Powered By Blogger

Saturday, July 12, 2025

வருது..வருது..காமிக்ஸ் கேரவன் வருது..!

 நண்பர்களே,

வணக்கம்! இரண்டு நாட்களுக்கு முன்பானதொரு நிகழ்வு..! சென்னையைச் சார்ந்ததொரு மூத்த குடும்பத்தலைவி..! நெய்வே­லி பக்கத்தில் சொந்த ஊர் போலும்...! ஆன்லைனில் டிஜிட்டல் கலரிங் பணிக்கு அநாமதேயமாய் நாம் ஆட்களைத் தேடி வர, அவரும் விண்ணப்பித்திருந்தார்! 

'என்ன மாதிரியான பணி? முழு நேரப் பணியா? என்ன மாதிரி அவகாசம் தருவீர்கள்?' 

என்றெல்லாம் வினவிக் கொண்டிருந்தார்! "மேடம்.. இது காமிக்ஸ் புக்குக்கு கலரிங் செய்யும் வேலை' என்று பதில் சொன்னேன்! "You know.. I recently bought some Tamil Comics... என்ன மாதியான தரம் தெரியுமா? அதும் சின்னப்பிள்ளைகளுக்கென Fairy Tales-லாம் கலரில்.. truly wonderful! அதுமட்டுமில்லாம டின்டின் கூட அற்புதமா தமிழிலே வருது தெரியுமா? Awesome! நீங்க அது மாதிரி try பண்ணுங்க சார்!" என்று சிலாகித்தார்! இந்த ஆட்டோ ஆறுமுகம் தான் அந்த பாம்பே ஆன்டனி என்பதை அவர் தெரிந்திருக்கவில்லை & எனக்குமே "இவன் தான் அவர்ர்ர்ர்ர்ர்.. அவர்ர்ர்ர்ர்ர் தான் இவன்'' என்று அள்ளிவிடத் தோன்றவில்லை! அவர் தெரிவித்த சமாச்சாரங்களை மட்டும் அசை போட்டேன்- மனம் நிறைந்த மகிழ்வுடன்! ஆண்டின் புத்தகவிழா சீஸன் துவங்கியிருக்க, நெய்வேலி­யில் நமது ஸ்டா­லில் தான் மேற்சொன்ன புக்குகளை அந்த இல்லத்தரசி வாங்கியிருக்க வேண்டுமென்பது புரிந்தது! சந்தாக்கள்; ஆன்லைன் கொள்முதல்கள்; மாமூலான கடைகளில் வாங்குவோர் என்ற லி­ஸ்டைத் தாண்டி இத்தகைய முற்றிலும் புது வாசகர்களை எட்டிப் பிடிக்க புத்தக விழாக்கள் தரும் வாய்ப்பானது எத்தனை அற்புதமானதென்பது அந்த நொடியில் இன்னமும் அழுந்தப் புரிபட்டது! தவிர, நம்மிடமுள்ள அந்த sheer variety தான் புத்தகவிழாவுக்கு வருகை தரும் புதியவர்களை(யும்) வசியம் செய்கிறதென்பதுமே புரிந்தது! வாசிக்கத் துவங்கும் வாண்டுகள் முதல் லூட்டியடிக்கும் யூத்கள், ரவுசடிக்கும் பெருசுகள் என இங்கே எல்லோருக்குமே ஏதேனும் இருக்குமென்பது ஒவ்வொரு ஊரிலும் நமக்கான அடையாளமாகி வருகிறது! இதோ- அடுத்த வாரம் துவங்கக் காத்துள்ள கோவை புத்தக விழா தான் நமது காமிக்ஸ் கேரவனின் அடுத்த நிறுத்தம்!

And இந்தாண்டு முதலாய் ஈரோடு & சென்னை விழாக்களுக்கு மட்டுமே ஸ்பெஷல் ரிலீஸ்கள் என்றில்லாது - பெருநகரங்கள் சகலத்திற்கும் ஏதேனும் specials போட்டுத் தாக்குவதெனத் தீர்மானித்துள்ளோம்! So:

கோவை  : 1

ஈரோடு    : 1 

திருச்சி    : 1

மதுரை    : 1

சேலம் : 1

திருப்பூர் : 1

என ஒரு ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ளோம்! And கோவைக்கு ஒற்றை வாரம் கூட இல்லை எனும் போது- அதற்கான ஸ்பெஷல் ரெடியாகிடாது போகுமா -என்ன?

