Powered By Blogger

Saturday, July 26, 2025

August Ahoy!!!

நண்பர்களே,

வணக்கம்! "உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'' என்று உப்மாக்களுக்கும், ஊறுகாய்களுக்குமே பில்டப் கொடுத்திருக்கிறோம் தான்! அட, ஜடாமுடி ஜானதனுக்கே கெத்து காட்டியவனாச்சே அடியேன்?! So மெய்யாலுமே ஒரு அசாத்திய வேளை கண்முன்னே புலர்ந்திடும் சமயம் லைட்டாகக் கூசுகிறது - வூடு கட்டி அடிப்பதற்கு! ஆனால், ஒற்றைப் புள்ளியில் ஒன்றல்ல.., இரண்டல்ல, மூன்றல்ல, நான்கல்ல அரை டஜன் "பெத்த தலக்கட்டுக்கள்!'' ஒன்று கூடும் அதிசயம் நிகழ்ந்திடும் போது கூரையேறிக் கூவாமல் இருக்க முடியாதல்லவா? So ஒரு அட்டகாச, அதகள, அசாத்திய, அதிரடி, அதிரி புதிரி ஆகஸ்டுக்கு ஸ்வாகதம் சொல்லத் தயாராகலாமா folks?

To start with- எப்போதும் போல் "தல'' புராணம்! நடப்பாண்டின் முதல் மெகா நீள TEX சாகஸமாய் "உதிரம் பொழியும் நிலவே!'' -296 பக்க ஆல்பத்தில் களம் காண்கிறது! And கதாசிரியர் மௌரோ போசெலி­! சும்மாவே ஒரு சிங்கிள் ஆல்பத்தைத் தந்தாலே தெறிக்கத் தெறிக்க போட்டுத் தாக்கும் மனுஷனிடம் சுமார் 300 பக்கங்களை ஒப்படைத்தால் விடுவாரா என்ன- சிலம்பம் ஆடியுள்ளார் கதை நெடுக! And துணைக்கு செம ஜித்தரான ஓவியரும் கரம் சேர்க்கும் போது- விளைவு அதகளமாகிடுகிறது! தமிழ் சினிமாவிலி­ருந்து உருவியதொரு one liner போலான கதைக்கரு தான்; ஆனால், அதை போசெலி­ கையாண்டிருப்பதில் தான் என்னவொரு லாவகம்; என்னவொரு ஆற்றல்! 

எண்பதாண்டுகள் கடந்துவிட்டன தான்- டெக்ஸ் வில்லர் என்றதொரு ஆளுமை ஜனித்து! அவரோடு தோள் நிற்போரும் இம்மியும் மாற்றமின்றி அதே மூவர் தான்! And களங்கள் அரிஸோனா; டெக்சாஸ்; மெக்ஸிகோ- என ஒரு வட்டத்தினுள்ளேயே தான் அடைபட்டும் கிடக்கின்றன! எப்போவாச்சும் கனடா; சான் பிரான்சிஸ்கோ என்று நகர்வது பெரிய சமாச்சாரம்! ஆனால், சிம்பிளான இந்த template-ஐ வைத்துக் கொண்டே year after year போனெலி­யின் படைப்பாளிகள் உருவாக்கிடும் இந்த மேஜிக் ஒரு தனி ரகம் தான்! நாற்பது ஆண்டுகளாய் நமக்கு வில்லரைத் தெரியும்; ஆனாலும் ஒவ்வொரு புது ஆல்பத்தின் அட்டைப்படத்தினைப் பார்க்கும் போதும் மனசெல்லாம் மத்தாப்பூ மலர்வது எனக்கு மட்டும் தான் என்றிராது தானே? So கடந்த பத்து தினங்களாய் இந்த 296 பக்க ஆல்பமே கதி என்று கிடந்தவனுக்கு போனெ­லியின் படைப்பாளிகள் மீதான மரியாதை பன்மடங்கு எகிறியுள்ளது என்பதே bottomline! ஆக, ஆகஸ்டில் காத்திருக்கும் முதல் ஜாம்பவான் நம்ம இரவுக் கழுகாரே தான்!

