நண்பர்களே,
வணக்கம். தீபாவளியும் வந்து போயாச்சு ; பட்டாசுகளையும் வெடித்து முடித்தாச்சு ; பட்சணங்களை வீர வரலாற்றின் லேட்டஸ்ட் அத்தியாயமாகவும் ஆக்கியாச்சு ; and இதோ - மறுக்கா அதே செக்குமாட்டு இயல்புக்கும் திரும்பியாச்சு ! இப்டிக்கா இன்னும் ஒரு மாசத்தை ஒட்டிப்புட்டால், அப்புறம் - "கிருஸ்துமஸ் வரப் போகுதுடோய் ; புது வருஷம் பொறக்கப் போகுதுடோய்" என்று அடுத்த உருட்டை ஆரம்பித்து விடலாம் ! அதன் பின்பாய் பொங்கல் !! வாழ்க்கையே ஒரு வட்டமென்று வெள்ளித்திரையின் மூதறிஞப் பெருமக்கள் சொன்னது இதையெல்லாம் மனதில் வைத்துத் தான் போலும் !!
நம்மைப் பொறுத்தவரைக்கும், 2 heavyweight நாயகர்களின் அதகளத்துடனான தீபாவளி போட்டுத் தாக்கியிருக்க - மெது மெதுவாய் நடப்பாண்டின் இறுதி மாதம் நோக்கிய நமது பயணத்தினை அரங்கேற்றி வருகிறோம் ! உங்களில் எத்தனை பேர் டைகராருடன் முரட்டுத் தூக்கங்களைப் போட்டீர்களோ தெரியாது ; எம்புட்டு பேர் இளம் 'தல'யை தலைமாட்டில் வைத்தபடிக்கே குறட்டைகள் விட்டீர்களோ - தெரியாது ; ஆனால் நம்மளவில் இந்த ஜாம்பவான்களுக்கு மத்தியிலான ரேஸில் Young Tex முன்னணியினில் இருக்கிறார் ! அந்த 6 அத்தியாய தெறி சாகசமானது இங்கு பெற்றிருந்த rave reviews-களைப் பார்த்த போதே புரிந்தது - இந்த இதழ் சூப்பர் ஹிட் என்று ! But still - பத்தாண்டுகளுக்குப் பின்பாய் "உள்ளேன் ஐயா" போட்டிருக்கும் இளம் டைகர் இந்த ரேஸில் முந்திடக்கூடும் என்ற சின்ன எண்ணமிருந்தது என்னுள் ! Alas - 'எதிர்ப்படுவோர் யாராக இருந்தாலும் சப்பளித்து விட்டு நகர்ந்து கொண்டே இருப்பேனாக்கும் !' என்ற டெக்சின் முழக்கத்தின் முன்னே இளம் வேங்கையாரும் சித்தே வழி விடத்தான் வேண்டியிருக்கிறது ! So "அதிகாரி பாயாசம்" என்பதெல்லாமே "அதிகாரி பாசம்" என்ற வாஞ்சையின் மாறுவேஷமே என்பது சந்தேகமற இம்முறை நிரூபணமாகியிருக்க, THE SIXER SPECIAL leads the November race ! இங்கே சின்னதொரு இடைச்செருகலும் folks :
ஒவ்வொரு மாதமும், புக்ஸ் தயாரான நொடி முதலாய், அவற்றை ஒருவாட்டி அழகாய்ப் புரட்டி விட்டு, அடுத்த மாதத்தின் பணிகளுக்குள் ஆழ்ந்திடுவதே எனது வாடிக்கை ! உங்களின் ஆன்லைன் ஆர்டர்கள் ; ஏஜெண்ட் ஆர்டர்ஸ் என்ற சகலத்தையும் நம்மாட்களே பார்த்துக் கொள்வார்கள் ! ஆனால் இம்முறையோ எனக்குள் ஒரு curiosity - 'தல' vs 'தளபதி' என்ற போட்டியில் ஆர்டர்கள் எவ்விதம் கிட்டுகின்றன ? என்பதை அறிந்திட ! So ஒரு மூணு நாட்களுக்கு ஆர்டர்களையெல்லாம் வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன் ! And yes - போன பதிவினில் சொன்னது போலவே தீபாவளிக்கு முன்பான 4 நாட்களிலும், டெக்ஸ் + டைகர் இதழ்கள் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தன ! ஆனால், V காமிக்சில் வந்திருந்த "வன்மேற்கின் அத்தியாயம் இதழ் # 4"-க்கு கிட்டியிருந்த ஆர்டர்ஸ் பிம்பிலிக்கா பிலாக்கி ரேஞ்சே தான் ! தொண்ணூற்றி சில்லறை இதழ்கள் டெக்சிலும், டைகரிலும், ஆன்லைனில் ஆர்டராகியிருக்க, "மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்" பெற்றிருந்ததோ வெறும் 8 பிரதிகளுக்கான ஆர்டரினை மட்டுமே !
Star power சற்றே குறைச்சலாய் கொண்டிருக்கும் அத்தனை நாயக / நாயகியரையும் 2024-ன் அட்டவணையினில் waiting லிஸ்டில் கொண்டு அமுக்கியதில் நண்பர்கள் நிறையப் பேருக்கு நிறைய கடுப்ஸ் இருந்திருக்கும் என்பதில் no secrets ! ஆனால் எனது அந்தத் தீர்மானத்தின் பின்னணியினில் இருந்தது இத்தகைய நிகழ்வுகளில் கற்றுக் கொண்டிருந்த பாடங்கள் மாத்திரமே ! கடைக்குப் போய் வாங்கும் நண்பர்களும் சரி, ஆன்லைனில் அந்தந்த மாதங்களில் வாங்கிடும் அன்பர்களும் சரி - கொஞ்சமே கொஞ்சமாய் ரெண்டாம் நிலையில் இருக்கக்கூடிய நாயகர்களின் ஆல்பங்களுக்கு கூட நாசூக்காய் "NO" சொல்லி விடுகின்றனர் ! அதன் பலனாய் அந்த இதழ்களெல்லாமே கையில் தேங்கி விடுகின்றன ! So மிஸ் பண்ணிட சாத்தியமேபடாதென்ற ரகத்திலான இதழ்களையாய் தேடிப்பிடித்து 2024-ன் அட்டவணையின் ரெகுலர் தடத்தில் புகுத்தியிருப்பது a step in this direction ! And இனி வரும் காலங்களில் மாதா மாதம் "எதை skip செய்யலாம் ?" என்ற கேள்விகளுக்கு இடமே தரப்படாதென்ற தீர்மானத்தில் பிறந்துள்ளதே ROUTE 2024 ! வாசிப்பில் ஒரு இலகுத்தன்மையும், சுவாரஸ்யமும் ஒட்டிக் கொள்வதன் சௌஜன்யங்கள் என்னவென்பதையும் ; "வாங்குறோம்-படிக்க மாட்டேங்கிறோமே !" என்ற குறுகுறுப்பின்றிப் பயணிப்பதன் சுகங்களையும் 2024-ன் பயணம் நமக்கு உணர்த்தும் என்ற திட நம்பிக்கை எனக்குள்ளது !
Moving on, 2024 -ன் கி.நா. குட்டித்தடத்தில் இதழ் # 3 ஆக இடம் பிடிக்க வேண்டியது நவீன வெட்டியான் ஸ்டெர்ன் தானா ? அல்லது கமர்ஷியல் கி.ந.வான "துணைக்கு வந்த மாயாவி" இதழா ? என்ற கேள்விக்கு 150 நண்பர்கள் பதில் தந்துள்ளனர் ! And 91 பேர் வெட்டியானுக்கு தங்களது ஓட்டுக்களை போட்டு விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் ! So அந்த கமர்ஷியல் கி.நா. ஏதேனும் ஆன்லைன் மேளா ஸ்லாட்டினை தேடிக் கொள்ள வேணும் போலும் !
And 2024-ன் Make My Own Mini சந்தா (MYOMS) பிரத்யேக தடத்தினில் நீங்கள் பார்த்திட விரும்பும் 4 இதழ்கள் பற்றிக் கேட்டிருந்தோமல்லவா ? விறுவிறுப்பான வோட்டிங் இன்னமும் அங்கே தொடர்ந்திடுகிறது & ஒற்றை நாயகர் மட்டும் இது வரைக்கும் தொடர்ச்சியாய் முன்னிலையில் இருந்து வருகிறார் and அவர் தான் CIA ஏஜென்ட் ஆல்பா ! 2 to 4 வரையிலான மீத positions ரொம்பவே சின்ன வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்திடுகின்றன & எந்த நொடியிலும் அந்த வரிசைதனில் மாற்றம் நிகழலாம் தான் போலும் ! இதோ - இன்னமும் வாக்களித்திருக்கா நண்பர்களின் பொருட்டு அந்த link இன்னொருமுறை : https://strawpoll.com/e7ZJGKeK5y3
Further down the line, டிசம்பரில் மொத்தம் 5 இதழ்கள் இருந்திட வேணும் :
*ரிப்போர்டர் ஜானி சாகசம் - "ஜானிக்கொரு தீக்கனவு"
*TEX - "உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி !"