இதோ: தி டெரர் லைப்ரரி! க்ளாஸிக் திகில் சிறுகதைகளின் தொகுப்பாய்- Black & white-ல் !  இந்த இதழின் ஹைலைட்டே அட்டைப்படம் தான் என்பேன்! நண்பர்களை AI உதவியோடு திகிலாய் ராப்பர் ஒன்றினை டிசைன் செய்து அனுப்பச் சொல்லி­ நமது வாட்சப் கம்யூனிட்டியில் கேட்டிருந்ததும் - தொடர்ந்த மூன்று நாட்களுக்கு கலர் கலராய் கும்மியடித்த கையோடு குஸ்தியும் போட்டுக் கொண்டது நினைவிருக்கலாம்! கடைசியாக பஞ்சாயத்து வேறு மாதிரியான வர்ணமெடுத்துப் போக - ஜமுக்காளத்தை மடிச்சுப்புட்டுக் கிளம்பும்படி ஆகிப் போனது! ஆனால், அன்று கிட்டியதொரு டிசைனிலிருந்து கொஞ்சத்தை மட்டும் சுட்டு, நம்மள் கி AI டிசைனோடு கலந்து கட்டி, அமெரிக்க ஓவியையிடம் ஒப்படைத்தோம்! இதோ அவர் போட்டுத் தந்த ரகளை! And கொஞ்சமாய் இரவல் வாங்கியது யாரது டிசைனிலி­ருந்து யூகிப்போருக்கு குச்சிமுட்டாய்  அடுத்த புத்தகவிழா சந்திப்பின் போது!

ரைட்டு.. கோவை விழா பற்றிப் பேசியாச்சு! அடுத்த சம்பவமானது- வழக்கம் போல பூமியை அதிரச் செய்து Star Sports சேனலை சேலம் நோக்கிப் படையெடுக்கச் செய்திடும் ஒரு ரணகளம்! அது தான் நம்ம மட்டைப்பந்து வீரர்களின் காமிக்ஸ் க்ரிக்கெட் லீக்! வரும் 20-ம் தேதி ஞாயிறு காலையில் சேலத்தையே அது ஸ்தம்பிக்கச் செய்யாட்டியும், ஒரு நாற்பது வூடுகளில் "அப்பாடா... ஒரு நாளைக்கு நிம்மதி!'' என்று விடப்படும் பெருமூச்சுகளால், மாவட்டத்தின் தட்பவெப்ப நிலைகளிலேயே பெரு மாற்றம் நேரிடக் கூடுமென்று வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்! பற்றாக்குறைக்கு மேக்னஸ் கார்ல்ஸனுக்கே "பெப்பே'' காட்டுமொரு செஸ் போட்டியும் அன்று நடக்கவிருப்பதால் சேலம் ஒரே பிஷி! நமக்கு ஒரு வாரம் முன்பாகத் தான் மேற்படி சம்பவங்கள் பற்றித் தெரிய வந்ததென்பதால் 'விலாவை' சிறப்பிக்க பயணம் பண்ணப் பார்க்கணும்! இடைப்பட்ட பொழுதில் நம்ம முழங்கால் சன்னமாய் சண்டித்தனம் பண்ண, ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னே கோவை டாக்டரொருவர் முட்டியில் முறுக்குப் பிழிந்து பார்த்த வைபவங்கள் கண் முன்னே வந்து-வந்து போயிங்! So பார்க்கலாமே என்றுள்ளேன் இந்த நொடியினில்!

நெக்ஸ்ட் ஸ்டாப் ஈரோடு! கடந்த இரண்டு ஆண்டுகளாய் முத்து 50 ; லயன் 40 என்ற மைல்கற்களை ரகளையாய் கொண்டாடியிருந்தோம், ஈரோட்டின் சந்திப்பினில்! இம்முறை அத்தகைய landmarks ஏதும் கிடையாதென்பது ஒருபுறமிருக்க, சீனியர் எடிட்டரின் மறைவு மாமூலான அந்தக் குதூகலங்களுக்குத் தடா போட்டுள்ளது! And நவம்பரில் "சாம்ப­லின் சங்கீதம்'' சேலத்தில் ரிலீஸ் செய்வதாக இந்த நொடியில் திட்டமிருப்பதால் அங்கொரு முறையான வாசக சந்திப்பை ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று மனசுக்குப்பட்டது! So இப்போதைக்கு ஈரோட்டில் சும்மா ஜாலியாய் ஒரு மீட்டிங்கை மரத்தடியிலோ; ஜுனியர் குப்பண்ணாவிலோ போட்டு ஈரோடு ஸ்பெஷலை ரீ­லிஸ் செய்துவிட்டாலென்ன folks? 

ஆகஸ்ட் முதல் தேதிக்கு புத்தகவிழா துவங்குகிறது & நாம் எப்போதுமே அதன் மறுநாளில் (சனியன்று) சந்தித்திடுவோம்! இந்தவாட்டியும் அதே தேதி ஓ.கே எனும் பட்சத்தில் நானும், ஜுனியரும் ஈரோட்டில் ஆஜராகியிருப்போம்! ஆகஸ்ட் மூன்றாம் தேதி ஞாயிறு- ஆடிப்பெருக்கு என்பதால் அன்று எல்லோருக்குமே வீட்டில் நேரம் செலவிடும் அவசியங்கள் இருக்கக் கூடும்! And எனக்குமே மூத்த சகோதரியின் இல்லத்திலொரு விசேஷம் இருக்கிறது! So ஆகஸ்ட் 2 சனி ஓ.கே என்றால் that will work for us!