And "ஈரோட்டில் இந்தவாட்டி விழா இல்லாட்டியும் பரால்லே; நாங்க இல்லாம புத்தகவிழா ஜொலி­க்காதே?!''என்று குரல் கொடுப்பது யார் தெரியுமோ? 95 ஆண்டுகளாய் லோகமெங்கும் வெற்றியை மட்டுமே தரிசித்து வந்திருக்கும் டின்டின் & கேப்டன் ஹேடாக் தான்!! Oh yes ஆண்டின் பிற்பகுதிக்கென slot in செய்து வைத்திருந்த டின்டினின் "கேல்குலஸ் படலம்'' அதிரடியாய் முன்கூட்டியே ஆஜராகிறது! டின்டினின் படைப்பாளிகள் வைத்திருக்கும் செம ஆழமான பரிசீலனைகளைத் தாண்டி ஒவ்வொரு ஆல்பத்துக்கும் approval வாங்குவது ஒரு இமாலயக் காரியமே என்பதால் இந்தப் பணிகளை சில மாதங்களுக்கு முன்னமே கையில் எடுத்திருந்தேன்! பெர்சனலாக எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த கதையிது என்பதால்- மே மாதம் முதலாகவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் எழுத ஆரம்பித்திருந்தேன்! ஆனால், for the sheer length & volume of the story, நாக்கு தொங்கியே போய்விட்டது- தமிழாக்கத்தை பூர்த்தி செய்வதற்குள்! 

And இங்கே ஒரு ஸ்பெஷல் ஐட்டமும் உண்டு- கேப்டன் ஹேடாக்கின் மாமூலான அந்தக் கூப்பாடுகளைத் தாண்டியுமே! கேப்டனுக்கு எங்கே எந்த பழைய curse words போடுவது? புதுசாய் எதைத் தேற்றுவது? என்ற சிண்டு பிய்க்கும் படலம் ஒரு பக்கமெனில் கதைக்கு ஜாலி­யூட்ட ஆஜராகிடும் ஒரு ஓட்டைவாய் இன்ஷுரன்ஸ் ஏஜெண்டுக்கு சற்றே வித்தியாசமாய் டயலாக்ஸ் அமைத்தால் தேவலாமென்று பட்டதால் அதற்கோசரம் டிரௌசர் கழன்று போகாத குறை தான்! சரி.., ரைட்டு - மே மாதம் ஆரம்பித்து, ஜுன் & ஜுலையில் பூர்த்தி செய்தாச்சு; இனி DTP பணி முடித்தால் படைப்பாளிகளுக்கு அனுப்பிவிடலாமென்று பார்த்தால் விதி கெக்கே பிக்கே என்று இளித்தது! தவணை முறையில் செய்திருந்த மொழியாக்கம் என்பதால் கோர்வையில் உதைப்பது போலவும் இருந்தது; கேப்டனின் அனற்றல்களில் ஒரே set of curses அடுத்தடுத்து தலைகாட்டுவது போலவும் இருந்தது! "நடுமண்டையிலே நானூறு நங்கூரங்களை இறக்க - டிக்கியை சேரில் அழுந்தப் பதித்து, ஸ்க்ரிப்டை ரிப்பேர் பண்ணுடா மங்கூஸ்தான் மண்டையா!'' என்று எனக்கு நானே சொல்­லிக் கொண்டு மறுபடியும் டின்டினின் உலகினுள் மூழ்கிப் போனேன்! நம்பினால் நம்புங்கள் மக்களே, கேல்குலஸ் படலத்தின் ஸ்க்ரிப்டை நான் தலை முதல் பாதம் வரை வாசித்தது மொத்தம் பதினேழு தடவைகள்!! ஒருவழியாய் எல்லா மாற்றங்களையும் போட்டு, படைப்பாளிகளுக்கு அனுப்பினால்- Oh wow!! நான்கே நாட்களில் "எல்லாம் ஓ.கே'' என்று பச்சை விளக்கைக் காட்டிவிட்டார்கள்! அப்புறமென்ன- சாமியே வரம் தந்துவிட்ட பின்னே காத்திருக்கவாவது தோன்றுமா? மின்னலாய் தயாரிப்புப் பணிகளுக்குள் ஐக்கியமானோம்! அதே "திக்'கான ஆர்ட் பேப்பர்; மிளிரும் அச்சு; நீட்டான பைண்டிங் என எல்லாமே ஒரு பக்கம் auto pilot-ல் தடதடக்க இரண்டு நாட்களுக்கு முன்பே டின்டின் ரெடி! அப்புறமும் இதை மூட்டை கட்டி வைத்து செப்டம்பருக்கோ- அக்டோபருக்கோ வெளியிடுவது பற்றி நினைத்துப் பார்க்கவாவது முடியுமா? "டப்'பென்று சிக்பில்லை செப்டம்பருக்குத் தள்ளிவிட்டோம்; "டுப்''பென்று டின்டினை ஆகஸ்ட் அட்டென்டன்ஸுக்கு தயாராக்கியாச்சு!