*V காமிக்ஸ் - ஏஜென்ட் ராபினின் "கொலைநோக்குப் பார்வை"
*ஏஜெண்ட் சிஸ்கோ தோன்றும் "கலாஷ்னிகோவ் காதல்"
*லயன் கிராபிக் நாவல் - "காலனின் கால்தடத்தில்"
எனக்கே இது லைட்டாய் overkill போல தோன்றுகிறது என்பதை மறுக்க மாட்டேன் ! ஆண்டின் பிற்பாதியில் ஈரோடு ஸ்பெஷல்ஸ் ; அப்புறமாய் டெக்சின் பிறந்த நாள் ஸ்பெஷல் & அதன் பின்னே டபுள் தீபாவளி ஸ்பெஷல்ஸ் என்ற திட்டமிடல்கள் சரமாரியாய்த் தொடர்ந்திருக்க, அட்டவணையினை இம்மியும் மாற்றியமைக்க வழியில்லாது போனது ! அதன் பலனாய் இந்த டிசம்பரில் 5 என்ற குவியல் !! வாசிப்பதில் நீங்கள் சமாளித்து விடுவீர்கள் என்றாலும், கடைகளில் விற்பனைக்கு வாங்கிடும் நமது முகவர்கள் இதனில் கொஞ்சமாய் தடுமாறுவார்கள் என்பது மாத்திரம் உறுதி ! So உங்களுக்கு ஓ.கே. எனில் இந்த ஐந்தில் விலை கூடுதலான ஏஜெண்ட் சிஸ்கோவை மட்டும் டிசம்பர் 20 வாக்கில் தனியாக அனுப்பிடலாமா ? என்ற எண்ணம் ஓடி வருகிறது ! உங்களின் suggestion என்னவோ guys ? சூட்டோடு சூடாய் போட்டுத் தாக்கி விடலாமா - அல்லது சிஸ்கோ மாத்திரம் தாமதித்து வரட்டுமா ?
சிஸ்கோ பணிகளுக்குள் புகுந்திட நான் கிளம்பும் முன்பாக சில updates :
எங்களுக்கு ரெம்போவே அருகாமையில் உள்ள விருதுநகரில் 2 தினங்களுக்கு முன்பிலிருந்து புத்தக விழா துவங்கியுள்ளது and அங்கே நமது ஸ்டால் நம்பர் 26 ! தினமும் கணிசமான பள்ளி மாணாக்கர் வருகை தந்து கொண்டிருக்க, ஆபத்பாந்தவர்களாய் கைகொடுத்து வருவன - ஐம்பது ரூபாய்க்கு உட்பட்ட விலைகளிலான நமது இதழ்களே ! கொஞ்சமாய் காசோடு வரும் பிள்ளைகள், ஆசை தீர மற்ற கலர் இதழ்களை நாள்தோறும் புரட்டி ரசிக்கத் தவறுவதில்லை ! "வீட்டிலே சொல்லி அந்த புக்ஸ் வாங்கி தர கேப்போம் !" என்றபடிக்கே பிள்ளைகள் கிளம்பும் போது சற்றே நெருடலாக இருப்பதை மறுக்க மாட்டேன் ; but சுடும் யதார்த்தங்களை மறப்பதற்கும் இல்லையே !
And காத்திருக்கும் 21 தேதி முதலாய் சேலத்திலும் புத்தக விழா துவங்கிடுகிறது ! போன வருஷம் தூள் கிளப்பிய அதே இடத்தில் தான் இம்முறையும் விழா நடந்திடவுள்ளது எனும் போது செம ஆர்வமாய்க் காத்துள்ளோம் ! நமது நண்பர்களில் கணிசமானோர் சேலத்திலும், சுற்று வட்டாரங்களிலும் இருப்பதைக் கருத்தில் கொள்ளும் போது வரும் காலங்களில் வாசக சந்திப்பினை அக்கட ஒருவாட்டி முயற்சிக்கலாம் என்றே தோன்றுகிறது ! பார்க்கலாமே !!
இது சற்றே சோகமானதொரு update ! பிராங்கோ-பெல்ஜிய படைப்பாளிகளுள் முக்கியமானவரான Bob De Groot இயற்கை எய்தியுள்ளார் ! க்ளிப்டன் கதைகளிலும் சரி, லியனார்டோ தாத்தாவின் கதைகளிலும் சரி, இவரது கைவண்ணங்களை நாம் ரசித்துள்ளோம் ! RIP sir ....!
Bye all....see you around ! Have a fun weekend !
P.S : இதோ - நவீன வெட்டியான் கெலித்துள்ள வாக்கெடுப்பின் screen shot :
லயன் தீபாவளி மலர் டெக்ஸ் சிக்ஸர் ஸ்பெஷல் அறிவிச்சது ஹார்ட் கவர். ஆனா வந்துருக்குறது பேப்பர் பேக்.என்ன ஆச்சு எடி சார்.?
ReplyDeleteபைண்டிங்கில் ஏகமாய் பணியாட்களின் தட்டுப்பாடு ; ஹார்ட்கவராக பைண்ட் செய்வதாயின் தீபாவளிக்கு புக்ஸ் வந்திட சாத்தியமே இல்லை என்ற சூழல் சார் ! தீபாவளி முடிந்தும் இன்னும் ஊருக்குள் வேலை நிலவரங்கள் நார்மலாகி இருக்கவில்லை !
DeleteSo வேறு வழியிருக்கவில்லை !
ஓகே சார்..வழக்கமா நீங்க இதெல்லாம் சொல்லிடுவீங்க..கேட்கவேண்டிய அவசியம் இருக்காது..என்ன காரணம்னு தெரிந்து கொள்ள வேண்டி கேட்டேன்...மிக்க நன்றி...
Delete//தீபாவளி முடிந்தும் இன்னும் ஊருக்குள் வேலை நிலவரங்கள் நார்மலாகி இருக்கவில்லை !//
Deleteஎனக்கு இன்றுதான் கொரியர் வந்தது. புதன் அன்று கூப்பிட்டு கேட்டதுக்கு தீபாவளி லீவ் போட்டவங்க இன்னும் வரலைனு சொன்னாங்க
அலுவலகமும் பக்கமாக இல்லை ஆகையால் இன்றுதான் டெலிவரி செய்யப்பட்டது
ஹார்ட் கவர் இல்லை என்றாலும் அந்த டிசைன் கவர் மிக நன்றாக இருந்தது சார்.
Deleteகடந்த மூணு பதிவுல கேட்டும் விடை கிடைக்காத காரணத்தால் மீண்டும் மீண்டும் கேட்பதற்கு மன்னிக்கவும்...
ReplyDeleteவந்தாச்சுங்கோ
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDelete10kkulla
ReplyDeleteWelcome
ReplyDeleteEdi Sir..🙏
ReplyDeleteMe in..😍😘
உள்ளேன் ஐயா..!!
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteTiger
ReplyDeleteFinished reading. Time taken 4 to 5 days. Each chapter one day. Story line is not new and as expected tiger escapes each time due to luck and circumstances. Got to know a lot of historical facts.
Not a breezy ride. It is a heavy weight album
Waiting for next album
வந்துட்டேன்...
ReplyDeleteவந்தார் வென்றார்... என்னை திகைக்க வைத்து விட்டத்துங்க sir..அந்த பிரமிப்பில் இருந்து விடுபடுவதற்குள் tiger, tex ன் தீபாவளி மலர்கள்...எத்தனை
ReplyDeleteவருஷம் வரைஞ்சாங்களோ.. My god.. திகைத்து போய், வாயடைத்து நிற்கிறேன்.. ஓவியங்களை தமிழ் பேச வைக்க எத்தனை சிரமம் என்பதும் புரிகிறது..நாங்கள் கொடுத்து வைத்தவர்களே.. மிக்க நன்றி. வாழ்த்துக்கள் sir.. ❤️👍🙏
Tex Deepavali issue
ReplyDeleteBreezy read. Sat at 6:30 pm and finished the book by 10:30 pm.
They covered all the qualities of tex by incidents which he faced during his young period.
Now my respect for tex has exceeded a lot.
10/10
வணக்கம் சார் 🙏🙏
ReplyDeleteசிஸ்கோ வை 20 ந்தேதி அனுப்புவதற்கு பதில் ஜனவரி கொரியரில் சேர்த்து அனுப்பி விடுங்கள் கொரியர் செலவு கொஞ்சம் மிச்சம் பிடிக்கலாம் ஒரு வேளை இந்த வருடம் சந்தா வில் இருந்து அடுத்த வருடம் கட்டாத நண்பர்களுக்கு மட்டும் ஜனவரியில் தனியாக அனுப்புங்கள்
ReplyDelete+9
Delete+555
DeleteBest
Deleteதற்போதுதான் "சிக்ஸர் ஸ்பெஷல்" வாசித்து முடித்தேன்.
ReplyDelete6 அத்தியாயங்களும் தெறி ரகங்கள்.
ஒன்றையொன்று மிஞ்சி விட்டது.
சட்டத்தின் பிடியில் சிக்காமல் நாடோடியாக சுற்றும் இளம் டெக்ஸின் நியாயமான எண்ண ஓட்டங்கள் மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது.
இரண்டாம் முறையும் வாசிக்க தூண்டும் இதழ்.இந்த இதழுக்கு தலைப்பு இல்லாததும் ஸ்பெஷல்தான்.
மகிழ்ச்சியான நன்றி சார் ❤️.
//சேலத்திலும், சுற்று வட்டாரங்களிலும் இருப்பதைக் கருத்தில் கொள்ளும் போது வரும் காலங்களில் வாசக சந்திப்பினை அக்கட ஒருவாட்டி முயற்சிக்கலாம் என்றே தோன்றுகிறது ! பார்க்கலாமே !! //
ReplyDelete+9999999
RIP Bob De Groot Sir
ReplyDeleteRIP
Deleteநமது நண்பர்களில் கணிசமானோர் சேலத்திலும், சுற்று வட்டாரங்களிலும் இருப்பதைக் கருத்தில் கொள்ளும் போது வரும் காலங்களில் வாசக சந்திப்பினை அக்கட ஒருவாட்டி முயற்சிக்கலாம் 💪💪💪🙏🙏🙏
ReplyDeleteகண்டிப்பாக
Deleteஉள்ளேன் ஐயா...
ReplyDeleteHi..
ReplyDelete## சேலத்திலும், சுற்று வட்டாரங்களிலும் இருப்பதைக் கருத்தில் கொள்ளும் போது வரும் காலங்களில் வாசக சந்திப்பினை அக்கட ஒருவாட்டி முயற்சிக்கலாம் என்றே தோன்றுகிறது ! பார்க்கலாமே !! ##
ReplyDelete😍😘😃😀Super Sir..