சரிதான்டா தம்பி.. ஆனா, ஈரோடுக்கான ஸ்பெஷல் என்னான்றீங்களா? கொஞ்ச மாதங்களுக்கு முன்னே- prime மறுபதிப்பாய் நீங்கள் பார்க்க விழைவது எதையோ? என்று வாட்சப் கம்யூனிட்டியில் கேட்டிருந்தேன்! எதேதோ ரகளை தொடர்ந்தன; And ஒற்றை இதழுக்கு அதிரடியாய் ஆதரவு இருந்தது! அந்த நொடியில் ஏதோ சொல்­லி நான் சப்பைக்கட்டு கட்டியிருந்தேன் தான்; but நிறைய நண்பர்களுக்கு அன்று வருத்தமென்பது புரியாதில்லை! So அன்றே தீர்மானித்தேன் - அமையும் முதல் சந்தர்ப்பத்தில் அதை உங்களிடம் ஒப்படைப்பதென்று! So here Comes "தங்கக் கல்லறை'' MAXI சைஸில்; ஹார்ட் கவர் பைண்டிங்கில் & ரொம்பவே முக்கியமாய் ஒரிஜினல் மொழிபெயர்ப்புடன்!

"அதென்ன 'ஒரிஜினல் மொழிபெயர்ப்புடன்" என்ற அழுத்தம்? மறுபதிப்புகளுக்கு ஒரிஜினல் மொழிபெயர்ப்பு தொடர்வது தானே இயல்பு? " என்று புதியவர்களுக்கு தோணலாம்....! பச்சே 12 வருஷங்களுக்கு முன்னே பிக்னிக் சந்துக்கு பால் காய்ச்சி, வலது காலை எடுத்து வைக்கச் செய்து நம்மளை உள்ளே இட்டுப் போய், பூரணகும்ப மருவாதிகள் நடத்தியதெல்லாம் நம்ம பெருமைமிகு வீர வரலாற்றின் ஒரு மைய அத்தியாயம் என்பதை ஆர்வலர்கள் அறிவர்! So இன்னொரு தபா பிக்னிக் போவானேன்? என்ற முன்ஜாக்கிரதையுடன், தங்கக் கல்லறை இதழின் ஒரிஜினல் மொழிபெயர்ப்பையே கையாண்டுள்ளோம் - பிழைகளை மட்டும் நீக்கி விட்டு! 1990'களில் வெளியான அந்த ஒரிஜினல் தமிழாக்கத்தில் நிறையவே தவறுகள் இருந்துள்ளன தான் ; ஆனால் அந்நாட்களில் அவற்றை நாம் பெருசாய் கவனிக்கலை போலும் & பழசின் மீதான மோகத்தில் 'பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணும்' என்று பின்னாட்களில் அடமும் புடித்துள்ளது இன்று ஸ்பஷ்டமாய் தெரிகிறது! So ஒரே கதையினை 1990-களில் ஒரு தபா ; 2010-களில் இன்னொரு தபா & 2020-களில் மூணாவது தபாவாய் தலை முதல் தூர் வரை எடிட் செய்துள்ள பெருமை இந்த ஏட்டு ஏகாம்பரத்துக்கே 💪💪...!

இங்கிலீஷில் "you're loco" என்று திட்டுகிறான் ஒரு கௌபாய் - அதாவது "நீயொரு லூசு" என்று பொருள்படும் விதத்தில்! கருணையானந்தம் அங்கிளுக்கு இது புரிந்திருக்கவில்லை ; so "நீயொரு லோக்கோ" என்றே தமிழில் எழுதியிருக்கிறார், அந்த முதல் பதிப்பில் ! அடியேனும் அதைக் கவனித்திருக்கவில்லை and நீங்களுமே தான். So பிழையோடே வண்டி அன்று ஓடியுள்ளது. 2013-ல் வெளியான நமது இரண்டாவது பதிப்பில் இது போலான பிழைகளைத் திருத்தியது மட்டுமன்றி, மொத்தமாகவே ஒரு புது வார்ப்பில் மொழியாக்கத்தை கருணையானந்தம் அங்கிளும், நானும் மாற்றி அமைத்திருந்தோம் ! பொஸ்தவம் வெளியான பின்னே விழுந்தது பாருங்கோ சாத்து மழை - ஆத்தாடி !! ஆயுசுக்கும் மறவாது ! அதிலும் லுங்கியோடு தலைகீழாய் மரத்தில் தொங்கும் ஒரு புனிதர் துவைத்த துவை Surf Excel க்கு tough தரும் ரகம் ! So இன்று பிழைகளைக் களைந்து, மற்றபடிக்கு அதே பெட்ரோமேக்ஸ் லைட்டோடு ஆஜராகிடவுள்ள இந்த சிறப்பிதழின் முதல் பிரதியினை அந்த ஈரோட்டு பவர் ஸ்டாரிடம் ஒப்படைத்தால் தான் நமக்கு நிம்மதி ! So ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு முயற்சிப்போமா மக்களே ? 