கதை என்று பார்த்தால் - அட்டகாசமான spy த்ரில்லர்! எதிரி நாடுகள்; ஆயுத உருவாக்கம்; ஆள் கடத்தல் - என்றெல்லாம் ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்சுக்கு இந்த ஆல்பம் அதகளம் செய்திட "பரபர''வென சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் தெறிக்க விடுகின்றன! And ஆக்ஷனுக்கு ஈடு தரும் விதமாய் ஹ்யூமரும் சேர்ந்தே பயணம் பண்ண- இந்த 62 பக்க ஆல்பம் நமக்கொரு மறக்க இயலா வாசிப்பு அனுபவத்தை வழங்கிடவுள்ளது என்பேன்! அடுத்த ஜாம்பவான் பக்கமாய் நான் தாவும் முன்பாக ஒக்க கோரிக்கை மக்கா :

டெம்போவெல்லாம் வச்சு பதினேழு வாட்டி கடத்தியிருக்கோம் ! So அதுக்காகவாச்சும் ஆகஸ்டில் டின்டினை முழுசுமாய்; சீக்கிரமாய் வாசிக்க நேரம் ஒதுக்கப் பாருங்களேன் - ப்ளீஸ்? வழக்கம் போல பொம்ம பார்த்துட்டு - 'புக் சூப்பர்.., ப்ரிண்டிங் செம' என்பதோடு நிறுத்திக் கொள்ளாது இந்தவாட்டி வாசித்திடவும் முயற்சி பண்ணுங்களேன் folks?

இனி ஜாம்பவான் # 3 பற்றிப் பார்க்கலாமா? அது வேறு யாருமல்ல- நம்ம தளபதி தான்! "தங்கக் கல்லறை'' மறு மறுபதிப்பில் வரவிருப்பது நீங்கள் அறிந்ததே! And இங்கே ஒரு சின்ன உவமை சொல்லத் தோன்றுகிறது! 

சர்க்கஸ்களில் உசிரைக் கொடுத்து மேலே ட்ரபீஸ் ஆடிக் கொண்டிருப்பார்கள்! ஒரு பக்கம் மரணக் கூண்டுக்குள்ளே- இன்று வெடித்துக் காட்டும் எலெக்ட்ரிக் பைக்களுக்கு முன்னோடியாட்டம் டுப்பு.. டுப்பு.. டுப்பு.. என்று வெடிக்கும் சைலன்ஸரோடு காந்தி காலத்து மோட்டார் சைக்கிளில் ஒரு மனுஷன் மாங்கு மாங்கென்று ரவுண்டடித்துக் கொண்டிருப்பார்! மக்கள் கூண்டுக்குள்ளும், அந்தரத்திலும் லயித்துப் போயிருக்கும் நொடியில் பேண்ட் செட் முழங்க ஆரம்பிக்க வரிசையாய் ஒரே மாதிரியான சிக் டிரெஸ் போட்ட யுவதிகள் சைக்கிள்களில் கரம் கோர்த்து உட்புகுந்திடுவர்! மறுகணம் மேலே ட்ரபீஸ் ஆடுவோரையும் சரி, மோட்டார் சைக்கிள் பார்ட்டியையும் சரி, மறந்துவிட்டு பார்வைகள் பாப்பாக்கள் மீது லயித்திடுவதுண்டு! அதே போலானதொரு நிகழ்வு இந்த ஆகஸ்ட் கூரியர் டப்பியிலும் நிகழ்ந்தால் நிச்சயம் வியந்திட மாட்டேன்!