👍👌✊
நம்ப கனவுலக ஜாம்பவான்கள் நிறைய பேரு சேலம் in & around என்கிறதால "காமிக்ஸ் என்சைக்ளோபீடியா" நம்ப STVR தலைமையில சிறப்பா நடத்திடுவோம்..😍😘👍✊👌
நடத்திடுவோம் ஜம்பிங் தல
Deleteமார்சல் டைகரின் சாகஸம் செம்ம செம்ம தெறிக்க விட்டுட்டாரு ரொம்ப நாளைக்கு அப்பால.
ReplyDelete30th
ReplyDeleteBook late received inimel than padikkanum...kuttrathin kural arumai
ReplyDeleteதீபாவளி டைம்னால அப்படி ஆகிவிட்டது சகோ
Deleteஎனக்கு இன்றுதான் வந்தது
தீபாவளி டைம்னாலே ஆட்கள் குறைந்து விடுகின்றனர்
நேரத்தில் பதிவு ...
ReplyDeleteமகிழ்ச்சி சார்...:-)
விருதுநகர்..மற்றும்...சேலம் புத்தக விழா சிறப்பான வெற்றியை பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்...
ReplyDeleteசேலம் புத்தகவிழா ஆரம்பிக்கும் சமயம் எங்கள் கம்பெனி எம்டியின் மகனாருக்கு திருமண நாள் என்பதால் என்னால் கலந்து கொள்ள முடியுமா என தெரியவில்லை..ஆனால் சேலம் நண்பர்கள் கலக்கி விடுவார்கள் என்பது உறுதி..போனமுறையே ஈரோடு புத்தகவிழாவை விட நல்ல வசதியான விசாலமான இடத்திலும் ..உணவு பாரக்கிங் என சிறப்பான வசதியும் இருந்தது..
ஜானி அட்டைப்படம் சிறப்பு சார...அருமை..
ReplyDeleteடிசம்பர் மாத இதழ்களை மொத்தமாக அனுப்பி விடுங்கள் சார்..இதழ்கள்
அதிகம் என நினைத்தால் ஜனவரி மாத இதழுடன் இணைத்து விடுங்கள்..ஒரு இதழுக்காக ஏன் தனி கொரியர் செலவு...ஏற்கனவே நீங்கள் பேக்கிங் ,கொரியர் செலவை சொன்னதில் தலை சுற்றி கிடக்கிறோம்..எனவே முடிந்தால் மொத்தமாக அனுப்புங்கள் இல்லையேல் ஜனவரி இதழ்களுடன் அனுப்புங்கள் சார்
+1
Deleteஆல்பா லீடிங்கில் இருப்பதில் மகிழ்ச்சி
ReplyDeleteமற்ற நாயகர்கள் யார் வருவார்கள் என்பதை பார்ப்போம்
This comment has been removed by the author.
ReplyDeleteTiger top - I love the story. He rocks again.
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஎன்னா கதை என்னா கதை! என்னா வில்லத்தனம் என்னா வில்லத்தனம்!! என்னா சஸ்பென்ஸ் என்னா சஸ்பென்ஸ்!!! என்னா எதிர்பாராத திருப்பம் என்னா எதிர்பாராத திருப்பம்!!!! என்னா கதாபாத்திரங்கள் என்னா கதாபாத்திரங்கள்!!!! அதுவும் ஒரு பெண் வில்லி செம தில் செய் தில்!!!!! என்னா மொழிபெயர்ப்பு என்னா மொழிபெயர்ப்பு: இதற்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்!!!!!என்னா க்ளைமாக்ஸ் என்னா க்ளைமாக்ஸ்!!!!!! என்னா சாகசம் என்னா சாகசம்!!!!!!! என்னா விறுவிறுப்பு!!!!!! புத்தகத்தை கீழே வைக்க விடாமல் என்னை கட்டிப்போட்ட கதாசிரியரின் திறமையை என்ன வென்று பாராட்டுவது!!!!!!! அழகான சித்திரங்கள் அதற்கு வலுசேர்க்கும் வண்ணம் என ஒரு நிறைவான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. என்ன கதை என்றா கேட்கிறீர்கள்!!!! எல்லாம் நம்ம இளம் டைகர்-தான்பா.
Deleteஇந்த கதையை படிக்காமல் இருப்பவர்கள் உடனே படியுங்கள். இந்த கதை புத்தகத்தை இன்னும் வாங்காதவர்கள் உடனே வாங்கிப் படியுங்கள்.
Deleteஇன்றைய பகல் பொழுது முழுவதும் இளம் டைகருடன் மகிழ்சியாக சென்றது.
Deleteநவீன வெட்டியான் ஓட்டெடுப்பில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி. நல்ல கதை தொடர்ந்து வரட்டும்.
ReplyDeleteஅது மகிழ்ச்சிதாம்ல...ஆனா தோத்த கதை புத்தக விழா ஸ்பெசலாமே...கூடுதல் மகிழ்ச்சி
DeleteAamley
Deleteசூப்பர் சார்...ஜானி அட்டை சூப்பர்....
ReplyDeleteகாதலனின் கால் தடத்தில் ...அந்த நீல வனத்தில்...கடலின் நிறத்தில்....அடேயப்பா தொலைந்து போக ஆசை....இது வரை வந்த அட்டைகள்ளயே எப்படா சீக்கிரம் கிட்டுமென ஏங்க வைக்கும் முதலட்டை இதான்
துணைக்கு வந்த மாயாவியும் சரியா போட்டி போடுவதால் ...சீக்கிரமா முதல் புத்தக விழாவ அலங்கரிக்கட்டுமே
ReplyDeleteநாளை உலகக் கோப்பய தூக்க போறோம்....அதனால் அந்த மினி லயன்ல வந்தது போல் ஒரு விளையாட்டு மலர்....கிரிக்கட் வெற்றி மலர்னு நாளை அறிவிப்பீங்கன்னு நம்புறேன்
ReplyDelete"உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி !" Tex கதைக்கு இப்படி ஒரு தலைப்பா? 😇
ReplyDeleteதீபாவளி Tex புக்கில் அனைத்து உள்பக்க பேனல்களும் மறைந்து உள்ளன சார். இது போல் நிகழாமல் பார்த்துக் கொள்ளுதல் நலம்
// தீபாவளி Tex புக்கில் அனைத்து உள்பக்க பேனல்களும் மறைந்து உள்ளன சார். //
Deleteஆம்,வாசிப்பில் சிரமம் ஏற்படுகிறது,ஒருவேளை ஹார்ட் பைண்டிங் இதழாக வந்திருந்தால் இந்த பிரச்சனை தவிர்க்கப்பட்டிருக்குமோ ?!
// உங்களின் suggestion என்னவோ guys ? சூட்டோடு சூடாய் போட்டுத் தாக்கி விடலாமா - அல்லது சிஸ்கோ மாத்திரம் தாமதித்து வரட்டுமா ? // சார் நான் மிகவும் எதிர்பார்க்கும் இதழ் இது எனவே சூட்டோடு சூடாக வெளியிடவும் நன்றி.
ReplyDelete+1000 ..
DeleteCISCO mailing on Dec 20th is ok sir - would be good to read in the final week. Alternately you can also combine it with Jan books to save courier charges sir. 4 books are sufficient for December.
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteஆஹா..புதிய பதிவு.
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteBob De Groot இயற்கை எய்தியுள்ளார் /////
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்.
வணக்கம் ஆசிரியர் சார். இரட்டிப்புக் கொரியர் செலவு எதற்கு சார் ?
ReplyDeleteசிஸ்கோவை சூட்டோடு சூட்டாகப் போட்டுத் தாக்குங்கள் சார்.
அப்படி சொல்லுங்க தல
Deleteரிப் ஜானியின் அட்டைப் படம் செம மிரட்டல் ரகம். உள்பக்கங்களும் கலக்கல் ரகம். ஆவலோடு காத்துள்ளேன்.
ReplyDeleteசிக்ஸர் ஸ்பெஷல் என்ன சொல்வது வேண்டுமானால் டபுள் சிக்ஸர் ஸ்பெஷல் என்று தாரளமாக சொல்லலாம் புத்தகத்தின் கனத்தை பார்த்து மலைத்து கதை சற்று போரடிக்குமோ இலகுவான ஒன் ஷாட் சாகஸம் படிக்கலாம் பிறகு எப்போதாவது படித்து கொள்ளலாம் என்று நினைக்கும் நண்பர்களுக்கு 10 நிமிடங்கள் மட்டும் ஒதுக்கி ஒரு பத்து பக்கங்கள் படியுங்கள் கதையின் அபார வேகம் டைனமைட்டை விட வேகமாக ஓடி உங்களை முழு புத்தகத்தையும் படிக்க வைத்து விடக்கூடிய சூப்பரான கதை இரண்டு இடங்களில் நண்பர்களுக்காக தன் உயிரையே இழக்க துனிகிறார் வசனங்கள் பல இடங்களில் கை தட்ட வைக்கிறது Don't miss it
ReplyDeleteDecember-Sending as 2 parts is also ok sir
ReplyDeleteகாலை வணக்கங்கள் உறவுகளே..
ReplyDeleteசேலம் சந்திப்பு எப்போன்னு சொல்லுங்க எடி சார்..
ReplyDeleteஊர்லதான் இருக்கேன்..
வர முயற்சிக்கிறேன்!
// So உங்களுக்கு ஓ.கே. எனில் இந்த ஐந்தில் விலை கூடுதலான ஏஜெண்ட் சிஸ்கோவை மட்டும் டிசம்பர் 20 வாக்கில் தனியாக அனுப்பிடலாமா ? //
ReplyDeleteசூட்டோடு சூடாய் போட்டுத் தாக்கி விடலாம் சார்...
சுற்றுலா போக சுகப்படா தீவு அது.....