அப்புறம் இதோ - கலரில் 2 விதங்களில் அட்டைப்பட image !! அதே ப்ளூவா ? இல்லாங்காட்டி சிகப்பா ? என்பதைச் சொல்லுங்களேன் please ? அதே போல "தங்கக் கல்லறை" என்ற எழுத்துருவினையும் நண்பர் ஜகத் எழுதி அனுப்பிட்டால் போட்டுத் தாக்கிடலாம் ! திங்களன்று அச்சுக்குச் செல்கிறோம் ; so blue ?  red ? என்ற தேர்வு ஜல்தியாய் ப்ளீஸ் ?


அப்புறம் உங்களுக்கும், எனக்கும் கொஞ்சமாய் நேரத்தை மிச்சப்படுத்த கேள்வியும் நானே ; பதிலும் நானே பகுதி :

1 .எவ்வளவோ மறுபதிப்புகள் பெண்டிங் கீது ! இதை இப்போ அவசரமா கேட்டது யாருய்யா ?

சில ஆண்டுகளின் கோரிக்கை இது சாரே ! And ஒச்சமாகவே நின்று வந்ததொரு குறைப்பாட்டை சரி செய்த நிம்மதி கோரியும் இந்த மறுபதிப்பு !

2 .சூப்பர் மேக்சி சைசில் போடலே...இதெல்லாம் என்னத்த உருப்பட ?

"பயணம்" ஒரு அசாத்தியம் ! So சூப்பர் மேக்சி சைஸ் இலையில் விருந்து ! அதே சைஸ் இலையை ஒவ்வொரு தபாவும் விரிப்பதாய் இருந்தால் அஜீரணமே மிஞ்சும் ! So அஜீஸ் ப்ளீஸ் !

3.இப்டி மறுபதிப்பாய் போட்டு உசிரை வாங்குற நேரத்துக்கு நாலு கி.நா.போட்ருந்தாலாச்சும் போற பாதைக்கு வெளிச்சம் கிடைச்சிருக்கும் ! இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ ?

எங்கேயும் போய் முடியாதுங்கோ ; "பயணம்" out of the blue வந்தது போலவே நமது நெடும் பயணத்தில் இன்னும் நிறைய கி.நா.க்கள் வரவே செய்யும். புத்தக விழா ஸ்பெஷல்ஸ் எப்போதுமே விற்பனைகளின் மீது மையல் கொண்ட முயற்சிகள் என்பதால் - கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் ரெண்டணாவாச்சும் பார்த்துக் கொண்டால் தப்பில்லீங்களே ? 

ரைட்டு...டெரர் லைப்ரரி ; அப்பாலிக்கா தங்கக் கல்லறை ; நடுவே டின்டின் என்று அடித்துள்ள பல்டிகளில் ஆகஸ்ட் ரெகுலர் இதழ்களுக்குள் இன்னமும் நுழையவே நேரம் கிட்டியிருக்கவில்லை ! இதோ - சிக் பில் & டாக் புல்லுக்கு குரல் கொடுக்க வாய்ஸ் ரெக்கார்டரோடு வீட்டின் ஒரு பொந்துக்குள் புகுந்திடக் கிளம்புகிறேன் ! பக்கத்து வீட்டில் யாருக்கேனும் கேட்டால் ஏர்வாடிக்கு எத்தினி மணிக்கு பஸ் ? என்ற விசாரிப்பில் இறங்கிடுவர் என்பது உறுதி ! But அதையெல்லாம் பார்த்தா பொழப்பு ஓடுமா ?

Bye folks ..have a cool weekend ! See you around ! 

102 comments:

  1. அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  2. Replies
    1. Rs.100 - டெரர் லைப்ரரி
      Rs.350 - தங்கக் கல்லறை (MAXI)

      கூரியர் : Rs.50

      ஆக மொத்தம் ரூ.500

      Delete
  3. வணக்கம் நண்பர்களே 🙏

    ReplyDelete
  4. தங்கக் கல்லறையா
    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete
  5. சொர்ண புதைவெளியிக்கு நன்றிகள் கோடி சார்

    ReplyDelete
  6. ப்ளூ அட்டைப்படம்

    ReplyDelete
  7. Red Color OK.

    We already release Blue color Version. So My choice is RED>

    ReplyDelete
  8. வாரே வா தங்கத் தலைவன் வந்துட்டான். 🥰🤩😘

    ReplyDelete
  9. //இந்த ஆட்டோ ஆறுமுகம் தான் அந்த பாம்பே ஆன்டனி//

    😊😊😊😊😊

    ReplyDelete
  10. //எவ்வளவோ மறுபதிப்புகள் பெண்டிங் கீது ! இதை இப்போ அவசரமா கேட்டது யாருய்யா ?//

    தங்கத் தலைவனின் ரசிகர்கள் 😁😁😁😊😊

    ReplyDelete
  11. தங்க கல்லறை Hardcoverல் Maxi sizeல்


    தெய்வமே...!!

    தெய்வமே...!!!

    நன்றி சொல்வேன்...

    தெய்வமே..!!!!

    தேடினேன்...!

    தேடினேன்...!!

    கண்டு கொண்டேன்

    டைகரை...!!!!

