொல்லப்படுகிறான் டெக்சால்....   கதையில் விறுவிறுப்பான கட்டம் அந்த ஆற்றை கடப்பதே...அந்த விரைந்து வரும் மரம் ....கதைசொல்லியாய் டெக்ஸ் ஒரு குத்து குத்த...மொழிபெயர்ப்பாளராய் கார்சனொரு குத்து குத்த ...எடிட்டராசிரியராய் படகோட்டி ஒரு குத்து குத்த ...வண்ணத்தால் வந்திருந்தாலென நானும் ஓர் குத்து வைக்கிறேன்

   Delete
  2. // பந்தம் தேடிய பயணம் // I love this story

   Delete
  3. யோவ் க்ளா@

   நாங்களாம் விமர்சனம் போடுவது போட்டிக்கும் சேர்த்து..

   போட்டிக்கு எண்ட்ரியாக 2023ல வந்த லயன்-முத்து தான் கணக்கு..

   இந்தாண்டு வந்த டெக்ஸ் கதை ஏதாச்சும் வாசிச்சி விமர்சனம் போடுய்யா..

   டாப்புல..
   பெயர், ஊர், போன் நெ., காமிக்ஸ் எனும் கனவுலகம் விமர்சனபோட்டினு சேர்த்துக்கோ... பரிசை அள்ளிக்கோ..

   பெளன்சர் செட், லயன்400னுபரிசு மழை உண்டு

   Delete
 48. //அந்த நான்கு பேர் யார் என்பதை அறிய ஆவலுடன்//-

  @கடல் சகோ

  என் கணிப்பு...

  ஆல்ஃபா, சிஸ்கோ, CID ஜான் மாஸ்டர் & ரெட்டை வேட்டையர்-- தேர்வாகிடும்....

  நம்ம அட்டு அங்கிள் சொன்ன ப்ளூகோட்டும், ஆசிரியர் சார் தெரிவித்துள்ள மேகி நூடுல்ஸ்ம், நெவேடாவும் காலி...

  சோடாவா, IRS இரண்டில கடைசி தேர்வு எதுவாக இருக்க கூடும்னா ரொம்ப கடினம் தான் ரிசல்ட்... பதிவுல தெரிஞ்சிகிடலாம்....


  ReplyDelete
  Replies
  1. ஏப்பா ஜானி ரசிகருங்களா உங்காளோட இடியாப்ப கதை வரணும்னு சோடாவை டீல்ல வுட்டீங்களேயா..!!!

   பிரியாணி தின்னா சோடா வேணுமேய்யா.....!!!

   Delete
 49. 2023-ன் பின்னோக்கிய ரிவ்யூ - வை விட/2024-ன் முன்னோக்கிய ரிவ்யூ - வை சிறப்பாக செய்து இருக்கிறீர்கள்...
  .குண்டு புக்குகள்-கொடுக்கும் சந்தோசத்தை விட இது போல் கைநிறைய புத்தகங்களை வைத்து ரசிக்கும் சந்தோசமே தனியாகத்தான் இருக்கும்..
  நம் காமிக்ஸ் ரசிகர்கள் ஒன்று இரண்டு மாதங்களிலேயே உணர்ந்துவிடுவார்கள்..

  ReplyDelete
 50. இந்தக் கதையின் விமர்சனத்தை வேறொருவர் எழுதி விட்டதால் நான் எழுதி பாதியில் நிறுத்தியிருந்த விமர்சனத்தை வீணடிக்க வேண்டாமே என்று இங்கு பதிவிடுகிறேன். இது போட்டிக்கான விமர்சனம் அல்ல 

  கறை படிந்த கரன்ஸி
   
   "இந்த தேசத்தில் குறுக்கும் மறுக்குமாய் சுற்றி வரும் ஒவ்வொரு டாலரும் என்ன செய்து வருகிறது என்பதை கண்காணிப்பதை தாண்டி IRS க்கு துளியும் அக்கறை கிடையாது". இப்படி பட்ட துறையில் அநேகமாக கிரிமினல் இன்வெஸ்டிகேஷன் (IRS - CI ) துறையை சார்ந்த ஒரு ஸ்பெஷல் ஏஜென்ட் தான் நம்ம லெரி பி மேக்ஸ். ஏழாம் வகுப்பிலேயே ஒழுங்கீன சிகாமணி என்று முத்திரை குத்தப்பட்டவர் தான் நம் ஹீரோ லேரி பி மேக்ஸ் ஆனால் கம்பியூட்டர் மூளை என்று அவரது உயரதிகாரிகளால் பாராட்டத் படுபவர். 


  "யுத்தமோ அமைதியோ எல்லாத் தருணங்களிலும் காசு பார்க்கும் வித்தைகளை அதிகாரவர்க்கத்தின் மேல்மட்டம் தெரிந்து வைத்திருக்கும்". இந்த கதையில் வரும் இந்த வசனம் தான் இந்த கதையின் அடிநாதம்.

  ஒரு மரணம் - அது சார்ந்த ஒரு புலனாய்வு எங்கெங்கு கதையை இட்டுச் செல்கிறது. வில்லனின் அஜாக்கிரதையான போக்கு நம்மை கதைக்குள் இழுத்துக் கொண்டு சென்றாலும் வில்லனின் முகமூடி கிழியும் பொழுது அட போட வைக்கிறது.

  கதாசிரியர் டெஸ்பேர்க் மற்றும் ஓவியர் ரேங்க்கென் செதுக்கி எடுத்திருக்கிறார்கள் இந்த கதையை. 

  கொசு விட்ட மூச்சில் சூறாவளிகள் அடங்கிப் போனதாய்ச் சரித்திரமே கிடையாது எனும் வசனம் வில்லனின் அலட்சியத்தை பறைசாற்றுகிறது 

  விலையே இல்லாத ஆள் யாருமே இந்த பூமியில் கிடையாது லேரி எனும் வசனம் உலகம் பணம் எனும் பொருளுக்கு பின்னாலேயே ஓடிக் கொண்டிருப்பதாய் அர்த்தப் படுத்துகிறது.  

  நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நதியைப் பராக்குப் பார்த்து நிற்கும் படகுத் துறைகள் மாத்திரமே நாமெல்லாம். என்று செண்டிமெண்ட் போன்ற எந்த உணர்வுக்கும் இந்த கதையில் மதிப்பில்லை என்று எடுத்துரைக்கிறது. 
   
  32ஆம் பக்கம் நகைச்சுவை நிறைந்த ஆக்ஷன் பக்கம். ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு அபாரம். 

  ஓவியங்கள் - 9/10 கதை - 9.5/10 மொழிபெயர்ப்பு - 10/10

  ReplyDelete