ReplyDeleteசூப்பர்...அப்ப போயே ஆகனும்....சுறாவை விட ஆபத்து காத்தும் மகா....பாக்கனுமே...சுறாவை கண்ட அட்டைப் படங்கள் பாத்து அசந்து அந்த காலத்தை விட அட்டகாசம்...ராணில சுறா வேட்டை நா பாத்த மொத அட்டைன்னு நெனைக்கிறேன்...அந்த சுறா கோபம்...விரட்டி வருவது விட நின்று பாப்பது ...அய்யோ அம்மா
//அதிகாரி பாயாசம் என்பதெல்லாமே அதிகாரி பாசம் என்பதன் மாறுவேசமே //.சூப்பர் சார் . ராஜ சேகரன்.
ReplyDelete// நம்மளவில் இந்த ஜாம்பவான்களுக்கு மத்தியிலான ரேஸில் Young Tex முன்னணியினில் இருக்கிறார் ! //
ReplyDeleteஇதில் ஒன்றும் வியப்பில்லை,போதாக்குறைக்கு கனமான களமும் கூட...
அதுவும் இளம் டெக்சுன்னாலே தன்னால பாச்சல் வந்துடுது புரட்டப் படும் பக்கங்களுக்கு
Delete// *TEX - "உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி !" //
ReplyDeleteதலைப்பு வியப்பு...
// போன மாதமே ஆஜராகியிருக்க வேண்டிய "ஜானியின் தீக்கனவு" preview !! //
ReplyDeleteசூப்பர்,தலைவன் ஜானிக்காக வெயிட்டிங்...
// *ஏஜெண்ட் சிஸ்கோ தோன்றும் "கலாஷ்னிகோவ் காதல்" //
ReplyDeleteசெமையான தலைப்பு,கலாஷ்னிகோவ் பெயரைக் கேட்டால் KGF-2 வில் இடைவேளையில் யாஷ் சொல்லும் டயலாக்தான் நினைவுக்கு வருது...
// கொஞ்சமாய் காசோடு வரும் பிள்ளைகள், ஆசை தீர மற்ற கலர் இதழ்களை நாள்தோறும் புரட்டி ரசிக்கத் தவறுவதில்லை ! "வீட்டிலே சொல்லி அந்த புக்ஸ் வாங்கி தர கேப்போம் !" என்றபடிக்கே பிள்ளைகள் கிளம்பும் போது சற்றே நெருடலாக இருப்பதை மறுக்க மாட்டேன் //
ReplyDeleteஉண்மைதான் சார்,சேலத்திலும் சென்ற முறை மாணவ / மாணவியர்கள் வருகையில் இந்த நிகழ்வே நடந்தது...
அவர்களை பத்திரமாய் அழைத்து வந்து பத்திரமாய் வீட்டிற்கு அனுப்புவதும் கொஞ்சம் நாக்கு தள்ளும் வேலைதான்...
சந்தாதாரர்களுக்கு வழக்கமாக கொடுக்கும் விலையில்லா இதழ்கள் இந்த முறை இல்லாததால், எனக்குத்தெரிந்து ஆறு நண்பர்கள் சந்தாவில் சேரவில்லை.
ReplyDeleteஅதுக்குதான் விலை குறைவாக டின்டின்னு எடுத்து சொல்லுங்க நண்பரே
Deleteசில பல சலுகைகள் கிடைக்கும்னு தான் சந்தா பணம் முன்கூட்டியே கட்றாங்க. இப்ப கூரியர் மட்டும்தான் சேமிப்பு. இப்போ நிறைய தேர்ந்தெடுத்து வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. கொரியர் பணம்லாம் பிரச்னை இல்லைங்க. மொத்தமா புக் சேர்ந்ததும் வாங்கிடறாங்க.
Deleteசநீதாதாரனர்க்கு 3 புத்தகங்க விலைய கணக்கு போடுங்க...
Deleteஇந்த சந்தா கூட தேர்ந்தெடுத்த சந்தாதானே
DeleteThis comment has been removed by the author.
Deleteடியர் எடி,
ReplyDeleteஎனது தொழில்துறையில் என்னையெல்லாம் தூக்கி சாப்பிடும் பல வல்லுனர்கள், Data SCIENCE, மற்றும் அதன் சம்பந்தமான Data ANALYSIS பற்றியும் மிகவும் சிலாகித்து வியப்பார்கள்.
ஆரம்பத்திலிருந்து சயின்ஸ் என்ற வார்த்தையை கேட்டால் நமக்குள் ஒரே கிலி, கிலி தான். பள்ளி நாட்களில் சயின்ஸ் பிரிவை பிரதானமாக எடுத்துக்கொண்டால் தவளைய வெட்டனும், எலிய வெட்டணும் என்று நண்பர்கள் கூற கேட்டதை பற்றி யோசித்து பயந்து, சயின்ஸ் என்றாலே நமக்கு ஆகாது என்று மண்டைக்குள் உரு ஏற்றியிருந்தேன்.
பிற்பாடு கணிணித்துறையில் இதே விசயத்தை வேறு முறையில் அணுகும்போதுதான் இதன் உண்மையான சாரமும், அதன் சரத்தும் மண்டைக்கு உறைத்தது.
40 வருட கால காமிக்ஸ் பயணத்தில், தாங்கள் கற்று தேர்ந்திருப்பது இப்படிபட்ட காமிக்ஸ் டேட்டா விஞ்ஞானத்தில் உள்ள நுணுக்கங்களைதான். அவ்வப்போதைய தலைமுறைக்கு எந்த புத்தகம் பிடிக்கிறது, எது விற்கிறது, அதன் சராசரி என்ன என்று நீங்கள் இன்றளவும் மெனக்கெடுவதில் தெரிகிறது, நாங்கள் ஏன் எங்கள் காமிக்ஸ் தேடல்களுக்கு இன்னும் உங்களையே பிரதானமாக உருவவெடுக்கிறோம் என்று.
இப்படி சக கால வாசகர்களின் நாடிதுடிப்பை அறிந்து புத்தகங்களை அணிவகுப்பது, அனுபவ பாடத்தில் மட்டுமே சாத்தியபடும்... இப்படியே தொடருங்கள், நாங்களும் உங்கள் மீது உப்பு மூட்டை ஏறி கொண்டு எங்கள் வாசிப்புக் களங்களை விசாலபடுத்தி கொண்டே தொடர்கிறோம்..
காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் கடகடவென்ன ஓடட்டும்... இணைந்திருக்கிறோம், தொடர்வோம் எப்போதுமே.
//40 வருட கால காமிக்ஸ் பயணத்தில், தாங்கள் கற்று தேர்ந்திருப்பது இப்படிபட்ட காமிக்ஸ் டேட்டா விஞ்ஞானத்தில் உள்ள நுணுக்கங்களைதான். //
Deleteஅடிச்சி விடுங்க. காசா பணமா? இதெல்லாம் கணிக்க முடிஞ்சா கோடோன் காலியா இருந்துருக்கும்
லார்கோவே தடுமாறும் போது என்னத்த கணிக்க....அப்படி கனிச்சா கிளாசிக்ல தேர்ந்தெடுத்து விட்டா போதாதா....புதிய முயற்ச்சிகள் தாத்தா...வெட்டியான நினச்சு பாக்க முடியுமா அதைத்தான் ஆசிரியர் தேர்வுகள்ங்றோம் .....இங்க விற்பனையாக கூடிய பிரதிகளை சற்றே விலையுயர்த்தி விடனும்...அதான் சந்தால இல்லா புத்தகங்கள் விலையுயர்வாய்....பார்ப்போமே
Deleteஅடிச்சி நான் ஏன் விடனும் நண்பரே... உண்மையா பொய்யா என்று எடிக்கு தெரியும். வெளியில் ஏதோ அவர் மனதை படித்தது போல நீங்க கருத்திடுவதுதான் உங்க அறியாமைய காட்டுது. அதுவும் கொடவுன் காலியா இருந்துருக்கும் என்று பேசுவது எல்லாம் ஏதோ நேரில் பார்த்தது போல நீங்க பேசுவதுதான் பெரிய காமெடி.....
Deleteஇரத்தக் கோட்டை
ReplyDeleteநான் படித்த முதல் டைகர் கதை இது. First impression is the best impression-னு சொல்லுவது போல தொடங்கிய முதல் டைகர் கதையே அட்டகாசமாகவும் அமர்க்களமாகவும் இருந்தது. ஒரு கதை நல்லா இருக்க வேண்டும்னா வில்லன் கதாப்பாத்திரம் பலமா இருக்கனும் , இதில் ஒற்றை கழுகு கதாப்பாத்திரம் ஹீரோவுக்கு சமமாக இருந்தது . ஒற்றை கண் குவானா என்னும் ஒற்றை கழுகு செய்யும் சூழ்ச்சிகள் அனைத்தும் நான் இதுவரை படித்ததில் வேறுபட்டும் புதிதாகவும் ரசிக்கும்படியாக இருந்தது. நான் இதிலிருந்து ரெஜிஸ்டர் பண்ணுவது என்னவென்றால் நானும் ஒரு தளபதி ரசிகனாக(விசிறி) மாறிவிட்டேன்.
இந்த கதை படித்து முடித்த பிறகு தான் இந்த மாதம் தளபதி ஸ்பெஷல் புத்தகம் கிடைத்தது. பின்னர் தான் தெரிந்தது அந்தக் கதையை படிக்கணும்னா அதற்கு முன்னே ஒன்பது கதைகள் படிக்கணுமாம். அதுனால இப்போ புத்தகங்களையும் கண்டுபுடித்து படிக்கபோகிறேன்.
அட டே இரத்த கோட்டையில உலா வந்தாச்சா கேப்டன்...
Deleteகுவனா, குரோ இரு செவ்விந்தியர்கள் வாயிலாக கதையை நகர்த்தியிருப்பாங்க... இரு வேறு துருவங்கள்.. இருவரும் கதையின் ஆணிவேர்கள்...