    💥💥💥💥💥💥💥💥💥

    ReplyDelete
    Replies
    1. அதே பீலிங் டாக்டர்...

      Delete
  12. அருமையான பதிவு. மகிழ்ச்சி

    ReplyDelete
  13. சிவப்பு தான்

    எனக்கு

    பிடிச்ச

    கலரு

    ReplyDelete
  14. வணக்கம்
    ஈரோடு
    மரத்தடி
    ஜூனியர் குப்பண்ணா
    எப்படி இருந்தாலும்
    ஈரோடு
    கட்டாயம் வருவோம்

    ReplyDelete
  15. அப்புறம் உங்களை கும்மு கும்மு என்று நாங்கள் உங்களை குத்த போகும் பதிவு எப்போ சார் 😊

    ReplyDelete
    Replies
    1. ஆமா கம்யூனிட்டியில் சொல்லி இருந்தீங்களே

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. இந்த பதிவுதான் குமார்.😆

      Delete
  16. /* "அதென்ன 'ஒரிஜினல் மொழிபெயர்ப்புடன்" என்ற அழுத்தம்? மறுபதிப்புகளுக்கு ஒரிஜினல் மொழிபெயர்ப்பு தொடர்வது தானே இயல்பு? " என்று புதியவர்களுக்கு தோணலாம்....! பச்சே 12 வருஷங்களுக்கு முன்னே பிக்னிக் சந்துக்கு பால் காய்ச்சி, வலது காலை எடுத்து வைக்கச் செய்து நம்மளை உள்ளே இட்டுப் போய், பூரணகும்ப மருவாதிகள் நடத்தியதெல்லாம் நம்ம பெருமைமிகு வீர வரலாற்றின் ஒரு மைய அத்தியாயம் என்பதை ஆர்வலர்கள் அறிவர்! */

    Hahahaha !!! ROFL !!! But sir remember I and Karthik Somalinga supported you back then - hehe - I had not read original back then until RTM gave me the copy to read - after which I changed sides :-D

    நண்பர்கள் யாரவது Saint Satan ஐயா அவர்களை மேடைக்கு இக்கணத்தில் அழைத்து வரவும் :-) சும்மா சொழட்டி சொழட்டி அடிச்சாப்ல :-) :-) :-) 

    ReplyDelete
    Replies
    1. ஹி... ஹி... மறக்குமா சார்?

      Delete
    2. அப்புறம் நம்ம சௌந்தரை மறந்துட்டீங்களே!!! அவரது வலைப்பூவில் ஒரு முழுநீளப் பதிவே போட்டிருந்தார்! ஹைலைட் வஜனம்:

      //வெட்டியான் வெட்டியாக வெட்டவெளியிலே வெட்கமில்லாமல் இருக்கிறாரே!//

      Delete
  17. Vanakam editor sir , thanks a ton for bringing ‘thanga Kalarai ‘ in MAXI .
    This shows again how much you value the fan’s wishes.

    My choice is RED sir

    ReplyDelete
    Replies
    1. சில கோரிக்கைகளை நிறைவேற்ற நேரம் எடுக்கலாம் சார், but அவை மறக்கப்படாது!

      Delete
  18. Magnum 2 என்ற பெயரில் ஈரோட்டுக்கு ஸ்பெசல் புக் கொடுங்க... include Tex story

    ReplyDelete
  19. Sir - variant covers - Red and Blue and I am taking a copy of each !!

    ReplyDelete
  20. ஈரோடு பவர் ஸ்டார் இவ்வளவு டெரரானவர் என்பது தெரியாது

    ReplyDelete
    Replies
    1. சும்மா பள்ளிப்பாளயமே அதிரும்லே 🥹

      Delete
  21. வனக்கம் சார், தங்கக் கல்லறைக்கு front and back cover பற்றி ஒரு சின்ன ஆலோசனை. முதல் பதிப்பின் இரண்டு புத்தகத்தின் Front Covers இந்த புது மறுபதிப்புக்கு Front and Back Cover ஆக அமைந்தால் நன்றாக இருக்கும் என்று என் அபிப்பிராயம். ஓவியர் மாலையப்பன் அவர்களின் கை வன்னம் என்று நினைக்கிறேன். 🙏

    ReplyDelete
    Replies
    1. ஊகும்... அவையெல்லாம் இன்றைக்கு சுகப்படாது நண்பரே!

      Delete
  22. தி டெரர் லைப்ரரியின் பின்னட்டையும் திகிலை கிளப்புகின்றன், பள்ளி சிறார்களின் பேவரிட் தேர்வாக இருக்க போகுது

    ReplyDelete
  23. லட்டு-1:-
    ஒவ்வொரு புத்தக திருவிழாவுக்கும் ஒரு ஸ்பெஷல் ❤️.