படு புஷ்டியாய் ஒரு டெக்ஸ் புக் ரகளை விட...

அட்டகாசத் தயாரிப்புத் தரத்தோடு டின்டின் கலரில் ஜாலங்கள் காட்ட...

ஹார்ட் கவரில் KING's ஸ்பெஷல் அரை டஜன் நாயகர்களோடு அதிரடியாய் மிரட்ட....

இடையே புகுந்திடும் "தங்கக் கல்லறை'' MAXI ஹார்ட்கவர் இதழானது ஒரு கணத்திற்காவது மூச்சை உள்ளிழுக்கச் செய்யாது போனால் நீங்கள் வழுக்குப்பாறைக்கு மிகமிக அருகே வசிக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்! ஆயிரத்துச் சொச்சம் புக்ஸ் கண்ட அரை மண்டையன் தான்; போட்டிக் கடைகளும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வைத்து விற்கத் துடிக்கும் "பயணத்தின்" அசுர சைஸி­லிருந்து, தம்மாத்துண்டு ஹார்ட்கவர் பாக்கெட் சைஸ் ஸ்பைடர் வரையிலும் தயாரித்தவன் தான்; வண்ணத்தில் XIII தொகுப்புக்களை ஒன்றுக்கு, இரண்டுவாட்டி உருவாக்கியவன் தான்- so பெருசாய் எதற்குமே வாய் பிளக்கும் ரகமல்ல தான்! அதுவும் ஒரு மறு மறுபதிப்பினை அழகு பார்த்துவிட்டு ஓரம் கட்டுவதே எனது வாடிக்கையாக இருந்திருக்க வேண்டும் -moreso ஒரு புத்தம் புதிய டின்டின் களமிறங்கும் இந்த மாதத்தில்! ஆனால்.....

....ஒரு இனம்புரியா வசீகரத்தோடு பைண்டிங்கிலி­ருந்து வந்திறங்கிய புக்ஸை கையில் ஏந்திய நொடியில் ஒரு அசாத்திய மகிழ்வு என்னுள்! இத்தனைக்கும் அதே அட்டைப்படம் தான்; and அட்டையில் கூட ஜிகினா வேலைகள் லேது! ஆனாலும் இந்த ஆல்பத்தைக் கையில் ஏந்திடும் எவருக்கும் அந்த ஈர்ப்பை உணர முடியாது போகாதென்பேன்! 

அட்டைப்படம் செம அழகாய் வந்துள்ளது..!

பைண்டிங் நீட்டாக அமைந்துள்ளது..! 

And உட்பக்கங்களின் பிரிண்டிங் தான் highlight! 

துவக்க நாட்களில் கலரில் அச்சிட நாம் பட்ட பாடுகளை தற்போதைய தரம் இரண்டு மடங்கு பெரிதாக்கிக் காட்டுகிறது! சொல்லப் போனால், 'அது தான் இது- இது தான் அது' என்று நம்ப ரொம்பவே சிரமப்படும்!

And ஒரிஜினல் தமிழாக்கம் - sans the flaws..!

So இந்த மாதம் டின்டின் ட்ரபீஸ் ஆட, டெக்ஸ் மரணக் கிணறில் சாகஸம் பண்ண, King's Special மேஜிக் ஷோ நிகழ்த்த- நடுவாக்கிலே புகுந்து பு­லியார் ஒளிவட்டத்தைக் கபளீகரம் பண்ண நேர்ந்தால் வியப்பே லேது! Trust me when I say this folks- உங்கள் சேகரிப்பில் சர்வ நிச்சயமாய் இருந்திட வேண்டியதொரு இதழ் இது!! இதுவுமே limited edition பதிப்பென்பதை நினைவூட்டுகிறேன் guys!- "பயணம்'' இதழுக்கு நேர்ந்தது போல இங்கும் கடைசி நிமிடத்தில் WWF போடாதிருந்தால் நலம்! 