இவங்களுக்கு இணையாக மதிநுட்ப டைகர்னு விசாலமான கதை களம்...
1995/96களில் இதை நாங்க ஒவ்வொரு மாதமும் ஒரு கதையாக காத்திருந்து வாசித்தோம்
அப்போது எப்படி இருந்து இருக்கும் னு யோசித்து பாருங்க...
294. இரத்தக் கோட்டை - பாகம்1...கேப்டன் டைகர்
295. மேற்கே ஒரு மின்னல் - பாகம்2..கேப்டன் டைகர்
296. தனியே ஒரு கழுகு - பாகம்3....கேப்டன் டைகர்
297. மெக்சிகோ பயணம் - பாகம்4...கேப்டன் டைகர்
299. செங்குருதிப் பாதை - பாகம்5...கேப்டன் டைகர்
மாதம் ஒரு அத்தியாயம் வீதம் 6மாதங்களில்... ஊடால வேறு ஒரு மாதம் வேறு கதையை போட்டு மேலும் காத்திருக்க வைத்தாரு...அதனால் தான் உப்பலாம் தொடர்கதைனா மக்கள் செவி சாய்க்க மாட்டறாங்க....
ஒரு முடியா இரவு....
ReplyDeleteகதையோட ஆரம்பத்தில் மூணு திருடர்கள் ஒரு மனநல ஆஸ்பத்திரியில திருடுவதற்காக உள்ளே போவாங்க. ஆனா அவங்க எதிர்பாக்காத விதமா உள்ளேயே மாட்டிக்குவாங்க. அதுக்கு அப்புறம் தான் அவங்க மூணு பேரும் எதுக்காக அங்க வந்தாங்க?, அவங்க எதிர்பாத்து வந்தது கிடைச்சுதா? இது தான் கதையின் சுருக்கம்.
ட்விஸ்டுகள் நிறைய இருக்கிறதால போரடிக்காம கதை இன்ட்ரஸ்டிங்கா நகர்ந்தது . கதை படிக்க நல்லா தான் இருத்தது ஆனா எனக்கு பெரிய இம்பேக்ட் குடுக்கல. ஏன்னா இதை படிக்கறதுக்கு முன் நான் ரத்தக்கோட்டை படிச்சேன் .அவ்ளோ அற்புதமான கதைய படிச்ச உடனே இந்தக் கதைய படிச்சதுனால கூட இருக்கலாம்.
யெஸ்.... டைகர் கதைகள் பிரமாண்டமான கதைக்களங்கள்... அவற்றை வாசித்துட்டு சில நாள் வேறு எதுவும் வாசிக்க கூடாது தான்...
Delete//யெஸ்.... டைகர் கதைகள் பிரமாண்டமான கதைக்களங்கள்... அவற்றை வாசித்துட்டு சில நாள் வேறு எதுவும் வாசிக்க கூடாது தான்...//
Delete+9
///இளம் டைகர் இந்த ரேஸில் முந்திடக்கூடும் என்ற சின்ன எண்ணமிருந்தது என்னுள் ! Alas - 'எதிர்ப்படுவோர் யாராக இருந்தாலும் சப்பளித்து விட்டு நகர்ந்து கொண்டே இருப்பேனாக்கும் !' என்ற டெக்சின் முழக்கத்தின் முன்னே இளம் வேங்கையாரும் சித்தே வழி விடத்தான் வேண்டியிருக்கிறது///
ReplyDelete---போற்றி பாடடி பெண்ணே...
டெக்ஸ் அரிசோனா மண்ணே...
காமிக்ஸ் தேசம் ஆளும் மன்னர் இவர்தான் ஹோய்...
நவஜோ இனத்தை சேர்ந்த ரேஞ்சர் இவர்தான் ஹோய்..
போற்றி பாடடி.......💕💕💕💕💕💕💕
ஸ்டீலோட காத்து இப்போ ,
Deleteசேலம் பக்கம் வீசும் போது
கவித .. STVR கவித..
///THE SIXER SPECIAL leads the November race ! ///
ReplyDelete----வருடத்தில பெரும்பாலான மாதங்களில் இதான் கதை....
டெக்ஸ்ஸை குறைக்கணும்,
டெக்ஸ் இல்லனா எங்க ஆளுது வரும்...டெக்ஸ்ஓவர் டோஸ்..
கதறல்கள் தொடரட்டும்...கேட்க கேட்க இனிமையாக உள்ளது..😻😻😻😻
///மிஸ் பண்ணிட சாத்தியமேபடாதென்ற ரகத்திலான இதழ்களையாய் தேடிப்பிடித்து 2024-ன் அட்டவணையின் ரெகுலர் தடத்தில் புகுத்தியிருப்பது a step in this direction ! ///
ReplyDelete---ம்ம்ம் இதுவும் சரிதான் சார்....
சோபிக்காத பிளேயர்னா பிளேயிங் லெவன்ல இடம் கிடைக்காதுதான்..
சில ஆண்டுகளில் இது இன்னும் அதிகரிக்கும் அப்ப உள்ளது நிஜ வேடிக்கை.....😉
டெக்ஸ்..லக்கி..ஆக்சன் ஹீரோஸ்னு வண்டில முறுக்கான சரக்குகள் தான் இருக்க கூடும் இனி வரும் ஆண்டுகளில்...
நாட்டாமை படத்தில,
ஐயா நான் பார்த்தனுங்க..
நீ என்ன முறையாகணும்??
சித்தப்பா.
ஹாங்..செல்லாது..செல்லாது..
ஐயா நான் பார்த்தனுங்க..
நீ என்ன முறையாகணும்??
அத்தை முறையாகணும்..
ஹாங்..செல்லாது..செல்லாது..
கதையா..
கி.நா...புதுசு...2வது லைன் ஹிரோஸ்லாம் சந்தா புக்லெட்ல இடம் கிடைக்குதானு பார்க்க வேண்டியதுதான் போல...🤭
////And 91 பேர் வெட்டியானுக்கு தங்களது ஓட்டுக்களை போட்டு விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் ! So அந்த கமர்ஷியல் கி.நா. ஏதேனும் ஆன்லைன் மேளா ஸ்லாட்டினை தேடிக் கொள்ள வேணும் போலும் ! //
Delete--- இங்கயே உள்ளது உதாரணமாக... சூப்பரு...
///கி.நா...புதுசு...2வது லைன் ஹிரோஸ்லாம் சந்தா புக்லெட்ல இடம் கிடைக்குதானு பார்க்க வேண்டியதுதான் போல...🤭///
DeleteTen thousand thundering typhoons.!
KOK to கவுன்டர்:-
Deleteநீங்க தமிழ் சினிமாவுல எப்படியோ, அவுக டின்டின் காமிக்ஸ்ல அப்படி......
Wrong information மாம்ஸ்..!
Deleteதலைவர் கவுண்டமணி ஸ்டைலுக்கும் கேப்டன் ஆர்ச்சிபால்டு ஹாடாக்கிற்கும் எவ்வித ஒப்பீடுகளும் சரியாக இருக்காது..!
கேப்டன் வேறுவிதமான கேரக்டர்..!
அதேபோல டின்டின் ஏதோ வயிற்றுவலி ஏற்படுத்துவல்ல காமெடி கதை என்ற எதிர்பார்ப்பும் வேணாம் மாம்ஸ்..!
டின்டின் ஒரு மாதிரியான அட்வென்சர் ஜானர்..!
லேசான ஹாஸ்யத்துடன்... சிறுவனுமல்லாத இளைஞனுமல்லாத ஒரு பதின்மவயது இரண்டுங்கெட்டானின் அட்வென்சர் தொடர்..!
துணைக்கு கேப்டன் ஹாடாக்.. நகைச்சுவை டிப்பார்ட்மென்ட்டை இவரும் புரபசர் கால்குலஸும் கவனித்துக்கொள்கிறார்கள்..!
படிக்க வெகு சுவாரஸ்யமான தொடர்....
உலகின் சகல மூலைமுடுக்குகளிலும் சக்கைபோடு போடும் தொடர்...
நம்ம மக்கள் என்ன செய்ய காத்திருக்காங்கன்னு தெரியலை..!
டின்டின்னுங்கிற பெயரை தாண்டி பெரிசா ஒன்றும் தெரியாத நூற்றுக்கணக்கான தமிம் ரசிக கூட்டத்தில மீயும் ஒருவன்..
Deleteடின் டின் ஆங்கிலத்தில் வாசித்துள்ள நீங்களாம் பேசிக்கிறத பார்த்தா நம்ம கவுன்டர்=ஹடாக்-- கோனு பார்தேன்..அப்படியும் இல்லனுட்டாய்...அப்ப அந்த ஹடாக் ஆளு எப்படிதான்யா???🤔
எங்க எனக்கும் என்னை போன்ற சாமானியர்களுக்கும் சட்டுனு தெரியற மாதிரி ஒரு உதாரணத்தை போடு மாமா!
மாம்ஸ் :
Delete///.அப்ப அந்த ஹடாக் ஆளு எப்படிதான்யா???🤔///
சுஸ்கி விஸ்கி தொடரில் வரும் மிக்கி ஒரு 30% டைகர் கதைகளில் வரும் ஜிம்மி ஒரு 30% நம்ம டாக்புல் ஒரு 20% கிட்ஆர்டின் ஒரு 10% ஆவ்ரேல் டால்டன் ஒரு 5% ரின்டின்கேன் ஒரு 5%
அனைத்தும் கலந்த கலவைதான் நம்ம கேப்டன் ஆர்ச்சிபால்டு ஹாடாக்... எனக்கு ரொம்ப புடிச்ச கேரக்டரும்.. உனக்கும் பிடிக்கும் மாம்ஸ்.!