    லட்டு-2:-
    தி டெரர் லைப்ரரி அட்டப்படத்த விடுங்க சார்,
    அதோட பின் அட்டையில் மை ஃபேவரைட் திகில் காமிக்ஸ் லோகோ போட்ருக்கீங்க பாருங்க,
    "யப்பா இத்தனை வருஷங்கழிந்து அந்த லோகோவ மீண்டும் நம்ம லயன் குழுமத்தில் பார்ப்பது எல்லையில்லா மகிழ்ச்சிங்க சார்.
    அதை முன்பக்கத்தில் கொண்டு வந்திருந்தால் இன்னும் கெத்தாக இருந்திருக்கும்.
    கதைக்கு தகுந்த போல அட்டைப்படம் அட்டகாசம்.

    லட்டு:-3
    மேக்ஸியில் "தங்கக் கல்லறை".
    ஏதேதோ எதிர்பார்த்து,
    கடைசியில் மீண்டும் தங்கக் கல்லறை.
    மேக்ஸி என்பதால் ஒரு எதிர்பார்ப்பு கூடுகிறது.🔥.

    💥ஈரோடு மீட்டிங் சனி என்பது சரியான முடிவு.

    💥ரெட் டை விட "ப்ளூ" கலர் அம்சம், அமானுஷ்யம் தூக்கல்.

    ReplyDelete
    Replies
    1. //திகில் காமிக்ஸ் லோகோ போட்ருக்கீங்க//

      ஆமாங்க தமிழய்யா
      செமயா இருக்கு
      ரொம்ப நாள் கழித்து😍😍😍
      எத்தன

      Delete
    2. Me too Blue Berry 😄😄🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

      Delete
  24. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  25. Blue color already released so This time We can try RED color wrapper sir...

    ReplyDelete
  26. /* இங்கிலீஷில் "you're loco" என்று திட்டுகிறான் ஒரு கௌபாய் - அதாவது */

    Not just this Sir - the first page of the revised edition had a title typo and you had to cover it with a sticker (this was corrected in the reprint of color edition which came without the black & white annexe pages) :-D :-D :-D :-D

    And பலூனுக்குள் வார்த்தைகள் நுழைக்க அப்போதைய சமயத்தில் inexperience கொண்ட நம்மவர்கள் தடுமாற அதை நீங்கள் புலம்பி வைக்க, வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நண்பர் (!) அமரர் ஷங்கர் ஆர்மண்ட் "தமிழ் கோமிக்ஸினில் தலையாய தடங்கல் பலூனுக்குள் வார்த்தை நுழைப்பதுவே" என்று அவருக்கே உரிய பாணியில் லந்து செய்ய - it was a terrific few months - unforgettable. :-) :-) :-)

    ReplyDelete
  27. // So here Comes "தங்கக் கல்லறை'' MAXI சைஸில்; ஹார்ட் கவர் பைண்டிங்கில் //
    சிறப்பு...

    ReplyDelete
  28. இருட்டு பின்னணிக்கு ப்ளூதான் சரியா இருக்கும்...
    ஆனா..ப்ளூ ஏற்கனவே வந்துள்ளதால் சிகப்பைச் சிறப்பிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா GP சிகப்பே சிறப்பு

      Delete
  29. // அதே ப்ளூவா ? இல்லாங்காட்டி சிகப்பா ? //
    ஏற்கனவே ப்ளூ வந்தாச்சி,இந்த வாட்டி கண்ணை கசக்கும் சூரியனோ "ரெட்" டை போட்டுத் தாக்கலாம் சார்...

    ReplyDelete
  30. இரு ஆண்டுகள் போல் மரத்தடி மீட்டிங் மட்டுமேனாலும் எங்க தங்கத் தலைவன் போதுமே ஈரோடு விழாவை அதகளமாக்கிட

    ReplyDelete
  31. 😰😰😰ப்ளூலதான் terror பீலிங் கிடைக்குது...

    ReplyDelete
  32. ஆகஸ்ட் 2ந் தேதி சுயம்புலிங்கம் போல் நமக்கும் செட் ஆகும் சார்.

    ReplyDelete
    Replies
    1. நாமளும் தியானத்துக்கு போறோமா சார்?

      Delete
  33. Editor sir,
    பயணம் கோவை புத்தக விழாவில் கிடைக்க வாய்ப்புள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. கஷ்டம் என்றே நினைக்கிறேன் சார்!

      Delete
  34. 2014 மே மாதமே ப்ளாக் மற்றும் கம்பேக்காகிய நம் காமிக்ஸ் உலகில் எட்டி பார்த்தேன்,
    தங்கக் கல்லறை என்பது ஒன்று இருப்பது அப்போது தெரிந்து கொண்டேன்(முதல் பதிப்பை படித்ததில்லை)
    தங்கக் கல்லறை தீர்ந்து விட்டது என மீண்டும் மறுபதிப்பு செய்தீர்கள் திகில் எதைகள் இன்றி,
    அப்போது கோவை புத்தக கடைகளுக்கு எப்போதும் வந்திடும் என ப்ளாக்கில் உங்களை நச்சியது நினைவில் உள்ளதுங்க, சார் 😅😅😅