ஆகஸ்டின் நான்காவது இதழோ அரை டஜன் க்ளாஸிக் நாயகர்களை உள்ளடக்கியதொரு "புஷ்டி பாபு''புக்!! அட்டையில் வேதாளரின் க்ளாஸிக் டிசைன்... உள்ளே மாயாத்மாவுக்கு இரண்டு ஸ்லாட்ஸ்; ரிப் கிர்பிக்கு 2; விங் கமாண்டர் ஜார்ஜுக்கு 2 and மீத மூன்று நாயகர்களுக்கும் தலா ஒன்று! So மொத்தம் 9 கதைகளின் பட்டியல் இதோ;

டிடெக்டிவ் சார்லி­யின் "சிறை மீட்டிய சித்திரக்கதை'' தவிர்த்த பாக்கி எட்டு கதைகளுமே நமக்குப் புதுசு! So நிதானமாய் நெதத்துக்கும் ஒரு சாகஸம் என்று வாசிப்பதாய் இருந்தால் கூட ஒன்றரை வாரங்களுக்கு உங்களை பிஸியாக வைத்திருக்க THE KING's ஸ்பெஷல் ரெடி! Of course இவையெல்லாமே ஒரு தலைமுறைக்கு முன்பான படைப்புகள் என்பதால் க்ளாஸிக் நெடி இல்லாது போகாது! ஆனால் Electric'80s தனித்தடமே க்ளாஸிக் பார்ட்டீஸ்களுக்கானது என்பதால்- அதனை புராதனம் குறித்து விமர்சிப்பதில் அரையணா பலனிராது! "இங்கே தயிர் சாதமும், வடாமும் தான் மெனு'' என்று போர்ட் போட்டிருக்கும் போது - 'டக்கில்லோ லேது; கபாப் இல்லே!' என்ற விசனங்கள் will be completely out of place! இதற்கென இன்னமுமே ஒரு வாசக அணி இருந்திடுவதால் அவர்களது ratings தான் இவற்றின் எதிர்காலங்களைத் தீர்மானிக்கும்! 

So ஒரு மெகா விருந்து இந்த ஆகஸ்டில் வெயிட்டிங் மக்களே! அடுத்த வியாழனன்று டெஸ்பாட்ச் இருந்திடும்! அடுத்த வாரயிறுதியினை முதற்கட்டமாய் கை நிறையக் குயந்தைகளோடு காட்சி தரும் உங்களது Selfies மூலமாய் தெறிக்க விடலாமா?

Bye all... See you around! Happy Weekend!


88 comments:

  1. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  2. பத்துக்குள்ள...வணக்கம்

    ReplyDelete
  3. சிறை மீட்டிய சித்திரக்கதை 👍👏👏

    ReplyDelete
  4. இத்தனை புக்கா வீட்டில் என்ன சொல்வது?

    ReplyDelete
  5. அனைவருக்கும் வணக்கம். படித்துவிட்டு வருகிறேன்

    ReplyDelete
  6. எடிட்டர் சார். தி டெரர் லைப்ரரி எப்போது கிடைக்கும் என்பது பற்றி தகவல் ஏதும் இல்லையே சார்?....

    ReplyDelete
  7. அனைத்து புத்தகங்களும் அருமை

    இந்த ஈரோடு புக்ஃபேர் களை கட்டப்போகுது .. ❤💛💙💚💜

    ReplyDelete
  8. ஆஹா ஆஹா ஆஹா...

    தங்கத் தலைவன்

    டெக்ஸ்

    ரிப் கிர்பி...


    Last but not the least.....


    அதிரடி நாயகன் டின்டின்...


    என்னுடைய favorite Professor Calculus பட்டைய கிளப்பும் " கேல்குலஸ் படலம்"


    Wow... இப்படி ஒரு அணிவகுப்பு கனவுல கூட நிகழாது...

    ஆவலுடன் waiting !!!

    😍🔥♥️🌹

    ReplyDelete
    Replies
    1. ஆமா doc ஆமா. இதெல்லாம் சரித்திரம்.