ஆஹா ...சூப்பர் கண்ணரே...ஆவல் தூண்டுறீங்க
Delete///ஒற்றை நாயகர் மட்டும் இது வரைக்கும் தொடர்ச்சியாய் முன்னிலையில் இருந்து வருகிறார் and அவர் தான் CIA ஏஜென்ட் ஆல்பா ! //
ReplyDelete----ஆல்பா வாழ்க...
// 2 to 4 வரையிலான மீத positions ரொம்பவே சின்ன வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்திடுகின்றன & எந்த நொடியிலும் அந்த வரிசைதனில் மாற்றம் நிகழலாம் தான் போலும்///
---ஐயாக்களா அந்த மேகி காரிசனை பாஸ் பண்ண வெச்சிடுங்கய்யா...🙏🙏🙏🙏🙏
வாய்ப்பில்லை ராஜா...வாய்ப்பில்ல !
Deleteஆஹா....கடைசியில மேகியக்கா குந்தியிருக்குதுங்களா சார்..ஹூம்!
Deleteகடைசி ஒரே பாகந்தான் உள்ளது.. சரி காத்திருப்போம்...
////உங்களுக்கு ஓ.கே. எனில் இந்த ஐந்தில் விலை கூடுதலான ஏஜெண்ட் சிஸ்கோவை மட்டும் டிசம்பர் 20 வாக்கில் தனியாக அனுப்பிடலாமா ? என்ற எண்ணம் ஓடி வருகிறது ! உங்களின் suggestion என்னவோ guys ? சூட்டோடு சூடாய் போட்டுத் தாக்கி விடலாமா - அல்லது சிஸ்கோ மாத்திரம் தாமதித்து வரட்டுமா ? ///
ReplyDeleteதங்களுக்கு பணிச்சுமை கணிசமாக மட்டுபடும் எனில் தனியாக அனுப்பலாம்ங் சார்...
வருடத்தின் கடைசி இதழாக அதகளம் புரியட்டும்....
//நமது நண்பர்களில் கணிசமானோர் சேலத்திலும், சுற்று வட்டாரங்களிலும் இருப்பதைக் கருத்தில் கொள்ளும் போது வரும் காலங்களில் வாசக சந்திப்பினை அக்கட ஒருவாட்டி முயற்சிக்கலாம்//
ReplyDeleteEDITOR SIR .. Come to visit our stall @ SALEM .. ONE WEEKEND ..
///ஜானியின் அளவுகோல்களின்படி இது செம ஜாலி சாகசமே ! மூக்கைச் சுற்றும் முன்னூறு பை-பாஸ் சாலைகளின்றி, அழகாய், நீட்டாய் பயணிக்கிறது ////
ReplyDeleteஎன்னாது நூறுவா நோட்டை காணோமா..!!!!!
Billions of bilious blue blistering barnacles.!
Delete😂😂😂😂😂
Delete///21 தேதி முதலாய் சேலத்திலும் புத்தக விழா துவங்கிடுகிறது ! போன வருஷம் தூள் கிளப்பிய அதே இடத்தில் தான் இம்முறையும் விழா நடந்திடவுள்ளது எனும் போது செம ஆர்வமாய்க் காத்துள்ளோம் ///
ReplyDeleteஇம்முறையும் வெற்றிகரமான விற்பனை& வரவேற்பு இருக்கும் சார்.. மாங்கனி நகரில் சிங்கத்தை சந்திக்க நாங்களுமே ஆவலுடன்...
///நமது நண்பர்களில் கணிசமானோர் சேலத்திலும், சுற்று வட்டாரங்களிலும் இருப்பதைக் கருத்தில் கொள்ளும் போது வரும் காலங்களில் வாசக சந்திப்பினை அக்கட ஒருவாட்டி முயற்சிக்கலாம் என்றே தோன்றுகிறது ! பார்க்கலாமே !! //
ReplyDeleteமனிடோவின் அருளால் மினி ஈரோடு சந்திப்பு போன்ற ஒன்றை 2025ல சேலத்திலும் முயற்சிக்கலாம் சார்...
கணிசமான நண்பர்கள் வருகை புரிவார்கள்..
புனித மனிடோவின் அருளால் 2024 சந்தாவின் முதல் தவணைத் தொகையை செலுத்தி சந்தா எக்ஸ்பிரஸில் துண்டு போட்டாச்சு. பிப்ரவரி மாதம் முடிவுக்குள் அடுத்த தவணையை கட்டினால் சந்தா எக்ஸ்பிரஸின் சீட் கன்ஃபார்ம் ஆகிவிடும். புனித மனிடோவின் அருள் காமிக்ஸ் உலகில் நிலைத்து நிற்கட்டும்
ReplyDeleteதளபதி ஸ்பெஷல் படிக்க ஆரம்பித்துள்ளேன்
ReplyDeleteவன்மேற்க்கு அத்தியாயம் மிக சுவாரசியமாக செல்கிறது. நான் விசிறி
ReplyDelete"காலனின் கால்தடத்தில்" அட்டைபடம் செம!
ReplyDelete"ஜானியின் தீக்கனவு" அட்டைபடமும் சரி உட்பக்க டீசரும் சரி அட்டகாசமாக வண்ணத்தில் உள்ளது.
சார்,
ReplyDeleteமுடிந்தவரை சிஸ்கோவை மற்ற கதைகளுடன் மாத்தத்தின் துவக்கத்திலேயே கொடுத்து விடுங்கள். தள்ளிப் போட வேண்டாம்
Yes sir
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசிஸ்கோ கதையை ஜனவரி மாத இதழ்களுடன் எனக்கு அனுப்பினால் போதும் சார்!
ReplyDeleteசேலம் புத்தகத்திருவிழா வெற்றி பெற வாழ்த்துக்கள்! வரும் காலத்தில் சேலத்தில் வாசக சந்திப்பு செம! இதனைத்தான் எதிர்பார்த்தோம்!
ReplyDeleteஅடுத்தவாரம் இறுதியில் நேரம் கிடைத்தால் சேலம் சென்று புத்தக திருவிழாவுக்கு சென்று நண்பர்களை பார்த்து வர ஆசை!
வாங்க சகோ
Delete
ReplyDeleteவிருதுநகர் KVS பள்ளி வருடம்தோறும் பொருட்காட்சி நடக்கும் இடம், அனைவருக்கும் (விருதுநகரை சுற்றி வாழும் மக்களுக்கும்) மிகவும் பழக்கபட்ட இடம்; எனவே புத்தகத்திருவிழாவை காணவரும் கூட்டம் நன்றாக இருக்கும்! விருதுநகரில் காலேஜ் படிக்கும் போது விருதுநகர் பழைய பேருந்து நிலையம் உள்ளே இருந்த கடையில் நமது காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிப்படிப்பேன்; இந்தக்கடை இன்னமும் நல்ல நிலையில் இயங்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. விருதுநகரில் நமது காமிக்ஸ் விற்பனை சிறக்க வாழ்த்துக்கள்!
ரிப். ஜானி - அட்டைப்படம் கதையைப் படிக்கத் தூண்டும் விதத்தில் அருமையாக அமைந்துவிட்டது.
ReplyDeleteசிம்பிளான சந்தனக் கலர் பிண்ணணி..
அதை ஈடுசெய்யும் விதத்தில்
உள் பக்கம் செம கலரிங்..
ரிப். ஜானி - எனக்கு மிகவும் பிடித்தமான ஃப்ரண்ட்..
இதழுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்..
//பைண்டிங்கில் ஏகமாய் பணியாட்களின் தட்டுப்பாடு ; ஹார்ட்கவராக பைண்ட் செய்வதாயின் தீபாவளிக்கு புக்ஸ் வந்திட சாத்தியமே இல்லை என்ற சூழல் சார் !
ReplyDeleteSo வேறு வழியிருக்கவில்லை//
இந்த நேரத்தில் தோல்களுக்கு ஹாட் கவர் கேட்டவன் நல்லாவா இருக்கும் அதனால நானே களத்தில் இறங்கிட்டேன்.¥
😅🤞
தோர்கல் புத்தகம் தயாரிக்க தேவையான பொருட்கள்- கால் மீட்டர் துணி, கத்தரிக்கோல், பழைய ரெக்காடு அட்டை, ஊசி, நூல், வீட்டிற்கு வேலைக்கு வந்த அண்ணனிடம் கடன் வாங்கிய ட்ரில் போடும் இயந்திரம் 😁
.
Preview https://www.instagram.com/reel/Cz2ygOvL2nC/?igshid=MzRlODBiNWFlZA==
Thorgal தோர்கலின் ஒரிஜினல் FONTஐ தமிழில் டிசைன் செய்திருக்கிறேன் 😁😁☮️👆👆
Delete😁😁😁😁😁
Deleteசரில...இனி சிரில
DeleteI am waiting ... For johny...
ReplyDelete*தீபாவளி - தளபதி ஸ்பெஷல்*
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஃப்ரெஷ்ஷாக வந்துள்ள இளம் டைகர் சாகசங்கள்...
முதல் ஷொட்டு புத்தகத்தின் தயாரிப்பு தரத்திற்கு... *ஹார்ட் பைண்ட், கண்களை கொள்ளை கொள்ளும் வண்ணம்* என எவரும் மிஸ் செய்யக் கூடாத மேக்கிங்...