    ReplyDelete
    Replies
    1. நச்சியது நம்பளுக்கு நினைவில்லியே 🤔

      Delete
  35. //அதே ப்ளூவா ? இல்லாங்காட்டி சிகப்பா ? என்பதைச் சொல்லுங்களேன்//

    இரவுக்குச் சிவப்பு சற்றும் பொருந்தவில்லை சார், it is overpowering the original art! இல்லையில்லை, பெட்ரோமேக்ஸ் லைட்டை போட்டே தீருவேன் என்று நீங்கள் அடம் பிடித்தால், சில வருடங்கள் கழித்து இப்படி எழுத வேண்டியிருக்கும்:

    விரைவில் வருகிறது - "தங்கக் கல்லறை'' MAXI சைஸில்; ஹார்ட் கவர் பைண்டிங்கில், ஒரிஜினல் மொழிபெயர்ப்பில் & ரொம்பவே முக்கியமாய் அதே நீலக்கலர் ஒரிஜினல் அட்டையுடன்!

    ReplyDelete
    Replies
    1. பெட்ரோமேக்ஸ் வேணும்னு அடம் பிடிக்கிறது நானில்லீங்கோ! நமக்கு தீப்பந்தம் கூட ஓகே தானுங் 💪

      Delete
    2. //அதே ப்ளூவா ? இல்லாங்காட்டி சிகப்பா ? //

      தொட்டிலையும் கிள்ளி விட்டு...

      //நமக்கு தீப்பந்தம் கூட ஓகே தானுங் 💪//

      ஆட்டையும் குழந்தைகிறீர்களே சார்!!! 😀😀😀

      Delete
  36. ////இப்டி மறுபதிப்பாய் போட்டு உசிரை வாங்குற நேரத்துக்கு நாலு கி.நா.போட்ருந்தாலாச்சும் போற பாதைக்கு வெளிச்சம் கிடைச்சிருக்கும் ! ////


    ////நமது நெடும் பயணத்தில் இன்னும் நிறைய கி.நா.க்கள் வரவே செய்யும்./////

    /////புத்தக விழா ஸ்பெஷல்ஸ் எப்போதுமே விற்பனைகளின் மீது மையல் கொண்ட முயற்சிகள் என்பதால் - கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் ரெண்டணாவாச்சும் பார்த்துக் கொண்டால் தப்பில்லீங்களே ? /////



    முதல் பதில் திருப்தியாய் இருந்த காரணத்தால் இரண்டாவது பதிலுக்கு (மறுமறுமறுபதிப்புக்கு) இந்த முறை ஆட்சேபனை இல்லை ஆசானே....

    ReplyDelete
  37. ////கலரில் 2 விதங்களில் அட்டைப்பட image !! அதே ப்ளூவா ? இல்லாங்காட்டி சிகப்பா ? என்பதைச் சொல்லுங்களேன்///

    ஏற்கனவே நீல வண்ணம் வந்த நிலையில் சிகப்பு வண்ணமே போடலாம் ஆசானே.

    ReplyDelete
  38. Wow!

    தங்கக் கல்லறை மறு மறுபதிப்பு!

    ப்ளூ அட்டை ஏற்கனவே வந்துட்டதால், இப்போ சிவப்பு ஓகே சார்

    ReplyDelete
  39. சார் இந்த கிளாசிக் கதைகளை கொஞ்சம் ஊறுகாய் அளவுக்கு பயன்படுத்தலாமே. ஏற்கனவே கிளாசிக் சந்தா என்று சுமார் 2 ஆயிரம் ரூபாய் அதற்கென்று ஓதுக்கியாகி விட்டது. அதுபோக ஜனவரியில் வந்த வேதாளர், சென்னை புத்தக விழா மறுபதிப்பாக வந்த கதைகள், ஒற்றைக்கண் மர்மம், விச்சு கிச்சு & இப்போது டெரர் லைப்ரரி என்று அடுக்கி கொண்டே போகலாம். கிட்டதட்ட சந்தாவின் பாதி தொகைக்கு கிளாசிக் கதைகளில் எண்ணிக்கை கூடி விட்டது.
    அனைத்து தரப்பையும் கவராத இந்த கிளாசிக் கதைகளுக்கு இத்தனை உழைப்பையும், பட்ஜட்டையும் ஓதுக்கி தான் ஆக வேண்டுமா.
    அட்டவணை வெளியிடும் சமயம் பல கதைகளுக்கு பட்ஜெட் காரணமாக இடம் இல்லாமல் போய் விடுகிறது. இந்த கிளாசிக் கதைகளுக்கு ஒதுக்கும் தொகையை குறைத்து ரெகுலர் கதைகளுக்கு அதை பயன்படுத்தலாம். விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, லயன், முத்து பேனரில் வரும் கதைகள் எதுவாக இருந்தாலும் வாங்கும் என்னைப் போன்றோரின் நிலை தர்ம சங்கடமே.
    கணக்கு போட்டு பார்த்தால் டெக்ஸ் கதைகளின் பட்ஜட்டையும் தாண்டி செல்கிறது இந்த கிளாசிக் கதைகளின் பட்ஜெட். கிளாசிக் கதைகளை வெளியிடுங்கள், ஆனால் இப்படி் கிடைக்கும் சங்கர்பங்களில் எல்லாம் போட்டு தாக்காதீர்கள் என்பதே எனது கோரிக்கை.