      Delete
  9. Semma.. semma..🔥🔥🔥🔥🔥🔥

    ReplyDelete
  10. ஆகஸ்ட் மாதம் வந்தாலே அப்படி ஒரு மகிழ்ச்சி தான். சும்மா தெறிக்க விடும் லைன் அப் சார்.

    ReplyDelete
  11. ஆகஸ்ட் மாதம் வந்தாலே அப்படி ஒரு மகிழ்ச்சி தான். சும்மா தெறிக்க விடும் லைன் அப் சார்.

    ReplyDelete
  12. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அன்றே எல்லா புத்தகங்களும் கிடைப்பது ஜாக்பாட் தான் போங்க.

    ReplyDelete
  13. உதிரம் பொழியும் நிலவே

    மழையின் ஊடே நடக்கும் மரணப்போராட்டம்.. என்ன ஒரு ட்ராயிங்...😍😍

    ஓவியர் சிவிடெல்லி சாயல் தெரிகிறது.. அவர்தானா சார்..?

    ReplyDelete
  14. //ஒரு கணத்திற்காவது மூச்சை உள்ளிழுக்கச் செய்யாது போனால் நீங்கள் வழுக்குப்பாறைக்கு மிகமிக அருகே வசிக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்!//

    நமது வெளியீடுகளில் ஒரு அசைக்க முடியாத உச்ச இடத்தில் இருக்கும் கதை "தங்க கல்லறை". Maxi சைசில் வருவது மகிழ்ச்சியே. கண்டிப்பாக விற்பனை சிறக்கும். நானும் நேரில் வந்து ஈரோட்டில் பெற முயற்சிக்கிறேன். இல்லாவிட்டால் கொரியரில் பெற்றுக் கொள்கிறேன்

    ReplyDelete
  15. வேதாளர்😘 ரிப் கிர்பி🥰 மாண்ட்ரேக்😘 சார்லி 🥰காரிகன் 😘ஜார்ஜ் 🥰..

    அப்பாலிக்கா டின் டின் 🥰💐


    Tiger 😘Tex🥰💐👍

    ஆஹா🥰 ஆஹா😘

    செம்ம😘.. செம்ம🥰


    ஆகஸ்ட் 💐🙏அடிதூள் 👍💐😄🙏😘🥰

    ReplyDelete
  16. டின் டின்

    புரபசர் கேல்குலஸ்.. 😍

    ReplyDelete
  17. The king special பேட்டர்ன் அட்டகாசம். இதே பாணியை தொடரலாம் சார்.! அடுத்தமுறை சார்லிக்கு இரண்டு ஸ்லாட்டுகள் ஒதுக்கப்பாருங்கள் சார்..😍

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா. ரெண்டு இல்ல 4 கதை போட்டாலும் மதி.

      Delete
    2. குமார் @ இப்படி சுத்தி வளைக்காமல் நீங்க சார்லி ஸ்பெஷல் வேண்டும் என்று கேட்கலாம்

      Delete
    3. கரெக்ட் தான் பரணி. சார்லி ஸ்பெசல் ஒண்ணு பார்சல்.

      Delete
  18. அடுத்த மாதம் நான்கு முனை போட்டி என்றாலும், கடும் போட்டி என்னவோ டின் டின் மற்றும் டைகர் இருவருக்கும் இடையில் தான் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது

    ReplyDelete
  19. வேதாளர் - 3
    ரிப் கிர்பி - 2
    விங் கமாண்டர் ஜார்ஜ் - 1
    காரிகன் - 1
    சார்லி - 1
    மான்ட்ரேக் - 1
    இப்படி இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

    ReplyDelete
  20. நீண்ட நாட்களுக்கு பிறகு எம்மாம் பெரிய பதிவு 😍

    ReplyDelete
  21. அட்டகாசமான, அதிரடியான, அமர்க்களமான, ஆர்ப்பாட்டமான, அதிரிபுதிரியான, அமோகமான - ஆகஸ்ட் இதுவென்பதில் வியப்பில்லை!!😍😍😍😍😍😍😍

    ReplyDelete
  22. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  23. டப் டூப் என்று மாற்றம் கண்டு ஆகஸ்ட் மாதத்தில் களம் இறங்கிடும் டின்டின்-க்கு ஜே

    ReplyDelete
  24. "உதிரம் பொழியும் நிலவே" அட்டகாசமான தலைப்பு சார்...