கதையில் உள்ளே போகும் முன்பாக, இதற்கு முன்பாக வந்த இதே தொடரின் சாகசங்களை ஒருமுறை வாசித்து விடுவது பல கேள்விகளை தவிர்ப்பதுடன், இந்த 4 பாகங்களுடன் ஒருங்கிணைந்து ஒன்றி படிக்கவும் உதவும் 📖
*பிங்கர்டன் தீர்வு ---:--- சபிக்கப்பட்ட பாதையில் ---:--- வாஷிங்டனுக்கான கடைசி ரயில் ---:--- லிங்கன் செத்தாக வேண்டும்!*
மேற்கண்ட 4 பாகங்களில் விரிந்திருக்கும் இந்த கதை வலையானது 2வது பாகத்தை தொடும் போது தான், மையப்புள்ளியை நோக்கி துவங்குகிறது... அதுவரையிலும் கதையை நகர்த்திச் செல்கிறாள் காட்டேரி அழகி எலனர் 👹🥰🥰
கதை நெடுகிலும் டைகரின் முத்திரைகள் விரவிக் கிடக்கின்றன... அதிலும் தெற்கின் ஜெனரல் எர்லியிடம் மாட்டிக் கொண்டாலும் சமயோசிதமாக அவரிடமே உதவியை பெற்று களத்திற்கு மீண்டும் வருவதில் தளபதியின் தனது முத்திரையை தரமாக பதிக்கிறார்...
இந்த கதையின் மற்றுமொரு பலம் உளவுத்துறை ஆசாமி ஆலன் பிங்கர்டன்... பார்ன் அல்டிமேடம் திரைபடத்தில் உளவுத்துறையினர் வருவார்கள் அவர்களுக்கே அப்பன் நான் என்பது போல ஆலனின் பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது...
கதையில் லெப்டினன்ட் பிளுபெர்ரிக்கு துணையாக, அவருடைய முன்னாள் சகாக்களான சார்ஜென்ட் கிரேசன் மற்றும் ஹோமர் இருவரும் வந்தாலும் ஜிம்மி, ரெட் உல்லி இருவரும் கதையில் வருவார்களா என மனம் தேடியது உண்மை...
ஆட்டத்தின் மையம்: அழகி மிட்செல் எலனேர், அப்படியே சிகுவாகுவா சில்க்கின் பாத்திரப் பாணியில் படைக்கப்பட்டிருந்தாலும், இவளிடம் இன்னமும் ரகசியங்கள் குவிந்து கிடக்கின்றன என்பதற்கு அவள் வரும் கடைசி பேனலே சாட்சி... இந்த அழகியின் வீக்னஸ் ஆக இருப்பது கண்ணில் படும் ஆடவர்களையெல்லாம் கருணையே இல்லாமல் கொலை செய்வது... அழகியின் கொலை செய்யும் வேகத்திற்கு தப்பியவர்கள் சொற்பமே...
கதை:
அமெரிக்க உள்நாட்டு போரில் / வடக்கு தெற்கு போரில், பெருந்தலைகளை எல்லாம் போட்டுத் தள்ளி விட்டால் போரின் போக்கை தங்களுக்கு சாதகமாக மாற்றி விடலாம் என்று 2 அணியினரும் யோசிக்கிறார்கள்...
இந்த முயற்சியில் வடக்கிலிருந்து தெற்கின் பக்கமாக இருந்த துப்பாக்கி அல்லது கத்தி முனையானது, எங்கிருந்து அனுப்பப்பட்டதோ அதே விரல்களை நோக்கியே திரும்புகிறது...
மாய வலையாள் எலனர் மிட்செலின் வெறி கொண்ட வலையில் இருந்து, ஆபிரகாம் லிங்கன் தப்பித்தாரா?
எலனர் மிட்செலின் கூட்டாளியாக இருப்பது ஆபிரகாம் லின்கனை உண்மையிலேயே கொன்ற ஜான் வில்கின்ஸ் பூத் என்னும் போது, மரண வலைக்குள் இருந்து லிங்கன் தப்பிக்கிறாரா?!
இதில் டைகரின் பங்கு என்ன என விறுவிறுப்பாக கதை நகர்ந்து செல்கிறது...
கதையை மொழிபெயர்த்த நண்பர் மகேந்திரன் பரமசிவம் @~வெட்டிப்பயல் மிகச்சிறப்பான, கடினமான பணியை, நேர்த்தியாக செய்திருக்கிறார்... நன்றிகள் சகோ...
முடிசுக்களோடு தொடங்கிய கதை, மேலும் ஒரு பெரிய்ய முடிச்சோடு இந்த 4 பாகங்களில் முடிந்துள்ளது. எஞ்சியுள்ள பாகங்களும் விரைவில் வந்தால் மகிழ்வேன்...
நன்றிகள்!
ரேட்டிங்: 10/10
சூப்பர் நண்பரே....தீபாவளிக்கு முன்னரே அதாவது ஈரோட்டு விழால
Deleteசிறப்பு..
DeleteMikasirappu
Deleteவிருதுநகர் மற்றும் சேலம் புத்தக விழாக்கள் வெற்றி பெற வாழ்த்துகள்
ReplyDelete+1
Deleteகானலின் கால் தடத்தில்( திக்கு தெரியாத தீவில்) போன்ற சர்விவல் கதைகளை வருடத்து ஓன்று வெளியிடுங்கள்.
ReplyDeleteவலிமையான ஹார்ட் பவுண்ட்..
ReplyDeleteகண்களில் ஒற்றிக் கொள்ளும் ஓவியங்கள்..
மனதுக்கு இனிய வண்ணச் சேர்க்கைகள்..
கட்டிப் போடும் கதையோட்டம்...
மெய்சிலிர்க்க வைக்கும் தங்க தலைவனின் மதியூகம்...
உயிரையும் பணயம் வைக்கும் உன்னத கடமை உணர்ச்சி..
விசம் தோய்ந்த வில்லி..
எதிராக..உடலிலும், அதைவிட மனதிலும் உறுதி கொண்ட நாயகன்..
அருமையான *தீபாவளி* விருந்து..
மொழிபெயர்ப்பில் தெரியும் சின்னஞ்சிறு குறைகளை மறந்து விட்டு படித்தோமானால் ...
இந்த அம்பது வருடங்களில் வந்த சிறப்பான .. தரமான சம்பவம் இதுவே...
Nice
Deleteசின்ராசுங்க அம்மா பாணியிலே சொல்லனும்னா...
ReplyDeleteஉசிரை காப்பாத்திக்க ஓடும் தேடுப்படும் குற்றவாளியின் கதை எங்கே?????
தன்னுயிரையே பணயம் வெச்சி பிரசிடென்ட் உயிர் காப்பாத்தும் தங்க தலைவன் கதை எங்கே??
உங்க கைலதா
Deleteபொறுமையா மறுக்கா படிங்க....
Deleteசேலம் புத்தக விழா இனிதே தொடங்கியது. நண்பர்களுடன் புத்தக அரங்கம் முழுவதும் சுற்றி வந்தாயிற்று. நண்பர்கள் ரகுராமன், யுவா கண்ணன், MKS ராம் உடன்.
ReplyDeleteSuper
Deleteஇனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் எடிட்டர் சார் 🙏🏼
ReplyDeleteஇன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼 💐💐💐🎉🎉🎉
அடடே நம்ம அன்பு எடிட்டர் சார் அவர்களுக்கு இனிய மண நாள் வாழ்த்துக்கள்
Deleteஆனானப்பட்ட ஜானியும்..சோடாவையும் ஓரங்கட்டி ஜெயிச்சிருக்காங்களே..சரி..எப்படித்தான் இருக்குனு படிச்சு பாத்தா..சும்மா..ஜிவ்னு ஜெட் வேகத்துல பறக்குது கதை..வாழ்த்துகள் ரூபின்.உங்க ரசிகர் மன்றத்துல எனக்கும் இடம் உண்டு.😍😍😍
ReplyDeleteயாருமேயில்லாத தங்கச்சி புருசனோட சொத்தை ஆட்டையைப் போட சொந்த மச்சானையே போட்டுத் தள்ளிய ஒரு செனட்டர்..வாரிசான குந்தையோட மூச்சை நிறுத்திட்டு.. வேறொரு கும்பலை வச்சி கடத்துற மாதிரி ப்ளான் பண்ணி..அந்த ட்ராப்பில் அந்த கும்பலையே மாட்டிவிட்டு சாட்சிகளையும் சாகடிக்க திட்டம் போடுறாரு.
சூழ்ச்சியிலிருந்து தப்பிக்கும் அந்த கும்பல் இறந்த குந்தையைப் புதைத்துவிட்டு..ஏறக்குறைய அதை போலொரு வேறெரு குழந்தையைக் கடத்தி
அதைக் காட்டி...அந்தக் குழந்தைதான் இந்தக் குழந்தையென்று செனட்டரை ப்ளாக் மெயில் செய்கிறது.
தற்போது...இத்தனைக் காலம்
தூக்கத்தைத் தொலைத்த செனட்டர் மேற்கொண்டு என்ன செய்கிறார்.?
இப்போது
காணாமல் போனவர்களைக் கண்டறியும் இலாக்காவில் இருக்கும் ரூபின்..எப்படி கதையில் லிங்க் ஆகிறார்.?
எப்போதோ காணாமல் போன..
அந்தக் குழந்தை யாருடையது என்பதை..
தாறுமாறான வேகத்தில் செல்லும் தோட்டா போல்..தொட்டால் தெறிக்கும் வகையில் கதை நகர்கிறது.
2022 இன் மிகச் சிறந்த அறிமுகங்களில் ஒருவர். இப்போது எனக்கு பிடித்த ஹீரோக்களில் ஒருவர்.
Deleteஅடுத்த கதை படிங்க அப்படியே addict ஆகிடுவீங்க. 96மணி நேரம். 2023 முத்து சம்மர் ஸ்பெஷல்.
Deleteஎடிட்டர் சார், இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் !!!
ReplyDeleteஅன்பின் ஆசிரியருக்கு இனிய மணநாள் வாழ்த்துக்கள்🌾🌾🌾
ReplyDeleteபி&பி ஸ்பெசல் கண்ணில் பட .....நாட்டின் ஹாட் ஷாட்....ராணியில் சீன உளவாளி படிக்கத் துவங்க கலீத் பாலஸ்தீன தீவிரவாதிகள் குறித்துப் பேச.... அன்றுமா என வேதனையோடும் ஈர்ப்போடும் கதை உள்ளிழுக்க...மஞ்சள் நிறம் ...கொக்கிக் கை...இயந்திரக் கை என் டாக்டர் நோ குறித்து பாண்டும்பற்ற வைக்க...இயற்பியல் விஞ்ஞானி உதவியுடன்...கொளுத்திப் போடுகிறார் அவர் ஒளியின் உதவியுடன் ...கதைக்கு சுறா மீன்....ஆளை தூக்கி பறக்க வைக்கும் ரோட்டர் விமானம் என பரபரப்பாய் வேகம் கூட்ட...