    தங்க கல்லறை மறுபதிப்பு - பல முறை படித்து துவைத்த கதை. வந்தாலும் ஓகே. வராவிட்டாலும் கவலை இல்லை. என்னிடம் கலர் & black White பிரதிகள் நல்ல நிலையில் உண்டு. ஆனாலும் கண்டிப்பாக வாங்குவேன் கலெக்சனுக்காக. இனி அடுத்தது ரத்தப்படலம், மின்னும் மரணம் என மேக்ஸி சைசில் அடுத்த ரவுண்டு ஆரம்பிக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. // தங்க கல்லறை மறுபதிப்பு - பல முறை படித்து துவைத்த கதை. வந்தாலும் ஓகே. வராவிட்டாலும் கவலை இல்லை. என்னிடம் கலர் & black White பிரதிகள் நல்ல நிலையில் உண்டு. ஆனாலும் கண்டிப்பாக வாங்குவேன் கலெக்சனுக்காக. //

      +1

      Delete
  40. Actually இரண்டாம் பதிப்பிலும் வசனங்கள் amazing ! ஒரிஜினல் கதையில் Blueberry-யை மிஞ்சிவிடுவார் கிழட்டு லக்னர் - ஒரு வீரியம் மிக்க கொடூர வில்லன். நம்மவர்களுக்கு Blueberry-யின்  (சரி சரி டைகர் - லொள் !!லொள் !!) MGR பாணி செட்டிங் பழகி விட்டிருந்ததால் (due to மின்னும் மரணம்), இந்த புதிய பாணியை - பிளூபெர்ரியை overtake செய்திடும் லக்னரை ஏற்க முடியவில்லை. அதான் தனி சந்தில் துவைத்து எடுத்து விட்டார்கள். முதல் பதிப்பைப் படித்த பின் இரண்டும் எனக்குப் பிடித்தது !

    ReplyDelete
  41. எடிட்டர் சார் - ஹி ஹி - அப்புறம் அந்த மின்னும் மரணம் Maxi எப்புடு ஒஸ்திந்தி ? :-)

    ReplyDelete
  42. // இந்த ஆட்டோ ஆறுமுகம் தான் அந்த பாம்பே ஆன்டனி என்பதை அவர் தெரிந்திருக்கவில்லை & எனக்குமே "இவன் தான் அவர்ர்ர்ர்ர்ர்.. அவர்ர்ர் //

    சார் எப்படி இப்படி 😊

    ReplyDelete
  43. // நவம்பரில் "சாம்ப­லின் சங்கீதம்'' சேலத்தில் ரிலீஸ் செய்வதாக இந்த நொடியில் திட்டமிருப்பதால் அங்கொரு முறையான வாசக சந்திப்பை ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று மனசுக்குப்பட்டது! //

    சிறப்பான முடிவு. அனைவரூம் கலந்து கொள்ள சரியான ஊர் சார்.

    ReplyDelete
  44. // ஈரோட்டில் சும்மா ஜாலியாய் ஒரு மீட்டிங்கை மரத்தடியிலோ; ஜுனியர் குப்பண்ணாவிலோ போட்டு ஈரோடு ஸ்பெஷலை ரீ­லிஸ் செய்துவிட்டாலென்ன folks? //

    மிகவும் சரியான முடிவு. பேக் டு நமது மரத்தடி மீட்டிங். சூப்பர்.

    ReplyDelete
  45. தங்க கல்லற மீண்டும் மறுபதிப்பு. அதுவும் பழைய மொழிபெயர்ப்பில் சாரி சார்.

    கார்ட்டூன் ஸ்பெஷல் பல வருடங்களாக கேட்டு வருகிறோம் ஆனால் பல காரணங்களால் இன்று வரை எங்களுக்கு கிடைக்கவில்லை. எல்லோரையும் எப்படியவது திருப்தி படுத்தும் நீங்கள் கார்ட்டூன் ரசிகர்களுக்கும் ஏதாவது பார்த்து செய்யுங்க சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  46. // பிக்னிக் சந்துக்கு பால் காய்ச்சி, வலது காலை எடுத்து வைக்கச் செய்து நம்மளை உள்ளே இட்டுப் போய், பூரணகும்ப மருவாதிகள் நடத்தியதெல்லாம் நம்ம பெருமைமிகு வீர வரலாற்றின் //

    🤣🤣🤣🤣🤣

    ReplyDelete
  47. // இன்று பிழைகளைக் களைந்து, மற்றபடிக்கு அதே பெட்ரோமேக்ஸ் லைட்டோடு ஆஜராகிடவுள்ள இந்த சிறப்பிதழின் முதல் பிரதியினை அந்த ஈரோட்டு பவர் ஸ்டாரிடம் ஒப்படைத்தால் தான் நமக்கு நிம்மதி ! So ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு முயற்சிப்போமா மக்களே ? //

    ஆகட்டும் சார்

    ReplyDelete