    ReplyDelete
  25. பின்னட்டையில் டிசைனிங் வொர்க் செம அட்டகாசம், ஒவ்வொரு முறையும் புதிதாக செய்து அசத்துறீங்க

    ReplyDelete
  26. // அடுத்த வியாழனன்று டெஸ்பாட்ச் இருந்திடும்! //
    சிறப்பு...

    ReplyDelete
  27. போன ஆண்டே நாம் டின்டின் போட ஆரம்பித்து இருந்தாலும், போன ஆண்டு கோவைக்கு டின்டின் வரவில்லை.
    இந்த ஆண்டு டின்டின் சேல்ஸ் நன்று.
    ப்ளஸ் ஆங்கிலத்தில் வைத்திருப்பதால் வாங்காமல் செல்பவர்கள் கூட லயன் காமிக்ஸின் தரத்தினை பாராட்டி செல்கிறார்கள்.
    ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட சிறுவன் தமிழில் டின்டின் என்றவுடன் வியந்து சென்றான்

    ReplyDelete
    Replies
    1. டின்டின் மொழிகளுக்கு அப்பாற்பட்டவர் 💪💪

      Delete
  28. அருமை சார்...வியப்பதற்கு ஒன்றுமில்லை....கார்சனின் கடந்த காலத்தை கண்ட பின் தங்ககல்லறை கவரலைன்னாதான் வியப்பேன்....எனது எதிர்பார்ப்பும் அதேதான்...அட்டைப்படம் இரு கலர்களில் கவிதையாய் திரிய....அந்த வண்ணப் பிசாசை அற்புத அச்சுத் தரத்தில் காண கண்கள் போதாதோ....டின் டின் உங்க பார்வை ஆவலைக் கிளப்ப....கிங் ஸ்பெசல் போடுடா வெடியன்னு பட்டய கிளப்ப...டெக்சின் அசத்தலான அட்டைப்படம் கவர்ச்சியாய் உலவும் தங்கப்பேயால் மட்டுப்பட....பாம் வெடித்தாலும் போதாதே...சர்ப்ரைஸ் இதழ்கள் தேடுது மனதே...செமயான மாதமிது...அந்த பேய் போல சுதந்திரமாய் திரிய சுதந்திர தினமும் காத்துளதோ

    ReplyDelete
  29. ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

    ReplyDelete
  30. கிங்ஸ் ஸ்பெஷல் (முன்/பின்) அட்டையில் ஜார்ஜ், காரிகன், சார்லி இருந்திருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. ரேஷனில் சர்க்கரை வாங்க நிக்கிற லைன் மாதிரி ஆகிப் போயிருக்கும் சார்!

      Delete
  31. அதும் ஆயிரக் கணக்கில் செலவு பண்ணி சிறை மீட்டிய சித்திரக் கதை வாங்காமல் விட்டது நல்லதே. இப்போ புத்தகம் புதியதாக கிடைக்கப் போகிறது. வெற்றி வெற்றி

    ReplyDelete
    Replies
    1. ஆயிரமா? இது எந்த ஊரிலே சார்???

      Delete
    2. சார் அந்த பழைய புத்தகம் எனக்கு தெரிந்து 2000 ரூபாய்.

      Delete
  32. எந்த புத்தகத்தை முதலில் படிப்பது ரொம்ப டெலிக்கேட் பொசிஷன்.

    ReplyDelete
    Replies
    1. விஞ்ஞான பூர்வமாய் இங்கி-பிங்கி -பாங்கி போட்டற வேண்டியது தான் சார் 🥹

      Delete
  33. ஆகஸ்டு இந்த வருடம் கலகலப்பே இல்லாத மாதிரி இருந்தது. .( "கிங்ஸ் ஸ்பெசல்",தலடெக்ஸின் "உதிரம் பொழியும் நிலவே டின்டின் in"கேல்குலஸ் படலம்",தளபதியின் "தங்கக் கல்லறை" )ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நீங்கள் தந்திருப்பது எல்லாமே அதிரடி சரவெடி.