ReplyDeleteமிரட்டலாய் பயணிக்குது கதை....சூப்பர் சார்....ஜேம்ச படிக்க உலக விஷயங்களும்(இல்லைன்னாலும் கத்துக்கலாம் இங்கே...ஆனா சுவாரஸ்யம் குறையலாம்) அந்த கவனத்த சிதறவிடா கூர்ந்த வசனங்களின் வாசிப்புத் திறனுமிருந்தால் இன்னோர் லார்கோ....
ஜேம்சின் எரி நட்சத்திரம் ...மந்திரியை கடத்திய மாணவி...டாக்டர் நோ...பேய்த் தீவு ரகசியம் போன்ற அன்று புரியாமல் ஈர்ப்பில்லாம படித்த கிளாசிக் கதைகளை சுடச்சுட லயனில் தொடருங்கள் ...
இன்றிரவு மாடஸ்டியோடு வெனிசுக்கு பயணம் ...வெனிசில் ஓர் வேங்கை...இங்கே வேங்கை ...அங்கே புலி...உங்க தேர்வுகள் அபாரம்
Deleteஇப்படி எல்லாம் எழுத, compare பண்ண உங்களால் மட்டுமே முடியும் ஸ்டீல். 😨
Deleteகுமார் ஆசிரியர் செய்தது ...கண்ல படுது அவ்வளவே...நேற்று உறக்கம் வராம இளவரசியை கார்வினோடு நானும் தொடர்...இங்கேயும் ஜேம்ஸ் போல மொராக்கோ...டார்னியர்னு பயணம் போனேன்...முந்தாநேத்து ஜேம்சோடு...நேத்தைக்கு மாடஸ்டியோடு அதே இடங்களுக்கு...தூக்கம் வந்ததால் சில பக்கங்களே மீதம்...கதை சும்மா சுறு சுறு...இவையெல்லாம் நம் சிங்கத்தமிழில் ஹிட் ஆகாதது ஆச்சரியமே...
Deleteஅன்று பிடிக்காததுமே....
தூங்கிப் போன டைம்பாம தேடுவேன் இன்று படிக்க ஏலுமான்னு பாக்க...
நம்ம ஆத்தூர் இளங்கோவுக்காக இன்னோர் பி&பி ஸ்பெசல் வரனும்னு முத்தாக விழாக்களில்...
இரு கதை பயணம் ஒற்றுமை பாக்கைல தோணுவது
ஆசிரியர் காரணங்களோடு தேர்ந்தாரா...இறைவன் வரமா
V_காமிக்ஸ்-கடைகளிலேயே வாங்கிவந்தேன்..
Delete2024- V- காமிக்ஸில் மாடஸ்டியை இணைத்துக்கொண்டதால்
V காமிக்ஸுக்கும் சேர்ந்து சந்தா செலுத்தியாச்சு..
சபலம் - அடுத்த பாதி சந்தா இதழ்களில் - இளவரசி" -க்கும் இடம் இருக்குமோ..?i என்பதுதான்..(நீங்களும் கொஞ்சம் சிபாரிசு செய்யுங்களேன்..ப்ளீஸ்.. ii)
ஹஹஹஹ...நண்பரே நம்ம தொழிலதிபருக்கு ...டாக்டர்களுக்கு பிடிக்காமலா...
Deleteடான்ஞியர்....மொராக்கோவிலிருந்து ஓடி....மிதந்த பாய்ச்சலுக்குப் பின்.....
Deleteகுழந்தை கடத்தல்....ஒரு கடத்தல்காரனுக்கு பனிஞ்சா ...அச்சுறுத்த ஆரம்பிச்சுடுவாங்கன்னு....பலே யுக்தியுடன் களமிறங்கும் மாடஸ்டி கார்வின் குழு....
மிக கவர்ந்த யுக்தி....வில்லி அடிபட்டதாய் காட்ட....மாடஸ்டி பணத்துடன் வரும் போது சுட்டு வீழ்த்தப்பட....என்னா நகர்த்தல் களம்....எதிரிகள் வழியிலேயே பணத்தை வாங்கியதுமே மாடஸ்டிய கொன்றுவிட்டால் எனும் காட்வின் அச்சத்துக்கும் முற்றுப் புள்ளி வைத்து...
வில்லி இல்லாததால் மாடஸ்டி தனியாத்தான் வரணும்னு கடத்தல்காரன் சிந்திக்க விடாம பலே திட்டம் தீட்டியத வியந்தா.....
மாடஸ்டி மேல் நன்றியுணர்வும்....கார்வின் மேல் அச்சு உணர்வும் இருக்கும் கூட்டாளி மேல் கடத்தல் தலைவன் சந்தேகப்பட...
அதற்கு கூட்டாளி மறுத்து காடர்வின் அடி படல....என தொடரும் யூகத்தால் வாதம்.யூகமென நச்சென நகரும் கதை மேலும் வியப்பூட்ட...சபாஷ் சரியான போட்டி என விரைந்து கடைசியில் சுபம்....வேகம் வேகம் என ஆசைப்படும் நண்பர்களுக்கு திகட்டா..இதுக்குத் தானா...இவ்ளோதானா என உச் கொட்டுவோமே அது போலில்லா...அடடான்னு அஆர்பரிக்கச் செய்யும் கதை.சூப்பர் சார்
ஆஹா..அருமை..
Deleteஇரும்புக் கை
யாரின் வித்தியாசமான ரிவ்யூ - வில் மாடஸ்டி..
நாங்கள்லாம் சொன்னா சிரிச்சுருவாங்கப்பா...
ஆசிரியருக்கு இனிய மணநாள் வாழ்த்துக்கள்🌾🌾🌾
ReplyDeleteTrichy book fair from 23/11/2023 to 04/12/2023
ReplyDeleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteSir pathivukkizhamai
ReplyDeleteஆத்தீ....நீங்களுமா சார் ?
Deleteகபில்தேவுக்குள் குக்கூ இருப்பது போல எங்க அனைவருக்குள்ளும் சுட்டீஸ் உள்ளனர் சார்.... என்ன கொஞ்சம் தொந்தியும் தொப்பையுமாக...ஹி...ஹி...
Deleteஅதும் நம்ம மேச்சேரி மைனர்லாம் தொப்பையை பெட்ரோல் டேங்மேல வெச்சிகிட்டு தான் வருவாரு....
இன்றைய பதிவில் ஜனவரிக்கு புது ஸ்பைடர் வருவாரான்னு புத்தக விழா ஸ்பெஷலா பதில் தருவாரா
ReplyDeleteமுக்கியமானதொரு மீட்டிங்குக்கோசரம் ரயிலைப் பிடித்துப் பயணம் ! பதிவு லேட்டாகும் guys ; சாமத்தில் or காலையில் பிரஷாக பார்த்துக் கொள்ளுங்களேன் ?
ReplyDeleteபதிவை காலையில் பார்த்துக் கொள்ளலாம் சார்... தயவுசெய்து காமிக்ஸ்(சாமக்)கோடங்கி வேலை வேணாமே...🙏
Deleteஇரவில் தேவையான ஓய்வு எடுங்கள் சார்....
Ok ok Sir. நாளை காலை சந்திப்போம்.
Deleteஇரவு வணக்கங்கள் ஆசிரியரே
Deleteகாலை காளை...
Deleteலயனு காளை...
நாளை காளை
Ok sir, no issues
DeleteNo problem sir.
Deleteபதிவு போடக் கூட நேரமில்லாமல் இப்படி அர்த்த ஜாமத்துல ரயிலைப் பிடிக்க ஓடறதைப் பார்த்தா எனக்கென்னவோ 'ஆஸ்ட்ரிக்ஸ் & ஓப்லிக்ஸ்' படைப்பாளிகளோடதான் மீட்டிங்கோன்னு தோனுதுங்க சார்!
Deleteஅப்ப மொத கதை Asterix & Obelix: Mission Cleopatra வாத்தான் கண்டிப்பாக இருக்கும்....💞💓💕😻
Deleteமீட்டிங் போறதே போறார் - அப்படியே கையோட அந்தக் கிளியோபாட்ரா உரிமத்தையும் வாங்கி வந்துட்டார்னா நல்லாருக்கும்!
DeleteGood night sir and friends.
ReplyDeleteஜானி & கி.நா அட்டைப்படங்கள் அருமை!! ஜானி உடல் முழுக்க சிவப்புச் சாயம் பூசிக்கொண்டு ஆபத்திலிருக்கும் ரயிலை நிறுத்தப் போராடுவது - செம!!
ReplyDeleteகி.நா அட்டைப்படம் - எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாய் இருக்கிறது! அந்தச் சுறா மீன் வெட்கப்பட்டுச் சிரிப்பதை நம்மாலும் உணரமுடிகிறது!
E V ji உங்களால் மடடுமே இப்படிலாம் யோசிக்க முடியும்.
Deleteநேத்து தான் நெனச்சேன் உங்கள காணோம் கரெக்டா வந்துட்டீங்க நீங்க வந்தா தான் தளம் கலகலப்பா இருக்கு அடிக்கடி கமெண்ட் போடுங்க.
அன்புக்கு நன்றிகள் sridharan ji. கூடுதல் வேலைப்பளு குடைச்சல் கொடுப்பதே காரணம்! :)
Deleteசிரிக்க முயன்ற சுறா
ReplyDeleteசார் காலை மாலையாயாச்சே
ReplyDeleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!
ReplyDelete