    ReplyDelete
    Replies
    1. பன்னிரண்டு மாதங்களிலும் பட்டாசு வெடிக்க நாங்க ரெடி சார் - நீங்க தான் தயார் ஆகிக்கணும் - வாசிக்க!

      Delete
  34. வேதாளர் 2,கிர்பி 2 ,ஜார்ஜ் 2 ,மாண்ட்ரேக் 1, சார்லி 1,காரிகன் 1அட்டகாசமான லைன் அப். ரொம்ப ரொம்பஹாப்பி .சார்

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஹேப்பின்னா நாங்களும் ஹேப்பி சார்!

      Delete
  35. Hi editor sir, this month , all books are awesome.
    Tex , Tiger , Tintin and classic hero’s 🔥
    . Thanks again for bringing Thanga Kallarai in MAXI . Eagerly waiting for it . Another highlight on this month to me is Kings special, wrapper looks very good and Phantom looks classy on RED,

    ReplyDelete
    Replies
    1. வேதாளர் ராப்பர் ஒரு துருக்கிய ஜாம்பவான் ஓவியரிடம் வாங்கியது சார்! அவரது படைப்புகள் சகலத்திலும் சிகப்பு உடுப்பு தான்!

      Delete
  36. ஆகஸ்ட் புக் ஃபேர்,..?

    ReplyDelete
    Replies
    1. வரும் வெள்ளியன்று துவங்குகிறது சார்!

      Delete
  37. ///டெம்போவெல்லாம் வச்சு பதினேழு வாட்டி கடத்தியிருக்கோம் ! So அதுக்காகவாச்சும் ஆகஸ்டில் டின்டினை முழுசுமாய்; சீக்கிரமாய் வாசிக்க நேரம் ஒதுக்கப் பாருங்களேன் - ப்ளீஸ்?///

    டெபனட்லி சார்! இந்தவாட்டி முதல் வாசிப்பே டின்டின் தான்!

    ReplyDelete
    Replies
    1. யாரங்கே....? ரண்டு வெங்காய சமோசா கூடுதலாய் பார்சல்ல்லல்....!!!

      Delete
    2. சார் 😍😍😍😍😍🫠🫠

      Delete
  38. தங்ககல்லறை அட்டைப்படம் -முன்னட்டை நீல நிறத்திலும், பின்னட்டை சிவப்பிலும் அமைந்திருப்பது ஒரு இன்ப அதிர்ச்சி சார்! 😍😍😍😇

    ReplyDelete
    Replies
    1. புக்கை ஏந்திப் பாருங்கள் கையில்.... தெறிக்க விடும் 💪

      Delete
    2. ஐயாம் வெயிட்டிங்கு சார்.. 😍😍😍😍😍

      Delete
  39. சார்.. 'உதிரம் பொழியும் நிலவே' தலைப்பும், அட்டைப்படமும் அட்டகாசம்!!

    ஆனாலும் அட்டைப்படத்தில் நம்ம டெக்ஸ் வில்லர் அப்படி பண்ணியிருக்கக் கூடாதுங்க சார்!🧐🫣

    ReplyDelete
    Replies
    1. 'இந்த zoom பண்ற வசதியை எவன் கண்டுபிடிச்சான்?' - அதானே சார்? 🤪

      Delete
    2. நம்ப கலைக் கண்களுக்கு zoom தேவையே லேதுவாச்சே சார் 😎😎

      Delete
    3. பண்றதையும் பண்ணிட்டு எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரி முகத்தை வச்சுக்கிட்டிருக்கார் பாருங்களேன்!!😝

      Delete
    4. அதெப்படி இளவரசரே
      உங்க Zoom கண் 😂😂😂

      Delete
    5. அண்ணி லிலித் போனதுக்கப்புறம் அண்ணன் டெக்ஸ் தனிமையில வாடறார்ன்ற உண்மையையும் நாம புரிஞ்சுக்கிடணும் சகோ! 😌

      Delete